Search This Blog

30.1.15

மத மாற்றம் - திருஞானசம்பந்தன் 16 வயதில் மண்டையைப் போட்டது ஏன்?


மத மாற்றம் பற்றி சர்ச் சையைக் கிளப்புகிறார்கள். மதுரையை ஆண்ட கூன் பாண்டியனை சமண மதத் திலிருந்து சைவ மதத் திற்குச் சூழ்ச்சியால் மாற்றவில்லையா?


கூன்பாண்டியனுக்கு வெப்பு நோய் ஏற்பட்டது என்றும் சமண முனிவர் களால் அந்த நோயைப் போக்க முடியவில்லை. திருஞான சம்பந்தன் மந்திரமாவது நீறு என்ற திருப்பதிகத்தை பாடி மன்னன் உடலில் திருநீறு பூச மன்னனின் வெப்பு நோய் விலகி ஓடியது என்று கதை கட்ட வில்லையா? கூன் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறன் ஆகினானாம்!


சமணர்களை எதிர்த்து அனல் வாதம், புனல் வாதம் நடத்தினார்களாம்.
சமணர்கள் பெரு நெருப்பை மூட்டினர்; சம்பந்தர் தான் பாடிய தேவாரத் திருமுறையில் கயிறு சாத்தி, போகமார்த்த என்ற திருப்பதிக ஏட்டை எடுத்து தளரிலி வள ரொளி என்ற பதிகத்தைப் பாடி நெருப்பில் இட்டார். அது தீயில் வேகாமல், கருகாமல் விளங்கியது; சமணர்கள் தங்கள் ஏடு களை நெருப்பிலிட அது சாம்பலாயிற்றாம்!


உடனே புனல் வாதம் தொடங்கியது. அப்பொ ழுது திருஞான சம்பந்தன் ஒரு பாடலைப் பாடினா னாம்.


வாழ்க அந்தணர் வானவரானினம்
வீழ்க தண் புனல்வேந்தனு மோங்குக
ஆழ்கதீய தெலா மர நாமமே
சூழ்க வையகமுந் துயர் தீர்கவே!


என்ற பதிகத்தைப்பாடி எழுதி அதை வைகை ஆற்றில் போட்டானாம்; அது ஆற்றில் எதிர் நீச்சல் போட்டு சிறிது தூரஞ் சென்று ஒரு கரையில் ஒதுங்கிற்றாம் - அந்த ஓதுங்கின இடத்திற்குத் திருவேடகம் என்று பெயர் வந்ததாம்.

வாதத்தில் தோற்றதால் சமணர்கள் எண்ணாயிரம் பேர்கழுவில் ஏற்றிக் கொல்லப்பட்டனர் அரசன் துணையோடு! (என்னே சைவத்தின் கருணை மழை!)


இதனை நினைவு கூரும் வகையில் ஒவ் வொரு ஆண்டும் - தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு சிவன் கோயிலிலும் பிர மோற்சவம் நடக்கும்போது ஆறாந் திருவிழாவை சமணர்களைக் கழுவில் ஏற்றிய புண்ணிய விழா வாகக் கொண்டாடுகிறார்கள் இப்பொழுதும்!


சீர்காழி சின்னசாமி அய்யரின் திருமகனான திருஞானசம்பந்தன்பற்றி அளந்து கொட்டப்பட்ட தகவல்கள் கொஞ்சமா - நஞ்சமா!


பாடலால் ஆண் பனை யைப் பெண் பனையாக மாற்றினார்.


சென்னை மயிலையைச் சேர்ந்த சிவசேனச் செட்டியாரின் செத்துப் போன மகளின் எலும்பிலிருந்து ஒரு பதிகம் பாடி உயிர்ப் பித் தானாம்! 

(புளுகுவதற்கும் ஓர் அளவு வேண்டாமா?)

அதெல்லாம் சரி.. இவ்வளவுப் பெரிய ஆள் 16 வயதில் மண்டையைப் போட்டது ஏனாம்!/


---------------- மயிலாடன் அவர்கள் 30-01-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

30 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வளையல்

கர்ப்பிணிக்கு அணிவிக் கும் வளையலால் கருச் சிதைவு ஏற்படாமல் குழந்தையைப் பாதுகாக்க இதைச் செய்ய வேண்டு மாம்.

அப்படி என்று யார் சொன்னார்கள்? இதற்கு என்ன ஆதாரம் இருக் கிறது? வளைகாப்புப் போட்டுக் கொண்ட பெண்களுக்குக் கருச் சிதைவே ஆகவில்லையா?

எந்தக் காலத்திலோ எவரோ உளறியது எல் லாம் உண்மையா?

Read more: http://viduthalai.in/e-paper/95200.html#ixzz3QJZjWWuU

தமிழ் ஓவியா said...

சபாஷ் உ.பி. அரசு ஜாதி ஒழிப்பு இணையர்களுக்கு ரூ.50 ஆயிரமும், பதக்கமும் வழங்குகிறது! தமிழ்நாடு அரசு மேலும் ஊக்கப்படுத்துக

சபாஷ் உ.பி. அரசு

ஜாதி ஒழிப்பு இணையர்களுக்கு ரூ.50 ஆயிரமும், பதக்கமும் வழங்குகிறது!

தமிழ்நாடு அரசு மேலும் ஊக்கப்படுத்துக

தமிழர் தலைவர் அறிக்கை

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற சோசலிஸ்ட், செக்குலர் என்பதை நீக்கி மத்திய அரசு விளம்பரமா?

உத்தரப்பிரதேச மாநில அரசு ஜாதி ஒழிப்பு இணையர்களுக்கு ரூ.50 ஆயிரம் அளித்து ஊக்கப்படுத்துகிறது. தமிழ்நாடு அரசு இத் திசையில் மேலும் ஊக்கப்படுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அகிலேஷ் யாதவ் தலைமையில் உள்ள சமாஜ்வாடி அரசு மிக அருமையான சமூகப் புரட்சிச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

சபாஷ், உ.பி.அரசு!

ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் மணமக்களுக்கு அய்ம்பதாயிரம் (ரூ.50,000) ரொக்கமும், பதக்கமும் (ஒரு மெடலும்), சான்றிதழும் தரப்படும் என்றும், அத்தகையோர் காதலர் நாள் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே பிப்ரவரி 8 ஆம் தேதி பாராட்டப்படுவார்கள் என்றும், மீரத் வட்டார கமிஷனர் பூபேந்திர சிங் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதற்காக உ.பி. முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அவர்களையும், அவரது அரசினையும் வெகுவாகப் பாராட்டி வாழ்த்துகிறோம்.

ஜாதியால் விளையும் கேடுகள்!

நம் நாட்டின் பல முனைகளிலும் ஜாதிதான் மிகவும் கேடுகளை விளைவிக்கும் ஆபத்தாக இருந்து கொண்டுள்ளது.

முன்பு நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் குன்னர் மிர்டல் என்ற ஸ்வீடன் நாட்டு அறிஞர், பிறகு நோபல் பரிசு பெற்ற நமது பொருளாதார மேதை அமர்த்தியாசென், உலகின் தலைசிறந்த நிர்வாகியாக அனைவராலும் மதிக்கப்படும் நவீன சிங்கப்பூர் நாட்டின் தந்தையாகிய லீக்வான்யூ போன்றோரும் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் முட்டுக்கட்டை ஜாதி அமைப்புதான் என்றார்கள்!

அண்ணா முதலமைச்சராக இருந்தபோது...

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக 1967 இல் பொறுப்பேற்றபோதே, ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்குப் பதக்கம் தந்து ஜாதி மறுப்புக்கு ஊக்கப்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அது மேலும் விரிவாக்கப்படுதல் அவசியம்.

Inter Caste Quota

வேலை வாய்ப்புகளில் ஜாதி மறுப்பாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட விழுக்காடு Inter Caste Quota ஒதுக்கினால் அத் திட்டம் வேகமாகப் பரவக்கூடும்.

தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானம்

தந்தை பெரியார் அவர்கள்தான் 1973 இல் நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானப்படி ஜாதி என்ற சொல்லை தீண்டாமை இருக்கும் இடத்தில், அரசியல் சட்டத்தின் 17 ஆவது பிரிவில் மாற்றி, ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்கு வழி செய்தால், சட்டப்படி ஜாதி ஒழியும் நிலை ஏற்படக்கூடும்.

தமிழ்நாடு அரசு செய்யவேண்டியது என்ன?

கருநாடக அரசும், ஜாதி மறுப்பாளர்களை ஊக்கப் படுத்துகிறது. எனவே, தமிழ்நாடு அரசு இதில் மேலும் பல திட்டங்களை உருவாக்க வேண்டும்.


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

கோவை
30.1.2015

Read more: http://viduthalai.in/e-paper/95194.html#ixzz3QJZqX4e9

தமிழ் ஓவியா said...

தாய் மதத்திற்கு திரும்புகின்றவர்களை எந்த ஜாதியில் சேர்ப்பீர்கள்? - பேராசிரியர் அருணன் கேள்வி


மதுரை, ஜன.30_ த.மு.எ.க.ச.வின் மதுரை மாநகர் மாவட்ட 7ஆவது மாநாட்டினையொட்டி சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத் தரங்கில் கலந்து கொண்டு பேரா. அருணன் பேசியதாவது: தூய்மை இந்தியா பற்றி பேசும் நரேந்திர மோடி, துப்புரவுப் பணி யாளர்கள் குறித்து பேசுவதேயில்லை. 21 நூற்றாண்டுகளாகியும் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஏன் இந்தப் பணியை மேற் கொண்டு வருகிறார்கள் என்று மோடி என்றாவது நினைத்ததுண்டா?

இந்து மதத்தை விட்டுச் சென்ற வர்கள், மீண்டும் தாய் மதம் திரும் புங்கள் என்கிறார்கள். ஏன் அவர்கள் இந்து மதத்தை விட்டுப் போனார் கள்? 99 சதவீதம் சூத்திரர்களும், பஞ்சமர்களும்தான் மதம் மாறி னார்கள். சாதிய அடக்கு முறையைக் கண்டு விம்மிதான் அவர்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறினார்கள். ஆக்ராவில் 150 இஸ்லாமியர்களை, தாய் மதத்தில் சேர்த்தீர்களே அவர் களை, எந்த சாதியில் இப்போது சேர்த்துக் கொண்டீர்கள்? தாய் மதம் திரும்புபவர்கள், எந்த சாதியில் சேர விருப்பமோ,அந்த சாதியில் சேர்ந்து கொள்ளலாம் என நீங்கள் அறிவிக்கத் தயாரா?அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக வேண்டும் என, உரிய பயிற்சி பெற்றவர் களுக்கு இன்றுவரை வேலையில்லை. எல்லா பயிற்சியும் பெற்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள்ளும், சிதம்பரம் நடராசர் கோவிலுக்குள்ளும் அனுப்பத் தயாரா? இந்து பெண்களை எந்த இந்துக் கோயிலிலாவது அர்ச்சகராக்கும் பேச்சு உண்டா? திருக்குறள் பற்றியும், திரு வள்ளு வரைப் பற்றியும் ஆர்எஸ்எஸ், பாஜக அதிகமாகப் பேசி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தியாவின் தேசிய நூலாக பகவத் கீதையை அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அனைத்து மொழி களுக்கும் தாய், சமஸ்கிருதம் என்பதுதான் ஆர்எஸ்எஸ் சின் மொழிக்கொள்கை.

இதற்காக, தமிழை ஒழித்துக் கட்ட சமஸ்கிருதம், பகவத் கீதையைத் தூக்கிக் கொண்டு பாஜக அலைகிறது. சமஸ்கிருதத் திணிப்புக்குப்பின் சாதியம், ஆணாதிக்கச் சிந்தனை உள்ளது. சூத்திரனும், பெண்ணும் படிக்கக் கூடாது என்று கூறும் பகவத்கீதை, சூத்திரர்கள் பாவயோனி யில் இருந்து பிறந்தவர்கள் என்றும் கூறுகிறது. இந்த நூலைத் தான் தேசிய நூலாக ஆக்க வேண் டுமென பாஜக கூறுகிறது. எழுத்தாளர் பெருமாள் முருகன், எழுத்து மீதான அடக்குமுறையை ஏற்க முடியாது. இதை எதிர்த்து தமுஎகச தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் துள்ளது. சட்டத்தைத் தவிர யாரும் இவ்விஷயத்தில் தலையிடக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இது பெருமாள் முருகனுக்கு தமுஎகச வழங்கிய முதல் வெற்றிக்கனி. எழுத்துரிமையைக் காப் பதற்காக எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சூப்பர் தணிக்கைச் சட்டத்திற்கு எதிராக பட்டினிப் போராட்டம் நடத்திக் காட்டிய ஓர் அமைப்பும் தமுஎகச தான் என பேரா.அருணன் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/95206.html#ixzz3QJaj5t33

தமிழ் ஓவியா said...

மத்திய ஆட்சியில் சர்வமும் இந்துத்துவாமயம்!


வெளியுறவுத் துறைச் செயலாளர் சுஜாதா சிங் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வெளியுறவுத் துறை போன்ற முக்கியமான பதவியில் உள்ளவர்கள் தங்கள் பணி பற்றிய குறிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து புதிதாக பதவியேற்கும் ஒருவரிடம் ஒப்படைப்பார்கள். அதற்காக குறைந்தது இரண்டு முதல் 5 வேலை வாரங்கள் எடுத்துக்கொள்வார்கள்.

இது முக்கிய பணிமாற்றம் குறித்த விதிகள் ஆகும். ஆனால் பாஜக பதவியேற்றதில் இருந்தே தலைமைப் பதவியில் உள்ள அதிகாரிகளை ஒரே இரவில் பதவியில் இருந்து வெளியேற்றி வைப்பது தொடர்கிறது. ஆட்சிக்கு வந்த பிறகு சிபிஅய் தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பிரிவுத் தலைவர், தேசிய பாதுகாப்பு ஆய்வு மய்யத் தலைவர் (DRDO) என பல முக்கிய அதிகாரிகள் இதே போன்று ஒரே இரவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக சிறப்புப் பாதுகாப்பு படைத்தலைவர் நேபாளத்தில் மோடியுடன் இருக்கும்போதே டில்லியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு பதவி பறிப்பு தகவல் குறித்த கடிதம் தொலைநகலில் அனுப்பப்பட்டுள்ளது.

தனது பதவி பறிக்கப்பட்டது தெரியாமல் நேபாள நாட்டில் மோடியின் பாதுகாப்புப் பணிகளை நேரடியாக கண்காணித்துக் கொண்டிருந்தார். அதேபோல் பாதுகாப்பு ஆய்வு மய்யத் தலைவர் அவினாஷ் சந்திரா முதல்நாள் இரவு வீட்டிற்குத் திரும்பி மறுநாள் காலை அலுவலகம் செல்ல இருந்தபோது அவரது அலுவலகத்தில் இருந்து நீங்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு விட்டீர்கள் என்று தகவல் தொலைப்பேசியில் வருகிறது.

இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்குக் காரணம் பத்திரிகைகள் மோடியை படம் எடுக்கும்போது பாதுகாப்பு வீரர்கள் குறுக்கே நிற்கிறார்களாம்; இதன் காரணமான அதன் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இதுபோன்ற முக்கிய அதிகாரிகளின் பதவி நீக்கத்திற்குப் பின்புலமாக காவிகளின் கரங்கள் இருக்கின்றன என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. பாதுகாப்பு ஆய்வு மய்யத் தலைவர் நவீன கண்டு பிடிப்புகளுக்கு புராணப் பெயர்களை வைப்பதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தவர்.

தமிழ் ஓவியா said...

ஹங்கேரி - இராமாயணம்


வார்சா ஒப்பந்தநாடுகளில் இராமாயண நாடகத்தை நடத்துவது இந்தியாவிற்கு நீண்டகாலமாக நற்பெயரை தரக்கூடிய வழிமுறையாக இருந்ததாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஹங்கேரியர்கள் இராமாயண நாடகத்தை நடத்தினால் நல்ல வரவேற்பு இருக்குமென்று கருதி, கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளையே கவரும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய இராமாயண நாடகத்தை தயாரித்தார்களாம்.

இந்த நாடகத்தில் இராவணன் வில்லனல்ல. மாறாக இலட்சுமணன் தான் வில்லன். இவன் நம்பிக்கைத் துரோகம் செய்து தன் அண்ணன் மனைவி சீதையை கூட்டிக் கொண்டு ஓடுவதாகக் கதை. இந்த நாடகம் ஹங்கேரியிலுள்ள புடா பெஸ்ட் நகரில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியிருக்கிறது.

மேலும் புதிய டியூட் டானிக்கின் புராண மொழி பெயர்ப்பின்படியும் சமீபத்தில் ஜெர்மானிய ஜனநாயக குடியரசு சார்பில் பெர்லினில் நடந்த நாடகத்திலும், இராவணன் சீதை மீது விருப்பமில்லாதவனாகவும், சீதை வலிய சென்று இராவணனை மயக்கக் கூடியவளாகவும் சித்தரித்திருக்கிறார்களாம்.

ஆதாரம்: இந்துஸ்தான் டைம்ஸ் - 4.10.1981

Read more: http://viduthalai.in/e-paper/95216.html#ixzz3QJdZi5p0

தமிழ் ஓவியா said...

ஜீவா பாடுகிறார்!

நல்லாரை உழைப்போரைப் பறையரென்றார்,
நயவஞ்சகமுடையோர் மேல்ஜாதி யென்றார்,
பொல்லாத கொடியவரை மன்னரென்றார்,
பொய்யுரைத்த குருக்கள், தமை குருக்கள் என்றார்
சொல்லாரும் தாயினத்தை அடிமையென்றார்
சூது மிகும் ஆசாரம் சமயம் என்றார்
இல்லாத பொய்வழியில் சொன்னதாலே
இந்நாட்டார் அடிமை வாழ்வு எய்தினாரே.

ப.ஜீவானந்தம்
தகவல்: எஸ்.எம்.தங்கவேலன், குஜராத்

Read more: http://viduthalai.in/e-paper/95216.html#ixzz3QJdlwDSW

தமிழ் ஓவியா said...

சர்க்கார் (அரசு) விடுமுறை நாள்கள்


இரு நூறு ஆண்டுகளாக நாம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். நம்முடைய அடிமைத்தளையை எந்த மதமும் அறுக்க வில்லை. பார்த்துக் கொண்டுதான் இருந்தன, எப்படி? உன்னுடைய தலை விதி, நீ அடிமையாக இருக்கும்படி நேரிட்டது என்று கூறுவதுபோல் இருந்தது. மதம் ஏற்படுத்திய அந்தத் தலை விதியை, நாட்டின் நலிவை தலைவர்கள், தங்கள் உழைப்பால் மண்டையில் அடித்து நொறுக்கினார்கள். தலை நொறுங்கவே - தளை அறு பட்டது.

அடிமைநிலை மாறிற்று. சுதந்திரம் கிடைத்தது. ஆனால், ஓயா, உழைப்பின் பயனாகவும், பல உத்தமர்களின் தியாகத்தினாலும் பெற்ற சுதந்திரத்தை ஏற்று நடத்திய மறக்க முடியாத ஒரு சரித்திர நிகழ்ச்சியை, மதக் கோட்பாட்டின்படி நாள் கோள் பார்த்தே நடத்தினர் என்றால் - அதிலும் ஒரு குறிப்பிட்ட மதக் கோட்பாட்டின்படி நல்ல நாள் பார்த்து சுதந்திர அரசாங்கத்தைத் தொடங்கினர் என்றால், மதக் கலப்பற்ற அரசியலையே இவர்கள் நடத்துகிறார்கள் என்று எப்படிக் கூற முடியும்? மதமா நமக்குச் சுதந்திரத்தை வாங்கித் தந்தது? மக்களின் உழைப்பன்றோ இன்று நாம் சுதந்திரமாக வாழ்வதற்கு அடிகோலித் தந்தது.

இதனை மறந்து மதங்களின் பெயரால் ஏற்படுத் தப்பட்ட ஆவணி அவிட்டத்தையும், கிருஷ்ண ஜெயந்தி யையும், விநாயக சதுர்த்தியையும், மஹாளய அமாவாசையையும், ஆயுதபூசையையும், பக்ரீத்தையும், மொகரத்தையும், தீபாவளியையும், வைகுந்த ஏகாதசியையும், சிவராத்திரி யையும் அரசின் விடுமுறை நாள்களாகக் கொண்டாடலாமா?

மத சம்பந்தமான நாள்களை அரசு விடுமுறை நாள்களாக்கிக் கொண்டாடுவது, இருநூறு ஆண்டுகளாக நாங்கள் அடிமைப்பகுதியில் வீழ்ந்து கிடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த மதமே! எமது அரசியல் விடுதலைக்கு உதவி புரியாத மதமே! சமுதாய ஒற்றுமையைக் குலைத்து எங்களுக் கிடையே ஒட்ட முடியாத பிளவை உண்டாக்கிய மதமே இருக்கின்ற சிறிதளவு ஒற்றுமையையும், அரசியலில் நுழைந்து குலைத்து விடாதே!

அரசியலை விட்டுச் சற்று விலகியிருப்பதே நீ எங்களுக்குச் செய்யும் பேருதவியாகும் என்று கூறி அதனை அரசியலோடு பிணைக்காமலும் அரசி யலின் பெயரால் அதற்கு விடுமுறை நாள்களை ஏற்படுத்தி மீண்டும் அரசியல் நெருக்கடிகளை உண்டாக்கி, அரிதில் பெற்ற விடுதலையை இழக்காமல் இருப்பதையுமே மத அடிப் படையின்மீது எழுப்பப்படாத இன்றைய அரசாங்கம் தன்னுடைய கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றோம்.

அறிஞர் அண்ணா
திராவிட நாடு இதழ் - (23.5.1948)

Read more: http://viduthalai.in/e-paper/95218.html#ixzz3QJduEwfC

தமிழ் ஓவியா said...

புது யுகம்

முற்காலத்து முனிவர்களுக்கு உற்சாகம் பிறந்தது இறைவனுடைய வடிவத்தைக் காண அவர்களின் அறிவு முயன்றது. வேதங்கள் பிறந்தன. ஆண்டவனைப்பற்றி இது அன்று அது அன்று என்ற அறிவு மட்டுமே அவர்களுக்கு உண்டாயிற்று.

உண்மையான தத்துவ ஞானம் இதுதான் என்று மக்கள் வியந்தனர்.

இடைக்காலத்துப் பெரியவர்களுக்கு உற்சாகம் பிறந்தது. இறைவனுடைய வடிவத்தைக் காண அவர்கள் பிரதிக்கினை செய்து கொண்டார்கள். அப்புறம் கேட்க வேண்டுமா? கல் தெய்வமாயிற்று; குரங்கு தெய்வமாயிற்று; ஆண்டவன் நீரிலும் தரையிலும் மரத்திலும் கல்லிலும் இருப்பதாக அவர்கள் கருதினார்கள்.

உண்மையான பக்தி இதுதான். என்று மக்கள் மகிழ்ச்சியோடு கூவினார்கள்.

விஞ்ஞான யுகம் வந்தது. விஞ்ஞானிகளுக்கு உற்சாகம் பிறந்தது கல்லிலிருந்து குரங்கு வரைக்கும் எல்லாப் பொருள்களின் வாழ்வையும் அவர்கள் ஆராய்ந்தனர். எந்தப் பொருளிலும் எங்கும் அவர்களுக்கு இறைவன் புலப்படவில்லை. அவர்கள் இகழ்ச்சியோடு இதுவும் அன்று; அதுவும் அன்று என்றார்கள்.

நாத்திகன்! நாத்திகன் என்று மக்கள் சினம் பொங்கக் கத்தினார்கள்.

- காண்டேகர், நந்தவனம் என்ற நூலில்.

Read more: http://viduthalai.in/e-paper/95218.html#ixzz3QJe4Rm87

தமிழ் ஓவியா said...

கம்யூனிஸ்டுகளின் கடவுள் கொள்கை


கம்யூனிஸ்டு ஒழுக்கமுறை என்று ஒன்று இருக்கிறதா? ஆம் நிச்சயமாக இருக்கிறது. நமக்கென்று தனி நெறிமுறை யில்லை என்று அடிக்கடி கருத்துக் கூறப்படுகிறது. பூர்ஷ்வாக்கள் நம்மைக் கம்யூனிஸ்டுகள் எல்லாவித ஒழுக்க முறைகளையும் நிராகரிக்கிறார்கள் என்று அடிக்கடி குற்றம்சாட்டுகிறார்கள்.

இது பிரச்சினையை குழப்பும் முறையாகும். தொழிலாளர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதாகும். எந்த அர்த்தத்தில் நெறிமுறைகளை நிராகரிக்கின்றோம்? பூர்ஷ்வா வர்க்கத்தால் கொடுக்கப்படும் அர்த்தத்தில் - கடவுளின் கட்டளைகள் என்னும் அடிப் படையில் கூறப்படும் நெறிமுறை என்னும் அர்த்தத்தில் அவைகளை நிராகரிக்கின்றோம். இந்த விஷயத்தில் நாம் நிச்சயமாக ஒன்று கூறுகிறோம். தமக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.

மதக்குருக்களும், நிலப்பிரபுக்களும், பூர்ஷ்வாக் களும் கடவுளின் பெயரைக் கிளப்பி விட்டு - அவர்கள் சுரண்டல்காரர்கள் என்னும் முறையில் அவர்களுடைய நல உரிமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதை நாம் நன்கு தெளிவாக அறிவோம்.

- வி.இ.லெனின் (மதத்தைப் பற்றி எனும் நூல் பக்கம் -103

Read more: http://viduthalai.in/e-paper/95221.html#ixzz3QJeCLCg0

தமிழ் ஓவியா said...

புரட்சிக்கவிஞரின் வினா!

தமிழர் வீட்டுப் பையன் பிள்ளையார் எதிரில் நின்று பாடுகின்றான்.

பாலும் தெளிதேனும்
பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு
நான் தருவேன்
கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத்
தூமணியே நீயெனக்கு
சங்கத்தமிழ்
மூன்றும் தா!
காலணாவுக்குப் பாலும், காலணாவுக்குத் தேனும், காலணாவுக்கு வெல்லப்பாகும், காலணாவுக்கு முந்திரிப் பருப்பும் ஆகிய நாலையும் கலந்து பிள்ளையாரப்பா உனக்கு நான் தருவேன்.
அப்படி நான் தருவதற்கு முன், நீ எனக்கு சங்கத்தின் இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழ்களையும் இப்படிப் போடு என்று கேட்கின்றான்! யாரை? அழுக்குருட்டி பிள்ளையாரை!
இவன் உருப்படுவானா? இப்படிப்பட்ட கல்வியைக் கட்டாயம் ஆக்கித்தான் என்ன பயன்?

- புரட்சிக் கவிஞர் (குயில், 20.9.1960)

Read more: http://viduthalai.in/e-paper/95221.html#ixzz3QJeLDhi3

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சுண்டெலி

சுண்டெலி நாள்தோறும் சிறுகச் சிறுக பூமியைத் தோண்டி வளையை ஆழப் படுத்துகிறது. அதுபோலவே காலம் என்ற சுண்டெலி ஒவ்வொரு நிமிடமும் உயிர் களுடைய வாழ்க்கையைக் குடைந்தெடுத்தபடியே இருக்கிறது. எப்போது இதற்குள்ளே புகுந்து இதை உடைமையாக்கிக் கொள்ள லாம்? என்று மரணம் உடலை கவனித்துக் கொண்டே இருக்கிறது.
- ஸ்ரீராமர்

இப்படி ஓர் ஆன்மிகத் துணுக்கு ஏடு ஒன்றில் வெளியாகியுள்ளது.

- ஆமாம் காலம் என்ற சுண்டெலியை உருவாக்கி யதுயார்? கடவுள் என்று தானே சொல்கிறார்கள். அவன் தானே பிண்டம் படைப்பவன்! அப்படி இருக் கும் போது ஸ்ரீராமன் புலம் புவது ஏன்? அதில் அர்த்தம் இருக்கிறதா?

Read more: http://viduthalai.in/e-paper/95394.html#ixzz3Qb8S7RX7

தமிழ் ஓவியா said...

கோலாலம்பூரில் 9ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

உலகளாவிய அளவில் தமிழும் - தமிழரும் எனும் தலைப்பில்

தமிழர் தலைவர் ஆசிரியர் நிகழ்த்திய ஆய்வுரை

வடமொழியால் விளைந்த பண்பாட்டுப் படையெடுப்புக் குறித்தும் இடித்துரை


கோலாலம்பூர், பிப்.2_ கோலாலம்பூரில் நடைபெற்ற 9ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வட மொழி யால் தமிழுக்கு நேர்ந்த கேடுகளை ஆதாரத் துடன் எடுத்துக்காட்டி ஆய்வுரை வழங்கினார்.

9 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசி யாவின் தலைநகர் கோலாலம்பூரில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.

தமிழ்மொழியை தமிழர்க்கு அறிமுகம் செய்தவர் அறிஞர் கால்டுவெல் ஆவார். தமிழை உலகுக்கு அறிமுகப் படுத்தியதில் பெரும்பங்கு வகித்தவர் தனி நாயக அடிகளார் ஆவார். அவருடைய பெரு முயற்சியால் முதல் உலகத்தமிழ் மாநாடு மிகவும் சிறப்பாக 1965இல் கோலாலம்பூரில் நடந்தது. இரண் டாவது மாநாடு சென்னையிலே மிகவும் கோலாகல மாக அறிஞர் அண்ணா அவர்களால் உலகச் சிறப் புடன் நடந்தது.

இப்போது 9ஆவது மாநாடு மீண்டும் கோலாலம்பூ ரில் சனவரி 30, 31 பிப்ரவரி 1ஆம் நாள்களில் நடை பெற்றது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் பெருமைமிகு பேராசிரியர் டத்தோ மாரிமுத்து அவர்களின் பெருமுயற்சியாலும், பெருமைமிகு டத்தோ சாமிவேலு அவர்களது ஒத்துழைப்புடனும், மலேசிய அரசின் ஒரு மில்லியன் டாலர் உதவியுடனும் நடைபெற்றது.

முதல் நாள் தொடக்க விழாவில் பேசிய மலேசியப் பிரதமர் மாண்புமிகு நஜீப் ரசாக் அவர்கள் திருக் குறளின் பெருமையைப் பேசி தமிழின் பெருமை, தமிழர்களின் முன்னேற்றம், குறித்தும் கருத்துரை வழங் கினார். மலேசியாவில் 542 அரசு தமிழ்ப் பள்ளிகள் இயங்குவது பற்றியும் பேசினார்.

பல்வேறு அமர்வுகளில் 120 ஆராய்ச்சிக் கட்டு ரைகள் வாசிக்கப்பட்டன.

இரண்டாம் நாள் சிறப்புப் பேச்சாளராக மானமிகு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். கோவையில் சிறப்புக்கூட்டத்தை முடித்துக் கொண்டு நேரே சென்னை வந்து உள்நாட்டு விமான நிலையத்தி லிருந்து பன்னாட்டு விமானத்தில் ஏறி மலேசியா வந்தடைந்தார்.
டத்தோ சாமிவேலு அவர்கள் அறிமுகப்படுத்திய போது மிகவும் பெருமையுடன் தானே திராவிடர் கழகத்தாலும், அய்யா சாரங்கபாணி அவர்களாலும் உருவாக்கப்பட்டதைச் சொல்லி ஆழமான உரை யாற்றினார். ஆசிரியர் அவர்களின் உழைப்பைப் பாராட்டி, அவரது வருகையால் நாங்கள் மிகவும் பெருமைப்படுகின்றோம் என்று வரவேற்றார்.

ஆசிரியர் அவர்கள் ஒரு மணி நேரம் உலகளாவிய நிலையில் தமிழும் தமிழரும் எனற தலைப்பில் தமிழும், தமிழரும் எப்படிப் பண்பாட்டுப் படை யெடுப்பை முறியடிக்க வேண்டியிருக்கின்றது என்பதை ஆதாரபூர்வ நூல்களை எடுத்துக்காட்டி விளக்கினார். தமிழனுக்குத் தனது மொழியே வட மொழியிலிருந்து கடன் பட்டது என்ற கதையை இல்லை,இல்லை, வடமொழிதான் தமிழுக்குக் கடன் பட்டுள்ளது, அதைத் திருடி தனது சொத்தாக சமஸ்கிருதம் என்ற மொழி உருவான கதையைச் சொன்னார். பண்பாட்டுப் படையெடுப்பு, மொழியில் மட்டுமன்றி, கலை, பண்பாடு, மொழியை அழிக்கச் செய்த சூழ்ச் சிகள், ஆக்கிக் கொண்டதையும், அதை நம்மையே நம்ப வைத்துவிட்ட சூழ்ச்சியையும் சொன்னார்.

செம்மொழிக்கு இருக்க வேண்டிய 11 தகுதிகளும் தமிழுக்கு மட்டுமே உள்ளதையும், சமஸ்கிருதத்திற்கு 7 தகுதிகள் மட்டுமே உள்ளதையும் விளக்கமாகச் சொன்னார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குயில் இதழ்களில் எழுதிய வந்தவர் மொழியா செந் தமிழ்ச்செல்வமா, என்றார். பல சொற்கள் வடமொழி போல் தோன்ற வைத்ததையும் அவை தூய தமிழ்ச்சொற்களேயாம் என்பதையும் நூலாக வெளியிட்டுள்ளதைக் காண்பித்தார். தமிழ் இசை கர்நாடக சங்கீதமாகவும், திருக்குறளிலேயே உள்ள "கூத்தாட்டும் அவை" பரத நாட்டியமாகவும் பண்பாட்டுப் படையெடுப்பு, மொழியை மட்டுமன்றி உள்ளதைத் தமிழறிஞர்கள் ஆக்கபூர்வமாக எடுத்துச் சொல்வதுதான் உண்மையான தமிழ்ப்பணி, அதை நாம் அனைவரும் நமது பிளவுகளை ஓரங்கட்டி, இணைப்புப் பாலங்களை இறுகச் செய்ய வேண்டும் என்று முழங்கினார். பேச்சு, புத்தகமாக அனைவர்க்கும் தரப்பட்டது.

கடைசி நாள் மலேசியாவின் கல்வி அமைச்சர் முடிவு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தார். பல்கலைக் கழக் துணைவேந்தர்களும், பல தமிழறிஞர்களும், 20 நாடுகளில் இருந்து வந்து பங்கேற்றனர். முன்னாள் கல்வி அமைச்சர் ஆறுமுக பரமசிவம் உணர்ச்சியுடன் தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிப் பேசியும் மழலைத் தமிழ் பேசியும் அனைவரையும் மயக்கினார்.

2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மலேசியப் பல்கலைக் கழகத்தில், அவர்களது ஆதர வுடன் நடைபெற்ற வெற்றித் திருவிழாவாக நடை பெற்றது.

Read more: http://viduthalai.in/e-paper/95391.html#ixzz3Qb8cu36q

தமிழ் ஓவியா said...

மூடனே!

கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிச் சோம்பித் திரிந்து கொண்டு, தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழி போட்டுத் திரிகின்றவன் ஒரு மூடனே! - (விடுதலை, 1.2.1969)

Read more: http://viduthalai.in/page-2/95400.html#ixzz3Qb954aqT

தமிழ் ஓவியா said...

குடும்பக் கட்டுப்பாடு மாத்திரையை உருவாக்கிய விஞ்ஞானி மறைவு

சான்பிரான்சிஸ்கோ, பிப்.2_ குடும்பக் கட் டுப்பாட்டுக்கு உதவும் மாத்திரையை உரு வாக்கிய விஞ்ஞானியான கார்ல் ஜெராஸி (91) காலமானார்.

ஆஸ்திரியாவில் பிறந்த இவர், அமெரிக் காவில் உயர் கல்வி பயின்றார். 1951 -இல் இவரது தலைமையிலான ஆய்வுக்குழு நாரத் ரின்ட்ரோன் எனும் மூலக்கூறைக் கண்டு பிடித்தது. அவருக்கு அப்போது 28 வயது. அந்த மூலக்கூறு அடிப்படையிலேயே குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உதவும் மாத்தி ரைகள் உருவாக்கப்பட்டன.

இதையடுத்து, குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரையின் தந்தை என கார்ல் ஜெராஸி அறியப்பட்டார்.
குடும்பக் கட்டுபாடு மாத்திரை ஒரு நாட் டின் பொருளாதாரத் திட்டங்களை வகுக்க உதவியது மட்டுமல்லாமல், பாலியல் உறவு களிலும், பெண்களின் வாழ்விலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. உலகெங்கும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில், அறி வியலைவிட, அரசியல் முக்கியப் பங்கு வகிக் கும் என்று அவர் ஒருமுறை குறிப்பிட்டார்.

வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர், பல்வேறு தனியார் வேதி யியல் மற்றும் மருந்து தயாரிப்பு நிறு வனங்களில் பணியாற்றியுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் வேதியியல் துறையின் கவுரவப் பேராசிரியராக இருந்தார். கரிம வேதியியல் துறைக்குப் பெரும் பங்களிப்பு செய்துள்ள அவர், சுமார் 1,200 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இரு கவிதைத் தொகுப்புகள், விஞ்ஞான நாவல்கள், நாடகங்களும் எழுதி யுள்ளார். இவரது சுயசரிதை 4 தொகுதி களாக வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக் கிழமை (ஜன.30) அவர் இறந்ததாக ஸ்டான் ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-7/95438.html#ixzz3Qb9t49SJ

தமிழ் ஓவியா said...

புதிய ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதங்களில் எந்த மாற்றங்களும் நடக்கவில்லை: அசோசேம் கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடில்லி, பிப்.2- புதிய அரசு பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களில் பெரிய அளவில் எந்த மாற்றங்களும் நடக்கவில்லை என்று அசோசேம் கருத்து கணிப்பில் கலந்துகொண்ட பெரும்பான்மையான தொழி லதிபர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

தவிர நடப்பு நிதி ஆண்டில் எந்த முதலீட்டுத் திட்டங்கள் வரும் என்பதையும் எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் தொழில் துறை அமைப்பான அசோசேம் பிஸினஸ் நம்பிக்கை குறியீடு என்ற பெயரில் நடத்திய சர்வேயில் இவை தெரிய வந்திருக்கின்றன.

அதேசமயம் நடப்பாண்டின் முதல் அரையாண்டுக்குள் சூழ் நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.
சர்வேயில் கலந்துகொண்ட 54.2 சதவீத தொழிலதிபர்கள் கடந்த ஆறு மாத காலத்தில் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்கள்.

மேலும் 45.8 சதவீத தொழிலதிபர்கள் நடப்பு நிதி ஆண்டுக்குள் முதலீட்டு சூழ்நிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் தெரிவித்தார்கள்.
மேலும் ஏற்றுமதி சந்தையும் மந்தமாகவே இருக்கும் என்று தெரிவித்தார்கள். ஆனால் 41.7 சதவீத தொழிலதிபர்கள் நடப்பு காலாண்டில் நிலைமை மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/95442.html#ixzz3QbA0kql6

தமிழ் ஓவியா said...

மதவெறி ஆட்சியை வேருடன் சாய்க்க வாரீர்!

பேராய மென்பது பார்ப்பன பனியாவைப்
பாதுகாக்கும் பிற்போக்குக் கட்சி
பார்ப்பன சனதாவோ ஆர்.எஸ்.எஸ். கோட்பாட்டை
அட்டியின்றிச் செயல்படுத்தும் நஞ்சு
இருபெரும் கட்சியின் ஆட்சியால் இல்லாமை
ஏழ்மை நிலவிடும் அவலம்
பெரும்முத லாளிய பன்னாட்டுப் பகாசுர
நிறுவனத்தை வளர்க்கும் கட்சிகளே!

பேராயம் மதச்சார்பின்மை பேசிடினும்
மதவெறியைக் கட்டுப் படுத்தவில்லை
அரசு சார்ந்து ஆர்.எஸ்.எஸ். ஊடுருவ
வாளா விருந்ததே காரணம்
நேரு காலத்திலே நேர்ந்த அவலத்தால்
பாபர் மசூதியை இடித்தனர்
பெரும்பான்மை மக்களைப் பின்னுக்குத் தள்ளி
சிறுபான்மைப் பார்ப்பனர் ஆட்சியே!

பார்ப்பன சனதாவின் கூட்டணி ஆட்சியில்
நிறைவேறா மறைமுகத் திட்டங்கள்
ஆர்.எஸ்.எஸ். வழிகாட்ட அறுதிப் பெரும்பான்மை
பெற்றுவிட்ட மோடியின் அரசு
வெளிப்படையாகவே செயல் படுத்த
ஆளுக்கொரு விதமாய்க் கூச்சலிட
நாளுக்கோர் அறிவிப்பை கூச்சநாச்ச மின்றி
மதவெறியால் கொக்கரிக் கின்றார்

இந்தித் திணிப்பு சமஸ்கிருத மாக்கல்
கல்வியில் காவிச் சாயமேற்ற
இந்நாட்டின் வரலாற்றைத் திரிக்க கொலைநூல்
கீதையை தேசிய நூலாக்க
இந்துவெறி தலைக்கேற இந்தியா இந்து
நாடாம் ஒரே பண்பாடாம்
மந்தை யாடுகள் மக்களென எண்ணி
மதவெறியால் மனப்பால் குடிக்கின்றார்!

காந்தியும் பட்டேலும் கூர்ச்சரத்தில் பிறந்தவர்
பட்டேலைத் தூக்கும் கமுக்கம்
காந்தியைத் தாழ்த்தி கோட்சேவை தேசப்
பக்தரென சரடுவிடு கின்றார்
தாயைக் கொன்றவனுக்கு ஊரிலே பாதியாம்
அதுபோல் கொடுவெறி யனுக்கு
வாய்த்து விட்ட ஆட்சியால் நாடொறும்
சிலைகோ யில் கட்டத் துடிக்கின்றார்!

மதவெறி பிடித்தால் மானுடம் கேடுறும்
மண்ணில் நிலவும் அவலம்
மதவெறியை மாய்த்தால் மானுடம் தழைக்கும்
மதவெறியை விலக்குவீர் நாட்டோரே
அய்யா பெரியார் அண்ணல் அம்பேத்கர்
கொள்கைக் கோட்பாட்டை ஏற்று
மய்யத்தை யாளும் மதவெறி ஆட்சியை
வேருடன் சாய்க்க வாரீரே!

- கவிஞர் இனியன், திருச்சி

Read more: http://viduthalai.in/page4/95265.html#ixzz3QbBoP6D3

தமிழ் ஓவியா said...

இவர்தான் ஏழை இந்தியாவின் பிரதமர்

ஒரு மணி நேர சந்திப்பிற்கு 10 லட்ச ரூபாய் ஆடை அணிந்த மோடி ஞாயிறு அன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாஉடனான சந்திப்பின் போது மோடி அணிந்திருந்த ஆடையின் விலை ரூ.10 லட்சம், அந்த ஆடையில் மோடியின் முழுப்பெயரான நரேந்திர தாமோதரதாஸ் மோடி எழுத்து தங்க ஜரிகையில் பின்னப்பட்டிருந்தது.

ஆடை அணிவது ஒருவரது தனிப் பட்ட விருப்பம், அவர் எளிமையாக அணியலாம் அல்லது மிகவும் ஆடம் பரமாக அணியலாம், ஆனால் இந்தியா போன்ற வளரும் நாட்டின் மக்கள் பிரதிநிதி ஒருவர் எப்படி இருக்க வேண் டும் என்று பொதுவான கோட்பாடு உள்ளது. பள்ளிகளில் கூட சீருடை ஏன் அணியச்சொல்கிறார்கள் என்றால் அனைவரும் சமமாக பாவிக்கவேண்டும் என்றுதான், ஆனால் நாட்டின் அனைத்துப் பகுதி மக்களையும் ஒன்றி னைத்து வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வேன், என்று முழக்கமிட்ட மோடி அம்பானி, அதானி, மற்றும் மதுபான தொழிலதிபர் விஜய்மல்லையா போல் ஆடம்பர ஆடையில் பவனி வருகிறார்.

இதில் என்ன வெட்கக்கேடு என்றால் பத்திரிகைகள் இதை புகழோ புகழ் என்று புகழ்கின்றனர்.

கடந்த ஆண்டு அமெரிக்க சென்ற மோடி 5 நாட்கள் தங்கி இருந்தார் இந்த அய்ந்து நாட் களிலும் பல்வேறு வித ஆடைகளை அனிந்திருந்தார். இவை அனைத்தும் அவருக்கென்று தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட் டவை தான்!

இந்த ஆடை வடிவமைப் பாளர்கள் எல்லாம் இந்தியர்களாக இருந்தால் அவர்களுக்கு சிறப்பு வரு மானத்திற்கு வழி வகுக்கிறார் என்று எண்ணி மகிழ்ச்சியடையலாம். ஆனால், மோடியின் ஆடைகளை நெய்வது முதல் வடிவமைத்து தைத்துக் கொடுப்பது எல்லாம் Holland & Sherry என்ற இங்கிலாந்து நிறுவனம். இந்த நிறுவனம் உலகில் முக்கிய சர்வாதி காரிகளுக்கு ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்த பல்வேறு செய்திகள் அய்ரோப்பியப் பத்திரிகையில் வலம் வந்துள்ளன. இந்தியாவில் வாடியா, அனில் அம்பானி, போன்ற இந்திய பெரும் பணக்காரர்களுக்கான சிறப்பு ஆடை களை வடிவமைத்து தைத்து கொடுத்து வந்தது இதே நிறுவனம் தான்.

இந்த நிறுவனம் நேரடியாக மோடிக்கு ஆடைகளை அனுப்புகிறதா? அல்லது வேறு யாரேனும் மோடிக்கான இந்த நிறுவனத்தில் இருந்து ஆடைகளை பெற்று அனுப்புகிறாரா? என்று பிற்காலத்தில் தெரியவரும். மோடியின் ஆடையில் தங்க ஜரிகை களால் “NARENDRA DAMODHARDAS MODI" என்று ஆங்கிலத்தில் எழுதப் பட்டது. இந்த ஆடை நெய்வதற்கு குறைந்தபட்சம் 3 முதல் 5 லட்சம் வரை செலவாகியிருக்கலாம் என்றும், வடிவ மைபபாளர்களுக்கு 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை கொடுத்திருக்கலாம் என்றும் தங்க ஜரிகைகளின் விலை குறைந்த பட்சம் 4 லட்சம் வரை இருக்கலாம், குறைந்தபட்சம் 10 முதல் 11 லட்சம் வரை செலவிட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

மோடிக்கு என்று பிரத்யோக ஆடை வடிவமைப்பளர் ராகேஷ் அகவர்வால் என்ற நபர் இருந்தாலும் மோடி அயல்நாட்டு வடிவமைப்பாளர்களின் ஆலோசனையையே பெரிதும் விரும்பி கேட்கிறார்.

பலரது ஆலோசனைகளை கேட்ட பிறகே தனது ஆடை வடிவ மைப்பாளரை அழைத்து இறுதி செய் கிறார். இந்தியாவில் இன்றளவும் வறுமைக் கோட்டிற்கு கீழே 43 விழுக்காடு மக்கள் வாழும் நிலையில் இந்த நாட்டின் பிரதிநிதியாக திகழும் ஒரு தனிநபர் மக்கள் பணத்தை இப்படி தன்னுடைய தனிப்பட்ட ஆசாபாசங்களுக்காக செலவிடலாமா? உலக நாடுகள் அனைத்தும் தங்களது பிரதிநிதிகளின் ஆடைக்கென ஒரு விதிமுறையை வைத்திருக்கிறது.

எடுத்துக்காட்டாக அமெரிக்க அதிபர் ஒபாமாவை எடுத்துக்கொண்டால் அவர் பிற நாட்டிற்கு அரசு முறைப்பயணமாக செல்லும் போது அவர்களுக்கு என்று வகுக்கப்பட்ட விதிமுறைகளின் படிதான் ஆடைகளை அணிய வேண்டும் இதை டிரஸ் கோட் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இன்றளவும் இந்தியாவில் உள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங் கள் கூட தனது பணியாளர்களுக்கு இந்த விதிகளைப் பயன்படுத்த வற்புறுத்து கிறது.

Read more: http://viduthalai.in/page8/95271.html#ixzz3QbCg5z95

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பண்படுத்திய இந்த பூமியில் இந்து அமைப்புகளின் எதிர்மறைக் கருத்துகளை பிரதமர் மறுக்காதது ஏன்?

கலைஞர்
கண்டனம்


சென்னை, பிப்.1_ தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் பண் படுத்தி வளர்த்து பாதுகாத்து வரும் இந்த பூமியில், இந்து அமைப்புகளின் எதிர் மறை கருத்துகளைப் பிரதமர் அவ்வப் போது மறுத்து, தெளிவுபடுத்தாதது ஏன்? எனவும், இவை ஆச்சரியத்தையும், அதிர்ச் சியையும் அளிப்பதாகவும் தி.மு.க. தலை வர் கலைஞர் கண்டனம் தெரிவித்துள் ளார்.

இதுகுறித்து கலைஞர் அவர்கள் வெளி யிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேள்வி:- இலங்கையில் தமிழர் ஒருவர் நாட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறாரே?

கலைஞர்:- இலங்கையில் பொறுப் பேற்றிருக்கும் சிறீசேனாவின் புதிய அரசு, சிறுபான்மைத் தமிழினத்தைச் சேர்ந்த 62 வயதான திரு.கே.சிறீபவன் என்பவரை நாட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்திருப்பது வரவேற்றுப் பாராட் டப்பட வேண்டிய நடவடிக்கையாகும். 1991 ஆம் ஆண்டில் இலங்கையின் தலைமை நீதிபதியாக திரு. தம்பையா என்னும் தமிழர் இருந்திருக்கிறார். தற் போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண் டும் ஒரு தமிழர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது, தமிழினத்திற்கு இதுவரை இழைக்கப்பட்டிருக்கும் ஏராள மான அநீதிகளை ஒவ்வொன்றாகத் துடைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் ஒன்றாகவே உலகத் தமிழினத்தால் கருதப்படும். எனினும், இலங் கையில் புதிய அரசின் பல அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவதில் ஏற்படும் தாம தம் தவிர்க்கப்படவேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது.

கேள்வி:- இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும். சட் டப்படி இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்கவேண்டும் என்ற குரல் மீண்டும் கேட்கத் தொடங்கிவிட்டதே?

தமிழ் ஓவியா said...

கலைஞர்:- தந்தை பெரியார் அவர் களும், பேரறிஞர் அண்ணா அவர்களும், அந்த இரு பெரும் இமயங்களின் அடி யொற்றி இலட்சோப இலட்சம் செயல் வீரர்களும் பண்படுத்தி, வளர்த்து, பாது காத்து வரும் இந்த பூமியிலேதான், அதுவும் பெரியார் வாழ்ந்த திருச்சியிலே தான், இப்படி ஒரு குரல் கேட்டிருக்கிறது. திருச்சியில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற விசுவ இந்து பரிஷத்தின் மாநாட்டில், அதன் செயல் தலைவர் பிரவீன் தொக்காடியா பேசும்போது, நாடாளுமன்றத்தில் மதமாற்றத்தை தடை செய்யும் வகையிலான சட்டத்தை அரசு நிறைவேற்றவேண்டும். ஒரே நாட்டில் இரு விதமான சட்டங்கள் இருக்கக் கூடாது. இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும். இந்துக்கள் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ்வதை உறுதிசெய்யவேண்டும். சட்டப்படி இந் தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படிப்பட்ட குரல் எழுப்பப்பட்டிருப் பது இது முதல் முறை அல்ல.

மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், சிவ சேனா போன்ற இந்துத்துவா அமைப்பு களைச் சேர்ந்த பலரும், ஏன், மத்திய அமைச்சர்களில் ஒரு சிலரும் இப்படிப் பேசி வருவதை இந்தியா கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே; காந்தியாரைப் போன்ற தேச பக்தர் கோட்சே; கோட்சேவுக்குச் சிலைகள் அமைக்கவேண்டும்; கேந்திரிய வித்யா லயா பள்ளிகளில் சமஸ்கிருதம் போன்ற அடிப்படை வாதக் கருத்துகள் கேட்கத் தொடங்கி இருக்கின்றன. பிரதமர் நரேந் திரமோடி கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றபோது அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பகவத் கீதையைத் தான் பரிசளித்தார் என்றும், அப்போதே அதற்குத் தேசிய புனித நூல் தகுதி வழங் கப்பட்டுவிட்டது என்றும், அதனைத் தேசியப் புனித நூல் என்ற அறிவிப்புதான் இந்த ஆட்சியில் இன்னும் அரசு ரீதியாக வெளியிடப்படவில்லை என்றும்; அந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுவிடும் என் றும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசியிருக்கிறார். அதைப்போலவே, முதலில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற சொற்கள் இல்லை. அவசரநிலை காலத் திலேதான் இந்த இரு சொற்களும் சேர்க் கப்பட்டன. இந்தச் சொற்கள் அரசமைப் புச் சட்டத்தின் முகப்புரையில் இடம்பெற வேண்டுமா, இல்லையா என்பது குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தலாம் என்று சர்ச்சைக்குரிய கருத்தை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட் டிருக்கிறார்.

அயோத்தியில் ராமருக்குக் கோவில் கட்டுவதை நினைவூட்ட நாடு முழுவதும் மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை ராம் மகோத் சவம் நடத்தப் படும் என்றும்; கிராமங் கள்தோறும் இரண்டரை அடி உயர முள்ள ராமர் சிலையை நிறுவி, பத்து நாட்கள் வழிபாடு நடத்தி அந்தந்த இடங் களிலேயே ராமர் சிலை நிரந்தரமாக வைக்கப்படும் என்றும் விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது. இந்தியத் திரு நாட்டை பிற்போக்குத் திசைக்கு இழுத்துச் செல்லும் எதிர்மறைக் கருத்துகளை யார் வெளியிட்டாலும் அதை அவ்வப்போது மறுத்து தெளிவுபடுத்த வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமைதி காத்து வருவது, ஜனநாயகம் - மதச் சார் பின்மை - சமாதானம் - சமதர்மம் - யாரை யும் விலக்கி வைக்காத அனைவரையும் அரவணைக்கும் வளர்ச்சிப் பாதை ஆகிய முற்போக்கு லட்சியங்களில் உறுதியான நம் பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் ஆச் சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது!
- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கேள்வி_பதில் அறிக்கையில் தெரிவித் துள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/95372.html#ixzz3QbDRmMnv

தமிழ் ஓவியா said...

உண்டாக்க வேண்டும்மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும். (விடுதலை, 1.10.1967).

Read more: http://viduthalai.in/page1/95292.html#ixzz3QbES8KsT

தமிழ் ஓவியா said...

தற்கொலை தெய்வீகமா? (தேசியத்துரோகி)


மசூலிப்பட்டிணத்தில், ஒரு போலீஸ் சேவகரின் மகளுக்குக் கல்யாணம் நடத்துவதாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததாம். கல்யாணத்திற்கு முதல் நாள் அந்த மணப்பெண், கல்யாண உடைகளை அணிந்து கொண்டு வீட்டின் கொல்லைப் புறத்தில் அடுக்கியிருந்த விறகில் ஏறித் தானே நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து விட்டாளாம்.

இவ்வாறு இறந்ததற்குக் காரணம் அப்பெண், தன்னை தெய்வத் தன்மை உள்ளவள் என்றும், தான் மனிதனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள யோக்கியதை இல்லை என்றும் கூறியதாகவும் கடிதம் எழுதி வைத்திருந்த தாகவும் சொல்லப்படுகிறது.

அப்பெண் இறந்ததற்குத் தெய்வத் தன்மை கற்பிக்கப்பட்டவுடன், ஏராளமான ஜனங்கள் கூடி, முனிசிபல் அதிகாரிகளின் உத்தரவுப் பெற்று அப்பிணத்தை ஊர்வல மாகத் தூக்கிச் சென்று அடக்கஞ் செய்தார்களாம். இதன்பின் அப்பிணத்தைப் புதைத்த இடத்தில் கோயில் கட்டுவ தற்காக ஜில்லா முழுதும் பணம் வசூல் பண்ணுகிறார்களாம்.

நமது நாட்டு மக்களின் பயித்தியக்காரத்தனத்தைக் காட்டு வதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

வாங்கினகடனை திருப்பிக் கொடுக்க முடியாத காரணத் தால் மானமுள்ளவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிர் துறந்திருக்கிறார்கள். கௌரவமாக ஜீவனம் பண்ணிய வர்கள், கஷ்டப்பட வேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்த போது கஷ்டம் பொறுக்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்டி ருக்கிறார்கள் குடும்பச் சச்சரவு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டு மடிந்து போனவர்களில் ஆண் களும் உண்டு, பெண்களும் உண்டு.

மணமகன் பிடிக்காத காரணத்தால், மணமகள் தற்கொலை செய்து கொண்டு இறப்பதும், மணமகள் பிடிக்காத காரணத்தால் மணமகன் தற் கொலை செய்து கொண்டு சாவதும் உண்டு. இம்மாதிரி இதற்கு முன் நடை பெற்றும் இருக்கின்றது ஆகையால் தற்கொலை செய்து கொண்டு இறப்பதில் தெய்வத்தன்மை கற்பிப்பதும், அதை மக்கள் நம்பி ஏமாறுவதும் மூடத்தனமேயாகும்.

மசூலிப்பட்டணத்தில் இறந்து போன மணப்பெண் விஷய மும் வெறும் தற்கொலையே தவிர வேறு ஒன்றும் ஆச்சரிய முள்ளதல்ல வென்றே நாம் சொல்லுவோம். அந்தப் பெண், தனக்குக் குறிப்பிட்டிருந்த மாப்பிள்ளை பிடிக்காத காரணத்தால் இறந்திருக்க வேண்டும்; அல்லது புத்தி தடுமாற்றத்தால் இறந்திருக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த காரணமும் கூற முடியாது.

இவ்வாறு உண்மையைச் சிந்தித்து பார்க்கும் அறிவில்லாமல் தெய்வீகத் தன்மையை நம்பி ஒருவர் சென்ற வழியே மற்றவர்களும் ஆட்டு மந்தைப் போலச் செல்வதனால் உண்டாகும் பைத்திய காரத்தனத்தையும், பொருள் நஷ்டத்தையும் யாராவது கவனிக்கின்றார்களா? இந்தமாதிரியே செத்துப் போனவர்கள் சம்பந்தமாக உண்டான மூடநம்பிக் கைகள் காரணமாகத் தான் இன்று நமது நாட்டில் எண்ணற்ற கோயில்கள் பெருகியிருக்கின்றன.

கிராமங்களில் உள்ள பல வகைப்பட்ட கோயில்களெல்லாம் செத்துப் போனமனிதர்கள் பேரால் ஏற்பட்டவை என்பதை இன்றும் கிராமங்களில் உள்ள வர்கள் அந்தக் கோயில் சாமி களைப் பற்றிச் சொல்லும் கதை களால் அறியலாம். இப்பொழுது மசூலிப் பட்டினத்தில் நடந்த சம்பவமும் இதற்குத் தகுந்த உதாரணமாகும்.

பொது ஜனங் களிடம், இந்த மாதிரியான இயற்கை நிகழ்ச்சிகளை எல்லாம் தெய்வத்தன்மை என்று நம்புகின்ற குணம் இருக்கின்ற வரை யிலுமவர்கள் முன்னேற்ற மடையப் போவதில்லை. ஆகையால் பகுத்தறிவுடைய தோழர்கள் இது போன்ற விஷயங்கள் நேரும் போதெல்லாம் பொது ஜனங்களை எச்சரித்து ஏமாறாமலிருக்கும் படி செய்ய முன் வருமாறு வேண்டுகிறோம்.

குடிஅரசு - கட்டுரை - 05.06.1932

Read more: http://viduthalai.in/page1/95304.html#ixzz3QbG8gGP7

தமிழ் ஓவியா said...

இந்த நேரத்தில் ஈழ அகதிகளை அனுப்புவது பலி பீடத்துக்கு அனுப்புவது போலாகும் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர்

கோவை, ஜன.31- கோவையில் திராவிடர் எழுச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று (30.1.2015) வருகை புரிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தி யாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டதாவது:

நாட்டில் ஜாதிய வாதம், மதவாதம் தலைதூக்கி நிற்கிறது. அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டில் இத்தகைய வாதங்கள் தலைதூக்குவது ஆபத்தானது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது கூட தமிழ்நாடு அமைதிப்பூங்கா வாக இருந்தது.

இத்தகைய பெரியார் பூமியில் மதவாதங் கள் தலைதூக்க அனுமதிக்கக் கூடாது. எட்டு மாதங் களுக்கு முன் தேர்தலில், மதவாத பிஜேபியின் ஆபத் தைப்பற்றி நாங்கள் எச்சரிக்கையாக எடுத்துச்சொன் னோம். அதை உணராத மக்கள் அவர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்தி உள்ளார்கள். அதன் பலனைத்தான் இன்றைக்கு நாடு அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

காந்தியாரைக் கொன்ற கோட்சேவின் சிலைகளை நாடு தழுவிய அளவில் வைக்கப்போவதாகக் கூறு கிறார்கள். இது சங் பரிவார் சொல்வதாக மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. மத்திய அரசாங்கம், குடியரசு நாளன்று வெளியிட்ட விளம்பரத்தில் அரசமைப்புச் சட்டத்தில் முகவுரையில் கூறப்பட்ட அடிப்படை கட்டமைப்பை (Basic Structure) உடைக்கும்வண்ணம் சோசலிஸ்ட், செக்குலர் என்ற இரண்டு சொற்களை நீக்கி விளம்பரம் கொடுத்திருக் கிறார்கள்.

அப்படிக் கொடுப்பதில் என்ன தவறு? என்று மத்திய சட்ட அமைச்சர் (ரவிசங்கர் பிரசாத்) சொல்கிறார். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடுவோ, இல்லை,இல்லை நாங்கள் மதசார்பின்மை யில் உறுதியாக இருக்கிறோம் என்று கூறுகிறார்.

பொறுப்புள்ள இரண்டு அமைச்சர்களுக்குள்ளேயே இப்படி ஒரு முரண்பாடு. பிரதமரோ இவற்றைக் கண்டு கொள் ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். இத்தகைய இந்துத்துவா ஆட்சியினை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டத்தான் 2000 மாநாடுகள் நடத்துகிறோம். கோவை மாவட்டத்தில் 25 மாநாடுகள் நடத்துகிறோம்.

செய்தியாளர்: சமஸ்கிருதம், இந்தித் திணிப்பு குறித்து....?

தமிழர் தலைவர்: இவை இரண்டும் பண்பாட்டுப் படையெடுப்பாக நாம் கருதவேண்டும். 1937ஆம் ஆண்டு முதலே இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பை மேற்கொண்டு வருகிறோம். நம் கையில் இருக்கவேண்டிய ஆயுதத்தை நம் எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்.

செய்தியாளர்: சிறீரங்கம் இடைத் தேர்தல் குறித்து...?

தமிழர் தலைவர்: அதிகார துஷ்பிரயோகம் அங்கே படமெடுத்து ஆடுகிறது.

செய்தியாளர்: குடியரசுநாள் ஊர்வலத்தில் ஜெய லலிதா படம் இருந்தது குறித்து...?

தமிழர் தலைவர்: 4 ஆண்டுகள் தண்டனை, ரூ.100 கோடி அபராதம் தண்டனை பெற்ற ஒருவரது படத்தை அனுமதித்தது எந்த வகையிலும் சரியில்லை. முன்னாள் முதல் வர்கள் என்று சொன்னால், காமராசர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் ஆகியோரும் முன்னாள் முதல் அமைச்சர்கள் தான். அவர்கள் படம் வைத்தார்களா?

செய்தியாளர்: உமாசங்கர்மீது மதப்பிரச்சாரம் செய்ததாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுகுறித்து...?

தமிழர் தலைவர்: எந்த அரசு அலுவலரும், எந்த மதப் பிரச்சாரத்தையும் செய்யக்கூடாது என்பதுதான் எங்கள் நிலை. அதேநேரத்தில், ஆயுத பூஜை என்று சொல்லி ஒலிபெருக்கி வைத்து காவல்நிலையத்தில்கூட பூஜை, புனஸ்காரங்கள் செய்வதை எப்படி அனுமதிக்கிறார்கள்?

செய்தியாளர்: இந்தியாவில் உள்ள ஈழத்தமிழ் அகதி களை மீள்குடியேற்றம் என்று திருப்பி அனுப்புவதாகக் கூறப்படுவதுகுறித்து...?

தமிழர் தலைவர்: இது உகந்த நேரமல்ல. தமிழ் மக்கள் பகுதியில் இராணுவம் இன்னும் விலக்கிக் கொள்ளப்பட வில்லை. அதனால், இந்த நேரத்தில் அவர்களை அனுப்புவது பலிபீடத்துக்கு அனுப்புவது போலாகும்.

செய்தியாளர்: தந்தை பெரியாருக்கு பாரத் ரத்னா பட்டம்குறித்து சிலர் பேசுகிறார்களே?

தமிழர் தலைவர்: பெரியார் பட்டம் பாரத் ரத்னா பட்டத்தைவிடப் பெரிய பட்டம்.

Read more: http://viduthalai.in/page1/95283.html#ixzz3QbGdk4ph

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வழிபாடு

தமிழ் மொழியினால் சிவனருள் பெற்ற மாணிக் கவாசகருக்கு, தமிழ் மொழியிலேயே தினமும் வழிபாடு செய்யப் பெறு கின்றது. தமிழ் மாதத்தில் வரும் மகம் நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடு கள் நடத்தப்படுகின்றன. மாணிக்கவாசகர் இறை வனுடன் கலந்ததாகக் கருதப்படும் ஆனி மாதம் மகம் நட்சத்திர நாள் அவரது குரு பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியின்போது மாணிக்கவாசகர் நகர் வலம் செல்கிறார். ஆனி மற்றும் மார்கழி மாதங் களில் உத்திரம் நட்சத்திர நாளில் மாணிக்கவாசகர், நடராசர் என இரு உற்ச வர்களும் ஒரே தேரில் நகர்வலம் செல்வது கண் கொள்ளாக் காட்சியாகும். மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா தரிசன நாளில் மூலவரான மாணிக்க வாசகர் விரித்த சடை யுடன் நடனக் காட்சியில் நடராசராக அலங்கரிக் கப்பட்டு வழிபாடு நடை பெறுகிறது என்று எழுது கிறார்கள்.

மாணிக்கவாசகர் கடவுள் ஸ்தானத்தில் வைக்கப்படுவதாக சொல்லுகிறார்கள். அப்படியானால் இந்த சிவன், விஷ்ணு, பிர்மா போன்றவர்கள் எல்லாம் மனிதர்களாக இருந்து கடவுளாக ஆக்கப்பட்ட வர்கள் தானா?

Read more: http://viduthalai.in/e-paper/95469.html#ixzz3Qgwmd5Yf

தமிழ் ஓவியா said...

அண்ணா


நூல் விமர்சனம் என்ற பகுதியில் இவ்வார கல்கி இதழில் (8.2.2015 பக்கம் 48) கருத்து ஒன்று கூறப்பட் டுள்ளது.

நா. முத்துநிலவன் கட் டுரை ஒன்றில்:

கம்பனைப் பற்றிய கட்டுரை ஒன்றில் வடமொழி பக்தி நூல்களை விடவும் தமிழ்நாட்டுப் பக்தி இயக்கங் களும், இலக்கியங்களும் ஜாதி உடைப்புக்கு ஆற்றிய பங்கை ஆய்வு செய்வது அவசியம்... என்று கூறுவதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். தீ பரவட்டும் என்று நெருப்பு வைத்து விட்டால் மட்டுமே அழிந்து நீறாகி விடக் கூடியவன் அல்லன் கம்பன் என்பது வரலாறு தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய செய்தி என்று புத்திசாலித் தனமாக ஏதோ சொல்லி விட்டதாக கல்கியில் குறிப் பிடப்பட்டுள்ளது.
சொல்லின் செல்வர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும், பசுமலை நாவலர் சோமசுந்தர பாரதி

யாருடனும், முறையே சென் னையிலும், சேலத்திலும் அண்ணா அவர்கள் கம்ப இராமாயணம், பெரிய புரா ணத்தை எதிர்த்து நடத்திய அந்த விவாதப் போரில் கம்ப இராமாயணமும், பெரிய புராணமும் கொளுத்தப்பட வேண்டியவையே என்று அண்ணா அவர்கள் ஆற்றிய உரை தீ பரவட்டும் என்ற நூலாக வெளி வந்துள்ளது. அதைத்தான் முத்துநிலவன் மறைமுகமாக அறிஞர் அண் ணாவைச் சாடியிருக்கிறார். வரலாறு தெரியாதவர்கள் என்றும் ஜாடை பேசுகிறார். கல்கிக்கு இது ஒரு மகிழ்ச்சி யான அம்சம்தானே!

அண்ணா அவர்களிடம் விவாதம் நடத்தியவர்களே தங்கள் தோல்வியை ஒரு வகையில் ஒப்புக் கொண்ட நிலையில், காலங் கடந்து கல்கியோ அவர் எடுத்துக் காட்டும் நூலாசிரியரோ கதறிப் பயனில்லை.

அண்ணாவுக்கு வரலாறு தெரியுமா தெரியாதா என் பதை அவரின் ஆரிய மாயை நூலைப் படித்து விட்டுப் பேச வேண்டும்.

இராமாயணம் என்பது ஆரியர் திராவிடர் போராட் டம் என்று வரலாற்று அறிஞர்கள் கூறியதுதான்! பி.டி. சீனிவாசய்யங்காரோ, விவேகானந்தரோ, திரா விடர் இயக்கத்தைச் சேர்ந் தவர்கள் அல்லர் - வரலாறு தெரியாதவர்களும் அல்லர். இவர்களே ஆரியர் - திரா விடர் போராட்டம் என்று தான் சொல்லுகிறார்கள்.

கம்பனாகிய திராவிடன் - தமிழன், நமது இனத்தை இழிவுபடுத்தும் ஒரு நூலைத் தமிழில் எழுதினானே என்ற சினம், சுயமரியாதை உள்ள வர்களுக்கு ஏற்படத்தான் செய்யும்; சுயமரியாதை உணர்வே தேவையில்லை என்று நினைத்தால் அவர் களிடம் விவாதம் செய்வதில் அர்த்தம் இல்லை.

வையகம் என்னை இகழுமோ, மாசு வந்து எய்துமோ? என்று கம்பன் தொடக்கத்திலேயே ஏன் எழுதினான்? அதில் ஒரு குற்ற உணர்வு மேலோங்கி நிற்பதற்குக் காரணம் என்ன? இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் வரலாறு தெரி யாதவர்கள் என்று பொத்தாம் பொதுவில் எழுதுவது எந்த வகையில் புத்திசாலித்தனம்?

ஒன்றை எதிர்ப்பதற்குக் காட்டக் கூடிய அடையா ளம்தான் தீ மூட்டுவதாகும்.

அந்நிய துணிகள் பகிஷ் காரம் என்று அந்தத் துணி களை எரிக்கவில்லையா? இராமாயணத்தை தந்தை பெரியார் எரித்தது - எரிக்கச் சொன்னது - அதன்மீது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்ற கோட்பாட் டின் அடிப்படையில்தானே!

ஆரிய - திராவிடப் போராட்டத்தில் கல்கி எந்தப் பக்கம் நின்று பேசும் என்று யாருக்குத்தான் தெரியாது!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/95464.html#ixzz3QgxBOuLJ

தமிழ் ஓவியா said...

காந்தியின் கொள்ளுப் பேரன் எச்சரிக்கை


இந்தூர், பிப்.3-_ மகாத் மாவை சுட்டுக்கொன்ற கோட்சே பெயரை தங்கள் இயக்க வளர்ச்சிக்காக சிலர் பயன்படுத்துவது வேதனைக் குரிய விஷயம் என்று காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி தெரி வித்துள்ளார். காந்தியைச் சுட்டுக்கொன்ற, நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்றும், அவருக்குக் கோவில் கட்டப்படும் என்றும் சில தலைவர்கள் கூறி வருகின்றனர். இது காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்திக்கு (வயது 55) மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது: காந்தியார் அவர் களைச் சுட்டுக் கொன்றவர் கோட்சே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது பெயரை தங்கள் இயக்க வளர்ச்சிக்காக சிலர் பயன் படுத்துவது வேதனைக்குரிய விஷயம். மகாத்மா அகிம்சை கருத்துகளை கொண்டிருந்தார். ஆனால் மற்றவர்கள் வெறுப்பு மற்றும் பகைமை எண்ணங் களை வளர்த்தனர். கோட்சேயை போற்றுவது, நாட்டின் வன்முறைக்கு வித்திடும் செயலாகும். இவ் வாறு துஷார் காந்தி கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/95470.html#ixzz3QgxKXDTu

தமிழ் ஓவியா said...

மாநில மொழிகளைக் காக்க ஒற்றுமையுடன் போராட வேண்டும் கர்நாடக முதல்வர் சித்தராமையா


மாநில மொழிகளைக் காக்க அனைவரும் ஒற்று மையாகப் போராட வேண்டும் என்று, கர் நாடக முதல்வர் சித்தர மையா கேட்டுக் கொண் டார்.

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், ஷாரவணபெலகோலாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய 81-ஆவது கன்னட சாகித்ய மாநாட் டைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:

மத்திய அரசின் மொழிக் கொள்கையால், மாநில மொழிகளைக் காக்க வேண்டிய அவசி யம் ஏற்பட்டுள்ளது. தமது மாநில மொழிகளைக் காக்க பக்கத்து மாநிலங் களைச் சேர்ந்த அனை வரும் ஒற்றுமையாகப் போராட வேண்டும்.

கர்நாடகத்தில் கன்னட மொழிக்கு ஆபத்து ஏற்படும்போது அனைவரும் ஒன்றி ணைந்து போராடி வரு கிறோம். கன்னட மொழி யைக் காக்க, வரும் காலங் களிலும் இது தொடர வேண்டும்.

ஆங்கில மொழி மோகத் தால் தனியார் பள்ளிகள் கன்னட மொழியைப் புறக்கணித்து வருகின்றன. இதனால், நமது மண் ணிலேயே நமது தாய் மொழி அழியும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, நமது மொழியைக் காக்க வேண் டியது நமது அனைவரின் கடமை. இதுகுறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களை ஒன்றி ணைத்து பிரதமரைச் சந்திக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதுதொடர் பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத முடிவு செய்துள் ளேன்.

கன்னட மொழியைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை கட்டாயம் கன்னடம் கற்பிக்க வேண் டும் என சட்டத்திருத்தம் செய்யப்பட உள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் தாய்மொழியைக் கற்பிக்க தமிழகத்தின் மாதிரியில் சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுச் செயல் பட்டு வருகிறோம். கர் நாடகத்தில் அனைத்து மொழிகளைச் சேர்ந்த வர்களும் வாழ்ந்து வரு கின்றனர்.

ஆனால், ஆங்கில மொழி வேறு நாட்டிலி ருந்து இங்குவந்து குடி யேறி உள்ளது. அதனை தாய்மொழியாகக் கொண் டவர்கள் 0.5 சதம்கூட இருக்க மாட்டார்கள். என்றாலும், அனைவரும் ஆங்கில மோகம் கொண் டுள்ளது வேதனை அளிக் கிறது.

அனைத்து மாநிலங் களிலும் தங்கள் தாய் மொழியைக் கட்டாய மாக்க வேண்டும் என காங்கிரஸ் அரசு உறுதி யாக உள்ளது. கன்னட சாகித்ய மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மா னங்களைச் செயல்படுத்த அரசு உதவியாக இருக்கும் என்றார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கன் னட சாகித்ய மாநாட்டின் தலைவர் சித்தலிங்கையா உள்ளிட்டோர் உடனிருந் தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/95473.html#ixzz3QgxWnT6Q

தமிழ் ஓவியா said...

மனிதன்


மனிதன் ஒருபோதும் தனித்து வாழக்கூடியவன் அல்ல; அப்படி வாழவும் அவனால் முடியாது; அதனால்தான் கூட்டமாகக் கூடி வாழ்கிறான். சமுதாயத் திற்குத் தேவையான ஒவ்வொரு காரியத் தையும் ஒவ்வொருவன் செய்கிறான்.
(விடுதலை, 10.02.1960)

தமிழ் ஓவியா said...

அரபு மொழியில் திருக்குறள்

ராமநாதபுரம், பிப். 3_ திருக் குறளை அரபு மொழியில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் எம். முத்துவேல் தெரிவித்தார். ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி தமிழ் உயராய்வு மய்யமும், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்தும் செவ்விலக்கியக் கலைவடிவங்களும், மாற்றுக் கலை வடிவங்களும் என்பது குறித்த 10 நாள் பயிலரங்கம் கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் அ.ஜோசப்துரை தலைமை வகித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலையின் பதிவாளர் வெ. மாணிக்கவாசகம் பயிலரங்கை தொடக்கி வைத்தார். விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் எம். முத்துவேல் பேசியதாவது: 21-ஆம் நூற்றாண்டில் மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குகூட விடை தரக்கூடிய வகையில் திருக்குறள் அமைந்துள்ளது. திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் தனித்தனி ராகத்தில் இணையத்தில் பாடலாகக் கேட்கலாம். 1812இல் திருக்குறள் அச்சேறுவதற்கு முன்பாகவே 1730இல் குறள் அய்ரோப்பிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஓலைச்சுவடியிலிருக்கும்போதே வேறு மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டது திருக்குறள் ஒன்றாகத்தான் இருக்கும். தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. விரைவில் அரபு மொழியில் திருக்குறளை வெளியிட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதுவரை 80க்கும் மேற்பட்டோர் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழி பெயர்த்திருக்கின்றனர்.

இவற்றில் சிறந்த 18 மொழி பெயர்ப்புகளை தேர்வு செய்து தொகுத்து அதை நூலாக்கியிருக் கிறோம். கல்லூரிகளில் செம் மொழித் தமிழில் முதுகலை படிப்பு தொடங்கினால் ஒரு மாணவருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்குகிறோம். புத்தகங்கள் வாங்க ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி செய்கிறோம். முனைவர் பட்டம் பெற ஒரு மாணவருக்கு மாதம் ரூ.12 ஆயிரமும், முனைவர் பட்ட மேலாய்வுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.18 ஆயிரம் வீதம் 5 பேருக்கு நிதியுதவி செய்யப்படுகிறது என்றார் முத்துவேல்.

Read more: http://viduthalai.in/page-2/95482.html#ixzz3QgyB2Mqe

தமிழ் ஓவியா said...

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் ஆர்.எஸ்.எஸ். பங்கு குறித்து மவுனம் ஏன்? திக் விஜய்சிங் வினா


கடந்த 1984-ஆம் ஆண்டு நடந்த சீக்கியர் களுக்கு எதிரான கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப் பினருக்கு உள்ள தொடர்பு குறித்து ஊடகங்கள் உள்பட யாரும் பேசாதது ஏன்? என்று காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தி யாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறிய தாவது: கடந்த 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச் சம்ப வங்கள் வருத்தத்துக்கும் கண்டனத் துக்கும் உரியவை.

இதுதொடர்பாக பல்வேறு விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனால், இந்தக் கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப் பினருக்கு உள்ள பங்கு என்ன என்பது குறித்து ஊடகங்கள் உள்பட யாரும் பேசவில்லை. இந்த விஷயத்தில் அனை வரும் மவுனம் சாதிப்பது ஏன்? என்று திக் விஜய் சிங் கேள்வி எழுப்பினார்.

Read more: http://viduthalai.in/page-2/95480.html#ixzz3Qgz2docf

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை: அய்பாட், ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் குழந்தைகளின் மூளைத்திறன் வெகுவாக பாதிக்குமாம்

நியூயார்க், பிப். 3- அமெரிக்காவில் அய்பாட், ஆண்ட்ராய்ட் போன், டேப்லெட் போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்களை உபயோகிக்கும் குழந்தைகளை வைத்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

பாஸ்டன் பல்கலைக்கழக குழந்தைகள் நல மருத்துவர் குழு நடத்திய இந்த ஆய்வில், குழந்தைப் பருவத்தின் ஆரம்ப கட்டங்களில், வழக்கமான நட்புணர்வு மற்றும் எதேச்சையான விளையாட்டுகளை தவிர்த்து இதுபோன்ற சாதனங்களின் அதீத பயன்பாடானது, பரிதாப உணர்ச்சி, சமூக சிந்தனை மற்றும் சிக்கலை தீர்க்கும் மூளையின் திறன் ஆகியவற்றில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.

மேலும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் குழந்தைகளின் மொழி மற்றும் சமூகத்திறன்கள் பாதிக்கப்படும் என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/95497.html#ixzz3Qh0nNgOI