Search This Blog

8.10.08

பக்தர்களே - பதறாமல் சிந்திப்பீர்!

ஆயுதங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை - எந்த ஆண்டவனின் அருளாலும் கிடைக்கப் பெற்றதில்லை.

மனித நாகரிக வளர்ச்சி என்பதே - அவன் கண்டுபிடித்த கருவிகளால்தான். கருவிகள் மனிதனின் அடிமைகளே தவிர கடவுள்கள் அல்ல!

அப்படிப் பார்க்கப் போனால், எல்லாக் கருவிகளுக்கும் பூஜை போடுவீர்களா?

விளக்குமாறிலிருந்து செருப்புவரை முக்கியமான கருவிகள்தான். அதற்குப் பூஜை போடுவதுண்டா?

விபச்சாரம்கூட தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொழிலாளிகளின் நிலை என்ன?

நகர சுத்தித் தொழிலாளர்கள் என்ற நிலை இன்றைக்கும் இருக்கிறது. அவர்கள் எதை வைத்துப் படைப்பார்கள்?

கொலைகாரனுக்குப் பயன்படும் அரிவாளும், கத்தியும் கூடப் பூஜைக்குரிய பொருள்கள்தானா?


கொலையை ஒழுங்காகச் செய்ய சக்தித்தேவி அருள்பாலிப்பாளோ!

கள்ளச்சாவிப் போட்டு பூட்டைத் திறந்து கொள்ளை அடிப்பவன் - அன்று கள்ளச் சாவிக் கொத்தை வைத்துப் படைத்தால், அவன் தொழில் இலாபகரமாக நடக்க அம்பாள் துணையிருப்பாளோ! கள்ளச் சாவி போட்டுத் திறந்து அம்பாளையே தூக்கிக் கொண்டு போய் விடுகிறானே - அப்படியானால் அம்பாளின் சக்தி அம்போதானா?

பக்தர்களே - பதறாமல் சிந்திப்பீர்!

----------------நன்றி; "விடுதலை" 8-10-2008

2 comments:

Yuvaraj said...

வணக்கம் அய்யா..!

தங்களின் இப்பதிவு அருமையான சூடு..!!!!

இனியேனும் திருந்துவார்களா இவ்வடிமைகள்


இணைவோம் தமிழர்களாய்!!
இயற்றுவோம் தமிழால்!!

தமிழ் ஓவியா said...

நன்றி தோழரே. தங்களின் உணர்வும், எண்னமும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. தொடருங்கள் உங்கள் தொண்டரப்பணியை.
நன்றி.