Search This Blog

13.11.13

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைக் கண்டித்து அவரவர் இல்லங்களில் கறுப்புக் கொடிகளை ஏற்றுவீர்!

தமிழர்களின் உணர்வுகளைப் புறக்கணித்து காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைக் கண்டித்து
கழகத் தோழர்களின் வீடுகளிலும், கழகப் பணிமனைகளிலும் இன்றுமுதல் 15 ஆம் தேதிவரை கறுப்புக் கொடிகளை ஏற்றுவீர்!
தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை
பலவகைகளிலும் தமிழர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியும், அவற்றைப் புறக்கணித்து, இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள் வதைக் கண்டிக்கும் வகையில் கறுப்புக்கொடிகளை ஏற்றுமாறு கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி அவர்கள்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறுவதால், தமிழர் இனப்படுகொலையை நடத்திய சிங்கள ராஜபக்சே தலைமை தாங்குவார்; இரண்டாண்டுகளுக்கு அவ்வமைப் பின் தலைவராக நீடிப்பார்.
அய்.நா.வின் அறிக்கை, மனித உரிமை ஆணையத்தின் அறிக்கைகள் கூறியபடி போர்க் குற்றவாளி, மனித உரிமை மீறல்கள் என்ற குற்றங்களை அடுக்கடுக்காக புரிந்து வருபவர் ராஜபக்சே என்பதாலும், இந்தியா காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும்; அதன்மூலம் உலகுக்கு இலங்கையின் குற்றங் களை இந்தியா வன்மையாகக் கண்டித்து தமிழர் வாழ் வுரிமையை நிலை நாட்டவேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அத்தனைக் கட்சிகளும், ஒருமித்த குரலில் வற்புறுத்தின.

டெசோ தலைவர் கலைஞர் அவர்கள், ஏற்கெனவே டெசோ (தி.மு.க., தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்க தமிழர் பேரவை)மூலம் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கவேண்டும் என்பதை தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னை உள்பட பல மாவட்டங்கள்மூலம் மத்திய அரசுக்குப் புறக்கணிப்பின் தேவைபற்றி வற்புறுத்தினார்கள்; வேண்டுகோள் விடுத்தார்கள்.

காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா சார்பில் ஒரு துரும்புகூட போகக்கூடாது; அப்போதுதான் அந்த புறக்கணிப்பு முழுமையாகும் என்ற கருத்தை தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாளர்களிடையே கூறினார்.

அவசரத் தீர்மானம்

நேற்று (12.11.2013) தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு அவசரக் கூட்டத்தைத் தமிழக அரசு கூட்டி அறிவிப்பு வந்த நிலையில், கலைஞர் அவர்கள், இதுபற்றி சட்டமன்றத்தில் காமன்வெல்த் மாநாட்டுப் புறக்கணிப்பு தீர்மானம் வந்தால், ஒருமித்த குரலில் தமிழர்கள் ஆதரிக்கவேண்டும் என்பதை மீண்டும் வற்புறுத்தினார்கள். (ஏற்கெனவே ஒரு தீர்மானம் நிறைவேறியது).
நேற்று (12.11.2013) மாலை முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானம் மிகத் தெளிவாக தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தது.

அத்தீர்மானம் வருமாறு:

இலங்கையில் கொழும்பு நகரில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்கவேண்டும்; பெயரளவுக்குக் கூட இந்திய நாட்டின் சார்பில் பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது.

இதுகுறித்த இந்தியா வின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர் களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நட வடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சென்னை பெரியார் திடலில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது

பேரவையின் தீர்மானத்துக்கு முற்றிலும் முரணான வகையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் ஒருகுழு செல்கிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழக சட்டப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்காத, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மத்திய அரசின் இந்த முடிவு மிகுந்த மனவேதனை அளிக்கும் செயலாகும். காமன்வெல்த் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம், இலங்கை அரசின் மனிதாபிமானம் அற்ற செயலை, மனிதநேயம் அற்ற செயலை இந்தியா ஏற்றுக் கொள்கிறது, அங்கீகரிக்கிறது என்ற நிலைதான் உருவாகும்.

இதுமட்டுமல்லாது, காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக இலங்கை அதிபர் இரண்டு ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பதற்கு உறுதுணையாக இருந்தது என்ற தீராப் பழிச் சொல் இந்தியாவுக்கு ஏற்படும். இப்படிப்பட்ட தீராப் பழிச் சொல் இந்தியாவுக்கு ஏற்படுவதைத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளவோ, சகித்துக் கொள்ளவோ இயலாது.

மீண்டும் வலியுறுத்துகிறோம்: எனவே, தமிழக மக்களின் ஒருமித்த கருத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இலங்கையில் வரும் 13 ஆம் தேதி நடைபெறவிருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான கூட்டத்திலோ, வரும் 15 முதல் 17 வரை நடைபெறவுள்ள காமன்வெல்த் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டிலோ பெயரளவுக்குக் கூட இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இந்த காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்றும், இந்தியப் பேரரசை, தமிழக சட்டப் பேரவை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 2 இல் விடுதலையில் வெளிவந்த அறிக்கை

இதற்குமுன் திராவிடர் கழகத்தின் சார்பில் விடுதலையில் (2.11.2013) நாம் விடுத்த அறிக்கையில் தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வைப் புறக்கணிக்கும் வகையில் மீறி, இந்திய அரசு காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளுமானால், அறவழியில் நமது வருத்தத்தை, கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில், கழக அலுவலகங்களிலும், நம் இல்லங்களிலும் கறுப்புக் கொடிகளை அந்நாள்களில் ஏற்றி, நமது உணர்வுகளைக் காட்டிடுவோம் என்று தெளிவு படுத்தியிருந்தோம்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தமது பரிவாரங்களுடன் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள செல்கிறார்.

அங்கு செல்வதோடு மட்டுமல்ல, குதிரை கீழே தள்ளியது மட்டுமல்ல, குழியும் பறித்தது என்ற கதைபோல இந்தியா காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கவில்லை என்று பேட்டி கொடுத்துள்ளார்! (பிரதமர் போகாதது பின் எதற்குத்தான் - புரியவில்லை).

கனடா நாட்டுப் பிரதமர் புறக்கணித்துள்ளார்; மொரிஷியஸ் நாட்டுப் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் கூடச் செல்லவில்லை. (அவர்கள் நமக்கு அப்பாற்பட்டவர்கள்) அறவழி ஆதரவு தருகிறார்கள்.

இத்தீர்மானத்தில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத கட்சிகள்

1. காங்கிரஸ்
2. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
3. டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் (வெளியேற்றம்)
4. பா.ம.க. (சட்டப்பேரவை நிகழ்ச்சிக்கே செல்ல வில்லை)

15 ஆம்தேதிவரை கறுப்புக் கொடிகளை ஏற்றுவீர்!

எனவே, இன்றுமுதல் 15 ஆம் தேதிவரை நமது இல்லங் களிலும், கழகப் பணிமனைகளிலும் கறுப்புக் கொடிகளை ஏற்றி நமது உணர்வுகளை அறவழியில் பதிவு செய்ய வேண்டுமென குறிப்பாக கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் இன உணர்வாளர்கள் எவரும் அவரவர் இல்லங்களில் கறுப்புக்கொடிகளை ஏற்றலாம். கறுப்புச் சின்னங்களைக் குத்திக் கொண்டு (வெள்ளை சட்டையாக இருப்பின்) இருக்கலாம். அமைதி வழியில் உணர்வுகளை மத்திய அரசுக்கு - உலகுக்குத் தெரியப்படுத்துவதுதான் இதன் நோக்கம்.

------------------------கி. வீரமணி தலைவர்,திராவிடர் கழகம்  சென்னை   13.11.2013

13 comments:

தமிழ் ஓவியா said...


தீண்டாமைக்குப் பதில் ஜாதி!



மற்ற மற்ற கட்சிகள் மாநாடு நடத்தித் தீர்மானங் களை நிறைவேற்றுவதற்கும், திராவிடர் கழகம் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும் அடிப்படை யிலே வேறுபாடு உண்டு.

அடிப்படைப் பிரச்சினைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தும் சூறாவளியாக இருக்கக்கூடியவை திராவிடர் கழக மாநாட்டுத் தீர்மானங்கள்.

சமூகத்தைப் பீடித்த பெருநோய் ஜாதி என்பதை மறுக்கவும் முடியுமா? மனித சமூகத்தைப் பிறப்பின் அடிப்படையில் கூறுபோட்டு, மாண்புக்குரிய மனிதத்தை - பகைப் புலமாக மாற்றிக் கேட்டினைச் செய்தது ஜாதிதானே!

பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்ற கொடுமை - மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது என்பதற்கு அடையாளமாக இருக்கலாமா என்ற கேள்வியை எழுப்புவது திராவிடர் கழகம்தானே!

மனித சக்தி ஒட்டுமொத்தமான சமூக வளர்ச்சிக்குப் பயன்படுவதற்குப் பதிலாக திசை திருப்பி, ஒருவருக்கொருவர் மோதலை உண்டாக் குவது எவ்வளவுப் பெரிய கேடு!

இந்தச் சமூகம் சீர்குலைந்து போனதற்கும், வறுமைக்குழியில் வீழ்ந்ததற்கும் முக்கிய காரணமே இந்த ஜாதி முறை சமூக அமைப்புதானே!

வறுமைக்கோட்டுக்குக் கீழே பெரும் அளவில் தாழ்த்தப்பட்டவர்கள் ஆளாக்கப்பட்டதற்குக் காரணம், பிறவியின் அடிப்படையில் அவர்கள் தீண்டாதவர்களாக ஆக்கப்பட்டதுதானே!

இந்தத் தீண்டாமை ஒழிக்கப்படவேண்டாமா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வெறும் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று எழுதி வைத்ததால் மட்டும் தீண்டாமை ஒழிந்துவிடுமா?

தீண்டாமை என்பது ஜாதியின் விளைவுதானே! ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்துவது போல இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17 ஆம் பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தம் கொண்டுவரப்படவேண்டும் என்று திருச்சி திராவிடர் எழுச்சி மாநாடு (9.11.2013) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஜாதி ஒழிக்கப்பட்டால் ஜாதி அடிப்படையில் அர்ச்சகர் என்ற நிலைப்பாடும் நிர்மூலம் ஆகிவிடாதா?

கல்வி, வேலை வாய்ப்பில் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யலாமா? இது ஜாதியை வளர்க்காதா? என்று ஜாதி ஒழிப்பு வீரர்கள்போல முண்டாசு கட்டி முண்டா தட்டும் பேர்வழிகள், சட்ட ரீதியாக ஜாதி ஒழிக்கப்படுவதற்குக் கைதூக்கட் டுமே பார்க்கலாம்.

இதுபற்றி 70 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் கருத்துக் கூறி இருக்கிறார் என்றால், சிலருக்கு ஆச்சரியமாகக்கூட இருக்கலாம்.

சட்டத்தின்மூலம் ஜாதிகள் ஒழிகின்றபோது, சட்டத்தின்மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எடுத்து விடுவது சிரமமான காரியமல்ல (திராவிட நாடு, 30.5.1943) என்று கருத்துக் கூறியுள்ளாரே!

இன்னும் தேநீர்க் கடைகளில் இரண்டு தம்ளர் கள், இன்னும் ஜாதி அடிப்படையில் சுடுகாடுகள், ஜாதியின் அடிப்படையில் திருமணங்கள் என்கிற மனிதத்துவத்திற்கு விரோதமான நடவடிக்கை களை அனுமதிப்பது கேவலம் அல்லவா? மனிதன் பகுத்தறிவுவாதி என்ற அடையாளத்துக்கு இது அழகல்லவே!

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மற்ற மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தீர்மானம் கொண்டு செல்லுவதைவிட தமிழ்நாட்டிலிருந்து செல்லுவது தானே சரியானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்கும்.

காரணம், இங்குதானே சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை எரிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் நடத்திக் காட்டினார். பத்தாயிரக் கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்றாண்டுகள்வரை கடுங்காவல் தண்டனையை ஏற்றனர்.

திருச்சி திராவிடர் எழுச்சி மாநாட்டின் இந்தத் தீர்மானத்தைத் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப் பினர்கள் கட்சிகளைக் கடந்து சிந்திப்பார்களாக!
13-11-2013

தமிழ் ஓவியா said...


ஒ, அப்படியா


பா.ஜ.க. ஆட்சிக்கு வந் தால் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு.

- எச். ராஜா (தமிழக பா.ஜ.க., துணைத் தலைவர்)

காமன்வெல்த் மாநாட் டில் இந்தியா போகலாமா - போகக் கூடாதா என்று முடிவு செய்யக் கூடிய கூட்டத்தில் எந்தவித மான முடிவையும் எடுக்க முடியாமல் கூடிக் கலைந்த வர்களா இப்படியெல்லாம் பேசுவது?

தமிழ் ஓவியா said...

காமன்வெல்த்: பெரும்பாலான நாடுகள் புறக்கணிப்பு

இலங்கையின் பொதுநலவாய நாடுகள் அமர்வுக்கு குறைந்த தலைவர்களே பங்கேற்பது குறித்து கனடா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. இந்த மாநாட்டில் பொதுநலவாயத்தின் அரைவாசி தலைவர்கள் பங்கேற்கவில்லை என்று கனடா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர், ஜோன் பேயர்ட் குறிப்பிடடுள்ளார்.

நாளை ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டில் 53 நாடுகளின் தலைவர்களில் 23 நாட்டுத் தலைவர்களே இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இந்தியப் பிரதமர், மொரிசியஸ் பிரதமர் ஆகியோரின் தீர்மானங்களை தாம் வரவேற்பதாக பேயர்ட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, தாம் மேற்கொண்டுள்ள மனித உரிமை மீறல்களை பொதுநலவாய மாநாட்டின் மூலம் மறைத்து வெள்ளையடித்துக் கொள்ளும் என்ற காரணத்தினாலேயே கனடா நாட்டுப் பிரதமர் அதில் பங்கேற்கவில்லை என்று பேயர்ட் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மோடி மீது அமெரிக்க அமைப்பின் பகிரங்கக் குற்றச்சாற்று!


வாஷிங்டன், நவ.14- கலவரத்தைத் தடுப்பதில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வியின் முகமாக குஜராத் முதல் வர் நரேந்திர மோடி இருக்கிறார். அவரை பிரதமர் பதவிக்கான வேட் பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது. வருத்தத்திற்கு உரியது என்று சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையத்தின் உறுப்பினர்கள் கூறி யுள்ளனர்.

அந்த ஆணைய உறுப்பினர்கள் கத்ரினா லன்டோஸ் ஸ்வெட், மேரி ஆன் கிளவுன்டான் ஆகியோர் ஊட கம் ஒன்றின் வலைப்பூவில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது: குஜராத்தைச் சேர்ந்த காந்தியார், பல மதங்கள் நிலவும் சமூகத் தில் சகிப்புத் தன்மை யுடன் கூடிய தொலை நோக்குப் பார்வை, பரந்த மனப்பான்மைக்கு முக்கி யத்துவம் அளித்தார். வரும் 2014-ஆம் ஆண்டு (மக்களவைப் பொதுத் தேர்தல்) இந்தியா எதற்கு முக்கியத்துவம் அளிக்கப் போகிறது? மதச் சுதந் திரத்திற்கா? மத சகிப்புத் தன்மையின்மைக்கா? காலம்தான் இதற்குப் பதிலளிக்கும்.

கலவரத்தைத் தடுப்பதில் இந்தி யாவுக்கு ஏற்பட்ட தோல்வியின் முகமாக நரேந்திரமோடி இருக்கிறார். 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது அவர் தான் முதல்வராக இருந்தார்.

மோடி தலைமையி லான நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்காததை, குஜராத் உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. சேதப்படுத்தப்பட்ட வழி பாட்டுத் தலங்களுக்கு தகுந்த இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித் துள்ளது. சர்வதேச மதச் சுதந்திரத் துக்கான அமெரிக்க ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மோடிக்கு விசா வழங்குவதை விலக்கி வைக்க அமெ ரிக்க வெளியுறவுத்துறை 2005ஆம் ஆண்டு ஒப்புக் கொண்டது.

எம்.பி.க்கள் கடிதம்

மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்று இந்திய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 65 உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதி யுள்ளனர். இந்நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க. சார்பில் 2014ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் வேட் பாளராக நரேந்திர மோடியை அறி வித்துள்ளது. வருத்தம் தருவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூட நம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.

(விடுதலை, _ 22.6.1973)

தமிழ் ஓவியா said...


குற்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியம்: உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடில்லி, நவ.14- வெளிப்படை யான குற்ற வழக்குகளில், உடனடியாக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியம் என்று, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், காஜியா பாத்தை சேர்ந்த லலிதகுமாரி என்ற பெண், தனது மகள் கடத்தப்பட்டது குறித்து காவல்துறையில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. காவல்துறை சீர்திருத்தம் மற்றும் வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (எப்.அய்.ஆர்.) பதிவு செய்வது தொடர்பாக, சரியான வழி காட்டு நெறிமுறைகளை வகுக்க வேண் டும் என்று மேலும் சில மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கில் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியதைத் தொடர்ந்து 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப் பட்டது.

தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையில், நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், ரஞ்சன் பி.தேசாய், ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பாப்டே ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேற்று முன்தினம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. தீர்ப்பு விவரம் வருமாறு:

ஒரு குற்றம் தொடர்பான புகாரில், குற்றம் நடந்திருப்பதை வெளிப்படை யாக உணர்ந்து கொண்டாலே, காவல் துறையினர் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியமாகும்.

அப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யத்தவறும் காவல்துறை அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோன்ற புகார்களில், வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு பூர்வாங்க விசாரணை நடத்த தேவை இல்லை. மற்ற புகார்கள் தொடர்பாக, காவல்துறையினர் பூர்வாங்க விசாரணை நடத்தி அதன்பின்னர் வழக்குப்பதிவு செய்யலாம். ஆனால், இந்த விசாரணை 7 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற புகார்களில், ஆதாரங் களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமண பந்த பிரச்சினை, ஊழல், நிதி முறைகேடு போன்ற புகார்களில், முதல் கட்ட விசாரணைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

குற்ற புகார்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ள இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படு கிறது. எனவே இனி காவல் நிலையங் களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுப்பது, இரு தரப்பினரையும் காவல் நிலையங்களிலேயே அழைத்துப் பேசி தீர்வு காண்பது (கட்ட பஞ்சாயத்து) போன்ற செயல்களில் இனி ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


தீண்டாமைக் கொடுமை மடமை


இந்தியத் துணைக்கண்டத்தில் தீண்டாமை என்பது எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு ஒரு சம்பவத் தைக் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஒரு சமயம் சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் ஒரு வக்கீலிடம் நன் கொடை வசூலிப்பதற்காய்ச் சென் றிருந்தார். அப்போது அந்த வழக் கறிஞர் என்னிடம் நன்கொடைக்கு வந்திருக்கிறீர்களே, என்னை தொட்டால் தீட்டு என்கிறார்கள் ஆனால் என் பணத்திற்கு மட்டும் அந்தத் தீட்டு இல்லையா? என்று கேட்டார்.

எல்லாவற்றையும் கடந்தவன் நான். நான் தீண்டாமையை அனுஷ்டிப்பவன் அல்ல என்றாராம் சுபாஸ் சந்திரபோஸ்.

அப்படியானால், ஒருநாளைக்கு என் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடுங்கள்; சாப்பிட்ட மறுநாள் நன்கொடை தருகிறேன் என்றார் அந்த வழக்கறிஞர்.

உடனே சுபாஸ் சந்திரபோஸ், சரி நாளைக்கே நாலைந்து உயர்ந்த சாதிக்காரர்களுடன் வந்து உங்கள் வீட்டில் சாப்பிடுகிறேன். நீங்களும் உங்கள் சாதிக்காரர்கள் சிலரை எங்களுடன் சேர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்யுங்கள் கலந்து அமர்ந்து சாப்பிட்ட பிறகு நன்கொடை தாருங்கள் என்றார். சரி என்றார் வக்கீல்.

அவர்கள் வந்த போது வழக்கறிஞர் மிகவும் சோகமாக உட்கார்ந்திருந்தார். ஏன்? என்று கேட்டார் போஸ். என்னால், நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றார். என்ன, காரணம்? என்ற கேட்ட போது, நீங்கள் உயர்ந்த சாதிக்காரர்களை என் வீட்டில் சாப்பிட அழைத்துக் கொண்டு வந்து வீட்டீர்கள்; ஆனால் என் சாதியை சேர்ந்தவர்கள் யாரும் அய்யோ உயர்ந்த சாதியாருடன் சேர்ந்து சாப்பிடுவதா? என்ன பாபம் செய்ததாலோ இப்படிப்பட்ட பிறப்பெடுத்திருக்கிறோம் - அவர்களோடு சேர்ந்து சாப்பிடும் பாபத்தையும் செய்தால், இன்னும் எத்தனை பிறப்புக்கு இடர்ப்பட வேண்டுமோ! என்றாராம்.

இந்த அளவுக்கு இந்த நாட்டிலே தீண்டாமை வேர் விட்டிருந்தது.

இந்த அடிமை நிலைமையைத்தான் அடியோடு தகர்த்தெறியப் பாடுபட்டார் தந்தை பெரியார்.

ஆதாரம்: கடலூர் மாநாட்டில் விடுதலை விரும்பி பேச்சு, முரசொலி (19.7.1981

தமிழ் ஓவியா said...


பெண்கள்பற்றி சி.பி.அய். இயக்குநர்


சி.பி.அய். இயக்குநர் ரஞ்சித் சின்கா தெரிவித்த கருத்து இந்தியா முழுமையும் சர்ச்சை அலைகளை எழுப்பி விட்டது.

ஓட்டல்களில் சூதாட்ட விடுதிகள் செயல்படு கின்றன. சில மாநிலங்களில் லாட்டரி சீட்டு களுக்கும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சூதாட்டம் பாலியல் வன்முறை போன்றது. அதைச் சட்டத்தால் தடுக்க முடியாது; தடுக்க முடியாவிட்டால் அனுப வித்து மகிழ வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வார்த்தைகள்தான் பெரும் பிரச்சினை யாகியுள்ளன.

மிகப் பெரிய அதிகாரம் மிக்க பதவியில் உள்ள ஒருவர் பொறுப்பாக சிந்தித்து, பொறுப்பாகப் பேச வேண்டும்.

யாரோ சாலையில் போகிற பாமர மனிதன் அல்ல; - சி.பி.அய். இயக்குநர் - அதுவும் சி.பி.அய். பொன் விழா நிகழ்ச்சியில் இப்படிப் பேசி இருக்கிறார்.

பாலியல் வன்கொடுமைபற்றி பெரிதாகப் பேசப்படும் காலத்தில், அதற்குக் காரண மானவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்றெல்லாம்கூட கருத்துகள் கூறப்படுகின்றன.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் பாலியல் வன்முறையைத் தடுக்க முடியாவிட்டால் அனுபவித்து மகிழ வேண்டியதுதான் என்பது எவ்வளவுக் கீழ்த்தரமானது!

ஆண் வெறியர்களால் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்படுகிற பெண் இயல்பான பாலியல் உறவில் அடையும் மகிழ்ச்சியைப் பெறுவது என்பது சாத்தியமானதுதானா? மெத்த படித்த இந்த மேதாவிகள் எந்த உலகத்தில் இருக்கிறார்கள்? ஒரு வக்கிரப் புத்தியோடு சொல்லப்படுகிற கருத்தாகத்தான் இதனைக் கருத முடியும்.

கோயில்களில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களைப் பொட்டுக் கட்டிவிட்டு அவர்களைத் தேவர்களுக்கு அடியார்கள் என்று கூறி வந்தார்கள்.

கோயில் திருவிழாக்களில் ஆடிப் பாடி மகிழ்விப்பது மட்டுமல்ல; மற்ற மற்ற நேரங்களில் அந்தப் பெண்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தப் பட்டார்கள் என்பதை விளக்கத் தேவையில்லை.

அப்படி அவர்கள் இருப்பது கடவுளுக்குச் செய்யும் தொண்டு என்று கூறப்பட்டதுண்டு. அதை எல்லாம் புறந்தள்ளி நீதிக்கட்சி ஆட்சியில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் முயற்சியால் தேவதாசி முறை சட்ட ரீதியாக ஒழிக்கப்பட்டது.

பெண்கள் என்றால் காமப் பதுமை என்று நினைக்கும் ஓர் இந்துத்துவ மனப்பான்மை இந்த நாட்டில் உண்டு. பெண்களை உயிருள்ள மானுடக் கூறு என்று கருதுவதில்லை. அதனால் தான் படித்தவர்கள்கூட, உயர்ந்த பதவிகளில் இருப்ப வர்கள்கூட, பெண்களைத் துச்சமாக, கொச்சைப் படுத்தும் தன்மையில் விமர்சித்து வருகிறார்கள்.

திருவாளர் சோ, ராமசாமி அய்யரின் துக்ளக் இதழைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு, ஒரு உண்மை விளங்காமல் போகாது.

பெண்களை மட்டம் தட்டி எழுதுவதில் அவரை அடித்துக் கொள்ள இன்னொருவர் இருக்க முடியாது.

சி.பி.அய். இயக்குநர் ரஞ்சித்சின்காவை விமர் சிக்கிறவர்கள்கூட, துக்ளக்கில் பெண்களைத் தொடர்ந்து கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கும் சோ போன்றவர்களை, விமர்சிப்பதில்லை கண்டிப்பதும் இல்லை. ஒருக்கால் சோ அவ்வளவு முக்கியமான பேர் வழியா என்று நினைக் கிறார்களோ என்னவோ!

பெண்கள் என்றால் வில்லிகள்போலத் தானே நம் நாட்டு சின்னத் திரைகள் சித்தரிக்கின்றன; அப்படி இல்லாவிட்டால் சதா அழுது கொண்டு இருப்பவர்களாகவும் வசவுக்கும், அடிக்கும் ஆளாகுபவர்களாகவும் தானே சித்தரிக்கிறார்கள்.

இதனை எதிர்த்து பெண்கள் அணி திரண்டு எழ வேண்டாமா? பெண்ணுலகம் சிந்திக்கட்டும்! செயல்படட்டும்!!

தமிழ் ஓவியா said...


பார்ப்பனச் சாதி


பார்ப்பனச் சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும்வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்துவரும்.

(விடுதலை, 29.5.1973)

தமிழ் ஓவியா said...


மோடி தமாஷ்!


அடுத்த பிரதமர் மோடி தான் - ஆம் மோடிதான்! மோடியேதான்! இப்பொ ழுதே எழுதி வைத்துக் கொள்க! என்கிற ரீதியில் நீட்டி முழங்கிப் பிரச்சாரம் செய்ய வாடகை ஒலி பெருக்கிகள் ஏராளமாகப் புழுத்துப் பெருகி விட்டன.

மோடி மேடையில் பேசும் போக்கைக் கவனிப்பவர் களுக்கு ஒன்று தெளி வாகவே புரியும். ஒரு பிரத மருக்கான வேட்பாளர் என்ற பெருங் குணமோ, பண்போ, அடக்கமோ, இன்சொற்களோ அதில் இருப்பதாகச் சொல்ல முடியுமா? பேட்டை தாதா தோற்று விட வேண்டும்; அந்த அளவுக்கு முகம் முறுக்கேற கண்கள் சிவக்க, மேடையையே தண்டால், பஸ்கி எடுக்கும் இடமாகக் கிடுகிடுக்க வைக்கிறார்; ஒருக்கால் கோட்சே உயிருடன் இருந் தால் இந்தப் பாணியில்தான் இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

பேச்சிலாவது தெளி வான கருத்தோ, சிறப்பான தகவல்களோ உண்டா என் றால் எந்த மண்ணாங்கட்டி யும் கிடையாது.

உளறல் திலகம் என்று வேண்டுமானால் பட்டம் சூட்டலாம். வேதாரண்யத் தில் உப்பு சத்தியாக்கிரகத் திற்கு வ.உ.சி. தலைமை தாங்கினார் என்கிற ஜோக் குகளையெல்லாம் பின் னுக்குத் தள்ளும் வண்ணம் சமீபத்தில் பேசி இருக் கிறார்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசிய சிந்த னையை வளர்க்கும் வகை யில் லண்டனில் இந்தியா ஹவுஸ் அமைப்பை ஏற்படுத் தியவர் சியாமா பிரசாத் முகர்ஜி. அவர் இந்தியப் புரட்சியாளர்களின் குரு என்று கருதப்படுகிறார். 1930ஆம் ஆண்டு உயிரி ழந்த சியாமா பிரசாத் முகர்ஜி, தனது அஸ்தியைப் பத்திரமாக வைத்திருந்து இந்தியா சுதந்திரம் பெற் றதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியி ருந்தார் குஜராத்தின் பெருமை மிகுந்த மைந்தன் சியாமா பிரசாத் முகர்ஜி என்று இடி முழக்கம் செய்தாரே பார்க்கலாம்.

சியாமா பிரசாத் முகர்ஜி என்பவர் பிறந்தது குஜராத் தில் அல்ல; அவர் பிறந்தது கொல்கத்தாவில் -அவர் உயிரிழந்ததோ 1953ஆம் ஆண்டில் - மோடி சொன் னது போல 1930ஆம் ஆண்டில் அல்ல.

இதில் என்ன வேடிக்கை என்றால் அவரால் சொல் லப்பட்டதெல்லாம் சியா மாஜி கிருஷ்ணவர்மா என்ற குஜராத்தைச் சேர்ந்த சமஸ்கிருத பண்டிதரைப் பற்றி; ஆனால் அவர் குறிப்பிட்டதோ அவருக்குச் சம்பந்தமேயில்லாத சியாமா பிரசாத் முகர்ஜியை.

எப்படி இருக்கிறது! எத் தகைய அறிவு ஜீவி இவர். இவரைத் தவிர வேறு யாராவது இப்படி உளறியி ருந்தால் எப்படியெல்லாம் இந்தப் பார்ப்பன ஏடுகள் கேலியும், கிண்டலும் செய் திருக்கும்! - மயிலாடன்மோடி தமாஷ்!

அடுத்த பிரதமர் மோடி தான் - ஆம் மோடிதான்! மோடியேதான்! இப்பொ ழுதே எழுதி வைத்துக் கொள்க! என்கிற ரீதியில் நீட்டி முழங்கிப் பிரச்சாரம் செய்ய வாடகை ஒலி பெருக்கிகள் ஏராளமாகப் புழுத்துப் பெருகி விட்டன.

மோடி மேடையில் பேசும் போக்கைக் கவனிப்பவர் களுக்கு ஒன்று தெளி வாகவே புரியும். ஒரு பிரத மருக்கான வேட்பாளர் என்ற பெருங் குணமோ, பண்போ, அடக்கமோ, இன்சொற்களோ அதில் இருப்பதாகச் சொல்ல முடியுமா? பேட்டை தாதா தோற்று விட வேண்டும்;

அந்த அளவுக்கு முகம் முறுக்கேற கண்கள் சிவக்க, மேடையையே தண்டால், பஸ்கி எடுக்கும் இடமாகக் கிடுகிடுக்க வைக்கிறார்; ஒருக்கால் கோட்சே உயிருடன் இருந் தால் இந்தப் பாணியில்தான் இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

பேச்சிலாவது தெளி வான கருத்தோ, சிறப்பான தகவல்களோ உண்டா என் றால் எந்த மண்ணாங்கட்டி யும் கிடையாது.

உளறல் திலகம் என்று வேண்டுமானால் பட்டம் சூட்டலாம். வேதாரண்யத் தில் உப்பு சத்தியாக்கிரகத் திற்கு வ.உ.சி. தலைமை தாங்கினார் என்கிற ஜோக் குகளையெல்லாம் பின் னுக்குத் தள்ளும் வண்ணம் சமீபத்தில் பேசி இருக் கிறார்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசிய சிந்த னையை வளர்க்கும் வகை யில் லண்டனில் இந்தியா ஹவுஸ் அமைப்பை ஏற்படுத் தியவர் சியாமா பிரசாத் முகர்ஜி. அவர் இந்தியப் புரட்சியாளர்களின் குரு என்று கருதப்படுகிறார். 1930ஆம் ஆண்டு உயிரி ழந்த சியாமா பிரசாத் முகர்ஜி, தனது அஸ்தியைப் பத்திரமாக வைத்திருந்து இந்தியா சுதந்திரம் பெற் றதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியி ருந்தார் குஜராத்தின் பெருமை மிகுந்த மைந்தன் சியாமா பிரசாத் முகர்ஜி என்று இடி முழக்கம் செய்தாரே பார்க்கலாம்.

சியாமா பிரசாத் முகர்ஜி என்பவர் பிறந்தது குஜராத் தில் அல்ல; அவர் பிறந்தது கொல்கத்தாவில் -அவர் உயிரிழந்ததோ 1953ஆம் ஆண்டில் - மோடி சொன் னது போல 1930ஆம் ஆண்டில் அல்ல.

இதில் என்ன வேடிக்கை என்றால் அவரால் சொல் லப்பட்டதெல்லாம் சியா மாஜி கிருஷ்ணவர்மா என்ற குஜராத்தைச் சேர்ந்த சமஸ்கிருத பண்டிதரைப் பற்றி; ஆனால் அவர் குறிப்பிட்டதோ அவருக்குச் சம்பந்தமேயில்லாத சியாமா பிரசாத் முகர்ஜியை.

எப்படி இருக்கிறது! எத் தகைய அறிவு ஜீவி இவர். இவரைத் தவிர வேறு யாராவது இப்படி உளறியி ருந்தால் எப்படியெல்லாம் இந்தப் பார்ப்பன ஏடுகள் கேலியும், கிண்டலும் செய் திருக்கும்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


இனப்படுகொலையாளர் ராஜபக்சே அமெரிக்க நாடாளுமன்றக் குழு கண்டனம்


அமெரிக்கப் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் இல்லினாய் மாநில மக் களாட்சிக் கட்சி உறுப் பினர் டேனி டேவிசும், ஒகையோ மாநில குடிய ரசுக் கட்சி உறுப்பினர் பில் ஜான்சன் அவர் களும் இணைந்து நவம் பர் 12, மாலை 2 மணிக்கு அமெரிக்க நாடாளு மன்ற இலங்கை இன, விடுதலைக் குழுவைத் தொடங்கி வைத்தனர்.

தொடக்கத்தில் நடந்த கருத்தரங்கில் இலங்கையின் முன் னாள் அமெரிக்கத் தூதுவர் ஆஷ்லி வில்சு காட்டமாக வெற்றித் திமிரில் ராஜபக்சே வடக்கே சிங்களவர் களைக் குடிஅமர்த்தித் தமிழர்களை அடக்கி ஆளப் பார்க்கின்றார். அவரே ஒத்துக்கொண்ட 13ஆவது தீர்மானத் தையே நிறைவேற்றாமல் நீர்த்துப் போகச் செய் கின்றார். பத்திரிகை மற்ற உரிமைகளைப் பறித்துக் கொலை செய்து பயமு றுத்துகின்றார் என்று எடுத்துக்காட்டுக்களுடன் எடுத்துரைத்தார்.

அடுத்து ஹெரிட் டேஜ் பவுண்டேசன் சமூக அமைப்பின் லிசா கர்டிசு அம்மையார் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் நிலங்கள் அபகரிக்கப் பட்டுள்ளன என்று வழக் குத் தொடர்ந்துள்ளனர். நான்காண்டுகளாக அடுக்கடுக்கான அபக ரிப்புக்களும், குற்றங் களும் நடந்து கொண் டுள்ளன. அமெரிக்கா இதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடி யாது என்றார்.

அரசியல் ஆய்வாளர் நிம்மி கவுரி நாதன் தமிழ்ப் பெண்கள் எவ்வளவு கொடுமைகளுக்கு ஆளாக்கப் படுகின்றனர். பாலியல் கொடுமை கட்டாயக் கருச்சிதைவு, பரத்தையர் ஆக்கப்படும் சீர்குலைவு, தற்கொலை, மன நோய் உண்டாக் குதல் என்று ராணுவத் தினரின் வெறியாட்ட மாகவே 24 மணி நேர மும் நடந்து கொண் டுள்ளது. மூன்றிலொரு பங்கு தமிழ் நிலம் ராணுவத்தினர் எடுத்துக் கொண்டுள்ளனர் என்றார். கண்ணால் பார்க்க முடி யாமல், வாயால் பேச முடியாமல்,நடக்கவும் அஞ்சி வாழ்கின்றனர் என்றார்.

அமெரிக்கன் என்டர் பிரைசு நிறுவனத்தின் சதானந்த் தூமே கருத் தரங்கத்தையும், கேள்வி பதில்களையும் ஒழுங்கு செய்தார்.

நாடாளுமன்ற உறுப் பினர் பில் ஜான்சன் கூறியதாவது: போர் நடந்த போது பாதுகாப் பான இடம் என்று ஒதுக்கி அங்கேயே அப் பாவி மக்களைக் கொன்று குவித்தது போர்க்குற்ற மாகும். ஒளிப்படங் களில் பார்க்கும் காட் சிகள் அதிர்ச்சியூட்டு கின்றன. இவையெல் லாம் கட்டாயம் விசா ரித்துத் தண்டிக்கப் பட வேண்டும். நவநீதம் பிள்ளை அம்மையாரின் அறிக்கை மனித நேயமற்ற செயல்களை, இன்றும் அவை தொடர் வதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.நான் மற்ற உறுப்பினர்களுக்கு இவற்றை எடுத்துச் சொல்லி இந்தக் குழு வின் வேலையைத் தொடங் குவேன் என்றார்.

டேனி டேவிசு அவர் கள் சுனாமிக்குப்பின் தான் அங்கு சென்று இரண்டு அரசுகள் நடந் ததைப் பார்த்தேன். இரண்டு உச்ச நீதி மன் றங்கள், வங்கி மற்ற துறைகளைப் பார்த்தேன். என்னுடன் கூடவே இருந்த நாடா ளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கிருஸ்துமசு அன்று சர்ச்சிலேயே கொல்லப் பட்டார். இளம் பிள் ளைகள், மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய அந்தப் பிள்ளைகள் போர்ப் பயிற்ச்சி வீரர்கள் என்று கொல்லப் பட்டார்கள்.

தமிழர்களின் போராட் டத்தை கருப்பினத்து நான் நன்கு உணர்கின் றேன். இவ்வளவு ஆண்டு கள் கழித்தும் இன்ன மும் அமெரிக்க உள் ளங்கள் முழு விடுதலை உணர்ச்சி பெற வில்லை. மக்கள் மக்களாக வாழக் கட்டாயம் நாம் பாடு பட வேண்டும். இது ஒரு சிறிய முயற்சி. சிறிய முயற்சிகள் தான் பெரிய வெற்றிகளின் ஆரம்பம். மனந்தளராமல் நாம் பாடுபடுவோம். வெற்றி நிச்சயம் என்று சொல்லி முடித்தார்.

- சோம.இளங்கோவன்

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


நிதிஷ்!

செய்தி: குஜராத்தில் மோடி 450 அடி உயரத்தில் படேல் சிலையை அமைக் கிறார். அதற்குப் போட்டி யாக நிதிஷ்குமார் பீகாரில் உலகிலேயே மிகப் பெரிய இந்துக் கோயிலைக் கட்டு கிறார். - செய்தி

சிந்தனை: குளிக்கப் போய் சேற்றில் விழலாமா நிதிஷ்?

தமிழ் ஓவியா said...

மோடியைப் பார்த்து கேட்க முடியாத கேள்வி

மத்திய அரசு நிதி என்பது மக்களின் வரிப் பணமா? அல்லது ராகு லின் தாய்மாமன் வீட்டுச் சீதனமா என்று ராய்ப் பூரில் வினா எழுப்பி யுள்ளார் மோடி.

குஜராத்தில் மோடியால் வளர்ச்சி வளர்ச்சி என்று கூறுகிறார்களே - அதெல்லாம் மோடியின் மாமியார் வீட்டுப் பணமா என்று கேட்க முடியாது. காரணம் கட்டிய மனைவியையே நட்டாற்றில் விட்டவராயிற்றே மோடி!