Search This Blog

6.1.15

ஆஸ்.எஸ்.எஸ். ஒப்பனை கலைகிறது!ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி நடைபெறும் பிரதமர் நரேந்திரமோடி அரசின் நடவடிக் கைகள் குறிப்பாக, கல்வித் துறையில் அதன் பிடியை நாளும் இறுக்கி, நெருக்கி வருகிறது.

சமஸ்கிருதத்தை எப்படியும் இந்தியாவின் பொது மொழியாக்கிட, திட்டமிட்ட ஊடுருவல் களும், பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவ னங்களும், ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பின் மாணவர் பிரிவான ABVP
என்ற  அகில பாரத வித்தியார்த்தி பரிஷத்தும் இணைந்து பல்வேறு வட்டார மாநாடுகள் கருத்தரங்கங்களை ஏதோ கல்விப் பிரச்சினைகள், கல்வித் தரம், உயர் கல்வியைப் பரப்புவது போன்ற வெளி வேஷத்தை போட்டு உள்ளுக்குள் ஆர்.எஸ். எஸ்.சின் ஹிந்து ராஷ்டிர, பத்தாம் பசலித்தன கொள்கைகளை கல்வித் திட்டங்களாக்கி, நாட்டின் இளைஞர்களின் மூளைகளில் காவிச் சாயத்தை ஏற்படுத்த மிகவும் தந்திரமான வித்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்!


விவேகானந்தரை முன்னிலைப்படுத்தி, அவரைப்பற்றி அறிந்து கொள்ள ஒவ்வொரு மாணவரும் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பது போன்ற சூழ்ச்சிப் பொறி வைப்பது; வேதங்களில் விமானம் செய்வது, ஓட்டுவது முதற்கொண்டு ஏராளம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது; பரத்வாஜ் மஹராஜ் என்ற வேத ரிஷி இவைகளையெல்லாம் புட்டுப்புட்டு அக்காலத்திலேயே எழுதியுள்ளார் சமஸ்கிரு தத்தில்  என்று மும்பையில் கூடிய விஞ் ஞானிகள் மாநாட்டில் - சயின்ஸ் காங்கிரசில் ஏதோ மிகப் பெரிய கண்டுபிடிப்பு போல படிப்பது; அதை ஊடகங்களில் ஊதி ஊதிப் பெருக்குவது,


வரலாற்று ஆய்வாளர்கள் - பேராசிரியர்கள் மாநாட்டிலும், புராணக் குப்பைகளைக் கொட்டி, ஏதோ நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பு களுக்கே, பிளாஸ்டிக் சர்ஜரி, (ஸ்டெம் செல்) மரபணு ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் எல்லாம் நம் முனிவர்களாலும், இதிகாச புராணங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தன என்று உளறுகிறார்கள்.


சர் அய்சக் நியூட்டன், புவி ஈர்ப்பு (Law of Gravitation)  சக்தியை கண்டுபிடிப்பதற்கு முன்பே நமது வேதங்களில் இருக்கின்றன என்பதுபோல ஏதோ பெரிய ஆய்வுக் கண்டுபிடிப்புபோல சில ஸ்லோகங்களை வைத்துப் பேசுவது, காங்கிரஸ் பார்ப்பனராக இருக்கும் சசிதரூர் போன்ற பூணூல்களும் (இவருக்குள்ள நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள பி.ஜே.பி.யுடன் இணைந்து கொள்ள இவருக்குக் கிடைத்த துருப்புச் சீட்டு போலும்), போன்றவர்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கூறுவதில் பொருள் உண்டு; அலட்சியப்படுத்தக் கூடாது என்று ”ஜால்ரா” அடிப்பது - தெளி வாகிறது.

மீண்டும் இந்த நாட்டை ஹிந்து ராஜ்ய மாக்குவது என்ற பெரிய பார்ப்பன ஆரிய சாம்ராஜ்யமாகவே மாற்றிக் காட்ட அனைத்து முயற்சிகளிலும் அசராமல் ஈடுபட்டுள்ளனர்.


ஆட்சிக்கு வந்து 7 மாதங்களே ஆன நிலையில், சர்வம் ஆர்.எஸ்.எஸ். மயமாகி - ஆரிய பார்ப்பனமயமாகி வருகிறது-


பாரம்பரிய முறையில் பெரும் பகுதியாக உள்ள மலைவாழ் மக்களின் முதல்வர் உரிமைகூட, மெல்ல சத்தீஸ்கரில் மாற்றப்பட்டு விட்டது! வளர்ச்சி என்ற போர்வையில், ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவ அமைப்பு, ஆட்சி அதிகார வாய்ப்புகளைப் பயன்படுத்தி தன்னை வளர்க்க மிகப் பெரிய திட்டத்தைப் போட்டு முழு மூச்சில் இறங்கி விட்டது!


அகமதாபாத்தில் ஓர் கூட்டத்தில் அதன் தலைவர் மோகன்பகவத் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை கிராமங்களில் பரப்ப வேண்டும்; முன்பு ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன? எதற்கு இவர்கள் கையில் தடியோடு வரிசை யாக செல்கின்றனர்? என்று கேட்ட மக்கள் நம்மைப் பற்றி இப்போது நன்கு அறிந்து வைத்துக் கொண்டுள்ளார்கள்.


ஆரியக் கலாச்சாரம்தான் இந்தியாவின் அடையாளத்திற்கும் இந்தியப் பாரம்பரியத் திற்கும் அடிப்படை ஆகும்.


(“The Aryan Culture was the basis of the Indian tradition and Indian identity”  - ‘The Hindu’ 5.1.2015 page 12)
Any one born in India is a Hindu,

இந்தியாவில் பிறந்த எவரும் இந்துவே! என்று பேசியுள்ளார்.

என்னே அமுத மொழிகள்!


ஆரிய வெறி அப்பட்டமாக வெளிச்சம் போட்டு ஆட்டமாடுகிறது! பலே பலே!

இணையத்தில் குஜராத் வளர்ச்சி - வேலை வாய்ப்பு - இந்தியாவில் என்று புதுமுகம் மோடிக்கு ஏமாந்து வாக்களித்து விட்டு, இப்போது கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிந்து கொண்ட இணைய இளைஞர்களே, இனியாவது இவர்களைப் புரிந்து கொண்டு, பாடம் பெறுங்கள் - விழிப்படையுங்கள்.

   --------------- ஊசி மிளகாய் 5-1-2015 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை

36 comments:

தமிழ் ஓவியா said...

பிளாஸ்டிக் சர்ஜரி முதன் முதலில் செய்யப்பட்டது எப்பொழுது?


வரலாற்று உண்மைகளுக்குப் புறம்பாகப் பேசுவதை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. ஆதி காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறையை இந்தியர்கள் பின்பற்றியதாக பிரதமர் நரேந்திரமோடி பேசியதற்காகவே வரலாற்று ஆய்வுக் கவுன்சில் குட்டு வைத்துள்ளது.வரலாற்று அறிஞர்கள், ஆர்வலர்கள் 10 ஆயிரத்தும் மேற் பட்டோர் அங்கம் வகிக்கும் வரலாற்று ஆய்வுக் கவுன்சிலின் 80-ஆம் ஆண்டையொட்டி டில்லி, ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. படத்திலுள்ள வால்டர் என்பவருக்கு தான் முதன்முதலில் பிளாஸ்டிக் சர்ஜரி 1917ஆம் ஆண்டு செய்யப்பட்டது. இதற்கு முன்பு எவருக்கும் செய்யப்படவில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/93953.html#ixzz3O0Ea81ms

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சர்வமும் சக்திமயம்

துர்க்கை சர்வ சக்தி மயமாக இருக்கின்றாள். சிவனிடம் சிவையாகவும், நாராயணரிடம் லட்சுமி யாகவும், பிரம்மாவிடம் சரஸ்வதியாகவும், கிருஷ் ணரிடம் ராதையாகவும், சந்திரனிடம் ரோகினியா கவும், இந்திரனிடம் இந்திராணியாகவும், காமனிடம் ரதியாகவும், வருணனிடம் வருணாளி னியாகவும், வாயுவிடம் அவர் சக்தியாகவும், அக்னியிடம் ஸ்வாஹா வாகவும், குபேரனிடம் அவன் சக்தியாகவும், யமனிடம் சுசீலாவாகவும், நிருருதியாகவும் கோட வீயாகவும், ஈசானனிடம் சசிகலையாகவும், மனு விடம் சதரூபையாகவும், கர்தமரிடம் தேவகதி யாகவும், வசிஷ்டரிடம் லோபாமுத்ரையாகவும், கௌதமரிடம் அகலி கையாகவும், எல்லாவற் றிற்கும் ஆதாரபூதமான பூமியாகவும், பல சிறந்த நதிகளாகவும், இந்த துர்க் கையே விளங்குகின்றாள்.

இப்படி எழுதுகிறது ஓர் ஆன்மிக இதழ். துர்க்கை - இதுவரை சிவனின் மனைவியாகத் தான் பக்தர்கள் நினைத் துக் கொண்டு இருந்தனர். இந்த ஆன்மிக இதழ் சொல்லுவதைப் பார்த் தால் எல்லா முக்கியக் கட வுளுக்கும் மனைவியாக அல்லவா இருக்கிறாள்?

Read more: http://viduthalai.in/e-paper/93952.html#ixzz3O0Eq4xQn

தமிழ் ஓவியா said...

கோட்சேவுக்கு கோயில் கட்டுவதில் பிரதமரின் நிலைப்பாடு என்ன? உ.பி. நவ்நிர்மான் சேனா கேள்வி


லக்னோ, ஜன.5- கோட்சேவுக்கு கோயில் கட்டும் முடிவை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள 40 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்ற மகாபஞ்சாயத்து நடை பெற்றது.

காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு உ.பி.மாநிலம், மீரட் மாவட்டம் பிரம்மபுரி பகுதியில் சிலை அமைக் கப்படும். அந்த சிலை வைக்கப்படும் இடத்தில் கோயில் ஒன்றும் கட்டப்படும் என அகில பாரத இந்து மகாசபை அமைப்பின் தேசியப் பொதுச் செயலாளரான ஆச்சார்யா மதன் என்ப வர் அறிவித்திருந்தார். இங்குள்ள சாரதா சாலை யில் இந்த கோயி லுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்ட தாக செய்திகள் வெளி யாகின.

இதற்கிடையே, கோட் சேவுக்கு கோயில் கட்ட அனுமதிக்க மாட்டோம் என அறிவித்த உத்தரப் பிரதேச மாநில நவ் நிர்மான் சேனா, இவ்விவ காரம் தொடர்பாக அனைத்து தரப்பு மக் களின் கருத்தினை கேட்கும் வகையில் 40 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்ற மகா பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்தது. உத்தரப்பிர தேசம் மாநில நவ் நிர் மான் சேனா தலைவர் அமித் ஜானி தலைமை யில் நடைபெற்ற இந்த மகாபஞ்சாயத்தில் கோட் சேவுக்கு கோயில் கட்டு வதை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இதனையடுத்து, கோட்சேவுக்கு கோயில் கட்டுவது தொடர்பாக பிரதமரின் நிலைப்பாடு என்ன? மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என அமித் ஜானி குறிப்பிட்டார். கோட்சேவுக்கு கோயில் கட்டும் முடிவை எதிர்த்து வரும் 11ஆ-ம் தேதி மீரட் நகர் சாரதா சாலையில் உள்ள அகில பாரத இந்து மகாசபை அலுவல கத்தின் முன்னர் தொண் டர்களுடன் திரண்டு சென்று போராட்டத்தில் ஈடுபடவும், பட்டினிப் போராட்டம் மேற்கொள் ளவும் முடிவு செய்துள்ள தாகவும் அவர் தெரி வித்தார்.

பின்னர், டில்லியில் உள்ள பிரதமரின் அலு வலகத்துக்கு சென்று இது தொடர்பாக மனு அளிப் போம். கோட்சேவுக்கு கோயில் கட்டும் விவ காரத்தில் பிரதமரின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக ஒரு பொது விளக்கம் அளிக் கும்படி பிரதமரை கேட் டுக் கொள்ளப் போவ தாகவும் அமித் ஜானி கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93950.html#ixzz3O0ExWtjn

தமிழ் ஓவியா said...

பிஜேபியை தோற்கடித்து மேயரானார் திருநங்கை

வாடத் தொடங்கிய தாமரை சத்தீஸ்கர் தேர்தலில் பிஜேபி படுதோல்வி!

பிஜேபியை தோற்கடித்து மேயரானார் திருநங்கை


ரெய்ப்பூர், ஜன.5- சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர் தலில் பாஜக தோல் வியைச் சந்தித்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த வாரம் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. முன்பு வென்ற பெருவாரி யான இடங்களில் பா.ஜ.க. வினர் வைப்புத்தொகை கூட பெற முடியவில்லை. மோடி அலையை நம்பி களமிறங்கியவர்களை மக்கள் அலை தோற் கடித்துவிட்டது.

முக்கியமாக சத்தீஸ்கர் உள்ளாட்சித் தேர்தலில் மோடி பிரச்சாரம் செய் யாவிட்டாலும் விதிகளை மீறி மத்திய அரசு மின் சாரம் மற்றும் வீட்டுவசதி வாரியத்திற்கான திட்டங் களை அறிவித்தது இதன் மூலம் தேர்தலில் எளிதாக வென்றுவிடலாம் என்று எண்ணியது. 2009 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர் தலில் 154 இடங்களில் 139 இடங்களை பாஜக கைப்பற்றியது, காங்கிரஸ் வெறும் 10 இடங்களில் மாத்திரமே வெற்றி பெற முடிந்தது. இதர இடங் களில் சுயேட்சைகள் வென்றனர்.

இந்த்த் தேர்தலில் பாஜகவின் தோல்விமுகம் ஆரம்பமாகிவிட்டதைக் காட்டுகிறது தேர்தல் முடிவுகளில் மொத்த முள்ள 154 இடங்களில் 102 இடங்களை காங்கிரஸ் வென்றது. பா.ஜ.க. 53 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க.விற்கு மிகவும் சொற்ப வாக்கு களே கிடைத்துள்ளன.

மாநகரத்தின் மேயரான திருநங்கை

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் மாநகர மேயராக சுயேட்சையாக போட்டி யிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றார். மது என்ற திருநங்கை தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரான மஹாவீரை விட 4,537 வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்றுள்ளார்.

தலித் வகுப்பைச் சேர்ந்த மது தேர்தல் வெற்றி பற்றிக் கூறுகை யில் மேயர் தேர்தலில் கோடிகளைக் கொட்டி பல்வேறு வகையில் பா.ஜ.க. வினர் பிரச்சாரம் செய் தனர். என்னிடம் தினசரி வரும் வருமானம் மாத் திரமே தேர்தலுக்கான செலவுகளை எனது நண்பர்களும் பொதுமக்களும் மேற்கொண்டனர்.

எந்த ஒரு தொழிலதிபரும் எனக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை.

8 ஆம் வகுப்பு வரை மாத்திரம் படித்த மது தன்னைப் போன்ற பல்வேறு கைவிடப்பட்ட திருநங்கைகளுக்காக சுயதொழில் கூடம் ஒன்றை நடத்தி வரு கிறார்.

மேலும் அவர் கைவிடப்பட்ட பெண் குழந்தைகளையும் தத்து எடுத்து அவர்களையும் காப்பாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/93945.html#ixzz3O0F6B8Sx

தமிழ் ஓவியா said...

அறிவு பெற முடியாமல்....

தெரியாததை, இல்லாததை நம்பவேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடு கிறான். - (விடுதலை, 2.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/93954.html#ixzz3O0FYtf3y

தமிழ் ஓவியா said...

மறக்க முடியாத மூன்று நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைபி.என்.எம். பெரியசாமி
கருங்கல்பாளையம், ஈரோடு

சங்ககாலத் தமிழகத்தின் வள்ளல் களின் வரிசையில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ள அதியமான் மற்றும் நமது தமிழம்மை அவ்வையார் அவர்களின் பெருமை பேசும் தர்மபுரி மாவட்டம். அண்டை மாநிலமான கருநாடகத்தில் பிறந்து இளமைத் துள்ளலோடு தமிழகத்தில் நுழையும் காவிரி ஒரு காலத்தில் தென் தமிழகத்தை வளமோடு வைத்திருந் தது! அந்தக் காவிரி ஆர்ப்பரிக்கும் அரு வியாக சாரல் தரும் இதமும் ஈரமணம் வீசும் குளிர் காற்றும் ஒருங்கே பெற்ற அழகுமிழும் ஒகேனக்கல்!

அதியமானின் வழித்தோன்றலும் அறிவுலக ஆசான் அய்யா பெரி யாரின் பெருந் தொண்டராகவும் வாழ்ந்து இன்று படமாகிப் போன எங்கள் பாடம் நினைவில் வாழும் மானமிகு எம்.என். நஞ்சய்யா அவர்களின் பெயர் தாங்கிய பெரியார் மன்றத்தில் திசம்பர் திங்கள் 27,28,29 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை திராவிட இயக்கத்தின் வேர்கள் அதன் விழுதுகளுக்கு நீர் வார்க்கும் பணி. அய்யா பெரியாரின் பேர் சொல்லும் பிள்ளைகள் கூடிய குடும்ப விழா!


தமிழ் ஓவியா said...

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை நூற்றாண்டு விழா கண்ட இப்பேர மைப்பைக் கட்டி அமைத்த தளகர்த்தர்களின் பெயர்கள் காற்றில் தவழ வெண்தாடி வேந்தர் அய்யா வின் பேருருவம் நம் வழிகளில் விரிய அவர் தம் அரிய கருத்துகளை உலக மயமாக்கி அதன் தொடர் பணியைத் தொய்வின்றி செய்து வரும் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர் களின் வழிகாட்டுதலில் எழுச்சியாக நடைபெற்றது.

செவிக்கினிய செய்தியும் வயிற் றுக்கு நல்லுணவும் வாழ்க்கைக்குத் தேவையான பகுத்தறிவுக் கருத்து களும் தந்த இனியவிழா! இவ்விழா வில் அய்யா பாதையில் வாழ்ந்து வரும் நம் தமிழர் தலைவர் அவர்கள் காட்டிய ஆர்வமும் துடிப்பும் இயக் கத்தின் துடிப்புமிக்க இளைஞர் களையே பொறாமைப் படவைத்தது என்னவோ உண்மைதான்! கருத்தாழ மிக்க ஆசிரியர் அவர்களின் இயல் பான பேச்சு மலைகளின் மடிப்பு களில் விழும் ஒகேனக்கல் அருவியில் குளித்து மகிழ்ந்ததைவிட இதமாக இருந்தது.

அதேபோல் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் அவர்களின் உணர்ச்சி மிகு உரை சனாதனிகளுக்கு சாட்டை யடியாக அமைந்தது எங்களுக்கோ சர்க்கரையாக இனித்தது. இசையால் மயங்காத இதயம் உண்டோ என்பதைப் போல பயிற்சி மாணாக்கர்களாகிய நாங்கள் அவரது உரையில் கட்டுண்டு கிடந்தோம்.

உலக வரலாற்றில் எங்கு தேடினாலும் கண்டிராத மொழிப் போராட்டம் என்பது 1930 களில் தொடங்கி 60கள் வரை! தாய்மொழி தமிழை வளர்க்கவும் பார்ப்பனீயம் கொண்டுவந்த இந்தித் திணிப்பைத் தடுக்கவும் போராடிய வரலாறு! இந்த வரலாற்றுச் செய்தியை அறிஞர்கள் பலரும் சொன்னவிதம் அப்போராட்டக் காலத்தில் நாமும் களத்தில் உலாவிய நல்லுணர்வைத் தந்தது என்றால் அது மிகையல்ல!

தமிழ் ஓவியா said...


நமது உயிர்க் கொள்கையான சமூக நீதிக்காகப் போராடிய நமது நீதிக்கட்சித் தலைவர்கள் டாக்டர் சி. நடேசனார், பிட்டி தியாகராயர் பனகல் அரசர் ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் போன்ற பெரு மக்கள் வசம் எளியோர்க்கு எட்டாக்கனியாய் இருந்த இயக்கத்தை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றி பாமரர்களின் கையில் அவர்களுக்கான இயக்கமாக உரிய நேரத்தில் கொண்டு சேர்த்த அய்யாவின் பணி அளப்பரியது என்று தமிழர் தலைவர் கூறியது எமது இதயத்தில் பசுமரத் தாணியாய் பதிந்தது. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டபின் இயக்கம் என்னாகுமோ? என்று தவித்த நேரத்தில் தமிழர்களின் தொலைநோக்கி யான அய்யா அவர்கள் முன்னதாகவே அதற்கு சரியான ஒரு ஏற்பாட்டை அன்னை மணியம்மையார் மூலம் சரியான தீர்வைத் தந்துவிட்டுச் சென்றார்! என்ற கவிஞரின் பேச்சு அடடா! சிலிர்த்துப் போனோம். மணியம்மையார் அவர்கள் வட நாட்டுத் தலைவர்களைக் கொண்டு அசுரர் குலதிலகம் திராவிட இனத்தின் தந்தை எனப் போற்றப்படுகின்ற பல்கலை வேந்தன் இராவணனுக்கு விழா எடுத்த வரலாற்றைச் சொன்னபோது எங்கள் இதயங்கள் சற்றுகனத்துப் போனது. மீண்டும் அதுபோன்ற விழாக்களை எதிர் காலத் தமிழர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற வேட்கையைத் தந்தது.

மேலும் கழகத்தின் செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் ஆற்றிய உரையின் மூலம் தான் ஒரு திராவிட இன வரலாற்றின் கருத்துக் களஞ்சியம் என்பதை மெய்ப்பித்தார். இந்த உலகம் படைக்கப்பட்டதல்ல! படிநிலையால் பரிணமித்தது என்ற டார்வினின் அறிவியல் உண்மையை அசைக்க முடியாத ஆதாரங்களை அணியமாக்கித் தந்ததும் சுயமரியாதை இயக்கமான நீதிக்கட்சி வரலாற்றைத் தனக்கேஉரிய கம்பீரத்தோடு பேசியவிதம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மட்டுமல்ல! எங்களின் விவாத அறிவிற்கு விடியலாக இருந்தது.

தமிழ் ஓவியா said...

கழகத்தின் பொருளாளர் மருத்துவர் மானமிகு அம்மையார் பிறைநுதல் செல்வி அவர்கள் தமது தலைப்பாக அய்யா அவர்களின் அடிப்படைக் கொள்கைகளான பெண்கள் சுதந்திரம் பெண் கல்வி சமத்துவம் மற்றும் சொத் துரிமை என்று அடுக்கடுக்காக அவர் சொன்ன பெண்ணுரிமைக் கருத்துகள் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் அவர்களின் தியாகவரலாற்றைச் சொன்னது அந்த அரங்கத்தில் கூடியிருந்த தோழியர் களுக்கு என்ன உணர்வைத் தந்ததோ! என்னைப் போன்றவர்களுக்கு அய்யா அவர்களின் தூய்மையான தொண் டுள்ளம் தெளிவாய்த் தெரிந்தது. அம்மையார் அவர்கள் எங்கள் மண்ணிற்குரியவர் அய்யாவின் மண்ணிற்கு சொந்தக்காரர் என்பது எங்களுக்கு மேலும் பெருமை சேர்த்தது. அதே போல மனிதர்களை மடையர்களாக்கும் புராண இதிகாசங்கள் அனைத்தும் மோசடியே! என்று தனது ஆணித்தரமான கருத்துகளை அதாவது அய்யா அவர்கள் சொல்லித் தந்த பாடத்தை எங்களுக்கு எடுத்துச் சொல்லி தனது பேராசிரியர் பணியை சிறப்பாக செய்து முடித்த பேராசிரியர் மானமிகு ப.காளிமுத்து அவர்கள் எங்கள் மதிப் பிற்கும் உரியவரே!

பயிற்சிப் பட்டறையின் ஒருங்கிணைப் பாளரும் கழகத்தின் பொதுச் செயலாளர் மானமிகு துரை.சந்திரசேகரன் அவர்கள் நிகழ்ச்சியை எழுச்சியோடு நடத்திக் காட்டியதோடு கழகத்தின் போர்க் களங்களை எடுத்துச் சொன்னவிதம் திராவிட இயக்க மாணவர்களாகிய எங்களுக்கு மிகவும் தேவையானபாடம் என்பதை உணர வைத்தார். அவர் வரிசைப்படுத்திய போர்க்கள நாயகர் களான குமாரசாமி பட்டுக்கோட்டை அழகிரிசாமி மொழிப் போரில் முதல் பலியான தியாக வேங்கைகள் தாள முத்து நடராசன் மணல்மேடு வெள்ளைச் சாமி மற்றும் பட்டுக்கோட்டை ராமசாமி ஆகியோர்களின் வீரத்தை மட்டுமல்ல அவர்களின் தியாகத்தையும் எங்க ளோடு படம் பிடித்துக் காட்டிய பொதுச் செயலாளர்க்கு நன்றி! நன்றி!!

மருத்துவர் மானமிகு கவுதமன் அவர்கள் தனக்கே உரித்தான நகைச் சுவையாலும் குரல் வளத்தாலும் ஒடுக் கப்பட்ட சமுதாயத்தில் உள்ளபேய பிசாசு என்ற மூடநம்பிக்கைகளை ஓட வைத்தவர் பயிற்சி மாணவர்களாகிய எங்களையும் இருக்கைகளில் கட்டிப் போட்டு விட்டார். அவரது அன்புள் ளத்தை எங்களுக்கு பசியாற பரி மாறியது மகத்தானது.

வரலாற்றுச் சம்பவங்களை சொல்லும் போதுஅதன் காலகட்டம் மிகவும் முக்கி யம் திராவிட இயக்கமா வீரர்கள் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தலைப்பில் உரையாற்றிய மானமிகு அதிரடி க.அன்பழகன் அவர்கள் திராவிட இயக்க வர லாற்றை அந்தந்தக் காலகட்டத்தோடு எடுத்துச் சொல்லிய விதம் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு பேச் சாளராக வேண்டும் என்று விரும்பும் மாணவர்களுக்கு எளிதான பயிற்சி யாக அமைந்தது எனலாம். இவ்வளவு அரிதான பல செய்திகளை உலகத்தின் மிகப் பெரியஅரசியல் சாராத சமு தாயப் பேரியக்கமான திராவிடர் கழ கத்தைத் தவிர வேறு எந்த இயக்கமும் தனது வழித் தோன்றல்களுக்கு விட்டுச் செல்ல முடியாது என்பது நமக்குப் பெருமையாக அமைவதோடு நல் வாய்ப்பாகவும் அமைந் துள்ளது.

இன்று நேற்றல்ல! பன்னெடுங் காலமாக பார்ப்பனீயம் நம் இனத்தின் மீதும் பாரம்பரியமான நம் பண்பாட் டின் மீதும் தொடர்ந்து தொடுத்து வரும் பண்பாட்டுப் படையெடுப்பை நம் அறிவுலக ஆசான் உலகப் பேரறி வாளர் தந்தை பெரியார் அவர்கள் தந்த புத்தியைக் கொண்டு திராவிட இனம் மானமும் அறிவும் பெற்று சுயமரியாதை வாழ்வு வாழ வேண்டும் சாதி மத வேறுபாடுகளற்ற சமூகமாக வாழ வேண்டுமென்ற உன்னத இலட் சியத்தை அடையவும் அதற்கான படைக்கலன்களை உருவாக்கிடவும் உரியமுறையில் அவைகளைக் கூர் தீட்டிய இந்த ஏற்பாடு மகத்தான வெற்றியாக அமைந்தது.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! வெல்க திராவிடம்!!!

Read more: http://viduthalai.in/page-2/93957.html#ixzz3O0Fi0hRQ

தமிழ் ஓவியா said...


ஒகேனக்கல் பயிற்சிப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட போர்வாள்!

நாம் இன்று பெற்றுள்ள உணவு, உடை, பேச்சு ஏன் மூச்சு சுதந்திரம் எவ்வளவு பெரியது என்பது நம் முன்னோர்கள் எதிர்கொண்ட அநீதிகளில் இருந்து புரிய வருகிறது. அடிப்படைத் தேவைகள் அனைத்தும் அவர்களுக்கு மறுக்கப்பட்டி ருந்தன. ஜாதி, மதங்களின் பெயரால் மக்கள் பிரிக்கப்பட்டு, சிலர் மேல்மக்கள் என்றும் சிலர் தாழ்ந்தவர்கள் என்றும் பிரிக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்டவர் களுக்கு தான் மேற்கூறிய அடிப்படைத் தேவைகள் மறுப்பு. ஜாதி, மதம் என்பது தந்திரமாக கடவுளின் பெயரால் அடி களிட்டு பார்ப்பனர் வீட்டிற்கு போடப்பட்ட கதவுகள். இவை அவர்கள் அதிகார செல்வம் களவு போகாமல் காப்பதற்கு அழகாக உதவுகிறது. பெரியார், அம் பேத்கர் போன்ற தலைவர்கள் அரும்பாடு பட்டும் ஜாதியும், மதமும் முழுமையாக ஒழிந்து போகாததன் காரணம், அவை கடவுளின் பெயரால் சித்தரிக்கப்பட்டு மக்களின் மனதில் ஏற்படுத்திய பயமே ஆகும் அவை சட்டங்களோ, நீதியோ அல்ல. இந்த சாதியையும், மதத்தையும் நீதியாக்கு வதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் பல.

அவற்றுள் முதலில் கூறபடுவது பிறப்பு! அதாவது பிரம்மன் தலையில் இருந்து பிராமணனும்,தோளில் இருந்து சத்ரியனும், தொடையில் இருந்து வைசியனும் காலில் இருந்து சூத்திரனும் பிறந்தான் என்பது. கடவுளே புனிதமுடையவர் என்று கூறும் போது அவர் கால் மட்டும் எப்படி தலையி லிருந்து தாழ்வான தாகிவிடும்? அப்படியே யென்றால் பிராமணன் மந்திரம் ஓதி போடும் பூக்கள் அனைத்தும் தலையிலே தானே விழ வேண்டும், ஏன் காலில் விழுகிறது. கடவுளே இருந்தாலும், என் பெயரால் இத்தனை வேறுபாடுகளா? என்று ரத்தக்கண்ணீர் சிந்தியிருப்பார். ஆனால்,அப்படி ஏதும் நடந்ததாக சரித்திரம் இல்லை. மனு என் பவன் பிராமணரின் நீதிபதி மற்றும் வக்கீல். இருபதவியையும் அவனே வகிக்கிறான். அவர்களுக்கு சாதகமான சட்டங்களை வகுத்து அவரே வாதாடுகிறார்.

அவர் வகுத்திருக்கும் நீதிகள் அனைத்தும் பிரா மணர் முன்னேற்றத்திற்கும் அதிகாரத்திற்கும் எளிதில் வழி வகுக்கிறது. இதில் உயர்நீதி (?) என்னவென்றால் பிராமணர்கள் கொலையே செய்தாலும் அவர்களின் தண்டனை மற்றவர்களை விட மிகமிக குறைவு தான். (தலையை மொட்டை அடித்தால் போதும்) பிராமணர்கள் இவ்வாறே தன் சொகுசு வீட்டிற்கு புகுவிழா, இல்லை இல்லை 'பிரவேசம்' செய்துள்ளனர். அந்த வீட்டின் கதவை உள் பூட்டிட்டு சாவியையும் விழுங்கிவிட்டனர். இப்போது கதவை உடைப்பதை தவிர வேறு வழியே இல்லை. வாருங்கள் இளைஞர்களே! கதவை உடைத் தால் மட்டும் போதுமா? இந்த வருணாசிரம கட்டடத்தையே தூள் தூளாக்க வேண்டும். இளைஞர்களாலேயே அது முடியும்.

ஆசிரியர் கடந்த 27, 28, 29.-12.-2014 ஆகிய மூன்று நாட்களில் ஒகேனக்கல்லில் நடந்த பயிற்சிப்பட்டறையில் பெற்ற பயிற்சி யின் விளைவாக எனக்குள் எழுந்த சிந் தனையை தங்களின் மேலான பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.

(நான், க. அருள்மொழி - அனிதாதாரணி இணையரின் மகள். கல்லூரியில் முதலாண்டு படிக்கும் மாணவி)

- அ.ஓவியா, குடியாத்தம் -632602

Read more: http://viduthalai.in/page-2/93958.html#ixzz3O0GBwCyt

தமிழ் ஓவியா said...

குளிர்காலத்தில் உடல் நலத்தைப் பாதுகாக்க!


வெயில் காலத்தைவிட பனி காலங்களில் நமக்கு அதிக அளவில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகிறது. மனிதர்களுக்கு காது, மூக்கு, தொண்டை பகுதிகளைத்தான் பனி தாக்குவ தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இரவு முதல் அதிகாலை வரையிலும் குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சுத் திணறல், சளி என பிரச்சினைகள் துவங்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறவும் வாய்ப்புள்ளது. பின்னர் அது மூக்கடைப்பு, காதுவலி போன்ற நோய்களையும் துணைக்கு அழைத்துக் கொள்ளும். குளிரால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி காய்ச்சல் மற்றும் குளிர்கால பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சில இயற்கை மருத்துவ வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.

1. பனிகாலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். அதற்கு எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். வெந்நீரில் ஒரு கைப்பிடி அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு கொதிக்கவைத்து அருந்தினால் தொண்டைவலி, மூக்கடைப்பு, காதுவலி, சளி போன்ற நோய்கள் நம்மை அண்டாது.

2. குளிருக்கு இதமாக கற்பூரவல்லி, தூதுவளை கீரை ஆகியவற்றில் கஷாயம் வைத்து அருந்தலாம். அல்லது 2 வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு பச்சையாக சாப்பிட்டாலும் உடலில் குளிரின் தாக்கம் ஏற்படாது.

3. குளிர்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது தோல்தான். சிலருக்கு தோலில் வெள்ளை படர் அல்லது தோல் சுருக்கம் ஏற்படும். எனவே, அதைத் தடுக்க குளிக்கும் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து குளிக்கலாம். தோல் பாதுகாக்கப்படும். தோல் வறட்சியும் நீங்கும்.

4. பனி காலத்தில் குளிப்பதற்கு சோப்புகளை பயன் படுத்துவதைவிட கடலை மாவு, பயத்தம் பருப்பு மாவு ஆகியற்றை தேய்த்து குளிக்கலாம்.

5. தொண்டைவலி, வறட்டு இருமலுக்கு, ஒரு கரண்டியில் நெய்யை விட்டு அடுப்பில் வைத்து, காய்ந்ததும் ஒரு சிறுதுண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும்போது, அரை தேக்கரண்டி மிளகுப்பொடி போட்டு சற்று ஆறியதும் அதை உருட்டி வாயில் போட்டுக்கொண்டால் இதமாக இருக்கும். வறட்டு இருமலும் அடங்கும்.

6. மூக்கு, தொண்டை, காதுகளில் ஏற்படும் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, காலில் பாத வெடிப்புகள் வேறு ஏற்படும். பாதவெடிப்புக்கு பயப்படவே தேவையில்லை. சிறிதளவு விளக்கெண்ணெயுடன், தேங்காய் எண்ணெயை சம விகிதத்தில் கலந்து, அதில் சிறிது மஞ்சள் பொடியை போட்டு குழைத்து, பேஸ்ட் போல் செய்து, அதை வெடிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகிவிடும்.

7. முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்க பாதாம் எண்ணெய் பயன்படுத்துவது உகந்தது.

குளிர் காலத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவு வகைகள்

தமிழ் ஓவியா said...

1. பனி காலங்களில் எண்ணெய்கள் மூலம் செய்யப்பட்ட பலகார வகைகளை அறவே ஒதுக்கிவிடவேண்டும். காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிக்கு இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசியால் செய்யப்பட்ட கஞ்சி, பிரெட் போன்றவற்றை சாப்பிடலாம்.

2. பழங்களில் சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களைச் சாப்பிடவேண்டும். புளிப்புச்சுவை நிறைந்த கொய்யா, ஆரஞ்சு, சீத்தாப்பழம் போன்ற பழவகைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ளக்கூடாது. வெயில் காலங்களில் நம் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளும் இப்பழங்கள் குளிர்காலங்களில் ஒத்துக்கொள்ளாது. விரிவாக கூறினால், வெயில் காலங்களில் நமக்கு அதிகம் வியர்க்கும். அப்போது வியர்வையுடன் சேர்ந்து அல்கலைன் சிட்ரைட் என்ற அமிலமும் நம் உடலில் இருந்து வெளியேறும். அதை ஈடு செய்வதற்காக நாம் புளிப்புச் சுவைமிக்க பழங்கள், மோர் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வோம். ஆனால், குளிர்காலத்தில் இவற்றை நாம் எடுத்துக்கொள்ளும்போது, நம் உடலில் அதிக அளவு அமிலச்சத்து சேர்ந்து சளி, சைனஸ் போன்றவை ஏற்படலாம். பழங்களில் பச்சை திராட்சையும், பச்சை வாழைப்பழத்தையும் கட்டாயம் தவிர்த்திட வேண்டும்.

3. முக்கியமாக இந்தப் பனிக்காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். சுண்டல் வகைகள், முளைக்கட்டிய தானியங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் சமையலில் மிளகு கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.

4. ஒரு நாளில் 2 வேளை உணவில் இரும்புச்சத்து நிறைந்த காய், கீரை, பழ வகைகள் எடுத்துக்கொள்ளலாம். முருங்கை, பேரீட்சை, திராட்சை உள்ளிட்டவற்றையும் சாப்பிடலாம். பழரசங்கள், இளநீர், தர்ப்பூசணி, அய்ஸ் கிரீம்கள் உள்ளிட்ட குளிர்ச்சியான உணவு வகைகளை அறவே தவிர்த்தல் நல்லது.

5. ஊட்டச்சத்துகள் முகுந்த பசலைக்கீரை, வேர்க்கடலை, கேரட், கோழிக்கறி ஆகியவற்றை சாப்பிடலாம். குறிப்பாக கோழி சூப் குளிருக்கு ஏற்ற இதமான ஒன்று என்பது யாவரும் அறிந்ததே.

6. நீர்ச்சத்து நிறைந்த பூசணி, சுரைக்காய், புடலங்காய், பீர்க்கன்காய், வெள்ளரி போன்ற காய்கறிகளை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.
மேலும் நோய் எதிர்ப்புச்சத்து மிகுந்த உணவுகளான கீரை, கோதுமை உட்கொள்ளுங்கள்.

Read more: http://viduthalai.in/page-7/93984.html#ixzz3O0IBhbHU

தமிழ் ஓவியா said...
நீதிமன்ற தீர்ப்பைக் குப்பைக் கூடையில் போடும் பார்ப்பனர்கள்

சிறீரங்கம் கோவிலில் பார்ப்பன அர்ச்சகர்களை சுமந்து செல்லுவதா?

அன்று தமிழர் தலைவர் கொடுத்த குரலை மீண்டும் புதுப்பிப்போம்!

திருச்சி, ஜன.6 சிறீரங்கம் ரெங்கநாதன் கோயில் அர்ச்சகர்களை மனிதர்களே சுமக்கும் பிரம்மரதம் நிகழ்ச்சியை எதிர்த்து சிறீரங்கம் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலை வர் எச்சரித்தார் (8.11.2010) அதனால் அது கைவிடப் பட்டது.

உயர்நீதிமன்றத்திலும் பார்பபனர் முறையீடு நிராகரிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் இவ்வாண்டு அந்தப் பிரம்மரதத்தைப் புதுப் பிக்கும் வேலையில் பார்ப் பனர்கள் ஈடுபட்டு வரு கிறார்கள்.

அப்படி நடந்தால் அது நீதிமன்ற அவமதிப் பாகும். இந்து அறநிலையத் துறை பொறுப்பேற்கும் நிலை ஏற்படும். திராவிடர் கழகத் தலைவர் அன்று எச்சரித்ததை மீண்டும் திராவிடர் கழகம் புதுப் பிக்கும் நிலை ஏற்பட் டுள்ளது. பிரம்ம ரதம்

சிறீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வைகுண்ட ஏகாதசியின் போது சொர்க்கவாசல் திறப்புக்கு பின்னர் வேதம் ஓதும் பார்ப்பனர்களான அரையாண் குடும்பம், பட்டர் அய்யர், வேத வியாசகர், பராசுர பட்டர் ஆகியோரை கோவிலி லிருந்து அவர்களது வீடு வரை பல்லக்கில் சுமந்து செல்வதும், இதனை பிரம்ம ரதமரியாதை என்றும், நீண்டகாலமாக பார்ப்பனர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதனை சீமான் தாங்கி (பிரம்ம ரதம்) என்று அழைக் கின்றனர்.

ஒரு காலத்தில் பார்ப் பனர்கள் வேதம் ஓதி விட்டு தனது சொந்த பல்லக்கில் வீடு வரையில் சென்று வந்தனர். அண் மைக் காலமாக இதனை அறநிலையத்துறை சார் பில் (கோவில் நிருவாகம்) பிரம்ம ரத மரியாதை வழங்கப்பட்டு வந்தது. இந்த மரியாதையை கொடுக்கக் கூடாது என்று பார்ப்பனர்களில் ஒரு பிரிவான வைணவர் கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காலங்காலமாக நடந்து வந்த மனிதனை மனிதன் (பார்ப்பனர்களை) சுமக்கும் அவலத்தை கண் டித்து கடந்த 2011 தி.மு.க. ஆட்சியில் அப்போதிருந்த கோவில் இணை ஆணை யர் ஜெயராமன் இந்த முறைக்கு தடைவிதித்தார்.

வழக்கு

இதனை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரம்ம ரத முறைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. ஆனா லும் பார்ப்பனர்கள் இதனை நடத்திவிட வேண்டு மென்று முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. அதிமுக ஆட்சி ஜெயலலிதா முதல்வ ரான பிறகு மீண்டும் இந்த பிரம்ம ரதமுறையை கொண்டும் வரும் முயற் சியில் பார்ப்பனர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அப்போதைய அற நிலையத்துறை ஆணையர் தனபால் திருச்சிக்கு வருகை தந்த போது, சராசர சுந்தரரேசன் பட்டர், திருவேங்கட பட்டர், பக்கிரி நாராயண பட்டர் ஆகியோர் ஆணை யரை சந்தித்து பிரம்ம ரத முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் கேட்டுக் கொண்டனர்.

2013 ஜன. 2, 3 தேதிகளில் இந்த பிரம்ம ரதமுறை எப்படியாவது நடத்திட வேண்டுமென்று முடிவு செய்து 2012 டிச.14 ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையை பார்ப் பனர்கள் அணுகினர். ஆனால் நீதிமன்றம் அவர் களை கடுமையாக எச் சரித்து அனுப்பியதோடு மட்டுமல்லாமல் இது தொடர்பான விசாரணை 2013 ஜனவரி 8 ஆம் தேதி ஒத்தி வைத்தது. அதனால் 2013 இல் பிரம்மரத முறையை நடத்த முடியா மல் போனது. ஆனாலும் பிரம்ம ரத முறையை எப்படியாவது நடத்திவிட வேண்டுமென்று அன்று முதல் பார்ப்பனர்கள் முயற்சியில் ஈடுபட்டு வரு கின்றனர்.

திராவிடர் கழகம்

பிரம்ம ரதமுறையை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் சிறீரங்கம் 2011 ஆம் ஆண்டு மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டித்து உரையாற்றினார். மேலும் பல்வேறு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்தனர்.

மீண்டும் பிரம்ம ரதம்

இந்நிலையில் தி-.மு.க ஆட்சியில் கருணாநிதி பிராமண துவேஷம் செய்துவிட்டார். அம்மா ஆட்சியிலாவது அந்த துவேஷத்தை போக்கி இந்த பிரம்ம ரதமுறையை நடத்திவிட வேண்டும் என ஆலோசனை கூட் டம் நடத்தப்பட்டு தற் போது சொர்க்க வாசல் திறப்புக்கு பின்னர், பிரம்ம ரதமுறை நடத்திட தீவிர முயற்சியில் பார்ப்பனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பார்ப்பனர்கள் செல் லும் பல்லக்கை தூக்க சீமான் தாங்கி என்று அழைக்கப்படும் அரை யர்கள் மறுப்பு தெரிவித்து வருவதால், வெளியிலி ருந்து பல்லக்கை தூக்கும் நபர் ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் பேரம் பேசி ஆள் களை ஏற்பாடு செய் திருக்கிறார்களாம்.

பரபரப்பு

சிறீரங்கத்தில் பல்வேறு இந்து மதவெறி அமைப்பு களின் துணையோடுவரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11 ஆம் தேதி) பிரம்ம ரத முறையை நடத்திட பார்ப்ப னர்கள் திட்ட மிட்டு இருப்பதால் சட் டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் ஏற் பட்டுள்ளது. இதனால் சிறீரங்கத்தில் பரபரப் பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/94007.html#ixzz3O3lXt1pw

தமிழ் ஓவியா said...

கருப்புப் பணப்புகழ் ராம்தேவ்க்கு பத்மபூசன் விருதாம்!

கோட்சேக்கு எப்பொழுது கொடுக்கப் போகிறார்களாம்!

புதுடில்லி, ஜன.6 ராம்தேவ் பாபாவிற்கு பத்மபூசன் விருதுவழங்க மோடி தலைமையினால் ஆன மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்துத்துவ கொள்கைகளை மூன்னி றுத்தி ஆட்சி செய்து வருகிறது, இந்துத்துவக் கொள்கைகளை நடை முறைப்படுத்துவது, கோட்சேவிற்கு சிலை, சமஸ்கிருத மொழி பள் ளிப்பாடங்களில் தினிப் பது மற்றும் இந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் முதல் மொழியாக்குவது போன்ற மக்கள் விரோத செயல் களில் முனைப்பு காட்டி வந்தது.

இதன் தொடர்ச் சியாக இந்து மகாசபை நிறுவனர் ராம் மோகன் மாளவியாவிற்கும் அடல்பிகாரிவாஜ்பேயிற்கும் பாரத ரத்னா கொடுக்க முடிவு செய்து அதற்கான ஆணையும் பிறப்பிக்கப் பட்டது. ஆட்சிக்கு வந் தது முதலே யார் யாருக்கு விருதுகள் வழங்க வேண் டும் என்று முக்கிய தலைமையிடமிருந்து விருதுவழங்கும் குழுவிற்கு பெயர்கள் அடங்கிய பட் டியல் வந்துவிட்டதாம். இந்த பட்டியலில் சானியா நெய்வால் பெயர் இல்லை.

பதமபூசன் பட்டியலில் முதலிடம் ராம்தேவ் பாபாவிற்கும் இரண்டா மிடம் லால் கிருஷ்ண அத்வானி பெயரும் இடம் பெற்றுள்ளதாகத் தெரி கிறது. ஜனவரி 26-ஆம் தேதிக்கு முன்பாகவே விருதுவழங்குவதற்கான பெயர்கள் அறிவிக்கப்படும்.

Read more: http://viduthalai.in/e-paper/94013.html#ixzz3O3m4oo7T

தமிழ் ஓவியா said...

பிரதமர் மோடியின் ஜனநாயகம்?

ஊடகங்கள் அரசை விமர்சனம் செய்தால் தான் அரசு நன்றாக செயல்படும் இதில் பாரபட்சம் பார்க்கக்கூடாது என்று கோலாப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் இருந்து வெளி வரும் பத்திரிகையான புடாரியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய போது அவர் கூறியதாவது: ஊடகங்கள் நமது நாட்டின் ஜனநாயகத்தின் தூண்களுள் ஒன்று இந்த ஊடகம் மக்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள தூரத்தை இணைக்கும் முக்கியமான பாலமாகும். ஊடகங்கள் இன்றி அரசும் சரிவர இயங்க முடியாது, மக்களும் நிலவரங்களை அறிந்துகொள்ளமுடியாது. ஊடகங்களின் மிகமுக்கிய பணி என்னவென்றால் அரசு, அமைச்சர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை கடுமை யாக விமர்சனம் செய்யவேண்டும் என்று பேசினார். மோடியின் பேச்சும் செயலும் தாமரை இலைத்தண் ணீர் போல் உள்ளது இதில் இருந்து தெரியவருகிறது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி முழுமையாக ஊடகங்களை விலைக்கு வாங்கினார். மோடியின் தேர்தல் பிரச்சாரப்பேச்சுக்களை அனைத்து இந்தி மற்றும் ஆங்கில அலைவரிசைகள் நேரடி ஒளிபரப்புச் செய்தன. தன்னுடைய பெயர் பத்திரிகையில் எப்போ தும் முதலிடத்தில் வரவேண்டும் என்பதற்காகவே தெரிந்த வரலாறுகளைக்கூட தவறாகப் பேசி பத்திரிகை யில் இடம் பிடித்தார்.

பி.ஜே.பி. - மதவாதத்துக்கு எதிரான பத்திரிகையா ளர்கள் இருந்தால், அத்தகையவர்களை அடையாளம் கண்டு செல்வாக்கைப் பயன்படுத்தி வெளியேற்றியும் உள்ளார். பண பலத்தின் மூலமும் இந்துத்துவா சிந்தனை கொண்ட ஊடகவியலாளர்கள் வாயிலாகவும் மக்களி டையே பெரும் பிரச்சாரம் மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றார்.

தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்த பிறகு இதுவரை எந்த ஒரு இந்திய ஊடகத்திற்கும் பேட்டியளிக்கவில்லை. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாரம் ஒருமுறை ஊடகங்கள் என்னைச் சந்தித்து நிறைகுறைகளை முன்வைக்கலாம் என்று வெற்றுப் பேச்சு பேசிய மோடி அதன் பிறகு ஊடகங்களை தனது அலுவலகவாசலுக்கு கூட வரவிடவில்லை.

அதே நேரத்தில் தனக்கு எதிராக எந்த செய்தியும் வராமல் ஊடகங்களை தனது கைக்குள் போட்டுக் கொண்டார். இந்தியாவின் பெரிய ஊடகக்குழுமங் களை அம்பானி மற்றும் பாஜக ஆதரவு தொழி லதிபர்கள் விலைக்கு வாங்கிவிட்டனர். எடுத்துக்காட்டாக நியூஸ் நெட்வெர்க் என்ற குழுமத்தின் கீழ் 6 செய்தி அலைவரிசையில் வரு கின்றன, இந்தக் குழுமத்தை கடந்த ஜூன் மாதம் அம்பானி விலைக்கு வாங்கிவிட்டார். அதே போல் இண்டியா டுடே நெட்வொர்கின் பங்குகளை பா.ஜ.க. ஆதரவு தொழிலதிபர்கள் வாங்கியுள்ளனர். அதே போன்று வியாபார நோக்கம் கொண்ட அச்சு ஊடகங்கள் ஆளுங்கட்சி சார்பாகவே செயல்படுவது வழக்கம், ஊடகங்களை விலைக்கு வாங்கும் மோடிக்கு தானாகவே விலைபோகும் ஊடகங்களை கைவசம் வைத்துக்கொள்வதென்பது பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதையாகிவிட்டது. சுமார் 60 ஆண்டுகளாக மகாராட்டிரத்தில் வெளிவரும் புடாரி நாளிதழ் நடுநிலைப்பத்திரிகை என்று பெயர்பெற்றது. மராட்டியத் தேர்தலின் போது நடுநிலையாக நின்று தனது பணியைச்செய்தது. ஆனால் கடந்த சில நாட்களாக முழுக்க முழுக்க பாஜக அரசியல் ஏடாகவே மாறிவிட்டது. இப்படி ஆரம்பம் முதலே ஊடகத்தை வளைத்து, தனக்கு சாதமான செய்திகளை மாத்திரம் இடம் பெறச் செய்த மோடி மேடையேறும் போதுமட்டும் ஊடக தர்மம் பேசுகிறார்.

அய்க்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பார்வை யாளர் கிறிஸ்தோ ஹேன்ஸ் குஜராத் இனப் படுகொலை களுக்குப் பிறகு குஜராத்துக்கு வர விரும்பினார்.

உண்மை நிலையை அறிந்து கொள்ள விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதுபோல அப் போது குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி பாசாங்கு செய்தார். கடைசி நேரத்தில் என்ன செய்தார் தெரியுமா? குஜராத்துக்கு அவர் வரக் கூடாது என்று கூறி விட்டார்.

இந்த நிலையை ஓர் அறிக்கை மூலமாக அய்க்கிய நாடுகள் மன்றத்தில் சிறப்புப் பார்வையாளர் அம்பலப் படுத்தினாரா இல்லையா?

முஸ்லீம்கள், கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் இவர்களின் உரிமைகள் எப்பொழுதும் ஆபத்தில்தான் இருக்கின்றன என்று சொன்னாரே அய்.நா. பார்வையாளர். (Source Statement of U.N.
Social Reporter - dt: 31.3.2012 MGM)

இந்த நிலையில் உள்ளவர்தான் ஊடகவியலாளர்கள் தம் ஆட்சியில் காணும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுமாறு ஜனநாயகவாதியாக தோற்றம் காட்டுகிறார். அடடே! இவரைப் போன்ற பல வேட மாமனிதரைக் காண்பது அரிதினும் அரிதே!

Read more: http://viduthalai.in/page-2/94003.html#ixzz3O3mHHAPv

தமிழ் ஓவியா said...

தொண்டு

சுக போகத்தினால் இன்பம் காணுவதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காணுவதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்காகவும், தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்க வேண்டும் என்று கருதவேண்டும்.
(விடுதலை, 2.7.1962)

Read more: http://viduthalai.in/page-2/94002.html#ixzz3O3mPvvtw

தமிழ் ஓவியா said...

இந்தக் கவிஞரைத் தெரிந்து கொள்வோம்!


ஒரே நேரத்தில் இலக்கியத்திலும் அரசியலிலும், கவிஞராகக் கலை களிலும் புரட்சியாளராகவும், புதுமை படைத்த ஆற்றலாளராகவும் ஒரு சிலரே உலக வரலாற்றில் சாதனை படைத்து, சரித்திரப் புகழ் பெற்றவர் களாக, சாகாத மா மனிதர்களாக வாழுகிறார்கள் - இன்றளவும்!

அவர்களில் மிகவும் நினைவுக் குரிய பாராட்டப்பட வேண்டிய சிந்தனையாளர், கவிஞர் கலீல் ஜிப்ரான் அவர்களாவார்.

பன்முக ஆற்றல் அறிஞரான அவர் தம் பிறந்த நாள் இன்று - ஜனவரி 6.

லெபனான் நாட்டில் (பஷ்ரி என்ற நகரில்) பிறந்த இவர் தம் 12ஆம் வயதிலேயே குடும்பம் அமெரிக் காவுக்கு புலம் பெயர்ந்தது.

அரேபிய மொழி, ஆங்கிலம், பாரசீக மொழிகளில் அறிவுள்ள இவர் சிறந்த ஓவிய நிபுணர்.

அதனால்தான் அவர் பாஸ்டனில் உள்ள ஓவியப் பள்ளியில் சேர்க்கப் பட்டாராம்!

15 வயதில் பெய்ரூத் சென்று உயர்கல்வியை அங்கே பயின்று, தமது தோழர்களுடன் இணைந்து கல்லூரி இலக்கியப் ஏட்டை வெளியிட்டார்!

மீண்டும் பாஸ்டனுக்கு திரும்பிய இவரின் கட்டுரை வடிவிலான கவி தைகள் அடங்கிய.

தி பிராஃபெட் (The Prophet) என்ற நூல் பல நாடுகளில் புகழை இவருக்கு அள்ளித் தந்தது!

முதலில் கல்லூரிக் கவிஞர் - பிறகு இவர் எழுதிய அந்த புத்தகம் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.

20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த நூல் என்ற முறையில்

(இன்றைய தமிழ் இந்து நாளேடு நிறைய தகவல்களை இரண்டு இடங் களில் தந்துள்ளது.)

இவரது படைப்பு இலக்கியங்களைத் தொகுத்து மக்கள் மன்றத்தில் சேர்த்து பரப்பியதற்கு முழுமுதற் காரணமான அவரது செயலாளரான பார்பராவையே சாரும்.

இதில் இவரது துணிவான, தெளிவான முற்போக்குக் கருத்துகள் - எழுத்துகள் - சிந்தனைகளால் மத குருமார்கள், அதிகாரிகள் கோபத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளானவர்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்ற தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனார் சிந்தனையையொட்டி, உலகம் ஒரு குலம் அனைவரும் உறவினர் என்று கூறியவர் இவர்!
வாழ்க்கையை தத்துவ ரீதியாக வரைந்து காட்டிய ஓவியக் கவிஞர் இவர்!

அதற்கு ஒரு எடுத்துக்காட்டு கீழே:

கலீல் ஜிப்ரான் (இவர் ஒரு மேரோனைட் கிறித்துவர்) - மிகவும் வசதி படைத்தவர்கள் - இயேசுபற்றி தனித்த கருத்தும் அவர் அமெரிக்காவுக்கு சொந்த மானவர் என்பது போன்ற கருத்தும் உடைய கிறித்துவப் பிரிவினர் - சால்ட் லேக்சிட்டி என்பது தலை நகரமாக கொண்ட அயோவா மாநிலத்தில் பெரிய தங்கத்தாலான கோபுரம் - வாஷிங்டனில் உள்ள சர்ச்சில் தங்கக் கோபுரம் உள்ளது) அப்பிரிவைச் சேர்ந்தவர் 1883-ல் பிறந்தவர் -

இந்த காப்புரிமை வருமானத்தை தனது பிறந்த மண்ணான பஷ்ரியின் வளர்ச் சிக்கே உயிலாக எழுதி வைத்தவர் இவர்.

இவரது ஒரு அருமையான கவிதை வரிகளைப் படியுங்கள்: என்னே உண்மைத் தத்துவ மிளிர்வு!

உங்கள் குழந்தைகள் உங்களுடையவை அல்ல. அவை, வாழ்வு தன்னையே தான் அடையக் கொள்ளும் ஏக்கத்தின் மகனும் மகளுமாக ஜனித்தவை.

உங்கள் குழந்தைகள் உங்களூடே தோன்றியவர்கள், உங்களிடமிருந்து அல்ல.

உங்களுடன் இருப்பினும் அவர்கள் உங்கள் உடமைகளல்லர்.

அவர்களுக்கு உங்களுடைய அன்பை நீங்கள் தரலாம், உங்கள் எண்ணங்களை அல்ல.

ஏனெனில், சுயமாக அவர்களிடத்தே எண்ணங்கள் பிறக்கின்றன.

அவர்கள் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம், உயிருக்கு அல்ல.

ஏனெனில், உங்கள் கனவில்கூட நீங்கள் அடைய முடியாத எதிர் காலம்தான் அவர் களது உயிர் உறையும் வீடு.

நீங்கள் அவர்களைப் போல ஆவதற் காக கடின முயற்சி செய்யலாம்.

ஆனால், உங்களைப் போல அவர் களையும் ஆக்கிவிடக் கூடாது.

ஏனெனில், வாழ்வு பின்னடித்துச் செல்வ தில்லை. நேற்றைய நாட்களில் சுணங்குவது மில்லை.

உயிருள்ள அம்புகளாக உங்களிட மிருந்தே எய்யப்படும் குழந்தைகளுக்கு நீங்கள் வில்லுகள்.
வில்லாளி, காலாதீதத்தின் மார்க்கத்தில் குறிவைத்து, தனது அம்புகள் அதிவேகத் துடன் தொலை தூரம் செல்லும்படி, உங் களைத் தனது மகாசக்தியால் வளைக்கிறான்.

வில்லாளியின் கரத்தில் உங்கள் வளைவு ஆனந்திக்கட்டும்.

ஏனெனில், பறக்கும் அம்புகளை அவன் விரும்புகிற அளவுக்கு அசைவற்ற வில்லின் உறுதியையும் விரும்புகிறான்.

(கலீல் ஜிப்ரானின் தீர்க்கதரிசி புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி. தமிழில்: பிரமிள்)

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/94005.html#ixzz3O3mY6T00

தமிழ் ஓவியா said...

கோட்சேவை புனிதப்படுத்துகிறார் மோடி: ராஜேஷ் எம்.பி. குற்றச்சாட்டு


பாலா (கேரளா), ஜன. 6_- மகாத்மா காந்தியாரை ஓரங்கட்டிவிட்டு கோட் சேவை மகத்துவப்படுத்த முயல்கின்ற நரேந்திர மோடி, நாட்டில் மத வெறியை வளர்த்து இந்து நாட்டை நிறுவ முயல் கிறார் என்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் எம்.பி. ராஜேஷ் (நாடாளுமன்ற உறுப்பினர்) குற்றம் சாட் டினார். இது இந்தியாவை மதவாத நாடுகளான பாகிஸ்தான், வங்க தேசம் போன்ற சீர்குலைவு நிலைக்கு இட்டுச் செல்லும் என்றும் ராஜேஷ் கூறினார்.

மதவெறிக்கும், ஊழ லுக்கும் எதிராக போராட் டம்தான் ஒரே வழி என்ற முழக்கத்தை முன்வைத்து வாலிபர் சங்கம் பாலா என்ற இடத்தில் நடத்திய இளைஞர் சங்கம நிகழ்ச்சி யைத் தொடங்கி வைத்து ராஜேஷ் பேசினார்.நல்ல காலம் பிறக்கப் போகிறது என்ற பிரமையை உரு வாக்கி அதிகாரத்தில் அமர்ந்தமோடி, கர்வாபஸி போன்ற மத வகுப்புவாத நட வடிக்கைகளின் மறை வில் நாட்டின் செல்வங் களை கார்ப்பரேட் முதலா ளிகளின் காலடியில் சமர்ப் பிக்கின்ற கொள்கைகளைத் தான் அமல் படுத்துகிறார்.

மதச்சிறுபான்மையினரிடையே பாதுகாப்பற்ற நிலை மையை உருவாக்கி மக்கள் மனதில் பிளவு விதை களைத் தூவுகிறது பா.ஜ.க. அரசு. தேசிய அளவில் கிறிஸ்துமஸ் தினத்தை உழைப்பு தினமாக்கிய மத்திய அரசு பக்ரீத் விடு முறையையும் ஒழித்துக் கட்டும் முயற்சியில் ஈடுபட் டுள்ளது.

கல்வி - கலாச்சா ரத் துறை களில் மூட நம் பிக்கைகளுக்கும் அறிவிய லுக்கும் புறம்பான நிலை பாடுகளுக்கும் அங்கீகாரம் அளித்து நாட்டின் வர லாற்றை, நாட்டின் முகத் தோற்றத்தை தலைகீழாக மாற்ற முயல்கிறார்கள். மதச்சார்பற்ற இந்தியா வின் தேசியப் பதாகை ஏந்திய ஆடம்பரக் காரில் பயணம் செய்கிற கோட்சே மனம் படைத்த பிரதமர், அம்பானி - அதானிக ளுக்கு சேவை செய்யும் பணியில்தான் தீவிரமாக உள்ளார்.

நாட்டில் பட்டினி, விலை உயர்வு போன்றவற் றைக் கட்டுப் படுத்தும் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாத மோடி ஆட்சி, அதானி வெளி நாட் டில் நிலக்கரிச் சுரங்கத் தொழில் ஆரம்பிக்க எஸ் பிஅய் வங்கியிலிருந்து ரூ.6200 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

பெட்ரோல் விலைக் கட்டுப் பாட்டை நீக்க மன்மோகன்சிங் அரசு 6 ஆண்டுகள் காத்திருந்தது என்றால், மோடி அரசு ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் டீசல் மீதான விலைக் காட்டுப்பாட்டை நீக்கியது. பெரும் ஏகபோக முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை மோடி அரசு ஏற்படுத்திக் கொடுத்துள் ளது.

மருந்துகளின் விலை யைத் தீர்மானிக்கும் உரி மையை மருந்துக் கம் பெனிகளுக்கு அளிக்கப் பட்டிருப்பதன் மூலம் ஏழை மக்களின் மருத்துவச் செலவை மோடி அரசு பெரு மளவு அதிகரித்துள்ளது.

ஆதாரை எதிர்த்த பாஜக அரசுஅதிகாரத் திற்கு வந்தபின் ஆதாரை கட்டாயமாக்கி விட்டது. 12 ஆக இருந்த சமையல் வாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9 ஆக குறைக்க முடிவு செய்துள் ளது.

பல பத்தாண்டுகளாக தொழிலாளர்களுக்கு கிடைத்து வந்த பிஎப், இஎஸ்அய் சலுகைகளை ரத்து செய்வதற்கும், தொழி லாளர்களை முதலாளிகள் தங்கள் இஷ்டப்படி வேலை நீக்கம் செய்வதற்குமான சட்டத்தை அமல்படுத்துவ தும் பா.ஜ.க. அரசின் புத் தாண்டுப் பரிசாகும் என் றும் ராஜேஷ் கூறினார்

Read more: http://viduthalai.in/page-8/94037.html#ixzz3O3qC1HkA

தமிழ் ஓவியா said...

தடுமாற்றம் இருக்காது!

செய்தி: கூட்டணியிலி ருந்து பா.ம.க. வெளியேறி னாலும், பா.ஜ.க.வுக்குப் பாதிப்பு இல்லை.
- மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

சிந்தனை: இதற்குப் பிற காவது பா.ம.க. நிறுவனருக்கு முடிவு செய்வதில் தடு மாற்றம் அனேகமாக இருக் காது என்று நம்பலாம்.

Read more: http://viduthalai.in/e-paper/94053.html#ixzz3O9A3uM2n

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியார்மீதான கொலை வழக்கு:

தீர்ப்பை எதிர்த்து களமிறங்கும் சமூக சேவகர்!


புதுச்சேரி, ஜன.7_ காஞ்சி புரம் வரதராஜப் பெரு மாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை செய் யப்பட்ட வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வளா கத்திலேயே படுகொலை செய்யப்பட்டார் மேலாளர் சங்கரராமன். இந்த கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 23 பேர் மீது வழக் குப் பதிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் நடை பெற்ற இந்த வழக்கு புதுச் சேரி மாநிலத்துக்கு மாற் றப்பட்டு தலைமை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப் பட்டனர். அதன்பின் சங்கரராமன் கொலை வழக்கில் புதுவை அரசு மேல்முறையீடு செய்ய வில்லை. இந்நிலையில், சென்னை கிழக்கு தாம் பரத்தைச் சேர்ந்த சமூக சேவகர் வாராகி என்பவர் புதுவை தலைமை குற்ற வியல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு புதுவை தலைமை குற்றவியல் நீதி மன்ற நீதிபதி வேல்முருகனி டம் தாக்கல் செய்யப்பட் டது. வாராகி அளித்துள்ள மனுவில், எனக்கு சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பின் சான்றளிக்கப்பட்ட ஆவ ணங்கள் அளிக்கவேண் டும்.

டாக்டர் மன்மோகன் சிங், சுப்பிரமணிய சுவாமி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில் குற்ற வியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோரை விடு தலை செய்ததற்கு எதிராக எந்தக் குடிமகனும் மறு ஆய்வு மனு தாக்கல் செய் யலாம் என குறிப்பிடப் பட்டுள்ளது. சங்கரராமன் கொலை வழக்கில் அரசு தரப்பு மேல்முறையீடு செய்ய நட வடிக்கை எடுக்கவில்லை. இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்த்து நான் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய விரும் புகிறேன். எனவே, வழக்கு தொடர்பான தீர்ப்பு நகல்கள் மற்றும் ஆவணங் களை எனக்கு அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். சங்கரராமன் கொலை வழக்கு மேல்முறையீடு செய்யத் தகுதியற்றது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு சமர்ப்பித்துள்ள அறிக் கையில் தெரிவித்திருந்தார். சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திர சரஸ் வதி மற்றும் விஜயேந்திர சரஸ்வதி ஆகியோரை கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி புதுச்சேரி நீதிமன்றம் விடுவித்தது. அப்போது மேல்முறையீடு செய்ய 90 நாள்கள் அவகாசமிருந்தது. தொடக்கத்தில் மேல்முறை யீடு செய்ய புதுச்சேரி அரசு ஆர்வமற்று இருந்தது. அதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முன்னாள் துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா அனுமதியளித்தார். இதுகுறித்து வீரேந்திர கட்டாரியா கூறும்போது, தனக்கு இந்த வழக்குபற்றி முழு விவரங்களும் சொல் லப்படவில்லை என்றார். இந்தப் பின்புலத்தில் தான் புதுச்சேரி அரசு மத்திய உள்துறை அமைச் சகத்தின் மூலமாக இந்த விஷயத்தில் அட்டர்னி ஜெனரலின் கருத்தைக் கோரியது. காஞ்சி சங்க ராச்சாரியார்களை விடுவிப் பதற்கு விசாரணை நடத் தப்பட்ட விதம், சாட்சி யங்கள் உருவாக்கப்பட்ட விதம் உள்ளிட்ட 20 கார ணங்களைப் பட்டியலிட் டுள்ளது புதுச்சேரி நீதி மன்றம். மேலும் 189 சாட் சியங்களில் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 83 பேர் பிறழ் சாட்சியங்கள் ஆயினர். எனவே இந்த வழக்கு மேல் முறையீடு செய்யத் தகுதி யற்றது என்று குறிப்பிட்டி ருந்தார். இந்த நிலையில் சங்கர ராமன் கொலை வழக்கிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட உள்ளதால் வழக்கு மீண்டும் சூடு பிடிக் கத் தொடங்கி உள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/94056.html#ixzz3O9AC8QIc

தமிழ் ஓவியா said...

எப்படியாவது இந்துப் பெண்கள் நான்கு குழந்தைகளைப் பெறவேண்டுமாம்: சொல்கிறார், பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி சாமியார்


லக்னோ, ஜன.7_ பாஜக நாடாளுமன்ற உறுப் பினரும் கோட்சேவை தேசபக்தர் என்று புகழ்ந்த வருமான சாக்ஷி என்ற சாமியார் இந்துப் பெண் கள் ஒவ்வொருவரும் எப் படியாவது 4 குழந்தை களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் ஒரு கோமாளித் தனமான உளறலைக் கொட்டியுள்ளார்

உத்தரபிரதேசம் மீரட் நகரில் நடந்த ஒரு மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக சாமியார் எம்பி சாக்ஷி தனது உரையில் கூறியதாவது: தற்போது மதமாற்றம் குறித்து பல்வேறு எதிர்க் கட்சிகள் பேசி வருகிறது. இது மதமாற்றம் அல்ல; தாய் மதம் திரும்ப வரு கிற நிகழ்ச்சிதான். மத மாற்றம் என்பது இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்குத் செல்லு வதைத்தான் குறிப்பிட வேண்டும். மதமாற்றம் செய்பவர்களைத் தூக்கில் போடவேண்டும் அதைச் சட்டமாக்கவும் பாஜக தயாராக உள்ளது.

நாதுராம் கோட்சே விற்கு சிலைவைப்பது பற்றி நான் தற்போது ஒன்றும் கூறமுடியாது.

இந்திய நாடு பல்வேறு கலாச்சாரங்களை உள்ள டக்கியது. இங்கு அனை வரும் ஒரே சிந்தனையில் இருப்பவர்கள் என்று கூறமுடியாது. பலருக்கு பல்வேறு சிந்தனைகள் இங்கே கடவுளை பன்றி வடிவிலும் வழிபடும் வழக்கம் உள்ளது. கழு தையையும் பூஜை செய்யும் மக்கள் இருக்கிறார்கள். மீரா கடவுளை பாம் பிற்குள்ளே பார்த்தாள், அவரவர்களுடைய எண் ணம் ஆகவே கோட் சேவை சிலர் புனிதராக பார்க்கின்றனர், அவ்வள வுதான் என்றார். மேலும் அவர் கூறிய தாவது, இதுவரை இருந்த இந்து விரோத அரசுகள் நாம் இருவர் நமக்கு இரு வர் என்ற கோரிக்கையை வைத்து இந்துக்களின் எண் ணிக்கையை குறைத்து விட்டனர். இனிமேல் மக்கள் நாம் இருவர் நமக்கு இருவர் என்பதை கருத்தில் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு இந் துக்களும் நான்கு அல்லது அதற்குமேல் குழந்தை களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்துக்கள் எப்படியும் கட்டாயமாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

அப் போதுதான் இந்துக்களின் எதிர்காலமும் இந்து தர் மமும் காக்கப்படும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/94054.html#ixzz3O9AKmeUy

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை வரலாற்றுப் புத்தகத்தில் ஓர் அரிய பாடம்


ஆசிரியருக்குக் கடிதம் >>>

சுயமரியாதை வரலாற்றுப் புத்தகத்தில் ஓர் அரிய பாடம்

ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மை யார் அவர்களின் மரணம், ஓர் இயற் கையின் விதியாகும். பகுத்தறிவாளர்கள் தாம் வாழுகின்ற காலத்தை, தனக்கும், பிறருக்கும் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்கின்றனர். அந்த வகையிலே அம்மா அவர்கள் வாழ்ந்த காலம் வீட்டிற்கும், நாட் டிற்கும் பயனுள்ளதாக அமைந்திருப்பதே மிகவும் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக் கும் உரியதாகும்.

நான், அம்மா அவர்களின் மரண சாசனத்தை ஒரு தடவைக்கு நான்கு தடவைகள் படித்துப் பார்த்தேன். அதில் ஒவ்வொரு வரியும், வைர வரிகளாகும். பிறருக்கும் நல்ல எடுத்துக் காட்டுகளாகும்.

தன்னுடைய பெற்றோர்கள், அன்பான அரவணைப்போடு, பகுத்தறிவுப் பாலூட்டி சுயமரியாதைக் கருத்துக்களோடு ஊறிப் பிறந்ததை, நினைவூட்டி தன் பெற்றோர் களைப் பெருமைப்படுத்தியிருக்கிறார்.
தந்தை பெரியாரின் அன்பான தலைமை, நல்ல தலைவர், நல்ல கொள்கை, சமுதாய சீர்திருத்தப்பணி, தந்தை பெரியாரே, மண மகனைத் தேர்வு செய்து, தம் செலவிலேயே திருமணம் செய்வித்த மிகப்பெரும் பேறு பெற்றேன் என்று தன்னுடைய நன்றி யுணர்வை வெளிப்படுத்தி பெரியாருக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

இந்தியக் குடிமக்களின் சராசரி வயதான அறுபதைத் தாண்டி வாழ்ந்து கொண்டிருக் கிறேன் என்பதே மகிழ்ச்சிக்குரியது தானே? என்ற வினாவை வயது 76 இல் எழுப்பி, 81 வயது வரை நிறை வாழ்வு வாழ்ந்தார்கள்.

மனித நேயப் பண்பாளர் டார்பிடோ, ஜனார்த்தனம் என் துணைவராகக் கிடைத்த காவிய வாழ்க்கை வாழ்ந்தோ மென்று தன் இணையரைப் பெருமைப் படுத்தியிருக்கிறார்.

தந்தை பெரியாரின் கருத்துகளை உலகம் முழுவதும் பரப்பிடும் பணியை, கல்விக் கூடங்களைப் பெருக்கி, அரசியல் மாற்றங் களை ஏற்படுத்திடும் அரிய தலைவர் நாட் டுக்குக் கிடைத்திருப்பதையெண்ணி, இறும் பூதெய்துகிறேன் என்று ஆசிரியர் அய்யா வீரமணியாரைப் பெருமைப்படுத்தியிருக் கிறார்.

பெரியார் தந்த துணிவோடு, ஆசிரியரின் வழிகாட்டுதலோடு, சமுதாயப் பணியில் மன நிறைவோடு, மரணத்தையும் மகிழ்வோடு தழுவிக் கொண்ட மனோரஞ்சிதம் அம் மாவை எண்ணியெண்ணி என் உள்ளம் நெகிழ்கிறது.

தன்னுடைய இறப்பிற்குப் பின்னாலும், தன்னுடைய உடல் மறைவதற்குள் ஏதாவது நன்மை செய்திட முடியாதா? என்று எண் ணியிருப்பார்கள் போலிருக்கிறது, என்ன விநோதம்! எனக்கு மாலைக்குப் பதில் விடுதலை சந்தா தாருங்கள் என்று கேட்ட தலைவரைப்போல என் உடலுக்கு மாலை போட வேண்டாம். அதற்குப் பதில் என் உட லருகில் உண்டியல் வைத்து நிதி தாருங்கள் என்று சொன்ன அந்த தொண்டரின் மனப் பாங்கை நான் என்னவென்று சொல்வேன்!

தலைவரைப் போலவே தொண்டர், தொண்டரைப் போலவே தலைவர். தொண்டன் நினைப்பதையே தலைவர் நினைக்கிறார். தலைவர் நினைப்பதையே தொண்டனும் நினைக்கிறார். உலகத்திலே இப்படியொரு விந்தையான இயக்கம் எங்காவது உண்டா? சாவுக்கு வருகின்ற மாலையைக்கூட வீணாக்க மனமின்றி, வாழ்வோருக்குப் பயன்படும் வித்தையினை கற்றுத் தந்த வித்தகர் யாரோ? அவர்தான் தந்தை பெரியாரோ! அம்மா நெஞ்சினில் நிறைந் தாரோ! அம்மாவின் எண்ணம் நிறை வேறியது. நாகம்மையார் இல்லத்துக்கு மாலைக்குப்பதில் கிடைத்த நன்கொடை கள் ரூ. 25,021/-

ஒருவர் இறந்துவிட்டால், சமுதாய நடப்பிலே, பெரிய காரியம் ஆகிவிட்டது என்று சிலர் சொல்லுவார்கள். கெட்ட காரியம் ஆகிவிட்டது என்றும் சிலர் சொல்லுவார்கள். அம்மாவின் மரணத் திலும், ஒரு நல்ல காரியம் பார்த்தீர்களா? இது தான் பகுத்தறிவு. இது தான் தன்னல மறுப்பு. இது தான் சுயமரியாதை இயக்கம் பார்த்தீர்களா? தோழர்களே!

அடிக்க அடிக்க பந்து எகிறுவது போல யார் தடுத்தாலும் அலைகள் அடிப்பதைப் போல எவ்வளவு நெருக்கடிகள், எவ்வளவு இடையூறுகள் வந்தாலும், அதையும் தாண்டி ஓர் இயக்கம், ஒரு நூற்றாண்டை நோக்கி வீறுநடை போடுகின்றதென்றால், மனோரஞ்சிதம் அம்மா போன்ற இயக்கக் கண்மணிகள், இல்லை வீரப்பெண்மணி கள் இருப்பதனாலன்றோ!

சட்ட எரிப்புப் போராட்டத்திலே, சிறைக்கஞ்சா அந்த வீரப்பெண்மணியை, மரணம் தன் சிறையிலே அடைத்துக் கொண்டது. எனினும் அவர் புகழை, யாராலும் சிறையிட முடியாது. ஆம், அம்மா அவர்கள் ஓர் காவியமாக நினைவு ஓவியமாக, சுயமரியாதை இயக்க சரித் தித்தில் மறக்கவொண்ணா ஓர் நீங்கா இடம் பெற்று விட்டார். ஆம் அம்மா ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அவர்களின் புகழ், வாழ்க! வாழ்க! வாழ்கவே!

வீர வணக்கம்! நன்றி!

- கா.நா.பாலு (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம், மேட்டூர் மாவட்டம்)

Read more: http://viduthalai.in/e-paper/94062.html#ixzz3O9B3v0r9

தமிழ் ஓவியா said...

பார்ப்பனத் தந்திரம்எந்தப் பார்ப்பனராவது வேஷம் போட்டு ஆடுவதோ, செடில் குத்திக் கொள்வதோ, அலகுக் குத்திக் கொள்வதோ, கன்னத்திலோ, நாக்கிலோ கம்பியைக் குத்திக் கொள்வதோ ஆகிய காரியங்களைச் செய்கிறார்களா? கோவில் கட்டுகின்றார்களா?
_ (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/e-paper/94058.html#ixzz3O9BEiyvH

தமிழ் ஓவியா said...

ஒகேனக்கல் பயிற்சிப்பட்டறை வரலாற்று நிகழ்வாகியது: தமிழர் தலைவர் பெருமிதம்

தருமபுரி ஜன. 7_ தருமபுரி மாவட்டம் ஒகேனக் கல்லில் நடைபெற்று முடிந்த 3 நாள் பெரியாரியல் பயிற்சி பட்டறை வரலாற்று நிகழ்வாகியது என தமிழர் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

ஒகேனக்கல்லில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் இறுதி நாள் நிகழ்வு டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற்றது.

காலை முதல் நிகழ்ச்சியாக தஞ்சை யோகிராசர் அவர்களின் யோகப்பயிற்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பயிற்சிப்பட்டறையில் கடவுள் மறுப்பு என்னும் தலைப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வகுப்பெடுத்தார். அதைத் தொடர்ந்து தமிழர் தலைவரின் தனித்தன்மைகள் என்னும் தலைப்பின் கீழ் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பயிற்சி அளித்தார்.

மூடநம்பிக்கைகள் ஒரு மோசடியே என்னும் தலைப்பில் மருத்துவர் கவுதமன் அவர்களும் புராண இதிகாச புரட்டுகள் என்னும் தலைப்பில் பேராசிரியர் ப.காளிமுத்து அவர்களும், தமிழர் தலைவரின் தனித் தன்மைகள் என்னும் தலைப்பில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

அதைத்தொடர்ந்து தமிழர் தலைவர் அவர்கள் மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு விரிவான பதில் அளித்தார். அந்த உரையே சிறப் புரையாக இருந்தது. மதிய உணவு இடைவெளிக்குப் பின் இளங்கோ தலைமையிலான அன்பு கலைச்குழுவின் சார்பில் நாடகம் மற்றும் பாடல் இசைக்கப்பட்டன.

சிறப்பித்தல்

மூன்று நாள் நிகழ்வில் பங்குபெற்ற தலைமை கழக நிர்வாகிகள் தமிழர் தலைவர், துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மாநிலப் பொருளாளர் டாக்டர் பிறைநுதற் செல்வி, செயலவைத்தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், பேராசிரியர் காளிமுத்து, மருத்துவர் கவுதமன், மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், யோகா மாஸ்டர் யோகராஜா, ஈரோடு மண்டலச் செயலாளர் சண்முகம், வேலூர் மாவட்டத் தலைவர் சடகோபன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாநில துணைச்செயலாளர் சிவக்குமார், கிருட்டிணகிரி மாவட்டச் செயலாளர் சு.வனவேந்தன் மற்றும் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்களுக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் சிறப்பு செய்தனர்.

பயிற்சி பட்டறையில் பங்கேற்ற அனைவரும் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடத்திட துணை புரிந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நகர கழக நிர்வாகிகளுக்கு கழக துணைத்தலைவர் சிறப்பு செய்தார்.

அத்துடன் பயிற்சிப் பட்டறை சிறப்பாக அமைந்திட பொருள் உதவி, மண்டப உதவி, ஒலி, ஒளி, அமைப்பு, உணவு ஏற்பாடு செய்திட்ட அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

பெரியார் ஆயிரம் வினா விடை நிகழ்ச்சியில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட அனைவரும் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றனர். பயிற்சிப் பட்டறையின் மூன்று நாளும் பயிற்சி பெற்றவர்களுக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் தருமபுரி பெரியார் பெருந்தொண்டர் பி.கே.ராமமூர்த்தி குடும்பத்தின் சார்பில் மருத்துவர் கவுதமன் அவர்கள் சிறப்பான முறையில் விருந்தளித்தார் என்பது குறிப்பிடதக்கது. அவருக்கு அனைவரும் நன்றியைத் தெரிவித்தனர்.

பயிற்சிப் பட்டறையில் தருமபுரி, சேலம், கிருட்டிணகிரி, வேலூர், சென்னை, திருச்சி, தஞ்சை, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, பழனி, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் இருந்து பயிற்சியில் கலந்து கொண்டனர் என்பது சிறப்புக்குரியது.

Read more: http://viduthalai.in/e-paper/94067.html#ixzz3O9Be5JTH

தமிழ் ஓவியா said...

கருநாடகத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பாராட்டு!

கருநாடகா, ஜன. 7_ இதுகுறித்து கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் மு.சானகிராமன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:_

இந்தியாவிலேயே முதன் மாநிலமாக சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற் கொள்ளும் வழிகாட்டி மாநிலமாக கருநாடக மாநிலத்தை கணக்கெ டுப்பு பணியை மேற்கொள் வதற்கு முதலமைச்சர் அவர்களை கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் பாராட்டி, வரவேற்கிறது.

1931ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் எந்த ஒரு சாதிவாரி கணக்கும் துல்லியமாகப் பராமரிக் கப்படாமல் 12 அய்ந் தாண்டு திட்டங்கள் நிறை வேற்றியும் மக்களுக்கு எந்த திட்டங்களும் இல குவாக சென்றடையவில்லை என்பதே உண்மையாகும்.

இதனால்தான் தந்தை பெரியார் சுதந்திரம் பெற் றோம் சுகவாழ்வு பெற் றோமா? எனக் கேட்டார். அதற்கான விடையும், தேவையும் பூர்த்தி செய் யப்படாமலே உள்ளன.

சாதிவாரிக் கணக் கெடுப்பு பணி செய்து, நாட்டில் எந்தெந்த வகுப் பினர் எவ்வளவு பேர்கள் உள்ளனர். அவர்களின் பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முழு புள்ளி விவரங்கள் அரசிடமில்லை. அதனால் மக்களின் வளர்ச் சிக்கு ஏற்ற திட்டங்களை செயல்படுத்த முடிய வில்லை.

இதனைக் கருத் தில் கொண்ட கருநாடக முதலமைச்சர் சித்தரா மையா அவர்கள் ஏப்ரல் திங்களுக்குள் சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ள முன்வந்த மைக்கு வெகுஜன மக்க ளின் சார்பாக பாராட்டு தெரிவிக்கின்றோம்.

மேலும் அரசுப் பணியா ளர்கள் எந்தவித சுணக்க மும் காட்டாமல் பொறுப் புடனும், விடுபடாமல் துல்லியமாக கணக் கெடுப்பு செய்து, இந்தியா விற்கே முன்னோடியாக விளங்கிட ஆவன செய்திட கேட்டுக் கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-7/94101.html#ixzz3O9COkCKJ

தமிழ் ஓவியா said...

600 ஆண்டுகால நவரத்தினங்கள் பதித்த தங்கக் கிரீடத்தைத் திருடிய அர்ச்சகப் பார்ப்பான் கைது!


லக்னோ, ஜன.8_ 600 ஆண்டுகாலமாக கோவிலில் இருந்த நவரத்தினம் பதித்த தங்கக் கிரீடத்தைக் கோவில் அர்ச்சகப் பார்ப் பான் திருடினான்_ அவன் கைது செய்யப்பட்டான்.

உத்தரப்பிரதேசம் பலியா நகரத்தில் உள்ள லகந்தரோட் என்ற பழங்காலக் கோட்டையில் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமை யான விஷ்ணு கோவில் ஒன்று உள்ளது. இக்கோ விலில் உள்ள விஷ்ணு சிலைக்குச் சாம்பல் மாகாணத்தின் குறுநில மன்னர்களால் வழங்கிய நவரத்தினம் இழைக் கப்பட்ட தங்கக் கிரீடம் திடீரென காணாமல் போனது. விலை மதிப்பு மிக்க தங்கக் கிரீடத்தைக் கோவில் அர்ச்சகப் பார்ப் பானே திட்டமிட்டு கொள் ளையடித்துள்ளான்.

600 ஆண்டு காலத் திற்கு முந்தைய விலை மதிப்பு மிக்க பொருள் என்பதால் உத்தரப் பிரதேச சி.அய்.டி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரணை செய்தது. இதில் கோவில் அர்ச்சகப் பார்ப்பானே இந்தக் கிரீடத்தை சில சமூக விரோதிகளின் துணை யுடன் திருடியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அர்ச்சகப் பார்ப்பான் மற்றும் இந்தத் திருட் டுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தத் திருட்டு வழக்கு தொடர்பாக பலி யாநகர இணை ஆணை யர் கூறியதாவது: விலைமதிப்பு மிக்க இந்த கிரீடத்தின் மீது நீண்ட நாள்களாகவே அர்ச்சகப் பார்ப்பானுக்கு ஒரு கண் இருந்து வந்தது.

இதை அப்பகுதியில் உள்ள சில சமூக விரோதிகள் மூலம் திருட திட்டமிட் டான். இதனைத் தொடர்ந்து தன்மீது சந்தேகம் எழாத வகையில் சில நாள்களாக பூசை முடிந்த பிறகு மக்களோடு மக்களாகவே அர்ச்சகப் பார்ப்பானும் கோவிலை மூடிவிட்டுச் சென்றுள் ளான்.

மஹாபூர்ணிமா நாளன்று அலகாபாத் செல்வதாக கூறிச் சென் றவர், ரகசியமாக திருடர் களுக்கு கட்டளையிட் டுள்ளார். இதனை அடுத்து கோட்டையில் யாருமில்லாத நேரத்தில் புகுந்து கோவில் கதவை உடைத்து கிரீடத்தை திருடிச் சென்றுள்ளனர். எப்போதும்போல் கோவிலுக்கு வந்த அர்ச் சகப் பார்ப்பான், கிரீடம் திருடு போனதாக நடித் துள்ளார்.

ஆனால், எங் களுக்கு ஆரம்பத்தில் இருந்தே அர்ச்சகப் பார்ப்பான்மீது சந்தேகம் இருந்தது. விசாரணையில் இந்தக் கொள்ளைக்கு திட்டமிட்டுக் கொடுத் தது, தான்தான் என்று ஒப்புக்கொண்டார். கிரீடம் தற்போது வேறு ஒருவரிடம் கொடுத்து வைத்துள்ளதாக தெரி கிறது. விரைவில் கிரீ டத்தை மீட்டுவிடுவோம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/94111.html#ixzz3OKAHQuI8

தமிழ் ஓவியா said...

காந்தியார் கொல்லப்பட்ட நாளில் கோட்சேவுக்காக இருசக்கர வண்டியில் ஊர்வலமாம்
லக்னோ, ஜன.8- காந்தியார் கொல்லப் பட்ட ஜனவரி 30 அன்று கோட்சேவுக்காக இருசக் கர வண்டி ஊர்வலங் களை நடத்த இந்து மகா சபை திட்டமிட்டுள்ளது.

சீதாபூர் பகுதியில் கோட்சேவுக்கு கோயில் கட்டும் திட்டத்தைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந் தாலும், கோட்சேவுக்காக இரு சக்கர வண்டிகளில் ஊர்வலத்தின் வாயிலாக காந்தி எதற்காகக் கொல் லப்பட்டார் என்று பிரச் சாரம் செய்ய இந்து மகா சபை திட்டமிட்டுள்ளது.

இந்து மகாசபாவின் தேசிய செயல் தலைவர் காம்லேஷ் திவாரி கூறும் போது, இரு சக்கர வண் டிகளில் கோட்சேவை ஆதரித்து, காந்தி கொல் லப்பட்டதற்கான காரணங்களை விளக்கி பிரச்சாரம் செய்யும்போது, பாப்தமாவ் கிராமத்தில் கோட்சே சிலை அமைப் பதற்கான பூமி பூஜை செய்ய உள்ளோம். பின்னர் அந்த இடத்தில் கோட்சே சிலையை அமைப்போம்.

அதே போன்று கோட்சேவுக் கான கோயில் அமைப் பதற்கு பூமி பூஜை செய்ய உள்ளோம். மேலும், பூமி பூஜை செய்வதற்கு முன் பாகவே சீதாபூரில் ஜன வரி 30 அன்று கோட்சே சிலையை அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று திவாரி கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, கர்ஷெட் பாக்கில் உள்ள இந்து சபா பவ னில் இரு சக்கர வாகன பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளது. சார்பாக், ஆலம் பாக், சவுக், அமினாபாத் மற்றும் பாரா ஆகிய பகுதிகளைக் கடந்து பப்தமாவ் கிராமத்தை அடையும். இருசக்கர வாகன பிரச்சாரத்தின் போது, கோட்சே ஏன் காந்தியைக் கொன்றார்? என்பதை விளக்கும் துண்டறிக்கைகள் வழங் கப்பட உள்ளது.

ஜன் ஜக்ரான் இரு சக்கர வாகன பிரச்சாரத் துக்கு இந்து மகாசபையின் நிர்வாகத்தின்மூலம் அனுமதி கோரப்பட்டுள் ளது. உரிய அலுவலர் களுக்கு எஸ்.எம்.எஸ். என்கிற குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இப்பிரச்சாரத்தில் கோட்சேவைப் புகழ்வதில் சட்ட விரோதம் எதுவு மில்லை. அரசுக்கு விரோ தமாக செயல்பட்டதாக எந்த சட்டத்தின்படி கோட்சேவுக்கு தண் டனை அளிக்கப்பட்டதா? என்று திவாரி கேட்டுள்ளார்.

அமைதியை சீர் குலைப்பதான குற்றச் சாட்டின்பேரில் திவாரி உள்ளிட்ட 26பேர் மீது சிதாபூர் மாவட்ட நிர்வா கம் 26.12.2014 அன்று வழக்கு பதிவு செய்துள் ளமை குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/94113.html#ixzz3OKAUMnIV

தமிழ் ஓவியா said...

பி.கே. திரைப்படம் ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக இல்லை

டில்லி உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

புதுடில்லி, ஜன.8_ ஹிந்தி நடிகர் அமீர்கான் நடித்து வெளிவந்துள்ள "பி.கே.' திரைப்படத்தில் ஹிந்து மத உணர்வு களைப் புண்படுத்தும்படி யாக காட்சிகள் உள்ளதாக கூறப்படுவதில் எந்த முகாந்திரமுமில்லை என்று டில்லி உயர்நீதி மன்றம் தெரிவித்தது. பி.கே. ஹிந்தி திரைப்படத்தை எதிர்த்து தாக்கல் செய் யப்பட்ட பொது நல மனுவை புதன்கிழமை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. ரோஹிணி, நீதிபதி ஆர்.எஸ். என்ட்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, மேற்கண்டவாறு தெரிவித்தது.

""அந்த திரைப்படத்தில் என்ன தவறு உள்ளது? எல்லாவற்றையும் நீங்கள் அவதூறாக கருதக் கூடாது. மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. இதுகுறித்து, விரிவான உத்தரவை, பிறகு பிறப் பிக்கிறோம்'' என்று நீதி பதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அஜய் கவுதம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டிருந்ததா வது: பி.கே. திரைப்படத் தில் சில காட்சிகள் ஹிந்து மத உணர்வுகளை புண் படுத்தக்கூடியதாக உள் ளன. ஆனால், அவற்றை கவனத்தில் கொள்ளாமல், திரைப்படத்தை வெளியிட திரைப்படத் தணிக்கை (சென்ஸார்) வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தத் திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி, நாட்டின் பல்வேறு பகுதி களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதனால், சட்டம்- ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டது. எனவே, பி.கே. திரைப்படத்தில் இருந்து, ஹிந்து மத உணர்வு களைப் புண்புடுத்தக் கூடிய காட்சிகளை நீக்க உத்தரவிட வேண்டும். அவ்வாறான காட்சிகளு டன், இத்திரைப்படத்தை திரையரங்கு களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிடக்கூடாது என்று இதன் தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், "இதே போன்ற மனுவை, உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்து விட்டது. எனினும், திரைப் படத்துக்கு அனுமதி யளித்து திரைப்படத் தணிக்கை வாரியம் அளித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடமுள்ளது' என்று வாதிட்டார்.
அவரது வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், "திரைப்பட தணிக்கை வாரியத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு மட்டுமே உரிமையுண்டு. சட்டப்படி, வெளியாள் களுக்கு அந்த உரிமை யில்லை' என்று தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/94114.html#ixzz3OKAhcivk

தமிழ் ஓவியா said...

இருந்து வரும்


பார்ப்பனச் சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும் வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்து வரும்.
(விடுதலை, 29.5.1973)

Read more: http://viduthalai.in/page1/94118.html#ixzz3OKCpwunl

தமிழ் ஓவியா said...

மதம் படுத்தும் பாட்டைப் பாரீர்!


400 சீடர்களின் ஆண்மையை பறித்ததாக சாமியார் மீது சி.பி.அய். வழக்குப்பதிவு

புதுடில்லி, ஜன. 8_- அரியானா மாநிலத்தில் 400 சீடர்களின் ஆண்மையை பறித்த சாமியார் மீது குர்மீட் ராம் ரஹிம் சிங் மீது சி.பி.அய். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சீக்கியர்களை எதிர்த்து கருத்து தெரிவித் ததன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர், குர்மீட் ராம் ரஹிம் சிங். டேரா ஸச்சா சவுதா என்ற அமைப்பை ஏற்படுத்தி சில சமூக சேவைகளை செய்துவரும் இவருக்கு அரியானா மாநிலத்தில் உள்ள சிர்ஸா நகரில் பெரிய ஆசிரமம் உள்ளது.

இந்த ஆசிரமத்தில் பல ஆண், பெண் சீடர் கள் தங்கியுள்ளனர். இங்கு தங்கியிருக்கும் ஆண் சீடர்களுக்கு இனப்பெருக் கத்தை கட்டுப்படுத்தும் விதமாக சுமார் 400 பேரின் விதைகளை அகற்றி விட்டதாக ஒரு முன்னாள் சீடர் பரபரப்பு புகாரை வெளி யிட்டார்.

ஹன்ஸ்ராஜ் சவுகான் என்ற அந்த சீடர் இதே குற்றச்சாட்டை குறிப்பிட்டு பஞ்சாப்-அரியானா நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

இது தொடர்பாக, சி.பி.அய். விசார ணைக்கு நீதிபதி கண்ணன் உத்தரவிட்டார். இதனையடுத்து, சி.பி.அய். நடத்திய விசார ணையில் ஆண்மையை உற்பத்தி செய்யும் விதைகளை அகற்றி விட்டால் கடவுளை காணலாம் என்று உபதேசித்த குர்மீட் ராம் ரஹிம் சிங், தனது ஆசிரமத்தில் உள்ள மருத் துவமனையில் பணியாற்றும் மருத்துவர் களை வைத்து பல சீடர்களின் ஆண்மையை பறித்துள்ளது உறுதி செய்யப்பட்டது.

இவர் மீது ஏற்கெனவே, ஒரு பத்திரிகை யாளரை கொன்றது, ஆசிரமத்தில் உள்ள பெண் சீடர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சங்கராபுரம் அருகே கோவில் பூட்டை உடைத்து அய்ம்பொன் சிலை கொள்ளை

சங்கராபுரம், ஜன.8 சங்கராபுரம் அருகே கீழ்பட்டு கிராமத்தில் சவுந்தர ராஜபெருமாள் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை கோவில் அர்ச் சகர் ராஜப்பா (45), கோவிலில் விளக்கேற்றி பூஜை செய்துவிட்டு இரவு கோவிலை பூட்டி விட்டு சென்றார். மார்கழி மாதத்தை யொட்டி வழக்கம்போல் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அர்ச்சகர் ராஜப்பா பூஜை செய்ய கோவிலுக்கு வந்தார்.

அப்போது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு பூட்டு தனியாக வெளியே கிடந்ததை கண்டு ராஜப்பா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கோவில் உள்ளே சென்றுபார்த்தபோது கோவில் கருவறையில் வைக்கப்பட்டிருந்த 2 அடி உயரம் மற்றும் 20 கிலோ எடை கொண்ட சிறீதேவி அய்ம்பொன் சிலையை காணாமல் திடுக்கிட்டார்.

அந்த சிலையை யாரோ கொள்ளை யடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கோவில் சிலையை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

கோயில்களில் நடக்கும் மோசடி: பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு!

நாகர்கோவில், ஜன. 8_- இணையத்தின்மூலம் சபரிமலை பிரசாதம் வழங்குவதாக கூறி போலி பிரசாதம் விற்று வந்த மேற்கு வங்க பிரமுகர் ஒருவரை கேரள காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கேரள காவல்துறையினருக்கு ஒரு புகார் வந்தது. இணையத்தின்மூலம் சபரிமலை பிரசாதம் விற்கப்படுவது உண்மைதானா என விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதனை யடுத்து சைபர் கிரைம், கால்துறையினரின் தனிப்படை விசாரித்தது.

மே.வங்கத்தை சேர்ந்தவர்; இந்த விசா ரணையில் ஆன்லைன் பிரசாதம் டாட்காம்'- என்ற பெயரில் இணையதளம் நடத்துவது தெரியவந்தது. இந்த அலுவலகம் பெங்களூரு பழைய விமான நிலையப்பகுதியில் இருப்பது தெரிய வந்தது. அங்கு விரைந்த காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு வைக்கப்பட்டிருந்த போலி பிரசாதம் மற்றும் குறுந்தகடுகள் கைப்பற்றப்பட்டன. மேற்கு வங்கம் ராஞ்சல் மாவட்டம் ஊஞ் சல்மால் என்ற பகுதியை சேர்ந்தவர் இந்த போலி பிரசாத நிறுவனத்தை நடத்தி வந்து உள்ளார். அய். டி., பொறியாளரான அவரை பிடிக்க காவல்துறையின் தனிப்படையினர் மேற்குவங்கம் விரைந்துள்ளனர்.

சபரிமலை பிரசாதம் மீனாட்சி அம்மன், பழநி பிரசாதம்

சபரிமலை பிரசாதத்தை பிரதானமாக விற்று வந்த அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழநி முருகன் கோயில் என 51 பிரபல கோயில்கள் பிரசாதம் தருவ தாக விளம்பரம் செய்துள்ளார்.

சபரி மலை பிரசாதத்தில் ஒருபாக்கெட், அப்பம், விபூதி, குங்குமம் கொண்ட பாக்கெட் விலை 501, 1500, 3 ஆயிரம் ரூபாய் வரை விற்றுள்ளார். இது குறித்து திருவதாங்கூர் தேவஸ் தானம் அதிகாரிகளிடம் கேட்ட போது சபரிமலை பிரசாதத்தை ஆன்லைனில் வழங் கிட யாருக்கும் நாங்கள் அனுமதி வழங்க வில்லை என கூறினர்

Read more: http://viduthalai.in/page1/94154.html#ixzz3OKDbwFSm

தமிழ் ஓவியா said...

கலைஞர், பேராசிரியர், தளபதி ஆகியோருக்கு வாழ்த்துகள் - பாராட்டுகள்


தி.மு.க.வில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட

கலைஞர், பேராசிரியர், தளபதி ஆகியோருக்கு வாழ்த்துகள் - பாராட்டுகள்

இன்று காலை (9.1.2015) கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் 14ஆவது கட்சித் தேர்தலில், அதன் தலைவராக உழைப்பின் உருவம் மானமிகு சுயமரியாதைக் காரரான நமது கலைஞர் அவர்களை மீண்டும் ஒருமனதாக, போட்டியின்றித் தேர்வு செய்து தனித்ததோர் வரலாறு படைத்துள்ளது.

வரலாற்றில் தொடர்ந்து சாதனைகள் செய்து வருபவர்; தி.மு.க.விற்கு எப்படிப்பட்ட மலை போன்ற எதிர்ப்புகளும், இடையூறுகளும், ஏற்படினும், தனது ஆற்றல்மிகு உழைப்பாலும், ஒப்பற்ற சாதுர்யத்தாலும் எதிர்கொண்டு இயக்கத்தின் சோதனைகளை சாதனைகளாக்கிடும் ஆற்றல் படைத்த கலைஞர் அவர்களுக்கு தாய்க் கழகமான திராவிடர் கழகம் தனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துப் பாராட்டி மகிழ்கிறது.

அவர்களோடு அக்கழகத்தை வழி நடத்திட உதவியாக தேர்வு செய்யப்பட்டு, புதிய அத்தியாயத்தைப் படைக்க பொதுச் செயலாளராக இனமானப் பேராசிரியர் அவர்களும், பொருளாளராக தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம். மற்ற பொறுப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள் - பாராட்டுகள்!

- கி.வீரமணி
தலைவர் திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page1/94171.html#ixzz3OKGTp0kv

தமிழ் ஓவியா said...

ஜனநாயகவாதி போல கருத்துக்கூறும் ராஜபக்சே

ஜனநாயகவாதி போல
கருத்துக்கூறும் ராஜபக்சே

மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட் சியை அமைதியான வழி யில் புதிய அதிபரிடம் ஒப்படைப்பேன் என்று அதிபர் ராஜபக்சே கூறி யுள்ளார். தேர்தலில் தோல்வி முகம் ஏற்பட்ட உட னேயே அதிபர் மாளி கையில் இருந்து வெளி யேறிய முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே தன்னுடை கருத்து குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் அதிபர் மாளிகை புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட மைத்ரி பால சிறி சேனாவின் அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நண்பகல் 12 மணி அளவில் மைத்திரி பால சிறிசேனாவின் வெற்றியும் தேர்தல் குழுத் தலைவர் வெளியிட்டார். இதனை அடுத்து மகிந்தா தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்ப தாவது,தேர்தல் முடிவுகள் புதிய ஆட்சிமாற்றத்தை மய்யமாக கொண்டுள் ளது. 10 ஆண்டுகளாக எனது ஆட்சிக் காலத்தில் இலங்கையை சர்வதேச அளவில் பல்வேறு துறை களில் முன்னுக்கு கொண்டு வந்துள்ளேன். இலங்கை மக்கள் எனது பணியை நினைவிற்கொள்வார்கள். புதிய அதிபருக்கு வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைதியான வழியில் புதிய அதிபரிடம் ஒப் படைப்பேன். இது குறித்து காலையில் எதிர் கட்சித் தலைவர் ரனில் விக்கிரம சிங்கேவிடம் விபர மாக பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page1/94179.html#ixzz3OKGo8DFf

தமிழ் ஓவியா said...

பீடை மதம்

இன்றைய ஆன்மிகம்? என்ற பெட்டிச் செய்தியை (சனி 27.12.2014 திருச்சி பதிப்பு) படித்தேன்.
புத்தர் மறுபிறவியில்லா வீடுபேறு மரணமடைந்த மாதம் மார்கழி 28ஆம் நாளாகும். எனவே மார்கழி மாதம் பெருமைக்குரிய மாதம் என்னும் பொருளில் பீடு மாதம் என்று பௌத்த மதத்தினரால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

பவுத்தத்திற்கு எதிரான ஆரிய வேத மதத்தினர், இப்பீடு மாதம் என்பதை பீடை மாதம் எனத் திரிபு செய்து விட்டனர். அம்மாதத்தின் சிறப்பைச் சிதைத்து விட்டனர். தடு என்ற சொல்லும் தடை என்ற சொல்லும் ஒரே பொருள் தரவல்லது போல, பீடு என்ற சொல்லும் பீடை என்ற சொல்லும் ஒரே பொருள் தராது என்பது உணரத் தக்கதாகும்.

- தி. அன்பழகன், திருச்சிராப்பள்ளி

Read more: http://viduthalai.in/page-2/94202.html#ixzz3OKITrh47

தமிழ் ஓவியா said...

அருகதையற்றவர்கள்


பேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிரதாய முறைகளையும், ஸ்தாப னங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற, ஒழிக்கத் துணிவு கொள்ள வேண்டும். இந்தத் துணிவு கொள் ளாத எவரும் சமதர்ம முயற்சிக்கு அருகதை அற்றவர்களே ஆவார்கள்.
(விடுதலை, 7.7.1965)

Read more: http://viduthalai.in/page-2/94182.html#ixzz3OKIZcaqo

தமிழ் ஓவியா said...

தீபாவளி மகாலட்சுமி அகோர ரத்தப்பசி காளி!

தீபவாளி அமாவாசை இரவு பெண்கள் மகாலட்சுமி நோன்பு - பூசை போடுகிறார்கள் - பட்டுக்குஞ்ச மஞ்சள் கயிறு கையில் கட்டிக் கொள்கிறார்கள்.

இந்த மகாலட்சுமியின் லட்சணங்கள் என்ன தெரியுமா?

மகாலட்சுமி தோத்திரம் என்று பார்ப்பனர் பாடும் சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைக் கவனியுங்கள்:- ஓ, தேவி! நீயே பிரபஞ்சம் அந்த பிரபஞ்ச சக்தி நீயே - நீ மகாபயங்கரி - மாய சக்தி நீ.

அகோர பசிக்காரி - காளி உருவத்தில் ஓ மகாலட்சுமி நமஸ்காரம்.

இந்த மகாலட்சுமி மகா பயங்கர உருவமும், செயலும், குரலும், கொண்டவள்.

காளி உருவம் எடுத்துள்ள போது அகோர பசி - அதாவது ஆண்களையும் எருமைகளையும் கொன்று அவர்கள் இரத்தத்தை குடிக்கவும் அவர்கள் குடலைத்தின்னவும் பெரும்பசி கொண்டவள்.

பலன் ஸ்ஜர்னல் 1967 - தீபவாளி மலர்.Read more: http://viduthalai.in/page-7/94196.html#ixzz3OKIsYuyh

தமிழ் ஓவியா said...

கடவுள்


1. கடவுளைக் காப்பாற்ற மனிதன் புறப்பட்டதாலேயே கடவுளின் பலவீனம் விளங்குவதோடு கடவுள்களுக்கு வரவர பலவீனம் ஏற்பட்டு ஆபத்தும் பலப்பட்டு வருகிறது.

2. கடவுள்கள் இல்லாவிட்டால் அரசன் இருக்க முடியாது. அரசன் இல்லாவிட்டால் பணக்காரன் இருக்க முடியாது. பணக்காரன் இல்லாவிட்டால் உயர்ந்த ஜாதிக்காரன் இருக்க முடியாது. ஆகவே இவை ஒன்றையொன்று பற்றிக் கொண்டிருக்கின்றன.

3. பெரும்பாலும் சுயநலக்காரர்களும் தந்திரக்காரர் களுமே கடவுளையும், வேதத்தையும், ஜாதியையும் உண்டாக்கு கிறார்கள்.

4. கடவுள் உண்டானால் பேய் உண்டு. பேய் உண்டானால் கடவுள் உண்டு. இரண்டும் ஒரே தத்துவங் கொண்டவை.

5. இந்தியாவில் காகிதம், புத்தகம், எழுத்து, எழுது கருவி எல்லாம் சரஸ்வதியாக பாவிக்கப்பட்டு வணங்கி வந்தாலும் 100-க்கு 5 பேர்களே படித்திருக்கின்றார்கள்.

6. மேல்நாட்டில் காகிதங்களினால் மலம் துடைத்து சரஸ்வதியை அலட்சியம் செய்தும் அங்கு 100-க்கு 90 பேர்கள் படித்திருக்கிறார்கள்.

7. கோயில்கள் சாமிக்காக கட்டியதல்ல. வேறெதற்காக என்றால் ஜாதியைப் பிரித்துக்காட்டி மக்களைத் தாழ்த்தவும், பணம் பறித்து ஒரு கூட்டத்தார் பிழைக் கவும், மக்களை அறியாமையில் வைத்து அடிமை களாக்கவும் கட்டப்பட்டதாகும்.

8. எவனொருவன் கடவுளிடத் திலும் அதைப் பற்றிச் சொல்லும் மதக் கொள்கை இடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங் களும் அவர்களுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக் கிறானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதத்தை வாயினால் உச்சரிக்கக் கூட யோக்கியதையற்ற வனாவான்.

9. சுயமரியாதைக்காரன் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனி தனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப் போய்விட்டது. ஆனால் நமது நாட்டில் அந்த செத்த பிணம் அழுகி நாறிக் கொண்டி ருப்பதை எடுத்துப் புதைத்து, நாறின இடத்தை லோஷன் போட்டுக் கழுவி சுத்தம் செய்கின்ற வேலையைத்தான் சுய மரியாதைக்காரன் செய்து கொண்டிருக் கின்றான்.

10. பத்துமாதக் குழந்தையை கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

11. கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பானைச் சாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை.

-தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/94195.html#ixzz3OKJBCYYp