Search This Blog

8.1.15

சாமியார் சாக்ஷி உரையை கண்டிக்க வேண்டியவர்கள் பெண்களே!
தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ; கண்டிப்பாக பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலைத் தான் குறிக்கும்.


ஆளுக்கு ஆள் பேசுவார்கள் - யார் யாரையும் கட்டுப்படுத்த முடியாது - வாய் இருப்பது என்பது உளறு வதற்கே, வன்முறைகளைத் தூண்டும் வார்த்தைகளை உதிர்ப்பதற்கே என்பது அவர்களின் சித்தாந்தம் போலும்!
வாத்தியாரே ஓடிக் கொண்டு சிறுநீர் கழித்தால் மாணவன் எப்படி நடந்து கொள்வான்? என்ற பழமொழி ஒன்று நாட்டு வழக்கில் உண்டு; அதுபோல ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருக்கக் கூடியவரே (மோகன் பகவத்) இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்கள் தான் என்று அடாவடியாகப் பேசுகிறார் என்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது?


ஒருவர் சொல்லுவார் - காந்தியைக் கொன்றதற்குப் பதிலாக நேருவைக் கொன்று இருக்க வேண்டும்; இன்னொருவர்  சொல்லுவார் காந்தியாரைப் படு கொலை செய்த கோட்சே மகா புருஷன். அவருக்கு நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் சிலை வைக்க வேண்டும் என்பார்; இன்னொருவர் இன்னொருபடி தாண்டி கோட்சேவுக்கு கோயிலே கட்ட வேண்டும் என்பார். அதற்கான விழாவில் பிரதமரே பங்கேற்க வேண்டும் என்பார்.


இன்னொரு அமைச்சர் சொல்லுவார்; பிஜேபிக்கு ஒட்டுப் போடுபவர்கள்தான் உண்மையான அப்பா அம்மாவுக்குப் பிறந்தவர்கள்; மற்றவர்கள் முறை தவறிப் பிறந்தவர்கள் என்று உளறுவார்.


இப்பொழுது ஒரு பி.ஜே.பி.காரர் - அவர் சாதாரண அனாமதேயம் அல்லர் - மக்களவை உறுப்பினர் பெயர் சாக்ஷிசாமியார் என்பவர் பேசி இருக்கிறார்.
இந்துப் பெண்கள் ஒவ்வொருவரும் எப்படி யாவது நான்கு குழந்தைகளைப் பெற வேண்டும்; இதுவரை இருந்து வந்த இந்து விரோத அரசுகள் நாம் இருவர்; நமக்கு இருவர் என்ற கோரிக்கையை வைத்து இந்துக்களின் எண்ணிக்கையைக் குறைத்து விட்டனர்;  இனிமேல் இந்து மக்கள் இதனைக் கருத்தில் கொள்ளக் கூடாது, ஒவ்வொரு இந்து பெண்ணும் நான்கு அல்லது அதற்கு மேல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்துக்கள் எப்படியும் கட்டாயமாக குழந் தைககளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.  அப்பொ ழுதுதான் இந்துக்களின் எதிர்காலமும் இந்துத் தர்மமும் காக்கப்படும் என்று உத்தரப்பிரதேசம் மீரட் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தான் இவ்வாறு பேசியுள்ளார்.


இதே கூட்டத்தில் மதமாற்றம் செய்பவரைத் தூக்கிலிட வேண்டும், அவ்வாறு சட்டம் செய்ய பி.ஜே.பி தயாராகவும் உள்ளது என்றும் நல்ல பாம்பாக நஞ்சைக் கக்கியுள்ளார்.


நியாயமாக இந்தப் பேச்சின்மீது சட்டப் படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இடம் இருக்கிறது; ஆனால் நடப்பது பி.ஜே.பி. ஆட்சியாயிற்றே! அதன் உள்ளுணர்வைத் தானே இவர் வெளிப்படுத்தி இருக் கிறார். அப்படி இருக்கும் போது அவர்மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. இதில் முக்கியமாக ஒன்றைச் சிந்திக்க வேண்டும். ஒரு பெண் நான்கு பிள்ளைகளைப் பெற வேண்டும் என்று சொல்லுவதற்கு இந்த ஆணுக்கு உரிமை எங்கே இருந்து வந்து  குதித்தது? குழந்தையைப் பெறுவதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது கணவன்கூட அல்ல - ஒரு பெண்தான் - துணைவிதான். அப்படி இருக்கும் போது பெண்ணைக் கட்டாயப்படுத்துவதற்கு இந்த ஆசாமியார்? என்ற கேள்வி எழலாம்.


ஆனால், இந்து மதத்தைப்பற்றி அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமானதாக இருக்காது; இந்து மதம் பெண்களை உயிர் உள்ள ஒன்றாக பொருட்படுத்துவதே கிடையாது. வெறும் ஜடமாகத்தானே கருதி இந்து மதம் கணிக்கிறது.


படுக்கை, ஆசனம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் என்று இந்துமதம் (மனுதர்மம் அத்தியாயம் 9 சுலோகம் 171). கூறுகிறதே. அப்படி இருக்கும்போது சாக்ஷி சாமியார்கள் வேறு மாதிரிப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?


இந்தச் சாமியாரின் பேச்சுக்கு முதலில் எதிர்க்குரல் கொடுக்க வேண்டியவர்கள் இந்து மதத்தில் இருப்பதாகக் கருதப்படும் பெண்களே! வீதிக்கு வந்து போராட வேண்டியதும் முதலில் பெண்கள்தான்!


நான்கு பிள்ளைகளை ஒரு பெண் பிரசவித்தார் என்றால், அந்த நான்கு பிள்ளைகளை வளர்த்து எடுப்ப தோடு அவர்களின் வாழ்நாள் பெரும்பாலும் அடை பட்டுப் போய்விடுமே! அவர்கள் படிப்பதாவது, வேலைக்குப் போவதாவது!


இதனைத்தான் பிள்ளை பெறும் எந்திரமா பெண்கள் என்ற வினாவைத் தொடுத்தார் பெண்ணுரிமைக் காவலரான தந்தை பெரியார்.
பெண்களின் முதற் கடமை இந்த இந்துத்துவா - பாசிச - பி.ஜே.பி., உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலை அடையாளம் கண்டுப் புறக்கணிப்பதேயாகும்.
இன்னொறும் முக்கியமானது. மக்கள் தொகை கட்டுப்பாடு (Population Control) என்ற அரசின் கொள்கையை எதிர்த்து ஆளுங் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரே பேசியுள்ளாரே  - இதுபற்றிப் பிரதமர் கருத்து தெரிவித்திருக்க வேண்டாமா? எல்லாம் சொல்லி வைத்து ஆடும் நாடகம் தானோ!

                           -----------------------------”விடுதலை” தலையங்கம்  08-01-2014

15 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நவநீத கிருஷ்ணன்

நவநீத கிருஷ்ணன் சின்ன வயதில் வெண் ணெயைத் திருடினான் வாலிப வயதில் பெண் ணைத் திருடினான் என் கிறார்களே - இப்பொ ழுது அவன் என்ன செய்கிறானாம்? அந்த வேலையை இப்பொழுது செய்தால் கம்பி எண்ண வேண்டியது தான்.

Read more: http://viduthalai.in/e-paper/94116.html#ixzz3OHq2QfcF

தமிழ் ஓவியா said...

600 ஆண்டுகால நவரத்தினங்கள் பதித்த தங்கக் கிரீடத்தைத் திருடிய அர்ச்சகப் பார்ப்பான் கைது!


லக்னோ, ஜன.8_ 600 ஆண்டுகாலமாக கோவிலில் இருந்த நவரத்தினம் பதித்த தங்கக் கிரீடத்தைக் கோவில் அர்ச்சகப் பார்ப் பான் திருடினான்_ அவன் கைது செய்யப்பட்டான்.

உத்தரப்பிரதேசம் பலியா நகரத்தில் உள்ள லகந்தரோட் என்ற பழங்காலக் கோட்டையில் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமை யான விஷ்ணு கோவில் ஒன்று உள்ளது. இக்கோ விலில் உள்ள விஷ்ணு சிலைக்குச் சாம்பல் மாகாணத்தின் குறுநில மன்னர்களால் வழங்கிய நவரத்தினம் இழைக் கப்பட்ட தங்கக் கிரீடம் திடீரென காணாமல் போனது. விலை மதிப்பு மிக்க தங்கக் கிரீடத்தைக் கோவில் அர்ச்சகப் பார்ப் பானே திட்டமிட்டு கொள் ளையடித்துள்ளான்.

600 ஆண்டு காலத் திற்கு முந்தைய விலை மதிப்பு மிக்க பொருள் என்பதால் உத்தரப் பிரதேச சி.அய்.டி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரணை செய்தது. இதில் கோவில் அர்ச்சகப் பார்ப்பானே இந்தக் கிரீடத்தை சில சமூக விரோதிகளின் துணை யுடன் திருடியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அர்ச்சகப் பார்ப்பான் மற்றும் இந்தத் திருட் டுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தத் திருட்டு வழக்கு தொடர்பாக பலி யாநகர இணை ஆணை யர் கூறியதாவது: விலைமதிப்பு மிக்க இந்த கிரீடத்தின் மீது நீண்ட நாள்களாகவே அர்ச்சகப் பார்ப்பானுக்கு ஒரு கண் இருந்து வந்தது.

இதை அப்பகுதியில் உள்ள சில சமூக விரோதிகள் மூலம் திருட திட்டமிட் டான். இதனைத் தொடர்ந்து தன்மீது சந்தேகம் எழாத வகையில் சில நாள்களாக பூசை முடிந்த பிறகு மக்களோடு மக்களாகவே அர்ச்சகப் பார்ப்பானும் கோவிலை மூடிவிட்டுச் சென்றுள் ளான்.

மஹாபூர்ணிமா நாளன்று அலகாபாத் செல்வதாக கூறிச் சென் றவர், ரகசியமாக திருடர் களுக்கு கட்டளையிட் டுள்ளார். இதனை அடுத்து கோட்டையில் யாருமில்லாத நேரத்தில் புகுந்து கோவில் கதவை உடைத்து கிரீடத்தை திருடிச் சென்றுள்ளனர். எப்போதும்போல் கோவிலுக்கு வந்த அர்ச் சகப் பார்ப்பான், கிரீடம் திருடு போனதாக நடித் துள்ளார்.

ஆனால், எங் களுக்கு ஆரம்பத்தில் இருந்தே அர்ச்சகப் பார்ப்பான்மீது சந்தேகம் இருந்தது. விசாரணையில் இந்தக் கொள்ளைக்கு திட்டமிட்டுக் கொடுத் தது, தான்தான் என்று ஒப்புக்கொண்டார். கிரீடம் தற்போது வேறு ஒருவரிடம் கொடுத்து வைத்துள்ளதாக தெரி கிறது. விரைவில் கிரீ டத்தை மீட்டுவிடுவோம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/94111.html#ixzz3OKAHQuI8

தமிழ் ஓவியா said...

பி.கே. திரைப்படம் ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக இல்லை

டில்லி உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

புதுடில்லி, ஜன.8_ ஹிந்தி நடிகர் அமீர்கான் நடித்து வெளிவந்துள்ள "பி.கே.' திரைப்படத்தில் ஹிந்து மத உணர்வு களைப் புண்படுத்தும்படி யாக காட்சிகள் உள்ளதாக கூறப்படுவதில் எந்த முகாந்திரமுமில்லை என்று டில்லி உயர்நீதி மன்றம் தெரிவித்தது. பி.கே. ஹிந்தி திரைப்படத்தை எதிர்த்து தாக்கல் செய் யப்பட்ட பொது நல மனுவை புதன்கிழமை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. ரோஹிணி, நீதிபதி ஆர்.எஸ். என்ட்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, மேற்கண்டவாறு தெரிவித்தது.

""அந்த திரைப்படத்தில் என்ன தவறு உள்ளது? எல்லாவற்றையும் நீங்கள் அவதூறாக கருதக் கூடாது. மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. இதுகுறித்து, விரிவான உத்தரவை, பிறகு பிறப் பிக்கிறோம்'' என்று நீதி பதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அஜய் கவுதம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டிருந்ததா வது: பி.கே. திரைப்படத் தில் சில காட்சிகள் ஹிந்து மத உணர்வுகளை புண் படுத்தக்கூடியதாக உள் ளன. ஆனால், அவற்றை கவனத்தில் கொள்ளாமல், திரைப்படத்தை வெளியிட திரைப்படத் தணிக்கை (சென்ஸார்) வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தத் திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி, நாட்டின் பல்வேறு பகுதி களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதனால், சட்டம்- ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டது. எனவே, பி.கே. திரைப்படத்தில் இருந்து, ஹிந்து மத உணர்வு களைப் புண்புடுத்தக் கூடிய காட்சிகளை நீக்க உத்தரவிட வேண்டும். அவ்வாறான காட்சிகளு டன், இத்திரைப்படத்தை திரையரங்கு களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிடக்கூடாது என்று இதன் தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், "இதே போன்ற மனுவை, உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்து விட்டது. எனினும், திரைப் படத்துக்கு அனுமதி யளித்து திரைப்படத் தணிக்கை வாரியம் அளித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடமுள்ளது' என்று வாதிட்டார்.
அவரது வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், "திரைப்பட தணிக்கை வாரியத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு மட்டுமே உரிமையுண்டு. சட்டப்படி, வெளியாள் களுக்கு அந்த உரிமை யில்லை' என்று தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/94114.html#ixzz3OKAhcivk

தமிழ் ஓவியா said...

இருந்து வரும்


பார்ப்பனச் சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும் வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்து வரும்.
(விடுதலை, 29.5.1973)

Read more: http://viduthalai.in/page1/94118.html#ixzz3OKCpwunl

தமிழ் ஓவியா said...

கொடுங்கோலன் ஆட்சி வீழ்த்தப்பட்டது


கொடுங்கோலன் ஆட்சி வீழ்த்தப்பட்டது
எந்த காரணத்துக்காக யாரால் வெற்றி பெற்றாரோ
அதனை உணர்ந்து பொதுமை ஆட்சி நடத்த வேண்டும் புதிய அதிபர் தமிழர் தலைவர்

ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

இலங்கைத் தீவில் கொடுங்கோலன் ராஜபக்சே ஆட்சி வீழ்ந்தது - வரவேற்கத்தக்கதே! எந்த மக்களின் ஆதரவால் எந்த காரணங்களால் புதிய அதிபராக மைத்திரி பால சிறீசேன வெற்றி பெற்றாரோ, அந்தக் காரணங்களை உள்ளபடியே உணர்ந்து சிறுபான்மை மக்களையும் மதிக்கும் பாதுகாக்கும் பொதுமை ஆட்சியாக நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இலங்கையில் இராஜபக்சே ஆட்சி வீழ்த்தப்பட்டது! தனது குழியைத் தானே தோண்டி வீழ்ந்த வரலாறு படைத்தார் அந்த சிங்கள வெறித்தன ஆட்சி அதிபர்.

மக்கள் வாக்குகள் மூலமே மீண்டும் முழு சர்வாதி காரியாய் ஆக முயன்ற இராஜபக்சேயின் குடும்ப ஆட் சிக்கு குதூகலத்துடன் விடை கொடுத்தனுப்பியுள்ளனர் வாக்காளர்கள்!

இனி, குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு, போர்க் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டிய, தடி நாயகம் நடத்தியவருக்கு இலங்கை மக்கள் தந்த தண்டனை இது! சர்வாதிகாரியாக மாறிட ஜனநாயகப் படிக்கட்டுக்களையே பயன்படுத்த நினைக்கும் பாசாங்குக்காரர்களுக்குப் பாடம் கற்பித்த முடிவு இது!

வாக்களித்தோரைப் பாராட்டுகிறோம்

இதனை உலகம் - நாகரிக உலகம் வரவேற்பதைப் போலவே, நாமும் வாக்களித்தோரைப் பாராட்டி வரவேற்கிறோம்.

மைத்திரி பால சிறீசேன என்ற எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ராஜபக்சேவை விட சுமார் 5 விழுக்காடு வாக்குகள் கூடுதலாகப் பெற்று ராஜபக்சேயின் குடும்ப ஆட்சியை வீழ்த்தியுள்ளது - எப்படி, எதனால் என்பதை வெற்றி பெற்ற, புதிய அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் மைத்திரி சிறீசேன ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

வெற்றிக்கு உறுதுணையாக இருந்தோர்

இந்த 5 விழுக்காடு வாக்குகள் பெரிதும் ஈழத் தமிழர்களாலும், இஸ்லாமிய சகோதரர்களாலும்தான் என்பதை மனதிற் கொண்டு, அவர்களுக்குக் கேடு, துன்பம் இழைத்து, சொந்த நாட்டு மக்களையே அந்நியப்படுத்தி குண்டு போட்டு அழிக்கவும் தயங்காத ராஜபக்சே யிசத்திற்கு விடை கொடுத்து அனைவருக்கும் அனைத் தும் என்ற சமூக நல்லிணக்கத்தை உருவாக்கிட தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும்.

அந்த மண்ணைப் பொன்னாக்கிட உழைத்த அந்தக் குடி மக்களையே மனிதாபிமானமின்றிக் கொன்றும், முள் வேலி சிறைக்குள் - சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கிய - அவல வாழ்வுக்கும் ஆளாக்கிய கொடுமைக்கு தக்க பரிகாரம் காண வேண்டும்.

ஜனநாயகத்தில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பும் உரிமையும் தேவை!

ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினர் ஆளுவது தான் என்றாலும் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழவும் உறுதி அளிக்கும் ஆட்சி முறை என்பதை மறந்து விடக் கூடாது!

தமிழர்களின் பங்களிப்புக் காரணமாகவே இலங்கை யின் பொருளாதாரமும், வளர்ச்சியும், முன்னேற்றமும் என்பதை உணர்ந்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் தவிர்த்தல் அவசியம்.

ஆட்சியைப் பொதுமையுடன் நடத்துக!

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமும் பறிக்கப்படும் அவலம் தொடராமல், நல்லுறவுடன் பழைய ராஜபக்சே ஆட்சி சென்ற பாதையில் செல்லாமல், புதிய மனிதாபிமான அணுகுமுறையுடன், சிக்கல்களைத் தீர்க்க முயல வேண்டும். பொது வேட்பாளராக வெற்றி பெற்றுள்ள புதிய அதிபர் ஆட்சியையும் பொதுமையுடன் நடத்தி, பழைய கறைகளைத் துடைக்க வேண்டும் என்றே உலகம் எதிர்பார்க்கிறது.

பொறுத்திருந்து பார்ப்போம்; மாற்றம் ஏமாற்றமாக முடிந்துவிடாது என்று நம்புவோமாக!

கீ.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை

9-1-2015

Read more: http://viduthalai.in/page1/94169.html#ixzz3OKGIP400

தமிழ் ஓவியா said...

கலைஞர், பேராசிரியர், தளபதி ஆகியோருக்கு வாழ்த்துகள் - பாராட்டுகள்


தி.மு.க.வில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட

கலைஞர், பேராசிரியர், தளபதி ஆகியோருக்கு வாழ்த்துகள் - பாராட்டுகள்

இன்று காலை (9.1.2015) கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் 14ஆவது கட்சித் தேர்தலில், அதன் தலைவராக உழைப்பின் உருவம் மானமிகு சுயமரியாதைக் காரரான நமது கலைஞர் அவர்களை மீண்டும் ஒருமனதாக, போட்டியின்றித் தேர்வு செய்து தனித்ததோர் வரலாறு படைத்துள்ளது.

வரலாற்றில் தொடர்ந்து சாதனைகள் செய்து வருபவர்; தி.மு.க.விற்கு எப்படிப்பட்ட மலை போன்ற எதிர்ப்புகளும், இடையூறுகளும், ஏற்படினும், தனது ஆற்றல்மிகு உழைப்பாலும், ஒப்பற்ற சாதுர்யத்தாலும் எதிர்கொண்டு இயக்கத்தின் சோதனைகளை சாதனைகளாக்கிடும் ஆற்றல் படைத்த கலைஞர் அவர்களுக்கு தாய்க் கழகமான திராவிடர் கழகம் தனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துப் பாராட்டி மகிழ்கிறது.

அவர்களோடு அக்கழகத்தை வழி நடத்திட உதவியாக தேர்வு செய்யப்பட்டு, புதிய அத்தியாயத்தைப் படைக்க பொதுச் செயலாளராக இனமானப் பேராசிரியர் அவர்களும், பொருளாளராக தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம். மற்ற பொறுப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள் - பாராட்டுகள்!

- கி.வீரமணி
தலைவர் திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page1/94171.html#ixzz3OKGTp0kv

தமிழ் ஓவியா said...

ஜனநாயகவாதி போல கருத்துக்கூறும் ராஜபக்சே

ஜனநாயகவாதி போல
கருத்துக்கூறும் ராஜபக்சே

மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட் சியை அமைதியான வழி யில் புதிய அதிபரிடம் ஒப்படைப்பேன் என்று அதிபர் ராஜபக்சே கூறி யுள்ளார். தேர்தலில் தோல்வி முகம் ஏற்பட்ட உட னேயே அதிபர் மாளி கையில் இருந்து வெளி யேறிய முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே தன்னுடை கருத்து குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் அதிபர் மாளிகை புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட மைத்ரி பால சிறி சேனாவின் அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நண்பகல் 12 மணி அளவில் மைத்திரி பால சிறிசேனாவின் வெற்றியும் தேர்தல் குழுத் தலைவர் வெளியிட்டார். இதனை அடுத்து மகிந்தா தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்ப தாவது,தேர்தல் முடிவுகள் புதிய ஆட்சிமாற்றத்தை மய்யமாக கொண்டுள் ளது. 10 ஆண்டுகளாக எனது ஆட்சிக் காலத்தில் இலங்கையை சர்வதேச அளவில் பல்வேறு துறை களில் முன்னுக்கு கொண்டு வந்துள்ளேன். இலங்கை மக்கள் எனது பணியை நினைவிற்கொள்வார்கள். புதிய அதிபருக்கு வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைதியான வழியில் புதிய அதிபரிடம் ஒப் படைப்பேன். இது குறித்து காலையில் எதிர் கட்சித் தலைவர் ரனில் விக்கிரம சிங்கேவிடம் விபர மாக பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page1/94179.html#ixzz3OKGo8DFf

தமிழ் ஓவியா said...

இலங்கை புதிய அதிபரின் நன்றி

இலங்கை அதிபர் தேர் தலில் தனக்கு ஆதர வளித்து வெற்றி பெறச் செய்ததற்காக இலங்கை மக்களுக்கு மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்தி ருக்கிறார்.

இலங்கையில் புதிய அதிபராக பதவியேற்கவி ருக்கும் மத்திரி சிறிபால சேனாவின் வெற்றியை அடுத்து இலங்கை அதிபர் மாளிகையில் அதிகாரப் பூர்வ இணையதளம் மைத்திரிபால சிறிசே னவின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்" என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மன மார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். கருணை யுடனான சகோதர யுகத்தை நோக்கி செல் வோம் என்று அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

பதவியேற்பு

இலங்கை அதிபர் தேர்தலில் வென்றுள்ள பொது எதிரணி வேட் பாளர் மைத்திரிபால சிறிசேன (இன்று) வெள் ளிக்கிழமை மாலை பதவியேற்கிறார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அதிபர் மைத் திரி சிறிபாலசேன இன்று மாலை கொழும்பில் உள்ள சுதந்திரச் சதுக்கத் தில் நடைபெறும் விழா வில் பதவியேற்பார் என்று இலங்கை அதிபர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/94170.html#ixzz3OKH5hYb3

தமிழ் ஓவியா said...

அருகதையற்றவர்கள்


பேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிரதாய முறைகளையும், ஸ்தாப னங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற, ஒழிக்கத் துணிவு கொள்ள வேண்டும். இந்தத் துணிவு கொள் ளாத எவரும் சமதர்ம முயற்சிக்கு அருகதை அற்றவர்களே ஆவார்கள்.
(விடுதலை, 7.7.1965)

Read more: http://viduthalai.in/page-2/94182.html#ixzz3OKIZcaqo

தமிழ் ஓவியா said...

தீபாவளி மகாலட்சுமி அகோர ரத்தப்பசி காளி!

தீபவாளி அமாவாசை இரவு பெண்கள் மகாலட்சுமி நோன்பு - பூசை போடுகிறார்கள் - பட்டுக்குஞ்ச மஞ்சள் கயிறு கையில் கட்டிக் கொள்கிறார்கள்.

இந்த மகாலட்சுமியின் லட்சணங்கள் என்ன தெரியுமா?

மகாலட்சுமி தோத்திரம் என்று பார்ப்பனர் பாடும் சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைக் கவனியுங்கள்:- ஓ, தேவி! நீயே பிரபஞ்சம் அந்த பிரபஞ்ச சக்தி நீயே - நீ மகாபயங்கரி - மாய சக்தி நீ.

அகோர பசிக்காரி - காளி உருவத்தில் ஓ மகாலட்சுமி நமஸ்காரம்.

இந்த மகாலட்சுமி மகா பயங்கர உருவமும், செயலும், குரலும், கொண்டவள்.

காளி உருவம் எடுத்துள்ள போது அகோர பசி - அதாவது ஆண்களையும் எருமைகளையும் கொன்று அவர்கள் இரத்தத்தை குடிக்கவும் அவர்கள் குடலைத்தின்னவும் பெரும்பசி கொண்டவள்.

பலன் ஸ்ஜர்னல் 1967 - தீபவாளி மலர்.Read more: http://viduthalai.in/page-7/94196.html#ixzz3OKIsYuyh

தமிழ் ஓவியா said...

கடவுள்


1. கடவுளைக் காப்பாற்ற மனிதன் புறப்பட்டதாலேயே கடவுளின் பலவீனம் விளங்குவதோடு கடவுள்களுக்கு வரவர பலவீனம் ஏற்பட்டு ஆபத்தும் பலப்பட்டு வருகிறது.

2. கடவுள்கள் இல்லாவிட்டால் அரசன் இருக்க முடியாது. அரசன் இல்லாவிட்டால் பணக்காரன் இருக்க முடியாது. பணக்காரன் இல்லாவிட்டால் உயர்ந்த ஜாதிக்காரன் இருக்க முடியாது. ஆகவே இவை ஒன்றையொன்று பற்றிக் கொண்டிருக்கின்றன.

3. பெரும்பாலும் சுயநலக்காரர்களும் தந்திரக்காரர் களுமே கடவுளையும், வேதத்தையும், ஜாதியையும் உண்டாக்கு கிறார்கள்.

4. கடவுள் உண்டானால் பேய் உண்டு. பேய் உண்டானால் கடவுள் உண்டு. இரண்டும் ஒரே தத்துவங் கொண்டவை.

5. இந்தியாவில் காகிதம், புத்தகம், எழுத்து, எழுது கருவி எல்லாம் சரஸ்வதியாக பாவிக்கப்பட்டு வணங்கி வந்தாலும் 100-க்கு 5 பேர்களே படித்திருக்கின்றார்கள்.

6. மேல்நாட்டில் காகிதங்களினால் மலம் துடைத்து சரஸ்வதியை அலட்சியம் செய்தும் அங்கு 100-க்கு 90 பேர்கள் படித்திருக்கிறார்கள்.

7. கோயில்கள் சாமிக்காக கட்டியதல்ல. வேறெதற்காக என்றால் ஜாதியைப் பிரித்துக்காட்டி மக்களைத் தாழ்த்தவும், பணம் பறித்து ஒரு கூட்டத்தார் பிழைக் கவும், மக்களை அறியாமையில் வைத்து அடிமை களாக்கவும் கட்டப்பட்டதாகும்.

8. எவனொருவன் கடவுளிடத் திலும் அதைப் பற்றிச் சொல்லும் மதக் கொள்கை இடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங் களும் அவர்களுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக் கிறானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதத்தை வாயினால் உச்சரிக்கக் கூட யோக்கியதையற்ற வனாவான்.

9. சுயமரியாதைக்காரன் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனி தனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப் போய்விட்டது. ஆனால் நமது நாட்டில் அந்த செத்த பிணம் அழுகி நாறிக் கொண்டி ருப்பதை எடுத்துப் புதைத்து, நாறின இடத்தை லோஷன் போட்டுக் கழுவி சுத்தம் செய்கின்ற வேலையைத்தான் சுய மரியாதைக்காரன் செய்து கொண்டிருக் கின்றான்.

10. பத்துமாதக் குழந்தையை கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

11. கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பானைச் சாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை.

-தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/94195.html#ixzz3OKJBCYYp

தமிழ் ஓவியா said...

இந்து மதம் பற்றி....


நாம் யாருக்கும் மேல் அல்ல; யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது. தர்ப்பை ஆகாது சேரியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது, யோக யாகப் புரட்டுகள் மனிதர் யாவரும் சரி நிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை இந்து என்று கூறிக் கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை - சூத்திரன் என்று கூறிக் கொள்ள எப்படித்தான் மனம் இடந்தரும்?

எப்படித்தான் துணியும்? இந்துமதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாயமுறை, மதக் கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப் பார்த்த பிறகு யாருக்குத் தான் தன்னை ஓர் இந்து என்று கூறிக் கொள்ள மனம் இடந்தரும், பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களை விட்டு, மதி கெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா?

மீளமார்க்கம் தேடுவதை விட்டு, மாள வழித் தேடிக் கொள்வாரா?

விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும் போது குழியில் வீழ்வார? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு திராவிடர் தனி நிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் இந்து மார்க்கத்தில் போய்ச் சேர இசைவாரா?

வீரர் திராவிடர் என்ற உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர் இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!!

- அறிஞர் அண்ணா
(ஆரியமாயை என்ற நூலில்)

Read more: http://viduthalai.in/page-7/94198.html#ixzz3OKJK6OWs

தமிழ் ஓவியா said...

பிராமணீயமும், கார்ப்பரேட்டுகளும்தான் உண்மையான எதிரிகள்: பேராசிரியர் அருணன் கருத்துரை

செங்கல்பட்டு, ஜன.9_ பொது எதிரிகளை அடையாளம் கண்டு போராட வேண்டும் என்று செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் பேராசிரியர் அருணன் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஜாதி, மூடநம்பிக்கை பெண்ணடிமைத்தனத்தை ஒழிப்போம். காதல் சுயமரியாதை திருமணத்தை ஆதரிப்போம் என்ற தலைப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டில் சுயமரியாதை சிறப்பு மாநாடு நடைபெற்றது. செவ்வாயன்று (ஜன.6) செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். முத்துக்கண்ணன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் பேராசிரியர் அருணன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

85 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை பெரியார், முதல் சுயமரியாதை மாநாடு நடத்திய செங்கல்பட்டில் வாலிபர் சங்கம் மீண்டும் சுயமரியாதை மாநாடு நடத்துவது மகிழ்ச்சியைத் தருகிறது.

அதேநேரத்தில் 85 ஆண்டுகள் கழித்து மீண்டும் சுயமரியாதை மாநாடு நடத்தவேண்டிய நிலைமை இருப்பது வருத்தத்தையும் தருகிறது. 1950_களில் முக்கியமான காதல் திரைப்படங்கள் வந்ததுண்டு. அவை காத்தவராயன், மதுரை வீரன் உள்ளிட்ட உண்மை காதல் கதைகளை பேசின.

21 ஆம் நூற்றாண்டிலும் சினிமா காதலை பேச வேண்டுமா என்றால் தருமபுரியில் இளவரசன் ரயில்முன் பாய்ந்ததற்குப் பிறகுதான் தமிழ் சினிமா இன்னும் காதலைப் பேச வேண்டிய அவசியம் உள்ளது. ஜாதி மதங்களைக் கடந்து காதலை சினிமா பேச வேண்டும்.

18 வயதில் காதல் திருமணம் செய்யக் கூடாது என்கின்றார் மருத்துவர் ராமதாசு. 22 வயதில் தாழ்த்தப்பட்ட இன இளைஞரை காதலித்தால் ஏற்றுக் கொள்வார்களா? தருமபுரியில் ஒரு தந்தையின் தற்கொலையைத் தொடர்ந்து இளவரசனின் மரணம், வீடுகள் எரிப்பு, கலவரம் என அனைத்தையும் செய்து விட்டு ஜாதியம் இல்லை என அன்புமணி ராமதாசு கூறுகின்றார்.

1931 இல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டைப் பற்றி குடியரசு ஏட்டில் சிங்காரவேலர், ஜாதி ஒழியும்வரை சகோதரத்துவம் என்பது வெறும் சொல் மட்டுமே என்று எழுதினார். நாட்டில் தீண்டா மையை ஒழித்தது இந்து முன்னணி அல்ல.

ஜாதியை எதிர்ப்பவர்களை இந்துக்களின் எதிரி எனக் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் மூன்று சதவிகிதம் உள்ள கிறிஸ்துவர்களையும், முஸ்லிம்களையும் பொது எதிரியாக கட்டமைக்கின்றனர். உண்மையான எதிரி கள் ஜாதி, மதம் பெண்ணடிமைத்தனத்தை கடைப் பிடிப்பவர்கள்தான்.

மண்டல் குழு பரிந்துரைத்த பிற்படுத்தப்பட்ட மக் களுக்கான இடஒதுக்கீட்டை வி.பி.சிங் அமல் படுத்தியபோது அதற்கு எதிராக மாணவர்களைப் பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தியது ஆர்எஸ்எஸ், பிஜேபி, சங்பரிவார் கூட்டங்கள்தான். மேலும், அந்த நேரத் தில் ரத யாத்திரையை நடத்தியதும் அவர்கள் தான்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்குஇடஒதுக்கீடு என்றவுடன் ரத யாத்திரை நடத்திய ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபிதான் இந்துக்களின் முதல் எதிரி. இப்போது அவர்கள்தான் தாய் மதத்திற்கு திரும்பவேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

இந்தியாவில் எது தாய்மதம்? இந்தியாவில் பெரிய மதங்கள் புத்தமும், சமணமும்தான். பிராமணீயம் இல்லை. அப்படியே திரும்பினாலும் திரும்பியவர் களுக்கு எந்த ஜாதியில் இடம் அளிப்பார்கள்? ஒபாமாவிற்காக மோடி இந்திய நாட்டு வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பலி கொடுத்து வருகின்றார்.

பிராமணீயமும், கார்ப்பரேட்டுகளும்தான் இந்தியாவின் உண்மையானஎதிரிகள். இவர்களை அடையாளம் கண்டு போராட இளைஞர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அருணன் பேசினார்.

Read more: http://viduthalai.in/page-5/94181.html#ixzz3OP2fVIhi

தமிழ் ஓவியா said...

சுதந்திரத் திராவிடத்தில் ஆரியர் கதி என்ன?

- அறிஞர் அண்ணா

திராவிடநாடு பிரிவினை ஏற்பட்ட பின்பு, ஆரியர்கள் எங்கு செல்வது என்பது பற்றி, ஆரியர்களேதான் முடிவு செய்ய வேண்டும்.

ஆங்கிலோ - இந்தியர்கள் முதலிய மைனாரிட்டிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் ஆரியர்களுக்கும் அளிக்கப்படும்.

ஆனால் மூடப்பழக்க வழக்கங்களும், பிறவியில் உயர்ந்தவன் என்பதும், வைதீகமும், வர்ணாச்சிரமமும் இருக்க இடங்கொடுக்க மாட்டோம்.

ஆரியர்களை எங்கும் ஓடிப்போகும்படி சொல்லவில்லை ஆனால், ஆரியர்களுக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லையானால் மேலே பல ஆரியவர்த்தத்திற்கு போகலாம்.

ஆரியர்கள் இந்நாட்டை விட்டு வெகு சுலபத்தில் போய் விட மாட்டார்கள். ஜெர்மனியில் யூதர்கள் விரட்டப்பட்ட போதுதான் வெளியேறினார்கள்.
ஆனால், நாங்கள் ஹிட்லராக இருக்க விரும்பவில்லை.

Read more: http://viduthalai.in/page4/%20_94226.html#ixzz3OPoh4auM

தமிழ் ஓவியா said...

திருக்குறள் தேசிய நூல் தி.க., திமுக தீர்மானங்கள்
திருக்குறள் தேசிய நூல்

தி.க., திமுக தீர்மானங்கள்6-7-2002 அன்று சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக இளை ஞரணி மாநாட்டில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

...

4,3.2006 அன்று திருச்சிராப்பள்ளி யில் கூடிய தி.மு.க. 9ஆவது மாநில மாநாடு தி.மு.க. இளைஞரணி வெள்ளி விழா மாநாட்டில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Read more: http://viduthalai.in/page4/%20_94227.html#ixzz3OPoypgJQ