Search This Blog

19.10.08

தீபாவளி தேவையா?





வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ - சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? - என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த 10 கோடியும் அனாவசியமாய் - துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும் கரியுமாக ஆக்கிய வகையிலும் செலவாகி இருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி ஏழை மக்கள்கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர், ராமரசன் முதலிய வெறி தரும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்துபோயிருந்த - சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மக்கள் மனதில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.

இவ்வளவு மாத்திரமல்ல; தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய்த் தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்டமடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு? தீபாவளிக்கு முன் சில நாட்களும், தீபாவளிக்குப் பின் சில நாட்களும், தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுகளிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால் அவர்கள் படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு? அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு?


---------------------தந்தைபெரியார் - ‘குடிஅரசு’, தலையங்கம், 22.11.1931

5 comments:

dheepan said...

periyar is right... its a waste of time and money

தமிழ் ஓவியா said...

நன்றி தோழர்.

மோகன் காந்தி said...

பெரியார் கருத்து சரிதான் மக்களுக்கு இதுபோன்ற விழாக்கள் தான் வாழ்க்கைக்கு உர்சாகம் உட்டும்

தமிழ் ஓவியா said...

//மக்களுக்கு இதுபோன்ற விழாக்கள் தான் வாழ்க்கைக்கு உற்சாகம் ஊட்டும்?//

உற்சாகம் ஊட்டுவதற்காக என்னவேண்டுமானாலும் செய்து விடலாமா?
ஒருவனுக்கு குடித்தால் உற்சாகம்; ஒருவனுக்கு புகைத்தால் உற்சாகம், ஒருவனுக்கு பெண்களை கேலி செய்தல் உற்சாகம்.
அனுமதிக்கலாமா?

இதுகூட தனிப்பட்ட நபர்களின் பிரச்சனை என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் இது போன்ற விழாக்கள் கண்ணை திறந்து கொண்டு கிணற்றில் விழுவதற்கு சமம்.

உற்சாகமாக இருப்பதற்கு எத்தனையோ நல்வழிகள் உண்டு தோழர். அதை நோக்கி உங்கள் சிந்தனை பாயட்டும்.

bala said...

//ஒருவனுக்கு குடித்தால் உற்சாகம்//

திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி தமிழ் ஓவியா அய்யா,

சரியா சொன்னீங்கய்யா.நீங்கள் சொல்வது "மானமிகு" முண்டம் பாசறை குஞ்சுகளுக்கும்,"கொளத்தூர்" முண்டத்தின் பாசறை குஞ்சுகளுக்கும்,மஞ்ச துண்டு ஜல்லி கோஷ்டிகளுக்கும் சரியாக பொருந்துகிறது.ஓசி பிரியாணிக்காகவும்,ஓசி சாராயத்துக்காகவும் தீவிரவாதி தாடிக்காரனுக்கு கோவிந்தா போடுகிற கேவலமான ஜந்துக்கள் தானே கருப்பு சட்டை பன்றி குட்டிகள்.

பாலா