Search This Blog

13.10.08

பகுத்தறிவுக்குத் தாராளமாய் மனம்விட்டு ஆலோசிக்க வேண்டும்.




பகுத்தறிவு

பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது; எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது; வெகு காலமாக நடந்து வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது; அநேகர் பின்பற்றுவதாலேயே நம்பி விடக் கூடாது; கடவுளாலோ, மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக் கூடாது. ஏதாவது ஒன்று நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திர சக்தி என்றோ நம்பிவிடக் கூடாது. எப்படிப்பட்டதானாலும் நடுநிலைமையிலிருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் மனம்விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்க வேண்டும்.

-------------------- தந்தைபெரியார் - "குடிஅரசு" 9.12.1928

0 comments: