Search This Blog

16.10.08

திராவிட மூவேந்தர்கள்










இந்திய அரசின் தொலைத் தொடர்பு மற்றும் தொழில் நுட்பத் துறையின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 130-ஆம் ஆண்டு பிறந்த நாளன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள தியாகராயர் மன்றத்தில், திராவிட இயக் கத்தின் மூவேந்தர்களான பிட்டி தியாகராயர், டாக்டர் சி. நடேசனார், டாக்டர் டி.எம். நாயர் ஆகிய பெருமக்களுக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. விழாவுக்கு அத்துறை அமைச்சரான ஆ. இராசா அவர்கள் தலைமை வகித்து அஞ்சல் தலைகளை வெளியிட தமிழ்நாடு முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் பெற்றுக் கொண்டு சங்கநாதம் செய்தார்.


பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான நீதிக்கட்சியின் ஒப்புயர்வற்ற தொண்டினை உணர்வுப் பூர்வமாக எடுத்துரைத்தார்.

திராவிட இயக்க அந்த மூவேந்தர்களைப் பற்றி இன்றைய இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு நமக்கு வந்து சேர்ந்துள்ள பவுசுகள் எல்லாம் வானத்திலிருந்து திடீரென்று குதித்தவையல்ல; தியாக விதைகளில் முளைத்துக் கிளம்பியவை. அந்த மூல விதைகளில் முக்கியமானவர்தான் டாக்டர் சி. நடேசனார் .

மன்பதை அன்பர் டாக்டர் சி.நடேசனார்

பிறர்க்கு உதவுவதே வாழ்வின் பயன் என்ற குறிக் கோளுடைய மாமனிதருக்குப் பெயர் டாக்டர் சி.நடேசனார். 1875-ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக் கேணி வீரராகவமுதலி தெருவில் (இப்பொழுது பெரிய தெரு என்று அதற்குப் பெயர்) பிறந்தார். எல்.எம்.எஸ். என்ற மருத்துவப் பட்டம் பெற்றவர்.

அவரைப்பற்றி திருவிக கூறுகிறார்:

1924-1925-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் நகர சபையை தன் மயமாக்கி வந்தபோது, டாக்டர் நடேசனார் வட்டத்துக்கென்று காங்கிரஸ் சார்பில் எவரையும் நிறுத்த வேண்டாமென்று யான் சீனிவாசய்யங்காருக்குச் சொன் னேன். மற்றவர் என் சொல்லுக்குச் செவி சாய்த்தாரில்லை. ஓ.கந்தசாமி செட்டியார் நிறுத்தப்பட்டார். யான் அவ்வட்டத் தேர்தலில் தலைப்படவேயில்லை. பிராமணருள்ளிட்டார் நெஞ்சில் நடேசனார் உலவுவது எனக்குத் தெரியும். வீண் முயற்சி எற்றுக்கு என்பது எனது கருத்து. தேர்தல் முடிவு என்ன ஆயிற்று? கந்தசாமி செட்டியார் தோல்வியே முடிவாயிற்று. பிராமணச் சகோதரர் பலர் சீனிவாசய்யங்கார் மாற்றத்தையுங்கேளாது நடேசனாருக்கு வாக்களித்தது அய்யங்காருக்கு அற்புதம் போல் தோன்றிற்று என்கிறார் திரு.வி.க.

-----------------------(திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள்)


நடேசனார் முன்னின்று உருவாக்கியது தான் மெட்ராஸ் யூனைடெட் லீக் (1912) ஆகும்.

அந்த அமைப்பின் தலைமை அலுவலகம் என்பதும் அவர் இல்லம்தான். மறு ஆண்டே அந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திராவிடர் சங்கம் (Dravidian Association) என்ற காரணப் பெயராயிற்று. பிற்காலத்தில் திராவிடர் இயக்கம் உருமலர்ச்சி பெற்றதற்கு இதுதான் கருவாகும்.

1914-ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி உயர்நிலைப் பள்ளி மாடியில் திராவிடர் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது.

ஸ்மால்காஸ் கோர்ட்டுகளின் பிரதம நீதிபதியாக விருந்த சி.கிருஷ்ணன் (பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் ஆனார்) ஆண்டு விழாவுக்குத் தலைமை ஏற்றார்.

அவ்விழாவில் பார்ப்பனர் அல்லாத பட்டதாரிகளுக்குப் பாராட்டும் ஏற்பாடாகியிருந்தது. அவ்விழாவில் சிறப்புரை ஆற்றியவர் டாக்டர் டி.எம். நாயர் ஆவார்.

ஏராளமான பார்ப்பனர் அல்லாத பெருமக்கள் அவ்விழாவில் கூடியிருந்தனர். அவ்விழாவில் நாயர் பெருமானின் உரை என்பது அற்புதம்! அற்புதம்!!

குறைபாடுகளைத் துணிவுடன் எடுத்துக் கூற வேண்டும் என்றும், நம் அமைப்பின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துக் கூறி வலுபடுத்த வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இறுதியில் அவர் பயன்படுத்திய சொல்லாடல்கள் விழியுங்கள்! எழுங்கள்!! இல்லையேல் என்றும் நீவிர் வீழ்ந்து பட்டோராவீர் (Awake, Arise or Be for Ever Fallen”)

டாக்டர் நடேசனார் பார்ப்பனர் அல்லாத சமூகத்துக்கு ஆக்கப் பூர்வமான தொண்டினை செய்தவர் ஆவார். அந்தக் கால கட்டத்தில் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்றால் சென்னைக்கோ திருச்சிக்கோ தான் செல்ல வேண்டும். ஆனால் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு விடுதிகள் கிடையாது. விடுதிகள் எல்லாம் பார்ப்பனர் களுக்குச் சொந்த மானவைகளாக யிருந்தன. பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் அந்த விடுதிகளிலிருந்து எடுப்புச் சாப்பாடு எடுத்து வந்து சாப்பிட முடியுமே தவிர உள்ளே உட்கார்ந்து சாப்பிட முடியாது. அந்த அளவுக்கு ஜாதி ஆணவம் கூட்டாம்பிள்ளைத்தனம் செய்து வந்தது.

அத்தகையதோர் சூழ்நிலையில் டாக்டர் சி. நடேசனார் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்காக விடுதி ஒன்றை- திராவிடர் சங்க விடுதி (Dravidian Association Hostel) ஒன்றை உருவாக்கினார் என்றால், அந்தப் பெரு மகனாரின் தொலைநோக்கு மதிநுட்பத்தையும், ஆக்கப் பூர்வச் செயல்பாட்டையும் எக்காலத்திலும் திராவிடர்கள் நன்றியுணர்வோடு நினைவு கூர்வர் 1916-ஆம் ஆண்டு நிகழ்த்த பொன்னெழுத்து அத்தியாயம் இது.


1920-ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி அபார வெற்றி பெற்றது. அதில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் டாக்டர் சி. நடேசனார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நீதிக்கட்சி அமைச்சரவை அமைத்தது என்றாலும் எந்தவித பதவிப் பொறுப்பிற்கும் டாக்டர் நடேசனார் செல்லவில்லை. அதே நேரத்தில் சட்டமன்றத்தில் பார்ப்பனர் ஆதிக்கத்தை வெடிகுண்டு வீசி தாக்கியது போல அவர் பணிகள் ஓங்கி நின்றன.

சட்டமன்றத்தில் கேள்வி நேரப் பகுதியில் நடேசனார் பயன்படுத்திக் கெண்டதுபோல, வேறு யாரும் பயன்படுத் திக் கொண்டது கிடையாது.

கேள்வியல்ல - வெடிகுண்டுகள்

வட ஆர்க்காடு மாவட்ட அலுவலங்கள் யாவும் ஒரே பார்ப்பனமயமாக இருந்தன. பார்ப்பனரல்லாதார் எவ்வளவு முயன்றும் உத்தியோகங்களை அடைய முடியவில்லை. தடைகள் விதிக்கப்பட்டும் பல அநீதிகள் நடைபெற்றன. இதைக் கேட்ட டாக்டர் சி.நடேச னார் சும்மா விடுவாரா அரசாங்கத்தை? ஆட்சி யாளருக்கு அவ்வநீதிகளை எடுத்துக் காட்டினார். நீதியையும் நேர்மையையும் பின் பற்றி நடக்கும்படி அறிவுறுத்தினார். சட்டசபையில் ரெவின்யூ மெம்பரைக் கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டார்.

அ. வட ஆற்காடு மாவட்டத்தில் நிரந்தரமாக வும் நிரத்நரமல்லாமலும் தாசில்தார், துணைத் தாசில்தார், சப் மாஜிஸ்ட்ரேட் ஆகிய பதவிகளில் இருந்துவரும் பார்ப்பனரல்லாதார் தொகையைத் தயவு செய்து ரெவின்யூ மெம்பர் கூறுவாரா?

ஆ. நிரந்தரமாகவும் நிரந்தரமல்லாமலும் தலைமை அக்கவுண்டண்ட் ரெவின்யூ இன்ஸ் பெக்டர் ஆகிய பதவிகளில் இருந்துவரும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் தொகையைத் தயவு செய்து ரெவின்யூ மெம்பர் கூறுவாரா?

இ. சமீபத்தில் மூன்று தாசில்தார்களைக் கீழ்ப்பதவிகளுக்கு இறக்கிய பிறகும்கூட, அப்பதவிகளில் ஆறுபேர் பார்ப்பனரும், நான்கு பேர் பார்ப்பனரல்லாதாரும் இருப்பதெப்படி? தாசில்தார், துணைத் தாசில்தார் பதவிகளுக்கு பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் ஆகியோருக்கு அவரவர் விகிதசாரப்படி உத்தியோகங்கள் கொடுக்கும் நடவடிக்கைகளை ஏன் அந்த மாவட்ட கலெக்டர் எடுத்துக் கொள்ளவில்லை?

இக்கேள்விகளுக்கு அரசாங்கத் தரப்பில் ரெவின்யூ மெம்பர் கூறிய பதிலாவது: சர்க்காருக்கு இவைகளைப் பற்றிய தகவல் ஒன்றுமில்லை என்பதுதான்!


கேட்கப்படும் கேள்விகளுக்கு இப்படிப்பட்ட பதில்களைக் கூறுவது அரசாங்கத்தின் தலை முறை தலைமுறை வழக்கமாகும். இப்படிப்பட்ட பதில்களைக் கேட்டவுடன் எடுத்துக்கொண்ட விஷயத்தை விட்டுவிடுபவர் அல்ல நம் நடேசனார். விஷயங்களைச் சூசமாகக் குறிப்பிட்டு மேலும் சர்க்கார் தரப்பினரை மடக்க முயற்சி செய்வார். வட ஆற்க்காடு மாவட்ட அலுவலகங்களில் . உத்தியோக விஷயமாக சர்க்காருக்கு தகவல் இல்லை என்ற மொட்டையான பதிலைக் கேட்ட டாக்டர் நடேசனார் ரெவின்யூ மெம்பரைக் கேட்டார்.

(அ) வட ஆற்காடு மாவட்ட ரெவின்யூ டிவிஷ னல் அலுவலக வருமானவரி அக்கவுண்ட் டன்ட் மற்ற மூன்று அக்கவுண்டண்டுகள் யாவரும் பார்ப்பனரே என்பது ரெவின்யூ மெம்பருக்குத் தெரியுமா? இவர்கள் யாவரும் சர்க்கார் குறிப்பிட்டுள்ள கல்வித் தகுதிகள் உடையவர்கள் தானா?

(ஆ) ரெவின்யூ டிவிஷனல் அலுவலகத்தில் அரை டஜன் பார்ப்பனரல்லாதார் துணைத் தாசில் தார் பதவிக்குத் தகுதியும் திறமையும் உள்ளவர் களாக இருக்கின்றனர் என்பதையும், அவர்கள் யாவரும் துணைத் தாசில்தார்களாக நியமிக்கப் படாமல் புறக்கணிக்கப்பட்டிருக் கின்றனர் என்பதையும், ரெவின்யூ மெம்பர் அறிவாரா?

(இ) வெளி மாவட்டக்காரர்கள் வட ஆற்காடு ரெவின்யூ அலுவலகங்களில் இறக்கு மதி செய்யப் படுவதும், துணைத் தாசில்தார் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதும் உண்மையா?

இக்கேள்விகளுக்கும் தெரியாது, தகவல் இல்லை என்று வழக்கமான விடைகளே கொடுக்கப்பட்டன, ரெவின்யூ மெம்பரால்!


இந்த அலட்சியமான விடையை கண்டு சலிப்படையவில்லை. டாக்டர் அவர்கள், வெளிப்படை யாகவே குற்றம் சாட்டி, சர்க்காரை மிரட்டினார், மேலும் மேலும் கேள்விகள் கேட்பதின்மூலம்,

அ. வட ஆற்க்காடு மாவட்ட கலெக்டர் அலுவலக சிரஸ்தார் பதவியானது 1936 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகப் பார்ப்பனர் களாலேயே வகிக்கப்பட்டு வருவது உண்மையா?

ஆ. வட ஆற்காடு மாவட்ட கலெக்டர் அலு வலக தற்போதைய சிரஸ்தார் ஒரு பார்ப்பன ரென்பதும் அவர் வேலூரில் சொத்துகளும் உடமைகளும் உடையனரென்பதும் உண்மையா? இவ் வுண்மை விஷயங்கள் கலெக்டர் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது என்பது உண்மையா?

இ. இந்த முக்கியப் பதவிக்கு இப்படிப்பட்ட ஒரு வரை நியமிக்க ஏதேனும் விசேஷ காரணம் உண்டா? இப்பதவிக்கு தகுதிபெற்ற பார்ப்பனரல் லாதார் ஒருவரும் இல்லையா?

தற்போதைய சிரஸ்தார் நியமிக்கப்படுவதற்கு முன்னால் அப்பதவிக்கு இருந்துவந்த சம்பளம், நியமிக்கப்பட்ட பிறகு இப்போதும் இருந்து வரும் சம்பளம் என்ன?

நடேசனார் கேட்டுள்ள கேள்விகளின் உட் பொருள்களை வாசகர்கள் நன்குணர்தல் கூடும். தெரியாது, தகவல் இல்லை என்ற பதிலைக் கூறி விட்ட சர்க்காரைப் பார்த்து உண்மைத் தகவல் களை நான் தருகிறேன், தெரிந்துகொள்; பார்ப்பனர்களுக்கு ஏகபோக உரிமை அளிக்கப்பட்டு வருவதை தடுத்து அவரவருக்கு ஏற்ற நிதியை வழங்கும் படி செய் என்று அறிவுறுத்துவது காண்க,

இக்கேள்விகளுக்கு ரெவின்யூ மெம்பர், வட ஆற்காடு கலெக்டர் அலுவலக சிரஸ்தார் பதவி யானது 1916-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ஆம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக பார்ப்பனர் களாலேயே வகிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது என்றும், மற்றக் கேள்விகளை பொறுத்தவரையில் சர்க்காருக்கு தகவல் ஒன்றுமில்லை என்றும் பதிலளித்தார்.

இந்தப் பதிலும் தெளிவாக இல்லாததாலும், நீதியைக் கடைபிடிக்க விருப்பமில்லாது கூறிய தாகத் தெரிந்ததாலும் மறுபடியுக டாக்டர் நடேசனார் அரசாங்க மெம்பரைக் கேள்விக் கேட்கத் தயங்கவில்லை.

(அ) வட ஆற்காடு கலெக்டர் அலுவலக தற்போதைய சிரஸ்தார் அப்பதவிக்கு வந்த பிறகு கலெக்டர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்ட பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதராகியோர் தொகை யைக் கனம் ரெவின்யூ மெம்பர் தெரிவிப்பாரா?

(ஆ) அரசாங்க உத்திரவின் பேரில் சமீபத்தில் நான்கு பார்ப்பனர்கள் முதல் வகுப்பு மாஜிஸ் திரேட்டுக்கு உயர்த்தப்பட்டது உண்மையா? அப்பதவிகளுக்குத் தகுதி பெற்ற பார்ப்பனரல்லா தார் ஒருவரும் அகப்படாமல் போய்விட்டனரா?


இப்படிப்பட்ட விளக்கமான கேள்விகளைக் கேட்டு அரசாங்கத்தின் அநீதிப் போக்கினார். கண்டித்தும் வெள்ளையர் ஆட்சி பார்ப்பனர் ஆட்சியாக மாறி உள்ளதை எடுத்துக்காட்டியும், பார்ப்பனரல்லாதாருக்கு உரிமையும் நீதியும் கிடைக்க வேண்டுமென்பதை அறிவுறுத்தியும், பார்ப்பனரல்லாதார் தகுதியும் திறமையும் உள்ளவர் களாகவும் இருந்தும், பார்ப்பனரால் அநீதி செய்யப் படுகின்றனர் என்பதை வெளிப்படுத்தியும், தொண்டு செய்வதில் டாக்டர் நடேசனாருக்குப் பெரிதும் பிடித்தமுண்டு. நடேசனார் கேட்ட கேள்விகள் அரசாங்கத்தினரிடமிருந்து உண்மை விடைகளைப் பெறுவதில் வெற்றியடையவில்லை, எனினும், மாவட்ட அலுவலகங்களில் நடைபெற்று வந்த பார்ப்பன அட்டூழியங்களைப் பொது மக்களுக்குத் தெரியப்படுத்திய ஒரு காரியமே போதும்.

கேட்ட கேள்விகள் சர்க்கார் தரப்பினால் அலட்சியமாகக் கருதப்பட்டு பதிலளிக்கப்பட்டா லும், அவர் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் பார்ப்பனர்களுக்கு ஒவ்வொரு வெடிகுண்டாக அமைந்தது என்றும் உண்மையைப் பார்ப்பனர் உள்ளிட்ட யாவரும் நன்கறிவர். இப்படியாக, சட்டசபையில் கேள்விக்குண்டுகளை விட்டெ றிந்து தீப்பற்றி எரியும்படி செய்து, அத்தீயில் பார்ப் பனீயத்தின் சுயநல ஆசை வெந்தொழிந்து போகும் படி செய்தவர். நம் நாட்டிற்கு நல்லோன் நடேசனாராகும்.

--------------(திராவிட தலைவர் டாக்டர் நடேசனார் வாழ்வும் தொண்டும் - கே. குமாரராசா (பக்கம் 49-51)

அந்தக் கால கட்டத்தில் பெரிய பெரிய பதவிகள் எல்லாம் ஆங்கிலேயர் வசம் இருந்தன. அவை இந்தியர் மயமாக்க வேண்டும் என்று காங்கிரஸ் குரல் கொடுத்தது உண்டு.

இதுபற்றி டாக்டர் சி. நடேசனார் சென்னை சட்டமன்றத்தில் விவாதித்த முறையும், திருத்தமும் அசோகர் கல்வெட்டுப் போன்றவை.

இந்திய மயமாக்குதல் என்றால் பார்ப்பனமயமாக்குதல் என்பதுதான் பொருளாக இருந்து வந்துள்ளது. இந்தியர் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே எல்லாவற்றையும் தனக்கே உரிமையாக்கிக் கொண்டு வந்துள்ளது. எனவே தீர்மானத்திற்கு ஒரு திருத்தம் கொண்டு வருவதுதான் என் நோக்கம். தீர்மானத்தில் இந்தியர் என்ற வார்த்தைக்குப் பதிலாகப் பார்ப்பனரல்லாதார் என்ற வார்த்தையைப் போடுக என்றார் டாக்டர் நடேசனார்.

இதைவிட பார்ப்பனர்களின் ஆதிக்கத்தையும் இந்தியர் என்ற போர்வையில் பார்ப்பனர்கள் நுழையும் அயோக்கியதனத்தையும் உண்டு இல்லை என்று சொல்லும் அளவுக்குத் தோலூரித்துக் காட்டி அவற்றை சட்டமன்ற ஆவணத்திலும் பதிவு செய்தார். எதிர்காலத்தில் எல்லா இலாக்காக்களிலும் உள்ள எல்லா கிரேடு உத்தியோகங்களும் பார்ப்பனரல்லாதாருக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் சரியான அளவினை எட்டும் வரை இம்முறை கடைபிடிக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தையும் சட்ட மன்றத்தில் முன்மொழிந்தவர் டாக்டர் நடேசனார் ஆவார்கள்.

1875-இல் பிறந்த நடேசனார் 1933 பிப்ரவரி 18-இல் காலமானார்.

இவ்வளவுத் தொண்டினையும் அவர் ஆற்றியிருந்தாலும் எந்த அரசுப் பதவிக்கும் சென்றவரில்லை. ஒரு முறை சென்னை மாநகராட்சி தலைவர் பதவிக்கு டாக்டர் நடேசனார் பெயர் முன்மொழியப்பட்டது. சர். முகம்மது உஸ்மான் பெயரை இன்னொருவர் முன் மொழிந்தபோது சற்றும் தாமதியால் நடேசனார் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து விட்டார் - அந்த அளவுக்குப் பெருமகனராக வாழ்ந்து காட்டியவர் அவர். பிட்டி தியாகராயரையும் டாக்டர் டி.எம். நாயரையும் ஒரே மேடையில் நிற்க வைத்து, தோளோடு தோள் இணையச் செய்த பெருமை டாக்டர் நடேசனாருக்கே சாரும். அதன் மூலம் பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தை - திராவிட இயக்கத்தைத் தோற்றுவிப்பதற்கான மூல விதையாக அவர் விளங்கினார் என்பதே உண்மை.

அவர் மறைந்த நிலையில் தந்தை பெரியார் அவர்களின் குடிஅரசு இதழ் (21.2.1937) டாக்டர் நடேசனர் நலிந்தார் என்ற தலைப்பில் வெளிவந்த கண்ணீர் எழுத்துகள் இதோ: டாக்டர் சி. நடேச முதலியார் நலிந்தார் என்ற சேதி கேட்டு நம் நாட்டில் திடுக்கிடாத பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அவரது சேவையைப் பாராட்டி, அவருக்கு நன்றி விஸ்வாசம் காட்டக் கடமைப் படாத தமிழ்மகன் எவனும் எந்நாட்டிலுமிருக்க மாட்டான். தோழர் நடேச முதலியாரிடம் உள்ள அருங்குணங்களில் சூது வஞ்சகம் அற்ற தன்மையே முதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதுமாகும்.

சூதற்றவனும் வஞ்சகமற்றவனும் உலகப் போட்டியில் ஒரு நாளும் வெற்றிபெற மாட்டான் என்கிற தீர்க்க தரிசன ஆப்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்த நடேசன் அவர்கள், தனது தொண்டிற்கும் ஆர்வத்திற்கும், உண்மை யான கவலை கொண்ட ஊக்கத்திற்கும் உள்ள பலனை தன் சொந்தத்துக்கு அடையாமல் போனதில் நமக்கு சிறிதும் ஆச்சரியமில்லை. ஏன்? தனக்கென வாழாதார் தான் பிறர்க்கென வாழ முடியும். ஆதலால் நடேசன் அவர்களால் தமிழ் மக்களுக்கு எண்ணரிய நன்மைகள் ஏற்பட்டி ருப்பதை அவரது எதிரிகளும் மறுக்கார்.

கொள்கை வீரர் - தன்னலமற்ற பெருந்தகை நடேச னார் நலிந்ததாலேயே தமிழ் மக்களுக்கு உழைக்கும் தயாளர் இல்லை என்ற நலிவு ஏற்படக் கூடாது என்பதே நமது அவா. ஆதலால் ஒரு நடேசன் நலிந்ததால் நாம் நலிவு கொண்டு விடாமல், 1000 நடேசனைக் காணுவோ மாக! நாம் ஒவ்வொருவரும் நடேசனே ஆக நாடுவோமாக!



வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி தியாகராயர்

வெள்ளுடைவேந்தர் என்று சொன்னால் அது பிட்டி தியாகராயர் என்ற பெருமானைத்தான் குறிக்கும். உடையில் மட்டுமல்ல; உள்ளத்திலும் பரிசுத்த தங்கமாகப் பொது வாழ்வில் ஒளியிட்ட ஏந்தல் அவர்.

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக ஆட்சியைப் பிடிப்பதற்கு முன் சென்னை மாநகராட்சியைத் தம் கைக்குள் கொண்டுவந்தது(1959).

முதல் மேயராக அ.பொ. அரசு தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழையு முன் வெற்றி பெற்ற 45 திமுக உறுப்பினர்களும் ஒரு சிலை முன் அணி வகுத்து நின்றனர். அண்ணாவின் கட்டளைப் படி அந்த சிலையின் முடி முதல் கால்வரை தொங்கும் ரோஜா மாலையை அணிவித்து திராவிட இயக்கம் ஆட்சிக் கட்டலில் ஏறுவதற்கு கடைக்கால் போட்டவர் நீவிர் அன்றோ! அதற்கு ஒரு சிறு நன்றிக் காணிக்கை இந்த ரோஜா மாலை என்று சூட்டினர் (24.4.1959). அந்தச் சிலை வேறு யாருடையதாக இருக்க முடியும் - வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் சிலையைத் தவிர? நீதிக்கட்சியின் தோற்றுநர்கள் மூவர் என்று கூறப்பட் டாலும், அதில் முக்கியமான இடத்துக்கு உரியவர் சர்.பி. தியாகராயரே!

1916 டிசம்பர் 26-இல் அவர் வெளியிட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை:

சமுதாய வாழ்க்கையிகல பிராமணர் முதலிடம் பெற்றிருப்பதும், உடலுழைப்பில்லாதவாறு அன்னார் வாழ்க்கை முறை அமைந்திருப்பதும், மோட்ச உலகத் திற்கு வழிகாட்டிகளாக அவர்கள் மதிக்கப்படு வதுமே இந் நாட்டில் பிராமணரை பெரு வாழ்வு வாழச் செய்து விட்டது என்று அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தந்தை பெரியாரின் வீச்சு போல இப்பகுதி அமைந்துள்ளது.

அரசுப் பணிகளில் பார்ப்பனர் கொடி கட்டி ஆண்ட ஆதிக்கத்தைப் புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத் தார் அவ்வறிக்கையிலே; அதனைப் படித்த நியாயவாதிகள் யாருக்குத்தான் குருதிக் கொதிப்பு ஏறாது?

ஆனால் இந்த அறிக்கையை பார்த்த இந்து ஏட்டுக்கும் இரத்தக் கொதிப்பு ஏற்பட்டது.

இது தேசிய நலனுக்கு ஆபத்தானது (Perilous to the National Cause) என்றது இந்து; நாட்டு முன்னேற் றத்தின் எதிரிகளுக்குத் துணை போவது என்று பாசாங்கு செய்தது.

ஆழ்ந்து துயரத்துடனும், ஆச்சரியத்துடனும், நாங்கள் தியாகராயரின் ஆவணத்தை ஆராய்ந்தோம் (It is with much pain and surprise we persued the document) என்று புலம்பியது என்றால் எந்த அளவுக்குப் பார்ப்பனர் அல்லாதார் நலனுக்குத் தியாராயர் அறிக்கை மாமருந்தாக இருந்திருக்கும் என்பதை அறியலாம்.

1920-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்திற் கான முதல் தேர்தலில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) பெரும் வெற்றியை ஈட்டியது; கட்சியின் தலைவர் என்கிற முறையில் தியாராயரை ஆளுநர் லார்டு வெல்லிங்டன் முதல் அமைச்சர் பதவி ஏற்க அழைத்தார். அதற்கு பிட்டி தியாகராயர் எழுத்து மூலமாக அளித்த பதில் தியாகராயரை மானுடத்தின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தி விட்டது.

இந்திய வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லை எனும்படி அரசியல் ஞானமற்ற பாமர மக்களைத் தட்டி எழுப்பிய பாவத்துக்காக என்னையும் அகால மரண மடைந்த என் அருமை சகத் தலைவர் டாக்டர் டி.எம். நாயரையும் வெள்ளையரின் வால் பிடிப்பவர்கள் என்று காங்கிரஸ் தலைவர்களும், அவர்களடைய பத்திரிகைகளும் தூற்றுகின்றன.

நான் இப்பதவியை ஏற்பனேயானால், எனது புனிதமான கட்சிக்குக் களங்கம் விளைவித்தவன் ஆவேன். அதனால் நான் பதவி ஏற்க மாட்டேன்; மன்னிக்க வேண்டும் என்று எழுதினாரே, அது என்ன சாதாரணமா?

வெள்ளுடை வேந்தரின் பெருந் தன்மையைப் பற்றி ஒரு நிகழ்ச்சி மூலம் திரு.வி.க. விளக்குகிறார்.

வரி உயர்வைக் குறித்து நகரசபையில் நடைமுறையை மறுத்தற்கென்று சென்னை ஹைகோர்ட் கடற்கரையில் ஒரு போது ஒரு கூட்டம் கூடியது. அக்கூட்டத்தில் யானும் பேசினேன். பேச்சிடை நகரசபையிலே தியாகராய செட்டி யார் தலைமையால் நற்பயன் விளையவில்லையென்றும், அவர் கும்பலே அச்சபையில் அதிகமென்றும், அதைக் காங்கிரஸ் மயமாக்குதல் வேண்டுமென்றும் குறிப்பிட்டு, ஜஸ்டிஸ் கட்சியைத் தாக்கினேன். இரண்டொரு நாள் கடந்து யான் பிராட்வே வழியே நடந்து சென்றேன். தியாகராயசெட்டியார் மோட்டார் வண்டி அவ்வழியே வந்தது. வண்டி நின்றது. தியாகராயர் என்னைப் பார்த்தார். யான் அவரைப் பார்த்தேன். வணக்கஞ் செய்து கொண்டோம். தியாகராய செட்டியார் வண்டியை விடுத்திறங்கினார். யான் நெருங்கினேன். செட்டியார் தமது முதுகைக் காட்டி அறை அப்பா; அறை அப்பா என்றார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னே கடலோரத்திலே வாயால் அறைந்தீரே; இப்பொழுது கையால் அறையும் என்று நகைத்தார். சிறு கூட்டம் தேங்கியது. வெட்கம் என்னை அரித்தது. யான் செட்டியார் வண்டியிலேறிப் பதுங்கினேன். முதியவரும் ஏறினார். வண்டி காஸ்மோபாலிட்டன் கிளப் சென்றதும் யான் விடை பெற்றேன். வழியெல்லாம் உரையாடலே.

---------------(நூல்: திருவிக வாழ்க்கை குறிப்புகள்)

நீதிக்கட்சி தலைவர்களான பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், தந்தை பெரியார் ஆகியோர் பார்ப்பனர்களால் இராட்சதர் ஆக்கப்பட்டது குறித்து, தந்தை பெரியார் திருச்சியில் ஒரு உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களில் மிக முக்கியமானவ ரான சர். பி.தியாகராயச் செட்டியார்கூட ஆரம்பத்தில் தேசிய வாதியாக இருந்தவர்தான். 1914-ல் சென்னையில் நடை பெற்ற காங்கிரஸ் மாநாட்டின் காரியதரிசியாயிருந்து அரும்பெரும் தொண்டாற்றியவர்தான் அவர். பிறகுதான் அவரும் இன உணர்ச்சி பெற்றார். ஆகவே, நாங்களெல்லாம் துவக்கத்திலேயே இராட்சதர்களாக ஆக்கப்பட்டவர் அல்லர். அடிமைகளாயிருந்து பிறகு அவர்களின் கொடுமை தாங்க முடியாமல், இழிவுபற்றிய உணர்ச்சி பெற்று விழிப்படைந்தவர்கள் தாம் நாங்கள். அப்படி மான விழிப் புணர்ச்சி பெற்ற பிறகுதான் நாங்கள் இராட்சதர்களாக் கப்பட்டோம்.

பிறகுதான் அவர்கள் எங்களை விட்டுவிட்டு வேறு விபீஷணர்களைப் பிடிக்க ஆரம்பித்தார்கள். உத்தியோகத் தில் நம் இனத்தவருக்கு உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான், காங்கிரஸ் ஸ்தாபனம் வேறு பக்கம் பார்க்க ஆரம்பித்தது. அதுவரை அது வெறும் உத்தி யோகக் கோரிக்கை ஸ்தாபனமாகத்தான் இருந்துவந்தது.

காங்கிரசின் ஆரம்பகால சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இதன் உண்மை விளங்கும். அப்போதெல் லாம் காங்கிரஸ் மாநாடுகளில் முதலாவதாக இராஜவிசுவாசப் பிரமாணத் தீர்மானம் நிறைவேற்றப்படும். வெள்ளை யரை இந்நாட்டுக்கு அனுப்பியதற்காகக் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படும். அவர்கள் ஆட்சி நீடூழி காலம் இருக்க வேண்டுமென்று வாழ்த்துச் செய்யப்படும். சென்னையில் 1915-ல் நடைபெற்ற மாநாட்டில் இம்மாதிரி இராஜவிசுவாசத் தீர்மானம் காலை ஒருமுறையும், மாலையில் கவர்னர் விஜயத்தின்போது மற்றொரு முறையும் ஆக இரண்டு முறைகள் நிறைவேற்றம் ஆகியது எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருந்து வருகிறது.

ஆகவே, வெள்ளையர் வழங்கிய உத்தியோக சலுகை களில் நம் இனத்தவருக்கும் உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான் - வெள்ளையர்களும் கொஞ்சம் நமக்குச் சலுகை தர ஆரம்பித்த பிறகுதான் - காங்கிரஸ் இயக்கமானது ஒரு தேசிய ஸ்தாபனமாக மாறி, வெள்ளையர்கள் வெளியேற வேண்டும் என்று கூறிற்றே ஒழிய அதுவரை - அது பார்ப்பனர்களுக்குப் பதவி தேடித் தரும் ஸ்தாபனமாகத்தான் இருந்து வந்தது என்பது கண்கூடு.


-------------------------(விடுதலை 14.12.1950)

இன்றைய திமுக ஆட்சி என்பது நீதிக்கட்சி வழி வந்த ஆட்சி என்கிற காரணத்தால் நீதிக்கட்சியின் மூவேந்தர் களின் நினைவைப் போற்றும் வண்ணம் மத்திய அரசின் மூலம் அஞ்சல் தலை வெளியிட்டிருப்பது - பொருத்த மானது மட்டுமல்ல- நன்றிக் காணிக்கையுமாகும்.

30.6.1950 அன்று சென்னை திருவல்லிக்கேணி தியாகராயர் நினைவுக் கூட்டத்தில் இன்று நூற்றாண்டு காணும் அறிஞர் அண்ணா அழகாக - ஆழமாக ஒரு கருத்தினைப் பதிவு செய்தார்.

இன்று நாம் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு மூலக் காரணம் யார்? நம் தியாகராயர். திராவிட இயக்கத்துக்குப் புத்துயிர் அளித்த பூமான் அவர். அவர் காலத்திலே தூவிய விதை நன்றாக வளர்ந்திருக்கிறது. அவர் அன்று பறக்கவிட்ட புரட்சிக் கொடியின் கீழ் நின்று தான் இன்று பணியாற்றி வருகிறோம் என்றார் 1950-இல் கூறினார் அறிஞர் அண்ணா. 2008-இல் மானமிகு கலைஞர் அவர்களின் தலைமையில் அதுதான் அந்த திராவிடர் ஆட்சிதான் நடந்து கொண்டு இருக்கிறது.

அன்று நீதிக்கட்சி ஆட்சியைப் பார்ப்பனர்கள் எதிர்த்தது போலவே இன்று திராவிடர் இயக்க ஆட்சிக்கும் எதிர்ப்பைக் கொடுத்தவண்ணம் உள்ளனர். தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக!

திராவிட லெனின் டாக்டர் டி.எம். நாயர்

டாக்டர் டி.எம். நாயர் எத்தகையவர்? வெகுதூரம் தேட வேண்டாம். திராவிட லெனின் என்று தந்தை பெரியார் அவர்களே போற்றியதற்குப் பிறகு நாயரைப் பற்றி தெரிந்து கொள்ள எந்த கலைக் களஞ்சியத்தைத் தேடித் திரிய வேண்டும்-

தந்தையார் மாவட்ட முன்ஷிப், தமையனார் அந்தக் காலத்திலேயே இங்கிலாந்து சென்று, பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்.

டாக்டர் நாயரோ எடின் பார்க் சென்று மருத்துவப் படித்தவர். புகழ் பெற்ற காது, மூக்கு, தொண்டை அறுவைச் சிகிச்சை நிபுணர்.

அத்தகைய புகழ் பெற்ற ஒருவர் பார்ப்பனர் அல்லாதாருக்காக தொண்டாற்ற முன் வந்தவர் என்றால் சாதாரணமானதா?

இப்படி ஒருவர் பார்ப்பனருக்குக் கிடைத்திருந்தால் பாரெங்கும் முதுகில் தூக்கிச் சுமந்து சென்று மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று பறைசாற்றி யிருக்க மாட்டார்களா?

தொடக்கத்தில் பகுத்தறிவுவாதியாகக் காட்சி அளித்த அதன்பின் பார்ப்பன சனாதனப் பஞ்சு மெத்தையில் சாய்ந்த அய்ரிஷ் பெண்ணான அன்னிபெசண்ட் அம்மையாரை மகாவிஷ்ணுவின் அம்சம் என்று சொன்னவர்கள்தானே பார்ப்பனர்கள்.

சென்னை மாநகர கவுன்சிலராக (1904-1916) தன் பொது வாழ்வைத் தொடங்கிய டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் திராவிட இயக்கத்தில் முப்பெரும் தலைவர்களுள் நடுநாயகமாகத் திகழ்ந்தவர் சிறந்த பகுத்தறிவுவாதி.

நீதிக்கட்சியின் தந்தை என்று போற்றப்படும் பிட்டி தியாகராயருக்கும், டாக்டர் நாயருக்கும் மோதல் வந்ததே அவர்கள் இருவரும் சென்னை மாநகராட்சி உறுப்பினர் களாகயிருந்தபோது, கோயில் குளம் பிரச்சினையில்தான்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயி லுக்குச் சொந்தமான தெப்பக்குளம், பாசி படர்ந்து போய், வாரம் ஒரு தற்கொலை நிகழும் பாழுங்குள மாக உருமாறிக் கிடந்தது; கொசுக்கள் உற்பத்திக்கான மூல ஊற்றாகவும் ஆயிற்று. அதன் காரணமாக மலேரியா காய்ச்சல் ஏற்பட்டு பலரும் பலியான சூழலில் மாநகராட்சி உறுப்பினரான டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை முன் மொழிந்தார்.

சென்னை மாநகரில் சுகாதார நலனைக் கருதி பாழடைந்து போன தெப்பக்குளத்தை மூடி, அழகான பூங்கா ஒன்றை நிறுவலாம் என்பதுதான் அந்தத் தீர்மானம்!

அம்மன்றத்தின் மூத்த உறுப்பிரான பிட்டி தியாகரா யருக்கு வந்ததே கோபம்! அடப்பாவி! நீயும் ஒரு இந்துவாக இருந்து இந்த அடாத தீர்மானத்தை மொழியலாமா? என்று மூக்கின் மேல் கோபம் கொப்பளிக்கப் பொரிந்து தள்ளினார்.

அதே தெப்பக்குளம் குறித்த இன்னொரு தீர்மானத்தை பிட்டி தியாகராயர் முன்மொழிந்தார் (1914).

1908 ஆண்டு தீர்மானித்தபடி பார்த்தசாரதி திருக்குளத்துக்கு வரியில்லாமல் தண்ணீர்விட வேண்டும் என்பதுதான் அத்தீர்மானம்.

டாக்டர் டி.எம். நாயர் என்ன செய்தார்? கடுமையாக எதிர்த்தார்.

இந்தக் கோயிலுக்கு மட்டும் வரியில்லாமல் தண்ணீர் கொடுத்தால் மற்ற கோயில்களுக்கும் அவ் வாறே கொடுக்க நேரிடும். மேலும் பார்த்தசாரதி கோயில் குளம் பொதுக் குளம் அல்ல; கோயில் குளம், கோயிலுக்கு நல்ல வருமானம் வருகிறது. இந்த நிலையில் ஏன் வரியில்லாமல் தண்ணீர் கொடுக்க வேண்டும்? என்ற நியாயமான பகுத்தறிவு எதிர் பதிலைத்தாக்கல் செய்தார் டாக்டர் நாயர். நாயரின் இந்தக் கருத்துக்கு ஆதரவு கொடுத்தவர் யார் தெரியுமா? நீதிக்கட்சியின் மூவேந்தர்களுள் ஒருவ ரான டாக்டர் சி. நடேசனார். நீதிக்கட்சியின் தோற்றம் உருவானதில் கோயில்கள் முக்கியமான பங்கை வகிக்கின்றன என்று சொன்னால் ஆச்சரியம்தான்.

எதிரும் புதிருமாக இருந்த பிட்டி தியாகராயரையும், டாக்டர் டி.எம். நாயகரையும் ஒன்று சேர வைத்த பெருமை - சென்னை மயிலாப்பூர் - கபாலீசுவரர் கோயிலைத்தான் சாரும்.

மயிலாப்பூர் கோயில் குட முழுக்குக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்த பெருந் தனவந்தர் தான் பிட்டி தியாகராயர். அந்தக் கால கட்டத்தில் பத்தாயிரம் ரூபாய் என்றால், அது சாதாரணமானதல்ல.

குடமுழுக்கு விழா அன்று ஆன்மீகக் கொழுந்தா கிய பிட்டி தியாகராயர் சென்றார். ஆனால் என்ன நடந்தது? விழா மேடையில் அமர அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் அவர் அலுவல கத்தில் சிப்பந்தியாகயிருந்த பார்ப்பான் மேடையில் அமர்ந்திருந்ததைக் கண்ணுற்றார் சர். தியாகராயர். கண்கள் சிவந்தன; சுயமரியாதைச் சூடு பிடித்தது; வாகன ஒட்டியை அழைத்து நேராக டாக்டர் நாயர் வீட்டுக்குப் போகச் சொன்னார்; ஆம், வட துருவமாக வும், தென் துருவமாகவும் இருந்த இரு பார்ப்பனர் அல்லாத தலைவக்ளும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிச் கொண்டனர்.

பார்ப்பனர் அல்லாதார் வரலாற்றில் அந்நாள் ஒரு பொன்னாளே!


பின்னாளில் பிட்டி. தியாகராயர், டாக்டர் சி. நடேசனார், டாக்டர் டி.எம். நாயர் ஆகிய மூம்மூர்த்தி களும் இணைந்து உண்டாக்கியதுதான் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (The South Indian Liberal Federation) என்ற நீதிக்கட்சியாகும். அறுபது ஆண்டுகள்கூட வாழாத டாக்டர் நாயரின் வாழ்க்கையில் இடம் பெற்ற முத்துக்குளியல்களும் பார்ப்பனர்களை எதிர்த்து நடத்திய வேட்டையாடுதல்களும் மிக அதிகம்.

ஜஸ்டிஸ் ஏட்டின் ஆசிரியராகயிருந்து அவரால் எழுதப்பட்ட தலையங்கங்களும், கட்டுரைகளும் எதிரி களின் மூளைகளுக்குப் பெரும் குடைச்சல்களைக் கொடுத்து விடும். ஏன் சில நேரங்களில் தலைகளைக் கூடப் பந்தாடிவிடும்.

பார்ப்பனீயத்தில் வக்கீலாகப் புறப்பட்டு வந்த அயர்லாந்து பெண்மணி அன்னி பெசன்ட்டின் வார்த்தைகளைக் கொண்டே டாக்டர் நாயரின் எழுத்துக் கூர்மையை அறிந்து கொள்ளலாம்.

என் உடலை தீ சுடுகின்றவரையில் நாயரின் சொற்கள் என்னை சுடாமல் இருக்காது. நான் வயதான பெண். இதற்கு மேல் நான் இதைப்பற்றி ஒன்றும் கூறப் போவதில்லை

எதிரியே சான்று கொடுத்த பிறகு நாயருக்குப் வேறு புகழாரம் எதற்கு?

எழுத்து மட்டுமல்ல; பேச்சும் அப்படித்தான். அப்படி ஒரு அழகும், ஆணித்தரமும் அவருடைய பேச்சில் உலாவரும்.

சென்னை சேத்துப்பட்டு ஸ்டாபர்டங்க் சாலையில் அவர் ஆற்றிய உரை ஒன்று போதுமே (விரித்தால் பெருகும்)

இங்கிலாந்து நாடாளுமன்றத்திலே அந்த சிங்கம் கர்ச்சித்தது.

பார்ப்பனர் அல்லாதாரின் இடஒதுக்கீட்டுக்காக லண்டன் சென்ற இடத்தில் அவருடைய நீரிழிவு நோய் அவரைச் காவு கொண்டு விட்டது.

அவர் மரண செய்தியை செவி மடுத்த நேரத்தில் மயிலாப்பூரும், மாம்பலங்களும், திருவல்லிக்கேணி களும் வாண வேடிக்கை நடத்திக் கொண்டாடி மகிழ்ந்தன. திருவல்லிக்கேணி பெரிய தெரு பிள்ளையார் கோயிலில் ஆயிரம் தேங்காய்களை உடைத்தனராம், என்னே பார்ப்பனர்களின் குரூரம்!

லண்டனில் டாக்டர் நாயர் இறந்த நேரத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் பார்ப்பனத் தலைவர்கள் லண்டனில் இருந்தும்கூட, ஒரு மனிதாபிமானத்துக் காக நாகரிகத்துக்காகக்கூட நாயரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த செல்லவில்லை; இதுதான் பார்ப்பனர்களின் பண்பாடு!

எதியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும், சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்ப்பான் தன் பிறவிக் குணத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டான் என்று சொன்னவராயிற்றே டாக்டர் நாயர்.


டாக்டர் நாயரைபற்றி குறிப்பிடும்பொழுது இன்றைய நூற்றாண்டு விழா நாயகரான அறிஞர் அண்ணா அவர்கள் அவரைப்பற்றி ஆற்றிய உரையின் ஒரு குறிப்பைச் சுட்டிக் காட்டுவது பொருத்தமே.

11.8.1957 அன்று மதுரையில் 1957-1967 என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரையில் டாக்டர் நாயர் என்னும் தங்கம் பத்தரை மாற்றுடையது என்பதை எடுத்துக் காட்டியுள்ளார். படியுங்கள்.

டாக்டர் நாயர் அவர்கள் அரசியல் துறையி லேயும், பொருளாதாரத் துறையிலேயும், சமுதாயத் துறையிலேயும் சேர்ந்து பணியாற்றிய ஒரு பெரும் தலைவர் ஆவார்கள்.

இன்றைய தினம் திராவிடர் இயக்கத்தை எப்படி காங்கிரஸ் தலைவர்கள் கருவறுத்து விட வேண்டும் என்று கூசாது, அஞ்சாது, பல பழிகளைச் சுமத்துகிறார்களோ, அபபடிப் பட்ட பல பழிச் சொற்களை எல்லாம் டாக்டர் நாயர் பேரிலும் சுமத்தி இருக்கிறார்கள். எப்படி இத்தனைப் பழிச் சொற்களைத் தாண்டி திராவிடர் இயக்கம் உயிர் வாழ்ந்து கொண் டிருக்கிறதோ, உயிர் வாழ்வது மட்டுமல்ல, புது வலிவினைப் பெற்றுக் கொண்டு வளர்ந்து வருகிறதோ அதைப் போலவே டாக்டர் நாயர் அவர்களும் அந்தப் பழிச் சொற்களை எல்லாம் தாண்டி, அவர் வாழ்ந்திருந்த காலம் வரையில் அவர் தமிழ்நாட்டினுடைய துர்ப்பாக்கிய வசத்தால் அதிக காலம் வாழ்ந்திருக்கவில்லை. வாழ்ந்திருந்த காலம் வரையிலே மாற்றார்கள் வீசி எறிந்த கணைகளைத் தாங்கக் கூடிய நெஞ்சு உரத்தைப் பெற்றிருந்தார். ஒரு தடவை டாக்டர் நாயர் அவர்களை காங்கிரஸ் இயக்கத் தைச் சார்ந்த பெரும் தலைவர்கள் - மைலாப் பூரையும், திருவல்லிக்கேணியையும் சேர்ந்தவர் கள் - கேலியாகச் சொன்னார்கள்.

டாக்டர் நாயரைப் போன்றவர்கள் எல்லாம் வெள்ளைகாரனுக்குத் துதிபாடிக் கொண்டிருக் கிறார்கள். வெள்ளைக்காரனுக்கு தாசனாக இருக்கின்றார்கள். வெள்ளைக்கார ஏகாதிபத் தியத்தைத் தாங்குகிறார்கள் என்று டாக்டர் நாயர் சொன்ன வாசகத்தை நான் அவர் களுடைய வரலாற்றுக் குறிப்புகளிலே இருந்து படித்துப் பார்த்திருக்கிறேன். அவர் சொல்லி யிருக்கின்றார், தேசியம் பேசுகின்ற என்னு டைய காங்கிரஸ் நண்பர்கள் இந்தியாவிலே சம்பாதிக்கின்ற பணத்தை இங்கிலாந்திலே கொண்டுபோய்ச் செலவழிக்கிறார்கள். நான் இங்கிலாந்திலே வைத்தியசாலை நடத்தி இங்கி லீஷ்காரன் பணத்தை சம்பாதித்துக் கொண்டு வந்து இந்தியாவிலே செலவழிக்கிறேன். நான் உண்மை தேசியவாதியா? இவர்கள் உண்மையான தேசீயவாதிகளா? என்று கேட்டார். மற்றொரு தடவை டாக்டர் நாயர் அவர்கள் இந்த நாட் டுத் தேசீயவாதியா? இவர்கள் உண்மை யான தேசீயவாதிகளா? என்று கேட்டார். அந்தக் காலத்து ஆங்கிலப் பத்திரிகையிலே வெளி வந்து, தமிழ்நாட்டினுடைய கருத்துக் கருவூலம் அதிலே இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.

அவர் எழுதியிருக்கிறார், எந்த நேரத்திலா வது சரி, At any time Tamillans will prefer london or Delhi என்று தெளிவாக எழுதியிருக்கிறார்.

நீ இலண்டனிலே அடிமைப்பட்டிருக் கிறாயா? டெல்லிக்கு அடிமைப்பட்டு இருக்கி றாயா? என்று கேட்டால் தென் இந்தியர்களா கிய நாங்கள் வேண்டுமானால் இலண்டனுக்கு அடிமைப்பட்டிருந்து விடுதலை பெறுவோமே தவிர டில்லிக்கு அடிமைப்பட்டிருக்க மாட் டோம் என்று டாக்டர் நாயர் அவர்கள் அன்றையதினமே எழுதி வைத்து இருக்கிறார்கள்.



------------------கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம் அவர்கள் அக்டோபர் 1-15 2008 "உண்மை" இதழில் எழுதிய கட்டுரை

6 comments:

bala said...

கருப்பு சட்டை பொறிக்கி,திராவிட முண்டம் அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,
இந்த மூஞ்சிகள் திராவிட மூவேந்தர்கள் என்றால்,தாடிக்கார சகுனி தாத்தா,அண்ணாதுரை,மஞ்ச துண்டு போன்ற மூஞ்சிகள் வெறும் குறுநில மன்னர்கள் தானா?விளகமா சொல்லுங்கய்யா.

பாலா

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பொறுக்கி பாலா,
உனக்கு நாகரிமாகவே எழுதத் தெரியாதா?
அது எப்படி முடியும்.

வேத காலத்தில் பிறந்தவன் பார்ப்பானாச்சே.அதைவிட்டு ஒரு அடி கூட முன்னேற்றம் இல்லாதவனிடம் எப்படி நாகரிகத்தை எதிர் பார்க்க முடியும்.

பார்ப்பானின் புத்தி அவ்வளவே.

பைத்தியகாரனுக்கும், பார்ப்பானுக்கும் வேறுபாடு இல்லை.

தமிழர்களே பொறுத்தருள்வீர்களாக.

bala said...

கருப்பு சட்டை பொறிக்கி,திராவிட முண்டம் அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

கேள்விக்கு பதில் சொல்லவில்லை,ஆனால் டிபிகல் மானமிகு முண்டம் பாசறையின் சொறி நாய் போல் வெறி பிடித்து குரைக்கிறீர்கள்.பாவம் பழனி பாசறை முண்டத்துக்கு வேறு என்ன செய்யத் தெரியும்.

பாலா

தமிழ் ஓவியா said...

பைத்தியகாரனுக்கும், பார்ப்பானுக்கும் வேறுபாடு இல்லை. என்பதை சரியாக நிரூபித்துள்ளான் பார்ப்பன பொறுக்கி பாலா.

பார்ப்பானுக்கு முன்புதியும் இல்லை. பின்புத்தியும் இல்லை என்பதும் சரியாத்தான் இருக்கு.

தமிழ் ஓவியா said...

பைத்தியகாரனுக்கும், பார்ப்பானுக்கும் வேறுபாடு இல்லை. என்று நாம் சொல்லி வருவதற்கு சான்றாக இன்று வந்துள்ள செய்தியை உங்களின் பார்வைக்கு வைக்கிறோம்.


"

பைத்தியம் பிடிப்பது எப்படி என்பதுபற்றிய ஆய்வு
தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களிடம் நடத்தப்பட்டது

காரணமான மரபணு கண்டறியப்பட்டது

சென்னை, அக். 18- மனநோய்ப் பாதிப்பு எப்படி ஏற்படுகிறது, அதற்குக் காரணமான மரபணு எது? என்பதுபற்றிய ஆய்வு கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஸ்கார்ஃப் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பு இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

இதற்காகத் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் 441 பேரிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இவர்கள்தான் யாரிடமும் நெருங்காமல் ஒதுங்கித் தனித்து வாழும் இயல்பைக் கொண்டிருக்கிறார்கள் என்பதால், முதிய, வயதான பார்ப்பனர்களிடையே மட்டும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்கிறார் இதன் இயக்குநரான மருத்துவர் தாரா ரங்கசாமி.

ஏற்கெனவே இதுபோன்ற ஆய்வு மங்கோலிய இனத்தைச் சேர்ந்த சீனர்கள், காகேசிய இனத்தைச் சேர்ந்த அய்ரோப்பியர்கள் ஆகியோரிடம் செய்யப்பட்டுள்ளது. சில அறிகுறிகள் தென்பட்டன என்றாலும், தமிழகப் பார்ப்பனர்களிடம் கிடைத்தவை குறிப்பிடத்தக்கவையாக அமைந்துள்ளன. உலக மக்களில் ஒரு விழுக்காட்டினர்க்கு மனநோய்ப் பாதிப்பு உள்ளது. இளம் வயதில் உள்ளோர்க்கு இப்பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கான மரபணு 1 என்பதுபற்றி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவைபற்றி விரிவான ஆய்வுகள் மற்ற இனத்தவரிடமும் மேற்கொள்ளப்படுமாம்.

மக்களுக்குப் பைத்தியம் பிடித்தால் வீட்டில் இருப்பதை வீதியில் எறிவார்கள்; பார்ப்பனர்களுக்குப் பைத்தியம் பிடித்தால், வீதியில் இருப்பதை வீட்டுக்குள் எடுத்துப் போடுவார்கள் என்று பெரியார் பார்ப்பனர்களில் உள்ள பைத்தியங்களைப்பற்றிக் கூறுவார். மனநோய் மருத்துவமனையில் கூடப் பார்ப்பனப் பைத்தியங்களுக்குத் தனி வார்டு இருந்தது என்பது வரலாறு. இப்போது, பைத்தியம் பிடிக்கக் காரணம் எது என்பதைப் பார்ப்பனர்களிடையே மட்டும் ஆய்வு செய்திருக்கிறார்கள் என்கிறது செய்தி!

இதிலும்கூட "அவாள்" தனித்தன்மை பெற்றவர்கள்தான் போலிருக்கிறது."

----------"விடுதலை" 18-10-2008 பக்கம் -3

butterfly Surya said...

இப்படி தெரு நாய் போல சண்டை போடவா பிளாக் நடத்துகிறீர்கள்.. அசிங்கம்..

வீரமணி என்ற சுயநல அரசியல் தலைவானுக்கு எதுக்கு காவடி..??