Search This Blog

9.1.15

கமல் - பாலசந்தர் ஒரு பார்வை


 
பாலசந்தர்

கமல்மீது அவருக்கு (இயக்குநர் பாலசந்தருக்கு) தன்னை விட்டு வளர்ந்து வெகு தூரம் போய் விட்டதில் ஒரு சின்ன ஆதங்கமும் அவ ருக்கு இருந்தது; அவன் நாத்திகனாகவே இருக் கட்டும்; அதை ஏன் வெளியே சொல்லி அலைகிறான் என்று என்னிடம் அவரைச் (கமலகாசனை) செல்ல மாகக் கோபித்ததுண்டு. அவர் கூப்பிட்டு, வய லும் வாழ்வும் எடுத்தா லும் நான் நடிப்பேன்; அவர்மீது நான் கொண்ட பக்தி அப்படியென்று கமலும் என்னிடம் மனந் திறந்திருக்கிறார்
- கவியரசு வைரமுத்து
(ஜூனியர் விகடன் 31.12.2014 பக்.28)


திரையுலகக் கலைஞர் என்ற முறையில் மறைந்த இயக்குநர் பாலசந்தருக்கு எத்தனையோ சிகரங்கள் இருக்கலாம். அதில் ஒன் றும் நமக்குப் பிரச்சினை யில்லை.  அதே நேரத்தில் நடிகர் கமலகாசன் அவர்கள் நாத்திகராக இருப்பதும், அதனை வெளிப்படை யாகச் செல்லுவதும் எந்த வகையில் குற்றமுடையது? 

ஆத்திகப் பழமான மறைந்த தவத்திரு குன்றக் குடி அடிகளார் அவர்கள் ஒரு முறை அழகாகச் சொன்னதுதான் நினை விற்கு வருகிறது.


இன்றைய ஆத்திகம் என்பது சிறு பான்மையினர் நலம் இன்றைய நாத்திகம் என்பது பெரும் பார்வையினர் நலம் (18.2.1971) என்றாரே! - இதற்குள் ஆழமாக இருக் கும் அழகிய கருத்து முத் தினைத் தெரிந்து கொண் டால் நாத்திகத்தின்மீது மறைந்த இயக்குநருக்கு இருந்த சீற்றத்திற்கான அலகு என்ன என்று புரியும்?


கமலகாசன் மட்டு மல்ல; அவர் மதித்துப் போற்றும் தந்தை பெரியார் பழுத்த நாத்திகர்தான்; இங்கர்சால் நாத்திகர் தான்; பெட்ரன்ட் ரசல் நாத்திகர் தான்; நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளில் பெரும் பாலோரும் நாத்திகர்தான். ஏன், பாலசந்தர் பற்றி ஜூவியில் இப்படி எழுதி யுள்ள கவியரசு மானமிகு வைரமுத்தும் நாத்திகர் தானே!


இதில் குறை காண என்ன இருக்கிறது?  கலை யுலகில் முத்திரை பொறித்த அந்த இயக்குநர் சென்னை அண்ணா நகரில் சிறீ கிருஷ்ணா தோட்டத்தில் நடைபெற்ற பிராமண சங்க வெள்ளி விழா மாநாட்டில் (24,25-12-2005) கலந்து கொள்ள வில்லையா?


இவ்வளவு பெரிய கூட்டத்தில் நானும் ஒருவன் என்கிறபோது எனக்குப் பெருமையாக இருக்கிறது! என்று பேச வில்லையா?


பிறப்பை வைத்து தன்னைப் பிராமணன் என்று மார்தட்டியதைவிட பிறப்பில் பேதம் பாராதே எனும் மனித நேயக் கொள்கையுடைய நாத்திக வாதியாக ஒருவர் இருப் பதும் - அதனை வெளிப் படையாகக் காட்டிக் கொள் வதும் எத்தனையோ கோடி மடங்கு மேல் - மேலினும் மேலே!


----------------------- மயிலாடன் அவர்கள் 9-1-2015 அன்று “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

21 comments:

தமிழ் ஓவியா said...

பிராமணீயமும், கார்ப்பரேட்டுகளும்தான் உண்மையான எதிரிகள்: பேராசிரியர் அருணன் கருத்துரை

செங்கல்பட்டு, ஜன.9_ பொது எதிரிகளை அடையாளம் கண்டு போராட வேண்டும் என்று செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் பேராசிரியர் அருணன் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஜாதி, மூடநம்பிக்கை பெண்ணடிமைத்தனத்தை ஒழிப்போம். காதல் சுயமரியாதை திருமணத்தை ஆதரிப்போம் என்ற தலைப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டில் சுயமரியாதை சிறப்பு மாநாடு நடைபெற்றது. செவ்வாயன்று (ஜன.6) செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். முத்துக்கண்ணன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் பேராசிரியர் அருணன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

85 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை பெரியார், முதல் சுயமரியாதை மாநாடு நடத்திய செங்கல்பட்டில் வாலிபர் சங்கம் மீண்டும் சுயமரியாதை மாநாடு நடத்துவது மகிழ்ச்சியைத் தருகிறது.

அதேநேரத்தில் 85 ஆண்டுகள் கழித்து மீண்டும் சுயமரியாதை மாநாடு நடத்தவேண்டிய நிலைமை இருப்பது வருத்தத்தையும் தருகிறது. 1950_களில் முக்கியமான காதல் திரைப்படங்கள் வந்ததுண்டு. அவை காத்தவராயன், மதுரை வீரன் உள்ளிட்ட உண்மை காதல் கதைகளை பேசின.

21 ஆம் நூற்றாண்டிலும் சினிமா காதலை பேச வேண்டுமா என்றால் தருமபுரியில் இளவரசன் ரயில்முன் பாய்ந்ததற்குப் பிறகுதான் தமிழ் சினிமா இன்னும் காதலைப் பேச வேண்டிய அவசியம் உள்ளது. ஜாதி மதங்களைக் கடந்து காதலை சினிமா பேச வேண்டும்.

18 வயதில் காதல் திருமணம் செய்யக் கூடாது என்கின்றார் மருத்துவர் ராமதாசு. 22 வயதில் தாழ்த்தப்பட்ட இன இளைஞரை காதலித்தால் ஏற்றுக் கொள்வார்களா? தருமபுரியில் ஒரு தந்தையின் தற்கொலையைத் தொடர்ந்து இளவரசனின் மரணம், வீடுகள் எரிப்பு, கலவரம் என அனைத்தையும் செய்து விட்டு ஜாதியம் இல்லை என அன்புமணி ராமதாசு கூறுகின்றார்.

1931 இல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டைப் பற்றி குடியரசு ஏட்டில் சிங்காரவேலர், ஜாதி ஒழியும்வரை சகோதரத்துவம் என்பது வெறும் சொல் மட்டுமே என்று எழுதினார். நாட்டில் தீண்டா மையை ஒழித்தது இந்து முன்னணி அல்ல.

ஜாதியை எதிர்ப்பவர்களை இந்துக்களின் எதிரி எனக் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் மூன்று சதவிகிதம் உள்ள கிறிஸ்துவர்களையும், முஸ்லிம்களையும் பொது எதிரியாக கட்டமைக்கின்றனர். உண்மையான எதிரி கள் ஜாதி, மதம் பெண்ணடிமைத்தனத்தை கடைப் பிடிப்பவர்கள்தான்.

மண்டல் குழு பரிந்துரைத்த பிற்படுத்தப்பட்ட மக் களுக்கான இடஒதுக்கீட்டை வி.பி.சிங் அமல் படுத்தியபோது அதற்கு எதிராக மாணவர்களைப் பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தியது ஆர்எஸ்எஸ், பிஜேபி, சங்பரிவார் கூட்டங்கள்தான். மேலும், அந்த நேரத் தில் ரத யாத்திரையை நடத்தியதும் அவர்கள் தான்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்குஇடஒதுக்கீடு என்றவுடன் ரத யாத்திரை நடத்திய ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபிதான் இந்துக்களின் முதல் எதிரி. இப்போது அவர்கள்தான் தாய் மதத்திற்கு திரும்பவேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

இந்தியாவில் எது தாய்மதம்? இந்தியாவில் பெரிய மதங்கள் புத்தமும், சமணமும்தான். பிராமணீயம் இல்லை. அப்படியே திரும்பினாலும் திரும்பியவர் களுக்கு எந்த ஜாதியில் இடம் அளிப்பார்கள்? ஒபாமாவிற்காக மோடி இந்திய நாட்டு வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பலி கொடுத்து வருகின்றார்.

பிராமணீயமும், கார்ப்பரேட்டுகளும்தான் இந்தியாவின் உண்மையானஎதிரிகள். இவர்களை அடையாளம் கண்டு போராட இளைஞர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அருணன் பேசினார்.

Read more: http://viduthalai.in/page-5/94181.html#ixzz3OP2fVIhi

தமிழ் ஓவியா said...

தி.மு.க. பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள்

மதவாத பேரபாயத்தைத் தடுப்போம் வாரீர்!

தமிழ்நாடு அரசின் முறைகேடுகளைப் பட்டியலிட்டு பேரணி நடத்தி ஆளுநரிடம் மனு

தமிழர் திருநாள் பொங்கலை இல்லந்தோறும் கொண்டாடுவோம்

தி.மு.க. தலைமைக்குப் புதிய பொறுப்பாளர்கள் ஒரு மனதாக தேர்வு

தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள்


சென்னை, ஜன.9- சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் இன்று (9.1.2015) கூடிய தி.மு.க. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு:

சிறப்புத் தீர்மானம் : இருபதாம் நுற்றாண்டின் தொடக் கத்தில் இந்தியாவில் தோன்றியும் இயங்கியும் வந்த அரசியல் சமூக இயக்கங்களான - தேச விடுதலையை முன்னிருத்திய இந்திய தேசிய காங்கிரஸ், பொருளியல் சமதர்மத்தை வலி யுறுத்திய பொதுவுடமை இயக்கங்கள், சிறுபான்மையினரின் உரிமைக்காக உருவான இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தள சுய ஆட்சியை கோரிய ஹோம் ரூல்Home Rule) இயக்கம், ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்டிரீய சுயம் சேவக் சங்கம் ஆகிய இயக்கங்களுக்கிடையே - சமூக சமத்துவம், சம தர்மம் மற்றும் மொழி, இன, அரசியல் உரிமைகளுக்காக தென் னகத்தில் டாக்டர் நடேசனார், சர். பிட்டி தியாகராயர் மற்றும் டி.எம். நாயர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் - பின்னிட்டு தந்தைப் பெரியார் அவர் களால் பரிமாணம் பெற்ற சுயமரியாதை இயக்கம் - அதனைத் தொடர்ந்து பரிணாமம் பெற்ற திராவிடர் கழகம் - அதிலிருந்து அரசியல் தளத்திற்கு விரிவு பெற்ற, பேரறிஞர் அண்ணா அவர்களால் கட்டமைக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இயக்கங்களின் அடிநாதமாக ஒரு நுற்றாண் டுக்கும் மேலாக விளங்கி வரும் திராவிட இயக்க கருத் தியலுக்கு (Dravidian Ideology)
அரசியல் அரணாக விளங்கி வருபவரும், இதுவரை 11 முறை கழகத்தின் தலைவராகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் கலைஞர் அவர்களை கேரளாவின் பிரபல நாளேடு மாத்ருபூமி (3-1-2005) இதழ், வெளியிட்டுள்ள கட்டுரையில், உலகத்தில் ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவராக இத்தனை ஆண்டுக் காலம் பொறுப்பு வகிப்பது என்பது வேறு எங்கும் இதுவரை நடந்திராத உலகச் சாதனையாகும் என்று எழுதியுள்ள பாராட்டுரைக்கு இலக்கணமாகத் திகழ்பவரும், இதுவரை தான் போட்டியிட்ட 12 தேர்தல்களிலும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த 57 ஆண்டுகளாக சட்டமன்ற வரலாற்றில் தொடர்ந்து தனது முத்திரையைப் பதித்து வருபவரும், அய்ந்து முறை முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து தமிழர்களின் நலன் காப்பதிலும், தமிழகத்தின் வளர்ச்சியிலும் இணையற்ற சாதனையாளராக திகழ்பவருமான தமிழர்களின் தனிப் பெருந் தலைவர் கலைஞர் அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் 14ஆவது தேர்தலில் அமையப் பெற்ற பொதுக்குழு, கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுப்பதில் பெருமையும் பெருமிதமும் கொள்கிறது. இத்தகைய பாராட்டுக்குரிய தலைவர் கலைஞர் அவர்களையும், அவர்களோடு கழகத்தை வழி நடத்திட உதவியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கழகத்தின் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களையும், பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களையும் இப்பொதுக் குழு வாழ்த்தி வரவேற்கின்றது.

தமிழ் ஓவியா said...


தீர்மானம்: 1 இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்று நம் அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தற்கும் மேலாக, இந்தியா ஒரு துணைக்கண்டம் என்றே அழைக்கப்படுகிறது. மிகப் பெரிய நிலப்பரப்புடன் அரசியல் நிர்வாக ஆளுமைக்குக் கீழ் நடத்தப்படும் இந்தியக் குடியரசில் பல்வேறு மொழி பேசும் மக்களின் உரிமைகளையும் - மொழிவழி தேசிய இன அடையாளங்களையும் பேணுவதற்கு ஏதுவாக மொழிவாரி மாநிலங்கள் அமையப் பெற்றதும் - பல்வேறு மதங்களை உள்ளடக்கிய மதச் சார்பற்ற அரசியல் நிர்வாகப் போக்கினை கடைப்பிடிப்பதுமான சிறப்புமிக்க விழுமியங்களைக் கொண்டுள்ள இந்தியாவை ஒரு துணைக் கண்டமாகவே உலக நாடுகளும் அங்கீகரித்துள்ளன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் (Preamble) இந்தியா ஒரு இறையாண்மை உள்ள (Sovereign) சமதர்ம, (Socialistic) மதச்சார்பற்ற, (Secular) ஜனநாயக குடியர சாகவே (Democratic Republic) கட்டமைக்கப் பட்டுள்ளது.

அரசியல் நிர்ணய சபையில் அரசியல் சட்டம் வடிவமைக்கப் பட்டபோதும், பின்னர் கொண்டுவரப்பட்ட அரசியல் சட்ட திருத்தங்களின் அடிப்படை யிலும் இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடாகவே அமைந்திட வேண்டுமென்று, அரசியல் நிர்ணய சபையினாலும் - நாடாளு மன்றத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட் டுள்ளது. அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச் சார்பின்மை (secularism) உள்ளிட்ட அடிப்படை கொள்கைகள் மாற்றப்படவோ, திருத்தப் படவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக வழங்கியுள்ள தீர்ப்பினை மதித்து, இதுவரை மத்தியில் அமைந்த எல்லா அரசுகளும் செயல்பட்டு வந்துள்ளன.

நாடு விடுதலை அடைந்தபோது, இந்திய தேசிய காங்கிரஸ் என்றும் இந்து மகா சபை என்றும், இரு தளங்களில் இயங்கிய முக்கியத் தலைவர்களிடம் காணப்பட்ட முரண்பட்ட மதவாத போக்குகளும், அவர்களோடு முஸ்லீம் லீக்கும், இஸ்லாமியத் தலைவர்களும் கொண்டிருந்த அரசியல் சமூகக் கருத்து மோதலும், தேசப் பிரிவினைக்கு இட்டுச் சென்று, அதன் விளைவாக இன்றளவும் இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அவ்வப்போது அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசின் இப்போதைய வெளிப்படையான மதவாதப் போக்கு, சிறுபான்மை இன மக்களுக்கு மட்டுமின்றி, மதச் சார்பின்மை கொள்கையிலும், இந்திய ஒருமைப்பாட்டிலும் அழுத்தமான நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் ஏற்புடையது அல்ல என்பதோடு, ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்பால் முழு நம்பிக்கைக் கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகம், தன் அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவையும், கட்டாயமும் ஏற்பட்டபோதும்கூட, மதச்சார் பின்மை கொள்கையை எப்போதும் விட்டுக் கொடுத்ததில்லை. குறிப்பாக, 1999ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியுடன் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டிய அரசியல் சூழ்நிலை ஏற்பட்டு, தலைவர் கலைஞர் அவர்களின் ஆலோசனையின்படி அமையப் பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று, குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை (Common Minimum Programme) தயாரிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

அவ்வறிக்கையை தயாரிப்பதில், முக்கியப் பங்கு வகித்த, நம் நினைவில் வாழும் திரு. முரசொலி மாறன் அவர்களின் கருத்தினை ஏற்று, பாரதிய ஜனதாக் கட்சியின் அடிப்படை அரசியல் கொள்கைகளான, காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை அங்கீகரிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 370-அய் நீக்குவது, அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவது மற்றும் எல்லா மதத்தினருக்குமான பொது சிவில் சட்டம் கொண்டு வருவது ஆகியவற்றை நிறைவேற்றிட முனையக் கூடாது என்ற உறுதி மொழியை இடம்பெறச் செய்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்றிருந்தவரை குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கையில் அளிக்கப்பட்ட இந்த உறுதிமொழிகள் எதனையும் விட்டுக் கொடுக்கவோ அல்லது சமரசம் செய்து கொள்ளவோ திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் சம்மதித்ததில்லை. மேலும், மத்தியிலும் மாநிலத் திலும், ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மதச்சார்பின்மை கொள்கையினை காப்பாற்றவும், சிறுபான்மை யினரைப் பாதுகாக்கவும், திராவிட முன்னேற்றக் கழகம், களத்தில் நின்று போராடத் தயங்கியதே இல்லை. 1999ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாக்கப்பட்ட போது, மதச் சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம், இந்திய நாட்டு மக்கள் அனைவருடைய உணர்வுகளுக்கும் மதிப்பளித்தல் என்பன போன்ற மையப்படுத்தப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில், செயல் திட்டம் ஒன்று பிரகடனப்படுத்தப் பட்டது.

தமிழ் ஓவியா said...

ஆனால் அந்தப் பிரகடனத்திற்கு மாறாக அயோத்தி பிரச்சினை, மத்திய அரசின் பொடா சட்டம் அதிமுக அரசால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரம், காவேரி ஆணையம் அமைப்பது குறித்து அலட்சியம் காட்டியது, மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியை ஏற்க மறுத்தது போன்ற பிரச்சினைகளில் மத்திய அரசின் முரண்பாடான அணுகு முறை காரணமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தே தி.மு. கழகம் தன்னை விடுவித்துக் கொண்டது. நடந்து முடிந்த 16ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, அரசியல் சட்டத்தின்மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டு, பிரதமர் பொறுப்பேற்றுள்ள திரு. நரேந்திர மோடி அவர்களின் அரசு, பொறுப்புக்கு வந்தவுடன் தொடக்கத்தில் நாம் வரவேற்கத் தக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தது. மேலும், வரவேற்க முடியாத ஒரு சில திட்டங்களைக் கொண்டு வர முயற்சித்த நேரத்தில், நாம் எடுத்துச் சொன்ன வாதங்களை ஏற்றுக் கொண்டு, அந்தத் திட்டங்களைத் தாங்களே முன் வந்து திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். அவற்றையெல்லாம் பார்த்து மத்திய அரசைப் பாராட்டும் நிலையிலே நாம் இருந்த போதும், அதற்குப் பிறகு மத்திய அரசின் சார்பில் ஒரு சில அமைச்சர்கள் அறிவிக்கின்ற பிற்போக்குத் திட்டங்களைப் பார்க்கையில், எங்கே திசை மாறிச் செல்கிறார்களே என்ற வேதனைத் தீ தான் நம்மை வாட்டி வதைக்கச் செய்கிறது. குறிப்பாக, அரசியல் சட்டத்தின்மீது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு மாறாக, மதச்சார்பின்மை கொள்கையை, கை விட்டது மட்டுமின்றி, இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்ட சூழலை ஏற்படுத்தி வருகின்றது. அதைப்போல, இந்தியாவின் முதல் பிரதமராக பொறுப் பேற்ற பண்டித ஜவகர்லால் நேரு அவர்களும், அவரைத் தொடர்ந்து வந்த பிரதமர்களும் வழங்கி வந்துள்ள உறுதி மொழிக்கு மாறாக, பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு மொழிக் கொள்கையிலும் முரண்பட்ட போக்கைக் கடைப்பிடித்து வருவது இந்தி பேசாத, சமஸ் கிருதத்தை ஏற்காத மக்களுக்கு விளைவிக்கப்படும் அநீதியாகவே அமைந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக் களே; இராமருக்குப் பிறக்காதவர்கள், முறை தவறிப் பிறந்தவர்கள்; பகவத் கீதை - தேசிய நூல்; காந்தியாரைப் போன்றே தேச பக்தர் கோட்சே காந்திக்குப் பதிலாக, கோட்சே நேருவைத் தான் சுட்டிருக்க வேண்டும்; நாடு முழுவதும் கோட்சேவுக்குச் சிலைகள் அமைக்க வேண்டும்; கிறிஸ்துமஸ் நாளை நல்லாட்சி நாளாக அனுசரிப்பது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க முயற்சி; கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவது; தில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக விடுதி மாணவர்களுக்கான சுற்றறிக்கையில் ஆங்கிலம் அகற்றப்பட்டு, இந்தியை மட்டுமே பயன்படுத்துவது;

தமிழ் ஓவியா said...

2021-ல் இந்தியாவை இந்து ராஷ்ட்டிரமாக மாற்றுவது என்று பா.ஜ.க. அரசில் அங்கம் வகிக்கும் பொறுப்புள்ள அமைச்சர்கள், பா.ஜ.க.வை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ்., இந்து மகா சபை தலைவர்கள் மற்றும் இவைகளின் துணை அமைப்புகள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தும் - அறிக்கை வெளியிட்டும் வருகின்றனர். இத்தகைய வெளிப்படையான மதத் திணிப்பு, மொழித் திணிப்பு நடவடிக்கைகளும், மாற்று மதம் மற்றும் மொழியை, தரம்தாழ்த்தி வன்மத்தைக் கற்பிப்பதும் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிராகவும் - நாட்டின் அமைதியையும், வளர்ச்சியையும் குலைக்கும் செயலாகவும் அமைந்து விடும் என்பதால், மத்திய பா.ஜ.க. அரசை வரவேற்கின்ற நிலையிலே இருந்த நாம் தற்போது மத்திய அரசின் அணுகு முறைகளைக் கண்டு வேத னைப்பட வேண்டிய கட்டத் திற்கு ஆளாகி, அவர்கள்பால் நாம் கொண் டிருந்த நம்பிக் கையைத் திரும்பப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளோம் என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டு வதுடன் மத்திய அரசின் இத்த கைய செயல்களை வன்மை யாகக் கண்டிக்கிறது. இத்த கைய மதவாத, மொழிவெறிப் போக்கினை, மத்திய அரசு கைவிட்டுவிட்டு, தேர்தல் நேரத்தில் அளித்த நாட்டின் வளர்ச்சி குறித்த வாக்குறுதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், மதச் சார்பின்மை கொள்கையிலும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் வேட்கையிலும், நாட்டின் ஒருமைப்பாட்டிலும் நம்பிக் கைக் கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், பிற இயக்கங்களும் தங்களின் மாநில உணர்வு மற்றும் அரசியல் மனமாச்சரியங்களை மறந்து, மத்திய அரசின் நடவடிக் கைகளினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மதவாத பேரபாயத்தை ஒன்றுபட்டு எதிர்த்திட முன்வருமாறு இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. தீர்மானம் : 2. 2011ஆம் ஆண்டு தமிழகத்தில் செல்வி ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு அமைந்த நாள் முதல் தேர்தல் நேரத்தில் அக்கட்சி வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்து விட்டு, ஜனநாயக விரோத, மக்கள் விரோத ஆட்சியினை நடத்தி வருகிறது.

தமிழ் ஓவியா said...

அதன் உச்சமாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது பற்றி தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபரா தமும் விதிக்கப்பட்ட பின் ஏற்பட்ட அரசியல் மற்றும் நிர்வாக மாற்றத்திற்குப் பிறகு, ஆட்சி நிர்வாகம் மேலும் முற்றிலுமாக நிலைகுலைந்தது மட்டுமின்றி, மாநில உரிமைகளும், மக்கள் பிரச்சினைகளும் கேட்பாரற்றுப் போனதோடு ஒரு அரசு ஆட்சிப் பொறுப்பில் இருப்பதாகவே எண்ண முடியாத அளவுக்கு தொடர்ந்து நிர்வாகச் சீரழிவு ஏற்பட்டு வருவதைத் தமிழக மக்கள் உணர்வார்கள். அதிலும் குறிப்பாக நீதி மன்றத் தண்டனையால் பதவி இழந்த செல்வி ஜெயலலிதாவின் பினாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியில் எவ்வித கொள்கை முடிவுகளோ, தொலை நோக்குத் திட்டங்களோ வகுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர், தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர் ஆகிய பதவிகளில் இரட்டை நிர்வாகம் (Dual Administration) நடை பெறுகின்ற அளவுக்கு, குளறுபடிகள் ஏற்பட்டு, தமிழகத்தின் உரிமைகள், மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் சட்டம், ஒழுங்கு உள்ளிட்டப் பிரச் சினைகள் குறித்து ஆரோக்கியமான விவாதங்களோ, முடிவுகளோ எடுக்கப்படாமல் அரசு இயந்திரம் முற்றிலுமாக செயலற்றுப் போய் விட்ட நிலைக்குத் தமிழகம் தள்ளப் பட்டுள்ளது. இப்பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் விரிவாக விவாதிக்கும்பொருட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், இதர அரசியல் கட்சிகளின் சார்பிலும் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மறுக்கப்பட்டதோடு, சட்ட மன்றத்தை அவசர அவசரமாக மூன்று நாட்கள் மட்டுமே நடத்தி முடித்து, ஜனநாயக நெறிமுறைகளையும், சட்டமன்ற மரபுகளையும் கேலிக்குரியதாக்கியுள்ளது ஜெயலலிதாவின் பினாமி அரசு. குறிப்பாக, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் பிரச்சினை. முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்துவது பற்றிய பிரச்சினை.

அமராவதி பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பிரச்சினை. தொடரும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது போன்ற மாநில உரிமைகள் குறித்த பிரச்சினைகளிலும்; வரலாறு காணாத தொடர் மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு; பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருள்களின் கடும் விலைவாசி உயர்வு. மாநிலத்தில் பரவி வரும் டெங்கு, பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட சுகாதாரச் சீர்கேடுகள். தமிழகம் முழுவதும் நிலவி வரும் யூரியா தட்டுப்பாடு காரணமாக விவ சாயிகள் தவிப்பு. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு; கொலைக்களமாகி வரும் கல்விக் கூடங்கள்; நாள்தோறும் தொடரும் கொலைகள் மற்றும் கொள்ளைகள். முதியோர் உதவித் தொகை ரத்து; பச்சைத் தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகள்; சத்துணவு முட்டைகள் வாங்கியதில் ஊழல்; ஆவின்பால் விற்பனையில் ஊழல்; கிரானைட் முறைகேடு, ஊழல்; தாது மணல் கொள்ளை, ஊழல்; உள்ளிட்ட ஊழல் முறைகேடுகளிலும் செயல்படாத ஜெயலலிதாவின் பினாமி அரசு எவ்வித விசாரணையையும், தீர்வையும் மேற்கொள்ளா மலும், மாநில உரிமைகளை வலியுறுத்திப் பாதுகாக்காமலும், மக்கள் பிரச்சினைகளுக்குரிய நடவடிக்கைகள் எடுக்காமலும் இருந்து வருவதுடன்;

அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங் களால் கண்டறிந்து எழுப்பப்படும் ஊழல் முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள் ளாமலும், முற்றிலுமாக முடங்கிக் கிடப்பதோடு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் - அவர்களை இயக்குகிறவர்களுக்கும் நலன் பயக்கும் காரியங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய மக்கள் விரோத, ஜனநாயக விரோத ஆட்சியின் அலங்கோலங்களை தமிழக மக்களுக்கு உணர்த்திடும் வகை யில், அ.தி.மு.க. ஆட்சி கடந்த மூன்றரை ஆண்டுகளில் செய்த ஊழல்களையும், முறைகேடுகளையும் பட்டியலிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பின்னர் அறிவிக்கப்பட விருககிற நாளில், மிகப் பெரிய பேரணி ஒன்றினை நடத்தி, தமிழக ஆளுநரிடம் அந்த ஊழல் பட்டியலை அளித்து, அதன் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்க விசாரணைக் கமிஷன் ஒன்றினை அமைத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்வதென இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

Read more: http://viduthalai.in/page-3/94218.html#ixzz3OP3JK98G

தமிழ் ஓவியா said...

திருக்குறள் தேசிய நூல் தி.க., திமுக தீர்மானங்கள்
திருக்குறள் தேசிய நூல்

தி.க., திமுக தீர்மானங்கள்6-7-2002 அன்று சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக இளை ஞரணி மாநாட்டில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

...

4,3.2006 அன்று திருச்சிராப்பள்ளி யில் கூடிய தி.மு.க. 9ஆவது மாநில மாநாடு தி.மு.க. இளைஞரணி வெள்ளி விழா மாநாட்டில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Read more: http://viduthalai.in/page4/%20_94227.html#ixzz3OPoypgJQ

தமிழ் ஓவியா said...


அரப்பன் நாகரிகம் யாருடையது?

-முனைவர் நடன காசிநாதன்

உலக அளவில் மிகப் பழைமையான நாகரிகம் என்று மெசபொடோமிய நாகரிகத்தையும் (இன்றைக்கு 5100 ஆண்டுகளுக்கு முந்தையது) இதற்கடுத்த நிலையில் எகிப்திய நாகரிகத்தையும் (5000 ஆண்டுகளுக்கு முந்தையது), தொடக்க எலமைட் நாகரிகத்தை அதற் கடுத்த நிலையிலும் (5000 ஆண்டுகள் பழைமையுடையது) தொல்லியலா ளர்கள் கணித்துள்ளனர்.

மேற்கூறிய வற்றுக்கு அடுத்த நிலையில் சிறந்து விளங்கிய நாகரிகம் தான் அரப்பன் (ஹரப்பன்) நாகரிகம் என்று கூறிவந்தனர்.

ஆனால் இந்தியத் திருநாட்டை யடுத்து வடமேற்குப் பகுதியில் அமைந் துள்ள பலுசிஸ்தான் நாட்டு மெஹர் கரில் அகழாய்வு மேற்கொண்டதில் அங்கு அரப்பன் நாகரிகத்தின் தொடக்க நிலை இன்றைக்கு 9000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. ஆதலால் உலகி லுள்ள அனைத்து நாகரிகங்களிலும் அரப்பன் நாகரிகம்தான் பழமையான நாகரிகம் என்றாகி விட்டது.

இதுவரை கண்டறியப்பட்டுள்ள அரப்பன் நாகரிக இடங்களைக் கணக் கில் கொண்டு பார்த்தால், அரப்பன் நாகரிகம் பரவியுள்ள இடமானது பரப் பளவில் எகிப்திய நாகரிகமும், மெச பொடோமிய நாகரிகமும் பரவியுள்ள இடங்களைக் காட்டிலும் இரு மடங்கு உள்ளதாகவும், உலகிலுள்ள பிற நாகரிக இடங்களின் பரப்பை ஒப்பிடுகையில் அரப்பன் நாகரிகப் பரப்பளவு அதிக மானது என்றும் கருதப்பெறுகிறது.

ஆனாலும், அரப்பன் நாகரிகம் உள்நாட்டிலே தோன்றிய நாகரிகம்தான் என்றும், இது ஆரியரல்லாதாரின் நாகரிகம் என்றும் பிற சான்றுகளைக் கொண்டு அறிய முடிகிறது என்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தமிழர்தம் நாகரிகம்தான் என்பதும் சில தடயங்களால் உறுதிப்படுகிறது.

முதலில் இந்நாகரிகம் ஆரியருடை யது அல்ல என்பதற்குக் கீழ்க்காணும் காரணங்கள் கூறப்படுகின்றன.
1) இது நகர நாகரிகம் ஆரியருடையது போன்று கிராமிய, நாடோடி நாகரிக மல்ல.

தமிழ் ஓவியா said...

2) அரப்பன் நாகரிகக் களிமண் தகடுகளில் பலவித விலங்குகளின் உரு வங்கள் காணப்பெறுகின்றன. ஆனால் குதிரை உருவம் காணப்பெறவில்லை.

3) குறுக்குக் கால்களையுடைய சக் கரங்கள் பொருத்தப் பெற்று இரதங்கள் காணப்படவில்லை. ஆரிய நாகரிகத் துக்குக் குதிரையும், குறுக்குக் கால்களை யுடைய சக்கரம் பொருத்தப்பெற்ற இரதங்களும்தாம் முக்கிய அடை யாளங்கள்.

4) ஆரியரின் முக்கிய வழிபாட்டு முறையான தீக்குண்டம் (ஹோமகுண் டம்) வழிபாடு காணப்பெறவில்லை.

அரப்பன் நாகரிகம் தமிழர்களின் நாகரிகம் தான் என்பதற்கான கார ணங்கள் பின்வருமாறு:-

1) எருமைக் கொம்புகள் போன்ற தலையணியுடன் காணப்பெறும் ஆண் உருவம் (இவ்வுருவம் பிற்கால மூஇலைச் சூல வழிப்பாட்டுக்கு முன்னோடியாக லாம்).

2) பெண் தெய்வங்கள் பல வடிவங்களில் காணப்பெற்றுத் தாய் வழிபாட்டு முக்கியத்துவம் தெரிவது.

3) தமிழர்கள் இன்றும் வழிபட்டு வரும் அரச மரம் மற்றும் பாம்பு வழிபாடு.

4) முக்கால் வட்ட கட்டடப் பகுதி (பனாவலி, அரியானா), (தமிழ்நாட்டில் பல்லவர் காலத்தில் கட்டப் பெற்றுள்ள பெரும்பாலான கோயில்கள் முக்கால் வட்ட வடிவிலேயே உள்ளன).

5) இலிங்க வழிபாடு.

6) சுடுமண் உருவங்கள் (குறிப்பாகப் பெண் உருவங்கள்) (,இவையும் தாய் வழிபாட்டின் சிறப்பையே உணர்த்து வனவாகக் கருதப்பெறுகின்றன).

7) மதகுருக்கள் சிற்பங்கள் காணப் படுபவை.

8) நீரில் மூழ்கி வழிபடுதல் (தமிழ் நாட்டில் கோவில்களின் முன்புள்ள குளங்களில் மூழ்கி வழிபட்டு வருதல்)

9) நகர அமைப்புகளில் இரு பகுதிகள் காணப்படுபவை (பூம்புகார், மருங்கூர்ப்பட்டினம் போன்ற நகரங்கள் போன்று).

10) சிற்ப அமைப்புகளில் திராவிடர் கலைப்பணி காணப்பெறுதல்.

11) தமிழ்நாட்டுக் கணித முறை அரப்பன் நாகரிகத்தில் காணப்பெறுதல்.

12) கோவில் இறைவன் முன்பாக அரசர் உருவங்கள் அமைந்திருப்பது. (மாமல்லை குடைவரைக் கோவில்களி லும், பிற கட்டுமானக் கோயில்களிலும் உண்ணாழிக்கு முன்பாக அரசர்கள் உருவங்கள் இறைவனை வணங்கும் நிலையில் காணப்படுகின்றன.

மேலே கூறியவற்றுக்கு மேலும் அரண் சேர்ப்பது போன்று, தமிழ் நாட்டில் அண்மைக்காலங்களில் கண்டறியப்பட்டுள்ள தொல்லியல் சான்றுகள் விளங்குகின்றன.

1) அரப்பன் நாகரிக உருவ எழுத்துக்கள் பொறிக்கப் பெற்றுள்ள புதிய கற்காலக் கருவி (நாகை மாவட் டம், செம்பியன் கண்டியூர்),

2) விழுப்புரம் மாவட்டம், கீழ் வாலை, இரத்தப் பாறையில் தீட்டப் பட்டுள்ள அரப்பன் நாகரிக உருவ எழுத்துகள்.

3) கோவை மாவட்டம், சூலூரில் கண்டறியப்பட்டு தற்போது பிரித் தானிய அருங்காட்சியகத்தில் (British Museum) காட்சிக்கு வைக்கப்பெற் றுள்ள சுடுமண் தட்டில் காணப்பெறும் அரப்பன் நாகரிக உருவ எழுத்துக்கள்.

தமிழ் ஓவியா said...

4) கரூரில் கிடைக்கப்பெற்ற மோதி ரத்தில் காணப்பெறும் அரப்பன் உருவ எழுத்துகள்.

5) தமிழ்நாட்டில் வெளிப்படுத்தப் பட்டுள்ள பெருங்கற்காலப் பானை யோடுகள் மீது காணப்பெறும் கீறல் உருவங்கள் (இவற்றில் 89 விழுக்காடு அரப்பன் உருவ எழுத்துகள் போன்றே உள்ளன),

6) இராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தில் மேற்கொண்ட அகழாய்வில் கிடைக்கப்பெற்றுள்ள பானையோட்டில் காணப்பெறும் உருவ எழுத்து மற்றும் தாயக் கட்டையில் காணப் பெறும் அரப்பன் நாகரிக எண் உருவங்கள்.

7) இலங்கை யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள ஆனைக்கோட்டையில் கிடைத்த செப்பு முத்திரை மீதுள்ள உருவ எழுத்துகள் மற்றும் கேரள மாநிலம் எடக்கலில் காணப்பெறும் தொன்மைத் தமிழ்க் கல்வெட்டோடு காணப்பெறும் அரப்பன் நாகரிக உருவ எழுத்து.

8) தமிழகத் தொன்மைத் தமிழ்க் கல்வெட்டுகளோடு காணப்பெறும் உருவ எழுத்துகள் ஆகியவையாகும்.

இவ்வனைத்துக்கும் மேலாகத் திருநெல்வேலி மாவட்டம், ஆதிச்ச நல்லூரில் சென்ற ஒரு நூறு ஆண்டுக் காலத்தில் நான்கு அல்லது ஐந்து முறை நிகழ்த்தப் பெற்ற அகழாய்வுகள், தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் வரை அரப்பன் நாகரிகம் பரவியிருந்திருக்கும் என்ற உண்மையைப் புலப்படுத்தும் வகையில் பல சான்றுகளை வெளிப் படுத்தியிருக்கிறது. அவற்றின் பட்டியல் கீழ்வருமாறு:

1) இதுவும் ஒரு ஆற்றோர நாகரிகம்.

2) இதுவும் நகர நாகரிகம், தொழில் மலிந்த நகரம்.

3) பெருங்கற்காலத்தைச் சாராத புதிய வகைப் பானையோடுகள். இவை கி.மு, 2000-த்தின் இறுதிக்காலத்தைச் சார்ந்தவை.

4) மண் குவளைகளின் தோள் பகுதி யில் துளையுடையவை (Spouted vessels).

5) வெண்கலப் பொருள்கள் (தாய்த்தெய்வம் மற்றும் விலங்குகளின் உருவங்கள்),

6) அரப்பன் நாகரிகத்தைச் சேர்ந்த வெண்கலப் பொருள்களிலும் (டைமா பாத்), ஆதிச்சநல்லூர் வெண்கலப் பொருள்களிலும் ஒரே அளவுள்ள ஆர் செனிக் (Arsenic) கலவை.

7) பானையோடுகளில் அரப்பன் உருவக் குறியீடுகள்.

8) துர்க்கை என்று கருதப்பெறும் தாய்த் தெய்வ மண் ஓட்டுருவம்.

9) ஆதிச்சநல்லூர் நாகரிகம் காலம் சுமார் கி.மு. 1500 - 500 (optically stimulated Luminiscence date conducted at Manipur) மேலே கூறப்பெற்றுள்ள அனைத்து வகைக்காரணங்களைக் கொண்டும் பார்க்கையில் தமிழகத் துக்கும், அரப்பன் நாகரிகத்துக்கும், குறிப்பாக ஆதிச்சநல்லூர் நாகரிகத் துக்கும் நெருங்கிய தொடர்பு இருந் திருக்கும் என்பது உறுதியாகிறது. ஆதலால் அனைத்து வகைச் சான்று களாலும் (அரப்பன் நாகாக உருவ எழுத்து அமைப்பு உட்பட) அரப்பன் நாகரிகம் தமிழரின் நாகரிகமே என்பது குன்றின் மேலிட்ட விளக்காகிறது.

Read more: http://viduthalai.in/page8/94233.html#ixzz3OPpCXzsy

தமிழ் ஓவியா said...திராவிடம் - ஒரு பார்வை

தமிழர்கள் தங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் போற்றப்பட வேண்டி யவர்கள் அறுவர். 1) அயோத்திதாசப் பண்டிதர் (1845 - 1914), 2) டாக்டர் சி.நடேசனார் (1875 - 1937), 3) டாக்டர் டி.எம்.நாயர் (1888 - 1919), 4) சர்.பிட்டி .தியாகராயர் (1852 - 1925), 5) தந்தை பெரியார் (1879 - 1973), 6) பேரறிஞர் அண்ணா (1909 - 1969).

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஆமைகளாய் ஊமைகளாய் அடங்கிக் கிடந்த கண்மூடிக் கொள்கைகளால் காலமெலாம் குருடராய் வாழ்ந்த தமிழ்ச் சமுதாயம் கண் திறப்பு ஏற்பட உரிமைக்குரல் கொடுத்தவர்கள் இந்த அறுவர் ஆவர்.

மிகவும் தொன்மையானதும் இந்து மதத்திற்கு முற்றிலும் மாறுபட்டதுமான திராவிடக் கருத்துகள் வேரூன்றி உள்ள தற்கு ஆயிரம் சான்றுகள் உள்ளன. 1856இல் திராவிட மொழிகளின் ஒப் பிலக்கணம் எனும் நூலை எழுதிய இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழி பேசும் மக்கள் எல்லோரும் ஒரே திராவிட இனத்தவர் என்னும் கருத்தை முன் வைத்தார்.

கி.பி.ஏழாம் நூற் றாண்டில் வாழ்ந்த வடமொழி ஆசான் குமாரிலபட்டர் ஆந்திர - திராவிட பாஷா எனும் சொற்றொடரை முதன் முதலாகப் பயன்படுத்தியதைக் கால்டு வெல் குறிப்பிடுகின்றார்.

1891ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கு பிராமணர், மராட்டியர், குடியேறிய முசல்மான் தவிர்த்து சென்னை மாகாணத்து மக்கள் முற்றிலும் திராவிடர்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவில் (Census of India, 1891 Madras Report)
இடம் பெற் றுள்ளது.

கி.பி. 800இல் வச்சிர நந்தியால் திராவிடச்சங்கம் மறைத்திரு.ஜான் ரத்தினம் என்பரை இந்தியராகக் கொண்டு திராவிடப் பாண்டியன் என்னும் இதழை அயோத்திதாசப் பண்டிதர் நடத்தினார்.

1891இல் அயோத்திதாசர் பிராமண என்ற அமைப்பை நிறுவினார். 1909இல் இதனை திராவிட மகாஜன சபை என் றும் மாற்றினார். ஆரியன் என்றொரு மொழி இருந்ததும் இல்லை. அதற்கு அட்சரமும் இல்லை என்று உறுதிபட வாதிட்டு ஆரியத்தின் அடித்தளத் தையே ஆட்டம் காணச் செய்தார்.

1907ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதர் ஒரு பைசாத் தமிழன் என்ற பெயரில் இதழ் நடத்தி தமிழ் மொழி பேசுவோர் திராவிடர் என வழங்கி விடுதலை குறிப்பிட்டு நிலை நாட் டினார். 21.10.2005 அன்று மத்திய அரசு அயோத்திதாசப் பண்டிதருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு பெருமைப்படுத் தியது.

ஒரு பைசாத் தமிழன் இதழின் நூற்றாண்டு விழாவை 2.7.2008 அன்று சென்னை சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் அந்நாள் முதல்வர் கலைஞர் பெருமகனார் மிகப்பெரும் அளவில் அரசு விழாவாகக் கொண்டாடி சிறப்பு சேர்த்தார். அயோத்திதாசப் பண்டிதர் திராவிடக் கருத்தியலின் முன்னோடி யாகத் திகழ்ந்தார். இக்கருத்தைத் தொடர்ந்து 1812இல் மாசத்தினைச் சரிதை என்னும் இதழ் தோன்றியது.

திராவிடன், ஆதிதிராவிடன் எனும் பெயர்களில் இதழ்கள் வரத்தொடங்கி யதையடுத்து, திராவிட தீபிகை (1845), திராவிட வர்த்தமானி (1822), திராவிட அபிமானி (1884), திராவிட மித்திரன் (1885), திராவிட ரஞ்சினி (1886), திராவிட நேசன் (1891), திராவிட மந்திரி (1893), திராவிட பானு (1906), திராவிட கோகிலம் (1899), திராவிடாபிமானி (1906), திராவிட மித்திரன் (1910 - இலங்கை) போன்ற இதழ்கள் 1912ஆம் ஆண்டிற்கு முன்பு வெளிவந்து திராவிடக் கருத்தியலை மக்கள் மத்தியில் பரப்பி வந்தன.

பிராமணர் அல்லாத அரசு ஊழியர்களை ஒன்று திரட்டி 1912ஆம் ஆண்டில் மெட்ராஸ் யுனைட்-டெட்-லீக் என்ற அமைப்பை உருவாக்கினர். 1913ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைட்டெட் லீக்கின் முதலாவது ஆண்டு விழா டாக்டர் நடேசனாரின் தோட்டத்தில் நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் மெட்ராஸ் யுனைட் டெட் லீக் என்னும் பெயரை திராவிடர் சங்கம் என மாற்றிட தீர்மானம் நிறைவேறியது. அதுவே திராவிட இயக்கம் எனப் பெயர்பெற்றது.

தமிழ் ஓவியா said...


இப்பெயர் மாற்றத்திற்குக் காரணமாக இருந்த டாக்டர் சி.நடேசனார் திரா விட இயக்க நிறுவனராக கருதப் பெற்றார். 1916ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20ஆம் நாள் டாக்டர் சி.நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர், சர்.பிட்டி. தியாக ராயர் ஆகியோரால் பிராமணர் அல்லாதோர் நலன் காத்திட தென் னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் கட்சி தொடங்கப் பெற்றது. அதுவே திராவிட இயக்கத்தின் தலைமகன் எனப் பெருமை பெற்ற நீதி கட்சியாகும். கண்மூடித் தமிழருக்கு கண் திறப்பு ஏற்பட்டது.

மனிதரில் வேற்றுமை விளைவித்த மனுநீதியை மாற்றிச் சமுதாய நீதி கேட்டுச் சண்ட மாருதம் எழுந்தது. 1916ஆம் ஆண்டில் தான் என முரசொலி மாறன், தமது திராவிட இயக்க வரலாற்று நூலில் குறிப்பிடு கின்றார்.

1920 முதல் 1936 முடிய 16 ஆண்டுகள் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சி தான் நடைபெற்றது. பெண் களுக்குத் தகுதி அடிப்படையில் வாக்குரிமை, தேவதாசி முறை ஒழிப்பு, பால்ய மணத்தடுப்பு ஆகியன நிகழ்ந்து, வகுப்பு வாரி பிரதிநிதித்துவ முறை (சிஷீனீனீஸீணீறீ நி.ளி.) அமுலுக்கு வந்தது.

இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பகல் உணவுத்திட்டம் ஆகியனவற்றால் சாதனைச் சரித்திரம் படைத்தது. சர்.றி.ஜி. இராஜன் முயற்சியால் நீதிக்கட்சியின் பொன்விழா 1968இல் நிகழ்ந்தது. அன்றைய முதல்வர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பொன்விழா மலரை வெளி யிட்டு உரை நிகழ்த்தினார்.

2003ஆம் ஆண்டு திராவிட இயக்கத்தின் 90 ஆம் ஆண்டுவிழா, இயக்க நிறுவனர் டாக்டர் சி.நடேசனாரின் 66வது நினைவு நாள் விழா, சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ணச் செட்டித் தெருவில் நிகழ்ந்தது.

டாக்டர் சி. நடேசனாரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து தளபதி மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆற்றிய நிறைவுரை திராவிட இயக்கத்தின் புதிய விழிப்புணர்வை உண்டாக்கியது. திராவிட இயக்க நூற்றாண்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சிறப்பான தலைமையில் நிகழ்வுற்றது.

திராவிடம் என்ற கருத்தியலை ஆந்திரர் ஏற்கவில்லை. கன்னடர் கண்டு கொள்ளவில்லை. கேரளர் செவியில் கேட்கவில்லை எனும் கருத்து அன்றும் இன்றும் முன்வைக்கப் பெறுகிறது. தாகூர் அவர்களால் வங்க மொழியில் எழுதப்பெற்று இன்று தேசிய கீதமாக நடுவண் அரசு ஏற்று, அனைத்து மாநிலங்களும், ஏற்றுக்கொண்டு பாடப்பெறுகின்ற ஜனகணமன என்ற பாடலில் திராவிட உத்சல வங்க என்று திராவிடம் எனும் சொல் இடம் பெற் றுள்ளது.

தமிழ் ஓவியா said...

இந்தியாவிலுள்ள அனைத்து இன மக்களையும் இணைத்துப் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம் ஆகிய நான்கு மொழிகளைப் பேசும் மக்களைக் குறிப்பிடும் சொல் லாக திராவிட என்ற ஒரே சொல் தேசிய கீதத்தில் பயன்படுத்தப் பெற் றுள்ளது. தெலுங்கு, கன்னடம், மலை யாளம் ஆகிய மூன்று மொழிகளைப் பேசும் மக்கள், தங்கள் இனம் தேசிய கீதத்தில் இல்லையே என்று இன்று வரை எவ்வித எதிர்ப்புக்குரலும் எழுப்பவில்லை.

ஏன்? மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் தமிழ்மொழி வாழ்த்துப்பாடலில் கன்னடமும் களி தெலுங்கும், கவின் மலையாளமும் உன் உதரத்துதித் தெழுந்து ஒன்று பல ஆயிடினும் என்று கூறும் அகச்சான்றிலிருந்து தமிழி லிருந்து கிளைத்த மொழிகளே கன் னடம், தெலுங்கு, மலையாளம் என்ற போதிலும். ஆதிநாளில் அனைவரும் தமிழைப் பேசும் திராவிடரே.

பின்னாளில் மொழி கிளைத்துத் தனித்தனி பிரிவு ஆயினர். கன்னடர், தெலுங்கர், மலையாளி ஆகியோர் ஒன்றாய் இருந்து தமிழ்ப்பேசினர். அந்நாளில் அவர்கள் திராவிடரே. அரண்மனையிலே இருந்த நீதிக் கட்சியை ஆலமரத்தடிக்குக் கொண்டு வந்தவர் தந்தை பெரியார். அதை மேலும் மேலும் விரிவாக்கி வெட்ட வெளிக்கு விரிவான திடலுக்குக் கொண்டு வந்து மக்கள் மன்றத்தில் கலந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

11.8.1957 அன்று பேரறிஞர் அண்ணா மதுரையில் ஆற்றிய உரையில்தான் இந்த அரண்மனை - ஆலமரம் - வெட்டவெளி என்ற விளக்கத்தைத் தந்தார் என்பதை முரசொலிமாறன், தமது திராவிட இயக்க வரலாற்று நூலில் தெளிவுபடுத்துகிறார். ஆகவே திராவிடம் என்பது காலாவதி ஆகிவிட்ட ஒன்று அன்று என்பதை உணர வேண்டும். அது பற்றிய கருத்தியலைப் பார்ப்போம்.
சிந்தனைக்கு:

திராவிட இயக்கம் பற்றி கவியரசு வைரமுத்துவின் வைர வரிகள்:
திராவிட இயக்கம் என்ன தான் செய்தது தமிழனுக்கு?
இந்தியர் அல்லாத அரசுகள் எழுந்ததும் விழுந்ததும் தான் இந்தியா வின் வரலாறு என்றார் காரல் மார்க்ஸ். தமிழர் அல்லாதவர்கள் தமிழர்களை ஆண்டதுதான் தமிழர்களின் வரலாறு என்பது அதன் உண்மை.

மண்ணின் மக்களை ஆலயத்துக்குள் அனுமதிக்காமல் பூக்களுக்கும் வரிவிதித் துப் புண்ணியம் தேடிக்கொண்டது பல்லவர் அரசு. வருணாசிரமத்தை நெறியென்று கொண்டு சாதிவாரியாய் வீதி அமைத் தது மத இயக்கத்தின் மடியில் கிடந்த மாமன்னன் இராசராசன் அரசு. மேல் சாதி மன்னனுக்கு கருவூலத் தங்கம் காணிக்கை கொடுத்து விட்டு தறிகளுக்கும் மாட்டு வண்டிகளுக்கும் வரி விதித்தது நாயக்கர் அரசு.

கீழ் ஜாதி என்று கருதப்பட்ட சாதி இந்து ஒருவர் கோயிலுக்குள் நுழைவது குற்றம் என்று நீதிமன்றத்தில் தீர்ப் பளித்தது பிரிட்டிஷ் அரசு (1874).

இப்படி நூற்றாண்டுகளின் செருப் படியில் லாடமாய்த் தேய்ந்து கிடந்த தமிழனைத் தொட்டுத் தூக்கி நிறுத் தியது திராவிட இயக்கம். மண்ணுக்கும் மனிதனுக்குமான உறவை உணர்த்தியது திராவிட இயக்கம். தொலைந்து போன விழுமங்களை மீட்டெடுத்தது திராவிட இயக்கம். உயர்வு - இழிவு என்பன பிறப் பால் உருவானதில்லை என்று வர லாற்று ரீதியாக வாதிட்டு வென்றது திராவிட இயக்கம்

- (மானுட வெளிச்சம் செங்குட்டுவன்)

Read more: http://viduthalai.in/page7/%20_94229.html#ixzz3OPpf12gr

தமிழ் ஓவியா said...

சோதிடம் தோல்வி

இலங்கை அதிபர் தேர்தலில் சந்தடி சாக்கில் ஒன்றை மறந்து விடக் கூடாது; மறந்தால் நல்லது; மறக்காவிட்டால் தங்கள் பிழைப்புப் போய் விடுமோ முகத்திரை கிழிந்து தொங்கி விடுமோ என்று கவலைப்படுபவர்கள் வேறு யார்? சோதிடர்கள் தான்.

இலங்கைத் தீவில் தேர்தலை நடத்தும் தேதி யைக்கூட சோதிடர்கள் தான் நிர்ணயித்தார்கள் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?

இலங்கையில் முன் னணி சோதிடர்களான சுமனதாச அபேகுணவர் தன மாபலகம விமலரதன மற்றும் சந்திரசிறி பண் டார ஆகியோர் ராஜபக்சேயின் வெற்றி உறுதி என்று அடித்துச் சொன்னார்கள். லக்ன மெல்லாம் சுத்தமாக இருக்கிறது - மீண்டும் அதிபர் ராஜபக்சேதான் என்றனர் அந்த சோதி டர்கள்.

ராஜபக்சேவுக்கு ஜெயபேரிகை கொட்டிய தோடு அந்த சோதிடர்கள் நின்றார்களா? அதையும் தாண்டி ஒன்றைச் சொன் னார்கள். எதிர்த்து நிற்கும் மைத்திரி பாலசிறீசேனா விற்கு அதிபர் பதவிக் கான ராஜயோகம் அறவே கிடையாது என் றும் துணிந்து சொன் னார்கள்.

இரண்டுமே நடக்க வில்லை; இதற்குப் பிற காவது சோதிடம் என்பது எத்தகைய பித்தலாட்டம் என்பதை மக்கள் உணர வேண்டாமா?

சோதிடர்கள் சொல் லுவதைப் பார்த்தால் தேர்தலில் நிற்கக் கூடிய வேட்பாளர்களின் ஜாத கம் மட்டுமல்ல; வாக் களிக்கும் மக்களின் ஜாதகம்கூட ஒன்றாகவே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தானே குறிப்பிட்ட வேட்பாள ருக்கு வெற்றி வாய்ப்புக் கிட்ட முடியும்?

இதுசாத்தியம்தானா? பிறந்த நேரம்தான் எல் லாவற்றிற்கும் அடிப் படை என்று பொதுவாக சோதிடர்கள் சொல்லு வார்கள்; அவர்களைப் பார்த்து நறுக்கென்று அறிவு ரீதியாக ஒரு கேள்விக் கணையை வீசி னால் அவை விதாண்டா வாதம் என்று சொல்லித் தப்பிக்கப் பார்ப்பார்கள்.

ஏனய்யா சோதிட சிகாமணியே! நில நடுக் கத்தில் லட்சக்கணக்கில் மக்கள் ஒரு நொடியில் புதையுண்டு சாகிறார் களே- இரயில் விபத்தால் ஆயிரக்கணக்கில் மடி கிறார்களே - விமான விபத்தில் நூற்றுக்கணக் கில் பலியாகிறார்களே - இவர்கள் அத்தனைப் பேர்களுமே ஒரே நேரத் தில் லக்னத்தில் பிறந்த மானிடர்களா? என்று கேட்டும் பாருங்கள் - முகம் சுருங்கிப் போய் விடும். இதற்கு அண்மை எடுத்துக்காட்டு (லேட் டஸ்ட்) ராஜபக்சே தோல் வியே!

சோதிடத்தை நம்பி தான் தேர்தலில் நிற்கி றேன் என்று அத்வானியை எதிர்த்து நின்றார் ஓய்வு பெற்ற தலைமைத் தேர் தல் ஆணையர் டி.என். சேஷன்; வென்றாரா? கட்டிய பணத்தையோ வது (டெபாசிட்) திரும்பப் பெற முடியவில்லையே!

சோதிடம் ஆருடம் என்பவை அசல் அக்கப் போர்களே!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/94303.html#ixzz3Obb6OZUG

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஆசை

நமக்கு எண்ண முடி யாத ஆசைகள் இருக் கின்றன ஆசைகளை ராஜினாமா செய்து விட் டால் அத்தனைக்கத்தனை ஆனந்தமாக இருக்கலாம்.
- காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (கல்கி 4.1.2015)

இட ஒதுக்கீடு விஷ யத்தில் மட்டும் நான் கொஞ்சம் கம்யூனல் பேசிசில் பேசியாக வேண் டியிருக்கிறது என்று இதே சங்கராச்சாரியார் கூறி யுள்ளாரே (தெய்வத்தின் குரல் 3ஆம் தொகுதி) இதுதான் ஆசையை துறந் ததற்கு அடையாளமா?

Read more: http://viduthalai.in/e-paper/94308.html#ixzz3ObbNHk55

தமிழ் ஓவியா said...

திருச்சி சிறீரங்கம் பிரம்ம ரதத்தை மனிதர்கள் தூக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் நடத்தி கைதானவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டினார்


திருச்சி சிறீரங்கம் பிரம்ம ரதத்தை மனிதர்கள் தூக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் நடத்தி கைதானவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டினார்


திருச்சி சிறீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வைகுண்ட ஏகாதசியின் போது சொர்க்கவாசல் திறப்புக்கு பின்னர் வேதம் ஓதும் பார்ப்பனர்களான அரையான் குடும்பம், பட்டர் அய்யர், வேத வியாசகர், பராசுர பட்டர் ஆகியோரை கோவிலிலிருந்து அவர்களது வீடுவரை பல்லக்கில் சுமந்து செல்வதும், இதனை பிரம்ம ரத மரியாதை என்றும், நீண்டகாலமாக பார்ப்பனர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதனை சீமான் தாங்கி (பிரம்ம ரதம்) என்று அழைக்கின்றனர்.

பிரம்ம ரதமுறையை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் சிறீரங்கம் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டித்து உரையாற்றினார். மேலும் பல்வேறு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்தனர். மனிதனை மனிதன் (பார்ப்பனர் களை) சுமக்கும் அவலத்தைக் கண்டித்து கடந்த 2011 தி.மு.க. ஆட்சியில் அப்போதிருந்த கோவில் இணை ஆணையர் ஜெயராமன் இந்த முறைக்கு தடைவிதித்தார்.

தடை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையை பார்ப்பனர்கள் அணுகினர். ஆனால், நீதிமன்றம் அவர்களைக் கடுமையாக எச்சரித்து அனுப்பியது.

இந்நிலையில் நீதிமன்ற தடையை மீறி சிறீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் ஏற்கெனவே திட்டமிட் டப்படி பிரம்ம ரத முறையை நேற்று (ஜன.10) நடத்திட ஏற்பாடுகளை செய்து வந்தனர். நேற்று மதியம் 12.30 மணியளவில் ரங்கநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அரையான் குடும்பம், பட்டர் அய்யர், வேதவியாசகர், பராசுர பட்டர் ஆகியோர் பிரம்ம ரத முறையை ஏற்றுக்கொண்டு பல்லக்கில் செல்லத் தயாராக இருந்தனர். அப்போது கோவில் வெளியே திராவிடர் கழகத்தினர் மாவட்ட தலைவர் மு.சேகர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு விடுதலை செய்யப்பட்டனர். அத்தோழர்கள் நேற்று (10.1.2015) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தனர்.

மறியலில் ஈடுபட்டு கைதான தோழர்களைப் பாராட்டும் விதமாக, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், திருச்சி மாவட்ட கழகத் தலைவர் சேகர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து, தோழர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/94286.html#ixzz3ObcTiLIc

தமிழ் ஓவியா said...

குயில் இதழில் புரட்சிக் கவிஞர்

போர்! தமிழ்ப் போர்!!

நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி, மிகப் பழமை வாய்ந்தது. அம்மொழி பல மொழிகளுக்குப் பெற்ற தாயாகவும், பல மொழிகளுக்கு வளர்ப்புத் தாயாகவும் இருந்து வந்துள்ளது.
தமிழ்மொழி இங்கு வந்து புகுந்த எதிரிகள் பலரால் சாகடிக்கப் பட்டதோ என்ற நிலையிலும் சாகாத மொழி. மறைக்கப்பட்டு விட்டதோ என்று எண்ணிய நிலையிலும் மறையாது வாழும் மொழி.

ஆயினும், தமிழை ஒழிப்பதன் மூல மாகத் தான் தமிழரை ஒழிக்க முடியும் என்ற முடிவோடு அதன் வளர்ச்சியில் எதிரிகள் தலையிட்டதில் அதன் வளர்ச்சி குன்றிற்று என்பது மறுக்க முடியாது.
தமிழ்மொழி எண்ணிலாத நல்ல இலக்கிய வளமுடைய மொழி. அவ்வி லக்கிய விளக்குகள், உலகை மூடியிருந்த இருளை ஓட்டியது என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. நடு நிலை உலகமே சொல்லும்.

தமிழிலக்கியங்கள் தம் வேலையை மன நிறைவு உண்டாகும்படி முடித்த பின்னரே அது எதிரிகளால் குன்றும் நிலையை அடைந்தது என்பது கருதிநாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

தமிழ் மொழியில் - தமிழ் இலக்கியங் களில் அயலார் புகுந்தனர் என்பதும், புகுந்து கை வைக்கவும் அவர்கட்கு வாய்ப்புக் கிடைத்தது என்பதும் துன்புறத் தக்கதேயாகும்.

நம் தாய்மொழி இன்று என்ன நிலையை அடைந்திருக்கிறது என்பதை நாம் நினைக்கும் தோறும் அந்நினைப்பு நம் நெஞ்சுக்கு நெருப்பாகி விடுகின்றது.

தமிழை ஒழிக்கும் நோக்கமுடைய வர்க்கு இத்தமிழ் நாட்டில் சலுகை மிகுதி, அவர்கள் தமிழரின் அண்டை யிலேயே குடித்தனம் பண்ணுகின் றார்கள். தமிழ்த் தாயை ஒழிக்கச் சொல் லித் தமிழரையே பிடிக்க அவர்கட்குச் செல்வாக்கு உண்டு.

தாய்மொழியை எதிர்க்கும், அதைக் கொல்ல நினைக்கும், கொல்ல நாடோ றும் ஆவன செய்து வரும் ஒரு கூட் டத்தை நம் தமிழரிற் சிலரே நடத்து கிறார்கள். அவர்கள் சொன்னபடி இவர்கள் ஆடுகின்றார்கள். மானத்தை விடுகின்றார்கள். வயிறு வளர்ப்பதே நோக்கம் என்கிறார்கள்.


தமிழ் ஓவியா said...

எதிரிகளைக் கொண்டே எதிரிகளின் கண்ணைக் குத்த வேண்டும் என்று எண்ணும் நம் இன எதிரிகளுக்கு ஆளாகி விடுகின்றார்கள். அன்னை நாடோறும் பட்டுவரும் பாடுஇது. கன்னல் தோறும் கண்டு வரும் இன்னல் இது. என் அன்புத் தமிழர்கள் தம் நெஞ்சு அரங்கிற்குத் திருப்புக முகத்தை, அழ வேண்டாம் எழுக!

அந்தத் தீயர்களை வாழ்த்த வேண் டும் அவர்கள் தீச்செயலுக்கு நன்றி கூற வேண்டும். தமிழுக்குத் தமிழர்க்கு இந் நாள் வரை அவர் செய்த தீமையால் தான் நம் இன்றைய எழுச்சி உணர்ச்சி ஏற்பட்டது.
நல்ல வேளையாக அவர்கள் தம் போக்கினின்று திருந்த மாட்டார்கள் அவர்கள் தீமை வளர்க தமிழர்கள் எழுக. உணர்ச்சி பெறுக.

தமிழ்

தமிழிலக்கியங்களில் - _ இன்று உள்ள தமிழிலக்கியங்களில் ஒன்றேனும் தனித் தமிழில் இல்லையாம். தமிழ்க் கோட்டையிற் புகுந்து கன்னம் வைத்த திருடர்கள் தமிழிலக்கியங்களில் கை வைத்த திருடர்கள் தமிழிலக்கியங்களில் கைவைத்த கன்னக்கோல்காரர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்.

வளர்ந்துவரும் தனித்தமிழையும் கலந்து வரும் தமிழாக்கிக் கொண்டே இருப்பவர்களாகிய பேடிகள் இவ்வாறு சொல்லுகிறார்கள்.

இழிந்த கருத்துள்ள செய்யுட்களை உயர்ந்த கருத்துள்ள செய்யுட்களிடையே புகுத்திய மனச்சான்றில்லாத கயவர்கள் இவ்வாறு சொல்லுகிறார்கள்.

தமிழர்களே நம் கடமை என்ன? நாம் இந்நாள் அன்னைக்குச் செய்ய வேண்டிய அருந்தொண்டு என்ன?
தமிழை எதிர்க்கும் நிறுவனங்கள் எதுவா இருந்தாலும் நாம் எதிர்த்து ஒழிக்க வேண்டும். தமிழை எதிர்ப்பவன். தமிழைக் கெடுப்பவன் எவனானாலும் அவனைத் தலை தூக்க ஒட்டாமல் செய்ய வேண்டும்.

தமிழர்கள் அரசியல் கட்சிகளில் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். விட்டு விலக வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஒன்றை மட்டும் மனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்ப் பற்றுக் காவிரிப் பெருக்காகி விட்டது. தமிழர்களைத் தாழ்வாகக் கணக்கிடக் கூடாது எவரும்!
சென்னைத் தமிழ் அமைச்சர்களிற் சிலர் தமக்கு ஆட்களைச் சேர்க்க இப்போதே தமிழின் பகைவர்களின் காலை நக்கத் தொடங்கி விட்டார்கள் அந்த நொள்ளைகளுக்கு இப்போதே சொல்லியனுப்பி விட வேண்டும்.

ஐயா நீவிர் எந்தத் தொகுதியில் நின்றாலும் நீவிர் ஏந்தும் கப்பறையில் கல்லே விழும் என்று.
இந்த அமைச்சரவை, இந்தக் கட்சி. இந்த ஆள், நல்ல அவை. நல்ல கட்சி. நல்ல ஆள் என்று தமிழர்கள் மதிப்பிடு வது தமிழுக்கு அவர்கள் செய்த நன்மையை எடை போட்டே.

அவன் எனக்கு வேண்டியவன் என்பதல்ல இப்போது தமிழர்களின் எண்ணம். அவன் தமிழுக்கு வேண்டி யவனா என்பது ஒன்றுதான்.

தமிழர்களின் மதிப்புப் பெற்றவன் இன்று பெற்ற தாயல்லள். தந்தையல் லன். உறவினன் அல்லன். தமிழரின் மதிப்பைப் பெற்றுத் திகழ்வது தமிழ ரின் தாயாகிய தமிழ்மொழி ஒன்று தான். நீ ஒரு மதத்தவனா? நீ ஒரு சாதி யினனா? நீ வேறு இனத்தவனா? இரு!

அந்தப் பற்றுக்களையெல்லாம் விடுவது நல்லது. விடவில்லை. இரு. ஆனால் தமிழ்ப் பற்றுள்ளவனாயிரு., தமிழின் நலன் கருதிப் போராடுகின் றவனாயிரு! அந்தப் போரில் தலை போவதாயினும் அஞ்சாதிரு!

நீ ஒரு அரசியல் அலுவல்காரன்! இரு! ஆனால் தமிழுக்குப் போராட அஞ்சாதே. வயிறு ஒன்றையே கருதித் தமிழைக் காட்டிக் கொடுப்பாரின் தெருவில் திரிவாரின் நண்பரையும் அணுகாதே!
போர்! தமிழ்ப் போர். தமிழ்த் தாய்க்காக! அவள் படும் இன்னலைத் தீர்ப்பதற்காக - தமிழர் தமிழராக மதிக்கப் பட வேண்டும் என்பதற்காக போர்!
தமிழ்த் தாய் வெல்க!
தமிழர்கள் விடுதலை எய்துக!

குயில் 23.2.1960

Read more: http://viduthalai.in/page3/94223.html#ixzz3ObgU5gIA

தமிழ் ஓவியா said...

சுதந்திரத் திராவிடத்தில் ஆரியர் கதி என்ன?

- அறிஞர் அண்ணா

திராவிடநாடு பிரிவினை ஏற்பட்ட பின்பு, ஆரியர்கள் எங்கு செல்வது என்பது பற்றி, ஆரியர்களேதான் முடிவு செய்ய வேண்டும்.

ஆங்கிலோ - இந்தியர்கள் முதலிய மைனாரிட்டிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் ஆரியர்களுக்கும் அளிக்கப்படும்.

ஆனால் மூடப்பழக்க வழக்கங்களும், பிறவியில் உயர்ந்தவன் என்பதும், வைதீகமும், வர்ணாச்சிரமமும் இருக்க இடங்கொடுக்க மாட்டோம்.

ஆரியர்களை எங்கும் ஓடிப்போகும்படி சொல்லவில்லை ஆனால், ஆரியர்களுக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லையானால் மேலே பல ஆரியவர்த்தத்திற்கு போகலாம்.

ஆரியர்கள் இந்நாட்டை விட்டு வெகு சுலபத்தில் போய் விட மாட்டார்கள். ஜெர்மனியில் யூதர்கள் விரட்டப்பட்ட போதுதான் வெளியேறினார்கள்.
ஆனால், நாங்கள் ஹிட்லராக இருக்க விரும்பவில்லை.

Read more: http://viduthalai.in/page3/%20_94226.html#ixzz3ObiUvZlE

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் பார்வையில்...

பெரும்பாலான பண்டிகைகளின் கதைகள் எல்லாம் தேவர்கள், அசுரர் களை அழித்து ஒழித் தார்கள் என்பதை மய்யப் பொருளைக் கொண்ட தாகவே இருக்கும்.

பிரபலமாகக் கொண் டாடப்படும் தீபாவளியை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான்.
தேவர்கள் என்று சொல் லப்படுவோர் எல்லாம் ஆரியப் பார்ப் பனர்கள்தான் என்பதும், அசுரர்கள், அரக்கர்கள், ராட்சதர்கள் என்று சொல் லப்படுவோர் எல்லாம் அவர்களை எதிர்த்த திராவிடர்கள் என்றும், வர லாற்றுப் பேராசிரியர்கள் ஆதாரத்துடன் எழுதியுள்ளனர். (அண்ணாவின் ஆரிய மாயை நூலிலும் விரிவாகக் காணலாம்)

தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்று திராவிட இயக்கம் முழக்கம் கொடுத்ததும் திராவிட இனத்தின் தன்மானங் கருதித்தான்.

தீபாவளி கொண்டாடாத தீரர்கள் பட்டியலை விடுதலை ஏடு வெளி யிட்டதுண்டு.
தைத் திங்கள் முதல் நாள் வரும் பொங்கல்தான் தமிழர்களின் திருநாள் - தை முதல் நாள்தான் தமிழர் புத்தாண்டு என்பதை திராவிட இயக்கம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறது.

பொங்கல் விழாவை புதுப்பொலி வுடன், தமிழர் பண்பாடு மறுமலர்ச்சிக் கண்ணோட்டத்தோடு புதுத் திருப் பத்தைக் கொடுத்ததும் நம் இயக்கம் தான். இதன் மூலம் தீபாவளிக்கு என்று இருந்த மகிமை இருளில் தள்ளப் பட்டது.

உலகம் பூராவும் அறுவடைத் திரு விழாக்கள் கொண்டாடப்படுவதுண்டு. அதுபோன்ற தமிழினத்தின் தனிப் பெரும் விழா பொங்கலாகும்.

இதிலும்கூடப் பார்ப்பனர்கள் தங்களுக்கே உரித்தான புராண சரக்கு களை வேண்டிய மட்டும் திணித் துள்ளனர். தந்தைபெரியார் இதுகுறித் தும் ஆழமான கருத்தினை வெளிப் படுத்தியுள்ளார்கள். அதனையும் இந்த இடத்தில் எடுத்துக்காட்டுவது பொருத் தமாக இருக்கும்.

ஒரு பொங்கல் நாளில் (விடுதலை 13.1.1970) தந்தை பெரியார் எழுதியுள்ள அந்தக் கருத்து தமிழர்களின் சிந்தனைக்கு இங்குத் தரப் படுகிறது.

பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்-கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல் லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்ப தாகத் தை மாதத்தையும் முதல் தேதி யையுமே ஆதாரமாகக் கொண்டதாகும்.

இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்தப் பாகத்திற்கும் எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றா லும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப்படுவதாகும்.

இக் கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால், விவசாயத்தையும் வேளாண்மை யையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடைப் பண்டிகை யென்று சொல்லப்படுவதாகும். ஆங்கி லத்தில் ஹார்வெஸ்ட் பெஸ்டிவல் என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான்.

என்றாலும், பார்ப்பனர் இதை மத சம்பந்தம் ஆக்குவதற்காக விவசாயம், வெள்ளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப்படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும் அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முக்கிய ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன் ஆதலால் இந்திரனைக் குறிப்பாய் வைத்து, விவசாயத்தில் விளைந்து வெள்ளாண் மையாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூசிப்பது என்றும் கதை கட்டி விட்டார்கள்.

- கி. வீரமணி

Read more: http://viduthalai.in/page3/94228.html#ixzz3ObihoI2X