Search This Blog

17.11.13

கடுகளவு அறிவியல் அறிவு உள்ளவர்கள்கூட இதனை நம்புவார்களா?அட மூடர்களே!

அரசியல் பிரச்சினைகள் என்றால், அணுவைத் துளைத்து ஏழு கடலைத் திணிக்கும் பார்ப்பனர்கள் புராண, இதிகாச சம்பந் தப்பட்ட பிரச்சினைகள் என்றால் புழுப் புழுத்துப் போய் முடைநாற்றம் வீசி னாலும் அவற்றில் கொஞ்சங்கூட அறிவைச் செலுத்தாமல், அந்தக் கேவலச் சகதியை, மூடநம்பிக்கைச் சேற்றை,  சந்தனமாக நினைத்து மார்பிலும், முகத்திலும் அள்ளி அள்ளிப் பூசிக் கொள்வார்கள்.

அறிவியல் நன்கொடை யான கணினிகளையும், அச்சு சாதனங்களையும், பயன்படுத்தி அச்சிடப்படும் இதழ்களில் இவ்வளவுக் கேவலமான, அறிவு கெட்ட சங்கதிகளை எழுதுகி றோமே என்று துளிகூட வெட்கப்படுவது இல்லை.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஒரு நாளிதழ் வெளி யிட்ட ஆன்மீக இதழில்.... 

கைலாய மலையில் தந்தை சிவன், தாய் பார்வதி, தம்பி முருகனுடன் வீற்றிருந்த, யானைத் தலையும் தொந்தி வயிறுமாகக் காட்சியளித்த விநாயகப் பெருமானைப் பார்த்ததும் சந்திரனுக்குச் சிரிப்பு வந்தது. அவன் விநாயகரைப் பார்த்து கேலியாக சத்தம் போட்டு சிரித்து விட்டானாம்.
இதைக் கண்டு கோபமுற்ற விநாயகர் சந்திரா! அழகாக இருக்கிறோம் என்ற ஆணவம் காரணமாகத் தானே உனக்கு என்னைக் கண்டதும் இகழ்ச்சி ஏற் பட்டது. அடக்கமின்றி நகைத்த நீ, உலகத்தில் பிரகாசமின்றி மறைந்து போவாயாக! என்று சாபமிட அதன் காரணமாக, சந்திரனுக்கு தேய்பிறை ஏற்பட்டதாம்.

இதைப் படித்துப் பார்த்தால் வாயால் சிரிக்க முடியுமா? கடுகளவு அறிவியல்  அறிவு உள்ளவர்கள்கூட இதனை நம்புவார்களா? புத்தியைப் பயன்படுத்த தெரிந்தவர்கள் தான் இது போன்ற முட்டாள்தனத்தை அச்சிடுவார்களா?

இதாவது மூடநம் பிக்கை. இன்னொன்றையும் கேளுங்கள் கேளுங்கள்!! அது  இந்து கடவுளின் ஒழுக்கக் கேட்டைத் தோர ணம் கட்டித் தொங்க விடும்.

தேவ குருவாகிய வியாழ பகவானின் சீடன்தான் சந்திரன். அவன் தன் குரு வாகிய வியாழ பகவானின் மனைவியாகிய தாரை என்ற பெண்ணைக் களவுப் புணர்ச்சி செய்ததாகவும், அதனை நேரில் பார்த்து விட்ட வியாழ பகவான் சினங்கொண்டு, சந்திரனின் கலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகக் கடவது என்று சாபம் கொடுத்ததால் தான் தேய் பிறை ஏற்பட்டதாம்.

திருவாளர் சோ வைக் கேட்டுப் பாருங்கள். ஆமாம் அது உண்மைதான் என்று வக்காலத்துப் போட்டு எழுதுவார்.

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக் கியன்; வணங்கு கிறவன் காட்டுமிராண்டி என்று தந்தை பெரியார் சொன்னதன் அருமையும், உண்மையும் எத்தகையது என்பதைப் புரிந்து  கொள்க!

------------------------ மயிலாடன்  அவர்கள் 17-10-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

43 comments:

தமிழ் ஓவியா said...

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற மத்திய அரசுக்குக் கண்டனம்!
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணைகோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
கலைஞர் தலைமையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, நவ.17- காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற மத்திய அரசுக்குக் கண்டனம், இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை கோரி இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், ஈழத் தமிழர் களுக்கான இந்திய அரசின் நிதி உரியவர் களுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்.

தஞ்சை - விளார் பகுதியில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தைச் சிதைத்த ஜெயலலிதா அரசுக்குக் கண்டனம் தெரி வித்தும் இன்று (17.11.2013) காலை சென்னையில் கலைஞர் தலைமையில் நடைபெற்ற டெசோ அமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டெசோ இயக்கத் தலைவர், தி.மு.கழகத் தலைவர், கலைஞர் அவர்கள் தலைமையில், 17-11-2013 இன்று காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில், தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ) கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பினர்களான தமிழர் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமா வளவன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.கழகப் பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் துரை. முருகன், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, அமைப்புச் செய லாளர் டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி., ரவிக் குமார், வழக்கறிஞர்கள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், அசன் முகமது ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விரிவான விவாதத்திற்குப் பிறகு பின்வரும் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன :-

தீர்மானம் : 1 காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற மத்திய அரசுக்குக் கண்டனம்.

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று தலைவர் கலைஞர் அவர்களும், டெசோ அமைப்பும், மற்றும் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும், மத்திய அரசைப் பல முறை வலியுறுத்திய பின்னரும், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக்கூடாது என்று மட்டுமல்லாது, ஒரு துரும்புகூட இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் செல்லக்கூடாது என்று தலைவர் கலைஞர் அவர்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்த பின்னும்; தமிழர்களின் ஒருமித்த உணர்வுகளைப் புறக்கணித்து விட்டு, வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் ஒரு குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல ஆகி விட்டது.

இலங்கை அதிபர் இராஜபக்சே தமிழர் மீது நடத்திய இனப் படுகொலையையும், இன அழிப்பையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்து கனடா நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், மொரீசிய நாட்டின் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம், ட்ரினிடாட் நாட்டின் பிரதமர் கம்லா பெர்சாத் பிசேசார் ஆகியோர் அந்த மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்துப் புறக்கணித்து விட்டனர்.

இலங்கையில் திரு. சம்பந்தம் தலைமையில் இயங்கும் தமிழ் தேசியக் கூட்டணியின் சார்பில் அந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டு மென்று தீர்மானமே நிறைவேற்றியுள்ளனர். மாநாட்டில் கலந்து கொண்ட, இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் அவர்களோ, ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளை நேரில் சுற்றிப் பார்த்து அங்குள்ள தமிழ் மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, நான் என் நிலையை தெளிவுபடுத்துகிறேன்.

காமன்வெல்த் மாநாட்டினை முன்னின்று நடத்து வதை விட, மனித உரிமைகளைக் காப்பதுதான் முக்கியமானது.... நான் மீண்டும் தெளிவாகக் குறிப்பிடுகிறேன். இலங்கை அரசு வருகிற மார்ச் மாதத்திற்குள், தங்களுடைய விசாரணையை முடிக்கவில்லையென்றால்; மனித உரிமைக் குழுவில் எங்களுக்குள்ள உரிமையைப் பயன்படுத்தி, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து - ஒரு முழுமை யான - நம்பகத் தன்மை வாய்ந்த - சுதந்திரமான - வெளிப்படையான சர்வதேச விசாரணையை நடத்திட அய்க்கிய நாடுகளின் மனித உரிமை ஆணை யத்தின் மூலமாக நடவடிக்கை மேற்கொள்வோம்

தமிழ் ஓவியா said...


(“I have made it particularly clear that human rights are more important than hoasting a Common Wealth Summit.....Let me be very clear, if an investigation is not completed by March, then I will use our position on the U.N. Human Rights Council to work with the U.N. Human Rights Commission and call for a full, credible, transparent and independent international investigation into human rights violations and war crimes in Sri Lanka.”) என்று தெரிவித்திருப்பது பாராட்டுக் குரியது மாத்திரமல்லாமல்; நமக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கிறது.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அவர்கள் இலங்கையில் இப்போது வெளியிட்டி ருக்கும் இதே கருத்தைத்தான் 16-3-2013 அன்று, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய கடிதத்தில், இலங்கை அரசின் போர்க் குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், சர்வ தேச மனித உரிமை சட்ட மீறல்கள், சர்வ தேச மனிதாபிமான சட்ட மீறல்கள், தமிழ் இனப் படுகொலை ஆகியவை குறித்து ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான, சர்வதேச, விசாரணை ஆணையம் ஒன்றினை அமைத்திட வேண்டுமென்று வற்புறுத்து கிறோம்.

தமிழ் ஓவியா said...


(Strongly urging establishment of a credible and independent, international Commission of Investigation in a timebound manner into the allegations of war crimes, crimes against humanity, Violations of International Human Rights Law, Violations of International Humanitarian Law and the Crime of Genocide against the Tamil People) என்று குறிப்பிட்டிருக் கிறார்.

ஈழத் தமிழர் பிரச்சினையிலே நெருக்கமான தொடர்பு இல்லாத இங்கிலாந்து நாட்டின் பிரத மரே இந்த அளவிற்கு கருத்துக்களை வெளியிட் டிருக்கும்போது, ஈழத் தமிழர்களுக்காக உண்மையிலேயே குரல் கொடுத்து உதவிக்கு வர வேண்டிய உரிமையும், கடமையும், பொறுப்பும் உள்ள சகோதர நாடான இந்தியா, தமிழர்களின் ஒட்டு மொத்த வேண்டுகோளைப்புறக்கணித்து, இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. சல்மான் குர்ஷித் அவர்களை அந்த மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்ததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

இராஜபக்சேவை சுதந்திரமானதும், நம்பகமா னதுமான சர்வதேச விசாரணைக்கு உட்படுத்திட வேண்டுமென்ற கருத்து பரவி வரும் வேளையில்; காமன்வெல்த் மாநாடு அங்கு நடந்தது அவரைப் பாதுகாக்கின்ற நடவடிக்கையாக அமைந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

தமிழக மீனவர்கள் மீது நாள்தோறும் தாக்குதல் நடத்தியும், அவர்தம் படகுகளை நாசப்படுத்தியும், அவர்களைக் கைது செய்து சிறையிலடைத்தும், துப்பாக்கிச் சூடு நடத்தியும், சிங்களவர்களும் இலங் கைக் கடலோரக் காவல் படையினரும் இணைந்து கட்டவிழ்த்து விடும் கொடுமைகளினால், இதுவரை 880 மீனவ சகோதரர்கள் பலியாகியிருக்கிறார்கள். சீனாவோடும், பாகிஸ்தானோடும் கைகுலுக்கிக் கொண்டு, இந்தியாவைப் பகடைக் காயாகப் பயன்படுத்திடும் தந்திரத்தைக் கையாளுகிறது இலங்கை.

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டிற்கு பலமுனைகளிலும் எதிர்ப்புத் தெரிவித் திருக்கின்ற நிலையில்; போர்க் குற்றங்களுக்காகவும், மனித உரிமை மீறல்களுக்காகவும் சர்வதேச விசா ரணைக்கு உட்படுத்த வேண்டுமெனக் கருதப்படு கின்ற இராஜபக்சே தலைமையில் கூடிய மாநாட் டிற்கு மத்திய அமைச்சர் திரு. சல்மான் குர்ஷித் தலைமையில் இந்தியா சென்றது சரியா என்பதுதான் இன்று தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ள வினா.

பிரச்சினையின் பரிமாணங்களைப் புரிந்து கொண்டோ அல்லது புரிந்து கொள்ளாமலோ, மத்திய அரசு; டெசோ இயக்கத்தின் தலைவர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளையும், மற்றும் தமிழகத்திலே உள்ள இயக்கங்களின் வேண்டு கோளையும் ஏற்காமல், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொண்டது; தமிழ்ச் சமுதாயத்தை அறவே புறக்கணித்து மனம் வருந்தச்செய்கின்ற நடவடிக்கை மட்டுமல்லாமல்; தமிழினத்தை அழித் திட முனையும் இராஜபக்சேக்கு; தோள் கொடுத்துத் தூக்கி நிறுத்துகின்ற நடவடிக்கையும்ஆகும் என்றே இக்கூட்டம் கருதுகிறது.

தீர்மானம் : 2
நாடாளுமன்றத்தில் இந்திய அரசு தீர்மானம்

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின்தலைவர்கள் வெளிப்படை யாகத் தெரிவித்திருக்கும் கருத்துக்களையும், உலகத் தமிழர்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு, இனியாவது மத்திய அரசு,இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து சர்வ தேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 3
இலங்கை வடக்கு, கிழக்கு, மாகாண அரசுகளுக்கு அனைத்து அதிகாரங்களும் கிடைத்திட வேண்டும்.

இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் முடிந்து முதல்வர்விக்னேஸ்வரன் தலைமையில் மாகாணக் கவுன்சில் அமைந்துள்ளது. இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தின்படி பல அதிகாரங்கள் தமிழர்களுக்கு வழங்கப்படும் என்பது இலங்கையில் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்து வருகிறது. 13ஆவது சட்டத் திருத்தத்தின்படி நில நிர்வாகம் (Land Administration), உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காவல் துறை நிர்வாகம்

அனைத்தும் இராஜபக்சே அரசின் கையில் உள்ளது. மாகாணக் கவுன்சிலைக் கூட்டுவதும், கலைப்பதும் இராஜபக்சே அரசின் மாகாண ஆளுநரின் கைகளில் உள்ளது. முதல்வர் விக்னேஸ் வரன் தலைமையில் உள்ள அமைச்சரவையின் பரிந்துரைகளை ஏற்பது அல்லது நிராகரிப்பதற் கான அதிகாரம் மாகாண ஆளுநருக்கும் இராஜ பக்சேக்கும்தான் உள்ளது.

தமிழ் ஓவியா said...

இந்த இறுக்கமான நிலையில் அங்குள்ள தமிழர்களுடைய எதிர்பார்ப் புக்கு ஏற்றவாறு அரசு நலத்திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்தமுடியும்? வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப் போன அரசி யல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப் பட்டுள்ளன.

அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு அரசியல் தீர்வு அமைய, வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையில் பொது வாக் கெடுப்பு நடத்த வேண்டுமென்பதும்; தமிழினப் படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மீது நம்பகமானதும், சுதந்திரமானதுமான சர்வதேச விசாரணை வேண்டும் என்பதும்தான் டெசோ அமைப்பின் நிலைப்பாடாக இருந்தாலும்;

இடைக்கால நிவாரணமாக முழுமையான அதிக ரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில், 13ஆவது சட்டத் திருத்தம் அமையவேண்டும் என்று இந்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்தி தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றிடவாவது முன்வர வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்து கின்றது.

தீர்மானம் : 4
ஈழத்தமிழர்களுக்கான இந்திய அரசின் நிதி உரியவர்களுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்திய அரசு பல்வேறு வகையில் ஈழத் தமிழர் களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களும், பொரு ளாதார உதவிகளும் அளித்தும், இலங்கை அரசு அதை முறையாக தமிழர் பகுதியில் பயன்படுத்த வில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

2009ஆம் ஆண்டிலிருந்தே ரூ. 577 கோடி அளவுக்கான திட்டங்களை மானிய உதவியாக இந்தியா வழங்கியது. மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் கூடுதலாக ரூ. 1,300 கோடி அளவிற்குச் செலவழிக் கவும் உறுதி அளிக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் வடக்கு ரயில்வே திட்டத் தினை நிறைவேற்ற ரூ. 4,000 கோடியைக் கடனுத வியாக வழங்கவும் இந்தியா ஒப்புக் கொண்டதோடு, அத்தொகையில் இலங்கை அரசினால் இதுவரை ரூ. 1,685 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


ஆனால் இலங்கை அரசு, இலங்கையின் தென்கோடியில் உள்ள சிங்களவர்கள் வாழும் காலி நகரத்தில் புகைவண்டி நிலையம் கட்டுவதற்கு, இந்திய அரசு வழங்கிய நிதியைப் பயன்படுத்தி உள்ளது. அதுபோலவே சிங்களவர்கள் வாழும், சீனாவின் பிடியில் உள்ள ஹம்பன்தோட்டா நகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு இந்தியா தமிழர் பகுதிகளுக்காக வழங்கிய அதிநவீனக் கருவிகளை இலங்கை அரசு பயன்படுத்தி உள்ளது.

வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலம், தொழில், கல்வி, அடிப்படைக் கட்டமைப்பு என, பல வகையான திட்டங்களுக்கு இந்திய அரசு அளித்த தொகை முழுமையாக ஈழத் தமிழர்களுக்குச் சென்றடையவில்லை. இதையும் இந்திய அரசு கண்டு கொள்ளாமல் பாராமுகமாகவே இருக்கின்றது. இந்திய அரசு இன்னின்ன உதவிகள் வழங்கி யுள்ளதென ஏடுகளில் ஒரு பக்க விளம்பரம் வெளி யிட்டுள்ளது.

ஆனால் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப் பட்டுள்ள திட்டங்களின் பலன் ஈழத் தமிழர் களுக்குக் கிடைத்திடவில்லை.

இப்பிரச்சினை குறித்து இந்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து, அவற்றின் முழுப்பயனும் ஈழத் தமிழர்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 5
முள்ளிவாய்க்கால் முற்றத்தைச் சிதைத்த ஜெயலலிதா அரசுக்குக் கண்டனம்.

தஞ்சை-விளார் பகுதியில் அமைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் துயரத்தின் நினைவுச் சின்னமான முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவரை இடித்து, அங்கே உருவாக்கப்பட்டிருந்த பூங்கா வையும் அழித்துள்ளது ஜெயலலிதா அரசு.

தலைவர் கலைஞர் அவர்கள் இந்த இரட்டை நிலை குறித்து இது வழக்கமான செயல்களில் ஒன்று என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று. பழந்தமிழ்ச் சின்னங்களையும், வரலாற்றுப் பதிவுகளையும் ஒழிப்பதே தங்கள் கடமை என்று அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. அரசு எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவரை இடித்துத் தகர்த்து, பூங்காவையும் அழித்திருக்கிறது.

ஈழத் தமிழர் துயரத்தின் நினைவுச் சின்னமான முள்ளி வாய்க்கால் முற்றத்தைச் சிதைத்ததன் மூலம் ஜெயலலிதாவின் வழக்கமான கபட நாடகம் மீண்டும் ஒரு முறை

அம்பலமாகியிருக்கிறது. அ.தி. மு.க. அரசின் இந்தத் தமிழின விரோத நடவடிக் கையை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ் ஓவியா said...

ஒரத்தநாட்டில் (51 பவுன்) ரூ.12,85,000/- தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது
பெரியார் நாடு இயக்க வரலாற்றில் ஒரு பொன்னேடு; அது நிலைத்திருப்பது சாதாரணமானதல்ல!
பெரியார் உலகம் பவுன் அளிப்பு விழாவில் தமிழர் தலைவர் பெருமிதம்

ஒரத்தநாடு, நவ.17- பெரியார் நாடு (ஒரத்தநாடு) இயக்க வரலாற்றில் ஒரு பொன்னேடு; அது நிலைத்திருப்பது சாதாரணமானதல்ல என்று பெரியார் உலகம் பவுன் அளிப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் உரையாற்றினார்.

ஒரத்தநாட்டில் நடைபெற்ற பெரியார் உலகத் திற்குப் பவுன் வழங்கும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

பொதுவாக பெரியார் நாடு என்று அழைத் தது எவ்வளவு பெரிய பொருத்தம் இந்த ஒரத்த நாட்டை என்று காட்டக்கூடிய வண்ணம், மீண்டும் அதை இந்த நிகழ்ச்சியின்மூலமாக நீங்கள் உறுதி செய்திருக்கின்றீர்கள். அதற்காக, நாடு முழுவதும் உள்ள பெரியார் தொண்டர் களின் சார்பாக, திராவிடர் கழகத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த பாராட்டுதல்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள் கிறோம்.

65 பவுனுக்கான நிதி!

அனைத்து இயக்கத் தோழர்களும், கொஞ்சம் கூட மனதில் எந்தவிதமான மன ஒதுக்கீடும் இல்லாமல், அனைவரும் தேனீக்களைப் போல சுற்றிச்சுற்றி சுழன்று, சேகரித்து இங்கே 50 பவுன் தருவதாகச் சொன்னார்கள்; ஆனால், இங்கே கணக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்;

அது என்னவென்று சொன்னால், 65 பவுனுக்கான நிதியை இங்கே அளித்திருக்கிறார்கள். என் னுடைய கணக்கில் இன்னும் 35 பவுன் பாக்கி இருக்கிறது என்பதை தெளிவாகச் சொல்லி, 100 பவுனை பெரியார் நாடே கொடுத்தது என்ற பெருமையை வருகிற 2 ஆம் தேதி சொல்ல வேண்டும். அதுதான் மிக முக்கியம்; அதை நிச்சயமாக நீங்கள் செய்வீர்கள்.

பெரியார் நாட்டைப் பொறுத்தவரையில், இங்கே உரையாற்றிய அத்தனை பேரும் சொன் னார்கள், ஜெகன்னாதன் அவர்களானாலும், அருணகிரி அவர்களானாலும், அதேபோல, குணசேகரன் அவர்களானாலும், ஜெயக்குமார் அவர்களானாலும், இங்கே உரையாற்றிய செயல்வீரர்களான நம்முடைய நண்பர்கள் அத்தனை பேரும் சொன்னார்கள், எந்தக் கட்டளையிட்டாலும் அதனை சிறப்போடு நாங்கள் செய்து முடிப்போம் என்று.

தமிழ் ஓவியா said...

அதுதான் பெரியார் நாட்டினுடைய தனி முத்திரை; தனிச் சிறப்பு. என்றைக்கும் மாறாத, நாங்கள் மனதில் உற்சாகம்கொண்டதன் காரணமாகத்தான் இங்கே வந்திருக்கிறேன்.

புயல் வருகிறது என்று சொன்னார்கள்; நிகழ்ச்சி நடக்குமா என்று சொன்னார்கள்; எனக்கு இருந்த கவலையெல்லாம் 50 பவுன் குறைந்துவிடக் கூடாதே? அதனைப் பெற்றுக் கொள்ள முடியாமல் நாம் செல்லக்கூடாதே? காலையில் இருந்து அமர்ந்திருக்கின்றோமே, என்றெல்லாம் நினைத்த நேரத்தில், வந்த புயல்கூட, மதியமே கரையைக் கடந்துவிட்டது என்று சொன்னால்,
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும் என்று அறிவாசான் அவர்கள் அந்தக் குறளைச் சொல்வார்கள்.

நமக்கு புயல் அடித்தாலும் சரி, சுனாமி வந் தாலும் சரி ஈரோட்டு பூகம்பத்தினுடைய விளைவை யாராலும் தடுக்க முடியாது; அத னுடைய தாக்கம் சாதாரணமானதல்ல என்று காட்டக்கூடிய வண்ணம் மிகச் சிறப்பாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கொள்கைப் பிரச்சாரமாக நடைபெறுவதுதான்...

நீண்ட இடைவெளிக்குப்பின் இங்கே பொது மக்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு, அதுவும் மூன்றாண்டுகளுக்கு முன் தேர்தல் பிரச்சாரத் தில்தான் நான் கடைசியாக உரையாற்றிய கூட்டம்; அது கணக்கிலே எடுத்துக்கொள்ளப் பட முடியாத ஒரு கூட்டம். கொள்கைப் பிரச் சாரமாக நடைபெறுவதுதான் நம்முடைய இயக்கக் கணக்கிலே வரக்கூடிய ஒரு சிறப்பான நிகழ்ச்சியாகும்.

தமிழ் ஓவியா said...

ஆங்காங்கே படிப்பகங்கள் திறக்கப்பட்டு, ஆங்காங்கே மணவிழாக்கள் நடத்தப்பட்டு இப்படி பல்வேறு நிகழ்வுகள் இடையில் நடை பெற்றிருக்கின்றன. அடிக்கடி நான் இந்தப் பகுதிக்கு வந்திருக்கிறேன் அல்லது இந்தப் பகுதி யைத் தாண்டிச் சென்றிருக்கிறேன் என்றெல்லாம் இருந்தாலும், நீண்ட நாள் ஆகிவிட்டதே என்ப தைக் கருதித்தான் நான் தேதியைக் கொடுத்தேன். வெறும் 50 பவுனுக்காக அல்ல; நான் வந்தாலும் கொடுக்கப் போகிறீர்கள்; வராவிட்டாலும் கொண்டுவந்து கொடுப்பீர்கள். ஆனால், இது ஒரு நல்ல பிரச்சாரமாக அமையும் என்று நினைத் தேன். மழைக்காலம் என்பதால்தான், இந்த நிகழ்ச்சியை மண்டபத்தில் ஏற்பாடு செய்திருக் கிறார்கள்.

புயல் அறிவிப்புகள், தொடர் மழை என்று இல்லையானால், பெரிய நிகழ்ச்சியாக, பொது மக்கள் அதிகமாகக் கூடியிருக்கின்ற நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி அமைந்திருக்கும். இருந்தாலும் பரவாயில்லை, இன்னொரு முறை நிச்சயமாக சில மாதங்களுக்குள்ளாக, மறுபடியும் பொது இடத்தில் விரிவாகப் பேசக்கூடிய வாய்ப்பை நான் பெறுவேன் என்று நினைக்கிறேன்.

அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர் களின் கருத்துகள் சாதாரணமான கருத்துகள் அல்ல; காலத்தை வென்றவை; வருங்காலத்தில் நிலைத்து நிற்கக்கூடியவை; எப்படி விஞ்ஞானம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு, புதிய புதிய பரிமாணங்களைக் கொடுத்துக்கொண்டி ருக்கிறதோ, அதுபோல, அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனை, மக்கள் மத்தியில், அவர்களுடைய வாழ்க்கையில் புதிய மாறுதல்களை உருவாக்கி, புதிய இணைப் புகளை ஏற்படுத்தி, புதிய வடிவங்களை உரு வாக்கி, புதிய பரிமாணங்களைத் தெளிவாகத் தரும்.

ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தலைவர்

காரணம் என்னவென்றால், உலகத்தில் தோன் றிய பல சிந்தனையாளர்கள், உலக வரலாற்றில் தலைவர் தந்தை பெரியாரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, பெரியார் மிகப்பெரிய அளவிற்கு 95 அடி சிலையாக மட்டுமல்ல; 135 அடி உயரத்தில் நிற்கக்கூடியவராக மட்டுமல்ல; அந்த வானத்தைத்தொடும் அளவிற்கு, சிந்தனை யில் உயர்ந்து நிற்கக்கூடியவர். அதனுடைய அடித்தளம் என்னவென்று சொன்னால், அவர் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தலைவர்.

மற்ற வர்களோடு எளிதில் ஒப்பிட்டுவிட முடியாது; ஒப்பிட்டுப் பார்த்தால், பெரியார் தனித்து நிற்பார் அங்கேயும்கூட. அதேபோலத்தான், அவரை மிக்கார், அவரைத் தாண்டி புரட்சி கரமாக சிந்தித்தவர்கள் உண்டா? என்றால், வரலாற்றில் தேடித்தேடிப் பார்த்தாலும் இருப்ப தில்லை.

பேராசிரியர் பெருமாள் அவர்கள்

இந்தப் பகுதியைச் சார்ந்தவர், உங்களில் பலருக்குத் தெரியும்; பேராசிரியர் பெருமாள் அவர்கள் ஆவார்கள். அவர் கல்வித்துறையில் தலைவராக இருந்தவர், மிகப்பெரிய அளவிற்கு. கல்வித் துறையின் தலைவராக இந்தப் பகுதிதான் அவர்களுடைய வாழ்வு நேரம். அப்படிப்பட்ட பகுதியைச் சார்ந்தவர்கள், நல்ல ஆங்கிலப் புலமை பெற்றவர். அவருடைய தந்தையார் மிகப் பெரிய அளவிற்கு வாய்ப்பைப் பெற்றவர்.

அவர் களால் உருவாக்கப்பட்ட பேராசிரியர் பெருமாள் அவர்கள், மறைந்தும், மறையாமலும் நம்முடைய நினைவிற்குரியவராக இன்றைக்கும் இருக்கக் கூடியவர். அவர் இந்தப் பகுதியைச் சார்ந்த நிலை யில், அவர் படித்தது எல்லாம் இலங்கையில். ஆங்கில வழிக் கல்வி முறையில்தான். எனவே, ஆங்கிலத்தில் சிறப்பாக எழுதக்கூடியவர்.

அப்படிப்பட்ட அவர் ஓய்வு பெற்ற நிலையில், அவரே முன்வந்து, நான் ஓய்வு பெற்ற நிலையில், பெரியாரை ஆழமாகப் பார்த்தேன்; நீண்ட காலமாக நான் படித்து வருகிறேன். உலக சிந்தனையாளர்களோடு பெரியாரை ஒப்பிட்டு, ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன்; ஆனால், உலக சிந்தனையாளர்களின் சிந்தனையும், பெரியாரின் சிந்தனையும் ஒப்பிட்டுப் பார்த்து, பெரியாரின் சிந்தனை சாதாரணமானதல்ல; ஆனால், மற்றவர் களின் சிந்தனை சாதாரணம்; பெரியாரின் சிந்தனை அசாதாரணமானது;

ஒப்பிடப்பட முடியாத சிந்தனை என்று அவர் எழுதிய நூலில் சொல்லியிருக்கிறார். அவர் எழுதிய ஆங்கில நூலில் எழுதியிருக்கிறார். அதனுடைய தமிழாக் கத்தை அண்மையில் வெளியிட்டோம்; உலக தத்துவ சிந்தனையாளர்களும், தந்தை பெரியார் அவர்களும் என்று சொல்லக்கூடிய இந்த நூல் சாதாரணமான நூல் அல்ல; மிக ஆழமான நூலாகும்.
எனவே, இந்த நூலை நம்முடைய டாக்டர் காளிமுத்து அவர்கள், என்னுடைய அன்பான வேண்டுகோளுக்கிணங்க, மொழி பெயர்த்தார் கள். நம்முடைய இளைஞர்கள் இதுபோன்ற நூல்களைப் படிக்கவேண்டும். பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள நூலா கும் இது. இதில் அவர்கள் மிக அழகாக எடுத்துச் சொல்லும்பொழுது,யார் யாரை ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் என்கிறபொழுது,

தமிழ் ஓவியா said...

ஆங்காங்கே படிப்பகங்கள் திறக்கப்பட்டு, ஆங்காங்கே மணவிழாக்கள் நடத்தப்பட்டு இப்படி பல்வேறு நிகழ்வுகள் இடையில் நடை பெற்றிருக்கின்றன. அடிக்கடி நான் இந்தப் பகுதிக்கு வந்திருக்கிறேன் அல்லது இந்தப் பகுதி யைத் தாண்டிச் சென்றிருக்கிறேன் என்றெல்லாம் இருந்தாலும், நீண்ட நாள் ஆகிவிட்டதே என்ப தைக் கருதித்தான் நான் தேதியைக் கொடுத்தேன். வெறும் 50 பவுனுக்காக அல்ல; நான் வந்தாலும் கொடுக்கப் போகிறீர்கள்; வராவிட்டாலும் கொண்டுவந்து கொடுப்பீர்கள். ஆனால், இது ஒரு நல்ல பிரச்சாரமாக அமையும் என்று நினைத் தேன். மழைக்காலம் என்பதால்தான், இந்த நிகழ்ச்சியை மண்டபத்தில் ஏற்பாடு செய்திருக் கிறார்கள்.

புயல் அறிவிப்புகள், தொடர் மழை என்று இல்லையானால், பெரிய நிகழ்ச்சியாக, பொது மக்கள் அதிகமாகக் கூடியிருக்கின்ற நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி அமைந்திருக்கும். இருந்தாலும் பரவாயில்லை, இன்னொரு முறை நிச்சயமாக சில மாதங்களுக்குள்ளாக, மறுபடியும் பொது இடத்தில் விரிவாகப் பேசக்கூடிய வாய்ப்பை நான் பெறுவேன் என்று நினைக்கிறேன்.

அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர் களின் கருத்துகள் சாதாரணமான கருத்துகள் அல்ல; காலத்தை வென்றவை; வருங்காலத்தில் நிலைத்து நிற்கக்கூடியவை; எப்படி விஞ்ஞானம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு, புதிய புதிய பரிமாணங்களைக் கொடுத்துக்கொண்டி ருக்கிறதோ, அதுபோல, அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனை, மக்கள் மத்தியில், அவர்களுடைய வாழ்க்கையில் புதிய மாறுதல்களை உருவாக்கி, புதிய இணைப் புகளை ஏற்படுத்தி, புதிய வடிவங்களை உரு வாக்கி, புதிய பரிமாணங்களைத் தெளிவாகத் தரும்.

ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தலைவர்

காரணம் என்னவென்றால், உலகத்தில் தோன் றிய பல சிந்தனையாளர்கள், உலக வரலாற்றில் தலைவர் தந்தை பெரியாரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, பெரியார் மிகப்பெரிய அளவிற்கு 95 அடி சிலையாக மட்டுமல்ல; 135 அடி உயரத்தில் நிற்கக்கூடியவராக மட்டுமல்ல; அந்த வானத்தைத்தொடும் அளவிற்கு, சிந்தனை யில் உயர்ந்து நிற்கக்கூடியவர். அதனுடைய அடித்தளம் என்னவென்று சொன்னால், அவர் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தலைவர்.

மற்ற வர்களோடு எளிதில் ஒப்பிட்டுவிட முடியாது; ஒப்பிட்டுப் பார்த்தால், பெரியார் தனித்து நிற்பார் அங்கேயும்கூட. அதேபோலத்தான், அவரை மிக்கார், அவரைத் தாண்டி புரட்சி கரமாக சிந்தித்தவர்கள் உண்டா? என்றால், வரலாற்றில் தேடித்தேடிப் பார்த்தாலும் இருப்ப தில்லை.

பேராசிரியர் பெருமாள் அவர்கள்

இந்தப் பகுதியைச் சார்ந்தவர், உங்களில் பலருக்குத் தெரியும்; பேராசிரியர் பெருமாள் அவர்கள் ஆவார்கள். அவர் கல்வித்துறையில் தலைவராக இருந்தவர், மிகப்பெரிய அளவிற்கு. கல்வித் துறையின் தலைவராக இந்தப் பகுதிதான் அவர்களுடைய வாழ்வு நேரம். அப்படிப்பட்ட பகுதியைச் சார்ந்தவர்கள், நல்ல ஆங்கிலப் புலமை பெற்றவர். அவருடைய தந்தையார் மிகப் பெரிய அளவிற்கு வாய்ப்பைப் பெற்றவர்.

அவர் களால் உருவாக்கப்பட்ட பேராசிரியர் பெருமாள் அவர்கள், மறைந்தும், மறையாமலும் நம்முடைய நினைவிற்குரியவராக இன்றைக்கும் இருக்கக் கூடியவர். அவர் இந்தப் பகுதியைச் சார்ந்த நிலை யில், அவர் படித்தது எல்லாம் இலங்கையில். ஆங்கில வழிக் கல்வி முறையில்தான். எனவே, ஆங்கிலத்தில் சிறப்பாக எழுதக்கூடியவர்.

அப்படிப்பட்ட அவர் ஓய்வு பெற்ற நிலையில், அவரே முன்வந்து, நான் ஓய்வு பெற்ற நிலையில், பெரியாரை ஆழமாகப் பார்த்தேன்; நீண்ட காலமாக நான் படித்து வருகிறேன். உலக சிந்தனையாளர்களோடு பெரியாரை ஒப்பிட்டு, ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன்; ஆனால், உலக சிந்தனையாளர்களின் சிந்தனையும், பெரியாரின் சிந்தனையும் ஒப்பிட்டுப் பார்த்து, பெரியாரின் சிந்தனை சாதாரணமானதல்ல; ஆனால், மற்றவர் களின் சிந்தனை சாதாரணம்; பெரியாரின் சிந்தனை அசாதாரணமானது;

ஒப்பிடப்பட முடியாத சிந்தனை என்று அவர் எழுதிய நூலில் சொல்லியிருக்கிறார். அவர் எழுதிய ஆங்கில நூலில் எழுதியிருக்கிறார். அதனுடைய தமிழாக் கத்தை அண்மையில் வெளியிட்டோம்; உலக தத்துவ சிந்தனையாளர்களும், தந்தை பெரியார் அவர்களும் என்று சொல்லக்கூடிய இந்த நூல் சாதாரணமான நூல் அல்ல; மிக ஆழமான நூலாகும்.
எனவே, இந்த நூலை நம்முடைய டாக்டர் காளிமுத்து அவர்கள், என்னுடைய அன்பான வேண்டுகோளுக்கிணங்க, மொழி பெயர்த்தார் கள். நம்முடைய இளைஞர்கள் இதுபோன்ற நூல்களைப் படிக்கவேண்டும். பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள நூலா கும் இது. இதில் அவர்கள் மிக அழகாக எடுத்துச் சொல்லும்பொழுது,யார் யாரை ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் என்கிறபொழுது,

தமிழ் ஓவியா said...

பெரியார் தனித்து நிற்கிறார்!

பலரை, பல கோணத்தில் ஒப்பிட்டுச் சொல்லி யிருக்கிறார். அவர் ஆய்ந்து பார்த்து, பெரியார் தனித்து நிற்கிறார் என்று சொல்லக்கூடிய அளவில், அவருடைய ஒப்பீடு சாதாரணமான ஒப்பீடாக நிகழவில்லை. அதனை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அந்த வகையில், இந்த ஒப்பீடு என்பது ஒவ்வொரு துறையிலும், தனித் தனியாக அவர்கள் ஒப்பிட்டு, ஒவ்வொரு அறிஞர் களையும் இந்த நூலில் சுட்டிக்காட்டியிருக் கிறார்கள்.
குறிப்பாக, அறிவின் சிகரம் வால்டர், அறிஞர் மீட்சே என்று பல அறிஞர்களையெல்லாம் ஒப் பிட்டு பார்த்து, மார்க்சையும் ஒப்பிட்டுப் பார்த் திருக்கிறார்கள். கடைசியாக, அவர்கள் பல்வேறு அறிஞர்களோடு ஒப்பிடும்பொழுது, சங்கரரும், பெரியாரும் - இந்த சங்கரர் அல்ல; சங்கரர் என்பவர் தத்துவங்களை உருவாக்கிய ஒரு பிலாசபி என்று சொல்லக்கூடிய ஒரு சங்கராச் சாரி; அவர்தான் புத்தருக்கு எதிராக வந்து, புத்தர் தத்துவத்தால் ஏற்பட்ட சமத்துவம் இவைகளுக் கெல்லாம் மாறானவர்; அப்படிப்பட்டவரோடு கூட பெரியாரை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார்.

இன்றைக்குப் பெரியாருடைய கொள்கைகள் தேவை!

பேராசிரியர் பெருமாள் அவர்கள் பொது வானவர்; அவர் இயக்கத்துக்காரருமல்லர்; இயக்கத்தைச் சார்ந்தவருமல்லர்; பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பாளருமல்லர்; ஆனால், அவரே முன்வந்து அற்புதமான ஆங்கிலத்தில் அந்நூலை எழுதியிருக்கிறார் என்கிறபொழுது நான் வியந்துபோனேன். சில கருத்துகள் மாறு பட்ட கருத்துகளாகக்கூட இருக்கலாம்; அது அவருடைய கண்ணோட்டம்.

தமிழ் ஓவியா said...

ஒரு பல்கலைக் கழகத்தில் ஒப்பீடு என்று வருகிறபொழுது, எல்லாக் கருத்துகளையும் நாம் ஏற்றுக்கொண் டோம் என்று சொல்ல முடியாது. அந்த வகையில், அய்யா அவர்களுடைய பணி என்பது எப்படிப்பட்டது. இனிமேல் காலங்காலமாக அது உணரப்படும். சில தலைவர்கள், இந்தியா வில் வாழ்ந்தவர்கள் என்று சொன்னால், அவர் கள் வாழ்நாளில் விளம்பர வெளிச்சத்தில் இருந் தார்கள்; மிகப்பெரிய அளவில் மதிக்கப்பட்டார் கள். ஆனால், வாழ்நாளுக்குப் பிறகு, அவர்களைப் பற்றிய நினைவே இல்லை பல பேருக்கு. நினை வூட்ட வேண்டிய அளவிற்கு இருக்கிறது; முக்கி யத்துவம் குறைந்துவிட்டது.

காரணம், காலங் காலமாக நினைக்கக்கூடிய அளவிற்கு இல்லை. புரட்சிகரமான சிந்தனையாளர்கள் என்று சொன்னால், அவர்களுக்கு அளவுகோல் எது என்னவென்று சொன்னால், வாழ்நாளில் அவர் களுக்கு எதிர்ப்பு இருக்கும்; வாழ்நாளில் அவர்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருப் பார்கள். அவர்கள் மறைந்த பிறகு, அவர்களு டைய கொள்கைகளைத் தவிர நமக்கு விடியல் இல்லை என்ற முடிவிற்கு வருவார்கள்.

அப்படிப் பட்ட நிலையில் இன்றைக்கு உலகளாவிய நிலை யில், பெரியார் வாழ்ந்த காலத்தில் எதிர்ப்போடு இருந்தார்; அவர் மறைந்தார் உடலால் என்று சொல்லக்கூடிய காலகட்டத்தில், இன்றைக்குப் பெரியாருடைய கொள்கைகள் தேவை, தேவை என்று அனைத்துத் தரப்பினரும் நினைக்கிறார் கள். இந்தியாவினுடைய பல்வேறு பகுதிகளில், வட இந்தியா வரையில், அந்தக் கருத்துகள் வந்திருக்கின்றன.

பெரியார் உலகத்திற்கு ஒரத்தநாடு ஒன்றியம் சார்பாக ரூ. 16,45,000/- லட்சம் வழங்கப்பட்டது

உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் கழக தலைவரிடம் பெரியார் உலகம் அமைய இதுவரை 65 பவுனுக்கான தொகை ரூ. 16,45,000/- லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கழக தோழர்களின் உழைப்பை கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் வெகுவாகப் பாராட்டி, உழைத்த தோழர்களுக்கு பயனாடை அணிவித்தார்.

இது முதல் தவணைதான் பெரியார் உலகம் அமையும் வரை எங்களது பணி தொடரும் என கழகப்பொறுப்பாளர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அறிவித்தனர்.

குழந்தைகளுக்கு அழகிரிசாமி என்று பெயர் வைத்தார்கள்!

தமிழ் ஓவியா said...

ஜாதி வாதம், மத வாததத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகின்ற இந்தக் காலகட்டத்தில், பெரியார் ஒருவர்தான் அதற்குச் சரியான விடை யளிப்பவர் என்பதை மிகத்தெளிவாக மற்றவர் கள் இன்றைக்கு நினைக்கிறார்கள். ஆகவே, பெரியாருடைய விடை என்பதிருக்கிறதே, எப்படி ஒரு மருந்து வேலை செய்யுமோ, நோய் அதிகமான நேரத்தில் சிறப்பான மருந்துக்குரிய அந்த வாய்ப்பைப் பெறுவோமா - அதுபோலத் தான் - அதைத்தான் தந்தை பெரியாருடைய கரம் பிடித்து - அந்தக் காலத்தில் சுயமரியாதை இயக்கத் தொண்டனாக, தோழனாக, பேச்சாள னாக, பெரியார் நாட்டிற்குப் பக்கத்தில் இருப் பவர் என்று பெருமைப்பட்ட பட்டுக்கோட்டை அண்ணன் அழகிரிசாமி அவர்கள். அவர்களு டைய பெயரால்தான், நம்முடைய இயக்கத்தவர் களின் குழந்தைகளுக்கு அழகிரிசாமி என்று பெயர் வைத்தார்கள்.

பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்கள், பல ஆண்டுகளுக்கு முன்னால், 1947 ஆம் ஆண்டு உரையாற்றியிருக்கிறார்கள்.

இதோ பெரியாரில் பெரியார் என்ற தலைப்பில் பல பதிப்புகளாக வந்திருக்கிறது. இயக்கத்து இளைஞர்கள், செயல்வீரர்கள், தோழர்கள் இதனை ஒரு பாடப் புத்தகம்போல திரும்பத் திரும்பப் படிக்கவேண்டும்.

பெரியாரில் பெரியார்!

அண்ணன் அழகிரி அவர்கள் பெரியாரைப் பார்த்த பார்வையே வேறு; அவர்களின் பார்வை யில் பெரியாராக மட்டும் அவர்கள் தோன்ற வில்லை; பெரியாரில் பெரியார்; அதுதான் மிகச் சிறப்பு என்று சொல்லக்கூடிய வகையில், அவர் கள் திருவண்ணாமலையில் பெரியார் உருவப் படத்தினைத் திறந்து வைத்து 67 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் ஆற்றிய உரை இப்பொழுதும் ஜீவனுள்ள உரையாகும்.

இப்பொழுதுகூட ஏன் பெரியார் உலகம் தேவைப்படுகிறது? ஏன் பெரியார் உலகம் என்ற ஒரு முயற்சியை நாம் எடுத்து, பல கட்டங்களாக அதனைப் பிரித்து, பெரியாருடைய 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிற்குமுன் அந்தப் பணியினை முழுமை யாகச் செய்து முடிப்போம் என்ற ஒரு நீண்ட திட்டத்தை, பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள திட்டமாக இருந்தாலும், அதனைச் செய்வோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருப்ப தற்கு, என்ன அடிப்படை? எதற்காக பெரியாருக்கு இவ்வளவு பெரிய சிலை வைக்கவேண்டும்?

பூஜை செய்வதற்கா? புனஸ்காரம் செய்வதற்கா? அல்ல, நம்முடைய அறிவு, ஆற்றல், திறன், புதிய சிந்தனை கள், புதியதோர் உலகம் செய்வோம் என்று சொல்லக்கூடிய அந்த உணர்வு இருக்கிறதே, அந்த உணர்வினை எப்படிப்பட்ட நிலையில் பெற்றிருக்கிறோம் என்று சொல்கிற நேரத்தில்,

அண்ணன் அழகிரியின் உரையைக் கேளுங் கள்:

நம் நாட்டிலும், ஏனைய நாடுகளிலும் எத்தனையோ பணக்காரர்கள் உண்டு. அவர்களில் சிலர் தனக்குப் பணம் இருக்கிறது என்று மற்றவர் பாராட்ட வேண்டும் என்பதற்காகப் பணம் சம்பாதிப்பார்கள்; சிலர் பண மூட்டைகளை அடுக்கி, அழகு பார்ப்பதற்காகச் சம்பாதிப் பார்கள்; இன்னும் சிலர், தமது வாழ்வை ஆடம்பரமாக நடத்தவேண்டும் என்பதற்காகப் பணம் சம்பாதிப்பார்கள். ஆனால், எந்தப் பணக்காரனும், அவன் எந்நாட்டவனா யினும் சரியே, அவன் தன் சுயநலத்திற்காக, சுய பெருமைக்காகப் பொதுவாழ்வில் ஈடுபடுவானே அல்லாது, தன்னலமற்ற எவனும் பொதுவாழ்வில் ஈடுபடமாட்டான். ஆயுள் முடிந்து ஓய்வு பெறவேண்டிய காலத்தில்கூட, தான் சம்பாதித்த பொருளின் முழுப் பயனையும் அடைய முயற்சிப்பானே அல்லாது; தன் எஞ்சிய காலத்தைப் பொதுவாழ்வுக்குச் செலவழிக்க இசையான்.

தமிழ் ஓவியா said...

ஆனால், இவர்களுக்கெல்லாம் மாறுபட்ட வர் பெரியார். இவரும், சம்பாதிக்கவேண்டுமென்ற ஆசையோடுதான், ஒரு மனிதனுடைய டாம்பீக வாழ்வுக் குப் போதுமான அளவுக்குப் பணம் சம்பாதித்துவிட்டார். இவருக்கு மனைவி இல்லை, மக்கள் இல்லை, தான் சம்பாதித்த பொருளைக்கொண்டு எடுபிடி ஆள் நாலைந்து பேரை வைத்துக்கொண்டு, எவ்வளவோ சுகமாக வாழலாம்.

எப்படித் தன் பணத்தை வாரி இறைத்தாலும், ஏனென்று கேட்க ஆளில்லை. அப்படி இருந்தும் பெரியார், என்ன செய்கிறார்? அவர் இப்படி சுக வாழ்க்கை அனுபவிப்பதைவிட்டு, இத்தள்ளாத வயதில் கூட, தனது நேரம் பூராவையும், பொதுநல ஊழியத்தி லேயே செலவழித்து வருகிறார். ஆகவேதான், பெரியாரில் ஒரு பெரியார் என்று இவரை அழைக்கவேண்டி இருக்கிறது. இத்தகைய பெரியார் இருந்ததாக உலக சரித்திரம் கூறக் காணோம். நாமும் இவரைத் தவிர, வேறோர் பெரியாரைக் கண்டோமில்லை; இனியும் காணப் போவதில்லை என்பதுதான் எனது அபிப்பிராயம்.

ஆகவே தான், நான் முதலிலேயே திராவிட நாடு அதிர்ஷ்டம் பொருந்திய நாடு; நாம் அதில் பிறந்திருப்பதால் அதிர்ஷ்ட சாலிகள் ஆனோம் என்றேன். ஏனெனில், இத்தகைய ஒரு பெரியாரின் வாழ்நாளில் பிறந்திருக்கும் பேறு பெற்றுள் ளோம் ஆதலினால்
பெரியாருக்குத் தனிப்பட்ட முறையில் யார் என்ன தீங்கு செய்தாலும், செய்திருந்தாலும் அதை, மனித சுபாவமே அப்படித்தான் என்று கூறிப் பொறுத்துக் கொண்டுவிடுவார். ஆனால், இயக்கத்தை பொறுத்த மட்டில், சிறிது தவறு செய்துவிட்டாலும், உளம் பொறார். சுலபத்தில் ஆத்திரம் கொள்வார்.

தயைதாட்சண்ய மின்றிச் சற்றும் பொறுப்பில்லாதவன், முட்டாள், போக்கிரி, சோம்பேறிப் பயல் என்றெல்லாம்கூட சமய சந்தர்ப்பம் பாராமல் ஏசிவிடுவார். இயக்கத்தின்மீது அவ்வளவு பற்றுதல் உள்ளவர். அவரது தன்னலமற்ற இந்த இயக்கப் பற்றுதல்தான் இந்த ஏசல் மொழிகளைக் கேட்டுக்கொண்டு நமது இளைஞர்கள் பெரியார் வாழ்க, வாழ்க! என வாழ்த்தொலி கூறிப் பின்பற்றிச் செல்லும்படி தூண்டுகிறது.

எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்கள்; எவ்வளவு எளிமையாக சொல்லியிருக்கிறார். நான் முதலில் சுட்டிக்காட்டியது, அறிவார்ந்த மக்கள் ஆய்வு செய்யக்கூடிய அளவிற்கு ஒரு பேராசிரியரின் சிந்தனை; ஆனால், இது பாமர மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு அவர் எப்படி, பெரியார் மட்டுமல்ல; பெரியாரில் பெரியார் என்பதை தளபதி அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள் இங்கே சிறப்பாகச் சொல்லியி ருக்கிறார்.

பெரியாரைப் பார்த்தவர்கள் இன்றைக்கு இல்லாமல் இருக்கலாம்; ஆனால், பெரியாரைப் பார்த்த தொண்டர்கள் இன்றைக்கு கடைசித் தலைமுறையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்யவேண்டிய கடமை என்ன? இதுதான், இந்தக் கேள்வியின் உந்துதல்தான், அதற்கு விடை காணும், பெரியார் உலகம் என்பதை நீங்கள் எல்லோரும் ஒப்புக்கொள்வீர் கள் என்று நான் நம்புகிறேன்.

பெரியார் உலகம் நமக்கெல்லாம் பெருமையைச் சேர்க்கக்கூடியது.

ஆகவேதான், பெரியார் உலகம், நம்முடைய காலத்தில் நமக்கெல்லாம் பெருமையைச் சேர்க்கக்கூடியது. ஒவ்வொரு நண்பர்களும் இங்கே வந்து உற்சாகத்தோடு நிதியளித்தார்கள்; உரையாற்றும்பொழுது சொன்னார்கள். எனக்கு சக்தி இருக்கிறதா? என்று நான் நினைப்பேன்; பெரியாருடைய சக்தி நினைத்தேன், எனக்கு தானே உந்துதல் ஏற்பட்டது என்று மிக அழகாக எடுத்துச் சொன்னார்கள்.

இதன் சிறப்பு என்னவென்றால், பல நண்பர் கள், இயக்கத் தோழர்கள் இப்பொழுது கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த கட்டம் பொதுமக்கள், ஆதரவாளர்களும் இருக் கிறார்கள். ஆனால், அதற்கு முன்னால் பார்த் தால், மிகுந்த உற்சாகத்தை நாங்கள் பெறுவதற்கு, எல்லையற்ற நம்பிக்கையை நாங்கள் பெறுவதற்கு என்ன காரணம் என்று சொன்னால், எங்கள் இயக்கத் தோழர்கள் உற்சாகத்தோடு இருப்பது முக்கியமல்ல;

அவர்களுடைய வாழ்விணையர் கள்; அவர்களுடைய குடும்பத்தவர்கள், எல் லோரும், பெரியார் பிஞ்சுகள் உள்பட; பெரியா ருக்குச் செய்யவேண்டும்; மற்றவர்கள் தடுப்பார் கள், எதற்கு இதெல்லாம் என்று நினைப்பார்கள்.

ஆனால், பல நேரங்களில் நம்முடைய தோழர்கள் தயங்கிய நேரத்தில்கூட, மற்றவர்கள் முன்வந்து, என்னய்யா, பெரியாருக்குக் கொடுக்காமல் நாம் எதற்கு இருக்கிறோம் - பெரியார் சிலையில் நம்முடைய பங்கு இருக்கவேண்டாமா? என்று ஒவ்வொரு தோழியரும் வற்புறுத்தினார்கள் என்ற செய்தி இருக்கிறதே, பெரியாருடைய அந்த உலகம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை எங்களைப் போன்ற அச் சத்தோடு ஆரம்பித்து, இன்றைக்கு மனநிறை வோடு அந்தப் பயணத்தை நடத்திக் கொண்டி ருக்கின்ற எங்களைப் போன்றவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படுகிறது.

எனவே, பேறு பெற் றுள்ளோம். பெரியார் கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாதவர்கள். என்றாலும், அவரை விரும்புகிறார்; பெரியாரால் தாக்கப்படாதவர் களே கிடையாது; என்றாலும், அவர்களை விரும்புகிறார்கள்; நீதிமன்ற நீதிக்கும் நீதி சொன்னார்; நெறிகெட்ட வளைந்ததெல்லாம் நிமிர்த்தி வைப்பார் என்று சொன்னார்.

தமிழ் ஓவியா said...

பெரியார் தொண்டு அடித்தளமாக அமைந்திருக்கிறது

நீதிமன்ற நீதிக்கே நீதி சொன்ன பெரியார்; அந்த நீதித்துறை தண்டித்தாலும் உண்மை யைத்தான் சொல்வேன் என்று சொன்னவர் பெரியார். அப்படிப்பட்ட பெரியாரால்தான் நாங்கள் நீதிபதிகளாக இருக்கிறோம் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரையில் இன்றைக்கு சொல்லக்கூடிய அளவிற்கு, பெரியார் தொண்டு அடித்தளமாக அமைந்திருக்கிறது.
இப்படிப்பட்ட தலைவரை, உலகத் தலைவர் களில் யாரையாவது நீங்கள் கேள்விப்பட்டி ருக்கிறீர்களா? எனவேதான், தந்தை பெரியார் அவர்களுக்கு, நம்முடைய நன்றி காணிக்கை. எந்தத் தலைவராக இருந்தாலும், மதத் தலைவராக இருந்தாலும், இன்றைக்கு ஏசுநாதர் அவர்கள் உலகளாவிய அளவிலே, எல்லோ ராலும் கொண்டாடப்படுபவராகவும், பின்பற்றப் படுபவராகவும் இருக்கிறார்;

மதத் தலைவராக நபிகள் நாயகம் இருக்கிறார் என்றால், அவர் சொன்ன தத்துவங்களை கொண்டு சேர்த்து, அவருக்கு அவ்வளவு பெரிய பெருமையை உருவாக்கியது அவரை பின்பற்றக் கூடியவர் களால்தான். எனவே, பின்பற்றக்கூடியவர்களின் உழைப்பு, உறுதி, தெளிவு, கட்டுப்பாடு இவை கள்தான் அதற்குத் அடித்தளமானது.

தமிழ் ஓவியா said...

அந்த வகையில், இது பெரியார் நாடு; மற்றவர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக இருக்கின்ற ஒரு பகுதி என்கிற காரணத்திற்காகத் தான், இவர்கள் அழைத்தபொழுது வருகிறோம்; சந்திக்கிறோம்; அதன்மூலமாக மிகப்பெரிய மகிழ்ச்சியை பெறுகிறோம்; ஒரு நல்ல உற்சாகம் ஏற்படுகிறது.

நம்மால் முடியாதது யாராலும் முடியாது; யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!

இந்தத் திட்டம் தொடங்கிய நேரத்தில், நம்முடைய அமர்சிங் போன்ற நண்பர்கள் எல்லாம் சுட்டிக்காட்டியதைப்போல, என்ன முடியுமா? இந்த அச்சம் பல நேரங்களில் என்னுடைய தூக்கத்தினைக் கெடுத்தது, வழ மைக்கு மாறாக; நான் படுத்தவுடன் தூங்கி விடுவேன்; எதற்காகவும் நான் தூக்கத்தை இழந்ததே இல்லை. காரணம் என்னவென்றால், அவ்வளவு கடுமையாக வேலை செய்துவிட்டு, மனதில் எந்தவிதமான சங்கடத்தையும் பெறாத ஒரு சூழல் - நான் என்ன வருமான வரித்துறையினரைப் பற்றி யோசிக்கப் போகி றேனா? வருமானம் இருக்கிறவர்கள் யோசிக்க வேண்டிய விஷயம் அது. வருமானம் இல்லா தவர்கள் வருமான வரித்துறையினரைப் பற்றி யோசிக்கவேண்டிய அவசியமில்லை.

அந்தப் பதவி கிடைக்கவில்லையே, இந்தப் பதவி எப்பொழுது கிடைக்கும்? என்று யோசிக்கப் போகிறேனா? பதவியைப்பற்றி சிந்திக்காதே என்று சொன்ன பெரியாருடைய பாதங்களில் நாம் வீழ்ந்த காரணத்தினால், அந்த ஒரு நிலையும் நமக்கு ஏற்படப் போவதில்லை. நமக்கிருக்கின்ற பலமே அந்த பலம்தான்; அங்கேதான் உண்மை யான பலம் நமக்கிருக்கிறது என்று பெரியார் தொண்டர்களுக்கு. எனவே, அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை.

ஆனால், இந்தத் திட்டம் முடியுமா? என்ற ஒரு கேள்வி வந்தது. அடுத்த படியாக, பகுத்தறிவு சிந்தனையில் விடையும் தானாகவே வந்து, ஒரு தட்டுத்தட்டி, அந்த அச்சத்தை உள்ளே போகச் செய்தது. நம்மால் முடியாதது யாராலும் முடியாது; யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்று சொல்லிக் கொடுத்துவிட்டு, நாமே பின்வாங்கி னால், இதைவிட பயங்கரமான இரட்டை நிலைப்பாடு உண்டா?

என்ற ஒரு கேள்வி வந்த நேரத்தில், இல்லை, நம்மால் முடியும்! நாம் என்று சொல்லும்பொழுது, என்னால் முடியும் என்று நான் சொல்லவில்லை; நம்மால் முடியும்; அதுதான் மிகச் சிறப்பானது. நாம் என்று சொல்வதற்குள்ளே, நம் அத்துணை பேரும், ஓர் உருவம், ஓர் மனம், ஓர் நிறை; ஓர் துணிவு என்ற அளவில் ஆகிறோம் நிலைக்கு வந்திருக்கிறோம்.

தமிழ் ஓவியா said...

இருவர் வழியும் வெவ்வேறு வழியல்ல; ஒரே வழி -அதுதான் பெரியார் காட்டிய வழி!

எனவேதான், தோழர்களே, இந்த அற்புதமான முயற்சிக்கு தஞ்சையில் விழா என்று சொன் னார்கள். நான் என்னுடைய பிறந்த நாள் விழாவில் என்றைக்கும் தோழர்களின் மத்தியில் சிக்குவது கிடையாது. ஆனால், இந்த முறை, இதை ஒரு வாய்ப்பாக வைத்து, ஆயிரம் பவுனைத் தருவதற்கு, என்னுடைய பிறந்த நாள் விழாவினை ஒரு அடையாளமாக ஆக்கிக் கொள்கிறார்கள் என்று சொன்னால், நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

தாராளமாக தோழர் களைச் சந்தித்து, அவர்கள் உற்சாகத்தோடு அவர்கள் இந்தப் பணியைச் செய்வதற்கு, அவர்கள் தங்களை அர்ப்பணிப்பதற்கு அதை ஒரு வாய்ப்பாகக் கொண்டால் நல்லது என்று சொல்லும்பொழுது, நான் எனக்கென்று தனி வாழ்க்கை இல்லாதவன்; தோழர்கள் எந்த இடத்திற்கு அழைக்கிறார்களோ, பெரியார் தொண்டர்களுக்குத் தொண்டனாக இருக்கின்ற காரணத்தினால்தான், அவர்கள் என்ன நிலைப் பாடு எடுத்தாலும், அதற்கேற்ப, நான் அவர்களை வழிநடத்தக்கூடியவன் என்று சொன்னாலும் கூட, அவர்கள் வழியே நானும் செல்லக்கூடிய வன்;

இருவர் வழியும் வெவ்வேறு வழியல்ல; ஒரே வழி - அதுதான் பெரியார் காட்டிய வழி; அதுதான் ஈரோட்டுப் பாதை. அந்தப் பாதையில் இருந்து நாம் ஒருபோதும் நழுவாமல், வேகமாக நடந்து சிறப்பாக செயல்படுவோம்.

நேற்றுகூட செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்டார்கள், பெரியார் உலகம் எவ்வளவு நாள் திட்டம்; எவ்வளவு ரூபாய் தேவைப்படும் என்று கேட்டார்கள்.

இத்திட்டத்திற்கான மொத்த செலவு என்று பார்த்தால், முப்பது கோடி ரூபாய். இது ஒவ்வொரு கட்டமாக நிறைவேற்றப்படும். தந்தை பெரியாரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்த ஆண்டு. மூன்று மூன்று ஆண்டுகள் என்று பிரிக்கப்பட்டு, அய்ந்து கட்டங்களாக இத்திட்டம் நடைபெறும். தந்தை பெரியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாளில் அனைத்துப் பணிகளும் முடிவடையும்.

பெரியார் செய்த புரட்சி எப்படிப்பட்டது!

தமிழ் ஓவியா said...

பெரியார் உலகத்திற்குள் செல்லும்பொழுது, பெரியார் எப்படிப்பட்டவர் என்பதை குழந் தைகள் புரிந்துகொண்டு வெளியே வரவேண்டும். அதுபோல், பெரியாருக்குமுன் இருந்த சமு தாயம்; பெரியாருக்குப் பின் ஏற்பட்ட சமூகப் புரட்சி. ஒரு துளி ரத்தம் சிந்தாமல், வன்முறைக்கு இடங்கொடுக்காமல், ஆயுதங்களைத் தூக்காமல், அறிவாயுதத்தை மட்டுமே பயன்படுத்தி, பெரி யார் செய்த புரட்சி எப்படிப்பட்டது என்பதைக் காட்டக்கூடிய வண்ணம் இவை அத்தனையும் செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் கருதித்தான் இந்த அளவிற்கு இந்த வாய்ப்பை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

எனவே, உங்களுடைய அன்பான ஒத்துழைப்பு மிகச் சிறப்பானது; இங்கே நண்பர்கள் சொன்ன தைப்போல, பெரியார் நாடு இயக்க வரலாற்றில் ஒரு பொன்னேடு; அது நிலைத்திருப்பது சாதாரணமானதல்ல; 1997 ஆம் ஆண்டு என்னுடைய எடைக்கு எடை 203 பவுன் தங்கம் கொடுத்தீர்கள்; இயக்கமும் வளர்ந்திருக்கிறது; நம்முடைய கொள்கையும் வளர்ந்திருக்கிறது என்பதற்கான அடையாளம்தான்;

பெரியார் உலகம் திட்டத்தினை அறிவித்தவுடனே அதனை செய்து முடிக்கக் கூடிய ஆற்றல் சிறப்பாக அமைந் திருக்கிறது. நம் நாட்டின் தலைநகரில் அமைந் துள்ள பெரியார் மய்யத்திற்கு 1998 ஆம் ஆண்டு 1000 மூட்டை சிமெண்ட் கொடுத்தீர்கள்; அது கம்பீரமாக தலைநகரத்தில் இருக்கிறது. அத் திறப்பு விழாவிற்குச் செல்லும்பொழுது, தன்னு டைய இன்னுயிரைத் தந்தவர்களின் பெயர்களும் அங்கே சூட்டப்பட்டிருக்கிறது என்பது மறக்க முடியாத ஒன்றாகும்.

பெரியார் முகமாகத்தான் எங்கள் தோழர்கள் இருப்பார்கள்!

அதுபோல, 1999 ஆம் ஆண்டு 625 விடுதலை சந்தாக்கள் தொடங்கி, தொடர்ந்து 25 ஆவது முறையாக திண்டிவனம் பொதுக்குழுவில் உங்களால் வழங்கப்பட்டது. அத்துணைத் தோழர்களும், பல்வேறு முகத்தவர்களாக இருப்பார்கள்; ஆனால், ஒரு மனத்தவர்களாக இருப்பார்கள். கட்டுப்பாடு என்பதைக் காக்கக் கூடிய ராணுவ வீரர்களாகத்தான் பெரியார் தொண்டர்கள் இருப்பார்கள்.

தமிழ் ஓவியா said...

எனவே, பன்முகம் என்று யாரும் நினைக்கவேண்டாம்; அத்தனையும் சேர்ந்து நன்முகமாகத்தான், பெரியார் முகமாகத் தான் எங்கள் தோழர்கள் இருப்பார்கள் என்பதை மீண்டும் இந்தப் பவுன் அளிப்பு நிகழ்ச்சி காட்டியிருக்கிறது, அதுதான் மிகச் சிறப்பானது.

பவுனைக் கொடுப்பதைவிட, எங்கள் தங்கங்கள் எப்பொழுதும் கொள்கை சொக்கத் தங்கங்கள் என்று காட்டக்கூடிய உணர்வை நீங்கள் செய்திருக்கிறீர்கள், அதற்காக மிக்க மகிழ்ச்சி.

2003 ஆம் ஆண்டு கண்ணந்தங்குடி கீழையூரில் வெள்ளி பேனா, கிரீடம் எனக்கு அளித்தீர்கள்; அவைகளில் எனக்கு விருப்பமில்லை. ஆனால், இந்தப் பணி ஒன்றுதான், நான் விரும்பி, விரும்பி இந்தப் பணிகள் வேண்டும் வேண்டும் என்று விரும்பி மகிழ்ச்சியோடு, நானே உங்களோடு சேர்ந்து, அதன்மூலமாக உற்சாகத்தைப் பெறவிருக்கிறேன்.

என்னுடைய தோழர்கள் இத்திட்டத்தினை முடிப்பார்கள்!

இன்னுங்கேட்டால், என்னுடைய காலத்தில் இந்தத் திட்டம் நடைபெற்று முடிந்துவிடுமா? என்ற ஒரு தயக்கம் சில நேரங்களில் இயற்கையை எண்ணி வந்தாலும்கூட, என்னுடைய தோழர்கள் இத்திட்டத்தினை முடிப்பார்கள் என்ற நல்ல நம்பிக்கை எனக்குண்டு. ஆகவே, நீங்கள் பல பணிகளைச் செய்திருக்கிறீர்கள். 12 படிப்பகங் களையும், 15 பெரியார் சிலைகளையும் உருவாக்கி இருக்கிறீர்கள்.

பெரியாருடைய பேருருவச் சிலை அமைக்கும் பணிகளில், பெரியார் நாட்டின் பங்களிப்பு என்பது தனித்தன்மையாக உயர்ந்து நிற்கக்கூடிய ஒன்று. எப்படி பெரியார் சிலை உயர்ந்து கம்பீரமாக நிற்கிறதோ, அப்படி பெரியார் நாட்டின் பங்களிப்பும் உயர்ந்து நிற்கும் வரலாற்றை உருவாக்கி தொடங்கியிருக்கிறார் கள்; இன்னும் முடிக்கவில்லை, இது வளர்ந்து இன்னும் சிறப்பாக தனி இடத்தைப் பெறுங்கள், பெறுங்கள் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

மாலை நிகழ்ச்சி

பெரியார் உலகம் திட்டத்திற்கு ஒரத்தநாடு சார்பில் பவுன் வழங்கும் விழாவில் கழகப் பிரச்சார பாடகர்களின் எழுச்சிப் பாடல் நிகழ்ச்சி இடம்பெற்றது.

16.11.2013 அன்று சனி மாலை 5 மணிக்கு உரத்தநாடு ஒன்றிய கழகத்தின் சார்பில் ரெங்கமணி திருமண அரங்கத்தில் அமைக்கப்பட்ட சுயமரியாதைச் சுட ரொளி கழகப்பொருளாளர் கோ.சாமிதுரை நினை வரங்கத்தில் பெரியார் உலகம் தந்தை பெரியார் 95 அடி உயர பேருருவ வெண்கலச்சிலை அமைக்க தங்கம் வழங்கும் விழா மாவட்ட செயலாளர் அ.அருணகிரி தலைமையில் நடைபெற்றது.

ஒன்றிய தலைவர் ஆ.இலக்குமணன் வரவேற்று உரையாற்றி னார். முன் னிலை வகித்த நகரச் செயலாளர் சாமி.அரசிளங்கோ, ஒன்றிய செயலாளர் இரா.துரை ராசு, மாநில கலைத் துறைச் செயலாளர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன், மாநில ப.க.பொதுச் செய லாளர் வ.இளங்கோவன், மாநில ப.க. துணைத் தலைவர் மா.அழகிரிசாமி, பொதுக்குழு உறுப் பினர் கை.முகிலன், நெடுவை தோ.தம்பிக்கண்ணு, பின்னையூர் திமுக இராமமூர்த்தி, கண்ணந்தங்குடி கீழை யூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சி.மாரிமுத்து, திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந் தமிழ்செல்வி, விடுதலை வாசகர் ஈச்சங்கோட்டை பாலசுப்ரமணியன், திருவா ரூர் மண்டல தலைவர் இராயபுரம் இரா.கோபால், த.செகநாதன், மாவட்ட அமைப்பாளர் ப.தேசிங்கு, மாவட்ட தலைவர் சி.அமர்சிங், தலைமைக் கழகப் பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், கழகப்பொதுச் செயலாளர்கள் உரத்தநாடு இரா. குணசேகரன், தஞ்சை இரா.ஜெயக் குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இராசகிரி கோ.தங்கராசு.

திராவிட இயக்க எழுத்தாளர் கலைமாமணி அ.மறைமலையான் ஆகியோர் உரைக்குப்பின்னர் தங்கத்தைப் பெற்றுக் கொண்டு தமிழர் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

நகரத்தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாவட்ட ப.க.செயலாளர் கோபு.பழனிவேல் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கு உழைத்த தோழர் களை பாராட்டி தலைமைச்செயற்குழு உறுப்பினர் ராசகிரி கோ.தங்கராசு பயனாடை போர்த்தி தோழர் களை உற்சாகப் படுத்தினார்.

தமிழ் ஓவியா said...

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: இங்கிலாந்து பிரதமர் கெடு


கொழும்பு, நவ.17- இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து மார்ச் மாத இறுதிக்குள் நம்பத்தகுந்த, சுதந்திரமான விசாரணைக்கு உத்தர விடவேண்டும் என்று ராஜபக்சேவுக்கு இங்கிலாந்து பிரதமர் கேமரூன் கெடு விதித்தார்.

காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு சென்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சென்றார். அங்கு முகாம்களில் வாழ்கிற தமிழ் மக்களை டேவிட் கேமரூன் சந்தித்துப் பேசினார்.

அவர்களின் துயரங்களை, வேதனைகளை, கண்ணீர்க்கதைகளை மிகுந்த பொறுமையுடனும், கனிவுடனும் கேட்டார். அதைத்தொடர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்சேவை நேற்று முன்தினம் இரவு டேவிட் கேமரூன் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பை தொடர்ந்து டேவிட் கேமரூன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப்பேசினேன். இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான, நம்பத்தகுந்த விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; அனைத்து தரப்பு மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும்; போரினால் இடம் பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு பிரச் சினைகள் குறித்து வெளிப்படையாக, கட்டுப்பாடுகளற்று விவாதித்தோம்.

இலங்கையில் போர் நடைபெற்ற போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த, வெளிப்படையான, சுதந்திரமான உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்பதை ராஜபக்சேவிடம் கூறினேன். அதை மார்ச் இறுதிக்குள் அவர் செய்ய வேண்டும். அது நடைபெறாவிட்டால், நாங்கள் எங்கள் நிலையைப் பயன் படுத்தி, இந்தப் பிரச்சினையை அய்.நா. மனித உரிமை ஆணையத்திடம் எடுத்துச் செல்வோம். சுதந்திரமான விசாரணை நடத்துவது தொடர்பாக அய்.நா. மனித உரிமை ஆணையருடன் இணைந்து செயல்படுவோம்.

தமிழ் ஓவியா said...

வடக்கு மாகாணத்தில் உள்ள, போரினால் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை இலங்கை ஏற்படுத்த வேண்டும் என்பது உறுதி யானது. இவ்வாறு டேவிட் கேமரூன் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு டேவிட் கேமரூன் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:-சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு எதற்காக நீங்கள் மார்ச் வரை காத்திருக்க வேண்டும்?

பதில்:-போரினால் ஏற்பட்ட விளைவு களிலிருந்து இன்னும் மீண்டு வர வேண்டி உள்ளது, எனவே அவகாசம் வேண்டும் என்று ராஜபக்சே கூறினார். அதை நான் ஏற்றுக்கொண்டேன். நல் லிணக்கம் ஏற்படுத்துவதற்கு அவகாசம் தேவைப்படுகிறது. அதை நான் புரிந்து கொள்கிறேன். போர் இல்லா பிரதேசத் தில் நடந்தவை (தமிழ் இனப்படுகொலை) குறித்து, சுதந்திரமான விசாரணை தேவை. சர்வதேச விசாரணை நடத்துவதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

கேள்வி:-அதிபர் ராஜபக்சேவிடம் எழுப்புவதற்கு என்னிடம் சில கடினமான கேள்விகள் இருக்கின்றன என்று நீங்கள் கூறினீர்கள். அந்த கேள்வி களை நீங்கள் அவரிடம் எழுப்பி னீர்களா?

பதில்:-வெளிப்படையாக விவாதித் தோம். ஆனால் நான் கூறிய எல்லாவற் றையும் ராஜபக்சே ஏற்றுக்கொள்ள வில்லை.
மனித உரிமை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், ஊடகங்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும், தமிழ் மக்கள் உரிய மதிப்புடனும், கண் ணியத்துடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். இவை எல்லாவற்றுக்கும், இலங்கை சரியான பாதையில் பயணிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

நல்லிணக்கம் ஏற்படுத்துவதை பொறுத்த மட்டில், போரினால் ஏற்பட்ட ரணங்கள் ஆற வேண்டும். இவையெல்லாம் நடை பெறுவதற்கு மேற்சொன்ன பிரச் சினைகள் தீர்க்கப்பட வேண்டும். சானல் 4 காட்டிய சில உறைய வைக்கும் சம்பவங்கள் நடைபெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களில் மறுகுடியேற்றம் நடை பெற்றுள்ளது என்பதை ஏற்பதற்கு இல்லை.

நான் திட்டமிட்டிருந்தபடி, அனைத்து பிரச்சினைகளையும் ராஜபக் சேயுடன் விவாதித்தேன். நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு அவருக்கு வாய்ப்பு இருப்பதை சொன்னேன்.

பத்திரிகைகளுக்கு சுதந்திரம் வேண்டும்

தமிழ் ஓவியா said...

கேள்வி:-யாழ்ப்பாணம் செல்ல ஏன் விரும்பினீர்கள்? அந்த பயணத்துக்கு பின்னர் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

பதில்:-ஒரு அரசியல்வாதியாக, பிரதமராக நான் செல்லுகிறபோது, அந்த மக்கள் கற்றுக்கொள்ள முடியும். அப்படி சென்றால்தான், கள நிலவரத்தைப் பார்க்க முடியும். புரிந்துகொள்ள முடியும்.

நான் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற சில ஊடகங்களின் பத்திரிகை யாளர்களுடன் யாழ்ப்பாணம் சென்ற தின் நோக்கம், உறைய வைக்கிற அளவுக்கு அங்கே நடந்த சில சம்பவங் களை வெளிச்சம் போட்டு காட்டுவது தான். பத்திரிகை சுதந்திரம்

இலங்கையில் பத்திரிகைகளுக்கு சுதந்திரம் வேண்டும். இலங்கை அரசு அதை செய்யும் என நம்புகிறேன்.

வடக்கு மாகாணத்தின் முதல் அமைச் சர் விக்னேசுவரனை சந்தித்தேன். அது நல்லதொரு சந்திப்பு. அந்த மாகாண மக்களின் பிரச் சினைகளில் அவரோடு இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். யாழ்ப் பாணத்துக்கு சென்றது, அங்குள்ள மக்களுக்கு குரல் கொடுக்கத்தான். உலகத்தின் குரலை தெரிவிக்கத்தான். அது கேட்கப்படவேண்டும்.

கேள்வி:-அய்.நா. மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை வந்து சென்ற பின்னர், அவரிடம் புகார் கூறிய மக்கள் பழிவாங்கப்பட்டதுபோல, இப்போது நீங்கள் யாழ்ப்பாணம் சென்று வந்த நிலையில், அந்த மக்கள் மீது பழிவாங்கும் போக்கில் இலங்கை அரசு செயல்படாது என்று எப்படி உங்களால் உறுதி கூற முடியும்?

பதில்:-இலங்கை அரசின் பதில் நடவடிக்கையை உலகம் கண்காணிக்கும். அதிகாரிகள் சர்வதேச கருத்தினை மதிப்பார்கள் என்று கருது கிறேன். தமிழ் மக்களை அவர்களுக்கு உரித்தான கண் ணியத்துடனும், மதிப்புடனும் இலங்கை மக்கள் நடத்து வார்கள் என்று எண்ணுகிறேன்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

போர்க்குற்ற விசாரணை கிடையாதாம் இலங்கை அமைச்சர் தகவல்

போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கேமரூன் கோரிக்கையை இலங்கை நிராகரித்தது. இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தபோது அரங்கேற்றப் பட்ட இனப்படுகொலைகள், போர்க் குற்றங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த, சுதந்திரமான உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நேற்று முன் தினம் இரவு சந்தித்து வலியுறுத்தினார்.

அடுத்த சில நிமிடங்களில் ராஜபக் சேவின் தம்பியும், இலங்கை பொருளா தார வளர்ச்சித்துறை அமைச்சருமான பசில் ராஜபக்சே, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் கோரிக்கையை நிராகரித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நாங்கள் எதற்காக உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டும்? நாங்கள் அதை எதிர்ப்போம். உறுதியாக நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கேட்பது ஒன்றும் புதிது இல்லை. கெடு விதிக்க முடியாது

மார்ச் மாத இறுதிக்குள் விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கெடு விதித்து உள்ளாரே என கேட் கிறீர்கள். அவர்கள் எங்களுக்கு கெடு விதிக்க முடியாது. அது நியாயம் இல்லை. எங்களுக்கு அவகாசம் வேண்டும் என்பதை கேமரூனே கூறி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


கழகப் பொருளாளர் சாமிதுரை மறைவிற்கு பேராசிரியர் க.அன்பழகன் இரங்கல்


சென்னை, நவ.17- திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் கடந்த 9.11.2013 அன்று சென்னையில் மறைவுற்றார். அவரது மறைவிற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் இரங்கல் தெரிவித்து, கழகத் தலைவருக்கு அனுப்பிய கடிதம் வருமாறு:-

திராவிடர் கழகப் பொருளாளரும், இளமை முதல் தந்தை பெரியாரின் தொண்டருமாக விளங்கிய தோழர் கோ.சாமிதுரை அவர்களின் மறைவு குறித்து அறிந்தபோது, மிகவும் வருத்தமுற்றேன்.

கொள்கையில் உறுதி,

இலட்சியத்தில் ஆர்வம்,

இயக்கத்தில் பிடிப்பு,

தலைமையை மதிக்கும் பண்பு ஆகியவற்றால் பெருமை பெற்றவராக, திராவிடர் கழகத் தலைவர் திரு.வீரமணி அவர்களின் முழு நம்பிக்கையைப் பெற்றவராகத் திகழ்ந்த தோழர் சாமிதுரை அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.

அவரது மறைவால் துயருற்றவர்கட்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

- இவ்வாறு பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் எழுதியுள்ள அவரது இரங்கல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்

தமிழ் ஓவியா said...


நமது நாட்டில் அறிவியல் மனப்பான்மை இல்லை விஞ்ஞானி ராவ் வருத்தம்

பெங்களூரு, நவ.18- அறிவியலுக்குப் போது மான நிதி ஒதுக்காததால், அரசியல்வாதிகள் முட்டாள்கள்' என்று பாரத ரத்னா விருதுக்கு தேர்வாகியுள்ள விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் விமர்சித்தார்.

இதுகுறித்து பெங்களூருவில் ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் போதுமான நிதி ஆதாரங்களை ஒதுக்க வேண் டும். அரசு அளித்துள்ள நிதியைக் காட்டிலும், அளவுக்கு அதிகமாக அறிவியல் ஆராய்ச்சிகளை அறிவியல் துறை செய்து காட்டியுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு அரசியல்வாதிகள் போதுமான நிதி ஒதுக்கவில்லை. இதனால், அவர்கள் முட்டாள்கள்.
எங்களுக்கு கிடைத்த நிதிக்குத் தகுந்தவாறு பணி செய்துள்ளோம். இந்தியாவில் அறிவியல் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது மட்டுமல்லாமல், காலதாமதமாகவும் அளிக்கப் படுகிறது.

சீனாவின் வளர்ச்சிக்கு நம்மைத்தான் காரணம் காட்ட வேண்டியுள்ளது. சீனர்களைப் போல இந்தியர்கள் கடுமையாக உழைப்பதில்லை. எதையும் நாம் எளிதாக எடுத்துக் கொள்கிறோம். தேசியவாதிகளைப் போல நாம் செயல்படுவ தில்லை. நமக்குக் கூடுதலாகப் பணம் கிடைத் தால், வெளிநாடுகளுக்குச் செல்லத் தயாராக இருக்கிறோம்.

தகவல் தொழில்நுட்பத்திற்கும், அறிவிய லுக்கும் சம்பந்தமில்லை. நமது நாட்டில் அறிவியல் உணர்வு இல்லை.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி யாற்றுவோர் அனைவரும் மகிழ்ச்சியில்லாமல் வேலை செய்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்வோர் அடிக்கடி தற் கொலை செய்து கொள்ளும் செய்தியைப் படிக் கிறேன்.

என்னைப் பாருங்கள், 80 வயதிலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னிடம் குறை கூற எதுவுமில்லை. நாம் செய்வதில் திருப்தி கிடைத் தால், அதுதான் மகிழ்ச்சி என்று கருதுகிறேன் என்றார் ராவ்.

தமிழ் ஓவியா said...


உலகமயமாகும் பெரியார் தத்துவங்கள்!

அமெரிக்காவில் சுயமரியாதை வாழ்க்கை ஒப்பந்தங்கள்

2013 நவம்பர் 2 - அட்லாண்டா நகரில்!

அமெரிக்காவில் இப்போதெல்லாம் மதச் சடங்குகள் இல்லாத பல பகுத்தறிவு வாழ்க்கை இணை விழாக்கள் நடந்து வருகின்றன.

எந்த மதச் சடங்குகளும் இல்லாமல் வாழ்விணை யர்கள் தாங்களே தயாரிக்கும் ஒப்பந்தங்களைப் படித்தோ அல்லது நீதி அரசர்கள் சொல்வதைச் சொல் லியோ, அல்லது பதிவு செய்து கொண்ட வாழ்விணை ஒப்பந்தங்கள் நடத்துவோர், அல்லது நீதிமன்றங்களில் பதிவு செய்து கொண்டு என்று நடத்திக் கொள் கின்றனர். இன்று அமெரிக்க இளைஞர்களில் பலர் விரும்பிச் செய்து கொள்ளப் பெற்றோர்களும் இணைந்து கொள்கின்றனர். இரண்டு மதங்களில் இருந்து இணைவோருங்கூட இந்த ஒப்பந்தங்களைச் செய்து கொள்கின்றனர்.

தமிழர்களில் முதலாவதாக மானமிகு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களது செல்வி அருள், பாலகுரு வாழ்க்கை ஒப் பந்த விழா நடந்து சுமார் 20 ஆண்டுகள் ஆகி விட் டது இப்போது பல தமி ழர்கள் பல நகரங்களில் செய்துள்ளனர். (அடுத்து ஆசிரியர் தலைமையில் சிகாகோவில் எனது மூத்த மகள் கனிமொழி வாழ்விணையர் ஏற்பு இப்படி எல்லாம் ஜாதி மறுப்பு, சுயமரியாதைத் திரு மணங்களாகவே நடந்தது.

அட்லாண்டா நகரிலே நவம்பர் 2ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தர்மபுரி பெரியார் பெருந் தொண்டர் எம்.என். நஞ்சையா அவர்களது பெயர்த்தியும், மருத்துவர் நல்லதம்பி - மீனா இவர்களது செல்வியுமான கவிதாவிற்கும், ஒடிசாவைச் சேர்ந்த மருத்துவர் நாராயண், சித்ராராத் அவர்களின் செல்வன் பிரகாஷ் அவர்கட்கும், நீதியரசர் வெஸ்லிசேனன், வாழ்க்கை ஒப்பந்த உரையைச் சொல்லி மணமக்கள் மோதிரங்கள் அணிந்து கொள்ளச் சிறப்பாக நடந்தது. தமிழகத்தி லிருந்தும், பிரான்சிலிருந்தும் மற்றும் அமெரிக்காவின் பல இடங்களிலிருந்தும் குடும்பத்தினரும், நண்பர்களும் வந்து வாழ்த்தி சிறப்பு செய்தனர். ஆசிரியர் அவர்களும், அவருடைய வாழ்விணையரும் தொலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

அட்லாண்டாவின் புகழ் பெற்ற எமரி பல்கலைக் கழக அறிவரங்கத்தில் 250 பேர் என்று மிகவும் ஆடம்பர மில்லாத மணமக்கள் விருப்பப்படியே ஆனால் மிகவும் சிறப்பான ஏற்பாடுகளுடன் விழா நடந்தது. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

மணமகன் ஒடிசா மாநிலத்தவர் ஆகையால் தந்தை பெரியார் கருத்துரைகள் கொண்ட ஒடிசா மொழி புத்தகத்தையும், ஆங்கில நூல்களையும் மணமக் களுக்கு ஆசிரியர் அனுப்பி, மணப் பரிசு வழங்கினார்.

- சோம இளங்கோவன்

தமிழ் ஓவியா said...


கடவுள் கருணையோ!

திருவண்ணாமலையேறிய பக்தர் மாரடைப்பால் சாவு

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை மலையேறிய பக்தர் ஒருவர் திரும்பி வரும்போது நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார்.

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த குணசேக ரன் (62). இவர் தனது நண்பர் நாகராஜுடன் தீபத் திருவிழாவைக் காண வந்தார். திருவண்ணாமலை யில் உள்ள தனது தங்கையின் வீட்டில் தங்கியிருந்த அவர், ஞாயிற்றுக்கிழமை மாலை, மலையேறிச் சென்றார்.
மீண்டும் இறங்கி வந்துகொண்டிருந்தபோது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாம். தீயணைப்பு வீரர்கள் குணசேகரனை அழைத்து வந்து, 108 ஆம்பு லன்ஸில் திருவண்ணாமலை அரசு மருத்துவ மனையில் மாலை 6.30 மணிக்கு சேர்த்தனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

திருவண்ணாமலை சென்று திரும்பிய பக்தர்கள் 4 பேர் விபத்தில் சாவு

தருமபுரி, நவ.18- தருமபுரி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் திருவண்ணாமலைக்குச் சென்று தீபத்தை தரிசித்து விட்டு வந்த பக்தர்கள் நால்வர் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக இறந்தனர். தருமபுரி அருகே ஒடசல்பட்டி கூட்டுரோடு என்ற இடத்தில் எதிரே வந்த கார் மீது லாரி ஒன்று மோதியது. இதில், காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக மருத்துவமைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற் கொண்ட விசாரணையில், விபத்தில் கார்த்திகை தீபமான நேற்று திருவண்ணாமலை சென்று விட்டு திரும்பிய போது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. விபத்துக் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.

தமிழ் ஓவியா said...


பெரிதாக்குகிறார்கள்

தண்ணீரில் வீழ்ந்து உயிருக்கு மன்றாடுபவன் ஒரு புல் மிதந்து வந்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு கரையேற நினைப்பது போல், இன்று பார்ப்பனரும், அவர்கள் கூட்டாளி களும் பதவி ஆசையால் அற்பக் காரியங்களையும் பெரிதாக்குகிறார்கள்.
(விடுதலை, 12.7.1972)

தமிழ் ஓவியா said...


டெசோவின் தீர்மானங்கள்

சென்னையில் நேற்று (17.11.2013) கூடிய டெசோ கூட்டத்தில் சிறப்பான அய்ந்து தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் டெசோ இத்தகு தீர்மானங்களை நிறைவேற்றி யுள்ளது - உலகின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாகும்.

மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை சென்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் - பாதிக்கப்பட்ட தமிழர்களின் பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிப்புக்கு ஆளான தமிழர்களின் உள்ளக் குறைகளை நேரில் தெரிந்து கொண் டுள்ளார். உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கும் சென்றுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படு கொலையை உலக நாடுகளின் கண்களில் படாமல் தப்பிக்கச் செய்யலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த ராஜபக்சேவின் கபட முகத் திரையை ஒரு பயணத்தின் மூலம் கிழித்து ராஜபக்சே என்னும் மிகப் பெரிய இனப் படுகொலையாளியைச் சர்வதேச நாடுகளின் முன் குற்றவாளியாக நிறுத்தி விட்டார்.

இலங்கைக்குப் பல்லக்குத் தூக்கிக் கொண்டி ருந்த நாடுகள்கூட, உலகின் மிக முக்கிய நாடான இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தம் மனந்திறந்த பேட்டியைச் செவி மடுத்த நிலையில், தங்கள் கண்களைக் கழுவிக் கொண்டு, அகல விரித்து உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பிரகாசமாகி விட்டது.

ஏற்கெனவே பிரிட்டன் 4 அலைவரிசை வெளியிட்ட படங்கள் பேரதிர்ச்சி அலைகளை உலகம் முழுவதும் தட்டி எழுப்பின. இப்பொழுது அந்தப் பிரிட்டன் பிரதமர் அலைவரிசை நான்கின் நம்பகத் தன்மையை நன்கு வெளிப்படுத்தி விட்டார்.

இதற்காக உலகத் தமிழர்கள் மட்டுமல்ல; மனித உரிமையாளர்கள், மனிதநேயவாதிகள் ஒரு முறை நன்றி உணர்ச்சியுடன் மிகப் பெரிய வணக்கத்தைத் (ளுயடரவயவடி) தெரிவிக்க வேண்டும்.

அவருடைய கருத்து எந்த அளவுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு அளவுகோல் - ராஜபக்சேவின் மிகப் பெரிய அலறலில் இருந்து அறிய முடிகிறது.

இந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இங்கிலாந்து எடுத்திருக்கும் இந்த நிலைப்பாட்டை - பாத்திரத்தை நியாயமாக இந்தியா அல்லவா செய்திருக்க வேண்டும்; இந்தியா ஆற்ற வேண்டிய கடமையை இங்கிலாந்து ஆற்றிய பிறகாவது இந்தியாவின் மனசாட்சி உலுக்கப்பட்டு, புதிய சிந்தனைச் சாளரம் திறந்தால், இதுவரை அது நடந்து வந்துள்ள பழிகளுக்குக் கழுவாய்த் தேடிக் கொள்ள முடியும்.

இங்கிலாந்து பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற போராட்டம் இங்கிலாந்தில் நடைபெற்றது. அதனைப் பொருட் படுத்தாமல் பிரதமர் டேவிட் கேமரூன் செல்லு கிறாரே என்ற மனக் குறை இருந்ததுண்டு.

ஆனால், அவர் அதில் கலந்து கொண்டு, அவர் மேற்கொண்ட அணுகுமுறை அவர் கலந்து கொண்டதற்கான மிகப் பெரிய அர்த்தத்தை, நியாயத்தை ஏற்படுத்தி விட்டது.

தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி, காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இங்கிலாந்து பிரதமர் செயல்பட்டதுபோல செயல்பட்டு இருந்தாலாவது ஆறுதல் பெற்றிருக்க முடியும். அந்தக் கூட்டத்தில் அவர் எடுத்து வைத்த கருத்தென்ன? இலங்கை அரசை எந்த வகையிலாவது வலியுறுத்தி ஈழத்தில் அவதிப்படும் தமிழர்களுக்கு நல்லது நடக்க வழி செய்தாரா?

மாநாட்டில் கலந்து கொண்டால்தானே ஈழத் தமிழர்களுக்குப் பயன் ஏற்பட வலியுறுத்த முடியும் என்று அரசனை விஞ்சிய விசுவாசிகளாக தொண்டையைக் கனைத்துக் கொண்டு வார்த்தை ஜாலங்களை வண்ண வண்ணமாகக் குழைத்துச் சொன்னவர்கள், இப்பொழுது தங்கள் முகங்களை எங்கே கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இந்த நிலையில், இந்தியா சார்பில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொண்டு இருப்பதை டெசோ கண்டித்தது மிகவும் சரியான நடவடிக்கையே!

தமிழ் ஓவியா said...


பெரியார், அம்பேத்கர் சிலைகளை அமைக்க கோரிக்கடவு ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுகோரிக்கடவு, நவ. 18- தந்தை பெரியார், புரட்சி யாளர் அம்பேத்கர் சிலை களை அமைக்க கோரிக் கடவு ஊராட்சி மன்றத் தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இது குறித்து பழனி கழக மாவட்ட பகுத்தறிவா ளர் கழக செயலாளர் ச. திராவிடச் செல்வன் தெரிவித்திருப்பதாவது:- திண்டுக்கல் மாவட்டம், பழனி கழக மாவட்டம், கோரிக்கடவு கிராமத் தில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத் கர் ஆகியோர்களின் சிலைகளை அமைக்க கோரிக்கடவு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

கழக விண்ணப்பத் தினை ஏற்று 24.10.2013-ஆம் தேதி ஊராட்சி மன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அங்கீகரிக்கப்பட்டது.

தந்தை பெரியார் சிலை வைக்க அங்கீகரிக் கப்பட்ட தீர்மான எண்: 137, புரட்சியாளர் அம் பேத்கர் சிலை வைக்க அங்கீகரிக்கப்பட்ட தீர்மான எண் 138 என் பதை பெருமகிழ்ச்சியு டன் தெரிவித்துக் கொள் கிறேன்.

அங்கீகரிக்கப்பட்ட தீர்மானங்களின்படி கோரிக்கடவு திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார், புரட்சி யாளர் அம்பேத்கர் ஆகி யோரின் சிலைகளை அமைத்து பராமரித்துக் கொள்ள திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அனுமதி வேண்டி 13.11.2013 அன்று விண்ணப்பித்துள்ளோம் என்று திராவிடச் செல் வன் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


முள்ளிவாய்க்கால் முற்றம்: இடித்த இடத்திலேயே தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வேண்டும்!

முள்ளிவாய்க்கால் முற்றம்: இடித்த இடத்திலேயே தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வேண்டும்!
தொல்.திருமாவளவன் அறிக்கை!

சென்னை, நவ.18- தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர்களை இடித்த தமிழக அரசே அதனைத் திரும்ப கட்டிக் கொடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

தஞ்சை அருகே விளார் கிராமத்தில் எழுப்பப் பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எனும் நினைவிடத்தின் சுற்றுச்சுவரினை தமிழக அரசு திடீரென இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது.

மேலும், அவ்வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பூங்காவும் சிதைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து நினைவிடம் கட்டப் பட்டிருப்பதாகவும், அதனால் சுற்றுச்சுவரை இடித்ததாகவும் பூங்காப் பகுதியைக் கைப்பற்றியிருப்ப தாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்டு மானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதில் தலையிடாமல் அமைதி காத்த அரசு, அதன் திறப்பு விழா முடிந்த ஒரு சில நாட்களில், திடீரென நூற்றுக்கணக்கான காவல்துறையினரை இறக்கி, அதிகாலை வேளையில் அவசரம் அவசரமாக இடித்து நொறுக்கியது ஏனென்று விளங்கவில்லை.

காலக்கெடு வேண்டாமா?

சட்டவிரோதமாக அரசு நிலத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டிருக்குமெனில் அதனை அப்புறப் படுத்துவதற்கு, உரிய காலக்கெடுவுடன் அரசு உரிய வர்களுக்கு அறிக்கை அனுப்பியிருக்க வேண்டும். அவ்வாறு எந்த அறிவிப்பையும் செய்யாமல் நினை விடத்தை எழுப்பியவர்களுக்குப் போதிய காலக்கெடு வையும் வழங்காமல், திடீரென அதிரடி நடவடிக் கையில் இறங்கியதன் மூலம் அரசுக்கு ஏதோ உள் நோக்கம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இலங்கையில் காமன்வெல்த் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிற வேளையில், இந்திய அரசை எதிர்த்துத் தமிழகமே கொதித்துக் கொண்டிருக்கும் சூழலில், தமிழக மக்களின் எழுச்சியைத் திசை திருப்பும் வகையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தை நடத்தி இந்திய அரசைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றிய ஓரிரு நாட்களில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்திருப்பது, தீர்மானம் நிறைவேற்றியதையே கேள்விக்குள்ளாக்குவ தோடு, தமிழக அரசின் நம்பகத்தன்மையின் மீதும் அய்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக எழுப்பப்பட்டுள்ள இந்த முற்றம் தமிழ் மக்களின் இனம்சார்ந்த உணர்வுகளோடு தொடர்புடையதாகும். அத்தகைய சிறப்பைப் பெற்ற நினைவு மண்டபத்தை இடித்ததன் மூலம் தமிழக அரசு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் வெகுவாகக் காயப்படுத்தியுள்ளது.

அதிமுக அரசு, ஈழத் தமிழர்களுக்கு உற்ற துணையாய் நிற்கும் என்று நம்பியவர்களுக்குப் பெரும் ஏமாற்றத் தையும் அவநம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் முற்றம், தனியார் இடத்தில் எழுப்பப்பட்டிருந்தாலும் அது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் சொந்தமான நினைவிடமே என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

எனவே, உலகத் தமிழர்கள் அனைவருக்கும் சொந்த மான முள்ளிவாய்க்கால் முற்றத்தில், தமிழக அரசு மீண்டும் சுற்றுச்சுவரை எழுப்பவும் பூங்காவை அமைக்கவும் முன்வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

அத்துடன், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவர்கள் மீதான பொய் வழக்கு களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டு மெனவும் தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு தொல்.திருமாவளவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


கொழுப்பைக் கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கொள்ளு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு என்பது பிரபல மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும்.

புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.

புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இருவகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. எனவே, சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின்மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.

கொள்ளின் பலன்கள்

கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரைக் கொள்ளு எடுத்துவிடும். கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது.

ஆயுர்வேதத்தில் கொள்ளை தலையில் வைத்துக் கொண்டாடாத குறைதான். அதில் பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்சினைக்கு, இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த... இப்படி கொள்ளு குணமாக்கும் பிரச்சினைகளின் பட்டியல் நீள்கிறது.

அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவ தாக ஆயுர்வேதம் சொல்கிறது. சிக்குன்-குன்யா நோய் பாதித்தவர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆந்திராவில் மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். அது மட்டுமின்றி, கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்சினைகளுக்குத் தடவுகிறார்கள்.

சூட்டைக் கிளப்புமா?

கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு. கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

குதிரைக்கு கொள்ளு கொடுப்பதன் பின்னணியும் இதுதான். குதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது. கொள்ளு கொடுப்பதால் தான் குதிரை கொழுப்பின்றி, சிக்கென்று இருக்கிறது. உடல் திண்மையுடன் வேகமாக ஓடுகிறது. மனிதர்களுக்கும் அப்படித்தான்.

எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?

கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து தினமும் அப்படியே குடிக்கலாம். வேக வைத்த கொள்ளை, சாலட் போல சாப்பிடலாம். கொள்ளை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொண்டு, சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும் சேர்க்கலாம்.

உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கொழுப்பிலிருந்து இது நம்மைக் காப்பாற்றும். அசைவம் சாப்பிடுகிறவர்கள், குறிப்பாக மட்டன் பிரியர்கள், அத்துடன் கொள்ளு சேர்த்து சமைக்கலாம். மட்டன் அதிக கொழுப்பு நிறைந்தது.

கொள்ளு அந்த கொழுப்பை உடலில் தங்க விடாமல் காக்கும். அதற்காக தினமும் மட்டன் சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. இது என்றோ ஒரு நாளைக்குத்தான். மதியமோ, இரவோ பலமான விருந்து சாப்பிடப் போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.

அன்றைய தினம் காலையில் நொய்யரிசியும், கொள்ளும் சேர்த்துக் கஞ்சி செய்து குடித்தால், அடுத்தடுத்த வேளைகள் சாப்பிடப் போகிற உணவின் கொழுப்பினால் உடலுக்கு பாதிப்பு வருவது தவிர்க்கப்படும்.

தமிழ் ஓவியா said...


நல்ல உடல் நலத்திற்கு பாரம்பரிய உணவா? துரித உணவா?


நல்ல உடல் நலத்திற்கு பாரம்பரிய உணவுகளா? துரித உணவுகளா? என்பது பற்றி கோவை என்.ஜி.மருத்துவமனை சேர்மன் மற்றும் லேப்ராஸ்கோபி, எண்டாஸ்கோபி சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோகரன் விளக்கமளிக்கிறார்.

உணவே மருந்து என்பது நமது சித்தர்களின் கோட்பாடு. நம் நாட்டு உணவு முறையானது நமக்கு ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தருவதாகும். நமது முன்னோர்கள் பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றி வந்தனர். குறிப்பாக கேழ்வரகு, கம்பு, சோளம், தினை போன்ற தானியங்கள் மற்றும் பலவகை பயிறு வகைகளும் அன்றாட உணவில் பெரும் பங்கு வகித்தன.

சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகளையே உண்டனர். விழாக்காலங்களில் மட்டுமே அரிசியை சமைத்து உணவாக உண்டனர். அவர்களது உடல் நலம் மிகவும் ஆரோக்கியமாகவும், நல்ல திடகாத்திரமாகவும் இருந்தது.

தங்களது உடல் உழைப்பினால் உணவு உற்பத்தியினைப் பெருக்கி உலகிற்கு சத்தான உணவளித்து வந்தனர். மக்கிப்போன இலை தழைகள், மாட்டுச்சாணம் போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்த தானியங்கள் நச்சுத்தன்மை இல்லாமலும், வைட்டமின், புரதம் மற்றும் தேவையான சத்துக்கள் நிறைந்தும் காணப்பட்டன. அதனால் அவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் நோய் நொடி இல்லாத நீண்ட ஆயுளைக் கொண்டிருந்தனர்.

உணவில் பயன்படுத்தும் கடுகு, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, மிளகு, தானிய வகைகள் போன்றவை மருத்துவகுணம் மிகுந்தவை. அப்போது உணவே மருந்தாக இருந்தது. காலப்போக்கில் அதிக மற்றும் விரைவான உணவு உற்பத்திக்காக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி வருவதால் தானியங்கள், காய்கறிகள், பழவகைகள், கீரைகள் போன்ற அனைத்தும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி வருகின்றன. அவற்றை உட்கொள்ளும் நாம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம். மலட்டு விதைகளை பயன்படுத்துவதால் விளை நிலத்தின் தன்மையும் பாதிக்கப்படுகிறது.

அதனால் உணவு உற்பத்தி குறைந்து பிறகு அந்நிலங்கள் உற்பத்திக்கான பயன்பாட்டிற்குத் தகுதி இல்லாத நிலங்களாக ஆகிவிடுகின்றன. இதனால் நம் வாழ்வாதாரங்களான விளை நிலங்கள் உணவு உற்பத்திக்குப் பயனற்றுப் போகின்றன. அண்மைக்காலம் தொட்டு பாரம்பரிய உணவுமுறைகள் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து மேற்கத்திய உணவு முறைகள் நம் மக்களிடம் ஆதிக்கம் செலுத்தத் துவங்கியுள்ளன.

நுகர்வு கலாச்சாரத்தினாலும் கவர்ச்சியான விளம்பரங்களினாலும் பீசா, பர்கர் போன்ற ஜங்க் புட்ஸ் என்றழைக்கப்படும் குப்பை உணவுகள் சிறியோர் மற்றும் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்து அத்தகைய உணவுகளை உண்ணுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் இவ்வகை உணவுகள் நமது உடலின் எடையை மிக விரைவாக அதிகரிப்பதுடன் தன்னோடு பல கொடூரமான நோய்களையும் கொண்டு வருகின்றன. நீரிழிவு நோய், இதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம் என இவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.

தமிழ் ஓவியா said...

ரத்த உற்பத்திக்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்

உடலில் உள்ள ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசிய மாகும்.

இயற்கை உணவுகள் மூலம் ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம். நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் ரத்தம் அதிகமாக ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாள்களுக்கு ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.

தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும். பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து ரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் ரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

தமிழ் ஓவியா said...


தனிச் சலுகை

ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத்தினர்க்குத் தனிச் சலுகை தரப்படவேண்டும். - (விடுதலை, 8.12.1967)

தமிழ் ஓவியா said...சி.என்.ஆர்.ராவின் குற்றச்சாற்று


பாரத ரத்னா விருது இருவருக்கு அறிவிக்கப்பட் டுள்ளது. ஒருவர் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் இன்னொருவர் கிரிக்கெட் விளையாட்டுக்காரர் சச்சின் டெண்டுல்கர்.

முதலாமவருக்குப் பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டதில், எந்தவித சர்ச்சையும் கிடையாது. ஆனால் அவர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைப் புயலைக் கிளப்பி விட்டன.

அறிவியலுக்குப் போதுமான அளவு நிதி ஒதுக்கப் படாததால், அரசியல்வாதிகளை முட்டாள்கள் என்று கூறியதுதான் சர்ச்சைக்குக் காரணம்; பிறகு இதுபற்றி சிந்தாமணி நாகேச இராமச்சந்திரராவ் விளக்கம் அளித்துச் சமாதானம் சொல்லியுள்ளார். அது ஒருபுறம் இருந்தாலும், அவர் சொன்ன வேறு சில கருத்துக்கள் தள்ளுபடி செய்யப்பட முடியாதவை. அறிவியல் துறைக்குப் போதுமான அளவு நிதி அளிக்கப்படுவதில்லை என்பதில், தமது கோப நெருப்பைக் காட்டியுள்ளார்.

இத்துறையைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, ராவ் சொன்ன கருத்து சரியானது தான் - உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

நிதி உதவி குறைவானதாக உள்ளது என்பதோடு மட்டுமல்ல, கால தாமதமாகவும் கிடைக்கிறது என்றும் கூறியுள்ளார். இது நமது நாட்டுக்கே உரித்தான சிகப்பு நாடா முறையாகும்.

சீனாவைப் போல நாம் உழைப்பதில்லை. எதையும் நாம் எளிதாக எடுத்துக் கொள்கிறோம் (சோம்பேறிகள் என்று சொல்லலாமல் சொல்லுகிறார் என்பதைப் புரிந்து கொண்டால் சரி) என்று கூறியுள்ளார்.

ராவ் கூறியதில் இன்னொரு முக்கியமான கருத்து; நம்மிடையே அறிவியல் மனப்பான்மை இல்லை என்பதுதான், நூற்றுக்கு நூறு துல்லியமான கருத்து இது. இந்த ராவ் கூறிய மற்ற மற்ற கருத்துக்களை வெளியிட்ட தமிழ் ஏடுகள் இந்தக் கருத்தை மட்டும் திட்டமிட்டு இருட்டடித்து விட்டன. குற்றமுள்ள மனம் குத்தியதோ என்னவோ!

இந்திய அரசமைப்புச் சட்டம் 51A என்பதில் உட்பிரிவு (h) என்பதில் தெளிவாக திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

விஞ்ஞான ரீதியான அணுகுமுறை, மனப்பான்மை மனிதாபிமானம், ஆராய்வு ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவைகளை ஊக்குவிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின், அடிப்படைக் கடமையாகும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளது.

இது எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது நியாயமான வினாவாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதி மொழி எடுத்துக் கொண்டு பதவி நாற்காலியில் அமர்பவர்களில் எத்தனைப் பேர் இந்தச் சரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒரு கணமாவது நினைத்துப் பார்க்கக் கூடியவர்கள்?

மற்றவர்களுக்கு இந்த உணர்வை ஊட்டுவது ஒருபுறம் இருக்கட்டும்; முதலில் மத்திய அமைச் சர்கள், ஏன் குடியரசுத் தலைவர்; துணைக் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட இதன்படி ஒழுகுபவர்கள் எத்தனைப் பேர்!

அதையும்விட இன்னொரு உச்சக்கட்ட கொடுமை என்ன தெரியுமா? அறிவியல் துறையில் பணியாற்றும் விஞ்ஞானிகளிடம் முதலில் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அந்த விஞ்ஞான மனப்பான்மை உண்டா?

இஸ்ரோ சார்பில் ஒவ்வொரு முறையும் விண் கலத்தை ஏவும் போதெல்லாம் அதனுடைய இயக்கு நராக இருக்கக் கூடிய ராதாகிருஷ்ணன் என்ன செய்கிறார்?

அந்த அறிவியல் ஆவணத்தைக் கொண்டு போய் திருப்பதி ஏழுமலையான் பாதத்திலும், காளஹஸ்தி சென்று அங்குள்ள கோயில் சன்னதியிலும் வைத்துப் பூசை செய்து வருகிறாரே - வெட்கப்பட வேண்டாமா?

விண்கலம் ஏவப்படுவது ஏழுமலையான் சக்தி யாலா? ஏழுமலையான் எத்தனை ஆண்டுகாலமாக அங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ளான்? அப்பொழு தெல்லாம் மங்கள்யான் பறக்க விடப்படவில்லையே - ஏன்?

இயக்குநர் பொறுப்பில் இருப்பவர்களுக்கே விஞ் ஞான மனப்பான்மை இல்லாதிருந்தால், இளை யோர்கள் எத்தகைய தாக்கத்திற்கு ஆளாவார்கள்? படிக்கும் மாணவர்களின் மத்தியில் மூடத்தனத்தைத் தானே ஏற்படுத்தும்.

வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லு வதுபோல விஞ்ஞானிகளே! முதலில் நீங்கள் விஞ் ஞான மனப்பான்மையைப் பெறுங்கள் என்பதுதான் நமது வேண்டுகோள்!

தமிழ் ஓவியா said...


வாயைத் திறக்காதீர் குர்ஷித்!


சிலர் வாயைத் திறப்பதை விட திறக்காமல் இருந்தாலே உத்தமம். வாயைத் திறந்து எதையாவது கொட்டி வாங்கிச் சுமப்பதில் இந்தியாவின் வெளி யுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை அடித்துக் கொள்ள வேறு ஒருவரும் இல்லை.

இலங்கை சென்ற இவர், திருவாய் மலர்ந் தருளியுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான உதவிகளை மட்டுமே இந்தியா வழங்க முடியும். அதே நேரத்தில் இலங்கைப் பிரச்சினைக்கு அந்நாட்டு அரசும், மக்களும்தான் தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.

நிறவெறி காரணமாக தென் ஆப்பிரிக்கா புறக்கணிக்கப்பட்டபோது இந்தப் புத்தி அப் பொழுது வேலை செய்யவில்லையோ! வங்காள தேசம் உருவாக்கப்பட்டபோது - இந்த ஞானோதயம் எங்கே போயிற்றாம்! இவர் சொல் கிறபடி பார்த்தால் அய்.நா. மன்றம், மனித உரிமை ஆணையம் இவையெல்லாம்கூட வெட்டி அமைப்புகள்தானோ!

தமிழ் ஓவியா said...


கழகத்தின் முயற்சிக்கு வெற்றி!


பெரியார் சிலையை மூடிய தேர்தல்

ஆணையமே மூடிய துணியை அகற்றியது

சேலம், நவ.19- ஏற்காட்டில் நடைபெற உள்ள இடைத் தேர்தலையொட்டி அத்தொகுதி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள சிலைகளை தேர்தல் ஆணையம் துணி போட்டு மூடியது தந்தை பெரியார் சிலையையும் இரவோடு இரவாக மூடினார்கள்.

இந்தத் தகவல் தலைமைக் கழகத்திற்கு வந்தது. இதற்கு முன் 2011இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் இதே தவறைச் செய்த நேரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதியரசர் திரு பி. ஜோதிமணி அவர்கள் தலைவர்களின் சிலைகளை மூடியதை உடனே நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அந்த ஆணையைத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி, உடனே மூடப்பட்ட பெரியார் சிலையைத் தேர்தல் ஆணையமே நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் பட்டது. அதன்படி தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட அனைத்து தலைவர் களின் சிலைகளை மூடியிருந்த துணிகளை தேர்தல் ஆணையமே நேற்று அகற்றிவிட்டது.

தேர்தல் ஆணையம் மூடிய சிலையைத் திறந்ததற்குப் பிறகு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே. ஜவகர், துணைத் தலைவர் சி.பூபதி, செயலாளர் அரங்க இளவரசன் மாநகரக் கழகத் தலைவர் பி. வடிவேல் ஆகியோர் இன்று காலை தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். தோழர்கள் ஜவகர், சி. பூபதி அரங்க இளவரசன், அ.க. இளவழகன் கடவுள் இல்லை சிவகுமார், பரமசிவம் ஆகிய கழகத் தோழர்கள் அதிகாரி களைச் சந்தித்து இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.

தமிழ் ஓவியா said...


சீனாவின் முதல் குரல்: இலங்கை மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்!


பீஜிங், நவ.19- இலங்கை மனித உரிமை களை பாதுகாக்கவும், ஊக்கப்படுத்தவும் நடவ டிக்கை எடுக்க வேண் டும் என்று இலங்கை யின் நட்பு நாடான சீனா திடீர் அறிவுரை வழங் கியுள்ளது.

இலங்கையில் சமீபத் தில் நடந்த காமன் வெல்த் மாநாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் சார்பில் குரல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கையின் நட்பு நாடான சீனாவும் முதன்முதலாக இலங்கை மனித உரிமை பிரச் சினை குறித்து கருத்து தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கியின் காங் செய்தியாளர்களி டம் கூறியதாவது:-

பல்வேறு நாடுகளில் உள்ள பொருளாதாரம், சமூக மேம்பாடு ஆகிய வற்றோடு ஒப்பிடும் போது, இலங்கையில் மனித உரிமைகள் பாது காப்பு மாறுபட்டதாக இருக்கிறது.

எனவே இதில் முக்கி யமானது என்னவென் றால், உலகின் மற்ற நாடுகள் இலங்கைக்கு சாதகமான உதவிகள் வழங்கும்போது, இலங்கை மனித உரிமை களை பாதுகாக்கவும், ஊக்கப்படுத்தவும் நடவ டிக்கை எடுக்க வேண் டும் என்றார்.

இங்கிலாந்து நாட் டுப் பிரதமர் டேவிட் கேமரூன் அந்த மாநாட் டில் எழுப்பிய பிரச்சினை களின் அடிப்படையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கூடும் அய்.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கை மீது சர்வதேச விசா ரணை நடத்தப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர், இது காமன்வெல்த் உறுப்பு நாடுகளுக்கிடையே உள்ள ஒரு பிரச்சினை. ஆனால் அதேசமயம், மனித உரிமைகள் பிரச் சினை தொடர்பாக நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகளும், தகவல் தொடர்புகளும் அதிகரிக்க வேண்டும் என்று நான் கருது கிறேன்.

மனித உரிமைப் பிரச் சினைகள் குறித்து உலக நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை மற்றும் தகவல் தொடர்புகள் மூலம் நல்ல புரிதல் ஏற் பட வேண்டும். இது சர்வதேச மனித உரிமை களை ஊக்கப்படுத்தவும், மேம்படுத்தவும் உதவும் என்று நாங்கள் எப்போ தும் கூறிவருகிறோம் என்று கியின் கூறினார்.

இலங்கையின் மனித உரிமைப் பிரச்சினை குறித்து சீனா கருத்து கூறியிருப்பது இதுவே முதல்முறையாகும். இலங்கைக்கு சீனா பில் லியன் டாலர் கணக்கில் உதவிகள் புரிந்து வரு கிறது.

இலங்கையில் நடை பெற்ற இறுதி போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அய்.நா. மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தபோது கூட, சீனா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித் தது. ஆனால் இந்தியா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது.

காமன்வெல்த் அமைப் பில் உறுப்பினராக இல் லாதபோதும், கொழும் பில் நடந்த காமன் வெல்த் மாநாட்டு கட் டமைப்பு வசதிகளுக் கான நிதியை சீனா வழங் கியதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


இன்றும் பார்ப்பனீயம் படம் எடுத்து ஆடும் கொடூரம்!

பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலைகளில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணமாம்!

கருநாடக மாநிலத்தில் நடக்கும் காட்டுமிராண்டித்தனம்!

பெங்களூரூ, நவ. 20- கருநாடகாவில் அத்தேகுக்கே சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கேவலமான பிரார்த்தனை செய்வது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். இதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று மாநில முதலமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றதில் நிலுவையில் உள்ளது.

தட்சிண கருநாடக மாவட்டத்தில் அத்தேகுக்கே சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 3 நாட்கள் மாதே ஸ்நானா பிரார்த்தனை நடை பெறும். பார்ப்பனர்கள் சாப்பிட்டு வைத்த எச்சில் இலைமீது கீழ்தட்டு வகுப்பைச் சேர்ந்த பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. இவ்வாறு நேர்த்திக்கடன் செய்தால் அவர்கள் நினைத்தது நிறைவேறும் என்று நம்பப் படுகிறதாம்.

இந்தப் பிரார்த்தனை முறை கீழ்தட்டு மக்களை அவமதிப்பதாகும் என்று தட்சிண கருநாடக கல்லியா தாலுகாவைச் சேர்ந்த கருணாகர் என்னே மஜல், மங்களூரு தாலுகாவைச் சேர்ந்த ஜெயக்குமார் கிரேமத், கே.நாராயண செட்டி ஆகியோர் மாநில முதலமைச்சர் சித்தராமய்யாவிடம் மனு கொடுத் தனர். எச்சில் இலை மீது கீழ்தட்டு மக்கள் அங்கப் பிரதட்சணம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு

மதவழிபாட்டுத் தலங்களில் எல்லோரும் சமமே. இதில் பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதவர் என்ற பாகுபாடு கூடாது. ஆனால் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்டு தெருவில் போட்ட எச்சிலை மீது பார்ப்பனர் அல்லாத பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்று வலி யுறுத்தப்படுவது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும். ஆகவே இதற்கு தடை விதிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று இந்த மனுவில் வலியுறுத்தி யுள்ளனர்.

இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாநில முதலமைச்சரின் அலுவலகம் உத்தரவிட்டது. ஆனால் இதுதொடர்பான எந்த உத்தரவும் தர வில்லை என்று கோவில் நிர்வாக அதிகாரி எம்.நாகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தக் கேவலமான பிரார்த்தனையை மாற்றி அமைக்கக்கோரி கருநாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஒருசில பக்தர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கோவிலில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையில் மாற்றம் செய்வதற்கு தடை விதித்தது. (என்ன கேவலம்!) இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காவல்துறையின் பாதுகாப்புடன் வழக்கம்போல் இந்தக் கேவலமான பிரார்த்தனை நடத்தப்பட்ட தாம். இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தமிழ் ஓவியா said...


மங்கள்யான் விண்கலம்: டிசம்பர் 1-இல் செவ்வாய்க்கோளை நோக்கிப் பயணிக்கும் இஸ்ரோ தலைவர் தகவல்


ஆலந்தூர், நவ.20- பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விடுபட்டு மங்கள்யான், செவ்வாய்க்கோளை நோக்கி டிசம்பர் ஒன்றாம் தேதி பயணம் மேற்கொள் ளும் என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க் கிழமை பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

செவ்வாய்க்கோளுக்கு கடந்த 5 ஆம் தேதி அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அது பூமியில் இருந்து 1.95 லட்சம் கி.மீ. தூரத்தில் தற்போது சுற்றி வருகிறது.

வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விடுபட்டு செவ்வாய்க்கோளுக்கு தனது பயணத்தைத் தொடங்கும்.

மங்கள்யான் விண்கலப் பயணம் திட்டமிட்டபடி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் கடந்த ஆகஸ்டு மாதம் 19 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது.

ஆனால், இறுதி நேரத்தில் ஏற்பட்ட சிறிய கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த ராக்கெட் உள்நாட்டு இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது.

தற்போது ஜி.எஸ்.எல்.வி டி-5 முழுமையாக தயாராகிவுள்ளது. இதை டிசம்பர் மாதம், இரண்டாவது வாரத்தில் விண்ணில் செலுத்த தயாராக உள்ளோம் என்றார் ராதாகிருஷ்ணன்.

தமிழ் ஓவியா said...


பாரத ரத்னா படும்பாடு!


கிரிக்கெட் விளையாட்டுக்காரர் சச்சின் டெண்டுல் கருக்குப் பாரத ரத்னா பட்டம் கொடுத்தாலும் கொடுத் தார்கள் - அது பெரிய சர்ச்சைப் புயலை நாடு தழுவிய அளவில் எழுப்பிவிட்டது.

விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இதுவரை பாரத ரத்னா பட்டம் கொடுக்கப்பட்டதில்லை. மூன்றாண்டுகளுக்கு முன்புதான் அத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

அப்படிப் பார்க்கப்போனால், இந்திய மண்ணுக்குச் சொந்தமான ஹாக்கிக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். மற்றவற்றில் எல்லாம் தேசியம் பேசுவோர்களின் சிந்தனையில் இந்த மின்னல் இழை தொனிக்காமல் போனது ஏன்?

ஒலிம்பிக்கில் எட்டு முறை தங்கத்தை வாங்கிக் கொடுத்த ஹாக்கிக்குக்கு அல்லவா முதல் மரியாதை செய்திருக்கவேண்டும்.

மற்ற மற்ற பிரச்சினைகள் என்று வரும்போது மட்டும்தான் வெள்ளைக்காரன் அந்நியனா? அவன் விட்டுச் சென்ற மிச்ச சொச்சங்களில் இந்தக் கிரிக்கெட்டும் ஒன்று.

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் அஸ்தமிக்காத ஒன்று என்று சொல்லப்படுவதுண்டு; அவன் ஆட்சி செய்த நாடுகளில் எல்லாம் இந்தக் கிரிக்கெட் உண்டு.

மற்றபடி உலகின் மிகப்பெரிய நாடுகளான அமெரிக்கா, சீனா, ருசியா, ஜப்பான், பிரான்சு போன்ற நாடுகளில் இந்த விளையாட்டைச் சீந்துவார் இல்லை.

அதிகம் போனால் கிரிக்கெட் விளையாட்டு பத்து நாடுகளைத் தாண்டாது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய, வெள்ளைக்காரர்களான பார்ப்பனர்கள் சுவீ காரம் செய்து கொண்ட விளையாட்டு இது. அதனால் தான் இதற்கு இவ்வளவு மரியாதை - ஊடகங்கள் எல்லாம் அவர்களின் கைகளில் என்பதால் மற்ற மற்ற விளையாட்டுகள் எல்லாம் மக்கள் மத்தியில் புறந்தள்ளப்பட்டு, கிரிக்கெட் மட்டும் குதிரைச் சவாரி செய்துகொண்டு இருக்கிறது.

அறிஞர் பெர்னாட்ஷா சொன்னதுபோல, 11 மடை யர்கள் விளையாடுகிறார்கள்; 11 ஆயிரம் மடையர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் நினைவிற்கு வருகிறது.

கிரிக்கெட் என்பது பணம் காய்த்துத் தொங்கும் மரம் போன்றது. ஒவ்வொரு முறை விளையாடும்பொழுதும் அளிக்கப்படும் பணம் போதாது என்று ஆண்டு சம்பளம் வேறு சுளை சுளையாக - மேலும் பலவகையான மாநில, மத்திய அரசுகளின் சலுகைகள் வேறு.

இவ்வளவும் போதாது என்று கிரிக்கெட் சூதாட்டம் வேறு - விளையாட்டு என்கிற வீரியத்தைக் காயடித்த ஆட்டம் ஒன்று உண்டு என்றால், அது கிரிக்கெட்தான்.

சச்சின் டெண்டுல்கரைப் பொறுத்தவரை, தன் சாதனைக்காக ஆடக் கூடியவரே தவிர, தான் சார்ந் திருக்கும் குழு வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கக் கூடியவரும் அல்லர்.

பொதுவாக ஒரு விமர்சனம் அவரைப் பொறுத்து உண்டு. அவர் அதிக ஓட்டம் எடுத்த ஆட்டம் வெற்றி பெற்றதில்லை என்று கூறப்படுவதுண்டு. அவர் சந்தித்த பந்துக்கும், ஓட்டத்திற்கும் உள்ள விகிதாச்சாரமும் அதனை நிரூபிக்குமே!

இவர் தனது 79 ஆவது ஆட்டத்தில்தான் முதல் சதமே போட்டார்.

இவர் அணித் தலைவராக இருந்து ஆடிய 5 நாள் போட்டிகள் 25; அதில் வெற்றி 4; தோல்வி 9. சரி சமம் (ட்ரா) 12.

ஒரு நாள் ஆட்டங்கள் 73; அதில் வெற்றி 23; தோல்வி 43. சரி சமம் 2; முடிவு இல்லாதது 5.
இதுதான் சச்சினின் சாதனையா? இவர்தான் கிரிக்கெட் கடவுளாம்!

இவர் தலைமையில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்றதும் இல்லை. கபில்தேவ், தோனி தலைமையில்தான் இந்திய அணி உலகக் கோப்பையைத் தட்டிப் பறித்ததுண்டு.

இதில் என்ன கொடுமையென்றால், 2011 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா வென்றது; அதன் பெருமை இந்திய அணியின் தலைவர் தோனிக்குத் தானே போய்ச் சேரவேண்டும்.

உண்மையில் என்ன நடந்தது? அந்தப் பதினோரு பேரில் ஒருவராக இருந்த சச்சினைத் தோளில் தூக்கிக் கொண்டு மைதானம் முழுவதும் வலம் வந்தனர். வெற்றிக் குரிய நாயகனான தோனியோ அமைதியாக ஒதுங்கி நின்றார்.

கிரிக்கெட்மூலம் சச்சின் கோடிகோடியாக சம்பாதித் தாரே தவிர, சமுதாயத்துக்கு அவரின் உதவி என்ன என்பது முக்கிய வினாவாகும்.

சச்சின் சாதனை என்பதைவிட, அவர் ஒரு பார்ப்பனர் என்ற எண்ணம் கொஞ்சம் தூக்கலாக இருப்பதுதான் இவ்வளவுக் களேபரம், கித்தாப்பு, விளம்பரங்களுக்கு எல்லாம் அடிப்படை!

தமிழ் ஓவியா said...


எனது ஆசை


எனக்கு ஆசை எல்லாம் - மக்கள் பகுத்தறிவாளர்கள் ஆகவேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் பார்ப்பனர் இருக்கக்கூடாது. இதுதான் எனது கொள்கை. (விடுதலை, 28.8.1972)

தமிழ் ஓவியா said...


சென்னை, காஞ்சி மண்டலக் கழகப் பொறுப்பாளர்களுக்கு அன்பு வேண்டுகோள்!

தஞ்சையில் டிசம்பர் 2ஆம் தேதி நடக்கவிருக்கும் நமது அருமைத் தலைவரின் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவில், உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு நாம் நிறுவ இருக்கும் 95 அடி உயர பேருருவச் சிலைக்காக முதற்கட்டமாக ஆயிரம் சவரன் தங்கத்துக்கான நிதியை தஞ்சையில் அளிக்க இருக்கிறோம்.

நாள்தோறும் தோழர்கள் நன்கொடைகளை ஆர்வத்துடன் வழங்கி வருவதை விடுதலையின் வாயிலாக அறிந்து இருப்பீர்கள்.

சென்னை, காஞ்சி மண்டலக் கழகப் பொறுப்பாளர்கள் நவம்பர் 26ஆம் தேதி செவ்வாய்க் காலை சென்னை பெரியார் திடலில் நடக்கவிருக்கும் நமது அருமைக் கழகப் பொருளாளர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு நேரில் வந்து கழகத் தலைவரிடம் நிதியை அளிக்குமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இடையில் நாட்கள் குறைவு - வேகமும், விவேகமும் காட்டுவீர்! தோழர்களே!

சென்னை
20.11.2013

- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்