Search This Blog

3.1.15

பக்தியால் ஒழுக்கக்கேடு குறைந்ததா?சோ சாமர்த்தியம் செல்லுபடியாகாது!


பா.ஜ.க. ஆட்சிக்குப் பார்ப்பனர் 'சோ' பகரும் பாராட்டு!

மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (ழிஞிகி) ஆட்சி என்னும் பா.ஜ.க. ஆட்சியின் நடைமுறைகள், பா.ஜ.க., சங்பரிவார்க் கூட்டத்தின் பேச்சுகள் - ஏச்சுகள் - நடைமுறைகள் பற்றி துக்ளக் இதழில் (31.12.2014) திருவாளர் சோ ராமசாமி தந்துள்ள நற்சான்றுப்(?) பத்திரங்கள் இதோ:

கே: பா.ஜ.க.வில் நிலவும் கருத்துச் சுதந்திரம், அக்கட்சிக்குப் பாதகமாக அமையுமா, சாதகமாக அமையுமா? பா. நாராயணன், சென்னை-92


ப: பா.ஜ.க.வில் இப்போது நிலவுவது கருத்துச் சுதந்திரம் அல்ல. கருத்து வெறி. இது அக்கட்சிக்கு நல்லதல்ல.


கே: அயோத்தியில் சீக்கிரமாக ராமர் கோவிலைக் கட்ட வேண்டும் - என்று உத்தரப்பிரதேச கவர்னர் ராம் நாயக் பேசியுள்ளது குறித்து? கே.ஆர். சாரங்கபாணி, வடவள்ளி


ப: ஒரு கவர்னர், இப்படி இந்தப் பிரச்சினையில் பேசுவது சரியல்ல. நாளை வேறொரு கவர்னர், இடிக்கப்பட்ட பாப்ரி மசூதி திரும்பவும் கட்டப்பட வேண்டும் என்று கூறினால், அது எவ்வளவு தவறாக இருக்குமோ, அவ்வளவு தவறு இதுவும்.


கே: இஸ்லாமியர்கள் மதம் மாறுவதை அரசியலாக்கக் கூடாது; அவர்களின் முன்னோர் இஸ்லாமியர்களாக மாற்றப் பட்டவர்கள்தான் - என்கிறாரே வி.ஹெச்.பி.தலைவர்? ச. புகழேந்தி, மதுரை-14


ப: என்றோ ஹிந்துவாக இருந்து, பிறகு மதம் மாறியவர்களின் இன்றைய வாரிசுகளை மீண்டும் ஹிந்துக்களாக மாற்றுவதில் தவறில்லை என்றால், அதே வாதத்தின்படி இன்னும் சற்று பின்னோக்கிச் சென்று பார்த்தால், எந்த மத நம்பிக்கையும் இல்லாமல் வாழ்ந்தவர்களுடைய வாரிசுகள் தானே, இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறார்கள்? ஆகையால், எல்லோரும் அவரவருடைய மத நம்பிக் கைகளை விட்டு விடுவதுதான் நல்லதா?


கே: ஸ்ரீநகரில் தேர்தல் அதிகாரியைக் கன்னத்தில் அறைந்திருக்கிறாரே பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர்? . புகேழந்தி, மதுரை -14


ப: கண்டனத்திற்குரிய நடத்தை. இப்படிச் செய்திருப்பவர் ஒரு பெண் வேட்பாளர் என்பது நிகழ்ச்சியை மேலும் அதிர்ச்சிக் குரியதாக்குகிறது.


கே: தாஜ்மஹால் ஒரு சிவன் கோவில் மீது கட்டப் பட்டுள்ளது என்றும், அதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளதே? எஸ். புருஷோத்தம் ராஜன், பரமக்குடி

ப: அந்தச் சிவனுக்கே இது பொறுக்காது.

                                           -----------------------------------(துக்ளக் 31.12.2014 பக்.13)

மோடியை ஆட்சி அதிகார நாற்காலி யில் அமர வைக்க வேண்டும் என்று சோ சும்மா விழுந்து விழுந்து எழுதினார்;  தொலைக்காட்சிகளிலும் அவ்வப்போது தன் சரக்கை அவிழ்த்துக் கொட்டினார்.


ஆனால், அவராலேயே இந்த ஏழு மாத ஆட்சிபற்றிப்  பெருமைப்பட முடிய வில்லை; மாறாக தன் மனப்புழுக்கத்தைக் கொட்டியுள்ளார்.


இப்படிக் கூறுவதால் சங்பரிவார் நட வடிக்கைகளை சோ ஏற்றுக் கொள்ள வில்லை என்று பொருளல்ல;  அவர்களின் நடவடிக்கைகள் வெகு மக்களின் எதிர்ப்பை மோடி அரசுக்குச் சம்பாதித்துக் கொடுக்குமே என்ற கவலைதான்.
பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தியவர்தானே இந்த சோ அதில் முக்கிய குற்றவாளியான எல்.கே. அத்வானிக்கு வக்காலத்துப் போட்டு எழுதியவர்தானே இந்த அக்கிரகாரவாசி!


கேள்வி: பாபர் மசூதி இடிப்பு அத்வானி யின் தூண்டுதலால் நடந்தது என்று சிறப்பு சி.பி.அய் கோர்ட்டில் பூசாரி உட்பட 5 கரசேவகர்கள் வாக்குமூலம் கொடுத்துள் ளார்களே?


பதில்: அவர்களுடைய வாக்குமூலமே இறுதியான ஆதாரம் ஆகி விடாது; நிகழ்ச்சி நடத்து பல வருடங்கள்; வழக்கு தொடங்கி சில வருடங்கள்; கமிஷன் விசாரணை தொடங்கி சில வருடங்கள்; கமிஷன் விசாரணை தொடங்கி கணிசமான காலம் - எல்லாம் கழிந்த பிறகு, இப்பொழுது திடீ ரென்று இப்படிச் சொல்வதால் - இவர்கள் பேச்சு சந்தேகத்திற்கு இடமளிக்கிறது  இவர்கள் கூறுவதை உறுதி செய்ய (சிஷீக்ஷீக்ஷீஷீதீஷீக்ஷீணீமீ) போதுமான சாட்சியங்கள் இருந் தால் மட்டுமே, அவர்கள் சொல்வது நீதிமன் றத்தில் எடுபடும் (துக்ளக் 25.6.2003 பக்.19).


இந்தப் பதிலில் தான் எத்தகைய தளுக்கு - குலுக்கு! - ஆட்சிக்கு வருவதற்கு முன் இதுபோன்ற காரியங்களில் வன்முறையா ளர்களுக்கு வக்காலத்து; ஆட்சிக்கு வந்த பிறகு இது போன்ற மதவாத சரக்குகளை சங்பரிவார்கள் அவிழ்த்துக் கொட்டினால் அது மக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்துமே என்பதால் இன்னொரு நாக்கால் பேசும் தந்திரம். இதற்குப் பெயர் தான் பார்ப்பனீயம் என்பது.

பேசு நா இரண்டுடையாய்ப் போற்றி! என்று அறிஞர் அண்ணா அவர்கள் ஆரிய மாயை நூலில் எழுதியதுதான் நினைவிற்கு வருகிறது. புரிந்து கொள்வீர் இந்(து)தப் பார்ப்பன நஞ்சுகளை!

----------------------------------------------------------------------------------------------------------------

பக்தியால் ஒழுக்கக்கேடு குறைந்ததா?
கே: கடவுள் பக்தியால் அச்சமும் வரவில்லை; ஒழுக்கமும் வளரவில்லை என்றால், அது என்ன பக்தி? அது பெருகி என்ன லாபம்? என்ற கி. வீரமணியின் கருத்து பற்றி?


ப: ஊழல், கொலை - கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல குற்றங்களைத் தடுக்க சட்டங்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால், இவை எல்லாம் ஒழிந்து விடவில்லை. குறையவும் இல்லை. இந்தச் சட்டங்கள் இருந்து என்ன பிரயோஜனம்? இந்தச் சட்டமே தேவையில்லை என்று முடிவு செய்துவிட வேண்டியதுதானா? சட்டங்கள் இருப்பதால் தான், இந்த அளவாவது கட்டுப்பாடு இருக்கிறது; இப்போதே இப்படி இருக்கிறது என்றால், சட்டங்கள் இல்லை என்றால் என்ன நடக்குமோ - என்று தானே எல்லோரும் நினைப்பார்கள்? அம்மாதிரியே பக்தி உணர்வு இருப்பதால்தான், சமுதாயத்தில் இந்த அளவுக்காவது கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பக்தி உணர்வு அறவே அற்றுப் போய் விட்டால் என்ன நேரிடுமோ...?                                          (துக்ளக் 31-12-2014 பக்.13)


திருவாளர் சோ ராமசாமி தான் இப்படி பதில் சொல்லி இருக்கிறார்.


முதலில் ஒன்றை அவர் ஒப்புக் கொண்டு இருக்கிறார். கடவுள் சக்தியையும் மனிதர்களின் செயல்பாடுகளையும் ஒரே அளவில் - சம மட்டத்தில் வைத்து எழுதுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். இதன் மூலம் மனிதனுக்கு மேற்பட்டது கடவுள் என்ற வாதம் அடிபட்டுக் கீழே விழ்ந்து விடவில்லையா? மனிதன்தான் சட்டம் செய்கிறான்; கடவுள், பக்தி இவற்றையும் மனிதன்தான் உண்டு பண்ணுகிறான் என்பதை இதன் மூலம் சோ ஒப்புக் கொள்வது ஒரு வகையில் பாராட்டத்தக்கதே! (இப்படிதான் அவரைப் பாராட்ட முடியும் - வேறு சந்தர்ப்பம் ஏது?)


சரி, இரண்டாவது விவாதத்துக்கு வருவோம் - பக்தி உணர்வு இருப்பதால் தான் இந்த அளவாவது கட்டுப்பாடு இருக்கிறது; இப்பொழுதே இப்படி இருக்கிறது என்றால், சட்டங்கள் இல்லை என்றால் என்ன நடக்குமோ என்று தானே எல்லோரும் நினைப் பார்கள்? அம்மாதிரியே பக்தி உணர்வு இருப்பதால் தான் சமுதாயத் தில் இந்த அளவுக்காவது கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பக்தி உணர்வு  அறவே அற்றுப் போய் விட்டால் என்ன நேரிடுமோ..?                                          (துக்ளக் 31-12-2014 பக்.13)


பக்தி இருந்தால் ஒழுக்கம் இருக்கும்; கட்டுப்பாடுகள் இருக்கும்; பக்தி உணர்வு அற்றுப் போய் விட்டால் என்ன நேரிடுமோ? என்று பசப்புகிறாரே திருவாளர் சோ ராமசாமி இதே சோவின் துக்ளக் ஏட்டில் பக்தியின் யோக்கியதை எப்படி என்பதை ஒப்புக் கொண்டுள்ளாரே!


வினா: வேத மந்திரத்தை இந்த மாதிரி விலைபேசி விற்கலாமா?


புரோகிதர் பதில்: எல்லாம் காலக்கோளாறுதான். காலம் ரொம்பத் தப்பாப் போச்சு நாங்கள்ளாம் இந்த மாதிரி வந்துட்டோம். இப்ப பிராமணனும் இல்லே. பிராமண தர்மமும் இல்லே.


வினா: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா, இப்போது?


புரோகிதர் விடை: பக்தியாவது, ஒண்ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத்துக்கா வர்றான்? சைட் அடிக்கன்னா வர்றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக்கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல்லாம் போக, நேரம் இருந்தா சுவாமி, அம்பாளை நெனச்சிக்கிறா!                   
                               ------------------------- (துக்ளக் 1-6-81 இதழ் பக்.32)


இப்படி எழுதிய சோதான் இப்பொழுது சந்தர்ப்பவாத பல்டி அடிக்கிறார். மேலும் ஒரு செய்தி உண்டு இவாளின் லோகக் குருவான சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பக்திப் பழம்தானே! அவர் யோக்கியதை - ஒழுக்க சீலம் எத்தகையது என்பதுபற்றி ஊரே சிரிக்கவில்லையா? கொலை குற்றப் பின்னணியில் வேலூர் சிறையில் கம்பி எண்ணவில்லையா? பார்ப்பனப் பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் என்ற பெண்மணி  - ஜெயேந்திர சரஸ்வதி என் கையைப் பிடித்து இழுத்து பிடித்து கேவலமாக நடந்து கொண்டார் என்று கண்ணீரும் கம்பலையுமாகக் கதறவில்லையா?


தொலைக்காட்சிகள்கூட அந்த அவல நிலையை ஒளிபரப்பியதே! பக்தி காரணமாக ஒழுக்கக் கேடாக நடந்து கொள்ளப் பயங்கொள்வார்கள் என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்!

சோ சாமர்த்தியமெல்லாம் செல்லுபடியாகாது.
 -------------------------------------------------------------------------------------------------------------------------------
                             --------------- மின்சாரம் அவர்கள் 03-01-2015 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
Read more: http://viduthalai.in/page-1/93838.html#ixzz3NlH0RWvp

68 comments:

தமிழ் ஓவியா said...

திராவிடர் இயக்க வீராங்கனை ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம்


பக்தர்கள் குழந்தைகளுக்கு கட வுளை வணங்கும் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே ஊட்டி வளர்ப்பதைப் போல், நம்மவர்கள் நம் குழந்தைகளை சிறிய வயதிலிருந்தே பகுத்தறிவுப் பால் (மருந்துகளை) ஊட்டி வளர்த்தால் இந்தச் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் தொண்டாற்றிட கடைசிவரை தங்களை ஒப்படைத்துக் கொள்ள அணியமாக இருப்பார்கள் என்பதற்கு ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் ஒரு சிறந்த எடுத் துக்காட்டாக இருக்கிறார்கள்.

பழைய மாமல்லபுரம் பாதையில் (படூர்) சிற்றூர். படூரில் தமிழார்வம் விதி பொன்னுச்சாமி - அங்கம்மாள் இணை யருக்கு மூன்றாவது மகளாக மனோ ரஞ்சிதம் 10.3.1934இல் பிறந்தார். முதல் இரண்டு பிள்ளைகள் பிறந்து இறந்து விட்டன. மணிமேகலை, சிலப்பதிகாரம் என்ற இரண்டு தங்கைகள், இரணியன் (எ) சாந்தகுணாளன், தசக்கிரீவன் என்னும் இரண்டு தம்பிகள் கூட்டுக் குடும்பம். பெரியப்பா சுப்பிரமணிய செட்டியார் மளிகை வியாபாரம் சிறிய தந்தை ஏழுமலை தையற்கடை நடததி வந்தார். பக்தியில் மூழ்கிய குடும்பம் பிள்ளையார் கோயிலை அந்த ஊரில் கட்டி தினமும் பூஜை செய்வது வழக்கம்.

முதல் இரண்டு பேரப் பிள்ளைகள் சிறு வயதில் நோய் வாய்ப்பட்டபோது பழனிக்கு வந்து முடி கொடுப்பதாக வேண்டியும் பிள்ளைகள் பிழைக்க வில்லை. பிள்ளைகளுக்கு உயிர் கொடுக் காத சாமிக்கு நான் முடி கொடுத்து வேண்டுதல் நிறைவேற்ற மாட்டேன் என்று பொன்னுசாமி அவர்கள் பிடிவாதமாக மறுத்துவிட்டு, 1929இல் செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டிற்குச் சென்று தந்தை பெரியார் சொற் பொழிவைக் கேட்டபின் -_ வீட்டிற்கு வந்துசாமி படங்களை எடுத்துக் குப் பையில் வீசி விட்டுப் பூணூலை அறுத்து அவரைப் பந்தலில் வீசி எறிந்து விட்டார்.

அதற்குப் பிறகு பிறந்தவர் மனோ ரஞ்சிதம் மூன்றாவது குழந்தையை குப்பையில் போட்டு புரட்டி குப்பம் மாள் என்று பெயர் வைப்பது அந் நாளைய அய்தீகம். அதைப் புறந்தள்ளி நல்ல மணமுள்ள மலர்ப் பெயரை வைத்து முதலில் அந்த மூட வழக்கத்தை முறியடித்தார். 1937இல் தந்தை பெரியார், பொன்னம்பலனார், குஞ்சிதம், குருசாமி போன்ற அந்நாளைய திராவிடர் இயக்கத் தலைவர்களை அழைத்து தன் தம்பி ஏழுமலைக்கும் அக்காள் மகள் ராதா பாய்க்கும் திருமணம் விமரிசையாக நடத்தி, மாலை பொதுக் கூட்டமும் நடத்தியதால் 1000 பேருக்கு மீனவர், தாழ்த்தப்பட்ட குடும்பங்களுக்கு திருமண விருந்து பரிமாறியதால், பொன்னுச்சாமியை ஜாதியைவிட்டு தள்ளி வைத்து விட் டார்கள். சிறுமி மனோரஞ்சிதம், மனைவி ஆகியோருடன் பக்கத்திலுள்ள கேளம்பாக்கம் என்ற கிராமத்திற்கு வந்து துணிக்கடை ஆரம்பித்து தனியாக உழைத்து நல்ல வசதியான நிலைக்கு வந்துவிட்டார்.

தமிழ் ஓவியா said...


தன் மகள் மனோரஞ்சிதம் மூன்றரை வயதிலேயே தந்தை பெரியார் மடியில் அமர்ந்து பேசும் வாய்ப்பு ஏற்படும்படி இயக்கக் கருத்துக்களை நாள்தோறும் ஊட்டி வளர்த்தார். விடுதலை தந்தை பெரியாரின் புத்தகங்கள், அண்ணாவின் எழுத்துக்கள் அடங்கிய நூல்கள், திராவிட நாடு இயக்க வார இதழ்கள் அனைத்தையும் வரவழைத்து பகுத்தறிவு நூலகம் நடத்தினார்.

இராமாயணம், மகாபாரதம், கடவுள் கதைகள் அனைத்தும் கூறி பகுத்தறிவு ஊட்டியதால் நல்ல இயக்கச் சிந்தனை யோடு வளர்ந்த மனோரஞ்சிதம், மூன்றாம் வகுப்புவரை கேளம்பாக்கம் திண்ணைப் பள்ளியில் படித்து _ இரட்டைத் தேர்ச்சி பெற்று அய்ந்தாம் வகுப்பில் சென்னை திருவல்லிக்கேணி கெல்லட் பள்ளியில் குஞ்சிதம் குருசாமி அவர்களால் சேர்க்கப்பட்டார். அதன் பின் ஆறாம், ஏழாம் வகுப்பு தேசிய உயர்நிலைப் பெண்கள் பள்ளியிலும் மற்றும் 8,9,10,11ஆம் வகுப்புகளை லேடி வெல்லிங்டன் உயர்நிலைப்பள்ளியிலும் (விடுதியில்) படித்தார். தமிழ்ப் புலவரும் ஒரு ஆண்டு படித்தார். தேர்வு எழு தினார்.

1948இல் தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தந்தை பெரியார் தலை மையில் முதல் நாள் மாநாட்டில் அரை மணி நேரம் பேசியதை தந்தை பெரியார் மிகவும் புகழ்ந்து பாராட்டிப் பேசினார்கள். விடுதியில் தங்கியிருக்கும் போது விடுதலையை மறைத்து வைத்துதான் படிக்க முடியும். விடுமுறை நாட்களில் நடக்கும் மாநாடுகளுக்கு குடும்பத்துடன் பொன்னுசாமி சென்று விடுவார்.

தமிழ் ஓவியா said...


1952இல் அந்நாளைய எஸ்.எஸ். எல்.சி. முடித்தவுடன் கல்லூரியில் சேர்ந்து படிக்க மனோரஞ்சிதம் விரும் பினாலும், இந்தக் கல்லூரிப் படிப்பு தான் உன்வாழ்க்கைக்கு நல்லது என்று தந்தை பெரியாரிடம் தந்தை கொண்டு வந்துவிட்டு விட்டுச் சென்றார்கள். சில காலம் தந்தை பெரியாருடன் வேனில் சுற்றுப் பயணம் சென்று அன்னை மணியம்மையாருடன் இருந்து அவர்கள் கைகளால் உணவு உண்டு வாழ்ந்ததை என்றும் கிடைத்தற்கரிய பெரும் பேறாக பெருமையுடன் நினைவுகூர்கிறார்.
இராஜாஜியின் குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து _ பழைய சட்ட மன்றம் இன்றைய கலைவாணர் அரங்கம் எதிரில் மறியல் செய்து, சென்னை மாவட்டத் தோழர்களுடன் கைதானார். பின் சென்னையில் நடை பெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத் தில் கைதாகி தி.மு.க. தோழியர் - சத்திய வாணி முத்துவுடன் சிறைப்பட்டார். தந்தை பெரியார் ஏற்பாடு செய்த மாநாடுகளில் கொடியேற்றும் பொறுப்பு இவர்களுக்குத் தரப்பட்டது. நாகையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அன்னை மணியம்மையார் தலைமையில் மாநாட்டுத் திறப்பாளர் பணி தரப்பட்டதை சிறப்பாகச் செய்தார்.

தந்தை பெரியார் பார்த்து மணமகன் ஏ.பி.ஜே.வுடன் 1956 நவம்பர் 4ஆம் தேதி திருச்சியில் பெரியார் மாளிகையில் அவர் தலைமையில், ஒரு மாநாடு போல திருமணம் நடைபெற்றது. சிங்கப்பூர் தமிழ் முரசில் மணத்திற்கு பணம் வாங்கும் பெரியார், பணம் தந்து நடத்திய திருமணம் என்று தலைப் பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.

திராவிடர் மாணவர் கழகத் தலைவராக இருந்த ஏ.பி. ஜனார்த்தனம் -மனோ ரஞ்சிதம் திருமணம் ஒரு ஜாதி மறுப்புத் திருமணம் திருமணத்திற்குப் பின் முரளி கபே மறியலில் கைது செய்யப்பட்டு மூன்று வாரம் அன்னை மணியம்மையாருடன் சென்னை சிறையில் இருந்தார். ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் சட்ட நகலைக் கொளுத்தி 1957 நவம்பர் 26இல் ஜனார்த்தனன் -_ மனோரஞ்சிதம் கைதாகி 6 மாதம் வேலூர் சிறையில் கடுஞ்காவல் சென்னை சிறையில் ஏ.பி. ஜனார்த்தனம் அவர்களுக்கு 9 மாதம் கடுங்காவல்.

விடுதலையான பின்னர் உடல் நலிந்த நிலையில் முதல் பெண் குழந்தை பிறந்து இறந்தது. 1961இல் இரண்டாவது பெண் குழந்தை. ஏ.பி.ஜே. அவர்கள் அரசியல் பாதைக்குச் சென்றாலும் தந்தை பெரி யாரின் தொண்டராக அய்யா இறக்கும் வரை அவரை வந்து பார்க்க தவறிய தில்லை. 1973 செப்டம்பர் 17அய்யாவின் பிறந்த நாளுக்கு மகள் வெண்ணிலா, மனைவி மனோரஞ்சிதத்துடன் வந்து அய்யாவைப் பார்த்துபேசி விட்டுச் சென்றார்.

1987இல் டார்ப்பிடோ ஏ.பி.ஜே. மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வந்த ஆசிரியர்அவர்கள் ஆறுதல் அளித்த துடன், மனோரஞ்சிதத்தை எப்போதும் போல இயக்க பணிகளுக்கு வாருங்கள் என்று அழைத்தார்கள். அன்றிலிருந்து எல்லா போராட்டங்களிலும் இன்று வரை பங்கேற்பதோடு ஆசிரியரோடு வேலூர் சிறையில் தோழர்களுடன் 5 வாரம் இருந்த வாய்ப்புபற்றி பெருமை யோடு நினைவு கூர்கிறார்.
மாநில மகளிரணிச் செயலாளர், கோட்டப் பிரச்சாரக் குழுத் தலைவர், மகளிரணி பிரச்சாரச் செயலாளர் போன்ற பொறுப்புகளை ஆசிரியர் தனக்கு தந்ததை மிகவும் பெருமையோடு எண்ணுகிறார்கள். பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார்.

75 வயது நிரம்பிய இவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் இந்த தமிழ் சமுதாயம் மூடநம்பிக்கை மதமாச்சர்யங்களில் இருந்து விடுபட்டு பகுத்தறிவு பெற்று இந்த விஞ்ஞான யுகத்தில் மற்ற நாட்டவரைப்போல தலை நிமிர்ந்து வாழ எத்துணை போராட்டங்கள் வந்தாலும் தன் உயிரையும் தரத் தயாராக இருக்கிறார்.

எத்துணைத் துன்பங்கள் தொல் லைகள் வந்தாலும் தந்தை பெரியாரின் பகுத்தறிவும், தந்தை பொன்னுசாமி அளித்த துணிவும், ஆசிரியர் அவர்களின் அன்பான ஆலோசனைகளும் வழிகாட் டுதலும் தன்னை நிம்மதியாக வாழச் செய்கிறது என்று பெருமிதத்தோடு கூறும் இவரின் வாழ்க்கை மற்றவர் களுக்கு ஓர் எடுத்துக்காட்டல்லவா!

(உள்ளத்திற்கினியவர்)

- விடுதலை ஞாயிறுமலர் 20.12.2008

Read more: http://viduthalai.in/page2/93839.html#ixzz3NlOLfkK0

தமிழ் ஓவியா said...

யார் இந்த அய்ரோம் ஷர்மிளா?

மணிப்பூரின் இரும்புப்பெண் என்று அழைக்கப்படும் அய்ரோம் சானு ஷர்மிளா என்பவர் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 2000-ஆம் ஆண்டு உண்ணா நிலைப் போராட் டத்தை தொடங்கினார்.

தனது 28ஆவது வயதில் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியதில் இருந்து, துளி நீர்கூட பருகாமல் கடந்த 14 ஆண்டுகளாக பட்டினி கிடந்து, காந்திய வழியில் போராடி உலகின் கவனத்தை இவர் ஈர்த்தார்.

மணிப்பூர் மாநில தலைநகர் இம் பால் விமான நிலையம் அருகே கடந்த 2000ஆம் ஆண்டு பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த 10 அப்பாவி பொதுமக்களை அசாம் ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

அப்பாவி மக்களை விசாரணை இன்றி சுட்டுக்கொல்லும் வகையில் ராணுவத்தினருக்கு தனி அதிகாரம் வழங்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்ரோம் ஷர்மிளா என்ற பெண் கடந்த 14 ஆண்டுகளாக தொடர் உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.

மணிப்பூர் மாநில அரசால் தற் கொலைக்கு முயன்றதாக குற்றம்சாடடி அவரை கைது செய்த போலீசார் இம்பாலில் உள்ள ஜவர்ஹர்லால் நேரு மருத்துவமனையில் ஷர்மிளாவை அனுமதித்து, பலவந்தமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அவர் 14 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருகிறார்.

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் உள்ள பல்வேறு மக்கள் உரிமை இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் இவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இருப்பினும், உண்ணாநிலை போராட்டம் கைவிடும் படி வலியுறுத்திய பலரது கோரிக்கையை ஏற்க ஷர்மிளா மறுத்துவிட்டார்.

மனித உரிமை போராளிகளுக்கான குவாஞ்சு விருது, மயிலம்மா விருது, 51 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசுடன் கூடிய ரவீந்திரநாத் தாகூர் விருது உள்ளிட்ட பல விருதுகள் ஷர்மிளாவுக்கு வழங்கப் பட்டது. ஆனால், தனது கோரிக்கையை ஏற்று ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை மத்திய அரசு நீக்கும் வரை எந்த விருதையும் ஏற்றுக்கொள்வ தில்லை என்ற முடிவில் ஷர்மிளா உறுதியாக உள்ளார்.

ஒவ்வொரு முறை விடுதலையாவதும், பின்னர் மீண்டும் உண்ணாநிலை போராட்டம் நடத்துவதும், மீண்டும் காவல்துறை கைது செய்வதுமாக சட்டத்துக்கும் போராட்டத்துக்கும் இடையே நடைபெறும் கண்ணாமூச்சி ஆட்ட மாக சமூகப்போராளி ஐரோம் ஷர்மிளாவின் வாழ்க்கை இருந்து வருகின்றது.

இந்திய தண்டனைச்சட்டம் 309-இன் கீழ் பட்டினிப் போராட்டம் நடத்துவது அல்லது வேறெந்த வகையிலாவது தற்கொலைக்கு முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிக பட்சமாக ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகின்றது.

இதே சட்டத்தின்கீழ் 14 தற்கொலை முயற்சி வழக்குகளில் கடந்த 14 ஆண்டு களாக அய்ரோம் ஷர்மிளா தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்கொலை முயற்சிக்கு தண்டனை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த உத்தரவை மேற்கோள் காட்டி இந்திய தண் டனைச் சட்டம் 309-அய் விரைவில் மத்திய அரசு ரத்து செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாநிலங்களும், 4 யூனியன் பிரதேசங்களும் ஆதரவளித்த தால், சட்டப்பிரிவு 309-அய் நீக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என போராடி வரும் அய் ரோம் ஷர்மிளா விரைவில் விடுதலை ஆவார் என நாடு முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்திய தண்டனைச்சட்டம் 309 என்பது அய்ரோம் ஷர்மிளாவின் அரசி யல் போராட்டத்தை கிரிமினல் நட வடிக்கையாக சித்தரித்து விட்டது. இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டு விடுதலை யானாலும், தனது போராட்டத்தில் இருந்து பின் வாங்கமாட்டார் என அவரது வழக்குரைஞர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அய்ரோம் ஷர் மிளாவை உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச பொது மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, சர்வதேச பொது மன்னிப்பு சபைக்கான இந்திய பிரதிநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில், உலகளாவிய அளவில் எழுந்து வரும் கோரிக்கையையடுத்து, தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய சட்டமல்ல என்று மத்திய அரசு முடிவு செய் துள்ளது. இந்த முடிவையொட்டி, அமைதியான முறையில் தனது கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தியதற்காக கைது செய்து காவலில் வைத்துள்ள அய்ரோம் ஷர்மிளாவை உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் மணிப்பூர் மற்றும் டெல்லி காவலர் கைவிட வேண்டும். அவர் முன்வைக்கும் கோரிக்கை என்ன? என்பதை ஆய்வு செய்து, அதை நிறை வேற்றி வைக்கவும் முயல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page3/93840.html#ixzz3NlOjMlZN

தமிழ் ஓவியா said...

பேய்கள் செய்த படுகொலைகளுக்கு அஞ்சலி செலுத்தின பிசாசுகள்

யாருக்காக நான் அழ.....?
பாமியான் புத்தர் சிலையை
பீரங்கியால் பிளந்தவர்கள்
பள்ளிக் குழந்தைகளை
துப்பாக்கியால் துளைத்தார்கள்
இரண்டுமே இஸ்லாத்தின்
புனிதப் போரென்று
பெருமையும் தான் பட்டார்கள்.
பக்கத்து நாட்டினிலோ
பாபர் மசூதி இடித்து
பகை நஞ்சை விதைத்தவர்கள்
கொழுக்கட்டைப் பிள்ளையாரை
கொலைக் கருவி ஆக்கியவர்கள்
பெஷாவர் பிள்ளைகளுக்கு
அவசர அவசரமாய்
அஞ்சலி என்று சொன்னார்கள்
இந்தியாவை இடித்து
இந்துராஷ்டிரம் அமைப்பவர்கள்

அண்டை நாட்டின்
அல்லாவின் கொலைகளுக்கு
அனுதாபம் சொரிந்தார்கள்
பேய்கள் செய்த படுகொலைகளுக்கு
அஞ்சலி செலுத்தின பிசாசுகள்
சந்தடி சாக்கில்
வந்ததொரு அறிவிப்பு
இனி பகவத் கீதையே
இந்தியாவின் புனித நூலென்னும்
புத்தம் புது கண்டுபிடிப்பு
தயங்காமல் கொல்
தமையனையும் கொல்
எனும் உபதேசம் புனிதமென்றால்
எதற்கிந்த அஞ்சலிகள்?
ஏனிந்த நீலிக் கண்ணீர்?
எங்கிருந்து வந்தது உம் அனுதாபம்?
கீதை உபதேசித்ததை
குரான் செய்து முடித்திருக்கிறது?
பாராட்ட வேண்டாமா
எதற்காக கண்ணீர்?
கிறிஸ்துமஸ் விடுமுறையில்
குதூகலிக்கும்
குழந்தைகளை
கொண்டாட்டத்தை நிறுத்து
எம்அரசின் புகழ்பாடி
கட்டுரைகள் எழுதுஎன
கட்டளை இட்டவர்கள்
கொடுங்கோன்மை செய்பவர்கள்
குழந்தைகள் கொலைக்காக
சிந்துவது கண்ணீரா?
அனுஷ்டிப்பது அஞ்சலியா?
காட்டுவது அனுதாபமா?
அரசியல்! அரசியல்!!
எல்லாம் அரசியல்!!!
குழந்தைகள் கொலைகூட
கேவலமானது அரசியலால்.
பேய்கள் அரசாண்டால்
பிணந்தின்னும் சாத்திரங்கள்
என்றதுவும் இதைத் தானோ?
குரானின் ஜிகாத்தும்,
கண்ணனின் கீதையும்
ஏசுவின் பைபிளும்,
சீக்கியம்
இன்னுமுள்ள
ஏராள மதங்களும்
அவற்றால் ஆன பெரிய
புனித நூல்களும்
கொல், கொல், கொல்லென்றும்
கொல்வது மதக் கடமையென்றும்
எதிரியை மட்டுமல்ல
அவர் வீட்டுக் குழவியையும்
விட்டுவிடாமல் கொல்லென்றும்
உபதேசித்தும்
உருவேற்றியும்
சொல்லியும் செய்தும்
காட்டிய பின்னும்
இவையெல்லாம்
புனிதமென்றும்
போற்றத்தக்க
நூல்களென்றும்
மனிதனை மேம்படுத்தும்
தேவ வாக்கென்றும்
எதைக் கொண்டு
என் பிள்ளைக்கு
நான் சொல்ல?
துள்ளித் திரியும்
பிள்ளைகளைவிட
புனிதம் என்று
ஒன்றுண்டா
இந்த பூமியிலே?
அந்த புனிதங்களை
சுட்டுப் பொசுக்கிய,
பிணங்களாக்கிய
புல்லர்களை
பிள்ளைக் கறி சமைத்த மாபாதகரை
கண்டிக்க வார்த்தையுண்டா?
தண்டிக்கத்தான் வழியுண்டா?
கொலையை தடுக்காதமதமும்
குழந்தையை காக்காத கடவுளும்
மழலைக்கு மயங்காத மனிதனும்
இருந்தென்ன? இறந்தென்ன?
இதில்யாருக்காக நான் அழ?
குழவியைக் கொன்ற
மதத்தின் மரணத்துக்கா?
காக்க மறுத்த
கடவுளின் சாவுக்கா?
மழலையைக் கொன்ற
மனிதமிருகத்தின் மறைவுக்கா?
இல்லை இந்த மூன்றின்
கூட்டுக் கொலை வெறியால்
துள்ளத் துடிக்க
கொடூரமாய் மரணித்த
மழலைகளின் மறைவுக்கா?
காணாமல் போன அவர்தம்
கள்ளமில்லாச் சிரிப்புக்கா?

(முக நூலில் இருந்து: எல்.ஆர்.ஜெகதீசன்)

Read more: http://viduthalai.in/page3/93841.html#ixzz3NlOrCI8d

தமிழ் ஓவியா said...

புதுக்கோட்டையில் பிள்ளையாரும் அரசுத் துறைகள் பட்டபாடும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகத் தால் அரசுத்துறைகள் படாதபாடுபட்டு வருகிறது.

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்த ஈழத் தமிழர்களில் பலர் புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள மூன்று முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அவர்களில் அழியா நிலை மற்றும் லெனாவிலக்கு ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் உள்ள வர்கள் கொஞ்சம் அமைதியாய் இருக்க தோப்புக்கொல்லை அகதிகள் முகாம் களில் உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து அரசுத்துறைகளுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக முகாம் வளாகத்துக்குள் சுமார் பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான அளவில் ஒரு பிள்ளையார் கோவில் கட்டினார்கள். அந்தக் கோவிலுக்கு 27.11.2014-அன்று கும்பாபிஷேகம் செய்வதற்கு நாள் குறிக்கப்பட்டது. அவாளின் ஏற்பாட் டின்படி 25-ஆம் தேதி மாலையே முதல் யாகசாலை கணபதி ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதையும் ஐந்து பார்ப்பனர்கள் முன்னின்று ஹோமம் நடத்தியிருக்கிறார்கள்.

அதற்கிடையில் நவம்பர் 26 மற்றும் 27- ஆகிய தேதிகளில் விடுதலைப்புலி களின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா மற்றும் மாவீரர்தின விழாக்கள் கொண்டாடும் விதமாக தமிழகமெங்கும் பாதாகைகள் வைக்கப்பட அதனை காவல்துறை அகற்றும் படலங்கள் தொடர்ந்தன. மேலும் பொதுக் கூட் டங்கள் அஞ்சலிக்கூட்டங்கள் நடத்த அனுமதிகள் கேட்டபோது காவல்துறை மறுத்ததோடு புதுக்கோட்டை மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரபாகரன் படம் அச்சிடப்பட்டு வைக்கப் பட்ட பதாகைகளை காவல்துறையினர் எடுத்துச் சென்று விட்டனர். அது குறித்த பிரச்சினைகள் பற்றி ஆங் காங்கே பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த வேளையில் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி கிடையாது என்று மறுத்து விட்ட காவல்துறைக்கு தோப்புக்கொல்லை அகதிகள் முகாமில் மாவீரர் தினத்தன்றுதான் கும்பபிஷே கம் நடக்க இருக்கிறது என்பது நினைவுக்கு வந்திருக்கிறது.

தமிழ் ஓவியா said...


அதனால் மிகவும் தாமதமாக விழித்துக் கொண்டதாக நினைத்துக் கொண்டு தோப்புக்கொல்லை அகதிகள் முகாமிற்கு இரவு ஒன்பது மணிக்கு விரைந்தது. அங்கு யாகசாலையில் இருந்த அய்ந்து பார்ப்பனர்களை காவலர்கள் அள்ளிக் கொண்டு காவல் நிலையம் சென்று விட்டனர். அங்கு கொண்டு சென்று விசாரணை மேற் கொண்டு இனிமேல் தோப்புக்கொல்லை அகதிகள் முகாம் பிள்ளையார் கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய மாட் டோம் என்று உறுதிமொழி பெற்றுக் கொண்டு மறுநாள் காலையில் விடுவித்து விட்டனர்.

பார்ப்பனர்கள் எப்போதும் பிரச் சினையில் சிக்கிக் கொள்ளவோ அத னால் காலவிரயம் செய்யவோ விரும்புவதில்லை. ஆனால் தந்திரமாகச் சில வேலைகளைச் செய்வார்கள். இந்தப் பிரச்சினையிலும் அதைத்தான் செய் தார்கள். ஆம் காவல் நிலையத்திலிருந்து வெளியில் வந்ததும் முகாம்வாசிகளிடம் நடந்ததை எடுத்துச் சொன்னதோடு யாகசாலை பூஜைகள் பாதியில் நிறுத்தப் பட்டதால் அதனால் ஊருக்குக் கெடுதல் வரும் என்றும் அதைத் தடுத்து நிறுத்த யாராலும் முடியாது என்று சொல்லி விட்ட பத்து நிமிடத்தில் முகா மில் வாழும் ஆண்கள் பெண்கள் அனைவரும் வந்து சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டம்வரை பேச்சு வார்த்தை நடத்தி விவரத்தை எடுத்துச் சொன்னது. அதன்படி 26, 27 தேதிகளுக்குப் பின் ஒரு நாளைக்குக் கும்பாபிஷேகம் நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தது. அதை ஏற்க மறுத்த முகாம் வாசிகள் தொடர்ந்து சாலைமறியல் செய்தனர். ஒரு கட்டத்திற்குப் பிறகு தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்த தோடு 84- பேரை காவல்துறை அள்ளிச் சென்றது. அதன்பிறகு பாக்கியிருந்த வர்கள் தத்தமது வீடுகளுக்குள் சென்று விட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், தொடர்ந்து பதற்றம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட அனைவரும் குவிந்ததோடு நூற்றுக் கணக்கான காவலர்களையும் கொண்டு வந்து நிறுத்தி வைத்து விட்டார்கள். இப்போது இரு துறைகளும் சேர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகின்றன.

அதாவது கோவில் கட்டும்போதே அதனைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண் டும்.

ஆனால் வழிபாட்டு உரிமை என்று விட்டுக் கொடுத்தாயிற்று. அதன்பிறகோ ஊர் முழுவதும் வசூல் செய்த போதாவது தடை செய்திருக்க வேண்டும். அதையும் விட்டு விட்டு இப்போது கும்பாபிஷேக நேரத்தில் தடுத்து விட்டதால் காவல்துறை அதிகாரிகளும் சரி வருவாய்த்துறை அதிகாரிகளும் சரி பக்தி மார்க்கத்தில் ஊறிப்போய்க் கிடப்பதால் கடவுள் சக்திக்குப் பயந்து நமக்கென்ன என்று இருந்து விடுகிறார்கள். அதனால் இப்போது குத்துது, குடையுது என்று சொல்லி தலைவலியை இழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறாரகள்.

இதில் கொடுமை என்னவென்றால் பிள்ளையாருக்கும் பிரபாகரனுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் சிந்திக்க வில்லை. இப்போது பிள்ளையார் கோவில் கட்டியிருக்கும் இடத்தில் ஒரு கல்விக்கூடம் இருந்தது அதை எடுத்து விட்டு கோவில் கட்டி வைத்திருக் கிறார்கள் என்பதையும் சிந்திக்க மறுக் கிறார்கள்.

கல்விக்கூடம் இருந்தால் சிந்திப்பார்கள். ஆனால், அதை எடுத்து விட்டு கோவில் கட்டினால் அறிவு வளர்ச்சிக்குப் பதிலாக காட்டு மிராண்டித்தனம் வளரும் என்பதையும் மறந்து விட்டார்கள். காட்டுமிராண் டித்தனம் வந்து காவல்துறையையும் அரசு இயந்திரங்களையும் அசைத்துப் பார்க்கிறார்கள். அந்தப் பிள்ளையார் கோவிலால் முக்கியமான இரண்டு துறைகளும் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறது.

- ம.மு.கண்ணன்

Read more: http://viduthalai.in/page4/93842.html#ixzz3NlP5cXlr

தமிழ் ஓவியா said...

கல் முதலாளி


திருப்பதி கோவிலில் 1975-ஆம் ஆண்டு முதல் தன்னிச்சையாக கோவில் நிர்வாகம் உண்டியல் வருமானம் மட்டும் தனியாக வரவில் வைக்கப்பட்டது. தினந்தோறும் எண்ணப்படும் பணம் அன்றைய தினமே வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. 1975-76-ஆம் ஆண்டில் ரூ.5.84 கோடியாக இருந்த உண்டியல் வருமானம், 1985-86-ம் ஆண்டில் ரூ.15.86 கோடியாக அதிகரித்தது. இது 1995-96-ல் ரூ.85.06 கோடியாகவும், 2005-06-ல் ரூ.307 கோடியாகவும் அதிகரித்தது. 2005-ம் ஆண்டுக்குப் பிறகு உண்டியல் வருமானம் சராசரியாக நாளொன்றுக்கு ரூ.1 கோடியாக இருந்தது.

பின்னர் அதிகரிக்கத் தொடங்கி, 2010-11-ல் ஆண்டுக்கு ரூ.675.85 கோடியாகவும், 2011-12-ல் ரூ.782.23 கோடியாகவும் வருமானம் அதிகரித்தது. இது 2012-13-ல் ரூ.859 கோடியானது. 2013-14-ல்(ஜுலை மாதம் 2014-வரை) உண்டியல் வருமானம் ரூ.950 கோடியை வங்கியில் டெபாசிட் வைக்கப்பட்டது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கடவுள் பணம் வாங்கிக் கொண்டுதான் அருள் பாலிக்குமா?

Read more: http://viduthalai.in/page4/93843.html#ixzz3NlPDE1H4

தமிழ் ஓவியா said...

மூடத்தனத்திற்கு முடிவுகட்டி கொசுவை ஒழிப்போம்


இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்திருக்கிறது. எதிர் பார்த்த அளவு இல்லையென்றாலும் சில பாதகங்களை ஏற்படுத்தும் அளவிற்கு மழை பெய்திருக்கிறது. ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு, பயிர்கள் சேதம், சாலைகள் வாய்க்கால்களாகவும் மழைநீர்தேங்கும் செயற்கை தொட்டி களாகவும் திகழும் அவலம் போன்றவை. இவையெல்லாம் மழைபெய்த சில நாட்கள் வரை நாம் கண்கூடாக பார்க் கும் ஒன்று, பிறகு எப்போதும் போல் செய்தித்தாள்களில் இருந்து இவை அனைத்தும் காணாமல் போகும். ஆனால் மார்ச் அல்லது மே மாத துவக்கம் வரை தமிழகம் முழுமையுமக தொல்லை கொடுக்கும் ஒன்று கொசு. ஏழை பணக்காரன் மாடிவீட்டுக்காரர், குடிசை, சொந்தவீடு வைத்திருப்பவர், வாடகைக்காரர் என அனைவரையும் சமமாக கடித்து தன் வயிற்றை வளர்க்கும் ஒரே உயிரினம் கொசு மட்டுமே.

நாகரீக வளர்சிக்கு ஏற்ப கொசுவினால் வரும் நோய்களின் எண்ணிக்கையும் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் கொசுவினால் மலேரியா வரும் என்று தான் மருத்துவர்கள் கூறக்கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் தற்போது 28 விதமான நோய்கள் வருகிறது, அதில் டெங்கு காய்ச்சல் ஒன்று. இதில் 10க்கும் மேற்பட்ட நோயின் பாதிப்பால் மரணம் ஏற்படுகிறது, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் டெங்குவினால் ஆண்டுக்கு 200-க்கும் மேற்பட்ட மரணங்கள் ஏற் படுகிறது. சொல்லிவைத்தார்ப்போன்று இந்த ஆண்டு மழைத்துவங்கிய பிறகு 2014-ல் மதுரை 2, சென்னை 1, கோவை 3, திருநெல்வேலி 1, திருச்சி 1, காஞ்சீபுரம் 1 என மழையினால் ஏற்பட்ட நோயின் பாதிப்பால் மரணமடைந்ததை மாநக ராட்சி மருத்துவமனை அட்டவனை காட்டிவிட்டது. இந்த மரணங்கள் டெங்குவினால் இருக்க அதிகவாய்ப் புள்ளது. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என நமது அவ்வைப் பாட்டி கூறியுள்ளார். இவ்வளவு அரிய மானுடப்பிறப்பை ஒரு சாதாரன கொசுவின் கடியால் இழந்து நிற்கலாமா? நீல்ஸ்கெயின் என்ற பிரபல வானியல் அறிஞர் கூறுகிறார். நமது பெருவெளி (பிரபஞ்சம்) கடிகாரத்தின் படி நமது புவி யின் காலம் வெறும் 0.7 மணித்துளிகள் தான். அப்படியென்றான்றால் நாம் வாழும் இந்த சில ஆண்டுகள் கணக்கு?! இவ்வளவு அரிய வாழ்க்கையை நாம் உணராமல் ஒரு சாதாரண கொசுவிடம் தோற்று உயிர்விடலாமா? அல்லது கொசுவின் கடியால் நிம்மதியான தூக்கத்தை இழக்கலாமா?

தமிழ் ஓவியா said...


கொசுவின் உற்பத்தித்தளம்

பொதுவாக நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் கொசுவின் உற்பத்தித்தளம், தண்ணீர் இருக்கும் பகுதி மற்றும் ஈரப் பதமான பகுதி. மழைக்காலம் என்றவுடன் தண்ணீர் தேங்கும் அனைத்து பகுதியும் கொசுவின் உற்பத்தி தளமாகிவிடுகிறது. பொதுவாக கொசு முட்டையில் உள்ள சில நொதிகள் சுமார் இரண்டு ஆண்டு வரை வறட்சியைத் தாங்கக்கூடியவை, அதாவது இரண்டு ஆண்டுகள் வரை நீர் எதுவும் கிடைக்காத நிலையில் புழுதியோடு புழுதியாக கலந்து தூசி, மண், ஏன் நமது வீட்டு அலமாரியின் இடுக்குகளில் கூட அமைதியாக உறங்கிக் கொண்டு இருக்கும். இந்த முட்டை பொறிப்பதற்கு தேவை தண்ணீர், மழையில் நனைந்த மறுவினாடியே கொசுமுட்டை தனது பணியை ஆரம்பித்துவிடுகிறது. அதுவும் எந்த ஒரு தாமதமும் இன்றி, அப்படி பொறித்த பெண்கொசுவின் முதல் பணி தனது அடுத்த தலைமுறை கொசுவை உற்பத்தி செய்ய தேவையான புரதச்சேகரிப்பு. அந்தப்புரதம் மனித ரத்தங்களில் அதிகம் இருப்பதால் நேரடியாக நமது ரத்தத்தை உறிஞ்ச ஆரம்பித்து விடுகிறது, அப்படி உறிஞ்சும் போது தனது உடலில் உள்ள நோய்பரப்பும் கிருமிகளை நமது உடலில் செலுத்தி விடுகிறது, இந்த நோய் பரப்பும் கிருமிகள் கொசுக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, காரணம் கொசுவின் உடலில் மிகவும் குறைந்த அளவு இருக்கும் இந்தக் கிருமிகள் மனித ரத்ததில் கலந்த உடன் பல்கிப் பெருக ஆரம்பித்து விடுகின்றன

தமிழ் ஓவியா said...

. அப்படி பெருகிய கிருமிகள் மனிதர்களின் நாளமில்லாச்சுரப்பிகளையும், நரம்பு மண்டலத்தையும் கடுமையாக பாதிக் கின்றன. இதற்கு நாம் கொடுக்கும் விலை மரணம். மும்பையில் உள்ள டாடாசமூக அறிவியல் ஆராய்ச்சி கல்வி மய்யத்தின் சில மாணவர் குழுக்கள் முக்கிய நகரங்களில் எடுத்த புள்ளிவிபரப்படி கொசுவில் இருந்து தப்பிக்க ஆண்டிற்கு சராசரியாக அய்ந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை செலவுசெய்கிறார்கள். அதாவது மின்கொசுவிரட்டி, பூச்சுக் களிம்பு, கொசுவர்த்திச்சுருள், போன்ற வற்றை வாங்குவதற்குத்தான் ஆண்டிற்கு பத்தாயிரம் வரை செலவுசெய்கிறான் சாதாரண நடுத்தர வர்க்கத்து இந்தியன். அதாவது சராசரியாக ஒருலட்சத்து இருபதாயிரம் வரை வருமாணம் ஈட்டும் சராசரி இந்தியன் கொசுவிற்காக மாத்திரம் பத்தாயிரம் ரூபாயை செலவு செய்கிறான். (அப்படி செய்தும் கொசு நம்மை விட்ட பாடில்லை) கொசுவை வீட்டிற்கு வரவேற்கும் விருந்தாளிகள் வள்ளுவன் விருந்தோம்பலை மனித குலத்திற்காகக் கூறினார். ஆனால் நாம் தற்போது நகரவாழ்க்கையில் விருந்தோம் பலின் அடிச்சுவடை அழித்துவிட்டோம். ஆனால் கொசுவை வீட்டின் படுக்கை அறைவரை வரவேற்க நமது மூட நம்பிக்கை கைகொடுக்கிறது.

தமிழ் ஓவியா said...

ஆம் சமூக அக்கறையின்றி வீட்டின் வெளியே தண்ணீர் தேங்குவதை கண்டு கொள் ளாமல் இருக்கும் நாம் வீட்டின் உள்ளேயே கொசுவிற்கு நல்ல வசதிகள் செய்து கொடுக்கிறோம். சென்னை நகரைப் பொருத்தவரை பல்வேறு வியா பாரத்தளங்களில், மருத்துவமனைகளில், உணவகங்களில் ஒரு பெரிய, சிறிய தாமிரப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிலவண்ண மலர்களை வைத் திருப்பார்கள். அதுஏன் என்று கேட்டல் இன்னதேதியில் குறிப்பிட்ட வண்ண மலர்களை வைத்தால் வாடிக்கையாளர் கள் ஓடி ஓடி வருவார்களாம் அதுவும் யார் சொன்னார்கள் என்றால் சோதி டரையோ அல்லது எட்டி நின்று திரு நீரை உள்ளங்கையில் வீசும் பூசாரியையோ சுட்டிக்காட்டுவார்கள். பிறகு ஏன் கோடிக்கணக்கில் பிரபல நடிகர்களை விட்டு தொலைக்காட்சியில் பப்பரபப்பரபயிங் என விளம்பரம் செய்கிறீர்கள் என்று கேட்டால் அதற்கு சரியான பதில் இல்லை. நமது நடுத்தர வர்க்கத்தினர் நல்லவற்றை எப்போதும் ஏற்றுக்கொள்ள ஆயிரம் முறை சிந்திப் பார்கள், ஆனால் முட்டாள்தனத்தை தயவு தாட்சண்யம் காட்டாமல் உடனே ஏற்றுக்கொள்வார்கள். அதுபோல் தான் இந்த சட்டியில் பூவைக்கும் சமாச் சாரமும் தற்போது கிட்டத்தட்ட எல்லா விட்டிலும் ஒரு அறைவிடாமல் சட்டியில் தண்ணீர் ஊற்றி அதில் பூவை மிதக்க விடும் பழக்கம் வந்துவிட்டது, சரி கடைக் காரன் தான் வாடிக்கையாளருக்காக வைக்கிறான். நீ எதற்கு என்றால் பதிலாக லட்சுமி(அதாவது) பணம் கொட்டும் என்கிறான்.பிறகு எதுக்கு வேலைக்கு போய் சிரமப்படுகிறாய் பேசாமல் வீட்டில் உள்ள அனைத்து பழைய பாத் திரத்தில் தண்ணீர் ஊற்றில் பூவைப் போட்டுவைத்தால் காசு அதுதான் லட்சுமி கொட்டோ கொட்டு என்று கொட்டுமே என்றால் அதற்கு பதிலில்லை. இந்த சட்டியில் பூவைக்கும் சமாச்சாரம், சீன புங்சுயி என்ற பெயரில் தண்ணீர் விட்டு அதில் மூங்கில் நாற்றை மிதக்கவிடும் சமாச்சாரம் இவை இரண்டும் கொசுவிற்கு நாமே அழகாக அமைத்து கொடுத்த ஹைடெக்பிரசவ விடுதிகள். அடுத்து நமது சமையலறை பொதுவாக கிராமப்புறங்களில் இரவு உணவு உண்ட பிறகு பாத்திரத்தை இருட்டு காரணமாக துலக்காமல் வாளி யில் போட்டுவிடுவார்கள். பிறகு காலை யில் வெளிச்சம் வந்த பிறகு விளக்கி காயவைத்து பயன்படுத்துவார்கள். நகரத்தில் நாம் அதையே பின்பற்ற ஆரம்பித்து விடுகிறோம்.

இரவு முழுவதும் சாப்பாட்டுப்பாத்திரத்தை பாத்திரம் கழுவும் இடத்தில் அப்படியே போட்டு விடுகிறோம். இது போதும் கொசு முட்டையிட சில நிமிடங்கள் போதும் முட்டை மூலையில் உள்ள நீர்த்துளியில் கூட பொறித்து லார்வா வெளிவந்துவிடும்.

நாமே கொசுவை மூடநம்பிக்கை, சோம்பேறித்தனத்தின் காரணமாக வீட்டிற்கு வளர்க்கிறோம். சோம்பேறி மற்றும் சமூக அக்கறையில்லா நிர்வாகம் சாலைகளில் கொசுவை வளர்க்கிறது.

அரசு நிர்வாகமும் சமூக அக்கறையில்லாத சுயநலமிக்க மனிதர் களும்சேர்ந்து கொசுவை வளர்த்துவிட்டு அதை ஒழிக்க கோடிக்கணக்கில் செலவு செய்கிறது, மும்பை மாநகராட்சி கொசுவை ஒழிக்க செய்யும் விளம்பரத் தொகை கோவா போன்ற சிறிய மாநி லங்களில் பாதி பட்ஜெட்டிற்குள் அடங்கிவிடும் என்றால் பாருங்கள். கொசுவை ஒழிக்க மிகவும் எளிய வழி முதலில் வீட்டில் மூடநம்பிக்கையுடன் வைத்திருக்கும் மூங்கில் நாற்று, பாத்திரத்தில் பூ போன்ற சமாச்சாரத்தை உடனே வீசுங்கள், அழகுக்கு செடி வைக்க வேண்டுமென்றால் தண்ணீரை அதிகம் உறிஞ்சி தண்ணுள் வைத்துக்கொள்ளும் நார்களைப் பயன்படுத்துங்கள் அப்பூந் தொட்டியினுள் எளிதில் கொசு புகா வண்ணம் ஜல்லடைகளினால் அடைத்து வையுங்கள். வீட்டில் கொசுவளர்ப்பை தடுத்துவிட்டால் வெளியிலிருந்து கொசு வருவதற்கான முதல் வழி நமது ஜன் னல்கள் தான். பொதுவாக நகரங்களில் வாடகைவீட்டில் வசிப்பவர்கள் ஜன்ன லுக்கு ஜல்லடை பொருத்துவதை தவிர்ப் பார்கள். சில வீட்டுக்காரகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இதற்கு ஒரே வழி பழைய கொசுவலையை ஜன்னல் அளவிற்கு கிழித்து ஒட்டும் டேப் அல்லது மெல்லிய சிற்றாணிகள் கொண்டு அடைத்துவிட்டால் தேவை யான போது எடுத்துவிடலாம், பிறகு மாட்டிக்கொள்ளலாம். இப்போழுது கொசு வீட்டிற்குள் வரவழி அத்தனையும் அடைந்துப் போகும், நாமும் நிம்மதியாய் தூங்கலாம். எல்லாவற்றையும் விட பத்தாயிரம் ரூபாய் சேமிப்பு தாய் மார்களே கவனத்தில் கொள்ளுங்கள்.

கொசுவை விரட்டுவோம், நோய் தவிர்ப்போம், மூடநம்பிக்கை ஒழிப்போம்.

- சரவணா இராஜேந்திரன்

Read more: http://viduthalai.in/page5/93844.html#ixzz3NlPo9Co9

தமிழ் ஓவியா said...

இவர்களிடம் சேர்ந்தால்...

ஒரு மிஸ்ஸுடு கால் கொடுத்தால், நாங்க வருவோம். வந்து எங்க கட்சியில் சேர்ப்போம் சொல்லுது பாஜக. இவங்கள்கிட்ட சேர்ந்தால் என்ன ஆகும்னு பாருங்க.

மாட்டு மூத்திரத்தில் கோலா, சோப்பு விற்கிறது விசுவ ஹிந்து பரிசத்.

நந்தினி பியூட்டி சோப் இதில் மாட்டு அதுவும் பசு மாட்டு மூத்திரத்தையும் சேர்த்து செய்தது.

லால் தந்த் மஞ்சன்: பசு மாட்டு சாணியை சேர்த்து செய்தது.

ஹார்டி சுர்னா லக்சாடிவ்: மாட்டு மூத்திரம் சேர்த்து செய்தது.

நந்தினி தோல் கிரீம் மாட்டு மூத்திரம் சேர்த்து செய்தது.

நந்தினி தூப் ஸ்டிக்ஸ்: மாட்டு சாணியை சேர்த்து செய்தது.

அனேகமாக, பசு மாட்டு மூத்திரம் நம் தேசிய டானிக்காக விரைவில் ஒரு அமைச்சரால் அறிவிக்கப்படலாம்.

- Indiatimes.com

Read more: http://viduthalai.in/page5/93845.html#ixzz3NlRKyc9n

தமிழ் ஓவியா said...

வடலூர் சத்திய ஞானசபையில் பார்ப்பனீய ஊருடுவல் வந்தது எப்படி?

- செய்யாறு இர.செங்கல்வராயன்

இராமலிங்க அடிகளார் (1823-_1874) வடலூர் 25.1.1872-இல் சத்திய ஞான சபையைத் தொடங்கியபேது ஜோதி வடிவிலேயே இறைவனை வழிபடும் முறையைத் தவிர வேறு வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படவில்லை. பார்ப் பனர் ஒருவர் வழிபட விரும்பினால்கூட அவர் தனது பூணூலை நீக்கி தன் சாதி அடையாளத்தைக் கைவிட்டே வழிபட வேண்டும்.

சபாபதி சிவாச்சாரியார் என்ற பார்ப்பனர் 2006 இல் சிவலிங்கம் ஒன்றை சத்திய ஞானசபையில் நிறுவினார்? பிரதோசம் அன்று அதற்கு வழிபாடு நிகழ்த்திப் பிரசாதங்களும் திருநீறும் வழங்கினார்!

சபாபதி பார்ப்பனரின் இச்செயல், வள்ளலாரின் கொள்கைகளுக்கு முரணா னது என்று, வள்ளலாரின் தொண்டர்கள் சிலர் இந்து அறநிலையத்துறையிடம் முறையீடு செய்தனர். இம்முறையீடே நீதியரசர் சந்துரு அவர்கள் தீர்ப்பு வழங்கிய வழக்காக அமைந்தது.

வள்ளலார் தொண்டர்கள் அளித்த மனுவில் இடம் பெற்றுள்ள செய்திகளின் அடிப்படையில் இவ்வழக்கில் பின்வரும் வினாக்களுக்கு விடைகாண வேண்டும் என்று இணை ஆணையர் முடிவு செய்தார். வினாக்கள் வருமாறு:

1) சத்திய ஞானசபை தொடங்கிய 25.1.1872 லிருந்து யார் சடங்குகளைத் தொடங்கியது?

2) உருவ வழிபாடு எப்போது தொடங் கியது? எப்போது சிவலிங்கம் நிறுவப் பட்டது?

3) இச்சடங்குகள் வள்ளலார் வகுத்த விதிமுறைகளுக்கு உட்பட்டனவா?

தமிழ் ஓவியா said...

18.7.1872 அன்று சமரச சுத்த சன்மார்க்க சபையை நிறுவியபோது வள்ளலார் வகுத்த விதிமுறைகளின் சாரத்தைப் பட்டியலிட்டு இவையே இச்சபையின் செயல்பாட்டுக்கான வழிகாட்டி என்று இணை ஆணையர் சுட்டிக்காட்டினார். அவை வருமாறு:

1) சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்தோர் வள்ளலார் வகுத்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

2) எண்ணெய் ஊற்றி எரியும் ஜோதியை தகர்த்தாலும் கண்ணாடியா லும் செய்யப்பட்ட பெட்டியில் வைத்துக்காட்ட வேண்டும்.

3) வேதம், ஆகமம், புராணம், இதி காசம் ஆகியவற்றில் அவர்கள் கொள்ளா திருக்க வேண்டும்.

4) சைவம், வைணவம், வேதாந்தம், சித் தாந்தம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லா திருக்க வேண்டும்.
இவ்விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கை ஆராய்ந்து, சிவாச் சாரியார் மேற்கொண்ட வழிபாட்டு முறையைத் தடைசெய்து இணை ஆணையர் உத்தரவிட்டார்.

இணை ஆணையரின் இத்தீர்ப்பை எதிர்த்து இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் சிவாச்சாரியார் மறு ஆய்வு மனுவை அளித்தார். மனுவில் பின் வரும் வாதங்களை அவர் முன்வைத்தார்.

1) தாம் நிறுவிய சத்திய ஞானசபையை சிவாலயமாகவே வள்ளலார் கருதினார்.

2) சிவாலய விதிப்படியே இதில் வழிபாடுகள் நிகழ்ந்தன.

3) சிவாச்சாரியாரின் முன்னோர்கள் சிவ ஆகம விதிப்படியே இதில் வழிபாடு களை நடத்தி வந்தனர்.

சபாபதி சிவாச்சரியாரின் மனுவை எதிர்த்து இராமநாதபுரம் மாவட்டம் புதுக்குடியைச் சேர்ந்த தொண்டல் குல வி.பெருமாள் என்பவர் எதிர்வாதங்கள் சிலவற்றை முன்வைத்தார். அவற்றில் முக்கியமானவை வருமாறு:

சைவ ஆகம விதிப்படி வழிபாட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்று வள்ளலார் எண்ணியிருந்தால் அதை சிவன் கோயிலாக நிறுவி இருப்பார். அதில் சிவலிங்கம் நிறுவப்பட்டிருக்க வேண்டும். சிவனுக்கு எதிராக நந்தி நிறுவப்பட்டிருக்க வேண்டும். சிவலிங்கம் ஒன்றை அங்கு நிறுவ உருவ வழிப் பாட்டை வள்ளலார் நிகழ்த்தியதற்கு வரலாற்றுச் சான்று எதுவுமில்லை.

சபாபதி சிவாச்சாரியாரின் மனுவைத் தள்ளுபடி செய்தும் இந்து அறநிலையத் துறை ஆணையர் தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன் றத்தில் சபாபதி சிவாச்சாரியார் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதியரசர் சந்துரு மனுதாரர் வைத்த விவாதங்களை ஏற்றுக்கொள்ளாது அவரது மனுவைத் தள்ளுபடி செய்து 24.3.2010 இல் தீர்ப்பு வழங்கினார்.

தமிழ் ஓவியா said...


தீர்ப்பின் தொடக்கத்தில் வள்ளலாரின் கொள்கையைக் குறித்த சில அறிமு கத்தைச் செய்துள்ளார். சாதி, சமயம், ஆகமம், வேதம் என்பனவற்றை வள்ள லார் ஏற்றுக்கொள்ளாததை வெளிப் படுத்தும் வழியாக சாதியும், மதமும், சமயமும் பொய் என் ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி என்ற பாடல் வரிகளை எடுத்துக்காட்டுகிறார்.

1865-ஆம் ஆண்டில் அன்றைய சென்னை மாநிலத்தில் நிகழ்ந்த கொடிய பஞ்சத்தால் மக்கள் பட்டினியால் வாடி யதுகண்டு வள்ளலார் பதைபதைத்ததும் தீர்ப்பில் இடம் பெறுகின்றன. இது வெறும் புலம்பலாக நின்றுவிடவில்லை.

1867-ஆம் ஆண்டில் வடலூரில் கஞ்சித் தொட்டி ஒன்றை அமைத்ததையும் அங்குள்ள அடுப்பில் அவர் ஏற்றிய நெருப்பு இன்று வரை அணையாது தொடர்வதையும், பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவளித்தலை உயரிய குணமாக வள்ளலார் கருதியதையும் நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன் பெற்றான் பொருள்வைப் புழி என்ற வள்ளுவரின் குறளுக்கு செயல் வடிவம் கொடுத்தவர் வள்ளலார்,

தீர்ப்பின் இறுதியில் சிந்தனைக்குரிய கருத்து ஒன்றையும் நீதியரசர் சந்துரு முன்வைத்துள்ளார். புத்தமதத்தைப் பின்பற்றும்படி மறைமுகமாக மக்களை வேண்டியுள்ளார் என்பதே அக்கருத் தாகும். இதற்குச் சான்றாக சாக்கிய வேதந் தேக்கிய பாதம் தாக்கிய ஏதம் போக்கிய பாதம்

புத்தந்தரும் யோதா வித்தந்தரும் தாதா நித்தந்தரும் பாதா சித்தந்திரும் பாதா என்ற வள்ளலாரின் பாடல் வரிகளை முன்வைக்கிறார்.

உருவம் இல்லாத வழிபாடும், நிறுவன சமய மறுப்பும் வள்ளலாருக்கு இக்காலத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்கு எதிரிகளை உருவாக்கியது போல் எதிரிகளை உருவாக்கின. அவரது எதிரிகள் அவருக்கு எதின பரப்புரையை மேற்கொண்டனர்.

வள்ளலாரின் பாடல்கள் திரு அருட்பா என்று அழைக்கப்படுவதை எதிர்த்து மருட்பா என்றழைத்தனர்.

இது தொடர்பாக 1869 இல் ஆறுமுக நாவலர் கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் தார். இறுதியில் வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

வள்ளலார் காலத்தில் தென்னார்க் காடு மாவட்ட ஆட்சியாளராக விளங்கிய கார்ஸ்டியன் என்ற ஆங்கிலேயர், புராணம், சாத்திரம் முதலியவற்றை அவர் கண்டித்ததைப் பொறுக்காத சமய வாதிகள் கற்பூரத்தை இட்டு அவர் எலும்புகூட கிட்டாவண்ணம் எரித்து விட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார் (விடுதலை 5.10.2011) மானமிகு கி.வீரமணி யார் 20.10.2013 அன்று திண்டிவனத்தில் பேசியது, ஒரு சமயம் விருதுநகரில் பெரும் பொதுக்கூட்டத்தில் பெரியார் ஆரி யத்தைத் தாக்கிப் பேசிக்கொண்டிருந்தார். நானும் அவர் அருகில் அமர்ந்திருந்தேன். ஆத்திரமடைந்த தோழர் ஒருவர் கனல் கக்கும் கண்களோடு தம் கத்தியை உருவிக்கொண்டு பெரியாரைக் குத்தி விட ஓடோடி வந்தார். அவரது கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் பெரியார்... அவரைத் தக்க பாதுகாப்போடு வீட்டிற்கு அனுப்பி வைத்தார். (விடுதலை 3.11.2013) பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் ஈடுபடும் தலைவர்கள் எவ்வளவு ஆபத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது.

Read more: http://viduthalai.in/page6/93846.html#ixzz3NlRYgIm3

தமிழ் ஓவியா said...

மோடியின் வராணாசி எதில் முன்னேற்றம்?

மோடி வெற்றிபெற்ற தொகுதியான வாரணாசியில் கருப்பையில் வளரும் குழந்தையை ஆணா? பெண்ணா? என அடையாளம் கண்டு பெண் என்றால் உடனே கருவைக் கலைத்து விடுவதும், இயலாத பட்சத்தில் பிறந்த உடனே கொலை செய்யும் பாதகச்செயல் கடந்த 4 மாதங்களில் ஒரு பணம் பார்க்கும் தொழிலாகவே மாறியுள்ளது. பிரதமர் மோடி நவீன டெக்னாலஜி வளர்ச்சிதான் நாட்டை முன்னுக்குக் கொண்டு செல்லும் என்று கூறியதுமல் லாமல், முஸ்லீம் தலித்துகள் இல்லாத ஜெயபூர் என்ற ஊரை தத்து எடுத்து சாலை எல்லாம் போட்டு வருகிறார். மோடியின் தொகுதி என்பதால் அதிக அளவு வங்கிக் கடன் மற்றும் இறக்குமதி உபகரணங்கள் அளவுக்குமீறி கொடுக்கப் பட்டு வருகிறது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வாரணாசி பகுதியில் சிறிய பெரிய மருத் துவமனைகளில் அதிக அளவு கருவி லேயே பாலினம் அடையாளம் கண்டு பிடிக்கும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இவை எல்லாம் கருவில் வளரும் சிசுவிற்கு என்ன நோய் இருக் கிறது என்று கண்டறிய வாங்கியவை அல்ல, கருவில் வளரும் சிசு ஆணா? பெண்ணா? எனக் கண்டறிந்து பெண் என்றால் கருவைக் கலைக்கவும், இயலாத பட்சத்தில் பிறந்த மறுநிமிடமே கொலை செய்யவும் தான் பயன்படுத் தப்படுகின்றன. இந்தப் பாதகமான செயல் எப்படி வெளி உலகத்திற்கு தெரியவந்தது என்றால் கடந்த இரண்டு மாதங்களாக வாரணாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் பெண் குழந்தை களின் பிறப்பு விகிதம் முற்றிலும் இல்லாமல் போனது, இதை ரகசியமாக கண்காணித்த சில தொண்டு அமைப்புகள் நேரடியாக களத்தில் இறங்கினர். சிறிய பெரிய மருத்துவமனைகளில் வெளியே உடல் சிதைந்த பெண் சிசுக்கள் பல வேதி திரவங்கள் பூசப்பட்டு புதைக்கப்பட்டது தெரியவந்தது.

முக்கியமாக லகோதா சந்திரபூர் போன்ற ஊர்களில் உள்ள மருத்துமனை களின் வெளியே பல்வேறு கொலை செய் யப்பட்ட சிசுக்களின் உடல்கள் தொண்டு அமைப்பினரால தோண்டி எடுக்கப் பட்டது. தொண்டு அமைப்பின் புகாரை அடுத்து மாவட்ட மாஜிஸ்ட்ரேட் சதர் அன்கித் அகர்வால் தலைமையில் மருத் துவர்கள் மற்றும் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் பல்வேறு மருத்து வமனைகளில் சோதனை நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான கருவில் வளரும் குழந்தை பாலின அடையாளம் காணும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் சரிவர இயங்காத பழுதடைந்த இயந்திரங்களாகும், மேலும் இவற்றை இயக்குபவர்கள் அனைவரும் சரிவர பயிற்சி பெறாதவர்கள் எனக் கண்டறியப்பட்டது.

முக்கியமாக சந்திரபூர் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட அரை டஜன் இயந்திரங்கள் முற்றிலும் பழுதடைந்த வைகளாக இருப்பது கண்டறியப்பட்டது. சிந்துகிரி பாக் பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை நடத்திய போது அந்தகடையில் பல்வேறு அல்ட்ரா சவுண்ட் போர்டபில் மெஷின் (சிறிய வகைபாலினபரிசோதனை கருவி) கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்தக் கடை நவீன உபகரணங்களை விற்க எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை. நகரம் முழுவதும் தற்போது மாஜிஸ்ட்ரேட் தலைமையில் சோதனை நடந்து வருகிறது. இப்பாதகச் செயல் தொடர்பாக இதுவரை யார் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விவகாரம் குறித்து சிசுக் கொலைப் பற்றிய உண்மையை வெளிக்கொணர்ந்த தொண்டு அமைப்புகளை பத்திரிகையா ளர்கள் தொடர்பு கொண்டபோது அவர்கள் எதுவும் பேச மறுத்துவிட்டனர்.

(நவபாரத் - இந்தி இதழ் 13.12.2004)

Read more: http://viduthalai.in/page7/93847.html#ixzz3NlRwwPJl

தமிழ் ஓவியா said...

தகவல் களஞ்சியம்

தையல் எந்திரத்தைக் கண்டறிந் தவர் மெட்ரிக்சிங்கர் இவர் இதைக் கண்டறிந்த விதம் மிக சுவாரசியமானது. தையல் எந்திரத்தின் எல்லாப் பாகங் களையும் கண்டறிந்த சிங்கர், ஊசியை மட்டும் அதில் எவ்வாறு பொருத்துவது என்று ரொம்பவே யோசித்தாராம். பின்னர் படுக்கைக்கு சென்றதும் ஒரு கனவு கண்டார். காட்டுவாசிகள் கூட்டம் கையில் கூர்மையான ஈட்டிகளுடன் அவரைச்சுற்றி நின்று நடனம் ஆடு கிறது. அந்த ஈட்டிகளின் முனைகளில் துளைகள் இருந்ததை பார்த்துவிட்டார். உடனே சிங்கருக்கு பொறி தட்டியது. அதன் மூலம் தையல் எந்திரத்தில் ஊசியை பொருத்தி தீர்வு கண்டார்

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல் டி.வி. அல்லது கணினித் திரையைப் பார்த்துக் கொண் டிருப்பவர்களுக்கு இதயநோய் ரிஸ்க் இரண்டு மடங்கு அதிகம்.

யானைகள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் தூங்குகின்றன. யானை ஒரே இடத்தில் தொடர்ந்து 8 மணி நேரம்கூட நிற்கும்.

(நூல்: அறிவியல் செய்திகள் களஞ்சியம்)

Read more: http://viduthalai.in/page7/93848.html#ixzz3NlS5Vutd

தமிழ் ஓவியா said...

இரண்டு பூஜ்ஜியங்கள் செய்த விளைவு

ஒரு பண்டிகை முடிந்த மறுநாளில் இருந்து, மீண்டும் அடுத்த ஆண்டு இந்த பண்டிகை எப்போது வரும்? என்ற ஏக்கம் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. அதிலும், குழந்தைகளுக்கோ... இந்த ஏக்கம் இரட்டிப்பாகி சதா சர்வநேரமும் இதே சிந்தனைதான் என்பதை குழந்தைகளாக இருந்து பெரியவர்களாக வளர்ந்த நமக்கு யாரும் சொல்லித்தான் புரிய வேண்டும் என்பதில்லை.

அவ்வகையில், இங்கிலாந்தின் பர்மிங்காம் பகுதியை சேர்ந்த டீன் பேக்கர் என்பவரின் 7 வயது மகளான ஏடன் கடந்த 364 நாட்களாக தனது கற் பனையில் ஆயிரமாயிரம் இன்பக்கனவு களை வளர்த்து வந்தாள். அடுத்த கிறிஸ் துமஸ் பண்டிகைக்கு அப்பா நமக்கு வகை, வகையாய் உடைகளை வாங்கித்தந்து மகிழ்விப்பார்.

கேளிக்கைப் பூங்காக்களுக்கு அழைத்து சென்று ராட்சத ராட்டினத் தில் சுற்ற வைப்பார். பனிச்சறுக்கு விளை யாடி குதூகலிக்கலாம். உயர்தர உணவு விடுதிக்கு சென்று நாமா? கோழியா? என்று ஒரு கை பார்க்கலாம் என்று ஏராள மான கற்பனைகளில் அவள் மிதந்தாள்.

தனது அன்புக்குழந்தைகளின் எல்லா ஆசையையும் தீர்த்து வைக்கும் அளவுக்கு டீன் பேக்கரும் வசதியானவர்தான். இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் பிறந்ததுமே அவரது வீட்டில் குதூகல வெள்ளம் பொங்கி வழிந்தது. கிறிஸ்துமஸ் மரம் வைத்து, இயேசு நாதரின் பிறப்பை சித் தரிக்கும் குடில் அமைத்து, 25-ஆம் தேதிக்காக குடும்பமே ஆவலுடன் காத்திருந்தது.

இதற்கிடையே, நண்பர்களுக்கு அனுப்ப வாழ்த்து அட்டைகளை வாங்குவதற்காக பர்மிங்காம் நகரின் எர்டிங்ட்டன் ஹை ஸ்ட்ரீட்டில் உள்ள கார்ட் பேக்டரி என்ற பரிசுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு கடந்த 22-ஆம் தேதி டீன் பேக்கர் சென்றார்.

தமிழ் ஓவியா said...

வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுப்பொருட்களை கிப்ட் பேக்கிங் செய்து அனுப்புவதற்கான பளபளப்பு காகிதம் ஆகியவற்றை தேர்வு செய்தார். மொத்தம் 5 பவுண்டு 94 பென்னிக்கு பொருட்களை வாங்கிய அவர் பணம் கட்டும் பகுதிக்கு வந்து தனது கிரெடிட் கார்டை கொடுத்தார். (ஒரு பவுண்டின் இந்திய மதிப்பு சுமார் 100 ரூபாய். பென்னி என்பது ஒரு ரூபாய்க்கான நூறு பைசாவை போன்றது)

காசாளர் பணியில் இருந்த பெண் அதை தேய்த்துப் பார்த்து விட்டு கார்டு சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி விட்டார். அந்த கார்டை வாங்கி இயந்திரத்தில் டீன் பேக்கர் தேய்த்தபோது எல்லாம் சரியாகவே இருந்தது. இப்போது, அந்த இயந்திரத்தில் வாங்கிய பொரு ளுக்கான தொகையை அந்த பெண் பதிவு செய்தார். டீன் பேக்கர் ரகசிய பின் நம்பரை அழுத்தினார். அதை கணினியும் ஏற்றுக்கொண்டது.

நாளை என்ன செய்யலாம்? என்ற திட்டத்துடன் டீன் பேக்கர் வீட்டுக்கு சென்றார்.

இரண்டு நாள் போனதே தெரியவில்லை. 24ஆ-ம் தேதி இரவு மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சர்ச்சுக்கு சென்ற அவர், அடுத்த ஒரு வாரத்தில் பிறக்கப்போகும் புத்தாண்டு நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என கர்த் தரை வேண்டிக்கொண்டார்.

தமிழ் ஓவியா said...


மறுநாள் பொழுதும் விடிந்தது. இங்கி லாந்தின் பர்மிங்காம் பகுதியில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

ஐ.டி. துறையில் பணியாற்றும் மனை வியையும் 7 வயது மகள் ஏடென் மற்றும் ஒன்றரை வயது மகள் ஹாரியட் ஆகியோரையும் காரில் ஏற்றிக்கொண்ட டீன் பேக்கர், நேராக அந்த பிரபல ஓட் டலுக்கு போய் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் அயிட்டங்களை ஆர்டர் செய்து இவர் களை திக்குமுக்காட வைக்க வேண்டும்.
அப்படியே, கிப்ட் ஷாப்புக்கு சென்று மிகப்பெரிய அன்பளிப்புகளை வாங்கித் தந்து அசத்தி விட வேண்டும் என்ற திட்டத்துடன் ஓட்டலுக்குள் நுழைந்த அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்தி ருந்தது. உணவுக்கான ஆர்டரை தந்து விட்டு சர்வரிடம் கார்டை நீட்டினார்.

பரிசுப்பொருள்களை பேக் செய்து அனுப்புவதற்காக கடந்த 22ஆ-ம் தேதி அவர் 59,400 பவுண்டுகளுக்கு பொருட்களை வாங்கியதாகவும், தற்போதைய நிலையில் வங்கிக்கு அவர் சுமார் 60 ஆயிரம் பவுண்டுகள் தர வேண்டிய நிலையில் மேற்கொண்டு அந்த கார்டின் மூலம் அவர் செலவு செய்ய அனுமதிக்க முடியாது என அங்கிருந்த ஸ்வைப்பிங் மெஷின் மனசாட்சியே இல்லாமல் தெரிவித்து விட்டது.

தனது திட்டங்கள் எல்லாம் தவிடுப்பொடியாகி விட்ட கவலையில் குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு எதுவுமே சாப்பிடாமல் ஓட்டலை விட்டு வெளியே வந்த அவர் நேராக கார்ட் பேக்டரி கடைக்குச்சென்று, இந்த கிறிஸ்துமஸ் எத்தனை சோதனையாக அமைந்தது என்பதை தெரிவித்து விளக்கம் கேட்டார்.

கேஷ் கவுன்ட்டரில் இருந்த புதிய பணிப்பெண் 5 பவுண்டு 94 பென்னிக்கு பதில் 59,400 பவுண்டுகள் என்று பூஜ்ஜியம் பொத்தான்களை இரண்டு முறை அதிகமாக அழுத்தியதால் இந்த தவறு (பொருள் வாங்கிய தொகையை விட பத்தாயிரம் மடங்கு அதிகம்) நேர்ந்து விட்டதாக கடை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த தவறு நடந்திருப்பது மறுநாளே கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதிகமாக பெற்றுக்கொண்ட தொகையினை வாடிக்கையாளரிடமே வழங்கி விடும்படி வங்கி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி யுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரி வித்தனர்.

ஆனால், வங்கி நிர்வாகமோ வரும் ஜனவரி 12-ம் தேதி வரை இந்த தொகையை விடுவிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இந்த குளறுபடி தொடர்பான செய் திகள் இங்கிலாந்து ஊடகங்களில் வெளி யாகி சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, டீன் பேக்கரின் கணக்கில் மேற்படி தொகை செலுத்தப்பட்டாகி விட்டதாக வங்கி அதிகாரிகள் தற்போது தெரிவித் துள்ளனர். யாரோ செய்த குளறுபடியால் இந்நிலை!
இது டீன் பேக்கருக்கு மட்டும் கிடைத்த அனுபவப்பாடமாக இருக்கட் டும். வேறு யாருக்கும் இதைப்போன்ற சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டு விடாமல் இருக்க, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளின் மூலமாக பொருட்களை வாங்கும்போது, பில் தொகையை ஒப்புக் கொண்டு பின் நம்பரை அழுத்துவதற்கு முன்னதாகவோ, கையொப்பமிடும் போதோ ஸ்வைப்பிங் மெஷினில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை சரியானது தானா? என்பதை ஒன்றுக்கு மூன்று முறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

Read more: http://viduthalai.in/page7/93849.html#ixzz3NlSGMMcr

தமிழ் ஓவியா said...

மோசமான 2014


2014 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 87 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். என சிபிஜே (பத்திரியாளர்களுக்கான் பாதுகாப்பு ஆணையகம்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் பத்திரிகைத் துறையைச்சார்ந்தவர்கள் தினசரி ஏதாவது ஒரு நெருக்கடிக்கு ஆளாகிக் கொண்டுள்ளனர். முக்கியமாக தென் அமெரிக்க நாடுகளில் உள்ள பத்திரிகை யாளர்கள், மற்றும் மத்திய ஆசிய நாடு களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் கடுமையான நெருக்கடியின் கீழ் பணியாற்றிவருகின்றனர். தென் அமெரிக்காவில் அர்ஜண் டைனா, பெரு போன்ற நாடுகளில் இந்த ஆண்டு 17 பத்திரிகையாளர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும், ஊழல் அரசியல்வாதிகளால் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், லிபியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதி களால் தலைவெட்டிக் கொலை செய்யப்பட்ட 8 பத்திரிகையாளர்களும் அடங்குவர். ஆப்கானில் அஞ்ச நிட் ரிங்கஸ் என்ற பத்திரிகையாளர் சித்திர வதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது உலகை உலுக்கிய சம்பவமாகும்.2011-ஆம் ஆண்டு 79 பத்திரிகையாளர்கள் கொல் லப்பட்டனர். இதனை அடுத்து இந்த ஆண்டு அதிக அளவில் கொல்லப்பட் டுள்ளனர். இந்தியா, சிறீலங்கா, பாகிஸ்தான், மற்றும் நேபாள் போன்ற் நாடுகளில் பத்திரிகையாளர்கள் கடும் நெருக்கடிகளுக்கு இடையே பணியாற்றி வருகின்றனர். இங்கு பத்திரிகையாளர் களுக்கு எதிராக நடக்கும் படுகொலைகள் திசை திருப்பப்பட்டுவிடுகின்றன. உக்ரைன் மற்றும் வடக்கு ஆப்ரிகக நாடுகளிலும் பத்திரிகையாளர்கள் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவருகின்றனர். காசாவின் மீதான இஸ்ரேல் தாக்குதலின் போது அசோஸியேசன் பிரஸ் நிறு வனத்தில் பத்திரிகையாளர்கள் சிமோன் கமிலி மற்றும் மொழிபெயர்ப்பாளர் அபு அஃபாஸ் இருவரையும் குறிவைத்து இஸ்ரேல் துருப்புகள் தாக்குதல் நடத்தியது.

எபோலா நோயின் தாக்குதலில் 3 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் எபோலா நோய் பற்றிய செய்தியை மக்களிடையே எடுத்துச்சென்ற மகத்தான பணியைச்செய்துள்ளனர். முக் கியமாக் உலகில் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்கள் பற்றிய முழுமையான தகவல் வெளி வரவில்லை, அல்லது அந்த அரசுகளால் அச்செய்தி மறைக்கப்படுகிறது. பத்திரி கையாளர்களின் மரணம் என்பது மக்கள் உரிமைகளின் மரணம் என்று நியூயார்க் நகரில் உள்ள தலைமையகத்தில் இருந்து சி.பி.ஜெ அமைப்பு வெளியிட்ட அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page7/93852.html#ixzz3NlSh9NSH

தமிழ் ஓவியா said...

பி.கே. திரைப்படத்தை இந்துத்துவவாதிகள் எதிர்ப்பது ஏன்?

பி.கே. திரைப்படத்தை இந்துத்துவவாதிகள் எதிர்ப்பது ஏன்?

இந்தியாவை காவிமயமாக்கும் முயற்சிதான் காரணம்

இந்து ஏடே அம்பலப்படுத்துகிறது


சென்னை, ஜன.3_ பி.கே. என்ற முற்போக்கு எண்ணம் கொண்ட திரைப்படத்தை இந்துத் துவவாதிகள் எதிர்ப்பதற்கு முக்கிய காரணமே இந்தியாவை இந்துத்துவாவாக்கும் முயற்சி அதிகரித்து வருவதுதான் என்று இந்து ஆங்கில ஏட்டில் வெளி வந்துள்ள கட்டுரை தோலுரித்துக் காட்டுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாத்சாயனர் என்ற ஒரு இந்து எழுதிய நூலை இன்று திரைப் படமாக ஆக்கினால், அது தணிக்கைக் குழுவின் சான்றினை எப்போதுமே பெறமுடியாது.

ஜெயதேவர் என்ற மற்றொரு இந்து எழுதிய பாலுணர்வு மிகுந்த கற்பனை நூலான கீதகோவிந்தம் கிருஷ்ண பரமாத்வாவின் அங்க அழகினை ஆழ்ந்த உணர்வுடன் எடுத்துக் காட்டுகிறது. அடிக்கடி உடலுறவு கொள்வது ஒருவரின் வாழ்நாளைக் குறைத்துவிடும் என்று அண்மையில் குறிப்பிட்ட போபால் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் அலோக் சஞ்சாருக்கு இந்த நூலை அறிமுகப்படுத்த நீங்கள் விரும்பக் கூடும். என்றாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உறுதியாக நின்று வரும் இந்து மதம் சிலர் நகைச் சுவையாகக் கூறும் கேலியினாலும், கிண்டலினாலும் அழிந்து போகும் என்று நினைப்பவர்களிடம் இருந்து இந்து மதத்தைப் பாதுகாக்கவேண்டிய நிலை மறுபடியும் நமக்கு ஏற்பட்டுள்ளது.

ராஜ்குமார் ஹிரானி என்ற ஒரு இந்து இயக்குநர் தயாரித்து வெளியிட்டுள்ள பி.கே. என்ற திரைப்படத்தைப் பற்றி எழுந்துள்ள கருத்துவேறுபாடுகளைப் பற்றித்தான் நான் இப்போது குறிப்பிடுகிறேன். விசுவ இந்து பரிஷத் இந்த திரைப்படத்தைத் தடை செய்யவேண்டும் என்று கோருகிறது; இந்த அமைப்பின் உறுப்பினர்களும், பஜ்ரங் தள உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டு இத் திரைப்படத்தின் சுவரொட்டிகளைக் கிழிந்தெறிந்து விட்டு, அத்திரைப்படம் திரையிடப்படுவதைத் தடுக்க முற்பட்டுள்ளனர். இதன் காரணம் என்ன? பி.கே. திரைப்படம் இந்து மதத்தைக் கேலிசெய்கிறது என்று விசுவஇந்து பரிஷத் அமைப்பின் செய்தித் தொடர் பாளர் வினோத் பன்சால் கூறுகிறார். மதநல்லி ணக்கத்தைக் காக்கும் நோக்கத்தில் இத் திரைப் படத் தின் சில காட்சிகளை சென்சார் குழு நீக்கிவிட வேண்டும் என்று அனைத்திந்திய முஸ்லிம்களுக்கான தனிப்பட்ட சட்டக் குழுவும் கேட்டுள்ளது.

மூன்று முட்டாள்கள் என்ற திரைப்படம்

சிறிது நேரத்துக்கு நாம் பி.கே. திரைப்படத்தை மறந்துவிடுவோம். நடிகர் அமீர்கானை வைத்து இதே இயக்குநர் ஹிரானி எடுத்து பெரு வெற்றி பெற்ற முந்தைய திரைப்படமான மூன்று முட்டாள்களை எடுத்துக் கொள்வோம். தேர்வுகள் பற்றி கவலைப்படும் ஒரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் தாங்கள் தேர்ச்சி பெற கடவுளை வழிபடுவதைப் பற்றி இத் திரைப்படத்தில் காட்சிகள் உள்ளன. தேர்வு முடிவுகள் இன்று வெளியாகப் போகின்றன. கடவுளுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய நேரமிதுதான் என்று கூறுவது போல கிண்டலாக அக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு கடவுளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.

ஒரு மாணவர் மணியடித்துக் கொண்டே, இந்து கடவுள்களின் படங்கள் நிறைந்துள்ள ஒரு சுவரின் முன்னர் கற்பூர ஆரத்தி காட்டிக்கொண்டே, கடவுளே எனது எலக்டிரானிக்ஸ் தேர்வு விடைத் தாளை கவனித்துக் கொள்ளுங்கள். அப்படி செய்தால், உங்களுக்கு நான் ஒரு தேங்காய் உடைக்கிறேன் என்று முணுமுணுக்கிறான். தனது இயல்பியல் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு உதவினால், நாகதேவதைக்கு தினமும் ஒரு லிட்டர் பால் வார்ப்பதாக ஒரு பாம்பின் முன் வணங்கி நிற்கிறான் இன்னொருவன்.

மூன்றாவது மாணவன் தனது கையில் வைத்திருக்கும் புல்லினை ஒரு பசுவின் வாயில் திணித்துக் கொண்டிருக்கிறான். தனது தேர்வுகளில் தேர்ச்சி பெற கோமாதா தனக்கு உதவ வேண்டும் என்று அவன் விரும்புகிறான். மற்றொரு மாணவன் வேறொரு கடவுள் சிலையின் முன்னர் நின்று கொண்டு மாதா மாதம் 100 ரூபாய் காணிக்கை செலுத் துவதாக உறுதி அளிக்கிறான்.


தமிழ் ஓவியா said...

காட்சியை விவரிப்பவர், இந்த 100 ரூபாயால் போக்குவரத்து காவல்காரரைக் கூட திருப்தி படுத்தமுடியாது; அப்படி இருக்கும்போது கடவுளை எப்படி இது திருப்திபடுத்தும் என்று குறிப்பிடுகிறார்.

இதுபோன்று இந்து மதம் கேலி செய்யப்படுவது பற்றித்தான் பி.கே. திரைப்படம் மீது குற்றம் சுமத்தப் படுகிறது. இத்துடன் முடிந்துவிடவில்லை; இதற்கு மேலும் உள்ளது.

3 முட்டாள்கள் படத்தில் இத் தகைய கேலியான விமர்சனம் செய்யும் வர்ணனை யாளர் ஃபர்ஹான் குரேஷி என்பவர். இந்தக் காட்சி களில் எல்லாம் திரைப்படத்தின் கதாநாயகன் எங்கே வந்தான்? ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறான்.

கற்பூர ஆரத்தி காட்டப்படும்போது கூறப்பட்ட மந்திரம், அப்போது அடிக்கப்பட்ட மணியின் ஓசை ஆகியவற்றாலும் அவனை உறக்கத்தில் இருந்து எழுப்பமுடியவில்லை. இவற்றை எல்லாம் கடந்த நிலையில் அவன் இருக்கிறான் என்று கூறுவதற்கான மற்றொரு வழி இது.

ஆனால் அப்போது, நாட்டின் பல பகுதிகளிலும் கடைபிடிக்கப்பட்டு வரும் முறையான சடங்குகள் எவை என்பது பற்றியும், அந்த திரைப்படத்தின் மய்யத்தில் தேவதூதனைப் போலக் காட்டப்படும் கதாநாயகனுக்கு சடங்குகள் என்ற ஊன்றுகோல் ஏன் தேவைப்படவில்லை என்பது பற்றியும் முஸ்லிம் வர்ணனையாளரின் கேலி, கிண்டல் பற்றி எவர் ஒருவரும் எந்த சத்தமும் எழுப்பாததன் காரணம் என்ன என்ற வியப்பு எவருக்கும் ஏற்படவே செய்யும்.

கிறிஸ்தவ, சீக்கிய, முஸ்லிம் மாணவர்கள் எவரும் தீவிரமாக அவரவர்களின் கடவுள்களை வழி படுவதைப் பற்றி இப்படத்தில் எதுவும் இடம் பெற வில்லை என்பது பற்றி ஒரு வார்த்தை கூட அப்போது பேசப்படவில்லை. மதசார்பற்ற, பகுத்தறிவு மனம் கொண்டவர்கள் இந்துக்கள் பின்பற்றும் பழக்க வழக் கங்களை மட்டுமே கேலியாகப் பார்ப்பது ஏன் என்று ஒருவர் கேட்கலாம்.

கமலஹாசனின் விசுவரூபம் படம்

மூன்று முட்டாள்கள் திரைப்படம் முழுக்க முழுக்க மதத்தைப் பற்றியதல்ல என்பதால் எவரும் இந்தக் கேள்வியை எழுப்பாமல் இருந்திருக்கலாம். ஆனால் பி.கே. திரைப்படத்தின் நோக்கம் நன்கு புலப்படுவதாக இருக்கிறது.

இத்தகைய இனிமையான திரைப் படத்தைப் பற்றி பேசும்போது தாக்குதல் என்ற சொல் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்ற போதிலும் இதில், எவரது கருத்து, உணர்வு பற்றி சிறிதும் கவலைப்படாமல் மதத்தின் மீது வெளிப்படையான கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய திரைப்படம், இதில் நடிப்பவர் ஒரு பெரிய நடிகர் என்பதால் இதற்கு எதிராகப் பேசினால், அது அதிக அளவிலான கவனத்தை ஈர்க்கும் என்பதாலேயே இத்திரைப்படத்தின் மீது இத்தகைய முழுமையான கவனம் குவிக்கப்பட்டிருக்கக்கூடும். கமலஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு என்ன நேர்ந்ததோ அதனைப் போன்றதுதான் இதுவும். முஸ்லிம்கள் தீட்டிய ஒரு சதித்திட்டத்தை தோற் கடிக்கும் அப்படத்தின் கதாநாயகன் தவறாமல் தொழுகை புரியும் ஒரு முஸ்லிம் என்பதை அப்படத்தை எதிர்த்த முஸ்லிம் அமைப்புகள் நன்கு அறிந்தே இருந்தன. இது போன்ற கருத்து கொண்ட இதர திரைப்படங்களில் பெரும்பாலானவை கதாநாயகனை ஓர் இந்துவாகவே காட்டுபவையாக இருக்கும் என்ற நிலையில் அப்படத்தின் கதாநாயகன் ஒரு முஸ்லிமாக காட்டப்படுவதை அந்த முஸ்லிம் அமைப்புகள் கொண்டாடியிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படியில்லை. தீவிரவாதிகள் எப் போதுமே பெரும்பாலும் அது போல பார்க்க மாட்டார்கள்.

தமிழ் ஓவியா said...

முப்பது ஆண்டுகளுக்குமுன்

பி.கே.திரைப்படத்தின் மீதான மற்றொரு குற்றச் சாட்டு அது காதல்புனிதப்போரை ஆதரிப்பதாக இருக்கிறது என்பதுதான். சர்பார்ஸ் என்ற பாகிஸ்தானிய இளைஞனுக்கும், இந்த உலகைப் படைத்தவள் என்ற பொருள் தரும் ஜகத்ஜனனி என்ற கடவுள் பெயரைக் கொண்ட ஒரு இந்து பெண் ணுக்கும் இடையே ஏற்படும் காதலைப் பற்றிய திரைப்படம் இது. ஆனால் இந்த காதல் கதை நடப்பது இந்தியாவிலோ பாகிஸ்தானத்திலோ அல்ல. எனது பெயர் கான் என்று கூறியவுடனேயே, அமெரிக்காவில் உள்ள ஒரு முஸ்லிம் இளைஞனுக்கும், ஒரு இந்து யுவதிக்கும் இடையே அது காதலைத் தோற்றுவித்துவிடுவது போலவே நடுநிலை நாடான பெல்ஜியத்தில் நடப்பதாக அக்கதை அமைந்துள்ளது. இந்த இரு திரைப் படங்களின் கதாநாயகிகளும் நன்கு படித்தவர்கள், தாராளமனம் கொண்டவர்கள், திருமணத்திற்குப் பிறகு அவர்கள் முஸ்லிம் மதத்திற்கு மாறிவிடுவார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.

மனஉறுதி படைத்த ஜோதாஅக்பர் தனது மதத்தைத் துறந்தது போல தங்களது மதத்தைத் துறக்கத் தயாராக இருப்பவர்கள் அல்ல அவர்கள். இருபது முப்பது ஆண்டு களுக்கு முன்னர் வெளிவந்த முகந்தர் தா சிக்கந்தர் போன்ற திரைப்படங்களிலும் நீங்கள் பார்த்திருக்கலாம். அவற்றில் கதாநாயகன் ஒரு முஸ்லிம் பெண்ணால் வளர்க்கப்பட்டிருப்பான்; ஆனால் அவன் ஓர் இந்து பெண்ணைக் காதலிப்பான். பாலியல் துருவங்கள் மாறி யிருக்கும் மதக்கலப்பு காதல் கதைகளைப் பார்த்தால், கடார் படத்தில் முஸ்லிம் பெண்ணும் -சீக்கிய இளை ஞனும், வீர் ஜாரா, ராஞ்சஹானா, ஏக் தா டைகர் ஆகிய படங்களில் முஸ்லிம் பெண்ணும்-இந்து ஆணும் காதலிக்கும் கதைகள் கொண்டவை. இப்படங்களுக்குப் பெரிய எதிர்ப்பு ஏதும் ஏற்பட்டதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா?

தமிழ் ஓவியா said...

மேலே குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படங்கள் அனைத்தும் பெருவெற்றி பெற்றவை. வசூலில் ரூ.200 கோடிக்கும் மேல் ஈட்டி சாதனை படைத்த முதல் திரைப்படம் மூன்று முட்டாள்கள் தான். அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த பார்வையாளர்களின், குறிப்பாக நமது நாட்டில் பெரும்பான்மையானவர்களாக உள்ள இந்து மக்களின் ஆதரவு இன்றி, இத்தகைய வசூலை ஒரு படத்தால் ஈட்டித் தர முடியாது. இப்படத்தில் செய்யப்படும் மென்மையான கேலியைப் பற்றி அவர்களே பெரியதாகக் கவலைப்படவில்லை என்னும்போது, அவர் களுக்காக தடிகளை ஏந்திக்கொண்டு தாக்குவதற்கு ஓடி வருவதற்கு, இந்த சந்தர்ப்பவாத அரசியல் கட்சி உறுப்பி னர்களும், மற்றவர்களும் யார்? திரைப்படங்கள் தேர்தல் களைப் போன்றவை என்பதை அவர்கள் உணர வில்லையா? மக்கள் வரிசையில் அமைதியாகக் காத்திருந்து, வாக்குச் சாவடிக்குள் சென்று, ஒரு வாக்கினை வாங்கி வாக்களிப்பார்கள். அதுபோல, பி.கே.போன்ற படங்கள் பெருவெற்றி பெறும்போது, 300 கோடி ரூபாய்க்கும் மேலான வசூலை அது அள்ளித்தரும் என்ற உறுதி ஏற்பட்டிருக்கிறது. இச்சாதனை புரியக்கூடிய முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும். அப்படியென்றால், அளவு கடந்த, மிகப் பெரிய பெரும் பான்மையான மக்களால் அது ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது என்பதே அதன் பொருளாகும். தங்கள் ஆதரவின் மூலம் மக்கள் பேசியுள்ளனர். ஒரு பக்கத்தில், இந்தப் படத்தின் கதையைப் பற்றி கவனிக்கும்படி காவல் துறையை மகாராஷ்டிர மாநில அரசு கேட்டுள்ளது; மறு பக்கத்தில், மும்பை வட்டத்தில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூல் கொடுக்கும் முதல் படமாக பி.கே. இருக்கும் என்று பாக்ஸ்ஆபீஸ்இந்தியா இணையதளம் உறுதிபடக் கூறுகிறது. இந்த இடத்தில் நீங்கள் கேட்கவேண்டிய கேள்வி இதுதான். இங்கே உண்மை யிலேயே எவருடைய மனஉணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன?

இந்தியாவைக் காவிமயமாக்கும் முயற்சி

தணிக்கைக் குழுவின் ஒப்புதலைப் பெற்று ஒரு திரைப்படம் வெளியிடப்பட்ட பிறகு, தங்கள் உணர்வுகளை அது காயப்படுத்துகிறது என்று கூறி, அதனை திரைப்பட அரங்குகளிலிருந்து திரும்பப் பெறவேண்டும் என்று கேட்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விஷயம் பற்றி உணர்ச்சி கொண்டவர்களாக இருக்கின்றனர். அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால், உங்களால் ஒரு திரைப்படத்தைக் கூடத் தயாரிக்கவே முடியாது. நீங்கள் இதனை அறிவீர்கள்; நானும் அறிந்திருக்கிறேன். எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகளும் இதனை அறிந்திருக்கின்றன. பிறகு ஏன், அவர்கள் தொடர்ந்து கோபப்படுபவர் களாகவும், கவலைப்படுபவர்களாகவும் இருக்கின்றனர்? சிலர் கூறுவது போல, இந்தியாவை காவிமயமாக்கும் முயற்சி அதிகரித்து வருவதுதான் இதன் காரணம். இப்போது உள்ள கலாச்சார தட்பவெப்ப நிலை, ஹரேராமா, ஹரேகிருஷ்ணா திரைப்படம் வெளிவந்த 1970 களில் நிலவிய தட்பவெப்பநிலையில் இருந்து மாறுபட்டதாகவே உள்ளது.

தமிழ் ஓவியா said...

தனது தலைப்பிலும், காட்சிகளிலும் கடவுள்களுக்கு நுகத்தடி பூட்டி, கேலிச்சித்திரமாகக் காட்டுவதற்கு ஹரேராமா, ஹரேகிருஷ்ணா திரைப்படத்தினால் முடியும் என்றால், (இப்படத்தின் தம்மரே தம் என்ற பாடல் பெருவெற்றி பெற்றது) கணக்கு வழக்கின்றி ஹூக்கா புகைக்கும் காட்சிகளும், திருமணத்திற்கு முன்பான உடலுறவுக் காட்சிகளும் இடம் பெறச் செய்ய முடியும் என்றால், சாதாரணமான கேலியைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை எதனால் இப்போது வந்தது? இதற்கு மிகப்பெரிய முக்கியமான காரணம் என்னவென்றால், நமது தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், இன்டர் நெட்டுக்கும் வாரம் 7 நாட்களும் தினமும் 24 மணி நேரமும் ஒளிபரப்ப செய்திகள் தேவைப்படுகின்றன. அந்த செய்தி ஒரு மாபெரும் வெற்றி பெற்ற திரைப் படத்தைப் பற்றிய செய்தியாக இருந்துவிட்டால், அந்தச் செய்தியே பெரியதாக ஆகிவிடுகிறது. உணர்ச்சி மயமான, பார்வையாளர்களையும், வாசகர்களையும் கவரும் செய்திகள்இவை.

எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த அமைப்புகள் மலிவான, எளிய, உறுதிஅளிக்கப் பட்ட விளம்பரம் தேடும் தங்கள் தாகத்தின் காரணமாக, கலவரங்களை விளைவித்து, சுவரொட்டிகளைக் கொளுத்துவதன் மூலம் தங்களைப் பற்றிய பொது மக்களிடையேயான அச்சத்தை வளர்க்க முயல்கின்றனர். இதில் உள்ள சோகம் என்னவென்றால், இது உங்களுக்கும் தெரியும்; எனக்கும் தெரியும்; எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகளுக்கும் இது தெரியும் என்பதுதான்.

நன்றி: தி ஹிந்து 2-1-2015

கட்டுரை ஆசிரியர்: பரத்வாஜ் ரங்கன்

தமிழில் : த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/e-paper/93853.html#ixzz3NlU5wn3P

தமிழ் ஓவியா said...

ஆண்டாள் என்று ஒருவர் இருந்தாரா? இதோ ஆச்சாரியார் பதில்


மார்கழி மாதம் - போட்டிப் போட்டுக் கொண்டு சில நாளேடுகள் நாள்தோறும் ஆண்டாள் பாடியதாக திருப்பாவையிலிருந்து பாடல்களை வெளியிட்டு வருகின்றன. உண்மையிலே ஆண்டாள் என்ற பக்தை இருந்தாளா? இல்லை என்று மறுப்பவர் யார் தெரியுமா? வைணவப் பக்தரான சாட்சாத் ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) தான் அப்படி சொல்லுகிறார் இதோ அவர்.

ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிர பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவை அல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார் என்று திரிவேணி என்னும் ஆங்கில மாதப் பத்திரிகையில் (1946 செப்டம்பர் இதழில்) எழுதினாரே! இதற்கு என்ன பதில்?

Read more: http://viduthalai.in/e-paper/93857.html#ixzz3NlUSl5Wr

தமிழ் ஓவியா said...

தீவிரவாத ஒத்திகைக்குக் கிடைத்தவர்கள் முஸ்லீம்கள் தானா?


இந்தியாவில் அதிகாரப் பூர்வமாக இந்துத்துவா ஆட்சி என்று அறிவிக்கவில்லையே தவிர, மற்றபடி பிஜேபியும் சரி, அதன் சங்பரிவாரங்களும் சரி ஓர் இந்து ஆட்சி இந்தியாவில் அமைந்துவிட்டதாகவே கருதி, ஆட்டம் போட ஆரம்பித்து விட்டனர்!

இந்த உண்மை அம்மணமாகத் தெரிந்திருந்தும் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் சீப்பை ஒளிய வைத்து கலியாணத்தை நிறுத்துவது என்பது போல நடந்து கொள்வது மிகக் கேவலமான வெட்கக் கேடாகும்.

ஊடகங்கள் உயர் ஜாதி பார்ப்பனர்கள் கைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளிலும் குவிந்து கிடப்பதால் இப்படி நடந்து கொள்கின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியே!

ஊடகங்களில் பெரும்பாலும் பணியாற்றுபவர் களாகப் பார்ப்பனர்களாகவே இருக்கின்ற காரணத்தால் இந்துத்துவாவைத் தூக்கிப் பிடிக்கத்தானே செய் வார்கள். உண்மையைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு அதன்மீது பொய்களான குரோட்டன்ஸ்களை வளர்க்கவே செய்வார்கள். அதுதான் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.

பிஜேபியில் ஏதோ அனாமதேயங்கள் அல்ல; பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திரமோடியே எப்படி நடந்து கொண்டு வருகிறார் என்பதைக் கவனித்தால் ஒளிவு மறைவு என்பதை எல்லாம் கடந்து, பச்சையாக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள மதச் சார்பின்மையைத் தூக்கிப் போட்டு மிதித்து விட்டு, ஒளிந்திருந்த இந்துத்துவாவை ராஜ நடை போட வைத்து விட்டார்.
ஜப்பானுக்குச் சென்ற பிரதமர் நரேந்திரமோடி இந்தியர்கள் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சியில் என்ன பேசினார்?

I brought Gita for gifting (the Japanese Emperor) I do not know what will happen in India after this. There may be a TV debate on this. Our secular friends will create ‘typhoon’ (storm).

ஜப்பான் நாட்டுப் பேரரசருக்கு கொடுக்கக் கீதையைக் கொண்டு போன இந்தச் செய்தி இந்தியாவை அடைந்தால் அங்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. தொலைகாட்சிகளில் விவாதங்கள் அனல் பறக்கும்; எனது மதச் சார்பற்ற நண்பர்கள் புயலையே கிளப்புவார்கள் என்று பேசினார் என்றால் பார்த்துக் கொள்ளலாமே.


தமிழ் ஓவியா said...

தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்பார்களே அதுபோலதான் செய்யும் தவறு என்ன என்று அவருக்கு மிக நன்றாகவே தெரியும்; இருந்தாலும் அவரைப் பீடித்து ஆட்டும் இந்துத்துவா வெறி அதனையும் கீழே தள்ளி மேலே எழுந்து நிற்கிறது. மதச் சார்பின்மை என்பதை எப்படியெல்லாம் எள்ளி நகையாடுகிறார். இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் இவ்வளவுப் பச்சையான மதவெறியரைத் தேடினாலும் எளிதில் கிடைக்கப் போவதில்லை.

குஜராத் மாநிலத்தை இந்துத்துவாவின் பரிசோ தனைக் கூடமாக உருவாக்கினார். மத அடிப்படையில் மக்களைக் கூறு போட்டு, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். அதையே இந்தியா முழுமைக்கும் பரவலாக்கும் எண்ணம் நொடிதொறும், நொடிதொறும் அவரை உசுப்பி எழுப்பிக் கொண்டு இருக்கிறது. குஜராத்தில் அவரைத் தொடர்ந்து வந்த முதல் அமைச்சர் மோடிக்குச் சளைத்தவரல்ல என்பதைக் காட்டிக் கொண்டு இருக்கிறார்.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் தீவிர வாதிகளை எப்படி முறியடிப்பது என்பதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.

தீவிரவாதிகளாக நடித்தவர்கள் அத்தனைப் பேரும் முசுலிம் உடை அணிந்து, தலையில் குல்லாய் அணிந்து காணப்பட்டனர். அவர்கள் வன்முறையில் ஈடுபடுவது போல குஜராத் காவல்துறையால் ஒத்திகை நடத்தப் பட்டது.

வன்முறையில் ஈடுபடுவதுபற்றி பிஜேபி.யோ அல்லது சங்பரிவார்க் கும்பலா பேசுவது? பாபர் மசூதி இடிக்கப்பட்டதை விடவா அராஜகத்துக்கும் பயங்கர வாதத்துக்கும் நிர்வாண வன்முறைக்கும் இன்னொரு எடுத்துக் காட்டுத் தேவை?

மாலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் யார்? ஒரிசா சட்டப் பேரவை வளாகத்துக்குள்ளேயே புகுந்து வன்முறை வெறியாட்டம் போட்டவர்கள் யார்? காவி பயங்கரவாதம் என்ற புதுமொழியை அன்றைய உள்துறை அமைச்சர் புதிய பட்டத்தைச் சூட்ட வில்லையா?

விசுவ ஹிந்து பரிஷத்தை சேர்ந்தவர்கள் பொது மக்களுக்குத் திரிசூலங்களை வழங்கி கிறித்தவர் களையும், முசுலீம்களையும் மதச் சார்பின்மை பேசும் இந்துக்களையும் குத்திக் கிழிக்கத் தூண்டிட வில்லையா?

அரியானா மாநிலத்தில் ஜாஜா பகுதியில் இறந்து போன பசுவின் தோலை உரித்ததற்காக அய்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த கொடியவர்களால் கொல்லப்படவில்லையா?

விசுவ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான கிரிராஜ் கிஷோர் என்பவர் பசுவின் உயிர் (அதுவும் செத்துப் போன) மனித உயிரைக் காட்டிலும் புனிதமானது என்று அப்போது கூறியது எவ்வளவுப் பெரிய காட்டுவிலங்காண்டித்தனம்!

ஏன்? காவல்துறை ஒத்திகை நடத்திக் கொண்டு இருக்கும் குஜராத்தில் நடக்காத வன்முறையா? அரச பயங்கரவாதமாக அல்லவா நடந்தது.

முசுலிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்களின் குடலைக் கிழித்து அந்தக் கருவை நெருப்பில் தூக்கி எறிந்து வெறிக் கூச்சல் போட்டுக் கூத்தாடவில்லையா? அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலின் வன்முறையைப் பட்டியல் போட்டால் நாட்டில் காகிதங்கள் போதாது.

இந்த யோக்கியதையில் உள்ளவர்கள்தான் தீவிர வாதத்தை முறியடிக்கும் பயிற்சிக்கான ஒத்திகைக்காக முஸ்லீம்களைத் தீவிரவாதிகளாக ஒப்பனை செய்து நிறுத்தியுள்ளனர்; இந்தியாவிற்கு இப்படி ஓர் ஆட்சியா? மகா மகா வெட்கக் கேடு!

Read more: http://viduthalai.in/page-2/93861.html#ixzz3NlUpImuS

தமிழ் ஓவியா said...

காலத்துக்கேற்ற...


காலத்துக்கேற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனா வான். - (குடிஅரசு,26.1.1936)

Read more: http://viduthalai.in/page-2/93860.html#ixzz3NlUxNMG7

தமிழ் ஓவியா said...

பாரத் ரத்னா விருதுக்குத் தகுதியானவர் வி.பி.சிங்தான்!

மண்டல் அறிக்கையை அமல்படுத்தியவர் என்பதால்
பாரத் ரத்னா விருதுக்குத் தகுதியானவர் வி.பி.சிங்தான்!

டில்லி, ஜன.3 கடந்த ஆண்டில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு சச்சின் டெண்டுல்கர் மற்றும் அறிவியலாளர் சி.என்.ராவ் ஆகியோருக்கு நாட்டின் உயர்ந்த விருதான பாரத் ரத்னா விருது அளிப்பதற்கு பரிந்துரைக்க முடிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் உயிரோடு இருப்பவர்களிலிருந்து மறைந்த வர்கள் வரை வாஜ்பேயி முதல் ராம் மனோகர் லோகியா, கற்பூரி தாகூர், கன்ஷி ராம் வரையிலும் என்று பெரிய பட்டி யலையே அளித்தனர்.

தற்போது வாஜ்பேயை மட்டும் பாஜக தலைமையிலான மத்திய அரசு எடுத்துக் கொண்டு மற்றவர்களை கவுரவிப்பதில் அவர்களுக்கான அரசு அமையும்வரை விருப்பப் பட்டியலிலேயே வைத்துவிட்டது. அந்த விருப்பப் பட்டியலில் மேனாள் பிரதமர் வி.பி.சிங் பெயரை, அவரால் நடை முறைப்படுத்தப்பட்ட மண்டல் அறிக்கை யின்மூலம் பெரிய அளவில் பயன் பெற்ற வர்கள் உள்பட எவருக்குமே பரிந்துரைக்கும் எண்ணம்கூட இல்லாமல் உள்ளது.

இசையில் பாரத் ரத்னா விருது ரவி சங்கர், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பிஸ் மில்லாஹ் கான் ஆகியோருக்கு கலைத் துறையில் அவர்களின் பங்களிப்பை யொட்டி வழங்கப்பட்டுள்ளது.

பாரத் ரத்னாவை யாருக்கு வழங்குவது என்பதுகூட அரசியல்வாதிகளின் முடிவில் தான் உள்ளது.

வாஜ்பேயி அய்யத்துக்கிட மின்றி, அரசியல்வாதியாக செயல்பட்ட காலங்களில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் நகைச்சுவையுடன் பேசி, பெரிய அளவில் நாடாளுமன்ற உறுப்பினராக விவாதங்களில் பங்கேற்று உணர்ச்சிகரமாக, சகோதர மனப்பான்மையுடன் இருந்தவர். ஆனாலும், அந்த காரணங்களை அளவு கோலாகக் கொள்ளாமல், எல்.கே.அத்வானி, பாஜக பரிந்துரைப்பதால், இந்துத்துவாக் கொள்கை உள்ளவர் என்பதால் மட்டுமே அவர் விருதுபெறும் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

அவர் பிரதமராக இருந்தபோது நடுநிலையுடன் இருந்து செயல்பட்டவர் அல்லர். அப்போது அவர் இந்தியாவில் எவ்விதத்திலும் நீண்ட காலத்துக்கான தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. அரசு நிர்வாக சீரமைப்பு என்று எதையும் செய்யவில்லை. இந்திய பொருளாதாரத்தில் நரசிம்மராவ் ஏற்படுத்திய புதிய பொருளா தாரக் கொள்கைபோன்று வாஜ்பேயி இந்தியாவின் புனரமைப்புக்கு எவ்வித பங்களிப்பையும் வழங்கிடவில்லை. பாகிஸ் தானுடனான அமைதி முயற்சிகூட காஷ் மீர்ப் பிரச்சினையில் ஏற்பட்டதைப் போன்றே மோசமாகவே முடிந்தது.

வாஜ்பேயி இந்தியத் துருப்புகளை பாகிஸ்தான் எல்லையில் குவித்ததால், நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடைபெற்றது. ஆனால், பன்னாட்டு அதிகார அழுத்தங் களினால் பின்வாங்கினார்கள். அவர் எடுத்த முடிவுகளால் வெளிப்படை யான அணுசக்திகுறித்த பூசல் ஏற்பட்டது. அதேநேரத்தில் டில்லிக்கு இணையாக இஸ்லாமாபாத்தும் உறுதியுடன் பதிலடியாக நிலைநிறுத்திக்கொண்டது. தென்கிழக்காசி யாவில் அணு ஆயுதப் போர் குறித்த கண் ணோட்டத்தில் வாஜ்பேயியின் கொள்கை பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் கடைக் கோடிக்கு தள்ளப்பட்டது. ஆம். அவர் காலத் தில்தான் கார்கிலில் பாகிஸ்தானைச் சேர்ந்த வர்கள் எல்லையைத் தாண்டி நுழைந்த பின்னர் வெளியேற்றப்பட்டனர்.

தமிழ் ஓவியா said...

அப்படியே நேரெதிராக, மண்டலை அமல்படுத்த முடிவுசெய்த வி.பி.சிங். சுனாமி யாக செயல்பட்டு சமுதாய அரசியலை முழுவதுமாக விரிவுபடுத்திவிட்டார். அதில் ஒரு பங்காக மத்திய அரசுப் பணிகளில் சமுதாய ரீதியிலும், கல்வியிலும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாதையைத் திறந்துவைத்தார். அதன்மூலம் அரசியல் ஒருங்கிணைப்புக்கு மண்டல்அறிக்கை ஒருகிரியா ஊக்கியாகவே உருவானது.

இதர பிற்படுத்தப்பட்டவர்கள், முசு லீம்கள் கூட்டாக சேர்ந்ததன் வாயிலாக காங் கிரசில் தங்களின் அரசியல் வலிமையைக் காட்டினார்கள். உயர்ஜாதியினரால் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கசப்பான நிலை உருவாக்கப்பட்டபோது, தாழ்த்தப்பட்டவர் களில் சில பிரிவினர் எச்சரிக்கை அடைந் தனர். பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட வகுப்புக் கலவரங்களைத் தொடர்ந்து மீண்டும் வட இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், முசுலீம்கள் கூட்டணியை ஆழப்படுத்தியது. இவ்வளவு இருந்தாலும், இதர பிற்படுத் தப்பட்டவர்கள் ஒருங்கிணைப்பு ஆழமாக இருந்த அதேநேரத்தில் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்புத் தலைவர்கள் அவர்களுடைய மாநிலங்களில் பெரும்பான்மையை உருவாக் குவதற்கு தேர்தலில் புதிய மாற்றங்கள், கூட்டணிகள் உருவாக்கி வருகிறார்கள். அதனால் சிறிய தலைவர்கள் பங்கு அரசி யலில் வலிமை பெற்றுவருகிறது.

நிதிஷ் குமார் முதல் லாலுபிரசாத், முலாயம் சிங் வரையிலும் உள்ள தலை வர்கள் மண்டலால் உருவாக்கப்பட்டவர் களாக தேர்தலில் களம் காணுபவர்களாக, காங்கிரசைக்காட்டிலும் வலிமை பெற்ற வர்களாக இருக்கிறார்கள்.

பாஜகவிலும் இதர பிற்படுத்தப்பட்ட வர்களின் செல்வாக்கு உயரத் தொடங்கியது. பழமையான பாஜக என்பது பார்ப்பன-பனியா கட்சியாகவே இருந்தது. பாஜக அரசியல் கணக்குகளில் லாபம் கருதி, கட்சியில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடத்தை அளிக்கத் தொடங்கியது.

பிகார், உத்தரப்பிரதேசத்தில் மோடி அலை என்று கூறப்பட்டபோதும், பிற்படுத் தப்பட்டவர் என்கிற அடையாளத்தால் எவ்வித பயனும் ஏற்படவில்லை. இப்போது மறக்கப்பட்ட நிலையில் உள்ள விபிசிங் நினைவு கூரும் நேரம் வந்துவிட்டது. இந்திய சமூகம் வஞ்சிக்கப்படுவதும், பார பட்சத்துடன் முன்னேற்றத்துக்கு இடை யூறாக இருப்பதுமான நிலை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் இந்திய அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தி, மறுகட்டமைப்பு செய்தவரான வி.பி.சிங். நினைவு கூரப்பட வேண்டும்.

வி.பி.சிங். உயர் ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தும், உயர் ஜாதியினருக்கு எதிராக, உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தைத் தகர்த் தவர். தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட் டவர். மண்டல் அறிக்கையை நடைமுறைப் படுத்தியவர். பிற்படுத்தப்பட்டவர்களை ஜனதா தளத்தில் இணைத்து பிரச்சாரம் செய்தவர். அதனாலேயே சமகால அரசியல் வாதிகள் மத்தியில் வகுப்புவாதியாக தூற்றப்பட்டவர். தேவிலால் வசமிருந்த தலைமைப் பொறுப்பை மாற்றியவர். இருந்தபோதிலும், சமூக நீதி என்னும் பதாகையைத் தாங்கியே 1989 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் என்ப தால், அவர்தான் மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்துபவர் என்கிற தோற்றம் ஏற்பட்டது.

தமிழ் ஓவியா said...

இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அறிவிக்கும்போது பல நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றில் இரண்டு குறிப்பிடத்தக்கது.

வி.பி.சிங். டில்லியில் 16.6.1989 அன்று கூறும்போது ஜனதா தளத்தின் கொள் கையில் சமரசம் கொள்ளாமல் எதிர்க் கட்சிகள் ஆதரவு பிளவு படுவதை தடுக்க முயற்சி மேற்கொண்டதாகத் தெரிவித் துள்ளார்.

மேலும் விபிசிங் கூறும்போது பலவீன மான சமூகத்தவர் மற்றும் சிறுபான்மையர் களுக்கு உரிய பங்கினை அளிப்பதுதான் வளர்ச்சி அடைந்த நாடு என்பதாகும். அதில் சமரசம் ஏதும் கிடையாது என்று குறிப் பிட்டுப் பேசும்போது பார்வையாளர்களை நோக்கி, மண்டல் அறிக்கையை நடை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

அதன்பின் மூன்று மாதங்களுக்குப் பின்னர் சென்னையில் 18.9.1989 அன்று அவர் கூறியதாக செய்தித்தாள்களில் குறிப்பிட்டதாவது: தேசிய முன்னணியின் மத்திய அரசில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பணிவாய்ப்புகளில் இடஒதுக்கீடு உள்ளது போல், மண்டல் அறிக்கை பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டவர்களின் நலனைக்கருதி இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று பேசினார்.

வி.பி.சிங். தீவிரமான சமூகநீதிக் கருத் துகளால் தேர்தல் அரசியலில் நீடித்திருக்க முடியவில்லை. அவர் பங்களிப்பைப் பற்றி அறியவிரும்புவோர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படியும், தேசிய வேலை உறுதியளிப்பு சட்டத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை உரு வாக்கிய அருண்ராய், நிகில் தே கூறும் போது, தகவல் பெறும் உரிமை சட்டம் மற்றும் தேசிய வேலை உறுதியளிப்புச்சட்டம் ஆகிய இரண்டு சட்டங்கள் உருவாக்கப் பட்டதன் வரலாற்றில் பலபேரையும் கூறி னாலும், எப்போதுமே யாராலும் கூறப்படாத ஒருவர் விபிசிங்தான். விபிசிங்குறித்து கூறும்போது மண்டல் அறிக்கை நடை முறைப்படுத்தியதை மட்டுமே கூறு கிறார்கள். ஆனால், அதில் மட்டுமே அவர் பங்களிப்பு என்பதில்லை. அவர் பங்க ளிப்பை புதைப்பதாக, அநீதி அவருக்கு இழைக்கப்பட்டாலும், அவர் பங்களிப்பு குறித்து கவனம் வந்துதான் தீரவேண்டும். அரசியல் வாதியாக, ஆட்சியாளராக இருந்தபோது ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்கான பங்களிப்பை நிலைநிறுத்தி உள்ளார் என்று கூறினார்கள்.

அருண் ராய் மற்றும் நிகில் தே இருவரும் கூறும்போது, அரசியல் பேரலை யில் நாங்கள் சிறு மீன்கள்தான். விபிசிங் ஊக்கம், நகைச்சுவை நீண்ட காலத்துக்குத் தேவையான நடைமுறைக்கு உகந்த ஆதரவு ஆலோசனைகளை வழங்கி உள்ளார் என்று கூறினார்கள்.

வெளிப்படையாக காங்கிரசோ, பாஜகவோ பாரத் ரத்னா விருதுக்கு விபிசிங் பெயரை கூறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அடிமைப்பட்டவர்கள்மீதான ஆதிக்கத்தைத் தகர்த்தவர் என்பதாலேயே எதிர்க்கப்பட்டவர். இந்து சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தவர்களின் தொடர்ச்சி யான ஆதிக்கத்தை தகர்ப்பதே அவரின் திட்டமாக இருந்துள்ளது.

இதில் அதிர்ச்சியூட்டக்கூடியது என்ன வென்றால், மண்டல் அறிக்கையால் பலன் பெற்ற அரசியல்வாதிகள் (மண்டலின் குழந் தைகள்) விபிசிங்கை மறந்துபோவதுதான். அவர் எந்த வகுப்பைச் சார்ந்தவர் என் பதைப் பார்க்காமல், சமூகநீதிக் கொள் கையை எதிர்ப்புகளுக்கு இடையே விரிவு படுத்தியவர் என்பதாலேயே அவருக்கு அளிக்கும்போது, இந்தியாவின் மனப் பான்மையை வெளிப்படுத்தக்கூடிய சின்னமாக பாரத் ரத்னா விருது அமையும்.

இக்கட்டுரை எழுத்தாளர் அஜாஸ் அஷ்ரப் டில்லி ஊடகவியலாளர ஆவார். விடியலுக்கு முந்தைய நேரம் (The Hour before Dawn) எனும் நூலின் ஆசிரியரும் ஆவார்.

- ஃபர்ஸ்ட் போஸ்ட், 26.12.2014

Read more: http://viduthalai.in/page-2/93862.html#ixzz3NlV66mMq

தமிழ் ஓவியா said...

பயிற்சி பெற்ற ஒருவரின் பார்வையில் ஒகேனக்கல் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

என் பெயர் ப.அருணா, சென்னை மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த நான் மணம் முடித்து நீலமலை மாவட்டம் கோத்தகிரியில் என் இணை யர் வெங்கடேசன் அவர்களுடன் வசித்து வருகிறேன். வெங்கடேசன் திராவிடர் கழக உறுப்பினராக இருக்கிறார். அவருடன் இணைந்து நான் கழக நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தாலும் பெரிய அளவில் கொள்கை தாக்கம் எதையும் நான் பெற்றதில்லை.

இந்த நிலையில் ஒகேனக்கல்லில் நடந்த பயிற்சி பட்டறைக்கு என்னை அழைத்து சென்றிருந்தார். அங்கு வந்து பயிற்சி வகுப்புகளில் உட்காரும்வரை திராவிடர் கழகத்தை பற்றி எதுவும் தெரியாமல் இருந்த என்னை அங்கு எடுக்கப்பட்ட வகுப்புகள் முழுமை யாக புரட்டிப் போட்டு அனுப்பியது.

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பெரியார் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார், அதில் பெரியாரின் தனித்துவம் பற்றி கூறினார். தந்தை பெரியார் மற்றும் தோழர்கள் சட்ட புத்தகத்தை (சாதியை காப்பாற்றும் சட்டபிரிவு) எரித்தார்கள். அதற்காக சிறை சென் றது மட்டும் தான் எனக்கு தெரியும். சிறையிலே புதைத்து விட்டார்கள். பின் அதற்காக போராட்டம் செய்து, அவர்களை தோண்டி எடுத்து ஊர்வலமாக கொண்டு சென்றதும் எனக்கு அப்போதுதான் தெளிவாக தெரிந்தது.

சட்ட புத்தகத்தின் மாதிரியை எரித்தார்கள் என்று நினைத்தேன். ஆனால் வெள்ளை தாள் எடுத்து அதில் சட்டபிரிவை எழுதி அதை எரித்து அதற்காக சிறை சென்றது அப்போது தெளிவாக தெரிந்தது. இந்த வகுப்பில் சுதந் திரத்தை பற்றி பெரியார் கேட்ட கேள்வி சுதந்திர நாட்டில் சாதி இருக் கலாமா? சாதி இருந்தால் அது எப்படி சுதந்திர நாடாகும்? என்று பூங்குன்றன் அவர்கள் கூறினார். அந்த கேள்வி மிகவும் என்னை யோசிக்க வைத்தது. இந்த வகுப்பில் தான். புத்த மதம் இந்தியாவில் இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொண்டேன். இந்த வகுப்பில் ராஜாஜி தமிழ்நாட்டில் செய்த கொடுமை தெளிவாக கூறினார். பெரியார் ஏன் அரசியலுக்கு வர வில்லை என்றும் கூறினார்.

அடுத்ததாக அவர் எடுத்த பெரியாருக்கு பின் தி.க.என்ற வகுப்பில் பெரியாரின் கடைசி நாட்கள், அவ ருக்கு பின் அன்னை மணியம்மையார் அவர்கள் இயக்க தலைவராக பொறுப்பு வகித்தார். அவர் இயக் கத்தை எவ்வாறு திறமையாகவும், தைரியமாகவும் நடத்தினார் என்பதும், இராவண லீலா எவ்வாறு நடந்தது என்பதையும் தெளிவாக கூறினார். பின் ஆசிரியர் வீரமணி அவர்கள் இயக்க தலைவராக வந்த வரலாறு பற்றியும் கூறினார். பார்ப்பனர் பண்பாட்டு படையெடுப்பு என்ற தலைப்பில் தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் வைப்பதில்லை. திருமணம், இறப்பிற்கு பின் சடங்கு, புதுமனைப் புகுவிழா போன்ற சடங்குகளுக்கு வேத மந்திரம் அர்த்தம் தெரியாமல் நம் மக்கள் பயன்படுத்துவதை விளக்கி கூறினார். பின் அந்த மந்திரத்திற்கு அர்த்தத்தை கூறினார். இரயில் நிலையங்களில் தமிழ் பெயர் முதலில் வர மற்றும் ஆங்கிலம், இந்தி பின்னாலும் வர தி.க. வினர் பங்கு என்ன என்பது புதிதாக எனக்குக் கிடைத்த செய்தி.

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் வீரமணி அவர்கள் சமூகநீதி பற்றிய வகுப்பில், சமூகநீதி, இடஒதுக்கீடு, வகுப்பு உரிமை, எல் லாமே ஒன்றில் ஒன்று இணையப்பட் டது. இடஒதுக்கீட்டுக்காக தி.க.செய்த போராட்டம் மற்றும் எம்.ஜி.ஆர். காலத்தில் வருமானத்திற்கு ஏற்றாற் போல் இடஒதுக்கீடு வந்ததும் பின்பு அதனை எதிர்த்து சாதி வாரியாக இடஒதுக்கீடு வழங்கிட தி.க. ஆற்றிய பணிகளும், போராட்டங்களும் இடஒதுக்கீடு 69% அதிகரிக்க தி.க.வின் பங்கு என்ன என்பது தெளிவாக தெரிந்தது. ஆசிரியர் வீரமணி அவர்கள் கடவுள் மறுப்பு வாசகத்தின் ஒவ்வொரு வரியையும் சொல்லி விளக்கம் கொடுத்தார். உலகத்தைப் படைத்தது கடவுள் என்றால் கடவுளை படைத்தது யார் என்று பெரியார் கேட்டதை நினைவு கூறினார். மனிதன் முட்டாள்தனமாக கடவுளைக் கும்பிட்ட போது பார்ப்பனர்கள் எவ்வாறு அதை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி கோயில், வேதம், சாஸ்திரம் முதலியவற்றை எப்படி உருவாக்கினார்கள் என்று தெளிவுபட விளக்கமாக கூறினார்.

ஆசிரியர் அவர்கள் பேசியதில் ஒவ்வொரு தலைப்பில் பேசும்போது அந்த தலைப்புக்கு எந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று கூறியது எனக்கு மிகவும் பிடித்தது.

தமிழ் ஓவியா said...

அறிவுக்கரசு அவர்கள் நீதிக்கட்சி / சுயமரியாதை இயக்கம் என்ற தலைப் பில் வகுப்பு எடுத்தார். இதில் தென் இந்திய நல உரிமை சங்கம் (எஸ்அய்எப்எல்) என்றால் என்ன? நீதிக்கட்சி என்ற பெயர் எப்படி வந்தது. பின்பு திராவிடர் கழகம் என்று எப்படி மாறியது என்ற தெளி வாக கூறினார். பெரியார் எதற்காக

காங்கிரசில் சேர்ந்தார்? பின் ஏன்? எப்போது அதில் இருந்து விலகினார்? என்பது புரிந்தது. இந்த வகுப்பில் தான் திராவிட இயக்க தளகர்த்தாக்கள் டாக்டர் பி.நடேசன், தியாக ராயர், டி.எம்.நாயர் ஆகி யோர் பற்றி தெரிந்து கொண்டேன். சர்க்கரை ஆலை தோல் ஆலை உரு வானதிற்கும் நீதிக்கட்சியின் பங்கு என்ன என்று தெரிந் தது. மேலும் அறிவுக்கரசு அவர்களது வகுப்பில் மனித இனம் எத்தனை வகைப்படும். அதில் திரா விடர் எதில் இருந்து வந்த வர்கள் அவர்கள் 40 மொழிகள் பேசினார்கள் என்பது எனக்கு புதிய செய்தியாக இருந்தது. திராவிடர் கழகக் கொடி எப்படி உருவானது அதற்கு என்ன அர்த்தம் என்பதை தெளிவாக எடுத்து கூறி னார். இந்த வகுப்பில் கருப்புச்சட்டை மாநாடு பற்றியும், 1927 ஆம் ஆண்டு 4 தோழர்கள் மீனாட்சி கோயில் பூட்டி வைத்த செய்தியும் பின்பு அவர்கள் எப்படி வெளி வந்தார்கள் என்பதும் புதிதாக எனக்கு கிடைத்த செய்தி. உலக போரில் இந்தியர்கள் ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்தால் இந்தியாவுக்கு விடுதலை தருகிறோம் என்ற செய்தியும் எனக்குப் புதிதாக இருந்தது. பின் அறிவுக்கரசு அவர்கள் உலகம் படைப்பா? பரிணா மமா? என்ற தலைப்பில் அவர் உலகம் எப்படி உரு வானது எப்படி அதில் உயிரினம் எப்படி உருவானது என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

காளிமுத்து அவர் களின் வகுப்பில் புராண இதிகாச புரட்டுகள் இதில் இராமாயணம், மகாபாரதம், மனுதர்மம், பகவத்கீதை, வேதம் போன்ற புத்தகங்கள், திராவிடர்களை கேவலப் படுத்தவும், அடிமையாய் வைத்திருக்கவும், எழுதப் பட்டது. முக்கியமாக பெண் களை எவ்வளவு கீழ்த்தர மாக சித்தரித்துள்ளார்கள் என்பதை தெளிவாக கூறி னார்.

மருத்துவர் கவுதமன் அவர்கள் மூடநம்பிக்கை மோசடியே என்ற தலைப் பில் பேய் பிசாசு என்பது மூடநம்பிக்கை என்றும் அதை பற்றி சொல்லும் போது அவர் பேய் மாதிரி ஒலி எழுப்பி அரங்கத் தையே தன் வசம் ஈர்த்தார். பேய், பிசாசுகள் பற்றி உடல் மொழியுடன் வகுப்பு எடுத் தது எனக்கு மிகவும் பிடித் தது. அவர் 4 கேள்விகளை முன் வைத்தார். 1) பார்ப்பனர்கள் பேய் ஆடி, சாமி ஆடி பார்த்தீர் களா 2) பெரிய கோவில் களில் சாமியாடி பார்த்திருக் கீர்களா? 3) கலெக்டர், அய்பிஎஸ் சாமியாடி பார்க்க முடியுமா? 4) ஆண்கள் பேய் ஆடுவ தில்லை ஏன்? என்ற கேள்விகளை எழுப்பி பின் பெண்களுக்கு ஹிஸ்டீரியா நோய் எப்படி வருகிறது? அந்த நோயின் பெயர்க் காரணம்பற்றி விளக்கமாகக் கூறினார்.

அதிரடி அன்பழகன் அவர்களின் வகுப்பில் தி.க.வின் மாவீரர்கள் பற்றி எழுச்சியோடு அழுத்த மாகக் கூறினார். இதில் நடேசன், டி.எம்.நாயர், தியாகராயர் ஆகியோரின் வரலாற்றை கூறினார். மருத்துவர் பிறை நுதல் செல்வி அவர்கள் பெரியாரும் பெண் உரிமையும் என்ற தலைப் பில் வகுப்பு எடுத்தார். அதில் பெண்களுக்காக பெரியார் செய்த போராட் டங்கள் பற்றிக் கூறினார். பெண்கள் ஏன் பலவீனராக நடத்தப்பட்டனர்? பெண் களை ஏன் பூட்டி வைத் தார்கள்? வேதம், சாஸ்திரம், இதிகாசம் போன்றவற்றில் பெண்களின் நிலை என்ன என்பதை தோலுரித்து காட்டினார். பருவமடைந்த பெண்ணை திருமணம் செய்து வைக்காத தந்தைக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று மனு தர்மம் கூறியதை பற்றி சொல்லும் போது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந் தது. பெண்கள் எப்போதும் ஆண்களை நம்பித்தான் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது, ஆனால் பெரியார் பெண்களுக்கு கல்வி அறிவு, வேலை வாய்ப்பு வேண்டும், பெயரில் கூட ஆண் பெண் வேறுபாடு இருக்கக்கூடாது, விதவை திருமணம் போன்றவற்றிற் காக குரல் கொடுத்தவர். ஆண்களால் பெண்களுக்கு ஒரு போதும் விடுதலை கிடையாது, அதனால் பெண் கள் தான் அவர்களுக்கு போராட வேண்டும் என்று புதியதொரு உத்வேகத்தை அளித்தார். கேள்வி நேரத் தில் தோழர்கள் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் கேள்வி கேட்டனர் அதற்கு பொறுமையாக அவர் சொன்ன பதில்கள் தெளி வாக இருந்தன.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு யாராவது என்னை கேள்வி கேட்டால் எப்படி விடை கொடுப்பது, அவர்களை எப்படி கேள்வி கேட்பது என்று புரிந்தது. நிறைய பகுத்தறிவு புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயிற்சி பட்டறையில் நான் தோழர்களோடு சேர்ந்து பாட்டுபாடும் போதும் நாடகம் நடிக்கும் போதும் பயிற்சியின் அனு பவம் பற்றி பேசும் போதும் தோழர்களிடம் எனக்கு கிடைத்த ஆதரவும், வகுப்பு எடுத்த அனைத்துப் பேச்சா ளர்களும் என்னை ஊக்கு வித்ததும். எனக்கு பெரிய தன்னம்பிக்கையை கொடுத் தது. நான் பெண் என்பதை நினைத்து பெருமையடைய வைத்தது. நான் இன்னும் நிறைய போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். பிரச்சாரம் செய்ய வேண் டும் என்ற தைரியமும், ஆர் வமும் இந்த பயிற்சி கொடுத்தது. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த அனை வருக்கும் நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன்.

நான் சென்னையில் பிபிஓ ஆக வேலை பார்த்த போது வாங்கிய சான்றிதழ் களும் படிக்கும்போது பெற்ற சான்றிதழ்களும், துறை அறிவு சார்ந்ததாக இருந்தது. ஆனால் பயிற்சிப் பட்டறையில் சான்றிதழ் வாங்கியபோது இது வரை நான் வாங்கிய அனைத்து சான்றிதழ்களுக்கும் இது தான் அடிப்படை என்று நினைத்துக் கொண்டே வாங்கினேன்.

இந்த பயிற்சிப் பட்ட றையில் கலந்து கொண் டதற்காக மிகவும் பெருமை யும், மகிழ்ச்சியும் அடை கிறேன்.

- ப.அருணா, கோத்தகிரி, நீலமலை மாவட்டம்

Read more: http://viduthalai.in/page-2/93863.html#ixzz3NlVM1TP3

தமிழ் ஓவியா said...

மலேயா தமிழர்கள்


மலேயாவில் உள்ள பினாங்கு நகரில் சென்ற 16, 17 - 01 - 1932ல் அகில மலேயா தமிழர்களின் இரண்டாவது மகாநாடு மிகவும் விமரிசையாக நடைபெற்றதை அறிந்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

மலேயாவில் நமது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்து தொண் டாற்றிவரும் திருவாளர்களான வி. கே. முருகேசம் பிள்ளை, ஆர். ஆர். அய்யாறு, தாமோதரம், ஜி. சாரங்கபாணி, சுவாமி அற்புதானந்தா, எச். எச். அப்துல்காதர் முதலான வர்கள் அம்மகாநாட்டில் அதிகமானப் பங்கு எடுத்துக் கொண்டு வேலை செய்திருக்கின்றார்கள்.

அந்த மகா நாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் நமது இயக்கக் கொள்கையை அநுசரித்தனவாகவே இருக் கின்றன.

அத்தீர்மானங்களில் முக்கியமானவை பொருத்தமற்ற விவாகங்களைக் கண்டிப்பதும், விதவா விவாகத்தை ஆதரிப்பதும், விவாகரத்தை ஆதரிப்பதும், இறந்து போனவர்களுக்காகச் செய்யப்படும் அர்த்தமற்ற சடங்குகளைக் கண்டிப்பதும் அகில மலேயா தமிழர் மகாநாடு என்பதை அகில மலேயா தமிழர் சீர்திருத்த மகாநாடு என்று மாற்ற வேண்டும் என்பதும் முக்கியமான தீர்மானங்களாகும்.

இது போலவே வாலிபர் மகாநாட்டிலும், பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இருப்பதைக் கண்டிப்பதாகவும், விவாகங்களைச் சடங்குகள் இல்லாமல் குறைந்த செலவில் பதிவு செய்து கொள்ளும் முறையில் செய்ய வேண்டு மென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இத்தீர்மானங்களை யெல்லாம் நாம் மனப்பூர்வமாகப் பாராட்டுகிறோம். தீர்மானங்களோடு நில்லாமல், வாலிபர்களும் சீர்திருத்த ஆர்வமுடைய தோழர்களும் இவைகளை அநுஷ்டானத்தில் கொண்டு வர வேலை செய்வார்களென்று நம்புகின்றோம்.

குடிஅரசு - கட்டுரை - 07.02.1932

Read more: http://viduthalai.in/e-paper/93892.html#ixzz3NoNQerAz

தமிழ் ஓவியா said...

உள்ளத் தூய்மை கொண்டோர் முகத்திலே கொடுமை சாயல் கொண்டி ராது. நல்ல பழக்க வழக்க முறைகள் கொண்ட நாட்டில் நல்ல நிலைமை யும், கெட்ட பழக்க வழக்கங்கள் கொண்ட நாட்டில் கேடுகளும் நிலவும், அவரவர்களின் செய் கைகளுக் கேற்ப முகமும் உடலும் தோற்றமும் ஏற் படுகின்றன; அதற்கேற்றபடி பலனும் அடைகின்றனர்.
மனிதன் இம்சையை இயற்கை என்று கருதுபவன் அல்ல. மற்றவனை அடித்தால் நோகுமே என்ற உணர்ச்சியை உடையவன் ஆவான். இம்சை செய் யாமல் மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்காமல் வாழத்தகும் அளவு பகுத்தறிவு இருக்கிறது. ஆனால், அவ்வித மனித சமுதாயம் அறிவைத் தவறாகப் பயன்படுத்தி மனிதத் தன்மையிலிருந்து பிறழ்ந்து, இயற்கையிலிருந்து மாறிவிட்டது.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/e-paper/93892.html#ixzz3NoNayHIb

தமிழ் ஓவியா said...

சூழ்ச்சி வெளிப்பட்டது (தேசியத்துரோகி)


திரு. காந்தியவர்கள் இங்கிலாந்தில், வட்டமேஜை மகாநாட்டிலும், மற்றும் வெளியிடங்களிலும், இந்தியாவின் நிலைமையைப் பற்றிச் செய்து வந்த பிரசங்கங்களை நாம் அவ்வப்போது பத்திரிகைகளிற் படித்து வந்திருக்கிறோம். அவர் இந்தியாவில் உள்ள சாதி வேற்றுமைகளை வெளிப்படுத்தாமல் கூடியவரையிலும் மறைத்துக் கொண்டே வந்தார்.

இந்தியாவில் சமூக ஒற்றுமை ஏற்பட்டு விட்டதென்றும், ஆகையால் பூரண சுயேச்சை கொடுத்துவிட வேண்டுமென்றும் ஆரவாரம் பண் ணினார். தாழ்த்தப்பட்டவர் களைப் பற்றிப் பேசும்போது, அவர் களுக்குக் காங்கிரஸ்தான் பிரதிநிதி, அம்பேத்கர் முதலான வர்கள் பிரதிநிதிகள் அல்லர். தாழ்த்தப்பட்டவர்களை இந்துக்கள் அவ்வளவாகக் கொடுமைப்படுத்தவில்லை.

ஆகையால் அவர்களுக்குத் தனித்தொகுதி வேண்டிய அவசியம் இல்லை. பொதுத்தொகுதிகளிலேயே தாழ்த்தப்பட்டவர்களும் தேர்ந் தெடுக்கப்படலாம். கொஞ்ச நஞ்சம் உள்ள வேற்றுமைகளும் சுயராஜ்யம் கொடுத்துவிட்டால் நீங்கிப்போய்விடும் என்று பேசிக் கொண்டிருந்தார்.

திரு. காந்தி, இவ்வாறு முழுப்பூசணிக்காயைச் சோற்றுக்குள் வைத்து மூடிக்கொண்டு இங்கிலாந்தில் இருந்து கொண்டிருக்க இங்குள்ள அவருடைய வாலர்கள் என்ன செய்து கொண்டி ருந்தார்கள்? அம்பேத்கர் தேசத்துரோகி யென்றும், முஸ்லிம்கள் அரசாங்கத்தைத் தாங்குகிறவர்களென்றும், அம்பேத்கரின் விஷமத்தனமென்றும், அம்பேத்கரின் மேல் நம்பிக்கை யில்லையென்றும் பத்திரிகைப் பிரசாரங்களும், மேடைப் பிரசாரங்களும், செய்து கொண்டிருந்தார்கள்.

ஆனால், தாழ்த்தப்பட்டவர்களும் பல மகாநாடுகளும் கூட்டங்களும் கூட்டி, அம்பேத்கரே தங்கள் பிரதிநிதியென்றும், காந்தி தங்களுக்குப் பிரதிநிதியல்லவென்றும் கண்டித்துத் தீர் மானங்கள் பல செய்து கொண்டுதான் இருந்தார்கள். கடைசியில் திரு. காந்தி இங்கிலாந்து சென்று, வட்டமேஜை மகாநாட்டை ஒரு முடிவும் செய்யவொட்டாமல் பண்ணிவிட்டு இந்தியா வுக்குச் சென்ற 28-12-1931ல் திரும்பிவந்தார்.

தமிழ் ஓவியா said...

அப்போது அவரை அவர்பால் பக்தியுடைய மக்கள் திரளாகக்கூடி பம்பாயில் வரவேற்றனர். அச்சமயத்தில் நடந்த மற்றொரு சம்பவம் குறிப்பிடத் தகுந்ததாகும். 1000 தொண்டர்கள் தீண்டா வகுப்பினர் கறுப்புக்கொடி பிடித்துக்கொண்டு வந்து திரு. காந்திக்குத் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். 1000 தொண்டர்க ளென்பது தேசியப் பத்திரிகைகளில் வெளி வந்துள்ள கணக்குத்தான்; ஆனால், உண்மையில் ஆயிரத்திற்கு மேலான தொண்டர்கள் இருந்திருக்கவேண்டும்.

தாழ்த்தப்பட்ட தொண்டர்கள் கறுப்புக்கொடி பிடித்ததோடு மட்டும் விடவில்லை. காங்கிரஸ் தொண்டர்களுக்கும், இவர் களுக்கும் பெரிய சச்சரவுகளும் நடைபெற்றன. அடிதடிகளும் நடந்தன. கடைசியில் போலீசார் தலையிட்ட பின்னரே கலகம் அடங்கிற்று. இவ்வாறு காந்தியின் வருகையின்போது கலகம் நடந்த செய்தியை யாரும் மறைக்க முடியாது. அதில் உள்ள ரகசியமும் வெளிப்படையானதேயாகும்.

இவ்வாறு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொண்டர்கள், கறுப்புக்கொடி பிடிக்க வேண்டிய காரணந்தான் என்ன? திரு. காந்தி, தானே இந்தியா முழுவதற்கும் பிரதிநிதி; தாழ்த்தப் பட்டவர்களுக்கும் பிரதிநிதி. ஆகையால், தான் சொல்லு வதையே கேட்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தது. பொருத்தமற்ற வார்த்தை-அர்த்தமற்ற சொற்கள்.

தமிழ் ஓவியா said...


அவர் எங்களுடைய பிரதிநிதி அல்ல; அம்பேத்கர்தான் எங்கள் பிரதிநிதி என்பதைத் தெரிவிப்பதற்கேயாகும். இதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உண்மையான மனப்பான்மை யையும், உணர்ச்சியையும் வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியைக் கொண்டு திரு. காந்தி இங்கிலாந்தில் பேசிய பேச்சக்களின் உண்மை விளங்கும்.

இந்தச் சம்பவத்தை, நமது நாட்டுத் தேசியப் பத்திரிகைகள் குறிப்பிடும்போது, அம்பேத்கர் கட்சியாரின் அமளி என்றும், அம்பேத்கர் கூட்டத்தாரின் அயோக்கியத் தனம் என்றும், அம்பெத்கர் கோஷ்டியாரின் ஆர்ப்பாட்டம் என்றும், பெரிய தலைப்பெயர்கள் கொடுத்துப் பிரசுரித்தன.

தாழ்த்தப் பட்டவர்கள், தங்கள் உணர்ச்சியைக் காட்டுவதற்காகச் செய்த காரியத்தை ஏன் இவர்கள் இவ்வாறு விவேகமின்றிக் குறைகூற வேண்டும்? இதற்காகத் திரு. அம்பெட்கரின் பெயரையும் ஏன் இழுக்க வேண்டும்?

தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திரு. காந்தியின் மேல் நம்பிக்கை இல்லை என்பதற்கும், தனித்தொகுதி வேண்டு மென்பதை ஆதரித்தவர்களிடத்தில்தான் நம்பிக்கை யுண்டென் பதற்கும் மற்றொரு உதாரணத்தையும் காணலாம். சென்ற 27-12-1931 இல் சென்னைக்கு வந்து சேர்ந்த, திருவாளர்கள். ஏ.டி. பன்னீர்செல்வம், ஏ. ராமசாமி முதலியார், ஆர். சீனிவாசன், பொப்பிலிராஜா முதலியவர்களைக் குதூகலமாக வரவேற்ற கூட்டத்தில் மிகுதியாக இருந்தவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிரதிநிதிகளும், அவ்வகுப்புத் தொண்டர்களுமேயாவார்கள்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் இவ்வாறு ஏராளமாகக்கூடி வரவேற்றது ஏன்? திரு. அம்பேத்கரின் துணையாக இருந்த திரு. ஆர். சீனிவாசன் அவர் களிடம் தங்களுக்குள்ள நம்பிக்கையைக் காட்டுவதற்கேயாகும். திரு. அம்பேத்காரின் கொள்கையை ஆதரித்த திருவாளர்கள். பன்னீர்செல்வம், பொப்பிலி ராஜா, ராமசாமி முதலியார் ஆகியர்களிடமும், தமக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கேயாகும்.

இவ்வாறு இந்தியா முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் எல்லோரும் திரு. காந்தியாரின் அபிப்பிராயத்திற்கு விரோதமாக வும், அம்பேத்கர் அபிப்பிராயத்தில் நம்பிக்கையுடையவராகவும் இருப்பது மலைமேல் ஏற்றிய விளக்கைப்போல் தெரிகிறது.

இப்படியிருந்தும், திரு. காந்தியும், அவருடைய பக்தர்களும், இன்னும் பழைய பல்லவி யையே பாடுவதில் என்ன பயன் என்று கேட்கிறோம். நமது நாட்டுப் பத்திரிகைகளும் உண்மையை மறைத்து விட்டுத் தாழ்த்தப்பட்ட வகுப்புத் தலைவர்களின் மேல் பழியைச் சுமத்துவது எவ்வளவு அயோக்கியத்தனம்? தாழ்த்தப் பட்டார்களை உயர்ந்த ஜாதி இந்துக்களால் நசுக்கப்படுகிறர் களாகவே இன்னும் வைத்துக்கொண்டு, அவர்களும் இந்துக்கள்தான்; அவர்களைப் பிரிக்கக்கூடாது.

அவர்களுக்குத் தனிப்பிரதி நிதித்துவம் கொடுத்தால் அவர்கள் எப்பொழுதும் தீண்டாதார்களாகவே இருந்து விடுவார்கள் என்று வீண் பிடிவாதம் பேசுவதில் என்ன பிரயோசனம்?

திரு. காந்தியவர்கள் வந்து இறங்கும்போதே - அவரை வரவேற்கக் கூடியிருந்த கூட்டத்திலேயே தாழ்த்தப் பட்டவர் களுக்கும், உயர்த்திக்கொண்டிருப்பவர்களுக்கும் சண்டை சச்சரவு நடந்தது.

அவர் வரும்போதே இப்படியிருந்தால், இனி காரியங்களைச் செய்யத் தொடங்கும்போது என்னென்ன காரியங்கள் நடக்கப்போகின்றனவோ? என்பதைப் பற்றி இப்பொழுதும் நாம் என்ன சொல்லுவது? எல்லாம் போகப் போகத்தான் தெரியும்.

குடிஅரசு - கட்டுரை - 10.01.1932

Read more: http://viduthalai.in/e-paper/93893.html#ixzz3NoNlaSQD

தமிழ் ஓவியா said...

பூனைக்கும்? பாலுக்கும்?


இந்திய சட்டசபையில் மேன்மை தங்கிய வைசிராய் என்ன பிரசங்கம் செய்யப்போகிறார் என்று நமது நாட்டு அரசியல்வாதிகள் அனேகர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பிரசங்கமும் சென்ற 25 - 01 - 1932 தேதியில் வெளிவந்து விட்டது. அதில் குறிப்பிடத்தகுந்தபடி விஷயம் தற்கால சட்டமறுப்பைப் பற்றி ராஜப்பிரதிநிதி அவர்கள் சொல்லியிருக்கும் விஷயமேயாகும்.

மேன்மைதங்கிய ராஜபிரதிநிதியவர்கள் சண்டைக்கு இழுக்கப் பட்டால் எந்த அரசாங்கம் பின்வாங்கி நிற்கும்? என்று கேட்கும் கேள்வியும், சட்டமறுப்புக்கு விரோதமாக இப்பொழுது அமலில் உள்ள முறைகள் அவசியமாக இருக்கக் கூடிய வரையில் அவைகள் தளர்த்தப்படவே மாட்டா என்று கூறி இருப்பதும் மிகவும் கவனிக்கக் கூடிய விஷயமாகும்.

அதிலும் காங்கிரஸ் காரர்கள்பால் அனுதாபம் காட்டுவதன் மூலம் தேசாபிமானிகள் என்று காங்கிரஸ்காரர்களால் மதிக்கப்பட வேண்டுமென்றும், சட்டமறுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலைமையில் இருப்பதன் மூலம் அரசாங்கத்தார்க்கும் நல்லபிள்ளைகளாக இருக்க வேண்டுமென்றும் தடுமாறிக் கொண்டிருக்கின்ற கோழைத் தலைவர்கள் அவசியம் கவனிக்க வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும்.

அவசரப்பட்டு சட்டமறுப்பைத் தொடங்கியவர்கள் காங்கிரசின் குட்டித் தலைவர்களென்பது நாடறிந்த விஷயமாகும். ஆனால் திரு.காந்திக்கு இராஜப்பிரதிநிதி பேட்டி கொடுத்துப் பேசியிருந்தால் சட்டமறுப்பியக்கம் இவ்வளவு கஷ்டமான நிலைமைக்குப் போயிருக்காதெனவும், ஆகவே ராஜப்பிரதிநிதியவர்கள் திரு. காந்திய வர்களுக்குப் பேட்டியளிக்க மறுத்தது தவறு எனவும் இந்த நடுநிலைமைக்காரர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இவர்கள் இவ்வாறு சொல்லுவதிலும் ஒரு சிறிதும் அர்த்தமில்லை என்றுதான் நாம் சொல்லுகிறோம். உண்மையில் திரு. காந்தியவர்கள் சமாதானப் பிரியமுடையவராயிருந்தால் காங்கிரசின் சர்வாதிகாரி யாகிய தன்னுடைய அனுமதியும் இல்லாமல் குட்டித் தலைவர் களால் தொடங்கப்பட்ட சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்திவிட்டு ராஜப்பிரதிநிதி அவர்களுடன் சமாதானம் பேச முன்வருவாரானால் அது நியாயமாக இருக்கும்.

அப்பொழுது ராஜப்பிரதிநிதியவர்கள் சமாதானம் பேச மறுத்திருந்தால் காங்கிரஸ் தன்னுடைய கொள்கைப்படி சட்டமறுப்பு ஆரம்பித்திருக்கலாம். அப்பொழுது இந்த நடுநிலைமைவாதிகள் கூறும் ராஜப்பிரதிநிதி காந்திக்குப் பேட்டியளிக்க மறுத்துவிட்டது தவறு என்று சொல்லுதவற்கு அர்த்தமிருக்க முடியும்.

இது நிற்க, சட்டமறுப்பியக்கத்தால் ஒரு காரியமும் நடக்கப் போவதில்லை என்பது நமது நேயர்களுக் கெல்லாம் தெரிந்த விஷயமே ஒழிய வேறில்லை இதுவரையிலும் நடந்த சட்டமறுப்பினால் நமக்கு கிடைத்த பலன் என்ன என்பதை யோசித்துப் பார்ப்பவர்களுக்கு இது விளங்காமல் போகாது, சட்ட மறுப்பு இல்லாமலிருந்தால், வட்டமேஜை மகாநாட்டுக் கமிட்டிகளின் வேலை இன்னும் திறமையாகவும், தாராளமாகவும், விரைவாகவும், நடந்து முடியக்கூடும்.

இப்பொழுது கொஞ்சம் சீர்பட்டிருக்கின்ற தொழில்களும், வியாபாரங்களும், விளைவுப் பொருள்களின் அக விலைகளும் இன்னும் கொஞ்சம் சீர்படக்கூடும். சட்டமறுப்பு நடை பெறுவதால் இவைகள் பாதகமடையக் கூடுமேயொழிய நமது நாட்டிற்கு வேறு கடுகளவு நன்மை கூட உண்டாகப் போவ தில்லையென்று ஆரம்பமுதல் கூறிவந்ததையே இப்பொழுதும் கூறுகிறோம்.

ஆகையால், சட்டமறுப்பு இயக்கத்தில் சிறிதும் நம்பிக்கையில்லா விட்டாலும் அது நாட்டுக்குத் தீமை விளைவிக்கும் பயனற்ற வழி என்று எண்ணிக் கொண்டிருந்தாலும், பாமர மக்களின் தூற்றுதலுக்கு பயந்து பேசாமலிருக்கும் ராஜீயவாதிகள் தமது கோழைத்தனத்தை விட்டுவிட்டு தைரியமாக சட்டமறுப்பை அடக்குவதற்கு உதவி செய்வதே சிறந்த காரியமாகும்.

சட்டமறுப்பு நின்றால் அவசர சட்டங்களும் நீக்கப்படும் என்னும் கருத்தைத் தெளிவாக இராஜப்பிரதிநிதியவர்கள் தமது பிரசங்கத்தில் கூறி யிருப்பதைக் கவனித்து ஆவன செய்வதே கடமையாகும். பூனைக்குத் தோழன் பாலுக்குக் காவல் என்று சொல்லிக் கொண்டு வாழுகின்ற சமயம் இதுவல்ல என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.

குடிஅரசு - கட்டுரை - 31.01.1932

Read more: http://viduthalai.in/e-paper/93894.html#ixzz3NoOBoAlt

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

போட்டிக் கடைகளா?

வைணவர்களுக்கு வைகுண்ட ஏகாதசி, சைவர்களுக்குச் சிவன் ராத்திரி இவை என்ன போட்டிக் கடைகளா?

Read more: http://viduthalai.in/e-paper/93908.html#ixzz3Nr25Z7ZP

தமிழ் ஓவியா said...

பிளாஸ்டிக் சர்ஜரி முதன் முதலில் செய்யப்பட்டது எப்பொழுது?


வரலாற்று உண்மைகளுக்குப் புறம்பாகப் பேசுவதை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. ஆதி காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறையை இந்தியர்கள் பின்பற்றியதாக பிரதமர் நரேந்திரமோடி பேசியதற்காகவே வரலாற்று ஆய்வுக் கவுன்சில் குட்டு வைத்துள்ளது.வரலாற்று அறிஞர்கள், ஆர்வலர்கள் 10 ஆயிரத்தும் மேற் பட்டோர் அங்கம் வகிக்கும் வரலாற்று ஆய்வுக் கவுன்சிலின் 80-ஆம் ஆண்டையொட்டி டில்லி, ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. படத்திலுள்ள வால்டர் என்பவருக்கு தான் முதன்முதலில் பிளாஸ்டிக் சர்ஜரி 1917ஆம் ஆண்டு செய்யப்பட்டது. இதற்கு முன்பு எவருக்கும் செய்யப்படவில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/93953.html#ixzz3O0Ea81ms

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சர்வமும் சக்திமயம்

துர்க்கை சர்வ சக்தி மயமாக இருக்கின்றாள். சிவனிடம் சிவையாகவும், நாராயணரிடம் லட்சுமி யாகவும், பிரம்மாவிடம் சரஸ்வதியாகவும், கிருஷ் ணரிடம் ராதையாகவும், சந்திரனிடம் ரோகினியா கவும், இந்திரனிடம் இந்திராணியாகவும், காமனிடம் ரதியாகவும், வருணனிடம் வருணாளி னியாகவும், வாயுவிடம் அவர் சக்தியாகவும், அக்னியிடம் ஸ்வாஹா வாகவும், குபேரனிடம் அவன் சக்தியாகவும், யமனிடம் சுசீலாவாகவும், நிருருதியாகவும் கோட வீயாகவும், ஈசானனிடம் சசிகலையாகவும், மனு விடம் சதரூபையாகவும், கர்தமரிடம் தேவகதி யாகவும், வசிஷ்டரிடம் லோபாமுத்ரையாகவும், கௌதமரிடம் அகலி கையாகவும், எல்லாவற் றிற்கும் ஆதாரபூதமான பூமியாகவும், பல சிறந்த நதிகளாகவும், இந்த துர்க் கையே விளங்குகின்றாள்.

இப்படி எழுதுகிறது ஓர் ஆன்மிக இதழ். துர்க்கை - இதுவரை சிவனின் மனைவியாகத் தான் பக்தர்கள் நினைத் துக் கொண்டு இருந்தனர். இந்த ஆன்மிக இதழ் சொல்லுவதைப் பார்த் தால் எல்லா முக்கியக் கட வுளுக்கும் மனைவியாக அல்லவா இருக்கிறாள்?

Read more: http://viduthalai.in/e-paper/93952.html#ixzz3O0Eq4xQn

தமிழ் ஓவியா said...

கோட்சேவுக்கு கோயில் கட்டுவதில் பிரதமரின் நிலைப்பாடு என்ன? உ.பி. நவ்நிர்மான் சேனா கேள்வி


லக்னோ, ஜன.5- கோட்சேவுக்கு கோயில் கட்டும் முடிவை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள 40 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்ற மகாபஞ்சாயத்து நடை பெற்றது.

காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு உ.பி.மாநிலம், மீரட் மாவட்டம் பிரம்மபுரி பகுதியில் சிலை அமைக் கப்படும். அந்த சிலை வைக்கப்படும் இடத்தில் கோயில் ஒன்றும் கட்டப்படும் என அகில பாரத இந்து மகாசபை அமைப்பின் தேசியப் பொதுச் செயலாளரான ஆச்சார்யா மதன் என்ப வர் அறிவித்திருந்தார். இங்குள்ள சாரதா சாலை யில் இந்த கோயி லுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்ட தாக செய்திகள் வெளி யாகின.

இதற்கிடையே, கோட் சேவுக்கு கோயில் கட்ட அனுமதிக்க மாட்டோம் என அறிவித்த உத்தரப் பிரதேச மாநில நவ் நிர்மான் சேனா, இவ்விவ காரம் தொடர்பாக அனைத்து தரப்பு மக் களின் கருத்தினை கேட்கும் வகையில் 40 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்ற மகா பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்தது. உத்தரப்பிர தேசம் மாநில நவ் நிர் மான் சேனா தலைவர் அமித் ஜானி தலைமை யில் நடைபெற்ற இந்த மகாபஞ்சாயத்தில் கோட் சேவுக்கு கோயில் கட்டு வதை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இதனையடுத்து, கோட்சேவுக்கு கோயில் கட்டுவது தொடர்பாக பிரதமரின் நிலைப்பாடு என்ன? மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என அமித் ஜானி குறிப்பிட்டார். கோட்சேவுக்கு கோயில் கட்டும் முடிவை எதிர்த்து வரும் 11ஆ-ம் தேதி மீரட் நகர் சாரதா சாலையில் உள்ள அகில பாரத இந்து மகாசபை அலுவல கத்தின் முன்னர் தொண் டர்களுடன் திரண்டு சென்று போராட்டத்தில் ஈடுபடவும், பட்டினிப் போராட்டம் மேற்கொள் ளவும் முடிவு செய்துள்ள தாகவும் அவர் தெரி வித்தார்.

பின்னர், டில்லியில் உள்ள பிரதமரின் அலு வலகத்துக்கு சென்று இது தொடர்பாக மனு அளிப் போம். கோட்சேவுக்கு கோயில் கட்டும் விவ காரத்தில் பிரதமரின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக ஒரு பொது விளக்கம் அளிக் கும்படி பிரதமரை கேட் டுக் கொள்ளப் போவ தாகவும் அமித் ஜானி கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93950.html#ixzz3O0ExWtjn

தமிழ் ஓவியா said...

பிஜேபியை தோற்கடித்து மேயரானார் திருநங்கை

வாடத் தொடங்கிய தாமரை சத்தீஸ்கர் தேர்தலில் பிஜேபி படுதோல்வி!

பிஜேபியை தோற்கடித்து மேயரானார் திருநங்கை


ரெய்ப்பூர், ஜன.5- சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர் தலில் பாஜக தோல் வியைச் சந்தித்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த வாரம் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. முன்பு வென்ற பெருவாரி யான இடங்களில் பா.ஜ.க. வினர் வைப்புத்தொகை கூட பெற முடியவில்லை. மோடி அலையை நம்பி களமிறங்கியவர்களை மக்கள் அலை தோற் கடித்துவிட்டது.

முக்கியமாக சத்தீஸ்கர் உள்ளாட்சித் தேர்தலில் மோடி பிரச்சாரம் செய் யாவிட்டாலும் விதிகளை மீறி மத்திய அரசு மின் சாரம் மற்றும் வீட்டுவசதி வாரியத்திற்கான திட்டங் களை அறிவித்தது இதன் மூலம் தேர்தலில் எளிதாக வென்றுவிடலாம் என்று எண்ணியது. 2009 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர் தலில் 154 இடங்களில் 139 இடங்களை பாஜக கைப்பற்றியது, காங்கிரஸ் வெறும் 10 இடங்களில் மாத்திரமே வெற்றி பெற முடிந்தது. இதர இடங் களில் சுயேட்சைகள் வென்றனர்.

இந்த்த் தேர்தலில் பாஜகவின் தோல்விமுகம் ஆரம்பமாகிவிட்டதைக் காட்டுகிறது தேர்தல் முடிவுகளில் மொத்த முள்ள 154 இடங்களில் 102 இடங்களை காங்கிரஸ் வென்றது. பா.ஜ.க. 53 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க.விற்கு மிகவும் சொற்ப வாக்கு களே கிடைத்துள்ளன.

மாநகரத்தின் மேயரான திருநங்கை

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் மாநகர மேயராக சுயேட்சையாக போட்டி யிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றார். மது என்ற திருநங்கை தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரான மஹாவீரை விட 4,537 வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்றுள்ளார்.

தலித் வகுப்பைச் சேர்ந்த மது தேர்தல் வெற்றி பற்றிக் கூறுகை யில் மேயர் தேர்தலில் கோடிகளைக் கொட்டி பல்வேறு வகையில் பா.ஜ.க. வினர் பிரச்சாரம் செய் தனர். என்னிடம் தினசரி வரும் வருமானம் மாத் திரமே தேர்தலுக்கான செலவுகளை எனது நண்பர்களும் பொதுமக்களும் மேற்கொண்டனர்.

எந்த ஒரு தொழிலதிபரும் எனக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை.

8 ஆம் வகுப்பு வரை மாத்திரம் படித்த மது தன்னைப் போன்ற பல்வேறு கைவிடப்பட்ட திருநங்கைகளுக்காக சுயதொழில் கூடம் ஒன்றை நடத்தி வரு கிறார்.

மேலும் அவர் கைவிடப்பட்ட பெண் குழந்தைகளையும் தத்து எடுத்து அவர்களையும் காப்பாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/93945.html#ixzz3O0F6B8Sx

தமிழ் ஓவியா said...

அறிவு பெற முடியாமல்....

தெரியாததை, இல்லாததை நம்பவேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடு கிறான். - (விடுதலை, 2.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/93954.html#ixzz3O0FYtf3y

தமிழ் ஓவியா said...


ஒகேனக்கல் பயிற்சிப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட போர்வாள்!

நாம் இன்று பெற்றுள்ள உணவு, உடை, பேச்சு ஏன் மூச்சு சுதந்திரம் எவ்வளவு பெரியது என்பது நம் முன்னோர்கள் எதிர்கொண்ட அநீதிகளில் இருந்து புரிய வருகிறது. அடிப்படைத் தேவைகள் அனைத்தும் அவர்களுக்கு மறுக்கப்பட்டி ருந்தன. ஜாதி, மதங்களின் பெயரால் மக்கள் பிரிக்கப்பட்டு, சிலர் மேல்மக்கள் என்றும் சிலர் தாழ்ந்தவர்கள் என்றும் பிரிக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்டவர் களுக்கு தான் மேற்கூறிய அடிப்படைத் தேவைகள் மறுப்பு. ஜாதி, மதம் என்பது தந்திரமாக கடவுளின் பெயரால் அடி களிட்டு பார்ப்பனர் வீட்டிற்கு போடப்பட்ட கதவுகள். இவை அவர்கள் அதிகார செல்வம் களவு போகாமல் காப்பதற்கு அழகாக உதவுகிறது. பெரியார், அம் பேத்கர் போன்ற தலைவர்கள் அரும்பாடு பட்டும் ஜாதியும், மதமும் முழுமையாக ஒழிந்து போகாததன் காரணம், அவை கடவுளின் பெயரால் சித்தரிக்கப்பட்டு மக்களின் மனதில் ஏற்படுத்திய பயமே ஆகும் அவை சட்டங்களோ, நீதியோ அல்ல. இந்த சாதியையும், மதத்தையும் நீதியாக்கு வதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் பல.

அவற்றுள் முதலில் கூறபடுவது பிறப்பு! அதாவது பிரம்மன் தலையில் இருந்து பிராமணனும்,தோளில் இருந்து சத்ரியனும், தொடையில் இருந்து வைசியனும் காலில் இருந்து சூத்திரனும் பிறந்தான் என்பது. கடவுளே புனிதமுடையவர் என்று கூறும் போது அவர் கால் மட்டும் எப்படி தலையி லிருந்து தாழ்வான தாகிவிடும்? அப்படியே யென்றால் பிராமணன் மந்திரம் ஓதி போடும் பூக்கள் அனைத்தும் தலையிலே தானே விழ வேண்டும், ஏன் காலில் விழுகிறது. கடவுளே இருந்தாலும், என் பெயரால் இத்தனை வேறுபாடுகளா? என்று ரத்தக்கண்ணீர் சிந்தியிருப்பார். ஆனால்,அப்படி ஏதும் நடந்ததாக சரித்திரம் இல்லை. மனு என் பவன் பிராமணரின் நீதிபதி மற்றும் வக்கீல். இருபதவியையும் அவனே வகிக்கிறான். அவர்களுக்கு சாதகமான சட்டங்களை வகுத்து அவரே வாதாடுகிறார்.

அவர் வகுத்திருக்கும் நீதிகள் அனைத்தும் பிரா மணர் முன்னேற்றத்திற்கும் அதிகாரத்திற்கும் எளிதில் வழி வகுக்கிறது. இதில் உயர்நீதி (?) என்னவென்றால் பிராமணர்கள் கொலையே செய்தாலும் அவர்களின் தண்டனை மற்றவர்களை விட மிகமிக குறைவு தான். (தலையை மொட்டை அடித்தால் போதும்) பிராமணர்கள் இவ்வாறே தன் சொகுசு வீட்டிற்கு புகுவிழா, இல்லை இல்லை 'பிரவேசம்' செய்துள்ளனர். அந்த வீட்டின் கதவை உள் பூட்டிட்டு சாவியையும் விழுங்கிவிட்டனர். இப்போது கதவை உடைப்பதை தவிர வேறு வழியே இல்லை. வாருங்கள் இளைஞர்களே! கதவை உடைத் தால் மட்டும் போதுமா? இந்த வருணாசிரம கட்டடத்தையே தூள் தூளாக்க வேண்டும். இளைஞர்களாலேயே அது முடியும்.

ஆசிரியர் கடந்த 27, 28, 29.-12.-2014 ஆகிய மூன்று நாட்களில் ஒகேனக்கல்லில் நடந்த பயிற்சிப்பட்டறையில் பெற்ற பயிற்சி யின் விளைவாக எனக்குள் எழுந்த சிந் தனையை தங்களின் மேலான பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.

(நான், க. அருள்மொழி - அனிதாதாரணி இணையரின் மகள். கல்லூரியில் முதலாண்டு படிக்கும் மாணவி)

- அ.ஓவியா, குடியாத்தம் -632602

Read more: http://viduthalai.in/page-2/93958.html#ixzz3O0GBwCyt

தமிழ் ஓவியா said...

குளிர்காலத்தில் உடல் நலத்தைப் பாதுகாக்க!


வெயில் காலத்தைவிட பனி காலங்களில் நமக்கு அதிக அளவில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகிறது. மனிதர்களுக்கு காது, மூக்கு, தொண்டை பகுதிகளைத்தான் பனி தாக்குவ தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இரவு முதல் அதிகாலை வரையிலும் குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சுத் திணறல், சளி என பிரச்சினைகள் துவங்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறவும் வாய்ப்புள்ளது. பின்னர் அது மூக்கடைப்பு, காதுவலி போன்ற நோய்களையும் துணைக்கு அழைத்துக் கொள்ளும். குளிரால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி காய்ச்சல் மற்றும் குளிர்கால பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சில இயற்கை மருத்துவ வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.

1. பனிகாலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். அதற்கு எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். வெந்நீரில் ஒரு கைப்பிடி அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு கொதிக்கவைத்து அருந்தினால் தொண்டைவலி, மூக்கடைப்பு, காதுவலி, சளி போன்ற நோய்கள் நம்மை அண்டாது.

2. குளிருக்கு இதமாக கற்பூரவல்லி, தூதுவளை கீரை ஆகியவற்றில் கஷாயம் வைத்து அருந்தலாம். அல்லது 2 வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு பச்சையாக சாப்பிட்டாலும் உடலில் குளிரின் தாக்கம் ஏற்படாது.

3. குளிர்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது தோல்தான். சிலருக்கு தோலில் வெள்ளை படர் அல்லது தோல் சுருக்கம் ஏற்படும். எனவே, அதைத் தடுக்க குளிக்கும் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து குளிக்கலாம். தோல் பாதுகாக்கப்படும். தோல் வறட்சியும் நீங்கும்.

4. பனி காலத்தில் குளிப்பதற்கு சோப்புகளை பயன் படுத்துவதைவிட கடலை மாவு, பயத்தம் பருப்பு மாவு ஆகியற்றை தேய்த்து குளிக்கலாம்.

5. தொண்டைவலி, வறட்டு இருமலுக்கு, ஒரு கரண்டியில் நெய்யை விட்டு அடுப்பில் வைத்து, காய்ந்ததும் ஒரு சிறுதுண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும்போது, அரை தேக்கரண்டி மிளகுப்பொடி போட்டு சற்று ஆறியதும் அதை உருட்டி வாயில் போட்டுக்கொண்டால் இதமாக இருக்கும். வறட்டு இருமலும் அடங்கும்.

6. மூக்கு, தொண்டை, காதுகளில் ஏற்படும் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, காலில் பாத வெடிப்புகள் வேறு ஏற்படும். பாதவெடிப்புக்கு பயப்படவே தேவையில்லை. சிறிதளவு விளக்கெண்ணெயுடன், தேங்காய் எண்ணெயை சம விகிதத்தில் கலந்து, அதில் சிறிது மஞ்சள் பொடியை போட்டு குழைத்து, பேஸ்ட் போல் செய்து, அதை வெடிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகிவிடும்.

தமிழ் ஓவியா said...


7. முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்க பாதாம் எண்ணெய் பயன்படுத்துவது உகந்தது.

குளிர் காலத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவு வகைகள்

1. பனி காலங்களில் எண்ணெய்கள் மூலம் செய்யப்பட்ட பலகார வகைகளை அறவே ஒதுக்கிவிடவேண்டும். காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிக்கு இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசியால் செய்யப்பட்ட கஞ்சி, பிரெட் போன்றவற்றை சாப்பிடலாம்.

2. பழங்களில் சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களைச் சாப்பிடவேண்டும். புளிப்புச்சுவை நிறைந்த கொய்யா, ஆரஞ்சு, சீத்தாப்பழம் போன்ற பழவகைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ளக்கூடாது. வெயில் காலங்களில் நம் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளும் இப்பழங்கள் குளிர்காலங்களில் ஒத்துக்கொள்ளாது. விரிவாக கூறினால், வெயில் காலங்களில் நமக்கு அதிகம் வியர்க்கும். அப்போது வியர்வையுடன் சேர்ந்து அல்கலைன் சிட்ரைட் என்ற அமிலமும் நம் உடலில் இருந்து வெளியேறும். அதை ஈடு செய்வதற்காக நாம் புளிப்புச் சுவைமிக்க பழங்கள், மோர் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வோம். ஆனால், குளிர்காலத்தில் இவற்றை நாம் எடுத்துக்கொள்ளும்போது, நம் உடலில் அதிக அளவு அமிலச்சத்து சேர்ந்து சளி, சைனஸ் போன்றவை ஏற்படலாம். பழங்களில் பச்சை திராட்சையும், பச்சை வாழைப்பழத்தையும் கட்டாயம் தவிர்த்திட வேண்டும்.

3. முக்கியமாக இந்தப் பனிக்காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். சுண்டல் வகைகள், முளைக்கட்டிய தானியங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் சமையலில் மிளகு கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.

4. ஒரு நாளில் 2 வேளை உணவில் இரும்புச்சத்து நிறைந்த காய், கீரை, பழ வகைகள் எடுத்துக்கொள்ளலாம். முருங்கை, பேரீட்சை, திராட்சை உள்ளிட்டவற்றையும் சாப்பிடலாம். பழரசங்கள், இளநீர், தர்ப்பூசணி, அய்ஸ் கிரீம்கள் உள்ளிட்ட குளிர்ச்சியான உணவு வகைகளை அறவே தவிர்த்தல் நல்லது.

5. ஊட்டச்சத்துகள் முகுந்த பசலைக்கீரை, வேர்க்கடலை, கேரட், கோழிக்கறி ஆகியவற்றை சாப்பிடலாம். குறிப்பாக கோழி சூப் குளிருக்கு ஏற்ற இதமான ஒன்று என்பது யாவரும் அறிந்ததே.

6. நீர்ச்சத்து நிறைந்த பூசணி, சுரைக்காய், புடலங்காய், பீர்க்கன்காய், வெள்ளரி போன்ற காய்கறிகளை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.
மேலும் நோய் எதிர்ப்புச்சத்து மிகுந்த உணவுகளான கீரை, கோதுமை உட்கொள்ளுங்கள்.

Read more: http://viduthalai.in/page-7/93984.html#ixzz3O0IBhbHU

தமிழ் ஓவியா said...
நீதிமன்ற தீர்ப்பைக் குப்பைக் கூடையில் போடும் பார்ப்பனர்கள்

சிறீரங்கம் கோவிலில் பார்ப்பன அர்ச்சகர்களை சுமந்து செல்லுவதா?

அன்று தமிழர் தலைவர் கொடுத்த குரலை மீண்டும் புதுப்பிப்போம்!

திருச்சி, ஜன.6 சிறீரங்கம் ரெங்கநாதன் கோயில் அர்ச்சகர்களை மனிதர்களே சுமக்கும் பிரம்மரதம் நிகழ்ச்சியை எதிர்த்து சிறீரங்கம் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலை வர் எச்சரித்தார் (8.11.2010) அதனால் அது கைவிடப் பட்டது.

உயர்நீதிமன்றத்திலும் பார்பபனர் முறையீடு நிராகரிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் இவ்வாண்டு அந்தப் பிரம்மரதத்தைப் புதுப் பிக்கும் வேலையில் பார்ப் பனர்கள் ஈடுபட்டு வரு கிறார்கள்.

அப்படி நடந்தால் அது நீதிமன்ற அவமதிப் பாகும். இந்து அறநிலையத் துறை பொறுப்பேற்கும் நிலை ஏற்படும். திராவிடர் கழகத் தலைவர் அன்று எச்சரித்ததை மீண்டும் திராவிடர் கழகம் புதுப் பிக்கும் நிலை ஏற்பட் டுள்ளது. பிரம்ம ரதம்

சிறீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வைகுண்ட ஏகாதசியின் போது சொர்க்கவாசல் திறப்புக்கு பின்னர் வேதம் ஓதும் பார்ப்பனர்களான அரையாண் குடும்பம், பட்டர் அய்யர், வேத வியாசகர், பராசுர பட்டர் ஆகியோரை கோவிலி லிருந்து அவர்களது வீடு வரை பல்லக்கில் சுமந்து செல்வதும், இதனை பிரம்ம ரதமரியாதை என்றும், நீண்டகாலமாக பார்ப்பனர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதனை சீமான் தாங்கி (பிரம்ம ரதம்) என்று அழைக் கின்றனர்.

ஒரு காலத்தில் பார்ப் பனர்கள் வேதம் ஓதி விட்டு தனது சொந்த பல்லக்கில் வீடு வரையில் சென்று வந்தனர். அண் மைக் காலமாக இதனை அறநிலையத்துறை சார் பில் (கோவில் நிருவாகம்) பிரம்ம ரத மரியாதை வழங்கப்பட்டு வந்தது. இந்த மரியாதையை கொடுக்கக் கூடாது என்று பார்ப்பனர்களில் ஒரு பிரிவான வைணவர் கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காலங்காலமாக நடந்து வந்த மனிதனை மனிதன் (பார்ப்பனர்களை) சுமக்கும் அவலத்தை கண் டித்து கடந்த 2011 தி.மு.க. ஆட்சியில் அப்போதிருந்த கோவில் இணை ஆணை யர் ஜெயராமன் இந்த முறைக்கு தடைவிதித்தார்.

வழக்கு

இதனை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரம்ம ரத முறைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. ஆனா லும் பார்ப்பனர்கள் இதனை நடத்திவிட வேண்டு மென்று முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. அதிமுக ஆட்சி ஜெயலலிதா முதல்வ ரான பிறகு மீண்டும் இந்த பிரம்ம ரதமுறையை கொண்டும் வரும் முயற் சியில் பார்ப்பனர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அப்போதைய அற நிலையத்துறை ஆணையர் தனபால் திருச்சிக்கு வருகை தந்த போது, சராசர சுந்தரரேசன் பட்டர், திருவேங்கட பட்டர், பக்கிரி நாராயண பட்டர் ஆகியோர் ஆணை யரை சந்தித்து பிரம்ம ரத முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் கேட்டுக் கொண்டனர்.

2013 ஜன. 2, 3 தேதிகளில் இந்த பிரம்ம ரதமுறை எப்படியாவது நடத்திட வேண்டுமென்று முடிவு செய்து 2012 டிச.14 ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையை பார்ப் பனர்கள் அணுகினர். ஆனால் நீதிமன்றம் அவர் களை கடுமையாக எச் சரித்து அனுப்பியதோடு மட்டுமல்லாமல் இது தொடர்பான விசாரணை 2013 ஜனவரி 8 ஆம் தேதி ஒத்தி வைத்தது. அதனால் 2013 இல் பிரம்மரத முறையை நடத்த முடியா மல் போனது. ஆனாலும் பிரம்ம ரத முறையை எப்படியாவது நடத்திவிட வேண்டுமென்று அன்று முதல் பார்ப்பனர்கள் முயற்சியில் ஈடுபட்டு வரு கின்றனர்.

திராவிடர் கழகம்

பிரம்ம ரதமுறையை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் சிறீரங்கம் 2011 ஆம் ஆண்டு மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டித்து உரையாற்றினார். மேலும் பல்வேறு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்தனர்.

மீண்டும் பிரம்ம ரதம்

இந்நிலையில் தி-.மு.க ஆட்சியில் கருணாநிதி பிராமண துவேஷம் செய்துவிட்டார். அம்மா ஆட்சியிலாவது அந்த துவேஷத்தை போக்கி இந்த பிரம்ம ரதமுறையை நடத்திவிட வேண்டும் என ஆலோசனை கூட் டம் நடத்தப்பட்டு தற் போது சொர்க்க வாசல் திறப்புக்கு பின்னர், பிரம்ம ரதமுறை நடத்திட தீவிர முயற்சியில் பார்ப்பனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பார்ப்பனர்கள் செல் லும் பல்லக்கை தூக்க சீமான் தாங்கி என்று அழைக்கப்படும் அரை யர்கள் மறுப்பு தெரிவித்து வருவதால், வெளியிலி ருந்து பல்லக்கை தூக்கும் நபர் ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் பேரம் பேசி ஆள் களை ஏற்பாடு செய் திருக்கிறார்களாம்.

பரபரப்பு

சிறீரங்கத்தில் பல்வேறு இந்து மதவெறி அமைப்பு களின் துணையோடுவரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11 ஆம் தேதி) பிரம்ம ரத முறையை நடத்திட பார்ப்ப னர்கள் திட்ட மிட்டு இருப்பதால் சட் டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் ஏற் பட்டுள்ளது. இதனால் சிறீரங்கத்தில் பரபரப் பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/94007.html#ixzz3O3lXt1pw

தமிழ் ஓவியா said...

கருப்புப் பணப்புகழ் ராம்தேவ்க்கு பத்மபூசன் விருதாம்!

கோட்சேக்கு எப்பொழுது கொடுக்கப் போகிறார்களாம்!

புதுடில்லி, ஜன.6 ராம்தேவ் பாபாவிற்கு பத்மபூசன் விருதுவழங்க மோடி தலைமையினால் ஆன மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்துத்துவ கொள்கைகளை மூன்னி றுத்தி ஆட்சி செய்து வருகிறது, இந்துத்துவக் கொள்கைகளை நடை முறைப்படுத்துவது, கோட்சேவிற்கு சிலை, சமஸ்கிருத மொழி பள் ளிப்பாடங்களில் தினிப் பது மற்றும் இந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் முதல் மொழியாக்குவது போன்ற மக்கள் விரோத செயல் களில் முனைப்பு காட்டி வந்தது.

இதன் தொடர்ச் சியாக இந்து மகாசபை நிறுவனர் ராம் மோகன் மாளவியாவிற்கும் அடல்பிகாரிவாஜ்பேயிற்கும் பாரத ரத்னா கொடுக்க முடிவு செய்து அதற்கான ஆணையும் பிறப்பிக்கப் பட்டது. ஆட்சிக்கு வந் தது முதலே யார் யாருக்கு விருதுகள் வழங்க வேண் டும் என்று முக்கிய தலைமையிடமிருந்து விருதுவழங்கும் குழுவிற்கு பெயர்கள் அடங்கிய பட் டியல் வந்துவிட்டதாம். இந்த பட்டியலில் சானியா நெய்வால் பெயர் இல்லை.

பதமபூசன் பட்டியலில் முதலிடம் ராம்தேவ் பாபாவிற்கும் இரண்டா மிடம் லால் கிருஷ்ண அத்வானி பெயரும் இடம் பெற்றுள்ளதாகத் தெரி கிறது. ஜனவரி 26-ஆம் தேதிக்கு முன்பாகவே விருதுவழங்குவதற்கான பெயர்கள் அறிவிக்கப்படும்.

Read more: http://viduthalai.in/e-paper/94013.html#ixzz3O3m4oo7T

தமிழ் ஓவியா said...

பிரதமர் மோடியின் ஜனநாயகம்?

ஊடகங்கள் அரசை விமர்சனம் செய்தால் தான் அரசு நன்றாக செயல்படும் இதில் பாரபட்சம் பார்க்கக்கூடாது என்று கோலாப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் இருந்து வெளி வரும் பத்திரிகையான புடாரியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய போது அவர் கூறியதாவது: ஊடகங்கள் நமது நாட்டின் ஜனநாயகத்தின் தூண்களுள் ஒன்று இந்த ஊடகம் மக்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள தூரத்தை இணைக்கும் முக்கியமான பாலமாகும். ஊடகங்கள் இன்றி அரசும் சரிவர இயங்க முடியாது, மக்களும் நிலவரங்களை அறிந்துகொள்ளமுடியாது. ஊடகங்களின் மிகமுக்கிய பணி என்னவென்றால் அரசு, அமைச்சர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை கடுமை யாக விமர்சனம் செய்யவேண்டும் என்று பேசினார். மோடியின் பேச்சும் செயலும் தாமரை இலைத்தண் ணீர் போல் உள்ளது இதில் இருந்து தெரியவருகிறது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி முழுமையாக ஊடகங்களை விலைக்கு வாங்கினார். மோடியின் தேர்தல் பிரச்சாரப்பேச்சுக்களை அனைத்து இந்தி மற்றும் ஆங்கில அலைவரிசைகள் நேரடி ஒளிபரப்புச் செய்தன. தன்னுடைய பெயர் பத்திரிகையில் எப்போ தும் முதலிடத்தில் வரவேண்டும் என்பதற்காகவே தெரிந்த வரலாறுகளைக்கூட தவறாகப் பேசி பத்திரிகை யில் இடம் பிடித்தார்.

பி.ஜே.பி. - மதவாதத்துக்கு எதிரான பத்திரிகையா ளர்கள் இருந்தால், அத்தகையவர்களை அடையாளம் கண்டு செல்வாக்கைப் பயன்படுத்தி வெளியேற்றியும் உள்ளார். பண பலத்தின் மூலமும் இந்துத்துவா சிந்தனை கொண்ட ஊடகவியலாளர்கள் வாயிலாகவும் மக்களி டையே பெரும் பிரச்சாரம் மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றார்.

தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்த பிறகு இதுவரை எந்த ஒரு இந்திய ஊடகத்திற்கும் பேட்டியளிக்கவில்லை. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாரம் ஒருமுறை ஊடகங்கள் என்னைச் சந்தித்து நிறைகுறைகளை முன்வைக்கலாம் என்று வெற்றுப் பேச்சு பேசிய மோடி அதன் பிறகு ஊடகங்களை தனது அலுவலகவாசலுக்கு கூட வரவிடவில்லை.

அதே நேரத்தில் தனக்கு எதிராக எந்த செய்தியும் வராமல் ஊடகங்களை தனது கைக்குள் போட்டுக் கொண்டார். இந்தியாவின் பெரிய ஊடகக்குழுமங் களை அம்பானி மற்றும் பாஜக ஆதரவு தொழி லதிபர்கள் விலைக்கு வாங்கிவிட்டனர். எடுத்துக்காட்டாக நியூஸ் நெட்வெர்க் என்ற குழுமத்தின் கீழ் 6 செய்தி அலைவரிசையில் வரு கின்றன, இந்தக் குழுமத்தை கடந்த ஜூன் மாதம் அம்பானி விலைக்கு வாங்கிவிட்டார். அதே போல் இண்டியா டுடே நெட்வொர்கின் பங்குகளை பா.ஜ.க. ஆதரவு தொழிலதிபர்கள் வாங்கியுள்ளனர். அதே போன்று வியாபார நோக்கம் கொண்ட அச்சு ஊடகங்கள் ஆளுங்கட்சி சார்பாகவே செயல்படுவது வழக்கம், ஊடகங்களை விலைக்கு வாங்கும் மோடிக்கு தானாகவே விலைபோகும் ஊடகங்களை கைவசம் வைத்துக்கொள்வதென்பது பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதையாகிவிட்டது. சுமார் 60 ஆண்டுகளாக மகாராட்டிரத்தில் வெளிவரும் புடாரி நாளிதழ் நடுநிலைப்பத்திரிகை என்று பெயர்பெற்றது. மராட்டியத் தேர்தலின் போது நடுநிலையாக நின்று தனது பணியைச்செய்தது. ஆனால் கடந்த சில நாட்களாக முழுக்க முழுக்க பாஜக அரசியல் ஏடாகவே மாறிவிட்டது. இப்படி ஆரம்பம் முதலே ஊடகத்தை வளைத்து, தனக்கு சாதமான செய்திகளை மாத்திரம் இடம் பெறச் செய்த மோடி மேடையேறும் போதுமட்டும் ஊடக தர்மம் பேசுகிறார்.

அய்க்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பார்வை யாளர் கிறிஸ்தோ ஹேன்ஸ் குஜராத் இனப் படுகொலை களுக்குப் பிறகு குஜராத்துக்கு வர விரும்பினார்.

உண்மை நிலையை அறிந்து கொள்ள விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதுபோல அப் போது குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி பாசாங்கு செய்தார். கடைசி நேரத்தில் என்ன செய்தார் தெரியுமா? குஜராத்துக்கு அவர் வரக் கூடாது என்று கூறி விட்டார்.

இந்த நிலையை ஓர் அறிக்கை மூலமாக அய்க்கிய நாடுகள் மன்றத்தில் சிறப்புப் பார்வையாளர் அம்பலப் படுத்தினாரா இல்லையா?

முஸ்லீம்கள், கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் இவர்களின் உரிமைகள் எப்பொழுதும் ஆபத்தில்தான் இருக்கின்றன என்று சொன்னாரே அய்.நா. பார்வையாளர். (Source Statement of U.N.
Social Reporter - dt: 31.3.2012 MGM)

இந்த நிலையில் உள்ளவர்தான் ஊடகவியலாளர்கள் தம் ஆட்சியில் காணும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுமாறு ஜனநாயகவாதியாக தோற்றம் காட்டுகிறார். அடடே! இவரைப் போன்ற பல வேட மாமனிதரைக் காண்பது அரிதினும் அரிதே!

Read more: http://viduthalai.in/page-2/94003.html#ixzz3O3mHHAPv

தமிழ் ஓவியா said...

தொண்டு

சுக போகத்தினால் இன்பம் காணுவதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காணுவதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்காகவும், தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்க வேண்டும் என்று கருதவேண்டும்.
(விடுதலை, 2.7.1962)

Read more: http://viduthalai.in/page-2/94002.html#ixzz3O3mPvvtw

தமிழ் ஓவியா said...

இந்தக் கவிஞரைத் தெரிந்து கொள்வோம்!


ஒரே நேரத்தில் இலக்கியத்திலும் அரசியலிலும், கவிஞராகக் கலை களிலும் புரட்சியாளராகவும், புதுமை படைத்த ஆற்றலாளராகவும் ஒரு சிலரே உலக வரலாற்றில் சாதனை படைத்து, சரித்திரப் புகழ் பெற்றவர் களாக, சாகாத மா மனிதர்களாக வாழுகிறார்கள் - இன்றளவும்!

அவர்களில் மிகவும் நினைவுக் குரிய பாராட்டப்பட வேண்டிய சிந்தனையாளர், கவிஞர் கலீல் ஜிப்ரான் அவர்களாவார்.

பன்முக ஆற்றல் அறிஞரான அவர் தம் பிறந்த நாள் இன்று - ஜனவரி 6.

லெபனான் நாட்டில் (பஷ்ரி என்ற நகரில்) பிறந்த இவர் தம் 12ஆம் வயதிலேயே குடும்பம் அமெரிக் காவுக்கு புலம் பெயர்ந்தது.

அரேபிய மொழி, ஆங்கிலம், பாரசீக மொழிகளில் அறிவுள்ள இவர் சிறந்த ஓவிய நிபுணர்.

அதனால்தான் அவர் பாஸ்டனில் உள்ள ஓவியப் பள்ளியில் சேர்க்கப் பட்டாராம்!

15 வயதில் பெய்ரூத் சென்று உயர்கல்வியை அங்கே பயின்று, தமது தோழர்களுடன் இணைந்து கல்லூரி இலக்கியப் ஏட்டை வெளியிட்டார்!

மீண்டும் பாஸ்டனுக்கு திரும்பிய இவரின் கட்டுரை வடிவிலான கவி தைகள் அடங்கிய.

தி பிராஃபெட் (The Prophet) என்ற நூல் பல நாடுகளில் புகழை இவருக்கு அள்ளித் தந்தது!

முதலில் கல்லூரிக் கவிஞர் - பிறகு இவர் எழுதிய அந்த புத்தகம் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.

20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த நூல் என்ற முறையில்

(இன்றைய தமிழ் இந்து நாளேடு நிறைய தகவல்களை இரண்டு இடங் களில் தந்துள்ளது.)

இவரது படைப்பு இலக்கியங்களைத் தொகுத்து மக்கள் மன்றத்தில் சேர்த்து பரப்பியதற்கு முழுமுதற் காரணமான அவரது செயலாளரான பார்பராவையே சாரும்.

இதில் இவரது துணிவான, தெளிவான முற்போக்குக் கருத்துகள் - எழுத்துகள் - சிந்தனைகளால் மத குருமார்கள், அதிகாரிகள் கோபத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளானவர்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்ற தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனார் சிந்தனையையொட்டி, உலகம் ஒரு குலம் அனைவரும் உறவினர் என்று கூறியவர் இவர்!
வாழ்க்கையை தத்துவ ரீதியாக வரைந்து காட்டிய ஓவியக் கவிஞர் இவர்!

அதற்கு ஒரு எடுத்துக்காட்டு கீழே:

கலீல் ஜிப்ரான் (இவர் ஒரு மேரோனைட் கிறித்துவர்) - மிகவும் வசதி படைத்தவர்கள் - இயேசுபற்றி தனித்த கருத்தும் அவர் அமெரிக்காவுக்கு சொந்த மானவர் என்பது போன்ற கருத்தும் உடைய கிறித்துவப் பிரிவினர் - சால்ட் லேக்சிட்டி என்பது தலை நகரமாக கொண்ட அயோவா மாநிலத்தில் பெரிய தங்கத்தாலான கோபுரம் - வாஷிங்டனில் உள்ள சர்ச்சில் தங்கக் கோபுரம் உள்ளது) அப்பிரிவைச் சேர்ந்தவர் 1883-ல் பிறந்தவர் -

இந்த காப்புரிமை வருமானத்தை தனது பிறந்த மண்ணான பஷ்ரியின் வளர்ச் சிக்கே உயிலாக எழுதி வைத்தவர் இவர்.

இவரது ஒரு அருமையான கவிதை வரிகளைப் படியுங்கள்: என்னே உண்மைத் தத்துவ மிளிர்வு!

உங்கள் குழந்தைகள் உங்களுடையவை அல்ல. அவை, வாழ்வு தன்னையே தான் அடையக் கொள்ளும் ஏக்கத்தின் மகனும் மகளுமாக ஜனித்தவை.

உங்கள் குழந்தைகள் உங்களூடே தோன்றியவர்கள், உங்களிடமிருந்து அல்ல.

உங்களுடன் இருப்பினும் அவர்கள் உங்கள் உடமைகளல்லர்.

அவர்களுக்கு உங்களுடைய அன்பை நீங்கள் தரலாம், உங்கள் எண்ணங்களை அல்ல.

ஏனெனில், சுயமாக அவர்களிடத்தே எண்ணங்கள் பிறக்கின்றன.

அவர்கள் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம், உயிருக்கு அல்ல.

ஏனெனில், உங்கள் கனவில்கூட நீங்கள் அடைய முடியாத எதிர் காலம்தான் அவர் களது உயிர் உறையும் வீடு.

நீங்கள் அவர்களைப் போல ஆவதற் காக கடின முயற்சி செய்யலாம்.

ஆனால், உங்களைப் போல அவர் களையும் ஆக்கிவிடக் கூடாது.

ஏனெனில், வாழ்வு பின்னடித்துச் செல்வ தில்லை. நேற்றைய நாட்களில் சுணங்குவது மில்லை.

உயிருள்ள அம்புகளாக உங்களிட மிருந்தே எய்யப்படும் குழந்தைகளுக்கு நீங்கள் வில்லுகள்.
வில்லாளி, காலாதீதத்தின் மார்க்கத்தில் குறிவைத்து, தனது அம்புகள் அதிவேகத் துடன் தொலை தூரம் செல்லும்படி, உங் களைத் தனது மகாசக்தியால் வளைக்கிறான்.

வில்லாளியின் கரத்தில் உங்கள் வளைவு ஆனந்திக்கட்டும்.

ஏனெனில், பறக்கும் அம்புகளை அவன் விரும்புகிற அளவுக்கு அசைவற்ற வில்லின் உறுதியையும் விரும்புகிறான்.

(கலீல் ஜிப்ரானின் தீர்க்கதரிசி புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி. தமிழில்: பிரமிள்)

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/94005.html#ixzz3O3mY6T00

தமிழ் ஓவியா said...

கோட்சேவை புனிதப்படுத்துகிறார் மோடி: ராஜேஷ் எம்.பி. குற்றச்சாட்டு


பாலா (கேரளா), ஜன. 6_- மகாத்மா காந்தியாரை ஓரங்கட்டிவிட்டு கோட் சேவை மகத்துவப்படுத்த முயல்கின்ற நரேந்திர மோடி, நாட்டில் மத வெறியை வளர்த்து இந்து நாட்டை நிறுவ முயல் கிறார் என்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் எம்.பி. ராஜேஷ் (நாடாளுமன்ற உறுப்பினர்) குற்றம் சாட் டினார். இது இந்தியாவை மதவாத நாடுகளான பாகிஸ்தான், வங்க தேசம் போன்ற சீர்குலைவு நிலைக்கு இட்டுச் செல்லும் என்றும் ராஜேஷ் கூறினார்.

மதவெறிக்கும், ஊழ லுக்கும் எதிராக போராட் டம்தான் ஒரே வழி என்ற முழக்கத்தை முன்வைத்து வாலிபர் சங்கம் பாலா என்ற இடத்தில் நடத்திய இளைஞர் சங்கம நிகழ்ச்சி யைத் தொடங்கி வைத்து ராஜேஷ் பேசினார்.நல்ல காலம் பிறக்கப் போகிறது என்ற பிரமையை உரு வாக்கி அதிகாரத்தில் அமர்ந்தமோடி, கர்வாபஸி போன்ற மத வகுப்புவாத நட வடிக்கைகளின் மறை வில் நாட்டின் செல்வங் களை கார்ப்பரேட் முதலா ளிகளின் காலடியில் சமர்ப் பிக்கின்ற கொள்கைகளைத் தான் அமல் படுத்துகிறார்.

மதச்சிறுபான்மையினரிடையே பாதுகாப்பற்ற நிலை மையை உருவாக்கி மக்கள் மனதில் பிளவு விதை களைத் தூவுகிறது பா.ஜ.க. அரசு. தேசிய அளவில் கிறிஸ்துமஸ் தினத்தை உழைப்பு தினமாக்கிய மத்திய அரசு பக்ரீத் விடு முறையையும் ஒழித்துக் கட்டும் முயற்சியில் ஈடுபட் டுள்ளது.

கல்வி - கலாச்சா ரத் துறை களில் மூட நம் பிக்கைகளுக்கும் அறிவிய லுக்கும் புறம்பான நிலை பாடுகளுக்கும் அங்கீகாரம் அளித்து நாட்டின் வர லாற்றை, நாட்டின் முகத் தோற்றத்தை தலைகீழாக மாற்ற முயல்கிறார்கள். மதச்சார்பற்ற இந்தியா வின் தேசியப் பதாகை ஏந்திய ஆடம்பரக் காரில் பயணம் செய்கிற கோட்சே மனம் படைத்த பிரதமர், அம்பானி - அதானிக ளுக்கு சேவை செய்யும் பணியில்தான் தீவிரமாக உள்ளார்.

நாட்டில் பட்டினி, விலை உயர்வு போன்றவற் றைக் கட்டுப் படுத்தும் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாத மோடி ஆட்சி, அதானி வெளி நாட் டில் நிலக்கரிச் சுரங்கத் தொழில் ஆரம்பிக்க எஸ் பிஅய் வங்கியிலிருந்து ரூ.6200 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

பெட்ரோல் விலைக் கட்டுப் பாட்டை நீக்க மன்மோகன்சிங் அரசு 6 ஆண்டுகள் காத்திருந்தது என்றால், மோடி அரசு ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் டீசல் மீதான விலைக் காட்டுப்பாட்டை நீக்கியது. பெரும் ஏகபோக முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை மோடி அரசு ஏற்படுத்திக் கொடுத்துள் ளது.

மருந்துகளின் விலை யைத் தீர்மானிக்கும் உரி மையை மருந்துக் கம் பெனிகளுக்கு அளிக்கப் பட்டிருப்பதன் மூலம் ஏழை மக்களின் மருத்துவச் செலவை மோடி அரசு பெரு மளவு அதிகரித்துள்ளது.

ஆதாரை எதிர்த்த பாஜக அரசுஅதிகாரத் திற்கு வந்தபின் ஆதாரை கட்டாயமாக்கி விட்டது. 12 ஆக இருந்த சமையல் வாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9 ஆக குறைக்க முடிவு செய்துள் ளது.

பல பத்தாண்டுகளாக தொழிலாளர்களுக்கு கிடைத்து வந்த பிஎப், இஎஸ்அய் சலுகைகளை ரத்து செய்வதற்கும், தொழி லாளர்களை முதலாளிகள் தங்கள் இஷ்டப்படி வேலை நீக்கம் செய்வதற்குமான சட்டத்தை அமல்படுத்துவ தும் பா.ஜ.க. அரசின் புத் தாண்டுப் பரிசாகும் என் றும் ராஜேஷ் கூறினார்

Read more: http://viduthalai.in/page-8/94037.html#ixzz3O3qC1HkA

தமிழ் ஓவியா said...

தடுமாற்றம் இருக்காது!

செய்தி: கூட்டணியிலி ருந்து பா.ம.க. வெளியேறி னாலும், பா.ஜ.க.வுக்குப் பாதிப்பு இல்லை.
- மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

சிந்தனை: இதற்குப் பிற காவது பா.ம.க. நிறுவனருக்கு முடிவு செய்வதில் தடு மாற்றம் அனேகமாக இருக் காது என்று நம்பலாம்.

Read more: http://viduthalai.in/e-paper/94053.html#ixzz3O9A3uM2n

தமிழ் ஓவியா said...

எப்படியாவது இந்துப் பெண்கள் நான்கு குழந்தைகளைப் பெறவேண்டுமாம்: சொல்கிறார், பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி சாமியார்


லக்னோ, ஜன.7_ பாஜக நாடாளுமன்ற உறுப் பினரும் கோட்சேவை தேசபக்தர் என்று புகழ்ந்த வருமான சாக்ஷி என்ற சாமியார் இந்துப் பெண் கள் ஒவ்வொருவரும் எப் படியாவது 4 குழந்தை களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் ஒரு கோமாளித் தனமான உளறலைக் கொட்டியுள்ளார்

உத்தரபிரதேசம் மீரட் நகரில் நடந்த ஒரு மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக சாமியார் எம்பி சாக்ஷி தனது உரையில் கூறியதாவது: தற்போது மதமாற்றம் குறித்து பல்வேறு எதிர்க் கட்சிகள் பேசி வருகிறது. இது மதமாற்றம் அல்ல; தாய் மதம் திரும்ப வரு கிற நிகழ்ச்சிதான். மத மாற்றம் என்பது இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்குத் செல்லு வதைத்தான் குறிப்பிட வேண்டும். மதமாற்றம் செய்பவர்களைத் தூக்கில் போடவேண்டும் அதைச் சட்டமாக்கவும் பாஜக தயாராக உள்ளது.

நாதுராம் கோட்சே விற்கு சிலைவைப்பது பற்றி நான் தற்போது ஒன்றும் கூறமுடியாது.

இந்திய நாடு பல்வேறு கலாச்சாரங்களை உள்ள டக்கியது. இங்கு அனை வரும் ஒரே சிந்தனையில் இருப்பவர்கள் என்று கூறமுடியாது. பலருக்கு பல்வேறு சிந்தனைகள் இங்கே கடவுளை பன்றி வடிவிலும் வழிபடும் வழக்கம் உள்ளது. கழு தையையும் பூஜை செய்யும் மக்கள் இருக்கிறார்கள். மீரா கடவுளை பாம் பிற்குள்ளே பார்த்தாள், அவரவர்களுடைய எண் ணம் ஆகவே கோட் சேவை சிலர் புனிதராக பார்க்கின்றனர், அவ்வள வுதான் என்றார். மேலும் அவர் கூறிய தாவது, இதுவரை இருந்த இந்து விரோத அரசுகள் நாம் இருவர் நமக்கு இரு வர் என்ற கோரிக்கையை வைத்து இந்துக்களின் எண் ணிக்கையை குறைத்து விட்டனர். இனிமேல் மக்கள் நாம் இருவர் நமக்கு இருவர் என்பதை கருத்தில் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு இந் துக்களும் நான்கு அல்லது அதற்குமேல் குழந்தை களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்துக்கள் எப்படியும் கட்டாயமாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

அப் போதுதான் இந்துக்களின் எதிர்காலமும் இந்து தர் மமும் காக்கப்படும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/94054.html#ixzz3O9AKmeUy

தமிழ் ஓவியா said...

மாட்டுக்கறி வறுவல்!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (சி.பி.எம்.) 6.1.2015 அன்று பிற்பகல் 3 மணிக்கு - செங்கற்பட்டில் நடை பெறும் சுயமரியாதை மாநாட் டில் மாட்டுக்கறி வறுவல் சிறப்பு விற்பனை மய்யத் தைத் தொடங்குகிறது - வரவேற்கத்தக்கதே!

இன்றைக்கு 40 ஆண்டு களுக்கு முன்பே திராவிடர் கழகம் இத்தகு மாட்டுக்கறி விருந்தை ஓர் இயக்கமா கவே நடத்தியது குறிப்பிடத் தக்கதாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/94052.html#ixzz3O9AWgwTh

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை வரலாற்றுப் புத்தகத்தில் ஓர் அரிய பாடம்


ஆசிரியருக்குக் கடிதம் >>>

சுயமரியாதை வரலாற்றுப் புத்தகத்தில் ஓர் அரிய பாடம்

ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மை யார் அவர்களின் மரணம், ஓர் இயற் கையின் விதியாகும். பகுத்தறிவாளர்கள் தாம் வாழுகின்ற காலத்தை, தனக்கும், பிறருக்கும் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்கின்றனர். அந்த வகையிலே அம்மா அவர்கள் வாழ்ந்த காலம் வீட்டிற்கும், நாட் டிற்கும் பயனுள்ளதாக அமைந்திருப்பதே மிகவும் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக் கும் உரியதாகும்.

நான், அம்மா அவர்களின் மரண சாசனத்தை ஒரு தடவைக்கு நான்கு தடவைகள் படித்துப் பார்த்தேன். அதில் ஒவ்வொரு வரியும், வைர வரிகளாகும். பிறருக்கும் நல்ல எடுத்துக் காட்டுகளாகும்.

தன்னுடைய பெற்றோர்கள், அன்பான அரவணைப்போடு, பகுத்தறிவுப் பாலூட்டி சுயமரியாதைக் கருத்துக்களோடு ஊறிப் பிறந்ததை, நினைவூட்டி தன் பெற்றோர் களைப் பெருமைப்படுத்தியிருக்கிறார்.
தந்தை பெரியாரின் அன்பான தலைமை, நல்ல தலைவர், நல்ல கொள்கை, சமுதாய சீர்திருத்தப்பணி, தந்தை பெரியாரே, மண மகனைத் தேர்வு செய்து, தம் செலவிலேயே திருமணம் செய்வித்த மிகப்பெரும் பேறு பெற்றேன் என்று தன்னுடைய நன்றி யுணர்வை வெளிப்படுத்தி பெரியாருக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

இந்தியக் குடிமக்களின் சராசரி வயதான அறுபதைத் தாண்டி வாழ்ந்து கொண்டிருக் கிறேன் என்பதே மகிழ்ச்சிக்குரியது தானே? என்ற வினாவை வயது 76 இல் எழுப்பி, 81 வயது வரை நிறை வாழ்வு வாழ்ந்தார்கள்.

மனித நேயப் பண்பாளர் டார்பிடோ, ஜனார்த்தனம் என் துணைவராகக் கிடைத்த காவிய வாழ்க்கை வாழ்ந்தோ மென்று தன் இணையரைப் பெருமைப் படுத்தியிருக்கிறார்.

தந்தை பெரியாரின் கருத்துகளை உலகம் முழுவதும் பரப்பிடும் பணியை, கல்விக் கூடங்களைப் பெருக்கி, அரசியல் மாற்றங் களை ஏற்படுத்திடும் அரிய தலைவர் நாட் டுக்குக் கிடைத்திருப்பதையெண்ணி, இறும் பூதெய்துகிறேன் என்று ஆசிரியர் அய்யா வீரமணியாரைப் பெருமைப்படுத்தியிருக் கிறார்.

பெரியார் தந்த துணிவோடு, ஆசிரியரின் வழிகாட்டுதலோடு, சமுதாயப் பணியில் மன நிறைவோடு, மரணத்தையும் மகிழ்வோடு தழுவிக் கொண்ட மனோரஞ்சிதம் அம் மாவை எண்ணியெண்ணி என் உள்ளம் நெகிழ்கிறது.

தன்னுடைய இறப்பிற்குப் பின்னாலும், தன்னுடைய உடல் மறைவதற்குள் ஏதாவது நன்மை செய்திட முடியாதா? என்று எண் ணியிருப்பார்கள் போலிருக்கிறது, என்ன விநோதம்! எனக்கு மாலைக்குப் பதில் விடுதலை சந்தா தாருங்கள் என்று கேட்ட தலைவரைப்போல என் உடலுக்கு மாலை போட வேண்டாம். அதற்குப் பதில் என் உட லருகில் உண்டியல் வைத்து நிதி தாருங்கள் என்று சொன்ன அந்த தொண்டரின் மனப் பாங்கை நான் என்னவென்று சொல்வேன்!

தலைவரைப் போலவே தொண்டர், தொண்டரைப் போலவே தலைவர். தொண்டன் நினைப்பதையே தலைவர் நினைக்கிறார். தலைவர் நினைப்பதையே தொண்டனும் நினைக்கிறார். உலகத்திலே இப்படியொரு விந்தையான இயக்கம் எங்காவது உண்டா? சாவுக்கு வருகின்ற மாலையைக்கூட வீணாக்க மனமின்றி, வாழ்வோருக்குப் பயன்படும் வித்தையினை கற்றுத் தந்த வித்தகர் யாரோ? அவர்தான் தந்தை பெரியாரோ! அம்மா நெஞ்சினில் நிறைந் தாரோ! அம்மாவின் எண்ணம் நிறை வேறியது. நாகம்மையார் இல்லத்துக்கு மாலைக்குப்பதில் கிடைத்த நன்கொடை கள் ரூ. 25,021/-

ஒருவர் இறந்துவிட்டால், சமுதாய நடப்பிலே, பெரிய காரியம் ஆகிவிட்டது என்று சிலர் சொல்லுவார்கள். கெட்ட காரியம் ஆகிவிட்டது என்றும் சிலர் சொல்லுவார்கள். அம்மாவின் மரணத் திலும், ஒரு நல்ல காரியம் பார்த்தீர்களா? இது தான் பகுத்தறிவு. இது தான் தன்னல மறுப்பு. இது தான் சுயமரியாதை இயக்கம் பார்த்தீர்களா? தோழர்களே!

அடிக்க அடிக்க பந்து எகிறுவது போல யார் தடுத்தாலும் அலைகள் அடிப்பதைப் போல எவ்வளவு நெருக்கடிகள், எவ்வளவு இடையூறுகள் வந்தாலும், அதையும் தாண்டி ஓர் இயக்கம், ஒரு நூற்றாண்டை நோக்கி வீறுநடை போடுகின்றதென்றால், மனோரஞ்சிதம் அம்மா போன்ற இயக்கக் கண்மணிகள், இல்லை வீரப்பெண்மணி கள் இருப்பதனாலன்றோ!

சட்ட எரிப்புப் போராட்டத்திலே, சிறைக்கஞ்சா அந்த வீரப்பெண்மணியை, மரணம் தன் சிறையிலே அடைத்துக் கொண்டது. எனினும் அவர் புகழை, யாராலும் சிறையிட முடியாது. ஆம், அம்மா அவர்கள் ஓர் காவியமாக நினைவு ஓவியமாக, சுயமரியாதை இயக்க சரித் தித்தில் மறக்கவொண்ணா ஓர் நீங்கா இடம் பெற்று விட்டார். ஆம் அம்மா ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அவர்களின் புகழ், வாழ்க! வாழ்க! வாழ்கவே!

வீர வணக்கம்! நன்றி!

- கா.நா.பாலு (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம், மேட்டூர் மாவட்டம்)

Read more: http://viduthalai.in/e-paper/94062.html#ixzz3O9B3v0r9

தமிழ் ஓவியா said...

பார்ப்பனத் தந்திரம்எந்தப் பார்ப்பனராவது வேஷம் போட்டு ஆடுவதோ, செடில் குத்திக் கொள்வதோ, அலகுக் குத்திக் கொள்வதோ, கன்னத்திலோ, நாக்கிலோ கம்பியைக் குத்திக் கொள்வதோ ஆகிய காரியங்களைச் செய்கிறார்களா? கோவில் கட்டுகின்றார்களா?
_ (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/e-paper/94058.html#ixzz3O9BEiyvH

தமிழ் ஓவியா said...

ராம்தேவுக்குப் பத்மபூஷண் விருதாம்!

ராம்தேவ் என்ற சாமியாருக்கு மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு பத்ம பூஷண் விருது அளிக்க முடிவு செய்துள்ளதாம். இதன்மூலம் இத்தகு விருதுகள் எத்தகைய கேவலத்தின் உச்சியைத் தொட்டுள்ளன என்பது தெளி வாகிறது. ரொமிலா தாப்பர் போன்றவர்கள் இதுபோன்ற விருதுகளை ஏன் புறக்கணித்தனர் என்பது இப்பொழுது தான் புரிகிறது.

போகிற போக்கைப் பார்த்தால் காந்தியாரைப் படு கொலை செய்த நாதுராம் கோட்சேவுக்குக்கூட இத்தகைய விருதுகள் அளிக்கப்படலாம் என்று தோன்றுகிறது.

யாரிந்த ராம்தேவ்?

தனது யோகா மருத்துவ முறைகளால் எவ்வித நோயையும் குணப்படுத்த முடியும் என்று வாய்ச்சவடால் விட்ட இவரை, 2006 ஆம் ஆண்டில் என்.டி.டி..வி.யில் மடக்கியவர் இந்திய அறிவியல் மற்றும் பகுத்தறிவாளர் சங்கத்தின் பிர்பீர்கோஷ். அவர் ராம்தேவிடம் வைத்த சவால் என்ன தெரியுமா?
தான் அனுப்பும் ஒரு நோயாளியையும், டில்லியைச் சேர்ந்த ஒரு வழுக்கைத் தலையரையும் நவீன மருத்துவ முறைகளைப் பின்பற்றாமல் முற்றிலும் ராம்தேவ் நம்பும் யோகா மருத்துவ முறைகளைக் கையாண்டு குணப்படுத்த முடியுமா? என்பதுதான் அந்தச் சவால். ஆனால், அதனை எதிர்கொள்ளாமல் நழுவியவர்தான் இந்தப் பேர்வழி!

ராம்தேவ் தயாரித்த ஆயுர் வேத மருந்துகளில் கலப் படங்கள் இருப்பதாகக் குற்றச்சாற்று எழுந்தது. சென்னை, அய்தராபாத், கொல்கத்தா முதலிய ஆய்வகங்களில் அந்த மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புகள் கலக்கப் பட்டதற்கான தடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. எந்த ஒரு மருந்துப் பொருளிலும் அதன் உள்ளடக்கப் பொருள்கள் இன்னின்னவை என்று பொறிக்கப்பட்டிருக்கும். அது கட்டாயமும்கூட; ஆனால், இந்த ராம்தேவ் தயாரித்து விற்கப்பட்ட மருந்துகளில் அத்தகு விவரங்கள் கிடையாது.

காங்கிரசின் பொதுச்செயலாளரான திக்விஜய் சிங் இந்த யோகா குரு என்றழைக்கப்பட்ட ராம்தேவ் பற்றி பல பிரச்சினைகளை எழுப்பியதுண்டு. பல கோடி சொத்துகள் எப்படி அவருக்கு வந்தன? அவற்றிற்கு முறையாக வருமான வரி செலுத்தப்பட்டதா? ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபடும் இந்த ராம்தேவுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டது எந்த அடிப்படையில்? என்பது போன்ற கேள்விகள் அவை!

1995 ஆம் ஆண்டில் திவ்யா யோக மந்திர் என்ற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கினார். 2003 ஆம் ஆண்டில் ஆஸ்தா தொலைக்காட்சியில் யோகா கற்றுத்தரத் தொடங்கியதுமுதல் பிரபலமானார். (தொலைக் காட்சியல்லவா!). பின்னர் உத்தரப்பிரதேச மாநிலம் அரித்துவாரில் பதஞ்சலி என்ற யோகா பீடம் அமைத்தார். ஆயுர்வேத மருத்துவமனை, பல்கலைக் கழக மருந்துத் தயாரிப்புத் தொழிற்சாலை, அழகு சாதனத் தொழிற்சாலை எனப் பெரும் ஆலை முதலாளியாக உருவெடுத்தார்.

200 நிறுவனங்களுக்குச் சொந்தக்கார பெருமுதலாளியாக உருவெடுத்தார்.

யோகா சொல்லிக் கொடுத்த அந்த ஆஸ்தா தொலைக்காட்சியையே விலைக்கு வாங்கினார் என்றால், அவரின் பொருளாதார வளர்ச்சியை எளிதில் தெரிந்து கொள்ளலாமே (ஒரு சாமியாருக்குத் தேவையானவையா இவை என்று யாரும் கேட்கவேண்டாம்!)

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ஊழல் ஒழிப்பு உத்தமராகத் தன்னைக் காட்டிக்கொள்ள முற்பட்டார். (இவரின் பின்னணியில் பி.ஜே.பி,. சங் பரிவார் இருந்தன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்).

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை மீட்கவேண்டும் என்றும், அதற்காக பட்டினிப் போராட்டம் இருக்கப் போவதாக மிரட்டினார். அவரை விமான நிலையத்திலேயே சந்தித்து, சமாதானம் செய்தார்கள் மத்திய அமைச்சர்கள் என்பதெல்லாம் எத்தகைய சிறுபிள்ளைத்தனம்!

ராம்லீலா மைதானத்தில் பட்டினிப் போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்தார். ஊடகங்கள் ஊது குழல்களாக மாறின. ராம்லீலா மைதானம் முழுவதுமே பிரம்மாண்டமாக அலங்காரப் பந்தல் போடப்பட்டது மட்டு மல்ல; முழுமையாக குளிர்சாதன வசதியும் செய்யப்பட்டது. இதற்காக, 18 கோடி ரூபாய் வசூல் கொள்ளை! இன்னொரு பக்கத்தில். ஆர்.எஸ்.எசுடன் கைகோத்து பட்டினிப் போராட்ட நாடகத்தைத் தொடங்கினார் (ஊழல் ஒழிப்பு முன்னணி ஒன்றை ஆர்.எஸ்.எஸ். தொடங்கியது. அதில் ஒரு புரவலர் இந்த பாபா ராம்தேவ்).

பட்டினிப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, காவல் துறை ராம்லீலா மைதானத்தில் நுழைந்தபோது, இந்த வீராதி வீரர் ராம்தேவ் என்ன செய்தார் தெரியுமா? சுடிதார் போட்டுக்கொண்டு, முகத்தை மூடிக்கொண்டு தப்பிக்க முயற்சி செய்தார் என்பது எவ்வளவுக் கேவலம்!

இத்தகு ஒரு நாலாந்தர மனிதனுக்கு மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சி பத்மபூஷண் விருது அளிக்க முடிவு செய்துள்ளது என்றால், இந்த ஆட்சியின் யோக்கியதாம்சம் என்ன என்பதை எளிதிற் தெரிந்துகொள்ளலாம்.

இந்தியத் துணைக் கண்டத்தில் இப்படியொரு கேடு கெட்ட ஆட்சியா? வெட்கக்கேடு!

Read more: http://viduthalai.in/e-paper/94059.html#ixzz3O9BP0G52

தமிழ் ஓவியா said...

ஒகேனக்கல் பயிற்சிப்பட்டறை வரலாற்று நிகழ்வாகியது: தமிழர் தலைவர் பெருமிதம்

தருமபுரி ஜன. 7_ தருமபுரி மாவட்டம் ஒகேனக் கல்லில் நடைபெற்று முடிந்த 3 நாள் பெரியாரியல் பயிற்சி பட்டறை வரலாற்று நிகழ்வாகியது என தமிழர் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

ஒகேனக்கல்லில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் இறுதி நாள் நிகழ்வு டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற்றது.

காலை முதல் நிகழ்ச்சியாக தஞ்சை யோகிராசர் அவர்களின் யோகப்பயிற்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பயிற்சிப்பட்டறையில் கடவுள் மறுப்பு என்னும் தலைப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வகுப்பெடுத்தார். அதைத் தொடர்ந்து தமிழர் தலைவரின் தனித்தன்மைகள் என்னும் தலைப்பின் கீழ் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பயிற்சி அளித்தார்.

மூடநம்பிக்கைகள் ஒரு மோசடியே என்னும் தலைப்பில் மருத்துவர் கவுதமன் அவர்களும் புராண இதிகாச புரட்டுகள் என்னும் தலைப்பில் பேராசிரியர் ப.காளிமுத்து அவர்களும், தமிழர் தலைவரின் தனித் தன்மைகள் என்னும் தலைப்பில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

அதைத்தொடர்ந்து தமிழர் தலைவர் அவர்கள் மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு விரிவான பதில் அளித்தார். அந்த உரையே சிறப் புரையாக இருந்தது. மதிய உணவு இடைவெளிக்குப் பின் இளங்கோ தலைமையிலான அன்பு கலைச்குழுவின் சார்பில் நாடகம் மற்றும் பாடல் இசைக்கப்பட்டன.

சிறப்பித்தல்

மூன்று நாள் நிகழ்வில் பங்குபெற்ற தலைமை கழக நிர்வாகிகள் தமிழர் தலைவர், துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மாநிலப் பொருளாளர் டாக்டர் பிறைநுதற் செல்வி, செயலவைத்தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், பேராசிரியர் காளிமுத்து, மருத்துவர் கவுதமன், மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், யோகா மாஸ்டர் யோகராஜா, ஈரோடு மண்டலச் செயலாளர் சண்முகம், வேலூர் மாவட்டத் தலைவர் சடகோபன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாநில துணைச்செயலாளர் சிவக்குமார், கிருட்டிணகிரி மாவட்டச் செயலாளர் சு.வனவேந்தன் மற்றும் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்களுக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் சிறப்பு செய்தனர்.

பயிற்சி பட்டறையில் பங்கேற்ற அனைவரும் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடத்திட துணை புரிந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நகர கழக நிர்வாகிகளுக்கு கழக துணைத்தலைவர் சிறப்பு செய்தார்.

அத்துடன் பயிற்சிப் பட்டறை சிறப்பாக அமைந்திட பொருள் உதவி, மண்டப உதவி, ஒலி, ஒளி, அமைப்பு, உணவு ஏற்பாடு செய்திட்ட அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

பெரியார் ஆயிரம் வினா விடை நிகழ்ச்சியில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட அனைவரும் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றனர். பயிற்சிப் பட்டறையின் மூன்று நாளும் பயிற்சி பெற்றவர்களுக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் தருமபுரி பெரியார் பெருந்தொண்டர் பி.கே.ராமமூர்த்தி குடும்பத்தின் சார்பில் மருத்துவர் கவுதமன் அவர்கள் சிறப்பான முறையில் விருந்தளித்தார் என்பது குறிப்பிடதக்கது. அவருக்கு அனைவரும் நன்றியைத் தெரிவித்தனர்.

பயிற்சிப் பட்டறையில் தருமபுரி, சேலம், கிருட்டிணகிரி, வேலூர், சென்னை, திருச்சி, தஞ்சை, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, பழனி, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் இருந்து பயிற்சியில் கலந்து கொண்டனர் என்பது சிறப்புக்குரியது.

Read more: http://viduthalai.in/e-paper/94067.html#ixzz3O9Be5JTH

தமிழ் ஓவியா said...

கருநாடகத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பாராட்டு!

கருநாடகா, ஜன. 7_ இதுகுறித்து கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் மு.சானகிராமன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:_

இந்தியாவிலேயே முதன் மாநிலமாக சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற் கொள்ளும் வழிகாட்டி மாநிலமாக கருநாடக மாநிலத்தை கணக்கெ டுப்பு பணியை மேற்கொள் வதற்கு முதலமைச்சர் அவர்களை கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் பாராட்டி, வரவேற்கிறது.

1931ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் எந்த ஒரு சாதிவாரி கணக்கும் துல்லியமாகப் பராமரிக் கப்படாமல் 12 அய்ந் தாண்டு திட்டங்கள் நிறை வேற்றியும் மக்களுக்கு எந்த திட்டங்களும் இல குவாக சென்றடையவில்லை என்பதே உண்மையாகும்.

இதனால்தான் தந்தை பெரியார் சுதந்திரம் பெற் றோம் சுகவாழ்வு பெற் றோமா? எனக் கேட்டார். அதற்கான விடையும், தேவையும் பூர்த்தி செய் யப்படாமலே உள்ளன.

சாதிவாரிக் கணக் கெடுப்பு பணி செய்து, நாட்டில் எந்தெந்த வகுப் பினர் எவ்வளவு பேர்கள் உள்ளனர். அவர்களின் பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முழு புள்ளி விவரங்கள் அரசிடமில்லை. அதனால் மக்களின் வளர்ச் சிக்கு ஏற்ற திட்டங்களை செயல்படுத்த முடிய வில்லை.

இதனைக் கருத் தில் கொண்ட கருநாடக முதலமைச்சர் சித்தரா மையா அவர்கள் ஏப்ரல் திங்களுக்குள் சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ள முன்வந்த மைக்கு வெகுஜன மக்க ளின் சார்பாக பாராட்டு தெரிவிக்கின்றோம்.

மேலும் அரசுப் பணியா ளர்கள் எந்தவித சுணக்க மும் காட்டாமல் பொறுப் புடனும், விடுபடாமல் துல்லியமாக கணக் கெடுப்பு செய்து, இந்தியா விற்கே முன்னோடியாக விளங்கிட ஆவன செய்திட கேட்டுக் கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-7/94101.html#ixzz3O9COkCKJ