Search This Blog

25.11.13

இராமன், கந்தன், கிருஷ்ணன், கணபதி என்பவர்கள் கடவுள்களா? கதைப்படி யோக்கியர்களா?

கடவுள் இழிவு!

இராமன் படத்தை "இழிவுப்படுத்தியதை"ப் பற்றி பார்ப்பனப் பத்திரிக்கைகள் கற்பனைச் செய்திகளை உண்டாக்கிக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற இமாலயப் பிரயத்தனம் செய்து மானங் கெடும்படியான தோல்வியை அடைந்தார்கள். "அதன் பயனாக" என்று சொல்லத்தக்க அளவில் வெற்றி பெற்ற தி.மு.கழகத்தார், இராமனைக் காப்பாற்றி அய்ந்து வருடம் ஆளலாம் என்கின்ற நிலைக்கு வரவேண்டியவர்களாகி விட்டார்கள்.

இராமனை இழிவுப்படுத்தியதாக சொல்லப்பட்ட கற்பனைக் குற்றச்சாட்டிற்கு எந்தவித பதிலும், சமாதானமும் சொல்லவில்லை. காரணம், தி.மு.க. விஷயத்தில் தாட்சண்யம் கொண்டேதான்.

இராமனை இழிவுப்படுத்தியதை யாரும் மறுக்காமலிருந்தும், இழிவுப் பிரச்சாரம் பலமாக, அதி பலமாக செய்யப்பட்டு வந்தும், எதிரிகள் (பார்ப்பனர்) படுதோல்வி அடைந்திருப்பது யாவரும் அறிந்ததேயாகும்.

இப்போது எனது நிலை என்ன என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டியவனாக இருக்கிறேன்.

இராமன் என்கின்ற பெயரையோ, உருவத்தையோ பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதவர்களை கடவுளாகக் கருதும்படியும் அதன் பயனாகவே பார்ப்பனரல்லாதவர்கள் (திராவிடர்களை) சூத்திரர், இழிஜாதி மக்கள் என்று ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப நடத்தும்படியும் செய்துவிட்டார்கள்.

இதை மாற்ற வேண்டுமென்கின்ற பிடிவாதக் கொள்கையில் அய்ம்பது ஆண்டாகத் தொண்டு செய்து வருகிறேன். அதன் பயனாய் இராமன் கடவுள் படம் செருப்பால் அடிக்கப்படவில்லை என்றாலும், பலவிதமான அவமானச் சின்னங்கள் செய்யப்பட்டே வந்திருக்கின்றன. ஆதலால் இப்போதும் அது தொடர்ந்து செய்யப்பட வேண்டியிருக்கிறது.

தேர்தலுக்குப் பிறகு நமது மக்களுக்கு இக்காரியம் செய்யப்பட வேண்டும் என்பதில் அதிகமான உற்சாகமும், ஊக்கமும் இருந்து வருகிறது. ஆங்காங்கு கூட்டம் நடத்தி அதில் செய்யவும், மாநாடுகள் நடத்தி அதில் செய்யவும் மக்கள் துடிக்கிறார்கள். நானும் மக்கள் அந்தப்படியே நடக்க வேண்டும் என்றே அறிக்கை விட்டு இருக்கிறேன்; சொற்பொழிவுகளிலும் வேண்டுகோள் விட்டிருக்கிறேன்.

இந்தப்படி செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட சில இடங்களில் நம் தோழர்களைப் போலீசார் அழைத்து ஊர்வலத்தில் இக்காரியம் செய்வதை நிறுத்திவிடும்படிக் "கேட்டுக் கொண்ட"தாகத் தெரிகிறது. போலீசார் கேட்டுக் கொள்வதும், தடை விதிப்பதும் இரண்டும் ஒன்று என்பது தான் எனது கருத்து.

ஆதலால், நமது ஜாதி, மத, கடவுள் ஒழிப்புப் பிரச்சாரத்தில் இப்போதைக்கு அதை மாத்திரம் நிறுத்தி வையுங்கள் என்று தோழர்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்றாலும், நமது எதிரிகள் (பார்ப்பனர்) ஜாதி, மதம், கடவுள் காப்பாற்றப்படும், பரப்பும் பிரச்சாரத்தால் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள்.

உதாரணமாக வடநாட்டில் 'இராம லீலா' நடக்கிறது. அதில் இராவணன் எரிக்கப்படுகிறான். தமிழ்நாட்டில் சமணர்களைக் கழுவேற்றிய உற்சவம் நடக்கிறது. சூரசம்ஹார உற்சவம்; இவை தவிர கந்தன், கணபதி, இராமன், கிருஷ்ணன் முதலிய கடவுள்கள் பிறந்த நாள் உற்சவங்கள், சில விடுமுறைகள் நடக்கின்றன.

இவைகளையெல்லாம் எதிர்ப்பில்லாமல் நடக்கவிட்டு விட்டு, எதிர்க்காரியம் செய்யாமல் சும்மாவும் இருப்பது என்றால் பிறகு எப்படித்தான், என்றைக்குத்தான் என்றைக்குக்தான் நமது இழிவு நிலையை –மூடநம்பிக்கையைப் போக்கிக் கொள்வது என்பது எனக்குப் புரியவில்லை.

நாட்டில் ஆயிரக்கணக்காண கோயில்கள் இருப்பதுடன், பல நூற்றுக்கணக்கானவற்றில் ஏராளமான உற்சவங்கள், நாட்கள், நட்சத்திரங்கள் நடந்த வண்ணமிருக்கின்றன. எதிரிகளுக்கு புராணங்கள், பத்திரிக்கைகள், பிரச்சாரங்கள், காலட்சேபங்கள், நாடகங்கள், சினிமாக்கள், பண்டிகைகள் முதலியவைகள் ஏராளமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் நமக்கு பரிகார மார்க்கம் என்ன இருக்கிறது?

இவைகளை ஒழுங்காய் நடத்திக் கொடுக்கும் ஆட்சிதானே நம்மிடம் இருக்கிறது!

இப்போது மக்கள் நமக்கு அனுகூலமாய் இருக்கிறார்கள். இதுபோல் எப்போதும் இருந்ததில்லை; இனி இருக்கப் போகிறார்களா என்பது சொல்ல முடியாத செய்தியாகும். என்னவென்றால் "இராமனை தார் பூசி நெருப்பிட்டுக் கொளுத்தியதோடு, "இராமன், முருகன் முதலாகிய கடவுள்களை செருப்பாலடித்ததாக" உருவகப்படுத்தி, படம் எழுதி சுவற்றில் ஒட்டி பல லட்சம் பத்திரிக்கைகளில் வெளியிட்டு இந்தியா முழுவதும் தெரியும்படி, அறியும்படிச் செய்த பிறகு தமிழ்நாட்டிலும், ஆந்திரம், மைசூர் நாட்டிலும் மற்றும் இந்தியாவில் பல இடங்களிலும், நாம் இமாலய வெற்றியும், பார்ப்பனர், ஆத்திகர் படுதோல்வியும் அடையும்படியான நிலை ஏற்பட்டதென்றால், இந்த வெற்றி செருப்படிக்கா அல்லது அது கூடாது என்பதற்காக என்று ஆட்சியாளரையும் மற்றும் பார்ப்பனரையும் கேட்கிறேன்.

நாட்டின் பட்டிதொட்டி, மூலை மூடுக்குகளிலெல்லாம் ஆள் உயர செருப்படி சுவரொட்டிப் படங்களும், இராஜாஜியும் காமராஜர் முதலிய பெருந்தலைவர்கள் என்பவர்களும் பிரச்சாரம் செய்தும் (எதிரிகளுக்கு) செய்தவர்களுக்கு வெட்கப்படத்தக்க தோல்வி என்றால், மக்கள் செருப்படியை விரும்புகிறார்கள் என்று அர்த்தமா? வெறுக்கிறார்கள் என்று அர்த்தமா? என்று கேட்கிறேன்.

இந்த இடத்தில் நான் ஆத்திக – நாத்திகப் பிரச்சாரம் செய்யவரவில்லை. மான- அவமான சுயமரியாதைப் பிரச்சாரம் செய்கிறேன். இராமன், கந்தன், கிருஷ்ணன், கணபதி என்பவர்கள் கடவுள்களா? கதைப்படி யோக்கியர்களா? நமக்கும் இவர்களுக்கும் நம்மை இழிவுபடுத்தியதல்லாமல் வேறு சம்பந்தம் என்ன என்று கேட்கிறேன். எது எப்படி இருந்தாலும் இன்றைய தினம் நமது மக்களுக்கு ஜாதி ஒழிய வேண்டும், பார்ப்பனர் ('பார்ப்பனர்') ஒழிய வேண்டும் என்பது தான் முக்கிய இலட்சியமே ஒழிய, கடவுள் காப்பாற்றப்பட வேண்டும், மரியாதை செய்யப்பட வேண்டும் என்பது முக்கியமல்ல. ஆதலால் அதற்கேற்ற காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.


ஆகவே, "கடவுள்" விஷயத்தில் இன்று நம்மால் செய்யப்படும் காரியங்கள் முழுமையும் ஜாதி ஒழிப்புக்காக, நமக்குள்ள ஜாதி ஒழிப்புக்காக, நமக்குள்ள ஜாதி இழிவு நீக்கத்திற்காகவே ஒழிய, யாருடைய மனமும் புண்பட வேண்டும் என்பதற்காகவோ, யாருக்கும் மனச் சங்கடத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல என்பதை அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தி கொள்கிறேன். மக்களும் இதை நல்லவண்ணம் உணர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். நமது எண்ணமெல்லாம், இந்த ஆட்சிக் காலத்திலாவது ஜாதி மூட நம்பிக்கை ஒழிய வேண்டுமென்பதேயல்லாமல், எப்படியாவது இந்த ஆட்சி அய்ந்தாண்டுக்கு இருக்க வேண்டும் என்பதே அல்ல.

ஆகையால், ஆட்சியாளர்கள் இந்த வாய்ப்பைக் காலம் கடத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ளாமல், காரியம் நடப்பதற்கு ஏற்ற வண்ணம் நடந்து கொள்ள வேண்டுமென்பது எனது ஆசை.

மக்கள் ஆதரவைப்பற்றி ஆட்சியாளர்கள் சிறிதும் சந்தேகப்பட வேண்டிய அவசியமில்லை. மக்களைப்பற்றி ஆட்சியாளருக்குத் தெரிந்த அளவுக்குக் குறையாமல் எனக்கும் தெரியும். இப்போது நான் சும்மாயிருந்துவிட்டால் மக்கள் என்னைக் கைவிட்டு விடுவார்கள் என்ற பயம் எனக்கு இருந்து வருகிறது. ஆகையால், எப்படியாவது நம் கடமையைச் செய்யாமல் நழுவிவிடுவது நமக்கு நல்லதல்ல என்றுதான் கருதிக் கொண்டிருக்கிறேன்.


                     --------------------28.03.1971- "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்

21 comments:

தமிழ் ஓவியா said...


விண்கலத்தைவிண்ணில்அனுப்புமுன் திருப்பதிக்குச்சென்றுபூஜைசெய்வதா?


பாரத ரத்னா விருது பெறும் விஞ்ஞானி சி.என். ராவ் கண்டனம்

பாரத ரத்னா விருது பெற்றுள்ள விஞ்ஞானி சி.என்.ராவ் பெங்களூரு வில் சனிக்கிழமை செய் தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இஸ்ரோ சார்பில் ஒவ்வொரு முறையும் ராக்கெட் அனுப்புவ தற்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவி லில் அதன் மாதிரி வடி வத்தை வைத்து பூஜை செய்யப்படும் வழக்கம் இருந்து வருகிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்குப் பதில் அளித்த விஞ்ஞானி சி.என்.ராவ்

அது மூடநம்பிக்கை. அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. பயத்தின் காரணமாக மனிதர்கள் பூஜைகள் செய்தால், தாம் செய்கின்ற பணி வெற்றிபெறும் என்று நம்புகிறார்கள். அதற்கு என்ன செய்ய முடியும்? இதுபோன்ற நம்பிக் கைகள் எனக்கு இல்லை. நான் ஜோதிடத்தையும் நம்புவதில்லை. மேலும் நான் தகவல் தொழில் நுட்பத்திற்கு எதிரான வன் என்ற கருத்தும் நிலவுகிறது.

அதில் உண் மையில்லை. சீனாவில் அறிவியல் துறையில் அதிக அளவில் முதலீடு செய்யப்படுகிறது. இந்தி யர்கள் எதையும் எளி தாக எடுத்துக் கொள் கிறார்கள். அறிவியல் துறையில் முதலீடு செய் வதை தவிர இந்தியா விற்கு வேறு வழி இல்லை. அறிவியல் துறையில் பின்தங்கிக்கொண்டு இந்தியா வல்லரசாக இருக்க வாய்ப்பில்லை. என்று கூறினார்.

இஸ்ரோவின் தலைவ ராக இருக்கக்கூடிய ராதா கிருஷ்ணன் இந்து மதச் சடங்கு ஆச்சாரங் களில் ஊறித் திளைத்தவ ராக இருக்கிறார். அவர் இந்தப் பதவியை ஏற்ப தற்குமுன் குருவாயூரப் பன் கோயிலுக்குச் சென்று எடைக்கு எடை சர்க் கரை கொடுத்தார். அதன் பின் விண்ணில் விண் கலத்தைச் செலுத்தும் போதெல்லாம் ஒவ் வொரு முறையும் திருப் பதிக்கும், காளஹஸ்திக் கும் குடும்பத்தாருடன் சென்று ராக்கெட்டின் மாதிரி வடிவத்தைக் கொண்டு போய் வைத் துப் பஜனை செய்தார்.

இந்திய அரசமைப் புச் சட்டத்தில் வலியுறுத் தப்பட்டுள்ள அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் அது ஒவ்வொரு குடிமகனின் கடமை (குரனேயஅநவேயட சுபைவ) என்று வலியுறுத் தப்பட்டுள்ள நிலையில், அறிவியல் நிறுவனமான இஸ்ரோவிலேயே மூட நம்பிக்கை வளர்க்கப்படு வது கண்டிக்கத்தக்க தாகும்.

தமிழ் ஓவியா said...


புயல் மழையைக் கொடுக்கும் - பெரியார் நிதியைக் கொடுப்பார்!

ஒரு ஆறு மணி நேரத்தில் பெரியார் பேருருவச் சிலை அமைப்புக்கு ரூ.இரண்டரை இலட்சம் நிதி கிடைத்தது என்றால் நம்ப முடிகிறதா? பெரு மக்கள் பதின்மர் தங்களின் நன்றி உணர்வை வெளிப்படுத்தினர் என்ற செய்தி உள்ளபடியே பெரியார் தொண்டர்களைப் பெரும் மகிழ்ச் சியின் உச்சிக்கே அழைத்துச் செல்கிறது.

நமது தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 40 ஆண்டுகள் ஓடி மறைந்த நிலையிலும், ஒவ் வொரு நொடியும் எப்படி எல்லாம் நம் மக்களால் நேசிக்கப்படுகிறார் - சுவாசிக்கப்படுகிறார் என்பதை எண்ணும் பொழுது நம்முடைய அணுக்கள் எல்லாம் சிலிர்க் கின்றன.

அய்யா எங்களுக்கு இன்று கிடைத்த இந்த வாழ்வு உங் களின் உழைப்பினால் கிடைத்த தான தர்மம் தானே! என்ற எண்ணம் நம் தமிழர்களிடத்திலே தழைத்திருக்கிறது என்பதன் அறிவிப்பே இது.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த டாக்டர் - பெயர் ஆர். இராசேந் திரன், பெரியார் பேருருவச் சிலைக் கான வேண்டுகோள் விண்ணப்பப் பல வண்ண ஆவணத்தைக் கொடுத்தபோது, அவர் கண்களில் பட்ட வாசகம்.

தந்தை பெரியார் அவர் களால் ஒட்டு மொத்தமாகப் பயன் பெற்ற இந்தச் சமுதாயத் தில் நீங்களும் ஒருவர் அல்லவா! நன்றியுள்ள மக்கள் நாம் என்று காட்டிக் கொள்ள வேண்டாமா? என்ற வாசகம்தான் மருத்துவரின் கண்களில் பட்டுள்ளது.

மறு வார்த்தை சொல்லவில்லை - மகிழ்ச்சியோடு - நன்றியுணர் வின் உந்துதலால் ஒரு சவரன் பவுனுக்கான தொகை ரூ.25 ஆயிரத்தை அளித்துள்ளார்.

அளித்தவரும் சரி, அதனைப் பெற்றுக் கொண்ட தோழர்களும் சரி, அந்த ஒரு நொடியில் வரு ணிக்கவே முடியாத நெகிழ்ச்சி கலந்த உணர்ச்சி வயப்பட்டனர் என்பது தான் உண்மை!

அதே வேகத்தில் 10 பெரு மக்களைச் சந்தித்து மளமள வென்று தேனீக்கள் போல நிதியைத் திரட்டியுள்ளனர் - ஒரு ஆறு மணி நேரத்துக்குள்! தமிழர் தலைவர் அறிவித்த போது ஆனந்தம் என்றால், நிதியை திரட்டும்போது உற்சாகம் - இதுதான் இன்றைய நிலை.

மற்ற மற்ற மாவட்டங்களில் உள்ள தோழர்களும் மலைக்காமல் வீதியில் இறங்கினால் விருப்ப மோடு நிதியை வழங்கிடத் தயா ராகவே உள்ளனர் - நன்றியுள்ள நம் தமிழினத்தார்! அதற்குப் பட் டுக்கோட்டை வழிகாட்டியிருக் கிறது. இன்னொரு தகவல், உள்ள படியே நெக்குருகச் செய்து விட்டது.

ஆர்.ஏ. சுப்பையா அவர்கள் மும்பை மாநகர திராவிடர் கழகத் தலைவராக நீண்டகாலம் இருந்து அரும் பணியாற்றியவர். ஓய்வுக்குப் பின் நெல்லை மாவட்டம் ராமா னுஜம் புதூர் என்ற தமது சொந்த ஊருக்குத் திரும்பினார் இணை யருடன்.

சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தார். அவர்தம் இணையர் மானமிகு முத்துவடிவு அவர்கள் நாள் தோறும் விடுதலை படிக்கக் கூடிய கொள்கையாளர்.

வளமையான சூழ்நிலை இல்லை. தந்தை பெரியார் அவர் களின் பேருருவச் சிலைக்காக நிதி அளிப்போர் பட்டியல் படத்துடன் விடுதலையில் வெளி வருவதை அன்றாடம் படித்த அம்மையார்- எப்பாடுபட்டேனும் அய்யா பேருருவச் சிலைக்கு அந்த நிதியைக் கொடுத்துவிட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண் டார். (என்னே இலட்சிய உணர்வு!).

அந்தப் பகுதிக்கு நெல்லை மாவட்டக் கழகப் பொறுப்பாளர் கள் காசி, இராசேந்திரன், இரத் தினசாமி ஆகியோர் சென்ற போது - அவர்களே அதிர்ச்சி அடையும் வண்ணம், தான் அணிந்திருந்த 9.7 கிராம் தங்க மோதிரத்தை எடுத்துக் கொடுத்து திக்கு முக்காடச் செய்துவிட்டார்.

வேண்டாம் என்றும் சொல்ல முடியாத நிலை! காரணம் அந்தத் தாயின் உணர்வையும் மதிக்க வேண்டுமே!

கொடுப்பதற்கு மனம் இருந் தால் போதும் என்பதற்கான இலக் கணத்தின் இலக்கியம் அல்லவா இது!

தோழர்களே, தந்தை பெரியார் என்ற சுடர் ஏந்திச் செல்லுவீர்!

கேட்பதற்கு மேலாகவே கிடைக் கும். உலகமே தந்தை பெரியார் பேருருவச் சிலையை நோக்கித் தன் கண்களைத் திருப்பப் போகிறது.

புறப்படுங்கள்! புறப்படுங்கள்!!

புயல் கொண்டு வரும் மழையைப் போன்று தந்தை பெரியார் உங்க ளிடம் நிதியைக் கொண்டு வந்து சேர்ப்பார்! செயல்படுவீர்!

தமிழ் ஓவியா said...


பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள் : பஞ்சாயத்து தலைவர்களும் வழங்கலாம்


'பிறப்பு - இறப்பு சான்றிதழ்களை, பஞ்சாயத்து தலைவர்கள் வழங்கலாம்' என, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள உத்தரவை, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தலைவர்கள், பிறப்பு - இறப்பு சான்று வழங்கலாம். பிறப்பு - இறப்பு பதிவுகள் பராமரிக்கும், வி.ஏ.ஓ.,க்கள், அதன் நகலை மாதந்தோறும் ஊராட்சிக்கு அனுப்ப வேண்டும்.

சான்று வழங்கியது குறித்து, பஞ்., தலைவர், வி.ஏ.ஓ., அவ்வப்போது ஆலோசனை செய்து கொள்ள வேண்டும் என, 2008 ஏப்ரல், 29இல் தமிழக அரசு உத்தரவிட்டது. எனினும், பஞ்சாயத்துகளில் பிறப்பு - இறப்பு சான்று வழங்கும் திட்டத்தை, தலைவர்கள் நடைமுறைபடுத்தவில்லை.

இந்நிலையில், தமிழக கிராம பஞ்., தலைவர் கூட்டமைப்பு சார்பில், பிறப்பு - இறப்பு சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்கக் கோரி, பிப்ரவரி மாதம், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் உத்தரவை, பஞ்., தலைவர்கள் உடனடியாக நடைமுறைப்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

பெண்கள் பாதுகாப்புக்கு நிர்வாகமே பொறுப்பு மக்களவைத் தலைவர் மீராகுமார் வலியுறுத்தல்

கொல்கத்தா, நவ. 24- வேலை செய்யும் இடங் களில் பெண்களின் பாது காப்புக்கு, நிர்வாக தலை மையில் உள்ளவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று மக்க ளவைத் தலைவர் மீரா குமார் கூறினார். கொல் கத்தாவில், எம்சிசி சேம்பர் நடத்திய பெண் முன்னேற் றம் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

நமது நாட்டில் இலக் கியத்திலும் கதைகளிலும் பெண்களை உயர்வாக வும் பெருமையாகவும் மதிக்கின்றனர். ஆனால் நிஜத்தில் பெண்களின் நிலை அதற்கு நேரெதிராக கீழாக இருக்கிறது. பெண் களுக்கு தகுந்த பாது காப்பு இல்லை.

அவர் களுக்கு கல்வி கற்க வாய்ப் புகள் இல்லை. நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு பல சட்டங்கள் இருக் கின்றன. ஆனால் அவை யெல்லாம் நடைமுறை யில் பலனளிப்பதில்லை.

ஒருவர் தான் என்ன வேலையில் பொறுப்பில் இருந்தாலும் பெண் களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தவேண்டும். நான் மக்களவை தலைவராக பொறுப்பேற்றுக் கொண் டதும் நாடாளுமன்றத் தில் பெண்களுக்கான குறை தீர்ப்பு அமைப்பை ஏற்படுத்தினேன். இதன் மூலம் பெண்களின் பிரச் சனைகள் தீர்க்கப்பட்டுள்ளது.

இதைப் போல ஒவ்வொரு கம்பெனியிலும் பெண் களுக்கான குறை தீர்ப்பு அமைப்பை ஏற் படுத்தி, அவர்களது பிரச் சனைகள் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பெண் களுக்கான பாதுகாப் புக்கு தலைமை நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர் கள் பொறுப்பு ஏற்றுக் கொள்ளவேண்

தமிழ் ஓவியா said...

பெண் வேவுபார்ப்பு விவகாரம்: மோடி மீது சிபிஅய் விசாரணை கோரி அய்.ஏ.எஸ். அதிகாரி வழக்கு'

இளம்பெண் வேவு பார்க் கப்பட்ட விவகாரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது சிபிஅய் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி அந்த மாநில அய்.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர் இப்போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதனுடன் குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவும் தீவிரவாத எதிர்ப் புப் படைத் தலைவர் சிங்காலும் பேசிய தொலைபேசி உரையா டல்கள் அடங்கிய 150 பக்க அறிக் கையையும் அவர் இணைத் துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டில் பெங்களூருவைச் சேர்ந்த 27 வயது பெண் பொறியாளரை குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையினர் பின்தொடர்ந்து வேவு பார்த்ததாக கோப்ராபோஸ்ட், குலைல் ஆகிய இணையதள ஊடகங்கள் அண் மையில் செய்தி வெளியிட்டன. குஜராத் மேலிட உத்தரவின் பேரிலேயே இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாக அந்த இணைய தளங்கள் குற்றம் சாட்டின.

இந்நிலையில், குஜராத் அரசால் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அய்.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா, இளம்பெண் விவகாரம் காரண மாகவே தன் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கோப்ராபோஸ்ட் வெளி யிட்டுள்ள தொலைபேசி உரை யாடல்கள் தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடி, முன்னாள் அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீது சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட் டுள்ளார்.

நரேந்திர மோடி, பெங்களூர் பெண் குறித்த விவகாரம் எனக்குத் தெரியும். அதன் காரணமாகவே என் மீது பழிவாங்கும் நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதை தவிர எனது தம்பி குல்தீப் சர்மா, குஜராத்தில் மூத்த அய்.பி.எஸ். அதிகாரியாகப் பணியாற்றுகிறார். 2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பல்வேறு தவறான செயல்பாடுகளை அவர் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். இதுவும் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம். என் மீதான அனைத்து வழக்குகளையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று தனது மனுவில் பிரதீப் சர்மா கோரியுள்ளார்.

இதனிடையே, தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்ப தாவது:

2004ஆம் ஆண்டில் பவ நகரில் நடைபெற்ற பூங்கா திறப்பு விழா வில் முதல்வர் மோடி பங்கேற்றார். அந்த விழாவில்தான் பெங் களூரு பெண் பொறியாளரை முதல்வருக்கு, நான் அறிமுகம் செய்தேன். அதன்பின்னர் இரு வருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.

தனது மகளுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக அவரு டைய தந்தை அறிக்கை வெளி யிட்டிருப்பதில் உண்மை இல்லை. மிரட்டலின்பேரிலேயே அவர் அந்த அறிக்கையை வெளி யிட்டிருக்கிறார் என்று தெரிவித் தார்.

தமிழ் ஓவியா said...


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய தகவல்


வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்டது என்று விசாரணை அதிகாரியே ஒப்புக் கொண்ட நிலையில்

பேரறிவாளனை விடுதலை செய்வதே சரியானதாகும்

சந்தேகத்தின் பலனை சாந்தன், முருகனுக்குக் கொடுத்து அவர்களையும் விடுதலை செய்க!

தமிழர் தலைவரின் சட்ட ரீதியான அறிக்கை

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் வாக்குமூலம் ஜோடிக்கப்பட்டது என்பதை விசாரணை அதிகாரியே கூறிவிட்ட நிலையில் பேரறிவாள னையும், சந்தேகத்தின் பலனை குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அளிப்பது என்ற முறையில் சாந்தன், முருகன் ஆகியோரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கு அளிக் கப்பட்ட தூக்குத் தண்டனை கடந்த 22 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் காலந்தாழ்ந்திருக்கும் நிலைமை, மறைமுகமான நன்மைகளையே (Blessing in Disguise) விளைவித்துள்ளது.

பல்வேறு புதைபட்ட உண்மைகள் நீதியின் அடிப் படையிலும், பலரின் மனசாட்சியின் விழிப்பின் காரணமாகவும் வெளி வரத் துவங்கியுள்ளன!

பேரறிவாளன் என்ற இளைஞனின் பங்கு அந்த கொலைக் குற்றத்தில், பிராசிகியூஷன் தரப்புப்படி, ராஜீவ்காந்தியைக் கொல்லப் பயன்படுத்துவதற்கான குண்டுக்காக பேட்டரி செல்கள் இரண்டை வாங்கிக் கொடுத்தவர் இவர் என்பதேயாகும்.

தமிழ் ஓவியா said...


உண்மையை ஒப்புக் கொண்ட விசாரணை அதிகாரி

பேரறிவாளன் என்ற இளைஞர் பாலிடெக்னிக்கில் படித்தவர் என்பதை முடிச்சு போட்டு, இந்த பேட்டரி செல்கள் நான் வாங்கிக் கொடுத்தேன் என்ற வாக்கு மூலம் மட்டும் விசாரணை அதிகாரி கேட்ட கேள்விக்குப் பதிலாக அவர் சொன்னதை அப்படியே பதிவு செய்யாமல், வழக்கில் பிராசிகியூஷனுக்கு சாதகமாக அமையும் வகையில், இந்த காரியத்திற்காக என்றே தெரிந்தே வாங்கிக் கொடுத்தேன் என்பதாக, அவரே சில வாக்கியங்களை - பேரறிவாளன் சொல்லாததை வாக்கு மூலத்தில் இணைத்துக் கொண்டு, பதிவு செய்து விட்டார் - அந்த விசாரணை அதிகாரி. அவர் ஓய்வு பெற்ற நிலையில், இப்போது அவர் நான் தான் வழக்கில் தண்டனை வாங்கித் தருவதற்காக அந்த வரிகளைச் சேர்த்துக் கொண்டேன் என்று கூறி உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார் - மனசாட்சி உறுத்தியதால்!

மோசமான சட்டம் குற்றவாளியின் வாக்குமூலம் என்று விசாரணை அதிகாரிகள் எழுதி வைப்பதையெல்லாம் அப்படியே ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளும், அடிப்படை உரிமை பறிப்புக்கான சட்டம்தான் தடா சட்டம் ஆகும்.

குற்றம் சுமத்தப்பட்டவர்மீதான குற்றத்தை நிரூபிப்பது பிராசிகியூஷன் வேலை - பொறுப்பு, என்பதை தலைகீழாக மாற்றி - குற்றமற்றவர் என்று நிரூபித்து வெளியே வர வேண்டியது - குற்றம் சுமத்தப்பட்டவரின் பொறுப்பு என்பதாக இருப்பதும் மற்ற கிரிமினல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத சாட்சியங்களை, இந்த தடா சட்டத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்வதுமான கொடுமையான சட்டம் என்பதால்தான் அதற்கு எதிராக கருத்துப் போர் தொடுத்து, ஜனநாயக அடிப்படை மனித உரிமையாளர்கள் - நம்மைப் போன்ற இயக்கத்தவர்கள் இயக்கம் நடத்தி, ரத்துசெய்ய வைத்தோம். அதன் முழு நியாயமும் இப்போது வெளியான விசாரணை அதிகாரியின் வாக்குமூலத்தின் படி, தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.

குற்றத்தினை முடிவு செய்ய மென்ஸ்சிரியா (‘Mens Rea’) என்ற குற்றநோக்கு அக்குற்றவாளியின் மனதில் இருந்திருந்தால்தான். அவர் குற்றவாளியாக முடியும்; இன்றேல் அவர் நிரபராதிதான். இது (கிரிமினல்) குற்றச் சட்டத்தின் அடிப்படையாகும்.
அவசர ஜோடனை!

பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்ததில் எந்த குற்ற நோக்கமும் இல்லையே! (விசாரித்த அதிகாரி யல்லவா அவசர ஜோடனை செய்து மேலும் சில வாக்கி யங்களை இணைத்துக் கொண்டார். காவல்துறை விசாரணை வழமையில் இது சர்வ சாதாரணமாக நடைபெறுவதாகும்)

எனவே இந்தத் தகவல் - அவரது தூக்குத் தண்டனைக்கு எவ்வித முகாந்திரமும், நியாயமும் இல்லை என்பதற்கு உள்ளங்கை நெல்லிக் கனி போன்ற சான்றாதாரம் ஆகும்.

அதுபோலவே முருகன், சாந்தன் இருவரும்கூட இவருடன் சுமார் 22 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்துள்ள நிலையில், அவர்களைப் பற்றியும் இம்மாதிரி பல தகவல்கள் வெளியாகும் நிலையில், சந்தேகத்தின் பலனை (Benefit of doubt) அவர்களுக்கே தந்து உச்சநீதி மன்றமே முன்வந்து, இந்த வழக்கை எடுத்துக் கோண லாகிப்போன நீதியை சரி செய்ய முன்வருதல் அவசரம்; அவசியம் ஆகும்.

2. மேலும் தண்டனை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான, ஜஸ்டீஸ் கே.டி. தாமஸ் அவர்கள், வழக்கின் தீர்ப்பு சரியாக வழங்கப்படவில்லை என்று குறிப்பினைக் கூறியதும் ஏடுகளில் வந்துள்ளது.

3. வழக்கு விசாரணையில் ஈடுபட்ட சி.பி.அய். அதிகாரிகளில் ஒருவரான திரு. ரகோத்தமன் அவர்கள் செய்தியாளர்கள் பேட்டி, தான் எழுதிய புத்தகம் ஆகிய வற்றிலும் இவ்வழக்கில் விசாரணை சரியாகச் செல்லவில்லை என்ற கருத்தை மய்யப்படுத்தியுள்ளார்.

மூவரையும் விடுதலை செய்க!

சதி என்பது பேரறிவாளனைப் பொறுத்து நிரூபிக்கப் படவே முடியாது - இல்லை என்பது வெளிச்சமாகியுள்ளது.

எனவே அவர்கள் மூவரையும் விடுதலை செய்வதுதான் நீதிக்கு - நியாயத்திற்குத் தலை வணங்குவதாகும்.

இம்மூவருக்கும் ஏதோ கருணை காட்டி விடுதலை செய்கிறோம் என்று எண்ணாமல், நீதி கெட்டு விடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில், நீதியின் கோணலை நிமிர்த்தி வைக்கும் கடமையாகவே இதனைக் கருதுவதும், நீதிக்குப் பெருமை சேர்ப்பதாகவே அமையும்.

கிரிமினல் சட்டம், பத்து குற்றவாளிகள் தப்பினாலும் கூட ஒரு நிரபராதி, தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற தத்துவத்தைக் கொண்டதல்லவா?

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


சென்னை

25.11.2013

தமிழ் ஓவியா said...


பேரறிவாளனுக்கு நியாயம் வழங்கிடுக! கலைஞர் வேண்டுகோள்

கேள்வி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் வாக்கு மூலத்தை மாற்றம் செய்ததாக இந்த வழக்கைப் புலன்விசாரணை செய்த முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்புதல் அளித்திருப்பதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?

கலைஞர்: சில குற்றவாளிகள் தப்பி னாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப் படக்கூடாது என்பது தான் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நெறியாகும். அந்த அடிப்படையில் தற்போது வெளியாகியுள்ள இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஏடுகளில் காணும்போது, நடந்து முடிந்த வழக்கு விசா ரணையிலும், அதன் அடிப்படையில் வழங் கப்பட்ட தீர்ப்பிலும் மிகப்பெரிய கேள்விக் குறி எழுந்துள்ளது. எனவே இனியாவது இதைப்பற்றி முழு விசாரனை நடத்திட அரசு முன்வரவேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இத்தனை ஆண்டுகள் சிறையிலே, தன் இளம் பிராயத்தைச் செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்

தமிழ் ஓவியா said...


கூறுவது கல்கி!

சென்னையைத் தவிர பிற நகரங்களில் அய்ந்து முதல் ஏழு மணி நேரம், மின்வெட்டு ஏற்படுவதாகச் செய்திகள் சொல்கின்றன. நடுவில் காணாமல் போயிருந்த மின் வெட்டு மீண்டும் ஆரம்பித்திருப்பது, நிர்வாகத் திறமையின்மை, திட்டமின்மையின் எடுத்துக்காட்டு. மின்வெட்டைக்கூட அனுபவித்து விட்டுப் போகலாம்; ஆனால், மின்வெட்டு இராது என்று ஆசை காட்டி மோசம் செய்வதைத் தாங்குவது ரொம்பக் கஷ்டம்.

####

மக்கள் நலப் பணியாளர்கள் ஒவ்வொரு முறையும் தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்படுவதும், அ.தி.மு.க. அரசில் நீக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. மக்கள் நலப்பணியில் அவர்களுக்குப் போதிய வேலை இல்லையெனில் பயிற்சிகள் கொடுத்து வேறு துறைகளில் பணியமர்த்துவது ஒன்றே நல்ல தீர்வு; வீட்டுக்கு அனுப்பு வது அல்ல. உச்சநீதிமன்றம் இதற்கு வழிகாட்டியுள்ளது. (கல்கி டிசம்பர் 1, 2013 பக்கம் 34, 35)

தமிழ் ஓவியா said...


மாவட்ட ஆட்சியர் என்ன செய்கிறார்? தமிழ்நாடு அரசு தடுக்குமா?

மாநில காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) தலையிடுவாரா?


தருமபுரி மாவட்டம் அரூர் காவல் நிலைய துணைக் கண்காணிப்பாளர் மற்றும் மகளிர் காவல் நிலைய வளாகத்துக்குள் கட்டப்பட்டு வரும் கோயில் இது - அரசு தலையிடுமா?

மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநரும், மாவட்ட ஆட்சியரும் இந்தச் சட்ட விரோத செயலைத் தடுப்பார்களா?

தமிழ் ஓவியா said...மோடி ஒருவர் போதும் பின்னடைவிற்கு!


டில்லி சட்டசபைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், குஜராத் முதல் அமைச் சரும், பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாள ருமான, திருவாளர் நரேந்திரமோடி மிகவும் நீட்டியே முழங்கி இருக்கிறார்.

டில்லியில் மாணவி கொடூரமாகக் கற்பழித்துக் கொல்லப்பட்டதை மறக்காதீர்கள்! என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டில்லி நிகழ்வு கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே! கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் கண்டிக்கப்பட்டது. இதுபோன்ற கொடுமை நடைபெறக் கூடாது என்ற வகையில் புதிய சட்டம் வரை நிறைவேற்றப்பட்டது.

ஆனால் ஒன்று, இதைப்பற்றியெல்லாம் பேசுவதற்கான தார்மீக உரிமை மோடியின் நாக்குக்குக் கிடையாது.

டில்லியில் ஒரு பெண் சிறுமைப்படுத்தப் பட்டார் என்பதற்காகக் கசிந்துருகும் மோடி, அவர் முதல்வராக இருந்து ஆட்சி புரிந்த குஜ ராத்தில் என்ன நடந்தது? இப்பொழுதும்தான் என்ன நடந்து கொண்டு இருக்கிறது?

வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்! என்று சொல்வதில்லையா? அது மோடிக்கு, நூற்றுக்கு நூறு துல்லியமாகவே பொருந்தும். பாட்டியா மாவட்டம், நரோடா என்னும் கிராமத்தில், என்ன நடந்தது? 95 முஸ்லிம் மக்கள் ஆண், பெண், குழந்தைகள் (35) சகிதமாக அடித்துக் கொல்லப்பட்டனரே - யார் பொறுப்பு?

கர்ப்பிணிப் பெண்களைக்கூட விட்டு வைக்க வில்லையே - இந்தக் காலிகள்! நீதிமன்றம், மண்டையில் அடித்ததன் காரணமாக மறு விசாரணை நடத்தப்பட்டு, 31 பேர்களுக்கு ஆயுள் தண்டனையும், மோடியின் அமைச்சர வையில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த மாயாபென்கோட் நானி என்னும் பெண் அமைச்சருக்கு (இந்த வெட்கக்கேட்டில் அவர் ஒரு டாக்டராம்) 28 ஆண்டு சிறைத் தண் டனையும் விதிக்கப்பட்டதே!

நியாயமாக குஜராத் கலவரங்களுக்கெல்லாம் பொறுப்பேற்று மோடி முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண் டாமா?

2000 பேருக்கு மேல் இவர் முதல் அமைச் சராக இருந்த குஜராத்தில் படுகொலை நடந்திருக்கிறது - இதற்கு யார் பொறுப்பு? அறிவு நாணயத்தோடு சொல்லட்டுமே பார்க்கலாம். முதல் அமைச்சர் மோடி, பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியுமா? தட்டிக் கழிக்கிறார் என்றால், இவரைவிட மோசமான, பொறுப்பற்ற மனிதனை உலகின் எந்த மூலையிலாவது கண்டுபிடிக்க முடியுமா?

நடந்தது என்ன தெரியுமா? பிஜேபியின் மூத்த தலைவர் அத்வானி போட்டு உடைத்து விட்டாரே!

என் நாடும் என் வாழ்க்கையும் எனும் நூலில் எல்.கே. அத்வானி என்ன எழுதியுள் ளார்? இதோ:

குஜராத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று நரேந்திரமோடி பதவி விலக வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயி கூறினார். கோவாவில் நடக்கவிருக்கும் தேசிய செயற் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று நரேந்திர மோடி கூறினார் என்று எல்.கே. அத்வானி குறிப் பிட்டுள்ளாரே!

அப்படி சொன்னபடி மோடி நடந்து கொண் டாரா? இல்லையே! மோடிக்கும், அறிவு நாணயத்துக்கும் என்ன ஒட்டு உறவு? பாரத ரத்னா கொடுக்கப்பட வேண்டியவர் என்று பிஜேபியினர் கதைக்கிறார்களே அந்த வாஜ்பேயியின் விருப்பத்தையே நிறைவேற்ற முன்வராதவர்தான் இந்த மோடி என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்

மோடி என்ற ஒருவரை வைத்துக் கொண்டு பிஜேபியி-யானாலும் சரி, அக்கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்ள விரும்புவோராக இருந்தாலும் சரி, அதைவிடப் பின்னடைவு வேறு ஒன்றும் இல்லை - இல்லவே இல்லை.

தமிழ் ஓவியா said...


நோக்கம்

சிறு கூட்டத்தாரால் நசுக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் செல் வமும், செல்வாக்கும் அற்ற பெரும்பான் மைக் கூட்டத்தார், சமுதாயத் துறைகளில் தங்களுக்குள்ள தடைகளை அரசியல் மூலம் நீக்கிக்கொண்டு முன்னேற்ற மடையுமாறு செய்வதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் நோக்கமாகும். - (விடுதலை, 21.7.1950)

தமிழ் ஓவியா said...


காலம் என்ற அற்புத ஆயுதம்!
------------கி.வீரமணி
தனி வாழ்க்கையாக இருந் தாலும் பொது வாழ்க்கையாக இருந்தாலும், காலத்தை எப்படி பயனுறு வகையில் திட்டமிட்டு அன் றாட வாழ்வில் நேரத்தைக் கையா ளுவது என்பதைப் பொறுத்தே நாம் வெற்றி பெற முடியும்.

நாம் பல நேரங்களில், கடிதங் களுக்குப் பதில் போடத் தவறும் போதோ, நண்பர்கள் சந்திப்பை ஏற்படுத்திக் கொள்ளாதபோதோ, சில முக்கியப் பணிகளை தவிர்த்து விடும் போதோ, ஒரே வழமையான சமாதானமாக என்னங்க எனக்கு நேரமே இல்லைங்க; அவ்வளவு பிசி, பிசி - தலைக்கு மேலே வேலைங்க என்று கூறுவது சரியான விளக்கம் ஆகாது.

அது, நம்முடைய பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே யாகும்.

உலகில் உள்ள மிகப் பெரிய பொறுப்பு வகிக்கும் பதவியாளர் களான அமெரிக்க அதிபர் ஒபாமா போன்ற வரிசையில் உள்ளவர்களா னாலும், மிக எளிய ஊழியர்களான நமது நெருக்கமான நண்பர்களாக இருப்பவர்களானவர்களும் சரி, எல்லோருக்கும் 24 மணி நேரம் தானே!

உலக சாதனையாளர்களாக எப்படிப் பலர் உயருகின்றனர்? அவர்களும் இந்த 24 மணி நேர காலத்தை - நாளை - பயன்படுத்தித் தானே வளர்ந்துள்ளார்கள்? எனவே காலத்தைத் திட்டமிட்டுச் செலவிட்டு, அதன் மூலம் மிகு பயன் உண்டாகும் வண்ணம் உழைத்தல் வேண்டும். காலத்தைப் பயனுறு வகையில் திட்டமிட்டு செலவிடுவது பற்றி எண்ணற்ற அறிஞர்களின் வழிகாட்டும் கருத்துரைகள், அடங்கிய நூல்கள் ஏராளம் ஆங்கிலத்தில் வந்துள்ளன.

அண்மையில் ஒரு கையடக்க ஆங்கிலப் புத்தகம் ‘Managing the time of your Life’ என்ற மேக்கன் மேக் டொனால்டு (Machen Macdonald) என் பவர் தொகுத்த புத்தகம் படித்தேன்.

முற்றிலும் புதிய அணுகுமுறை; அலுப்புசலிப்பின்றி படித்துப் பயன் பெறும் வகையில் முதலில் ஒரு அத்தியாயத்தில் இவரது அறிமுகக் கட்டுரை போன்ற கருத்துக்கோவை.
அடுத்து உலகின் மிகப் பிரபல சிந்தனையாளர்கள், கருத்தாளர்கள் சிலரின் கருத்துரைகளின் தொகுப்பு களுடன்.

ஹாரிஹீப்ஸ், ஸ்டீபென் கோவி, ஸ்காட்டெயிலர், ரோபன் கன்சாலஸ், ஆலிசன் அர்னால்ட், பிரயன் டிரேசி, டெனிஸ் வெயிட்லே, போன்ற பல 13 அறிஞர்களின் சுருக்கமான கருத்துக் கட்டுரைகள் தொகுப்பாக அமைந்துள்ளன.

பணத்தைச் செலவு செய்தால், பிறகு சம்பாதித்துக் கொள்ள முடியும். உடல் நலக்குறைவுகூட சரி செய்து நோய் தீர்த்த ஆரோக்கிய வாழ்வு மீண்டும் மலர வாய்ப்புள்ளது; காரணம் மருத்துவத் தொழில் நுட்பமும் நுண்ணறிவுக் கண்டுபிடிப்புகளும், அதற்கேற்ற மருந்து வகைகளும், நாளும் பெருகி வருகின்றன; உலக மனித வாழ்வும் சராசரியை வளர்த்து, உயர்ந்து கொண்டே வருகின்றன.

ஆனால் இழந்த காலம் என்பது நம் வாழ்நாளில் மீண்டும் வராது; வரவே வராது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

நொடி - வினாடியைக்கூட இப் போது பகுத்துப்பகுத்து, நானோ வினாடிகளாக்கி அணுவைத் துளைத்ததுபோல, காலத்தையும் அல்லவா துளைத்துப் பிரித்து வெற்றி கண்டு விட்டதே விஞ்ஞானம்!

இந்த நூலாசிரியர் ஒரு அருமை யான கருத்தைப் பதிய வைத் துள்ளார்.

கடந்த காலம் (Past)என்பது சென்று விட்டது. செலவாகி விட்டது.

சில அனுபவங்களைப் பெற வேண்டுமானால் அது ஓரளவுக்குப் பயன்படலாம்; மற்றபடி அதைப்பற்றி அளவுக்கு மீறிச் சிந்தித்து, காலத்தைச் செலவிடுவது பயனு றுவதாக அமையாது.

அதுபோலவே, வருங்காலம் என்பது இப்போது நம் கையில் இல்லாத ஒன்று. கற்பனையாக எதிர்பார்க்க வேண்டிய ஒன்று (அது எப்படி இருக்கும் என்று ராசி பலன் பார்ப்பது நம்மை உயர்த்தாது; வீணே வீழ்த்தவே செய்யும்) நிகழ்காலம் தான் கையில் உள்ள உணவு - அதைச் சுவைத்துச் சாப்பிட்டு அதிலிருந்து சத்துக் களை செரிமானம் செய்வது தானே முக்கியம்?

எனவே நிகழ் காலத்தைப் போற்றி திட்டமிட்டு பயனுறு வகையில் செலவழித்து செழிப்போம் நாம்!

தமிழ் ஓவியா said...


பேரறிவாளனிடம் பெற்ற வாக்குமூலத்தை நான் மாற்றி அமைத்தேன்

சிபிஅய் முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் ஒப்புதல்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசா ரணை முடிவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பேரறிவாளனிடம் நான் வாக்குமூலத்தை பதிவு செய்து. பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கி விட்டு, என் கருத்தை சேர்த்து கொண்டேன். இதற்காக நான் வருந்துகிறேன். என சிபிஅய் முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனனுக்கு மரண தண் டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சிபிஅய் முன்னாள் எஸ்.பி. தியாகராஜன்தான் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித் துள்ள பேட்டியில் கூறியிருப்ப தாவது:

9 வோல்ட் திறன் கொண்ட 2 கோல்டன் பவர் பேட்டரிகளை வாங்கி, சிவராசனிடம் கொடுத்தேன். அவற்றை வெடிகுண்டுகளில் சிவராசன் பயன்படுத்தினார் என்று பேரறிவாளன் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.ஆனால், தான் வாங்கிய பேட்டரி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டில் பயன்படுத்தப்பட உள்ளது என்பது தெரியும் என்று பேரறிவாளன் கூறவே இல்லை.

அவரிடம் வாக்குமூலம் பெற்ற போது, நான் பேட்டரியை வாங்கி கொடுத்தது உண்மை. ஆனால், எதற்காக சிவராசன் அதை கேட்டார் என்று தெரியவில்லை என்றுதான் பேரறிவாளன் கூறினார்.ஒரு விசா ரணை அதிகாரி என்ற முறையில், பேரறிவாளனின் வாக்குமூலம் என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. அது தகுதியான வாக்குமூலம் அல்ல. அதாவது அவரது ஒப்புதல் இல்லா மல், சதி திட்டம் அரங்கேறிய தாகத்தான் இதில் அர்த்தம் கொள் ளப்படும். இதனால், பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கி விட்டு, என் கருத்தை சேர்த்து கொண்டேன். இதற்காக நான் வருந் துகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால், அதை நிச்சயம் மாற்றி இருந்திருப்பேன்.

கடந்த 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் பேரறிவாளனிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது. பேரறி வாளன் வாக்குமூலம் கொடுத்த பின்னர், எனக்கு 2 வாய்ப்புகள்தான் இருந்தன.அவரது வாக்குமூலத்தை அப்படியே ஏற்பது அல்லது பிற ஆதாரங்கள் அடிப்படையில் என் னுடைய அனுமானத்தை அதில் பதிவு செய்வது. அதனால் வேறு வழியின்றி 2ஆவது வாய்ப்பை தேர்ந்தெடுத்தேன்.

வெடிகுண்டு தயாரிக்கப்பட்ட தற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், பேரறிவாளன் வாக்குமூலம் தகுதியானதாக இல்லாவிட்டால் அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும். 22 ஆண்டு களுக்கு பின்னர் என் செயலுக்காக வருந்து வதற்கு காரணம், இப்போது இல்லா விட்டால் எப்போதும் முடி யாது என்பதால்தான்.

ராஜீவ் கொலை வழக்கு விசா ரணை முடிவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பேரறிவாளனிடம் நான் வாக்குமூலத்தை பதிவு செய்து விட்டேன். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. கெட்ட வாய்ப்பாக ராஜீவ் கொலை வழக்கில் வெடிகுண்டு யாரால், எங்கு தயாரிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை சிபிஅய்யால் கண்டு பிடிக்க முடியவில்லை.இவ்வாறு தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


நரேந்திர மோடி மனைவி இருப்பதை மறைத்தாரா? தேர்தல் வழக்காக தொடர உச்சநீதிமன்றம் அனுமதி!

புதுடில்லி, நவ. 25- நரேந்திர மோடி, மனைவி இருப்பதை மறைத் தாரா என்பது பற்றி தேர்தல் வழக்கு தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

பாரதீய ஜனதா பிரதமர் வேட் பாளரும், குஜராத் முதல் அமைச்ச ருமான நரேந்திரமோடி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அவர் குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் மணிநகர் தொகுதியில் போட்டி யிட்ட போது வேட்பு மனுவில் உண்மைகளை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக கொல்கத் தாவைச் சேர்ந்த தொழில் அதிபர் சுனில் சரோகி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், நரேந்திரமோடி வேட்பு மனுவில் அவருக்கு மனைவி இருப்பதை மறைத்துவிட்டார். நரேந்திரமோடி மனைவி பெயர் ஜசோதா பென். இவர் 1951ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி பிறந்தார். இவருக்கும், நரேந்திர மோடிக்கும் 1968ஆம் ஆண்டு திரு மணம் நடந்தது. ஆனால் நரேந்திர மோடி இதை மறைத்துவிட்டார். பொது வாழ்க்கையில் இருப்பவர் இவ்வாறு உண்மையை மறைப்பது தவறு. இதுபற்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியி ருந்தார்.

இந்த மனு நேற்றுமுன்தினம் தலைமை நீதிபதி சதாசிவம் முன்னி லையில் விசாரணைக்கு வந்தது. மனு தாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் கோலின் கான்சால் வேஸ் ஆஜராகி வாதாடுகையில், நரேந்திர மோடி வேட்பு மனுவில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் பொய். மனைவி இருப்பதை மறைத்துவிட்டார். தேர்தல் அதிகாரி அவரது வேட்பு மனுவை நிராகரித்து இருக்க வேண் டும். அவரது பிரமாண பத்திரத்தில் கூறியுள்ள தகவல்களில் சில சந்தேகங்கள் இருக்கின்றன. அதை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டது தவறு என்றார்.

வழக்குரைஞர் வாதத்துக்குப் பின் தலைமை நீதிபதி சதாசிவம் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

நரேந்திரமோடியின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நன்கு சரிபார்த்துதான் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதில் உயர்நீதி மன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் பங்கு என்ன இருக்கிறது. எனவே மனுதாரர் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.

தமிழ் ஓவியா said...


மருத்துவ குணம் நிறைந்த ஆரஞ்சு


உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும். ஆரஞ்சு பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும், சக்தியும் கிடைத்துவிடுகிறது. நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மி.லி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

ஆரஞ்சு பழத்தை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும். ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது. சளி, ஆஸ்துமா, நுரையீரல் கோளாறு, சுவாசக் கோளாறு, காச நோய் போன்ற வியாதி களால் அவதியுறுவோர் பால் உணவுகளை விலக்கி ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டு விரைந்து குணம் பெறலாம். மேலும் உடல் சூடு, கண் பார்வைக் கோளாறு, சளித்தொல்லை இவை அனைத்தும் சேர்ந்த வியாதி உள்ளவர்களுக்கு உடனடி நிவாரணத் திற்கு ஏற்ற ஒரே பழம் ஆரஞ்சுப்பழம்.

குடல்புண் நோயால் அவதிப்படுபவர்களுக்கு ஓர் அற்புத உணவு, செரிக்கும் சக்தியையும், பசியையும் அதிகப்படுத்துவதுடன் நொந்து போன குடலை விரைந்து சரி செய்கிறது. அழிந்த திசுக்களை புதுப்பிக்கிறது.

இரத்த சோகை, நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளவர்களின் உன்னத உணவாக செயல்பட்டு புது இரத்தம் உற்பத்தி செய்கிறது. பல் வலி, பயரியா போன்ற கோளாறுகளைத் தீர்க்கும்.

உடல் சூடு, வெட்டைச்சூடு, மூலவியாதி போன்றவற்றிற்கும், சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கோளாறுகளுக்கும் இரவில் அரை டம்ளர் ஆரஞ்சு சாறு குடித்தால் பலன் கிட்டும். உடம்பில் மிகுந்துள்ள விஷத்தன்மையை முறித்து காய்ச்சலிலிருந்து உடனே நிவாரணம் தருகிறது.

உடல் எடை, மூட்டுவலி, உடம்பில் அதிக உப்புச்சத்து, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் சரியாக இதுவே சஞ்சீவி கனியாக செய்ல் படுகிறது. கர்ப்பமுற்ற பெண்கள் இப்படிச்சாற்றை அதிக அளவில் சாப்பிட்டால் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவார்கள்.

வெய்யில் காலத்தில் உண்டாகும் அக்கி, தோல் வியாதிகள், மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்றவைகளில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது. மேலும் வயிற்று வலி, ஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கை உடன் சரிசெய்கிறது. குழந்தைகளின் பிரைமரி காம்ளக்ஸ் சரியாகிறது.

தமிழ் ஓவியா said...


பெண்களை மிரட்டும் புது நோய்


பெண்களை புது நோய் ஒன்று மிரட்டத்துவங்கி உள்ளது. ஆம்... இத்தனை காலமாக சி.ஓ.பி.டி., நோய் (கிரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மோனரி டிசீஸ்), புகைப்பிடிக்கும் ஆண்களின் நோயாகவே கருதப்பட்டது. தற்போது இந்நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

1959ஆம் ஆண்டு கணிப்புப்படி, சி.ஓ.பி.டி., ஆண்களிடமே அதிகமாக உள்ளது எனக் கூறுகிறது. ஆனால் 2000ஆம் ஆண்டில் ஆண்களைவிட, சி.ஓ.பி.டி., பாதித்த பெண்கள் அதிகம் இறப்பை சந்தித்துள்ளனர். பெண்களும் புகைப்பிடிக்கத் துவங்கிவிட்டதால், இந்த மாறுதல் தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சி.ஓ.பி.டி., என்பது, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய். இது நுரையீரல் சளி மற்றும் நாள்பட்ட நுரையீரல் காற்றுக்குழாய் வீக்கம் என்பதை கொண்டது. உலகின் இறப்பு விகிதத்திற்கு நான்காவது காரணமாக உள்ளது. 2030 ஆம் ஆண்டில் 3 ஆவது இடத்தை பிடிக்கும் என்ற அச்சுறுத்தல் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், சி.ஓ.பி.டி., நோய், புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதோரிடம் அதிகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு புகை, மாசு, ரசாயன தூசு, வீட்டின் உள் மற்றும் வெளிப்புறம் உள்ள காற்றின் மாசு, நாள்பட்ட ஆஸ்துமா போன்றவை காரணம்.

அறிகுறிகள்: மூச்சிரைத்தல், நாள்பட்ட இருமல், சளி, பெண்களுக்குக் கூடுதல் அறிகுறிகளாக, அதிக மூச்சிரைத்தல், அதிகமனஅழுத்தம், மனச்சோர்வு, குறைந்த வாழ்க்கைத்தரம், அடிக்கடி மூச்சிரைப்பதால் ஏற்படும் சத்துக்குறைவு போன்ற வையாக வெளிப்படலாம். பொதுவாக பெண்களுக்கு, நுரையீரல் சிறிய அளவாக இருப்பதால் அதிகம் பாதிக்கப்படுகிறது என, ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் சராசரியாக 2-3 மணி நேரம் சமைப்பதில் செலவிடும் ஒரு பெண், 25 மில்லியன் லிட்டர் மாசுபடிந்த காற்றை சுவாசிக்கிறார் என்பது வியக்கத்தக்க உண்மை. வீடுகளில் கொசுவிரட்டியாக பயன்படும் கொசுவத்தி சுருள் ஒன்று, 100 சிகரெட்டுகளை எரிப்பதற்கு சமமானது.

நிலக்கரி சுரங்கங்களில் வேலை பார்க்கும் பெண்கள், வெடிமருந்து தொழிற்சாலை, ரசாயனத் தொழிற்சாலைகள், அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் பெண்கள், கழிவுகலந்த மாசுபடிந்த காற்றை சுவாசிக்கின்றனர். மேலும் மண்ணெண்ணெய் அடுப்பில் சமைப்பது, ஊதுபத்தி புகை, விறகு, நிலக்கரி, தாள், தேங்காய் ஓடு போன்றவற்றை எரிப்பதால் ஏற்படும் புகையை சுவாசிப்பது, சிறிய வீட்டில் காற்றோட்டமில்லாத கழிவறையில் புகைப்பிடிப்பது போன்ற வையும் காரணம்.

ஸ்பைரோமெட்ரி என்ற செலவில்லாத ஒரு பரிசோதனை மூலம் சி.ஓ.பி.டி., நோயை கண்டறியலாம். இந்நோய் அதிகரிக்காமல் இருக்க, புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். நெருங்கிய நண்பர் புகைப்பிடித்தால் அவர்கள் அருகில் இருப்பதை தவிர்க்கவேண்டும்.

நுரையீரலை பாதிக்கும் தூசு, மாசுபடிந்த காற்று, பெயிண்ட் ஸ்பிரே போன்றவற்றில் இருந்து விடுவித்துக் கொள்ளவேண்டும். இது உயிர்க்கொல்லி நோய் அல்ல. ஆரோக்கியமான உணவு, முழுமையான சுற்றுச்சூழல், காற்றோட்டமான சமையலறை என வாழ்க்கைத்தரத்தை உயர்த்தினாலே இந்த நோயை தவிர்க்கலாம். - மருத்துவர் எம்.பழனியப்பன், மதுரை. 94425 24147.

தமிழ் ஓவியா said...

அதிக நேரம் சைக்கிள் ஓட்டினால் இதயம் பாதிக்கும்!

உலகம் முழுவதும் மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளில் சைக்கிள் ஓட்டுவதும் ஒன்று. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கும், இரவில் நல்ல உறக்கத்தைத் தரும், கொழுப்பைக் குறைக்கும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டும்... இப்படி சைக்கிள் ஓட்டுவதில் நிறைய நன்மைகள்.

ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சல்லவா? அப்படித்தான் தினமும் அதிக நேரம் ஓடுவதும் சைக்கிள் ஓட்டுவதும் ஆபத்து என்று சமீபத்தில் எச்சரித்துள்ளது அமெரிக்க மருத்துவக் கழகம். தொடர்ச்சியான சைக்கிளிங், நம் இதயத் தசைகளை பலவீனமாக்கி விடக் கூடும். இந்த உடற்பயிற்சியும் ஒரு விதத்தில் பவர்ஃபுல் மாத்திரை போன்றதுதான். அதற்கும் பக்க விளைவுகள் உண்டு என்று சொல்லியிருக்கிறார் அமெரிக்க மருத்துவக் கழகத்தின் இதய மருத்துவ நிபுணர் கார்ல் ஜே.லேவி.

இப்படிப்பட்ட கடுமையான உடற்பயிற்சிகளால் பலவீனமடையும் இதயம் வழக்கத்தை விட வேகமாகவோ, மெதுவாகவோ துடிக்கத் துவங்குகிறது. இதனை அரித்மியா என்கிறார்கள். பெரும்பாலும் ஆபத்தின்றி வந்து போகும் இந்த அரித்மியா, சில நேரங்களில் இதய செயலிழப்பிலும் கொண்டுபோய் விட்டுவிடும் என்கிறார்கள் அவர்கள்.!

தமிழ் ஓவியா said...


கவனிக்கவேண்டும்


மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துகளும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா, நீங்காதா என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.
_ (விடுதலை,3.12.1962)

தமிழ் ஓவியா said...


காலம் என்னும் அற்புத ஆயுதம்! (2)

காலம் - நேரம் - பறக்கிறது (‘Time Flies’) என்பது கெட்ட செய்தி! அதில் நீங்கள் விமானியாக (Pilot) இருக்கிறீர்கள் என்பது நல்ல செய்தி!! என்றார் மைக்கேல் அல்ஷுலர்.

காலத்தை (நேரத்தை) நாம் மாற்ற முடியாது; மாறாக அக் காலத்தை நாம் பயன்படுத்திட சரியாக திட்டமிட்டுச் செயல்படுத் திட முடியும். அப்போது நேர மில்லையே எனக்கு என்ற பஞ்சப் பாட்டுக்கு போலி சமாதானங் களுக்கு இடமே ஏற்படாது.

ஆழமாக மனதில் பதிய வைத் துக் கொள்ளுங்கள்.

பறக்கும் காலம் என்ற விமானத் தில் நீங்கள் விமான ஓட்டியாக, விமானியாக, அமர்ந்து விமா னத்தை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, பயணம் செய் யுங்கள் - இலக்கு நோக்கி!

உங்களுக்கு ஒவ்வொரு நாளிலும் 1440 மணித் துளிகளும், ஒவ்வொரு ஆண்டிலும் 5,25,600 மணித் துளிகளும் உங்கள் கட்டுப்பாட்டிற் குள் உள்ளது என்று உணர்ந்து பறக்கும் விமானத்தை உற்சாகத் துடன் ஓட்டுங்கள்! இலக்கினை அடையும்போது இறக்குங்கள்!
சிலர் நேரத்தை எப்படி உருப்படி யான வகையில் செலவழிப்பது என்பதை நடைமுறைப்படுத்தி, அன்றாட வாழ்க்கையில் அனுபவ ரீதியாக கற்றுக் கொள்ள புத்தகம் புத்தகமாக புரட்டுவதில் அரிதினும் அரிதான காலத்தை நாம் வீணாக்கி விரயம் செய்து விடுகிறோம்.

உறுபயன் அதனால் உடன் விளைவது கிடையாது.

சமையலை வெறும் புத்தகங்களால் மட்டுமே கற்றுக் கொள்ள முடியாது. அவை ஒரு வழிகாட்டி என்று மட்டுமே கருதிட வேண்டும். ஒவ்வொரு முறை சமையலிலும் வெறும் வரி வரியாகப் படித்து சமையலைச் செய்யத் துவங் கினால் சமையலும் முடியாது; சுவை யாகவும் இராது, பொருள்களும் வீணாகவே செலவாகும்!

உள்வாங்கிய கருத்துக்களும், நடைமுறை அனுபவங்களும், வார்ப்புப் பட்டறைகளாகி, மளமளவென கற்றுக் கொள்ள கவனத்துடன் திட்டமிடு தலும் - திறம்படச் செய்தலும் தேவை யாகும்.

சிலர் காலத்தை நிர்வகிக்க என்று கனத்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டே காலத்தை அதில் விரயம் செய்து விடுகிறார்கள்!

அனாவசிய செலவாளிகள் பலர் எத்தனைப் பேர் பணத்தை கணக்குப் பார்க்காமல் செலவழிக்கிறார்கள். சாப்பிட்டு எழும்போது, உணவு விடுதிகளில் - ஓட்டல்களில் டிப்ஸ் என்ற ஒரு வெகுமதிப் பணம் அளவ றிந்துகூட தராமல், ஜம்பத்திற்காக 50 ரூபாய் தர வேண்டிய இடத்தில் 500 ரூபாய் தருவது எப்படி ஒரு தவறான விரும்பத்தகாத செயலோ, அது போன்றதே 5 மணித் துளிகளை ஒதுக்க வேண்டிய பணிகளுக்கு 50 நிமிடங்களை - செலவிட்டு வீணாக் குவது ஆகும்!

புத்தகங்களை இதுபோன்ற செய் திகளை அறிய என்ற தேவைகளுக்கு அப்பாற்பட்டு அதில் செலவழித்து விட்டு, ஏமாறுவது நியாயமா?

எடுத்துக்காட்டாக, தேர்வுக்கு விடை எழுதத் துவங்குமுன் நன்கு கேள்விகளைப் படித்துப் புரிந்து கொண்டு விடை எழுதத் துவங்கி னால் உங்களுக்கு நல்ல வெற்றி கிட்டும் என்று ஆசிரியர்கள் அறிவு றுத்துகின்றனர்.

உண்மைதான், அதற்காக கேள்வியைப் படித்து உள்வாங்கிடவே மொத்தம் உள்ள 2 மணி நேரத்தில் ஒரு மணி நேரத்தை எடுத்துக் கொள்ளலாமா? அது அபத்த மல்லவா? அதுபோலத்தான், இந்தக் காலத்தை, எப்படி நிர்வாகிப்பதில் வெற்றி பெறுவது பற்றியே சதா ஓர் ஆய்வு செய்கிறேன் என்று கூறி அந்த வழிகாட்டிகளைப் படித்துக் கொண்டே இருந்தால் எப்படி?

ரயில்வே டைம் டேபிள் வாங்கி ரயில் புறப்படும் நேரத்தைப் பார்த்து விட்டு சரியான நேரத்தில் (அதன்படி) சென்ற ரயிலில் ஏறி பயணம் செய்யாமல், டைம் டேபிளையே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால் உங்களுக்காக ரயில் நிற்குமா? அதுபோல எதற்கு எவ்வளவு நேர ஒதுக்கீடு - எப்பணிக்கு எம்மாத்திரம் அளவு என்ற நேர அளவீடும், முன்னுரி மையும் (Sense of Priority and Sense of Proportion) மிகவும் முக்கிய மாகும்.

ஆயுதத்தின் முனையை, சாணை பிடிப்பதுபோல் இந்தச் செயல்கள், பயன்பாடுகள் நமக்கு வெற்றியை ஈட்டித் தர முந்தும்!

நிறுவனங்கள், ஆய்வுக் கூட் டங்கள் என்ற பெயரில் தேவையற்ற விவாதங்கள் அடங்கிய கூட்டங் களால் பல பயனுறு பணிகள் தாமத மாகுமே தவிர, முழுப் பலன் தராது என்பது பல தலைமைப் பொறுப் பாளர்கள் அறிய மாட்டார்கள்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டத்தை நிராகரிக்க அ.தி.மு.க. அரசு மேலும் ஒரு மனு தாக்கல் கலைஞர் கருத்து

சென்னை, நவ.26- சேது சமுத்திரத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. அரசு உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்திருப்பது குறித்து தி.மு.க. தலைவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (26.11.2013) சென்னை பெரியார் திடலில் தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாளர்களிடையே கூறியதாவது:

செய்தியாளர் :- சேது சமுத்திரத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. அரசின் சார்பில் மேலும் ஒரு மனுவை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகச் செய்தி வந்திருக்
கிறதே?

கலைஞர் :- சேது சமுத்திரத் திட்டத்திற்காக 1967ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் முதலமைச் சராகப் பொறுப்பேற்றவுடன், திராவிட முன்னேற்றக் கழகத்தாரையும், தமிழ்நாட்டு மக்களையும் பார்த்து விடுத்த வேண்டுகோள், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதாகும்.

அண்ணா அவர்களுடைய அந்த விருப்பத்தை நிறைவேற்ற, அந்தக் கனவை நனவாக்க, முயற்சிகள் எடுத்துக் கொண்டு, திராவிட இயக்கத்தாராகிய நாங்கள் பாடுபடும்போது, இன்றைக்கு இருக்கின்ற ஜெயலலிதா அரசு, ஏற்கென வே ஒரு முறை இந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வரை சென்று தடை கோரி யிருக்கிறது.

திரும்பவும் இப்போது நான் கேள்விப்படுகிறேன் - இரண்டாவது முறையாகவும், ஏற்கெனவே தாங்கள் சொல்ல விட்டுப் போன விஷயங்களைச் சொல்லுகிறோம் என்று சொல்லி, சேது சமுத்திரத் திட்டத்தைக் கை விட வேண்டுமென்று உச்சநீதிமன்றத்திற்கு மேலும் ஒரு முறையீடு செய் திருக்கிறது.

அண்ணா அவர்களின் எண்ணங்களை, தமிழ் நாட்டு மக்களுடைய தேவைகளை ஜெயலலிதாவும், அவர் தலைமையிலே உள்ள இந்த ஆட்சியும் எந்த அளவுக்குப் புறக்கணிக்க முற்படு கிறார்கள் என்பதற்கு இதுவே தக்க அடையாளம்.