Search This Blog

24.10.08

சீமான், அமீருக்கு சத்யராஜ் ஆதரவு





சென்னையில் முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ள மனிதச் சங்கிலியில் பங்கேற்காத யாரும் தமிழ்நாட்டில் இருக்கவே தகுதியற்றவர்கள் என நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார்.

பிரபு சாலமன் இயக்கிய லாடம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் இன்று நடந்தது. விழாவில் நடிகர் சத்யராஜ் பங்கேற்று பாடலை வெளியிட்டார். விழாவில் அவர் கூறியதாவது:

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை என்து வீட்டில் முக்கிய நிகழ்ச்சி இருந்ததால் என்னால் போக இயலவில்லை.

இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னையில் நாளை முதல்வர் தலைமையில் மனித சங்கிலி நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்தை தான் நான் வரவேற்கிறேன்.

அவர் சொன்னது போல் இப்போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே லாயக்கற்றவர்கள். இதை கட்சி சார்பாகவோ, யாருக்கோ ஜால்ரா அடிக்கவோ நான் பேசிவல்லை. தமிழன் என்ற உணர்வோடு பேசுகிறேன். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி, மொழி இனபாகுபாடின்றி அனைவரும் ஒட்டு மொத்த குரல் கொடுக்க வேண்டும்.

இயக்குனர் அமீர், சீமானுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பது தேவையற்றது. அவர்கள் பேசியது சரியா, தவறா என்பதை விடுங்கள். அதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய தருணம் இதுவல்ல.

இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த திரையுலகமும் சீமான், அமீர் பின்னால் நின்று அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். ஏனென்றால் எனக்கு தனிப்பட்ட முறையில் இது போன்ற ஒரு பிரச்சினை ஏற்பட்டபோது திரையுலகம் என் பின்னால் நிற்கவில்லை. திராவிடர் கழகமும், விடுதலை சிறுத்தைகளும் தான் எனக்கு உதவி செய்தன.

ஈழத்தமிழர் நலனுக்காகத்தான் அமீரும் சீமானும் அப்படி பேசி உள்ளனர். அவர்கள் தொடர்ந்து பேசட்டும். நாம் அவர்களுக்கு ஆதரவாக பின்னால் நிற்க வேண்டும், என்றார் சத்யராஜ்.

-------------------- நன்றி : thatsTamil

0 comments: