Search This Blog

16.10.08

மேல் ஜாதி, கீழ்ஜாதி என்பதை ஒழித்தாக வேண்டும்!



நாம் செய்யப்போவது என்ன ?

நாம் செய்யப்போவது என்ன என்பது மிகவும் பொறுப்போடு பொறுமையோடு யோசித்துச் செய்யவேண்டியிருக்கிறது, இன்று நம் நாட்டில்,

1. மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற பேதமும்,
2. படித்தவன் படிக்காதவன் என்ற தன்மையும்,
3. பணக்காரன் ஏழை என்ற நிலைமையும்,
4. முதலாளி அல்லது எஜமான் தொழிலாளி அல்லது கூலி என்கின்ற முறைமையும் இருந்து வருகின்றன.


இதனால் ஏற்படும் குறைபாடு கொடுமை என்பவைகளைத் தவிர உலகில் மக்களுக்கு வேறு தொல்லை இல்லை என்றும், தொல்லைக்கு அடிப்படை இல்லை என்றும் சொல்லலாம். இவற்றுள் முற்கூறிய பெரிய ஜாதி, சின்ன ஜாதி, படித்தவன், தற்குறி (படிக்காதவன்) என்கின்ற கொடுமை அதாவது சகல குறைபாடுகளுக்கும் அஸ்திவாரமாக இருக்கும் கேடுகள் நம் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று சொல்லலாம் ஆதலால் இந்த நாட்டில் இப்போது உடனடியாக ஒரு யோக்கியன், ஒரு வீரன், ஒரு “தெய்வீக சக்தி கொண்ட மகான்” என்பவன் செய்யவேண்டிய வேலை இந்த இரண்டுமேயாகும். இந்த இரண்டிலும் முதன்மையானதாகச் செய்யவேண்டியது முதலாவதான மேல் ஜாதி, கீழ்ஜாதி என்பதை ஒழிப்பதேயாகும் ஆகவேதான், அந்தக் கருத்தின்மீதே நம் திராவிடர் கழகம் முதலாவதாக இதனையே கருதி இதை முதல் வேலைத் திட்டமாகவும் கைக்கொண்டு இருக்கிறது.


------------------------ தந்தைபெரியார் - "குடிஅரசு" தலையங்கம் 6-4-1946

1 comments:

சுனா பானா said...

பெரியாரின் போராட்டங்களுக்கு பிறகு, பூணூல் பார்ப்பானீயர்களிடம் இருந்து தமிழர்கள் பிழைத்து கொண்டாலும், பார்ப்பனீயத்தின் விழுமியங்களை பின்பற்றி, செயல்படுத்தி வரும் கருப்பு பார்ப்பனர்களிடமிருந்தும், சாதி வெறியர்களிடம் இருந்தும் விடுபடவில்லை.