Search This Blog

19.10.08

10 பேர்கள் 100 பேர்கள் செத்தாலும் சரி. நம் இழிவு நீங்க வேண்டும்



இதற்கு முன்னுள்ள சரித்திரகாலத்தில் சமூதாய மாறுதல் பலாத்காரத்தால் தானே நடந்துள்ளது?

இந்நாட்டில் இருக்கின்ற நம் மக்களுக்கு அறிவு இல்லை, மானமில்லை, என்பதை உணர்ந்து நம் மக்களுக்கு அறிவையும், மானத்தையும் ஏற்படுத்துவதற்காகக் கூட்டப்பட்ட இம்மாநாட்டிற்குப் போதுமான மக்கள் வராதது, அவர்கள் இழிவைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகின்றது.

நேற்று தர்மபுரியில் எனது சிலை திறப்பு என்னும் பெயரால் எனது உருவ பொம்மை திறந்தார்கள். அதற்கு இலட்சக்கணக்கான மக்கள் வேடிக்கைப் பார்க்க வந்தார்கள். தங்களின் இழிவைப் போக்கிக் கொள்கிற இந்தக் காரியத்திற்கு இவ்வளவு பேர்கள் தான் வந்திருக்கின்றார்கள். பொதுவாகவே சமூதாய முன்னேற்றமான காரியங்கள் சமூதாய இழிவு நீங்க வேண்டிய காரியங்கள் சமுதாயக் கொடுமைகள் நீங்க வேண்டிய காரியங்கள் யாவும் வாயால் சொல்வதால் மட்டும் ஆகாது என்பது தெரிகிறது. 50 – வருஷம் பிரசாரம் செய்து பார்த்தாகி விட்டது. ஒன்றும் மாற்றம் நடைப்பெற்றதாகத் தெரியவில்லை. இதற்கு முன்னும், சரித்திர காலம் முதல் பார்த்தோமானால் சமூதாய மாறுதல் என்பது தீயிடல், கொலை செய்தல் போன்ற பலாத்தாரத்தால் - நாசவேலையால் தான் நடைப்பெற்று இருக்கின்றது.

சாதாரணமாக நம் காலத்தில் ஏற்பட இருந்த பெரும் மாற்றத்தைத் தடுப்பதற்காக காந்தியைக் கொன்று தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர். காந்தி அரசாங்கம் மத விஷயத்தில் ஈடுபடக்கூடாது – மதத்திற்கு அரசாங்கத்திற்கும் நம்பந்தமில்லை என்று தான் சொன்னார். அதற்காகவே அவரைக் கொன்றார்கள். சரித்திரத்தில் பார்த்தாலும் அறிவுப் பிரச்சாரம் செய்த பவுத்தர்கள், சமணர்கள் போன்றவர்களைக் கொன்றார்கள். தீயிட்டுக் கொளுத்தினார்கள், கழுவேற்றினார்கள் இப்படி அறிவைக் கொண்டு பிரச்சாரம் செய்து மக்களுக்கு அறிவு ஏற்படத் தொண்டாற்றியவர்கள் அனைவருமே எதிரிகளால் கொல்லப்பட்டு இருக்கிறனர். பலர் உயிரோடு கொளுத்தப்பட்டு இருக்கிறார்கள்.


இப்போது நாம் செய்கிற பிரசாரம் ஒன்றும் பெரியதல்ல; நாம் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த போதே, நல்ல ரோடு வசதி, போக்குவரத்து வசதிகள் யாவும் இருந்தன. ஆனால் அவர்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த போது ரோடுகளே கிடையாது. காடும், மலையும்; முள்ளும், புதரும் நிறைந்த பாதைகளில் சென்று பயங்கர மிருகங்களை எல்லாம் இலட்சியம் செய்யாமல் உயிருக்குத் துணிந்து நாடு பூராவும் பிரச்சாரம் செய்து கருத்துக்களைப் பரப்பி இருக்கின்றனர். கன்னியாகுமரி முதல் இமயம் வரை அவர்கள் கருத்து பரவி இருந்ததோடு, கடல் கடந்த நாடுகளிலும் பரவி இருக்கின்றது. அந்தப் பிரச்சாரத்தைப் பார்ப்பான் எப்படித் தடுத்தான் என்றால் பார்ப்பான் தானும் புத்த கருத்துக் கொண்டவன் என்று சொல்லி உள்ளே புகுந்தான். புகுந்து ஸ்தாபனத்தைக் கைப்பற்றினான். கைப்பற்றியதும் பவுத்தர்களை வெட்டினான். பலரை வீட்டுக்குள் போட்டுத் தீயிட்டுக் கொன்றிருக்கின்றான். இப்படி எல்லாம் செய்து அக்கருத்துக்களைப் பரவ விடாமல் தடுத்து இருக்கின்றான். இனி, நாம் பிரச்சாரம் செய்து கொண்டு சீர்த்திருத்தம் செய்ய நினைப்பது முடியாது.

நாமும் பலாத்காரத்தில் இறங்க வேண்டும். பலாத்காரத்தில் இறங்குவது என்றால் நம் எதிரிகளான பார்ப்பனரைக் கொல்ல வேண்டும் என்பதில்லை. கொல்வதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதில்லை. தீவைப்பதற்குத் தயாராகப் பெட்ரோலும், பந்தமும் தயாராக வைத்துக் கொண்டிருக்க வேண்டும். நாம் தயாரானாலே திருந்திவிடுவார்கள். அதற்கும் திருந்தவில்லை என்றால் உயிரைப்பற்றிக் கவலைப்படாமல் ஆரம்பிக்க வேண்டியது தான். ஒரு 10 பேர்கள் 100 பேர்கள் செத்தாலும் சரி. நம் இழிவு நீங்க வேண்டும். அது தான் நமக்கு முக்கியம். நம் நாட்டிலிருக்கின்ற புராணம், இதிகாசம் என்பவையும் கடவுள் அவதாரம் என்பவையும் பார்ப்பனுக்கு எதிராகக் காரியம் செய்பவர்களை அழித்து ஒழிப்பதற்காகத் தோன்றியவையே ஆகும் என்பதை எடுத்து விளக்கியதோடு விரைவில் இதற்கான போராட்டத்தைத் துவக்க இருக்கின்றேன். அதில் பங்கு கொண்டு சிறைக்குச் செல்ல நீங்கள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும்.

---------------------25-05-1969 அன்று மன்னார்குடியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு."விடுதலை" 12-06-1969. "பெரியார் களஞ்சியம்" …. பக்கம்: 270 - 272

0 comments: