Search This Blog

20.11.13

ஆரியரின் அந்தரங்க அகராதி!

ஆரியரின் அந்தரங்க அகராதி!


(தமிழர்கள் நம்பும் பல கருத்துகளுக்கு ஆரியர் கொண்டுள்ள உண்மையான கருத்து)

கோயில்

கோவென மக்களை வெளியே அழ வைத்து வாழ்வதற்காக ஆரியர் தமிழரைக் கொண்டே கட்டிவைத்துக் கொண்ட இல்லங்கள்.

கும்பாபிஷேகம்


கும்பம்= வயது, அபிஷேகம்= ... செய்வது, ஆரியர் வயறு குளிர... வாழ்,ஓர் வழி.

அர்ச்சனை...


ஹர்- சேனை என்பதன் மருஉ. ஹர் என்ற கொள்ளைக் கூட்டத்தாரின் சேனை போல், தமிழரைக் கொள்ளையடிக்க உபயோகமாகும் தந்திரம்.

திராவிட மக்களின் செல்வத்தை வாழ்வையும் இந்த நாட்டிலே கரைக்க உபயோகித்த ஆயுதம். இன்று கொஞ்சம் கூர் மழுங்கிக் கிடக்கிறது.

அரன்.

அரம் என்பதன் திரிபு. தமிழர் வாழ்வைத் துண்டு துண்டாக்க உபயோகிக்கப்பட்ட அரம்= ஒரு ஆயுதம்.

கௌபீனம்.

தமிழருக்கு, அவர்கள் பட்டு பீதாம்பரம். பவுன்புட்டா சேலை முதலிய ஆடைவகைகள் செய்யும் திறமை உள்ளவர்களாக இருந்தாலும், யார் என்ன அணிய வேண்டும் என்பதைக் குறிக்கும் பதம். லகரம், னகரமாகி விட்டது. தமிழர்களுக்கு விஷயம் தெரியாமலிருக்க.

வினாயகன்

வினா- அகன், என்பதன் கூட்டுச் சொல். ஏன் இப்படி எங்களைத் துரத்தினீர் என்ற வினா தமிழர்களுக்கு தோன்றினாலும், அதை மனத்திற்குள்ளேயே முடங்கும்படி செய்வதற்காக ஏற்பட்ட கற்பனைத் தேவன், வினா அகன், என்பதை வினாயகன் என்று தொகுத்துத் தமிழருக்குத் தந்தோம்.

ராவணன்

ரா+வண்ணன், ராவணன் என்றாயிற்று, ரா= இரவு, வண்ணன்= நிறமுடையவன், அதாவது கரிய மேனியன், தமிழன்.

இதிகாசம்

இது, காசம், என்பது தமிழருக்குத் தெரியாதிருக்கும் பொருட்டு, இதிகாசம் என்று கூறப்பட்டது. இது= இந்தக் கதை, காசம்= கேட்டு நம்பினவருக்குக் கருத்து, காசநோய்க்காரரின் உடல் கெடுவது போல் கெட்டு விடும் என்பது புதைந்துள்ள பொருள்.

வேதம்

பேதம், என்பதையே, வேதம் என்று விளம்பினோம். நாட்டிலே பேதம் இருக்கவே, இந்த வேதம் பயன்படுவிதிலிருந்து, இந்த இரகசியம் விளங்கும்.

வைகுண்டம்

வை! முண்டம்! என்பதைத் திரித்து எழுதினோம். எம்மிடம், ஏமாறும் முண்டமே! வை, காசு பணம் என்று நம்மவர், திதி முதலிய காரியங்களின் போது தமிழரைக் கேட்க, வை குண்டம் என்ற இரகசிய கோட் (ஊடினந) உபயோகிக்கிறோம்.

கைலாயம்

தானை முன், என்பது முந்தானை என்று ஆயிற்று, தானை சேலை, முன்= முன்னால் இருக்கும் பாகம். அதுபோலவே லாயம் கை, என்பது கைலாயம் என்றாயிற்று. லாயம்= ஆரியருக்குச் செக்குமாடுகளாக உள்ள ஏமாளி களை அடைத்து வைத்திருக்கும் பட்டி, கை= நம்முடைய கையில் இருக்கிறது என்று, நம்மவர், தமிழரின் சடங்குகளிலே சொல்லுகிறோம். இதுவும் இரகசிய கோட் (ஊடினந) தேசிய சர்க்கார் எங்ஙனம் அமைப்பது, இங்கு மூன்று தேசங்கள் உள்ளனவே என்றுரைத்தாலோ, முப்புரிகள் முணு முணுக்கின்றன. பின்னர் எப்படித் தேசீய சர்க்கார் அமைப்பது! இதுசமயம் தேவை, தேசீய சர்க்காரால்ல, இன்று தேசீயம் என்பது, ஓர் கதம்பக் குழம்பாக இருக்கிறது. நாட்டுப் பிரிவினைக்குப் பிறகே, தெளிவான தேசீயம் தோன்ற முடியும்! இன்று அவசியமானது, போரைத் திறம்பட, வெற்றிகரமகா நடத்தித் தரக்கூடிய, பலமான சர்க்கார்- அதைப் பரிபூரண மாக ஆதரிக்கும் மக்கள்- அம்மக்களைக் சரியான வழியிலே நடத்திச் செல்லும் தலைவர்கள்- இவையே! இவைகட்குக் குறுக்கே நிற்பது, ஆச்சாரியார்ர் போன்றோர், அடிக்கடி விடும் அறிக்கைகள், சில சீமை மகாத்மாக்கள் விடும் யோசனைகள், பேட்டிகள் ஆகிய நிகழ்ச்கிகளே என்போம்.

தேசீய சர்க்கார் தேவை, தேவை என்று இன்று கூறும், ஆச்சாரியார், அதை அமைக்க, அவருக்கு இருந்த அருமையான சந்தர்ப்பங்களைத் தவற விட்டுவிட்டார் என்பதை, தர்க்கத் துக்காக அவர் மறுக்கலாமே தவிர, மனதார மறுக்க முடியாது!! போர் துவங்கிய உடனே, பிரிட்டனுடன் பேரம் பேசும் காரியத்திலே இறங்காது, பிணக்கு தீர, இங்குள்ள கட்சிகளைக் கலந்து சமரசம் உண்டாக்கியிருந்திருப்பின், இன்று ஆச்சாரியார் கோரும் சர்க்கார் இருந்திருக்கும்! அன்று அவரது ஆசை, வாலியை வீழ்த்த வேண்டும் என்பதன்றி வேறில்லை, இன்று விம்மிடுவது வீண் என்போம். இப்போதும், மூன்றாண்டுகட்கு முன்பு பேசியிருக்க வேண்டியதைப் பேசிக் கொண்டிருந்து பயன் இல்லை.

இன்று, ஆச்சாரியார் ஆங்கிலேயருக்கு, வேண்டுகோளோ, எச்சரிக்கையோ விடுவதை விட உண்மையிலேயே நாடு, ஜப்பானியரிடம் சிக்காமலிருக்க வேண்டுமென்ற எண்ணமிருப் பின், போர்க்காலத்திலே பேரம் பேசக்கூடாது என்று கூறிவிட்டு, களத்தை வேவல்கள் கவனிக்கட்டும், மக்களை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு, மற்றத் தலைவர்களுடன் கலந்து பேசி, மக்களிடையே, போரில் வெற்றிபெறுவதற்கான ஆர்வம் பிறக்கும் வேலையைச் செய்தலே, முறை என்போம்.

கல்கத்தாவிலே ஆச்சாரியார் பேசிய போது, தமது காங்கிரஸ் சகாக்களுக்குச் சொன் னார், ``பிரிட்டிஷ் ஆட்சியை இத்தனை வருஷ காலம் பொறுத்துக் கொண்டோம், இனி இரண்டாண்டு பொறுத்துக்கொள்வோம்’’ என்ற அருமையான போதனை! அத்துடன் ஒன்று சேர்த்து ஆச்சாரியாருக்கு நாம் அர்ப்பணம் செய்கிறோம், இந்த மூன்றாண்டுகளாக உமது சகாக்கள் ஒதுங்கி இருந்தது போல், இன்னும் இரண்டாண்டு, வெற்றி கிடைக்கும்வரை, ஒதுங்கி இருக்கட்டும், இந்தச் சமயத்திலே, அவர்களை உள்ளே புகுத்தும் முயற்சி வேண்ண்டாம்.’’

இதனை நாம், எட்டு கோடி முஸ்லீம், நாலு கோடி திராவிடர், ஆறு கோடிக்கு அதிகமான ஆதிதிராவிடர் சார்பாகக் கூறுகிறோம். ``பவதி பிஷாந்தேஹி’ என்று, சியாங்கே ஷெக்கிடமோ, ரூஸ்வெல்ட்டிடமோ சென்று பயனில்லை என்று சீரிய புத்திமதி கூறிய டாக்டர் அம்பேத்காரின் அறிக்கையையும், கண்டவர். காற்றாடியைப் பறக்க விடும் கபடம் வேண்டாம் என்று ஜனாப்ஜின்னா விடுத்த எச்சரிக்கையையும், கவனப்படுத்துகிறோம்.

--------------------------------------அறிஞர் அண்ணா- "திராவிட நாடு", 8-11-1942

41 comments:

தமிழ் ஓவியா said...


இன்றும் பார்ப்பனீயம் படம் எடுத்து ஆடும் கொடூரம்!

பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலைகளில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணமாம்!

கருநாடக மாநிலத்தில் நடக்கும் காட்டுமிராண்டித்தனம்!

பெங்களூரூ, நவ. 20- கருநாடகாவில் அத்தேகுக்கே சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கேவலமான பிரார்த்தனை செய்வது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். இதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று மாநில முதலமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றதில் நிலுவையில் உள்ளது.

தட்சிண கருநாடக மாவட்டத்தில் அத்தேகுக்கே சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 3 நாட்கள் மாதே ஸ்நானா பிரார்த்தனை நடை பெறும். பார்ப்பனர்கள் சாப்பிட்டு வைத்த எச்சில் இலைமீது கீழ்தட்டு வகுப்பைச் சேர்ந்த பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. இவ்வாறு நேர்த்திக்கடன் செய்தால் அவர்கள் நினைத்தது நிறைவேறும் என்று நம்பப் படுகிறதாம்.

இந்தப் பிரார்த்தனை முறை கீழ்தட்டு மக்களை அவமதிப்பதாகும் என்று தட்சிண கருநாடக கல்லியா தாலுகாவைச் சேர்ந்த கருணாகர் என்னே மஜல், மங்களூரு தாலுகாவைச் சேர்ந்த ஜெயக்குமார் கிரேமத், கே.நாராயண செட்டி ஆகியோர் மாநில முதலமைச்சர் சித்தராமய்யாவிடம் மனு கொடுத் தனர். எச்சில் இலை மீது கீழ்தட்டு மக்கள் அங்கப் பிரதட்சணம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு

மதவழிபாட்டுத் தலங்களில் எல்லோரும் சமமே. இதில் பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதவர் என்ற பாகுபாடு கூடாது. ஆனால் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்டு தெருவில் போட்ட எச்சிலை மீது பார்ப்பனர் அல்லாத பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்று வலி யுறுத்தப்படுவது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும். ஆகவே இதற்கு தடை விதிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று இந்த மனுவில் வலியுறுத்தி யுள்ளனர்.

இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாநில முதலமைச்சரின் அலுவலகம் உத்தரவிட்டது. ஆனால் இதுதொடர்பான எந்த உத்தரவும் தர வில்லை என்று கோவில் நிர்வாக அதிகாரி எம்.நாகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தக் கேவலமான பிரார்த்தனையை மாற்றி அமைக்கக்கோரி கருநாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஒருசில பக்தர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கோவிலில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையில் மாற்றம் செய்வதற்கு தடை விதித்தது. (என்ன கேவலம்!) இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காவல்துறையின் பாதுகாப்புடன் வழக்கம்போல் இந்தக் கேவலமான பிரார்த்தனை நடத்தப்பட்ட தாம். இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தமிழ் ஓவியா said...


மறக்கத்தான் முடியுமா இந்நாளை....?

ஆம், மறக்கவே முடியாத மாண்புக் குரிய மானமிகு நாள் இந்நாள்.

இந்நாளில்தான் அன்று 1916 இல் திராவிடர் இயக்கத்துக்கான வித்து மண்ணில் விழுந்த நாள்.

1916 இல் இதே நாளில் தான் பார்ப்பனர் அல்லாதார் ஒன்று கூடி பார்ப்பனர் அல்லாதாரின் பரிதாப நிலையைப்பற்றி எண்ணிப் பார்த் தனர்.

எல்லா வகைகளிலும் பார்ப்பனர் களின் இரும்புப் பிடியில் சிக்கி விழி பிதுங்கி இருந்த நம் மக்கள் கரையேற உரியது செய்யப்பட வேண்டும் என்று திட்டம் தீட்டிய நாள் - டாக்டர் சி.நடேசனார் என்ற பெருமகன் தாய்த்தோளாக இருந்து இந்த இயக்கக் குழந்தையைப் பெற் றெடுத்துச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து ஆளாக்கினார்.

அந்தப் பெருமகனாரின் நினைவை நெகிழ்ச்சியோடு நன்றி மலர் சூட்டிப் போற்றுவோம் - எழுந்து நின்று வீரவணக்கமும் செலுத்து வோம்.

விரைவில் பொன்னேரி பக்கத்தில் உள்ள அவர்தம் சொந்தவூரில் அவர் சிலை திறக்கப்பட உள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி!

அந்த நாளில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் உணவு விடுதிகளில் உட்கார்ந்து உணவருந்த முடியாது. எடுப்புச் சாப்பாடு வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.

அத்தகு இறுகிய ஒரு கால கட்டத்தில் பார்ப்பனர் அல்லாதாருக் கென்று விடுதி ஒன்றை உருவாக்கி நம் மக்களைத் தாய்ப்பறவையாக இருந்து இறக்கைச் சூட்டில் கத கதக்க வைத்ததைக் கண்ணீர் மல்க நினைவு கூர்வோம்.

திராவிடர் இயக்கம் என்ன செய்தது? என்று நன்றியைக் காலில் போட்டு மிதித்துத் திமிர் முறிக்கும் குப்பைகளை நெட்டித் தள்ளி, நாம் நடந்துவந்தபாதையை இந்நாளில் அரிமா நோக்காகப் பார்ப்போம்.

அன்று 1914 இல் நம் படிப்பின் நிலை என்ன?

1915 இல் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் நூற்றுக்கு ஏழு பேர். அதில் 3 சதவிகிதம் உள்ள பார்ப்பனர் களின் கல்வி நிலை என்ன தெரி யுமா? 75 சதவிகிதம். பார்ப்பனர் அல் லாதாரின் கல்வி நிலை... அதிர்ச்சி அடையாதீர்கள் - வெறும் 3 சதவிகிதமே!

1915 இல் கல்வித் துறையில் இருந்த மொத்த உத்தியோகங்கள் 518. இதில் பார்ப்பனர்கள் மட்டுமே 399 பேர்கள். இதில் கிறித்தவர்களும், ஆங்கிலோ இந்தியர்களும் 73 பேர். முசுலிம்கள் 28 பேர். தாழ்த்தப்பட்ட வர்கள் உள்பட பார்ப்பனர் அல்லாதார் வெறும் 18 பேர். (பார்க்க வகுப் புரிமை வரலாறு - கி.வீரமணி, பக்கம் 36)

தமிழ் ஓவியா said...


இந்த நிலை அடி தெரியாமல் இன்று நொறுங்கிப் போனதற்கு யார் காரணம்? சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் திருவாசகம் இதே நாளில் 2010 இல் திராவிடர் இயக்க வரலாற்று ஆய்வு மய்யம் சென்னை பெரியார் திடலில் நடத்திய விழாவில் கலந்துகொண்டு சொன்ன புள்ளி விவரம் என்ன தெரியுமா?

சென்னைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் 1,45,450 சதவிகிதம் 89.

நெஞ்சில் நேர்மையின்றி நச்சுக் காற்றைச் சுவாசித்து வாழும் சில ஜீவன்கள். திராவிடத்தால் வீழ்ந் தோம் என்கிறார்களே, அவர்களின் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக் கம் தெளிவித்து, இந்த விவரங்களை எடுத்துச் சொல்லுங்கள்.

அதைவிட இன்னும் துல்லியமாக இப்பொழுது (டுயவநளவ) உள்ள ஒரு தகவலைத் தெரிவிப்போம்.

இந்த ஆண்டு மருத்துவக் கல் லூரி சேர்க்கையை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்.

தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட் டுக்கு (85 சதவிகிதம்) உரிய இடங் கள் 2172. இதில் திறந்த போட்டியில் (டீவாநச கூரச) வெற்றி பெற்றவர்கள் விவரம்.

முற்பட்ட வகுப்பினருக்கு (குடிசறயசன ஊடிஅஅரவைல - பார்ப்பனர் உள்பட) 50 இடங்கள்,

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 442 இடங்கள்,

மிகவும் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 140 இடங்கள்,

பிற்படுத்தப்பட்டோர் (முசுலிம் களுக்கு) 18 இடங்கள்,

தாழ்த்தப்பட்டவர்களுக்கு 21 இடங்கள், தாழ்த்தப்பட்டவர் (அருந் ததியர்க்கு) ஒரு இடம்

பழங்குடியினருக்கு ஒரு இடம்

என்று கலந்தாய்வுமூலம் 673 மாணவர்களுக்குச் சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது.
இதுதவிர இட ஒதுக்கீட்டுப் பிரி வினர்க்கு எம்.பி.பி.எஸ். இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 576 இடங்கள்,

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 434 இடங்கள்,
பிற்படுத்தப்பட்டோர் (முசுலிம் களுக்கு) 76 இடங்கள்,
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 328 இடங்கள்,

தாழ்த்தப்பட்டோர் (அருந்த தியர்க்கு) வகுப்பினருக்கு 63 இடங்கள்,
பழங்குடி வகுப்பினருக்கு 22 இடங்கள்

எனக் கலந்தாய்வுமூலம் 1499 மாணவர்களுக்குச் சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது (தினமணி, 19.8.2013, பக்கம் 9).

சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற மனுதர்மத் தடையை நீதிக்கட்சி ஆட்சி நொறுக்கவில்லையானால், இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?
இந்தப் புள்ளி விவரங்களைப் பார்த்த பிறகாவது, திராவிட இயக்கம் என்ன செய்து கிழித்தது என்று சட்டைகளையும், வேட்டிகளையும் கிழித்துக்கொண்டு உளறும் பித்துக் குளிகள் புத்தி தெளியட்டும்!

- கருஞ்சட்டை

கூடுதல் தகவல்(Tail Piece)

1901 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சென்னை மாகாணத்து மக்கள் தொகைக் கணக்கு கீழ்க்கண்ட விவரத்தைத் தருகிறது.

சென்னை மாகாணத்தில் வாழும் மக்கள் பிரிவு

பிராமணர்கள் 3.4 சதவிகிதம்

சூத்திரர்கள் 94.3 சதவிகிதம்

ஆகமொத்தம் 97.7 சதவிகிதம்

சூத்திரர்கள் என்றால் யார்? சூத்திரன் என்பவன் ஏழு வகைப் படும்:

1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்

2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்

3. பிராமணனிடத்தில் பக்தியால் ஊழியஞ்செய்கிறவன்

4. விபச்சாரி மகன்

5. விலைக்கு வாங்கப்பட்டவன்

6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்

7. தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்

(மனுதர்மம் அத்தியாயம் 8: சுலோகம் 415)

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்று சொன்னவர் தந்தை பெரியார் - இயக்கம்

சுயமரியாதை இயக்கம் - மறக்காதே ம(ர)றத்தமிழா!

தமிழ் ஓவியா said...


மங்கள்யான் விண்கலம்: டிசம்பர் 1-இல் செவ்வாய்க்கோளை நோக்கிப் பயணிக்கும் இஸ்ரோ தலைவர் தகவல்


ஆலந்தூர், நவ.20- பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விடுபட்டு மங்கள்யான், செவ்வாய்க்கோளை நோக்கி டிசம்பர் ஒன்றாம் தேதி பயணம் மேற்கொள் ளும் என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க் கிழமை பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

செவ்வாய்க்கோளுக்கு கடந்த 5 ஆம் தேதி அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அது பூமியில் இருந்து 1.95 லட்சம் கி.மீ. தூரத்தில் தற்போது சுற்றி வருகிறது.

வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விடுபட்டு செவ்வாய்க்கோளுக்கு தனது பயணத்தைத் தொடங்கும்.

மங்கள்யான் விண்கலப் பயணம் திட்டமிட்டபடி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் கடந்த ஆகஸ்டு மாதம் 19 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது.

ஆனால், இறுதி நேரத்தில் ஏற்பட்ட சிறிய கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த ராக்கெட் உள்நாட்டு இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது.

தற்போது ஜி.எஸ்.எல்.வி டி-5 முழுமையாக தயாராகிவுள்ளது. இதை டிசம்பர் மாதம், இரண்டாவது வாரத்தில் விண்ணில் செலுத்த தயாராக உள்ளோம் என்றார் ராதாகிருஷ்ணன்.

தமிழ் ஓவியா said...


பாரத ரத்னா படும்பாடு!


கிரிக்கெட் விளையாட்டுக்காரர் சச்சின் டெண்டுல் கருக்குப் பாரத ரத்னா பட்டம் கொடுத்தாலும் கொடுத் தார்கள் - அது பெரிய சர்ச்சைப் புயலை நாடு தழுவிய அளவில் எழுப்பிவிட்டது.

விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இதுவரை பாரத ரத்னா பட்டம் கொடுக்கப்பட்டதில்லை. மூன்றாண்டுகளுக்கு முன்புதான் அத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

அப்படிப் பார்க்கப்போனால், இந்திய மண்ணுக்குச் சொந்தமான ஹாக்கிக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். மற்றவற்றில் எல்லாம் தேசியம் பேசுவோர்களின் சிந்தனையில் இந்த மின்னல் இழை தொனிக்காமல் போனது ஏன்?

ஒலிம்பிக்கில் எட்டு முறை தங்கத்தை வாங்கிக் கொடுத்த ஹாக்கிக்குக்கு அல்லவா முதல் மரியாதை செய்திருக்கவேண்டும்.

மற்ற மற்ற பிரச்சினைகள் என்று வரும்போது மட்டும்தான் வெள்ளைக்காரன் அந்நியனா? அவன் விட்டுச் சென்ற மிச்ச சொச்சங்களில் இந்தக் கிரிக்கெட்டும் ஒன்று.

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் அஸ்தமிக்காத ஒன்று என்று சொல்லப்படுவதுண்டு; அவன் ஆட்சி செய்த நாடுகளில் எல்லாம் இந்தக் கிரிக்கெட் உண்டு.

மற்றபடி உலகின் மிகப்பெரிய நாடுகளான அமெரிக்கா, சீனா, ருசியா, ஜப்பான், பிரான்சு போன்ற நாடுகளில் இந்த விளையாட்டைச் சீந்துவார் இல்லை.

அதிகம் போனால் கிரிக்கெட் விளையாட்டு பத்து நாடுகளைத் தாண்டாது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய, வெள்ளைக்காரர்களான பார்ப்பனர்கள் சுவீ காரம் செய்து கொண்ட விளையாட்டு இது. அதனால் தான் இதற்கு இவ்வளவு மரியாதை - ஊடகங்கள் எல்லாம் அவர்களின் கைகளில் என்பதால் மற்ற மற்ற விளையாட்டுகள் எல்லாம் மக்கள் மத்தியில் புறந்தள்ளப்பட்டு, கிரிக்கெட் மட்டும் குதிரைச் சவாரி செய்துகொண்டு இருக்கிறது.

அறிஞர் பெர்னாட்ஷா சொன்னதுபோல, 11 மடை யர்கள் விளையாடுகிறார்கள்; 11 ஆயிரம் மடையர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் நினைவிற்கு வருகிறது.

கிரிக்கெட் என்பது பணம் காய்த்துத் தொங்கும் மரம் போன்றது. ஒவ்வொரு முறை விளையாடும்பொழுதும் அளிக்கப்படும் பணம் போதாது என்று ஆண்டு சம்பளம் வேறு சுளை சுளையாக - மேலும் பலவகையான மாநில, மத்திய அரசுகளின் சலுகைகள் வேறு.

இவ்வளவும் போதாது என்று கிரிக்கெட் சூதாட்டம் வேறு - விளையாட்டு என்கிற வீரியத்தைக் காயடித்த ஆட்டம் ஒன்று உண்டு என்றால், அது கிரிக்கெட்தான்.

சச்சின் டெண்டுல்கரைப் பொறுத்தவரை, தன் சாதனைக்காக ஆடக் கூடியவரே தவிர, தான் சார்ந் திருக்கும் குழு வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கக் கூடியவரும் அல்லர்.

பொதுவாக ஒரு விமர்சனம் அவரைப் பொறுத்து உண்டு. அவர் அதிக ஓட்டம் எடுத்த ஆட்டம் வெற்றி பெற்றதில்லை என்று கூறப்படுவதுண்டு. அவர் சந்தித்த பந்துக்கும், ஓட்டத்திற்கும் உள்ள விகிதாச்சாரமும் அதனை நிரூபிக்குமே!

இவர் தனது 79 ஆவது ஆட்டத்தில்தான் முதல் சதமே போட்டார்.

இவர் அணித் தலைவராக இருந்து ஆடிய 5 நாள் போட்டிகள் 25; அதில் வெற்றி 4; தோல்வி 9. சரி சமம் (ட்ரா) 12.

ஒரு நாள் ஆட்டங்கள் 73; அதில் வெற்றி 23; தோல்வி 43. சரி சமம் 2; முடிவு இல்லாதது 5.
இதுதான் சச்சினின் சாதனையா? இவர்தான் கிரிக்கெட் கடவுளாம்!

இவர் தலைமையில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்றதும் இல்லை. கபில்தேவ், தோனி தலைமையில்தான் இந்திய அணி உலகக் கோப்பையைத் தட்டிப் பறித்ததுண்டு.

இதில் என்ன கொடுமையென்றால், 2011 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா வென்றது; அதன் பெருமை இந்திய அணியின் தலைவர் தோனிக்குத் தானே போய்ச் சேரவேண்டும்.

உண்மையில் என்ன நடந்தது? அந்தப் பதினோரு பேரில் ஒருவராக இருந்த சச்சினைத் தோளில் தூக்கிக் கொண்டு மைதானம் முழுவதும் வலம் வந்தனர். வெற்றிக் குரிய நாயகனான தோனியோ அமைதியாக ஒதுங்கி நின்றார்.

கிரிக்கெட்மூலம் சச்சின் கோடிகோடியாக சம்பாதித் தாரே தவிர, சமுதாயத்துக்கு அவரின் உதவி என்ன என்பது முக்கிய வினாவாகும்.

சச்சின் சாதனை என்பதைவிட, அவர் ஒரு பார்ப்பனர் என்ற எண்ணம் கொஞ்சம் தூக்கலாக இருப்பதுதான் இவ்வளவுக் களேபரம், கித்தாப்பு, விளம்பரங்களுக்கு எல்லாம் அடிப்படை!

தமிழ் ஓவியா said...


எனது ஆசை


எனக்கு ஆசை எல்லாம் - மக்கள் பகுத்தறிவாளர்கள் ஆகவேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் பார்ப்பனர் இருக்கக்கூடாது. இதுதான் எனது கொள்கை. (விடுதலை, 28.8.1972)

தமிழ் ஓவியா said...


கழிப்பறைகளும், நம் கவனமும்!


உலகக் கழிப்பறை நாள் நேற்று (19.11.2013, செவ்வாய்)!

பல்வேறு பிரச்சினைகளை முன் னிறுத்தி முக்கியமான பிரச்சாரத்திற் காக இப்படி ஆண்டில் பெரும்பாலான நாள்களைக் கொண்டாட முடிவு செய்து, உலக அளவில் இதற்குரிய முக்கியத் துவம் ஏற்பட்டு, நடைமுறைப்படுத் தப்பட்டு வருகிறது!

சிலர் இதனை மேலெழுந்தவாரி யாகப் பார்த்து கேலியாகக்கூட நினைக்கக்கூடும்.

அது சரியான கண்ணோட்டம் ஆகாது.

காரணம், கழிப்பறை என்பது மிகமிக முக்கிய தேவை வீடுகளில்.

வீடுகளில் மட்டுமா? உடலின் ஆரோக்கியத்திற்குக்கூட, கழிப்புகள் - அவை மலக்கழிப்பானாலும், சிறுநீர்க் கழிப்பாக ஆனாலும், மிக முக்கிய மல்லவா?

மருத்துவரிடம் நாம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்று, சிகிச்சைக் காக உடலைக் காட்டிடும்போது, அவர் கேட்கும் சில முக்கிய கேள்விகள்:

பசி எடுக்கிறதா?

தூக்கம் சரியாக உள்ளதா?

மலக்கழிப்பு சரியாக நடைபெறு கிறதா?

சிறுநீர் கழிப்பு அதற்கும் உள் ளதா? என்பது போன்ற கேள்விகளும், முதல் கேள்விகளாக சரியாக மூச்சு விட முடிகிறதா? காய்ச்சல் (ஜூரம்), இருமல் உள்ளதா? என்ற கேள்வி களுக்கு முன்னுரிமை அளித்த நிலை யில், அடுத்து இவைதான் கேட்கப்படும் கேள்விகள்.
முதுமையில் மலச்சிக்கல் வெகு பலரையும் அல்லல்படுத்தும் அவதி நோய்களில் ஒன்று. எனவே, கழிப்பறை கள் மிகவும் உடல்நலப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியம்.

திறந்தவெளியிலும், தெருக்களிலும் குழந்தைகளை மலம், சிறுநீர் கழிக்க அனுப்பும் பெற்றோர் முன்பு அதிகம்; சிறுநகரங்களில்கூட முன்பு இருந்த கொடிய பழக்கம் அது! ஆனால், இப் பொழுது அது வெகுவாகக் குறைந்து விட்டது. மாறிவருவது நல்ல திருப்பம்.
பொதுவாக நமது கிராமப்புறங்களில் திறந்தவெளிகளில், பெண்கள்கூட மலங்கழிக்க ஒதுங்கும் பரிதாப நிலை இருந்தது; காரணம், அங்கே போதிய கழிப்பறை வசதிகள் கிடையாது; அதனால் அந்தப் பழக்கமும் அவர்கள் பதியவில்லை; இப்போது பெரிதும் அந்நிலை மாறிவிட்டது!

ஒரு வெளிநாட்டுக்காரர் எழுதிய ஒரு ஆங்கில நூலில், நமது வினோத மான பழக்கத்தை நன்கு சுட்டிக்காட்டி, சம்மட்டி அடி தந்துள்ளார்!

இந்தியாவில் ஒரு விசித்திர பழக்கத்தைக் கண்டு அதிர்ந்து போனேன்; மலங்கழிப்பது மனிதர்களின் தனியே நடக்கவேண்டிய (ரகசிய) நிகழ்வு ஆகும். இதை ஒரு சங்கிலித் தொடர் வண்டிபோல் அமர்ந்துகொண்டு (தள்ளித் தள்ளி உட்கார்ந்து) கூச்ச நாச்சமில்லாமல் செய்கிறார்கள்!

ஆனால், அதேநேரத்தில் மத உணர்வு காரணமாக சடங்காச்சாரத் தைக் காப்பாற்றுவதற்காக, எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சிந்தித்துப் பேசி மகிழ்ந்து கலந்து உண்ணும் உணவுப் பழக்கத்தை - சாப்பிடும்போது - தனியே திரைபோட்டதுபோல - மறைத்துக் கொண்டு சாப்பிடுகிறார்கள்!(Private) (மனுதர்ம சாஸ்திரத்தில் இது ஜாதிய - வருணாசிரமப்படி வற்புறுத்தப்பட் டுள்ளது).

எதைத் தனியாகச் செய்யவேண் டுமோ, அதைக் கூச்சமின்றி பொதுவாக -பப்ளிக்காக திறந்தவெளி அரங்கில் செய்கின்றனர்; எது பொதுவாக ‘Socially’ நடத்தப்படவேண்டுமோ அந்த உண்ணும் பழக்கத்தை ஒரு தனியே திரை போட்டு மறைத்துவிட்டுச் செய் கின்றனர் என்று எழுதியுள்ளார்!

- இது சரியான சுட்டிக்காட்டல் தானே! மறுக்க முடியாதே!

இப்போது அது வெகுவாக மாறி வருகிறது. வாஸ்து சாஸ்திர மூட நம்பிக்கை இப்போது படித்த தற் குறிகளையும்கூடப் பிடித்தாட்டுகிறதே! அந்த வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டுக் குள் கழிப்பறை கட்டுவதற்கு அனுமதி யில்லையே!

ஆனால், இன்றுள்ள நவீன வீடுகளில் ‘Bath Attached’ குளியல் - கழிப்பறை உள்ளடங்கிய அறைகள் தானே 2 முதல் 3, 4 என்று உள்ளதே!

எனவே, இது உடல்நலக் கண் ணோட்டத்தில் மட்டும் முக்கியமல்ல நண்பர்களே, அறிவுநலக் கண் ணோட் டத்திலும், பகுத்தறிவின்படி கழிப் பறைகள் எங்கும் தேவை.
அதேநேரத்தில், அவைகள் நன்றாக, சுத்தமாக உள்ளனவா என்ற கண் காணிப்பு மிகமிக அவசியமாகும்; நோய்க் கிருமிகளின் வாசமே அங்கு தான்!

வீடுகளில் வரவேற்பறையை அழகு படுத்துவதைவிட, கழிப்பறைகளைச் சுத்தப்படுத்துதல் மிகமிக இன்றியமை யாதது!

எனவே, கழிப்பறை என்றால் முகம் சுழிக்கவேண்டாம்; கவனம் தேவை!

அதுபோலவே, பூஜை அறை முக்கி யத்தைவிட, கழிப்பறை மிக முக்கியம். veramani

தமிழ் ஓவியா said...


சென்னை, காஞ்சி மண்டலக் கழகப் பொறுப்பாளர்களுக்கு அன்பு வேண்டுகோள்!

தஞ்சையில் டிசம்பர் 2ஆம் தேதி நடக்கவிருக்கும் நமது அருமைத் தலைவரின் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவில், உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு நாம் நிறுவ இருக்கும் 95 அடி உயர பேருருவச் சிலைக்காக முதற்கட்டமாக ஆயிரம் சவரன் தங்கத்துக்கான நிதியை தஞ்சையில் அளிக்க இருக்கிறோம்.

நாள்தோறும் தோழர்கள் நன்கொடைகளை ஆர்வத்துடன் வழங்கி வருவதை விடுதலையின் வாயிலாக அறிந்து இருப்பீர்கள்.

சென்னை, காஞ்சி மண்டலக் கழகப் பொறுப்பாளர்கள் நவம்பர் 26ஆம் தேதி செவ்வாய்க் காலை சென்னை பெரியார் திடலில் நடக்கவிருக்கும் நமது அருமைக் கழகப் பொருளாளர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு நேரில் வந்து கழகத் தலைவரிடம் நிதியை அளிக்குமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இடையில் நாட்கள் குறைவு - வேகமும், விவேகமும் காட்டுவீர்! தோழர்களே!

சென்னை
20.11.2013

- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


சல்மானுக்கென்ன மாண்டு மடிந்தது தமிழர்கள்தானே?

உடன்பிறப்பே,

உலகத் தமிழர்களும், கனடா, பிரிட்டன், மொரீஷியஸ், ட்ரினிடாட் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பியதற்குப் பிறகு, காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்று முடிந்துவிட்டது. அந்த மாநாட்டின் ஒரே சிறப்பு, அந்த மாநாட்டினை நடத்திய இலங்கை அதிபருக்கு ஏற்பட்ட நெருக் கடியான நிலை; இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் அவர்களுக்குக் கிடைத்த சர்வதேச கவனம். ஈழத் தமிழர்கள் - இலங்கையிலே வாழ் வோர் மற்றும் உலகமெங்கும் வாழ்வோர், ஏன் தமிழ்நாட்டில் வாழும் அத்தனை தமிழர்களின் நெஞ்சங்களிலும், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் இடம் பெற்றுவிட்டார். இந்தப் புகழும், பெருமையும் நம்முடைய இந்தியப் பிரதமருக்கும் கிடைத்திருக்கும். எப்போது தெரியுமா? இலங்கை யில் நடைபெற்ற காமன் வெல்த் மாநாட்டில், நமது வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான குழுவும், ஈழத் தமிழர்களுக்கு இலங்கை இழைத் திருக்கும் கொடுமைகளையும், மனித உரிமை மீறல்கள் - போர்க் குற்றங்கள் - இனப்படுகொலை ஆகியவற்றையும் கண்டிக்கும் வகையில் இந்தியா அந்த மாநாட்டில் கலந்து கொள்ளாது; இந்தியா விலிருந்து பிரதமர் அல்ல, ஒரு துரும்பு கூட அந்த மாநாட்டில் கலந்து கொள்ளாது என்று அறிவித் திருக்குமானால், தமிழகமே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கும். தமிழர்கள் ஒருமனதாக அதைப் பாராட்டி மகிழ்ந்திருப்பார்கள்; பிரதமரும் சர்வ தேச கவனத்தை ஈர்த்திருப்பார்!

தமிழ் ஓவியா said...

தலையும், வாலும்

அதுமாத்திரமல்ல; இலங்கை அதிபருக்கு தலை யையும், தமிழர்களுக்கு வாலையும் காட்டி ஏமாற்ற நினைத்ததைப் போல, இரண்டுங்கெட்டான் நிலையில், இந்தியப் பிரதமர் இலங்கைக்குச் செல்லாமல், அதேநேரத்தில் மத்திய அமைச்சரை மட்டும் அனுப்ப முன்வந்த சூழலில், அந்தச் செய்தியையாவது பிரதமர் ஓர் அறிக்கையாக இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக அங்கே நடத்திய வன்கொடுமைகளைக் கண்டிக்கின்ற வகையில்தான் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்திருந்தாலோ - அல்லது இலங்கைக்குச் சென்ற மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், இங்கிலாந்து பிரதமர் செய்த தைப்போல, ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று, தொடர்ந்து துன்ப துயரங்களை மட்டுமே அனுபவித்துவரும் தமிழர்களுக் கெல்லாம் இந்தியா சார்பில் ஆறுதல் தெரிவித்து, நெஞ்சைக் கலக்கும் அவர்களின் நிலைமைகளை; இலங்கை அதிபரைச் சந்தித்து எடுத்துக் கூறி, ஈழத் தமிழர்களுக்கு இலங்கை ராணுவம் இன்னமும் செய்துவரும் கொடு மைகளைக் கண்டிக்கும் வகையில் விசாரணைக் குழு ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும், தவறி னால் அய்.நா. மன்றத்திலும், மனித உரிமைகள் ஆணையத்திலும் இந்தியா முறையிட்டுத் தீர்மானம் கொண்டு வருவோம் என்று சொல்லியிருந்தாலே, இன்றைக்கு கேமரூன் அவர்களுக்குக் கிடைத்துள்ள அத்தனை பெருமைகளும் இந்திய அரசுக்குக் கிடைத்திருக்கும். உலகத் தமிழ்ச் சமுதாயம் நமக்காக இந்திய அரசு துணைபுரிய முன்வந்திருக்கிறது என்றெண்ணி நன்றி செலுத்தியிருக்கும்.

தமிழ் ஓவியா said...

இந்திய அரசின் செயல்பாட்டினைக் கண்டித்து, கடந்த ஞாயிறன்று அண்ணா அறிவாலயத்தில் கூடிய டெசோ கூட்டத்தில் நிறைவேற்றிய முதல் தீர் மானத்தில், ஈழத் தமிழர் பிரச்சினையிலே நெருக்க மான தொடர்பு இல்லாத இங்கிலாந்து நாட்டின் பிரதமரே, இந்த அளவிற்கு கருத்துக்களை வெளி யிட்டிருக்கும்போது, ஈழத் தமிழர்களுக்காக உண் மையிலேயே குரல் கொடுத்து உதவிக்கு வந்திருக்க வேண்டிய உரிமையும், கடமையும், பொறுப்பும் உள்ள சகோதர நாடான இந்தியா, தமிழர்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளைப் புறக்கணித்து, இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. சல்மான் குர்ஷித் அவர்களை அந்த மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்ததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று ஒரு பத்தியில் குறிப்பிட்டிருப்பதோடு, இரண்டாவது தீர்மானத் தில் பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கும் கருத்துக்களையும், உலகத் தமிழர்களின் உணர்வு களையும் புரிந்து கொண்டு, இனியாவது மத்திய அரசு, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படு கொலை குறித்து, சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இந்திய நாடாளு மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என் றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏடுகளின் விமர்சனங்கள்

தமிழ் ஓவியா said...

இந்தியாவின் செயல்பாடுகள் பற்றி உள்நாட்டு - வெளிநாட்டுப் பத்திரிகைகள் என்ன எழுதியிருக் கின்றன தெரியுமா? இதோ உதாரணத்திற்கு ஒன் றிரண்டு!

The New York Times, in an editorial appearing in the Thursday edition, accused
Sri Lanka of committing “serious human rights violations” and of failing “to provide accountability for war-time abuses.” Under the Rajapaksa Government, the paper said, journalists have been systematically threatened, harassed, killed or forced into exile in what amounts to a war on the press, adding, that Colombo did everything it could to sabotage a free and fair outcome (in the Northern elections), including publishing a fake edition of the local newspaper Uthayan. The editorial urged the leaders attending the Commonwealth Heads of Government Meeting to insist that Colombo show meaningful progress in addressing human rights abuses abiding by international standards and to restore constitutional protection for freedom of expression”

#####

The Hindu - Editorial - “Manmohan Singh’s decision not to attend the summit has brought no political or diplomatic advantage. By comparison, British Prime Minister David Cameron showed far more nous. He silenced political opposition to his participation by using the occasion to publicly criticise Sri Lanka’s rights record, issuing an ultimatum to President Rajapaksa to institute by March a credible inquiry into allegations of rights violations. How useful such ultimatums are as a diplomatic strategy is questionable going by the Sri Lankan leader’s defiant stance, but the British Prime Minister achieved his stated aim of “focus(ing) the eyes of the world on Sri Lanka”. He also did what the Indian Prime Minister should have done - visited Jaffna, connecting with the Tamil people and their problems first-hand. New Delhi will face its next Sri Lanka test in March 2014 at the U.N. Human Rights Council, but its timing right before the elections means it may blunder through again”

தமிழ் ஓவியா said...

#####

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில்

இதோ; ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில், ஒருவரின் குரல் “Lee Rhiannon, a Greens Party Senator from New South Wales, during a debate in the Australian Parliament following her return from Sri Lanka on the eve of the Commonwealth Meeting, said that the situation in the North East under Mahinda Rajapakse regime is dire, that the Sri Lanka army’s involvement in civilian life is pervasive and Australia is turning a blind eye to credible allegations of continuing torture, rape and crimes against humanity reported by respected Rights groups and by several video documentaries from Channel-4. Rhiannon pointed out the increasingly voiced broad consensus from several countries for an international investigations into the war-crimes by the Rajapakse regime, and praised the CHOGM boycott of several Prime Ministers in spotlighting the Sri Lanka’s continuing dismal rights record and lack of accountability for war-crimes. She added a Catholic father who has documented the details of more than 2000 people disappeared after being arrested alive had told her that crimes that have been committed and those that continue to be perpetrated amount to genecide against the Tamils.”

#####

தமிழ் ஓவியா said...

இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதிய...

The New Indian Express - Editorial - “Rajapaksa needs to remember that nobody trusts his Government when it says there were no violations and the end of the war has brought peace and tranquility to Sri Lanka.

நழுவியது வாய்ப்பு என்ற தலைப்பிலே தினமணி - இலங்கையில் நடந்த இனப்படு கொலையையும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த போரின் போது அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறலை யும் கண்டித்து, அதற்காக காமன் வெல்த் மா நாட்டைப் புறக்கணிப்பதாக வெளிப்படை யாகவே அறிவித்தனர் கனடா, மொரிஷியஸ் பிரதமர்கள். இந்தியப் பிரதமர் அப்படி அறிக்கை எதுவுமே வெளியிடாமல், தனக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சரைப் பங்கேற்க அனுப்பி வைத்து, தமிழக அரசியல் கட்சிகளுக்கு தலையையும், இலங்கை அரசுக்கு வாலையும் காட்டி நழுவியிருக் கிறார். ஒன்று, புறக்கணித்த ஏனைய இரண்டு பிரதமர்களையும் போல, துணிவுடன் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறலுக்குக் கண்டனம் தெரிவித்து, சர்வதேச விசாரணை கோரியிருக்க வேண்டும். அல்லது, உள்நாட்டு எதிர்ப்பையும் மீறி, இலங்கைக்குச் சென்றிருக்க வேண்டும். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனைப் போல, யாழ்ப் பாணம், முல்லைத்தீவு, திரிகோண மலை பகுதி களுக்குச் சென்று, அங்கேயுள்ள மக்களின் குறை களைக் கேட்டறிந்து, கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டிலும், இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் நேரிலும் பிரச்சினைகளை எழுப்பி, அதை விவாதப் பொருளாக்கி இருக்க வேண்டும் என்றெல்லாம் எழுதிய தினமணி தலை யங்கத்தை முடிக்கும் போது, அதிபர் ராஜபக்சேவுக்கு ஒரு ஆலோசனை - இலங்கைக்கு என்று தனியாக ஒரு வெளிவிவகார அமைச்சர் தேவையில்லை, அந்த வேலையை சல்மான் குர்ஷித் திறம்படச் செய்கிறார் என்று கூறியுள்ளது.

இலங்கையின் நட்பு நாடு என்பதால், ஏராளமான உதவிகளை இலங்கைக்குச் செய்து வரும் சீனாவே கூட, பல்வேறு நாடுகளில் உள்ள பொருளாதாரம், சமூக மேம்பாடு ஆகியவற்றோடு ஒப்பிடும்போது, இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மாறுபட்டதாக இருக்கிறது; இலங்கை மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் கியின் காங் நிருபர்களிடம் கூறியிருக்கிறார். ஆனால் இலங்கை சென்ற நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சர் வாயைத் திறந்தாரா?
ராஜபக்சேவைச் சந்தித்த கேமரூன்
ராஜபக்சே அரசின் நடவடிக்கைகளைப் பற்றி யும், காமன்வெல்த் மாநாடு பற்றியும், இந்தியாவின் அணுகுமுறை பற்றியும் பலரும் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்திருக்கிறேன். உலகத் தமிழ்ச் சமூகத்தின் ஒன்றுபட்ட பாராட்டினைப் பெறுகின்ற அளவிற்கு, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், மாநாட்டின் முதல் நாளன்றே, அதாவது 15-11-2013 அன்றே யாழ்ப்பாணத்தில் உருக்குலைந்த பகுதிகளுக்கெல்லாம் சென்று அங்கே பாதிக்கப் பட்ட ஈழத் தமிழ் மக்களையெல்லாம் நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளையெல்லாம் கேட்டி ருக்கிறார். அதற்குப் பிறகுதான் அவர் கொழும்பு திரும்பி, அன்றிரவே அதிபர் மகிந்த ராஜபக்சேவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். 1948இல் பிரிட்டனிட மிருந்து இலங்கை விடுதலை பெற்ற பிறகு, யாழ்ப்பாணம் சென்ற முதல் வெளிநாட்டு பிரதமரே டேவிட் கேமரூன்தான். 16-11-2013 அன்று டேவிட் கேமரூன் அவர்கள் அளித்த பேட்டியில், இறுதிக் கட்ட போரின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தனியாக இலங்கைக்குள் வெளிப்படைத் தன்மை வாய்ந்த விசாரணை நடத்த மார்ச் மாதத் துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; கெடு தவறி னால், அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தை அணுகி, சுயேச்சையான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன். போரின் போது தாக்கு தலிலிருந்து தப்பிக்கலாம் என வரவழைத்து, பொது மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு முகாம் களில் என்ன நடந்தது என்பதை அறிய சர்வதேச விசாரணை அவசியம் என்று சொல்லியிருக்கிறார். மேலும் அவர், யாழ்ப்பாணத்துக்கு சில சர்வதேச அமைப்புகளுடன் நான் சென்றதற்குக் காரணம், அங்கு நடந்த மனதை உறைய வைக்கும் சம்பவங் களை வெளிச்சம் போட்டு உலகுக்குக் காட்டுவ தற்காகத்தான். காமன்வெல்த் குடும்பத்தின் உறுப் பினர் என்ற முறையில் இதைச் செய்தேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

பிரிட்டன் பிரதமர் செய்ததைத்தான் இந்தியா வும், இந்தியப் பிரதமரும் செய்ய வேண்டுமென்று தமிழ்ச் சமுதாயம் எதிர்பார்த்தது. ஆனால் பிரிட்டன் பிரதமர் தமிழ்ச் சமுதாயத்தின் மீது காட்டுகின்ற அக்கறையையும், பரிதாபத்தையும், இந்தியா காட்டுகிறதா? பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளாதது பற்றி கருத்து தெரிவிக்கும் போது, அவர் உண்மையிலே தமிழ்நாட்டு மக்களின் விருப் பத்திற்கிணங்க அதிலே கலந்து கொள்ளவில்லை என்றால், இலங்கைப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அதற்கான காரணத்தை வெளிப்படை யாகவே தெரிவித்திருக்கலாம் அல்லவா? ஈழத் தமிழர் களுக்கு இன்னின்ன கொடுமைகள் நடைபெற்றிருக் கின்றன, அதற்காக ஒளிவுமறைவற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், உண்மை உலகத்திற்குத் தெரிய வேண்டும் என்று அந்தக் கடிதத்திலே தெரிவித்திருக்கலாம் அல்லவா? தமிழர்களின் கோரிக்கைகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு, பிரதமருக்குப் பதிலாக அந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு சென்றாரே, அவர் அங்கே செய்தது என்ன? இங்கிலாந்து பிரதமர் மாநாட்டின் முதல் நாள் அன்றே யாழ்ப்பாணத்திற்கு ஓடோடிச் சென்று, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையெல்லாம் பார்த்து ஆறுதல் வழங்கினாரே; அதைப் போலச் செய்தாரா? விசாரணை நடத்தப்பட வேண்டு மென்று அவரைப் போல பேட்டி அளித்தாரா? காமன்வெல்த் மாநாட்டிலே இலங்கையிலே நடை பெற்ற கொடுமைகளைப் பற்றியெல்லாம் கர்ஜித் தாரா? பிரதமர் ஏன் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று காரணங்களை அடுக் கினாரா? எதுவுமே செய்யவில்லை; சல்மானுக் கென்ன; மாண்டு மடிந்தது நமது தமிழ் இன மக்கள்தானே?
அன்புள்ள,

மு.க.
நன்றி: முரசொலி, 20.11.2013

தமிழ் ஓவியா said...

ராஜராஜன் எங்கள் ஜாதி என்று சொந்தம் கொண்டாடுவோர் அவன் கட்டிய கோவிலுக்குள் சென்று அர்ச்சனை செய்ய முடியுமா?

தலைவர்களை ஜாதி கூண்டுக்குள் அடைப்பதா?

ராஜராஜன் எங்கள் ஜாதி என்று சொந்தம் கொண்டாடுவோர்

அவன் கட்டிய கோவிலுக்குள் சென்று அர்ச்சனை செய்ய முடியுமா?

இந்த உரிமைக்காகப் போராட முன்வாருங்கள் - அதுதான் மான உணர்ச்சி!

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

ராஜராஜன் எங்கள் ஜாதியைச் சேர்ந்தவர் என்று உரிமை கொண்டாடுவோர், அந்த ராஜராஜன் கட்டிய தஞ்சை பெருவுடையான் கோவிலுக்குள் சென்று அர்ச்சனை, அபிஷேகம் செய்ய உரிமை உண்டா? அதற்காகப் போராடுவதுதானே மான உணர்ச்சிக்கு அழகு? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பெரியார் பிறந்த மண்ணான, திராவிடர் இயக்கத் தொட்டிலான தமிழ்நாட்டில், பாழும் வாக்கு வங்கி அரசியலுக்காக நாளும் ஜாதி வெறி, மதவெறிக்கான தீய சக்திகளும், அவற்றின் கூலிப்படைகளும் மலிந்து வருவது மிகவும் ஆபத்தானதும், கேவலமானதும் - வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

ஜாதி ஒழிப்பிலும், சமூகநீதியிலும் நம்பிக்கை உடைய அத்தனை முற்போக்குச் சக்திகளும் ஒரே அணியில் திரண்டு கடுமையாக, போர்க்கால அடிப்படையில் பணியாற்ற முன்வரவேண்டியது அவசர அவசியமாகும்.

தலைவர்களின் பெயர்களில் மாவட்டங்கள்

கொஞ்சகாலத்திற்கு முன்பு தமிழ்நாட்டின் அரும்பெரும் தலைவர்களின் பெயர்கள் அவர்களது தியாகத்திற்காகவும், தொண்டிற்காகவும், மாவட்டங்களுக்கு சூட்டப்பட்டன. தந்தை பெரியார் பெயர் தொடங்கி, தொடர்ந்தது.

உடனே ஜாதித் தலைவர்களை முன்னிறுத்தி புதிது புதிதாக, தோண்டித் துருவி, அவர்களின் பெயர்களை வைக்கக்கோரி வேண்டுகோள் கிளம்பியது; வாக்குகளைப் பெற ஆட்சிக்கு வந்தவர்களும், மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்களுக்குப் பெயர்களைச் சூட்டி, குறுக்கு வழியில் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தவிர்த்திடவே, தந்தை பெரியார்; அறிஞர் அண்ணா பெயர்களைக்கூட நீக்கச் செய்து, ஜாதிவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. முன்பு தி.மு.க. ஆட்சியில் கலைஞர் இருந்த (நான்காம் முறை ஆட்சியில்) போது, நாம் கூறினோம்; முதல்வர் கலைஞரும் துணிந்து மாற்றிவிட்டார்.

தமிழ் ஓவியா said...


புதிய தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டவுடன், ஒவ்வொரு ஜாதி சங்கமும்கூட நன்றி, நன்றி என்று ஜாதீய சிமிழுக்குள் அத்தலைவர்களை அடைத்துக் கேவலப்படுத்தினர். இதைவிட வெட்கக்கேடு வேறு உண்டா?

திருவள்ளுவர் எந்த ஜாதி?

திருவள்ளுவர் பெயரை மாவட்டத்திற்கு வைத்தபோது, ஒருவரும் விளம்பரம் - நன்றி அறிவிப்பு தரவில்லை; காரணம், அவர் என்ன ஜாதி என்று அவர்களுக்கு உறுதிப்படுத்தி தெரிவிக்கப்படவில்லை.

திராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்தையும்கூட ஜாதிக்குள் அடக்கிடப் பார்த்தது கொடுமையல்லவா?

தியாகச் செம்மல் வ.உ.சி.யை ஜாதி சிமிழுக்குள் அடைப்பதா?

கப்பலோட்டிய தமிழர் தியாகச் செம்மல் வ.உ.சி. அவர்களைக்கூட இன்று வெறும் ஜாதி வட்டத்திற்குள் அடக்கிக் குறுக்கிவிட்டனர்!

உலகமகா அறிவாளியும், உன்னத சமூகநீதிப் புரட்சியாளருமான அண்ணல் அம்பேத்கர், அனைத்து மக்களுக்கும் உள்ள தலைவர்களுள் ஒருவராவர். அவரை ஏதோ தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர் என்று விஷமமாகக் குறிப்பிட்டது - ஏற்கத்தக்கதா?

அதுபோல, காமராசர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வரை இவ்விஷ முத்திரை குத்தப்பட்டது.

விளைவு...?

கூண்டுக்குள் தலைவர் சிலைகள்!

தென்மாவட்டங்களிலும், பழைய வட ஆற்காடு தென்னாற்காடு பகுதிகளான மாவட்டங்களிலும் அத்தலைவர்களின் சிலைகளை சிறையில் வைத்ததுபோல இரும்புக் கம்பி கூண்டுக்குள் அடைத்துப் பாதுகாக்கும் விசித்திரம்!

வடநாடுபோல அல்லது தென்னாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஜாதிப் பட்டத்தைப் பெயருக்குப் பின்னால் போடவே வெட்கப்பட்ட நிலை இருந்தது.

ஒரு மரியாதைக்காகப் போடப்பட்டதைக்கூட அத்தலைவர்களே வெறுத்து தூக்கி எறிந்தனர். 1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டு முதலாவது சுயமரியாதை மாகாண மாநாட்டில் அந்த வகையிலே தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.

இதோடு நிற்கவில்லை, தஞ்சையில் பெரிய கோவிலுக்குள் ராஜராஜன் சிலை வைக்க தொல்பொருள் துறை அனுமதிக்காததினால், வெளியே வைத்துக் காட்டினார் கலைஞர் (கோவில் கட்டிய தமிழன் கதி அதுதானே!).

ராஜராஜன் எந்த ஜாதி என்ற ஆராய்ச்சியா....?

இப்போது தஞ்சையில் பெரிய ஆராய்ச்சி மேல் ஆராய்ச்சி - ராஜராஜன் எந்த ஜாதி என்ற வெட்ககரமான, அநாகரிகமான ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.
தமிழ் இந்து ஏட்டில் வெளிவந்துள்ள (நவம்பர் 16, 2013 பதிப்பில்) செய்தி (3 ஆம் பக்கம் காண்க) தரப்பட்டுள்ளது!

மிகவும் கேவலமாக, கேலிக்கூத்தாக இல்லையா?

பெருமை பேசும் இந்த ஜாதிக்காரர்கள், எவரும் ராஜராஜன் கட்டிய கோவிலில் உள்ள மாட்டு உருவத்திற்கோ, லிங்கத்திற்கோகூட அபிஷேக, ஆராதனை செய்ய உரிமை இல்லையே! காரணம், இவர்கள் சூத்திரர்; சூத்திரர், சற்சூத்திரர், பஞ்சமர்கள்.

இந்த இழிவை நீக்கி, அர்ச்சனை செய்யும் பூ+செய்=பூஜை செய்யும் உரிமையைப் பெறப் போராடும் எண்ணம் எழுந்ததா?

அதுவல்லவா மானம் உள்ள மக்களுக்கு அழகு?

எனவே, ஜாதி வெறியை மறந்து, உரிமையை நிலைநாட்ட முன்வாருங்கள் - அதுதான் தன்மானத்துக்கு அழகு!

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை 21.11.2013

தமிழ் ஓவியா said...


செய்தியும், பின்னணியும்!

பதற்றம்

ஏற்காட்டில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளும் பதற்றமானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

(ஜனநாயகமே பதற்றத்தில்தானே இருக்கிறது!).

அதிசயம்... ஆனால்...

அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஏழு குழந்தைகளும் இப்போது தங்கள் 16 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டா டினர்.

(இது என்ன அதிசயம்; ரிஷி பிண்டம் ரா தங்காது என்பது இந்து மதப் புண்மொழி; நாரதனுக்கும், கிருஷ்ணனுக்கும் ஒரே நேரத்தில் 60 குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறவில்லையா?)

காவிரி அன்னைக்கு...

கும்பகோணம் மேலக்காவிரியில் நேற்று காவிரி அன்னை கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

(இனிமேல் கவலையில்லை; கருநாடகத்திற்கு விண்ணப்பம் போடத் தேவையில்லை - அதுதான் காவிரித் தாய் கடவுளாகிவிட்டாரே... அதுசரி கும்பாபிஷேகத்துக்கு ஜலம் பஞ்சமில்லாமல் கிடைத்ததா?)

இருமுடி திருட்டு!

கன்னியாகுமரி வந்த சென்னை அய்யப்பப் பக்தர்களின் வேனை உடைத்து இருமுடிக் கட்டுகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடப்பட்டது.

(அய்யப்பனே கொள்ளைக்காரன் என்ற கருத்துண்டே! அவனே ஆள் வைத்து ஏற்பாடு செய்திருப்பானோ!)

எட்டு வயதில் டும்! டும்! டும்!

உத்தரப்பிரதேசத்தில் நாசி என்னும் கிராமத்தில் 14 வயது சிறுவனுக்கும், 8 வயது சிறுமிக்கும் கல்யாணம் நடந்தது - தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை.

(அவ்வளவுத் தூரம் போவா னேன்?- சிதம்பரத்தில் தீட்சதப் பார்ப்பனர்கள் குடும்பத்தில் இன் றைக்குவரைக்கும் இது சர்வ சாதாரணமாயிற்றே!- சட்டம் பாயாது! படுத்துக்கொள்ளும். காரணம் அவாளாயிற்றே!- ராஜஸ்தானில் பால்ய விவாகத்தைத் தடுத்த பன்வாரி என்ற பெண்ணை மூன்று பார்ப்பனர்கள் பாலியல் வன்முறை செய்து தூக்கி எறிந்தனரே - வாழ்க பா.ஜ.க. ஆட்சி!).

செவ்வாயில்...

செவ்வாய்க் கோளில் கிரானைட் கற்கள் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

(இங்கு மணல் அள்ளுவதைப் போல் அங்குபோய் கிரானைட்டை அள்ளிவர ஏதாவது குறுக்குவழி இருந்தால் சொல்லுங்கள்).

சச்சின் கோவில்

சச்சின் டெண்டுல்கருக்கு பிகார் மாநிலத்தில் கோவில் கட்டப்படுகிறது.

(கோவில்கள் எப்படியெல்லாம் தோன்றியிருக்கின்றன என்பதற்கு கண்ணெதிரே நடைபெறும் இது ஒன்று போதாதா?)

தமிழ் ஓவியா said...


மோடிக்கு விசா கூடவே கூடாது! அமெரிக்கவில் மீண்டும் தீர்மானம்!


குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா தொடர வேண்டுமென்று அந்நாட்டு நாடாளுமன்றத் தில் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் இதற்கான தீர்மானத்தை எம்.பி.க்கள் கொண்டு வந்துள்ளனர். மத சுதந்திரம் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மோடிக்கு விசா மறுக்கும் நடவடிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென்று அந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது. குஜராத் கலவரத்தை சுட்டிக்காட்டியுள்ள அந்தத் தீர்மானம் அதில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தங்களுக்கு நீதி கோரி வருவதையும் குறிப்பிட்டுள்ளது.

அதே சமயம் இந்தியாவின் மத சகிப்பு தன்மை கொள்கையை தீர்மானத்தில் எம்.பி.க்கள் பாராட்டியுள்ளனர். ஆளும் ஜனநாயக கட்சி எம்.பி. கீத் எலிசன் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை, குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஆதரித்துள்ளனர். இந்தத் தீர்மானம் வெளியுறவு அமைச்சக நாடாளுமன்ற துணைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குஜராத் கலவரத்திற்கு பின்னர் மோடிக்கு விசா வழங்குவதை 2005 ஆம் ஆண்டுமுதல் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இந்நிலையில் மோடிக்கு விசா வழங்கக் கூடாது என வலியுறுத்தி அமெரிக்கா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யின் புளுகுப் பிரச்சாரம் அம்பலம்!

ஸ்பெயினில் உள்ள சாலைப் படத்தைப் போட்டு மத்திய பிரதேசத்தில் பி.ஜே.பி.யின் சாதனை என்று விளம்பரம்!

50 ஆண்டுகளாக இருந்த காங்கிரஸ் சாலைப் பணியை மேம்படுத்தவில்லை, ஆனால் 10 ஆண்டுகளுக்குள் அப்படி இருந்த சாலையை இப்படி மாற்றிவிட்டோம் என்று பி.ஜே.பி.யினர் விளம்பரம் தந்து இருந்தார்கள்; படத்தை உற்றுநோக்கும்பொழுது அது ஸ்பெனியில் உள்ள ஒரு கார்கோ நிறுவன விளம்பரத்தில் உள்ள படம் இது. இந்த நிறுவனம் 2009 ஆண்டு இந்த இணைய தளத்தை துவங்கி அதில் விளம்பரத்திற்காக (வவயீ://றறற.உயசபடி ளாயீயீபே.உடிஅ) ஸ்பெயின் சாலையில் கார்கோ நிறுவன வண்டிகள் ஓடுவது போன்று உள்ள இந்த படத்தை அப்படியே எடுத்து எடிட்கூட செய்யாமல் ஒட்டி வைத்து சிவராஜ் சிங் சவுகானோடு போட்டிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு முகநூலில் (ஃபேஸ்புக்) சீனாவின் பேருந்துகளை குஜராத்தின் சாலையில் ஓடும் பேருந்தாக சமூக வலைதளத்தில் போட்டு இருந்தார்கள் அது பொதுவான தளம் யாரும் என்னவேண்டுமானாலும், செய்யலாம், ஆனால் ஒரு மாநில அரசை ஆளும் கட்சி தன்னுடைய விளம்பரத்தில் இப்படி ஒரு பொய்யான விளம்பரத்தை பத்திரிக்கை வாயிலாக கொடுத்து அதிகாரபூர்வமாக மக்களை ஏமாற்றியுள்ளனர்.

அமெரிக்காவில் விற்பனைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு வீட்டைப் போட்டு, இதுதான் ஆ.இராசாவின் வீடு என்று இணைய தளத்தில் பித்தலாட்டப் பிரச்சாரம் செய்த யோக்கியர்களையும் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்.

கெட்டிக்காரன் புளுகே எட்டு நாள்கள்தான். பி.ஜே.பி.யின் புளுகுகள் ஒவ்வொரு நாளும் அம்பலமாகி வருகின்றன.

தமிழ் ஓவியா said...


கடவுள் செயல் என்பது...

தொட்டதற்கெல்லாம் கடவுள் செயல் - கடவுள் செயல் என்று சமாதானம் சொல்லு கின்றவர்கள் தங்கள் தப்பிதத்தின் காரணத்தை உணராதவர்கள். அல்லது தங்கள் தவறுகளை உணர்ந்து அதிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கின்றவர்கள் ஆவார்கள்.
(குடிஅரசு, 4.5.1930)

தமிழ் ஓவியா said...


ராக்கெட் ஏவுதளத்தை கோட்டை விட்டது ஏன்?


தமிழகத்தைப் புறக்கணிக்கிறது இஸ்ரோ என்ற தலைப்பில் குங்குமம் வார இதழில் (18.11.2013) கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. அதில் ஆந்திர மாநிலம், சிறீஹரிகோட்டாவில் இரு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ள நிலையில், மூன்றாவது ஏவு தளத்தைத் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் உருவாக்கும் திட்டம் ஒன்று கணக்கில் இருந்தது. இப்பொழுது அது கைவிடப் பட்டு, ஏற்கெனவே இரு ஏவுதளங்கள் உள்ள சிறீஹரி கோட்டாவிலேயே இந்த மூன்றாவது ஏவுதளமும் அமைக்கப்படுவது குறித்து தி.மு.க. தலைவர் கலை ஞர் அவர்களும் அறிக்கை ஒன்றினை வெளியிட் டுள்ளார்.

12 ஆவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் விண்வெளி ஆய்வினை ஊக்கப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 60 திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் இதுவும்.

எல்லா வகையிலும் இந்தத் திட்டத்தைக் குல சேகரப்பட்டினத்தில் நிறுவினால், பல கோடி ரூபாய் மிச்சப்படும் என்று அதிகாரவட்டாரங்கள் தெரி வித்திருந்தும், 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தத் திட்டத்தை கையும் காதும் வைத்தாற்போல தமிழ்நாட்டுக்கு வராமல், சிறீஹரிகோட்டாவிலேயே முடக்கியது ஏன் என்பது புரியவில்லை.

தொழில்நுட்ப ரீதியாகவும் இந்தத் திட்டத்தைக் குலசேகரன்பட்டினத்தில் நிறுவுவது தான் சரியானது என்று திரவ இயக்க உந்து மய்யப் பொதுச்செயலாளர் எம்.மனோகரன் கூறுகிறார்:

சிறீஹரிகோட்டாவைவிட ராக்கெட் ஏவுதளம் அமைத்திட மிகச் சிறந்த இடம் குலசேகரன்பட் டினமே! சில தொழில்நுட்பக் காரணங்கள் மூலம் இதனை உறுதிப்படுத்தவும் முடியும். பி.எஸ்.எல்.வி. செயற்கைக்கோள்களை தெற்கு நோக்கி ஏவி, 450 கி.மீ. முதல் 1000 கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்த வேண்டும். ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை பூமத்திய ரேகைக்கு மேலாக கிழக்கு நோக்கி ஏவி 36 ஆயிரம் கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்தவேண்டும். உலக விண்வெளி விதிமுறைப்படி ஒரு நாடு ஏவும் ராக்கெட் டுகள் இன்னொரு நாட்டின்மீது பறக்கக்கூடாது. ஆனால், சிறீஹரிகோட்டாவிலிருந்து நேரடியாக ராக்கெட்டுகளை ஏவினால், இலங்கை, இந்தோனே சியா நாடுகள்மீது பறக்க வாய்ப்புண்டு. அதற்காக தென் கிழக்காக அனுப்பி, மீண்டும் திசை திருப்பி, சுற்றுப் பாதைக்குக் கொண்டுவரவேண்டும். இத னால் கூடுதலாக பல கோடி ரூபாய்கள் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

மேலும், சிறீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் மூலம் 1600 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை 650 கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்த முடியும். ஆனால், குலசேகரன்பட்டினத்திலி ருந்து 2200 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை அனுப்புவது சாத்தியம். 600 கிலோ கூடுதல் எடை கிடைக்கும். இன்றைக்குப் பன்னாட்டுச் சந்தையில் ஒரு கிலோ எடையை விண்ணில் அனுப்பிட ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம்வரை கட்டணம்; அப்படிப் பார்த்தால், 600 கிலோ கூடுதல் எடைக்கான கட்டணம் ரூ.60 கோடி என்பது போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன.

எல்லா வகையிலும் பொருத்தமான இடம் குல சேகரன்பட்டினம் என்று இஸ்ரோவைச் சேர்ந்த நிபுணர்களே கூறியும், பிடிவாதமாக தமிழ்நாட்டுக்கு வராமல் தடுத்த சக்தி எது?

பெரும்பாலும் மலையாளிகளும், பார்ப்பனர்களும், தமிழர்களுக்கு எதிராக இருப்பது ஒரு காரணமா?

இந்தத் திட்டம் குலசேகரன்பட்டினத்தில் செயல் படுத்தப்பட்டால் நேரடியாக 4000 பேருக்கும் மறை முகமாக 10 ஆயிரம் பேருக்கும், வேலை வாய்ப்புண்டு. அதிகபட்சம் 3 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் வரும் - அவற்றின்மூலம் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும், மறைமுகமாக சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிட்டும்.

இது இப்பொழுது தட்டிப் பறிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இதுகுறித்துப் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரும் அழுத்தம் கொடுத்திருந் தால், தமிழ்நாட்டுக்கு எவ்வளவுப் பெரிய ஒளிமயமான வாய்ப்புக் கிடைத்திருக்கும். இதனைக் கோட்டை விட்டது ஏன்? இதிலும் அரசியல்தானா?

சேது சமுத்திரத் திட்டத்தை, ராமன் பெயரைச் சொல்லித் தடுத்தாயிற்று. வளர்ச்சியை நோக்கிச் சிந்தித்துச் செயல்பட்டால்தான், அதற்குப் பெயர் மக்கள் நல அரசாகும் என்பதை நமது முதல்வர் உணர்வாரா?

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் 95 அடி பேருருவச் சிலை அமைப்பு

பெரியார் உலகத்திற்கு நன்கொடை திரட்டும் தோழர்களே!

இருபத்தியோராம் நூற்றாண்டை பெரியார் நூற்றாண்டாக்கிடும் திட்ட இலக்கோடு செயல்படும் நாம் தற்காலத்தில் கற்காலத்தைத் தாண்டி, பொற்காலப் புது யுகத்தினை மக்களுக்கு உழைக்க உறுதி பூண்டு ஓய்வறியா உழைப்பினை - தன்னலம் துறந்த தொண்டறத் தினை, பதவி புகழ் வேட்டை அறி யாக் களப்பணியை முன்னாலே நிறுத்துவதில் சிறப்பான வகையில் மக்கள் ஆதரவினைப் பெற்று வருகிறோம்.

பால் (Sex), ஜாதி, மதம், கட்சி என்ற பேத உணர்வுகளைத் தாண்டி நமது இயக்கம் மக்கள் மத்தியில் பேராதரவினைப் பெற்றுவருவதால் இது பொற்காலம் ஆகும்!

தங்கம் தாருங்கள் என்று எங்கும் சென்று நீங்கள் சிறப்பாகத் திட்டமிட்டு, சிட்டுகளாகப் பறப்பதைக் கண்டு நாடே வியப்பு அடைகிறது!

தங்கம் தந்த தங்கங்கள் (‘Book of Gold People’) என்ற ஒரு அழகிய நூல் ஒன்றினை திராவிடர் கழகம் அதிகாரபூர்வமாக வெளியிட்டு அதில் பெயருடன் நன்கொடை விவரமும் பொறித்தால், வருங்கால சந்ததியினருக்கும், வரலாறு எழுதுவோருக்கும்கூட, இது எதிர்காலத்தில் நல்ல உதவியாக அமையக்கூடும் என்பது எனது பணிவன்பான யோசனையாகும்.

எவரிடமும் எதையும் கேட்டுப் பெறுவதற்கு முன்பு நாம் நமது பங்கினை அளித்துவிட்டுப் பேசுவதுதான் எடுத்துக்காட்டான அணுகுமுறை என்பதால், எளிய எம் தோழர்கள் குடும்பத்தில் உள்ள பொன் அணிகலன்களையும், தாலியையும் கூட இயக்கத்துக்கு மகிழ்வுடன் தந்து, எதிர்காலத்தில் இந்த இயக்கம் ஓர் உலக மாமலை யாகிட வேண்டும் என்பதற்கு நல்ல அடித்தளமிட்டுள்ளனர்.

இதற்காக இன்னும் சில மாதங்கள் உழைப்பு! உழைப்பு! உழைப்பு! - இவை மூலமாகவே நாம் இலக்கு அடைய வாய்ப்பு!

நமது கறுஞ்சிறுத்தைகள் அக ராதியில் நம் உழைப்பு ஒருக்காலும் தோல்வியை ஏற்படுத்தாது.

நமது இயக்கத்தை உலகளாவிய இயக்கமாக ஆக்கிடுதல் வேண்டும். மனிதனின் சுயமரி யாதையை முன்னிலைப்படுத்திய முதல் இயக்கம் அய்யா அணி - இந்த அறிவியக்கம் ஒன்றுதான் என்பது வரலாற்றுப் பெட்டகம் கூறும் உண்மையாகும்.

தமிழ் ஓவியா said...

மத இயக்கங்கள் எப்படியெல் லாம் ஒவ்வொரு நாட்டில், ஒவ் வொரு கால கட்டத்தில் வேரூன் றியது என்பதை இவ்வாண்டு விடுதலை அய்யா விழா மலரில் நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.

அமெரிக்காவில் நான் பயணம் செய்தபோது, செயின்ட்லூயிஸ் என்ற ஒரு பெருநகரத்தின் விமான நிலையத்தில் இறங்கிச் செல்லும் போது, அங்கே ஹரே இராமா, ஹரே கிருஷ்ணா இயக்கத்தினைச் சார்ந்த தொண்டர்கள் (இவர்கள் அமெரிக்கர்கள்) சிலர் பகவத் கீதை புத்தகங்களை வைத்து பிரச்சாரம் செய்வதைப் பார்த்து, அவர்களது வெளியீட்டினை நான் தோழர் அரசுமூலம் வாங்கினேன். அதில் உலக நாடுகளின் முக்கிய பெரு நகரங்களில் எல்லாம் அவர்களது கிளைகள் ஏற்படுத்தப்பட்டு நடை பெற்று வருகின்றன என்று இருந்தது.

அது மட்டுமா? பல மண்டை ஓட்டு அடையாள - ஆனந்த மார்க்க இயக்கத்திற்கு உலகம் முழுதும் 200, 300 கிளைகளாம்! இது எப்படி சாத்தியம்? தொண்டன் - உழைப்பு - நன்கொடை திரட்டல் - நிதி அடிப்படை சரியாக இருப் பதன் தத்துவம் தந்த தலைவருக்குப் பிறகு அதனைப் பலப்படுத்தி, பாரெங்கும் கொண்டு செலுத்தும் பணியை, அவருக்குப் பின்வரும் அத்தலைவரின் உண்மையான தொண்டர்கள் தான் செய்து முடித்திடுவர் -இதுதான் வரலாறு. மூலம் அடையலாம்.

கொள்கை பலமற்ற மனித குலத்தினைக் கூறுபோடுவோர் அதைச் செய்கின்ற நிலையில், மனித நேயத்தினையே மய்யப் படுத்தியுள்ள அரிய தத்துவ மாமலை பெரியார்தம் தத்துவத்தை உலகளாவச் செய்திட நாம் உழைப்பதுதானே நியாயம். பெரியார்விட்ட பணி முடிக்க எடுத்த சூளுரையில் உண்மையான செயலாக்கமாகவும் இருக்க முடியும்!

எந்தத் தத்துவமானாலும், எல்லா சமூக இயக்கங்களும் இப்படித்தான் உலக இயக்கங்களாக ஓங்கி உயர்ந்து நின்றன!

இதற்குமுன் இருபதாம் நூற்றாண் டில் பெரியார் தேவைப்பட்ட தைவிட, 21 ஆம் நூற்றாண்டில்தான் அதிகம் தேவைப்படுவார், பெரியார் என்றால் ஓர் வாழும் மானுடவியல் தத்துவம் - மனித குலத்தின் மகத்தான விடிவு! அதனை உருவாக்கிட நாம் எதை யும் கட்டுப்பாடு காத்து பழைமை வாதச் சக்திகளுடன் ஜாதி - மத - பேத மூடத்தனத்தினை - முகவர் களை எதிர்த்து, முழுப்போரை நடத்திட ஆற்றல் பெற்று, பெரிய ரின் இராணுவமாக ஆகிட வேண்டும்!

பெரியாருக்குப் பிறகு என்ற காலம்; மனித குலத்திற்கான பொற்காலம். உருவாக்க வேண்டிய பொறுப்பு மிகுந்த பணி நம் அனைவருக்கும் பேச்சாக அல்ல; மூச்சாகவே அமைந்துள்ளது என்பதை நான் இப்போது எடுத்துக் காட்டிடத் தேவையில்லை.

இயக்கக் குடும்பங்கள் ஒரு நிலையில் ஓங்கி உயர்ந்து தங்கம் திரட்டுவது, தனிப்பட்ட எவரின் சுயநல, சுகபோக வாழ்வுக்காக அல்ல; எதிர்கால மானுடத்தின் மகத்தான உய்வுக்காகவே!

இது இப்போது எழுதப்பட்ட தல்ல; எடைக்கு எடைத் தங்கம் வசூலிக்கும் திட்டத்தின்போது கழகத் தலைவர் 1998ஆம் ஆண்டு விடுத்த அறிக்கை இது!!

எனவே, அதே முயற்சியை மேலும் பன்மடங்காக்கி விழை யுங்கள்! வெற்றி நமதே! -

தலைமை நிலையம்

தமிழ் ஓவியா said...

லட்சியத்தை வென்றெடுக்கும் அமைப்பு, வழிமுறைகள் மாறினாலும் நீதிக் கட்சியின் நோக்கங்கள் இன்றைக்கும் தொடர்கின்றன நீதிக்கட்சி 97ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் பேருரை!

சென்னை, நவ. 21- சென்னை - பெரியார் திடலில் நீதிக் கட்சியின் 97ஆம் ஆண்டு விழா நேற்று (நவம்பர் 20ஆம் நாள்) நடைபெற்றது. திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப் பட்ட நீதிக்கட்சியின் ஆண்டு விழாவிற்கு மய்யத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் அ. இராமசாமி தலைமை வகித் தார்.

மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் முனைவர் ந.க.மங் கள முருகேசன் வருகை தந் தோரை வரவேற்று, விழா பற் றிய அறிமுக உரையினை ஆற் றினார். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புப் பேருரை ஆற்றினார். நன்றியுரையினை மய்யத்தின் செயலாளர் பேராசி ரியர் அ.கருணானந்தம் வழங் கினார்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை புரவலராகக் கொண்டு செயல்படும் திரா விடர் வரலாற்று ஆய்வு மய்யம் 2010ஆம் ஆண்டு துவக்கப் பட்டது. திராவிடர் வரலாற்றை பதிவு செய்திடவும், திராவிடர் வரலாற்றைத் திரிபு செய்திடும், தவறாக வெளியிடும் செயல் களுக்கு மறுப்பு, எதிர்ப்பு தெரி விக்கும் பணியிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அண் மையில் மய்ய அரசுப் பள்ளிக் கல்வி பாடப் புத்தகத்தில் திரா விடர் இயக்க கொள்கைகளுக்கு தொடர்பில்லாத அரசியல் கட்சிகளை திராவிடர் இயக்கத் திலிருந்து பிரிந்தவை என தவறாகக் குறிப்பிட்ட அரசின் செயலைக் கண்டிக்கவும், மய்ய அரசே தவறைத் திருத்திக் கொண்ட சூழலை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் உரு வாக்கியது.

ஒவ்வொரு ஆண் டும் நீதிக்கட்சியின் ஆண்டு விழாவினை திராவிடர் வர லாற்று மய்யம் முனைப்புடன் நடத்தி வருகிறது. இந்த முறை நீதிக்கட்சியின் 97ஆம் ஆண்டு விழாவினை ஏற்று நடத்துகிறது.

தமிழர் தலைவரின் விழாப் பேருரை

நீதிக்கட்சியின் ஆண்டு விழா வின் சிறப்புப் பேருரையில் திரா விடர் வரலாற்று ஆய்வு மய்யத் தின் வழிகாட்டுதல் - புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டவையின் சுருக்கம்:

நீதிக்கட்சிக்கு ஆண்டு விழா கொண்டாடுவது சடங்கிற்காக அல்ல; சம்பிரதாயத்திற்காகவும் அல்ல. நீதிக்கட்சி எந்த லட் சியங்களுக்காக போராடியதோ அதன் இன்றைய சூழலை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் கடமை யாக, நிகழ்கால வருங்கால சவால்களை எதிர்கொள்ளும் வல்லமையினை உருவாக்கிடும் பணியாகவே இந்த விழா நடைபெறுகிறது.

சமூகத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகளைப் போக்கிட வேண்டும் எனும் தனி மனிதன் சிந்தனைகள் அமைப்பு ரீதியாக 1916ஆண்டில் நீதிக்கட்சி வடி வில் உருவானது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், சமூக மரியாதைகள் காக்கப்பட வேண்டும் - அதற்காக ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகித்தது நீதிக்கட்சி.

அப்படிப்பட்ட நீதிக்கட்சி தோல்வியைத் தழு விய நேரத்தில் தலைமைப் பொறுப்பினை ஏற்று அதனை மக்கள் இயக்கமாக மாற்றியவர் தந்தை பெரியார். அமைப்பு அடிப்படை அடையாளங்கள் மாறி வந்தாலும் தந்தை பெரி யார் கடைப்பிடித்த அந்த லட் சியத்தை நிறைவேற்றத்திற்கான அணுகுமுறைகள் காலச் சூழலுக்கு ஏற்றவாறு மாறி இருந்தாலும், அடிப்படை நோக்கம் ஒன்றே.

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு உரிய கல்வி, வேலை வாய்ப்புகளை, உரிய அளவில் அவர்களுடைய சமூக மரியாதையினை காத்தி டும் உன்னத நோக்கமே அது.

தமிழ் ஓவியா said...

நீதிக்கட்சி ஆட்சி அதிகாரத் திலிருந்து இறங்கிய பின்னர் காங்கிரசு ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்தது காங்கிரசு ஆட்சி அதிகாரம் இழந்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தொடர்ந்தது. இந்த அதிகார ஆட்சிப் போக்கில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அடிப்படை லட்சியத்தை அடைந்திட தந்தை பெரியார் கூறிய கருத்து கள் காலங்களை கடந்து வென்றது.

காங்கிரசுக் கட்சியிலிருந்து வெளியேறினாலும், ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த, அமர வேண்டிய தலைவர்களை இனம் பிரித்து ஆதரவுக் கரம் கொடுத்து, காத்து திராவிடர் இன மக்களின் உரிமைக்கு, மேன்மைக்கு தந்தை பெரியார் தொடர்ந்து பாடுபட்டார். கொள்கை (Principle) ஒன்றே தான் திட்டங்கள் (Policies) மாறுபடலாம் - எனும் அணுகு முறை தான் நீதிக்கட்சி தொடங் கியதிலிருந்து இன்றுவரை நிற் கிறது. திராவிடர் என்பது இன அடையாளம் என்பதை விட பண்பாட்டு அடையாளமாகக் கருதப்படவேண்டும்.

நமது பண்பாட்டு அடையாளங் களை அழித்திட நினைக்கும் ஆதிக்க சக்திகளின் செயல் களை இனம் பிரித்து, அவர் களது செயல்களுக்கு துணை போகும் நம்மவர்களைப் புரிந்து கொள்ளும் மனப்போக்கு பெருகிட வேண்டும். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகளின் போக்கில் நமது லட்சியத் தடத்திலிருந்து தடம் புரளும் கட்டங்களைக் கண்டறியும் விழிப்புணர்வு வளர்ந்திட வேண்டும்.

இளைய தலை முறைக்கு நமது வரலாற்று, பண்பாட்டு அடையாளங் களை அறிந்து இருக்கின்ற உரிமைகளைக் காத்து, இழந் தவைகளை மீட்கின்ற உணர் வினை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழர் தலைவர் தனது உரையின் சாராம்சமாகக் குறிப்பிட்டார் (தமிழர் தலைவரின் முழு உரை பின்னர் வெளிவரும்).

முனைவர் அ.இராமசாமி

விழாவிற்கு தலைமை வகித்த காரைக்குடி பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தரும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவருமான பேராசிரியர் அ.இராமசாமி தமது உரையில் குறிப்பிட்ட தாவது:

நீதிக்கட்சி தோன்றியதன் அடிப்படை நோக்கமே, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பார்ப்பனர் அல்லாத மக்க ளுக்கு உரிய பங்கு வழங்கப்பட வேண்டும் என்பதே. அந்நாளில் சென்னையில் பார்ப்பனர் அல்லாத கல்லூரி மாணவர்கள் தங்கிப் படிக்கவே விடுதி கிடைக்காத சூழல் நிலவியது. உணவுக்கடைகளில் பார்ப்பனர் அல்லாத அடித்தள மக்கள் உட்கார்ந்து சாப்பிடும் உரிமை மறுக்கப்பட்டு இருந்தது.

எடுப்பு சாப்பாடுதான் கிடைக் கும். சென்னைப் பல்கலைக் கழ கத்தில் தமிழ் மொழிக்கென்று தனித்துறை என எதுவும் கிடை யாது. கீழ்த்திசை மொழித்துறை யில் இதர பிற மொழிகளோடு தமிழுக்கும் இடம் இருந்தது. மருத்துவப் படிப்பிற்கான அனுமதி, சமஸ்கிருதம் படித் திருந்தால் மட்டும் என்பதே சாத்தியமாய் இருந்தது. இந் நிலையில் மாற்றம், கல்வியில் புரட்சி ஏற்பட நீதிக்கட்சி பாடு பட்டது. ஆட்சி அதிகாரத்திற்கு நீதிக்கட்சியினர் வந்த நிலையில் படிப்படியாக முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இந்த செய்திகளை இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும்.

மேலும் திராவிடர் வரலாற்றை, தமிழ்மொழி வரலாற்றை திரித்துக் கூறிடும் பணியில் திட்டமிட்ட பிரச் சாரம் சில ஆதிக்க மனம் படைத்த அறிவு ஜீவுகளால் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் எழுத்து உரு பிராமி மொழி எழுத்து உருவிலிருந்து வந்தது எனும் தவறான வரலாற்று திரிபை வேண்டுமென்றே வெளி யிடுகின்றனர். தமிழ் பிராமி என அடையாளப்படுத்த ஆதிக்க வாதிகள் முயற்சிக்கின்றனர். தமிழ் எழுத்துரு தனித்து இயங்கவல்லது.

தமிழ் ஓவியா said...

தொன்மை வாய்ந்தது. கி.மு. 2000ஆம் ஆண்டு காலத்திய தொல்லியல் சின்னங்களாகக் கருதப்படும் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு களில் உள்ளவை தமிழ் எழுத் துக்கள் என்பது உறுதியாகி உள்ளது. தமிழுக்கு, தமிழர் நாகரிகத் திற்கு தொன்மை அடையாளங் கள் கிடைத்த அகழ்வாராய்வுக ளுக்கு உரிய முக்கியத்தும் அளிக் கப்படவில்லை.

இத்தகைய சூழல்களில் ஆதிக்க சக்திகளின் எண்ணங்களை, செயல்பாடு களை அறிந்து கொள்ளும் மனப்போக்கு வளர வேண்டும். அதுவே இழந்த இன உரிமை களை வென்றெடுக்க ஏதுவா கும். இருக்கின்ற உரிமைகளை தக்க வைத்துக் கொள்ளவும் துணை புரியும். - இவ்வாறு தனது உரையில் குறிப்பிட்டார்.

முனைவர் ந.க. மங்கள முருகேசன்

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளரும், சென் னைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் மேனாள் பேராசிரியர் முனை வர் ந.க.மங்கள முருகேசன் அவர்கள் உரையாற்றும் பொழுது குறிப்பிட்டதாவது:

நீதிக்கட்சி துவக்கப்படுவ தற்கு முன்பே 1895ஆம் ஆண்டு பார்ப்பனர் அல்லாதார் சமூகத் தில் ஒதுக்கப்படுவது குறித்து சிந்தனை நிலவியது. பின்னர் 1909ஆம் ஆண்டு தனிப்பட்ட வழக்கறிஞர்கள் சிலர் பார்ப் பனர் அல்லாத மக்களுக்கு உரிய பங்கு கிடைக்க முயற்சி எடுத் தனர்.

1912ஆம் ஆண்டு மெட் ராஸ் யுனெடெட் லீக் என்பதன் பேரால் பார்ப்பனர் அல்லாத மக்கள் கூடிப் பேசுகின்ற நிலை உருவானது. 1916ஆம் ஆண்டில் தான் பார்ப்பனர் அல்லாத மக் களின் உரிமைகளை வென்றெடுக்க நீதிக்கட்சி எனும் தென் னிந்திய நல உரிமைச் சங்கம் - அரசியல் அமைப்பாக உருவாக் கப்பட்டது. 97 ஆண்டுகளுக்கு முன்னர் நவம்பர் 20ஆம் நாள் நீதிக்கட்சி துவக்கப்பட்டது.

நவம்பர் 20ஆம் நாள் மறுக் கத்தான் முடியுமா இந் நாளை...? எனும் தலைப்பில் இன்றைய விடுதலை ஏட்டில் வெளிவந்த செய்தி இது: (புள்ளி விவரங்களுடன் கூடிய அந் நாளில் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு நிலவிய கல்வி, வேலை வாய்ப்பைப் பற்றிய செய்தி வாசிக்கப்பட்டது) டாக் டர் சி.நடேசனார் என்ற பெரு மகனார் ஒரு தாயைப்போல நீதிக்கட்சி இயக்கத்திற்கு எடுத்த முயற்சிகள் நினைந்து போற் றப்படவேண்டியவை. அந்தப் பெருமகனாருக்கு வீரவணக்கம் செலுத்துவோம் எனக் கூறிட, நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத் துத் தரப்பினரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

பேராசிரியர் அ.கருணானந்தம்

நிகழ்ச்சியின் நிறைவாக திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் அ.கருணானந்தம் தமது நன்றி உரையில் குறிப்பிட்டதாவது:

1885ஆம் ஆண்டு துவக்கப் பட்ட காங்கிரசு கட்சி ஆட்சி யைப் பிடிக்க ஏறக்குறைய 60 ஆண்டுகளாயின. 1909ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முஸ் லீம் லீக் கட்சி, முஸ்லீம் மக்கள் அதிகமாக உள்ள மாநிலங் களிலேயே ஆட்சி அமைக்க முடியவில்லை, ஆட்சி அமைக்க உறுதுணை புரியத்தான் முடிந் தது. ஆனால் 1916இல் தொடங் கிய நீதிக்கட்சி 1920ஆம் ஆண் டில், நான்கு ஆண்டுகால அள விலே ஆட்சி அதிகாரத்தில் அங் கம் வகிக்க முடிந்தது.

அப்பொழுது அரசியல் போட்டிக்கு களத்தில் காங்கிரசு கட்சி நேரடியாக இல்லாவிட் டாலும், ஹோம்ரூல் கட்சியின் வடிவில் நிலவிய எதிர்ப்பையும், தாண்டி நீதிக்கட்சி வென்றது. இந்த வெற்றிக்குக் காரணம் அன்று நிலவிய ஏற்றத் தாழ்வு களை, சமூக அடக்குமுறை களை வெளிப்படுத்தி, சமத்து வத்திற்கு போரிடும் லட்சியத் தைக் கொண்டிருந்தது நீதிக் கட்சி.

வரலாற்று ஆய்வின்படி, தொன்மையான கல்வெட்டு களில் இருக்கும் குறிப்புகள் பார்ப்பன எதிர்ப்பானவையே. பிராமி எழுத்துகளில் இருந்தன அந்த கல்வெட்டுகள். ஆனால் ஆதிக்க சக்திகள் பிராமி எழுத் தையே தன்வயமாக்கி தம் ஆதிக்க வலிமையின் அடையாளமாக தமிழ் பிராமி என கூற முற் பட்டு வருகின்றன. இந்த முரண் பாடுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஆதிக்க சக்திகளின் அடையாளங்கள் காணப்பட்டு அன்னியப்படுத்தப்பட வேண் டும்.

இவ்வாறு நன்றியுரையில் பேராசிரியர் அ.கருணானந்தம் குறிப்பிட்டார்.

இணைப்புரையினை திரா விடர் வரலாற்று ஆய்வு மய்யத் தின் பொருளாளர் வீ.குமரேசன் வழங்கி நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார்.

நீதிக்கட்சி 97ஆம் ஆண்டு விழாவில் கல்வியாளர்கள், முற் போக்கு அமைப்பினர், இயக்கத் தோழர்கள், பொதுவான ஆர்வ லர்கள் என பலதரப்பினரும் பெருமளவில் வருகை தந்திருந் தனர்.

தமிழ் ஓவியா said...


ராஜராஜ சோழன் எங்க ஜாதி.. பங்காளி ஊரு மாப்ளே - வரிந்துகட்டி ஜாதிச் சங்கத்தில் உறுப்பினராக்கும்' அமைப்புகள்

ராஜராஜ சோழ உடையார்.. சோழர்குல படையாச்சியார்.. ராஜராஜ சோழ தேவேந்திரர்.. வன்னியர்குல சத்திரிய பேரரசன்.. - இந்த ஆண்டு ராஜராஜ சோழனின் 1028ஆவது சதய விழாவுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் பளிச்சிட்ட வாசகங்கள்தான் இவை!

நேதாஜி, முத்துராமலிங்கத் தேவர், அம்பேத்கர் வரிசையில், கடல் கடந்து சைவத்தையும், தமிழையும் பரப்பிய ராஜராஜ சோழனையும் ஜாதி வட்டத் துக்குள் அடைத்துவிட்டார்கள். உடையார் என்றும் தேவர் என்றும் தேவேந்திரர் என்றும் ஆளாளுக்கு ராஜராஜ சோழனுக்கு ஜாதி முத்திரை குத்தியதால் இந்த ஆண்டு சதய விழா பதற்றத்துடனேயே கடந்திருக்கிறது.
பரம்பு மன்னனின் பேரன் ராஜராஜ சோழன்.., உடையார் ராஜராஜ சோழத் தேவருக்கு.. என்று கல் வெட்டுகளில் காணப்படுவதை வைத்து ராஜ ராஜனை எங்காளு என்கிறது உடையார் (பார்கவ குலம்) சமூகம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக பார்கவ குல இளைஞர் முன்னேற்றப் பேரவைச் செயலாளர் சசிகுமார், ராஜராஜன் உடையார்தான் என்பதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கு. எங்கள் வம்சத்தைச் சேர்ந்த பரம்பு மன்னனின் பேரன்தான் ராஜராஜ சோழன். வர்ணாசிரம தர்மப்படி தேவேந்திரர்களோ, முக்குலத்தோரோ, சத்திரியர்களாக இருந்திருக்க முடியாது. அப்படி இருக்க, ராஜராஜன் எப்படி அந்த ஜாதிகளைச் சேர்ந்தவராக இருக்க முடியும்? என்றார்.

விஜயாலயச் சோழத்தேவர் எங்க ஊரு மாப்ளே!

ராஜராஜன் 48 சிறப்புப் பட்டங்களை உடையவர். இந்த உடையவர் என்பது தான் காலப்போக்கில் உடையார் என்றாகிவிட்டது. ஆனால், கல்வெட்டுக் களை முழுமையாக படித்துப் பார்த்தால் ராஜராஜ சோழத் தேவர் என்று இருப்பதை அறியமுடியும் என்கிறார் சோழ மண் டலத்து முக்குலத்தோர் சமுதாய மக்கள் அமைப் பைச் சேர்ந்த சிவகுரு நாதன். விஜயாலயச் சோ ழனுக்கு வலங்கைமான் அருகி லுள்ள ஊத்துக் காட்டில் வானவன்மா தேவி என்ற பெண்ணைத் தான் திருமணம் முடித் தார்கள். அந்தப் பெண் ணின் வம்சாவழியினர் எனக்கு உறவுமுறை. விஜ யாலயச் சோழன் எங்க ஊரு மாப்ளே என்கிறார்.
உடையார், தேவர் என்பதெல்லாம் ஜாதியில்லை
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலர் தியாககாமராஜ், உடையார், தேவர் என்பதெல்லாம் ராஜராஜனின் மறு பெயர்கள். சாதி அல்ல. ராஜராஜன் தேவேந்திரகுலத்தில் வந்தவன் என்பதை நாங்கள் தக்க சான்றுகளுடன் விவாதிக்கத் தயாராய் இருக்கிறோம் என்றார்.

சத்திரிய ஜாதி வன்னியர்கள் மட்டும்தான்!

வன்னியர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் ஆறு. அண்ணல் கண்டார், தமிழகத்தில் சத்திரியன் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஜாதி வன்னியர். சோழ மன்னர்களுக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலில்தான் முடிசூட்டு விழா நடப்பது வழக்கம். இன்று வரை சிதம்பரம் கோயிலில் முடிசூட்டும் ஒரே குடும்பம் வன்னியர்களான பிச்சாவரம் பாளையக் காரர் குடும்பம். நடராஜர் கோயிலில் இப்ப வரைக்கும் சோழர் மண்டகப்படின்னு மண்டகப் படியே நடத்திக்கிட்டு வர்றாரு. சகல சம்பத்துக்களும் உடையவர் என்பதால் ராஜராஜனை உடையார் என்றும் அனைவருக்கும் மேலானவன் என்பதால் தேவர் என்றும் அழைத்தார்கள். இந்த உண்மை தெரியாமல் அவரை தேவர் ஜாதியிலும் உடையார் ஜாதியிலும் சேர்ப்பது பிதற்றல் என்கிறார்.

அவலத்தை முளையிலேயே கிள்ளணும்

இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் கருத்து வேறாக இருக்கிறது. ராஜராஜன் இந்துப் பேரரசன். அதனால்தான் தன்னை சிவபாத சேகரன் என அழைத்துக் கொண் டான். அவரை ஜாதிக்குள் அடைப்பது அநியாயம்; அக்கிரமம். அருண்மொழித் தேவன் என்று இருப்பதால் அவரை தேவர் ஜாதி என்கிறார்கள். பெரிய கோயிலைக் கட்டியதால் ராஜராஜனுக்கு பெருந்தச்சன் என்ற பட்டம். இதனால் தச்சர்கள் எல்லாம், ராஜராஜன் எங்காளு என்கிறார்கள். தேவேந்திரகுலத்தினர், ராஜராஜன் மல்லர் குலத்தைச் சேர்ந்தவர் என்கிறார்கள். இதைவிட அபத்தம் என்னவென்றால், சாதி இரண்டொழிய வேறில் லைனு சொன்ன அவ்வைப் பாட்டியையே மள்ளத்தி என்று சாதிய வட்டத்துக்குள் கொண்டு வந்து விட்டார்கள். ராஜராஜ சோழனையும் ஜாதிய வட்டத்துக்குள் கொண்டுவரும் அவலத்தை முளை யிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றார்.

தஞ்சை பெரிய கோயிலை ஆய்வு செய்துவரும் வரலாற்றுப் பேராசிரியர் குடவாயில் பாலசுப்பிர மணியனிடம் இந்த சர்ச்சை குறித்துக் கேட்டதற்கு, இதுதொடர்பாக இன்னும் நிறைய ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. ஆய்வின் முடிவில்தான் பதில் கிடைக்கும் என்று ஒதுங்கிக்கொண்டார். ராஜராஜ சோழனுக்கும் இது சோதனையான காலகட்டம்தான் போலிருக்கிறது! (தி இந்து, 16.11.2013)

தமிழ் ஓவியா said...


அஸ்திவாரம் கிடையாது

பார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரம் கிடையாது. - (விடுதலை, 11.7.1954)

தமிழ் ஓவியா said...


தெரியாதோ நோக்கு?
- ஊசி மிளகாய்

புதுக்கோட்டை - திருச்சி இடையில் உள்ள மாத்தூர் காவல் நிலையத்தில், அடிக்கடி அப்பகுதி யில் கொலை, கொள்ளைகள் நடைபெறுவதைத் தடுக்க அங்குள்ள காவல் துறை அதிகாரிகளான பிரகஸ்பதிகள் பார்ப்பன குருக்களைஅழைத்து, யாகம் செய்துள்ளதாக, இம்மாதம் 15ஆம் தேதி ஏடுகளில் வந்துள்ள செய்தியைவிட, நம் அரசு, மதச்சார்பின்மையை காப்பாற்றுவதிலும், அரசியல் சட்டம் கூறும் அடிப்படைக் கடமையான அறிவியல் மனப்பான்மையைக் குடிமக்களிடம் வளர்க்க வேண்டிய அரிய பணியையும்விட அற்புதமான(?) செயல் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மக்களுக்குத் திருடர் பயமோ, கொலை, கொள்ளை பீதியோ இனி ஏற்படவே ஏற்படாது; இது சத்தியம்! இது சத்தியம்!

பலே பலே, இவாளுக்கு தனியே பாராட்டு விழா நடத்தி முதல் அமைச்சரும், தமிழக அரசும் பண முடிப்பு அளித்து யாகாதிபதி. காவல் சுவாமிகள் பட்டங் களையும் வழங்கலாம்; குற்றத் தடுப்புக்கு இவ்வளவு எளிய வழியைக் கண்டுபிடித்த இவாளுக்கு டபுள் புரோமோஷன் அல்லவா அரசு வழங்க வேண்டும்! அடடா என்னே பக்தி! என்னே பக்தி!! மற்ற மாவட்டங்களிலும் இதையே கடைப்பிடிக்கலாம்; அவசர அரசு ஆணையையும் பிறப்பிக்கலாம்.

இனி டி.ஜி.பி. அய்.ஜி. பதவிகளுக்குப் பதிலாக, யாகாதிபதிகள், பர்ண சாலை பகவத் குஞ்சுகள் என்றெல்லாம் கூறி, எல்லா காவல் நிலையங்களையும், யாக சாலைகளாகவும், பர்ண சாலைகளாகவும், மாற்றி நித்தம் நித்தம் பூஜை, யாகம், நடத்தலாம்! நரபலி கூட கொடுத்தால் மேலும் யாகங்களின் பலன் குயிக்கா (ணுரஉம) கிட்டாதோ!

அப்புறம் பூணூல் குருஜிகளுக்கெல்லாம் ஏகப்பட்ட டிமாண்டோ டிமாண்டு ஏற்பட்டு விடும்!
அந்த யாகப் புகை மண்டலமே நல்ல ஆரோக்கிய சுற்றுச் சூழலை நன்னா பாதுகாக்கும்!

நம்ம பெரியவா கண்டுபிடிச்ச யாகமுன்னா மற்ற நாட்டுக்காராளெல்லாம்கூட வருவாளே?

ஏற்கெனவே நம் அய்யர் வாள்களை ராஜபக்சே அழைச் சுண்டு போய் யாகங்கள் நடத்தியல்லவா அந்த டெரரிஸ்ட் டுகளான புலிகளை அழிச் சாள் - தெரியாதோ நோக்கு?

இதைக்கேட்ட அந்த ஒபாமாகூட இந்த அல்கொய்தா தொல்லையை ஒழிக்க யாகத்தையே செய்யணும்னு சொல்லிண்டிருக்காராம்; நம்ம அடுத்தாத்து அம்புஜத்தின் ஒண்ணுவிட்ட சகலை யின் சம்பந்தியின் மருமா சொன்னார்! ஆமாம் ஏற்கனவே தீபாவளி கொண்டாடச் சொல்லி சாதிச்சுட்டோமே!

அவாளுக்கு ஸ்பெஷல் விசா கூட அதனால வருமாம்!

ஹூம் - நேக்குக் கிடைக்காத பாக்கியம் அவாளுக்கு அடிச்சுது யோகம்! ஒயிட் அவுஸ்போய் ஜாம் ஜாம்ன்னு உட்கார்ந்துண்டு யாகம் என்று40 நாள் பண்ணி ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணிட யோசனையாம்!

பலே பலே! நம்ம வேத விற்பன சிகாமணி யாக சாலை யோகானந்த குருக்கள்தான் இனிமே ஒயிட்அவுஸ் அதிபர் கொஞ்ச நாளைக்குன்னு சொல்லு!

அதுசரி, இந்த மாத்தூர் போலீஸ்காரர் மேலே தி.க. கறுப்புச் சட்டைக்காரனுங்க, பி.அய்.எல் அது தானே பொது நல வழக்கு அது இதுன்னு எதுவும் போட்டு, ஏதாவது ஏடா கூடாமா தீர்ப்பு வாங்கிடப் போறா?

அதையும் நன்னா விசாரியுங்கோ. இப்படி சிறீரங்கத்திலே ஒரு உரையாடல் நடந்தாலும் ஆச்சரியப்பட முடியாதே!

தமிழ் ஓவியா said...


காவல் நிலையத்தில் சிறப்பு யாகமா? கலைஞர் கருத்து


கேள்வி: புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் காவல் நிலையத்திற்குள் சிறப்பு யாகம் செய்யப்பட்ட நிகழ்ச்சி புகைப்படத்தோடு ஏடுகளில் வெளிவந்திருக்கிறதே?

கலைஞர்: மாத்தூர் காவல் நிலைய எல்லைக்குள் ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் அதிகரித்த காரணத்தால், போலீசார் சேர்ந்து, காவல் நிலையத்திற்குள் சிறப்பு யாகம் நடத்தியிருக்கிறார்கள். மாத்தூர் காவல் நிலைய எல்லைக்குள் மாத்திரமல்ல; தமிழகம் முழுவ திலுமே ஏராளமான கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், தலைமைச் செயலகத்திற் குள்ளேயே சிறப்பான யாகம் நடத்தலாம்! இப்போது முதலமைச்சர் நிகழ்ச்சிகளிலே உரையாற்றும்போது அண்ணா நாமம் வாழ்க! என்றும், எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! என்றும் சொல்கிறார் அல்லவா; இனி மேல் பெரியார் நாமம் வாழ்க! என்றும் சேர்த்துக் கொள்ளலாம். காவல் நிலையத்தை யாகசாலையாக மாற்றிய காவல் துறையினருக்கும் ரொக்கப் பரிசுகள், பதவி உயர்வுகள் வழங்கலாம்! தமிழர்களே! இதற் காகத்தானே அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தீர்கள்!

தமிழ் ஓவியா said...


2ஜி' ஜெபிசி அறிக்கையை திருப்பி அனுப்புக! மீரா குமாருக்கு டி.ஆர்.பாலு கடிதம்!

புதுடில்லி, நவ.22- 2ஜி அலைக்கற்றை முறை கேடு தொடர்பான ஜேபிசி (நாடாளுமன்றக் கூட்டுக் குழு) அறிக்கை முழுமையற்றது என்றும், அதைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று மக் களவைத் தலைவர் மீரா குமாரிடம் நாடாளு மன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, மீரா குமாருக்கு அவர் எழுதியுள்ள 3 பக்க கடி தத்தில், 2ஜி அலைக் கற்றை விவகாரம் தொடர்பான ஜேபிசி அறிக்கை அரசியல் சார் புடையதாக உள்ளது என்றும், அக்குழுவின் தலைவர் (சாக்கோ) ஒரு சார்பாக செயல்பட்டுள் ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டு நெறிகளின் படி முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வலியு றுத்தியுள்ள அவர், ஒரு வேளை முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டால், அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட் டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

1998 முதல் 2009 வரை அரசு மேற்கொண்ட கொள்கை முடிவுகளால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவை தொடர்பாக எந்தக் குறிப்பும் இல்லை என்றும் அவர் குறை கூறியுள்ளார்.

மேலும், '2ஜி அலைக்கற்றை விவகா ரம் தொடர்பான ஆ. ராசாவின் விளக்கம் இறுதிகட்ட அறிக்கை யில் சேர்க்கப்படும் என்று ஜேபிசி தலைவர் உறுதி யளித்திருந்தார். ஆனால், அந்த அறிக்கையை முறையாக பரிசீலிக்கா மல் அவர் நிராகரித்து விட்டார். எந்தவொரு காலக்கட்டத்திலும் ராசாவின் விளக்கம் விவாதிக்கப்படவே இல்லை.

இந்த விவகாரம் தொடர்பாக நான் தாக்கல் செய்த ஆட்சேப அறிக்கையில் இருந்தும் ஆ.ராசாவின் விளக்கம் குறித்த பகுதி நீக்கப்பட் டுள்ளது. இது எனக்கும் ஆ.ராசாவுக்கும் இழைக் கப்பட்ட அநீதி. என்னு டைய ஆட்சேப அறிக் கையை நீர்த்துப் போக செய்யும் வகையில் தவறான பிரிவின் கீழ் அது சேர்க்கப்பட்டுள் ளது. சில உண்மைகளை ஜேபிசி குழு முழுமை யாக நிரந்தரமாக மூடி மறைத்துவிட்டது.

எனவே, ஜே.பி.சி. அறிக்கையை அந்தக் குழுவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும். 2ஜி குறித்து முழுமையாக விசாரணை நடத்தி மறுஅறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஜே.பி.சி. அறிக்கையில் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் எழுத்துப் பூர்வ விளக்கமும் சேர்க் கப்பட வேண்டும்' என்று அந்தக் கடிதத்தில் டி.ஆர். பாலு கோரியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மோடியின் அடுத்த உளறல்


துடு (ராஜஸ்தான்) ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காந்தியா ரின் பெயரை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தவறாக உச் சரித்தார். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ப தற்கு பதிலாக மோகன் லால் கரம்சந்த் காந்தி என மோடி குறிப்பிட் டார்.

ராஜஸ்தானின் துடு பகுதியில் நரேந்திர மோடி பேசுகையில், தனது வாழ்வின் இறுதியில் மகாத்மா காந்திக்கு ஓர் ஆசை இருந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை. அதை நீங்கள் நிறை வேற்றுவீர்களா? மோகன்லால் கரம்சந்த் காந்தி... என நரேந்திர மோடி தனது பேச்சைத் தொடர்ந்தார்.

மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி என்பதற்குப் பதிலாக மோகன்லால் கரம்சந்த் காந்தி என உச்சரித்த தனது தவறை உணராமல் தொடர்ந்து உரையாற்றினார்.
சில நாள்களுக்கு முன் புரட்சியாளர் சியா மாஜி கிருஷ்ணா வர்மா வின் பெயரை குறிப்பிடு வதற்குப் பதிலாக ஜன சங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி யின் பெயரை மோடி குறிப்பிட்டது நினைவு கூரத்தக்கது

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


மகிழ்ச்சியே!

செய்தி: செஞ்சி அருகே வகுப்பறை இல்லாததால் கோயில் வகுப்பறை ஆனது.

சிந்தனை: இந்த ஒரு நல்ல காரியத்துக்காவது கோயில் பயன்படுகிறதே -அந்த அளவில் மகிழ்ச்சியே!

தமிழ் ஓவியா said...


பித்தலாட்டத்தின் மறுபெயர் பிஜேபி இதோ இன்னொரு ஆதாரம்

நான் முதல் மந்திரி ஆவதற்கு முன்பு சாலைகள் மிகவும் மோசமாக போர்க் காலத்தில் குண்டு போட்ட சாலை போல் குண்டும் குழியுமாக இருந்தன. நான் மாநிலம் முழுவது பயணம் செய்தபோது இந்த அவலத்தைப் பார்த்தேன். என்னுடைய வாகனம் செல்வதுகூட பெரும் சிரமமாக இருந்தது. இவற்றையெல்லாம் சரி செய்வதென்பது எனக்கு மிகவும் பெரிய சோதனையான ஒன்றாக இருந்தது. இந்த பாழடைந்த சாலைகளை சீர் செய்ய மிகப் பெரிய யாகம் செய்வதைப் போன்று பெரிய காரியமாக இருந்தது. இப்போது நான் செய்த காரியத்தின் பலனை நீங்களே பாருங்கள்...

இந்த சாலையைப் பார்த்த பிறகு இந்தியாவே கூறும் பாதுகாப்பான மற்றும் நவீன வசதியுடைய சாலைகள் மத்திய பிரதேச சாலைகள் என்று...
இவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது மத்திய பிரதேச பி.ஜே.பி. ஆட்சியால்.
உண்மை என்னவென்றால் இது மேற்கு வங்காளத்தில் உள்ள துர்காபூர் சாலையாகும்; பித்தலாட்டமே உன் பெயர்தான் பிஜேபியா?

தமிழ் ஓவியா said...


ஜீவா பாடுகிறார்!


நல்லாரை உழைப்போரைப் பறையரென்றார், நயவஞ்சகமுடையோர் மேல்ஜாதி யென்றார்,

பொல்லாத கொடியவரை மன்னரென்றார்

பொய்யுரைத்த குருக்கள், தமை குருக்கள் என்றார்

சொல்லாரும் தாயினத்தை அடிமையென்றார்

சூது மிகும் ஆசாரம் சமயம் என்றார்

இல்லாத பொய்வழியில் சொன்னதாலே

இந்நாட்டார் அடிமை வாழ்வு எய்தினாரே.

ப.ஜீவானந்தம்
தகவல்: எஸ்.எம்.தங்கவேலன், குஜராத்

தமிழ் ஓவியா said...

தலை எழுத்து

பிரம்மனால் பெண்ணுக்கும், ஆணுக்கும் தலை எழுத்து தனித் தனியே எழுதப்படுமாயின், மருத்துவத் தால் பெண்ணாக மாறும் ஆணுக்கும் ஆணாக மாறும் பெண்ணுக்கும் எவ்வாறு பொருந்தும்?

- சாமி. சேகரன், புதுவை

தமிழ் ஓவியா said...

காந்தியார் புகுத்திய குழப்பம்

ஒத்துழையாமை இயக்கத்தில் மதத்தைப் புகுத்தினார். ஆனால் எனது தந்தை, தேச பந்துதாஸ், லாலாஜி ஆகியோர் அரசியல் பிரச்சினைகளை மதச் சார்பற்ற முறையில் தான் அணுக வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அவர்கள் பொது வாழ்வில் மதத்தைப் புகுத்தியதே இல்லை.

நமது அரசியலில் இந்த மதம் பகுந்து வளர்வது கண்டு எனக்கு கவலை ஏற்பட்டது. அரசியலில் மதம் புகுவது எனக்கு பிடிக்கவே இல்லை. மவுல்விகளும், மவுலானாக்களும், சுவாமிகளும் மேடைப் பேச்சில் பரப்பிய கருத்துகள் கெடுதிடை உண்டாக்கக் கூடியவை. அவர்கள் நாட்டின் சரித்திரம்.

பொருளா தாரம், சமூக அமைப்பு பற்றிய உண்மைகளைத் திரித்துக் கூறி மக்களைக் குழப்பி தெளிவான சிந்தனைக்கு இடமில்லாமல் செய்துவிட்டார்கள்.

(நேரு எழுதிய உலக சரித்திரம், பக்கம் 139)

தமிழ் ஓவியா said...


மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்...


பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞான முடைய எவனும் கூற முன் வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும்.

இந்தி யாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரிகளுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன? ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயிருக் கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடைய வனாயிருக்கிறான்.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

இராவணனுக்குப் பிறந்த பிள்ளை

இலங்கையினின்று சீதையை இராமன் மீட்டு வரும்போதே அவள் கர்ப்பிணி!

இது ஊருக்குத் தெரிந்து விட்டது. ஆதலால், இலக்குமணனை விடு, அவளைக் காட்டிற்குக் கொண்டுபோ என்றான். இலக்குமணன் ஒரு கொழுத்த தவசியிடம் விட்டு மீண்டான். குசன் பிறந்தான். அதன்பிறகு சீதை ஒரு பையனைப் பெற்றிருந்தாள். அவன் பெயர் இலவன்.

இராமனால் விடப்பட்ட குதிரை இலவனால் பிடித்துக் கட்டப்பட்டது. அதனால் குதிரையுடன் வந்தவர்கள் இலவனை உதைத்து தேர்க்காலில் சுட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். பிறகு குசன் கேள்விப்பட்டுத் தம்பியை ஓடி மீட்கிறான். கட்டியவர்களைக் கொல்லு கின்றான். இராமன் வருகின்றான். அவனையும் கொன்று விடுகிறான்.

இலவன் தோற்றதேன்? இலவன் தவசிக்கு பிறந்தபிள்ளை குசன் ஏன் வென்றான்? அவன் இராவணனுக்குப் பிறந்தவன் தந்தையை கொன்ற இராமனைப் பழிக்குப் பழி கொடடா என்று தீர்த்தான் வேலையை!

-புரட்சிக் கவிஞர்

தமிழ் ஓவியா said...


பழைமைக்கு அடி!


ஓ ஜ ஜி! உங்களுடைய அநேக விஷயங்களைப் பற்றி நட்புரிமையோடு பேச விரும்புகிறேன். ஆகவே முதலில் எனக்கும் உங்களுக்குமுள்ள அபிப்பிராய பேதத்தை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லதென்று கருது கிறேன்.

நான் ஹரிஜன் பத்திரிகை முற்றிலும் பழைய பாதையிலேயே இந்தியாவை இருட்டு யுகத்திற்கு இழுத்துச் செல்லும் பத்திரிகையென்று கருதுகிறேன் காந்தியை எங்கள் குலத்தின் விரோதி என்று நினைக்கிறேன்.

உங்கள் ஜாதிக்கு, காந்திஜி ஓர் உதவியும் செய்ய வில்லையென்று கருதுகிறீர்களா?

மில் முதலாளிகள், மில் கூலிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு உதவி தான் காந்திஜி எங்கள் குலத்திற்குச் செய்கிறார்

காந்திஜி யாரையும் முதலாளியாகும்படி சொல்ல வில்லையே? ஜமின்தாரர்கள், முதலாளிகள், சிற்றரசர் களை காப்பாளர்கள் (கார்டியன்கள்) என்று சொல் வதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே, காந்திஜி எங்களிடம் அன்பு செலுத்துகிறார்.

நாங்கள் இந்துக்களை விட்டுப் பிரிந்து, தனியாக எங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதற்காகவே, அவர் பூனாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

இந்துக்களுக்கு மலிவான அடிமைகள், உழைப்ப தற்குத் தேவையாயிருந்தது ஆயிரக்கணக்கான வருடங்களாக அத்தேவையை எங்கள் ஜாதி பூர்த்தி செய்து வந்திருக்கிறது முதலில் எங்களை அடிமைகள் என்றே அழைத்தனர்.

இப்போது காந்திஜி ஹரிஜன் என்று பெயர் வைத்து எங்களை முன்னேற்ற விரும்பு கிறார். இந்துக்களுக்கு அடுத்தபடியாக எங்கள் ஜாதிக்கு பெரிய விரோதி ஹரிதான். அந்த ஹரியின் ஜனங்கள் என்று சொல்வதை நாங்கள் எப்படி விரும்புவோம்?

நீங்கள் பகவானைக்கூட ஒப்புக் கொள்வ தில்லையா?

எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? இது ஆயிரக்கணக்கான வருடங்களாக எங்கள் ஜாதி மிருகங்களிலும் கேவலமாக - தீண்டத்தகாததாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

உயர்ஜாதி இந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங் களுக்கும் கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து உங்களுக்குத் தேர் ஓட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே நாங்கள் அவமானப் படுத்தப்பட்டு வந்திருக்கிறோம்.

நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக எங்கள் பெண்களின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாங்கள் சந்தைகளிலே மிருகங்களைப் போல் விற்கப்பட்டு வந்திருக்கிறோம்.

இன்றும் கூட வசவு கேட்பதும் - அடிபடுவதும் - பட்டினிகிடந்து சாவதும் தான் எங்களுக்குப் பகவானின் கருணையென்று சொல்லப்படுகிறது - இவ்வளவையும் பார்த்துக் கொண்டு மவுனமாயிருக்கும் அந்தப் பகவானை நாங்கள் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்?

ஆதாரம்: (வால்காவிலிருந்து கங்bகைவரை என்ற நூல்)

ஆசிரியர்: ராகுலசாங்கிருத்தியாயன் மொழியாக்கம்