Search This Blog

23.11.13

பக்தி என்பது முட்டாள்தனம் அல்லது புரட்டு!


பக்தி என்றால் என்ன? கோவிலுக்குப் போய் கடவுளைக் கும்பிடுவதும், வீட்டில் கடவுளை நினைத்து நாமம், விபூதி அணிந்து கடவுளைக் கும்பிடுவதும், பார்ப்பனரிடம் மிக்க விசுவாசம் காட்டி அவர்களுக்கு மரியாதை செய்து காசு, பணம், பொருள் கொடுப்பதும், ராமாயணம், பாரதம், பாகவதம், கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் முதலிய மத நூல்களைப் படிப்பதும்; படிக்கக் கேட்பதும் அல்லாமல் - வேறு எதைப் பார்ப்பனர்கள் பக்தி என்கிறார்கள்?

ஸ்தல யாத்திரை, தீர்த்த யாத்திரை செய்வது புண்ணியம் என்பார்கள். பிரபந்தம், தேவாரம் படிப்பது பெரிய பக்தி என்பார்கள்.

பக்தியை பற்றி விளக்கப் போவோமானால், இப்படி ஏதாவது இன்னும் பல நடப்புக்களைத்தான் சொல்லலாமே யொழிய, பக்திக்கும், அறிவுக்குமோ அல்லது எந்தவிதமான ஒழுக்கம், நாணயம், நன்றி, உபகாரம், நேர்மை முதலிய மனிதப் பண்புகள் - அதாவது மற்ற மனிதனிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய எந்த ஒரு நற்குணத்தையாவது முக்கியமாகக் கூறமாட்டார்கள்.

இந்த மேற்கண்ட குணங்கள் தான் மனிதனிடம் இருக்க வேண்டிய அவசியமான பண்புகளாகும் என்று மக்களிடையில் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்திருக்குமானால், இவ்வளவு ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு, நேர்மைக்கேடு ஏற்பட்டிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.


இன்றைக்கு நாம், எத்தனை மக்களிடம் விபூதி, நாமம், கோவில் செல்லுதல், வீட்டில் பூசை செய்தல், வாயால் சிவநாமம், ராமநாமம் உபசரித்தல் முதலிய பக்திக் குணங்களைக் காண்கிறோம் - அவற்றில் ஒரு பங்குக் கூட யோக்கியதையோ, ஒழுக்கத்தையோ, நாணயத்தையோ, நேர்மையையோ, காணமுடிவதில்லையே, என்ன காரணம்?

சாதாரணமாக, பக்தி என்பது ஒரு மனிதனுக்கு வெறும் பச்சை சுயநலமே ஒழிய அதனால் மற்ற மக்கள் எவருக்கும் எவ்விதப் பயனுமில்லை. ஒரு மனிதனுடைய பக்தியினால் ஏதாவது பலன் கிடைப்பதானாலும் பக்தி செலுத்தும் மனிதனுக்கு மாத்திரம் பலன் உண்டாகலாமே தவிர, வேறு எந்த மனிதனுக்கும் அதனால் எந்தவித பயனும் ஏற்படுவதற்கும் இடமே இல்லை.

ஆனால் -

மனிதனுடைய ஒழுக்கம், நாணயம், நேர்மை முதலானவை அவற்றை உடைய மனிதனுக்குப் பெருமையளிப்பது மாத்திரமல்லாமல் அவனைச் சுற்றியுள்ள எல்லா மக்களுக்கும் நன்மை அளிக்கும் காரியமாகும். உதாரணமாக ஒரு மனிதன் பக்தியற்றவனாக இருந்தால், அதனால் யாருக்கும் எவ்விதக் கெடுதியும் ஏற்படப் போவதில்லை.

ஆனால் -

ஒரு மனிதன் ஒழுக்கமற்றவனாக இருந்தால், நாணய மற்றவனாக இருந்தால், நேர்மையற்றவனாக இருந்தால், அவனைச் சுற்றியுள்ள, அவன் சம்பந்தப்பட்டுள்ள எல்லா மக்களுக்கும் தொல்லை, துன்பம், நட்டம், வேதனை, உண்டாகுமா இல்லையா?

மற்றொரு மனிதனுக்குக் கேடு செய்வது என்பது தானே ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு, நேர்மைக்கேடாக முடிகிறது.

உலகிலே - பாழாய்ப் போன எந்தக் கடவுளும் உலகத்தில் மக்களுக்குக் கேடு செய்த எப்படிப்பட்ட அயோக்கியனையும் மன்னிக்கவும், முடியாவிட்டால் தண்டிக்கவும் தான் தகுதி உடைய கடவுளாக இருக்கிறதே தவிர, எவனையும், எந்த ஜந்துவையும், மற்ற மனிதனுக்கு மற்ற ஜந்துவுக்குத் துன்பம் செய்யாமல் இருக்கும்படியான சக்தி இல்லாதவையாகத் தானே இருக்கின்றான்.

மக்களுக்குக் கேடு செய்யாதவனைத் தண்டித்தால் தண்டிக்கப்பட்ட மனிதன் இனிமேல் கேடு செய்யாமல் இருக்கத்தான் அந்தத் தண்டனை பயன்படலாமே ஒழிய துன்பமோ – கேடோ அடைந்தவனுக்குக் கடவுளால் என்ன பரிகாரம் செய்ய முடிகிறது? நல்லபடியாய் பக்தி செய்தவனுக்குக் கேடு, துன்பம் வந்தாலும் இதுதானே முடிவு?

ஆகையால், பக்தியால் மனிதனுடைய குணமாவது மாறுகிறதா? மற்ற மனிதனுக்குக் கேடு செய்யாமல் இருக்கவாவது பயன்படுகிறதா?

ஆகவே, பக்தி என்பதெல்லாம் முட்டாள்தனமும், புரட்டும் பயனற்ற தன்மையும் கொண்டதல்லாமல் வேறு என்ன என்று கேட்கிறேன்.


------------------------------------17.04.1973- "விடுதலை" நாளிதழில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்

32 comments:

தமிழ் ஓவியா said...


வேலை இல்லாதோர் உதவித் தொகை பெற விண்ணப்பித்து விட்டீர்களா?


10-ஆம் வகுப்பு தேர்வு எழுதி, தோல்வி அடைந்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தால் அவர்களுக்கு தமிழக அரசு மாதந்தோறும் 100 ரூபாய் வழங்குகிறது. அதுபோல் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 150 ரூபாயும், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாயும் வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகையைப் பெற கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும்.

1) குடும்ப வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும்.

3) 40 வயதுக்கு மேற்பட்டவர்களா இருக்கக் கூடாது.

4) பள்ளி, கல்லூரிகளில் பயில்பவராக இருக்கக்கூடாது.

5) சுயதொழில் செய்பவராக இருக்கக் கூடாது.

6) தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதி படைத்தவர்கள் வேலை இல்லாதோர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம். இந்த உதவித் தொகை காலாண்டு தோறும் கணக்கிடப்பட்டு, வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களில் நிறையப் பேர் 10-ஆம் வகுப்புக்கு மேல் படித்துள்ளனர். அவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகளும் உள்ளன. அவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதில்லை. பதிவு செய்தவர்களும் இந்த வசதியைப் பற்றி அறிந்திருக்கவில்லை. (உணர்வு _ 2013 _ நவம்பர் (8-_-14), பக்கம் 14)

தமிழ் ஓவியா said...


தெரியுமா?


முதல் கலைக்களஞ்சியம் சீன மொழியில் வெளியானது.
கார்களுக்குப் பதிவு எண் வழங்குவதை அறிமுகப்படுத்தியது சுவீடன்.
கண்ணாடியில் சாலைகள் போட்டுள்ள நாடு ஜெர்மனி.
சீனாவின் புனித விலங்கு பன்றி.
டிராப்ட் தரும் முறையை அறிமுகப்படுத்திய நாடு சீனா.
ஒரு மயிலிறகில் ஒன்பது வண்ணங்கள் இருக்கின்றன.
ஒரு கிலோ குங்குமப்பூவைச் சேகரிக்க ஒரு லட்சத்து 40 ஆயிரம் செடிகள் வேண்டும்.
தாம் பிறந்த நாட்டை தந்தையர் நாடு என்று சொல்பவர்கள் அய்ரோப்பியர்கள்.
உலகில் அதிக தொலைக்காட்சி நிலையங்கள் இருக்கும் நாடு அமெரிக்கா.

தமிழ் ஓவியா said...


வலிப்பு வரும்போது சாவியை கொடுப்பதால் பயன் இல்லை


வலிப்பு வந்தவுடன், அவருக்கு சாவியை கொடுப்பதால் எவ்விதமான பயனும் இல்லை என்று ராஜீவ்காந்தி மருத்துவமனைத் தலைவர் டாக்டர் கனகசபை தெரிவித்தார்.

சென்னை மருத்துவக் கல்லூரி - ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனை நரம்பியல் துறை சார்பில் தேசிய வலிப்பு நோய் தினத்தை முன் னிட்டு, வலிப்பு நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடந்தது. மருத்துவமனைத் தலைவர் வி.கனகசபை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். நரம்பியல் துறைத் தலைவர் கே.தெய் வீகன், பேராசிரியர்கள் கே.பானு, எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 100_க்கும் மேற்பட்ட வலிப்பு நோயாளிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வி.கனகசபை பேசியதாவது:

மூளையில் உள்ள நரம்பு அணுக் களில் ஏற்படும் மின் அலை மாற்றங் களால், மூளையின் அனைத்து பாகங் களும் ஒரு முகமாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலிப்பு நோய் வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வலிப்பு நோய் வரவாய்ப்பு உள்ளது. ஒரு சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகிறது.
வலிப்பு நோய் வந்தால் உடனடியாக சாவியை கையில் கொடுப்பது போல சினிமாவில் காட்டுகின்றனர். அதனைப் பார்த்து பொதுமக்களும் வலிப்பு நோய் வந்தவுடன், அவர்களின் கையில் சாவியை கொடுக்கின்றனர். வலிப்பு நோய்க்கு சாவி கொடுப்பதின் மூலம் எவ்வித பயனும் இல்லை. இதுபோன்ற மூடநம்பிக்கைகளை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

வலிப்பு வந்தவுடன், அவரை உடன டியாக இடது பக்கம் திரும்பி படுக்க வைக்க வேண்டும். அவர் பற்களை கடித்துக்கொள்ளாமல் பாதுகாக்க ரப்பர் பந்துகளை வாயில் வைக்க வேண்டும். கட்டையை வாயில் வைத்தால், பற்கள் உடைந்துவிடும். அதன்பின், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். டாக்டர்கள் சொல்லும் மருந்து, மாத்திரைகளை வலிப்பு நோயா ளிகள் பல ஆண்டுகள் சாப்பிட வேண்டும்.

இரண்டு மாதமாக வலிப்பு வர வில்லை என்பதால், மருந்து, மாத்திரை களை பாதியில் நிறுத்தி விடக்கூடாது. டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து எப்போது சொல்கிறார்களோ, அப்போதுதான் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதலில் அடிக்கடி வரும் வலிப்பு நோய் குறையும். அதன்பின், வலிப்பு நோய் முழுவதுமாக குணமடையும்.
இந்த மருத்துவமனைக்கு தினமும் 200 முதல் 250 வலிப்பு நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களில் 15 பேர் புதிய நோயாளிகள். ஆரம்பத் தில் வலிப்பு நோயாளிகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை மாத்திரைகள் வழங்கப்பட்டது. நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போது மாதத்திற்கு ஒரு முறை மாத்திரை வழங்கப்படுகிறது. நோயின் தன்மையை பொருத்து ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள ஒரு மாதத்திற்கான மாத் திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. வலிப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது மற்றும் உயரமான இடங்களில் நிற் பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக வலிப்பு நோயாளிகள் கவலைப்படக் கூடாது. பதற்றம் அடையக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார். திருமணம் செய்வதற்கோ, குழந்தை பெறுவதற்கோ வலிப்பு நோய் ஒரு தடை இல்லை.
நன்றி: தி இந்து 19.11.2013


றீ குழந்தைக்கு தாய் பால் கொடுக்கலாம்.

றீ பிரசவ காலங்களில் டாக்டரின் ஆலோசனைப்படி சில வலிப்பு மாத்திரைகளை சாப்பிடலாம்.

வலிப்பு நோய் அறிகுறிகள்:

றீ நினைவு இழந்து கை, கால், முகம் வெட்டி வெட்டி இழுக்கும்.

றீ திடீரென்று சுய உணர்வு இல்லாமல் போதல்.

றீ நினைவு இழந்து நின்ற இடத்திலேயே கீழே விழுதல்.

றீ சிறிது நேரத்திற்கு மாறுபட்ட விநோதமான செயல்களை செய்தல்.

றீ சில நிமிடங்கள் கண் இமைக் காமல் விழித்து பார்த்தல், வாய் மெல்லுதல், உமிழ்நீர்,

துப்புதல், கைகளை பிசைதல்.

வலிப்பு நோய் காரணங்கள்:

றீ மூளையில் அடிபடுதல்,

றீ மூளைக் காய்ச்சல்.

றீ மூளையில் கட்டி.

றீ நாடா புழுக்களினால் ஏற்படும் கட்டிகள்.

றீ காசநோய் கட்டிகள்.

றீ புற்றுநோய் கட்டிகள்.

றீ மூளைக்கு ரத்தம் குறைவாக செல்லுதல்

றீ பிரசவத்தில் குழந்தைகள் ஏற் படும் சுவாச அடைப்பு.

தமிழ் ஓவியா said...


நஞ்சருக்குப் பஞ்சணையா? நாட்டுக்கு மோடி தலைமையா?

மதச்சார் பற்றநாடு அரசு கட்சியென்று
மார்தட்டிக் கொள்கின்றார் நாளும்
மதவிலக்கம் செய்யாமல் மானுட மேட்டிமை
மனங்கொள் வாரிங் கில்லை
மதச்சார் பின்மையென்றால் மதம னைத்தையும்
சமமாய்ப் பாவிப்ப தென்றெண்ண
அதிகார வருக்கமோ ஆரியச் சார்பை
ஆட்சி யதிகாரத்தில் புகுத்தினர்!

பார்ப்பனர் பண்பாடு பச்சைப் படுகொலையும்
பயங்கர வாதமுமே இல்லையெனின்
கூர்ச்சரத்தைக் கொலைக்கள மாக்கிக் குருதி
குடித்த வெறியனுக்குக் கொம்புசீவி
மூர்க்கன் ஒருவனுக்கு முடிசூட்டி விட்டு
மோடி மஸ்தான் வேலையில்
ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அனைத்து இந்துவிய
அமைப்புகளும் ஆர்ப்பாட்டம் போடுகின்றார்!

ஊடக மென்பது உண்மை வெளிச்சமிட
நடுநிலை தவறாமல் நாட்டுவதாம்
ஊடகமெல்லாம் பார்ப்பனர் கையில்
பெரும்பான்மை இருப்பதால் ஊதிப்
பெருக்குகிறான் ஒரு சார்பாய் மோடிகுறித்து
மாயத் தோற்றத்தைக் காட்டியே
பெருக்கிக் கூட்டினும் பின்னடைவு பிஜேபிக்கே

என்பதை மறுக்க வேண்டாம்!

நஞ்சருக்குப் பஞ்சனையா? நரவேட்டை யாடிய
மோடிக்கு நாட்டுத் தலைமையா?
வஞ்சகவானர வரலாற்றைத் திரித்த
கூட்டத்துக்கு மீண்டும் ஆட்சியா?
அடிப்படைக்கே அல்லாடும் ஆயிரமா யிரவர்
ராமனுக்குக் கோயில் கேட்குதாம்
உடைப்புக்களும் வெடிப்புக்களும் நிறைந்த நாட்டில்
உழைக்கும் மக்களுக்கே ஆட்சி!
பார்ப்பன ரல்லாதார் மோடி யென்றாலும்
பார்ப்பனர் அடிவருடி யென்பதால்
பார்ப்பனர் பக்கம் படியாதீர்! மதச்சார்
பின்மையில் மனங்கொள் வீரே!
பெரும்பான்மை ஆள்வதும் சிறுபான்மை வாழ்வதே
மக்கள் நாயக மரபாகும்!
பெரும்பான்மை மக்களைப் பின்னுக்குத் தள்ளும்
சூழ்ச்சியை முறியடிப் பீரே!

பெரியார் மண்ணில் பார்ப்பன ஜனதாவின்
மோடிக்குத் திருச்சியில் என்னவேலை?
நரிக்குப் பாதுகாப்பு நம்தமிழர் தலைவர்க்கு
தாக்குதல் நாரீமணி ஆட்சியில்!
கிருஷ்ணன் என்பான் கீழ்மகன் பெண்ணை
வெண்ணெய் திருடியவன் பகவானா?
திருச்சி மாநாடு தக்கதோர் விடையளிக்கும்
திரண்டு வாரீர் தீரர்களே!

- கவிஞர் இனியன், திருச்சி -13

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவா? என்ன விலை?


- சிவகாசி மணியம்

கையிலே என்ன கயிறு என்று கேட்டால் நம்பிக்கை என்று பதில் வருகிறது. கழுத்தில் என்ன கொட்டை என்றால் அதே பதில் தான். மூடநம்பிக்கை என்ற சொல்லின் முதல் இரண்டு எழுத்துக்களை முடக்குவதால் நம்பிக்கை என்றாகிறது. நம் அறிவை, ஆற்றலை முடக்குவதால் மூடநம்பிக்கை என்பதும் சரியே! அன்றாடம் செய்தித்தாளில், ஊடகங்களில் எத்தனை விதமான அறிவை இழக்கும் அசட்டு நிகழ்வுகள்! சில நெஞ்சைப் பதறவைக்கின்றன. வேறு சில சிரிப்பை வரவழைக்கின்றன.

இரத்தத்தை உறைய வைக்கும் ஒரு செய்தி: திண்டுக்கல் அருகே கோவிலூரில் கொழும்பு சையது முகமது ஆலிம் மேல் நிலைப்பள்ளி இருக்கிறது. இங்கு ஆறாம் வகுப்பு படித்த, பழனியைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்ற பையன் பள்ளியின் செப்டிக் டேங்கில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான். இது தொடர்பாக அதே பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவனைக் கைது செய்திருக்கிறது காவல் துறை.

பத்தாம் வகுப்பு படிக்கும் முருகனும் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) ஹரிபிரசாத்தும் விடுதியில் நெருங்கிப் பழகியிருக்கிறார்கள். அவர்களுக்குள் ஹோமோ எனும் ஓரினச்சேர்க்கை ஏற்பட்டுள்ளது. தொடர் தொந்தரவு பொறுக்க மாட்டாமல் இனிமே கூப்பிட்டா வார்டன் கிட்ட சொல்லிருவேன் என்று ஹரிபிரசாத் மறுத்திருக்கிறான். மீண்டும் உறவுக்கு வற்புறுத்திய போது வார்டன் கிட்ட சொன்னாதான் நீ திருந்துவே என்று செல்லிவிட்டு அதற்காகக் கிளம்பியவனைப் பார்த்து பயந்த முருகன், திறந்து கிடந்த செப்டிக் டேங்கருக்குள் தள்ளி மூடிவிட்டான். அவன் இப்போது மதுரை சிறுவர் காப்பகத்தில்!

இறந்துபோன சிறுவனின் தாய் பரிமளாதேவி அழுது கொண்டே சொன்னது: எங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். ஒரே ஆம்பளைப் பிள்ளைங்கிறதால ரொம்ப செல்லமா வளர்த்தோம். என் வீட்டுக்காரருக்கு திருப்பூர் பணியன் கம்பெனில வேலை. அஞ்சாவது வரை பழனி கான்வென்ட்லதான் படிச்சான். அங்கேயே படிக்க வச்சிருக்கலாம். உங்க பையனுக்கு நேரம் சரியில்லேனு சோசியர் ஒருத்தர் சொன்னதைக் கேட்டுத்தான் அவனை ஹாஸ்டல்ல சேர்த்தோம். அதுவே அவனுக்கு சவக்குழி ஆயிடுச்சே என்று கதறினாள். நெஞ்சை நெகிழச் செய்யும் இச்சம்பவம் ஒருபுறம்.

11.10.2013 விடுதலை படித்தவர்களுக்கு நினைவிருக்கும். கொட்டை எழுத்துச் செய்தியாக அதைக் கைப்பற்றினார் பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி. ஆனால் அவரது பதவியும் அடுத்த சில நாட்களிலேயே பறிபோனது. பிறகு அங்கே வைகைச் செல்வன் வந்தார். கிழக்கு நோக்கி இருந்த இருக்கையை மேற்கு நோக்கி மாற்றிக் கொண்டார். ஆனாலும் வைகைச் செல்வனின் பதவியும் தப்பவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்து புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றாலும் யாரும் அந்த அறையை எட்டிப்பார்க்கக்கூடத் தயங்குகிறார்கள்!

இப்போது அந்த அறையில் நூலாம் படை வாசம்!

பகுத்தறிவு அப்படினா என்ன? எங்கே கிடைக்கும்? கிலோ என்ன விலை? என்று கேட்டு உங்களை சுற்றி வளைத்துவிடப் போகிறார்கள்! எச்சரிக்கை!.

தமிழ் ஓவியா said...


சாத்தாணியின் புரோகிதம்

நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலேதான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம். அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான். அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்

- ஈ.வெ.ரா. (ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு)

தமிழ் ஓவியா said...


மனிதனிலிருந்து...


9.11.2013 நாளிட்ட விடுதலை ஞாயிறு மலரில் இடம் பெற்ற மனிதனி லிருந்து குரங்குக்குப் போகலாமா? என்ற மின்சாரத்தின் கட்டுரை அருமை யிலும் அருமை. தமிழகத்தில் ஜாதியை மய்யப்படுத்தி அரசியலில் சாதிக்க லாம் என மனப்பால் குடிக்கும் சிறுமதியாளர்களுக்கு, சிறுபிள்ளைகளுக்கு பாடம் நடத்துவது போல் பல்வேறு எடுத்துக்காட்டுக்களுடன் வரலாற்றுச் செய்திகளையும் சொல்லியிருக்கிறார் மின்சாரம்.

தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பேசி, பிரபலமாகி, அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திடும் பதவிப் பித்தர்களின் கனவு ஒருக்காலமும் தமிழகத்தில் பலிக்காது என்பது திண்ணம்.

- சீ. தங்கத்துரை, மேலமெஞ்ஞானபுரம்

தமிழ் ஓவியா said...


கடவுள் பதில் சொல்வானா....?

ஏ..
இறைவா..!
நீ உலகத்தைப்
படைத்ததாக
சொல்கிறார்களே...
அந்த உலகம்
உருண்டையா..?
தட்டையா?
எவ்வாறு படைத்தாய்?
இதனை
தகவலறியும் உரிமைச்
சட்டத்தின் கீழ்
கேட்டால் சொல்வாயா?

@

குறும்பா

காசேதான்
கடவுளப்பா
ஏழைகளுக்கு...!
கடவுளேதான்
காசப்பா...!
பணக்காரன்களுக்கு!

தமிழ் ஓவியா said...


பிஜேபியின் யோக்கியதையைப் பாரீர்!

மதக் கலவரத்துக்குக் காரணமாகி கைது செய்யப்பட்ட இரு பி.ஜே.பி., எம்.எல்.ஏ.களுக்குப் பாராட்டாம்!

சரத் யாதவ், மாயாவதி கண்டனக் குரல்

புதுடில்லி, நவ.23- உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் நடந்த வகுப்பு மோதலுக்கு துணைபோவதாக கைதான கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்களைப் பொதுக் கூட்டத்தில் பாராட்டி கவுரவம் செய்ததற்காக தமது முந்தைய கூட்டணிக் கட்சியான பா.ஜ.க. வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது அய்க்கிய ஜனதா தளம் கட்சி இது தொடர்பாக செய்தியாளர்களி டம் வெள்ளிக்கிழமை கட்சியின் தலைவர் சரத் யாதவ் கூறியதாவது:

கட்சியின் பிரதமர் வேட்பாள ராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதிலி ருந்தே பா.ஜ.க. வின் திசை மாறி விட்டது.

ஆக்ராவில் வியாழக்கிழமை நடந்த கூட்டத்துக்கு மோடி வந்து சேர்வதற்கு முன்னதாக தந்திரமாக அந்த2 எம்.எல்.ஏ.க்களையும் கவுர வப்படுத்தியுள்ளனர். பா.ஜ.க.வின் உண்மையான முகம் தெரிந்து விட்டது.

பொதுமக்களுக்கு முக்கியத் துவம் வாய்ந்த விவகாரங்களை விவாதிக்காமல் உதவாத விஷ யங்களை பற்றி அலசுவதே பா.ஜ.க.வுக்கு வேலையாகி விட்டது. தான் செல்ல வேண் டிய திசை என்னவென்பதே அதற்கு தெரிய வில்லை. கட்சி யின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட திலிருந்தே பா.ஜ. க.வில் இத்தகைய நிலை வலுத்து விட்டது.

5 மாநிலங்களில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஒன்றுக்கும் உதவாத பிரச்சினை கள் தீவிர விவாதப் பொருளாக் கப்பட்டு பல்வேறு அமைப்புகளி லும், ஊடகங்களிலும் விவாதம் அரங்கேறுகிறது.

கட்சிகளுக்கு இடையே, தனி நபர் தாக்குதல் அதிகரித்துவிட் டது. இதற்கெல்லாம் விடை கொடுத்து ஏழைகள் பற்றியும், சமூகத்தில் பின்தங்கியோர் பற்றி யும் விவாதிப்பதுதான் நாட்டுக்கு நல்லது என்றார் சரத்யாதவ்.

மாயாவதி கண்டனம்! செய்தியாளர்களிடம் வெள் ளிக்கிழமை இது தொடர்பாக மாயாவதி கூறியதாவது: ஆக்ரா வில் நடந்த நிகழ்ச்சியில் தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 பேரையும் கவுரவித்துள்ளது பா.ஜ.க. இதை பகுஜன் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இந்த நிகழ்ச்சி காரணமாக உத்தரப்பிரதேசத்தில் பதற்றம் ஏற்படலாம். அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அதற்கு சமாஜ் வாதி கட்சியைத்தான் பகுஜன் சமாஜ் குற்றம் சாட்டும்.

இந்த கூட்டத்துக்கு அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு அனுமதி தந்திருக்கக்கூடாது. சமாஜ்வாதி, பா.ஜ.க. விஷயத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது என்றார் மாயாவதி.

சமாஜ்வாதி கட்சியின் பரேலி பேரணியில் சர்ச்சைக்குரிய இஸ் லாமிய மத குரு தவுகீர் ரஸாகான் பங்கேற்றது பற்றி கேட்டதற்கு பா.ஜ.க.வுக்கும், சமாஜ்வாதிக்கும் வித்தியாசம் இல்லை என்பதை இது தெளிவுபடுத்துகிறது என் றார் மாயாவதி.

முசாபர்நகர் வகுப்பு கலவரத் தில் பாதிக்கப்பட்டோருக்கு ஜாதி பாகுபாடு பிரித்து பார்த்து நிவா ரண நடவடிக்கைகளை அறி வித்தது மாநில அரசு.

இந்து - முஸ்லிம் மோதலை தூண்டி விடுவதே மாநில அரசின் திட்டம். பா.ஜ.க. சமாஜ்வாதியின் கூட்டுத்திட்டம் தான் இது.

பகுஜன் சமாஜ் கட்சிஆட்சியில் இருந்தபோது கொண்டு வரப் பட்ட திட்டங்கள் பற்றி குறை கூற எதுவும் இல்லை என்பதால் அப் போது அமைக்கப்பட்ட நினைவி டங்கள், அருங்காட்சியகங்கள் பற்றி குற்றம் கண்டுபிடிக் கிறார்கள்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசம் அடைந்துள்ளதால் அதிலிருந்து திசை திருப்பவே இப்படியெல்லாம் குறை கண்டு பிடிக்கிறார்கள்.

குடியரசுத் தலைவர் ஆட்சி

மாநிலத்தில் ஏற்பட்ட வகுப்பு கலவரம் உள்ளிட்டவற்றை கருத் தில் கொண்டு ஆளுநர் நிலை மையை மதிப்பிட வேண்டும். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றார் மாயாவதி.

முசாபர் நகர் மதக் கலவர வழக்குகளில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதாகி பிணையில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் இரு எம்.எல்.ஏ.க்களான சுரேஷ் ராணா மற்றும் சஞ்சய் சோம் ஆகியோர் வியாழக்கிழமை ஆக்ரா நகரில் நடந்த கூட்டத்தில் கவுரவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு உ.பி. மாநில பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க.வின் சட்டசபை தலைவர் லால்ஜி டண்டன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஆனால், இந்த நிகழ்ச்சி மோடி மேடையில் ஏறுவதற்கு சற்று முன்பாகவே செய்து முடிக்கப்பட்டது.
குற்றவாளிகளின் கூடார மாகவே பி.ஜே.பி. ஆகி விட்டதை இந்த நிகழ்ச்சி நிரூபித்து விட்டது.

தமிழ் ஓவியா said...


அவாளின் டேஸ்ட்டே அலாதிதான்!
எழுத்துரு அளவு Larger Font Sm

- ஊசி மிளகாய்

நேற்று தினமலர் ஏட்டின் அங்காடித் தெரு பற்றிய சுவையான, நாக்கில் (தண்ணீர் அல்ல), ஜலம் சொட்டச் சொட்ட ஒரு ருசியான பயணம் - வாங்க சாப்பிடலாம்ங்ற தலைப்பிலே
நம்மவா ஏடு என்றாலும், இந்த சூத்திராள், பஞ்சமாள் போன்றவர்களால்கூட இவ்வளவு நன்னா சுவையோடு நான்வெஜிட்டேரியன் என நம்ம மூதாதைகளின் சாப்பாட்டை பிரமாதமா படம் பிடிச்சு எழுதிட்டாள்! நோக்கு தெரியுமோ? அங்கே எழுதியிருப்பதை படியுங்கோ.

ஸ்டீம்டுபிஷ் (Steamed Fish Soup) நீராவியில் வேகவச்ச கொடுவா மீன் சூப், மசாலா வெல்லாம் சேர்த்தது; இதிலே கொழுப்பு கம்மி உடம்புக்கு நல்லது, இதை சூடா குடிச்சா ரொம்ப ருசியா இருக் கும் அருகில் அமர்ந்திருந்த பாட்டி பிடிவாதமாய் கொடுக்க, ருசித்தேன் - ஆஹா என்ன மணம், என்ன ருசி, அருமையான மீன்சூப்.

இட்லி, புரோட்டாவுக்குக் கொஞ்சம் கிரேவியும் வைத்தவரிடம், காரம் இல்லாமல் சிக்கனைப் போல வெந்திருந்த மட்டன்துண்டு; நாக்கில் வழுக்கி தொண்டையை அடைந்து, மோட்சம் பெற தொடங் குது இது காயல் களறி கறி காயல்பட்டினம் பக்கம் ரொம்ப பிரபலம். ரொம்ப நல்லாயிருக்கு

அடுத்து இன்னொரு முக்கியமான அயிட்டம் பற்றியும் எழுதுகிறார் தினமலர்காரர். இது நண்டு பெப்பர் பிரை நண்டு சாப்பிட்டா நெஞ்சு சளி கரைஞ்சு போகும். - சித்த மருத்துவர் போல விளக்கம் சொன்னாராம் தாத்தா (தாத்தா பாட்டி மேலே பழியைப் போட்டுட்டா..!)

நண்டு பொறியலின் காரமில்லாத ருசியில் மயங்கிக் கிடந்தது என் நாக்கு.

- இது அந்தக் கட்டுரையின் அருள்வாக்கு! அடுத்து எனக்கு சிக்கன் கார்டன் ப்ளூ ரொம்பப் பிடிக்கும். நீயும் கொஞ்சம் சாப்பிட்டுப் பாரு, குலாப் ஜாமூன் போல மென்மையாகவும், ஆலிவ், சீஸ் சுவையுடன் மொறுமொறுப்பாகவும் இருந்ததைப் பாட்டி நீட்ட..

இதற்கெல்லாம் விலை ஒன்றும் அதிகம் இல்லே; இவா சொல்லற நுங்கம்பாக்கம் ஓட்டல்ல!

ஸ்டீம்டுஃபிஷ் சூப் ரூ.750

நண்டு பெப்பர் ஃப்ரை ரூ360

காயல் களறி கறி ரூ.280

கடைசி இளநீர் புட்டிங் ரூ.140

படீச்சீங்களா? என்ன இதோடு உங்களுக்குத் தேவையானா சுரபானம், சோமபானம் இவைகளை எல்லாம் சேர்த்துக்கலாமே!

அவாள் யாகம் நடத்தும் ஸ்டைலும், அதில் அவிர்ப் பாகங்களை எப்படியெல்லாம் சுவைச்சு யாகம் நடத்தும் பிராமணோத்தமர்கள் சாப்பிட்டு, மோட்சத்திற்கு டிக்கெட் தருவான்னு விவரம் தெரியனும்ன்னா - ஞான சூரியன் சிவானந்த சரஸ்வதி எழுதியதை சமஸ்கிருத சுலோக விளக்கத்தோடு தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போதுதான் புரிகிறது; நம் கிராமத்து ஜனங்க - இன்னிக்கு உங்க வீட்டிலே என்னா சமையல்? என்று கேட்பார்.

நம்ம கிராமத்துப் பெண்கள் பலரும் பதில் சொல்லுவார்கள் - இன்னிக்கு வெள்ளிக்கிழமை நாங்க அந்நிய பதார்த்தம் சமைக்கிறதில்லேன்னு.

இந்த அந்நியர்கள் - பதார்த்தச் சுவை இப்போ எவ்வளவு காஸ்ட்டிலியாகி விட்டது பார்த்தீர்களா?

ஆச்சாரம் அனுஷ்டானம், நம்ம புராதன கலாச்சாரம்பற்றி பேசுறது இதையெல்லாம் பரப்பத்தானோ? என்று கேட்கலாம்.

இதை ஒரு வேளை அந்த பத்திரிக்கை விளம்பரமாய் போடறாளோ?

இல்லை, நல்ல கட்டுரையாகவே!

ஆ/ஆம் சாப்பிடவாங்கோ என்று இன்விட் டேஷனா அல்லவா எழுதியிருக்கா?

அதனாலதானே இராமாயணத்தில இராமன் எல்லாம் மாமிசம், மது பயன்படுத்தினா என்று வால்மீகி இராமாயணம் என்ற ஒரிஜினல் ராம கதையிலேயே இருக்கிறதே - அதனால் தப்பில்லை. தப்பில்லைதான்!

தமிழ் ஓவியா said...


மகளிருக்கான தனி வங்கி


இந்தியா முழுமையும் பெண்களுக்கான வங்கிகள் திறக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மக்கள்தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதியினரான பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு, சொத்துரிமை என்பதில் ஆணுக்கு நிகரான இடத்தில் இல்லை என்பது எல்லோருக்குமே தெரிந்த உண்மை.

பெண்கள் கல்வி வாய்ப்பு அளிக்கப்பட்ட குறுகிய காலத்தில், தங்கள் திறமையினை வெளிப்படுத்திக் கொண்டு விட்டனர்.

தேர்வுகளில் அவர்களின் சாதனைகள் ஆண்களை விஞ்சும் வகையில்தான் அமைந்து விடுகின்றன. வாய்ப்புக் கொடுக்காததுதான் சமு தாயக் குற்றம் என்பது இப்பொழுது உணரப்படுகிறது.

சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதை கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து ஆண்களாலும் முட்டுக்கட்டை போடப்பட்டுத் தடுக்கப்பட்டு வருகின்றது. 1996 ஆம் ஆண்டு முதல் கடந்த 17 ஆண்டு காலமாக இது நிலுவையில் இருப்பது வெட்கக் கேடானது; ஜனநாயகம் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதி உள்ள பெண்களுக்கு வெறும் 33 விழுக்காடு கொடுக்கக் கூட மறுக்கப்படுகிறது என்றால் இதற்குப் பெயர்தான் ஜனநாயகமா? அந்த ஜனம் என்பதில் பெண்கள் வர மாட்டார்களா?

மகிளா வங்கியைத் தொடங்கி வைத்த இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் கூறினார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச அளவிலான முதல் 50 தொழில் அதிபர்களில் இந்தியாவை சேர்ந்த நான்கு பெண்கள் இடம் பெற்றுள்ளனர். எனினும் நம் நாட்டில் பெண் களுக்கு எதிரான பாகுபாடுகள் குறையவில்லை. பெண்களுக்குச் சம உரிமை கிடைப்பதில் நாம் எட்டாத தூரத்தில் இருக்கிறோம் என்றாரே பிரதமர்.

இந்த எட்டாத தூரத்தை எட்டும்படிச் செய்ய வேண்டாமா?

ஆண்களால், பெண்களுக்கு விடுதலை என்பது பூனைகளால், எலிகளுக்கு விடுதலை என்பதைப் போன்றது என்று தந்தை பெரியார் கூறிய கருத்தினைப் பெண்கள் ஒரு பாடப் புத்தகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் பொறுத்தவரையில் பெண்கள் உரிமையில் இரண்டு சாதனைகளைச் சுட்டிக் காட்டிட வேண்டும்.

ஒன்று குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் ஆகும். இதன் நோக்கம் உயர்ந்தது - உன்னதமானது.

ஆனாலும் இந்தச் சட்டத்தினை எந்தளவுக்குப் பெண்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியே! இந்தச் சட்டத்தைப் பற்றிப் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அளவுக்குப் பிரச்சாரம் செய்யப்படவில்லை.

விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லாத இந்தியாவில் இதுபோன்ற சட்டங்களை வெகு மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.


மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து ஒரு கால கட்டத்தில் விரிவாக விளம்பரம் செய்யப்பட்ட தில்லையா? அது போலவே பெண்கள் உரிமை தொடர்பான சட்டங்களும் விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இன்னொரு சிறப்பான சட்டம் என்பது பெண்களுக் கான சொத்துரிமைச் சட்டம். இதைப்பற்றியும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

பெண்களிடத்தில் ஒப்படைக்கப்படும் எந்தப் பணியும் சிறப்பாகவே அமையும் என்பதில் அய்யமில்லை. ஆனால் வாய்ப்பு கொடுப்பதில்தான் தயக்கம். அமைச்சரவையில்கூட (முதல் அமைச்சரே பெண் ணாக இருந்தாலும்கூட!) பெண்களுக்கு ஒதுக்கப் படும் துறைகள் மிக மிகச் சாதாரணமானதாகவே இருப்பதைப் பார்க்கிறோம்.

ஏன், நிதித்துறை, கல்வித்துறை, வருவாய்த் துறை, உள்துறை போன்றவற்றை அவர்களிடத்தில் ஒப்படைத்தால் சிறப்பாக நிர்வகிக்க மாட்டார்களா?

என்னதான் நாம் கரடியாய்க் கத்தினாலும் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடத் தயாராக வேண்டும்.

மயிலே மயிலே! என்றால் இறகு போடாது என்பது போல பெண்கள் நேரடியாகக் களத்தில் இறங்கினா லொழிய தங்களுக்குரிய உரிமைகளை முழுமையான அளவில் மீட்டிட முடியாது.

அதற்குத் தந்தை பெரியார் சொன்ன தத்துவங்களை, கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். முதலில் சிந்தனைத் தடைகளை உடைத்தறிந்து விட்டு வெளியில் வெளிச்சத்தில் தங்கள் உரிமைக் குரலைக் கொண்டு வர வேண்டும்.

எந்த ஒரு நியாயமான உரிமையாக இருந்தாலும் அதற்கொரு விலை கொடுக்க வேண்டுமே என்பார் தந்தை பெரியார்! பெண்கள் தயார் தானா?

தமிழ் ஓவியா said...


அடிமைப்படக்கூடாது...


உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக்கூடாது.

- விடுதலை, 26.2.1968

தமிழ் ஓவியா said...


ஏகலைவா புரஸ்கார் விருதினை வழங்குகிறார் தமிழர் தலைவர்

சென்னை, நவ.23- மகாபாரத காவியத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக ஏகலைவனுக்கு வில்வித்தையைக் கற்றுக் கொடுக்க மறுத்து விடுகிறார் துரோணா சாரியார். ஆனால் ஏகலைவன் தன் மனஉறுதியினாலும் விடா முயற்சியி னாலும் சிறந்த வில் வீரானாகிறான். வரலாற்றில் ஏகலைவன் போன்ற எத்தனையோ திறமையானவர்கள் தாழ்த்தப்பட்டவன் என்ற அடிப்படை யில் நசுக்கப்பட்டார்கள். ஏறத்தாழ 2000 ஆண்டுகளாக நசுக்கப்பட்ட இந்த தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகம் இன்றளவும் தனது திறமைகளை வெளியே கொண்டு வர இயலாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. எனினும் தனது விடா முயற்சியால் ஏகலைவன் சாதித்தது போல் இன்றும் இந்த தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப் பட்ட சமூகம் விடா முயற்சிகளை மேற்கொள்ளும் பட்சத்தில் நிச்சயம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏகலைவா புரஸ்கார் என்ற விருதை வழங்க முடிவு செய்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாணவ - மாணவிக்கு இந்த ஏகலைவா விருதுடன் ரொக்கப் பணம் ரூ.5000 வழங்கப்படும்.

இந்த விருது நாளை (24ஆம் தேதி) சென்னை, பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் மன்றத்தில் மாலை 5 மணியளவில் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில பொதுச் செயலாளர் எஸ்.அப்துர் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விருது வழங்கி சிறப்புரை யாற்றுகிறார். மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ் மாயில், எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டில் சுயமரியாதை சத்தியாக்கிரகம்

தமிழ்நாட்டில் சுயமரியாதை சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப் போவதாய் ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை முதலியோர்கள் தெரிவித்துக் கொண்டதற்கு இணங்கவும், நாமும் விண்ணப்பித்துக் கொண்டதற்கு இணங்கவும் இதுவரை அநேக ஆதரவுகள் கிடைத்துவந்திருக்கின்றன. அதாவது பல இடங்களில் சூத்திராள் என்று போடப்பட்டிருந்த விளம்பரங்கள் எடுபட்டு விட்டதாகவும், பல மகாநாடுகளில் சுயமரியாதை சத்தியாக்கிரகத்தை ஆதரித்தும் அதற்கு உதவி செய்வதாகவும் தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. பல தனிப்பட்ட வாலிபர்களும் பெரியோர்களும் தங்களைச் சத்தியாக்கிரகிகளாய்ப் பதிந்து கொள்ளும்படி வேண்டிக் கொண்டும் தெரிவித்துமிருக்கிறார்கள். சில பிரபுக்கள் தங்களால் கூடிய உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றார்கள். எனவே தக்கபடி பொறுப்புள்ள மக்கள் கூடி யோசித்து அதை எப்பொழுது எங்கு ஆரம்பிப்பது என்பதே இப்பொழுது கேள்வியாயிருக்கின்றது,

சமீபத்தில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களும் சென்னையில் இதைப்பற்றி சில கனவான்களிடத்தில் கலந்து பேசப் போவதாகவும் சமீபத்தில் அதாவது 22, 23 தேதிகளில் சென்னையில் நடக்கும் பார்ப்பனரல் லாத வாலிபர் மகாநாட்டில் யோசிப்பதாகவும் ஒரு கனவானால் கேள்விப்பட்டு மிகுதியும் சந்தோஷப்படு கின்றோம். ஆதலால் அப்படி ஏதாவது ஆலோசித்து முடிவு செய்ய ஒரு ஆலோசனைக் கூட்டம் கூட்டப்படுமானால் மற்ற வெளியூர்களில் உள்ள பிரமுகர்களும் தொண்டர்களும் அவசியம் வந்து இதற்கு வேண்டிய ஆலோசனை சொல்லி உதவி செய்யவேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம். ஒரு படகோட்டி தன்னை தாழ்ந்த ஜாதியென்று நினைக்கின்ற ஒருவனுக்கு தனது படகை ஓட்ட மாட்டேனென்று சொல்லி பட்டினியிருக்கத் தயாராய் இருக்கும் போது மற்றபடி பெரியோர்கள், பிரபுக்கள், சுயமரியாதை நமது பிறப்புரிமை என்று சொல்லிக் கொள்ளுபவர்களுக்குப் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லாமலிருக்கும்போதே இதற்குத் தக்க முயற்சி செய்யத் தகுந்த உணர்ச்சி இல்லையா என்று கேட்கின்றோம்.
- குடிஅரசு - கட்டுரை - 16.10.1927

தமிழ் ஓவியா said...

சூத்திரன்

சூத்திரன் என்கிற வார்த்தையானது இழிவான அர்த்தத்தை புகட்டி வஞ்சனையாக ஏற்படுத்தப்பட்ட தென்றும், அது பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் பார்ப்பன ஆதிக்கத்திற்காக உண்டாக்கப்பட்டதென்றும், அவ்வார்த்தை நமது நாட்டில் எந்த விதத்திலும் நம்ம தலையில் இருக்கக்கூடாது என்றும் கிளர்ச்சி செய்து அதில் ஒருவிதமான வெற்றிக்குறி காணப்படுகிற காலத்தில் சர்க்காராரே சூத்திரன் என்கின்ற பதத்தை உபயோகித்து வருகின்றார்கள் என்றால் இந்தச் சர்க்காருக்கு கடுகளவாவது மக்களின் யோக்கியமான உணர்ச்சியில் கவலை இருப்பதாக யாராவது எண்ணக்கூடுமா? பார்ப்பனர்களே இப்போது சூத்திரன் என்று சொல்லப்பயப்படு கிறார்கள். அவர்கள் எழுதிக் கட்டி தொங்கவிடப் பட்டிருந்த போர்டு, பலகைகளையெல்லாம் அவிழ்த்தெறி கின்றார்கள். வாழ்க்கையில் இப்போது சூத்திரன் என்கின்ற பதம் பார்ப்பனப் பெண்களிடையும் கோமுட்டி செட்டியார்கள் என்கின்ற ஒரு வகுப்புப் பெண்களிடையும், தான் உச்சரிக்கப்பட்டு வருகின்றது. மற்ற இடங்களில் நாளுக்கு நாள் மறைந்து கொண்டே போகின்றது.

அப்படி இருக்க, சர்க்காரில் அதுவும் ஒரு பார்ப்பனரல்லாதாராகிய ஒருவரின் ஆதிக்கத்தில் உள்ள இலாகாவில், அதுவும் நமக்கே முழு அதிகாரமும் கொடுத் திருப்பதாக பிரித்து விடப்பட்டதான மாற்றப்பட்ட இலாகாவாகிய ஸ்தலஸ்தாபன இலாகாவில், அதுவும் ஜாதி வித்தியாசமில்லை, பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்கிற கொள்ளையை உடையவரும், அதை அமலில் காட்டும் முகத்தான் ஒரு பார்ப்பனப் பெண் மணியை மணந்தவருமான ஸ்ரீமான் டாக்டர் சுப்பராய கவுண்டர் அவர்களின் ஏகபோக ஆட்சியில் உள்ள இலாகாவில் பிராமணன், சத்திரியன், விஸ்வப் பிரா மணன், சவுராஷ்டிர பிராமணன், வைசியன், சூத்திரன், ஆதிதிராவிடன், ஒடுக்கப்பட்டவன், பிற்பட்டவன் என்று கலம் போட்டு பிரித்து சட்டசபைக்கு தெரிவிப்பாரானால், அவரது புத்திக் கூர்மையை என்னவென்று சொல்லக் கூடும். நமக்கு இதைப்பற்றி அதிகமாக எழுத பல ஆதாரங்களும், ஆத்திரங்களும் இருந்தாலும், அடுத்தாற் போல் கூடும் சட்டசபைக் கூட்டத்தில் இக் குற்றத்தை உணர்ந்து சூத்திரன் என்ற வார்த்தை உபயோகித்ததற்கு வருந்தி அவ்வார்த்தையை தாம் உபயோகித்திருக்கிற அரசாங்க ஆதரவிலிருந்து எடுத்துவிட நமது டாக்டர் சுப்பராயகவுண்டருக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்து அதில் அந்தப்படி நடக்கா விட்டால் பிறகு மற்ற விவரங்கள் எழுதலாம் என்கிற எண்ணத்துடன் இதை இத்துடன் முடிக்கின்றோம்.
- குடிஅரசு - கட்டுரை - 30-10-1927

தமிழ் ஓவியா said...


விண்கலத்தைவிண்ணில்அனுப்புமுன் திருப்பதிக்குச்சென்றுபூஜைசெய்வதா?


பாரத ரத்னா விருது பெறும் விஞ்ஞானி சி.என். ராவ் கண்டனம்

பாரத ரத்னா விருது பெற்றுள்ள விஞ்ஞானி சி.என்.ராவ் பெங்களூரு வில் சனிக்கிழமை செய் தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இஸ்ரோ சார்பில் ஒவ்வொரு முறையும் ராக்கெட் அனுப்புவ தற்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவி லில் அதன் மாதிரி வடி வத்தை வைத்து பூஜை செய்யப்படும் வழக்கம் இருந்து வருகிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்குப் பதில் அளித்த விஞ்ஞானி சி.என்.ராவ்

அது மூடநம்பிக்கை. அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. பயத்தின் காரணமாக மனிதர்கள் பூஜைகள் செய்தால், தாம் செய்கின்ற பணி வெற்றிபெறும் என்று நம்புகிறார்கள். அதற்கு என்ன செய்ய முடியும்? இதுபோன்ற நம்பிக் கைகள் எனக்கு இல்லை. நான் ஜோதிடத்தையும் நம்புவதில்லை. மேலும் நான் தகவல் தொழில் நுட்பத்திற்கு எதிரான வன் என்ற கருத்தும் நிலவுகிறது.

அதில் உண் மையில்லை. சீனாவில் அறிவியல் துறையில் அதிக அளவில் முதலீடு செய்யப்படுகிறது. இந்தி யர்கள் எதையும் எளி தாக எடுத்துக் கொள் கிறார்கள். அறிவியல் துறையில் முதலீடு செய் வதை தவிர இந்தியா விற்கு வேறு வழி இல்லை. அறிவியல் துறையில் பின்தங்கிக்கொண்டு இந்தியா வல்லரசாக இருக்க வாய்ப்பில்லை. என்று கூறினார்.

இஸ்ரோவின் தலைவ ராக இருக்கக்கூடிய ராதா கிருஷ்ணன் இந்து மதச் சடங்கு ஆச்சாரங் களில் ஊறித் திளைத்தவ ராக இருக்கிறார். அவர் இந்தப் பதவியை ஏற்ப தற்குமுன் குருவாயூரப் பன் கோயிலுக்குச் சென்று எடைக்கு எடை சர்க் கரை கொடுத்தார். அதன் பின் விண்ணில் விண் கலத்தைச் செலுத்தும் போதெல்லாம் ஒவ் வொரு முறையும் திருப் பதிக்கும், காளஹஸ்திக் கும் குடும்பத்தாருடன் சென்று ராக்கெட்டின் மாதிரி வடிவத்தைக் கொண்டு போய் வைத் துப் பஜனை செய்தார்.

இந்திய அரசமைப் புச் சட்டத்தில் வலியுறுத் தப்பட்டுள்ள அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் அது ஒவ்வொரு குடிமகனின் கடமை (குரனேயஅநவேயட சுபைவ) என்று வலியுறுத் தப்பட்டுள்ள நிலையில், அறிவியல் நிறுவனமான இஸ்ரோவிலேயே மூட நம்பிக்கை வளர்க்கப்படு வது கண்டிக்கத்தக்க தாகும்.

தமிழ் ஓவியா said...


புயல் மழையைக் கொடுக்கும் - பெரியார் நிதியைக் கொடுப்பார்!

ஒரு ஆறு மணி நேரத்தில் பெரியார் பேருருவச் சிலை அமைப்புக்கு ரூ.இரண்டரை இலட்சம் நிதி கிடைத்தது என்றால் நம்ப முடிகிறதா? பெரு மக்கள் பதின்மர் தங்களின் நன்றி உணர்வை வெளிப்படுத்தினர் என்ற செய்தி உள்ளபடியே பெரியார் தொண்டர்களைப் பெரும் மகிழ்ச் சியின் உச்சிக்கே அழைத்துச் செல்கிறது.

நமது தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 40 ஆண்டுகள் ஓடி மறைந்த நிலையிலும், ஒவ் வொரு நொடியும் எப்படி எல்லாம் நம் மக்களால் நேசிக்கப்படுகிறார் - சுவாசிக்கப்படுகிறார் என்பதை எண்ணும் பொழுது நம்முடைய அணுக்கள் எல்லாம் சிலிர்க் கின்றன.

அய்யா எங்களுக்கு இன்று கிடைத்த இந்த வாழ்வு உங் களின் உழைப்பினால் கிடைத்த தான தர்மம் தானே! என்ற எண்ணம் நம் தமிழர்களிடத்திலே தழைத்திருக்கிறது என்பதன் அறிவிப்பே இது.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த டாக்டர் - பெயர் ஆர். இராசேந் திரன், பெரியார் பேருருவச் சிலைக் கான வேண்டுகோள் விண்ணப்பப் பல வண்ண ஆவணத்தைக் கொடுத்தபோது, அவர் கண்களில் பட்ட வாசகம்.

தந்தை பெரியார் அவர் களால் ஒட்டு மொத்தமாகப் பயன் பெற்ற இந்தச் சமுதாயத் தில் நீங்களும் ஒருவர் அல்லவா! நன்றியுள்ள மக்கள் நாம் என்று காட்டிக் கொள்ள வேண்டாமா? என்ற வாசகம்தான் மருத்துவரின் கண்களில் பட்டுள்ளது.

மறு வார்த்தை சொல்லவில்லை - மகிழ்ச்சியோடு - நன்றியுணர் வின் உந்துதலால் ஒரு சவரன் பவுனுக்கான தொகை ரூ.25 ஆயிரத்தை அளித்துள்ளார்.

அளித்தவரும் சரி, அதனைப் பெற்றுக் கொண்ட தோழர்களும் சரி, அந்த ஒரு நொடியில் வரு ணிக்கவே முடியாத நெகிழ்ச்சி கலந்த உணர்ச்சி வயப்பட்டனர் என்பது தான் உண்மை!

அதே வேகத்தில் 10 பெரு மக்களைச் சந்தித்து மளமள வென்று தேனீக்கள் போல நிதியைத் திரட்டியுள்ளனர் - ஒரு ஆறு மணி நேரத்துக்குள்! தமிழர் தலைவர் அறிவித்த போது ஆனந்தம் என்றால், நிதியை திரட்டும்போது உற்சாகம் - இதுதான் இன்றைய நிலை.

மற்ற மற்ற மாவட்டங்களில் உள்ள தோழர்களும் மலைக்காமல் வீதியில் இறங்கினால் விருப்ப மோடு நிதியை வழங்கிடத் தயா ராகவே உள்ளனர் - நன்றியுள்ள நம் தமிழினத்தார்! அதற்குப் பட் டுக்கோட்டை வழிகாட்டியிருக் கிறது. இன்னொரு தகவல், உள்ள படியே நெக்குருகச் செய்து விட்டது.

ஆர்.ஏ. சுப்பையா அவர்கள் மும்பை மாநகர திராவிடர் கழகத் தலைவராக நீண்டகாலம் இருந்து அரும் பணியாற்றியவர். ஓய்வுக்குப் பின் நெல்லை மாவட்டம் ராமா னுஜம் புதூர் என்ற தமது சொந்த ஊருக்குத் திரும்பினார் இணை யருடன்.

சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தார். அவர்தம் இணையர் மானமிகு முத்துவடிவு அவர்கள் நாள் தோறும் விடுதலை படிக்கக் கூடிய கொள்கையாளர்.

வளமையான சூழ்நிலை இல்லை. தந்தை பெரியார் அவர் களின் பேருருவச் சிலைக்காக நிதி அளிப்போர் பட்டியல் படத்துடன் விடுதலையில் வெளி வருவதை அன்றாடம் படித்த அம்மையார்- எப்பாடுபட்டேனும் அய்யா பேருருவச் சிலைக்கு அந்த நிதியைக் கொடுத்துவிட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண் டார். (என்னே இலட்சிய உணர்வு!).

அந்தப் பகுதிக்கு நெல்லை மாவட்டக் கழகப் பொறுப்பாளர் கள் காசி, இராசேந்திரன், இரத் தினசாமி ஆகியோர் சென்ற போது - அவர்களே அதிர்ச்சி அடையும் வண்ணம், தான் அணிந்திருந்த 9.7 கிராம் தங்க மோதிரத்தை எடுத்துக் கொடுத்து திக்கு முக்காடச் செய்துவிட்டார்.

வேண்டாம் என்றும் சொல்ல முடியாத நிலை! காரணம் அந்தத் தாயின் உணர்வையும் மதிக்க வேண்டுமே!

கொடுப்பதற்கு மனம் இருந் தால் போதும் என்பதற்கான இலக் கணத்தின் இலக்கியம் அல்லவா இது!

தோழர்களே, தந்தை பெரியார் என்ற சுடர் ஏந்திச் செல்லுவீர்!

கேட்பதற்கு மேலாகவே கிடைக் கும். உலகமே தந்தை பெரியார் பேருருவச் சிலையை நோக்கித் தன் கண்களைத் திருப்பப் போகிறது.

புறப்படுங்கள்! புறப்படுங்கள்!!

புயல் கொண்டு வரும் மழையைப் போன்று தந்தை பெரியார் உங்க ளிடம் நிதியைக் கொண்டு வந்து சேர்ப்பார்! செயல்படுவீர்!

தமிழ் ஓவியா said...


பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள் : பஞ்சாயத்து தலைவர்களும் வழங்கலாம்


'பிறப்பு - இறப்பு சான்றிதழ்களை, பஞ்சாயத்து தலைவர்கள் வழங்கலாம்' என, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள உத்தரவை, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தலைவர்கள், பிறப்பு - இறப்பு சான்று வழங்கலாம். பிறப்பு - இறப்பு பதிவுகள் பராமரிக்கும், வி.ஏ.ஓ.,க்கள், அதன் நகலை மாதந்தோறும் ஊராட்சிக்கு அனுப்ப வேண்டும்.

சான்று வழங்கியது குறித்து, பஞ்., தலைவர், வி.ஏ.ஓ., அவ்வப்போது ஆலோசனை செய்து கொள்ள வேண்டும் என, 2008 ஏப்ரல், 29இல் தமிழக அரசு உத்தரவிட்டது. எனினும், பஞ்சாயத்துகளில் பிறப்பு - இறப்பு சான்று வழங்கும் திட்டத்தை, தலைவர்கள் நடைமுறைபடுத்தவில்லை.

இந்நிலையில், தமிழக கிராம பஞ்., தலைவர் கூட்டமைப்பு சார்பில், பிறப்பு - இறப்பு சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்கக் கோரி, பிப்ரவரி மாதம், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் உத்தரவை, பஞ்., தலைவர்கள் உடனடியாக நடைமுறைப்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

பெண்கள் பாதுகாப்புக்கு நிர்வாகமே பொறுப்பு மக்களவைத் தலைவர் மீராகுமார் வலியுறுத்தல்

கொல்கத்தா, நவ. 24- வேலை செய்யும் இடங் களில் பெண்களின் பாது காப்புக்கு, நிர்வாக தலை மையில் உள்ளவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று மக்க ளவைத் தலைவர் மீரா குமார் கூறினார். கொல் கத்தாவில், எம்சிசி சேம்பர் நடத்திய பெண் முன்னேற் றம் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

நமது நாட்டில் இலக் கியத்திலும் கதைகளிலும் பெண்களை உயர்வாக வும் பெருமையாகவும் மதிக்கின்றனர். ஆனால் நிஜத்தில் பெண்களின் நிலை அதற்கு நேரெதிராக கீழாக இருக்கிறது. பெண் களுக்கு தகுந்த பாது காப்பு இல்லை.

அவர் களுக்கு கல்வி கற்க வாய்ப் புகள் இல்லை. நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு பல சட்டங்கள் இருக் கின்றன. ஆனால் அவை யெல்லாம் நடைமுறை யில் பலனளிப்பதில்லை.

ஒருவர் தான் என்ன வேலையில் பொறுப்பில் இருந்தாலும் பெண் களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தவேண்டும். நான் மக்களவை தலைவராக பொறுப்பேற்றுக் கொண் டதும் நாடாளுமன்றத் தில் பெண்களுக்கான குறை தீர்ப்பு அமைப்பை ஏற்படுத்தினேன். இதன் மூலம் பெண்களின் பிரச் சனைகள் தீர்க்கப்பட்டுள்ளது.

இதைப் போல ஒவ்வொரு கம்பெனியிலும் பெண் களுக்கான குறை தீர்ப்பு அமைப்பை ஏற் படுத்தி, அவர்களது பிரச் சனைகள் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பெண் களுக்கான பாதுகாப் புக்கு தலைமை நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர் கள் பொறுப்பு ஏற்றுக் கொள்ளவேண்

தமிழ் ஓவியா said...

பெண் வேவுபார்ப்பு விவகாரம்: மோடி மீது சிபிஅய் விசாரணை கோரி அய்.ஏ.எஸ். அதிகாரி வழக்கு'

இளம்பெண் வேவு பார்க் கப்பட்ட விவகாரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது சிபிஅய் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி அந்த மாநில அய்.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர் இப்போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதனுடன் குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவும் தீவிரவாத எதிர்ப் புப் படைத் தலைவர் சிங்காலும் பேசிய தொலைபேசி உரையா டல்கள் அடங்கிய 150 பக்க அறிக் கையையும் அவர் இணைத் துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டில் பெங்களூருவைச் சேர்ந்த 27 வயது பெண் பொறியாளரை குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையினர் பின்தொடர்ந்து வேவு பார்த்ததாக கோப்ராபோஸ்ட், குலைல் ஆகிய இணையதள ஊடகங்கள் அண் மையில் செய்தி வெளியிட்டன. குஜராத் மேலிட உத்தரவின் பேரிலேயே இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாக அந்த இணைய தளங்கள் குற்றம் சாட்டின.

இந்நிலையில், குஜராத் அரசால் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அய்.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா, இளம்பெண் விவகாரம் காரண மாகவே தன் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கோப்ராபோஸ்ட் வெளி யிட்டுள்ள தொலைபேசி உரை யாடல்கள் தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடி, முன்னாள் அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீது சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட் டுள்ளார்.

நரேந்திர மோடி, பெங்களூர் பெண் குறித்த விவகாரம் எனக்குத் தெரியும். அதன் காரணமாகவே என் மீது பழிவாங்கும் நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதை தவிர எனது தம்பி குல்தீப் சர்மா, குஜராத்தில் மூத்த அய்.பி.எஸ். அதிகாரியாகப் பணியாற்றுகிறார். 2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பல்வேறு தவறான செயல்பாடுகளை அவர் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். இதுவும் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம். என் மீதான அனைத்து வழக்குகளையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று தனது மனுவில் பிரதீப் சர்மா கோரியுள்ளார்.

இதனிடையே, தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்ப தாவது:

2004ஆம் ஆண்டில் பவ நகரில் நடைபெற்ற பூங்கா திறப்பு விழா வில் முதல்வர் மோடி பங்கேற்றார். அந்த விழாவில்தான் பெங் களூரு பெண் பொறியாளரை முதல்வருக்கு, நான் அறிமுகம் செய்தேன். அதன்பின்னர் இரு வருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.

தனது மகளுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக அவரு டைய தந்தை அறிக்கை வெளி யிட்டிருப்பதில் உண்மை இல்லை. மிரட்டலின்பேரிலேயே அவர் அந்த அறிக்கையை வெளி யிட்டிருக்கிறார் என்று தெரிவித் தார்.

தமிழ் ஓவியா said...


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய தகவல்


வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்டது என்று விசாரணை அதிகாரியே ஒப்புக் கொண்ட நிலையில்

பேரறிவாளனை விடுதலை செய்வதே சரியானதாகும்

சந்தேகத்தின் பலனை சாந்தன், முருகனுக்குக் கொடுத்து அவர்களையும் விடுதலை செய்க!

தமிழர் தலைவரின் சட்ட ரீதியான அறிக்கை

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் வாக்குமூலம் ஜோடிக்கப்பட்டது என்பதை விசாரணை அதிகாரியே கூறிவிட்ட நிலையில் பேரறிவாள னையும், சந்தேகத்தின் பலனை குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அளிப்பது என்ற முறையில் சாந்தன், முருகன் ஆகியோரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கு அளிக் கப்பட்ட தூக்குத் தண்டனை கடந்த 22 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் காலந்தாழ்ந்திருக்கும் நிலைமை, மறைமுகமான நன்மைகளையே (Blessing in Disguise) விளைவித்துள்ளது.

பல்வேறு புதைபட்ட உண்மைகள் நீதியின் அடிப் படையிலும், பலரின் மனசாட்சியின் விழிப்பின் காரணமாகவும் வெளி வரத் துவங்கியுள்ளன!

பேரறிவாளன் என்ற இளைஞனின் பங்கு அந்த கொலைக் குற்றத்தில், பிராசிகியூஷன் தரப்புப்படி, ராஜீவ்காந்தியைக் கொல்லப் பயன்படுத்துவதற்கான குண்டுக்காக பேட்டரி செல்கள் இரண்டை வாங்கிக் கொடுத்தவர் இவர் என்பதேயாகும்.

உண்மையை

தமிழ் ஓவியா said...

ஒப்புக் கொண்ட விசாரணை அதிகாரி

பேரறிவாளன் என்ற இளைஞர் பாலிடெக்னிக்கில் படித்தவர் என்பதை முடிச்சு போட்டு, இந்த பேட்டரி செல்கள் நான் வாங்கிக் கொடுத்தேன் என்ற வாக்கு மூலம் மட்டும் விசாரணை அதிகாரி கேட்ட கேள்விக்குப் பதிலாக அவர் சொன்னதை அப்படியே பதிவு செய்யாமல், வழக்கில் பிராசிகியூஷனுக்கு சாதகமாக அமையும் வகையில், இந்த காரியத்திற்காக என்றே தெரிந்தே வாங்கிக் கொடுத்தேன் என்பதாக, அவரே சில வாக்கியங்களை - பேரறிவாளன் சொல்லாததை வாக்கு மூலத்தில் இணைத்துக் கொண்டு, பதிவு செய்து விட்டார் - அந்த விசாரணை அதிகாரி. அவர் ஓய்வு பெற்ற நிலையில், இப்போது அவர் நான் தான் வழக்கில் தண்டனை வாங்கித் தருவதற்காக அந்த வரிகளைச் சேர்த்துக் கொண்டேன் என்று கூறி உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார் - மனசாட்சி உறுத்தியதால்!

மோசமான சட்டம் குற்றவாளியின் வாக்குமூலம் என்று விசாரணை அதிகாரிகள் எழுதி வைப்பதையெல்லாம் அப்படியே ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளும், அடிப்படை உரிமை பறிப்புக்கான சட்டம்தான் தடா சட்டம் ஆகும்.

குற்றம் சுமத்தப்பட்டவர்மீதான குற்றத்தை நிரூபிப்பது பிராசிகியூஷன் வேலை - பொறுப்பு, என்பதை தலைகீழாக மாற்றி - குற்றமற்றவர் என்று நிரூபித்து வெளியே வர வேண்டியது - குற்றம் சுமத்தப்பட்டவரின் பொறுப்பு என்பதாக இருப்பதும் மற்ற கிரிமினல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத சாட்சியங்களை, இந்த தடா சட்டத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்வதுமான கொடுமையான சட்டம் என்பதால்தான் அதற்கு எதிராக கருத்துப் போர் தொடுத்து, ஜனநாயக அடிப்படை மனித உரிமையாளர்கள் - நம்மைப் போன்ற இயக்கத்தவர்கள் இயக்கம் நடத்தி, ரத்துசெய்ய வைத்தோம். அதன் முழு நியாயமும் இப்போது வெளியான விசாரணை அதிகாரியின் வாக்குமூலத்தின் படி, தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.

குற்றத்தினை முடிவு செய்ய மென்ஸ்சிரியா (‘Mens Rea’) என்ற குற்றநோக்கு அக்குற்றவாளியின் மனதில் இருந்திருந்தால்தான். அவர் குற்றவாளியாக முடியும்; இன்றேல் அவர் நிரபராதிதான். இது (கிரிமினல்) குற்றச் சட்டத்தின் அடிப்படையாகும்.
அவசர ஜோடனை!

பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்ததில் எந்த குற்ற நோக்கமும் இல்லையே! (விசாரித்த அதிகாரி யல்லவா அவசர ஜோடனை செய்து மேலும் சில வாக்கி யங்களை இணைத்துக் கொண்டார். காவல்துறை விசாரணை வழமையில் இது சர்வ சாதாரணமாக நடைபெறுவதாகும்)

எனவே இந்தத் தகவல் - அவரது தூக்குத் தண்டனைக்கு எவ்வித முகாந்திரமும், நியாயமும் இல்லை என்பதற்கு உள்ளங்கை நெல்லிக் கனி போன்ற சான்றாதாரம் ஆகும்.

அதுபோலவே முருகன், சாந்தன் இருவரும்கூட இவருடன் சுமார் 22 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்துள்ள நிலையில், அவர்களைப் பற்றியும் இம்மாதிரி பல தகவல்கள் வெளியாகும் நிலையில், சந்தேகத்தின் பலனை (Benefit of doubt) அவர்களுக்கே தந்து உச்சநீதி மன்றமே முன்வந்து, இந்த வழக்கை எடுத்துக் கோண லாகிப்போன நீதியை சரி செய்ய முன்வருதல் அவசரம்; அவசியம் ஆகும்.

2. மேலும் தண்டனை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான, ஜஸ்டீஸ் கே.டி. தாமஸ் அவர்கள், வழக்கின் தீர்ப்பு சரியாக வழங்கப்படவில்லை என்று குறிப்பினைக் கூறியதும் ஏடுகளில் வந்துள்ளது.

3. வழக்கு விசாரணையில் ஈடுபட்ட சி.பி.அய். அதிகாரிகளில் ஒருவரான திரு. ரகோத்தமன் அவர்கள் செய்தியாளர்கள் பேட்டி, தான் எழுதிய புத்தகம் ஆகிய வற்றிலும் இவ்வழக்கில் விசாரணை சரியாகச் செல்லவில்லை என்ற கருத்தை மய்யப்படுத்தியுள்ளார்.

மூவரையும் விடுதலை செய்க!

சதி என்பது பேரறிவாளனைப் பொறுத்து நிரூபிக்கப் படவே முடியாது - இல்லை என்பது வெளிச்சமாகியுள்ளது.

எனவே அவர்கள் மூவரையும் விடுதலை செய்வதுதான் நீதிக்கு - நியாயத்திற்குத் தலை வணங்குவதாகும்.

இம்மூவருக்கும் ஏதோ கருணை காட்டி விடுதலை செய்கிறோம் என்று எண்ணாமல், நீதி கெட்டு விடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில், நீதியின் கோணலை நிமிர்த்தி வைக்கும் கடமையாகவே இதனைக் கருதுவதும், நீதிக்குப் பெருமை சேர்ப்பதாகவே அமையும்.

கிரிமினல் சட்டம், பத்து குற்றவாளிகள் தப்பினாலும் கூட ஒரு நிரபராதி, தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற தத்துவத்தைக் கொண்டதல்லவா?

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


சென்னை

25.11.2013

தமிழ் ஓவியா said...


பேரறிவாளனுக்கு நியாயம் வழங்கிடுக! கலைஞர் வேண்டுகோள்

கேள்வி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் வாக்கு மூலத்தை மாற்றம் செய்ததாக இந்த வழக்கைப் புலன்விசாரணை செய்த முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்புதல் அளித்திருப்பதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?

கலைஞர்: சில குற்றவாளிகள் தப்பி னாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப் படக்கூடாது என்பது தான் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நெறியாகும். அந்த அடிப்படையில் தற்போது வெளியாகியுள்ள இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஏடுகளில் காணும்போது, நடந்து முடிந்த வழக்கு விசா ரணையிலும், அதன் அடிப்படையில் வழங் கப்பட்ட தீர்ப்பிலும் மிகப்பெரிய கேள்விக் குறி எழுந்துள்ளது. எனவே இனியாவது இதைப்பற்றி முழு விசாரனை நடத்திட அரசு முன்வரவேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இத்தனை ஆண்டுகள் சிறையிலே, தன் இளம் பிராயத்தைச் செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்

தமிழ் ஓவியா said...


கூறுவது கல்கி!

சென்னையைத் தவிர பிற நகரங்களில் அய்ந்து முதல் ஏழு மணி நேரம், மின்வெட்டு ஏற்படுவதாகச் செய்திகள் சொல்கின்றன. நடுவில் காணாமல் போயிருந்த மின் வெட்டு மீண்டும் ஆரம்பித்திருப்பது, நிர்வாகத் திறமையின்மை, திட்டமின்மையின் எடுத்துக்காட்டு. மின்வெட்டைக்கூட அனுபவித்து விட்டுப் போகலாம்; ஆனால், மின்வெட்டு இராது என்று ஆசை காட்டி மோசம் செய்வதைத் தாங்குவது ரொம்பக் கஷ்டம்.

####

மக்கள் நலப் பணியாளர்கள் ஒவ்வொரு முறையும் தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்படுவதும், அ.தி.மு.க. அரசில் நீக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. மக்கள் நலப்பணியில் அவர்களுக்குப் போதிய வேலை இல்லையெனில் பயிற்சிகள் கொடுத்து வேறு துறைகளில் பணியமர்த்துவது ஒன்றே நல்ல தீர்வு; வீட்டுக்கு அனுப்பு வது அல்ல. உச்சநீதிமன்றம் இதற்கு வழிகாட்டியுள்ளது. (கல்கி டிசம்பர் 1, 2013 பக்கம் 34, 35)

தமிழ் ஓவியா said...


மாவட்ட ஆட்சியர் என்ன செய்கிறார்? தமிழ்நாடு அரசு தடுக்குமா?

மாநில காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) தலையிடுவாரா?


தருமபுரி மாவட்டம் அரூர் காவல் நிலைய துணைக் கண்காணிப்பாளர் மற்றும் மகளிர் காவல் நிலைய வளாகத்துக்குள் கட்டப்பட்டு வரும் கோயில் இது - அரசு தலையிடுமா?

மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநரும், மாவட்ட ஆட்சியரும் இந்தச் சட்ட விரோத செயலைத் தடுப்பார்களா?

தமிழ் ஓவியா said...மோடி ஒருவர் போதும் பின்னடைவிற்கு!


டில்லி சட்டசபைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், குஜராத் முதல் அமைச் சரும், பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாள ருமான, திருவாளர் நரேந்திரமோடி மிகவும் நீட்டியே முழங்கி இருக்கிறார்.

டில்லியில் மாணவி கொடூரமாகக் கற்பழித்துக் கொல்லப்பட்டதை மறக்காதீர்கள்! என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டில்லி நிகழ்வு கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே! கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் கண்டிக்கப்பட்டது. இதுபோன்ற கொடுமை நடைபெறக் கூடாது என்ற வகையில் புதிய சட்டம் வரை நிறைவேற்றப்பட்டது.

ஆனால் ஒன்று, இதைப்பற்றியெல்லாம் பேசுவதற்கான தார்மீக உரிமை மோடியின் நாக்குக்குக் கிடையாது.

டில்லியில் ஒரு பெண் சிறுமைப்படுத்தப் பட்டார் என்பதற்காகக் கசிந்துருகும் மோடி, அவர் முதல்வராக இருந்து ஆட்சி புரிந்த குஜ ராத்தில் என்ன நடந்தது? இப்பொழுதும்தான் என்ன நடந்து கொண்டு இருக்கிறது?

வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்! என்று சொல்வதில்லையா? அது மோடிக்கு, நூற்றுக்கு நூறு துல்லியமாகவே பொருந்தும். பாட்டியா மாவட்டம், நரோடா என்னும் கிராமத்தில், என்ன நடந்தது? 95 முஸ்லிம் மக்கள் ஆண், பெண், குழந்தைகள் (35) சகிதமாக அடித்துக் கொல்லப்பட்டனரே - யார் பொறுப்பு?

கர்ப்பிணிப் பெண்களைக்கூட விட்டு வைக்க வில்லையே - இந்தக் காலிகள்! நீதிமன்றம், மண்டையில் அடித்ததன் காரணமாக மறு விசாரணை நடத்தப்பட்டு, 31 பேர்களுக்கு ஆயுள் தண்டனையும், மோடியின் அமைச்சர வையில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த மாயாபென்கோட் நானி என்னும் பெண் அமைச்சருக்கு (இந்த வெட்கக்கேட்டில் அவர் ஒரு டாக்டராம்) 28 ஆண்டு சிறைத் தண் டனையும் விதிக்கப்பட்டதே!

நியாயமாக குஜராத் கலவரங்களுக்கெல்லாம் பொறுப்பேற்று மோடி முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண் டாமா?

2000 பேருக்கு மேல் இவர் முதல் அமைச் சராக இருந்த குஜராத்தில் படுகொலை நடந்திருக்கிறது - இதற்கு யார் பொறுப்பு? அறிவு நாணயத்தோடு சொல்லட்டுமே பார்க்கலாம். முதல் அமைச்சர் மோடி, பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியுமா? தட்டிக் கழிக்கிறார் என்றால், இவரைவிட மோசமான, பொறுப்பற்ற மனிதனை உலகின் எந்த மூலையிலாவது கண்டுபிடிக்க முடியுமா?

நடந்தது என்ன தெரியுமா? பிஜேபியின் மூத்த தலைவர் அத்வானி போட்டு உடைத்து விட்டாரே!

என் நாடும் என் வாழ்க்கையும் எனும் நூலில் எல்.கே. அத்வானி என்ன எழுதியுள் ளார்? இதோ:

குஜராத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று நரேந்திரமோடி பதவி விலக வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயி கூறினார். கோவாவில் நடக்கவிருக்கும் தேசிய செயற் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று நரேந்திர மோடி கூறினார் என்று எல்.கே. அத்வானி குறிப் பிட்டுள்ளாரே!

அப்படி சொன்னபடி மோடி நடந்து கொண் டாரா? இல்லையே! மோடிக்கும், அறிவு நாணயத்துக்கும் என்ன ஒட்டு உறவு? பாரத ரத்னா கொடுக்கப்பட வேண்டியவர் என்று பிஜேபியினர் கதைக்கிறார்களே அந்த வாஜ்பேயியின் விருப்பத்தையே நிறைவேற்ற முன்வராதவர்தான் இந்த மோடி என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்

மோடி என்ற ஒருவரை வைத்துக் கொண்டு பிஜேபியி-யானாலும் சரி, அக்கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்ள விரும்புவோராக இருந்தாலும் சரி, அதைவிடப் பின்னடைவு வேறு ஒன்றும் இல்லை - இல்லவே இல்லை.

தமிழ் ஓவியா said...


நோக்கம்

சிறு கூட்டத்தாரால் நசுக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் செல் வமும், செல்வாக்கும் அற்ற பெரும்பான் மைக் கூட்டத்தார், சமுதாயத் துறைகளில் தங்களுக்குள்ள தடைகளை அரசியல் மூலம் நீக்கிக்கொண்டு முன்னேற்ற மடையுமாறு செய்வதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் நோக்கமாகும். - (விடுதலை, 21.7.1950)

தமிழ் ஓவியா said...


காலம் என்ற அற்புத ஆயுதம்!
------------கி.வீரமணி
தனி வாழ்க்கையாக இருந் தாலும் பொது வாழ்க்கையாக இருந்தாலும், காலத்தை எப்படி பயனுறு வகையில் திட்டமிட்டு அன் றாட வாழ்வில் நேரத்தைக் கையா ளுவது என்பதைப் பொறுத்தே நாம் வெற்றி பெற முடியும்.

நாம் பல நேரங்களில், கடிதங் களுக்குப் பதில் போடத் தவறும் போதோ, நண்பர்கள் சந்திப்பை ஏற்படுத்திக் கொள்ளாதபோதோ, சில முக்கியப் பணிகளை தவிர்த்து விடும் போதோ, ஒரே வழமையான சமாதானமாக என்னங்க எனக்கு நேரமே இல்லைங்க; அவ்வளவு பிசி, பிசி - தலைக்கு மேலே வேலைங்க என்று கூறுவது சரியான விளக்கம் ஆகாது.

அது, நம்முடைய பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே யாகும்.

உலகில் உள்ள மிகப் பெரிய பொறுப்பு வகிக்கும் பதவியாளர் களான அமெரிக்க அதிபர் ஒபாமா போன்ற வரிசையில் உள்ளவர்களா னாலும், மிக எளிய ஊழியர்களான நமது நெருக்கமான நண்பர்களாக இருப்பவர்களானவர்களும் சரி, எல்லோருக்கும் 24 மணி நேரம் தானே!

உலக சாதனையாளர்களாக எப்படிப் பலர் உயருகின்றனர்? அவர்களும் இந்த 24 மணி நேர காலத்தை - நாளை - பயன்படுத்தித் தானே வளர்ந்துள்ளார்கள்? எனவே காலத்தைத் திட்டமிட்டுச் செலவிட்டு, அதன் மூலம் மிகு பயன் உண்டாகும் வண்ணம் உழைத்தல் வேண்டும். காலத்தைப் பயனுறு வகையில் திட்டமிட்டு செலவிடுவது பற்றி எண்ணற்ற அறிஞர்களின் வழிகாட்டும் கருத்துரைகள், அடங்கிய நூல்கள் ஏராளம் ஆங்கிலத்தில் வந்துள்ளன.

அண்மையில் ஒரு கையடக்க ஆங்கிலப் புத்தகம் ‘Managing the time of your Life’ என்ற மேக்கன் மேக் டொனால்டு (Machen Macdonald) என் பவர் தொகுத்த புத்தகம் படித்தேன்.

முற்றிலும் புதிய அணுகுமுறை; அலுப்புசலிப்பின்றி படித்துப் பயன் பெறும் வகையில் முதலில் ஒரு அத்தியாயத்தில் இவரது அறிமுகக் கட்டுரை போன்ற கருத்துக்கோவை.
அடுத்து உலகின் மிகப் பிரபல சிந்தனையாளர்கள், கருத்தாளர்கள் சிலரின் கருத்துரைகளின் தொகுப்பு களுடன்.

ஹாரிஹீப்ஸ், ஸ்டீபென் கோவி, ஸ்காட்டெயிலர், ரோபன் கன்சாலஸ், ஆலிசன் அர்னால்ட், பிரயன் டிரேசி, டெனிஸ் வெயிட்லே, போன்ற பல 13 அறிஞர்களின் சுருக்கமான கருத்துக் கட்டுரைகள் தொகுப்பாக அமைந்துள்ளன.

பணத்தைச் செலவு செய்தால், பிறகு சம்பாதித்துக் கொள்ள முடியும். உடல் நலக்குறைவுகூட சரி செய்து நோய் தீர்த்த ஆரோக்கிய வாழ்வு மீண்டும் மலர வாய்ப்புள்ளது; காரணம் மருத்துவத் தொழில் நுட்பமும் நுண்ணறிவுக் கண்டுபிடிப்புகளும், அதற்கேற்ற மருந்து வகைகளும், நாளும் பெருகி வருகின்றன; உலக மனித வாழ்வும் சராசரியை வளர்த்து, உயர்ந்து கொண்டே வருகின்றன.

ஆனால் இழந்த காலம் என்பது நம் வாழ்நாளில் மீண்டும் வராது; வரவே வராது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

நொடி - வினாடியைக்கூட இப் போது பகுத்துப்பகுத்து, நானோ வினாடிகளாக்கி அணுவைத் துளைத்ததுபோல, காலத்தையும் அல்லவா துளைத்துப் பிரித்து வெற்றி கண்டு விட்டதே விஞ்ஞானம்!

இந்த நூலாசிரியர் ஒரு அருமை யான கருத்தைப் பதிய வைத் துள்ளார்.

கடந்த காலம் (Past)என்பது சென்று விட்டது. செலவாகி விட்டது.

சில அனுபவங்களைப் பெற வேண்டுமானால் அது ஓரளவுக்குப் பயன்படலாம்; மற்றபடி அதைப்பற்றி அளவுக்கு மீறிச் சிந்தித்து, காலத்தைச் செலவிடுவது பயனு றுவதாக அமையாது.

அதுபோலவே, வருங்காலம் என்பது இப்போது நம் கையில் இல்லாத ஒன்று. கற்பனையாக எதிர்பார்க்க வேண்டிய ஒன்று (அது எப்படி இருக்கும் என்று ராசி பலன் பார்ப்பது நம்மை உயர்த்தாது; வீணே வீழ்த்தவே செய்யும்) நிகழ்காலம் தான் கையில் உள்ள உணவு - அதைச் சுவைத்துச் சாப்பிட்டு அதிலிருந்து சத்துக் களை செரிமானம் செய்வது தானே முக்கியம்?

எனவே நிகழ் காலத்தைப் போற்றி திட்டமிட்டு பயனுறு வகையில் செலவழித்து செழிப்போம் நாம்!

தமிழ் ஓவியா said...


பேரறிவாளனிடம் பெற்ற வாக்குமூலத்தை நான் மாற்றி அமைத்தேன்

சிபிஅய் முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் ஒப்புதல்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசா ரணை முடிவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பேரறிவாளனிடம் நான் வாக்குமூலத்தை பதிவு செய்து. பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கி விட்டு, என் கருத்தை சேர்த்து கொண்டேன். இதற்காக நான் வருந்துகிறேன். என சிபிஅய் முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனனுக்கு மரண தண் டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சிபிஅய் முன்னாள் எஸ்.பி. தியாகராஜன்தான் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித் துள்ள பேட்டியில் கூறியிருப்ப தாவது:

9 வோல்ட் திறன் கொண்ட 2 கோல்டன் பவர் பேட்டரிகளை வாங்கி, சிவராசனிடம் கொடுத்தேன். அவற்றை வெடிகுண்டுகளில் சிவராசன் பயன்படுத்தினார் என்று பேரறிவாளன் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.ஆனால், தான் வாங்கிய பேட்டரி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டில் பயன்படுத்தப்பட உள்ளது என்பது தெரியும் என்று பேரறிவாளன் கூறவே இல்லை.

அவரிடம் வாக்குமூலம் பெற்ற போது, நான் பேட்டரியை வாங்கி கொடுத்தது உண்மை. ஆனால், எதற்காக சிவராசன் அதை கேட்டார் என்று தெரியவில்லை என்றுதான் பேரறிவாளன் கூறினார்.ஒரு விசா ரணை அதிகாரி என்ற முறையில், பேரறிவாளனின் வாக்குமூலம் என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. அது தகுதியான வாக்குமூலம் அல்ல. அதாவது அவரது ஒப்புதல் இல்லா மல், சதி திட்டம் அரங்கேறிய தாகத்தான் இதில் அர்த்தம் கொள் ளப்படும். இதனால், பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கி விட்டு, என் கருத்தை சேர்த்து கொண்டேன். இதற்காக நான் வருந் துகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால், அதை நிச்சயம் மாற்றி இருந்திருப்பேன்.

கடந்த 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் பேரறிவாளனிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது. பேரறி வாளன் வாக்குமூலம் கொடுத்த பின்னர், எனக்கு 2 வாய்ப்புகள்தான் இருந்தன.அவரது வாக்குமூலத்தை அப்படியே ஏற்பது அல்லது பிற ஆதாரங்கள் அடிப்படையில் என் னுடைய அனுமானத்தை அதில் பதிவு செய்வது. அதனால் வேறு வழியின்றி 2ஆவது வாய்ப்பை தேர்ந்தெடுத்தேன்.

வெடிகுண்டு தயாரிக்கப்பட்ட தற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், பேரறிவாளன் வாக்குமூலம் தகுதியானதாக இல்லாவிட்டால் அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும். 22 ஆண்டு களுக்கு பின்னர் என் செயலுக்காக வருந்து வதற்கு காரணம், இப்போது இல்லா விட்டால் எப்போதும் முடி யாது என்பதால்தான்.

ராஜீவ் கொலை வழக்கு விசா ரணை முடிவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பேரறிவாளனிடம் நான் வாக்குமூலத்தை பதிவு செய்து விட்டேன். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. கெட்ட வாய்ப்பாக ராஜீவ் கொலை வழக்கில் வெடிகுண்டு யாரால், எங்கு தயாரிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை சிபிஅய்யால் கண்டு பிடிக்க முடியவில்லை.இவ்வாறு தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


நரேந்திர மோடி மனைவி இருப்பதை மறைத்தாரா? தேர்தல் வழக்காக தொடர உச்சநீதிமன்றம் அனுமதி!

புதுடில்லி, நவ. 25- நரேந்திர மோடி, மனைவி இருப்பதை மறைத் தாரா என்பது பற்றி தேர்தல் வழக்கு தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

பாரதீய ஜனதா பிரதமர் வேட் பாளரும், குஜராத் முதல் அமைச்ச ருமான நரேந்திரமோடி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அவர் குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் மணிநகர் தொகுதியில் போட்டி யிட்ட போது வேட்பு மனுவில் உண்மைகளை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக கொல்கத் தாவைச் சேர்ந்த தொழில் அதிபர் சுனில் சரோகி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், நரேந்திரமோடி வேட்பு மனுவில் அவருக்கு மனைவி இருப்பதை மறைத்துவிட்டார். நரேந்திரமோடி மனைவி பெயர் ஜசோதா பென். இவர் 1951ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி பிறந்தார். இவருக்கும், நரேந்திர மோடிக்கும் 1968ஆம் ஆண்டு திரு மணம் நடந்தது. ஆனால் நரேந்திர மோடி இதை மறைத்துவிட்டார். பொது வாழ்க்கையில் இருப்பவர் இவ்வாறு உண்மையை மறைப்பது தவறு. இதுபற்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியி ருந்தார்.

இந்த மனு நேற்றுமுன்தினம் தலைமை நீதிபதி சதாசிவம் முன்னி லையில் விசாரணைக்கு வந்தது. மனு தாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் கோலின் கான்சால் வேஸ் ஆஜராகி வாதாடுகையில், நரேந்திர மோடி வேட்பு மனுவில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் பொய். மனைவி இருப்பதை மறைத்துவிட்டார். தேர்தல் அதிகாரி அவரது வேட்பு மனுவை நிராகரித்து இருக்க வேண் டும். அவரது பிரமாண பத்திரத்தில் கூறியுள்ள தகவல்களில் சில சந்தேகங்கள் இருக்கின்றன. அதை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டது தவறு என்றார்.

வழக்குரைஞர் வாதத்துக்குப் பின் தலைமை நீதிபதி சதாசிவம் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

நரேந்திரமோடியின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நன்கு சரிபார்த்துதான் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதில் உயர்நீதி மன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் பங்கு என்ன இருக்கிறது. எனவே மனுதாரர் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.

தமிழ் ஓவியா said...


மருத்துவ குணம் நிறைந்த ஆரஞ்சு


உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும். ஆரஞ்சு பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும், சக்தியும் கிடைத்துவிடுகிறது. நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மி.லி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

ஆரஞ்சு பழத்தை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும். ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது. சளி, ஆஸ்துமா, நுரையீரல் கோளாறு, சுவாசக் கோளாறு, காச நோய் போன்ற வியாதி களால் அவதியுறுவோர் பால் உணவுகளை விலக்கி ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டு விரைந்து குணம் பெறலாம். மேலும் உடல் சூடு, கண் பார்வைக் கோளாறு, சளித்தொல்லை இவை அனைத்தும் சேர்ந்த வியாதி உள்ளவர்களுக்கு உடனடி நிவாரணத் திற்கு ஏற்ற ஒரே பழம் ஆரஞ்சுப்பழம்.

குடல்புண் நோயால் அவதிப்படுபவர்களுக்கு ஓர் அற்புத உணவு, செரிக்கும் சக்தியையும், பசியையும் அதிகப்படுத்துவதுடன் நொந்து போன குடலை விரைந்து சரி செய்கிறது. அழிந்த திசுக்களை புதுப்பிக்கிறது.

இரத்த சோகை, நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளவர்களின் உன்னத உணவாக செயல்பட்டு புது இரத்தம் உற்பத்தி செய்கிறது. பல் வலி, பயரியா போன்ற கோளாறுகளைத் தீர்க்கும்.

உடல் சூடு, வெட்டைச்சூடு, மூலவியாதி போன்றவற்றிற்கும், சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கோளாறுகளுக்கும் இரவில் அரை டம்ளர் ஆரஞ்சு சாறு குடித்தால் பலன் கிட்டும். உடம்பில் மிகுந்துள்ள விஷத்தன்மையை முறித்து காய்ச்சலிலிருந்து உடனே நிவாரணம் தருகிறது.

உடல் எடை, மூட்டுவலி, உடம்பில் அதிக உப்புச்சத்து, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் சரியாக இதுவே சஞ்சீவி கனியாக செய்ல் படுகிறது. கர்ப்பமுற்ற பெண்கள் இப்படிச்சாற்றை அதிக அளவில் சாப்பிட்டால் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவார்கள்.

வெய்யில் காலத்தில் உண்டாகும் அக்கி, தோல் வியாதிகள், மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்றவைகளில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது. மேலும் வயிற்று வலி, ஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கை உடன் சரிசெய்கிறது. குழந்தைகளின் பிரைமரி காம்ளக்ஸ் சரியாகிறது.

தமிழ் ஓவியா said...

அதிக நேரம் சைக்கிள் ஓட்டினால் இதயம் பாதிக்கும்!

உலகம் முழுவதும் மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளில் சைக்கிள் ஓட்டுவதும் ஒன்று. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கும், இரவில் நல்ல உறக்கத்தைத் தரும், கொழுப்பைக் குறைக்கும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டும்... இப்படி சைக்கிள் ஓட்டுவதில் நிறைய நன்மைகள்.

ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சல்லவா? அப்படித்தான் தினமும் அதிக நேரம் ஓடுவதும் சைக்கிள் ஓட்டுவதும் ஆபத்து என்று சமீபத்தில் எச்சரித்துள்ளது அமெரிக்க மருத்துவக் கழகம். தொடர்ச்சியான சைக்கிளிங், நம் இதயத் தசைகளை பலவீனமாக்கி விடக் கூடும். இந்த உடற்பயிற்சியும் ஒரு விதத்தில் பவர்ஃபுல் மாத்திரை போன்றதுதான். அதற்கும் பக்க விளைவுகள் உண்டு என்று சொல்லியிருக்கிறார் அமெரிக்க மருத்துவக் கழகத்தின் இதய மருத்துவ நிபுணர் கார்ல் ஜே.லேவி.

இப்படிப்பட்ட கடுமையான உடற்பயிற்சிகளால் பலவீனமடையும் இதயம் வழக்கத்தை விட வேகமாகவோ, மெதுவாகவோ துடிக்கத் துவங்குகிறது. இதனை அரித்மியா என்கிறார்கள். பெரும்பாலும் ஆபத்தின்றி வந்து போகும் இந்த அரித்மியா, சில நேரங்களில் இதய செயலிழப்பிலும் கொண்டுபோய் விட்டுவிடும் என்கிறார்கள் அவர்கள்.!