Search This Blog

22.1.15

அண்ணாவின் கடவுள் கொள்கை என்ன?

அண்ணாவின் கடவுள் கொள்கை என்ன?இவ்வினாவை விடுத்திருக்கம் நண்பர் வேல்சாமி ஆடுதுறையைச் (தஞ்சை மாவட்டம்) சார்ந்தவர். கடவுள் பிரச்சினையில் அண்ணாவின் கொள்கை எப்படி இருந்தது என்று வீணாக நாம் ஆராயத் தேவை இல்லை. 2.1.1949 திராவிட நாடு இதழில் அண்ணா அவர்கள் எழுதிய கட்டுரை அப்படியே தந்து விட்டால் விவரம் புரிந்து விடும் என்று கருதி அக்கட்டுரையை இதோ தருகிறோம். - ஆ.ர்)

மக்களின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு பொருள் கடவுள் என்ற பெயரோடு நின்று இவ்வுலகத்தை இயக்குகின்றதென்பது மத நூலார் கொள்கை.
மத நூலார் இலக்கணப்படி கடவுள் உண்டு என்று கூறுவதே அவர்கள் கொள்கைக்குத் தவறு உண்டாக்கு வதாகும். அப்படியென்றால், ஓசை ஓலி எல்லாம் ஆனாய் நீ என்ற பின்னர் பேச இரண்டுண்டோ? என்பது மத நூற்றுணிவாகும்.

எனவே, உயிர்கள் அனைத்திற்கும் பொதுவாயும், தந்தையாயும், எல்லாமாயும், எங்குமாயும் உள்ள ஒரு பொருளை உண்டென்று கூறுவது போன்ற அறியா மையும் அதன் கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டும்; அதற்குச் சட்டமியற்ற வேண்டுமென்ற நெட்டுயிர்ப்பும் வேடிக்கையாகவே இருக்கிறது.
கடற்சிப்பியில் முத்து இருக்கிறது என்று ஒருவன் கூறுவது வியத்தற்குரியதும் இயற்கைக்கு மாறு படாததுமாகும்.

கடவுள் மறைந்து இருப்பவர் அல்ல

ஆனால், நமது கடவுள் அப்படிப்பட்டவரன்று; கடற் சிப்பி முத்துபோல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மறைந்து இருப்ப வருமன்று. ஒரு இடத்தில் இருப்பதும், மற்றைய இடங்களில் இல்லாததுமான ஒன்றைத்தான் அது இன்ன இடத்தில், இன்ன தன்மையோடு இருக்கிறதென்று அறியுந் தன்மையில் ஒருவன் அதனை அறியாதார்க்கு அறிவிக்க வேண்டும்.

அங்ஙனமின்றி, எல்லாமாய், எங்குமாய் அணுவுக் கணுவாய், அகண்டமாய், எதிலும் பிரிவற நிற்பதாகச் சொல்லப்படும் ஒன்றை ஒருவன் உண்டென்று கூறும் அறியாமையை அளப்பதற்குக் கருவியே இல்லை. ஒருவனால் உண்டென்று கூறப்படும் ஒரு பொருள், யாதொரு கருவியாலோ, அறிவாலோ அளந்தறிந்து உணரக் கூடியதாயும் இருத்தல் வேண்டும்.

ஆனால், கடவுள் அளப்பரும் இயல்பினதாய் - மறைமுதல் சொல் ஈறாக உள்ள எந்தக் குறைவிலா அறிவினாலும் அளந்தறிய முடியாதென்று முழங்கிய பின், ஒருவன் அதனைக் கண்டறிந்து அளந்தவனா வானா? அதன் கவுரவத்தைக் காப்பாற்றத்தான் முயல்வானா? முடியுமா?

கண்டதையே உண்டு எனக் கூறல் வேண்டும்

அன்றி, அப்பொருள் ஒருவனால் அளந்தறியப் படுவதற்கு அது எங்காவது ஒரு இடத்தில் தனித்திருந் தாலன்றி முடியுமா?
ஒருவன் ஒரு பொருளை உண்டென்று கூறுவானாயின், அவன் அப்பொருளைக் கண்டிருத்தல் வேண்டு மன்றோ!

எனவே, ஒருவனால் காணப்பட்டு, மற்றவர்களால் காணப்படாத ஒன்றைக் கடவுள் என்பது மத நூலார் கொள்கைக்கே மாறுபட்டதாகும். எப்படியென்றால், காண முடியாதது எதுவோ அதுவே கடவுள் மதநூலார் கொள்கை. எனவே, காணமுடியாதது எது என்று ஆராயுமிடத்து, எது இல்லாததோ அதுவே காண முடியாததுமாகும் என்ற உண்மை பெறப்படுகின்றது. அன்றியும், மக்களால் எளிதில் அறிந்து கொள்ள முடியாத கடற்சிப்பி முத்து போல கடவுளும், எங்காவது ஒரு மறைவிடத்தில் தனியாக இருப்பதாகக் கொள்ளவும் மத நூல்கள் இடந்தருவதில்லையே!

கடவுள் இல்லாத இடமே இல்லை என்பதுதான் அந்த நூல்களின் முடிந்த முடிவாகும்.

எனவே, கடவுளை அறிந்ததாகக் கூறுபவனும், கடவுளைக் காப்பாற்றாவிட்டால் அதன் கவுரவம் குறைந்துவிடுமென்றும் கருதும் நிறைமதியாளனும் மணற்சோற்றில் கல் ஆராய்பவனும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களேயாவார்கள்.


முன்னுக்குப்பின் முரண்

இனி, மத நூல்கள் சிலவற்றில் கூறியுள்ளபடி, தேடினால் கிடைப்பர்! என்ற முன்னுக்குப் பின் முரணான கொள்கைகளை நம்பி, அவ்வழிச் சென்றோர் எல்லாம் அத்துறையைக் காணாது சலிப்படைந்து, தங்கள் ஏமாந்த இயல்பினை இனிதியம்பி யுள்ளனர்.

பட்டினத்தார், நாவுக்கரசர், புத்தர் முதலானோர் அவ்வழிப்போய் மீண்ட பலருள் சிலராவர்.

ஈனா வாழை மரத்தின் மட்டைகளை ஒவ்வொன்றாக உரித்துப் பார்த்தால், உரிக்கப்பட்ட அம்மட்டைகளை தவிர, அதனுள்ளே வேறொன்றும் இல்லாமை புலப்படுவது போல், மத நூல்கள் கூறிய வழிகளிலே சென்றவர்கள் தாங்கள் கருதிப் போன கடவுள் காணப்படாமையைக் கருத்தோடு திருத்தமாகக் கூறியுள்ளார்கள்.

எனவே, இல்லாத ஒன்றை உண்டென்னும் கொள்கை என்றைக்குத் தோன்றியதோ அன்றிருந்தே அக்கூற்று மறுக்கப்பட்டும் வந்திருக்கிறது - வருகிறது.

உண்மையை அறிய மதம் தடை

ஆனால், உண்மைக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பு மதக் கொள்கைகளால் பிரித்துப் பிளவுபட்டிருப்பதால் பொய்யைப் பொய்யெனக் கொள்ளும் பேதமையே பெருமை பெற்று வருகிறது. இதனால், உண்மைகளை உருவாக்கு வதற்குப் பெரு முயற்சியும், பேருழைப்பும், பெருந்துணிவும், இடுக்கண் வந்தால் ஏற்கும் இயல்பும் இன்றியமையாது வேண்டப்படு கின்றது.

இஞ்ஞான்றை உலகம் ஓரளவு வெற்றி பெற்றுவருவது கண் கூடு. காரணம், மக்களிடையே மங்கிக் கிடந்த பகுத்தறிவு வென்னும் பகலவன் தன் ஒளி அலைகளால், விரிந்த உலகின் சரிந்த கொள்கைகளை வீழ்த்தும் ஆராய்ச்சித் துறையின் அணிகலனாக விளங்குவதால் என்க.

        -------------------  திராவிட நாடு 2.1.1949

Read more: http://viduthalai.in/page-7/93127.html#ixzz3MM170W7m

23 comments:

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் சமாளிப்புத் திறமை..
....................................................................

ஒருமுறை அய்யாவும் அண்ணாவும் மும்பை சென்றிருந்தனர். அங்கு எம்.என்.ராய் அவர்களைச் சந்தித்தனர். அய்யாவிடம் பேரன்பும் பெருமதிப்பும் வைத்திருந்தவர் ராய். தமது அன்பினை வெளிப்படுத்த அய்யாவுக்கு விருந்து கொடுக்க நினைத்து அழைத்தார்.

அய்யாவும் அண்ணாவும் விருந்திற்குச் சென்றனர். ராய்க்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும். தமிழ் தெரியாது. அய்யாவுக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் மட்டுமே தெரியும்.

பிரமாதமாக நடைபெற்ற விருந்தில் இருவருக்கும் ராய்தான் பரிமாறினார். அய்யாவுக்கு, குறிப்பிட்ட ஒரு பதார்த்தத்தின் மீது ஆசை ஏற்பட்டது.

மனதிற்குப் பிடித்ததைக் கேட்டு விடுவது அய்யாவின் குணங்களுள் ஒன்று. எப்படிக் கேட்பது? ராய்க்குத் தமிழ் தெரியாதே, ஊறுகாய் என்றால் ராய்க்குப் புரியாதே, என நினைத்தார்.

இதன் ஆங்கிலப் பெயரும் அப்போது மறந்துவிட்டது அய்யாவுக்கு.

அய்யாவின் தேவையை அண்ணா புரிந்துகொண்டார். எனினும் அய்யாவின் சமாளிப்புத் திறமையைக் கண்டு ரசிக்க விரும்பினார்.

ராய் அருகில் வந்தபோது, நாக்கில் கையை வைத்து நாக்கால் ஒரு சொடக் கொடுத்து ஓசை எழுப்பிக் காட்டினார் அய்யா.

உணவு பறிமாறிக்கொண்டிருந்த ராய் புரிந்துகொண்டு, ஓ பிக்கிள் என்றார்.

உடனே, எஸ் எஸ் பிக்கிள் என்றார் மலர்ச்சியுடன் அய்யா.

நாவினால் ஓசை எழுப்பியே தமது கருத்தைத் தெரிவித்துச்சமாளித்த அய்யாவின் திறமையை எண்ணி வியந்தார் அண்ணா.

தகவல்..உண்மை இதழ்.,

தமிழ் ஓவியா said...

சென்னை புத்தகக் கண்காட்சியில்
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனப் புத்தகங்கள் ரூ.5,14,553க்கு விற்றுச் சாதனை!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின ரால் நந்தனம் ஒய்.எம். சி.ஏ. கல்லூரி மைதானத் தில் 9.1.2015 முதல் 21.1.2015 வரை 13 நாள்கள் நடத்தப் பட்ட 38ஆவது சென்னை புத்தகக் காட்சியில் நமது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அரங் கில் எந்த ஆண்டும் இல் லாத சாதனை அளவாக ரூ.5,14,553க்கு நூல்கள் விற்பனை ஆகி உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். இந்தச் சாதனையை அடைய ஆதரவு அளித்த பொது மக்களுக்கு உளங் கனிந்த நன்றியும், ஊக்கத்தோடு பணிபுரிந்த பெரியார் புத்தக நிலைய உதவியாளர்களுக்குப் பாராட்டுதலையும் உரித்தாக்குகிறோம். நன்றி
- த.க. நடராசன், மேலாளர்

Read more: http://viduthalai.in/e-paper/94742.html#ixzz3PYfD2c94

தமிழ் ஓவியா said...

கலவரங்களில் ஆர்.எஸ்.எஸின் பங்கு கிரண்பேடிக்கு திக்விஜய்சிங் கேள்வி


புதுடில்லி, ஜன 22_ ஆர்.எஸ்.எஸ்., ஒரு தேசியவாத அமைப்பு என டில்லி தேர்தலில் போட் டியிடும் பா.ஜ., முதல்வர் வேட்பாளரும், முன்னாள் அய்.பி.எஸ்., அதிகாரியு மான கிரண்பேடி தெரி வித்திருந்தார். இது தொடர்பாக தனது டுவிட் டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், ஆர் .எஸ்.எஸ்., நாட்டை ஒருமைப்படுத்தியதாக கிரண்பேடி கூறி உள் ளார். ஒரு அய்.பி.எஸ்., அதிகாரியாக அவர் மத கலவரங்கள் தொடர்பான சட்ட ஆணைய அறிக்கை களை படித்ததில்லையா? கலவரங்களில் ஆர்.எஸ். எஸ்.,ன் பங்கு என்ன வென்று படித்ததில் லையா? சுதந்திர போராட் டத்தில் ஆர்.எஸ்.எஸ்.,ன் பங்கு என்னவென்று கிரண்பேடியால் சொல்ல முடியுமா? ஆர்.எஸ். எஸ்.அய்., சேர்ந்த 5 சுதந்திர போராட்ட வீரர் களின் பெயர்களை அவ ரால் சொல்ல முடியுமா? கோட்சேவை அவர் தேசபக்தராக கருது கிறாரா? இந்துத்துவா என்பதற்கு என்ன அர்த் தம் என்று அவர் விளக்கு வாரா? கிரண்பேடி அவர்களே..உங்களது சொந்த விருப்பங்களுக்காக வரலாற்றை சிதைக்க வேண்டாம். உங்களது அரசியல் ஆசை என்ன என்பது எனக்கு தெரியும். அதில் தவறேதும் இல்லை. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் மற்றவர்களின் அரசியல் ஆசைகளுக்காக அன்னா ஹசாரேவின் சமூக சேவை கள் பயன்படுத்தப்படுவதற் காக பரிதாபப்படுகிறேன். இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/94739.html#ixzz3PYffHxGS

தமிழ் ஓவியா said...

மீண்டும் மதக்கலவரங்களா?

பிகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் இரு சமூகத் தினரிடையே வன்முறை வெடித்தது, இதில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் தீவைத்துக்கொளுத்தப்பட்டன. 4 பேர் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டனர். முசாபர்பூர் நகரில் ஞாயிறன்று இரவு மதக்கலவரம் வெடித்தது. சிறுபான்மையினர் உள்ள பகுதியில் நுழைந்த 200 பேர் அடங்கிய கும்பல் முதலில் வீடுகளுக்குத் தீவைத்தது, வீடுகளில் தீப்பிடித்ததும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வெளியே வந்தவர் களைத் தாக்க ஆரம் பித்தனர்; இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறையில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. சபாரா, முசாபர்பூர், சமேலி, சமஸ்திபூர், சீதாமாடி போன்ற பகுதிகளில் தற்போது கலவரம் பரவும் சூழ்நிலை உள்ளதால், அப்பகுதியில் மத்திய பாதுகாப்புப் படை மற்றும் பிகார் வன்முறை தடுப்புப் பிரிவு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பிகார் மாநில இணை ஆணையர் குசேஷ்வர் பாண்டே பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, சில நாட்களுக்கு முன்பு ஓர் இளைஞர் காணாமல் போய்விட்டார். அந்த இளைஞர் ஞாயிறன்று முசாபர்பூர் நகர் பகுதியில் பிணமாக கிடந்தார். இதனைத் தொடர்ந்து இறந்து போனவன் நண்பர்களிடம் விசாரணை செய்து வருகிறோம்.

இந்த நிலையில் சிலர் இவ்விவகாரத்தை இரண்டு சமூகத் தவரிடையே வன்முறையைத் தூண்டும் விதத்தில் வதந்தியைப் பரப்பி விட்டனர். இதனால் கலவரம் ஏற்பட்டுவிட்டது. கலவரத்தைத் தடுக்கும் விதமாக மத்திய பாதுகாப்புப் படை மற்றும் வன்முறைத் தடுப்புப் பிரிவுகளைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகள் 5 மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரம் மேலும் பரவிவிடாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக இது வரை யாரையும் கைது செய்யவில்லை என்று கூறினார். பிகாரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட இந்த திடீர்க் கலவரம் குறித்து கேள்விப்பட்ட முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி தனது மும்பை பயணத்தை ரத்து செய்தார். மாநில காவல்துறை ஆணையர் மற்றும் 5 மாவட்ட ஆட்சியாளர்களை நேரில் அழைத்து நிலவரம் குறித்து அறிக்கை ஒன்றினைக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். கடந்த வியாழனன்று (15.1.2015) குஜராத் மாநிலம் பரூச்சில் குறிப்பிட்ட பிரிவினர் ஒலிபெருக்கி பயன்படுத்துவதை எதிர்த்து சிலர் வழிபாட்டுத்தலத்தின் சுவரில் அருவருப்பான வார்த்தைகளை எழுதியது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறி பரூச் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் மத மோதலாக மாறியது. இதனை அடுத்து குஜராத் அரசு குஜராத்தில் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் இணையதள சேவை களை நிறுத்தியது. பருச்சின் சில பகுதிகளின் அலை பேசி சேவையும் நிறுத்தப்பட்டது. இந்த மோதல்களில் 4 பேர் உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பரூச் ஹன்சோட் நகரில் சிறுபான்மையினரின் வணிகத் தலங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால் இவ்விவகாரம் குறித்து பரூச் மாவட்ட காவல்துறை ஆய்வாளர் டி.சவுதிரி கூறியதாவது: பட்டம் விடுவது தொடர்பான விவகாரத்தில் இரண்டு இளைஞர்கள் கொலை தொடர்பாக சில இடங்களில் மோதல்கள் நடந்தன தற்போது அமைதி திரும்பி யுள்ளது. இதுவரை யார் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை, யாரும் கைதுசெய்யப்படவும் இல்லை இருப்பினும் அடையாளம் தெரியாத 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கடந்த நான்கு நாட்களாக பரூச் உள்ளிட்ட மேற்கு வடக்கு குஜராத் மாவட்டங்களில் பதற்றமான சூழல் தான் உருவாகி வருகிறது. மதமாற்றம் தொடர்பான விவகாரங்களில் இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து தலையிட்டு வருவதால் இரு சமூகத்தினரிடையே பதற்றமான சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது என்று இந்துஸ்தான் டைம்ஸ் (19.1.2015) விவரித்துள்ளது.

மேற்கண்ட செய்திகளைப் பெரும்பாலும் ஏடுகள் இருட்டடித்து விட்டன.

தமிழ் ஓவியா said...


மத்தியில் பிஜேபி தலைமையிலான அரசு அமைந்தாலும் அமைந்தது - நாடே கலவரப் பூமியாக உருமாறி விட்டது. ஆட்சி அதிகாரப் பூடத்தில் இருக்கும் பிஜேபியும், அதன் சங்பரிவார்களும் நடந்து கொள்ளும் போக்கும் வெறியூட்டும் பேச்சுகளும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கொழுந்து விட்டு எரியும்படிச் செய்து வருகின்றன.

குஜராத் கலவரத்திற்கு முதல் அமைச்சர் மோடிக்குத் தளகர்த்தராக இருந்தவர் இப்பொழுது பிஜேபியின் அகில இந்தியத் தலைவராகவும் ஆகிவிட்ட நிலையில் இந்துத்துவா காவிக் கும்பலுக்கு மேலும் கொம்புகள் முளைத்து விட்டன. அரசியல் காரணங்களுக்காக மதச் சார்பற்ற சக்திகள் பிரிந்து கிடக்கும் நிலையில் ஒரு மாற்றம் நடந்தே தீர வேண்டிய கால கட்டம் இது.

பிஜேபியின் போக்குக்கு முதற்கட்டமாக மூக் கணாங் கயிறு போட்டாக வேண்டும். குறுகிய கால திட்டம், தொலை திட்டங்கள் தீட்டப்பட்டு ஒரு கட் டத்தில் மதவாத சக்திகள் ஆணி வேரோடு வீழ்த்தப் பட்டாக வேண்டும். அதன் மூலம்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மையின் உயிர் காப்பாற்றப்பட முடியும். இது மிக மிக முக்கியம் அவசியமாகும்.

Read more: http://viduthalai.in/page-2/94736.html#ixzz3PYgAHNgk

தமிழ் ஓவியா said...

பெரியார் உலகம் - ஒரு வரலாற்றுச் சாதனை முயற்சி
பேரறிஞர் வரிசையில் போற்றப்பட வேண்டியவர் ஆசிரியர்!

82 வயதான புதுச்சேரி ஜி.கே.எம். பேட்டி!

புதுச்சேரி மாநில திராவிடர் கழக பொதுக் குழு உறுப்பினர் ஜி.கே.எம். என்கிற ஜி. கிருட்டிணமூர்த்தி. 82 வயதான இளைஞர். தமிழர் தலைவர் ஆசிரியர்மீது வற்றா அன்பு பூண்டவர். சீரிய நூல் வாசிப்பாளர். விடுதலையின் தொடர் வாசகர்.

அவர் வீடு முழுவதும் கொள்கை வாசகங்கள்; பேரறிஞர்கள் தம் கருத்துக்கள் எங்கு பார்த்தாலும் எழுதப்பட்டுள்ளன. சிந்தனையாளர் களின், முற்போக்காளர்களின் உருவப் படங்கள் வீட்டை அலங்கரிக்கின்றன.

அவரைப்பற்றி...

காரைக்காலில் 31.07.1933இல் கோவிந்தசாமி - _ பட்டம்மாள் இணை யரின் மூத்த மகனாகப் பிறந்தவர். விசயலட்சுமி இவரின் துணைவியார். எழில், அன்பரசு, அறிவொளி, மல்லிகா, செல்வி என 5 பிள்ளைகள் இவருக்கு! இவரின் தந்தையார் சுயமரியாதை உணர்ச்சி உள்ளவர். அவரே ஜி.கே.எம். பகுத்தறிவுவாதியாக பரிணமிப்பதற்குக் காரணம். இயக்கப் பற்றுதல் எப்படி ஏற்பட்டது?

காரைக்கால் நிரவி பகுதிக்கு பெரியார் வந்தபோது எனக்கு 15 வயது இருக்கும். நான் நேரில் சென்று பார்த்ததும், 17,18 வயது இருக்கும்போது என் தாத்தா வீடான புதுச்சேரி குயவர் பாளையம் சென்றிருந்தபோது ஒதியஞ் சாலை திடலில் தந்தை பெரியார் பேசியதைக் கேட்டதும், குபேர் தலை மையில் வள்ளுவர் விழா நடந்தபோது திருக்குறள் முனுசாமியும், இளைஞர் வீரமணி (தமிழர் தலைவர்)யும் பேசி யதைக் கேட்டதும் இயக்கக் கொள்கை யின் பால் பற்றுதல் ஏற்பட காரண மான நிகழ்வுகளாகும்.

இயக்கத்தின் ஆதரவாளனாக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்திருக்கிறேன். வி.சு. சம்பந்தம் பொறுப் பிலிருந்த போதுதான் நான் இயக்கத்தின் பொறுப்புக்கு வந்தேன். இப்போது புது வையில் இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதைப் பார்க்கும்போது பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

கொள்கை பரவலுக்கு தங்களின் பணிபற்றி...

இயக்க நூல்கள் மற்றும் மேலை நாட்டு அறிஞர்களின் நூல்கள் அவ்வப் போது நிறைய வாங்கி ஏராளமானவர் களுக்கு கொடுத்து அவர்களில் பலரை இயக்கத்துக்கு ஆதரவாளர்களாக மாற்றியுள்ளேன். தேவையான சமயத் தில் துண்டறிக்கைகள் அச்சிட்டு வழங்கி வருகிறேன்.

இயக்க நிகழ்ச்சிகள் நடத்தும் போது தாராளமாக நிதி உதவி செய்வதில் மகிழ்ச்சி காணுபவன். பெரியார் உலகம் நிதி இருபத்தையா யிரம் அளித்துள்ளேன். எப்போதும் யாரிடமாவது இயக்கக் கொள்கைகளை பற்றிப் பேசிக் கொண்டே இருப்பேன்! பலரை இயக்க சார்பாளர்களாக நான் மாற்றி உள்ளேன்.
மறக்க முடியாத நிகழ்ச்சி ஏதாவது...

1984ல் என் புதிய வீடு திறப்பு. என் துணைவியார் கிரகப் பிரவேசமாக நடத்த விரும்பினார். நான் மறுத்து விட்டேன். எனது கொள்கை உரிமையை விட்டுக் கொடுக்க நான் தயாரில்லை என்று கூறிவிட்டேன். வேறு வழியின்றி எதுவுமே செய்யாமல் அவ்வீட்டுக்கு குடிசென்று விட்டோம். அதன்பிறகு தான் எனக்கு (என் கொள்கைக்கு) ஒத் துழைக்க ஆரம்பித்தார் என் துணை வியார்.

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் பற்றி தங்களின் கருத்து....

தந்தை பெரியார் சூரியன் என்றால் ஆசிரியர் கி. வீரமணி அவர்களோ அதன் ஒளி வாங்கிய முழு நிலா என் பேன். உலகளாவிய பேரறிஞர் வரிசையில் போற்றப்பட வேண்டியவர். பெரியார் உலகம் -அவரின் வரலாற்றுச் சாதனை முயற்சியாகும்.

ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைகள் நூல் வரிசை என்னை மிகவும் ஈர்த்திட்ட புத்தகங்களாகும். புதுச்சேரி தமிழக மக்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்களாகும். பல நூறு புத்தகங்கள் அவற்றில் வாங்கி மற்றவர்களுக்கு கொடுத்திருக்கிறேன்.அதுபோல கீதையின் மறுபக்கம் சீரிய ஆய்வு நூல். அதைப் படித்து வியந்தவன் நான்.

அய்யாவின் அடிச்சுவட்டில்...

நூல் வரிசையும் இயக்கத்தின் வர லாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளப் பயன்படும் நூல் களாகும்.

இயக்க வளர்ச்சிக்கு தங்களின் கருத்து...

இயக்கத்தில் இளைஞர்கள், மாண வச் செல்வங்கள் நிறைய பேர் சேர வேண்டும். இயக்க இளைஞர்கள் விடுதலை ஏட்டினைத் தவறாமல் படிப்பதுடன், அய்யா, ஆசிரியர் நூல்களை முழுவதுமாக வாசிக்க வேண்டும். தொடர்ந்த வாசிப்பு வழக்கம் ஆழ்ந்த கொள்கை உறுதியை ஏற்படுத்தும்.

அறிவில் சிறந்தவர்களாக மிளிர முடியும். 2000 மாநாடுகள் என்று ஆசிரியர் அறிவித்துள்ள அறிவிப்பு என்னை பிரமிக்க வைத்தது. கழக நிர்வாகிகளும், தோழர்களும் வட்டார விழிப்புணர்வு மாநாடுகளைத் திறம்பட நடத்தினாலே இயக்க வளர்ச்சி செழித்தோங்கும் என்பது என் கருத்து. ஒவ்வொரு கழகத் தோழரும் விடுதலை வாங்க வேண்டும் _- படிக்க வேண்டும்.

மதவெறிக்கு தூபம் போடும் மத்திய அரசு அமைந்து உள்ள இக்காலத்தில் அதனை முறியடித்து மனிதநேயம் காக்கப்பட நமது இயக்கத்தால் மட்டுமே செயலாற்ற முடியும்.

நமது தமிழர் தலைவர் ஆசிரியர் எவ்வித எதிர்பார்ப்புமின்றி அய்யாவின் கொள்கையைப் பரப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவரின் ஆணையைச் செயல்படுத்துவதே நாம் இயக்கத்துக்கு மக்களுக்கு ஆற்றிடும் தொண்டு என்பதை உணர்ந்து தோழர்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்!

பேட்டி கண்டவர்: துரை. சந்திரசேகரன் 31.12.2014

Read more: http://viduthalai.in/page-1/94844.html#ixzz3Pk0n5V3d

தமிழ் ஓவியா said...

நீ.. இந்து என்றால்....

நீ இந்து என்றால் உனக்கு ஏன் கோயிலில் நுழைய அனுமதி இல்லை? அர்ச்சகராகவும் உரிமையில்லை.

நீ கட்டிய கோயில், நீ செதுக்கிய சிலை, நீ தொட்டுச் செய்த அந்த சிலை எப்படி கடவுளாக முடியும்?

நீ தொட்டால் மட்டும் அது எப்படி தீட்டாகும்? தீட்டு என்றால் என்ன? அப்படித்தானே அர்ச்சகர் ஆகும் உரிமையில்லை என்று தமிழக சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது?

நீ இந்து என்று சொல்லிக் கொள்கிறாய். ஆனால் உன்னை வேசிமக்கள் என்றும் பாவ யோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்றும் வேதத்தில் எழுதி வைத்துள்ளான். அந்த வேத சாஸ்திரங்கள்தானே அர்ச்சகர் ஆகும் உரிமையைத் தடுத்துள்ளன.

ஒரே ரத்தம் உள்ள மனிதனை பல ஜாதிகளாக பிரித்து தான் மட்டுமே சொன்னால் கடவுள் கேட்பார் என்று ஊருக்கு ஊர் ஒரு தேரை வைத்து வினை தீர்ப்பதாகவும், பணம் கொடுப்பதாகவும், நோய் தீர்ப்பதற்கும், திருமணம் செய்வதற்கும் என்றே பல கடவுள் என்கிற சிலைகளையும் கோயில்களையும் கட்ட வைத்து தன்னினத்தையே உரிமையாக்கிக் கொண்டு மக்களை ஓட்டாண்டிகளாக வைத்துள்ளார்கள்.

எத்தனை நூற்றாண்டுகளாகியும் எத்தனை பெரியோர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வந்துள்ளார்கள். கல்வியே இல்லை என்று சொன்னதை மறந்து இப்போதுதானே படிக்க முன்வந்துள்ளீர்கள்.

எத்தனையோ அறிவார்ந்த புத்தகங்கள் பெரியார் மன்றத்தில் குவிந்து கிடக்கின்றன. அதைப் படிக்கும் முன்பே செத்த மொழியைப் புகுத்தி அதிலே நீ செய்த சிலைகளையும் அதற்காக தொகுத்த கற்பனைக் கதைகளையும் படிக்க வைத்து மீளவும் கற்காலப் பயணத்துக்கு ஆட்படுத்த உள்ளார்கள்.

எனக்கென்ன எனக்கென்ன என்று நீயிருந்தால் உன் சந்ததிகள் அல்லல்படும் என்பதை அறிவாயா? இப்போது இருக்கும் கல்விமுறையில் மாற்றம் என்ற பெயரில் செத்த மொழி சமஸ்கிருதத்தைத் திணிப்பதால் என்ன நன்மை ஏற்படப் போகின்றது?

கர்நாடகா மற்றும் கேரளா அரசுகள் மூடநம்பிக்கையை ஒழிக்க சட்டம் செய்ய முன்வந்துள்ள இன்றைய நிலையில் தமிழ்நாடு என்ன செய்யப் போகிறது? -

மா. சென்றாயன், தருமபுரி

Read more: http://viduthalai.in/page-1/94845.html#ixzz3Pk1EtE00

தமிழ் ஓவியா said...

ஒரு மருத்துவர் பார்வையில்....

(அ. உசேன் மஸ்தான் விஙிஙிஷி., ஞிளி., வி.கி., (தமிழ்) இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் (நிறைவு) கண் மருத் துவர், சஞ்சிதா மெடிக்கல்ஸ் அறந் தாங்கி புதுக்கோட்டை மாவட்டம்).

பொருள்: திருமணப் பொருத்தம் - _ மருத்துவப் பரிசோதனை பார்வை: 28.8.2014 விடுதலை வியாழன்
ability is of little account without opportunity
பார்ப்பானை ஒழிக்க தமிழர்களால் ஒருக்காலும் முடியாது.

தமிழர்களை ஒழிக்க பார்ப்பான் தேவையில்லை. தமிழர்களே ஒருவருக்கொருவர் அடித் துக் கொண்டு வீழ்ந்து விடுவார்கள். பணம், பதவி, புகழ், மது, மாது ஒரு இலட்சம் கால வரலாற்றை உற்று நோக்கும் போது தமிழர்களிடம் இதற்கென்ற மரபணு இருப்பதாக என் சிந்தனைக்குத் தென்படுகிறது.
அதிர்ந்து விடாதீர்கள்.

ஒரு காரணத்திற்காக முகம் இதழுக்கு எழுதினேன். இதைச் சொல் லுவதற்கு எனக்குத் தகுதி இல்லைதான். ஏதோ எடுத்த எடுப்பில் நான் சொல்லவில்லை.

அடிப்படையில் நான் ஓர் அறிவிய லாளன். மருத்துவப் படிப்பு படித்தவன். பெரிய மேதைகளோடோ உலக அரசியல் தலைவர்களின் பழக்கமோ எனக்குக் கிடையாது. கிட்டத்தட்ட 120 புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துள்ளேன்.

மருத்துவப் படிப்பின் இயல்புதான் எனக்குக் கை கொடுத்தது. கற்றது கடுகளவுதான். பொது மக்களின் தொடர்புதான் எனக்கு படிப்பினை கொடுத்தது. பாமர மக்களிலிருந்து உலகப் பெரிய தலைவர்களின் எண் ணங்கள் ஒன்றாகவே இருக்கின்றன. அவர்களுடைய சூழ்நிலை புகழைத் தந்தது. உழைப்பு அவர்களுக்கு முன் னேற்றத்தைக் கொடுத்தது. அவ்வளவே இந்தக் கடிதம் எழுதுவதற்குக் காரணம்?

சிறுபிராயத்திலே பார்ப்பனர்களிடம் பழகியவன். பள்ளிப் பருவத்தில் மணப்பாறை அஞ்சலகத்தில் கூலி வேலை செய்தவன். நான் தடுமாற்றம் இல்லாமல் படிப்பதைப் பார்த்து கீழ் மட்டப் பணியாளர்கள் என்னை விடுதலையை வாசிக்கச் சொல்லி பத்து பேர்கள் காது தாழ்த்தி கேட்பார்கள். அடுத்த நாள் விடுதலையை துப்பறியும் நாவல் போல் ஆர்வமுடன் கேட் பார்கள்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாக அறந்தாங்கி தி.க. செயற்குழு உறுப்பினர் கண்ணுச்சாமி அய்யா. அவர்களின் இல்லத் திருமண விழாவில் ஆசிரியர் தலைமையேற்று நடத்தியபோது வாழ்த் துரை வழங்கியதில் நானும் ஒருவன்.

அப்போது நான் திருமணப் பொருத்தம் மூடத்தனமானது அறிவியல் - மருத்துவப் பொருத்தம்தான் நன்மை யானது என்றேன். நான் இந்த விஷயத் தில் வெட்டு, குத்து, கொலை ஆகிய வற்றில் (Post Mortem) செய்து கோர்ட் டில் விளக்கம் கொடுக்கப் போவேன்.

நான் பல இடங்களில் அறிவியல் உண்மைகளைச் சொல்லி கூட்டமாக என்னை வெட்ட வந்து விடுவார்கள் -_ நான் தப்பியோடி உயிர் பிழைத்தது உண்டு.இந்த பேச்சைக் கேட்டு இந்த மாதிரி எந்த டாக்டரும் சொல்லியதில்லையே என்றீர்கள்.

கொலம்பஸ்ஸுக்கு ஸ்பெயின் நாட்டு அரசு உதவ முன் வரவில்லை. இராணி யின் அனுமதி கேட்டு அவரிடம் வாக்குறுதி பெற்று அமெரிக்கா சென்று வந்த பிறகு பலவற்றைக் கொடுத்தார். SYPHILIS என்ற பால்வினை நோய் பரவுவதற்குக் காரணமானார். இந்த நோய் இராஜபிளவை என்றும் அரச பரம்பரைக்குத் தான் வரும் என்று பெருமையாகப் பேசிக் கொள்வார்கள். பெருமையுடனிருப்பார்கள்.

300 ஆண்டுகளுக்குள் இது பாமர மக்களிடையே பரவ ஆரம்பித்தவுடன் மருத்துவர்கள் ஆராய ஆரம்பித்தார்கள். இதற்கிடையே மனைவிமார்கள்மீது சந்தேகப்பட்டு பல கொலைகள் நடந் தன. பலர் நோயினால் பைத்தியமாக திரிந்தார்கள். PENICILLIN கண்டுபிடித்த தின் பின் நோய் குறைந்தது. மரணம் தள்ளிப் போடப்பட்டது. மக்கள் பெருக்கம் அதிகமாகியது.

மருத்துவத் துறையைப் பொறுத்த மட்டில் பாமரன் மேதை தலைவன் என்று எல்லோருக்கும் ஒரே எண்ணம் தான் அதில் கடுகளவும் பொய்யில்லை.

உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் 25 ஆண்டுகளுக்கு முன் திருமணத்தில் கலந்து கொண்ட வயதானவர் அன்று ஏளனமாய் சிரித்ததுபோல் சட்டத் துறையிலுள்ளவர்களுக்கும் பைத்தியம் பிடித்து விட்டது போலிருக்கிறதே என்றார். நான் என்ன ஒரு சுண்டைக் காய்தான்.

சார்லஸ் டார்வின் -_ மென்டல் - தற்போது பால்நர்ஸ் என்ப வர்கள் படாத அவமானமா நான் அடைந்து விட்டேன்? ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். சமயக் கருத்துக்கு மாறுபட்டா சொன்னேன். பிழைக்கத் தெரிந்த பார்ப்பனர்கள்தான் கெட்டிக்காரர்கள்.

தமிழர்கள் எப்போ துமே மற்றவர்களுக்கு அடிமையா யிருந்து, கசையடி பெற்றுப் பழகிப் போனவர்கள். மரபணுவின் செய்வது தந்தை பெரியாரைவிட பாடுபட்டவர் கள் யாருமில்லை. அவரையே தூக்கி எறிந்து பேசுகிறார்கள் மருத்துவர்கள்.

இன்னும் எவ்வளவோ இருக்கிறது சொல்ல நேரமும் இடமும்தான் இல்லை. முயற்சி திருவினையாக்கும் என்று காலத்தைத் தள்ளிக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

Read more: http://viduthalai.in/page-1/94891.html#ixzz3Pk2hwL2G

தமிழ் ஓவியா said...

திராவிடர் திருநாள் ஏற்படுத்திய திருப்பம்

சென்னை லயோலா கல்லூரியில் சமூகவியல் இரண்டாம் ஆண்டு மாணவர் கி.விக்னேஷ், சிவகங்கை மாவட்டம் தேவரம்பூர் கிராமத்தைச் சார்ந்தவர். இவர் அகில இந்திய தேசிய மாணவர் படையில் சேர்ந்து முகாம்களில் பல பயிற் சிகளைப் பெற்றுள் ளவர்.

தமிழகம் முழுவதும் ஏழு முகாம்கள் நடை பெற்ற ஆறு பயிற்சிப் பிரிவுகளில் பயிற்சி பெற்றவர். காலாட்படை ஓட்டம் (Thalsanik), சுடுதல் பயிற்சி (Firing), சுத்தம் மற்றும் சுகாதாரம் (Health & Higene), நில யுக்தி (Field Craft), போர் யுக்தி(Battle Craft), முகாம் அமைத்தல் (Tent Fixing) உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றுள்ளவர்.

தமிழகத்திலிருந்து தேசிய அளவி லான டில்லியில் நடைபெற்ற முகா முக்கு தேர்வு செய்யப்பட்டவர்.
அகில இந்திய அளவில் டில்லி யில் தல்சானிக் முகாம் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற ஏழு முகாம் களிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர் கி.விக்னேஷ்.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் திருநாள் விழாக்கொண்டாட்டங்களில் பங்கேற்று பெரிதும் உற்சாகம் அடைந்துள்ளார். அவர் கூறும்போது, "என் தலைமுறையில் உள்ள மக்களுக்கு மதம், ஜாதி போன்றவைகளிலி ருந்து விடுபட பகுத்தறி வுடன் அடக்குமுறை, ஒடுக்குமுறைகளுக்கு எதிராக செயல்படும் நோக்கோடு நான் இப்பயிற்சியை மேற் கொண்டு, இப்போது பயணப்பட்டுக் கொண் டிருக்கிறேன். இது ஒரு நீண்ட பயணம்.

என் சார்ந்த பகுதி, கலாச்சாரம் சார்ந்த மக்களுக்கு பகுத்தறிவு குறைவாக உள்ள மக்களிடம் சென்று பெரியார் அளித்த சுயசிந்தனை, விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். என்னை ஆட்கொண்டிருக்கும் தந்தை பெரியாரின் பணியைத் தொடருவேன்" என்று உறுதிபடக் கூறினார்.

இவரைப் போன்று ஏராள மான இளைஞர்கள், மாணவ _ மாண வியர்கள் பெரியார் திடலில் மூன்று நாள்கள் (ஜன.16,17,18) நடைபெற்ற திராவிடர் திருநாள் கொண்டாட்டத் தில் கலந்து கொண்டு இத போன்ற உணர்வினை பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-1/94896.html#ixzz3Pk39UtLB

தமிழ் ஓவியா said...

திருவள்ளுவர் நாள் ஊர்வலம் துவக்கி வைக்க கருநாடக முதல்வர் சித்தராமையா ஒப்புதல்பெங்களூரு, ஜன.23- பெங்களூருவில், திருவள் ளுவர் நாள் ஊர்வலத்தை, கர்நாடக முதல்வர் சித்த ராமையா துவக்கி வைக்க உள்ளார்.பெங்களூரு தமிழ் சங்கமும், பெங்களூ ருவிலுள்ள அனைத்து தமிழ், தமிழர் அமைப் புகள் இணைந்து, ஆண்டு தோறும் திருவள்ளுவர் தின ஊர்வலம் நடத்தப் படுகிறது. இந்தாண்டு, பிப்., 1ஆம் தேதி காலை, திருவள்ளுவர் தின ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, வரும் பிப்., 1ஆம் தேதி, நடக்கும் திரு வள்ளுவர் தின ஊர்வ லத்தை துவக்கி வைக்க, முதல்வர் ஒப்புதல் தெரி வித்து உள்ளார். அனைத்து தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பெரும் எண்ணிக்கையில் மக்களை திரட்டி, ஊர்வலத்தை சிறப்பாக நடத்த உள்ளன.

தமிழ் ஓவியா said...

தொல்லை

வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப் படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

Read more: http://viduthalai.in/page1/94790.html#ixzz3Pk4Tlg5T

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவின் கொள்கை

பகுத்தறிவு வாரப் பத்திரிகையின் முதல் மலர் 26.9.1934 ஞாயிறு வெளியாகின்றது என்றாலும், அதன் கொள்கை களைப் பற்றி குடிஅரசு ரிவோல்ட் பகுத்தறிவு (தினசரி) ஆகிய பத்திரிகைகளின் அபிமானிகளுக்கும் வாசகர் களுக்கும் எடுத்துக் கூற வேண்டியதில்லை.

சுருக்கமாக ஒரு வாக்கியத்தில் சொல்லித் தீர வேண்டுமானால் பகுத்தறிவு தோன்றலானது இன்றைய உலக வழக்கில் இருந்து வரும் காரியங்களில் பெரும் பான்மை மக்களால் முதன்மையானதாகவும், இன்றி யமையாதனவாகவும் கருதப்படும்.

எங்கும் நிறைந்த இறைவனை வாழ்த்தவோ, எல்லாம் வல்ல மன்னனை வாழ்த்தவோ, யாதினும் மேம்பட்ட வேதியனை வணங்கவோ, ஏதும் செய்யவல்ல செல்வ வானை வாழிய செப்பவோ கருதி அல்ல வென்பதே யாகும்.

மேலும் மனித சமூகத்தில் மௌட்டியத்தால் ஏற்பட்ட துரபிமானங்களாகிய கடவுள், ஜாதி, மதம், தேசம், நான், என்பன போன்ற அபிமானங்களை அறவே ஒழித்து மனித சமூக ஜீவாபிமானத்தையும், ஒற்றுமையையும் பிரதான மாய்க் கருதி உழைத்து வரும் என்றும் சொல்லுவோம்.

இத்தொண்டாற்றுவதில் பகுத்தறிவு வேதத்திற்கோ, விமலத்திற்கோ, சாத்திரத்திற்கோ, பழக்கத்திற்கோ, பழமைக்கோ, புதுமைக்கோ, அடிமையாகாமல் கொள்வன கொண்டு தள்வன தள்ளி தானே சுதந்திரமாய் தன்னையே நம்பி தனது அறிவையும் ஆற்றலையுமே துணைக் கொண்டு தன்னாலான தொண்டாற்றி வரும்.

முடிவாய் கூறுமிடத்து பகுத்தறிவு மனித ஜீவாபி மானத்துக்கு மக்களை நடத்திச் செல்லுமே ஒழிய எக் காரணம் கொண்டும் மக்கள் பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வில் உயிர் வாழாது என்பதேயாகும்.

-தந்தை பெரியார்
பகுத்தறிவு 26.8.1934

Read more: http://viduthalai.in/page1/94822.html#ixzz3Pk5nMAUQ

தமிழ் ஓவியா said...

நாத்திகர்களே தேவை!


இந்துக்கள் தங்களுடைய மதமே சிறந்தது எனக் கருதுகிறார்கள். முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் தர்மமே மேலானது என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் நாம் எந்த மதத்தைத் தழுவுவது என்று அக்பர் ஒருமுறை கேட்டதாக கிறிஸ்துவப் பாதிரிகள் சொல்லுகிறார்கள். அக்பருடைய கேள்வி நியாமானது. ஆனால், அது கிறிஸ்துவ பாதிரிகளுக்கு பிடிக்கவில்லை.

தங்கள் குறிப்பேட்டில்,

எல்லா நாஸ்திகர்களுக்கும் உரிய பொதுவான குற்றம் அக்பரிடத்தும் காணப்படுகிறது. நாஸ்திகர் தங்கள் படித்தறிவை மத நம்பிக்கைகளுக்கு கீழ்ப்படுத்த மறுக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஒரு நாஸ்திகனுக்குரிய லட்சணம் இதுவாயின் இத்தகைய நாஸ்திகர்களின் தொகை பெருகுவதால் நாட்டுக்கு நன்மையே தவிர வேறில்லை.

-ஜவகர்லால்நேரு
உலக சரித்திரம், பக்கம் 157

Read more: http://viduthalai.in/page1/94825.html#ixzz3Pk67GuZz

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ்சை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கக்கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு


நியூயார்க், ஜன.23- ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெளிநாடு களிலிருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்பு என அமெரிக்க நீதிமன்றத்தில் சீக்கியர் உரிமைகளுக்கான அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. நியூயார்க் தென் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தி லிருந்து இவ்வழக்கின்மீது அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி 60 நாள்களுக்குள்ளாக பதில் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நீதிக்கான சீக்கிய அமைப்பு Sikhs for Justice (SFJ) தொடுத்துள்ள வழக்கில் வெளிநாட்டிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பு என்பதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து உறுதிப்படுத்தக் கோரப்பட்டுள்ளது. பாசிசக் கொள் கைகளை நம்புவதும், அதன்படியே உணர்ச்சிகளின்படி இந்தியாவை இந்து தேசமாக மாற்றி ஒரு மதம், ஒரே கலாச்சார அடையாளம் என்று தீயநோக்கங்களுடன் வன்முறையுடன் பிரச்சாரம் செய்துவருகிறது.

சீக்கிய அமைப்பின் சார்பில் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ். அதன் பிரச்சாரத்துக்கு தாய்வீடு திரும்புதல் என்று தலைப்பிட்டு கட்டாயமாக கிறித்துவர் களையும், இசுலாமியர்களையும் இந்துமத்துக்கு மாற்றம் செய்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கக்கோரும் வழக்கின் மனுவில் குறிப்பிடும்போது, ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சார்பு அமைப்புகளை வெளிநாட்டிலிருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பன்னாட்டு பயங்கர வாதத்துக்கு என்றே வடிவமைக்கப்பட்ட அமைப்பாக Specially Designated Global Terrorist entity (SDGT) அறிவிக்கவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

சிறுபான்மையினரைக் குறிவைத்துள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து மனுவில் குறிப்பிடும்போது, பாபர் மசூதி இடிப்பு, பொற்கோயிலில் இராணுவம் நுழைந்து கலவரம் ஏற்படுத்தியது, கிறித்தவ சர்ச்சுகளை தீயிட்டு கொளுத்தியது, 2008 இல் கிறித்தவ செவிலியர் களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது மற்றும் 2002 குஜராத் கலவரங்கள் ஆகியவைகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்களிப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/94828.html#ixzz3Pk71MVqa

தமிழ் ஓவியா said...

முதல் பெண் அய்.எப்.எஸ்.

பெண்களில் முதல் அய்.எப்.எஸ். அதிகாரி இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளராகவும் இருந்தவர். அதுவும் பிற் படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் (கருநாடகம்) என்றால் பலருக்கும் ஆச்சரி யமாக இருக்கலாம் - இந்தத் தகவல் சிலருக்குப் புதிதாகக் கூட இருக்கக் கூடும்.

அவர் பெயர் சி.பி. முத்தம்மா (1924-2009) 1949இல் இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த போது அவர் சந்தித்த சவால்கள் சாதாரணமான வையல்ல!

திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்தபோது, சட்ட விதிகள் சல்லடம் கட்டி எதிர் நிலையில் நின்றன. திரு மணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் வெளி யுறவுத்துறை செயலாளர் பதவியில் இருக்கக் கூடா தாம்! பாரத மாதாவின் மடியில் குடி கொண்டிருந்த விதிகளைப் பார்த்தீர்களா? அய்.எப்.எஸ். படித்து வெளியுறவுத்துறை செயலாளராகவும் ஒளி விட்டவர் அல்லவா? விடுவாரா? உச்சநீதிமன்றம் சென்றார்; நல்ல வாய்ப்பாக அந்த வழக்கை விசாரித்தவர் வி.ஆர். கிருஷ்ணஅய்யர்.

விதி எண் 8(2) தடைச் சுவர் எழுப்புவதைக் கண்ட நீதிபதி ஏளனமாகச் சிரித்தார்.

தனது சிந்தனைக் கூட்டி லிருந்து சில அம்புகளை எடுத்து வீசினார். ஒரு பெண் அதிகாரி திருமணத்துக்கு முன்னர் அரசின் அனு மதியைப் பெற வேண்டு மென்றால், ஓர் ஆண் அதிகாரியும் அத்தகைய அனுமதியைப் பெற வேண்டாமா!? தமது குடும்பப் பொறுப்பு காரணமாக ஒரு பெண் தன் அலுவலகப் பணிகளைச் சரி வர செய்யாத நிலை என்றால், அதே காரணம் ஓர் ஆணுக் கும் பொருந்த வேண்டாமா? என்று வினா தொடுத்த நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய் யர் - அரசமைப்புச் சட்டத் தின் முரண்பாட்டையும் ஒரு மொத்து மொத்தினார்.

இந்த விதி அரசியல் சாசனத்தின் 16ஆம் பிரிவுக்கு முரணானது என்பதையும் சுட்டிக் காட்டினார்.

பெண்கள் பலவீனமான வர்கள் என்ற மனோ நிலை கொண்ட ஆணாதிக்கக் கலாச்சாரத்தின் தொடர்ச்சி தான் இந்த பாகுபாடு சுதந்திரமும், நீதியும் - ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதே! அரசியல் சாசனம் கூறும் சம நீதித் தத்துவத்திற்கு இந்த விதி முறைகள் எதிரானவை என்றும் இடித்துக் கூறினார் நீதிபதி.

35 ஆண்டுகள் அரசு பணியில் சிறப்பாகப் பணி யாற்றி முத்திரை பொறித்தார் முத்தம்மா.

நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் முன்னிலையில் இந்தவழக்குச் செல்லாமல், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவி ருந்த ரெங்கநாத் மிஸ்ரா போன்றவர்களிடம் சென்றி ருந்தால் என்னாகும்?

பெண்கள் வீட்டு வேலை செய்வதில்தான் திறமையானவர்கள்; ஆண்களோடு போட்டிப் போட்டுக் கொண்டு அரசுப் பணிகளுக்கு வர ஆசைப்படக் கூடாது என்று பிரம்ம குமாரிகள் மாநாட்டில் பேசிய துண்டே! (8.11.1996)

- மயிலாடன்

குறிப்பு : முத்தம்மா அவர் களின் பிறந்த நாள் இந்நாள் (1924)

Read more: http://viduthalai.in/e-paper/94874.html#ixzz3Pk7S9ccG

தமிழ் ஓவியா said...

குஜராத்தில் கோலோச்சும் இந்துத்துவா வெறி!

முஸ்லீம்களின் உருது பள்ளிகளிலும் சரஸ்வதி வந்தனாவாம்!

பள்ளிகளில் சனிக் கிழமை (ஜனவரி 24) "வசந்த பஞ்சமி' தினத்தை யொட்டி, "சரஸ்வதி வந்தனம்' நிகழ்ச்சியை முஸ்லிம்களின் உருது பள்ளிகள் உட்பட நடத்த வேண்டும் என்று குஜ ராத்தின் ஆமதாபாத் நகர பள்ளிக் கல்வி வாரியம் அனுப்பியுள்ள சுற்ற றிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆமதாபாத் மாநக ராட்சியின் பள்ளிகள் வாரியம் அந்த நகரின் 450 தொடக்கப் பள்ளிகளை நடத்துகிறது. அவற்றில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள 64 உருது வழிப் பள்ளிகளும் அடங் கும். இந்தப் பள்ளிகளில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சுமார் 16,000 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆமதா பாத் மாநகராட்சியின் பள்ளிகள் வாரியம் ஜனவரி 19ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை வெளியிட் டது. அதில் கூறப்பட்டி ருந்ததாவது:

வசந்த பஞ்சமி தின மானது அறிவுக் கடவு ளான சரஸ்வதிதேவியை இந்த நாளில் நினைவு கூரும் ஒரு நிகழ்வாகும்.

கல்வியின் முக்கியத் துவத்தை மாணவர்கள் அறிந்துகொள்ள, இந் நாளில் சரஸ்வதி பூஜைக்கு பள்ளிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி வழி பாட்டு நிகழ்ச்சியின் போது சரஸ்வதிதேவி தொடர்பான வழிபாட் டுப் பாடல்களை பாடச் செய்ய வேண்டும். மேலும், மற்ற மாநிலங்களில் "வசந்த பஞ்சமி' தினம் எவ்வாறு கொண்டாடப் படுகிறது என்பதை மாண வர்கள் புரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக் கப்பட்டிருந்தது.

காங்கிரஸ் எதிர்ப்பு: இந்தச் சுற்றறிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள் ளது. இது குறித்து ஆம தாபாத் மாநகராட்சியின் சர்கேஜ் பகுதி மாமன்ற உறுப்பினர் ஹாஜி மீர்ஸாபேக் கூறியதாவது:

இது பாஜகவின் இந்துத்துவச் செயல் திட்டத்தை முன்னெடுக் கும் ஒரு முயற்சியாகும். இந்தச் சுற்றறிக்கை முஸ் லிம்கள் மட்டுமன்றி மற்ற மதத்தினரின் அடிப்படை உரிமைகள் மீதான தாக் குதல். ஒரு ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் தங்கள் மதத்தைப் பின் பற்றும் உரிமை உள்ளது. முஸ்லிம் மாணவர்கள் பூஜை செய்ய வேண்டும் என்று அவர்கள் (மாநக ராட்சி நிர்வாகம்) ஏன் விரும்புகின்றனர்? இது உருதுப் பள்ளிகளில் கட் டாயமாக்கப்படக் கூடாது என்றார் அவர்.

மாநகராட்சி விளக்கம்

இதனிடையே, சம்பந்தப்பட்ட சுற்ற றிக்கை தொடர்பாக ஆமதாபாத் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. "யாருடைய உணர்வுகளை யும் புண்படுத்தும் எண் ணம் எங்களுக்கு இல்லை. மாணவர்களிடையே அறிவுக்கான தேடலை மேம்படுத்துவதே எங்கள் நோக்கமாகும். கல்வியின் முக்கியத்துவத்தை மாண வர்கள் அறிந்து கொள்வ தற்காகவே அந்தச் சுற் றறிக்கை வெளியிடப்பட் டது'' என்று வெண்டைக் காய் விளக்கெண்ணெய் விளக்கம் கூறுகிறார், மாநகராட்சியின் பள்ளி கள் வாரியத் தலைவர் ஜகதீஷ் பாவ்சார்.

Read more: http://viduthalai.in/e-paper/94875.html#ixzz3Pk7eaX5z

தமிழ் ஓவியா said...

அரசுப் பேருந்தில் ஹிந்துமத மாநாட்டு விளம்பரமா?


அரசு நிர்வாகம் சாதி,மத பேதங்களுக்கு அப் பாற்பட்டு இருக்க வேண்டும். அரசுநிர்வாகத்தில் மதத்தையோ, சாதியையோ இணைக்கக் கூடாது என்பது விதிமுறை. ஆனால் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகத்தின் உடுமலை பணிமனைக்குட்பட்ட அரசு பேருந்தில் ஒரு மதத்தின் மாநாடு குறித்த விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.அந்த விளம்பரத் திற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசு நிர்வாகம் அதனை அனுமதித்திருக்கிறது. ஏற்கெனவே தலைவர் களின் பெயரில் ஓடிய பேருந்துகளில் கூட சாதிய அடையாளம் காணப்பட்டு பிரச்சினை உருவானது.

அது தமிழகத்தின் சட்டஒழுங்கு பிரச்சினையான பின்பு, அனைத்துக் கட்சிகளின் முடிவிற்கேற்ப, அனைத்து அரசுபோக்குவரத்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற ஒரே பெயரில் இயக்கப்படுகிறது. ஆனால் தற்போது புதியதாக மதத்தின் பெயரால் இன்னொரு சட்ட ஒழுங்கு பிரச்சினையை உருவாக்க உடுமலை அரசு போக்குவரத்து பணிமனை வழி காட்டுகிறதோ ? என்ற அய்யம் உடுமலை பகுதி மக்களிடம் எழுந் திருக்கிறது. அரசு போக்குவரத்து கழக தலைமை நிர்வாகம் இதனை கவனிக்கின்றதா?

Read more: http://viduthalai.in/e-paper/94885.html#ixzz3Pk808l2I

தமிழ் ஓவியா said...

வேளாண் பல்கலைக் கழக துணைவேந்தராக முதல் தாழ்த்தப்பட்டவர்


பெங்களூரு, ஜன.24- கர்நாடக மாநிலத்திலேயே முதல் முறையாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். கருநாடக மாநிலத்தில் பெங்களூருவில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக தாவர வல்லுநர் மற்றும் மரபியலாளருமாகிய எச். சிவாண்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/94880.html#ixzz3Pk8AL9gh

தமிழ் ஓவியா said...

உயிருக்கு குறி வைக்கும் இரசாயன ஆலைகள்


ஆலைகள் அவசியம் தான்; அவற்றின்மூலம் உற்பத்திகள் பெருகுகின்றன, பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது, வேலை வாய்ப்பும் விரிவடைகிறது. அதே நேரத்தில் அவை சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதற்கு இடம் தரக் கூடாது அல்லவா?

விதி முறைகள் ஏராளம்இருந்தும், அவை கடைப் பிடிக்கப்படுவதில்லை என்பதுதான் வேதனையான செய்தியாகும்.

ஆலை முதலாளிகளின் கவனிப்பில் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாற்று இன்னொரு பக்கத்தில்; எது எப்படி இருந்தாலும் இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பொது மக்கள்தான்.

இந்த ஆலைக் கழிவுகள் பெரும்பாலும் நதிகளில் கலந்து விடுகின்றன; இதனால் பாதிக்கப்படுவது சுற்றுச் சூழலும், பொது மக்களும் கால் நடைகளும் தான்.

நீதிமன்றங்கள் பற்பல நேரங்களில் கடுமையான தீர்ப்புகள், ஆணைகள் வழங்கிக் கொண்டு தானிருக் கின்றன! ஆனால் அவற்றையும் கண்டு கொள்வ தில்லை; சட்ட ஆட்சி எந்தத் தரத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறது என்பதற்கு இவை எல்லாம் கண்ணிறைந்த சாட்சியங்களாகும்.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் அருகே தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் (DCW)என்ற அமில ஆலை ஒன்று செயல்பட்டு வருகின்றது.

இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் காஸ்டிக் சோடா, பி.வி.சி., சி.பி.வி.சி. போன்றவை; இவற்றின் மூலப் பொருள் பாதரசம் ஆகும்.

எந்த விதிமுறைகளையும், கட்டுத் திட்டங்களையும் பற்றிக் கவலைப்படாமல் இந்த ஆலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டும் வருகிறது.

இந்த ஆலைகளில் தேக்கி வைக்கப்படும் டிரை குளோரோ எதிலின், அயன் ஆக்சைடு, காட்மியம் போன்ற ஆபத்தான செந்நிறம் கொண்ட ரசாயன கழிவுகள் ஆலைக்கு அருகில் உள்ள காயல்பட்டணம் கடலில் கலக்க விடப்படுகின்றன.

இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள், குறிப்பாக மீன் வளம் மிகக் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகி வருகிறது.

காயல் பட்டணம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் கொடிய நோய்களுக்கும் ஆளாகின்றனர். சுவாசக் கோளாறுகள், புற்று நோய் போன்ற நோய்களின் தாக்குதலுக்கு இரையாகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு மனு கொடுத்து, மனு கொடுத்து ஓய்ந்தும் போய் விட்டனர். பல்வேறு அமைப்புகள் முற்றுகைப் போராட்டங் களைக்கூட நடத்திப் பார்த்து விட்டனர். கடையடைப் புகள் எல்லாம் நடந்தும் இருக்கின்றன - அரசோ அசையவில்லை.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்த ஆலைக்குத் தேவையான தண்ணீரைத் தாமிரபரணியிலிருந்து பெற்றுக் கொள்ள தமிழ்நாடு அரசிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 3 லட்சம் கேலன் தண்ணீர் பயன்படுத் தப்படுகிறது. அதற்கான கெடு முடிந்தும்கூட தாமிரபரணி தண்ணீரை அந்த ஆலை சட்ட விரோத மாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாம்.

நாட்டின் போக்கு எப்படி இருக்கிறது? மக்களின் உயிர் என்பதுதான் இந்த நாட்டில் மிகவும் மலிவான பொருள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்!

எடுத்துக்காட்டுக்கு இதனைக் குறிப்பிடுகிறோம். பெரும்பாலான ஆலைகளில் கழிவுகள் நீரில் கலக்கப் படுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கடுமையானசட்ட திட்டங்களும், செயல்பாடுகளும் கண்காணிப்புகளும் மிக மிக தேவை என்று வலியுறுத்துகிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/94870.html#ixzz3Pk8Yoeiz

தமிழ் ஓவியா said...

இந்துமதப் போர்வைக்குள் பார்ப்பனிய பாம்புகள்!...

நடந்து முடிந்த திமுக பொதுக்குழுவில் அதன் பொதுச்செயலாளர், இனமானக் காவலர் பேராசிரியர் அவர்கள், பெரும் பான்மை மக்களின் ஆதர்ஷபுருஷனாகக் கருதப்படும் ராமனை ஏடா கூடமாக விமர்சித்து விட்டார் என கோபக்கனலை அள்ளி வீசி இருக்கிறது ஒரு பார்ப்பன ஏடு.

இது அந்த ஏட்டின் குரலல்ல; பார்ப் பனியத்தின் பாசீசக்குரல்! ராமனுக்குப் பிறந்தவர்கள்தான் இந்துக்கள், ஏனையோர் முறை தவறிப் பிறந்தவர்கள் என வாய்க் கொழுப்போடு பேசிய பா.ஜ.க. எம்.பியைக் கண்டிப்பதற்கு யோக்கியதை இல்லாத அந்த ஏடு, ராமன் என்ன ஜல்லிக்கட்டு காளையா? எனப் பேராசிரியர் பேசியதை மட்டும் ஆவேசத்தோடு கண்டித்திருப் பதைப் பார்க்கும்போது அய்யாவின் பேச்சுதான் நினைவுக்கு வருகிறது.

ஆரியரும், திராவிடரும் ஒற்றுமையாக இருக்க முடியாதா? என அய்யாவைக் கேட்டதற்கு அவர் சொன்னார்.

நெசவாளியும், குரங்கும் ஒற்றுமையாக இருக்க முடியுமா? நெசவாளி நெய்து கொண்டே இருப்பான்; குரங்கு இழைகளை அறுத்துக்கொண்டே இருக்கும். எப்படி ஒற்றுமை ஏற்பட முடியும்? என அன் றைக்கே அய்யா அவர்கள் ஆணித்தர மாகக் கூறினார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை என்பதைத்தான் இன்றைய அந்த பார்ப்பனிய ஏடு விளக்கி இருக்கிறது!...

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ் சாது என்பதை அந்தப் பார்ப்பனிய ஏடு புரிந்து கொண்டால் சரி!... பார்ப்பனியக் கோட்டை அய்யாவின் பகுத்தறிவு ஏவு கணைத் தாக்குதல்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சரிந்துவரும் வேதனையைத் தாங்கிக்கொள்ள வழியின்றித் தனது வயிற்றெரிச்சலை வார்த்தைகளாகக் கொட்டித் தீர்த்திருக்கிறது.

இளமையிலேயே வசிஷ்டருக்குத் தாதாவேலை செய்தவனை சொந்தமாகச் சிந்திக்கத் திறனற்று எவனோ சொன்னான் என்பதற்காக தனது சொந்த துணைவியின் மீதே சந்தேகப்பட்டு கர்ப்பிணி என்று கூடப் பாராமல் காட்டுக்குத் துரத்திய காருண்ய சீலனை! கடவுளின் அவதாரம் எனச் சொல்லிக் கொண்டு மானுக்கும், மாயமானுக்கும் வேறுபாடு தெரியாமல் இருந்த ஒரு கருத்துக்குருடனை, புராணம் என்றும் இதிகாசம் என்றும், வேதம் என்றும், பாமர மக்களை ஏமாற்றி இன்ன மும் அவர்களைச் சுரண்டிப்பிழைக்க நினைக்கும் ஒரு எத்தர் கூட்டம் இப்படி ஆணவத்தோடு பேசுகிறதென்றால் என்ன பொருள்? அதன் ஆதிக்கக்கோட்டை கலகலத்துப்போய்விட்டது என்பது தானே பொருள்! அய்யா ஆசிரியர் அவர்களின் தொண்டறம் வீண் போகவில்லை என்பதுதானே அர்த்தம்!

தமிழினத் தலைவர் கலைஞர் அவர் களையும், இனமானப் பேராசிரியர் அவர் களையும் குறிவைத்து பார்ப்பனியம் பாய் வதற்குக்காரணம் இப்போது மக்களுக்குப் புரிந்திருக்கும்!

சாம, பேத, தான, தண்டம் என்ற முனைமழுங்கிப்போன பார்ப்பனிய அஸ்திரத்தை மீண்டும் தமிழர்கள் மீது ஏவி அவர்களை அழித்து விடலாமென பகற்கனவு காணுகிறது பார்ப்பனியம். இந்து மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு ஏமாந்த தமிழர்களை தனது நச்சுப்பற்களால் கொத்தி மகிழத்துடிக்கிறது பார்ப்பனியம்!... அது பெரியார் பூமியிலே ஒரு காலும் நடவாது! நடக்க விடாது திராவிடர் கழகம்!!...

முள்மீது இலை மோதினாலும், இலை மீது முள் மோதினாலும் கிழிபடப்போவது இலை தானே தவிர முள் அல்ல என்பதை இனியேனும் பார்ப்பனியம் புரிந்து கொண் டால் சரி!...

- நெய்வேலி க.தியாகராசன், கொர நாட்டுக்கருப்பூர்

Read more: http://viduthalai.in/page-2/94873.html#ixzz3PkA5dsDj

தமிழ் ஓவியா said...

இத்தகைய கோவில்கள் ஏன்?


தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்த வரகூர் என்னும் கிராமத்தில் உள்ள வெங்டேசப் பெருமாள் கோவிலில் பார்ப்பனரல்லாதார் சென்று தரிசனம் பண்ணக்கூடாது என்பது பற்றி அவ்வூர் பார்ப்பனர்களுக்கும்,, பார்ப்ப னரல்லாதார்களுக்கும் நீண்டகாலமாக வழக்கு நடை பெற்றது.

கடைசியில் சென்னை ஹைகோர்ட்டில், ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டலே முன்பும் ஜஸ்டிஸ் வாலர் முன்பும் விசாரணைக்கு வந்தபோது இருவரும் வேறு வேறு அபிப்பிராயம் கொண்டனர்.

ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டலே பார்ப்பனரல் லாதாருக்கும் தரிசனம் பண்ண உரிமையுண்டு என்று அபிப்பிராயப்பட்டார்; ஜஸ்டிஸ் வாலர், பார்ப்பனரல்லா தாருக்குத் தரிசனம் பண்ணும் உரிமையில்லை என்று அபிப்பிராயப்பட்டார்; ஆகையால் கடைசியாக ஜஸ்டிஸ் வாலர் அவர்கள் அவ்வழக்கை இரண்டாம் முறையாக விசாரித்து, பார்ப்பனரல்லாதார்க்குத் தரிசன உரிமை இல்லை என்று தீர்ப்புக் கூறினார்.

இத்தீர்ப்பைப் பற்றி நமக்கு ஒரு கவலையுமில்லை. பார்ப்பனரல்லாதாருடைய தயவோ ஒத்தாசையோ இல்லாவிட்டால் எந்தக் கோயில்களும் நிலைத்திருக்க முடியாது. சோற்றை வடித்து பொங்கல் புளியோதரைகள் பண்ணி அவற்றைக் கல்லுப் பொம்மையின் முன்பு கொண்டு போய் காட்டியபின் பார்ப்பனர்கள் பங்கு போட்டு எடுத்துக் கொண்டு போகிற ஒரு காரியத்தைத் தவிர, மற்ற எல்லாக் காரியங்களையும் பார்ப்பனரல்லாதார்களே செய்து வருகின்றார்கள்.

இத்தகைய ஒரு கோயிலுக்குள், பார்ப்பனரல்லாதார் போகக் கூடாது என்று தடுத்துக் கோர்ட்டுக்குப் போகும்படி செய்த பார்ப்பனர்களின் சுய நலத்தையும் அகங்காரத் தையும் உணருகின்ற எந்தப் பார்ப்பனரல்லாதாரும், இனி இது போன்ற கோயில்கள் விஷயத்தில் எந்த வகையிலும் ஒத்துழைக்க முன்வர மாட்டார்களென்றே நம்புகின்றோம்.

ஆகையால் உண்மையில், பார்ப்பனர்களின் சுயநலத் தையும், அகங்காரத்தையும் ஒழிக்க வேண்டுமானால் முதலில் செய்ய வேண்டியது கோயில்களைப் பகிஷ்கரிக்க வேண்டிய வேலையேயாகும். தங்களுக்கு உரிமையில்லாத கோயில் சம்பந்தமான எந்த வேலைகளையும் செய்ய மறுத்து அவைகளைப் பார்ப்பனர்களே செய்து கொள்ளும்படி விட்டுவிட வேண்டும்.

இவ்வாறு கோயில்களைப் பகிஷ்கரிக்க ஆரம்பித்தால், கோயில்களே அனேகமாக ஒழிந்து போய்விடும். நமது மக்களுக்குக் கோயில்களின் மேல் உள்ள மயக்கம் ஒழிந்தால் முக்கால்வாசிமூட நம்பிக்கைகள் ஒழிந்து போகுமென்பதில் அய்யமில்லை.

ஆகையால் இனியேனும், கோயில் பிரவேசத்திற்காகப் பாடுபடுகின்ற வர்கள். கோயில்களை ஒழிக்கப்பாடு படுவார்களானால், அதனால் அதிக நலனும், பொருளா தாரச் சிக்கனமும் ஏற்படுமென்பதில் அய்யமில்லை.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 10.04.1932

Read more: http://viduthalai.in/page-6/94907.html#ixzz3PkBN5V00

தமிழ் ஓவியா said...

மொழிப் பிரச்சினையில் முன்னாள் பிரதமர்கள் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றவேண்டும் கலைஞர் கடிதம்


சென்னை, ஜன.24- மொழிப் பிரச்சினையில் முன்னாள் பிரதமர்கள் அளித்த வாக்குறுதியை இன்றைய பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றுவாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.

முரசொலியில் அவர் இன்று (24.1.2015) எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் - வீரவணக்க நாள் - அந்த நாளை, தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடித்து வருகிறோம். அந்த நாளில் தமிழகத்தின் ஒவ்வொரு நகரிலும், கழகப் பேச்சாளர்கள் கலந்து கொண்டு, மொழிப் போரிலே கழகம் ஈடுபட்ட வரலாற்றை நினைவு படுத்தி வருகிறார்கள். அதுபோல இந்த ஆண்டும் தமிழகம் முழுவதிலும் வீரவணக்க நாள் கடைப் பிடிக்கப்படுகிறது.

1965 ஆம் ஆண்டு கழகம் நடத்திய அந்த மொழிப் போரின் அய்ம்பதாம் ஆண்டு நிறைவு தான் 2015. அதாவது மொழிப்போர் வரலாற்றின் பொன் விழா. ஆனால் அதற்கு முன்பே 1937-1938 ஆம் ஆண்டிலேயே மொழிப்போர் என்பது தொடங்கிவிட்டது. அப்போது எனக்கு வயது பதி னான்குதான். திருவாரூர் உயர்நிலைப் பள்ளியிலே நான் மாணவன்.

அப்போதிருந்த ஆட்சியாளர்கள் கல்வி நிலையங்களில் இந்தி கட்டாயப் பாடம், இந்தி படித்து அதில் போதிய மதிப்பெண் பெற்றால்தான் அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியும் என்று ஓர் ஆணையைப் பிறப்பித்தபோது, அதனை எதிர்த்து தமிழகமே போர்க்கோலம் பூண்டது. அப்போது பள்ளி மாணவனாக இருந்த நான், கையிலே ஒரு பதாகையை ஏந்திக் கொண்டு புறப்பட்டுவிட்டேன்.

அந்த நாளே, என்னை அரசியலில், பொது வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கச் செய்த நாள். என்னையும் ஒரு கவிஞனாக்கிய நாளும் அந்த நாள்தான். 1938 இல் தொடங்கிய எனது அரசியல் பயணம், இதோ 92 வயதிலும் தொடருகிறது - அதே உணர்வுகளோடு இது மேலும் தொடரும்.

நம்முடைய போராட்டத்தின் விளைவாகத்தான் இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர்கள் எல்லாம் நமக்கு வாக்குறுதி அளித்தார்கள். 1959 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7 ஆம் நாள் பண்டித நேரு கூறும்போது, (இந்தி) திணிப்பு கூடவே கூடாது. இரண்டாவதாக, காலவரம்பற்ற நீண்ட காலத்திற்கு - அது எவ்வளவு காலம் என்பது எனக்குத் தெரி யாது - ஆங்கிலத்தை கூட்டு ஆட்சி மொழியாக நீடிக்க விரும்புகிறேன்.

மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலத்தை நீடிக்க வைப்பேன். ஆங்கிலம் இனி நீடிக்கக்கூடாது என்கிற முடிவினை நான் இந்தி பேசும் மக்களிடம் விடமாட்டேன். அதை முடிவு செய்யவேண்டியது இந்தி பேசாத மக்களே என்றார்.

மீண்டும் நேரு 1963 ஆம் ஆண்டும் நாடாளு மன்றத்திலே இந்தி பேசாத மக்களின் பூரண சம்மதத்தைப் பெறுகிற வரையில் ஆங்கிலம் அல்லது இந்தி நிலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படக்கூடாது என்றார். இதே உறுதி மொழி களைத் தான் 1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதியன்று பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியும், அதன் பின்னர் இந்திரா காந்தியும் தெரிவித்தார்கள்.

ஆனால் அந்த மூன்று பிரதமர்களும் இந்தி பேசாத மக்களுக்கு அளித்த உறுதிமொழியை இன்றைய பிரதமர் நரேந்திரமோடி காப்பாற்றுவாரா? அல்லது இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பைக் கொண்டு வர முனையும் சிலருடைய தூண்டுதலுக்கு இரையாகி விடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டு வரும் நேரத்திலேதான், இந்த ஆண்டு வீரவணக்க நாள் நடைபெறுகிறது.

அந்த உறுதிமொழியை அளிக்க வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தும் நாளாக இந்த ஆண்டு அமையவேண்டும் என்பதை தமிழ் மக்களிடையே விளக்கிக் கூறுவதைத்தான் நம் முடைய பேச்சாளர்கள் நாளைய கூட்டத்தில் முக்கியமாக வலியுறுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முன்னாள் பிரதமர்களின் உறுதிமொழி, இந்நாள் பிரதமர் நரேந்திரமோடியால் காப்பாற்றப்படுமா?.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறி யுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/94922.html#ixzz3PkBeLvfi