ஒரு நாட்டின் முதலமைச்சர் ஆவதற்கு - உழைப்புத் தேவையில்லை, தியாகம் தேவையில்லை, தொண்டு தேவையில்லை - ஆற்றல்கள் தேவையில்லை, அறிவும் தேவையில்லை, வெறும் சினிமா கவர்ச்சி - அதன்மூலம் கிடைக்கும் பாமரத்தனமான விளம்பரம் மட்டுமே போதும் என்கிற ஒன்றையே முதலீடாக வைத்து அரசியல் துரைத்தனம் நடத்த ஆசை கொண்டு நிற்கும் விஜயகாந்த் என்ற நடிகர் ஒரு தவறான முன்னு தாரணத்துக்கு முன்னோடி இந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரவில்லையா - முதல் அமைச்சர் ஆகவில்லையா என்று சமாதானம் கூறும் சமர்த்தர்கள் உண்டு.
அந்த எம்.ஜி.ஆர். நேற்று பெய்த மழையில் உடனே முளைத்த காளான் இல்லை. தி.மு.க.வில் பல ஆண்டுகள் இருந்து, பிரச்சாரம் செய்தவர். கொடை உள்ளம் கொண்டவர். ஒரு கட்டத்தில் கட்சியின் பொருளாளராக இருந்தவர். இந்தப் பின்னணிகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாமா?, அவருக்கு சினிமா ரசிகர் மன்றங்கள் இருந்தன. கவர்ச்சியும் இருந்தது என்பதும் இந்தப் பின்னணிக்கு மேலும் இருந்த கூடுதல் பலம் அவ்வளவுதான்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிகச் சிறந்த நடிகர்தான். அவருக்கு ரசிகர் மன்றங்கள் உண்டு என்றாலும் கூட அவர் அரசியலில் பரிணமிக்கவில்லை என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் காரணத்தைக் கொஞ்சம் ஆழமாகவும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஒரு கட்சியின் மாநில மாநாட்டுக்கு மக்கள் திரள்வது என்பது ஒன்று - திரட்டப்படுவது என்பது இன்னொன்று. இந்த இரண்டாவது வகையில் பெரும்பாலும் செலவு செய்து மக்களைத் திரட்டி - அந்த மக்கள் எண்ணிக்கையின் மூலம் இதோபார் எனக்கும் மக்கள் கடல் - நான்தான் அடுத்த முதல்அமைச்சர் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் தேவை? என்று மார்தட்டி, தொண்டர்களை உற்சாகப்படுத்துவது என்பது புரிந்துகொள்ள முடிந்த ஒன்றுதான். இவர் கட்சியைத் தொடங்கிய நாள் முதல் அவர் கூறிவந்த கருத்துகளைத் தொகுத்துப் படித்துப் பார்த்தால் அப்படிப் படிக்கிறவர்கள் பைத்தியம் பிடிக்காமல் போனால் ஆச்சரியம்தான்!
அதுவும் கூட்டணிபற்றி அவர் கூறிவந்த கருத்துகள் முரண்பாடுகளின் மொத்த வடிவமாகும்.
சென்னைத் தீவுத் திடலில் அரும்பாடுபட்டு கூட்டப்பட்ட அந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் திரு. விஜயகாந்த் அவர்கள் உரையை கேட்டவர்கள் அறிவைக் கொஞ்சம் பயன்படுத்திச் சிந்தித்தால் இவர்களிடம் எல்லாம் கலைஞர் அவர்கள் அரசியல் நடத்த வேண்டிய அவலமும், சூழ்நிலையும் ஏற்பட்டுவிட்டதே என்று இரங்கப்பட வேண்டியுள்ளது.
தன் முன் கூடியிருந்த கட்சிக்காரர்களை கட்சிக்குள் கட்டிப் போடுவதற்கும், அவர்களை உற்சாகம் ஏற்றி கட்சியில் தொடரச் செய்வதற்குமான பேச்சு முறையே பெரும்பாலும் இருந்தது. அதிலும் கூட ஜனநாயக மணம் இல்லை. என் தொண்டர்கள் என்று கூறுகிற இட்லரிசமே தூக்கலாக இருந்தது.
கலைஞர் அவர்களை சாதாரணமாக காட்ட வேண்டும் என்பதற்காக, வெகு சிரமப்பட்டார். தி.மு.க.விலிருந்த போது அவர் அக்கட்சியில் முக்கியமாக இல்லாததுபோல காட்ட முயற்சித்தார்.
கட்சியை உருவாக்க நடைபெற்ற அமைப்புக் கூட்டத்தில் கலைஞர் முக்கியமாக இருந்ததையும், கட்சிப் பிரச்சார குழுவில் அவர் இடம் பெற்றிருந்ததையும் பண்ருட்டி அவர்கள் சொல்லிக் கொடுக்காமலா இருந்திருப்பார்?
திமுகவை வளர்த்ததில் கலைஞருக்குப் பங்கு இல்லை என்று நடிகர் விஜயகாந்த் பரப்புரை ஆற்ற முனைந்ததால் - அவருக்குக் கடும் தோல்வியைத்தான் கொடுக்கும்.
சென்னை மாநகராட்சியில் திமுக பெரும்பான்மை பெற்று மேயராக திமுகவைச் சேர்ந்தவர் வருவதற்கு கலைஞர் அவர்களின் முயற்சியும், உழைப்பும் தான் காரணம் என்பதற்காக அண்ணா அவர்கள் கலைஞர் அவர்களுக்கு மோதிரம் அணிவித்த தகவல் எல்லாம் நடிகருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.
எனக்குப் பின்னால் கலைஞர் அவர்கள் திமுகவின் பிற்கால வரலாற்றை எழுதுவார் என்று அண்ணா அவர்கள் சொன்னதை மறுக்க முடியுமா?
இந்த வகையில் கலைஞர் அவர்களைக் கொச்சைப்படுத்த தேமுதிக பொதுச் செயலாளர் முயல்வாரேயானால், அபாண்டமாக பேசுவதில் இவருக்கு நிகர் இவர்தான் என்ற எண்ணத்தையே மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் - அது கலைஞருக்கு செய்யும் மாபெரும் உதவியாகத்தான் முடியும்.
புத்திசாலியாக இருந்தால் இந்த இடத்தை நடிகர் தொட்டிருக்கக் கூடாது; கலைஞர்மீது இருக்கும் ஆத்திரம் அவரை நிதானமிழக்கச் செய்திருக்கலாம்.
அரசியல் நடத்த ஆசைப்படும் ஒருவருக்கு எதைத் தொடலாம், எதைத் தொடக் கூடாது என்கிற விவரம் தெரிந்திருக்க வேண்டாமா?
கட்சிக்கு உழைப்பது, கட்சியைக் கட்டுவது - தொண்டர்களிடம் நெருக்கமான உறவை வைத்துக் கொள்வது - தேர்தலை நடத்துவது என்பதில் கலைஞருக்கு உள்ள முத்திரைகளை, தனித்தன்மைகளை எதிரிகளே ஒப்புக் கொள்ளும் ஒரு நிலையில் அதற்குத் தலைகீழான ஒரு கருத்தை விஜயகாந்த் திணிக்க முயலுவது சிறுபிள்ளைத்தனமானதே!
ஒரு பெரிய கூட்டத்தை சிரமப்பட்டு திரட்டிய நடிகர் - அந்த மக்களிடம் அரசியல் ரீதியாக என்ன சொன்னார்? சமுதாய ரீதியாக என்ன சொன்னார்? பொருளாதார ரீதியாக எதைக் கூறினார்? என்பதுதானே முக்கியம்.
ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இவர் கட்சியின் நிலை என்ன? அதற்காக அவர் கையில் வைத்திருக்கும் திட்டமென்ன? அதைப்பற்றி ஒன்றையும் கூறிட எவ்வித சரக்கும் தம்மிடம் இல்லாத நிலையில் தமிழ்நாடு அரசால் கூட்டப்பட்டு, பெரும்பாலான கட்சிகள் பங்கேற்று ஜனநாயகக் கடமையைச் செய்ததை - ஜெயலலிதா பாணியில் நாடகம் என்று சொல்கிறார் என்றால், அதன் மூலம் தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகளையும், அமைப்புகளையும் - அவற்றைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களையும் அவமதித்ததோடு மட்டுமல்லாமல் - அம்மக்களின் வெறுப்புக்குத் தன்னைத்தானே உட்படுத்திக் கொண்டு விட்டாரே!
தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விளைவாக மத்திய அரசு மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கைகளை தம் பேச்சில் மூடி மறைத்து விட்டார். இது அவரின் நெருப்புக் கோழி மனப் பான்மையைத்தான் நிர்வாணமாகக் காட்டுகிறது.
ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடந்து விடக் கூடாது; அரசின் முயற்சியில் வெற்றி பெற்று விடக் கூடாது; அதனைத் தம் குறுகிய அரசியல் லாபத்துக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற பிணந்தின்னி கழுகு மனப்பான்மை அருவருக்கத்தக்கதாகும்.
இலங்கைத் தமிழர்ப் பிரச்சினையில் கலைஞருக்கு அக்கறை யிருந்திருந்தால் வெளியுறவுத்துறையைக் கேட்டுக் பெற்று இருக்க மாட்டாரா என்று ஒருபோடு போட்டாரே பார்க்கலாம்.
ஒரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சராகயிருந்தால், அவர் விருப்பத்துக்கு முடிவு எடுக்க முடியும் என்று நினைப்பது அசல் சிறுபிள்ளைத்தனமாகும். அயல்நாட்டுப் பிரச்சினை என்கிறபோது ஒவ்வொரு ஆட்சிக்கும் சில கொள்கை முடிவுகள் உண்டு. அமைச்சரவை எடுத்த முடிவின்படிதான் செயல்பட முடியும். இதனையெல்லாம் விஜயகாந்திடம் எதிர்ப்பார்க்க முடியுமா என்ன?
தமிழ்நாட்டில் நிலவிவரும் மின் வெட்டுப்பிரச்சினை, விலைவாசிப் பிரச்சினை என்பவற்றை மூடி மறைக்கத்தான் இலங்கைப் பிரச்சினையை கருணாநிதி எடுத்துக் கொண்டு இருப்பதாகவும், அவர் குற்றஞ்சாட்டிப் பேசினார். கருணாநிதியை அரசியல் ரீதியாகக் காப்பாற்றுவதற்காக ஒரு பிரச்சினை எடுத்துக் கொடுக்கத்தான் இலங்கை இராணுவம் தமிழர்கள்மீது குண்டுகளை வீசிக் கொண்டிருக்கிறது என்று சொல்லாமல் விட்டாரே அதுவரை சந்தோஷம் தான்.
ஒரு தொடர்ச்சியில்லாமலேயே இருந்தது நடிகர் விஜய்காந்தின் பேச்சு. துண்டு துக்கடாவாகத்தான் பேசினார். எங்கெங்கேயோ போய் விட்டு இடைஇடையே மின்வெட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.
முதல் அமைச்சர் மின்சார திட்டங்களை அறிவித்துக் கொண்டு இருக்கிறார். இப்பொழுது சில திட்டங்களை அறிவித்துள்ளார். அவை செயல்பாட்டுக்கு வர நான்கு வருடம் ஆகும் என்றார்.
அப்பொழுது பார்வையாளர் வரிசையிலிருந்து ஒரு கேள்வி வந்தது. நீங்கள் திட்டம் போட்டாலும் நான்கு வருடம் ஆகாதா என்பதுதான் அந்தக் கேள்வி அதற்கு அவர் சொன்ன பதில் மில்லியன் டாலர்? பெறுமானம் உள்ளதாகும்.
இல்லை இல்லை - நான் திட்டம் போட்டால் நான்கு வருடம் ஆகாது - வேறு திட்டம் என்னிடம் இருக்கிறது; அதை இப்பொழுது சொல்ல மாட்டேன்! சொன்னால் கருணாநிதி அதனைத் திருடிக் கொள்வார் என்றாரே பார்க்கலாம்.
நாட்டு மக்கள் மத்தியிலே உண்மையிலே இவருக்கு நல்லெண்ணமும், அக்கறையும் இருக்குமேயானால் என்ன செய்திருக்க வேண்டும்?
நான்கு வருடம் ஆகாமலே மின்சார திட்டத்தை முடிக்க என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது - அது இதுதான் என்று சொல்லியிருந்தால், உண்மையிலே மக்கள்மீது அவருக்கு அக்கறையிருக்கிறது என்று பொருள். மின்வெட்டு நாட்டில் இருக்க வேண்டும் - அதன் மூலம் மக்கள் அவதிப்பட வேண்டும் - அந்த அவதியை அரசியல் லாபமாகதாம் அனுபவிக்க வேண்டும் என்று ஒரு மனிதர் கருதுகிறார் - ஆசைப்படுகிறார் என்றால் அதற்கு பெயர் என்ன? மக்கள் துன்பத்தில் மகிழ்ச்சி காணும் அருவருப்பான அற்ப மகிழ்ச்சி தானே இது! இதுபோன்ற மனப்பான்மை உள்ளவர்கள் ஆட்சிக்கு வந்தால்நாடு என்னவாகும் என்று மக்கள் சிந்திக்க மாட்டார்களா - தன் தலையில் தானே கொள்ளி வைத்துக் கொள்ள மக்கள் என்ன அவ்வளவு தூரம் புத்தி கெட்டவர்களா?
ஒரு மீனைக் கொடுப்பதற்குப் பதிலாக மீனைப்பிடிக்க ஒரு வலையைக் கொடு என்பது சீன நாட்டுப் பழமொழியாகும். திரு. விஜயகாந்த் கூறுகிறார் ஒருவனுக்கு வலையை கொடுத்தால் மட்டும் போதாது - மீனையும் கொடுக்க வேண்டும் என்று கூறியது ஒரு அரை குறைப் பேர்வழியின் அறியாமை நெடியேறும் பேச்சாகத்தான் அமைந்திருந்தது.
இவ்வளவு பேச்சிலும் ஒரு நல்ல கருத்து இடம் பெறாமல் இல்லை. தோழர்களே திருமணத்துக்காக வரதட்சணை வாங்காதீர்கள் - வரதட்சணையையும் கொடுக்காதீர்கள் என்றார் - பாராட்டத்தகுந்த அறிவிப்பு!
மற்றபடி அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா என்பதற்கான அறிகுறியோ, கட்சியின் பெயரில் திராவிட கழகம் என்று வைத்திருக்கிறாரே அதற்கான பகுத்தறிவுச் சிந்தனைகளோ, மூடநம்பிக்கைகளைப்பற்றிய விமர்சனமோ மருந்துக்கும் கிடையாது.
கட்சியின் கொடியை திருப்பதி வெங்கடேச பெருமாள் பாதங்களில் வைத்து ஆசீர்வாதம் பெற்று வந்தவராயிற்றே - அவரிடம் இதையெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாதுதான்.
பெண்களைப்பற்றி சக்தி என்று அவர் அழைப்பதற்கு ஒரு காரணத்தை விளக்கினார். பெண்கள் பிறந்த வீட்டில் ஒரு குல தெய்வத்தைக் கும்பிடுவார்கள்; புகுந்த வீட்டில் அந்த வீட்டுக்குள்ள குல தெய்வத்தைக் கும்பிடுவார்கள் - அதனால்தான் பெண்களை சக்தி என்று தாம் அழைப்பதாகக் கூறினாரே - ஆகா! பெண்கள் பற்றிய எத்தகைய முற்போக்கான சிந்தனை இது! கேட்ட மாத்திரத்திலேயே மயிர்க்கூச் செரிய செய்கிறது.
இந்தியப் பெண்களைப்பற்றி மதர் இந்தியா நூலில் மிஸ்மேயோ ஒன்றைக் குறிப்பிட்டு இருந்தார். காடன், மாடன் போன்ற குல தெய்வப் பூஜைகளை எப்படியெல்லாம் நடத்துவது, கணவன் வீட்டில் அவர்களைத் திருப்திப்படுத்துவது போன்றவற்றைத் தெரிந்திருக்க வேண்டும் என்று ஒரு இந்துப் பெண் எதிர்பார்க்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அந்தப் பிற்போக்குத் தனங்களுக்கு முலாம் பூசி சந்தைக்குக் கொண்டு வந்துள்ளார் இந்த நடிகர், இந்த லட்சணத்தில் கட்சியின் பெயரில் திராவிட கழகம் என்ற ஒட்டு வேறு!
தந்தை பெரியாரை எந்த வகையிலும் உச்சரிக்காமல் விட்டாரே - அந்த வகையில் அவர் செய்த மகத்தான நல்ல காரியம் தான்!
ஆயிரக்கணக்கில் மக்களைக் கூட்டினால் மட்டும் போதாது - அந்த மக்களுக்கு உருப்படியாக பல கருத்துகளைக் சொல்லத் தெரிய வேண்டும்.
கட்சியின் கொள்கைகளை, இலட்சியங்களை எடுத்துரைக்க வேண்டும். திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
இன்றைக்குத் தலை தூக்கி நிற்கும் மதவாதத்தைப் பற்றி கறாராக கருத்துக் கூற வேண்டும்; தமிழ்நாட்டின் மிக முக்கிய பிரச்சினையான ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் நாடி பிரச்சினையான இடஒதுக்கீடைப்பற்றி எடுத்துக் கூற வேண்டும்.
அந்தப் பக்கம் மழைக்குக்கூட ஒதுங்கவில்லை இவர் - நடக்க விருக்கும் மக்களவைத் தேர்தலில் 40 இடங்களும் தங்களுக்கே என்று ஆசை பொங்க எடுத்துக் கூறிய ஒரு கட்சியின் தலைவர் மத்திய அரசை விமர்சிக்க வேண்டும் அல்லவா? ஒரே ஒரு வார்த்தைகூட உரசவில்லையே! சுற்றிச் சுற்றி கலைஞரைப் பற்றிதான் தமிழ்நாட்டு ஆட்சியைப்பற்றிதான் வலம் வந்தார். அதுபோலவே பா.ஜ.க.,வைப் பற்றியோ, சங்பரிவாரங்களைப் பற்றியோ அவை கட்டவிழ்த்துவிடும் வன்முறை வெறியாட்டங்களைப் பற்றியோ மூச்சுவிடவில்லை மனிதன் - ஏன்?
அடுத்த நாடாளுமன்ற தேர்தலைச் சந்திப்பதாகக் கூறும் ஒருவர் - அது தொடர்பான மத்திய ஆட்சியும், காங்கிரசையும் பா.ஜ.க.வையும் ஏன் விமர்சிக்கவில்லை? அதில் உள்ள மர்மம் என்ன? இரண்டில் ஒன்றோடு கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உள்ளூரத் துடிக்கும் நப்பாசையாலா?
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், ஒகேனக்கல் பிரச்சினை, முல்லைப் பெரியாறு நீர்த் தேக்கம் என்று நாட்டின் உயிர் நாடிப் பிரச்சினையை பற்றியெல்லாம் வாய்த் திறக்கவில்லையே, ஏன்?
இலஞ்சத்தை ஒழிப்பேன் என்று மார் தட்டுகிறார் - இது எல்லோரும் சொல்லக் கூடியதுதான். அதே நேரத்தில் சினிமாவில் நான் கறுப்புப் பணம் வாங்குவதில்லை என்று தம்மைக் கறுப்பு எம்.ஜி.ஆர். என்று சொல்லிக் கொள்ளும் இந்த மனிதர் ஏன் சொல்லவில்லை? இனிமேலாவது சொல்வாரா?
மாநிலம் தழுவிய அளவில் பெரும் செலவு செய்து, முயற்சி செய்து மாநாட்டைக் கூட்டும் பொழுது இவைபற்றியெல்லாம் கருத்துச் சொல்லாவிட்டால், அது எப்படி ஒரு மாநாடாகும்? கருத்துப் பஞ்சமா?
முறையான தயாரிப்பு இல்லையா? அனுபவக் குறைவா? வைத்துக் கொண்டா வஞ்சனை செய்யப் போகிறார்? அவ்வளவுதான் எங்கள் சரக்கு ஆளைவிடுமய்யா என்று கைகளை உயர்த்தப் போகிறாரா?
தமிழ்நாட்டு மக்களிடம் பாச்சா பலிக்காது என்பதுமட்டும் உண்மை.
---------------மின்சாரம் அவர்கள் 19-10-2008 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை
Search This Blog
19.10.08
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி,அடை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,
இதே விஜய்காந்த் மஞ்ச துண்டுடன் கூட்டணி வைத்துக் கொள்ளட்டும்;மின்சாரம்,மானமிகு போன்ற ஜால்ராக்கள் அடிக்கும் ஜல்லியே வேஎறு மாதிரி இருக்கும்.திராவிடம் பேசும் தமிழ் கும்பல் என்றாலே மலம் தின்னும் பன்றிகள் தானே.மின்சாரமாவது,மானமிகுவாவது,எல்லாம் பொறிக்கி பன்றிகள்.
பாலா
பன்றிக்கும் பார்ப்பானுக்கும் வேறுபாடு இல்லை. என்பதை பார்ப்பன பொறுக்கி பாலா நிரூபித்துள்ளார்.
Post a Comment