Search This Blog

23.1.15

பிஜேபி என்றால் பிராமணீய ஜனதா கட்சி

பிஜேபி என்றால் பிராமணீய ஜனதா கட்சி பேராசிரியர் அருணன் படப்பிடிப்பு


சென்னை, ஜன. 7- 12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் பேராசிரியர் அருணன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

இந்த எழுச்சிகரமான கண்டனப் பொதுக்கூட்டத்தினுடைய தலைவர் அய்யா தமிழர் தலைவர் அவர்களே, தா.பா. அவர்களே, திருமா அவர்களே, சுப.வீ. அவர்களே, கவிஞர் அவர்களே, பிரின்சு அவர்களே, எதிரில் அமர்ந்திருக்கக் கூடிய சான்றோர்களே, உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஆறு மாத காலமாக மோடி அரசு எத்தகைய யுக்திகளையெல்லாம் கைக் கொண்டிருக்கின்றது என்பதை சுப.வீ. அவர்கள் அழகாக இங்கே தொகுத்துச் சொன்னார்.
பி.ஜே.பி. என்றால், பிராமணீய ஜனதா கட்சி!
வாராவாரம் படம் வந்துகொண்டிருக்கிறது என்று சொன்னார். அது எவ்வளவு கொடூரமான, குரூரமான, சில நேரம் அபத்தமான படங்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்கிறோம். ஆனாலும், நாம் ஆச்சரியப்பட வேண்டிய தில்லை. காரணம், இப்பொழுது நடப்பது பி.ஜே.பி. ஆட்சி. பி.ஜே.பி. என்றால், பிராமணிய ஜனதா கட்சியின் ஆட்சி. மிகப் பலர், பாரதீய ஜனதா கட்சி என்று புரிந்து வைத்திருக் கிறார்கள். அல்ல, பி.ஜே.பி. என்றால், பிராமணிய ஜனதா கட்சி.
பிராமணியம் என்பது, ஜாதியம், ஆணாதிக்கம், சமஸ்கிருத சுதி, இன்னும் சொல்லப்போனால், மூடநம்பிக் கைகள், இன்னும் சொல்லப்போனால், மதவாத அரசினை நியாயப்படுத்துவது, கொண்டுவருவது, இத்தகைய குணங் களை, அதாவது குணக்கேடுகளைக் கொண்ட ஒரு கட்ட மைப்பதுதான் பிராமணியம்.

அந்த பிராமணியத்தை தன்னுடைய லட்சியமாகக் கொண்டிருக்கக்கூடிய ஒரு கட்சி; ஒரு பெரிய விபத்தாக, அதற்கென்று தனிப்பெரும்பான்மை வந்து, ஒரு ஆட்சி. அந்தக் கட்சி, அதனுடய ஆட்சி, இப்படி செய்யாமல் இருந்தால்தான் நாம் ஆச்சரியப்படவேண்டுமே ஒழிய, செய்வது கண்டு ஆச்சரியப்படுவதற்கு அவசியமே இல்லை என்பதை நான் முதலில் குறிப்பிட விரும்புகிறேன்.
பகவத் கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்கப் போகிறோம் என்று சொல்லியிருப்பது யாரென்றால், வெளிவிவகாரத் துறை அமைச்சர். அவர் எப்பொழுது உள் விவகாரத் துறை அமைச்சராக ஆனார் என்பது நமக்குத் தெரியவில்லை. அதுவும் சாமியார்களின் கூட்டத்திற்குச் சென்று அவ்வாறு பேசியிருக்கிறார். இன்னும் அறிவிக் காதது ஒன்றுதான் குறை. ஆனால், கிட்டத்தட்ட அப்படி அங்கீகரிக்கப்பட்டு விட்டது. காரணம், அமெரிக்காவிற்குச் சென்ற இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபரிடம் பரிசாகக் கொடுத்த நூல், கீதை. அதனுடைய அர்த்தம் என்ன தெரியுமா? என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் சொல்கிறார்,  அதனுடை அர்த்தம் என்னவென்றால், இந்தியாவின் தேசிய நூல் கீதை என்பதுதான் அர்த்தம். இப்படி ஒரு அர்த்தத்தை நான் கேள்விப்பட்டதில்லை. ஒரு நாட்டினுடைய தலைவர், இன்னொரு நாட்டின் தலை வருக்கு, அவருக்குப் பிடித்த புத்தகத்தைக் கொடுத்தால், அது எப்படி தேசிய நூலாகும்? ஆனால், அதுதான் அர்த்தம் என்று இந்த நாட்டினுடைய வெளிவிவகாரத் துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார். ஆக, கிட்டத்தட்ட அறிவிப்பு என்பதை அதிகாரப்பூர்வமாக செய்யாதது ஒன்றுதான் குறை.

மற்றபடி அந்த நிலைக்கு நாங்கள் வந்துவிட்டோம் என்று பா.ஜ.க. அரசு, மோடி ஆட்சி சொல்லிவிட்டது. இனி நாம் என்ன செய்யப் போகிறோம்? என்பதுதான் செய்தி.

ஏன் பகவத் கீதையை தேசியப் புனித நூலாக அங்கீகரிக்க முடியாது?
முதலில் நாம் இதனை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டி இருக்கிறது. இந்தக் கூட்டம் ஒரு மிக அற்புதமான ஆரம்பம் என்று நான் நினைக்கிறேன்.
ஏன்? பகவத் கீதையை தேசியப் புனித நூலாக அங்கீக ரிக்க முடியாது? என்னைப் பொறுத்தவரை சில காரணங் களைக் கூறுகிறேன்.
முதல் காரணம், ஒரு நாட்டுக்கு தேசிய நூல் என்ற ஒன்று இருக்கமுடியுமா? இது எனது அடிப்படையான கேள்வி.

தேசியப் பறவை இருக்கலாம்; தேசிய விலங்கு இருக் கலாம். ஆனால், தேசிய புத்தகம் எப்படி இருக்க முடியும்? புத்தகம் என்பது ஒரு கோட்பாடு. அது ஒரு கருத்தியல். ஒரே கருத்தியல் கொண்டவர்களா? இந்த 125 கோடி மக்களும்.
இங்கே நன்றாகக் கேட்டாரே, சுப.வீ. அவர்கள். சைவர் களிடம் கேட்டால், பகவத் கீதையை ஒப்புக்கொள்வீர்களா? என்றால், இல்லை, இல்லை, அது வைணவ நூல்தான் என்று சொல்வார்கள் என்று.

இவர்கள் சொல்கிற இந்து மதத்தினரின் ஒரு பிரிவினரு டைய நூல். அதை எப்படி மற்ற பிரிவினர்கள் ஏற்பார்கள்? அதை ஏன் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள், சமணர்கள் ஏற்கவேண்டும்? மூன்று ஆட்சேபணைகள்!

முதல் ஆட்சேபணை எனக்கு என்னவென்றால், ஒரு நாட்டிற்கு தேசியப் புனித நூல் என்ற ஒன்று இருக்க முடியாது. இரண்டாவது ஆட்சேபணை, நம்முடைய அரசியல் சாசனம் என்ன சொல்கிறது. இது ஜனநாயகக் குடியரசு மட்டுமல்ல, இது மதச்சார்பற்ற  குடியரசு என ஆக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு கெடுதலில் நன்மை போல், அந்தக் கொடூரமான அவசர நிலை ஆட்சிக் காலத்தில், இந்திரா அம்மையார் செய்த ஒரே நல்ல காரியம். செக்யூலர் என்கிற அந்த சொல்லை, அரசியல் சாசனத்தில் சேர்த்தது.

அப்படி என்றால், இது மதச்சார்பற்ற அரசு என்றால், ஒரு மதத்தின் நூலை, எப்படி அரசின் நூலாக, தேசத்தின் நூலாக, நாட்டின் நூலாக ஆக்க முடியும்? சட்ட விரோதம் என்கி றேன். அதுமட்டுமல்ல, சில நேரங்களில் அவர்கள் என்ன சொல்வார்கள் என்றால், மதச்சார்பற்ற அரசு என்றால் என்னவென்றால், எல்லா மதங்களையும் சமமாகப் பாவிப்பதுதான் என்று.

இதுவே கோளாறான வியாக்கியானமாகும். பெரியார் சொல்வார், ஏங்க, கன்னியாஸ்திரி என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டால், எல்லா ஆண்களையும் சமமாகப் பாவிக் கின்ற பெண் என்றா சொல்வீர்கள்; எல்லா ஆண்களையும் விலக்கி வைத்திருக்கின்ற பெண்தானே!

அதுபோலத்தான், மதச்சார்பற்ற அரசு என்றால், என்ன பொருள் என்றால், சகல மதங்களிலிருந்தும் விலகி நிற்கின்ற அரசு. அரசு என்பது எல்லா மதத்துக்காரர்களும் தருகின்ற வரிப் பணத்தில் இயங்குகின்ற அரசு.
எல்லா மதங்களையும் சமமாகப் பாவிப்பதுதான் மதச் சார்பற்ற அரசு என்றால், மோடி அரசைப் பார்த்து வெளி விவகாரத் துறை அமைச்சரைப் பார்த்து கேட்கிறேன், கீதை ஒரு மதத்தின் நூலா? இல்லையா?


எல்லா மதங்களையும் சமமாகப் பாவிக்கிறீர்களா, இல்லையா? அப்பொழுது என்ன செய்யவேண்டும்? ஒரு ஏழு, எட்டு தேசிய நூல்களையாவது அறிவிக்கவேண்டும் அல்லவா!

ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நூலை அறிவி யுங்கள். எல்லா மதங்களையும் சமம் என்று சொல்கிறீர்கள் அல்லவா! எல்லா மதங்களையும் சமமாகப் பாவிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, கடைசியில் தேசத்திற்கே ஒரே நூல்; அது என்ன நூல் என்றால், ஒரு வைணவ மத நூல் என்பது.
இந்த நாட்டில், எல்லா மதங்களையும் சமமாகப் பாவிக் கின்ற வேலையை இந்திய அரசால் செய்ய முடியாது. 80 சதவிகிதம் பேர் இந்துக்கள்; 14 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள்; 2 சதவிகிதம் பேர் கிறிஸ்தவர்கள். இன்னும் பல பேர் உள்ளனர். நீங்கள் சமமாகப் பாவிக்கவேண்டும் என்று வரும்பொழுது, இயல்பாக என்ன செய்வீர்கள்? 80 சத விகிதம் பேர் உள்ள இந்து மதத்தைத்தான் அரசு கூடுதலாகக் கொண்டாடும்; அதில் போய்தான் நிற்கும்.

ஆகவேதான், வரலாற்று ரீதியாக அய்ரோப்பாவிலி ருந்து இன்றைக்கு உலகம் முழுவதும் வந்துகொண்டிருக் கின்ற சிந்தனை, இந்தக் குழப்பமே வேண்டாம்; இந்தக் கூத்தடிப்புகள் வேண்டாம்; மத நம்பிக்கையை நாம் புரிந்து கொள்கிறோம்; கடவுள் நம்பிக்கையை நாம் புரிந்துகொள் கிறோம். அது அவரவர்களுடைய குடிமக்களுடைய தனிப்பட்ட விவகாரமாக இருக்கட்டும்.
அரசு முழுமையாக, சகல மதங்களிலிருந்தும் விலகி நிற்கட்டும். இதுதானே மதச்சார்பற்ற அரசு!


சுஷ்மா சுவராஜை பதவி நீக்கம் செய்யவேண்டும்!
இந்த மதச்சார்பற்ற அரசை, இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அந்த அரசியல் சாசனத்தில் இன்னும் நுணுகிப் போய் பார்த்தால், அந்த அரசியல் சாசனத்திற்கு உண்மையாக இருப்பேன் என்று சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டவர்தான் வெளிவிவகாரத் துறை அமைச்சர். எப்படி ஒரு மதத்தின் நூலை, இந்த நாட்டின் தேசியப் புனித நூல் என்று அறிவிக்கலாம். உடனே இந்த அம்மையாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். காரணம், அவர் எடுத்துக்கொண்ட உறுதி மொழிக்கு முரணாக அவர் பேசியிருக்கிறார்.

ஆக, இரண்டாவது ஆட்சேபணை, இது சட்ட விரோத மான அறிவிப்பு; அமைச்சருடைய அறிவிப்பு. யாரோ ஒரு கட்சித் தலைவர் சொன்னால், நான் இப்படி பேச மாட்டேன்.

மூன்றாவது ஆட்சேபணை, சுப.வீ. அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
அய்யா, இதையெல்லாம் விட்டுவிடுங்கள். தேசியப் பறவை போல, தேசிய விலங்கு போல, ஒரு தேசிய நூல் இருக்கவேண்டுமா? என்று முதல் ஆட்சேபணையாக சொன்னேன்.

அரசியல் சாசனத்தின் மதச் சார்பற்ற அரசு என்ற அந்த சரத்துக்கு இது பொருந்தி வருமா? என்று இரண்டாவது ஆட்சேபணையை சொன்னேன்.
மூன்றாவது ஆட்சேபணை, இவையெல்லாம் போனா லும்கூட, தேசியப் புனித நூல் என அறிவிப்பதற்கான யோக்கியதை பகவத் கீதைக்கு உண்டா?
இந்த ஆட்சேபணையையும் நாங்கள் எழுப்புகிறோம். இதைத்தான் அவர் எடுத்துச் சொன்னார்.

பல பேர் நீங்கள் படித்திருப்பீர்கள். கொஞ்சம் நுணுகிப் பார்க்கும்பொழுது என்ன ஒரு சிக்கல் வரும் என்றால், எல்லோரும் சொல்வார்கள், யுத்த களத்தில் வந்து நின்றான் அர்ஜூனன், எதிரில் பார்க்கிறான், தாத்தா, சித்தப்பா, பெரியப்பா, மாமா எல்லோரும் உறவினர்களாகத்தான் நிற்கிறார்கள்.

இவர்களையெல்லாம் கொலை செய்வதா? என்று அந்தக் கணத்திலே மிரண்டு போய் தேரிலேயே உட்கார்ந்து விட்டான் அர்ஜூனன்.

அவனைக் கொஞ்சம் தேற்றி, பிறகு கொல்லச் சொன்னது யார் தெரியுமா? கீதை தந்த கிருஷ்ணன்.

சத்திரிய குலப் பெண்களுக்கு உறவு கொள்ள ஆண்களே இருக்கமாட்டார்களே? இன்னும் கொஞ்சம் நுணுக்கமாகப் பார்த்தால், அர்ஜூனன் ஏன் கவலையோடு உட்கார்ந்தான் தெரியுமா? கீதை சொல்கிறது, இவ்வளவு பேரை கொலை செய்யப் போகிறோமே என்பதற்காக அவன் கவலையோடு உட்கார வில்லை. இவ்வளவு பேர் ஆண்கள்; சத்திரிய குலத்துக் காரர்கள். இவர்களையெல்லாம் தீர்த்துக் கட்டிவிட்டால், அர்ஜூனன் கேட்கிறான், கிருஷ்ணனிடம், நம் சத்திரிய குலப் பெண்களுக்கு உறவு கொள்ள ஆண்களே இருக்க மாட்டார்களே? என்று.
அதுதான் அர்ஜூனனுடைய குணம்; எங்கே போனாலும், அவனுடைய புத்தி இப்படித்தான்.

போரில் அவ்வளவு பேரும் இறந்துபோனால், நம் முடைய சத்திரியக் குலப் பெண்களுக்கு உறவு கொண் டாட ஆண்கள் நம்ம வருணத்தில் இருக்க மாட்டார்களே, வருண தருமம் குலைந்து போகாதா? என்று கேட்கிறேன்.
நான்கு வருணத்தை உருவாக்கியது நான்தான்; அதனை நானே நினைத்தாலும் மாற்ற முடியாது என்று.


நான் உண்மையில் சொல்கிறேன், பகவானை கேவலப் படுத்தியது பகவத் கீதைதான்.

ஏனென்றால், அவனாலேயே மாற்ற முடியாத ஒன்று, இந்த பூலோகத்தில் இருக்கிறது என்றால், அவர் எப்படி எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த கடவுளாவார்.

இந்த வருணாசிரமத்தைக் காக்கவேண்டும் என்கிற கவலையிலிருந்துதான் அர்ஜுனனுக்குப் பல கேள்விகள் வருகின்றன.

அவனை சமாதானப்படுத்தி, நிமிர்ந்து உட்கார வைத்து, போரிலே எதிர்த்து நிற்கும் வேலையைச் செய்கிறான் கண்ணன்.

நான் கேட்கிறேன், இந்த ஆட்சியாளர்களைப் பார்த்து, கொலை செய்யத் தூண்டுகிற ஒரு நூலை, இந்தியாவின் தேசிய நூலாக செய்தால், அதைவிட ஒரு கேவலம் இந்த நாட்டிற்கு வேறு உண்டா?

கொலை செய்; நல்லபடியாகத் தீர்த்துக் கட்டு. சொந்த பந்தமாக இருந்தாலும் பரவாயில்லை. மண்ணுக்காக கொலை செய். உன்னுடைய ஒரே கவலை என்ன? வருண தருமம் குலைந்துபோகும் என்றுதானே, கவலைப்படாதே, அப்படி ஒரு நிலை வரும்பொழுது, நான் மீண்டும் மீண்டும் பிறப்பேன் என்கிறான்.
இவர் எதற்குப் பிறக்கிறார், சம்பவாமி யுகே, யுகே!
நிறைய பேர் சொல்வார்கள், தருமத்தைக் காப்பாற்றுவ தற்காக இவர் பிறக்கிறார் என்று சொல்வார்கள்; அது என்ன தர்மம் தெரியுமா? வருண தருமம்! அதாவது ஜாதி அதர்மம்; அந்த அதர்மம் சீர்குலையும்போது, நான் பிறந்த வந்து அதைக் கட்டிக்காப்பேன் என்று விதவிதமாக அர்ஜூன னைத் தேற்றுகிறார் கிருஷ்ணன்.

இப்பொழுது சொல்கிறார்கள், காந்தியும் தேசபக்தர்தான்; கோட்சேவும் தேசபக்தர்தானாம். இவர்கள் கோட்சேவின் புதல்வர்கள்; காந்தி பிறந்த நாள் அன்று, தூய்மைப்படுத்தும் வேலை செய்கிறார்கள். அதனுடைய சூட்சுமம் என்ன வென்பதை, சுப்பிரமணிய சாமி ஒரு ஆங்கிலப் பத்திரி கையில் கட்டுரையாக எழுதியிருந்தார்.
காந்திக்கும், நேருவுக்கும் குப்பைக் கூட்டும் வேலையைத்தான் கொடுத்திருக்கிறார்களாம்!

அதில், எங்கள் ஆட்சி காந்தியைப் புகழுகிறது, நேருவைப் புகழுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களே, ஆனால், காந்திக்கும், நேருவுக்கும் நாங்கள் என்ன வேலை கொடுத்திருக்கிறோம் பார்த்தீர்களா? குப்பைக் கூட்டும் வேலையைத்தான் கொடுத்திருக்கிறோம்.

இதை நான் சொல்லவில்லை, சுப்பிரமணியசாமி அந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.

இப்படி அசிங்கப்படுத்துகின்றவர்கள்தான் இந்த ஆட்சி யாளர்கள். காந்தி என்றால், இந்து - முஸ்லிம் ஒற்றுமை; காந்தி என்றால், ஏகாதிபத்திய எதிர்ப்பு; காந்தி என்றால், ஆலய நுழைவுப் போராட்டம்; காந்தி என்றால், மக்கள் ஒற்றுமை என்று கொண்டுவரவில்லை. குப்பைக் கூட்டு கின்ற வேலைக்குத்தான் காந்தி என்று கொண்டு வந்திருக் கிறார்கள். எவ்வளவு வேகமாக வேலையைப் பார்க்கிறார் கள். காரணம், இவர்கள் கோட்சேவின் புதல்வர்கள். அந்தக் கோட்சே போற்றிய நூல், பாராட்டிய நூல், கையில் வைத்துக்கொண்டு கொலை செய்த நூல்தான் பகவத் கீதை. அப்படிக் கொலை செய்யத் தூண்டிய நூலையா இந்த நாட்டினுடைய தேசியப் புனித நூல் என்கிறீர்கள்.

அது தேசிய நூலும் அல்ல; புனித நூலும் அல்ல. இதுதான் உண்மை.


குணத்தின் அடிப்படையில் பிரிக்க முடியாதாம்!
சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் என்று வருகிற பொழுது, நானே நினைத்தாலும் அதனை மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு, ஆனாலும், குணத்தின் அடிப்படையில் தான் வருணப் பிரிவினை என்று சொல்லியிருக்கிறாரே என்று இந்தக் கேள்வியை சங்கராச்சாரியாரிடம் கேட்டார் கள்; இந்தச் சங்கராச்சாரியல்ல; கொலைக் குற்றத்தில் மாட் டிய சங்கராச்சாரியல்ல. அதற்கும் முந்தைய சங்கராச்சாரி யிடம் கேட்கிறார்கள்.

குணத்தைப்பற்றி பகவான் பேசியிருந்தாலும், பிறப்பின் அடிப்படையில்தான் என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும்;  குணத்தின் அடிப்படையில் பிரிக்க முடியாது என்று சொன்னார்.

ஆகவே, குணத்தைப்பற்றி பேசுகின்ற புண்ணியவான்க ளுக்குச் சொல்லுங்கள், நீங்களும், நானும் சொன்னால் கேட்கமாட்டார்கள். சங்கராச்சாரியாரே சொல்லியிருக் கிறார், வருணாசிரமம் என்று பகவான் சொல்லியிருப்பது பிறப்பின் அடிப்படையில்தான்.


தமிழா எச்சரிக்கை!
இறுதியாக ஒன்று, இதே பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒரு எம்.பி., தருண்விஜய் என்பவர், திருக்குறளை புகழ்ந்து விட்டாரே, திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடப் போகிறார்களே என்று. எனக்கு அப்பொழுதே சந்தேகமாக இருந்தது. பின்னாடி என்னமோ நடக்கப் போகிறது என்று. நம்முடைய கையில் குச்சி அய்சைக் கொடுத்துவிட்டு, இவன் கப் அய்ஸ்கிரீம் சாப்பிடப் போகிறான்.
தமிழா எச்சரிக்கை!
நன்றி, வணக்கம்!
இவ்வாறு பேராசிரியர் அருணன் அவர்கள் உரையாற்றினார்.

                           "விடுதலை” 7-1-2015

23 comments:

தமிழ் ஓவியா said...

பெரியார் உலகம் - ஒரு வரலாற்றுச் சாதனை முயற்சி
பேரறிஞர் வரிசையில் போற்றப்பட வேண்டியவர் ஆசிரியர்!

82 வயதான புதுச்சேரி ஜி.கே.எம். பேட்டி!

புதுச்சேரி மாநில திராவிடர் கழக பொதுக் குழு உறுப்பினர் ஜி.கே.எம். என்கிற ஜி. கிருட்டிணமூர்த்தி. 82 வயதான இளைஞர். தமிழர் தலைவர் ஆசிரியர்மீது வற்றா அன்பு பூண்டவர். சீரிய நூல் வாசிப்பாளர். விடுதலையின் தொடர் வாசகர்.

அவர் வீடு முழுவதும் கொள்கை வாசகங்கள்; பேரறிஞர்கள் தம் கருத்துக்கள் எங்கு பார்த்தாலும் எழுதப்பட்டுள்ளன. சிந்தனையாளர் களின், முற்போக்காளர்களின் உருவப் படங்கள் வீட்டை அலங்கரிக்கின்றன.

அவரைப்பற்றி...

காரைக்காலில் 31.07.1933இல் கோவிந்தசாமி - _ பட்டம்மாள் இணை யரின் மூத்த மகனாகப் பிறந்தவர். விசயலட்சுமி இவரின் துணைவியார். எழில், அன்பரசு, அறிவொளி, மல்லிகா, செல்வி என 5 பிள்ளைகள் இவருக்கு! இவரின் தந்தையார் சுயமரியாதை உணர்ச்சி உள்ளவர். அவரே ஜி.கே.எம். பகுத்தறிவுவாதியாக பரிணமிப்பதற்குக் காரணம். இயக்கப் பற்றுதல் எப்படி ஏற்பட்டது?

காரைக்கால் நிரவி பகுதிக்கு பெரியார் வந்தபோது எனக்கு 15 வயது இருக்கும். நான் நேரில் சென்று பார்த்ததும், 17,18 வயது இருக்கும்போது என் தாத்தா வீடான புதுச்சேரி குயவர் பாளையம் சென்றிருந்தபோது ஒதியஞ் சாலை திடலில் தந்தை பெரியார் பேசியதைக் கேட்டதும், குபேர் தலை மையில் வள்ளுவர் விழா நடந்தபோது திருக்குறள் முனுசாமியும், இளைஞர் வீரமணி (தமிழர் தலைவர்)யும் பேசி யதைக் கேட்டதும் இயக்கக் கொள்கை யின் பால் பற்றுதல் ஏற்பட காரண மான நிகழ்வுகளாகும்.

இயக்கத்தின் ஆதரவாளனாக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்திருக்கிறேன். வி.சு. சம்பந்தம் பொறுப் பிலிருந்த போதுதான் நான் இயக்கத்தின் பொறுப்புக்கு வந்தேன். இப்போது புது வையில் இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதைப் பார்க்கும்போது பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

கொள்கை பரவலுக்கு தங்களின் பணிபற்றி...

இயக்க நூல்கள் மற்றும் மேலை நாட்டு அறிஞர்களின் நூல்கள் அவ்வப் போது நிறைய வாங்கி ஏராளமானவர் களுக்கு கொடுத்து அவர்களில் பலரை இயக்கத்துக்கு ஆதரவாளர்களாக மாற்றியுள்ளேன். தேவையான சமயத் தில் துண்டறிக்கைகள் அச்சிட்டு வழங்கி வருகிறேன்.

இயக்க நிகழ்ச்சிகள் நடத்தும் போது தாராளமாக நிதி உதவி செய்வதில் மகிழ்ச்சி காணுபவன். பெரியார் உலகம் நிதி இருபத்தையா யிரம் அளித்துள்ளேன். எப்போதும் யாரிடமாவது இயக்கக் கொள்கைகளை பற்றிப் பேசிக் கொண்டே இருப்பேன்! பலரை இயக்க சார்பாளர்களாக நான் மாற்றி உள்ளேன்.
மறக்க முடியாத நிகழ்ச்சி ஏதாவது...

1984ல் என் புதிய வீடு திறப்பு. என் துணைவியார் கிரகப் பிரவேசமாக நடத்த விரும்பினார். நான் மறுத்து விட்டேன். எனது கொள்கை உரிமையை விட்டுக் கொடுக்க நான் தயாரில்லை என்று கூறிவிட்டேன். வேறு வழியின்றி எதுவுமே செய்யாமல் அவ்வீட்டுக்கு குடிசென்று விட்டோம். அதன்பிறகு தான் எனக்கு (என் கொள்கைக்கு) ஒத் துழைக்க ஆரம்பித்தார் என் துணை வியார்.

தமிழர் தலைவர் பற்றி தங்களின் கருத்து....

தந்தை பெரியார் சூரியன் என்றால் ஆசிரியர் கி. வீரமணி அவர்களோ அதன் ஒளி வாங்கிய முழு நிலா என் பேன். உலகளாவிய பேரறிஞர் வரிசையில் போற்றப்பட வேண்டியவர். பெரியார் உலகம் -அவரின் வரலாற்றுச் சாதனை முயற்சியாகும்.

ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைகள் நூல் வரிசை என்னை மிகவும் ஈர்த்திட்ட புத்தகங்களாகும். புதுச்சேரி தமிழக மக்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்களாகும். பல நூறு புத்தகங்கள் அவற்றில் வாங்கி மற்றவர்களுக்கு கொடுத்திருக்கிறேன்.அதுபோல கீதையின் மறுபக்கம் சீரிய ஆய்வு நூல். அதைப் படித்து வியந்தவன் நான்.

தமிழ் ஓவியா said...

அய்யாவின் அடிச்சுவட்டில்...

நூல் வரிசையும் இயக்கத்தின் வர லாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளப் பயன்படும் நூல் களாகும்.

இயக்க வளர்ச்சிக்கு தங்களின் கருத்து...

இயக்கத்தில் இளைஞர்கள், மாண வச் செல்வங்கள் நிறைய பேர் சேர வேண்டும். இயக்க இளைஞர்கள் விடுதலை ஏட்டினைத் தவறாமல் படிப்பதுடன், அய்யா, ஆசிரியர் நூல்களை முழுவதுமாக வாசிக்க வேண்டும். தொடர்ந்த வாசிப்பு வழக்கம் ஆழ்ந்த கொள்கை உறுதியை ஏற்படுத்தும்.

அறிவில் சிறந்தவர்களாக மிளிர முடியும். 2000 மாநாடுகள் என்று ஆசிரியர் அறிவித்துள்ள அறிவிப்பு என்னை பிரமிக்க வைத்தது. கழக நிர்வாகிகளும், தோழர்களும் வட்டார விழிப்புணர்வு மாநாடுகளைத் திறம்பட நடத்தினாலே இயக்க வளர்ச்சி செழித்தோங்கும் என்பது என் கருத்து. ஒவ்வொரு கழகத் தோழரும் விடுதலை வாங்க வேண்டும் _- படிக்க வேண்டும்.

மதவெறிக்கு தூபம் போடும் மத்திய அரசு அமைந்து உள்ள இக்காலத்தில் அதனை முறியடித்து மனிதநேயம் காக்கப்பட நமது இயக்கத்தால் மட்டுமே செயலாற்ற முடியும்.

நமது தமிழர் தலைவர் ஆசிரியர் எவ்வித எதிர்பார்ப்புமின்றி அய்யாவின் கொள்கையைப் பரப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவரின் ஆணையைச் செயல்படுத்துவதே நாம் இயக்கத்துக்கு மக்களுக்கு ஆற்றிடும் தொண்டு என்பதை உணர்ந்து தோழர்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்!

பேட்டி கண்டவர்: துரை. சந்திரசேகரன் 31.12.2014

Read more: http://viduthalai.in/page-1/94844.html#ixzz3Pk0n5V3d

தமிழ் ஓவியா said...

நீ.. இந்து என்றால்....

நீ இந்து என்றால் உனக்கு ஏன் கோயிலில் நுழைய அனுமதி இல்லை? அர்ச்சகராகவும் உரிமையில்லை.

நீ கட்டிய கோயில், நீ செதுக்கிய சிலை, நீ தொட்டுச் செய்த அந்த சிலை எப்படி கடவுளாக முடியும்?

நீ தொட்டால் மட்டும் அது எப்படி தீட்டாகும்? தீட்டு என்றால் என்ன? அப்படித்தானே அர்ச்சகர் ஆகும் உரிமையில்லை என்று தமிழக சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது?

நீ இந்து என்று சொல்லிக் கொள்கிறாய். ஆனால் உன்னை வேசிமக்கள் என்றும் பாவ யோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்றும் வேதத்தில் எழுதி வைத்துள்ளான். அந்த வேத சாஸ்திரங்கள்தானே அர்ச்சகர் ஆகும் உரிமையைத் தடுத்துள்ளன.

ஒரே ரத்தம் உள்ள மனிதனை பல ஜாதிகளாக பிரித்து தான் மட்டுமே சொன்னால் கடவுள் கேட்பார் என்று ஊருக்கு ஊர் ஒரு தேரை வைத்து வினை தீர்ப்பதாகவும், பணம் கொடுப்பதாகவும், நோய் தீர்ப்பதற்கும், திருமணம் செய்வதற்கும் என்றே பல கடவுள் என்கிற சிலைகளையும் கோயில்களையும் கட்ட வைத்து தன்னினத்தையே உரிமையாக்கிக் கொண்டு மக்களை ஓட்டாண்டிகளாக வைத்துள்ளார்கள்.

எத்தனை நூற்றாண்டுகளாகியும் எத்தனை பெரியோர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வந்துள்ளார்கள். கல்வியே இல்லை என்று சொன்னதை மறந்து இப்போதுதானே படிக்க முன்வந்துள்ளீர்கள்.

எத்தனையோ அறிவார்ந்த புத்தகங்கள் பெரியார் மன்றத்தில் குவிந்து கிடக்கின்றன. அதைப் படிக்கும் முன்பே செத்த மொழியைப் புகுத்தி அதிலே நீ செய்த சிலைகளையும் அதற்காக தொகுத்த கற்பனைக் கதைகளையும் படிக்க வைத்து மீளவும் கற்காலப் பயணத்துக்கு ஆட்படுத்த உள்ளார்கள்.

எனக்கென்ன எனக்கென்ன என்று நீயிருந்தால் உன் சந்ததிகள் அல்லல்படும் என்பதை அறிவாயா? இப்போது இருக்கும் கல்விமுறையில் மாற்றம் என்ற பெயரில் செத்த மொழி சமஸ்கிருதத்தைத் திணிப்பதால் என்ன நன்மை ஏற்படப் போகின்றது?

கர்நாடகா மற்றும் கேரளா அரசுகள் மூடநம்பிக்கையை ஒழிக்க சட்டம் செய்ய முன்வந்துள்ள இன்றைய நிலையில் தமிழ்நாடு என்ன செய்யப் போகிறது? -

மா. சென்றாயன், தருமபுரி

Read more: http://viduthalai.in/page-1/94845.html#ixzz3Pk1EtE00

தமிழ் ஓவியா said...

ஒரு மருத்துவர் பார்வையில்....

(அ. உசேன் மஸ்தான் விஙிஙிஷி., ஞிளி., வி.கி., (தமிழ்) இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் (நிறைவு) கண் மருத் துவர், சஞ்சிதா மெடிக்கல்ஸ் அறந் தாங்கி புதுக்கோட்டை மாவட்டம்).

பொருள்: திருமணப் பொருத்தம் - _ மருத்துவப் பரிசோதனை பார்வை: 28.8.2014 விடுதலை வியாழன்
ability is of little account without opportunity
பார்ப்பானை ஒழிக்க தமிழர்களால் ஒருக்காலும் முடியாது.

தமிழர்களை ஒழிக்க பார்ப்பான் தேவையில்லை. தமிழர்களே ஒருவருக்கொருவர் அடித் துக் கொண்டு வீழ்ந்து விடுவார்கள். பணம், பதவி, புகழ், மது, மாது ஒரு இலட்சம் கால வரலாற்றை உற்று நோக்கும் போது தமிழர்களிடம் இதற்கென்ற மரபணு இருப்பதாக என் சிந்தனைக்குத் தென்படுகிறது.
அதிர்ந்து விடாதீர்கள்.

ஒரு காரணத்திற்காக முகம் இதழுக்கு எழுதினேன். இதைச் சொல் லுவதற்கு எனக்குத் தகுதி இல்லைதான். ஏதோ எடுத்த எடுப்பில் நான் சொல்லவில்லை.

அடிப்படையில் நான் ஓர் அறிவிய லாளன். மருத்துவப் படிப்பு படித்தவன். பெரிய மேதைகளோடோ உலக அரசியல் தலைவர்களின் பழக்கமோ எனக்குக் கிடையாது. கிட்டத்தட்ட 120 புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துள்ளேன்.

மருத்துவப் படிப்பின் இயல்புதான் எனக்குக் கை கொடுத்தது. கற்றது கடுகளவுதான். பொது மக்களின் தொடர்புதான் எனக்கு படிப்பினை கொடுத்தது. பாமர மக்களிலிருந்து உலகப் பெரிய தலைவர்களின் எண் ணங்கள் ஒன்றாகவே இருக்கின்றன. அவர்களுடைய சூழ்நிலை புகழைத் தந்தது. உழைப்பு அவர்களுக்கு முன் னேற்றத்தைக் கொடுத்தது. அவ்வளவே இந்தக் கடிதம் எழுதுவதற்குக் காரணம்?

சிறுபிராயத்திலே பார்ப்பனர்களிடம் பழகியவன். பள்ளிப் பருவத்தில் மணப்பாறை அஞ்சலகத்தில் கூலி வேலை செய்தவன். நான் தடுமாற்றம் இல்லாமல் படிப்பதைப் பார்த்து கீழ் மட்டப் பணியாளர்கள் என்னை விடுதலையை வாசிக்கச் சொல்லி பத்து பேர்கள் காது தாழ்த்தி கேட்பார்கள். அடுத்த நாள் விடுதலையை துப்பறியும் நாவல் போல் ஆர்வமுடன் கேட் பார்கள்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாக அறந்தாங்கி தி.க. செயற்குழு உறுப்பினர் கண்ணுச்சாமி அய்யா. அவர்களின் இல்லத் திருமண விழாவில் ஆசிரியர் தலைமையேற்று நடத்தியபோது வாழ்த் துரை வழங்கியதில் நானும் ஒருவன்.

அப்போது நான் திருமணப் பொருத்தம் மூடத்தனமானது அறிவியல் - மருத்துவப் பொருத்தம்தான் நன்மை யானது என்றேன். நான் இந்த விஷயத் தில் வெட்டு, குத்து, கொலை ஆகிய வற்றில் (Post Mortem) செய்து கோர்ட் டில் விளக்கம் கொடுக்கப் போவேன்.

நான் பல இடங்களில் அறிவியல் உண்மைகளைச் சொல்லி கூட்டமாக என்னை வெட்ட வந்து விடுவார்கள் -_ நான் தப்பியோடி உயிர் பிழைத்தது உண்டு.இந்த பேச்சைக் கேட்டு இந்த மாதிரி எந்த டாக்டரும் சொல்லியதில்லையே என்றீர்கள்.

கொலம்பஸ்ஸுக்கு ஸ்பெயின் நாட்டு அரசு உதவ முன் வரவில்லை. இராணி யின் அனுமதி கேட்டு அவரிடம் வாக்குறுதி பெற்று அமெரிக்கா சென்று வந்த பிறகு பலவற்றைக் கொடுத்தார். SYPHILIS என்ற பால்வினை நோய் பரவுவதற்குக் காரணமானார். இந்த நோய் இராஜபிளவை என்றும் அரச பரம்பரைக்குத் தான் வரும் என்று பெருமையாகப் பேசிக் கொள்வார்கள். பெருமையுடனிருப்பார்கள்.

300 ஆண்டுகளுக்குள் இது பாமர மக்களிடையே பரவ ஆரம்பித்தவுடன் மருத்துவர்கள் ஆராய ஆரம்பித்தார்கள். இதற்கிடையே மனைவிமார்கள்மீது சந்தேகப்பட்டு பல கொலைகள் நடந் தன. பலர் நோயினால் பைத்தியமாக திரிந்தார்கள். PENICILLIN கண்டுபிடித்த தின் பின் நோய் குறைந்தது. மரணம் தள்ளிப் போடப்பட்டது. மக்கள் பெருக்கம் அதிகமாகியது.

மருத்துவத் துறையைப் பொறுத்த மட்டில் பாமரன் மேதை தலைவன் என்று எல்லோருக்கும் ஒரே எண்ணம் தான் அதில் கடுகளவும் பொய்யில்லை.

உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் 25 ஆண்டுகளுக்கு முன் திருமணத்தில் கலந்து கொண்ட வயதானவர் அன்று ஏளனமாய் சிரித்ததுபோல் சட்டத் துறையிலுள்ளவர்களுக்கும் பைத்தியம் பிடித்து விட்டது போலிருக்கிறதே என்றார். நான் என்ன ஒரு சுண்டைக் காய்தான்.

சார்லஸ் டார்வின் -_ மென்டல் - தற்போது பால்நர்ஸ் என்ப வர்கள் படாத அவமானமா நான் அடைந்து விட்டேன்? ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். சமயக் கருத்துக்கு மாறுபட்டா சொன்னேன். பிழைக்கத் தெரிந்த பார்ப்பனர்கள்தான் கெட்டிக்காரர்கள்.

தமிழர்கள் எப்போ துமே மற்றவர்களுக்கு அடிமையா யிருந்து, கசையடி பெற்றுப் பழகிப் போனவர்கள். மரபணுவின் செய்வது தந்தை பெரியாரைவிட பாடுபட்டவர் கள் யாருமில்லை. அவரையே தூக்கி எறிந்து பேசுகிறார்கள் மருத்துவர்கள்.

இன்னும் எவ்வளவோ இருக்கிறது சொல்ல நேரமும் இடமும்தான் இல்லை. முயற்சி திருவினையாக்கும் என்று காலத்தைத் தள்ளிக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

Read more: http://viduthalai.in/page-1/94891.html#ixzz3Pk2hwL2G

தமிழ் ஓவியா said...

திராவிடர் திருநாள் ஏற்படுத்திய திருப்பம்

சென்னை லயோலா கல்லூரியில் சமூகவியல் இரண்டாம் ஆண்டு மாணவர் கி.விக்னேஷ், சிவகங்கை மாவட்டம் தேவரம்பூர் கிராமத்தைச் சார்ந்தவர். இவர் அகில இந்திய தேசிய மாணவர் படையில் சேர்ந்து முகாம்களில் பல பயிற் சிகளைப் பெற்றுள் ளவர்.

தமிழகம் முழுவதும் ஏழு முகாம்கள் நடை பெற்ற ஆறு பயிற்சிப் பிரிவுகளில் பயிற்சி பெற்றவர். காலாட்படை ஓட்டம் (Thalsanik), சுடுதல் பயிற்சி (Firing), சுத்தம் மற்றும் சுகாதாரம் (Health & Higene), நில யுக்தி (Field Craft), போர் யுக்தி(Battle Craft), முகாம் அமைத்தல் (Tent Fixing) உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றுள்ளவர்.

தமிழகத்திலிருந்து தேசிய அளவி லான டில்லியில் நடைபெற்ற முகா முக்கு தேர்வு செய்யப்பட்டவர்.
அகில இந்திய அளவில் டில்லி யில் தல்சானிக் முகாம் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற ஏழு முகாம் களிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர் கி.விக்னேஷ்.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் திருநாள் விழாக்கொண்டாட்டங்களில் பங்கேற்று பெரிதும் உற்சாகம் அடைந்துள்ளார். அவர் கூறும்போது, "என் தலைமுறையில் உள்ள மக்களுக்கு மதம், ஜாதி போன்றவைகளிலி ருந்து விடுபட பகுத்தறி வுடன் அடக்குமுறை, ஒடுக்குமுறைகளுக்கு எதிராக செயல்படும் நோக்கோடு நான் இப்பயிற்சியை மேற் கொண்டு, இப்போது பயணப்பட்டுக் கொண் டிருக்கிறேன். இது ஒரு நீண்ட பயணம்.

என் சார்ந்த பகுதி, கலாச்சாரம் சார்ந்த மக்களுக்கு பகுத்தறிவு குறைவாக உள்ள மக்களிடம் சென்று பெரியார் அளித்த சுயசிந்தனை, விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். என்னை ஆட்கொண்டிருக்கும் தந்தை பெரியாரின் பணியைத் தொடருவேன்" என்று உறுதிபடக் கூறினார்.

இவரைப் போன்று ஏராள மான இளைஞர்கள், மாணவ _ மாண வியர்கள் பெரியார் திடலில் மூன்று நாள்கள் (ஜன.16,17,18) நடைபெற்ற திராவிடர் திருநாள் கொண்டாட்டத் தில் கலந்து கொண்டு இத போன்ற உணர்வினை பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-1/94896.html#ixzz3Pk39UtLB

தமிழ் ஓவியா said...

திருவள்ளுவர் நாள் ஊர்வலம் துவக்கி வைக்க கருநாடக முதல்வர் சித்தராமையா ஒப்புதல்பெங்களூரு, ஜன.23- பெங்களூருவில், திருவள் ளுவர் நாள் ஊர்வலத்தை, கர்நாடக முதல்வர் சித்த ராமையா துவக்கி வைக்க உள்ளார்.பெங்களூரு தமிழ் சங்கமும், பெங்களூ ருவிலுள்ள அனைத்து தமிழ், தமிழர் அமைப் புகள் இணைந்து, ஆண்டு தோறும் திருவள்ளுவர் தின ஊர்வலம் நடத்தப் படுகிறது. இந்தாண்டு, பிப்., 1ஆம் தேதி காலை, திருவள்ளுவர் தின ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, வரும் பிப்., 1ஆம் தேதி, நடக்கும் திரு வள்ளுவர் தின ஊர்வ லத்தை துவக்கி வைக்க, முதல்வர் ஒப்புதல் தெரி வித்து உள்ளார். அனைத்து தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பெரும் எண்ணிக்கையில் மக்களை திரட்டி, ஊர்வலத்தை சிறப்பாக நடத்த உள்ளன.

தமிழ் ஓவியா said...

தொல்லை

வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப் படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

Read more: http://viduthalai.in/page1/94790.html#ixzz3Pk4Tlg5T

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவின் கொள்கை

பகுத்தறிவு வாரப் பத்திரிகையின் முதல் மலர் 26.9.1934 ஞாயிறு வெளியாகின்றது என்றாலும், அதன் கொள்கை களைப் பற்றி குடிஅரசு ரிவோல்ட் பகுத்தறிவு (தினசரி) ஆகிய பத்திரிகைகளின் அபிமானிகளுக்கும் வாசகர் களுக்கும் எடுத்துக் கூற வேண்டியதில்லை.

சுருக்கமாக ஒரு வாக்கியத்தில் சொல்லித் தீர வேண்டுமானால் பகுத்தறிவு தோன்றலானது இன்றைய உலக வழக்கில் இருந்து வரும் காரியங்களில் பெரும் பான்மை மக்களால் முதன்மையானதாகவும், இன்றி யமையாதனவாகவும் கருதப்படும்.

எங்கும் நிறைந்த இறைவனை வாழ்த்தவோ, எல்லாம் வல்ல மன்னனை வாழ்த்தவோ, யாதினும் மேம்பட்ட வேதியனை வணங்கவோ, ஏதும் செய்யவல்ல செல்வ வானை வாழிய செப்பவோ கருதி அல்ல வென்பதே யாகும்.

மேலும் மனித சமூகத்தில் மௌட்டியத்தால் ஏற்பட்ட துரபிமானங்களாகிய கடவுள், ஜாதி, மதம், தேசம், நான், என்பன போன்ற அபிமானங்களை அறவே ஒழித்து மனித சமூக ஜீவாபிமானத்தையும், ஒற்றுமையையும் பிரதான மாய்க் கருதி உழைத்து வரும் என்றும் சொல்லுவோம்.

இத்தொண்டாற்றுவதில் பகுத்தறிவு வேதத்திற்கோ, விமலத்திற்கோ, சாத்திரத்திற்கோ, பழக்கத்திற்கோ, பழமைக்கோ, புதுமைக்கோ, அடிமையாகாமல் கொள்வன கொண்டு தள்வன தள்ளி தானே சுதந்திரமாய் தன்னையே நம்பி தனது அறிவையும் ஆற்றலையுமே துணைக் கொண்டு தன்னாலான தொண்டாற்றி வரும்.

முடிவாய் கூறுமிடத்து பகுத்தறிவு மனித ஜீவாபி மானத்துக்கு மக்களை நடத்திச் செல்லுமே ஒழிய எக் காரணம் கொண்டும் மக்கள் பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வில் உயிர் வாழாது என்பதேயாகும்.

-தந்தை பெரியார்
பகுத்தறிவு 26.8.1934

Read more: http://viduthalai.in/page1/94822.html#ixzz3Pk5nMAUQ

தமிழ் ஓவியா said...

கடவுள் செய்த துரோகம்


ஒரு திருடனைப் பற்றியும் அவன் செய்த வித்தியாசமான திருட்டைப் பற்றியும் ஒரு ருசிகரமான கேஸ் குஜராத்தைச் சேர்ந்த போலீஸ் கையில் சிக்கியிருக்கிறது. சூரத் நகரிலிருக்கும் ப்ரோ இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி என்ற ஒரு நிறுவனத்தின் முத்திரையிடப்பட்ட 20 லட்சம் ரூபாய் செக் ஒன்று காணாமல் போய் விட்டது; அல்லது திருட்டுப் போய் விட்டது.

அதையடுத்து வங்கியிலிருந்து பணத்தை எடுப்பதற் காகத் தேவையான ஒரு போலி முத்திரை அல்லது சீல் தயாரிக்கப்பட்டு திருட்டுக் கையெழுத்துடன் ரூ.20 லட்சம் பணமும் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது.

இந்தக் கைங்கரியத்தைச் செய்த ஆசாமி அதே வங்கியின் ஊழியரான ராஜேஷ் குல்மி என்பவர்தான். அவர் ராஜஸ்தானிலிருந்து வேலை தேடி சூரத்துக்கு வந்தவர். பொய்ச் செக்கு எழுதி 20 லட்சம் ரூபாயைக் கையி லெடுத்துக் கொண்டு, இவர் நேரே ராஜஸ்தானிலிருக்கும் தன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார். இந்த நிகழ்ச்சி எத்தனையோ முறை மென்று துப்பிய நிகழ்ச்சி என்று தோன்றத்தான் செய்யும் நமக்கு! ஆனால் இதற்குப் பிறகுதான் இருக்கிறது டுவிஸ்ட்!

20 லட்சம் ரூபாயைக் களவாடிச் சென்ற ராஜேஷுக்கு தான் எங்கே யாவது போலீசில் மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் இருக்கத்தானிருந்தது. எனவே அவர்தன் பாதுகாப்பிற்காக, தன் ஊருக்கு எல்லையிலிருந்த ஒரு பிரசித்தி பெற்ற கோவிலுக்குச் சென்று, 2 லட்சம் ரூபாய் நோட்டுகளை அங்கேயிருந்த உண்டியலில் போட்டு, கடவுளே! ப்ளீஸ்! என்னை எப்படியாவது காப்பாத்த வேணும்! என்று பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டார்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் அவர் கடவுளுக்குப் ப்ரொட்டெக்ஷன் மனி அதாவது பாதுகாப்பு ஊதியம் கொடுத்து விட்டார். இப்படிக் கடவுளுக்கே லஞ்சம் கொடுப்பதில் அவருக்குத் துளியேனும் மனசாட்சி உறுத்தவில்லை. வெட்கமும் தோன்ற வில்லை.

இந்தக் கேசின் விவரத்தைக் கேட்ட ஒரு மூத்த க்ரைம் ரிப்போர்ட்டர் அல்லது பத்திரிகை நிருபர் ஒருவர். தமாஷாக ஒரு கமெண்ட் அடித்தார். 2 லட்சம் ரூபாயைக் கடவுளுக்குக் கொடுத்ததற்குப் பதிலாக போலீசுக்குக் கொடுத்திருந்தால் கேஸே இல்லாமல் போயிருக்கும்! சரியான முட்டாள் ஆசாமி! என்று அவர் திருவாய் மலர்ந்தருளினார்.

இந்தக் கேசின் முடிவு என்னவென்றால் போலீஸ் ராஜேஷைக் கைது செய்து அவரிடம் மிச்சமிருந்த 18 லட்சம் ரூபாயைக் கைப்பற்றியது. கோவில் உண்டிப் பெட்டியிலிருக்கும் பாக்கி 2 லட்சம் ரூபாயையும் மீட்கும் முயற்சியில் அது இறங்கியுள்ளது. ஏனெனில், உண்டியலில் போடப்பட்ட அந்தப் பணம், போலீசைப் பொறுத்த வரைக்கும் திருட்டுச் சொத்து அல்லவா?

ராஜேஷ் இப்போது சிறையில் கையைப் பிசைந்த வண்ணம் உட்கார்ந்திருக்கிறார். பாவம்! கடவுள் அவருக்குத் துரோகம் செய்து விட்டார்.

குறிப்பு: கடவுள் பக்தி உள்ளவன் ஒழுக்கம் எந்தத் தரத்தில் உள்ளது பார்த்தீர்களா! பாக்யா டிச.30.2011 - ஜன 5 - 201

Read more: http://viduthalai.in/page1/94823.html#ixzz3Pk5waeuF

தமிழ் ஓவியா said...

நாத்திகர்களே தேவை!


இந்துக்கள் தங்களுடைய மதமே சிறந்தது எனக் கருதுகிறார்கள். முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் தர்மமே மேலானது என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் நாம் எந்த மதத்தைத் தழுவுவது என்று அக்பர் ஒருமுறை கேட்டதாக கிறிஸ்துவப் பாதிரிகள் சொல்லுகிறார்கள். அக்பருடைய கேள்வி நியாமானது. ஆனால், அது கிறிஸ்துவ பாதிரிகளுக்கு பிடிக்கவில்லை.

தங்கள் குறிப்பேட்டில்,

எல்லா நாஸ்திகர்களுக்கும் உரிய பொதுவான குற்றம் அக்பரிடத்தும் காணப்படுகிறது. நாஸ்திகர் தங்கள் படித்தறிவை மத நம்பிக்கைகளுக்கு கீழ்ப்படுத்த மறுக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஒரு நாஸ்திகனுக்குரிய லட்சணம் இதுவாயின் இத்தகைய நாஸ்திகர்களின் தொகை பெருகுவதால் நாட்டுக்கு நன்மையே தவிர வேறில்லை.

-ஜவகர்லால்நேரு
உலக சரித்திரம், பக்கம் 157

Read more: http://viduthalai.in/page1/94825.html#ixzz3Pk67GuZz

தமிழ் ஓவியா said...

மனித குலத்துக்கு அடிமைக் கயிறு!

கடவுள் கருத்து எப்பொழுதும் சமுதாய உணர்வுகளை உறங்க வைத்திருக்கிறது; மழுங்கடித்திருக் கிறது. உயிருள்ளவற்றிற்குப் பதிலாக அந்த இடத்தில் இறந்ததை வைக் கின்றது அது எப்பொழுதும் அடிமைத்தனத்தின் கருத்தாகவே - மிகவும் படுமோசமான அடிமைத் தனத்தின் கருத்தாகவே இருந்திருக் கின்றது. கடவுள் கருத்து எந்தக் காலத்திலும் தனி நபரைச் சமுதாயத்துடன் இணைத்ததில்லை;

அது எப்பொழுதும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைத்தான் ஒடுக்குபவர்களின் தெய்வத்தன்மைக் கற்பனையில் - கடவுள் நம்பிக்கை என்னும் கயிற்றால் கைகளையும், கால்களையும் கட்டிப்போட்டிருக்கின்றது.

மதம் என்னும் நுகத்தடி மனித குலத்தை அழுத்திக் கொண்டிருப்பது; சமுதாயத்துக்குள்ளேயே உள்ள பொரு ளாதார நுகத்தடியின் பிரதிபலிப்பு - அதன் விளைவுதான் என்பதை மறப்பது குறுகிய பூர்ஷவா புத்தியாகும். - லெனின்

Read more: http://viduthalai.in/page1/94825.html#ixzz3Pk6FiOBA

தமிழ் ஓவியா said...

காஷ்மீர் தலைமை நீதிபதி

ஜஸ்டீஸ் பால்வசந்தகுமாரை பாராட்டுகிறோம்

சென்னை உயர்நீதி மன்ற மூத்த நீதிபதியான ஜஸ்டீஸ் திரு. பால்வசந்த குமார் அவர்கள் ஜம்மு - காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் பெற்று, வரும் 2.2.2015 அன்று காஷ்மீர் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கிறார் என்பது அனைத்துத் தரப்பினரும் மகிழ்ந்து, வரவேற்கும் ஒரு நல்ல செய்தியாகும்.

தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டத் தில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த இவர், தனது அறிவு, ஆற்றல், நுண்ணறிவு, மனிதநேயம், சமூக நீதிப் பார்வைகளால், பல்வேறு விரைந்த தீர்ப்புகள்மூலம் தனக்கென்று ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் ஆவார்!

தகுதி திறமை என்பது உழைக்கும் எவர்க்கும், நேர்மையாளர்களுக்குக் கிட்ட வேண்டிய பரிசு என்பதை நிரூபித்துள்ளார்.

மற்ற சக அமர்வில் உள்ளவர்களின் பைசலை (Disposal) விட மிகவும் விரைந்து அதிகமாக வழக்குகளை முடித்து சாதனை சரித்திரம் படைத்த இவருக்கு நமது வாழ்த்துகள் - பாராட்டுகள்!

இவர் உச்சநீதிமன்றம் போன்ற அமைப்புகளிலும் இடம் பெற்று, நீதித் துறைக்குப் பெருமை சேர்ப்பார் என்று நம்புகிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


சென்னை
24-1-2015

Read more: http://viduthalai.in/e-paper/94886.html#ixzz3Pk7mGDFU

தமிழ் ஓவியா said...

அரசுப் பேருந்தில் ஹிந்துமத மாநாட்டு விளம்பரமா?


அரசு நிர்வாகம் சாதி,மத பேதங்களுக்கு அப் பாற்பட்டு இருக்க வேண்டும். அரசுநிர்வாகத்தில் மதத்தையோ, சாதியையோ இணைக்கக் கூடாது என்பது விதிமுறை. ஆனால் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகத்தின் உடுமலை பணிமனைக்குட்பட்ட அரசு பேருந்தில் ஒரு மதத்தின் மாநாடு குறித்த விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.அந்த விளம்பரத் திற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசு நிர்வாகம் அதனை அனுமதித்திருக்கிறது. ஏற்கெனவே தலைவர் களின் பெயரில் ஓடிய பேருந்துகளில் கூட சாதிய அடையாளம் காணப்பட்டு பிரச்சினை உருவானது.

அது தமிழகத்தின் சட்டஒழுங்கு பிரச்சினையான பின்பு, அனைத்துக் கட்சிகளின் முடிவிற்கேற்ப, அனைத்து அரசுபோக்குவரத்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற ஒரே பெயரில் இயக்கப்படுகிறது. ஆனால் தற்போது புதியதாக மதத்தின் பெயரால் இன்னொரு சட்ட ஒழுங்கு பிரச்சினையை உருவாக்க உடுமலை அரசு போக்குவரத்து பணிமனை வழி காட்டுகிறதோ ? என்ற அய்யம் உடுமலை பகுதி மக்களிடம் எழுந் திருக்கிறது. அரசு போக்குவரத்து கழக தலைமை நிர்வாகம் இதனை கவனிக்கின்றதா?

Read more: http://viduthalai.in/e-paper/94885.html#ixzz3Pk808l2I

தமிழ் ஓவியா said...

கவனிக்கவேண்டும்


மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துகளும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா, நீங்காதா என்பதைத்தான் கவனிக்க வேண்டும். - (விடுதலை,3.12.1962)

Read more: http://viduthalai.in/page-2/94869.html#ixzz3Pk8OQHoN

தமிழ் ஓவியா said...

உயிருக்கு குறி வைக்கும் இரசாயன ஆலைகள்


ஆலைகள் அவசியம் தான்; அவற்றின்மூலம் உற்பத்திகள் பெருகுகின்றன, பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது, வேலை வாய்ப்பும் விரிவடைகிறது. அதே நேரத்தில் அவை சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதற்கு இடம் தரக் கூடாது அல்லவா?

விதி முறைகள் ஏராளம்இருந்தும், அவை கடைப் பிடிக்கப்படுவதில்லை என்பதுதான் வேதனையான செய்தியாகும்.

ஆலை முதலாளிகளின் கவனிப்பில் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாற்று இன்னொரு பக்கத்தில்; எது எப்படி இருந்தாலும் இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பொது மக்கள்தான்.

இந்த ஆலைக் கழிவுகள் பெரும்பாலும் நதிகளில் கலந்து விடுகின்றன; இதனால் பாதிக்கப்படுவது சுற்றுச் சூழலும், பொது மக்களும் கால் நடைகளும் தான்.

நீதிமன்றங்கள் பற்பல நேரங்களில் கடுமையான தீர்ப்புகள், ஆணைகள் வழங்கிக் கொண்டு தானிருக் கின்றன! ஆனால் அவற்றையும் கண்டு கொள்வ தில்லை; சட்ட ஆட்சி எந்தத் தரத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறது என்பதற்கு இவை எல்லாம் கண்ணிறைந்த சாட்சியங்களாகும்.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் அருகே தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் (DCW)என்ற அமில ஆலை ஒன்று செயல்பட்டு வருகின்றது.

இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் காஸ்டிக் சோடா, பி.வி.சி., சி.பி.வி.சி. போன்றவை; இவற்றின் மூலப் பொருள் பாதரசம் ஆகும்.

எந்த விதிமுறைகளையும், கட்டுத் திட்டங்களையும் பற்றிக் கவலைப்படாமல் இந்த ஆலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டும் வருகிறது.

இந்த ஆலைகளில் தேக்கி வைக்கப்படும் டிரை குளோரோ எதிலின், அயன் ஆக்சைடு, காட்மியம் போன்ற ஆபத்தான செந்நிறம் கொண்ட ரசாயன கழிவுகள் ஆலைக்கு அருகில் உள்ள காயல்பட்டணம் கடலில் கலக்க விடப்படுகின்றன.

இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள், குறிப்பாக மீன் வளம் மிகக் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகி வருகிறது.

காயல் பட்டணம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் கொடிய நோய்களுக்கும் ஆளாகின்றனர். சுவாசக் கோளாறுகள், புற்று நோய் போன்ற நோய்களின் தாக்குதலுக்கு இரையாகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு மனு கொடுத்து, மனு கொடுத்து ஓய்ந்தும் போய் விட்டனர். பல்வேறு அமைப்புகள் முற்றுகைப் போராட்டங் களைக்கூட நடத்திப் பார்த்து விட்டனர். கடையடைப் புகள் எல்லாம் நடந்தும் இருக்கின்றன - அரசோ அசையவில்லை.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்த ஆலைக்குத் தேவையான தண்ணீரைத் தாமிரபரணியிலிருந்து பெற்றுக் கொள்ள தமிழ்நாடு அரசிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 3 லட்சம் கேலன் தண்ணீர் பயன்படுத் தப்படுகிறது. அதற்கான கெடு முடிந்தும்கூட தாமிரபரணி தண்ணீரை அந்த ஆலை சட்ட விரோத மாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாம்.

நாட்டின் போக்கு எப்படி இருக்கிறது? மக்களின் உயிர் என்பதுதான் இந்த நாட்டில் மிகவும் மலிவான பொருள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்!

எடுத்துக்காட்டுக்கு இதனைக் குறிப்பிடுகிறோம். பெரும்பாலான ஆலைகளில் கழிவுகள் நீரில் கலக்கப் படுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கடுமையானசட்ட திட்டங்களும், செயல்பாடுகளும் கண்காணிப்புகளும் மிக மிக தேவை என்று வலியுறுத்துகிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/94870.html#ixzz3Pk8Yoeiz

தமிழ் ஓவியா said...

இந்துமதப் போர்வைக்குள் பார்ப்பனிய பாம்புகள்!...

நடந்து முடிந்த திமுக பொதுக்குழுவில் அதன் பொதுச்செயலாளர், இனமானக் காவலர் பேராசிரியர் அவர்கள், பெரும் பான்மை மக்களின் ஆதர்ஷபுருஷனாகக் கருதப்படும் ராமனை ஏடா கூடமாக விமர்சித்து விட்டார் என கோபக்கனலை அள்ளி வீசி இருக்கிறது ஒரு பார்ப்பன ஏடு.

இது அந்த ஏட்டின் குரலல்ல; பார்ப் பனியத்தின் பாசீசக்குரல்! ராமனுக்குப் பிறந்தவர்கள்தான் இந்துக்கள், ஏனையோர் முறை தவறிப் பிறந்தவர்கள் என வாய்க் கொழுப்போடு பேசிய பா.ஜ.க. எம்.பியைக் கண்டிப்பதற்கு யோக்கியதை இல்லாத அந்த ஏடு, ராமன் என்ன ஜல்லிக்கட்டு காளையா? எனப் பேராசிரியர் பேசியதை மட்டும் ஆவேசத்தோடு கண்டித்திருப் பதைப் பார்க்கும்போது அய்யாவின் பேச்சுதான் நினைவுக்கு வருகிறது.

ஆரியரும், திராவிடரும் ஒற்றுமையாக இருக்க முடியாதா? என அய்யாவைக் கேட்டதற்கு அவர் சொன்னார்.

நெசவாளியும், குரங்கும் ஒற்றுமையாக இருக்க முடியுமா? நெசவாளி நெய்து கொண்டே இருப்பான்; குரங்கு இழைகளை அறுத்துக்கொண்டே இருக்கும். எப்படி ஒற்றுமை ஏற்பட முடியும்? என அன் றைக்கே அய்யா அவர்கள் ஆணித்தர மாகக் கூறினார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை என்பதைத்தான் இன்றைய அந்த பார்ப்பனிய ஏடு விளக்கி இருக்கிறது!...

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ் சாது என்பதை அந்தப் பார்ப்பனிய ஏடு புரிந்து கொண்டால் சரி!... பார்ப்பனியக் கோட்டை அய்யாவின் பகுத்தறிவு ஏவு கணைத் தாக்குதல்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சரிந்துவரும் வேதனையைத் தாங்கிக்கொள்ள வழியின்றித் தனது வயிற்றெரிச்சலை வார்த்தைகளாகக் கொட்டித் தீர்த்திருக்கிறது.

இளமையிலேயே வசிஷ்டருக்குத் தாதாவேலை செய்தவனை சொந்தமாகச் சிந்திக்கத் திறனற்று எவனோ சொன்னான் என்பதற்காக தனது சொந்த துணைவியின் மீதே சந்தேகப்பட்டு கர்ப்பிணி என்று கூடப் பாராமல் காட்டுக்குத் துரத்திய காருண்ய சீலனை! கடவுளின் அவதாரம் எனச் சொல்லிக் கொண்டு மானுக்கும், மாயமானுக்கும் வேறுபாடு தெரியாமல் இருந்த ஒரு கருத்துக்குருடனை, புராணம் என்றும் இதிகாசம் என்றும், வேதம் என்றும், பாமர மக்களை ஏமாற்றி இன்ன மும் அவர்களைச் சுரண்டிப்பிழைக்க நினைக்கும் ஒரு எத்தர் கூட்டம் இப்படி ஆணவத்தோடு பேசுகிறதென்றால் என்ன பொருள்? அதன் ஆதிக்கக்கோட்டை கலகலத்துப்போய்விட்டது என்பது தானே பொருள்! அய்யா ஆசிரியர் அவர்களின் தொண்டறம் வீண் போகவில்லை என்பதுதானே அர்த்தம்!

தமிழினத் தலைவர் கலைஞர் அவர் களையும், இனமானப் பேராசிரியர் அவர் களையும் குறிவைத்து பார்ப்பனியம் பாய் வதற்குக்காரணம் இப்போது மக்களுக்குப் புரிந்திருக்கும்!

சாம, பேத, தான, தண்டம் என்ற முனைமழுங்கிப்போன பார்ப்பனிய அஸ்திரத்தை மீண்டும் தமிழர்கள் மீது ஏவி அவர்களை அழித்து விடலாமென பகற்கனவு காணுகிறது பார்ப்பனியம். இந்து மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு ஏமாந்த தமிழர்களை தனது நச்சுப்பற்களால் கொத்தி மகிழத்துடிக்கிறது பார்ப்பனியம்!... அது பெரியார் பூமியிலே ஒரு காலும் நடவாது! நடக்க விடாது திராவிடர் கழகம்!!...

முள்மீது இலை மோதினாலும், இலை மீது முள் மோதினாலும் கிழிபடப்போவது இலை தானே தவிர முள் அல்ல என்பதை இனியேனும் பார்ப்பனியம் புரிந்து கொண் டால் சரி!...

- நெய்வேலி க.தியாகராசன், கொர நாட்டுக்கருப்பூர்

Read more: http://viduthalai.in/page-2/94873.html#ixzz3PkA5dsDj

தமிழ் ஓவியா said...

யோகியின் ஆசை


ஹடயோகி என்று புகழப்பட்டவரும், கடைசியில் இரங்கூனில் விஷமுண்டு இறந்தவருமான, நரசிம்ம சுவாமி என்பவர், இறந்த விதத்தைப் பற்றியும், அவருடைய கடைசி, ஆசையைப் பற்றியும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

அவர் இறக்குந்தறுவாயில் கடைசி ஆசையாக, தன்னுடைய உடம்பை 24 மணி நேரம் சும்மா வைத்திருக்க வேண்டுமென்றும், தன்னுடைய உடம்பைப் புதைத்த இடத்தில் புத்தர் கோயில் ஒன்று கட்ட வேண்டுமென்றும் கூறினாராம். அதற்கிணங்கி அவரை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு சென்று புதைத்தார்களாம்.

இனி, அவருடைய சகோதரர் வந்து பணவசூல் செய்து இறந்து போன ஹடயோகியின் அவாவைப் பூர்த்தி செய்யப் போகின் றாராம். யோகிகளின் ஏமாற்றுந் தன்மைக்கும், இந்துக்களின் மூடத்தன்மைக்கும் இதைவிட வேறு உதாரணம் வேண்டு வதில்லையென்றே நாம் அபிப்பிராயப்படுகின்றோம்.

ஜால வேடிக்கை போல ஏதோ சாதுரியத்தினால் விஷந்தின்று மாண்ட ஒரு மனித ருக்குக் கோயில் எதற்காக என்று கேட்கின்றோம். உண்மையிலேயே இவர் சுயநலங் கருதாத - உலக நன்மையை விரும்புகின்ற ஒரு யோகியா யிருந்தால் ஏன் தன்னுடைய புதை குழியின் மேல் ஒரு கோயில் கட்ட வேண்டுமென்று ஆசைப்பட வேண்டும்? பிற்காலத்தில் தன்னை ஒரு மகானென்று நினைத்துக் கொண்டு மூட மக்கள் தன்னுடைய புகழைப் பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்னும் பேராசை யேயன்றோ?

நம்முடைய மக்களும் மதவேஷம் போட்டவர்களையும் ஜாலவேடிக்கைக்காரர் களையும், மகான்களென்றும், யோகிகளென்றும், மகாத்மாக்களென்றும் நம்பியே மோசம் போய்க்கொண்டே வருகின்றார்கள். நமது மக்களின் இத்தகைய மூடத்தனத்தினால் தான் இன்று நமது நாட்டில் எண்ணற்ற கோயில்களும் சமாதிகளும் ஏற்பட்டுள்ளன.

இந்தக் கோயில்களுக்கும் புதை குழிகளுக்கும் நமது மக்கள் அழுகின்ற பொருளுக்கு அளவேயில்லை, இந்நிலையில் இப்படி ஒரு புதுக்கோயில் கட்டவும் முயற்சி செய்ய வேண்டுமா? ஆகவே பர்மாவில் உள்ள இந்தியர்கள் இந்தப் பயனற்ற காரியத்திற்காக ஏழை மக்களிடம் பொருளைச் சேகரித்து புதை குழியின் மேல் கோயில் கட்டி அதன் மூலம் மக்களுக்கு மூடத்தனத்தை வளர்க்க வேண்டாம் என எச்சரிக்கின்றோம்.

குடிஅரசு - கட்டுரை - 10.04.1932

Read more: http://viduthalai.in/page-6/94906.html#ixzz3PkB1OIqe

தமிழ் ஓவியா said...

உப்புக்கும், ரத்த அழுத்தத்துக்கும் காரணம் கண்டுபிடிப்பு: ஆய்வுத் தகவல்

டொரன்டோ, ஜன.25_ உணவில் அதிக மாக உப்பு சேர்த்தால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் உப்புக்கும், ரத்த அழுத்தத்துக்கும் அப்படி என்ன தொடர்பு என்பது இதுவரை விஞ் ஞானிகளுக்குக்கூட தெரியாத புதிராக இருந்து வந்தது. இந்த நிலையில், கனடாவைச் சேர்ந்த மெக்கில் பல்கலைக்கழகப் பேராசிரியர் சார்லஸ் போர்க் தலைமையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் இந்த முடிச்சு அவிழ்க்கப் பட்டுள்ளது.

அதாவது, அளவுக்கு அதிகமாக உடலில் சேரும் உப்பு, மூளையின் செயல் பாட்டில் ஏற்படுத்தும் குறிப்பிட்ட மாற்றமே, ரத்த அழுத்தம் அதிகரிக்கக் காரணம் என எலிகளைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட ஆய்ந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சார்லஸ் போர்க் கூறியதாவது:

உணவில் அதிக உப்பு சேர்க்கப்படும்போது, "வாஸாபிரெஸ்ஸின்' எனப் படும் ஹார்மோன் களை வெளிப்படுத்தும் நரம் பணுக்களில் அது வேதி யியல் மாற்றத்தை ஏற்படுத் துகிறது.

இந்த வேதியியல் மாற்றம் காரணமாக, மூளையில் இயற்கையாக அமைந்துள்ள ரத்த அழுத்தத்தைக் கண் காணிக்கும் அமைப்பால், "வாஸாபிரெஸ்ஸின்' ஹார் மோன்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது.

"வாஸாபிரெஸ்ஸின்' ஹார்மோன்கள்தான் ரத்த அழுத்தத்தையும், உடலின் நீர் அளவையும் அதிகரிக்கச் செய்கின்றன.

இந்த ஹார்மோன்கள் மிக அதிக அளவில் உற் பத்தியாவதன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக் கிறது என்றார் அவர்.

இந்தக் கண்டுபிடிப்பால் உப்புக்கும், ரத்த அழுத்தத் துக்கும் உள்ள தொடர்பு கண்டறியப்பட்டாலும், இந்தப் பிரச்சினைக்கு மருத் துவத் தீர்வு காண்பதற்கான சிகிச்சை முறைகளை உருவாக்க, இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட வேண்டி யிருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்த னர்.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "நியூரான்' அறிவியல் இதழில் இந்த ஆய்வின் விவரம் வெளி யிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

எது உண்மையான இராமாயணம்?

இராமாயணம் என் றால் ஒன்றிரண்டு அல்ல; எண்ண முடியாத அள வுக்கு இராமாயணம் பல மொழிகளில் உண்டாம்.

உண்மை என்றால் ஒன்றாகத் தானே இருக்க வேண்டும். இத்தனை இராமாயணங்களில் எது உண்மை என்று ஏற்றுக் கொள்வது? வங்காள இராமாயணத்தில் இரா வணனின் மகள் சீதை! எப்படி இருக்கிறது?

Read more: http://viduthalai.in/e-paper/94980.html#ixzz3Pvh8Ub73

தமிழ் ஓவியா said...

விருதுகள் பார்ப்பனரின் ஏகபோகமா?


ஜனவரி 26 - இந்தியக் குடிஅரசு நாளை யொட்டி, இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறுவர் பத்மபூஷன், பத்மஸ்ரீ முதலிய விருதுகளுக் குரியவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள்

1) என்.கோபால்சாமி (அய்யங்கார்) ஓய்வு
2) சுதா இரகுநாதன்
3) எம்.ஆர். சீனுவாசன்
4) பி.வி. இராஜராமன் (அய்.ஏ.எஸ்.) ஓய்வு

அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் தேடித் தேடிப் பார்த்தாலும் தமிழ்நாட்டிலிருந்து பெரிதும் பூணூல் திருமேனிகளே தகுதி பெற்றவர்களாக உள்ளார்கள்;
தடவித் தடவிப் பார்த்தால் ஒன்று வெறும் முதுகு கிடைக்குமோ என்ன?

யாருக்கு வந்த சுதந்திரம் இது?

புரிகிறதா?

Read more: http://viduthalai.in/e-paper/94984.html#ixzz3PvhFequ3

தமிழ் ஓவியா said...

காந்தியாரைக் கொன்ற கோட்சேவுக்கு கோயில் கட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இடத்துக்கு சீல் வைப்பு

உ.பி. அரசின் பாராட்டத்தக்க நடவடிக்கை

லக்னோ, ஜன.26 உத்தரப்பிரதேசம் மாநி லம், மீரட் நகரில் இந்து மதவெறியன் கோட் சேவுக்கு கோயில் கட்டுவ தாக அறிவிக்கப்பட்ட இடத்துக்கு உ.பி. அரசின் மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

அனைத்து தரப்பு மக்களாலும், மகாத்மா என ஏற்றுக் கொள்ளப் பட்டவர் காந்தியார். அவரை பிர்லா பிரார்த் தனை மய்யத்தில் 30.1.1948 அன்று இந்து மதவெறி யன் நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். காந்தி கொலை வழக்கில் அவனுக்காக வாதாட எவரும் முன்வரவில்லை. அந்த கொலை வழக்கில் கோட்சேக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்தான். காந்தியாரை கொன்ற வனையே 18 ஆண்டு களுக்குபின் விடுதலை செய்தனர்.

அவனிடம் காந்தியை ஏன் கொலை செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, அவர் இந்து மதத்துக்கு துரோ கம் செய்தார். இஸ்லாமி யர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். அதனால் காந்தியாரை சுட்டுக் கொன்றேன் என்றான். அப்படிப்பட்ட இந்து மதவெறி பிடித்த நாதுராம் கோட்சேவுக்கு மீரட் மாவட்டம் பிரம்ம புரி பகுதியில் வரும் ஜன வரி மாதம் சிலை வைக்கப் படும். அந்த சிலை வைக்கப்படும் இடத்தில் கோயில் ஒன்றும் கட்டப் படும் என மதவெறியை தூண்டும் வகையில் அகில இந்திய இந்து மகா சபாவின் தேசியப் பொதுச் செயலாளரான ஆச் சார்யா மதன் கடந்த டிசம்பர் மாதம் அறிவித் திருந்தார்.

இந்த கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக, விசா ரித்து நடவடிக்கை எடுக் கும்படி மாவட்ட நிர் வாகம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் மற்றவரை அவமதிப்பு செய்வது, வதந்திகளை பரப்புவது போன்ற குற்றவியல் சட்டங்களின்கீழ் ஆச் சார்யா மதன் மீது கிரி மினல் வழக்குப்பதிவு செய் யப்பட்டது.

இந்நிலையில், இவ் விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட மேல் விசாரணையின் விளை வாக கோட்சேவுக்கு சிலை அமைக்க விரும்பிய சர்ச்சைக்குரிய இடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

அந்த இடத்துக்குள் அத்துமீறி நுழைய முயற் சிப்பவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக் கப்படும் என மீரட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/94969.html#ixzz3PvhSGEMk

தமிழ் ஓவியா said...

ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்

உண்மையாக ஜாதிப் பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணா சிரமத் தர்மத்தையும், சூத்திரத் தன்மையையும் ஒழிக்கவேண்டுமானால், எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
(குடிஅரசு, 19.1.1936)

Read more: http://viduthalai.in/e-paper/94967.html#ixzz3PvhdbOru

தமிழ் ஓவியா said...

மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தோழர்கள் உடற்கொடை


திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள், தனது பிரச் சார பயணங்களில் செல்லுமிடமெல்லாம் வலியுறுத்துவது மனிதா பிமான அடிப்படையில் உதவவேண்டும். குருதிக் கொடை, உட லுறுப்பு கொடை, கண் கொடை மற்றும் உடற் கொடை வழங்கவேண் டும்.

அது பொதுமக் களுக்கு பயன்படும். உடற்கொடை அளிப்ப தால், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்குப் பயன்படும். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக தோழர்கள் மாவட்டத் தலைவர் டி.ஏ.ஜி.அசோகன், மாவட்ட செயலாளர் இரா.சக்திவேல், நகர செயலாளர் ச.வேலாயுதம், அவருடைய தாயார் லட்சுமி அம்மாள் சண்முகம், மண்டல மாணவரணி செயலாளர் அ.அர்ஜூனன், மாவட்ட ப.க. தலைவர் என்.சிதம்பரநாதன்,

பெரியார் பெருந்தொண்டர் டி.ஏ.ஜோதி மற்றும் தோழர்கள் தனது உடலை மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கொடை வழங்குவதாக பதிவு செய்து, அதற்கான சான்றிதழ்களையும், பத்திரங்களின் நகலை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர் (காஞ்சிபுரம், 24.1.2015)

Read more: http://viduthalai.in/page-8/95003.html#ixzz3Pvjd5jfE