Search This Blog

19.1.15

தமிழர் பொங்கலா? திராவிடர் பொங்கலா?

சூத்திரர்களாக இருக்க ஆசைப்படும் சூத்திரதாரிகள்!

தித்திக்கும் தேனாறு என்பதா? மான்கள் துள்ளி விளையாடும் பூங்கா என்று சொல்லுவதா? ஆனந்தத் தென்றலின் அறுசுவைக் கூட்டு என்று புகல்வதா!


அடடே! தை முதல் மூன்று நாட்களும் சென்னையில் உள்ள பெரியார் திடல் திராவிட இனத்தின் திரு நடன சாலையாக அல்லவா காட்சி அளித்தது. பகுத்தறிவுப் பாடம் நடத்தும் கூடமாக அல்லவா இருந்தது. சுயமரி யாதைச் சுடர் விட்டு ஒளி வீசியதே! மூடநம்பிக்கையின் முதுகெலும்பை முறிக்கும் பட்டறையாக அல்லவா காட்சி அளித்தது. இனமானச் சீலம் எழுச்சி முகம் காட்டியதே!


மிகப் பெரிய இனத்தின் மீட்டுரு வாக்கமாக அல்லவா காட்சி அளித்து,  கலைகள் எல்லாம் களிநடம் புரிந்தன; இசை மழை சோ என்று பொழிந்தது.


பிஞ்சுகள் முதல் பெரியவர்கள் வரை அந்த மூன்று நாட்களிலும் முகமும் அகமும் மலர்ந்த முல்லைக் காடாகக் காட்சி அளித்தனர்.


இவ்வாண்டு முல்லை நிலத்தில் முறுவல் காட்சிகள் அரங்கேற்றம் செய் யப்பட்டு இருந்தன. கூட்டம் கூட்டமாக எம்மக்கள் கண்டு களித்தனர்.


நாட்டுப் புறக்கலைகள் என்றும் - நாலாஞ் ஜாதிக்காரர்களின் கலைகள் என்றும் ஒதுக்கப்பட்ட நம்மினத்திற்குரிய கலைகள் எல்லாம் மீட்டெடுக் கப்பட்டன. சாதனைகள் படைத்த பல்துறைத் தமிழர்களுக்குப் பெரியார் விருது அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப் பட்டனர்.


அண்மைக் காலத்தில் திராவிடர் கழகம் பெரும் புரட்சி ஒன்றைச் செய்து வருகிறது. பறை என்றால் ஏதோ சாவுக்குத் தான் அது என்று ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்ட அந்தப் பறையை திருமண வீட்டுக்குள்ளும் கொண்டு வந்துள்ளனர்; புதுமனை புகுவிழாவின் வரவேற்பு வாசலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.


மிரட்சியோடு மக்கள் பார்க் கிறார்கள். எந்தப் புரட்சிக்கும் எடுத்த எடுப்பிலேயே சிகப்புக் கம்பள வரவேற்பா கிடைக்கும்? காலத்தைக் கடந்த புரட்சிப்பயணம் நடத்தும் கருஞ்சட்டைச் சேனைக்கு இவை எல்லாம் சர்வ சாதாரணமே!


இந்த மூன்று நாட்களிலும் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை முறி யடிக்கும் திராவிடப் பேரினத்தின் முற் றுகைப் போராக அல்லவா காட்சி யளித்தது!


பிரபவ தொடங்கி அட்சய முடிய அறுபது ஆண்டுகள் என்றும் நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும், கிருஷ் ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த பிள்ளைகள்தான் தமிழ் ஆண் டுகள் என்னும் ஆபாச சமஸ்கிருத சாக்கடையை உடைப்பெடுக்கச் செய்த ஆரியக் கலாச்சாரத்தின் அடி முடிகளின் ஆணி வேர்களை அறுத்தெறிய ஆவேசப் புயலாக அல்லோலகல் லோலப்பட்டது பெரியார் திடல்.


சில கிறுக்கர்கள் இப்பொழுது புறப் பட்டுள்ளார்கள். தமிழர் பொங்கலா? திராவிடர் பொங்கலா? என்ற விசார ணையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்படி சொல்லுகிறவர்கள் குறைந்தபட்சம் அந்தத் தமிழர் விழாவை நடத்தி னாலும்கூட மன்னித்து விடலாம். வெறும் விமர்சனம் செய்வதே வீர தீர பராக்கிரமச் செயல் என்று நினைக் கிறார்களே, என்ன செய்ய!


அட, பைத்தியங்களே! திராவிடர் கழகம் நடத்தும் விழா திராவிடர் விழாவாகத் தான் இருக்கும் என்ற பால பாடம் கூடத் தெரியாமல் பச்சைப் பிள்ளையாக ஒட்டாரம் பிடிப்பதில் பசையில்லை.


முதல் நாள் விழாவில் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் ஆணித்தரமாக அடித்துச் சொன்னதுபோல, தமிழன் என்றால் தமிழ்ப் பற்று மட்டும்தான் இருக்கும்; திராவிடன் என்று சொன்னால் அதில் தமிழ்ப் பற்றோடு இனப் பற்றும் இருக்கும்; சொரணையும் இருக்கும் என்றாரே - அதன் ஆழம் புரியாவிட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?

பார்ப்பனரை ராஜகுருவாக வைத்துக் கொண்டுள்ள அமைப்பைச் சேர்ந்த வர்கள் இதனை எப்படி ஏற்றுக் கொள் வார்கள்?


திராவிடர் என்று பெயர் சூட்டப் பட்டதற்கு என்ன காரணமோ, அதே காரணம் தான் திராவிடர் விழா நடத்து வதற்கும்! முதலில் அந்த இடத்தில் நின்று பேச வேண்டுமே தவிர, அதன் தொடர்ச் சியில் நடைபெறும் நிகழ்வுகள்மீது கல் வீசித் தன் கயமையைக் காட்ட முயலக் கூடாது.


தமிழ்த் தேசியம் என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்களுக்கு ராஜபாட் டையைத் திறந்து வைத்துக் கொண்டுள் ளவர்கள் - பார்ப்பனத் தூசுகூட உள்ளே நுழைய வசதி இருக்கக் கூடாது என்று ஆழமாக எண்ணி, வரலாற்றுப் பெயரான திராவிடர் பெயரைச் சூட்டினார் பெரியார் என்ற அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ளவில்லையா? அல்லது புரிந்து கொண்டும் பொய்யழுகை அழுவதன் பின்னணி என்ன? யாரைத் திருப்திப் படுத்த இந்த விபீஷணத்தனம்?


பொங்கல் விழாவைக் கேரளாவில் கொண்டாடுகிறார்களா? ஆந்திராவில் கொண்டாடுகிறார்களா? அப்படி இருக்கும் பொழுது அதைத் திராவிடர் திருநாள் என்று எப்படிக் கூற  முடியும் என்று ஏதோ அதிமேதாவியாகக் கேள்வி கேட்டு விட்டது போல் தன் முதுகைத்தானே தட்டிக் கொள்கிறார்கள். ஒருக்கால் அந்த மாநிலங்களில் பொங்கல் கொண்டாடி னால் திராவிடர் திருநாள் என்று கொண் டாடலாம் என்று கூற வருகிறார்கள் என்றுதானே பொருள்.


இதன் மூலம் ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களை இவர்கள் சுட்டிக் காட்டுவதன் மூலம் அவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள் என்று தானே பொருள்?


தீபாவளியை இந்தியா முழுமை யும் கொண்டாடுகிறார்கள் என்பதை வைத்துக் கொண்டு இந்தியா முழு மையும் இருப்பவர்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லுவார்களோ!


எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக எழுதுகிறார்கள் என்பதற்கு இந்தக் கேள்வியிலேயே விடை இருக்கிறது.


ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனியே பிரிந்து வேறு வேறு இடங்களுக் குப் புலம் பெயர்ந்து சென்று விடுவதாலே அவர்களின் அப்பன் பெயரும், தாயின் பெயரும், குடும்பப் பெயரும் மாறி விடுமா?


மாறிவிடும் என்று சொல்கிறவர்கள் ஒருக்கால் அனாதைகளாக இருக்கக் கூடும்.


திராவிடர் என்ற பெயர் திராவிடர் இயக்கமோ தந்தை பெரியாரோ கண்டு பிடித்துச் சொல்லில்லை - வரலாற்றில் மூத்த இனங்களில் முக்கியமானது திரா விடர் இனம் என்பது அய்ந்தாம் வகுப்புப் படிக்கும் சிறுவனுக்கும் தெரிகிறது; ஆனால் சில அக்கப் போர் பேர்வழி களுக்கு மட்டும் தெரிவதில்லை. ஒன்று மட்டும் உண்மை. தமிழர் என்று பெயர் வைத்துக் கொண்டால் அங்கு பார்ப்பனருக்கு இடம் உண்டு; திராவிடர் என்று வைத்துக் கொண்டால் அங்குப் பார்ப்பனருக்கு இடம் இல்லை.


தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ளப் பார்ப்பனர்கள் முன் வரக் கூடும்; ஆனால், எந்தக் கிறுக்குப் பிடித்த பார்ப்பான்கூட தன்னைத் திராவிடன் என்று சொல்லிக் கொள்ள முன்வர மாட்டான்.


ஆரிய, திராவிடர் போராட்டம் என்பது இன்று நேற்று ஏற்பட்ட தல்லவே. இது வரலாறு தெரிந்தவர் களுக்குத் தெரியும்.


பார்ப்பன எதிர்ப்பை முன்னிறுத் தியே திராவிடர் இயக்கம் தாழ்த்தப் பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கல்வி வாய்ப்பையும், வேலை வாய்ப்பையும் பெரும் அளவில் பெற்றுத் தந்தது.


அடிதட்டு மக்களுக்குப் பொது வுரிமையைப் பெற்றுத் தந்தது.


பார்ப்பன எதிர்ப்பு என்பதே எனக்கு ஏ.பி.சி.டி யாக இருந்தது என்றுகூட தந்தை பெரியார் கூறுகிறார்.


அந்தப் பார்ப்பன எதிர்ப்புதான் இந்தி எதிர்ப்பாக, சமஸ்கிருத எதிர்ப் பாக, பார்ப்பனப் பண்பாட்டுப் படை யெடுப்பு எதிர்ப்பாக உருப் பெற்றது என்பதை மறுக்க முடியுமா?


அந்தப் பார்ப்பன எதிர்ப்புதான் நமக்குச் சமூகநீதியைப் பெற்றுத் தந்தது.
சமஸ்கிருதமயமாக்கப்பட்ட தமிழன் பெயர்கள் தமிழ் மயமானதற்கான உந்து சக்தியாக திராவிட இயக்கம் - தந்தை  பெரியார் இருந்தார் என்பதை மறுக்க முடியுமா?


திராவிடர் இயக்க முன்னணியினரான நாராயணசாமி நெடுஞ்செழியனாகவும், இராமையன் அன்பழகனாக வும் பெயர் மாற்றம் பெற்றனரே!


அன்புமணி என்றும், அறிவுக்கொடி என்றும், அன்புமதி என்றும், அருள் செல்வி என்றும் குழந்தைகளுக்கு பெயர்களை சூட்டியவர் தந்தை பெரியார் அல்லவா!


தமிழன் வீட்டு நிகழ்ச்சிகள் எல்லாம் பார்ப்பனப் புரோகிதன் தானே நடத் தினான்? அவை சமஸ்கிருதமயமாகத் தானே இருந்தன?


இவற்றுக்கு மாற்றாக சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தியது யார்? அதற்குச் சட்ட வடிவம் கொடுத் தது யார்? தமிழ்நாட்டில் இரு மொழி தான். இந்திக்கு இடம் இல்லை என்று சட்டம் செய்தது யார்?


இவற்றை மாற்றியமைத்த தலைவர் யார்? இயக்கம் எது? தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் பார்ப்பனர்களைக் காப்பாற்ற முயலும்  பேர்வழிகள் பதில் சொல்லட்டும் பார்க்கலாம். தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் செய்தது திமுக ஆட்சிதானே; அதில்  கை வைத்து அதிமுக அரசு மாற்றிய போது, இந்தத் தமிழ்த் தேசியவாதிகள் எங்கே போனார்கள்?


சென்னை மாநிலத்திற்குத் தமிழ் நாடு என்று சட்டப்படி பெயர் சூட் டியது. அறிஞர் அண்ணா, திராவிடர் இயக்கத்தை சேர்ந்தவர் அல்லர் என்று சொன்னாலும் சொல்லுவார்கள். இப் பொழுதுதான் ஒவ்வொரு தலைவ ருடைய பிறந்த ஜாதிபற்றி எல்லாம் பேச ஆரம்பித்துள்ளார்களே!


தமிழர்களுக்கு மானத்தையும், அறிவையும் தான்தான் ஊட்ட வந்ததாக பெரியார் சொல்லிக் கொண் டாராம் - இப்படி எழுதுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்த கையவர்களை நம்மின மக்கள் அடை யாளம் காண்பார்கள் என்பதில் அய்யமில்லை.


தன்னைச் சூத்திரன் என்றும், ஒருபடி மேலே சென்று சற்சூத்திரன் என்றும் ஒப்புக் கொள்பவர்கள்தான் இப்படியெல்லாம் பேச முடியும் எழுத முடியும். அவர்களுக்கு மானத்தையும், அறிவையும் ஊட்ட வேண்டிய கடமை நமக்கு மேலும் இருக்கத்தான் செய்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறோம்.


சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்ற எழுச்சி முழக் கத்தைக் கொடுத்தவர்கள் யார்?

ஒரே ஒரு கணம் சிந்திப்பீர்!

-----------------------


உளறலின் குவியல்கள்


தமிழின மறுப்பும், தமிழ் மொழி எதிர்ப்பும் பெரியாரியத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாம்!


இதைப் படிப்பவர்கள் யாரும் வாயால் சிரிக்க மாட்டார்கள். பாரப்பனச் சுரண்டலையும், சமஸ்கிருத ஆதிக்கத்தையும், ஊடுருவலையும் பண்பாட்டுப் படையெடுப்பையும் எதிர்த்தழிக்கத் தூக்கி பிடிக்கப்பட்ட போராயுதம்தான் திராவிடர் என்பது வரலாற்று உண்மை. இதன் மூலம்தான் தமிழினத்தையும், தமிழையும் பாதுகாக்க முடியும் என்ற அடிப்படை அறிவு இல்லாதவர்களால்தான் இப்படியெல்லாம் தலைகீழாக உளற முடியும்.


பெரியாரைக் கொச்சைப்படுத்தினால் அவர்களுக்கு சடகோபச் சாத்துப்படி கிடைக்கும். தந்தை பெரியார் முன்னின்று நடத்திய போராட்ட எரிமலைகளும், பிரச்சாரப் புயல்களும், அப்பழுக்கற்ற தொண்டறமும் ஆரிய நுகத்தடியின்கீழ் குப்புற விழுந்து கிடந்த ஒர் இனத்தைத் தூக்கி நிறுத்தியது என்பதற்கு இந்தச் சில்லறைகளின் சான்றுப் பத்திரம் தேவைப்படாது. அவருடைய அளப்பரும் தொண்டுக்கு முன் இந்தத் தூசுகள் ஊளையிடுவதன் பின்னணியை மக்கள் அறிவார்கள். இராமாயண காலத்திலிருந்து இந்த விபீஷணத்தனம் இருந்தே வந்துள்ளது. 

தமிழர் சந்தையில் வணிகம் நடத்த வேண்டும் என்ற வணிக உத்தியை தமிழர் தலைவர் கடைப்பிடிக்கிறாராம்.


எதிரிகள்கூட சொல்லக் கூசும் கேவலத்தை தன் முகத்தில் எல்லாம் பூசிக் கொள்ளும் அற்பத்தனமே இது! கடை விரித்தும் கொள்வாரில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட விரக்திகளின் விரசக் குரல் இது. அது என்ன வணிகம்? என்ன சம்பாத்தியம்? விரல் விட்டுச் சொல்ல முடியுமா?


இந்த இயக்கம் வெளியிடும் நூல்கள் அவற்றின் விலைப் பட்டியலையும், குற்றம் சுமத்தும் குள்ளநரி மனப்பான்மை கொண்டவர்கள் வெளியிடும் நூல்களின் விலைப் பட்டியலையும் ஒரு முறை புரட்டிப் பார்த்தால் தமிழின் பெயரால் வணிகம் நடத்தும் வக்கிர மனிதர்கள் யார் என்பது ஒரு கணத்தில் அம்பலமாகி விடும்.


என்ன பேசுகிறோம்? யாரைப் பற்றிப் பேசுகிறோம்? என்ற நிதானப் பண்பு இல்லாத தள்ளாட்டம் இதில் பளிச்சென்று படுகிறதே!


             ------------------ மின்சாரம்  அவர்கள் 19-01-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

71 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

இ.சேவை

தங்கரதம் இழுக்க அன்னதானம் வழங்க நேர்த்திக்கடன் கழிக்க இ.சேவை மூலம் முன் கூட்டியே பதிவு செய்யும் முறையை இந்து அற நிலையத் துறை செய்துள் ளதாம். பக்கா பிசினஸ் இன்றைய ஆன்மிகம் என்பதற்கு வேறு என்ன தேவை?

Read more: http://viduthalai.in/e-paper/94574.html#ixzz3PGegLinR

தமிழ் ஓவியா said...

மொழியால், வழியால் நாம் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், பிறப்பால் மனிதர்கள், அறிவால் பகுத்தறிவாளர்கள்!

திராவிடர் திருநாள் நிறைவு விழாவில் தமிழர் தலைவர் தமிழர்களுக்கு வகுத்தளித்த வரையறை!

திராவிடர் திருநாளில் 2015ஆம் ஆண்டிற்கான பெரியார் விருது திரைப்பட இயக்குநர் சுசீந்திரன், திரைப்பட இசையமைப்பாளர் டி. இமான், ஊடகவியலாளர் ப. ரகுமான் ஆகியோர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வழங்கினார். உடன்: இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், ஊடகவியலாளர் கோ.வி. லெனின் ஆகியோர் உள்ளனர். (18.1.2015, பெரியார் திடல்)

சென்னை, ஜன. 19: தந்தை பெரியார் முத் தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற திராவிடர் திருநாள் நிறைவு நாள் நிகழ்ச்சியில், மொழியால், வழியால் நாம் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், பிறப்பால் மனிதர்கள், அறிவால் பகுத்தறிவாளர் கள் என்று தமிழர் தலை வர் கி. வீரமணி அவர்கள் தமிழர்களுக்கான அடை யாளமாகக் குறிப்பிட் டார்.

திராவிடர் திருநாள் கொண்டாட்டங்கள் என்பது, பெரியார் நெடுஞ் சாலையிலுள்ள அன்னை மணியம்மையார் சிலையில் தொடங்கி, ஊர்வலமாக வந்து பெரியார் திடலுக்குள் உள்ள சொரணையையும், இன உணர்வையும் கொடுத்த தந்தை பெரியார் சிலை முன்பு நின்று ஆடிப்பாடி களித்துவிட்டு, பிறகு உரியடித்திடலுக்கு வந்து நிலைபெற்று விளையாடு வார்கள். ஒருநாளை மிஞ்சியது அடுத்த நாள் என்பதுபோல, மூன்றாம் நாள் (18.01.2015) நிகழ்ச் சிகள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!

தந்தை பொரியார் முத்தமிழ் மன்றம், பெரி யார் நூலக வாசகர் வட்டம், பெரியார் பகுத் தறிவு கலை இலக்கிய அணி, பெரியார் சுயமரி யாதை ஊடகத்துறை மற்றும் திராவிடர் வர லாற்று ஆய்வு மய்யம் ஆகியவை இணைந்து நடத்தும் திராவிடர் திருநாளின் மூன்றாம் நாள்(18-.01.2015) நிகழ்ச் சிகள் சரியாக மாலை 4.45க்குத் தொடங்கியது. நிகழ்ச்சியை அகில இந் திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க கூட்டமைப் பின் பொதுச்செயலாளர் கோ. கருணாநிதி, திரா விடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர். கலிபூங்குன்றன் ஆகியோர் இணைந்து பறையடித்துத் தொடங்கி வைத்தனர்.

தமிழ் ஓவியா said...

எப்படி ஒரு பொத்தானை அழுத்தியதும் வெளிச்சம் வருகிறதோ அது போல, தொடங்கி வைத்ததும், எப்போது எப்போது என்று உள்ளுக்குள் உலவிக் கொண்டிருந்த உற்சாகம், உடனே பற்றிக் கொண்டது. நாம் மறந்து போன மயிலாட்டம், மாடாட்டம், கொக்காலிக் கட்டையாட்டம், கிழவன் கிழவியாட்டம், கரகாட் டம், பறையாட்டம் என்று பெரியார் நெடுஞ்சா லையே ஆட்டம் பாட் டம் கொண்டாட்டத்தால் களைகட்டி விட்டது. தொடக்க நிகழ்ச்சியில் தெற்குநத்தம் சித்தார்த் தன், வீ. பன்னீர்செல்வம், வில்வநாதன், தமிழன் பிரசன்னா, தாம்பரம் முத்தையா, திருவொற்றி யூர் கணேசன், தளபதி பாண்டியன், நயினார், பிரபாகரன், திலீபன், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உற்சாக ஊர்வலம்!

சமர் கலைக்குழு வேலு வழங்கிய பறையிசையின் தாளகதியில், தயங்கியவர் கள்கூட மயங்கிப் போய் தானாகவே களத்தில் இறங்கி துள்ளிக்குதித்து ஆட்டம் போட்டனர். உற்சாக நதியே உருவெ டுத்தது போல ஆடிப் பாடியபடியே ஊர்வல மாக வந்தனர். தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண் டாக கொண்டாடுகின்ற சுயமரியாதையை நமக்கு ஊட்டிய தந்தை பெரி யாருக்கு நன்றி காட்டும் விதமாக, அவரது சிலை யின் முன்பாக நின்று சின்னஞ் சிறுவர்களிலி ருந்து பெரியவர்கள் வரை ஆடி மகிழ்ந்தனர். ஒவ் வொருவரின் முகங்களும் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல ஒளிர்ந்தது.

எல் லோரும் சமத்துவமாக மொத்தமாக ஆடுகின்ற இடமாக தந்தை பெரியா ரின் சிலை இருந்ததென் றால், உரியடித்திடல் வயது வாரியாக, இணை யர்களுக்காகவும் என்று இட ஒதுக்கீடு செய்து, வியர்வை மழையில் நனைந்தபடியே ஆடினர். அப்பப்பா... எங்கேயிருந் தது இந்த உற்சாகம், எங்கேயிருந்தது இந்த ஆனந்தம் என்று நினைப் பதற்கும், கேள்வி கேட்டு பதிலைப்பெறுவதற்கும் நேரம் எங்கேயிருந்தது?

திராவிடர் திருநாளில் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் படத்தினை பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் திறந்து வைத்தார். (18.1.2015, பெரியார் திடல்)

சரியாக 6 மணிக்கு மேடை நிகழ்ச்சிகள் தொடங்கின. மக்கள் வேண்டுமளவுக்கு உற்சா கத்தை வெளிக்காட்டிய பிறகு, அறிவை மாந்துவ தற்கும் நாங்கள் சளைத் தவர்களல்ல என்பதைப் போல விறுவிறுப்பாக எம்.ஆர். ராதா மன்றத் தினுள் வந்து தங்களுக் கான இருக்கையில் அமர்ந்து கொண்டனர். வழக்கம் போல அரங்கமும் மேல் தளமும் நிறைந்தன. சமர் கலைக்குழுவின் பறை யாட்டத்தைத் தொடர்ந்து, செ. கனகா அவர்கள் அனைவரையும் வரவேற் றுப் பேசினார். மோகனப் பிரியா சிறப்பானதொரு அறிமுகவுரையை வழங் கினார். டெய்சி மணி யம்மை தலைமையேற்றுப் பேசினார். அவர் தனது உரையில், தமிழ் தேசிய வாதிகள் குழம்பிப் போயி ருப்பதாகக் குற்றம் சாட் டினார். நான் சாகின் றேனே என்று கவலைப் படவில்லை. உங்களை யெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டுச் சாகின் றேனே என்று வருந்திய தந்தை பெரியாரையா கொச்சைப்படுத்துவது என்று சாடினார். எத் தனை இடையூறு வந்த லும் அடிக்க அடிக்க எழும் பந்து போல திரா விடர் கழகம் துடிப்போடு எழுந்து நடைபோடும் என்று பதிலடி கொடுத் தார்.

தமிழ் ஓவியா said...

எஸ்.எஸ்.ஆரின் வரலாறு - திராவிட இயக்கத்தின் வரலாறு!

இலட்சிய நடிகர் மறைந்த எஸ்.எஸ். ராஜேந்திரனின் உருவப் படத்தை திரைப்பட இயக்குநரும், சுயமரியா தைக் குடும்பத்தவருமான எஸ்.பி. முத்துராமன் அவர்கள் திறந்து வைத்து, அவரைப்பற்றிய அரிய சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். மொத்தத்தில் எஸ். எஸ்.ஆரின் வரலாறு

திராவிட இயக்கத்தின் வரலாறு என்று பதிவு செய்தார். பேரறிஞர் அண்ணா மறைந்த பிறகு, நிலைகுலைந்து போய் அவர் மருத்துவமனையில் இருந்தபோது, தந்தை பெரியார் அவரைக் கடிந்து தன்னிலையடையச் செய்த வரலாற்று குறிப்புகளை அசைபோட்டார். இவரைப் போல பல திராவிட இயக்கக் கலைஞர்களின் பங்களிப் பையும் தவறாமல் குறிப்பிட்டார். அவரைப்போல லட்சியத்தில் உறுதியாக நின்றால் வெற்றி நிச்சயம் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

திராவிடர் திருநாள் பகுத்தறிவுக் கொம்பாக மாறியிருக்கிறது!

இயக்குநர் முத்துராமன் அவர்களைத் தொடர்ந்து, ஊடகவியலாளர் கோவி. லெனின் திராவிடர் திருநாள் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். அவரின் உரை, நடைமுறையில் அர்த்தமில்லாத கொண்டாட்டங்களில் சிக்கியுள்ள இன்றைய தலை முறையினரை, மீட்க இதுபோன்ற ஆக்கபூர்வமான கொண்டாட்டங்களை நாம் கொடுக்க வேண்டியுள் ளது என்று தொடங்கினார். சமத்துவம் இல்லாத வாழ்க்கை முறையில் ஏற்படும் மன அழுத்தங்களை போக்க, கொம்பைத் தேடும் கொடி போல மனம் அலைபாயும் போது, இந்த திராவிடர் திருநாள் பகுத்த றிவுக் கொம்பாக மாறியிருக்கிறது என்ற பொருளில் பேசினார். திராவிடர் திருநாளில் திதி கிடையாது, நாள் கிடையாது, எந்தப்புராணப் பின்னணியும் கிடையாது. ஆகவே, இதுதான் தமிழ்ப்புத்தாண்டு. இதைத்தான் நாம் கொண்டாடிக் கொண்டிருக் கிறோம். மற்ற மற்ற மாநிலங்களில் இதுவே சங்கராந்தி ஆகிவிட்டது. தமிழ்நாட்டில்தான் பொங்கல் பொங்கலாக இருக்கிறது என்று நாட்டு நடப்புகளைக் கொண்டு இந்த திராவிடர் திருநாளின் சிறப்புகளை பட்டியலிட்டார். வரலாற்று சாட்டையைச் சொடுக்கி தமிழ்தேசியவாதிகளை சுளுக்கெடுக்கவும் தவறவில்லை அவர்.


தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் செய்த புரட்சியைப் போல வேறொன்று உண்டா?

வெள்ளை ஆடைக்குப் பதிலாக கறுப்பு ஆடை யணிந்து வந்து அனைவரையும் வியப்பிலாழ்த்திய பேராயர் எஸ்றா. சற்குணம் அவர்கள், இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கும் இறைவி அவர்களை சுட்டிக்காட்டி, கறுப்பு உடையும் அதில் சிவப்பு நிற பொத்தானும் வைத்த ஆடை அணிந்து வந்திருக்கி றேன் என்று சொன்னார். நானும் பெரியாரிஸ்ட்தான் என்று கலகலப்போடு உரையைத் தொடங்கினார். தொடந்து அவர், தனக்கும் திராவிட இயக்கத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்று உரிமை கொண்டாடினார். மேலும் அவர், கால்டுவெல் எழுதிய திராவிட ஒப்பிலக்கண நூலை தனது பேச்சுக்கு ஆதாரம் காட்டி திராவிட இயக்கத்துக்கும் பாதிரியார்களுக்கும் இடையே உள்ள உறவை நியாயப்படுத்தினார். பிரெஞ் புரட்சி, மாவோ புரட்சி, ரஷ்ய புரட்சி என்று ஏதேதோ புரட்சிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், கத்தியின்றி ரத்தமின்றி தன்னுடைய கருத்துகளை மாத்திரம் பிரச்சாரம் செய்து, இந்த சமூகத்தில் தந்தை பெரியார் செய்த புரட்சியைப் போல வேறொன்று உண்டா? என்று அரங்கத்தினரைப் பார்த்து கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வியிலேயே பதிலும் தொக்கி நின்றதால், அரங்கத்தினரிடமிருந்து அவர் கேள்விக்கு பலத்த கைதட்டல்தான் பதிலாகக் கிடைத்தது.

பெரியார் திடலுக்கு வந்தால் ஆதாரத்தோடு பேசவேண்டும்

தொடர்ந்து அவர், இன்றைய பி.ஜே.பி. அரசின் அவலங்களைச் சுட்டிக்காட்ட சில கருத்துகளை எடுத்து வைத்தார். முதலில் தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும் என்பதைப் பற்றி சொல்லும் போது, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தன்னுடைய தாத் தன் இந்து மதக்கொடுமையிலிருந்து விலகி கிறித்துவ மதத்திற்குச் சென்ற போது, இந்து மதம் என்ற ஒன்றே இல்லையே; நான் எந்த மதத்திற்குத் திரும்புவது? என்ற அர்த்தமுள்ள கேள்வியை எழுப் பினார். பெரியார் திடலுக்கு வந்தால் ஆதாரத்தோடு பேசவேண்டும் என்று மெல்லிய சிரிப்பலையை எழுப்பியவாறே, 1911 இல் ணிகி கெய்ட் என்பவர் எழுதிய நூலை ஆதாரமாகக் காட்டினார். பிறகு, மனுதர்ம புத்தகத்தை படித்துக்காட்டி, அது மனுதர்மமல்ல மனுஅதர்மம் என்று நிறுவினார். பிறகு, நிகழ்ச்சியின் சிறப்பு, பெரியார் விருதின் மதிப்பு ஆகியவற்றின் தாக்கத்தால், எனக்கும் ஒருநாள் இந்த கவுரவத்தைக் கொடுங்கள் என்று பலத்த சிரிப்பினூடே சொல்லி உரையை நிறைவு செய்தார்.

சுயமரியாதை குடும்ப விழாவில் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். (18.1.2015, பெரியார் திடல்)

தமிழ் ஓவியா said...

பெரியார் விருது வழங்கும் விழா

பேராயரின் உரையைத் தொடர்ந்து பெரியார் விருது வழங்கும் விழா தொடங்கியது. ஊடகவியலா ளர் ப. ரகுமான், இசையமைப்பாளர் டி. இமான், திரைப்பட இயக்குநர் சுசீந்திரன் ஆகியோர்களுக்கு தமிழர் தலைவர் முறைப்படி பெரியார் விருதை அரங் கத்தினரின் பலத்த கரவொலிக்கிடையில் வழங்கிச் சிறப்பித்தார். முன்னதாக விருது பெறும் பேராளர்கள் பற்றிய காணொலிக்காட்சி திரையில் காட்டப்பட்டது. ஏற்புரை வழங்க வந்த ப. ரகுமான், நன்றி சொல்ல வார்த் தைகளைத் தேடினார். இறுதியில் பெரியார் திடலில், பெரியார் தொண்டர்களின் மத்தியில் எனக்குப் பெரியார் விருது பெற்றதை மிகப் பெரிய கவுரவமாக நினைக்கிறேன் என்று முடித்தார். பெரியார் ஒரு புத் துலக தொலை நோக்காளர் என்று யுனெஸ்கோ மாமன்றம் சொன்னதை அப்படியே சொல்லி, அதுதான் பெரியாரைப்பற்றிய எனது பார்வை என்றார்.

சந்தை அடிப்படைவாதம், மத அடிப்படைவாதம் 1930களில் தமிழ்நாட்டில் தந்தை பெரியாரால் விரட்டி அடிக்கப்பட்ட மதன்மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதையும், கோட் சேவால் சுட்டுக்கொல்லப்பட்டு காந்தி இறந்த போது தமிழ்நாடு அமைதியாக இருந்தததையும் சுட்டிக் காட்டி, இன்றுள்ள நிலவரத்தையும் எடுத்துரைத்தார். மேலும் அவர், சந்தை அடிப்படைவாதம், மத அடிப் படைவாதம் இரண்டையும் எதிர்கொள்ள எப் போதையும்விட இப்போதுதான் பெரியார் தேவைப்படு கிறார் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

கருத்துச் சுதந்திரத்திற்கான தலைமையிடம் பெரியார் திடல்! அவரைத் தொடந்து வந்த திரைப்பட இசையமைப் பாளர் டி. இமான் அவர்கள் பேசும் போது, எல்லா புகழும் இயேசு கிறித்துவுக்கே என்று தொங்கினார். அப்போது, பேராயர்கூட மேடையிலிருந்த தமிழர் தலைவரைத் திரும்பிப் பார்த்தார். அவரோ புன்னகைத்தார். தொடர்ந்து பேசிய இசையமைப் பாளர், தான் வழக்கமாக இப்படித்தான் பேசத்தொடங் குவேன். இங்கே இப்படி பேசலாமா கூடாதா என்று தயங்கிக்கொண்டிருந்தேன். ஆனால், இதுதான் எனது அடையாளம் அதனால் அதையே பேசிவிட்டேன் என்று தயக்கத்தோடு கூறினார். இதற்காக அவர் தயங்கியிருக்க வேண்டியதில்லை. இந்த இடமே கருத் துச் சுதந்திரத்திற்கான தலைமையிடம்தான். ஆகை யால், அவருடைய கருத்துச் சுதந்திரத்தை அங்கீகரித்த அரங்கம் அதை ஆமோதித்து கைதட்டி வரவேற்றது. இதைத்தான் தமிழர் தலைவரும் புன்னகை மூலம் அங்கீகரித்திருந்தார். அவரைத் தொடர்ந்து ஏற்புரையாற்ற வந்த இயக்குநர் சுசீந்திரன், இந்த விருது கிடைத்தற்கு தன்னைவிட தனது தந்தை மிகுந்த மகிழ்ச்சியடைந்ததை மிகுந்த நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். தான் பணத்திற்காகவும், தன்னுடைய சுயத்திற்காகவும் வேலை செய்கிறேன். அப்படியே தொடர்வேன் என்று கூறி அமர்ந்து கொண்டார்.

நாளுக்கு நாள் சிறப்பு கூடிக்கொண்டே போகிறது!

கருத்துரை, பெரியார் விருது, வாழ்த்துரை முடிந்து தமிழர் தலைவர் நிறைவுரையாற்ற வருகை தந்தார். நாளுக்கு நாள் சிறப்பு கூடிக்கொண்டே போகிறது என்ற ஒற்றை வாக்கியத்தில், இந்த மூன்று நாள் நிகழ்ச்சியின் மாட்சியை ரத்தினச் சுருக்கமாகக்கூறி தனது உரையைத் தொடங்கினார். எங்கள் இனத்தில் எல்லா திறமைகளும் பெற்றவர்கள் இருக்கிறார்கள். இதுவரை அடக்கியடக்கி வைத்திருந்தார்கள். இன்று வெளிவந்திருக்கிறார்கள். மூன்று நாட்களாய் மூன்று மூன்று முத்துக்களாய் 9 பேருக்கு பெரியார் விருதளித்து மகிழ்ந்திருக்கிறோம். முதலில் பெரியார் திடலுக்கு துணிச்சலாக வந்ததற்கே இவர்களைப் பாராட்ட வேண்டும் என்றதும் பலத்த கைதட்டல் எழுந்தது. மேலும் அவர், திரைப்படத்துறையை நாங்கள் நாடுவதில்லை என்று சொல்லிவிட்டு, அது யாருக்கோ பயன்படுகிறது, எப்படியோ பயன்படுகிறது, எதற்கோ பயன்படுகிறது என்று அதற்கான காரணத் தையும் தொடர்ந்து சொன்னார். இதையெல்லாம் மாற் றக்கூடிய வகையிலே, இதோ நாங்கள் இருக்கிறோம். வாய்ப்பு இருந்தால் எங்களை சரியான முறையில் வெளிகட்டத் தயங்கமாட்டோம் என்று இவர்கள் வந்திருக்கிறார்கள் என்று மூவரையும் சுட்டிக்காட்டி, அச்சமின்றி உங்கள் பயணத்தைத் தொட ருங்கள் பெரியார் தொண்டர்கள் உங்கள் பின்னால் இருக் கிறார்கள் என்று ஒரு பிரகடனம் போல சொன்னதும் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது.

தமிழ் ஓவியா said...


துணிந்தவனுக்குத் தோல்வியில்லை!

மேலும் விருது பெற்ற மூவரின் தன்னம்பிக்கையை பெருக்கும் வகையில், துணிந்தவனுக்கு துக்கமில்லை என்பது பழமொழி. துணிந்தவனுக்கு தோல்வியில்லை என்பது புதுமொழி என்று பழமையை புதுப்பித்தார். மாட்டுப் பொங்கலைப்பற்றிச் சொல்லும்போது, ஏன் எருமை மாட்டை சொல்ல மறுக்கிறோம் என்று தர்க்க ரீதியிலான ஒரு கேள்வியை எழுப்பி, அதற்கு மனுதர் மத்திலிருந்தே ஆதாரத்தை எடுத்துக்காட்டினார். கருப்பு-, -கருப்பர்கள், தஸ்யூக்கள், அடிமைகள் என்று ஆக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து அவர் திரைப்படத் தணிக்கைத் துறை பி.ஜே.பி. அரசில் படும்பாட்டை கண்டித்துப்பேசினார். மீண்டும் இவர்கள் மனுதர்மத்தை சட்டமாக கொண்டு வரு வார்கள். அதை வெளிப்படையாகவும் பேசத் தொடங்கி விட்டனர். திலகர் ளிக்ஷீ றீணீஷ் வீ விணீஸீனீவீக்ஷீலீவீ என்று கூறியிருப்பதை புத்தகத்தின் பக்கம் எண், வால்யூம் எண் என்று ஆதாரத்தோடு எடுத்துரைத்தார். இதற் காகவே தான், மனுதர்ம ஆராய்ச்சி நூல் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று பலத்த கையொலி களுக்கிடையேகூறி, இந்துத்துவ வாதிகளின் அடாவடி களுக்கு அறிவு ஒன்றுதான் பதிலடி என்று சொல்லா மல் சொன்னார்.

மனுதர்மம் என்ன சொல்கிறது? அதேபோல, வைதீகமாக இருப்பினும், லௌகீகமாக இருப்பினும் அக்கினியானது எப்படி மேலான தெய்வமாக இருக்கிறதோ அப்படியே ஞானியாக இருந் தாலும், மூடனாக இருந்தாலும் பிராமணனே மேலான வன் என்று மனுதர்மதின் 317 ஆவது சுலோகத்தில் உள்ளளதை எடுத்துக்காட்டி, தெய்வாதீனம் ஜெகத் சர்வம், மந்திராதீனம் துதெய்வதம், தன்மந்திரம் பிராமணாதீனம் என்ற சமற்கிருத சுலோகத்தை படித்துக்காட்டினார் மனு தர்மத்தில் பிராமணனின் உயர்வு எப்படி நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்பதை நிறுவினார். 319 ஆவது சுலோகத்தின்படி பிராமணன் கெட்ட காரியங்களில் பிரவேசித்தாலும் அவனே மேலான தெய்வமல்லவா என்பதையும் எடுத்துக் காட்டியதோடு, ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்ற திராவிட இனத்தின் பண்பாட்டையும் நினைவுபடுத் திடத் தவறவில்லை அவர். மேலும் அவர் மக்களை எச்சரிக்கும் விதத்தில், மீண்டும் பழைய கதை திரும்பும். அதை எதிர்கொள்கின்ற வலிமை பெரியாரியத்திற்கு உண்டு. அதுபோலவே, நம் இனத்திற்கு பயன்படுகிற வகையில் இந்த மூன்று முத்துக்களின் திறமைகள் இன்னும் வளர வேண்டும் என்று வாழ்த்திவிட்டு, மொழியால், வழியால் நாம் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், பிறப்பால் மனிதர்கள், அறிவால் பகுத்தறிவாளர்கள் என்று ஒரு வரையறையுடன் தனது உரையை நிறைவு செய்து கொண்டார். பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களின் தலைமை ஒருங்கிணைப்பில், துணைத் தலைவரின் ஆலோசனைகளோடு பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், அச்சக மேலாளர் க.சரவணன், நாராய ணன், பிரின்சு என்னாரெசு பெரியார், இறைவி, ஓவியச் செல்வன், மாணிக்கம், தமிழ்க்குடிமகன், ஆனந்த், கலைமணி, சுரேஷ், வை.கலையரசன், இசையின்பன், மரகதமணி, பழனிகுமார், நா.பார்த்தீபன், சிறீராம், ரேவந்த், உடுமலை வடிவேல், மற்றும் பெரியார் திடலில் பணிபுரியும் தோழர்களும் பின்னணியில் இருந்திருக்கிறார்கள்.

மூன்று நாள் அரங்க நிகழ்ச்சிகளை பெரியார் வலைக்காட்சி இணையம் மூலமாக நேரலை செய்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் தவமணி, வழக்குரைஞர்கள் குமாரதேவன், சென்னியப்பன், திருமகள், க. பார்வதி, கு. தங்கமணி, உமா செல்வராஜ், இராணி ரகுபதி, க. வனிதா, பண் பொளி கண்ணப்பன், சு. அன்புச் செல்வன், கு. செல் வேந்திரன், வெ. கார்வேந்தன், சு. நாகராஜ், பாசு. ஓவியச் செல்வன், ஆ.இர. விசசாமி, நா. பார்த்திபன், மு. மாணிக் கம், மீஞ்சூர் ராஜ்குமார், ப. எழிலரசி வீரமர்த்தினி, தென்றல், தமிழ்சாக்ரடிஸ், வெ. ஞானசேகரன், வீ. பன்னீர் செல்வம், சத்ய நாராயணசிங், தமிழ்ச்செல்வன், கோபால், வே. மதிமாறன், பெரியார் மாணாக்கன், செல்வி, மணிமேகலை, விடுதலை புகைப்பட கலைஞர் பா.சிவகுமார், பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் ஏராளமான இயக்கத் தோழர்கள், பொது மக்களும் அரங்கம் நிரம்பி வழியும் அளவுக்கு கலந்து கொண்டு கண்டு, உண்டு உய்த்து மகிழ்ந்த தோடு, அரசாங்கம் சித்திரையையே புத்தாண்டாக வைத்துக்கொள் ளட்டும். மானமுள்ள தமிழர்கள் தை முதல்நாளையே தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடி விட்டுப் போகி றோம். அதற்காக இன் னும் ஒரு ஆண்டு காத்திருக்க வேண் டியிருக்கிறதே என்ற ஏக்கத் தோடு மூன்று நாள் நிகழ்ச்சிகளையும் அசைபோட்டவாறே கலைந்தனர்.

முல்லை திணையை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற இவ்விழாவில் காடுகளை நினைவூட்டும் வகையில் ஓசான் நிறுவனம் அமைத்திருந்த மேடை வடிவமைப்பு அமைந்திருந்தது.

Read more: http://viduthalai.in/e-paper/94568.html#ixzz3PGf2CVuD

தமிழ் ஓவியா said...

திராவிடர்கள்தான்

பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)

Read more: http://viduthalai.in/page-2/94576.html#ixzz3PGfZO5D4

தமிழ் ஓவியா said...

கலாச்சாரக் காவலர்களா?

மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு ஆர்.எஸ்.எஸ். சாவி கொடுத்தால் ஆடுகிற பொம்மை என்பதை ஏற்கனவே நம்ப மறுத் தவர்கள்கூட இப்பொழுதும் ஆம், அப்படித்தான்! என்று நம்பும், வெளிப்படையாகப் பேசும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

கலாச்சாரக் காவலர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு திரிகிறார்கள். அந்தக் கலாச்சாரம் என்பது ஆரியப் பார்ப்பனக் கலாச்சாரமே!

காதலர் தினத்தை அவர்கள் எப்படி கணிக்கிறார்கள் என்பதைப் பார்த்தால் தெரியுமே! இப்பொழுது மத்திய தணிக்கைத் துறையில் தன் அருவருப்பான முகத்தை நுழைத்து வருகிறது பி.ஜே.பி. அரசு.


தமிழ் ஓவியா said...

பஞ்சாபில் ஒரு பாபா! (சாமியார்) இருக்கிறார்; அவர் பெயர் ராம் ரஹீம் பாபா என்பதாகும். இவருக்குள்ள தனிச் சிறப்பு (?) என்ன தெரியுமா? தனது சீடர்களுக்கு முதற் கட்டமாக ஆண்மை நீக்கம் (அறுவைச் சிகிச்சை) செய்வதுதான் இப்படித்தான் மனத்தை அடக்கி ஆள்கிறார்கள் போலும்! இதுவரை 400 பேர்களுக்கு மேல் இந்த வேலை நடந்திருக்கிறதாம்; இதன்மீது அவரது சீடர்களில் ஒருவரான பரமத்சிங் என்பவர் காவல் துறையில் புகாரும் கொடுத்துள்ளார்.

இவர் தன்னைப் பற்றித் தம்பட்டம் அடித்து கொள்வதில் ஆர்வவெறி மிகுந்தவர். தன்னை சீக்கிய மத குருவான குருநானக்கின் மறுபிறவி என்று கூறிக் கொள்கிறார்; சட்லஜ் நதிக் கரையில் மிகப் பெரிய அளவுக்கு மடம் ஒன்றையும் நிறுவியுள்ளார்.

தன்னைப்பற்றி மக்கள் மத்தியில் விளம்பரம் பெரிய அளவில் போய்ச் சேர வேண்டும் என்றால், சினிமாதான் சரியான கருவி என்று முடிவு செய்து கடவுளின் தூதர் என்ற பெயரில் ஒரு படம் எடுத்து வெளியிட்டுள்ளார்; அதில் அவரே அந்தக் கடவுள் தூதராகவும் நடித்துள்ளார்.

சீக்கிய மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியுள்ளது. குற்றப் புகாரில் சிக்கியுள்ள ஒருவர் எடுத்திருக்கும் இந்தப் படம் மூடநம்பிக்கையின் முழு முகவரியே!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட் டுள்ளது. விஞ்ஞான மனப்பான்மையையும் சீர்திருத்த உணர்வையும் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடி மகனின் கடமை (51ணீ(லீ) என்ற சரத்துக்கு விரோத மானதும்கூட!

மத்திய தணிக்கைக் குழு இந்தப் படத்துக்கு அமைதி மறுத்து விட்டது - சரியான நடவடிக்கையே!
இதற்குப்பின் என்ன நடந்தது என்பது தான் முக்கியம். இந்தப் பாபாவின் சீடரும், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றவரும், மத்திய அமைச்சருமான ராஜ்யவர்தன் ராத்தோட் என்பவர் தலையிட்டு அந்த சினிமா திரையிடப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தணிக்கைத் துறையின் ஆணையைப் புறக்கணித்து இந்தக் கேடு கெட்ட காரியம் நடந்துள்ளது. இதன்மூலம் ஒன்றைத் தெளிவாகவே புரிந்துகொள்ளலாமா?

இன்றைய மோடி தலைமையிலான பிஜேபி அரசு சட்ட திட்டங்களை மதிக்கத் தயாராக இல்லை; எந்த எல்லைக்கும் சென்று பாபாக்களின், சாமியார்களின் எடுபிடிகளாக உள்ளனர்; மூடநம்பிக்கைகளைப் பரப்புவதன் மூலமாகத்தான் தங்களின் மதவாத சிந்தனைக் கூடைக்குள் மக்களைக் கவிழ்த்துப் போடலாம் என்பது அவர்களின் எண்ணமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் இந்தியில் பி.கே. என்ற முற்போக்குத் திரைப்படம் - மூடநம்பிக்கையின் முதுகெ லும்புகளையும், மூட்டு எலும்புகளையும் நொறுக்கும் திரைப்படத்தை எதிர்த்து வடமாநிலங்களில் இந்த ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கும்பல் ரகளைகளில் ஈடுபட்டன. இவ்வளவுக்கும் அத்திரைப்படம் தணிக் கைக் குழுவால் அனுமதி பெறப்பட்ட ஒன்றாகும்.

அதைப்பற்றி எல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் எதிர்ப்பு நெருப்பைக் கொட்டினர். ஆனால், வெகு மக்களின் எண்ணமோ வேறுவிதமாக இருந்தது - இருக்கிறது. மிகப் பெரிய வசூலைக் குவித்து விட்டது. இந்தத் திரைப்படம் கடைசிக் கட்டமாக நீதிமன்றத்தை யும் நாடினர் இந்தக் கலாச்சாரக் காவலர். நீதிமன்றமோ அவர்களின் தலையில் பலமாகக் குட்டி உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அந்தத் திரைப்படத்துக்குப் போகாதீர்கள் என்று தீர்ப்பு அளித்துவிட்டது.

இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும்; மூடநம்பிக்கையை முறியடிக்கும் - அறிவியல் மனப் பான்மையை - பகுத்தறிவுச் சிந்தனையை வளர்க்கும் திரைப்படம் என்றால் எதிர்ப்பு! மூடநம்பிக் கைகளுக்கு தீனி போடும் - பிற்போக்குச் சாமியார்கள் பற்றிய திரைப்படம் என்றால் சட்டத்தையும் கிழித்துக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டு ஆதரவுப் பச்சைக் கொடியைக் காட்டும் கும்பலுக்குப் பெயர்தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலின் கரசேவையாகும்.

இவர்களையும் இவர்களுக்குத் துணை போகும் மோடி அரசையும் வெகு மக்கள் அடையாளம் காண்பார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/94577.html#ixzz3PGfjZL6A

தமிழ் ஓவியா said...

அய்.டி.யிலிருந்து பணியாளர்கள் நீக்கம்


தொழில் நுட்ப நிறுவனங்களில் (அய்.டி.) பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்கள் கூட திடீரென்று வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின் றனர். இதுவரை 25 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சிக்கு உரியது ஆகும்.

எந்த நேரத்தில் வேலை நிறுத்த ஓலை தங்கள் கழுத்தைச் சுற்றுமோ என்று அய்.டி.யில் பணியாற்று வோர் ஒரு திகிலிலேயே ஒவ்வொரு நாளும் ஓட்டி வருகின்றனர்.

இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிடாது என்று தட்டிக் கழித்து வருவது சரியானதுதானா? மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணைய மைச்சர் பண்டாரு தத்தாத்ரேயோ சில நாட்களுக்கு முன் அரசு தலையிடாது என்று கூறியுள்ளாரே இது கார்ப்பரேட்களின் அரசு என்பது இதன் மூலம் உறுதிப்படவில்லையா? தனியார்த்துறை எப்படி நடந்து கொண்டாலும் மத்திய அரசு தலையிடாதா? அப்படியென்றால் தனியார்த் துறைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு என்னதான் பாதுகாப்பு இருக்கிறது?

தற்காலிக ஊழியர்கள் 241 நாட்களும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் 480 நாட்களும் பணியாற்றியிருந்தால் அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் தொடர்பான சட்டங்கள் இருக்கின்றனவே - அந்தச் சட்டங்கள் அய்.டி.யில் பணியாற்றுவோருக்கும் பொருந்தாதா?

அதுவும் அய்.டி.யில் மூத்த பணியாளர்களை வெளியேற்றும் போக்கு அதிகரித்து வருகிறது. காரணம் அதிக சம்பளம் வாங்குபவர்களை நீக்கி விட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அது லாபம்தானே! மூத்த பணியாளர்களை வேலை நீக்குவதற்கான பின்னணி யில் உள்ள தந்திரம் இதுதான்.

தமிழ் ஓவியா said...

அய்.டி.யில் பணியாற்றுவோர்; அந்த வருமானத்தை ஒட்டி வீடு கட்டுவதற்கு வங்கிகளில் கடன் வாங்கி இருந்தால் அத்தகையவர்கள் திடீர் என்று நிறுத்தப்பட்டால் வங்கிகளில் வாங்கிய கடனை எங்கிருந்து அடைக்கப் போகின்றனர்? வாழ்க்கையில் பணி நிரந்தரம் உறுதிப்படுத்தப்படா விட்டால், சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை நிலை என்னாவது?

நீக்கப்படுபவர் ஒருவராகக்கூட இருக்கலாம்; அந்த ஒருவரோடு அது முடிந்து விடக் கூடியதல்லவே! அவரை நம்பி ஒரு குடும்பமே இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. அப்படி 25,000 பணியாளர்கள் நீக்கம் என்றால் அந்த எண்ணிக்கையில் குடும்பங்கள் நட்டாற்றில் நிற்கின்றன என்றே பொருளாகும்.

ஏற்கெனவே வேலையில்லாத் தீண்டாட்டம் உச்சியைப் பிடித்துக் குலுக்குகிறது. போதாதற்கு பல்லாண்டு பணியாற்றியோர் வெளியேற்றப்படுவது வேலையில்லாதார் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யவில்லையா?

உலகிலேயே இளைஞர்கள் அதிக எண்ணிக் கையில் இருப்பது இந்தியாவில்தான் என்று பெருமைப் பேசுகிறார்கள். இது ஒரு வகையில் நாட்டுக்குப் பலம்தான் என்றாலும் அவர்களுக்குப் போதிய வேலை வாய்ப்புக் கிடைக்கவில்லை என்கிறபோது அது நாட்டின் அமைதிக்கே கேள்விக் குறியாகி விடாதா? இளைஞர்கள் தீவிரவாதிகளாயினர் என்றால் அதன் விளைவு விபரீதமானதாகும்.

வேலை இல்லை என்ற பிரச்சினை நாட்டில் பல்வேறு திசைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுமே. மக்கள் நல அரசு என்றால் இதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டாமா? அரசுத் துறைகளில் புதிய பணிக்கு நியமனம் இல்லை. ஆண்டு ஒன்றுக்குப் பல லட்சம் பேர் ஓய்வு பெற்றாலும் அந்த இடங்கள் நிரப்பப்படுவதில்லை.

இதுதான் பிஜேபி ஆட்சியின் நிருவாக லட்சணமா? உற்பத்தியைப் பெருக்கும் தொழிற்சாலைகளை ஊக்குவிப்பது, அதன் மூலம் வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவது என்பது ஆட்சி ரயில் ஓடும் தண்டவாளம் போன்றாகும்.

ஆனால், இங்கே எல்லாம் தலைகீழாகவே உள்ளது. பொறியியல் கல்லூரி. பாலிடெக்னிக் கல்லூரிகள் நாட்டில் ஏராளம் பெருகி வருகின்றன. ஆண்டு ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் வெளி வருகின்றனர்.

இவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதுபற்றி இந்திய அரசு சிந்திக்க வேண்டாமா? திட்டக் குழுவைக் கலைப்பது யூஜி.சி.யை நீக்குவது என்பது போன்ற நீக்குவது மாற்றுவது மட்டும்தான் ஆட்சியின் வளர்ச்சி என்று மோடி அரசு கருதுகிறதா?

மோடிக்குப் பின் பாட்டுப் பாடும் ஊடகங்கள் இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டி அதன் தலையில் குட்டுவதில்லை. ஊடகங்களுக்கு அரசியல் நோக்கம் இருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.

அய்.டி.யிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட் டவர்கள் இப்பொழுது ஒன்று சேர்ந்து சங்கம் அமைக்கப் போர்க் கொடி தூக்கத் தலைப்பட்டுள்ளனர்.

இதுகூடக் காலம் கடந்த செயலாகவே தோன்று கிறது என்றாலும் இப்பொழுதாவது அவர்களுக்கு அத்தகு சிந்தனை, விழிப்பு தோன்றியுள்ளதே - அந்த அளவில் வரவேற்கவே செய்யலாம்.

சட்டப்படி இந்தப் பிரச்சினையில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய செயலில் ஈடுபடலாம்; நீதிமன்றத்தின் மூலம்கூட நிவாரணம் தேடலாம்; மற்றொரு பக்கம் வீதியில் வந்து போராட வேண்டும்.

படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உத்தர வாதம் தேவை என்றும், வேலையில்லாப் பட்டதாரிகள் மாநாடு என்றும் திராவிடர் கழகம் நடத்தியதுண்டு.

அதனை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமா என்பது மத்திய மாநில அரசுகளேதான் முடிவு செய்ய வேண்டும். வெளிநாடுகளில் இந்திய முதலாளிகள் தொழில் தொடங்கிட உதவிக்கரம் நீட்டும் பிரதமர் நரேந்திர மோடி முதலில் உள்நாட்டுப் பிரச்சினையில் கவனம் செலுத்தட்டும்!

இளைஞர்கள் பொங்கி எழுந்தால்ஆட்சிகள் அதில் மிதக்க வேண்டிய நிலைதான் ஏற்படும் - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page1/94510.html#ixzz3PGgQcxpi

தமிழ் ஓவியா said...

கீதை கூட்டமா? காங்கிரஸ் கூட்டமா?

காங்கிரஸ்காரர்கள் தங்களுடைய காரியங்களுக்கு இப்பொழுது ஜனக்கூட்டம் சேர்வதும் கஷ்டமாகிவிட்டதை அறிந்துப் புதிய வழிகளைக் கண்டுபிடித்திருக் கின்றார்கள் என்று தெரிகின்றது.

இன்று திரு. காந்தியவர்கள் தமது ராமராஜ்யப் பேச்சையும், பகவத்கீதைப் பிரபாவத்தையும் விட்டு விடுவாரானால், அவருக்கும் பொதுஜனங்களிடம் உள்ள மதிப்புக் குறைந்து போகும் என்பதில் அய்யமில்லை. பொதுஜனங்கள், தாங்கள் கொண்டிருக்கும் மூடநம்பிக்கை காரணமாக ராமராஜ்யம் பகவத் கீதை முதலிய வார்த்தை களைக் கேட்டே ஏமாறுகிறார்கள் என்பதில் அய்யமில்லை.

சென்ற 14.03.1932ல் கராச்சியில் காங்கிரஸ் கமிட்டி காரிய தரிசிசுவாமி கிருஷ்ணானந்தர் என்பவர் ஜவுளிக்கடை வீதியில் காங்கிரசின் பெயரால் கூட்டம் சேர்ப்பதற்கு ஒரு தந்திரம் செய்தார்.

இரு தெருக்கள் சந்திக்கும் ஒரு சந்தியில் உட்கார்ந்து கொண்டு பகவத்கீதை பாராயணம் பண்ண ஆரம்பித்தார். உடனே அதைக் கேட்க ஜனக்கூட்டம் சேரத் தொடங்கிற்று. பிறகு வழக்கம்போல் போலீசார் வருவதும், கலகஞ் செய்வதும், கைது செய்வதும் ஆகிய காரியங்கள் நிறைவேறின.

இவ்வாறு காங்கிரஸ் கூட்டம் கூட்டுவதால் என்ன அர்த்தமிருக்கிறது என்று தான் நாம் கேட்கிறோம். சாதாரண மாக மருந்து விற்கின்றவன் ஒருவன் ஒரு சந்தியில் நின்று கொண்டு தனது மருந்தைப் பற்றியும், அது தீர்க்கும் வியாதிகளைப் பற்றியும் பிரசங்கம் பண்ண ஆரம்பித்தால் அங்கும் வேடிக்கை பார்க்கத் திரளான ஜனங்கள் கூடி விடுகின்றனர்.

கழைக் கூத்தாடி ஒருவன் தனது கழைக்கோலை நட்டு வைத்து விட்டுத் தனது வாத்தியத்தை முழக்கத் தொடங்கினால் அங்கும் திரளான ஜனங்கள் கூடி விடுகின்றனர். செப்பிடுவித்தைக்காரன் ஒருவன் தனது கோணிப்பையை எடுத்து வைத்துக் கொண்டு தண்டு தளவாடங்களுடன் உட்கார்ந்து தனது சங்கதிகளை எடுத்து விடத் தொடங்கினால் அங்கும் திரளான ஜனங்கள் கூடி விடுவார்கள்.

பாம்பாட்டி ஒருவன் தனது பாம்புப் பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டு தன் மகுடியை ஊத ஆரம்பிப்பானாயின் அங்கும் எண் ணிக்கையில்லாத மக்கள் கூடி விடுகின்றார்கள்.

இந்த அற் பமான காரியங்களுக்கே இவ்வளவு ஜனங்கள் கூடுவார் களாயின் சாதாரணமாக, பொது ஜனங்கள் உண்மையானவை யென்றும் கேட்டால், படித்தால் மோட்சமும் சகல சௌகரியமும் உண்டாகு மென்றும் நம்பிக் கொண்டிருக்கும் ராமாயண பாரத பாகவதம் முதலியவை களையும், பகவத்கீதையையும் பாராயணம் பண்ணத் தொடங்கினால், மூட நம்பிக்கை யையுடைய மக்கள் ஏராளமாகக் கூடுவார்கள் என்பதில் என்னதடை?

ஆகையால் மக்கள் மயங்கத் தகுந்த இதுபோன்ற காரியங்களைச் செய்து ஜனக் கூட்டத்தைச் சேர்த்து, அதை அரசியல் கூட்டமென்றும், காங்கிரஸ் கூட்டமென்றும், சொல்லி ஏமாற்றுவதுதான் ஒழுங்கா என்று கேட்கின்றோம். இத்தகைய காரணங்களின் மூலம் பொதுஜனங்கள் காங்கிரசை ஆதரிப்பதாகவும்; அரசாங்கத்தை வெறுப்பதாகவும் விளம்பரம் பண்ணுவதனால் வெள்ளைக்காரர்களோ மற்றவர் களோ ஏமாந்து விடுவார்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

ஆகையால் தான் பொது ஜனங்கள் ஏமாறாமல் இருக்க வேண்டுமானால், அவர் களுடைய ஏமாற்றத்திற்குக் காரணமானமூட நம்பிக்கையை அடியோடு ஒழிக்க வேண்டு மென்று நாம் கூறி வருகின்றோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 20.03.1932

Read more: http://viduthalai.in/page1/94478.html#ixzz3PGhKtBQb

தமிழ் ஓவியா said...

இந்திக் கொள்ளை

ஒரு தேசத்தில் உள்ள மக்களைச் சுலபமாகவும், சீக்கிரமாகவும், அறிவுடையவர் களாகச் செய்வதற்கு, முதலில் அவர்களுடைய தாய் மொழியின் மூலம் எல்லா விஷயங் களையும் போதிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதுதான் பொது ஜனங்களின் மனத்தில் தேசா பிமான உணர்ச்சியை உண்டாக்குவதற்கு அடிப்படையான வேலை யென்றும் சொல்லப்படுகிறது.

இதுபோலவே தான் சுதந்திரப்போர் புரிந்த நாட்டினர் செய்து தங்கள் காரியங்களில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என்றும் அறிகின்றோம். ஆனால் நமது தமிழ் நாட்டின் தேசாபிமானமோ இதற்கு முற்றிலும் வேறுபட்டதாகவே இருந்து வருகிறது.

சுயராஜ்யம் வேண்டுமென்று கூச்சலிடுகின்ற தேசத் தலைவர்கள் என்பவர்களில் யாரும் இதுவரையிலும் தாய்மொழியின் வளர்ச்சியில் மனஞ் செலுத்தவும் முயற்சி செய்யவும் முன்வரவே இல்லை.

ஆனால் வட நாட்டினர் அரசியல் விஷயத்துடன் இந்தியையும் சேர்த்துக் கொண்டு, அதையே இந்தியா முழுவதுக்கும் பொதுப்பாஷை ஆக்க வேண்டுமென முயற்சி செய்யத் தொடங்கியவுடன் நமது நாட்டுத் தேசாபிமானிகளும் அவர்கள் கொள்கையை ஆதரித்துப் பிரசாரம் பண்ணத் தொடங்கிவிட்டனர்.

தேசாபிமானியாக வெளிவருகின்ற ஒருவன் காந்திக்கு ஜே காங்கிரசுக்கு ஜே கதர் கட்டுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது போலவே இந்தியைப் படியுங்கள் என்றும் சொல்ல வேண்டிய அவசியமும் இப்பொழுது ஏற்பட்டுவிட்டது.

தெலுங்கர்கள், வங்காளிகள் முதலானவர்கள் தங்கள் தாய் பாஷையை மிக உன்னத பதவிக்குக் கொண்டு வந்து வைத்திருக்கின்றனர் அவர்கள் தங்கள் மொழிகளில் மக்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற புதிய நூல்களையெல்லாம் ஆக்கி வைத்திருக் கின்றனர்.

அவைகளைப் படிக்குமாறு மக்களுக்கு ஊக்க மூட்டுகின்றனர். நமது தமிழ் மொழியோவென்றால் ஒன்றுக்கும் பயன்படாத நிலையிலேயே இன்னும் இருந்து வருகிறது.

மக்களுடைய அறியாமையைப் போக்கி நவீன அறிவையும் உலகப் பொருள் களின் தன்மைகளை அறிந்து அவைகளைத் தமது வாழ்க் கைக்கு உபயோகப்படுத்திக் கொள்ள அறிவையும் ஊட்டக் கூடிய நூல்களைச் செய்ய முயற்சி எடுத்துக் கொள்ளவே இல்லை.

தமிழ் மொழிக்காக உழைக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற பண்டிதர்களும் சங்கங்களும் தமிழ் மொழியினால் பொதுஜனங்கள் நன்மையடையத் தகுந்த உறுப்படியான வேலைகள் ஒன்றுமே செய்வதில்லை ராமாயணக் கதையையும், பாரதக் கதையையும் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய கதைகளையும் வசனமாகவும், பாட்டாகவும், சுருக்காகவும், விரிவாகவும் திருப்பித் திருப்பி எழுதிக் கொண்டிருக்கின்றனர், அல்லது அந்தப் புலவர் எந்தக் காலத்திலிருந்தார்.

தமிழ் ஓவியா said...


இந்தப் புலவர் எந்தக் காலத்தி லிருந்தார் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக் கின்றனர். இது தான் ஆராய்ச்சியென்று சொல்லப்படு கின்றது. இவ்வளவுதான் இவர்கள் தமிழ் பாஷைக்குச் செய்யும் தொண்டு. இதனால் மக்களை இன்னும் மூடநம்பிக்கை உடையவர்களாக்குவதற்கு வழி தேடுகின்றார்களேயொழிய வேறு தேசத்திற்கு என்ன நன்மை செய்கின்றார்கள் என்றுதான் கேட்கின்றோம்.
ஆனால் தேசாபிமானிகளாக வருகின்றவர் களுக்கோ இதில் கூடக் கொஞ்சமும் கவலை இருப்ப தில்லை.

பொதுவாக நமது நாட்டு தேசாபிமானி களுக்கு எந்த வகையிலும் சொந்த அறிவு என் பதே இருப்பதில்லை வடநாட்டுத் தேசாபிமானிகள் எந்தக் காரியங்களை ஆரம்பிக்கின்றாரோ அதையே பின்பற்றுவதுதான் நமது நாட்டு அரசியல் வாதிகளில் போக்காக இருந்து வரு கின்றது. சமுகவியலாகட்டும், மதவியலாகட்டும் அரசியலா கட்டும், பாஷவியலாகட்டும் மற்ற எந்த இயலா கட்டும் எல்லாவற்றிலும் நமது நாட்டினர் வடநாட்டினர்க்கு அடிமைப்பட்டே வந்து கொண்டிருந்தனர்.

இதற்கு உதாரணமாக இதுவரையிலும் நடந்து வந்திருக்கும் கதர் இயக்கம், காங்கிரஸ் இயக்கம். இந்தியியக்கம் முதலிய வைகளை எடுத்துக் கொண் டாலே போதுமானதாகும். சமீபத்தில், சென்னையிலுள்ள இந்திப் பிரசார சபைக்கு ஒரு கட்டடம் கட்டும் பொருட்டு நிதி சேகரிப்பதற்காகப் பத்திரிகைகளில் ஒரு வேண்டுகோள் வெளிவந்தது.

அதில் இந்தியின் அவசியத்தையும், அதற்குக் கட்டடம் கட்ட வேண்டியதன் அவசியத்தையும் வற்புறுத்திப் பொது ஜனங்களைப் பொருளுதவி செய்யுமாறு வேண்டிக்கொண்டு, பலகையான அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும, சட்டசபை மெம்பர்களும், தாலுகா போர்டு, முனிசிபாலிட்டி ஜில்லா போர்டு, முதலிய ஸ்தாபனங்களில் பதவி வகிப்பவர்களுமாகச் சுமார் 50 பேர்களுக்கு மேல் கையொப்ப மிட்டிருக்கின்றனர்.

உண்மையிலேயே இவர்கள் இந்தி மொழி தேசிய பாஷையாக வேண்டும். அதன் மூலம் மக்கள் நன்மையடைய வேண்டும் என்ற கருத்துடன் இந்தி மொழிக்கு ஆதரவளிக்க முன்வந்தார்களா என்பதுதான் நமக்குச் சந்தேகம். இவர்கள் தங்கள் சொந்த பாஷையின் வளர்ச்சிக்குக் கடுகளவாவது நன்மை செய்திருப்பார்களானால் இந்தி மொழிக்கு ஆதரவளிக்க முன் வந்ததில் ஏதாவது அர்த்தம் இருக்க முடியும். அப்படி யிலலாமல்,

தமிழ் மக்கள் முன்பின் அறியாததும் சமஸ்கிருதம் தெரிந்த பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்குப் படிக்கக் கஷ்டமாயிருப்பதும், துளசிதாஸ் ராமாயணத்தைத் தவிர வேறு இலக்கியங்களோ அல்லது நவீன கலைகளோ இல்லாததும் ஆகிய ஒரு பிரயோசனமற்ற பாஷையைத் தமிழ் மக்களிடம் பரப்ப முன் வருவார்களா? மக்கள் சொந்த மொழியையே கற்க முடியாமல் வாழுகின்ற பொது ஜனங்கள் இந்தி மொழியை எவ்வளவு தூரம் கற்றுக் கொள்ளப் போகிறார்கள்?

இவையெல்லாம் அந்தப் பிரமுகர்களுக்குத் தெரியாத விஷயம் அல்ல. ஆயினும் ஏன் கையெழுத்திடமுன் வந்தார்களென்றால், தங்களைத் தேசாபிமானி என்று காட்டிக் கொள்வதன்மூலம் அடுத்த தேர்தலுக்கு ஆதரவு பெறவே என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. ஆதலால் இதைக் கண்டு யாரும் ஏமாந்து விட வேண்டாமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 03.04.1932

Read more: http://viduthalai.in/page1/94479.html#ixzz3PGhVMbIy

தமிழ் ஓவியா said...

யோகப் புரட்டு


மூச்சடக்கிப் பலவகையாக யோகஞ் செய்வதன் மூலம் சிறிது சரீரம் திடம் பெறுவதற்கு ஏதாவது மார்க்க மிருக்குமேயொழிய அதில் வேறு தெய்வீகத்தன்மை யாதொன்றுமில்லை என்பதே நமது அபிப்பிராயமாகும்.

ஆகவே இதுவும் கழைக் கூத்து, சர்க்கஸ், ஜால வித்தை, முதலியவைகளைப் போல ஒன்றுதான் என்பதில் சந்தேக மில்லை. ஆனால் நமது மக்கள் யோகத்தில் ஏதோ தெய்வீகத்தன்மை இருப்பதாக நம்பியிருப்பதால் அநேகர் யோகிகள் என்று கிளம்பி, சில ஜாலங்களைச் செய்து, பாமர மக்களை மலைக்கச் செய்து ஏமாற்றி வருகின்றனர். ஜன சமுகமும் இவர்கள் பால் பரம்பரையாகவே ஏமாந்து கொண்டும் வருகிறது.

இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கவனித்தால் விளங்கும். ஹட யோகம் என்பதில் சித்தி பெற்றவராகச் சொல்லப்பட்ட நரசிம்மசாமி என்பவர், சென்னை, கல்கத்தா முதலிய இடங்களில், பிரபல ரசாயன சாஸ்திரிகளின் முன்னிலையில், கொடிய விஷம், கண்ணாடித் துண்டுகள், ஆணிகள் முதலியவற்றை விழுங்கி உயிரோடிருந்தாராம்.

இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசாயன சாஸ்திரிகள் எல்லோரும் மலைத்துப் போய்விட்டனர். ஆகவே யோகத்தின் மகிமைப் பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனால் இதே நரசிம்ம சாமியார் சில தினங்களுக்கு முன் ரெங்கூனில் இரண்டாம் முறையாக விஷங்களையும் கண்ணாடித் துண்டுகளையும் விஷங்களையும் விழுங்கிய கொஞ்ச நேரத்திற்குள் மரண யோகம் பெற்று விட்டார்.

இதற்கு காரணம் விஷம் உண்டவுடன் ஹட யோகம் பண்ணு வதற்கு கொஞ்சம் நேரமாகிவிட்டது என்று பத்திரிகைகளில் சொல்லப்படுகின்றன. ஆனால் அவைகளை உட்கொள்ளும் சாதுரியத்திலோ அல்லது மாற்று மருந்தை உட்கொள்ளு வதிலோ அல்லது பழக்கப்பட்ட அளவை உட்கொள்ளுவதிலோ தவறிவிட்டார் என்று ஏன் சொல்லக் கூடாதென்று தான் நாம் கேட்கின்றோம்.

யோகத்தில் தெய்வத் தன்மை உண்டென்பது வீண் புரட்டேயொழிய வேறில்லை. சாதுரியத்தினாலோ அல்லது பழக்கத்தினாலோ அல்லது மாற்று மருந்துகளினாலோ செய்யப்படும் காரியங்களையெல்லாம் யோகமென்றும், மந்திரமென்றும், தேவதை யென்றும், தெய்வசக்தியென்றும், சொல்லி ஒரு கூட்டத்தார் ஜன சமுகத்தை ஏமாற்றி வருகிறார்கள் என்பதை அறிய வேண்டுகிறோம். ஆகையால் இனியேனும் இதுபோன்ற மோசடியான காரியங்களைக் கண்டு ஏமாறாமலிருக்கும்படி எச்சரிக்கை செய்கிறோம்.

குடிஅரசு - கட்டுரை - 03.04.1932

Read more: http://viduthalai.in/page1/94480.html#ixzz3PGhgkE00

தமிழ் ஓவியா said...

சிறப்புச் சிறுகதை-1

சொல்லாடல்

- கோவி.லெனின்

சபா களைகட்டியிருந்தது. குருநாதர் முன்பாக உட்கார்ந்திருந்த சீடர்களுக்குள் அப்படி ஒரு பரவச மனநிலை. தன்னுடைய புதிய படைப்பின் டீசர் வெளியீட்டுக்காகத்தான் இன்றைய சபையைக் கூட்டியிருந்தார் குருநாதர். வாசிக்கட்டுமா? என்று கு.நா. கேட்டதும் பலமாக ஆடியது சீடகோடிகளின் தலை.

உக்கிர சொரூப காளியின் சூலாயுதத்தில் பூத்திருந்தது கருமஞ்சள் பூ. வானத்தில் ஆயிரங்கால் பூச்சி தொங்கியபடி ஊர்ந்தது. நியூயார்க்கின் உயரமான கட்டடத்தில் சிலுக்குவார்பட்டி அழகேசன் ரம்மி ஆடிக் கொண்டிருந்தான். சீட்டுக்கட்டு ஜோக்கர்களின் காமெடிக்கு கிங்கும் குயினும் ஜாக்கிபோல சிரிக்க, க்ளாவரும் ஸ்பேடும் கைதட்டி ரசித்தன.

டீசர் முடிவதற்கு முன்பாகவே, என்ன ஒரு படிமம் சார் என்றது சீடக்குரல் ஒன்று. சார்.. அதிபின்நவீனத்துவத்தை நீங்கதான் தமிழில் ஆரம்பிச்சி வச்சிருக்கீங்க. அபாரம் என்றது இன்னொரு சீடக்குரல்.

இல்லை.. உஸ்பெகிஸ்தானில் இப்படியொரு முயற்சி செய்து தோற்றுப் போயிட்டாங்க. ஆனா நீங்க ஓப்பனிங்லேயே அசத்திட்டீங்க குருவே.. உலகின் முதல் அதிபின்நவீனத்துவப் படைப்பை நீங்கதான் சரியாத் தொடங்கியிருக்கீங்க.

இன்னும் கரெக்ட்டா சொல்லணும்னா தமிழுக்கே நீங்க பெருமை சேர்த்திருக்கீங்க. இப்படிச் சொன்னா உங்களுக்குப் பிடிக்காதுன்னு தெரியும் என்று மூன்றாவது சீடக்குரல் சொன்னபோது, கு.நா. தும்மலை அடக்குவதுபோல தனக்குள் பொங்கி வந்த பரவசத்தை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் காட்டிய முகபாவத்தில் ஞானம் வெளிப்படுவதாக சீடர்கள் சிலாகித்தார்கள். வௌக்குமாறு நாவலின் டீசர் தினத்தை உடனடியாக ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என சமூக வலைத்தளங்கள் அனைத்தும் கொண்டாடின. நாவலின் தலைப்பே அதில் உள்ள அரசியலை அழுத்தமாகச் சொல்வதாகப் பதிவுகள் தம்பட்டமடித்தன.

இந்த அதிபின்நவீனத்துவ நாவலில் உள்அரசியல், வெளிஅரசியல், பக்கவாட்டு அரசியல், குறுக்குவெட்டு அரசியல் என அத்தனையும் தோலுரிக்கப்பட்டிருப்-பதாகவும், 2352 பக்க அளவிலான இந்த வௌக்குமாறு வெளியானதும் அத்தனை கட்சிகளும் ஆடிப்போய்விடும் என்றும் முன்னோட்டங்கள் வெளியாகிக்-கொண்டிருந்தன.

கு.நா.வின் ஒவ்வொரு புத்தகம் வருவதற்கு முன்பும் இப்படித்தான் அது பலமுறை அரசியலைப் புரட்டிப்போடுவதாக அவருடைய சீடகோடிகளும் வாசகர்களும் உறுதியாக நம்புகிறார்கள். போனமுறை பாராளுமன்றத்தில் நடந்த சட்டத்திருத்தம்கூட, கு.நாவின் நாவல் ஏற்படுத்திய தாக்கம்தான் என பிரபல நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரையில் கு.நா.வே எழுதியிருந்ததுதான் எல்லாவற்றையும்விட அதிகப்படியான புரட்டல்.

தமிழ் ஓவியா said...


இருநூறு ஆண்டுகளாகப் புதுச் சொற்கள் இல்லாமல் பாசம்பிடித்திருந்த தமிழ்க்குளத்தின் படிக்கட்டுகளை ப்ளீச்சிங் பவுடர் போட்டு க்ளீன் செய்து, பல புதிய வார்த்தைகளை அவர்தான் தன்னுடைய படைப்புகள் மூலம் தந்திருக்கிறார் என்று ஒரு வாசகர் எழுதியிருந்த கடிதமும் அதில் அவர் குறிப்பிட்டிருந்த சதுரவட்டமுக்கோணம் என்கிற கு.நாவின் சொல்லாடலுக்கு இணையாக உலகின் எந்த மொழியிலும் வார்த்தை இல்லை என்கிற வரிகளும் இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை உண்டாக்கி, இரண்டு மாதங்களாக அதுகுறித்த ஆய்வுகளும் விவாதங்களும் தொலைக்காட்சி நேரலைகள் வரை முக்கியத்துவம் பெற்றன.

கு.நா. நேரடியாக எந்த விவாதத்திலும் பங்கேற்கவில்லை. அவரது சீடகோடிகள் மயிர்பிளக்கும் வாதங்களால் எதிராளிகளைத் திணறடித்தனர். வேதகால ஞானத்தின் நீட்சியாக எழுதிக்கொண்டிருந்கும் கு.நா.தான் அதிபின்நவீனத்துவத்தின் பீஷ்மர் என்பதை எல்லாத் தளங்களிலும் படாதபாடுபட்டு நிறுவிக்கொண்டிருந்தனர். இந்தப் பின்னணியில்தான், பட்டுக்குஞ்சத்தால் கட்டப்பட்டிருந்த வௌக்குமாறு இலக்கிய ஜாம்பவான்களாலும் தொழிலதிபர்களாலும் கட்டு பிரிக்கப்பட்டுப் பிரமாதமாக வெளியிடப்பட்டது.

அரங்கில் 52 பேர் இருந்தார்கள். இரண்டு டன் ஏ.சி. 8 இருந்ததால் குளிர் அதிகமாக இருந்தது. புத்தகத்தைத் தானே வெளியிட்டுப் பேசிய கு.நா., அறிவுஜீவிகள் எல்லா நாட்டிலும் குறைவாகத்தான் இருப்பார்கள். டான்சானி-யாவின் பிரபல எழுத்தாளர் தன்னுடைய நூலை வெளியிட்டபோது 13 பேர்தான் இருந்தார்கள். அவர்கள்தான் அந்த நாட்டின் மொத்த அறிவுஜீவிகள். இங்குகூட 52 பேரும் அறிவுஜீவிகள் என நான் நம்பவில்லை.

27 பேர் மட்டுமே அறிவுஜீவிகளாகத் தெரிகிறார்கள். மற்ற 25 பேரும் இன்று முதல் அறிவுஜீவி-களாகும் நிலை உருவாகியிருக்கிறது. என்னுடைய ஒவ்வொரு புத்தகமும் வெளியாகும்-போது இப்படிப்பட்ட அறிவுஜீவிகள் உருவாகிறார்கள் என்பதை இலக்கிய உலகம் அறியும் என்றார்.

கு.நா.வின் பேச்சில் வெளிப்பட்டது அறச்சீற்றம் என்றும், குளிர் அரங்கத்தை அது உஷ்ணமாக்கிவிட்டது என்றும் அவருடைய சீடகோடிகளில் ஒருவரான பத்திரிகை நிருபர் அந்த வார இதழின் புத்தக வெடி பகுதியில் எழுதியிருந்தார். டீக்கடையில் நின்றிருந்த கு.நாவின் சீடகோடிகள் அந்த புத்தக வெடி பகுதியைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

எஃப்.எம் ரேடியோவில் ஜாக்கியாக இருக்கும் தீவிர வாசகர் ஒருவரும், டி.வி. காம்பியராக இருக்கும் சின்சியர் வாசகி ஒருவரும் பாடல்களுக்கு நடுநடுவே வௌக்குமாறு பற்றியும் கு.நா. பற்றியும் குறிப்புகளைச் சொல்ல அது காஃபி ஷாப், மல்ட்டிப்ளக்ஸ் போன்ற பல இடங்களிலும் கவனத்தை ஈர்த்தது. வௌக்குமாறு வாங்கிட்டீங்களா? என்று கேட்பது சமூகத்தில் தவிர்க்க முடியாத சம்பிரதாயமாக மாறிவிட்டது.

புதுவாசகர் ஒருவர், வௌக்குமாறு படிச்சிட்டேன் என்றதும், படிச்சிட்டேன்னு சொல்லாதே, வாசிச்சதா சொல்லு. அதில்தான் ஒரு லயம் இருக்குது என்று திருத்திய நெடுங்கால வாசகர் ஒருவர், வாசிச்சேன்னு சொல்றப்ப இசை கேட்கிற மாதிரி இனிமையா இருக்கும்.

படிச்சிட்டேன்னு சொன்னா பள்ளிக்கூடப் புத்தகம் மாதிரி ரேஞ்ஜ் குறைஞ்சிடுது என்றார். ஆமாம் என்று தலையாட்டிய புதுவாசகர், வாசிக்கிறது எப்போதுமே இனிமைதான். நாம பீச்சுக்குப் போயிருந்த ராத்திரி நேரத்துல நீகூட நல்லா ஃப்ளூட் வாசிச்சியே என்று சொல்லி, வாசிப்பு என்ற வார்த்தையின் அர்த்தத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டதை உணர்த்தினார்.

தமிழ் ஓவியா said...


வௌக்குமாறு பற்றிய உரையாடல்கள்தான் இலக்கிய உலகத்தின் எல்லாத் திசைகளிலும் கேட்கிறது என கு.நாவின் வாசகர்களால் பேசப்பட்டுப் பதிவாக, அதை மறுத்த எழுத்தாளர் ராகுகாலன் (சுருக்கமாக ராகா) தன்னுடைய ஜால்ரா நாவலின் சத்தம்தான் எல்லா இடத்திலும் ஒலிக்கிறது என்றும் விற்பனையிலும் சக்கைப் போடு போடுகிறது என்றும் பேட்டிகள் கொடுக்கத் தொடங்கினார்.

ஜால்ரா நாவலே கு.நா.வையும் அவரது சீடகோடிகளையும் மய்ய இழையாக வைத்து எழுதப்பட்ட குறியீடுதான் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

கு.நா.வா, ராகாவா என்ற விவாதம் தீப்பற்றி எரிய, காஷ்மீர் பிரச்சினை முதல் காவிரிப் பிரச்சினை வரை அனைத்தும் பின்னுக்குப் போயின. இருதரப்பின் நேரடிச் சீடர்களும், ஆன்லைன் சீடர்களும் தூங்கிய நேரம்போக மிச்சப் பொழுதுகளை உரையாடல்களிலேயே கழித்தனர்.

அவர்களுடைய சொல்லாடல்கள் தமிழ் இலக்கியத்தின் விவாதப் பரப்பை ஏக்கர் கணக்கில் பெரிதாக்கியிருப்பதாக சிற்றிதழ்களில் கிலோமீட்டர் நீளத்திற்கான கட்டுரைகளும் அதையொட்டிய விவாதங்களும் தொடர்ந்தன. இது தமிழின் மறுமலர்ச்சிக்காலம் என இலக்கியப் பீடங்கள் பெருமைப்பட்டன.

உண்மையைச் சொன்னால், இரண்டு எழுத்தாளர்களும் ரகசியமாகப் பேசிவைத்துக்கொண்டு இப்படியொரு விவாதத்தை உருவாக்கி, புத்தக விற்பனையை அதிகமாக்கியிருக்கிறார்கள் என்கிற புலனாய்வுத் தகவலும் காதில் விழுந்தது.

புத்தகத் திருவிழாவில் ராகாவின் ஜால்ராவைவிட, கு.நாவின் வௌக்கமாறு 32 பிரதிகள் கூடுதலாக விற்றதாக ஜனரஞ்சக பத்திரிகையில் வெளியான புள்ளிவிவரம் குறித்து சிற்றிதழ் நேசர்கள் காரசாரமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.

கூடுதல் விற்பனையால் கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருந்த கு.நாவின் சீடர்களுக்குப் பேரிடியாய் இறங்கியது டெல்லித் தகவல். இந்த ஆண்டுக்கான விருது, ராகாவின் ஜால்ரா_வுக்குத்தான் என்ற தகவலால் கொண்டாட்ட மனங்கள் இழவு வீடாயின.

வருத்தத்தோடு கூடியது சபா. சீடர்களின் முகத்தைப் பார்த்தபடி இருந்த கு.நா.வின் மனதில் வௌக்கமாறு விற்பனையின் ராயல்டி கணக்கு ஓட, அது அவரது முகத்தில் திருப்தியை வெளிப்படுத்தியது. சீடர்களிடம், ரிக்வேத ஆச்சரியங்கள் முதல் அடை-_அவியல் ரெசிபி வரை பேசிக்கொண்டே இருந்தார் குருநாதர்.

இந்த நிலையிலும் இப்படித் தெளிவாக வார்த்தைகளைக் கொட்டுகின்ற ஞானப்பேரரருவியை நினைத்து மீண்டும் சிலாகித்தது சீடர் வட்டம்.

தானே தயாரித்த, மணமணக்கும் சுக்கு டீயை சீடர்களுக்குக் கொடுத்த கு.நா., தனது அடுத்த படைப்பு பற்றிப் பேச ஆரம்பித்தார். 5432 பக்கங்களுக்குத் திட்டமிட்டிருப்பதாகவும், நாவலை முடிக்கும்போது கடைசி வார்த்தையாக எது அமைகிறதோ அதையே நாவலின் தலைப்பாக வைக்கப்போவதாகவும் சொன்னார்.

இதை மீறி இன்னொரு கதைக்கு விருது கொடுத்துவிட முடியாது என்றனர் சீடகோடிகள். அதிபின்நவீனத்துவத்தின் அடுத்த கட்டம் பற்றிய உரையாடல்கள் பல கிலோ மீட்டர்களுக்குப் பயணிக்கத் தொடங்கின வேகமாகவும், அதிபயங்கரமாகவும்.

தமிழ் ஓவியா said...

எது தமிழ்த் திருமணம்?

மூடச் சடங்கில் முக்கியச் சடங்கு

திருமணச் சடங்குகளிலேயே பெரும் மூடச் சடங்கு மணமகளுக்குத் தாலி கட்டுதல் ஆகும். ஒருத்தி ஒருவனுக்கு உரியவளாகி விட்டாள் என்பதை எடுத்துக்காட்டும் சடங்காம். தாலி எனும் சொல் திருமணச் சின்னத்தைக் குறிக்கும் சொல். ஆக 11ஆம் நூற்றாண்டில்தான் பயன்படுத்தப்பட்டது.

கடவுள் எனப்படும் முருகன் செய்துகொண்ட ஒரு திருமணத்தில் தாலி கட்டியதாகக் குறிப்பு உள்ளது. அவனே செய்துகொண்ட இன்னொரு திருமணத்தில் (வள்ளி திருமணம்) இத்தகைய குறிப்பில்லை.இக்கடவுளின் தந்தைக் கடவுள் செய்து கொண்ட (சிவன்) திருமணத்திலும்கூட இக்குறிப்பில்லை. தெய்வயானை என்பாளை முருகன் திருமணம் செய்துகொண்ட நிகழ்ச்சியை,

மங்கல நாணை மணிக்களம் ஆர்த்து நங்கை முடிக்கோர் நறுந்தொடை சூழ்ந்தான் என்று கந்த புராணம் கூறுகிறது. மங்கல நாண் அணிவித்தானாம். அத்துடன் மலரையும் அவளின் கூந்தலில் சூட்டினானாம்.

திருமணத்தன்று மணப்பெண்ணுக்கு மலர் சூடுவதுதான், அவள் திருமணம் ஆனவள் என்பதற்கான அடையாளம் என்பதாக அகநானூற்றுக் காலத்திலிருந்தே வரும் பழக்கம். ஒன்றுக்கு இரண்டாக அடையாளம் இருக்கட்டுமே என்றானோ, கடவுள்? ஒன்றுக்கு இரண்டாக மனைவியைக் கொண்டவன் ஆயிற்றே!

தொங்குதல் எனும் பொருள் கொண்டது நாலுதல் எனும் சொல். நாலுதல் தாலுதலாகி அதுவும் சுருங்கி தாலி என்றாகியது என விளக்கம் தருகின்றார்கள் தமிழ் படித்தோர். தால், தாலம் என்பன பனைமரத்தின் பெயர்கள்.

பனங்குருத்தோலையால் செய்யப்பட்ட நகைகள் சிறுவர் சிறுமியர்க்கு அணிவிப்பது வழக்கம். தாலிக் கொழுந்தைத் தடங் கழுத்தில் பூண்டு என்று கண்ணனை வருணிக்கிறார் பெரியாழ்வார்.

திருமால் எனும் கடவுளின் ஆயுதங்கள் எனப்படும் சங்கு, சக்கரம், வில், வாள், கதை ஆகிய அய்ந்தையும் சிறு வடிவில் செய்து ஆண் குழந்தைக்கு அய்ந்து மாதம் வயதாகும்போது அணிவிக்கும் பழக்கம் இருந்தது. இதனை அய்ம்படைத் தாலி என்றனர்.

அய்ம்படைச் சதங்கை சாத்தி என்று பெரிய புராணத்தில் குறிப்பிடப்படுகிறது. தாலி அய்ம்படைத் தழுவு மார்பிடை என்று கம்பராமாயணம் பாடுகிறது. அய்ம்படை மார்பிற் காணேன் என்ற பரஞ்சோதி எழுதிய திருவிளையாடல் புராணம் கூறும்.

புறநானூற்றில்கூட (பாடல் 77) தார்பூண்டு தாலி களைந்தன்றுமிலனே பால்விட்டு அயினியும் இன்று அயின்றனனே எனக் கூறி, தலையானங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இளம் பருவத்திலேயே பகைவரை வென்றதைப் பாடுகிறது.

புலியுடன் சண்டை செய்து கொன்று அதன் பல்லைக் கொண்டு அணிசெய்து அதனைப் புலிப்பல் தாலி என்றனர். புறநானூறு (374). இதனை புலிப்பல் தாலிப் புலம்பு மணிச் சிறார் எனப் பாடுகிறது. இதனையே சிறுமியரும் அணிந்ததை அகநானூறு (பாடல் 7) இவ்வாறு பாடுகிறது.

புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி ஒலிக்குழைச் செயலை உடைமாண் அல்குல் என்று!

மறங்கொள் வயப்புலி வாய்பிளந்துபெற்ற
மாலை வெண் பற்றாலி _ என்று இதனைச் சிலப்பதிகாரமும் பாடுகிறது.
இதுதவிர, பின் தாலி எனவும் ஒன்றுண்டு என சிலப்பதிகாரம் கூறுகிறது.

முதுகை மறைக்கும் அளவுக்கு முத்தாரத்தில் நவ ரத்தினங்கள் கோத்துச் செய்யப்படும் அணி பின்தாலி எனப்பட்டது. தாலி என்றால் தொங்குவது எனும் பொருளில்தான் இந்தப் பெயர். இவ்வாறே முன்பக்கம் தொங்கும் அணி சின்மணித்தாலி எனப்பட்டது.

ஆமைத்தாலி என்பதை அக்குவடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்தசயனன் தளர்நடை நடலானே எனப் பெரியாழ்வார் பாசுரத்தில் குறிப்பிடப்-படுகிறது. இதுவும் சிறுவர்கள் கழுத்தில் அணியும் நகை என்கிறார்கள்.

இவற்றால், தாலி என்பது மணமகன் மணமகளை மனைவியாக ஏற்றுக் கொண்டதன் அடையாளச் சின்னமாக அறியப்பட்டது என்பது சரியில்லை. தொங்கும் அணிகளைக் குறிக்கும் சொல்லாகத்தான் பயன்படுத்தப்-பட்டது.

சின்னம் இழையே

அகநானூற்றில் வரும் (பாடல் 86) மணமகளுக்குக் குளிப்பாட்டிய முதிய மகளிர்பற்றிப் பாடும்போது வாலிழை மகளிர் நால்வர்கூடி என வருகிறது. பாடல் 136இல் மழைபட்டன்ன மணன்மலிபந்தக்/இழையணி சிறப்பின் பெயர் வியர்ப்பாற்றி என வரும் வரிகளால் இழை அணிவிக்கப்பட்டது என உணரலாம்.

தமிழ் ஓவியா said...


இந்த இழை வெறும் நூல் இழை மட்டுமே. இவர்கள் கூறும் தாலி கோக்கப்படாத வெறும் இழைதான் அணிவிக்கப்பட்டதாகக் கருதலாம்.

ஈகையரிய இழையணி மகளிரொடு
சாயின்றென்ப ஆய்கோயில்

என வரும் புறநானூற்றுப் பாடலில் (127) எல்லாப் பொருளையும் வாரி வழங்கிய ஆய் மன்னனின் மகளிர் ஓர் இழையை மட்டுமே அணிந்திருந்த காரணத்தால் ஒளி குறைந்து காணப்பட்டனர் எனக் கூறப்படுகிறது. தகதகக்கும் தங்கநகை இன்மையால் ஒளி குறையத்தானே செய்யும்?

கரிகால் பெருவளத்தான் இறந்தபோது அவனின் உரிமை மகளிர் அணிமணிகளைக் களைந்தனர் என்றாலும் இழையையும் களைந்துவிட்டனர் என்று புறநானூறு பாடல் 224இல் புலவர் கருங்குழலாதனார் பாடியுள்ளார். கணவனை இழந்தோர் கழற்ற வேண்டியது இழை எனப் பொருள்படுகிறது. தாலி அல்ல என்பதை உணரலாம்.

மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் வந்து திருமணம் செய்துகொண்ட காட்சியைக் காட்டும் சிலப்பதிகாரம்கூட தாலி கட்டிய காட்சியைக் காட்டவில்லை. கோவலன் கொலை செய்யப்பட்டதை அறிந்த கண்ணகி தாலியை அகற்றினாள் எனப் பாடவும் இல்லை. வளையல்களை உடைத்தாள் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தாலி மங்கல மகளிர் இழக்கக் கூடாத ஒன்று எனும் பொருளில் கந்தபுராணம் மட்டுமே முதலில் கூறியுள்ளது. திருப்பாற்கடலை (உலக வரைபடத்தில் அப்படியொரு கடல் இருக்காது _ புராணப் புளுகில் இதுவும் ஒன்று) தேவரும் அசுரரும் கடைந்தபோது எழுந்த ஆலகால விஷத்தைச் சிவன் உண்டதால் பிரம்மன், திருமால் முதலிய தேவர்களின் உயிரைக் காப்பாற்றினான் என்றும் அதன்மூலம் தேவர்களின் மனைவியரின் தாலிகளைக் காப்பாற்றினான் என்றும் பாடல் உள்ளது.

செற்றால முயிரனைத்தும் உண்டிடவே
நிமிர்ந்தெழலும் சிந்தை மேற்கொள்
பற்றாலங்கது நுகர்ந்து நான்முகனே
முதலோர் தம்பாவை மார்கள்
பொற்றாலி தனையளித்தோன் புகழ்போற்றி

என்பது பாடல். இதனால்தான் இந்தப் புளுகு கந்த புராணத்திலும் இல்லை என்கிற சொல்லடை உண்டானதுவோ?

ராம காதையைப் பாடிய கம்பன் இறந்தபோது பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருப்ப நாமடந்தை நூலிழந்த நாள் என்று ஒட்டக்கூத்தர் எனும் புலவர் பாடியதாகப் பாடல் ஒன்று உண்டு. கொண்டவன் இறந்தால் மகளிர் இழக்க வேண்டியது இழை என்றுதான் இப்பாடலும் குறிக்கிறது.

மாறாக, அபிதான சிந்தாமணி கூறுகிறது. திருமணத்தில் கொண்டோன் தெய்வம் வாழ்த்தித் தன் தேச சம்ரட்சணார்த்தம் தன் சந்ததியின் விருத்தியின் பொருட்டும் கொண்ட மனைவியின் கழுத்தில் தேவரிஷிகள் புரோகிதர் முதலியோர் சாட்சியாகக் கட்டும் அடையாளமாம்.

இதற்குத் தாலி என்பது முற்கால, தற்கால வழக்கம். இந்தத் தாலியைச் செல்வமுள்ளோர் பொன் முதலியவற்றாலும் மற்றவற்றாலும் செய்து அணிவர். செல்வமில்லா ஏழைகள் மரத்தாலும் ஓலையாலும் செய்து அணிவர்.

இதனைத் தாலபத்திரம் என்னும் ஓலையால் பலர் அணிதல் பற்றியே இதற்குத் தாலி என்று காரணப் பெயர் உண்டாயிற்று. மரத்தாலியும் உண்டாயிற்று போலும்.

இது வடநாட்டில் தற்காலம் சில கீழ் ஜாதியாரிடம் நடைபெறுகிறது. இதன் உரு, தேசங்கள் தோறும் ஜாதிகள்தோறும் வேறுபடுகிறது. இத்தாலி, பலவற்றால் செய்யப்படும் என்பதை ஸ்வர்ணேன ரஜதேனை வாதாம் ரேணதா ருஜைரபிஅதலா தால பத்ரேவா பவுஞ்ச சதுஸ்ரகம் எனும் ஸ்ரீஉத்தர காரண வாக்கியத்தால் அறிக. இதனைப் பதினாறு இழைகள் கொண்ட சூத்திரத்தில் கோக்க வேண்டும் என்பது. (பக்கம் 1234)

ஊருக்கு ஊர் வேறுபட்டும் ஜாதிக்கு ஜாதி மாறுபட்டும் காட்சியளிக்கும் தாலி பலவகைப்படும். 1. பெருந்தாலி, 2. சிறுதாலி, 3. தொங்குத்தாலி, 4. பொட்டுத்தாலி, 5. சங்குத்தாலி, 6. ரசத்தாலி, 7. தொப்புத்தாலி, 8. உருண்டைத்தாலி, 9. கருந்தாலி, 10. ஜாகாத்தாலி, 11. இருதாலி, 12. தாலிகட்டி எனப் பட்டியல் நீளும். இதன்னியில், காதுகளில் அணியும் தோடுகூட மங்கல அணியாகக் கருதப்பட்ட நிலையும் இருந்தது. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் இயற்றிய மதுரைக் கலம்பகத்தில்,

நம்பா நினக்குஓலம் முறையோ எனக்கால
நஞ்சுண்டு பித்துண்டு நாம்தேவர் என்பார்
தம்பாவையர்க்கு அன்று காதோலை பாலித்த
தயவாளர்... என்று பாடிப் போகிறார்.

எனவே மலர் அணிந்தும், இழை அணிந்தும், வளை அணிந்தும், தோடு அணிந்தும் தாம் மணமானவர் என்பதை மகளிர் உணர்த்தி இறுதியில் தாலியை அணிந்து அதனை இசகுபிசகான இடத்தில் தொங்கவிட்டு அதைத் துருவிப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற நிலைக்குக் கொண்டு வந்துள்ளதைக் கவனிக்க வேண்டும்.

இந்த நிலை தமிழ் மகளிர்க்கு மட்டுமே! தமிழ்நாட்டு மகளிர்க்கு மட்டுமே! வடநாட்டுப் பெண்கள் தாலி அணி-வதில்லை.

அவர்கட்குத் தாலி கட்டுவ-தில்லை. நெற்றிக் குங்குமம் மட்டுமே அடையாளம். பார்த்தாலே தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

திருமணம் செய்துகொள்ளும் வரை அவர்கள் பொட்டு வைப்பதில்லை. வடநாட்டில் இல்லாதது தமிழ்நாட்டில் மட்டும் எப்படி வந்தது? தமிழர் திருமணத்தில் மட்டும் எப்படிப் புகுந்தது?

தமிழ் ஓவியா said...

சூழவியல்

- ச.முகமது அலி, க.யோகானந்த்

அந்தப் பக்கம் ஒரு ஒத்தக் கொம்பன் இருக்கு

முல்லை நிலத்துக்குரிய யானை உள்ளிட்ட உயிரினங்களை குறிஞ்சியை நோக்கி விரட்டிவிட்டு, காட்டையும் அழித்துவிட்டு, யானைகள் அத்துமீறி ஊருக்குள் புகுந்ததாக - அவற்றின் மீதே குற்றப் பத்திரிகை படிக்கும் அளவுக்கு இயற்கை குறித்த பார்வை மங்கிப் போயிருக்கிறது நமக்கு!

மனிதனுக்கும் கானுயிர்களுக்குமிடையிலான மோதல் அத்தனை அறங்களையும் மீறியதாக, பல வடிவில் நடந்து கொண்டிருக்கிறது. கட்டுரையாளர்களின் இந்தப் பயணத்திலும் அப்படி ஒரு சூழல் அமைகிறது...

கோவை பேருந்து நிலையத்தில் சிறுவாணி என்ற பெயர்ப் பலகை இட்ட ஒரு பேருந்தைப் பார்க்கும்போதெல்லாம், எப்போது அங்கு செல்லப் போகிறோம் என்ற ஏக்கம் எழ காரணம் இருந்தது. பேருந்தின் பலகையில்தான் சிறுவாணி என்று இருக்குமே தவிர அதில் உள்ளபடியே அது சிறுவாணிக்கு ஒருபோதும் செல்லாது.

அது மேற்கேயுள்ள பேரூரைக் கடந்து, பல்லுயிரினக் களஞ்சியமான மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளின் ஒரு எல்லை ஓரத்திலுள்ள சாடிவயல் என்ற கிராமத்தின் வழியே, தேக்கு மரங்களடர்ந்த, இலையுதிர் காட்டினுள் சுமார் 3 கி.மீ. தொலைவிலிருக்கும் குடிநீர் வடிகால் வாரியத்தின் அலுவலர்களின் குடியமைப்பு வரை மட்டுமே சென்று திரும்பும். அந்த இடம், மலை மேல் 3000 அடி உயரத்திலுள்ள சிறுவாணி அணையிலிருந்து குடிநீரைப் பெற்று கோவைக்கு அனுப்பும் இடமாகும்.

1995இல், சிறு ஊனுண்ணிகள் குறித்து நீலகிரி உயிர் மண்டலத்தில் ஆராய்ச்சி செய்து வந்த தோழர் யோகானந்த், சிறுவாணியில் தமது களப்பணியைச் செய்துவந்தபோதுதான் அப்பகுதியைப் பார்த்து, வியக்க வாய்ப்பு வந்தது.

சிறுவாணியில் அன்று பிற்பகல். காட்டுப் பாதையில், இக்கட்டான பயணத்தை முடித்துக் கொண்டு நண்பர் தினேஷ் உட்பட மூவரும் ஒரு சரக்கு வண்டியிலிருந்து இறங்கினோம். குக்குறுவான்களின் பின்னணி ஓசையில் மனத்தில் இனம் புரியா திகைப்பு.

அடர்ந்து செறிந்த காடு. எதிரேயிருந்த பள்ளத்தாக்கை அடுத்திருந்த மழைக்காடு இருண்டு காணப்-பட்டது. ஆங்காங்கே காட்டுக் கோழிகளின் கயாக் கக் என்ற கீச்சுக் கூவல் எதிரொலி.

சின்ன இருவாசிப் பறவைகளின் தனித்த, உரத்த கேவல் மொழி, அங்குமிங்குமாக மலைச்-சிட்டான்கள் என பளபளத்த புதியதொரு பசுமை உலகம். சில்லென்ற காற்றில், எங்கள் வியர்த்த உடல் குளிர்ந்தது. எதிரே விடுதிக் காவலர் ஜோசப் வர, நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.

3, 4 நாட்கள் பல பகுதிகளிலும் சுற்றித் திரிந்த நாங்கள், அந்த ஓங்கிய பெரும் மழைக் காட்டில் விதவிதமான பறவைகள், ஒரு சிறுத்தைப் பூனையின் காலடித்தடம், நீர்நாய்களின் எச்சங்கள், கரடியின் கழிவுகள், பூச்சியினங்கள் பல, ஊர்ந்து சென்ற ஒரு கருநாகம் (King Cobra)ஆகியவற்றைப் பார்த்தோம்.

வெயிலும், மழையும் என அக்காட்டின் மாறுபட்ட தன்மை கிளர்ச்சி-யூட்டியது. இயற்கையின் கோடிக்கணக்கான அர்த்தங்கள் புரிந்தும் புரியா நிலையில், நிம்மதி மேலிட, நாட்கள் நகர்ந்ததே தெரியவில்லை.

ஊர் திரும்பும் நாள் வந்தது. பிற்பகல் 3 மணி, பை முதுகில் தொற்றிக் கொள்ள, சற்று தொலைவு நடந்து சென்று, தகரம் வேய்ந்த ஒரே குடிசைக் கடையில், வரத்தேநீர் அருந்திவிட்டு தார் சாலையிலேயே கொஞ்ச தூரம் செல்வோம் என ஆசையுடன் நடக்கலானோம். கடையிலிருந்தவர்கள் ஒன்றைச் சொன்னார்கள் பாத்துப் போங்க அந்தப் பக்கம் ஒரு ஒத்தக் கொம்பன் இருக்கு!

அஞ்சுவதஞ்சாமை பேதமை என்பது புரியாது சிரித்துக் கொண்டே அவர்களை மறந்து நடைபோட்டோம்... இனிய பருவக் காற்று, மாசுமருவற்ற சூழல், மாலை வேளை, மழைக்காட்டு ஓரம், ஜொலிக்கும் பசுமையான சூழல். தலைக்கு மேல் அடிக்கடி பச்சைப் புறாக்கள் (Emerald dove) வேகமாகப் பறந்தன.

நீண்ட தூரம் நடந்திருப்போம். ஒரு திருப்பம் முடிந்ததும், சாலை நீண்டிருந்தது. மூவரும் சாலை நடுவே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தோம். ஒரு வகை மௌனம். மாலை 5 மணி இருக்கும்.

வீசிய ஈரக்காற்று எங்களைத் தொட்டு முன்னே சென்றபோது, எதிரே வலதுபுறம் சுமார் 60 அடி தூரத்திலிருந்த ஒரு இளம் வேங்கை மரத்தின் கிளைப்பகுதி வெடுக்கென்று பலமாகக் குலுங்கியது. கொண்டைக் குருவிகள் இரண்டு குர்ர்ரோ... கீக் என்ற சந்தேகக் குரல் கொடுத்து ஒரு புதரிலிருந்து விருட்டெனப் பறந்தன.

தமிழ் ஓவியா said...

துணுக்குற்ற நாங்கள், எங்களை அறியாமல் நின்றோம். அந்த இடத்தில் கண்கள் நிலைத்து நோக்க..
பெரிய காட்டு யானை ஒன்று, டைனோசரைப் போல நடந்து வந்து சாலையின் குறுக்கே நிற்கின்றது. எதிர்பாராத பேருருவம்...

அதிர்ச்சியில் யானை என்று கத்தியதோடு சில நொடிகளுக்கே அதைப் பார்க்கும் வாய்ப்பு, ஒரு தந்தம் மட்டுமே அதற்கு இருந்தது. ஒற்றைக் கொம்பன் தலையைத் திரும்பி எங்களைப் பார்த்ததும் வீர் எனப் பிளிறிக் கொண்டு எங்களை நோக்கி ஓடி வந்தது. அவ்வளவுதான் மூவருக்கும் ஓட்டப்பந்தயம்.

சுமார் 200 அடி தூரம் அப்படி ஓடியிருக்க வேண்டியதில்லை திரும்பி மட்டும் பார்த்திருந்தால். உறைய வைத்த அந்தப் பிளிறல் பேரோசையின் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாது எங்கள் உடல்கள் நடுங்கின. துடிதுடித்த இதயங்கள் உடல்களைப் படபடக்கச் செய்தன. வியர்த்து மூச்சிறைக்க திரும்பிப் பார்த்தோம்.... அதே வேங்கை மர ஓரத்தில் அந்த யானை எதையோ பறித்துக் கொண்டிருந்தது.

தமிழ் ஓவியா said...

நாங்கள் பீதியுடன் மெல்லச் சிரித்தோம். அடுத்து என்ன செய்வது? எப்படி ஊருக்குச் செல்வது? போன்ற சிந்தனைகளுடன் வந்த வழியே திரும்பி நடக்கத் தொடங்கினோம். 2 கி.மீ. வந்து ஒரு பாலத்தின் பக்கச் சுவரில் அமர்ந்தோம். ஜோசப் வருவதாகச் சொல்லியிருந்த இன்டேக் பகுதியில், இன்னும் அந்த லாரி காத்திருக்காது. மணி 6.15... பொழுது போய்விட்டது. வேறு ஏதாவது யானைகள் வந்துவிடுமோ...?

தகரக் குடிசைத் தேநீர் விடுதிக்கே சென்று விடலாம் என எழுந்து புறப்பட... ஒரு ஆச்சரியம். ஏதோ ஒரு வண்டி வரும் ஓசை கேட்டது. இரண்டு நிமிடங்களில் ஒரு பழைய ஜீப் முனகிக் கொண்டே வர, நிறுத்தச் செய்து, கீழே சாடிவயல் வரை செல்லக் கேட்டுத் தொற்றிக் கொண்டோம். உள்ளே மொத்தமாக 12 பேர், யானை விஷயத்தை ஓட்டுநரிடம் சொல்ல அவர் முகம் விகாரமடைந்தது. ம், வண்டியில ஹார்ன் வேற இல்ல... என்ற மலையாள வார்த்தைகள் மெல்ல வந்தன.

தமிழ் ஓவியா said...


நாங்கள் வந்த வழியே சிறிது நேரம் ஓடியது வண்டி. பிறகு அந்தத் திருப்பத்தில் வண்டி திரும்பியது. அங்கே... அதே ஒற்றைத் தந்த யானை, கிறீச்சிட்டு நின்றது ஜீப். சகிக்க முடியாத அவ்வொலி கேட்ட யானை பிளிறிக் கொண்டு முன்னே ஓடி வரத் தொடங்கியது. ஜீப்பை இவன் பின்னெடுக்க, உள்ளிருந்த ஆட்கள் கோவென கூச்சலிட, நாங்கள் மூவரும் நடு வண்டிக்குள் பாதுகாப்பாக இரசித்துக் கொண்டிருந்தோம்.

தலையை உயர்த்தி, காதை விரித்துக் கொண்டு 20_30 அடிகள் விரட்டிய யானை, வந்த வேகத்தில் திரும்பி ஓடி, பழைய இடத்துக்கே போய் நின்றது. எதைச் சொன்னாலும் கேட்க மறுத்த ஜீப் ஓட்டுநர் எங்களையெல்லாம் கத்தச் சொல்லியபோது, காத்திருந்தவர்கள் போல விதவிதமான குரல்களில் கடும் கூச்சல் போட்டனர் ஏனையோர். தைரியம் பெற வேறு வழி?

30 மீட்டர் தொலைவில் தனது பின்புறத்தைக் காட்டிக் கொண்டிருந்த யானை அப்போதும் நகரவில்லை. ஓட்டுநரின் எலும்பும் தோலுமாயிருந்த உதவியாளன் எஞ்சின் அணைக்கப்படா வண்டியில் ஒரு காலும், தரையில் ஒரு காலுமாய் நின்றுகொண்டு தன் தொண்டைக்கு மீறிய பெருங்குரலில் அப்பா முருகா எங்களை மன்னிச்சிக்க, வழிய விடு, நாங்க ரொம்ப தூரம் போகணும், புள்ள குட்டிக தேடுவாங்க (மனைவி அல்ல) முருகா வழி விடப்பா என வேண்டினான். பாமர மக்களின் வெகுளித்தனமான வேண்டுதல்களை இரசித்தோம். சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டோம்.

சுமார் 5 நிமிடங்களுக்குப் பிறகு எங்களால் இடையூறுக்குட்பட்ட அந்த யானை தனது பெரும் உடலை மெல்ல அசைத்து இடது பக்கமுள்ள ஒரு மேட்டில் ஏறி நின்றது. இப்பொழுது ஜீப் செல்ல வழியுண்டு. பயத்தில் உடல் நடுங்கினாலும் ஒருவாறு சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் மெல்ல வண்டியை ஓரத்தில் நகர்த்தி, சற்று வேகத்தைக் கூட்டி, முடிந்தவரை வலதுபுற ஓரமாக ஓட்டிச் செல்ல அந்த இடத்தருகே வந்தபோது, நாங்கள் யானையை மிக அருகே பார்த்தோம்.

நீட்டிய அதன் தும்பிக்கை முனைக்கும் வண்டிக்கும் சுமார் 20 அடிகளே இருந்தன. சட்டென வேகம் பிடித்த ஜீப், எங்களுக்கும், யானைக்கும் பெரிய நிம்மதியைத் தந்தது.

காடுகளில் பலமுறை யானைகளைச் சந்தித்த அனுபவம் எங்களுக்கு உண்டு. ஆனால் வாழ்வில் மறக்கமுடியாத மேற்கண்ட சம்பவத்தின் ஒவ்வொரு முனையிலும் நாங்களே தவறு செய்திருக்கிறோம் என்பதை நீங்கள் கூர்ந்தறிதல் வேண்டும். யானைகளுக்கு மக்கள் நினைப்பதுபோல சூதும், வாதும், பழி உணர்வும் இருக்குமேயானால் இந்நூல் எழுத நாங்கள் இல்லை அல்லவா?

உயிரினங்கள் வாழும் காடுகளை நாம் கிள்ளுக் கீரையாக நினைத்துக் கொண்டிருக்-கிறோம். நமக்கு நமது வீடுகள் போலவே அவற்றுக்குக் காடுகளே வீடுகள் என்பதையும், கானகம் நமது சுற்றுலாத் தலமல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். இந்த வரையறைக்கும் நாம்தாம் காரணம்: மக்கள்தொகையைப் பெருக்கியதும், காடுகளின் பரப்பளவைக் குறுக்கியதும், காட்டுயிர்களைக் கொன்று குவித்ததும் மனிதர்தானே?

தனியுடைமை, ஊழல், தாழ்மை, அறியாமை, ஜாதி, மதவெறி போன்ற நெருடலான நமது சூழலில் யானைகளைக் காப்பாற்றுவது எளிதல்ல. சட்டம், கையொப்பம், உத்தரவு, சம்பளம், மிரட்டல், தண்டனை ஆகியவையே இன்று யானைகளைக் காப்பாற்றி வருகின்றன என்பதைவிட, இப்புவிச் செழிப்பின் சின்னமான அப்பேருயிரின் அழிவைச் சற்றுத் தள்ளிப்போட மட்டுமே அவை உதவுகின்றன எனலாம்.

இந்நிலை மாற மக்கள் மனம் மாற்றப்பட வேண்டும். இதை வழக்கம்போல் அரசுக்கு ஓயாது சொல்லிக் கொண்டிருப்பதைவிட வேறு என்ன செய்துவிட முடியும்? ஒரு வேளை அரசு தீவிரச் செயலில் இறங்கும்போது, கடைசி யானையின் பாடம் செய்யப்பட்ட பஞ்சடைத்த உடல் அருங்காட்சியகத்தில் வைக்கப்-பட்டிருக்கலாம்.

முடிவாக ஒன்றைக் குறித்... டுமீல் அதோ கோடிக்கணக்கான ஆண்டுகள் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றியடைந்த, இப்புவியில் வாழும் உரிமையை நமக்கு முன்பே பெற்றுவிட்ட, தந்தம் தாங்கிய மேலும் ஒரு கம்பீரமான ஆண் யானை சுடப்பட்டு, காடே எதிரொலிக்கும் கதறலுடன் பிணமாகச் சாய்கிறது. இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?

இயற்கை வரலாறு அறக்கட்டளையின் வெளியீடான அழியும் பேருயிர்: யானைகள் நூலிலிருந்து...
நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்க: 9894140750

தமிழ் ஓவியா said...

இவ்விடம் அரசியல் பேசலாம்

இந்த சாமியாருக தொல்லை தாங்க முடியலப்பா!

சந்தானத்தின் சலூனுக்குள் தோழர் மகேந்திரன் நுழைந்ததுமே தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தோழர் என்று வரவேற்றார்.

உங்களுக்கும் வாழ்த்துகள் தோழர்!
இந்தப் பொங்கல் விடுமுறைக்கு ஊருக்குப் போகலையா தோழர்? என சந்தானம் கேட்க,

எங்க ஊருக்குப் போக? பொங்கல் விடுமுறையைக் கணக்குப் பண்ணி பத்தே நிமிடத்துல அத்தனை ரயில் டிக்கெட்டுகளையும் பதிவு பண்ணிடுறாங்க. குழந்தை குட்டியோட போற நான், பேருந்தை நம்பினால் சீரழிய வேண்டியதுதான்! அதனால் தமிழ்ப் புத்தாண்டு எப்பவுமே சென்னைலதான் தோழர் எனக்கு!

அதுசரி, எத்தனை ரயில்வே பட்ஜெட் வந்தாலும் தமிழ்நாட்டுக்கு மட்டும் ரயில் எண்ணிக்கை குறையுமே தவிர கூடிடாது! வந்தாரை வாழவைக்கும் சென்னை இப்பல்லாம் வந்தவங்களை வழியனுப்ப முடியாமல் திணறிக்கிட்டிருக்கு!
ஆமா தோழர். என்னைக்கு இதுக்கெல்லாம் விடிவுகாலம் வரப்போகுதோ!

இது மட்டும் பணிவு முதல்வரோட காதுல விழுந்துச்சுன்னா அம்மா எக்ஸ்பிரஸ்னு பத்து இருபது ரயில் வண்டியைப் புதுசா விட்டு அசத்திட மாட்டாங்க! அதுமட்டுமா, அந்த ரயில் முழுக்க மக்கள் முதல்வரோட விளம்பரமா ஒட்டி மிரட்டிட மாட்டாங்க!

கண்டிப்பா பண்ணுவாங்க! தண்டவாள இரும்புலகூட கட்சி விளம்பரம் பண்ணிடு-வாங்களே!
விளம்பரம்னதும்தான் ஒரு விசயம் நினைவுக்கு வருது தோழர். இந்த ஆன்மீக வியாபாரிகள் பண்ற விளம்பரங்களைப் பார்த்திங்களா?
இந்து ஆன்மீக கும்பலைச் சொல்றிங்களா? இல்லை கிறித்துவ ஆன்மீக வியாபாரக் கும்பலைச் சொல்றிங்களா?

ரெண்டு கும்பலையும்தான் சொல்றேன்! கடவுள் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்னு சொல்றாங்க, ஆனால் உண்மையில் எல்லா மின்விளக்குத் தூணிலும் இந்த கார்ப்பரேட் ஆன்மீக வியாபாரிகள்தான் இருக்காங்க பார்த்திங்களா தோழர்?

ஆமா ஆமா. இப்ப அமிர்தானந்தமயி வேற சென்னைக்கு வரப்போறதா பேனர் வச்சிருக்காங்க பார்த்திங்களா?
யாரு? அந்த முத்தச் சாமியாரிணியா?

அதுவேதான் தோழர். இளைஞர்களின் முத்தப் போராட்டத்தைத் தப்புன்னும் கலாச்சாரக் கேடுன்னும் விமர்சிக்கிற அதே பெருசுங்கதான் அமிர்தானந்தமயியைக் கட்டிப்பிடிச்சு முத்தம் வாங்கறதுக்காக க்யூவுல பயபக்தியா நிக்கிறாங்க! ரத்தத்துல வகை இருக்குற மாதிரி முத்தத்திலும் வகை இருக்கும் போல! ஆன்மீக முத்தங்களை மட்டும் ஏத்துக்கறாங்க!

என சொல்லவும் சிரிப்பு அள்ளியது!. அதுசரி, இந்த பிடதி மேட்டர் பார்த்திங்களா? ஆன்மீகம்ங்கற பெயரில் நித்தியானந்தா கூத்துகளையும் கொலைகளையும் மக்கள் கண்டும் காணாத மாதிரில்ல இருக்காங்க! என்றார் மகேந்திரன்.

கேள்விப்பட்டேன் தோழர். இப்ப நம்ம மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதாங்கற பொண்ணு நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் மர்மமான முறையில் இறந்திருக்கு. இறந்து அடக்கம் பண்ணின பிறகு, இப்போ திரும்ப அந்த உடலை வெளிய எடுத்து போஸ்ட்மார்ட்டம் பண்றாங்க.

வழக்கம்போல இந்த கேசையும் நித்தியானந்தா குரூப் ஒன்னுமில்லாமல் பண்ணிடும். என்ன, சுத்தியிருக்குறவங்க கொஞ்சம் காசு பார்த்திடுவாங்க!

பாவம் அப்பாவி மக்கள் இன்னமும் இவனுங்க வலையில் விழுந்து, பெத்த பொண்ணையே இவனுங்களோட ஆசிரமத்துல சேர்க்கறது கொடுமைல்ல... இப்பதான் அரவிந்தர் ஆசிரமத்துலயும் தற்கொலை சம்பவம் நடந்துச்சு...

உண்மையில இந்த மாதிரித் திருடனுங்களை அடையாளம் காட்டித் துரத்த வேண்டியதே சாமி கும்பிடுறவங்களோட கடமைதான். ஆனால் அவங்க கண்டுங்காணாம இருக்கறதால-தான் இந்தத் திருடனுங்களை நாம அடையாளம் காட்ட வேண்டியிருக்கு...

சாமி கும்பிடாதவங்களுக்கு இதுல என்ன அக்கறைன்னு பாயிண்டா கேள்வி மட்டும் கேட்டுடுவானுங்க வீணாப் போனவனுங்க!

தமிழ் ஓவியா said...

இதுல இன்னொன்னைக் கவனிச்சிங்களா? முன்னல்லாம் மாரியாத்தா, காளியாத்தா, கருப்பண்ணசாமி, முருகன்னு மட்டும் கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. இப்ப இந்த கார்ப்பரேட் சாமியாருங்க வந்தபிறகு ஜக்கம்மாவை விட்டுட்டு ஜக்கியைக் கும்பிடுறாங்க! சிவனை மறந்துட்டு சாய்பாபா காலைக் கழுவி ஊத்திக்கிட்டிருக்காங்க!

பின்ன முருகனுக்கு அறுபடை வீட்டை-விட்டால் கஸ்டமர் கேர் சென்டர் வேற எங்க இருக்கு? அதே நேரத்துல மேல்மருவத்தூர் பங்காருக்கு தெருவுக்குத் தெரு வழிபாட்டு மன்றம்ங்கற பெயர்ல வழிபாட்டு மன்றம் தொடங்கிடுறாங்க! பிறகெப்படி சிவன் அன்ட் பேமிலி வளர்றது?!

சரியாச் சொன்னிங்க, இந்த ஜக்கி கோயமுத்தூர் மலையடிவாரத்துல அம்புட்டு இயற்கைச் சீரழிவைப் பண்ணிப்புட்டு இன்னொரு பக்கம் லட்சக்கணக்குல மரக்கன்று நடுறேன்னு சமூகசேவகனா சீன் போடுறாரு!

இனி சிவனே நேர்ல வந்தாலும் மரக்கன்று நடப்போறேன், அனாதை இல்லத்துக்கு உதவப்போறேன்னு சீன் போட்டால்தான் நம்புவாங்க! சாருநிவேதிதாவுக்கு வாசகர் வட்டம் இருக்கிற மாதிரி சிவனுக்கும் முருகனுக்கும் பக்தர் வட்டம் வச்சுக்கிட்டால்தான் முடியும்! மக்களும் எம்புட்டு நாளைக்குத்தான் நேரில் காட்சி தராத கடவுளையே நம்பிக்கிட்டிருப்பாங்க!

நீங்க சிவன், சாருநிவேதிதான்னு சொன்னதும்தான் இன்னொரு விஷயம் நினைவுக்கு வருது. எழுத்தாளர் பெருமாள்முருகனோட மாதொரு பாகன் நாவலை திருச்செங்கோட்டிலிருந்த கலாச்சாரக் காவலர்கள் குரூப் ஒன்னு தீவைச்சு எரிச்சு கொலை மிரட்டலெல்லாம் விட்டிருக்கறதப் பார்த்திங்களா?

ஆமா ஆமா, அந்த நாவல் வந்து நாலு வருசமாச்சு. பயபுள்ளைங்க இப்பத்தான் முன்னுரையே வாசிச்சிருப்பானுங்க போல!

பெருமாள்முருகனாவது சமகாலத்து எழுத்தாளர், போன் நம்பர்லாம் இருக்கறதால கொலைமிரட்டல் விட்டிருக்காங்க. ஆனால் ராமாயணம், மகாபாரதம் எழுதுன ஆசிரியர்களெல்லாம் உயிரோடவும் இல்லை! அவங்க வாரிசுங்களும்கூட இல்லை! பின்ன எப்படிக் கொலைமிரட்டல் விடுவாங்க?

தசரதனுக்கு ஆயிரக்கணக்கான மனைவிகள் இருந்தது எம்புட்டுப் பெரிய கலாச்சாரச் சீர்கேடு? பாஞ்சாலிக்கு அய்ந்து புருஷன்கள் என்பதும் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? அதையெல்லாம் படிச்சா எதிர்க்கட்சிக்காரன் நம்ம இந்து மதத்தைப்பத்தி என்ன நினைப்பான்?

இதை எதுக்குத் தோழர் இம்புட்டுச் சத்தமாச் சொல்றீங்க?
இதெல்லாம் இங்கிருக்கிற கூஜாக்களுக்குக் கேட்கட்டும்னுதான் சொல்றேன்!
தமிழ்நாட்டுல கூஜாக்கள் இருக்குற மாதிரி பி.ஜே.பி.க்கு நாடு முழுக்க தத்துப்பித்து ஆட்கள் இருந்துக்கிட்டுத்தான் இருக்காங்க தோழர்

தமிழ் ஓவியா said...

ஆமா ஆமா. இப்பக்கூட ஒரு பி.ஜே.பி. தறுதலை, இந்துக்கள் எல்லோரும் நாலு குழந்தை பெத்துக்கணும்னு சொல்லியிருக்கறதப் பார்த்திங்களா?

அவங்களுக்கென்ன, பாதிப்பேரு கல்யாணம் பண்ணாதவங்களும், கல்யாணம் பண்ணியும் மனைவியைத் தள்ளிவைச்சுக் குடும்பம் நடத்தறவங்களும்தான அங்க பெரும்பாலும் தலைவர்களா இருக்காங்க! குடும்பம் நடத்தறதோட கஷ்ட நஷ்டம் அவங்களுக்கு என்ன தெரியும்?

நாலு குழந்தை பெத்துக்கிட்டா இந்துக்களோட எண்ணிக்கை அதிகமாயிடும்னு கணக்குப் போடுற மாதிரி ஏதாவது பொருளாதார மேதை ஏழைகள் அத்தனை பேரும் குழந்தைகளே பெத்துக்கக்கூடாது, குறிப்பா வறுமைக்கோட்டுக்குக் கீழ இருக்கறவங்க இந்தத் தலைமுறையோட வாழ்றதை நிறுத்திக்கிட்டா அடுத்த தலைமுறையில இந்தியா பணக்கார நாடாயிடும்னு சொன்னாலும் சொல்லுவாங்க!

என்ன தோழர் நீங்களே அவங்களுக்கு பாயிண்டு எடுத்துக் கொடுப்பிங்க போல!
இதுல இன்னொரு கொடுமையைக் கேட்டிங்களா தோழர், என்னவோ மக்கள் தொகை வளர்ச்சியைச் சொல்ற மாதிரியே ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் தமிழ்நாட்டில் ஒருத்தர் பி.ஜே.பி.யில சேர்ந்துக்கிட்டிருக்கறதா தமிழிசை மேடம் அறிக்கை விட்டிருக்காங்க!

ஆமா ஆமா! அவனவன் ஆதார் அட்டையே இன்னும் கிடைக்கலைன்னு புலம்பிக்-கிட்டிருக்காங்க... இவங்க உதார் விடுறதைப்-பார்த்தால் ஆதார் அட்டைக்குப் பதிலா அம்புட்டுப் பேருக்கும் பி.ஜே.பி. உறுப்பினர் அட்டை கொடுத்தாலும் கொடுப்பாங்க போல! நாமதான் உஷாரா இருக்கணும்!

இவங்க உதார் விடுறதை பி.ஜே.பி. தலைவர்கள் வேணும்னா ரசிக்கலாம், ஆனால் உண்மை என்னன்னா இப்ப அவங்ககூட இருக்குற ஒவ்வொரு கட்சியா கூட்டணியிலிருந்து வெளியேறிக்கிட்டிருக்கு!

முதலில் ம.தி.மு.க., அடுத்து பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் கிட்டத்தட்ட வெளியேறிட்ட மாதிரிதான்! இதுல சுப்பிரமணியசாமியும் ராஜாவும் பேசறதையெல்லாம் கூட்டணிக் கட்சிகள் பொறுத்துப்போகணும், விமர்சிக்கக்-கூடாதுன்னு அட்வைஸ் வேற!
கூட்டுக்குடித்தனம் இம்புட்டுச் சீக்கிரம் கசந்துடுச்சே!

பின்ன பண்றதெல்லாம் தமிழ்நாட்டுக்கு எதிரானதாகவே இருந்தால் தமிழகக் கட்சிகள் அதையெல்லாம் ரசிச்சுக்கிட்டா இருக்க முடியும் தோழர்?

எந்த விளம்பரங்களை, டெக்னாலஜியை வச்சு இவங்க ஆட்சிக்கு வந்தாங்களோ, இப்ப அதே டெக்னாலஜி இவங்களுக்கு எதிரா திரும்பத் தொடங்கிடுச்சு பார்த்திங்களா?

ஆமா தோழர். இப்பல்லாம் வாட்ஸ் அப், பேஸ்புக்னு எல்லாத்திலும் மீத்தேன் திட்டத்துக்கு எதிர்ப்பு, நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு, கெயில் திட்டத்துக்கு எதிர்ப்புன்னு தமிழ்நாட்டைக் குப்பைக்காடா மாத்துற திட்டங்களுக்கு எதிராகத்தான் நிறைய விழிப்புணர்வு பெருகிக்கிட்டு இருக்குது!
அப்போ அந்த க்ளீன் இந்தியா திட்டம்?

இனி கூடிய விரைவில் கிளைமாக்ஸ்தான்! மத்திய அரசையே கூட்டிப் பெருக்கித் தள்றதுதான் நடக்கப்போகுது!
சீக்கிரம் நடக்கட்டும்... கெட்டுப்போன கங்கையைவிட முக்கியம் இந்த மாதிரி மதவெறியர்களைச் சுத்தம் பண்றதுதான்!

ரொம்பச் சரியாச் சொன்னிங்க தோழர்! விரைவில் அதுதான் நடக்கப்போகுது! இந்தப் புத்தாண்டு நம்ம எல்லாருக்கும் நல்ல ஆண்டா விடியட்டும்!

கண்டிப்பா தோழர்! என்றபடி நிறைவோடு விடைபெற்றார் தோழர் மகேந்திரன்.

தமிழ் ஓவியா said...

இனப்படுகொலையாளனுக்கு ஜனநாயகத் தீர்ப்பு முதல் படியே!


இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருந்தும் கூட, தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சிங்களர்களிடமும் தனக்கு நல்ல பெயர் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட மகிந்த ராஜபக்சே, அந்நிலை மேலும் மோசமாவதற்குள் மூன்றாவது முறையாக அதிபராகிவிடலாம் என்று முடிவு செய்தார். இரண்டுமுறைக்கு மேல் அதிபராக முடியாது என்ற அரசியல் சட்ட அமைப்பையும், தன் போக்குக்கு வளைத்து, தன்னால் நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மொகான் பிரீசை வைத்து மூன்றாவது முறையாகப் போட்டியிட அனுமதியும் பெற்றுவிட்டார்.

அவருடைய ஆஸ்தான ஜோதிடரான சுமனதாச அபயகுணவர்த்தனாவும் அமோகமாக வெற்றிபெற்று விடுவீர்கள் என உறுதி வழங்க, திருப்பதி வெங்கியையும் தரிசித்துவிட்டு, தேர்தல் களத்திற்குத் தயாரானார் இராஜபக்சே. ஒட்டுமொத்த ராஜபக்சே குடும்பத்தின் ஆட்டம் காரணமாக வெறுப்பிலிருந்த மக்கள், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அதிபர் தேர்தலில் போட்டியிட்ட, மகிந்த ராஜபக்சேவின் முன்னாள் அமைச்சரான மைத்ரி பால சிறீசேனாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிபராக்கி யிருக்கின்றனர். இதில் தமிழர்களின் வாக்குகள் தான் மைத்ரி பாலவுக்கு வெற்றியை உறுதி செய்திருக் கின்றன. தமிழர்கள் விசயத்தில் மைத்ரி பால தலைகீழ் மாற்றத்தைக் கொண்டுவந்துவிட மாட்டார் என்றாலும், இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு மக்கள் வழங்கியுள்ள தண்டனை இது. ஆனால், இது முடிவு அல்ல.

அயல்நாடுகளுக்குத் தப்பிச் செல்கிற முகாந்திரம் ராஜபக்சே குடும்பத்திடம் தெரிகிறது. அதைத் தடுத்து, உரிய பன்னாட்டு விசாரணக்கு உட்படுத்தி ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத் தருவது அவசியமாகும். இதை மைத்ரி பால நடத்துவார் என்று எதிர்பார்க்க முடியாவிட்டாலும், உரிய அழுத்தம் தந்து அய்.நா மற்றும் உலக நாடுகள் பன்னாட்டு விசாரணையை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இங்கிருந்த சு.சாமி, ஊடகங்கள் உள்ளிட்ட கைக்கூலிகள் தங்கள் விசுவாசத்தை மாற்றிக் கொள்வார்கள். என்ன, தனது ஆதரவு பெற்றவரும், தன்னைப் போலவே இனப்படுகொலை, உருட்டல்-மிரட்டல், அதிகாரப் போக்கு, அலங்கார பாவனை என்று அலைந்த ராஜபக்சே தோற்றதில் மோடிக்குத் தான் கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கும்!

தமிழ் ஓவியா said...

உழவும் உழைப்பும்
- அறிஞர் அண்ணா

வானத்தை அண்ணாந்து பார்த்தபடியே, நம் நாட்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படுகிறது என நம்நாட்டு நிலையைப் பற்றி அறிஞர்கள் கூறுவர்.

பெரிதும் விவசாயத்தையே உறுதுணையாகக் கொண்டு வாழும் நாடு இது. 100-க்கு 80-க்கு மேற்பட்டவர்கள் கலப்பையையே கருவூலமாக நம்பி வாழுகின்றனர்.
கவிகள் வேண்டுமானால் மேழிச் செல்வத்தைப் பற்றியும் ஏரடிக்கும் சிறுகோலைப் பற்றியும், வெண்பாக்கள் அமைத்துப் பாடலாம். வேளாண்மையின் சீரையும் சிறப்பையும் பற்றிப் பேசி மகிழலாம்.

ஆனால் விவசாயம் ஒன்றையே நம்பி வாழும் எந்த நாடும், நாகரிக உலகில் நல்லதொரு இடம் பெற்று இனி வாழ முடியாது என்பதை உலக வளர்ச்சி சரிதம் விளக்கிக் கூறுகிறது.

விவசாயம் மட்டுமே நடத்தி, உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து குவித்து, தொழிலுக்கு உதவும் வேறு உற்பத்திப் பொருள்களை உண்டாக்கி அவைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு, வாழ்ந்து வந்ததே, பொருளாதாரத் துறையில் நம் நாடு நசித்து வருவதற்கு முக்கியமான காரணம். மேனாடுகளில் உள்ளதைப் போலவே, தொழில் வளர்ச்சியும், விவசாயத்தோடு இணைந்து இருந்தால் மட்டுமே, நாட்டுச் செல்வ நிலையைப் பண்படுத்திப் பெருக்க முடியும்.

விவசாயத் தொழில், இந்தியாவில் உள்ளதைப்போல வேறு எங்கும் மோசமாக இல்லவே இல்லை. இங்குதான், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போன்ற எலும்பும் தோலுமாக உள்ள உழவனும், அவனது இளைத்துப்போன எருதும், மூதாதையர் தந்த கலப்பையும், முதுகை நெரிக்கும் சுமையும் உள்ளன.

இந்த நாட்டில்தான் இன்றளவும், வறண்ட நிலமும், வற்றிப்போன குட்டையும், வாழ்க்கையில் இன்பமென்பது யாது என அறியாது வறுமையிற் பிறந்து வளர்ந்து, வறுமையின் மடிமீது படுத்துத் தூங்கும் அடிமைகளும் உள்ளனர். ஏர் உழுவது, முதற்கொண்டு அறுவடை வரையில் நம் நாட்டார் மட்டுமே பன்னெடு நாட்களுக்கு முன்பு இருந்த பழைமையான முறைகளையே கையாண்டு வருகின்றனர்.

பழைமையின் கடைசிப் புகலிடம் கிராமங்களே! பழைமைப்பித்து முற்றிலும் கொண்டவர்களும் கிராமத்தவரே, ஒன்றரை ஏக்கர் நிலத்திலே ஒன்பது பாகம்! உழுது பயிரிடுவோரின் உழைப்போ, மிருக உழைப்பு! மிராசுதாரரோ நிலத்தை உழவனிடம் தந்து, நெற்கதிரைத் தம்மிடம் கொண்டு வாழுபவர்.

மாற்றம், காலப்போக்கின் கண்ணோட்டம், நாகரிகம் கிராமங்களுக்குச் செல்வதில்லை, அன்று இருந்த அவதியே இன்றுமிருக்கிறது. அதே நிலையில் கிராமங்கள் என்றென்றும் இருக்கவேண்டுமென்பதே, காந்தியாரின் கிராமப் புனருத்தாரணத் திட்டம்.

தமிழ் ஓவியா said...


ஆம்! உள்ளபடி, மேனாடுகளில் இதே விவசாயம் நடத்தப்படும் வித்தையும், அவர்கள் அங்கு கையாளும் முறைகளையும் கண்டவர் நம் நாட்டு விவசாயத்தையுங் காணில் இதனை கிராமவாசியின் கர்ம பலன் என்று கூறுவரேயன்றி நாட்டின் நல்வாழ்வுச் சாதனம் என்று கூறார்.

இன்றைய விவசாய முறையால் வரும் கேடுகள் யாவை? விவசாயமுறை பெரிதும் பழைமையை வளர்த்து கிராமத்தில் காட்டுமிராண்டித் தன்மையைத் தந்து வருவது மறைமுகமான கேடு என்ற போதிலும் மற்றைய கேடுகளைப் பெற்றெடுத்து வளர்க்கும் நாயகமாக விளங்குகிறது.

வாழ்க்கையில் கசப்பு, மனச்-சோர்வு, தன்னம்பிக்கை அற்ற தன்மையையே அது வளர்க்கிறது. ஒரு விதமான பரபரப்பு, சுறுசுறுப்பு, வேகம், எழுச்சி, விழிப்பு வருவதாகக் காணோம். கோழி கூவும்போது கூரைவீட்டில் குறட்டை விட்டுத் தூங்கும் உழவன், எழுந்திருந்து கோணல் கலப்பையைத் தூக்கிக் கொண்டு கொடிவழி நடந்து நிலம் சேர்ந்து நெற்றி வியர்வை நிலத்துசிந்த மாலை இருள் வரும் வரை உழைக்கிறான், நரம்புகள் அத்தனைக்கும் வேலை.

கை கால்கள் கசக்கப்படுகின்றன. மேனி கறுத்து அவன் ஒரு தனி ஜாதியானோ என அய்யுறுமாறு மாறிவிடுகிறான். இவ்வளவு கஷ்டப்பட்டும் பட்டபாட்டிற்கு தக்க பலன் உண்டா? இல்லை! விளைவு முன்பு இருந்ததைவிட வளர்ந்ததா? கிடையாது.

முன்பிருந்ததைவிட வேறுவிதமான, வகையான பொருள்கள் விளைகிறதோ? அஃதும் இல்லை. ஏன்? இன்னமும் உழவன் பழைமையில் நெளிகிறானே தவிர, விஞ்ஞானத்தைத் துணை கொண்டு வாழ முற்படவில்லை. இன்றளவும் அவனைச் சுற்றி அந்தகாரம் இருக்கிறதேயல்லாமல் நவநாகரிகச் சுடர் காணப்படுவதில்லை.

உழைப்பு இந்நாட்டில் மட்டுமே மிக மிக அலட்சியமாகக் கருதப்பட்டு வருகிறது. உழைப்பு மட்டுமா? உயிரும் அப்படியே! ஏதோ மனிதன் பிறந்தான் _ - மாயப்பிரபஞ்சத்தில் சின்னாள் இருப்பான், பிறகு மறு உலகு சென்று மகேஸ்வரனோடு கலந்து மலரும் மணமும் போல இருப்பான் என்று கருதப்படும் நாடு இஃதேயன்றோ! ஆகவேதான் இங்கு மனித உழைப்பு, உழைப்பிற்கேற்ற பலன் பெறாத முறையில் வகுக்கப்பட்டுள்ள உழவு முறைக்குப் பலியாக்கப்பட்டு

வருகிறது.
எத்துணை சேதம்! எவ்வளவு அமோகமான உழைப்பு வீணாகிறது! எத்தனை ஆயிரக்கணக்-கானவர்கள் எலும்பு நொறுங்க வேலைசெய்து வாழ்க்கையை நடத்துகின்றனர். அவ்வாழ்க்கை-யிலும், வெறும் நடைப்பிணங்களாகவன்றோ உள்ளனர்.

உழவு பயனற்றதா? அல்ல! உழவு நம் நாட்டவருக்குப் பசிபோக பண்டந்தரவல்ல-தன்றோ! செல்வம் கொழித்து நம் நாட்டவர் சீருடன் வாழவும், தேயிலைத் தோட்டம் சென்று தேம்பி வாழும் தமிழர் யாவரும் தமிழகத்திலேயே தன்மதிப்போடு வாழவும் முடியும். எப்போது? உழவு வெறும் உழைப்பாக மட்டுமன்றி உழவுத் தொழிலாக, விஞ்ஞான முறையைத் துணைக் கொண்டு நடத்தப்படின்.

நூல்: பேரறிஞர் அண்ணாவின் அறிவூட்டும் கட்டுரைகள்

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வும் அதன் தலைவர்களும் மதத்தை அடிப்படையாக வைத்து அரசியல் நடத்துகின்றனர். இது மோசமான விளைவு-களை ஏற்படுத்தும். இதை உணராமலேயே அவர்கள் தொடர்ந்து மக்களைத் தவறாக வழி நடத்துகின்றனர்.

- அகிலேஷ் யாதவ், உ.பி. முதல் அமைச்சர்

விநாயகனின் தலையில் யானையின் தலையைப் பொருத்தியதன் மூலம் புராண காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறை தொடங்கிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். இதுபோன்ற கருத்துகள் வரலாற்றைத் திரிப்பதாகும்.

இவ்வாறு திரிக்கப்படும் வரலாற்று உண்மைகள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுவது கவலைக்குரியது.

- இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சில்

நமது நாட்டில் சட்டங்களுக்கும் நலத் திட்டங்களுக்கும் குறைவில்லை. ஆனால் அவற்றை அரசு இயந்திரம் சரியாக அமல்படுத்துவதில்லை. இதனால் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள், சமூக_பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. நம் நாட்டில் மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை.

- நீதிபதி டி. முருகேசன், மனித உரிமை ஆணைய உறுப்பினர்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இந்தியா இருந்தபோது பெண்களின் சுதந்திரம் குறித்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பெண்கள் பல முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்-களாக உள்ளனர். இருந்தும் பெண் குழந்தைகள் இறப்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கின்றன. அய்.நா. அறிக்கையின்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

சமூகத்தில் உள்ள அனைத்துத் தளங்களிலும் பெண்களின் பங்கை அதிகப்படுத்த வேண்டும். அதன்மூலம் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்.

- நீதிபதி ராமசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றம்.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசு நிருவாகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. திட்டக் கமிசனுக்குப் பதிலாக உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைப்பிலும் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம்தான் நிலவுகிறது. ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள்தான் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டின் நிர்வாகத்தையே கேலிக் கூத்தாக்கிவிடும்.

- தருண் கோகாய், அசாம் மாநில முதல் அமைச்சர்.

தற்போது முன்னேறி வருகின்ற இந்தக் காலம் அறிவுக் களஞ்சியங்களைக் கொண்ட உலகம் ஆகும். இந்த அறிவு உலகத்தில் மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள பாடப் புத்தகங்-களையும் தாண்டி மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டியது அவசியம் ஆகும். புத்தக வாசிப்பை சுகமான மற்றும் சுலபமான ஒரு அனுபவமாக மாணவர்கள் கருத வேண்டும்.

- சி.சைலேந்திர பாபு, ஏடிஜிபி தமிழக கடலோரக் காவல்படை

தமிழ் ஓவியா said...

கர்மவீர பூமிபுத்திர நாதுராம்ஜீ கோட்சே
திரைப்படம் விரைவில்

ஜனவரி 30 வெளியீடாம்

நாதுராம் கோட்சேவைத் தூக்கிலிட்ட தினமான நவம்பர் 15 அவரது நினைவு நாளாக கடந்த ஆண்டு (2014) மகராஷ்டிரா முழுவதும் கடைப்பிடிக்கப்-பட்டது. மகராஷ்டிரா மாநிலம் பன்வேலில் நடந்த ஒரு பொதுக்-கூட்டத்தில் பேசிய இந்து மகாசபை செய்தித் தொடர்பாளர் தினேஷ் போன்சலே கூறியதாவது:

நாம் இன்று ஷஹூரிய திவஸ் (வீரர்களின் நினைவுநாள்) கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். நாம் இந்து தேசத்திற்காகப் பாடுபட்ட வீரர்களை என்றும் நினைவில் கொள்ள வேண்டும். நமது இந்துமதப் பாதுகாப்பிற்காக நாதுராம் கோட்சே தனது இன்னுயிரை ஈந்த நாள் இன்று.

இந்த நாளை நாடுமுழுவதும் கொண்டாடி வருகிறோம். நாங்கள் இன்றும் நாதுராம் கோட்சேவின் சாம்பலைப் போற்றிப் பாதுகாத்து வருகிறோம். அதை அகண்ட பாரதமான பிறகு சிந்து நதி கடலில் கலக்கும் இடத்தில் (காராச்சி,-பாகிஸ்தான்) கரைப்போம். இது எங்கள் சத்தியப் பிரமாணம்.

இதை வரும் தலைமுறைக்கு எடுத்துக்கூறவே இந்த நாளை உங்களுக்கு நினைவுப்-படுத்துகிறோம். வரும் தலைமுறைக்கு நாதுராம் கோட்சேவின் உண்மையான வரலாற்றை எடுத்துக்கூறும் விதமாக கர்மவீர பூமிபுத்திர நாதுராம்ஜீ கோட்சே (தற்போது தேஷபக்த் கோட்சே என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற திரைப்படத்தை ஜனவரி 30-ஆம் தேதி வெளியிட இருக்கிறோம்.

உண்மையான தேசபக்தனின் வரலாற்றை அனைத்து இந்துக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். கோட்சேவுக்கு சிலை வைக்க இடங்-களைத் தேர்வு செய்துவிட்டதாகக் கூறும் இவ்வமைப்பு இப்படியொரு படத்தை வெளியிட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

குறுஞ்செய்தி


பிரம்மாவின் ஒரு தினத்தில் ஒருமுறை அதாவது நமது புராணம் என்றால் புருடா என்று பொருள்.

860,00,00,000 (860 கோடி) ஆண்டு-களுக்கு ஒரு முறை எந்த நோக்கத்திற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறாரோ அந்த நோக்கத்திற்குச் சிறைப்பட்ட ஜீவாத்மாவை வழி நடத்துவதற்காக பகவத் கீதையை உள்ளது உள்ளபடி அளிப்பதே எமது ஒரே லட்சியமாகும்.- இந்தச் செய்தி, பகவத் கீதை உண்மையுருவில் என்று பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா (ஸ்தாபக ஆசாரியர் : அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) (சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில்) எழுதி, ஆத்ம தத்வ தாஸ் தமிழாக்கம் செய்து 1971ஆம் ஆண்டில் வெளியிடப்-பட்ட நூலில் (முன்னுரையில்) உள்ளது.

சத்ய யுகம் 1728000ஆண்டுகள், திரேதாயுகம் 1296000 ஆண்டுகள், துவாபரயுகம் 864000 ஆண்டுகள், கலியுகம் 4,32,000 ஆண்டுகள். மொத்தம் 43,20,000 ஆண்டுகள்தான். எனும்போது, நமது 860,00,00,000 (860கோடி) ஆண்டுகளுக்கு ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறார் என்பது எப்படிச் சரியாகும்?

கடவுள் கதை என்றால் ஆராய்ந்து பார்க்கக் கூடாது என்று சொல்லி-விடுவதால் யாரும் யோசிப்பதில்லை. ஆனால் நாம் யோசிப்போமே?! -

- க.அருள்மொழி, குடியாத்தம்

தமிழ் ஓவியா said...

இந்துத்துவா

கோட்சேவுக்கு சிலை

பார்ப்பனியத்தைப் புரிந்து கொண்டு மதவெறியை எதிர்த்த காரணத்தால் அண்ணல் காந்தியாரை, அகண்ட பாரதத்தின் எதிரி மற்றும் இந்துக்களின் துரோகி என்று கூறி கோட்சே தலைமையிலான குழு திட்டமிட்டுக் கொலை செய்தது. இந்தக் கொலை நிரூபிக்கப்பட்டு, கோட்சேவிற்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க. அரசு இந்துத்துவச் சக்திகளின் அரசாக அமைந்ததால், இந்துத்துவக் கொள்கைகளைத் தூக்கிப் பிடித்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் சாக்சி மகராஜ் என்ற சாமியார் நாதுராம் கோட்சேவை தேசபக்தன் என்று கூறி பிறகு மன்னிப்புக் கேட்டார்.

இது, நாடாளுமன்றத்தில் மிகவும் விவாதத்திற் குள்ளாகிக் கொண்டுள்ள நிலையில், தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சகோதர அமைப்பான இந்து மகாசபை இந்தியா முழுவதும் நாதுராம் கோட்சேவின் சிலையைத் திறக்க முடிவு செய்துள்ளதாம்.

இது குறித்து இந்துமகா சபைத் தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக் எக்னாமிக் டைம்ஸ் என்ற இதழுக்கு அளித்த பேட்டியில் நாங்கள் ஜனவரி 30 ஆம் தேதி (காந்தி கொலை செய்யப்பட்ட நாள்) இந்தியா முழுவதும் கோட்சேவின் சிலையைத் திறக்க விருக்கிறோம்.

இதற்காக ராஜஸ்தானின் கிஷான் கட் என்ற ஊரில் நூற்றுக்கணக்கான பளிங்குச் சிலைகள் தயாராகிக் கொண்டு இருக்கின்றன. புதுடில்லியில் கோட்சே தங்கி இருந்த மத்திய டில்லியில் உள்ள கிருஷ்ணகஞ்சில் கோட்சே சிலையுடன் அவருக்கான காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது.

நாங்கள் மத்திய அரசிடம் உடனடியாக அய்ந்து நகரங்களில் வைக்க அனுமதி கேட்டு இருக்கிறோம். மத்திய அரசு எங்களுக்கு அனுமதியளிக்காவிட்டாலும் கவலையில்லை, நாங்கள் இந்த நாட்டின் மகாபுருஷர்களுக்குச் சிலை வைக்க யாரும் தடைசெய்ய முடியாது.

விரைவில் நாடெங்கும் கோட்சேவின் சிலைகள் வைக்கப்படும் என்று கூறியுள்ளார். கோட்சே இந்து மகாசபையின் தலைமையகத்தில்தான் வந்து தங்கினார். புதுடில்லியில் உள்ள தலைமையகத்தில்தான் அவர் துப்பாக்கிச்சுடும் பயிற்சி பெற்றார்.

அவருக்குப் புகலிடமும், திட்டமிட்டுக் கொடுத்ததும் இந்துமகாசபையின் உறுப்பினர்கள்-தான். 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் கோட்சேவின் சிலைகள் செய்ய உத்தர-விடப்பட்டு, இந்தச் சிலைகளில் 17 சிலைகள் டில்லியில் உள்ள இந்து மகாசபை தலைமையகத்திற்கு வந்துவிட்டனவாம்.

காந்தியைக் கொலைசெய்வதற்கு முந்தைய நாள் முழுவதும் கோட்சே இந்துமகாசபை உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் விவாதம் நடத்தினான். அவனுக்குத் துப்பாக்கிச் சுடப் பயிற்சியளித்த இடத்தில் தற்போது அவனுக்கான சிலை அமைக்கும் மேடைகள் தயாராக உள்ளன என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்த விவாதங்களை முதலில் மறுத்த பா.ஜ.க. இப்போது மெல்ல மெல்ல கோட்சே ஒரு தேசபக்தன்தான் என்று சொல்லத் தொடங்கியுள்ளது. காந்தியைக் கொன்ற கோட்சேவின் இயக்கத் தலைவருக்கு பாரத ரத்னா கொடுத்த அரசு வேறு எப்படியிருக்கும்?

தமிழ்நாட்டில் கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று ஒருவர் வேகமாக சுவரொட்டி அடித்து ஒட்டினார். ஈரோட்டில் அப்படிப் பரபரப்பை ஏற்படுத்திய சுபாஷ் சுவாமிநாதன் யார் தெரியுமா? இதோ நக்கீரன் (2015, ஜன. 03_06) இதழ் சொல்கிறது.
யார் இவர்? எதற்காக இந்தக் கொடிய கோரிக்கை? விசாரணையில் இறங்கினோம்.

100 நாளில் கோடீஸ்வரன் ஆக்குகிறேன் என்று திருச்சியில் பல நூறு மக்களிடம் வசூல் செய்து கோடீஸ்வரரான ரவிச்சந்திரனின் பார்ட்னராக இருந்தவர்தான் இந்த சுபாஷ் சுவாமிநாதன். பணமோசடி, முறைகேடுகள் என பல புகார்கள் இவர்மீது உள்ளன. அவற்றிலிருந்து தப்பிப்பதற் காகவே அகில பாரத இந்து மகா சபா கட்சி என்றொரு லெட்டர் பேடு கட்சியை ஆரம்பித்து அதன் இளைஞர் அணி தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டவர்.

எனக்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பஜ்ரங்தள் எல்லாம் ஆதரவு தெரிவித்துள்ளன என்று பலரிடமும் தெரிவித் திருக்கிறார் இந்த சுபாஷ்.
அயோக்கியத்தனத்தின் பிறப்பிடமும் புகலிடமுமாக காவிதானே இருக்கிறது!

தமிழ் ஓவியா said...

-கி.தளபதிராஜ்

சனாதனப் பற்றாளரே
மாளவியா!

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மதன்மோகன் மாளவியாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. மாளவியாவை சீர்திருத்தவாதி போன்று ஊடகங்கள் சித்தரிக்க முயன்றாலும், ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் மாளவியாவைத் தூக்கிப்பிடிப்பதைப் பார்த்தாலே அவர் எப்படிப்பட்டவர் என்பதை நம்மால் ஓரளவு உணர முடியும்.இந்து மகாசபையின் தலைவராக இருந்த மாளவியா சாஸ்திரங்களைத் தூக்கிப்பிடித்த சனாதனவாதி. தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் சரக்கு தமிழ்நாட்டில் போனியாகாத போதெல்லாம் வடநாட்டுப் பார்ப்பனர்களை வரவழைத்து வித்தை காண்பிப்பது வழக்கம்.

அப்படி அழைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்த மாளவியா என்பதும், தமிழ்நாட்டிற்கு வந்து பலமுறை மூக்குடைபட்டுத் திரும்பியவர் என்பதையும் வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்.

1929இல் "சாஸ்திரம் அறிந்தவன் நான். நமக்கு ஜாதிகள் இருக்க வேண்டியது அவசியம்" என்று பேசிய மாளவியாவை எதிர்த்து "கிறிஸ்துவனையோ, மகமதியனையோ இந்துவாக்கினால் அவனை எந்த ஜாதியில் சேர்ப்பீர்கள்?" என்று கேட்க, அதற்கு "சாஸ்திரத்தைப் பார்த்துத்தான் பதில் சொல்ல வேண்டும்" என்று நழுவியவர் மாளவியா.

"உங்கள் இந்து யூனிவர்சிட்டியில் ஈழவர்களைச் சேர்த்துக் கொள்வீர்களா?" என்ற கேள்விக்கு, "நீங்கள் புலையர்களைக் கல்லூரிகளில் சேர்ப்பீர்களா?" என ஆத்திரம் பொங்கக் கேட்டார் மாளவியா.

கூட்டத்தினர் எழுந்து ஏகோபித்த குரலில் "நாங்கள் சேர்த்துக் கொள்வோம். அதில் எங்களுக்கு ஆட்சேபணை எதுவுமில்லை" என்று சொல்ல, மாளவியா மூர்ச்சையாகிப் போனதாக அன்றைய குடிஅரசு எழுதியது.

தொடர்ந்து ஜாதியமைப்பை ஆதரித்துப் பேசிவந்த மாளவியாவைக் கண்டித்து மீண்டும் தலையங்கம் எழுதியது குடிஅரசு பத்திரிகை. "இந்து ஜாதிய அமைப்பில், எல்லா ஜாதியினருக்கும் ஒரே மாதிரியான சத்தியம் இருக்க முடியாது.

மற்றொருவன் சமைத்ததைப் பாவம் என்றும், மற்றொருவன் தொட்ட தண்ணீரைக் குடிப்பது தோஷம் என்றும், மற்றொருவன் பார்க்கச் சாப்பிடுவது நரகம் சித்திக்கக் கூடியது என்றும் பண்டித மாளவியா போன்ற 'உத்தம பிராமணர்'களுக்குத் தோன்றலாம். ஆனால் இப்படி நினைப்பதே ஆணவமென்றும், அறிவீனம் என்றும் அந்த வழக்கத்தை ஒழித்தாலொழிய, நாடு ஒற்றுமையும், சமத்துவமும் அடையாதென்றும், அதை ஒழிக்க சத்தியாகிரகம் செய்ய வேண்டுமென்றும் உண்மையான சமூகச் சீர்திருத்தக்காரர்களுக்குத் தோன்றலாம்"என்று குறிப்பிட்டிருந்தது.

தாழ்த்தப்பட்டோருக்கான தனி வாக்காளர் தொகுதியை மாளவியா எதிர்த்தபோது, பார்ப்பனியத்தைக் காப்பாற்ற மாளவியாவிற்கு எவ்வளவு அக்கறை உண்டோ அதுபோலவே பார்ப்பனியத்தை ஒழித்து மனிதத்தன்மையைப் பெற அம்பேத்கருக்கும், இரட்டைமலை சீனிசாசனுக்கும் உரிமை உண்டு என்று சொன்னார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார்.

பம்பாய் கல்பதேவியில், 1932ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி-யொன்றில் சமபந்தி போஜனம், கலப்பு மணம் இவற்றைப் பொறுத்தவரையில் ஜாதிக்கட்டுப்-பாடுகளை ஒழிக்கும் விஷயத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாது என்று பேசினார் மாளவியா.

தீண்டாமை ஒழிய வேண்டுமானால் முதலில் ஜாதி வித்தியாசம் ஒழிந்தாக வேண்டும். ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டுமானால் ஜாதிக்கட்டுப்பாடும், வருணாசிரம தருமங்களும் குழிவெட்டிப் புதைக்கப்பட வேண்டும். இவற்றை நிறைவேற்ற நாட்டில் கலப்புத் திருமணங்கள் நடைபெற வேண்டும்.

"ஒவ்வொரு ஜாதிகளும் தமக்கு மேற்பட்ட ஜாதிகளுடனும், கீழ்ப்பட்ட ஜாதிகளுடனும் கலந்து ஒன்றாக வேண்டும். பஞ்சமர் முதல் பார்ப்பனர் வரையுள்ள எல்லா வகுப்புகளும் கலந்து ஒன்றாகும் வரை ஜாதிகள் ஒழியாது. தீண்டாமையும் ஒழியாது.

இன்று இக்காரியங்களுக்குத் தடையாக இருப்பது இந்து மதமும், அதில் உள்ள வேத, புராண, இதிகாச, சாஸ்திரங்களும் அதைப் படித்துவிட்டுச் சொந்தப் புத்தியில்லாமல் இருக்கும் மாளவியா போன்ற மண்ணுருண்டை-களுமே ஆகும்" என்று மாளவியாவின் பேச்சிற்கு குடிஅரசு பதிலடி கொடுத்தது. அப்படிப்பட்ட ஒருவருக்குத்தான் தற்போது காவிக் கூட்டம் பாரத ரத்னா வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

தமிழ் ஓவியா said...

தமிழில் திருமணத் திட்டம் உண்டா?

கேட்டல்: சரி, பெரியார் தமிழில் திருமணம் பற்றிய திட்டம் ஒன்றுமில்லை என்று கூறுகிறாரே?

கிளத்தல்: திருமண முறையில் கோடிக்-கணக்கான குப்பைகள், மூடச் செய்கைகள், முட்டாள்-தனமான செலவுகள், நடைமுறைகள், மானக்கேடான செயல்கள் சேர்ந்துள்ளன; இவைகளையெல்லாம் எடுத்துக்காட்டி ஒதுக்கச் சொல்லுகிறவர் பெரியார் ஒருவர்தாம்! இவர் பேசுகின்ற முறையில் திருமணம் பற்றித் தமிழில் ஒரே இடமாக எங்கே விளக்கப்பட்டிருக்கின்றது.

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (14.6.1960)

தமிழ் ஓவியா said...

தலைவிரித்தாடும் வேலையின்மை

வளர்ச்சி வளர்ச்சி என்ற வசீகரமான குரலைக் கொடுத்து ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துள்ள பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மக்கள் மத்தியிலே பெரியதோர் ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது.

இந்த ஏழரை மாதங்களில் மதவாத ஓங்காரக் குரலேயன்றி, மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி மோதல்களை உண்டாக்கும் போக்கு அல்லாமல், பொருளாதாரத் துறையிலோ, தொழில் வளர்ச்சியிலோ, வேலைவாய்ப்பிலோ, கல்வி மேம்பாட்டிலோ, மக்களின் சுகாதார வளர்ச்சியிலோ குறிப்பிடத்தக்க சாதனையைச் சொல்லி மார்தட்ட முடியுமா?

மோடி காந்திநகரில் (பிரவாசி பாரத் திவஸ்) வெளிநாட்டுவாழ் இந்தியர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டு இருக்கும்போது தொழிலாளர் துறை அமைச்சகம் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வழங்கியுள்ளது. இந்தியாவில் வேலைவாய்பின்மை 4.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்குள் வேலையில்லாத மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

நகர்ப்புறங்களில் முக்கியமாக தொழிற்சாலைகள் எவ்வித காரணமுமின்றி மூடப்பட்டு வருகிறது. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் புரிதலற்ற பொருளாதாரக். கொள்கை காரணமாக அனைத்து மட்டங்களிலும் வேலைவாய்ப்பின்மை பெருகி வருகிறது.

தமிழ் ஓவியா said...


வட இந்திய பல்வேறு மாநிலங்களில் 100 நாள் வேலைவாய்ப்புத்திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பயன்பட்டு வந்த 60 விழுக்காடு மக்கள் வேலை வாய்ப்பிழந்தவர்களாகிவிட்டனர். இதன் காரணமாக கிராமப்புறங்களில் 5.7 விழுக்காடு வேலை வாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது.

வேலைவாய்ப்பின்மை கிராமப்புறங்களைப் பொறுத்தவரை ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதித்துள்ளது. கிராமப்புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் 83 விழுக்காடு பெண்களும் 67 விழுக்காடு ஆண்களும் பயனடைந்து வந்தனர்.

நகர்ப்புறங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் தினசரிக் கூலிகளின் நிலையும் பரிதாபமாக உள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் பல்வேறு கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இதை நம்பியுள்ள 43 விழுக்காடு மக்கள் வேலைவாய்ப்பின்றி வாடுகின்றனர்.

தமிழ் ஓவியா said...


இவர்களின் பெரும்பாலானோர் தினசரி கூலிகளாக பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அரசின் பொருளாதாரக் கொள்கை காரணமாக எதிர்வரும் ஆண்டுகளில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

2014 செப்டம்பர் ஹிந்துஸ்தான் வாட்ச் லிமிடெட் மூடப்பட்டதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள 17,000 தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.

ஏர்.இந்தியா, ஓ.என்.ஜி.சி, போன்ற அரசுத்துறை நிறுவனங்களின் பல்வேறு பிரிவுகள் இழுத்து மூடப்பட்டன. இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வேலைவாய்ப்பிழந்து நிற்கின்றனர்.

நாட்டின் முக்கிய விமான நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதன் காரணமாக அதைச் சார்ந்த 30,000 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து நிர்க்கதியாகி நிற்கின்றனர்.

பன்னாட்டு அளவில் தகவல் தொடர்புத்துறை அதிநவீனமயமாக்கப்பட்டு வருவதால் பெரும்பாலான நாடுகள் தங்களது தேவைகளைத் தாங்களே மிகவும் குறைந்த செலவில் பூர்த்தி செய்துகொள்கின்றன. இதன் காரணமாக (அய்.டி) தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களைக் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வருகிறது.

இந்த வரிசையில் கடந்த 3 மாதங்களாக விப்ரோ, எல்&டி, டாடா கன்சல்டன்சி மற்றும் ஹக்சார்வே போன்ற பெரிய தகவல் தொழில் துறைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் நாடு முழுவதும் தங்களது கிளை நிறுவனங்களில் பலவற்றை மூடியுள்ளன. இதனால் நாடு முழுவதும் ஒருலட்சத்திற்கும் அதிகமானோர் வேலையிழந்-துள்ளனர். இவர்களில் இளைஞர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களில் கதவடைப்பு காரணமாக இத்துறையைச் சேர்ந்த ஆண்களில் 57 விழுக்காடும் பெண்களில் 42 விழுக்காடும் வேலையிழந்துள்ளனர்.

இந்தியாவில் இந்த நிலை என்றால் தமிழ்நாட்டில் நிலை அதல பாதாளத்தில் குப்புற வீழ்ந்து கிடக்கும் பரிதாப நிலை!

நோக்கியா, பி.ஒ.ய்.டி. ஆகிய மின்பொருள் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை மூடப்படுகிறது; பிளக்ட்ரானிக், சான்மினா போன்ற தொழிற்சாலைகளில் ஆள் குறைப்புச் செய்யப்படுகிறது. இவற்றின் மூலம் 25,000 பேர் வேலையை இழக்கின்றனர் என்றால் 25,000 குடும்பங்கள் நடு வீதிக்கு வருகின்றன என்று பொருள்.

டாடா கன்சல்டன்சி என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் 25 ஆயிரம் பேர்களுக்கு வேலை இல்லை என்று நோட்டீஸ் கொடுத்துவிட்டது.

என்.வி.எச். இந்தியா தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கி இதுவரை தமிழ்நாட்டில் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர்.

வேலையில்லாத் திண்டாட்டம் தலைதூக்கினால் நாட்டில் இளைஞர் மத்தியில் வன்முறை தலைதூக்கும் அபாயமும் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பக்கத்தில் வேலைவாய்ப்புப் பறிப்பு; இன்னொரு பக்கத்தில் அரசுத்துறைகள் தனியார்த் துறைகளுக்கு கைமாறும் போக்கு; தனியார் துறைகளில் இடஒதுக்கீடு இல்லாமையால் போராடி போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டுக்கு ஆழக் குழிபறிப்பு! உயிர் காக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வெட்டு, (20 சதவீதம் குறைப்பு ரூ.6000 கோடி வெட்டப்பட்டுள்ளது) உலகில் எய்ட்ஸ் (எச்.அய்.வி.) பாதிக்கப்-பட்டவர்களில் மூன்றில் ஒரு பாகம் இந்தியாவில் உள்ளனர்; மத்திய அரசின் விபரீதப் போக்கால் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட இரயில்வே துறை வளர்ச்சித் திட்டங்களும் முடக்கம்!

இந்த ஆபத்துகளின் இரும்புப் பிடியில் நாடு அபாய கட்டத்தைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. மக்களின் கவனம் இந்தப் பக்கம் வராமல் தடுக்க மற்றொரு பக்கத்தில் இந்துத்து-வாவாதிகளின் மதவாதக் கூச்சல்!

இவற்றை எல்லாம் முறியடிக்க வேண்டியது மக்கள் நலன்மீது அக்கறை கொண்டவர்களின் அவசியமான அடிப்படைக் கடமையாகும். மக்கள் மத்தியில் பிரச்சினைகளைக் கொண்டு போகவும் தொழிற்சாலைகள் மூடப்படுவதையும் வேலை-வாய்ப்புகள் பறிக்கப்படுவதைத் தடுக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற உரிமைக் குரல் எழுப்பவும், சமூக நீதியை நிலைநாட்டவும் போராட வேண்டிய நிலையில்-தான் நாடு இருக்கிறது.

கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் இளைஞர்களே மாணவர்களே கிளர்ந்தெழுவீர்! கிளர்ந்தெழுவீர்!!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

தை தை தை என்றே பாடுவோம்!


பொங்கலோ பொங்கலுன்னு
பொங்கனும் மானுடம்
பொல்லாப்பு பொய்களெல்லாம்
பொசுங்கனும் மனிதரிடம்
எரியும் அடுப்பிலே
ஏழ்மை கருகட்டும்
கரும்பின் இனிப்பிலே
கசப்புகள் கழியட்டும்
தோரணத் தொங்கலில்
தோழமை மிளிரட்டும்
அழகுக் கோலங்களில்
அறிவு ஒளிரட்டும்
கபடி உறி விளையாட்டில் கள கட்டிடும் ஊரு
கதிரவனும் அரைத்தூக்கத்தில் கை கொட்டிடும் பாரு

கழனியிலே கதிர்மணிகள்
கவிதைகளாய் வெளிப்படும்
விவசாயியின் வியர்வைத் துளிகள்
விதைகளாய்த் துளிர்விடும்
உழுபவனின் விரல் அசைவில்
உழலும் நரிகள் வழிவிடும்
உழைப்பவனின் கைகளை
உலகம் வணங்கி வழிபடும்
இயற்கைக்கு நன்றி சொல்லும் இயல்பான திருவிழா
இதயங்கள் நலம் கொள்ளும் இதமான பெருவிழா

மாட்டு வண்டி ஓட்டத்தில்
மாவிலையும் குதித்தாடும்
சலங்கை ஒலி ஓசையில்
சகலமும் கூத்தாடும்
பறைகளின் கூட்டிசையில்
பனை மரமும் அசைந்தாடும்
குழந்தைகளின் கூக்குரலில்
குருவிகளும் இசைந்தாடும்
மனிதத்தை முன்னிறுத்தும் மகத்தான திருவிழா
மண்ணுக்கு மரியாதை அளித்திடும் பெருவிழா

மடிப்புக் களையா வேட்டிகள்
மங்கையரை நோக்கிடும்
துடிப்புக் கொண்ட தாவணிகள்
துள்ளலாய்த் தாக்கிடும்
இளையோரின் பானைகளில்
இளங்காதல் வழிந்திடும்
இணையதள காலத்தில்
இயற்கையும் மகிழ்ந்திடும்
தை தை தை என்றே பாடுவோம்
தைத் திங்கள் நாளிதைக் கொண்டாடுவோம்

- மணிமாறன் மகிழினி

தமிழ் ஓவியா said...

நூற்றாண்டு

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார்
(28.05.1914-09.06.1981)

பண்ணாராய்ச்சி வித்தகர் எனவும் ஏழிசைத் தலைமகன் எனவும் திருமுறைச் செல்வர் எனவும் போற்றப்பட்டவர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். தமிழிசை உலகின் மிகச் சிறந்த பணிகளைச் செய்துள்ள இவரை உலகத் தமிழர்கள் தங்கள் உள்ளங்களில் போற்றி மதிக்கும் பெருமைக்குரியவர்.பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்கள் சீர்காழியில் 28.05.1914இல் பிறந்தவர். பெற்றோர் பஞ்சநாதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோர் ஆவர். இவர் குடந்தையில் நான்காம் வகுப்புவரை பயின்றவர். குடந்தை பேட்டை நாணயக்காரத் தெருவில் வாழ்ந்து வந்தவர்.

இவருடன் பிறந்த தங்கையின் பெயர் சர்வாங்கத்தம்மாள். ப.சுந்தரேசனாரின் தந்தையார் பர்மாவில் கணக்கு எழுதிக் குடும்பத்தைக் காக்கும் நிலையில் இருந்தவர்.

ப.சுந்தரேசனார் அவர்கள் 1944 இல் திருவாட்டி சொர்ணத்தம்மாளை (சாரதா) மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்து, இளமையிலேயே இறந்தன. அதில் ஒரு குழந்தையின் பெயர் விபுலானந்தன் (யாழ்நூல் ஆசிரியர் நினைவாக) என்று அமைந்தமை இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது.

ப.சுந்தரேசனார் முதன்முதலில் கும்பகோணம் தேவாரப் பாடசாலையில் (பிடில்) கந்தசாமி தேசிகர் என்பவரிடம் இசைப் பயின்றார். கண்ணாவய்யர் என்பவரிடமும் இசை பயின்றார். பின்பு வேப்பத்தூர் பாலசுப்பிர-மணியம் அவர்களிடம் சில காலம் இசை பயின்றார்.

அதன் பின்னர் 1935 முதல் ஏறத்தாழ பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக குடந்தையில் வாழ்ந்த வேதாரண்யம் இராமச்சந்திரன் அவர்களிடம் குருகுல மரபில் செவ்விசை பயின்றுள்ளார்.

திருவாவடுதுறை ஆதீனப்புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் பயின்று தெளிந்த அறிவு பெற்றார்.
ப.சுந்தரேசனார் அவர்களுக்கு விபுலானந்தரின் தொடர்பு கிடைத்ததும் சிலப்பதிகார இசையாய்வில் தோய்ந்தார். குடவாசல் என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்கொள்ளம்பூதூர்(திருக்களம்பூர்) என்ற ஊரில் 1947 இல் நடைபெற்ற விபுலானந்தரின் யாழ்நூல் அரங்கேற்ற விழாவில் ப.சுந்தரேசனார் இசைப் பாடல்களைப் பாடிக் காட்டியதும் அடிகளார் வியந்து பாராட்டினார்.

மறைந்து-போன நூல்களின் வரிசையில் இருந்த இசைத்தமிழ் நூலான பஞ்சமரபு நூலினை ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பித்து அந்த (1973, 1975) நூலுக்கு உரை வரைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

ப.சுந்தரேசனார் அவர்களின் இசையில் ஈடுபாடு கொண்ட அன்பர்களால் ஆடுதுறையில் 1946 இல் அப்பர் அருள்நெறிக்கழகம் ஏற்படுத்தப்பட்டு தொடர் இசைப்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றன.

தமிழ் ஓவியா said...


ஆடுதுறை திரு. வைத்தியலிங்கம் அவர்கள் இப்பணியில் முன்னின்றார். நாகப்பட்டினத்தில் அந்நாள் வாழ்ந்த கவிஞர்கோ கோவை.இளஞ்சேரன் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பெற்ற நாகைத் தமிழ்ச்சங்கத்தில் ப.சுந்தரேசனார் சிலப்பதிகாரத்தை மாதந்தோறும் சொற்-பொழிவாக நிகழ்த்தி அப்பகுதியில் தமிழிசை ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தினார்.

குடந்தை ப. சுந்தரேசனார் முயற்சியால் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருத்தவத்-துறையில் (இலால்குடி) ப. சு. நாடுகாண் குழு செயல்படுகின்றது. புன்செய்ப் புளியம்பட்டி மறைமலையடிகள் மன்றம், கோவை நன்னெறிக்கழகம், பூவாளூர் சைவ சித்தாந்த சபை, வடுவூர் பாவாணர் மன்றம் (1975,76,77), குடந்தை காந்தி நகர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர் தொல்காப்பியர் கழகம், கீழப்பழுவூர், மேலப்பழுவூர், அரியலூர், புள்ளம்பாடி உள்ளிட்ட ஊர்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம், திருவிளையாடல் புராணச் சொற்பொழிவுகள் செய்துள்ளார்.

தமிழகத்தில் தெலுங்குமொழியில் இசைப்-பாடல்கள் செல்வாக்குப் பெற்றிருந்த சூழலில் தமிழர்களுக்குத் தமிழிசைமேல் ஈடுபாடு ஏற்படுவதற்கு முந்திய தமிழ் நூல்களில் இருந்த இசை நுட்பங்களை எடுத்துக்காட்டி விளக்கிய பெருமைக்குரியவர்.

அரைநூற்றாண்டுக்கும் மேலாக இப்பணியில் இப்பெருமகனார் ஈடுபட்டிருந்தார். இதனால்தான் இனத்தின் மீட்பர் தந்தை பெரியார்; மொழி மீட்பர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்; தமிழிசை மீட்பர் பண்ணாய்வான் ப.சு. குடந்தை ப.சுந்தரேசனார் என்று அறிஞர்கள் இவர் பணியை மதிப்பிடுவது உண்டு.

1949 முதல் 1952 வரை திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் வகுப்பு இசையாசிரி-யராகவும், ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்களின் விருப்பின்படி 1952 சூலை முதல் 1955 வரை அண்ணாமலைப் பல்கலைக்-கழகத்தில் தேவார இசை விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

நீதியரசர் செங்கோட்டு வேலனார், அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம், என். வரதராசலு நாயுடு முதலானவர்கள் ப.சுந்தரேசனார் அவர்களின் இசையில் திளைத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

டி.கே.நாராயணசாமி நாயுடு, இராம. திருநாவுக்கரசு, அன்பில் தருமலிங்கம், பூவாளூர் சண்முகம் செட்டியார், தாசரிபாளையம் நரசிம்ம நாயுடு, அருணாசல முதலியார், மேலையூர் இராசசேகரன், புலவர் நா. தியாகராசன், திருமுடி.

தமிழ் ஓவியா said...


சேதுராமன் செட்டியார்(புதுச்சேரி) உள்ளிட்டவர்கள் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களை ஆதரித்தவர்களுள் குறிப்பிடத்தக்க-வர்கள். பிரான்சுநாட்டுத் தமிழறிஞர் பிரான்சுவா குரோ அவர்கள் பரிபாடல் ஆராய்ச்சி செய்தபொழுது சுந்தரேசனார் வழியாக அந்நூலின் இசைத்தமிழ்ப் பகுதிகளுக்கு விளக்கம் அறிந்துள்ளார்.

இவர்தம் அருமை அந்நாள் முதலமைச்சராக விளங்கிய ம. கோ. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதும் பெரிதும் மகிழ்ந்தார். மதுரை உலகத் தமிழ் மாநாட்டில் ப.சு. அவர்கள் ஆற்றிய உரை அறிஞர் உலகால் பெரிதும் போற்றப்பட்டது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்களால் ஓராண்டுக்குத் தமிழிசை ஆய்வுக்குப் பணியமர்த்தப்-பட்டவர்.

திருச்சிராப்பள்ளி வானொலியில் பல்லவி பற்றி இவர் ஆற்றிய உரை ஒலிபரப்பாகியுள்ளது. விபுலானந்தரை இவர் நேர்காணல் செய்ததும் ஒலிபரப்பப்பட்டுள்ளது.

குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழ்க்கொடை:

1. இசைத்தமிழ்ப் பயிற்சி நூல் (1971) திருப்பத்தூர் (முகவை) தமிழ்ச்சங்க இசைத்தமிழ் வெளியீடு

2. முதல் அய்ந்திசைப்பண்கள்(1956) பாரி நிலையம்,

3. முதல் அய்ந்திசை நிரல்,

4. முதல் ஆறிசை நிரல்,

5. முதல் ஏழிசை நிரல் முதலான நூல்களை எழுதியவர்.

தமிழ் ஓவியா said...

மேலும் ஓரேழ்பாலை, இரண்டாம் அய்ந்திசை நிரல், இரண்டாம் ஏழிசை நிரல், பரிபாடல் இசைமுறை, பாணர்கள் பயிற்றுவித்த இசைமுறை, இசைத்தமிழ்ப் பயிற்சி நூல், இசைத்தமிழ் அகரநிரல், வேனிற்காதை இசைப்பகுதி விளக்கம், சேக்கிழார் கண்ட இசைத்தமிழ், சமயக்குரவர்கள் கைக்கொண்ட இசைத்தமிழ், பெரும் பண்கள் பதினாறு, நூற்றுமூன்று பண்கள், தாளநூல்கள் 1 முதல் 6 வரை, கடித இலக்கிய இசைத்தமிழ்க் குறிப்புகள், இசைத்தமிழ் _ தமிழிசைப்-பாடல்கள், இசைத்தமிழ் வரலாறு முதலான இவர்தம் நூல்கள் வெளிவராமல் போயின.

குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் தமிழ்ப்-பொழில், தமிழ்நாடு, நித்திலம் உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகள் பலவற்றை எழுதி வெளியிட்டுள்ளார். சென்னை, மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் பொழுது வெளியிடப்பெற்ற மலர்களில் இவர்தம் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

குடந்தை ப.சுந்தரேசனார் மதுரைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பொழுது மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, 09.06.1981 இல் இயற்கை எய்தினார்.

தமிழிசை குறித்த ப.சுந்தரேசனார் அவர்களின் முடிவுகள் :

1. தமிழ் மக்கள் இசையை உணர்ந்தது குழற்கருவிகள் வழியாகும்.

2. முல்லை நில மக்களே குழற்கருவிகளையும், யாழ்க்கருவி-களையும் கண்டுபிடித்தனர்.

3. முதலில் குழல்கருவி அய்ந்து துளைகளைக் கொண்டிருந்தது. அதுபோல் அய்ந்து நரம்புகள் கொண்ட யாழ் பயன்படுத்தப்பட்டது.

4. அய்ந்து துளைகளின் வழியாக எழுந்த அய்ந்து இசைகளே ஆதி இசையாகும்.

5. குழற்கருவி முந்தியது எனினும் யாழ்க்கருவியின் வாயிலாகவே இசை வளர்ச்சியுற்றது.

6. இசைத்தமிழில் முதல் இசைக்குப் பெயர் தாரம்.

7. முதல் அய்ந்திசைப் பண்ணின் இசைநிரல் முதலியன 1. தாரம், 2. குரல், 3. துத்தம், 4. உழை, 5. இளி என்பன.

8. முதற்பண்ணாகிய தாரம் என்பது ஆசான் எனவும், ஆசான்திறம் எனவும், காந்தாரம் எனவும் பல பெயர்களில் வழங்கின. இன்று மோகனம் என்று வழங்கப்படுகின்றது.

9. இரண்டாவது பண் குரல் பண் என்பது செந்திறம், செந்துருதி, செந்துருத்தி என முன்பு வழங்கப்பட்டு இன்று மத்தியமாவதி எனப்படுகிறது.

10. மூன்றாவதாகிய துத்தப்பண் இந்தளம், வடுகு எனப் பண்டு பெயர்பெற்று இன்று இந்தோளம் எனப்படுகிறது.

11. நான்காவதாகிய உழைப்பண் சாதாளி எனப்பட்டு இன்று சுத்தசாவேரி எனப்படுகிறது.

12. அய்ந்தாம் பண்ணாகிய இளிப்பண் தனாசி எனும் பெயர்பெற்று, இன்று சுத்த தன்யாசி எனப்படுகிறது.

13. தென்னிந்திய இசைக்கு அடிப்படையான இசை பழந்தமிழகத்தில் வழங்கப்பட்ட இசையேயாகும்.

14. பழைய பண்முறைகள் இன்றளவும் தமிழ்நாட்டில் தேவாரங்களிலும், திருவாய்மொழியிலும் மற்றும் பிற திருமுறைகளிலும் உள்ளன.

குடந்தை ப.சுந்தரேசனாரின் நூற்றாண்டு விழா 2014 இல் தமிழகம், புதுச்சேரி, அமெரிக்காவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

இக்கட்டுரை-யாசிரியரால் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் வாழ்வியல், பணிகளை விளக்கும் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

பத்திரிகையாளர்கள் படுகொலை

பிரச்சினை நிறைந்த இடங்கள், உள்நாட்டுப் போர் நடைபெறும் ஆபத்தான இடங்கள் என துணிச்சலுடன் சென்று செய்திகளைச் சேகரிக்கும்போது பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலைமை உள்ளது. 1993ஆம் ஆண்டி-லிருந்து இதுவரை 1056 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2004ஆம் ஆண்டிற்குப் பின்னர் பத்திரிகையாளர்கள் படுகொலையின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 1993ஆம் ஆண்டிலிருந்து ஈராக்கில் 166, சிரியாவில் 79, பிலிப்பைன்சில் 75, பாகிஸ்தானில் 56, சோமாலியாவில் 56, இந்தியாவில் 32 பேர் என்ற எண்ணிக்கையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆறாம் இடத்திலிருக்கும் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 10, ஆந்திராவில் 7 பேர் கொலை செய்யப்-பட்டுள்ளனர். கொல்லப்படும் பத்திரிகையாள-களில் மூன்றில் இரண்டு பேர் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர்.

அல்லது போராட்டங்கள், வன்முறைகள் மற்றும் இரு பிரிவினர் இடையிலான மோதல் போன்ற நிலைகளில் செய்திகளைச் சேகரிக்கச் செல்லும்போது உயிரிழக்-கின்றனர். இந்தியாவில் 32 பேர் என இருப்பினும், இன்னும் 20 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்-பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

புரட்சிப் பொங்கல்

பழைமைவாதப்
பஞ்சாங்கப்
படிப்பு வேண்டாம்!

மதவாத
மண்சரிவில்
மடிய வேண்டாம்!

ஜாதியெனும்
சாக்கடையில்
வீழ வேண்டாம்!

மூடமதிக்
குட்டையிலே
மூழ்க வேண்டாம்!

பெண்ணடிமைப்
பெருஞ்சேற்றில்
புதைய வேண்டாம்!

ஆரியத்தின்
கலாச்சார
வாடை வேண்டாம்!

பெரியாரை
ஒரு நாளும்
மறக்க வேண்டாம்!

பொங்கட்டும்
புரட்சிப்
பொங்கல்!

தமிழ் ஓவியா said...

பொங்கல் கவிதை

- கலைஞர்

மானத்திற்கு மறுபிறப்பு

ஞாயிறு போற்றுதும்;
ஞாயிறு போற்றுதும்!
சிலம்பொலி கேட்குது;
சிந்தையில் இனிக்குது!
ஆயிரம் நிலவுகள் ஆயிரம் மாதர்கள்;
ஆயிரம் கதிர்கள் ஆயிரம் ஆடவர்;
ஞாயிறு போற்றினர்!
ஞாயிறு போற்றினர்!
ஆயிரம் கோடியாய் ஆயினர் தமிழர்!
பாயிரம் பலப்பல பாடினர் தமிழர்!
ஞாயிறு போற்றியே கூடினர் பொங்கலில்!
ஞாயிறு போற்றியே ஆடினர் பொங்கலில்!
மாவிலை தோரணம் மஞ்சள் வாழை
கோவிலின் முரசம் கோலம் கண்டனர்!
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை நிலமெனப்
பிரிந்து வாழினும் தமிழர் பண்பைப்
புரிந்து வாழ்ந்தனர்!
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து
முன்தோன்றி மூத்தகுடி எனினும்
காடு கொன்று நாடாக்கக்
குளம் தொட்டு வளம் பெருக்கக் கற்றனர் அன்னார்!
வில் தோன்றும், தோள்களிலே - அது
வீரம் காட்டும்.
நெல் தோன்றும், வயல்களிலே - அது
வேளாண் திறத்தைக் காட்டும்.
சொல் தோன்றும் புதிது புதிதாக - அது
மொழியின் வளத்தைக் காட்டும்.
எழுத்து, சொல், இரண்டேயன்றி
பழுத்த நல் தொல்காப்பியன் - தமிழர்தம்
செழிப்பு மிகு வாழ்வுக்கும்
தொகுத்தளித்தான் இலக்கண நூல்!
கொய்யாக் கனித் தமிழால் - குறள்
நெய்தான் உலகுக்கு வள்ளுவனும்!
பெய்யா மழை பெய்தது போல் மகிழ்ச்சி கொள்வோம் - அவன்
பொய்யாமொழிக் கவி கேட்டு!

***
பல் முளைத்திடா மழலையருடன் பருவக் கிள்ளைகளுடன்
பண்பார் பிள்ளைகளுடன் பொங்கலோ பொங்கலெனப்
பொங்கும் மகிழ்வுடன் ஆடிப்பாடிடும் அழகுத் திருநாள்!
அன்புத் திருநாள்! அமுதத் திருநாள்! ஆம்; அன்றொரு நாள்!
இந்தப் பூமியில் ஈட்டியின் பாய்ச்சல் கண்டு இமை கொட்டியவன் கோழை
என்றல்லவா வீரத்திற்கு இலக்கணம் தீட்டப் பட்டிருந்தது!
இன்றோ; இந்தத் தமிழ் நிலத்தில் வீரம், விலை கேட்கும் பொருளாகவும் - தீரம்,
திக்கற்ற குழந்தை போலவுமன்றோ ஆகிவிட்ட அவலம் காண்கிறோம்.
அகழ்வாரைத் தாங்கும் நிலமாய் இருக்கலாம்; அதற்காக; நம்மை, நமது
பண்பாட்டை இகழ்வாரைத் தாங்கும் நிலைப்பாடு இருக்கலாமா?
கொதித்தெழு; பிறரை வதைத்தெழ! என்று கூறமாட்டேன் - நம்மையே நாம்
பலியாக்கிக் கொள்ள நேரிடினும் பரவாயில்லை; நமது பழம் பெருமைக்கு ஊறு
நேரிடுகிறது எனக் காணும்போது, நமது வரலாறு மாய்க்கப்படுகிறது
என்கிறபோது, ஆமைகளாய், ஊமைகளாய் அடங்கிக் கிடக்காமல் அதற்கென
அமையும் களத்தில் உயிரைச் சாவில் நட்டு உரிமைகளை வாழ வைப்போம்
எனும் வீரம் கொள்வோம் என்றே இப்பொங்கல் நாளில் சூளுரையேற்க
அழைக்கிறேன்!

மறு பிறப்பு என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை!
ஆனால்; தமிழினத்தின் மானத்திற்கு - வீரத்திற்கு - மறுபிறப்பு வேண்டுமென
மன்றாடுகிறேன்!
யாரிடம்?
தமிழன்; தமிழனிடம்தான் மன்றாடுகிறேன்!
என் கோரிக்கை நிறைவேறிட;
இந்தப் பொங்கல் இனிதே பொங்குக!
நூல்: கலைஞரின் கவிதை மழை

பொங்கல் விழா கவியரங்கில் கலைஞரின் தலைமைக் கவிதை (14.01.1975).

தமிழ் ஓவியா said...

போதை... கீதை...

சரக்கு போதையில் சொர்க்கத்துக்குப் போகலாம் என்று கிருஷ்ண பகவானே கீதையில் சொல்கிறார் கேளுங்கள்.

த்ரைவித்யா மாம் ஸோமாபா: பூத பாபா யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர் கதிம் ப்ரார் தயந்தே தே புண்யமாஸாத்ய ஸுரேந்த்ர லோகம் அஷ்நந்தி திவ்யாந்திவி தேவபோகான் சுவர்க்க உலகங்களை நாடி, வேதங்களைப் பயின்று 'ஸோம ரச'த்தை அருந்துபவர்களும் என்னையே மறைமுகமாக வழிபடுகின்றனர்.
அவர்கள் இந்திரனின் உலகத்தில் பிறவியெடுத்து தேவர்களின் இன்பங்களைச் சுகிக்கிறார்கள்.

-பகவத்கீதைஅத்யாயம்9.பதம்20

பேச்சு வழக்கில், ''போதை கீதை ஏத்திக்கப் போற.... ஒழுங்கா வந்து சேர்'' என்பார்கள். ஆமாம், போதை, கீதை ரெண்டும் வேண்டாம்.

- க.அருள்மொழி, குடியாத்தம்

தமிழ் ஓவியா said...

மகிழ்ச்சியை விரிவடையச் செய்த பெரியாரின் எழுத்துகள்

என்னை மிகவும் பாதித்த புத்தகங்களை வேறு யார் எழுதியிருப்பார்? பெரியார்தான். பெரியாரின் புத்தகங்கள் புத்தகங்கள் அல்ல, களஞ்சியங்கள்.இயல்பாகவே மகிழ்ச்சிகரமான மனப்போக்கு உள்ளவன் நான். பெரியாரின் எழுத்துகள் எனது மகிழ்ச்சியை இன்னும் விரிவடையச் செய்தன.

அநாவசிய மூடநம்பிக்கைகள் இல்லாமல் இருப்பதைவிட வேறு என்ன சந்தோஷம் வேண்டும்? நான் எந்த ஓட்டலில் தங்கினாலும் 13ஆம் எண் அறையா என்று பயப்படுவதில்லை. 8ஆம் தேதி படப்பிடிப்பா என்று பதறுவதில்லை. இதெல்லாம் பெரியாரின் எழுத்துகள் எனக்குச் செய்த பேருதவிகள்.

- நடிகர் சத்யராஜ்

தமிழ் ஓவியா said...

முழுமையான திருவிழா


தை! தை! தை திருவிழா
தமிழர்களின் பெருவிழா
பொங்கல் எனும் ஒருவிழா - நாம்
போற்றிப் புகழும் திருவிழா


குடும்பமாக ஒன்று சேர்ந்து
குதூகலிக்கும் ஒருவிழா
குழந்தைகளும் மகிழ்வுடனே
கொண்டாடும் திருவிழா (தை)

இயற்கை தன்னைப் போற்றுகின்ற
இனிமையான ஒருவிழா
இருளை நீக்கி ஒளிவழங்கிடும்
சூரியனின் திருவிழா

உழவருக்கு நன்றிசொல்லி
உழைப்பைப் போற்றும் ஒருவிழா
உழைப்பில் வந்த அரிசி பொங்கி
குலவை கொட்டும் திருவிழா

இதயம் கனிந்த வாழ்த்துச் சொல்லும்
இன்பமான ஒருவிழா
இனிக்கும் பொங்கல் கரும்பு தின்னும்
சுவையான திருவிழா (தை)

தமிழர்களின் பண்பாட்டைப்
பறைசாற்றும் ஒரு விழா
தமிழரெல்லாம் கொண்டாடும்
பகுத்தறிவுத் திருவிழா

ஜாதிமத பேதமின்றி
சகலருக்கும் ஒருவிழா
மூடத்தனம் ஏதுமில்லா
முழுமையான திருவிழா (தை)- மு.கலைவாணன்

தமிழ் ஓவியா said...

உற்சாக சுற்றுலாத் தொடர்

- மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன்

வாழ்ந்துதான் பார்ப்போமே!

நேசனல் ஜியோகிராபி என்ற ஒரு அமைப்பு. அதில் வரும் படங்களும் செய்திகளும் கண்களைக் கவர்ந்து மனதை மயக்கி ஒரு ஏக்கத்தை உண்டாக்கிவிடும்.
நேரில் பார்க்கும் நாள் வாராதோ என்ற எண்ணம் தோன்றுவது இயற்கை.

அதிலும் பல முக்கிய இடங்களை ஒரு குழுவாக அந்த இடங்களை நன்கு அறிந்த அறிஞர்கள் விளக்கிச் சொல்லிட பார்த்துவரும் வாய்ப்புக் கிடைத்ததும் வாழ்ந்துதான் பார்ப்போமே என்ற ஆர்வம் வந்துவிட்டது.

அதிலும் கால்கள் நன்றாக இருக்கும் போதே பார்த்துவிட வேண்டும். மனம் இருந்தும் உடல் ஒத்துழைக்க வேண்டுமே! நடக்கவும், பல இடங்களிலே ஏறி இறங்கவும் தெம்புள்ள போதே பார்த்துவிட வேண்டும். இந்தப் பயணம் ஒழுங்காகத் திட்டமிடப்பட்ட பாடமாகவும் அமைந்து விட்டது.

நேஷனல் ஜியாகிரபிக் என்பது நாம் வாழும் இந்த உலகம், மண்ணுலகம், விண்ணுலகம் பற்றிய தெளிவான ஆராய்ச்சிகள் செய்து அறிந்தும், புரிந்தும் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு இயக்கம். பல அறிவியல் ஆராய்ச்சிகள் செய்து அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அற்புதமான படங்-களுடன் விளக்கி எழுதப்பட்ட கட்டுரைகளைத் தாங்கி மாத இதழாக அதே பெயரில் வெளியிடுகின்றார்கள்.

தலைசிறந்த படப்பிடிப்பு விற்பன்னர்கள் ஒரு நல்ல படம் எடுப்பதற்காக நாள்கணக்காக ஏன் மாதக்கணக்காகக் காத்திருந்து காடு மேடுகள் என்று எடுத்துள்ள படங்கள் ஏராளமானவை. அப்படிப்பட்ட படமெடுத்தவர்களில் ஒருவர் பயணத்தில் வந்து விளக்கிச் சொல்லவும் ஏற்பாடு செய்யப்-பட்டிருந்தது.

இந்தப் பயணத்தின் ஏற்பாடுகள் ஓராண்டிற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுவிடும். ஆண்டிற்கு இரண்டே பயணங்கள், எழுபது பேருக்குத்தான் இடம். முன்பணம் கட்டிவிட வேண்டும். பயணிகள் தங்களைப் பற்றிய விவரங்கள், மருத்துவர் அனுமதி, சிறப்புத் தேவைகள் போன்றவற்றை அனுப்ப வேண்டும்.

பயண அனுமதி அட்டை மற்றும் பயணம் செய்யும் நாடுகளுக்கு வேண்டிய அனுமதிப் பதிவு போன்ற ஏற்பாடுகள் ஆரம்பித்துவிடும். சில நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பு ஊசி, மற்ற தடுப்பு ஊசிகள் தேவைப்படும். விவரங்கள் அனுப்பப்படும். அவரவர் அதற்குரிய ஏற்பாடு-களையும் செய்துகொள்ள வேண்டும்.

பயணத்தின் சில சிறப்புகளைப் பார்ப்போம். உலகின் பல சிறந்த இடங்களில் பத்து இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவை லிமா, மாச்சு பிச்சு பெரு நாட்டில், அடுத்து ஈஸ்டர் தீவு, சிலி நாட்டில், மூன்றாவது பசிபிக் பெருங்கடலில் உள்ள சாமொவா, அடுத்து பெரும் பவளப்பாறைகள் உள்ள ஆஸ்திரேலியா-வின் போர்ட் டக்ளசு, அய்ந்தாவது கம்போடியாவில் ஆங்கார் வாட், அடுத்து சீனாவின் செங்டோவும் திபெத்தின் லாசாவும், அங்கிருந்து ஆக்ராவில் தாஜ்மகால், பின்னர் ஆப்பிரிக்காவிலுள்ள டான்செனியாவின் சிராங்கட்டி காப்பகம், அடுத்து ஜோர்டன், கடைசியாக மொராக்கோ.

தலை சுற்றுகின்றதா? பயணம் சிறப்பாகவும் வசதியாகவும் அமைக்கப்-பட்டிருந்ததால் மகிழ்ச்சியாகவே அமைந்தது. 21 நாட்கள் பறந்துவிட்டன, முப்பதாயிரம் மைல்களுடன்! தனி விமானம், வசதியான இருக்கைகள், கனிவான கவனிப்பு. வாழ்ந்துதான் பார்ப்போமே!

தமிழ் ஓவியா said...


உடன் எழும் கேள்வி, எவ்வளவு என்பதுதானே? மூன்று தவணைகளாக முன்பே வாங்கிவிட்டனர், ஆகவே இப்போது அதைப்-பற்றி எண்ணாமல் பயணத்தை அனுபவிப்போம், வாருங்கள்.

உலகச் சுற்றுப்பயணம்

அக்டோபர் 6ஆம் தேதி வாசிங்டன் நகரிலிருந்து ஆரம்பித்தது.
இப்பயணம் எதிர்பாராத விதமாக அமைந்தது. எங்கள் இளைய மகன் மருத்துவர் குமார் வற்புறுத்தலாலும் ஊக்கத்தாலும் இப்பயணம் ஆரம்பித்தது.

இப்பயணத்தின் எல்லா ஏற்பாடுகளையும் என் இணையர் மருத்துவர் சோம. இளங்கோவன் கவனித்துக் கொண்டார். எல்லா நாடுகளின் விசா கிடைக்க சில மாதங்கள் முன்னரே ஏற்பாடு செய்து வாங்கிவிட்டனர். பயணத்திற்கு இரண்டு வாரங்கள் முன்னர் ஒரு பெரிய பார்சல் வந்தது.

அதிலே ஒவ்வொருவருக்கும் ஓர் எண் கொடுத்த அடையாள அட்டை பெட்டிகளில் தொங்கவிட. சிறப்பாகச் செய்யப்பட்ட தள்ளுவண்டிப் பெட்டி, அதற்குள்ளேயே தனித்தனியாக வைத்துக்கொள்ள பல தடுப்புகள். தோளில் தொங்கும் பள்ளிக்கூடப் பிள்ளைகள் பை, அதிலும் பல உள்பைகள்.

இடுப்பில் கட்டிக்-கொள்ள ஒரு பை. ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அய் பேட் கணினி. அதில் வேண்டிய புத்தகங்கள், பாட்டுகள், சினிமா போன்ற-வற்றைத் தரவிறக்கிக் கொள்ள 100 டாலர் பெறுமான இலவசக் கட்டண அட்டை.

பயணம் பற்றிய முழு விவரம் அடங்கிய பைண்டர் புத்தகம் அதில் அனைத்து விவரங்-களும், ஆங்காங்கே தங்கும் விடுதிகளின் முகவரி, தொலைப்பேசி எண் உறவினர்களுக்குத் தெரிவிக்க. பயணத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய அனைத்தும் அடங்கிய ஒரு பட்டியல். மகள், மகன்கள், மருமகன், பேத்திகள் அன்புடன் வழியனுப்ப பயணத்தைத் தொடங்கினோம்.

பென்சில்வேனியாவின் ஃகாலந்து நகரிலிருந்து காரில் 3 மணி நேரம் கழித்து வாசிங்டன் வந்து சேர்ந்தோம். அன்று இரவு நேசனல் ஜியாகிரபிக் அறக்கட்டளைக் கட்டிடத்தில் 70 பயணிகளுக்கு வரவேற்புக் கொடுத்தார்கள் . உடன் பயணம் செய்தவர்கள் பல துறை வல்லுநர்களாக இருந்தார்கள்.

பயண அமைப்பாளர் திருமதி சூசன் வரவேற்புரை வழங்கி பயண விவரங்கள் பற்றி சுருக்கமாகச் சொன்னார். பயணத்தில் பல நாடுகளின் அரசியல், கலாச்சாரங்களைப் பற்றிச் சொற்பொழிவு ஆற்றப்போகும் பேராசிரியர்கள் அலெக்சாண்டர் மர்பி, சேக் டால்டன் அவர்களை அறிமுகப்படுத்தினார்.

பிறகு இரவு உணவு வெள்ளைமாளிகை அருகில் கேஆடம்ஸ் விடுதியில் நடைபெற்றது. நேசனல் ஜியாகிரபி அமைப்பின் தலைவரே வந்து பங்கேற்று சிறிது நேரம் பேசி அனைவருடனும் அளவளாவி வழியனுப்பி வைத்தார்.

பிச்சாண்டார் கோவிலிலும், மேலக்கல்-கண்டார் கோட்டையிலும் பிறந்து வளர்ந்த எங்களுக்கு, பெருஞ் செல்வந்தர்களும், பெரும் பதவி வகிப்பவர்களும் தங்கும் விடுதியின் விருந்தறையில் அமர்ந்து கீழே தெரியும் வெள்ளை மாளிகையைக் கண்டு உணவருந்தியது தந்தை பெரியார், பெருந்-தலைவர் காமராசரின் உழைப்பின் பயன் என்பதை எண்ணிப் பார்த்துப் பெருமைப்-பட்டோம்.

(பயணிப்போம்)

தமிழ் ஓவியா said...

புகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை


பத்தியம் இருப்பவர்கள் உண்ணக்கூடாத கீரை என்று அகத்திக் கீரையை குறிப்பிடுவர். ஏனெனில் தன்னுள் இருக்கும் அதீதமான சக்திகளால் இது மருந்தின் வீரியத்தை குறைத்து விடுகிறதாம். இக்கீரை 63 சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. சுண்ணாம்புச்சத்தை அதிகமாக கொண்டது.

கண்பார்வை, நினைவாற்றலை பேணுவதற்கு அகத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. அகத்தி கீரையை துவையல் செய்யும்போது புழுங்கலரிசியை வறுத்து பொடிசெய்து கலந்தால் கீரையின் கசப்புதன்மை விலகும். அகத்திக்கீரை- கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்றன.

இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக கீரை மலமிளக்கி யாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படும். கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்டால், வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பும், மலச்சிக்கல், காபி, தேநீர், இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.

அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் (அகத்திப்பட்டைக் குடிநீர்) குடித்துவர, காய்ச்சல், தாகம், கை கால் எரிச்சல், மார்பு எரிச்சல், உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைக் காய்ச்சல் ஆகியவை தீரும்.

குழம்பு வைக்கும்போது, தாளிக்கும்போது கறிவேப்பி லைக்குப் பதிலாக அகத்தியை சிறிது வதக்கி சேர்த்தால் உடல்சூடு, வாய்ப்புண், வயிற்று புண் அகலும். மலேசி யாவை தாயகமாக கொண்ட அகத்தி இந்தியாவில் ஈரப்பசை அதிகமுள்ள நிலங்களிலும், களிமண் நிலத்திலும் செழித்து வளரும்.

நான்கு வகைகள் கொண்ட அகத்தியில் வெள்ளை பூ பூக்கும் அகத்தியே மனிதன் உண்ண தகுந்தது. மற்ற வகைகள் அபூர்வம் என்றாலும், அவை கால்நடை களுக்கே உணவாகப் பயன்படுகின்றது. புகையிலை உபயோகிப்போர் நிகோடின் நச்சுவால் பாதிக்கப்பட்டால் அதனை களையும் சக்தி அகத்திக்கு உண்டு.

நீராகாரம் பருகும் பழக்கமுடையவர்கள் அகத்தி கீரை சமையலாகும் நாட்களில் கீரை, ரசம், நீராகாரம் மூன்றையும் கலந்து பருகுவர். இவ்வாறு பருகுவதால் மலச்சிக்கல், நீரடைப்பு தீர்வதுடன் உடலின் நச்சு நீர்கள் முறிவடைகின்றன. எனினும் மாதத்துக்கு இருமுறை மட்டுமே உண்ணவல்லது அகத்தி.

இலைச்சாறும் நல்லெண்ணெய்யும் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து பதமுறக் காய்ச்சி வடிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக் கிழுங்கு விளாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி (அகத்தித் தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்து வர பித்தம் குறைந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.

Read more: http://viduthalai.in/page-7/94608.html#ixzz3PK5t2Jgi

தமிழ் ஓவியா said...

ஏலக்காயில் மருத்துவ குணம் ஏராளம்

நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர் களுக்கும்கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட் டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும்.

வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைதான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம். சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக்கூடாது.

இதில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.

ஏலக்காயை தேநீர், பாயாசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் அதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது. எனவே, காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது.

ஈரப்பதம், புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன. ஏலக்காய் ஆண்மைக் குறைவையும், பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பேறும் உண்டாக்கும்.

இரவு ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி தொண்டைக்கட்டு உள்நாக்கில் வலி குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்த ஏலக்காயும், இலவங்கப் பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

செரிமானமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும். சில சமயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்பவர்களுக்கு நெஞ் செரிச்சலும், வாய்வுத் தொந்தரவும் இருக்கும். இவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காயை மெல்லுவது நல்லது.

இரண்டு ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்புகள் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து குடிக்கச் செரிமான மின்மை. பாலில் சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து இருபாலரும் தினமும் அருந்தி வந்தால் இருபாலருக்கும் குறைபாடுகள் குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/94608.html#ixzz3PK60KQDT

தமிழ் ஓவியா said...

ஆரோக்கியம் தரும் மூலிகைத் தண்ணீர்


வயிற்றில் பூச்சி, வாய்வு பிரிதல் பிரச்சினை, வயிற்றுவலி, குடல் இரைச்சல், போன்ற பிரச் சினைகள் தீர ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சூடாக்கி வடிகட்டி குடித்தால் பிரச்சினைகள் தீரும். ஒரு லிட்டர் தண்ணீரில் அரைதேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறு, வயிற்று உப்புசம் மற்றும் உடல்சூடு போன்றவை தணியும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிதளவு சுக்கு, மிளகு, கொத்த மல்லி ஆகியவற்றை தட்டிப்போட்டு போதுமான அளவு சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லை, முகத்தில் ஏற்படும் கருவளையம், தொண்டைக்கட்டு ஆகியவை குணமாகும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கடுக்காயை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் நாவல் பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சர்க்கரை குறையும். ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால் பெருங்காயத்தை தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி நேரம் அப்படியே ஊற வைத்து பிறகு குடித்து வந்தால் வாய்வு பிடிப்பு, ஏப்பம், மூட்டுவலி குணப்படும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, உப்பு போன்றவற்றை கலந்து அப்படியே குடித்துவந்தால் உடல்சோர்வு, அதிக தாகம் அடங்கும். ஒரு லிட்டர் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைப்பழம், தேன், சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும் உடலில் உள்ள நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.

இதுபோன்ற இன்னும் பலவித மூலிகை நீர் சிகிச்சை உண்டு. ஒருவர் தொடர்ந்து ஒரேவிதமான நீர்சிகிச்சையை செய்யக்கூடாது. ஒருலிட்டர் என்பது ஒரு அளவீடுதான் நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவைப்படுமோ அவ்வளவு நீரையுமே இந்த முறையில் தயாரித்து குடித்து வந்தாலும் மிகவும் நல்லதுதான்.

ஒருமுறை தயாரித்த நீரை அதிகபட்சம் 9 மணிநேரம் வரையில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம். மூலிகை நீர் தயாரிப்பதற்கு சாதாரண குழாய் குடிநீரையே பயன்படுத்தலாம் அல்லது மண்பானை நீரையும் பயன்படுத்தலாம்.

Read more: http://viduthalai.in/page-7/94607.html#ixzz3PK6EcZSF

தமிழ் ஓவியா said...

உடலின் செயல்பாடுகளை சிதைக்கும் தைராய்டு கோளாறு


இந்தியாவில் 4.2 கோடி மக்கள் தைராய்டு கோளாறி னால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாக மதிப் பிடப்பட்டுள்ளது. தைராய்டு என்பது கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள நாளமில்லா சுரப்பியாகும். இதன் முக்கிய வேலை தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்வதாகும்.

இந்த ஹார்மோன்கள் உடல் வளர்ச்சி மற்றும் மேம் பாட்டிற்கு உதவுகிறது. உடல் வெப்பநிலையை மேம்படுத்து கிறது. உடல் உறுப்புகளுக்கு அவற்றின் செயல்பாட்டில் துணை புரிகிறது. மொத்தத்தில் உடலின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் உதவுகிறது.

உடலில் ஏற்படும் நோய்கள், தைராய்டு சுரப்பியை பாதிக்கின்றன. தைராய்டு சுரப்பியின் அழற்சி உள்ளிட்ட சில அம்சங்கள் தைராய்டு கோளாறுகளுக்கு காரணமாகின்றன. 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், ஏற்கெனவே தைராய்டு பாதித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை பாதிக்கும் மருந்துகள் ஆகியவையும் தைராய்டு கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்றால், தைராய்டு சுரப்பி போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை (ஹைபோ தைராய்டிஸம்) ஏற்பட்டிருக்கலாம் அல்லது அளவுக்கு அதிகமாக ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் (ஹைபர் தைராய் டிஸம்) ஏற்பட்டிருக்கலாம்.

ஹைபோ தைராய்டிஸத்தின் அறிகுறிகள், மனச்சோர்வு, விவரிக்க முடியாத எடை கூடுதல், களைப்பு, முடி உதிர்தல், வறண்ட சருமம், அதிக கொலஸ்ட்ரால், ஒழுங்கற்ற மாதவிடாய், மலட்டுத்தன்மை அல்லது கருத்தரித்தலில் சிக்கல். கால்களில் வீக்கம் ஆகியவை.

ஹைபர் தைராய்டிஸத்தின் அறிகுறிகள், அதிகப்படியாக மலம் கழித்தல், எடை இழப்பு, நடுக்கம், தொடர்ந்து தொண்டை வறட்சி, அதிகப்படியாக வியர்த்தல், விரைவான இதயத்துடிப்பு, வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பத உள்ளங்கை, தூங்குவதில் சிரமம் ஆகியவை.

இத்தகைய அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் மருத்துவரை கலந்தா லோசிக்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்து எடுத்து கொள்ள வேண்டும். பெரும்பாலான தைராய்டு கோளாறுகளை மருந்துகள் கொண்டு எளிதில் கட்டுப் படுத்தலாம். உணவுத் திட்டம் தைராய்டு நோயை பாதிப்பதில்லை.

கோதுமை, அரிசி, சோளம், ஆப்பிள் ஆகிய தானியங்கள், ஆரஞ்சு, திராட்சை ஆகிய பழங்கள், கீரை வகைகள், மீன், ஆலிவ் எண்ணெய், தாவர எண்ணெய் ஆகியவை ஆரோக்கியமான உணவுகளாகும். இது ஒட்டுமொத்த நலனுக்கு நன்கு உதவும்.

இவற்றை சரியாக உண்ணவேண்டும் மற்றும் உடற்பயிற்சி மேற் கொள்ளவேண்டும். இத்தகைய ஆரோக்கிய பராமரிப்புகள் தைராய்டு கோளாறுகளை சரி செய்யும் மருந்துகளுக்கு பக்கபலமாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Read more: http://viduthalai.in/page-7/94609.html#ixzz3PK6Nr71P

தமிழ் ஓவியா said...

நான் தான் அவரோடு பலத்த கருத்து வேற்றுமை கொண்டேன் என்றும், அவரைப் பிடிக்கவேயில்லை என்றும் பேசுவது தவறு, உண்மைக்கு புறம்பானது. எனக்கு அவரோடு தொடர்பு ஏற்பட்டது 1935 ம் ஆண்டில், நான் அப்போது பி.ஏ. ஹானர்ஸ் பரிட்சை எழுதியிருந்தேன். பரிட்சை முடிவு தெரியாத நேரம் அது அப்போது கோவைக்கடுத்த திருப்பூரில் ஓர் வாலிபர் மாநாடு நடந்தது. அங்குதான் பெரியாரும் நானும் முதலில் சந்தித்தோம். அவரிடம் எனக்குப் பற்றும் பாசமும் ஏற்பட்டது.

அவரது சீர்திருத்தக் கருத்துக்கள் எனக்குப் பெரிதும் பிடித்தன. பெரியார் என்னைப் பார்த்து “என்ன செய்கிறாய்” என்று கேட்டார். ‘படிக்கிறேன், பரிட்சை எழுதியிருக்கிறேன்’ என்றேன். ‘உத்தியோகம் பார்க்கப் போகிறாயா?’ என்றார். “இல்லை. உத்தியோகம் பார்க்க விருப்பமில்லை, பொது வாழ்க்கையில் ஈடுபட விருப்பம்” என்று பதிலளித்தேன். அன்று முதல் அவர் எனது தலைவர் ஆனார். நான் அவருக்குச் சுவீகாரப் புத்திரனாகி விட்டேன். பொது வாழ்வில் அன்றிலிருந்து இன்றுவரை சுவீகாரப் பிள்ளைதான் நான் அவரது குடும்பத்தாருக்கு! இன்றும் கூட அந்தத் தொடர்பு விடவில்லை எனக்கும் அவருக்கும் ஏன்? அவருடைய அண்ணார் பிள்ளை சம்பத் என்னுடைய சுவீகாரப் பிள்ளை. இப்போது 14 வருடங்கள் அவரோடு பழகினேன். 14 வருடங்களாகப் பொதுவாழ்வில் இருக்கின்றேன்.

இத்தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த தலைவர், தெரிந்த தலைவர், பார்த்த தலைவர் இவர் ஒருவர் தான். வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்ததும் கிடையாது, செய்யவும் மனம் வந்ததில்லை. வராது. அதே காரணத்தினால்தான், இன்றுகூட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கூடத் தலைவரை ஏற்படுத்த வில்லை; அவசியம் என்று கருதவில்லை. இதய பூர்வமான தலைவர், இதயத்திலே குடியேறிய தலைவர், நமக்கெல்லாம் அப்பொழுது நல்வழி காட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை, தலைவர் பதவியை, நாற்காலியை காலியாகவே வைத்திருக்கிறோம். அந்த பீடத்திலே, நாற்காலியிலே வேறு ஆட்களை அமர்த்தவோ, அல்லது நாங்களே, அல்லது நானே அமரவோ விரும்பவில்லை ! "

- திமுக தொடக்க விழாவில் அண்ணா .

தமிழ் ஓவியா said...

பாடுபடுவான்

இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாகக் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால், அவனுக்குக் கடுகளவு சுயமரியாதையாவது இருக்குமானால், அவன் மனித இழிவைப் போக்கத்தான் முதலில் பாடுபடுவான். - (குடிஅரசு, 3.5.1936)

Read more: http://viduthalai.in/page-2/94634.html#ixzz3PPprWpim

தமிழ் ஓவியா said...

சோதிடத்தின் யோக்கியதை!

இலங்கையில் எதேச்சாதிகாரியாக, அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சேவுக்கு ஆஸ்தான சோதிடராக இருந்தவர் சுமணதாச அபய குணவர்த்தனே என்பவர் தான் அந்தச் சோதிடரன்றி அசைய மாட்டாராம் முன்னாள் அதிபர் ராஜபக்சே.

இன்னும் ஈராண்டும் அதிபராக இருக்க வாய்ப்பு இருந்தும் தேர்தலை முன் கூட்டியே நடத்தச் சொன்னதும் இந்தச் சோதிட சிகாமணிதான். அந்த ஆசாமிதான் இப்பொழுது வேறுவிதமாகக் கூறுகிறார்.
தேர்தல்ஆணையாளரையும் காவல் அதிகாரியை யும் புகழ்ந்து அவர்களால் நாடு காப்பாற்றப்பட்டது எனக் கூறியுள்ளார். நான் இல்லாவிட்டால் அவர் களுக்கு பணியாற்ற தேர்தல் ஒன்று வந்திருக்குமா? தேர்தல் 2017ஆம் ஆண்டே நடைபெறவிருந்தது.

முன்னாள் ஜனாதிபதியை தேர்தலை நடத்த நானே இணங்க வைத்தேன். அப்படியில்லை என்றால், அவர் வசிய மந்திரத்தை உச்சரித்து கொண்டு 2017 ஆண்டு வரை அலரி மாளிகையில் இருந்திருப்பார். இவற்றை நாங்கள் பகிரங்கமாக கூற முடியாது; எவரும் இதனை தமது அறிவைக் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். நாடு பயணிப்பதை பார்த்தபோது முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஆட்சியில் இருந்தால் எமக்கு நாடு என்று மீதமிருக்காது என்பதை நாம் உணர்ந்தோம். அந்த எண்ணத்திலேயே நாங்கள் இதனைச் செய்தோம். ராஜபக்சே ஆட்சியில் இருந்தால் எமக்கு நல்லதாக இருந்திருக்கும் ஆனால் அது நாட்டுக்கு கெடுதலாக முடிந்திருக்கும்.

யார் என்ன கூறினாலும் எமது வயிற்றைவிட நாங்கள் எமது நாட்டை நேசிக்கின்றோம். உண்மையில் கடந்த 9 ஆண்டுகள் நாட்டை நாங்களே நிர்வகித் தோம்.

இவ்வாறு சோதிடர் சுமணதாச அபயகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இந்தச் சோதிடர் எவ்வளவுப் பெரிய பித்தலாட்டக்காரர் என்பதை உணர வேண்டும்.

இந்த ஆசாமியின் சோதிடத்தை நம்பி தான் ராஜபக்சே முன்கூட்டியே அதிபர் தேர்தலை நடத் தினார். சோதிடம் பொய்த்து விட்ட நிலையில், தங்கள் முகமூடி கிழிக்கப்பட்ட நிலையில், ஏதோ நாட்டின் நலன் கருதி ராஜபக்சேயின் ஆட்சிக் கொடுமையி லிருந்து நாட்டைக் காக்கத்தான் அப்படி சோதிடம் சொன்னதாகச் சொல்லுவது அசல் ஏமாற்று வேலை யல்லவா! - பித்தலாட்டம் அல்லவா!

இதன் மூலம் சோதிடத்தின் யோக்கியதை எத்தகை யது என்பது விளங்கவில்லையா? சோதிடத்தை நம்பி ஏமாறும் பொது மக்கள் இதற்குப் பிறகாவது சிந்திக்க வேண்டாமா?

ஒருக்கால் தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்று இருந்தால், பார் பார் எங்கள் சோதிடம் பலித்தது! என்று மார்தட்டிக் கொள்வார்கள். அதற்குரிய சன்மானத் தையும் பெரிய அளவில் பெற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதில் அய்யமில்லை. சோதிடம் என்பது அறிவியலால் ஏற்றுக் கொள்ளப்படாதது. நோபல் பரிசு பெற்றவர்கள் எல்லாம் சோதிட நம்பிக்கையைக் கடுமையாகச் சாடியுள்ளனர்.

நியாயமாக சோதிடம் என்ற ஏமாற்று வேடத்தை சட்டப்படி தடுக்க வேண்டும் அரசுகள். அதுதான் மக்கள் நல அரசு (Welfare State) என்பதற்கான அடையாள மாகவும் இருக்க முடியும்.

சில நேரங்களில் குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்தது போல சொன்னது நடந்து விட்டால் சோதிடம் என்பது எவ்வளவு பெரிய உண்மை என்று ஊரே அதிரக் குரல் கொடுப்பார்கள்.

சந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் மிக அழகாகவே சொன்னார்.

உயர்நிலைப் பள்ளியைத் தாண்டிப் படிக்க தனக்கு வாய்ப்பு இல்லை - கல்வியில் மந்தம் என்று சோதிடர் சொன்னது மிகப் பெரிய பொய்யென்று நான் நிரூபித்துள்ளேன். கல்லூரிப் படிப்பையும் முடித்து இப்பொழுது விஞ்ஞானியாக வலம் வருகிறேன் என்று சொல்லவில்லையா?

தேர்தலைப் பற்றியும் பல நேரங்களில் இந்தச் சோதிடர் ஆரூடங்களை அள்ளி விடுவார்கள். ஆனால் அவர்கள் சொன்னபடி நடத்ததுண்டா?

உலகக் கோப்பைக் கிரிக்கெட் பற்றிக்கூட சோதிடம் சொல்லுவார்கள்; யாகம் நடத்தியதுண்டு. ஆனால், ஏமாற்றம்தான் மிச்சம்.

இலங்கை ராஜபக்சேயின் சோதிடர் கூறிய இன்னொன்றையும் கவனிக்கத் தவறக் கூடாது. இந்த 9 ஆண்டுகளும் ராஜபக்சே தாங்கள் சொன்னபடிதான் அரசை நடத்தினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்படியென்றால் இந்த ஒன்பதாண்டுகளில் நடைபெற்றுள்ள அநீதிகளுக்கும், கொடுமைகளுக்கும், சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் இந்தச் சோதிடரே பொறுப்பு என்று இலங்கை அரசு இந்தச் சோதிடரைக் கைது செய்து சிறைக்குள் தள்ள வேண்டாமா?

தப்பானவழி காட்டுதலுக்கு சோதிடம் பயன்பட்டு இருக்கிறதே இதற்கு என்ன பதில்?

இந்த யோக்கியதை உள்ள சோதிடத்தைத்தான் தமிழ்ப் பல்கலைக் கழகமும் அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் சொல்லிக் கொடுக்கின்றனவாம். இதனைவிட வெட்கக் கேடும், தலைக் குனிவும் வேறு ஒன்று இருக்க முடியுமா?

சோதிடத்தைப் பாடத் திட்டத்தில் வைத்துப் பட்டயங்களை வழங்கும் ஒரு நாட்டில் விஞ்ஞானிகள் உருவாவார்கள் என்று எதிர்பார்க்கத்தான் முடியுமா? அய்யகோ வெட்கக் கேடு மகா மகா வெட்கக்கேடு!

மக்கள் விழிப்புணர்வு பெறுவார்களாக! எதிலும் பகுத்தறிவை, விஞ்ஞான மனப்பான்மையைப் பயன் படுத்துவார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/94640.html#ixzz3PPq2pMWC

தமிழ் ஓவியா said...

உன்னால் நான் கெட்டேன் என்னால் நீ கெட்டாய்! புலம்புகிறார் மகிந்தா ராஜபக்சே


என்னை தமிழனோ, முஸ்லீமோ அழிக்க வில்லை. நீங்கள்தான் என்னுடைய அரசியல் வாழ்வை நாசப் படுத்தினீர்கள் என்று கோத்தபாயவிடமும், தன் பிள்ளைகளிடமும் எரிந்து விழுந்துள்ளார் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே.

தேர்தலில் தோல்வி யடைந்த பின்னர் தனது சொந்த ஊருக்குச் சென்ற மகிந்தா அங்கு தன்னைச் சந்தித்த பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அதன் பிறகு அவரது வீட்டில் கூடி யிருந்த அவரது உறவினர் கள் அனைவரையும் திட் டித் தீர்த்துவிட்டார்.

இது குறித்து இலங்கை உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தி யில், எனது 45 ஆண்டு அர சியல் வாழ்க்கை எனது பிள்ளைகளாலும் சகோதரா களாலும் அழிந்துவிட்டது என அனைவரையும் திட்டி தீர்த்தாராம்.

Read more: http://viduthalai.in/e-paper/94657.html#ixzz3PPqrYBsC

தமிழ் ஓவியா said...

நிதி நெருக்கடியில் திண்டாடும் மத்திய அரசு கோயில் நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமே!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


நிதி நெருக்கடி என்று கூறி, பல முக்கியத் துறைகளுக்கான நிதியை வெட்டும் மத்திய அரசு, கோயில்களில் குவிந்து கிடக்கும் நிதியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. (மத்திய) அரசு தனது நிதிப் பற்றாக்குறைக்காக நல்ல லாபம் தரும் - பொன் முட்டை இடும் வாத்தைக் கொல்வது போன்று - பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதில், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஈடுபட்டு வருகிறது.

மக்களின் சுகாதாரத் திட்டத்திற்காக செலவு செய்வதில் 20 விழுக்காடு வெட்டு!
உயர் கல்வித் துறை வளர்ச்சிக்கான ஒதுக்கீட்டில் 3000 கோடி ரூபாய்க்கு மேல் வெட்டு.

வரிமூலம் பறிக்கும் அரசு

பெட்ரோல், டீசல் (ஏழை விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில்) உலகச் சந்தை விலை சரி பாதிக்கு மேல் வீழ்ச்சி அடைந்தும், அதன் பயனை நுகருவோரான மக்களைச் சென்று அடையாமல், மத்திய அரசு வரி விதிப்பின் மூலம் இடையே பறித்துக் கொள்கிறது!

உரவிலையும் கூடவே விவசாயிகளின் தலையில் விடிகிறது; சந்தைப் பொருளாதாரத்தின் கொள்ளை லாபக் குபேரர்கள் கொள்ளையடிக்க ஏதுவாக கட்டுப்பாடுகளை நீக்கி கதவுகள் - திறந்து விடப்படும் கொடுமையும் நாளும் வளர்ந்துவருகிறது!

மக்களைத் துன்புறுத்தும் இந்த மாய வளர்ச்சியின் உண்மைத் தன்மையை வாக்களித்தவர்கள் உணரத் தலைப்பட்டு வருகிறார்கள்!

கோயில்களில் குவிந்துள்ள நிதியைப் பயன்படுத்தலாமே!

நிதி ஆதாரம் தேடும் மத்திய அரசு, பல லட்சம் கோடி ரூபாய்களை உள்ளடக்கிய கோயில்களான திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், குருவாயூரப்பன் கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில் வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக கடன் பத்திரங்களாக்கி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு - திருப்பிக் கொடுக்கலாமே!

மக்கள் பணத்தை முழுமையாக மக்கள் நலத்திற்குச் செலவிடுவதில் என்ன தவறு?

திருப்பதி ஏழுமலையான் கோயில் பட்ஜெட்டைப் பாரீர்!

எடுத்துக்காட்டாக, கடவுள்களிலேயே அதிக வருவாய் பெறும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் வருமானம் 2014-2015 பற்றிய ஒரு புள்ளி விவரம் இதோ:

அதன் பட்ஜெட் ரூ.2401 கோடி, ரூ.900 கோடி உண்டியல் மூலம் வசூல்; வங்கியில் உள்ள டெபாசிட்டுகளுக்கான வட்டி மூலம் வருவாய் 655 கோடி ரூபாய், பக்தர்களின் மொட்டை - மயிர்மூலம் ரூபாய் 190 கோடி வருவாய், கட்டட வாடகை மூலம் ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு ரூ.108 கோடி - வருவாய்.

செலவு விவரம் பாரீர்!

ஹிந்து தர்ம பிரச்சாரத்திற்கு ரூ.109 கோடி!
மருத்துவமனைகளுக்கு ரூ.55 கோடி
மற்ற பெரும் பகுதி - ஊழியர்கள் சம்பளம்.
இதன் வைப்பு நிதி மூலதனம் 7,000 கோடி ரூபாய்!

இந்து மதப் பிரச்சாரத்துக்கு
ரூ.100 கோடியாம்

மற்ற அறக்கட்டளைகளுக்கு வருமான வரித் துறையினர் தரும காரியங்களுக்கு எவ்வளவு விழுக்காடு செலவு செய்தீர்கள் என்று கேள்வி கேட்கும்போது, வெங்கடாஜலபதி கோயிலில் கொழுத்த பார்ப்பனர் சுரண்டல் எப்படி உள்ளது பார்த்தீர்களா? இவர்கள் ஆண்டுக்கு ரூ.100 கோடியில் ஹிந்து தர்ம பிரச்சாரமாம்! அதன் விவரத்தை அளிக்கவேண்டாமா?

கிறித்துவர்களின் கல்வித் தொண்டு மருத்துவத் தொண்டுக்கு முன் இது எம்மாத்திரம்? அரசின் மக்கள் நலப் பணிகள் மருத்துவம், கல்வி, முதலியவற்றை இவைகளை ஒருங்கிணைத்தாவது செய்தால் திருப்பதி ஏழுமலையான் கோபித்துக் கொண்டு வெளி நாட்டிற்கா போய் விடுவார்?

மூடபக்தியினால் திருப்பதிக்கு வாரி வழங்கும் பணக்காரர்களும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கட்டும்.

பக்தி வந்தால் புத்தி போகும்
புத்தி வந்தால் பக்தி போகும்

எனவே - மனிதர்களை வாழ விடுங்கள்.

விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்திட அரசுகள் வழி காணட்டும்!

பெரியார் கூறிய மூன்று வகை முதலாளிகளில்

1) உயிருடன் மூலதனம் போடும் முதலாளிகள்

2) கடவுள் (கல்) முதலாளிகள்

3) பிறவி முதலாளிகளான பார்ப்பனர்

இந்த முதலாளித்துவத்தை எதிர்த்து ஒழித்தால் ஒழிய சமதர்மம் வருமா? சிந்தியுங்கள்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
21.1.2015

தமிழ் ஓவியா said...

ஜாதி-மத வெறிகளை எதிர்த்தும்,
மனிதநேயம், சமூகநீதியை வலியுறுத்தியும்
2000 வட்டார மாநாடுகள்
திருவாரூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்


திருவாரூர், ஜன.21- ஜாதி, மதவெறி களை எதிர்த்தும், மனிதநேயம், சமூக நீதியை வலியுறுத்தியும் 2000 வட்டார மாநாடுகள் தமிழகம் முழுவதும் திரா விடர் கழகம் சார்பில் நடத்தப்பட்டு வரு கின்றன என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (21.1.2015) திருவாரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: திராவிடர் கழக மாநாட்டின் நோக்கம்...?

தமிழர் தலைவர்: ஜாதி வெறி, மத வெறிகளை எதிர்த்தும், மனித நேயம், சமூகநீதி ஆகியவற்றை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் 2000 வட்டார மாநாடுகளை நடத்த திராவிடர் கழகம் திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் நாளை (22.1.2015) வரை 14 மாநாடுகள் நடைபெறுகின்றன. மத்தியில் ஆளும் பிஜேபி அரசு, அதனுடைய சங் பரி வாரங்களும் புதிய சூழ்நிலையைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சி செய்கின்றன. அதுகுறித்து மக் களிடத்தில் எச்சரிக்கை உணர்வை ஏற் படுத்துவதும் இம்மாநாட்டின் நோக்க மாகும். புதிய பலம் ஏற்பட்டதுபோல அவர்கள் நினைக்கிறார்கள்.

அது இல்லை என்பதை நாம் காட்டுவோம்

செய்தியாளர்: மேனாள் முதலமைச் சர் ஜெயலலிதாவுடன் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி சந்திப்பு குறித்து...?

தமிழர் தலைவர்: டில்லியில் சிபிஅய் இயக்குநரை வழக்கு சம்பந்தப் பட்டவர்கள் யார் யார் சந்தித்தார்கள் என்பது பிரச்சினையானது. உச்சநீதிமன் றத்திலும் இது கடுமையாக விமரிசிக்கப் பட்டது. இது மத்திய நிதியமைச்சர் ஜெட்லிக்கு தெரியாததா?

செய்தியாளர்: இலங்கையின் புதிய ஆட்சி குறித்து...?

தமிழர் தலைவர்: ஒரு மாற்றம் தெரி கிறது. 13 ஆவது சட்டத் திருத்தம் நிறை வேற்றப்படும் என்பதும், மாகாணங் களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப் படும் என்கிற மாநில சுயாட்சி அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. இந்த வெள்ளிக்கீற்று கள் அகலமாக வேண்டும். ராஜபக்சே குடும்பம் செய்த அநியாயங்கள், கொடு மைகள்குறித்து விசாரணை ஆரம்ப மாவது வரவேற்கத்தகுந்தது.

செய்தியாளர்: மீத்தேன் திட்டம் வரவேற்கத்தகுந்தது என்று பாஜக மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே?

தமிழர் தலைவர்: மூன்றாண்டு களுக்கு முன்பாகவே மதுக்கூர் திராவிடர் கழக மாநாட்டில் மீத்தேன் குறித்து தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட் டில் விவசாயிகள் கடுமையாக எதிர்த்துக் கிளம்பியுள்ள இந்த காலகட்டத்தில், ஒரு பொறுப்புள்ள மத்திய அமைச்சர் இப்படிப் பேசியிருப்பது சரியானதுதானா? நாட்டு மக்கள் இவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

செய்தியாளர்: சிறீரங்கம் இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு?

தமிழர் தலைவர்: சிறீரங்கம் தேர்தல் ஆதரவுகுறித்து விரைவில் அறிக்கை வெளிவரும்.

செய்தியாளர் சந்திப்பின்போது திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் கழகப் பொறுப் பாளர்கள் உடனிருந்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/94680.html#ixzz3PVinkqc4

தமிழ் ஓவியா said...

தமிழர் பகுதிக்கு அதிகாரப் பகிர்வு; 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதி


கொழும்பு, ஜன.21_ தமி ழர் பகுதிக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க 13- ஆவது அரசியல் சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதி அளித்துள்ளார்.

கடந்த 1987- ஆம் ஆண்டு ஜூலை மாதம், இந்தியா_- இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதில், அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், அப்போதைய இலங்கை அதிபர் ஜெய வர்த்தனேவும் கையெழுத் திட்டனர்.

அதைத் தொடர்ந்து, இலங்கை அரசியல் சட் டத்தில் 13- ஆவது திருத் தம் மேற்கொள்ளப்பட் டது. தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகா ணங்கள் உள்பட அனைத்து மாகாணங்களுக்கும் அதி காரப் பகிர்வு அளிக்க இந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது.

ஆனால், அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள், இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்தவில்லை. மேலும், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம், 13 ஆ-வது சட்டத் திருத் தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், மாகாணங்களுக்கு இது வரை அதிகாரப் பகிர்வு கிடைக்கவில்லை.

ஆனால், 13- ஆவது சட் டத் திருத்தத்தை எழுத் திலும், செயலிலும் அமல் படுத்துமாறு இலங்கையை, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த 8- ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜ பக்சே தோல்வி அடைந் தார். புதிய அதிபராக மைத்ரிபால சிறீசேனா பதவி ஏற்றார்.

அய்க்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்கே, புதிய பிரதமராக பதவி ஏற்றார். புதிய அரசு பதவி ஏற்ற பிறகு, நேற்று முதல் முறையாக நாடாளுமன் றம் கூடியது. நாடாளு மன்றத்தில் பேசிய புதிய பிரதமர் ரணில் விக்ரம சிங்கே, தனது அரசின் 100 நாள் திட்டம்பற்றி விளக்கிக் கூறினார்.

அப்போது அவர், 13- ஆவது சட்டத் திருத் தத்தை அமல்படுத்தப்
போவதாக அறிவித்தார். அவர் பேசியதாவது:-

வெவ்வேறு கொள்கை களும், நோக்கங்களும் கொண்ட அரசியல் கட்சி கள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளோம். சர் வாதிகார குடும்ப ஆட் சிக்கு முடிவு கட்ட நாங் கள் ஒன்று சேர்ந்தோம்.

எல்லா அரசியல் கட்சி களிடம் இருந்தும் நாங் கள் யோசனைகளையும், திட்டங்களையும், விமர் சனங்களையும் வரவேற்கி றோம். தேசிய பிரச்சினை களுக்குத் தீர்வுகாண நாங்கள் ஒன்று சேர்வது சவாலான விஷயம்தான். இருப்பினும், இந்த பிரச் சினைகளை இந்த நாடா ளுமன்ற பதவிக்காலத் துக்கு அப்பாலும் நீடிக்க விட்டுவிடக்கூடாது.

மாகாணங்களுக்கு அதி காரப் பகிர்வு அளிக்க வகை செய்யும் 13- ஆவது அரசியல் சட்ட திருத் தத்தை அமல்படுத்து வோம். ஒன்றுபட்ட இலங்கை என்ற அடிப் படையிலும், சிறுபான்மை தமிழர்களுடன் நல்லிணக் கத்தை எட்டுவதற்காகவும் இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்தப்போகிறோம்.

ஜனநாயக சீர்திருத்தங் களை அறிமுகப்படுத்து வதுதான், எங்களது 100 நாள் திட்டத்தின் பெரும் பகுதியாக இருக்கும். ராஜ பக்சே, நாடாளுமன்றத் தின் அதிகாரத்தைக் குழி தோண்டி புதைத்து விட்டு, அதிபர் பதவிக்கு அதிகாரங்களை குவித்துக் கொண்டார்.

இதற்காக அவர் செய்த 18 ஆ-வது அரசியல் சட்ட திருத்தத்தை ரத்து செய் வோம். இதன்மூலம், அதி பர் பதவிக்கான அதிகாரங் கள் கட்டுப்படுத்தப்படும். நாடாளுமன்றத்துக்கும், அமைச்சரவைக்கும் அதி காரங்கள் அளிக்கப்படும். நாடாளுமன்றத்துடன் இணைக்கப்பட்ட அமைச் சரவையை கொண்ட புதிய அரசு முறையை கொண்டுவர நாடாளு மன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்.

தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை மீண்டும் உருவாக்க, 19 ஆ-வது அரசியல் சட்ட திருத் தம் கொண்டுவரப்படும். நீதித்துறை உள்ளிட்ட பொது அமைப்புகளை கண்காணிக்கும் அமைப் பாக இந்த தன்னாட்சி அமைப்புகள் செயல்படும். இதுவும், அதிபரின் அதி காரத்தைக் குறைக்கும் நடவடிக்கைதான்.
ஒளிவு மறைவற்ற நிர் வாகத்தை அளிப்பதற்காக, தகவல் பெறும் உரிமை சட்டம் கொண்டுவரப் படும்.

ராஜபக்சே ஆட்சி யால், மேலை நாடுகள் மற்றும் இந்தியாவின் ஆதரவை இலங்கை இழந்து விட்டது. சீனா வையே சார்ந்து இருந்தது. ஆனால், சீனா, ராஜபக் சேவின் நடவடிக்கைகளை கண்டு கொள்ளவில்லை.

இவ்வாறு ரணில் விக் ரமசிங்கே பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/94676.html#ixzz3PVjCYDC5

தமிழ் ஓவியா said...

கங்கை இந்துக்களின் தனிச் சொத்தா?


கங்கையில் நூற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்து பல கிலோமீட்டர் கரைப்பகுதிகள் பிணநாற்றமெடுத்து அருவருப்பான நிலையில் இருக்கும் பட்சத்தில் கங்கை யில் பிணங்களை வீசுவது குறித்து சாமியார்கள் முடி வெடுப்பார்கள் என்று மத்திய நீர்வள மற்றும் கங்கை நீர் சுத்திகரிப்பு துறைக்கான அமைச்சர் உமாபாரதி கூறியுள்ளார்.

சனிக்கிழமை அன்று அலகாபாத் கங்கைக் கரையில் சாமியார்கள் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டு உமாபாரதி கூறியதாவது, மத்திய அரசு கங்கையில் இந்து மக்கள் கொண்ட கொள்கைக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காது, இந்துக்களின் நம்பிக் கையின் அடிப்படையில் தான் மோட்சமடைவதற்காக கங்கையில் உடல்கள் வீசப்படுகின்றன, உலகிலேயே கங்கை நதிமாத்திரம் தான் எலும்புகளைக்கூட மிகவிரைவிலேயே அரித்து தண்ணீரோடு கலந்துவிடும் தன்மை கொண்டது.

இதனடிப்படையில் தான் கங்கையில் உடல்கள் வீசப்படுகின்றன, மலர்கள், உடைகள் கங்கையில் வீசப்படுகின்றன என்றால் அவை நீண்ட நெடிய கங்கை கரையில் உரமாக மாற்றப்படுகின்றன. மேலும் கங்கை நதிக்கரையில் மரங்கள் நடுவது குறித்து சாமியார்களிடம் கேட்டு இருக்கிறோம், இந்துமத சாஸ்திரங்களின் படி கங்கைக் கரையில் மரங்கள் நடுவதா வேண்டாமா என்பதை சாமியார்கள் தான் இறுதிமுடிவெடுப்பார்கள். கங்கை மாசுபடுவது இறந்த உடல்கள் மற்றும் கடவுளுக்கு சாற்றிய மலர்கள் மற்றும் ஆடைகளால் தான் என்று கூறுவது முட்டாள் தனமானது, நவீன காலத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் கங்கைக் கரையில் அமைந்துவிட்டன. இவற்றிலிருந்து வரும் கழிவுகளால் தான் கங்கை மாசடைந்து வருகிறது.

கங்கையை சுத்தப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது, ஆனால் அது ஒருபோதும் இந்த நாட்டின் மக்களாகிய இந்துக்களின் நம்பிக்கைக்கு விரோதமாக இருக்காது. கங்கைக்கரை முழுவதும் தடுப்புகள் அமைப்பது குறித்து மத்திய அரசு எந்த ஒரு முடிவை யும் எடுக்காது; அது அந்த அந்த மாநில அரசின் முடிவுகள், மேலும் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பது குறித்து எந்த ஒரு மாநில அரசு சாமியார்களின் ஆலோசனையைப் பெறவேண்டும். இந்துக்களின் நம்பிக்கையில் விளையாடவேண்டாம் என்று கர்ச்சிக் கிறார் அமைச்சர் உமாபாரதி.

கடந்த வாரம் கங்கையில் 200-க்கும் மேற்பட்ட பிணங்கள் மிதந்தது குறித்து நேரிடையாக பதிலளிக் காமல் மத நம்பிக்கைகளை நாம் இழிவுபடுத்தக் கூடாது.உடல்கள் இன்றல்ல நேற்றல்ல; தொன்று தொட்டு கங்கைக்கு அர்ப்பணிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் இது குறித்து கூறுவதற்கு ஒன்றுமில்லை, இருப்பினும் சாமியார்கள் தான் இது குறித்து முடிவு செய்யவேண்டும், மேலும் திருவிழா காலங்களில் சாமி சிலைகள் கங்கையில் வீசுவதற்குப் பதிலாக கங்கைக் கரையில் பெரிய பள்ளங்களைத் தோண்டி அதில் கரைக்க வேண்டும் என்ற தொண்டு அமைப்பின் கோரிக்கைக்கு பதிலளித்த உமா பாரதி கங்கையை ஒரு சிறிய பள்ளத்தில் அடைக்க முடியுமா? என்று எதிர்க்கேள்வி கேட்டுள்ளார். என்னே தர்க்கம் இது? சிலைகளை குழிதோண்டி மூடமுடியாதா?

இந்து சாமியார்களைக் கேட்டு முடிவெடுப்பதற்கு கங்கை என்ன இந்துக்களுக்கு மட்டும் சொந்தமான தனிப்பட்ட சொத்தா? நாட்டின் பொதுச் சொத்து அல்லவா! இந்துக்களைத் தவிர வேற்று மதத்தவர்கள்

கங்கையில் நீராடக் கூடாது என்று கூட சட்டம் செய்வார்கள் போல தோன்றுகிறது.

கங்கை மாசுபடுவதற்கு முக்கிய காரணம் மனித உடல்களையும், கிழட்டு மாடுகளையும் எரியூட்டி எரிக்கப்பட்ட மனித சாம்பலையும், எலும்புகளையும் கங்கையில் வீசுவதுதான் என்பதை மறுக்கிறார் ஒரு மத்திய அமைச்சர் என்றால் மதம் அவர்களின் மதியை எப்படி எல்லாம் பாழ்படுத்தி இருக்கிறது! எதையும் இந்து சாமியார்கள் தான் முடிவு செய்வர்களா? ஆஸ்தான சாமியார்களைக்கூட அதிகாரப் பூர்வமாக அமைத்துக் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாடு மன்னர்கள் காலத்திற்குச் செல்லுகிறதா? எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...

மேலான ஆட்சிதந்திரத்தாலும், வஞ்சகத்தாலும், மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட, துப்பாக்கியாலும், பீரங்கியினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது. _ (குடிஅரசு, 3.11.1929)

தமிழ் ஓவியா said...

திருவரங்கம் விடுதலை வாசகர் வட்டத்தில் நடைபெற்ற இராவண காவியம் விந்த காண்டம் சொற்பொழிவு

திருவரங்கம், ஜன. 21_ விடுதலை வாசகர் வட்டம் திருவரங்கம் சார்பில் 10ஆவது மாதாந்திர கூட்டம் 29.11.2014 அன்று மாலை 6.30 மணிக்கு மு. மீனாட்சி சுந்தரம் (தலை வர் வி.வா.வ.) தலைமை யில் சிறப்பாக நடைபெற் றது. தந்தை பெரியார் சிறப்பைப் பற்றிய கவி தையை டி.செல்வராஜ் படித்தார்.

அனைவரையும் வழக்குரைஞர் சா.ஹரி ஹரன் (செயலாளர் வி. வா.வ) வரவேற்று உரை யாற்றினார் ஆ.பெரிய சாமி, சா.கண்ணன், இரா. மோகன்தாஸ், எம்.நேருஜி (திமுக) ஆகியோர் முன் னிலை வகித்தார்கள். வி. சீனிவாசன் (திமுக) வாழ்த் துரை வழங்கினார்.

பொறியாளர் சி.ரெங்க ராஜூ நிகழ்ச்சியை துவக்கி ஆற்றிய உரையில் தந்தை பெரியாரின் பண்புகள் கொள்கை உறுதி மனித நேயம் அரிய பண்புகளை எடுத்துக் காட்டுடன் விளக்கினார். ஆரியரு டைய நிர்வாகத்தில் இயங் கும் திருச்சி சீதாலெட்சுமி ராமசாமி பெண்கள் கல்லூரியில் (ஷி.ஸி.சிஷீறீறீமீரீமீ) தந்தை பெரியாரை உரை யாற்ற அழைத்தார்கள்.

தந்தை பெரியார் உரை யாற்றுவதை கேள்விபட் டவுடன் இயக்கத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித் தார்கள். உடனடியாக தந்தை பெரியார் பெண் கள் கல்வி கற்க வேண்டு மென கொள்கையை வலியுறுத்தி 50 ஆண்டு களாக போராடி வருகி றேன் பெண்கள் கல்வி கொள்கை வெற்றி பெற் றது என மகிழ்ச்சி அடைந் தேன் என தக்க பதிலடி தந்தார்.

இராவண காவி யம் 5 காண்டம், 57 பட லம், 3100 செய்யுள் கொண்ட காப்பியம். இராவணகாவி யத்திற்கு 1948 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு தடைவிதித்தது ஆனால் 1971 ஆம் ஆண்டு டாக்டர் கலைஞர் அரசு தடையை நீக்கி ஆணை பிறப்பித் தார் என சிறப்பான உரை யாற்றினார்.

பேராசிரியர் இ.சூசை முழக்கம்

ஆசிரியர் புலவர் குழந்தை தன் இராவண காவியம் விந்த காண்டம். ஆரிய படலம் முடிய உள்ள பாடல்கள் மூலம் இரா வணப் பேராசின் எல்லை விந்தியம் முதல் தென்னிந் தியா முழுவதும், இன்றைய ஒரிசா மாநிலம் (பழைய கலிங்கம்) உள்ளிட்டதாக பரவியிருந்தது எனக் கூறுகிறார். விந்த காண் டம் 28 பாடல்களைக் கொண்டும், ஆரியபடலத் தில் ஆரியர்களின் வாழ்வு முறை ஒழுக்கச் சீர்கேடு களை நுட்பமாக ஆய்வு டன் சாடியுள்ளார்கள்.

ஆரியர்கள் தங்கள் மனைவி மக்களுடன் உடலாலும், உள்ளத்தாலும் மகிழ்ந் திருந்தனர். ஆயினும் காட்டில் வசதியுடன் துறவிவேடம் பூண்டு மனித சமுதாயத்தில் உயர்ந்தவனாகவும், கருத வைத்தும் தங்களை வணங்க வைத்தும், தமிழர் களுக்கு சோமபானம் வழங்கி போதையில் மதி யிழந்து, மதிப்பு இழந்து வீழ்த்தினார்கள்.

ஆரியப் படலத்தில் ஆரியர்கள் சூழ்ச்சியில் மூழ்கிய ஆரி யர்கள் என்றே கூறுகிறார். இராவணன் படையுடன் வரும்போது ஆரியர்கள் ஓடி ஒளிந்தனர் எனப்பகர் கின்றார். ஆரியர்களுக்கே தனி மொழியாக சமஸ்கிரு தம் இல்லை. வடிவமில்லை, சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவராக கருதிக்கொண்டு அந்தந்த இடத்திற்கு தக்கவாறு வேடம்பூண்டனர்.

உதார ணம் தமிழ்நாட்டில் அந் தணர், தெலுங்கு நாட்டில் தெலுங்கு பிராமணர் எனவும், ஆரியர்கள் மராத் தியுடன் (சவுராஷ்டிர மொழி) கலந்து சமஸ் கிருதம் எனக்கூறியுள் ளார். இந்த பொய்யுரை களை கூறியதால் இவர் களை உயிருடன் கொளுத்த வேண்டும் என கார்த்தி என்ற ஆய்வாளர் வெகுண்டு உரைக்கின்றார். ஆரியர் களின் வாழ்வு நெறியினை புலவர் குழந்தை சாடி யுள்ளார்.

ஒற்றுமையான சமூகத்தினை குறிப்பாக தமிழர்களை பிரித்தல், இயலவில்லை எனில் தமி ழர்களுடன் கூட்டுசேர்ந்து அடுத்து கெடுத்தல், பொருட்களை கேடு செய் வது, ஆராயாமல் எதனை யும் செய்தல் இவைகளை யெல்லாம் பஞ்சதந்திரம் எனக்கூறி ஏமாற்றுகின் றனர் என்பதை ஆரிய படலத்தில் விரித்துரைக் கப்பட்டிருக்கிறது.

ஆரியர் கள் பொய் புரட்டுகளை, ஒழுக்கச்சீர்கேடுகளை பட்டியலிட்டு விரித்து ரைத்தால் இராவண காவியத்தை தீய இலக் கியம் எனக்கூறி அழித்து விடுவர் என்றே புலவர் குழந்தை அஞ்சினார் அஞ்சியதற்கு காரணம் இராவண காவியம் நின்று நிலைத்து காலத்தால் அழி யாமல் இருக்க வேண்டும் என்ற ஆசிரியரின் பேரவா எனக்கூறி பேராசிரியர் சூசை நிறைவு செய்தார்.

கூட்டத்திற்கு வருகை தந்தோர் சட்டஎரிப்பு வீரர்முத்துகுமாரசாமி, ப.இராமநாதன், தி.சண் முகநாதன், பி.தேவா, இரா.முருகன், காட்டூர் கனகராசு, க.சுதாகர், கிருஷ்ணகுமார், க.பாஸ் கர், திமுகவை சார்ந்த மு.கருணாநிதி.ராஜேஷ், மூலதோப்புரவி, கே. மாணிக்க, செல்வகுமார், அப்பு.அன்பு கணபதி, சு.பரஸ்கரன் ந.நிஜவீரப்பா மற்றும் ஏராளமான இயக்க தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் கள்.
இறுதியாக டி.பி.தியாக ராசன் நன்றி கூற இனிதே முடிவுற்றது.

Read more: http://viduthalai.in/e-paper/94719.html#ixzz3PVkwhEB9

தமிழ் ஓவியா said...

சென்னை புத்தகக் கண்காட்சியில்
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனப் புத்தகங்கள் ரூ.5,14,553க்கு விற்றுச் சாதனை!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின ரால் நந்தனம் ஒய்.எம். சி.ஏ. கல்லூரி மைதானத் தில் 9.1.2015 முதல் 21.1.2015 வரை 13 நாள்கள் நடத்தப் பட்ட 38ஆவது சென்னை புத்தகக் காட்சியில் நமது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அரங் கில் எந்த ஆண்டும் இல் லாத சாதனை அளவாக ரூ.5,14,553க்கு நூல்கள் விற்பனை ஆகி உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். இந்தச் சாதனையை அடைய ஆதரவு அளித்த பொது மக்களுக்கு உளங் கனிந்த நன்றியும், ஊக்கத்தோடு பணிபுரிந்த பெரியார் புத்தக நிலைய உதவியாளர்களுக்குப் பாராட்டுதலையும் உரித்தாக்குகிறோம். நன்றி
- த.க. நடராசன், மேலாளர்

Read more: http://viduthalai.in/e-paper/94742.html#ixzz3PYfD2c94

தமிழ் ஓவியா said...

நரேந்திர மோடி அரசு ராம பக்தர்களின் அரசாம் : ராமனின் ராஜ்ஜியமாம்!


கூறுகிறார் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நரேந்திரமோடி அரசு ராமபக்தர்களின் அரசு நாடெங்கும் ஜெய் சிறீ ராம் என்ற முழக்கத்தை ஒலிக்க வைக்கும் அரசு, என்று நெடுஞ்சாலை மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசம், பைசாபாத் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் நிதின் கட்கரி கூறியதா வது: மோடி ஆட்சி, ஒரு வரலாற்றுத் திருப்பம் நீண்ட காத்திருப்பிற்கு பிறகு ராமபக்தர்களின் ஆட்சி அமைந்திருக்கிறது.

ராமனின் அனுக்கிரகத் தால் பிரதமர் நரேந்திர மோடி, இந்த நாட்டை வளமான பாதைக்குக் கொண்டு சென்று கொண்டு இருக்கிறார்.ராமனின் ஆட்சியில் பேதங்கள் இல்லை, ஊழல்கள் இல்லை, வறுமை இல்லை, அதை இந்த ஆட்சியில் நரேந்திரமோடி கொண்டு வர முனைப்புடன் இருக் கிறார். நாங்கள் ஊழல் வாதிகளை ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம். நாடு முழுவதும் ராம வன் மார்க்(ராமர் அம்பு காட் டிய பாதை) என்ற பெய ரில் சாலைகள் அமைப் போம், இது இலங்கை யையும் இணைக்கும் வகையில் எதிர்காலத்தில் அமையும். இந்த ராமன் வன் மார்க் குறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திட்டவரை முறைகளை முன்வைப் போம், வருங் காலத்தில் இந்த ஆட்சியில் நாடெங் கும் ஜெய் சிறீராம் என்ற முழக்கமே ஒலிக்கும், என்றார். அரசியல் சாசனப்படி அனைத்து மக்களையும் ஒன்றாக பாவிப்பேன் என்று கூறி பதவியேற்ற நிதின் கட்கரி, ஒரு மதத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறி யுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/94743.html#ixzz3PYfKhjDe

தமிழ் ஓவியா said...

திராவிடர் விழிப்புணர்ச்சி 13ஆம் வட்டார மாநாடு:

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே எதிர்த்து பேசுகிறார்கள்


நன்னிலம், ஜன.22- மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையை எதிர்த்து ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே பேசுகிறார்கள் - இதுதான் பிஜேபி ஆட்சியின் இலட்சணம்! என தமிழர் தலைவர் கருத்துரையாற்றினார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நேற்று (21.1.2015 மாலை நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு 13ஆம் வட்டார மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய கருத்துரை வருமாறு: வளர்ச்சி வளர்ச்சி என்று போட்ட சத்தத்தில், மயக்க பிஸ்கட்டில் ஏமாந்து இன்றைக்கு எட்டு மாதங்களுக்கு முன் ஓர் ஆட்சியை மத்தியில் உட்கார வைத்தார்கள் மக்கள் ஏமாந்தார்கள். ஆட்சிக்கு வந்தவர்கள் என்ன வளர்ச்சியை நாட்டில் ஏற்படுத்தினார்கள்!?

மதவாதத்தைக் கிளப்பி வருகிறார்கள். யானைக்கு மதம் பிடித்தாலே ஆபத்து! மனிதனுக்கு மதம் பிடித்தால் என்னவாகும்? ஒரு கட்சிக்கோ, ஆட்சிக்கோ மதம் பிடித்தால் என்ன ஆகும்? அதுதான் இப்பொழுது நடக்கிறது.

காந்தியைச் சுட்டுக் கொன்றவர்கள், இப்பொழுது கோட்சேவுக்குச் சிலை வைப்போம் என்கிறார்கள். ஒரு நாடு எப்பொழுது வளர்ச்சி அடையும்? அந்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இணக்கமாக கைகோர்த்து வாழ்ந்தால் தான் அந்நாடு வளர்ச்சி அடையும்.

ஆட்சியிலே உள்ளவர்களே சிறுபான்மை, பெரும் பான்மை பேசி மக்களை ஒருவரோடு ஒருவர் மோத விட்டால் அந்த நாடு வளர்ச்சி அடையுமா?

குஜராத்தில் என்ன நடந்தது? அது நாடு முழுவதும் நடைபெற வேண்டுமா? நாம் அதைஅனுமதிக்கலாமா? ஏற்கத்தான் முடியுமா?

120 கோடி மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கிக் கொண்டு தவிக்கிறது. எதை எதையெல்லாம் விற்கலாம் என்று திட்டம் போடுகிறார்கள் மத்தியில் உள்ள ஆட்சியாளர்.

இந்த லட்சணத்தில் ஒவ்வொரு வரும் நான்கு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஒருவர் கூறுகிறார் - இன்னொரு சங்கராசசாரியாரோ - ஒவ்வொரு வரும் பத்துப் பிள்ளைகளைப் பெற்று தள்ளுங்கள் என்று சொல்லுகிறார்கள் - மத்தியில் ஆள்பவர்கள். இவற்றை யெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. மக்கள் தொகை யைக் கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையை எதிர்த்து ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே பேசுகிறார்கள் - இதுதான் பிஜேபி ஆட்சியின் இலட்சணம்!

ஒரு பெண் எத்தனை குழந்தையைப் பெற்றுக் கொள் வது என்பதை ஆண்கள் முடிவு செய்யலாமா?

கருவைப் பத்து மாதம் சுமந்து பிரசவிக்கும் பெண்ணுக்கல்லவா அதன் வலியும் சுமையும் தெரியும்.

கேட்டால் கடவுள் கொடுக்கிறான் என்று சமாதானம் சொல்கிறார்கள். அந்தக் கடவுளிடமே சொல்லுங்கள். அவர்தான் சர்வ சக்தி வாய்ந்தவராயிற்றே! பெண்களின் கருப்பையை ஆண்களுக்கு மாற்றி வைக்கச் சொல்லுங்கள். பத்து மாதம் ஆண்கள் கருவைச் சுமந்து பிரசவிக்கட்டுமே! ஏற்றுக் கொள்வார்களா? (பலத்த சிரிப்பு - கை தட்டு!)

மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சியில் ஒரு பக்கம் பார்ப்பனர் ஆதிக்கம்; இன்னொரு பக்கத்தில் கார்ப்பரேட்டு நிறுவனங்கள் இரண்டும் நாட்டைச் சூறையாடுகின்றன.

அரசமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நிற்பதாக சத்தியம் செய்து கொடுத்துப் பதவி ஏற்கிறார்கள். அந்த அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார் பின்மைக்கு விரோதமாகப் பேசுகிறார்கள் - நடந்து கொள்கிறார்கள்.

இத்தகையவர்களை அடையாளம் காணுங்கள் என்று எச்சரிக்கவே திராவிடர் கழகம் நடத்தும் திராவிடர் விழிப்புணர்ச்சி மாநாடுகள்!

வீட்டுக்காரன் தூங்கலாம்; குறட்டை விட்டுக் கூடத் தூங்கலாம்; ஆனால், காவல்காரன் தூங்கலாமா? தூங்கத்தான் முடியுமா?

அந்தக் காவல்காரனாக இருந்துதான் திராவிடர் கழகம் எச்சரித்துக் கொண்டு இருக்கிறது. கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன் என்ற பழமொழிதான் உங்களுக்குத் தெரியுமே! என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/94744.html#ixzz3PYfW3C49

தமிழ் ஓவியா said...

பெருமாள் முருகனுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்! திராவிடர் கழகம் பங்கேற்பு

சென்னை, ஜன.22_ கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து எழுத்தாளர் பெருமாள் முருகனை ஆதரித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் என்ற நாவலுக்கு எதிராக இந்துத்துவவாதிகளும், ஜாதியவாதிகளும் தொடர்ந்து செய்துவரும் பிரச்சினைகளால், எழுத்தாளர் பெருமாள் முருகன் திருச்செங்கோட்டில் வாழ முடியாத வண்ணம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் இனிமேல் தான் எழுதப் போவதில்லை, தனது எழுத்துகள், புத்தகங்கள் இனி பதிப்பிக்கப்படமாட்டாது என்று அறிவித்ததோடு, எழுத்தாளர் பெருமாள்முருகன் இறந்துவிட்டான்; இனி இருப்பது பேராசிரியர் பெ.முருகன் தான் என்று மிகுந்த மன உளைச்சலோடு முகநூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி ஒரு எழுத்தாளனின் படைப்புக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் பெருமாள் முருகனோடு நிற்கப்போவதில்லை; கருத்துரிமைக்கு எதிரான இந்த பாசிசப் போக்கு இனி எல்லா விதங்களிலும் தொடரக்கூடிய ஆபத்தை எடுத்துச் சொல்லும் விதத்தில் பெருமாள்முருகனுக்கு ஆதரவான ஆர்ப் பாட்டம் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் 20.1.2015 அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார். திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பழ.நெடுமாறன், பேராசிரியர் அருணன், தியாகு, பேராசிரியர் மார்க்ஸ், எழுத்தாளர் ஜெயப்பிரகாசம், ஞானி, நடிகை ரோகிணி, இயக்குநர் வெற்றிமாறன், ராம், உள்ளிட்ட தலைவர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்கு நர்கள், ஊடகத்துறையினர் உள்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

Read more: http://viduthalai.in/page-3/94778.html#ixzz3PYh6q3K0