Search This Blog

4.11.13

பெரியார் செய்த புரட்சி

பெரியார் செய்த புரட்சி - பொதுக்கூட்ட மேடையிலேயே திருமணம்! தமிழர் தலைவர் சுட்டிக்காட்டிப் பெருமிதம்

திண்டிவனம், நவ.1- ஒரு பொதுக்கூட்ட மேடை யிலேயே சிக்கனமாக திருமணம் நடைபெற்றது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், இது தந்தை பெரியார் செய்த மகத் தான புரட்சி என்று குறிப்பிட்டார்.
கடந்த 20.10.2013 அன்று மாலை திண்டிவனத் தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
மிகுந்த சிறப்போடு காலையில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் முடிந்து, அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங் களை விளக்குகின்ற ஒரு பொதுக்கூட்ட நிகழ்ச்சி யாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பொதுக் கூட்ட நிகழ்ச்சி, அடாது மழை பெய்தாலும், விடாது நாடகம் நடத்தப்படும் என்று அந்தக் காலத்திலே துண்டறிக்கையிலே போடுவார்கள். ஆனால், அதையும் மிஞ்சக்கூடிய வகையில், திராவிடர் கழகத்துக்காரர்கள் இயற்கையைக் கூட எதிர்த்து வெல்லக்கூடியவர்கள்தான் என்று சொல்லக்கூடிய வகையில், இவ்வளவு பெரிய கடும் மழை பெய்தாலும், கூட்டத்தினை இந்த இடத்திலேயே நடத்துங்கள் என்று தோழர்கள் எங்களுக்கு ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி இங்கே இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.
இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், நாங்கள் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டமாகத் தான் நடத்தவேண்டும் என்று நினைத்தோம். நம்முடைய இயக்கத் தோழர் சர்வேயர் ஆறு முகம் அவர்களின் மூத்த மகன் பொறியாளர் சிந்தனையாளன் அவர்களுக்கும், மணம்பூண்டி லட்சுமிநாராயணன் என்கிற சுந்தரமூர்த்தி - பத் மாவதி ஆகியோருடைய மகள் செல்வி சுகன்யா அவர்களுக்கும் இந்த மேடையில் சுயமரியாதைத் திருமணம் எளிமையாக நடைபெறவிருக்கிறது.

தந்தை பெரியாரோடு முடிந்துவிட்டது என்று நினைத்தார்கள்
தந்தை பெரியார் அவர்கள் உடலாலே மறைந்து 40 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அய்யா அவர்கள் தமது 95 ஆம் வயது வரையில், தம்முடைய சிறுநீர் இயற்கை வழியாகப் பிரியா விட்டாலும்கூட, அதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, ஒரு பாட்டிலை கையில் தூக்கிக்கொண்டுதான் - அதில்தான் சிறுநீர் பிரிந்தது; ஆனாலும், அலுப்பு, சலிப் பின்றி இறுதி மூச்சடங்குகின்ற வரையில் உரை யாற்றிக்கொண்டு, மக்களைத் திருத்தவேண்டும் என்று உழைத்தார்கள். உலகிலேயே இப்படி  உழைத்த மாபெரும் ஒரு தலைவரை எங்கும் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு தலைவர் மறைந்தவுடன், பலர் எண்ண நினைத்தார்கள், இனிமேல் இந்த இயக்கம் கிடையாது; அவரோடு முடிந்துவிட்டது. ஊருக்கு நான்கு பேர் இருந் தார்கள்; இனி அவரோடு முடிந்துவிட்டது என்று நினைத்தார்கள். பெரியாரின் கொள்கைக்கும் நாம் ஒரு முடிவு கட்டிவிட்டோம் என்று ஆரியம் கொக்கரித்தது. ஆனால், அருமை நண்பர்களே, பெரியார் கொள்கை எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது என்று சொன்னால், தந்தை பெரியார் அவர்கள் எந்தப் பண்பாட்டுப் படை யெடுப்பை முறியடித்து, ஜாதீய வெறியை அவர் கள் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தை முறியடித்து, இதுபோன்ற மணவிழாக்கள் என்றால், புரோகி தர்களைத்தான் அழைக்கவேண்டும்; குறிப்பிட்ட நாளிலேதான் நடத்தவேண்டும். சடங்குகள், சம்பிரதாயங்கள் நடத்தவேண்டும். ஏழு அடி சப்தபதி என்ற பெயரால் அங்கே நெருப்பை மூட்டி, சுற்றி வந்தால்தான், சட்டப்படி அந்தத் திருமணம் செல்லும் என்று தீர்ப்புகள் வழங்கப் பட்ட நாட்டிலே, அதைத் தலைகீழாக்கி, ஒரு துளி ரத்தம் சிந்தாமல், வன்முறையில் அணு அளவு கூட நம்பிக்கை இல்லாமல், பிரச்சாரம், போராட் டம், தங்களை வருத்திக் கொள்வது; பொதுமக் களுக்கு இடையூறு செய்யாதது, பொதுச்சொத் துக்களுக்கு நாசம் விளைவிக்காதது என்ற முறை யில், தன்னுடைய இயக்கத்தை அய்யா அவர்கள் 60 ஆண்டுகாலத்திற்கு மேலாக, நடத்தியதன் விளைவு, அதன் வெற்றிக்கனியாகத்தான் இந்த மணமக்கள் இங்கே மேடையில் அமர்ந்திருக் கிறார்கள்.
பெரியார் உருவாக்கிய துணிச்சல்.

பெரியாருடைய கொள்கையின் விளைச்சல்
நீங்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்; பெரியாருடைய கொள்கை பெரியாரோடு முடிந்துவிட்டதா? அதோடு இந்த இயக்கம் தலை யெடுக்கவில்லையா? நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு திருமணம் என்று சொன்னால், எல்லோரையும் பயமுறுத்தி வைத்திருந்தார்கள்; கல்யாணத்தைப் பண்ணி பார்; வீட்டைக் கட்டிப் பார்! என்று. கல்யாணத்தை எவ்வளவு எளி மையாக செய்யக்கூடிய துணிச்சல் எங்களுடைய தோழர்களுக்கு உண்டு. சர்வேயர் ஆறுமுகம் ஒரு பகுத்தறிவாளர்; இங்கே மணமக்கள் இருவரும் எப்படி உட்கார்ந்திருக்கிறார்கள், கறுப்பு உடை அணிந்து உட்கார்ந்திருக்கிறார்கள். இந்தத் துணிச்சல் வேறு யாருக்காவது உண்டா? இதுதான் பெரியார் உருவாக்கிய துணிச்சல். பெரியாருடைய கொள்கையின் விளைச்சல். அந்த அளவிற்கு இவ்வளவு எளிமையாக நடைபெறு கிறது.
ஒரு வார காலத்திற்கு முன்னே வந்திருந்து, சடங்கு, சம்பிரதாயத்தோடு முன்பெல்லாம் திருமணம் நடைபெறும். இப்பொழுதெல்லாம் யாரும் இது மாதிரி திருமணங்களை நடத்த விரும்புவதில்லை.
ஒரு நாள் திருமணம் நடத்தவேண்டும்; அதற்கு மேல் இருக்கக்கூடாது என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால் எப்படி இருக்கும். ஆனால், 1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் பெரியார் போட்ட தீர்மானங்களில் ஒன்று, இனிமேல் பல நாள் நடைபெறும் திருமண விழாவை குறைத்து ஒரு நாள் திருமணமாக நடத்தவேண்டும்; ஒரு நாள் அரை நாள் ஆகியது; அரை நாள் சில மணிநேர மாகியது. ஆடம்பரங்கள் அகன்றன; அழைப் பிதழ்கள் கிடையாது. ஆனால், அதேநேரத்தில், எவ்வளவு அற்புதமான பொதுமக்களின் சாட்சி யங்களோடு, நீங்கள் உங்களது சாட்சியங்களோடு இங்கே  மணமக்கள் அருமை செல்வர்கள் சிந்த னையாளன் - சுகன்யா ஆகியோர் வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்திக் கொள்கிறார் கள் என்றால், பெரியார் கொள்கை, பெரியார் உடலால் மறைந்து 40 ஆண்டுகள் ஆன பிறகும் கூட, எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக் கிறது. இந்தத் துணிச்சல், இந்தத் தெளிவு எங் களுடைய தோழர்களுக்கு உண்டு. யாருக்கும் அச்சமில்லை; பயமில்லை. அதன் காரணமாகத் தான் அவர்கள் துணிவாகச் செய்கிறார்கள். மண மக்கள் என்ன புரியாதவர்களா? அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களைப் படிக்க வைத்திருக் கிறார்கள். இங்கே உரையாற்றிய தோழர்கள் சொன்னார்களே, சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும், படிப்பைக் கொடுக்கக்கூடாது என்று. இதுதானே மனுதர்மம் - இதுதானே வேதம்! அதையும் தாண்டி நாம் இன்றைக்குப் படித்தவர்களாக இருக்கின்றோம்;இங்கே வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள், பட்டதாரிகள் இருக்கிறார்கள். இப்பொழுது தடுக்கி விழுந்தால் தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் கல்லூரியின்மீது தான் விழவேண்டும்; பாலிடெக்னிக் கல்லூரியின் மீதுதான் விழவேண்டும் என்ற அந்த நிலை இருக்கிறது. இவை எல்லாம் எப்படி வந்தன? வெறும் சரசுவதி பூஜை கொண்டாடியதால் வந்ததா? ஆயுத பூஜை கொண்டாடியதால் வந்ததா? இதெல்லாம் வந்ததற்குக் காரணம் ஒரே ஒருவர் - அவர் தான் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
அறிவுப் புரட்சி எப்படி ஏற்பட்டது?
அந்தப் பெரியார் அவர்களுடைய சிந்தனை களால், நீதிக்கட்சி ஆட்சி எல்லோருக்கும் கல்வி யைத் தந்தது; அதனுடைய தொடர்ச்சி திரா விடர் இயக்கம் - திராவிடர் இயக்கத்தினுடைய தாக்கம் பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசர் அவர்கள் - குலக்கல்வித் திட்டத்தினை ஒழித்த நிலை - இவையெல்லாம் வந்ததினால், இங்கே அமர்ந்திருக்கும் மணமக்களைப் பாருங்கள், மணமகன் சிந்தனையாளன் பி.இ., மணமகள் சுகன்யா பி.எஸ்சி., நர்சிங் - அடுப்பூதும் பெண் களுக்குப் படிப்பெதற்கு என்று சொன்னார்கள்; ஆனால், இப்பொழுது பெண்கள் ஊதுகின்ற அடுப்பே கிடையாது; எல்லோருக்கும் கலைஞர் திருகியவுடன் எரிகிற அடுப்பைக் கொடுத்தார்.
முத்தன் மகன் முனியன், குப்பன் மகன் சுப்பன், காத்தான் மகன் கருப்பன் இவர்களெல்லாம் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள் என்றால், கனடாவில் ஒருவர் இருக்கிறார்; சுவிட்சர்லாந் தில் ஒருவர் இருக்கிறார்; இன்னொருவர் இங்கி லாந்தில் இருக்கிறார். அடிக்கடி பிள்ளைகள் எனக்கு போன் செய்கிறார்கள் என்று சொல் கிறார்; சரி, உங்கள் பிள்ளை எந்த நாட்டில் இருக் கிறார் என்று கேட்டால், அவர் என்ன சொல் கிறார், எந்த நாடு என்று எனக்குத் தெரியாது என்று.
நண்பர்களே, இவர்களுடைய பிள்ளைகள் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய நிலை எப்படி வந்தது? அறிவுப் புரட்சி எப்படி ஏற்பட்டது? சமுதாய மாற்றங்கள் எப்படி வந்தது? நீங்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள் தமிழர்களே, திராவிடர்களே அருள்கூர்ந்து நீங்கள் எண்ணிப் பாருங்கள்; பெரியார் இல்லை என்றால், சுயமரியாதை இயக்கம் பிறக்காவிட் டால், திராவிடர் கழகம் இல்லாவிட்டால், இவை எல்லாம் சாத்தியமா? நாமெல்லாம் பட்டதாரி களாக இருப்போமா? நம்முடைய கையில் பேனா இருக்குமா? நம்முடைய கையில் ஸ்டெதஸ்கோப் இருக்குமா? நம்முடைய கையில் டி-ஸ்கோயர் இருக்குமா? பொறியாளர்களாக ஆகியிருக்க முடியுமா? டாக்டர்களாக ஆகியிருக்க முடியுமா? முடியாது - எல்லோர் கைகளிலும் மாடு ஓட்டுகின்ற கோல் இருக்கும்! ஆடு ஓட்டுகின்ற குச்சி இருக்கும்! பெரியார் பிறந்ததினால், அன் றைக்கு மாடு ஓட்டிக் கொண்டிருக்கின்றவர்கள் கைககளில் எல்லாம் பேனா இருக்கிறது. எங்களைப் போன்றவர்கள் வழக்கறிஞர்களாக இருக்கிறோம்; பலர் டாக்டர்களாக இருக்கிறார் கள். ஸ்டெதஸ்கோப்பினை கழுத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் பிறந்திருக்க வில்லை என்றால், நாமெல்லாம் கூலிகளாக இருந்திருப்போம்.


திராவிட இயக்கத்தைத் தவிர
வேறு எந்த இயக்கத்திற்கு உண்டு!
தமிழர்கள் என்றாலே ஒரு காலத்தில் அகராதி யிலே கூலிகள் என்று எழுதி வைத்திருந்தார்கள்; அப்படிப்பட்ட சூழ்நிலைகள் உண்டு. அப்படிப் பட்டவை எல்லாம் இன்றைக்கு மாற்றப்பட்டு, அந்த மூட நம்பிக்கைகளையெல்லாம் எதிர்த்துப் போராடினார். ஜாதி, ஜாதீய தத்துவம், அதனு டைய வேர் எங்கே இருக்கிறது என்று பார்க்கிற பொழுது, பார்ப்பன ஆதிக்கம் - அந்தப் பார்ப்பன ஆதிக்கத்தினுடைய விளைவுதான் - திருமணத் திலும் பார்ப்பன ஆதிக்கம் - புரியாத மொழியில் மந்திரத்தைச் சொல்லி சடங்குகள், சம்பிரதாயங் களை நடத்தவேண்டும். தமிழன் இல்ல மணவிழா தமிழிலே நடத்தப்படாது; தமிழரால் நடத்தப் படாது என்ற நிலை இருந்ததை மாற்றிக் காட்டிய பெருமை பெரியாரைத் தவிர, சுயமரியாதை இயக்கத்தைத் தவிர, திராவிட இயக்கத்தைத் தவிர வேறு எந்த இயக்கத்திற்கு உண்டு.
யாருக்கு சம்மன் அனுப்புவது?
அதனுடைய விளைவுதான், இங்கே இந்த மணமக்கள் அமர்ந்திருக்கிறார்கள்; நாற்காலியை கூட அவர்கள் தூக்கிப் போடவில்லை; நம்மு டைய தோழர்கள்தான் தூக்கிப் போட்டார்கள். பழைய வைதீக திருமணத்தில் என்ன சொல் வார்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சி யாக, நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள் சாட்சி யாக என்று சொல்லி திருமணத்தை நடத்தி வைப்பார்கள்; அந்தத் திருமணத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு, நீதிமன்றத்திற்கு சென்றார் கள் என்றால், முப்பத்து முக்கோடி தேவர்களில் யாருக்கு சம்மன் அனுப்புவது; நாற்பத்தெண் ணாயிரம் ரிஷிகளில் யார் சாட்சிக்கு வருவார் கள்? அக்னி சாட்சி என்று சொல்கிறார்களே, அக்னியை சாட்சிக்கு அழைக்க முடியுமா? அப்படி கூப்பிட்டால், பயர் சர்வீசும் கூட வரவேண்டுமே! இவையெல்லாம் நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
இந்த மணவிழாவினைப் பாருங்கள், நீங்கள் எல்லாம் சாட்சிகளாக - அதைவிட வீடியோ சாட்சியாக - இது நீதிமன்றத்திற்குச் சென்றாலும் செல்லுபடியாகும். இதுதானே அறிவியல் காலம். இதனைப் பெரியார் அவர்கள் எவ்வளவு எளிமை யாக உருவாக்கி வைத்திருக்கிறார். எனவே, இந்த மணமக்கள் மிகவும் புத்திசாலியான மணமக்கள்.
மிகவும் எளிமையாக இந்த மணவிழாவினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்றால், பெரியார் கொள்கை எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக் கிறது என்பதற்கு இதைவிட ஒரு நல்ல எடுத்துக்காட்டு வேறு கிடையாது என்று சொல்லி, இந்த மணவிழாவினைப் புகுத்தியவர் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர் களானாலும், அந்த மணவிழாவிற்குச் சட்ட வடிவம் கொடுத்த பெருமை 1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்தவுடன் முதல்வராக அண்ணா பதவி யேற்றவுடன், சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் கொடுத்தார்கள்; அதுமட்டுமல்ல, இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று சட்டமன்றத்திலே பிரகடனப் படுத்தினார்.

எளிமை, சிக்கனம் உங்களை வாழ்க்கையில் உயர்த்தும்!
அப்படிப்பட்ட அண்ணாவை நினைத்து, அய்யாவை நினைத்து இந்த மணமக்கள் செல்வர்கள் சிந்தனையாளன் - சுகன்யா ஆகி யோரும் வாழ்க்கை இணையேற்பு விழா உறுதி மொழியினை கூறி, வாழ்க்கை இணையேற்பு விழாவினை இங்கே நடத்திக் கொள்கிறார்கள்.
(மணவிழாவை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்).
நண்பர்களே, மணமக்கள் இருவரும் இங்கே எளிதாக மாலை மாற்றிக் கொண்டார்கள்; சில நேரங்களில் தாலி அணிவிக்கின்ற பழக்கம் இருக் கிறது; மணமக்களுக்கு அந்த உரிமை சுயமரியா தைத் திருமணத்தில் உண்டு. அந்த அடிப்படை யில், ஒன்றே ஒன்றைச் சொல்லி முடிக்கின்றேன்.
இன்றைக்கு இந்த மணவிழாவினை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களோ, அதேபோல், வாழ்க்கையில் இதே சிக்கனத்தை நீங்கள் கடைப்பிடிக்கவேண்டும்; அதுதான் மணமக் களுக்கு அறிவுரை. எளிமை, சிக்கனம் உங்களை வாழ்க்கையில் உயர்த்தும். அதைவிட மிகமுக்கி யம் என்னவென்றால், அறிவுரையை நாங்கள் சொல்லவேண்டியதில்லை; மணமக்கள் மிகத் தெளிவானவர்கள். உங்கள் பெற்றோர்களால்தான் நீங்கள் வளர்ந் தீர்கள். உங்கள் பெற்றோர்களை அலட்சியப் படுத்தாதீர்கள். அவர்கள் பணத்திற்காக உங்களை எதிர்பார்ப்பதில்லை. பாசத்திற்காக உங்களிடம் அன்பு காட்ட விரும்புகிறார்கள். எனவே, பெற் றோர்களிடம் அன்பு காட்டுங்கள். யார் யாரெல்லாம் உங்களுக்கு உதவி செய்தார்களோ வாழ்க்கையில் முன்னேற, அவர்களுக்கெல்லாம் உதவுவதற்குத் தயாராகுங்கள். அதையும் தாண்டி, இல்லறம் நடத்திக்கொண்டே தொண்டறம் செய்யப் பழகுங்கள். சமூகத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைப் பிறருக்குத் தாராளமாக வழங்குங்கள். அளவான குடும்பம்; வளமான குடும்பம். சிக்கனம் தேவை; வரவிற்கு உட்பட்டு  சிக்கனத்தோடு வாழுங்கள்; சிக்கனம் எல்லா வற்றிலும் இருக்கவேண்டும். குழந்தை பெற்றுக் கொள்வதிலும் இருக்கவேண்டும்.
இல்லறத்தில் இருந்துகொண்டே தொண்டறம்! இல்லறம் - துறவறம் என்று இரண்டு அறங் களை மட்டும் சொன்ன நாட்டில், தந்தை பெரியார்தான் புதிய வழியைக் காட்டினார். இல் லறத்தை விட்டுத்தான் துறவறம் செல்லவேண்டும் என்று சொன்னார்கள்; புரோகிதன் நடத்தி வைக்கும் திருமணத்தில், காசி யாத்திரை என்ற பெயரில் மணவிழா அன்றைக்கே சந்நியாசம் செல்லும் காட்சியெல்லாம் அங்கே நடைபெறும். இங்கே அதெல்லாம் இருக்காது. வாழ வேண்டியவர்கள் அவர்கள்; சமுதாயத்திற்கு வழிகாட்டவேண்டியவர்கள். எனவே, இல்லறம் நடத்துகின்ற நேரத்தில், நீங்கள் சமுதாயத்திற்கு உதவி செய்யுங்கள்; சமுதாயத்திலே இருக்கின்ற வர்களுக்கு உதவ வாய்ப்பு ஏற்படும்பொழு தெல்லாம் உதவுங்கள்; அதற்குப் பெயர்தான் தொண்டறம் என்பதாகும்.
எனவே, தந்தை பெரியார் அவர்கள் இல்லறத்தில் இருந்துகொண்டே தொண்டறம் என்பதைச் சொல்லிக் கொடுத்தார்கள்.
ஆகவே, இந்த இரண்டை அன்பு மணமக்களே நீங்கள் கடைப்பிடித்து ஒருவருக்கொருவர் விட் டுக் கொடுத்து வாழுங்கள்; தன்முனைப்பின்றி வாழுங்கள்; அதன்மூலமாக நீங்கள் சிறப்பான வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திக் கொள் வீர்கள் என்று எடுத்துச் சொல்லி,
உங்களுக்கெல்லாம் ஒரு முக்கிய அறிவிப்பு, மற்ற மணவிழாக்களில் எல்லாம்  கட்டாயம் இருந்து சாப்பிட்டுவிட்டுச் செல்லவேண்டும் என்று உங்களை கட்டாயப்படுத்துவார்கள்; நீங்கள் இந்தக் கூட்டம் முடிந்ததும், அவரவர்கள் சென்று எங்கெங்கே சென்று சாப்பிடக்கூடிய முழு உரிமை உங்களுக்கு வழங்கப்படுகிறது என்று சொல்லி விடை பெறுகிறோம் இந்த மணமக்களை வாழ்த்தி அனுப்புகிறோம், நன்றி! வணக்கம்.
வாழ்க மணமக்கள்! வாழ்க பெரியார்!! வளர்க பகுத்தறிவு!!!
------------------ இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். -”விடுதலை”  1-11-2013

16 comments:

தமிழ் ஓவியா said...


பதிப்பாளர் பார்வையில் பெரியார்இத்தனை ஆண்டுகள் பதிப் பாளர் வாழ்வில் வர்த்தகரீதி யாக வெற்றிகரமானவராக இல்லையே என்ற வருத்தம் ஏற்பட்டதுண்டா?

வியாபாரத்துக்கு எந்தப் புத்தகம் உதவும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. கிராமத்தி லிருந்து தனது முதல் புத்தகத்தை யாரும் போடுவதற்கு வழியில்லாமல் யார் எடுத்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களது புத்தகங்களைப் போடவேண்டும் என்பதே எனது கொள்கை. இதுவரை ஆயிரத்துக்கும் மேல் தலைப்புகளில் புத்தகங்கள் போட்டுள்ளேன். நூல்களை ஒரு ரசிகனாக, ஒருவனாகவே வெளியிட்டு வருவ தால் நான் ஒரு வியாபாரியாக ஆக முடிய வில்லை. ஒரு எழுத்தாளனின் முதல் எழுத்தை எப்படியாவது போட்டுவிட வேண்டும் என்று நினைப்பேன். எல்லாரும் போடும் நூல்களைப் போடுவதில்லை என் பதை நான் குறிக்கோளாகவே வைத் துள்ளேன். திரு.வி.கவையும், பெரி யாரையும், காந்தியையும் படிப்பவன், பொருள் சேர்க்க வேண்டும் என்று நினைக்க மாட்டான்.

சிலப்பதிகாரம், தொல்காப் பியம் மற்றும் திருவாசகத்தின் காலம் குறித்து தமிழுணர்வாளர் களின் உணர்வுகளுக்கு எதி ரான கருத்துகள் உங்களிடம் உள்ளனவே?

திருவாசகத்தின் காலம் குறித்த ஒரு விவாதத்தில் மறைமலை அடிகள் அப்போது மூன்றாம் நூற்றாண்டுதான் என தொடர்ந்து வலிந்து எழுதி வந்தார். அதைப்பற்றி அப்பாதுரையிடம் விவாதித்தபோது, அவர் தமிழ்க் கடலையே குற்றம் சொல்கிறாயா என்றுதான் என்னிடம் கேட்டார். அவருக்கு ஒரு கருத்து இருந்தும் அதை அவர் வெளிப் படுத்தவே இல்லை. அறிஞர்களுக்குள்ளும் பக்தி உணர்வு உண்டு என்பதை அப்போது தான் புரிந்து கொண்டேன்.

ஒரு புதிய கருத்தைக்கேட்டால் அதைப் பரிசீலிக்க வேண்டும். அதை நான் பெரியார் வழியாகவே கற்றுக்கொண்டேன். மனிதனை உயர்த்தாத எதையும், மனிதனுக்கு நம்பிக்கை கொடுக்காத எதையும் அவர் எதிர்த்தார். அவர் வழியில் வந்ததால் எந்தப்புதிய கருத் துக்கும் என்னிடம் ஆதரவுண்டு. பெரியார் யாரையும் மேற்கோள் காட்டியதில்லை. சிக்கலுள்ள ஆயிரம் சமூகச் சிக்கல்களைப் பெரியார்தான் எடுத்துக்கொண்டார். மகாத்மா காந்தி அச்சப்பட்ட இடத்தில் பெரியார் நுழைந்தார். பெரியாரின் சிந்தனை கள் இன்னும் புதுமையாகவே இருக்கின்றன. அவரிடம் எதன்மீதும் கண்மூடித்தனமான பக்தி இல்லை. பக்தி இருக்கும் இடத்தில் ஆய்வுகள் உண்மையாக இருக்காது என்பதே எனது எண்ணமும்கூட.
- வெள்ளையாம்பட்டு சுந்தரம்

(தமிழில் வரலாறு, தொல்லியல் சார்ந்த நூல்களை பதிப்பித்தவர் - ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டவர்)

நன்றி: தி இந்து 2.11.2013

தமிழ் ஓவியா said...

கேள்வி: சிற்றுந்தில் இரட்டை இலை அரசு தவிர்த்திருக்கலாம்தானே?

பதில்: அது இரட்டை இலை இல்லை. பசுமையைக் குறிப்பிடும் நல்ல நோக்கத்தில் நான்கு இலைகள் கலைநயத்துடன் வரையப்பட்டுள்ளது என்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர். எம்.ஜி.ஆர். நினைவுச் சின்னத்தில் இரட்டை இலை, பிகாஸஸ் குதிரையின் உயரே எழும் சிறகுகளாக மாற முடியுமென்றால் சிற்றுந்தில் இரட்டை, இரட்டை இலைகள் பசுமையைக் குறிப்பதில் வியப் பில்லைதான்! அமைச்சர் காணும் கலைநயம் பலருக்கு ஜனநாயகப் பண்புகளின் கொலைக் களமாகத் தோன்றுவதிலும் வியப்பில்லை!
(நன்றி: கல்கி 10.11.2013)

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்நம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல் தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப் படவே வேண்டியவர்களாவார்கள் இந்தப் பார்ப்பனர்.
(விடுதலை, 12.11.1960)

தமிழ் ஓவியா said...


போலிக் கண்ணீர் மோடி


பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி, அக்டோபர் 27ஆம் தேதி பாட்னாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார். அப்பொழுது நிகழ்த்தப் பட்ட குண்டுவெடிப்பில் ஆறு பேர் பலியா னார்கள், 83 பேர் காயம் அடைந்தார்கள்.

அந்த வன்முறை கண்டிக்கத்தக்கதே; காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் அதனைக் கண்டிக்கவே செய்தன.

அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, அந்தச் சம்பவம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை; கண்டனம் தெரிவிக்கவில்லை; பலியானவர்களுக்கு அனுதாபம் தெரிவித்துக் கூடப் பேசவில்லை.

இப்பொழுது அவருக்கு மனதில் ஆறாத் துயரம் வெடித்துக் கிளம்பி, அதிலிருந்து விடு படவே முடியாத ஆற்றாமையால், பீகார் மாநிலத் திற்கு ஓடோடிச் சென்று, இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பொதுவாகப் பார்ப்பவர்களுக்கு - நல்ல அணுகுமுறைதானே - மனிதத் தன்மை என்பது இதுதானே என்று தோன்றக் கூடும்.

அதே நேரத்தில் மோடியைப் பற்றிய முழு வடிவத்தைத் தெரிந்தவர்களுக்கு, இது சுத்த நடிப்பு - அரசியல் பாசாங்குதனம் - பொது மக் களை ஏமாற்ற வடிக்கும் கிளிசரின் கண்ணீர் என்பதை, எளிதிற் புரிந்து கொள்ளலாம்!

குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்ட தற்கு மூலகாரணமாக இருந்தவர் முதலமைச்சர் மோடி என்பது உலகத்துக்கே தெரிந்த உண்மை.

மூன்று நாட்கள் காவல் துறைக்கும், அரசு அதிகாரிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலுக்கும் முழு உரிமை கொடுத்து, சிறுபான்மையினரை வேட்டையாடி முடியுங்கள் - காவல்துறை உங்களைக் கண்டு கொள்ளாது என்று உத்தரவிட்ட புண்ணிய வான் இந்த மோடியல்லவா!

கருவுற்ற பெண்களைக்கூட குத்திக் குடலைக் கிழித்து சிசுவை நெருப்பில் தூக்கிப் போட்டு கும்மாளம் போட்ட காட்டு விலங் காண்டிகளை இதற்கு முன் உலகம் கண்ட துண்டா? இந்த அருவருப்பான சாதனை மோடி அரசில்தான் நிகழ்த்தப்பட்டது.

அதனால்தான் உச்சநீதிமன்ற நீதிபதி, மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டார் என்பதை மறந்து விடக் கூடாது.

குஜராத்தில் நடைபெற்ற இனப்படு கொலைக்கு, நியாயமாக பொறுப்பேற்று முதல் அமைச்சர் மோடி பதவி விலகி இருக்க வேண்டாமா?

குறைந்தபட்சம், வருத்தமாவது தெரிவித் திருக்க வேண்டாமா? மாறாக என்ன சொல்லு கிறார்? காரில் பயணம் செய்யும் போது நாய்க் குட்டி அடிபடும் பொழுது ஏற்படும் அளவுக்கு வருத்தப்படுவதாகச் சொல்லுகிறார் என்றால், அவரைப் பற்றிய மதிப்பீட்டைப் புரிந்து கொள்ளலாம்.

சொந்த வீடுகளை இழந்து அகதிகள் முகாம்களில் முடங்கிக் கிடந்த சிறுபான்மை மக்கள் இனவிருத்தி வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர் என்று பேசிய மிகப் பெரிய நாகரிகத்துக்குச் சொந்தக்காரர் இவர்.

தனக்குப் பிடிக்காதவர், சொந்த கட்சியில் இருந்தாலும், போட்டுத் தள்ளக் கூடியவர்; (எடுத்துக்காட்டு அமைச்சர் ஹரேன் பாண் டியா)

தன்னை நம்பி இருந்த அதிகாரிகளைக்கூட தன்மீது பழி வரக் கூடாது என்பதற்காகக், காட்டிக் கொடுத்த கண்ணியவான் இந்த மோடி.

இப்படிப்பட்ட ஒருவர், குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்காக, நேரில் சென்றார்; கண்ணீர் மல்கினார் என்ற செய்தியைப் படிக்கும் பொழுது, சிரிப்புதான் வருகிறது.

தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றிடவும், கடந்த காலத்தில் அவர்மீதுவிழுந்த மரண வியாபாரி என்ற முத்திரை சாயத்தைக் கழுவிக் கொள்ளவும், இப்படியெல்லாம் நாடகம் ஆடு கிறார் என்பதைப் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...


இசைப்பிரியாவுக்கு நடந்த கொடூரத்திற்குப் பிறகும் காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியா செல்ல வேண்டுமா?


சென்னை, நவ. 4-இசைப்பிரி யாவுக்கு நடந்த கொடூரத்திற்குப் பிறகும் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதிநிதிகள் செல்ல வேண்டுமா? என்று திமுக தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் கலைஞர் நேற்று (3.11.2013) வெளி யிட்ட அறிக்கை வருமாறு:

பெயரே அழகு! அவள் முகமோ, குழந்தை முகம்! கல்லூரி சென்று வரும் குழந்தை என்று கூடச் சொல்லலாம். 27 வயதே நிரம்பியவள்! அவர் உலகத்தில் பிறந்ததற்கு, செய்த பாவம் விடுதலைப் புலிகளின் ஊட கப் பிரிவில் அவளும் ஒருத்தியாக தன்னை இணைத்துக் கொண்டது தான். விடுதலைப் புலிகள் இயக்கத் தின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன், பாலச்சந்திரனை சுட்டுக் கொலை செய்தது உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான சிறுவர்களையும், பெண் களையும், முதியோர்களையும் கொன்ற கொடுமைகளுக்கு ராஜபக்சே பதில் சொல்லியே தீர வேண்டும்.

தமிழ்ப் பெண்கள் சிங்கள ராணு வத்தினரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப் பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தற்போது இசைப்பிரியா தொடர் பான காட்சிகளையும் படமாக்கி வெளியிட்டுள்ளது.

காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடைபெறவிருக்கும் நேரத்தில், இசைப்பிரியா தொடர்பான காட்சி களை, அதே சேனல் 4 நிறுவனம் உலகம் முழுவதிலும் வெளிக் கொணர்ந்து நம்மையெல்லாம் தேம்பிப் புலம்ப வைத்துள்ளது. இந்தக் கொடுமையான காட்சியை, நம்முடைய நாட்டுப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும், ஏன் அந்தக் காமன்வெல்த் மாநாட் டில் இந்தியா கலந்து கொள்ள வேண் டுமென்று இன்னமும் குரல்கொடுத்து கொண்டிருப்பவர்களும் கண்ட பிறகும், அந்த மாநாட்டிலே கலந்து கொள்ள வேண்டுமென்று எண்ணு கிறார்களா? அதில் இந்தியா கலந்து கொண்டால், நாமெல்லாம் தமிழர் கள் தானா என்று சரித்திரம் சாப மிடாதா?

ஈழத்தில் நடந்த இனத் துடைப்பு நடவடிக்கைக்கும், மனித உரிமை மீறல்களுக்கும், வரலாறு கண்டிராத போர்க் குற்றங்களுக்கும் சுதந்திரமான தும், நம்பகமானதுமான சர்வதேச விசாரணை வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; ஈழத் தமிழர் களுக்கு அவர்கள் விரும்பும் நியாயமான அரசியல் தீர்வை அவர்களே முடிவு செய்து கொள்ளும் வகையில், அய்.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்; என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

நெஞ்சை உலுக்கிடும் இந்த நிகழ் வுக்கு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும், இலங்கையிலே நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட் டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று இங்குள்ள தமிழர்களும், உலகெங்கிலுமுள்ள தமிழர்களும் எதிர்பார்க்கிறார்கள். என்ன செய்திடப் போகிறது இந்திய அரசு? இசைப்பிரியா வுக்கு நடைபெற்ற கொடூரத்திற்குப் பிறகும் இந்தியா இலங்கை செல்ல வேண்டுமா? இவ்வாறு கலைஞர் அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


செவ்வாய்க்கான ராக்கெட்: சாதனையும் - வேதனையும்!

- ஊசி மிளகாய்

மங்கள்யான் என்ற பெயரில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் 2 மணி 38 நிமிடத்திற்கு, ஸ்ரீஹரிகோட்டா, சத்திஷ் தவான் பி.எஸ். எல்.வி.சி.-25 ராக்கெட் மூலம், ஏவுதளத்தில் விண்கலம் ஏவப்படுகிறது.

இஸ்ரோவின் இந்த முயற்சியில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை முதற் கொண்டு பல நூற்றுக்கணக்கான விண்வெளி ஆய்வாளர் களான விஞ்ஞானிகளின் உழைப்பும், சாதனை யும் இதனைச் சாத்தியமாக்கியுள்ளது.

செவ்வாய்தோஷம் என்ற பெயரில் மூடநம்பிக் கைக்கு ஆட்பட்டு, பல நூற்றுக்கணக்கான பெண்களுக்குத் திருமணமே ஆகாமல் மன உளைச்சலில் சிக்கி மாண்டு கொண்டுள்ள மகளிர் உலகம் உள்ள ஒரு நாடு, செவ்வாய்க் கோளுக்குத் தனது விண்கலத்தை அனுப்ப ஒரு செவ்வாய்க்கிழமையையே தேர்ந்தெடுத்துள்ளது மகிழ்ச்சி சாதனை என்றாலும்,

ஆனால் விளக்கு அடியில் சூழ்ந்துள்ள இருட்டுப் போல, ஒரு வேதனையும் வெட்கப்பட வேண்டிய செய்தியும் உள்ளது!

கீழே உள்ள படத்தையும், செய்தியையும் படியுங்கள்:

மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாகப் பறக்க வேண்டி இஸ்ரோ தலைவர் இராதா கிருஷ்ணன் (நாயர்) தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

நேற்றுமுன்தினம் இரவு அவர் திருப்பதிக்கு வந்தார். கோயில் சாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கோயிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் லட்டு, தீர்த்தப் பிரசாதம், சாமி படம் ஆகியவை வழங்கப்பட்டன. தொடர்ந்து அதி காரிகள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினார்கள்.

அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் ஏழுமலையான் கோயிலில் நடந்த சுப்ரபாத சேவையிலும் கலந்து கொண்டு, இஸ்ரோ தலைவர் மீண்டும் சாமி தரிசனம் செய்தார். அப்போது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் மாதிரி வடிவத்தை ஏழுமலையானின் பாதங் களில் வைத்து வழிபட்டார்; விண்கலம் விண்ணில் வெற்றிகரமாகப் பறக்க வேண்டிக் கொண்டார்.

பின்னர் இஸ்ரோ தலைவர் தன் மனைவியுடன் நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்குச் சென்றார். அங்கு நடந்த பூஜையிலும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். (- தினந்தந்தி 5.11.2013)

- அங்கு உழைத்த விஞ்ஞானி களால் முடியாததை திருப்பதி ஏழுமலையானும், காளஹஸ்தி சிவனும் (இவரது கோபுர கலசம் இரு முறை வீழ்ந்ததை காப்பாற்ற முடியாதவர் இந்தச் சிவன்; ஏழுமலையான் உண்டியலுக்கே துப்பாக்கிப் போலீஸ் பாதுகாப்பு - அவ்வளவு சர்வ சக்தி அவருக்கு!) - காப்பாற்றப் போகிறார்களா?

இஸ்ரோ தலைவர் நாயருக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பதுபற்றி நமக்கு ஆட்சேபனை இல்லை; அது அவரது சொந்த விஷயம். ஆனால் விண்கலத்தின் மாதிரி வடிவத்தைக் கோயி லுக்கு எடுத்துச் செல்வது, வேண்டுவது எவ்வகையில் நியாயம்? யார் இவருக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?

இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள Secularism - - மதச் சார்பின்மையைக் காப்பதா இது?

எல்லா மதங்களையும் ஒன்று போல் பாவிக்க என்று ஒரு விளக்கம் என்றால் இவர் எந்த சர்ச்சுக்குப் போனார்? எந்த மசூதிக்குப் போனார்?

போனாலும் நியாயமாகுமா என்பது முக்கிய கேள்வி!

அதோடு அரசியல் சட்ட அடிப்படைக் கடமைகள் 51A(h) பிரிவின்படி -
இதுதான் அறிவியல் மனப்பான்மையை பரப்பும் முறையா? Scientific Temper
என்பது இஸ்ரோ தலைவரின் அகராதியில் இதுதானா?

மத்திய அரசு இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு வாய் பொத்தி, கைகட்டி இருக்க லாமா?

முன்பு ஏவப்பட்ட ராக்கெட் தோல்வி அடைந்த போதும், அதற்குமுன் ஏழுமலையானைத் தரிசனம் செய்து, உண்டியல் காணிக்கை செலுத்தித்தானே நடந்தது? அதற்கு என்ன சமாதானம் கூறப்பட்டது?

அறிவியல் மனப்பான்மைப் பரப்புதலின் லட்சணம் இதுதானா?

வெட்கம்! மகா வெட்கம்!! சாதனை ஒருபுறம் - வேதனை மறுபுறம்!

தமிழ் ஓவியா said...


இசைப்பிரியா


இசைப்பிரியா என்ற பெயர் இன்றைய தினம் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் கேட்கிறது. என்னதான் சாமர்த்தியமாகப் பிரச்சாரம் செய்தாலும், என்னதான் உலகின் சில நாடுகள் இலங்கையின் பக்கம் நின்று அதன் அதிபர் ராஜபக்சேவின் முதுகுப் பக்கம் முட்டுக் கொடுத்துப் பார்த்தாலும் - ராஜபக்சே என்பவர் மனித குலத்தின் நாசகார சக்தி - ஹிட்லரே வெட்கப்படும்படியான குரூரர், நரமாமிசம் தின்னும் காட்டு மனிதன் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி நோஃபயர் சோன் என்ற ஆவணப்படத்திலிருந்து பிரிட்டனின் 4ஆவது அலை வரிசை வெளியிட்ட இந்தப் படம் உலகில் மனச்சாட்சியைக் குலுக்கித் திகிலடையச் செய்து விட்டது.

விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய இசைப் பிரியா பலத்த காயங்களுடன் மரணம் அடைந்து கிடக்கும் அந்தக் காட்சி அசாதாரணமானது.

2010இல் இசைப்பிரியா காட்டப்பட்ட காட்சி யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்பட்டது.

இப்பொழுது வெளியாகி இருக்கும் காட்சி - அந்தப் பெண்ணை உயிருடன் பிடித்து நிர்வாண மாக்கி அரைகுறை உடையுடன் இராணுவத் தினர் இழுத்துச் செல்வதும், அந்தப் பெண் பிரபாகரனின் மகள் என்று கருதுவதும், அந்தப் பெண் மறுத்த நிலையில், பாலியல் வக்கிரத் துக்கு இரையாக்கிக் கொல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

வழக்கம்போல இலங்கை சிங்கள இனவாத அரசு அந்தக் காட்சிகள் போலியானவை என்று கூறுவது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்கதல்ல.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலையிலும் சரி, வெள்ளைக் கொடியேந்தி சமாதானக் கோரிக்கையுடன் சென்ற போராளி களைச் சுட்டுக் கொன்ற போதும் சரி எதை அந்த வல்லூறுகள் ஒப்புக் கொண்டுள்ளன?

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறவிருக்கும் இந்தக் காலகட்டத்தில், ராஜபக்சேவுக்குத் தொண்டையில் குத்திய ஈட்டியாகி விட்டது இந்த ஒளிபரப்பு!
இதற்குப் பிறகும் ராஜபக்சே பக்கம் பேசுவதற்கு எவரும் கூச்சமும், வெட்கமும் படவே செய்வார்கள் என்பதில் அய்யமில்லை.

இனப்படுகொலை, மனித உரிமை மீறல் என்ற குற்றங்களின்மீது உலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட முழுத் தகுதியான பேர் வழிதான் ராஜபக்சே என்பதி லிருந்து தப்பிக்கவே முடியாத நிலை இன்று.

இந்திய அரசு இதற்கு முன் எந்த நிலை எடுத்திருந்தாலும் சரி, இதற்குப் பிறகு மறு சிந்தனைக்கும், முடிவுக்கும் உட்பட்டே தீர வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கு மேலும் செல்ல நினைத்தால், ராஜபக்சே பற்றி என்ன பொது அபிப்ராயம் ஏற்படுமோ அதில் பங்கு வாங்கிக் கொள்ளும் மானக்கேடு தான் மிஞ்சும்.

காங்கிரசைச் சேர்ந்த முக்கிய மத்திய அமைச்சர்களான ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம், ஜி.கே. வாசன் போன்றவர்களே இந்த முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், பிரதமராக இருந்தாலும் சரி, காங்கிரசின் உயர் மட்டக் குழுவானாலும் சரி இலங்கைக் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை;

வரலாற்றில் வீண் பழியையும், உலகத் தமிழர்களின், உலக மனித உரிமை யாளர்களின் நிரந்தர வெறுப்பையும் வலிய சம்பாதித்துக் கொள்ளவும் வேண்டாம் - வேண் டவே வேண்டாம் என்பதே நமது அழுத்தமான வேண்டுகோள்!

தமிழ் ஓவியா said...


அடைய முடியும்


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.

- (விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


கடவுளின் சக்தி இவ்வளவுதான்!

சங்கரன்கோவிலில் கோயில்
ராஜகோபுரத்தை மின்னல் தாக்கியது

சங்கரன்கோவில், நவ. 5-சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழைமையான 125 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தின் மீது நேற்று மின்னல் தாக்கியதில், ராஜாளி பொம்மை மற்றும் சிற்பங்கள் சேதம் அடைந்து நொறுங்கி விழுந்தன.

கி.பி.11ஆம் நூற்றாண்டில் உக்கிர பாண்டிய மன்னரால் எழுப்பப் பட்ட சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோயிலில் 9 நிலைகளுடன் 125 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் அமைந் துள்ளது. சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் நேற்று இடி, மின்னலுடன் கனமழை பெய் தது. அப்போது பலத்த ஓசையுடன் ராஜகோபுரத்தின் தென்பகுதியில் மின்னல் தாக்கி யது.

இதில் கோபுரத்தின் 9ஆவது நிலையின் கிழக்கு பகுதியில் இருந்த ராஜாளி பொம்மை சேதம் அடைந்தது. கோபுரத்தின் உச்சியில் பெரிய அளவில் அமைந்திருந்த கண் திருஷ்டியாளியின் கண்கள் சேதம் அடைந்தன. மேலும், கோபுரத்தின் பல பகுதிகளில் அமைந்திருந்த சிற்பங்களும் உடைந்தன.

கோவில் அருகே இருந்த வீடு களில் நூற்றிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் மற்றும் கணி னிகள் சேதமுற்றன.

தமிழ் ஓவியா said...

சாலை விபத்து : அய்யப்ப பக்தர்கள் நால்வர் சாவு

ரெட்டியார்சத்திரம், நவ.5- திண்டுக்கல் அருகே வேனும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி யதில், பெங்களூருவைச் சேர்ந்த, அய்யப்ப பக்தர்கள் நால்வர் இறந் தனர்; 18 பேர் காயமடைந்தனர். பெங்களூருவைச் சேர்ந்த, 14 பேர், தீபாவளி விடுமுறையை முன்னிட்டு, டெம்போ டிராவலர் வேனில் சபரிமலை சென்றனர். அங்கிருந்து மதுரை வந்து, மீனாட்சிஅம்மன் கோயிலில், சாமி தரிசனம் செய் ததும், பழநிக்குப் புறப்பட்டனர். நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு, திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம், மாங்கரை, பிரிவு அருகே வேன் சென்ற போது, ஓட்டுநர் தூங்கியதால், கோவையில் இருந்து மதுரை சென்ற, அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இதில், வேன் ஒட்டுநர் உட்பட, பெங்களூருவைச் சேர்ந்த நான்கு பேர் இறந்தனர். பேருந்து ஓட்டுநர் உட்பட, 18 பேர் காயமுற்றனர். ரெட்டியார் சத்திரம் காவல்துறை யினர் விசாரிக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...

பைக் மீது கார் மோதி
கோயில் பூசாரி பரிதாப பலி

புழல், நவ.5-புழல் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த வர் ஆனந்தன் (43). புழல் யாகாத் தம்மன் கோயில் பூசாரி. தீபாவளி யன்று பட்டாசு வாங்க தனது மகன் லோகேஷ் (16), மகள் தீபிகா (18) ஆகியோருடன் பைக்கில் புழலுக்கு புறப்பட்டார் ஆனந்தன்.

புழல் மத்திய சிறைச்சாலை ஜிஎன்டி சாலையில் சென்றபோது பின்னால் வந்த கார், பைக் மீது பயங்கரமாக மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட் டனர். ஆனந்தன் படுகாயம் அடைந் தார். லோகேஷ், தீபிகா லேசான காயத்துடன் தப்பினர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆனந்தனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி னர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலையில் ஆனந்தன் பரிதாபமாக இறந்தார்.

தமிழ் ஓவியா said...

காளஹஸ்தி கோவிலில் தீ விபத்து: கலைப் பொருள் விற்பனைக் கடை எரிந்து சாம்பல்

காளஹஸ்தி, நவ. 5- காள ஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவி லில் முகப்பு கோபுரத்தின் உள்ளே பக்தர்கள் தங்கள் காலணிகளை விடும் கவுண்டர் அருகே வெங்கடே சன் என்பவர் கலைப்பொருள் விற்பனைக் கடை வைத்து உள்ளார்.
நேற்று இரவு இவர் கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டார். இன்று அதிகாலை 3.30 மணி அள வில் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீ பரவிற்று.

தகவல் கிடைத்ததும் காளஹஸ்தி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த விலை உயர்ந்த கலைப் பொருட்கள், சுவாமி படங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. சேத மதிப்பு ரூ. 2 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


மக்களின் பகுத்தறிவுப் பூங்கா பெரியார் உலகம்!


திராவிடர் கழகப் பொதுக் குழுவில் எத்தனையோ வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக் கின்றன! ஆனால்.

எல்லாவற்றிற்கும் சிகரமாக... உலகத் தமிழர் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியில் பொங்கி வழிய போடப்பட்ட தீர்மானம் தான். திண்டிவனத்தில் 20.10.2013 அன்று போடப்பட்ட தீர்மானம் எல்லோருமே எழுந்து நின்று கைதட்டி, வரவேற்ற தீர்மானம் என்ற செய்தியை இதோ ஒரு பெரியார் உலகம் என்ற விடுதலை தலையங்கத்தின் வாயிலாக (21.10.2013) படித்த உலகத் தமிழர்கள் மட்டுமல்ல. உலகப் பகுத்தறிவாளர்கள் அனைவருமே எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்திருப் பார்கள் என்பது உறுதி!.. காரணம்...

தூக்கு மேடையில் இருந்துகொண்டு நான் நாஸ்திகன்தான்,அதுவும் நல்ல பரிசுத்தமான நாஸ்திகன்தான் என்று கூப்பாடு போட்டுச் சொல்லிக் கொள்ளத் தயாராயிருக்கிறேன் (குடியரசு 19.5.1929) என, 1929ஆம் ஆண்டிலேயே முழுக்க மிட்ட ஒரு நாத்திகப் பேரறிவாளருக்கு வைக்கப்படும் சிலையல்லவா, அதனால் தான்! அதோடு மட்டுமா?

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னாலேயே விடுதலை எனும் பெயரில் இதழ் நடத்தினார். நாடு வெள்ளையரின் முடியாட்சியின் கீழ் இருந்தபோதே குடியரசு என்ற ஏடு நடத்தினார். ஆகஸ்டு பரட்சிக்கு முன்பாகவே, சுடிஎடிடவ (புரட்சி) எனும் ஏடு நடத்தினார். அறியாமை இருளிலே மூழ்கி அடிமைத்தனத்திலே கட்டுண்ட கிடந்த தமிழினத்தை ஒளி உலகுக்கு அழைத்து வந்து அவர்களது பகுத் தறிவுக் கண்களைத் திறந்தார். அடிமை விலங்கை உடைத்து எறிந்து உரிமை உலகிலே நடமாட வைத்தார்... மொத்தத் தில் மனிதனை மனிதனாக வாழ வைத்தார்! இதனை எதிர்த்த பார்ப்பனீ யத்தின் ஆணிவேரையே அறுத் தெறிந்தார்! ஆம்.

இத்தகைய புரட்சியாளருக்குத்தான் சிலை! உலகிலேயே உயரமான வெண்கலச் சிலை 95 அடி உயரத்தில்! அதுவும் ஒரு எட்டாவது அதிசயமாக ஒர முழுமையான நாத்திகவாதிக்கு சிலை! உலகில் வேறு எந்த நாட்டிலுமே இல்லாத புதுமை! புரட்சி!!

சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில், கூடிய பெரியார் உலகம்! அதில், அய்யாவின் வரலாறு ஒலி - ஒளிக் காட்சியாக! அறிவும், அறிவியலும் கலந்த கோளரங்கம், பொழுது போக்குப் பூங்கா குழந்தைகளுக்கான அறிவியல் விளையாட்டுப் பொழுதுபோக்கு.. எண் ணிப் பார்க்கும்போது உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடு கிறது!

பார்ப்பனியம் என்ற வெடி மருந்துக் கிடங்குக்குள் சுயமரியாதை எனும் தீப்பந்தத்தை ஏந்தி நடக்கும்...

மிகத் துணிவான காரியத்தில் ஈடு பட்டு வெற்றி கண்ட தந்தை பெரியா ருக்கு நன்றி மறவா, பெரியாரின் பெருந் தொண்டர் தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள்... காலத்தாலழியாத.. வரலாற்றுச்சிறப்பு மிக்க நினைவுச் சின்னமே... பெரியார் உலகம்!...

அய்யாவின் சிலைக்காக.. அள்ளித் தருகிறது தமிழ்க் குடும்பங்கள்! ஆம்! உலகச் சுற்றுலாப் பயணிகளின் மையமாகி விளங்க இருக்கும் பெரியார் உலகம், 81வது பிறந்த நாள் காண இருக்கும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் வீரமணி அவர்களின்...

70 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வரும் தொண்டறத்தின் சிகரம்! அவரு டைய பிறந்த நாளன்று தமிழினம் காட்டும் நன்றி 1000 பவுன் அன்பளிப்பு!

திராவிடர் கழகத் தலைவருக்கு அளிக் கப்படும் ஒவ்வொரு காசும் பல லட்சங் களாக தமிழினத்திற்கே பயன்பட்டிருக் கிறது என்பதுதான் கடந்த கால வர லாறு ஆகவேதான் அய்யாவுக்கு சிலை என்றால்... அள்ளி, அள்ளித் தருகிறார்கள்!
சிறுகனூர் விரைவில் உலக மக்களின் பகுத்தறிவுப் பூங்கா! பாரே போற்றும் பெரியார் உலகம்!!

- நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


தமிழை இங்கிலீஷ் வரிவடிவத்தில் எழுதலாம் என்பதா?


தமிழ் இந்து ஏட்டுக்குக் கடும் எதிர்ப்பு!

இந்து அலுவலகத்துக்கு நேரில் சென்று தமிழின உணர்வாளர்கள் கண்டனம்!

சென்னை, நவ.5- தமிழை இங்கிலீஷ் வரி வடிவத்தில் எழுதலாம் என்று மலையாள நாட்டைச் சேர்ந்த ஜெயமோகன் என்ற பார்ப்பனர் இந்து தமிழ் நாளேட்டில் எழுதிய கட்டுரையைக் கண்டித்து திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சி களை, இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்து நாளிதழ் அலுவலகத்துக்கு நேரில் சென்று அதன் ஆசிரியரைச் சந்தித்து கண்டனங் களை நேரில் பதிவு செய்தனர்.

தமிழால் இணைவது தமிழை அழிப்ப தற்கா? எனும் தலைப்பில் கண்டனமும் எழுத் துப்பூர்வமாக இந்து ஆசிரியரிடம் அளிக்கப் பட்டது.

அதன் விவரம் வருமாறு:

இம்மடலின் இறுதியில் கையொப்ப மிட்டுள்ள, பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் ஆகியவற்றின் பொறுப்பாளர் களும், தமிழ் உணர்வாளர்களும் ஆகிய நாங்கள் தி இந்து நாளிதழில் (4.11.2013) வெளியாகியுள்ள எழுத்தாளர் ஜெயமோக னின் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? என்னும் கட்டுரையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழ் மொழிக்கும், இனத்துக்கும் எதிரான அக் கட்டுரையை வெளியிட்டுள்ள தி இந்து நாளிதழுக்கும் எங்களின் கடும் கண்டனத் தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதழியல் துறையில் மிக நீண்ட அனுபவம் உடைய ஒரு நிறுவனம் தமிழால் இணை வோம் என்னும் முழக்கத்தோடு தமிழ் நாளிதழ் ஒன்றைத் தொடங்கியபோது தமிழ் மொழிக் கும், இனத்திற்கும் வலிமை சேர்க்கும் முயற்சி என்று அதனை நம்பிய பலரின் தலையிலும் இடி விழுந்தாற்போல் இக்கட்டுரை அமைந் துள்ளது. தமிழ் மொழியை எவராலும் அழிக்க முடியாது, என்றாலும், எப்படியாவது அழித்து விடவேண்டும் என்ற நோக்கில் அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

உலகெங்கும் வாழும் பல கோடித் தமிழர் களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதத்திலும், ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தை இழிவுபடுத்தும் வகையிலும் எழுதப்பட்டுள்ள அக்கட்டுரையை தன் ஏட்டில் வெளியிட்டதன் மூலம் தமிழ்கூறு நல்லுலகை தி இந்து நாளிதழ் வேதனைப்படுத்தியுள்ள உண்மையை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வரு கின்றோம்.

எழுத்தாகிய உடல் இல்லையேல் மொழி யாகிய உயிர் அழியும் என்பார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். இப்போது தமிழ் மொழியின் உடலை அழிக்கும் முயற்சியில் ஒரு மாமேதை இறங்கியுள்ளார். அதற்கு தி இந்து நாளிதழ் துணை போகலாமா?

தன்னை ஒரு நாயர் என்று பெருமையாகக் கூறிக்கொள்ளும் அவர், மலையாள மண்ணின் மீது மாறாத பற்றுடையவர் என் பதை அறிவோம். அந்த மலையாள மண்ணில் மாற்றங்களை எல்லாம் செய்துமுடித்துவிட்டு, தமிழ் எழுத்து வடிவத்தை அழிக்க ஜெய மோகன்கள் புறப்படட்டும்.

மலாய் மொழியைத் தமிழுக்கு ஒப்பிட்டுக் காட்டுவது எவ்வகையில் பொருந்தும்? தங்களுக்கென்று தனி வரி வடிவம் இல்லாத நேரத்தில், பிற வரி வடிவங்களைக் கையாள் வது இயல்புதான். மலாய் மொழி ஆங்கில எழுத்துருவுக்கு வந்திருப்பதாய் இக்கட்டுரை யாளர் சொல்கிறார். அது இலத்தீன் எழுத் துருவிலும், சுமத்ரா பகுதியில் அரபு எழுத் துருவிலும் கூட எழுதப்படுகின்றது என்பதை அவர் அறிவாரா?

தமிழ் எழுத்துகளின் மூல எழுத்து பிராமி என்பது தவறான கருத்து என்பதை மொழி யியலாளர்களே இன்று ஏற்கின்றனர். அத னால்தான் தமிழ் பிராமி என அழைக்கத் தொடங்கியுள்ளனர். இதனை எல்லாம் மொழி யியல் மேதை ஜெயமோகன் அறிவாரா?

எழுத்துருவை மாற்றும்போது ஒலிப்பு முறை (உச்சரிப்பு) முற்றிலும் மாறிவிடாதா? தமிழ் நூல்களின் எழுத்துரு அனைத்தையும், ஒரு தலைமுறைக் காலத்தில் முற்றிலுமாக மாற்றிவிட வேண்டும் என்று ஜெயமோகன் துடியாய் துடிக்கிறார். தமிழின் சுவடுகள்கூட இல்லாமல் அதனை அழித்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடுதானே இது?

கனத்த நெஞ்சுடன் மீண்டும், மீண்டும் எங்களின் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இக்கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள் பட்டியல் வருமாறு:

தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்

சுப.வீரபாண்டியன், பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன், தலைமை இலக்கிய அணி, தி.மு.க.

க.திருநாவுக்கரசு, திராவிட இயக்க ஆய்வாளர்,

சைதை க.வ.சிவா, தமிழக வாழ்வுரிமை கட்சி,

மே.ப.காமராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி

தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

கீ.த.பச்சையப்பன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு

வா.மு.சே.திருவள்ளுவர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

பா.இறையெழிலன், உலகத் தமிழ்க் கழகம்

கோ.பாவேந்தன், தமிழ்த்தேச மக்கள் கட்சி

தமிழ்மகன், தமிழ்த்தேச மக்கள் கட்சி

உதயன், தமிழக கலை இலக்கியப் பேரவை

முத்தையாகுமரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி,

இரா.வில்வநாதன், தலைவர், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம்

ஆகியோர் கையொப்பமிட்டுக் கொடுத் தனர்

தமிழ் ஓவியா said...


மோடியை வாரிசாக ஏற்பாரா படேல்? காந்தியாரின் பேரன் சாடல்

புதுடில்லி, நவ. 5- குஜராத் முதல் வர் நரேந்திர மோடியை தனது கொள்கை ரீதியான வாரிசாக நாட் டின் முதல் உள்துறை அமைச்ச ரான சர்தார் வல்லபாய் படேல் அங்கீகரிக்க மறுத்திருப்பார் என்று காந்தியாரின் பேரன் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
சமீப காலமாக படேலை சொந் தம் கொண்டாடி புகழ்வதில் பாஜ கவின் பிரதமர் வேட்பாளரான மோடியும், காங்கிரஸ் கட்சித் தலை வர்களும் போட்டி போட்டுக் கொண்டு பேட்டி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேல் தொடர்பான வரலாற்றுப் புத்தகத்தை எழுதியுள்ள ராஜ் மோகன் காந்தி, சி.என்.என். அய்.பி. என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கல வரத்தை படேல் பார்த்திருந்தால், ராஜ நீதியை மோடி கடைப்பிடிக் காத காரணத்துக்காக அவர் மீது அதிருப்தி அடைந்திருப்பார். குஜ ராத்தைச் சேர்ந்த படேல், கலவ ரத்தை தடுக்க மோடி அரசு தவறி விட்டது குறித்தும், துயரச் சம்ப வத்தை கண்டும் மிகவும் வருந்தி யிருப்பார். தன்னை படேலின் வாரிசாக மோடி காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். இது படேல் குறித்த கருத்தை தவறாக மாற்றி விடும்.

காந்தியின் சீடராகவும், காங் கிரஸ்காரராகவும் இருந்தவர் படேல். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழித்தடத்தில் செல்பவர் மோடி. படேல் பின்பற்றிய கொள்கையை கடைப்பிடித்து, மோடி தன்னை வளர்த்துக்கொண்டால் எனக்கு மகிழ்ச்சியே. படேல் அணியை கட் டமைப்பதில் வல்லவர். மற்றவர் களுக்கு தனது வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார். அதே போன்று மோடியும் செயல் பட்டால், அது பாராட்டுக் குரியதே" என்றார்.

அதே சமயம், கடந்த 63 ஆண்டு களாக படேலை காங்கிரஸ் மறந்து விட்டது.

அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. நாட்டின் முதல் பிரதமரான நேருவுக்குப் பின், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இந்திரா, சஞ்சய், ராஜீவ், சோனியா, ராகுல் ஆகியோர் காங்கிரஸ் கட்சி யில் முக்கிய பங்கு வகித்தனர். அதே சமயம், படேலின் வாரிசுகள் கட் சியிலோ ஆட்சியிலோ பங்கேற்க வில்லை. நேருவை விட படேல் 14 ஆண்டுகள் மூத்தவர். அவரது உடல் நிலையும் சீராக இல்லை. அதனால்தான், படேலுக்கு பதிலாக நேருவை பிரதமராக்கினார் காந்தி யார். அவரின் இந்த முடிவை பின் னர் படேல் ஏற்றுக் கொண்டார். அதுதான் சரியானது என்றும் தெரிவித்தார். ஒரு காங்கிரஸ்கார ராக இருப்பதில் படேல் மிகவும் பெருமை கொண்டிருந்தார். 1947 ஆம் ஆண்டு வரை ஆர்.எஸ்.எஸ். ஸின் பணிகளை பாராட்டி வந்த படேல், காந்தி படுகொலைக்குப் பின் இந்துத்துவா அமைப்புகளை கடுமையாக எதிர்த்தார்" என்றார் ராஜ்மோகன் காந்தி.

தமிழ் ஓவியா said...

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் தலைமை உரையாற்றினார்.

அவர் தமதுரையில்...

இன்றைய தினம் ஒடிசா மாநில அரசு, தந்தை பெரியாரின் சிந்தனைகளைக் கொண்ட நூலை ஒடிசா மாநில மொழியில் வெளியிட்டிருக்கிறது. இதில் நமது கழகத்தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற ஒடிசா மாநிலம், புவனேஷ்வருக்குச் சென்றிருக்கிறார். நமக்கெல்லாம் பெரியார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்கிற பெருமை உண்டு. அய்யா அவர்கள், அவர் வாழ்ந்த காலத்தைவிட இப்போதுதான் அதிகம் பேசப்படுகிறார். அந்த வகையில் பெரியார் இன்று உலகமயமாகி வருகிறார். சிறீரங்கத்தை பார்த்த மக்கள் இனி சிறுகனூரைப் பார்க்கப் போகிறார்கள். மதமற்ற உலகமே மனித இனம் அமைதியாக வாழ நிரந்தரத் தீர்வாகும். இந்த வகையில் மதமற்ற உலகிற்கான கருத்துகள் பெரியாரின் கருத்துகள் ஆகும். இன்று (27.10.2013) காலையில் சென்னையில் மறைந்த பொறியாளர் மணிசுந்தரம் அவர்களது மறைவிற்கு சென்று வந்தோம். அவர்தான் நமது பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்குவதற்கு தமிழர் தலைவருக்கு வழிகாட்டியாக இருந்தவர். கல்லூரி தொடங்கப் போதுமான நிதி இல்லையே என்று வருத்தப் பட்டார். அப்போது ஆசிரியரிடம் மணி சுந்தரம், மிஸ்டர் வீரமணி, உலகில் யாரிடத்திலும் இல்லாத பெரும் மூலதனம் உங்களிடம் இருக்கிறது. அதுதான் பெரியார் எனும் டார்ச். அந்த டார்ச்சை எடுத்துக்கொண்டு நீங்கள் பாலைவனம் சென்றால் கூட அது சோலைவனம் ஆகும் என்று குறிப்பிட் டார். அது இன்று நடந்தேறி இருக்கிறது. அப்படிப் பட்ட ஆற்றல் நம் இயக்கத்துக்கு உண்டு. எனவே கழகத்தோழர்கள் புதிய நம்பிக்கை - உற்சாகத்துடன் நம்மால் மட்டுமே முடியும் என்பதைக் காட்டுவோம் இவ்வாறு அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.