Search This Blog

29.1.15

வெளிநாடுகளில் நான்கு வகை ஜாதிகள் உண்டா?

தமிழருடைய கலாச்சாரம் ஆரியத்தால் கெட்டது - பேராசிரியர் க.அன்பழகன் முழக்கம்!
தமிழருடைய கலாச்சாரம் ஆரியத்தால் கெட்டது
நான்கு வகை வருணத்தைத் திணித்தவர்களும் ஆரியர்களே!

ஆவடி வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் முழக்கம்!

ஆவடி, ஜன.29- தமிழர்களிடையே இல்லாதிருந்த ஜாதி யைத் திணித்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள் - தமிழரு டைய கலாச்சாரம் கெட்டதும் அவர்களால்தான் என்றார் தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள்.


சென்னையை அடுத்த ஆவடியில் 25.1.2015 அன்று மாலை நடைபெற்ற வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை வருமாறு:


இந்தி எதிர்ப்பு உணர்ச்சி இன்னும் கலைஞரிடத்தில் இருக்கிறது! 

இந்தி மொழிக்கு தமிழ் நாட்டில் இடம் கிடையாது. தமிழ் நாட்டில்  வாய்ப்பைத் தேடி வந்த இந்திப் பெண்ணே, நீ இந்த நாட்டை நம்பாதே ஓடிப்போ! என்று பாடியவர் கலைஞர். அன்று தொடங்கிய அந்த உணர்ச்சி இன்றும், கலைஞரிடத்தில் அவருடைய பேச்சில், செயலில்,  எழுத்தில் நீடிக்கிறது. உண்மையாக இந்தி மொழி மட்டும் நம் எதிர்ப்பு அல்ல. இந்தி மொழிக்கு முன்னாலே ஏறத்தாழ 500 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் தமிழருடைய உரிமை யைப் பறிக்கக்கூடிய முறையில் சமஸ்கிருதம் திணிக்கப் பட்டது. திருக்கோவில்களில் எல்லாம் ஆண்டவனுக்கு சமஸ்கிருதத்தில் வழிபாடு. தமிழ் வீட்டுத் திருமணங்கள் எல்லாம் புரோகிதர்களைக் கொண்டு நடத்துகின்ற ஒரு நிலை. நான் சிறுவனாக, மாணவனாக இருந்த போது நாட் டில் பல இடங்களில் பிராமணர்களுக்கென்றே பாடசாலை கள். அந்தப் பாடசாலைகள் எல்லாம் வேத பாடசாலைகள். ஒவ்வொரு வேத பாடசாலைகளிலும் 30 பேர், 40 பேர் பிரா மணர்கள்தான் படிப்பார்கள். அவர்களுக்கு இலவசமாக சாப்பாடு, இலவசமாக குடியிருப்பு, இலவசமாக எண்ணெய், பால், இலவசமாக ஆடை எல்லாம் வழங்கப்பட்டன. பார்ப்பனரல்லாதவர்க்கு பள்ளிக்கூடமே இருக்காது. வெள்ளைக்காரன் வந்தான். ஏதோ அவர்களுக்கு ஆட்கள் தேவை என்பதற்காக பள்ளிக்கூடங்களை வளர்த்தார்கள் என்ற ஒரு கருத்து. அவர்கள் ஆட்கள் தேவை என்று வளர்த்தாலும்கூட அவன்தான் பள்ளிக் கூடத்தில் நம்மை எல்லாம் நுழைய விட்டான்.தாழ்த்தப்பட்ட தோழர் கிருஷ்ணசாமியோ, அவருடைய தந்தையோ, பாட்டனோ ஒரு அய்ம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக் கூடங்களுக்குள் நுழைய முடியாது. கிருஷ்ணசாமி படித்தது ஆச்சரியம்.  பள்ளிக்கூடத்தை திறந்துவிட்டது நீதிக் கட்சித் தலைவர்கள். நீங்கள் எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள் சர்பிட்டி தியாகராயர் - தெலுங்கர். டாக்டர் டி.எம்.நாயர் - மலையாளி, டாக்டர் நடேசனார் - முதலியார்! -தமிழன். இந்த மூன்று பேரும் கலந்து பேசி தமிழ்நாட்டில் ஆரிய ஆதிக்கம் இருக்கிறது.
பிராமணீய ஆதிக்கம் இருக்கிறது. தமிழ் மக்களை தலை எடுக்கவிடாத அளவிற்கு அந்த ஆதிக்கம் இருக்கிறது. அரசாங்க உத்தியோகத்திலே எல்லாம்  நூற் றுக்கு மூன்று பேராக இருக்கிற பிராமணர்களுக்கு நூற்றுக்கு எழுபத்தைந்து இடம். தமிழர்களாகிய நாம் ஏறத்தாழ 90 பேர், நமக்கு சமுதாயத்தில் இருபது இடம். 90 பேருக்கு இருபது இடம். மூன்று பேருக்கு 75 இடம். இது என்ன நியாயம்?அப்படி இருந்ததைத்தான் தியாகராயரும், டாக்டர் நாயரும் எதிர்த்து கண்டித்தார்கள். வெள்ளைக்கார அரசு பார்ப்பனீயர்களின் கைப்பாவையாக இருக்கிறது. ஆங்கி லேயர்கள் தமிழ்நாட்டில், இந்தியாவில் பிராமணர் அல் லாதாரை ஒதுக்கிவிட்டு செல்வாக்குள்ள பிராமணர்களை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். இந்த முறை கேட்டை நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்கள். எனக்குத் தெரிந்து, 1930 ஆவது  ஆண்டில் தமிழ்நாட்டில் பள்ளிக் கூடங்களில் பார்ப்பனரல்லாதாருக்கு இடம் கொடுத்தாலும் கூட ஆதிதிராவிடர்களுக்கு இடம் கிடையாது.  ஆரம்பப் பள்ளிக்கூடத்துக்குப் போய் கிருஷ்ணசாமியின் சொந்தக் காரர் தன்னுடைய பிள்ளையை சேர்க்கப் போனால் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். கிருஷ்ணசாமிக்கு மட்டுமல்ல; டாக்டர் அம்பேத்கருக்கே இந்த கதிதான்.


டாக்டர் அம்பேத்கரை ஒரு ஓரத்தில் உட்கார வைத்தார்கள்!


டாக்டர் அம்பேத்கர் படிக்கப் போனபோது மற்ற பிள்ளைகளை எல்லாம் உட்கார வைத்து  அம்பேத்கரை ஒரு ஓரத்தில் உட்கார வைத்தார்கள். ஒரு தட்டிக்குப் பக்கத் திலே உட்கார வைத்தார்கள். இந்தத் தட்டிக்கு அப்பால் ஆதிதிராவிடர்கள். இந்த தட்டிதான் ஆதிதிராவிடர்களைக் காப்பாற்றியது. தட்டிக்கு அப்பால் ஆதிதிராவிடர்கள், தட்டிக்கு இப்பால் ஆதி திராவிடர் அல்லாதவர்கள். அதற்கு மேலே ஆசிரியர்கள்! தண்ணீர் வேண்டுமானால் இந்த ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் இருந்து தான் வாங்கி குடிப்பார். அம்பேத்கர் தண்ணீர் குடிக்கவேண்டுமானால் அங்கே இருக்கும் பானையிலே தண்ணீர் எடுக்கக்கூடாது. அவர் வெளியிலே போய்தான் யார் வீட்டிலாவது தண்ணீர் வாங்கி குடிக்கவேண்டும். அது எவ்வளவுப் பெரிய வெட்கக் கேடு, நம்முடைய தமிழன் இந்த பார்ப்பனீயக் கொள் கைக்கு எப்படியோ அடிமைப்பட்டான். இன்றைக்கு  நான் உங்களிடத்தில்  பெருமையாகச் சொல்கிறேன். திருவள்ளு வர் பிறந்த தமிழகத்தில் திருவள்ளுவருக்கு சாதி கிடை யாது. திருவள்ளுவர் காலத்தில் இருந்து புரவலர்களுக்கு சாதி கிடையாது.வள்ளுவர் காலத்தில் வாழ்ந்த மன்னர்களுக்கு சாதி கிடையாது.

தமிழருடைய கலாச்சாரம்
ஆரியத்தால் கெட்டுவிட்டது!

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது அப்போது உயர்ந்த மொழி! அப்படி இருந்த காலத்தில் சமஸ் கிருதத்திற்கு இங்கே வேலையில்லை. யாரோ சில பேர் இங்கே சமஸ்கிருதம் படித்தார்கள். அவர்கள்தான் பிரா மணர்கள். நம்முடைய கோவில்களில் எல்லாம் சமஸ் கிருதம் ஆக்கிரமிக்கவில்லை. அப்போது நம்முடைய வீட்டுத் திருமணங்களை பிராமணர்கள் நடத்துகின்ற ஒரு நிலை கிடையாது. அது ஒரு காலம். அந்தக் காலம் மாறிப் போய் எவ்வளவோ ஆண்டுகள் ஆகி, ஆரிய ஆதிக்கம் மெல்ல மெல்ல வேரூன்றியது. தந்தை பெரியார் சொல்வார். ஆரிய ஆதிக்கம் என்பது பாம்புப் புற்றுக்கு பால் வார்ப் பதைப் போல. நாம் அதை ஆதரித்து விட்டோம். நம்மு டைய அறியாமை என்று. பாம்பு புற்றில் பால் வார்த்தால், பாம்பு நம்மை கடிக்காது என்று தாய்மார்கள் சொல்வார்கள். அது பால் இருக்கும் வரைக்கும் குடிக்கும். அது கிடைக் காதபோது கடிக்கும். ஆனால், இந்தப் பாம்பு பாலையும் குடித்து இரத்தத்தையும் குடிக்கும். அந்த ஆரிய கலாச் சாரத்தை எதிர்ப்பதுதான் தமிழருடைய பாதுகாப்பு என்று பிராமண அறிஞர்களே சொன்னார்கள். பி.டி.சீனிவாச அய்யங்கார் என்ற வரலாற்றுப் பேரறிஞர் எழுதினார். தமிழருடைய கலாச்சாரம் ஆரியத்தால் கெட்டுப் போய்விட்டது. நான்கு வகை சாதியை ஆரியர்கள் தமிழகத்தில் புகுத்தினார்கள். இந்த நால்வகை சாதி இல்லாவிட்டால் தமிழர்கள் ஒற்றுமையாக வாழ்ந்திருக்க முடியும். பிராமணன், சத்திரியன், வைஸ்யன், சூத்திரன் என்றெல்லாம் ஆண்டவன் படைப்பு என்று ஏமாற்றி விட்டார்கள்.


பிராமணன் என்றால் உயர்ந்த சாதி, கிருஷ்ண சாமி என்றால் தாழ்ந்த சாதி. அவர் எப்படித் தீண்டப் படாதவர், நீ எப்படி எல்லாருக்கும் மந்திரம் சொல்பவர்? கேட்டால் பிரா மணர் சொல்லக்கூடிய வார்த்தை என்ன தெரியுமா? 

ஆண்டவன் படைப்பு. ஆண் டவன் யார் என்று கேட்டால் பிரம்மா என்பார்கள். பிரம்மா எப்படி படைத்தார் என்றால், பிரம்மா முகத்தில் இருந்து பிரா மணரை படைத்தார், தோளில் இருந்து சத்திரியனை படைத்தார். தொடையில் இருந்து வைஸியனைப் படைத்தார், வைஸி என்றால் வியாபாரி. பாதத்தில் இருந்து சூத்திரனைப் படைத்தார். முகத் தில் இருந்து பிராமணர்களை படைத்த தால் அவர்களுக்கு அறிவு சாதியாம். தோளில் இருந்து படைத்த சாதி என்றால் அது வீர சாதியாம்.


தொடையில் இருந்து படைத்த சாதி ஊர் ஊராக சுற்றும் சாதியாம். காலில் இருந்து படைத்த சாதி என்றால் வேலை செய்கிற சாதியாம். அந்த சூத்திரனுக்குக் கீழே பஞ்சமன்.

வெளிநாடுகளில் நான்கு வகை ஜாதிகள் உண்டா?

பஞ்சமன் என்றால் பறையன், பள்ளன், தாழ்த்தப்பட்டவன். தீண்டாதவர்கள் யாரோ அவர்கள் எல்லாம் இதில் அடங் கும். இதையெல்லாம் சொன்னபோதுதான், பெரியார் சொன்னார் இப்படியெல்லாம் பிரித்து ஆண்டவன் படைப்பானா, ஆண் டவன் இப்படி நான்கு சாதியைப் படைத்து இருந்தால் மிச்ச சாதிக்கெல்லாம் யார் கணக்கு சொல்வது. இந்த நான்கு சாதியை இந்தியாவில்தான் படைத்தானா, அய் ரோப்பாவில் நான்கு சாதியைப் படைத் தானா? வெள்ளைக்காரன் இடத்தில் படைத்தானா, மற்ற நாட்டில் எல்லாம் படைக்காமல் இங்கே மட்டும் படைத்தான் என்றால் அவன் ஆண்டவனா? அப்படித் தான் படைத்தார்கள் என்றால் அவரவர் வேலையைச் செய்து இருக்கலாம் இல்லையா, ஆனால் பார்ப்பனர்களுக்கு சூத்திரர்கள் எத்தக் காலத்திலும் தொண்டு செய்வது அவர்களுடைய கடமை. அடி மையாக வேலை செய்யவேண்டி இருக்கே, எங்களுக்கு விடுதலை கிடை யாதா என்றால், விடுதலை என்று நீ கேட் டாலே மோட்சத்திற்குப் போக மாட்டாய். விடுதலை கேட்டால் நரகத்திற்குத்தான் போவாய். பிராமணர்களுக்கு தொண்டு செய்வதிலிருந்து விடுதலை சூத்திரர் களுக்குக் கிடையாது. எவ்வளவு காலமாக ஆனாலும் பிராமணருக்கு சூத்திரன் தொண்டு செய்துதான் மேல் நிலைக்கு வர வேண்டும். பிராமணர்கள் வேலை செய் வதற்கு கூலி கொடுக்காவிட்டால்கூட வேலை செய்யவேண்டும். சூத்திரர் களுக்கு சொத்து எது எது என்று கருது கிறார்களோ அந்தச் சொத்துக்கள் அத் தனையும் பிராமணர்களுக்குச் சொந்தம்.


ஏதோ சில காரணத்தால் சூத்திரனுக்கு சொத்துக்கள் கிடைத்தாலும்கூட அதை
பிராமணன் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வான். இப்படியெல் லாம் எதை எதையோ எழுதி வைத்திருக் கிறார்கள். அதையெல்லாம் பிராமணர் கள் சாஸ்திரம் என்கிறார்கள். முட்டாள் தனம் எல்லாம் சாஸ்திரமா? சாஸ்திரத் தில் சொல்லி இருந்தால் எதையும் நாம் அனுமதிக்கலாமா?


சாஸ்திரத்தில் நீங்கள் மேல் சாதி நாங் கள் கீழ் சாதி என்று சொல்லி இருந்தால் அதை ஒப்புக் கொள்ளவேண்டுமா? ஆண்டவன் படைத்தான் என்றால் அதற் காக நாங்கள் அடிமையாக இருக்கவேண் டுமா? அப்படியானால் ஆண்டவனே அடிமையாக இருக்கட்டும். என்னை ஏன் அடிமையாக இருக்கச்  சொல்கிறீர்கள்? எனவே சாஸ்திரத்தின் பெயரால், கட வுளின் பெயரால், தெய்வத்தின் பெயரால் கற்பனையாக நம்மையெல்லாம் முட்டா ளாக்கி நான் சொல்கிற வார்த்தைக்காக மன்னித்துக் கொள்ளுங்கள் நம்மை யெல்லாம் அடிமைகளாக்கினார்கள். தமிழ்நாட்டில் இப்போது நம் கண்ணுக்குத் தெரியவில்லை. நான் சின்ன பிள்ளையாக இருந்தபோது நான் படித்த, மயிலாடுதுறை யில் இரண்டு தெருக்கள். இந்த இரண்டு தெருவிலும் இருநூறு வீடுகள். இந்த இருநூறு வீடுகளில் 195 வீடுகளும் பிரா மணர்கள் வீடுகள்தான். ஒரு அய்ந்தாறு வீடுகளில்தான் முதலியார், செட்டியார் போன்றோர் இருந்திருப்பார்கள். வன்னி யரைக்கூட உள்ளே விடமாட்டார்கள். ஆதிதிராவிடர்கள் அந்தத் தெருவிலே நடக்கக் கூடாது. யாராவது இறந்து போனால் தூக்கிக் கொண்டு போகலாமே தவிர நடக்கக்கூடாது.


தீண்டாமையை ஒழிப்பதுதான் பெரியாரின் முதல் வேலையாக இருந்தது!


இந்தத் தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பதுதான் பெரியாரின் முதல் நோக் கம். தீண்டாமையை ஒழிக்க பள்ளியில் இடம் கொடுத்தது நீதிக்கட்சி. அரசாங்க நிலையிலே பங்கு கொடுத்தது நீதிக் கட்சி. நீதிமன்றத்தில் நீதிபதியாக ஒரு சூத்திரரை உட்கார வைத்தது கலைஞர். ஆதிதிரா விடர்களை உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆக்கியது கலைஞர். கிருஷ்ணசாமிதான் நீதிபதியாக ஆக வேண்டும் என்று கட் டாயமில்லை. ஒரு ஆதிதிராவிடர் ஆகி விட்டால் கிருஷ்ணசாமி ஆனது போலத் தான். நம்முடைய இனம் உள்ளே நுழை யக் கூடாது என்கிறார்கள். அந்த இடத் திற்கு நுழையக் கூடிய ஒரு உரிமையை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலை ஞர் அவர்கள் தேடிக் கொடுத்திருக்கிறார்.


சமஸ்கிருதத்தை பெண்கள் படிக்கக்கூடாது!


இப்படி நடைபெற்ற அநீதிகளுக் கெல்லாம் காரணம் சமஸ்கிருதம். சமஸ் கிருதம் தேவ மொழி, தமிழ் நீச மொழி என்று சொன்னார்கள். தமிழ் பிறந்த காலத்தில் சமஸ்கிருதம் பிறக்கவில்லை. தமிழ் இலக்கியங்கள் பிறந்த காலத்தில் சமஸ்கிருதம் பிறக்கவில்லை. தமிழில் உள்ள நீதி நூல்களுக்கு ஈடாக சமஸ் கிருதத்திலே கிடையாது. தமிழ் எல் லோரும் படிக்கலாம். ஆனால், சமஸ்கிரு தத்தை  பிராமணர்கள் மட்டும் தான் படிக் கலாம். அது  அவர்களுக்காகவே தயா ரிக்கப்பட்ட மொழி. தமிழ் மொழி எல் லோருக்கும் உரியது. சமஸ்கிருதத்தை பெண்கள் படிக்கக் கூடாது. மனைவி, தாய் படிக்கக் கூடாது. ஆனால், தமிழை எல் லோரும் படிக்கலாம், மனைவி படிக்கலாம், தாய் படிக்கலாம். தங்கை படிக்கலாம், முதலாளி, தொழிலாளிகள் என்று எல் லோரும் படிக்கலாம்.


தமிழ் நம்மை வாழவைத்த மொழி, சமஸ்கிருதம் நம்மை சாகடித்த மொழி. அந்த சமஸ்கிருதம் பிராமணர்களுக்கு பயன்படுகிறது. அந்த சமஸ்கிருதத்திலே தான் இந்தி வளர்க்கப்பட்டு புகுத்தப்படு கிறது என்ற காரணத்தால் ஏற்கெனவே நாங்கள் சமஸ்கிருதத்தால் பாதிக்கப்பட்ட வர்கள். மறுபடியும் நீங்கள் இந்தியைக் கொண்டு வருகிறீர்கள் அதை ஏற்க மாட்டோம் என்று பெரியார் சொன்னார், மறைமலை அடிகள் சொன்னார். மிகப் பெரிய தமிழறிஞர்கள் எல்லாம் சொன் னார்கள்.


பாரதியாரே தமிழ் மொழியைத் தான் போற்றிப் பாடினார். பாரதிதாசன் இந்தி மொழி நுழைவதைக் கண்டித்துப் பாடி னார். இந்தி எத்தனை பட்டாளம் கூட்டி வரும்! என்று கேட்டவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.


தமிழனை சொரணை உள்ளவனாக ஆக்கியது இந்த இயக்கம்!

இந்த இயக்கம் தமிழனை சொரணை உள்ளவனாக ஆக்கி இருக்கிறது. எனக்கு தெம்பு இருந்தால், நான் கொள்கையோடு வாழ்ந்தால், ஒரு லட்சியம் எனக்கு இருந் தால், நான் பேசுகிற போது அந்தப் பேச்சில் நம்பிக்கை இருந்தால் அத்தனையும் கொடுத்தது திராவிட இயக்கம். தியாகராயர் இல்லாவிட்டால், டி.எம். நாயர் இல்லாவிட்டால் அந்த வழியிலே வந்த தலைவர்கள் இல்லாவிட்டால் இந்தி திணிப்பை எதிர்க்கின்ற ஒரு உணர்வு இல்லாவிட்டால், எங்களைப் பொறுத்த வரையில், எங்களைப் போன்றவர்களுக்கு இன்றைக்கு கலைஞருக்கோ, எனக்கோ இந்த இயக்கத்தில் முன்னோடிகளாக இருந்து பணியாற்றுகின்ற அந்த சூழ் நிலையே வந்திருக்காது.


இந்திமொழியைத் திணிக்க மாட்டோம் என நேரு கொடுத்த உறுதிமொழி!


அண்ணாவே உயர்ந்த நிலைக்கு வந்திருக்க மாட்டார். காமராஜருக்கே மரியாதை வந்திருக்காது. ராஜாஜியை எதிர்த்து காமராஜர் போராடியபோது கருப்பு காந்தி என்று காமராஜரை சொன் னார்கள். அப்படி இந்த நாட்டில் சாதி உணர்வு, வைதீக ஆதிக்கம், பிராமணிய மேலாண்மை, சூத்திரர்களை இழிவுபடுத் துவது இவையெல்லாம் எதிர்த்து நின்ற ஒரு வலுவான சக்தி திராவிட இயக்கம். அந்த வழியில் தான் இந்தி மொழியைத் திணிக்காதே., பள்ளிக் கூட மாணவர் களுக்கு அரசாங்கத்திலே கொண்டுவந்து எல்லா இடத்திலும் இந்தியைப் பரப்பாதே என்று அன்றைக்கு போராட ஆரம்பித்து, பண்டித ஜவஹர்லால் நேரு அதை ஒத்துக் கொண்டு, இந்தி மொழி பேசாத மக்கள் ஒப்புக்கொள்கிற வரையில் நாங்கள் இந்தியை அந்த மக்களுக்கு ஆட்சி மொழியாக ஆக்க மாட்டோம் என்று உறுதிமொழி கொடுத்தார். நீங்கள் ஒத்துக் கொண்டால்தான் ஆட்சி மொழி - இல்லா விட்டால் நாங்கள் திணிக்க மாட்டோம். இது லால்பகதூர் சாஸ்திரியும் சொன்னார்.


இவ்வாறு தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் உரையாற்றினார்.

                    --------------------”விடுதலை” 29-01-2015

48 comments:

தமிழ் ஓவியா said...

சிந்துவெளி நாகரிகம் திராவிட மொழியைச் சார்ந்ததே: அய்ராவதம் மகாதேவன்தஞ்சாவூர், ஜன.29_ சிந்துவெளி நாகரிகம் திரா விட மொழியைச் சார்ந் தது என்று கல்வெட்டு ஆய்வாளரும், தினமணி முன்னாள் ஆசிரியருமான அய்ராவதம் மகாதேவன் கூறினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல் கலைக்கழகத்தில் கடல் சார் வரலாறு, கடல்சார் தொல்லியல் துறை சார் பில் புதன்கிழமை நடை பெற்ற முனைவர்கள் எ. சுப்பராயலு, செ.ராசு அறக் கட்டளைச் சொற் பொழிவு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

சிந்துவெளி நாகரிகம் திராவிட சமுதாயத்தைச் சார்ந்தது. மொகஞ்சதா ரோவில் கிடைத்த முது கைக் காட்டி உட்கார்ந்த நிலையிலான விலங்கு, கொக்கி, நாற்சந்தி, குவளை வடிவ முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.

இவற்றில் விலங்கு வடி வம் பண்டமாற்று முறை, கொக்கி வடிவம் வாங் குதல், எடுத்துக் கொள் வது, நாற்சந்தி வடிவம் தெருக்கள் அடங்கிய நகரம், கிராமம் என்பதை உணர்த்துகிறது. குவளை வடிவம் சிந்துவெளியில் அதிகம் காணப்படுகிறது. சொல்லின் இறுதியில் காணப்படும் இந்த வடி வம் அன், நகரத் தலை வன், பாண்டி, பாண்டி யன் போன்றவற்றைக் குறிக்கிறது. இதற்கு இணை யான வார்த்தைகள் பழந் தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும்போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழு திபாண்டியன் எனவும் வாசிக்க முடியும்.

இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் போது சிந்துவெளியில் பேசியது ஒரு திராவிட மொழி. அங்கு வாழ்ந்த மக்கள் புலம்பெயர்ந்து தென்னகத்துக்கு வந்த தால், சிந்துவெளி மொழிக் கூறுகள் பழந்தமிழ் மொழி யில் காணப்படுகின்றன என்பது என் கருத்து.

பாண்டியர்களின் மூதா தையர்கள் சிந்துவெளியில் வணிகத்தில் ஈடுபட்டிருக் கலாம். அவர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப்பாக, பண்டைய தமிழைப் பேசியிருக்கலாம்.
வெளியிலிருந்து வந்த ஆரியர்கள் சிந்துவெளியில் குடியேறியதால் அங்கு இந்திய- ஆரிய சமுதாயம் உருவாகியிருக்கலாம். இந்திய ஆரியப் பண்பாட்டில் இருந்த ரிக் வேதத்தில் உள்ள வார்த்தைகள் சிந்து வெளியில் இருந்து கடன் மொழியாகப் பெறப்பட்டிருக் கின்றன. ரிக் வேதத்தில் வரும் பூசன் என்ற கட வுளின் பெயர் சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப் பட்டதாக அறிய முடிகிறது.

எனவே, சிந்துவெளி நாகரிகம் வேதப் பண் பாட்டைவிட காலத்தால் மிகப் பழைமையானது. சிந்துவெளிக் குறியீடு களுக்கும், பண்டைய தமிழ் வார்த்தைகளுக்கு மான தொடர்பு அதிக மாக இருப்பதை சங்க காலத் தமிழ்ச் சொற்கள் மூலம் அறியலாம். எனவே, சிந்துவெளி நாகரிக மொழி தொல் திராவிட வடிவம் கொண்டது என் பது எனது முடிவு என் றார் அய்ராவதம் மகாதேவன்.

துணைவேந்தர் ம. திருமலை தலைமை வகித் தார். பதிவாளர் சே. கணேஷ்ராம், புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத் தின் இந்தியவியல் துறைத் தலைவர் எ. சுப்பராயலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுவடிப்புலத் தலைவர் சு. ராசவேலு வரவேற்றார். முனைவர் ந. அதியமான் நன்றி கூறி னார்

Read more: http://viduthalai.in/e-paper/95143.html#ixzz3QD9bWUhy

தமிழ் ஓவியா said...

மதச்சார்பின்மையை நீக்கியது சரியானதுதானாம்!
மத்திய அமைச்சரே வக்காலத்து

புதுடில்லி, ஜன.29- இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 42ஆவது திருத்தம் செய்யப்பட்டு 1976ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் சோசலிஸ்ட், செக்குலர் என்ற சொற்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டன. இந்திய அரசமைப்பு சட்டத்தின் முகவுரையைக் கொண்டுள்ள படம் குடியரசு நாள் விழாவையொட்டி அரசின் சார்பில் வெளியிடப் பட்ட விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்திய அரசமைப்பு சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சோசலிஸ்ட் மற்றும் செக்யூலர் என்கிற பதங்களை நீக்கி விட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, நம் நாடு மதசார்பற்ற நாடாக இருப்பதால், இந்த சொற்பதங்கள் தேவை இல்லை. அச்சொற்பதங்கள் இல்லாமலேயே நாம் மதசார்பற்ற நாட்டினராக இருக்கிறோம் என்றார்.

அவர் மேலும் கூறும்போது, நெருக்கடிக் காலத்தில் 1976 ஆம் ஆண்டில் இந்த இரு சொற்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த இரு சொற்கள் குறித்த விவாதம் நடத்தப்படுவதில் என்ன தவறாகிவிடப்போகிறது? நாடு என்ன விரும்புகிறது என்பதைப் பார்ப்போமே என்றார். திருத்தத்துக்கு முந்தைய அரசமைப்பு சட்டத்தின் முகவுரை யைத் தொடர்ந்து அரசு அலுவலகரீதியாக பயன்படுத்திவருமா? என்று கேட்டதற்கு, ஆம். அதுதான் திட்டம் என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் திருத்தத்துக்கு முந்தைய முகவுரை இரண்டு அச்சு விளம்பரங்களில் இடம் பெற்றதற்கு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பொறுப்பானவர் ஆவார்.

Read more: http://viduthalai.in/e-paper/95144.html#ixzz3QD9mUo3T

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஏனோ?

பிரம்மாவின் ஆண வத்தை அடக்குவதற்காக சிவனின் முகத்திலிருந்து ஜோதியாக வெளிப்பட்ட வர் பைரவர். இவரின் வாகனம் நாய். காலையில் கோவில் திறந்தவுடனும், அர்த்த ஜாம பூஜை முடி யும்போதும் இவருக்கு விசேஷ பூஜைகள் நடை பெறுமாம்.

சரி, பைரவரின் வாகன மான நாய்க்கும் சேர்த்து தானே அந்தப் பூஜை? பைரவரின் வாகனமான நாய் வீதியெல்லாம் சுற்றிப் பொறுக்கிக் கொண்டு வயிற்றை வளர்க்கிறதே - இந்தப் பைரவர் இதற் கொரு வழி செய்யாதது ஏனோ?

Read more: http://viduthalai.in/e-paper/95145.html#ixzz3QD9v4252

தமிழ் ஓவியா said...

செய்தியும்
சிந்தனையும்

மிஸ்டு கால்!

செய்தி: ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளனர்.
- தமிழிசை சவுந்தரராசன் (பி.ஜே.பி. தமிழகத் தலைவர்)

சிந்தனை: எல்லாம் மிஸ்டு காலில்தானா?

குறிப்பு: சொந்தக்காலில் நிற்க முடியாதவர்கள், மிஸ்டு காலில் நிற்க முயற்சிக் கிறார்கள்.

-திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

Read more: http://viduthalai.in/e-paper/95147.html#ixzz3QDA82eOe

தமிழ் ஓவியா said...

மதம் பயன்படாது


மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. - (குடிஅரசு, 7.5.1949)

Read more: http://viduthalai.in/page-2/95137.html#ixzz3QDASJACb

தமிழ் ஓவியா said...

அமெரிக்க அதிபர் சொன்னதற்கு ஆதாரம் உண்டு! உண்டு!!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவில் கோலோச்சும் மதவாதம் குறித்துப் பேசியது என்பது சாதாரணமானதல்ல. ஆழமான புரிதலின் அடிப்படையில் வெளியிடப்பட்ட உண்மையாகும்.

ஒரு வகையில் சொல்லப்போனால் இந்திய நாட்டுக்கு அவர் மாபெரும் தொண்டினைச் செய்திருக்கிறார் என்று கூடச் சொல்லலாம்.

மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பி.ஜே.பி. ஆட்சியும், அதன் பரிவாரங்களும் போடும் ஆட்டத்தைப் பார்த்தால் 2002 இல் குஜராத்தில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட மதவன்மம்- அதன் காரணமாகக் கொடூரமாக அரசப் பயங்கரவாதமாக அரங்கேற்றப்பட்ட அந்தப் பயங்கரம் இந்தியா முழுமையும் காட்டுத் தீ போல பரவினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்க அதிபரிட மிருந்து அந்தச் சொற்கள் வரும்பொழுது அதற்கு வலிமை அதிகமே! உலகம் முழுவதும் அவர் உதிர்த்த வாசகங்கள் மின்னலையாகப் பரவி விடுமே - பரவியும் இருக்கிறதே!

குஜராத் முதலமைச்சராகவிருந்த அந்தப் பொழுதில் பலமுறை அமெரிக்கா செல்ல நரேந்திர மோடி முயன்றும், அமெரிக்கா விசா வழங்கவில்லை என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டிக் கொள்ளவேண்டும்.

என்ன காரணம் என்பது உலகறிந்த உண்மை. அவர் ஒரு இனப் படுகொலையாளராக கருதப்பட்டார். அதன் காரணமாகவே விசா மறுக்கப்பட்டது என்பதை மறுக்கத்தான் முடியுமா?

அந்த மதக் கறையிலிருந்து தம்மை இன்னும் கழுவிக் கொள்ளாதவராகத் தானே (பிரதமரான நிலையிலும்கூட) இன்றுவரை அவர் இருந்து வருகிறார்.

மரபுக்கு மாறாக அமெரிக்க அதிபரை விமான நிலையம் வரை சென்று வரவேற்கச் சென்றார் இந்தியப் பிரதமரான நரேந்திர மோடி. அந்த அதிபர் காந்தியாரின் நினைவிடத் திற்குச் சென்றபோது, இந்தியாவின் பிரதமர் உடன் செல்லாதது ஏன்?

காந்தியார் என்றால், அவர் பார்வையில் என்னவாக இருக் கிறது? நாதுராம் கோட்சேயின் சிந்தனை உடையவர்களாகத் தானே இருக்கிறார்கள்.

குஜராத் மாநிலத்தில் காந்தியாரும், வல்லபாய் படேலும் பிறந்திருந்தாலும், 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து படேலுக்குத்தானே சிலை எழுப்பத் திட்டமிடுகிறார் மோடி.

ஆட்சிக்கு வந்த பிறகு - அந்தப் பழைய மதவாத ஆவர்த்தனங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, தேர்தலுக்கு முன்பாக மக்களிடம் எடுத்து வைத்த அந்த வளர்ச்சி வாகனத்தில் பயணிக்கிறார்களா?

தமிழ் ஓவியா said...

காதைக் கிழிக்கும் மதவாத ஆக்ரோஷமான ஒலி அல்லவா குதித்து குதித்து எழுகிறது.

அரசின் வானொலியைப் பயன்படுத்தி இந்தியா இந்து நாடு என்று அறிவிக்கிறாரே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.

பாகிஸ்தானையும் இந்து நாடாக மாற்றவேண்டும்; மத மாற்றம் நடக்கும்; முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்றும் அவர் பேசினாரே! (2015 ஜனவரி 5, 6, 7 ஆகிய நாள்களில் அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில்).

காந்தியாரைக் கொன்றதற்குப் பதிலாக நேருவைக் கொலை செய்திருக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸின் அதிகாரப்பூர்வ ஏடான கேசரி (மலையாள ஏடு) எழுதுகிறதே!

ஒரு இந்துப் பெண்ணை முஸ்லிமாக மாற்றினால், நாம் நூறு முஸ்லிம் பெண்களை இந்துக்களாக மாற்றவேண்டும் என்று ஆதித்தியநாத் ஜோதி என்ற நாடாளுமன்ற உறுப்பினர் பேசவில்லையா?

இந்தியாவில் ராமனை ஏற்றுக் கொண்டவர்கள் அனை வரும் ராமனின் பிள்ளைகள் (ராம்ஜாதி) ராமனை ஏற்றுக் கொள்ளாத அனைவரும் (ஹராம் ஜாதி) முறை தவறிப் பிறந்தவர்கள் என்று சொன்னவர் யாரோ ஒரு அனாமதேயம் அல்ல - மத்திய பெண் அமைச்சர் சாத்வி நிரஞ்சனா ஜோதி என்பவர்தான் அப்படி ஆபாசமாக, அருவருக்கத்தக்க முறை யில் பேசினார் என்பதைவிட ஏசினார் என்றே சொல்ல வேண்டும்.
மோடியை ஆதரிக்காதவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட வேண்டும் என்று மிரட்டினாரே கிரிராஜ் விஸ் - இவரும் பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினர்தான்! (இவர் வீட்டில்தான் கடந்த ஜூலை மாதம் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டது).

காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே அவதார புருஷன் - கோட்சேவுக்கு நாடாளுமன்றத்தில் சிலை வைக்கவேண்டும் - காந்தியார் படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 அன்று முக்கிய நகரங்களில் கோட்சேவுக்கு சிலை திறக்கப்படும்; மகாபுருஷர்களின் சிலை வைப்பதற்கு அரசின் அனுமதி யெல்லாம் தேவையில்லை என்று பச்சையாகப் பாசிசத்தின் நெடிய உருவமாக நின்று முழங்கிக் கொண்டிருக்கிறார்களே!

இவ்வளவு நடந்தும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புப் புயலைக் கிளப்பிய போதும்கூட ஆடாமல் அசையாமல் மவுன சாமியாராகத்தானே பிரதமர் நரேந்திர மோடி எவ்வித சலனமும் இல்லாமல் உட்கார்ந்திருந்தார்.

தேர்தல் நேரத்தில் அடேயப்பா எப்படி எல்லாம் முழங்கினார் - இன்று நாடாளுமன்றத்தில் மூச்சு விடவில் லையே - ஏன்? இதுதான் அவர் 52 அங்குல மார்பு அகலமுள்ள பராக்கிரமசாலி என்பதற்கான அடையாளமா?

நாடாளுமன்றம் நடக்கும் நேரத்தில் வெளிநாடுகள் பயணம் மேற்கொண்டு விடுகிறார். அப்படி செல்லாத நாள்களில், நாடாளுமன்றம் வந்தாலும் வாய்த் திறப்பதில்லை.
இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் சுஷ்மா சுவராஜ் கீதையை இந்தியாவின் தேசியப் புனித நூலாக ஆக்கப் போகிறோம் என்று சொன்னார் - அதற்கும் பதில் இல்லை பிரதமரிடமிருந்து.

இப்படி நிர்வாணக் கோலமாக மதவெறித்தனம் கோர ரூபத்தில் இந்தியாவில் கூத்தாடுவதையெல்லாம் அறிந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் - பச்சையாக - அதே நேரத்தில் நாகரிகமாக இந்தியா வளர்ச்சி அடைய வேண்டுமானால், மதவாதத்தைக் கைவிடவேண்டும் என்று திருவாய் மலர்ந்தார்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் முக்கிய நாட்டின் அதிபர் இப்படி சொன்ன பிறகு - சுய மதிப்பீடு செய்து மத்தியில் உள்ள ஆட்சி இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப் பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு உண்மையாக நடந்துகொள்ள முனைந்தால், நாட்டுக்கும், அவர்களுக்கும் நல்லது
எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/page-2/95138.html#ixzz3QDAcf4IC

தமிழ் ஓவியா said...

மருந்து வேண்டாம் - எப்போது?


இன்று இளைய சமுதாயத்தினரான நமது இளை ஞர்கள் பலரும் நன்கு படிக்கின்றனர்.

உலகைத் தங்களின் விரல் நுனியில் வைத் துள்ளதில் பெருமிதம் கொள்ளுகிறார்கள்!

சூரியனின் கீழ் உள்ள அத்துணை செய்திகளையும் தமது இணையத்தின் மூலம், கைத்தொலைபேசி என்ற தகவல் களஞ்சியத்தின் குதிர்களிலிருந்து எப்போது வேண்டுமானாலும் அள்ளி நொடிப்பொழுதில் தரு கின்ற ஆற்றல் உடைய திருவினராக உள்ளனர்!

வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு புறம் இருந் தாலும், மறுபுறம் வேலைக்குச் சென்றவர்கள் கைநிறைய சம்பாதித்து, ஆடம்பர வாழ்வும் வாழுகின்றனர்!

இவ்வளவு சிறப்புகள் ஒருபுறம் இருந்தாலும், இளைஞர்கள் தங்களது உடல் நலத்தில் மிகுந்த கவலையும், அக்கறையும் செலுத்தாமல் வயிறு முட்ட - கண்ட தீனிகளையும், விரைவு உணவுகள் என்ற பெயரால் வெளிநாட்டு உணவுக் கடைகளில் உள்ள வைகளையும், உள்நாட்டுப் பரோட்டா போன்றவை களையும், குளிர்பானங்களாகிய பல கேட்டினை அழைத்து உடலுக்குள் தங்க வைக்கும் சுவை நீர் களையும் அருந்தி, நோயுற்ற (நோயற்ற வாழ்வுக்கு விடை கொடுத்து) வாழ்வினை வர வழைத்து, கொழுப்பினால் அவதியுறு கிறார்கள்!

பலர் வாய்க் கொழுப்பினால் கெட்டுப் போவ தைப்போலவே, உடற்கொழுப்புப் பெருக்கத்தால் இளம் வயதில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பலவித நோய்களால் தாக்குண்டு தனது வாழ்நாளைச் சுருக்கிக் கொள் ளும் கொடுமை நாளும் அதிகரித்தே வருகிறது!

வேதனைப்பட வேண்டிய செய்தி இது!

மருத்துவம் பார்க்கச் சென்றாலே கொள்ளைச் செலவு.

பக்க விளைவுகளையும் சேர்த்து ஏற்படுத்தும் பல மருந்துகளை வாங்கி உட்கொள்ளவேண்டிய கட்டா யத்திற்கு ஆளாக்கப்படும் கொடுமை மறுபுறம்!

சிற்சில நேரங்களில் மருந்துகளே கூட நோய்க் கொல்லியாக இராமல், ஆட்கொல்லியாக மாறிடும் வேதனையும் நிகழவே செய்கிறது!

இதற்கு மாற்று வழி என்னவென்பது இப்போது சமூக ஆர்வலர்கள், தொண்டறப் பணிபுரிவோர் ஆராய்ந்து பல கருத்துகளைக் கூறுகின்றனர்!

அத்தகையோர் ஆய்வதற்கு வள்ளுவர் தரும் மருந்து என்னவென்பதைப் படித்தால், திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் உள்ள அரிய, எளிய, எவரும் பின்பற்ற இலகுவான கருத்துகளை அறிந்து கொள்ள முடியும்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே நம் தமிழ் அறிஞர் பெருந்தகை இவ்வளவு தெளிவான சிந்தனையை உலகுக்கு அறவுரையாக - அறிவுரை யாக அளித்துள்ளார் என்பது எத்தகைய சிறப்பும், பெருமையும் தமிழ் உலகிற்குக் கிடைத்துள்ளது!

முதல் விதி:

1. மருந்தே உங்களுக்குத் தேவையில்லை - எப்போது?

நீங்கள் உண்ட உணவு, சரியானபடி செரிமானம் ஆயிற்றா என்று அறிந்து, பின் மறுபடி உணவை உட்கொள்ளும் பழக்கம் நமக்கு ஏற்பட்டால், நோய் வராது - மருந்து தேவைப்படாதே!

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி யுணின் (குறள் 942)

தான் முன்னர் உண்ட உணவானது நன்கு செரித்துப் போய்விட்ட தன்மையைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகு, ஒருவன் தக்க அளவு உணவு உட்கொள்வானேயானால், அவனுடைய உடம்புக்கு மருந்து என்ற ஒன்று வேண்டியதில்லை.

அதுபோலவே, அடுத்து ஒரு குறள்:
அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
பெற்றா னெடிதுய்க்கு மாறு (குறள் 943)
இதன் கருத்து

ஒருவன், தான் முன்பு உண்ட உணவு செரித்த பிறகு, செரிக்கக் கூடிய அளவினை ஒருவன் அறிந்து கொண்டு உண்ணவேண்டும். நல்ல உடம்பினைப் பெற்றுள்ள ஒருவன், நீண்ட காலம் அவ்வுடம்பினைக் காப்பாற்றி வாழக்கூடிய வழியும் அதுவேயாகும்.

எனவே, பசித்து உண்ணுங்கள் - ருசிக்காக உண்ணாதீர்கள். எனவே, நாகாக்க என்பது வெறும் பேச்சுக்கு மட்டும் தடையல்ல நண்பர்களே, உணவுக்கும், உடல்நலப் பாதுகாப்புக்கும் சேர்த்தே என்றும் புரிந்து கொள்ளுங்கள்.- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page-2/95139.html#ixzz3QDAmNJ73

தமிழ் ஓவியா said...

காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன?

நாம் 2014 ஆம் ஆண்டைக் கடந்து 2015 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். பூமியானது தனது பாதையில் சூரியனை ஒரு முறை சுற்றி முடித்தால் அதை ஓர் ஆண்டு என்று கணக்கு வைத்திருக்கிறோம். இது சாதாரண ஆண்டுகளில் 365 நாட்கள்.

லீப் ஆண்டு என்றால் 366 நாட்கள். என்றும் வைத்துக் கொண்டுள்ளோம். உண்மையில் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க பூமியானது 365. 242199 நாட்களை எடுத்துக் கொள்கிறது.

சூரியன் ஏதோ நிலையாக ஒரே இடத்தில் இருப்பதாகவும் பூமி உட்பட கிரகங்கள் சூரியனை சுற்றி வருவதாகவும் சிலர் நினைக்கலாம். அது அப்படி அல்ல. சூரியன் எல்லா கிரகங் களையும் அந்த கிரகங்களை சுற்றுகின்ற துணைக் கோள்களையும் இழுத்துக் கொண்டு நமது அண்டத்தின் () மையத்தைச் சுற்றி வருகிறது. விண்வெளியில் எதுவுமே நிலையாக ஓரிடத்தில் இருப்பது கிடையாது.

ஆகாய கங்கை எனப்படும் நமது அண்டத்தில் தான் சூரியன் அடங்கியுள்ளது. இந்த அண்டத்தில் 10 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் அடங்கியுள்ளதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள் ளனர். (சூரியனும் ஒரு நட்சத்திரமே). நமது அண்டத்தில் நட்சத்திரங்கள் மட்டுமன்றி நட்சத்திரங்களுக்கு இடையில் வாயு, அண்டவெளித் தூசு ஆகியவையும் அடங்கியுள்ளன.

மாட்டு வண்டிச் சக்கரம் ஒன்றைத் தரையில் படுக்க வைத்து மேலிருந்த படி பார்த்தால் எப்படி இருக்கும்? நமது அண்டம் கிட்டத்தட்ட அந்த மாதிரியில் இருக்கிறது. நமது சூரியன் கிட்டத்தட்ட நமது அண்டத்தின் விளிம்பில் உள்ளது. அண்டத்துக்கு மய்யப் பகுதி உள்ளது. இந்த மய்யப் பகுதியை சூரியன் தனது பரிவாரங் களுடன் அதி வேகத்தில் சுற்றி வருகிறது.

சூரியனின் வேகம் குறித்து வெவ்வேறு மதிப்பீடுகள் உள்ளன. எனினும் சூரியன் மணிக்கு சுமார் 90 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருப்ப தாகக் கூறலாம். சூரியன் நமது அண்டத்தை ஒரு முறை சுற்றி முடிக்க சுமார் 24 கோடி ஆண்டுகள் ஆவதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. சூரியன் இவ்விதம் ஒரு முறை சுற்றி முடிப்பதைத் தான் காஸ்மிக் ஆண்டு என்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/95189.html#ixzz3QDBGmhV4

தமிழ் ஓவியா said...

அரசமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் ஹிட்லரிசத்துக்கு மத்திய செய்தி விளம்பரத் துறை மன்னிப்புக் கோரவேண்டும்!


இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற சோசலிஸ்ட், செக்குலர் என்பதை நீக்கி மத்திய அரசு விளம்பரமா?

அரசமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் ஹிட்லரிசத்துக்கு மத்திய செய்தி விளம்பரத் துறை மன்னிப்புக் கோரவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற சோசலிஸ்ட், செக்குலர் என்பதை நீக்கி மத்திய அரசு விளம்பரமா?

66 ஆவது குடியரசு நாளுக்காக மத்திய செய்தி விளம்பரத் துறையின் சார்பில் ஏடுகளுக்குக் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் உறுதி செய்யப்பட்டு இடம் பெற்றுள்ள சோசலிஸ்ட், செக்குலர் என்ற சொற் களைத் திட்டமிட்டு நீக்கியதைச் சுட்டிக்காட்டி, இந்த அத்துமீறலை - சட்ட விரோதச் செயலை மேற்கொண்ட செய்தி விளம்பரத்துறை பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி தலைமையில், ஏழு மாதங்களுக்கு முன்பு ஆட்சிப் பொறுப்பேற்ற - ஆர்.எஸ்.எஸ். - ஆணைப்படி நடக்கும் - பா.ஜ.க. என்ற ஆட்சியில் பகிரங்க மாக, பட்டாங்கமாய் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அமைந்து உருவாக்கப்பட்டவற்றை அரசின் அடிப்படை நோக்கத்தையே, அமைதியான முறையில் அகற்றிடும் முயற்சிகள் இந்த 66 ஆவது இந்தியக் குடியரசு நாள் முதலே தொடங்கப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் பரவலாக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது!

அப்பட்டமான ஹிந்து மதவாத ஹிந்துத்துவ முயற்சிகள் - சிறிதும் கூச்சநாச்சமின்றி, மோடி அரசில் இடம்பெற்றுள்ள அவரது சக அமைச்சர்கள், பா.ஜ.க. எம்.பி.,களால் நிறைவேற்றப்பட்டு வருவதை நாடே பார்க்கத் தவற வில்லை.

தி எகனாமிக் டைம்ஸ் ஆங்கில நாளேட்டில் இன்று (28.1.2015) 3 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள செய்தியும், பின்னணியும்!

அரசமைப்புச் சட்டத் திட்டத்தில் உள்ள முக்கிய சொற்களை நீக்கி விளம்பரம்!

இதே பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள - 66 ஆவது குடியரசு நாளையொட்டி மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை என்ற செய்தித் துறை அமைச்சு (Information and Broadcasting Ministry) விளம்பரத்தில்,

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள முன்னுரை பூர்வப் பீடிகை (Preamble) வாசகங்களையே மாற்றி அரசு சார்பில் விளம்பரம் தரப்பட்டுள்ளது. நமக்கு நாமே வழங்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் - இந்திய மக்களாகிய நாம் இந்திய அரசினை இறையாண்மையுடன் கூடிய சமதர்ம, மதச்சார்பற்ற ஜன நாயகக் குடியரசாக அமைந்துள்ள ஆட்சி என்பதாகத்தான் தொடங்குகிறது.

இந்தப் பீடிகை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாற்றப்படக்கூடாத அடிப்படை அரசியல் சட்டக் கட்டுமானப் பகுதியாகும்.

தமிழ் ஓவியா said...

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும்...

இந்த அரசின் மாற்றப்படக் கூடாத அடிக்கட்டுமான (Basic Structure of the Constitution) சொற்களான சோஷலிஸ்ட், செக்யூலர் (Socialist and Secular) என்பதனை நீக்கி, விளம்பரம் கொடுத்துள்ளனர். உச்சநீதி மன்றத்தில் இரண்டு வழக்குகளில் அதை நீக்கிட முடியாது - அது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அடிப் படை நோக்கப் பகுதி என்று தெளிவாக உறுதியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது!

திட்டமிட்டே நீக்கப்பட்டுள்ளது!

இப்போது வேண்டுமென்றே திட்டமிட்டு இந்திய அரசின் முக்கிய துறைகளில் ஒன்றான (I&B Ministry) அதிகாரபூர்வமாகத் தந்த விளம்பரத்தில் - திட்டமிட்டே ஆழம் பார்க்கும் வகையில், ஹிட்லரிசம் தலைதூக்கி, சமதர்மம், மதச் சார்பின்மை (சோலிஸ்ட், செக்குலர்) இரண்டு நோக்கங்களையும் எங்கள் அரசு தூக்கி எறிந்து விட்டது என்று சொல்லுவதாக அரசு விளம்பரம் தருகிறது!

சப்பைக் கட்டா?

இதற்குச் சப்பைக் கட்டுக் கட்டுவதற்கு சில ஜால் ராக்களும், ஆமாம் சாமிகளும் ஊடகங்களுக்குக் கிடைத் தும் இருப்பது விந்தையிலும் விந்தை! வெட்கக்கேடானதும் கூட!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தொடக்கத்தில் இது இல்லையாம்; 42 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம்தான் இந்த இரண்டு சொற்றொடர்களும் புகுத்தப் பட்டனவாம்! முன்பு இருந்த வாசகங்களைக் கொண்டே இந்த அரசு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளதாம்!

- இப்படி ஒரு வெண்டைக்காய், விளக்கெண்ணெய் வியாக்கியானம் - விளக்கம்!

கேழ்வரகில் நெய்வடிகிறது என்று இந்த ஜால்ரா நிபுணர்கள் ஒத்து ஊதுகிறார்கள்! கேட்பவருக்கு மதியில்லை என்ற நினைப்போ!

இந்திய அரசமைப்புச் சட்டமானாலும் அல்லது வேறு எந்த சட்டப் பிரிவானாலும் - ஏன் ஒரு அரசு ஆணைகூட, தற்போது எப்படி அதில் உள்ளதோ அதை அப்படியே மாற் றாமல்தான் எடுத்தாளவேண்டும் - கடைப்பிடிக்கவும் வேண்டும்.

திட்டமிட்டே சில முக்கிய அதுவும் இலட்சிய குறிக் கோள் சொற்களை விட்டுவிட்டு அரசு விளம்பரம் தரலாமா?

மன்னிப்புக் கோரவேண்டும்

இது தற்செயலாக நிகழ்ந்த தவறு அல்ல; திட்டமிட்டு - ஆழம் பார்க்கும் - ஹிந்துத்துவா உணர்வின் வெளிப்பாடு - அசல் ஹிட்லரிசத்தின் அருவருக்கத்தக்க வெளிப்பாடு!

இதனை முற்போக்குக் கருத்துள்ளவர்கள் அனைவரும் வன்மையாகக் கண்டித்து, நாடு தழுவிய அளவிலே கண்டனக் குரல் எழுப்பி, இந்திய தகவல் ஒலிபரப்புத் துறையை மன்னிப்புக் கேட்க வைக்கவேண்டும்.

வருமுன்னர் காக்கத் தவறக்கூடாது. மோடி அரசு நாட்டை எப்பாதையில் அழைத்துப் போகத் திட்ட மிட்டுள்ளது என்பதற்கான ஒரு முன்னோட்டம் இது!

எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை செய்கிறோம் மக்களே விழிப்புடன் இருப்பீர்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
28.1.2015

Read more: http://viduthalai.in/page1/95065.html#ixzz3QDBuzKw6

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஆசை கொள்ளாதே!

ஆசை அறுமின்காள் ஆசை அறுமின்காள்
ஈசனோடுஆயினும்
ஆசை அறுமின்காள்!

- திருமூலர்

ஈசனாக இருந்தாலும் அவனிடமும் ஆசை கொள்ளாதீர்கள் என்று கூறியுள்ளாரே!
பக்தர்களே இதற்கு என்ன பதில்?

Read more: http://viduthalai.in/page1/95066.html#ixzz3QDCkhWE3

தமிழ் ஓவியா said...

செய்தியும்
சிந்தனையும்

தெரிந்திருக்குமோ....!

செய்தி: இந்தியப் பயணத் தின்போது திருப்பதி கோவி லுக்கு இலங்கை அதிபர் சிறீசேன வருகிறார்.

சிந்தனை: ராஜபக்சே கூடத்தான் வந்து போனார் - என்ன பலன் கிடைத் தது என்பதை அறியாத வரா புதிய அதிபர்...? புத்தர் சிலைதான் ஏழு மலையானாக மாற்றப் பட்டது என்ற உண்மை ஒருக்கால் அவருக்குத் தெரிந்திருக்குமோ!

Read more: http://viduthalai.in/page1/95067.html#ixzz3QDCrcIrj

தமிழ் ஓவியா said...

சோறு போட்டு உதை வாங்கிய கதை!


நீதிக் கட்சிக்குத் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டினார் தந்தை பெரியார். 1944 இல் சேலத்தில் நடை பெற்ற (ஆகஸ்டு 27) 16 ஆவது தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக்கட்சி) மாநாட்டில்தான் இந்தத் தீர்மானம் அண்ணாதுரை தீர்மானம் என்ற பெயரில் முன்மொழி யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அத்தீர்மானத்தில் பதவி பட்டங்களைத் துறக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. தேர்தலில் ஈடுபடு வதில்லை என்றும் தீர்மானம் கறாராகக் கூறியது.

பட்டம், பதவிகளை அனுபவித்துக் கொண்டிருந்த நீதிக்கட்சியைச் சேர்ந்த பெரிய மனிதர்களுக்கு இது அதிர்ச்சியைத் தந்தது.

இந்த நிலையில், பி.டி.ராஜன் தலைமையில் அத்தகைய வர்கள் தாங்கள்தான் உண்மையான நீதிக்கட்சி என்று சொல்லிக்கொண்டார்கள்.

அப்பொழுது டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சென்னை வந்ததைப் பயன்படுத்தி, அந்த நீதிக்கட்சித் தலைவர்கள் சென்னை கன்னிமாரா ஓட்டலில் வரவேற்பு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்கள் (24.9.1944).

அந்த வரவேற்பில் கலந்துகொண்ட அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கூட்டம் கூட்டியவர்களின் நோக்கத் தைப் புரிந்துகொண்டு, பெரியார் தலைமையை ஏற்று நடந்துகொள்ளுமாறு அறிவுரை கூறினார். மறுநாளே தந்தை பெரியார் அவர்களை அண்ணல் அம்பேத்கர் சந்தித்து உரையாடினார்.

அண்ணல் அம்பேத்கரை அழைத்து மூக்கு உடைக்கப் பட்ட நீதிக்கட்சியினர் குறித்து சோறு போட்டு உதை வாங்கிய கதை என்று குடிஅரசு இதழ் கேலி செய்ததுண்டு.

70 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியை இப்பொழுது குறிப்பிடுவதற்குப் பொருத்தமான காரணம் உண்டு.

இந்தியாவின் 66 ஆவது குடியரசு நாளில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பராக்! பராக்! என்று கட்டியம் கூறியது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு. உலகத் தலைவர்கள் வரிசையில் இடம் பிடிக்க இந்தியப் பிரதமர் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.

வண்ண வண்ண ஆடைகளில் நாடகத்தில் வேடம் கட்டி ஆடுபவர்கள் போல ஜொலிக்கிறார்! மூன்று நாள்கள் அமெரிக்க அதிபருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பன்னாட்டுத் தலைவர்களைக் கவர்ந்து இழுத்தார்.

கடைசியில் என்னாயிற்று தெரியுமா? நேற்று இறுதி நாளில் (27.1.2015) பகல் 12 மணிக்கு டில்லி சிரிபோர்ட் அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியிலே உரை யாற்றினார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

அப்பொழுது மாணவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடை அளித்துக் கொண்டிருந்தார். அதில் அவர் தெரிவித்த கருத்து - இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான அருமருந்தென தேவைப்படும் அரிய கருத்துச் செறிவாகும் என்றாலும், இந்தியா இந்துக்களின் நாடென்றும், இந்தியாவில் இந்து ராஜ்ஜியத்தை உருவாக் குவோம் என்றும் ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டி ருக்கும் மத்தியில் ஆளும் கட்சியான பி.ஜே.பி.யும், அதன் சங் பரிவார்களும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், அமெரிக்க அதிபர் சிந்தனை வளத்துடன் வெளிப்படுத்திய கருத்து. இந்த இந்துத்துவவாதிகளுக்கு மரண அடியாகி விட்டது. அப்படி ஒரு கருத்தை அமெரிக்க அதிபரிடமிருந்து யாரும் எதிர்ப்பார்த்திருக்கவும் மாட்டார்கள்.

அப்படி என்ன சொல்லி விட்டார் என்று ஆர்வம் பீறிடுகிறதா? இந்தியாவின் வளர்ச்சிக்கு மதவாதம் தடையானது என்று போட்டாரே ஒரு போடு!

மதவாதம் என்பது மக்களைப் பிரிவினைக்கு ஆளாக்கும் ஒரு கருவியாக தற்போது மாறிக்கொண்டு வருகிறது. மதவாதப் பாதையிலிருந்து விலகி, சமூக நலனிற்குப் பாடுபடும் நாடுகளே தற்போது முன்னேற்றம் கண்டு வருகின்றன. இந்தியா போன்ற நாடுகள் மதத்தின் பெயரால் பிரிவினை செய்வதை விட்டுவிட்டு, வளர்ச்சியில் ஆர்வம் காட்டினால், இந்தியா வளர்ச்சி அடையும்! என்று மாணவர்கள் மத்தியிலே ஆணித்தரமாக அழுத்தமாக கம்பீரமாக முழங்கினார் அமெரிக்க அதிபர்.

இந்துத்துவா பேசும் - இந்தியா என்பது இந்து நாடு என்று வெறி பிடித்து கூச்சல் போடும் பிரதமர் மோடி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் உள்பட அனைத்து இந்துத்துவவாதிகளுக்கும் இதைவிட மரண இடி வேறு ஒன்று இருக்க முடியுமா?

உலகின் மிகவும் பெரிய நாட்டின் அதிபர் உள்பட இந்தியாவின் இன்றைய அரசியல் - ஆட்சிப் போக்கை எந்த அளவுக்குத் துல்லியமாக உணர்ந்து வைத்துள்ளனர் என்பதற்கு அமெரிக்க அதிபரின் இந்தக் கருத்து ஒன்றே ஒன்று போதுமே!

மூன்று நாட்கள் விருந்து கொடுத்து, உபசரித்து அமெரிக்க அதிபரை தங்கத் தட்டில் வைத்து சீராட்டிப் பாராட்டிய நிலையில் கடைசி கடைசியாக இந்து மதவாதக் கூட்டத்தினரின் மூக்கை வெட்டும் கருத்தினை பராக் ஒபாமா எடுத்துச் சொன்னதை நினைக்கும்பொழுது - அன்று அம்பேத்கருக்கு விருந்தளித்து உபசரித்த நீதிக் கட்சித் தலைவர்கள் மூக்கறுபட்டபோது குடிஅரசு இதழ் எழுதியதே சோறு போட்டு உதை வாங்கிய கதை என்று - அதுதான் இப்பொழுது நினைவிற்கு வந்து தொலைக் கிறது! என்ன செய்வது!!

Read more: http://viduthalai.in/page1/95073.html#ixzz3QDD8GRWq

தமிழ் ஓவியா said...

கருநாடகாவில் ஆடம்பரத் திருமணங்களுக்கு தடை புதிய சட்டத்தை அமல்படுத்த முடிவு


பெங்களூரு, ஜன. 28_ ஆடம்பர திருமணங்க ளுக்கு கடிவாளம் போட, கருநாடக அரசு, புதிய சட்டத்தை வடிவமைக்க தீர்மானித்து உள்ளது. இச்சட்டம், வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தொட ரின் போது தாக்கல் செய் யப்பட உள்ளது.

காங்கிரஸ், அரசு ஆட் சிக்கு வந்தவுடன், மூட நம்பிக்கைகள் தடை மற் றும் ஆடம்பரத் திருமணங் களை தடை செய்யும் மசோதாக்களை அமல் படுத்த முன்வந்தது. ஆனால், அதற்கு எதிர்ப்பு கிளம்பி, விவாதத்துக்கு உள்ளானது. எனவே, இவ் விரு மசோதாக்களையும் பரிசீலிக்கும்படி, சட்ட ஆணையத்திடம், அரசு கேட்டு கொண்டது.

சட்ட ஆணையம், முத லில் ஆடம்பர திருமண மசோதாவை பரிசீலித்து, இப்படிப்பட்ட மசோ தாக்கள் கொண்டுவர வேண்டிய அவசியம் உள் ளது. இந்த திருத்த மசோ தாவை செயல்படுத்தலாம் என்று, பரிந்துரை செய் துள்ளதாக தெரியவந்து உள்ளது. சட்டக் ஆணை யத்திடமிருந்து வந்த பரிந்துரையை, சட்டத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறைக்கு அனுப்பி உள்ளது.

இத்து டன், மசோதாவை வடிவ மைக்கும்படியும் தெரி வித்து உள்ளது. மசோதா தயாரானவுடன், அமைச் சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்து, ஒப்புதல் பெற்று, வரும் சட்டப் பேரவை கூட்டத்தொட ரிலோ அல்லது பட்ஜெட் கூட்டத் தொடரிலோ தாக்கல் செய்ய, அரசு தீர் மானித்து உள்ளது. சமீப நாட்களாக, ஆடம்பர திரு மணங்கள் அதிகரித்துள் ளன.

இதனால், பொருளா தார ஏற்றதாழ்வுகள் ஏற் படுகின்றன. லட்சக்கணக் கான ரூபாய் செலவிட்டு நடைபெறும் திருமண விருந்துகளில், உணவுகள் வீணாக்கப்பட்டு, தெரு வில் கொட்டுகின்றனர். பெங்களூரு போன்ற மாந கரங்களில், பிரபலமான திருமண மண்டபங்களில் வாடகை, லட்சக் கணக் கான ரூபாயாக உள்ளது. இரண்டு நாள் திருமண நிகழ்ச்சிக்காக, 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்படுகிறது.

இது போன்ற ஆடம் பரத் திருமணங்களுக்கு, கடிவாளம் போடுவது பற்றி, சட்டசபை, மேலவை கூட்டத்தொடரில் பல முறை விவாதிக்கப்பட்டும், மசோதா வடிவமைக்க வில்லை. தற்போது செயல் பாட்டில் உள்ள, ஆடம் பர திருமணத் தடை சட் டத்துக்கு திருத்தம் கொண்டு வருவதன் மூலம், புதிய மசோதாவை, அரசு தயாரித்து வருகிறது.

தற் போது அமலிலுள்ள சட் டத்தில், 50 ஆயிரம் ரூபாய்க் கும் அதிகமாக செலவு செய்து செய்யப்படும் திருமணங்கள், ஆடம்பர திருமணங்களாக கருதப் படும். தற்போது இத்தொகை, அய்ந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. ஆடம்பர திருமணங்க ளுக்கு, இரண்டு சதவீதம் வரி விதிக்க வேண்டும் என, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஆலோசிக் கின்றனர்.

இத்திட்டத் திற்கு, திருமண மண்டப உரிமையாளர்களின் ஒத்துழைப்பும், அவர் களிடமிருந்து, திருமண செலவு விவரங்கள் பெறப் படும். அனைத்து திருமண மண்டபங்களிலும், 'சிசி டிவி' கேமரா பொருத்து வது கட்டாயமாக்கப்படு கிறது என, அரசு வட் டாரம் தெரிவித்துள்ளது.

கூட்டுத் திருமணம் மற் றும் எளிமையான திரு மணங்களை ஊக்கப் படுத்த வேண்டும் என்பது, அரசின் விருப்பம். எனவே, எத்தனை தடைகள் வந் தாலும், இம்மசோதாவை தாக்கல் செய்தே ஆக வேண்டும் என்று, அரசு முடிவெடுத்துள்ளது.

எளிமையான திரும ணங்களை ஊக்கப்படுத்தி, ஆடம்பர திருமணங்க ளுக்கு கடிவாளம் போட வேண்டும் என்பது, அர சின் விருப்பம்; இதற்காக சட்டம் வடிவமைக்கப் படுகிறது. சட்டத் துறை யிடமிருந்து வந்துள்ள கோரிக்கையில், எங்கள் துறை, சில அம்சங்களை சேர்க்கிறது. மசோதாவை, எப்போது தாக்கல் செய் வது என்பதை முதல்வரே தீர்மானிப்பார் என்றார்.

Read more: http://viduthalai.in/page1/95102.html#ixzz3QDDmsKIN

தமிழ் ஓவியா said...

இந்துத்துவவாதிகளுக்கு மரண அடி

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடை மதவாதமே!

அமெரிக்க அதிபர் ஒபாமா அதிரடி!


புதுடில்லி, ஜன.27_ இந்தியாவின் வளர்ச்சிக்கு மதவாதம் தடையாகவே இருக்கும் என்றார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

மாணவர்களிடையே அவர் தெரிவித்த கருத்து இந்துத்துவாவாதிகளுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. டில்லியில் இந்திய சுற்றுப் பயணத்தின் இறுதி நாளான இன்று (27.1.2015) பகல் 12 மணியளவில் சிரிபோர்ட் அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரிடையே பேசும் போது அவர்களின் கேள்விகளுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பதில் அளிக்கையில் மத வாதப் பாதையில் செல்லும் எந்த நாடும் முன் னேற்றம் காணாது, இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக மக்களைப் பிளக்கும் கருவியாக மதவாதம் இருக்கும் என்று பதிலளித்தார்.

மதவாதம் என்பது மக்களைப் பிரிவி னைக்கு ஆளாக்கும் ஒரு கருவியாக தற்போது மாறிக்கொண்டு வருகிறது, மதவாதப் பாதை யில் இருந்து விலகி, சமூகநலனிற்கு பாடுபடும் நாடுகளே தற்போது முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியா போன்ற நாடுகள் மதத் தின் பெயரால் பிரிவினை செய்வதை விட்டு விட்டு வளர்ச்சியில் ஆர்வம் காட்டினால் இந்தியா வளர்ச்சியடையும்.

அமெரிக்காவில் 30 லட்சத்திற்கு மேல் இந்தியர்கள் வசிக்கின்றார்கள். அங்கு இந்தி யர்கள் மதத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்களுடைய வளர்ச்சியுடன் அமெரிக்காவின் வளர்ச்சி குறித்தும் அக்கறைகொண்டு செயலாற்றி வருகிறார்கள். இதன் காரணமாக அமெரிக்க மக்களிடையே பல இந்தியர்கள் நற்பெயர்களைப் பெற்றுள் ளனர்.

நமக்குள் ஏற்படும் விவாதங்களை அது எந்த தலைப்பில் இருந்தாலும் அமைதியான பேச்சுவார்த்தையின் துணையோடு தான் தீர்வு காண முடியும். ஆனால், உணர்ச்சி பூர்வமாக எடுக்கும் எந்த முடிவும் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.

இந்தியா எப்பொழுது வெற்றிப் பாதையில் செல்லும்?

இந்தியாவின் வளர்ச்சி எப்போது வெற்றிகரமான பாதையில் செல்லும் என்றால், அது மதவாதத்தை விட்டுவிட்டு, மதத்தின் பெயரால் பிரிவினைவாதச் செயல்களை நடத் தாமல் இருக்கும் பொழுதுதான் இந்த நாட்டின் வளர்ச்சி சிறப்பாக அமையும்; அதுவரை நாட்டின் வளர்ச்சி என்பது கேள்விகுறியாகத்தான் இருக்கும்.

மதமாற்ற விவகாரம் குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்த ஒபாமா ஒருவர் ஒரு மதத்தைப் பின்பற்றுவதும், அதை விட்டு விலகுவதும் அவரவர் விருப்பமாகும், அது தனிப்பட்ட மனிதருக்கான அதிகாரமாகும், ஆனால் மதத்தின் பெயரால் சமூகத்தைப் பிரிவினைக்கு ஆட்படுத்தும் இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

அமெரிக்கா வளர்ச்சி அடைந்தது எப்பொழுது? நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது எங்களது பெற்றோருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது, காரணம் நிறபேதம் அமெரிக் காவை ஆட்டிப்படைத்தது, தற்போது அப்பிரி வினைவாதம் நீங்கியதால் தான் அமெரிக்கா வின் வளர்ச்சி சாத்தியமானது. இந்தியாவின் உறுதியை மதப் பிணக்குகள் குலைத்து விடும். இந்திய அரசமைப்பு சட்ட பிரிவு 25 இந்துத்துவா வலதுசாரி அமைப்புகளின் கர் வாப்சி என்கிற மதமாற்றங்களுக்கு எதி ராக ஒபாமா பேச்சு அமைந்திருந்தது.

ஒபாமா இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 25இன்படி மத சுதந்திரம் குறித்து கூறப் பட்டுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசும்போது, உங்கள் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 அனைத்து மக்களும் சமம் என்று குறிப்பிடு கிறது. அனைவருக்கும் தேர்வு செய்வதிலிருந்து, சுதந்திரமாகப் பேசுவதற்கும், பின்பற்றுவதற் கும், பரப்புவதற்கும் உரிமை உள்ளது. நம்முடைய இரண்டு நாடுகளிலும் அனைத்து நாடுகளிலும் மத சுதந்திரத்தைக்காக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமன்றி அனைவருக் கும் உள்ளது.

உலகம் முழுவதும் மத சகிப்புத்தன்மை இல்லாமல் உள்ளதைக் காண்கிறோம். வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றால் ஒரே நம்பிக்கையைப் பின்பற்ற வேண்டும் என்று உள்ளது. மதரீதியான பிரிவினைக்கு எதிராக காப்பாளராக நாம் இருக்க வேண்டும். என்று கருத்துரை வழங்கினார் அமெரிக்க அதிபர்.

Read more: http://viduthalai.in/page1/95039.html#ixzz3QDE7Olt6

தமிழ் ஓவியா said...

ஜாதிப் பெயரா?

சமீபத்தில் என் அலு வலக நண்பரின் வீட்டிற்கு போயிருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஆறாவது படிக்கும் நண்பனின் மகன் அழுத படி வந்தான். ஏன் அழு கிறாய்? என்று கேட்டதற்கு, அவன் கூறிய பதிலைக் கேட்டு கோபம் வந்தது.

அவன் ஆசிரியர், அவனை கறுப்பா என்று அழைப்பாராம். அதைக் கேட்டு சக மாணவர்கள் கேலி செய்து சிரிப்பார் களாம். இதைக் கூறி மேலும் அழுதான் பையன்.

அவனுடைய சக வகுப்பு நண்பனிடம் கேட்டதற்கு, எங்கள் ஆசிரியர் அப்படித்தான்...

மாணவர்களின் இனத்தை வைத்து கவுண்டா, அய் யரே, பாய் என்றும், முடி காணிக்கை செலுத்தியவர் களை மொட்டையா என்றும் கூப்பிடுவதாகக் கூறினான்.

ஒழுங்கையும், மரியா தையையும் சொல்லித் தரும் ஆசிரியர்களே இப்படி கிண்டலடித்தால், மாணவர் சமுதாயம் எப்படி முன் னேறும்?
- ஜானகிராமன், வாலாஜா
(தினமலர் வார மலர் 25.1.2015 பக்.10)

இது ஒன்றும் புதிதல்ல - சில ஆண்டுகள் முன் வரை பள்ளிகளில் பெரும் பாலும் ஆசிரியர்கள் பார்ப் பனர்களாகவே இருப் பார்கள். தாழ்த்தப்பட்டவர் களும், பிற்படுத்தப்பட்ட வர்களும் படிக்க வந்த நிலையில் அந்த உயர் ஜாதி ஆணவம் அவர் களை ஆத்திரத்தின் உச் சிக்கே துரத்தியது.

முதல் தலைமுறை யாகப் படிக்க வந்த மாண வர்களைப், பல தலை முறைகளாகப் படித்த பரம்பரையைச் சேர்ந்த பார்ப்பனர்களோடு ஒப்பிட் டுப் பேசுவதே தவறு. அப் படியெல்லாம் அவர்களால் சிந்திக்க முடியாதே!

நீ எல்லாம் ஏன் படிக்க வந்தே? மாடு மேய்க்கப் போக வேண்டியதுதானே? உன் வாயில் இதெல்லாம் எப்படி நுழையும் - உன் நாக்கில் வசம்பை வைத் துத்தான் தேய்க்கனும் என்று வாய்க்கு வந்த வசுவுகளையெல்லாம் கொட்டித் தீர்ப்பார்கள்.

தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் பல நிகழ்ச்சி களில் பேசும் போது இவற்றையெல்லாம் குறிப் பிடுவதுண்டு.

நான் மயிலாடுதுறை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண் டிருந்தபோது பெரும்பா லும் பார்ப்பன ஆசிரியர் களே இருந்தனர்.

நம் மாணவர்களைப் பார்த்து இப்படியெல்லாம் சொல்லு வார்கள் என்று பேரா சிரியர் அவர்கள் குறிப் பிட்டதுதான் நினைவிற்கு வருகிறது.

தந்தை பெரியார் அவர்களின் பேருழைப்பால், கல்வி வள்ளல் காமராசரால், திராவிட இயக்கத்தின் தொடர் ஆட்சியால் பார்ப் பனர் அல்லாத இரு பால் மாணவர்கள் பார்ப்பனர் களைப் புறந் தள்ளும் பெரு நிலைக்கு வந்து விட்டனர்.

இந்த நிலையிலும் பழைய காலத்து விட்ட குறை, தொட்ட குறையாக ஜாதிப் பெயரை சொல்லி மாணவர்களை அழைக் கிறார்கள் கறுப்பா என்று கிண்டல் செய்கிறார்கள் ஆசிரியர்கள் என்றால் அந்தஆணவம் இன்னும் குற்றுயிராகத் துடித்துக் கொண்டிருக்கிறது என்று பொருள்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/95034.html#ixzz3QDEGJUwi

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நீதிமன்றம் ஏன்?

திருவாஞ்சியம் - மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய தலம் இதுவாம்.

அப்படியானால் குடும்ப நல நீதிமன்றத் தைக் குறைந்தபட்சம் அந்த மாவட்டத்திலாவது மூடி விடலாமா? மனநல மருத்துவர்களின் (Coun siling)
அலுவலகத்தை யும் வேண்டாம் என்று சொல்லி விடலாமா?

Read more: http://viduthalai.in/page1/95042.html#ixzz3QDERSLhA

தமிழ் ஓவியா said...

நாடு

நாடு என்று எதைச் சொல்ல வேண்டும் என்றால், அது பொரு ளாதாரச் சுதந்திரமுடைய நாடாக இருத்தல் வேண்டும்; அது இல்லாத நாடு அடிமை நாடு என்றுதான் சொல்லவேண்டுமே தவிர, சுதந்திர நாடு என்று சொல்ல முடியாது.
(விடுதலை, 2.12.1958)

Read more: http://viduthalai.in/page1/95025.html#ixzz3QDF58jCY

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

எது உண்மையான இராமாயணம்?

இராமாயணம் என் றால் ஒன்றிரண்டு அல்ல; எண்ண முடியாத அள வுக்கு இராமாயணம் பல மொழிகளில் உண்டாம்.

உண்மை என்றால் ஒன்றாகத் தானே இருக்க வேண்டும். இத்தனை இராமாயணங்களில் எது உண்மை என்று ஏற்றுக் கொள்வது? வங்காள இராமாயணத்தில் இரா வணனின் மகள் சீதை! எப்படி இருக்கிறது?

Read more: http://viduthalai.in/page1/94980.html#ixzz3QDGZhAnL

தமிழ் ஓவியா said...

காந்தியாரைக் கொன்ற கோட்சேவுக்கு கோயில் கட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இடத்துக்கு சீல் வைப்பு

உ.பி. அரசின் பாராட்டத்தக்க நடவடிக்கை

லக்னோ, ஜன.26 உத்தரப்பிரதேசம் மாநி லம், மீரட் நகரில் இந்து மதவெறியன் கோட் சேவுக்கு கோயில் கட்டுவ தாக அறிவிக்கப்பட்ட இடத்துக்கு உ.பி. அரசின் மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

அனைத்து தரப்பு மக்களாலும், மகாத்மா என ஏற்றுக் கொள்ளப் பட்டவர் காந்தியார். அவரை பிர்லா பிரார்த் தனை மய்யத்தில் 30.1.1948 அன்று இந்து மதவெறி யன் நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். காந்தி கொலை வழக்கில் அவனுக்காக வாதாட எவரும் முன்வரவில்லை. அந்த கொலை வழக்கில் கோட்சேக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்தான். காந்தியாரை கொன்ற வனையே 18 ஆண்டு களுக்குபின் விடுதலை செய்தனர்.

அவனிடம் காந்தியை ஏன் கொலை செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, அவர் இந்து மதத்துக்கு துரோ கம் செய்தார். இஸ்லாமி யர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். அதனால் காந்தியாரை சுட்டுக் கொன்றேன் என்றான். அப்படிப்பட்ட இந்து மதவெறி பிடித்த நாதுராம் கோட்சேவுக்கு மீரட் மாவட்டம் பிரம்ம புரி பகுதியில் வரும் ஜன வரி மாதம் சிலை வைக்கப் படும். அந்த சிலை வைக்கப்படும் இடத்தில் கோயில் ஒன்றும் கட்டப் படும் என மதவெறியை தூண்டும் வகையில் அகில இந்திய இந்து மகா சபாவின் தேசியப் பொதுச் செயலாளரான ஆச் சார்யா மதன் கடந்த டிசம்பர் மாதம் அறிவித் திருந்தார்.

இந்த கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக, விசா ரித்து நடவடிக்கை எடுக் கும்படி மாவட்ட நிர் வாகம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் மற்றவரை அவமதிப்பு செய்வது, வதந்திகளை பரப்புவது போன்ற குற்றவியல் சட்டங்களின்கீழ் ஆச் சார்யா மதன் மீது கிரி மினல் வழக்குப்பதிவு செய் யப்பட்டது.

இந்நிலையில், இவ் விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட மேல் விசாரணையின் விளை வாக கோட்சேவுக்கு சிலை அமைக்க விரும்பிய சர்ச்சைக்குரிய இடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

அந்த இடத்துக்குள் அத்துமீறி நுழைய முயற் சிப்பவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக் கப்படும் என மீரட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/94969.html#ixzz3QDGhyJ7E

தமிழ் ஓவியா said...

விருதுகள் பார்ப்பனரின் ஏகபோகமா?


ஜனவரி 26 - இந்தியக் குடிஅரசு நாளை யொட்டி, இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறுவர் பத்மபூஷன், பத்மஸ்ரீ முதலிய விருதுகளுக் குரியவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள்

1) என்.கோபால்சாமி (அய்யங்கார்) ஓய்வு
2) சுதா இரகுநாதன்
3) எம்.ஆர். சீனுவாசன்
4) பி.வி. இராஜராமன் (அய்.ஏ.எஸ்.) ஓய்வு

அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் தேடித் தேடிப் பார்த்தாலும் தமிழ்நாட்டிலிருந்து பெரிதும் பூணூல் திருமேனிகளே தகுதி பெற்றவர்களாக உள்ளார்கள்;
தடவித் தடவிப் பார்த்தால் ஒன்று வெறும் முதுகு கிடைக்குமோ என்ன?

யாருக்கு வந்த சுதந்திரம் இது?

புரிகிறதா?

Read more: http://viduthalai.in/page1/94984.html#ixzz3QDGoZ3oG

தமிழ் ஓவியா said...

ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்


உண்மையாக ஜாதிப் பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணா சிரமத் தர்மத்தையும், சூத்திரத் தன்மையையும் ஒழிக்கவேண்டுமானால், எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
(குடிஅரசு, 19.1.1936)

Read more: http://viduthalai.in/page1/94967.html#ixzz3QDH5Gjco

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் தமது சிறப்புரையில் குறிப் பிட்டதாவது:

கழகத்தின்சார்பில் சேலத்திலே எடுத்த முடிவுக்கு ஏற்ப திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகள் மாநிலம் தழுவிய அளவிலே ஒவ்வொரு வட்டாரத்திலும் அடுத்த 6 மாதம் அல்லது ஓராண்டுக்குள்ளாக 2000 பிரச்சார நிகழ்ச்சிகளை, மாநாடுகளை நடத்த வேண்டும் என்ற அந்தத் தீர்மானத்தைச் செயல்படுத்தக்கூடிய வகையிலே கடந்த 24ஆம் தேதி அறிவாசான் தந்தை பெரியார் நினைவு நாளில் (24.12.2014) தொடங்கி பல்வேறு பகுதிகளிலே மாநாடுகள் நடைபெறுகின்றன.

நம்முடைய கருத்தைப் பரப்புங்கள்

எப்போதும் கட்டுப்பாட்டை மதிக்கும் இயக்கம் நம்முடைய இயக்கம். அறிவு ஆசான் தந்தைபெரியார் காலத்திலிருந்தே நாங்கள் கொள்கை விளக்கங்களை சிறுசிறு புத்தகங்களாக இங்கே கொண்டுவந்திருக் கின்றோம்.லாபத்தைக்கருதியோ, வியாபார நோக்கத் தோடோ அல்ல.

மாறாக உண்மைகளை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். மக்களுக்கு உண்மைகள் போய்ச் சேர வேண்டும். அப்படி சேர்ந்தால்தான் மக்களிடம் தெளிவும், விழிப்பும் உண்டாகும் என்பதற்காகத்தான் இந்தப் புத்தகங்களை நாங்கள் அச்சிட்டு கொண்டு வந்திருக்கிறோம். இவைகளை நீங்கள் வாங்க வேண்டும்.

படிக்கவேண்டும். கருத்துகளை ஏற்கவேண்டும் என்று கூட நாங்கள் சொல்லமாட்டோம். நீங்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகள். இதைப்படித்தாலே, இந்த மருந்து வேலைசெய்யும். அதிலே ஒன்றும் சந்தேகமே இல்லை. இந்த புத்தகங்களை வாங்குங்கள், படியுங்கள், பிறருக்கும் கொடுங்கள். இந்தக் கருத்தைப்பரப்புங்கள். ஏனென்றால், இந்த நாட்டில் உள்ள ஊடகங்கள் என்பவை பெரும்பாலும் உண்மைகளைப் பரப்புவதில்லை.

நீங்கள் நன்றாக சிந்தித்துப்பார்த்தால் இன்றைய சூழ்நிலை எப்படி இருக்கிறது? இந்த மாநாட்டுக்கு என்ன தலைப்பு? நம்முடைய மார்க்சிஸ்ட் நண்பர்களும், இடதுசாரி தோழர்களும், விடுதலைசிறுத்தைகளும், ஏனைய தோழர் களும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் அவர்களும் சமுதாயத்திலே இன்றைய சூழ் நிலை எப்படி இருக்கிறது? என்று எடுத்துச் சொன் னார்கள். அதைத்தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.

உடற்கொடை

நம்முடைய தோழர்கள் எல்லாம், அசோகன் மற்றவர்கள் எல்லாம் பெரியார் உடற்கொடைக் கழகம் சார்பிலே இவர்கள் தங்களுடைய உடலை மருத்துவ மனைக்கு மறைந்தபிற்பாடு கொடுக்கப்போகிறோம் என்று எழுதியே கொடுத்திருக்கிறார்கள். காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு உடற்கொடை அளித்து எழுதி, பதிவு செய்திருக்கிறார்கள். இது ஒரு எடுத்துக்காட்டான செய்தி.

மதத்தினுடைய அடிவேரிலேயே வெந்நீர் ஊற்றுகின்ற சங்கதி இருக்கிறதென்றால் அது இதுதான். இது வெறும்கொடையைப்பொருத்தது மட்டுமல்ல. அதைவிட மதத்தினுடைய ஆணிவேர் வெட்டப்படுகிறது. எங்க ளுடைய தோழர்களுக்கு வாழ்நாள்முழுவதும் நாங்கள் பயனுள்ள வாழ்க்கையை வாழவேண்டும், இறந்த பிற் பாடும்கூட எங்களுடைய உடல் பயன்படவேண்டும் என்ப தற்கு பகுத்தறிவாளர்கள் எவ்வளவு மனிதநேயத் தோடு இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மதவெறியை மாய்ப்போம் மனித நேயத்தை காப்போம்

இந்த நகரத்தைப் பொருத்தவரையிலே இது புதிதல்ல. சீரிய பகுத்தறிவாளராக இருந்தவர், அன்றைக்கு நகர் மன்றத் தலைவராக இருந்த கே.டி.எஸ்.மணி நம்முடைய சகோதரர்ஆவார். அவருடைய உடல் மருத்துவமனைக்கு தரப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்சிலிருந்துதான் அவர் திராவிட இயக்கத்துக்கு வந்தவர். வியப்பாக இருக்கும். ஏனென்றால் அவர் சிந்தித்தார்.

தமிழ் ஓவியா said...

சிந்தித்தபிறகு நம்முடைய இனத்துக்கு, சமுதாயத்துக்கு துரோகம் செய்கிறோமே என்று நினைத்தார்கள். தீவிர பகுத்தறிவாளராக அவர் இருந்தார். அவர் ஏற்படுத்திய சரித்திரம் அவரோடு முடிந்து விடவில்லை. அது இன்னமும் தொடர்கிறது.

இளைய தலைமுறைகூட அந்த முடிவிலே இருக்கிறார்கள் என்று சொன்னால், இதுவே மதவெறி மாய்ப்போம், மனித நேயத்தைக் காப்போம் என்று சொல்வதற்கு அற்புதமான நடைமுறை எடுத்துக்காட்டாகும். நாங்கள் பேசிவிட்டு போகக்கூடியவர்கள் அல்ல. எதைப்பேசுகிறோமோ? அதைச் செய்யக்கூடியவர்கள்.

எதைச் செய்கிறோமோ அதைமட்டும்தான் பேசக்கூடியவர்கள். அவர்களுக்குப் பெயர்தான் பெரியார் தொண்டர்கள், சுயமரியாதைக் காரர்கள் என்று அதற்குப் பொருள். அந்த அளவிலே தான் திராவிடர்களுக்கு விழிப்புணர்வு தேவை.

வீட்டுக்காரர்கள் நன்றாக குறட்டைவிட்டுத் தூங்கி னால்கூட, காவலாளி தூங்கமுடியுமா? கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்.ஆக, எங்களுடைய வேலை பதவிக்குப் போவதில்லை. பெருமைகளைத் தேடுவது அல்ல. நீங்கள் இன்றைக்குப் பாராட்டுகிறீர்கள்.

இந்த பாராட்டைப்போலவே நீங்கள் கல்லை எடுத்து போட்டாலும் இந்தக் கருத்தைச் சொல்லிக்கொண்டுதான் இருப்போம். எங்களுடைய உயிருக்கு ஆபத்து என்று மற்றவர்கள் மிரட்டினாலும் கூட, அதைப்பற்றி கவலைப்படாமல் இந்தக் கொள்கையைச் சொல்லிக்கொண்டிருப்பதில்தான் எங்களுடைய வாழ்வு முடியவேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் நாங்கள்.

நம்நாட்டில் சட்டம் ஒழுங்கு!

அப்படிப்பட்ட விழிப்புணர்வு நமக்கு இன்றைக்கு ஏன் தேவை? விழிப்புணர்வு எப்போது தேவை? தூங்கு பவர்களுக்கு ஆபத்து வந்தால் அந்த நேரத்தில் தூங்கக் கூடாது, விழிப்பாக இருக்க வேண்டும். வீட்டில் தீப் பிடித்துக் கொண்டு எரியும்போது தூங்கிக்கொண்டிருக்க முடியுமா?

நம் நாட்டிலேதான் சட்டம் ஒழுங்கு பிரமாதமாக இருக்கிறது என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே, அண்மையிலேகூட கிருஷ்ணகிரியிலே ஒன்றும் அதிகமில்லை, 10கோடி அளவில் வங்கியிலேயே உள்ளதையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விட்டான். இப்போது சைரன் வைத்திருக்கிறார்கள். கைவைத்தாலே சத்தம் வரும்.

சிலபேர் வீட்டுக்குள் காலை வைத்தாலே சத்தம் வரும். அந்த சைரனுக்கு என்ன வேலை என்றால், அய்யா! ஆபத்து, எழுந்திருங்கள், விழிப்பாக இருங்கள் என்று சொல்வதுதான் அதனுடைய வேலை.

இப்போது எழுப்புவதற்கு தனியே கடிகாரம் தேவையில்லை.இப்போது எல்லோர் கையிலும் கைத்தொலைபேசி (செல்போன்) இருக்கிறது. இதனால் பல பொருட்களை தேவை இல்லை என்று ஆக்கி விட்டார்கள். செல்போன் கேமரா, ஒலிஅமைப்பு, கடிகாரம், காலண்டர் என அனைத்தையும் அதிலேயே அடக்கி உள்ளார்கள்.

தந்தை பெரியார் இனி வரும் உலகம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 10 காசுக்கு விற்ற புத்தகம். அதில், ஒவ்வொ ருவர் கையிலும், சட்டைப்பையிலும் வானொலியும், தொலைபேசியும் இருக்கும். ஒருவருக் கொருவர் ஆள்காட்டி, உருவம் காட்டிப் பேசிக்கொண்டு இருப்பார்கள் என்று தந்தைபெரியார் எழுதினார்.

சங்கராச்சாரியார் கண்டுபிடித்த விஷயமா? அவருக்கும் சேர்த்து மற்றவன்தான் கண்டுபிடித்திருக் கிறான். சத்ய சாய்பாபா கையைத் தூக்கிய உடனே பொத்தென்று விழுந்த விஷயமா? முப்பத்துமுக்கோடி தேவர்கள், நாற்பத்தைந்தாயிரம் ரிஷிகள், கிண்ணரர், கிம்புருடர், அஷ்டதிக்கு பாலகர்களில் ஒரு பயலுக்காவது செல்போன் என்றால் என்ன என்று தெரியுமா?

இவ்வளவும் அறிவு, சிந்தனை, வளர்ச்சி. ஏன்? எப்படி? என்று கேள்வி கேட்டு கேட்டு அறிவியல் வளர்ந்த துடைய விளைவாகஇவ்வளவு வளர்ந்திருக்கிறது.

-இவ்வாறு தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தம்பேச்சில் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page1/94978.html#ixzz3QDHPODFB

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வளையல்

கர்ப்பிணிக்கு அணிவிக் கும் வளையலால் கருச் சிதைவு ஏற்படாமல் குழந்தையைப் பாதுகாக்க இதைச் செய்ய வேண்டு மாம்.

அப்படி என்று யார் சொன்னார்கள்? இதற்கு என்ன ஆதாரம் இருக் கிறது? வளைகாப்புப் போட்டுக் கொண்ட பெண்களுக்குக் கருச் சிதைவே ஆகவில்லையா?

எந்தக் காலத்திலோ எவரோ உளறியது எல் லாம் உண்மையா?

Read more: http://viduthalai.in/e-paper/95200.html#ixzz3QJZjWWuU

தமிழ் ஓவியா said...

மருந்து வேண்டாம் - எப்போது (2)


வாழ்வின் அனைத்துத் துறைகளிலும், எப்படிப் பட்ட துன்பமும் தொல்லையும் நோயும் மனிதர்களை வருத்தும் என்பதை அறிந்து, ஆராய்ந்து, அவற்றை நீக்கத் தேவையான அறிவுரைகளை அறவுரைகளாக வழங்கும் வள்ளுவரின் மருந்து, மருத்துவம் பற்றிய நுண்மாணுழைபுலம் மிகவும் வியக்கத்தக்கது அல்லவா?

மருத்துவ முறையையே நான்கு வகைப்படுத்தி வள்ளுவர் தனது குறளில் கூறும் கருத்துக்கள் அவர் எத்தகைய தலைசிறந்த பகுத்தறிவுக் கண்ணோட்ட முடையவர் என்பதை நன்கு விளக்கக் கூடியதாக இருக்கிறது என்பதற்கு இக்குறள் ஒரு அருமையான சான்று அல்லவா?

உற்றவன் தீர்ப்பான், மருந்துழைச் செல்வான் என்று
அப்பால் நாற்கூற்றே மருந்து (குறள் (950)

இதன் பொருள்: 1. நோயாளி, 2. நோய் தீர்க்கும் மருத்துவன், 3. மருந்து, 4. நோயாளிக்கு அருகில் இருந்து உதவி புரிபவன் என்று நான்கு வகைப் பாடுகளை உடையதே மருத்துவ முறையாகும்.

என்னே அருமையான ஆய்வு! மருத்துவத்தையே அறுத்து நான்கு கூறுகள் முக்கியம் என்கிறாரே!

இன்று நமது மருத்துவர்கள் கண்டறிந்துள்ள நோய்க்கு மூலமான ஒன்று ஒவ்வாமை (Allergy) என்பதாகும்.

வெளிப்புறத் தூசியினால், மருந்தினால், உணவி னால் இத்தகைய ஒவ்வாமை பலருக்கு ஏற்படுகிறது!
ஆனால், அதன் காரணம் இதுதான் என்று புரிந்து கொள்ளாமல், வேறு எந்தெந்த மருந்துகள் - மருத் துவப் பரிசோதனைகள் - மருத்துவ சிகிச்சைகளை நாம் மேற்கொண்டு அவதியுறுகிறோம் பற்பல நேரங்களில் (எனக்குக்கூட பல ஆண்டுகளுக்குமுன்பு இத்தகைய கசப்பான, வேதனையான அனுபவம் ஏற்பட்டு, இறுதியில்தான் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங் களில் இடம் பெற்ற தலை சிறந்த தொண்டற டாக்டர் தம்பையா அவர்கள் கண்டுபிடித்து, எளிய மருத்துவத் தைக் கூறி என்னை உபாதையிலிருந்து விடுவித்தார்!)
திருவள்ளுவர் இந்த ஒவ்வாமை நோயை அறிந்து, புரிந்து, மிகவும் துல்லியமாக இரண்டு குறள்களில் கூறுவது நம்மை வியப்புக் கடலில் தள்ளுகிறது!

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து (குறள் 944)

இக்குறளின் பொருள் இதோ: ஒருவன், தான் முன்பு உண்ட உணவு செரித்து உள்ளதை அறிந்து கொண்டு, உடம்பிற்கு மாறுபாட் டினை உண்டாக்காத உணவைக் குறியாகக் கொண்டு, மிக நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும்.

உணவு உடம்பில் மாறுபாட்டினை உண்டாக்குவது தான். ஒவ்வாமை - அதனை அவாமையே நம்மைக் காப்பாற்றும் இல்லையா?

சில உணவுகள் சிலருக்கு ஒவ்வாதனவாக இருக்கக் கூடும். இதை அறியாமல் அதை உண்டு, உயிர்க்கு இறுதியாகி விடும் பேராபத்தும்கூட அதனால் ஏற்படுவது உண்டு.

காய்கறிகளை விரும்பிச் சாப்பிடும் ஒருவர், முருங்கைக் காயை உணவில் எடுத்துக் கொண்ட பிறகு மிகப் பெரும் போராட்டத்திற்குப் பிறகே மீண்ட நிகழ்வுகள் அறிவேன்.

அதுபோலவே, மீன், இறைச்சி, இறால் உணவு களை உண்ணுவோரில் சிலருக்கு இறால் வகை, அல்லது குறிப்பிட்ட இறைச்சி வகை உண்ட சில மணித்துளிகளுக்குப் பிறகு - உடம்பெல்லாம் தடித்து, முகம் வீங்கி - மூச்சு விடுவதற்கேகூட ஆபத்து என்று ஆகும் நிலையும் ஏற்படுவது உண்டு.

இதைத்தான் வள்ளுவர் - உடம்பிற்கு மாறுபாட் டினை உண்டாக்காத உணவைக் குறியாகக் கொண்டு - உண்ணுக - அதுவும் நன்கு பசி வந்த பிறகே உண்ணுக என்று அறிவுறுத்துகின்றார்!

இன்னும் தெளிவாக, அடுத்த குறளில் ஒவ்வாமை பற்றி விளக்குகிறார்!

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. (குறள் 945)

கருத்து:

உடம்பிற்கு மாறுபாடு ஏற்படுத்தாமல், ஒத்துப் போகக் கூடிய உணவாக இருந்த போதிலும் அது அளவுக்கு மீறிப் போகாமல் தடுத்து நிறுத்தி, செரிக்கும் அளவிற்கு மட்டுமே ஒருவன் உண்டால், அவனுடைய உயிர் வாழ்க்கை நோய்களினால் துன்பம் ஏற்படுவது இல்லை.

எனவே, செரித்தபின் உண்ணுங்கள்.

நமது உடல் அமைப்பில் முக்கிய பணிகள் - செரிமானக் கருவிகளால் தத்தம் கடமையைத் தவறாது செய்து நம்மை வாழ வைக்க உதவுகையில், நாம் அவற்றின் பணிக்கு உதவிட வேண்டாமா?
அதுதான் அளவறிந்து உண்ணுதல்,

செரித்தபின் உண்ணுதல்

ஒவ்வாதனவற்றை நீக்கி உண்ணுதல்

இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்ற ஆசை உங்களைத் தூண்டும்போது, அந்த ஆசைக்குப் பலியாகாமல் உடனே இலையை விட்டு எழுந்து விடுங்கள். அந்த கொஞ்ச நேரம் - வாழ்க்கையில் நீங்கள் பிறருடன் நீண்ட காலம் கொஞ்சி வாழ வகை செய்யுமே! புரிந்து செயல்படுக!- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/e-paper/95203.html#ixzz3QJbA36te

தமிழ் ஓவியா said...

மத்திய ஆட்சியில் சர்வமும் இந்துத்துவாமயம்!


வெளியுறவுத் துறைச் செயலாளர் சுஜாதா சிங் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வெளியுறவுத் துறை போன்ற முக்கியமான பதவியில் உள்ளவர்கள் தங்கள் பணி பற்றிய குறிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து புதிதாக பதவியேற்கும் ஒருவரிடம் ஒப்படைப்பார்கள். அதற்காக குறைந்தது இரண்டு முதல் 5 வேலை வாரங்கள் எடுத்துக்கொள்வார்கள்.

இது முக்கிய பணிமாற்றம் குறித்த விதிகள் ஆகும். ஆனால் பாஜக பதவியேற்றதில் இருந்தே தலைமைப் பதவியில் உள்ள அதிகாரிகளை ஒரே இரவில் பதவியில் இருந்து வெளியேற்றி வைப்பது தொடர்கிறது. ஆட்சிக்கு வந்த பிறகு சிபிஅய் தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பிரிவுத் தலைவர், தேசிய பாதுகாப்பு ஆய்வு மய்யத் தலைவர் (DRDO) என பல முக்கிய அதிகாரிகள் இதே போன்று ஒரே இரவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக சிறப்புப் பாதுகாப்பு படைத்தலைவர் நேபாளத்தில் மோடியுடன் இருக்கும்போதே டில்லியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு பதவி பறிப்பு தகவல் குறித்த கடிதம் தொலைநகலில் அனுப்பப்பட்டுள்ளது.

தனது பதவி பறிக்கப்பட்டது தெரியாமல் நேபாள நாட்டில் மோடியின் பாதுகாப்புப் பணிகளை நேரடியாக கண்காணித்துக் கொண்டிருந்தார். அதேபோல் பாதுகாப்பு ஆய்வு மய்யத் தலைவர் அவினாஷ் சந்திரா முதல்நாள் இரவு வீட்டிற்குத் திரும்பி மறுநாள் காலை அலுவலகம் செல்ல இருந்தபோது அவரது அலுவலகத்தில் இருந்து நீங்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு விட்டீர்கள் என்று தகவல் தொலைப்பேசியில் வருகிறது.

இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்குக் காரணம் பத்திரிகைகள் மோடியை படம் எடுக்கும்போது பாதுகாப்பு வீரர்கள் குறுக்கே நிற்கிறார்களாம்; இதன் காரணமான அதன் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இதுபோன்ற முக்கிய அதிகாரிகளின் பதவி நீக்கத்திற்குப் பின்புலமாக காவிகளின் கரங்கள் இருக்கின்றன என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. பாதுகாப்பு ஆய்வு மய்யத் தலைவர் நவீன கண்டு பிடிப்புகளுக்கு புராணப் பெயர்களை வைப்பதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தவர்.

தமிழ் ஓவியா said...

பன்னாட்டளவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அந்த நாட்டுப் பெயருடன் சில குறிப்பு எழுத்துக்களை பயன்படுத்துவது எதிர்காலத்தில் அந்த கண்டு பிடிப்புகளைபற்றிய தகவல்கள் பெற மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறிவந்தார். மேலும் ராணுவத்தில் காவிகளின் ஆதிக்கம் குறித்தும் பல்வேறு கட்டங்களில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தார். இதன் காரணமாக அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் வரிசையில் தற்போது சுஜாதா சிங் இவர் பதவி நீக்கம் செய்ய பல்வேறு காரணங்கள் கூறப்பட்டுள்ளன. இது குறித்து ஃபர்ஸ்ட் போஸ்ட் என்ற ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபரின் இந்தியப்பயணத்தின் போது காந்தியார் நினைவிடத்திற்கு ஒபாமாவுடன் சென்றது, ஒபாமாவின் வருகையின் போது ஊடகங்களில் மோடிக்குச் சமமாக வெளியுறவுத்துறைச் செயலாளரான சுஜாதாசிங்கின் படம் வந்தது, வெளியுறவுத்துறை குறித்த பல்வேறு பதவிகளுக்கு மோடிக்கு நெருக்கமானவர்கள் கொடுத்த பட்டியலைப் புறக்கணித்து தகுதியான நபர்களை பணியில் அமர்த்தியது, அதை விட முக்கியமாக இவரது தந்தை தமிழரான டி.வி.ராஜேஷ் வர் காங்கிரஸ்காரர் என்ற ஒரு காரணமும் இதில் இணைந்திருக்கிறது. இந்தியாவில் மதவாதம் பற்றி ஒபாமா தெரிவித்த கருத்துக்கு வெளியுறவுச் செயலாளர் காரணமாக இருக்கலாம் என்ற அய்யப்பாடு மோடி அரசுக்கு இருந்ததும் ஒரு காரணமாம்!

இதுபோன்று பல்வேறு காரணங்கள் கூறப்பட் டுள்ளன. ஆனால் இதுவரை உள்துறை அமைச்சகமோ அல்லது பிரதமர் அலுவலகமோ சுஜாதா சிங் பதவி நீக்கத்திற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. சுதந்திர இந்தியாவின் சி.பி.முத்தம்மா, நிருபமா ராவ் போன்ற பெண் வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்குப் பிறகு சுஜாதா சிங் நியமிக்கப்பட்டிருந்தார்.

முக்கியமாக பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படுவது - அதிகரித்து வருகிறது. பெண் வெளியுறவுத் துறை அதிகாரிகளை காரணம் எதுவும் கூறாமல், நீக்கிய மோடி சில நாள்களுக்கு முன்பு அரியானாவில் பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்; பெண் குழந் தையை காப்பாற்றுவோம் என்று முழங்கி இருக்கிறார். என்னே முரண்பாடு!

நிருபெந்திர மிஸ்ரா ஆர்.எஸ்.எஸ்.காரர்; மோடி ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக தொலைத் தொடர்பு ஆணையத்தின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற இவரை பணி நியமனத்திற்கான விதியில் மாற்றம் செய்து பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளராக நியமித்தார்.

அஜித் தொவல் பாதுகாப்பு ஆலோசகர் மே மாதம் 30 (2014) ஆம் தேதி மோடியால் நேரடியாக தேர்ந் தெடுக்கப்பட்டவர். இவர் தனது சொந்த வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை தேச வளர்ச்சி கொள்கை என்ற கருத்தை மய்யப்படுத்தி பல்வேறு கட்டுரைகளை எழுதியவர் ஆவார்.

இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவராக தீவிர இந்து வெறியரான எல்லப் பிரகலத சுதர்ஷன் ராவ் (ஒய்.பி.சுதர்ஷன் ராவ்) என்பவர் நியமிக்கப்பட்டார்.

சோசலிஸம் என்ற வார்த்தையே பிடிக்காது, சர்வமும் இந்துத்துவா மயம் என்ற பாதையில்தான் மோடி தலை மையிலான ஆட்சி நடை போடுகிறது - எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

Read more: http://viduthalai.in/e-paper/95202.html#ixzz3QJbOKTig

தமிழ் ஓவியா said...

ஹங்கேரி - இராமாயணம்


வார்சா ஒப்பந்தநாடுகளில் இராமாயண நாடகத்தை நடத்துவது இந்தியாவிற்கு நீண்டகாலமாக நற்பெயரை தரக்கூடிய வழிமுறையாக இருந்ததாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஹங்கேரியர்கள் இராமாயண நாடகத்தை நடத்தினால் நல்ல வரவேற்பு இருக்குமென்று கருதி, கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளையே கவரும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய இராமாயண நாடகத்தை தயாரித்தார்களாம்.

இந்த நாடகத்தில் இராவணன் வில்லனல்ல. மாறாக இலட்சுமணன் தான் வில்லன். இவன் நம்பிக்கைத் துரோகம் செய்து தன் அண்ணன் மனைவி சீதையை கூட்டிக் கொண்டு ஓடுவதாகக் கதை. இந்த நாடகம் ஹங்கேரியிலுள்ள புடா பெஸ்ட் நகரில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியிருக்கிறது.

மேலும் புதிய டியூட் டானிக்கின் புராண மொழி பெயர்ப்பின்படியும் சமீபத்தில் ஜெர்மானிய ஜனநாயக குடியரசு சார்பில் பெர்லினில் நடந்த நாடகத்திலும், இராவணன் சீதை மீது விருப்பமில்லாதவனாகவும், சீதை வலிய சென்று இராவணனை மயக்கக் கூடியவளாகவும் சித்தரித்திருக்கிறார்களாம்.

ஆதாரம்: இந்துஸ்தான் டைம்ஸ் - 4.10.1981

Read more: http://viduthalai.in/e-paper/95216.html#ixzz3QJdZi5p0

தமிழ் ஓவியா said...

ஜீவா பாடுகிறார்!

நல்லாரை உழைப்போரைப் பறையரென்றார்,
நயவஞ்சகமுடையோர் மேல்ஜாதி யென்றார்,
பொல்லாத கொடியவரை மன்னரென்றார்,
பொய்யுரைத்த குருக்கள், தமை குருக்கள் என்றார்
சொல்லாரும் தாயினத்தை அடிமையென்றார்
சூது மிகும் ஆசாரம் சமயம் என்றார்
இல்லாத பொய்வழியில் சொன்னதாலே
இந்நாட்டார் அடிமை வாழ்வு எய்தினாரே.

ப.ஜீவானந்தம்
தகவல்: எஸ்.எம்.தங்கவேலன், குஜராத்

Read more: http://viduthalai.in/e-paper/95216.html#ixzz3QJdlwDSW

தமிழ் ஓவியா said...

சர்க்கார் (அரசு) விடுமுறை நாள்கள்


இரு நூறு ஆண்டுகளாக நாம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். நம்முடைய அடிமைத்தளையை எந்த மதமும் அறுக்க வில்லை. பார்த்துக் கொண்டுதான் இருந்தன, எப்படி? உன்னுடைய தலை விதி, நீ அடிமையாக இருக்கும்படி நேரிட்டது என்று கூறுவதுபோல் இருந்தது. மதம் ஏற்படுத்திய அந்தத் தலை விதியை, நாட்டின் நலிவை தலைவர்கள், தங்கள் உழைப்பால் மண்டையில் அடித்து நொறுக்கினார்கள். தலை நொறுங்கவே - தளை அறு பட்டது.

அடிமைநிலை மாறிற்று. சுதந்திரம் கிடைத்தது. ஆனால், ஓயா, உழைப்பின் பயனாகவும், பல உத்தமர்களின் தியாகத்தினாலும் பெற்ற சுதந்திரத்தை ஏற்று நடத்திய மறக்க முடியாத ஒரு சரித்திர நிகழ்ச்சியை, மதக் கோட்பாட்டின்படி நாள் கோள் பார்த்தே நடத்தினர் என்றால் - அதிலும் ஒரு குறிப்பிட்ட மதக் கோட்பாட்டின்படி நல்ல நாள் பார்த்து சுதந்திர அரசாங்கத்தைத் தொடங்கினர் என்றால், மதக் கலப்பற்ற அரசியலையே இவர்கள் நடத்துகிறார்கள் என்று எப்படிக் கூற முடியும்? மதமா நமக்குச் சுதந்திரத்தை வாங்கித் தந்தது? மக்களின் உழைப்பன்றோ இன்று நாம் சுதந்திரமாக வாழ்வதற்கு அடிகோலித் தந்தது.

இதனை மறந்து மதங்களின் பெயரால் ஏற்படுத் தப்பட்ட ஆவணி அவிட்டத்தையும், கிருஷ்ண ஜெயந்தி யையும், விநாயக சதுர்த்தியையும், மஹாளய அமாவாசையையும், ஆயுதபூசையையும், பக்ரீத்தையும், மொகரத்தையும், தீபாவளியையும், வைகுந்த ஏகாதசியையும், சிவராத்திரி யையும் அரசின் விடுமுறை நாள்களாகக் கொண்டாடலாமா?

மத சம்பந்தமான நாள்களை அரசு விடுமுறை நாள்களாக்கிக் கொண்டாடுவது, இருநூறு ஆண்டுகளாக நாங்கள் அடிமைப்பகுதியில் வீழ்ந்து கிடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த மதமே! எமது அரசியல் விடுதலைக்கு உதவி புரியாத மதமே! சமுதாய ஒற்றுமையைக் குலைத்து எங்களுக் கிடையே ஒட்ட முடியாத பிளவை உண்டாக்கிய மதமே இருக்கின்ற சிறிதளவு ஒற்றுமையையும், அரசியலில் நுழைந்து குலைத்து விடாதே!

அரசியலை விட்டுச் சற்று விலகியிருப்பதே நீ எங்களுக்குச் செய்யும் பேருதவியாகும் என்று கூறி அதனை அரசியலோடு பிணைக்காமலும் அரசி யலின் பெயரால் அதற்கு விடுமுறை நாள்களை ஏற்படுத்தி மீண்டும் அரசியல் நெருக்கடிகளை உண்டாக்கி, அரிதில் பெற்ற விடுதலையை இழக்காமல் இருப்பதையுமே மத அடிப் படையின்மீது எழுப்பப்படாத இன்றைய அரசாங்கம் தன்னுடைய கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றோம்.

அறிஞர் அண்ணா
திராவிட நாடு இதழ் - (23.5.1948)

Read more: http://viduthalai.in/e-paper/95218.html#ixzz3QJduEwfC

தமிழ் ஓவியா said...

புது யுகம்

முற்காலத்து முனிவர்களுக்கு உற்சாகம் பிறந்தது இறைவனுடைய வடிவத்தைக் காண அவர்களின் அறிவு முயன்றது. வேதங்கள் பிறந்தன. ஆண்டவனைப்பற்றி இது அன்று அது அன்று என்ற அறிவு மட்டுமே அவர்களுக்கு உண்டாயிற்று.

உண்மையான தத்துவ ஞானம் இதுதான் என்று மக்கள் வியந்தனர்.

இடைக்காலத்துப் பெரியவர்களுக்கு உற்சாகம் பிறந்தது. இறைவனுடைய வடிவத்தைக் காண அவர்கள் பிரதிக்கினை செய்து கொண்டார்கள். அப்புறம் கேட்க வேண்டுமா? கல் தெய்வமாயிற்று; குரங்கு தெய்வமாயிற்று; ஆண்டவன் நீரிலும் தரையிலும் மரத்திலும் கல்லிலும் இருப்பதாக அவர்கள் கருதினார்கள்.

உண்மையான பக்தி இதுதான். என்று மக்கள் மகிழ்ச்சியோடு கூவினார்கள்.

விஞ்ஞான யுகம் வந்தது. விஞ்ஞானிகளுக்கு உற்சாகம் பிறந்தது கல்லிலிருந்து குரங்கு வரைக்கும் எல்லாப் பொருள்களின் வாழ்வையும் அவர்கள் ஆராய்ந்தனர். எந்தப் பொருளிலும் எங்கும் அவர்களுக்கு இறைவன் புலப்படவில்லை. அவர்கள் இகழ்ச்சியோடு இதுவும் அன்று; அதுவும் அன்று என்றார்கள்.

நாத்திகன்! நாத்திகன் என்று மக்கள் சினம் பொங்கக் கத்தினார்கள்.

- காண்டேகர், நந்தவனம் என்ற நூலில்.

Read more: http://viduthalai.in/e-paper/95218.html#ixzz3QJe4Rm87

தமிழ் ஓவியா said...

கம்யூனிஸ்டுகளின் கடவுள் கொள்கை


கம்யூனிஸ்டு ஒழுக்கமுறை என்று ஒன்று இருக்கிறதா? ஆம் நிச்சயமாக இருக்கிறது. நமக்கென்று தனி நெறிமுறை யில்லை என்று அடிக்கடி கருத்துக் கூறப்படுகிறது. பூர்ஷ்வாக்கள் நம்மைக் கம்யூனிஸ்டுகள் எல்லாவித ஒழுக்க முறைகளையும் நிராகரிக்கிறார்கள் என்று அடிக்கடி குற்றம்சாட்டுகிறார்கள்.

இது பிரச்சினையை குழப்பும் முறையாகும். தொழிலாளர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதாகும். எந்த அர்த்தத்தில் நெறிமுறைகளை நிராகரிக்கின்றோம்? பூர்ஷ்வா வர்க்கத்தால் கொடுக்கப்படும் அர்த்தத்தில் - கடவுளின் கட்டளைகள் என்னும் அடிப் படையில் கூறப்படும் நெறிமுறை என்னும் அர்த்தத்தில் அவைகளை நிராகரிக்கின்றோம். இந்த விஷயத்தில் நாம் நிச்சயமாக ஒன்று கூறுகிறோம். தமக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.

மதக்குருக்களும், நிலப்பிரபுக்களும், பூர்ஷ்வாக் களும் கடவுளின் பெயரைக் கிளப்பி விட்டு - அவர்கள் சுரண்டல்காரர்கள் என்னும் முறையில் அவர்களுடைய நல உரிமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதை நாம் நன்கு தெளிவாக அறிவோம்.

- வி.இ.லெனின் (மதத்தைப் பற்றி எனும் நூல் பக்கம் -103

Read more: http://viduthalai.in/e-paper/95221.html#ixzz3QJeCLCg0

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சுண்டெலி

சுண்டெலி நாள்தோறும் சிறுகச் சிறுக பூமியைத் தோண்டி வளையை ஆழப் படுத்துகிறது. அதுபோலவே காலம் என்ற சுண்டெலி ஒவ்வொரு நிமிடமும் உயிர் களுடைய வாழ்க்கையைக் குடைந்தெடுத்தபடியே இருக்கிறது. எப்போது இதற்குள்ளே புகுந்து இதை உடைமையாக்கிக் கொள்ள லாம்? என்று மரணம் உடலை கவனித்துக் கொண்டே இருக்கிறது.
- ஸ்ரீராமர்

இப்படி ஓர் ஆன்மிகத் துணுக்கு ஏடு ஒன்றில் வெளியாகியுள்ளது.

- ஆமாம் காலம் என்ற சுண்டெலியை உருவாக்கி யதுயார்? கடவுள் என்று தானே சொல்கிறார்கள். அவன் தானே பிண்டம் படைப்பவன்! அப்படி இருக் கும் போது ஸ்ரீராமன் புலம் புவது ஏன்? அதில் அர்த்தம் இருக்கிறதா?

Read more: http://viduthalai.in/e-paper/95394.html#ixzz3Qb8S7RX7

தமிழ் ஓவியா said...

கோலாலம்பூரில் 9ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

உலகளாவிய அளவில் தமிழும் - தமிழரும் எனும் தலைப்பில்

தமிழர் தலைவர் ஆசிரியர் நிகழ்த்திய ஆய்வுரை

வடமொழியால் விளைந்த பண்பாட்டுப் படையெடுப்புக் குறித்தும் இடித்துரை


கோலாலம்பூர், பிப்.2_ கோலாலம்பூரில் நடைபெற்ற 9ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வட மொழி யால் தமிழுக்கு நேர்ந்த கேடுகளை ஆதாரத் துடன் எடுத்துக்காட்டி ஆய்வுரை வழங்கினார்.

9 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசி யாவின் தலைநகர் கோலாலம்பூரில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.

தமிழ்மொழியை தமிழர்க்கு அறிமுகம் செய்தவர் அறிஞர் கால்டுவெல் ஆவார். தமிழை உலகுக்கு அறிமுகப் படுத்தியதில் பெரும்பங்கு வகித்தவர் தனி நாயக அடிகளார் ஆவார். அவருடைய பெரு முயற்சியால் முதல் உலகத்தமிழ் மாநாடு மிகவும் சிறப்பாக 1965இல் கோலாலம்பூரில் நடந்தது. இரண் டாவது மாநாடு சென்னையிலே மிகவும் கோலாகல மாக அறிஞர் அண்ணா அவர்களால் உலகச் சிறப் புடன் நடந்தது.

இப்போது 9ஆவது மாநாடு மீண்டும் கோலாலம்பூ ரில் சனவரி 30, 31 பிப்ரவரி 1ஆம் நாள்களில் நடை பெற்றது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் பெருமைமிகு பேராசிரியர் டத்தோ மாரிமுத்து அவர்களின் பெருமுயற்சியாலும், பெருமைமிகு டத்தோ சாமிவேலு அவர்களது ஒத்துழைப்புடனும், மலேசிய அரசின் ஒரு மில்லியன் டாலர் உதவியுடனும் நடைபெற்றது.

முதல் நாள் தொடக்க விழாவில் பேசிய மலேசியப் பிரதமர் மாண்புமிகு நஜீப் ரசாக் அவர்கள் திருக் குறளின் பெருமையைப் பேசி தமிழின் பெருமை, தமிழர்களின் முன்னேற்றம், குறித்தும் கருத்துரை வழங் கினார். மலேசியாவில் 542 அரசு தமிழ்ப் பள்ளிகள் இயங்குவது பற்றியும் பேசினார்.

பல்வேறு அமர்வுகளில் 120 ஆராய்ச்சிக் கட்டு ரைகள் வாசிக்கப்பட்டன.

இரண்டாம் நாள் சிறப்புப் பேச்சாளராக மானமிகு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். கோவையில் சிறப்புக்கூட்டத்தை முடித்துக் கொண்டு நேரே சென்னை வந்து உள்நாட்டு விமான நிலையத்தி லிருந்து பன்னாட்டு விமானத்தில் ஏறி மலேசியா வந்தடைந்தார்.
டத்தோ சாமிவேலு அவர்கள் அறிமுகப்படுத்திய போது மிகவும் பெருமையுடன் தானே திராவிடர் கழகத்தாலும், அய்யா சாரங்கபாணி அவர்களாலும் உருவாக்கப்பட்டதைச் சொல்லி ஆழமான உரை யாற்றினார். ஆசிரியர் அவர்களின் உழைப்பைப் பாராட்டி, அவரது வருகையால் நாங்கள் மிகவும் பெருமைப்படுகின்றோம் என்று வரவேற்றார்.

ஆசிரியர் அவர்கள் ஒரு மணி நேரம் உலகளாவிய நிலையில் தமிழும் தமிழரும் எனற தலைப்பில் தமிழும், தமிழரும் எப்படிப் பண்பாட்டுப் படை யெடுப்பை முறியடிக்க வேண்டியிருக்கின்றது என்பதை ஆதாரபூர்வ நூல்களை எடுத்துக்காட்டி விளக்கினார். தமிழனுக்குத் தனது மொழியே வட மொழியிலிருந்து கடன் பட்டது என்ற கதையை இல்லை,இல்லை, வடமொழிதான் தமிழுக்குக் கடன் பட்டுள்ளது, அதைத் திருடி தனது சொத்தாக சமஸ்கிருதம் என்ற மொழி உருவான கதையைச் சொன்னார். பண்பாட்டுப் படையெடுப்பு, மொழியில் மட்டுமன்றி, கலை, பண்பாடு, மொழியை அழிக்கச் செய்த சூழ்ச் சிகள், ஆக்கிக் கொண்டதையும், அதை நம்மையே நம்ப வைத்துவிட்ட சூழ்ச்சியையும் சொன்னார்.

செம்மொழிக்கு இருக்க வேண்டிய 11 தகுதிகளும் தமிழுக்கு மட்டுமே உள்ளதையும், சமஸ்கிருதத்திற்கு 7 தகுதிகள் மட்டுமே உள்ளதையும் விளக்கமாகச் சொன்னார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குயில் இதழ்களில் எழுதிய வந்தவர் மொழியா செந் தமிழ்ச்செல்வமா, என்றார். பல சொற்கள் வடமொழி போல் தோன்ற வைத்ததையும் அவை தூய தமிழ்ச்சொற்களேயாம் என்பதையும் நூலாக வெளியிட்டுள்ளதைக் காண்பித்தார். தமிழ் இசை கர்நாடக சங்கீதமாகவும், திருக்குறளிலேயே உள்ள "கூத்தாட்டும் அவை" பரத நாட்டியமாகவும் பண்பாட்டுப் படையெடுப்பு, மொழியை மட்டுமன்றி உள்ளதைத் தமிழறிஞர்கள் ஆக்கபூர்வமாக எடுத்துச் சொல்வதுதான் உண்மையான தமிழ்ப்பணி, அதை நாம் அனைவரும் நமது பிளவுகளை ஓரங்கட்டி, இணைப்புப் பாலங்களை இறுகச் செய்ய வேண்டும் என்று முழங்கினார். பேச்சு, புத்தகமாக அனைவர்க்கும் தரப்பட்டது.

கடைசி நாள் மலேசியாவின் கல்வி அமைச்சர் முடிவு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தார். பல்கலைக் கழக் துணைவேந்தர்களும், பல தமிழறிஞர்களும், 20 நாடுகளில் இருந்து வந்து பங்கேற்றனர். முன்னாள் கல்வி அமைச்சர் ஆறுமுக பரமசிவம் உணர்ச்சியுடன் தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிப் பேசியும் மழலைத் தமிழ் பேசியும் அனைவரையும் மயக்கினார்.

2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மலேசியப் பல்கலைக் கழகத்தில், அவர்களது ஆதர வுடன் நடைபெற்ற வெற்றித் திருவிழாவாக நடை பெற்றது.

Read more: http://viduthalai.in/e-paper/95391.html#ixzz3Qb8cu36q

தமிழ் ஓவியா said...

மூடனே!

கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிச் சோம்பித் திரிந்து கொண்டு, தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழி போட்டுத் திரிகின்றவன் ஒரு மூடனே! - (விடுதலை, 1.2.1969)

Read more: http://viduthalai.in/page-2/95400.html#ixzz3Qb954aqT

தமிழ் ஓவியா said...

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்

நம் முன்னோர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற ரீதியில் தங்கள் உணவு பழக்கத்தை வைத்திருந்தனர். அதனால்தான் அவர்கள் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். இன்றைய நவீனஉலகமும், இயந்திரத்தனமான வாழ்க்கையும் அத்தகைய உணவு பழக்கத்தை நம்மை விட்டு தள்ளி விட்டுள்ளது.

அதனால்தான், வாழ்க்கையின் குறிப்பிட்ட நாட்களை மருத்துவ சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டிய சூழ்நிலையில் தவித்து வருகிறோம். அந்த வகையில் நமது முன்னோர்களின் உணவில் முக்கிய பங்கு வகித்த வெந்தயத்தின் மகிமை அலாதியானது.

வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக் கின்றன. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள்.

தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டாது.

நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது. நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமி லங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன.

வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைவதோடு சீக்கிரம் ஆறும் தன்மைக் கொண்டது. வயிற்றுப்போக்கை குணமடைய செய்வதோடு, தாய்ப்பால் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு. வெந்தய கீரையை பகலில் சமைத்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்பசம் இருந்தாலும் குறையும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, சுண்டக்காய்ச்சி, இருவேளையும் அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாக குணமாகும்.

பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சினையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்தால், முடி உதிர்வது குறைவதுடன், அடர்த்தியாக முடி வளரவும் செய்கிறது.

பொடுகு பிரச்சினை, அரிப்பு குறைவதோடு முடியை பளபளப்பாகவும் வைக்கிறது. வெந்தய விழுதை பருக்கள் மீது தடவ பருக்கள் மறையும். ஆகவே, வெந்தயத்தை பயன்படுத்தி தான் பாருங்களேன் அதன் பயன்களும், மருத்துவ குணங்களும் என்னவென்று உங்களுக்கே தெரியும்.

Read more: http://viduthalai.in/page-7/95419.html#ixzz3Qb9Pq67R

தமிழ் ஓவியா said...

நரம்புகளை பலம் பெற வைக்கும் சீரகம்

சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும். எடையும் குறையும். சீரகத்தையும், உப்பையும் சேர்த்து தண்ணீர் குடித்தால் வயிற்றுவலிக்கு உடனடியாக தீர்வு தரும். சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும். சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.

சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நின்றுவிடும். சீரகத்தை மென்று தின்றாலே வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும். சீரகப்பொடியோடு எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்து சாப்பிட்டால் பித்தம் அகலும்.

நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டு காய்ச்சி எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும். சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறிந்துவிடும். சீரகத்தை வறுத்து சுடுநீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும். மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.

சீரகம் வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை சேர்த்து தூளாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம் தினம் இரண்டு வேளையாக சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும். சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும். நரம்புத்தளர்ச்சி குணமாகும்

Read more: http://viduthalai.in/page-7/95420.html#ixzz3Qb9Wx6EI

தமிழ் ஓவியா said...

மருத்துவ குணங்கள் நிறைந்த பரங்கிக்காய்

மலையாளிகள் சமூகத்தில் மஞ்சள் பூசணிக்காய் எரிசேரி என்பது மிகவும் பிரபலமான ஓர் உணவு. வெளிர் ஆரஞ்சு நிறமுள்ள இந்த பதார்த்தம் பண்டிகை நாட்களின் ஸ்பெஷல் தயாரிப்பு. இது மிகவும் சுவையாக இருக்கும். இந்த காயின் வெளிர் ஆரஞ்சு நிறம் பீட்டா கரோட்டீன் கொண்டது.

இது நம் உடலுக்குத் தேவைப்படும் போது கல்லீரலுக்கு வைட்ட மின் ஏ-வாக மாற்றிக் கொடுக்கும். தோற்றம் பரங்கிக்காயின் பூர்வீகம் வட அமெரிக்கா. பரங்கி என்பது ஒரு தாவரத்தின் பெயர்.

சமையலுக்கு மட்டுமல்ல... விதையாகவும் எண்ணெயாகவும் கூட இது பயன்படுகிறது. குணங்கள் பரங்கி பரவலாக விளையக்கூடிய ஒரு காய். இது அளவிலும் நிறத்திலும் வடிவத்திலும் வேறுபட்டது. மெகா சைஸ் பரங்கிக்காய் 4-6 கிலோ எடை கூட இருக்கும். இது பொதுவாக ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கு இப்படியொரு நிறத்தைக் கொடுப்பது, அதன் தோல் மற்றும் உள்ளே உள்ள சதைப் பகுதி. இதன் தோல் பகுதி அழுத்தமாகவும் எடையற்ற தாகவும் இருக்கும்.

ஆழமான இதன் உள் பகுதியில், சின்ன சின்ன வெள்ளை நிறமுடைய விதைகள் ஒன்றோடு ஒன்று வலைபோலப் பின்னிப் பிணைந்திருக்கும். பயன்கள் மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும், கொலஸ்ட்ராலும் இல்லை.

இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகிய வற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம். வைட்டமின் ஏவை அபரி மிதமாகக் கொண்ட இது, உடலுக்குத் தேவையான இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயல் படுகிறது. சரும ஆரோக்கியத்தையும் சளி சவ்வுப் பகுதி களையும் பாதுகாக்கிறது. பார்வைத்திறன் மேம்படவும் உதவுகிறது.

இது ஆல்ஃபா, பீட்டா கரோட்டின், லூட்டின் மற்றும் ஸியாக்ஸான்தின் ஆகியவற்றைக் கொண்டது. என்பது இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட். இது வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் தசை நோய்களைத் தடுக்கிறது. பரங்கியில் கெராட்டினாயிட்ஸ் அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.

ஃபோலேட், நியாசின், வைட்டமின் பி6, தையாமின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் போன்ற பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிகம். தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை சிறந்த அளவில் உள்ளடக்கிய காய். பரங்கி விதைகளில் நார்ச்சத்தும், ஒற்றை - நிரம்பாத கொழுப்பு அமிலமும் உள்ளன.

இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் ட்ரிப்டோஃபன் எனப்படுகிற அமினோ அமிலம் உள்ளது. 1 டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை விரட்டுகிறது. பரங்கியில் நமது சருமத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலமும் உள்ளது. சருமப் பளபளப்புக்குக் காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் மக்னீசி யமும் உள்ளது.

பரங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுவதுடன் மேலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் போராடவும் செய்கிறது. பரங்கியில் உள்ள வைட்டமின் ஈ, சருமக் குறைபாடுகளை சரி செய்கிறது. பரங்கியில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் ஆகியவையும் சரி செய்யப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page-7/95417.html#ixzz3Qb9gOqLF

தமிழ் ஓவியா said...

குடும்பக் கட்டுப்பாடு மாத்திரையை உருவாக்கிய விஞ்ஞானி மறைவு

சான்பிரான்சிஸ்கோ, பிப்.2_ குடும்பக் கட் டுப்பாட்டுக்கு உதவும் மாத்திரையை உரு வாக்கிய விஞ்ஞானியான கார்ல் ஜெராஸி (91) காலமானார்.

ஆஸ்திரியாவில் பிறந்த இவர், அமெரிக் காவில் உயர் கல்வி பயின்றார். 1951 -இல் இவரது தலைமையிலான ஆய்வுக்குழு நாரத் ரின்ட்ரோன் எனும் மூலக்கூறைக் கண்டு பிடித்தது. அவருக்கு அப்போது 28 வயது. அந்த மூலக்கூறு அடிப்படையிலேயே குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உதவும் மாத்தி ரைகள் உருவாக்கப்பட்டன.

இதையடுத்து, குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரையின் தந்தை என கார்ல் ஜெராஸி அறியப்பட்டார்.
குடும்பக் கட்டுபாடு மாத்திரை ஒரு நாட் டின் பொருளாதாரத் திட்டங்களை வகுக்க உதவியது மட்டுமல்லாமல், பாலியல் உறவு களிலும், பெண்களின் வாழ்விலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. உலகெங்கும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில், அறி வியலைவிட, அரசியல் முக்கியப் பங்கு வகிக் கும் என்று அவர் ஒருமுறை குறிப்பிட்டார்.

வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர், பல்வேறு தனியார் வேதி யியல் மற்றும் மருந்து தயாரிப்பு நிறு வனங்களில் பணியாற்றியுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் வேதியியல் துறையின் கவுரவப் பேராசிரியராக இருந்தார். கரிம வேதியியல் துறைக்குப் பெரும் பங்களிப்பு செய்துள்ள அவர், சுமார் 1,200 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இரு கவிதைத் தொகுப்புகள், விஞ்ஞான நாவல்கள், நாடகங்களும் எழுதி யுள்ளார். இவரது சுயசரிதை 4 தொகுதி களாக வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக் கிழமை (ஜன.30) அவர் இறந்ததாக ஸ்டான் ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-7/95438.html#ixzz3Qb9t49SJ

தமிழ் ஓவியா said...

புதிய ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதங்களில் எந்த மாற்றங்களும் நடக்கவில்லை: அசோசேம் கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடில்லி, பிப்.2- புதிய அரசு பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களில் பெரிய அளவில் எந்த மாற்றங்களும் நடக்கவில்லை என்று அசோசேம் கருத்து கணிப்பில் கலந்துகொண்ட பெரும்பான்மையான தொழி லதிபர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

தவிர நடப்பு நிதி ஆண்டில் எந்த முதலீட்டுத் திட்டங்கள் வரும் என்பதையும் எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் தொழில் துறை அமைப்பான அசோசேம் பிஸினஸ் நம்பிக்கை குறியீடு என்ற பெயரில் நடத்திய சர்வேயில் இவை தெரிய வந்திருக்கின்றன.

அதேசமயம் நடப்பாண்டின் முதல் அரையாண்டுக்குள் சூழ் நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.
சர்வேயில் கலந்துகொண்ட 54.2 சதவீத தொழிலதிபர்கள் கடந்த ஆறு மாத காலத்தில் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்கள்.

மேலும் 45.8 சதவீத தொழிலதிபர்கள் நடப்பு நிதி ஆண்டுக்குள் முதலீட்டு சூழ்நிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் தெரிவித்தார்கள்.
மேலும் ஏற்றுமதி சந்தையும் மந்தமாகவே இருக்கும் என்று தெரிவித்தார்கள். ஆனால் 41.7 சதவீத தொழிலதிபர்கள் நடப்பு காலாண்டில் நிலைமை மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/95442.html#ixzz3QbA0kql6

தமிழ் ஓவியா said...

திமுக உறவு நட்பு ரீதியானது தொல்.திருமாவளவன்

சென்னை, பிப்.2_ திமுக வுடனான உறவு குறித்து விளக்கம் அளிக்க வேண் டியதில்லை என்று தொல். திருமாவளவன் கூறினார்.
இது தொடர்பாக சென்னையில் ஞாயிற்றுக் கிழமை திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பொன்.ராதாகிருஷ்ணன் என் நட்புக்குரியவர். நல்ல வர். ஆனால், தற்போது அவரை ஆக்கிரமித் துள்ள அதிகாரத்தின் மூலம் பேசுகிறார்.
பெரியார், நாராயண குரு போன்றோரின் கோட்பாடுகளை நான் உள்வாங்கி இருப்பதால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை எதிர்க்கிறேன். தனிப் பட்ட முறையில் அமித் ஷாவோ, பொன்.ராதா கிருஷ்ணனோ எனக்குப் பகைவர்கள் இல்லை.

திமுக_ விடுதலைச் சிறுத் தைகள் இடையிலான பிரச்சினை நட்பின் அடிப் படையிலானது. இதற்கு விளக்கம் அளிக்க வேண் டிய தேவையில்லை. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் செல்வாக்குடன் திகழ்ந்த காமராஜரின் புதுதில்லி இல்லத்தை யார் கொளுத் தினர் என்பது அவருக்கே தெரியும். காந்தியைச் சுட்ட கோட்சேவை தேச பக்தன் என்று சொல்வது நியாயமா?

இதனைப் பொன். ராதாகிருஷ்ணன் கண்டிக் காதது ஏன் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். அண் மையில், நடைபெற்ற தமாகாவின் கருத்தரங்கில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை யும், பாஜக தேசியத் தலை வர் அமித்ஷாவையும் தொல்.திருமாவளவன் விமர்சித்து இருந்தார்.

அதற்கு பதில் அளித் திருந்த பொன்.ராதா கிருஷ்ணன், சிறீரங்கம் இடைத்தேர்தலில் திமுகவை, விடுதலைச் சிறுத்தைகள் ஆதரிக்கா தது ஏன் என்பதற்கு அவர்கள் (விடுதலைச் சிறுத்தைகள்) விளக்கம் அளிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு, தற்போது திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-7/95441.html#ixzz3QbA8j1Hs

தமிழ் ஓவியா said...

இங்கிலாந்தில் போர்க் கொடி!


மனித உரிமை மீறல் தொடர்பான சர்வதேச விசாரணையை புறக்கணித்த இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து எம்.பி.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அந்த நாட்டுக்கு அய்ரோப்பிய யூனியன் வர்த்தக சலுகை வழங்கக் கூடாது என அவர்கள் கூறி உள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டம் அடைந்தபோது லட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். உலகில் வேறெங்கும் நடந்திராத அளவில், மனித உரிமைகள் மீறப்பட்டன. இது தொடர்பாக அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த விசாரணையை இலங்கை அதிபர் இராஜபக்சே நிராகரித்து விட்டார். எந்த ஒத்துழைப்பும் வழங்க முடியாது என அவர் திட்டவட்டமாக கூறி விட்டார். இதன் காரணமாக இலங்கைக்கு வர்த்தக ரீதியில் எந்த சலுகையும் வழங்கக் கூடாது என அய்ரோப்பிய யூனியனிடம் இங்கிலாந்து போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற வெளியுறவு கமிட்டியின் தலைவரும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.யுமான ரிச்சர்ட் ஒட்டவே மற்றும் எம்.பி.க்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துகிற சர்வதேச விசாரணை குழுவுக்கு அனுமதி அளிக்க முடியாது என்று அந்த நாடு மறுத்து வருகிறது. இது தொடர்ந்தால் அந்த நாட்டுக்கு வழங்கி வருகிற வர்த்தக சலுகைகளை நீக்குவது குறித்து அய்ரோப்பிய யூனியனிடன் நமது அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இந்த விஷயத்தில் பொருளாதார தடை விதிப்பது, சர்வதேச விசாரணை குழுவை இலங்கையில் அனுமதிக்கச் செய்வது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளையும் பரிசீலிக்க நமது அரசு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page2/95263.html#ixzz3QbB3pxkp

தமிழ் ஓவியா said...

தெரிந்து கொள்ள வேண்டியவை

நீரை அதிக அளவு தேக்கி வைப்பதில் இந்தியாவிலேயே மிகப் பெரியது பரம்பிக்குளம் ஆழியாறு நீர்த் தேக்கமாகும். உலகிலுள்ள முதல் பத்து மிகப் பெரிய நீர்த் தேக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.

தேன்கூட்டில் சேகரித்து வைக்கப்படும் தண்ணீர் அற்ற தேன், ஆயிரம் ஆண்டுகளானாலும் கெடாது.

ஒரு மனிதன் தூங்கும்போது 14 முறை புரண்டு படுக்கிறான்.

வாழ்நாள் முழுவதும் நாம் சாப்பிடும் சாப்பாட்டின் எடை நூறு யானைகளின் எடைக்குச் சமம்.

தீயில் எரிந்து போன எழுத்துக்களை அறிய அகச் சிவப்பு கதிர்களை பயன்படுத்துகின்றனர்.

எதிர்காலத்தில் மின்சாரம் வழங்கப் போவது நிலக்கரியோ அல்லது சுற்றுச்சூழலைப் பாதிக்கக் கூடிய பிற உலைகளோ இல்லை.

சூரிய ஒளிமூலம் எல்லா இடங்களிலும் பரவலாக மின்சாரம் எடுக்கப்படும்.

ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு அலுவலகமும் தங்களுக்குத் தேவையான சூரியஒளி மின்சாரத்தை தாங்களே தயாரித்துக் கொள்ளும் நிலை இருக்கும்.

இதனால் மின்தடை என்பது இருக்காது.

டயரை கண்டுபிடித்தவர் டன்லப் - 1833ஆம் ஆண்டு.

நீர்ச்சத்து நிறைந்தது தர்ப்பூசணிப் பழங்கள், கோடை காலத்துக்கு ஏற்றவை.

நாம் தர்ப்பூசணியின் சதைப் பற்றான பகுதியை மட்டும் சாப்பிட்டு விட்டு வெள்ளை நிறப் பகுதியை வீசி எறிந்து விடுகிறோம். இப்படி தூக்கி ஏறியப்படும் பகுதியில் இருந்துதான் சர்க்கரையும், எத்தனாலும் தயாரிக்கப்படுகிறது.

மரங்களுக்கு மனிதர்களைப் போல் வாழ்நாள் இவ்வளவு என்று கணக்கு கிடையாது.

கலிபோர்னியாவில் சில மரங்களுக்கு வயது 4 ஆயிரம் ஆண்டுகளாகும்.

(நூல் அறிவியல் செய்திகள் களஞ்சியம்)

தகவல்: க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page5/95268.html#ixzz3QbCCv1hG

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பண்படுத்திய இந்த பூமியில் இந்து அமைப்புகளின் எதிர்மறைக் கருத்துகளை பிரதமர் மறுக்காதது ஏன்?

கலைஞர்
கண்டனம்


சென்னை, பிப்.1_ தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் பண் படுத்தி வளர்த்து பாதுகாத்து வரும் இந்த பூமியில், இந்து அமைப்புகளின் எதிர் மறை கருத்துகளைப் பிரதமர் அவ்வப் போது மறுத்து, தெளிவுபடுத்தாதது ஏன்? எனவும், இவை ஆச்சரியத்தையும், அதிர்ச் சியையும் அளிப்பதாகவும் தி.மு.க. தலை வர் கலைஞர் கண்டனம் தெரிவித்துள் ளார்.

இதுகுறித்து கலைஞர் அவர்கள் வெளி யிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேள்வி:- இலங்கையில் தமிழர் ஒருவர் நாட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறாரே?

கலைஞர்:- இலங்கையில் பொறுப் பேற்றிருக்கும் சிறீசேனாவின் புதிய அரசு, சிறுபான்மைத் தமிழினத்தைச் சேர்ந்த 62 வயதான திரு.கே.சிறீபவன் என்பவரை நாட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்திருப்பது வரவேற்றுப் பாராட் டப்பட வேண்டிய நடவடிக்கையாகும். 1991 ஆம் ஆண்டில் இலங்கையின் தலைமை நீதிபதியாக திரு. தம்பையா என்னும் தமிழர் இருந்திருக்கிறார். தற் போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண் டும் ஒரு தமிழர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது, தமிழினத்திற்கு இதுவரை இழைக்கப்பட்டிருக்கும் ஏராள மான அநீதிகளை ஒவ்வொன்றாகத் துடைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் ஒன்றாகவே உலகத் தமிழினத்தால் கருதப்படும். எனினும், இலங் கையில் புதிய அரசின் பல அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவதில் ஏற்படும் தாம தம் தவிர்க்கப்படவேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது.

கேள்வி:- இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும். சட் டப்படி இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்கவேண்டும் என்ற குரல் மீண்டும் கேட்கத் தொடங்கிவிட்டதே?

தமிழ் ஓவியா said...

பகிஷ்கார யோசனை

காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தற்போது செய்தி ருக்கும் பகிஷ்கார யோசனை மிகவும் புத்திசாலித்தன முள்ளதாகவும், வேடிக்கையானதாகவும் இருக்கிறது. ரயில் போஸ்டாபீஸ், தந்தி முதலியவைகளையும் பகிஷ்காரம் செய்ய வேண்டுமாம். ஆனால் எந்த காங்கிரஸ்காரராவது இவைகளை நடைமுறையில் செய்து காட்ட முடியுமா? என்று கேட்கிறோம்.

இந்த பகிஷ்கார வியாக்கியானம் வெகு வேடிக்கையானது! ரயிலைப் பகிஷ்காரஞ் செய்வதென்றால் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வண்டிகளில் ஏறாமல் மூன்றாவது வகுப்பில்தான் ஏறவேண்டுமாம்! தபால் பகிஷ்காரம் என்றால் கவர் எழுதாமல் கார்டுகளிலேயே எழுத வேண்டுமாம்.

தந்தியைப் பகிஷ்கரிப்பது என்றால் கூடுமானவரையில் வார்த்தைகளைச் சுருக்கித் தந்தி கொடுக்க வேண்டுமாம்! இதுதான் இந்த பகிஷ்காரங் களுக்குக் காங்கிரஸ்காரர்கள் செய்யும் அருமையான அர்த்த புஷ்டியுள்ள விருத்தியுரை.

இந்த வியாக்கியானம் கூறவும், இந்தப் பகிஷ்காரப் பிரசாரஞ் செய்யவும் வேண்டிய அவசியமே இல்லை. பொருளாதார நெருக்கடியுள்ள தற்காலத்தில் இப்படித்தான் நடந்து தீருகின்றது. ஏழை மக்கள் ரயிலில் முதலாவது, இரண்டாவது வண்டிகளை எப்பொழுதும் திரும்பிப் பார்த்தே இருக்க மாட்டார்கள்.

அவர்கள் எழுதும் கடிதங் களும் குறைவு. அதுவும் கார்டு 9 பைசாவும், கவர் 1 அணா 3 பைசாவும் ஆனவுடன் நிச்சயமாகக் கார்டில்தான் எழுது வார்கள். தந்திக்கும் அவர்களுக்கும் வெகுதூரம் ஆகையால் இந்தப் பகிஷ்காரத்தைப் பற்றிப் பிரயோசன மில்லை.

உண்மையிலேயே பகிஷ்காரம் பண்ண வேண்டுமானால், வெள்ளைக்கார அரசாங்கத்திற்குச் சொந்த மானதையெல்லாம் நாம் உபயோகிக்கக் கூடாது என்று இருக்க வேண்டுமேயானால், முதலில் நாம் இந்த நாட்டி லேயே இருக்கக் கூடாது. ஏன்? இந்த நாட்டை இப்பொழுது வெள்ளைக்கார அரசாங்கந்தானே ஆண்டு கொண்டிருக்கின்றது? ஆகவே அவர் களுடைய ஆட்சிக்குள் அடங்கிய நாட்டில் இருப்பது பாவம் அல்லவா? ஆகையால் எல்லோரும் சமுத்திரத்தில் குடியேற வேண்டும்;

வெள்ளைக் காரர் ஆளும் பூமியைப் பகிஷ்காரம் பண்ண வேண்டும் என்று தீர்மானஞ் செய்வார்களானால் இன்னும் மெச்சத்தக்கதாக இருக்கும் என்று யோசனை கூறுகிறோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 10.01.1932

Read more: http://viduthalai.in/page1/95301.html#ixzz3QbFhSS37

தமிழ் ஓவியா said...

தற்கொலை தெய்வீகமா? (தேசியத்துரோகி)


மசூலிப்பட்டிணத்தில், ஒரு போலீஸ் சேவகரின் மகளுக்குக் கல்யாணம் நடத்துவதாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததாம். கல்யாணத்திற்கு முதல் நாள் அந்த மணப்பெண், கல்யாண உடைகளை அணிந்து கொண்டு வீட்டின் கொல்லைப் புறத்தில் அடுக்கியிருந்த விறகில் ஏறித் தானே நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து விட்டாளாம்.

இவ்வாறு இறந்ததற்குக் காரணம் அப்பெண், தன்னை தெய்வத் தன்மை உள்ளவள் என்றும், தான் மனிதனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள யோக்கியதை இல்லை என்றும் கூறியதாகவும் கடிதம் எழுதி வைத்திருந்த தாகவும் சொல்லப்படுகிறது.

அப்பெண் இறந்ததற்குத் தெய்வத் தன்மை கற்பிக்கப்பட்டவுடன், ஏராளமான ஜனங்கள் கூடி, முனிசிபல் அதிகாரிகளின் உத்தரவுப் பெற்று அப்பிணத்தை ஊர்வல மாகத் தூக்கிச் சென்று அடக்கஞ் செய்தார்களாம். இதன்பின் அப்பிணத்தைப் புதைத்த இடத்தில் கோயில் கட்டுவ தற்காக ஜில்லா முழுதும் பணம் வசூல் பண்ணுகிறார்களாம்.

நமது நாட்டு மக்களின் பயித்தியக்காரத்தனத்தைக் காட்டு வதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

வாங்கினகடனை திருப்பிக் கொடுக்க முடியாத காரணத் தால் மானமுள்ளவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிர் துறந்திருக்கிறார்கள். கௌரவமாக ஜீவனம் பண்ணிய வர்கள், கஷ்டப்பட வேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்த போது கஷ்டம் பொறுக்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்டி ருக்கிறார்கள் குடும்பச் சச்சரவு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டு மடிந்து போனவர்களில் ஆண் களும் உண்டு, பெண்களும் உண்டு.

மணமகன் பிடிக்காத காரணத்தால், மணமகள் தற்கொலை செய்து கொண்டு இறப்பதும், மணமகள் பிடிக்காத காரணத்தால் மணமகன் தற் கொலை செய்து கொண்டு சாவதும் உண்டு. இம்மாதிரி இதற்கு முன் நடை பெற்றும் இருக்கின்றது ஆகையால் தற்கொலை செய்து கொண்டு இறப்பதில் தெய்வத்தன்மை கற்பிப்பதும், அதை மக்கள் நம்பி ஏமாறுவதும் மூடத்தனமேயாகும்.

மசூலிப்பட்டணத்தில் இறந்து போன மணப்பெண் விஷய மும் வெறும் தற்கொலையே தவிர வேறு ஒன்றும் ஆச்சரிய முள்ளதல்ல வென்றே நாம் சொல்லுவோம். அந்தப் பெண், தனக்குக் குறிப்பிட்டிருந்த மாப்பிள்ளை பிடிக்காத காரணத்தால் இறந்திருக்க வேண்டும்; அல்லது புத்தி தடுமாற்றத்தால் இறந்திருக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த காரணமும் கூற முடியாது.

இவ்வாறு உண்மையைச் சிந்தித்து பார்க்கும் அறிவில்லாமல் தெய்வீகத் தன்மையை நம்பி ஒருவர் சென்ற வழியே மற்றவர்களும் ஆட்டு மந்தைப் போலச் செல்வதனால் உண்டாகும் பைத்திய காரத்தனத்தையும், பொருள் நஷ்டத்தையும் யாராவது கவனிக்கின்றார்களா? இந்தமாதிரியே செத்துப் போனவர்கள் சம்பந்தமாக உண்டான மூடநம்பிக் கைகள் காரணமாகத் தான் இன்று நமது நாட்டில் எண்ணற்ற கோயில்கள் பெருகியிருக்கின்றன.

கிராமங்களில் உள்ள பல வகைப்பட்ட கோயில்களெல்லாம் செத்துப் போனமனிதர்கள் பேரால் ஏற்பட்டவை என்பதை இன்றும் கிராமங்களில் உள்ள வர்கள் அந்தக் கோயில் சாமி களைப் பற்றிச் சொல்லும் கதை களால் அறியலாம். இப்பொழுது மசூலிப் பட்டினத்தில் நடந்த சம்பவமும் இதற்குத் தகுந்த உதாரணமாகும்.

பொது ஜனங் களிடம், இந்த மாதிரியான இயற்கை நிகழ்ச்சிகளை எல்லாம் தெய்வத்தன்மை என்று நம்புகின்ற குணம் இருக்கின்ற வரை யிலுமவர்கள் முன்னேற்ற மடையப் போவதில்லை. ஆகையால் பகுத்தறிவுடைய தோழர்கள் இது போன்ற விஷயங்கள் நேரும் போதெல்லாம் பொது ஜனங்களை எச்சரித்து ஏமாறாமலிருக்கும் படி செய்ய முன் வருமாறு வேண்டுகிறோம்.

குடிஅரசு - கட்டுரை - 05.06.1932

Read more: http://viduthalai.in/page1/95304.html#ixzz3QbG8gGP7