Search This Blog

14.11.13

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா-கெட்ட பெயர்தான் மிச்சம்!

கெட்ட பெயர்தான் மிச்சம்! 


கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது - அப்படிக் கலந்து கொள்வது, தமிழர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு துணை போனதாகத்தான் பொருள் என்று கட்சி களுக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழர்கள் ஒருமுகமாக அழுத்தம் கொடுத்தனர்.

அதன் விளைவாக இந்தியப் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக இலங்கை அதிபருக்கு, இந்தியப் பிரதமர் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படு கொலை, போர்க் குற்றங்கள் காரணமாகக் கலந்து கொள்ளவில்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தால் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளாததன் சிறப்பு மேலோங்கி நின்றிருக்கும்.

இந்தியா இதற்கு முன் கடைப்பிடித்து வந்திருந்த மனித உரிமைகள் மீதான அக்கறை தொடர்ந்து பின்பற்றப்பட்டே வருகிறது என்ற புகழும் நிலை கொண்டிருக்கும்.

அதுபற்றியெல்லாம் குறிப்பிடாமல், ஏதோ தனிப்பட்ட காரணங்களுக்காகக் கலந்து கொள்ளாதது போல கடிதம் எழுதியிருப்பது, முடிவு எடுத்தும் அதன் பயன் இந்தியாவுக்கோ, காங்கிரசுக்கோ கிடைக்காத ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டது. இதில் என்ன ராஜதந்திரம் வாழ்கிறது?

இதன் மூலம் இரு தரப்பிலும் கெட்ட பெயரைச் சம்பாதித்தது தான் மிச்சம்.
அடுத்து, பிரதமர் போகாமல், வெளியுறவுத் துறை அமைச்சர், அதிகாரிகள் படை சூழக் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்தியா சார்பில் பிரதமர் கலந்து கொள்ள வில்லை; வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொண்டாலும், அது இந்தியா, பங்கு கொண்டதாகத்தான் பொருள்படும்.

இலங்கை சென்ற இந்தியாவின் வெளியுற வுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் என்ன சொல்லியிருக்கிறார்?

தமிழர்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில்தான், பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். இதனால்தான் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு காமன்வெல்த் மாநாட்டில், நான் கலந்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இனப்படுகொலை நடந் திருக்கிறது என்பதற்காகவோ, போர்க் குற்றம் நடந்திருக்கிறது, மனித உரிமைகள் நசுக்கப் பட்டுள்ளன என்பதற்காகவோ இந்தியப் பிரதமர் இலங்கை செல்லவில்லை. தமிழர்கள் தமிழ் நாட்டில் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத் தான் கொழும்பு செல்வதைப் பிரதமர் தவிர்த் திருக்கிறார் என்பது இதன் மூலம் விளங்க வில்லையா?

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் காமன்வெல்த் மாநாட்டில் எதைச் சொல்லப் போகிறார்? அதற்கான திட்டவட்டமான கருத் துரு ஏதாவது உண்டா? இல்லை, அதிகாரிகள் எழுதிக் கொடுத்தவற்றை கிளிப்பிள்ளை போல பாடம் ஒப்புவிக்கப் போகிறாரா?

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் கண்டுள்ளவைகளை ஏன் நிறைவேற்றவில்லை? அய்.நா. குழு நியமனம் செய்த மூவர் குழுவின் அறிக்கை, எல்.எல்.ஆர்.சி.யின் அறிக்கை, மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டவைபற்றி எடுத்துக் கூறுவாரா?

இந்தியா இதுவரை அளித்துள்ள நிதி யுதவியைக் கொண்டு ஈழத் தமிழர்கள் எந்த வகையில் பலன் பெற்றார்கள்? அந்த நிதியை ஏன் சரிவர தமிழர்களுக்குப் பயன்படும்படி செய்யவில்லை என்ற வினாவையாவது எழுப்பப் போகிறாரா?
குறைந்தபட்சம் தமிழர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இராணுவத்தை வெளியேற்று வதற்காவது இந்தியா பங்கு கொள்வது பயன் பட்டால் சரி, எங்கே பார்ப்போம்!
           --------------------------"விடுதலை” தலையங்கம் 14-11-2013

42 comments:

தமிழ் ஓவியா said...


ஒ, அப்படியா


பா.ஜ.க. ஆட்சிக்கு வந் தால் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு.

- எச். ராஜா (தமிழக பா.ஜ.க., துணைத் தலைவர்)

காமன்வெல்த் மாநாட் டில் இந்தியா போகலாமா - போகக் கூடாதா என்று முடிவு செய்யக் கூடிய கூட்டத்தில் எந்தவித மான முடிவையும் எடுக்க முடியாமல் கூடிக் கலைந்த வர்களா இப்படியெல்லாம் பேசுவது?

தமிழ் ஓவியா said...

காமன்வெல்த்: பெரும்பாலான நாடுகள் புறக்கணிப்பு

இலங்கையின் பொதுநலவாய நாடுகள் அமர்வுக்கு குறைந்த தலைவர்களே பங்கேற்பது குறித்து கனடா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. இந்த மாநாட்டில் பொதுநலவாயத்தின் அரைவாசி தலைவர்கள் பங்கேற்கவில்லை என்று கனடா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர், ஜோன் பேயர்ட் குறிப்பிடடுள்ளார்.

நாளை ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டில் 53 நாடுகளின் தலைவர்களில் 23 நாட்டுத் தலைவர்களே இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இந்தியப் பிரதமர், மொரிசியஸ் பிரதமர் ஆகியோரின் தீர்மானங்களை தாம் வரவேற்பதாக பேயர்ட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, தாம் மேற்கொண்டுள்ள மனித உரிமை மீறல்களை பொதுநலவாய மாநாட்டின் மூலம் மறைத்து வெள்ளையடித்துக் கொள்ளும் என்ற காரணத்தினாலேயே கனடா நாட்டுப் பிரதமர் அதில் பங்கேற்கவில்லை என்று பேயர்ட் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மோடி மீது அமெரிக்க அமைப்பின் பகிரங்கக் குற்றச்சாற்று!


வாஷிங்டன், நவ.14- கலவரத்தைத் தடுப்பதில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வியின் முகமாக குஜராத் முதல் வர் நரேந்திர மோடி இருக்கிறார். அவரை பிரதமர் பதவிக்கான வேட் பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது. வருத்தத்திற்கு உரியது என்று சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையத்தின் உறுப்பினர்கள் கூறி யுள்ளனர்.

அந்த ஆணைய உறுப்பினர்கள் கத்ரினா லன்டோஸ் ஸ்வெட், மேரி ஆன் கிளவுன்டான் ஆகியோர் ஊட கம் ஒன்றின் வலைப்பூவில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது: குஜராத்தைச் சேர்ந்த காந்தியார், பல மதங்கள் நிலவும் சமூகத் தில் சகிப்புத் தன்மை யுடன் கூடிய தொலை நோக்குப் பார்வை, பரந்த மனப்பான்மைக்கு முக்கி யத்துவம் அளித்தார். வரும் 2014-ஆம் ஆண்டு (மக்களவைப் பொதுத் தேர்தல்) இந்தியா எதற்கு முக்கியத்துவம் அளிக்கப் போகிறது? மதச் சுதந் திரத்திற்கா? மத சகிப்புத் தன்மையின்மைக்கா? காலம்தான் இதற்குப் பதிலளிக்கும்.

கலவரத்தைத் தடுப்பதில் இந்தி யாவுக்கு ஏற்பட்ட தோல்வியின் முகமாக நரேந்திரமோடி இருக்கிறார். 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது அவர் தான் முதல்வராக இருந்தார்.

மோடி தலைமையி லான நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்காததை, குஜராத் உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. சேதப்படுத்தப்பட்ட வழி பாட்டுத் தலங்களுக்கு தகுந்த இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித் துள்ளது. சர்வதேச மதச் சுதந்திரத் துக்கான அமெரிக்க ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மோடிக்கு விசா வழங்குவதை விலக்கி வைக்க அமெ ரிக்க வெளியுறவுத்துறை 2005ஆம் ஆண்டு ஒப்புக் கொண்டது.

எம்.பி.க்கள் கடிதம்

மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்று இந்திய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 65 உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதி யுள்ளனர். இந்நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க. சார்பில் 2014ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் வேட் பாளராக நரேந்திர மோடியை அறி வித்துள்ளது. வருத்தம் தருவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

மக்கள் நலப் பணியாளர்கள் பிரச்சினை: உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று, மனிதாபிமானத்துடன்
13,000 மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்துக! தமிழர் தலைவர் விடுத்துள்ள மனிதநேய அறிக்கை

அ.இ.அ.தி.மு.க. அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை உச்சநீதி மன்றத்தின் ஆணைப்படி, மனித நேயக் கண்ணோட்டத்துடன் அரசு ஊழியர்கள் குடும்பங்களின் வயிற்றில் அடிக்காமல், மீண்டும் பணி நியமனம் செய்யுமாறு திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: திருச்சியில் கடந்த 9ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் நடத் தப்பட்ட திராவிடர் எழுச்சி மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்கள் நல ஊழியர்களைப் பணியில் அமர்த்துக!

2011இல் ஆட்சிக்கு வந்த இன்றைய அ.இ. அ.தி.மு.க. அரசு முதல் வேலையாக 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை வேலை நீக்கம் செய்து பெரிய அநீதியை இழைத்தது.

வேலைவாய்ப்பை இழந்ததால் அவர்களை நம்பி வாழும் குடும்பத்தினர், பெரும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். வாழ்வாதாரமே பறிபோன பலர் தற்கொலையும் செய்து கொண்டனர். மீண்டும் தாங்கள் பணியில் அமர்த்தப்பட நீதி மன்றங்களின் கதவுகளையும் தட்டியுள்ளனர்.

பிச்சை எடுக்கும் போராட்டம் வரை நடத்தியும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களே ஆவர்.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் வெறும் அரசியல் நோக்கத்தோடு, பழிவாங்கும் தன்மையோடு அரசு நடந்து கொள்வது - மக்கள் நல அரசு என்ற தன்மைக்கு மாறானது என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டி, பணி ரத்து செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணி யில் அமர்த்துமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்து கிறது.

பல்லாயிரம் சாலைப் பணியா ளர்களை 2001இல் அ.இ.அ.தி.மு.க. அரசு பதவிக்கு வந்தபோது இதே முறையில் பணிநீக்கம் செய்ததும், அவர்களும் பலவிதப் போராட் டங்களை நடத்தி, நீதிமன்றங் களுக்குச் சென்ற நிலை ஏற்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் மறு பணி அமர்த்தப் பட்டதையும் இம்மாநாடு சுட்டிக்காட்டி - இத்தகைய பழிவாங்கும் அணுகுமுறையிலிருந்து அ.தி.மு.க. அரசு விடுபட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இரண்டு நாள்கள் இடைவெளியில், இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு சிறப்பான தீர்ப்பினை வழங்கியுள்ளது.

அரசு ஊழியர்கள் வாழ்வில் விளையாடுவதா?

மக்கள் நலப் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம். உயர்நீதி மன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும்.

பல ஆண்டு காலமாக பணியாற்றிய மக்கள் நலப் பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணி நீக்கம் செய்தது தவறானது. அவர்கள் வாழ்க்கையை அரசு விளையாட் டாகக் கருதியுள்ளது. எனவே, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்.


தமிழ் ஓவியா said...

ஆறு மாத விசாரணைக் காலத்தில் அரசுத் தரப்பிலும், மக்கள் நலப் பணியாளர்கள் தரப்பிலும் வாய்தா கோரி வழக்கில் கால தாமதத்தை ஏற்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்புக் கூறியுள்ளது.

1989 முதல் மாறி மாறி நியமனமும் - நீக்கமும்

மக்கள் நலப் பணியாளர்கள் 1989ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியால் பணியமர்த்தம் செய்யப்பட்டனர். ஒவ்வொரு முறை அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதெல்லாம் அவர்களைப் பணி நீக்கம் செய்வதும், தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மீண்டும் பணியமர்த்தம் செய்வதும் ஒரு தொடர் கதையாகவே ஆகி விட்டது. இதனைத்தான் உச்சநீதிமன்றம் அரசு ஊழியர்களின் வாழ்க்கையை விளை யாட்டாக அரசு கருதியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

13,000 குடும்பங்களின் வயிற்றில் அடிக்கலாமா?

13,000 பணியாளர்கள் என்றால் அதன் பொருள் 13,000 குடும்பங்களின் வயிற்றில் அடித்ததாகப் பொருள்படும்.

அரசு என்றால் அதனை நம்பி வாழும் மக்களைக் காப்பாற்ற வேண்டும் - மக்கள் நல அரசு (Welfare State) என்பதற்கு அதுதான் பொருள்.

அன்று சாலைப் பணியாளர்கள்

தி.மு.க. ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்களை இதே முறையில்தான் 2001இல் அதிமுக அரசு பணி நீக்கம் செய்தது. கடுமையான போராட்டத் துக்குப்பின் நீதிமன்ற உத்தரவின்பேரில்தான் அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

தமிழ் ஓவியா said...

ஓர் அரசு, தேர்தலில் வெற்றி பெற்று வந்திருக்கிறது என்றால் அது கடந்த ஆட்சியின் தொடர்ச்சிதான் என்று அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றம் வேறொரு வழக்கில் சுட்டிக் காட்டியதை ஏனோ அ.இ.அ.தி.மு.க. அரசு மறந்து விட்டது.

தி.மு.க. அரசு எப்படி நடந்து கொண்டது?

அ.இ.அ.தி.மு.க., ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் கொடுத்ததை திமுக. ஆட்சி ரத்து செய்யவில்லையே - அந்தத் திட்டத்தைத் தொடரத்தானே செய்தது. அந்த அணுகுமுறை அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு இல்லாது போனது மிகவும் வருத்தத்திற்குரியது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் நோக்கத்தைப் புரிந்து கொள்க!

உச்சநீதிமன்ற தீர்ப்பின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரை காத்துக் கொண்டு இராமல், மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரையும் பணியில் அமர்த்தி, மக்கள் நல அரசு என்ற நல்ல பெயரை ஈட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் அதிர்ச்சியின் காரணமாக தற்கொலைகூட செய்து கொண்டுள்ளனர் - சிலர் நோய்வாய்ப்பட்டனர். பிச்சை எடுக்கும் போராட்டம்வரை நடத்திவிட்டனர்.

மனித நேயத்துடன் நடந்திடுக!

இதற்கு மேலும் அரசு இந்தப் பிரச்சினையை மனித நேயக் கண்ணோட்டத்தில் அணுகியிருக்க வேண்டாமா?

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக அமையட்டும் என்று அறிஞர் அண்ணா சொன்னதையே அண்ணாவின் பெயரில் உள்ள அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு, சிறப்பாக அதன் முதல் அமைச்சருக்குச் சுட்டிக்காட்டி 13,000 மக்கள் நலப் பணியாளர்கள் குடும்பங்களை வாழ வைக்க வேண்டு மாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூட நம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.

(விடுதலை, _ 22.6.1973)

தமிழ் ஓவியா said...


கூகிள் முகப்பு பக்கத்தில் ஒரு சாராரை மாத்திரம் முன்னிலைப்படுத்தும் செயலை சுட்டிக்காட்டும் மடல்


கூகில் டூடிள் என்ற ஒரு துணைப் பிரிவைக் கொண்ட கூகிள் இணைய தளம் இது வரை இந்தியாவில் உள்ள பல பிரபலங்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் அவர்களின் படங் களை தன்னுடைய (www.google.co.in) இணையதளத்தின் முகப்பில் வெளி யிட்டு அவர்களைப் பற்றிய விவரங்களை தரும் சுட்டிகளை அன்றைய தினத்தில் சிறப்புப் பார்வையில் வைக்கும், அவர் களைக் கவுரவப்படுத்தும் விதமாக இதைச் செய்துவருகிறது.

உலகெங்கிலும் உள்ள அனைத்து கூகிள் இணைய தளங்கள் அவரவர் நாட்டின் முக்கிய தலைவர்களை எந்த ஒரு வர்க்கப்பாகுபாடுமின்றி வெளி யிட்டு வருகிறது, ஆனால் இந்திய கூகிள் நிறுவனம் மட்டும் (www.google.co.in) தொடர்ந்து குறிப்பிட்ட பிரபலங்களைப் பற்றி மாத்திரம் அவர்கள் பிறந்த நாளில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது, இந்த ஆண்டு மாத்திரம் கர்நாடக இசைப்பாடகி சுப்புலட்சுமி, கணிதத்தில் புலமை பெற்ற சகுந்தலா தேவி, சர்.சி.வி. இராமன், சத்யஜித்ரே, சிறீனிவாச ராமானுஜம், ஆனந்த் பாய் (இராமாயண, மகாபாரத இதர புராணக் கதைகளைச் சித்திரக் கதைகளாக குழந்தைகளிடம் கொண்டு சேர்ந்தவர் (அமர் சித்திரகதா, அம்புலிமாமா போன்றவை) ஜகஜீத்சிங் ஹிந்துஸ்தானி இசைப்பாடகர் போன்ற வர்களை நினைவு கூர்ந்து கவுரவிக்கும் வகையில் வெளியிட்டிருந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்கிறது, கூகிள்(www.google.co.in) தனிப்பட்ட இணையதளம் அவர்களின் விருப்பம் என்று ஒதுக்கிவிட முடியாது, காரணம் கூகிள் இந்தியா இந்திய இணையதளங்களில் முதன்மையான அங்கமாக மாறிவிட்டது, மக்களின் ஆதரவில்தான் முதலிடத்தைப்பிடித்தது மேலும் முழுக்க முழுக்க மக்கள் சார்ந்த ஒரு இணையதளமாகும், தனிப்பட்ட வியாபார அல்லது விளம்பர இணைய தளமல்ல.

அப்படி இருக்க கவுரவிக்க வேண்டு மென்றால் அனைத்துத் தலைவர்களை யும் கவுரவிக்கவேண்டும், ஆனால் குறிப்பிட்ட பிரபலங்களை மட்டும் தேர்ந் தெடுத்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மற்றவர்கள் எல்லாம் தேவையற்றவர்கள் என்ற நிலையில் வைத்திருக்கிறதா? என்று புரியவில்லை,

தமிழ் ஓவியா said...


இந்திய மொழியில் இந்தியைப் பெரும் பான்மையானவர்கள் பயன்படுத்தி னாலும் இணையத்தில் குறிப்பாக கூகிள் தமிழ் தான் இந்தியாவில் அதிக பட்சம் பேர் பயன்படுத்தும் இணைய தளம், இதில் பிளாக்குகள் (வலைப் பூக்கள்), கூகிள் துணை இணையதளம், கூகிள் குரூப்ஸ்(குழுமங்கள்), என கோடிக்கணக்கான தமிழ் தளங்கள் கூகிளில் உள்ளது அப்படி இருக்க தமிழ் தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராஜர் மற்றும் இதர தமிழ் பெருந்தலைவர் களைப் புறக்கணித்தே வருகிறது, ஏன் என்ற காரணம் தெரியவில்லை.

கூகிள் இந்தியா நிறுவனத்தின் தலைமைக்குழு பற்றிய தகவலைத் திரட்டும் போது அதன் தலைவர் பற்றிய வியப்பூட்டும் தகவல் கிடைத்தது.

இந்திய கூகிள் இந்தியா நிறுவனத் தின் தலைவர் ராஜன் ஆனந்தன். பிரபல சாதனைத்தமிழர் ஆழிக்குமார் என்று வர்ணிக்கப்படும் வல்வெட்டித்துறை வி.எஸ்.குமார் ஆனந்தன் அவர்களின் புதல்வர் ஆவார்.

வல்வெட்டித்துறையைச்சேர்ந்த வி.எஸ்.குமார் ஆனந்தன் சிறந்த தமிழ்ப் பற்றாளர். தனிப்பட்ட முறையில் பல உலக சாதனைகளைச் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர். இவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டம் வீரகேசரி என்ற இலங்கை பத்திரிகையால் வழங் கப்பட்டது. உலகின் பல்வேறு நீரிணைப் புகளை நீந்தி கடந்து சாதனை படைத் தவர், பாக். நீரிணைப்பு, மும்பை கேட்வே ஆப் இந்தியா முதல் எலிபெண்டா குகை வரை, மன்னார் நீரிணைப்பு, மன்னாரில் இருந்து தனுஷ்கோடி என பலமுறை இருபக்கமும் ஓய்வெடுக்காமல் நீந்திக் கடந்து சாதனைபுரிந்தவர்.

இங்கிலாந்தில் உள்ள ஆங்கில நீரி ணைப்பைக் கடக்கும் போது கடுங் குளிரில் உடல் உறுப்புகள் செயலிழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரண மடைந்தார். இப்படி தன் வாழ் நாள்களில் சாதனைகளைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர். வி.எஸ்.குமார் ஆனந்தன் ஆவார். அவர்களின் இல்ல மும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லமும் அருகருகே தான் இருந்தன. இவரின் புதல்வரான ராஜன் ஆனந்தன். பல பெரிய மின்ன ணுவியல் நிறுவனங்களில் பணிபுரிந்து 2011 ஆம் ஆண்டு கூகிள் இந்தியா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

கூகிள் டூடிள் திட்டமே இவரது ஆலோசனையின் பெயரில்தான் நடக் கிறது. இவர் பொறுப்பேற்றபிறகு தான் கூகிள் இணையத்தில் குறிப்பிட்ட பிரபலங்கள் மாத்திரம் கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மேலும் பல பார்ப்பன பிரமுகர்களை மாத்திரம் கவுரவப்படுத்தும் பணிகளை கூகிள் இந்தியா நிறுவனம் செய்து வருகிறது. அதிக அளவு தமிழர்கள் பயன்படுத்தும் கூகிள் அனைத்துத் தலைவர்களுக்கும் பிற நாடுகளைப் போல் பாகுபாடின்றி அவர்களைக் கவுரவிக்கவேண்டும். வேண்டுமென்றே புறக்கணிப்புகள் ஈடேறிவருகின்றன. இவர்களின் புறக்கணிப்பை சுட்டிக் காட்டும் வகையில் அவர்களுக்கு வேண் டுகோளாக இந்த கடிதத்தை எழுதி யுள்ளேன்.

திரு.ராஜன் ஆனந்தன் அவர் களுக்கு வணக்கம்,

உங்களது சொந்த ஊர் வல்வெட் டித்துறையில் இரண்டு சாதனை யாளர்கள் பிறந்து தமிழினத்தின் வரலாற்றில் இடம்பெற்றார்கள். ஒன்று விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன், மற்றொருவர் தங்கள் தந்தை ஆழிகுமரன் என்ற பட்டம் பெற்ற வி.எஸ் குமார் ஆனந்தன், இலங்கைத் தமிழர் ஒருவர் இந்தியாவின் முன்னணி இணையதள நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பது பெருமைக்குரிய செய்தியாகும். அதைவிட முக்கியமாக நீங்கள் தலைமைப்பொறுப்பை ஏற்றபிறகு தான் கூகிள் இந்திய நிறுவனம் இந்தி யாவில் முன்னணி இதற்கு காரணம் தமிழ்தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் ஊர்க்காரர் என்பதை நினைத்து மகிழ்கிறோம்.

அதே நேரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூகிள் இணையதள முகப்பில் பல பிரபலங்களைக் கவுர விக்கும் வகையில் அவர்களின் நினைவு நாளிலும், பிறந்த நாளிலும் தகவல்களை ஒரே இடத்தில் பெறும் வகையில் கூகிள் டூடிள் செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகம் மற்றும் இந்தியாவில் பல தலைவர்கள் தேசநலனுக்கும் சமுதாய பாகுபாட்டைக் களையவும், சமூக நீதிக்கும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். அவர்களை எல்லாம் புறக்கணிக்கும் விதமாக சிலரை மாத்திரம் கவுரவப் படுத்தி வருகிறீர்கள்.

சிறந்த சேவைகள் புரிந்து மக்களுக்கு தெரியாத மக்களை உலகிற்கு கொண்டுவருகிறோம் என்ற கூற்றை நிறுவனத்திற்கான பாலிஸியை (ethic policy)” ஏற்றுக்கொள்ள முடியாது.

காரணம் காந்தியடிகள் போன்ற பிரபலங்களுக்கும் சிறப்பு செய்துள்ளீர்கள், தமிழகம் மற்றும் இந்தியாவில் பல தலைவர்கள் உலகம் போற்றும் விதமாக சேவைகள் பல செய்து பெரும் எண்ணிக்கையிலான மக்களின் உள்ளங்களில் என்றும் வாழும் தலைவர்கள் பலர் உள்ளனர்.. இனிவரும் நாட்களில் அனைத்துத் தலைவர்களையும் கவுரவிக்கும் வகை யில் வெளியிட்டு சிறப்பிக்க வேண்டு மாறு கேட்டுக்கொள்கிறோம். - சரவணா இராசேந்திரன்

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாடு: போராட்டங்கள் - கோரிக்கைகள் - குறைபாடுகள்

காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக தொடர் போராட்டங்கள்

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக இங்கிலாந்து மற்றும் இந்திய நகரங்களில் இன்றும், நாளையும் தொடர் போராட்டங்கள் நடைபெற உள்ளன. தமிழினப் படு கொலையை நிகழ்த்திய இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்பது தமிழர்களின் கோரிக்கையாகும். இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்றும் நாளையும் இங்கிலாந்து மற்றும் இந்திய நகரங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற உள்ளன. இங்கிலாந்தின் லண்டன் நகரின் டவுனிங் வீதியில் வெள்ளிக் கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை போராட்டம் நடைபெற இருக்கிறது.

இந்தியாவில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதேபோல் பெங்களூரு டவுன் ஹால் அருகே வெள்ளிக் கிழமையன்று மாலை 4.30 முதல் 6.30 மணி வரை போராட்டம் நடைபெறுகிறது. அத்துடன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று மாநில தலைமைச் செயலகம் எதிரேயும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்துவதற்கும் அதில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழ் இனவழிப்பை சர்வதேசம் விசாரிக்க வேண்டும்: பிரித்தானிய எம்.பிக்கள் கோரிக்கை

பிரித்தானியத் தமிழர் பேரவையினரால் கடந்த பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புக்கள் தொடர்ந்து வெற்றிகரமாக நீடித்த வண்ணம் உள்ளன. Adrian Bailey - தொழில் கட்சி MP (West Bromwich-மேற்கு)

இலங்கையில் தமிழ் மக்கள் மீது இனவழிப்பை கட்டவிழ்த்து விட்ட அதிகார சக்திகளை, தன்னிச் சையாக சர்வதேச விசாரணைக் குழு மூலமாக விசாரிக்க வேண்டுமெனவும், இலங்கை மீது தகுந்த தடைகள் விதிக்கப்படவேண்டுமென்றார். அத்துடன் CHOGM மாநாட்டில் கலந்து கொள்வ தால் டேவிட் கேமரூன் இந்த அதிகார சக்திகளை அங்கீகரிப்பதாகவே தோன்றுகிறது. Bob Stewart--மிதவாதக் கட்சி MP (Beckenham)

இன்னும் நூறாண்டுகள் கழிந்தாலும் போற் குற்றங்களில் ஈடுபட்டவ ராக இருப்பினும் சட் டத்தின் முன் அவர்கள் கொண்டுவரப்படுவார்கள். பல போர்குற்ற விசா ரணைகளின் போது சாட்சியம் அளித்தவன் என்ற வகையில் நான் இதைனைக் கூறுகின் றேன் என்றார். -

Rosie Winterton-தொழில் katchi MP (Doncaster Central)

தமிழ் ஓவியா said...

CHOGM செல்லும் தனது முடிவை பிரதமர் மாற்ற வேண்டுமென்று வலியுறுத்தியதோடு, இலங் கையில் தமிழர்களுக்கு என்னவெல்லாம் நடந்தது என்பதை பற்றிய ஒரு சர்வதேச விசாரணைக்கான முன்னகர்வுகளை மேற்கொள்ளவேண்டுமென்றார். Brandon Lewis மிதவாதக் கட்சி MP (Great Yarmouth), Steve Reed -தொழில் கட்சி MP (Croydon North ),உள்துறை அமைச்சர் Theresa May MP (Maidenhead),Stephen Metcalfe MP (South Basildon&East Thurrock)
ஆகியோர்களுடனான சந்திப்புகளும் கடந்த வாரத்தில் இடம்பெற்றன.

மாநாடு கொழும்பில் ஆரம்பமாகும் அதே வேளை, பொதுநலவாய செயலகத்தின் முன்னால், மகிந்த ராஜபக்சே அடுத்த இரண்டாண்டு களுக்கான பொது நலவாய நாடுகளின் தலைமைப் பொறுப் பேற்பதை தடுக்கக்கோரும் ஆர்பாட்டம் ஒன்று பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழமைபோல் பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டு, ஒடுக்கப்பட்ட தாயக உறவுகளுக்கான தங்கள் குரல்களைப் பதிவு செய்யுமாறு பிரித்தானியத் தமிழர் பேரவை உரிமையோடு அழைக்கிறது. ஆர்ப்பாட்ட விவரம்:

தமிழ் ஓவியா said...

Date: Friday 15 November, 10AM-2PM
Venue: Marlborough House, Pall Mall, SW1Y 5HX
Nearest stations: Green Park, Piccadilly Circus and Charing Cross

பாதிக்கப்பட்ட மக்களுக்கான முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை:

யாழில் பொதுநலவாய பிரதிநிதிகள் கருத்து போர் முடிவுற்ற நாடுகளில் விரைவான அபி விருத்தி இடம்பெற்று யுத்தத்தினால் பாதிக்கப் பட்ட மக்கள் வழமைக்கு திரும்புவது உலக நாடு களிலுள்ள வழமையான செயற்பாடாகும். ஆனா லும், இலங்கையில் அவ் வாறான செயற்பாடுகள் காணப்படவில்லை யென் பதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் போது மானதாக இருக்கவில் லை என பொதுநலவாய நாடு களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற் காக இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் புதன்கிழமை (நவ.13) இரவு யாழ்ப்பாணம் வருகை தந்து யாழ். ரில்கோ சிட்டி ஓட்டலில் தங்கினர். தமது வருகை தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள், வடபகுதிக்கு புதன்கிழமை (நவ.13) அன்று பயணம் மேற்கொண்டு இங்குள்ள நிலமைகளை பார்வை யிட்டோம். குறிப்பாக கிளிநொச்சி பகுதிக்குச் சென்று செஞ்சோலை சிறுவர் இல்லம் மற்றும் சிவில் பாதுகாப்புச் செயலகத்தில் பணி புரியும் பெண்கள் ஆகியோருடன் கலந்துரை யாடினர்.

அப்போது தங்களுக்கான நிவாரணங்கள் போதுமானதாக இல்லை என அப்பெண்கள் எமக்குத் தெரிவித்தனர். தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட இராணுவத்தளபதியுடன் இடம்பெற்ற சந்திப்பில் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் மறு சீரமைப்பு வேலைகள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக அவர் விளக்கமளித்தார்.

கிளிநொச்சியில் சில பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவித்த போதும், பெரும் பாலோர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு மொழி ஒரு பிரச்சினையாகவிருந்தது. யுத்தம் நடந்த முடிவுற்ற நாடுகளில் விரைவான அபிவிருத்தி இடம்பெற்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வழமைக்கு திரும்புவது உலக நாடுகளிலுள்ள வழமையான செயற்பாடாகும்.

ஆனாலும், இலங்கையில் அவ்வாறான செயற்பாடுகள் காணப்படவில்லையென்பதுடன், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முன் னெடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இருக்கவில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு இலங்கை அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் போன்று இன்னும் 10 மடங்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தால் மட்டுமே மக்கள் நல்ல நிலைக்குத் திரும்பமுடியும்

இம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்திய மற்றும் மேற்குலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


குற்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியம்: உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடில்லி, நவ.14- வெளிப்படை யான குற்ற வழக்குகளில், உடனடியாக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியம் என்று, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், காஜியா பாத்தை சேர்ந்த லலிதகுமாரி என்ற பெண், தனது மகள் கடத்தப்பட்டது குறித்து காவல்துறையில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. காவல்துறை சீர்திருத்தம் மற்றும் வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (எப்.அய்.ஆர்.) பதிவு செய்வது தொடர்பாக, சரியான வழி காட்டு நெறிமுறைகளை வகுக்க வேண் டும் என்று மேலும் சில மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கில் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியதைத் தொடர்ந்து 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப் பட்டது.

தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையில், நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், ரஞ்சன் பி.தேசாய், ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பாப்டே ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேற்று முன்தினம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. தீர்ப்பு விவரம் வருமாறு:

ஒரு குற்றம் தொடர்பான புகாரில், குற்றம் நடந்திருப்பதை வெளிப்படை யாக உணர்ந்து கொண்டாலே, காவல் துறையினர் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியமாகும்.

அப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யத்தவறும் காவல்துறை அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோன்ற புகார்களில், வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு பூர்வாங்க விசாரணை நடத்த தேவை இல்லை. மற்ற புகார்கள் தொடர்பாக, காவல்துறையினர் பூர்வாங்க விசாரணை நடத்தி அதன்பின்னர் வழக்குப்பதிவு செய்யலாம். ஆனால், இந்த விசாரணை 7 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற புகார்களில், ஆதாரங் களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமண பந்த பிரச்சினை, ஊழல், நிதி முறைகேடு போன்ற புகார்களில், முதல் கட்ட விசாரணைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

குற்ற புகார்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ள இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படு கிறது. எனவே இனி காவல் நிலையங் களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுப்பது, இரு தரப்பினரையும் காவல் நிலையங்களிலேயே அழைத்துப் பேசி தீர்வு காண்பது (கட்ட பஞ்சாயத்து) போன்ற செயல்களில் இனி ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

இடதுசாரி சிந்தனையாளர்கள் இணைந்து மதவாதம் - ஜாதீயவாதங்களைத் தகர்ப்போம்!
சேது சமுத்திர திட்டத்தில் ராமன் எங்கே வந்தான்?
த.மு.எ.க. சங்க நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவரின் கருத்து வீச்சு

சென்னை, நவ. 14- மதவாதம், ஜாதீய வாதங்களைத் தகர்ப் பதில் இடது சாரி சிந்தனையா ளர்கள் ஒன்றிணைந்து பாடுபடு வோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை அய்க்கஃப் (AICUF) அரங்கில் நேற்று (13.11.2013) மாலை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்று கையில் அவர் குறிப்பிட்டதாவது:-

இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு தமிழக பண்பாட்டுச் சூழல் நூலினை வெளியிட் டுள்ள தோழர் என்.சங்கரய்யா அவர்கள் தமிழ்நாட்டின் மூத்த தலைவர் பொது வாழ்வில் நீண்ட அனுபவமும், முதிர்ச்சி யும் கொண்ட எடுத்துக்காட் டான தலைவர். நம்மிடையே அரசியல் அணுகுமுறைகளில் சில நேரங் களில் மாறுபாடு இருப்பினும் இடது சாரிகளும், நாமும் அடிப்படையில் வேறுபட்டு நிற்க வேண்டிய அவசியம் இல்லை. நம்மிடம் இணைக்கக் கூடியவைதான் ஏராளம்.

நம்மிடையே நெருக்கம் தேவை

அதுவும் ஜாதீய வாதம், மத வாதம் தலைதூக்கப் பார்க்கும் ஒரு காலகட்டத்தில் நம்மி டையே கூடுதலாக நெருக்கமும், உறவும் பலப்பட வேண்டும்.

இங்கு வெளியிடப்பட்டுள்ள நூலைப் பெரும் பகுதி படித்து விட்டேன். புதினம் போல வேகமாகப் படிக்கக் கூடிய நூலல்ல இது. ஓர் ஆவணம் போன்றதாகும்.

பயிற்று மொழி பற்றி தெளி வான கருத்துக் கூறப்பட்டு உள்ளது. தாய்மொழியில் படிப் பது என்பது தான் சரியானது என்பது கல்வியாளர்களின் கருத்தாகும்.

இன்றைக்குச் சீனா அனைத் திலும் முன்னிலை வகித்து வரு கிறது. இன்னும் சொல்லப் போனால் அமெரிக்காவின் தேசியக் கொடி கூட மேடின் சீனா தான் (கரஒலி). சீனாவில் பயிற்று மொழி சீனம்தான். எல்லா வகை பாடங்களும், தொழிற்கல்வி கூட சீன மொழியில்தான் பயிற்று விக்கின்றனர்.

அய்.ஏ.எஸ். தேர்வில் தமிழ்நாடு வளர்ச்சிக்குக் காரணம்

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் கூட அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வுகளில் அதி கம் பேர் வெற்றி பெற்று வரு கிறார்கள். காரணம் தமிழி லேயே அந்தத் தேர்வுகளை எழுதலாம் என்ற வாய்ப்பு இருப்பதுதான்.

மண்டல் குழு பரிந்துரை அமலுக்கு வந்தபின் பிற்படுத் தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடும் இந்த வளர்ச் சிக்கு முக்கிய காரணமாகும்.

தமிழ் ஓவியா said...

இரண்டாவதாக இந்த நூலில் கூறப்பட்டுள்ள மத வெறி பற்றிய கருத்து முக்கி யத்துவம் வாய்ந்ததாகும்.

சேது சமுத்திரத் திட்டத்தில் மதவாதக் குறுக்கீடு!

குறிப்பாக சேது சமுத்திரத் திட்டம் குறித்து விவாதிக்கப் பட்டுள்ளது. இந்தத் திட்டம் நாம் நீண்டகாலமாக எதிர் பார்த்த திட்டமாகும்.

தென் மாவட்டங்களில் ஜாதி கலவரம் ஏற்பட்ட போது நீதி யரசர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், தென் மாவட் டங்களில் வேலை வாய்ப்புப் பெருக வேண்டும் என்ற கருத் தினை எடுத்துக் கூறியிருந்தது.

அந்த வகையில் சேது சமுத் திரத் திட்டம் மிக முக்கிய மானது. தென்மாவட்டங்களில் தொழில்வளம் பெருகவும் வேலைவாய்ப்புக் கிட்டவும் வாய்ப்புள்ள திட்டமாகும்.

இராமன் பெயர் சொல்லி அந்தத் திட்டம் முடக்கப்பட் டுள்ளது. இரண்டு தேர்தல் அறிக்கைகளில் அ.இ.அ.தி. மு.க.வால் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தாலும், இப்பொழுது இந்தத் திட்டம் கூடாது, இராமன் பாலத்தை இடிக்கக் கூடாது என்று மத வாதத்தைத் திணிப்பது என்ன நியாயம்?

இவ்வளவுக்கும் இந்தத் திட்டத்துக்கு தொழில்நுட்ப ரீதியாக இசைவு அளித்த தெல்லாம் பிஜேபி ஆட்சியில் தான்; வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதுதான் - ராமன் பாலம் என்று சொல்லுகிறார் களே அந்தப் பாதையில் (6 ஆவது நீர்வழிப்பாதை) இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடி வெடுக்கப்பட்டது. நீரி என்ற சுற்றுச் சூழல் அறிவியல் நிறு வனம் வகுத்துக் கொடுத்த பாதை இது.

எங்கிருந்து வந்து குதித்தான் ராமன்?

இப்பொழுது எங்கிருந்து வந்து குதித்தான் ராமன், திமுக ஆட்சியில் கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், மதுரைக்கு வந்து தொடங்கி வைக்கப்பட்ட திட்டத்தை மதம் காரணம் காட்டி முடக் குவதை அனுமதிக்கக் கூடாது.

தோழர் சங்கரய்யா அவர்கள் இங்கு குறிப்பிட்டது போல வழக்கை வாபஸ் வாங்கச் செய் யத் தேவையான நிர்ப்பந்தத்தை நாம் உருவாக்க வேண்டும்.

இல்லாத ராமனைக் கொண்டு வருவதும், இருந்த பாபர் மசூ தியை இடிப்பதும்தான் இந்துத் துவா வாதிகளின் நிலைப்பாடு.

இதில் மதவாதத்தை ஒழிப் பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு வழி செய்ய முடி யும்.

தமிழ் ஓவியா said...

மதம் யானைக்குப் பிடித் தால் ஆபத்து, மனிதனுக்குப் பிடித்தால் அதைவிட ஆபத்து, ஓர் ஆட்சிக்குப் பிடித்தால் அதைவிடப் பல மடங்கு ஆபத்தாகும். அதனைத்தான் நடைமுறையில், நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

காதல் திருமணம் கூடாதா?

மூன்றாவதாக இந்நூலில் ஜாதியவாதம் பற்றி விவாதிக் கப்பட்டுள்ளது; காதல் திரு மணம் கூடாது என்று சொல்ல ஆரம்பித்தவர்கள் திருமண வயது 18 லிருந்து 21-க்கு உயர்த்த வேண்டும் என்கின்றனர்.

18 வயதுக்கு வாக்குரிமை வந்துவிட்டதே அதையும் உயர்த்தலாமா? யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்யக் கூடியவன், தனது வாழ்க்கைக்கு யார் துணைவர் என்று முடிவு செய்ய முடியாதா?
ஜாதி என்பதற்கு என்ன அடையாளம்? அது விஞ்ஞானபூர்வமானதா?

ஜாதி வாரியாகத்தான் ரத்தப் பிரிவு இருக்கிறதா? ஜாதி அடிப்படையில்தான் உடல் உறுப்பு கொடைகள் செய்யப்படுகின்றனவா?

அய்யங்கார் ரத்தம், அய்யங்காருக்கு, முதலியார் ரத்தம் முதலியாருக்கு என்று எங்காவது இருக்கிறதா?

பெண்ணுரிமை பற்றி பெரியார்

நான்காவதாக பெண்ணுரிமை பற்றிய சிந்தனை; புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடினான்:

சுக்கா மிளகா

கதந்திரம் கிளியே

அக்கா வந்து கொடுக்க

என்ற வினாவை எழுப்பினார்.

இங்கு தோழர் சங்கரய்யா அவர்கள் கூறினார். பெண்ணுரிமைக்காக ஆண்கள் பாடுபட வேண்டும் என்றார்.

நடைமுறையிலே ஆண்கள் யாராக இருந்தாலும் ஆதிக்க உணர்வு ஒரு பக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது. அதனால் தான் தந்தை பெரியார் கூறினார். பூனைகளால் எலிகளுக்குச் சுதந்திரம் கிடைக்குமா? அது போலத்தான் ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைப்பது என்றார். அதுதான் நடைமுறையில் உள்ளது.

தமிழ் ஓவியா said...

பெண்கள் விடுதலைக்கு ஆண்மை ஒழிய வேண்டும் என்று தந்தை பெரியார் கூறியதை இந்த நூலில் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார்கள்.

கல்லானாலும் கணவன், புல்லானாலும் ஃபுல்(Full) ஆனாலும் கணவன் என்ற நிலைதானே இன்னும்; இதில் மாற்றம் வரவேண்டாமா?

பெரியார் சொன்னார் பெண்ணுரிமை என்று வரும்போது உங்கள் மனைவிமார்களை நினைத்துக் கொண்டு பார்க்காதீர்கள். மனைவி சம்பளம் இல்லாத வேலையாளாக இருப்பது அவர்களுக்கு வசதியாக இருக்கும். அதனால்தான் தந்தை பெரியார் பெண்ணுரிமை என்று வரும்போது உங்கள் மனைவியை நினைத்துச் சிந்திக்காதீர்கள் உங்கள் மகளை, உங்கள் தாயை, உங்கள் சகோதரியை நினைத்துப் பார்த்துச் சிந்தியுங்கள் என்றார்.

ஊடகங்கள் யார் கைகளில்?

இன்றைக்கு இருக்கும் ஊடகங்கள் பெரு முதலாளிகள் உயர் ஜாதிக்காரர்களின் கைகளில் இருக்கின்றன. அவர்கள் உணர்வை நம்மீது திணிக்கிறார்கள். இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆபத்தான பண்பாட்டுப் படையெடுப்பு

அரசியல் அடிமை என்பது கையில் மாட்டப்பட்ட விலங்கு போன்றது. பொருளாதார அடிமை என்பது காலில் பூட்டப்பட்ட விலங்கு, இவற்றை எளிதில் உடைத்துவிடலாம். பண்பாட்டு ஆதிக்கப் படையெடுப்பு என்பது மூளையில் மாட்டப்பட்ட விலங்கு. இதனை உடைப்பது எளிதல்ல. நுட்பமான அணுகுமுறை தேவைப்படும்.

இந்த நூலின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனி யாகப் பேசப்படவேண்டும். கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றார்.

வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்வோம்!

தமிழ் ஓவியா said...


நாங்கள் தஞ்சை - வல்லத்தில் நடத்தும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உள்ள பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தில் தனியே ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நமது பேராசிரியர் அருணன் போன்றவர்கள் ஆய்வு செய்யலாம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தரத் தயார் என்று குறிப்பிட்டார்.

தமிழகப் பண்பாட்டுச் சூழல்!

நூலினை வெளியிட்டவர் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா, அவருக்குக் கழகத் தலைவர் கி.வீரமணி சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தார்.
நூலினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார்.

தமிழக பண்பாட்டுச் சூழல் எனும் நூல் வெளியீட்டு விழாவினை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தென்சென்னை) ஏற்பாடு செய்திருந்தது.

13.11.2013 அன்று மாலை 6.30 மணிக்கு அய்க்கஃப் (AICUF) அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மயிலை பாலு வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் அருணன், சட்டப் பேரவை உறுப்பினர் சவுந்தரராசன், ஜனநாயக மாதர் சங்கப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, தோழர்கள் ராஜ்மோகன், ஏ.சாமுவேல் ராஜ், ஆர்.வேல்முருகன், சு.இராமச்சந்திரன் முதலியோர் உரையாற்றினர். இரா.முத்து நன்றி கூறினார். நிகழ்ச்சி தொகுப்புரை கி.அன்பரசன் வழங்கினார்.

சி.பி.அய். (எம்) மாநில பொதுச் செயலாளர் ஜி.ராமகிருட்டிணன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

தோழர் என்.சங்கரய்யா

நூலினை வெளியிட்ட மூத்த தலைவர் என்.சங் கரய்யா அவர்கள் இந்த அமைப்பின் நோக்கம் தேசியத்துக்கு பாரதியார், சமூக சீர்திருத்தத்திற்கு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பொதுவுடைமைக்கு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர் என்று தொடக்கத்திலேயே குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல் கல்வி போன்றவை தமிழிலேயே சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்தி தமிழ்நாட்டிலும் தொழில்நுட்பக் கல்வியை பயிற்றுவிக்கலாம் - வெளித் தொடர்புகளுக்கு ஆங்கிலம் இருக்கட்டும். அறிவு நூல் கருத்துக்களைத் தாய்மொழி மூலம்தான் தெளிவாக புரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.

2014 மக்களவைத் தேர்தலில் மதவாத சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று கூறிய அவர், முஸ்லிம்களில் சிலரின் தீவிரவாதம், பெரும் பான்மை மக்களின் தீவிரவாதத்தை எதிர்கொள் வதற்கு இடையூறாக இருக்கக்கூடும். முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள பெரியவர்கள் இதற்கொரு முடிவைக் காண வேண்டும் என்று குறிப்பிட்டார்.

படேலை, மோடி முன்னிறுத்தப் பார்க்கிறார். படேல் காந்தியாரின் சிந்தனையில் வளர்ந்தவர். மோடியோ, ஆர்.எஸ்.எஸால் வளர்க்கப்பட்டவர். இருவரும் எப்படி ஒன்றாக முடியும் - என்ற வினாவையும் எழுப்பினார்.

வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்வோம்!

நாங்கள் தஞ்சை - வல்லத்தில் நடத்தும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் உள்ள பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தில் தனியே ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நமது பேராசிரியர் அருணன் போன்றவர்கள் இந்த நூலை ஆய்வு செய்யலாம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தரத் தயார்.

தமிழ் ஓவியா said...


தீண்டாமைக் கொடுமை மடமை


இந்தியத் துணைக்கண்டத்தில் தீண்டாமை என்பது எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு ஒரு சம்பவத் தைக் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஒரு சமயம் சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் ஒரு வக்கீலிடம் நன் கொடை வசூலிப்பதற்காய்ச் சென் றிருந்தார். அப்போது அந்த வழக் கறிஞர் என்னிடம் நன்கொடைக்கு வந்திருக்கிறீர்களே, என்னை தொட்டால் தீட்டு என்கிறார்கள் ஆனால் என் பணத்திற்கு மட்டும் அந்தத் தீட்டு இல்லையா? என்று கேட்டார்.

எல்லாவற்றையும் கடந்தவன் நான். நான் தீண்டாமையை அனுஷ்டிப்பவன் அல்ல என்றாராம் சுபாஸ் சந்திரபோஸ்.

அப்படியானால், ஒருநாளைக்கு என் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடுங்கள்; சாப்பிட்ட மறுநாள் நன்கொடை தருகிறேன் என்றார் அந்த வழக்கறிஞர்.

உடனே சுபாஸ் சந்திரபோஸ், சரி நாளைக்கே நாலைந்து உயர்ந்த சாதிக்காரர்களுடன் வந்து உங்கள் வீட்டில் சாப்பிடுகிறேன். நீங்களும் உங்கள் சாதிக்காரர்கள் சிலரை எங்களுடன் சேர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்யுங்கள் கலந்து அமர்ந்து சாப்பிட்ட பிறகு நன்கொடை தாருங்கள் என்றார். சரி என்றார் வக்கீல்.

அவர்கள் வந்த போது வழக்கறிஞர் மிகவும் சோகமாக உட்கார்ந்திருந்தார். ஏன்? என்று கேட்டார் போஸ். என்னால், நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றார். என்ன, காரணம்? என்ற கேட்ட போது, நீங்கள் உயர்ந்த சாதிக்காரர்களை என் வீட்டில் சாப்பிட அழைத்துக் கொண்டு வந்து வீட்டீர்கள்; ஆனால் என் சாதியை சேர்ந்தவர்கள் யாரும் அய்யோ உயர்ந்த சாதியாருடன் சேர்ந்து சாப்பிடுவதா? என்ன பாபம் செய்ததாலோ இப்படிப்பட்ட பிறப்பெடுத்திருக்கிறோம் - அவர்களோடு சேர்ந்து சாப்பிடும் பாபத்தையும் செய்தால், இன்னும் எத்தனை பிறப்புக்கு இடர்ப்பட வேண்டுமோ! என்றாராம்.

இந்த அளவுக்கு இந்த நாட்டிலே தீண்டாமை வேர் விட்டிருந்தது.

இந்த அடிமை நிலைமையைத்தான் அடியோடு தகர்த்தெறியப் பாடுபட்டார் தந்தை பெரியார்.

ஆதாரம்: கடலூர் மாநாட்டில் விடுதலை விரும்பி பேச்சு, முரசொலி (19.7.1981

தமிழ் ஓவியா said...


பெண்கள்பற்றி சி.பி.அய். இயக்குநர்


சி.பி.அய். இயக்குநர் ரஞ்சித் சின்கா தெரிவித்த கருத்து இந்தியா முழுமையும் சர்ச்சை அலைகளை எழுப்பி விட்டது.

ஓட்டல்களில் சூதாட்ட விடுதிகள் செயல்படு கின்றன. சில மாநிலங்களில் லாட்டரி சீட்டு களுக்கும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சூதாட்டம் பாலியல் வன்முறை போன்றது. அதைச் சட்டத்தால் தடுக்க முடியாது; தடுக்க முடியாவிட்டால் அனுப வித்து மகிழ வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வார்த்தைகள்தான் பெரும் பிரச்சினை யாகியுள்ளன.

மிகப் பெரிய அதிகாரம் மிக்க பதவியில் உள்ள ஒருவர் பொறுப்பாக சிந்தித்து, பொறுப்பாகப் பேச வேண்டும்.

யாரோ சாலையில் போகிற பாமர மனிதன் அல்ல; - சி.பி.அய். இயக்குநர் - அதுவும் சி.பி.அய். பொன் விழா நிகழ்ச்சியில் இப்படிப் பேசி இருக்கிறார்.

பாலியல் வன்கொடுமைபற்றி பெரிதாகப் பேசப்படும் காலத்தில், அதற்குக் காரண மானவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்றெல்லாம்கூட கருத்துகள் கூறப்படுகின்றன.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் பாலியல் வன்முறையைத் தடுக்க முடியாவிட்டால் அனுபவித்து மகிழ வேண்டியதுதான் என்பது எவ்வளவுக் கீழ்த்தரமானது!

ஆண் வெறியர்களால் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்படுகிற பெண் இயல்பான பாலியல் உறவில் அடையும் மகிழ்ச்சியைப் பெறுவது என்பது சாத்தியமானதுதானா? மெத்த படித்த இந்த மேதாவிகள் எந்த உலகத்தில் இருக்கிறார்கள்? ஒரு வக்கிரப் புத்தியோடு சொல்லப்படுகிற கருத்தாகத்தான் இதனைக் கருத முடியும்.

கோயில்களில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களைப் பொட்டுக் கட்டிவிட்டு அவர்களைத் தேவர்களுக்கு அடியார்கள் என்று கூறி வந்தார்கள்.

கோயில் திருவிழாக்களில் ஆடிப் பாடி மகிழ்விப்பது மட்டுமல்ல; மற்ற மற்ற நேரங்களில் அந்தப் பெண்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தப் பட்டார்கள் என்பதை விளக்கத் தேவையில்லை.

அப்படி அவர்கள் இருப்பது கடவுளுக்குச் செய்யும் தொண்டு என்று கூறப்பட்டதுண்டு. அதை எல்லாம் புறந்தள்ளி நீதிக்கட்சி ஆட்சியில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் முயற்சியால் தேவதாசி முறை சட்ட ரீதியாக ஒழிக்கப்பட்டது.

பெண்கள் என்றால் காமப் பதுமை என்று நினைக்கும் ஓர் இந்துத்துவ மனப்பான்மை இந்த நாட்டில் உண்டு. பெண்களை உயிருள்ள மானுடக் கூறு என்று கருதுவதில்லை. அதனால் தான் படித்தவர்கள்கூட, உயர்ந்த பதவிகளில் இருப்ப வர்கள்கூட, பெண்களைத் துச்சமாக, கொச்சைப் படுத்தும் தன்மையில் விமர்சித்து வருகிறார்கள்.

திருவாளர் சோ, ராமசாமி அய்யரின் துக்ளக் இதழைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு, ஒரு உண்மை விளங்காமல் போகாது.

பெண்களை மட்டம் தட்டி எழுதுவதில் அவரை அடித்துக் கொள்ள இன்னொருவர் இருக்க முடியாது.

சி.பி.அய். இயக்குநர் ரஞ்சித்சின்காவை விமர் சிக்கிறவர்கள்கூட, துக்ளக்கில் பெண்களைத் தொடர்ந்து கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கும் சோ போன்றவர்களை, விமர்சிப்பதில்லை கண்டிப்பதும் இல்லை. ஒருக்கால் சோ அவ்வளவு முக்கியமான பேர் வழியா என்று நினைக் கிறார்களோ என்னவோ!

பெண்கள் என்றால் வில்லிகள்போலத் தானே நம் நாட்டு சின்னத் திரைகள் சித்தரிக்கின்றன; அப்படி இல்லாவிட்டால் சதா அழுது கொண்டு இருப்பவர்களாகவும் வசவுக்கும், அடிக்கும் ஆளாகுபவர்களாகவும் தானே சித்தரிக்கிறார்கள்.

இதனை எதிர்த்து பெண்கள் அணி திரண்டு எழ வேண்டாமா? பெண்ணுலகம் சிந்திக்கட்டும்! செயல்படட்டும்!!

தமிழ் ஓவியா said...


பார்ப்பனச் சாதி


பார்ப்பனச் சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும்வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்துவரும்.

(விடுதலை, 29.5.1973)

தமிழ் ஓவியா said...


மோடி தமாஷ்!


அடுத்த பிரதமர் மோடி தான் - ஆம் மோடிதான்! மோடியேதான்! இப்பொ ழுதே எழுதி வைத்துக் கொள்க! என்கிற ரீதியில் நீட்டி முழங்கிப் பிரச்சாரம் செய்ய வாடகை ஒலி பெருக்கிகள் ஏராளமாகப் புழுத்துப் பெருகி விட்டன.

மோடி மேடையில் பேசும் போக்கைக் கவனிப்பவர் களுக்கு ஒன்று தெளி வாகவே புரியும். ஒரு பிரத மருக்கான வேட்பாளர் என்ற பெருங் குணமோ, பண்போ, அடக்கமோ, இன்சொற்களோ அதில் இருப்பதாகச் சொல்ல முடியுமா? பேட்டை தாதா தோற்று விட வேண்டும்; அந்த அளவுக்கு முகம் முறுக்கேற கண்கள் சிவக்க, மேடையையே தண்டால், பஸ்கி எடுக்கும் இடமாகக் கிடுகிடுக்க வைக்கிறார்; ஒருக்கால் கோட்சே உயிருடன் இருந் தால் இந்தப் பாணியில்தான் இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

பேச்சிலாவது தெளி வான கருத்தோ, சிறப்பான தகவல்களோ உண்டா என் றால் எந்த மண்ணாங்கட்டி யும் கிடையாது.

உளறல் திலகம் என்று வேண்டுமானால் பட்டம் சூட்டலாம். வேதாரண்யத் தில் உப்பு சத்தியாக்கிரகத் திற்கு வ.உ.சி. தலைமை தாங்கினார் என்கிற ஜோக் குகளையெல்லாம் பின் னுக்குத் தள்ளும் வண்ணம் சமீபத்தில் பேசி இருக் கிறார்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசிய சிந்த னையை வளர்க்கும் வகை யில் லண்டனில் இந்தியா ஹவுஸ் அமைப்பை ஏற்படுத் தியவர் சியாமா பிரசாத் முகர்ஜி. அவர் இந்தியப் புரட்சியாளர்களின் குரு என்று கருதப்படுகிறார். 1930ஆம் ஆண்டு உயிரி ழந்த சியாமா பிரசாத் முகர்ஜி, தனது அஸ்தியைப் பத்திரமாக வைத்திருந்து இந்தியா சுதந்திரம் பெற் றதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியி ருந்தார் குஜராத்தின் பெருமை மிகுந்த மைந்தன் சியாமா பிரசாத் முகர்ஜி என்று இடி முழக்கம் செய்தாரே பார்க்கலாம்.

சியாமா பிரசாத் முகர்ஜி என்பவர் பிறந்தது குஜராத் தில் அல்ல; அவர் பிறந்தது கொல்கத்தாவில் -அவர் உயிரிழந்ததோ 1953ஆம் ஆண்டில் - மோடி சொன் னது போல 1930ஆம் ஆண்டில் அல்ல.

இதில் என்ன வேடிக்கை என்றால் அவரால் சொல் லப்பட்டதெல்லாம் சியா மாஜி கிருஷ்ணவர்மா என்ற குஜராத்தைச் சேர்ந்த சமஸ்கிருத பண்டிதரைப் பற்றி; ஆனால் அவர் குறிப்பிட்டதோ அவருக்குச் சம்பந்தமேயில்லாத சியாமா பிரசாத் முகர்ஜியை.

எப்படி இருக்கிறது! எத் தகைய அறிவு ஜீவி இவர். இவரைத் தவிர வேறு யாராவது இப்படி உளறியி ருந்தால் எப்படியெல்லாம் இந்தப் பார்ப்பன ஏடுகள் கேலியும், கிண்டலும் செய் திருக்கும்! - மயிலாடன்மோடி தமாஷ்!

அடுத்த பிரதமர் மோடி தான் - ஆம் மோடிதான்! மோடியேதான்! இப்பொ ழுதே எழுதி வைத்துக் கொள்க! என்கிற ரீதியில் நீட்டி முழங்கிப் பிரச்சாரம் செய்ய வாடகை ஒலி பெருக்கிகள் ஏராளமாகப் புழுத்துப் பெருகி விட்டன.

மோடி மேடையில் பேசும் போக்கைக் கவனிப்பவர் களுக்கு ஒன்று தெளி வாகவே புரியும். ஒரு பிரத மருக்கான வேட்பாளர் என்ற பெருங் குணமோ, பண்போ, அடக்கமோ, இன்சொற்களோ அதில் இருப்பதாகச் சொல்ல முடியுமா? பேட்டை தாதா தோற்று விட வேண்டும்;

அந்த அளவுக்கு முகம் முறுக்கேற கண்கள் சிவக்க, மேடையையே தண்டால், பஸ்கி எடுக்கும் இடமாகக் கிடுகிடுக்க வைக்கிறார்; ஒருக்கால் கோட்சே உயிருடன் இருந் தால் இந்தப் பாணியில்தான் இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

பேச்சிலாவது தெளி வான கருத்தோ, சிறப்பான தகவல்களோ உண்டா என் றால் எந்த மண்ணாங்கட்டி யும் கிடையாது.

உளறல் திலகம் என்று வேண்டுமானால் பட்டம் சூட்டலாம். வேதாரண்யத் தில் உப்பு சத்தியாக்கிரகத் திற்கு வ.உ.சி. தலைமை தாங்கினார் என்கிற ஜோக் குகளையெல்லாம் பின் னுக்குத் தள்ளும் வண்ணம் சமீபத்தில் பேசி இருக் கிறார்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசிய சிந்த னையை வளர்க்கும் வகை யில் லண்டனில் இந்தியா ஹவுஸ் அமைப்பை ஏற்படுத் தியவர் சியாமா பிரசாத் முகர்ஜி. அவர் இந்தியப் புரட்சியாளர்களின் குரு என்று கருதப்படுகிறார். 1930ஆம் ஆண்டு உயிரி ழந்த சியாமா பிரசாத் முகர்ஜி, தனது அஸ்தியைப் பத்திரமாக வைத்திருந்து இந்தியா சுதந்திரம் பெற் றதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியி ருந்தார் குஜராத்தின் பெருமை மிகுந்த மைந்தன் சியாமா பிரசாத் முகர்ஜி என்று இடி முழக்கம் செய்தாரே பார்க்கலாம்.

சியாமா பிரசாத் முகர்ஜி என்பவர் பிறந்தது குஜராத் தில் அல்ல; அவர் பிறந்தது கொல்கத்தாவில் -அவர் உயிரிழந்ததோ 1953ஆம் ஆண்டில் - மோடி சொன் னது போல 1930ஆம் ஆண்டில் அல்ல.

இதில் என்ன வேடிக்கை என்றால் அவரால் சொல் லப்பட்டதெல்லாம் சியா மாஜி கிருஷ்ணவர்மா என்ற குஜராத்தைச் சேர்ந்த சமஸ்கிருத பண்டிதரைப் பற்றி; ஆனால் அவர் குறிப்பிட்டதோ அவருக்குச் சம்பந்தமேயில்லாத சியாமா பிரசாத் முகர்ஜியை.

எப்படி இருக்கிறது! எத் தகைய அறிவு ஜீவி இவர். இவரைத் தவிர வேறு யாராவது இப்படி உளறியி ருந்தால் எப்படியெல்லாம் இந்தப் பார்ப்பன ஏடுகள் கேலியும், கிண்டலும் செய் திருக்கும்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


இனப்படுகொலையாளர் ராஜபக்சே அமெரிக்க நாடாளுமன்றக் குழு கண்டனம்


அமெரிக்கப் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் இல்லினாய் மாநில மக் களாட்சிக் கட்சி உறுப் பினர் டேனி டேவிசும், ஒகையோ மாநில குடிய ரசுக் கட்சி உறுப்பினர் பில் ஜான்சன் அவர் களும் இணைந்து நவம் பர் 12, மாலை 2 மணிக்கு அமெரிக்க நாடாளு மன்ற இலங்கை இன, விடுதலைக் குழுவைத் தொடங்கி வைத்தனர்.

தொடக்கத்தில் நடந்த கருத்தரங்கில் இலங்கையின் முன் னாள் அமெரிக்கத் தூதுவர் ஆஷ்லி வில்சு காட்டமாக வெற்றித் திமிரில் ராஜபக்சே வடக்கே சிங்களவர் களைக் குடிஅமர்த்தித் தமிழர்களை அடக்கி ஆளப் பார்க்கின்றார். அவரே ஒத்துக்கொண்ட 13ஆவது தீர்மானத் தையே நிறைவேற்றாமல் நீர்த்துப் போகச் செய் கின்றார். பத்திரிகை மற்ற உரிமைகளைப் பறித்துக் கொலை செய்து பயமு றுத்துகின்றார் என்று எடுத்துக்காட்டுக்களுடன் எடுத்துரைத்தார்.

அடுத்து ஹெரிட் டேஜ் பவுண்டேசன் சமூக அமைப்பின் லிசா கர்டிசு அம்மையார் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் நிலங்கள் அபகரிக்கப் பட்டுள்ளன என்று வழக் குத் தொடர்ந்துள்ளனர். நான்காண்டுகளாக அடுக்கடுக்கான அபக ரிப்புக்களும், குற்றங் களும் நடந்து கொண் டுள்ளன. அமெரிக்கா இதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடி யாது என்றார்.

அரசியல் ஆய்வாளர் நிம்மி கவுரி நாதன் தமிழ்ப் பெண்கள் எவ்வளவு கொடுமைகளுக்கு ஆளாக்கப் படுகின்றனர். பாலியல் கொடுமை கட்டாயக் கருச்சிதைவு, பரத்தையர் ஆக்கப்படும் சீர்குலைவு, தற்கொலை, மன நோய் உண்டாக் குதல் என்று ராணுவத் தினரின் வெறியாட்ட மாகவே 24 மணி நேர மும் நடந்து கொண் டுள்ளது. மூன்றிலொரு பங்கு தமிழ் நிலம் ராணுவத்தினர் எடுத்துக் கொண்டுள்ளனர் என்றார். கண்ணால் பார்க்க முடி யாமல், வாயால் பேச முடியாமல்,நடக்கவும் அஞ்சி வாழ்கின்றனர் என்றார்.

அமெரிக்கன் என்டர் பிரைசு நிறுவனத்தின் சதானந்த் தூமே கருத் தரங்கத்தையும், கேள்வி பதில்களையும் ஒழுங்கு செய்தார்.

நாடாளுமன்ற உறுப் பினர் பில் ஜான்சன் கூறியதாவது: போர் நடந்த போது பாதுகாப் பான இடம் என்று ஒதுக்கி அங்கேயே அப் பாவி மக்களைக் கொன்று குவித்தது போர்க்குற்ற மாகும். ஒளிப்படங் களில் பார்க்கும் காட் சிகள் அதிர்ச்சியூட்டு கின்றன. இவையெல் லாம் கட்டாயம் விசா ரித்துத் தண்டிக்கப் பட வேண்டும். நவநீதம் பிள்ளை அம்மையாரின் அறிக்கை மனித நேயமற்ற செயல்களை, இன்றும் அவை தொடர் வதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.நான் மற்ற உறுப்பினர்களுக்கு இவற்றை எடுத்துச் சொல்லி இந்தக் குழு வின் வேலையைத் தொடங் குவேன் என்றார்.

டேனி டேவிசு அவர் கள் சுனாமிக்குப்பின் தான் அங்கு சென்று இரண்டு அரசுகள் நடந் ததைப் பார்த்தேன். இரண்டு உச்ச நீதி மன் றங்கள், வங்கி மற்ற துறைகளைப் பார்த்தேன். என்னுடன் கூடவே இருந்த நாடா ளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கிருஸ்துமசு அன்று சர்ச்சிலேயே கொல்லப் பட்டார். இளம் பிள் ளைகள், மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய அந்தப் பிள்ளைகள் போர்ப் பயிற்ச்சி வீரர்கள் என்று கொல்லப் பட்டார்கள்.

தமிழர்களின் போராட் டத்தை கருப்பினத்து நான் நன்கு உணர்கின் றேன். இவ்வளவு ஆண்டு கள் கழித்தும் இன்ன மும் அமெரிக்க உள் ளங்கள் முழு விடுதலை உணர்ச்சி பெற வில்லை. மக்கள் மக்களாக வாழக் கட்டாயம் நாம் பாடு பட வேண்டும். இது ஒரு சிறிய முயற்சி. சிறிய முயற்சிகள் தான் பெரிய வெற்றிகளின் ஆரம்பம். மனந்தளராமல் நாம் பாடுபடுவோம். வெற்றி நிச்சயம் என்று சொல்லி முடித்தார்.

- சோம.இளங்கோவன்

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


நிதிஷ்!

செய்தி: குஜராத்தில் மோடி 450 அடி உயரத்தில் படேல் சிலையை அமைக் கிறார். அதற்குப் போட்டி யாக நிதிஷ்குமார் பீகாரில் உலகிலேயே மிகப் பெரிய இந்துக் கோயிலைக் கட்டு கிறார். - செய்தி

சிந்தனை: குளிக்கப் போய் சேற்றில் விழலாமா நிதிஷ்?

தமிழ் ஓவியா said...

மோடியைப் பார்த்து கேட்க முடியாத கேள்வி

மத்திய அரசு நிதி என்பது மக்களின் வரிப் பணமா? அல்லது ராகு லின் தாய்மாமன் வீட்டுச் சீதனமா என்று ராய்ப் பூரில் வினா எழுப்பி யுள்ளார் மோடி.

குஜராத்தில் மோடியால் வளர்ச்சி வளர்ச்சி என்று கூறுகிறார்களே - அதெல்லாம் மோடியின் மாமியார் வீட்டுப் பணமா என்று கேட்க முடியாது. காரணம் கட்டிய மனைவியையே நட்டாற்றில் விட்டவராயிற்றே மோடி!

தமிழ் ஓவியா said...


அன்னதானம்!


தினமணி வெள்ளி மணியில் (15.11.2013) தானத்தின் பலன் என்ற தலைப்பில் மறைந்த காஞ்சி சூப்பர் சீனியர் சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களின் அருளுரை இதோ:

தானத்தின்பலன்

எல்லா தானங்களிலும் அன்னதானம் விசேஷம். பகவானும் கீதையில், எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச் சாப்பிடு கிறானோ அவனுடைய பாபத்தையும் முழுக்க அவ னேதான் அனுபவித்தாக வேண்டும். வேறு யாரும் அதில் பங்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்கிறார்.

பிறருக்குப் போடாமல், தான் மட்டுமே தின்கிறவன் சாதம் சாப்பிடவில்லை. பாபத்தையே புசிக்கிறான் என்கிற மாதிரி சொல் கிறார். அன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால் அதிலேதான் ஒருத்தரைப் பூரணமாகத் திருப்திப் படுத்த முடியும்.

பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு இந்த மாதிரியானவற்றை எவ் வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறவன் அதற்கு மேல் தந்தாலும் வேண்டாம் என்று சொல்ல மாட்டான். அன்னம் போடு கிறபோதுதான் ஒருத்தன் என்னதான் முட்ட முட்டச் சாப்பிட்டாலும் ஓர் அள விற்கு மேல் சாப்பிட முடியாது. ஓர் அளவுக்கு மேல் போய் விட்டால், ஐயையோ இனிமேல் போடாதீர்கள் என்று மன்றாடச் செய்கிறான். இம்மாதிரி ஒருத்தன் பூர்ண மனஸோடு திருப்தி தெரி விக்கிற போதுதான் தானத் தின் பலன் பூர்ணமாகக் கிடைக்கும்.- காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர்

ரொம்ப சரி.. சிறப்பா கவே சொல்லியிருக்கிறார். பாராட்டக் கூடச் செய்ய லாம்.

காஞ்சீபுரம் சங்கர மடத்தில் இன்றைக்குக் கூட, அங்கு சமைக்கப்பட்டு மீதமான உணவை என்ன செய்கிறார்கள்? குழி தோண்டி அல்லவா புதைக் கிறார்கள்! உண்மையா இல்லையா?
அன்னதானத்தைப்பற்றி ஆகாயம் வரை அள்ளி விடும். அந்தப் பெரியவாள் மீதி அன்னத்தை ஏழை எளியவர்களுக்கு வழங்கிட வழி செய்திருக்கக் கூடாதா?

அதே நேரத்தில் வடலூர் இராமலிங்க அடி களாரை எடுத்துக் கொள்ளுங்கள்.அவர் அன்று ஏற்றி வைத்த அடுப்பு நெருப்பு இன்று வரை அணையவில்லையே! அன்னதானம் அன்றாடம் வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது போய்ப் பார்த்தாலும் காணலாமே.

அதனால்தானே அவர் வள்ளலார் என்று அன் பொழுகப் போற்றப்படு கிறார். ஆனால் பார்ப்பனர் களின் கர்மா தத்துவப்படி, பட்டினி கிடப்பது அவாள் அவாள் தலையெழுத்து என்பதுதானே!

இந்த ஜென்மத்தில் கர்மப் பலன்படி பட்டினி கிடந்து அந்தத் துன்பத்தை அனுபவித்தால் அடுத்த ஜென்மத்தில் நல்லது கிடைக்கும் என்பவர்கள் இதுபோன்ற அருளுரை களைக் கூறுவதில் அர்த்தம் இல்லை.

நாத்திகர்களுக்கு வைத்தியம் பார்க்காதே என்று சொல்லக் கூடியவர் தான் அவாள் அகராதியின் மகாப் பெரியவர்! - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


தேர்தல் கருத்துக் கணிப்பு

தேர்தல் கருத்துக் கணிப்பு தடை செய்யப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை யாகும். இப்பொழுது அந்தக் கருத்தினைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு, அதுபற்றி சட்டம் இயற்றலாம் என்று மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது.

ஒரு ஜனநாயக நாட்டில் மக்களைச் சிந்திக்க விடாமல் கருத்துக் கணிப்பு என்கிற பெயரால் கருத்துத் திணிப்பினைச் செய்து வருகிறார்கள்.

ஊடகங்களில் 71 சதவிகித அளவுக்கு உயர் ஜாதி பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள். டில்லியைப் பொறுத்தவரை 300-க்கும் மேற்பட்ட மூத்த ஊடக இயலாளர்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்டவர் இல்லை என்பது அதிர்ச்சிக்குரியது.

பணியாற்றுபவர்கள் தான் இப்படி இருக் கிறார்கள் என்றால் ஊடகங்களின் உரிமை யாளர்கள் எல்லாம் யாரென்றால், பெரும்பாலும் பெரும் பெரும் பண முதலாளிகள்தான்.
பிறவி முதலாளித்துவவாதிகளான பார்ப் பனர்களும், பொருள் முதலாளிகளும் சேர்ந்து தங்கள் கருத்துக்களை மக்கள் மத்தியில் திணிக்கும் நயவஞ்சக வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களுடைய நன்மைக்காகவும், இலாபத் துக்காகவுமான ஓர் ஆட்சியை உருவாக்குவதில் இவர்களின் பங்கு கணிசமாக இருந்து வருவது கண்கூடு.
இவர்களுக்கு, மோடி பிரதமராக வர வேண்டும் என்பது மனம் கொண்ட அளவுக்கு ஆசையும், வெறியும் உண்டு.

சென்னையில் பெரிய பெரிய முதலாளிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் மோடிதான் பிரதமராக வர வேண்டும் என்று தங்கள் விருப் பத்தினை வெளிப்படுத்தியதை இந்த இடத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும்.

டாட்டா நிறுவனத்தின், நானோ கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு 1100 ஏக்கர் விளை நிலங்களை மோடி தாரை வார்த்தார் என்றால் எந்த அடிப்படையில்? முத்திரைத்தாள் கட்டணமும் விதி விலக்காம்; 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் கடன் தொகை ரூ.9750 கோடி - வட்டி விகிதம் என்ன தெரியுமா .1 (புள்ளி ஒன்று) சதவீதமாம்.

இப்படி முதலாளிகளையும், கார்ப்பரேட் கம்பெனிகளையும் ஊட்டி வளர்க்கக் கூடியவர் தான் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி.

இப்படிப்பட்டவரை பிரதமர் நாற்காலியில் அமர வைக்க எந்த முறைகளையும் கையாளக் கூடியதுதான் முதலாளித்துவம்! அவர்களின் கைகளில் பலமாகச் சிக்கிக் கொண்டுள்ள ஊடகங்களைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். கருத்துக் கணிப்புகளை வெளி யிட்டு, அடுத்த பிரதமர் நரேந்திரமோடிதான் என்கிற மாயையைப் பாமர மக்களின் மனதில் திணிக்கும் வேலையில் திட்டமிட்டு இறங்கி யுள்ளனர்.

மோடியின் ஆட்சியில் 2002இல் நடைபெற்ற படுகொலையைத் திரையிட்டு மறைத்துவிட்டு மோடியினால் குஜராத் வளர்ச்சி வளர்ச்சி என்ற பொய்க் கதையை மூக்கும் முழியும் வைத்து இறக்கைக் கட்டிப் பறக்க விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இது ஜனநாயக உணர்வைக் கொல்லைப்புற வழியாகக் காயடிக்கும் கயமையாகும்.

பெரிய முதலாளிகளுக்காக அவர்களிடம் லஞ்சப் பணம் பெற்றுக் கொண்டு அவர் களுக்காக நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியவர்களின் வரிசையில் பிஜேபி முதலி டத்தில் இருந்த தகவல் வெளி வரவில்லையா?

இன்னொன்றையும் கவனிக்கத் தவறக் கூடாது; 2009- 15ஆவது மக்களவைத் தேர்தலில் பிஜேபிதான் ஆட்சிக்கு வரப் போகிறது என்று பெரும்பாலான ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டனவே அவை என்னாயிற்று? பொய்த்துப் போக வில்லையா?
மக்களைக் குழப்பும், மோசடி வேலையைச் செய்யக்கூடிய கருத்துக் கணிப்பைத் தடை செய்ய வேண்டியது மிகவும் அவசியமே!

தமிழ் ஓவியா said...


அழித்தாக வேண்டும்



மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி, நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்கும் மதம் எதுவானாலும் அதை அழித்தாக வேண்டும்.
(குடிஅரசு, 18.12.1927)

தமிழ் ஓவியா said...


தேசூர் உபாத்திமைச் சங்கத்தில் பார்ப்பனக் குறும்பு


கும்பகோணத்தில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்க 11ஆவது மகாநாட்டில் சொற்பொழிவு

இம்மாதிரியான வகுப்பு மகாநாடுகள் நமது நாட்டில் நடந்து வருவது நாட்டின் முற்போக்குக்கு ஏற்றதா இல்லையா என்பது கேள்வி. பலர் இது கெடுதல் எனச் சொல்லுகிறார்கள் எனினும் வகுப்பு மகாநாடு அல்லாத (வகுப்புவாதமல்லாத) மகாநாடுகளே இந்நாட்டில் இல்லை என்பதே எனது அபிப்பிராயம்.

ஒவ்வொரு வகுப்பாரும் தங்களுடைய உரிமைகளைக் கேட்கவே மகாநாடுகள் நடத்துகிறார்கள். மற்றொரு வகுப்பார் தலையெடுக்காமல் அடிக்கவும், மற்ற வகுப்பார் உரிமைகள் பெறாமலிருக்கவுமே பலர் பல மகாநாடுகளை நடத்துகிறார்கள். ஆனால் நமது நாடார் மகாநாடோ அப்படியில்லை. பிறருக்குக் கெடுதல் செய்யாமல் நாடார் மகாஜனங்களின் நன்மையை நாடியும், உரிமைகளைப் பெறவுமே இம் மகாநாடு நடைபெறு கின்றது. வகுப்பு மகாநாடுகளும், வகுப்பு வாதங்களும் மேல் ஜாதியாராலும் அவர்களுடைய கொடுமைகளாலும் தான் ஏற்பட்டவை. துவேஷத்தை உண்டாக்க நாம் மகாநாடுகள் கூட்டுவதில்லை துவேஷம் வேண்டாம், எல்லோரும் சமம் என்று சொல்லுங்கள்; சொல்லவே நாம் இம்மகாநாடு கூட்டியிருக் கிறோம்.

நம் நாட்டில் அடிக்கடி சொல்லப்பட்டுவரும் ஒற்றுமை என்ற வார்த்தைகளும், பிரச்சினைகளும் வெளிவேஷமே. தங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய நிலைமை ஒவ்வொரு வருக்கும் ஏற்பட்ட பின்னரே உண்மை ஒற்றுமை ஏற்படும். ஒருவருக்கொருவர் ஒற்றுமையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டியது அவசியம். அதற்கான வேலைகளைச் செய்யச் சுதந்திரம் ஒவ்வொரு சமூகத்துக்கும் இருக்கவேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் சுயமரியாதை, சமத்துவம், சுயமதிப்பு ஏற்பட வேண்டும். அதன் மூலந்தான் தேச முன்னேற்றமடையும். உண்மையான தேசியம் என்பது சுயமரியாதை ஒன்றே சுயமரியாதையைப் பொறுத்தேதான் சுயராஜ்ஜியமிருக்கிறது. சகலரும் ஒன்று. மேலோர், கீழோர் என்று உணர்ச்சி இருக்கவே கூடாது.
- குடிஅரசு - சொற்பொழிவு - 09.10.1927

தமிழ் ஓவியா said...


தேசூர் உபாத்திமைச் சங்கத்தில் பார்ப்பனக் குறும்பு

தேசூர், போர்டு எலிமென்டரி ஆண்கள் பாட சாலையில் 10-09-1927இல் உபாத்திமைச் சங்கம் கூடிற்று. அதில் அக்கிராசனம் வகித்தவர் ஒரு பார்ப் பனர், காரியதரிசியும் ஒரு பார்ப்பனர். மேற்படி தேதியில் ஒற்றுமை என்கிற விஷயத்தைப் பற்றிப் பேசினவரும் ஒரு பார்ப்பனர். இவர் இவ்விஷயத் தைப்பற்றிக் கூறிக்கொண்டு வரும்போது சில மேற்கோள்களை எடுத்துக்காட்டினார். அதில், தற்காலந்தான் ஒற்றுமையைப்பற்றி ஒவ்வொரு சங்கத்திலும் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன் பேசப்பட்டதே கிடையாது. மேன்மை தங்கிய விக்டோரியா மகாராணி காலத்திலும், எட்வர்ட் அரசர் முற்பாதி அரசாட்சி யிலும் ஒற்றுமையைப் பற்றி கூறினதே கிடையாது. காங்கிரஸ் கட்சியும், ஜஸ்டிஸ் கட்சியும் தோன்றி, ஜஸ்டிஸ் கட்சியார் ஒரு பூடக மாகயிருந்த இந்து மத விஷயங்களை வெளிப் படுத்தியதால் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஒற்றுமை சீர் குலைந்தது என்று கூறினார். பாவம் இப்பார்ப்பனர், பார்ப்பனரல்லாதாருக்கு இழைத்து வரும், வருகின்ற தீங்குகளை, அப்படியே காக்கக் கடவுள் கருணைகூர்ந்தார் போலும்.

மேலும் கவர்ன்மெண்ட் உத்தியோகங்களில் உள்ள பார்ப்பன உத்தியோகஸ்தர்களுக்கு அதிகக் கடினமான விஷயங்களையும், பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர்களுக்கு இலேசான விஷயங் களையும் கொடுத்து விவகாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றார். பார்ப்பனர்களுக்குத்தான் அதிகப் புத்திக் கூர்மை, அதனால் பார்ப்பனர்களைக் கொண்டு மிகக் கடின விஷயங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பதை இப்பார்ப்பனர் தம் உள்ளக் கிடக்கையாய்க் கொண்டு பார்ப்பனரல்லாதாரை இழித்துக் கூறினார். என்னே! இப்பார்ப்பனரின் ஒற்றுமைக் கூற்று. மேலும் இவர் கைவிரல்களில் ஏற்றத்தாழ்வு இருப்பதுபோல், மானிட வர்க்கத்திலும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் உண்டு என்று ஓர் ஆதி திராவிட உபாத்தியாயரைப் பார்த்து பஞ்சமன்-பஞ்சமன் என்று பல தடவைகளில் மிகத் தாழ்வு படுத்திக்கூறி அமர்ந்தார். பிறகு ஓர் ஆதி திராவிட உபாத்தியாயர் எங்களை பஞ்சமன் என்று சொல் லுவது கிடையாது. ஆதிதிராவிடர் என்று கூறப்படு கிறது, கவர்ன்மெண்டாராலும் அங்கீகரிக்கப் பட்டிருக் கிறது. ஆகையால் எங்களை இவ்விதத் தாழ்வுபடுத் திக் கூறினது இச்சங்கத்திற்கழகல்ல எனக்கூறி அமர்ந்தார். பிறகு ஓர் உபாத்தியாயர் வருணாசிரமம் பிரித்தவர்கள் நான்கு வருணங்களைத்தான் பிரித்திருப்பதாகத் தெரிகிறது. பஞ்சமன் என்ற ஒரு வருணத்தை உண்டாக்கினதாகத் தெரியவில்லை. ஆகையால் முதலில் பேசிய அங்கத்தவர் அவ்வார்த் தையை வாபஸ் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். உடனே அப்பார்ப்பன ஆசிரியர் வாபஸ் வாங்கிக் கொள்ளமாட்டேன். தொன்று தொட்டு வந்த வார்த்தையை நாம் ஏன் தள்ளவேண்டும்? அப்படித் தள்ளுவது கூடாது என்று கூறினார். என்னே இப்பார்ப்பனரின் தைரியம். பிராமணத் தன்மையினின்றும் நீங்கியவர்கள் சண்டாளன் என்று இவர்கள் வேதமே கூறுகின்றன. ஆகையால் இதற்கு இப்பார்ப்பனர் என்ன சமாதானம் கூறப் போகிறார்?

பிறகு அக்கிராசனாதிபதி மத விஷயங்களை இங்கு புகுத்தக்கூடாது என்று கூறினாரேயொழிய, தாழ்வான வார்த்தைகளை உபயோகித்தது தவறு என்று கூறினாரில்லை. என்னே! இப்பார்ப்பனர்களின் ஒற்றுமை. பிறகு ஓர் அங்கத்தினர், முதலிலேயே தடுத்திருந்தால் மிகவும் நல்லது. இப்பொழுது தடுப்பது அவ்வளவு உசிதமல்ல எனக்கூறினார். முதலில் பேசிய இப்பார்ப்பன ஆசிரியர், தன்னிடத் தில் இவ்வளவு வகுப்புப் பிரிவினைகளை வைத்துக் கொண்டு ஒற்றுமையைப் பற்றிப் பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறதென்று நாம் கடாவுவதற்கு என்ன சமாதானம் கூறப் போகிறார். இப்பார்ப்பனரின் ஒற்றுமையே ஒற்றுமை. பளா! பளா!!
- குடிஅரசு - கட்டுரை - 18.09.1927

தமிழ் ஓவியா said...

டில்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டுக் கிருஷ்ணனும்: சித்திரபுத்திரன்

டில்லியில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி என்கிற பண்டிகையின்போது தீண்டாதவர்கள் என்கிறவர்களை எல்லாம் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பத்திரிகையில் காணப்படுகிறது. புராணங்களின்படி கிருஷ்ணன் என்பதாக ஒரு சுவாமியோ, ஆசாமியோ இருந்ததாக நாம் ஒப்புக்கொள்வதானால் அது ஒரே சாமியாகத்தான் இருந் திருக்கலாமே தவிர, டில்லிக்கு ஒரு கிருஷ்ணனும், தமிழ்நாட்டுக்கு ஒரு கிருஷ்ணனும் இருந்திருக்க முடியாது. அப்படியிருக்க டில்லி கிருஷ்ணன் தீண்டாதவர்கள் கோவிலுக்குள் போனால் ஓடிப்போகாமல் கோவில்களுக் குள்ளாகவே தைரியமாய் உயிருடன் இருக்கும்போது, நமது தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள கிருஷ்ணன் மாத்திரம் தீண்டாதவர்கள் உள்ளே போனால் கோவிலைவிட்டு ஓடிப்போவதோ அல்லது ஒரே அடியாய் செத்துப்போவதோ ஆனால் இந்தமாதிரி கிருஷ்ணனை வைத்து பூஜை செய்வதால் நமக்கு என்ன பலன் அவரால் உண்டாகக்கூடும்? ஒரு மனிதன் உள்ளே வந்தால் தாக்குப்பிடிக்காத கிருஷ்ணன யாருக்கு என்ன செய்ய முடியும்? ஆதலால் தமிழ் நாட்டு கிருஷ்ணனை துரத்திவிட்டு டெல்லி கிருஷ்ணனைத்தான் தருவித்துக் கொள்ளவேண்டுமேயல்லாமல் இந்த மாதிரி சக்தியில்லாத, கிட்டப்போனால் ஓடிப்போகிற கிருஷ்ணன் நமக்கு அரை நிமிஷங்கூட கண்டிப்பாய் உதவவே உதவாது.
- குடிஅரசு - கட்டுரை - 28.8.1927

தமிழ் ஓவியா said...


தாலிபற்றி ஒரு தகவல்

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கருத்துகள் பகுத்தறிவு சிந்தனை மக்களை சென்றடைந்துள்ளது என்பதற்கு உதாரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நான் பார்த்ததை விடுதலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

புதுயுகம் என்ற தனியார் தொலைக்காட்சியில் வீடு தாண்டி வருவாயா என்ற நிகழ்ச்சியில் ஒருவர் கூறியது. அவர் சிறு வயதாக இருந்தபொழுது உறவினர் ஒருவர் தன் மனைவி அவர் சொல்வதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும் எனவும் எதிர்த்து கேட்கக் கூடாது; ஏன்னா நான் தாலி கட்டியவன் என அடிக்கடி கூறுவார். ஒரு முறை அவர் மனைவி கோபப்பட்டு தாலியை கழற்றி வீசி விட்டார். குடும்பத்தினர் அனைவரும் அதிர்ந்து விட்டனர்; பின் அனைவரும் மனைவியை சமாதானபடுத்தி தாலி அணிவித்தனர். சில நாட்களில் மீண்டும் அதே போன்று தாலி கட்டினவன் சொன்னா கேட்கனும் என கூறவும், மனைவி கோபத்தில் தாலியை கழற்றி அம்மியில் வைத்து நசுக்கி விட்டார். பின் அனைவரும் சமாதானபடுத்த மீண்டும் அணிந்து கொண்டார் எனவும், தாலி பெண்களை அடிமைபடுத்துகிறது எனவும் கூறினார். தாலிமீது தனக்கு நம்பிக்கையில்லை எனவும் தன் திருமணத்திற்கு பின் மனைவியுடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று வீடு வந்த பொழுது மனைவியின் தாலி எங்கோ தொலைந்து விட்டது. எனவும் மனைவி இதனால் பயந்துவிட்டார். உறவினர்கள் பூசை பரிகாரம் கூறினர். நான் எதுவும் ஆகாது பயப்பட வேண்டாம் என மனைவிக்கு ஆறுதல் கூறினேன். உறவினரின் தாலிபற்றிய கதையைச் சொன்னேன் உறவினரையும் அவருக்குக் காண்பித்து ஆறுதல் கூறினேன் என்று அவர் நிகழ்ச்சியில் தெரிவித்தார். இப்படி அவர் அறிந்தோ அறியாமலோ பெரியார் கொள்கை அவரைச் சென்றடைந்துள்ளது.

தமிழ் ஓவியா said...


எடை மேடை

நிழலற்ற பயணம்

பி.ஆர்.சுபாஸ் சந்திரன் எதையும் கொடுக்காமல் ஒன்றை இலவச மாகக் கொடுக்க முடியாது. இது இயற்கை வகுத்த வழி.உழைப்பின் தரத்தையும் அள வையும் பொறுத்தே ஒருவனுக்குக் கிடைக்கும் புகழ்,பதவி,மரியாதை போன் றவை அமையும் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறார் சுசில் குமார் சிந்தே. தலித்வாடாவிலிருந்து தலைநகர் வரை (தற்போது நடுவண் அரசில் உள்துறை அமைச்சராக இருக்கும்) சிந்தே அவர்களின் பிறப்பு வளர்ப்பு என்பதில் தொடங்கி அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த எத்தனையோ சுவையான நிகழ் வுகள் "நிழலற்ற பயணமாக"(வாழ்க்கை வரலாறாக) தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

ஆங்கிலம்,இந்தி,தெலுங்கு,மராத்தி ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ள இந்நூல்,தமிழுக்குப் புது வரவு.ஆற்றல் மிக்க எழுத்தாளர் பி.ஆர்.சுபாஸ் சந்திரனால் எழுதப்பெற்ற சிறந்த நூல்.நல்ல மொழி நடையோடு வந்துள்ள ஓர் அருமையான தமிழ்ப்படைப்பு.

- மூனாதானா.

நூல் வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.

பக்கங்கள்: 454. விலை:ரூ.300.

தமிழ் ஓவியா said...


ஏழைகளின் பிரதிநிதிகளாம் இவர்கள்!


ஏழைகளின் பிரதிநிதிகளாம் இவர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது உள்ள 80 (எண்பது) நாடாளுமன்ற உறுப்பினர்களில் 52 பேர் கோடீஸ்வரர்கள்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் சராசரியாக ரூபாய் 4 கோடியே 9 லட்சம் சொத்து உடையவர்கள்.

அதே உத்தரபிரதேசத்தில் சட்டப் பேரவையில் உள்ள 403 சட்டப் பேரவை உறுப்பினர்களில் 271 பேர் கோடீஸ்வரர்கள்.

இந்தியா ஏழை நாடு என யார் சொன்னது?


இதுதான் இந்தியா
தலைமயிர் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கொடுக்கும் தலைமயிர் காணிக்கை மூலம் இந்தஆண்டு வருவாய் 72 கோடி என அறியப்படுகின்றது. திருப்பதி செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் தென்னிந்தியர்கள் எனினும் அதிகம் மயிர்க் காணிக்கை செலுத்துவோர் தமிழ்நாட்டு மக்களே ஆவர். உயிருக்கு இல்லையேனும், மயிருக்காவது மதிப்பு இருப்பதை எண்ணி ஆறுதல் அடையலாம். உலகிலேயே அதிக நீளமான முடி இந்தியப் பெண்களுக்கே உள்ளது என்பது தற்போதைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாசுபாடு பட்டியலில் நமக்கு முதலிடம்

அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அதிக மாசடைந்த நகரங்களின் பட்டியலில், இந்தியாவிலுள்ள லக்னோ நகரம் முதலிடத்தில் உள்ளது. உலகில் அதிக மாசடைந்த 25 நகரங்களில் இந்தியாவில் பெருவாரியாக 4 மாநிலங்கள் முறையே லக்னோ 1ஆவது இடத்திலும், கொல்கத்தா 14ஆவது இடத்திலும், மீரட் 17ஆவது இடத்திலும், மும்பை 21ஆவது இடத்திலும் உள்ளன. இந்நகரங்களில் காற்று மற்றும் நீர் மாசுபாடு அதிகமாகக் காணப்படுவதாக ஆய்வுக் குழுவினரால் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடரும் இடிபாடுகள்

அண்மைக் காலமாக மகாராட் டிரா மாநிலத்தில் அடுக்குமாடிக் கட்டட இடிபாடுகளால் உயிரிழப் போரின் எண்ணிக்கை அதிக ரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக மும்பை, தானே பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் 4 அடுக்குமாடிக் கட்டடங்கள் இடிந்துள்ளன. கட்டட இடிபாடு களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை சற்றொப்ப 168 பேர். இவ்வாறு இடிந்த கட்டடங்கள் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பாகக் கட்டப்பட்டவை. மிக அதிக விலை கொடுத்து நிலங்களை ரியல் எஸ்டேட் மூலம் பெறப்பட்டதே இத்தகைய சட்டவிரோத கட்டடங்கள் உருவானதற்கான மூல காரணங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- தமிழ் இலெமுரியா அக்டோபர் 15 2013

தமிழ் ஓவியா said...


பார்ப்பனச் சேரி



சதுர்வேதி மங்கலங்கள்
அக்ரகாரமாய்ச் சுருங்கி
தேய்ந்த கட்டெறும்பாய்
அதுவுமான பார்ப்பனச் சேரிகள்
தம் அடையாளங்கள் தொலைக்க
ஆதலினாலங்கு குடியேறிய
ஒரு சூத்திரன் வீட்டு
பட்டாசாலையில் அமர்ந்து
தங்கள் சரிந்த சரிதம் எண்ணி
தங்களுக்காக தான் அழுவது
புகையினால்தான் எனக்காட்டி
வரிகள் சரியா எனத்தெரியாத
புரியாத மொழியில்
அவசர அவசரமாய்
மந்திரங்களை ஓதும்
அந்த கருப்புப் பார்ப்பன புரோகிதனின்
கவனங்கள் என்னவோ
யாசகப் பையில்தான்.
அக்ரகாரம் = பார்ப்பனச் சேரிகள் (Madras University
1936ல் வெளி யிட்ட Tamil Lexicon

தொகுப்பு: வையாபுரிப் பிள்ளை தலைமை யிலான குழு)

- பரமத்தி வேலூர் செல்மா காமராசன்

தமிழ் ஓவியா said...


சர்க்கரை வியாதி முற்றிலும் குணமாகுமா?


சர்க்கரை வியாதி என்றால் என்ன? இரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் இருந்தால் அது சர்க்கரை வியாதி எனப்படுகிறது. இந்த குளுகோஸை சரியான அளவில் வைத்திருக்கும் வேலையைத் தான் கணையம் செய்கிறது. இன்சுலின் என்ற ஹார்மோனை கணையம் சுரக்கிறது. இந்த இன்சுலின்தான் குளுக் கோஸை சரியான அளவில் இரத்தத்தில் சேர்க்கிறது. மிஞ்சி இருக்கும் குளுகோஸை சேமித்து வைத்து தேவைப்படும் போது வழங்குகிறது.

சர்க்கரை வியாதி ஏன் வருகிறது? கணையம் இன்சுலின் சுரப்பதை நிறுத்திவிட்டால் குளுகோஸை கட்டுப்படுத்தும் நிலை இல்லாமல் ஆகி விடுகிறது. எனவே அளவின்றி குளுகோஸ் இரத்தத்தில் கலக்கிறது. இதனால் சர்க்கரை வியாதி வருகிறது.

இந்த குளுக்கோஸ் எங்கிருந்து வருகிறது? நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் செரிமானமானதும் குளுகோஸாக மாற்றப்படுகிறது. இந்த குளுகோஸ் இரத்தத்தில் சேர்ந்து பயணமாகி செல்களுக்கு வழங்கப்படுகிறது. செல்களில் குளுக்கோஸ் எரிக்கப்பட்டு சக்தி கிடைக்கிறது. குளுக்கோஸ் சக்தியைத் தானே தருகிறது? அதிகம் கலந்தால் ஏன் வியாதியாகிறது? அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே.

தடுக்க என்ன வழி? தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அரைமணி நேரமாவது காலாற நடக்க வேண்டும். பரம்பரையாக வரக்கூடும் என்பதால் முன்னோருக்கு இவ்வியாதி இருந்தால் எச்சரிக்கை மிக அதிகம் தேவை. இரத்த பரிசோதனை மூலம் சர்க்கரை அளவை அறிய வேண்டும். வெறும் வயிற்றில் சர்க்கரை அளவை அறிய வேண்டும் வெறும் வயிற்றில் 100.1நி சாப்பிட்ட பின் 140.1நி இருந்தால் அது சர்க்கரை வியாதியின் தொடக்கம் என அறிதல் வேண் டும். மேலும் செய்ய வேண்டியது என்ன?

உணவுக் கட்டுப்பாடு மிக மிக அவசியம் இரத்தத்துக்கு எவ்வளவு குளுகோஸ் தேவையோ அந்த அளவுக்குத்தான் சாப்பிட வேண்டியதிருக்கும். எனவே வயிறுமுட்ட சாப்பிடக் கூடாது. குளுகோஸ் அதிகமுள்ள கிழங்குகள், பழங்கள் ஆகியன குறைவாக உண்ண வேண்டும். பட்டினியும் இருக்கக் கூடாது. மது, புகை, மாமிச உணவுகள் வேண்டாம். உடல் எடை போடக் கூடாது. தேவையற்ற கவலைகள் தேவையில்லை. மிஞ்சிய சர்க்கரையின்போது இன்சுலினை ஊசி மூலம் செலுத்தி நிவாரணம் பெறலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி வியாதி உள்ளவர்கள் செயல்பட வேண்டும். முற்றிலும் குணமாக்க முடியுமா? அப்படி ஒரு மருந்து இதுவரை இல்லை. எனவேஉணவுக் கட்டுப்பாடு தான்மிகவும் பயனுடையது. சர்க்கரை வியாதியின் பின் விளைவுகள் மோசமானது. இதயம், சிறுநீரகம், கண்பார்வை போன்ற முக்கியப் பகுதிகளைப் பாதிக்கும். எனவே அலட்சியமாக இருக்கக் கூடாது.

- பொதிகை மின்னல், நவம்பர் 2013

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


பூமியிலிருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் 7 கிரகங்களுடன் கூடிய சூரியக் குடும்பத்தைக் கண்டுபிடித்த அய்ரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் அதற்கு எச்.டி.10180 என்று பெயரிட்டுள்ளனர்.

பூமியிலிருந்து 700 ஒளி ஆண்டு தூரத்திலுள்ள புதிய கிரகத்தை நாசா அனுப்பிய கெப்லர் விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. அதற்கு கெப்லர் 78பி எனப் பெயரிட்டுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் மங்கல்யான் விண்கலத்தைத் தாங்கிய பி.எஸ்.எல்.வி.சி_25 ராக்கெட் நவம்பர் 5 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

தமிழ் ஓவியா said...

நட்சத்திரக் கூட்டம்



பூமியிலிருந்து 1300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தை டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யும் கோவாவைச் சேர்ந்த இந்திய அமெரிக்க விஞ்ஞானி விதால் தில்வி, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிங்கல் ஸ்டீல் மற்றும் அவரது ஆராய்ச்சி மாணவர் மிமி சாங் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.

உலகிலேயே முதன்முறையாக இந்த நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்தது மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும், இந்தக் கண்டுபிடிப்பு பிரபஞ்சம் உருவானது பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் விதால் தில்வி கூறியுள்ளார். அண்டவெளியில் ஏற்பட்ட பிக்பேங் என்ற பெரு வெடிப்புக்குப் பின் 700 மில்லியன் ஆண்டுகளில் இந்த நட்சத்திரக் கூட்டம் உருவாகியிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

பேரிழப்பு


திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைவு!

திருச்சிக்கு 9.11.2013 அன்று காலை சென்றபோது, திராவிடர் எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள்பற்றி கழகப் பொறுப்பாளர்களிடம் கலந்து பேசிக் கொண்டிருந்தபோது, பேரிடி போன்ற செய்தி ஒன்று எங்களைத் தாக்கியது.

எனது வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களும், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களும் என்னை நெருங்கி, தயங்கி நின்று சொன்னார்கள்.

கழகப் பொருளாளர் எனது அன்பு சகோதரர் கோ.சாமிதுரை அவர்கள் சற்றுமுன் சென்னையில் உள்ள (கோட்டூர்புரம் பகுதி) இல்லத்தில் காலமானார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் மிகவும் தாக்குண்டோம்!

சில காலம் உடல் நலிவுற்று இருந்த நிலையில், அவர் தேறி வந்தது ஆறுதலாக எங்களுக்கு -_ இயக்கத்திற்கு இருந்தது! ஆனால், சற்றும் எதிர்பாராத விதத்தில் அவரது முடிவு ஏற்பட்டதை எப்படித் தாங்கிக் கொள்வது என்பதே தெரியவில்லை.

எங்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இச்செய்தி என்ற நிலையில், அவரது அன்புச் செல்வங்களான மகன்கள், மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் எப்படித்தான் தாங்கிக் கொள்ள முடியும்?

மாணவப் பருவம் தொட்டே சகோதரர் மானமிகு கோ.சாமிதுரை அவர்கள் எனக்கு நெருக்கமான இயக்கத்தவர். அரை நூற்றாண்டுக்குமேல் எங்கள் பாசமும், உறவும், நட்பும் மேலானதாக இருக்கும் ஒன்று. அவர் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ., படித்தபோது, நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அதே காலத்தில் படிப்பில் இருந்தவன். திராவிடர் மாணவர் கழகம் எங்களை இணைத்தது. சட்டக் கல்லூரியில் இருவரும் இணை பிரியாதவர்களாக இருந்தோம்.

இயக்கத்திற்குச் சோதனை ஏற்பட்ட போதெல்லாம், சற்றும் சபலமோ, சலனமோ கொள்ளாத இளைஞர் அவர் அன்று. எனவேதான், அருமை அய்யாவின், அம்மாவின் பெரும் நம்பிக்கை, பாராட்டைப் பெற்ற எனது உற்ற தோழர் என்ற பெருமைக்கு ஆளாகி, கடைசிவரை காத்தவர்.

வழக்குரைஞர் தொழில் தொடங்கும்போது கடலூரில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்தோம். அவர் கல்லக்குறிச்சியில் பிரபலமான நிலையில், வழக்குரைஞர் தொழிலைக்கூட கடந்த 10 ஆண்டுகளுக்குமுன் துறந்து, இயக்கத் தொண்டாற்ற பெரியார் திடலுக்கே தன்னை ஒப்படைத்துவிட்டு, சென்னைவாசியானார் என்னைப் போலவே!

அவரது வாழ்விணையர் மறைந்த சரோஜா அவர்களும், எனது வாழ்விணையரும் கடலூரில் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். இப்படி இரு குடும்ப உறவுகளும் என்றும் மறக்க முடியாதவை -_ பிரிக்க முடியாதவை!

பாழும் சாவு பிரித்துவிட்டதே!

வரும் (நவம்பர்) 26 ஆம் தேதி அவரது 81ஆம் ஆண்டு பிறந்த நாள்; என்னைவிட ஒரு சில நாள்கள்தான் மூத்தவர் அவர்!

அவரது பிரிவு கழகத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் பள்ளமும், இழப்பும் எளிதில் ஈடுசெய்ய முடியாத ஒன்று!

என்றாலும், தந்தை பெரியாரின் அறிவுரைக்கேற்ப, இயற்கையின் கோணல் புத்திக்குமுன் என்ன செய்ய இயலும்?

எனவே, நாம் அவருக்குப் பிரியா விடையைக் குளமாகும் கண்களோடும், கனத்த இதய வலியோடும் தந்து வீர வணக்கத்தைத் தெரிவித்து, எங்களது பெரும் பெரியார் குடும்பமான அந்தக் குடும்பத்துச் செல்வங்களுக்கும் தேற்ற முடியாத எமது ஆறுதலை, இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

தமிழ் ஓவியா said...

மத்தியக் கல்வித் துறையின் மக்கள் துரோகம்


தமிழ்நாட்டில் மத்திய அரசு, ஏற்கெனவே ஆக்கிரமித்தது போதாது என்ற முறையில், கல்வித் துறையில் புதியதோர் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்தியாலயா திட்டப்படி, மத்திய அரசும், தனியாரும் கூட்டுச் சேர்ந்து மாதிரிப் பள்ளிகள் என்று தனியே தொடங்கிட முயற்சிப்பதாக வந்துள்ள செய்தி- சரியாக இருக்குமானால் _ அதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கல்வி என்பது ஏற்கெனவே மாநிலப் பட்டியலில் இருந்த முக்கிய துறையாகும்; அதனை _- நெருக்கடி கால நிலையில் _- ஓசையில்லாமல் மத்திய அரசு, பொதுப் பட்டியலில் மத்தியக் கல்வித் துறையின் மக்கள் துரோகம் கொண்டுபோய்ச் சேர்த்து மாற்றம் ஏற்படுத்தியது.

இது நடந்தது 1976-இல்; அதன்பின் வந்த ஆட்சிகள் இதை ஒரு முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டு, மீண்டும் பழையபடி மாநிலப் பட்டியலுக்குள் கல்வியைக் கொண்டு வரத் தவறியதன் விளைவே, பல்வேறு சமூக அநீதிகளும், சமூகக் கொடுமைகளும் சட்ட பூர்வமாகவே மத்திய அரசால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன _- மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்ற கல்வித் துறையின் மூலம். எடுத்துக்காட்டாக, மாநில அரசு ஒழித்த பொது நுழைவுத் தேர்வு என்பதை _- மருத்துவக் கல்வி, மற்றும் தொழிற்படிப்புகளில் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை ஆதிக்க அதிகார சக்திகள் செய்து வருகின்றன. ஏற்கெனவே உச்ச நீதிமன்ற பெரும்பான்மைத் தீர்ப்பு நுழைவுத் தேர்வு ரத்து சரிதான் என்று கூறிய பிறகும் மருத்துவக் கவுன்சில் மறுசீராய்வு மனுவைப் போட்டுள்ளது; மத்திய அரசும் அதனை ஆதரிக்கிறது!

இது போன்ற கல்வியில் இரண்டு எஜமானர்கள் ஒரே நேரத்தில் அதிகாரம் செலுத்தும் விசித்திர நிலை ஏற்பட்டுள்ளது!

மாநிலங்களின் உரிமைகள் _- அதிகாரங்கள் ஏற்கெனவே பெரிதும் பாதிக்கப்பட்டு, வெறும் முனிசிபாலிட்டிகளைப் போன்று மாநில அரசுகள் ஆக்கப்பட்டுள்ள நிலையில், இது போன்ற புதிய அறிவிப்புகள் மேலும் மேலும் மாநிலங்களின் அதிகாரப் பறிப்புக்குத்தான் வழி வகுக்கும். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிக்கை, காலத்தால் தரப்பட்ட சரியான எச்சரிக்கை மணி!

மாநில அரசின் ஒப்புதலோ, அல்லது அதனுடன் கலந்து ஆலோசிக்காமலோ இப்படி தன்னிச்சையாக மத்திய அரசு நடந்து கொள்வது எவ்வகையில் நியாயம்?

கல்வியை வியாபாரமாக்காதே என்ற குரல் ஓங்கி முழங்கிக் கொண்டே இருக்கும் நிலையில், வெளிநாட்டுப் பெரும் வணிகத் திமிங்கிலங்களுக்குக் கதவு திறந்து விட்டு, நம் நாட்டில் சில்லறை வணிகத்தினை அழிப்பது போல, இப்போதுள்ள பள்ளிகளையும்கூட மறைமுகமாக கொஞ்சம் கொஞ்சமாக இத்தகைய மாதிரிப் பள்ளிகள் -_ வணிகமயம் ஆகும்; அதுவும் மத்திய அரசும் தனியாரும் (Private - Public Partnership) நடத்துவது எவ்வகையில் நியாயப்படுத்தக் கூடியது?

கல்வி அடிப்படை உரிமை (Education is Citizen’s Fundamental Right - Right to
Education) என்று அரசமைப்புச் சட்டத்தில் சட்ட ரீதியாக அறிவிக்கப்பட்டபின், இப்படி மத்தியக் கல்வித்துறை ஒரு முடிவு எடுத்திருப்பது மிகப் பெரிய, அரசியல் சட்ட விரோதப் போக்காகும்!

இதனை, தமிழ்நாட்டுக் கல்வி அறிஞர்கள், மாநில உரிமை காக்க விழைவோர், உண்மையான ஜனநாயக விரும்பிகள், அனைவரும் ஒட்டு மொத்தக் குரலில் எதிர்க்க வேண்டும்; தமிழக அரசும் முதல்வரும் உடனடியாக எதிர்ப்பைப் பதிவு செய்தாக வேண்டும்.

முன்பு ராஜீவ்காந்தி கொண்டு வந்த நவோதயா பள்ளிகளே ஹிந்தித் திணிப்புக்கு மறைமுக வழி என்று கண்டித்து நிறுத்திய தமிழ்நாடு, இப்பொழுது சும்மா இருக்காது _- இருக்கவும் கூடாது. கிளர்ந்தெழ வேண்டும்.

- கி.வீரமணி, ஆசிரியர்

தமிழ் ஓவியா said...


கழகப் பொருளாளர் சாமிதுரை மறைவிற்கு பேராசிரியர் க.அன்பழகன் இரங்கல்


சென்னை, நவ.17- திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் கடந்த 9.11.2013 அன்று சென்னையில் மறைவுற்றார். அவரது மறைவிற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் இரங்கல் தெரிவித்து, கழகத் தலைவருக்கு அனுப்பிய கடிதம் வருமாறு:-

திராவிடர் கழகப் பொருளாளரும், இளமை முதல் தந்தை பெரியாரின் தொண்டருமாக விளங்கிய தோழர் கோ.சாமிதுரை அவர்களின் மறைவு குறித்து அறிந்தபோது, மிகவும் வருத்தமுற்றேன்.

கொள்கையில் உறுதி,

இலட்சியத்தில் ஆர்வம்,

இயக்கத்தில் பிடிப்பு,

தலைமையை மதிக்கும் பண்பு ஆகியவற்றால் பெருமை பெற்றவராக, திராவிடர் கழகத் தலைவர் திரு.வீரமணி அவர்களின் முழு நம்பிக்கையைப் பெற்றவராகத் திகழ்ந்த தோழர் சாமிதுரை அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.

அவரது மறைவால் துயருற்றவர்கட்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

- இவ்வாறு பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் எழுதியுள்ள அவரது இரங்கல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்