Search This Blog

12.11.13

கடவுளை இழிவுபடுத்தியது யார்? வீரமணியா? அதை எழுதியவர்களா?

கடவுளை இழிவுபடுத்தியது யார்?

தெய்வம் பல பல சொல்லி பகைத்தீயை வளர்ப்பவர் மூடர் என்றார் பாரதி. இப்படிப்பட்ட மூடர்களில் சிலர், ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து, இப்போது ஆளைக்கடிக்க ஆரம்பித்துள் ளனர். ஆம் நேற்றைய முன்தினம் (9.11.2013) அன்று திராவிடர் கழகம் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மதவாத -ஜாதியவாத எதிர்ப்புக் கருத்தரங்கில் பங்கேற்க வந்த, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் உருவப் பொம்மையை அசிங்கமாக அலங்கரித்து எரிக்க முயற்சித்ததோடு, கருத்தரங்க அரங்கத்திற்குள் புகுந்து தகராறு செய்யவும் முயற்சித்துள்ளனர்.

திருச்சியில் இந்த அராஜகத்தை அரங்கேற்றியவர்கள் பாரத முன்னேற் றக் கழகத்தினர்.

இதே போல் சென்ற மாதம் 28.9.2013 அன்று கடலூரில் தி.க. மாணவரணி மாநாட்டிற்கு செல்லும் வழியில் விருத் தாச்சலம் அருகே கி.வீரமணி சென்ற வேனை மறித்து, தேசிய யாதவ மகா சபை என்கிற அமைப்பினர் தாக்குதல் தொடுத்தனர்.

கூர்மையான கம்பிகள் மூலமாக பிரச்சார வேனுக்குள்ளிருந்த வீரமணியை தாக்க முயற்சித்துள்ளனர். அவருடன் சென்றவர்களின் உதவியால், எந்தப் பாதிப்பும் இல்லாமல் அவர் உயிர் தப்பினார். இந்த இரண்டு சம்பவங்களிலும் இந்துத்துவா காவித்தீவிரவாத கும்பலே ஈடுபட்டுள்ளது.

இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்ட வர்கள் யாதவ ஜாதி சங்கம் வைத்திருப் பவர்கள், ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் பரிவாரங்களும் தனது ஆக்டோபஸ் கால்களை விரித்து தற்போது ஜாதியாய்ப் பிரிந்துகிடக்கும் தமிழர்களை மெல்ல மெல்ல தன் பக்கம் இழுத்து தன் வயப்படுத்தி வைத்துக்கொண்டு அதைப் பக்கம் பக்கமாக படித்து அதில் உள் ளதைப் பேசினார். அதே போல் திருமா லின் அவதாரமான இராமாயண இரா மன், மகாபாரத கிருஷ்ணர் பற்றி அதில் என்ன இருக்கிறதோ அதைத்தான் படித்து கூட்டத்தில் காண்பிக்கிறார்.
அவர் மிகைப்படுத்தி பேசுவதில்லை. புராணப் புரட்டர்கள் எழுதிய பக்கங் களை புரட்டிப் புரட்டி காண்பித்து படித் துக் காண்பிக்கிறார். இதை இழிவுபடுத் தியதாகக் கருதினால், இழிவுபடுத் தியது வீரமணியா? அதை எழுதிய வர்களா?
எழுதியவர்கள் மீது தானே கோபப் பட வேண்டும். அதைத்தானே அவர் சொல்லி வருகிறார்.

தந்தை பெரியாராகட்டும் அதற்குப் பின் பெரியாரியலை நெறிமாறாமல் பரப்பும் வீரமணியாகட்டும், கையில் ஆதாரமான புத்தகங்கள் அல்லது குறிப்பேடு இல்லாமல் பேசுவது இல்லை.

கடவுள் இல்லை என்று சொல்பவர் கள் கடவுளை இழிவுபடுத்தியதும் கிடையாது. கோயில்களை இடித்ததும் கிடையாது.

கடவுள் இருக்கு என்று சொல்பவர்கள் ஒரு கடவுளை உயர்த்தி, மற்ற கடவுளை தாழ்த்தியும் பேசி வருகின் றனர். அதே போல் எல்லா இடங்களி லும் நானே இருக்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் சொன்னார் என்று சொல்லிவிட்டு, பாபர் மசூதியை இப்போது இடித்தனர். ஏற்கெனவே புத்தர் கோயில்களை இடித் தனர். சிவன் கோயிலை, பெருமாளை வழிபடுபவர்கள் இடித்தனர். பெருமாள் கோயிலை சிவனடியார்கள் இடித்தனர். எங்கேயாவது கடவுள் இல்லை என்ப வர்கள் கோயில்களை இடித்தனரா?.
புராணக் கதைகள் அந்தந்த காலத் தில் மனிதர்களால் புனையப்பட்டு வந்துள்ளது.

சிகண்டி என்கிற அரவாணியை முன்னிறுத்தி, சிகண்டி பின் நின்றுதான் பீஷ்மரை வீழ்த்தினான். அர்ச்சுனன் என்று மகாபாரதம் கூறுகிறது. அதே போல் ஆரியப் பார்ப்பனீயம், பிற்படுத்தப் பட்டோர்களையும், தாழ்த்தப்பட்டோர் களையும், சூத்திரர், பஞ்சமர் என்று இழிவுப்படுத்தியதோடு கலவரங்களை அரங்கேற்றும்போது இதே சூத்திரர் களையே அடியாட்களாகவும் பயன் படுத்தி வருகின்றன.

பலிபீடம் நோக்கி தானே நகரும் பலியாடுகளாய், பீடத்தின் உயரத்தில் மனுவெனும் வெட்டரி வாளோடு காத் திருக்கும் ஆரியம் நோக்கி சூத்திரர் களும், பஞ்சமர்களும் பக்தி மயக்கத்தில் நகர்ந்து கொண்டேயிருக்கின்றனர்.
மடமையை நாட்டில் மலிவு செய்தால் உடைமையை இலேசாய் உறிஞ்சலாம் எனப்பாவேந்தர் கூறியதற்கேற்ப, அறியாமை இருளைப் பரப்பித் தங்கள் ஆதிக்கத்தையும், வசதியையும், காப் பாற்றிக்கொள்வோர். இதை அரசிய லிலும் புகுத்தி ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கின்றனர்.

இந்த அறியாமை இருளை விலக்கி, சிந்தனை வெளிச்சத்தை பாய்ச்சுவோர் தான் மார்க்சியர்களும், பெரியாரிய வாதிகளும்.

எனவே தான் அவர்களுக்கு எதிராக யாரை விடுவிக்கப்போராடுகிறோமோ, அவர்களைக் கொண்டே தாக்கு கின்றனர்.

சிந்திக்க அஞ்சுபவர் கோழை;
சிந்திக்க மறுப்பவர் மதவாதி;
சிந்திப்பவரே பகுத்தறிவுவாதி;

எனத் தந்தை பெரியார் தெளிவு படுத்துவார்.

சிந்திக்க ஆரம்பித்தால் சூத்திரராக இருப்பதையே பெருமையாகக் கருதும் இந்த அமைப்பினர் உண்மையில் யாரைத்தாக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்வர்.

ஆரியர்களின் வைப்பாட்டி மகன்கள் சூத்திரர்கள் என்று வேதங்கள் சொல் கிறது. இதைப் பெருமையாக கருத முடி யுமா? இந்த அமைப்பினர் எதையும் படிப்பதில்லை. படிக்காமலேயே கோபப் பட வேண்டியவர்கள் மீது கோபப்படா மல், உண்மையைச் சொல்பவர்கள் மீது கோபப்படுகின்றனர்.
தற்போது தி.க.தலைவர் கி.வீரமணி மீது எதற்காக கோபப்பட்டார்கள்.
பகவத் கீதை பற்றியும், கிருஷ்ணர் பற்றியும் அவர் இழிவாகப் பேசுகிறார் என்று சொல்கிறார்கள்.

அவர் எங்கே இழிவுபடுத்தினார். பகவத் கீதையை கையில்  கதை. எனவே மனிதர்களின் அடிமன வக்கிர உணர்வு களையெல்லாம் கடவுள் கதையாக சொல்லி வைத்துள்ளனர்.

இந்த உண்மையைப் புரிந்து கொண் டால், கடவுள்களின் பிறப்புகள் மதிப் புடையதாக இருக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். எனவே பெரியாராகட்டும், வீரமணியாகட்டும், மார்க்சியர்களாகட்டும் கடவுளை மரி யாதைக் குறைவாக இழிவுபடுத்த வில்லை.

புராணப் படைப்புகளே இழிவுபடுத்து கின்றன. பார்வதியின் அழுக்கு உருண்டைதான் பிள்ளையார் என்கிறார்கள். கிருஷ்ணன் லீலைகள் பற்றி கதை, கதையாகச் சொல்கிறார்களே. அதைப்படித்துவிட்டு அதே போல் பெண்களிடம் இன்றைய இளைஞர்கள் நடந்து கொண்டால், ஈவ்டீசிங் வழக்கில் கைது செய்யப்படுவார்கள்.

இராமன் முருகன் பிறப்பு பற்றி யெல்லாம் அசிங்கம் அசிங்கமாய் ஆபாச மாய் வீரமணியா எழுதி வைத்தார்? இதிகாசங்கள் என்று போற்றப்படும் ராமாயணமும், மகாபாரதமும் கந்தப் புராணங்களுமே கூறுகிறது.
அதையெல்லாம் அப்படியே படித்தால் புளூபிலிம் பார்ப்பதற்கு சமமான ஆபாசக்காட்சிகள் தான் நிரம்பியிருக் கிறது. இந்த உண்மையைச் சொன்னால் சொல்பவர் மீது கோபப்படுகிறீர்கள்.

கடைசியாக இரண்டு கேள்விகளை இந்த அமைப்பினருக்கு கேட்க விரும்பு கிறேன்.

கிருஷ்ணர் யாதவ குலத்தைச் சேர்ந்தவர். எனவே கிருஷ்ணரை அவமானப் படுத்தினால், எங்கள் ஜாதியை அவமானப்படுத்தியதாக கருதுகிறோம் என்று சொல்கிறீர்களே. கிருஷ்ணர், திருமாலின் அதாவது பெருமாளின் அவதாரம் தானே. அப்படியானால் திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் கருவறைக்குள் நீங்கள் சென்று வழிபடுங்களேன், பார்க்கலாம்.

உங்களை உசுப்பேத்திய பார்ப்பனீய தலைமைப் பார்த்துக் கொண்டிருக்குமா? அனுமதிக்குமா? சோதித்துப் பாருங்கள்.

இரண்டாவது திருமால் பன்றி அவதாரமும் எடுத்தார். எனவே பன்றி வளர்ப்பில் ஈடுபடும் தாழ்த்தப்பட்டவர்களை திருமாலின் வாரிசுகளாக ஏற்றுக் கொள்கிறார்களா? என்றும் கேளுங்கள். அப்போது தெரியும். அவர்களின் உண்மை உருவம்.

--------------------------- த. இந்திரஜித்   (மாநில நிர்வாக குழு உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜனசக்தி 11.11.2013, பக்கம் 3)

16 comments:

தமிழ் ஓவியா said...


பக்....தீ!


நமது தமிழ் நாளேடுகள் ஒவ்வொரு நாளும் இணைப்புகளை (Supplementary) வெளியிடுகின் றன. வியாபார யுக்தியோடு போட்டி போட்டு இலவச இணைப்பாக அவை வெளியிடப்படுகின்றன.

ஆன்மீகம், சோதிடம் இளைஞர், மகளிர் என்ற தலைப்புகளில் வெளி வந் தாலும் - தப்பித் தவறிக்கூட அறிவியல் என்றோ பகுத் தறிவு என்றோ இணைப் புகளை வெளியிட்டு விட மாட்டார்கள். மக்களுக்குப் பகுத்தறிவு வந்துவிடக் கூடாது என்பதில் அவ் வளவு அக்கறை.

பகுத்தறிவு வளர்ந்து விட்டால் இந்தக் குப்பை களைச் சீந்த மாட்டார்களே - அதன் பின் பத்திரிகை வியாபாரம் படுத்துவிடுமே - கல்லாப் பெட்டி நிரம் பாதே!

இது தெரியாத பைத் தியக்காரர்களா அவர்கள்? அதே நேரத்தில் பகுத்தறிவு வாதிகள் தோலுரித்துக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஒரு நாளிதழ் வெளி யிட்ட ஆன்மிகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்.

கோபியர்களின் ஆசை என்பது தலைப்பு..

கிருஷ்ணனின் வீரம்; அலங்காரம், அவனது குழலோசை, தூய்மையான மனம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு, அவனிடம் தங்கள் மனதைப் பறி கொடுத்தனர் கோபிகள். கிருஷ்ணன் தனக்குக் கண வனாக வர மாட்டானா? என எண்ணத் துவங்கினர். அவனது புல்லாங் குழல் இசையால் ஈர்க்கப்பட்டு, தங்களை மறந்து நிற்பார் கள். திருமணமான பெண் களும்கூட கண்ணனைக் காதலித்தனர். அவன்மீது அன்பு கொண்டிருந்தனர்.

கிருஷ்ணன் நடந்து செல்லும்போது, அவனது காலடிபட்டு அந்த மண் சிவந்து போகும். அந்த மண்ணை எடுத்துப் பெண் கள் மஞ்சளுக்குப் பதில் உடலிலும், முகத்திலும் பூசிக் கொள்வார்கள். அதன் காரணமாக அவர்களது காம இச்சைகள் அடங்கிப் போகும் என்பதுதான் அது.

இதற்கு ஆயிரம் ஆயிரம் விளக்கம் கூறி அச மடக்க முயற்சிப்பார்கள் பாகவதர்கள்.

யாராக விருந்தாலும் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லியாக வேண்டும் கடவுளைப் பார்த்தால் ஒரு பக்தைக்குப் பக்தி வருமா? காமம் வருமா என்பதுதான் அந்தக் கேள்வி.

காமம் வருகிறது என் றால் அது என்ன பக்தி? கண்ணனைக் கட்டிப் பிடிக்க முடியாவிட்டால் அவன் காலடி மண்ணை உடம்பெல்லாம் பூசி காம இச்சையை அடக்கிக் கொள்வது என்றால் இதற் குப் பெயர் பக்தியா? வக்கிரப் புத்தியா?

இதைச் சொல்லுவ தற்கு, தூண்டுவதற்குத் தான் ஆன்மிக இதழ்களா?

உள்ளதைச் சொன் னால் உபத்திரவமா? அறி வோடு சிந்திக்க வேண் டாமா?

- மயிலாடன் 12-11-2013

தமிழ் ஓவியா said...

காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பதா?

பிரதமர் கலந்து கொள்ளாததால் ஏற்பட்ட நல்ல உணர்வினை இது வீணடித்து விட்டது!

காலந் தாழ்ந்து விடவில்லை - மறுபரிசீலனை செய்திடுக! தமிழர் தலைவரின் வழிகாட்டும்
முக்கிய அறிக்கை

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் கலந்து கொள்ளாததால் ஏற்பட்ட உணர்வை வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பதால் வீணடித்து விட்டது என்றும், இன்னும் காலந் தாழ்ந்துவிடவில்லை; வெளியுறவுத் துறை அமைச்சரும் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் இவ்வாரம் தொடங்கவிருக்கும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டினை இந்தியா புறக்கணிக்க வேண்டும்; காரணம் அந்நாடு கொத்துக் குண்டுகளை வீசி சொந்த நாட்டு மக்களான ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்ததோடு மனித உரிமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தல் நடைபெற்ற பின்புகூட, அவர்களுக்கு எவ்வித உரிமைகளையும் தராது, இராணு வத்தை அங்கே இன்னமும் நிறுத்தி வைத்துள்ளது;

அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை ஆய்வுக்கு வந்தபோதுகூட, அவமதிப்புச் செய்து கொச்சைப்படுத்தியது; கருத்துச் சுதந்திரம் எதுவும் கிடையாது;

சிங்களவர் ஆன போதிலும் - அது கிடையாது என்பதுபோல அங்கே தலைமை நீதிபதியான பெண்மணி ஒருவரையே பதவி நீக்கம் செய்த ஜனநாயக விரோத சர்வாதிகாரப் போக்கு என்பதையெல்லாம் சுட்டிக் காட்டி, உலகத்தார் குரல், தமிழர் வாழ்வுரிமையைப் பாதுகாப்பது - இவற்றையெல்லாம் உள்ளடக்கிய காரணிகளால்தான் தமிழ்நாட்டில் டெசோ தீர்மானம் மூலம் முதன்முதலாக குரல் கொடுத்து, நாடு தழுவிய அளவில் பெருந் திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு

தமிழக சட்டமன்றத்தில், தமிழக அரசு சார்பாக முதல் அமைச்சரால் முன்மொழியப்பட்ட காமன்வெல்த் மாநாட்டினை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்ற தீர்மானம், அனைத்துக் கட்சியினராலும் வழிமொழியப் பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, தமிழ்நாடே கொதி நிலையில் உள்ளது - இப்பிரச்சினையில் என்று காட்டும் வகையில், மாணவர்கள், வணிகர்கள், விவசாயிகள் போன்ற அனைத்துப் பிரிவினர்களும் அறப் போர்கள் மூலம் இதே உணர்வை, மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினர்!

மத்திய அரசும் மவுனத்தைக் கலைத்தது; பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறியது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறது என்று ஆறுதல் கொள்ளும் வண்ணம் அமைந்தது.

பாதிக் கிணறு தாண்டிய புத்திசாலிகள்

ஆனால் வெளி உறவுத்துறை அமைச்சர் திரு சல்மான் குர்ஷித் என்பவர் அதிகாரிகளுடன் கலந்து கொள்ளுவார் என்றுகூறி, அனுப்பி வைப்பதன் மூலம், எந்த நோக்கத் திற்காக பிரதமர் திரு. மன்மோகன் சிங் கலந்து கொள் வதைத் தவிர்த்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறாத வண்ணம் - இருபுறத்தினரும் ஏற்காத ஒரு இரண்டுங் கெட்ட நிலையைத்தான் ஏற்படுத்தி விட்டது; இது ஒருபோதும் இராஜதந்திரம் ஆகாது, பாதிக் கிணறு தாண்டிய புத்திசாலித்தனமாக(?) தான் கருதப்படும்.

பாம்புக்குத் தலை, மீனுக்குவால் என்ற விலாங்குத் தன பாசாங்காகத்தான் உலகத்தார் கண்முன் இது தென்படக் கூடும்.

பிரதமர் கலந்து கொள்ளாத உணர்வை வீணடிப்பதா?

இன்று மாணவர்களின், மக்களின் அனைத்துக் கட்சிகளின் உணர்வுகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு, வெளி உறவுத்துறை அமைச்சரை அனுப்புவதன் மூலம், புறக்கணிக்கவில்லை என்று பதிவு செய்வது, பிரதமர் கலந்து கொள்ளாததன் காரணமாக ஏற்பட்ட உணர்வையே வீணடித்து விட்டதாகத்தானே ஆகும்!

எனவே, இன்னமும் காலந் தாழ்ந்து விடவில்லை; இதையும் மத்திய அரசு மறுபரிசீலனை செய்வது அவசரம் அவசியம். அரசியல் ரீதியாக காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமும் - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான பாதுகாப்பும்கூட இதில் அடங்கியுள்ளது.

காலந்தாழ்ந்து விடவில்லை

புறக்கணிப்பு என்பது ஒருவகையான எதிர்ப்பு (Protest) என்னும்போது அதை முழுமையாகச் செய்து காட்டுவது தானே சரியானது?

எனவே இன்னமும் காலந்தாழ்ந்துவிடவில்லை; அதிகார வர்க்கம், உயர் ஜாதி ஊடக வர்க்கம் - இவை திட்டமிட்டே காங்கிரசைக் கவிழ்த்து விட்டு, பா.ஜ.க., பதவிக்கு வருவதற்கு இப்படி இந்திய அரசின் மூக்கைச் சொறியும் தந்திரத்தை - பழைய காக்கை - நரி வடை கதை போல் செய்கின்றன. ஏமாந்து விடக் கூடாது. உலகத் தமிழர்கள் உணர்வுகளும், டாட்டு பாதிரியார் போன்ற மனித உரிமை ஆர்வலர்களின் கருத்துக்களை அலட்சியப் படுத்தக் கூடாது என்று மத்திய அரசை வற்புறுத்து கிறோம்.


சென்னை
12.11.2013

வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


கழகக் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி! 13,500 மக்கள் நலப்பணியாளர்களின் பணி நீக்க உத்தரவு ரத்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை


புதுடில்லி, நவ.12-மக்கள் நலப்பணியாளர் கள் 13,500 பேரை பணி நீக்கம் செய்தது செல் லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப் புக்கு தடை விதித்த துடன், வழக்கை மீண் டும் விசாரித்து, ஆறு மாதத்தில் தீர்ப்பளிக்கும் படியும் அதிரடி உத்தரவு போட்டுள்ளது. வழக் கில் இரு தரப்பினரும் வாய்தா கேட்டு கால தாமதம் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர் கடந்த 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நியமிக்கப் பட்டனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய் தது.

அதை நீதிபதி சுகுணா விசாரித்து, மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டார். அதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு நீதிபதிகள் விசா ரித்தது. விசாரணைக்கு பின்னர், மக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத ஊதியத்தை நிவார ணமாக அளித்து, அவர் களை பணி நீக்கம் செய் யலாம் என்று தீர்ப்பு அளித்தது. பணி வழங் கக் கோரிய மக்கள் நலப்பணியாளர்களின் வழக்கையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி மக்கள்நலப் பணி யாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் மதி வாணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதை உயர் நீதிமன்றம் தள்ளு படி செய்து விட்டது. அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மக் கள் நலப் பணியாளர் கள் சார்பில் மேல்முறை யீடு மனு தாக்கல் செய் யப்பட்டது.

இந்த மனுவை நீதி பதிகள் ஜெயின், மதன் லோக் ஆகியோர் விசா ரித்தனர். அப்போது, கடந்த 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பணி யில் சேர்ந்த 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணி யாளர்கள், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பணி நீக்கம் செய்யப்பட்ட னர். இதுபோல 3 முறை இப்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களை நியமிப்பதும், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களை நீக்குவது மாக தொடர்ந்து நடந் துள்ளது. அவர்களை கால்பந்து என்று கருதி அரசு விளையாடியிருக் கிறது. எனவே மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்று தமிழக அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு கடந்த ஒரு ஆண்டாக நிலுவை யில் இருந்தது. இந்நிலை யில், இந்த வழக்கு நீதிபதிகள் அனில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய டிவிஷன் அமர் வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதி பதிகள், மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்த உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசா ரித்து தீர்ப்பளிக்க வேண் டும். 6 மாதத்தில் விசா ரணையை முடித்து தீர்ப்பு அளிக்க வேண் டும் என்று அதிரடியாக தீர்ப்பளித்தனர்.

மேலும், அவர்கள் கூறுகையில், மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத் தலைவர் பதவியி லிருந்து நீக்கப்பட்ட பழனியப்பன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, அவர் 5 மாதம் ஊதியம் கொடுத் தால் போதும் என்று கூறியதை ஏற்று உத்தர விடப்பட்டுள்ளது சரி யான நடைமுறையா காது.

இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை டிவிஷன் அமர்வு ஏற்க மறுத்ததும் தவறானது. பல ஆண்டுகளாக பணி யாற்றிய மக்கள் நலப் பணியாளர்களை தமி ழக அரசு பணி நீக்கம் செய்தது தவறானது. அவர்கள் வாழ்க்கையை அரசு விளையாட்டாக கருதியுள்ளது என்றும் தெரிவித்தனர்.

எனவே, உயர்நீதிமன் றத்தில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். 6 மாத விசாரணைக் காலத்தில் அரசுத் தரப்பும், மக்கள் நலப் பணியாளர்கள் தரப்பிலும் வாய்தா கோரி வழக்கில் காலதா மதத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிபதி கள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


குஜராத்தில் மதுவிலக்கு படும்பாடு

இந்தியாவிலேயே காந்தி பிறந்த குஜராத்தில் மட்டும் தான் மதுவிலக்கு அமலில் உள்ளது என பெருமை பேசுவதுண்டு. ஆனால், அங்கு மதுவிலக்கு என்ன பாடுபடுகிறது தெரியுமா?

குஜராத்தில் குடிகாரர்கள் நல்லமுறையில் உபசரிக்கப்படுகிறார்கள். உள்ளூர் முறைகேடான சாராய வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர் களுக்கு குஜராத் நகரங்களில் எந்த நேரமும் மதுபானம் கிடைக்கும்.

சட்டப்படி அனுமதி பெற்றுள்ள மதுபானக் கடை களும் உள்ளூர் சாராயத்திற்கு அதிக இடமளிப்ப தால் அரசுக்கு சேர வேண்டிய வரி, காவலர் கலால் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் களுக்கு கிரிமினல் குற்றவாளிகள்மூலம் கிடைக் கிறது. சட்டத்துக்கு புறம்பான மதுபான விற்பனையால் அரசியல்வாதிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதால் அங்கு ஒரு போதும் மதுவிலக்கு நீக்கப்படாது. அவர் களின் பாதுகாவலில் இந்த முழு வேலைகளும் நடப்பதால் மதுவிலக்கு அங்கு நீடித்து நிலைக்கும்.

இந்த சாராய விற்பனையால் குஜராத்தில் அரசுக்கு வருவதைவிட ஆளும் கட்சிக்கு அதிக பணம் கிடைக்கிறது. இதுதான் குஜராத் மது விலக்கு. இது நாட்டுக்கு தேவையா?
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா அக்.23 பக்.7 இதழிலிருந்து...

தமிழ் ஓவியா said...


மதக் குறி


மதக் குறி என்பது மாட்டு மந்தைக்-காரன் தனது மாடுகளுக்குப் போடும் அடையாளம்போலவே, மதத் தலைவன் தன் மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்பதைக் காட்ட ஏற்படுத்திய குறியேயாகும்.

(விடுதலை, _ 25.5.1950)

தமிழ் ஓவியா said...


மதவாதத்தை நிராகரிப்போம்!

திருச்சிராப்பள்ளியில் கடந்த 9ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட திராவிடர் எழுச்சி மாநாடு பல வகைகளிலும் சிறப்பையும், பெருமையையும் பெற்று விட்டது. காலங் கருதி நடத்தப்பட்ட அம்மாநாட்டில் காலத்தின் அவசியம் கருதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அதன் தனித் தன்மையை மேலும் உயர்த்தி விட்டன. மதவாதத்தை நிராகரிப்போம் என்னும் தலைப்பில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானம் மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தொடக்கமே இப்படியாக இருக்கிறது.

பாரத தேசத்தை மதச் சார்பற்ற சமதர்மக் குடியரசாக அமைப்பதற்கு இந்திய மக்களாகிய நாங்கள் உறுதி பூண்டு, இந்திய மக்கள் அனைவருக்கும் சமூக, பொருளதார, அரசியல் நீதி, எண்ண, எழுத, எடுத்துச் சொல்ல நம்பிக்கை வைக்க, வழிபாடு செய்ய, சுதந்திரம், தரத்திலும், தகுதியிலும், வாய்ப்பிலும் சமத்துவம் ஆகியவற்றை அளிப்பதற்கும் எங்களிடையே தனி மனிதனின் கவுரவம் மற்றும் தேசிய ஒற்றுமையையும், ஒருமைப் பாட்டையும் உறுதியளிக்கத்தக்க சகோதரத் துவத்தை வளர்க்கவும் உறுதி எடுத்துக் கொள் கிறோம் எடுத்த எடுப்பிலேயே மதச் சார்பற்ற சமதர்மக் குடியரசு என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அடிப்படைக்கு விரோதமாக பாரதீய ஜனதா என்னும் கட்சி இந்து ராஜ்ஜியம் அமைப்பதாகக் கூறும் நிலையில், தேர்தலில் நிற்பதற்கே தகுதி உடையது தானா என்பது மிக முக்கிய கேள்வியாகும்.

பா.ஜ.க.,வினால் பிரதமருக்கான வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திருவாளர் நரேந்திரே மோடி என்பவர் தன்னைப் பற்றிக் கூறும்போது இந்து நேஷனலிஸ்ட் என்றே கூறியுள்ளார்.

திருச்சி திராவிடர் எழுச்சி மாநாடு இதனை எடுத்துக்காட்டி, இப்படிச் சொல்லுகிற ஒருவரைப் பிரதமராக அறிவித்திருப்பது - இந்திய அரசமைப்புச் சட்டப்படி குற்றமானதல்லவா என்ற வினாவை எழுப்பியுள்ளது.

மதச் சார்பின்மை என்பதற்கு தங்கள் விருப்பம் போல வியாக்கியானம் செய்வது திசை திருப்பும் வேலையாகும்.

என்னைப் பொறுத்தவரையில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் மதச் சார்பின்மை என்று கூறியுள்ளார் (துக்ளக் ஆண்டு விழாவில் மோடி பேசியது).

மதச் சார்பின்மை என்பதற்கான உண்மையான பொருளை எதிர் கொள்ள முடியாத நிலையில், அதனைத் திசை திருப்புவதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

செக்குலரிசம் (மதச் சார்பின்மை) என்ற சொல் எந்த மொழியைச் சேர்ந்தது? அந்த மொழியில் இந்தச் சொல்லுக்கு என்ன பொருள் கூறப்பட்டுள்ளது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

சென்னைப் பல்கலைக் கழக முயற்சியால் டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார் அவர்களைத் தலைமை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட ஆங்கிலம் - தமிழ்ச் சொற் களஞ்சியம் என்ன கூறுகிறது?

செக்குலர் என்றால் இவ்வுலகுக்குரிய, உலகியல் சார்ந்த, சமயஞ் சாராத என்று தெளிவாகவே வரையறை செய்துள்ளது. ஆக்ஸ்போர்டு அகராதி என்ன கூறுகிறது? Not Concerned with Religion மதம் சாராத - மதத் தொடர்பில்லாத என்னும் பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த உண்மைக்கு மாறாக தன் விருப்பத்திற்கு ஏற்ப இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப் பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விளக்கம் கூறக் கூடியவர்தான் அடுத்த பிரதமருக்கான வேட்பாளரா?

ஏன் இப்படி வியாக்கியானம் செய்கிறார்கள் என்றால், அவர்களின் உள்ளத்தில் தேக்கி வைத் திருக்கும் இந்துத்துவாவுக்கு எதிரானதாயிற்றே அதனால்தான்!

உண்மையான மதச் சார்பின்மைமீது மோடிக்கு நம்பிக்கை இருக்குமானால், குஜராத்தில் சிறு பான்மை மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டு இருப்பார்களா?

காரில் போகும்போது அடிபடும் நாய்க்குச் சமம் என்று சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டதைக் கருதுகிறார் என்றால் அவரிடம் உண்மையான மதச் சார்பின்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? மதவெறியைத்தான் எதிர்பார்க்க முடியும்.

இந்த நிலையில் தான், பிஜேபியின் முகத் திரையைக் கிழித்துக் காட்டி, மக்களையும் அரசியல் கட்சிகளையும் எச்சரிக்கை செய்திருக்கிறது திரா விடர் கழகம் நடத்திய திராவிடர் எழுச்சி மாநாடு

தமிழ் ஓவியா said...

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் ஒரு துரும்புகூட பங்கேற்கக்கூடாது! தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி


சென்னை, நவ.12- செய்தியாளர்களை இன்று சந்தித்த தி.மு.க. தலைவர் கலை ஞர் அவர்கள் காமன்வெல்த் மாநாட் டில் இந்தியாவின் சார்பில் ஒரு துரும்புகூட பங்கேற்கக்கூடாது என்று தெரிவித்தார்.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அவசரக் கூட்டம் இன்று (12.11.2013) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள முர சொலி மாறன் வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டம் முடிந்ததும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அதன் விவரம் பின்வருமாறு:

செய்தியாளர்: இன்று நடைபெற்ற தி.மு. கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது?

கலைஞர்: இன்றைய தினம் மாலையில் தமிழகச் சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் ஒன்று கொண்டுவரப் படுவதாகவும் - குறிப்பாக அது இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்ததாகவும் இருக்கும் என்று கருதப்படுவதால், அந்தக் கூட்டத்தில் தி.மு.கழகத்தின் நிலை குறித்து - நம்முடைய தி.மு.க. உறுப்பினர்கள் எப்படி பங்கேற்கவேண்டும், எப்படி பேச வேண்டும், நம்முடைய கருத்தை எந்த வகை யிலே எடுத்து வைக்கவேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டது.

இலங் கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசின் சார்பிலே தீர்மானம் கொண்டு வரப்படு மேயானால், அதில் எத்தகைய கருத்து வேறுபாடும் இல்லாமல் ஒருமனதாக ஆத ரித்து நிறைவேற்றுவதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய ஒற்றுமையை எடுத்துக்காட் டுவதாக இருக்கும் என்ற வகையில், நம் முடைய தி.மு.க. உறுப்பினர்கள் தீர்மா னத்தை வெற்றிகரமாக அமைதியாக நடத் திச் செல்வது குறித்து இன்றைய காலைக் கூட்டத்திலே விவாதிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

செய்தியாளர்: இன்று சட்டசபையில் கொண்டுவரப்படும் தீர்மானம், கடுமையாக மத்திய அரசைக் கண் டிக்கும் வகையிலே இருந்தால், தி.மு. கழகத்தின் நிலை என்ன?

கலைஞர்: மத்திய அரசை வேண்டுமென்றே யாரும் கண்டிக் கப் போவதில்லை. நம்முடைய தமிழ்ச் சொந்தங்கள் இலங்கை யிலே அனுபவித்து வருகின்ற தொல்லைகளையும், வேதனை களையும் எடுத்துக்காட்டியும் கூட, மத்திய அரசு அதைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகளை இதுவரையில் மேற்கொள்ளாத தைச் சுட்டிக்காட்டவும், குறைந்த பட்சம் காமன்வெல்த் மாநாட் டிலே இலங்கையைப் புறக்கணித்து விட்டு, அதற்குச் செல்லாமல் இருக்கக்கூட இந்திய அரசு எங் களுடைய கருத்தை முழுமையா கக் கேட்கவில்லை. அதற்கு நாங் கள் எங்களுடைய அதிருப்தியை வெளியிட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

பிரதமர் மன்மோகன்சிங் அவர் கள் காமன்வெல்த் மாநாட்டிற்கு போகவில்லை என்பதைப்பற்றி செய்தியாளர்களாகிய நீங்கள் கேட்டபோதே அது ஓரளவிற் குத்தான் ஆறுதல் என்று நான் சொல்லியிருக்கிறேன். இந்தியா விலிருந்து இலங்கை காமன் வெல்த் மாநாட்டிற்கு ஒரு துரும்புகூடச் செல்லக்கூடாது என்பதுதான் எங்களுடைய திட்டவட்டமான கருத்து என்று சொல்லியிருக்கிறேன்.

செய்தியாளர்: இப்படிப் பட்ட சூழ்நிலையில், மத்திய அரசை வெகுவாகக் கண்டித்து ஒரு தீர்மானம் சட்டசபையிலே வந்தால், உங்களுக்கு ஆட் சேபணை இருக்குமா?

தமிழ் ஓவியா said...

கலைஞர்: தமிழர்களின் நலன்களுக்காக அந்தக் குறிக்கோளோடு தீர்மானம் வருமேயானால், இலங்கையிலே வாடிக் கொண்டிருக்கின்ற - அனா தைகளாக - அபலைகளாக ஆக்கப்பட்டிருக்கின்ற தமிழர்களுக்கு கைகொடுக்கும் வகையில் வருகிற தீர்மானத்தை ஆதரிப்பதை நாங்கள் எங்களுடைய கடமையாகக் கருதுகிறோம்.

செய்தியாளர்: முக்கியமான இந்தத் தீர்மானம் பேரவையில் கொண்டுவரப்படுகின்ற நேரத்தில், இன்று நடைபெறும் பேரவைக் கூட்டத்தில் நீங்கள் கலந்துகொள்வீர்களா?

கலைஞர்: நான் சென்று அமருவதற்கு ஏற்ப, அங்கே எனக்கு அமர இடம் இல்லை.

செய்தியாளர்: காமன்வெல்த் பல் இல்லாத புலி, அதிலே கலந்துகொள்வதில் பிரயோஜனம் இல்லை என்று கருத்துச் சொல்லப்படுகிறதே?

கலைஞர்: காமன்வெல்த் மாநாடுபற்றி செய்யப் படுகின்ற விமர்சனங்களுக்குப் பதிலளிக்க நாங்கள் தயாராக இல்லை. ஏனென்றால், பல நாடுகள் கலந்து கொள்கிற ஒரு கூட்டத்தில் நீங்கள் சொன்னதைப் போல அதை விமர்சிக்க நான் தயாராக இல்லை.

செய்தியாளர்: இலங்கை கூட்டத்தில் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்துகொள்வதை எதிர்த்து, தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்துவீர் களா?

தமிழ் ஓவியா said...

கலைஞர்: அதற்காக தி.மு.க. சார்பில் நம்மு டைய எதிர்கருத்தை நாங்கள் தெரிவித்திருக்கி றோம். குர்ஷித் இலங்கைக்குத் தற்போது செல்வது பற்றி எங்களுடைய எதிர்க்கருத்தை நாங்கள் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறோம். ஆனால், அவர் செல்வதை எதிர்த்து இப்போது போராட்டம் நடத்துவதாக இல்லை. இலங்கைத் தமிழர் பிரச் சினைக்காக ஒன்றல்ல, இரண்டல்ல, பல போராட் டங்களை தமிழர்கள் சார்பில் தேவைப்படுகிற போது நடத்துகிறோம். இதற்காகப் போராட்டம் தேவைப்படுமானால், நாங்கள் நிச்சயம் நடத்து வோம்.

செய்தியாளர்: இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசினை எதிர்த்து உங்கள் வலுவான எதிர்ப்பைக் காட்டுகின்ற வகையில், மத்திய அர சுக்கு பிரச்சினைகளைப் பொறுத்து வெளியிலி ருந்து தருகின்ற ஆதரவைத் திரும்பப் பெறுவீர் களா?

கலைஞர்: ஆதரவு என்பது காங்கிரசுக்காக அல்ல; பிரச்சினைகளைப் பொறுத்துத்தான் ஆதரவு.

செய்தியாளர்: காங்கிரசுக்கு தமிழகத்தில் உங் களைவிட்டால் வேறு வழியில்லை; எதிர்காலத்தில் காங்கிரசைச் சுமக்கவேண்டிய ஒரு சூழல் உங்களுக்கு ஏற்படுமா?

கலைஞர்: உங்களோடு சேர்ந்து நாங்களும் அங்கலாய்க்கிறோம்.
செய்தியாளர்: பா.ம.க. இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று முடிவெடுத்திருக்கிறதே?

கலைஞர்: அரசு கொண்டுவரப் போகிற தீர்மான வாசகங்கள் என்னவென்று தெரியவில்லை. எந்தக் கருத்தின் அடிப்படையில் பா.ம.க. இன்றைய கூட் டத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்பதும் தெரிய வில்லை.

செய்தியாளர்: பிரதமர் இலங்கை மாநாட்டி னைப் புறக்கணித்தது குறித்து ஆறுதல் என்று சொன்னதும், சல்மான் குர்ஷித் செல்வது குறித்து விவாதத்திற்குரியது என்றும் நீங்கள் கூறிய கருத்து?

கலைஞர்: நான் சொன்ன கருத்து அரைமனதாக சொல்லப்பட்டதே தவிர, முழு மனதாக ஆறுதல் தருகிறது என்று கூறவில்லை. ஓரளவுக்கு ஆறுதல் என்றுதான் சொன்னேன். அதேநேரத்தில் நான் அதனை வரவேற்றும் சொல்லவில்லை. குர்ஷித் செல்வதுபற்றியும் அது விவாதத்திற்குரியது என்றுதான் கூறினேன்.

செய்தியாளர்: இந்தப் பிரச்சினையை முன் வைத்து தி.மு.க. சார்பில் பந்த், மறியல் நடத்து வீர்களா?

கலைஞர்: எங்கள் கட்சியிலும் அத்தகைய போராட்ட உணர்வுகள் இருக்கின்றன. யார், யார் எப்போது எந்த இடத்தில் என்பதுபற்றி பின்னர் முடிவெடுக்கப்படும்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

தமிழ் ஓவியா said...


தீண்டாமைக்குப் பதில் ஜாதி!மற்ற மற்ற கட்சிகள் மாநாடு நடத்தித் தீர்மானங் களை நிறைவேற்றுவதற்கும், திராவிடர் கழகம் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும் அடிப்படை யிலே வேறுபாடு உண்டு.

அடிப்படைப் பிரச்சினைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தும் சூறாவளியாக இருக்கக்கூடியவை திராவிடர் கழக மாநாட்டுத் தீர்மானங்கள்.

சமூகத்தைப் பீடித்த பெருநோய் ஜாதி என்பதை மறுக்கவும் முடியுமா? மனித சமூகத்தைப் பிறப்பின் அடிப்படையில் கூறுபோட்டு, மாண்புக்குரிய மனிதத்தை - பகைப் புலமாக மாற்றிக் கேட்டினைச் செய்தது ஜாதிதானே!

பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்ற கொடுமை - மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது என்பதற்கு அடையாளமாக இருக்கலாமா என்ற கேள்வியை எழுப்புவது திராவிடர் கழகம்தானே!

மனித சக்தி ஒட்டுமொத்தமான சமூக வளர்ச்சிக்குப் பயன்படுவதற்குப் பதிலாக திசை திருப்பி, ஒருவருக்கொருவர் மோதலை உண்டாக் குவது எவ்வளவுப் பெரிய கேடு!

இந்தச் சமூகம் சீர்குலைந்து போனதற்கும், வறுமைக்குழியில் வீழ்ந்ததற்கும் முக்கிய காரணமே இந்த ஜாதி முறை சமூக அமைப்புதானே!

வறுமைக்கோட்டுக்குக் கீழே பெரும் அளவில் தாழ்த்தப்பட்டவர்கள் ஆளாக்கப்பட்டதற்குக் காரணம், பிறவியின் அடிப்படையில் அவர்கள் தீண்டாதவர்களாக ஆக்கப்பட்டதுதானே!

இந்தத் தீண்டாமை ஒழிக்கப்படவேண்டாமா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வெறும் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று எழுதி வைத்ததால் மட்டும் தீண்டாமை ஒழிந்துவிடுமா?

தீண்டாமை என்பது ஜாதியின் விளைவுதானே! ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்துவது போல இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17 ஆம் பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தம் கொண்டுவரப்படவேண்டும் என்று திருச்சி திராவிடர் எழுச்சி மாநாடு (9.11.2013) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஜாதி ஒழிக்கப்பட்டால் ஜாதி அடிப்படையில் அர்ச்சகர் என்ற நிலைப்பாடும் நிர்மூலம் ஆகிவிடாதா?

கல்வி, வேலை வாய்ப்பில் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யலாமா? இது ஜாதியை வளர்க்காதா? என்று ஜாதி ஒழிப்பு வீரர்கள்போல முண்டாசு கட்டி முண்டா தட்டும் பேர்வழிகள், சட்ட ரீதியாக ஜாதி ஒழிக்கப்படுவதற்குக் கைதூக்கட் டுமே பார்க்கலாம்.

இதுபற்றி 70 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் கருத்துக் கூறி இருக்கிறார் என்றால், சிலருக்கு ஆச்சரியமாகக்கூட இருக்கலாம்.

சட்டத்தின்மூலம் ஜாதிகள் ஒழிகின்றபோது, சட்டத்தின்மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எடுத்து விடுவது சிரமமான காரியமல்ல (திராவிட நாடு, 30.5.1943) என்று கருத்துக் கூறியுள்ளாரே!

இன்னும் தேநீர்க் கடைகளில் இரண்டு தம்ளர் கள், இன்னும் ஜாதி அடிப்படையில் சுடுகாடுகள், ஜாதியின் அடிப்படையில் திருமணங்கள் என்கிற மனிதத்துவத்திற்கு விரோதமான நடவடிக்கை களை அனுமதிப்பது கேவலம் அல்லவா? மனிதன் பகுத்தறிவுவாதி என்ற அடையாளத்துக்கு இது அழகல்லவே!

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மற்ற மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தீர்மானம் கொண்டு செல்லுவதைவிட தமிழ்நாட்டிலிருந்து செல்லுவது தானே சரியானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்கும்.

காரணம், இங்குதானே சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை எரிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் நடத்திக் காட்டினார். பத்தாயிரக் கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்றாண்டுகள்வரை கடுங்காவல் தண்டனையை ஏற்றனர்.

திருச்சி திராவிடர் எழுச்சி மாநாட்டின் இந்தத் தீர்மானத்தைத் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப் பினர்கள் கட்சிகளைக் கடந்து சிந்திப்பார்களாக!
13-11-2013

தமிழ் ஓவியா said...


ஒ, அப்படியா


பா.ஜ.க. ஆட்சிக்கு வந் தால் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு.

- எச். ராஜா (தமிழக பா.ஜ.க., துணைத் தலைவர்)

காமன்வெல்த் மாநாட் டில் இந்தியா போகலாமா - போகக் கூடாதா என்று முடிவு செய்யக் கூடிய கூட்டத்தில் எந்தவித மான முடிவையும் எடுக்க முடியாமல் கூடிக் கலைந்த வர்களா இப்படியெல்லாம் பேசுவது?

தமிழ் ஓவியா said...

காமன்வெல்த்: பெரும்பாலான நாடுகள் புறக்கணிப்பு

இலங்கையின் பொதுநலவாய நாடுகள் அமர்வுக்கு குறைந்த தலைவர்களே பங்கேற்பது குறித்து கனடா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. இந்த மாநாட்டில் பொதுநலவாயத்தின் அரைவாசி தலைவர்கள் பங்கேற்கவில்லை என்று கனடா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர், ஜோன் பேயர்ட் குறிப்பிடடுள்ளார்.

நாளை ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டில் 53 நாடுகளின் தலைவர்களில் 23 நாட்டுத் தலைவர்களே இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இந்தியப் பிரதமர், மொரிசியஸ் பிரதமர் ஆகியோரின் தீர்மானங்களை தாம் வரவேற்பதாக பேயர்ட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, தாம் மேற்கொண்டுள்ள மனித உரிமை மீறல்களை பொதுநலவாய மாநாட்டின் மூலம் மறைத்து வெள்ளையடித்துக் கொள்ளும் என்ற காரணத்தினாலேயே கனடா நாட்டுப் பிரதமர் அதில் பங்கேற்கவில்லை என்று பேயர்ட் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மோடி மீது அமெரிக்க அமைப்பின் பகிரங்கக் குற்றச்சாற்று!


வாஷிங்டன், நவ.14- கலவரத்தைத் தடுப்பதில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வியின் முகமாக குஜராத் முதல் வர் நரேந்திர மோடி இருக்கிறார். அவரை பிரதமர் பதவிக்கான வேட் பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது. வருத்தத்திற்கு உரியது என்று சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையத்தின் உறுப்பினர்கள் கூறி யுள்ளனர்.

அந்த ஆணைய உறுப்பினர்கள் கத்ரினா லன்டோஸ் ஸ்வெட், மேரி ஆன் கிளவுன்டான் ஆகியோர் ஊட கம் ஒன்றின் வலைப்பூவில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது: குஜராத்தைச் சேர்ந்த காந்தியார், பல மதங்கள் நிலவும் சமூகத் தில் சகிப்புத் தன்மை யுடன் கூடிய தொலை நோக்குப் பார்வை, பரந்த மனப்பான்மைக்கு முக்கி யத்துவம் அளித்தார். வரும் 2014-ஆம் ஆண்டு (மக்களவைப் பொதுத் தேர்தல்) இந்தியா எதற்கு முக்கியத்துவம் அளிக்கப் போகிறது? மதச் சுதந் திரத்திற்கா? மத சகிப்புத் தன்மையின்மைக்கா? காலம்தான் இதற்குப் பதிலளிக்கும்.

கலவரத்தைத் தடுப்பதில் இந்தி யாவுக்கு ஏற்பட்ட தோல்வியின் முகமாக நரேந்திரமோடி இருக்கிறார். 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது அவர் தான் முதல்வராக இருந்தார்.

மோடி தலைமையி லான நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்காததை, குஜராத் உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. சேதப்படுத்தப்பட்ட வழி பாட்டுத் தலங்களுக்கு தகுந்த இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித் துள்ளது. சர்வதேச மதச் சுதந்திரத் துக்கான அமெரிக்க ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மோடிக்கு விசா வழங்குவதை விலக்கி வைக்க அமெ ரிக்க வெளியுறவுத்துறை 2005ஆம் ஆண்டு ஒப்புக் கொண்டது.

எம்.பி.க்கள் கடிதம்

மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்று இந்திய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 65 உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதி யுள்ளனர். இந்நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க. சார்பில் 2014ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் வேட் பாளராக நரேந்திர மோடியை அறி வித்துள்ளது. வருத்தம் தருவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூட நம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.

(விடுதலை, _ 22.6.1973)

தமிழ் ஓவியா said...


குற்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியம்: உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடில்லி, நவ.14- வெளிப்படை யான குற்ற வழக்குகளில், உடனடியாக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியம் என்று, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், காஜியா பாத்தை சேர்ந்த லலிதகுமாரி என்ற பெண், தனது மகள் கடத்தப்பட்டது குறித்து காவல்துறையில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. காவல்துறை சீர்திருத்தம் மற்றும் வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (எப்.அய்.ஆர்.) பதிவு செய்வது தொடர்பாக, சரியான வழி காட்டு நெறிமுறைகளை வகுக்க வேண் டும் என்று மேலும் சில மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கில் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியதைத் தொடர்ந்து 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப் பட்டது.

தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையில், நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், ரஞ்சன் பி.தேசாய், ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பாப்டே ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேற்று முன்தினம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. தீர்ப்பு விவரம் வருமாறு:

ஒரு குற்றம் தொடர்பான புகாரில், குற்றம் நடந்திருப்பதை வெளிப்படை யாக உணர்ந்து கொண்டாலே, காவல் துறையினர் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியமாகும்.

அப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யத்தவறும் காவல்துறை அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோன்ற புகார்களில், வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு பூர்வாங்க விசாரணை நடத்த தேவை இல்லை. மற்ற புகார்கள் தொடர்பாக, காவல்துறையினர் பூர்வாங்க விசாரணை நடத்தி அதன்பின்னர் வழக்குப்பதிவு செய்யலாம். ஆனால், இந்த விசாரணை 7 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற புகார்களில், ஆதாரங் களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமண பந்த பிரச்சினை, ஊழல், நிதி முறைகேடு போன்ற புகார்களில், முதல் கட்ட விசாரணைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

குற்ற புகார்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ள இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படு கிறது. எனவே இனி காவல் நிலையங் களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுப்பது, இரு தரப்பினரையும் காவல் நிலையங்களிலேயே அழைத்துப் பேசி தீர்வு காண்பது (கட்ட பஞ்சாயத்து) போன்ற செயல்களில் இனி ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.