Search This Blog

16.10.08

ஈழப்பிரச்சினையும் - பார்ப்பன ஏடுகளும்!

ஈழத்தமிழர் பிரச்சினை முன்புபோல் தமிழ்நாட்டு மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது - அது ஒரு காலகட்டம், இப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டு மக்களிடத்திலே ஆதரவு கிடையாது என்பது போல ஒரு தோற்றத்தை இந்நாட்டில் உள்ள பார்ப்பனர்கள், பார்ப்பன ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்தன. தொடர்ந்து அப்பிரச்சினையைக் கொச்சைப்படுத்திக் காட்டுவதில் மிகவும் குறியாக இருந்து வருகின்றன.

தமிழீழம் ஏற்பட்டு விட்டால், தமிழ்நாடும் தனி நாடாகி பார்ப்பனர்களெல்லாம் உடனடியாக வெளியேற்றப்பட்டு விடுவார்கள் என்பதுபோன்ற நினைப்பில் நிர்வாணக் கூத்து ஆடுவது அவர்களின் வழக்கம்!

இதில் இந்து ஏடு, துக்ளக் இதழ், தினமணி ஏடு, கல்கி இதழ், ஆனந்தவிகடன் போன்ற பார்ப்பன வட்டாரத்துக்குச் சொந்தமான ஊடகங்கள் முன்வரிசையில் நிற்கும்.

செஞ்சோலையில் மழலைச் செல்வங்களை மிருகத்தனமான இலங்கை அரசின் வான்படை குண்டு போட்டு அழித்ததைக்கூட துக்ளக் வக்காலத்துப் போட்டு ஆதரித்து எழுதியது.

ஜெயவர்த்தனாவிடமிருந்து சிங்கள ரத்னா விருது பெற்றவராயிற்றே! அந்த உப்புக்கு இரண்டகம் நினைக்குமா அந்த உச்சிக்குடுமிகள்!

தமிழ்நாட்டில் தமிழ், தமிழன், பகுத்தறிவு, சுயமரியாதை, தமிழர் பண்பாடு என்பன போன்ற சொற்களைக் கேட்டாலே இந்தக் கூட்டத்துக்கு ஆசன வாயில் மிளகாய்ப் பொடியைத் தூவியதுபோல எரிச்சல்பட்டு குதிக்க ஆரம்பித்துவிடும்.

தமிழர்களின் தன்மான உணர்வை குறுகிய வெறித்தனம் (chauvinisam) என்று இந்து ஏட்டில் பார்ப்பன அம்மையார் ஒருவரால் சிறப்புக்கட்டுரை எழுதப்படுகிறது.

செத்துச் சுண்ணாம்பாக ஆகிப்போன சமஸ்கிருதத்தை தேவபாஷை என்றும் தங்கள் பெயர்களை சமஸ்கிருதத்தில் தவிர தமிழில் வைக்கமாட்டோம் என்றும் வெறித்தனமாக இருந்துவரும் பார்ப்பனர்கள், கோயில்களில் தமிழ் வழிபாட்டு மொழியாக இருக்கக்கூடாது என்று கூறி நீதிமன்றப் படிக்கட்டுகளை மிதிக்கும் அக்ரகாரக் கூட்டம், 30 கல் தொலைவில் உள்ள தமிழர்களின் தொப்புள்கொடி உறவுள்ள ஈழத் தமிழர்கள் வெறித்தனம் கொண்ட ஒரு அரசால் முப்படை கொண்டு தாக்கப்படும் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுத்தால் அதற்குப் பெயர் தமிழ் வெறியர்கள் என்று பட்டம் சூட்டுகிறார்கள் என்றால், அவர்களைத் தமிழர்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டாமா?

பார்ப்பனர்களைப்பற்றி உயர்ந்த நிலையில் கணக்குப் போட்டு வைத்திருக்கும் அப்பாவித் தமிழர்கள், பார்ப்பனர்களைப்பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு இப்பொழுது கிடைத்திருக்கிறது.

சிங்களவர்களும், ஆரியர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூட அவர்கள் கூறுவதுண்டு. அதையும் இணைத்துக் கொண்டு தமிழர்கள் ஒரே கல்லால் இரண்டு காயை வீழ்த்துவது போன்ற சந்தர்ப்பத்தை இப்பொழுது பெற்றுவிட்டனர். அந்த நிலையைப் பார்ப்பனர்களே உருவாக்கிக் கொண்டும் வருகின்றனர்.


தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உலகத் தமிழர்கள் மத்தியிலே பெரும் எழுச்சியை ஏற்படுத்திவிட்டன. இந்த எழுச்சியின் முன்னே பார்ப்பனர்கள் வாலாட்டுவார்களேயானால், அதன் எதிர்விளைவைப் பார்ப்பனர்கள் அனுபவித்தே தீரவேண்டும்.

பார்ப்பனர்களுக்கு ஒரு சரியான தலைமையில்லாத வறட்சி நிலை ஏற்பட்டு விட்டது. சங்கராச்சாரியார்களோ கொலைக் குற்றவாளிப் பட்டியலில் நடமாடிக் கொண்டு இருக்கின்றனர். சோ போன்றவர்கள்தான் அவர்களின் தலைவர்கள் என்றால், அதன் யோக்கியதை எப்படி இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ!

தமிழ்நாட்டின் கலை உலகினர் கிளர்ந்து எழுந்து விட்டனர். மாணவர்கள் கல்வி நிறுவனங்களிலிருந்து வெளியேறி போர்க்குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். சென்னையில் வழக்கறிஞர்கள்கூட வீதிகளுக்கு வந்துவிட்டனர்.

ஈழப் பிரச்சினைக்காக தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியைத் தூக்கி எறிய தீர்மானித்துவிட்டனர். இவர்கள் அத்துணைப் பேர்களையும், அவர்களின் நடவடிக்கை களையும் கொச்சைப்படுத்த ஒரு கூட்டம் முயலுமானால், அதன் விளைவு அந்தக் கூட்டத்தைத் தனிமைப்படுத்திவிடும்; ஆரியர் - திராவிடர் போராட்டம் என்ற ஒரு நிலைக்கு ஒரு புத்தெழுச்சியையும் உண்டாக்கிக் கொடுத்து வருகின்றனர் - வரட்டும்!


------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 16-10-2008

2 comments:

Thamizhan said...

பார்ப்பனீயம் தன் முழு அடையாளத்தையுங் காட்டட்டும்,அப்போதுதான் சில புரியாதத் தமிழர்களும் நன்கு புரிந்து கொள்வாகள்.
சோமாரிகளும்,நரசிம்மன்களும்,நரிகளும்
நிறையப் பேசட்டும்,எழுதட்டும்.அதுவே தமிழினத்தின் விடி வெள்ளி வெடித்தெழுத உதவட்டும்.

தமிழ் ஓவியா said...

தமிழர்கள் புரிந்து கொள்ளும் காலம் வெகு விரைவில்.

நம்பிக்கையுடன் தொடர்வோம் தொண்டறத்தை.

வெல்வோம்.

நன்றி.