Search This Blog

9.1.15

கீதையைப் புனித நூலாக சித்தரிப்பதன் பின்னணி என்ன?

திருப்பதி, திருவரங்கம் கோயில்களில் உள்ளவை புத்தர் சிலைகள்தான்

திருப்பதி, திருவரங்கம் கோயில்களில் உள்ளவை புத்தர் சிலைகள்தான்
சென்னை சிறப்புக் கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உரை

சென்னை, ஜன. 3- திருப்பதி திருவரங்கம் கோயில்களில் உள்ளவை புத்தர் சிலைகள்தான் என்றார் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள். 12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

நம்மையெல்லாம் ஒருங்கிணைக்கின்ற ஆற்றல் வாய்ந்த தலைவர் தமிழர் தலைவர்

ஒடுக்கப்பட்ட, ஏழை, எளிய மக்களுக்கு எதிரான அரசின் நிலைப்பாட்டை அல்லது அணுகுமுறையை எதிர்ப்பதில், எப்போதும் முன்னிலையில் இருக்கிற கழகம், திராவிடர் கழகம். எப்பொழுதும் நம்மையெல்லாம் ஒருங்கிணைக்கின்ற ஆற்றல் வாய்ந்த தலைவர் தமிழர் தலைவர். அவருக்கு முதலில் விடுதலை சிறுத்தைகளின் சார்பில் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிசம்பர் 2 ஆம் தேதி ஆசிரியர் அய்யா அவர்களின் பிறந்த நாள். அய்யா அவர்கள் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை.  ஆனாலும், அவர் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்த வேண்டியது நம்முடைய கடமை. அன்றைக்கு நான் இல்லை, வெளிநாட்டில் இருந்தேன்.

பெரியார் அவர்களைவிடவும், கூடுதலாக நீடூழி வாழவேண்டும்!

அய்யா பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற அந்தக் கொள்கைக் களத்தில் ஆற்றவேண்டிய பணிகளை, மிகச் சிறப்பாக ஆற்றி வருகின்ற தமிழர் தலைவர் அவர்கள், அய்யா பெரியார் அவர்களைவிடவும், கூடுதலாக நீடூழி வாழவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகளின் சார்பில், நான் நெஞ்சார்ந்து வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

வழக்கத்திற்கு மாறாக, இன்று அரங்கம் நிறைந்திருக் கிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினை என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால், என்னவெல்லாம் செய்வார்கள் என்று நாம் எதிர்பார்த்தோமோ, அவை அனைத்தையும், ஒவ்வொன்றாக செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் உண்மை முகத்தினை வெளிப்படுத்திக் கொண்டிருக் கிறார்கள்.

இது ஆச்சரியப்படுவதற்கோ, அதிர்ச்சியடைவதற்கோ ஒன்றுமில்லை. ஆனால், நாம் எச்சரிக்கையாக இருந்து, இவற்றை எதிர்கொள்ளவேண்டிய கடமை நம் முன்னால் இருக்கிறது. இவையெல்லாம் உண்மையில்லை என்பது அவர்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. கிருஷ்ணன்பற்றிய கதைகளோ, ராமாயணத்தைப்பற்றிய கதைகளோ, மகாபாரதத்தில் சொல்லப்படுகின்ற விவரங்களோ, இவை அனைத்தும் கற்பனை என்பது மோடிக்குத் தெரியும்; சுப்பிரமணிய சாமிக்குத் தெரியும்; சுஷ்மா சுவராஜூக்குத் தெரியும்.

ராமன் என்ற ஒருவன் கற்பனையான பாத்திரம் என்பது சு.சாமிக்குத் தெரியாதா?
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில், பல ஆயிரம் கோடியைக் கொட்டிய பிறகு, அதனைத் தடுத்து நிறுத்தினார்கள். ஏனென்றால், அந்தப் பாலம் ராமனால் கட்டப் பெற்ற பாலம் என்று சொன்னார்கள். ராமன் என்ற ஒருவன் கற்பனையான பாத்திரம் என்பது சுப்பிரமணிய சாமிக்குத் தெரியாதா? அந்தப் பாலம் ராமனால் கட்டப்பட வில்லை; அது பாலமே அல்ல என்பது சுப்பிரமணிய சாமிக்குத் தெரியாதா?

பாரதீய ஜனதா கட்சித் தலைவர் களுக்குத் தெரியாதா? தெரியும்!

மக்களின் பலவீனத்தைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தங்களுக்கான ஆதாயமாக அதைப் பயன்படுத்திக் கொள் கின்ற ஆற்றல் வாய்ந்தவராக அவர்கள் இருக்கிறார்கள். நாம் மிக எச்சரிக்கையாக இவற்றை அணுகவேண்டும்.

பள்ளிக்கூடத்திற்கே செல்லாத பாமரர்கள்; அரிச் சுவடியே கற்காத நம்முடைய மக்கள், ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் இப்பொழுது சொல்லுங்கள் என்றால், சொல்லுவார்கள். அவர்கள் யாரும் மகாபாரத புத்தகத்தை எடுத்து, படித்து கற்றுக்கொள்ளவில்லை. ராமாயண புத்தகத்தை எடுத்துப் படித்து கற்றுக்கொள்ளவில்லை. ஆனால், எந்தக் கிராமத்திற்குச் சென்று நீங்கள் ராமனைப்பற்றி கேட்டாலும், ஓரளவிற்காவது அந்தக் கதையை சொல்லுவார்கள். சீதையைப்பற்றி சொல்லுவார் கள்; கிருஷ்ணனைப்பற்றி சொல்லுவார்கள்; பாண்டவர் களைப்பற்றி சொல்லுவார்கள்; கவுரவர்களைப்பற்றி சொல்லுவார்கள்.

ஒட்டுமொத்த மக்களும் மயங்குவார்கள், நானே அதில் மயங்கி இருக்கிறேன்

எங்கள் ஊரில் ஒரு பெரியவர் இருந்தார்; அவர் இரண்டாம் வகுப்புக்குக்கூட போகவில்லை என்று அவரே சொல்லியிருக்கிறார். அவர் மகாபாரதக் கதையைச் சொன்னால், எங்கள் ஊரே உட்கார்ந்து கேட்கும். அண்ணன் சுப.வீ. அவர்கள் சொன்னபொழுது, நாம் எப்படி மயங்கினோமோ, அப்படி அவர் அதை ராகத்தோடு எடுத்துப் பாடி, ஒவ்வொரு வரிக்கும் அவர் விளக்கம் சொல்லும்பொழுது, ஒட்டுமொத்த மக்களும் மயங்குவார் கள், நானே அதில் மயங்கி இருக்கிறேன். அவர் வந்தால், ஏதாவது சொல்லுங்கள் என்று சிறிய வயதில் கேட்பேன். அந்த அளவிற்குப் படிக்காத பாமரர்களையும் கொண்டு போய்ச் சேர்ந்திருக்கிறது. அவர்கள் எவ்வளவு கெட்டிக் காரர்களாக, சாதுர்யமாக, தம்முடைய பிரச்சாரத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கிறார்கள், தலைமுறை தலைமுறையாக. 2000 ஆம் ஆண்டுகளா? 2500 ஆண்டு களா? அல்லது அவர்கள் சொல்வதுபோல, 5151 ஆண்டு களா? என்பதல்ல. இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக, ஒரு கருத்தை தொடர் பிரச்சாரம் செய்து, இன்றைக்கு நம்முடைய காலத்தில் வாழுபவன் கூட, அதைப்பற்றி பேசக்கூடிய அளவிற்கு வெற்றிகரமாக அவனுடைய பிரச்சாரத்தை அவன் நிகழ்த்தியிருக்கிறான். அதுதான் மிக முக்கியமானது. நம்முடைய காலத்தில், சம காலத்தில் வாழக்கூடியவன், இந்தக் கதைகளை கேட்கவும், பேசவும் கூடிய அளவிற்கு அவனுடைய பிரச்சார யுக்தி வெற்றி கரமானதாக இருக்கிறது என்பதுதான் மிக முக்கியமானது.
படிப்பறிவில்லாத பாமர மக்களின் மூளைகளில் அதனைத் திணித்திருக்கிறார்கள்
கிராமப்புறங்களில் இன்றைக்கும் கோவில் திருவிழாக் களை கொண்டாடுகிறார்கள். அம்மன் திருவிழாக்களை கொண்டாடுகிறார்கள்; ஆண்டுதோறும் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதில் என்ன நாடகம் நடத்துகிறார்கள்? இராம நாடகம்; மகாபாரதத்தில் இருந்து ஏதேனும் ஒரு கதை. இன்றைக்கும் அது கிராமப்புறங்களில் இருக்கிறது. ஒரு காப்பியத்தை எழுதி முடித்ததோடு அவர்கள் நிறுத்தவில்லை. அந்தக் கற்பனைக் கதைகளை அப்படியே நூலாக்கிவிட்டு நின்றுவிடவில்லை. அவை களை நாடக வடிவத்தில் கொண்டு வந்து, நன்றாகப் பயிற்று வித்து, கிராமம்தோறும் அதனை எடுத்துச் சென்று, ஆடு, மாடு மேய்க்கின்ற, கூலி வேலை செய்யக்கூடிய, படிப்பறி வில்லாத பாமர மக்களின் மூளைகளில் அதனைத் திணித் திருக்கிறார்கள். ஒவ்வொரு பாமரனின் மூளைக்கும் ராமாயணம் இருக்கிறது; மகாபாரதம் இருக்கிறது. அவர் களின் பிரச்சார யுக்தி எவ்வளவு கெட்டிக்காரத்தனமாக இருக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.

சாராயம் கொடுக்கின்ற போதையைவிட,  மகாபாரதமும், ராமாயணமும் மிகப்பெரிய போதைகளாக இருக்கின்றன
எதைப்பற்றி தெரிகிறதோ இல்லையா, ராமாயணத்தைப் பற்றியும், மகாபாரதத்தைப்பற்றியும் இந்தியாவில் உள்ள சாதாரண பாமர மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். கள் கொடுக்கின்ற போதையைவிட, சாராயம் கொடுக்கின்ற போதையை விட, பாமர மக்களுக்கு மிகப்பெரிய அளவில் போதை கொடுக்கக்கூடிய காப்பியங்களாக மகாபாரதமும், ராமாயணமும் இருக்கிறது என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

இன்னும் கொஞ்சம் நேரம் அண்ணன் சுப.வீ. அவர்களைப் பேசவிட்டால், நாம் அப்படியே மெய்மறந்து கேட்டுக் கொண்டிருப்போம். என்னென்வோ பெயர்களைச் சொன்னார். தருமனைப்பற்றியெல்லாம் சொன்னார். உள்ளபடியே தருமன் ஒரு பாத்திரம், அவ்வளவுதான்! அவனை இங்கே அண்ணன் சுப.வீ. அவர்கள் தோலுரித்துக் காட்டினார். ஆனால், தருமன் பாத்திரத்தைப் படைத்தவன் யார்? அவனை நாம் மறந்துவிட்டோம். அந்தப் பாத்திரத் தைப் படைத்தவன்தான் அயோக்கியன். தருமன் என்கிற பாத்திரம் அயோக்கியன் அல்ல. எவ்வளவு கவனமாக, எவ்வளவு எச்சரிக்கையாக ஒவ்வொரு பாத்திரங்களையும் படைத்து, அதன்வழி அவனுடைய கருத்துகளைத் திணித் திருக்கிறான். உடம்புக்கு நல்லது; இதை வெறும் போதைப் பொருளாகப் பார்க்காதே; இதைக் குடித்தால், உடம்பில் இருக்கின்ற சூடு தணியும்; முதலில் ஒரு டம்ளர் பீர் குடி என்று சொல்கிறான்; பீர் குடிக்கக் கற்றுக்கொடுக்கின்ற பொழுது. அது உடம்புக்கு நல்லதாக இருந்தாலும், போதையைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லாமல், இதைக் குடிப்பதினால், உடம்பில் இருக்கும் சூடு தணியும் என்று சொல்வதைப்போல, இந்தக் கதைகளின் மூலம், அவர்களின் தத்துவத்தை, இந்தப் போதையின் மூலம், அவர் களின் கருத்தியலை நம்முடைய மக்களின் மூளையில் திணித்துவிட்டார்கள். நாம் மயங்கிக் கிடக்கிறோம் என் பதை முதலில் ஒப்புக்கொள்ளவேண்டும். நாம் மயங்கிக் கிடக் கிறோம்; பெரியார் பிள்ளைகள் விழிப்பாக இருக்கிறோம். ஆனால், அதைவிடப் பெரிதாய், பாமரர்கள் மயக்கத்தில் கிடக்கிறார்கள். இந்தியா முழுவதும், தமிழ்நாட்டில் மட்டுமல்ல. பலவீனத்தை மோடிக்கள், சுஷ்மாக்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்
இந்தச் சந்தர்ப்பத்தை அல்லது இந்த பலவீனத்தை சுஷ்மா சுவராஜ் பயன்படுத்திக் கொள்கிறார்; இந்த பல வீனத்தை மோடி பயன்படுத்துகிறார். இப்படி சொன்னால், இது உணர்ச்சிபூர்வமான ஒரு பகுதி. எது  உணர்ச்சிபூர்வ மான விஷயமாக இருக்கிறதோ, அதனைக் கையில் எடுத்து, மக்களிடையே விவாதத்தை உருவாக்கி, கவனத்தை திசை திருப்புவதே அல்லது தம்முடைய ஆளுமையை நிலை நாட்டுவது என்பது அவர்களுடைய யுக்தி.
ஜாதியைத் தொட்டால், அது உணர்ச்சிபூர்வமானது; பெண்களைத் தொட்டால், அது உணர்ச்சிபூர்வமானது; மதத்தைத் தொட்டால் அது உணர்ச்சிபூர்வமானது; புனிதத்தைத் தொட்டால், அது உணர்ச்சிபூர்வமானது. மிகவும் உணர்ச்சிபூர்வமான பகுதி.

ஆகவே, அதனை எடுத்து, விவாதமாக்கி, அதிலிருந்து தம்முடைய ஆளுமையை நிலைநாட்டுவது என்கிற யுக்தியை அவர்கள் மிக எச்சரிக்கையாகக் கையாண்டு வருகிறார்கள். அதனை நாம் மிக கவனமாகப் பார்க்கவேண்டும்.

இன்னொரு காப்பியம் இங்கே உருவாக்கப்படவில்லை

இந்திய மண்ணிலே நமக்குத் தெரிந்து ராமாயணம், மகாபாரதம் என்பதை வீழ்த்தக் கூடிய அளவிற்கு, அந்த இரண்டையும் தோலுரித்து அம்பலப்படுத்தக் கூடிய அளவிற்கு இன்னொரு காப்பியம் இங்கே உருவாக் கப்படவில்லை. அல்லது அதைப்போல, நாடகங்களை நம்மால் நடத்திக்காட்ட முடியவில்லை, வெற்றிகரமாக! திரைப்படங்கள்மூலமாக அவற்றை நம்மால் வெளிப்படுத்த முடியவில்லை. மீண்டும் மீண்டும் அவன் மகாபாரதத்தைக் காட்டினாலும், மக்கள் பார்க்கிறார்கள். மீண்டும் மீண்டும் ராமாயணத்தைக் காட்டினாலும், மக்கள் பார்க்கிறார்கள். அவ்வளவு போதைகளை உள்ளே வைத்து, மக்களை மயக்கக்கூடிய தந்திரங்களை கையாண்டிருக்கிறார்கள். இதை எப்படி நாம் எதிர்கொள்ளப் போகிறோம் என்பது தான் நமது கவலை. நம்முடைய பிரச்சார யுக்திகளைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது. மக்களிடத்தில் இதனை எப்படி வெற்றிகரமாக கொண்டு செல்வது என்பதுதான் மிக முக்கியமானது.
எனது அருமைத் தோழர்களே, பவுத்தத்தை எதிர்த்து, இந்துத்துவம் இருந்தது. பவுத்தத்திற்கும், இந்துத்துவத் திற்கும் நிகழ்ந்த யுத்தம்தான், அதில் ஏற்பட்ட விளைவு கள்தான் இன்றைய இந்தியா. இன்றைக்கு இந்தியா எந்த நிலையில் இருக்கிறதோ, இன்றைய கட்டமைப்பு எந்த நிலையில் இருக்கிறதோ, இந்தக் கட்டமைப்பு எந்த யுத்தத் தின் விளைவாக விளைந்தது என்றால், பவுத்தத்திற்கும், இந்துத்துவத்திற்கும் இடையில் நிகழ்ந்த யுத்தத்தின் விளைவாக நிகழ்ந்தவைதான்.

மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரம்தான் கவுதம புத்தராம்!
பவுத்தம், வீழ்த்தப்பட்டது; இன்றைக்கு உலகத்தில் மிகப் பெரிய மதமாக பிற நாடுகளில் வளர்ச்சி அடைந்தாலும்கூட, இந்தியாவில் அது வீழ்த்தப்பட்டது. இன்னும் சொல்லப் போனால், கவுதம புத்தரே மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று, மகாயாணத்தின் மூலமாகவும் நிலைநாட்டி விட்டான். கவுதம புத்தர் வேறு யாருமல்ல, மகாவிஷ்ணு வின் ஒரு அவதாரம்தான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு.

எல்லாவற்றையும் சுவீகரித்துக் கொள்கிறார்கள்; உள்வாங்கிக் கொள்கிறார்கள். அதை மிக கவனமாகக் கையாள்கிறார்கள். ஆக, இப்படிப்பட்ட நிலையில் பவுத்தம் வாழ்ந்த காலத்தில்,  அதை எதிர்ப்பதற்காக அவர் கையாண்ட யுக்தியைப்போல, இன்றைக்கு இங்கே பேசிய தலைவர்கள் சொன்னார்கள்; சைவத்திற்கும், வைணவத் திற்கும் நடந்த யுத்தம் இருக்கிறதே, அது பவுத்தத்திற்கும், இந்துத்துவத்திற்கும் நடந்த யுத்தத்தைவிட கொடூரமானது.
பல கீதைகள் இருப்பதாக நம்முடைய ஆசிரியர் அவர்கள் அவருடைய நூலிலே பதிவு செய்திருக்கிறார். ஒரு கீதையல்ல; ராமாயணத்தில், பல ராமாயணங்கள் இருப்பதைபோல, கீதையில், பல கீதைகள். அதில் வைணவத்திற்குக் கீதை எப்பொழுது உருவானது என்றால், சிவன் வழிபாட்டிற்குரியவர்கள் சிவ கீதையை உருவாக் கியிருக்கிறார்கள். அதில் வெளியில் வரவில்லை. சிவ கீதைக்கு எதிராகத்தான், இந்தப் பகவத் கீதை உருவாக் கப்பட்டது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. அதை, பாலகங்காதர திலகர் சொல்லிலிருந்தே ஆசிரியர் அய்யா அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கிறார். பல கீதைகள் இருந்திருக்கின்றன. பதினெட்டிற்கும் மேற்பட்ட கீதை களைப் பட்டியலிட்டிருக்கிறார் அவருடைய நூலில்.
சைவ மதத்திற்கும், வைணவ மதத்திற்கும் இடையில் நடந்த யுத்தத்தின் அடையாளம்தான், உருவகம்தான் ராமாயணம். ராமாயணத்தை நீங்கள் உருவக அடிப் படையில் கவனித்தால் தெரியும்; ராமன் வைணவ மதத் தைச் சார்ந்தவன். ராவணன் சைவ மதத்தைச் சார்ந்தவன். ராமன், ராவணனை வீழ்த்துகிறான். என்றால், வைணவம் சைவத்தை வீழ்த்துகிறது. அதுதான் அடிப்படை.

தமிழனாக இருக்கின்ற நாம் ராவணனைத்தானே உயர்த்திப் பிடிக்கவேண்டும்!
நான் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மானுடத்தின் தமிழ் கூடல் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்பொழுது ஒரு கேள்வியை எழுப்பினேன். நீங்களும் இங்கே ராவணன் வதையை நாடகமாக நடத்திக் காட்டுகிறீர்களே, இந்த ராவணன் இந்த மண்ணைச் சார்ந்தவன்தானே; தமிழன் என்றுதானே அந்த இலக்கியத்தில், காப்பியத்தில் சொல்லப்படுகிறது. தமிழனாய் இருக்கின்ற ராவணனை ஆரியத்தினுடைய எடுபிடியாக இருக்கின்ற ராமன் வந்து வீழ்த்துவதற்காக அந்தக் காப்பியம் சொல்கிறதே! நீங்கள் ராமனின் பக்கம் நிற்கவேண்டுமா? ராவணனின் பக்கம் நிற்க வேண்டுமா? தமிழனாய் இருக்கின்ற நாம் ராவணனைத் தானே உயர்த்திப் பிடிக்கவேண்டும் என்று கேட்டேன்.
நாங்கள் இதுவரையில் அந்தக் கோணத்தில் சிந்திக்கவே யில்லை. ராவணனை நாங்கள் அரக்கனாக மட்டுமே பார்க்கிறோம்; தமிழனாகப் பார்க்கவில்லை என்று சொன்னார்கள்.
எந்தக் கோணத்தில், எதைப் பார்க்கவேண்டும் என்பதில் தான் மிக முக்கியமான ஒரு தேவை இருக்கிறது. சைவத்தை வீழ்த்தியது வைணவம். அதற்கான உருவகம்தான், அதற்கான காப்பியம்தான் ராமாயணம். அதற்குள்ளே பல்வேறு கதைகள் இருக்கலாம்; பல்வேறு தத்துவங்கள் இருக்கலாம். ஆனால், உண்மையில், சைவத்திற்கும், வைணவத்திற்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தில் வைணவம் வென்றது. இன்றைக்கு இந்தியா முழுமையும் வைணவத்தின் மேலாதிக்கம்தான். சைவம் சுருங்கிவிட்டது.
அரிஜன் என்றுதான் சொன்னார்;சிவஜன் என்று சொல்லவில்லை

சிவனை வணங்குபவர்கள் இறந்தால், சொர்க்கத்திற்குப் போவார்கள்; கைலாசத்திற்குப் போவார்கள்; கைலாசம் எங்கே இருக்கிறது என்றால், இமயமலையில் இருப்பதாகத் தான் சொல்கிறார்கள். ஆக, இமயமலையில் கைலாசம் இருக்கிறது என்று சொன்னால், அதிலிருந்து ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இமயமலை வரையில் சைவம் இருந்திருக்கிறது. இந்தியா முழுவதும் சைவ மதம் மேலோங்கி இருந்திருக்கிறது. ஆனால், இன்று இந்தியா முழுமையும் வைணவத்தின் மேலாதிக்கம்தான் இருக்கிறது. காந்தியை கோட்சே சுட்டபோதுகூட, ஹரே ராம், ஹரே ராம் என்று சொல்லிவிட்டு இறந்தார். சிவ, சிவா சிவ, சிவா என்று சொல்லிவிட்டு இறக்கவில்லை. அவர் ஒரு வைணவர். தலித்துகளுக்குப் பெயர் சூட்டும்பொழுதுகூட, அரிஜன் என்றுதான் சொன்னார்; சிவஜன் என்று சொல்ல வில்லை. அரியின் பிள்ளைகள் என்றுதான் சொன்னார்; விஷ்ணுவின் பிள்ளைகள் என்றுதான் சொன்னார். அரிஜன் அவர்கள் அரியினுடைய குழந்தைகள்; சிவனுடைய குழந்தைகள் என்று அவர் சொல்லவில்லை. ஏனென்றால், அவர் வைணவ மதத்தைச் சார்ந்தவர்.

ஆதிசங்கரர் இந்தியா முழுமையும் நடையாய் நடந்தார், எதற்காக?

அத்வானியாக இருந்தாலும், சுஷ்மாவாக இருந்தாலும், மோடியாக இருந்தாலும், அனைவரும் நாமத்தைச் சூட்டக் கூடியவர்கள்தான். ஒருவர்கூட பட்டையடிக்கக் கூடிய வர்கள் இல்லை. ஆக, வைணவம் மேலோங்கியிருக்கின்ற ராமாயணத்திற்குப் பிறகு, இந்தியாவில், வைணவம் மேலோங்கி இருக்கிறது. பவுத்தத்தையும் வீழ்த்தினார்கள். பவுத்தத்தை வீழ்த்திய பிறகு, இங்கே இந்துத்துவம் வைணவமும், சைவமும் ஒன்று சேர்ந்துவிட்டது. அரியும், சிவனும் ஒண்ணு; அறியாதவர்கள் வாயில் மண்ணு இந்தப் பழமொழி எதிலிருந்து வந்தது என்றால், நீங்கள் இரண்டு பேரும் ஒன்றாக இருங்கள்; சண்டை போட்டுக் கொள்ளா தீர்கள் என்பதற்காகத்தான். பிற்காலத்தில் வந்தது. சைவ மதமே பல பிரிவுகளாக இருந்து, ஆதிசங்கரர்தான், நடையாய் நடந்து, இந்தியா முழுமையும் பயணம் செய்து, பல்வேறு குழுக்களாக இருந்த, அவர்களை வைணவ மதத்தை அல்லது சைவ மதத்தை ஒன்று சேர்த்தார். பகவத் கீதையையும் பரப்பினார்.

திருப்பதி, திருவரங்கம் கோவில்களில் உள்ளது புத்தரின் சிலைகள்தான்!

ஆக, அவர்கள் சைவத்திற்கு எதிராகவும், பவுத்தத்திற்கு எதிராகவும் ஒரே காலகட்டத்தில் யுத்தத்தை நடத்தி, வைணவத்தை இங்கே நிலைநாட்டினார்கள். ஒரு நண்பர் சொன்னார்,  திருப்பதி ஏழுமலையான் சிலையைப் பார்த்தால் தெரியும். அவருக்குப் போட்டிருக்கின்ற நாமம் மட்டும் இரண்டு கண்களையும் மறைத்திருக்கும். நாமம் என்றால், நெற்றியில்தான் போடவேண்டும். ஆனால், வெங்கடேச பெருமாளுக்கு மட்டும் கண்களே தெரியாமல் நாமம் போட்டிருப்பார்கள். எதற்காக இப்படி நாமம் போட்டிருக்கிறார்கள் என்று கேட்டபொழுது அவர் சொன்னார், அந்த நாமத்தை நீங்கள் எடுத்துவிட்டுப் பார்த்தால், அந்தச் சிலையின் முகத்தில் கவுதம புத்தர் தெரிவார் என்று சொன்னார். ஏனென்றால், அது புத்தரின் சிலைதான். திருவரங்கத்தில் இருக்கின்ற ரங்கநாதரின் சிலையும் புத்தரின் சிலையும்தான். திருப்பதியில் உள்ள ஏழுமலையானின் சிலையும் புத்தரின் சிலைதான். எங்கெல்லாம் புத்தர் விகார்கள் எழுப்பப்பட்டிருந்தனவோ அங்கெல்லாம் அந்தப் புத்தர் விகார்களை இடித்தார்கள் அல்லது கைப்பற்றினார்கள். கைப்பற்றிய பிறகு, அதை வைணவமாக்கிக் கொண்டார்கள். சில இடங்களில் சைவக் கோவில்களாக மாற்றிக் கொண்டார்கள். மதமும், அரசும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.
அரசியல் பார்வை கொண்டு பார்க்கவேண்டும்!

உலகம் முழுவதும் எல்லா அரசுகளும் ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்திருக்கின்றன. அரச மதமாக அறிவிப்பு செய் திருப்பார்கள். ஆக, மதம் என்பது அரசோடு இணைந்து ஆளுமை செலுத்தக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்றதாக இருக்கிறது.  ஆகவே, இந்த மதம் தொடர்பான அத்தனை விவரங்களையும் அரசியல் பார்வையோடு நாம் அணுகவேண்டி இருக்கிறது. இதை நாம் வெறும் பண்பாட்டுத் தளத்திலே மட்டுமே பார்த்துவிட முடியாது. அரசியல் பார்வை கொண்டு பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது.
இந்தியாவை இந்துஸ்தான் ஆக்கவேண்டும்; இதுதான் பாரதீய ஜனதாவின் நோக்கம். இந்துக்கள் பெரும்பான்மை யாக வாழுகின்ற நாடு; எனவே, இதை இந்துஸ்தான் என்று அறிவிக்கப்படவேண்டும். இதுதான் ஆர்.எஸ்.எஸினுடைய திட்டம். அதற்கு இவர்கள் என்னென்ன யுக்திகளை கையாளவேண்டுமோ, அதற்கான யுக்திகளையெல்லாம் கையாளப் போகிறார்கள். நரேந்திர மோடியை பிரதம வேட்பாளராக அறிவிக்கும்பொழுதே, நாமெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கவேண்டும் இந்தியா முழுமையும்.
ஆனால், அவர்கள் ஒரு சாதுர்யமான யுக்தியைக் கையாண்டார்கள் என்றால், நரேந்திர மோடி பார்ப்பன ரல்ல; பார்ப்பனரல்லாத சமுகத்தைச் சார்ந்தவரைப் பிரதம ராக்கப் போகிறோம். இந்தியா முழுவதும் இருக்கின்ற ஜாதியல்லாத தலைவர்கள் அதிலே மயங்கிப் போனார்கள். அதுதான் அவர்களுடைய யுக்தி. அதற்காகத்தான் அவர்கள் அதனைச் செய்தார்கள்.
                                              ---------------------------"விடுதலை” 03-01-2015

Read more: http://viduthalai.in/page-4/93871.html#ixzz3NlVm5Clo
*************************************************************************************
கீதையைப் புனித நூலாக சித்தரிப்பதன் பின்னணி என்ன?


கீதையைப் புனித நூலாக சித்தரிப்பதன் பின்னணி என்ன?
எதிரிகளை வீழ்த்த அரசியல் தளத்தில் ஒன்றுபடுவோம்!
கீதை புனித நூலா? சிறப்புக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எழுச்சியுரை

சென்னை, ஜன. 4- கீதையைப் புனித நூலாக சித்தரிப்பதன் பின்னணி என்ன? என்றும், எதிரிகளை வீழ்த்த அரசியல் தளத்தில் ஒன்றுபடுவோம்! என்று எழுச்சியுரையாற்றினார் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.
12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

கிருஷ்ணனை ஒரு கற்பனை பாத்திரம் என்று சொல்லக்கூடிய துணிச்சல் இல்லை

இன்றைக்கு எல்லா மாநிலக் கட்சிகளும், பார்ப்பன ரல்லாத ஜாதி இந்துத் தலைவர்கள் தலைமை தாங்கக் கூடிய அளவிற்கு இந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ச்சிய டைந்திருக்கிறார்கள். ஆனால், பார்ப்பனரல்லாத பெரும் பாலான ஜாதி இந்துத் தலைவர்கள், இந்துத்துவா கோட் பாட்டுக்கு எதிரானவர்களாக இல்லை, ஒன்றிரண்டு பேரை தவிர. பகவத் கீதையை மறுக்கக்கூடியவர்கள் இல்லை. கிருஷ்ண பகவானை அவன் ஒரு கற்பனை பாத்திரம் என்று சொல்லக்கூடிய துணிச்சல் இல்லை. அப்படி இருக்கின்ற தலைவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துத்துவா கோட்பாட்டுக்குக் கட்டுப்படக் கூடியவர்களாக இருக்கிறார் கள். மிக எளிதாக அவர்களால் இதையெல்லாம் ஒப்புக் கொள்ள முடிகிறது.

தேசியப் புனித நூல் பகவத் கீதை என்று அறிவிப்பதற்கு பாரதீய ஜனதா முடிவெடுத்தால், மாநில அளவிலே வளர்ச்சி பெற்றிருக்கின்ற தலைவர்கள், இதற்கு எந்த அளவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்; மறுப்பு தெரிவிப்பார்கள் என் பதை தயவுகூர்ந்து எண்ணிப் பார்க்கவேண்டும். தமிழ் நாட்டில், தலைவர் கலைஞர் எதிர்ப்பார். ஆனால், அம்மா எதிர்ப்பாரா? இரண்டு பேர்தான் தமிழ்நாட்டில் முக்கியமான தலைவர்கள். 20 சதவிகிதத்திற்குமேலே வாக்கு வங்கிகள் உள்ள தலைவர்கள். நாமெல்லாம் சின்ன சின்னக் கட்சிகள். இதிலே தேர்தலில் ஈடுபடுகின்ற அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கின்றது என்பதுதான் மிக முக்கியமானது. ஆகவே, நீங்கள் மாநிலக் கட்சித் தலைவர் களின் பட்டியலைப் போட்டுப் பார்த்தால், பெரும்பான்மை யான மாநில கட்சித் தலைவர்கள் அதிதீவிர இந்துத்துவா கருத்தியலாளர்களாகவே இருக்கிறார்கள்.

மோடியே எதிர்பார்த்திருக்க மாட்டார்; ஆர்.எஸ்.எஸ். இயக்கமே எதிர்பார்த்திருக்காது

பாரதீய ஜனதாவை இன்னும் 10 ஆண்டுகளுக்கு இந்தியாவில் இருந்து நம்மால் அப்புறப்படுத்த முடியுமா? என்பது ஒரு பெரிய கேள்விக் குறியாகவே இருக்கிறது. நரேந்திர மோடியே எதிர்பார்த்திருக்க மாட்டார்; அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கமே எதிர்பார்த்திருக்காது. இவ்வளவு தனிப்பெரும்பான்மையுடன் மோடி பிரதமர் ஆவார் என்று. அந்த அளவிற்கு அவர்கள் யுக்திகளைக் கையாளுகிறார் கள். நாம் தேர்தல் அரசியலில் வெற்றிபெறக் கூடிய யுக்தி களைப் பற்றி ஆழமாக சிந்திக்கக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.
டாக்டர் அம்பேத்கர் பவுன்டேசன்!
ஆட்சி அதிகாரத்தில் யார் இருக்கிறார்களோ, அவர் களின் மொழிதான்; ஆட்சி அதிகாரத்தில் யார் இருக்கிறார் களோ, அவர்களின் மதம்தான் அரச மதமாகும். ஆட்சி அதி காரத்தில் யார் இருக்கிறார்களோ, அவர்களின் கோட்பாடு தான் மக்களின் கோட்பாடாகும். நாம் ஆட்சிக்கும், அதி காரத்திற்கும் தொடர்பில்லாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புறந்தள்ளப்பட்டிருக்கிறோம். அதிகாரத் தைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் கிடக்கிறோம். புரட்சி யாளர் அம்பேத்கர் அவர்கள் Reduce of Induism என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில், டாக்டர் அம்பேத்கர் பவுன் டேசன் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, அவருடைய எழுத்துக்களையும், பேச்சுகளையும் இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்யவேண்டும் என்று முடிவு செய்தார்.
அதில், Reduce of Induism என்ற புத்தகத்தை பல மொழிகளில் மொழியாக்கம் செய்ய வில்லை. ஏன்? தமிழிலேயே கூட இன்னும் மொழியாக்கம் செய்யப்படவில்லை. இந்துயிசத்திற்கு எதிராக, இந்துத்துவா கோட்பாட்டுக்கு எதிரான கருத்துகள் எதுவாக இருந்தாலும், அந்தக் கருத்துகளை, மக்களிடத்தில் எடுத்துச் சொல்வதற்கு, அச்சப்படக்கூடியவர்களாக அல்லது தடுக்கப்படக்கூடிய வர்களாகத்தான் அதிகார வர்க்கமும் இருக்கிறது. மொழி பெயர்க்கக்கூடிய குழுவிலே இருக்கின்றவர்களுக்கும் அதில் உடன்பாடு இல்லை; அல்லது துணிச்சல் இல்லை. இவ்வளவு பெரிய பலகீனம் நம்மிடையே இருக்கிறதே தோழர்களே, அவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல; தெரியாதவர்கள் அல்ல. ராமாயணம் என்பது ஒரு கதை; ஒரு புராணம். வரலாறு வேறு; புராணம் வேறு.

மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் நாம் படிக்கக்கூடாது!

அலெக்சாண்டர் படையெடுத்து வந்தார் என்பது வரலாறு. அதனால், அது வரலாற்றுப் பாடத்தில் இடம் பெற்றிருக்கிறது. திப்பு சுல்தான் ஒரு மாமன்னர்; அவருடைய வரலாறு பாட புத்தகத்தில் இருக்கிறது. வரலாற்றுத் துறையில் இருக்கிறது. ராமன் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்றான் என்பது வரலாறாக இருந்தால், அது ஏன் வரலாற்றுப் பாடத்தில் இல்லை? ஏன் வரலாற்று துறையில் அதனை வைக்கமுடியவில்லை? அதனை அப்படி வைக்க துணிச்சல் உண்டா? வைக்கமுடியுமா?

அது ஒரு கற்பனை; அது ஒரு மாயை. ஆக, தெரிந்தே அதனைப் பரப்புகிறார் கள். ஏனென்றால், நம்முடைய பலவீனம்; ஆகவே, இந்தக் கதைகளைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆவலில்கூட, மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் நாம் படிக்கக்கூடாது; நீங்கள் படிக்கத் தொடங்கினால், உங்களை அறியாமலேயே வழுக்குப் பாறையில் கால் வைத்ததைப் போல இறங்க நேரிடும். அவ்வளவு ஆபத்தான காப்பியங்கள்.
கம்பன் கழகத்தில் என்னைப் பற்றி தெரியாமல் அழைத்தார்கள் விழுப்புரத்திற்கு. நான் அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முடிக்கும் தருவாயில், கம்பன் மிகப்பெரிய ஆற்றல் வாய்ந்த படைப்பாளி; ஆனால், இந்த இனத்திற்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்துவிட்டார் என்றுதான் கருதுகிறேன். ராமாயணத்தை தமிழாக்கம் செய்ததுதான், தமிழ் மக்களை வீழ்த்தியது என்று நான் முடித்தேன்.

இன்றைக்கும் இலக்கியத் துறைக்குச் சென்று ராமாய ணக் கதைகளைச் சொன்னால், கூட்டம் நிறைய  இருக்கும். தமிழ்த் துறையில்கூட ராமாயண வகுப்பெடுக்கிறார்கள் என்றால், மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியேற மாட்டார்கள். அவ்வளவு கதைகள். போதை நிறைந்த ஒரு இலக்கியம் அது. கம்பன் மிக அழகாக, தமிழ்நாட்டில் நிறைய தலைவர்கள், நம்முடைய கோட்பாட்டைப் புரிந்த தலைவர்கள், பெரியாரை மதிக்கக்கூடிய தலைவர்கள், ஆனாலும்கூட, இன்றைக்கும் கம்பனுடைய பெயரிலே ராமா யணத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரை மதிக்கக்கூடிய பல தலைவர்கள், நம்முடைய தொலைக் காட்சிகளில் இன்றைக்கும் அந்தக் கருத்துகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். மகாபாரதமும், ராமாயணமும் அடுத்தத் தலைமுறைக்குப் போய்ச் சேராமல், தடுப்பதில்தான் நம்முடைய வெற்றி அடங்கியிருக்கிறது தோழர்களே!


திருக்குறளை மக்களிடத்தில் கொண்டு செல்லக்கூடிய பிரச்சார யுக்திகளை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும்

நாள்தோறும் குறளைப் படியுங்கள் என்று சொன்னாலும், குறளைப் படிக்கின்ற ஆர்வம் யாருக்கும் வரவில்லை. கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, எல்லாப் பேருந்துகளிலும் குறளை எழுதிப் போட்டார். 10 குறளைக்கூட மனப்பாடம் செய்து சொல்லக்கூடிய அளவிற்கு, தமிழர்களிடத்தில் குறளின்மீது ஒரு ஈர்ப்பு ஏற்படவில்லை. அதை இன்னும் எளிய வடிவத்தில், மக்களி டத்தில் கொண்டு செல்லக்கூடிய பிரச்சார யுக்திகளை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும். அப்பொழுதுதான் நாம் வெற்றி பெற முடியும்.

எல்லா விஞ்ஞானிகளாலும் கடவுள் இல்லை என்பதை உணர முடிகிறது. ஆனால், அதனை அவர்களால் துணிச் சலாக சொல்ல  முடியவில்லை. ஏனென்றால், பெரும் பான்மையான மக்கள் அந்த நம்பிக்கையில் இருக்கிறார்கள். சார்லஸ் டார்வின் முதலில் ஒரு கிறிஸ்தவ பாதிரியாராக வேண்டும் என்றுதான் அவருக்கு விருப்பம் இருந்திருக் கிறது. பாதிரியாராக அவர் படிக்கவேண்டும் என்கிற எண்ணம் அவருடைய தந்தைக்கு இருந்திருக்கிறது. ஆறாவது நாள் இறைவன் மனித உயிர்களையும், பிற ஜீவன்களையும் படைத்தான் என்ற கருத்தினை அவர் நம்பிக்கைக் கொண்டிருந்தார்.

சார்லஸ் டார்வினின் மனமாற்றம்!
உலகத்தை மொத்தம் ஏழு நாள்களில் படைத்தான் ஆண்டவன். ஆறாவது நாள் எல்லா ஜீவன்களையும் படைத் தான். ஒரே நாள்களில் அனைத்து ஜீவன்களையும் படைத் தான் என்பதில் அவர் நம்பிக்கைக் கொண்டிருந்தார்.

400 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் உயிர் தோன்றியிருக்கிறது

ஆனால், அய்ந்தாண்டுகள் அவர் ஒரு கப்பலில் பயணம் செய்து; கடற்பகுதிகளிலுள்ள தீவுகளுக்கெல்லாம் சென்று, நுண்ணுயிர்களையெல்லாம் கொண்டு வந்து அதனை ஆய்வு செய்த பிறகு, அய்ந்தாண்டுகளுக்குப் பிறகு அவர் சொல்கிறார்,
உயிர்கள் ஒரே நாளில் படைக்கப்பட்டதல்ல; 400 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் உயிர் தோன்றியிருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் தோன்றியதற்குப் பிறகு என்று அவர் சொன்னார்.

400 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான், உயிரற்றப் பொருளில் இருந்து, ஒரு உயிர் பொருள் தோன்றியிருக் கிறது. எனவே, நான் பழைய கருத்தை மாற்றிக்கொள் கிறேன் என்று சார்லஸ் டார்வின் சொன்னார். ஏனென்றால், அவருடைய கோட்பாட்டிலிருந்துதான் மார்க்சியமே வருகிறது. பரிணாமக் கோட்பாடு. உயிரினங்களின் தோற்றம்; இயற்கைத் தேர்வு; பரிணாமக் கோட்பாடு இதுதான் சார்லஸ் டார்வினுடைய கண்டுபிடிப்பு. அதன் பிறகுதான், இன் றைக்கு உலகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அரசியல் பொருளாதார தளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மார்க்சியமும் அதி லிருந்துதான் கட்டப்பட்டிருக்கிறது.

பெரும்பாலோரின் பலவீனத்தை அவர்கள் யுக்தியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்

ஆனால், அந்த விஞ்ஞானிகளால் இதனை ஏன் சொல்ல முடியவில்லை என்றால், பெரும்பான்மை மக்கள் நம்பிக்கைக் கொண்டிருப்பதன்மீது, அவர்களால் அந்தத் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்கிற அந்த பல வீனம்தான், சுஷ்மா சுவராஜ், நரேந்திர மோடி போன்ற வர்களுக்கு பலமாக இருக்கிறது.

பெரும்பான்மை மக்கள் கடவுளை நம்புகிறார்கள்; பெரும்பான்மை மக்கள் மகாபாரதத்தை நம்புகிறார்கள்; பெரும்பான்மை மக்கள் கிருஷ்ணன் இருந்தது உண்மை தான்; அவன் சொன்னது உண்மைதான்; அவன் சொன்னது தான் பகவத் கீதை என்று நம்புகிறார்கள். அதனால், இதை அவர்கள் ஒரு யுக்தியாகப் பயன்படுத்துகிறார்கள்.

எனவே, அதை முறியடிப்பதற்கு, இவர்களைத் தோலு ரிப்பதற்கு அரசியல் ரீதியாக நாம் வெற்றி பெற்றால்தான் முடியும். அரசியல் ரீதியாக வெற்றி பெறுவதற்கு ஏதுவாக இல்லாத ஒரு சூழல்தான் இப்பொழுது.
கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் சிதறிக் கிடக்கிறார்கள்; தலித் அமைப்புகள் ஒருபுறம் சிதறிக் கிடக்கிறார்கள்; சிறுபான்மை சமூக அமைப்புகள் ஒருபுறம் சிதறிக் கிடக்கிறார்கள்; இப்படி பகுத்தறிவு பேசக்கூடிய அல்லது அறிவியலைப் பேசக் கூடிய சக்திகள் சிதறிக் கிடக்கின்றன. ஆட்சி அதிகாரத் தைப்பற்றிய கவலையே இல்லாமல் இருக்கிறோம். அவன் ஆட்சி அதிகாரத்தைப்பற்றிய கவலையோடுதான் அவர் கள் பயணத்தை நடத்துகிறார்கள்.


ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் புடம்போட்டு வளர்க்கப் பெற்ற ஒரு இந்துத்துவா தொண்டன்தான் நரேந்திர மோடி

எப்பொழுதும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவேண்டும்; ஆட்சி அதிகாரத்தை இழந்துவிடக்கூடாது; ஆட்சி அதி காரத்தைக் கைப்பற்றவேண்டும். அதற்கென்று, இந்தியா வில் 13 ஆயிரம் பேர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் திருமண மும் செய்துகொள்ளாமல், 18 வயதிலிருந்து 98 வயதுவரை யில் முழுநேரப் பணியாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். இங்கேயும் அந்தத் தொண்டர்கள் வந்திருப்பார்கள்; தோழர்கள் வந்திருப்பார்கள். அவர்கள் ஊடுருவாத களமே கிடையாது. காவல்துறையிலும் சரி, வருவாய்த் துறையிலும் சரி, உயர்பதவிகள் அத்தனையிலும் சரி, ஆர்.எஸ்.எசை நேசிக்கக்கூடியவர்களை அவர்கள் உருவாக்கிக் கொண்ட இருக்கிறார்கள். தேநீர்க் கடையில் வேலை செய்த ஒரு சாதாரண தொழிலாளி அல்ல நரேந்திர மோடி. ஆர்.எஸ். எஸ். இயக்கத்தில் புடம்போட்டு வளர்க்கப் பெற்ற ஒரு இந் துத்துவா தொண்டன். அதனால்தான், காந்திக்குப் பதிலாக, சர்தார் படேலுக்கு உலகிலேயே உயரமான சிலையை நிறுவவேண்டும் என்று துடிக்கிறார். சர்தார் படேலுக்கு  அவ்வளவு பெரிய சிலையை நிறுவவேண்டும் என்று அவர் சொல்வதிலிருந்தே, அவருடைய உள்ளம் எப்படிப்பட்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் தோழர்களே!

சர்தார் வல்லபாய் பட்டேல் யார்?

சர்தார் பட்டேல் யார் என்றால், அதிதீவிர இந்துத்துவ கருத்தியலாளர். ஜாதி அமைப்பை வற்புறுத்தக்கூடியவர்; நியாயப்படுத்தக்கூடியவர். இந்த ஏற்றத்தாழ்வு பிறப்பின் அடிப்படையில்தான் உருவானது என்பதை நியாயப் படுத்தக் கூடியவர். இந்துத்துவம்தான் இங்கே ஆட்சி புரியவேண்டும் என்பதிலே நம்பிக்கைக் கொண்டிருந்தவர். அப்படிப்பட்டவருக்கு உலகத்திலேயே மிக உயர்ந்த சிலையை 3,500 கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்து இங்கே நிறுவப் போகிறோம் என்று சொன்னால், அதற்கு என்ன காரணம்,  ஒரு பெரிய கோட்டிற்குப் பக்கத்தில், இன்னொரு பெரிய கோட்டைப் போட்டால், ஏற்கெனவே இருக்கின்ற பெரிய கோடு சின்னக்கோடாகும் என்று சொல் வதைப்போல, இந்தியாவின் தந்தை என்று சொல்லப் படக்கூடிய காந்தியை, கீழ்மைப்படுத்துவதற்கு அல்லது சிறுமைப்படுத்துவதற்கு அல்லது பின்னுக்குத் தள்ளுவதற்கு பட்டேல் என்ற பெரிய கோடு போடுவதற்கு நரேந்திர மோடி முயற்சிக்கிறார்.

அப்படியென்றால், காந்தி இந்துத்துவாவிற்கு எதிரான வரா என்று நீங்கள் கேட்டுவிடக்கூடாது; இந்துத்துவத்தைக் காப்பாற்றுவதற்காக அவதரித்தவர்தான் காந்தி. அதனால் தான் புரட்சியாளர் அம்பேத்கருக்கும், காந்திக்கும் மோதலே வந்தது.


ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரிகள் யார்?
நீங்கள் இந்துத்துவத்திற்காக கவலைப்படுகிறீர்கள். நாங் கள் மனித உரிமைகளுக்காகப் போராடுகிறோம் என்றார். காந்திக்கும், புரட்சியாளருக்கும் இடையில் மிகப்பெரிய கருத்து மோதல் நடந்தது. புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னார், ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரிகள் என்று சொல்லுகிறபொழுது மூன்று அடையாளத்தைச் சொன்னார்.

ஒன்று, இந்துத்துவம்
இரண்டு காந்தி
மூன்றாவது இந்திய தேசிய காங்கிரஸ்
என்று சொன்னார்.

ஏனென்றால், இந்துத்துவம் என்கிற கோட்பாடு நமக்கு எதிரானது. அந்தக் கோட்பாட்டைக் காப்பாற்றுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஆளுமை காந்தி. இந்த இரண்டு பேரையும் வைத்து உருவாக்கப்பட்டிருக்கின்ற கட்சிதான் தேசிய காங்கிரஸ் கட்சி. இதை வைத்துதான் அது இந்திய தேசியத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த மூன்றையும் எதிர்ப்பதுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையை வென்றெடுக்க முடியும் என்று புரட்சியாளர் அம்பேத்கர் அடையாளப்படுத்தினார். ஆகவே, காந்தியை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொண்ட தில்லை.

பட்டேல், திலகர் போன்றோரின் வாரிசுகள் தான் இப்பொழுது ஆட்சியில் உள்ளனர்!

ஆனாலும், காந்தி ஒரு மிதவாதி; அவர் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வற்புறுத்தினார். எனவே, கோட்சே அவரை சுட்டுக்கொன்றார். ஆர்.எஸ்.எஸ். அந்தக் கடமை யைச் செய்தது. ஏனென்றால், அதிதீவிர இந்துத்துவா சக்தியாக இருக்கின்ற பட்டேல் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டியவர்; பாலகங்காதர திலகர் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டியவர். அவர்களுடைய வாரிசுகள்தான் மோடி தலை மையிலான ஆட்சியை இங்கு அமைத்திருக்கிறார்கள்.
எனவே, இந்த அய்ந்தாண்டுகளில் நாம் எதை யெல்லாம் எதிர்பார்க்கிறோமோ, இதை செய்யப் போகிறார் கள் என்று, அதையெல்லாம் அவர்களாகவே வெளியிட்டுக் கொண் டிருக்கிறார்கள்.

பகவத் கீதையை புனித நூலாக அறிவிக்கவேண்டும் என்று சொல்லியிருப்பது, அவர் விவரம் இல்லாமல் சொல்லிவிட்டார் என்று நாம் கருத முடியாது; பாரதீய ஜனதா கட்சியில் ஒரு மூத்த தலைவர்; அவர்களுக்குள்ளாக நடைபெற்ற ஒரு விவாதத்திலிருந்துதான், அந்த விவாதத் தில் எடுக்கப்பட்ட முடிவிலிருந்துதான், அவரால் இப்படி ஒரு கருத்தை சொல்லியிருக்கமுடியும். அவர்கள் எப் பொழுதுமே மிக எச்சரிக்கையானவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.


தீர்மானிக்கின்ற இடங்களில் அவர்கள் இருக்கிறார்கள்!
ஆளுக்கொரு கருத்தை சொல்லக்கூடியவர்கள் என்று நாம் நினைக்கிறோம். சுப்பிரமணியசாமி ஒரு நகைச்சுவை மனிதர் என்று நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அப்படி கிடையாது. சோ.ராமசாமி அவர்களையும், திரைப் படத்தில் நகைச்சுவை நடிகராகத்தான் நாம் பார்த்திருக்கி றோம். நிஜ வாழ்க்கையில் அவர்கள் அப்படி கிடையாது.  தீர்மானிக்கின்ற இடங்களில் அவர்கள் இருக்கிறார்கள்; முடிவெடுக்கின்ற இடங்களில் அவர்கள் இருக்கிறார்கள். நாம் அதனை புரிந்துகொள்ளவேண்டும்.
தலித் இயக்கத் தலைவர்களை குறி வைத்து அவர்கள் அணுகுகிறார்கள்
இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எங்கே இலக்கு வைத்திருக்கிறார்கள் என்றால், இந்தியா முழுவதும், தலித் இயக்கங்களை நோக்கி அவர்களுடைய பயணம் அமைந்திருக்கின்றது. தலித் இயக்கத் தலைவர்களை குறி வைத்து அவர்கள் அணுகுகிறார்கள். தலித் மக்களுடைய பிரச்சினைகளைப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். இதைத் தடுப் பதற்கு நம்மிடத்திலே அரசியல் யுக்தி தேவைப்படுகிறது.
நான் வலியுறுத்த விரும்புவது, எனது அருமைத் தோழர்களே, எல்லாவற்றையும் தங்களுக்கான சாதகமான சக்தியாக மாற்றிக் கொள்கின்ற சாதுரியம், யுக்தி அவர்க ளுக்கு இருக்கிறது. அவர்களை நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. அல்லது வெறுமனே அதை நகைச் சுவையாகவோ, பொழுதுபோக்காகவோ நாம் பேசி சிரித்து கலைந்துவிடக் கூடாது. மிக எச்சரிக்கையாக இவற்றைத் தடுப்பதற்கு நாம் ஒன்று சேரவேண்டிய தேவை இருக்கிறது.

ஏன் இடதுசாரிகளால் முடியவில்லை!

20 ஆண்டுகளாக நான் சொல்லி வருகிறேன், இடது சாரிகளும், ஒடுக்கப்பட்ட மக்களும், சிறுபான்மை சமூகத் தவர்களும், அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்காக வாவது, அரசியல் சக்தியாக அணிதிரள வேண்டி இருக் கிறது என்பதை நான் வலியுறுத்தி வருகிறேன். இதை உடைப்பதற்கு எந்த முனைப்பும் இந்திய அளவில் ஒரு புள்ளியிலிருந்து இன்னும் தொடங்கவில்லை. இஸ்லாமிய அமைப்புகளோடும், தலித் அமைப்புகளோடும், ஆர்.எஸ். எஸ்.காரன் தலித் அமைப்புகளோடு காட்டுகின்ற நெருக் கம்கூட, இடதுசாரிகள் காட்டவில்லை; அது ஏன் என்று தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு அந்த யுக்தி தெரிகிறது. அவன் தலித்துகளை நசுக்குகிறான், ஒடுக்கு கிறான், இழிவுபடுத்துகிறான், எல்லாவற்றையும் செய்கிறான், அதனை நியாயப்படுத்துகிறான். ஆனால், அவனால் பாஸ் வானை மத்திய அமைச்சராக்க முடிகிறது. உதித்ராஜை எம்.பி.,யாக்க முடிகிறது. அக்யாலாலை சேர்த்துக்கொள்ள முடிகிறது. மிக எளிதாக தலித்துகளை வென்றெடுக்க முடிகிறது. ஏன் இடதுசாரிகளால் அது முடியவில்லை. தலித்துகளும், இடதுசாரிகளும் ஒரே அணியில் இணைய வேண்டியவர்கள்தானே.

ஒடுக்குமுறையை எதிர்க்கின்றவர் கள்தானே; சுரண்டலை எதிர்க்கின்றவர்கள்தானே; ஜாதி அமைப்பை எதிர்க்கின்றவர்கள்தானே; இந்துத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானவர்கள்தானே. ஏன்? தலித் அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும் ஒரே அணியில் திரள முடியாத நிலை இருக்கிறது. இதைப்பற்றி சிந்திக்க வேண்டிய காலம் இந்தக் காலம். இதைப்பற்றி சிந்திக்காமல், இப்படி ஒரு அணி திரட்சி இல்லாமல், சுஷ்மா சுவராஜ் போன்றவர்களை நம்மால் எதிர்கொள்ள முடியாது. நரேந்திர மோடியின் ஆளுமையை அல்லது ஆதிக்கத்தை நம்மால் முறியடிக்க முடியாது. அவர்கள் எப்படி பார்ப் பனரல்லாத ஒரு தலைமையை உருவாக்கி, மிக எளிதாக அவர்களையெல்லாம் சமரசப்படுத்தி, அத்வானியை வாயை மூடவைத்து,  முரளிமனோகர் ஜோஷியை வாயை மூட வைத்து, சுஷ்மா சுவராஜை வாயை மூட வைத்து அப்படி ஆளுமை மிக்க மூத்த தலைமைகளையெல்லாம் கட்டுப்படுத்தி, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வரை, மிக எளிதாக, ஆறே மாதத்தில் தேசிய தலைவராக்கி, அவரைப் பிரதமராக்கி விட்டார்கள். அவர்களுடைய யுக்தி எவ்வளவு வேலை செய்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.

அரசியல் தளத்தில் நாமெல்லாம் ஒன்றுபடவேண்டியது அவசியம்

எனது அருமைத் தோழர்களே, அது இலக்கியமாக இருந்தாலும், காப்பியமாக இருந்தாலும், திரைப்படமாக இருந்தாலும், எந்த ஊடக வடிவத்தில் இந்தப் பிரச்சாரங்கள் நடந்தாலும், அவர்கள் எப்படி யுக்திகளைக் கையாண்டு, எளிய மக்களை ஏய்க்கிறார்களோ, அப்படி யுக்திகளைக் கையாண்டு, நம்முடைய எதிரிகளை நாம் வீழ்த்த வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு முதற்படியாக, அரசியல் தளத்தில் நாமெல்லாம் ஒன்றுபடவேண்டிய அவசியம் இருக்கிறது.
புரட்சிகர சக்திகளும், பகுத்தறிவு சக்திகளும், ஒடுக்கப் பட்ட சக்திகளும், சிறுபான்மை மக்களும், ஒடுக்கப்பட்டுக் கிடக்கின்ற யாவரும் அரசியல் சக்தியாக அணிதிரண்டால் தான், இவற்றையெல்லாம் முறியடிக்க முடியும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி, நிறைவு செய்கிறேன், நன்றி, வணக்கம்!
- இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார்.
                    -----------------------””விடுதலை” 04-01-2015
Read more: http://viduthalai.in/page-4/93918.html#ixzz3Nr2QQ2fG

36 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நவநீத கிருஷ்ணன்

நவநீத கிருஷ்ணன் சின்ன வயதில் வெண் ணெயைத் திருடினான் வாலிப வயதில் பெண் ணைத் திருடினான் என் கிறார்களே - இப்பொ ழுது அவன் என்ன செய்கிறானாம்? அந்த வேலையை இப்பொழுது செய்தால் கம்பி எண்ண வேண்டியது தான்.

Read more: http://viduthalai.in/e-paper/94116.html#ixzz3OHq2QfcF

தமிழ் ஓவியா said...

600 ஆண்டுகால நவரத்தினங்கள் பதித்த தங்கக் கிரீடத்தைத் திருடிய அர்ச்சகப் பார்ப்பான் கைது!


லக்னோ, ஜன.8_ 600 ஆண்டுகாலமாக கோவிலில் இருந்த நவரத்தினம் பதித்த தங்கக் கிரீடத்தைக் கோவில் அர்ச்சகப் பார்ப் பான் திருடினான்_ அவன் கைது செய்யப்பட்டான்.

உத்தரப்பிரதேசம் பலியா நகரத்தில் உள்ள லகந்தரோட் என்ற பழங்காலக் கோட்டையில் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமை யான விஷ்ணு கோவில் ஒன்று உள்ளது. இக்கோ விலில் உள்ள விஷ்ணு சிலைக்குச் சாம்பல் மாகாணத்தின் குறுநில மன்னர்களால் வழங்கிய நவரத்தினம் இழைக் கப்பட்ட தங்கக் கிரீடம் திடீரென காணாமல் போனது. விலை மதிப்பு மிக்க தங்கக் கிரீடத்தைக் கோவில் அர்ச்சகப் பார்ப் பானே திட்டமிட்டு கொள் ளையடித்துள்ளான்.

600 ஆண்டு காலத் திற்கு முந்தைய விலை மதிப்பு மிக்க பொருள் என்பதால் உத்தரப் பிரதேச சி.அய்.டி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரணை செய்தது. இதில் கோவில் அர்ச்சகப் பார்ப்பானே இந்தக் கிரீடத்தை சில சமூக விரோதிகளின் துணை யுடன் திருடியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அர்ச்சகப் பார்ப்பான் மற்றும் இந்தத் திருட் டுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தத் திருட்டு வழக்கு தொடர்பாக பலி யாநகர இணை ஆணை யர் கூறியதாவது: விலைமதிப்பு மிக்க இந்த கிரீடத்தின் மீது நீண்ட நாள்களாகவே அர்ச்சகப் பார்ப்பானுக்கு ஒரு கண் இருந்து வந்தது.

இதை அப்பகுதியில் உள்ள சில சமூக விரோதிகள் மூலம் திருட திட்டமிட் டான். இதனைத் தொடர்ந்து தன்மீது சந்தேகம் எழாத வகையில் சில நாள்களாக பூசை முடிந்த பிறகு மக்களோடு மக்களாகவே அர்ச்சகப் பார்ப்பானும் கோவிலை மூடிவிட்டுச் சென்றுள் ளான்.

மஹாபூர்ணிமா நாளன்று அலகாபாத் செல்வதாக கூறிச் சென் றவர், ரகசியமாக திருடர் களுக்கு கட்டளையிட் டுள்ளார். இதனை அடுத்து கோட்டையில் யாருமில்லாத நேரத்தில் புகுந்து கோவில் கதவை உடைத்து கிரீடத்தை திருடிச் சென்றுள்ளனர். எப்போதும்போல் கோவிலுக்கு வந்த அர்ச் சகப் பார்ப்பான், கிரீடம் திருடு போனதாக நடித் துள்ளார்.

ஆனால், எங் களுக்கு ஆரம்பத்தில் இருந்தே அர்ச்சகப் பார்ப்பான்மீது சந்தேகம் இருந்தது. விசாரணையில் இந்தக் கொள்ளைக்கு திட்டமிட்டுக் கொடுத் தது, தான்தான் என்று ஒப்புக்கொண்டார். கிரீடம் தற்போது வேறு ஒருவரிடம் கொடுத்து வைத்துள்ளதாக தெரி கிறது. விரைவில் கிரீ டத்தை மீட்டுவிடுவோம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/94111.html#ixzz3OKAHQuI8

தமிழ் ஓவியா said...

காந்தியார் கொல்லப்பட்ட நாளில் கோட்சேவுக்காக இருசக்கர வண்டியில் ஊர்வலமாம்
லக்னோ, ஜன.8- காந்தியார் கொல்லப் பட்ட ஜனவரி 30 அன்று கோட்சேவுக்காக இருசக் கர வண்டி ஊர்வலங் களை நடத்த இந்து மகா சபை திட்டமிட்டுள்ளது.

சீதாபூர் பகுதியில் கோட்சேவுக்கு கோயில் கட்டும் திட்டத்தைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந் தாலும், கோட்சேவுக்காக இரு சக்கர வண்டிகளில் ஊர்வலத்தின் வாயிலாக காந்தி எதற்காகக் கொல் லப்பட்டார் என்று பிரச் சாரம் செய்ய இந்து மகா சபை திட்டமிட்டுள்ளது.

இந்து மகாசபாவின் தேசிய செயல் தலைவர் காம்லேஷ் திவாரி கூறும் போது, இரு சக்கர வண் டிகளில் கோட்சேவை ஆதரித்து, காந்தி கொல் லப்பட்டதற்கான காரணங்களை விளக்கி பிரச்சாரம் செய்யும்போது, பாப்தமாவ் கிராமத்தில் கோட்சே சிலை அமைப் பதற்கான பூமி பூஜை செய்ய உள்ளோம். பின்னர் அந்த இடத்தில் கோட்சே சிலையை அமைப்போம்.

அதே போன்று கோட்சேவுக் கான கோயில் அமைப் பதற்கு பூமி பூஜை செய்ய உள்ளோம். மேலும், பூமி பூஜை செய்வதற்கு முன் பாகவே சீதாபூரில் ஜன வரி 30 அன்று கோட்சே சிலையை அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று திவாரி கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, கர்ஷெட் பாக்கில் உள்ள இந்து சபா பவ னில் இரு சக்கர வாகன பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளது. சார்பாக், ஆலம் பாக், சவுக், அமினாபாத் மற்றும் பாரா ஆகிய பகுதிகளைக் கடந்து பப்தமாவ் கிராமத்தை அடையும். இருசக்கர வாகன பிரச்சாரத்தின் போது, கோட்சே ஏன் காந்தியைக் கொன்றார்? என்பதை விளக்கும் துண்டறிக்கைகள் வழங் கப்பட உள்ளது.

ஜன் ஜக்ரான் இரு சக்கர வாகன பிரச்சாரத் துக்கு இந்து மகாசபையின் நிர்வாகத்தின்மூலம் அனுமதி கோரப்பட்டுள் ளது. உரிய அலுவலர் களுக்கு எஸ்.எம்.எஸ். என்கிற குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இப்பிரச்சாரத்தில் கோட்சேவைப் புகழ்வதில் சட்ட விரோதம் எதுவு மில்லை. அரசுக்கு விரோ தமாக செயல்பட்டதாக எந்த சட்டத்தின்படி கோட்சேவுக்கு தண் டனை அளிக்கப்பட்டதா? என்று திவாரி கேட்டுள்ளார்.

அமைதியை சீர் குலைப்பதான குற்றச் சாட்டின்பேரில் திவாரி உள்ளிட்ட 26பேர் மீது சிதாபூர் மாவட்ட நிர்வா கம் 26.12.2014 அன்று வழக்கு பதிவு செய்துள் ளமை குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/94113.html#ixzz3OKAUMnIV

தமிழ் ஓவியா said...

பி.கே. திரைப்படம் ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக இல்லை

டில்லி உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

புதுடில்லி, ஜன.8_ ஹிந்தி நடிகர் அமீர்கான் நடித்து வெளிவந்துள்ள "பி.கே.' திரைப்படத்தில் ஹிந்து மத உணர்வு களைப் புண்படுத்தும்படி யாக காட்சிகள் உள்ளதாக கூறப்படுவதில் எந்த முகாந்திரமுமில்லை என்று டில்லி உயர்நீதி மன்றம் தெரிவித்தது. பி.கே. ஹிந்தி திரைப்படத்தை எதிர்த்து தாக்கல் செய் யப்பட்ட பொது நல மனுவை புதன்கிழமை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. ரோஹிணி, நீதிபதி ஆர்.எஸ். என்ட்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, மேற்கண்டவாறு தெரிவித்தது.

""அந்த திரைப்படத்தில் என்ன தவறு உள்ளது? எல்லாவற்றையும் நீங்கள் அவதூறாக கருதக் கூடாது. மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. இதுகுறித்து, விரிவான உத்தரவை, பிறகு பிறப் பிக்கிறோம்'' என்று நீதி பதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அஜய் கவுதம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டிருந்ததா வது: பி.கே. திரைப்படத் தில் சில காட்சிகள் ஹிந்து மத உணர்வுகளை புண் படுத்தக்கூடியதாக உள் ளன. ஆனால், அவற்றை கவனத்தில் கொள்ளாமல், திரைப்படத்தை வெளியிட திரைப்படத் தணிக்கை (சென்ஸார்) வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தத் திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி, நாட்டின் பல்வேறு பகுதி களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதனால், சட்டம்- ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டது. எனவே, பி.கே. திரைப்படத்தில் இருந்து, ஹிந்து மத உணர்வு களைப் புண்புடுத்தக் கூடிய காட்சிகளை நீக்க உத்தரவிட வேண்டும். அவ்வாறான காட்சிகளு டன், இத்திரைப்படத்தை திரையரங்கு களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிடக்கூடாது என்று இதன் தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், "இதே போன்ற மனுவை, உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்து விட்டது. எனினும், திரைப் படத்துக்கு அனுமதி யளித்து திரைப்படத் தணிக்கை வாரியம் அளித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடமுள்ளது' என்று வாதிட்டார்.
அவரது வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், "திரைப்பட தணிக்கை வாரியத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு மட்டுமே உரிமையுண்டு. சட்டப்படி, வெளியாள் களுக்கு அந்த உரிமை யில்லை' என்று தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/94114.html#ixzz3OKAhcivk

தமிழ் ஓவியா said...

தவிர்க்க முடியாத நரேந்திரமோடி

- ஷிவ் விஸ்வநாதன்

சடங்குகள் என்ற அளவில், ஆண்டின் இறுதி நாட்களும், புத்தாண்டு தொடக்க நாட்களைப் போலவே, வருவதை முன்கூட்டி ஊகித்து உரைக்கப்பட இயன்றவையே. ஆண்டின் இறுதி நாளைக் கொண்டாட மக்கள் விரும்புகின்றனர்.

சில நிகழ்வுகள், முடிவுகள் மறக்கமுடியாத காட்சிகளாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள ஊடகங்கள் விரும்புகின்றன. ஒவ் வொரு ஆண்டுக்கும் அதனைப் பற்றிய நினைவுச் சின்னம் ஒன்று தேவையாக இருக்கிறது. கலவரங்கள் நிறைந்ததாக இருந்த அந்த ஆண்டு, தட்டுத் தடுமாறி வெற்றி கொள்ளும் முடிவைக் கொண்ட ஒரு ஓட்டப் பந்த யத்தைப் போல தோற்றமளிக்க வேண்டும். இவ்வாறு வெற்றி பெறு பவனே நாயகனாவான். அந்த ஆண்டுக்கான மனிதனாவான்.

கிரேக்க புராணக் கதைகளில் வரும் நாயகனைப் போன்ற தோற்றம் ஒரு பக்கமும், ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவனைப் போன்ற தோற்றம் மற்றொரு பக்கத்திலும் கொண்ட ஒருங்கிணைந்த ஒரு தோற்றத்தை அளிப்பவனாக அவன் இருப்பான். 2014 ஆம் ஆண்டுக்கான இத்தகைய மனிதன் தவிர்க்கவே முடியாதவனாவான். அறிவியல் ரீதியான மக்கள் தொகை ஆய்வு அளவிலும், அடையாளப் படுத்த இயன்ற அளவிலும், உயர்தட்டு மக்களும், பாமர மக்களும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்தனர். அவர் வேறு யாருமல்ல.

தவிர்க்க இயலாதபடி நரேந்திர மோடியை 2014 ஆம் ஆண்டு நமக்குப் பிரதமராகத் தந்து விட்டது.

ஒரு பார்வையாளனாக, ஒரு விமர்சகனாக, ஒரு குடிமகனாக இந்தத் தேர்வு ஒரு முக்கியமான செய்தியே அல்ல. அனைவர் மீதும் அதிகாரமும் செல்வாக்கும் செலுத்தும் நரேந்திர மோடி பற்றிய இந்த விவாதத்தின் விவாத முறை இன்னமும் ஆழமாகச் செல்வதாகும். முன்னணிப் பத்திரிகை களையோ, முக்கியமான பத்திரிகை யாளர்களின் கட்டுரைகளையோ ஒருவர் படிக்கும்போது, மோடியைச் சுற்றி இருப்பவர்கள் பேசுபவை குழப் பத்தையும், பின்னர் எரிச்சலையும், இறுதியில் கவலையையும் ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன.

மோடியின் வளர்ச்சி பாராட்டப்பட வேண்டியதே. அதிகார நாட்டம் மிகுந்த, சுயம்புவாக வளாச்சியடைந்த மனிதர் அவர். இதற்கு மாறாக, செயலற்று இருப்பவரான ராகுல் காந்தி இப்போது மக்களால் முற்றிலுமாக மறக்கப்பட்டுவிட்டார். வளரும் இளம் பருவத்தினரான ராகுல், தற்செயலாகத் தனக்கு பாரம்பரிய வழியில் கிடைத்த அதிகாரத்தை வீணடித்துவிட்டார். முதல்தரமான வாய்ப்புகள் சொரியப்பட்ட இரண்டாம் தர மனிதர் ராகுல். வெற்றிகளின் மூலம் இதற்கு எதிரான நிலையின் பிரதிநிதியாக இருப்பவர் மோடி. மோடியைப் பற்றி காட்டப்படும் தோற்றம் உண்மை யானதா, நம்பத் தகுந்ததா என்று உங்களை வியப்படைய வைப்பது விவாதங்களின் பிற்பகுதிகளே.

உண்மைக்கும் வெற்றி பெற்றவருக் கும் இடையே இருக்கும் இடை வெளியை பிரச்சாரம் நிரப்ப வேண்டும் என்று ஒருவர் எதிர்பார்க்கிறார். இத்தகைய பத்திரிகையாளர்கள் மனதைக் கவரும் ஓர் இலக்கிய நாகரிகப் பாங்கினைப் பெற்றிருப் பவர்கள் என்றும் ஒருவர் கருதக்கூடும்.

அதிகார வர்க்கத்துக்கு அருகில் இருக்க வேண்டிய ஒரு மாபெரும் தேவை இத்தகைய எழுத்தாளர்கள் அனைவருக்கும் உள்ளது. அதிகாரம் பெறுவதற்கான வாய்ப்பு அவர்களைக் கவர்கிறது. ஆட்சியுடனும், ஆட்சி யாளருடனும் இருக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. இந்த விவரிப்பு இப்போது ஒரு படி முன்னேறியுள்ளது. அவர்களது நினை வெல்லாம் இப்போது ராகுல் -மன்மோகன் ஆகியோர் இல் லாததைப் பற்றி அல்லாமல், உறுதியுடன் செயலாற்றும் அவர்களின் புதிய தலைவர் இருப்பதைப் பற்றியே உள்ளது.

காட்சிகள் மாறுகின்றன; ஒளிப்படங்கள் ஒரு மாறுபட்ட நேரத்தைக் குறிப்பவை யாக உள்ளன. ஆட்சி அதிகாரத்தைப் பெறவேண்டும் என்ற பேராவல் கொண்ட மனிதராக இன்னமும் மோடி இருக்க வில்லை. மற்ற தலைவர்களிடையே அவரும் ஒரு தலைவராக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளார். வரலாறு பற்றி குற்றம் காண்பவராக இல்லாமல், வரலாறு படைப்பவராகவே அவர் இருக்கிறார். உலகை மாற்ற இயன்ற அரசியல் மேதை யாகவும், கவனம் மிகுந்த சீர்திருத்த வாதியாகவும் காட்டப்படும் அவர், கல்வி காவிமயமாக்கப்படுவது பற்றியோ, சிறுபான்மை மதமக்கள் மதமாற்றம் செய்யப்படுவது பற்றியோ சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்பது போன்ற விமர்சனங்கள் செய்யப்படும் அற்ப காரணங்களுக்காக தமது கவனத்தைச் சிதறவிடவோ, தமது வழியை மாற்றிக் கொள்ளவோ விரும்பாதவர் ஆவார்.

தமிழ் ஓவியா said...

அவரது உடல் அசைவுகள் மவுன மொழியில் பேசுவதைப் போல உள்ளன. உள்நாட்டு அதிகார மய்யங்களில் வலம் வரும் அவர், புடின், ஒபாமா போ ன்றோருடன் அவர்களுக்கு சமமான வராக நடை பயில்கிறார். சடங்கு, சம் பிரதாய முறையில் மிகச் சரியானவராக வும், நுணுக்கமறிந்தவராகவும் அவர் இருக்கிறார். அரசியல் என்பது நடனத் துக்காக அணியும் ஒரு உடை போன்றது என்பதை உணர்ந்திருக்கும் மோடி, நிகழ்ச்சிகளுக்கு மிகவும் பொருத்தமான உடைகளை குறையற்ற முறையில் அணிகிறார். நிறம் மங்கிய கதராடை யையோ, மேற்கத்திய நாகரிக கோட், சூட் போன்றவைகளையோ தான் அணிய முடியாது என்பதை அறிந்துள்ள அவர், வேற்றுமையில் ஒற்றுமை உணர்வைத் தூண்டும், தேசிய, ஸ்வதேசிய, உலக லாவிய உணர்வுகளை வெளிப்படுத்தும் உடைகளை அணிகிறார். இந்திய நாடு தான் தேடிக்கொண்டிருந்த தலைவரைக் கண்டுபிடித்து விட்டதாகவே தோன்று கிறது. அரசியல் மேதை என்ற பாகத்தை ஏற்று நடிக்கும் மோடி மிகத் திறமையாக தன்னைப் பற்றிய பழைய தோற்றத்தை உதறித் தள்ளிவிட்டார். அவற்றை அவர் கைவிட்டுவிடவில்லை; மோகன்பகவத், அமீத் ஷா மற்றும் விசுவ இந்து பரிசத் அமைப்புகள் தனது முந்தைய பணிகளை செய்யட்டும் என்று அவர்கள் பொறுப்பில் விட்டுவிட்டார். அவர்கள் மீது அவரால் எப்போதும் கண் வைத்திருக்கமுடியும்.

தனது இருப்பை ஒரு கலவையாக மோடி வெளிப்படுத்துகிறார்; ஒரு நிலையில் ஈடுஇணையற்றவராக அவர் தோன்றினாலும், நேரு, படேல், வாஜ்பேயி, மாளவியா போன்ற தலைவர்களின் சாயலும் அவரிடம் காணப்படுவதாக கருதப்படுகிறது. இவ்வாறு இவர்கள் அனைவரையும் போல இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் முயற்சியில் அவர்கள் அனைவரது கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகளையும் அவர்களுக்காக ஒருங் கிணைக்கிறார். அனைத்துக் காலங்களுக் கும், அனைத்து உணர்வுகளுக்குமான மனிதர் என்று அவர் காட்டப்படுகிறார்.

ஊடகங்களும், மத்திய பிரிவு மக்களும், சர்வதேச அரசியலில் எந்த ஒரு வல்லரசு நாட்டையாவது பின்பற்றும் தன்னம்பிக்கையற்ற இந்தியாவை எண்ணி எண்ணி சோர்வடைந்து போயி ருந்தனர். அவர்களுக்கு ஒரு வெற்றி யாளர் தேவை; மக்களை நன்றாகப்புரிந்து கொண்டு இந்திய நாட்டை நாகரிகத் திலிருந்து ஒரு நவீன பேரரசாக மாற்ற இயன்ற, திடப்பற்று கொண்ட, நம்பிக் கைக்கு உரிய ஒருவர் தேவை. உலகின் மற்ற நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று விரும்பும் இந்தியா நாட்டின் பேரரசர் மோடி. இத்தகைய எழுத்துக்கள் அனைத்துமே மனதள விலான ஒரு குறைபாட்டுக்குத் தீனி போடுகின்றன என்பதை ஒருவர் சிறிது சிறிதாக உணர்கிறார். அவர் மோடி என்ற தனிப்பட்ட மனிதரல்ல; மக்கள் கருத்தின் தொகுப்பாக இருப்பவர்.

தமிழ் ஓவியா said...


இந்தியக் கன வினால் முன்னிறுத்தப்படுபவர்; எடுத்துக் காட்டப்படுபவர் அவர். ஊடகங்கள் அக்கனவுகளின் செயல்பாடுகளை எடுத்துக் கூறுகின்றன, அவ்வளவுதான். கொள்கைகளில் அவர் படைத்த சாதனை களைப் பற்றி அவர்கள் கூறவரவில்லை; நம்பிக்கை இழந்தவராக மோடி காணப்படுவதாக கற்பனை செய்து கொண்ட, பகட்டாரவாரம் கொண்டவர் களின் செயல்களைப் பற்றி கூறுகின்றனர். மோடியைப் போன்ற ஒவ்வொரு மனி தனும் இந்த ஆண்டுக்கான மனிதர்கள் என்பதால், மோடி இந்த ஆண்டின் மனிதராகிறார்.

இது ஓர் ஓரங்க நாடகமல்ல; உலக அரங்கில் தனது பண்டைய பெருமையை எடுத்துக் காட்டியிருக்கும் இந்தியா இது. அணி சேராக் கொள்கை, மூன்றாம் உலக நாடுகள் போன்ற பழைய கொள்கைகள் பலமற்றவர்களின் குரல் என்பதை நமது மேல்தட்டு மக்கள் உணர்கின்றனர். விருப்பத்துடன் போராட இயன்ற ஒருவரைத்தான் மக்கள் தேடுகின்றனர். தெருக்களில் சாதாரணமாகக் காணப்படும் கொடியமனமும், மிருக பலமும் கொண்ட ஒருவனையல்ல அவர்கள் தேடுவது. சிறுநகரவாழ் மக்களும், வெளிநாட்டில் வாழும் மக்களும் புரிந்து கொள்ள இயன்ற நிர்வாக இயல், இனஆய்வியல், தேசியம் பற்றி பேச இயன்ற, ஓர் ஒழுங் குக்குக் கட்டுப்பட்ட, கட்டுடல் கொண்ட ஒருவனைத்தான் அவர்கள் தேடுகின் றனர். பெரும் பகுதியினராக அயல்நாடு களில் வாழும் இந்தியர்கள் இந்தியாவின் வெற்றிக் கதையை வெளிநாடுகளில் கூறுபவர்களாக உள்ளனர். நியூயார்க், நியூ ஜெர்சியில் உள்ள இந்தியத் தூரகங்களில் இந்திய தேசியக் கொடி பறப்பதால் மகிழ்ச்சி அடையும், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் நாட்டுப் பற்று கொண்டவர்களாக இருப்பது மிகவும் எளிதானதே.

வெற்றிகரமாக நடந்தேறிய மெடிசான் பூங்கா சதுக்கக் கூட்டம் அமெரிக்கவாழ் இந்தியர்களின் தேவையை நிறைவேற்றியது. உயர்ந்த இடத்தை எட்டியிருக்கும் நேரமே தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான சரியான நேரமாகும். தனது கடந்த காலத்திலிருந்து மோடி தூய்மைப் படுத்தப்பட்டுள்ளார். உண்மையைக் கூறுவதானால், அவரது கடந்த கால செயல்பாடுகள் இப்போது அவரைச் சுற்றியிருப்பவர்களால் அரங்கேற்றப் படுகின்றன. ஏதோ சில நல்லவை களைச் செய்ய மோடி விரும்பினாலும், அந்த விருப்பப்பட்டியல் உண்மை யானதாக இருந்தாலும், இரண்டு விதமான சக்திகள் அவரை அவற்றைச் செய்யவிடாமல் தடுக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. வடி வத்தில் மோடியின் கடந்த காலம் இப்போதும் தொடர்கிறது என்பது முதலாவது. வரலாற்றின் மீது தங் களின் சொந்த முத்திரையைப் பதிக்க அவர்கள் விரும்புகின்றனர்.

இரண் டாவது, ஆட்சி முறை என்பது ஒரு மனிதரின் தலைமையை விட அதிக அளவிலான மனிதர்களின் செயல் பாடுகளை உள்ளடக்கியது என்பது இரண்டாவது. ஆட்சி முறையை சீர்திருத்துவது என்று வரும்போது, ஒரு தூய்மை இயக்கம் எனப்படுவதே வெறும் வெள்ளையடிக்கும் வேலைதான்.

தமிழ் ஓவியா said...


முடிசூட்டப்பட்ட மன்னர் ஒருவரை இப்போது பெற்றுள்ள நாம், மன்னரால் தவறே செய்யமுடியாது என்று முடிவு செய்துவிட்டோம். பல வழிகளில் புதிய சர்தாராக விளங்கும் அவருக்கு, வரலாற்றில் சர்தாருக் குண்டான இடம் ஏற்கெனவே அளிக் கப்பட்டுள்ளது.

பழைய சர்தாரைப் போல ஈடுகட்டுவதற்கான சிலை எதுவும் மோடிக்கு அமைக்கப் படத் தேவையில்லை. இதற்கு முந்தைய தனது கடந்தகாலம் என்னும் பேயிட மிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட, இந்திய வரலாற்றில் முகமை என்ற ஒரு புதிய கருத்தின் பிரதிநிதி யாக அவர் விளங்குகிறார். மாற்றம் என்னும் ஓர் உயர்ந்த ஒட்டுத் தயாரிப் பான ஊடகம், இந்த சடங்கு ஆற்றும் தனது பங்கினை புத்திசாலித்தனமாக செய்துள்ளது.

மோடி புதிய மாசற்ற தூய்மையான முறையில் பிறந்த ஒரு தெய்வீகப் பிறப்பாளராகக் காட்டப் படுகிறார்.

மோடியின் இந்தக் கொண் டாட்டத்தை பன்னாட்டு நிறுவன மட்டத்திற்கோ அல்லது சுயநலத் துக்காக ஊடகத்தால் பயன்படுத்திக் கொள்வது என்ற அளவுக்கோ தாழ்த் தப்படுவது போதாது. தங்களது தற் போதைய கற்பனைக் கனவுகளையும், எதிர்காலம் பற்றிய அச்ச உணர்வு களையும் மட்டுமே கருத்தில் கொண்டு அளிக்க இயன்ற ஒரு கதையை ஊடகம் தயாரித்துக் கொண்டிருக் கிறது. மோடியைப் பற்றி புரிந்து கொள்வதை எளிமையானதாக்குவதற் காக, ஒரு மாறுபட்ட வகையிலான நடுநிலை மதிப்புரையும், அன்றாட ஆட்சி முறை பற்றிய பல்வேறு சமூகங்கள் பற்றிய ஆய்வியலும் இப்போது தேவைப்படுகிறது. வரும் ஆண்டில் இந்த நடுநிலை மதிப்புரை கருத்து மாறுபட்ட ஒரு மாபெரும் முரண்பாடாக உருவெடுக்கும். அத் தகைய நிலை ஏற்படாமல் போனால், வரையறை என்ற உணர்வே அற்ற அதிகாரம் பற்றிய ஒரு புதிய கற்பனை கொண்ட நாடாக ஆவதற்கான வழியில் செல்வதாக இந்தியா இருக்கும்.

இந்த ஆண்டின் மனிதரைக் கொண்டாடுவது, வரும் சோகத்தின் தொடக்கத்தைப் பற்றி உறுதி அளிப்பதாக இருக்கிறது. நிறைகுறை பற்றிய ஒரு சிறிய அளவிலான விமர்சனம் எதிர்காலத்தை மிகுந்த நம்பிக்கை கொண்டதாக ஆக்கும்.

நன்றி: தி ஹிந்து 5-1-2015

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/page1/94121.html#ixzz3OKCantOE

தமிழ் ஓவியா said...

இருந்து வரும்


பார்ப்பனச் சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும் வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்து வரும்.
(விடுதலை, 29.5.1973)

Read more: http://viduthalai.in/page1/94118.html#ixzz3OKCpwunl

தமிழ் ஓவியா said...

கொடுங்கோலன் ஆட்சி வீழ்த்தப்பட்டது


கொடுங்கோலன் ஆட்சி வீழ்த்தப்பட்டது
எந்த காரணத்துக்காக யாரால் வெற்றி பெற்றாரோ
அதனை உணர்ந்து பொதுமை ஆட்சி நடத்த வேண்டும் புதிய அதிபர் தமிழர் தலைவர்

ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

இலங்கைத் தீவில் கொடுங்கோலன் ராஜபக்சே ஆட்சி வீழ்ந்தது - வரவேற்கத்தக்கதே! எந்த மக்களின் ஆதரவால் எந்த காரணங்களால் புதிய அதிபராக மைத்திரி பால சிறீசேன வெற்றி பெற்றாரோ, அந்தக் காரணங்களை உள்ளபடியே உணர்ந்து சிறுபான்மை மக்களையும் மதிக்கும் பாதுகாக்கும் பொதுமை ஆட்சியாக நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இலங்கையில் இராஜபக்சே ஆட்சி வீழ்த்தப்பட்டது! தனது குழியைத் தானே தோண்டி வீழ்ந்த வரலாறு படைத்தார் அந்த சிங்கள வெறித்தன ஆட்சி அதிபர்.

மக்கள் வாக்குகள் மூலமே மீண்டும் முழு சர்வாதி காரியாய் ஆக முயன்ற இராஜபக்சேயின் குடும்ப ஆட் சிக்கு குதூகலத்துடன் விடை கொடுத்தனுப்பியுள்ளனர் வாக்காளர்கள்!

இனி, குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு, போர்க் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டிய, தடி நாயகம் நடத்தியவருக்கு இலங்கை மக்கள் தந்த தண்டனை இது! சர்வாதிகாரியாக மாறிட ஜனநாயகப் படிக்கட்டுக்களையே பயன்படுத்த நினைக்கும் பாசாங்குக்காரர்களுக்குப் பாடம் கற்பித்த முடிவு இது!

வாக்களித்தோரைப் பாராட்டுகிறோம்

இதனை உலகம் - நாகரிக உலகம் வரவேற்பதைப் போலவே, நாமும் வாக்களித்தோரைப் பாராட்டி வரவேற்கிறோம்.

மைத்திரி பால சிறீசேன என்ற எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ராஜபக்சேவை விட சுமார் 5 விழுக்காடு வாக்குகள் கூடுதலாகப் பெற்று ராஜபக்சேயின் குடும்ப ஆட்சியை வீழ்த்தியுள்ளது - எப்படி, எதனால் என்பதை வெற்றி பெற்ற, புதிய அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் மைத்திரி சிறீசேன ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

வெற்றிக்கு உறுதுணையாக இருந்தோர்

இந்த 5 விழுக்காடு வாக்குகள் பெரிதும் ஈழத் தமிழர்களாலும், இஸ்லாமிய சகோதரர்களாலும்தான் என்பதை மனதிற் கொண்டு, அவர்களுக்குக் கேடு, துன்பம் இழைத்து, சொந்த நாட்டு மக்களையே அந்நியப்படுத்தி குண்டு போட்டு அழிக்கவும் தயங்காத ராஜபக்சே யிசத்திற்கு விடை கொடுத்து அனைவருக்கும் அனைத் தும் என்ற சமூக நல்லிணக்கத்தை உருவாக்கிட தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும்.

அந்த மண்ணைப் பொன்னாக்கிட உழைத்த அந்தக் குடி மக்களையே மனிதாபிமானமின்றிக் கொன்றும், முள் வேலி சிறைக்குள் - சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கிய - அவல வாழ்வுக்கும் ஆளாக்கிய கொடுமைக்கு தக்க பரிகாரம் காண வேண்டும்.

ஜனநாயகத்தில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பும் உரிமையும் தேவை!

ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினர் ஆளுவது தான் என்றாலும் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழவும் உறுதி அளிக்கும் ஆட்சி முறை என்பதை மறந்து விடக் கூடாது!

தமிழர்களின் பங்களிப்புக் காரணமாகவே இலங்கை யின் பொருளாதாரமும், வளர்ச்சியும், முன்னேற்றமும் என்பதை உணர்ந்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் தவிர்த்தல் அவசியம்.

ஆட்சியைப் பொதுமையுடன் நடத்துக!

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமும் பறிக்கப்படும் அவலம் தொடராமல், நல்லுறவுடன் பழைய ராஜபக்சே ஆட்சி சென்ற பாதையில் செல்லாமல், புதிய மனிதாபிமான அணுகுமுறையுடன், சிக்கல்களைத் தீர்க்க முயல வேண்டும். பொது வேட்பாளராக வெற்றி பெற்றுள்ள புதிய அதிபர் ஆட்சியையும் பொதுமையுடன் நடத்தி, பழைய கறைகளைத் துடைக்க வேண்டும் என்றே உலகம் எதிர்பார்க்கிறது.

பொறுத்திருந்து பார்ப்போம்; மாற்றம் ஏமாற்றமாக முடிந்துவிடாது என்று நம்புவோமாக!

கீ.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை

9-1-2015

Read more: http://viduthalai.in/page1/94169.html#ixzz3OKGIP400

தமிழ் ஓவியா said...

கலைஞர், பேராசிரியர், தளபதி ஆகியோருக்கு வாழ்த்துகள் - பாராட்டுகள்


தி.மு.க.வில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட

கலைஞர், பேராசிரியர், தளபதி ஆகியோருக்கு வாழ்த்துகள் - பாராட்டுகள்

இன்று காலை (9.1.2015) கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் 14ஆவது கட்சித் தேர்தலில், அதன் தலைவராக உழைப்பின் உருவம் மானமிகு சுயமரியாதைக் காரரான நமது கலைஞர் அவர்களை மீண்டும் ஒருமனதாக, போட்டியின்றித் தேர்வு செய்து தனித்ததோர் வரலாறு படைத்துள்ளது.

வரலாற்றில் தொடர்ந்து சாதனைகள் செய்து வருபவர்; தி.மு.க.விற்கு எப்படிப்பட்ட மலை போன்ற எதிர்ப்புகளும், இடையூறுகளும், ஏற்படினும், தனது ஆற்றல்மிகு உழைப்பாலும், ஒப்பற்ற சாதுர்யத்தாலும் எதிர்கொண்டு இயக்கத்தின் சோதனைகளை சாதனைகளாக்கிடும் ஆற்றல் படைத்த கலைஞர் அவர்களுக்கு தாய்க் கழகமான திராவிடர் கழகம் தனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துப் பாராட்டி மகிழ்கிறது.

அவர்களோடு அக்கழகத்தை வழி நடத்திட உதவியாக தேர்வு செய்யப்பட்டு, புதிய அத்தியாயத்தைப் படைக்க பொதுச் செயலாளராக இனமானப் பேராசிரியர் அவர்களும், பொருளாளராக தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம். மற்ற பொறுப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள் - பாராட்டுகள்!

- கி.வீரமணி
தலைவர் திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page1/94171.html#ixzz3OKGTp0kv

தமிழ் ஓவியா said...

ஜனநாயகவாதி போல கருத்துக்கூறும் ராஜபக்சே

ஜனநாயகவாதி போல
கருத்துக்கூறும் ராஜபக்சே

மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட் சியை அமைதியான வழி யில் புதிய அதிபரிடம் ஒப்படைப்பேன் என்று அதிபர் ராஜபக்சே கூறி யுள்ளார். தேர்தலில் தோல்வி முகம் ஏற்பட்ட உட னேயே அதிபர் மாளி கையில் இருந்து வெளி யேறிய முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே தன்னுடை கருத்து குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் அதிபர் மாளிகை புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட மைத்ரி பால சிறி சேனாவின் அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நண்பகல் 12 மணி அளவில் மைத்திரி பால சிறிசேனாவின் வெற்றியும் தேர்தல் குழுத் தலைவர் வெளியிட்டார். இதனை அடுத்து மகிந்தா தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்ப தாவது,தேர்தல் முடிவுகள் புதிய ஆட்சிமாற்றத்தை மய்யமாக கொண்டுள் ளது. 10 ஆண்டுகளாக எனது ஆட்சிக் காலத்தில் இலங்கையை சர்வதேச அளவில் பல்வேறு துறை களில் முன்னுக்கு கொண்டு வந்துள்ளேன். இலங்கை மக்கள் எனது பணியை நினைவிற்கொள்வார்கள். புதிய அதிபருக்கு வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைதியான வழியில் புதிய அதிபரிடம் ஒப் படைப்பேன். இது குறித்து காலையில் எதிர் கட்சித் தலைவர் ரனில் விக்கிரம சிங்கேவிடம் விபர மாக பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page1/94179.html#ixzz3OKGo8DFf

தமிழ் ஓவியா said...

இலங்கை புதிய அதிபரின் நன்றி

இலங்கை அதிபர் தேர் தலில் தனக்கு ஆதர வளித்து வெற்றி பெறச் செய்ததற்காக இலங்கை மக்களுக்கு மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்தி ருக்கிறார்.

இலங்கையில் புதிய அதிபராக பதவியேற்கவி ருக்கும் மத்திரி சிறிபால சேனாவின் வெற்றியை அடுத்து இலங்கை அதிபர் மாளிகையில் அதிகாரப் பூர்வ இணையதளம் மைத்திரிபால சிறிசே னவின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்" என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மன மார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். கருணை யுடனான சகோதர யுகத்தை நோக்கி செல் வோம் என்று அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

பதவியேற்பு

இலங்கை அதிபர் தேர்தலில் வென்றுள்ள பொது எதிரணி வேட் பாளர் மைத்திரிபால சிறிசேன (இன்று) வெள் ளிக்கிழமை மாலை பதவியேற்கிறார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அதிபர் மைத் திரி சிறிபாலசேன இன்று மாலை கொழும்பில் உள்ள சுதந்திரச் சதுக்கத் தில் நடைபெறும் விழா வில் பதவியேற்பார் என்று இலங்கை அதிபர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/94170.html#ixzz3OKH5hYb3

தமிழ் ஓவியா said...

காந்தியாரை இன்னும் எத்தனை முறை கொலை செய்வார்கள்?

நாதுராம் கோட்சேவை தூக்கிலிட்ட தினத்தை அவரது நினைவு நாளாக மகராஷ்டிரா முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. மகராஷ்டிரா மாநிலம் பன்வேலில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய இந்து மகாசபை செய்தித்தொடர்பாளர் தினேஷ் போன்சலே கூறியதாவது: நாம் இன்று ஷஹூரிய திவஸ் (வீரர்களின் நினைவுநாள்) கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

நாம் இந்து தேசத்திற்காக பாடுபட்ட வீரர்களை என்றும் நினைவில் கொள்ள வேண்டும். நமது இந்துமதப்பாதுகாப்பிற்காக நாதுராம் கோட்சே தனது இன்னுயிரை ஈந்த நாள் இன்று, இந்த நாளை நாடுமுழுவதும் கொண்டாடிவருகிறோம். நாங்கள் இன்றும் நாதுராம் கோட்சேவின் சாம்பலை போற்றிப் பாதுகாத்து வருகிறோம் அதை அகண்ட பாரதமானபிறகு சிந்து நதி கடலில் கலக்கும் இடத்தில் (கராச்சி-பாகிஸ்தான்) கரைப்போம், இது எங்கள் சத்திய பிரமாணம்! இதை தலைமுறைக்கு எடுத்துக் கூறவே இந்த நாளை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம்.

வரும் தலைமுறைக்கு நாதுராம் கோட்சேவின் உண்மையான வரலாற்றைக் எடுத்துக்கூறும் விதமாக கர்மவீர பூமிபுத்ர நாதுராம்ஜீ கோட்சே என்ற திரைப்படத்தை ஜனவரி 30-ஆம் தேதி வெளியிட விருக்கிறோம். உண்மையான தேசபக்தனின் வரலாற்றை அனைத்து இந்துக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அது மட்டுமல்ல, காந்தியார் கொல்லப்பட்ட ஜனவரி 30 அன்று கோட்சேவுக்காக இருசக்கர வண்டி ஊர் வலங்களை நடத்த இந்து மகா சபை திட்டமிட்டுள்ளது.
சீதாபூர் பகுதியில் கோட்சேவுக்கு கோயில் கட்டும் திட்டத்தைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந் தாலும், கோட்சேவுக்காக இரு சக்கர வண்டிகளில் ஊர்வலத்தின் வாயிலாக காந்தி எதற்காகக் கொல்லப்பட்டார் என்று பிரச்சாரம் செய்ய இந்து மகாசபை திட்டமிட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

இந்து மகாசபாவின் தேசிய செயல் தலைவர் காம்லேஷ் திவாரி கூறும் போது, இரு சக்கர வண்டி களில் கோட்சேவை ஆதரித்து, காந்தி கொல்லப்பட்ட தற்கான காரணங்களை விளக்கிப் பிரச்சாரம் செய்யும்போது, பாப்தமாவ் கிராமத்தில் கோட்சே சிலை அமைப்பதற்கான பூமி பூஜை செய்ய உள்ளோம். பின்னர் அந்த இடத்தில் கோட்சே சிலையை அமைப்போம். அதே போன்று கோட்சேவுக்கான கோயில் அமைப்பதற்கு பூமி பூஜை செய்ய உள்ளோம். மேலும், பூமி பூஜை செய்வதற்கு முன்பாகவே சீதாபூரில் ஜனவரி 30 அன்று கோட்சே சிலையை அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று திவாரி கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, கர்ஷெட் பாக்கில் உள்ள இந்து சபா பவனில் இரு சக்கர வாகன பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளது. சார்பாக், ஆலம் பாக், சவுக், அமினாபாத் மற்றும் பாரா ஆகிய பகுதிகளைக் கடந்து பப்தமாவ் கிராமத்தை அடையும். இருசக்கர வாகன பிரச்சாரத்தின் போது, கோட்சே ஏன் காந்தியைக் கொன்றார்? என்பதை விளக்கும் துண்டறிக்கைகள் வழங்கப்பட உள்ளன.

ஜன் ஜக்ரான் இரு சக்கர வாகன பிரச்சாரத்துக்கு இந்து மகாசபையின் நிர்வாகத்தின்மூலம் அனுமதி கோரப்பட்டுள்ளது. உரிய அலுவலர்களுக்கு எஸ்.எம்.எஸ். என்கிற குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இப்பிரச்சாரத்தில் கோட்சேவைப் புகழ்வதில் சட்ட விரோதம் எதுவுமில்லை. அரசுக்கு விரோதமாக செயல்பட்டதாக எந்த சட்டத்தின்படி கோட்சேவுக்கு தண்டனை அளிக்கப்பட்டது? என்று திவாரி கேட்டுள்ளார்.

அமைதியை சீர் குலைப்பதான குற்றச் சாட்டின் பேரில் திவாரி உள்ளிட்ட 26பேர் மீது சிதாபூர் மாவட்ட நிர்வாகம் 26.12.2014 அன்று வழக்கு பதிவு செய் துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காந்தியாரை 1948 ஜனவரி 30ஆம் தேதி இந்துத்துவா வெறி படுகொலை செய்தது போதாது என்று மீண்டும் மீண்டும் அவரைக் கொலை செய்ய வெறி கொண்டு கிளம்பி விட்டது காவிக் கூட்டம். இதன் போக்கு எதில் கொண்டு போய் முடியுமோ என்ற திகில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே மக்கள் மத்தியில் பிளவுகளை உண்டாக்கும் வேலையில் இறங்கி இருப்பது - அதாவது வேலியே பயிரை மேய்ந்து தீர்ப்பது என்ற முடிவோடு முண்டாதட்டி கிளம்பி இருப்பது - நாடு ரண களப்படுவதற்கான முயற்சியேயாகும்.

சங்பரிவார்கள் இப்படி சண்டமாருதம் செய்வதை ஆட்சியில் உள்ள பிரதமர் கண்டு கொள்வதேயில்லை. இந்த மவுனம் இந்த வன்முறைக்கு மறைமுகமாகப் பச்சைக் கொடி காட்டுவதாகத் தான் பொருள்படும்.

காந்தியார் பிறந்த நாளை தூய்மைப் படுத்தும் நாள் என்று அறிவித்து, காந்தியாரின் நினைவை மக்கள் மத்தியிலிருந்து முற்றிலும் அப்புறப்படுத்துவதே இதன் பின்னணியில் உள்ள தந்திரமாகும்.

பொதுவாக பார்ப்பனீயம் என்பதே மறைந்திருந்து தாக்கும் யுக்தியுடையதாகும்; வாலியை மரத்தின் மறைவிலிருந்து தாக்கவில்லையா கோழை இராமன்?
ஆரியர்களுக்கு ஆபத்துவரும் பொழுதெல்லாம் இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்று ஆச்சாரி யார்கள் சொல்லுவதன் பொருள் இதுதான்.

மத்தியில் பிஜேபி தலைமையிலான ஆட்சி அமைந்து ஏழரை மாதங்கள் ஆவதற்குள்ளாகவே கா(லி)விவெறித்தனம் கண் மூடித்தனமாக குதியாட்டம் போட ஆரம்பித்து விட்டது; இன்னும் சொச்ச காலம் எப்படி போகுமோ என்ற பீதியில் மக்கள் உறைந்து இருக்கிறார்கள்.

இதே மக்கள் நினைத்தால் இந்த மத்தியக் காவி ஆட்சிக்குத் தக்க பாடம் கற்பிக்கலாம்; நடக்கவிருக்கும் ஒவவொரு தேர்தலிலும் வாக்குச் சீட்டு மூலம் பாடம் கற்பிக்க வேண்டும்; இன்னொரு பக்கத்தில் மிக முக்கியமாக இந்துத்துவாவின் கேடு கெட்ட கோட் பாட்டை உள்வாங்கிக் கொள்வது மிக மிக முக்கியமாகும்.

தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு மூலி கையே இதற்கான கை கண்ட மாமருந்து என்பதையும் மறக்க வேண்டாம்!

Read more: http://viduthalai.in/page-2/94197.html#ixzz3OKHNFQ85

தமிழ் ஓவியா said...


உலகின் முதல் அரசியல் தீவிரவாதி சாணக்கியன்தான்

எத்தகைய குற்றத்தைச் செய்யச் சொன்னாலும் அதனைச் செய்யத் தயாராக இருக்கும் 14 வயது சிறுவன் ஒருவனை அப்போது பார்த்துவிட்டதால், நந்த அரசனின் மீது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துவதுதான் சாணக்கியனின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருந்தது. தனநந்தனின் சாம்ராஜ்யம் விரிந்து பரந்திருந்தது. தனநந்தனின் காலத்தில் மகத சாம்ராஜ்யம் கங்கைச் சமவெளியைக் கடந்து பரந்திருந்தது; மகதநாட்டுக்கு வடக்கே இருந்த ஆர்யவர்த்தத்தின் பல ராஜ்யங் களை தனநந்தன் கைப்பற்றி தனது சாம்ராஜ் யத்துடன் இணைத்துக் கொண்டான். அவனது சாம்ராஜ்யம் அரபிக் கடல் வரை விரிந்திருந்தது.

ஆரியர்களைப் பொறுத்தவரை, ஒரு அரசன் என்றால் அவன் ஒன்று ஆரியனாக இருக்க வேண்டும் அல்லது ஆரியர் களுக்குக் கீழ்ப்படிந்தவனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கீழ்ப்படியாத ஆரியன் அல்லாத அரசனை பதவியிழக்கச் செய்ய ஆரியர்கள் என்ன வேண்டு மானாலும் செய்வார்கள். இதற்குக் கடந்த கால மற்றும் நிகழ்கால வரலாற்று உண்மை களே தக்க சான்றுகளாகும். அன்று இருந்த ஆரியர்களில் மிகமிகக் கொடூரமானவன் இந்த சாணக்கியன் என்றும், தனநந்தன் மீது அளவற்ற வெறுப்பும் பகையும் கொண்டி ருந்தான் என்றும் இந்தியாவின் புத்தமதப் பேரரசர் அசோகா என்ற தனது நூலில் ஏ. வின்சென்ட் கூறுகிறார்.

இவ்வாறு தனநந்தன் மீது அளவற்ற அடக்கமுடியாத வெறுப்பும், பகையும் கொண்ட சாணக்கியன் தனது கூலிப் படையினர் தொடர்ந்து வர, உஜ்ஜ யினியைத் தலைநகராகக் கொண்ட முன் னாள் அவந்தி நாட்டிலிருந்த காடுகளில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான் இந்த அவந்தி நாடும் நந்தன் காலத்தில் மகத ராம்ராஜ்யத்துடன் இணைக்கப்பட்ட ஒரு பகுதியாகும். நந்தனுக்கு எதிராக என்ன பொய் சொல்லி மக்களை ஏமாற்றலாம் என்று சிந்தித்துக் கொண்ட காட்டினில் திரிந்து கொண்டிருந்தபோது, காட்டின் ஓரத்தில் இருந்த ஒரு கிராமத்தை அடைந்தான்.


தமிழ் ஓவியா said...

தட்டில் சூடாக வைத்துக் கொடுக்கப்பட்ட உணவில் தட்டில் நடுவில் இருந்த உணவை எடுக்க முயன்று தனது விரல்களை சுட்டுக் கொண்ட தனது மகனை ஒரு தாய் திட்டிக் கொண்டி ருந்ததை சாணக்கியன் தற்செயலாகக் கேட்க நேர்ந்தது. தட்டின் ஓரங்களில் உள்ள உணவை முதலில் எடுத்து உண்டுவிட்டு பிறகு மத்தியில் உள்ள உணவை எடுத்து உண்ணுமாறு தனது மகனுக்கு அத்தாய் அறிவுரை அளித்துக் கொண்டிருந்தாள். அதைக் கேட்டதும் சாணக்கியனின் மனதில் பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது. தனநந்தனின் சாம்ராஜ்யத்தின் எல்லை ஓரங்களில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவன் முடிவு செய்தான். என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது அவன் அறிந்திருந்தான்.

எல்லையோரத்தில் கொள்ளைக்காரர்களுடன்
இரண்டு மடங்கு புத்துணர்வும், தூண்டு தலும் பெற்றவனாக சாணக்கியன் அருகில் இருக்கும் ஒரு கிராமத்துக்குச் சென்று, மிகவும் ரகசியமாகவும், எச்சரிக்கையுடனும் அப் பகுதியில் இருந்த, தங்களது வாழ்க்கைக்காக நேர்மையாக உழைக்காமல் பொருளைத் தேடும் திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கொலை காரர்கள் மற்றும் இதர சமூக விரோதிகள் பற்றிய விவரங்களைத் திரட்டினான். தனக்கே சொந்த மான ஒரு கொள்ளை, கொலைகார கும்பலை அவன் திரட்டத் தொடங்கினான்.

காட்டில் ஓரிடத்தில் அவர்களையெல்லாம் திரட்டிய சாணக்கியன், கீழ்க்கண்டவாறு அவர்களுக்கு உபதேசித்தான்: எனதருமை மக்களே, உங்கள் கிராமத்தில் சில சில்லறைத் திருட்டுகளிலும், குற்றங்களிலும் ஈடுபட்ட நீங்கள், பிடிபட்டபோது தண்டிக்கப்பட்டுள் ளீர்கள். பிடிபட்டால் நீங்கள் பெறும் தண் டனைக்கு ஏற்ற அளவுக்கு இவற்றில் கிடைக்கும் வருமானம் இருப்பதில்லை. எந்த சந்தேகமும் கொள்ளாமல், எந்த கேள்வியும் கேட்காமல் நான் கூறுவதையெல்லாம் செய்து முடிப்பதாக எனக்கு நீங்கள் வாக்குறுதி அளித்தால், விரைவில் உங்களை நான் பணக்காரர்களாக, மிகப் பெரிய பணக்காரர்களாக ஆக்குவேன்.

உங்களது சில்லறை திருட்டுகளும், தனித் தனியாக அடிக்கும் கொள்ளைகளும் பணக் காரர்களாக ஆகவேண்டும் என்ற உங்களது இலக்கை அடையும் இடத்திற்கு உங்களைக் கொண்டு செல்லமாட்டா. உங்களை மாபெரும் பணக்காரர்களாக நான் ஆக்குகிறேன். அவ் வாறு பெரும் அளவுக்குப் பணம் உங்களுக்குக் கிடைத்துவிட்டால், இந்த உலகத்து இன்பங்களை எல்லாம் நீங்கள் விரும்பியபடி அனுபவிக்கலாம்.

ஆனால், இதற்கான ஒரே நிபந்தனை என்னவென்றால், நான் என்ன சொன்னாலும் அதை நீங்கள் செய்யவேண்டும் என்பதும், இச் செய்திகளை நீங்கள் எப்போதும் மிகமிக ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பதும்தான். எனது அறிவுரையை தவறாமல் கடைபிடித்தால், இதனால் உங்களுக்கு எந்த வித ஆபத்தும் நேராது என்று உங்களுக்கு உறுதியளிக்க என்னால் முடியும். இதற்குத் தயாராக இருந்தால் எனது குழுவில் நீங்கள் சேரலாம்.

அங்கு கூடியிருந்த சமூக விரோதக் கும்பல் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சமூக ஒழுங்கிற்கோ, சட்டதிட்டங்களுக்கோ அவர்கள் எப்போதுமே கட்டுப்படுவதில்லை. நேர்மை யான உடலுழைப்பு மேற் கொள்ளாமலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக ஆவதற்கான வாய்ப்பு தங்கள் முன் இருக்கிறதென்பதை உணர்ந்த பிறகு, அந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளாமல் இருப்பதற்கான கார ணங்கள் எதுவும் அவர்களுக்கு இருக்க வில்லை.

தாங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்படப்போகிறோம் என்ற கேள்வியைக் கேட்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. அவர்களது ஒரே ஆசை தாங்கள் பணக்காரர்களாக ஆகவேண்டும் என்பதும், அதுவும் உடலுழைப்பு இல்லா மலேயே விரைவிலேயே ஆக வேண்டும் என்பதும்தான். தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பைப் பற்றி சிந்திப்பதற்கு அங்கு கூடி யிருந்த குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் களுக்கு அதிக நேரம் தேவையாக இருக்க வில்லை. சாணக்கியன் தனது பேச்சை முடித்த பிறகு, அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

தமிழ் ஓவியா said...


ஒரே நேரத்தில் தங்களது பதிலை சொல்வதற்கு கூட்டத்தில் இருந்த அனைவரும் முயற்சி செய்தனர். நீங்கள் என்ன உத்தரவிட்டாலும் சரி அதனை நிறைவேற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும், இது பற்றி நாங்கள் உங்களை எந்தக் கேள்வியும் கேட்கமாட்டோம் என்றும் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குக் கூறுங்கள். இன்றே அதை நாங்கள் செய்து முடிக்கிறோம் என்றும் எப்போதும் எங்கள் செயல்களை நாங்கள் மிகமிக ரகசியமாக வைத்திருப்போம் என்றும் அவர்கள் பலவாறு பதில் கூறினர்.

இந்த நேரத்துக்காகவும், இந்த பதிலுக்கு மாகவும் காத்திருந்த சாணக்கியன், பேச்சும் சந்தடியும் ஓய்ந்து அமைதி திரும்புவதற்காக காத்திருந்துவிட்டு, பின்னர் அவர்களைப் பார்த்து, எனதருமை மக்களே. ஓர் ஒழுங்கு முறையில் ஏற்பாடு செய்யாவிட்டால் நம்மால் எதையுமே சாதிக்கவோ, அடையவோ முடி யாது. அதனால், உங்களில் இருந்து ஒருவரை தலைவராக நான் நியமிக்கிறேன். என்னிட மிருந்து அவருக்கு நேரடியாக அறிவுரைகள் வரும். அவரது உதவி தலைவர்களாக உங்களில் மூவர் இருக்கப்போகிறீர்கள்; இந்த மூவருக்கும் உங்கள் தலைவர் எனது அறிவுரைகளைத் தெரிவிப்பார்.

தமிழ் ஓவியா said...


இந்த உதவித் தலைவர்கள் ஒவ்வொருவரும் பத்துபேரிடம் பேசி தொடர்பு வைத்துக் கொள்வார்கள். இந்த ஏற்பாட்டை எவருமே மீறக்கூடாது. உங்களது நலனுக் காகவும், பாதுகாப்புக்காகவுமே இந்த நடை முறை வகுக்கப்பட்டுள்ளது. சங்கிலித் தொடர் போன்ற இந்தத் தொடர்பு உடையாத வரையில், உங்கள் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க நான் உறுதி அளிக்கிறேன்.

ஒற்றர் வலைப்பின்னல் அமைப்பு
சாணக்கியன் விதித்த நிபந்தனைகளை எதற்கும் கட்டுப்படாத அச்சமூக விரோ திகள் கூட்டம் ஏற்றுக் கொண்டது. பின்னர், அவர்களைக் கலைந்து தங்கள் இடத்துக்குச் செல்லும்படி கூறிய சாணக்கியன் இன்ன மும் ஒரு வார காலத்திற்குள் தனது உத்தரவு வரும் என்றும் அதற்காகக் காத்திருக்கும் படியும் அவர்களிடம் கூறினான். அதற் கடுத்த நாள், தான் அமைத்த குழுவிற் குள்ளே இருக்கும் தந்திரம் மிகுந்த திருடன் ஒருவனைக் கூப்பிட்டு அனுப்பினார். அங்கு வந்த அவனிடம் சாணக்கியன் கூறியதாவது: தம்பி, இதோ பார். உன்னை இக்கூட்டத்தின் தலைவனாகவோ, உதவித் தலைவனாகவோ அனைவரும் அறியும்படி நான் நியமிக்கவில்லை.

தமிழ் ஓவியா said...

என்றாலும் அனைவரையும் விட நீதான் புத்திசாலி என் பதையும் நான் அறிவேன். மற்றவர்களை விட நீதான் எனக்கு முக்கியமானவன். எனது ரகசியமான அமைப்பில் நீ நியமிக் கப்படுகிறாய். இந்தக் குழுவின் அனைத்து உறுப்பினர்கள், குழுத் தலைவன், உதவித் தலைவர்கள் ஆகியோரின் நடவடிக்கை களைப் பற்றி நீ நேரடியாக என்னிடம் மட்டிலுமே எந்தத் தகவலையும் தெரிவிக்க வேண்டும். இதற்காக உனக்கு சிறப்பான வெகுமதி அளிக்கப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன். அனைவரின் நடவடிக் கைகள் பற்றி என்னிடம் நீ தெரிவிக்கிறாய் என்பதை எவருக்கும் நீ தெரிவிக்கக்கூடாது. இல்லையென்றால் அவர்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள் அல்லவா?

இந்த வாய்ப்பை மறுப்பதற்கான காரணம் அந்தத் திருடனிடமுமில்லை. அதிகார மய்யத்துக்கு மிகவும் நெருக்க மானவனாக தான் ஆவப்போவதைப் பற்றியும், அதற்காக கூடுதல் வெகுமதி கிடைப்பது பற்றியும் அவனுக்கு மகிழ்ச் சியே. மிகுந்த மகிழ்ச்சியுடன் அவன் இந்த ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டான். இதன் மூலம் அவன் ஓர் ஒற்றனாக ஆனான். தனக்குப் பதவி உயர்வு கிடைத்துவிட்டது போலவே அவன் உணர்ந்தான். சாணக் கியன் தந்த சில அடையாள வெகுமதிகளு டன் அவன் மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றான்.

வேறு ஒரு உதவித் தலைவன் கட்டுப்பாட்டில் இருந்த குழுவில் இருந்து மற்றொரு திருடனை சாணக்கியன் மறுநாள் அழைத்து, அவனையும் இதுபோலவே ஒரு ஒற்றனாக நியமித்தான். அதற்கும் மறுநாள் மூன்றாவது துணைத் தலைவனின் குழுவில் இருந்து வேறொரு திருடனையும் ஒற்றனாக நியமித்தான். இப்போது அதிகாரபூர்வமாக ஒரு தலைவன் மற்றும் அவனது துறைத் தலைவர்ளிடமிருந்து தகவல்களைத் திரட்டிப் பெற சாணக்கியனால் முடியும். அது மட்டுமல்லாமல், தனது மூன்று ஒற்றர்கள் மூலம் செய்திகளைப் பெறுவதற்கான ரகசிய வழியும் சாணக்கியனுக்கு இருந்தது. இப்போது அவனால், அக்குழுவில் இருக் கும் வேறு எவர் ஒருவரையும் விட அதிக அளவு தகவல்களைத் திரட்டிப் பெற முடியும். தகவல்தான் அதிகாரம்.

Read more: http://viduthalai.in/page-2/94194.html#ixzz3OKHgmh3u

தமிழ் ஓவியா said...

தலித் என்ற சொல்

தாழ்த்தப்பட்டவர்கள் என பட்டியல் படுத்தப்பட்ட மக்களைத் தற்போது தலித் என்ற சொல்லால் குறிப்பிடுவதை நிறைய அரசியல்கட்சிகளும், ஊடகங்களும் பின் பற்றி வருகின்றன. தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல்லிலும் ஆதிதிராவிடர்கள் என்ற சொல்லிலும் பொருள் இருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்கள், ஆதி திராவிடர்கள் ஆகிய சொற்களில் இருக்கக்கூடிய வரலாற்றை மறைப்பதற்கும் மறுப்பதற்கும் தலித் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர் என பட்டியல் படுத்தப்பட்ட மக்களின் தாய்மொழி தமிழ் ஆகும். ஒரு சமுதாயத்தின் அடை யாளத்தை அந்நிய மொழியில் தலித் என்று குறிப்பிடுவது ஏற்புடையதாகத் தெரிய வில்லை. தாழ்த்தப்பட்டோர் என பட்டியல் படுத்தப்பட்ட, மக்களிடையேயும் பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மக்களிடையேயும் நிரந்தர பிளவை ஏற்படுத்திடவே தலித் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தமிழிலிருந்து அவர்களை அந்நியப்படுத்தவே தலித் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

தங்கள் பெயரைத் தமிழில் வைக்க வேண்டும் என்று போராட வேண்டியிருக்கக் கூடிய இக்காலக் கட்டத்தில் ஒரு சமுதாயத்தின் பெயரையே தாய்மொழியில் அடையாளப்படுத்தாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. இந்தியா முழு வதிற்கும் ஒரு பொதுச் சொல் வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

பொதுச் சொல்லாக ஆங்கிலத்தில் எஸ்.சி./எஸ்.டி. என்ற சொல் இருக்கிறபோது மராட்டிய மொழியான தலித் என்ற சொல்லலால் தாழ்த்தப்பட்ட மக்களை அடையாளப் படுத்த வேண்டிய தேவை ஒன்றுமில்லை. தமிழில் பெரும்பாலான ஊடகங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் தலித் என்ற சொல்லைப் பயன்படுத்துகிற சூழலில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் இது வரை அந்தச் சொல்லைப் பயன்படுத்திய தில்லை.

விடுதலை, உண்மை ஆகிய இதழ்களின் தலையங்கத்திலும் தலித் என்ற சொல் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் சில நேரங்களில் விடுதலையில் இச்சொல் செய்திப் பக்கங்களில் வெளியாகிறது. இந்த வார்த்தையைத் தவிர்க்க வேண்டும் என அன்புடன் வேண்டுகோள் வைக்கிறேன்.

சி. செந்தமிழ்ச் சரவணன், குடியாத்தம்

Read more: http://viduthalai.in/page-2/94202.html#ixzz3OKIJYYwY

தமிழ் ஓவியா said...

பீடை மதம்

இன்றைய ஆன்மிகம்? என்ற பெட்டிச் செய்தியை (சனி 27.12.2014 திருச்சி பதிப்பு) படித்தேன்.
புத்தர் மறுபிறவியில்லா வீடுபேறு மரணமடைந்த மாதம் மார்கழி 28ஆம் நாளாகும். எனவே மார்கழி மாதம் பெருமைக்குரிய மாதம் என்னும் பொருளில் பீடு மாதம் என்று பௌத்த மதத்தினரால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

பவுத்தத்திற்கு எதிரான ஆரிய வேத மதத்தினர், இப்பீடு மாதம் என்பதை பீடை மாதம் எனத் திரிபு செய்து விட்டனர். அம்மாதத்தின் சிறப்பைச் சிதைத்து விட்டனர். தடு என்ற சொல்லும் தடை என்ற சொல்லும் ஒரே பொருள் தரவல்லது போல, பீடு என்ற சொல்லும் பீடை என்ற சொல்லும் ஒரே பொருள் தராது என்பது உணரத் தக்கதாகும்.

- தி. அன்பழகன், திருச்சிராப்பள்ளி

Read more: http://viduthalai.in/page-2/94202.html#ixzz3OKITrh47

தமிழ் ஓவியா said...

அருகதையற்றவர்கள்


பேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிரதாய முறைகளையும், ஸ்தாப னங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற, ஒழிக்கத் துணிவு கொள்ள வேண்டும். இந்தத் துணிவு கொள் ளாத எவரும் சமதர்ம முயற்சிக்கு அருகதை அற்றவர்களே ஆவார்கள்.
(விடுதலை, 7.7.1965)

Read more: http://viduthalai.in/page-2/94182.html#ixzz3OKIZcaqo

தமிழ் ஓவியா said...

இவ்விதம் ஆணையும் எருமையையும் கொன்று ரத்தம் குடிப்பதாகப் புராணக் கதை சித்தரித்துக் காட்டும் பெண் உருவத்தை வணங்கினால் ஏற்படும் குணபாவங்கள் எத்தகையதாக இருக்கும்

-சிந்தியுங்கள் - அறிவு - தெளிவுபட!

(காளி உருவச்சிலைகளையும், படங்களையும் பார்த்திருப்பீர்கள்- அதில் மகாகாளி பைரவி என்ற பெண் உருவம் பல கொலை ஆயுதங்கள் கொண்ட பல கைகள்.

சாதாரண ஆடையணியாத நிர்வாண கோலம் - இடுப்பிலே, மனிதர் கால் கைகளின் எலும்புகளைக் கோர்த்து, ஒட்டி இறக்கத்துக்கு ஆடை போல் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் - கழுத்திலே மனித மண்டை ஓடுகள் கோர்த்த மாலை - வாயிலே கோரப் பற்களிடையே ரத்தம் வடியும் குடல்கள், காலடியிலே - வயிறு கிழிக்கப்பட்ட ஆணுருவம்.)

விடுதலை 4.11.1969

Read more: http://viduthalai.in/page-7/94196.html#ixzz3OKJ3wDzb

தமிழ் ஓவியா said...

கடவுள்


1. கடவுளைக் காப்பாற்ற மனிதன் புறப்பட்டதாலேயே கடவுளின் பலவீனம் விளங்குவதோடு கடவுள்களுக்கு வரவர பலவீனம் ஏற்பட்டு ஆபத்தும் பலப்பட்டு வருகிறது.

2. கடவுள்கள் இல்லாவிட்டால் அரசன் இருக்க முடியாது. அரசன் இல்லாவிட்டால் பணக்காரன் இருக்க முடியாது. பணக்காரன் இல்லாவிட்டால் உயர்ந்த ஜாதிக்காரன் இருக்க முடியாது. ஆகவே இவை ஒன்றையொன்று பற்றிக் கொண்டிருக்கின்றன.

3. பெரும்பாலும் சுயநலக்காரர்களும் தந்திரக்காரர் களுமே கடவுளையும், வேதத்தையும், ஜாதியையும் உண்டாக்கு கிறார்கள்.

4. கடவுள் உண்டானால் பேய் உண்டு. பேய் உண்டானால் கடவுள் உண்டு. இரண்டும் ஒரே தத்துவங் கொண்டவை.

5. இந்தியாவில் காகிதம், புத்தகம், எழுத்து, எழுது கருவி எல்லாம் சரஸ்வதியாக பாவிக்கப்பட்டு வணங்கி வந்தாலும் 100-க்கு 5 பேர்களே படித்திருக்கின்றார்கள்.

6. மேல்நாட்டில் காகிதங்களினால் மலம் துடைத்து சரஸ்வதியை அலட்சியம் செய்தும் அங்கு 100-க்கு 90 பேர்கள் படித்திருக்கிறார்கள்.

7. கோயில்கள் சாமிக்காக கட்டியதல்ல. வேறெதற்காக என்றால் ஜாதியைப் பிரித்துக்காட்டி மக்களைத் தாழ்த்தவும், பணம் பறித்து ஒரு கூட்டத்தார் பிழைக் கவும், மக்களை அறியாமையில் வைத்து அடிமை களாக்கவும் கட்டப்பட்டதாகும்.

8. எவனொருவன் கடவுளிடத் திலும் அதைப் பற்றிச் சொல்லும் மதக் கொள்கை இடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங் களும் அவர்களுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக் கிறானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதத்தை வாயினால் உச்சரிக்கக் கூட யோக்கியதையற்ற வனாவான்.

9. சுயமரியாதைக்காரன் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனி தனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப் போய்விட்டது. ஆனால் நமது நாட்டில் அந்த செத்த பிணம் அழுகி நாறிக் கொண்டி ருப்பதை எடுத்துப் புதைத்து, நாறின இடத்தை லோஷன் போட்டுக் கழுவி சுத்தம் செய்கின்ற வேலையைத்தான் சுய மரியாதைக்காரன் செய்து கொண்டிருக் கின்றான்.

10. பத்துமாதக் குழந்தையை கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

11. கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பானைச் சாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை.

-தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/94195.html#ixzz3OKJBCYYp

தமிழ் ஓவியா said...

இந்து மதம் பற்றி....


நாம் யாருக்கும் மேல் அல்ல; யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது. தர்ப்பை ஆகாது சேரியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது, யோக யாகப் புரட்டுகள் மனிதர் யாவரும் சரி நிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை இந்து என்று கூறிக் கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை - சூத்திரன் என்று கூறிக் கொள்ள எப்படித்தான் மனம் இடந்தரும்?

எப்படித்தான் துணியும்? இந்துமதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாயமுறை, மதக் கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப் பார்த்த பிறகு யாருக்குத் தான் தன்னை ஓர் இந்து என்று கூறிக் கொள்ள மனம் இடந்தரும், பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களை விட்டு, மதி கெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா?

மீளமார்க்கம் தேடுவதை விட்டு, மாள வழித் தேடிக் கொள்வாரா?

விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும் போது குழியில் வீழ்வார? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு திராவிடர் தனி நிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் இந்து மார்க்கத்தில் போய்ச் சேர இசைவாரா?

வீரர் திராவிடர் என்ற உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர் இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!!

- அறிஞர் அண்ணா
(ஆரியமாயை என்ற நூலில்)

Read more: http://viduthalai.in/page-7/94198.html#ixzz3OKJK6OWs

தமிழ் ஓவியா said...

திருக்குறள் தேசிய நூல் தி.க., திமுக தீர்மானங்கள்
திருக்குறள் தேசிய நூல்

தி.க., திமுக தீர்மானங்கள்6-7-2002 அன்று சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக இளை ஞரணி மாநாட்டில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

...

4,3.2006 அன்று திருச்சிராப்பள்ளி யில் கூடிய தி.மு.க. 9ஆவது மாநில மாநாடு தி.மு.க. இளைஞரணி வெள்ளி விழா மாநாட்டில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Read more: http://viduthalai.in/page4/%20_94227.html#ixzz3OPoypgJQ

தமிழ் ஓவியா said...

சோதிடம் தோல்வி

இலங்கை அதிபர் தேர்தலில் சந்தடி சாக்கில் ஒன்றை மறந்து விடக் கூடாது; மறந்தால் நல்லது; மறக்காவிட்டால் தங்கள் பிழைப்புப் போய் விடுமோ முகத்திரை கிழிந்து தொங்கி விடுமோ என்று கவலைப்படுபவர்கள் வேறு யார்? சோதிடர்கள் தான்.

இலங்கைத் தீவில் தேர்தலை நடத்தும் தேதி யைக்கூட சோதிடர்கள் தான் நிர்ணயித்தார்கள் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?

இலங்கையில் முன் னணி சோதிடர்களான சுமனதாச அபேகுணவர் தன மாபலகம விமலரதன மற்றும் சந்திரசிறி பண் டார ஆகியோர் ராஜபக்சேயின் வெற்றி உறுதி என்று அடித்துச் சொன்னார்கள். லக்ன மெல்லாம் சுத்தமாக இருக்கிறது - மீண்டும் அதிபர் ராஜபக்சேதான் என்றனர் அந்த சோதி டர்கள்.

ராஜபக்சேவுக்கு ஜெயபேரிகை கொட்டிய தோடு அந்த சோதிடர்கள் நின்றார்களா? அதையும் தாண்டி ஒன்றைச் சொன் னார்கள். எதிர்த்து நிற்கும் மைத்திரி பாலசிறீசேனா விற்கு அதிபர் பதவிக் கான ராஜயோகம் அறவே கிடையாது என் றும் துணிந்து சொன் னார்கள்.

இரண்டுமே நடக்க வில்லை; இதற்குப் பிற காவது சோதிடம் என்பது எத்தகைய பித்தலாட்டம் என்பதை மக்கள் உணர வேண்டாமா?

சோதிடர்கள் சொல் லுவதைப் பார்த்தால் தேர்தலில் நிற்கக் கூடிய வேட்பாளர்களின் ஜாத கம் மட்டுமல்ல; வாக் களிக்கும் மக்களின் ஜாதகம்கூட ஒன்றாகவே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தானே குறிப்பிட்ட வேட்பாள ருக்கு வெற்றி வாய்ப்புக் கிட்ட முடியும்?

இதுசாத்தியம்தானா? பிறந்த நேரம்தான் எல் லாவற்றிற்கும் அடிப் படை என்று பொதுவாக சோதிடர்கள் சொல்லு வார்கள்; அவர்களைப் பார்த்து நறுக்கென்று அறிவு ரீதியாக ஒரு கேள்விக் கணையை வீசி னால் அவை விதாண்டா வாதம் என்று சொல்லித் தப்பிக்கப் பார்ப்பார்கள்.

ஏனய்யா சோதிட சிகாமணியே! நில நடுக் கத்தில் லட்சக்கணக்கில் மக்கள் ஒரு நொடியில் புதையுண்டு சாகிறார் களே- இரயில் விபத்தால் ஆயிரக்கணக்கில் மடி கிறார்களே - விமான விபத்தில் நூற்றுக்கணக் கில் பலியாகிறார்களே - இவர்கள் அத்தனைப் பேர்களுமே ஒரே நேரத் தில் லக்னத்தில் பிறந்த மானிடர்களா? என்று கேட்டும் பாருங்கள் - முகம் சுருங்கிப் போய் விடும். இதற்கு அண்மை எடுத்துக்காட்டு (லேட் டஸ்ட்) ராஜபக்சே தோல் வியே!

சோதிடத்தை நம்பி தான் தேர்தலில் நிற்கி றேன் என்று அத்வானியை எதிர்த்து நின்றார் ஓய்வு பெற்ற தலைமைத் தேர் தல் ஆணையர் டி.என். சேஷன்; வென்றாரா? கட்டிய பணத்தையோ வது (டெபாசிட்) திரும்பப் பெற முடியவில்லையே!

சோதிடம் ஆருடம் என்பவை அசல் அக்கப் போர்களே!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/94303.html#ixzz3Obb6OZUG

தமிழ் ஓவியா said...

அதிகாரிகளுக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவேண்டும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, ஜன.11_ எஸ்.சி\எஸ்.டி பிரிவு களைச் சேர்ந்த வங்கி அதிகாரிகளுக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப் படவேண்டும், என்று ஒரு முக்கியமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி யுள்ளது. வங்கி உயர்பதவிகளில் பணிபுரியும் அதிகாரி களின் பதவி உயர்வின் போது இட ஒதுக்கீட்டை புறக்கணிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட வர்க் கத்தைச் சேர்ந்த அதி காரிகளுக்கே பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இதற்கான காரணமாக திறமை முன்வைக்கப்பட் டது.

இப்பாரபட்சமான இட ஒதுக்கீட்டின் காரண மாக எஸ்.சி\எஸ்.டி பிரிவு களை சேர்ந்த அதிகாரி களுக்கான பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து பல்வேறு காலகட்டங் களில் வங்கி அதிகாரி களுக்கான எஸ்.சி\எஸ்.டி பிரிவு தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்தன. ஆனால் வங்கி நிர்வாகம் இவர்களின் கோரிக்கை களைப் புறந்தள்ளிவிட் டது. இதனை அடுத்து எஸ்.சி\எஸ்.டி வங்கி அதி காரிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

இவ்விவகாரம் குறித்து பதில் அளிக்க வங்கி களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியது. இதற்கு பதிலளித்த சென்ட்ரல் வங்கி தன்னுடைய பதில் மனுவில் குறிப்பிட்டதா வது, உயர் பதவிகளில் திறமை மற்றும் மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் மாத்திரமே பதவி உயர்விற்கு பரிசீலிக்கப் படும், இட ஒதுக்கீடு என்பது வங்கியில் பல் வேறு பிரிவுகளில் (கணக் காளர் முதல்) பதவி உயர்விற்குப் பயன்படுத்தப் படுகிறது, ஆனால் குறிப் பிட்ட உயர்பதவிகளில் இட ஒதுக்கீட்டை விட திறமை மற்றும் மூப்பு (சீனியாரிட்டி) முக்கிய மாக எடுத்துக் கொள்ளப் படுகிறது என்று குறிப் பிட்டிருந்தது.

எஸ்.சி\எஸ்.டி வங்கி அதிகாரிகள் மற்றும் வங் கியின் பதில் மனுக்களை விசாரணை செய்த செல மேஸ்வர் மற்றும் ஏகே சிகரி தலைமையினாலான நீதிமன்ற அமர்வு முக்கியத் துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. அத்தீர்ப்பின் விவரம் வருமாறு இட ஒதுக்கீடு என்பது அனைத் துப் பிரிவு பணிகளுக்கும் பொதுவான ஒன்றாகும், இதற்கு முன்பு வழங்கப் பட்ட பல்வேறு தீர்ப்பு களில் அதிகாரிகளின் பதவி உயர்வின் போது இட ஒதுக்கீடு பின்பற்றப் பட்டுள்ளது. இதனடிப் படையில் வங்கிகளுக்கும் அந்த தீர்ப்பு பொருந்தும், பதவி உயர்வின் போது பதவி உயர்வுபெற்ற அதி காரிக்கான அனைத்து சலு கைகளும் கிடைக்கவேண் டும். ஊதியவிகிதத்தில் ஒரே மாதிரியான உரி மைகள் கேட்டுப்பெற பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கு முழு உரிமை உண்டு. எந்தக் காரணங்களைக் கூறியும் இட ஒதுக்கீடு தொடர் பான விவகாரத்தில் வங்கிகள் தலையிடுதல் கூடாது.

வங்கியில் உள்ள அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீட்டைக் கடைப் பிடிக்க வேண்டும். வங்கி அதிகாரிகள் பிரிவு ஒன்று முதல் பிரிவு ஆறு வரை மாத்திரமே இட ஒதுக்கீடு கடைப்பிடிப் போம் என்ற வங்கியின் பதிலை ஏற்க முடியாது, பிரிவு ஆறு வரை வங்கி கள் இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்கும் போது பிரிவு ஏழு மட்ட அதி காரிகளுக்கான பதவி உயர்வின் போது இட ஒதுக்கீட்டை கடைப் பிடிப்பதில் ஏன் சிக்கல் எழுகிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பதவி உயர்வின் போது அனைத்துப் பிரிவுகளிலும் இட ஒதுக்கீட்டை கட்டா யம் கடைப்பிடிக்க வேண்டும் என்று தனது தீர்ப்பில் கூறினர்.

மேலும் வங்கியின் தரப்பில் தாக்கல் செய் யப்பட்ட மனுவை தள்ளு படி செய்த நீதிபதிகள் எஸ்.சி\எஸ்.டி பிரிவு வங்கி அதிகாரிகளுக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டின் மூலமே முக்கிய முடிவுகள் எடுக் கப்படவேண்டும் வங்கிகள் நீதிமன்றத்தின் ஆணையை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறினர்.

Read more: http://viduthalai.in/e-paper/94305.html#ixzz3ObbUUHKR

தமிழ் ஓவியா said...

யாகசாலையில் இளைஞர்கள் உயிரிழப்பு புரோகிதப் பார்ப்பனர்கள் தலைமறைவு


மதுரா, ஜன. 11- உத்தரப் பிரதேச மாநிலத் தில் உள்ள மதுராவில் பாங்கி பிஹாரி கோவி லுக்கு அருகேயுள்ள யாக சாலையில் சந்தேகத் திற்கிடமான முறையில் மூன்று இளைஞர்கள் இறந்து கிடந்தனர். இறந்தவர்கள் மூவரும் ஆகாஷ், கல்யாண், மனோஜ் என்பது காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் இறந்ததற்கான காரணம் தெளிவாகத் தெரியவில் லையென்றும் மூவரின் உடல்களும் பிணக்கூறு ஆய்விற்கு அனுப்பப்பட் டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்திருந்தது.

கோயில் உதவியாளர் களாக இருந்த மூவரும் யாகசாலையில் தூங்கிய போது மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என கோவிலில் உள்ள புரோகி தர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மூவர் இறந்த வழக்கில் கொலை மற்றும் வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஆனந்த் கிஷோர் கோஸ் வாமி மற்றும் ஜீகல் கிஷோர் கோஸ்வாமி என்ற இரண்டு புரோகி தர்கள்மீது பிருந்தாவன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர்கள் குடும்பத்துடன் தலை மறைவாகி விட்டனர். அவர்களை காவல்துறை யினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/94309.html#ixzz3ObbblIUi

தமிழ் ஓவியா said...

திருச்சி சிறீரங்கம் பிரம்ம ரதத்தை மனிதர்கள் தூக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் நடத்தி கைதானவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டினார்


திருச்சி சிறீரங்கம் பிரம்ம ரதத்தை மனிதர்கள் தூக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் நடத்தி கைதானவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டினார்


திருச்சி சிறீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வைகுண்ட ஏகாதசியின் போது சொர்க்கவாசல் திறப்புக்கு பின்னர் வேதம் ஓதும் பார்ப்பனர்களான அரையான் குடும்பம், பட்டர் அய்யர், வேத வியாசகர், பராசுர பட்டர் ஆகியோரை கோவிலிலிருந்து அவர்களது வீடுவரை பல்லக்கில் சுமந்து செல்வதும், இதனை பிரம்ம ரத மரியாதை என்றும், நீண்டகாலமாக பார்ப்பனர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதனை சீமான் தாங்கி (பிரம்ம ரதம்) என்று அழைக்கின்றனர்.

பிரம்ம ரதமுறையை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் சிறீரங்கம் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டித்து உரையாற்றினார். மேலும் பல்வேறு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்தனர். மனிதனை மனிதன் (பார்ப்பனர் களை) சுமக்கும் அவலத்தைக் கண்டித்து கடந்த 2011 தி.மு.க. ஆட்சியில் அப்போதிருந்த கோவில் இணை ஆணையர் ஜெயராமன் இந்த முறைக்கு தடைவிதித்தார்.

தடை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையை பார்ப்பனர்கள் அணுகினர். ஆனால், நீதிமன்றம் அவர்களைக் கடுமையாக எச்சரித்து அனுப்பியது.

இந்நிலையில் நீதிமன்ற தடையை மீறி சிறீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் ஏற்கெனவே திட்டமிட் டப்படி பிரம்ம ரத முறையை நேற்று (ஜன.10) நடத்திட ஏற்பாடுகளை செய்து வந்தனர். நேற்று மதியம் 12.30 மணியளவில் ரங்கநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அரையான் குடும்பம், பட்டர் அய்யர், வேதவியாசகர், பராசுர பட்டர் ஆகியோர் பிரம்ம ரத முறையை ஏற்றுக்கொண்டு பல்லக்கில் செல்லத் தயாராக இருந்தனர். அப்போது கோவில் வெளியே திராவிடர் கழகத்தினர் மாவட்ட தலைவர் மு.சேகர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு விடுதலை செய்யப்பட்டனர். அத்தோழர்கள் நேற்று (10.1.2015) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தனர்.

மறியலில் ஈடுபட்டு கைதான தோழர்களைப் பாராட்டும் விதமாக, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், திருச்சி மாவட்ட கழகத் தலைவர் சேகர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து, தோழர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/94286.html#ixzz3ObcTiLIc

தமிழ் ஓவியா said...

குயில் இதழில் புரட்சிக் கவிஞர்

போர்! தமிழ்ப் போர்!!

நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி, மிகப் பழமை வாய்ந்தது. அம்மொழி பல மொழிகளுக்குப் பெற்ற தாயாகவும், பல மொழிகளுக்கு வளர்ப்புத் தாயாகவும் இருந்து வந்துள்ளது.
தமிழ்மொழி இங்கு வந்து புகுந்த எதிரிகள் பலரால் சாகடிக்கப் பட்டதோ என்ற நிலையிலும் சாகாத மொழி. மறைக்கப்பட்டு விட்டதோ என்று எண்ணிய நிலையிலும் மறையாது வாழும் மொழி.

ஆயினும், தமிழை ஒழிப்பதன் மூல மாகத் தான் தமிழரை ஒழிக்க முடியும் என்ற முடிவோடு அதன் வளர்ச்சியில் எதிரிகள் தலையிட்டதில் அதன் வளர்ச்சி குன்றிற்று என்பது மறுக்க முடியாது.
தமிழ்மொழி எண்ணிலாத நல்ல இலக்கிய வளமுடைய மொழி. அவ்வி லக்கிய விளக்குகள், உலகை மூடியிருந்த இருளை ஓட்டியது என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. நடு நிலை உலகமே சொல்லும்.

தமிழிலக்கியங்கள் தம் வேலையை மன நிறைவு உண்டாகும்படி முடித்த பின்னரே அது எதிரிகளால் குன்றும் நிலையை அடைந்தது என்பது கருதிநாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

தமிழ் மொழியில் - தமிழ் இலக்கியங் களில் அயலார் புகுந்தனர் என்பதும், புகுந்து கை வைக்கவும் அவர்கட்கு வாய்ப்புக் கிடைத்தது என்பதும் துன்புறத் தக்கதேயாகும்.

நம் தாய்மொழி இன்று என்ன நிலையை அடைந்திருக்கிறது என்பதை நாம் நினைக்கும் தோறும் அந்நினைப்பு நம் நெஞ்சுக்கு நெருப்பாகி விடுகின்றது.

தமிழை ஒழிக்கும் நோக்கமுடைய வர்க்கு இத்தமிழ் நாட்டில் சலுகை மிகுதி, அவர்கள் தமிழரின் அண்டை யிலேயே குடித்தனம் பண்ணுகின் றார்கள். தமிழ்த் தாயை ஒழிக்கச் சொல் லித் தமிழரையே பிடிக்க அவர்கட்குச் செல்வாக்கு உண்டு.

தமிழ் ஓவியா said...

தாய்மொழியை எதிர்க்கும், அதைக் கொல்ல நினைக்கும், கொல்ல நாடோ றும் ஆவன செய்து வரும் ஒரு கூட் டத்தை நம் தமிழரிற் சிலரே நடத்து கிறார்கள். அவர்கள் சொன்னபடி இவர்கள் ஆடுகின்றார்கள். மானத்தை விடுகின்றார்கள். வயிறு வளர்ப்பதே நோக்கம் என்கிறார்கள்.

எதிரிகளைக் கொண்டே எதிரிகளின் கண்ணைக் குத்த வேண்டும் என்று எண்ணும் நம் இன எதிரிகளுக்கு ஆளாகி விடுகின்றார்கள். அன்னை நாடோறும் பட்டுவரும் பாடுஇது. கன்னல் தோறும் கண்டு வரும் இன்னல் இது. என் அன்புத் தமிழர்கள் தம் நெஞ்சு அரங்கிற்குத் திருப்புக முகத்தை, அழ வேண்டாம் எழுக!

அந்தத் தீயர்களை வாழ்த்த வேண் டும் அவர்கள் தீச்செயலுக்கு நன்றி கூற வேண்டும். தமிழுக்குத் தமிழர்க்கு இந் நாள் வரை அவர் செய்த தீமையால் தான் நம் இன்றைய எழுச்சி உணர்ச்சி ஏற்பட்டது.
நல்ல வேளையாக அவர்கள் தம் போக்கினின்று திருந்த மாட்டார்கள் அவர்கள் தீமை வளர்க தமிழர்கள் எழுக. உணர்ச்சி பெறுக.

தமிழ்

தமிழிலக்கியங்களில் - _ இன்று உள்ள தமிழிலக்கியங்களில் ஒன்றேனும் தனித் தமிழில் இல்லையாம். தமிழ்க் கோட்டையிற் புகுந்து கன்னம் வைத்த திருடர்கள் தமிழிலக்கியங்களில் கை வைத்த திருடர்கள் தமிழிலக்கியங்களில் கைவைத்த கன்னக்கோல்காரர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்.

வளர்ந்துவரும் தனித்தமிழையும் கலந்து வரும் தமிழாக்கிக் கொண்டே இருப்பவர்களாகிய பேடிகள் இவ்வாறு சொல்லுகிறார்கள்.

இழிந்த கருத்துள்ள செய்யுட்களை உயர்ந்த கருத்துள்ள செய்யுட்களிடையே புகுத்திய மனச்சான்றில்லாத கயவர்கள் இவ்வாறு சொல்லுகிறார்கள்.

தமிழர்களே நம் கடமை என்ன? நாம் இந்நாள் அன்னைக்குச் செய்ய வேண்டிய அருந்தொண்டு என்ன?
தமிழை எதிர்க்கும் நிறுவனங்கள் எதுவா இருந்தாலும் நாம் எதிர்த்து ஒழிக்க வேண்டும். தமிழை எதிர்ப்பவன். தமிழைக் கெடுப்பவன் எவனானாலும் அவனைத் தலை தூக்க ஒட்டாமல் செய்ய வேண்டும்.

தமிழர்கள் அரசியல் கட்சிகளில் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். விட்டு விலக வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஒன்றை மட்டும் மனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்ப் பற்றுக் காவிரிப் பெருக்காகி விட்டது. தமிழர்களைத் தாழ்வாகக் கணக்கிடக் கூடாது எவரும்!
சென்னைத் தமிழ் அமைச்சர்களிற் சிலர் தமக்கு ஆட்களைச் சேர்க்க இப்போதே தமிழின் பகைவர்களின் காலை நக்கத் தொடங்கி விட்டார்கள் அந்த நொள்ளைகளுக்கு இப்போதே சொல்லியனுப்பி விட வேண்டும்.

ஐயா நீவிர் எந்தத் தொகுதியில் நின்றாலும் நீவிர் ஏந்தும் கப்பறையில் கல்லே விழும் என்று.
இந்த அமைச்சரவை, இந்தக் கட்சி. இந்த ஆள், நல்ல அவை. நல்ல கட்சி. நல்ல ஆள் என்று தமிழர்கள் மதிப்பிடு வது தமிழுக்கு அவர்கள் செய்த நன்மையை எடை போட்டே.

அவன் எனக்கு வேண்டியவன் என்பதல்ல இப்போது தமிழர்களின் எண்ணம். அவன் தமிழுக்கு வேண்டி யவனா என்பது ஒன்றுதான்.

தமிழர்களின் மதிப்புப் பெற்றவன் இன்று பெற்ற தாயல்லள். தந்தையல் லன். உறவினன் அல்லன். தமிழரின் மதிப்பைப் பெற்றுத் திகழ்வது தமிழ ரின் தாயாகிய தமிழ்மொழி ஒன்று தான். நீ ஒரு மதத்தவனா? நீ ஒரு சாதி யினனா? நீ வேறு இனத்தவனா? இரு!

அந்தப் பற்றுக்களையெல்லாம் விடுவது நல்லது. விடவில்லை. இரு. ஆனால் தமிழ்ப் பற்றுள்ளவனாயிரு., தமிழின் நலன் கருதிப் போராடுகின் றவனாயிரு! அந்தப் போரில் தலை போவதாயினும் அஞ்சாதிரு!

நீ ஒரு அரசியல் அலுவல்காரன்! இரு! ஆனால் தமிழுக்குப் போராட அஞ்சாதே. வயிறு ஒன்றையே கருதித் தமிழைக் காட்டிக் கொடுப்பாரின் தெருவில் திரிவாரின் நண்பரையும் அணுகாதே!
போர்! தமிழ்ப் போர். தமிழ்த் தாய்க்காக! அவள் படும் இன்னலைத் தீர்ப்பதற்காக - தமிழர் தமிழராக மதிக்கப் பட வேண்டும் என்பதற்காக போர்!
தமிழ்த் தாய் வெல்க!
தமிழர்கள் விடுதலை எய்துக!

குயில் 23.2.1960

Read more: http://viduthalai.in/page3/94223.html#ixzz3ObgU5gIA

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருதத் துணைவேண்டாத் திராவிடத் தனித்தன்மை

- டாக்டர் கால்டுவெல்திராவிட மொழிகள் வட இந்திய மொழிகளி லிருந்து பற்பல இயல்பு களில் வேறுபடுகின்றன. அவ்வாறிருந்தும், அத் திராவிட மொழிகள், வட இந்திய மொழிகளைப் போலவே, சமற்கிருதத்திலிருந்து பிறந் தனவாகச் சமற்கிருதப் பண்டிதர்களால் கருதப்பட்டன.

தாங்கள் அறிந்த எப் பொருளுக்கும் பார்ப்பன மூலம் கற்பிக்கும் இயல்பினர் அப்பண் டிதர்கள். அவர்கள் கூறும் அம்முடிவை, முதன் முதலில் வந்த அய்ரோப்பிய அறி ஞர்களும் அவ்வாறே ஏற்றுக் கொண் டனர்.

தங்கள் கருத்தை ஈர்த்த ஒவ் வொரு திராவிட மொழியும் சமற்கிருதச் சொற்களை ஓரளவு பெற்றிருப்பதை அவர்கள் காணாதிருக்க முடியாது. அவற்றுள் சில இவை எம்மொழிச் சொற்கள் என்பதை அரும்பாடுபட்டே அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் பெரிதும் சிதைவுண்டிருக்கும்.

எனினும் சில சிறிதும் சிதைந்து மாறுபாடுற்றிரா என்பது உண்மை. ஆனால், அம்மொழி ஒவ்வொன்றும் சமஸ்கிருதம் அல்லாத பிறமொழிச் சொற்களையும், சொல்லுரு வங்களையும் அளவின்றிப் பெற்றிருப் பதையும் அவர்கள் தெளிவாகக் காண்பர் என்றாலும், அச்சொற்களே அம்மொழி வடிவில் பெரும் பகுதியை உருவாக் குகின்றன;

அச் சொற்களிலேயே அம் மொழியின் உயிர்நாடி நிற்கிறது என்ற உண்மையை உணர்ந்திருக்க மாட் டார்கள். அவ்வறியாமையின் பய னாய், அம்மொழிகளில் காணலாகும் அச்சமற் கிருதப் புறத்தன்மைகளுக்குக் காண முடியாத யாதோ ஒரு சில மூலத்திலி ருந்து தோன்ற வேற்று மொழிக் கலவை யாம் என்ற பெயர் சூட்டி அமைதி யுற்றனர்.

உண்மையில் சமற்கிருத மொழிச் சிதைவுகளாய் கௌரிய இனத்தைச் சேர்ந்த வங்காளம் போலும் மொழிகளிலும், சமற்கிருதத்திற்குப் புறம்பான சில சொற்களும் சொல்லுரு வங்களும் இடம் பெற்றுள்ளன; அப் பண்டிதர்கள் கருத்துப்படி, திராவிட மொழிகளுக்கும் அக்கௌரிய மொழி களுக்கிடையே மதிப்பிடத்தக்க வேறு பாடு எதுவும் இல்லையாதல் வேண்டும்.

இவ்வாறு, திராவிட மொழியில் காண லாகும் சமற்கிருதப் புறத்தன்மைகளை, வேற்று மொழிக் கலவையாக மதித்து ஒதுக்குவது, உண்மை நிலையிலிருந்து உருண் டோடி வீழ்வதாகும். மேலும், திராவிடம் சமற்கிருதத்திலிருந்து பிறந்தது என்ற கருத்து முந்திய தலைமுறையின ராக மொழி நூல் வல்லுநர்க்கு ஏற் புடையதாய் விளங்கினும், இக்காலை அறவே அடிப்படையற்றுப் போன கட்டுக்கதையாகி விட்டது.

மேலே கூறிய பண்டிதர்கள் சமற்கிருத மொழியை ஆழக் கற்று, வட இந்திய மொழிகளை விளங்க அறிந்தவரே எனினும் அவர்கள் திராவிட மொழிகளை அறவே கண் டறியாதவராவர்; அல்லது, ஒரு சிறிதே அறிந்தவராவர்.

ஒப்பியல் மொழி நூல் விதி முறைகளில் ஒரு சிறு பயிற்சியும் பெறாத எவரும், திராவிட மொழி களின் இலக்கண விதிகளையும் சொற்களையும் நன்கு கற்றுத் தேர்ந்து, அவற்றைச் சமற்கிருத இலக்கண முறைகளோடும் ஒப்புநோக்க அறியாத எவரும், திராவிட இலக்கண அமைப்பு முறையும், சொல் லாக்க வடிவங்களும், இன்றியமையாச் சிறப்பு வாய்ந்த அவற்றின் எண்ணற்ற வேர்ச் சொற்களும், எத்தகைய சொல் லாக்க, சொற்சிதைவு முறைகளினாலேயா யினும், சமற்கிருதத்திலிருந்து தோன்றி யனவாகும் என்று கூற உரிமையுடையவராகார்.

(திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் -
தமிழாக்கம்: புலவர் கா. கோவிந்தன்)

Read more: http://viduthalai.in/page3/94224.html#ixzz3Obi86O00

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் பார்வையில்...

பெரும்பாலான பண்டிகைகளின் கதைகள் எல்லாம் தேவர்கள், அசுரர் களை அழித்து ஒழித் தார்கள் என்பதை மய்யப் பொருளைக் கொண்ட தாகவே இருக்கும்.

பிரபலமாகக் கொண் டாடப்படும் தீபாவளியை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான்.
தேவர்கள் என்று சொல் லப்படுவோர் எல்லாம் ஆரியப் பார்ப் பனர்கள்தான் என்பதும், அசுரர்கள், அரக்கர்கள், ராட்சதர்கள் என்று சொல் லப்படுவோர் எல்லாம் அவர்களை எதிர்த்த திராவிடர்கள் என்றும், வர லாற்றுப் பேராசிரியர்கள் ஆதாரத்துடன் எழுதியுள்ளனர். (அண்ணாவின் ஆரிய மாயை நூலிலும் விரிவாகக் காணலாம்)

தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்று திராவிட இயக்கம் முழக்கம் கொடுத்ததும் திராவிட இனத்தின் தன்மானங் கருதித்தான்.

தீபாவளி கொண்டாடாத தீரர்கள் பட்டியலை விடுதலை ஏடு வெளி யிட்டதுண்டு.
தைத் திங்கள் முதல் நாள் வரும் பொங்கல்தான் தமிழர்களின் திருநாள் - தை முதல் நாள்தான் தமிழர் புத்தாண்டு என்பதை திராவிட இயக்கம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறது.

பொங்கல் விழாவை புதுப்பொலி வுடன், தமிழர் பண்பாடு மறுமலர்ச்சிக் கண்ணோட்டத்தோடு புதுத் திருப் பத்தைக் கொடுத்ததும் நம் இயக்கம் தான். இதன் மூலம் தீபாவளிக்கு என்று இருந்த மகிமை இருளில் தள்ளப் பட்டது.

உலகம் பூராவும் அறுவடைத் திரு விழாக்கள் கொண்டாடப்படுவதுண்டு. அதுபோன்ற தமிழினத்தின் தனிப் பெரும் விழா பொங்கலாகும்.

இதிலும்கூடப் பார்ப்பனர்கள் தங்களுக்கே உரித்தான புராண சரக்கு களை வேண்டிய மட்டும் திணித் துள்ளனர். தந்தைபெரியார் இதுகுறித் தும் ஆழமான கருத்தினை வெளிப் படுத்தியுள்ளார்கள். அதனையும் இந்த இடத்தில் எடுத்துக்காட்டுவது பொருத் தமாக இருக்கும்.

ஒரு பொங்கல் நாளில் (விடுதலை 13.1.1970) தந்தை பெரியார் எழுதியுள்ள அந்தக் கருத்து தமிழர்களின் சிந்தனைக்கு இங்குத் தரப் படுகிறது.

பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்-கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல் லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்ப தாகத் தை மாதத்தையும் முதல் தேதி யையுமே ஆதாரமாகக் கொண்டதாகும்.

இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்தப் பாகத்திற்கும் எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றா லும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப்படுவதாகும்.

இக் கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால், விவசாயத்தையும் வேளாண்மை யையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடைப் பண்டிகை யென்று சொல்லப்படுவதாகும். ஆங்கி லத்தில் ஹார்வெஸ்ட் பெஸ்டிவல் என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான்.

என்றாலும், பார்ப்பனர் இதை மத சம்பந்தம் ஆக்குவதற்காக விவசாயம், வெள்ளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப்படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும் அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முக்கிய ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன் ஆதலால் இந்திரனைக் குறிப்பாய் வைத்து, விவசாயத்தில் விளைந்து வெள்ளாண் மையாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூசிப்பது என்றும் கதை கட்டி விட்டார்கள்.

- கி. வீரமணி

Read more: http://viduthalai.in/page3/94228.html#ixzz3ObihoI2X

தமிழ் ஓவியா said...

வால்மீகியின் வாய்மையும்-கம்பனின் புளுகும்!!

அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.

இதுபற்றி பண்டித மன்மத நாததத்தர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.

Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse. The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.

இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள். ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள்.

இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார். ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான்.

உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார். ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை?

Read more: http://viduthalai.in/page3/94230.html#ixzz3Obip05UT