Search This Blog

25.10.08

13 ஆம் எண்ணைக் கண்டு பயப்படுவது சரியா?



13 பற்றிய பயம்


13-ஆம் எண் பற்றிய பயம் மேல்நாட்டு மூடமதியாளர்களிடமிருந்து இந்திய முட்டாள்களிடம் பரவியுள்ளது. 12-க்கும் 14-க்கும் இடையில் வரும் ஒரு எண் என்ற எண்ணமே இல்லாமல் அதைக் கண்டு பயந்து சாகும் மனிதர்களை முட்டாள்கள் என்றழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?

உலகின் பல பெரிய நகரங்களிலும் உள்ள மிகப் பெரிய ஓட்டல்களிலும்கூட, 13-ஆம் தளமோ, 13-ஆம் எண் அறையோ இல்லாமல் உள்ள அவலம்! 12ஏ எனப் பெயர் சூட்டி விடுகிறார்கள். விமானங்களின் இருக்கை எண்களிலும் இதே மூடத்தனம்தான்.

மிகவும் அசிங்கமானது ஒன்று. இந்தியாவில் இருக்கிறது. மிகவும் முற்போக்கு நாங்கள்தான் என்று தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளும் கேரளாவில், உயர்நீதிமன்றக் கட்டடத்தில் 13-ஆம் எண் அறையே கிடையாது.

சான்ஃபிரான்சிஸ்கோ (அமெரிக்காவில்) நகரில் 13-ஆம் அவென்யூவை யாராவது தேடினால், அவ்வளவுதான்! கண்டுபிடிக்கவே முடியாது. 12-க்கு அடுத்து 14 தான். இடையில் பன்ஸ்டன் அவென்யூ எனப் பெயர் வைத்து விட்டார்கள்!

இதே அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் முடிந்தபிறகு, அதில் ஈடுபட்ட கேப்டன் வில்லியம் ஃபவுலர் என்பவர் 13 கிளப் என்ற ஒரு கிளப் ஆரம்பித்தார். மொத்த உறுப்பினர்கள் 13. கூடியது அறை எண் 13 இல் (நிக்கர்போக்கர் விடுதி) கூடிய நாள் 13-ஆம் தேதி (ஜனவரி 1881). ஒருவரையொருவர் வாழ்த்திக் கொண்டனர். சாகப் போகும் நாம் வணக்கம் செலுத்துகிறோம் (Nos Morituri Te Salutamus) என்பது வாழ்த்து வாசகம்!


விருந்து உண்டு நல்லபடியாகவே கலைந்தனர்! மூடநம்பிக்கையாளர்கள் கூறுவதுபோல, எந்த ஒருவரும் சாகவில்லை (13 பேர் கலந்து கொண்ட விருந்தில் கலந்து கொண்டபோதுதான் ஏசு, காட்டிக் கொடுக்கப்பட்டுப் பின்னர் கொல்லப் பட்டார் என்கிற கதைதான் மூடநம்பிக்கைக்குக் காரணி)


இனிய பருவம் எனப் பொருள்படும் விதத்தில் Sweet Teen என்பதே, 13-ஆம் வயதிலிருந்துதான் தொடங்குகிறது. பின் எப்படி அதைக் கண்டு டீன் ஏஜைக் கொண்டாடும் ஆள்களே மிரள்கிறார்கள்?

--------------நன்றி: "விடுதலை" 25-10-2008

2 comments:

Unknown said...

13 வது எண் என்றாலே பயங்கொள்ளுவோருக்கு சிறப்பான ஓர் பதிவு, அருமை தமிழ் ஓவியா.

தமிழ் ஓவியா said...

நன்றி தோழர்.