Search This Blog

24.1.15

இதோ ராஜபக்சேயின் வாரிசுகள்! தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அக்கிரகாரவாசிகளுக்கு அவல் பாயசம் சாப்பிட்டது மாதிரிதானே!

இதோ ராஜபக்சேயின் வாரிசுகள்!

கேள்வி: இலங்கை அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவது இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும், இலங்கைத் தமிழர் களுக்கும் நல்லது என்று நீங்கள் நினைக் கிறீர்கள்?


பதில்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரி பால சிறீசேனா ராஜபக்சே போல் அல்லாமல், சமஷ்டி அமைப்பு ஏற்பட வழி செய்ய முன் வருவார் என்ற எதிர்பார்ப்பு சிலரிடம் இருந்தது. ஆனால், அவரோ, அப்படி எண்ணம் இல்லை என்பதைத் தெளிவாக்கி விட்டார்.

இது தவிர, அவர் எது செய்ய நினைத் தாலும் தன்னை ஆதரிக்கிற பல கட்சிகளின் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்ய முடியாது.

தமிழர்கள் விஷயத்தில் அந்த மாதிரி ஒப்புதல், பல கட்சிகளிடம் இருந்து சுலப மாகப் பெறக் கூடியது அல்ல. ராஜபக்சே நிலை இப்படிப்பட்டது அல்ல. ஆகையால் அவரிடம் காரியம் சாதித்துக் கொள்ள முயல்வதே மேல். அந்த வகையில் பார்த்தால் அவர்  வெற்றி பெறுவது இந்தி யாவிற்கு ஓரளவுக்காவது நல்லதாக இருக்கக் கூடும்.

                                                ------------------------------------(துக்ளக் 24.12.2014 பக்கம் 11)

சோ மட்டுமல்ல; ஒட்டு  மொத்தமான பார்ப்பனர்களின் நிலைப்பாடும் இதுதான்.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல நடக்கவில்லை; ராஜபக்சே தோல் வியைத்தான் தழுவினார்.


ஒன்றை இந்த இடத்தில் குறிப்பிடுவது முக்கியம்; வெற்றி பெற வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்த்த அந்த ராஜபக்சே எத்தகையவர் என்பது இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எவ்வளவுக் குரூரமான மனிதர் இவர்! இந்த குடும்பமே பெரிய கொள்ளைக்காரக் குடும்பமாக அல்லவா இருந்திருக்கிறது.


ராஜபக்சேயின் தம்பி கோத்தபாய ராஜபக்சே தனது பினாமி பெயரால் ஆயுதக் கப்பலே வைத்திருந்தார் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


தங்களுக்கு எதிரானவர்களைப் படுகொலை செய்ய மரணப் படை ஒன்றைக் கையில் வைத்திருந்தார் இவர். வெள்ளை நிற வாகனங்கள் இதற்குப் பயன்படுத்தப் பட்டன என்கிற தகவல்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகப் புற்றீசல் போல வெளி வரத் தொடங்கி விட்டன.


சர்வாதிகாரி போல் ஆடம்பரமாக வாழ்ந்த மகிந்த ராஜபக்சேபற்றி ஏராளமான தகவல்கள் வெளி வந்துள்ளன; அவற்றில் சில வருமாறு:


1. மகிந்தா அணியும் ஸன்கிளாஸின் மதிப்பு  35 லட்சம் ரூபாய்



2. மகிந்தா அணியும்கைக்கடிகாரத்தின் மதிப்பு 9 லட்சம் ரூபாய்; அவரிடம் அவ் வாறான 9 கைக்கடிகாரங்கள் உள்ளன


3. மகிந்தாவின் 2 ஆம் மகன் தன் காதலியின் பிறந்தநாளுக்குக் கொடுத்த பரிசு இங்கிலாந்து அரண்மைனையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல கோடி பெறுமதியான வெண் குதிரை.


4. உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த லம்போகினி கார் ரூ.1000 கோடி மதிப்புக்கு 9 கார்களை இறக்குமதி செய்தார். இதற்காக நமால் ராஜபக்சேக்குக் கிட்டத்தட்ட ரூ.500 கோடி வரிவிதிவிலக்கு வழங்கப்பட்டது. இதற்கு வரிவிலக்கு பாராளுமன்றத்தால் ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.


5. 100 மில்லியன் டொல் 5000 ரூபா தாளில் மத்தியவங்கியிலிருந்து மாற்றிச் சென்றுள்ளார்கள். அதாவது 1300 கோடி ரூபாய் தேர்தல் நடவடிக்கை களுக்கு லாரிகளில் எடுத்துச் சென்றுள் ளார்கள்.


6. தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஞிவீணீறீஷீரீ  நிறுவனத்திலிருந்து 500 கோடி ரூபாய் பெற்றுள்ளார்கள்


7. மகிந்தா சிறீ லங்கா டெலிகொம் மூலம் ரூ.150 மில்லியன் பணம் தேர்தல் நடவடிக் கைக்காக எடுத்துள்ளனர்


8. நாடாளுமன்ற மந்திரி ஒருவரை விலகிப் போகாமலிருக்க வைப்பதற்காக  ஒன்றரைக் கோடி ரூபாய் கை மாறியுள்ளது


9. பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினரை தமது பக்கம் இழுக்க 500 கோடி ரூபாய் செலவழித்திருக்கின்றனர்.


10. அநுராதபுர மகிந்தாவின் கூட்டத் துக்கு 1100 பேருந்துகள் கொண்டு வரப் பட்டன இதற்காக கொடுக்கப்பட்ட செலவு 250 லட்சம் ரூபாய். அனுராதபுர கூட்டத் திற்கு மாத்திரம் ரூ.70 கோடிகளுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.


11.  கோத்தபய ராஜபக்சவின் மகளின் திருமணத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பூக்கள் 2 கன்டெய்னர்களில் இந்தோனே சியா விலிருந்து வரவழைக்கப்பட்டன.


12.  சிரானி பண்டாரநாயக்கசட்டமா அதிபராக இருந்த போது 2 தீர்ப்புக்களை அரசுக்கு எதிராக வழங்கியதால் அவரை போலி குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பதவி யிலிருந்து துரத்திவிட்டு, இதுவரை எந்த வழக்கிலும் ஆஜராகாத நீதித்துறையில் எந்த ஆழமான சட்ட நுணுக்கமும் தெரியாத மொஹான்பீரிஸை இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக  ஜனாதிபதி நியமித்தார்


13.  பொதுவிடத்திலேயே மதுபானம் அருந்தி பெண்களுடன் பாலியல் குற்றத் தில் ஈடுபட்ட பாலசூரியவை இலங்கை காவல்துறைத் தலைவராக தனது நிறை வேற்றும் அதிகாரம் மூலம் நியமித்தார்.


மஹிந்தா பற்றிய மேலும்  தகவல்கள் உண்டு.

1. மகிந்தாவின் மனைவி இலங்கையி லேயே அதிக  வசதிகளைக் கொண்ட கால் டன் என்ற மொன்டசூரியின் (கேளிக்கை விடுதி) உரிமையாளர்.


2. நமால் ராஜபக்ச 5 ரேடியோ  2 தொலைக்காட்சிகளுக்கு சொந்தக்காரர்.


3. மகிந்தாவின் இரண்டாம் மகனுக்கு ரக்பி போட்டியில் போட்டியாக இருந்த துவான் என்றதிறமையான முஸ்லிம் இளைஞனை நாரஹேன்பிட்டியில் வைத்து இரவு வேளையில் உயிருடன் தீ வைத்து எரித்துக் கொலை செய்தனர்.


4. மியான்மாவில் பலரை உயிருடன் எரித்துக் கொலை செய்து மியான்மா படுகொலைகளுக்கு தலைமை தாங்கிய விராது என்ற பிக்குவுக்கு உலகில் எந்த நாடும் இதுவரை விசா வழங்கவில்லை. ஆனால், மகிந்தாவின் அரசு வழங்கியது. விராது  தனது உரையை மகிந்தாவுக்கு நன்றி செலுத்தி விட்டே தொடங்கினான்.


5. யாழ்ப்பாணத்தில் யுத்தத்தின்பின் கைப்பற்றிய பல பில்லியன் மதிப்பான தங்கங்களை 6கண்டெய்னர்கள் மூலமாக திருப்பதி ஏழுமலையானுக்குத் தானமாக கொடுத்தார். 

 6. மகிந்தாவுக்கு எதிராக செயற்பட்ட பல ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தான். நூற்றுக்கணக்கான ஊடகவிய லாளர்கள் நாட்டை விட்டே போய் விட்டார்கள்


7. மகிந்தாவுக்கு எதிரான இன்னும் ஆயிரக்கணக்கானோர் வெள்ளை வேன் களில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட் டார்கள்; இவர்கள் இறந்தார்களா? உயிருடன் இருக்கிறார்களா? என்று கூடத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக் கிறார்கள் இவர்களின் குடும்பத்தார்கள்.


8. பவுத்த பிக்குகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி எதனால் இறக்குமதிக்கு அனுமதிகொடுத்து மக்களை - இலங்கைத் தீவை மதுவிற்கு அடிமையாக்கி வைத்தார்.


9. மாசடைந்த குடிநீரினால் அவரது சொந்தத் தொகுதியான அனுராதபுரத்தில்  சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த மருத்துவ உதவியும் கொடுக்காமல், தனது ஓர் ஆண்டு செல வுக்காக ரூ.942 கோடிகளை ஒதுக்கிக் கொண்டார்.


10. நாட்டு மக்களிடமிருந்து வரி என்றபெயரில் சூதாட்டவிடுதிகளுக்கு அதீத உரிமைகளை வழங்கினார்.


11. பல்வேறு பாலியல் குற்றச்சாட்டு மற்றும் பெண்களை அயல்நாடுகளுக்கு கடத்தும் குற்றவாளிகளான மதுமிந்த சில்வா போன்றவர்களுக்கு முக்கிய பிரமுகர் களுக்கு நிகரான பாதுகாப்பு வழங்கினார்


12. நாட்டின் உச்சநீதிமன்றத்தையே முடக்கி நீதி, நியாயத்தையே கொலை செய்தவர்

இப்படிப்பட்ட ஒரு கொடூரனைத் தான் சோ உள்ளிட்ட பார்ப்பனர்கள் தோளில் தூக்கி வைத்து ஆடினார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.


இவரே மீண்டும் வர வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் ஆசைப்பட்டது - இவர்கள்  ராஜபக்சேயின் இன்னொரு வகை வாரிசுகள் என்பதை மறந்து விட வேண் டாம்! தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அக்கிரகாரவாசிகளுக்கு அவல் பாயசம் சாப்பிட்டது மாதிரிதானே!

                             ------------------------மின்சாரம் -”விடுதலை” ஞாயிறுமலர் 24-01-2015

45 comments:

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியாரும் - மதமாற்றமும்


சங்கராச்சாரியாரும் - மதமாற்றமும்

-பொறியாளர் கோவிந்தராசன் BE, MBA, MA

இந்தியாவில் முதன் முதலில் தோன்றிய மதம் பவுத்த மதமாகும். எனவே புத்த மதத்தை இந்தியர்களின் தாய் மதம் என்று கருத வாய்ப்புள்ளது. புத்த மதத்தை ஒட்டி தோன்றிய மதம் சமண மதம். இந்த இரு மதங்களும் தற்போது நடக்கும் கலியுகத்தில் மனிதர்களால் தொடங்கப்பட்டவை யாகும். இந்த மதங்கள் தோன்றிய போது இந்துமதம் தோன்றவில்லை.

ஆனால் அப்போது ஆரியர்கள் சிந்து சமவெளியில் இருந்து கங்கைச் சமவெளிக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் செய்த யாகங்களில் ஆயிரக் கணக்கான கால்நடைகள் பலியிடப்பட் டன. இதனால் பாதிக்கபட்ட கங்கைச் சமவெளி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது ஆரியர் களின் யாகங்களை எதிர்த்தும் உயிர் களைக் கொல்வதை எதிர்த்தும் பவுத்த மதமும் சமண மதமும் தோன்றின. இந்த சூழ்நிலையில் இந்து மதத்தின் தோற்றம் பற்றியும் மதமாற்றம் பற்றியும் மறைந்த காஞ்சி மடாதிபதி அவர்கள் தனது நூலில் (தெய்வத்தின் குரல்) கூறியுள் ளதை தொகுத்து கீழே தரப்படுகின்றது

இந்து மதத் தோற்றம்

பவுத்த மதம் மற்றும் சமண மதம் போல அல்லாமல் இந்து மதம் எந்த ஒரு தனி மனிதனாலும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு இடத்தில் நிறுவப்பட வில்லை. இந்தக் கலியுகத்தில் இந்தி யாவில் வேத காலந்தொட்டு புத்தர் காலம் வரை பல மகான்கள் ரிஷிகள் தோன்றினார்கள்.

இவர்கள் மனித வாழ்க்கை பற்றியும் உலகத்தைப் பற்றியும் பல தத்துவங்களை மக்களிடம் பரப்பினார்கள். ஆனால் இவர்கள் யாரும் எந்த ஒரு மதத்தையும் தோற்று விக்கவில்லை. ஆனால் ஆரியர்கள் வேதகாலத்தில் எந்த தர்மத்தைக் கடைப் பிடித்தார்கள்.

என்பது பற்றி மறைந்த பெரிய சங்கராச்சாரியார் தனது தெய்வத்தின் குரல் என்ற நூலில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

1) ---ஆனால் ஹிந்து என்பது நமது பூர்வீகப் பெயர் அல்ல.வைதிக மதம் சனாதன தர்மம் என்றெல்லாம் சொல்கிறோமே அவைதான் பெயரா என்றால் அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும்போது இந்து மதத்திற்கு எந்த பெயரும் குறிப்பிடவில்லை. ( பக் 126)

2)-----பல்வேறு மதங்கள் இருக்கிற போதுதான் ஒன்றிலிருந்து இன்னொன் றுக்கு வித்தியாசம் தெரிவதற்காகப் பெயர் கொடுக்க வேண்டும். ஒரே மதந்தான் இருந்தது என்றால் அதற்குப் பெயர் எதற்கு? (பக். 127)

3) ---புத்தமதம் என்றால் அது கவுதம புத்தரால் ஸ்தாபிக்கப்பட்டது. எனவே அவருக்கு (புத்தருக்கு) முன் அந்த மதம் இல்லை என்றாகிறது. --- (பக். 127)

4)- --(பெயரில்லாமல் இருந்த தற்போதைய இந்து மதத்திற்கு) அப்படி ஒரு ஸ்தாபகரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

பிரம்ம சூத்திரம் செய்த வியாசரை சொல்லலாமா கீதை சொன்ன கிருஷ்ண பரமாத்மாவை சொல்லாமா என்றால் அவர்களும் தங்களுக்கு முன்னே இருக்கிற வேதங் களை சொல்லுகிறார்கள்.. ( கிருஷ்ண பரமாத்மா மற்றும் கவுதம புத்தர் துவாபரயுகத்தில் அவதரித்தவர்கள். (விக்கிபீடியா தகவல்) ஆனால் ரிக் வேதம் இந்த கலியுகத்தில் இந்தியாவில் நுழைந்த ஆரியர்கள் சிந்து சமவெளியில் தங்கிய போது சுமார் கிமு 1500-ல் இயற்றப்பட்டது. இது ஒரு பெரிய முரண்பாடு ஆகும் ) (பக் 128)

5)----- இந்த வேதங்களை) ரிஷிகள் தபோ மகிமையால் இந்த சிருஷ்டியிலிருந்து ஜீவர்களை கடைத்தேற்றுகிற சப்தங் களை (வேதங்களை) மந்திரங்களாகக் கண்டார்கள். ( பக் 129 )

இவ்வாறு பல ஆயிரம் ஆண்டு களாக தற்போதைய இந்து மதம் பெயர் இல்லாமலும் ஸ்தாபகர். (நிறுவியவர்) இல்லாமலும் இருந்து வந்தது.

இந்த நிலையில் இந்து என்ற பெயர் எப்படி வந்தது என்பதை சங்கராச்சாரியார் தனது நூலில் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்:-

1)-----இப்போது ஹிந்து மதம் என்று சொல்கிறோமே இதற்கு உண்மையில் இந்த பெயர் கிடையாது.---நம்முடைய பழைய (வேதம் முதலான) சாஸ்திரம் எதிலும் ஹிந்து மதம் என்ற வார்த் தையே கிடையாது. (பக் 125)

2) -----ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர் தான். மேல்நாட்டுக்காரர்கள் ஸிந்து நதியைக் கடந்தே பாரத நாட்டுக்கு வரவேண்டி யிருந்தது அல்லவா? ஆனபடியால் ஸிந்துவை ஹிந்து என்றும் அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும் அதன் மதத்தை இந்து என்றும் குறிப்பிட்டார்கள். (பக் 125)

தமிழ் ஓவியா said...


3) ---- நமக்குள் சைவர்கள் வைஷ்ணவர் கள் என்று வேறாக சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தாம். அவன் வைத்த பெயர் நம்மை காப்பாற்றியது.-------------------- இப்போது ஹிந்து சமூகம் என்று பொதுப் பெயரில் சொல்லப் படும் சமுதாயத்தை இப்படி ஏழெட்டு மதங்களாகப் (சைவம் வைணவம் சாக்தர் முருக பக்தர் ஐயப்பன் பக்தர்) என்று பிரித்து விட்டால் அதற்கு அப்புறம் ஒவ்வொரு ஊரிலும் முஸ்லீம் கிறிஸ்தவர்கள் போன்ற மதஸ்தர்கள் தான் அதிகம் இருப்பார்கள். (பக். 267)

4) ----ஹிந்து என்று சொல்லப்படும் நமது மதம் ஒன்றே ஆதியில் லோகம் முழுவதும் பரவியிருந்தது. அந்த ஒரே மதம் இருந்ததால்தான் அதற்குத் தனியே பெயர் வைக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இதனால் தான் நம் ஆதார நூல்களில் ஹிந்து மதத்திற்குப் பெயரே இல்லை.

மதமாற்றம்

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உலக நியதி. கடவுள் படைத்ததாக சொல்லப்படும் மனிதர்களில் ஆண்கள் சிலர் அறுவை சிகிச்சை மூலம் பெண் ணாக மாறிய செய்திகள் உண்டு. இதே போல் அறுவை சிகிச்சைகள் மூலம் முகத் தோற்றத்தையே மாற்றுகிறார்கள்.

மேலும் .இதயம சிறுநீரகம கண்கள் போன்றவை மாற்றம் செய்யபடுகின்ற இந்த காலத்தில் மதமாற்றம் நிகழ்வதில் ஆச்சரியம் ஒனறும் இல்லை. எல்லா மதங்களும் பொதுவாக சொல்வது நல்ல செயல்களை செய்வதன் மூலம் ஒருவர் சொர்க்கத்தை அல்லது கடவுளை அடைய முடியும் என்பது ஆகும்.

இத்தகைய மதங்களுக்கு (இந்து மதம் உள்பட) முன் வாழ்ந்த மனிதர்கள் யாரும் சொர்க்கத்தை அடையவில் லையா? இந்த கேள்வியை கேட்பவர் சங்கராச்சாரியார்.

தமிழ் ஓவியா said...

மதமாற்றம் பற்றி சங்கராச்சாரியார்

1)----- ஹிந்து மதத்தில் கடைப்பிடிக்கப் படும் மதச்சடங்குகள் ரிக் முதலான நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. வேதங்கள் உருவான காலத்தில் இந்து மதம் என்று ஒன்றும் இல்லை. அப்போது இருந்த மதத்தின் பெயர் வைதிக மதம் அல்லது சனாதன தர்மம் என்று அழைக்கப்பட் டது.

அந்த காலத்தில் மற்ற மதங்கள் --- புத்த சமண மதங்கள் சீக்கிய மதம் கிருத்துவ மதம் இஸ்லாமிய மதம் போன்றவை தோன்றவில்லை. எனவே மதம் மாற்றம் எதுவும் நடக்கவில்லை என சங்கராச்சாரியார் கூறுகிறார். மேலும் அவர் கூறுவது கீழே தரப்பட்டுள்ளது.-

2) ஒரு தேசத்து மக்களே ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு. மாறவும் செய்கிறார்கள். புத்தர் காலத்தில் வேத மதத்திலிருந்து வேத மதஸ்தர்கள் பவுத்த மதத்திற்கு மாறினாரகள். பிற்காலத்தில் எத் தனையோ ஹிந்துக்கள் முகம்மதிய மதத்திலும் கிறித்துவமத்திலும் சேர்ந் திருக்கிறாரகள்.

ஜைனர்கள் வைஷ்ண வர்களாக மாறி புஷ்டி மார்க்கிகள் என்று பெயர் பெற்றிருக்கிறார்கள். (இதிலிருந்து வைணவ மதம் என்பது இந்து மதத்திலிருந்து வேறு பட்டது என்பதை அறியலாம். மேலும் ஜைன மதம் தோன்றியபின்புதான் வைணவ மதம் தோன்றியுள்ளது என்பதையும் அறியலாம்.) (பக் 117 )

3) ---யார் யார் எந்த மதத்திற்குப் போனாலும் கடைசியில் (அத்தனை மதத்தினரும்) ஒரே பரமாத்மாவிடத்தில் வந்து சேருவார்கள் என்பதை ஒப்புக் கொள்ளுகிற விசால மனப்பான்மை நம் சாஸ்திரங்களிலேயே காணப்படுகிறது. இதனால்தான் பிறரை ஹிந்துவாக மதமாற்ற நம் சாத்திரங்கள் இடம் கொடுக்கவில்லை. (பக் 148)

4) ----- -ஒருத்தனை புது மதத்திற்கு மாற்றுவது என்றால் அதற்கென ஒரு சடங்கு இருக்க வேண்டும். இப்போது கன்வரட்செய்கிற மதங்களில் எல்லாம் அப்படி ஒன்று ஞானஸ்நானம் என்கிற மாதிரி---- ஏதாவது ஒன்று இருக்கிறது.

மற்ற எந்த மதங்களை விட மிக அதிகமாக சொல்கிற சடங்குகளை சொல்கிற இந்து மத சாஸ்திரங்களைப் பார்த்தால் இப்படி நம் மதத்திற்கு மற்ற மதஸ்தனை மதமாற்ற ஒரு சடங்கும் இல்லை. இதுவே நாம் மத மாற்றத்தை விரும்புகிறவர்கள் அல்ல என்பதற்கு அத்தாட்சி. ( பக் 114)

5).----தங்களிடையே கோட்பாடுகளிலும் அநுஷ்டானங்களிலும் சில வித்தி யாசங்கள் இருப்பதில் தவறில்லை. எல்லா மதங்களும் ஒன்று போல் இருக்க வேண்டிய அவசியம் இல்-லை. ஒரே மாதிரி ஆக்காமலே எல்லா மதங்களும் (மதத்தினரும்) மனத்தில் ஒற்றுமையோடு இருப்பது தான் அவசியம். யுனிபார்மிட்டி அவசியம் இல்லை. யுனிட்டிதான் அவசியம். (பக் 115) எனவே இந்து மதத்தில் மத மாற்றம் அனுமதிக்கப் படவில்லை என கூறலாம்.

முடிவுரை:- இயற்கையில் நாள் தோறும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. மனித வாழ்க்கையில் பல முன்னேற் றங்கள் மற்றும் மாற்றங்கள் நிகழ்கின் றன. அதே போல் மனித குலம் இந்த பூமியில் நீடித்து வாழ மனிதனுக்கு தேவையான வளங்கள் மற்றும் வசதிகள் ஆகியவற்றில் எல்லாம் மாற்றங்கள் நிகழ்கின்றன.

இந்த மாற்றங்கள் எல்லாம் மனிதனின் நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மாற்றி அமைக் கின்றன. முற்றிலும் நம்பிக்கையின் அடிப் படையில் ஏற்பட்ட மத நம்பிக்கைகளை யும் மற்றும் சடங்குகளை மாற்றுவது தவிர்க்க முடியாது. இதனால் மதமாற் றங்கள் நிகழ்கின்றன என அறியலாம்.

Read more: http://viduthalai.in/page-1/94841.html#ixzz3Pk00mGPv

தமிழ் ஓவியா said...

தன் முதுகு தனக்கே தான்...

30.11.2014 இந்து நாளிதழில் தருமபுரியில் கை வைத்தியம் பார்ப்பதாக பிறந்து 2 நாளே ஆன சிசுவுக்கு சூடு போட்ட அவலம் - சுகாதார அமைச்சர் அதிர்ச்சி என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியில், தருமபுரி மாவட்டம், பென் னாகரம் வட்டம், பேடூர் அருகேயுள்ள திட்டனூர் கிராமத்தில் முருகேசன் என்பவரின் மனைவி பச்சையம்மாளுக்கு ஒரு ஆண் குழந்தை வீட்டிலேயே சுகப்பிரசவமாகப் பிறந்துள்ளது.

அக்குழந்தை பிறந்ததிலிருந்து அழாத காரணத்தால், அக்குழந்தையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர மெல்லிய கம்பியை நெருப்பிலிட்டு காய்ச்சி ஆறு இடங்களில் குழந்தையின் உடலில் சூடு போட்டுள்ளனர். ஆனாலும் குழந்தை இயல்பு நிலைக்கு வராததால் ஆபத் தான நிலையில் தருமபுரி மருத்துவ மனையில் குழந்தைகள் பிரிவில் சேர்த் துள்ளனர்.

மருத்துவர்கள் அக்குழந் தைக்கு செயற்கை சுவாசக் கருவியை வைத்து தீவிர சிகிச்சை அளித்து குழந் தையின் உடல் நலத்தைப் படிப்படியாக முன்னேற்றினர்.

இது குறித்து பச்சிளங்குழந்தைகள் பிரிவு மருத்துவர்கள், இன்றளவும் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் மக்கள் மத்தியில் நிலவுவது வேதனை அளிக் கிறது என்று கூறியுள்ளனர்.

மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் மருத்துவ மனையை ஆய்வு செய்தபோது இதை அறிந்து அதிர்ச்சி அடைந்து நவீன காலத்திலும் இதுபோன்ற நம்பிக்கை களை மக்கள் தொடர்கிறார்களா? என்று கேட்டுள்ளார்.

மருத்துவர்களும், அமைச்சர் அவர் களும் எளிய கிராமத்து மக்கள் செய்த ஒரு மூடத்தனமான செயலைக் கண்டு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந் திருப்பது உண்மையிலேயே பாராட்டத் தக்கது தான். இதுபோன்ற மூடநம்பிக் கைகளிலிருந்து மக்களை விடுவிக்க பாடுபட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஆனால் இதே இந்து 27.11.2014 நாளிதழில் ஆனந்தஜோதி என்று வெளியிட்டுள்ள நான்கு பக்க இணைப் பில் எத்தனை எத்தனை (மூட) நம்பிக்கை!

மேற்கோளாக, சங்கரனுக்கு சங்கா பிஷேகம்! என்ற தலைப்பில் கே.குமார சிவாச்சாரியார் எழுதியுள்ளதில், ... சோமவாரத்தில் சங்காபிஷேகத்தைத் தரிசித்தால் ஆயுள் விருத்தி உண்டாகும், தீராத நோய்களும் தீரும், துர்சக்திகள் நம்மைவிட்டு விலகும் என்பது நம் பிக்கை... ஈசனுக்குச் செய்த சங்காபிஷேக தீர்த்தத்தைத் தெளித்துக் கொண்டால் பிரம்மஹத்தி தோஷங்களும் விலகி விடும் என்பது நம்பிக்கை! என்று கூறுகிறார்.

இவை மூடநம்பிக்கை இல்லையா? புற்று நோயால் மற்றும் பல கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சங்காபிஷேகத்தைத் தரிசித்தால் நோய்கள் தீர்ந்து விடுமா? தீர்ந்துவிடும் என்றால் நோயாளிகள் எல்லோரையும் சங்காபிஷேகத்தைத் தரிசிக்கச் செய்து எளிய முறையில் நோய்களைத் தீர்த்து விடலாமே!

பிறகு ஏன் மருத்துவ மனைகள்? இந்த நவீன காலத்திலும் இப்படி எல்லாம் எழுதுவது சரியா? இதைப்பற்றி ஏன் யாரும் கவலைப் படவில்லை?

இதே இந்து 20.11.2014 நாளிதழி லிருந்து ஒரே ஒரு எடுத்துக்காட்டு.

நானூறு ஆண்டுகளுக்கு முன்பு திருவிசை நல்லூரில் சிறீதரவேங்கடேச அய்யர்வாள் என்பவர் தன் பித்ரு வழிபாட்டுக்கு அந்தணர்களுக்கு உணவளிக்க செய்யப்பட்ட உணவை பசியால் வாடிய ஒதுக்கப்பட்டவருக்கு அளிக்கிறார். அதைக் கண்ட ஆச்சார அந்தணர்கள் அவரைக் கடுமையாகச் சாடி, அவரை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்து விட்டதாகவும், இனி தங் களுக்கு உணவளிக்க வேண்டுமானால் கங்காஸ்நானம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

உடனே சிறீதர வேங்கடேச அய்யர்வாள் கண்ணை மூடிக்கொண்டு கங்கையை வேண்டுகிறார். உடனே கங்கையானது அவரது இல்லத்துக் கிணற்றில் பொங்கிப்பிரவாகித்து ஊர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. மிரட் டிய அந்தணர்கள் பயந்துபோய் அவரை வேண்ட, அவரும் தனது கிணற்றிலேயே தணிந்து இருக்குமாறு வேண்ட கங்கையும் பணிந்தாள்... என்றெல்லாம் என்.ராஜேஸ்வரி எழுதியுள்ளார்.

கங்கை என்ன அய்யர்வாள் வீட் டுக்குப் பக்கத்தில் ஓடுகிறதா? அவரை கங்காஸ்நானம் செய்துவிட்டு வரச் சொல்ல, அப்படிச் சொன்னவர்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? ஒரு கால், கங்கா ஸ்நானம் செய்ய முடியாது எனவே அவர் வீட்டு உணவை உண் ணாமல் சென்றுவிட அந்தணர்கள் செய்த சூழ்ச்சியா?

தமிழ் ஓவியா said...


நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். இது போன்ற கதைகள் எவ்வளவு பெரிய மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளன, மேலும் இன்றும் மக்களிடம் மூடநம்பிக்கைகளைப் பரப்ப உதவுகிறது. இந்த நவீன காலத்திலும் இது போன்ற மூடநம்பிக்கைகளை பரப்புகிறார்களே என்று யாரும் கவலைப்படவில்லையே!

பொதுவாக ஒவ்வொரு நாளிதழும், திங்கள் இதழ்களும் வெளியிடும் ஆன்மீக மலர்களும், தொலைக்காட்சி களில் ஒளி ஒலி பரப்பப்படும் கோயில், கடவுள், ஜாதகம் பற்றிய கதைகளும் மூடநம்பிக்கையின் வெளிப்பாடு அல் லவா? ஏன் இதைப்பற்றி யாரும் இந்த நவீன காலத்திலும் சிறிதும் சிந்திக்காமல் இருக்கிறார்கள்? இருக்கிறோம்?.

ஒரு கட்சியின் தலைவி மீது அவர் முதலமைச்சராய் இருந்தபோது நடை பெற்ற ஊழல் பற்றிய வழக்கு நடக்கும்போது அவருக்கு வழக்கிலி ருந்து விடுதலை கிடைக்க கோயில் கோயிலாகச் சென்று கும்பிடுவதும், பரிகாரம் செய்வதும், யாகம் செய்வதும் தொண்டர்களும் அமைச்சர்களும் மண்சோறு தின்பது, மொட்டை போட்டுக்கொள்வது, பால்குடம் எடுப்பது யாகம் செய்வது, ஜோதிடரைக் கேட்டு பரிகாரம் செய்வது எல்லாம் சரியா? இந்த நவீன காலத்திலும் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் சரியா என்று யாரும் எண்ணிப் பார்க்க வில்லையே ஏன்?

படித்தவர், பெரிய பொறுப்பில் - பதவியில் இருந்தவர் எந்தக் கட்சி யையும் சார்ந்து தேர்தலில் நிற்காமல், சோதிடரிடம் தனது ஜாதகத்தைக் கொடுத்து நான் சுயேட்சையாக தேர்தலில் நின்றால் வெற்றி பெறு வேனா? என்று கேட்க, உங்கள் ஜாதிகப்படி நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள் என்று சோதிடர் கூறியதை நம்பி தேர்தலில் நின்று படுதோல்வி அடைந்த போது, இது என்ன மூடநம்பிக்கை? இந்த நவீன காலத்திலுமா இப்படி நடந்து கொள் வதுஎன்று யாரும் கூறவில்லையே, ஏன்?

சபரிமலை அய்யப்பன் கோயிலுக் குச் சென்றால் செல்வம் கொழிக்கும், நோய்கள் ஓடிப்போகும், வேண்டிய எல்லாம் நம்மைத்தேடி ஓடிவரும் என்றெல்லாம் (மூட) நம்பிக்கை கொண்டு சபரிமலைக்குச் சென்றவர் களில் பலர் கடுமையான நோய்களுக்கு ஆளானதுடன் விபத்துகளில் சிக்கியும் உயிரை இழந்தபோது யாரும் இந்த நவீன காலத்திலும் இப்படிப்பட்ட மூடநம்பிக்கை தேவையா என்று கேட்கவில்லையே, ஏன்?

சில நாட்களுக்கு முன்புகூட சபரிமலைக்குச் சென்று அய்யப்பனைக் கும்பிட்டுவிட்டு திரும்பும்போது நாமக்கல் பரமத்திசாலை கவேட்டி பட்டி அருகே விபத்து ஏற்பட்டு தந்தை, மகன் உட்பட 5 பேர் உயிரி ழந்தார்களே அப்போது யாரேனும் இந்த நவீன காலத்திலும் இப்படியா? என்று ஏன் யாரும் கவலைப் படவில்லை?

மாறாக எல்லா ஊடகங்களும் அய்யப்பன் கோயிலுக்குச் சென்றால் இது கிடைக்கும் அது கிடைக்கும் என்று கூறி மூடநம்பிக்கையை இந்த நவீன காலத்திலும் வளர்க்கிறார்களே இதைப்பற்றி யாரும் வருத்தப்பட வில்லையே ஏன்?

விபத்தில் இறந்து போனது அவர்களுடைய விதி. விதியை யாரால் மாற்ற முடியும் என்று கூறி தப்பித்துக் கொள்ளவே பார்ப்பார்கள். ஆனால் அந்த விதியை வெல்வதற்குத்தானே கோயில், குளம், மலை, தீர்த்தம், பரிகாரம் என்றெல்லாம் அலைவதை யாரும் சிந்திப்பதில்லையே ஏன்?

சரி விபத்தில் இறந்து போனது விதி என்றால், அந்த குழந்தையின் விதி பிறந்த இரண்டு நாளிலேயே சூடு போட்டுக் கொள்ள வேண்டும் என்று இருந்ததா? அப்படியானால் நவீன காலத்திலும் இப்படிப்பட்ட மூடநம் பிக்கை இருக்கிறதே என்று ஏன் ஆதங்கப்படவேண்டும்?

21 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கற்பனை செய்து எழுதப் பட்ட இராமாயணக் கதையில் குரங்கு களும் (!) அணில் (!!)களும் உதவி செய்ய இராமர் பாலம் கட்டியதாக இன்றும் கூறுகின்ற அரசியல் தலைவர்களைப் பார்த்து இந்த நவீன காலத்திலுமா இப்படிப்பட்ட மூடநம்பிக்கையுடன் பேசுவது! சேதுகால்வாய்த் திட்டத்தை முடக்குவது என்று யாரும் வெட்கப் படவில்லையே ஏன்?

ஒவ்வொருவரும் எந்த மதத்தை - இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் கடவுள் கோயில் வேண்டுதல் பூசை பரிகாரம் சோதிடம் போன்ற மூட நம்பிக்கைகளிலிருந்து முற்றாக விடு பட்டு அறிவுள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதே உண்மையான அறிவாளர்களின் எண்ணமாக இருக்க வேண்டும். சிந்தியுங்கள், ஆழ்ந்து சிந்தியுங்கள்,

- பம்மல் பொன்.இராமசந்திரன்

Read more: http://viduthalai.in/page-1/94843.html#ixzz3Pk0V8744

தமிழ் ஓவியா said...

பெரியார் உலகம் - ஒரு வரலாற்றுச் சாதனை முயற்சி
பேரறிஞர் வரிசையில் போற்றப்பட வேண்டியவர் ஆசிரியர்!

82 வயதான புதுச்சேரி ஜி.கே.எம். பேட்டி!

புதுச்சேரி மாநில திராவிடர் கழக பொதுக் குழு உறுப்பினர் ஜி.கே.எம். என்கிற ஜி. கிருட்டிணமூர்த்தி. 82 வயதான இளைஞர். தமிழர் தலைவர் ஆசிரியர்மீது வற்றா அன்பு பூண்டவர். சீரிய நூல் வாசிப்பாளர். விடுதலையின் தொடர் வாசகர்.

அவர் வீடு முழுவதும் கொள்கை வாசகங்கள்; பேரறிஞர்கள் தம் கருத்துக்கள் எங்கு பார்த்தாலும் எழுதப்பட்டுள்ளன. சிந்தனையாளர் களின், முற்போக்காளர்களின் உருவப் படங்கள் வீட்டை அலங்கரிக்கின்றன.

அவரைப்பற்றி...

காரைக்காலில் 31.07.1933இல் கோவிந்தசாமி - _ பட்டம்மாள் இணை யரின் மூத்த மகனாகப் பிறந்தவர். விசயலட்சுமி இவரின் துணைவியார். எழில், அன்பரசு, அறிவொளி, மல்லிகா, செல்வி என 5 பிள்ளைகள் இவருக்கு! இவரின் தந்தையார் சுயமரியாதை உணர்ச்சி உள்ளவர். அவரே ஜி.கே.எம். பகுத்தறிவுவாதியாக பரிணமிப்பதற்குக் காரணம். இயக்கப் பற்றுதல் எப்படி ஏற்பட்டது?

காரைக்கால் நிரவி பகுதிக்கு பெரியார் வந்தபோது எனக்கு 15 வயது இருக்கும். நான் நேரில் சென்று பார்த்ததும், 17,18 வயது இருக்கும்போது என் தாத்தா வீடான புதுச்சேரி குயவர் பாளையம் சென்றிருந்தபோது ஒதியஞ் சாலை திடலில் தந்தை பெரியார் பேசியதைக் கேட்டதும், குபேர் தலை மையில் வள்ளுவர் விழா நடந்தபோது திருக்குறள் முனுசாமியும், இளைஞர் வீரமணி (தமிழர் தலைவர்)யும் பேசி யதைக் கேட்டதும் இயக்கக் கொள்கை யின் பால் பற்றுதல் ஏற்பட காரண மான நிகழ்வுகளாகும்.

இயக்கத்தின் ஆதரவாளனாக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்திருக்கிறேன். வி.சு. சம்பந்தம் பொறுப் பிலிருந்த போதுதான் நான் இயக்கத்தின் பொறுப்புக்கு வந்தேன். இப்போது புது வையில் இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதைப் பார்க்கும்போது பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

கொள்கை பரவலுக்கு தங்களின் பணிபற்றி...

இயக்க நூல்கள் மற்றும் மேலை நாட்டு அறிஞர்களின் நூல்கள் அவ்வப் போது நிறைய வாங்கி ஏராளமானவர் களுக்கு கொடுத்து அவர்களில் பலரை இயக்கத்துக்கு ஆதரவாளர்களாக மாற்றியுள்ளேன். தேவையான சமயத் தில் துண்டறிக்கைகள் அச்சிட்டு வழங்கி வருகிறேன்.

இயக்க நிகழ்ச்சிகள் நடத்தும் போது தாராளமாக நிதி உதவி செய்வதில் மகிழ்ச்சி காணுபவன். பெரியார் உலகம் நிதி இருபத்தையா யிரம் அளித்துள்ளேன். எப்போதும் யாரிடமாவது இயக்கக் கொள்கைகளை பற்றிப் பேசிக் கொண்டே இருப்பேன்! பலரை இயக்க சார்பாளர்களாக நான் மாற்றி உள்ளேன்.
மறக்க முடியாத நிகழ்ச்சி ஏதாவது...

தமிழ் ஓவியா said...

1984ல் என் புதிய வீடு திறப்பு. என் துணைவியார் கிரகப் பிரவேசமாக நடத்த விரும்பினார். நான் மறுத்து விட்டேன். எனது கொள்கை உரிமையை விட்டுக் கொடுக்க நான் தயாரில்லை என்று கூறிவிட்டேன். வேறு வழியின்றி எதுவுமே செய்யாமல் அவ்வீட்டுக்கு குடிசென்று விட்டோம். அதன்பிறகு தான் எனக்கு (என் கொள்கைக்கு) ஒத் துழைக்க ஆரம்பித்தார் என் துணை வியார்.

தமிழர் தலைவர் பற்றி தங்களின் கருத்து....

தந்தை பெரியார் சூரியன் என்றால் ஆசிரியர் கி. வீரமணி அவர்களோ அதன் ஒளி வாங்கிய முழு நிலா என் பேன். உலகளாவிய பேரறிஞர் வரிசையில் போற்றப்பட வேண்டியவர். பெரியார் உலகம் -அவரின் வரலாற்றுச் சாதனை முயற்சியாகும்.

ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைகள் நூல் வரிசை என்னை மிகவும் ஈர்த்திட்ட புத்தகங்களாகும். புதுச்சேரி தமிழக மக்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்களாகும். பல நூறு புத்தகங்கள் அவற்றில் வாங்கி மற்றவர்களுக்கு கொடுத்திருக்கிறேன்.அதுபோல கீதையின் மறுபக்கம் சீரிய ஆய்வு நூல். அதைப் படித்து வியந்தவன் நான்.

அய்யாவின் அடிச்சுவட்டில்...

நூல் வரிசையும் இயக்கத்தின் வர லாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளப் பயன்படும் நூல் களாகும்.

இயக்க வளர்ச்சிக்கு தங்களின் கருத்து...

இயக்கத்தில் இளைஞர்கள், மாண வச் செல்வங்கள் நிறைய பேர் சேர வேண்டும். இயக்க இளைஞர்கள் விடுதலை ஏட்டினைத் தவறாமல் படிப்பதுடன், அய்யா, ஆசிரியர் நூல்களை முழுவதுமாக வாசிக்க வேண்டும். தொடர்ந்த வாசிப்பு வழக்கம் ஆழ்ந்த கொள்கை உறுதியை ஏற்படுத்தும்.

அறிவில் சிறந்தவர்களாக மிளிர முடியும். 2000 மாநாடுகள் என்று ஆசிரியர் அறிவித்துள்ள அறிவிப்பு என்னை பிரமிக்க வைத்தது. கழக நிர்வாகிகளும், தோழர்களும் வட்டார விழிப்புணர்வு மாநாடுகளைத் திறம்பட நடத்தினாலே இயக்க வளர்ச்சி செழித்தோங்கும் என்பது என் கருத்து. ஒவ்வொரு கழகத் தோழரும் விடுதலை வாங்க வேண்டும் _- படிக்க வேண்டும்.

மதவெறிக்கு தூபம் போடும் மத்திய அரசு அமைந்து உள்ள இக்காலத்தில் அதனை முறியடித்து மனிதநேயம் காக்கப்பட நமது இயக்கத்தால் மட்டுமே செயலாற்ற முடியும்.

நமது தமிழர் தலைவர் ஆசிரியர் எவ்வித எதிர்பார்ப்புமின்றி அய்யாவின் கொள்கையைப் பரப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவரின் ஆணையைச் செயல்படுத்துவதே நாம் இயக்கத்துக்கு மக்களுக்கு ஆற்றிடும் தொண்டு என்பதை உணர்ந்து தோழர்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்!

பேட்டி கண்டவர்: துரை. சந்திரசேகரன் 31.12.2014

Read more: http://viduthalai.in/page-1/94844.html#ixzz3Pk0n5V3d

தமிழ் ஓவியா said...

நீ.. இந்து என்றால்....

நீ இந்து என்றால் உனக்கு ஏன் கோயிலில் நுழைய அனுமதி இல்லை? அர்ச்சகராகவும் உரிமையில்லை.

நீ கட்டிய கோயில், நீ செதுக்கிய சிலை, நீ தொட்டுச் செய்த அந்த சிலை எப்படி கடவுளாக முடியும்?

நீ தொட்டால் மட்டும் அது எப்படி தீட்டாகும்? தீட்டு என்றால் என்ன? அப்படித்தானே அர்ச்சகர் ஆகும் உரிமையில்லை என்று தமிழக சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது?

நீ இந்து என்று சொல்லிக் கொள்கிறாய். ஆனால் உன்னை வேசிமக்கள் என்றும் பாவ யோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்றும் வேதத்தில் எழுதி வைத்துள்ளான். அந்த வேத சாஸ்திரங்கள்தானே அர்ச்சகர் ஆகும் உரிமையைத் தடுத்துள்ளன.

ஒரே ரத்தம் உள்ள மனிதனை பல ஜாதிகளாக பிரித்து தான் மட்டுமே சொன்னால் கடவுள் கேட்பார் என்று ஊருக்கு ஊர் ஒரு தேரை வைத்து வினை தீர்ப்பதாகவும், பணம் கொடுப்பதாகவும், நோய் தீர்ப்பதற்கும், திருமணம் செய்வதற்கும் என்றே பல கடவுள் என்கிற சிலைகளையும் கோயில்களையும் கட்ட வைத்து தன்னினத்தையே உரிமையாக்கிக் கொண்டு மக்களை ஓட்டாண்டிகளாக வைத்துள்ளார்கள்.

எத்தனை நூற்றாண்டுகளாகியும் எத்தனை பெரியோர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வந்துள்ளார்கள். கல்வியே இல்லை என்று சொன்னதை மறந்து இப்போதுதானே படிக்க முன்வந்துள்ளீர்கள்.

எத்தனையோ அறிவார்ந்த புத்தகங்கள் பெரியார் மன்றத்தில் குவிந்து கிடக்கின்றன. அதைப் படிக்கும் முன்பே செத்த மொழியைப் புகுத்தி அதிலே நீ செய்த சிலைகளையும் அதற்காக தொகுத்த கற்பனைக் கதைகளையும் படிக்க வைத்து மீளவும் கற்காலப் பயணத்துக்கு ஆட்படுத்த உள்ளார்கள்.

எனக்கென்ன எனக்கென்ன என்று நீயிருந்தால் உன் சந்ததிகள் அல்லல்படும் என்பதை அறிவாயா? இப்போது இருக்கும் கல்விமுறையில் மாற்றம் என்ற பெயரில் செத்த மொழி சமஸ்கிருதத்தைத் திணிப்பதால் என்ன நன்மை ஏற்படப் போகின்றது?

கர்நாடகா மற்றும் கேரளா அரசுகள் மூடநம்பிக்கையை ஒழிக்க சட்டம் செய்ய முன்வந்துள்ள இன்றைய நிலையில் தமிழ்நாடு என்ன செய்யப் போகிறது? -

மா. சென்றாயன், தருமபுரி

Read more: http://viduthalai.in/page-1/94845.html#ixzz3Pk1EtE00

தமிழ் ஓவியா said...

பெருமாள் முருகன் அப்படி என்ன தவறு செய்து விட்டாராம்?


கொங்குநாட்டுக் காலவரலாற்றாசிரியர்மீது சங் பரிவாரத்தினரின் தாக்குதல்

பெருமாள் முருகன் அப்படி என்ன தவறு செய்து விட்டாராம்?

-ஏ.ஆர். வெங்கடாசலபதி

தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள கரிசல் (பருத்தி விளையும் கருப்பு மண்) பூமியில் வழங்கும் சொற் களடங்கிய அகராதி ஒன்றை 17 ஆண்டுகளுக்கு முன்பு 1983 இல் கண்ட ஈரோடு சிக்கைய நாயக்கர் கல்லூரி மாணவர் ஒருவர் அது போன்ற அகராதி ஒன்றினை கொங்கு மண்டலத்திற்கும் தயாரிப்பது என்ற முடிவெடுத்தார்.

நண்பர்களிடமிருந்தும், உறவினர்களி டமிருந்தும், பேச்சுவழக்கு பாரம்பரியத் திலிருந்தும் கொங்கு நாட்டில் மட்டுமே வழங்கும் தனிச் சொற்களை சேகரிக்கத் தொடங்கினார். வரலாற்று ரீதியாக கொங்கு மண்டலம் என்பது கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர் மாவட் டங்களை உள்ளடக்கியது.

விவசாயத் துக்கு சாதகமான சூழல் அற்ற நிலையில் கடின உழைப்பாளிகளாக இருந்த இப்பகுதி விவசாயிகள் அனைவரும் இந்த இளைஞர் மீது தணியாத பாசமும், ஈர்ப்பும் கொண்டிருந்தனர்
நவீன இலக்கியத்தில் கொங்கு நாட்டின் பங்களிப்பு அப்பகுதியின் நிலத்தடி நீரைப் போலவே வறண்டதாக இருந்தது.

ஆனால் நாகம்மாள் என்ற புகழ் பெற்ற புதினத்தை சண்முகசுந்தரம் மட்டும் எழுதாமல் போயிருந்தால், கொங்கு நாட்டு மக்களின் வளமான வாழ்க்கையை பலர் புரிந்து கொள்ளா மலேயே போயிருப்பர். 1991 ஆம் ஆண்டு தொடங்கி, அவரது எழுது கோலிலிருந்து எண்ணற்ற புதினங்களும், சிறுகதைகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தன. தன்னந்தனி ஆளாக எழுதிக் குவித்து, கொங்கு நாட்டை தமிழ்நாட்டின் இலக்கிய வரைபடத்தில் அவர் இடம் பெறச் செய்தார்.

நவீன தமிழ் இலக்கியம் என்றாலே, நீண்ட காலமாகவே தஞ்சை, திருநெல் வேலியைச் சுற்றியுள்ள கிராம வாழ்க்கை மற்றும் சென்னை மாநகர நடுத்தர மக்களின் நகர வாழ்க்கையை சுற்றிச் சுற்றியே கதை சொல்லும் வழக்கம் கொண்டதாக இருந்தது. இந்த இளைஞ ரின் புதினத்தில் கடின உழைப்பாளி களான கொங்குநாட்டு விவசாயிகள் இடம் பெற்றனர்.

கங்கணம் மாரிமுத் துவையோ அல்லது ஆளந்தாபட்சி முத்துவையோ எவரால் மறக்க முடியும்? நாடோடிகள் மற்றும் தாழ்ந்த ஜாதி மக்கள் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவனவாக அவரது படைப்புகள் இலக்கிய வளம் படைத்தவையாக இருந்தன.

வரலாறு பற்றி ஓர் ஆழ்ந்த உணர்வு கொண்ட கல்வியாளரான அவர், முந்தைய ஆசிரியர்கள் எழுதிய படைப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார்.

கொங்குநாட்டுக்கென ஒரு சொல்லகராதியை உருவாக்க வேண்டும் என்று அவர் முதன் முத லாகக் கண்ட கனவு 17 ஆண்டுகள் கழிந்த பிறகு 2000 ஆம் ஆண்டில்தான் நிறைவேறியது. கொங்கு மண்டலத்தைப் பற்றி டி.ஏ.முத்துசாமி கோனார் எழுதிய, நீண்ட காலமாகக் காணாமல் போயி ருந்த, வரலாற்று நூலை கண்டுபிடித்து அவர் மறுபதிப்பு வெளியிட்டார்.

இந்த மாபெரும் கால வரலாற்று ஆசிரியர்தான் இப்போது தான் மிகவும் நேசித்த கொங்கு நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். ஜனவரி 8 ஆம் தேதியன்று இரவு, காவல்துறையினரின் குறிப்பான அறிவுரையின் பேரில், தனது குடும்பத்துடன் இந்த பெருமாள் முருகன் தனது சொந்த ஊரை விட்டு ஓடிப்போனார்.

இரண்டு நாட்கள் கழித்து, மாதொருபாகன் என்ற அவ ரது புதினத்தை எதிர்த்து திருச்செங் கோடு நகரத்தில் ஒரு முழுமையான கடையடைப்பு நடைபெற்றது. இரண்டு வார கால தொலைபேசி வசைமொழி, அச்சுறுத்தலுக்குப் பிறகு இது நடந்தேறியுள்ளது.

அதற்கு முன்பு டிசம்பர் 26 அன்று சட்டத்திற்குப் புறம் பாகக் கூடிய ஒரு கலவர கும்பல் அவ ரது இந்த நூலின் நகல்களை எரித்த துடன், அந்த நூலைத் தடை செய்ய வேண்டும் என்றும், நூலாசிரியரையும், வெளியீட்டாளரையும் கைது செய்ய வேண்டும் என்றும் கோரினர்.

தமிழ் ஓவியா said...


மாதொருபாகன் என்ற இந்தப் புதினம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. முருகனின் புதினத் தேடுதலில் இந்த புதினம் இரண்டாவது கட்டத்தைக் குறிப்பதாக அமைந்த தாகும். நூறாண்டு காலத்திற்கு முன் வாழ்ந்த குழந்தையற்ற ஒரு விவசாய இணையரின் சோகக் கதையைக் கூறுவதாக அமைந்துள்ள புதினம் அது.

பொன்னாவும் காளியும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த காதலில் மகிழ்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் குழந்தைப் பேறற்ற அவர்களது மனவலி, சுற்றியிருந்தவர்களின் ஏச்சுப் பேச்சு களாலும், மதவிழாக்களின் போது அவர் களுக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானங் களாலும், அதிகமாயின.

பாதி உடல் ஆணாகவும், பாதி உடல் பெண்ணாக வும் உள்ள அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில் திருச்செங்கோட்டில் அமைந் திருந்த சிவன்கோயில் மிகவும் புனிதம் வாய்ந்ததாகக் கருதப்பட்டு வந்துள்ளது.

தங்கள் குடும்பத்திற்கு வாரிசு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கோயிலை நாடி வரும் மக்கள் கூட்டம் பெரிது. திருச்செங்கோட்டில் உள்ள வரடிகல்லைச் சுற்றி வந்த ஈரோட்டைச் சேர்ந்த சின்னத்தாயம்மாள் - வெங்கட நாயக்கர் இணையருக்கு மாபெரும் பகுத்தறிவாளரான பெரியார் பிறந்தார்.

குழந்தை பிறப்புக்கான அனைத்து வழிகளையும் முயன்று பார்த்து பலன் கிடைக்காமல் போகும் சில இணை யர்கள், இறுதியில் பாலுணர்வைத் தூண்டும், ஒழுக்கக் கேடானது என்றும் கூறப்பட இயன்ற, ஒரு தீர்வை நாடு கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத் தேரோட்டத்தின்போது, குழந்தைப் பேறற்ற பெண்கள், திரு விழாக் கொண்டாட்ட சூழலில், அவர் களது கணவர்கள் உட்பட அனைவரது ஒப்புதலுடன், வேற்று ஆடவர்களுடன் உடலுறவு கொள்ளும் பழக்கம் நடை முறையில் இருந்தது. இதில் நல்வாய்ப்பு பெற்ற சில பெண்கள் கருத்தரிப்பர். சமூக ரீதியாக அனுமதிக்கப்பட்ட இந்த சடங்கில் பிறந்த பிள்ளைகள் சாமி கொடுத்த பிள்ளைகள் என்று குறிப் பிடப்படுகின்றனர்.

கருத்தரிப்பதற்கான உதவிகள் கிடைக்காத பண்டைய சமூகங்கள் பலவற்றில் இது போன்ற பழக்கம் இருந்திருக்கலாம் என்பதை மானிடவியல் ஆய்வு வல்லுநர்கள் உறுதி செய்வார்கள். பண்டைய இந்து மத பாரம்பரியங்களில் இந்த பழக்கம் நியோகா அல்லது நியோக தர்மா என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இதற்கு மத அனுமதி இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது.

இந்த புதினத் தின் இந்தப் பகுதிதான் இந்து மதவெறி யர்கள், மற்றும் ஜாதி வெறியர்களின் கோபத்தை தூண்டியுள்ளது. இந்து பெண்கள் மீது களங்கம் கற்பிக்கப் படுகிறது என்று கூறி, ஒட்டு மொத்த திருச்செங்கோடு நகரத்தையே கேவலப்படுத்தி விட்டதாக முருகன் மீது குற்றம் சாட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு ஓரிடத்தைத் தேடி அலையும் சங் பரிவார கும்பல் இதனை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது.

உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் முருகனின் நூலை எரித்த வன்முறை கும்பலில் முன்னிலை வகித்திருந்தார். மாநில கட்சித் தலைமை அவரது இந்த செயலுக்கு கட்சி பொறுப்பல்ல என்று அறிவித்தபிறகு, இந்து அமைப்புகள் இப்போது திரை மறைவில் இருந்து செயலாற்றுகின்றன.

கடந்த சில வாரங்களில், இந்துக்களின் மனதைப் புண்படுத்தியதாக் கூறப்படும் புதினத்தின் பக்கங்களை, அக்கருத்து எந்த சந்தர்ப்பத்தில் தெரிவிக்கப்பட்டி ருந்தது என்பதை அறியமுடியாதபடி தனியே பிரித்தெடுத்து, ஆயிரக்கணக் கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு பக் தர்களிடையே வினியோகிக்கப்பட்டுள் ளது.

நூல்களைப் போற்றி கொண்டாடு வதை விட அவற்றை எரிப்பதே சிறந்தது என்பதுதான் இந்து பாரம்பரியம் என்றும் கூட ஒருவர் நினைக்கக்கூடும். உணர்வுகளைத் தூண்டிவிடும் சுவரொட்டிகள் நகரம் முழுவதிலும் ஒட்டப்பட்டிருக்கின்றன. அதிகார பூர்வமற்ற கூட்டங்களில் வன்முறைக் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடை யூறு ஏற்படுவதைத் தவிர்க்கும் ஒரு முயற்சியாக, முருகன் வருத்தம் தெரி வித்து ஒரு விளக்கம் வெளியிட்டுள் ளார். இந்த நகரத்தைப் பற்றி நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி அனைத் தையும் அடுத்து வரும் பதிப்புகளில் இருந்து நீக்கிவிடுவதாகவும் அவர் வாக்குறுதி அளித்தார். ஆனால் எதுவும் பயன்படவில்லை. முழுமையான கடையடைப்பு நடந்தேறியது.

இந்த நூல் முதன் முதலில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப் பட்ட போது எவரது மனமும் அத னால் புண்படவில்லை. உண்மையைக் கூறுவதானால், பொன்னா மற்றும் காளியுடன் தங்களை சில இணை யர்கள் அடையாளப்படுத்திக் கொண் டனர். ஒரு தெளிவற்ற குழப்பமான முடிவை அந்த புதினம் கொண்டிருந்த தால், காளி என்ன ஆனாள் என்பது பற்றிய கேள்விகளைக் கேட்டு வாசகர் கள் முருகனைக் குடைந்தார்கள்.

தமிழ் ஓவியா said...

படைப்புணர்வுடன் அதற்கு பதில ளிக்கும் விதத்தில், வேறுபட்ட முடிவு களைத் தெரிவிக்கும் ஆலவாயன் மற்றும் அர்த்தநாரி என்ற இரு தொடர் புதினங்களை எழுதி அவர் வெளி யிட்டார்.

இந்த நூலை எரித்தவர்கள் இலக்கியம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளாதவர்களாக இருப் பார்கள் என்பது போலவே தோன்று கிறது. கவலைஅளிக்கும் ஒரு நேரத்தில், அவர்களுடன் தீயநோக்கம் கொண்ட சுயநலமிகளும் சேர்ந்து கொண்டனர். முருகன் புதினம் எழுதும் ஒரு எழுத் தாளர் மட்டுமல்ல. இருபது ஆண்டு களாக அவர் அரசு கல்லூரிகளில் பேராசிரியராகப் பாடம் கற்பித்துக் கொண்டு வருகிறார்.

தமிழ் ஓவியா said...


கடந்த பல ஆண்டுகளில் கல்வி என்னும் வியா பாரத்தைத் தாக்கி பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். நாமக்கல் இரண்டு விஷயங்களுக்குப் பெயர் போனது. ஒன்று கோழிப்பண்ணை. மற்றது கல்வி வியாபாரம். உயர்ந்த மதிப்பெண்களை மாணவர்களை வாங்கச் செய்வது என்று கூறிக் கொண்டு கல்வியை வியாபாரமாக செய்து வருகின்றனர்.

இந்த தொழிற் சாலைப் பள்ளிகள் கடைபிடிக்கும் நியாயமற்ற, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதில் முருகன் எந்த முயற்சியையும் செய்யாமல் விட்டுவிட வில்லை. சேலம் மாவட்ட ஆட்சியாள ராக இருந்தபோது, சுற்றுச்சூழல் விதிகளை மீறிய பல குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்த, போராட்ட உணர்வு கொண்ட அதிகாரியான சகாயத்துக்கு ஆதரவாகவும் முருகன் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

இவற் றால் பாதிக்கப்பட்ட ஒட்டு மொத்த உள்ளூர் சுயநலவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துகொண்டு, முருகனை ஊரை விட்டு விரட்டும் முயற்சியில் தற்காலிகமாக வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால் அனைத்துமே நம்பிக்கை அற்றதாகப் போய்விடவில்லை. பிளவு பட்டு நிற்பதில் பெயர் பெற்ற தமிழ் எழுத்தாளர் சமுதாயமும், அறிஞர் சமுதாயமும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பிரச்சினையில் ஒன்றுபட்டு நின்றுள்ளனர்.

நிர்ப்பந் தங்கள் கொடுக்கப்படும்போது எப்போ துமே வெளியீட்டாளர்கள் பணிந்து போவதுதான் வழக்கம். ஆனால், முருக னின் பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் நிபந்தனையற்று முருகனை ஆதரிப் பதுடன், இந்த விஷயத்துக்காக நீதி மன்றங்களில் போராடவும் தயாராக இருக்கிறார்.

தனது படைப்பாற்றலின் உச்ச கட்டத்தில் பெருமாள் முருகன் உள் ளார். இந்த ஆண்டு சாகித்ய அகாடமி பரிசுக்கு அவரது பெயர் அடிபடுகிறது. மாதொருபாகன் நூலின் ஆங்கில மொழியாக்க நூலான ஒரு பகுதி பெண் (One part Woman) என்ற நூலைப் பற்றிய பலத்த விமர்சனங்கள் கடந்த ஆண்டு வெளியாயின.

தன்னைச் சுற்றி வெளிச்சம் போடப்படுவதைக் காணக் கூசும் இந்த ஆசிரியர் இப்போது பொதுமக்களின் பார்வைக் குவிப்பின் ஒளியில் உள்ளார். முதல் தரத்தவர் என்று கருதப்படும் இந்த எழுத் தாளரைப் பேசவிடாமல் ஊமையாக ஆக்குவது பெருத்த சோகத்தை அளிப் பதாக இருக்கும்.

நன்றி: தி இந்து
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்.


Read more: http://viduthalai.in/page-1/94846.html#ixzz3Pk1dD9wh

தமிழ் ஓவியா said...

சென்னை மாகாணம் - இரண்டாவது சட்டசபை - சாதனைகள்

-மா.பால்ராசேந்திரம்

ஜஸ்டிஸ் கட்சியின் நோக்கம் சமுதாயத்துறையில் மக்களை மனிதத் தன்மை அடையச் செய்து எல்லோர்க் கும் சமதர்மமும் சமநீதியும் வழங்குவதே என்றார் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள். 1923 செப்டம்பர் 11 பொதுத் தேர்தல் என அறிவிப்புச் செய்யப்பட் டது.

சர்.பிட்டி.தியாகராயருக்கும், டாக்டர்.சி.நடேசனாருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை இருவரும் பேசிக்கொள்ளாத நிலைக்குச் சென்றது. அதுவே தேர்தலில் கட்சிக்குச் சற்றுச் சரிவைத் தந்தது. கட்சி இடம் தராத சூழலில் நடேசனார் சுயேட்சையாகப் போட்டியிட்டார். ஒருவரையொருவர் தோற்க வேண்டுமென விரும்பிய நிலை யில் இருவருமே வெற்றி பெற்றனர்.

பல்குழுவும் பாழ்செய்யும் உட் பகையும் வேந்தலைக்கும் கொல் குறும்பும் இல்லது நாடு எனும் குறள் நெறிக்கொப்ப உட்பூசல் தொடக்க காலப் பெருமக்களைப் புறக்கணித்தல், முதல் அமைச்சரவையில் தெலுங் கர்களே என்ற புழுக்கம், மோதிலால் நேருவால் தோன்றிய சுயராஜ்யக்கட்சி என்ற பல்வேறு இடையூறுகளை நொறுக்கி நீதிக்கட்சி, அமைச்சரவை அமைக்குமளவிற்குப் பெரும்பான்மை பெற்றது.

மொத்தம் 98 உறுப்பினர்களில் பார்ப்பனர் அல்லாதார் 61 பேரும், பார்ப்பனர் 13 பேரும், முஸ்லிம்கள் 13 பேரும், இந்தியக்கிறித்தவர் 5 பேரும், அய்ரோப்பியர் 5 பேரும், ஆங்கிலோ இந்தியர் ஒருவருமாகத் தேர்வாயினர். ராமராய நிங்கார் எனும் பனகல் அரசரை முதல் அமைச்சராகவும், சர்.ஏ.பி.பாத்ரோ, டி.என்.சிவஞானம் பிள்ளை (தூத்துக்குடி ஓய்வு பெற்ற அரசு அதிகாரி) ஆகியோரைச் சக அமைச்சராகவும் கொண்டு 1923 நவம்பர் 19இல் பதவி ஏற்றது.

கட்சிக் கொள்கையை விடேனெனக்கூறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார் நடேசனார். கவர்னர் நியமனமின்றி இம்முறை உறுப்பினர்களே 1924 மார்ச் 28 இல் கூடிய முதல் சட்டமன்றக் கூட்டத்தில் எல்.டி.சாமிக்கண்ணுப் பிள்ளையைச் சபைத்தலைவராகவும், திவான்பகதூர் பி.கேசவப்பிள்ளையைத் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுத் தனர். சபைத்தலைவரின் திடீர் மறை வால் 1925 அக்டோபர் 28இல் பேரா சிரியர் எம்.இரத்தினசாமி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ் ஓவியா said...


தன்கு லத்தினைத் தூக்கிடும் தாம்பெனச் சகம்சிரிக்கப் பிறந்தவி பீஷணன் ஆகச் சித்தூர் தொகுதி உறுப்பினர் சிந்தாமணி ராமலிங்க ரெட்டி, கே.வி.ரெட்டிநாயுடு, டாக்டர் சி.நடேசனாருடன் சேர்ந்து அமைச் சரவை மீது, கட்சியில் ஒழுங்கான சட்டதிட்டமில்லை.

முதலாளி, பணக்காரர்களின் கட்சி, தேசியப் பிரச்சனைகளில் ஒத்துழைப்பில்லை, கடல்கடந்த இந்தியர் பற்றிய அக்கறையில்லை. மலபார் குடியுரிமைச் சட்டத்தை ஆதரிக்க முன்வராத கட்சி, சிறைக்கொடுமையைக் கண்டிக்காத கட்சி என்று குற்றஞ்சாட்டி 1924 நவம்பர் 27 இல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்.

முகம்மது மூஸா செய்ட் வழி மொழிந்தார். எஸ்.சத்யமூர்த்தி அய்யர் சுயராட்சியக் கட்சி சார்பில் ஆதரித்துப் பேசினார்.

மேலும், இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் ஒழுங்காகச் செயல்பட இனஉணர்வு ஆட்சிமுறை பாதக மானது என நான் உறுதியாக நம்பு கிறேன் என்று உள்துறைச் செயலர் ஆலிவர் பிரபுக்குக் கடிதமும் எழு தினார். புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக சர்.சி.பி.இராமசாமி அய்யரும், நீதிக் கட்சியின் கொள்கைகள் பில்கிரிம்ஸ் பிராக்ரஸில் வருவதுபோல, நீரைப் போன்றோர்; வெப்பத்தில் ஆவி ஆகி விடுவர்; குளிரால் பனிக்கட்டி ஆகிவிடுவர்.

காற்றடிக்கும் பக்கம் சாயும் கொள்கையில்லாதவர். தவளையைப் போல் நீரிலும் நிலத்திலும் வாழ்ப வர்கள். முதுகெலும்பில்லாதவர். அவர் களை எப்படியும் வளைக்கலாமெனச் சத்தியமூர்த்திக்குக் கடிதமெழுதி வன்மத்தைத் தீர்த்துக்கொண்டார். பிராமணர்களைத் திட்டும் திட் டத்தைக் காட்டித்தான் கட்சி உயிர் வாழ்கிறது. மந்திரி சபைக்குச் சாவு ஏற்பட்டு விட்டது. அழக்கூட ஆள் இருக்க மாட்டார்கள் என்றார் சத்தியமூர்த்தி.
தீர்மானத்தை எதிர்த்து ஏ.பி. பாத்ரோ, நீங்களெல்லாம் பச்சோந் திகள் என்றார். ஏ.இராமசாமி முதலி யார் பார்ப்பனரல்லாதாரின் உரிமைப் பேச்சு வகுப்புவாதமென்றால் அவர் களின் தேசியவாதமும் பச்சை வகுப்பு வாதமே, 97 சதவீத மக்களின் நலன் தான் பட்டமும் பதவியுமாகும் என்று பேசினார். முதல்வரின் பதிலுரைக்குப் பின் தீர்மானம் வாக்கெடுப்பில் தோற்றது.

தமிழ் ஓவியா said...


சாதனைகள்:

மருத்துவக் கல்லூரிக்கு விண் ணப்பம் செய்பவர் சமஸ்கிருதம் தெரிந்த வராக இருக்க வேண்டுமென்ற தடையை உடைத்தெறிந்தார்.

ஆங்கிலேயர் வசமிருந்த மருத் துவத்துறையில் அவரின் ஆதிக்கத்தை அகற்றி இந்தியர்களையும் பங்குபெறச் செய்தார். ஆயுர்வேத வைத்தியம் விருத்தி செய்யப்பட்டது.

முதன்முதலாகச் சென்னையில் இந்திய மருத்துவக் கல்லூரியை ஏற் படுத்தினார்.

ஆந்திராவில் ஒரு பல்கலைக் கழகம் உருவாக்கினார். அண்ணா மலைப் பல்கலைக்கழகத்துக்கு தொடக்க விழா நடத்தப்பட்டது.

நிறைதமிழ்! இந்நாள் நெடுநிலம் முழுதும் குறைவில தென்று குறிக்கும் தனத்தமிழ்!

தமிழர் வாழ்வின் தனிப்பெரு மைக்கும்

அமைந்த சான்றாம் அமுதுநேர் செந்தமிழ்

எனும் புரட்சிக்கவிஞரின் தமிழின் சிறப்பை, ஆரியம் குறைத்து 1857 இல் உருவான சென்னைப் பல்கலைக்கழகத் தில் சமஸ்கிருதத்தைத்தான் கற்பிக்க வேண்டும் எனச் செய்யப்பட்டிருந்தது. பார்ப்பனரல்லாத அறிஞர்கள் பலர் போராடியதால் தமிழ்மொழியைக் கற்பிக்க வழி ஏற்பட்டது. 1927-_28 ஆம் ஆண்டிற்குப் பிறகே வித்வான் பட்டம் கிடைத்தது தமிழனுக்கு.

நல்ல கீதம் சிவத்தனி நாதம் நடன ஞானியர் சிற்சபை யாட்டம்
அல்லல் போக இவருடன் சேர்ந்தே ஆடி யாடிப் பெருங்களி கொள்வோம்

பாரதியாரின் கூற்றுக்கேற்ப ஆலயங் களில் களியாட்டமே நிறைந்தது. ஆலயச் சொத்துக்களையும், மானியங் களையும் சுயநலமிகள் தம் வீட்டுச் சொத்தாகப் பயன்படுத்தினர். நகை களோ சரியான கணக்கின்றிக் குருக்கள் வீட்டுப்பொருளானது.

கேள்வி கேட்டு வழக்காடிய நிலையில், பெருந்தொகை பார்ப்பன வழக்கறிஞர்களுக்குக் கோவில் வருமானத்திலிருந்து தரப்பட்டும் சரியான தீர்வு கிடைக்கவில்லை. சரியான சட்டம் கொண்டுவர முற்படு கையில் சத்தியமூர்த்தி, பிராமணர்களை மட்டும் எதிர்க்கவில்லை, கடவுளையும் எதிர்க்கக் கிளம்பி விட்டார்கள் என்று ஆவேசப்பட்டார்.

எலிஏ மாந்தால் எறும்பும் கொல்லும்
புலிஏ மாந்தால் பன்றியும் புரட்டும்
யானைஏ மாந்தால் எறும்பும் நலிசெயும்
மானே மாந்தால் நரியும் மடிக்கும்!

புரட்சிக்கவிஞரின் எச்சரிக்கைக் கருத்திற்கொப்ப என்.கோபாலசாமி அய்யங்காரைத் தமக்குத் துணையாகக் கொண்டு 1925 சனவரியில் வைஸ்ராய் கையொப்பத்தோடு அறநிலையப் பாதுகாப்புச் சட் டத்தை நிறைவேற்றினார் முதல்வர் பனகல் அரசர். இன்று இந்தியாவெங் கும் அறநிலையத்துறை இருப்பதற்குக் காரணமே நீதிக்கட்சிதான்.கைத்தொழிலுக்கு அரசு உதவிச் சட்டம் வந்தது.

கவர்னர் ஜார்ஜ் ஜே.கோஷனின் பழக்கவழக்கங்களும் சாதியும் நீக்கப்படும் வரைத் தாழ்த்தப்பட்டோர் சார்பில் கோரப்படும் சமத்துவம் வழங்குவது இயலாது என்ற அறை கூவலைப் புறந்தள்ளி வீறுகொண் டெழுந்த அரசு, பொது அலுவலகம், கிணறு, குளம், பொதுத்தங்குமிடம் இவற்றிடம் சாதி இந்துக்கள் எவ் விடம்வரைச் செல்கின்றாரோ அது வரைத் தாழ்த்தப்பட்டோரும் செல்லத் தடையில்லை என 22.12.1924 அர சாணை எண் 3674 இன்படி உள் ளாட்சி மன்றம், துறைத் தலைவர் களுக்கும் அனுமதி பிறப்பிக்கப்பட்டது.

பார்ப்பனர்களோ அற நிலையத் துறையையும், மந்திரி வீட்டையுமே பதவிக்காகச் சுற்றி வந்தார்கள் என் கிறது 1925 குடியரசு ஏடு. கெஞ்சினால் விஞ்சுவதும், விஞ்சினால் கெஞ்சுவது தானே பார்ப்பனர் தன்மை.

நம் உரிமையைப் பெறுவதென்பது, உரிமையைப் பறித்து வருவோரின் ஆதிக்கத்தை அழிப்பதேயாகும். அவரின் அழிவின் மீதே நாம் நம் உரிமைகளைப் பெற முடியும் என்னும் அறிவாசான் கருத்திற்கிணங்க பனகல் அரசரின் அமைச்சரவை தமிழரின் உரிமையை நிலைநாட்டியது!

Read more: http://viduthalai.in/page-1/94848.html#ixzz3Pk24Ysw1

தமிழ் ஓவியா said...

சிறீரங்கம் இடைத் தேர்தலில் திமுகவையே ஆதரிக்க வேண்டும் - ஏன்?

சிறீரங்கம் இடைத் தேர்தலில் திமுகவையே ஆதரிக்க வேண்டும் - ஏன்?

நடைபெறவிருக்கும் சிறீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரையே ஆதரிக்க வேண்டிய அவசியத்தை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வரும் பிப்ரவரி 13ஆம் தேதி சிறீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது இந்த இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

ஏன் இந்த இடைத் தேர்தல்?

இத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, அது நிரூபிக்க பட்டதால், பெங்களூர் தனி நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்ததால் சட்டத்தின் இயல்பான முறைப்படி முதல் அமைச்சர் பதவியையும், சிறீரங்க சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இந்த இடைத் தேர்தல் சட்டப்படி நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. மற்றபடி இந்த இடைத் தேர்தலுக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.

ஊழல் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை!

1) இந்தியாவில் ஊழல் வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டு, முதல் அமைச்சர் பதவியை இழந்தது என்பது முதன் முதலில் அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் விஷயத்தில்தான் நடந்துள்ளது. இது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பது ஆகாது.

ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதால், காலியான சட்டப் பேரவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்கும் நிலையில், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் போட்டியிடும் போது, அக்கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்கச் செய்வதன் மூலமாகத்தான் தமிழ்நாட்டு மக்கள் ஊழலுக்கு எதிரான ஆரோக்கியமான பண்பு நலன் கொண்டவர்கள் என்பதை நிலை நிறுத்த முடியும். தனிப்பட்ட விருப்பு, வெறுப்பைப் பொறுத்ததல்ல; ஜனநாயக கடமை ஆகும்.

நாட்டையே ஊழலில் மூழ்கடித்து விடும் - எச்சரிக்கை!

அவ்வாறு இல்லாமல் ஊழல் புரிந்த ஒரு கட்சியின் வேட்பாளரை மீண்டும் வெற்றி பெறச் செய்தால் அது இந்த ஒரு இடைத் தேர்தல் சம்பந்தப்பட்ட ஒன்றாகக் கருதப்பட முடியாமல், நாட்டையே ஊழலில் மூழ்கடிப்பதற்கான ஓர் அங்கீகாரத்தை மக்களே உற்சாகமாக வழங்கி விட்டார்கள் என்ற மனப்பான்மையைத் தானே உருவாக்கும்?

2) இரண்டாவதாக அ.இ.அ.தி.மு.க. ஆட்சி 2011இல் பொறுப்பேற்றது முதல், மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகள் நடைபெற்றுள்ளன என்று குறிப்பிட்டுள்ள சொல்லுவதற்கென்று பெரிதாக ஏதுமில்லை என்பது வெளிப்படை!

தமிழ் ஓவியா said...


அத்தியாவசியப் பொருள்களும் - கட்டண உயர்வு

மாறாக மக்களின் அடிப்படை, அன்றாட வாழ்வைப் பாதிக்கும் வகையில், பேருந்துகள் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என்று சாதாரண அடித்தட்டு மக்களைப் பெரிதும் பாதிக்கும் வகையில் செயல்பட்டு வந்திருக்கிறது. குறைந்த பட்சம் இதனை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தெரிவிப்பதற்காவது, இந்த இடைத் தேர்தலை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா!? அப்படி ஒரு தீர்ப்பை சிறீரங்கம் தொகுதி வாக்காளர்கள் வழங்காவிட்டால் மேலும் மேலும் பல துறைகளிலும் விலைவாசியை உயர்த்தும் கைங்கர்யத்தை அ.இ.அ.தி.மு.க. அரசு துணிச்சலாகச் செய்வதற்கான துணிவை அங்கீகாரத்தைக் கொடுத்ததாகி விடுமே!

மின்வெட்டுத் தொடருகிறதே!

3) நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதங்களில் மின் தட்டுப்பாட்டை அறவே ஒழித்து விடுவோம் என்று அ.இ.அ.தி.மு.க. உத்தரவாதம் கொடுத்தது; நான்கு ஆண்டுகள் ஓடிய நிலையிலும் இன்னும் மின் தட்டுப்பாடு என்னும் இருட்டில் மக்கள், உழலும் பரிதாப நிலைதானே! அதே நேரத்தில் மின் கட்டணம் உயர்வு மட்டுமே நடந்திருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.

தி.மு.க. ஆட்சி பற்றி உச்சநீதி மன்றம்

4) இந்தியாவிலேயே பொது விநியோகத் திட்டத்தில் தமிழ்நாடு அரசை (திமுக அரசை) மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றமே ஆலோசனை தெரிவித்தது (12.8.2010).
ஆனால், இன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசின் செயல்பாடு என்ன? பொது மக்களின் குமுறலை அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் - ஆட்சி என்ற ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறதா என்பது எங்கும் பேச்சாகவே இருக்கிறது!

தமிழ் ஓவியா said...

மத்தியில் உள்ள பிஜேபி அரசு இந்துத்துவா கொள்கை வெறி கொண்டது என்பது நாடறிந்த உண்மை. தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. கட்சி ஆட்சி என்பதும் பெரிதும் அந்தப் போக்குக் கொண்டதே என்பதற்குப் பெரிய எடுத்துக்காட்டுகள் தேவையில்லை.

அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டே மண் சோறு சாப்பிடுவது வரை சர்வ சாதாரணமே!

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதை மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் கலைஞர் சட்டத்தின் மூலம் கொண்டு வந்தார். அதன் மூலம் தந்தை பெரியார் உள்ளிட்ட தமிழ்நாட்டு அறிஞர் பெரு மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த கோரிக்கை நிறைவேறியது.

தமிழ் ஆண்டு போய் சமஸ்கிருத ஆண்டு வந்தது!

ஆனால் ஆட்சிக்கு வந்த முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா - இந்து மதப் புராணக் கதையின் அடிப்படையில் சமஸ்கிருத ஆண்டுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறி முந்தைய தி.மு.க. ஆட்சி நிறைவேற்றியதை மாற்றி தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டத்தைக் கசக்கிக் குப்பைக் கூடையில் வீசி எறிந்தார். இந்த ஒன்றே ஒன்று போதும் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆட்சியும், அவர் பொதுச் செயலாளராக இருக்கும் அ.இ.அ.தி.மு.க.வும் தமிழ் - தமிழர் - விரோத இந்துத்துவா ஆட்சி என்பதற்கு. பிஜேபியை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் அது கொண்டுள்ள இந்துத்துவ வெறி என்றால், அதே கண்ணோட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியையும் பார்ப்பதற்குச் சகல தகுதியும் அஇஅதிமுகவுக்கு உண்டு. அந்த வகையிலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட மதச் சார்பின்மை கொள்கைக்கு எதிராக செயல்படுவோர் யாராக இருந்தாலும் வாக்காளர் பெரு மக்கள் வாக்குச் சீட்டு மூலம் தக்க பாடத்தைக் கற்பிக்கக் கடமைப்பட்டுள்ளவர்கள் ஆவார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்....

6) சிறீரங்கம் இடைத் தேர்தலில் பிஜேபி நின்றாலும் சரி, அது தொடர்புடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் (NDA) நின்றாலும் சரி, அது இந்துத்துவா வெறிக்கு, ராம ராஜ்ஜியத்துக்கு, மதச் சார்புத் தன்மைக்கு அளிக்கப்பட்ட ஆதரவாகவே கருதப்பட வேண்டும்.

7) கடந்த எட்டு மாத மத்திய பிஜேபி ஆட்சியில் நடைபெற்றவை எல்லாம் இந்துத்துவா மதவெறி முழக்கங்கள்தான்; அது காந்தியாரைப் படுகொலை செய்த கோட்சேக்குக் கோயில் கட்டுவோம் என்று சொல்லும் அளவுக்கு மிகப் பெரிய துணிச்சலைக் கொடுத்து விட்டதா இல்லையா?

வளர்ச்சியா - தளர்ச்சியா?

8) வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்லி மக்களுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து ஏமாற்றி, மத்தியில் ஆட்சியிலே அமர்ந்த நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் தளர்ச்சியைத் தவிர மக்கள் கண்ட பலன் என்ன?

இலாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்களை எல்லாம் தனியார்க்குத் தூக்கிக் கொடுக்கும் நாட்டின் செல்வத்தை தனியார்க்கு ஏகபோகமாக்கும் கேடு கெட்ட வேலையில்தான் மோடி அரசு வேக வேகமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது.

விவசாயம் வேகமாக வீழ்ச்சியை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கொண்டு வரப்பட்ட பயிர்க் காப்பீட்டு (இன்ஷ்யூரன்ஸ்) திட்டத்தை யாருக்கும் தெரியாமல் கையுறை போட்டுக் கொன்று குழியில் தள்ளி மூடிவிட்டது. கிராம மக்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டமான நூறு நாள் வேலை திட்டம் அனேகமாக ஊற்றி மூடப்பட்டு விட்டது.

தமிழ் ஓவியா said...


உள்நாட்டுத் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றனவே!

வெளிநாட்டு முதலாளிகளைக் கூவிக் கூவி அழைக்கும் பிஜேபி அரசு, ஏற்கெனவே இந்தியாவில் நடைபெற்று வந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பைத் தந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றனவே - அதனைத் தடுக்க ஒரு தூசைக்கூட அசைக்கவில்லையே!

ஆர்.எஸ்.எஸ். சாவி கொடுத்தால் ஆடும் இந்துத்துவா பொம்மையாகத்தான் மோடி அரசு நடனமாடிக் கொண்டு இருக்கிறது.

அதன் காரணமாகவே நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் பெரிய அளவுக்கு வாக்குச் சரிவை பிஜேபி சந்தித்துக் கொண்டு இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். குறுகிய காலத்திலேயே வெகு மக்கள் எதிர்ப்பை வாரி அணைத்துக் கொண்டு விட்டதே. பிரதமர் மோடிவெற்றி பெற்ற உ.பி. வாரணாசி தொகுதிகளில் நடைபெற்ற கண்டோன்மென்ட் தேர்தலில் அனைத்து இடங்களிலும் பிஜேபி தோல்வியைக் கண்டுள்ளது.

குறுகிய காலத்திலேயே பிஜேபி ஆட்சியின் தரம் எத்தகையது என்பதை இந்திய வாக்காளர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். சிறீரங்கம் இடைத் தேர்தல் மேலும் ஒரு பாடத்தைக் கற்பித்தால் எதிர் காலத்திற்கு நன்மையாக முடியும்.

கூட்டணியிலிருந்து விலகல்

கடந்த 16ஆவது மக்களவைத் தேர்தலில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சியின்மீது கடும் அதிருப்தி கண்டு, வெளிப்படையாகவே குற்றம் சாட்டி, கூட்டு முறிந்தது என்று அறிவித்து, வெளியேறி விட்டனர் என்பதையும் சிறீரங்கம் தொகுதி வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இடதுசாரிகள் கவனத்துக்கு...

9) சிறீரங்கம் இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்கிஸ்ட்) போட்டியிடுவதாக அறிவிப்பு வந்துள்ளது. தேர்தலில் போட்டியிடுவது என்பது அரசியல் கட்சிக்குரிய உரிமையே! அதே நேரத்தில் யார் வெற்றி பெறுவது என்பதைவிட யார் தோற்கடிக்கப்பட வேண்டியது எது என்பது முக்கியம் அல்லவா! தெரிந்தோ தெரியாமலோ தோற்டிக்கப்பட வேண்டிய சக்திகளுக்கு நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ துணை போய் விடக் கூடாது என்பதில் இடதுசாரிகள் எச்சரிக்கையாக இருந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள். ஒரே நேரத்தில் பல போர் முனைகளைத் தேர்வு செய்யக் கூடாது என்பது இடதுசாரிகளுக்குத் தெரியாததல்லவே!

தி.மு.க. வேட்பாளரை ஆதரிப்பீர்!

10) மதவாத பிஜேபி நிலைப்பாட்டை வெளிப்படையாகவே விமர்சித்து தனது எதிர்ப்பினை திமுக பொதுக்குழு (சென்னை 9.1.2015) வலுவான தீர்மானத்தின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் கூடுதல் வாய்ப்பு திமு.க.வுக்கு மட்டுமேதான் இருக்கிறது என்ற நிலையில் அதனைப் பிரகாசமாக்கி, திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதன் மூலம் மத்தியில் உள்ள மதவாத பிஜேபி அரசு, மாநிலத்தில் அதே மனப்பான்மை கொண்ட அ.இ.அ.தி.மு.க. அரசுகளுக்கு தோல்வியைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

இதனை சிறீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர்கள் தெளிந்து உணர்ந்து அத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு வெற்றியை ஈட்டித் தருமாறு திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு கொள்கைக் கண்ணோட்டத்திலும், நாட்டு மக்களின் வளர்ச்சி நோக்கிலும் இந்த வேண்டுகோளை திராவிடர் கழகம் வாக்காளர்களுக்கு முன் வைக்கிறது.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
23-1-2015

தமிழ் ஓவியா said...

திருவள்ளுவர் நாள் ஊர்வலம் துவக்கி வைக்க கருநாடக முதல்வர் சித்தராமையா ஒப்புதல்



பெங்களூரு, ஜன.23- பெங்களூருவில், திருவள் ளுவர் நாள் ஊர்வலத்தை, கர்நாடக முதல்வர் சித்த ராமையா துவக்கி வைக்க உள்ளார்.பெங்களூரு தமிழ் சங்கமும், பெங்களூ ருவிலுள்ள அனைத்து தமிழ், தமிழர் அமைப் புகள் இணைந்து, ஆண்டு தோறும் திருவள்ளுவர் தின ஊர்வலம் நடத்தப் படுகிறது. இந்தாண்டு, பிப்., 1ஆம் தேதி காலை, திருவள்ளுவர் தின ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, வரும் பிப்., 1ஆம் தேதி, நடக்கும் திரு வள்ளுவர் தின ஊர்வ லத்தை துவக்கி வைக்க, முதல்வர் ஒப்புதல் தெரி வித்து உள்ளார். அனைத்து தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பெரும் எண்ணிக்கையில் மக்களை திரட்டி, ஊர்வலத்தை சிறப்பாக நடத்த உள்ளன.

தமிழ் ஓவியா said...

மக்கள் தொகைப் பெருக்கம்பற்றி பாரதீய ஜனதாவின் கருத்தென்ன?

பாரதீய ஜனதா கட்சியின் பரிதாப நிலைக்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது. கட்சிக்கு உறுப்பினர்களை அது சேர்க்கும் முறையிலேயே அதன் பலவீனம் எத்த கையது என்பது எளிதில் விளங்கி விடும்.

திராவிடர் விழிப்புணர்ச்சி வட்டார மாநாடுகளில் அதுபற்றி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எடுத்துச் சொல்லும் பொழுது பொது மக்கள் பெரிதும் ரசித்து கைதட்டி ஆரவாரத்தை வெளிப்படுத்து கின்றனர்.

மிஸ்டு கால் (Missed Call) என்ற பெயரில் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்த ஒரு கட்சியை இதுவரை யாரேனும் கேள்விப்பட்டதுண்டா?

ஒரு கட்சியில் சேர அந்தக் கட்சிக்கென்று கொள் கைகள் கோட்பாடுகள் தேவைப்படாதா? வெறும் மிஸ்டு காலில் கட்சிக்கு உறுப்பினர் சேர்ப்பதன் மூலம் அவை எல் லாம் தேவையில்லை; கட்சிக்கு ஆள்களின் எண்ணிக்கைக் கூடினால் போதும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு.

சொந்தக் காலில் நிற்க முடியாதவர்கள் மிஸ்டு காலில் நிற்க ஆசைப்படுகிறார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்ன போதுதான் அந்த ஆரவாரம் - சிரிப்பு கையொலி!

கைப்பேசியில் மிஸ்டு கால் வருவதுண்டு - பெரும் பாலும் வியாபார நோக்கத்தில்தான் அது வருகிறது. அப்படியென்றால் பிஜேபி அரசியல் வியாபாரம் செய்கிறதா என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

ஒன்றை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் பிஜேபி என்றாலும் அதனை ஆட்டி வைக்கும் சங்பரிவார்களாக இருந்தாலும் அவர்களை அடையாளம் காட்ட வேண்டுமானால் ஒரு சுருக்கமான சூத்திரம் உண்டு. தந்தை பெரியார் கொள்கைக்கு அண்ணல் அம்பேத்கர் கொள்கைக்கு, பொதுவுடைமைக் கொள்கைக்கும் விரோதமானதுதான் இவை என்று சொல்லி விட்டாலே போதுமானது - பிஜேபி வகையறாக்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி விடுமே.

தமிழ் ஓவியா said...

இதற்கு மேல் பிஜேபியை அடையாளம் காட்ட வேறு என்ன ஆதாரங்கள் தேவை? இன்னும் ஒரு கூடுதல் தகவல் தேவைப்படும் என்று சொன்னால், மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு தலைவரான காந்தியாரைப் படுகொலை செய்த ஒரு கும்பல் இது. (இந்து மகாசபைக் காரர்தான் கொன்றார் என்று திசை திருப்பித் தங்களை காப்பாற்றி கொள்ள முயன்றாலும், இந்து மகாசபை என்ப தும் இந்துத்துவா கொள்கையுடைய காவிக் கூடாரம் தானே!)

காந்தியாரைப் படுகொலை செய்ததோடு மட்டுமல்ல; காந்தியாரைக் கொன்ற நாதுராம் கோட்சே தூக்கிலிடப் பட்டான் அல்லவா? அவனது அஸ்தியை (சாம்பலை) சேகரித்து வைத்துள்ளனர்; ஒவ்வொரு ஆண்டும் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள அந்த அஸ்தியின் முன்னே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஓர் உறுதி மொழியை எடுத்துக் கொள்கின்றனர்.

அகண்ட பாரத தேசத்தை உருவாக்குவோம்! (பர்மா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உட்பட இந்தியாவுடன் சேர்ப்பது என்பதுதான் அகண்ட பாரத தேசம் என்பதாம்) அப்படி உருவாக்கப்படும் காலத்தில் பாகிஸ்தானில் இப்பொழுது ஓடிக்கொண்டு இருக்கும் சிந்துநதியில் கோட்சேயின் அஸ்தியைக் கரைப்பார்களாம்.

இப்பொழுது இன்னொரு கட்டத்திற்குத் தாண்டிக் குதித்து வந்துள்ளார்கள். இந்தியாவின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேயின் சிலையை வைக்க வேண்டும் என்று கூறியதோடு, இந்தியாவின் முக்கிய நகரங்களில் கோட்சேயின் சிலைகளை, காந்தியார் படுகொலை செய்யப்பட்ட சனவரி 30இல் (இன்னும் ஒரு வாரம் இருக்கிறது) திறக்கப் போகிறார்களாம்.

இப்பொழுதே 17 சிலைகள் தயாராக உள்ளதாம்; காந்தியைப் படுகொலை செய்வதற்கு முதல் நாள் டில்லியில் இந்து மகாசபை அலுவலகத்தில் விவாதித்துப் பேசினார்களாம். அந்தக் கட்டடத்தில் கோட்சேபற்றிய அருங்காட்சியகத்தையும் உருவாக்கப் போகிறார்களாம்.

அதோடு விட்டார்களா? நாதுராம் கோட்சேயின் சிலையை வைப்பதற்கு அரசின் அனுமதிக்காக அவர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்க மாட்டார்களாம். மகா புருஷர்களின் சிலைகளை வைப்பதற்கு யார் அனுமதியும் தேவைப்படாது என்றும் வெளிப்படை யாகவே சொல்லியுள்ளனர்.

கடந்த ஆட்சியில் எல்லாம் வராத தைரியம் இப்பொ ழுது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பீறிட்டுக் கொண்டு கிளம்புகிறது என்றால், அதற்கான துணிவு எங்கிருந்து கிடைத்தது என்பது எளிதில் விளங்கி விடும்.

மதவெறித் தலைமையில்தான் இவ்வளவு அநாகரிகங் களும் இந்த ஆட்சிக் காலத்தில் அரங்கேறுகின்றன என்றால், இன்னொரு பக்கத்தில் நாட்டை அச்சுறுத்தி வரும் மக்கள் தொகைப் பிரச்சினைபற்றியது - இது குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் நன்னிலம் பொதுக் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்திய அரசின் கொள்கையும், திட்டமும் ஆகும்; இப்பொழுதே 120 கோடியைக் கடந்துவிட்டது; இந்தப் போக்குத் தொடருமேயானால் உலக மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியத் துணைக் கண்டம் விரைவில் முதல் இடத்திற்கே வந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது; அந்த நிலை மிகப் பெரிய சவாலாகவே இருக்கும்.

நாம் இருவர் நமக்கு இருவர் என்பது இந்திய அரசின் முழக்கமாகவும் இருந்து வரும் நிலையில், பிஜேபியைச் சேர்ந்தவர்களும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நிருவாகிகளும் ஒவ்வொருவரும் அதிகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தூண்டும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சாரமும் செய்கிறார்கள்.

இதனைப் பொறுப்பு வாய்ந்த பிரதமரோ, மற்ற மற்ற மத்திய அமைச்சர்களோ கண்டித்தார்களா? என்பது முக்கிய வினாவாகும்.

அரசமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற போக்கு அறவேயில்லாதவர்கள் இந்தியாவை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்; எச்சரிக்கை! எச்சரிக்கை!!

அபாயச் சங்கை ஊதுவது கருப்புச் சட்டையின் கடமை! விழித்தால் எதிர்காலம் அச்சமற்று அமைதிப் பூங்காவாக செழிப்புறும்; கருத்தில் கொள்க!

Read more: http://viduthalai.in/page1/94791.html#ixzz3Pk4IHakL

தமிழ் ஓவியா said...

தொல்லை

வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப் படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

Read more: http://viduthalai.in/page1/94790.html#ixzz3Pk4Tlg5T

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவின் கொள்கை

பகுத்தறிவு வாரப் பத்திரிகையின் முதல் மலர் 26.9.1934 ஞாயிறு வெளியாகின்றது என்றாலும், அதன் கொள்கை களைப் பற்றி குடிஅரசு ரிவோல்ட் பகுத்தறிவு (தினசரி) ஆகிய பத்திரிகைகளின் அபிமானிகளுக்கும் வாசகர் களுக்கும் எடுத்துக் கூற வேண்டியதில்லை.

சுருக்கமாக ஒரு வாக்கியத்தில் சொல்லித் தீர வேண்டுமானால் பகுத்தறிவு தோன்றலானது இன்றைய உலக வழக்கில் இருந்து வரும் காரியங்களில் பெரும் பான்மை மக்களால் முதன்மையானதாகவும், இன்றி யமையாதனவாகவும் கருதப்படும்.

எங்கும் நிறைந்த இறைவனை வாழ்த்தவோ, எல்லாம் வல்ல மன்னனை வாழ்த்தவோ, யாதினும் மேம்பட்ட வேதியனை வணங்கவோ, ஏதும் செய்யவல்ல செல்வ வானை வாழிய செப்பவோ கருதி அல்ல வென்பதே யாகும்.

மேலும் மனித சமூகத்தில் மௌட்டியத்தால் ஏற்பட்ட துரபிமானங்களாகிய கடவுள், ஜாதி, மதம், தேசம், நான், என்பன போன்ற அபிமானங்களை அறவே ஒழித்து மனித சமூக ஜீவாபிமானத்தையும், ஒற்றுமையையும் பிரதான மாய்க் கருதி உழைத்து வரும் என்றும் சொல்லுவோம்.

இத்தொண்டாற்றுவதில் பகுத்தறிவு வேதத்திற்கோ, விமலத்திற்கோ, சாத்திரத்திற்கோ, பழக்கத்திற்கோ, பழமைக்கோ, புதுமைக்கோ, அடிமையாகாமல் கொள்வன கொண்டு தள்வன தள்ளி தானே சுதந்திரமாய் தன்னையே நம்பி தனது அறிவையும் ஆற்றலையுமே துணைக் கொண்டு தன்னாலான தொண்டாற்றி வரும்.

முடிவாய் கூறுமிடத்து பகுத்தறிவு மனித ஜீவாபி மானத்துக்கு மக்களை நடத்திச் செல்லுமே ஒழிய எக் காரணம் கொண்டும் மக்கள் பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வில் உயிர் வாழாது என்பதேயாகும்.

-தந்தை பெரியார்
பகுத்தறிவு 26.8.1934

Read more: http://viduthalai.in/page1/94822.html#ixzz3Pk5nMAUQ

தமிழ் ஓவியா said...

நாத்திகர்களே தேவை!


இந்துக்கள் தங்களுடைய மதமே சிறந்தது எனக் கருதுகிறார்கள். முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் தர்மமே மேலானது என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் நாம் எந்த மதத்தைத் தழுவுவது என்று அக்பர் ஒருமுறை கேட்டதாக கிறிஸ்துவப் பாதிரிகள் சொல்லுகிறார்கள். அக்பருடைய கேள்வி நியாமானது. ஆனால், அது கிறிஸ்துவ பாதிரிகளுக்கு பிடிக்கவில்லை.

தங்கள் குறிப்பேட்டில்,

எல்லா நாஸ்திகர்களுக்கும் உரிய பொதுவான குற்றம் அக்பரிடத்தும் காணப்படுகிறது. நாஸ்திகர் தங்கள் படித்தறிவை மத நம்பிக்கைகளுக்கு கீழ்ப்படுத்த மறுக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஒரு நாஸ்திகனுக்குரிய லட்சணம் இதுவாயின் இத்தகைய நாஸ்திகர்களின் தொகை பெருகுவதால் நாட்டுக்கு நன்மையே தவிர வேறில்லை.

-ஜவகர்லால்நேரு
உலக சரித்திரம், பக்கம் 157

Read more: http://viduthalai.in/page1/94825.html#ixzz3Pk67GuZz

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டில் மதவாதம் காலூன்றப் பார்க்கிறது - அதனை ஆசிரியரும், கலைஞரும் முறியடிப்பார்கள்


கண்ணந்தங்குடி கீழையூர் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் எல்.ஜி. உரை

மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளைக்கு ரூ.24,000 திராவிடர் கழக வளர்ச்சி நிதியாக ரூ.48,000 வழங்கப்பட்டது

உரத்தநாடு, ஜன. 23- தை முதல் நாள் 15.1.2015 அன்று மாலை உரத்தநாடு ஒன்றியம் கண்ணந்தங்குடி கீழையூரில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை பரிசளிப்பு விழா, திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு மிக எழுச்சியுடன் நடைபெற்றது.

நிகழ்விற்கு திருச்சி பெரியார் பெண்கள் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர் கி.மகாலெட்சுமி தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் இ.அல்லிராணி, செ.ஜெகதாராணி, கு.கலைச்செல்வி, செ.கலாலெட்சுமி, தா.பூங்குழலி, தா.ஜன ரஞ்சனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் இரா.கயல்விழி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கழக கொடியை திரு வாரூர் மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந் தமிழ்ச்செல்வி ஏற்றி வைத்து உரையாற்றினார். மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி மாநாட்டை திறந்து வைத்து உரையாற்றினார்.

தொடர்ந்து ஒன்றியத் தலைவர் ஆ.இலக்குமணன், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மண்டலச் செயலாளர் மு.அய்யனார், கழக பொதுச் செயலாளர் இரா.செயக்குமார், கழக பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், நாகை மாவட்ட ப.க. செயலாளர் மு.க.ஜீவா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சி.மாரிமுத்து, தி.மு.க ஒன்றிய செயலாளர் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மு.காந்தி, கழக பொதுச்செயலாளர் இரா.குணசேகரன்,

தலைமைச் செயற்குழு உறுப்பினர் இராசகிரி கோ. தங்கராசு, கழகப் பேச்சாளர் பூவை. புலிகேசி, பெரியார் மருத்துவ குழும தலைவர் டாக்டர் இரா.கவுதமன், கழக பொருளாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி ஆகியோர் உரையைத் தொடர்ந்து திமு.க. தேர்தல் பணிக் குழு செயலாளர் எல்.கணேசன் சிறப்புரை யாற்றினார். இறுதியாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.வெற்றிக்குமார் நன்றி கூறினார்.

மருத்துவர் பிறைநுதல்செல்வி உரை

இன்றைய தினம் மத்திய மோடி அரசால் ஏற்படும் ஆபத்துகள் கலாச்சார சீரழிவு, வரலாற்று திரிபுவாதம், பொரு ளாதார ஏற்றத்தாழ்வு, வேலை வாய்ப்புக்குக் கேடு மதவாதப் போக்கு இவற்றை தடுக்கும் மூளையான திராவிட சித்தாந் தத்தை உயர்த்தி பிடிக்கும் வகையில் தமழர் தலைவர் அவர்கள் 2000 வட்டார மாநாடுகளை தமிழகம் முழுவது அறிவித்தார்கள்.

அதன் தொடர்ச்சியாக இந்த மாநாடும், தந்தை பெரியாரை எப்படி அன்னை மணியம்மையார் பாதுகாத்தார்களோ அதே போல் தமிழர் தலைவரை பாதுகாக்கும் மோகனா அம்மையார் பெயரில் கல்வி அறக்கட்டளை நடத்துவது பெருமைக்குரியது என பாராட்டிப் பேசினார்.


தமிழ் ஓவியா said...

மு.காந்தி உரை

தமிழ்நாட்டில் தன்னுடைய கணக்கை துவங்கலாம் என துடிக்கும் மதவாத பி.ஜே.பி. இன்றைய தினம் பல தந்திரங் களை எடுக்கும் முயற்சியாக தருண்விஜய் திருக் குறளை பரப்ப போவதாக வருகிறார்.

இந்த மாய வேலைகள் இங்கு நடக்காது. அவர்கள் வடநாட்டில் திருக்குறளை பரப்பட்டும் இங்கு அந்தத் தேவைகள் இல்லை. தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண் டும் என்று எடுத்துக் கூறினார். தி.மு.க. ஒன்றிய செயலாளரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான மு.காந்தி அவர்கள்.

எல்.கணேசன் உரை

மதவாதம் தமிழ்நாட்டில் கால் ஊன்றப் பார்க்கிறது என்று இங்கே அனைவரும் பேசினார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் அந்த பயம் நமக்கு வேண்டாம் அது இங்கே நடக்காது. ஏனென்றால் இது பெரியார் பூமி அவரால் பக்குவப்படுத்தப்பட்ட மக்கள் டி.எம்.நாயர் முதல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், பின்னால் நீதிகட்சி பிறகு சுயமரியாதை இயக்கம்.

பிறகு திராவிடர் கழகம் தி.மு.க. என்ற பரிணாம வளர்ச்சி பெற்ற நமது இயக்கங்கள் அண்ணா சொன்னது போல் இரட்டைக்குழல் துப்பாக்கியாக தி.மு.க., தி.க. செயல்படும் வரை இங்கு அவர்கள் கனவு பலிக்காது. அவற்றை முறியடிக்கும் வேலையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் திமுக தலைவர் கலைஞர் அவர்களும் பார்த்துக் கொள்வார்கள். நாம் அவர்களை பின்தொடர்ந்து செல்வோம் என எடுத்துக் கூறினார்.

தொடக்கத்தில் ஜெயங்கொண்டம் கலைவாணன் அவர்களும் திருப்பூர் குமார் அவர்களும் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியையும், அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியையும் மிகச் சிறப்பாக நடத்தினார்கள்.

மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை பரிசளிப்பு

2013-2014 கல்வியாண்டில் கண்ணந்தங்குடி கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 453/500 பெற்று முதல் இடத்தை பெற்ற மாணவி ப.குடியரசி 437/500 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பெற்ற மாணவர் பூ.விஜய பூபதி 427/500 மதிப்பெண் பெற்ற மாணவர் சி.கார்த் திக் ஆகியோரை பாராட்டி கல்வி ஊக்கத்தொகையும் நினைவு சான்றிதழும் கழக பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, எல்.கணேசன், மு.காந்தி ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர். அரசு உயர்நிலைப் பள்ளி தனிப் பயிற்சிக்கு மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ.5,000 ஊ.ம. துணைத் தலைவர் சி.மாரிமுத்து அவர்களிடம் டாக்டர் கவுதமன் வழங்கினார்.

கண்ணந்தங்குடி கீழையூர் கே.ஆர்.சி. நினைவு அறக்கட் டளை சார்பில் கே.ஆர்.பன்னீர்செல்வம், கவுதமன் குடும்பத் தின் சார்பில் கழக வளர்ச்சி நிதியாக மாதம் 2000 வீதம் ஒரு ஆண்டுக்கான தொகை 24,000த் துக்கான காசோலையை எல்.கணேசன் அவர்கள் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி அவர்களிடம் வழங்கினார்.

உரத்தநாடு வட்டம், தெலுங்கன் குடிக்காடு துரைசாமி சேதுராயர் நினைவாக அமெரிக்காவாழ் கமலக்கண்ணன் - மாயா ஆகியோர் ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால் மூலமாக கழக வளர்ச்சி நிதியாக மாதம் 2000 வீதம் ஓராண் டுக்கான தொகை ரூ.24,000-க்கான காசோலை கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களிடம் வழங்கப்பட்டது.

நாகை மாவட்ட ப.க. செயலாளர் மு.க.ஜீவா அவர்கள் ரூ.5000 கண்ணந்தங்குடி கீழையூர் மறைந்த சு.ரெங்கநாதன்- ரெ.அஞ்சலை ஆகியோர் நினைவாக பொறியாளர் அரங்க.குமரவேல் -கலைச்செல்வி ஆகியோர் சார்பாக ரூ.10 ஆயிரம் பெரியார் மருத்துவ குழும தலைவர் குன்னூர் டாக்டர் கவுதமன் அவர்கள் ரூ.9 ஆயிரம் மோகனா வீரமணி கல்வி அறக்கட்ட ளைக்கு நன்கொடையாக வழங்கினர்.

தமிழ் ஓவியா said...

பெரியார் படிப்பகத்திற்கு நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து தினத்தந்தி நாளிதழை கோவிந்தராசு நினைவாக வழங்கும் கோ.சரபோஜி, ப.தாமரைக் கண்ணன் இந்த ஆண்டு தினமணி நாளிதழ் வழங்கும் க.கவியரசன் (அதிமுக) படிப் பகத்தை நிர்வகிக்கும் இரா.அண்ணாமலை ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில், ஒன்றிய தி.மு.க. துணைச் செயலாளர் நாதன் (எ) கலைச்செல்வன், கண்ணை கிழக்கு ஊராட்சி திமுக செயலாளர் கு.கருணாநிதி, உரத்த நாடு நகர செயலாளர் திமுக இரா.கிருஷ்ணகுமார், பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்டி.ஏ. நெப்போலியன், மாநில ப.க. பொறுப்பாளர் இளங் கோவன்,

மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த் தன், மாநில ப.க. துணைத் தலைவர் மா.அழகிரிசாமி, மாநில வீதி நாடக அமைப்பாளர் பி.பெரியார் நேசன், த.ரமேஷ், த.குமார், திருவாரூர் மாவட்ட ப.க. தலைவர் கரிகாலன், செயலாளர் சிவக்குமார், கழகப் பேச்சாளர்கள் இராம.அன்பழகன், சு.சிங்காரவேல், மாவட்ட ப.க. செயலாளர் கோபு.பழனிவேல், மாவட்ட அமைப்பாளர் ப.தேசிங்கு, பகுத்தறிவு இலக்கிய அணி தலைவர் சித்தார்த்தன், செயலாளர் நாராயணசாமி, தோ.தம் பிக்கண்ணு, ஒன்றியச் செயலாளர் இரா.துரைராசு,

நகரத் தலைவர் பேபி.ரவிச்சந்திரன், நகர செயலாளர் சாமி.அர சிளங்கோ, ஒன்றிய இளைஞரணி தலைவர் அ.சுப்பிரமணி யன், அ.தன பால், வெ.விமல் குழந்தை கவுதமன், சேதுராயன் குடிக்காடு இராஜப்பன் பூவை.இராமசாமி, தஞ்சை நகர செயலாளர் முருகேசன், இரா.செந்தில்குமார், ப.தாமரைக்கண் ணன், இராசதுரை, தண்டாயுதபாணி, சோ.இராமகிருஷ்ணன், மன்னை ஒன்றியத் தலைவர் தமிழ்செல்வன், நீடா ஒன்றியத் தலைவர் கணேசன், ரெத்தினவேலு, இராயபுரம் சேது, திருவாரூர் மண்டலத் தலைவர் இரா.கோபால் உள்ளிட்ட ஏராள மான தோழர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.

விழா சிறக்க உழைத்தவர்களுக்கு பாராட்டு

மாநாடு சிறக்க உழைத்த மாவட்ட செயலாளர் அ.அருண கிரி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெற்றிக்குமார், செயலாளர் இராஜவேல், மாவட்ட மாணவரணி செயலாளர் தர்மசீலன், தலைவர் நா. அழகிரி, ஆயங்குடி தாமரைச்செல் வன், அண்ணா. மாதவன், வே.தமிழ்ச்செல்வன், த.கிருஷ்ண மூர்த்தி, நா.வெங்கடேசன், ந.அறிவுநிதி, சிவசீலன், அரங்க. குமரவேல் ஆகியோருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கன்னை மேற்கு உலக.கவுதமன் மகன் திலீபன் தன்னை மகிழ்வுடன் நமது இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்.

மாநாட்டை ஒட்டி ஒரத்தநாடு முதல் கன்னந் தங்குடி கீழையூர் வரை சுவர் விளம்பரம், பிளக்ஸ் விளம்பரம், கழகக் கொடிகள் கட்டப்பட்டு இருந்தன.

ஒளி விளக்குகள், அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பெரியார் படிப்பகத் தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள் மாலை அணிவித்து, படிப்பகத்தையும் கி.வீரமணி நூலகத்தையும் பார்வையிட்டார்.

Read more: http://viduthalai.in/page1/94827.html#ixzz3Pk6WIyeS

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ்சை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கக்கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு


நியூயார்க், ஜன.23- ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெளிநாடு களிலிருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்பு என அமெரிக்க நீதிமன்றத்தில் சீக்கியர் உரிமைகளுக்கான அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. நியூயார்க் தென் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தி லிருந்து இவ்வழக்கின்மீது அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி 60 நாள்களுக்குள்ளாக பதில் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நீதிக்கான சீக்கிய அமைப்பு Sikhs for Justice (SFJ) தொடுத்துள்ள வழக்கில் வெளிநாட்டிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பு என்பதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து உறுதிப்படுத்தக் கோரப்பட்டுள்ளது. பாசிசக் கொள் கைகளை நம்புவதும், அதன்படியே உணர்ச்சிகளின்படி இந்தியாவை இந்து தேசமாக மாற்றி ஒரு மதம், ஒரே கலாச்சார அடையாளம் என்று தீயநோக்கங்களுடன் வன்முறையுடன் பிரச்சாரம் செய்துவருகிறது.

சீக்கிய அமைப்பின் சார்பில் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ். அதன் பிரச்சாரத்துக்கு தாய்வீடு திரும்புதல் என்று தலைப்பிட்டு கட்டாயமாக கிறித்துவர் களையும், இசுலாமியர்களையும் இந்துமத்துக்கு மாற்றம் செய்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கக்கோரும் வழக்கின் மனுவில் குறிப்பிடும்போது, ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சார்பு அமைப்புகளை வெளிநாட்டிலிருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பன்னாட்டு பயங்கர வாதத்துக்கு என்றே வடிவமைக்கப்பட்ட அமைப்பாக Specially Designated Global Terrorist entity (SDGT) அறிவிக்கவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

சிறுபான்மையினரைக் குறிவைத்துள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து மனுவில் குறிப்பிடும்போது, பாபர் மசூதி இடிப்பு, பொற்கோயிலில் இராணுவம் நுழைந்து கலவரம் ஏற்படுத்தியது, கிறித்தவ சர்ச்சுகளை தீயிட்டு கொளுத்தியது, 2008 இல் கிறித்தவ செவிலியர் களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது மற்றும் 2002 குஜராத் கலவரங்கள் ஆகியவைகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்களிப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/94828.html#ixzz3Pk71MVqa

தமிழ் ஓவியா said...

முதல் பெண் அய்.எப்.எஸ்.

பெண்களில் முதல் அய்.எப்.எஸ். அதிகாரி இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளராகவும் இருந்தவர். அதுவும் பிற் படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் (கருநாடகம்) என்றால் பலருக்கும் ஆச்சரி யமாக இருக்கலாம் - இந்தத் தகவல் சிலருக்குப் புதிதாகக் கூட இருக்கக் கூடும்.

அவர் பெயர் சி.பி. முத்தம்மா (1924-2009) 1949இல் இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த போது அவர் சந்தித்த சவால்கள் சாதாரணமான வையல்ல!

திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்தபோது, சட்ட விதிகள் சல்லடம் கட்டி எதிர் நிலையில் நின்றன. திரு மணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் வெளி யுறவுத்துறை செயலாளர் பதவியில் இருக்கக் கூடா தாம்! பாரத மாதாவின் மடியில் குடி கொண்டிருந்த விதிகளைப் பார்த்தீர்களா? அய்.எப்.எஸ். படித்து வெளியுறவுத்துறை செயலாளராகவும் ஒளி விட்டவர் அல்லவா? விடுவாரா? உச்சநீதிமன்றம் சென்றார்; நல்ல வாய்ப்பாக அந்த வழக்கை விசாரித்தவர் வி.ஆர். கிருஷ்ணஅய்யர்.

விதி எண் 8(2) தடைச் சுவர் எழுப்புவதைக் கண்ட நீதிபதி ஏளனமாகச் சிரித்தார்.

தனது சிந்தனைக் கூட்டி லிருந்து சில அம்புகளை எடுத்து வீசினார். ஒரு பெண் அதிகாரி திருமணத்துக்கு முன்னர் அரசின் அனு மதியைப் பெற வேண்டு மென்றால், ஓர் ஆண் அதிகாரியும் அத்தகைய அனுமதியைப் பெற வேண்டாமா!? தமது குடும்பப் பொறுப்பு காரணமாக ஒரு பெண் தன் அலுவலகப் பணிகளைச் சரி வர செய்யாத நிலை என்றால், அதே காரணம் ஓர் ஆணுக் கும் பொருந்த வேண்டாமா? என்று வினா தொடுத்த நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய் யர் - அரசமைப்புச் சட்டத் தின் முரண்பாட்டையும் ஒரு மொத்து மொத்தினார்.

இந்த விதி அரசியல் சாசனத்தின் 16ஆம் பிரிவுக்கு முரணானது என்பதையும் சுட்டிக் காட்டினார்.

பெண்கள் பலவீனமான வர்கள் என்ற மனோ நிலை கொண்ட ஆணாதிக்கக் கலாச்சாரத்தின் தொடர்ச்சி தான் இந்த பாகுபாடு சுதந்திரமும், நீதியும் - ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதே! அரசியல் சாசனம் கூறும் சம நீதித் தத்துவத்திற்கு இந்த விதி முறைகள் எதிரானவை என்றும் இடித்துக் கூறினார் நீதிபதி.

35 ஆண்டுகள் அரசு பணியில் சிறப்பாகப் பணி யாற்றி முத்திரை பொறித்தார் முத்தம்மா.

நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் முன்னிலையில் இந்தவழக்குச் செல்லாமல், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவி ருந்த ரெங்கநாத் மிஸ்ரா போன்றவர்களிடம் சென்றி ருந்தால் என்னாகும்?

பெண்கள் வீட்டு வேலை செய்வதில்தான் திறமையானவர்கள்; ஆண்களோடு போட்டிப் போட்டுக் கொண்டு அரசுப் பணிகளுக்கு வர ஆசைப்படக் கூடாது என்று பிரம்ம குமாரிகள் மாநாட்டில் பேசிய துண்டே! (8.11.1996)

- மயிலாடன்

குறிப்பு : முத்தம்மா அவர் களின் பிறந்த நாள் இந்நாள் (1924)

Read more: http://viduthalai.in/e-paper/94874.html#ixzz3Pk7S9ccG

தமிழ் ஓவியா said...

காஷ்மீர் தலைமை நீதிபதி

ஜஸ்டீஸ் பால்வசந்தகுமாரை பாராட்டுகிறோம்

சென்னை உயர்நீதி மன்ற மூத்த நீதிபதியான ஜஸ்டீஸ் திரு. பால்வசந்த குமார் அவர்கள் ஜம்மு - காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் பெற்று, வரும் 2.2.2015 அன்று காஷ்மீர் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கிறார் என்பது அனைத்துத் தரப்பினரும் மகிழ்ந்து, வரவேற்கும் ஒரு நல்ல செய்தியாகும்.

தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டத் தில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த இவர், தனது அறிவு, ஆற்றல், நுண்ணறிவு, மனிதநேயம், சமூக நீதிப் பார்வைகளால், பல்வேறு விரைந்த தீர்ப்புகள்மூலம் தனக்கென்று ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் ஆவார்!

தகுதி திறமை என்பது உழைக்கும் எவர்க்கும், நேர்மையாளர்களுக்குக் கிட்ட வேண்டிய பரிசு என்பதை நிரூபித்துள்ளார்.

மற்ற சக அமர்வில் உள்ளவர்களின் பைசலை (Disposal) விட மிகவும் விரைந்து அதிகமாக வழக்குகளை முடித்து சாதனை சரித்திரம் படைத்த இவருக்கு நமது வாழ்த்துகள் - பாராட்டுகள்!

இவர் உச்சநீதிமன்றம் போன்ற அமைப்புகளிலும் இடம் பெற்று, நீதித் துறைக்குப் பெருமை சேர்ப்பார் என்று நம்புகிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


சென்னை
24-1-2015

Read more: http://viduthalai.in/e-paper/94886.html#ixzz3Pk7mGDFU

தமிழ் ஓவியா said...

சிறீரங்கம் தேர்தலில் தனித்து விடப்படும் பா.ஜ.க.?!

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழக கட்சிகளில் முக்கியமான (வைகோவின்) ம.தி.மு.க. ஏற்கெனவே வெளியேறிய பின்னர்,

சிறீரங்கத்தில் பா.ஜ.க. தனி வேட்பாளராக நிறுத்தியுள்ளதன் மூலம், அக்கூட்டணியிலிருந்து தே.மு.தி.க. என்ற விஜயகாந்த் கட்சி வெளியேறுவது உறுதியாகி விட்டது!

பா.ம.க. சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என்பதால் அதுவும் ஏறத்தாழ வெளியேறிய நிலைதான்! அதிகார பூர்வ அறிவிப்பு பிப்ரவரி ஒன்றில் வெளியாகக் கூடுமாம்!

அந்தோ பரிதாபம் விவீமீபீ சிணீறீறீ - கொடுத்தே இனிமேல் இக்கட்சி பலம் பெறுமாம்!

வாக்காளர் ஆதரவும் மிஸ்டு கால் மூலம் தானா? என்று கேட்கிறார் சிறீரங்கத்து வாக்காளர் ஒருவர்!

Read more: http://viduthalai.in/e-paper/94884.html#ixzz3Pk7t24pu

தமிழ் ஓவியா said...

கவனிக்கவேண்டும்


மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துகளும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா, நீங்காதா என்பதைத்தான் கவனிக்க வேண்டும். - (விடுதலை,3.12.1962)

Read more: http://viduthalai.in/page-2/94869.html#ixzz3Pk8OQHoN

தமிழ் ஓவியா said...

உயிருக்கு குறி வைக்கும் இரசாயன ஆலைகள்


ஆலைகள் அவசியம் தான்; அவற்றின்மூலம் உற்பத்திகள் பெருகுகின்றன, பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது, வேலை வாய்ப்பும் விரிவடைகிறது. அதே நேரத்தில் அவை சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதற்கு இடம் தரக் கூடாது அல்லவா?

விதி முறைகள் ஏராளம்இருந்தும், அவை கடைப் பிடிக்கப்படுவதில்லை என்பதுதான் வேதனையான செய்தியாகும்.

ஆலை முதலாளிகளின் கவனிப்பில் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாற்று இன்னொரு பக்கத்தில்; எது எப்படி இருந்தாலும் இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பொது மக்கள்தான்.

இந்த ஆலைக் கழிவுகள் பெரும்பாலும் நதிகளில் கலந்து விடுகின்றன; இதனால் பாதிக்கப்படுவது சுற்றுச் சூழலும், பொது மக்களும் கால் நடைகளும் தான்.

நீதிமன்றங்கள் பற்பல நேரங்களில் கடுமையான தீர்ப்புகள், ஆணைகள் வழங்கிக் கொண்டு தானிருக் கின்றன! ஆனால் அவற்றையும் கண்டு கொள்வ தில்லை; சட்ட ஆட்சி எந்தத் தரத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறது என்பதற்கு இவை எல்லாம் கண்ணிறைந்த சாட்சியங்களாகும்.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் அருகே தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் (DCW)என்ற அமில ஆலை ஒன்று செயல்பட்டு வருகின்றது.

இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் காஸ்டிக் சோடா, பி.வி.சி., சி.பி.வி.சி. போன்றவை; இவற்றின் மூலப் பொருள் பாதரசம் ஆகும்.

எந்த விதிமுறைகளையும், கட்டுத் திட்டங்களையும் பற்றிக் கவலைப்படாமல் இந்த ஆலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டும் வருகிறது.

இந்த ஆலைகளில் தேக்கி வைக்கப்படும் டிரை குளோரோ எதிலின், அயன் ஆக்சைடு, காட்மியம் போன்ற ஆபத்தான செந்நிறம் கொண்ட ரசாயன கழிவுகள் ஆலைக்கு அருகில் உள்ள காயல்பட்டணம் கடலில் கலக்க விடப்படுகின்றன.

இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள், குறிப்பாக மீன் வளம் மிகக் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகி வருகிறது.

காயல் பட்டணம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் கொடிய நோய்களுக்கும் ஆளாகின்றனர். சுவாசக் கோளாறுகள், புற்று நோய் போன்ற நோய்களின் தாக்குதலுக்கு இரையாகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு மனு கொடுத்து, மனு கொடுத்து ஓய்ந்தும் போய் விட்டனர். பல்வேறு அமைப்புகள் முற்றுகைப் போராட்டங் களைக்கூட நடத்திப் பார்த்து விட்டனர். கடையடைப் புகள் எல்லாம் நடந்தும் இருக்கின்றன - அரசோ அசையவில்லை.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்த ஆலைக்குத் தேவையான தண்ணீரைத் தாமிரபரணியிலிருந்து பெற்றுக் கொள்ள தமிழ்நாடு அரசிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 3 லட்சம் கேலன் தண்ணீர் பயன்படுத் தப்படுகிறது. அதற்கான கெடு முடிந்தும்கூட தாமிரபரணி தண்ணீரை அந்த ஆலை சட்ட விரோத மாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாம்.

நாட்டின் போக்கு எப்படி இருக்கிறது? மக்களின் உயிர் என்பதுதான் இந்த நாட்டில் மிகவும் மலிவான பொருள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்!

எடுத்துக்காட்டுக்கு இதனைக் குறிப்பிடுகிறோம். பெரும்பாலான ஆலைகளில் கழிவுகள் நீரில் கலக்கப் படுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கடுமையானசட்ட திட்டங்களும், செயல்பாடுகளும் கண்காணிப்புகளும் மிக மிக தேவை என்று வலியுறுத்துகிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/94870.html#ixzz3Pk8Yoeiz

தமிழ் ஓவியா said...

இந்துமதப் போர்வைக்குள் பார்ப்பனிய பாம்புகள்!...

நடந்து முடிந்த திமுக பொதுக்குழுவில் அதன் பொதுச்செயலாளர், இனமானக் காவலர் பேராசிரியர் அவர்கள், பெரும் பான்மை மக்களின் ஆதர்ஷபுருஷனாகக் கருதப்படும் ராமனை ஏடா கூடமாக விமர்சித்து விட்டார் என கோபக்கனலை அள்ளி வீசி இருக்கிறது ஒரு பார்ப்பன ஏடு.

இது அந்த ஏட்டின் குரலல்ல; பார்ப் பனியத்தின் பாசீசக்குரல்! ராமனுக்குப் பிறந்தவர்கள்தான் இந்துக்கள், ஏனையோர் முறை தவறிப் பிறந்தவர்கள் என வாய்க் கொழுப்போடு பேசிய பா.ஜ.க. எம்.பியைக் கண்டிப்பதற்கு யோக்கியதை இல்லாத அந்த ஏடு, ராமன் என்ன ஜல்லிக்கட்டு காளையா? எனப் பேராசிரியர் பேசியதை மட்டும் ஆவேசத்தோடு கண்டித்திருப் பதைப் பார்க்கும்போது அய்யாவின் பேச்சுதான் நினைவுக்கு வருகிறது.

ஆரியரும், திராவிடரும் ஒற்றுமையாக இருக்க முடியாதா? என அய்யாவைக் கேட்டதற்கு அவர் சொன்னார்.

நெசவாளியும், குரங்கும் ஒற்றுமையாக இருக்க முடியுமா? நெசவாளி நெய்து கொண்டே இருப்பான்; குரங்கு இழைகளை அறுத்துக்கொண்டே இருக்கும். எப்படி ஒற்றுமை ஏற்பட முடியும்? என அன் றைக்கே அய்யா அவர்கள் ஆணித்தர மாகக் கூறினார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை என்பதைத்தான் இன்றைய அந்த பார்ப்பனிய ஏடு விளக்கி இருக்கிறது!...

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ் சாது என்பதை அந்தப் பார்ப்பனிய ஏடு புரிந்து கொண்டால் சரி!... பார்ப்பனியக் கோட்டை அய்யாவின் பகுத்தறிவு ஏவு கணைத் தாக்குதல்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சரிந்துவரும் வேதனையைத் தாங்கிக்கொள்ள வழியின்றித் தனது வயிற்றெரிச்சலை வார்த்தைகளாகக் கொட்டித் தீர்த்திருக்கிறது.

இளமையிலேயே வசிஷ்டருக்குத் தாதாவேலை செய்தவனை சொந்தமாகச் சிந்திக்கத் திறனற்று எவனோ சொன்னான் என்பதற்காக தனது சொந்த துணைவியின் மீதே சந்தேகப்பட்டு கர்ப்பிணி என்று கூடப் பாராமல் காட்டுக்குத் துரத்திய காருண்ய சீலனை! கடவுளின் அவதாரம் எனச் சொல்லிக் கொண்டு மானுக்கும், மாயமானுக்கும் வேறுபாடு தெரியாமல் இருந்த ஒரு கருத்துக்குருடனை, புராணம் என்றும் இதிகாசம் என்றும், வேதம் என்றும், பாமர மக்களை ஏமாற்றி இன்ன மும் அவர்களைச் சுரண்டிப்பிழைக்க நினைக்கும் ஒரு எத்தர் கூட்டம் இப்படி ஆணவத்தோடு பேசுகிறதென்றால் என்ன பொருள்? அதன் ஆதிக்கக்கோட்டை கலகலத்துப்போய்விட்டது என்பது தானே பொருள்! அய்யா ஆசிரியர் அவர்களின் தொண்டறம் வீண் போகவில்லை என்பதுதானே அர்த்தம்!

தமிழினத் தலைவர் கலைஞர் அவர் களையும், இனமானப் பேராசிரியர் அவர் களையும் குறிவைத்து பார்ப்பனியம் பாய் வதற்குக்காரணம் இப்போது மக்களுக்குப் புரிந்திருக்கும்!

சாம, பேத, தான, தண்டம் என்ற முனைமழுங்கிப்போன பார்ப்பனிய அஸ்திரத்தை மீண்டும் தமிழர்கள் மீது ஏவி அவர்களை அழித்து விடலாமென பகற்கனவு காணுகிறது பார்ப்பனியம். இந்து மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு ஏமாந்த தமிழர்களை தனது நச்சுப்பற்களால் கொத்தி மகிழத்துடிக்கிறது பார்ப்பனியம்!... அது பெரியார் பூமியிலே ஒரு காலும் நடவாது! நடக்க விடாது திராவிடர் கழகம்!!...

முள்மீது இலை மோதினாலும், இலை மீது முள் மோதினாலும் கிழிபடப்போவது இலை தானே தவிர முள் அல்ல என்பதை இனியேனும் பார்ப்பனியம் புரிந்து கொண் டால் சரி!...

- நெய்வேலி க.தியாகராசன், கொர நாட்டுக்கருப்பூர்

Read more: http://viduthalai.in/page-2/94873.html#ixzz3PkA5dsDj

தமிழ் ஓவியா said...

யோகியின் ஆசை


ஹடயோகி என்று புகழப்பட்டவரும், கடைசியில் இரங்கூனில் விஷமுண்டு இறந்தவருமான, நரசிம்ம சுவாமி என்பவர், இறந்த விதத்தைப் பற்றியும், அவருடைய கடைசி, ஆசையைப் பற்றியும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

அவர் இறக்குந்தறுவாயில் கடைசி ஆசையாக, தன்னுடைய உடம்பை 24 மணி நேரம் சும்மா வைத்திருக்க வேண்டுமென்றும், தன்னுடைய உடம்பைப் புதைத்த இடத்தில் புத்தர் கோயில் ஒன்று கட்ட வேண்டுமென்றும் கூறினாராம். அதற்கிணங்கி அவரை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு சென்று புதைத்தார்களாம்.

இனி, அவருடைய சகோதரர் வந்து பணவசூல் செய்து இறந்து போன ஹடயோகியின் அவாவைப் பூர்த்தி செய்யப் போகின் றாராம். யோகிகளின் ஏமாற்றுந் தன்மைக்கும், இந்துக்களின் மூடத்தன்மைக்கும் இதைவிட வேறு உதாரணம் வேண்டு வதில்லையென்றே நாம் அபிப்பிராயப்படுகின்றோம்.

ஜால வேடிக்கை போல ஏதோ சாதுரியத்தினால் விஷந்தின்று மாண்ட ஒரு மனித ருக்குக் கோயில் எதற்காக என்று கேட்கின்றோம். உண்மையிலேயே இவர் சுயநலங் கருதாத - உலக நன்மையை விரும்புகின்ற ஒரு யோகியா யிருந்தால் ஏன் தன்னுடைய புதை குழியின் மேல் ஒரு கோயில் கட்ட வேண்டுமென்று ஆசைப்பட வேண்டும்? பிற்காலத்தில் தன்னை ஒரு மகானென்று நினைத்துக் கொண்டு மூட மக்கள் தன்னுடைய புகழைப் பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்னும் பேராசை யேயன்றோ?

நம்முடைய மக்களும் மதவேஷம் போட்டவர்களையும் ஜாலவேடிக்கைக்காரர் களையும், மகான்களென்றும், யோகிகளென்றும், மகாத்மாக்களென்றும் நம்பியே மோசம் போய்க்கொண்டே வருகின்றார்கள். நமது மக்களின் இத்தகைய மூடத்தனத்தினால் தான் இன்று நமது நாட்டில் எண்ணற்ற கோயில்களும் சமாதிகளும் ஏற்பட்டுள்ளன.

இந்தக் கோயில்களுக்கும் புதை குழிகளுக்கும் நமது மக்கள் அழுகின்ற பொருளுக்கு அளவேயில்லை, இந்நிலையில் இப்படி ஒரு புதுக்கோயில் கட்டவும் முயற்சி செய்ய வேண்டுமா? ஆகவே பர்மாவில் உள்ள இந்தியர்கள் இந்தப் பயனற்ற காரியத்திற்காக ஏழை மக்களிடம் பொருளைச் சேகரித்து புதை குழியின் மேல் கோயில் கட்டி அதன் மூலம் மக்களுக்கு மூடத்தனத்தை வளர்க்க வேண்டாம் என எச்சரிக்கின்றோம்.

குடிஅரசு - கட்டுரை - 10.04.1932

Read more: http://viduthalai.in/page-6/94906.html#ixzz3PkB1OIqe

தமிழ் ஓவியா said...

ஜஸ்டிஸ் கட்சியில் மாறுதல்

சமுதாய விஷயங்களிலும், அரசியல் விஷயங்களிலும் பிற்போக்கடைந்து பார்ப்பனர்களுக்கு அடிமையாகக் கிடந்து வந்த தென்னிந்தியப் பார்ப்பனரல்லாதார்களின் முன்னேற்றத் திற்காகவே, காலஞ் சென்ற டாக்டர். நாயர் அவர்களாலும், சர். பி. தியாகராயர் அவர்களாலும் ஜஸ்டிஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டது என்பது பார்ப்பனரல்லாதார்களுக்கெல்லாம் தெரியும்.

ஆனால் அக்கட்சி தோன்றிய நாள் முதல் அரசியல் விஷயங்களில் பார்ப் பனர்களுடன் போராடிப் பார்ப்பனரல்லாதார்க்கு உத்தியோகம் தேடிக் கொடுப்பதில் மாத்திரம் முழுதும் கவனம் செலுத்தி வந்ததேயொழிய சமுகச் சீர்திருத்தம் சம்பந்தமாகப் போதுமான காரியங்களைச் செய்துவிட்டதாகக் கூறமுடியாது.

அதிலும் தற்சமயம் அக்கட்சியில் உள்ள தலைவர்கள் சமுகச் சீர்திருத்தம் சம்பந்தமாகப் பேசுவதற்குக்கூடக் கொஞ்சம் பயமடைகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில் ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமெனச் சில தலைவர்களால் முயற்சி செய்யப்பட்டு பெரும்பாலும் அதற்காகவே நெல்லூரில் கூடிய மகாநாட்டில் அத்தீர்மானமும் தோல்வியடைந்தது.

அதன்பின் அக்கட்சியின் நிர்வாகசபைக் கூட்டத்தில் பார்ப்பனர்களையும் கட்சியில் சேர்த்துக் கொள்வதாகத் தீர்மானம் செய்து, அதன்மூலம் சில பார்ப்பனர் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கும்படியும் செய்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இத்தீர்மானத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டுமானால் மற்றொரு மாகாண மகாநாடு கூட்டி அம்மகாநாட்டில் ஒப்புக் கொள்ளச் செய்தபின்னரே அமலுக்குக் கொண்டு வருதல் முறையாகும்.

இதன் பொருட்டு ஜஸ்டிஸ் கட்சி மகாநாடு கூட்டுவதற்காக, எத்தனையோ முறை முயன்றும், இதற்காகப் பல தடவை, மாதங்கள், வாரங்கள், குறிப்பிட்டும் மகாநாடு நடத்தப்பட வில்லை. இதுவரையிலும் மகாநாடு நடத்தப்படாமைக்கு அவர்களால் எந்த காரணமும் சொல்லப்படவும் இல்லை.

ஆனால் சென்ற சில தினங்களுக்குமுன் திருச்சி, உறையூரில் அக்கட்சியின் தலைவராகிய முதல் மந்திரி, திரு. முனிசாமி நாயுடு அவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் கிளையினரால் படித்துக் கொடுத்த உபசாரத்திற்குப் பதில் சொல்லும் போது, அவசரச் சட்டங்கள் நீங்கியப் பின் மகாநாடு கூட்டப்படும் என்று ஒரு சமாதானம் கூறினார்.

அவசரச் சட்டங்களுக்கும், ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டிற்கும் என்ன சம்பந்தமென்று நமக்குத் தெரியவில்லை. இச்சமயத்தில் மற்றொரு விஷயத்தையும் முதல் மந்திரி குறிப்பிட்டார். அதாவது ஜஸ்டிஸ் கட்சியில் மாறுதல் ஏற்பட வேண்டிய காலம் வந்து விட்டதென்றும், ஆகையால் பார்ப் பனர்களையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் தமது கருத்தை வெளியிட்டார்.
சென்ற ஆண்டிலும், அதற்கு முன்பும் ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும், என்ற பிரஸ்தாபம் வந்த போது

தென்னாட்டி லுள்ள பார்ப்பனரல்லாத மக்கள் அனைவரும் அதை எதிர்த்த விஷயம் எல்லாருக்கும் தெரியும். அக் கட்சியின் தலைவர்களிலும் அநேகர் இதற்கு எதிராகவே இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கட்சியின் தலைவராக இருக்கின்ற ஒருவர் தனது சொந்த அபிப்பிராயத்தை வெளியிட்டு அக்கொள்கைக்கு ஆதரவு தேட முயற்சிப்பது அவ்வளவு சரியான காரிய மாகாது என்றுதான் நாம் அபிப்பிராயப்படுகின்றோம்.

உண்மையிலேயே ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனரல்லாத மக்களுக்கு அரசியல் விஷயத்திலாவது, சமுதாய சீர்திருத்த விஷயத்திலாவது, சிறிதளவாவது உதவி செய்யக் கூடியதாக இருக்க வேண்டுமானால் அதன் ஆதிக் கொள்கை யிலிருந்து தவறாமல் இருப்பதே ஒழுங்காகும்.

அவ்வாறில்லாமல் அக்கட்சியை ஸ்தாபித்த வர்களின் எண்ணங்களுக்கு மாறாக அதில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்வார்களானால் ஜஸ்டிஸ் கட்சியும், மற்ற காங்கிரஸ் கட்சி, மதவாதக் கட்சி முதலியவை களைப் போல பார்ப்பனர்களின் அடிமையாகவேண்டியதுதான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

இது வரையிலும் பார்ப்பனர்கள் சேர்ந்திருக்கிற எந்த ஸ்தாபனமாவது பார்ப்பனரல்லாதார். நன்மையைக் கவனிக்கக் கூடியதாக இருக்கிறது என்று யாராவது எடுத்துக் காட்ட முடியுமா? இந்த நிலையில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளும் ஜஸ்டிஸ் கட்சி எப்படி பார்ப்பனரல்லா தார்களுக்கு நன்மை செய்ய முடியும்? என்று கேட்கிறோம்.

ஜஸ்டிஸ் கட்சியின் எதிரிகள் அதனை வகுப்புத் துவேஷக் கட்சி என்று குறை கூறுகின்றார்கள் என்பதற்காகவே பார்ப் பனர்களையும் அக்கட்சியில் சேர்த்துக் கொண்டால் அக்குறை நீங்கிவிடும் என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறுவதில் சிறிதும் பொருள் இல்லையென்று தான் நாம் நினைக்கிறோம்.

நமது நாட்டில் வகுப்பு பிரிவினைகள் இருந்து கொண்டும் ஒரு வகுப்பினர் மற்ற வகுப்பினர்களை அடிமையென நினைத்துக் கொண்டும் இருக்கும் வரையிலும் வகுப்புத் துவேஷம் இருந்துதான் தீரும். தனித்தனி வகுப்புகளின் நன்மையைக் கவனிக்கின்ற கட்சிகளும் இருந்துதான் தீர வேண்டும்.

தமிழ் ஓவியா said...

அன்றியும் வகுப்புத் துவேஷம் என்று கூச்சலிடுகின்றவர்கள் யாரோ அவர்கள்தான் உண்மையில் வகுப்புத் துவேஷிகளே தவிர பிற்போக்கடைந்திருக்கும் சமுகத்திற்கும் அரசியல் சமுக சமத்துவம் வேண்டுமென்று கூறுகின்றவர்கள் வகுப்பு துவேஷி களாக மாட்டார்கள். பல நாட்களாக ஏமாந்து கிடந்த மக்கள் சிறிது கண்விழித்து தங்களுக்கும் மற்றவர்களைப்போல் அரசியலிலும் சமுகத்திலும் சமத்துவம் வேண்டும் என்று கேட்பது எவ்வாறு வகுப்புத் துவேஷமாகும் என்று கேட்கின்றோம்.

ஆகையால் வகுப்பு துவேஷம் என்ற வார்த்தைக்கு யாரும் அஞ்ச வேண்டி யதே இல்லை. தற்காலத்திலுள்ள ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர்கள் அக்கட்சி ஸ்தாபகர்களின் அபிப்பிராயத்திற்கு விரோதமாக, அதில் பார்ப்பனர் களையும் சேர்த்து பார்ப்பனரல்லாதார் கட்சி என்னும் பெயரையே அடியோடு கொலை செய்ய எண்ணு வதைவிட துரோகமான காரியம் வேறு ஒன்றுமில்லை.

ஆதலால் அக்கட்சி யின் உண்மையான தலைவர்களும், பார்ப்பனரல்லா தாருடைய அரசியல் முன்னேற்றத்திலும், சமுதாய முன்னேற்றத் திலும், உண்மையான கவலை உடைய வர்களும் அக்கட்சிக்கு யாதொரு ஆபத்தும் வராமல் பாதுகாப்பார்களென்று நம்பு கின்றோம்.

இப்படி இல்லாமல், அக்கட்சியில் பார்ப்பனர்களும் சேர்க்கப்பட்டு, அதன் சமுதாயச் சீர்திருத்தக் கொள்கைகளும் வாய்ப்பேச்சளவில் கூட இல்லாமல் கைவிடப்பட்டு வெறும் அரசியல் கட்சியாகப் போய்விடுமானால், அப்பொழுது பழைய கொள்கையுடைய பார்ப்பனரல்லாதார் கட்சி ஒன்று புதிதாக தோன்றினாலொழிய, பார்ப்பனரல்லாதார் அரசியல் செல்வாக்குப் பெற முடியாதென்பதை எடுத்துக்காட்டி எச்சரிக்கை செய்ய விரும்புகின்றோம்.

குடிஅரசு - கட்டுரை - 03.04.1932

Read more: http://viduthalai.in/page-6/94909.html#ixzz3PkBBnsxH

தமிழ் ஓவியா said...

இத்தகைய கோவில்கள் ஏன்?


தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்த வரகூர் என்னும் கிராமத்தில் உள்ள வெங்டேசப் பெருமாள் கோவிலில் பார்ப்பனரல்லாதார் சென்று தரிசனம் பண்ணக்கூடாது என்பது பற்றி அவ்வூர் பார்ப்பனர்களுக்கும்,, பார்ப்ப னரல்லாதார்களுக்கும் நீண்டகாலமாக வழக்கு நடை பெற்றது.

கடைசியில் சென்னை ஹைகோர்ட்டில், ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டலே முன்பும் ஜஸ்டிஸ் வாலர் முன்பும் விசாரணைக்கு வந்தபோது இருவரும் வேறு வேறு அபிப்பிராயம் கொண்டனர்.

ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டலே பார்ப்பனரல் லாதாருக்கும் தரிசனம் பண்ண உரிமையுண்டு என்று அபிப்பிராயப்பட்டார்; ஜஸ்டிஸ் வாலர், பார்ப்பனரல்லா தாருக்குத் தரிசனம் பண்ணும் உரிமையில்லை என்று அபிப்பிராயப்பட்டார்; ஆகையால் கடைசியாக ஜஸ்டிஸ் வாலர் அவர்கள் அவ்வழக்கை இரண்டாம் முறையாக விசாரித்து, பார்ப்பனரல்லாதார்க்குத் தரிசன உரிமை இல்லை என்று தீர்ப்புக் கூறினார்.

இத்தீர்ப்பைப் பற்றி நமக்கு ஒரு கவலையுமில்லை. பார்ப்பனரல்லாதாருடைய தயவோ ஒத்தாசையோ இல்லாவிட்டால் எந்தக் கோயில்களும் நிலைத்திருக்க முடியாது. சோற்றை வடித்து பொங்கல் புளியோதரைகள் பண்ணி அவற்றைக் கல்லுப் பொம்மையின் முன்பு கொண்டு போய் காட்டியபின் பார்ப்பனர்கள் பங்கு போட்டு எடுத்துக் கொண்டு போகிற ஒரு காரியத்தைத் தவிர, மற்ற எல்லாக் காரியங்களையும் பார்ப்பனரல்லாதார்களே செய்து வருகின்றார்கள்.

இத்தகைய ஒரு கோயிலுக்குள், பார்ப்பனரல்லாதார் போகக் கூடாது என்று தடுத்துக் கோர்ட்டுக்குப் போகும்படி செய்த பார்ப்பனர்களின் சுய நலத்தையும் அகங்காரத் தையும் உணருகின்ற எந்தப் பார்ப்பனரல்லாதாரும், இனி இது போன்ற கோயில்கள் விஷயத்தில் எந்த வகையிலும் ஒத்துழைக்க முன்வர மாட்டார்களென்றே நம்புகின்றோம்.

ஆகையால் உண்மையில், பார்ப்பனர்களின் சுயநலத் தையும், அகங்காரத்தையும் ஒழிக்க வேண்டுமானால் முதலில் செய்ய வேண்டியது கோயில்களைப் பகிஷ்கரிக்க வேண்டிய வேலையேயாகும். தங்களுக்கு உரிமையில்லாத கோயில் சம்பந்தமான எந்த வேலைகளையும் செய்ய மறுத்து அவைகளைப் பார்ப்பனர்களே செய்து கொள்ளும்படி விட்டுவிட வேண்டும்.

இவ்வாறு கோயில்களைப் பகிஷ்கரிக்க ஆரம்பித்தால், கோயில்களே அனேகமாக ஒழிந்து போய்விடும். நமது மக்களுக்குக் கோயில்களின் மேல் உள்ள மயக்கம் ஒழிந்தால் முக்கால்வாசிமூட நம்பிக்கைகள் ஒழிந்து போகுமென்பதில் அய்யமில்லை.

ஆகையால் இனியேனும், கோயில் பிரவேசத்திற்காகப் பாடுபடுகின்ற வர்கள். கோயில்களை ஒழிக்கப்பாடு படுவார்களானால், அதனால் அதிக நலனும், பொருளா தாரச் சிக்கனமும் ஏற்படுமென்பதில் அய்யமில்லை.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 10.04.1932

Read more: http://viduthalai.in/page-6/94907.html#ixzz3PkBN5V00

தமிழ் ஓவியா said...

மொழிப் பிரச்சினையில் முன்னாள் பிரதமர்கள் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றவேண்டும் கலைஞர் கடிதம்


சென்னை, ஜன.24- மொழிப் பிரச்சினையில் முன்னாள் பிரதமர்கள் அளித்த வாக்குறுதியை இன்றைய பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றுவாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.

முரசொலியில் அவர் இன்று (24.1.2015) எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் - வீரவணக்க நாள் - அந்த நாளை, தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடித்து வருகிறோம். அந்த நாளில் தமிழகத்தின் ஒவ்வொரு நகரிலும், கழகப் பேச்சாளர்கள் கலந்து கொண்டு, மொழிப் போரிலே கழகம் ஈடுபட்ட வரலாற்றை நினைவு படுத்தி வருகிறார்கள். அதுபோல இந்த ஆண்டும் தமிழகம் முழுவதிலும் வீரவணக்க நாள் கடைப் பிடிக்கப்படுகிறது.

1965 ஆம் ஆண்டு கழகம் நடத்திய அந்த மொழிப் போரின் அய்ம்பதாம் ஆண்டு நிறைவு தான் 2015. அதாவது மொழிப்போர் வரலாற்றின் பொன் விழா. ஆனால் அதற்கு முன்பே 1937-1938 ஆம் ஆண்டிலேயே மொழிப்போர் என்பது தொடங்கிவிட்டது. அப்போது எனக்கு வயது பதி னான்குதான். திருவாரூர் உயர்நிலைப் பள்ளியிலே நான் மாணவன்.

அப்போதிருந்த ஆட்சியாளர்கள் கல்வி நிலையங்களில் இந்தி கட்டாயப் பாடம், இந்தி படித்து அதில் போதிய மதிப்பெண் பெற்றால்தான் அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியும் என்று ஓர் ஆணையைப் பிறப்பித்தபோது, அதனை எதிர்த்து தமிழகமே போர்க்கோலம் பூண்டது. அப்போது பள்ளி மாணவனாக இருந்த நான், கையிலே ஒரு பதாகையை ஏந்திக் கொண்டு புறப்பட்டுவிட்டேன்.

அந்த நாளே, என்னை அரசியலில், பொது வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கச் செய்த நாள். என்னையும் ஒரு கவிஞனாக்கிய நாளும் அந்த நாள்தான். 1938 இல் தொடங்கிய எனது அரசியல் பயணம், இதோ 92 வயதிலும் தொடருகிறது - அதே உணர்வுகளோடு இது மேலும் தொடரும்.

நம்முடைய போராட்டத்தின் விளைவாகத்தான் இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர்கள் எல்லாம் நமக்கு வாக்குறுதி அளித்தார்கள். 1959 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7 ஆம் நாள் பண்டித நேரு கூறும்போது, (இந்தி) திணிப்பு கூடவே கூடாது. இரண்டாவதாக, காலவரம்பற்ற நீண்ட காலத்திற்கு - அது எவ்வளவு காலம் என்பது எனக்குத் தெரி யாது - ஆங்கிலத்தை கூட்டு ஆட்சி மொழியாக நீடிக்க விரும்புகிறேன்.

மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலத்தை நீடிக்க வைப்பேன். ஆங்கிலம் இனி நீடிக்கக்கூடாது என்கிற முடிவினை நான் இந்தி பேசும் மக்களிடம் விடமாட்டேன். அதை முடிவு செய்யவேண்டியது இந்தி பேசாத மக்களே என்றார்.

மீண்டும் நேரு 1963 ஆம் ஆண்டும் நாடாளு மன்றத்திலே இந்தி பேசாத மக்களின் பூரண சம்மதத்தைப் பெறுகிற வரையில் ஆங்கிலம் அல்லது இந்தி நிலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படக்கூடாது என்றார். இதே உறுதி மொழி களைத் தான் 1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதியன்று பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியும், அதன் பின்னர் இந்திரா காந்தியும் தெரிவித்தார்கள்.

ஆனால் அந்த மூன்று பிரதமர்களும் இந்தி பேசாத மக்களுக்கு அளித்த உறுதிமொழியை இன்றைய பிரதமர் நரேந்திரமோடி காப்பாற்றுவாரா? அல்லது இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பைக் கொண்டு வர முனையும் சிலருடைய தூண்டுதலுக்கு இரையாகி விடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டு வரும் நேரத்திலேதான், இந்த ஆண்டு வீரவணக்க நாள் நடைபெறுகிறது.

அந்த உறுதிமொழியை அளிக்க வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தும் நாளாக இந்த ஆண்டு அமையவேண்டும் என்பதை தமிழ் மக்களிடையே விளக்கிக் கூறுவதைத்தான் நம் முடைய பேச்சாளர்கள் நாளைய கூட்டத்தில் முக்கியமாக வலியுறுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முன்னாள் பிரதமர்களின் உறுதிமொழி, இந்நாள் பிரதமர் நரேந்திரமோடியால் காப்பாற்றப்படுமா?.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறி யுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/94922.html#ixzz3PkBeLvfi

தமிழ் ஓவியா said...

உப்புக்கும், ரத்த அழுத்தத்துக்கும் காரணம் கண்டுபிடிப்பு: ஆய்வுத் தகவல்

டொரன்டோ, ஜன.25_ உணவில் அதிக மாக உப்பு சேர்த்தால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் உப்புக்கும், ரத்த அழுத்தத்துக்கும் அப்படி என்ன தொடர்பு என்பது இதுவரை விஞ் ஞானிகளுக்குக்கூட தெரியாத புதிராக இருந்து வந்தது. இந்த நிலையில், கனடாவைச் சேர்ந்த மெக்கில் பல்கலைக்கழகப் பேராசிரியர் சார்லஸ் போர்க் தலைமையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் இந்த முடிச்சு அவிழ்க்கப் பட்டுள்ளது.

அதாவது, அளவுக்கு அதிகமாக உடலில் சேரும் உப்பு, மூளையின் செயல் பாட்டில் ஏற்படுத்தும் குறிப்பிட்ட மாற்றமே, ரத்த அழுத்தம் அதிகரிக்கக் காரணம் என எலிகளைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட ஆய்ந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சார்லஸ் போர்க் கூறியதாவது:

உணவில் அதிக உப்பு சேர்க்கப்படும்போது, "வாஸாபிரெஸ்ஸின்' எனப் படும் ஹார்மோன் களை வெளிப்படுத்தும் நரம் பணுக்களில் அது வேதி யியல் மாற்றத்தை ஏற்படுத் துகிறது.

இந்த வேதியியல் மாற்றம் காரணமாக, மூளையில் இயற்கையாக அமைந்துள்ள ரத்த அழுத்தத்தைக் கண் காணிக்கும் அமைப்பால், "வாஸாபிரெஸ்ஸின்' ஹார் மோன்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது.

"வாஸாபிரெஸ்ஸின்' ஹார்மோன்கள்தான் ரத்த அழுத்தத்தையும், உடலின் நீர் அளவையும் அதிகரிக்கச் செய்கின்றன.

இந்த ஹார்மோன்கள் மிக அதிக அளவில் உற் பத்தியாவதன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக் கிறது என்றார் அவர்.

இந்தக் கண்டுபிடிப்பால் உப்புக்கும், ரத்த அழுத்தத் துக்கும் உள்ள தொடர்பு கண்டறியப்பட்டாலும், இந்தப் பிரச்சினைக்கு மருத் துவத் தீர்வு காண்பதற்கான சிகிச்சை முறைகளை உருவாக்க, இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட வேண்டி யிருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்த னர்.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "நியூரான்' அறிவியல் இதழில் இந்த ஆய்வின் விவரம் வெளி யிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

எது உண்மையான இராமாயணம்?

இராமாயணம் என் றால் ஒன்றிரண்டு அல்ல; எண்ண முடியாத அள வுக்கு இராமாயணம் பல மொழிகளில் உண்டாம்.

உண்மை என்றால் ஒன்றாகத் தானே இருக்க வேண்டும். இத்தனை இராமாயணங்களில் எது உண்மை என்று ஏற்றுக் கொள்வது? வங்காள இராமாயணத்தில் இரா வணனின் மகள் சீதை! எப்படி இருக்கிறது?

Read more: http://viduthalai.in/e-paper/94980.html#ixzz3Pvh8Ub73

தமிழ் ஓவியா said...

விருதுகள் பார்ப்பனரின் ஏகபோகமா?


ஜனவரி 26 - இந்தியக் குடிஅரசு நாளை யொட்டி, இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறுவர் பத்மபூஷன், பத்மஸ்ரீ முதலிய விருதுகளுக் குரியவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள்

1) என்.கோபால்சாமி (அய்யங்கார்) ஓய்வு
2) சுதா இரகுநாதன்
3) எம்.ஆர். சீனுவாசன்
4) பி.வி. இராஜராமன் (அய்.ஏ.எஸ்.) ஓய்வு

அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் தேடித் தேடிப் பார்த்தாலும் தமிழ்நாட்டிலிருந்து பெரிதும் பூணூல் திருமேனிகளே தகுதி பெற்றவர்களாக உள்ளார்கள்;
தடவித் தடவிப் பார்த்தால் ஒன்று வெறும் முதுகு கிடைக்குமோ என்ன?

யாருக்கு வந்த சுதந்திரம் இது?

புரிகிறதா?

Read more: http://viduthalai.in/e-paper/94984.html#ixzz3PvhFequ3

தமிழ் ஓவியா said...

காந்தியாரைக் கொன்ற கோட்சேவுக்கு கோயில் கட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இடத்துக்கு சீல் வைப்பு

உ.பி. அரசின் பாராட்டத்தக்க நடவடிக்கை

லக்னோ, ஜன.26 உத்தரப்பிரதேசம் மாநி லம், மீரட் நகரில் இந்து மதவெறியன் கோட் சேவுக்கு கோயில் கட்டுவ தாக அறிவிக்கப்பட்ட இடத்துக்கு உ.பி. அரசின் மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

அனைத்து தரப்பு மக்களாலும், மகாத்மா என ஏற்றுக் கொள்ளப் பட்டவர் காந்தியார். அவரை பிர்லா பிரார்த் தனை மய்யத்தில் 30.1.1948 அன்று இந்து மதவெறி யன் நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். காந்தி கொலை வழக்கில் அவனுக்காக வாதாட எவரும் முன்வரவில்லை. அந்த கொலை வழக்கில் கோட்சேக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்தான். காந்தியாரை கொன்ற வனையே 18 ஆண்டு களுக்குபின் விடுதலை செய்தனர்.

அவனிடம் காந்தியை ஏன் கொலை செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, அவர் இந்து மதத்துக்கு துரோ கம் செய்தார். இஸ்லாமி யர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். அதனால் காந்தியாரை சுட்டுக் கொன்றேன் என்றான். அப்படிப்பட்ட இந்து மதவெறி பிடித்த நாதுராம் கோட்சேவுக்கு மீரட் மாவட்டம் பிரம்ம புரி பகுதியில் வரும் ஜன வரி மாதம் சிலை வைக்கப் படும். அந்த சிலை வைக்கப்படும் இடத்தில் கோயில் ஒன்றும் கட்டப் படும் என மதவெறியை தூண்டும் வகையில் அகில இந்திய இந்து மகா சபாவின் தேசியப் பொதுச் செயலாளரான ஆச் சார்யா மதன் கடந்த டிசம்பர் மாதம் அறிவித் திருந்தார்.

இந்த கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக, விசா ரித்து நடவடிக்கை எடுக் கும்படி மாவட்ட நிர் வாகம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் மற்றவரை அவமதிப்பு செய்வது, வதந்திகளை பரப்புவது போன்ற குற்றவியல் சட்டங்களின்கீழ் ஆச் சார்யா மதன் மீது கிரி மினல் வழக்குப்பதிவு செய் யப்பட்டது.

இந்நிலையில், இவ் விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட மேல் விசாரணையின் விளை வாக கோட்சேவுக்கு சிலை அமைக்க விரும்பிய சர்ச்சைக்குரிய இடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

அந்த இடத்துக்குள் அத்துமீறி நுழைய முயற் சிப்பவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக் கப்படும் என மீரட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/94969.html#ixzz3PvhSGEMk

தமிழ் ஓவியா said...

ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்

உண்மையாக ஜாதிப் பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணா சிரமத் தர்மத்தையும், சூத்திரத் தன்மையையும் ஒழிக்கவேண்டுமானால், எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
(குடிஅரசு, 19.1.1936)

Read more: http://viduthalai.in/e-paper/94967.html#ixzz3PvhdbOru