Search This Blog

6.11.13

நரேந்திரமோடியின் முகமூடிகளை கிழித்துக் காட்டுவோம், கிளர்ந்தெழுவீர்!

பத்து ஆண்டுகளுக்குமுன் இதே திருச்சியில் - திரள்வீர் திருச்சி திராவிடர் எழுச்சி மாநாட்டுக்கு!
வரும் 9 ஆம் தேதி சனியன்று திருச்சி மாநகரிலே திராவிடர் எழுச்சி மாநாடு - அழைப்பினைக் கொடுத்துள்ளார் தமிழர் தலைவர்.

நரேந்திர மோடி என்ற நரவேட்டை மனிதன் இதே திருச்சியிலே வந்து, தன் இந்துத்துவா நச்சு நாக்கைச் சுழற்றிச் சென்றுள்ளார்.

மாநிலங்களே தேவையில்லை என்ற கோல்வால் கரின் கோஷத்தைக் கிளப்பியுள்ளார். ஜனசங்கத்தின் உந்திக் கொடியிலிருந்து வார்த்தைகளை உறிஞ்சி எடுத்து உதார் விட்டுச் சென்றுள்ளார்.

மாநிலங்கள் என்று வந்துவிட்டால், இனம் - மொழி - பண்பாடு - தன்னுணர்வு என்னும் வெடிமருந்து காயாமல் இருக்கும் அல்லவா?

தங்களுக்கென்று ஒரு நாடு இல்லாத கூட்டம் அடுத்தவர்களுக்கு நாடு இருந்தால் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் அல்லவா!

இந்தியா - பாரததேசம் ஒரே நாடு - அது இந்து நாடு - ஒரே மதம் - அது இந்து மதம் - ஒரே மொழி -- அது சமஸ்கிருதம் என்பது நிலைநாட்ட மொழிவாரி மாநிலம் முட்டுக்கட்டையாக இருக்குமே! அதனால் தான் மொழிவாரி மாநிலத்தைப் பார்த்துப் பதை பதைத்துப் பேசியிருக்கிறார் மோடி.
பத்தாண்டுகளுக்குமுன் இதே திருச்சியில் ஹிந்து இளைஞர் மாநில மாநாடு ஒன்றைக் கூட்டினார்கள் (பிப்ரவரி 8, 9-2003).

அகில உலக விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கால் வந்தார் - பொதுச்செயலாளர் பிரவீன் தொகாடியா வந்தார். முன்னவர் பொறியாளர் - பின்னவர் டாக்டர்.

ஆனாலும், புத்தி மட்டும் பாசிச மேய்ச்சல் அவர் களோடு மட்டுமா? காஞ்சி சங்கராச்சாரியார்கள் இருவரும் வந்தனர்.

அங்கே என்ன நடந்தது? அசோக் சிங்காலுக்கும், தொகாடியாவுக்கும் தங்கத் திரிசூலங்கள் பரிசுகளாக அளிக்கப்பட்டன.

அந்த மாநாட்டைப் பற்றி நாம் சொல்வதைவிட கல்கி தலையங்கம் தீட்டி தபசு செய்தது அல்லவா - அதைச் சொல்லுவோம்:

அந்தத் திரிசூலங்களின் மும்முனைகளும் முறையே மதம் மாற்றும் கிறிஸ்தவர்களையும், பயங்கரவாத முஸ்லிம்களையும், மதச் சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளையும் அழிப்பதற்காக ஏற்பட்டுள்ளன என அந்த மேடையிலேயே அளிக்கப்பட்ட விளக்கம்தான் தொண்டு என்பதற்கு இவர்கள் காட்டும் லட்சணமா?

கல்கியே (23.2.2003) மனம் பொறுக்காமல் தலையங்கம் தீட்டியதே!
நியாயமாக இதன்மீது அரசு நடவடிக்கை எடுத் திருக்கவேண்டும் - எடுக்கப்படவில்லை என்பது கெட்ட வாய்ப்பே!

அந்த மதவெறி மாநாட்டை எதிர்த்து மதி துலங்கும் மானமிகு மாநாட்டை உடனடியாகவே அதே திருச்சி யிலேயே நடத்திக் காட்டியது (2.3.2003) திராவிடர் கழகம். திராவிடர் கழக மாணவர் எழுச்சி மாநாடு அது.

நாத்திக பூமியை - திராவிடத்தை நொறுக்குவோம் என்று அவாள் மாநாட்டில் அக்னிதாண்டவம் ஆடினார்கள் அல்லவா!

அந்தச் சவாலை ஏற்றுதான் கழகத்தின் மாணவர் சேனை கால் முளைத்த கருஞ்சட்டைக் கடலாக எழுச்சித் தாண்டவத்தை நடத்திக் காட்டிற்று.
அவர்கள் சூலம் எடுத்து வந்தார்கள்.

தந்தை பெரியார் கையில் இருந்த தடியின் அடை யாளமாக தடியோடு வீரநடை போட்டது நமது வீர வேங்கைப் படை!

அந்த மாநாட்டுக்கு நமது தமிழர் தலைவர் அழைப்புக் கொடுத்தார்.
திராவிட மாயையை நொறுக்கு வார்களாம்! மதச் சார்பின்மை என்பது என்ன? பன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் மிகுந்த இந்தியாவில் என் மதம்தான் ஆள வேண்டும்; மற்றவர் கள் அதற்கு அடி பணியவேண்டும் என் பது பச்சைப் பாசிசம் அல்லவா? மதச்சார் பின்மை என்பது அர சியல் சட்டம் வகுத்த நெறி! அதனை ஏற் பவர்களை, அதன்படி ஒழுகுபவர்களை, ஒழிப்பவர்கள் அர சியல் சட்ட நெறி களை அழிப்பவர்கள் அல்லவா? இவர்களை சட்டமும், அரசு களும் அனுமதிப்பது கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வ தல்லாமல் வேறு என்ன?
எனவேதான், திராவிட மாணவர் மாநாடு லட்சிய நோக்கோடு திருச்சியில் கூடுகிறது. திராவிடர் பாடிவீடு அமைத்து, சவால்களை எதிர்கொண்டு, குலதர்மக் கொடியை இறக்கி, மதவெறி மாய்த்து, மனிதநேயம் காக்கும் மாநாட்டினை நடத்திட இருக்கி றோம். ஜாதி ஒழிப்பு சமுதாய லட்சியம் காண களங்கள் அமையட்டும்! வாரீர்!! திருச்சிக்கு வாரீர்!!! என்று 12.2.2003 அன்று தமிழர் தலைவர் கொடுத்த அழைப்பு வரும் 9 ஆம் தேதி நடக்கவிருக்கும் திராவிடர் எழுச்சி மாநாட்டுக்கும் பொருந்தும், முக்காலமும் பொருந்தும்.

மோடியை முன்னிறுத்துவதன் முக்கிய நோக்கம் என்ன?

குஜராத்தைத் தூக்கி நிறுத்திவிட்டாராம் - அதேபோல, இந்தியாவைத் தூக்கி நிறுத்தப் போகிறாராம்.

பொய்யிலேயே பிறந்து, பொய்யிலேயே வளர்ந்த ஊத்தை வாய்கள், எந்த எல்லைக்கும் சென்று பொய் மூட்டைகளை வண்டி வண்டியாகக் கொட்டும்.
  • இந்தியாவில் குஜராத் வளர்ச்சியில்  14 ஆம் இடம்!
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு மூக்கை உடைத்துக் கூறிவிட்டதே.
  • இந்தியாவிலேயே குழந்தைகள் மரணம் அதிகம் குஜராத்திலேதான் என்ற புள்ளி விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன.
  • எழுத்தறிவில் 18 ஆம் இடம்.
  • குடிதண்ணீர் வழங்குவதில்கூட ஒவ்வொரு ஜாதிக்கும் இந்த இந்த நேரம் என்று  அட்டவணை போட்டு ஜாதி நெருப்புக்கு நெய்யை ஊற்றிக்கொண்டே இருப்பவர்தான் இந்த மோடி.
  • நானோ கார் உற்பத்திக்கு டாட்டாவுக்கு ரூ.1100 ஏக்கர் விவசாய நிலங்கள் தானம்!
  • முத்திரைத்தாள் கட்டண விதிவிலக்கு. கொடுக்கப்பட்ட கடனோ 9750 கோடி ரூபாய். தவணையோ 20 வருடங்கள். வட்டி விகிதம் என்ன தெரியுமா? அதிர்ச்சி அடையாதீர்கள் 0.1 (புள்ளி ஒன்று) சதவிகிதம்தான்.
  • வெங்காய விவசாயிகளின் வயிற்றில் அடித்து 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களை நிர்மா நிறுவனத்துக்குத் தாரை வார்த்த தம்பிரான்தான் இவர்!
  • மதவாதத்தின் செல்லப் பிள்ளை-    கார்ப்            பரேட் முதலாளிகளின் பஞ்சணையில் சயனம் கொள்ளும் ஆஞ்சநேயர்!
  • இவர்தான் இந்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடி!
இந்த முகமூடிகளை கிழித்துக் காட்டுவோம், கிளர்ந்தெழுவீர்!

இந்துத்துவாவில் பதுங்கி இருக்கும் இந்த ஆதிசேஷன்களைத் தோலுரித்துத் தொங்கவிடுவோம் தோழர்களே, தோள் தூக்கி வாரீர்!

இந்து ராஜ்ஜியமா - இழிவுபடுத்தப்பட்டோருக்கான ஏற்றத் தாழ்வை ஒழிக்கும் லட்சிய ராஜ்ஜியமா? முடிவெடுப்போம் - ஈட்டி முனைகளாய் வாரீர்! வாரீர்!!

----------------- மின்சாரம் அவர்கள் 5-11-2013 ‘விடுதலை” யில் எழுதிய கட்டுரை

34 comments:

தமிழ் ஓவியா said...


செவ்வாய்க்கான ராக்கெட்: சாதனையும் - வேதனையும்!

- ஊசி மிளகாய்

மங்கள்யான் என்ற பெயரில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் 2 மணி 38 நிமிடத்திற்கு, ஸ்ரீஹரிகோட்டா, சத்திஷ் தவான் பி.எஸ். எல்.வி.சி.-25 ராக்கெட் மூலம், ஏவுதளத்தில் விண்கலம் ஏவப்படுகிறது.

இஸ்ரோவின் இந்த முயற்சியில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை முதற் கொண்டு பல நூற்றுக்கணக்கான விண்வெளி ஆய்வாளர் களான விஞ்ஞானிகளின் உழைப்பும், சாதனை யும் இதனைச் சாத்தியமாக்கியுள்ளது.

செவ்வாய்தோஷம் என்ற பெயரில் மூடநம்பிக் கைக்கு ஆட்பட்டு, பல நூற்றுக்கணக்கான பெண்களுக்குத் திருமணமே ஆகாமல் மன உளைச்சலில் சிக்கி மாண்டு கொண்டுள்ள மகளிர் உலகம் உள்ள ஒரு நாடு, செவ்வாய்க் கோளுக்குத் தனது விண்கலத்தை அனுப்ப ஒரு செவ்வாய்க்கிழமையையே தேர்ந்தெடுத்துள்ளது மகிழ்ச்சி சாதனை என்றாலும்,

ஆனால் விளக்கு அடியில் சூழ்ந்துள்ள இருட்டுப் போல, ஒரு வேதனையும் வெட்கப்பட வேண்டிய செய்தியும் உள்ளது!

கீழே உள்ள படத்தையும், செய்தியையும் படியுங்கள்:

மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாகப் பறக்க வேண்டி இஸ்ரோ தலைவர் இராதா கிருஷ்ணன் (நாயர்) தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

நேற்றுமுன்தினம் இரவு அவர் திருப்பதிக்கு வந்தார். கோயில் சாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கோயிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் லட்டு, தீர்த்தப் பிரசாதம், சாமி படம் ஆகியவை வழங்கப்பட்டன. தொடர்ந்து அதி காரிகள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினார்கள்.

அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் ஏழுமலையான் கோயிலில் நடந்த சுப்ரபாத சேவையிலும் கலந்து கொண்டு, இஸ்ரோ தலைவர் மீண்டும் சாமி தரிசனம் செய்தார். அப்போது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் மாதிரி வடிவத்தை ஏழுமலையானின் பாதங் களில் வைத்து வழிபட்டார்; விண்கலம் விண்ணில் வெற்றிகரமாகப் பறக்க வேண்டிக் கொண்டார்.

பின்னர் இஸ்ரோ தலைவர் தன் மனைவியுடன் நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்குச் சென்றார். அங்கு நடந்த பூஜையிலும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். (- தினந்தந்தி 5.11.2013)

- அங்கு உழைத்த விஞ்ஞானி களால் முடியாததை திருப்பதி ஏழுமலையானும், காளஹஸ்தி சிவனும் (இவரது கோபுர கலசம் இரு முறை வீழ்ந்ததை காப்பாற்ற முடியாதவர் இந்தச் சிவன்; ஏழுமலையான் உண்டியலுக்கே துப்பாக்கிப் போலீஸ் பாதுகாப்பு - அவ்வளவு சர்வ சக்தி அவருக்கு!) - காப்பாற்றப் போகிறார்களா?

இஸ்ரோ தலைவர் நாயருக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பதுபற்றி நமக்கு ஆட்சேபனை இல்லை; அது அவரது சொந்த விஷயம். ஆனால் விண்கலத்தின் மாதிரி வடிவத்தைக் கோயி லுக்கு எடுத்துச் செல்வது, வேண்டுவது எவ்வகையில் நியாயம்? யார் இவருக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?

இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள Secularism - - மதச் சார்பின்மையைக் காப்பதா இது?

எல்லா மதங்களையும் ஒன்று போல் பாவிக்க என்று ஒரு விளக்கம் என்றால் இவர் எந்த சர்ச்சுக்குப் போனார்? எந்த மசூதிக்குப் போனார்?

போனாலும் நியாயமாகுமா என்பது முக்கிய கேள்வி!

அதோடு அரசியல் சட்ட அடிப்படைக் கடமைகள் 51A(h) பிரிவின்படி -
இதுதான் அறிவியல் மனப்பான்மையை பரப்பும் முறையா? Scientific Temper
என்பது இஸ்ரோ தலைவரின் அகராதியில் இதுதானா?

மத்திய அரசு இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு வாய் பொத்தி, கைகட்டி இருக்க லாமா?

முன்பு ஏவப்பட்ட ராக்கெட் தோல்வி அடைந்த போதும், அதற்குமுன் ஏழுமலையானைத் தரிசனம் செய்து, உண்டியல் காணிக்கை செலுத்தித்தானே நடந்தது? அதற்கு என்ன சமாதானம் கூறப்பட்டது?

அறிவியல் மனப்பான்மைப் பரப்புதலின் லட்சணம் இதுதானா?

வெட்கம்! மகா வெட்கம்!! சாதனை ஒருபுறம் - வேதனை மறுபுறம்!

தமிழ் ஓவியா said...


இசைப்பிரியா


இசைப்பிரியா என்ற பெயர் இன்றைய தினம் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் கேட்கிறது. என்னதான் சாமர்த்தியமாகப் பிரச்சாரம் செய்தாலும், என்னதான் உலகின் சில நாடுகள் இலங்கையின் பக்கம் நின்று அதன் அதிபர் ராஜபக்சேவின் முதுகுப் பக்கம் முட்டுக் கொடுத்துப் பார்த்தாலும் - ராஜபக்சே என்பவர் மனித குலத்தின் நாசகார சக்தி - ஹிட்லரே வெட்கப்படும்படியான குரூரர், நரமாமிசம் தின்னும் காட்டு மனிதன் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி நோஃபயர் சோன் என்ற ஆவணப்படத்திலிருந்து பிரிட்டனின் 4ஆவது அலை வரிசை வெளியிட்ட இந்தப் படம் உலகில் மனச்சாட்சியைக் குலுக்கித் திகிலடையச் செய்து விட்டது.

விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய இசைப் பிரியா பலத்த காயங்களுடன் மரணம் அடைந்து கிடக்கும் அந்தக் காட்சி அசாதாரணமானது.

2010இல் இசைப்பிரியா காட்டப்பட்ட காட்சி யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்பட்டது.

இப்பொழுது வெளியாகி இருக்கும் காட்சி - அந்தப் பெண்ணை உயிருடன் பிடித்து நிர்வாண மாக்கி அரைகுறை உடையுடன் இராணுவத் தினர் இழுத்துச் செல்வதும், அந்தப் பெண் பிரபாகரனின் மகள் என்று கருதுவதும், அந்தப் பெண் மறுத்த நிலையில், பாலியல் வக்கிரத் துக்கு இரையாக்கிக் கொல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

வழக்கம்போல இலங்கை சிங்கள இனவாத அரசு அந்தக் காட்சிகள் போலியானவை என்று கூறுவது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்கதல்ல.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலையிலும் சரி, வெள்ளைக் கொடியேந்தி சமாதானக் கோரிக்கையுடன் சென்ற போராளி களைச் சுட்டுக் கொன்ற போதும் சரி எதை அந்த வல்லூறுகள் ஒப்புக் கொண்டுள்ளன?

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறவிருக்கும் இந்தக் காலகட்டத்தில், ராஜபக்சேவுக்குத் தொண்டையில் குத்திய ஈட்டியாகி விட்டது இந்த ஒளிபரப்பு!
இதற்குப் பிறகும் ராஜபக்சே பக்கம் பேசுவதற்கு எவரும் கூச்சமும், வெட்கமும் படவே செய்வார்கள் என்பதில் அய்யமில்லை.

இனப்படுகொலை, மனித உரிமை மீறல் என்ற குற்றங்களின்மீது உலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட முழுத் தகுதியான பேர் வழிதான் ராஜபக்சே என்பதி லிருந்து தப்பிக்கவே முடியாத நிலை இன்று.

இந்திய அரசு இதற்கு முன் எந்த நிலை எடுத்திருந்தாலும் சரி, இதற்குப் பிறகு மறு சிந்தனைக்கும், முடிவுக்கும் உட்பட்டே தீர வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கு மேலும் செல்ல நினைத்தால், ராஜபக்சே பற்றி என்ன பொது அபிப்ராயம் ஏற்படுமோ அதில் பங்கு வாங்கிக் கொள்ளும் மானக்கேடு தான் மிஞ்சும்.

காங்கிரசைச் சேர்ந்த முக்கிய மத்திய அமைச்சர்களான ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம், ஜி.கே. வாசன் போன்றவர்களே இந்த முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், பிரதமராக இருந்தாலும் சரி, காங்கிரசின் உயர் மட்டக் குழுவானாலும் சரி இலங்கைக் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை;

வரலாற்றில் வீண் பழியையும், உலகத் தமிழர்களின், உலக மனித உரிமை யாளர்களின் நிரந்தர வெறுப்பையும் வலிய சம்பாதித்துக் கொள்ளவும் வேண்டாம் - வேண் டவே வேண்டாம் என்பதே நமது அழுத்தமான வேண்டுகோள்!

தமிழ் ஓவியா said...


அடைய முடியும்


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.

- (விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


கடவுளின் சக்தி இவ்வளவுதான்!

சங்கரன்கோவிலில் கோயில்
ராஜகோபுரத்தை மின்னல் தாக்கியது

சங்கரன்கோவில், நவ. 5-சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழைமையான 125 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தின் மீது நேற்று மின்னல் தாக்கியதில், ராஜாளி பொம்மை மற்றும் சிற்பங்கள் சேதம் அடைந்து நொறுங்கி விழுந்தன.

கி.பி.11ஆம் நூற்றாண்டில் உக்கிர பாண்டிய மன்னரால் எழுப்பப் பட்ட சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோயிலில் 9 நிலைகளுடன் 125 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் அமைந் துள்ளது. சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் நேற்று இடி, மின்னலுடன் கனமழை பெய் தது. அப்போது பலத்த ஓசையுடன் ராஜகோபுரத்தின் தென்பகுதியில் மின்னல் தாக்கி யது.

இதில் கோபுரத்தின் 9ஆவது நிலையின் கிழக்கு பகுதியில் இருந்த ராஜாளி பொம்மை சேதம் அடைந்தது. கோபுரத்தின் உச்சியில் பெரிய அளவில் அமைந்திருந்த கண் திருஷ்டியாளியின் கண்கள் சேதம் அடைந்தன. மேலும், கோபுரத்தின் பல பகுதிகளில் அமைந்திருந்த சிற்பங்களும் உடைந்தன.

கோவில் அருகே இருந்த வீடு களில் நூற்றிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் மற்றும் கணி னிகள் சேதமுற்றன.

தமிழ் ஓவியா said...

சாலை விபத்து : அய்யப்ப பக்தர்கள் நால்வர் சாவு

ரெட்டியார்சத்திரம், நவ.5- திண்டுக்கல் அருகே வேனும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி யதில், பெங்களூருவைச் சேர்ந்த, அய்யப்ப பக்தர்கள் நால்வர் இறந் தனர்; 18 பேர் காயமடைந்தனர். பெங்களூருவைச் சேர்ந்த, 14 பேர், தீபாவளி விடுமுறையை முன்னிட்டு, டெம்போ டிராவலர் வேனில் சபரிமலை சென்றனர். அங்கிருந்து மதுரை வந்து, மீனாட்சிஅம்மன் கோயிலில், சாமி தரிசனம் செய் ததும், பழநிக்குப் புறப்பட்டனர். நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு, திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம், மாங்கரை, பிரிவு அருகே வேன் சென்ற போது, ஓட்டுநர் தூங்கியதால், கோவையில் இருந்து மதுரை சென்ற, அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இதில், வேன் ஒட்டுநர் உட்பட, பெங்களூருவைச் சேர்ந்த நான்கு பேர் இறந்தனர். பேருந்து ஓட்டுநர் உட்பட, 18 பேர் காயமுற்றனர். ரெட்டியார் சத்திரம் காவல்துறை யினர் விசாரிக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...

பைக் மீது கார் மோதி
கோயில் பூசாரி பரிதாப பலி

புழல், நவ.5-புழல் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த வர் ஆனந்தன் (43). புழல் யாகாத் தம்மன் கோயில் பூசாரி. தீபாவளி யன்று பட்டாசு வாங்க தனது மகன் லோகேஷ் (16), மகள் தீபிகா (18) ஆகியோருடன் பைக்கில் புழலுக்கு புறப்பட்டார் ஆனந்தன்.

புழல் மத்திய சிறைச்சாலை ஜிஎன்டி சாலையில் சென்றபோது பின்னால் வந்த கார், பைக் மீது பயங்கரமாக மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட் டனர். ஆனந்தன் படுகாயம் அடைந் தார். லோகேஷ், தீபிகா லேசான காயத்துடன் தப்பினர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆனந்தனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி னர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலையில் ஆனந்தன் பரிதாபமாக இறந்தார்.

தமிழ் ஓவியா said...

காளஹஸ்தி கோவிலில் தீ விபத்து: கலைப் பொருள் விற்பனைக் கடை எரிந்து சாம்பல்

காளஹஸ்தி, நவ. 5- காள ஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவி லில் முகப்பு கோபுரத்தின் உள்ளே பக்தர்கள் தங்கள் காலணிகளை விடும் கவுண்டர் அருகே வெங்கடே சன் என்பவர் கலைப்பொருள் விற்பனைக் கடை வைத்து உள்ளார்.
நேற்று இரவு இவர் கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டார். இன்று அதிகாலை 3.30 மணி அள வில் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீ பரவிற்று.

தகவல் கிடைத்ததும் காளஹஸ்தி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த விலை உயர்ந்த கலைப் பொருட்கள், சுவாமி படங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. சேத மதிப்பு ரூ. 2 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


மக்களின் பகுத்தறிவுப் பூங்கா பெரியார் உலகம்!


திராவிடர் கழகப் பொதுக் குழுவில் எத்தனையோ வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக் கின்றன! ஆனால்.

எல்லாவற்றிற்கும் சிகரமாக... உலகத் தமிழர் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியில் பொங்கி வழிய போடப்பட்ட தீர்மானம் தான். திண்டிவனத்தில் 20.10.2013 அன்று போடப்பட்ட தீர்மானம் எல்லோருமே எழுந்து நின்று கைதட்டி, வரவேற்ற தீர்மானம் என்ற செய்தியை இதோ ஒரு பெரியார் உலகம் என்ற விடுதலை தலையங்கத்தின் வாயிலாக (21.10.2013) படித்த உலகத் தமிழர்கள் மட்டுமல்ல. உலகப் பகுத்தறிவாளர்கள் அனைவருமே எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்திருப் பார்கள் என்பது உறுதி!.. காரணம்...

தூக்கு மேடையில் இருந்துகொண்டு நான் நாஸ்திகன்தான்,அதுவும் நல்ல பரிசுத்தமான நாஸ்திகன்தான் என்று கூப்பாடு போட்டுச் சொல்லிக் கொள்ளத் தயாராயிருக்கிறேன் (குடியரசு 19.5.1929) என, 1929ஆம் ஆண்டிலேயே முழுக்க மிட்ட ஒரு நாத்திகப் பேரறிவாளருக்கு வைக்கப்படும் சிலையல்லவா, அதனால் தான்! அதோடு மட்டுமா?

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னாலேயே விடுதலை எனும் பெயரில் இதழ் நடத்தினார். நாடு வெள்ளையரின் முடியாட்சியின் கீழ் இருந்தபோதே குடியரசு என்ற ஏடு நடத்தினார். ஆகஸ்டு பரட்சிக்கு முன்பாகவே, சுடிஎடிடவ (புரட்சி) எனும் ஏடு நடத்தினார். அறியாமை இருளிலே மூழ்கி அடிமைத்தனத்திலே கட்டுண்ட கிடந்த தமிழினத்தை ஒளி உலகுக்கு அழைத்து வந்து அவர்களது பகுத் தறிவுக் கண்களைத் திறந்தார். அடிமை விலங்கை உடைத்து எறிந்து உரிமை உலகிலே நடமாட வைத்தார்... மொத்தத் தில் மனிதனை மனிதனாக வாழ வைத்தார்! இதனை எதிர்த்த பார்ப்பனீ யத்தின் ஆணிவேரையே அறுத் தெறிந்தார்! ஆம்.

இத்தகைய புரட்சியாளருக்குத்தான் சிலை! உலகிலேயே உயரமான வெண்கலச் சிலை 95 அடி உயரத்தில்! அதுவும் ஒரு எட்டாவது அதிசயமாக ஒர முழுமையான நாத்திகவாதிக்கு சிலை! உலகில் வேறு எந்த நாட்டிலுமே இல்லாத புதுமை! புரட்சி!!

சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில், கூடிய பெரியார் உலகம்! அதில், அய்யாவின் வரலாறு ஒலி - ஒளிக் காட்சியாக! அறிவும், அறிவியலும் கலந்த கோளரங்கம், பொழுது போக்குப் பூங்கா குழந்தைகளுக்கான அறிவியல் விளையாட்டுப் பொழுதுபோக்கு.. எண் ணிப் பார்க்கும்போது உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடு கிறது!

பார்ப்பனியம் என்ற வெடி மருந்துக் கிடங்குக்குள் சுயமரியாதை எனும் தீப்பந்தத்தை ஏந்தி நடக்கும்...

மிகத் துணிவான காரியத்தில் ஈடு பட்டு வெற்றி கண்ட தந்தை பெரியா ருக்கு நன்றி மறவா, பெரியாரின் பெருந் தொண்டர் தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள்... காலத்தாலழியாத.. வரலாற்றுச்சிறப்பு மிக்க நினைவுச் சின்னமே... பெரியார் உலகம்!...

அய்யாவின் சிலைக்காக.. அள்ளித் தருகிறது தமிழ்க் குடும்பங்கள்! ஆம்! உலகச் சுற்றுலாப் பயணிகளின் மையமாகி விளங்க இருக்கும் பெரியார் உலகம், 81வது பிறந்த நாள் காண இருக்கும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் வீரமணி அவர்களின்...

70 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வரும் தொண்டறத்தின் சிகரம்! அவரு டைய பிறந்த நாளன்று தமிழினம் காட்டும் நன்றி 1000 பவுன் அன்பளிப்பு!

திராவிடர் கழகத் தலைவருக்கு அளிக் கப்படும் ஒவ்வொரு காசும் பல லட்சங் களாக தமிழினத்திற்கே பயன்பட்டிருக் கிறது என்பதுதான் கடந்த கால வர லாறு ஆகவேதான் அய்யாவுக்கு சிலை என்றால்... அள்ளி, அள்ளித் தருகிறார்கள்!
சிறுகனூர் விரைவில் உலக மக்களின் பகுத்தறிவுப் பூங்கா! பாரே போற்றும் பெரியார் உலகம்!!

- நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


தமிழை இங்கிலீஷ் வரிவடிவத்தில் எழுதலாம் என்பதா?


தமிழ் இந்து ஏட்டுக்குக் கடும் எதிர்ப்பு!

இந்து அலுவலகத்துக்கு நேரில் சென்று தமிழின உணர்வாளர்கள் கண்டனம்!

சென்னை, நவ.5- தமிழை இங்கிலீஷ் வரி வடிவத்தில் எழுதலாம் என்று மலையாள நாட்டைச் சேர்ந்த ஜெயமோகன் என்ற பார்ப்பனர் இந்து தமிழ் நாளேட்டில் எழுதிய கட்டுரையைக் கண்டித்து திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சி களை, இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்து நாளிதழ் அலுவலகத்துக்கு நேரில் சென்று அதன் ஆசிரியரைச் சந்தித்து கண்டனங் களை நேரில் பதிவு செய்தனர்.

தமிழால் இணைவது தமிழை அழிப்ப தற்கா? எனும் தலைப்பில் கண்டனமும் எழுத் துப்பூர்வமாக இந்து ஆசிரியரிடம் அளிக்கப் பட்டது.

அதன் விவரம் வருமாறு:

இம்மடலின் இறுதியில் கையொப்ப மிட்டுள்ள, பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் ஆகியவற்றின் பொறுப்பாளர் களும், தமிழ் உணர்வாளர்களும் ஆகிய நாங்கள் தி இந்து நாளிதழில் (4.11.2013) வெளியாகியுள்ள எழுத்தாளர் ஜெயமோக னின் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? என்னும் கட்டுரையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழ் மொழிக்கும், இனத்துக்கும் எதிரான அக் கட்டுரையை வெளியிட்டுள்ள தி இந்து நாளிதழுக்கும் எங்களின் கடும் கண்டனத் தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதழியல் துறையில் மிக நீண்ட அனுபவம் உடைய ஒரு நிறுவனம் தமிழால் இணை வோம் என்னும் முழக்கத்தோடு தமிழ் நாளிதழ் ஒன்றைத் தொடங்கியபோது தமிழ் மொழிக் கும், இனத்திற்கும் வலிமை சேர்க்கும் முயற்சி என்று அதனை நம்பிய பலரின் தலையிலும் இடி விழுந்தாற்போல் இக்கட்டுரை அமைந் துள்ளது. தமிழ் மொழியை எவராலும் அழிக்க முடியாது, என்றாலும், எப்படியாவது அழித்து விடவேண்டும் என்ற நோக்கில் அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

உலகெங்கும் வாழும் பல கோடித் தமிழர் களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதத்திலும், ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தை இழிவுபடுத்தும் வகையிலும் எழுதப்பட்டுள்ள அக்கட்டுரையை தன் ஏட்டில் வெளியிட்டதன் மூலம் தமிழ்கூறு நல்லுலகை தி இந்து நாளிதழ் வேதனைப்படுத்தியுள்ள உண்மையை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வரு கின்றோம்.

எழுத்தாகிய உடல் இல்லையேல் மொழி யாகிய உயிர் அழியும் என்பார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். இப்போது தமிழ் மொழியின் உடலை அழிக்கும் முயற்சியில் ஒரு மாமேதை இறங்கியுள்ளார். அதற்கு தி இந்து நாளிதழ் துணை போகலாமா?

தன்னை ஒரு நாயர் என்று பெருமையாகக் கூறிக்கொள்ளும் அவர், மலையாள மண்ணின் மீது மாறாத பற்றுடையவர் என் பதை அறிவோம். அந்த மலையாள மண்ணில் மாற்றங்களை எல்லாம் செய்துமுடித்துவிட்டு, தமிழ் எழுத்து வடிவத்தை அழிக்க ஜெய மோகன்கள் புறப்படட்டும்.

மலாய் மொழியைத் தமிழுக்கு ஒப்பிட்டுக் காட்டுவது எவ்வகையில் பொருந்தும்? தங்களுக்கென்று தனி வரி வடிவம் இல்லாத நேரத்தில், பிற வரி வடிவங்களைக் கையாள் வது இயல்புதான். மலாய் மொழி ஆங்கில எழுத்துருவுக்கு வந்திருப்பதாய் இக்கட்டுரை யாளர் சொல்கிறார். அது இலத்தீன் எழுத் துருவிலும், சுமத்ரா பகுதியில் அரபு எழுத் துருவிலும் கூட எழுதப்படுகின்றது என்பதை அவர் அறிவாரா?

தமிழ் எழுத்துகளின் மூல எழுத்து பிராமி என்பது தவறான கருத்து என்பதை மொழி யியலாளர்களே இன்று ஏற்கின்றனர். அத னால்தான் தமிழ் பிராமி என அழைக்கத் தொடங்கியுள்ளனர். இதனை எல்லாம் மொழி யியல் மேதை ஜெயமோகன் அறிவாரா?

எழுத்துருவை மாற்றும்போது ஒலிப்பு முறை (உச்சரிப்பு) முற்றிலும் மாறிவிடாதா? தமிழ் நூல்களின் எழுத்துரு அனைத்தையும், ஒரு தலைமுறைக் காலத்தில் முற்றிலுமாக மாற்றிவிட வேண்டும் என்று ஜெயமோகன் துடியாய் துடிக்கிறார். தமிழின் சுவடுகள்கூட இல்லாமல் அதனை அழித்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடுதானே இது?

கனத்த நெஞ்சுடன் மீண்டும், மீண்டும் எங்களின் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இக்கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள் பட்டியல் வருமாறு:

தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்

சுப.வீரபாண்டியன், பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன், தலைமை இலக்கிய அணி, தி.மு.க.

க.திருநாவுக்கரசு, திராவிட இயக்க ஆய்வாளர்,

சைதை க.வ.சிவா, தமிழக வாழ்வுரிமை கட்சி,

மே.ப.காமராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி

தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

கீ.த.பச்சையப்பன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு

வா.மு.சே.திருவள்ளுவர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

பா.இறையெழிலன், உலகத் தமிழ்க் கழகம்

கோ.பாவேந்தன், தமிழ்த்தேச மக்கள் கட்சி

தமிழ்மகன், தமிழ்த்தேச மக்கள் கட்சி

உதயன், தமிழக கலை இலக்கியப் பேரவை

முத்தையாகுமரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி,

இரா.வில்வநாதன், தலைவர், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம்

ஆகியோர் கையொப்பமிட்டுக் கொடுத் தனர்

தமிழ் ஓவியா said...


மோடியை வாரிசாக ஏற்பாரா படேல்? காந்தியாரின் பேரன் சாடல்

புதுடில்லி, நவ. 5- குஜராத் முதல் வர் நரேந்திர மோடியை தனது கொள்கை ரீதியான வாரிசாக நாட் டின் முதல் உள்துறை அமைச்ச ரான சர்தார் வல்லபாய் படேல் அங்கீகரிக்க மறுத்திருப்பார் என்று காந்தியாரின் பேரன் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
சமீப காலமாக படேலை சொந் தம் கொண்டாடி புகழ்வதில் பாஜ கவின் பிரதமர் வேட்பாளரான மோடியும், காங்கிரஸ் கட்சித் தலை வர்களும் போட்டி போட்டுக் கொண்டு பேட்டி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேல் தொடர்பான வரலாற்றுப் புத்தகத்தை எழுதியுள்ள ராஜ் மோகன் காந்தி, சி.என்.என். அய்.பி. என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கல வரத்தை படேல் பார்த்திருந்தால், ராஜ நீதியை மோடி கடைப்பிடிக் காத காரணத்துக்காக அவர் மீது அதிருப்தி அடைந்திருப்பார். குஜ ராத்தைச் சேர்ந்த படேல், கலவ ரத்தை தடுக்க மோடி அரசு தவறி விட்டது குறித்தும், துயரச் சம்ப வத்தை கண்டும் மிகவும் வருந்தி யிருப்பார். தன்னை படேலின் வாரிசாக மோடி காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். இது படேல் குறித்த கருத்தை தவறாக மாற்றி விடும்.

காந்தியின் சீடராகவும், காங் கிரஸ்காரராகவும் இருந்தவர் படேல். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழித்தடத்தில் செல்பவர் மோடி. படேல் பின்பற்றிய கொள்கையை கடைப்பிடித்து, மோடி தன்னை வளர்த்துக்கொண்டால் எனக்கு மகிழ்ச்சியே. படேல் அணியை கட் டமைப்பதில் வல்லவர். மற்றவர் களுக்கு தனது வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார். அதே போன்று மோடியும் செயல் பட்டால், அது பாராட்டுக் குரியதே" என்றார்.

அதே சமயம், கடந்த 63 ஆண்டு களாக படேலை காங்கிரஸ் மறந்து விட்டது.

அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. நாட்டின் முதல் பிரதமரான நேருவுக்குப் பின், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இந்திரா, சஞ்சய், ராஜீவ், சோனியா, ராகுல் ஆகியோர் காங்கிரஸ் கட்சி யில் முக்கிய பங்கு வகித்தனர். அதே சமயம், படேலின் வாரிசுகள் கட் சியிலோ ஆட்சியிலோ பங்கேற்க வில்லை. நேருவை விட படேல் 14 ஆண்டுகள் மூத்தவர். அவரது உடல் நிலையும் சீராக இல்லை. அதனால்தான், படேலுக்கு பதிலாக நேருவை பிரதமராக்கினார் காந்தி யார். அவரின் இந்த முடிவை பின் னர் படேல் ஏற்றுக் கொண்டார். அதுதான் சரியானது என்றும் தெரிவித்தார். ஒரு காங்கிரஸ்கார ராக இருப்பதில் படேல் மிகவும் பெருமை கொண்டிருந்தார். 1947 ஆம் ஆண்டு வரை ஆர்.எஸ்.எஸ். ஸின் பணிகளை பாராட்டி வந்த படேல், காந்தி படுகொலைக்குப் பின் இந்துத்துவா அமைப்புகளை கடுமையாக எதிர்த்தார்" என்றார் ராஜ்மோகன் காந்தி.

தமிழ் ஓவியா said...

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் தலைமை உரையாற்றினார்.

அவர் தமதுரையில்...

இன்றைய தினம் ஒடிசா மாநில அரசு, தந்தை பெரியாரின் சிந்தனைகளைக் கொண்ட நூலை ஒடிசா மாநில மொழியில் வெளியிட்டிருக்கிறது. இதில் நமது கழகத்தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற ஒடிசா மாநிலம், புவனேஷ்வருக்குச் சென்றிருக்கிறார். நமக்கெல்லாம் பெரியார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்கிற பெருமை உண்டு. அய்யா அவர்கள், அவர் வாழ்ந்த காலத்தைவிட இப்போதுதான் அதிகம் பேசப்படுகிறார். அந்த வகையில் பெரியார் இன்று உலகமயமாகி வருகிறார். சிறீரங்கத்தை பார்த்த மக்கள் இனி சிறுகனூரைப் பார்க்கப் போகிறார்கள். மதமற்ற உலகமே மனித இனம் அமைதியாக வாழ நிரந்தரத் தீர்வாகும். இந்த வகையில் மதமற்ற உலகிற்கான கருத்துகள் பெரியாரின் கருத்துகள் ஆகும். இன்று (27.10.2013) காலையில் சென்னையில் மறைந்த பொறியாளர் மணிசுந்தரம் அவர்களது மறைவிற்கு சென்று வந்தோம். அவர்தான் நமது பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்குவதற்கு தமிழர் தலைவருக்கு வழிகாட்டியாக இருந்தவர். கல்லூரி தொடங்கப் போதுமான நிதி இல்லையே என்று வருத்தப் பட்டார். அப்போது ஆசிரியரிடம் மணி சுந்தரம், மிஸ்டர் வீரமணி, உலகில் யாரிடத்திலும் இல்லாத பெரும் மூலதனம் உங்களிடம் இருக்கிறது. அதுதான் பெரியார் எனும் டார்ச். அந்த டார்ச்சை எடுத்துக்கொண்டு நீங்கள் பாலைவனம் சென்றால் கூட அது சோலைவனம் ஆகும் என்று குறிப்பிட் டார். அது இன்று நடந்தேறி இருக்கிறது. அப்படிப் பட்ட ஆற்றல் நம் இயக்கத்துக்கு உண்டு. எனவே கழகத்தோழர்கள் புதிய நம்பிக்கை - உற்சாகத்துடன் நம்மால் மட்டுமே முடியும் என்பதைக் காட்டுவோம் இவ்வாறு அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


மோடி- ஒரு தமாஷ்!


நரேந்திர தாமோதர தாஸ் மோடி இந்திய நாட்டை ரட்சிக்க வந்த தேவதூதன், பாரத நாட் டைப் பாவிக்க வந்த மகா விஷ்ணுவின் அடுத்த கட்ட அவதாரம்போல இந்த நாட்டு ஊடகங்கள் காற்றடித்து வானில் பறக்க விடுகின்றனவே- அந்தச் சூட்சமத்தின் பின்ப(பு)லம் என்ன தெரி யுமா?

இந்தியாவில் ஊடகங் களில் பிரம்மாவின் நெற் றியிலே பிறந்த ஜாதியி னர் 71 சதவிகிதம். புதுடில்லியில் 300 இந்தி, ஆங்கில ஏடுகளில் மூத்த பத்திரிகையாளர்களில் தாழ்த்தப்பட்டவர் ஒருவ ரும் கிடையாது. எல்லாம் அவாள் மயமே!

மோடிபோல ஒரு தாழ்த்தப்பட்டவரோ பிற்படுத்தப்பட்டவரோ பேசி இருந்தால் எப்படி எப்படி யெல்லாம் கேலி பேசி, கிண்டல் அடித்து கூவத் தில் தூக்கி எறிந்திருப் பார்கள்.

வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் வ.உ.சி. தலைமையில் நடந்தது என்று சென்னையில் மோடி பேசவில்லையா? (ராஜாஜி தலைமையில் நடந்தது என்பதுதான் சரி!).

பாட்னாவில் என்ன பேசினார்? குப்தர் வம்ச பெருமையை நாம் நினைக் கும்போது சந்திரகுப் தரின் ராஜநீதி நினை விற்கு வருகிறது என் றாரே பார்க்கலாம். (சந் திரகுப்தர் மவுரிய வம்சம் என்பதே சரி!).

அடுத்த தமாஷ், அலக்சாண்டர் படை, உலகையே வென்றது. ஆனால், அந்தப் படை யைத் தோற்கடித்தவர்கள் பீகாரிகள் என்று பீகாரின் தலைநகரான பாட்னா வில் நீட்டி முழங்கினார்.

(உண்மை என்ன தெரி யுமா? அலக்சாண்டர் கங்கையைக் கடந்து இக்கரைக்கு வரவில்லை. தட்சசீலா என்று மோடி குறிப்பிடுவது பீகாரில் இல்லை, பாகிஸ்தானில் உள்ளது.

அலக்சாண்டர் சட்லஜ் நதிவரை மட்டுமே வந்தார் என்பது வரலாறு).

எப்படிப்பட்ட கோமா ளிக் கூத்துகள் இவை! மற்றவர்கள் இப்படியெல் லாம் உளறியிருந்தால், நம் ஊர் சோ ராமசாமி அய் யர்கள் எப்படியெல்லாம் நக்கல் அடித்திருப்பார் கள்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


நான் பெரியார் அவர்களை நன்கு அறிவேன்; அவர் கொள்கைகளைப் பின்பற்றி வருபவன் நார்வே நாட்டு அறிஞர் பெருமிதம்


நார்வே, நவ.6- நார்வே நாட்டுக்காரர் தமிழ் நாட்டுக்காரர் அறவழி என்று அறிந்தவுடன், ஓ, நீங்கள் பெரியார் நாட்டிலிருந்து வருகிறீர்களா? என்று கேட்டு அசத்தினார் நார்வே நாட்டுப் பேராசிரியர்.

இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அறவழி அவர்கள் திராவிடர் கழகத் தலைவர்

கி.வீரமணி அவர்களுக்கு அனுப்பிய கடிதமும், தகவல்களும் வருமாறு: வணக்கம், என் பெயர் அறவழி. நான் நார்வே நாட்டின் பொறியியல் நிறுவனம் ஒன்றில் பணி யாற்றுகிறேன். பணி தொடர்பான மூன்று நாள் பயிற்சி கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அலுவலக பணி நிமித்தமாக நான் முதல் நாள் கருத்தரங்கில் கலந்து கொள்ளவில்லை; மறு நாள் கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்ற போது பயிற்சியாளர் அர்லிட் நொர்டெ பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கும் முன்பு என்னைப்பற்றி அனைவரிடமும் அறிமுகப் படுத்தும்படி கூறினார். அதில் நான் தமிழ்நாட் டைச் சேர்ந்தவர். எனது சொந்த ஊர் காஞ்சிபுரம் என்றதும் அவர் வியப்படைந்தார். அவரது அடுத்த கேள்வி நீங்கள் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இருந்து வந்தவரா? என்று கேட்டார். மேலும் அவர், தந்தை பெரியாரின் கருத்து களை பல காலங்களாக படித்து வருபவர் என் றும், அவரது கருத்து களை தவறாது பின் பற்றிவருவதாகவும், கூறினார்.அதன் பிறகு நானும், அவரும் தந்தை பெரி யாரின் சிந்தனைகள் பற்றி பல கருத்துகளை பரிமாறிக் கொண் டோம். ஆனால் அவர் என்னைவிட பெரியா ரைப்பற்றி அதிகம் அறிந்துள்ளார். கருத் தரங்கம் முடிந்ததும் அவருடன் நிழற்படம் எடுத்துக்கொண்டேன். நாங்கள் இருவரும் பேசியது மற்றும் தந்தை பெரியார் பற் றிய அர்லிட் நொர் டெவின் கருத்துகளை பெரியார் பகுத்தறிவு என்ற எனது சமூக இணைய தளத்தில் பதியவிட்டிருந்தேன். அது உடனடியாக பல அயல்நாட்டு நண்பர் களிடம் சென்றடைந் தது. உடனடியாக இதை செய்தியாக்கி நார்வே உள்ளூர் பத்திரிகை ஒன்றிற்கு தந்தை பெரி யார் மற்றும் ஆசிரியர் வீரமணி அவர்களின் நிழற்படத்துடன் அனுப்பி வைத்தேன்.

அதை அந்த பத்திரிகை அப்படியே மறுநாள் வெளியிட்டிருந்தது. தந்தை பெரியாரின் கருத்துகள் மற்றும் திராவிடர் கழகத்தின் சமுதாயப்பணிகள் கடல் கடந்து அய் ரோப்பிய நாடுகளிலும் மதிப்புமிக்க ஒன்றாக இருப்பதை தமிழக மக்களுக்குத் தெரி விக்கும் விதமாக இந்தச் செய்தியை தெரிவிப்ப தில் பெருமையடைகி றேன். - இவ்வாறு அறவழி கிருபானந்தன் (பொறி யாளர் ரெனிஸெர்ச்ன் எஸ்லேவ் இரிக்ச்சன் செண்டர் நார்வே) அவர்கள் வெளியிட் டுள்ள செய்திக் குறிப் பில் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


சூழ்நிலை


பிறவியில் மனிதன் அயோக்கி யனல்ல; அறிவற்றவனல்ல; ஒழுக்கக் கேடான வனல்ல; சூழ்நிலை, சுற்றுச்சார்பு, பழக்க வழக்கங்களால் தான் மனிதன் அயோக் கியனாகவும், மடையனாகவும் ஆகின் றான்.
(விடுதலை, 11.11.1968)

தமிழ் ஓவியா said...

படேலின் முதுகுக்குப்பின் ஒளியும் மோடி!


படேலை, நரேந்திர மோடி கையில் எடுத்துக்கொண் டாலும், எடுத்துக்கொண்டார்; எட்டுத் திசையிலிருந்தும் மோடியை நோக்கி மொத்துகள் மொத்தமாக வந்துகொண் டிருக்கின்றன.

காந்தியார் அவர்களின் பேரன் ராஜ்மோகன் காந்தி உள்பட கணைகள் தொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

சர்தார் வல்லபாய் படேல் தொடர்பான வரலாற்றுப் புத்தகத்தை எழுதியுள்ள ராஜ்மோகன் காந்தி, சி.என்.என். அய்.பி.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தை படேல் பார்த்திருந்தால், ராஜ நீதியை, மோடி கடைப்பிடிக்காத காரணத்துக்காக அவர் மீது அதிருப்தி அடைந்திருப்பார். குஜராத்தைச் சேர்ந்த படேல், கலவரத்தை தடுக்க மோடி அரசு தவறி விட்டது குறித்தும், துயரச் சம்பவத்தை கண்டும் மிகவும் வருந்தியிருப்பார். தன்னை படேலின் வாரிசாக மோடி காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். இது படேல் குறித்த கருத்தை தவறாக மாற்றி விடும்.

காந்தியின் சீடராகவும், காங்கிரஸ்காரராகவும் இருந்தவர் படேல். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழித்தடத்தில் செல் பவர் மோடி. படேல் பின்பற்றிய கொள்கையைக் கடைப்பிடித்து, மோடி தன்னை வளர்த்துக்கொண்டால் எனக்கு மகிழ்ச்சியே. படேல் அணியை கட்டமைப்பதில் வல்லவர். மற்றவர்களுக்கு தனது வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார். அதேபோன்று மோடியும் செயல்பட்டால், அது பாராட் டுக்குரியதே! என்று காந்தியார் அவர்களின் பேரன் சி.என்.என்., அய்.பி.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

தமது அமைப்பின் கொள்கைகளை, கோட்பாடுகளைச் சொல்லி வாக்குச் சேகரிக்க முடியாது என்பதை சந்தேகத் துக்கு அப்பாற்பட்ட முறையில் உணர்ந்துவிட்ட நிலையில், 450 அடி உயர வல்லபாய் படேலின் சிலையின் பக்கவாட்டில் நின்று கொண்டு தம் தோற்றப் பொலிவை (போஸ்) கொடுக்கிறார் என்பதுதான் உண்மை.

குஜராத் மாநிலத்துக்காரர் படேல் என்பதுதான் அதற்குக் காரணம் என்று சொல்லப்படுமேயானால், படேலுக்கும் தலைவரான காந்தியார் அவர்களும் அதே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்தானே - அவருக்கல்லவா 450 அடி உயரத்தில் சிலையை நிறுவிட முன்வரவேண்டும்!

காந்தியாரிடம் நெருங்கினால் பாமர மக்கள் மத்தியி லிருந்தும், சுனாமி புறப்பட்டுவிடுமே! அட பாவிகளா! காந்தியாரையும் சுட்டுப் பொசுக்கிவிட்டு, அவருக்குச் சிலை வேறா நிறுவுகிறீர்கள்? என்று பற்களை நரநரவென்று கடித்துக்கொண்டு சம்ஹாரம் செய்யப் புறப்பட்டுவிட மாட்டார்களா?

படேல் உள்துறை அமைச்சராக இருந்தபோது டில்லியில் முசுலிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலைத் தடுக்கும் நடவடிக்கையை சரியாகக் கையாளாமல் இருந்துவிட்டார் என்று கூறி காந்தியார் அவர்களே உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்; அதனை வைத்துக்கொண்டு படேல் முசுலிம்களுக்கு எதிரான ஹிந்துத்துவா குணம் - கொண்டவர் என்ற அனுதாபம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு இருக்கக்கூடும்.

அதேநேரத்தில், காந்தியார் படுகொலையைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பைத் தடை செய்து, ஆணை பிறப்பித்தவர் உள்துறை அமைச்சரான படேல் என்பதை மறந்துவிட்டார்களா அல்லது மறைக்கிறார்களா?

தமிழ் ஓவியா said...

அந்த ஆணையில் படேல் என்ன குறிப்பிட்டுள்ளார் என்பதுதான் மிக முக்கியமானதாகும்.
ஆர்.எஸ்.எஸ். இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்கள் நோக்கம் என்று கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அந்த இயக்கத்தவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை. விரும்பத்தகாத அதே சமயம் பயங்கரமான சில நடவடிக்கைகளில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஈடுபட்டனர். பொதுச்சொத்துக்குத் தீயிடல், சேதப்படுத்துதல், கொள்ளை போன்ற சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. சட்ட விரோத ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும், குண்டுகளையும் அவர்கள் சேகரித் துள்ளனர். அரசுக்கு எதிராகப் பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபடுமாறும், ஆயுதங்களைச் சேகரிக்குமாறும், அரசுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுமாறும், காவல் துறை, இராணுவம் ஆகியவற்றிற்குக் கட்டுப்பட மறுக்கு மாறும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் செயல்பாடுகள் ரகசியமாக உள்ளன என்று தடை அறிக்கையில் காரணங் கள் சொல்லப்பட்டனவே - தடை அறிக்கையை வெளியிட் டவர் உள்துறை அமைச்சர் படேல் அல்லவா!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கருக்கு, உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் எழுதியுள்ள கடிதமும் மிக முக்கியமானது.

இந்துத்துவாவாதிகளின் பேச்சுகள் முழுமையும் வகுப்புவாத விஷம் தோய்ந்தவைகளாக உள்ளன. இந்துக்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், அமைப்பாக்குவதற் காகவும் இப்படி விஷத்தைப் பரப்பவேண்டியதில்லை. இதன் இறுதி விளைவாக மகாத்மா காந்தியின் விலை மதிப்பற்ற உயிரை இந்த நாடு இழக்கவேண்டியதாயிற்று. காந்திஜியின் மரணத்தை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

- இது ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கருக்கு, உள்துறை அமைச்சர் படேல் எழுதிய கடிதம் ஆகும் (செப்டம்பர் 11-1948).

படேலுக்கு 450 அடி உயரத்தில், 2500 கோடி ரூபாய் செலவில் சிலை எழுப்ப இருக்கும் - ஆர்.எஸ்.எஸின் பிரத மருக்கான வேட்பாளர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, ஆர்.எஸ்.எஸ்.பற்றி படேல் சொன்னதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறார்?

இந்தக் கேள்வியை எழுப்பினால், அந்த 450 அடி உயர சிலைக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதைத் தவிர மோடிக்கு வேறு வழியேயில்லை.

தமிழ் ஓவியா said...


கோவில் விழாவில் ஒருவர் மீது ஒருவர் 'சாணி'யை அடிக்கும் விழாவாம்!

சத்தியமங்கலம், நவ. 6-ஈரோடு மாவட்டம், கர்நாடகா மாநில எல்லையையொட்டி சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ளது தாளவாடி. இதன் அருகே உள்ள கும்டாபுரத்தில் பீரேஸ்வரர் கோவில் உள்ளது.

மிகவும் பழைமை வாய்ந்த இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் சாணியடி திருவிழா நடைபெறுமாம்.

இந்த விழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மாட்டு சாணத்தை உருண் டையாக பிடித்து வீசுவார்களாம்.

இந்தக் கோவிலில் உள்ள சிவலிங் கத்தை யாரோ ஒருவர் எடுத்து சாணம் சேகரிக்கும் குப்பைமேட்டில் எறிந்து விட்டாராம். ஒரு சமயம் அந்த குப்பை மேட்டில் மாட்டு வண்டி ஒன்று செல் லும்போது ரத்தம் பீறிட்டதாம். இதைக் கண்ட மக்கள் என்னமோ... ஏதோ... என்று தோண்டி பார்த்த போது கோவிலில் காணாமல்போன சிவலிங்கம் இருப்பதை கண்டன ராம்.

அப்போது ஒரு சிறுவனின் கனவில் வந்த சாமி, தீபாவளி முடிந்து 4 ஆவது நாள் சாணத்தில் இருந்து மீண்டெழுந்திருக்கிறேன். இதன் நினைவாக சாணியடி திருவிழா நடத்த வேண்டும் என்று கூறிற்றாம்.

இதையடுத்து இந்த பீரேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவ ளிக்கு அடுத்த 4 ஆவது நாள் இந்த சாணியடி திருவிழா நடைபெற்று வருகிறதாம்.

அதன்படி இந்த ஆண்டு நேற்று இந்த சாணியடி விழா கொண் டாடப்பட்டதாம்.

சாமிக்கு காலை சிறப்பு பூஜை யுடன் விழா தொடங்கியதாம். முன் னதாக கும்டாபுரம் கிராம மக்கள் அனைத்து பசு மாட்டு சாணங் களைச் சேகரித்து கோவில் பின்புற மாக குவித்து வைத்திருந்தனராம்.

தொடர்ந்து அங்குள்ள ஊர்க் குளத்தில் இருந்து கழுதை மேல் சுவாமியை வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்ததாம்.

இதைத் தொடர்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்டிருந்த பீரேஸ்வர ருக்கு சிறப்பு பூஜைகள் நடந்ததாம். கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும், சிறுவர்களும் சட்டை அணியாமல் கோவிலுக்கு வந்தனராம்.

பிறகு அங்கு குவித்து வைக்கப் பட்டிருந்த சாணத்தை அவர்கள் உருண்டைகளாக செய்து ஒருவர் மீது ஒருவர் வீசி அடித்தனர்.

ஒருவர் மீது ஒருவர் சாணியை அடித்த போது கூடி இருந்த பொது மக்கள் குறிப்பாக பெண்கள் கைதட்டி ரசித்து பார்த்தனராம்.

சாணியடி நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் ஊர்க் குளத்தில் குளித் தனராம். பிறகு அவர்கள் வரிசையாக நின்று பீரேஸ்வரரை வழிபட்டனராம்.

இந்த சாணியடி திருவிழாவை ஈரோடு மாவட்டத்தில் இருந்த ஏராளமான பக்தர்களும், மேலும் கர்நாடக மாநில பக்தர்களும் நேரில் சென்று பார்த்து மகிழ்ந்தனராம்.

பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் கூறியது எவ்வளவு பொருந்துகிறது பார்த்தீர்களா...!

தமிழ் ஓவியா said...


திருச்சியில் திராவிடர் கழகம் கூட்டும் மாநாட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகளே திரண்டு வாரீர்!


ஜாதி-மதவாதங்களுக்குச் சம்மட்டி அடிகொடுக்க
திருச்சியில் திராவிடர் கழகம் கூட்டும் மாநாட்டுக்கு
விடுதலைச் சிறுத்தைகளே திரண்டு வாரீர்!
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, நவ. 6- ஜாதி - மதவாதங்களை எதிர்த்து வரும் 9ஆம் தேதி திருச்சியில் திரா விடர் கழகத்தின் சார்பில் கூட் டம் மற்றும் திராவிடர் எழுச்சி மாநாட்டுக்கு அனைவரும் வருகை தருமாரு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அழைப் புக் கொடுத்துள்ளார்.

திராவிடர் கழகத்தின் சார் பில் வரும் 9-11-2013 அன்று திருச் சிராப்பள்ளியில் 'திராவிடர் எழுச்சி மாநாடு' ஒருங்கிணைக் கப்படுகிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்க ளின் தலைமையில் நடைபெற வுள்ள இந்த மாநாட்டில் ஜாதிய வாதமும், மதவாதமும் என்கிற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெறுகிறது. நிறைவாக, திருச்சி உழவர் சந்தை மைதா னத்தில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

தமி ழக அளவிலும், அகில இந்திய அளவிலும் ஜாதியவாதமும் மத வாதமும் இருபெரும் ஆபத்து களாகச் சூழ்ந்துள்ளன. அப்பாவி உழைக்கும் மக் களுக்கிடையில் ஜாதிவெறியை யும் மதவெறியையும் தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடுவதற்கு ஜாதியவாதிகளும், மதவாதிகளும் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவரிடை யேயும் இந்த நஞ்சைப் பரப்பி வருகின்றனர். இத்தகைய சூழ் நிலையில்தான் திராவிடர் கழ கம் மிகுந்த பொறுப்புணர் வோடு உடனடியாகக் களமிறங் கிச் சிறப்பாகச் செயலாற்றி வரு கிறது. தருமபுரியில் சேரிகளைச் சூறையாடிக் கொளுத்திய ஜாதி வெறியர்களைக் கண்டிக்கும் வகையில் உடனடியாக ஜாதி ஒழிப்பு மாநாட்டை தருமபுரி யில் திராவிடர் கழகம் நடத்தி யது. தற்போது நரேந்திரமோடி யின், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் ஸின் சமூக விரோத அரசிய லைக் கண்டிக்கவும், எதிர்க்கவும் ஏதுவாக, திருச்சிராப்பள்ளியில் திராவிடர் எழுச்சி மாநாட்டை ஆசிரியர் வீரமணி அவர்கள் ஒருங்கிணைத்திருக்கிறார். இது இன்றைய சூழலில் மிகவும் வரவேற்கத்தக்கதாகும். திராவிடர் எழுச்சி மாநாடு என்பது தலித்துகள், பழங்குடி யினர் மற்றும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்புக்கான மாநாடா கும். இந்த மாநாடு ஜாதி-மத வெறியர்களுக்கு சம்மட்டி அடி கொடுப்பதாக அமைய வேண் டும். ஆகவே, இந்த மாநாட்டை முழுமையாக வெற்றி பெறச் செய்ய விடுதலைச் சிறுத்தைகள் பெருவாரியாக பங்கேற்க வேண்டும் என்று யாவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

தமிழ் ஓவியா said...


மேரி கியூரி


விஞ்ஞானி மேரிகியூரி பிறந்த நாள் இந்நாள் (1867) நோபெல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்னும் பெருமைக்குரிய வர். இயற்பியல் (1903). வேதியியல் (1911) ஆகிய இரு துறைகளிலும் இரட்டை நோபெல் பரிசு பெற்றவர் மட்டுமல்ல; பாரிஸ் பல் கலைக் கழகத்தில் பேரா சிரியராகப் பணியாற்றிய முதல் பெண் என்ற மகு டமும் - இவருக்குண்டு. போலோனியம், ரேடியம் என்ற தனிமங்களைக் கண்டுபிடித்தவர்; கதிரி யக்கக் கோட்பாட்டை உரு வாக்கியவரும் இவரே!

விஞ்ஞானி மேரிகியூரி பிறந்த நாள் இந்நாள் (1867) நோபெல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்னும் பெருமைக்குரிய வர். இயற்பியல் (1903). வேதியியல் (1911) ஆகிய இரு துறைகளிலும் இரட்டை நோபெல் பரிசு பெற்றவர் மட்டுமல்ல; பாரிஸ் பல் கலைக் கழகத்தில் பேரா சிரியராகப் பணியாற்றிய முதல் பெண் என்ற மகு டமும் - இவருக்குண்டு.
போலோனியம், ரேடியம் என்ற தனிமங்களைக் கண்டுபிடித்தவர்; கதிரி யக்கக் கோட்பாட்டை உரு வாக்கியவரும் இவரே!

1914 - முதலாம் உல கப்போரின்போது ஆம்பு லன்ஸ் வாகனங்களில் எக்ஸ்கதிர் கருவிகளை பொருத்தி உயிர்களைக் காத்தார்.

சாதாரண ஏழைக் குடும்பத்தில் போலந்தில் பிறந்தவர் இவர். அவர் கண்டுபிடித்த அந்த ரேடி யம் கதிர் வீச்சின் காரண மாக ஏற்பட்ட ரத்த சோகை காரணமாக அதற்கே பலியான தியாகியானார்! (1934).

அவரைப்பற்றிய ஒரு முக்கிய தகவல்!

ரேடியம் கண்டுபிடித்த அம்மையாரிடம் அமெ ரிக்கப் பத்திரிகை ஆசிரியை ஒருவர் உங்களுக்கு வேண் டிய ஒன்றைக் கேட்கச் சொன்னால் எதைக் கேட் பீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு கியூரி சொன்ன பதில்: எனக்கு ஒரு கிராம் ரேடியம் தேவைப்படுகிறது. ஆய்வுக்காக; ஆனால் அதன் விலையோ ஒரு லட்சம் டாலர் ஆயிற்றே! என்று பதில் சொன்னார் கியூரி. அந்தப் பத்திரிக்கை யாளரின் பண்பாடும், தொண்டறச் சிந்தனையும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

அந்தப் பத்திரிகையா ளர் அமெரிக்காவில் குழு ஒன்றை உருவாக்கி, பொது மக்களிடம் நிதி திரட்டி ஒரு கிராம் ரேடியத்தையும், வாங்கி மேரியை அமெரிக் காவுக்கே அழைத்து அமெ ரிக்கக் குடியரசுத் தலை வரின் கையாலேயே கொடுக்கவும் செய்தார்.

ரேடியத்தை வழங்கும் ஆவணத்தைப் பார்க்கும் பொழுது அது தன் பெய ருக்கு எழுதப்பட்டு இருந் ததைக் கவனித்து, அதைத் தம் ஆய்வு நிறுவனத்தின் பெயருக்கு மாற்றி எழுதித் தரும்படிக் கூறினாரே பார்க் கலாம். தனக்குப் பிறகு அதற்கு தன் சந்ததியினர் உரிமை கொண்டாடி விடக் கூடாதல்லவா என்றார்.

இந்த நேரத்தில் ஒன்றை நினையுங்கள். தமக்காக தந்தை பெரியார் அளித்த சொத்துக்களை தனக்காக வைத்துக் கொள்ளாமல், அறக்கட் டளையாக்கி, அதன் பொறுப்பை நமது தமிழர் தலைவரிடம் ஒப்படைத் தாரே - அதையும் இவ்விடத் தில் நினைவூட்டுவது பொருத்தம் அல்லவா!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பல மொழிகளிலும் பெரியார் வலம் வருகிறார்


தஞ்சாவூர், நவ.7- பல மொழி களிலும் தந்தை பெரியார் வலம் வருகிறார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார். இதுபற்றி இந்து ஏடு வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:

தந்தைபெரியாரைப் பற்றிய பாரதிதா சனாரின் பொன்னெழுத்துக்களான தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் மண்டைச்சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் என்ற இந்த வரிகளுக்கு ஏற்ப பெரியாரின் கருத்துக்கள் இன்று உலகம் எங்கும் பரவியுள்ளது.

பிரென்சு, ஆங்கிலம் ஆகிய மொழி களில் பெரியாரின் சிந்தனைகள் மொழி பெயர்க்கப்பட்டு அய்ரோப்பிய கண்டங் களில் பலரைச்சென்றடைந்துள்ளது, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தரும் திராவிடர் கழக தலைவருமான ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பிரபல ஆங்கில தினசரிக்கு அளித்த பேட்டியில் பெரியாரின் சிந்தனைத்திரட்டு ஒரிய மொழியில் புகழ்பெற்ற ஒரிய மொழி எழுத் தாளரும் ஒரிய பல்கலைக்கழக தத்துவ யியல் பேராசிரியருமான தியானேஸ்வர் ஷாகு அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு பல்கலைக்கழகத்தில் 29.10.2013 அன்று வெளியிடப்பட்டது.

ஒரிய மொழியை அடுத்து பெண்ணிய விடுதலையை மய்யமாக வைத்து பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூல் இந்தி, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது, கன்னடம், வங்க மொழி மற்றும் பிரென்சு மொழிகளில் பெரி யாரின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு பெருவாரியான மக்களை சென்றடைந் துள்ளது.

குஜராத்தியிலும் பெரியாரின் நூல்களை மொழிபெயர்க்க திட்டமிட்டு வருகிறோம், அகர்தலாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பிரபல வங்கமொழி எழுத்தாளர்கள் பெரி யாரின் நூல்களை வங்கமொழியில் மொழி பெயர்க்க ஆவன செய்வதாக உறுதியளித் துள்ளனர், சிலர் தாங்கள் மொழிபெயர்த்த நூல்களையும் எங்கள் பார்வையில் கொணர்ந்தனர், ஏ.ஆர்.வெங்கடாசலபதி சென்னை கல்வி வளர்ச்சித்துறை பேரா சிரியர் பற்றி 1000 பக்கங்கள் அடங்கிய நூலை எழுதியுள்ளார், அதைப் பென் குவின் பதிப்பகம் வெளியிடுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...


திராவிட நெருப்பை தின்னுமா ஆரியம்?


திருச்சி
கந்தக
மண்ணில்
தீர்மானிப்போம்
வாருங்கள்!

திராவிட
எழுச்சித் தோளின்
தீ(வி)ரத்தை
காட்டுவோம்
கூடுங்கள்!

யாரோ மோடியாம்
முண்டாதட்டி
சென்றாராம்
திருச்சியில்

பெரியார்
மண்ணென்று
சேதி சொல்ல
ஆளில்லையா
அவருக்கு?

அவருக்கும்
சேர்த்து
முரசடித்துக்
கூறுவோம்
புறப்படுக!

மனுதர்மம்
மண்மூடிப்
போன கதை
யெல்லாம்
புரியாதா?

கருஞ்சட்டை
மகளிர்ப்படை
வைத்த தீயில்
வெந்த கதைத்
தெரியாதா?

ஆச்சாரியார்
ஆட்சிக்கு
இருமுறை
வந்தாரே
தெரியுமா?

வாய்தா காலம்
ஆளாமல்
ஓடிப்போன
சங்கதி
புரியுமா?

பெரியார்
தடிதான்
அடித்து
விரட்டியது - இது
வரலாறு!

ஆட்சிக்குப்
போகாத
அய்யாவுக்கு
ஆட்சியே
காணிக்கை!

எந்த
நாட்டில்
நடந்தது
இந்த அதிசயம்?

இடம்
தெரியாமல்
கால்வைத்து
அவதிப்பட
வேண்டாம்!
ராமராஜ்ஜியமா?
இது என்ன
அயோத்தி
என்ற
நினைப்பா?

பெரியார்
கைத்தடியால்
வாங்கிய அடி
கொஞ்சமா
நஞ்சமா?

ராமனுக்கே
சாமி ராமசாமி
ஆயிற்றே
பெரியார்!

அழைத்துவா
பார்க்கலாம்
அந்த
ராமனை
இங்கு!

சேலம் என்று
சொல்லுங்கள்
பார்ப்போம்
ஒண்ணுக்கும்
போயிடுவான்

கால்வைத்துப்
பார்க்கிறார்
கருஞ்சட்டை
சேனையே
புறப்படு!

ஆழம் பார்க்க
ஆசையாம்
அரிமா
சேனையே
புறப்படு!

திருச்சி
பெரியாரின்
தலைமைப் பீடப்
பாசறை!

புயலே புறப்படு
புதுப்
புறநானூறு
படைத்திடவே!

தலைவர்
அழைக்கிறார்
தமிழகம்
திரளட்டும்!
திரளட்டும்!!

திராவிட நெருப்பை
தின்னுமா
ஆரியம்?
எங்கே பார்ப்போம்?

புறப்படு
புறப்படு
புலிநிகர்த்த
பாய்ச்சலோடு
புறப்படு! புறப்படு!!

தமிழ் ஓவியா said...


பஸ்வான்

வரும் மக்களவைத் தேர்தலில் பிஜேபி போட் டியிடவில்லை ஆர்.எஸ். எஸ்.தான் போட்டியிடுகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மத ரீதியான பதற்றம் உட்பட, அனைத்துத் தந்திரங்களையும் அது கடைப் பிடிக்கும்.

- ராம்விலாஸ் பஸ்வான், தலைவர், லோசக்தி

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்

புரியுது!

செய்தி: படேலை வகுப்புவாதி என்றார் நேரு.
- எல்.கே. அத்வானி

சிந்தனை: ஓகோ! அதனால் தான் பிஜேபி யினர் படேலைப் பிடித் துத் தொங்கிக் கொண் டுள்ளனரா?

தமிழ் ஓவியா said...


சிறப்பு

விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவை யில்லாவிடின், பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பயனில்லை. அறிவுடையோர்க்கே சென்றவிட மெல்லாம் சிறப்பு.

- (விடுதலை, 12.3.1965)

தமிழ் ஓவியா said...


செவ்வாய்க்கோளுக்கு விண்கலம் ஏவியதில் பெரும் பங்காற்றிய பாராட்டுக்குரிய தமிழர்கள்!


கடந்த 05.11.2013 அன்று இந்தியாவிலிருந்து செவ்வாய்கோளை ஆராய மங்கள்யான் (செவ்வாய்கலம்) விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனையான இந்த நிகழ்வில் தமிழகத்தை சேர்ந்த மயில்சாமி அண்ணாத்துரை, எஸ்.அருணன், எம்.எஸ். பன்னீர்செல்வம் ஆகிய மூன்று விஞ்ஞானி களின் முக்கிய பங்களிப்பு இருக்கிறது என்பது தமிழர்களுக்குப் பெருமை தரக்கூடிய செய்தி.

விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது! விண்கலம் வெற்றிகரமாக அதன் வட்டப்பாதையில் சேர்க்கப்பட்டுவிட்டது! என்ற முதல் அறிவிப்பை வெளியிட்டவர் விஞ்ஞானி எம்.எஸ்.பன்னீர்செல்வம். மங்கள்யான் விஞ்ஞானிகள் குழுவில் ரேஞ்ச் ஆப்பரேஷன் இயக்குநராக இருக்கும் எம்.எஸ். பன்னீர்செல்வம் தருமபுரியை சேர்ந்தவர். சிறீஹரி கோட்டா ஏவுதள தலைமைப் பொது மேலாளராக இருக்கும் இவர், எந்த தடங்கலும் இல்லாமல் விண்கலத்தை விண்ணில் செலுத்தத் தேவையான ஏற்பாடுகளை பராமரித்து வந்தவர். மகிழ்ச்சிகரமான முதல் அறிவிப்பை வெளியிட்ட எம்.எஸ்.பன்னீர்செல்வம் அவர்களிடம், அந்த அறிவிப்பை வெளியிட்ட போது எப்படி உணர்ந் தீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, எங்களுக்கு எந்த தனிப்பட்ட உணர்வும் இல்லை, நாங்கள் எங்கள் கடமையை செய்து கொண்டிருக் கிறோம் என்று எந்தச் சலனமும் இல்லாமல் நிதானமாக பதிலளித்தார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு சாதனையை கூட இப்படி நிதானமாக எடுத்துக்கொண்டு பதிலளித்த எம்.எஸ்.பன்னீர்செல்வம், ஒரு சீரிய பகுத்தறிவாளர் என்பதும் அவரது தந்தையார் முருகேசன் திராவிடர் கழகத்தின் தருமபுரி நகரச் செயலாளராக இருந் தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமம் இடித்து தரைமட்டம்


வசாய், நவ.8-தானே மாவட்டம் விரார் கிழக்கு மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையில் பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமம் உள் ளது. இந்த ஆசிரமத்தில் ஆசாராம் பாபுவின் கொள்கையை பின்பற்று பவர்கள் பஜனைகள் நடத்தி வந்தனர்.

அரசுக்கு சொந்த மான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இந்த ஆசி ரமம் கட்டப்பட்டிருந் தது. கடந்த 9 ஆண்டு களுக்கு முன்னதாக ஆசாராம் பாபுவின் மகன் நாராயண சாய் தனது உதவியாளராக வேலை செய்து வந்த மகேந்திர சிங் சாவ்லா வின் பெயரில் அந்த இடத்தை ஆக்கிரமித்து அங்கு ஆசிரமம் கட்டி யதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான தகவல் மகேந்திரசிங் சாவ்லாவிற்கு தெரியவந் ததும் அவர் நாராயண சாயிடம் உதவியாளராக வேலை செய்வதை நிறுத்தி விட்டார். மேலும் இது தொடர்பாக நாராயண சாய் மீது சட்டப்பூர்வ மாக நடவடிக்கை எடுக் குமாறு மறியல் போராட் டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து வசாய்- விரார் மாநக ராட்சி, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் ஆகி யோர் ஆசிரமம் இருந்த இடத்தை ஆய்வு செய் தனர். ஆய்வில் ஆசிரமம் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஆசிரமத்தை காலி செய் யுமாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கடந்த வாரம் ஆசிரம நிர்வாகிகளுக்கு நோட் டீசு அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர்கள் ஆசிரமத்தை காலி செய்ய வில்லை. இதனையடுத்து ஆசிரமத்தை அகற்ற முடிவெடுக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று காலையில் வசாய்-விரார் மாநகராட்சி ஆக் கிரமிப்பு தடுப்பு துறை, வருவாய்த்துறை அதி காரிகள் மற்றும் வட் டாட்சியர் ஆகியோர் பொக்லைன் எந்திரங் களுடன் சம்பவ இடத் திற்கு சென்றனர். இதை யொட்டி அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.

பின்னர் ஆக்கிர மித்து கட்டப்பட்ட ஆசாராம் பாபுவின் ஆசி ரமம் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. சுமார் 20-க்கும் மேற் பட்ட அறைகள், ஆசிர மத்தின் அருகே இடை வெளி விட்டு கட்டப் பட்ட அறைகள் அனைத் தும் சுமார் 2 மணி நேரத்தில் இடித்து தள்ளப்பட்டது.

ஆசிரமத்தை இடித்து தள்ளுவதற்கு முன்பாக உள்ளே இருந்த குளிர் சாதன பெட்டிகள், விலை மதிப்புடைய தொலைக்காட்சி பெட் டிகள், கம்ப்யூட்டர் சாதனங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மதிப்புடைய பொருட் களை ஆசிரமத்தை சேர்ந்த நிர்வாகிகள் எடுத்துச்சென்றனர்.

தமிழ் ஓவியா said...


புதிய கருத்துகள்


மனித அறிவு நாளுக்கு நாள் மளமளவென்று மேலே போய்க் கொண்டே இருக்கிறது. அதையொட்டி மக்களைக் கொண்டு போக வேண்டாமா? புதிய உலகத்திற்குப் புதிய உணர்ச்சிகள், புதிய கருத்துகளைக் கொண்டு செலுத்தவேண்டாமா?
(விடுதலை, 2.2.1959)

தமிழ் ஓவியா said...


அந்த சிவக்குமார் - இறந்த மனிதரல்ல! - சிறந்த மனிதர் அல்லவா?
-----------veramani

தொண்டறம் புரிவதில் எத்தனையோ பேர்கள் எந்த ஆரவாரமும் இன்றி, விளம்பர வெளிச்சத்தைக்கூட விரும்பாமல், இடது கை செய்தது வலது கைக்குத் தெரியாது என்பது போல் செய்து அடக்கத்தின் உச்சத் திற்கு சென்று, தங்களது மன நிறைவைத் தானே தேடிக் கொள்ளுகிறார்கள்!

தொண்டு செய்து பழுத்த பழமான தந்தை பெரியார் அவர்கள் அவரது தன்னலம் துறந்த தொண்டைப் பாராட்டும்போது, நான் அதை செய்வது அப்பட்ட மான சுயநலத்திற்காகத்தான் - அதில் என்ன பெரிய தியாகம் அடங்கியுள்ளது? என்று கேட்டு ஒரு அரு மையான தத்துவ விளக்கத்தினையே தருவார்கள்.

நான் செய்யும் பணி - எனக்கு மன மகிழ்ச்சிக் கான ஒரு பணி; அதன் மூலம் நான் மனநிறைவை -மகிழ்ச்சியைப் பெறுகின்றேன் என்றால் அது என் சுயநலம் தானே!

எனவே பொதுநலம் என்று கருதி சிலரால் செய்யப்படும் செயல் எதுவும் ஆழ்ந்து சிந்தித்தால், அவர்களது சுயநலமே ஆகும்; அதுபோலவே சுயநலம் கருதிய அத்தகை யவர்களின் செயல்கள் அதனால் ஏற்படும் பயன் - விளைவுகளை வைத்து யோசித்துப் பார்த்தால் அது பொது நலமாகவே தான் அமையும்; முடியும் என்பார்கள்.

அசை போட்டுச் சிந்தித்தால் இது நன்கு புரியும்.

நேற்று ஒரு உள்ளத்தை நெகிழ வைத்த ஒரு செய்தி - நாளேடுகளில்.

திரு எம்.எஸ். சிவக்குமார் என்ற ஒருவர்; பாலக் காடு பகுதி ஆயலூர் என்ற ஊரைச் சார்ந்தவர், சென்னையில் வசித்தவர். 56 வயதுள்ளவர். ஒரு சமூக ஆர்வலர்.

காணாமற் போன பலரையும் கண்டுபிடித்து அவர்களது குடும்பத்தாரோடு சேர்ப்பது; அக் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி உதவுவது மருத்துவ மனைகளில் அனாதைப் பிணங்களாகி தகவல் தெரியாத நிலையில் அவர்களை அடக்கம் செய்வ தற்கு முயற்சிகளை எடுப்பது, மருத்துவமனைகளில் சிசிச்சை முடிந்து குணமான ஆதரவற்றோர்களை, அனாதை இல்லங்களுக்குக் கொண்டு சேர்த்து அவர்களின் புது வாழ்வுக்கு உதவுவது - இப்படிப்பட்ட மனிதநேயத் தொண்டை தொடர்ந்து செய்வதில் இன்பங்கண்டு வாழ்ந்தவர் இந்த சிவக்குமார் அவர்கள் - சொத்துக்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து பதிவுகளை செய்து எளிய வாழ்வு நடத்திய எளிய ஆனால் உயர்ந்த மனிதர்!

தானே புயலில் சிக்கிய கப்பல் 2012-இல் அவதியுற்ற நிலையில் காணாமற்போன ஆறு மாலுமிகளுடைய குடும்பம் துயரத்தில் தந்தளித்த போது அவர்களுக்கு ஆறுதல் கூறி உதவிய தொண்டற மாமனிதர்!

ஆதரவற்ற மனிதர்களின் சவங்களைப் பெற்று அடக்கம் நடத்திய மகத்தான தொண்டறச் செம்மல்.

அவர் சில நாள்களுக்கு முன்னால் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே புகாரி ஓட்டல் முன் தனது இரு சக்கர வாகனத்தில் பயணித்தபோது அடிபட்டு கீழே விழுந்து தலைக்காயம் அடைந்தார்.

உடனே, அங்கிருந்தவர்கள் அவரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, சேர்த்தார்கள்; அவருக்கு ஆசுஐ, மற்றும் ஊகூ. ஸ்கேன் செய்ததில் மண்டையில் மிகக் கடுமை யான காயம் ஏற்பட்டதால் செவ்வாய் இரவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்!

இந்த சிவக்குமார் ஒரு நோயுற்ற சகோதரியை கண்காணித்து வந்தவர் என்று இவரை அறிந்த நண்பர் நாராயணன் என்பவர் கூறியுள்ளார். மருத்துவமனை மருத்துவர்களும் இவரது தொண்டுபற்றி நினைவு கூர்ந்துள்ளனர்!

அவர் மருத்துவமனையில் இறந்தபோது அவர் அருகில் எவரும் இல்லை என்பதுதான் எத்தகைய கொடுமையான சோகம்!

இவரது மறைவு அறிந்து அவரது துணைவியார், மகள் பாலக்காட்டிலிருந்து வந்து, சென்னை மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரிக்கு உடல் கொடை தரப்பட்ட நிலையில் உடனிருந்து, மரியாதை செலுத்தினர். அந்தப் படமும் இன்றைய நாளேடு ஒன்றில் வெளி வந்துள்ளது.

அந்த மனிதர் அதை அறிய மாட்டார். அவர் இறந்து விட்டார்!

ஆனால், இத்தகைய மனிதர்கள் உண்மையில் இறந்த மனிதர்களா?

என்றென்றும் நமது வீர வணக்கத்திற்குரிய சிறந்த மனிதர்களா - சொல்லுங்கள் நண்பர்களே!

அந்த சமூக ஆர்வலர் சிவக்குமாரின் இறுதி ஊர்வலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர நடைபெறவில்லை என்றாலும், அவர் பல்லாயிரம் மனிதர்கள் செய்யாத, செய்யத் தவறிய பணியைச் செய்து இறந்தவர். அவரைவிடச் சிறந்த மனிதர் யார்? யார்?
வரலாற்றில் அடக்கமான தொண்டால் அடை யாளம் பெற்ற மனிதராக உயர்ந்து நிற்கிறாரே!

அவர் வாழுகிறார்! வாழுகிறார்! - பலர் உள்ளங்களில்! மனிதநேயம் மரித்துவிடவில்லை என்பதற்கு இவ்வாண்டே இதைபோன்று இன்னும் இரண்டு நிகழ்வுகள் நடந்ததை நான் வாழ்வியலில் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

ஓட்டி வந்த மின்சார ரயில் ஓட்டுநர் தனது இதய வலியைப் பொறுத்துக் கொண்டு, பாதுகாப்பாக ரயிலை நிறுத்தியபிறகு இறந்த, உள்ளம் உருக்கும் மனிதநேய நிகழ்ச்சி.

அதுபோலவே சில மாதங்களுக்குமுன் பேருந்தை ஓட்டிச் சென்றவர், ஓரமாக நிறுத்தி, மற்றவர்களை விபத்துக் குள்ளாக்காமல் காப்பாற்றி தான் மாரடைப்பால் மரணமடைந்தார்.
எனவே இப்படிப்பட்டவர்கள் நம் நெஞ்சில் நிழலாடி வாழுபவர்கள் அல்லவா!

தமிழ் ஓவியா said...


அர்ச்சகர் ஓட்டம்!


புதுவை மாநிலம் திருநள்ளாற்றில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி சூரசம்ஹாரவிழா நடைபெற்றது. இரவு 7 மணி அளவில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. சாமி என்ற சிலையோடு பல்லக்கில் இரண்டு பார்ப்பன அர்ச்சகர்களும் உட்கார்ந்து கொண்டனர்.

பல்லக்கைக் கோவிலில் இருந்து வெளியே தூக்கி வந்தவுடன், பல்லக்குத் தூக்கும் தோழர்கள், எங்கள் வேலை சாமியைத் தூக்குவதுதானே தவிர - அர்ச்சகப் பார்ப்பனர்களை அல்ல - அவர்கள் கீழே இறங்கிவிட வேண்டும் என்று கூறிவிட்டனர்.

பக்தர்கள் திரளாக கூடியிருந்தனர். பல்லக்கு கிளம்பவில்லை. இரவு 10 மணி ஆகியும் புறப்படவில்லை. வேறு வழியின்றிப் பார்ப்பன அர்ச்சகர்கள் கீழே இறங்கினர். பொதுமக்கள் பலத்த கரவொலி எழுப்பி ஆதரித்தனர். ஏற்கெனவே சங்கரன் கோயிலில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் தப்ளாம் புளியூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் அண்மையில் போராட்டமே நடந்துள்ளது - அதன் காரணமாகத் தோழர்கள் சிறை ஏகினர். சாமி சிலையோடு பார்ப்பனன் பல்லக்கில் உட்கார்ந்து வரக்கூடாது என்று அண்மையில் திராவிடர் கழகம் தீர்மானம் நிறை வேற்றியது குறிப்பிடத்தகுந்தது.

தமிழ் ஓவியா said...

பிறப்பில் தீண்டாமை கருதலாமா?

தீண்டாதாரிடை ஒழுக்கமில்லை என்று சிலர் சொல்கிறார்கள். மற்றவரெல்லாரும் ஒழுக்கமுடை யவரா? என்று அச்சகோதரரைக் கேட்கிறேன். தீண்டாதார் என்று சொல்லப்படுவோரும் எத்தனையோ பேர் ஒழுக்க சீலராயிருக்கிறார்கள். உயர் வகுப்பாரென்று சொல்லப்படுவோருள், எத்தனையோ பேர் ஒழுக்க ஈனராயிருக்கிறார்கள்.

அவரைப் பார்ப்பனரென்றும் இவரைத் தீண்டாதா ரென்றும் ஏன் கொள்ளுதல் கூடாது? பிறப்பில் தீண் டாமை கருதுவது கொடுமை! வன்கண்; அநாகரிகம். பிறப்பில் தீண்டாமை கருதப்படுமிடத்தில் தேசபக்தி எங்ஙனம் இடம் பெறும்?

-திரு.வி.க.
(சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து பக்கம் -79)

தமிழ் ஓவியா said...


சாத்தாணியின் புரோகிதம்


நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலேதான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம்.

அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான்.

அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்

- ஈ.வெ.ரா.
(ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு)

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி....

சேவல் ஒரு காலாற் பெட்டையின் அருகில் நயங்காட்டி, தன் வயப்படுத்துவது போல பார்ப்பானும் எவரோடும் பகையாமல், நயமாகவே தன் செய்கையை முடித்து வெற்றி பெறுவான் என நான்மணிக்கடிகைக் கூறுகிறது.

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகுக என்பது திரிகடுகம்.

தமிழைவிட வடமொழி உயர்ந்தது என்று கூறிய ஒருவனை நக்கீரர் சாவப் பாடியதாகத் தொல்காப்பிய உரையில் பேராசிரியர் கூறுகிறார்.

அந்தப் பாடல்: ஆரிய நன்று தமிழ்
தீது என உரைத்த
காரியத்தாற் காலக்கோட்
பட்டரெனச் சீரிய
அந்தண்பொதியில்
அகத்தியனார் ஆணையினாற்
செந்தமிழே தீர்க்க சுவாகா
திவாகர நிகண்டில் ஆரியர் என்பதற்கு காட்டுமிராண்டிகள் (Barbarians) எனப் பொருள் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


மருத்துவமனையில் கடவுள் இல்லை


திருப்பூர் மாவட்டம் நத்தக் காடையூர் பெரியார் பெருந் தொண்டர் புலவர் கு.தெய்வசிகா மணி அவர்கள் கடந்த 10 நாட்கள் உடல்நலமில்லாமல் ஈரோடு தனி யார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது நலம்பெற்று வருகிறார்.

அவரை அமைப்புச் செயலாளர் த.சண்முகம், மாவட்ட தலைவர் ப.பிரகலாதன், மாவட்ட செயலாளர் இரா. நற்குணன், மாநகர தலைவர் கு.சிற்றரசு, பேராசிரியர் ப.காளிமுத்து, மாவட்ட இளைஞரணி செயலாளர் செபராசு செல்லதுரை, பெரியார் படிப்பக வாசகர் வட்ட செயலாளர் இரா.பார்த்திபன், பிரகாசன், தாராபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் வெள்ளக்கோவில் மணிகண்டன், ஈரோடு கோ.திருநாவுக்கரசு, நத்தக் காடையூர் திருஞானம் ஆகியோர் சென்று உடல்நலம் விசாரித்தனர்.

மருத்துவமனையில் ஒரு செவி லியர் அவரைப் பற்றித் தெரியாமல் சாம்பலை அவரது நெற்றியில் பூசிவிட்டார். உடனே அவர் கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று கடவுள் மறுப்பு வாசகம் கூறி அங்கு இருந்த செவிலியர்களிடம் பிரச்சாரம் செய்தார்.

அந்த நிலையிலும் பெரியார் தொண்டர்கள் கொள்கை உறுதியோடு இருப்பார்கள் என்பதற்கு நத்தக் காடையூர் புலவர் கு.தெய்வசிகாமணி எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

தகவல்: ஈரோடு சண்முகம்

தமிழ் ஓவியா said...

தீனிப் பையில் தீனி இருக்க வேண்டும்!

திங்கட்கிழமை பட்டினிக் கிடந்தால் சிவபெருமானே நேரில் வந்து கை கொடுப்பார் என்று சொன்னாலும் நீ, தீனிப்பையை வெறுமையாய் வைக்காதே. பசித்தீ குடலை தின்றுவிடும்.சனிக்கிழமை பட்டினிக்கு மகிழ்ந்து கோவிந்தப் படையாட்சி கழுகேறி வருவார் என்று எவன் புளுகினாலும் கேட்காதே. நேரத்தோடு உணவு கொள்- தீனிப்பையில் எப்போதும் உணவு தளதளவென்று இருக்கட்டும்.

இதைக் கேள்: நடலை அறுந்
தாள் அருணை
நம்பனுக்கு அன்பில்லா
உடலை ஒறுத்தால்
ஆவதுண்டோ -
அடலைநூல்
ஓதினால் பாசம் பொழியுமோ புற்றிலே
மோதினாற்
பாம்பு சாமோ.

இச்செய்யுட் கருத்து: நல்லவனாயிரு. உடலைத் தண்டிக்காதே என்பதாம். உண்மை மருத்துவர் இதைத்தான் வற்புறுத்தினார்கள்.

- புரட்சிக்கவிஞர்
குயில் 4-10-1960