Search This Blog

16.11.13

கார்த்திகைதீபம்-கடவுள்பொய்சொல்லுகிறதுஎன்பதற்குஒருபண்டிகையா?அண்ணாமலைக்குஅரோகரா!
அருணாசல புராணம் தீர்த்தச் சருக்கம்:

காக முன் பலி பீடத்தில் பலித
னைக் கவரும் போதில்
ஆக மார் சிறகைக் கீழே புடைத்
தாலை யத்தி னூடே
ஓகையால் நமது கோயில் விளக்கிய
தென உட்கொண்டு
பாக சாதனனார் வாழும் பதியினைப்
பரமன் ஈந்தான்


இதன் பொருள்: ஒரு காக்கையானது திருவண்ணாமலைக் கோயிலில் உள்ள பலி பீடத்தில் வைத்திருந்த சோற்றைத் தின்னும் போது தன் சிறகை விரித்து அசைத்தது. அதனைக் கண்ட பரமசிவன் இந்தக் காக்கை நமது கோயிலைச் சுத்தம் செய்தது என்று மகிழ்ந்து அதற்கு உடனே தேவேந்திரன் வாழும் உலகத்தைக் கொடுத்தார் என்பதாகும்.


மேற்படி சருக்கம் 37ஆம் பாட்டு:


மூடிக மொன்று கோயில் முளை
யினைக் கிளறும் போது
தேடரு மணி போன்றங்கே சிதறி
யோர் விளக்கிக் காட்ட
ஆடிய பெருமான் தீபம் அளித்த
தென் றதற்கு நல்ல
வீடுயர் நெறியுங் காட்டி விரைந்து
சாலோக மீந்தான்.


இதன் பொருள்: ஒரு பெருச்சாளியானது (மூஷிகம்)  கோயிலில் வளை தோண்டும்போது அது பறித்துத் தள்ளிய மண்ணிலிருந்து ஒரு இரத்தினமானது சன்னதியில் விளக்குபோல் ஒளி மின்னியது. அதைக் கண்ட சிவபெருமான் அந்தப் பெருச்சாளி, தன் சன்னதிக்குத் தீபம் போட்டது என்று கருதி, மோட்ச வழியைக் காட்டி சாலோகப் பதவியைக் கொடுத்தார் என்பது. 

மேற்படி சருக்கம் 38ஆம் பாட்டு.


சிலந்தி யொன்றொருநாள் அந்தத்
திருமலை யிடத்து நூலைக்
கலந்துடன் இழைக்க
ஈதுகலை நமக்களித்த தென்று
நலந்திகழ ரசனாக்கி அதற்கு நல்லறிவு நல்கி
உலர்ந்தபின் நெடிய மாயன் 

உலகினை உதவினானே. 

இதன் பொருள்: திருவண்ணாமலையில் ஒரு நாள் ஒரு சிலந்திப் பூச்சியானது தன் வாய் நூலால் ஒரு கூடு கட்டியது. அதனை சிவபெரு மான், அச்சிலந்தியானது தனக்கு நல்ல வஸ்திரத்தை செய்து கொடுத்ததாகக் கருதி அதை இராஜாவாக ஆக்கி நல்ல ஞானம் உண் டாக்கி, அது இறந்த பிறகு வைகுந்த லோகத்தைக் கொடுத்தார் என்பதாகும்.

ஒரு கோயிலுக்கு அந்தக் கோயிலில் உள்ள மூலவரான கடவுளுக்கு அசாத்தியமான முக்கி யத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகப் புலவர்கள், பக்திமான்கள் அளந்து கொட்டும் சரடு இது.


அளவுக்கு மீறிய தன்னலம், பேராசை, அச்சம் ஆகியவற்றின் கலவையான மனிதன் அறிவை அகலக் குழி வெட்டிப் புதைத்து விட்டு ஆண்டவனே கெதி என்று கப்பறையை விரிக் கிறான்.


கடுகளவு அறிவு இருக்கின்றவனும் இந்தக் காக்கைக் கதையையும், சிலந்திக் கதையையும் எலிக் கதையையும் நம்புவானா?


நம்புகிறான் என்றால் அவனுக்குக் கடுகத்தனை அறிவுகூட இல்லை என்பதற்கான விளக்கம்தான்.


அருணாசலக் கடவுள் எவ்வளவுப் பெரிய பரம முட்டாள், தற்பெருமைக்காரன் என்பதற்கும் இப்பாடல்கள் எடுத்துக்காட்டு!


இந்த அருணாசலம் குடி கொண்ட திருவண் ணாமலை இருக்கிறதே இது கிருதாயுகத்தில் அக்னிமலையாக இருந்ததாம், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாம், துவாபர யுகத்தில் பொன் மலையாம், கலியுகத்தில் கல் மலையாம்.


பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றியதுபோல உளறுவது தான் புராணம். கலியுகத்தில் கல்மலை என்று மிகவும் ஜாக்கிரதையாகவே கூறி வைத்துள்ளார்கள். பொன்மலை, மாணிக்க மலை என்று கூறியிருந்தால் சுரண்டிப் பார்த்து விடுவார்களே, குட்டு வெளிப்பட்டுப் போகுமே!


திருவண்ணாமலையில் அருணாசலர் வந்ததற்கு ஒருகதை! எல்லாம் கதை தானே!


பிர்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே போட்டி! என்ன போட்டி? யார் அறிவாளி, யார் ஒழுக்கச் சீலர் என்கிற போட்டியா? அல்ல! அல்ல! இருவரில் யார் பெரியவர் என்கிற  போட்டியாம். இவர்கள்தான் அகந்தையை அகற்றி அருள் பாலிப்பார்களாம். ஆண்டவன் விஷயம் என்றால் தான் அறிவைப் பயன்படுத்தக் கூடாதே!


இடையிலே சிவன் குறுக்கிட்டான். ஆதியும், அந்தமும் இல்லாத அருள் பெரும் ஜோதியாய்த் தோன்றி நின்றானாம். சிவன் உங்களில் யார் என் முடியையும், அடியையும் காண்கிறீர்களோ அவர்தான் பெரியவர் என்று தீர்ப்புக் கூறினாராம். விஷ்ணு, பன்றி அவதாரம் எடுத்து பூமியைத் துளைத்துக் கொண்டு போய் தோல்வி முகத்தோடு திரும்பினானாம். பிர்மா கருடன் அவதாரம் எடுத்து முடியைக் காண வெகுதூரம் சென்றானாம்.


அந்த நேரத்தில் தாழம்பூ ஒன்று ஆகாய வெளியில் வந்ததாம். எங்கிருந்து வருகிறாய்? என்று பிர்மா கேட்டானாம்! சிவன் முடியிலிருந்து வருகிறேன் என்று அது சொன்னதாம். பிர்மாவுக்கு ஒரு நொடியில் பொறிதட்டியது. சிவன் முடியை நான் பார்த்ததாகச் சாட்சியம் சொல்வாயா என்று கேட்டானாம் பிர்மா. தாழம் பூவும் ஒப்புக் கொண்டதாம். சிவனிடம் அவ்வாறே சொன்னார்களாம்.


பொய் சொல்லுவதை அறிந்த தோடுடைய சிவன் பொல்லாக் கோபம் கொண்டானாம்.


உனக்குக் கோயிலே கிடையாது நாட்டில் என்று பிர்மாவுக்குச் சாபம் விட்டானாம். உன்னை பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாது என்று தாழம் பூவுக்கும் நச்சென்று தலையில் குட்டினானாம்.


சிவன் ஜோதிப் பிழம்பிலிருந்து விடுபட்டு மீண்டும் சிவலிங்க உருவத்தில் தோன்றினா னாம். பிர்மா, திருமால் இருவரும் சிவனை வழிபட்டு உண்மை ஞானம் பெற்றனராம்.


இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் விதத்தில் தான் கார்த்திகை மாதம் பவுர்ணமியன்று திருக்கார்த்திகை நட்சத்திரத்தில் பொருந்தியிருக்கும்போது கார்த்திகை தீபம் தொடங்குகிறது என்று திருவண்ணாமலை தலபுராணம் கதைக்கிறது.

கடவுள் பொய் சொல்லுகிறது என்பதற்கு ஒரு பண்டிகையா?


இந்தக் கதையின்மூலம் பக்தர்கள் என்ன பாடத்தைப் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள்?


சிவனைத் தூக்கிப் பிடிக்கும் இந்தத் தீபக் கதையை, வைணவர்கள் ஏற்றுக் கொள் வார்களா? ஆகாயத்தில் கருடனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்ளும் பிர்மாவின் பக்தர்கள்தான் ஒப்புக் கொள்வார்களா?


அவர்களுக்குள் இருக்கும் உயர்வு - தாழ்வு தெருச் சண்டைக்கு இதுபோன்ற புராணப் புனைவுகள் என்பதுதானே உண்மை.

--------------------- கருஞ்சட்டை 16-11-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

72 comments:

தமிழ் ஓவியா said...


அன்னதானம்!


தினமணி வெள்ளி மணியில் (15.11.2013) தானத்தின் பலன் என்ற தலைப்பில் மறைந்த காஞ்சி சூப்பர் சீனியர் சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களின் அருளுரை இதோ:

தானத்தின்பலன்

எல்லா தானங்களிலும் அன்னதானம் விசேஷம். பகவானும் கீதையில், எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச் சாப்பிடு கிறானோ அவனுடைய பாபத்தையும் முழுக்க அவ னேதான் அனுபவித்தாக வேண்டும். வேறு யாரும் அதில் பங்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்கிறார்.

பிறருக்குப் போடாமல், தான் மட்டுமே தின்கிறவன் சாதம் சாப்பிடவில்லை. பாபத்தையே புசிக்கிறான் என்கிற மாதிரி சொல் கிறார். அன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால் அதிலேதான் ஒருத்தரைப் பூரணமாகத் திருப்திப் படுத்த முடியும்.

பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு இந்த மாதிரியானவற்றை எவ் வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறவன் அதற்கு மேல் தந்தாலும் வேண்டாம் என்று சொல்ல மாட்டான். அன்னம் போடு கிறபோதுதான் ஒருத்தன் என்னதான் முட்ட முட்டச் சாப்பிட்டாலும் ஓர் அள விற்கு மேல் சாப்பிட முடியாது. ஓர் அளவுக்கு மேல் போய் விட்டால், ஐயையோ இனிமேல் போடாதீர்கள் என்று மன்றாடச் செய்கிறான். இம்மாதிரி ஒருத்தன் பூர்ண மனஸோடு திருப்தி தெரி விக்கிற போதுதான் தானத் தின் பலன் பூர்ணமாகக் கிடைக்கும்.- காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர்

ரொம்ப சரி.. சிறப்பா கவே சொல்லியிருக்கிறார். பாராட்டக் கூடச் செய்ய லாம்.

காஞ்சீபுரம் சங்கர மடத்தில் இன்றைக்குக் கூட, அங்கு சமைக்கப்பட்டு மீதமான உணவை என்ன செய்கிறார்கள்? குழி தோண்டி அல்லவா புதைக் கிறார்கள்! உண்மையா இல்லையா?
அன்னதானத்தைப்பற்றி ஆகாயம் வரை அள்ளி விடும். அந்தப் பெரியவாள் மீதி அன்னத்தை ஏழை எளியவர்களுக்கு வழங்கிட வழி செய்திருக்கக் கூடாதா?

அதே நேரத்தில் வடலூர் இராமலிங்க அடி களாரை எடுத்துக் கொள்ளுங்கள்.அவர் அன்று ஏற்றி வைத்த அடுப்பு நெருப்பு இன்று வரை அணையவில்லையே! அன்னதானம் அன்றாடம் வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது போய்ப் பார்த்தாலும் காணலாமே.

அதனால்தானே அவர் வள்ளலார் என்று அன் பொழுகப் போற்றப்படு கிறார். ஆனால் பார்ப்பனர் களின் கர்மா தத்துவப்படி, பட்டினி கிடப்பது அவாள் அவாள் தலையெழுத்து என்பதுதானே!

இந்த ஜென்மத்தில் கர்மப் பலன்படி பட்டினி கிடந்து அந்தத் துன்பத்தை அனுபவித்தால் அடுத்த ஜென்மத்தில் நல்லது கிடைக்கும் என்பவர்கள் இதுபோன்ற அருளுரை களைக் கூறுவதில் அர்த்தம் இல்லை.

நாத்திகர்களுக்கு வைத்தியம் பார்க்காதே என்று சொல்லக் கூடியவர் தான் அவாள் அகராதியின் மகாப் பெரியவர்! - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


தமிழர்கள் படும் வேதனை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது - பிரிட்டன் பிரதமர் கேமரூன்


கொழும்பில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற அதே நாளில் பிரிட்டன் பிரதமர் தமிழர் பகுதிக்கு நேரில் சென்ற சிறப்பு

தமிழர்கள் வேதனையின் விளிம்பில் நின்று குமுறல்!

தமிழர்கள் படும் வேதனை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது - பிரிட்டன் பிரதமர் கேமரூன்

கொழும்பு,நவ.16- காமன்வெல்த் மாநாடு நடைபெறும் கால கட்டத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேம ரூன் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிக்குச் சென்றபோது ஈழத் தமிழர்கள் தாங்கள் படும் வேதனையை வெளிப்படுத்தினர்.இது பெரும் தாக்கத்தைத் தனக்கு ஏற்படுத்திய தாக பிரிட்டன் பிரத மர் கூறினார். இந்த நிகழ்வுகள் உலக அள வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டன!

காமன்வெல்த் நாடு களின் 3 நாள் மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று தொடங்கியது.

கனடா புறக்கணிப்பு

இலங்கை போரின் போது 1 லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், மனித உரிமைகள் மீறப் பட்டதற்கும் கண்டனம் தெரிவித்து, கனடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பிரதமர்கள் இந்த மாநாட்டை புறக்க ணித்து விட்டனர்.

இங்கிலாந்து பிரதமர்

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், புறக்கணிப்பு கோரிக் கையை நிராகரித்து காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்தாலும், போரின்போது நடந்த மனித உரிமைகள் மீறல் குறித்தும் மாநாட்டில் எழுப்ப இருப்பதாக கூறி இருந்தார்.

இந்த நிலையில், கொழும்பில் நேற்று காமன்வெல்த் மாநாடு தொடங்கியதும் டேவிட் கேமரூன் தனி விமானத்தில் இலங்கை தமிழர் பகுதியான யாழ்ப் பாணம் புறப்பட்டுச் சென்றார்.

விக்னேஸ்வரனுடன் சந்திப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த பொது நூலகம் போர் தாக்குதலில் கடு மையான சேதம் அடைந்து தற்போது புன ரமைப்பு செய்யப்பட்டு உள்ளது.

அந்த நூலகத்தை பார்வையிட்ட இங்கி லாந்து பிரதமர் டேவிட் கேமரூன், அங்கு யாழ்ப் பாணம் புதிய முதல் அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டணியின் விக்னேஸ்வரன் உள் ளிட்ட தமிழ் தலைவர் களை சந்தித்து பேசினார்.

இலங்கை இங்கி லாந்து ஆதிக்கத்தில் இருந்து கடந்த 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்ற பின், இலங்கை தமிழர் பகுதியான யாழ்ப் பாணத்தில் சர்வதேச தலைவர் ஒருவர் சுற்றுப் பயணம் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ப் பெண்கள் குமுறல்

தமிழ் ஓவியா said...

யாழ்ப்பாணம் நூலகத்தில் இருந்து இங்கிலாந்து பிரதமரின் வாகன அணிவகுப்பு வரிசை புறப்பட்ட போது, இலங்கை அர சின் கொடுமை குறித்து முறையிடுவதற்காக சாலையின் இரு புறங் களிலும் ஏராளமான பெண்கள் உள்பட தமி ழர்கள் ஆர்வத்துடன் திரண்டு நின்று கொண்டு இருந்தனர். அவர்களில் சிலர் வாயில் கறுப்புத் துணியை கட்டி இருந் தனர்.

போரின்போது கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன தங்கள் சொந்தங்களின் புகைப்படங்களை தாங் கிய பதாகைகளை அவர் கள் தங்கள் கைகளில் ஏந்தி இருந்தனர். இங்கிலாந்து பிரதமரின் வாகனத்தை அவர்கள் நெருங்கிவிடாமல் தடுப் பதற்காக காவல்துறையி னர் தடுப்புகளை ஏற் படுத்தி இருந்தனர்.

காரை வழிமறித்தனர் பிரதமரின் வாகன வரிசை அவர்களை நெருங் கியதும் காவல்துறை யினர் பாதுகாப்பை மீறி ஆண்களும், பெண்களும் சாலைக்கு வந்து வாக னங்களை வழி மறித் தனர். அப்போது இலங்கை அரசுக்கு எதிராகவும், இங்கிலாந்து பிரதமரை வாழ்த்தியும் அவர்கள் குரல் எழுப்பினர். போரில் தங்கள் சொந்தங்களை இழந்த தமிழர்கள், குறிப்பாக பெண்கள் டேவிட் கேம ரூனை வாழ்த்தியபடி, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பல் வேறு மனுக்களையும், புகைப்படங்களையும் கொடுத்ததாகவும், அவர் களுடைய கோரிக்கை களை பிரதமர் முழுமை யாக உணர்ந்து இருப்ப தாகவும், இந்த சுற்றுப் பயணத்தில் பிரதமரு டன் பங்கேற்ற செய்தி யாளர்கள் தெரிவித்தனர்.

முகாமில் உள்ள தமிழர்கள்

போரின்போது இடம் பெயர்ந்த அகதி களில் மறுகுடியமர்த்தப் படாத சிலர் இன்னும் முகாம்களில் தங்கி உள் ளனர். அந்த முகாமிற்குச் சென்ற டேவிட் கேம ரூன், அவர்களிடம் நீங் கள் ஏன் இன்னும் உங் கள் சொந்த இடங்களுக் குச் செல்ல வில்லை? என்று கேட்டார்.

அதற்கு தங்கள் இடங்களை ராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டு முகாம் அமைத்து இருப்பதாக குறிப்பிட்ட அவர்களிடம், உங்கள் கோரிக்கையை இலங்கை அரசிடம் தெரிவித்து உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக, இங்கிலாந்து பிரதமர் உறுதி அளித்தார்.

உதயன் ஏட்டின் அலுவலகத்தில்

யாழ்ப்பாணத்தில் உள்ள உதயன் என்ற தமிழ் பத்திரிகை அலுவ லகத்திற்கும் இங்கி லாந்து பிரதமர் டேவிட் கேமரூன் சென்றார். இந்த பத்திரிகை அலுவ லகம் கடந்த ஆண்டில் தீ வைத்து எரிக்கப்பட் டதுடன், அதன் பத்திரி கையாளர்கள் அடிக்கடி தாக்கப்படுவது வழக்க மான நிகழ்வாகும்.

பிரிட்டன் பிரதமரின் கருத்து

அந்த பத்திரிகை ஊழியர்களிடம் பேசிய டேவிட் கேமரூன், உங் களுடைய மறக்க முடியாத அனுபவங்கள் என்னிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட் டார். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை அரசுக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாகவும், அவர் தெரிவித்தார். முன்னதாக இங்கி லாந்து பிரதமர் யாழ்ப் பாணம் முதல்அமைச் சரை சந்தித்துப் பேசிக் கொண்டு இருந்தபோது, போரில் காணாமல் போனவர்களின் உறவி னர்கள் நூலகத்திற்கு வெளியே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

இதனால், ஆத்திரம் அடைந்த போலீ சார் அவர்கள் மீது கடுமையான தாக் குதல் நடத்திய தாக, தமிழர் கட்சி பிரதிநிதிகள் குற்றம் சாட்டி உள் ளனர்.

சிங்களவர்களும் போராட்டம்

இதற்கிடையில், டேவிட் கேம ரூன் வருகையின்போது இலங்கை அரசுக்கு எதிராக தமிழர்கள் நடத்திய போராட்டத்துக்கு போட் டியாக சிங்களர்களும் போராட் டத்தில் ஈடுபட்டனர். இலங்கை விடுதலை அடைவதற்கு முன்பாக ஆங்கிலேயர் ஆட்சியின்போது நடைபெற்ற அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்த வற்புறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. பிரிட்டன் பிரதமர் தமிழர் பகுதிக்குச் சென்றதும் தமிழ் மக்கள் தங்கள் குமுறல்களைக் கொட்டி யதும், சிங்களவர்கள் அடாவடித் தனமாக நடந்து கொண்டதும் உலக நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

தமிழ் ஓவியா said...


தேர்தல் கருத்துக் கணிப்பு

தேர்தல் கருத்துக் கணிப்பு தடை செய்யப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை யாகும். இப்பொழுது அந்தக் கருத்தினைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு, அதுபற்றி சட்டம் இயற்றலாம் என்று மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது.

ஒரு ஜனநாயக நாட்டில் மக்களைச் சிந்திக்க விடாமல் கருத்துக் கணிப்பு என்கிற பெயரால் கருத்துத் திணிப்பினைச் செய்து வருகிறார்கள்.

ஊடகங்களில் 71 சதவிகித அளவுக்கு உயர் ஜாதி பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள். டில்லியைப் பொறுத்தவரை 300-க்கும் மேற்பட்ட மூத்த ஊடக இயலாளர்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்டவர் இல்லை என்பது அதிர்ச்சிக்குரியது.

பணியாற்றுபவர்கள் தான் இப்படி இருக் கிறார்கள் என்றால் ஊடகங்களின் உரிமை யாளர்கள் எல்லாம் யாரென்றால், பெரும்பாலும் பெரும் பெரும் பண முதலாளிகள்தான்.
பிறவி முதலாளித்துவவாதிகளான பார்ப் பனர்களும், பொருள் முதலாளிகளும் சேர்ந்து தங்கள் கருத்துக்களை மக்கள் மத்தியில் திணிக்கும் நயவஞ்சக வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களுடைய நன்மைக்காகவும், இலாபத் துக்காகவுமான ஓர் ஆட்சியை உருவாக்குவதில் இவர்களின் பங்கு கணிசமாக இருந்து வருவது கண்கூடு.
இவர்களுக்கு, மோடி பிரதமராக வர வேண்டும் என்பது மனம் கொண்ட அளவுக்கு ஆசையும், வெறியும் உண்டு.

சென்னையில் பெரிய பெரிய முதலாளிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் மோடிதான் பிரதமராக வர வேண்டும் என்று தங்கள் விருப் பத்தினை வெளிப்படுத்தியதை இந்த இடத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும்.

டாட்டா நிறுவனத்தின், நானோ கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு 1100 ஏக்கர் விளை நிலங்களை மோடி தாரை வார்த்தார் என்றால் எந்த அடிப்படையில்? முத்திரைத்தாள் கட்டணமும் விதி விலக்காம்; 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் கடன் தொகை ரூ.9750 கோடி - வட்டி விகிதம் என்ன தெரியுமா .1 (புள்ளி ஒன்று) சதவீதமாம்.

இப்படி முதலாளிகளையும், கார்ப்பரேட் கம்பெனிகளையும் ஊட்டி வளர்க்கக் கூடியவர் தான் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி.

இப்படிப்பட்டவரை பிரதமர் நாற்காலியில் அமர வைக்க எந்த முறைகளையும் கையாளக் கூடியதுதான் முதலாளித்துவம்! அவர்களின் கைகளில் பலமாகச் சிக்கிக் கொண்டுள்ள ஊடகங்களைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். கருத்துக் கணிப்புகளை வெளி யிட்டு, அடுத்த பிரதமர் நரேந்திரமோடிதான் என்கிற மாயையைப் பாமர மக்களின் மனதில் திணிக்கும் வேலையில் திட்டமிட்டு இறங்கி யுள்ளனர்.

மோடியின் ஆட்சியில் 2002இல் நடைபெற்ற படுகொலையைத் திரையிட்டு மறைத்துவிட்டு மோடியினால் குஜராத் வளர்ச்சி வளர்ச்சி என்ற பொய்க் கதையை மூக்கும் முழியும் வைத்து இறக்கைக் கட்டிப் பறக்க விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இது ஜனநாயக உணர்வைக் கொல்லைப்புற வழியாகக் காயடிக்கும் கயமையாகும்.

பெரிய முதலாளிகளுக்காக அவர்களிடம் லஞ்சப் பணம் பெற்றுக் கொண்டு அவர் களுக்காக நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியவர்களின் வரிசையில் பிஜேபி முதலி டத்தில் இருந்த தகவல் வெளி வரவில்லையா?

இன்னொன்றையும் கவனிக்கத் தவறக் கூடாது; 2009- 15ஆவது மக்களவைத் தேர்தலில் பிஜேபிதான் ஆட்சிக்கு வரப் போகிறது என்று பெரும்பாலான ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டனவே அவை என்னாயிற்று? பொய்த்துப் போக வில்லையா?
மக்களைக் குழப்பும், மோசடி வேலையைச் செய்யக்கூடிய கருத்துக் கணிப்பைத் தடை செய்ய வேண்டியது மிகவும் அவசியமே!

தமிழ் ஓவியா said...


அழித்தாக வேண்டும்மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி, நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்கும் மதம் எதுவானாலும் அதை அழித்தாக வேண்டும்.
(குடிஅரசு, 18.12.1927)

தமிழ் ஓவியா said...


இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பயணம் பலனளிக்குமா?

முக்கிய பிரச்சினைகள் குறித்து டெசோ நாளை முடிவெடுக்கும்

சென்னை, நவ.16- கொழும்பில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் காலக் கட்டத்தில், டெசோ நாளை கூடி முக்கிய முடிவுகளை எடுக்கும் என்று டெசோ தலைவர் கலைஞர் கூறி யிருக்கிறார்.

இது தொடர்பாக முரசொலியில் அவர் எழுதி யிருப்பதாவது:-

உடன்பிறப்பே,

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் கலந்து கொள்ளாத நிலையில், இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.சல்மான் குர்ஷித் அவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருக்கிறார். இதுகுறித்துச் செய்தி யாளர்கள் என்னிடம் கேட்ட போது, அது தவறு என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழ் மக்களின் உணர்வுகளை இப்படியெல்லாம் மத்திய அரசு புறக்கணிக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என்று 13-11-2013 அன்று பதில் அளித்திருந்தேன். என்னுடைய இந்த உணர்வையே தமிழகத்திலுள்ள வேறு சில கட்சிகளும் பிரதிபலித்தன. திரு.சல்மான் குர்ஷித், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கச் செல் வதை நியாயப்படுத்திச் சில காரணங்களை வெளி யிட்டிருக்கிறார்.

சல்மான் குர்ஷித் கூறும் காரணங்கள் 1. ஈழத் தமிழர் பிரச்சினைகள் உள்பட பல்வேறு பிரச்சினைகளை இலங்கை அரசுடன் பேச வேண்டி யுள்ளது. 2. ஈழத் தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவது பற்றியும், இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்கிறபோது எதிர்கொள்கிற தாக்குதல்கள் குறித்தும், இந்தியாவின் கருத்துக்களை இலங்கை அரசிடம் எடுத்துச் சொல்கிற வாய்ப்புக் கிடைக்கும். 3. இலங்கையில் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டுள்ளோம். 4. இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசை, அரசியல் ரீதியிலும் - பொருளாதார ரீதியிலும் வெற்றியடையச் செய்வதில் உறுதி கொண்டுள்ளோம். 5. தமிழர்களுக்கு அரசியல் சட்டத்தின்படியும், இந்திய - இலங்கை உடன்பாட்டின் படியும் கூடுதல் அதிகாரம் வழங்குவதை உறுதி செய்யும் கடமையும் இந்தியாவுக்கு உண்டு; என் பவையே சல் மான் குர்ஷித் வெளியிட்டிருக்கும் காரணங்கள் ஆகும்.

தமிழ் ஓவியா said...

தன்னுடைய இலங்கைப் பயணத்தை நியாயப் படுத்தி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வெளி யிட்டிருக்கும் காரணங்கள் அனைத்தும் வரலாற்று ரீதியாகவும் - அரசியல் ரீதியாகவும் சிங்களப் பேரின வாத அரசால் முறியடிக்கப்பட்டுள்ளவை ஆகும். தந்தை செல்வா காலம்தொட்டு, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் வரை பல்வேறு காலக்கட்டங்களில் தமிழினத்தோடு சிங்கள அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் எதுவும் சிங்கள அரசால் நிறைவேற்றப் படவில்லை; மாறாக, மீறப்பட்டிருக்கிறது என்பதே வரலாறு ஆகும். சிங்கள அரசு, தமிழர்களை இலங் கையின் குடிமக்களாகக் கருதி, அரசியல் சட்டப்படி அவர்களுக்குள்ள உரிமைகளைத் தருவதற்கே தயக்கம் காட்டி வருவதை அனைவரும் அறிவர். எந்த நாட்டிலாவது தங்கள் குடிமக்கள் மீதே ஓர் அரசு தன்னுடைய இராணுவத்தின் துணையோடு படை யெடுத்து போர்புரிந்து பேரழிவு ஏற்படுத்திய சோக நிகழ்வு நடந்ததுண்டா? சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் இனம் வேறெங்கும் உண்டா? ஈழத்தில் நடந்திருக்கிறதே! இலங்கை 1948ல் விடுதலை பெற்ற காலம் முதலே, தமிழர்களின் உரிமைப் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தந்தை செல்வா அவர்களின் தலைமையில் 30 ஆண்டு காலம் அறவழிப் போராட் டம் நடைபெற்றிருக்கிறது. அறவழிப் போராட்டத்தின் மூலம் சிங்கள அரசின் கவனத்தை நீதி - நேர்மையின் பக்கம் திருப்ப முடியவில்லை என்பதால் 25 ஆண்டு காலம் ஆயுதம் தாங்கிய போராட்டம் நடைபெற்றது.

ஆட்சி அமைத்த பிறகும்... அதில் 5இலட்சம் தமிழ் மக்கள் பலியாகி இருக்கிறார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை வடக்கு மாகாணத்தில் ஜனநாயகத் தேர்தல் களம் அமைக்கப்பட்டு, 38 இடங்களில் 30 இடங்களை தமிழர் தேசியக் கூட்டமைப்பு வென்று, ஆட்சி அமைத்த பிறகும், தமிழர்களுக்கு நியாயமாகக் கிடைத் திட வேண்டிய உரிமைகள் நீர்த்துப் போனவையாகவே இருக்கின்றன.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச் செய லாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தற்போது தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் எடுத்து இயம்பியிருக்கும் விவரங்கள் அனைத்தையும்; ஈழப் போரின்போது, ராஜபக்சே அரசு கட்டவிழ்த்துவிட்ட மனித உரிமை மீறல்கள், சர்வதேசச் சட்டங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டுப் புரிந்த போர்க் குற்றங்கள் பற்றியும், போருக்குப் பிறகு திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் தமிழ்இன அழிப்புச் செயல்கள் குறித்தும் விளக்கும் போது, நான் ஏற்கனவே பலமுறை எடுத்துக் காட்டியிருக்கிறேன்; டெசோ அமைப்பின் தீர் மானங்கள் மூலமாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

தமிழ் ஓவியா said...

2009ஆம் ஆண்டு ஈழத்தின் இறுதிக் கட்டப் போர் முற்றுப் பெற்றதற்குப் பிறகு, இலங்கை அரசின் சிங்களமயமாக்கல் கொள்கை வெகு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழர்கள் பகுதியில் ஒன்றரை லட்சம் சிங்களத் துருப்புகள் இலங்கை அரசின் 2 இலட்சம் இராணுவப் படை யினரில் சுமார் ஒன்றரை இலட்சம் பேர், தமிழர்கள் வாழும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் முகா மிட்டுள்ளனர். அமைதியை நிலைநாட்டுதல், கண்ணி வெடிகளை அகற்றுதல் என்ற போர்வையில், தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளன. 10 இலட்சம் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில், தமிழர்களுக்குச் சொந்தமான 6,500 ஏக்கர் நிலங்களை சிங்கள இராணுவம் தன்வயப்படுத்தி உள்ளது. போரின் போது வெளியேறி, பிறகு முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு முடக் கப்பட்ட தமிழ் மக்களின் சொந்த வீடுகளை, சிங்கள இராணுவ வீரர்கள் ஆக்கிரமித்துப் பயன்படுத்தி வருகின்றனர். போரினால் விதவைகள் ஆக்கப்பட்ட 84 ஆயிரம் பேரில், 54 ஆயிரம் பேர் இலங்கை வடக்கு மாகாணத்தில் மட்டும் வாழ்கின்றனர். 12 ஆயிரம் அனாதைக் குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் 2 ஆயிரம் பேர், கதியற்று வாழவழியற்று வாடி வரு கின்றனர். பெரும்பான்மையினராகத் தமிழர்கள் வாழ்ந்து வரும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 78 சதவிகிதமாக இருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை இன்று 48 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

புலம் பெயர்ந்தவர் 10 லட்சம் பேர்

10 இலட்சம் தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் குடியேறி, புலம் பெயர்ந்தவர்களாகிவிட்டனர். இந்த இரண்டு மாகாணங்களிலும் தற்போது சுமார் 18 இலட்சம் தமிழர்கள்தான் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களை யும் அகற்றி, முழுவதும் சிங்களமயமாக்கும் முயற்சி களே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் பகுதிகளின் பூகோள அமைப்பே - மக்கள் தொகைக் குறைப்பு, எல்லைகள் மாற்றம் ஆகியவற்றின் காரணமாக - மூல அடையாளங்களை முழுவதுமாய் இழந்து வருகின்றது. தமிழர் பகுதிகளில் உள்ள இந்துக் கோயில்கள், இஸ்லாமியப் பள்ளி வாசல்கள் உடைத்துத் தகர்க்கப்பட்டு, அவை அனைத்தும் புத்தமத வழி பாட்டு இடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. சிங்கள அரசின் இத்தகைய எதேச்சாதிகார, பாசிச நட வடிக்கைகளை எதிர்ப்பவர்களை பயங்கரவாதி களாகக் குற்றம் சாட்டி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மூலம் கைது செய்து, விசாரணையின்றி ஒன்றரை ஆண்டு சிறையில் வைத்திருக்க முடியும். இந்த அச்சுறுத்தல்களின் காரணமாக, தமிழர்கள் தமது சொந்த நாட்டை விட்டு வெளியேறி, வேறு நாடுகளுக்குச் சென்று வாழ்வாதாரம் தேடவே முயற்சிக்கின்றனர். மேலும், ஒரு பெருங்கொடுமையாக 18 வயதிற்குட்பட்ட தமிழ்ப் பெண்களைக் கட்டாயக் கருத்தடை செய்து, இலங்கை அரசு இன வளர்ச்சித் தடுப்புச் செயலில் இரக்கமின்றி ஈடுபடுகிறது. உருப்படியான பலன்கள் விளையுமா?

பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதிவழி தேடும் அணுகுமுறையே அற்றுப்போய், இலங்கையில் இத்தகைய கடுமையான நிலைமைகள், பதற்றமான சூழ்நிலைகள் உருவானதற்குப் பிறகு, சல்மான் போன்றவர்கள் பிரச்சினைகளைப் பேச முற்படுவதால் என்ன உருப்படியான பலன் விளைந்துவிடப் போகிறது என்று தெரியவில்லை. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே இதுதான் முதல்முறையாக நடைபெறப் போகும் பேச்சுவார்த்தையா? போருக்குப் பின்னர் எண்ணற்ற முறைகள், டெல்லியிலும் கொழும்பிலும் அதிகாரிகள் மட்டத்திலும், அமைச்சர்கள் மட்டத் திலும், பிரதமர்களிடையேயும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றனவே! என்ன முடிவு ஏற்பட்டது? மனித உரிமை மீறல்கள் குறைந்து விட்டனவா? தமிழர் பகுதிகளில் ஆக்கிரமித்துள்ள இராணுவம் திரும்பப் பெறப்பட்டு விட்டதா? இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான வீடுகளும், நிலங்களும் தமிழர்களிடமே திருப்பி ஒப்படைக்கப் பட்டு விட்டனவா?

தமிழ் ஓவியா said...

இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளினால் ஈழத் தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரங்கள் கிடைத்து விட்டனவா? 13 பிளஸ் அதாவது 13ஆவது திருத்தத் திற்கு அதிகமாகவே அதிகாரங்கள் அளிப்பேன் என்று ராஜபக்சே வாக்குறுதி அளித்தாரே! அதை நிறைவேற்றி னாரா? நிலம் மற்றும் காவல்துறை தொடர்பான அதிகாரங்கள் இல்லாமல், பெரும்பான்மைத் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு ஒன்று அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே! அதைப் பற்றிக் கிஞ்சிற்றேனும் கருத்தில் கொண்டாரா ராஜபக்சே? ஆட்சி அதிகாரம் ஏதும் இல்லாமல், தமி ழர்களின் ஆட்சி, சிங்கள அரசின் கடும் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் சிக்கிக் கொண்டு, மக்கள் நலனை முறையாகப் பேண முடியாமல், வீழ்ச்சி அடைந்து தமிழ் மக்களின் வெறுப்புக்கு இலக்காகி விட வேண்டு மென்பதுதானே ராஜபக்சேயின் விருப்பம்? சிங்களர் களும், இலங்கைக் கடலோரக் காவல்படையினரும் இணைந்து, தமிழ் மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதல்கள், ஏற்படுத்தும் சேதாரங்கள், துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள், நீதிமன்றத்தில் நிறுத்திச் சிறைக்கு அனுப்பும் நடவடிக்கைகள்; போருக்கு முன்பு இருந்ததைவிட, போருக்குப் பின்னர் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனவே அல்லாமல், சிறிதும் குறைந்தபாடில்லையே! இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழர் நலனுக்காக இந்தியா பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக சல்மான் குர்ஷித் சொல்லி இருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

புதிய வீடுகளில் சிங்களர்கள் அந்தத் திட்டங்களின் பலன் பெரும்பாலும் சிங்களவர்களுக்கே செல்கிறது. குறைந்தது நான்கு பேருக்கும் அதிகமாக இருக்கும் குடும்பத்தினருக்கு மட்டுமே வீடு ஒதுக்கப்படும் என்று ஒரு சட்டம் இயற்றி, புதிதாகக் கட்டப்படும் வீடுகளில் பெரும் பாலானவை சிங்களவர் களுக்கே ஒதுக்கப்பட்டு வருகின்றன என்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டி ருக்கிறதே! அய்.நா. அவைப் பொதுச்செயலாளர் பான் கீ மூன் அவர்களால் அமைக்கப்பெற்ற, இந்தோனேஷி யாவைச் சேர்ந்த தரூஸ்மான் தலைமையிலான மூவர் குழு 2011 ஏப்ரல் மாதம் அளித்த அறிக்கையில், ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள் வெளி உலகுக்குத் தெரிந்து விடாமல், தடயங்கள் அனைத்தையும் அழிக்கும் முயற்சிகளைப் பற்றித் தெரிவிக்கப் பட்டிருந்தது. அந்த அறிக்கை வெளிவந்த பிறகாவது, இலங்கை அரசு விழிப்புணர்ச்சியைப் பெற்றதா?

தமிழ் ஓவியா said...

மனசாட்சிப்படி நடந்ததுண்டா சிங்கள அரசு அய்.நா. அவையின் மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வதேசக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் கண் டறியப்பட்டு, போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. அதன் பிறகாவது இலங்கை அரசு தனது மனசாட்சியின்படி நடந்து கொண்டதா? இலங்கை அரசே, கற்ற பாடங்கள் மற்றும் சமாதான நடவடிக்கைகள் குழு ஒன்றை அமைத்து, அந்தக் குழுவும் பல்வேறு வகை யான பரிந்துரைகளைச் செய்து அறிக்கை அளித்தது. அந்தப் பரிந்துரைகளை ஏற்றுச் செயல்படுத்துவது பற்றி ராஜபக்சே அரசு சிந்தித்துப் பார்த்ததுண்டா? கடந்த செப்டம்பர் மாதம் ஒருவார காலம் இலங் கையிலே சுற்றுப்பயணம் செய்த அய்.நா. மனித உரிமை கள் அமைப்பின் ஆணையாளர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள், சுற்றுப் பயணத்தை முடித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, இலங்கையின் பாதுகாப்புப் படைகளால் மனித உரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளது. இலங்கை சர்வாதிகாரப் பாதையில் செல்வதற்கான அதிகரித்துள்ளன. போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.

தமிழ் ஓவியா said...

காணாமற்போனவர்கள் குறித்த இலங்கை அரசின் விசாரணைக்குழு ஏமாற்றம் தருகிறது என்று சர்வதேச சமூகத்தின் முன் வெளிப்படையாகவே சொன்னதற்குப் பிறகாவது, இலங்கை அரசு தன்னைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்ததா? இலங்கையின் எதிர்க்கட்சியான அய்க்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கே இரண்டு மாதங்களுக்கு முன் பேசும்போது, யாழ்ப்பாணத்தில் எல்லா இடங்களிலும் சிங்கள இராணுவக் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருவதால், இன்னும் அய்ந்து ஆண்டுகளில் யாழ்ப் பாணத்தில் தமிழ் மக்கள் வாழ்வதற்குக்கூட இடம் இல்லாமல் போகலாம் என்று குற்றம் சாற்றியதற்குப் பிறகாவது, இலங்கை அரசு தனது குறைகளைப் போக்கும் நடவடிக்கை எதையும் மேற்கொண்டதா?

பிரிட்டன் பிரதமர் கூறுகிறார்

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், இலங் கையில் உள்நாட்டுப் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும், போர்க்குற்றம், பாலியல் பலாத்காரக் குற்றச் சாட்டுகளின் பேரில் யாரும் கைது செய்யப்பட வில்லை. பத்திரிகையாளர்கள் தொடர்ந்து மிரட்டப் படுகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளதை எண்ணி இலங்கைச் சிங்கள அரசு வெட்கித் தலைகுனிந்திருக்க வேண்டாமா? இலங்கையில் நீதிநெறிமுறைகளுக்கு அப்பால் நடந்துள்ள மனிதப் படுகொலைகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் போன்ற வற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டேன் என்று கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்ததையும்; இலங் கையில் நடைபெற்று வந்த மனிதஉரிமை நிலைமை களை உன்னிப்பாகக் கவனித்து வந்ததாலேயே அவற்றைக் கண்டித்திடும் வகையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என்று மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திரா ராம்கூலம் அறிவித்ததையும் எண்ணி இலங்கைச் சிங்கள அரசு வாட்டமடைந்து வருந்தியிருக்க வேண்டாமா? இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா மற்றும் அனைத்து உறுப்பு நாடுகளும் புறக்கணிக்க வேண்டும். இதன்மூலம் அங்கு சிறுபான்மை இனமாக வாழும் தமிழர்களுக்கும் அவர்கள் மீது நடத்தப்பட்ட மனிதத் தன்மையற்ற செயல்களுக்கும் நீதி கிடைக்கும் என்று தென்னாப் பிரிக்க அமைதிப் பிரச்சாரகரும், நோபல் பரிசு பெற்றவருமான ஆர்ச் பிஷப் டெஸ்மாண்ட் டுட்டு சொல்லியிருப்பதைச் சிங்கள அரசு சிறிதேனும் சிந்தித் துப் பார்த்ததா? உலக நாடுகளும், சர்வதேச சமூகமும், அய்.நா. அவை போன்ற உலக நாடுகளின் அமைப்பு களும் இலங்கைச் சிங்கள அரசின் மனக்கதவைத் திறந்து, நீதியையும் நியாயத்தையும் உணர்ந்து நடந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும். இலங்கையிலே நடைபெற்ற தமிழ் இனப் படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், சர்வதேச சட்டமீறல்கள் ஆகியவை குறித்து சுதந்திரமானதும் நம்பகமானது மான விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக் கப்பட வேண்டும் என்பதும்; ஈழத் தமிழர்கள், அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை அவர்களே தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக, அய்.நா. அவையின் மேற்பார்வையில், ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும்; இவை யே ஈழத் தமிழர்களுக்கு, பன்னெடுங்காலமாக உருவாக் கப்பட்டு வரும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வாக அமைந்திடும் என்பதும்தான்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் - டெசோ அமைப்பின் சார்பிலும் முன்வைக்கப்படும் கோரிக்கை ஆகும்.
டெசோ முடிவெடுக்கும்

எனினும் இப்போதைக்கு, இலங்கை சென்றிருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அவர்கள், அவரே சுட்டிக்காட்டியுள்ளபடி இலங்கை அரசோடு பேச்சுவார்த்தைகள் நடத்தி; தமிழர் பகுதி களிலிருந்து இராணுவத்தை முழுமையாக விலக்கிக் கொள்ளவும்; 13வது திருத்தத்தின்படி அனைத்து உரிமைகளையும் தமிழர்களுக்கு வழங்கிடவும்; வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள புதிய அரசுக்கு நிதி, போலீஸ், நிலம் தொடர்பான அனைத்து அதிகாரங் களும் கிடைத்திடவும்; தமிழக மீனவர்களின் பிரச் சினைகள் ஓய்ந்திடவும்; ஆக்கப்பூர்வமான ஏற்பாடு களைச் செய்வதோடு; சிங்கள அரசின் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், இராணுவத்தினர் நடத்தி யுள்ள பாலியல் கொடுமைகள் குறித்து காமன்வெல்த் மாநாட்டில் குரல் கொடுத்திடவும் முன்வருவாரா? என்பதே தமிழ் மக்களிடையே கேள்விக்குறியாக எழுந்துள்ளது! இந்தப் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து, அடுத்து செய்ய வேண்டியது குறித்து முடி வெடுக்கவே, நாளை (17-11-2013) டெசோ அமைப்பின் கூட்டம்!

இவ்வாறு டெசோ தலைவர் கலைஞர் எழுதியுள்ளார்.

நன்றி:- முரசொலி, 16.11.2013

தமிழ் ஓவியா said...

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் ஒன்றுபட்ட முயற்சியாக திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் அமைய உள்ளது

தஞ்சையில் தமிழர் தலைவர் பேட்டி


தஞ்சாவூர், நவ.16- உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் ஒன்றுபட்ட முயற்சியால் திருச்சி சிறுகனூரில் தந்தை பெரியார் பேருருவச் சிலையுடன் கூடிய பெரியார் உலகம் உருவாக இருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்தார்.
15.11.2013 அன்று தஞ்சையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார். பேட்டியின் விவரம் வருமாறு:-

முள்ளிவாய்க்கால் சுற்றுச்சுவர் இடிப்புப்பற்றி....?

தமிழ் ஓவியா said...

தஞ்சையில் சில நாள்களுக்கு முன் திறக்கப் பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்ற அந்த நினைவு முற்றத்தினுடைய சுற்றுச்சுவர்கள் திடீரென்று தமிழக அரசின் ஆணைக்கேற்ப, உள்ளூர் காவல்துறையினர் இடித்து, ஒரு வேலியை போட்டு, அதனுள் யாரும் செல்ல முடியாத அளவிற்கு செய்திருப்பது என்பது வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாகும்.

உலகத் தமிழர் பேரமைப்பு என்ற பெயரில் அங்கே நிறுவப்பட்டிருக்கின்ற நிலையில், அதனை ஆட்சேபித்த தோழர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 81 பேர்களை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்து வைத்திருப்பது மிகவும் வருத் தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது. அவர்கள் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை.

பொதுவாக, அனுமதியில்லாமல் அந்தப் பகுதி யில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிலம் அரசாங்கத்தினுடைய புறம்போக்கு நிலத்தைச் சார்ந்தது என்பது காவல்துறையினரின் சார்பாக சொல்லப்பட்டிருக்கும் வாதம் என்று சொன் னாலும்கூட, ஈழத் தமிழர்களின் இனப் படுகொலையினைக் கண்டித்து, தமிழக அரசு சட்டப்பேரவையில் இரண்டு தீர்மானங்களை அனைத்துக் கட்சி களின் ஒத்துழைப்போடு முதலமைச்சர்கள் அவர் கள் நிறைவேற்றியிருக்கிறார்கள். அதனை எல் லோரும் வரவேற்றார்கள், பாராட்டினார்கள். அப்படி இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப் பட்ட நாள் 12.11.2013.

நீதிமன்ற ஆணை!

முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவு திறப்பு விழா நிகழ்ச்சிகள் மூன்று நாள்கள் நடைபெற்றன. அனுமதியைப்பற்றி பிரச்சினை தஞ்சாவூரில் வந்தபொழுது, நாங்கள் பத்திரிகைகளின்மூலம் அறிந்த செய்தி என்னவென்றால், அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நீதிமன்றத்திற்குச் சென்று உயர்நீதிமன்றத்தினுடைய ஆணைப்படி, காவல் துறைக்குத் தாக்கீது கொடுத்து, நீங்கள் அவர் களை அணுகுங்கள், அவர்கள் உங்களுக்கு சில நிபந்தனைகளோடு அவர்கள் அனுமதி கொடுப் பார்கள் என்று செய்தியாக பத்திரிகைகளில் வந்தது.

அந்த நிகழ்ச்சிகளுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது பொதுவாக சொல்லப்பட் டிருந்தாலும், நிபந்தனைகளை விதிக்கலாம் என்றும்கூட அச்செய்தியில் இருந்தது.

முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழா ஒரு நாள் முன்னதாகவே திறக்கப்பட்டது. பிறகு, நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. அந்த நிகழ்ச்சியின் பொழுது எந்தப் பிரச்சினையும் இல்லை; எந்த வித சட்ட ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்படவில்லை.

மாறாக, நிபந்தனைகள் என்று சொல்லும் பொழுது, அந்த விழா ஏற்பாட்டாளர்கள் அனு மதியில்லாமல் கட்டப்பட்டிருந்தால், அந்தப் பூங்கா அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருக் கிறது; அதனைத் திறப்பதற்கு அனுமதியில்லை என்று அவர்களுக்குச் சொல்லியிருக்கலாம். ஆனால், அப்படிச் சொல்லப்படவில்லை. அந்தப் பூங்காவிற்கும், திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி கொடுத்துவிட்டு, பிறகு திடீரென்று இடிக்கின்ற இயந்திரங்களைக் கொண்டு இடித்து, வேலியை அமைத்தது என்று சொல்லும் பொழுது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு மட்டு மல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கும்கூட இது ஒரு பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும்.

தமிழ் ஓவியா said...


இடிப்பு-நேர்விரோதமான செயலே!

உலகத் தமிழர்கள், தமிழ்நாட்டு மக்கள் தங் களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்; இனப் படு கொலையை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள்; தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என்று இப்பிரச்சினையில் கட்சிகள் வேறுபாடுகளின்றி அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இருக்கிறார்கள் என்கிற ஒரு நல்ல எண்ணத்தை - அதுவும் இலங் கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசுப் புறக்கணிக்கவேண்டும் என்று இரண்டு தீர்மானங்கள் தமிழக சட்டப்பேரவை யில் நிறைவேற்றிய நிலையில், அதனை மீறி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் செல் கிறார் என்று சொல்கிறபோதுகூட, அதைப் பற்றிய உணர்வுகள் இங்கு கொழுந்துவிட்டு எரியும்பொழுது, இந்த இடிப்பு என்பது அதற்கு முற்றிலும் நேர்விரோதமான ஒரு செய்கையாகத் தான் உலகத் தமிழர்களால் பார்க்கப்படுகிறது.

எனவேதான், அந்த சட்ட விரோதமான செயலை காவல்துறை செய்தது. எப்படியென் றால், என்னதான் ஒருவர் ஆக்கிரமிப்பு செய் திருந்தாலும், அந்த ஆக்கிரமிப்பை அகற்றவேண் டும் என்று சொன்னால், வருவாய்த் துறை முத லாவதாக அவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருக் கிறார்கள் என்று நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும். அப்படி கொடுத்ததாகத் தெரிய வில்லை. அதுதான் சட்ட முறை.

அப்படி நோட்டீசு கொடுத்திருந்தால், அவர் கள் நீதிமன்றத்திற்குச் சென்று தங்களுடைய நிலைப்பாட்டையோ, வாதங்களையோ சொல் வதற்கு வாய்ப்பு ஏற்படும்.
மும்பை தீர்ப்பைப் பார்க்கட்டும்!

உதாரணமாக, மும்பை மாநகரில் ஏழு மாடி களுக்கு அனுமதி வாங்கி, 20 மாடிவரை கட்டி யிருக்கிறார்கள். அதை இடிக்கவேண்டும் என்று உத்தரவு போடப்பட்ட நிலையில், சட்ட விரோத மாகக் கட்டப்பட்டிருக்கிறது என்று தெளிவாக தெரிந்த பிறகு, உயர்நீதிமன்றம் உத்தரவு கொடுத்து, அக்கட்டடங்களை இடிப்பதற்கு மாநகராட்சிப் பணியாளர்கள் செல்கிறார்கள்; அந்த நிகழ்வுகள் ஊடகங்களிலே காண்பிக்கப் பட்டன. அதனை இடிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவைப் போடுகிறது - அடுத்த ஆண்டுவரை இக்கட்டடத்தை இடிக்கக் கூடாது என்று. இடிக்க வந்தவர்கள் திரும்பிச் செல்கிறார்கள். அந்தப் பிரச்சினை தற்காலிகமாக சுமூகமான முடிவுக்கு வந்தது.

இந்தத் தீர்ப்பு என்பது ஒரு வழிகாட்டக்கூடிய தீர்ப்பாகும். எனவேதான், இப்பொழுது அரசு செய்திருப்பது சட்ட விரோதமான நடவடிக்கை யாகும். இப்பொழுது நடந்திருப்பது சட்டப்படி நடந்தி ருப்பது அல்ல; அரசே சட்டத்தை மீறிய செயலாகும்.

இங்கும் முள்வேலியா?

முள்ளிவாய்க்கல் முற்றத்தின் உள்ளே யாரும் போகக்கூடாது என்பதைப்போல, வாசற்படியில் வேலியை அமைத்திருப்பது - மக்கள் மத்தியில் பரவலான பேச்சு என்னவென்றால், இவ்வளவு பெரிய தீர்மானத்தை நிறைவேற்றிய அரசு - இங்கே முள்வேலியை அமைத்திருப்பது - ஈழத்தில்தான் முள்வேலி என்று சொன்னால், இங்கேயும் முள்வேலியா? ஈழத்திலே ஒரு ராஜ பக்சே என்றால், இங்கேயும் இப்படியா? என்று பேசுகிறார்கள். தேவையில்லாமல் தமிழக முதல மைச்சர் பழிக்கு ஆளாகக்கூடிய, கெட்ட பெயர் ஏற்படக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

எனவே, நாங்கள் பொது நிலையில் நின்று தெளிவுபடுத்துகின்றோம். இந்த வழக்குகள் கைவிடப்படவேண்டும். முள்ளிவாய்க்கல் முற்றம் என்பது எந்த வகையிலும், யாருக்கும் நினைவுகள் என்பது எல்லோருடைய நினைவுகளையும் பிரதி பலிப்பதாகும். யார் செய்தார்கள், இதற்கு யார் காரணமானவர்கள் என்பது முக்கியமல்ல. இந்தப் பிரச்சினை என்பது வரலாற்று உண்மையாகும்.

அதுமட்டுமல்ல, மூன்றாண்டுகளாக இந்த நினைவு கட்டடப் பணிகள் நடைபெறும் பொழுது, அரசுக்குத் தெரியாமல் இருக்க முடி யாது. இன்னும்கேட்டால், இந்த முள்ளிவாய்க் கால் முற்றத்தினை, நீங்கள்தான் திறக்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு அழைப்பும் கொடுத்திருக்கிறார்கள் என்று செய்திகள் வந் திருக்கின்றன.
முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள்!

ஆகவே, முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் என்னவென்றால், இந்தப் பிரச்சினையை மேலும் பதற்றத்திற்குரிய பிரச்சினையாக ஆக்காமல், இதனை சுமூகமாக முடிக்கவேண்டும். அந்த அடிப்படையில், தோழர் நெடுமாறன் போன்ற வர்களின்மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும். அவர்களை விடுதலை செய்யவேண்டும். முள்வேலி அகற்றப்படவேண் டும். மக்கள் மனதில் தவறான எண்ணங்கள் ஏற்பட்டால், அதன் விளைவு ஆவேசமான, தேவையற்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இடங் கொடுக்கவேண்டி வரும். ஒரு நல்ல உணர்வை, தீர்மானங்கள்மூலமாக உருவாக்கிய முதலமைச் சர் அவர்கள் இதனை செய்திருக்கவேண்டிய அவ சியம் இல்லை என்கிற கருத்தை, உங்கள்மூலமாக தமிழக அரசுக்குத் தெளிவாகச் சொல்லிக்கொள் கிறோம். அப்படி செய்ததை எந்த வகையிலும் நியாயப்படுத்தக்கூடிய ஒன்றல்ல.

அதேபோல இன்னொன்று,

மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரம் பேர் வாழ்வதாரப் பிரச்சினையாகும். இவர்கள் எல் லோரும் தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்படுவது; மறுபடியும் மற்றொரு ஆட்சி வந்தவுடன் அவர் களை நீக்குவது - அவர்கள் பட்டினிச் சாவு - போராட்டம் - பிச்சை எடுக்கும் போராட் டங்கள்வரை நடத்திவிட்டனர். அவர்களுக்கு ஒன்றும் சம்பளம் பல்லாயிரக்கணக்கில் அல்ல; அவர்களுக்குக் கொடுக்கின்ற ஒட்டுமொத்த சம்பளம் என்னவென்றால், அது அரசாங்கம் செலவழிக்கின்ற பல்வேறு செலவினங்களில் சொற்பத் தொகையாகும். அதன்மூலம் ஆயிரக் கணக்கான குடும்பங்களை வாழ வைக்கக்கூடிய ஒரு சூழல் ஏற்படும். எனவே, இது மனிதாபி மானப் பிரச்சினையாகும் என்பதை முதலமைச் சருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...

உச்சநீதிமன்றம் ஏற்கெனவே கொடுத்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு தவறானது என்று கொடுத்து விட்டு, நீங்கள் மறுபடியும் விசாரணை செய்து நியாயம் வழங்குங்கள் என்று சொல்லியிருக்கிறது. அதுவரை காத்திருக்கவேண்டிய அவசியமின்றி, முதலமைச்சர் அவர்கள் மக்கள் நலப் பணியாளர் களுக்கு மீண்டும் பணி வழங்கினால், உங்களை அவர்கள் வாழ்த்துவார்கள். ஆகவே, இச்செய்தி யினையும் உங்கள்மூலமாக முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோளாக வைக்கின்றோம்.

திருச்சி - சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் சிலைபற்றி....

முள்ளிவாய்க்கால் பிரச்சினையில் பெரியார் படம் இல்லை, காமராசர் படம் இல்லை என்று சொல்கிறார்கள். நாங்கள் அதைப் பொருட் படுத்தவில்லை. பெரியாருடைய தொண்டு இருக் கிறதே, அது உலகளாவிய தொண்டாகும். இந்து பத்திரிகையில் சில நாள்களுக்கு முன்பு, தஞ்சை செய்தியாளர் கொடுத்த செய்தியிருக் கிறதே, உலகளாவிய நிலையில் இன்றைக்குப் பரவியிருக்கிறது.

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும் - அவர்தாம் பெரியார்!

தமிழ் ஓவியா said...

உலகளாவிய நிலையில் அந்தக் கொள்கை களை உலகம் தொழும் என்று சொல்லக்கூடிய அளவில், பெரியாருடைய கருத்துகள் உலகளா விய கருத்துகளாக இன்றைக்கு இருக்கின்றன.

அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் பாடங் களாக வைக்கக்கூடிய அளவிற்கு இருக்கிறது. ஆய்விற்குரியதாக ஆக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு வரலாற்றுச் சின்னத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காக, சிறுகனூரில், தந்தை பெரியார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 27 ஏக்கராவில், 95 அடி உயரமுள்ள வெண்கலச் சிலையை உரு வாக்கவேண்டும்; அதற்குப் பீடம் எல்லாவற்றை யும் சேர்த்து 135 அடி உயரத்தில் அமையவிருக் கிறது. பெரியார் உலகம் என்ற பெயரில் அங்கே ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கி அந்த அருங்காட்சியகத்தில், பெரியாரைப்பற்றிய பல்வேறு செய்திகள், பெரியாரைப்பற்றி ஒலி - ஒலிக் காட்சிகள்; பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றுக் கட்டங்கள்; பெரியாருக்கு முன் சமூகம் எப்படி இருந்தது; பெரியாருக்குப் பின் சமுதாய மாற்றங்கள் எப்படி உருவாயின என்பது போன்ற செய்திகள்; இன்னும் ஆழமான பெரி யார் சிந்தனைக்கான நூலகங்கள்; பெரியாரைப் பற்றிய குழந்தைகள் தெரிந்துகொள்ளக்கூடிய பல்வேறு செய்திகள் இவைகள் எல்லாம் உள்ள டக்கிய, பல்வேறு நிகழ்வுகளை - அது ஒரு சுற் றுலாத்தலம்போல் அல்லாமல், அறிவியல் மனப் பான்மையை வளர்க்கக்கூடிய அளவிற்கு - பெரியாருடைய சிந்தனை அறியவிலைப் படிப்ப தோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்; அறிவியலை வாழ்வியலாக ஆக்குங்கள் என்பது மிக முக்கியம் என்ற அந்தக் கருத்தோட்டத்தை மய்யமாக வைத்து, பல குழுக்களை நாங்கள் உருவாக்கியிருக் கிறோம். அந்தப் பணிகளை முடிப்பதற்கு மூன்றாண்டுகளுக்கு மேலாகும்.

முறைப்படி அரசினுடைய அனுமதி; சுற்றுச் சூழல் அனுமதி என்று பல்வேறு பணிகள் நடை பெற்று வருகின்றன. அதற்கு முதற்கட்டமாக பெரியார் பற்றாளர்கள், எங்களுடைய பணியாக தஞ்சையில் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதியன்று தோழர்கள் 1000 பவுனை அளிப்பதற்குத் தயா ராக இருக்கிறார்கள். ஒரு பவுனுக்கு 25 ஆயிரம் என்று கணக்குப் போட்டு, முதற்கட்டமாக இரண்டரை கோடி ரூபாயைத் திரட்டவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். இத்திட்டத்திற்கான மொத்த செலவு எவ்வளவு ஆகும்?

இத்திட்டத்திற்கான மொத்த செலவு என்று பார்த்தால், முப்பது கோடி ரூபாய். இது ஒவ்வொரு கட்டமாக நிறைவேற்றப்படும். தந்தை பெரியாரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்த ஆண்டு. மூன்று மூன்று ஆண்டுகள் என்று பிரிக்கப்பட்டு, தந்தை பெரியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாளில் அனைத்துப் பணிகளும் முடிவடையும்.

தமிழ் ஓவியா said...


உலகளாவிய நிலையில், பல்வேறு நாட்டின ரும் இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள்; அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். ஆகவே, இது உலகளாவிய உலக முயற்சியாக, பெரியார் பன்னாட்டமைப்பு இன்னும் பல்வேறு அமைப் புகள், பெரியார் பற்றாளர்கள் என்றால், கட்சி, அரசியல் எதுவும் கிடையாது; இதனை செய்வது கூட பெரியார் அறக்கட்டளைதான் செய்கிறது. ஒரு கட்சியோ, இயக்கமோ இதனை செய்ய வில்லை. பெரியார் பற்றாளர்கள் எல்லா இயக் கங்களிலும் இருக்கிறார்கள்; எல்லா கட்சி களிலும் இருக்கிறார்கள். அவர்களுடைய பங் களிப்பு இதில் கண்டிப்பாக இருக்கும். அந்தத் தொகையினை வழங்கக்கூடிய பணி டிசம்பர் 2 ஆம் தேதி தஞ்சையில் நடைபெறுகிறது.

பெரியார் உலகத்தை நிறுவுவதற்கு சிறுகனூ ரைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் என்ன?

நாங்கள் ஒரு சர்வே எடுத்தோம்; ஏறத்தாழ 24 மணிநேரத்தில், ஒரு லட்சத்து 500 வாகனங் களுக்கு மேலாக அந்த நெடுஞ்சாலை வழியாக செல்லுகின்றன. வாகனங்கள் மட்டுமே ஒரு லட் சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் அந்த வழியாகப் பயணம் செல்கின்றன. அதில் பயணம் செய்பவர் கள் ஒரு வாகனத்தில் 35 பேர் சென்றாலும் சரி; இரண்டு பேர் சென்றாலும் சரி; ஒரு நாளைக்கு அந்தப் பகுதியில் மிகப்பெரிய அளவிற்கு 20 லட்சம் பேராவது அந்தப் பகுதியைத் தாண்டிப் போகிறார்கள். அவ்வளவுப் பேரும் அங்கே அமைக்கப்படவுள்ள தந்தை பெரியாரின் சிலை யைப் பார்த்துச் செல்லவேண்டும். உள்ளே போக வில்லையானாலும், சாலையில் செல்லும் பொழுதே பார்த்துக்கொண்டுதான் செல்லவேண்டும்.

தமிழ் ஓவியா said...

அங்கே வருபவர்களுக்கு அந்த இடம் ஒரு சுற்றுலா போல் மட்டுமல்லாமல், பெரியாரைப் பற்றி முழு விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

இது இப்பொழுது விவாத அளவில்தான் இருந்துகொண்டிருக்கிறது. முடிவிற்கு இன்னும் வரவில்லை. பல்வேறு துறைகளிலுள்ள அறிஞர் களை அழைத்து குழுக்கள் அமைத்திருக்கின் றோம். அவர்களுடைய ஆலோசனையைப் பெற்று இந்தப் பணிகள் நடைபெறும்.

இந்தத் திட்டத்திற்காக அந்த இடத்தைத் தேர்ந் தெடுத்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று, அங்கே அறக்கட்டளைக்குச் சொந்த மான இடம் இருக்கிறது; இத்திட்டத்திற்காக நிலம் வாங்கவேண்டுமானால், பெரும் செல வாகும். அந்தச் செலவு எங்களுக்கு மிச்சம்தான்.

இதையெல்லாவற்றையும்விட முக்கியமானது, பொதுமக்கள் சுலபமாக வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அந்த இடத்திலிருந்து விமான நிலை யத்திற்குச் செல்லவேண்டுமானால், அரை மணி நேரத்தில் சென்று விடலாம். வெளிநாட்டுக்காரர் கள் வருவதற்கு மிகவும் வாய்ப்பாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல், பெரியார் அவர்கள் திருச்சியைத்தான் தலைநகரமாக்கவேண்டும் என்று சொன்னார்கள்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தந்தை பெரியார் படத்தை வைக்காததற்கும், பா.ஜ.க. விற்கும் தொடர்பிருக்கிறது என்று சொல் கிறார்களே, அதுபற்றி...?

கடந்த 9 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற திராவிடர் எழுச்சி மாநாட்டில் ஜாதி வாதத் திற்கோ, மதவாதத்திற்கோ இடமே கிடையாது. யார், ஜாதிவாதத்தோடு, மதவாதத்தோடு எந்த அரசியல் அமைப்புகள் சமரசம் செய்து கொண்டோ, சமரசம் செய்துகொள்ளாமலோ, கூட்டணி என்று போனால், நிச்சயமாக நாங்கள் ஆதரிக்காதது மட்டுமல்ல, தமிழக மக்களும் ஆதரிக்கக்கூடாது; தமிழ்நாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரு டைய கருத்துகளுக்கு நேர் விரோதமானது என்பதும், ஏற்கெனவே மீண்டும் ஒருமுறை இந்த வரலாற்றை காவி மயமாக்குவதற்கோ அல்லது தலைகீழாகப் புரட்டிப் போடுவதற்கோ வாய்ப்புகள் வரக்கூடாது என்பதை பல்லாயிரக் கணக்கான அளவிலே, மோடி எந்த இடத்திலே கூட்டம் போட்டாரோ, அந்த இடத்தைவிட, அகலமானது, நீளமானது, அதைவிட கூட்டம் அதிகம். உங்களைப் போன்ற பத்திரிகையாளர் கள் எங்களுக்கு போதுமான விளம்பரங்களைத் தரவில்லை என்பதைவிட, வேறு முக்கியமான செய்தி கிடையாது. ஆகவே, நாங்கள் தெளிவாக இருக்கிறோம். மற்றவர்களையும் தெளிவாக வைத்திருக்கிறோம்.

திராவிடர் கழகம் முன்னின்று ஒரு மதச்சார் பற்ற அமைப்பை உருவாக்குவதற்கு முன்வர வேண்டும் என்று அந்த மாநாட்டில் கலந்து கொண்ட பல்துறை அறிஞர்கள் எங்களிடம் கோரிக்கை வைத்தார்கள். காரணம், மற்றவர்கள் எல்லாம் அரசியல் கட்சிகள், நீங்கள் அரசியலில் நிற்காதவர்கள்; உங்களுடைய பார்வை என்பது வெறும் அரசியல் பார்வை அல்ல; சமுதாயப் பார்வை; ஆகவே அந்த வகையில் நீங்கள் இதனை உருவாக்கலாம் என்று சொன்னார்கள். அதற்கும் வாய்ப்புண்டு. போகப் போக உங்களுடைய கேள்விக்குத் தெளிவான விடை கிடைக்கும்.

நீங்கள் மதச்சார்பற்ற அணியை அமைப்பீர்களா?

அணி கிடையாது; அமைப்பு. அணி என்பது திடீரென்று வரும். அரசியல் கட்சிகள் ஒன்றைச் சொல்லி தப்பித்துக் கொள்வார்கள், அது என்ன வென்றால், எங்களுக்கு நிரந்தரமான பகைவர் களும் கிடையாது; நிரந்தரமான நண்பர்களும் கிடையாது என்பதுதான் அது. அரசியல் கட்சிகள் அவர்களுக்கு வசதியாக வைத்துக் கொண்டிருக்கின்ற வாக்கியம் அது.

ஆனால், எங்களைப் பொறுத்தவரையில், எங்களுக்கு நிரந்தரமான கொள்கை எதிரிகள் உண்டு; நிரந்தரமான கொள்கை நண்பர்கள் உண்டு. யார் யார் பெரியாரின் கொள்கைகளுக்கு பாதகமாக இருக்கிறார்களோ, அவர்கள் நிரந்தர எதிரிகள். யார் யார் பெரியாரின் கொள்கை களுக்கு சாதகமாக இருக்கிறார்களோ, அவர்கள் எங்களுக்கு நிரந்தர நண்பர்கள். இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்; எங்களுக்குக் குழப்பம் ஒன்றும் கிடையாது. அதனால், நாங்களும் குழம்பாமல், மற்றவர்களையும் குழப்பாமல் நாட்டைப் பாதுகாப்போம்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் செய்தியாளர்களிடையே கூறினார்.

தமிழ் ஓவியா said...


தேசூர் உபாத்திமைச் சங்கத்தில் பார்ப்பனக் குறும்பு


கும்பகோணத்தில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்க 11ஆவது மகாநாட்டில் சொற்பொழிவு

இம்மாதிரியான வகுப்பு மகாநாடுகள் நமது நாட்டில் நடந்து வருவது நாட்டின் முற்போக்குக்கு ஏற்றதா இல்லையா என்பது கேள்வி. பலர் இது கெடுதல் எனச் சொல்லுகிறார்கள் எனினும் வகுப்பு மகாநாடு அல்லாத (வகுப்புவாதமல்லாத) மகாநாடுகளே இந்நாட்டில் இல்லை என்பதே எனது அபிப்பிராயம்.

ஒவ்வொரு வகுப்பாரும் தங்களுடைய உரிமைகளைக் கேட்கவே மகாநாடுகள் நடத்துகிறார்கள். மற்றொரு வகுப்பார் தலையெடுக்காமல் அடிக்கவும், மற்ற வகுப்பார் உரிமைகள் பெறாமலிருக்கவுமே பலர் பல மகாநாடுகளை நடத்துகிறார்கள். ஆனால் நமது நாடார் மகாநாடோ அப்படியில்லை. பிறருக்குக் கெடுதல் செய்யாமல் நாடார் மகாஜனங்களின் நன்மையை நாடியும், உரிமைகளைப் பெறவுமே இம் மகாநாடு நடைபெறு கின்றது. வகுப்பு மகாநாடுகளும், வகுப்பு வாதங்களும் மேல் ஜாதியாராலும் அவர்களுடைய கொடுமைகளாலும் தான் ஏற்பட்டவை. துவேஷத்தை உண்டாக்க நாம் மகாநாடுகள் கூட்டுவதில்லை துவேஷம் வேண்டாம், எல்லோரும் சமம் என்று சொல்லுங்கள்; சொல்லவே நாம் இம்மகாநாடு கூட்டியிருக் கிறோம்.

நம் நாட்டில் அடிக்கடி சொல்லப்பட்டுவரும் ஒற்றுமை என்ற வார்த்தைகளும், பிரச்சினைகளும் வெளிவேஷமே. தங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய நிலைமை ஒவ்வொரு வருக்கும் ஏற்பட்ட பின்னரே உண்மை ஒற்றுமை ஏற்படும். ஒருவருக்கொருவர் ஒற்றுமையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டியது அவசியம். அதற்கான வேலைகளைச் செய்யச் சுதந்திரம் ஒவ்வொரு சமூகத்துக்கும் இருக்கவேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் சுயமரியாதை, சமத்துவம், சுயமதிப்பு ஏற்பட வேண்டும். அதன் மூலந்தான் தேச முன்னேற்றமடையும். உண்மையான தேசியம் என்பது சுயமரியாதை ஒன்றே சுயமரியாதையைப் பொறுத்தேதான் சுயராஜ்ஜியமிருக்கிறது. சகலரும் ஒன்று. மேலோர், கீழோர் என்று உணர்ச்சி இருக்கவே கூடாது.
- குடிஅரசு - சொற்பொழிவு - 09.10.1927

தமிழ் ஓவியா said...


தேசூர் உபாத்திமைச் சங்கத்தில் பார்ப்பனக் குறும்பு

தேசூர், போர்டு எலிமென்டரி ஆண்கள் பாட சாலையில் 10-09-1927இல் உபாத்திமைச் சங்கம் கூடிற்று. அதில் அக்கிராசனம் வகித்தவர் ஒரு பார்ப் பனர், காரியதரிசியும் ஒரு பார்ப்பனர். மேற்படி தேதியில் ஒற்றுமை என்கிற விஷயத்தைப் பற்றிப் பேசினவரும் ஒரு பார்ப்பனர். இவர் இவ்விஷயத் தைப்பற்றிக் கூறிக்கொண்டு வரும்போது சில மேற்கோள்களை எடுத்துக்காட்டினார். அதில், தற்காலந்தான் ஒற்றுமையைப்பற்றி ஒவ்வொரு சங்கத்திலும் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன் பேசப்பட்டதே கிடையாது. மேன்மை தங்கிய விக்டோரியா மகாராணி காலத்திலும், எட்வர்ட் அரசர் முற்பாதி அரசாட்சி யிலும் ஒற்றுமையைப் பற்றி கூறினதே கிடையாது. காங்கிரஸ் கட்சியும், ஜஸ்டிஸ் கட்சியும் தோன்றி, ஜஸ்டிஸ் கட்சியார் ஒரு பூடக மாகயிருந்த இந்து மத விஷயங்களை வெளிப் படுத்தியதால் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஒற்றுமை சீர் குலைந்தது என்று கூறினார். பாவம் இப்பார்ப்பனர், பார்ப்பனரல்லாதாருக்கு இழைத்து வரும், வருகின்ற தீங்குகளை, அப்படியே காக்கக் கடவுள் கருணைகூர்ந்தார் போலும்.

மேலும் கவர்ன்மெண்ட் உத்தியோகங்களில் உள்ள பார்ப்பன உத்தியோகஸ்தர்களுக்கு அதிகக் கடினமான விஷயங்களையும், பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர்களுக்கு இலேசான விஷயங் களையும் கொடுத்து விவகாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றார். பார்ப்பனர்களுக்குத்தான் அதிகப் புத்திக் கூர்மை, அதனால் பார்ப்பனர்களைக் கொண்டு மிகக் கடின விஷயங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பதை இப்பார்ப்பனர் தம் உள்ளக் கிடக்கையாய்க் கொண்டு பார்ப்பனரல்லாதாரை இழித்துக் கூறினார். என்னே! இப்பார்ப்பனரின் ஒற்றுமைக் கூற்று. மேலும் இவர் கைவிரல்களில் ஏற்றத்தாழ்வு இருப்பதுபோல், மானிட வர்க்கத்திலும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் உண்டு என்று ஓர் ஆதி திராவிட உபாத்தியாயரைப் பார்த்து பஞ்சமன்-பஞ்சமன் என்று பல தடவைகளில் மிகத் தாழ்வு படுத்திக்கூறி அமர்ந்தார். பிறகு ஓர் ஆதி திராவிட உபாத்தியாயர் எங்களை பஞ்சமன் என்று சொல் லுவது கிடையாது. ஆதிதிராவிடர் என்று கூறப்படு கிறது, கவர்ன்மெண்டாராலும் அங்கீகரிக்கப் பட்டிருக் கிறது. ஆகையால் எங்களை இவ்விதத் தாழ்வுபடுத் திக் கூறினது இச்சங்கத்திற்கழகல்ல எனக்கூறி அமர்ந்தார். பிறகு ஓர் உபாத்தியாயர் வருணாசிரமம் பிரித்தவர்கள் நான்கு வருணங்களைத்தான் பிரித்திருப்பதாகத் தெரிகிறது. பஞ்சமன் என்ற ஒரு வருணத்தை உண்டாக்கினதாகத் தெரியவில்லை. ஆகையால் முதலில் பேசிய அங்கத்தவர் அவ்வார்த் தையை வாபஸ் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். உடனே அப்பார்ப்பன ஆசிரியர் வாபஸ் வாங்கிக் கொள்ளமாட்டேன். தொன்று தொட்டு வந்த வார்த்தையை நாம் ஏன் தள்ளவேண்டும்? அப்படித் தள்ளுவது கூடாது என்று கூறினார். என்னே இப்பார்ப்பனரின் தைரியம். பிராமணத் தன்மையினின்றும் நீங்கியவர்கள் சண்டாளன் என்று இவர்கள் வேதமே கூறுகின்றன. ஆகையால் இதற்கு இப்பார்ப்பனர் என்ன சமாதானம் கூறப் போகிறார்?

பிறகு அக்கிராசனாதிபதி மத விஷயங்களை இங்கு புகுத்தக்கூடாது என்று கூறினாரேயொழிய, தாழ்வான வார்த்தைகளை உபயோகித்தது தவறு என்று கூறினாரில்லை. என்னே! இப்பார்ப்பனர்களின் ஒற்றுமை. பிறகு ஓர் அங்கத்தினர், முதலிலேயே தடுத்திருந்தால் மிகவும் நல்லது. இப்பொழுது தடுப்பது அவ்வளவு உசிதமல்ல எனக்கூறினார். முதலில் பேசிய இப்பார்ப்பன ஆசிரியர், தன்னிடத் தில் இவ்வளவு வகுப்புப் பிரிவினைகளை வைத்துக் கொண்டு ஒற்றுமையைப் பற்றிப் பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறதென்று நாம் கடாவுவதற்கு என்ன சமாதானம் கூறப் போகிறார். இப்பார்ப்பனரின் ஒற்றுமையே ஒற்றுமை. பளா! பளா!!
- குடிஅரசு - கட்டுரை - 18.09.1927

தமிழ் ஓவியா said...

டில்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டுக் கிருஷ்ணனும்: சித்திரபுத்திரன்

டில்லியில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி என்கிற பண்டிகையின்போது தீண்டாதவர்கள் என்கிறவர்களை எல்லாம் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பத்திரிகையில் காணப்படுகிறது. புராணங்களின்படி கிருஷ்ணன் என்பதாக ஒரு சுவாமியோ, ஆசாமியோ இருந்ததாக நாம் ஒப்புக்கொள்வதானால் அது ஒரே சாமியாகத்தான் இருந் திருக்கலாமே தவிர, டில்லிக்கு ஒரு கிருஷ்ணனும், தமிழ்நாட்டுக்கு ஒரு கிருஷ்ணனும் இருந்திருக்க முடியாது. அப்படியிருக்க டில்லி கிருஷ்ணன் தீண்டாதவர்கள் கோவிலுக்குள் போனால் ஓடிப்போகாமல் கோவில்களுக் குள்ளாகவே தைரியமாய் உயிருடன் இருக்கும்போது, நமது தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள கிருஷ்ணன் மாத்திரம் தீண்டாதவர்கள் உள்ளே போனால் கோவிலைவிட்டு ஓடிப்போவதோ அல்லது ஒரே அடியாய் செத்துப்போவதோ ஆனால் இந்தமாதிரி கிருஷ்ணனை வைத்து பூஜை செய்வதால் நமக்கு என்ன பலன் அவரால் உண்டாகக்கூடும்? ஒரு மனிதன் உள்ளே வந்தால் தாக்குப்பிடிக்காத கிருஷ்ணன யாருக்கு என்ன செய்ய முடியும்? ஆதலால் தமிழ் நாட்டு கிருஷ்ணனை துரத்திவிட்டு டெல்லி கிருஷ்ணனைத்தான் தருவித்துக் கொள்ளவேண்டுமேயல்லாமல் இந்த மாதிரி சக்தியில்லாத, கிட்டப்போனால் ஓடிப்போகிற கிருஷ்ணன் நமக்கு அரை நிமிஷங்கூட கண்டிப்பாய் உதவவே உதவாது.
- குடிஅரசு - கட்டுரை - 28.8.1927

தமிழ் ஓவியா said...

விருத்தாசலம் : இனிக்கும் இருபது ஆண்டு நினைவலைகள்...

- பொன்னியின் செல்வன்

28.9.2013 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாணவர் அணி மண்டல மாநாட்டின் சிறப் புக்களோடு இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவைகளை நினைவு கூர்ந்து, 8.10.2013 அன்று விடுதலையில் விருத்தாசலம் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் சிவ.பாலசுப்ர மணியன் அவர்கள் எழுதியுள்ள அரிய கட்டுரை நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு நம்மோடு தொண்டாற்றிய இலட்சிய வீரர்கள், பெரியாரியலை வென்றெடுக்க நாம் நிகழ்த்திய அரும்பெரும் செயல்கள் முதலான வசந்தகால நினைவலைகள் நம் நெஞ்சக் கடலில் அலை அலையாய் மோதிய வண்ணம் இருப்பதை நாம் உணர்கிறோம்!

மயிலாடுதுறையில் இருந்து திரு முதுகுன்றம் என்ற விருத்தாசலத்தில் குடிபுகுந்து திருமண வாழ்க்கையைக் கூட துறந்து, பெரியார் பாசறையான திராவிடர் கழகத்தை வேரூன்றச் செய்வதில் முனைந்து செயல்பட்ட, அரசியல் சட்ட எரிப்பு போராட்ட மாவீரர் ஆர்.சபாபதி, பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்த நன்றி உணர்வை எந்நாளும் மறவாமல் கழகப்பணியில் முத்திரை பதித்துக் காட்டிய கச்சிராய நத்தம் தர்மலிங்கம், தொடர் வண்டித்துறையில் நிலைய அலுவலராக பணியாற்றி, பகுத்தறி வாளர் கழகத்தை வேரூன்றச் செய்த, கட்டுரையாளர் கண்ணந்தங்குடி மேலையூர் சிவ.பாலசுப்ரமணியன், போக்குவரத்துத் துறையில் ஓட்டுந ராகப் பணியாற்றிய எஸ்.எஸ்.பி. மூர்த்தி, காந்தி நகர் விசுவநாதன், விருத் தாசலம் ஒன்றிய கழக அமைப்பாள ராக பணியாற்றிய கென்னடி ஏ.ஆர்.ஆறுமுகம், அவரது சம்பந்தியும் விடுதலை முகவருமான ராஜ மாணிக்கம், விருத்தாசலம் நகர கழக செயலாளராக பணியாற்றி பின்னர் தி.மு.கழகத்தில் இணைந்துவிட்ட கச்சிராய நத்தம் இராமு, தங்கமணி திரை அரங்கு (இன்றைய சபீதா அரங்கம்) அருகில் புரபசர் குமார் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை பலமுறை நடத்திய சித்த மருத்துவர் மணி, ஆர் சபாபதி அவர் களின் மயுரா கபே உணவகத்தில் பணி யாற்றிய (முரசொலி அடியாரின் மைத்துனர்) பொன்னுசாமி, ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் சி.ஜெ. ஜெயமோகன், அரசுக் கல்லூரி மாண வர் விடுதி காப்பாளர் இரா.வெங்க டேசன், மின்வாரியத்தில் பணியாற்றிய நைனார், நில அளவையாளராக பணியாற்றிய இராஜாராமன், வட் டாட்சி அலுவலர்களான அக்னிராஜ், கோவிந்தராசன், மின்வாரியத்தில் பணி யாற்றிய ப.க. செயல்வீரர் (இன்றைய குடந்தை மாவட்ட தி.க.தலைவர்) வை.இளங்கோவன், ரயில்வே தொழி லாளர் தேவதானம், கோ.ஆப்.டெக்ஸ் அலுவலக மேலாளர் தில்லை அம் பலம், முதலான எண்ணற்ற தோழர் களின் பேருழைப்பின் விளைவாக விருத்தாசலம் கழகக் கோட்டையாக கம்பீரத்துடன் எழுந்து நின்றது.

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பிறந்த நாளில் மாலை அணிவிக்க அருகில் உள்ள மங்கலம்பேட்டைக்கு சென்று, பத்தி ரப்பதிவு எழுத்தரான இராமநாதன் முயற்சியால் அமைக்கப்பட்ட பெரி யார் சிலைக்கு மாலை அணிவித்த காலம் ஒன்று இருந்தது! ஆனால் இன்று ரயில் நிலைய சந்திப்பு அருகில், சுயமரியாதை வீரர் மன்னை நாராயண சாமி திறந்துவைத்த (29.10.1982) சிலை, கொளஞ்சியப்பர் அரசுக் கல்லூரியில் மாணவர்கள் அமைத்து டாக்டர் ச.இராமதாசு திறந்து வைத்த சிலை (10.2.1996), சேலம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன் அமைந்துள்ள சிலை (7.11.1991) என நகரில் திரும்புகிற திசையெல்லாம் சிலை வடிவில் நம் அய்யா நிற்கிறார். பாலக்கரை அருகில் உள்ள ரவுண்டானாவில் தந்தை பெரியார் சிலை அமைக்க சபாபதி முறைப்படி முயற்சியில் ஈடுபட்டார். தஞ்சை மாவட்டத்தின் தலைவராக அப்போது இருந்த மன்னார்குடி ஆர்.பி,சாரங்கன் மூலம் சிலைக்குரிய தொகையினையும் அங்கிருந்த சிற்பியிடம் கொடுத்தோம். அரசியல் சதிச் செயலால் நமது எண்ணம் அப்போது முறியடிக்கப் பட்டது. கடவுள் மறுப்பு விளக்கத் துடன் கூடிய அய்யா சிலை எழும் என்ற நம்பிக்கை நம் அனைவர் நெஞ்சிலும் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டு தான் இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

விருத்தாசலத்தில்... கடலூரிலிருந்து வரும் வழியில் நுழைவாயிலில் பெரி யார் நகர் கம்பீரமாய் நம்மை இன்று வரவேற்கிறது. பக்கிரிசாமி நகராகத் தான் முதலில் அங்கு குடியிருப்புகள் முளைத்தன. ராஜாஜி நகராக அதனை மாற்றிட அங்குள்ள பார்ப்பனர்கள் துடியாய்த்துடித்தனர். அந்த பகுதியில் வசித்த திமுக ஒன்றிய செயலாளரும், நமது கழக ஆதரவாளருமான சி.இராசு அவர்களின் முயற்சியால், சார்பதிவாள ராக பணியாற்றிய இரா.செழியன் (இன்றைய மாவட்ட ப.க. செயலாளர்) வட்டாட்சியர்களாக பணியாற்றிய கோவிந்தராஜ், அக்னிராஜ் ஆகி யோரின் அலுவலகம் சார்ந்த சிறப்பான அணுகுமுறைகளால், பெரியார் நூற்றாண்டு காலமாக இருந்த சூழலில் அரசு ஆதரவோடு பெரியார் நகர் அன்று உதயமானது! பெரியார் நகர் விரிவடைந்தபோதும் சூதுமதியினரின் சூழ்ச்சி தொடர்ந்தது. நமது தோழர் களின் ஆரவாரமில்லா செயல்பாடு காரணமாக பெரியார் நகர் வடக்கு, பெரியார் நகர் மேற்கு என்று மீண்டும் நம் இனத்தலைவர் அய்யா பெரியாரின் பெயரே அனைத்து பகுதிகளுக்கும் முகவரியால் நிலைத்து நின்றது! தொடர்கிறது!


அரசினர் கலைக்கல்லூரியாக செயல்பட்டுக் கொண்டிருந்தபோது பேராசிரியர் அ.இராமசாமி (அழகப்பா பல்கலைக்கழக மேநாள் துணை வேந்தர் - திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய தலைவர்) துணைப் பேராசிரியர் முத்துசாமி, விரிவுரையாளர் குறிஞ்சிக் கபிலன் ஆகியோர் சீரிய பகுத்தறி வாளர்களாக திகழ்ந்ததால் முருகன் குடி க.பழனிவேல் மூலம் மாணவர் திராவிடர் கழகத்தை கல்லூரியில் அமைத்தோம். தமிழர் தலைவர் கி.வீரமணி, அமைப்புச் செயலாளராக பணியாற்றிய மறைந்த பொருளாளர் கோ.சாமிதுரை, தத்துவக் கவிஞர் குடியரசு, விடுதலை விரும்பி ஆகிய நம் தலைவர்களின் கொள்கை முழக்கம் கல்லூரியின் வரலாற்றுத் துறையிலும்; தமிழ்த்துறையிலும், வணிகவியல் துறையிலும் தொடர்ந்து ஒலித்திட, நம் மாணவர் அணி முனைந்து செயல் பட்டது.

மண்டல மாணவர் அணி மாநாட் டிற்கு வரும் வழியில், மதவெறிக் கும்பலால் தமிழர் தலைவர் இன்று தாக்கப்பட்டார் என்றால் இன எதிரிகளின் எதிர்ப்பை சந்திப்பது என்பது நமக்குப் புதிதல்ல! மாநாடு நடைபெற்ற இதே (வானொலித் திடலில்) இடத்தில் தந்தை பெரியார் அவர்களை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை அழைத்து கூட்டம் ஏற்பாடு செய்தவர் அன்றைய நகர தி.க தலைவர் ஆர்.சபாபதி! காவல்துறை அன்றைக்கும் அனுமதி மறுத்தது. அரசியல் எதிரிகள் திருப் பணியும் தொடர்ந்தது. கூட்ட அறிவிப்பை விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

இந்த நிலையில் சபாபதி அவர்கள் கழுத்தில் தகர டின் ஒன்றை கட்டிக்கொண்டு அதனைத் தட்டி ஒலி எழுப்பி (ஒலிபெருக் கியின்றி) கூட்ட அறிவிப்பை நகரம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். திட்டமிட்டவாறு மக்கள் திரளில் பொதுக்கூட்டம் தொடங்கியது. இன எதிரிகளும் கூட்டத்தின் இறுதியில் நின்று கொண்டு சதிச்செயலில் ஈடுபட் டார்கள். இதனையும் தெரிந்து கொண்ட சபாபதி, இதனை மாவட்ட தலைவர் கு.கிருட்டிணசாமி அவர் களிடம் முறையிட்டார். தன்னோடு சிதம்பரத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்திருந்த தோழர்களோடு மேடைக்கு அருகில் உள்ள படிக்கட்டு வழியாக அருகிலிருந்த ஆற்றில் இறங்கினார் தலைவர் கு.கிருட்டிண சாமி. சதியாளர்கள் நைசாக பேசி கீழே ஆற்றில் இறக்கி வரவழைக்கப் பட்டார்கள். திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன கயவர்கள் கூட்டம் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்தது. எதுவும் தெரியாமல், மேலே பொதுக்கூட்டம் நடந்து கொண்டி ருந்தது. சாதாரணமாக கு.கிருட்டிண சாமி அவர்கள் மேடைக்கு சென்று அமர்ந்தார். அதுவும் ஒரு காலம்!

விருத்தாசலம் கடைவீதியில் உள்ள ஒரு உணவு விடுதியிலும், பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவு விடுதியிலும் பிராமணாள் என்ற அறிவிப்பு பெரிய அளவில் வைக்கப் பட்டிருந்தது. அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்று உணவக உரிமையாளர்களுக்கும், காவல் துறையினருக்கும் கழகம் சார்பில் முறையிட்டோம்; எவ்வித பலனும் இல்லை. எனவே இதனை கண்டித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவது என முடிவெடுத்தோம். அதற்கும் காவல் துறை அனுமதிக்கவில்லை. அதைப் பற்றி கவலைப்படாமல், உணவு விடுதிக்கு முன்னே நின்று முழக்கமிட் டோம். பக்கத்துக்கடையில் இருந்த ஒரு ஸ்டூலைக் கொண்டு வந்து போட்டு, அதில் நின்று கொண்டு அன்றைய மாவட்டச் செயலாளர் இரா.கனகசபாபதி, மண்டல இளை ஞரணி செயலாளர் துரை.சந்திர சேகரன் ஆகியோரை உரையாற்றச் செய்தோம். ஒலிபெருக்கி இல்லா நிலையிலும் மக்கள் திரண்டு வந்து கேட்டார்கள்; இன உணர்வுடன் ஆதரித்தார்கள். உணவக உரிமை யாளர்கள் இறங்கி வந்து நாங்கள் முதலியார் ஜாதியினர் தான், பிரா மணாள் என்று விளம்பரம் செய்தால் தான் சைவ உணவகம் என்று தெரியும் என்று மழுப்பலாக பேசினார். எங் களது முறையான விளக்கம் காரண மாக, பிராமணாள் பெயர் பின்னர் நீக்கப்பட்டது!.

ஆபாசம், ஒழுக்கக்கேடு ஆகியவை விஞ்சி இருப்பது மகாபாரதத்திலா, கம்பராமாயணத்திலா என்ற பட்டி மன்றங்களை கழகம் நாடு முழுக்க அப்போது நடத்தியது. அதன் தொடர்ச்சியாக விருத்தாசலத்திலும் நடத்த திட்டமிட்டோம். அப்போதும் காவல்துறை அனுமதி மறுத்தது மட்டுமல்ல, பட்டிமன்றம் தொடர் பான விளம்பரப் பலகையையும் ஆர்.எஸ்.எஸ்.தோழர்களின் சலசலப் பைக் காரணம் காட்டி அதனை கழற்றி காவல்நிலையத்திற்கே எடுத்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து நியாயம் கேட்க சென்ற நம்மையும், ஆசிரியர் கே.தர்மலிங்கம், பட்டி சு.செங்குட்டுவன் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்து, கிரிமினல் குற்றவாளிகள் அடைக்கப் பட்டிருந்த காவல்நிலைய லாக் அப்பில் எங்களையும் அடைத்து வைத்தார்கள். இந்த செய்தியினை கேள்விப்பட்ட சி.இராசு அவர்கள், திமுக தோழர்களான து.பன்னீர் செல்வம், ந.வி.முத்து ஆகியோர் மூலம் பெருமளவு தோழர்களை அடுத்த சில மணி நேரத்தில் திரட்டி, பாலக்கரை அருகில் சாலை மறியல் போராட் டத்தை நடத்தினார். அதன் காரண மாக நாங்கள் விடுவிக்கப்பட்டாலும் எங்கள் மீது பொய்வழக்கு போடப் பட்டது. இரண்டு ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில், திமுக வழக்கறிஞர் க.இராமலிங்கம் அவர்கள் கட்டணம் வாங்காமல் வாதாடினார். காவல் துறையினரின் பொய் சாட்சியான பாண்டியன் (திமுக) உண்மையை நீதிமன்றத்தில் சொன்னதால், காவல் துறையின் தவறான போக்கை கண் டித்து, எங்களை விடுதலை செய் வதாக நீதிமன்றம் அறிவித்தது. இதற் கிடையில் பட்டிமன்றம் நடத்தவும் காவல்துறை தடை விதித்தது. நெருக் கடியான நிலையில் ப.க.தோழரும், கோ ஆப்டெக்ஸ் துறையின் மேலாள ருமான கு.தில்லை நாயகம் நமக்கு உதவினார். அவரது வீட்டின் மாடி யில் உள்ள மிகப்பெரிய அரங்கத்தில் பரபரப்பான சூழ்நிலையில் பரபரப் பான பட்டிமன்றத்தை எழுச்சியுடன் நடத்தி வெற்றி பெற்றோம்!

தமிழ் ஓவியா said...


தாலிபற்றி ஒரு தகவல்

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கருத்துகள் பகுத்தறிவு சிந்தனை மக்களை சென்றடைந்துள்ளது என்பதற்கு உதாரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நான் பார்த்ததை விடுதலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

புதுயுகம் என்ற தனியார் தொலைக்காட்சியில் வீடு தாண்டி வருவாயா என்ற நிகழ்ச்சியில் ஒருவர் கூறியது. அவர் சிறு வயதாக இருந்தபொழுது உறவினர் ஒருவர் தன் மனைவி அவர் சொல்வதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும் எனவும் எதிர்த்து கேட்கக் கூடாது; ஏன்னா நான் தாலி கட்டியவன் என அடிக்கடி கூறுவார். ஒரு முறை அவர் மனைவி கோபப்பட்டு தாலியை கழற்றி வீசி விட்டார். குடும்பத்தினர் அனைவரும் அதிர்ந்து விட்டனர்; பின் அனைவரும் மனைவியை சமாதானபடுத்தி தாலி அணிவித்தனர். சில நாட்களில் மீண்டும் அதே போன்று தாலி கட்டினவன் சொன்னா கேட்கனும் என கூறவும், மனைவி கோபத்தில் தாலியை கழற்றி அம்மியில் வைத்து நசுக்கி விட்டார். பின் அனைவரும் சமாதானபடுத்த மீண்டும் அணிந்து கொண்டார் எனவும், தாலி பெண்களை அடிமைபடுத்துகிறது எனவும் கூறினார். தாலிமீது தனக்கு நம்பிக்கையில்லை எனவும் தன் திருமணத்திற்கு பின் மனைவியுடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று வீடு வந்த பொழுது மனைவியின் தாலி எங்கோ தொலைந்து விட்டது. எனவும் மனைவி இதனால் பயந்துவிட்டார். உறவினர்கள் பூசை பரிகாரம் கூறினர். நான் எதுவும் ஆகாது பயப்பட வேண்டாம் என மனைவிக்கு ஆறுதல் கூறினேன். உறவினரின் தாலிபற்றிய கதையைச் சொன்னேன் உறவினரையும் அவருக்குக் காண்பித்து ஆறுதல் கூறினேன் என்று அவர் நிகழ்ச்சியில் தெரிவித்தார். இப்படி அவர் அறிந்தோ அறியாமலோ பெரியார் கொள்கை அவரைச் சென்றடைந்துள்ளது.

தமிழ் ஓவியா said...


எடை மேடை

நிழலற்ற பயணம்

பி.ஆர்.சுபாஸ் சந்திரன் எதையும் கொடுக்காமல் ஒன்றை இலவச மாகக் கொடுக்க முடியாது. இது இயற்கை வகுத்த வழி.உழைப்பின் தரத்தையும் அள வையும் பொறுத்தே ஒருவனுக்குக் கிடைக்கும் புகழ்,பதவி,மரியாதை போன் றவை அமையும் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறார் சுசில் குமார் சிந்தே. தலித்வாடாவிலிருந்து தலைநகர் வரை (தற்போது நடுவண் அரசில் உள்துறை அமைச்சராக இருக்கும்) சிந்தே அவர்களின் பிறப்பு வளர்ப்பு என்பதில் தொடங்கி அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த எத்தனையோ சுவையான நிகழ் வுகள் "நிழலற்ற பயணமாக"(வாழ்க்கை வரலாறாக) தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

ஆங்கிலம்,இந்தி,தெலுங்கு,மராத்தி ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ள இந்நூல்,தமிழுக்குப் புது வரவு.ஆற்றல் மிக்க எழுத்தாளர் பி.ஆர்.சுபாஸ் சந்திரனால் எழுதப்பெற்ற சிறந்த நூல்.நல்ல மொழி நடையோடு வந்துள்ள ஓர் அருமையான தமிழ்ப்படைப்பு.

- மூனாதானா.

நூல் வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.

பக்கங்கள்: 454. விலை:ரூ.300.

தமிழ் ஓவியா said...


மரண சாசனம் எழுதியவர்கள் நாம்!


திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், நத்தக்காடையூர் பெரியார் பெருந்தொண்டர் -புலவர் கு. தெய்வசிகாமணி மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய் அடைப்பு (ஙிக்ஷீணீவீஸீக்ஷீஷீளீமீ) காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சைக்குப்பிறகு வீட்டில் இருந்தபடியே உடற்கூறு பயிற்சிகள் மேற்கொண்டு குணமடைந்து வருகிறார். அவரை காங்கேயம் ஒன்றிய தி.க. தலைவர் மு. திருஞானம், பிரேமா திருஞானம், முத்தூர் கிளைக் கழக தி.க. பொறுப்பாளர் சிதம்பரம், தாராபுரம் கழக மாவட்ட தி.க. இளைஞரணிச் செயலாளர் வெள்ளக்கோவில் ச. மணிகண்டன், புலவர் குழந்தை நற்பணி மன்றத்தைச் சார்ந்த தோழர் அன்பழகன், பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த கே.பி. கிட்டுச்சாமி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் நாம் மரண சாசனம் எழுதிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள். நாம் மரணத்தை வென்றெடுப்பவர்கள், எனவே, விரைவில் நீங்கள் சுகம் பெற்று எழுவீர்கள் என்று ஊக்கம் தந்ததோடில்லாமல் தமிழர் தலைவரின் கருத்தாழம் மிக்க உணர்ச்சிப் பூர்வமான எழுச்சி உரைகளைக் கேட்பதே உங்களுக்கு சிறந்த மருந்து என்று கூறி கழக வெளியீட்டுக் குறுந்தகடுகளையும் தோழர்கள் அளித்தனர். காளியம்மாள் தெய்வசிகாமணி பெரியார் பிஞ்சு இளமதி உடனிருந்தனர்.

- தகவல்: ச. மணிகண்டன், செய்தியாளர், திருப்பூர்

தமிழ் ஓவியா said...


ஏழைகளின் பிரதிநிதிகளாம் இவர்கள்!


ஏழைகளின் பிரதிநிதிகளாம் இவர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது உள்ள 80 (எண்பது) நாடாளுமன்ற உறுப்பினர்களில் 52 பேர் கோடீஸ்வரர்கள்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் சராசரியாக ரூபாய் 4 கோடியே 9 லட்சம் சொத்து உடையவர்கள்.

அதே உத்தரபிரதேசத்தில் சட்டப் பேரவையில் உள்ள 403 சட்டப் பேரவை உறுப்பினர்களில் 271 பேர் கோடீஸ்வரர்கள்.

இந்தியா ஏழை நாடு என யார் சொன்னது?


இதுதான் இந்தியா
தலைமயிர் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கொடுக்கும் தலைமயிர் காணிக்கை மூலம் இந்தஆண்டு வருவாய் 72 கோடி என அறியப்படுகின்றது. திருப்பதி செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் தென்னிந்தியர்கள் எனினும் அதிகம் மயிர்க் காணிக்கை செலுத்துவோர் தமிழ்நாட்டு மக்களே ஆவர். உயிருக்கு இல்லையேனும், மயிருக்காவது மதிப்பு இருப்பதை எண்ணி ஆறுதல் அடையலாம். உலகிலேயே அதிக நீளமான முடி இந்தியப் பெண்களுக்கே உள்ளது என்பது தற்போதைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாசுபாடு பட்டியலில் நமக்கு முதலிடம்

அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அதிக மாசடைந்த நகரங்களின் பட்டியலில், இந்தியாவிலுள்ள லக்னோ நகரம் முதலிடத்தில் உள்ளது. உலகில் அதிக மாசடைந்த 25 நகரங்களில் இந்தியாவில் பெருவாரியாக 4 மாநிலங்கள் முறையே லக்னோ 1ஆவது இடத்திலும், கொல்கத்தா 14ஆவது இடத்திலும், மீரட் 17ஆவது இடத்திலும், மும்பை 21ஆவது இடத்திலும் உள்ளன. இந்நகரங்களில் காற்று மற்றும் நீர் மாசுபாடு அதிகமாகக் காணப்படுவதாக ஆய்வுக் குழுவினரால் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடரும் இடிபாடுகள்

அண்மைக் காலமாக மகாராட் டிரா மாநிலத்தில் அடுக்குமாடிக் கட்டட இடிபாடுகளால் உயிரிழப் போரின் எண்ணிக்கை அதிக ரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக மும்பை, தானே பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் 4 அடுக்குமாடிக் கட்டடங்கள் இடிந்துள்ளன. கட்டட இடிபாடு களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை சற்றொப்ப 168 பேர். இவ்வாறு இடிந்த கட்டடங்கள் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பாகக் கட்டப்பட்டவை. மிக அதிக விலை கொடுத்து நிலங்களை ரியல் எஸ்டேட் மூலம் பெறப்பட்டதே இத்தகைய சட்டவிரோத கட்டடங்கள் உருவானதற்கான மூல காரணங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- தமிழ் இலெமுரியா அக்டோபர் 15 2013

தமிழ் ஓவியா said...


பார்ப்பனச் சேரிசதுர்வேதி மங்கலங்கள்
அக்ரகாரமாய்ச் சுருங்கி
தேய்ந்த கட்டெறும்பாய்
அதுவுமான பார்ப்பனச் சேரிகள்
தம் அடையாளங்கள் தொலைக்க
ஆதலினாலங்கு குடியேறிய
ஒரு சூத்திரன் வீட்டு
பட்டாசாலையில் அமர்ந்து
தங்கள் சரிந்த சரிதம் எண்ணி
தங்களுக்காக தான் அழுவது
புகையினால்தான் எனக்காட்டி
வரிகள் சரியா எனத்தெரியாத
புரியாத மொழியில்
அவசர அவசரமாய்
மந்திரங்களை ஓதும்
அந்த கருப்புப் பார்ப்பன புரோகிதனின்
கவனங்கள் என்னவோ
யாசகப் பையில்தான்.
அக்ரகாரம் = பார்ப்பனச் சேரிகள் (Madras University
1936ல் வெளி யிட்ட Tamil Lexicon

தொகுப்பு: வையாபுரிப் பிள்ளை தலைமை யிலான குழு)

- பரமத்தி வேலூர் செல்மா காமராசன்

தமிழ் ஓவியா said...


சர்க்கரை வியாதி முற்றிலும் குணமாகுமா?


சர்க்கரை வியாதி என்றால் என்ன? இரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் இருந்தால் அது சர்க்கரை வியாதி எனப்படுகிறது. இந்த குளுகோஸை சரியான அளவில் வைத்திருக்கும் வேலையைத் தான் கணையம் செய்கிறது. இன்சுலின் என்ற ஹார்மோனை கணையம் சுரக்கிறது. இந்த இன்சுலின்தான் குளுக் கோஸை சரியான அளவில் இரத்தத்தில் சேர்க்கிறது. மிஞ்சி இருக்கும் குளுகோஸை சேமித்து வைத்து தேவைப்படும் போது வழங்குகிறது.

சர்க்கரை வியாதி ஏன் வருகிறது? கணையம் இன்சுலின் சுரப்பதை நிறுத்திவிட்டால் குளுகோஸை கட்டுப்படுத்தும் நிலை இல்லாமல் ஆகி விடுகிறது. எனவே அளவின்றி குளுகோஸ் இரத்தத்தில் கலக்கிறது. இதனால் சர்க்கரை வியாதி வருகிறது.

இந்த குளுக்கோஸ் எங்கிருந்து வருகிறது? நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் செரிமானமானதும் குளுகோஸாக மாற்றப்படுகிறது. இந்த குளுகோஸ் இரத்தத்தில் சேர்ந்து பயணமாகி செல்களுக்கு வழங்கப்படுகிறது. செல்களில் குளுக்கோஸ் எரிக்கப்பட்டு சக்தி கிடைக்கிறது. குளுக்கோஸ் சக்தியைத் தானே தருகிறது? அதிகம் கலந்தால் ஏன் வியாதியாகிறது? அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே.

தடுக்க என்ன வழி? தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அரைமணி நேரமாவது காலாற நடக்க வேண்டும். பரம்பரையாக வரக்கூடும் என்பதால் முன்னோருக்கு இவ்வியாதி இருந்தால் எச்சரிக்கை மிக அதிகம் தேவை. இரத்த பரிசோதனை மூலம் சர்க்கரை அளவை அறிய வேண்டும். வெறும் வயிற்றில் சர்க்கரை அளவை அறிய வேண்டும் வெறும் வயிற்றில் 100.1நி சாப்பிட்ட பின் 140.1நி இருந்தால் அது சர்க்கரை வியாதியின் தொடக்கம் என அறிதல் வேண் டும். மேலும் செய்ய வேண்டியது என்ன?

உணவுக் கட்டுப்பாடு மிக மிக அவசியம் இரத்தத்துக்கு எவ்வளவு குளுகோஸ் தேவையோ அந்த அளவுக்குத்தான் சாப்பிட வேண்டியதிருக்கும். எனவே வயிறுமுட்ட சாப்பிடக் கூடாது. குளுகோஸ் அதிகமுள்ள கிழங்குகள், பழங்கள் ஆகியன குறைவாக உண்ண வேண்டும். பட்டினியும் இருக்கக் கூடாது. மது, புகை, மாமிச உணவுகள் வேண்டாம். உடல் எடை போடக் கூடாது. தேவையற்ற கவலைகள் தேவையில்லை. மிஞ்சிய சர்க்கரையின்போது இன்சுலினை ஊசி மூலம் செலுத்தி நிவாரணம் பெறலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி வியாதி உள்ளவர்கள் செயல்பட வேண்டும். முற்றிலும் குணமாக்க முடியுமா? அப்படி ஒரு மருந்து இதுவரை இல்லை. எனவேஉணவுக் கட்டுப்பாடு தான்மிகவும் பயனுடையது. சர்க்கரை வியாதியின் பின் விளைவுகள் மோசமானது. இதயம், சிறுநீரகம், கண்பார்வை போன்ற முக்கியப் பகுதிகளைப் பாதிக்கும். எனவே அலட்சியமாக இருக்கக் கூடாது.

- பொதிகை மின்னல், நவம்பர் 2013

தமிழ் ஓவியா said...

காவியை முறியடிக்கும் கருப்பின் எழுச்சி


திருச்சிராப்பள்ளி உழவர் சந்தை மைதானத்தில் எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன என்றாலும் 9.11.2013 அன்று மாலை பல்லாயிரக்கணக்கான மக்களால் திணறியது என்றே சொல்ல வேண்டும். இது குவார்ட்டர் பாட்டிலும், பிரியாணிப் பொட்டலமும் கொடுத்து அழைத்து வரப்பட்ட கும்பல் அல்ல; இலட்சிய வெறியோடு திரண்டு வந்த தியாகத் தமிழர்களின் கூட்டம். திருச்சி நகரெங்கும் கருப்பு சிவப்பு வண்ணத்தில் ஜொலிக்கும் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. பதாகைகளும், வளைவுகளும் மாநாட்டுக்குக் கட்டியம் கூறின.

மதவாத சக்திகள் தலை தூக்கியுள்ள இந்தக் காலகட்டத்தில் இந்து ராஷ்டிரத்தைக் கொண்டு வருவோம் என்று புறப்பட்டுள்ள தருணத்தில் அதற்கான எதிர்ப்பு சக்திகளை, மதச் சார்பின்மையில் நம்பிக்கையுள்ளவர்களை ஓரணியில் திரட்டும் வரலாற்றுக் கடமையை திராவிடர் கழகமும், அதன் தலைவரும் செய்திருந்ததை மனித நேயத்தை வளர்க்க விரும்பும் மக்கள் அனைவரும் பாராட்டினர்.

தந்தை பெரியார் இருந்திருந்தால் எதைச் செய்திருப்பாரோ அந்த வரலாற்றுக் கடமையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்று மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் புகழாரம் சூட்டினார்கள்.

சென்னையிலிருந்து வந்திருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருட் தந்தை ஜெகத்கஸ்பார் அவர்கள், திராவிடர் கழகம் இந்த முயற்சியை எடுத்திருப்பது பொருத்தமானதே என்றார். இந்தியாவில் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம் தந்தை பெரியார்தான். தந்தை பெரியாரின் முதல் புள்ளி, கடவுளிடமிருந்து தோன்றிடவில்லை. மானுட நேயத்தின் புள்ளியிலிருந்து அது தொடங்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக அவர் போரிட்டார் என்றால் அதற்குக் காரணம் அந்த மானுடம்தான். தந்தை பெரியார் இந்த மண்ணுக்குக் கிடைக்கவில்லையென்றால் இந்த ஜெகத்கஸ்பார் படித்திருக்க மாட்டான்; கூலி வேலை செய்து கொண்டுதானிருந்திருப்பான்.

எந்த சக்தி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தலைதூக்கி நின்றதோ அது மீண்டும் தலைதூக்கப் பார்க்கிறது. -அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று எச்சரிப்பதற்குத் தான் பொருத்தமான காலத்தில் இந்த மாநாடு இங்கே!

நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் - மதவாத சக்திகள் தமிழ்த் தேசியத்தில் அடைக்கலம் கொண்டிருக்கின்றன என்று கூறவும் தவறவில்லை ஜெகத்கஸ்பார்.

எதற்காக திராவிடர் எழுச்சி மாநாடு? ஏன் தமிழர் எழுச்சி மாநாடு என்று நடத்தவில்லை? இந்தக் கேள்வியை எழுப்பிய திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், அதற்கு உரிய முறையில் விடையையும் சொன்னார்.

தமிழர் எழுச்சி மாநாடாக இருந்திருந்தால், அதில் பொன். ராதாகிருஷ்ணனும், அர்ஜுன் சம்பத்தும் இடம் பெற்றிருப்பார்களே!

தமிழர் எழுச்சி மாநாடு என்றால் அங்கே ஜெகத்கஸ்பாருக்கும், பேராசிரியர் காதர்மொய்தீன் அவர்களுக்கும் இடம் கிடையாது.

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு குறித்த அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது, வரவேற்கிறோம். அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்காகப் பாடுபட்ட தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளனவே _- அதில் தந்தை பெரியாருக்கு இடம் இல்லாதது - ஏன்? என்ற வினாவை பேராசிரியர் சுப.வீ. அவர்கள் எழுப்பிய போது, அந்தத் தகவல் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆழமான அமைதி ஒன்று ஆழமான சிந்தனையின் கொள்கலனாக இருந்தது. இப்படிக்கூட தமிழ்நாட்டில் நடக்குமா? நடத்துபவர்களும் உண்டா? என்ற வினாக்குறி ஒவ்வொருவர் முகத்திலும் எள்ளும் கொள்ளுமாக வெடித்தது.

தமிழ்த் தேசியம் என்றால் தந்தை பெரியாரை ஏற்க மறுப்பது என்ற பொருளை இப்பொழுது தமிழர்கள் எளிதாகவே புரிந்து கொண்டிருப்பார்கள் அல்லவா?

தமிழ் ஓவியா said...

இதில் ஒரு வெட்கக் கேடு என்ன தெரியுமா? சனாதன வெறியோடு, ஆஷ் துரையைச் சுட்ட வாஞ்சிநாதன் படம்கூட அதில் இடம் பெற்றுள்ளதாம். தமிழ்த் தேசியம் என்றால் பெரியாரை வெறுக்கும்; வாஞ்சிநாதய்யர்களைக் கட்டிப் பிடித்துக் கொள்ளும் என்பதை ஓர் அருங்காட்சியகம் அமைத்துப் பறைசாற்ற வேண்டும் போலும்!

பேராசிரியர் சுப.வீ. நறுக்கத் தெறித்தது போல ஓர் உண்மையைச் சுட்டிக் காட்டினார்.

எந்தத் தொலைக்காட்சி தூய தமிழைத் தூக்கிப் பிடிக்கிறதோ அந்தத் தொலைக்காட்சிதான், தூயதாக ஜாதியையும் தூக்கிப் பிடிக்கிறது என்றாரே பார்க்கலாம் (சபாஷ், மிகவும் சரியான முகத்திரைக் கிழிப்பு!).

கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார்தான் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட எல்லோருக்கும் உரிமை உண்டு என்று போராடினார். தாலி கூடாது என்று சொன்ன பெரியார்தான், தேவதாசிகளுக்குத் தாலி கட்டுவது பற்றி வாதாடினார்.

ஆணாகப் பிறந்த பெரியார், பெண்களுக்காகக் குரல் கொடுத்தார். உயர்ந்த ஜாதியில் பிறந்த அவர், கீழ்ஜாதியென ஒதுக்கப்பட்ட ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடினார். பணக்காரக் குடும்பத்தில் பிறந்த பெரியார் ஏழை -_ எளியவர்களுக்காக உழைத்தார்.

99 சதவீத மக்கள் கடவுள் நம்பிக்கையானவர்கள், அந்த 99 சதவீத மக்களும் கடவுள் இல்லை என்று சொன்ன ஒருவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டது தந்தை பெரியாரைத்தான். அந்தப் புரட்சி இங்குதான் நடந்திருக்கிறது என்று மிக அருமையாக நுண்மையாகப் படம் பிடித்துக் காட்டினார் சுப.வீ.

பெரியார் வரலாற்றை உருவாக்கியவர், அவரை வரலாற்றிலிருந்து எப்படி மறைக்க முடியும் என்ற அழகான வினாவையும் தொடுத்தார். ஜாதி மதவாத எதிர்ப்பைத் தூக்கிப் பிடிக்க கருஞ்சட்டைப் படையைவிட வேறு யாரும் கிடையாது. திராவிடர் கழகம் அனைத்துக் கழகத்துக்கும் தாய்க் கழகம் என்ற கருத்து மணிகளைக் கோர்த்து அழகான ஆரமாகப் பரிணமிக்கச் செய்தார் சுப.வீ.

அடுத்துப் பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர், பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் உரை கண்ணியத்தின் வடிவமாய் மிளிர்ந்தது.

எடுத்த எடுப்பிலேயே நிறைவேற்றிய கடைசித் தீர்மானமான திருச்சிராப்பள்ளியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை வழிமொழிந்த பேராசிரியர், மண்ணில் மட்டுமல்ல; விண்ணிலும் பகுத்தறிவுப் பகலவன் பெயர் ஒலிக்க வேண்டும் என்றார்.

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக்கும், மத எதிர்ப்புக்கும் அடிப்படை மனிதநேயமே! ஒன்றே குலம் என்பது தமிழர் நெறி, யாதும் ஊரே என்பதும் தமிழர் நெறி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதும் தமிழர் நெறி!

இவற்றைத் தமிழன் மறந்த நேரத்தில் தந்தை பெரியார் நினைவூட்டி அதற்குப் பகுத்தறிவு என்று பெயர் சூட்டினார்.

மண்டல் குழு அறிக்கையிலே ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. வட நாட்டிலே ஒரு கிராமத்துக்கு மின் இணைப்புக் கொடுக்கப்பட்டது. அந்தக் கிராம மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். என்ன காரணம் தெரியுமா? அந்த மின்சாரம் அதற்கு முந்தியுள்ள தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் கிராமத்திலிருந்து வருகிறதாம் (மின்சாரத்தில்கூட தீண்டாமையோ!) தீட்டுப்பட்டு விட்டதாம். இதுதான் வடநாட்டின் நிலைமை. தமிழ்நாட்டில் அப்படிக் கூற முடியுமா? காரணம் இது பெரியார் பிறந்த மண். பெரியார் பிறந்த மண்ணிலே மதவாதத்தை விதைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அறிவிப்பதுதான் இந்தத் திராவிடர் எழுச்சி மாநாடு என்று குறிப்பிட்டார் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன்.

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.ஏ.வடிவேலு பேசும் போது, ஒரு பெரிய தீமை நாட்டைச் சூழ்ந்து நிற்கிறது. பி.ஜே.பி. ஆட்சிக்கு வரத் துடிக்கிறது. எங்குப் பார்த்தாலும் மோடியே பிரதமர் ஆகிவிட்டது போல ஒரு பிரச்சாரம்! இந்த நிலையை எதிர்த்து அழிக்க மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று திரட்டப்பட வேண்டும். அதற்காகத்தான் இந்த மாநாடு. அந்த வகையிலும் தீர்மானம் இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.

யார் வரக் கூடாது என்பது மிகவும் முக்கியம், முதலில் மதச்சார்பின்மைச் சக்திகள் தமிழ்நாட்டில் ஒன்று திரட்டப்பட வேண்டும். அதனை வட மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களோடு ஒத்துழைக்கத் தயார் என்று குறிப்பிட்டார்.

தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. பேசும்போது, திராவிடமா? ஆரியமா? இன்னும் தேவையா என்று சிலர் கேட்கின்றனர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது திராவிடம். சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் என்பது ஆரியம். பெண்ணிற் பெருந்தக்கயாவுள என்பது திராவிடம். பெண்கள் பாவ ஜென்மம் என்பது ஆரியம்.

தமிழ் ஓவியா said...


திராவிட இயக்கம் என்பது இழந்ததை யெல்லாம் மீட்க வந்த இயக்கம். எங்கள் கொள்கை மானுடக் கொள்கை. எங்கள் வீட்டில் எல்லா ஜாதியும் உண்டு _ மதங்களும் உண்டு. -இவற்றைக் கடந்துதான் எங்கள் வீட்டில் திருமணங்கள் _- பெரியார் வழி வந்தவர்கள் நாங்கள்.

இப்பொழுது நாட்டை ஆள்வது அரசியல் கட்சிகளல்ல; நீதிமன்றங்கள் ஆளுகின்றன. தொழில் நிறுவன அதிபதிகள் ஆளுகின்றனர். ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவர்கள்தான், இவைதான் ஒருவரை பிரதமராகக் கொண்டு வர முயற்சிக்கின்றன.

காகித ஊடகங்களைவிட மின்னூடகங்கள், தொலைக்காட்சிகள் மக்கள் மூளையை மாற்றி வருகின்றன. மீண்டும் மீண்டும் பெரியாரைப் படியுங்கள். இல்லையேல் மீண்டும் நாம் சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்ற நிலைதான் உருவாகும், எச்சரிக்கை என்று குறிப்பிட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி. எரிமலையாய் கொந்தளித்தார்.

இப்படி ஒரு மாநாட்டைக் கூட்டியதற்காக திராவிடர் கழகத்துக்கு, தமிழர் தலைவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்று எடுத்த எடுப்பிலேயே குறிப்பிட்டார்.

தருமபுரியிலே ஜாதி வெறியர்கள், தாழ்த்தப்பட்டோர் வாழும் கிராமங்களைக் கொளுத்தினார்கள். அந்தக் காலகட்டத்திலேயே அந்தத் தருணத்திலேயே தருமபுரியில் ஜாதி ஒழிப்பு மாநாட்டைக் கூட்டி அதில் திருமாவளவனும் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று ஏற்பாடு செய்தவர் தமிழர் தலைவர். தாழ்த்தப்பட்டவர்களை அழித்து விடலாம் என்று யாரேனும் நினைத்தால் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்று கருஞ்சட்டைப் படை எச்சரிக்கை விடுத்த மாநாடுதான் அந்த ஜாதி ஒழிப்பு மாநாடு.

மோடி அலை என்று ஒன்றைக் கிளப்பி விட்டுள்ளார்களே -இதற்கு முறையான எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டாமா என்று நினைத்த நேரத்திலே இந்த மாநாட்டை நடத்திட தமிழர் தலைவர் முன் வந்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் இருந்திருந்தால் என்ன செய்து இருப்பாரோ அந்தக் கடமையைத்தான் நமது தமிழர் தலைவரும் செய்துள்ளார்.

மாநாட்டோடு இது நின்றுவிடக் கூடாது. மதச்சார்பற்ற தோழமைக் கட்சிகளை ஒன்றிணைத்தாக வேண்டும். இதற்குத் தலைமை தாங்க பொருத்தமானது திராவிடர் கழகம்தான். இதே போல வடநாட்டிலும் இந்துத்துவாவை எதிர்க்கக் கூடியவர்களை ஒன்றிணைக்க வேண்டும். தமிழர் தலைவரே அதற்கும் தலைமை தாங்கி வழிநடத்திட வேண்டும். இந்த மாநாட்டின் மூலம் தமிழர் தலைவர் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு ஓர் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் பி.ஜே.பி.யோடு கூட்டு வைத்துக் கொள்ளக் கூடாது என்று நம்மையெல்லாம் எச்சரிப்பதற்குத்தான் தமிழர் தலைவர் இந்த மாநாட்டைக் கூட்டியுள்ளார். மோடி பிரதமரானால் தாழ்த்தப்பட்டோர் நிலைமை என்ன? சிறுபான்மை மக்களின் நிலை என்ன? இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு விடும்.

இன்றைக்கு மோடியின் பின்பலமாக இருக்கக் கூடியவர்கள் யார்? ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா சக்திகளுக்கு, பன்னாட்டு நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும்தான். தமிழ்நாட்டில் ராஜபக்சேயானாலும், ராமபக்சே ஆனாலும் அவர்களைக் கொள்கை ரீதியாக எதிர்த்துப் போராடக்கூடிய இயக்கம் திராவிடர் கழகம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதற்கு உறுதுணையாக இருக்கும் என்றார். அவருடைய 25 நிமிட உரை அனல் பறப்பதாகவும், தமிழ் மண்ணின் உரிமைக் குரலாகவும் ஒலித்தது என்றால் அது மிகையாகாது.

தமிழ் ஓவியா said...

நிறைவாக முழங்க வந்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி. ``இது கூட்டிவரப்பட்ட கூட்டமல்ல. இலட்சிய தாகத்தோடு திரண்டு வந்த கூட்டம் என்று சொன்னபோது கைத்தட்டல் இடியென ஒலித்தது.

நாங்கள் அரசியல் கட்சியல்ல; எங்கள் சிந்தனைக்குத் தோன்றியதைச் சொல்லக் கூடியவர்கள்.

இப்பொழுது நம்முன் உள்ள பெரிய ஆபத்து -_ ஆபத்து என்பதைக்கூடப் புரிந்து கொள்ள முடியாத _ இயலாத ஆபத்து.

சாக்ரடீசுக்கு அன்று கொடுத்த நஞ்சு, அது என்னவென்று தெரியும். ஆனால் இப்பொழுது கொடுக்கப்படுவதோ ஸ்லோ பாய்சன் முறை! ஒரு கட்டத்துக்குப் பிறகுதான் அதன் ஆபத்து புரியும். இதனைப் புரிந்து கொள்ள ஆய்வுதேவை.

மோடி வந்தால் இப்பொழுதுள்ள சிஸ்டத்தை மாற்றி அமைப்பார் என்கின்றனர். மீண்டும் மனுதர்ம முறைக்கு நாடு மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது. (குஜராத்தில் மனுதர்மம் பாடத்திட்டமாக இடம்பிடித்து விட்டதே) என்று கூறியவர் ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு நிகழ்வை நினைவூட்டினார். குழந்தைத் திருமணத் தடுப்புப் பணியில் ஈடுபட்ட ஒரு பெண்ணை, பார்ப்பனர் ஒருவர் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினார்.

வழக்கின் தீர்ப்பு என்ன தெரியுமா? ஒரு கீழ்ஜாதிப் பெண்ணை உயர்ஜாதி பிராமணர் எப்படிக் கற்பழித்திருக்க முடியும் என்று வழக்கைத் தள்ளுபடி செய்தனரே! அந்த நிலை இங்கு வர வேண்டுமா? என்பதுதான் நமது கேள்வி.

குஜராத் வளர்ச்சி பற்றிச் சொல்கிறார்களே, அதுபற்றி இணையதளத்தில் வெளிவந்த ஒரு தகவல் என்ன தெரியுமா? கடந்த 16 ஆண்டுகளில் குஜராத்தில் 60 ஆயிரம் சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்கிற அந்தத் தகவலை வெளியிட்டார்.

மதவாதத்தைப் போலவே ஜாதீயவாதமும் ஆபத்தான ஒன்று.

தந்தை பெரியார், அன்று ஆதிக்கவாதிகளான பார்ப்பனர்களைத் தனிமைப்படுத்தி, பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தைத் தொடங்கினார்.

இப்பொழுது சிலரோ பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொண்டு ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்த ஜாதிக் கட்சிகளை ஒருங்கிணைத்து அரசியல் கூட்டம் ஒன்றை உருவாக்குகிறார்கள்.

தாழ்த்தப்பட்டோர் வாழும் வீடுகளைக் கொளுத்துகிறார்கள், தருமபுரி மாவட்டத்தில் அதுதானே நடந்தது.

யார் அதிக அளவு ஒடுக்கப்பட்டார்களோ, உரிமைகள் மறுக்கப்பட்டார்களோ, அவர்களைத் தூக்கிவிடுவதுதான் முதல் கடமை.

தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், இரு காரணிகளாக இருந்து ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து உரிமைகளை ஈட்ட வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. அந்தக் கண்ணோட்டத்தில்தான் திராவிடர் கழகம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

அதில், சிறுத்தைகளும் இணைந்து பாடுபடும். சிறுத்தைகளில் கருஞ்சிறுத்தை, வெள்ளைச் சிறுத்தை என்று பாகுபாடு கிடையாது. சிறுத்தை என்றால் சிறுத்தைதான் என்று தமிழர் தலைவர் குறிப்பிட்ட போது, பெரும் ஆரவாரத்துடன் மக்கள் கடலிலிருந்து கையொலி எழுந்தது.

மத உணர்வுகளைவிட மனித நேயமே முக்கியம் என்பதை எடுத்துக் காட்டும் மண்ணாக தமிழகத்தை பெரியார் அவர்கள் பக்குவப்படுத்தி வைத்துள்ளார்கள். அந்த அமைதிப் பூங்காவில் இந்துத்துவ நச்சுக் காற்றைப் பரவவிடும் தீச்செயலை திருச்சியில் மோ(ச)டிப் பேர்வழிகள் செய்துவிட்டுச் சென்றதற்கு தக்க பதிலடியாக திராவிடர் எழுச்சி மாநாடு அமைந்திருந்தது.

அன்று காலை ரோஸ் மஹாலில் தி.க.செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில் நடந்த கருத்தரங்கில் பேராசிரியர் சபாபதி மோகன், முனைவர் துரை.சந்திரசேகரன், பேராசிரியர் அ.மார்க்ஸ், கவிஞர். நந்தலாலா ஆகியோர் கருத்துமழை பொழிந்தனர்.

திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் நினைவு அரங்கு திருச்சி உழவர் சந்தையில் அழகு மலர் குலுங்கினாற் போல அமைக்கப்பட்ட மாநாட்டு மேடையில் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது. கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை அவர்களின் படத்தினை கழகத் தலைவர் திறந்து வைத்தார். திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எம்.சேகர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுகவுரை ஆற்றினார்.

அவர் தமது உரையில், 2003இல் இதே இடத்தில் வி.எச்.பி. மாநாடு நடைபெற்றதையும், அப்பொழுது தங்கத்தினாலான திரிசூலத்தை காஞ்சி சங்கராச்சாரியார், வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால், பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியாவுக்கு வழங்கியதையும் நினைவூட்டி, அப்பொழுதும் உடனடியாக திராவிடர் கழக மாநில மாணவர் மாநாட்டினை, மிகப் பெரிய பேரணியுடன் நடத்திக் காட்டியதையும் நினைவூட்டினார். டாக்டர் அதிரடி அன்பழகன் இணைப்புரையைச் சிறப்பாக வழங்கினார்.

காமன்வெல்த் புறக்கணிப்பு!

பாபர் மசூதி குற்றவாளிகளுக்குத் தண்டனை

தமிழ் ஓவியா said...

மதவாத எதிர்ப்பு அணி

திராவிடர் எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள்:

> மக்களாட்சியான ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் வகையில் நாட்டு மக்கள் மத்தியில் மதவாதத்தையும், ஜாதீயவாதத்தையும் தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயலும் சக்திகளுக்கு இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இலட்சியங்களும், சித்தாந்தங்களும், முற்போக்குச் சிந்தனைகளும் கைவரப் பெறாதவர்கள், வெறும் ஜாதியை முன்னிறுத்தி குறுக்குவழியில் பதவி தேடிட, தேர்தல் ஆதாயம் பெற ஆசைப்படுவது - சமூகப் பொறுப்பற்ற பிற்போக்குத்தனமானது என்பதை இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.

அதுவும் ஆண்டாண்டுக்காலமாக வருணாசிரம தர்மத்தின் நுகத்தடியில் எல்லா வகையிலும் உரிமை மறுக்கப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட, தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்தி, பிறப்பின் அடிப்படையில் உயர்வான தன்மையை வரித்துக்கொண்டு, எல்லா வகையிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய பார்ப்பனர்களையும் உள்ளடக்கி, ஜாதிக் கூட்டணியை உருவாக்குவது -தந்தை பெரியார் கொள்கைக்கும் அவர்தம் உழைப்பால் ஏற்பட்ட விளைவுகளுக்கும், சமூக நீதிக்கும், சமத்துவ நிலைக்கும் முற்போக்குச் சிந்தனைகளுக்கும் எதிரான ஒரு நிலை என்பதை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

ஜாதீய சிந்தனைகள் வளர வளர தமிழன் என்ற இனவுணர்வு குன்றி, அதன் காரணமாக பல இழப்புகளையும் சந்திக்க வேண்டிய ஆபத்தையும் எண்ணி, தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று, ஒரே குரலில் ஜாதீயக் கட்சிகளுக்கும், கூட்டணிக்கும், அத்தகு சிந்தனைக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை - இல்லவே இல்லை என்று சூளுரைத்து நிராகரித்துத் தள்ளுமாறு தமிழ்நாட்டுப் பெருமக்களை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் இந்தத் திராவிடர் எழுச்சி மாநாடு கேட்டுக் கொள்கிறது.

> இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு விரோதமாக, இந்து நேஷனலிஸ்டு என்று தம்மைத் தாமே அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஒருவரை, அடுத்து நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பிரதமருக்கான வேட்பாளர் என்று பி.ஜே.பி. அறிவித்திருப்பது சட்ட ரீதியாக குற்றம் மட்டுமன்றி, இந்தியாவின் எதிர்காலத்தை மத அடிப்படையில் கலவர பூமியாக மாற்றும் அபாயகரமான போக்காகும்.

1992இல் ராம ஜென்ம பூமி என்ற பெயரால் 450 ஆண்டுகால சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை அயோத்தியில் இடித்ததால், நாடு தழுவிய அளவில் கலவரம் நடந்ததை நாட்டு மக்கள் மறந்திருக்கவே முடியாது.

அதனைத் தொடர்ந்து 2002இல் குஜராத்தில் கோத்ரா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விரும்பத்தகாத ஒரு நிலைமையை மய்யப்படுத்தி, அம்மாநில முதல் அமைச்சராக இருந்த நரேந்திர மோடியே முன்னின்று, சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும் அளவில் மதக் கலவரத்தைத் தூண்டி, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டதும், அவர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதும், அதன் காரணமாக உலக நாடுகள் மத்தியில் இந்தியாவைத் தலைகுனியச் செய்த கொடுமையும் சாதாரணமான ஒன்றல்ல.

அதற்குப் பிறகும் நாடு தழுவிய அளவில் ஆங்காங்கே மதக் கலவரங்கள் உருவாக்கும் வேலையைத் திட்டமிட்டுச் செய்து வருவதை இந்தியாவின் உள்துறை அமைச்சர்கள் அதிகாரப்பூர்வமாகவே வெளிப்படுத்திவிட்டனர்.

இந்தியாவின் மதச் சார்பின்மையைக் காவி உடைகளின் காலில் போட்டு மிதிக்கும் அந்த இந்துத்துவா தீய சக்திகள் 2014இல் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவையே மீண்டும் மனுதர்ம ஆட்சியின் கீழ்க் கொண்டுவரத் துடியாய்த் துடித்துக் கொண்டுள்ளன.

தமிழ் ஓவியா said...

மாநிலங்களே இருக்கக் கூடாது என்பதன் மூலம் இனம், மொழி, பண்பாட்டுத் தலங்களை முற்றிலும் அழித்திட எண்ணுவது; ஹிந்து ராஷ்டிரா என்பதன் மூலம் பிறப்பின் அடிப்படையில் ஜாதிக் கட்டமைப்பை நிலைநிறுத்துவது; குலக்கல்வித் திட்டத்தை அரங்கேற்றுவது; பெண்ணடிமைத்தனத்தைப் பாதுகாப்பது; ஒரே மதம் -அது இந்து மதம், ஒரே நாடு - அது பாரதம் (மாநிலங்கள் கிடையாது). ஒரே மொழி -அது சமஸ்கிருதம் என்கிற கோட்பாட்டை சட்ட ரீதியாகச் செயல்படுத்துவது என்கிற ஆபத்துகளை உண்டாக்குவதுதான் பி.ஜே.பி. கூறும் ஹிந்து ராஷ்டிரம்!

மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியிலிருந்தபோது ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டு என்று அறிவித்து கோடிக்கணக்கான ரூபாய்களை அதற்குச் செலவழித்ததையும், வேதகணிதம் என்பதை பல்கலைக்கழகங்களில் திணித்ததையும், சரஸ்வதி வந்தனத்தை அறிமுகப்படுத்தியதையும், பாடத் திட்டங்களில் ஹிந்துத்துவா சிந்தனைகளை விதைத்ததையும், கல்வியாளர்கள் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். நிபுணர் சிட்டியங்லா என்பவரால் தயாரிக்கப்பட்ட கல்வியை -இந்திய மயமாக்குதல், தேசிய மயமாக்குதல், ஆன்மீக மயமாக்குதல் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியதையும் நாடு மறந்துவிட முடியாது.

பெரும்பான்மை கிடைத்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோவிலைக் கட்டுவோம் என்று அமெரிக்காவின் ஸ்டேட்டன் தீவில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநாட்டில் அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி சொன்னதையும், அயோத்தியை அடுத்து காசி, மதுரா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பது குறித்து ஒரு பட்டியல் கைவசம் இருக்கிறது என்று கூறியுள்ளதையும் நினைவு கொண்டால், 2014 மக்களவைத் தேர்தலில் இந்த மதவாத சக்தியை எந்தக் காரணத்தைக் கொண்டும் தலைதூக்க அனுமதிக்கக் கூடாது என்பது எளிதில் விளங்கும்.

மதச்சார்பின்மை காப்பாற்றப்பட, சமூகநீதி உறுதிப்பட, சமத்துவ சமதர்மம் மலர, எல்லா வகையிலும் தத்துவ ரீதியிலும், சிந்தனை ரீதியிலும் எதிராக இருக்கும் பிஜேபியையும், அதற்குத் துணைபோகும் கூட்டணிக் கட்சிகளையும் வரும் மக்களவைத் தேர்தலில் உறுதியாக, ஒருமுகமாக எழுந்து நின்று தோற்கடித்தே தீருவது என்று திராவிடர் எழுச்சி மாநாடு தீர்மானிக்கிறது.

> மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்திலேயே பாபர் மசூதியை நாங்கள்தான் இடித்தோம் -சந்திக்கத் தயார் என்று (8.12.2009) சொன்னார். இதற்குப் பிறகும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இதன் காரணமாக மக்களுக்குச் சட்டத்தின் மீதும், நீதிமன்றங்கள் மீதும் நம்பிக்கை குறைவதோடு, வன்முறைகள் சர்வசாதாரணமாகத் தலைதூக்கவும் தூண்டுகின்றன. பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தர விரைந்து செயல்படுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழ் ஓவியா said...

> நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வராமல் தடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானிப்பதே முக்கியமானதாகும். அந்த வகையில் ஹிந்து ராஷ்டிரத்தை அமைக்கவிருப்பதாகக் கூறும் பி.ஜே.பி. மற்றும் அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளை எதிர்க்கும் வகையில், மதச் சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அமைப்புகளை ஒன்றிணைத்து, மதவாதத்தை வீழ்த்தும் வகையில் காலம் தாழ்த்தாது செய்யப்பட வேண்டிய அந்தக் கடமையைச் செய்வது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. அதற்கான முயற்சியை திராவிடர் கழகம் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

> இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. தீண்டாமை என்பது ஜாதியின் விளைவு என்கிற காரணத்தால் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று இம்மாநாடு, மத்திய அரசை வலியுறுத்துகிறது.

அரசு அலுவலகங்களில் பூஜைகள், நடைபாதைக் கோவில்கள் நீக்கம், ஜாதி மறுப்பு மற்றும் மத மறுப்புத் திருமணங்கள், காதல் திருமணங்களை ஊக்குவித்தல், இந்திய அரசு - இலங்கை காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும், மக்கள் நல ஊழியர்களைப் பணியில் அமர்த்தல், ஆசிரியர் தகுதித் தேர்வில் சமூகநீதிப் பாதிப்பு, திருச்சி - பன்னாட்டு விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயர் சூட்டுதல் -ஆகிய தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

திராவிடர் எழுச்சி மாநாட்டில் மகிழினி மணிமாறனின் புத்தர் கலைக்குழுவினரின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி சிறப்பு அம்சமாக அமைந்திருந்தது. 9.11.2013 சனி அன்று மாலை 5.30 மணியிலிருந்து இரவு 7 மணிவரை தூள் கிளப்பியது.

திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் நவம்பர் 7, 8, 9 ஆகிய மூன்று நாள்களிலும், பறை இசைப் பயிற்சி புத்தர் கலைக் குழுவினரால் பயிற்சி அளிக்கப்பட்டது. கல்வி வளாகப் பிள்ளைகள் 46 பேர் பங்கேற்றனர்.

வெளியூர்களிலிருந்து பயிற்சிக்கு வந்தவர்கள் மூவர். புத்தர் கலைக் குழுவின் சார்பில் பங்கேற்பு 17 பேர். பெண்கள் சமமான எண்ணிக்கையில் இருந்தனர்.

மிகப்பெரிய மேடை முழுவதும் ஆக்கிரமித்து சின்னஞ் சிறுவர்களும் பறையடித்த காட்சி கண்கொள்ளாக் காட்சி!

குழந்தைகள் 7 அடிகளில் பறை இசைத்தனர். கால்கள் மாறி மாறி பத்து விதமான நடனம் ஆடினர்.

பறையடித்தல், ஆடுதல், கருத்துப் பகிர்தல், பாடுதல் என நால்வகை அம்சங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டி பல்லாயிரக்கணக்கான மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் -குன்னூர் லிங்கப்பன் _- மலர்க்கொடி ஆகியோரின் மகன் வெங்கடேஷ் பி.சி.ஏ., சென்னை மண்ணிவாக்கம் இரா. பத்மாசூரன் _ -சிவபாக்கியம் ஆகியோரின் மகள் ப. அருணா எம்.எஸ்சி ஆகியோருக்கு மாநாட்டு மேடையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பலத்த கரவொலிக்கிடையே மணவிழாவினை நடத்தி வைத்தார்.

மணமகன், மணமகள் ஆகியோர் மணமுறிவு பெற்றவர்கள் மட்டுமின்றி மணமகளுக்கு மூன்று வயதில் பெண் குழந்தையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணம், தாலி விலக்கப்பட்ட திருமணம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தத் திருமணத்தில் வழக்கம்போல உறுதிமொழிகளைக் கூறச் செய்த கழகத் தலைவர் அவர்கள், மணமகனுக்குக் கூடுதலான சில உறுதி மொழிச் சொற்களையும் சேர்த்துக் கூறச் செய்தார்.

எந்த நிலையிலும் பழைய வாழ்க்கை நினைவுகளைக் சுட்டிக்காட்டுவதில்லை என்றும்; இந்தக் குழந்தையை, தன் சொந்தக் குழந்தையைப் போலப் பாவிப்பேன் என்றும் கூறச் செய்தார். இத்தகைய உறுதிமொழிகளைக் கூறச் சொன்னபோது வெள்ளம்போல் திரண்டிருந்த மக்கள் திரள் பெருத்த கரஒலி எழுப்பியது.

- நமது சிறப்புச் செய்தியாளர்

தமிழ் ஓவியா said...

தீவுப்பட்டினம் - முரசொலி மாறன்


திராவிட இயக்க எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். முரசொலி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். மூன்றுமுறை நடுவண் அமைச்சராக இருந்து 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். பன்னாட்டு வணிக விலை பேரங்களில் (நிகிஜிஜி) இந்தியாவின் நன்மைக்காகப் போராடி பாராட்டுப் பெற்றவர். பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ள இவர் பல நூல்களையும் படைத்துள்ளார்.

மானாட மயிலாட, மங்கை நீ ஆடக் கண்டிருந்த நான் பேயாடும் இரணகளத்தில் போராடும் நேரம் வந்துவிட்டது. முக்கனியும் முத்தமிழும் சுவைத்து, முக்கலையின் வளர்ச்சிக்கு எத்தனையும் தருவோம் _ என வக்கனை பேசி வாழ்ந்தோமே; அது வாலறுந்த நரிகளாம் தஞ்சைக் காவலன் ரகுநாத நாயக்கனுக்கும், அவன் தளபதியாம் வாள் பிடிக்கத் தெரியாத வீரன் கோவிந்த தீட்சதருக்கும் பிடிக்கவில்லை! போர் தொடுத்திருக்கிறார்கள், புரட்டர்கள்! நான் காமியாம். கண்ட கண்ட பெண்களின் கற்பைக் கொள்ளையடிக்கும் கொடியவனாம்! _ கதைகட்டி விட்டிருக்கிறார் கோவிந்த தீட்சதர்! குன்று போல அன்னம் குவிந்திருக்கிறது என் எதிரில், குலக்கொடி உன் வடிவில்! அதை விட்டு, எறும்பு கொள்ளும் எச்சல் பண்டத்தைப் போல, கொள்ளிடக் கரையில் குளிக்கவரும் கோமள வல்லிகளை மலரணையில் சந்தித்தேனாம்; சம்மதிக்காதவர்களை சித்திரவதையும் செய்கிறேனாம் _ பொய்மையின் எல்லையையே தாண்டி விட்டார்கள்; வாய்மைக்கு வாய்க்கரிசி போட்டு அனுப்பி விட்டார்கள்; வல்லூறு போல நம் பூமியை வளைத்துவிடப் பார்க்கும் வளைந்த செங்கோலினர்! வீரர் குடும்பத்து விளக்குகளே! உங்கள் தினவு கொண்ட தோள்களுக்கு உணவு கிடைத்து விட்டது...

கோவிந்த தீட்சதன் _ கோபுரம் போல் நிமிர்ந்து நிற்கும் தமிழர் குலத்தைக் குட்டிச்சுவராக்கும் கொலைகாரன்; எட்டிக்காய்போல் நினைத்து, அவன் தலையை வெட்டி யெறியாவிட்டால் _ கட்டிக் கரும்பாம் தமிழர் நாகரிகம் பட்ட மரமாகி விடும். சங்கம் வளர்த்த தமிழை சதிகாரன் ஒருவன் சாய்த்துவிட அனுமதிப்பதா? வங்கம், கலிங்கம், கடாரம் வென்றவன் _ ஆடுமாடு மேய்க்க வந்தவனால் பங்கம் பெறுவதா? கூடாது; கூடாது! ஆடாமல் அசையாமல் வாழ்வு தேடும் அந்தணர் கூட்டம். வாடா மலராம் நம் அன்னையின் முடியை அபகரிக்கக் கூடாது. அறவழி நடக்கும் காளைகளே! போர் நாமாகத் தேடிக் கொண்டதல்ல நம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது. தீட்சதரின் ஆதிக்கத்தை எதிர்த்தோமாம்; அதற்காக எதிர்க்கிறார்கள், ஆணவக்காரர்கள்! நம்மைப் படுகளத்திலே சந்திக்கப் போகிறவர் சமானியமானவரல்ல; தஞ்சை பூபதி _ அவர் கையிலே தொகை தொகையாய்ப் பட்டாளம் குவிந்திருக்கிறது. நம் படையோ சாதாரணம். மான வுணர்ச்சியைத் தவிர நம்மிடம் வேறு மூலதனமில்லை. எனவே தற்காப்புக்காகவே போர் செய்யுங்கள்; தருக்கர்களின் தலை தேங்காய்க் குலைகளைப் போல அறுந்து தரையிலே விழும்வரை போர் செய்து கொண்டே இருங்கள்!

சோழகன் என்று பெயர் படைத்த சிங்கம் தன் படை வீரர்கள்பால் இப்படிக் கர்ஜனை புரிந்தான். கால் நுனிபட்டுப் பாய்ந்தோடும் பந்தினைப் போல், சோழகன் பேச்சுக் கேட்டு வீராவேசம் கொண்டு அந்தத் தமிழர் பட்டாளம் புழுதி கிளப்பிப் புறப்பட்டது. கோட்டையைக் காக்க!

சோழகன் கொள்ளிட நதிக்கரையிலே அமைந்திருக்கும் தீவுப் பட்டினத்துக்கு அதிபதி.

தீவுப் பட்டினம் அல்லது தீவுக்கோட்டை என்று அழைக்கப்படும் அந்த நகரே புதிய பாணியில் அமைந்திருந்தது.

சுற்றிலும் ஆழமான அகழி! கடலைப் போன்ற ஆழமென்பர்; முடியையும் அடியையும் காட்டாமல் ஒளியுருக் கொண்டானே பரமன், அவனால்கூட கடக்க முடியாதென்பர் _ அவ்வளவு புகழ் பெற்றதாம், அந்த நீர் அரண்!

அதிலே எண்ணிறந்த முதலைகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். இதில் விநோதம் என்னவென்றால், அந்த முதலைகள் பகுத்தறிவுள்ள பிராணிகளைப் போல நடந்து கொள்வதுதான்! சோழகனின் ஆணைப்படி யெல்லாம் நடக்கும் நாய்க் குட்டிகளாகி விடும், அந்த முதலைகள்! தீவுப் பட்டினத்துக்கு இதைவிட வேறு பாதுகாப்பு என்ன வேண்டும்?

ஆனால் தஞ்சையின் கதை இதனினும் மாறுபட்டது. அங்கே முதலைகள் தண்ணீரிலே நீச்சல் போடவில்லை. தரையிலே எழுந்து நடமாடின; தமிழர் வம்சத்தைத் தரைமட்டமாக்கிவிட தவம் கிடந்தன!

தமிழ் ஓவியா said...


தஞ்சைக் காவலன் ரகுநாதநாயக்கன் பெயருக்குத்தான் மன்னன்; உண்மையில் அவன் குல குரு கோவிந்த தீட்சதருக்குக் கால் பிடிக்கும் அடிமையைப் போல நடந்து கொண்டிருந்தான்!

வேதியரின் ஆணைப்படியே அரசியல் படகு திருப்பப்பட்டு வந்தது. வடமொழி அப்போது மகுடம் புனைந்திருந்தது! அந்தணன் எதிரிகள் அரசாட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்டார்கள்!

காவிரி மண்டலம் தலைவிரி கோலம் கொண்டிருந்த இந்த நேரத்திலேதான் ஆரியத்தின் எதிரியாக தீவுப்பட்டினத்துச் சோழகன் தோன்றினான்.

அந்த எதிர்ப்புணர்ச்சியை முளையிலேயே கிள்ளிவிட எண்ணினான் கோவிந்த குருக்கள்!

தீட்சதரல்லவா; குள்ள நரிக்குணம் அவர்கள் பரம்பரைச் சொத்தாயிற்றே!
அதன் விளைவுதான் சோழகன் ஆட்சியிலிருந்த சின்னஞ்சிறு தீவுப் பட்டினத்தைச் சுற்றி அபலைப் பெண்களைக் கற்பழித்த போலிக் குற்றச்சாட்டுகளும், தஞ்சைப் பேரரசின் படைகளும் குவிந்தன!

கோவிந்த தீட்சதன் படைத்தலைமை தாங்கிப் புறப்பட்டான்; ஆமாம்; எத்துவேலை எக்காளம் ஊதிப் புறப்பட்டது. நயவஞ்சகம் நல்லவர்களை எதிர்த்து நடைபோட்டது! மறைந்து தாக்குவதையும், புறமுதுகிலே பாணம் பூட்டுவதையும் தொழிலாகக் கொண்டுவிட்ட புல்லேந்திகளின் தலைவன் வில்லேந்திகளின் விலாப்புறத்தை ஒடித்தெறிய புரவியிலேறிப் புறப்பட்டான்!

தீவுப்பட்டினம் தஞ்சை வீரர்களால் சூழப்பட்டது. மரப் பொந்தினில் கூடுகட்டிக் குஞ்சு பொறித்து, குடித்தனத்தோடு வாழும் பச்சைக்கிளியை வாயில் போட்டுக்கொள்ள பூனைக் குட்டிகள் காத்திருப்பதைப் போல, சோழகனின் சிரம் வாங்க வேதியர் ஆணைப்படி வீரர்கள் காத்திருந்தனர்.

தீவுப் பட்டினம், என்ன சாமான்யமா? சுலபத்தில் பஸ்பமாகும் தன்மை கொண்டதா?

அல்லவே; அந்த முதலைகளைக் கடப்பதென்றால் முக்கண்ணனாலும் முடியாதே!
படகுப்பாலம் அமைத்துக் கடக்க முயன்றனர்; தஞ்சை வீரர்கள்! முடியவில்லை; அடியற்ற மரம்போல அவர்கள் எல்லாம் முதலைகளின் வயிற்றுக்குள்ளே சாய்ந்தனர்!

இந்தக் காட்சிகளை யெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ரகுநாத நாயக்கன் கண்கள் சிவப்பேற தீட்சதரைப் பார்த்தான்.

குருநாதா! நம் வீரர்கள் சவங்களாகச் சாய்ந்து விழுவதைத் தடுக்க முடியாதா? உங்கள் தவ வலிமையால் அதற்கொரு ஏற்பாடு செய்ய முடியாதா?

தீட்சதர் மூக்கின்மேல் விரல் வைத்தார்.

ரகுநாதா! ஆண்டவனை அழைத்தால்தான் படமெடுத்தாடும் இந்தப் பாம்புக் குட்டியை நாம் அழிக்க முடியும். அதோ அந்தக் காட்டிலே நான் சிறிது நேரம் ஆபத்பாந்தவனை நினைத்து; நினைத்ததைச் செய்து முடிக்கும் வல்லமை பெறும் வரை எனக்கு அவகாசம் கொடு!

கொற்றவனுக்கு அபயம் அளித்து விட்டு, தீட்சதர் காட்டை நோக்கிப் புறப்பட்டார்.

வேதியருக்கு வேதம் ஓதுவதற்கு மட்டுமல்ல; மருத்துவமும் சிறிது தெரியும். அதுவும் விஷ மூலிகைகளின் விபரம் அவருக்கு மனப்பாடம். ஏனெனில் தஞ்சையில் வேலும் வாளும் முப்புரி நூலுக்கு அடிபணிய அந்த அஸ்திரம்கூட எத்தனை நேரங்களில் பயன்பட்டிருக்கிறது! வீராதி வீரர்களும், இரணகளச் சூரர்களும் ஆரியத்தை எதிர்த்த காரணத்துக்காக _ விபூதியில் கலந்து கொடுக்கப்பட்ட விஷத்தால் எத்தனையோ தடவை பிணமாக விழுந்திருக்கிறார்களே!

தீட்சதர் காய்ந்து போன சில விஷ மூலிகைகளை எடுத்து சிஷ்ய கோடிகளின் கையிலே கொடுத்துப் பொடியாக்கச் சொன்னார். அவைகளை நன்றாக விபூதியுடன் கலந்து கையிலெடுத்துக் கொண்டார்.

தமிழ் ஓவியா said...

ரகுநாதா! மாட்டிறைச்சியை உருண்டை-களாக்கி இங்கே கொண்டுவரச் சொல்!
தீட்சதரின் உத்தரவு பிறந்ததுதான் தாமதம்; பறந்து வந்தது மாட்டிறைச்சி!
கோவிந்த குருக்கள் பிறகு ஏதோ மந்திரத்தை ஜபித்தார்.
சேவகா! அந்த இறைச்சி உருண்டைகளை என் கையிலே கொடு

சுவாமிகள் மாமிசத்தைத் தீண்டக் கூடாதே!

ஹஹ்ஹா! என் அப்பன் அணிந்திருப்பதே மானைக் கொன்று அதன் சதையைக் கிழித்தெடுத்த தோல்தானே! மன்னவா; இதனால் தோஷமில்லை; நாளை நாம் தஞ்சாபுரி சென்றதும் ஆயிரம் பிராமணர்களுக்கு அக்காரவடிசிலுடன் பத்து நாள் போஜனத்துக்கு ஏற்பாடு செய்தால் பாபம் பறந்துவிடும்...

தமிழ் ஓவியா said...


என்று சொல்லிக் கொண்டே தீட்சதர் விஷம் கலந்த திருநீற்றை மாமிசத்தோடு கலந்தார். பிறகு அவைகளை வீரர்களிடம் தந்து ஆண்டவனின் பெயர் சொல்லி அகழியிலே எறியச் சொன்னார்.

அவ்வளவுதான்! மாமிச உருண்டைகளைக் கண்ட முதலைகள் அவைகளை விழுங்கத் தொடங்கின! பாவம், தஞ்சைத் தலைவன் ரகுநாதனுக்கே விஷம் எது; வேஷம் எது _ என்று புரியாதபோது வாயில்லா ஜீவன்களுக்கு அது எங்கே புரியப் போகிறது!

மாமிசத்தை விழுங்கிய மறு வினாடி முதலைகள் யாவும் நீர் மட்டத்தில் மிதக்கத் தொடங்கின _ பிணங்களாக!

பிறகு கேட்க வேண்டுமா? சிப்பாய்கள் அனைவரும், கையிலே இருந்த வில், வேல், வாள், ஈட்டி போன்ற வீராயுதங்களைத் தரையிலே போட்டு விட்டு, ஆகாயத்தை நோக்கிய வண்ணம் சிவ சிவா! _ என்று கன்னத்தில் போட்டுக் கொண்டனர்; கோவிந்த தீட்சதரை நோக்கி சிரம் தாழ்த்தி வணங்கினர்!

வணங்கி வணங்கித்தான் அவர்கள் முதுகே வளைந்து விட்டதே; இப்போது வணங்காமுடி சோழகனையும் வணங்க வைப்பதற்காக ரகுநாதன் படைகள் தீவுப்பட்டினத்துக்குள்ளே நுழையத் துவங்கின!

சவங்களாய் மாறித் தண்ணீரில் மிதக்கும் முதலைகளின் உடலைக் கொண்டே படகுப் பாலம் அமைத்து கோட்டைக் கதவுகளைத் தட்டினர்!

தஞ்சாபுரிப் படைகள் கடலைப் போல பெருகி நிற்பன! சோழகன் கோட்டையைக் காத்திருந்ததோ முதலைகள்; அவைகளை நம்பித்தான் அவன், போர்ச்சுக்கீசியரிடமிருந்து கூட அதிகமான படைகளைக் கேட்காமல் தற்காப்புப் போர் புரிந்து வந்தான்.

இப்போது ஆபத்து அணுகி வருவதைக் கண்டதும் சோழகனின் கண்கள் எரிமலையாயின.

கோட்டைக்குள்ளே எதிரிகள் புகுந்து விட்டால் எந்தத் தமிழன்தான் வீட்டுக்குள்ளே இருப்பான்!

உருவிய வாளுடன், அரபி நாட்டுக் குதிரையிலேறிக் காவலன் களத்துக்கு ஏகினான்!

ரகுநாதா! தீட்சதர் தட்டும் மேளத்துக் கெல்லாம் நெளிந்து கொடுக்கும் மண் புழுவே! என் உன்னத நோக்கமறியாது என் மீது பாய்ந்து விட்டாய்! பரவாயில்லை; உறை கழற்று உன் உடைவாளை!

சோழகனின் சூளுரை கேட்ட ரகுநாதன் சித்தம் சோர்ந்தான்!

அவன் இருப்பதோ யானையின் மீது; அம்பாரியில்!

சோழகன் பரியிலிருந்தே பாணம் பூட்டினான்!

ரகுநாதனால் சமாளிக்க முடியவில்லை; திணறினான்!

பக்கத்திலிருந்த தீட்சதர் இதைப் பார்த்தார். இனி அறம் வெற்றி தேடித் தராது; குறுக்கு வழியில் சென்றால்தான் குருகுலம் நிலைக்குமென்பதை நினைத்தார்.

யானைப் பாகனுக்குக் கண் ஜாடை காட்டினார்!

அவ்வளவுதான்; மதம் கொண்டதைப் போல அந்த யானை குதிரையிலிருந்து சோழகனை _ சூழ்ந்து வரும் ஈட்டிகள் அனைத்தையும் தனியொருவனாக எதிர்த்து நிற்கும் எஃகு மார்பனை _ ஆகாயத்தில் தூக்கி யெறிந்தது!

தீட்சதர் சும்மாயிருப்பாரா? உடன் பக்கத்திலிருந்த வீரனின் கையிலிருந்து வாளை வாங்கிக் கொண்டு, உயரே யிருந்து கீழே விழுந்து கொண்டிருக்கும் சோழகன்பால் வீசினார். அய்யகோ! துண்டிரண்டாய்த் தரையில் வீழ்ந்தான் அந்த மறத்தமிழன்!
அஹ் ஹ ஹா!......

அதிர்வேட்டு போல சிரித்தார், தீட்சதர்!

இரணியனும், இராவணனும் செய்ய முடியாத காரியத்தைச் செய்து முடிக்க நினைத்த சிற்றெறும்பே! இனி இந்த தீட்சதனை எதிர்க்க ஒரு துரும்புகூட இந்தத் தமிழ் நாட்டில் அசைய முடியாதடா; அசைய முடியாது!

மீண்டும் சிரித்தார், அந்த மகானுபாவர்! ரகுநாதனும் சேர்ந்து சிரித்தான்!

குற்றுயிரும், குலையுயிருமாய்க்கிடந்த சோழகன் பேச முயன்றான்.

சிரிக்காதேடா, ரகுநாதா, சிரிக்காதே! மாண்டது நான்; என் படையில் பலர்; உன் படையில் சிலர். தஞ்சாபுரியின் பூபதியே! சிந்தித்துப்பார். தீட்சதரைச் சேர்ந்தவர்கள் ஒருவராவது இங்கு வீழ்ந்து கிடக்கிறார்களா? இங்கு உடைப்பெடுத்தோடும் இரத்த வெள்ளத்தில் ஒரு துளியாவது அந்த வர்க்கத்து இரத்தம் என்று கருதுகிறாயா? இல்லையடா இல்லை; ஆடுகள் நாம்; நம்மை மோதவிட்டு, வழிந்தோடும் குருதியைக் கோப்பையிலே வாரிக் குடிக்கிறது, அந்தக் குள்ளநரி! இனிமேலாவது, உன் சித்தம் மாறுமா? ரகுநாதா! இனிமேலாவது சிண்டு வைத்திருக்கும் அந்தக் கொடியவனின் சிலந்திப் பின்னல் உனக்குப் புரியுமா?..... யோசித்துப் பாரடா; பாராண்ட இனம் பழுதையாய் ஆகியிருப்பது யாரால் என்று சிந்தித்துப் பாரடா! அது போதும் எனக்கு; உன் சிந்தனை வேலை செய்தால் என் சாவுக்குச் சரியான காரணம் கிடைத்து விடும்! நான் சந்தோஷத்தோடு கண்களை மூடுவேன்! _ சோழகன் முணகினான்!

அதற்குமேல் அவனால் பேச முடியவில்லை; தீட்சதரின் ஆணைப்படி ரகுநாதனின் யானை சோழகனின் தலையை மிதித்துத் துவைத்தது!

ஓவென்று அலறி உயிர்விட்டான் உத்தமன்; உடன் தீவுப் பட்டினத்து நெடுமதில்களும் படபட வென்று சாய்ந்து விழுந்தன!

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


பூமியிலிருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் 7 கிரகங்களுடன் கூடிய சூரியக் குடும்பத்தைக் கண்டுபிடித்த அய்ரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் அதற்கு எச்.டி.10180 என்று பெயரிட்டுள்ளனர்.

பூமியிலிருந்து 700 ஒளி ஆண்டு தூரத்திலுள்ள புதிய கிரகத்தை நாசா அனுப்பிய கெப்லர் விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. அதற்கு கெப்லர் 78பி எனப் பெயரிட்டுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் மங்கல்யான் விண்கலத்தைத் தாங்கிய பி.எஸ்.எல்.வி.சி_25 ராக்கெட் நவம்பர் 5 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

தமிழ் ஓவியா said...

நட்சத்திரக் கூட்டம்பூமியிலிருந்து 1300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தை டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யும் கோவாவைச் சேர்ந்த இந்திய அமெரிக்க விஞ்ஞானி விதால் தில்வி, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிங்கல் ஸ்டீல் மற்றும் அவரது ஆராய்ச்சி மாணவர் மிமி சாங் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.

உலகிலேயே முதன்முறையாக இந்த நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்தது மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும், இந்தக் கண்டுபிடிப்பு பிரபஞ்சம் உருவானது பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் விதால் தில்வி கூறியுள்ளார். அண்டவெளியில் ஏற்பட்ட பிக்பேங் என்ற பெரு வெடிப்புக்குப் பின் 700 மில்லியன் ஆண்டுகளில் இந்த நட்சத்திரக் கூட்டம் உருவாகியிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

நீங்க எனக்குத் தெய்வம் மாதிரி - பிரதிபா


இந்தப் பொண்ண வரச்சொல்லு தியாகு என்றார் படத்தின் புரடியூஸர்.

சரிங்க சார் சாயந்தரம் 6 மணிக்கு ரகிதா லாட்ஜூக்கு நான் அழைச்சுட்டு வந்துடுறேன். அங்க வச்சு மற்ற விசயங்கள் எல்லாம் பேசிக்கலாம். நான் கிளம்பட்டுமா சார்? என்றார் படத்தின் இயக்குனர் தியாகு.

மாலை சரியா 6 மணிக்கு ரகிதா லாட்ஜ் ரூம் நம்பர் 12இல் (அதுதான் புரடியூசருக்கு ராசியான நம்பர்) அந்தப் பெண், தியாகு, புரடியூசர் மற்றும் புரடியூசரின் உதவியாளர்கள் இருவர் இருந்தனர்.

அந்தப் பெண் ரொம்ப பவ்வியமாக அமர்ந்து இருந்தாள்.

என்னம்மா? நல்லா நடிக்க வருமா உனக்கு.? எதுக்கு சினிமாவுக்கு வரணும் என்று ஆசைப்பட்ட?

சார் சின்ன வயசுல இருந்தே எனக்கு சினிமா மேல மோகம். விடாம சினிமா பார்ப்பேன். ஸ்கூல் படிக்கும் போது என் ப்ரண்ட்ஸ் எல்லாம் நீ அழகா இருக்கடி..? ஹீரோயின் மாதிரி இருக்கடினு சொல்லிச்சொல்லி மேலும் எனக்கு சினிமா மேல காதல் கொள்ள வச்சுட்டாங்க. மாடலிங் போய்ட்டு இருந்தேன். ஒவ்வொரு கம்பெனியா என் புகைப்படங்களை அனுப்பினேன். நீங்க என்னை ஹீரோயினா தேர்ந்தெடுத்ததா தியாகு சார் சொன்னதும் எனக்குக் கையும் ஓடல, காலும் ஓடல சார். அப்படியே மிதக்குற மாதிரி இருக்கு என்று ஆர்வத்துடன் கண்களை அகலவிரித்து, தலையை ஆட்டி ஆட்டிப் பேசியவளை புரடியூசர் ரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்தார்.

தமிழ் ஓவியா said...

சரி சம்பளம் விவகாரம் எல்லாம் பேசிக்கலாம். அப்புறம், சினிமாவுக்கு வந்துட்ட, இனிமே எல்லாவற்றையும் சமாளிக்கக் கத்துக்கணும். புதுப்படத்துக்கு வரும் பொம்பளப் பிள்ளைங்கள வச்சுட்டு விளையாடுற மாதிரி புரடியூசர் நான் கிடையாதும்மா.. ஆனா எனக்குத் தேவை விசுவாசம், என்னதான் நாம வளர்ந்தாலும் நம்ம பழைய வாழ்க்கையை மறக்கக்கூடாது. என்ன பார்க்க அழகா இருக்க.. நல்லா நடி.. அப்புறம் பாரு உன் வளர்ச்சியை. நாளைக்கு நீ வடபழனில இருக்கிற சத்யம் சினிமா அலுவலகம் வந்துடு. அங்க சூட்டிங்.. எப்போ எப்போ நடக்கும், உன் சம்பளம், என்பது பற்றி எல்லாம் நம்ம இயக்குனர் சொல்வார் கேட்டு நடந்துக்க.. படத்துல உன் கூட நடிக்கப்போகும் ஹீரோ இரண்டு படம் நல்லா நடிச்சு பேர் வாங்கி இருக்கார். அதுனால அவருக்கு இணையா நீ நடிச்சுக் கொடுக்கணும். படம் நல்லா வரணும் என்றபடி தியாகுவின் பக்கம் திரும்பி, என்னப்பா அப்போ நான் கிளம்பட்டுமா? என்றார்.

தமிழ் ஓவியா said...

படாரென தன் காலில் விழுந்த ஹீரோயினைக் கண்டதும், என்னம்மா இது? என்றார் அதிர்வாக.

இல்ல சார் நீங்க எனக்குத் தெய்வம் மாதிரி. என்னை ஹீரோயினா செலக்ட் பண்ணியிருக்கீங்க, நான் உங்க பேரைக் காப்பாத்துவேன். உங்களுக்காக நான் என்ன வேணா செய்வேன். காலம் முழுதும் நீங்க எடுக்கும் படத்தில் நான் நடிக்கத் தயார் சார். இப்பவே கையெழுத்துக்கூட போட்டுத் தர்றேன் சார்.. என்றவளைப் பார்த்து சிரித்தபடி, கடைசிவரை இந்த மாதிரியே இரு.. அது போதும் என்று சொல்லி வாழ்த்திவிட்டு ரூமை விட்டு வெளியேறினார்.

புரடியூசருக்கு இது பதினைந்தாவது படம். இதுவரை அவர் தயாரிப்பில் வந்த அனைத்துப் படங்களும் ஹிட். அதனால் நல்ல தயாரிப்பாளர் அந்தஸ்து கிடைத்து மிக பிரபலம் ஆகிவிட்டார்.

இந்தப்படமும் ஹிட் ஆனது.

ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் எல்லோருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. புரடியூசருக்கு நல்ல வருமானம் கிடைத்தது.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந்த நடிகை ரொம்பப் பிரபலம் ஆகிவிட்டாள். நான்கு படத்தில் மூன்று படம் சூப்பர் டூப்பர் ஹிட் அதனால் கையில் ஏகப்பட்ட படங்கள் புக் ஆகி இருந்தன. இப்போது புக்கான படங்கள் நடித்துக்கொடுக்கவே இரண்டு வருடங்களுக்கு மேலாகும்.

கேரவேனுக்குள் அடுத்த சீனுக்கான டிரஸ் பண்ணிக்கொண்டு இருந்தாள் நடிகை. செல்போன் ஒலித்தது அவசரமாக யார் எனப் பார்த்தவள் தன்னை அறிமுகப்படுத்திய புரடியூசர் என்றதும், போனை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு சூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றுவிட்டாள்.

திரும்ப வந்து பார்த்தபோது இரண்டு மிஸ்டுகால் இருந்தது. நான்காவது முறையாக செல்போன் சிணுங்கியதும் எடுத்தவள்,
சொல்லுங்க சார் எப்படி இருக்கீங்க? என்றாள்.
நல்லா இருக்கேன்.. நீதான் எங்கேயோ போய்ட்ட. உன் வளர்ச்சி, நடிப்பு எல்லாம் பிரமிக்க வைக்குது.. போன்கூட பேசமுடியலம்மா.. ரொம்ப நல்ல விசயம் தான்.. இன்னும் தொடர்ந்து நல்லபடங்கள் நடி அப்புறம்... என்றவரிடம், சொல்லுங்க சார் என்றாள்.
இல்ல எனக்குத் தெரிந்த ஒரு டைரக்டர். நல்ல படங்கள் எடுத்தவர். ஹீரோ புக் பண்ணிட்டார். ஹீரோயினா நீதான் வேணும்னு அடம்பிடிக்கிறார். என்னிடம் சிபாரிசு செய்யச்சொல்லி வற்புறுத்தினார். நானும் நான் சொன்னா அந்தப் புள்ள உடனே சரி சொல்லிடும் என்று வாக்குக் கொடுத்துட்டேன். என்னம்மா நான் சொன்னது சரிதானே? என்றார்.
என்னம்மா?
சார் என்னோட வளர்ச்சி பற்றி தெரியாமப் பேசுறீங்க. எனக்குக் கையில இருக்குற படத்துக்கே டேட் இல்லாம அலைஞ்சிட்டு இருக்கேன். அதில வேற புதுப்படம் அது இதுனுட்டு. சார் எப்படி நீங்க என்னைக் கேட்காம சரினு சொல்லலாம். என்னால முடியாது. ப்ளீஸ் மன்னிச்சிடுங்க.. என்றபடி செல்போனை அணைத்தாள்.
புரடியூசர் காதில் மட்டும் இன்னும் கேட்டுக் கொண்டு இருந்தது. நீங்க எனக்குத் தெய்வம் மாதிரி சார், காலம் முழுதும் நீங்க சொல்ற படங்களில் நான் நடிக்கத் தயார். இப்பவே கையெழுத்துப்போட்டுத் தர்றேன்...

தமிழ் ஓவியா said...

பேரிழப்பு


திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைவு!

திருச்சிக்கு 9.11.2013 அன்று காலை சென்றபோது, திராவிடர் எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள்பற்றி கழகப் பொறுப்பாளர்களிடம் கலந்து பேசிக் கொண்டிருந்தபோது, பேரிடி போன்ற செய்தி ஒன்று எங்களைத் தாக்கியது.

எனது வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களும், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களும் என்னை நெருங்கி, தயங்கி நின்று சொன்னார்கள்.

கழகப் பொருளாளர் எனது அன்பு சகோதரர் கோ.சாமிதுரை அவர்கள் சற்றுமுன் சென்னையில் உள்ள (கோட்டூர்புரம் பகுதி) இல்லத்தில் காலமானார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் மிகவும் தாக்குண்டோம்!

சில காலம் உடல் நலிவுற்று இருந்த நிலையில், அவர் தேறி வந்தது ஆறுதலாக எங்களுக்கு -_ இயக்கத்திற்கு இருந்தது! ஆனால், சற்றும் எதிர்பாராத விதத்தில் அவரது முடிவு ஏற்பட்டதை எப்படித் தாங்கிக் கொள்வது என்பதே தெரியவில்லை.

எங்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இச்செய்தி என்ற நிலையில், அவரது அன்புச் செல்வங்களான மகன்கள், மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் எப்படித்தான் தாங்கிக் கொள்ள முடியும்?

மாணவப் பருவம் தொட்டே சகோதரர் மானமிகு கோ.சாமிதுரை அவர்கள் எனக்கு நெருக்கமான இயக்கத்தவர். அரை நூற்றாண்டுக்குமேல் எங்கள் பாசமும், உறவும், நட்பும் மேலானதாக இருக்கும் ஒன்று. அவர் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ., படித்தபோது, நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அதே காலத்தில் படிப்பில் இருந்தவன். திராவிடர் மாணவர் கழகம் எங்களை இணைத்தது. சட்டக் கல்லூரியில் இருவரும் இணை பிரியாதவர்களாக இருந்தோம்.

இயக்கத்திற்குச் சோதனை ஏற்பட்ட போதெல்லாம், சற்றும் சபலமோ, சலனமோ கொள்ளாத இளைஞர் அவர் அன்று. எனவேதான், அருமை அய்யாவின், அம்மாவின் பெரும் நம்பிக்கை, பாராட்டைப் பெற்ற எனது உற்ற தோழர் என்ற பெருமைக்கு ஆளாகி, கடைசிவரை காத்தவர்.

வழக்குரைஞர் தொழில் தொடங்கும்போது கடலூரில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்தோம். அவர் கல்லக்குறிச்சியில் பிரபலமான நிலையில், வழக்குரைஞர் தொழிலைக்கூட கடந்த 10 ஆண்டுகளுக்குமுன் துறந்து, இயக்கத் தொண்டாற்ற பெரியார் திடலுக்கே தன்னை ஒப்படைத்துவிட்டு, சென்னைவாசியானார் என்னைப் போலவே!

அவரது வாழ்விணையர் மறைந்த சரோஜா அவர்களும், எனது வாழ்விணையரும் கடலூரில் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். இப்படி இரு குடும்ப உறவுகளும் என்றும் மறக்க முடியாதவை -_ பிரிக்க முடியாதவை!

பாழும் சாவு பிரித்துவிட்டதே!

வரும் (நவம்பர்) 26 ஆம் தேதி அவரது 81ஆம் ஆண்டு பிறந்த நாள்; என்னைவிட ஒரு சில நாள்கள்தான் மூத்தவர் அவர்!

அவரது பிரிவு கழகத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் பள்ளமும், இழப்பும் எளிதில் ஈடுசெய்ய முடியாத ஒன்று!

என்றாலும், தந்தை பெரியாரின் அறிவுரைக்கேற்ப, இயற்கையின் கோணல் புத்திக்குமுன் என்ன செய்ய இயலும்?

எனவே, நாம் அவருக்குப் பிரியா விடையைக் குளமாகும் கண்களோடும், கனத்த இதய வலியோடும் தந்து வீர வணக்கத்தைத் தெரிவித்து, எங்களது பெரும் பெரியார் குடும்பமான அந்தக் குடும்பத்துச் செல்வங்களுக்கும் தேற்ற முடியாத எமது ஆறுதலை, இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

தமிழ் ஓவியா said...

போனஸ் வந்த வரலாறு - சரவணா இராசேந்திரன்


போனஸ் என்பது வேறு, ஊக்கத்தொகை என்பது வேறு. ஊக்கத்தொகை ஒரு தொழிலாளரைப் பாராட்டியோ, குடும்பத் தேவைகளுக்காகவோ கொடுக்கப்படும். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் முக்கியமான பண்டிகைக் காலங்களில் அனைவருக்கும் போனஸ் கொடுப்பது சட்டமாகிவிட்டது.

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத இந்தப் பழக்கம் ஏன் இந்தியாவில் வந்தது.வரலாற்றுப் பார்வை:

திருவிழாக் காலங்களில் தரும் ஊக்கத்தொகை குறித்து கல்வெட்டிலோ அல்லது வாய்மொழிப் பாடல்களிலோ எந்த ஒரு குறிப்பும் கிடையாது. போனஸ் என்ற ஒன்று ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு விரும்பத்தகாத ஒன்றாக இருந்துள்ளது.

தேவதாசிகளின் கேளிக்கைகளுக்குப் பணம் தேவைப்பட்டது. அப்படி அவர்கள் பணத்தை வாங்கிய பழக்கத்தில் இருந்து போனஸின் வரலாறு தொடங்குகிறது.

தமிழ் ஓவியா said...


மேடையில் ஆடுவது, செல்வந்தர்களுக்குத் தங்கள் உடலைப் படைப்பது போன்றவைகளின் மூலம்தான் தேவதாசிகளுக்கு வருமானம் கிடைத்தது.

முக்கியப் பண்டிகைகளின்போது தேவதாசிகள் தங்கள் கேளிக்கை இல்லங்களுக்கு வந்து செல்லும் செல்வந்தர்களைத் தேடிச் செல்வர். திருவிழா கொண்டாட வேண்டும் என்று கூறி தங்களின் கோரிக்கையைக் கூறுவர். ஆரம்ப காலத்தில் தங்கக் காசுகளைக் கொடுத்துவந்த செல்வந்தர்கள், பணம் புழக்கத்திற்கு வந்த பின்னர் பணமாகக் கொடுத்தனர்.

செல்வந்தர்கள் இவர்களுக்கு எப்பொழுதும் கொடுப்பதைவிட பண்டிகைக் காலங்களில் ஒருமடங்கு அதிகமாகத் தந்தார்கள். ஆனால், செல்வந்தர்கள் தங்களிடம் வேலை செய்யும் பணியாளர்களுக்கு இதேபோல் பணம் கொடுக்க மாட்டார்கள். பணியாளர்களும் தங்களுக்கு வழங்கவேண்டும் என்று கேட்க வெட்கப்படுவார்கள். காரணம், செல்வந்தர்கள் என்ன காரணத்திற்காக தேவதாசிகளின் உதவியாளர்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்று தெளிவாக தெரியும் போது பலர் முன்னிலையில் வாங்க வெட்கப்படுவார்கள். ஆனால் பணியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பொருளாகவோ பணமாகவோ வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

ஆங்கிலேயர்கள், அவர்களின் கம்பெனிகளில் பணியாற்றும் அனைவருக்கும் போனஸ் கொடுக்கும் முறையை உருவாக்கினார்கள். தமது முதலாளியிடம் வாங்குவதை அசிங்கமாக நினைத்து ரகசியமாக வாங்கிக்கொண்டு வந்த தொழிலாளர்கள் ஆங்கிலேயர்களிடம் வாங்குவதை அசிங்கமாக நினைக்கவில்லை. காரணம், அவர்கள் எல்லோர் முன்னிலையிலும் அனைவருக்கும் சரிசமமாகக் கொடுத்தார்கள்.

ஆங்கிலேயர்களின் போனஸ் என்னும் சூழ்ச்சி: 1854இ-ல் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள சில குறுநில மன்னர்கள் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் படையின் முன்பு அடிபணிந்தனர். பெரும்பாலானோர் எதிரியின் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டு போரிட்டு மாண்டுபோனார்கள். முதன்முதலாக சூரத்தில் பருத்தி ஆலை அமைத்த ஆங்கிலேயர்கள் பண்டிகை கொண்டாடும் பொருட்டு போனஸ் எனப்படும் தொகையை அனைத்துத் தொழிலாளர்களுக்கும் கொடுக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.

தமிழ் ஓவியா said...


இந்தப் பழக்கம் மெல்ல மெல்ல அனைத்து பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. கம்பெனி கைகளில் இருந்து இங்கிலாந்தின் ஆளுமைக்குள் வந்த பிறகு இந்தியாவின் முதல் ஷிமீநீக்ஷீமீணீக்ஷீஹ் ஷீயீ ஷிணீமீ யீஷீக்ஷீ மிஸீபீவீணீ என்ற பதவியில் இருந்த லார்ட் எட்வார்டு ஸ்டான்லி என்பவர் போனஸ் முறையை ஒழுங்குபடுத்தி இந்தியன் பில் என்ற ஒரு மாதிரி அரசியல் அமைப்புச் சட்டம் ஒன்றை அவசர கதியில் 1858-இல் உருவாக்கி தொழிலாளர்களுக்கான ஊக்கத்தொகை என்ற பெயரில் திருவிழாக் காலங்களில் கொடுக்க வழிவகை செய்தார். அங்கிருந்து தொடங்கியதுதான் இன்றைய போனஸ். இந்த போனஸ் திட்டம் பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு நன்மையைக் கொடுத்தது. அவர்கள் நாட்டில் உள்ளது போல் தனிநபர் ஊக்கத்தொகை என்று வருடம் முழுவதும் அழுவதைவிட ஒரே நாளில் கொடுத்துவிட்டு அதை அப்படியே பின்புறமாக பிடுங்கும் வசதியை ஏற்படுத்திவிட்டது.

டாடா நிறுவனங்களும் போனஸும்:

ஆங்கிலேயர்களின் நிறுவனம் கொடுத்ததைக் கண்டவுடன் அப்போதைய இந்தியாவின் பெரிய நிறுவனமான டாடா குழுமம், வேண்டாவெறுப்பாக போனஸ் தொகையைக் கொடுக்கவேண்டி இருந்தது. அதே நேரத்தில் டாடா நிறுவனம் ஒரு தந்திர உத்தியைக் கையாண்டது. போனஸைக் கொடுத்த கையோடு முக்கிய விழாக்காலங்களில் தங்களின் நிறுவன ஊழியர்களுக்கு தங்களால் சுட்டிக்காட்டப்படும் கடைகளில் மட்டும் சிறப்புச் சலுகையில் பொருட்கள் தரப்படும் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. இதன் விளைவு, மிகவும் சாமர்த்தியமாக 10 ரூ போனஸாக கொடுத்து 15 ரூ கடைக்காரர்களிடம் இருந்து கமிசனாக வாங்கிவிடுவார்கள். இந்த பச்சை வியாபார உத்தியை ஆரம்பித்தவர் ஜாம்செட்ஜி டாடா அவர்களின் பொருளாதார ஆலோசகராக இருந்த சைரஸ் மக்வானே. ஆனால் ஜாம்செட்ஜியின் புதல்வர் சர் துரோபாய்ஜி டாடா, தொழிலாளர்களை ஏமாற்றும் இந்தத் திட்டத்தைத் தடுத்து தங்களது நிறுவனமே இலவசமாக இனிப்பு, பரிசுப்பொருள், உடைகள் மற்றும் போனஸ் தொகை என தொழிலார்களுக்கு முக்கிய பண்டிகைக் காலங்களில் கொடுக்க ஆரம்பித்தார்.
பிரிட்டிஷ்காரர்கள் இவருக்கு சர் பட்டம் கொடுத்ததன் முக்கியக் காரணம் தொழிலாளர் மீது இவர் காட்டிய இந்த மனிதாபிமான செயல்தான் என்ற வரலாற்றுத் தகவலை ரத்தன் டாடா தனது பணிஓய்வு சிறப்புக்கூட்டத்தில் கூறியுள்ளார். அவரவர்களுக்கான உற்பத்தித் திறனுக்கு ஏற்ப போனஸ் தொகையைக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

மைசூர் சமஸ்தானமும் போனஸும்:

சுதந்திரத்திற்கு முன்பு மைசூர் சமஸ்தானத்தின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்கக் கூடாது என்று நல்வாடி கிருஷ்ன ராஜ சன்னிதானம் என்ற மன்னர் ஆணையிட்டார். அவர் போனஸ் கொடுப்பதால் கஜானா காலியாகும், செய்யாத வேலைக்கு எதற்காக பணம் தரவேண்டும், பண்டிகைகளை வசதியிருந்தால் கொண்டாடுங்கள், இல்லை என்றால் வேடிக்கை பாருங்கள் என்று உத்தரவிட்டார்.

அதேவேளையில் பண்டிகைக் காலங்களில் சில நற்காரியங்களையும் செய்துவந்தார். இவரின் இந்த போனஸ் பற்றிய சிந்தனை வேடிக்கையாகத் தெரிந்தாலும், நிதானமாகப் பார்த்தால் முற்போக்கான சிந்தனையாகும். (இவர்தான் பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தை இந்தியாவில் முதன்முதலில் தனது மைசூர் மாகாணத்தில் கொண்டுவந்தவர்).

தமிழ் ஓவியா said...

விரும்பாவிட்டாலும் போனஸ்:

ஒருவருக்கு ஒருவர் சமமாக ஊதியம் வாங்கும் போது ஊக்கத்தொகை அல்லது போனஸ் என்பது எதற்குத் தேவைப்படும் என்பதை இங்கே கேள்வியாகக் கேட்டால், போனஸ் என்பது ஏமாற்றும் ஒரு செய்தியாகத் தெரியும்.

தொழிலாளர்களுக்குத் திடீர் என வரும் நோய், இதர குடும்பத் தேவைகளுக்கு வாங்கும் முன்பணம் குழந்தைகளின் கல்வி, சில அத்தியாவசிய செலவுகள் இந்த போனஸ் எனப்படும் முன் பணத்தில் வராது.

சரி, இந்த போனஸ் வாங்கி என்னதான் செய்கிறார்கள்?

ஆடம்பரச் செலவுதானே, அதை எத்தனை பேர் சேமிக்கின்றார்கள் என்று பார்த்தோமானால் அதுவும் மிகவும் அரிதாகத்தான் தெரிகிறது. மகாகருமிகூட போனஸை செலவு செய்யத் தயங்குவதில்லை. இந்த போனஸ் என்பது எப்படியான ஏமாற்று வேலை என்று புரிகிறதா?

கேளிக்கை காலங்களில் கேளிக்கைக்கு உட்படும் பொருட்கள் அனைத்தும் அரசின் சிறப்பு வரியின் கீழ் வரும். மற்ற நாட்களில் நாம் வாங்கும் ஒரு பொருள் 50-ரூபாய் என்றால் கேளிக்கை காலங்களில் அதன் விலை 75 ரூபாயாக இருக்கும். இதில் அரசின் சிறப்பு வரிகளையும் சேர்த்தால் 80-ரூபாய் ஆகிவிடும். அதாவது, போனஸ் மாதிரி உங்களுக்கு முன்பு கொடுத்து பின்பு உருவி எடுக்கும் வேலை. ஆங்கிலேயர் எந்தத் திட்டத்தோடு போனஸைக் கொண்டு வந்தார்களோ அதே திட்டம் இன்று இந்திய அரசால் தொடரப்பட்டு வருவது வேடிக்கையான ஒன்றுதான்.

இந்தியா போன்ற ஏழைகள் அதிகமாக வாழும் நாட்டில் திடீரென ஒரு தொகை வருவது ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஒரு வித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பெரியார் கூறிய சமத்துவமான உலகம் வரும்வரை போனஸ் என்பது மக்கள் விரும்பாவிட்டாலும்கூட தேவையான ஒன்றாகிவிட்டது.

உழைக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வது நிறுவனங்களின் கடமையாகும். உலகம் எங்கும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வருடாந்தர உற்பத்தி விகிதத்திற்கு ஏற்ப லாப மற்றும் ஈட்டுத்தொகையைத் தொழிலாளர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும். இதனடிப்படையில் ஊக்கத்தொகை மற்றும் இதர உதவித்தொகைகளைப் பங்கிட்டுக் கொடுப்பதைப் பெறுவது சட்டப்படி தொழிலாளர்களின் உரிமையாகும். சட்டப்படி கிடைக்கும் இந்த வரவைச் சேமித்து, தேவைப்படும் போது பயன்படுத்துவது சிறந்ததாகும். ஆனால், பெரும்பாலானோர் பண்டிகைக் காலங்களில் கிடைக்கும் இந்தத் தொகையை அதிசய வரவு போல் நினைத்து, ஆடம்பரமாகச் செலவு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

தற்போதுள்ள சூழலில் பல வணிக நிறுவனங்கள் புதிய உத்திகளைக் கையாண்டு பணத்தைத் பிடுங்கும் வேலைகளைச் செய்துகொண்டு இருக்கின்றன. பண்டிகைக் காலங்களில் வாங்கும் பொருட்கள் பொரும்பாலும் தேவையற்ற பொருட்களாகவும் ஆடம்பரமிக்கதாகவும் தான் உள்ளன. நமது உழைப்பிற்குக் கிடைத்த பணத்தை, பண்டிகைக் காலங்களில் விரயம் செய்யாமல் சிக்கனமாக இருந்து நமது குழந்தைகளுக்கும் சிக்கனத்தைக் கற்றுக் கொடுப்போம்.

Reference

1. Muvalur Ramamirthammal’s Web of Deceit: Devadasi Reform in Colonial India By Muvalar Ramamirthammal, Kalpana Kannabiran, Vasantha Kannabiran

2. The Scandal of Empire: India and the Creation of Imperial Britain
Pressnote: Ratan Tata Retirement 31-08-2012

3. History of the Princely State of Mysore. Orient
Blackswan publication

தமிழ் ஓவியா said...

மத்தியக் கல்வித் துறையின் மக்கள் துரோகம்


தமிழ்நாட்டில் மத்திய அரசு, ஏற்கெனவே ஆக்கிரமித்தது போதாது என்ற முறையில், கல்வித் துறையில் புதியதோர் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்தியாலயா திட்டப்படி, மத்திய அரசும், தனியாரும் கூட்டுச் சேர்ந்து மாதிரிப் பள்ளிகள் என்று தனியே தொடங்கிட முயற்சிப்பதாக வந்துள்ள செய்தி- சரியாக இருக்குமானால் _ அதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கல்வி என்பது ஏற்கெனவே மாநிலப் பட்டியலில் இருந்த முக்கிய துறையாகும்; அதனை _- நெருக்கடி கால நிலையில் _- ஓசையில்லாமல் மத்திய அரசு, பொதுப் பட்டியலில் மத்தியக் கல்வித் துறையின் மக்கள் துரோகம் கொண்டுபோய்ச் சேர்த்து மாற்றம் ஏற்படுத்தியது.

இது நடந்தது 1976-இல்; அதன்பின் வந்த ஆட்சிகள் இதை ஒரு முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டு, மீண்டும் பழையபடி மாநிலப் பட்டியலுக்குள் கல்வியைக் கொண்டு வரத் தவறியதன் விளைவே, பல்வேறு சமூக அநீதிகளும், சமூகக் கொடுமைகளும் சட்ட பூர்வமாகவே மத்திய அரசால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன _- மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்ற கல்வித் துறையின் மூலம். எடுத்துக்காட்டாக, மாநில அரசு ஒழித்த பொது நுழைவுத் தேர்வு என்பதை _- மருத்துவக் கல்வி, மற்றும் தொழிற்படிப்புகளில் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை ஆதிக்க அதிகார சக்திகள் செய்து வருகின்றன. ஏற்கெனவே உச்ச நீதிமன்ற பெரும்பான்மைத் தீர்ப்பு நுழைவுத் தேர்வு ரத்து சரிதான் என்று கூறிய பிறகும் மருத்துவக் கவுன்சில் மறுசீராய்வு மனுவைப் போட்டுள்ளது; மத்திய அரசும் அதனை ஆதரிக்கிறது!

இது போன்ற கல்வியில் இரண்டு எஜமானர்கள் ஒரே நேரத்தில் அதிகாரம் செலுத்தும் விசித்திர நிலை ஏற்பட்டுள்ளது!

மாநிலங்களின் உரிமைகள் _- அதிகாரங்கள் ஏற்கெனவே பெரிதும் பாதிக்கப்பட்டு, வெறும் முனிசிபாலிட்டிகளைப் போன்று மாநில அரசுகள் ஆக்கப்பட்டுள்ள நிலையில், இது போன்ற புதிய அறிவிப்புகள் மேலும் மேலும் மாநிலங்களின் அதிகாரப் பறிப்புக்குத்தான் வழி வகுக்கும். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிக்கை, காலத்தால் தரப்பட்ட சரியான எச்சரிக்கை மணி!

மாநில அரசின் ஒப்புதலோ, அல்லது அதனுடன் கலந்து ஆலோசிக்காமலோ இப்படி தன்னிச்சையாக மத்திய அரசு நடந்து கொள்வது எவ்வகையில் நியாயம்?

கல்வியை வியாபாரமாக்காதே என்ற குரல் ஓங்கி முழங்கிக் கொண்டே இருக்கும் நிலையில், வெளிநாட்டுப் பெரும் வணிகத் திமிங்கிலங்களுக்குக் கதவு திறந்து விட்டு, நம் நாட்டில் சில்லறை வணிகத்தினை அழிப்பது போல, இப்போதுள்ள பள்ளிகளையும்கூட மறைமுகமாக கொஞ்சம் கொஞ்சமாக இத்தகைய மாதிரிப் பள்ளிகள் -_ வணிகமயம் ஆகும்; அதுவும் மத்திய அரசும் தனியாரும் (Private - Public Partnership) நடத்துவது எவ்வகையில் நியாயப்படுத்தக் கூடியது?

கல்வி அடிப்படை உரிமை (Education is Citizen’s Fundamental Right - Right to
Education) என்று அரசமைப்புச் சட்டத்தில் சட்ட ரீதியாக அறிவிக்கப்பட்டபின், இப்படி மத்தியக் கல்வித்துறை ஒரு முடிவு எடுத்திருப்பது மிகப் பெரிய, அரசியல் சட்ட விரோதப் போக்காகும்!

இதனை, தமிழ்நாட்டுக் கல்வி அறிஞர்கள், மாநில உரிமை காக்க விழைவோர், உண்மையான ஜனநாயக விரும்பிகள், அனைவரும் ஒட்டு மொத்தக் குரலில் எதிர்க்க வேண்டும்; தமிழக அரசும் முதல்வரும் உடனடியாக எதிர்ப்பைப் பதிவு செய்தாக வேண்டும்.

முன்பு ராஜீவ்காந்தி கொண்டு வந்த நவோதயா பள்ளிகளே ஹிந்தித் திணிப்புக்கு மறைமுக வழி என்று கண்டித்து நிறுத்திய தமிழ்நாடு, இப்பொழுது சும்மா இருக்காது _- இருக்கவும் கூடாது. கிளர்ந்தெழ வேண்டும்.

- கி.வீரமணி, ஆசிரியர்

தமிழ் ஓவியா said...


கழகப் பொருளாளர் சாமிதுரை மறைவிற்கு பேராசிரியர் க.அன்பழகன் இரங்கல்


சென்னை, நவ.17- திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் கடந்த 9.11.2013 அன்று சென்னையில் மறைவுற்றார். அவரது மறைவிற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் இரங்கல் தெரிவித்து, கழகத் தலைவருக்கு அனுப்பிய கடிதம் வருமாறு:-

திராவிடர் கழகப் பொருளாளரும், இளமை முதல் தந்தை பெரியாரின் தொண்டருமாக விளங்கிய தோழர் கோ.சாமிதுரை அவர்களின் மறைவு குறித்து அறிந்தபோது, மிகவும் வருத்தமுற்றேன்.

கொள்கையில் உறுதி,

இலட்சியத்தில் ஆர்வம்,

இயக்கத்தில் பிடிப்பு,

தலைமையை மதிக்கும் பண்பு ஆகியவற்றால் பெருமை பெற்றவராக, திராவிடர் கழகத் தலைவர் திரு.வீரமணி அவர்களின் முழு நம்பிக்கையைப் பெற்றவராகத் திகழ்ந்த தோழர் சாமிதுரை அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.

அவரது மறைவால் துயருற்றவர்கட்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

- இவ்வாறு பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் எழுதியுள்ள அவரது இரங்கல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்

தமிழ் ஓவியா said...


நமது நாட்டில் அறிவியல் மனப்பான்மை இல்லை விஞ்ஞானி ராவ் வருத்தம்

பெங்களூரு, நவ.18- அறிவியலுக்குப் போது மான நிதி ஒதுக்காததால், அரசியல்வாதிகள் முட்டாள்கள்' என்று பாரத ரத்னா விருதுக்கு தேர்வாகியுள்ள விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் விமர்சித்தார்.

இதுகுறித்து பெங்களூருவில் ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் போதுமான நிதி ஆதாரங்களை ஒதுக்க வேண் டும். அரசு அளித்துள்ள நிதியைக் காட்டிலும், அளவுக்கு அதிகமாக அறிவியல் ஆராய்ச்சிகளை அறிவியல் துறை செய்து காட்டியுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு அரசியல்வாதிகள் போதுமான நிதி ஒதுக்கவில்லை. இதனால், அவர்கள் முட்டாள்கள்.
எங்களுக்கு கிடைத்த நிதிக்குத் தகுந்தவாறு பணி செய்துள்ளோம். இந்தியாவில் அறிவியல் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது மட்டுமல்லாமல், காலதாமதமாகவும் அளிக்கப் படுகிறது.

சீனாவின் வளர்ச்சிக்கு நம்மைத்தான் காரணம் காட்ட வேண்டியுள்ளது. சீனர்களைப் போல இந்தியர்கள் கடுமையாக உழைப்பதில்லை. எதையும் நாம் எளிதாக எடுத்துக் கொள்கிறோம். தேசியவாதிகளைப் போல நாம் செயல்படுவ தில்லை. நமக்குக் கூடுதலாகப் பணம் கிடைத் தால், வெளிநாடுகளுக்குச் செல்லத் தயாராக இருக்கிறோம்.

தகவல் தொழில்நுட்பத்திற்கும், அறிவிய லுக்கும் சம்பந்தமில்லை. நமது நாட்டில் அறிவியல் உணர்வு இல்லை.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி யாற்றுவோர் அனைவரும் மகிழ்ச்சியில்லாமல் வேலை செய்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்வோர் அடிக்கடி தற் கொலை செய்து கொள்ளும் செய்தியைப் படிக் கிறேன்.

என்னைப் பாருங்கள், 80 வயதிலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னிடம் குறை கூற எதுவுமில்லை. நாம் செய்வதில் திருப்தி கிடைத் தால், அதுதான் மகிழ்ச்சி என்று கருதுகிறேன் என்றார் ராவ்.

தமிழ் ஓவியா said...


உலகமயமாகும் பெரியார் தத்துவங்கள்!

அமெரிக்காவில் சுயமரியாதை வாழ்க்கை ஒப்பந்தங்கள்

2013 நவம்பர் 2 - அட்லாண்டா நகரில்!

அமெரிக்காவில் இப்போதெல்லாம் மதச் சடங்குகள் இல்லாத பல பகுத்தறிவு வாழ்க்கை இணை விழாக்கள் நடந்து வருகின்றன.

எந்த மதச் சடங்குகளும் இல்லாமல் வாழ்விணை யர்கள் தாங்களே தயாரிக்கும் ஒப்பந்தங்களைப் படித்தோ அல்லது நீதி அரசர்கள் சொல்வதைச் சொல் லியோ, அல்லது பதிவு செய்து கொண்ட வாழ்விணை ஒப்பந்தங்கள் நடத்துவோர், அல்லது நீதிமன்றங்களில் பதிவு செய்து கொண்டு என்று நடத்திக் கொள் கின்றனர். இன்று அமெரிக்க இளைஞர்களில் பலர் விரும்பிச் செய்து கொள்ளப் பெற்றோர்களும் இணைந்து கொள்கின்றனர். இரண்டு மதங்களில் இருந்து இணைவோருங்கூட இந்த ஒப்பந்தங்களைச் செய்து கொள்கின்றனர்.

தமிழர்களில் முதலாவதாக மானமிகு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களது செல்வி அருள், பாலகுரு வாழ்க்கை ஒப் பந்த விழா நடந்து சுமார் 20 ஆண்டுகள் ஆகி விட் டது இப்போது பல தமி ழர்கள் பல நகரங்களில் செய்துள்ளனர். (அடுத்து ஆசிரியர் தலைமையில் சிகாகோவில் எனது மூத்த மகள் கனிமொழி வாழ்விணையர் ஏற்பு இப்படி எல்லாம் ஜாதி மறுப்பு, சுயமரியாதைத் திரு மணங்களாகவே நடந்தது.

அட்லாண்டா நகரிலே நவம்பர் 2ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தர்மபுரி பெரியார் பெருந் தொண்டர் எம்.என். நஞ்சையா அவர்களது பெயர்த்தியும், மருத்துவர் நல்லதம்பி - மீனா இவர்களது செல்வியுமான கவிதாவிற்கும், ஒடிசாவைச் சேர்ந்த மருத்துவர் நாராயண், சித்ராராத் அவர்களின் செல்வன் பிரகாஷ் அவர்கட்கும், நீதியரசர் வெஸ்லிசேனன், வாழ்க்கை ஒப்பந்த உரையைச் சொல்லி மணமக்கள் மோதிரங்கள் அணிந்து கொள்ளச் சிறப்பாக நடந்தது. தமிழகத்தி லிருந்தும், பிரான்சிலிருந்தும் மற்றும் அமெரிக்காவின் பல இடங்களிலிருந்தும் குடும்பத்தினரும், நண்பர்களும் வந்து வாழ்த்தி சிறப்பு செய்தனர். ஆசிரியர் அவர்களும், அவருடைய வாழ்விணையரும் தொலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

அட்லாண்டாவின் புகழ் பெற்ற எமரி பல்கலைக் கழக அறிவரங்கத்தில் 250 பேர் என்று மிகவும் ஆடம்பர மில்லாத மணமக்கள் விருப்பப்படியே ஆனால் மிகவும் சிறப்பான ஏற்பாடுகளுடன் விழா நடந்தது. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

மணமகன் ஒடிசா மாநிலத்தவர் ஆகையால் தந்தை பெரியார் கருத்துரைகள் கொண்ட ஒடிசா மொழி புத்தகத்தையும், ஆங்கில நூல்களையும் மணமக் களுக்கு ஆசிரியர் அனுப்பி, மணப் பரிசு வழங்கினார்.

- சோம இளங்கோவன்

தமிழ் ஓவியா said...


கடவுள் கருணையோ!

திருவண்ணாமலையேறிய பக்தர் மாரடைப்பால் சாவு

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை மலையேறிய பக்தர் ஒருவர் திரும்பி வரும்போது நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார்.

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த குணசேக ரன் (62). இவர் தனது நண்பர் நாகராஜுடன் தீபத் திருவிழாவைக் காண வந்தார். திருவண்ணாமலை யில் உள்ள தனது தங்கையின் வீட்டில் தங்கியிருந்த அவர், ஞாயிற்றுக்கிழமை மாலை, மலையேறிச் சென்றார்.
மீண்டும் இறங்கி வந்துகொண்டிருந்தபோது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாம். தீயணைப்பு வீரர்கள் குணசேகரனை அழைத்து வந்து, 108 ஆம்பு லன்ஸில் திருவண்ணாமலை அரசு மருத்துவ மனையில் மாலை 6.30 மணிக்கு சேர்த்தனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

திருவண்ணாமலை சென்று திரும்பிய பக்தர்கள் 4 பேர் விபத்தில் சாவு

தருமபுரி, நவ.18- தருமபுரி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் திருவண்ணாமலைக்குச் சென்று தீபத்தை தரிசித்து விட்டு வந்த பக்தர்கள் நால்வர் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக இறந்தனர். தருமபுரி அருகே ஒடசல்பட்டி கூட்டுரோடு என்ற இடத்தில் எதிரே வந்த கார் மீது லாரி ஒன்று மோதியது. இதில், காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக மருத்துவமைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற் கொண்ட விசாரணையில், விபத்தில் கார்த்திகை தீபமான நேற்று திருவண்ணாமலை சென்று விட்டு திரும்பிய போது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. விபத்துக் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.

தமிழ் ஓவியா said...


பெரிதாக்குகிறார்கள்

தண்ணீரில் வீழ்ந்து உயிருக்கு மன்றாடுபவன் ஒரு புல் மிதந்து வந்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு கரையேற நினைப்பது போல், இன்று பார்ப்பனரும், அவர்கள் கூட்டாளி களும் பதவி ஆசையால் அற்பக் காரியங்களையும் பெரிதாக்குகிறார்கள்.
(விடுதலை, 12.7.1972)

தமிழ் ஓவியா said...


டெசோவின் தீர்மானங்கள்

சென்னையில் நேற்று (17.11.2013) கூடிய டெசோ கூட்டத்தில் சிறப்பான அய்ந்து தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் டெசோ இத்தகு தீர்மானங்களை நிறைவேற்றி யுள்ளது - உலகின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாகும்.

மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை சென்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் - பாதிக்கப்பட்ட தமிழர்களின் பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிப்புக்கு ஆளான தமிழர்களின் உள்ளக் குறைகளை நேரில் தெரிந்து கொண் டுள்ளார். உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கும் சென்றுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படு கொலையை உலக நாடுகளின் கண்களில் படாமல் தப்பிக்கச் செய்யலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த ராஜபக்சேவின் கபட முகத் திரையை ஒரு பயணத்தின் மூலம் கிழித்து ராஜபக்சே என்னும் மிகப் பெரிய இனப் படுகொலையாளியைச் சர்வதேச நாடுகளின் முன் குற்றவாளியாக நிறுத்தி விட்டார்.

இலங்கைக்குப் பல்லக்குத் தூக்கிக் கொண்டி ருந்த நாடுகள்கூட, உலகின் மிக முக்கிய நாடான இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தம் மனந்திறந்த பேட்டியைச் செவி மடுத்த நிலையில், தங்கள் கண்களைக் கழுவிக் கொண்டு, அகல விரித்து உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பிரகாசமாகி விட்டது.

ஏற்கெனவே பிரிட்டன் 4 அலைவரிசை வெளியிட்ட படங்கள் பேரதிர்ச்சி அலைகளை உலகம் முழுவதும் தட்டி எழுப்பின. இப்பொழுது அந்தப் பிரிட்டன் பிரதமர் அலைவரிசை நான்கின் நம்பகத் தன்மையை நன்கு வெளிப்படுத்தி விட்டார்.

இதற்காக உலகத் தமிழர்கள் மட்டுமல்ல; மனித உரிமையாளர்கள், மனிதநேயவாதிகள் ஒரு முறை நன்றி உணர்ச்சியுடன் மிகப் பெரிய வணக்கத்தைத் (ளுயடரவயவடி) தெரிவிக்க வேண்டும்.

அவருடைய கருத்து எந்த அளவுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு அளவுகோல் - ராஜபக்சேவின் மிகப் பெரிய அலறலில் இருந்து அறிய முடிகிறது.

இந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இங்கிலாந்து எடுத்திருக்கும் இந்த நிலைப்பாட்டை - பாத்திரத்தை நியாயமாக இந்தியா அல்லவா செய்திருக்க வேண்டும்; இந்தியா ஆற்ற வேண்டிய கடமையை இங்கிலாந்து ஆற்றிய பிறகாவது இந்தியாவின் மனசாட்சி உலுக்கப்பட்டு, புதிய சிந்தனைச் சாளரம் திறந்தால், இதுவரை அது நடந்து வந்துள்ள பழிகளுக்குக் கழுவாய்த் தேடிக் கொள்ள முடியும்.

இங்கிலாந்து பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற போராட்டம் இங்கிலாந்தில் நடைபெற்றது. அதனைப் பொருட் படுத்தாமல் பிரதமர் டேவிட் கேமரூன் செல்லு கிறாரே என்ற மனக் குறை இருந்ததுண்டு.

ஆனால், அவர் அதில் கலந்து கொண்டு, அவர் மேற்கொண்ட அணுகுமுறை அவர் கலந்து கொண்டதற்கான மிகப் பெரிய அர்த்தத்தை, நியாயத்தை ஏற்படுத்தி விட்டது.

தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி, காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இங்கிலாந்து பிரதமர் செயல்பட்டதுபோல செயல்பட்டு இருந்தாலாவது ஆறுதல் பெற்றிருக்க முடியும். அந்தக் கூட்டத்தில் அவர் எடுத்து வைத்த கருத்தென்ன? இலங்கை அரசை எந்த வகையிலாவது வலியுறுத்தி ஈழத்தில் அவதிப்படும் தமிழர்களுக்கு நல்லது நடக்க வழி செய்தாரா?

மாநாட்டில் கலந்து கொண்டால்தானே ஈழத் தமிழர்களுக்குப் பயன் ஏற்பட வலியுறுத்த முடியும் என்று அரசனை விஞ்சிய விசுவாசிகளாக தொண்டையைக் கனைத்துக் கொண்டு வார்த்தை ஜாலங்களை வண்ண வண்ணமாகக் குழைத்துச் சொன்னவர்கள், இப்பொழுது தங்கள் முகங்களை எங்கே கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இந்த நிலையில், இந்தியா சார்பில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொண்டு இருப்பதை டெசோ கண்டித்தது மிகவும் சரியான நடவடிக்கையே!

தமிழ் ஓவியா said...


பெரியார், அம்பேத்கர் சிலைகளை அமைக்க கோரிக்கடவு ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுகோரிக்கடவு, நவ. 18- தந்தை பெரியார், புரட்சி யாளர் அம்பேத்கர் சிலை களை அமைக்க கோரிக் கடவு ஊராட்சி மன்றத் தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இது குறித்து பழனி கழக மாவட்ட பகுத்தறிவா ளர் கழக செயலாளர் ச. திராவிடச் செல்வன் தெரிவித்திருப்பதாவது:- திண்டுக்கல் மாவட்டம், பழனி கழக மாவட்டம், கோரிக்கடவு கிராமத் தில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத் கர் ஆகியோர்களின் சிலைகளை அமைக்க கோரிக்கடவு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

கழக விண்ணப்பத் தினை ஏற்று 24.10.2013-ஆம் தேதி ஊராட்சி மன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அங்கீகரிக்கப்பட்டது.

தந்தை பெரியார் சிலை வைக்க அங்கீகரிக் கப்பட்ட தீர்மான எண்: 137, புரட்சியாளர் அம் பேத்கர் சிலை வைக்க அங்கீகரிக்கப்பட்ட தீர்மான எண் 138 என் பதை பெருமகிழ்ச்சியு டன் தெரிவித்துக் கொள் கிறேன்.

அங்கீகரிக்கப்பட்ட தீர்மானங்களின்படி கோரிக்கடவு திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார், புரட்சி யாளர் அம்பேத்கர் ஆகி யோரின் சிலைகளை அமைத்து பராமரித்துக் கொள்ள திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அனுமதி வேண்டி 13.11.2013 அன்று விண்ணப்பித்துள்ளோம் என்று திராவிடச் செல் வன் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


முள்ளிவாய்க்கால் முற்றம்: இடித்த இடத்திலேயே தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வேண்டும்!

முள்ளிவாய்க்கால் முற்றம்: இடித்த இடத்திலேயே தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வேண்டும்!
தொல்.திருமாவளவன் அறிக்கை!

சென்னை, நவ.18- தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர்களை இடித்த தமிழக அரசே அதனைத் திரும்ப கட்டிக் கொடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

தஞ்சை அருகே விளார் கிராமத்தில் எழுப்பப் பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எனும் நினைவிடத்தின் சுற்றுச்சுவரினை தமிழக அரசு திடீரென இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது.

மேலும், அவ்வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பூங்காவும் சிதைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து நினைவிடம் கட்டப் பட்டிருப்பதாகவும், அதனால் சுற்றுச்சுவரை இடித்ததாகவும் பூங்காப் பகுதியைக் கைப்பற்றியிருப்ப தாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்டு மானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதில் தலையிடாமல் அமைதி காத்த அரசு, அதன் திறப்பு விழா முடிந்த ஒரு சில நாட்களில், திடீரென நூற்றுக்கணக்கான காவல்துறையினரை இறக்கி, அதிகாலை வேளையில் அவசரம் அவசரமாக இடித்து நொறுக்கியது ஏனென்று விளங்கவில்லை.

காலக்கெடு வேண்டாமா?

சட்டவிரோதமாக அரசு நிலத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டிருக்குமெனில் அதனை அப்புறப் படுத்துவதற்கு, உரிய காலக்கெடுவுடன் அரசு உரிய வர்களுக்கு அறிக்கை அனுப்பியிருக்க வேண்டும். அவ்வாறு எந்த அறிவிப்பையும் செய்யாமல் நினை விடத்தை எழுப்பியவர்களுக்குப் போதிய காலக்கெடு வையும் வழங்காமல், திடீரென அதிரடி நடவடிக் கையில் இறங்கியதன் மூலம் அரசுக்கு ஏதோ உள் நோக்கம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இலங்கையில் காமன்வெல்த் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிற வேளையில், இந்திய அரசை எதிர்த்துத் தமிழகமே கொதித்துக் கொண்டிருக்கும் சூழலில், தமிழக மக்களின் எழுச்சியைத் திசை திருப்பும் வகையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தை நடத்தி இந்திய அரசைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றிய ஓரிரு நாட்களில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்திருப்பது, தீர்மானம் நிறைவேற்றியதையே கேள்விக்குள்ளாக்குவ தோடு, தமிழக அரசின் நம்பகத்தன்மையின் மீதும் அய்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக எழுப்பப்பட்டுள்ள இந்த முற்றம் தமிழ் மக்களின் இனம்சார்ந்த உணர்வுகளோடு தொடர்புடையதாகும். அத்தகைய சிறப்பைப் பெற்ற நினைவு மண்டபத்தை இடித்ததன் மூலம் தமிழக அரசு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் வெகுவாகக் காயப்படுத்தியுள்ளது.

அதிமுக அரசு, ஈழத் தமிழர்களுக்கு உற்ற துணையாய் நிற்கும் என்று நம்பியவர்களுக்குப் பெரும் ஏமாற்றத் தையும் அவநம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் முற்றம், தனியார் இடத்தில் எழுப்பப்பட்டிருந்தாலும் அது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் சொந்தமான நினைவிடமே என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

எனவே, உலகத் தமிழர்கள் அனைவருக்கும் சொந்த மான முள்ளிவாய்க்கால் முற்றத்தில், தமிழக அரசு மீண்டும் சுற்றுச்சுவரை எழுப்பவும் பூங்காவை அமைக்கவும் முன்வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

அத்துடன், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவர்கள் மீதான பொய் வழக்கு களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டு மெனவும் தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு தொல்.திருமாவளவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


கொழுப்பைக் கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கொள்ளு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு என்பது பிரபல மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும்.

புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.

புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இருவகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. எனவே, சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின்மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.

கொள்ளின் பலன்கள்

கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரைக் கொள்ளு எடுத்துவிடும். கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது.

ஆயுர்வேதத்தில் கொள்ளை தலையில் வைத்துக் கொண்டாடாத குறைதான். அதில் பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்சினைக்கு, இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த... இப்படி கொள்ளு குணமாக்கும் பிரச்சினைகளின் பட்டியல் நீள்கிறது.

அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவ தாக ஆயுர்வேதம் சொல்கிறது. சிக்குன்-குன்யா நோய் பாதித்தவர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆந்திராவில் மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். அது மட்டுமின்றி, கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்சினைகளுக்குத் தடவுகிறார்கள்.

சூட்டைக் கிளப்புமா?

கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு. கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

குதிரைக்கு கொள்ளு கொடுப்பதன் பின்னணியும் இதுதான். குதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது. கொள்ளு கொடுப்பதால் தான் குதிரை கொழுப்பின்றி, சிக்கென்று இருக்கிறது. உடல் திண்மையுடன் வேகமாக ஓடுகிறது. மனிதர்களுக்கும் அப்படித்தான்.

எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?

கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து தினமும் அப்படியே குடிக்கலாம். வேக வைத்த கொள்ளை, சாலட் போல சாப்பிடலாம். கொள்ளை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொண்டு, சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும் சேர்க்கலாம்.

உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கொழுப்பிலிருந்து இது நம்மைக் காப்பாற்றும். அசைவம் சாப்பிடுகிறவர்கள், குறிப்பாக மட்டன் பிரியர்கள், அத்துடன் கொள்ளு சேர்த்து சமைக்கலாம். மட்டன் அதிக கொழுப்பு நிறைந்தது.

கொள்ளு அந்த கொழுப்பை உடலில் தங்க விடாமல் காக்கும். அதற்காக தினமும் மட்டன் சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. இது என்றோ ஒரு நாளைக்குத்தான். மதியமோ, இரவோ பலமான விருந்து சாப்பிடப் போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.

அன்றைய தினம் காலையில் நொய்யரிசியும், கொள்ளும் சேர்த்துக் கஞ்சி செய்து குடித்தால், அடுத்தடுத்த வேளைகள் சாப்பிடப் போகிற உணவின் கொழுப்பினால் உடலுக்கு பாதிப்பு வருவது தவிர்க்கப்படும்.

தமிழ் ஓவியா said...


நல்ல உடல் நலத்திற்கு பாரம்பரிய உணவா? துரித உணவா?


நல்ல உடல் நலத்திற்கு பாரம்பரிய உணவுகளா? துரித உணவுகளா? என்பது பற்றி கோவை என்.ஜி.மருத்துவமனை சேர்மன் மற்றும் லேப்ராஸ்கோபி, எண்டாஸ்கோபி சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோகரன் விளக்கமளிக்கிறார்.

உணவே மருந்து என்பது நமது சித்தர்களின் கோட்பாடு. நம் நாட்டு உணவு முறையானது நமக்கு ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தருவதாகும். நமது முன்னோர்கள் பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றி வந்தனர். குறிப்பாக கேழ்வரகு, கம்பு, சோளம், தினை போன்ற தானியங்கள் மற்றும் பலவகை பயிறு வகைகளும் அன்றாட உணவில் பெரும் பங்கு வகித்தன.

சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகளையே உண்டனர். விழாக்காலங்களில் மட்டுமே அரிசியை சமைத்து உணவாக உண்டனர். அவர்களது உடல் நலம் மிகவும் ஆரோக்கியமாகவும், நல்ல திடகாத்திரமாகவும் இருந்தது.

தங்களது உடல் உழைப்பினால் உணவு உற்பத்தியினைப் பெருக்கி உலகிற்கு சத்தான உணவளித்து வந்தனர். மக்கிப்போன இலை தழைகள், மாட்டுச்சாணம் போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்த தானியங்கள் நச்சுத்தன்மை இல்லாமலும், வைட்டமின், புரதம் மற்றும் தேவையான சத்துக்கள் நிறைந்தும் காணப்பட்டன. அதனால் அவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் நோய் நொடி இல்லாத நீண்ட ஆயுளைக் கொண்டிருந்தனர்.

உணவில் பயன்படுத்தும் கடுகு, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, மிளகு, தானிய வகைகள் போன்றவை மருத்துவகுணம் மிகுந்தவை. அப்போது உணவே மருந்தாக இருந்தது. காலப்போக்கில் அதிக மற்றும் விரைவான உணவு உற்பத்திக்காக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி வருவதால் தானியங்கள், காய்கறிகள், பழவகைகள், கீரைகள் போன்ற அனைத்தும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி வருகின்றன. அவற்றை உட்கொள்ளும் நாம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம். மலட்டு விதைகளை பயன்படுத்துவதால் விளை நிலத்தின் தன்மையும் பாதிக்கப்படுகிறது.

அதனால் உணவு உற்பத்தி குறைந்து பிறகு அந்நிலங்கள் உற்பத்திக்கான பயன்பாட்டிற்குத் தகுதி இல்லாத நிலங்களாக ஆகிவிடுகின்றன. இதனால் நம் வாழ்வாதாரங்களான விளை நிலங்கள் உணவு உற்பத்திக்குப் பயனற்றுப் போகின்றன. அண்மைக்காலம் தொட்டு பாரம்பரிய உணவுமுறைகள் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து மேற்கத்திய உணவு முறைகள் நம் மக்களிடம் ஆதிக்கம் செலுத்தத் துவங்கியுள்ளன.

நுகர்வு கலாச்சாரத்தினாலும் கவர்ச்சியான விளம்பரங்களினாலும் பீசா, பர்கர் போன்ற ஜங்க் புட்ஸ் என்றழைக்கப்படும் குப்பை உணவுகள் சிறியோர் மற்றும் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்து அத்தகைய உணவுகளை உண்ணுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் இவ்வகை உணவுகள் நமது உடலின் எடையை மிக விரைவாக அதிகரிப்பதுடன் தன்னோடு பல கொடூரமான நோய்களையும் கொண்டு வருகின்றன. நீரிழிவு நோய், இதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம் என இவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.

தமிழ் ஓவியா said...

ரத்த உற்பத்திக்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்

உடலில் உள்ள ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசிய மாகும்.

இயற்கை உணவுகள் மூலம் ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம். நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் ரத்தம் அதிகமாக ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாள்களுக்கு ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.

தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும். பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து ரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் ரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

தமிழ் ஓவியா said...


தனிச் சலுகை

ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத்தினர்க்குத் தனிச் சலுகை தரப்படவேண்டும். - (விடுதலை, 8.12.1967)

தமிழ் ஓவியா said...சி.என்.ஆர்.ராவின் குற்றச்சாற்று


பாரத ரத்னா விருது இருவருக்கு அறிவிக்கப்பட் டுள்ளது. ஒருவர் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் இன்னொருவர் கிரிக்கெட் விளையாட்டுக்காரர் சச்சின் டெண்டுல்கர்.

முதலாமவருக்குப் பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டதில், எந்தவித சர்ச்சையும் கிடையாது. ஆனால் அவர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைப் புயலைக் கிளப்பி விட்டன.

அறிவியலுக்குப் போதுமான அளவு நிதி ஒதுக்கப் படாததால், அரசியல்வாதிகளை முட்டாள்கள் என்று கூறியதுதான் சர்ச்சைக்குக் காரணம்; பிறகு இதுபற்றி சிந்தாமணி நாகேச இராமச்சந்திரராவ் விளக்கம் அளித்துச் சமாதானம் சொல்லியுள்ளார். அது ஒருபுறம் இருந்தாலும், அவர் சொன்ன வேறு சில கருத்துக்கள் தள்ளுபடி செய்யப்பட முடியாதவை. அறிவியல் துறைக்குப் போதுமான அளவு நிதி அளிக்கப்படுவதில்லை என்பதில், தமது கோப நெருப்பைக் காட்டியுள்ளார்.

இத்துறையைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, ராவ் சொன்ன கருத்து சரியானது தான் - உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

நிதி உதவி குறைவானதாக உள்ளது என்பதோடு மட்டுமல்ல, கால தாமதமாகவும் கிடைக்கிறது என்றும் கூறியுள்ளார். இது நமது நாட்டுக்கே உரித்தான சிகப்பு நாடா முறையாகும்.

சீனாவைப் போல நாம் உழைப்பதில்லை. எதையும் நாம் எளிதாக எடுத்துக் கொள்கிறோம் (சோம்பேறிகள் என்று சொல்லலாமல் சொல்லுகிறார் என்பதைப் புரிந்து கொண்டால் சரி) என்று கூறியுள்ளார்.

ராவ் கூறியதில் இன்னொரு முக்கியமான கருத்து; நம்மிடையே அறிவியல் மனப்பான்மை இல்லை என்பதுதான், நூற்றுக்கு நூறு துல்லியமான கருத்து இது. இந்த ராவ் கூறிய மற்ற மற்ற கருத்துக்களை வெளியிட்ட தமிழ் ஏடுகள் இந்தக் கருத்தை மட்டும் திட்டமிட்டு இருட்டடித்து விட்டன. குற்றமுள்ள மனம் குத்தியதோ என்னவோ!

இந்திய அரசமைப்புச் சட்டம் 51A என்பதில் உட்பிரிவு (h) என்பதில் தெளிவாக திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

விஞ்ஞான ரீதியான அணுகுமுறை, மனப்பான்மை மனிதாபிமானம், ஆராய்வு ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவைகளை ஊக்குவிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின், அடிப்படைக் கடமையாகும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளது.

இது எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது நியாயமான வினாவாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதி மொழி எடுத்துக் கொண்டு பதவி நாற்காலியில் அமர்பவர்களில் எத்தனைப் பேர் இந்தச் சரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒரு கணமாவது நினைத்துப் பார்க்கக் கூடியவர்கள்?

மற்றவர்களுக்கு இந்த உணர்வை ஊட்டுவது ஒருபுறம் இருக்கட்டும்; முதலில் மத்திய அமைச் சர்கள், ஏன் குடியரசுத் தலைவர்; துணைக் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட இதன்படி ஒழுகுபவர்கள் எத்தனைப் பேர்!

அதையும்விட இன்னொரு உச்சக்கட்ட கொடுமை என்ன தெரியுமா? அறிவியல் துறையில் பணியாற்றும் விஞ்ஞானிகளிடம் முதலில் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அந்த விஞ்ஞான மனப்பான்மை உண்டா?

இஸ்ரோ சார்பில் ஒவ்வொரு முறையும் விண் கலத்தை ஏவும் போதெல்லாம் அதனுடைய இயக்கு நராக இருக்கக் கூடிய ராதாகிருஷ்ணன் என்ன செய்கிறார்?

அந்த அறிவியல் ஆவணத்தைக் கொண்டு போய் திருப்பதி ஏழுமலையான் பாதத்திலும், காளஹஸ்தி சென்று அங்குள்ள கோயில் சன்னதியிலும் வைத்துப் பூசை செய்து வருகிறாரே - வெட்கப்பட வேண்டாமா?

விண்கலம் ஏவப்படுவது ஏழுமலையான் சக்தி யாலா? ஏழுமலையான் எத்தனை ஆண்டுகாலமாக அங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ளான்? அப்பொழு தெல்லாம் மங்கள்யான் பறக்க விடப்படவில்லையே - ஏன்?

இயக்குநர் பொறுப்பில் இருப்பவர்களுக்கே விஞ் ஞான மனப்பான்மை இல்லாதிருந்தால், இளை யோர்கள் எத்தகைய தாக்கத்திற்கு ஆளாவார்கள்? படிக்கும் மாணவர்களின் மத்தியில் மூடத்தனத்தைத் தானே ஏற்படுத்தும்.

வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லு வதுபோல விஞ்ஞானிகளே! முதலில் நீங்கள் விஞ் ஞான மனப்பான்மையைப் பெறுங்கள் என்பதுதான் நமது வேண்டுகோள்!

தமிழ் ஓவியா said...


வாயைத் திறக்காதீர் குர்ஷித்!


சிலர் வாயைத் திறப்பதை விட திறக்காமல் இருந்தாலே உத்தமம். வாயைத் திறந்து எதையாவது கொட்டி வாங்கிச் சுமப்பதில் இந்தியாவின் வெளி யுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை அடித்துக் கொள்ள வேறு ஒருவரும் இல்லை.

இலங்கை சென்ற இவர், திருவாய் மலர்ந் தருளியுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான உதவிகளை மட்டுமே இந்தியா வழங்க முடியும். அதே நேரத்தில் இலங்கைப் பிரச்சினைக்கு அந்நாட்டு அரசும், மக்களும்தான் தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.

நிறவெறி காரணமாக தென் ஆப்பிரிக்கா புறக்கணிக்கப்பட்டபோது இந்தப் புத்தி அப் பொழுது வேலை செய்யவில்லையோ! வங்காள தேசம் உருவாக்கப்பட்டபோது - இந்த ஞானோதயம் எங்கே போயிற்றாம்! இவர் சொல் கிறபடி பார்த்தால் அய்.நா. மன்றம், மனித உரிமை ஆணையம் இவையெல்லாம்கூட வெட்டி அமைப்புகள்தானோ!

தமிழ் ஓவியா said...


கழகத்தின் முயற்சிக்கு வெற்றி!


பெரியார் சிலையை மூடிய தேர்தல்

ஆணையமே மூடிய துணியை அகற்றியது

சேலம், நவ.19- ஏற்காட்டில் நடைபெற உள்ள இடைத் தேர்தலையொட்டி அத்தொகுதி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள சிலைகளை தேர்தல் ஆணையம் துணி போட்டு மூடியது தந்தை பெரியார் சிலையையும் இரவோடு இரவாக மூடினார்கள்.

இந்தத் தகவல் தலைமைக் கழகத்திற்கு வந்தது. இதற்கு முன் 2011இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் இதே தவறைச் செய்த நேரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதியரசர் திரு பி. ஜோதிமணி அவர்கள் தலைவர்களின் சிலைகளை மூடியதை உடனே நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அந்த ஆணையைத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி, உடனே மூடப்பட்ட பெரியார் சிலையைத் தேர்தல் ஆணையமே நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் பட்டது. அதன்படி தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட அனைத்து தலைவர் களின் சிலைகளை மூடியிருந்த துணிகளை தேர்தல் ஆணையமே நேற்று அகற்றிவிட்டது.

தேர்தல் ஆணையம் மூடிய சிலையைத் திறந்ததற்குப் பிறகு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே. ஜவகர், துணைத் தலைவர் சி.பூபதி, செயலாளர் அரங்க இளவரசன் மாநகரக் கழகத் தலைவர் பி. வடிவேல் ஆகியோர் இன்று காலை தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். தோழர்கள் ஜவகர், சி. பூபதி அரங்க இளவரசன், அ.க. இளவழகன் கடவுள் இல்லை சிவகுமார், பரமசிவம் ஆகிய கழகத் தோழர்கள் அதிகாரி களைச் சந்தித்து இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.

தமிழ் ஓவியா said...


சீனாவின் முதல் குரல்: இலங்கை மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்!


பீஜிங், நவ.19- இலங்கை மனித உரிமை களை பாதுகாக்கவும், ஊக்கப்படுத்தவும் நடவ டிக்கை எடுக்க வேண் டும் என்று இலங்கை யின் நட்பு நாடான சீனா திடீர் அறிவுரை வழங் கியுள்ளது.

இலங்கையில் சமீபத் தில் நடந்த காமன் வெல்த் மாநாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் சார்பில் குரல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கையின் நட்பு நாடான சீனாவும் முதன்முதலாக இலங்கை மனித உரிமை பிரச் சினை குறித்து கருத்து தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கியின் காங் செய்தியாளர்களி டம் கூறியதாவது:-

பல்வேறு நாடுகளில் உள்ள பொருளாதாரம், சமூக மேம்பாடு ஆகிய வற்றோடு ஒப்பிடும் போது, இலங்கையில் மனித உரிமைகள் பாது காப்பு மாறுபட்டதாக இருக்கிறது.

எனவே இதில் முக்கி யமானது என்னவென் றால், உலகின் மற்ற நாடுகள் இலங்கைக்கு சாதகமான உதவிகள் வழங்கும்போது, இலங்கை மனித உரிமை களை பாதுகாக்கவும், ஊக்கப்படுத்தவும் நடவ டிக்கை எடுக்க வேண் டும் என்றார்.

இங்கிலாந்து நாட் டுப் பிரதமர் டேவிட் கேமரூன் அந்த மாநாட் டில் எழுப்பிய பிரச்சினை களின் அடிப்படையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கூடும் அய்.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கை மீது சர்வதேச விசா ரணை நடத்தப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர், இது காமன்வெல்த் உறுப்பு நாடுகளுக்கிடையே உள்ள ஒரு பிரச்சினை. ஆனால் அதேசமயம், மனித உரிமைகள் பிரச் சினை தொடர்பாக நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகளும், தகவல் தொடர்புகளும் அதிகரிக்க வேண்டும் என்று நான் கருது கிறேன்.

மனித உரிமைப் பிரச் சினைகள் குறித்து உலக நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை மற்றும் தகவல் தொடர்புகள் மூலம் நல்ல புரிதல் ஏற் பட வேண்டும். இது சர்வதேச மனித உரிமை களை ஊக்கப்படுத்தவும், மேம்படுத்தவும் உதவும் என்று நாங்கள் எப்போ தும் கூறிவருகிறோம் என்று கியின் கூறினார்.

இலங்கையின் மனித உரிமைப் பிரச்சினை குறித்து சீனா கருத்து கூறியிருப்பது இதுவே முதல்முறையாகும். இலங்கைக்கு சீனா பில் லியன் டாலர் கணக்கில் உதவிகள் புரிந்து வரு கிறது.

இலங்கையில் நடை பெற்ற இறுதி போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அய்.நா. மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தபோது கூட, சீனா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித் தது. ஆனால் இந்தியா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது.

காமன்வெல்த் அமைப் பில் உறுப்பினராக இல் லாதபோதும், கொழும் பில் நடந்த காமன் வெல்த் மாநாட்டு கட் டமைப்பு வசதிகளுக் கான நிதியை சீனா வழங் கியதும் குறிப்பிடத்தக்கது.