Search This Blog

29.11.13

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்-தமிழர்களே எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் இது!


சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது நீண்ட காலமாக தமிழர்கள் எதிர்பார்க்கும் திட்டம்; இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசியல் முட்டுக்கட்டைகள் போடப்படும் இந்தக் காலகட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே எதற்கு இதில் மூக்கை நுழைக்கிறார்?

இது தொடர்பாக ஒரு குழு போட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்து ஆராயப் போகிறாராம்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது இந்தியாவுக்குள் நடைபெறும் ஒரு திட்டமாகும். இதில் போய் இன்னொரு நாடான இலங்கை தலையிடவோ, ஆய்வு செய்யவோ உரிமை எங்கிருந்து வந்து குதிக்கிறது?

இலங்கை அதிபர் ராஜபக்சே வெளியிட்டுள்ள கருத்துக் குறித்து இந்தியா ஏன் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை? இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நினைத்தால் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. அந்த அளவு பலகீனமாக இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இலங்கைக்கு வரும் வருமானத்தில் மண் விழுந்துவிடும் என்ற சுயநலம்தான் இதன் பின்னணி இரகசியமாகும்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளுக்கு இடையே பயணிக்கும் கப்பல் போக்குவரத்தின் தூரம் எவ்வளவு மிச்சப்படும் தெரியுமா? 420 கடல் மைல் அளவு மிச்சப்படுவதோடு, (ஒரு கடல் மைல் என்பது 1.8 கி.மீ.) பயண காலமும் 30 மணிநேரம் குறையும்.

அய்ரோப்பாவிலிருந்து ஆசிய நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து சேரவேண்டிய கப்பல்கள் ஆப்பரிக்காவைச் சுற்றி சூயசுக்கு வந்து சேரவேண்டிய நிலை இருந்தது. சூயஸ் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றியதற்குப் பிறகு வீண் விரயங்கள் தவிர்க்கப்பட்டன.
அதுபோலவே இப்பொழுது இந்தியாவில் மேற்கு - கிழக்கு கடல் பகுதிகளுக்கிடையே பயணிக்கும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிவரும் நிலை உள்ளது.

சேதுகால்வாய்த் திட்டம்பற்றி தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவராக இருந்த திரு.இரகுபதி அய்.ஏ.எஸ். சொன்ன தகவல்கள் கருத்தூன்றிக் கவனிக்கத்தக்கவையாகும்.

செங்கடலையும், மடகாஸ்கரையும் இணைக்கம் சூயஸ் கால்வாய் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களை இணைக்கும் பனாமா கால்வாய், வடகடலையும், பால்டிக் கடலையும் இணைக்கும் கீழ்க் கால்வாய் போன்று மன்னார் வளைகுடாவையும், பாக்.நீரிணைப்பையும் கால்வாய்மூலம் இணைத்து பெருங்கப்பல் போக்குவரத்தை ஏற்படுத்தும் சேது சமுத்திரத் திட்டம் தமிழ்நாட்டின் தொழில் வர்த்தக மேம்பாட்டையும், பொருளாதார வளர்ச்சியையும் நிச்சயம் ஏற்படுத்தும்; இது தமிழ்நாட்டுக்குக் கிடைத்த சிறந்த பரிசு என்று இரகுபதி கூறினார்.

இதில் குறிப்பிடத்தக்க ஒன்று ஒளிந்துகொண்டு இருக்கிறது. இப்பொழுது இந்தக் கப்பல்கள் எல்லாம் இலங்கையைச் சுற்றி வரவேண்டியுள்ளதால், இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் குவிந்து கொண்டிருக்கிறது.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட்டால், இலங்கைக்குக் கிடைக்கும் வருமானம் அடிபட்டுப் போகும். இந்தச் சுயநல உணர்வுடன்தான் ராஜபக்சே, இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையான இந்தத் திட்டத்தில், மூக்கை நுழைக்கிறார் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

நீண்ட காலமாக இந்தத் திட்டம் தடைப்பட்டுப் போனதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமே! இலங்கைக்கு உதவுவதற்காகவே அன்று இருந்த அரசுகள் இந்தப் பிரச்சினையில் அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாற்றும் நீண்ட காலமாகவே இருந்துவரும் ஒன்றுதான்.

இது தொடர்பாக திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (26.11.2013) சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளது அலட்சியப்படுத்தப்படக் கூடியதல்ல.
சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தக் கூடாது என்று இங்குள்ளவர்கள் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள்.

இலங்கை ராஜபக்சேவும் அதே குரலில்தான் பேசுகிறார். ஒரு கூட்டுச் சதி இதில் இருக்கிறது என்பதுதான் அந்த எச்சரிக்கை. தமிழர்களே, நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் இது!

                          -------------------------"விடுதலை” தலையங்கம் 28-11-2013

86 comments:

தமிழ் ஓவியா said...


பொதுவுடைமை - பொதுவுரிமை


பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.
(குடிஅரசு, 25.3.1944)

தமிழ் ஓவியா said...


இலங்கை தமிழர் படுகொலை குறித்து ஒளிவுமறைவற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் லண்டன் பத்திரிகைக்கு கேமரூன் பேட்டிலண்டன், நவ. 28- இலங்கையில் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொண் டார். அப்போது, தமிழர்கள் பகுதி யான வடக்கு மற்றும் கிழக்கு மாகா ணத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டார்.

அப்போது, தமிழர்கள் போரின் போது பட்ட அவதிகளையும், கொடு மைகளையும், ராணுவ அத்துமீறல் களையும் கதறியபடி அவரிடம் எடுத் துரைத்தனர். காணாமல் போன தங்களது குடும்பத் தினர் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்றும் கண்ணீர் வடித்தனர்.

அதை தொடர்ந்து காமன்வெல்த் மாநாட்டில் பேசிய கேமரூன், இறு திக்கட்ட போரின் போது நடந்த தமிழர்கள் படுகொலை குறித்து இலங்கை அரசு நம்பகமான விசா ரணை நடத்த வேண்டும் என வலி யுறுத்தினார். அதற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தது. போரின் போது அத்துமீறல்கள் நடைபெறவில்லை என கூறியது.

இந்த நிலையில், தற்போது லண் டன் பத்திரிகைக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பேட்டி அளித்துள்ளார். அதில் கூறி இருப்ப தாவது:

நான் இலங் கையின் வடக்கு மாகாணம் சென்று திரும்பி ஒரு வாரம் ஆகி விட்டது. ஆனா லும், அங்கு பார்த்த காட்சி கள் இன்னும் என் மனதில் நிழலாடுகின்றன. முதலில் தமிழர்கள் படுகொலை குறித்து நம்பகமான ஒளிவு மறைவற்ற சுதந்திரமான விசா ரணை நடத்தப்பட வேண்டும்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்த போது அடுத்த மாதத்துக்குள் சர்வதேச விசாரணை தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். விசாரணை தொடங்காவிட்டால் நாங்கள் அய்.நா. மூலமாக அத்தகைய விசாரணையை கேட்போம் என அவரிடம் தெளிவாக கூறிவிட்டேன்.

இலங்கையில் மனித உரிமை விஷ யத்தில் முன்னேற்றம் வேண்டும். உண் மையான கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் நிலவ வேண்டும். தமிழர் சிங்களர் இடையே நல்லிணக் கம் வேண்டும்.

நான் இலங்கை சென்றதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நான் சென்றதால் அங்கு செய்ய வேண்டிய காரியங்களை வலியுறுத்த முடிந்தது. - இவ்வாறு டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


கடந்த இரண்டரை ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி சாதித்தது என்ன? கடுமையான மின்வெட்டு, மத்திய அரசின் திட்டங்கள் முடக்கம்!

சட்டம் - ஒழுங்கு கடும் பாதிப்பு - ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இரட்டை வேடம்!

தி.மு.க.வுக்கே வாக்களித்து தடம்புரளாமல் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவீர்!

ஏற்காடு தொகுதி மக்களுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்!


சங்கர்ராமன் படுகொலை வழக்கு: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - கி.வீரமணி அறிக்கை

நடக்கவிருக்கும் ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க. வுக்கே வாக்களித்து ஜனநாயகம் தடம் புரளாமல் காப்பாற்றவேண்டும் என்று ஏற்காடு தொகுதி வாக் காளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதியன்று, ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற விருக்கிறது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும், உண்மையான எதிர்க்கட்சி தி.மு.க.தான் என்று ஜன நாயகத்தைக் காக்கும் வகையில் நாட்டுக்கு அறிவிக்கும் வகையில் தி.மு.க.வும் போட்டியிட களத்தில் இறங்கி யுள்ளன.

இடைத்தேர்தல் முடிவு

ஒரு இடைத்தேர்தலின் முடிவு ஆட்சியை மாற்றப் போவதில்லை; ஆனால், ஜனநாயகத்தின் முக்கிய தேவை யான வாக்காளர்களின் மனநிலை எப்படி ஆட்சியின் பால் உள்ளது என்பதற்கான எடைமேடை அல்லவா?

செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்று சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது.

இதில் அவரது ஆட்சியில் ஏற்கெனவே பொதுத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற் றப்பட்டுள்ளனவா? ஏற்கெனவே வாக்களித்த மக்களின் நம்பிக்கை இவ்வாட்சியின்மீது அதேபோல் உள்ளதா, குறைந்திருக்கிறதா என்று அளந்து பார்க்கும் அரசியல் வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல்.

அதேநேரத்தில், இது ஒரு சம போட்டி என்றும் கருதிட முடியாத அளவுக்கு, இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம் பற்றிய ஏராளமான புகார்கள் பறப்பதை வைத்துப் பார்க்கையில், நிச்சயம் சமவாய்ப்பில் லாத போட்டி என்ற நிலையே உள்ளது.

தமிழ் ஓவியா said...


மக்களின் அதிருப்தி அலை கரைபுரண்டு ஓடினாலும், அதைப் பல வகையிலும் - பண பலம், இன பலம், பத் திரிகை பலம், அதிகாரவர்க்க பலம் இவை ஆளுங் கட்சியினருக்கு உள்ள ஒரு கூடுதல் வாய்ப்பு.

அவையெல்லாவற்றையும் பொருட்படுத்தாமல் ஜன நாயகக் கடமையைச் செய்ய முன்வந்துள்ள தி.மு.க. முடிவும் இடையறாத முயற்சிகளும் பாராட்டத்தக்கவை.

எதிர்க்கட்சி என்று அறிவிக்கப்பட்டுள்ள கட்சியோ, தேசியக் கட்சிகள் என்பவைகளோ தேர்தலில் போட்டி யிட்டு, ஆளுங்கட்சியின் பல்வேறு வசதி வாய்ப்புகளோடு ஈடுகொடுத்து போட்டி போட முடியாது என்று தயங்கி, பின்வாங்கிவிட்ட நிலையில், ஒதுங்கிக் கொண்டுவிட்டன. தி.மு.க. முன்வந்து களத்தில் துணிவுடன் இறங்கி தனது தேர்தல் பணிகளை எதிர்நீச்சலாக செய்து வருகிறது!

கடந்த காலத்தில் ஆளும் கட்சியின் சாதனைகள் என்ன?

ஆளுங்கட்சியின் ஆளுமை கடந்த ஆண்டுகளில் எப்படி இருக்கிறது என்று சீர்தூக்கிப் பார்த்து, வாக் களிக்க வேண்டிய கடமை ஏற்காடு வாக்காளர்களுக்கு உண்டு.

1. ஆட்சியை ஏற்ற மூன்றே மாதங்களில் மின்தட்டுப்பாட்டை - மின்வெட்டை நீக்குவோம் என்று வாக்குறுதி தந்து வந்த ஆட்சியில் இன்றுள்ள மின்வசதி எப்படி உள்ளது?

2 மணிநேர மின்வெட்டு அதுவும் சிலகாலம் ஏற்பட்டதற்காக தி.மு.க.வை அதற்காக குறை கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அவர்களது ஆட்சியில் வெளியூர்களில் மூன்று மணிமுதல் 10 மணிநேரம்வரை மின்வெட்டு; அதுவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நேரங்கள்!

தமிழ் ஓவியா said...

விவசாயிகள், வீட்டு உபயோகிப்பாளர்கள் இருட்டு வேதனை ஒருபுறம் என்றால், குறு, சிறு தொழில் செய்வோர் குறிப்பாக கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேலை இழந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் துயரமும், துன்பமும் நாளும் குறையாமல் பெருகிய வண்ணம் உள்ளது!

தொழிற்சாலை நடத்துவோர் கோடிக்கணக்கில் முதலீடு - கடன் வாங்கிச் செய்யும் எங்களது இயந்திரங் கள் குறைந்தபட்சம் தொடர்ச்சியாக ஓட்டப்பட்டால்தான் பழுதடையாமல் இருக்கும்; இப்பொழுது விட்டுவிட்டு வரும் மின்வெட்டு காரணமாக அந்த இயந்திரங்களும்கூட பழுதாகி, கூடுதல் இழப்பு ஏற்படும் அபாயம் பெருகுகிறது என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார்கள்.

சில மாதங்கள்முன் மின் மிகை மாநிலமாகும் விரைவில் என்று கூறப்பட்டது; ஆனால், இப்போது ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல பல மணிநேரம் மின்வெட்டு, இருட்டு - அதன் காரணமாக பெருகிடும் திருட்டு, கொள்ளைகள், கொலைகள் - என்னே கொடுமை!

தமிழக அரசு இதற்கு ஒரு புது காரணம் கூற முற்பட் டுள்ளது; மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை; தமிழக அரசுக்கு எதிரான சதி என்றெல்லாம் கூறி, மத்திய அரசு மீது பழிபோடுவது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதாகாது.

மேட்டூர், தூத்துக்குடி முதலிய பல மின் நிலையங்கள் மத்திய அரசு நிர்வகிப்பதன்று. கூடங்குளம் அணுமின் நிலையம் என்பது தற்போது உருவான ஒன்று - அது இன்னும் முழுமையான உற்பத்தி பெருக்கத்திற்கு வராத நிலை. அதுவே ஏற்கத்தக்கக் காரணம் ஆகிவிடுமா?

ஒன்று முந்தைய தி.மு.க. ஆட்சிமீது குற்றச்சாற்று; இன்றேல் மத்திய அரசின்மீது பழி. இவைகளால் மக்கள் குறைகளை எவ்வளவு காலம் திசை திருப்ப முடியும்?

வளர்ச்சித் திட்டங்களுக்காக மற்ற மாநிலங்கள் மத்திய அரசை வற்புறுத்தி வாதாடுகின்றன. ஆனால், தமிழ்நாட்டின் அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு என்ன?
அடுத்தவர்மீது பழிபோடுவதா?

ஏற்கெனவே பணி தொடங்கப்பட்ட திட்டங்களைக் கூட, ஒத்துழைப்புத் தராது முடக்கப்படும் நிலையை ஒரு மாநில அரசே செய்யும் அவலம் - இதுவரை கேள்விப்படாத ஒன்று அல்லவா?

1885 கோடி ரூபாய் திட்டமான மதுரவாயல் பறக்கும் திட்டம்மூலம், சென்னை துறைமுகத் திலிருந்து நேரடியாக விரைந்து சரக்குகள் - சாலைப் போக்குவரத்துக்கு வழிவகை செய்யும் அத்திட்டத்திற்கு இதுவரை 900 கோடி செலவிட்ட நிலையில், தமிழக அரசால் இது தடை செய்யப்பட்டு, இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு போடப் பட்டுள்ளது. இதுதான் வளர்ச்சிக்கான வழிகாட்டுதலா?

தமிழ் ஓவியா said...

பிரதமர் மன்மோகன்சிங் தனது ஆலோசகர் நாயர் தலைமையில் ஒரு குழு, தமிழக முதலமைச்சரைச் சந்தித்து, இத்திட்டத்திற்கு ஒப்புதலை விரைவுபடுத்த கேட்டுக்கொண்டது - விழலுக்கு இரைத்த நீர்தானா?

2. தமிழகத்தில் பத்தாயிரம் கோடிக்கான நெடுஞ் சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கு தமிழக அரசின் ஒத்துழையாமையால் ஏராளமாய் முடங்கிக் கிடக்கின்ற அவலம் மற்றொரு புறம்! சேது சமுத்திரத் திட்டத்தில் அந்தர்பல்டி!

3. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ஏன் மத்திய அரசு விரைவுபடுத்தவில்லை என்று இரண்டு தேர்தல் அறிக்கைகளில் கேள்வி கேட்டு துளைத்து, இப்போது தி.மு.க.வின் இடைவிடா முயற்சியால் அத்திட்டத்திற்கு ரூ.800 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டு, இன்னும் 12 கிலோ மீட்டர்தான் முடிவடைய இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு தடையாணை வாங்கி, மணல் திட்டு - ஆதாம் பாலம் -என்று முன்பு சொன்னதையே மாற்றிக் கொண்டு, இப்போது இராமர் சேது பாலம் அதை உடைக்கக் கூடாது என்றும், மீன்வளப் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு என்று இல்லாத காரணத்தைக் காட்டி, தென்மாவட்டங்களின் பெரும் வளர்ச்சித் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கி வைத்தவர்கள்தான் வாக்குகளை அள்ள ஏற்காடு வருகிறார்கள்.

சட்டம்-ஒழுங்கு மோசமோ மோசம்!

சட்டம் ஒழுங்கு என்பது ஒரு ஆட்சிக்கு முக்கியம். கொலை, கொள்ளை, செயின் அறுப்பு என்பவை நிகழாத நாள்கள் உண்டா?

எனது ஆட்சியில் கொள்ளையர்கள், திருடர்கள் ஆந்திராவிற்கு ஓடிப் போய்விட்டார்கள் என்று முதல்வர் கூறியதை, மக்களால் மறக்க முடியுமா? இப்போது என்ன நிலை?

மூன்று ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாத கொலைகள் திருச்சி இராமஜெயம், மதுரை பொட்டு சுரேஷ் - இப்படி பல - மக்களிடையே உள்ள கேள்விகள் இவை!

ஈழத் தமிழர் பிரச்சினையிலும் இரட்டை வேடம்!

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கோ பெரும் வாய்ப்பூட்டு! குரல்வளை நெரிக்கப்படுவதுபோல பேச்சுரிமை மறுப்பு - மீறினால் வெளியே தள்ளுவதும், கடும் நடவடிக்கை எடுப்பதும்!

சட்டமன்றத்தில் இல்லாதவர்கள், பொறுப்பான தலைவர்கள்மீது தரக்குறைவான தாக்குதல் விமர் சனங்கள் - அதற்காக அத்தகைய சாதனையாளர் களுக்கு பதவிப் பரிசுகள்! தமிழ்நாட்டு ஜனநாயகத் தின்(?) விசித்திரங்கள் இவை!

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் இரண்டு தீர்மானங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இந்த அ.தி.மு.க. அரசு, தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து, எதிர்த்தவர்கள்மீது வழக்கைப் போட்டு சிறைக்கு அனுப்பியது ஏன்?

இது இரட்டை நிலைப்பாடு, இரட்டை வேடம் என்பது உலகத் தமிழர்களுக்கு விளங்கிவிட்டதே! வாக்காளர் களுக்கு - ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு உண்மையாக பாடுபட்டு வருபவர்கள் யார் என்பது புரிந்துவிட வில்லையா?

விரிக்கின் பெருகும் என விடுத்து, ஏற்காடு வாக்காளர்களே,

ஜனநாயகம் காக்க, ஆளுங்கட்சி சரியான முறையில் ஆட்சி செய்ய, நீங்கள் மற்ற சபலங்களுக்கு ஆளாகாமல், தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தால், ஆளுங்கட்சி சற்று சுயபரிசோதனை செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.

தி.மு.க.வுக்கே வாக்களிப்பீர்!

தி.மு.க.வை வெற்றி பெறச் செய்வது, தி.மு.க.வுக்காக மட்டுமல்ல; ஜனநாயகம் காக்க, மக்கள் தீர்ப்பின்மூலம், இடிப்பாரை மக்கள் தீர்ப்பாக அது அமைந்து தடம்புரளும் ஜனநாயகம் சற்று நிதானித்துத் தடத்தில் எஞ்சிய காலத்தில் பயணிக்க உதவியதாக அமையக்கூடும் என்பதால் கூறுகிறோம்.

இன்றேல், நட்டம் தி.மு.க.வுக்கு அல்ல; தமிழர்களுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு - ஜனநாயகத்திற்கு என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்!

சென்னை தலைவர்,
28.11.2013 திராவிடர் கழகம்.

குறிப்பு: இதனைத் துண்டறிக்கையாக ஏற்காடு தொகுதி திராவிடர் கழகத் தோழர்கள் வழங்குவார்கள்

தமிழ் ஓவியா said...


மின்னஞ்சலில்...ராமர் பாலம் மிதக்கும் பாலமே! சுக்ரீவனின் சேனை சேது கரையோரமாக இருந்த கற்களையும், பாறைகளையும் பெயர்த்தெடுத்து விஸ்வகர்மாவின் மகன் நளன் கையில் கொடுக்க, அவன் அதைக் கடலில் தூக்கிப் போட்டான். நளன் கையில் பட்ட அனைத்தும் மிதக்கும் என்ற அவன் பெற்ற வரத்தின் காரணமாக அவை அனைத்தும் மிதந்தன. ஆகவே அது மிதக்கும் பாலமே, அது கடலின் அடிபகுதிக்கு எப்படி சென்றது? சிந்திப்பீர்!

- பெரியார்மணி

தமிழ் ஓவியா said...


இடையில் மூன்றே நாட்கள்!
எழுத்துரு அளவு Larger Font

கழகத் தோழர்களே, தோழியர்களே!

டிசம்பர் 2 - இடையில் மூன்றே நாள்கள்!

தந்தை பெரியார் பிறந்த நாள்,

தமிழர் தலைவர் பிறந்த நாள்,

பெரியார் பேருருவச் சிலை - பெரியார் உலகம் உருவாக்கத்திற்கு முதற்கட்டமாக ஆயிரம் சவரன் தங்கத்திற்கான நிதி வழங்கும் விழா -

தோழர்களே, உங்கள் மாவட்டத்திற்கான இலக்கினை முடித்து விட்டீர்களா?

நிலுவையிருந்தால், இந்த மூன்று நாள்களிலும் முடுக்கோடு முனைப்பாகச் செயல்படுவீர்!

செயல்படுவீர்!!

டிசம்பர் 2 - தஞ்சை கண்கொள்ளாக் காட்சி - களேபரமான ஏற்பாடுகள் - கழகத் தோழர்களின் கால்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

பெரியார் பேருருவச் சிலை இப்பொழுதே அங்கு நிற்பது போன்ற உணர்ச்சி அலைகள்!

வாழ்விலோர் திருநாள்!

வாருங்கள் தோழர்களே,

குடும்பம், குடும்பமாய்!

மறக்கவேண்டாம் - உங்கள் மாவட்ட இலக்கினை நிறைவு செய்த நிறைவோடு வாருங்கள் - கூடுதல் மகிழ்ச்சி உங்களுக்கும், தமிழர் தலைவருக்கும்!

என்ன சரிதானே!

- தலைமை நிலையம்

தமிழ் ஓவியா said...


ஏற்காடு இடைத்தேர்தல் அத்துமீறல்: கலைஞர் பேட்டி


சென்னை, நவ.28- ஏற்காடு இடைத் தேர்தலில் ஆளும் கட்சியினரின் அத்து மீறல் நடவடிக்கைகள் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அளித்துள்ள பேட்டி வருமாறு:
செய்தியாளர் :- ஏற்காடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற விதி முறை மீறல்களையெல்லாம் உங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் எடுத்துக் கூறி வருகிறீர்கள். இதற்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன?

கலைஞர் :- தேர்தல் ஆணையம் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை; என்ன நடவடிக்கை எடுக் கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

செய்தியாளர் :- எரிவாயு குழாய்களைப் பதிக்கும் பிரச்சினையில் உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பினை எதிர்த்து, விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் வகையில் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டு மென்று கோரிக்கை வைக்கப்படுகிறதே?

கலைஞர் :- விவசாயிகளின் கஷ்டத்தையும், அவர்களுடைய கோரிக்கையையும் நான் கவனமாகப் பார்த்து வருகிறேன். செய்தியாளர் :- உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டு மென்று நீங்கள் கருதுகிறீர்களா?

கலைஞர் :- வழக்காடுவதை விட இரு தரப்பாரும் பேசி, விவசாயிகளுக்கு பாதகமின்றி நன்மை ஏற்படுகின்ற வகையில் நல்ல தீர்வு காண வேண்டும் என்பது தான் என் கருத்து.
செய்தியாளர்:- புதுச்சேரி நீதிமன்றம் சங்கரராமன் கொலைவழக்கு குறித்து அளித்துள்ள தீர்ப்பு பற்றி.

கலைஞர்:- நான் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றி எப்போதும் விமர்சனம் செய்வதில்லை.

செய்தியாளர் :- உங்களுடைய ஆருயிர் நண்பர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு நீங்கள் தான் உங்கள் ஆட்சிக் காலத்தில் சிலை வைத்தீர்கள். ஆனால் அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக, இப்போது அந்தச் சிலையை அகற்ற வேண்டுமென்று அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்

கிறார்களே? கலைஞர் :- கண்ணகி சிலை யையே எடுத்தவர்கள் இப்போது என்னுடைய நண்பர் சிவாஜி கணேசனின் சிலையை எடுக்க விரும் பினால், அதன் பலனை அவர்களே அனுபவிக் கட்டும். செய்தியாளர் :- தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின் வெட்டுக்குக் காரணம், மத்திய அரசின் சார்பில் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஏற் பட்டுள்ள திடீர் பழுது கள் தான் என்றும், மத்திய அரசு சதி செய்கிறது என்றும் தமிழக முதலமைச்சர் கூறியிருக் கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- இதைப் பற்றிய குற்றச்சாட்டினை தமிழக முதல் அமைச்சரே பிரதம அமைச்சருக்குக் கடிதம் மூலமாக எழுதியிருக்கிறார். அதற்குப் பிரதமரின் பதில் வந்த பிறகு அந்த விவரத்தை அறிந்து நான் விளக்கம் அளிக்கிறேன்.

தமிழ் ஓவியா said...

மதுரையில் பகுத்தறிவாளர் கழகத்தின் சிறப்புக் கருத்தரங்கம்


மதுரை, நவ.28- மதுரையில் பகுத்தறிவாளர் கழகத்தின் சிறப்புக் கருத்தரங்கம் 17.11.2013 மாலை 6 மணியளவில் மதுரை சிம்மக்கல்லில் உள்ள பழக்கடை வளாகத்தில் நடைபெற்றது . நிகழ்விற்கு பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா. நேரு தலைமை தாங்கினார். மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சுப.முருகானந்தம் அனைவரையும் வரவேற் றார். சிறப்புக் கருத்தரங்கத்திற்கு தே.எடிசன் ராசா, தலைமைச்செயற்குழு உறுப்பினர், திராவிடர்கழகம் ,மீ.அழகர்சாமி, மண்டலச் செயலாளர், திராவிடர் கழகம், வே.செல்வம், மாநில மாநில அமைப்புச் செயலாளர்,திராவிடர் கழகம், சே.முனியசாமி, மாவட்டத் தலைவர்,திராவிடர் கழகம்,க.அழகர், மாவட்டச்செயலாளர், திராவிடர் கழகம், பொ. நடராசன் , நீதிபதி (பணி நிறைவு), மாநில சட்டத்துறைத் துணைத்தலைவர், அ.வேங்கை மாறன் மதுரை புற நகர் மாவட்டச்செயலாளர், திராவிடர்கழகம் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். நிகழ்வின் தொடக்கத்தில் திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் எழுதிய ' திராவிடர் கழகம் ஒரு கட்சி அல்ல, புரட்சி இயக்கமே ' என்னும் நூலை , திராவிட முன்னேற்றக்கழகச் சொற்பெருக்காளர் துரை.எழில்விழியன் வெளி யிட்டார். நூலினை திராவிடர் கழகத்தின் தலைமைச்செயற் குழு உறுப்பினர் தே.எடிசன் ராசா பெற்றுக் கொண்டார். தொடர்ந்து தோழர்கள் வரிசையாக வந்து பணம் கொடுத்து நூல்களைப் பெற்றுக்கொண்டனர். திராவிடர் கழகம் ஒரு கட்சி அல்ல, புரட்சி இயக்கமே' என்னும் நூல் பற்றிய அறிமுகத்தை துரை.எழில் விழியன் நிகழ்த்தினார். அப்புத்தகத்தில் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள், இந்த நூலை ஒரு ஆய்வு நூல் என்று குறிப்பிட்டதைக் குறிப்பிட்டு , நூலின் பல்வேறு சிறப்புக்களை மன்றத்தில் எடுத்து வைத்து உரையாற்றினார். தொடர்ந்து மோடி பொய்யும் மெய்யும் என்னும் தலைப்பில் கருத்தரங்க சிறப்புரையை திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு,.அறிவுக்கரசு நிகழ்த்தினார்.

தமிழ் ஓவியா said...

அவர் தனது உரையில்:- அரசுப் பணியில் இருந்தபோது எழுதமுடிய வில்லை, பல இடர்ப்பாடுகள் இருந்தன. 60 வயதில்தான் எழுதத்தொடங்கினேன். பெரியார் பன்முகம்' என்னும் நூலுக்கு அணிந்துரையும் தந்து , தொடர்ந்து எழுது என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான் ஊக்கமும், ஆக்கமும் தந்தார்கள்.10 நூல்களை எழுதியிருக்கின்றேன். அந்த வரிசையில் விழிகள் பதிப்பகம் மூலமாக இந்த நூல் திராவிடர் கழகம் ஒரு கட்சி அல்ல, புரட்சி இயக்கமே' என்னும் நூலும் ஆசிரியர் அவர்களின் அணிந்துரையோடு வந்திருக்கின்றது என்று சிறப்பாகக் குறிப்பிட்டு தமிழர் தலைவருக்கு நன்றி கூறி வெளியிட்டு உரையாற்றிய துரை.எழில்விழியனுக்கு தனது நன்றி களைக் கூறினார். தொடர்ந்து மோடியை பிரதமர் வேட்பாளர் என்று பாரதீய ஜனதா கட்சி அறிவித்திருக்கின்றது, இல்லை, இல்லை, ஆர்.எஸ்.எஸ். அறிவித்திருக்கின்றது. மோடியும் ஆர்.எஸ்.எஸ்.ம் ஒன்றுதான் என்று குறிப்பிட்டு பல்வேறு புள்ளி விவரங்களை , பொய்யாக ஊடகங்கள் குறிப்பிடுவதைக் குறிப்பிட்டார். ஆர்.எஸ். எஸ். காரர்கள், மோடியைத் தூக்கிப்பிடிப்பவர்கள் ஏன் முன்னாள் பிரதமர் நேருவை வெறுக்கின்றார்கள் என்பதனைக் குறிப்பிட்டு, சர்தார் வல்லபாய் படேல் எப்படி இந்து சனாதன வாதியாக இருந்தார் என்ப தனையும் ,நேரு பார்ப்பனர் என்றாலும், நாடு சுதந்திரம் வாங்கியபோது யாகத்தில் எப்படி கலந்து கொண்டார் என்பதையும் சுட்டிக் காட்டி இருந்தபோதிலும் நேரு மதச்சார்பின்மையை வலியுறுத்தியவர், சோசலிசக் கொள்கையைக் கடைப்பிடித்தவர் என்ற முறையில் அவர் மீது வெறுப்பைக் கக்குகின்றார்கள் மோடி கூட்டத்தார் என்பதனையும் , மெக்காலே கல்வித் திட்டத்தால் எல்லோரும் படிக்க வாய்ப்புக் கிடைத்தது, வர்ணாசிரமத்திற்கு அது எதிரானது என்பதால் மெக்காலே மீது பாய்கின்றார்கள் என்பதனையும் எடுத்துக்காட்டினார்.

பார்ப்பன ஊடகங்கள் எப்படியெல்லாம் மோடி யை மேலே தூக்கிப்பிடிக்கின்றார்கள், உண்மையில் குஜராத் வளர்ச்சிப்பாதையிலா இருக்கிறது, இல்லை, கார்ப்பரேட் நிறுவனங்கள் மோடியை உயர்த்திப்பிடிக் கின்றார்கள் தங்கள் சுய நலத்திற்காக என்பதனை எடுத்துரைத்தார். 1991 ,முதல் நடந்த இந்தியப் நாடாளுமன்றத் தேர்தல்களையும், அதில் பத்திரிகைகள் கொடுத்து கருத்துக்கணிப்பையும், வந்த தேர்தல் மமுடிவுகளையும் ஒப்பிட்டு , அவை எப்படி பொய்யானவை என்பதனை அவையோர் பார்வைக்கு எடுத்துவைத்தார். 2002இல் குஜராத்தில் நடைபெற்ற கலவரம் எப்படி திட்டமிட்டு நடத்தப்பட்டது, அதில் எப்படியெல்லாம் அய்.ஏ.எஸ்.., அய்.பி.எஸ்..அதிகாரிகள் துணை நின்றார்கள், போலி என்கவுண்டர்கள் எப்படி திட்டமிட்டு நடத்தப் பட்டன், இப்போது சிறையில் இருக்கின்ற அதிகாரிகள் என்ன சொன்னார்கள், இப்போது என்ன சொல்கின்றார்கள் போன்ற செய்திகளையும் கூறி பி.ஜே.பி ஒரு இடம் கூட வெற்றி பெறாத மாநிலங்கள் எத்தனை என்பதனை எடுத்துக்கூறி ஒரு பொய்யான தோற்றத்தை ஊடகங்களும், கார்ப்பரேட் நிறுவனங் களும் இணைந்து செய்கின்றார்கள், மெய்யான , பாசிஸ்ட் மோடியை மக்கள் மன்றத்தில் அம்பலப் படுத்தும் வேலையை நாம் தொடர்ந்து செய்ய வேண் டும் என்று கூறி பல்வேறு வரலாற்றுத் தகவல்களை வந்திருந்தோர் அனைவர் மனதிலும் பதியும்படி உரையாற்றினார். முடிவில் மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மா.பவுன்ராசா நன்றி கூறினார். நிகழ்வில் தொலைதொடர்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தின் மா நிலச்செயலாளர் அ.செல்லப்பாண்டியன், அகில இந்திய அமைப்புச்செயலாளர் வி.சூரப்பன், மாவட்டச்செயலாளர் ந.முருகன், மதுரை விடுதலை வாசகர் வட்டச்செயலாளர் அ.முருகானந்தம், மகளி ரணி இராக்கு, மஞ்சுளா, சுசிலா வேல்முருகன் ,தொழிற் சங்கத் தலைவர் சவுந்தர்,

மற்றும் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும், பொதுவானவர் களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

ரத்தம், உடல் உறுப்புகள் கொண்ட செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

உலகில் மனிதன் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியபோதும் மனிதனை கடவுளால் மட்டுமே படைக்க முடியும் என்ற நியதியையும் மாற்றி, செயற்கை மனி தனையும் தயாரித்து சாதனை படைத்து இருக்கிறார்கள்.

பிரிட்டனில் உள்ள 18 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக நிபுணர்கள் இணைந்து செயற் கை மனிதனைப் படைத்துள்ளனர். ரத்தம், சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், கை, கால், கண்கள் போன்றவை அனைத்தும் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது.

கண்கள், இதயம், நுரையீரல்கள் போன்ற உறுப்புகள் கணினி சிப்களுடன் இணைக்கப்பட்டு இதன்மூலம் அவை இயக்கப்படுகின்றன.

இந்த செயற்கை மனிதனை உருவாக்க ரூ.5.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த செயற்கை மனிதன் லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கிறான்.

செயற்கை மனிதனின் சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும், செயற்கை நுரையீரல்கள், ஸ்வாசீன் பல்கலைக்கழகத்திலும் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


பூமியின் காந்த மண்டலத்தை ஆராய 3 செயற்கைக் கோள்கள்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பூமியின் காந்த மண்டலத்தை மேலும் தெளிவாக அடையாளப் படுத்துவதற்கான நோக்குடன் மூன்று அய்ரோப்பிய (சாட்டலைட்) செயற்கைக் கோள்கள் ரஷ்யாவிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஏவப்பட்டன. பூமியின் ஆழத்தில், குழம்பு நிலையில் இருக்கும் புவி மய்யப் பகுதியில் காந்த மண்டலம் எவ்வாறு இயங்குகின்றது என்று தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு இந்த செயற்கைக் கோள்கள் உதவும். மூன்று செயற்கைக் கோள்களும் பொதுவாக ஸ்வார்ம்' என்று அழைக்கப்படுகின்றன.

அண்மைய பல ஆண்டுகளாக பூமியின் காந்த மண்டலம் பலவீனமடைந்து வருகின்றமைக்கான காரணங்களை ஆராய்வதற்கும் விஞ்ஞானிகள் இந்த செயற்கைக் கோள்களை பயன்படுத்த வுள்ளனர்.

பூமியின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்கள் சில லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு தடவை தமது துருவத் தன்மைகளை பரிமாற்றிக்கொள்ளும் இயல்பு கொண்டவை. அப்படியான ஒரு துருவ தன்மை பரிமாற்றம் எதிர்காலத்தில் நடக்க இருக்கின்றதா என்றும் விஞ்ஞானிகள் ஆராய வுள்ளனர்.

இந்த காந்த மண்டலம் இல்லாவிட்டால் பூமி வறண்டு செவ்வாய் கோளைப் போல உறைந்து விடும்.

சூரியனிலிருந்து விலகிச் சென்றுவிடாது பூமியை இயங்கச் செய்வதற்கு இந்த காந்த மண்டலம் தான் காரணமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


பார்ப்பதற்கு கொசு போலவே தோற்றமளிக்கும் உளவாளி ரோபோக்கள்

பார்ப்பதற்கு அப்படியே கொசு போலவே தெரிகிறதா? ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்கமுழுக்க ஒரு உள வாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும்.

இதனை இன்னும் தயாரித்துக்கொண்டுதான் இருக் கிறார்கள். இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது. இதனை இருந்த இடத்திலிருந்து ரிமோட் மூலமாகவே விரும்பியவாறு இயக்கலாம். அத்துடன் நவீனரக சிறிய கமராவையும் மைக்ரோபோனையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த கொசு போன்ற பறக்கும் ரோபோவை ரிமோட் மூலமாக மனிதர்கள் மீது கொசுவைப் போலவே கச்சிதமாக பறந்து சென்று உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம். பின்னர் தனது மிக நுண்ணிய ஊசியால் தேவையான மனிதரின் தோலில் குத்தி அழுத்த சக்தியின் பிரயோகத்தால் மாதிரியை (குருதியை) எடுத்து விடலாம்.

முக்கியமாக குறிப்பிட்ட ஒரு நபரை பின்தொடர்ந்து செல்ல உதவிவருகின்ற இதனை தோலின் மீது விட்டுச்செல்லவும் இந்த ரோபோவினால் முடியும்.

சாதாரணமாக திறந்து வைக்கப்பட்டுள்ள ஒரு ஜன்னலின் ஊடாகவே ஒருவரின் வீட்டிற்குள் பறந்து சென்று நுழையக்கூடிய ஆற்றல் இதற்குள்ளது. அத்துடன் இது பறந்து சென்று குறிப்பிட்ட மனிதரின் ஆடையில் ஒட்டிக்கொள்வதன் மூலம் இரகசியமாக அவருடன் சேர்ந்து அவரது வீட்டிற்கே சென்று துப்பறியக்கூடிய திறமை யுடையது.

மேலும் அதிதிறமை வாய்ந்த இவ்வகை ரோபோக்கள் இராணுவத் துறையிலும், உளவுத் துறையிலும்தான் பெரிதும் பயன்படுகின்றன.

தமிழ் ஓவியா said...

அழிந்த அரிய தவளையினம்

புகழ் பெற்ற பிரிட்டிஷ் தாவரவியல் மற்றும் உயிரியல் விஞ்ஞானி, சார்லஸ் டார்வின் பெயரிடப்பட்ட ஒரு தவளையினம் அழிந்தொழிந்து போய்விட்டது என்று சிலி மற்றும் பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் கூறியிருக்கிறனர்.

வட டார்வின் தவளை என்ற இந்த தவளையினம், நீர் - நிலம் வாழ் பிராணிகளைத் தொற்றிய ஒரு வித மோசமான தோல் வியாதி காரணமாக, அதன் தென் அமெரிக்க வாழ்விடங் களிலிருந்து முழுதுமாகக் காணாமல் போய்விட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்,

இந்த தவளையின் உறவினமான, தென் டார்வின் தவளையினமும், எண்ணிக்கையில் வெகுவாகக் குறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த முடிவுகள் அறிவியல் நூலான ப்லோஸ் ஒன் என்ற நூலின் இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தவளையினம், 1830களில் சார்லஸ் டார்வின் எச்.எம்.எஸ் பீகிள் என்ற கப்பலில் உலகக் கடற்பயணம் மேற்கொண்டபோது அவரால் சிலி நாட்டில் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த இனத்தின் மிகவும் அசாதாரணமான அம்சம் என்னவென்றால், இந்தத் தவளைகளின் குஞ்சுகள் ஆண் தவளைகளின் குரல்வளைக்குள் வைத்து வளர்க்கப் படுவதுதான்.

தமிழ் ஓவியா said...

அடிமை ஒழிப்பு நாளில் ... பிறந்தார் வாழ்க! - சு.அறிவுக்கரசு

தந்தை பெரியார் அவர்கள் மூன்று மணி நேரத்திற்குக் குறையாமல் பொதுக் கூட்டங்களில் பேசுவார். மக்கள் திரள் அவ்வளவு நேரமும் அமர்ந்து அந்த மழலை மொழியை, கொங்கு தமிழைக் கேட்டு அறிவு பெற்றனர். நீங்கள் எல்லாரும் முட்டாள்கள் என்று காரண, காரியங்களோடு அவர் கூறியதைக் கைதட்டி வரவேற்று ஏற்றுக் கொண்டனர் மக்கள் என்பது பதிவு செய்யப்பட்ட வரலாறு. வேறு எவரும் இந்தப் பெருமையைப் பெற்றதாக எந்நாட்டு வரலாறும் கூறவில்லை.

பெரியாரின், பகுத்தறிவுக் கருத்துகளை அழகு தமிழில் பேசி மக்களைக் கவர்ந்தவர் அறிஞர் அண்ணா. மேடைப் பேச்சுக்கலையை வளர்த்தவர்கள் பெரியாரும் அண்ணாவும் என்பது, வெற்றுப் பெருமைச் சொற்கள் அல்ல. அன்று, சொல்லின் செல்வர் எனச் சிறப்பிக்கப்பட்டவர் தமிழ்ப் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை. நாவலர் எனப் போற்றப்பட்டவர் சோமசுந்தர பாரதியார். இவர்கள் இருவருமே அண்ணாவிடம் வாதப் போரில் வெற்றிபெற முடியவில்லை என்பதும் கடந்தகால நிகழ்ச்சிகள். அறிவார்ந்த வாதங்களுக்கு அலங்காரச் சொற்களும் அழகூட்டிட அமைந்த அண்ணாவின் சொற்பொழிவுகள் தனிச்சிறப்பானவை.

தமிழ் ஓவியா said...


இளம் வயதில்

அறிவுச் சுரங்கமாம் பெரியாரின் கருத்துகளைப் பேசி மக்களைக் கவர்ந்த மற்றும் ஒருவர் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள். ஒன்பது ஆண்டு ஏழு மாதங்கள் மட்டுமே வயது உள்ள நிலையில் மேடை ஏறி _ அல்ல அல்ல _ மேசை ஏறிப் பேசியவர் அவர். பயிற்றுவிக்கப்பட்ட பேச்சாக இருந்தாலும் வரலாறு படைத்தவர். தொடர்ந்து தம் சிறிய வயதிலேயே பேசி, நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கி, திருமணங்களை நடத்தி வைத்து வாழ்த்தி, வரலாற்றை உருவாக்கியவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இலக்கிய மன்றங்களின் சொற்போர்களில் கலந்து கொண்டு எப்போதும் முதல் பரிசைப் பெற்ற பெருமைக்குச் சொந்தக்காரர். அவரோடு பொருது, முதல்நிலையைப் பெற இயலாதவராக இருந்தவர் குமரி அனந்தன்.

பேச்சுக் கலை வல்லவர்களாகிய கலைஞரும் இனமானப் பேராசிரியரும் இன்னும் பிறரும் எழுதிய பேச்சுக்கலை பற்றிய நூல்களில் எடுத்துக்காட்டான பேச்சாளராக எழுதப்பட்டவர். இவரது பேச்சு ஆற்றல்பற்றி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து ஆய்வறிஞர் பட்டம் பெற்றுள்ளனர், பல்கலைக் கழகங்களில்!
வழக்குரைஞரல்லவா!

ஆதாரங்களோடு பேசுவது இவரது பாணி. ஆதார நூல்களை அடுக்கடுக்காக எடுத்துக் காட்டிப் பேசி விளக்குவார். கேட்கும் எவரும் ஏற்காமல் இருக்க முடியாது. வழக்குரைஞராகப் பணியாற்றியவர் என்பது காரணமோ? சட்டக் கல்லூரியில் சொல்லித் தருவார்களாம்: சட்டம் உன் பக்கம் இருந்தால் சட்டப் புத்தகத்தைக் காட்டிப் பேசு, அப்படி இல்லாவிட்டால் மேசையைத் தட்டி ஆவேசமாகப் பேசு, அதற்கும் வழி இல்லையென்றால் மன்றாடிப் பேசி அனுதாபத்தைப் பெற்று வெற்றி பெறப் பார் என்று! இவரது பேச்சு முதல்வகை. ஏனென்றால், இவரைப் பயிற்றுவித்த சீனியர் வழக்குரைஞர் தந்தை பெரியார்! இவரின் அறிவு ஆசான் சமுதாய வழக்குகளில் நாடு முழுவதும் நாள் முழுவதும் வாதாடி வெற்றியைத் தவிர வேறு ஒன்றையும் ஈட்டாதவர் அல்லவா! பெரியார், வழக்குரைஞர் மட்டுமல்ல, வழக்கறிஞர் ஆயிற்றே! அவருடைய மாணவர் மட்டும் எப்படிச் சோடைபோக முடியும்?

மக்கள் மன்றத்தில்

புதுக்கோட்டை, திருமயத்தைச் சார்ந்த பார்ப்பனர் சத்யமூர்த்தி என்பவர் தம் பெயருக்கே விரோதமானவர்! சென்னை மாநகராட்சியில் பொய்யையே பேசி, பார்ப்பன ஏடுகளில் விளம்பரம் பெற்றவர். அவர் பேச்சைப் போடும் அவாள் ஏடுகள் மாநகராட்சித் தலைவரின் பதிலையோ விளக்கத்தையோ வெளியிட்டது இல்லை. அவாளின் பத்திரிகா தர்மத்தை வெல்ல அன்றைய மாநகராட்சித் தலைவர் சர்.ஏ.இராமசாமி முதலியார் மக்களையே நேராகச் சந்தித்தார். பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் மேடை அமைத்துப் பேசினார். தலைவர் பேசுகிறார் (PRESIDENT SPEAKS) என்று விளம்பரம். அப்போது மேயர் என்று அழைக்கப்படவில்லை. மக்கள் விளக்கம் பெற்றனர். பார்ப்பன சத்யமூர்த்தியின் மாய்மாலம் மக்களுக்கு விளங்கியது.

கொலைவழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள சங்கராச்சாரியைக் கைது செய்த நிலையில் அவாள் கூட்டம் பதறியது. பத்திரிகைகள் கண்டித்தன. ஆசிரியர் வீரமணி, ஆற்காடு ராமசாமி முதலியாரின் செயல்முறையைப் போலவே, மக்களிடம் விளக்கினார், சங்கராச்சாரி - யார் என்பதை! நாடு புரிந்துகொண்டது. நீதிமன்றத் தீர்ப்புக்கும் நீதி சொன்ன தம் ஆசானைப் போலவே மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்டவர்.

தமிழ் ஓவியா said...

மாற்றாரின் மமதைக்கு அடி

பொய்யும் புரட்டுகளுமாகத் திராவிடர் இயக்கத்தைப் பற்றி சி.பி.எம்.கட்சிக்காரர் பி.இராமமூர்த்தி ஒரு நூலை எழுதினார். அதுபற்றிக் கருத்துக் கேட்டு ஆசிரியர் வீரமணிக்குக் கடிதம் எழுதினார் அவர். பார்ப்பனப் பாசத்தின் விளைவாக மோசடியும் முரண்பாடுகளும் கொண்ட நூல் எழுதிய பித்தலாட்டத்தை இரண்டு நபர்களுக்கு இடையேயான வாதமாக மட்டுமே வைத்திட விரும்பாமல், மக்கள் மன்றத்தில் வைத்தார் பெரியார் திடல் கூட்டங்களின் வாயிலாக! நாடு தெளிவு பெற்றது.

வெள்ளையர்க்கு வால் பிடித்தது நீதிக்கட்சியும், திராவிடர் இயக்கமும் என்கிற பொய், பலமுறை திரும்பத் திரும்பக் காங்கிரசுக்காரர்களால் சொல்லப்பட்டு மெய்யாக ஆக்கிட முயற்சிகள் எடுக்கப்பட்டதைத் தவிடு பொடியாக்கினார் தொடர் கூட்டங்களின் சொற்பொழிவுகளால்! காங்கிரசுக் கட்சியின் கறைபடிந்த அத்தியாயங்களை அம்பலப்படுத்தி உண்மை வரலாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. கராச்சி காங்கிரசு மாநாட்டில் ஆங்கிலேய அதிகாரிகள் உள்பட யாரும் மாதச் சம்பளம் ரூ.500/_க்கு மேல் வாங்கக் கூடாது என்பது தீர்மானம். அந்தக் காலக்கட்டத்தில் காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்தவர் வாங்கிய சம்பளம் ரூ.5 ஆயிரம். பெரியார் இதை வெளிப்படுத்திக் கண்டனம் தெரிவித்த பின்னர் சம்பளம் குறைக்கப்பட்டது என்ற உண்மையைப் போட்டு உடைத்தார் ஆசிரியர் வீரமணி.

தமிழ் ஓவியா said...


இன்று மகா உத்தமர் என்று பா.ஜ.கட்சியால் பிரச்சாரம் செய்யப்படுகிற வல்லபாய் பட்டேல்தான் அய்ந்தாயிரம் சம்பளம் வாங்கிய காங்கிரசுத் தியாகி!

யாராக இருந்தாலும்...

மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்த எம்.ஜி.ஆர். உடல்நலம் மிகவும் கெட்டுப் படுத்திருந்த நிலையில், மக்கள் பிரார்த்தனை செய்தால் அவர் உயிர் பிழைப்பார் என்ற பிரச்சாரம் செய்யப்பட்டது. மூடநம்பிக்கைகளை முறியடிப்பதையே நோக்கமாகக் கொண்ட அறிவியக்கத்தின் ஆசிரியர் வீரமணி பிரார்த்தனை மோசடி என்று நாடு முழுவதும் பேசி அந்த மூடத்தனத்தைத் தோலுரித்தார். மக்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்ற அய்யமோ, அச்சமோ ஏற்படாமல் தம் அறிவு ஆசான் வழியில் அஞ்சாமல் பேசியவர்.

ஈரோடும் - யாரோடும்

சொற்களுக்காக இவர் அலைவதில்லை. இயல்பான பேச்சு என்பதால் வெற்று அலங்காரச் சொற்களோ, அடுக்குச் சொற்களோ இவரது சொற்பொழிவில் காணக் கிடைக்காது. அதனால் வறண்டிருக்கும் என நினைத்து விடக்கூடாது. ஏகலவ்யனின் கட்டை விரலைத் துரோணன் குரு காணிக்கையாகக் கேட்டுப் பெற்ற கொடுமையைக் கூறும்போது, அதன்பிறகு ஏகலவ்யன் வில்லைத் தொடவில்லை என்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் பலருடன் நானும் அமர்ந்து கேட்டு ரசித்த சொற்சிலம்பம் அது! ஈரோடு போனவர்கள் யாரோடும் போகமாட்டார்கள் என்பதும் இவரது சொற்கள்தான்!

மக்களை மகிழ்விப்பதற்காகப் பேசும் பேச்சாளரல்லர். தம் ஆசானைப் போலவே, மக்களைத் தம் வழிக்குக் கொண்டுவரப் பேசுபவர். அதனால் அடர்த்தியான கருத்துகளை இயல்பான மொழியில் எடுத்து விளக்குபவர். மொத்தத்தில், நல்ல பேராசிரியர்கள் பாடம் நடத்துவதைப் போல இருக்கும். இவர் போன்று பாடம் நடத்தும் பேராசிரியர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமம் என்பது வேறு!

மாலைநேரக் கல்லூரிகளில்

பெரியாரின் பொதுக்கூட்டங்களை மக்களுக்கான மாலை நேரக் கல்லூரி என்றார் பேரறிஞர் அண்ணா. அப்பேர்ப்பட்ட மாலை நேரக் கல்லூரிகளை தமிழகத்தின் முதல் பேராசிரியரான பெரியார் (இந்தப் புகழாரமும் அண்ணா சூட்டியதுதான்) அவர்களின் மறைவுக்குப் பின்னரும், தொடர்ந்து நடத்திவரும் விரிவுரையாளராக விளங்குகிறார்.

பல்கலைக்கழகங்கள் இவரை அழைத்துத் தம் மாணவரிடையே உரையாற்றச் செய்து உணர்வூட்டச் செய்கின்றன. தென் மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் இத்தகு வரவேற்பு. இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம், சொற்பொழிவு என ஓயாது பெரியாரின் கொள்கைகளைப் பலருக்கும் பரப்புரை செய்கிறார். வெளிநாடுகளிலும் பல்வேறு அறிஞர் மன்றங்களில் பெரியாரைப் பரப்பும் பணியில் தம் பேச்சாற்றலைப் பயன்படுத்துகிறார் _ ஆங்கில மொழியில் உரையாற்றுவதன் மூலம்!

நாளெல்லாம், பொழுதெல்லாம் பேச்சு, பிரச்சாரம், கருத்து விளக்கம்! இதன்னியில் சற்றொப்ப நூறுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆக்கம். அப்பப்பா!

எழுபது ஆண்டுகள்

1943இல் தொடங்கிய பணி 70 ஆண்டுகளாக 2013லிலும் தொய்வின்றித் தொடர்கிறது. 81ஆம் அகவையில் நுழைகிறார். அவர் வாழ்க! இன்னும் அய்ம்பதாண்டுக் காலம் வாழ்க! (கஞ்சத்தனம்தான். மருத்துவ அறிவியல் அறிஞர்கள் மனிதன் 120 ஆண்டுகள் வாழலாம் என்றுதானே கூறுகிறார்கள்!) அவர் வாழ்கின்ற நாளெல்லாம் திராவிடச் சமுதாயம் மானமும் அறிவும் பெறவே உழைப்பார் என்பதால் _ அவர் வாழ்ந்தால் நாமும் வாழ்வோம்!

டிசம்பர் 2 உலக அடிமை ஒழிப்பு நாள் ஆகக் கொண்டாடப்படுகிறது. ஆரியப் பண்பாட்டுக்கு அடிமையாக்கப்பட்ட திராவிடர்களின் அடிமைத்தன்மை ஒழிப்புக்காக தந்தை பெரியாருக்குப் பின் அயராது உழைப்பவரான ஆசிரியர் பிறந்த நாள் என்பதால் பொருத்தம்தானே! ஆசிரியர் வாழ்க! வாழ்க!

தமிழ் ஓவியா said...

அய்யாவின் ‘கணக்கில் நீ’ ஆயுட்கால வைப்பு நிதி!


எண்பத்தியொன்னில்
எடுத்தடி வைக்கும் எங்கள்
தொன்மைத் தமிழ்க்குடியின்
உண்மையான காவலனே!

அண்ணாவே வந்தழைத்தும்
அசைந்திடாத மன உறுதி!
அய்யாவின் கணக்கில் நீ;
ஆயுட்கால வைப்பு நிதி!

வாலிபங்கள் மைனராய்
திரியும் வயதிலேயே
பெரியார் மடியில் வந்து விழுந்த
கோகினூர் வைரம் நீ!

வாலிபமும், வருவாயும்
வருங்கால வசந்தம் காண
ஆசைகாட்டி அழைத்தபோதும்
மோசம் போகாமல்
ஆசையை அறுத்துவிட்டு
அய்யா அழைத்தவுடன்
அனைத்தையும் துறந்து வந்தாய்!

ஈரோட்டுக் கிழவரின்
கரம்பற்றி; கைத்தடியாய்
பகுத்தறிவுப் பாட்டையில்
பத்தியமாய் பயணித்தவன் நீ!

மேடையில் உன் பேச்சோ
போர் முழக்கம்!
ஆதாரங்கள் அதில் வந்து
அணிவகுக்கும்!
எதிரிகளுக்கு எடுக்கும்
குலை நடுக்கம்!
எங்கள் செவிகளிலோ
தேன் இனிக்கும்!

மக்கள் கூடும்
மாலை நேர வகுப்புகளில்
பெரியாரியலைப் போதிக்கும்
பேராசிரியனும் நீதான்!
பெரியாரை இன்னமும்
பயிலும் மாணவனும் நீதான்!

பெரியாரும், அண்ணாவும்
பச்சைத் தமிழர் காமராஜரும், கலைஞரும்
பேணிவளர்த்த சமூக நீதிக்கு
பார்ப்பனப் பெரும்புள்ளிகளை வைத்தே
பாதுகாப்பு வேலி போட்ட
அசகாய சூரன் நீ!
அசுரகுலத் தலைவன் நீ!
நீதி மன்றங்களுக்கும்
நீதி சொல்லிக் கொடுக்கும் பாடசாலை நீ!

அண்ணா அழைத்தபோதே சென்றிருந்தால்
அரசியலின் அதிசயமாய் ஆகியிருப்பாய்!
அய்யாவிடமே நின்றுவிட்டதால்
அரசியலே அதிசயக்கும்
அதிசயமாய் ஆகிவிட்டாய்!

சேர, சோழ, பாண்டியரும்
சரிநிகர் உனக்கில்லை!
அவர்களெல்லாம் வெறும்
அந்தப்புரத்துப் பொலிகாளைகள்!
சோற்றுத் துருத்திகள்;
சோம்பேறிகள்!

பார்ப்பனப் பாதந்தாங்கிகள்;
பெண் பித்தர்கள்!
மன்னர் மரபில் மட்டும்
நீ பிறந்திருந்தால்...
புத்தருக்கு ஒரு அசோகன்போல்
பெரியாருக்கு நீயும் ஆகியிருப்பாய்!

சாமானியனாய்
நீ பிறந்திட்டாலும்....
பெரியாரியலை உலகமயமாக்கும்
பெரும் பணியைத் தலைமேற்கொண்டு
சக்கரம் கட்டி உலகைச் சுற்றி
சரித்திரம் படைக்கின்றாய்!

புவியின் சுழற்சி
நிற்கும் மட்டும்; நின் புகழும்
மங்காது; மறையாது!
மாறாது நிலைத்திருக்கும்!

- சீர்காழி கு.நா.இராமண்ணா

தமிழ் ஓவியா said...

அரைக்கோப்பைத் தேநீரும் நாலு இட்லியும்


- முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

அய்ம்பது ஆண்டுகளுக்குமுன் _ இந்தத் திராவிட இயக்கத்தின் _ ஈடுஇணையற்ற இந்தத் தமிழர் தலைவரின் தேவை _ அரைக்கோப்பைத் தேநீரும் நாலு இட்லியும்தான். ஆம்! இன்றும் அதே நிலைதான். மனிதர் மாறவில்லை. வயது ஏறியிருக்கிறது. சுருண்ட முன்நிற்கும் அழகிய கேசம் நரைத்துப் படிந்திருக்கிறது. ஆயினும் இன்றும் அதே அரைக்கோப்பைத் தேநீருடன் நான்கு இட்லியுடன் கூட்டம் முடிந்து கொள்கை முழக்கமிட்டுக் கார் ஏறும் தலைவராக வேறு யாரையும் சுட்டிக்காட்ட முடியவில்லை.

ஆனால் அவர் வென்றெடுத்த சாதனைகளைப் பட்டியல் போட்டால், படம் பிடித்துக் காட்டினால் ஏடும் போதாது, இடமும் போதாது. அவரின் அந்த எளிமை மாறவில்லை இன்றும்.

சாதனைகளில் எல்லாம் தலையாய சாதனை மூத்திரச் சட்டியைச் சுமந்து, மூன்று கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் முழக்கமிட்ட தந்தை பெரியாரின் கொள்கைகள் இன்று உலகமயமாகி வருகின்றன எனும் பெருமிதத்திற்குச் சொந்தக்காரர் என்று பட்டியல் இட்டால் ஒருவர்தான் _ ஆம்! நிச்சயமாக ஒருவர்தான் _ ஆசிரியர், தமிழர் தலைவர் ஒருவர்தான் என்பதை வரலாற்றாசிரியர்களான நாம் அல்ல வரலாறே பதிவு செய்திருக்கிறது.

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம் ஆகிய கொள்கைகளின் மாற்று வடிவம்தான் தந்தை பெரியார். அந்தப் பகுத்தறிவுப் பகலவனின் கொள்கைகளை _ உலகமயமாகி வரும் தந்தை பெரியாரின் கொள்கைகளை வென்றெடுப்போம்! என்று வெற்று முழக்கமில்லாது வெற்றி முழக்கமாக முழங்கி வரும் மாமனிதர்தான் நம் தமிழர் தலைவர். ஏன் பெரியாரைத் தோள்மீது தூக்கிச் சுமக்கிறார்? ஏன் பெரியாரை உலக மயமாக்குகிறார்?

அதற்கு விடையாக அவருக்குக் கிடைக்கிறது ஒரு தகவல். 50 ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உலகத் தத்துவ அறிஞர்கள் மாநாட்டிலே மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்திக்கொண்டிருந்த உலகம் போற்றும் பேரறிஞர் வால்டர் ரூபன் இந்தியச் சமூகத்தில் மேலிருந்து கீழ்வரை பரவி சமூக வளர்ச்சியை முடக்கிக்கொண்டிருக்கும் மிகப் பெரிய நோய் வருணாசிரமம் அல்லது மனுதர்மம் அல்லது வைதீகம். இந்த நோய்க்கு எதிராகப் போராடுகிறார் பெரியார் ஈ.வெ.ரா. எனவே இன்றைய இந்தியாவின் முன்னுதாரணமற்ற பேராளுமை பெரியார் ஈ.வெ.ரா.தான் என்று குறிப்பிட்ட முன் உதாரணம் ஆசிரியர் முன் நிற்கிறது. பெரியாரை உலகமயமாக்கத் தூண்டுகிறது.

எனவேதான், ஆசிரியர் அவர்கள், அய்யாவின் 135ஆவது ஆண்டில் அரிமா நோக்குடன் அந்தச் சிங்கம் நடைபோட்ட பாதையைப் திரும்பிப் பார்க்கிறோம். திசைகளில் அவர் கிழக்கு என்பது புரிகிறது. வரலாற்றில் இனிவரும் காலத்தில் பெரியாருக்கு முன் பெரியாருக்குப் பின்

என்றுதான் புதிய இணைப்புகள் தோன்றும். அதுதான் நியாயமும்கூட என்று எழுதுகிறார்.

அந்த வேரின் பலம்தான் வீழ்த்தப்பட முடியாத வீறுகொண்ட இயக்கமாகவும், தோல்வி காணாத கனல்களாகவும், துவண்டு போகாத தொண்டர்களாகவும், தொய்வில்லாத பிரச்சாரமாகவும் உலகமயமாகி ஒளிவீசிக் கொண்டிருக்கும் கலங்கரை வெளிச்சமாகி இன்று உயர்ந்து நிற்கிறது. ஆம். ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டதுபோல் பெரியாருக்குப் பின் என்று புதிய இணைப்புகள் தோன்றுகையில் பெரியாருக்குப் பின் பெரியார் உலகமயமாகி ஒளிவீசினார், அந்தத் திருப்பணியைச் செய்தவர் கி.வீரமணி எனும் பெரியாரின் முதன்மைத் தொண்டர் என்று வரலாறு மறக்காமல், மறுக்காமல் குறிப்பிடும்.

பெரியார் உலகமயமாக இந்தப் பெருந்தொண்டர் தமிழர் தலைவர் என்ன செய்துவிட்டார் என்பதைப் பட்டியலிட்டால் இங்கே இடம் போதாது. பெரியாருக்குப் பின் நான் என்பது அவரிடம் இல்லை. நாம் என்பதே இருக்கிறது. அதுவே முதல் அடிச்சுவடு உலக மயாமாக்குதலுக்கு. தமிழர் தலைவர் என்றும் எங்கும் கூறிவருவன:

நம் இயக்கத்தில் நான் எப்போதும் இல்லை. நாம் என்பதே எங்கும் இருக்கிறது. இருக்கும், இருக்கவேண்டும். கூட்டுக்குழு மனப்பான்மையுடன் நாம் ஒருங்கிணைந்து உழைத்தால் மாமலையும் ஒரு கடுகு. நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது. வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்பது நமது தனித்ததோர் முழக்கமல்லவா!

அதனாலேதான் தாம் நிகழ்த்திய மாபெரும் சாதனை என்றாலும் பார்ப்பன முதலமைச்சர், பார்ப்பனத் தலைமை அமைச்சர், பார்ப்பனக் குடியரசுத் தலைவரைக் கொண்டிருந்த வேளையில் நிகழ்த்திய அந்தச் சாதனையைத் தனது என்று கருதாமல் எவ்வளவு அடக்கமாகக் கூறுகிறார் தமிழர் தலைவர் என்பதைப் பாருங்கள்.

தமிழ் ஓவியா said...

பெரியார் காலத்தில் வித்திடப்பட்ட வகுப்புரிமை சுருக்கப்படவில்லை. விரிந்தோங்கித் தந்த சட்டப்பாதுகாப்புடன் கோலோச்சுகிறது. 69 சதவிகிதம் - கல்வி, வேலைவாய்ப்புகள், தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள், மிகப் பிற்படுத்தப்பட்டோர், அருந்ததியர், இஸ்லாமியர் என்று பசியேப்பக்காரரை அடையாளம் கண்டு பந்தியில் அமரவைத்து விருந்து பரிமாறப்படுகிறதே! பெரியாருக்குப்பின் என்ற சரித்திரக் குறிப்பில் இது முக்கியமாக கோடிட்டுக் காட்டப்பட வேண்டியதாகும்.

நம் இயக்கத்தின் சமூக நீதிக் குரல் ஓங்கியது எனில் அதற்குக் காரணகர்த்தா அய்யாவின் அடிச்சுவட்டில் மாற்றமில்லாது நடைபோடும் தமிழர் தலைவரேதான் முழுமுதற் காரணம். இதன் விளைவாக ஆசிரியர் குறிப்பிட்டதுபோல், தமிழர் தலைவர் குறிப்பிட்டதுபோல் இடஒதுக்கீட்டுக்கு நீதிமன்றத் தீர்ப்புகளால் ஆபத்து வரும்போதெல்லாம் அரசியல் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர வடமாநிலத் தலைவர்கள் உட்பட பலரும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் குரல் கொடுக்கிறார்கள். மத்திய அரசும் அதன் முக்கிய அமைச்சர்களும் வாக்குறுதியைத் தருவதோடு செயல்பட முனைப்புடன் இருக்க தொடர்ந்து வற்புறுத்தப்படுகிறார்கள். இதில் கட்சி அரசியல் இல்லை. இரண்டே அணிகள். இடஒதுக்கீட்டுக்கு _ சமூக நீதிக்கு ஆதரவான அணி, எதிர்க்கும் மற்றொரு அணி என்றும் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

தம் கருத்துக்கு வலுவூட்ட உலகப் புகழ்பெற்ற அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழக நோபல் பரிசுபெற்ற அறிஞர் அமர்த்தியாசென் அவர்களும், பெல்ஜியம் நாட்டுப் பேராசிரியரான ஜீன் டிரெடே அவர்களும் இணைந்து எழுதிய இந்தியாவும் அதன் முரண்பாடுகளும் நிச்சயமற்ற பெருமை எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் ----An uncertain Glory India and its Contradictions என்னும் நூலை மேற்கோளாகக் காட்டும் அளவிற்கு அறிவுத்திறன் மிக்க தலைவராக நம் தலைவர் விளங்குவது நமக்குப் பெருமை, சிறப்பு, உயர்வு ஆகியனவாகும்..

தந்தை பெரியார்தான் இனி வரலாற்று முதல்வர் _ வரலாற்று நாயகர் _ என்றும் உயர்ந்து நிற்பார் என்பது காலத்தின் தேவை என்பது மட்டுமல்ல _ கட்டாயமும் கூட என்பதை எண்ணித்தான் தமிழர் தலைவரின் சீரிய, பொறுப்புமிக்க, ஆற்றல்மிகுந்த தலைமையின் கீழ் அதன் பணிகளைப் பன்முகப் பார்வையுடன் தொடர்ந்து தொய்வின்றிச் செய்துகொண்டே இருக்கிறார்.
இதற்குச் சான்று மலேசியாவில் தொடங்கி ஆப்பிரிக்கா, மியான்மர் ஆகிய பகுதி வரை பெரியார் இயக்கம் பரவி வருவதே ஆகும்..

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தொடங்கிப் பல முதன் ஊர்களிலும் மலேசியத் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் விழா பல ஆண்டுகளாகச் சீரோடு கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூரிலோ, பெரியார் சமூக சேவை மன்றம் எனும் அமைப்பு, மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் மய்யத்தில் அய்யாவின் அருந்தொண்டைப் பரப்புரை செய்கிறது.

தமிழ் ஓவியா said...

பெரியார் பன்னாட்டமைப்பு அமெரிக்கத் திருநாட்டில் சிகாகோவில், வாஷிங்டன் பகுதியில் மேரிலாண்டு பகுதிகளில் தந்தை பெரியார் விழா கருத்தரங்குகளைத் திட்டமிட்டு நடத்துகிறது.

அதுமட்டுமல்லாது அடிமைத்தனத்தில் ஊறிப்போயிருந்த ஆப்பிரிக்க நாட்டில் _ கானா நாட்டில் பழைய கோஸ்டில் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் சார்பில் தந்தை பெரியார் 135ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா செப்டம்பர் 23 அன்று கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் கலந்து கொள்ள அய்யா ஆப்பிரிக்காவிலும் கால் ஊன்றினார் என்றால் சாதாரண நிகழ்வன்று அது.

உலகத்தின் முதல் நாத்திகர் புத்தரின் கொள்கை பரப்பும் அறிஞர்கள் ஆண்டுதோறும் மியான்மரில் பெரியார் சுயமரியாதை இயக்கம் சார்பில் அய்யா விழா கொண்டாடப்படுவதையும், குவைத் நாட்டில், துபாயில் பெரியார் விழாக்கள் பெருஞ்சிறப்போடு கொண்டாடப்படுகிறது என்றால் பெரியாருக்குப் பின் _ வீரமணி அவர்களின் தொண்டு, சிறப்புமிக்க பணி பெரியாரை உலகமயமாக்குவதில் வெற்றி முகட்டைத் தொட்டுவிட்டது என்பதுதானே பொருள். கடல்கடந்து மட்டுமல்லாது விந்திய மலையைக் கடந்தும் பெரியாரியம் ஒடியா மொழியில் குஜராத்திய மொழியில், மராத்திய மொழிகளில், ஓங்கி ஒலிக்கிறது. ஆம், பெரியாரின் தத்துவத் தேர் தடையின்றி ஓடுகிறது. கொள்கைக் கொடி பட்டொளி வீசிப்பறக்கிறது.
நாம் சொல்வதைவிட அடுத்தவர்கள் சொல்லக் கேட்பதுதான் பெருமை. வள்ளுவர் கூட சான்றோன் எனக் கேட்ட தாய் என்கிறார்-.

புவனேஸ்வரத்தில் பெரியாரானா ராச்சனா எனும் தலைப்பில் தந்தை பெரியாரின் சிந்தனைத் தொகுப்புகள் வெளியீட்டு விழாவில் உத்கல் பல்கலைக்கழக உளவியல் துறைத் தலைவரும் ஒடிசா மாநில பகுத்தறிவாளர் சங்கத்தின் துணைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் பிரசாந்த் ரதா தம் தலைமை உரையில் தந்தை பெரியார் தொடங்கிய பகுத்தறிவுப் பிரச்சார அமைப்பினை தமிழர் தலைவர் முன்னெடுத்துச் செல்வது குறித்துக் கூறியது ஒரு சான்று. இரண்டாவது சான்று, பேராசிரியர் தானேசுவர் சாகு ஒடியா மொழியாக்கப் பணிக்கு ஆசிரியர் காட்டிய அறிவுரை, வழிமுறை குறித்துக் கூறியனவாகும்.

ஆனால், இவ்வளவு சாதனைகள் புரிந்தும், பெரியாரை உலகமாக்கி உயரிய சிறப்புப் பெறச் செய்தும், பெரும்பணி ஆற்றிய அந்தத் தலைமையிடம் ஆர்ப்பரிப்பு, ஆரவாரம், பகட்டு, பெருமை ஏதும் இல்லை என்பதைப் பாருக்கு எடுத்துச் செல்ல வேண்டியது நம் கடமை. அந்தத் தலைவர் 50 ஆண்டுகளுக்குப் பின்னும் அதே எளிமை, அதே அரைக்கோப்பைத் தேநீர், 4 இட்லியுடன் (சில வேளைகளில் 4 அல்ல 3 இட்லி மட்டும்தான்) தன் உணவை முடித்துக் கார் ஏறுவது, ரயில் ஏறுவது வியப்பின் வெளிச்சமே.

படிக்கத் தெரிந்த பள்ளிச் சிறுவன் முதல் படிப்பறியா பாமரனிலிருந்து, வெளிநாட்டிலிருந்து வாழும் எவரும் கண்டு வியக்கும் 95 அடி உயரப் பெரியாரையும், பெரியார் உலகத்தையும் இனி வரும் உலகம் காணச் செய்யும் ஆசிரியர், பெரியாருக்குப் பின் _ நாம் கண்டெடுத்த பெருஞ்செல்வம் _ சொத்து.

வரலாற்றைப் படைக்க, வரலாற்றை உருவாக்க, வரலாற்றை நிலைநிறுத்த பாரம்பரியமும் பழம் பெருமைக் குடும்பப் பாரம்பரியமும் தேவையில்லை. அறிவும், உழைப்பும் போதுமென்ற பெரியாரின் வாக்கை நிலைநிறுத்தும் நாணயமான கடலூர் கிருஷ்ணசாமி வீரமணி வாழ்க! என்று நம் ஆசிரியரின் பிறந்த நாளில் முழங்குவோமாக.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்திய மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்திட, தமிழகம் முதல் டெல்லி வரை 42 மாநாடுகள் 16 போராட்டங்கள் நடத்தியவர் தமிழர் தலைவர் கி.வீரமணி என்பதும், அதன் விளைவாக மண்டல் சூறாவளி வடபுலத்தில் வீசி, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்து, மண்டல் அறிக்கையின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, தற்போது லட்சக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்பட்டு வருகிறார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

ஒப்பிட முடியாத வாழ்க்கை


எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்காகவே தம்மை ஒப்படைத்துக் கொண்ட மனிதர்! தனி வாழ்வை கிஞ்சிற்றும் நுகராமல், பொது வாழ்வே முழு வாழ்வு என வாழ்பவர். பள்ளிப் பருவத்திலே மேடை ஏறி வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒரு சேரப் பெற்றவர். ஒரு இளைஞராக வாழ்ந்த காலத்தில், உரிய எந்த ஒன்றையும் அனுபவித்து மகிழாதவர்.

குறிப்பாக எல்லா சட்டத் திட்டங்களுக்கும் உட்பட்டு, ஒரு குறிப்பிட்ட நேர்கோட்டில், நேர்மையோடு வாழ்வதென்பது அவ்வளவு சாத்தியமில்லை.

அந்தக் காலங்களில் இப்படியான ஒரு சூழலைச் சில தமிழ்நாட்டுப் பள்ளிகள், தங்கள் விடுதிகளில் (Hostel அமல்படுத்தின. ஒரு மாணவனை முழு மனிதனாக ஆக்கும்பொருட்டு, பெற்றோர்கள் அங்கு வளர்த்தெடுக்க விரும்பினார்கள். எனினும் அவைகூட, கால ஓட்டத்தில் கரைந்து போயின. இப்படியான பொதுக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, சுயக்கட்டுப்பாடுகளுடன், பெரியார் கொள்கையை மட்டுமே மையமாகக் கொண்டு வளர்ந்து, மிளிர்ந்தவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஒரு மனிதருக்கான சராசரி இன்பங்களைக் கூட அனுபவிக்காமல் வளர்ந்தவர். இன்றைக்கு உலகளவில் அவர் புகழ்பெற்று, இயக்கத்தையும் அப்படியே வளர்த்து, உச்ச நிலையில் இருக்கிறார் என்றால், அதற்காக அவர் வழங்கியது தம் வாழ்வு முழுவதையும்! இப்படியான ஒரு உழைப்பை, ஒரு தொழில் அல்லது அரசியல் கட்சியில் வழங்கியிருந்தால், அதன் பலனே வேறு. பத்து வயதுச் சிறுவன் வீரமணிக்கும், இன்றைய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குமான இடைப்பட்ட வாழ்வை நினைத்துப் பார்த்தாலே நம் நெஞ்சம் சிலிர்க்கிறது. காரணம், அப்படியான ஒரு வாழ்வை நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது; வேறு யாருடனும் ஒப்பிடவும் முடியாது. திராவிடர் கழக வரலாறு என்பது நெடிய பாதை மட்டுமல்ல; அது ஓர் கொடிய பாதை! விஷத்தை விடவும் கொடிய பார்ப்பனியத்தோடு மோதுகிற பாதை. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத பாதை. எனினும், இன்றைய சூழலில் நிறைய மாறியிருக்கலாம். கொடிய பாதைகள், பெரியார் பாதைகளாக மாற்றப்பட்டிருக்கலாம்.

ஆனாலும், அன்றைய சூழலில் அதனோடு வாழ்ந்து, உழன்று, போராடியவர் ஆசிரியர் கி.வீரமணி என்பதை மறந்துவிடக் கூடாது. பொதுவாக இந்த உலகம், முதலீட்டு உலகமாகவே இருந்து வந்திருக்கிறது. எதில் முதலீடு செய்தால் இன்பம் காணலாம் என்பதாகவே மனிதனின் கணக்கு இருக்கிறது. ஒரு அய்ந்து ஆண்டு உழைப்பை முதலீடாகக் கொடுத்தால், அரசியல் அள்ளித் தரும் என்பது ஒரு கணக்கு. இது உள்ளூர் அரசியல் தொடங்கி, உலக அரசியல்வரை நீள்கிறது. இதுதவிர, உண்மையான சமூகச் சிந்தனையாளர்கள் அவ்வப்போது செயல்படுபவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். மேலை நாடுகளில் எழுதுவதும், பேசுவதுமாக அவர்களின் சமூகப் பணி இருந்து வந்திருக்கிறது. உறவின் வெறுப்பு, சமூக எதிர்ப்பு, வாழ்வின் வெறுமை, உயிருக்கு மிரட்டல், மன உளைச்சல், உடல் சோர்வு என்பதெல்லாம் அவர்களுக்கு மிக மிகக் குறைவு அல்லது இல்லவே இல்லை. இதை நாம் குறையாகப் பதிவு செய்யவில்லை. மாறாக, அவர்களின் சமூகச் சூழல் அப்படி. ஆனால், நம் சூழலோ வேறு. உலகில் எங்குமே ஏற்பட்டுவிடக் கூடாத, பார்ப்பனக் கருத்துகள் நிறைந்த நாடு நம் நாடு.

உலகில் நிறைய விசயங்களுக்கு தரவரிசைப் பட்டியல் தயார் செய்கிறார்கள். அதைப் போல உலகின் கொடுமைகள் என வரிசைப்படுத்தினால் அதில் பார்ப்பனக் கொடுமைகள்தான் முதலிடம் பிடிக்கும். மற்றக் கொடுமைகளுக்கு அடுத்தடுத்த இடமே கிடைக்கும். காரணம், எல்லாக் கொடுமைகளும் ஒரு சேரப் பெற்றதுதான் பார்ப்பனியக் கொடுமை. கொடுமைகளின் பிறப்பிடம் பார்ப்பனியம், கொடுமைகளின் தாய் வீடு பார்ப்பனியம் என்றெல்லாம் நாம் வர்ணித்தால் அதில் கடுகளவும் பொய் இருக்க முடியாது; மிகை இருக்க முடியாது. இதை வெறும் எழுத்து வடிவிலோ, உணர்ச்சி விளிம்பிலோ நின்று எழுதவில்லை. மாறாக, அறிவியல் பூர்வமாக, ஆதாரப்பூர்வமாக இவற்றை நாம் உறுதி செய்ய முடியும்.

அப்பேற்பட்ட ஆபத்து நிறைந்த, வலிமை பொருந்திய ஒரு கூட்டத்தை நேரெதிர் நின்று களம் கண்ட இயக்கம் திராவிடர் கழகம். அந்தக் கழகத்தில் தம் வாழ்வையே அவர் அர்ப்பணித்திருக்கிறார். இயக்கத்தின் கடவுள் மறுப்புக் கொள்கையில் அல்லது பொதுவான சில கருத்துகளில் மாறுபட்டவர்கள் இருக்கலாம். எனினும், ஆசிரியர் கி.வீரமணி என்கிற மனிதரின் அர்ப்பணிப்பும், உழைப்பும் தமிழ்நாட்டின் அத்தனை பூமித் தடத்திலும் நிரவிக் கிடக்கிறது என்பதை எந்த நியாயாவாதியும் மறுக்கமாட்டார். தனக்கான சௌகரியத்தை மனிதன் தொடர்ந்து உறுதி செய்து கொண்டே இருப்பதும், தனக்காக மற்றும் குடும்பத்திற்காக மட்டுமே வாழ்ந்து வரும் மனிதர்களையும் மனதில் வைத்துச் சேர்த்து யோசித்தால், மேலே கூறியவை அனைத்தும் ஒப்பிட முடியாத சாதனைகள் என்பதை எளிதில் அறிய முடியும். அச்சாதனைகளை அவர் தொடர்ந்து செய்வார். அதனால்தான் கி.வீரமணியாய் இருந்தவர் தமிழர் தலைவரானார்!

- வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...

இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தனியாக இலங்கைக்குள் வெளிப்படைத் தன்மை கொண்ட நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்த மார்ச் மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கெடு தவறினால் அய்.நா.மனித உரிமை ஆணையத்தை அணுகி சுயேச்சையான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்.

- டேவிட் கேமரூன்,
பிரிட்டிஷ் பிரதமர்

தமிழ் ஓவியா said...

இலங்கையில் நடைபெற்ற போரின்போது, மனித உரிமைகள் ஒட்டு மொத்தமாக மீறப்பட்டுள்ளதே காமன்வெல்த் மாநாட்டை மொரிஷியஸ் புறக்கணித்ததற்கு முக்கியக் காரணம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொரிஷியஸ், காமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற நிலையில், காமன்வெல்த் விவகாரத்தில் எங்கள் அரசு தற்போது எந்த முடிவைக் கொண்டுள்ளதோ அதே நிலைதான் நீடிக்கும்.

- நவீன் சந்திரராம் கூலம்,
மொரிஷியஸ் பிரதமர்

தமிழ் ஓவியா said...

நீ சொல்லு - நான் சொல்றேன்

(இன்றைய காலத்தில் கழிப்பறைகள் வீட்டுக்கு வீடு இருக்கின்றன. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை எடுப்புக் கழிப்பறைகள்தான் இருந்தன. நகரங்களில் சிலர் தெரு ஓரங்களையே கழிப்பிடமாக ஆக்கிவிடுவார்கள். அந்த மலத்தை அள்ளும் தொழிலாளர்கள் அதன் மீது முதலில் சாம்பலைப் போடுவார்கள்; பின்பு அள்ளிச் செல்வார்கள். இந்த நடைமுறை இருந்த காலத்தில் பின்வரும் நகைச்சுவை உரையாடலைப் பெரியார் எழுதியுள்ளார்.)

வைணவ தாசன்: என்ன தேசிகர்வாள், உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல் விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே! இது என்ன, பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?

சைவப் பண்டாரம்: அசிங்கமென்னையா வந்தது? ஒரு சிம்ட்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் மோட்சத்திற்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்பதாக விபூதி மான்மியத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. நாம் நல்ல காரியம் செய்து மோட்சத்திற்கு ஒரு காலமும் போகமுடியாதபடி சைவநெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால், விபூதி பூசியாவது மோட்சத்திற்குப் போகலாமென்றால் இதில் உமக்கேன் இத்தனை பொறாமை.

வைணவ: எனக்கு ஒன்றும் பொறாமையில்லை. சந்தோஷமாய் தாங்கள் மோட்சத்திற்குப் போங்கள். ஆனால், எனக்கு ஒரு சந்தேகம். ஒரு சிமிட்டா சாம்பல் பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போய்விடும் என்கிறீர்களே. மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த அந்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போயிருக்குமே! அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோட்சத்திற்குப் போய் அந்த எழவு நாற்றத்தை எப்படிச் சகிப்பது என்கின்ற சந்தேகம்தான்.

சைவ: சரி, சரி! நீர் சுயமரியாதைக்காரர் போல் தெரிகின்றது; உம்முடைய யோக்கியதையைப் பார்ப்போம். பட்டையாய் வலிப்பு மாட்டுக்குச் சூடு போட்டதுபோல் போட்டுக் கொண்டிருக்கிறீர்?

வைணவ: உம்மைக் கேட்ட சங்கதிக்குப் பதில் சொல்லும்; பிறகு நான் பதில் சொல்லுகிறேன்.

சைவ: நாளைக்காவது சொல்லுவீரா?

வைணவ: நான் நீர் சொன்ன பிறகுதான் சொல்லுவேன்.

(9.11.1930 குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதியது.)

தமிழ் ஓவியா said...

டிசம்பர் 6 : அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்


இந்து மதம் ஒழிவதே நல்லது!

இந்தியர்களுக்கு தாங்கள் ஒரே நாட்டைச் சார்ந்தவர்கள் என்ற எண்ணம் வருவதே மிகக் கடினமான ஒன்றாகும். இங்கே அமர்ந்துள்ள அரசியல் உணர்வுமிக்க தலைவர்கள், இந்தியாவின் மக்கள் என்று அழைப்பதையே கடுமையாக எதிர்த்த நிகழ்வு என் நினைவிற்கு வருகிறது! இந்திய தேசம் என்று அழைக்கப்படுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள். இந்தியர்கள் ஒரே தேசத்தவர் என்று நம்புவதன் மூலம் மிகத் தவறான கருத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறீர்கள்.

பல ஆயிரம் ஜாதியினராகப் பிளவுபட்டுள்ள மக்கள் எப்படி ஒரே தேசத்தினராக மாற முடியும்? சமூகத்தளத்தில் இந்தியர்கள் இன்னும் பிளவுண்டு கிடக்கிறார்கள் என்பதை எவ்வளவுக் கெவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. அப்போதுதான் இந்தியர்களுக்குள் ஆழ வேரூன்றியுள்ள சமூகப் பிளவுகளை அகற்ற வேண்டிய அவசியத்தை நாம் உணர்வோம். அந்த இலக்கினை அடைவது நமக்கு மிகக் கடினமாக இருக்கப் போகிறது. அதுவும் அமெரிக்க அய்க்கிய நாட்டில் இருந்ததைவிட நமக்குக் கடினமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில், அமெரிக்க அய்க்கிய நாட்டில் ஜாதிகள் இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன. ஜாதிகள் அனைத்துமே தேச விரோத சக்திகள்தான். இந்தியா ஒரு தேசமாக மாற வேண்டுமானால், ஜாதிகளை முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும்.

(-1949 நவம்பர் 11 ஆம் நாளன்று இந்திய நாடாளுமன்றத்தில் அரசியல் நிர்ணய சபையின் இறுதிக் கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய உரையிலிருந்து...)

இந்துக்களைப் போல, சீக்கியர்களைப்போல, பார்சிகளைப்போல தீண்டத்தகாத மக்களும் தனித்த வகுப்பினர்; அவர்கள் இந்துக்கள் அல்லர். அம்மக்களை இந்துக்களாகக் கருதுவது பெரும் பிழையாகும். இந்திய வரலாற்று நோக்கில் தனித்த பண்பாடோடும், மத நம்பிக்கைகளோடும் வாழ்ந்த அம்மக்கள் தனித்த வகுப்பினராகக் கருதப்பட வேண்டும்

(1929 இல் சைமன் ஆணையத்திடம் அண்ணல் அம்பேத்கர் அளித்த அறிக்கையில்...)

இந்து மதத்தில் உள்ள சமத்துவமின்மைதான் நான் இந்து மதத்திலிருந்து வெளியேற எண்ணுவதற்கான அடிப்படைக் காரணமாகும். நான் ஓர் இந்துவாகப் பிறந்துவிட்டேன், அது என் தவறன்று; ஆனால், நான் ஓர் இந்துவாக இறக்க மாட்டேன் -1935இல் பம்பாய் இயோலா மாநாட்டில், இந்து மதத்தை இந்திய மண்ணிலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறிவதற்கு கிறித்துவமோ இசுலாமோ பயன்படாது. அந்த மதங்களின் கடவுள் கோட்பாடுகளும், ஜாதிப் பழக்க வழக்கங்களும் அதற்குத் தடையாக இருக்கின்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் பவுத்தத்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும். இந்து சமூகக் கட்டமைப்பில்தான் இந்தியாவின் பலவீனம் தங்கியிருக்கிறது. எனவே இந்து மதம் எவ்வளவு விரைவில் ஒழிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நல்லது. நமது சமூக நெறிகளும், இந்து மத மரபுகளும் நமது ஒற்றுமையைச் சீர்குலைப்பவையாக உள்ளன. எதிர்கால இந்தியாவில் இந்து மதத்தின் பங்கு எந்த அளவில் இருக்கப்போகிறது என்பதைப் பொருத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும்.

- டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

நேர்மை + நாணயம் = ஆசிரியர்


ஆசிரியரின் சாதனைகள் யாவும் நாம் அறிந்ததே. அவை அளவிடற்கரியன. ஆனால், அவரது நேர்மைக்கும், நாணயத்துக்கும் ஏராளமான சம்பவங்கள் உண்டு. அதில் எனக்குத் தெரிந்ததில் இரண்டு மட்டும்.

ஆசிரியர் சென்னைக்கு - அய்யாவால் அழைக்கப்படுவதற்கு முன்பு, நாங்கள் வழக்குரைஞர்களாக கடலூரில் இருந்தோம். நான் கல்லக்குறிச்சியில் வழக்குரைஞர் தொழில் செய்து வந்தேன்.

கல்லக்குறிச்சியில் ஒரு வழக்கு என்னிடம் வந்தது. அதாவது, பங்காளிகள் இருவருக்குள் கொடுக்கல், -வாங்கலில் தகராறு. அதனால் எனது கட்சிக்காரர் மற்றவரின் எருது மாடுகளை அவரது பட்டியில் இருந்து ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார். அதனால் காவல்துறையில் மாடுகள் திருடியதாக வழக்குத் தொடுத்து, அது விசாரணைக்குப் பின் எனது கட்சிக்காரர் மீது 379 இ.பி.கோ.படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டார்கள். அந்த வழக்கு விசாரணையில் எனது கட்சிக்காரருக்கு நான் வழக்காடினேன். கடைசியில் எனது கட்சிக்காரர் விடுதலை செய்யப்பட்டு மாடுகளும் அவரிடமே திருப்பிக் கொடுக்கும்படி உத்தரவாகி, காவல்துறையும் மாடுகளை எனது கட்சிக்காரரிடம் கொடுத்துவிட்டது.

மாடுகளுக்குச் சொந்தக்காரர், கடலூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி முன்பு மறுபரிசீலனைக்கு (Revision) மனுபோட்டார். கடலூரில் இருந்து அந்த அழைப்பாணை (Summons) யை எனது கட்சிக்காரர் எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தார். நான் நம் ஆசிரியருக்கு ஒரு கடிதம் கொடுத்து, இந்த வழக்கில் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படிச் சொன்னேன்.

அவரும் ஒப்புக்கொண்டு வழக்கு நகல்களைப் பெற்றுக்கொண்டு, வழக்கைப் பற்றி என் கட்சிக்காரரிடம் கேட்டிருக்கிறார். அவர் மாடுகள் தனக்குச் சொந்தமல்லவென்று உண்மையைச் சொல்லியிருக்கிறார். உடனே, ஆசிரியர் வழக்கு நகல்களைத் திருப்பிக் கொடுத்து அவரையே (என்னையே) வந்து வாதாடச் சொல். நான் பொய் சொல்லி வழக்கை நடத்த மாட்டேன் என்று திருப்பி அனுப்பிவிட்டார்.

எனது கட்சிக்காரர் என்னிடம் வந்து நடந்ததைச் சொன்னார். வழக்குத் தேதிக்கு வரும்படி அவரை அனுப்பிவிட்டு நான் கடலூர் போய் ஆசிரியரிடம் ஏன் இப்படிச் செய்துவிட்டீர்கள்? என்றேன். மாடுகள் தனக்குச் சொந்தமில்லை என்று சொல்கிறார். நான் எப்படிப் பொய் சொல்வது? என்றார்.

எனக்கு வியப்பாகப் போய்விட்டது. அவன் விடுதலையாக வேறு வழியில்லை. நீங்கள் வழக்கு நகலில் உள்ளபடி வாதாடுங்கள். அவன் சொன்னதை ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள்? என்றேன். அதெப்படி முடியும். மன்னிக்கவும், நான் வழக்காட முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். வேறு வழியில்லாமல் வழக்கு நடத்த உள்ள தொகையை நான் பெற்றுக்கொண்டு நான் வாதாடினேன். அவரும், என்னருகில் நீதிமன்றத்தில் பேசாமல் உட்கார்ந்திருந்தார். அந்த வழக்கு என் கட்சிக்காரருக்குச் சாதகமாக முடிந்தது. இதைப் போல ஏராளம் சொல்லலாம் என்றாலும், இதை நான் எடுத்துக்காட்டாகத் தான் சொல்கிறேன்.

அடுத்து, அவருடைய நாணயத்தைச் சொல்ல இது ஒரு சம்பவம். ஒருமுறை அவருக்குப் பணமுடை வந்தது. ஆசிரியர், சென்னையில் ஊதியம் வாங்காமல் விடுதலை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அய்யாவுக்குச் செய்தி தெரிந்து ஆசிரியரைக் கூப்பிட்டு ரூ.10,000/- (பத்தாயிரம்) கையில் கொடுத்தார். மிகவும் நன்றி சொல்லிவிட்டு அந்தத் தொகைக்கு, ஒரு கடன் உறுதிச்சீட்டு (Promissory Note) எழுதிக் கொடுத்தார்.

அய்யா, இதென்ன நான் கேட்கவில்லையே என்று சொல்லி திருப்பிக் கொடுத்ததை ஆசிரியர் வாங்க மறுத்துவிட்டார். அது அய்யாவிடமே இருந்தது. சில நாட்கள் கழித்து தொகையை அய்யாவிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். கடன் உறுதிச் சீட்டை இவர் கேட்கவில்லை. அய்யாவிடமே இருந்ததா அல்லது திருப்பிக் கொடுத்தாரா என்று எனக்குத் தெரியாது. நான் அப்போது சென்னையில் இல்லை.

அய்யாவிடம் எந்தச் சூழ்நிலையிலிருந்தும் எதுவும் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

(தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007-இல் ஆசிரியருடன் சட்டக் கல்லூரியில் படித்து திராவிடர் கழகப் பொருளாளராக இருந்து அண்மையில் மறைந்த திரு. கோ.சாமிதுரை எழுதியது.)

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


கருணை அடிப்படையில் வேலை கேட்கும்போது தகுதி அடிப்படையில் மட்டுமே வேலை கொடுக்க வேண்டும், அவரது பெற்றோர் செய்த வேலையையே கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.

பிறவியிலேயே உருவாகும் ஹிர்ஸ்பரங்க் என்னும் குடல் நோயை ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் குணப்படுத்தும் முறையினை சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கையினால் தொடாமலேயே மின் சாதனங்களை இயங்கச் செய்யும் அகச் சிவப்புக் கதிர் (இன்பிராரெட்) தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்விட்சினை பொறியாளர் ஹரிராம் சந்தர் கண்டுபிடித்துள்ளார்.

செல்பேசி மூலமாக பயனாளிகள் மணியார்டர் தொகையினைப் பெறும் வசதி நவம்பர் 16 முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.

சிறைச்சாலை மற்றும் காவல்துறையின் காவலில் இருக்கும் விசாரணைக் கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம் என்று மத்திய அரசின் சட்டத் திருத்தத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் நவம்பர் 19 அன்று தீர்ப்புக் கூறியுள்ளது.

பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் அனைத்து மகளிர் வங்கி (பாரதிய பெண்கள் வங்கி) நவம்பர் 19 அன்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

பண்பாளர் - பேரா.நம்.சீனிவாசன்

கி.வீரமணி பழகுவதற்கு இனிமையானவர்; எல்லோருக்கும் மரியாதை கொடுத்துப் பேசுவது அவரது பண்பாகும். வணக்கம் செய்வோருக்குத் தலையாட்டும் கர்வம் இல்லை; முகம் மலர்ந்து இரு கரம் கூப்பிப் புன்சிரிப்போடு பதில் வணக்கம் செய்கின்றார். தம்மிடம் வருபவர்களை அமரச் சொல்கின்றார்; யாரையும் நிற்க வைத்துப் பேசும் பழக்கம் அவரிடம் இல்லை. வாகனத்தில் பயணம் செய்கின்றபோது தனித்துப் பயணிப்பது இல்லை; தோழர்களை ஏற்றிக் கொண்டு உரையாடியவாறே செல்கின்றார்.

ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்க்கின்ற பண்பினை கி.வீரமணியிடத்தில் காணமுடிவதில்லை. கூட்டத்திற்குக் கால தாமதமாக வரும் பழக்கமும் அவரிடம் இல்லை. முன்கூட்டியே வந்திருந்து காத்திருக்கின்றார். கழகத் தோழர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கின்றார். குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் கேட்டறிகின்றார்.

மணவிழா அழைப்பிதழ் தருவோரிடம் திருமணத்தைச் சிக்கனமாக நடத்துங்கள் என்று அறிவுறுத்துகின்றார். சுவரொட்டி விளம்பரங்கள், அழைப்பிதழ்களில் தன் பெயர் சிறிய எழுத்தில் இருக்கிறதா -_ பெரிய எழுத்தில் இருக்கிறதா? என்பதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.

கருத்து வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல் நட்புறவாகப் பழகுகின்றார். ஒருமுறை சந்தித்து உரையாடினாலே ஈர்த்து விடுகின்றார். வயது முதிர்ந்த பெரியார் தொண்டர்களை மேடையில் ஏற்றிக் கௌரவிக்கின்றார். உடல் நலம் குன்றிய தோழர்களை மருத்துவமனையிலும் அவர்களது இல்லத்திலும் சந்தித்து நலம் விசாரித்து நம்பிக்கை ஊட்டுகின்றார்.

இயக்கத் தோழர்கள் அன்பின் மிகுதியால் உணவை அதிகமாகப் பரிமாறிவிடுகின்றபோது அருகில் உள்ள நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு, உணவை விரயமாக்காமல் உண்கின்றார். கட்சித் தோழர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்கின்றார்; செய்த உதவிகளை யாரிடமும் சொல்லாமல் மௌனம் காக்கின்றார்.

தமக்கு வருகின்ற அன்பளிப்புப் பொருட்களை இயக்கத்திற்குக் கொடுத்து விடுகின்றார். கி.வீரமணியைச் சந்தித்துப் பேசுவதற்கு எவ்விதத் தடையும் யாருக்கும் கிடையாது. யாரையும் காக்க வைக்காமல் உடனே சந்தித்து அனுப்பி வைக்கின்றார். சுற்றுப் பயணத்தின்போது கி.வீரமணி ஆடம்பர விடுதிகளில் தங்குவதில்லை. கட்சித் தோழர்கள் கூட்டம் கூட்டமாக அறைகளில் வந்து சந்திப்பதைத் தடுப்பதில்லை.

கி.வீரமணி தமக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரச் சொல்லும்போது உடனே பணத்தைக் கொடுத்து விடுகின்றார். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டபோதிலும் தீவிர சுற்றுப் பயணம் செய்து சுறுசுறுப்புடன் இயங்குகின்றார். உடல் நலமில்லை; சோர்வாக இருக்கின்றேன் என்றெல்லாம் கி.வீரமணி கூறுவதே இல்லை.

குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர், நீதிபதி, உயர் அதிகாரி, கல்வியாளர் என்று பலரிடமும் செல்வாக்குடன் திகழும் கி.வீரமணி அதனைப் பற்றி எவரிடமும் பெருமையாகக் கூறுவது இல்லை. திராவிடர் கழகத்தின் செல்வாக்குக்கும், பல அரிய சாதனைகளை நிகழ்த்தியதற்கும் கி.வீரமணியே காரணமாக இருக்கின்றார் என்றாலும், நான் என்று சொல்லாமல் நாம் என்றே கூறுகின்றார்.

கி.வீரமணி பாராட்டப்பட வேண்டியவர்களை மனம் திறந்து பாராட்டுகின்றார். ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றிக் குறை கூறுவதில்லை. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதை வீரமணியிடத்தில் காண முடிவதில்லை. எப்போதும் கொள்கையாளராகவே இருக்கின்றார்.

பொய் சொல்லுவதில்லை; மது அருந்துவதில்லை; மறைமுகமாகக் காரியம் ஆற்றுவதில்லை; வாக்கு மாறிப் பேசுவதில்லை; பிழைகளைப் பொறுத்துக் கொள்கின்றார். நெருக்கமானவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்துகின்றார். நகைச்சுவை உணர்வு நிரம்பப் பெற்றவர்; கலகலப்பானவர்; ஒளிவு மறைவு இல்லாதவர்; காலந்தவறாதவர்; எளிய உணவை மேற்கொள்பவர்; சேர்ந்து உண்பதை விரும்பக் கூடியவர்.

தமிழ் ஓவியா said...

பாராட்டி வரவேற்கிறேன்


வீரமணி அவர்கள் வக்கீல் தொழிலில் ஈடுபட்ட சிறிது நாட்களுக்குள் மாதம் 1-க்கு ரூ.200, ரூ.300 என்கிற கணக்கில் வருமானமும், அதிகாரிகளின் பாராட்டுதலும் மதிப்பும் பெறத்தக்க நிலையை அடைந்துவிட்டார்.

அவரது இயக்க சம்பந்தமில்லாத நண்பர்களும், வக்கீல் தோழர்களும் அவருக்கு எவ்வளவோ ஆசை ஏற்படும்படியான எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லித் தடுத்தும், அதை ஏற்காமல் துணிந்து முழுநேரப் பொதுத் தொண்டுக்கு இசைந்து முன்வந்தது குறித்து நான் அதிசயத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன்.

- பெரியார் ஈ.வெ.ரா.
விடுதலை, 10.8.1962

தமிழ் ஓவியா said...

பேரறிவாளனை விடுதலை செய்வதே சரியானதாகும்

கடந்த இரண்டரை ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி சாதித்தது என்ன? கடுமையான மின்வெட்டு, மத்திய அரசின் திட்டங்கள் முடக்கம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கு அளிக் கப்பட்ட தூக்குத் தண்டனை கடந்த 22 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் காலந்தாழ்ந்திருக்கும் நிலைமை, மறைமுகமான நன்மைகளையே (Blessing in Disguise) விளைவித்துள்ளது.

பல்வேறு புதைபட்ட உண்மைகள் நீதியின் அடிப் படையிலும், பலரின் மனசாட்சியின் விழிப்பின் காரணமாகவும் வெளிவரத் துவங்கியுள்ளன!

பேரறிவாளன் என்ற இளைஞனின் பங்கு அந்தக் கொலைக் குற்றத்தில், பிராசிகியூஷன் தரப்புப்படி, ராஜீவ்காந்தியைக் கொல்லப் பயன்படுத்துவதற்கான குண்டுக்காக பேட்டரி செல்கள் இரண்டை வாங்கிக் கொடுத்தவர் இவர் என்பதேயாகும்.

பேரறிவாளன் என்ற இளைஞர் பாலிடெக்னிக்கில் படித்தவர் என்பதை முடிச்சுப் போட்டு, இந்த பேட்டரி செல்கள் நான் வாங்கிக் கொடுத்தேன் என்ற வாக்கு மூலம் மட்டும் விசாரணை அதிகாரி கேட்ட கேள்விக்குப் பதிலாக அவர் சொன்னதை அப்படியே பதிவு செய்யாமல், வழக்கில் பிராசிகியூஷனுக்குச் சாதகமாக அமையும் வகையில், இந்தக் காரியத்திற்காக என்றே தெரிந்தே வாங்கிக் கொடுத்தேன் என்பதாக, அவரே சில வாக்கியங்களை _ பேரறிவாளன் சொல்லாததை வாக்கு மூலத்தில் இணைத்துக் கொண்டு, பதிவு செய்து விட்டார் -_ அந்த விசாரணை அதிகாரி. அவர் ஓய்வு பெற்ற நிலையில், இப்போது அவர், நான்தான் வழக்கில் தண்டனை வாங்கித் தருவதற்காக அந்த வரிகளைச் சேர்த்துக் கொண்டேன் என்று கூறி உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார் -_ -மனசாட்சி உறுத்தியதால்!

குற்றவாளியின் வாக்குமூலம் என்று விசாரணை அதிகாரிகள் எழுதி வைப்பதையெல்லாம் அப்படியே ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளும், அடிப்படை உரிமைப் பறிப்புக்கான சட்டம்தான் தடா சட்டம் ஆகும்.

குற்றம் சுமத்தப்பட்டவர்மீதான குற்றத்தை நிரூபிப்பது பிராசிகியூஷன் வேலை - -_ பொறுப்பு, என்பதைத் தலைகீழாக மாற்றி - -_ குற்றமற்றவர் என்று நிரூபித்து வெளியே வர வேண்டியது -_ -குற்றம் சுமத்தப்பட்டவரின் பொறுப்பு என்பதாக இருப்பதும் மற்ற கிரிமினல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத சாட்சியங்களை, இந்தத் தடா சட்டத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்வதுமான கொடுமையான சட்டம் என்பதால்தான் அதற்கு எதிராக கருத்துப் போர் தொடுத்து, ஜனநாயக அடிப்படை மனித உரிமையாளர்கள் -_ நம்மைப் போன்ற இயக்கத்தவர்கள் இயக்கம் நடத்தி, ரத்துசெய்ய வைத்தோம். அதன் முழு நியாயமும் இப்போது வெளியான விசாரணை அதிகாரியின் வாக்குமூலத்தின் படி, தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.

குற்றத்தினை முடிவு செய்ய மென்ஸ்சிரியா (‘Mens Rea’) என்ற குற்றநோக்கு அக்குற்றவாளியின் மனதில் இருந்திருந்தால்தான் அவர் குற்றவாளியாக முடியும்; இன்றேல் அவர் நிரபராதிதான். இது (கிரிமினல்) குற்றச் சட்டத்தின் அடிப்படையாகும்.

பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்ததில் எந்தக் குற்ற நோக்கமும் இல்லையே! (விசாரித்த அதிகாரி யல்லவா அவசர ஜோடனை செய்து மேலும் சில வாக்கியங்களை இணைத்துக் கொண்டார். காவல்துறை விசாரணை வழமையில் இது சர்வ சாதாரணமாக நடைபெறுவதாகும்).

எனவே இந்தத் தகவல் -_ அவரது தூக்குத் தண்டனைக்கு எவ்வித முகாந்திரமும், நியாயமும் இல்லை என்பதற்கு உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற சான்றாதாரம் ஆகும்.

அதுபோலவே முருகன், சாந்தன் இருவரும்கூட இவருடன் சுமார் 22 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்துள்ள நிலையில், அவர்களைப் பற்றியும் இம்மாதிரி பல தகவல்கள் வெளியாகும் நிலையில், சந்தேகத்தின் பலனை ((Benefit of doubt) அவர்களுக்கே தந்து உச்சநீதி மன்றமே முன்வந்து, இந்த வழக்கை எடுத்துக்கோணலாகிப் போன நீதியைச் சரி செய்ய முன்வருதல் அவசரம்; அவசியம் ஆகும். 2. மேலும் தண்டனை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான, ஜஸ்டீஸ் கே.டி.தாமஸ் அவர்கள், வழக்கின் தீர்ப்பு சரியாக வழங்கப்படவில்லை என்று குறிப்பினைக் கூறியதும் ஏடுகளில் வந்துள்ளது.

3. வழக்கு விசாரணையில் ஈடுபட்ட சி.பி.அய். அதிகாரிகளில் ஒருவரான திரு. ரகோத்தமன் அவர்கள் செய்தியாளர்கள் பேட்டி, தான் எழுதிய புத்தகம் ஆகியவற்றிலும் இவ்வழக்கில் விசாரணை சரியாகச் செல்லவில்லை என்ற கருத்தை மய்யப்படுத்தியுள்ளார்.

சதி என்பது பேரறிவாளனைப் பொறுத்து நிரூபிக்கப்படவே முடியாது --_ இல்லை என்பது வெளிச்சமாகியுள்ளது. எனவே அவர்கள் மூவரையும் விடுதலை செய்வதுதான் நீதிக்கு - நியாயத்திற்குத் தலை வணங்குவதாகும்.

இம்மூவருக்கும் ஏதோ கருணை காட்டி விடுதலை செய்கிறோம் என்று எண்ணாமல், நீதி கெட்டுவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில், நீதியின் கோணலை நிமிர்த்தி வைக்கும் கடமையாகவே இதனைக் கருதுவதும், நீதிக்குப் பெருமை சேர்ப்பதாகவே அமையும்.

கிரிமினல் சட்டம், பத்துக் குற்றவாளிகள் தப்பினாலும்கூட ஒரு நிரபராதி, தண்டிக்கப் பட்டுவிடக்கூடாது என்ற தத்துவத்தைக் கொண்டதல்லவா?

- கி.வீரமணி
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

பொன்மொழி


நாம் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, பிறர் பேசுவதை அதிகம் கேட்க வேண்டும். அதன் பொருட்டே குறைவாகப் பேசுவதற்கு ஒரு வாயும் அதிகம் கேட்பதற்கு இரு காதும் இயற்கை வழங்கி இருக்கிறது.

- இந்தியா

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் உலகமயமாக்கப் பணியில் தமிழர் தலைவர்

- வீ.குமரேசன்

உலகில் தோன்றிய பல்வேறு சமூகப் புரட்சியாளர்களிடமிருந்து தந்தை பெரியார் வேறுபட்டவர். வெறும் கருத்துகளைச் சொல்லிவிட்டுச் சென்றவர் அல்ல தந்தை பெரியார்; மானிட முன்னேற்றத்திற்காக களம் இறங்கி, போராடி, பல்வேறு சவால்களை நேர்கொண்டு தனது வாழ்நாளிலேயே சாதனைகள் பல புரிந்தவர் தந்தை பெரியார். நடைமுறை நிலைமையிலிருந்து சமுதாயப் பணியினைத் துவக்கியவர்.

கருத்து வடிவங்களைத் தொடர்ந்து, நடைமுறை வருவது தான் உலகில் நடைபெற்ற பல்வேறு சமூகப் புரட்சிகள் உருவான வழிமுறை என இருந்த வரலாற்றைப் புரட்டிப் போட்டவர் தந்தை பெரியார். பல்வேறு நூற்றாண்டுகளாக புரையோடிப் போயிருந்த சமூக அவலங்களை நீக்கிட ஆயுதம் ஏந்தாமலே மாற்றம் ஏற்பட, சமத்துவத்திற்குப் பாடுபட்டவர் தந்தை பெரியார்.

சமூக அநீதிகளை, ஏற்றத்தாழ்வுகளை நேரடியாகப் பட்டறிந்த சிந்தனைத் தாக்கத்தின் விளைவாக கருத்துகளை ஏற்படுத்திக் கொண்டார் தந்தை பெரியார். சமுதாயப் பணி ஆற்ற அமைப்பினை நிறுவி தனது கருத்துகளைப் பரப்புரை செய்து வந்தாலும், முன்னுரிமை என வரும்பொழுது நான் கட்சிக்காரனல்ல; கருத்தாளன் என பகிரங்கமாக வெளிப்படுத்தியவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் சிந்தனைகள் காட்டாறு போன்றவை. சமூகச் சீரழிவுகளை எதிர்த்துப் போராடுகின்ற போக்கில், அவர் தொட்டுச் செல்லாத சமூக அழுக்குகளே இல்லை. அத்தகைய சமூகத் துப்புரவுப் பணியில் தன் வாழ்நாள் இறுதிவரை சளைக்காமல், துவளாமல், தடம்மாறிடாமல் துணிச்சலின் பேருருவாக தலைநிமிர்ந்து பயணித்தவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் மறைவிற்குப் பின்னர் அவர்தம் பகுத்தறிவுச் சிந்தனைகளை, தமிழகம் தாண்டி பரப்புரை செய்கின்ற வகையில் கொள்கைச் சட்டம் போட்டு அதற்கு பெரியாரியல் எனப் பெயரிட்ட பெருமையாளர் தந்தை பெரியாரின் சீடரும், கொள்கை வழித் தோன்றலுமான தமிழர் தலைவர் கி.வீரமணி ஆவார். தந்தை பெரியார்தம் செயல்பாட்டை, அவர் கைக்கொண்ட அணுகுமுறை புரிந்து கொள்ளப்பட்டதை வகைப்படுத்தியவர் தமிழர் தலைவர்.

தமிழ் ஓவியா said...

கடவுள் மறுப்பு என்பது தந்தை பெரியாரின் கொள்கை என புரிந்து கொள்ளப்பட்டதை கடவுள் மறுப்பு தந்தை பெரியாரின் கொள்கை அல்ல; அது ஒரு அணுகுமுறை. அவரது கொள்கை மனித நேயமே என்று வகைப்படுத்தி தந்தை பெரியாரின் சிந்தனைகளைப் பாடம் போன்று படைத்தளிக்க ஆவன செய்து அந்தப் பாடத்தை நாட்டின் பிற மாநிலங்களில், வெளிநாடுகளிலும் சென்று பரப்புரை செய்வதைத் தமக்கே உரிய அணுகுமுறையில் தந்தை பெரியார் உலக மயமாக்கம் (Globalization of Periyar) என ஆவணப்படுத்தியவர் தமிழர் தலைவர்.

வாழ்நாள் கடமையாகக் கருதி தனது 81ஆவது வயது தொடங்கிய நிலையிலும் ஆர்வம் குன்றா செயல்பாட்டுச் சிங்கமாக ஆசிரியர் வீரமணி விளங்கி வருகிறார். மானிட மேம்பாட்டிற்கு ஒளிவிளக்காகத் திகழ்கிறார்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் உலகமயமாக்கப் பணியில் தமிழர் தலைவர் மேற்கொண்ட பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் சுவையானவை; கருத்துச் செறிவுமிக்கவை. வெளிப்படுத்திய கருத்துகள் கல்வெட்டுப் போன்றவை. தந்தை பெரியாரின் சிந்தனைகளைப் பல்வேறு தளங்களில் வகைப்படுத்தி, வடிவமைத்து - பகுத்தறிவு, நாத்திகம், சமூக நீதி, மகளிர் உரிமை மற்றும் முன்னேற்றம், மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு என தமிழர் தலைவர் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நதித் தடங்கள் பலவாக இருந்தாலும் இறுதியில் சென்றடையும் இடம் கடல் என்பதுபோல தந்தை பெரியாரின் சிந்தனை பற்றிய பரப்புரை பல வழித் தடங்களில் நடந்தாலும் சிந்தனையின் மய்யக் கரு மனிதநேயமே.

மராட்டிய மாநிலம் - மும்பாய்

மராட்டிய மாநிலத் தலைநகர் மும்பாய் மாநகரத்தில், தானே பகுதியில் நடைபெற்ற புத்தமார்க்க மாநாட்டில் சிறப்புரை ஆற்ற தமிழர் தலைவர் அழைக்கப்பட்டிருந்தார். மாநாட்டிற்கு வருகை தந்தோர் வெள்ளை நிறத்தில் உடை அணிந்திருந்தனர். புத்த துறவிகளோ காவி நிறத்தில், இவர்களுக்கு மத்தியில் கருப்புச் சட்டைத் தலைவர் பக்குவமாகப் பேசி மதச் சடங்கு, வழிபாட்டு முறைகளை எதிர்க்கத் தோன்றிய புத்த நெறி, புத்தமதமாக மாற்றப்பட்டு நெறி தோன்றிய இந்நாட்டிலிருந்து அன்னியப்படுத்தப்பட்ட வரலாற்றை எடுத்துச் சொன்னார்.

மாநாட்டு வருகையாளர்களுக்கு உண்மை நிலை விளக்கப்பட்டது. இந்திய நாடு கண்ட முதல் பகுத்தறிவாளர் தலைவர் புத்தரே; புத்தரை மதச் சிறைக்குள்ளிருந்து மீட்க வேண்டும். அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைத் தடத்தில் புத்த நெறி மடைமாற்றம் செய்யப்படவேண்டும் என மதஉணர்வுமிக்க மக்கள் மத்தியில் அவர்தம் மத உணர்வினை எதிர்த்து தமிழர் தலைவர் உரையாற்றியது தந்தை பெரியாரின் துணிச்சல்மிக்க கருத்து வெளிப்பாட்டினை நினைவுகூர்ந்தது. பிற மாநிலப் பயணங்களில் பலதரப்பட்ட மக்களை அதிக அளவில் சந்திக்கும் வாய்ப்பினை உருவாக்கிக் கொள்வது தமிழர் தலைவரின் அணுகுமுறை. முதல்நாள் முற்பகல் புத்த மாநாடு; மாலை மும்பாய் வாழ் தமிழ்ச் சான்றோருக்குப் பாராட்டு; அடுத்த நாள் முற்பகல் சமூகநீதிக் கருத்தரங்கம் என இரண்டு நாள் பயணத்தை அழுத்தமாக, கொள்கைப் பரப்பலை அடர்வாகக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்பவர் தமிழர் தலைவர் ஆவார்.

தமிழ் ஓவியா said...


ஆந்திர மாநிலம் - அய்தராபாத்

ஆந்திர மாநிலம் அய்தராபாத் நகரில் சமூக நீதித் தளத்தில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்வுகள் பல. தமிழர் தலைவர் எந்த ஆட்சி அதிகாரத்திலும் இருப்பவர் அல்ல. தனிப்பட்ட முறையில் எவருக்கும் உதவும் நிலை அவருக்கில்லை. இருப்பினும், பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முதல், வழக்குரைஞர்கள் வரை அவர்மீது காட்டும் அன்பு கலந்த மரியாதை, அவர்கள் காட்டும் உடல் மொழிப் (தீஷீபீஹ் றீணீஸீரீணீரீமீ) பாங்கு, சமூகநீதிச் சவால்களை, நேர்கொள்ளும் பணி பற்றிய பரிந்துரை வேண்டல் என தமிழர் தலைவரின் சமுதாயப் பணியின் உன்னதத்தன்மையினை, உணர்ந்த நிலையினை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. தந்தை பெரியாரின் சமூக நீதி சாதனைத் தடத்தில் தங்களது மாநிலமும், அடக்கப்பட்ட மக்களுக்கும் உரிய நீதி கிடைக்க தமிழர் தலைவரின் வழிகாட்டுதல் பயனளிக்க வேண்டும் என சமூக அக்கறை சார்ந்த ஆதங்கமே ஆந்திர மாநில சமூக ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகிறது. அய்தராபாத் போன்ற பெருநகர் பகுதி மட்டுமன்றி, தெனாலியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ரேபள்ளி கிராமப்புறப் பகுதியில் நடைபெற்ற சமூகநீதிக் கூட்டத்தில் தமிழர் தலைவர் பங்கேற்றபோதும் ஆந்திர மக்கள் காட்டிய ஆர்வம் அளவிலடங்காதது.

தமிழ் ஓவியா said...

மேற்கு வங்கம் - கல்கத்தா மற்றும் வங்காள தேச எல்லைக்கருகில்

மேற்கு வங்காளத்தில் ஒரே நாளில் கல்கத்தா, வங்காளதேச எல்லைப் பகுதி என பரந்துபட்ட சமூக நீதி மாநாடுகள், மக்கள் சந்திப்பு என தமிழர் தலைவர் அண்மையில் கலந்து கொண்டார். வர்க்க பேதத்தை விட தமது பேதமே நடைமுறையில் முன்னுரிமையானது என இடதுசாரி இயக்கங்கள் சிந்தனையிலிருந்து மாறுபட பெரியார் இயக்கம் பாடுபட்டு வருவதன் வெற்றி வெளிப்பாட்டை உணர்த்துவதாக இருந்தது..

பெரியார் இயக்கப் பணியினால், தமிழர் தலைவரது தனித்துவ முயற்சியால் கல்வியிலும், வேலையிலும் இடஒதுக்கீடு 69 விழுக்காடு அளவு சட்ட வடிவில் உள்ள நிலைமை குறித்து மேற்கு வங்க மக்கள் வியப்படைகின்றனர். பல ஆண்டுகளாக இடது சாரி இயக்கத்தால் ஆளப்பட்ட மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 17 விழுக்காடே உள்ளது. தங்களுக்கும் பெரியார் தேவைப்படுகிறார் எனும் நிலையினை தமிழர் தலைவரது பயணம் உருவாக்கியது. வங்கிகளுக்கெல்லாம் வங்கியாக, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தவல்ல கொள்கை வழிமுறைகளை வடிவமைக்கும் ரிசர்வ் வங்கியில் பணிபுரிகின்றவர்கள் தங்களது வளாகத்திற்கு தமிழர் தலைவர் வருகை தரவேண்டுமென்பதில் ஆர்வமுடன் இருந்தனர். தமிழர் தலைவரை அழைத்து தந்தை பெரியாரின் 135ஆவது பிறந்த நாளைத் தமிழ்நாட்டிற்கும் முன்னதாகவே கொண்டாடி விட்டனர்.

ஒடிசா மாநிலம் - புவனேஸ்வரம்

ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் சிந்தனைத் தொகுப்பு முதன் முறையாக ஒடியா மொழியில் புத்தகமாக வெளியிடப்பட்டது. பெரியாரங்கா ராச்சனா புத்தகத்தினை வெளியிட தமிழர் தலைவர் அழைக்கப்பட்டு இருந்தார். உத்கல் பல்கலைக்கழக வளாகத்தில், கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள், பொதுநல ஆர்வலர்கள் என பலதரப்பட்ட மக்கள் கலந்துகொண்ட புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் இந்திய பகுத்தறிவாளர் இயக்கத்திற்கு தந்தை பெரியாரின் பங்களிப்பு எனும் தலைப்பில் அறிவார்ந்த, கொள்கைச் செறிவுமிக்க உரையினை தமிழர் தலைவர் வழங்கினார். பெரியார் கொள்கை தாக்கத்திற்கு இயக்க அடிப்படையில் ஆட்படாத ஒடிசா மாநில மக்கள், தமிழர் தலைவர் உரைகேட்டு பெரியார் இயக்கம், அது அடைந்த சாதனைகள் பற்றி அறிந்து, தங்களது மாநிலத்திற்கும் பெரியாரின் தேவை பற்றி உணரத் தலைப்பட்டார்கள். புவனேஸ்வரத்திலிருந்து திரும்பிய பின்னர் ஒடிசா மக்களிடமிருந்து வந்த கடிதங்கள் அவர்களது உள்ளத்தின் வெளிப்பாட்டைப் புலப்படுத்தியது.

புத்த நெறியின் நினைவாக அமைதித் தூண்

தமிழ் ஓவியா said...

அசோக மன்னன் கலிங்கப் போர் நடத்திய பகுதி புவனேஸ்வரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் தயா நதிக்கரையில் உள்ளது. அசோகர் புத்த நெறியினைத் தழுவிய நினைவாக, புத்த நெறி விளக்கமாக அமைதித் தூண், தவ்லி குன்றில் எழுப்பப்பட்டுள்ளது. அதனைப் பார்வையிட்ட தமிழர் தலைவர் கூறிய புத்தர் தொடர்பான செய்தி மிகவும் அறிவுப்பூர்வமானது. தந்தை பெரியாரின் சிந்தனை, செயல் முறைகளுக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்தது.

புத்தர் காலத்தில் பிரச்சாம் நடைபெற்ற பாங்கினைப் பற்றி தான் படித்த புத்தகத்தில் உள்ள ஒரு குறிப்பினை தமிழர் தலைவர் எடுத்துக் கூறினார்.

புத்தர் காலத்தில் அவரது வாய்மொழியாக வந்த நெறிகளை சீடர்கள் செவிமடுத்து அதனைப் பல இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் புத்தர், சீடர்கள் தம்மிடம் கேட்டதைச் சரியாக பிரச்சாரம் செய்கின்றார்களா என அறிந்து கொள்ள அவர்களை அழைத்து எந்த விதமாக தமது நெறியினைப் பிரச்சாரம் செய்கிறீர்கள் எனக் கேட்டுவிட்டு, மக்களிடம் அவர்கள் கூறுவதை அப்படியே திருப்பிக் கூறிட புத்தர் பணித்தார். சீடர்களும் அவ்வாறே செய்தனர். அப்பொழுதுதான் புத்தர் தாம் கூறிய செய்திகளிலிருந்து சீடர்கள் எவ்வளவு தூரம் விலகி பிரச்சாரம் செய்கின்றனர் என்பதை அறிந்தார். வாய்மொழி வாயிலாகக் கூறக் கேட்டு பிரச்சாரம் செய்வதில் இத்தகைய விலகிச்செல்லல் இயல்புதான் என்பதை புத்தர் உணர்ந்தார்.

ஒரு சீடர், புத்தரிடம், உங்கள் காலத்திலேயே உங்களின் போதனையிலிருந்து விலகிச்செல்லும் நிலை இருந்தால் எதிர்காலத்தில் பல தலைமுறைகளைக் கடந்து பிரச்சாரம் நடக்கும் பொழுது உண்மையான போதனையை உணர்ந்து கொள்வது எப்படி? என்று வினா எழுப்பினார். அதற்குப் புத்தர், உண்மை நெறியினை அறிந்து கொள்ள ஒரே வழி மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தினை பகுத்தறிவு கொண்டு ஆய்ந்து உணர்ந்தால் உண்மை நெறி தெரியவரும் என தொலைநோக்குப் பார்வையுடன் பதிலளித்தார். எதையும் பகுத்தறிவு கொண்டு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள் எனும் அணுகுமுறையினை மெய்ப்பித்து மக்கள் இயக்கம் கண்ட தந்தை பெரியாரின் சிறப்பு எவ்வளவு சிறப்பானது என்பதை தமிழர் தலைவர் எடுத்துச் சொன்ன செய்தியால் அதனைக் கேட்ட அனைவருமே மனம் ஒன்றிய நிலைக்கு ஆளானோம். பகுத்தறிவு நெறி சார்ந்த பரந்துபட்ட அமைப்பு, மக்கள் இயக்கமாக தந்தை பெரியாரின் உருவாக்கத்தில் தொடங்கி, தமிழர் தலைவரின் இன்றைய வழிகாட்டுதலில் தொடர்வது பெருமையாக இருந்தது.

புவனேஸ்வரத்திலிருந்து சென்னை திரும்ப கிளம்பிய வேளையில் அரை மணி நேர இடைவெளியில், அழைப்பிற்கிணங்க அங்குள்ள பொறியியல் கல்லூரியில், மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மை பற்றி அறிவுப்பூர்வமான உரையினை ஆற்றி, பெரியார் சிந்தனைகளைப் பரவலாக்கிடும் பணிக்கு தமிழர் தலைவர் அணி சேர்த்தார்.

உலகம் தழுவிய பகுத்தறிவாளர்கள் மற்றும் அமைப்புகள்

வெளிநாடுகளில் தமிழர் தலைவர் மேற்கொண்ட பயணங்களினால் பெரியார் இயக்கத்தினைப் பற்றி பிற நாத்திகர், மனிதநேயர், பகுத்தறிவாளர் அமைப்பினர் புரிந்து கொண்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அமைப்பினர் பெரியார் இயக்கம் நடத்திய பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டு, நாத்திகர் இயக்கமானது _- மாபெரும் மக்கள் இயக்கமாக மாறி உள்ள இந்த நாட்டுச் சூழல் கண்டு வியப்படைகின்றனர்.

தமிழ்நாடு, பிற மாநிலங்கள் தழுவிய பரப்புரையாக பெரியாரின் சிந்தனைகளை, வெளிநாட்டளவில் அந்த நாட்டு பகுத்தறிவாளர் அமைப்புகளோடு, அறிஞர் பெருமக்களோடு தொடர்பு, ஒருங்கிணைப்புப் பணிகள் தமிழர் தலைவர் வழிகாட்டுதலில் நடைபெற்று வருகின்றன.

பரிணாமக் கோட்பாட்டின் தந்தையான சார்லஸ் டார்வினின் 200ஆம் ஆண்டு பிறந்த நாளினை அறிவியல் மனப்பான்மை விழாவாக நடத்துவதிலாகட்டும், நாத்திக அறிஞர்களான அமெரிக்க நாட்டு கிறிஸ்டோபர் கிட்சன்ஸ், பால்கார்ட்ஸ், மராட்டிய மாநில மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி நரேந்திர தபோல்கர் ஆகியோர் மறைவிற்கு வீரவணக்கம், நினைவு போற்றுதல் நிகழ்ச்சி நடத்துவதிலும், ஒருவித மனிதநேயக் கொள்கை ஒருமைப்பாட்டோடு, பெரியார் இயக்கம்தான் உலக நாத்திகர்களுக்குத் தாய்வீடு என்பது போன்ற நிலையினை தமிழர் தலைவர் பெரியார் உலகமயமாக்கப் பணியினால் ஏற்படுத்தியுள்ளார். பெரியார் உலகத் தலைவர் என்பதன் கொள்கை விளக்கம், வெளிப்பாடு விரைந்து வருகின்ற சூழல்கள் தமிழர் தலைவரின் அயராத, அர்ப்பணிப்பு கலந்த பொது வழக்கப் பணியின் விளைவுகளே! மண்டைச் சுரப்பை உலகு தொழும் எனும் புரட்சிக்கவிஞரின், இலக்கியக் கூற்று இன்று நடைமுறை இயல்பாகிவிட்டது.

தந்தை பெரியாரை உலக மயமாக்கும் பணியின் அடுத்த விழுமியங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கை முதுகெலும்பை முறிக்கும் மகத்தான தலைவர்


திராவிடர் கழகம் என்பது உலகிலேயே பகுத்தறிவுச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட சமூகப் புரட்சி இயக்கம்.

மானுடப் பற்றைத் தவிர வேறு எந்தப் பற்றும் எனக்கில்லை என்று சொன்ன தந்தை பெரியார் சிந்திக்கும்தன்மையின் கூர்மையே பகுத்தறிவு என்று விளக்கமும் சொன்னார்.

புத்தியைச் சம்பாதிப்பதில் போட்டி போடுக என்றும் வலியுறுத்தினார்.

மனித குல முன்னேற்றத்திற்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதும் மூடநம்பிக்கைகளே.

மனிதன் மூடநம்பிக்கைகளிலிருந்து வெளியேறினால் வளர்ச்சி பெறுவான் என்பதை உணர்ந்து திராவிடர் கழகம் மக்கள் மத்தியில் பல்வேறு வகைகளிலும் பகுத்தறிவுச் சிந்தனைகளை ஊட்டி வருகிறது.

கழகம் நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சியுமே இந்த அடிப்படையிலானதே! வெறும் கூட்டங்கள், மாநாடுகள் மட்டுமல்ல, மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் என்பதைப் பிரதானமாக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லுகிறது.

கோவில்களில் தீக்குண்டம் இறங்குவது, தீச்சட்டி எடுத்துச் செல்லுவது, அலகுக் குத்தி சப்பரங்களை இழுத்துச் செல்லுவது என்பதை எல்லாம் செய்முறை விளக்கங்கள் மூலம் மக்களிடத்தில் தெளிவை ஏற்படுத்தி வருகிறது.

திராவிடர் கழகப் பெண்களே தீச்சட்டி ஏந்தி ஊர்வலத்தில் எடுத்துச் செல்வதைப் பொது மக்கள் நேரில் பார்த்துத் தெளிவு பெறுகிறார்கள்.

தீச்சட்டியை ஏந்திச் செல்லும் பெண்கள் கடவுள் இல்லை, இல்லவே இல்லையென்று முழக்கமிட்டுச் செல்லுவதை ஆச்சரியமாகப் பார்த்தாலும், அந்தக் காட்சியும், நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியே வருகிறது.

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தை மேடையில் நின்று பார்வையிடும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அந்தத் தீச்சட்டியைக் கொண்டு வரச் செய்து தானும் தூக்கிக் காட்டுவார்.

ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் தீக்குண்டம் இறங்குவது என்பது பிரசித்தி பெற்றது.

அதே ஊரில், மிகப் பெரிய அளவுக்குத் தீக்குண்டம் ஏற்பாடு செய்து, திராவிடர் கழக ஆண்களும், பெண்களும் கடவுள் மறுப்பு வாசகங்களை முழக்கமிட்டுக் கொண்டு நெருப்பில் நடந்து சென்றனரே! அதே ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில், மாட்டு வண்டி கட்டி மலைமேல் ஏறுவது என்பதைத் தெய்வசக்தி என்று வெகுகாலமாக நம்பிக் கொண்டு இருந்தனர்.

அதே சென்னிமலை முருகன் கோவில் மலைமீது திராவிடர் கழகத் தோழர்கள் கடவுள் மறுப்புக் கூறி வண்டியை ஏற்றிக் காட்டி அப்பகுதி மக்களை மலைக்கவும் வைத்தனர்.

தந்தை பெரியார் சிலைகளை முக்கியமான பகுதிகளில் நிறுவி, அதன் பீடத்தில் கடவுள் இல்லை. இல்லவே இல்லை என்றும் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றும், பரப்புகிறவன் அயோக்கியன் என்றும் வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்றும், தந்தை பெரியாரின் அறிவு மொழியும் பொறிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் சங்கர மடம் முன்பும், சிறீரங்கம் ரெங்கநாதன் கோவில் முன்பும் கூட, இந்த வாசகங்கள் ஒளிவீசிக் கொண்டு தானிருக்கின்றன.

தமிழ் ஓவியா said...

ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பார்த்து படித்துக் கொண்டு தானிருக்கின்றனர். வெளிநாடுகளிலிருந்து வரும் பகுத்தறிவாளர்கள் கூட இந்தக் காட்சியை மிகப் பெரிய அதிசயமாகவும் சாதனையாகவும் கருதுகிறார்கள்.

இதனை எதிர்த்து சிலர் நீதிமன்றமும் சென்றதுண்டு. சென்னை உயர்நீதிமன்றமோ அதில் ஒன்றும் தவறில்லை; பெரியார் சிலையின்கீழ் அவரது கொள்கை பொறிக்கப்பட்டிருப்பது சரியே! என்று தான் தீர்ப்பும் கூறியது.

அய்.நா.வின் யுனெஸ்கோ மன்றமும் இவற்றை அங்கீகரித்து, தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ், புத்துலகச் சிற்பி என்று விருது அளித்துச் சிறப்பு செய்திருக்கிறது. இந்திய அரசும் அவரின் நூற்றாண்டையொட்டி சிறப்பு அஞ்சல் தலையையும் வெளியிட்டதுண்டு. 125ஆம் ஆண்டில் சிறப்பு உறையையும் வெளியிட்டுப் பெருமை பெற்றது.

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைத் தாக்கம் இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே காண முடிகிறது. மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை ஊட்ட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்ற வாசகம் இடைக்காலத்தில் தான் இணைக்கப்பட்டுள்ளது. 51A(h)

பகுத்தறிவுக்கு விரோதமாக அரசு நடந்து கொண்டாலும், அதனைத் தட்டிக் கேட்பது, சுட்டிக் காட்டுவது என்பதைத் திராவிடர் கழகம் அன்றாட நடவடிக்கையாகவே கொண்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளைக் கவர அரசு சார்பு சுற்றுலா அசோகா ஓட்டலில் கைரேகை ஜோதிடர் நியமிக்கவிருப்பதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் முஃப்தி முகம்மது சையத் மக்களவையில் அறிவித்திருந்தார். (29.11.1986).

அதனை எதிர்த்தும், கண்டித்தும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பிரதமர் ராஜீவ் காந்திக்குக் கடிதம் எழுதித் தடுத்து நிறுத்தினார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) பிரிவில் கூறப்பட்டு இருந்த அந்த வாசகத்தையும் அந்தக் கடிதத்தில் நினைவூட்டினார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51A(h) என்னும் சரத்துக்கு எதிரானது சுற்றுலாத்துறை அமைச்சரின் அறிவிப்பு. அதுவும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்பதையும் சுட்டிக்காட்டி, அந்த முயற்சியைக் கைவிடுமாறு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் ஓவியா said...


உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிப் பீடத்தில் இருந்த சமயம்; கான்சிராம் அவர்கள் உருவாக்கிய கொள்கை முடிவு என்பது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர்தான் இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் (பகுஜன்) அவர்கள் கைகளில்தான் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்ற கொள்கையை முன்னிறுத்தி உத்தரப்பிரதேசத்தில் ஓர் ஆட்சியை உருவாக்கி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணான மாயாவதியை முதல் அமைச்சர் ஆக்கிய சாதனையைச் செய்தார்.

1995 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை உ.பி. அரசின் சார்பில் மூன்று நாட்கள் கொண்டாடும்படிச் செய்தார்.

உ.பி. தலைநகரமான லக்னோ நகரில் சமூக மாற்றத்திற்கான சதுக்கத்தில் (பரிவர்த்தன் சவுக்) இந்தியாவில் சமூகநீதிக்காகப் பாடுபட்ட மகாத்மா ஜோதிபாபுலே, நாராயணகுரு, சாகுமகராஜ், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர்களுக்குச் சிலை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. (18.9.1995).

பெரியார் விழாவில் நாட்டின் பல திசைகளிலிருந்தும் லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள், பார்ப்பனர் அல்லாதார் குடும்பம் குடும்பமாகக் குவிந்தனர்.

மூன்று நாள் விழா இந்தியா முழுமையும் சமூகநீதிஅலையைத் தட்டி எழுப்பியது.

அதனைத் திசை திருப்பும் வகையில், ஆர்.எஸ்.எஸ். பின்னணியோடு சந்திராசாமி என்ற பார்ப்பனர் பிள்ளையார் பால் குடித்தார் என்ற ஒரு பொய்யைத் திட்டமிட்ட வகையில் பரப்பினார். இந்த மூடநம்பிக்கையை உயர்ஜாதி ஊடகங்கள் இந்தியா முழுமையும் கொண்டு சென்றன.

அந்தச் சூழ்நிலையில் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணிஅவர்கள் எல்லோரும் திராவிடர் கழகத்தின் பக்கம் பார்க்கும் வகையில் ஒரு யுக்தியை மேற்கொண்டார்.

சென்னை அண்ணா சாலையில் தனது முதுகில் தமுக்கைக் கட்டிக் கொண்டு, திராவிடர் கழகத் தோழர்களையும் அழைத்துக் கொண்டு தமுக்கடிப் பிரச்சாரத்தைச் செய்தார் (23.9.1995).

தமிழ் ஓவியா said...

சிறிது நேரத்தில் அண்ணாசாலை பரபரப்பாகியது,- வாகனங்கள் தேங்கி நின்றன.

டும்! டும்! டும்!! பிள்ளையார் பால் குடிப்பதாக நிரூபித்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசளிக்கப்படும்! கொழுக்கட்டை சாப்பிட்டால் ரூ.2 லட்சம் பரிசளிக்கப்படும்! என்று தமுக்கடித்துக் குரல் கொடுத்தார். விடுதலை ஆசிரியர் அவர்களின் இந்தச் செயல் பொது மக்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியது.

அதோடு அவர் நின்றுவிடவில்லை. பிள்ளையார் பால் குடித்தார் எனும் மோசடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை சி.பி.அய். கண்டுபிடிக்க வேண்டும். அரசு அதற்கு முன் வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பிலும், பகுத்தறிவாளர் கழகம் சார்பிலும் 200 ரிட் மனுக்களையும் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்தவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆவார்.

திராவிடர் கழகத்தின் சார்பில் கிராமப் பிரச்சாரத்திட்டம் உருவாக்கப்பட்டு, பகுத்தறிவுப் பிரச்சாரம் அடைமழை போல் பொதுவாக செய்யப்பட்டு வருகிறது.

ஆங்காங்கே மூடநம்பிக்கைகள் கிளம்பும்போது அந்த இடத்திற்கே சென்று மூடநம்பிக்கைகளை எடுத்து விளக்கி, மக்கள் மத்தியில் தெளிவு ஏற்படுத்தப்படுகிறது.

மதுரையையடுத்த பேரையூரில் குழந்தைகளைக் குழியில் போட்டு மூடும் கொடுமையான மூடத்தனம் அரங்கேற்றப்பட்டு வந்தது. அதனைக் கண்டித்து விடுதலையில் எழுதியதன் காரணமாக அது தடுத்து நிறுத்தப்பட்டது.

புதுவை மாநிலம் காரைக்காலையடுத்த அம்பகரத்தூர் என்னும் ஊரில் காளியம்மன் கோவிலுக்கு எருமைக்கடா வெட்டும் பழக்கம் இருந்து வந்தது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் மறியல் செய்யப்பட்டது (1964-மே) அதனைத் தொடர்ந்து புதுவை மாநில அரசே சட்டம் போட்டு அதனைத் தடுத்து நிறுத்தியது.

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் வளாகத்தில் (என்.எல்.சி.) அதிகாரிகள் அதிருத்ர மகா யக்ஞம் எனும் யாகத்தை நடத்த முனைந்தபோது அதனைத் தடுத்து நிறுத்தும் மறியல் போராட்டம் (22.1.1999) நடத்தப்பட்டது. கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை பாரத் ஓவர்சீஸ் வங்கியில் வங்கி செலவில் யாகம் நடத்தியது திராவிடர் கழகத்தின் ஆர்ப்பாட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது (17.2.1995).

சென்னையையடுத்த பேரம்பாக்கம் என்னும் ஊரில் சுடுகாட்டில் ஒரு முள் செடியில் பேய் இருப்பதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததோடு அல்லாமல், திராவிடர் கழக மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் அந்தச் சுடுகாட்டுக்கே சென்று அந்த முள் செடியை வெட்டி ஊருக்கு நடுவே கொண்டு வந்து பகிரங்கமாக எரித்துக் காட்டினர் (ஏப்ரல் 1991).

வாடிப்பட்டி - அய்யங்கோட்டையில் பேய், பிசாசு அடித்து பெண்கள்மரணம் அடைவதாகப் பரப்பப்பட்ட வதந்தி மற்றும் மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் வகையில் மதுரை புறநகர் மாவட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. (19.6.2005).

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டுவது மிகவும் பொருத்தமாகும்.

குமரி மாவட்டத்து அழகப்பபுரத்தில் வானத்திலிருந்து பெய்த ரத்தத்துளி புரளி பற்றிய பேச்சு சட்டப் பேரவையில் எழுந்தது.(29.4.1989)

இந்திரா காங்கிரஸ் உறுப்பினர் குமரிஅனந்தன் குறிப்பிடுகையில் பகுத்தறிவு ரீதியாக இதுபற்றி ஆராயத் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி சேவையைத் தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ளுமா? என்று கேட்டார். இதற்குப் பதிலளித்த சட்டப் பேரவைத் தலைவர் தமிழ்க்குடிமகன், வீரமணியின் சேவை தேவையெனில், அதைப் பயன்படுத்திக் கொள்ளும்படி நானே அரசுக்குப் பரிந்துரைப்பேன் என்றார்.

அந்த அளவுக்குப் பகுத்தறிவு என்றால், நம்பிக்கை ஒழிப்பு என்றால் உடனே நினைவுக்கு வருவது திராவிடர் கழகமும், அதன் ஒப்பற்ற தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும்தான்.

உலகப் புகழ் பெற்ற ஏடான அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் (3.11.1982) ஏடுகூட இந்த வகையில் திராவிடர் கழகம் - அதன் தலைவரின் செயல்பாடுகளை விரிவாக எழுதியதே!

- கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

வரலாற்றில் இவர்கள்


மோடி புகழும் படேலின் யோக்கியதை

- நா.சுதன்ராஜ்

நேரு,காந்தி,படேல்

இந்தியாவின் இரும்புமனிதர்! என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் மதவாதியா? மதச்சார்பின்மைவாதியா? என்று ஒரு விவாதத்தைத் தொடங்கி இருக்கிறார் நரேந்திர மோடி. அகமதாபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி படேலின் மதச்சார்பின்மைதான் இன்று நமது நாட்டுக்குத் தேவை என்று பேசி இருக்கிறார். அது மட்டுமல்லாது 2000 கோடி செலவில் இரும்பு மனிதருக்குச் சிலைவைக்க இரும்பு வேட்டை ஆடிக்கொன்டிருக்கிறார்.

மோடியோ பாரதீய ஜனதாவின் பிரதம வேட்பாளர். பாரதீய ஜனதாவின் கொள்கையை யாரும் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அப்பட்டமான மதவெறி இயக்கம்தான் பாரதீய ஜனதா. மீண்டும் ராம ராஜ்ஜியத்தைக் கொண்டு வருவதுதான் அதன் ஒரே கொள்கை. இந்த ராம ராஜ்ஜியக் கூட்டத்தின் பிரதம வேட்பாளர் மோடிக்கு படேலின் மீது இவ்வளவு பாசம் ஏன் என்றால் படேல் வேறு யாருமல்ல, மோடிக்கு முன்னோடி. அடிக்கடி மோடி நான் டீ விற்றவன் டீ விற்றவன் என்கிறார். நமது டீக்கடைக்காரர் மோடி, படேல் என்ன செய்தாரோ அதையே இவரும் செய்கிறார். எவன் எப்படிப் போனால் நமக்கு என்ன? நாம் பார்ப்பானுக்கு ஜே! போட்டால் பதவி வரும். அதுவும் பிரதமர் பதவி. இதுதான் மோடியின் கணக்கு. அதுதான் திரு படேலின் கணக்கு. அப்பட்டமாக பார்ப்பனர்களுக்கு விபீசனர் வேலை பார்த்தவர்தான் திரு படேல். அதே வேலையை இப்போது செய்து கொண்டிருப்பவர்தான் மோடி. படேலுக்கு பார்ப்பனர்களுக்காக வக்காலத்து வாங்கத்தான் தெரியுமே ஒழிய நமது சமூகக் கலாச்சாரத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது.

தமிழ் ஓவியா said...

டேலின் பார்ப்பனியம்

படேலின் யோக்கியதையைப் பற்றி 22.9.-1929 அன்று குடிஅரசில் மீன்டும் படேல் என்ற கட்டுரையில் தந்தை பெரியார் விளக்கி இருக்கிறார். சமூகத்தில் இருந்தும் அரசியலில் இருந்தும் பார்ப்பன ஏகபோகத்தை விரட்டியடித்தது சுயமரியாதை இயக்கம். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட ஒட்டு மொத்த பெண் சமூகத்திற்கும் உரிமையும் சுதந்திரமும் மான வாழ்வையும் பெற்றுத் தந்தது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் வேரூன்றி இருந்த இடங்களில் எல்லாம் பார்ப்பனியத்தால் காலூன்ற முடியவில்லை. இதைப் பொறுக்காத பார்ப்பனர்கள் படேலை அழைத்து வந்து சுயமரியாதை இயக்கத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய வைத்திருக்கிறார்கள். அப்போது திரு படேல் சுயமரியாதை இயக்கத்தைத் தான்தோன்றித்தனமாக விமர்சனம் செய்திருக்கிறார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு உழைப்பதாகச் சொல்லிக் கொண்டு ஒரு சிலர் சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒன்றை ஆரம்பித்து இந்திய நாட்டிற்குப் புனிதமானவைகளை அழிப்பதும், ஸ்திரீகளின் மேன்மைக்குப் பங்கம் விளைவிப்பதும், இந்து மதத்தைத் தாக்குவதும், கோடிக்கணக்கான மக்களால் பூஜிக்கப்படும் ராமனையும் சீதையையும் குற்றம் சொல்வதும், பிராமண சமூகத்தின் மீது துவேசம் உண்டு பண்ணுவதுமான காரியங்களைச் செய்து வருகிறார்கள். இதை யோக்கியமான அரசாங்கம் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது என்று பேசியிருக்கிறார். அப்போது பெரியார் மீன்டும் படேல் என்ற தலைப்பில் குடிஅரசில் எழுதிய கட்டுரையில் இன்றைய மோடிக்கும் சேர்த்து படேலுக்கு மறுப்பும் எழுதி கேள்வியும் கேட்டிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

இந்து மதம் என்றால் என்ன?

இந்து மதம் என்றால் என்ன? இந்து மதம் என்றால் என்ன? என்று மும்முறை திரு படேலைக் கேட்கின்றோம். (குடிஅரசு -22.09.1929) பெரியாரின் இந்தக் கேள்விக்கு இன்று வரை உள்ள இந்துத்துவவாதிகளால் பதில் சொல்ல முடியுமா? பதில் உண்டா? தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் இந்து மதத்தில் என்ன நிலை என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். பெண்களைப் பாப யோனியில் பிறந்தவர்கள் என்று கீதையே கூறுகிறது. அவர்களை எல்லாம் எழுச்சி பெற வைத்தது சுயமரியாதை இயக்கம். அவற்றை அந்தக் கட்டுரையில் விளக்கி இருக்கும் பெரியார் இராமனையும் சீதையையும் சுயமரியாதை இயக்கம் இழித்துச் சொல்கிறது என்று கூறிய திரு படேலின் குற்றச்சாட்டிற்கு, எந்த இராமனையும் சீதையையும் என்று திரு படேல் சொல்லி இருந்தால் யோக்கியமாக இருந்திருக்கும். பார்ப்பனன் காலில் விழுந்த இராமனையா? மாமிசம் சாப்பிட்ட இராமனையா? கொலை செய்த இராமனையா? பார்ப்பனரல்லாதாராகிய சம்பூகன் எனும் சூத்திரன் கடவுளைத் தோத்திரம் தபசு செய்ததற்காகக் கொன்ற இராமனையா? சுயநலத்திற்காக தம்பியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு நியாயம் அநியாயம் பார்க்காமல் பாரபட்சமாய் அண்ணனைக் கொன்ற இராமனையா? வருணாசிரமத்தை ஆதரித்த இராமனையா? தன் பெண்ஜாதியை ஒரு பாமரன் பேச்சைக் கேட்டுக் கோபத்துடன் காட்டில் கொண்டுபோய் விட்டுவந்த இராமனையா? கடைசியாக பெண்ஜாதி நடவடிக்கைமீது சந்தேகப்பட்டு நெருப்பிலும் குழியிலும் இறக்கிய இராமனையா? எந்த இராமனை? எந்த இராமனை? என்று திரு படேலைக் கேட்கின்றோம். (குடிஅரசு _ -22.09.1929) பெரியாரின் இந்தக் கேள்வி படேலுக்கு மட்டுமல்ல, மோடி வரை உள்ள ராமராஜ்ஜியவாதிகளுக்கும்தான். ராமராஜ்ஜியம்! ராமராஜ்ஜியம் என்கிறார்களே இவற்றுள் எந்த இராமனின் ராஜ்ஜியம்? பதில் சொல்ல முடியுமா இவர்களால்.

பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் என்ன பிரச்சினை என்று எனக்கு விளங்கவே இல்லை என்றும் படேல் பேசி இருக்கிறார். இப்படிப்பட்ட படேலுக்கு சமுதாயத்தைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் என்ன அறிவு இருந்திருக்கும். இருந்திருந்தால் அது எப்படிப் பட்டதாய் இருந்திருக்கும்.

படேலின் தாழ்த்தப்பட்டவர் களுக்கு எதிரான மனப்பான்மை

படேல் பார்ப்பனியவாதி மட்டுமல்ல, ஜாதீயவாதியும்கூட. அதை அம்பேத்கர் பதிவு செய்திருக்கிறார்.

1942இல் உலகப்போரை முன்னிட்டு இந்தியர்களின் ஆதரவைப் பெறும் நோக்கோடு வைசிராய் லின்தோ பிரபு பல்வேறு பகுதியினரின் பிரதிநிதிகளையும் தம்முடைய இருப்பிடத்திற்கு அழைத்துப் பேசினார். இவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்தவர்களும் உண்டு. இத்தகையவர்களுக்கு வைசிராய் அழைப்பு விடுத்ததை திரு வல்லபாய் படேலால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதற்குப் பிறகு அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் பேசிய திரு வல்லபாய் படேல் பின்கண்டவாறு கூறினார்:

வைசிராய் இந்து மகாசபைத் தலைவர்களை அழைத்தார், முஸ்லிம் தலைவர்களை அழைத்தார், அத்தோடு காஞ்சிகள் (எண்ணை எடுப்போர்), மோச்சிகள் (செருப்புத் தைப்போர்) போன்றோரையும்கூட அழைத்தார்.

தமிழ் ஓவியா said...

திரு வல்லபாய் படேலின் மனக் காழ்ப்பும் வன்மமும் சுடு சொல்லும் கொண்ட தமது சொற்களால் காஞ்சிகளையும் மோச்சிகளையும் மட்டுமே குறிப்பிட்ட போதிலும் இந்த நாட்டின் அடிமட்ட வகுப்புகளிடம் ஆதிக்க வகுப்பும் காங்கிரஸ் மேலிடமும் கொண்டுள்ள பொதுவான வெறுப்பையுமே அவருடைய உரை குறிக்கிறது என்பதில் அணுவளவும் அய்யமில்லை. (அம்பேத்கர் நூல் தொகுப்பு_16,- பக்கம்_338)

இப்படி தாழ்த்தப் பட்டவர்களை ஒரு பொருட்டாகவே கருதாத வல்லபாய் படேல்தான் தாழ்த்தப்பட்டவர்கள் விசயத்தில் சுயமரியாதை இயக்கத்தைக் குறை கூறினார் என்றால் மோடியைப்போல் படேலும் பொய் கூறத் தயங்காதவர் என்று தானே அர்த்தப்படும்.

படேலின் முஸ்லிம் மத வெறுப்பு

படேல் ஒரு ஜாதியவாதி மட்டுமல்ல, மத வெறியரும்கூட. முகமதியர்களைப் பற்றி இந்துத்வாவாதிகளுக்கு என்ன நிலைப்பாடோ அதே நிலைப்பாட்டைக் கொண்டவர்தான் திரு படேல்.

கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான இ.எம்.எஸ் நம்பூதிபாட் எழுதிய நேரு கொள்கையும் நடைமுறையும் என்ற நூலில் இருந்து சில தகவல்:

சுதந்திர இந்தியாவில் இந்து முஸ்லிம் கலவரம் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த சமயம், அதிகார மையத்தை எப்படிக் கட்டமைப்பது என்று நேருவும் காந்தியும் யோசித்துக் கொண்டிருந்தபோது திரு படேலின் கருத்து என்னவாக இருந்தது என்றால்,

இந்து மாகாசபைத் தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜியின் ஆதரவுடன் அரசாங்கம் இந்துமதச் சார்பு கொண்டதாய் இல்லா விட்டாலும் இந்துப் பெரும்பான்மையின் நலன்களைப் பாதுகாப்பதாய் இருக்க வேண்டும் என்று கருதினார். இந்தியாவில் பணிபுரிய விருப்பந் தெரிவித்த முஸ்லிம் அதிகாரிகள்கூட இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள். ஆகவே, அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பது படேலின் கருத்து. (நூல்: நேரு கொள்கையும் நடைமுறையும்,- பக்கம்- 177).

மதவெறி மனப்பான்மை இல்லாமல் திரு படேலுக்கு இப்படி ஒரு கருத்து வந்திருக்குமா? அந்தச் சமயத்தில் ஆர்.எஸ்.எஸ் கருத்தும் அதுதானே! வங்கப் பிரிவினை நிகழ்ந்த போது அங்கிருந்து இந்துக்கள் இந்தியாவை நோக்கி வெளியேறினர். அப்போது படேல்,
இந்துக்கள் கிழக்கு வங்காளத்தில் இருந்து வெளியேற நேர்ந்தால் அதே அளவு எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவர் என்று இந்தியா பாகிஸ்தானை எச்சரிக்க வேண்டும் (அதே நூல்: பக்கம்- 210) என்று யோசனை கூறியிருக்கிறார். இதுதானே இந்துத்வா யோசனை.

ஆர்.எஸ்.எஸின் விபீசனர் படேல் எல்லாவற்றுக்கும் மேலாக படேலின் விபீசனத் தன்மையை விளக்க வேண்டும் எனறால், படேல் வேறு யாருமல்ல, காங்கிரசின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்திருந்த ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். காந்தியைக் கோட்சே கொன்றான். ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது. அதன் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது கோல்வால்கர் இது சம்பந்தமாக காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்கிறார். அந்த இயக்கத்தின் தடையைப் போக்க காங்கிரசில் இருந்து கொண்டு மறைமுகமாக எல்லா உதவிகளையும் செய்கிறார் திரு படேல். அந்தச் சமயத்தில் செப்டம்பர் 24, -1948இல் கோல்வால்கர் திரு படேலுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில்,

உங்கள் அரசாங்க சக்தியும் எங்களுடைய கலாச்சார சக்தியும் சேர்ந்து கொண்டால் நாம் இந்த (கம்யூனிச) ஆபத்தை அடக்கி விடலாம் என்று எழுதி இருக்கிறார். அதற்குப் பதில்கூறும் விதமாக திரு படேல்,

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் காங்கிரசில் சேர்ந்து கொண்டுதான் தங்கள் தேசபக்திச் செயல்களில் ஈடுபட முடியும். காங்கிரசில் இருந்து விலகியோ அல்லது அதை எதிர்த்தோ அல்ல (அதே நூல்: பக்கம்- 210) என்று பதில்கூறி இருக்கிறார். படேலின் இந்தப் பதிலை எப்படி எடுத்துக் கொள்வது? காந்தியைக் கொல்ல தனியாக ஒரு இயக்கம் எதற்கு? அதை காங்கிரசில் இருந்துகொண்டே செய்யலாமே! என்று எடுத்துக் கொள்வதா?

காந்தியைக் கொன்றவர்களோடு கைகோர்க்கத் தயாராய் இருந்த திரு படேலுக்கு மோடி சிலை வைக்கிறார் என்றால் ஆச்சரியம் இல்லை, சிலை வைக்காமல் இருந்தால் அது நன்றி கெட்டதனமல்லவா? இனம் இனத்தோடு சேர்ந்திருக்கிறது.

தமிழ் ஓவியா said...

ஹாய் மேடம்… ஹான் சாகேப்…

- ரகசியன்

“சாகேப்ஜி மேலே எனக்கு மரியாதை இருக்குதுங்கப்பா. அவருக்கும் என் மேலே அன்பு அதிகம்தான். அதற்காக என் சொந்த விருப்பங்களை மறைச்சிக்க முடியுமா? அந்த அதிகாரிகூட நான் பேசுறதுலேயும் பழகுறதுலேயும் என்ன தப்பு?“

“சாகேப்ஜிக்கு இது பிடிக்கலை. அவர் எவ்வளவு பெரிய ஆளு. இந்த நாட்டோட எதிர்கால பொக்கிஷம். அவருக்குக் கீழே வேலை பார்க்குற அதிகாரியோடு நீ பழகுனா அவருக்கு கோபம் வரத்தானே செய்யும்.”

“நான் என்ன பொதுசொத்தா டாடி? எனக்குன்னு மனசு ஒண்ணு இருக்கக்கூடாதா? நான். எங்கெங்கே போறேன்னு கண்காணிச்சிருக்காரு சாஹேப்ஜி. யார்யார்கூட பேசுறேன்னு மொபைலை ஒட்டுக்கேட்டிருக்காரு. இதெல்லாம் பெரிய மனுசங்க செய்யுற காரியமா?”

“பெரிய இடத்துலதாம்மா இதெல்லாம் நடக்கும். சாகேப்ஜிக்கு எவ்வளவு அன்பு இருந்தா உன் விஷயத்தில் இத்தனை அக்கறையோடு கண்காணிச்சிருப்பாரு! முக்கியமான மீட்டிங்கில் அவர் இருந்தாலும் உன் போன்கால் வந்தால் வெளியே போய் பேசிட்டு வருவாராமே.. நீயும் அவர்கூட ரொம்ப நேரம் பேசியிருக்கியே..”

“ஒரு பெரிய மனிதரோடு பேசுற சான்ஸ் கிடைக்கும்போது அதை அவாய்ட் பண்ண முடியுமா? அதுவும் உங்களுக்காகவும் அண்ணன்களுக்காவும்தாம்ப்பா நான் அவ்வளவு நேரம் பேசுனேன். சாஹேப்ஜியோடு நான் பேசுனதிலே உங்களுக்கு சந்தோஷமா இருக்குது.

ஆனா, அந்த அதிகாரியோடு பேசுறதும் பழகுறதும் கோபத்தை உண்டாக்குதுல்ல…”

தமிழ் ஓவியா said...

“எங்களுக்கு மட்டும் கோபம் வரலை. சாஹேப்ஜிக்கும் கோபம்தான். ஏன்னா உன் மேலே இருக்கிற அன்பிலேதானே நம்ம கம்பெனிக்கு கான்ட்ராக்ட் கிடைக்கும்படி செய்தாரு சாஹேப்ஜி. அதுவும் ஓப்பன் டென்டரே விடாமல் நமக்கே அந்த காண்ட்ராக்ட் கிடைக்கச் செய்திருக்காரு. எட்டு மாசமா நம்ம கம்பெனி என்ன நிலைமையில் இருந்ததுன்னு உனக்குத் தெரியும். எந்த ஆர்டரும் கிடைக்காம கஷ்டப்பட்டோம். சாஹேப்ஜிக்கு உன் மேலே இருக்கிற அன்புதான் உன் அண்ணன்கள் டைரக்டரா இருக்கிற நம்ம கம்பெனிக்கு காண்ட்ராக்ட் கிடைக்கக் காரணம். இது உனக்குத் தெரியாதா?”

“அதுவும் தெரியும்.. அதுக்கு மேலேயும் தெரியும்”

“என்ன தெரியும்?”

“சாஹேப்ஜிக்கு சேவகம் செய்யுற எல்லோருமே என்னை மேடம் மேடம்னு சுத்தி வந்தாங்க. பெரிய மனுசரோட ராஜ்ஜியத்தில் என்னை ராணி மாதிரி ட்ரீட் பண்ணினாங்க. அது மட்டுமா, அவரோட டின்னர் சாப்பிட்டதுக்காக 12ஆயிரத்து 500 ரூபாயை அரசாங்க கஜானாவிலிருந்து எடுத்து ஹோட்டலுக்கு பில் கட்டியிருக்காங்களே… ரனோத்ஸவத்துக்குப் போனப்ப என்னோட வண்டிக்கு பெட்ரோல் செலவுக்காகவும் என்னோட மொபைல் பில்லுக்காகவும் 5ஆயிரத்து 153 ரூபாய் அரசாங்க பணத்தை செலவு பண்ணியிருக்காரே பெரிய மனுசர்.”

“எல்லாத்துக்கும் காரணம் உன் மேலே சாஹேப்ஜிக்கு இருக்கிற அன்புதான். அதைப் புரிஞ்சுக்க. இதை விவகாரமாக்காதே… உன் நலனுக்காகத்தான் அவர் கண்காணிச்சாரு, ஒட்டுக்கேட்டாருன்னு நாங்க சொல்லிக்கிறோம். உன்னோட எதிர்காலமும் நம்ம கம்பெனியோட வளர்ச்சியும் நமக்கு முக்கியம்.”

“நான் இதை விவகாரமாக்காம இருந்தாலும், அரசாங்க பணத்தை எடுத்து செலவு செஞ்சா அரசியல்வாதிகள் விட்டு வச்சிடுவாங்களா? ஆர்.ட்டி.ஐ ஆக்ட்டில் போட்டு எல்லா விவரத்தையும் வாங்கிக்கிட்டிருக்காங்க.”‘

“அவங்க என்னவோ பண்ணிட்டுப் போகட்டும். அதையெல்லாம் பெரிய மனுசரு சமாளிச்சுக்குவாரு. கொத்துக் கொத்தா நடந்த கொலைகளையே மறைச்சி, தன்னோட இமேஜை இந்திய அளவுக்கு பில்டப் பண்ணிக்கிட்டிருக்கிற சாமர்த்தியசாலியாச்சே நம்ம சாஹேப்ஜி. நீ எப்பவும் போல அவரு ராஜ்ஜியத்தில் மேடம்ங்கிற அந்தஸ்தோடு இருக்கணும். அந்த அதிகாரி சகவாசமெல்லாம் வேணாம். அப்புறம் சாஹேப்ஜி சதிகாரியா, சர்வாதிகாரியா மாறிடுவாரு. சாஹேப்ஜி மனசு நோகாம பார்த்துக்க. புரியுதா?”

“புரியுது..”

“என்ன புரியுது?”

“யோக்கியன் வர்றாரு.. சொம்பை எடுத்து உள்ளே வையின்னு சொல்றீங்க. அதானே!”

நன்றி: www.kavvinmedia.com

படம்- நன்றி: Deccan Chronicle

தமிழ் ஓவியா said...


சங்கரமடம்


காஞ்சிபுரம் ஏனத்தூரில் உள்ள சங்கர மடத்தின் நிர்வா கத்தில் நடைபெறும் சங்கரா ஆர்ட்ஸ் சயின்ஸ் கல்லூரி நிர்வாகமே! உங்களுக்கு ஓர் கேள்வி!

பெரியார் அறக்கட்டளை சார்பில் தஞ்சை வல்லத்தில் இயங்கும் பெரியார் மணியம் மைப் பல்கலைக் கழகம் தஞ்சை யிலுள்ள நகரப் பேருந்து நிலை யத்திலுள்ள பொது சுகாதார கழிப்பறையை சுத்தம் செய்து, தனது செலவில் இன்று வரை பராமரித்து வருகின்றது.

காஞ்சிபுரம் சங்கரமடம் நிர்வாகம், இம்மாதிரி காஞ்சியில் ஏதாவது ஒரு சமுதாயப் பொது நலன் கருதி செய்வது இல் லையே! ஏன் என்றால் சூத்திர னும், பஞ்சமர்களும் அதை பயன்படுத்துவர்கள் அல்லவா? என்று தஞ்சைக்குச் சென்று வந்த - காஞ்சிபுரத்தைப் பூர்வீக மாகக் கொண்ட - இப்பொழுது சென்னையில் வசித்துவரும் தோழர் அ.நா. பாலகிருஷ்ணன்; அவர்கள் ஒரு கடிதம் எழுதியுள் ளார்.

சங்கரமடமாக இருந்தாலும் சரி, இந்து மதமாக இருந்தாலும் சரி - அவர்கள் கர்மா தத்துவத் திலே முழு அளவு நம்பிக்கை கொண்டுள்ளவர்கள்.

தொழில் பாகுபாடும்; ஆசாரங்களை சாஸ்திரப்படி அவாளவாள் பின்பற்றுவதும் மாறி இப்பொழுதுள்ள நிலைமை ஏற்பட்டு விட்டதுதான் தப்பு என்று விவேகத்தோடு புரிந்து கொள்ள வேண்டும் - என் கிறார் மறைந்த காஞ்சீபுரம் சங்க ராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (தெய்வத்தின் குரல்).

இந்த நிலையில் உள்ளவர் கள் சமதர்ம சமத்துவச் சிந்த னையோடு செயல்பட முன்வரு வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?
ஓர் அதிர்ச்சியான தகவல் - இப்பொழுது சொன்னால் எவரும் எளிதாக நம்பக் கூட மாட்டார்கள்.

1935 ஆம் ஆண்டில் கும்பகோணம் நகராட்சியில் அக்கிரகாரத்துக்குக் கக்கூஸ் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்கக் கூடாது - அதற்குப் பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மலம் எடுப்பதிலேகூட தீண்டத்தகாத வர்கள் அக்ரகாரத்துக்குள் நுழையக் கூடாது என்ற பாகுபாடு இருந்தது என்றால்; சங்கர மடம் நண்பர் பால கிருஷ்ணன் அவர்கள் எதிர் பார்ப்பதுபோல முதலில் சிந்திக் குமா? சிந்தித்தால் அல்லவா செயல் என்பது அடுத்த கட்டம்.

சிறைக்குச் சென்ற காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மல ஜலம் கழிக்க வாழை இலை கேட்கிறார் - அவர்களுடைய புத்தி எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஓர் அடையாளம்.

இந்து மதத்தைச் சேர்ந்தவர் களுக்குக்கூட ஒரே சுடுகாடு கூடாது என்கிறார் காஞ்சி ஜெயேந்திரர். கேட்டால் ஒவ் வொருவருக்கும் ஒவ்வொரு சம்பிரதாயம் இருக்கிறதே என்கிறார். சமபந்தி போஜனம் என்பதைக்கூட சங்கரமடம் ஏற்றுக் கொள்வதில்லை.

போஜனம் பண்ணும்போது நம்மோடு சாப்பிடுகிறவர்களின் குணதோஷங்களில் பரமாணுக் களும் நாம் சாப்பிடும் அன்னத் தில் ஓரளவு சேருகிறது.

பரிசுத்தமாக இருக்கப்பட்ட வர்களைப் பங்கத்தி பாவனர் கள் என்று சொல்லியிருக் கிறது. அதாவது அவர்கள் உட்கார்ந்திருப்பதாலேயே அந்தப் பந்தியைச் சுத்தப்படுத்தி விடுவார்களாம். அவர்களோடு நாம் போஜனம் பண்ணினால் அந்த ஆகாரம் உள்ளே போய் நம் மனத்தைத் தூய்மையதாக் கும்.

அதே மாதிரி பங்க்த்தி தூஷகர்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறது. ரொம்பவும் தோஷமுள்ளவர்கள் - இவர்கள் உட்கார்ந்திருப்பதாலேயே அவர்களுக்குப் பந்தி முழுவதும் அசுத்தமாகி விடுகிறது என் கிறார் சங்கராச்சாரி சந்திர சேகரேந்திர சரஸ்வதி - இப்படி சொல்லுவது சாதா ரணக் குரல் அல்ல - தெய்வத் தின் குரலாம்.

நண்பர் பாலகிருஷ்ணன் போன்று நல்ல மனம் கொண்ட வர்கள் இத்தகு மனப்பான்மை கொண்டவர்களிடம் தாராள எண்ணத்தையும் மனிதநேயத் தையும், பண்பையும் எதிர்பார்க் கலாமா?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


திருமணம் செய்து கொள்ளாமல் ஆணுடன் வாழும் பெண்களுக்கு பாதுகாப்பு : சட்டம் கொண்டுவர உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடில்லி, நவ.29-திருமணம் செய்து கொள் ளாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண் களுக்கும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண் ணும் இணையர் களாக சேர்ந்து வாழும் நடைமுறை நாட்டில் இப் போது அதிகமாகி உள் ளது. சில ஆண்டுகளில் இவர்களில் பெரும்பா லோர் பிரிந்து விடுகின் றனர் அல்லது இறுதி வரை சேர்ந்து வாழ் கின்றனர். இதுபோன்ற பெண்களுக்கும், அவர் களுக்கு பிறக்கும் குழந்தை களுக்கும் சட்ட பாது காப்பு இல்லாமல் இருக் கிறது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி ராதா கிருஷ்ணன் தலைமை யிலான அமர்வு விசாரித்து நேற்று வர லாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.

தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ கிடையாது. இதுபோன்ற உறவு முறை சட்டத்தால் அங்கீகரிக் கப்படாமல் இருப்பதா லும், இயற்கை திருமணத் துக்கு முரணாக இருப்ப தாலும், இந்த உறவுமுறை பிரிவுக்குப் பிறகு பெண் களுக்கு சட்ட பாதுகாப்பு இல்லாமல் உள்ளன.

எனவே, இதுபோன்ற பெண்களுக்கும், இந்த உறவின் மூலம் அவர் களுக்கு பிறக்கும் குழந்தை களுக்கும் எதிர்காலத்தில் சட்டப் பாதுகாப்பு அளிக் கும் வகையில், நாடாளு மன்றத்தில் மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். மேலும், இந்த உறவுமுறையையும் இயற்கை திருமண உறவு முறைக்குள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு நீதி பதிகள் தீர்ப்பு அளித்தனர்.

தமிழ் ஓவியா said...


மோடியின் மறுபக்கம்


மோடியைப் பற்றி இந்திரன் சந்திரன் என்று ஒரு பக்கம் திட்டமிட்ட வகையில் புகழ் புராணப் பட்டம் பறக்க விடப்பட்டாலும், அவரைப்பற்றி ஒவ்வொரு நாளும் வெளிவரும் தகவல்கள் மூலம் அவரது அந்தரங்கம் அசிங்கமானது என்பது அம்பலமாகி வருகிறது.

குறிப்பாக பிரதீப் சர்மா என்னும் அய்.ஏ.எஸ். அதிகாரி சி.எஸ்.என். அய்.பி.என். ஆங்கில அலை வரிசையில் அளித்த பேட்டி ஒன்று போதும் - மோடி என்னும் விகார மனிதனின் முழு வடிவத்தைத் தெரிந்து கொள்வதற்கு.

இதில் ஒரு பெரிய வெட்கக்கேடு என்ன வென்றால், மோடியைப்பற்றி வெளிவரும் அசிங்கமான தகவல்களை இந்நாட்டுப் பார்ப்பன ஊடகங்களும், முதலாளித்துவ சக்திகளின் கைகளில் பதுங்கியுள்ள ஏடுகளும், இதழ்களும் அப்படியே மூடி போட்டு மறைக் கின்றன.

தெகல்கா ஆசிரியர் தேஜ்வால் பற்றிய தகவல்களைப் பெரிதாக்கி, மோடியின் பெண் தொடர்பான சங்கதிகளைக் கழுத்தைத் திருகிப் புதைத்து விட்டனர்.

மான்சி என்னும் கட்டடக் கலை பொறியாள ரான பெண்ணுக்கும் மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்து சி.பி.அய். வசம் விசார ணையை ஒப்படைக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அந்த அய்.ஏ.எஸ். அதிகாரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மான்சி என்ற அந்தப் பெண்ணுக்கும் மோடிக்கும் இடையில் நடைபெற்ற தொலைப் பேசி உரையாடல்களையும் பிரதீப் சர்மா அந்தப் பேட்டியில் கூறினார். ஒரு பெண்ணிடம் பேசத் தகாத இரட்டை அர்த்தம் தொனிக்கும் சொற்களை உதிர்த்திருக்கிறார்.
நள்ளிரவில்கூட மோடியை, அந்தப் பெண் சந்தித்திருக்கிறார் என்கிற தகவல்கள் எல்லாம் வெளி வந்துள்ளன.

இவற்றையெல்லாம் தாண்டி, விதிமுறை களை எல்லாம் தாண்டி, கட்டடக் கலை தொடர்பாக பெரிய பெரிய ஒப்பந்தங்கள் மோடி அரசால் அந்தப் பெண்ணுக்கு, அளிக்கப் பெற்று கோடிகளை வருவாயாகப் பெற்றிருக்கிறார்.

விலை உயர்ந்த வெளிநாட்டுக் காரில் அந்தப் பெண் பயணிக்க ஆரம்பித்துள்ளார். அந்தக் காரை பழைய விலைக்கு விற்றால்கூட அதை வாங்கும் தகுதி பலருக்கு இல்லை; காரணம் பழைய விலைகூட கோடிகளைத் தொடும் என்று அந்த அய்.ஏ.எஸ். அதிகாரி பேட்டியில் போட்டு உடைத்து விட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு வரிகூட இதனை மோடியால் மறுக்க முடியவில்லை என்பதுதான். பதில் சொல்ல ஆரம்பித்தால் வசமாகச் சிக்கிக் கொண்டு விடுவோம் என்ற அச்சம்தான்.

பிரதீப் சர்மாவை அந்தப் பெண் சந்தித்து வந்ததால், அந்தப் பெண்ணை உளவு பார்க்க ஏற்பாடு செய்துள்ளார், முதல் அமைச்சர் நரேந்திரமோடி. அந்த அளவுக்கு அந்தப் பெண் ணின்மீது உரிமை கொண்டாடியிருக்கிறார் உள்ளத்தில் என்பதுதான், இதற்குள் குடி கொண்டிருக்கும் உண்மையாகும்.

ஒரு கட்டத்தில் பிரதீப் சர்மா அய்.ஏ.எஸ். கைது செய்யப்பட்டு சிறைக்குள்ளும் தள்ளப்பட் டுள்ளார். 27 ஆண்டு காலம் சிறந்த அய்.ஏ.எஸ். அதிகாரியாக பெயர் பெற்றவர்; இன்னும் சொல்லப் போனால் முதலமைச்சர் மோடியாலும் புகழப்பட்டவர்கூட!

அந்தப் பெண் விஷயத்தில் இவர் போட்டிக்கு வந்து விடுவார் என்ற நினைப்பில் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தன் சொந்த நலனுக்காக எதையும் செய்யக் கூடியவர் இந்தமோடி; அவர் பேச்சை நம்பி அத்துமீறி நடந்து கொண்ட அதிகாரிகள் யெல்லாம் நட்டாற்றில் விடப்படவில்லையா?

இத்தகு குணாளர் தான் பாரதப் புண்ணிய பூமியின் பிரதமர் நாற்காலியை அலங்கரிக்க ஆசைப்படுகிறார்.

நாட்டு மக்கள் அசிங்கப்படப் போகிறார்களா என்று தெரியவில்லை.

தமிழ் ஓவியா said...


கலாச்சாரப்படி...


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப் பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள் தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.

(விடுதலை, 24.2.1954)

தமிழ் ஓவியா said...


பெரியார் உலகத்திற்கு பெரியார் பெருந்தொண்டரின் நன்கொடை


தமிழர் தலைவர் மானமிகு முனைவர் கி.வீரமணி அவர்கள் 7.11.2013 விடுதலை இதழில் செல்வத்திற்கு நோய் வரும் - எச்சரிக்கை என்ற தலைப்பில் அருமை யான வாழ்வியல் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். கட்டுரையில் எங்கள் செய்யாறு நகரைச்சேர்ந்த முதுபெரும் பெரியார் தொண்டர் 88-ஆவது வயதில் அடி எடுத்து வைக்கும் பா.அருணாசலம், பெரியார் உலகத்திற்கு வழங்கியுள்ள நன் கொடையைப் பற்றி புகழ்ந்துள்ளார்.

பா.அருணாசலம் மிக எளிய குடும்பத்தில் பிறந்து தனது உழைப்பால் உயர்ந்த நிலைக்கு வந்துள்ள உத்தமர். முயற்சி திருவினை ஆக்கும் என்ற குறள் நெறிக்கு எடுத்துக் காட்டு அவர்.

தமிழர் தலைவர் திருக்குறளில் நன்றியில் செல்வம் என்ற அதிகாரத்தில் வரும்.

ஏதம் பெருஞ்செல்வம் தான்றுவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலாதான் (குறள் 1006)

என்ற குறளுக்கு அருமையான பொருளைக்கூறி இருக்கிறார். பெருஞ்செல்வம் படைத்த ஒருவன் தானும் நுகர மாட்டாதவனாய் தகுதி படைத்தவர்களுக்குக் கொடுத்து உதவும் பண்பும் இல்லாதவனாய் இருப்பானேயானால், அவன் தன் பெருஞ்செல்வத்திற்கே கேடு பயக்கும் ஒரு நோயாகக் கருதப்படுவான்.

தான் உழைப்பால் ஈட்டிய செல்வத்தை ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்த நாளின் போது சென்னை பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவரிடம் கழக வளர்ச்சிக்காக நன்கொடை வழங்கி வருபவர் அண்ணன் அருணாசலம் தக்கார்க்குக் கொடுத்து உதவுவதும், தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன்மேலும் பெருகிய பல கோடிப்பொருள் உண்டானாலும் அதனால் பயன் இல்லை என்பது வள்ளுவர் பொன்மொழி ... (குறள் 1005)

தமிழர் தலைவர் முனைவர் கி.வீரமணி அவர்களால் நிறுவப்பட்டு அவர்களை வேந்தராகக் கொண்டு தஞ்சை - வல்லத்தில் இயங்கி வரும் பெரியார் மணியம்மையார் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற பல்லாயிரம் மாணவர்கள் நாட்டிற்குப் பல்வேறு துறைகளில் சேவை புரிந்து வருகின்றனர்.

இரு மாதங்களுக்கு முன்னால் தமிழர் தலைவர் விடுதலையில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். பெரியாரின் பரிந்துரையால் நன்மை அடைந்தவர்கள் தங்கள் நன்றிக்கடனாக விடுதலைக்கு சந்தா செலுத்தி இருப்பார்களானால் இன்று விடுதலை இதழ் 2 இலட்சத்திற்கு மேல் வாசகர்களைக் கொண்டு சிறப்புடன் விளங்கும் என்பதே அந்த செய்தி.

தந்தை பெரியார் ஒரு பொன்மொழியைக் கூறுகிறார். நாம் தண்ணீர்ப் பந்தல் வைத்துள்ளோம். தண்ணீர் குடித்து, தாகத்தை தீர்த்துக் கொண்டவர் களில் எத்தனை பேர் தண்ணீர்ப் பந்தல் வைத்தவர் களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எண்ணு கிறார்கள்? ஆயிரத்தில் ஒருவர் கூடக்கிடையாதே.

திருவள்ளுவர் இரு வகை மனிதர்களை இரு வேறு மரங்களுக்கு ஒப்பிடு கிறார். ஒப்புரவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன்உடை யான்கண் படின் - (குறள் 216)

தக்கார்க்கு உதவாத காரணத்தில் ஒருவராலும் விரும்பப்படாதவ னுடைய செல்வம் ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது (குறள் 1008) பெரியார் பெருந்தொண்டர் அருணாசலம் போன்றோர் ஊரின் நடுவே உள்ள பயன் மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

தமிழர் தலைவர் தொடங்கியுள்ள பெரியார் உலகம் என்ற அரிய திட்டத்திற்கு அண்ணன் அருணாசலம் தன் குடும்பம் சார்பில் 10 பவுன் (இரண்டு லட்சத்து அய்ம்பதாயிரம் ரூபாய்) வழங்கியுள்ளார். நண்பர்களிடம் பெரியார் உலகம் நன்கொடை பெற்று பதினாறரை பவுன் வழங்கியுள்ளார்.

வாழ்க பெரியார் பெருந்தொண்டர் அருணாசலம்!
வளர்க அவர்தம் தொண்டு!

வாழ்க தமிழர் தலைவர் மானமிகு முனைவர் வீரமணியார்!
வெல்க அவர்தம் பகுத்தறிவுத் தொண்டு!

- இர.செங்கல்வராயன் (முன்னாள் துணைத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு)

தமிழ் ஓவியா said...


போலிக் கடவுள்கள்


இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் உள்ள விக்கிரகங்களில் பெரும்பாலானவை உண்மையானவை அல்ல; போலிகளேயாகும். பணத்திற்கு ஆசைப்பட்டு, பல்வேறு புராதன விக்கிரகங்கள் வெளிநாடு களுக்குக் கடத்தப்பட்டு வருவதால், தற்போது கோயில்களில், நாம் வணங்கும் பல்வேறு கடவுள்களின் சிலைகள் போலிகளே!

விக்கிரகங்களைக் கடத்துபவர்கள் அசல்போலவே காட்சி அளிக்கும் போலி விக்கிரகங்களை நிர்மாணித்து விட்டுச் சென்று விடுவதால் அந்த விக்கிரகங்கள் மீது எவருக்கும் சந்தேகம் வருவதில்லை. விக்கிரக திருடர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் கொடுக்கும் வாக்கு மூலத்தைக் கொண்டே, இன்னின்ன கோயில்களில் உள்ள விக்கிரகங்கள் போலியானவை என்று பொதுமக்களுக்குத் தெரிய வருகிறது.

சமீபத்தில் சர்ச்சைக்குட்பட்ட சிவபுரத்து நடராசன் விக்ரகம் தமிழகத் திலிருந்து ரூ.5 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு, 15 ஆயிரம், 5 லட்சம், 35 லட்சம் என்று 3 பேர் கை மாறி, கடைசியில் ஒருவரால் 75 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டது. அவ்வளவு மதிப்பு வாய்ந்த நடராசன் விக்கிரகம் களவு போன விஷயமே 7 ஆண்டுகளுக்குப் பின்னரே நமக்குத் தெரியவந்தது.

சென்னை நகர சி.அய்.டி. போலீஸ் சூப்ரின்டெண்டன்ட் கே.வி.ஞானசம்பந்தம் ஒரு கருத்தரங்கில் வெளியிட்ட விவரமே இவை.

(ஆதாரம்: 8.12.1975, தினமணி, 2ஆம் பக்கம்)

தமிழ் ஓவியா said...

சமூகப் புரட்சிஒரு பெரிய சமூகப் புரட்சி உண் டாகாமல் அபேதவாதிகள் (சோஷலிஸ்ட்) விரும்பும் பொருளாதார சுதந்திரம் ஏற்பட போவதில்லை என்பது உறுதி. புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால் ஏழை - எளியோர் முன் வந்துதான் ஆக வேண்டும்.

ஏனையோர், தம்மை சமமாகவும், சகோதர உணர் வுடனும், நீதியாகவும் நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தால்தான் பாமர மக்கள் மற்ற மக்களுடன் சேர்ந்து புரட்சி செய்வார்கள்.

வெற்றி பெற்ற பிறகு ஜாதி - மதவேற்றுமை பாராட்டாமல் சமத்துவமாக நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலொழிய எத்தகைய புரட்சிக்கும் மக்கள் முன் வரமாட்டார்கள். ஜாதியில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று வாயளவில் மட்டும் அபேதவாதிகள் கூறிவிட்டால் போதாது. ஜாதி உயர்வு - தாழ்வு பிரச்சினையை முடிவு செய்யாமல் அபேதவாதிகள் ஒரு விநாடி கூட ஆட்சி நடத்த முடியாது.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

அப்பா - மகன்மகன்: எதிர்த்த வீட்டு ஜோசியரு ஜாதக பொருத்த மெல்லாம் பார்க்க ரொம்பவும் ராசி யான ஆளா? 50, 100ண்ணு அங்க வர்றவங்கள்ளாம் தட்சணை கொடுக்கிறாங்களே... அந்த பணத்தை எல்லாம் அவரு என்ன பண்ணுவாரு?

தந்தை: அங்க வர்றவங்கள்ளாம் தர்ற தட்சணைப் பணத்தை எல்லாம் சேர்த்து வச்சு தம் பொண்ணுக வரனுக்கு வரதட்சணையா கொடுப் பாரு!

-கி.கி.ஜின்னா

தமிழ் ஓவியா said...


உலகப் பகுத்தறிவாளர்கள்

பேரறிஞர் அண்ணா அவர் கள், காலத்தினால் விளைந்த மாற்றங்களையும், கருத்தினால் விளைந்த மறுமலர்ச்சியையும், மக்களின் கொதிப்பினால் பிறந்த புரட்சிகளையும் மனதில் கொண்டுதான் தமிழ்ச் சமுதாயத் தைத் தட்டி எழுப்பினார்.

அறிஞர் அண்ணா கூறு கிறார்;

கிரேக்க நாட்டின் விசித்திர வைதிகர்களை, வீதி சிரிக்கச் செய்தார். - சிந்தனைச் சிற்பி சாக்கரடீசு!

உலக வடிவை உணராதவர்களுக்கு அது உருண்டை என்னும் உண்மையை உரைத்து வதைபட்டார் - கலிலீயோ

பழைமையை வற்புறுத்திய வைதிகத்தின் மடமையைத் தமது வாதத்தினால் வாட்டினார் - நாட்டை விட்டே ஓட்டினார் - வால்டேர்

மக்களின் ஒருமுகப்பட்ட ஒப்புதல் உடன்பாட்டுப் பயனே ஆட்சியாவதால் மக்கள் மன்றத்திற்கு உரிய மதிப்புத் தர வேண்டினார் - ரூசோ வேதப் புத்தகங்களை விற்று, விபச்சார விடுதிகளில் அந்தப் பணத்தை இறைக்கும் மதப் போர்வை அணிந்த போகிகளைக் கண்டித்தனர் - விக்ளிப், ஜீவிங்கிலி - மார்ட்டின் லூதர் போன்றோர்

அமெரிக்கக் கறுப்பர்கள் - பூட்டப்பட்டிருந்த விலங்கொடித்து அந்த அடிமைகளை விடுவித்தார் - ஆபிரகாம் லிங்கன்

முதலாளிகளின் கொடுமைகளை எடுத் துரைத்து - சமதருமச் சமுதாயம் காண அறை கூவினார் - காரல்மார்க்ஸ்

முதலாளித்துவ ஜார் மன்னர்களை எதிர்த்துப் புரட்சி நடத்தி வெற்றி பெற்றார் - மாவீரர் இலெனின்

ஒற்றுமை காண வழியற்று ஒருவரை ஒருவர் பகைத்து நின்ற சீனர்களின் சிறுமதியைப் போக்கிச் சீனாவைத் தலை நிமிர வைத்தார் - சன்யாட்சன்

துருப்பிடித்த மூடநம்பிக்கைகளில் உழன்று உருக்குலைந்த துருக்கியர்களின் மதி தேய்வதைத் தடுத்தார் - கமால் அத்தா - துர்க்

மதத்தின் ஆதிக்கத்தால் இறைவன் பெயரைக் கூறி, ஏழைகளை வஞ்சித்தவர்களைச் சந்தி சிரிக்க வைத்தார் - இங்கர்சால்

சிந்தனையற்ற மக்களின் பேதைமையைப் போக்கும் அறிவூட்டும் பணியை மேற்கொண்டார் - பெர்னார்ட்சா

உலகைத் திருத்தவும், உண்மையை நிலை நாட்டவும், மூடநம்பிக்கைகளை முறியடிக்கவும், அருந்தொண்டாற்றிய சிந்தனைச் சிற்பிகளை அறிவியல் மேதைகளை, சீர்திருத்தச் செம்மல் களை எல்லாம் எடுத்துக் காட்டுவது ஏன்? (நூல்: பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் க.அன்பழகன், பக்கம் 108)

தகவல்: க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...

அறிவியல் வளர்ச்சிநீங்களெல்லாம் நன்றாக உணர்ந்துள்ள உண்மைதான் அறிவியல் வளர்ச்சி.

பொறியியல் துணைக் கொண்டு எத்தனை படிக்கட்டுகளைத் தாண்டி அந்த வளர்ச்சி வந்திருக்கின்றது என்பது முதன் முதல் சக்கரம் - உருளையைக் கண்டுபிடித்தானே, அது அறிவியலில் தொடக்கக் கால வளர்ச்சி. சக்கரம் கண்டுபிடிக்காமலிருந்திருப்பின் மகா விஷ்ணுவே கூட வெற்றி பெற்றிருக்க மாட்டார். திருமாலுக்குக் கூடச் சக்கரம்தான் பெரிய ஆயுதம்.

அசோகர் காலத்தில் அதே சக்கரம் சமாதானத்திற்கு அடையாளம்; போருக்கு ஆயுதமன்று.

நூல்: பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் க.அன்பழகன் -பக்கம் 132

தமிழ் ஓவியா said...


பேரறிவாளன், முருகன், சாந்தன் விடுவிக்கப்பட வேண்டும்: கலைஞர் கருத்து


கேள்வி :- பேரறிவாளனுக்கு நியாயம் வழங்க வேண்டுமென்றும், அதைப்பற்றி முழு விசாரணை நடத்திட அரசு முன்வர வேண்டுமென்றும் கூறியிருந் தீர்கள்; அதை எப்படி நடைமுறைப் படுத்த முடியும்?

கலைஞர் :- புலன் விசாரணை அதிகாரி தற்போது வெளியிட்டுள்ள தகவலுக்கு முன்பாகவே, கடந்த சில ஆண்டுகளாகவே, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டுமென்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அறிக்கைகளும் விடுத்துள்ளேன்.

29-8-2011 அன்று நான் விடுத்த அறிக்கையில், இவர்கள் மூவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன். மீண்டும் 13-4-2013 அன்று நான் விடுத்த அறிக்கையிலும் இந்த வேண்டுகோளைத்தான் வலியுறுத்தியிருந்தேன். இதற்கிடையேதான் சி.பி.அய். அதிகாரி தியாகராஜன் தெரிவித்துள்ள கருத்துகள் மிகுந்த அதிர்ச்சியை நமக்குத் தந்தன. அந்தக் காவல் துறை அதிகாரி தற்போது கூறும்போது, சிவராசனுக்கு, இரண்டு வோல்ட் பவர் பேட்டரிகளை பேரறிவாளன் வாங்கிக் கொடுத்தார்.

அதுதான், ராஜீவைக் கொலை செய்யப் பயன்படுத்தப்படும் வெடிகுண்டுக்குப் பயன்படும் என தனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் என்னிடம் சொல்லியிருந்தார். இதை நான் வாக்குமூலம் எழுதும்போது, இந்தப் பேட்டரி மூலம், இயக்கப்பட்ட வெடிகுண்டைப் பயன்படுத்தி ராஜீவ் காந்தியைக் கொலை செய்தார்கள் எனப் பொதுவாக பதிவு செய் திருந்தேன். எனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் சொன்னதை விட்டுவிட்டு, நான் வாக்குமூலத்தை எழுதிவிட்டேன்.

வழக்கு விசாரணையில், இதுபோல் வாக்குமூலம் தரவில்லை என்று பேரறிவாளன் மறுத்தார். குறுக்கு விசாரணையில், தடா நீதி மன்றத்தில் என்னைக் குறுக்கு விசாரணை செய்த வழக் கறிஞர் துரைசாமி, சாட்சியங்களை வேண்டுமென்றே நான் மாற்றி எழுதி விட்டதாகக் குற்றம் சாட்டினார், அவற்றை நான் மறுத்துவிட்டேன் என்று குறிப் பிட்டுள்ளார். தான் செய்த தவறுக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் காவல் துறை அதிகாரி பாவ மன்னிப்பு கோரியிருக்கிறார்.

ஆனால் அந்த இளைஞனின் 22 ஆண்டுக் கால வாழ்க்கையை யாரால் திருப்பிக் கொடுக்க முடியும்? ஒருவேளை இந்த இடைவெளியில் அவர் தூக்குத் தண்டனைக்கு ஆளாகியிருந்தால், அந்த இளைஞனைப் பெற்ற தாய்க்கு நாம் எப்படி ஆறுதல் கூறியிருக்க முடியும்? காவல்துறை அதிகாரியின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, தமிழகத்திலே உள்ள பெரும்பாலான கட்சிகள் பேரறிவாளனை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கின்றன.

பேரறிவாளனைப் பெற்ற தாயாரும் அந்த வேண்டுகோளை கண்ணீரோடு வைத்திருக்கிறார். இந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, இனியாவது அந்த வாலிபனுக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் விடுதலை தரப்பட வேண்டும்.

தமிழ் ஓவியா said...


டிசம்பர் -2 மறவாதீர்! தஞ்சையைப் பற்றி தந்தை


எங்கும் இயக்கத் தோழர்கள் இருந் தாலும், என்னுடைய முயற்சிக்கும், போக் குக்கும் தஞ்சை முதன்மையானதாக உள்ளது. திராவிடர் கழகமாக ஆன பிறகு மாத்திரமல்ல. நான் காங்கிரசில் இருந்த காலத்திலும், தஞ்சை பெருமளவில் ஆதரவு அளித்துள்ளது. சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலத்திலும், நடத்திய காலத் திலும் தஞ்சைதான் ஆதரவு அளித்துள் ளது.

எதைச் சொல்கிறேனோ, எதை எதிர்பார்க்கிறேனோ, அதைத் தமிழ்நாடு முழுவதும் பகுதி செய்கிறது என்றால், தஞ்சை மாத்திரம் பகுதிக்குக் குறையாமல் செய்யும்

தஞ்சை ஜாதி ஒழிப்பு மாநாட்டில் - தமக்கு எடைக்கு எடை வெள்ளி ரூபாய் நாணயங்கள் அளிக்கப்பட்ட விழாவில் தந்தை பெரியார் சொன்ன வடிகட்டிய சொற்கள்தான் இவை (3.11.1957).

ஆம்! இந்தத் தஞ்சையில்தான் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கமும் அளிக்கப்பட்டது. (1.2.1998).

ஆம்! இதே தஞ்சையில்தான் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழர் தலைவரிடத்தில் 100 சவரன் தங்கமும் அளிக்கப்பட்டது. (7.10.1979).

ஆம்! இதே தஞ்சையில்தான் வரும் டிசம்பர் 2ஆம் தேதி பெரியார் பேருருவச் சிலைக்காக ஆயிரம் சவரன் தங்கத்திற்கான நிதியை அளிக்கப் போகிறார்கள்.

நமது தலைவருக்கு மட்டுமல்ல; இந்த வரலாற்றுப் பொன் மணக்கும் விழாவில் நாமும் பங்கேற்றோம் என்ற பெருமையை நமது வாரிசுகளுக்கு விட்டுச் செல்லுவோம் - வாருங்கள் தோழர்களே வாருங்கள்!

குடும்பம் குடும்பமாக வாருங்கள்!

தமிழ் ஓவியா said...


மத்திய அமைச்சர் ஆ. இராசா பதவி விலக காரணமான உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி பாலியல் புகாரில் சிக்கினார்!

தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சில மாதங்கள் மட்டுமே பணிபுரிந்து, உடனே சுப்ரீம்கோர்ட்டுக்கு - சிவப்பு கம்பள விரிப்பில் நடந்து உச்சநீதிமன்ற நீதிபதி யானவர் வங்காளப் பார்ப்பனர் கங்குலி.

இந்தப் பெரிய மனிதர் மீதுதான் பெண் வழக்குரைஞர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு; தன்னுடைய உதவியாள ரான பெண் வழக்குரைஞரிடம் (65 வயது உச்சநீதிமன்ற நீதிபதி ஓய்வு வயது - அந்தக் கால கட்டத்தில் (62 - 65 வயது) பாலியல் புகார்!

மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எச். டட்டு, ரஞ் சனா தேசாய் ஆகியோர் விசாரணை முடித்து தலைமை நீதிபதியிடம் அறிக் கையை தந்துள்ளனர்!

நீதிபதி கங்குலி கொடுத்த வாக்கு மூலத்தில் உள்ள வாக்கியங்கள். (ஏடுகளில் வந்துள்ளபடி)

நான் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ளேன் நான் உடல் ரீதியாக அவருக்கு எந்த துன்புறுத் தலையும் செய்யவில்லை. (அப்படியா னால் மன ரீதியாக நடத்தினேன் என்று சொல்லுகிறாரா என்று இதைப் படித்த வாசகர் கேட்கிறார்).
அந்தப் பெண் பயிற்சிக்காக என்னிடம் அதிகார பூர்வமாக ஒதுக்கப் பெறாத நிலையில் பயிற்சி பெற்றார்

கேள்வி: ஓட்டல் அறைக்கு நீங்கள் அழைத்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டி உள்ளாரே?

கங்குலி: அப்போது நான் பணி நிமித்தமாக டில்லியில் இருந்தேன். அவரும் டில்லியில் இருந்தார். அவர் தான் என்னை நாடி வந்தார்!...

ஒரு பெரு நிலை நீதிபதி (இவருடைய அனுமதியின்றி அவர் எப்படி ஓட்டல் அறையில் சந்திக்க முடியும் என்று கேட்கிறார் மற்றொரு வாசகர்)

இந்த வங்காளப் பார்ப்பன நீதிபதி, ஊழலை, லஞ்சத்தை, ஒழுக்கக் கேட்டை ஒரு போதும் சகிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்ஜித்து, மற்றொரு பஞ்சாப் பார்ப்பன நீதிபதி யுடன் இணைந்து 2ஜி வழக்கில் அமைச் சர் ராஜாவை, விசாரணையே துவங் காத நிலையிலேயே பதவிலக வேண்டி கடும் தாக்குதல்களைப் பொழிந்த நீதிமான்! இவர் கதை இப்போது இப்படி!

உலகமே அறிந்து அகல விழி களைத் திறந்து பார்க்கிறது!

பார்ப்பனரல்லாத பஞ்சாப் தலைமை நீதிபதியாக, உயிருக்குத் துணிந்து பதவியேற்றுக் கொண்ட ஜஸ்டீஸ் வி. இராமசாமி மீது, ஏதோ கூடுதல் விலை கொடுத்து மேஜை, நாற்காலி வாங்கி யதையும், அனுமதியோடு ஊருக்கு டெலிபோன் எடுத்துச் சென்றதை யெல்லாம் ஊழலோ ஊழல் என்று ஓங்காரக் கூச்சலிட்டவர்கள் கங்குலி புராணம் கண்டு என்ன சொல்லப் போகிறார்கள்?

நடவடிக்கை வருமா? இல்லையேல் மனுதர்ம முறைப்படி நீதி தானா? நாடே கேட்கிறது!

பார்ப்பனர்களின் தகுதி, திறமை, இதோபதேசத்தின் யோக்கியதை இப் போது புரியவில்லையா?

தமிழ் ஓவியா said...


நடராஜன் கோயில்: சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்!


சிதம்பரம் நடராஜன் கோயிலை மீண்டும் தீட்சதர் பார்ப்பனர்களிடத்தில் ஒப்படைக்கக் கூடாது (அவர்கள் அடித்த கொள்ளைகள் போதும்! போதும்!!) என்பதை வலியுறுத்தி 4.12.2013 புதன் காலை 11 மணிக்கு சிதம்பரம் காந்தி சிலையருகில் நகர மக்கள் குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்பார்கள். தோழர்களே திரள்வீர்! திரள்வீர்!!

- தலைமை நிலையம்
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


பாலிமர் தொலைக்காட்சியில் அருள்மொழி

சங்கர்ராமன் படுகொலை வழக்கில் காஞ்சி சங்கராச் சாரியார்கள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக பாலிமர் தொலைக்காட்சியில் மக்களுக்காக பகுதி யில் நாளை (1.12.12003) இரவு 9 மணிக்கு நடைபெறும் விவாதத்தில் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் அருள்மொழி பங்கேற்கிறார்.

தமிழ் ஓவியா said...
மோடியின்பிம்பத்தைப்பெரிதுபடுத்திக்காட்டும் இணையதளமோசடிகள்அம்பலம்!
தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தும் தில்லுமுல்லுகள்!

புதுடில்லி, நவ.30- தொழில் நுட்பத்தில் நெளிவு சுளிவுகளைப் பயன்படுத்தி இணைய தளங்களில் பொய்யான வற்றையும், கற்பனை களையும் கலந்து நரேந் திரமோடியைத் தூக்கி நிறுத்தும் முகத்திரை தில் லுமுல்லு அம்பலத்துக்கு வந்துள்ளது.

கோப்ரா போஸ்ட் எனும் இணையதள ஏடு 'ஆபரேசன் புளு வைரஸ்' என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்களின் செயல்பாடு களை ஆய்வுசெய்தது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் போலியாகப் புகுந்த இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்களில், 12 நிறுவனங்கள் மற்றவர்களின் முக வரிக்குள் கடுமையான முறையில் உருவாக்குகிற ஒவ்வொரு கருத்துக்கும், ஏராளமானோர் ஆத ரித்து கருத்து எழுதுவது போல் ஓர் அறையில் அமர்ந்துகொண்டே எழுதித்தள்ளுகிறார்கள் எனத் தெரியவந்ததாக, கோப்ரா போஸ்ட் ஆசிரியர் அனிருத்தா பஹல் தெரிவிக்கிறார்.

அவதூறில் பா.ஜ.க.வே முன்னணி!

இத்தகைய அவ தூறுப் பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னணியில் இருப்ப தாகவும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை பிரபலப் படுத்துவதற் காக விடியவிடிய வேலை செய்வதாகவும், இதற் காக பல்லாயிரம் கோடி ரூபாய் கைமாறியிருப் பது தெரியவந்தது என் றும் அவர் கூறுகிறார்.

மேலும், இவர்களுக்கு ஆதரவாக ஏராள மான முஸ்லீம்கள் கருத் துச் சொல்வது போல் தோற்றத்தை ஏற்படுத்த, ஆயிரக்கணக்கான முஸ்லீம்களின் பெயரில் கணக்குகளைத் துவக்கி பின்னூட்டங்களை இடுவதாகவும் அனி ருத்தா தெரிவிக்கிறார்!

போலியான பெயர்களில்....

மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவன அய்.டி. அய் நிபுணர் ஒருவர் கூறும் போது, முக்கிய மாக முகநூல் மற்றும் டிவிட்டர் இதர உலக அளவிலான முக்கிய ஊடகங்கள் நடத்தும் பிளாக்குகளில் பல விதமான பெயர்களில் கணக்குகள் திறக்கப் படுகின்றன.

இதற்கு நிலை வட்டு (ஹார்டு டிஸ்குகள்) தேவையில்லை. மேலும் இண்டர்நெட் வழங்கனில் (சர்வர் களில்) இருந்து பல போலியான பெயரில் அய்.பி முகவரிகள் உரு வாக்கி கொள்ளும் தொழில் நுட்பம் போன் றவை பிரபல இணைய தள கண்காணிப்பு சாத னங்களை ஏமாற்றிவிடும் ஆகையால் அவை எல் லாக் கணக்குகளையும் வேறு வேறு நபர்கள் அனுப்பியதாக காட்டிக் கொள்ளும்,

இதன் காரணமாக ஒரு குறிப் பிட்ட நபரைப்பற்றிய பதிவுகளை பலர் கூறுவ தாக எடுத்துக்கொண்டு தானாகவே அந்த இணையதளம் அந்த நபருக்குமுக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கும், இந்த வகையில் தற் போது முன்னணி பத் திரிகையான டைம்ஸ், மோடியை இந்த வருடத் தில் சிறந்த மனிதர்கள் பட்டியலில் சேர்த்து வாக்குப்பதிவிற்கு விட் டுள்ளது. இதில் விழும் ஓட்டுக்களின் நம்பகத் தன்மை தற்போது கேள் விக்குறியாக உள்ளது.

தன்னைப்பற்றிய செய்தியை மறைக்கும் தொழில் நுட்பம்

தற்போது ஊடகங் களை விலைக்கு வாங்கி யதன் மூலம் மான்சி/மாதுரி என்ற பெண் ணைத்தொடரும் விவ காரத்தை மறைத்து, தெகல்கா விவகாரத்தை இரவும் பகலும் ஓட்டிக் கொண்டு இருக்கிறார் கள், அதே போல் இணையதளத்திலும் மோடிக்கு எதிரான செய்திகளை தேடும் தளத்தில் இருந்து மறைத்து விடும் தொழில் நுட் பத்தையும் கையாண்டு வருகிறார்கள்,

எடுத் துகாட்டிற்கு குஜராத் மாநிலம் குறித்து தேடும் பட்சத்தில் மோடியின் பொய் பிரச்சாரங்கள் மட்டுமே அவர்களின் தேடலில் கிடைக்கும், உண்மை நிலவரங்கள் எதுவும் தேடுதளத்தில் கிடைக்காது. இது மிகவும் மோசமான ஓர் உதாரணமாகும் என்று பெங்களூருவைச் சேர்ந்த அய் டி நிபுணர் ஒருவர் கோப்ரா போஸ் டிற்கு தெரிவித்தார்.

இந்த வகையில் தான் உலகில் உள்ள முக்கிய பத்திரிகைகள் நரேந்திர மோடியை இந்தியாவின் முக்கிய நபராக தவறா கக் கணித்து விடுகிறது, மோடியின் டுவிட்டர் அக்கவுண்டில் இணைந் துள்ள லட்சக்கணக் கான நபர்கள் என்பது சில நூறுகள் கூட இருக்கலாம் ஆனால் இது போன்ற போலி அய்.டி.கள் மூலம் ஒருவர் நூறு கணக்குகள் கூட உருவாக்கி மோடி யின் ஆதரவாளர்கள் என காட்டிக்கொள்ள லாம். சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தி அலை வரிசையில் மோடியின் இந்த மோசடிதனத்தை ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது.

தமிழ் ஓவியா said...


பெரியார் நூலக வாசகர் வட்டத்திற்கு வாழ்த்துகள்!

சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் நூலக வாசகர் வட்டம் 2000 நிகழ்ச்சிகளைத் தொய்வில்லாமல் நடத்திப் பெருஞ் சாதனையைச் செய்துள்ளது. அதற்கான இரு நாள் விழாக்கள் சென்னை பெரியார் திடலில் நேற்றும் இன்றும்; ஓர் அமைப்புத் தொடங்கப்பட்டு இடையில் தொய்வு இன்றி தொடர்ச்சியாக 2000 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது என்றால் அது ஒன்றும் சாதாரண செயல் அல்ல!

புயல் வீசினாலும், சுனாமி ஏற்பட்டாலும், கடும் மழை பொழிந்தாலும், வியாழன் மாலை என்றால் சென்னை பெரியார் திடலில், பெரியார் நூலக வாசகர் வட்டம் கண்டிப்பாக நடந்தே தீரும் என்ற நம்பிக்கை எல்லோர் மத்தியிலும் உண்டு.

இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையை உண்டாக் குவதற்கு இந்த அமைப்பு எப்படியெல்லாம் செயலாற்றியிருக்க வேண்டும் என்று நினைத் துப் பார்க்க வேண்டும்.

தொடங்கும்போது ஆர்வமாக வருவார்கள். அது தொடரும்போது தான் ஆயிரத்தெட்டுச் சிக்கல்; நிருவாகிகளுக்கிடையே கருத்து மோதல்; குழுக்களாகப் பிரிந்து செயலாற்றுதல் என்ற நோய்த் தாக்கி அந்தச் செடி பட்டுப் போய் விடும்.

பெரியார் நூலக வாசகர் வட்டம் அதற்கு விதி விலக்கு; ஓர் அமைப்பு கூட்டுப் பொறுப்போடு, நல்ல குடும்ப உறவோடு எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு நல்லதோர் எடுத்துக் காட்டே பெரியார் நூலக வாசகர் வட்டம்.

1976 நெருக்கடி நிலை காலத்தில் கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் கைது செய்யப்பட்ட கால கட்டம் அது.

அந்த நேரத்தில் நண்பர்கள் சிலர் சேர்ந்து இப்படி ஒரு கரு உருவாக்கப்பட்டது. செவ்வாய் தோறும் பெரியார் திடலில் உள்ள நூலகத்தில் கருத்துகளை பரிமாறிக் கொள்வது என்று ஆரம்பிக்கப்பட்டது.

நெருக்கடி நிலை விலக்கப்பட்ட பின்னர் அதிகார பூர்வமாக ஓர் அமைப்பாகத் தொடங் கப்பட்டது. திராவிடர் கழகத்தின் துணை அமைப்புகளுள் ஒன்றாக பெரியார் திடலில் இயங்கி வருகிறது. வியாழன் மாலை வாரந் தோறும் நடைபெறும் கூட்டத்தில் தமிழ் நாட்டில் குறிப்பாக தலைநகரில் பேசாத முக்கிய தலைவர்களோ, சிந்தனையாளர்களோ, பகுத் தறிவாளர்களோ அரிது என்றே கூறலாம்.

இன்னும் சிறப்பாகச் சொல்ல வேண்டு மானால் இந்த அமைப்பில் பேசுவது பெருமைக் குரிய ஒன்று என்று கருதும் அளவுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டம் வளர்ந் தோங்கியுள்ளது.

தமிழுக்கும், தமிழினத்துக்கும், முற்போக்குக் குத் தொண்டு செய்துள்ள பெரு மக்களுக் கெல்லாம் விழா எடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் விழாவாம் பொங்கல் விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. அய்யா அண்ணா பிறந்த நாள் விழாக்கள் கலை விழாக்களாகக் கொண் டாடப்பட்டு வருகின்றன - போட்டிகள் நடத்தப்படுவதும் உண்டு.

வெறும் கூட்டங்கள் என்பதோடு அல்லாமல், மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன.

இவ்வமைப்பில் ஆற்றப்பட்ட சிலரின் உரைகள் நூலாகவும் வெளி வந்துள்ளன. குறிப்பாக புரவலர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தொடர் சொற்பொழிவுகளை நடத்தி, அந்தவுரைகள் தொகுக்கப்பட்டன. பெரியாரியல் இராமா யண ஆய்வுச் சொற்பொழிவுகள் என்ற நூல்களாக வெளிவந்துள்ளன.

பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் பார்வையாளராக வந்த சிலர் பிற்காலத்தில் எழுத்தாளர்களாகவும், பேச்சாளர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், ஏன், அமைச் சர்களாகவும்கூட ஆகி இருக்கின்றனர்.

2000 நிகழ்ச்சிகளை நிறைவு செய்த பெரியார் நூலக வாசகர் வட்ட நிருவாகிகளைப் பாராட்டு கிறோம். மேலும் வளர்ந்து கின்னசில் இடம் பிடிக்கச் செய்ய அனைவரின் ஒத்துழைப்பையும் கோருகிறோம்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

தமிழ் ஓவியா said...


உழைப்பு


எவனெவன் தனது உழைப்பை வயிற்றுச் சோற்றுக்கு மட்டும் கொடுக்கின்றானோ அவனெல்லாம் கூலியாள்; வயிற்றுச் சோற்றுக்கு வசதி வைத்துக்கொண்டு மேலும் உழைப்பவன் முதலாளி.

(விடுதலை, 11.4.1947)

தமிழ் ஓவியா said...


சென்னையில் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாடு

சென்ற வாரம் 22, 23 ஆம் தேதிகளாகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை பீபிள்ஸ் பார்க் என்கிற மைதானத்தில் அமைக்கப்பட்ட, நாயர் பந்தல் என்கின்ற ஒரு அழகிய பெருங் கொட்டகையில் பார்ப்பனரல்லாத வாலிபர்களின் முதலாவது மாகாண மகாநாடு, பெங்களூர் சட்ட சபை மெம்பரும் முனிசிபல் சேர்மனுமான ஜனாப் மகமத் அப்பாஸ்கான் சாஹேப் அவர்கள் தலைமையில் நடந்தது.

சுமார் ஆண், பெண் உள்பட 5000 ஜனங்கள் வரை விஜயம் செய் திருந்தார்கள். அவ்வாலிப சங்கத்தலைவரும், மகாநாட்டின் வரவேற்புத் தலைவருமான ஸ்ரீமான் ஆரியா அவர்கள் வரவேற்பு உபன்யாசமும், தலைவரின் அக்கிராசன உபன்யாசமும் வாலிப சங்கத்தின் ஆரம்பத்தைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் பார்ப்பனரல்லாத வாலிபர்களும், பெரியோர்களும் இனி நடந்து கொள்ள வேண்டியதைப் பற்றியும் தெளிவாய் எடுத்துச் சொல்லி இருக்கின்றனர்.

அவற்றை ஒவ்வொருவரும் கவனித்துப்படிக்க வேண்டியது அவசியம். தவிர, இம்மகாநாடானது அளவுக்குமேல் வெகுவிமரிசையாகவும் அதி ஊக்கமாகவும், மிக தாராள நோக்கத்துடனும் நடைபெற்றதானது நமது நாடு விழித்துக் கொண்டதென்பதையே காட்டுகிறது.

அதில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் உலகத்தையே மூட நம்பிக்கையிலிருந்தும், அடிமைத் தனத்திலிருந்தும் விடுதலை செய்யத் தகுந்த அவ்வளவு சக்தி அடங்கியவைகளாகவே இருந்தன.

உதாரணமாக, மனுதர்ம சாஸ்திரத் தையும் அதை ஆதாரமாகக் கொண்ட புராணங் களையும் அரசாங்கத்தார் பறிமுதல் செய்ய வேண்டும் என்று செய்த தீர்மானமும், சூத்திரன் என்று கூப்பிட்டால் பினல் கோட் சட்டப்படி கடுங்காவல் தண்டனையும், கசையடியும் கொடுக்கவேண்டும் என்று பேசிய பேச்சும், பார்ப்பனர்களின் சூழ்ச்சியை எல்லோரும் அறிந்து விட்டார்கள் என்பதையே வெளியாக்கு கிறது.

அன்றியும் குடும்பச் சொத்துக்களில் ஆண்களுக்கு உள்ளதுபோலவே பெண் களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்று செய்த தீர்மானமும், விதவைகளான பெண் களுக்கும் குடும்பச் சொத்தில் தங்கள் புருஷர்கள் இருக்கும்போது அனுபவித்து வந்த வாழ்க்கை யையே அளிக்கவேண்டுமே அல்லாமல்,

ஜீவனாம்சம் என்பதாகச் சொல்லிக்கொண்டு வக்கீல் வீடுகளிலும், கோர்ட்டுகளிலும் அலையா திருக்கச் செய்யவேண்டிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பவைகளாகிய பல தீர்மானங்களும், சுயமரியாதைக்காகச் செய்யப்படும் சத்தியாக் கிரகங்களிலும் அதை ஆதரிப்பதுடன் அதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று செய்த தீர்மானமும் இவைகளில் காட்டிய உற்சாகமும் தமிழ் நாட்டின் சுயமரியாதை உணர்ச்சிக்கு வீரம் எழுந்து விட்டதென்பதையே காட்டுகின்றன.

இவ்வாலிப சங்கமானது இத்தீர்மானங் களுடன் திருப்தி அடைந்துவிடாமல் இவை அமலுக்கு வரத் தகுந்த அளவு வேலை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றோம். இரண்டு மாதங்களுக்கு முன் பம்பாய் வாலிபர் மகாநாட்டிலும் ஏறக்குறைய இது போன்ற தீர்மனங்களே நிறைவேறி இருக்கின்றன.

ஒரு நாடு விடுதலையடைய வேண்டுமானால், அந்நாட்டு வாலிபர்களுக்கு விடுதலை உணர்ச்சி வரவேண்டும் என்கின்ற ஆப்தவாக்கின்படியே நமது நாட்டுக்கு இப்போது விடுதலை அறி குறிகள் காணப்படுகின்றதும், அத்துடன் பால்யைகளும் முனைந்து முன் இருக்கின்ற தானது இம்மகாநாட்டால் அறியலாம், ஸ்ரீமதிகள் கிருஷ்ணாபாய் B.A.L.T.; ஊ.ஏ நாயகம் B.A.;பாரிஜாதம் B.A.; இந்திராணி பால சுப்ரமணியம், ஸ்கவுட் மாஸ்ட்டர், அலர்மேலுமங்கைத் தாயாரம்மாள் முதலிய ஸ்திரீ ரத்தினங்களின் சொற்பொழிவுகள் முன் காலத்தில் தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் காணப்படும் வீரத் தாய்மார் களையெல்லாம் உறுதிப்படுத்தியது.

எனவே, வாலிப சங்கத்தையும், இம்மகா நாட்டையும், அதன் நிர்வாகிகளையும், அதற்கு ஆதரவளித்த பெரியோர்களையும் நாம் மனப் பூர்வமாய் பாராட்டுவதுடன் நமது கொள்கைக்குப் பின்பலமாயிருப்பதற்கு நமது நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு கட்டுரை - 30.10.1927

தமிழ் ஓவியா said...


தேவதாசி விண்ணப்பம்

நமது நாட்டில் தெய்வத்தின் பேராலும், மதத்தின் பேராலும் விபசாரித் தனத்திற்கு இடமாயிருக்கிற தேவதாசிகள் என்கிற தத்துவம் எடுபடவேண்டு மென்பதாக பலர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக, சென்னை சட்டசபை அங்கத்தினரும், உப தலைவருமான ஸ்ரீமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்ட சபையில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

அதன் தத்துவம் என்னவென்றால், விபசாரத்திற்காக மதத்தின் பேரால் கோவிலில் பெண்களுக்கு பொட்டுக்கட்டி (முத்திரை போட்டு) விடும் வழக்கம் கூடாதென்றும், அப்படிச்செய்தால் அதற்கு இன்ன தண்டனை என்று ஏற்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

இந்தச் சட்டம் கூடாது என்பதாக இரண்டு தேவதாசிப் பெண்கள் அதாவது ஸ்ரீமதிகள் துரைக்கண்ணு, பார்வதி, என்கிற இரு சகோதரிகளால் சட்டசபை மெம்பர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனவாம். இதைப் பற்றி நமக்கு யாதொரு ஆச்சரியமுமில்லை. ஏனெனில், இந்த விண்ணப்பம் அச்சகோதரி களால் அனுப்பப்பட்டிருக்காது என்பதும், அதற்குப்பின்புறம் சிலரிருந்துகொண்டு வேலை செய்திருப்பார்கள் என்பதும் நாம் மனப்பூர்வமாய் தீர்மானிக்கக் கூடியதாயிருக்கிறது.

ஏனெனில், அப்பெண்மணிகளுக்கு அவ்வேலை நின்று போனால் பிழைக்க முடியாது என்றாவது, அப்பெண்மணிகளால்தான் உலகத்திலுள்ள மற்ற பெண்களுக்கு கற்புகெடாமலிருக்கின்றது என்றாவது, இச்சட்டத்தால் உலகம் முழுகிப் போகுமென்றாவது நாம் நினைக்கமுடியாது.

ஆனால், அப்பெண்களுக்கு தரகர்களாயிருந்து நோகாமல் ஒரு சொட்டு வேர்வைகூட நிலத்தில் விழாமல் மேலா மினுக்காய் இருந்து வாழ்ந்துவரும் மாமாக்கள் என்று சொல்லு கின்றவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கொரு வழி கிடைப்பது சற்று கஷ்டமாயிருக்கும்.

ஆதலால், அவர்கள் இந்த விண்ணப்பத்திற்கு மூல கர்த்தாக்களாயிருப்பதில் நமக்கு ஆச்சரியமில்லை. எனினும், இக்கூட்டத்தார் பிழைப்பதற்காக நமது சகோதரிகள் நாட்டுக்கும், சமூகத்திற்கும் இழிவான வேலைகள் செய்து கொண்டிருக்க மதத்தின் பேரால் இடம் கொடுப்பதை விட அதர்மமானதும், கொடுமையானதுமான காரியம் வேறில்லை.

தவிர, மற்றும் சில பெரியோர்கள் நாட்டின் நற்பெயரையும், நமது மற்ற பெண்களின் கற்பையும் காப்பதை உத்தேசித்து, இம்மாதிரி ஒரு கூட்டம் பெண்கள் விபசாரத்திற்கென்றே தனியாயிருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்களாம். இந்தக் கொள்கையைப் பற்றி நாம் விவகாரம் பின்னால் செய்து கொள்ள நினைக்கின்றோம்.

ஆனால், அப்படி ஒரு கூட்டம் பெண்கள் வேண்டும் என்கிற கட்சியை நியாயமென்று கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும், அதற்காக ஒரு வகுப்பாரே தலைமுறை, தலைமுறையாக தங்கள் பெண்களை உதவிவர வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? என்று கேட்பதுடன், அந்த தேசாபிமானமும், நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம் எல்லா வகுப்புக்கும் பங்கு முறைப்படி வரட்டும் என்பதாக தாராள நோக்கத்துடன் பார்த்து,

அதை மற்றவகுப்புக்கும் பிரித்து விடுவதில் என்ன ஆட்சேபணை, அல்லது நாட்டு கற்பில் கவலையுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு பெண்ணை இந்த தேசாபிமானத்திற்கும், கற்பு அபிமானத்திற்கும் விட ஒரு சட்டம் செய்வதற்கு என்ன ஆட்சேபணை என்று கேட்கின்றோம். இப்படிப்பட்ட தர்ம நியாயங்கள் சொல்லி ஏமாற்றித்தானே, ஆதியில் ஒரு வகுப்பார் தலையில் இவ்விழிவு காரியங்கள் போய் விழுந்து விட்டன.

தவிரவும், இவர்கள் இப்படிச் சொல்லுவதிலிருந்து மற்ற பெண்கள் கற்பு தவறுவதற்கு ஆண்களே காரணம் என்றும், அந்த ஆண்களுக்கு வேறு பெண்கள் தயாராயிருந்து விட்டால் மற்ற பெண்கள் கற்பு கெடாது என்றும் கருதுவதாகவும் தெரிகின்றது.

இப்படிச் சொல்லு வதானது, ஆண் சமூகத்திற்கே கொடுமை செய்ததாகும். சட்டமும், சாஸ்திரமும், மதமும் எப்படி இருந்தாலும் இயற்கைத் தத்துவமும் கடவுள் சித்தமும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இவ் விஷயத்தில் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்பது நமது அபிப்பிராயம்.

ஆனாலும், பெண்களுக்கு காவலும், கட்டுப்பாடும், நிபந்தனையும் அதிகமாயிருப்பதால் அவர்கள் விஷயத்தில் நாம் அதிக யோக்கியதை கொடுத்துவிட நேருகின்றது. கட்டுப்பாட்டால் காப்பாற்றப்படும் கற்பை, கற்பு என்று நாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது.

இவ்விஷயத்தில், உலகத்தில் உள்ள எல்லா மதமும் பழக்கத்தில் தனிமயமாகத்தான் நடந்து கொள்ளுகின்றது. ஆனால், இம்முறைகள் இனி அதிக காலத்திற்கு நிலைக்காது என்பதும் நிலைக்கும் வரை ஆண் பெண் இரு பாலர்க்கும் சரி சமானமான சுதந்திரம் இல்லை என்பதுமே நமது அபிப்பிராயம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 30.10.1927

தமிழ் ஓவியா said...

ஸ்ரீமான் காந்தி

ஸ்ரீமான் காந்தி அவர்களுக்கு இப்போது அழைப்புமேல் அழைப்பு வரத்தொடங்கி விட்டது. ஒவ்வொரு ஊர் ராஜாக்களும் வரவேற்கிறார்கள். ரயில்வே வியாபாரிகள் போன்று அய்ரோப்பியர்கள் எல்லோரும் வரவேற்கிறார்கள். சர்க்கார் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். ராஜப் பிரதிநிதி வரவேற்கிறார், அழைக்கிறார்.

நமது நாட்டுப் பார்ப்பனர்களும் தாசானுதாசராய் இருக்கிறார்கள் ஆகவே, அவர் அவ்வளவு தூரம் அய்ரோப்பிய அரசாங்கத்திற்கும், அய்ரோப்பிய வியாபாரிகளுக்கும், பார்ப்பனர் களுக்கும் பரமானந்த சாதுவாக ஆகிவிட்டார் என்பது நன்றாய் விளங்குகிறது.

இப்படி அய்ரோப்பியருக்கும், பார்ப்பனருக்கும் பரமானந்த சாதுவாயும், வரவேற்றுக் கொண்டாடத்தக்கவராகவும் ஒருவர் இருந்தால் அவரால் நாட்டுக்கு என்னவிதமான நன்மை விளையக்கூடும்? மேல் கொண்டு, இக்கூட்டத்தாரால் நசுக்குண்டு வாழும் கோடிக்கணக்கான அய்ரோப்பியரல்லாத பார்ப்பனரல்லாத ஏழை மக்களுக்கு என்ன பலன் உண்டாகக்கூடும்? ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்த்தால் போதும் அல்லவா?

- குடிஅரசு - கட்டுரை - 30.10.1927

தமிழ் ஓவியா said...


வீரமணிபற்றி உலக இதழ்கள்


ஆனந்த விகடன் பார்வையில் வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி போன்றவர் பேசும்போது குறுக்கே பேச மாட்டார் கவன மாக சில சமயம் தன் கைகளைக் கட்டிக் கொண்டு கூர்மையாகக் கேட்பார். வயதில் சின்னவர் களைக்கூட வாங்க போங்க என்று தான் சொல்வார்.

நன்றி: ஆனந்த விகடன் 22.5.1983

சிந்தனைத் தெளிவும், கொள்கை நெறி பிசகாது, மலிவான விமர்சனங்களில் இறங்காது, தொய்வு தட்டாமல் பேசக் கூடிய நா. வல்லவர்களில் மூன்று நான்கு பேர்களில் வீரமணியும் ஒருவர்.

நன்றி: சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு 1983

பிராமணர்கள் மனிதர்களாகத்தான் இருக்கவேண்டும்; தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகக் கருதக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகிறார்.

நன்றி: நியூயார்க் டைம்ஸ் நவம்பர் 3, 1982

தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் என்ற இயக்கம் பார்ப்பனீய எதிர்ப்பு கொள்கையில் வலிமை மிக்கதாகவும், சக்தி வாய்ந்த இயக்கமாகவும் இருக்கிறது. அதன் தலைவர் கி.வீரமணி.

நன்றி: இந்தியா டுடே ஜனவரி 15, 1983.

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரின் கணிப்பு!

வீரமணி அவர்கள் எம்.ஏ.பி.எல்., பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ., பி.எல்., பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ.400 வரும்படி வரத்தக்க அளவுக்குத் தொழிலில் வளர்ந்ததோடு கொஞ்சக் காலத்திலேயே மாதம் ரூ. 500, 1000 தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர்.

இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத்தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர், வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும்.

அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரச்சாரகராகவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன்-படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்து விட்டேன்.

விடுதலை பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்!

- விடுதலை 6.6.1964)

தமிழ் ஓவியா said...


கண்மணி வீரமணியின் அரும்பணி


பனிமொழி பகர்ந்து தனி அன்பினைக் கலந்து என்றும் எனை வரவேற்கத் தவறாத என் ஆருயிர் இளவல், இன்று தன்மானத் தோழர் களால் தமிழர்க்குத் தலைவரென அழைக்கப்படும் வீரமணியாரின் தீரம் மிக்க திறனால் போற்றிப் பாது காக்கப்படும் தந்தை பெரியார் தந்து விட்டுச் சென்ற மாட மாளிகை அல்ல; கூட கோபுரம் அல்ல;

அவற்றையும் மிஞ்சும் வண்ண மிகு எண்ணங்கள் - தமிழ் வசீகர வளாகத்தைக் கண்டேன்; ஆங்கமைந்த கலைவாணர் அரங்கம் ஒன்றில் ஓங்கு கதிர் சூரியனாம் உண்மை ஒளிர் தலைவனாம் உலகம்போற்றும் பெரியாரை, ஒவ்வொரு இளங்கலைஞர் களின் இசையில், நடனத்தில், ஆட்டத்தில் அனைத்திலும் அடியேன் கண்டு ஆனந்தப் பரவசமுற்றேன். அருவியில் குளித்தோர்க்கும் அந்த இன்பம் கிடைப்பதில்லை.

அடாத அரசியல், கொடும் வெயிலில் காய்ந்திடும் எனக்கு அந்த அருவிச் சோலையில் கிடைத்த புத்துணர்ச்சியைத்தான் என் னென்று புகழ்வேன்?

இருபது ஆண்டின் முன்னே இளவல் வீரமணி எனையழைத்து, அங்கே சோலை நடுவே அய்யாவின் சிலையை நாட்டச் சொன்னார். அந்த சிலை இன்றைக்கும் அங்கேயிருந்து என்னை அருகணைத்து உச்சி முகர்ந்தது போல் கண்ட உணர்வு எத் துணை மகிழ்ச்சியானது! எப்படி என் உடலைச் சிலிர்க்க வைத்தது?

அய்யாவுக்குப் பிறகு அவர் ஆரம்ப காலந்தொட்டு சேர்த்து வைத்த ஆஸ்தி, பாஸ்தி, கட்டிவைத்த கட்டடங்கள், அறிவுக் கூடங்கள், விட்டுச் சென்றுள்ள கொள்கைகள், வீரம் மிக்க அறை கூவல்கள் இத்தனையையும் கட்டிக் காக்க, யாருளர் என்று நமக்கெலாம் எழுந்த அய்யப்பாட்டை, இதோ நானிருக்கிறேன் என்று எடுத்துக்காட்டி ஏறுபோல் நம்மை நிமிர்ந்து பார்க்கின்ற என்னரும் இளவல், பெரியாரின் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடர், தன் மான முரசு வீரமணியார்.

என் கண்ணிலும் அவர் கண்ணிலும் நீர் துளிக்க, அது ஆனந்தப் பன்னீராக இருக்க, ஒருவரையொருவர் தழுவிக் கொண்டோம். உமது முயற்சிகள் வெல்க! இங்கு வளரும் பூங்கொடி கள், பூஞ்செடிகள், புதுமை மணம் பெறுக! இன்றுபோல் என்றென்றும் இது பகுத்தறிவுப் பண்ணையாகத் திகழ்க! என்று வாழ்த்தினேன். அவரும் வாழ்த் தினார்.

அறிவுப் பணி, அதற்குத் தேவையான அமைப்புப் பணி, அதிலும் ஒரு கட்டுப் பாட்டுப் பணி என இப்படி கடமைப் பணியாற்றுகிற சுயமரியாதை இயக்கக் கண்மணியாம் வீரமணியாரின் நிருவாகப் பணியை நேரிலே காணும் வாய்ப்பு இனியும் பலமுறை இந்த வாய்ப்பு எனக்குக் கிட்ட வேண்டும் என பேராவலுடன் விடை பெற்றுக்கொண்டேன்.

ஆங்கொரு நூலகத்திற்கு விழா மேடையில்இறுதிக் கட்ட மாக ஓர் அறிவிப்பு: கலைஞர் கருணாநிதி நூலகம் என்று அது அழைக்கப்படும் என்று! திணறிப் போனேன். தேன்குடத்தில் தூக்கிப் போட்டு விட்டார் களேயென்று!

பெரியாருக்குக் காலணியாய் இருப்பது போல், பெரியார் பெயரில் அமைந்துள்ள அந்தப் பூங்காவில் நூலகம் என்ற ஒரு நுண்ணிய கொடியாக இருந்து விட்டுப் போகிறேன். அது எனக்கு பிறவிப் பெரும் பயன் தான்.

(முரசொலி 15-10-2008, திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி நூலகத் திறப்பு விழாவில் - முதலமைச்சர் கலைஞர்.)

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரைப் பாராட்டி லண்டனிலிருந்து ஒரு கடிதம்


இனமானத் தமிழினத்தின் நலத் திற்கும் பாதுகாப்பிற்கும் உயர்வுக் கும் தன்னையே அர்ப்பணித்துப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் விட்டுச் சென்ற சீரிய பணியைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்தி வரும் பெரியாருக்குப் பெரியாராய் பேரும் புகழும் ஈட்டிக் கொண்டி ருக்கும் தமிழினத் தலைவர்களில் பகுத்தறிவுத் தமிழராகத் திகழும் அய்யா கி.வீரமணி அவர்கள், நீதி மன்றங்களில் திருக்குறள் தேசிய நூலாக வைக்கப்பட வேண்டும் என அனைவருக்கும் முகாமை யான வேண்டு கோளாக விடுத்திருப்பதை உலகத் தமிழர் முன்னேற்றத்திற்கு நெம்புகோலாகத் திகழும் லண்டன் த.மு.க. வழி மொழிந்து நெஞ்சார வரவேற் கின்றது.

திருக்குறள் நீதி நூல் நேர்மையில்லா செயலுக்கு நெற்றியடி கொடுத்து நீதியை (பக்க சார்பற்ற முறையில்) நிலை நிறுத்தும் ஒப்பற்ற அரிய நூல்.

உலகின் மூத்தகுடியான தமிழ்க்குடி, தமிழ் செம்மொழி என அறிவிக்க ஆதாரமாக இருப்பவை திருக்குறளே. 2000 ஆண்டு களுக்கு மேலான வாய்மைச் சிறப்பு மிக்க நூல் என உலகமாந்த இனமே நெஞ்சார ஏற்றுச் சிறப்படையும் சிறந்த நூல் என்பதை தமிழக அனைத்து மக்களும் சமய வேறுபாடு களின்றி தர்க்க வாதங்கள் செய்திடாது, பகுத்தறிவுச் சிந் தனையோடு முழு ஆதரவு நல்கி அறிவு நூலான திருக்குறளை நீதி மன்றங்களில் வைத்துப் போற்றிட வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

தமிழர்களின் எண்ணம் ஈடேறிட! வாழ்வு முன்னேறிட வாய்மை வெல்லும் என்பதை நெஞ்சில் நிறுத்துவோம்!


லண்டன்
10.9.2004

- ம. தேவதாசு,
லண்டன் தமிழர்
முன்னேற்றக் கழகம்

தமிழ் ஓவியா said...


ஆதி திராவிடர் தனிப் பிரிவு உண்டா?


கேள்வி: திராவிடர் கழகத்தில் ஆதிதிராவிடர் பிரிவு என்று ஒன்று உண்டா?

பதில்: திராவிடர் கழகத்தில் அப்படி ஒரு பிரிவு நிச்சயம் இல்லை. இருக்க முடியாது. காரணம், திராவிடர் கழகம் என்ற அமைப்பில் உறுப்பினர் ஆனாலே ஆதிதிராவிடர், மீதித் திராவிடர் என்ற பேதம் தானே பறந்துவிட வேண்டுமே!

சென்னை மாநாடு ஒன்றில் தந்தை பெரியார் அவர்களிடம் திராவிட நாடு திராவிடருக்கானால் ஆதிதிராவிடர்களுக்கு என்ன லாபம்? என்று கேள்வி கேட்கப்பட்ட போது, அய்யா அவர்கள் சொன்ன பதில் லாபம் இல்லை. நட்டம்தான். ஆதி என்ற இரண்டு எழுத்துக்களை வெட்டியெறிந்து விடுவோம் என்றார்கள்.

அரசியல் கட்சிகளால் இப்படி ஒன்று வாக்குகளை வைத்தே உருவாக்கப்படுகிறது. உண்மையான சமுதாயப் புரட்சி இயக்கத்தில் எப்படி அது இருக்க முடியும்? அதே நேரத்தில், சமுதாயத்தில் அழுத்தப்பட்டு அடித்தளத்தில் கிடக்கும் மக்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து திராவிடர் கழகம் அன்று முதல் இன்று வரை பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழர் தலைவர் கி.வீரமணியின் பதில்
(விடுதலை ஞாயிறு மலர் 21.8.1994)

தமிழ் ஓவியா said...


வடகிழக்கு மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அறவே கிடையாதாம்! மசோதாவைத் தடுத்து நிறுத்துவீர்!


மத்திய மனிதவள அமைச்சக மான கல்வி அமைச்சு நாடாளு மன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள மசோதாவில், வடகிழக்கு மாகாணங்களில் OBC என்ற இதர பிற் படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு நீக்கப் பட்டுள்ளது. அங்கே OBC பிற் படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்றால், இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து வட கிழக்கு மாநிலங்கள் பிரிந்து சென்று விட்டதாக, மத்திய கல்வி அமைச்சகம் கருதுகிறதா?

இது சரியான தகவலாக இருப்பின் இது வன்மையான கண்டனத் திற்குரியதே!

சமூக நீதி, இட ஒதுக்கீடு இந்தியா முழுவதற்கும்தான். இந்திய அரசியல் சட்டப்படி இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில் இப்படி ஒரு நிலைப் பாடு எடுப்பது தவறான சட்ட விரோத நடவடிக்கை அல்லவா?

வடகிழக்கு மாநிலங்களில் இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டு வதால், அதனைச் சரி செய்ய பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அறவே நீக்கி விடுகிறார் களாம். இது ஓர் ஆபத்தான ஆரம்பமாகும்; முளையிலேயே இது கிள்ளி எறியப்படவேண்டும்.

உடனடியாக சமூக நீதிக்கான அனைத்து அமைப்புகளும், இதனை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். சமூகநீதியில் நம்பிக்கை உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர் களும் முன் வரிசையில் நின்று இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்த வேண் டும்.

- கி. வீரமணி திராவிடர் கழகத் தலைவர் (விடுதலை: 5.8.2011)

தமிழ் ஓவியா said...


குடும்பங்களின் வாழ்த்துக்கள்!


உள்ளமெல்லாம் நிறைந்தே தான்

நன்றியுடன் வாழ்த்துகின்றோம்!

உறவுக்குப் பலர் இருப்போர்

உங்களிடம் அன்பு பெற்று

குடும்பத்து மூத்தவர் போல்

உங்களிடம் கலந்து பேசி

தாங்கள் பெறும் ஆறுதலை

குடும்பம் குடும்பமாய்

நன்றியுடன் நினைத்தேதான்

வாழ்த்துகின்றோம் இன்றும்மை!

எப்படித்தான் உணர்வீரோ

ஆறுதல் தேவையுள்ளோர்

கேட்குமுன்னே அறிந்திடுவீர்

அன்பான வார்த்தைகளே

அருமருந்தாய் கவலைபோக்கக்

கனிவான கருத்துக்கள்

குடும்பங்கள் ஏற்றிடுமே!

எத்தனைத் தொண்டர்கள் எங்கெங்கோ இருந்திடினும்

அத்தனையும் அத்துபடி

அவர் பெயரை அழைத்திடுவீர்!

அவர் தொல்லை தீர்த்திடுவீர்!

அத்தனைக் குடும்பங்களும்

அகமகிழ்ந்து வாழ்த்துகின்றோம்

ஆசிரியர் வாழ்க வென்றே!

நூறாண்டு வாழவேண்டும்!

நூற்றாண்டு நாயகனின்

நிழல்போலத் தொடர்ந்திடுவோம்!

- சோம.இளங்கோவன்.

தமிழ் ஓவியா said...


உமை நினைப்பது இன்றா?

இல்லை இல்லை என்றும் எப்போதும்!

அஞ்சா நெஞ்சனே, எங்கள் அண்ணனே

பதவிக்கோட்டை தேடாத பட்டுக்கோட்டையே!

வளையாத லட்சியமே!

வரவு நாடா தியாகமே!

எதிர்ப்பில் சிலிர்க்கும் சிங்கமே

எங்கள் வழிகாட்டிக் கருவியே

உம்மை நினைப்பது - இன்றா, நேற்றா?

என்றும் எப்போதும் தான்!

எங்கள் லட்சிய நடையின் வேகமே

தொண்டறத்துக்கு ஏது சாவு? எம்

தொண்டுப் பழத்தின் துவளாத துணையே

உம்மை நினைப்பது - இன்றா, நேற்றா?

இல்லை என்றும் எப்போதும்!

எங்களின் குருதி ஓட்டமே, கொள்கைச்

சட்டாம்பிள்ளையே, உம் நினைவு

எமக்கு என்றும் எப்போதும் தான்

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


அருண்ஷோரி நூலுக்கு மறுப்புரை: தோழரின் உணர்ச்சிக் காவியம்!


டாக்டர் அம்பேத்கர்பற்றி பார்ப்பன எழுத்தாளர் அருண்ஷோரி எழுதிய நூலை விமர்சித்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆற்றிய உரையைச் செவிமடுத்த தோழர் ஒருவரின் உணர்ச்சிக் காவியம்!

அன்புத் தலைவ! ஆகஸ்ட் திங்கள் 5,6 தேதிகளில் (1997) பெரியார் திடலில் அருண்சோரிக்கு தங்களின் ஆணித்தரமான மறுப்பும், அவருக்கு ஆதரவு தருவோருக்கு, வெட்கித் தலைகுனிகின்ற வகையில் தங்களின் ஆழ்ந்த சிந்தனைத் துளிகளின் தெளிவும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, அண்ணல் அம்பேத்கரின் உண்மை உள்ளத்தை, தியாகத்தை, சேவையை உணர்ந்த எந்த சமுதாயத்து நல்லவர்களும், தங்களின் மறுப்பை பெருமை யுடனும், மகிழ்வுடனும் வரவேற்கின்றனர்.

பத்திரிகை பலம் இல்லாத சமுதாயம் என உணர்ந்து வரும் துன்பங்களை, தாங்கள் ஏற்றுக் கொண்டு, உள்ளம் குமுற, ஆனால், எதிர்ப்பவர்களின் நெஞ்சம் பதற தங்களின் பேச்சும், எழுத்தும், நீண்ட காலத்திற்கு தேவை. இந்தப் பேச்சும், எழுத்தும் மற்ற மாநில பத்திரிகைகளிலும் வரச் செய்தால் மிகவும் நலம் பயக்கும்.

ஏனென்றால் ஒரு முறை ஹிந்து பத்திரிகையில் தாழ்த்தப்பட்டவருக்கு இருக்கும் இட ஒதுக்கீடு குறித்து கேலி செய்து, துணுக்கு வெளியிட, அதை வடபுலத்து கேரவான் பத்திரிகை மீண்டும் தமிழகத்து கல்கி பத்திரிகையும் வெளியிட்டது.

எனவே நீங்கள், இதை மற்ற மாநில மொழி பத்திரி கைகளுக்கு அனுப்புவதும் நேரம் இல்லையென்றால் அதையே சிறு புத்தகமாக ஆங்கிலத்தில் அல்லது தமிழில் வெளியிட்டால், உங்கள் அரிய கருத்துக்களை நிறைய பேர் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். தங்களின் உயர்ந்த உள்ளத்தை, சமுதாய மக்கள் உணர இவை மேலும் வலுவூட்டும்.

நன்றி வணக்கம்.

- எம்.சீனிவாசன்
For the Scheduled Caste/Tribes REsidents Welfare Association Villivakkam, Madras - 600 049.

தமிழ் ஓவியா said...

நாம் பிறருக்கு உதவும்போது ஏற்படும் இன்பம்தான் நமது மனிதநேயத்தினை அளக்கும் கருவி.
ஒருவரது தவறைச் சுட்டுவது தவறல்ல; பலர்முன் சுட்டிக் காட்டி அவரை மிகக் கேவலமாக மற்றவர் நினைக்கும்படி செய்வது தவறு.
பெற்றோர்கள், குழந்தைகளை வளர்க்கும் போதே நன்றி என்பதைச் சொல்லிக் கொடுத்துப் பழக்கப் படுத்திவிட வேண்டும்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


சிம்பதியா - எம்பதியா?


பிறர்க்கு உதவி செய்திட ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

சிம்பதி (Sympathy) என்பதைவிட எம்பதி(Empathy) என்பது வாழ்வில் மிக முக்கியம்.

சிம்பதிக்கும் எம்பதிக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.

சிம்பதி என்பது மற்றொருவரிடம் நாம் காட்டக் கூடிய இரக்கம். எம்பதி என்பது மற்றொருவர் படுகிற துன்பத்தின் நிலையை அவர் நிலையில் நம்மை நிறுத்திக் கொண்டு உணர்வது ஆகும்.

சிம்பதியைவிட, எம்பதி என்பதே மனித நேயத்தின் முக்கிய அம்சம்.

_ கி.வீரமணி
(திண்டுக்கல் ரோட்டரிக் கிளப்பில் -_ 3.1.1998)

தமிழ் ஓவியா said...


நீங்கள் மாமனிதர்


கருப்புச் சட்டை வெள்ளை இதயம்
நெஞ்சில் உரம் நேர்மைத் திறம்
மூச்சில் தமிழ் பேச்சில் நெருப்பு
உயர்ந்த சிந்தனை தெளிவான பார்வை
இவற்றுக்கு சொந்தக்காரர்
ஈரோட்டுத் திண்ணைக் காரர்
சமூக நீதிக் காவலர் - அவரே
எங்கள் அன்பு ஆசிரியர் அய்யா

கடலூரின் கருத்துக் கனல் - என்றும்
அடங்கா எழுத்துப் புனல் -
எழுதிய நூல்கள் எழுபத்தைந்து
அத்தனையும் அரு மருந்து
60 ஆண்டுகள் அயராத சமூகப் பணி
சமுதாயப் பிணியை நீக்கும் பணி

அதிகாரம் பேசும் பூமியில்
அரிதாரம் பூசாத மனிதர்
விடுதலை மூலம் மூடப்பழக்கங்களுக்கு
மூட்டை கட்டும் ஆசிரியர்
உண்மை உரைத்து புதிய
உலகம் செய்யும் போராளி
அகில உலகில் முதன் முதலாய்
பாவையருக்கு தொழில் நுட்ப கல்லூரி
கண்ட கல்விக் காவலர்
பெண்களைப் போற்றும் கண்மணி
பெண்களே போற்றும் வீரமணி
மூடநம்பிக்கை ஒழிப்பதே மூச்சு
மனிதாபிமானம் வளர்ப்பதே பேச்சு
பெண் உரிமை பெண்களுக்குச் சொத்துரிமை கண்ட
பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு காண தூண்டிய
பெரியாரின் இளவல்
பெண் உரிமைக் காவலர்

தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்

(கோவை கே.ஜி. அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு ஆயிரமாண்டில் செயலாற்றல் மிக்க தலைவர் விருது - டாக்டர் கே.ஜி. பாலகிருஷ்ணன் படித்தளித்த புகழாரக் கவிதை இது - 25.2.20011).