Search This Blog

21.1.15

பெரியார் மண்ணை காவிகளின் மண்ணாக்க முடியாது-கி.வீரமணி

ஜாதி தீண்டாமையை ஒழிக்கின்ற மகத்தான அணி ஏற்படுத்தப்படும்

மதச்சார்பற்ற -  சமூகநீதியைக் காப்பாற்றுகின்ற - ஜாதி
தீண்டாமையை ஒழிக்கின்ற மகத்தான அணி ஏற்படுத்தப்படும்
தமிழர் தலைவர் உணர்ச்சிபூர்வமான உரை

சென்னை, டிச. 26- இந்துத்துவ மதவெறி பாசிசப் போக்கு களை எதிர்த்தும் வகையில் மதச்சார்பற்ற - சமூக நீதியைக் காப்பாற்றுகின்ற - ஜாதி - தீண்டாமையை ஒழிக்கின்ற மகத்தான அணி ஏற்படுத்தப்படும் என தமிழர் தலைவர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 23.12.2014 அன்று சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள ஆர்.எஸ்.எஸ்.-பாஜக இந்துத்துவ மதவெறி ஃபாசிசப் போக்குகளைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமா வளவன் தலைமையில் நடைபெற்றது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழ் மய்யம் நிறுவனர் ஜெகத் கஸ்பார், தமுமுக மற்றும மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் உஸ்மான் அலி, பேராசிரியர்கள் அருணன், அ.மார்க்ஸ், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாறன், எஸ்டிபிஅய் தெகலான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு உள்பட ஏராள மானவர்கள் பல்வேறு அமைப்புகளிலிருந்தும் ஆர்ப்பாட் டத் தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்கள் பேசும்போது குறிப்பிட்டதாவது:-

மிகுந்த சிறப்போடும், எழுச்சியோடும் நடைபெறக் கூடிய சமூகநீதிக்கு ஏற்பட்டு இருக்கக்கூடிய, சமூக நல்லிணக்கத்துக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அச்சுறுத்தலை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். பாரதீய ஜனதா பாசிசக் கும்பலின் இந்துத்துவ மதவெறி பாசிசப்போக்குகளைக்கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பாக நடைபெறக்கூடிய, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய நமது அன்பு சகோதரர் எப்போதும் கொள்கையிலே இருந்து பின்வாங்காமல் எழுச்சித் தமிழராகவே என்றைக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அருமைச் சகோதரர் மானமிகு தொல்.திருமாவளவன் அவர்களே, முதுபெரும் தலைவராகவும், எளிமையின் சின்னமாகவும் அதே நேரத்தில் கொள்கைக்காக தன்னுடைய வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவருமான அன்பிற்குரிய அய்யா திரு ஆர்.என்.கே என்று அன்போடு அழைக்கப்படக்கூடிய தோழர் நல்லக்கண்ணு அவர்களே, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்களின் சங்கத் துணைத்தலை வரும் சீரிய சிந்தனையாளருமாகிய மானமிகு பேராசிரியர் அருணன் அவர்களே, சிந்தனையாளர் பேராசிரியர் மார்க்ஸ் அவர்களே,  மனித நேய மக்கள் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் உஸ்மான் அலி அவர்களே, பாராட்டுதலுக்கும், பெருமைக்கும் உரிய தமிழ்மய்ய நிறுவனர் ஜெகத் கஸ்பார் அவர்களே, திராவிடர்கழகத்தின் துணைத்தலைவர் அவர்களே, மேடையிலே வீற்றிருக்கக் கூடிய அருமைச் சகோதரர்களே, விடுதலைச்சிறுத்தை களின் தோழர்களே, முதன்மையான செயல்வீரர் வன்னி யரசு அவர்களே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பைச் சேர்ந்த தோழர்களே, தோழியர்களே,


கொடுமைகளை தடுத்து நிறுத்தும் கைகள்

இந்த மேடையிலே உயர்த்தப்பட்ட கைகள் எப்போதும் தாழாது, எப்போதும் ஓயாது. எப்போதும் வீழாது. இந்தக் கைகள் பதவிக்காக உயர்த்தப்படுகிற கைகள் அல்ல. மாறாக கொள்கைக்காக, இலட்சியத்துக்காக, இந்த நாட்டின் மனிதநேயத்துக்காக, நல்லிணக்கத்துக்காக, ஒரு புது உலகத்தை உருவாக்குவதற்காக, அதோடு பாய்ந்து வரக்கூடிய கொடுமைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவதற் காக இந்தக் கைகள் எந்த நேரத்திலும், எந்தக் கருவியை வேண்டுமானாலும் ஏந்தக்கூடிய கைகளாகவும் ஆகும் என்பதுதான் மிக முக்கியம்.

பெரியார் மண்ணை - காவிகளின் மண்ணாக்க முடியாது

தமிழகத்திலே அமைதிப்பூங்காவாக இருக்கிற இந்த இடத்திலே இருந்து கிளம்ப வேண்டும். தமிழகம்தான் இந்தியாவுக்கு வழிகாட்ட வேண்டும். தமிழகத்தையே காவி மண்ணாக, பெரியார் மண்ணாக இருக்கக்கூடிய இந்த மண்ணை, பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களுடைய கொள்கைக்கு இதுதான் தலைசிறந்த விளைநிலம் என்று சொல்லக்கூடிய இந்த மண்ணை, அதுபோலவே புரட்சியாளர்களுக்கெல்லாம் இதுதான் தலைசிறந்த மண் என்று சொல்லக்கூடிய இந்த மண்ணை காவி மண்ணாக்க வேண்டும்  என்ற முயற்சிகள் ஒருபக்கத்திலே தீவிரமாக, பல வடநாட்டுத்தலைவர்களைக் கொண்டுவந்து, இறக்கு மதி செய்து, இங்கே யாராவது கிடைப்பார்களா என்று தேடித்தேடிப்பார்த்து, யார் கிடைப்பார்கள் என்று ஓடிப்பார்த்து அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மத்தியிலே அவர்கள் ஆட்சியிலே அமர்த்தப்பட்டிருக் கிறார்கள். நாம் இங்கிருக்கக்கூடிய அணியினர் அன் றைக்கே எச்சரித்தோம். ஆனாலும் ஏமாந்தார்கள். ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன், புலி வேஷம் போட்டு ஆடுகிறான்; புல் அளவேனும் பொதுமக்களுக்கு மதிப்பேனும் தருகின்றானா? என்று புரட்சிக்கவிஞர் கேட்டார்கள்.

அதுபோலத்தான் ஏமாந்ததுடைய விளைவு 6 மாதத்தில் அவர்களின் மறைமுகத்திட்டங்களை வெளிப்படையாகச் செய்வதற்குத் தயாராக ஆகிவிட்டார்கள்.

இந்த மறைமுகத்திட்டத்தை வெளிப்படையாக செய்வதற்கு அவர்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். மக்கள் எவ்வளவு காலம் இதைப்பொறுத்திருப்பார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும்  எனவேதான், அவர்களுக்குள் ளேயே பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அந்தப்பிரச்சினை களாலேயே நாடாளுமன்றம் பல நேரங்களிலே நடை பெறாத ஒரு சூழல். இந்த நடைபெறாத ஒரு சூழலை ஏற் படுத்தி இருக்கிறார்களே, இது ஜனநாயகத்துக்கு நல்லதா? என்று கூட சிலர் கேட்பார்கள். இதற்கு வழிகாட்டியவர்கள் யார்? இவர்கள்தானே எதிர்க் கட்சியிலே அமர்ந்தபோது இதே வழியைக்காட்டினார்கள். எனவே, இவர்கள் காட்டிய வழியை இவர்களுக்கேத் திருப்பிக் கொடுக்கிறார்கள்.

எதை விதைத்தார்களோ, அதை இன்றைக்கு அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள், இது காலத்தின் கட்டாயம். தவிர்க்க முடியாது. எண்ணிப்பாருங்கள். சொன்னாரே நம்முடைய அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அவர்கள் சொன்னார்கள். சமஸ்கிருதத்தைத் திணித்து, இந்தியைத் திணித்து, பன்மதங்கள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள், பல நாகரிகங்கள் இருக்கிற அத்தனையும் சேர்ந்ததுதான் இந்தியா என்ற இந்த நாடு.

மக்கள் சக்திக்கு முன்னாலே இந்த ஆட்சி தொடர முடியாது

ஆனால், என் மதம் மட்டுமே ஆளவேண்டும். இதுதானே இப்போது உங்கள் கொள்கை? என் மொழி மட்டும்தான் மக்களால் படிக்கப்பட வேண்டும்; என்னு டைய கலாச்சாரத்தைத்தான் நீங்கள் ஏற்க வேண்டும் என்பது தான் உங்களுடைய ஆட்சியினுடைய நடைமுறை என்று சொன்னால், நீங்கள் எவ்வளவு பெரிய மெஜாரிட்டியைப் பெற்றிருந்தாலும் மக்கள் சக்திக்கு முன்னாலே இந்த ஆட்சி தொடர முடியாது. அதைத்தான் இந்த அணி சொல்ல இருக்கிறது. நாங்கள் ஜனநாயகத்தை மதிக்கிறவர்கள். ஜனநாயகத்தின் அடிப்படையிலே நீங்கள் வாக்கு வாங்கி இருக்கிறீர்கள். எந்த வாக்குறுதியை சொன்னீர்களோ, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, இந்த நாட்டிலே மதக்கலவரங்களைத் தூண்டலாம், ஜாதிக்கலவர ங்களைத் தூண்டலாம், பல மொழிகள் இருக்கிற நாட்டில் சமஸ்கிருதத்தையும், இந்தியை மட்டுமேத் திணிக்கலாம், இன்னும் கேட்டால் வலுக்கட்டாயமாக மதமாற்றம் என்பதைச் செய்வதன்மூலமாக ஒரு பெரிய கலவரத்தை உண்டாக்கி சிறுபான்மைச்சமுதாய மக்களை அச்சுறுத்தி, அடக்கி வைக்கவேண்டும் என்று சொல்லக் கூடிய பாசிசப் போக்கு தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும்.

மோடி வித்தைகள் நீண்டகாலம் பயன் தராது

இப்போது அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் பாராளுமன்றத்திலே? ரொம்ப சாமர்த்தியமான பதில். இதுவரையிலே வித்தைகளாலேயே ஆட்சிக்கு வந்தவர் கள். மோடி வித்தை.  மோடி வித்தைமூலமாகவே ஆட்சிக்கு வந்தார்கள். ஆட்சிக்கு வந்த நேரத்திலே வித்தைகள்மூலம்  ஆட்சிக்கு வரக்கூடியவர்களுக்கு சொல்லுகிறோம்.  நீண்ட காலம் வித்தைகள் பலிக்காது. வித்தைகளைப்பொருத்த வரையிலே கொஞ்ச காலத்துக்குத்தான் பார்க்க முடியும். நீண்ட காலத்துக்கு அந்த வித்தைகள் பயன் தராது. வித்தை களால் ஆட்சிக்கு வந்த நீங்கள், இப்போது அந்த வித்தை களாலேயே உங்கள் ஆட்சிக்கு அறைகூவல் ஏற்படக் கூடிய அபாயம் வெளியிலிருந்துகூட உங்களை யார் ஆட்சிக்கு அமர்த்தினார்களோ, அவர்களாலேயே  உரு வாக்கப்படுகிறது. அதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

மிகத் தெளிவாக அவர்களுடைய ஏடுகளே படம் போட் டுக் காட்டுகின்றன. மோடியுடைய கழுத்தை ஆர்.எஸ்.எஸ். பாம்பு சுற்றிக்கொண்டிருப்பதைப்போல தினமணி ஏடு சில நாட்களுக்கு முன்னால் கார்ட்டூன் போட்டிருக்கிறது.

மோடியின் கழுத்தில் ஆர்.எஸ்.எஸ். பாம்பு!

அவர்களே ஆர்.எஸ்.எஸ். உயர்ந்த தத்துவம் என்று எழுதக்கூடியவர்கள் பாம்பாக அதைக்காட்டியிருக்கிறார் கள். அதற்காக இப்போதாவது உங்களுக்கு புத்தி வந்ததா? பாம்பைக் கண்டிருக்கிறீர்களே, விஷப் பாம்பை கண்டிருக் கிறீர்களே என்று நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். அந்தப்பாம்பு மோடியினுடைய கழுத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், அந்தப் பாம்பைக் காட்டித்தான் மோடி மகுடம் வாசித்தார். பல காலங்களிலே பாம்பு படமெடுத்தாடியது. அதில் அழகாககூட இருக்கும். அதிலே சந்தேகமே இல்லை. ஆனால், கொத்த ஆரம்பித்து விட்டதைப்போல்தான் அதுதான் தெரிகிறது. அய்யய்யோ!  கொஞ்சம் பாம்பைக் கூடையில் தள்ளுங்கள், தள்ளுங்கள் என்றால், கழுத்தைச் சுற்றிய பாம்பு விடாது. இதுதான் மிக முக்கியம். பிரதமர் மோடி அவர்களே, உங்களுக்கு எதிரி கள் நாங்கள் அல்ல. உங்களுக்கு எதிரிகள் உங்களுக்குள் ளேயே இருக்கிறார்கள். முதலில் அந்தப் பிரச்சினையைத்  தீருங்கள்.

இந்த நாட்டில் மதத்தை ஏற்காதவர்கள் எங்களைப் போன்றவர்கள் உண்டு. மதத்தை நம்புகிற நம்முடைய சகோதரர்கள் உண்டு. ஆனால், மனித நேயம் எப்படிப்பட் டதாக  இருக்கிறது என்று சொன்னால், எல்லோரும் எங்கள் சகோதரர்கள்தான். அவர்கள் உருவத்தால் வேறு பட்டாலும், உள்ளத்தால் ஒன்றுபட்டவர்கள் என்று சொல்லக்கூடிய அணி இந்த அணி.
பன்மொழிகள், பல கலாச்சாரங்கள், பல நாகரிகங்கள் இருக்கிற நாட்டிலே நீங்கள் கட்டாய மதமாற்றம் என்கிறீர் கள். நான் ஒன்றை நினைவு படுத்துகிறேன். பலபேர் மறந்து விடுவார்கள். பொதுமக்கள் மறதியை வைத்துக்கொண்டு அரசியல் நடக்கிறது சர்வ சாதாரணம். 1980 வாக்கிலே 82க்குப் பிறகு, மிகப்பெரிய அளவிலே ஒரு நிகழ்ச்சி மதம் மாற்றம் சம்மந்தமாக வந்தது என்று சொன்னால், தென் கோடியிலே இருக்கக் கூடிய மீனாட்சி புரத்திலே ஏற்பட்ட மதமாற்றம்தான் இந்தியாவிலே இவர்கள் விஎச்பி என்று சொல்லக் கூடிய விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை நோக்கி வந்து மிகப்பெரிய ஆய்வு எல்லாம் செய்தார்கள். அப்போது அருமைத் தோழர்களே! நன்றாக நீங்கள் கவனியுங்கள். நாம் திராவிடர் கழகத்தின் சார்பிலே, மீனாட்சிபுரத்துக்கு நேரிலே சென்று இசுலாமியர் களாக மதம் மாறிய அந்தத் தாழ்த்தப் பட்ட சகோதரர்களை, அந்தத் தாய்மார்களை சந்தித்து அவர்களிடம் பேட்டி எடுத்து ஒரு புத்தகமாக வந்திருக் கிறது. அந்தப் பேட்டி, ஒலி நாடா இன்னமும் இருக்கிறது. யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கும். அதிலே அவர்களைப் பார்த்துக் கேட்டபோது, உங்களுக்கெல்லாம் பணம் தந்துதான் நீங்கள் சென்றிருக் கிறீர்கள் என்று குற்றம் சொல்லுகிறார்களே, புகார் கூறு கிறார்களே அது உண்மையா? என்று கேட்டபோது அவர் கள் சொன்னார்கள், எங்களை மனிதர்களாகவே மதிக்க வில்லை, அதேநேரத்திலே எங்கள் பக்கத்திலே இருந்த இசுலாமிய சகோதரர்களுக்கு இருந்த மரியாதை எங்களுக்கு இல்லை. ஆகவே, எங்களுக்கு அந்த தன்மான உணர்வுதான் எங்களை மதம் மாறச்செய்தது என்று அவர்கள் சொன்னார் கள். அப்போது உடனடியாக இந்தியா முழுவதும் கூச்சல் போட்டார்கள்.

ஆனால், அப்படிப்பட்டவர்கள் இப்போது மீண்டும் எங்களுடைய மதத்துக்கு வருகிறார்கள் என்று சொல் கிறார்களே, அவர்களைப்பார்த்து நான் கேட்கிறேன், எங்களைப் பொருத்தவரையிலே நாங்கள் மதத்துக்கு அப்பாற்பட்டவர்கள். ஆனால், பகுத்தறிவு அடிப்படை யிலே, மனித நேய அடிப்படையிலே இந்தக் கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள்? இந்து மதத்திலிருந்து, எங்கள் மதத்திலிருந்துதான் அவர்கள் சென்றார்கள், ஆகவே, அவர்கள் திரும்ப வருகிறார்கள், தாய்மதத்துக்கு திரும்ப வருகிறார்கள் என்று சொல்கிறார்களே, தயவு செய்து ஏன் சென்றார்கள்? எதற்காக சென்றார்கள்? அவர்கள் திரும்ப வரும்போது அந்தக்காரணங்கள் சரிப்படுத்தப்பட்டிருக்கின்றனவா உங்கள் தாய் மதத்தில்?  அந்தக் கேள்வியைக் கேட்கமாட்டார்களா அறிவுள்ள மக்கள். எதற்காக, இப்போது அவர்களுடைய நிலை என்ன?

இது ஒரு அறிவிப்புக் கூட்டம். இது ஒரு எச்சரிக்கை மணி அடிக்கிறக் கூட்டம். அதைத்தான் எண்ணிப்பார்க்க வேண்டும். அந்த அடிப்படையிலே, மிகத் தெளிவான ஒரு வாய்ப்பு, இது பெரியார் மண் என்று சொல்லக்கூடிய அளவில்  நான் தெளிவாக ஒரு சில செய்திகளை மட்டும் உங்களுக்கு முன்னாலே வைக்கின்றேன். மிகப்பெரிய இன்றைக்குத் தேவை, இந்தியாவுக்கே தமிழ்நாடு அரசியலுக்கு அப்பாற்பட்டு வந்துதான் வேண்டும். அதற்கு முழு அச்சாரமாக அமைந்திருக்கிற மேடை என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்கிறோம்.
திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் போன்ற அமைப்புகள், இடது சாரிகளுடைய தோழர்கள், அதே போல முற்போக்கு சிந்தனையாளர்களாக இருக்கின்ற மற்ற சிறுபான்மை மக்கள் அத்தனைப்பேரையும் ஒருங் கிணைத்து மதசார்புக்கு அப்பாற்பட்ட மதசார்பற்ற ஒரு அணி, மதங்கள் என்பது வேறு, மதவாதம் என்பது வேறு. நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, மத வெறியை மாய்த்து, மனித நேயத்தைக் காக்கக் கூடிய வகையிலே ஒரு சிறப்பான Secular, Social Justice, Caste and Untouchability Eradication Front
என்று சொல்லக்கூடிய  மதச்சார்பற்ற,  அதேநேரத்தில் சமூகநீதியைக் காப்பாற்றுகின்ற, ஜாதியை தீண்டாமையை ஒழிக்கின்ற ஒரு மகத்தான அணி ஒன்றை ஏற்படுத்துவதற்கு விரைவில் நாங்கள் திட்டமிட்டிருக் கிறோம். அதைக் கூட்டுவதற்குத் தயாராக இருக்கிறோம். அதற்காக அச்சாரமாகத்தான் இங்கே நம்முடைய தலைவர்கள் கைகளை உயர்த்தி இருக்கிறார்கள்.
உயர்த்தப்பட்ட இந்தக் கைகள் கோடி கைகளாக மாறும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. கோரிக்கைகள் ஒன்றுதான். கோடி கைகள் பலவாக இருந்தாலும். இந்தக்கூட்டம் ஓர் எச்சரிக்கை மணி அடிக்கக்கூடியக் கூட்டம். நீண்டகாலமாக இந்த வித்தைகளைப் பயன்படுத்த முடியாது. இதுவரையிலே அந்தக் கூட்டம், ஆரியக் கூட்டம், ஆர்.எஸ்.எஸ். கூட்டம், பாசிசக் கூட்டம், தந்திரங்களைப்பயன்படுத்தியேதான் வாழ்ந்திருக்கிறது. ஒரு பக்கம் வித்தை, இன்னொரு பக்கம் தந்திரம். அண்ணா அவர்கள் சொன்னதைப்போல, தந்திரமூர்த்தி போற்றி! போற்றி!! என்றார். எனவே, இவர்கள் தந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். இப்போதுகூட பாராளுமன்றத்திலே ஒரு தந்திரம். ஒரு அஸ்திரம். என்ன சொல்லி இருக்கிறார் வெங்கய்யா நாயுடு அவர்கள்? எங்களுக்கும் அதற்கும் சம்மந்தமில்லை. நாங்கள் பிஜேபிகாரர்கள். பிஜேபிக்கும், ஆளும்கட்சிக்கும் சம்மந்தமில்லை. எவ்வளவு தந்திரமான பதில். மக்கள் என்ன எளிதில் ஏமாந்துவிடுவார்களா?மக்கள் என்ன அவ்வளவு புரியாதவர்களா? அவர்களைப் புரியவைப்பதுதான் இந்த அணியினுடைய திரட்டல் இதை நன்றாகப்புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப்போராட்டம் சரியான நேரத்திலே எடுக்கப்பட்ட அற்புதமான ஒரு வியூகம். இது ஒரு முன் எச்சரிக்கை. இது முடிவல்ல. இன்று ஒரு நாளில் முடிந்துவிடாது. இது ஒரு தொடக்கத்தின் துவக்கம். நன்றாக நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இங்கு வந்துள்ள அத்துனை பேரும் நாங்கள் விரிவுபடுத்துவோம்.

இது வெறும் அரசியலுக்காக அல்ல.நாட்டைக் காப்பதற்காக, இந்த மக்களைப் பாது காப்பதற்காக. உயர்ந்த கொள்கைகள், தலைசிறந்த மனித நேயம். இந்த நாட்டின் என்றென்றைக்கும் கொடிகட்டிப் பறக்க வேண்டுமேத் தவிர, மனித நேயத்துக்கு ஒருபோதும் குழி தோண்ட பாசிஸ்டுகளுடைய முயற்சித்தால், அதற்கு அனுமதியாத கூட்டம். எங்களையே நாங்கள் இழப்பதற்கும் தயாராக இருக்கிறக் கூட்டம் என்பதை உறுதியோடு இங்கே தெளிவாகச் சொல்லிக்கொண்டு, எங்களுக்கு வாய்ப் பளித்து இந்த ஏற்பாட்டைச் செய்த விடுதலைச் சிறுத் தைகளின் தலைவர், எழுச்சித்தலைவர், அன்பு சகோதரர் தொல்.திருமா அவர்களுக்கும், மேடையிலே கலந்து கொண்டிருக்கிற நம்முடைய தலைவர்களுக்கும், அனைவருக்கும் மகிழ்ச்சியைப் பாராட்டைத் தெரிவித்து நம்முடைய ஒற்றுமையைக் காட்டுவோம். எது நம்மைப் பிரிக்கிறது என்பதல்ல, எது நம்மை இணைக்கிறது என்பதுதான் மிகவும் முக்கியமானது. அதைப்புரிந்து கொள்ள வேண்டும்.நம்மை இலட்சியங்கள் இணைக் கின்றன. அதைவிட இந்த நேரத்தில் உங்களுக்கு நன்றி சொல்லுவதைவிட, நம்மை இணைத்திருக்கிறார்கள் பாருங்கள்.  அந்த பாசிச வாதிகளுக்கும் சேர்த்து நன்றி சொல்லுவோம். நீங்கள் அடிக்கடி இப்படிச் செய்து கொண்டே இருந்தால், எங்கள் வழியிலே இருக்கிற  சில சில கசப்புகளும்கூட மாறி, எல்லோரும் ஓரணியிலே, உயர்த்தப்பட்ட கைகள், ஓங்கிச் செயல்படக்கூடிய கைகளாக, இன்னும கேட்டால், பாசிசத்தின் கழுத்தைப் பிடித்து நெறிக்கின்ற கைகளாக இவை அமையும் அமை யும் என்று கூறி விடை பெறுகிறேன். வணக்கம். நன்றி! வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு.

 இவ்வாறு தமிழர் தலைவர் தம் உரையில் குறிப்பிட்டார்.
              --------------------”விடுதலை” 26-12-2014
Read more: http://viduthalai.in/page-3/93476.html#ixzz3N0QWPDIR

27 comments:

தமிழ் ஓவியா said...

நிதி நெருக்கடியில் திண்டாடும் மத்திய அரசு கோயில் நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமே!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


நிதி நெருக்கடி என்று கூறி, பல முக்கியத் துறைகளுக்கான நிதியை வெட்டும் மத்திய அரசு, கோயில்களில் குவிந்து கிடக்கும் நிதியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. (மத்திய) அரசு தனது நிதிப் பற்றாக்குறைக்காக நல்ல லாபம் தரும் - பொன் முட்டை இடும் வாத்தைக் கொல்வது போன்று - பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதில், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஈடுபட்டு வருகிறது.

மக்களின் சுகாதாரத் திட்டத்திற்காக செலவு செய்வதில் 20 விழுக்காடு வெட்டு!
உயர் கல்வித் துறை வளர்ச்சிக்கான ஒதுக்கீட்டில் 3000 கோடி ரூபாய்க்கு மேல் வெட்டு.

வரிமூலம் பறிக்கும் அரசு

பெட்ரோல், டீசல் (ஏழை விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில்) உலகச் சந்தை விலை சரி பாதிக்கு மேல் வீழ்ச்சி அடைந்தும், அதன் பயனை நுகருவோரான மக்களைச் சென்று அடையாமல், மத்திய அரசு வரி விதிப்பின் மூலம் இடையே பறித்துக் கொள்கிறது!

உரவிலையும் கூடவே விவசாயிகளின் தலையில் விடிகிறது; சந்தைப் பொருளாதாரத்தின் கொள்ளை லாபக் குபேரர்கள் கொள்ளையடிக்க ஏதுவாக கட்டுப்பாடுகளை நீக்கி கதவுகள் - திறந்து விடப்படும் கொடுமையும் நாளும் வளர்ந்துவருகிறது!

மக்களைத் துன்புறுத்தும் இந்த மாய வளர்ச்சியின் உண்மைத் தன்மையை வாக்களித்தவர்கள் உணரத் தலைப்பட்டு வருகிறார்கள்!

கோயில்களில் குவிந்துள்ள நிதியைப் பயன்படுத்தலாமே!

நிதி ஆதாரம் தேடும் மத்திய அரசு, பல லட்சம் கோடி ரூபாய்களை உள்ளடக்கிய கோயில்களான திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், குருவாயூரப்பன் கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில் வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக கடன் பத்திரங்களாக்கி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு - திருப்பிக் கொடுக்கலாமே!

மக்கள் பணத்தை முழுமையாக மக்கள் நலத்திற்குச் செலவிடுவதில் என்ன தவறு?

திருப்பதி ஏழுமலையான் கோயில் பட்ஜெட்டைப் பாரீர்!

எடுத்துக்காட்டாக, கடவுள்களிலேயே அதிக வருவாய் பெறும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் வருமானம் 2014-2015 பற்றிய ஒரு புள்ளி விவரம் இதோ:

அதன் பட்ஜெட் ரூ.2401 கோடி, ரூ.900 கோடி உண்டியல் மூலம் வசூல்; வங்கியில் உள்ள டெபாசிட்டுகளுக்கான வட்டி மூலம் வருவாய் 655 கோடி ரூபாய், பக்தர்களின் மொட்டை - மயிர்மூலம் ரூபாய் 190 கோடி வருவாய், கட்டட வாடகை மூலம் ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு ரூ.108 கோடி - வருவாய்.

செலவு விவரம் பாரீர்!

ஹிந்து தர்ம பிரச்சாரத்திற்கு ரூ.109 கோடி!
மருத்துவமனைகளுக்கு ரூ.55 கோடி
மற்ற பெரும் பகுதி - ஊழியர்கள் சம்பளம்.
இதன் வைப்பு நிதி மூலதனம் 7,000 கோடி ரூபாய்!

இந்து மதப் பிரச்சாரத்துக்கு
ரூ.100 கோடியாம்

மற்ற அறக்கட்டளைகளுக்கு வருமான வரித் துறையினர் தரும காரியங்களுக்கு எவ்வளவு விழுக்காடு செலவு செய்தீர்கள் என்று கேள்வி கேட்கும்போது, வெங்கடாஜலபதி கோயிலில் கொழுத்த பார்ப்பனர் சுரண்டல் எப்படி உள்ளது பார்த்தீர்களா? இவர்கள் ஆண்டுக்கு ரூ.100 கோடியில் ஹிந்து தர்ம பிரச்சாரமாம்! அதன் விவரத்தை அளிக்கவேண்டாமா?

கிறித்துவர்களின் கல்வித் தொண்டு மருத்துவத் தொண்டுக்கு முன் இது எம்மாத்திரம்? அரசின் மக்கள் நலப் பணிகள் மருத்துவம், கல்வி, முதலியவற்றை இவைகளை ஒருங்கிணைத்தாவது செய்தால் திருப்பதி ஏழுமலையான் கோபித்துக் கொண்டு வெளி நாட்டிற்கா போய் விடுவார்?

மூடபக்தியினால் திருப்பதிக்கு வாரி வழங்கும் பணக்காரர்களும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கட்டும்.

பக்தி வந்தால் புத்தி போகும்
புத்தி வந்தால் பக்தி போகும்

எனவே - மனிதர்களை வாழ விடுங்கள்.

விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்திட அரசுகள் வழி காணட்டும்!

பெரியார் கூறிய மூன்று வகை முதலாளிகளில்

1) உயிருடன் மூலதனம் போடும் முதலாளிகள்

2) கடவுள் (கல்) முதலாளிகள்

3) பிறவி முதலாளிகளான பார்ப்பனர்

இந்த முதலாளித்துவத்தை எதிர்த்து ஒழித்தால் ஒழிய சமதர்மம் வருமா? சிந்தியுங்கள்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
21.1.2015

தமிழ் ஓவியா said...

கங்கை இந்துக்களின் தனிச் சொத்தா?


கங்கையில் நூற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்து பல கிலோமீட்டர் கரைப்பகுதிகள் பிணநாற்றமெடுத்து அருவருப்பான நிலையில் இருக்கும் பட்சத்தில் கங்கை யில் பிணங்களை வீசுவது குறித்து சாமியார்கள் முடி வெடுப்பார்கள் என்று மத்திய நீர்வள மற்றும் கங்கை நீர் சுத்திகரிப்பு துறைக்கான அமைச்சர் உமாபாரதி கூறியுள்ளார்.

சனிக்கிழமை அன்று அலகாபாத் கங்கைக் கரையில் சாமியார்கள் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டு உமாபாரதி கூறியதாவது, மத்திய அரசு கங்கையில் இந்து மக்கள் கொண்ட கொள்கைக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காது, இந்துக்களின் நம்பிக் கையின் அடிப்படையில் தான் மோட்சமடைவதற்காக கங்கையில் உடல்கள் வீசப்படுகின்றன, உலகிலேயே கங்கை நதிமாத்திரம் தான் எலும்புகளைக்கூட மிகவிரைவிலேயே அரித்து தண்ணீரோடு கலந்துவிடும் தன்மை கொண்டது.

இதனடிப்படையில் தான் கங்கையில் உடல்கள் வீசப்படுகின்றன, மலர்கள், உடைகள் கங்கையில் வீசப்படுகின்றன என்றால் அவை நீண்ட நெடிய கங்கை கரையில் உரமாக மாற்றப்படுகின்றன. மேலும் கங்கை நதிக்கரையில் மரங்கள் நடுவது குறித்து சாமியார்களிடம் கேட்டு இருக்கிறோம், இந்துமத சாஸ்திரங்களின் படி கங்கைக் கரையில் மரங்கள் நடுவதா வேண்டாமா என்பதை சாமியார்கள் தான் இறுதிமுடிவெடுப்பார்கள். கங்கை மாசுபடுவது இறந்த உடல்கள் மற்றும் கடவுளுக்கு சாற்றிய மலர்கள் மற்றும் ஆடைகளால் தான் என்று கூறுவது முட்டாள் தனமானது, நவீன காலத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் கங்கைக் கரையில் அமைந்துவிட்டன. இவற்றிலிருந்து வரும் கழிவுகளால் தான் கங்கை மாசடைந்து வருகிறது.

கங்கையை சுத்தப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது, ஆனால் அது ஒருபோதும் இந்த நாட்டின் மக்களாகிய இந்துக்களின் நம்பிக்கைக்கு விரோதமாக இருக்காது. கங்கைக்கரை முழுவதும் தடுப்புகள் அமைப்பது குறித்து மத்திய அரசு எந்த ஒரு முடிவை யும் எடுக்காது; அது அந்த அந்த மாநில அரசின் முடிவுகள், மேலும் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பது குறித்து எந்த ஒரு மாநில அரசு சாமியார்களின் ஆலோசனையைப் பெறவேண்டும். இந்துக்களின் நம்பிக்கையில் விளையாடவேண்டாம் என்று கர்ச்சிக் கிறார் அமைச்சர் உமாபாரதி.

கடந்த வாரம் கங்கையில் 200-க்கும் மேற்பட்ட பிணங்கள் மிதந்தது குறித்து நேரிடையாக பதிலளிக் காமல் மத நம்பிக்கைகளை நாம் இழிவுபடுத்தக் கூடாது.உடல்கள் இன்றல்ல நேற்றல்ல; தொன்று தொட்டு கங்கைக்கு அர்ப்பணிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் இது குறித்து கூறுவதற்கு ஒன்றுமில்லை, இருப்பினும் சாமியார்கள் தான் இது குறித்து முடிவு செய்யவேண்டும், மேலும் திருவிழா காலங்களில் சாமி சிலைகள் கங்கையில் வீசுவதற்குப் பதிலாக கங்கைக் கரையில் பெரிய பள்ளங்களைத் தோண்டி அதில் கரைக்க வேண்டும் என்ற தொண்டு அமைப்பின் கோரிக்கைக்கு பதிலளித்த உமா பாரதி கங்கையை ஒரு சிறிய பள்ளத்தில் அடைக்க முடியுமா? என்று எதிர்க்கேள்வி கேட்டுள்ளார். என்னே தர்க்கம் இது? சிலைகளை குழிதோண்டி மூடமுடியாதா?

இந்து சாமியார்களைக் கேட்டு முடிவெடுப்பதற்கு கங்கை என்ன இந்துக்களுக்கு மட்டும் சொந்தமான தனிப்பட்ட சொத்தா? நாட்டின் பொதுச் சொத்து அல்லவா! இந்துக்களைத் தவிர வேற்று மதத்தவர்கள்

கங்கையில் நீராடக் கூடாது என்று கூட சட்டம் செய்வார்கள் போல தோன்றுகிறது.

கங்கை மாசுபடுவதற்கு முக்கிய காரணம் மனித உடல்களையும், கிழட்டு மாடுகளையும் எரியூட்டி எரிக்கப்பட்ட மனித சாம்பலையும், எலும்புகளையும் கங்கையில் வீசுவதுதான் என்பதை மறுக்கிறார் ஒரு மத்திய அமைச்சர் என்றால் மதம் அவர்களின் மதியை எப்படி எல்லாம் பாழ்படுத்தி இருக்கிறது! எதையும் இந்து சாமியார்கள் தான் முடிவு செய்வர்களா? ஆஸ்தான சாமியார்களைக்கூட அதிகாரப் பூர்வமாக அமைத்துக் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாடு மன்னர்கள் காலத்திற்குச் செல்லுகிறதா? எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...

மேலான ஆட்சிதந்திரத்தாலும், வஞ்சகத்தாலும், மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட, துப்பாக்கியாலும், பீரங்கியினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது. _ (குடிஅரசு, 3.11.1929)

தமிழ் ஓவியா said...

திருவரங்கம் விடுதலை வாசகர் வட்டத்தில் நடைபெற்ற இராவண காவியம் விந்த காண்டம் சொற்பொழிவு

திருவரங்கம், ஜன. 21_ விடுதலை வாசகர் வட்டம் திருவரங்கம் சார்பில் 10ஆவது மாதாந்திர கூட்டம் 29.11.2014 அன்று மாலை 6.30 மணிக்கு மு. மீனாட்சி சுந்தரம் (தலை வர் வி.வா.வ.) தலைமை யில் சிறப்பாக நடைபெற் றது. தந்தை பெரியார் சிறப்பைப் பற்றிய கவி தையை டி.செல்வராஜ் படித்தார்.

அனைவரையும் வழக்குரைஞர் சா.ஹரி ஹரன் (செயலாளர் வி. வா.வ) வரவேற்று உரை யாற்றினார் ஆ.பெரிய சாமி, சா.கண்ணன், இரா. மோகன்தாஸ், எம்.நேருஜி (திமுக) ஆகியோர் முன் னிலை வகித்தார்கள். வி. சீனிவாசன் (திமுக) வாழ்த் துரை வழங்கினார்.

பொறியாளர் சி.ரெங்க ராஜூ நிகழ்ச்சியை துவக்கி ஆற்றிய உரையில் தந்தை பெரியாரின் பண்புகள் கொள்கை உறுதி மனித நேயம் அரிய பண்புகளை எடுத்துக் காட்டுடன் விளக்கினார். ஆரியரு டைய நிர்வாகத்தில் இயங் கும் திருச்சி சீதாலெட்சுமி ராமசாமி பெண்கள் கல்லூரியில் (ஷி.ஸி.சிஷீறீறீமீரீமீ) தந்தை பெரியாரை உரை யாற்ற அழைத்தார்கள்.

தந்தை பெரியார் உரை யாற்றுவதை கேள்விபட் டவுடன் இயக்கத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித் தார்கள். உடனடியாக தந்தை பெரியார் பெண் கள் கல்வி கற்க வேண்டு மென கொள்கையை வலியுறுத்தி 50 ஆண்டு களாக போராடி வருகி றேன் பெண்கள் கல்வி கொள்கை வெற்றி பெற் றது என மகிழ்ச்சி அடைந் தேன் என தக்க பதிலடி தந்தார்.

இராவண காவி யம் 5 காண்டம், 57 பட லம், 3100 செய்யுள் கொண்ட காப்பியம். இராவணகாவி யத்திற்கு 1948 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு தடைவிதித்தது ஆனால் 1971 ஆம் ஆண்டு டாக்டர் கலைஞர் அரசு தடையை நீக்கி ஆணை பிறப்பித் தார் என சிறப்பான உரை யாற்றினார்.

பேராசிரியர் இ.சூசை முழக்கம்

ஆசிரியர் புலவர் குழந்தை தன் இராவண காவியம் விந்த காண்டம். ஆரிய படலம் முடிய உள்ள பாடல்கள் மூலம் இரா வணப் பேராசின் எல்லை விந்தியம் முதல் தென்னிந் தியா முழுவதும், இன்றைய ஒரிசா மாநிலம் (பழைய கலிங்கம்) உள்ளிட்டதாக பரவியிருந்தது எனக் கூறுகிறார். விந்த காண் டம் 28 பாடல்களைக் கொண்டும், ஆரியபடலத் தில் ஆரியர்களின் வாழ்வு முறை ஒழுக்கச் சீர்கேடு களை நுட்பமாக ஆய்வு டன் சாடியுள்ளார்கள்.

ஆரியர்கள் தங்கள் மனைவி மக்களுடன் உடலாலும், உள்ளத்தாலும் மகிழ்ந் திருந்தனர். ஆயினும் காட்டில் வசதியுடன் துறவிவேடம் பூண்டு மனித சமுதாயத்தில் உயர்ந்தவனாகவும், கருத வைத்தும் தங்களை வணங்க வைத்தும், தமிழர் களுக்கு சோமபானம் வழங்கி போதையில் மதி யிழந்து, மதிப்பு இழந்து வீழ்த்தினார்கள்.

ஆரியப் படலத்தில் ஆரியர்கள் சூழ்ச்சியில் மூழ்கிய ஆரி யர்கள் என்றே கூறுகிறார். இராவணன் படையுடன் வரும்போது ஆரியர்கள் ஓடி ஒளிந்தனர் எனப்பகர் கின்றார். ஆரியர்களுக்கே தனி மொழியாக சமஸ்கிரு தம் இல்லை. வடிவமில்லை, சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவராக கருதிக்கொண்டு அந்தந்த இடத்திற்கு தக்கவாறு வேடம்பூண்டனர்.

உதார ணம் தமிழ்நாட்டில் அந் தணர், தெலுங்கு நாட்டில் தெலுங்கு பிராமணர் எனவும், ஆரியர்கள் மராத் தியுடன் (சவுராஷ்டிர மொழி) கலந்து சமஸ் கிருதம் எனக்கூறியுள் ளார். இந்த பொய்யுரை களை கூறியதால் இவர் களை உயிருடன் கொளுத்த வேண்டும் என கார்த்தி என்ற ஆய்வாளர் வெகுண்டு உரைக்கின்றார். ஆரியர் களின் வாழ்வு நெறியினை புலவர் குழந்தை சாடி யுள்ளார்.

ஒற்றுமையான சமூகத்தினை குறிப்பாக தமிழர்களை பிரித்தல், இயலவில்லை எனில் தமி ழர்களுடன் கூட்டுசேர்ந்து அடுத்து கெடுத்தல், பொருட்களை கேடு செய் வது, ஆராயாமல் எதனை யும் செய்தல் இவைகளை யெல்லாம் பஞ்சதந்திரம் எனக்கூறி ஏமாற்றுகின் றனர் என்பதை ஆரிய படலத்தில் விரித்துரைக் கப்பட்டிருக்கிறது.

ஆரியர் கள் பொய் புரட்டுகளை, ஒழுக்கச்சீர்கேடுகளை பட்டியலிட்டு விரித்து ரைத்தால் இராவண காவியத்தை தீய இலக் கியம் எனக்கூறி அழித்து விடுவர் என்றே புலவர் குழந்தை அஞ்சினார் அஞ்சியதற்கு காரணம் இராவண காவியம் நின்று நிலைத்து காலத்தால் அழி யாமல் இருக்க வேண்டும் என்ற ஆசிரியரின் பேரவா எனக்கூறி பேராசிரியர் சூசை நிறைவு செய்தார்.

கூட்டத்திற்கு வருகை தந்தோர் சட்டஎரிப்பு வீரர்முத்துகுமாரசாமி, ப.இராமநாதன், தி.சண் முகநாதன், பி.தேவா, இரா.முருகன், காட்டூர் கனகராசு, க.சுதாகர், கிருஷ்ணகுமார், க.பாஸ் கர், திமுகவை சார்ந்த மு.கருணாநிதி.ராஜேஷ், மூலதோப்புரவி, கே. மாணிக்க, செல்வகுமார், அப்பு.அன்பு கணபதி, சு.பரஸ்கரன் ந.நிஜவீரப்பா மற்றும் ஏராளமான இயக்க தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் கள்.
இறுதியாக டி.பி.தியாக ராசன் நன்றி கூற இனிதே முடிவுற்றது.

Read more: http://viduthalai.in/e-paper/94719.html#ixzz3PVkwhEB9

தமிழ் ஓவியா said...

நீதியரசர் ஏ.கே.ராஜன் எழுதிய ஸ்பேர் எ மோமன்ட் நூல் வெளியீட்டு விழா

பல்வேறு தகவல்களை பயனுள்ள வகையில் கூறும் இந்த நூல் கலங்கரை விளக்காக உள்ளது
நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் புகழாரம்

சென்னை, ஜன. 21- நீதியரசர் டாக்டர் ஏ.கே.ராஜன் அவர்கள் எழுதியுள்ள ஸ்பேர் எ மோமன்ட் என்ற நூல் பல்வேறு தகவல்களை பயனுள்ள வகையில் கூறும் கலங்கரை விளக்காக உள்ளது என இந்நூலை வெளியிட்டு பேசிய தமிழர் தலைவர் புகழாரம் சூட்டினார்.

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் எழுதிய ஷிஜீணீக்ஷீமீ ணீ னீஷீனீமீஸீ ஸ்பேர் (எ மோமன்ட்) ஆங்கில நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் 20.1.2015 அன்று மாலை நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்கள் நூலை வெளியிட்டார். சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

மூத்த வழக்குரைஞர் ஏ.தியாகராஜன் நூல் அறிமுக வுரை ஆற்றினார்.

ஸ்பேர் எ மோமன்ட் நூல் சேது பதிப்பகம் சார்பில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சிறப்புரையில் குறிப்பிடும் போது:

சட்டத்துறையில் ஆழ்ந்த புலமை பெற்று பல்வேறு பணிகளைச் செய்து, நீதியரசராக பணியாற்றியவர் நூலாசிரியர் நீதியரசர் ஏ.கே.ராஜன். துணிவோடும், தெளிவோடும் கருத்துகளை அவ்வப்போது வெளி யிட்டு வருபவர். அவர் ‘Spare a moment’ நூலை ஆங் கிலத்தில் எழுதியுள்ளார். தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு மட்டுமல்ல, உலகுக்கு சமூக நீதி, சமூக அநீதி குறித்து எடுத்துக்கூறும் நூலாக உள்ளது.

நம் நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் பிரச்சினை கள் குறித்து பல்வேறு கட்டுரைகள் எழுதிவருபவர். எங்கெல்லாம் வெளிச்சம் தேவையோ அங்கெல்லாம் நம் கருத்தோட்டங்கள் உலகுக்குத் தேவை.

ஆங்கிலம் மூலம் எளிமையாக புத்தகம் சிறப்பாக உள்ளது. 18 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூலில் சாதாரண கட்டுரைகளாக இல்லாமல் ஆய்வுக் கட்டுரைகளாக உள்ளன. ஆங்கில வார, மாத இதழில் படித்தவைதான் என்றாலும், திரும்பத் திரும்ப படிக்கும் போது, திருக்குறளில் சொல்வதுபோல்

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

தேன்கூட்டிலிருந்து தேன் எடுத்துக் கொடுப்பது போல, ஒரு நல்ல நூலைத் திரும்பத்திரும்ப படிக்கும் போது உற்சாகம் வருகிறது. நீதியரசர் ஏ.கே.ராஜன் சிறந்த பண்பாளர். இந்த நூல் சிறந்த இலக்கியமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு கூடியிருப்பவர்கள் சட்டம் படித்தவர்கள்.

இது அறிஞர்கள் அவையாக உள்ளது. எங்களின் பணி சாக்கடைகளைத் தூர்வாரும் பணி என்றார்கள். துப்புரவுப் பணிக்கு நல்ல கருவிகள் தேவை. அந்தக் கருவிகள் இந்தப்புத்தகத்தில் உள்ளது.

தமிழ் ஓவியா said...

மறைந்தும் மறையாமல் நம்முடைய நெஞ்சங்களில் நிறைந்திருப்பவர் அவர் சகோதரர் அழகுமலை எம்.எல். அவர்களின் படம் இங்கு வைக்கப்பட்டுள்ளது. அவர் படமாக மட்டுமல்லாமல் பாடமாகவும் இருப்ப வர். அவரையும் நான் அறிவேன். ராஜமாணிக்கம் அறிமுகப்படுத்தினார். சட்ட மேதை அழகுமலை.

தமிழர்களில் சட்ட அறிஞர்கள் உண்டா? என்றார் கள். எம்.எல். படித்தவர்கள் குறைவாகவே இருந்தனர். கா.சு.பிள்ளை எம்.எல். படித்தவர். அவர் எம்.எல். பிள்ளை என்றே அழைக்கப்பட்டவர். தம்மின் தம் சகோதரர் அறிவார்ந்தவர்களாக வேண்டும் என்பதில் இந்தக் குடும்பம் நல்ல பல்கலைக்கழகம். எடுத்துக் காட்டான குடும்பம், கொள்கைக் குடும்பம், குறிக்கோள் உள்ள குடும்பம். தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும் பம் என்றில்லாமல் சமூக நீதிக்கு ஆற்றிய பணிகள் ஏராளம்.

கலைஞர் அரசில் தமிழக அரசின் சார்பில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவராகப் பணியாற்றியவர். ஆகமங்கள் குறித்து அறிக்கையாகக் கொடுத்தார்கள். புத்தகமாக வந்துள்ளது.

ஆங்கிலத்தில் உள்ள இந்தப்புத்தகம் தமிழில் வெளிவரவேண்டும். அந்தப்பணியினை நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். ஏன் இப்படிப்பட்ட புத்தகங்கள் தேவைப்பட்டன என்று முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப்புத்தகத்தில் ஊடகங்கள், இட ஒதுக்கீடு, கிரீமி லேயர், மாநிலப்பட்டியலிலருந்து கல்வி பொதுப்பட்டி யலுக்கு கொண்டு செல்லப்பட்டது, நாங்கள் மிசாவில் இருந்தோம் வெளியில் இருந்தவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதைத் தடுக்க வில்லை. இரவோடு இரவாக மாநிலப்பட்டியலிலிருந்து கல்வி பொதுப்பட்டி யலுக்கு களவாடப்பட்டது என்றே கூறவேண்டும்.

1919 ஆம் ஆண்டு சட்டம், 1935 ஆம் ஆண்டு சட்டம் குறித்து எழுதியிருக்கிறார்கள். ‘Unity in Diversity’ கல்வி, கலாச்சாரம், பண்பாடு, பாதுகாப்பாக இருக்க வேண்டும். வரலாற்றில் அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டபோது ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து கட்டுரை உள்ளது.

எட்டாம் அட்டவணையில் 22 மொழிகள் உள்ளன. 22 மொழிகளில் மற்ற மொழிகளுக்கு இல்லாத சிறப்பு என்று கூறி சமஸ்கிருதத்தைப் படிக்கக் கூறுகிறார்கள். பன்மொழி உள்ள நாட்டில் 110 கோடி மக்கள் வாழும் நாட்டில் 22 ஆயிரம் பேர் பேசுவதாக சொல்லப்பட்ட மொழி சமஸ்கிருதம் அதைத் திணிக்கிறார்கள். இரண்டு கல்வி அமைச்சகங்கள், இரண்டு கல்வித் திட்டங்கள் தேவை இல்லை என்று கொஞ்சம் கொஞ் சமாக படிப்படியாக மாறி, துணை வேந்தர்களைக்கூட வேறு எங்கிருந்தோ நியமிக்கும் நிலை உள்ளது.

அரசியல் கிடையாது. விருப்பு,வெறுப்பு இன்றி, முழுக்க முழுக்க சமூக நீதிக் கண்ணோட்டத்தில் இந்நூல் எழுதி இருக்கிறார். ‘Unity in Diversity’ நேரு கூறினார். அடிப்படையில் கல்விதான் முக்கியம்.

இட்லர் கல்வியில்தான் முதலில் கவனம் செலுத் தினார். மாணவர்கள் மத்தியில் யூதர்கள் மீது வெறுப்பு உண்டாக்க வேண்டும் என்று கணக்கு பாடத்தில் வியாபாரத்தில் இலாபம் என்பதற்குப்பதிலாக யூதன் அடித்த கொள்ளை என்று கூறி பாடத்திட்டங்களின் மூலம் ஜெர்மனியில் இட்லர் செய்தார். ஆதிக்க ஆயுதமாக அரசு கல்வித்துறையைப் பயன்படுத்து கிறது.

பல்வேறு தகவல்களை பயனுள்ளவகையில் கூறும் இந்த நூல் கலங்கரை விளக்காக உள்ள நூல். அற்புத மான அறிவாயுதம். இந்த நாட்டில் இந்த நேரத்தில் சமூகக் கண்ணோட்டத்தோடு கட்டுரைகள், தீர்ப்பு களாக உள்ளன. நுண்மாண் நுழைபுலம் உள்ள அறிஞர் களுக்கும் பயனுள்ள நூல். தமிழில் கொண்டு வரும் போது இன்னும சிறப்பாக கொண்டு வரவேண்டும். கிராமத்திலிருந்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து எடுத்துக்காட்டாக உயர முடியும் என்பதற்கு சான்று நீதியரசர் ஏகே ராஜன் குடும்பம்.

-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் தம் உரையில் குறிப்பிட்டார். நிறைவாக நூலாசிரியர் ஏ.கே. ராஜன் ஏற்புரை ஆற்றினார்.

விழாவில் நீதியரசர் வெங்கடாசலம், மூத்த வழக் குரைஞர் காந்தி, சம்பத், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன், வழக்குரைஞர் வீரமர்த்தினி மற்றும் வழக்குரைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் ஓவியா said...

நரேந்திர மோடி அரசு ராம பக்தர்களின் அரசாம் : ராமனின் ராஜ்ஜியமாம்!


கூறுகிறார் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நரேந்திரமோடி அரசு ராமபக்தர்களின் அரசு நாடெங்கும் ஜெய் சிறீ ராம் என்ற முழக்கத்தை ஒலிக்க வைக்கும் அரசு, என்று நெடுஞ்சாலை மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசம், பைசாபாத் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் நிதின் கட்கரி கூறியதா வது: மோடி ஆட்சி, ஒரு வரலாற்றுத் திருப்பம் நீண்ட காத்திருப்பிற்கு பிறகு ராமபக்தர்களின் ஆட்சி அமைந்திருக்கிறது.

ராமனின் அனுக்கிரகத் தால் பிரதமர் நரேந்திர மோடி, இந்த நாட்டை வளமான பாதைக்குக் கொண்டு சென்று கொண்டு இருக்கிறார்.ராமனின் ஆட்சியில் பேதங்கள் இல்லை, ஊழல்கள் இல்லை, வறுமை இல்லை, அதை இந்த ஆட்சியில் நரேந்திரமோடி கொண்டு வர முனைப்புடன் இருக் கிறார். நாங்கள் ஊழல் வாதிகளை ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம். நாடு முழுவதும் ராம வன் மார்க்(ராமர் அம்பு காட் டிய பாதை) என்ற பெய ரில் சாலைகள் அமைப் போம், இது இலங்கை யையும் இணைக்கும் வகையில் எதிர்காலத்தில் அமையும். இந்த ராமன் வன் மார்க் குறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திட்டவரை முறைகளை முன்வைப் போம், வருங் காலத்தில் இந்த ஆட்சியில் நாடெங் கும் ஜெய் சிறீராம் என்ற முழக்கமே ஒலிக்கும், என்றார். அரசியல் சாசனப்படி அனைத்து மக்களையும் ஒன்றாக பாவிப்பேன் என்று கூறி பதவியேற்ற நிதின் கட்கரி, ஒரு மதத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறி யுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/94743.html#ixzz3PYfKhjDe

தமிழ் ஓவியா said...

திராவிடர் விழிப்புணர்ச்சி 13ஆம் வட்டார மாநாடு:

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே எதிர்த்து பேசுகிறார்கள்


நன்னிலம், ஜன.22- மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையை எதிர்த்து ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே பேசுகிறார்கள் - இதுதான் பிஜேபி ஆட்சியின் இலட்சணம்! என தமிழர் தலைவர் கருத்துரையாற்றினார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நேற்று (21.1.2015 மாலை நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு 13ஆம் வட்டார மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய கருத்துரை வருமாறு: வளர்ச்சி வளர்ச்சி என்று போட்ட சத்தத்தில், மயக்க பிஸ்கட்டில் ஏமாந்து இன்றைக்கு எட்டு மாதங்களுக்கு முன் ஓர் ஆட்சியை மத்தியில் உட்கார வைத்தார்கள் மக்கள் ஏமாந்தார்கள். ஆட்சிக்கு வந்தவர்கள் என்ன வளர்ச்சியை நாட்டில் ஏற்படுத்தினார்கள்!?

மதவாதத்தைக் கிளப்பி வருகிறார்கள். யானைக்கு மதம் பிடித்தாலே ஆபத்து! மனிதனுக்கு மதம் பிடித்தால் என்னவாகும்? ஒரு கட்சிக்கோ, ஆட்சிக்கோ மதம் பிடித்தால் என்ன ஆகும்? அதுதான் இப்பொழுது நடக்கிறது.

காந்தியைச் சுட்டுக் கொன்றவர்கள், இப்பொழுது கோட்சேவுக்குச் சிலை வைப்போம் என்கிறார்கள். ஒரு நாடு எப்பொழுது வளர்ச்சி அடையும்? அந்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இணக்கமாக கைகோர்த்து வாழ்ந்தால் தான் அந்நாடு வளர்ச்சி அடையும்.

ஆட்சியிலே உள்ளவர்களே சிறுபான்மை, பெரும் பான்மை பேசி மக்களை ஒருவரோடு ஒருவர் மோத விட்டால் அந்த நாடு வளர்ச்சி அடையுமா?

குஜராத்தில் என்ன நடந்தது? அது நாடு முழுவதும் நடைபெற வேண்டுமா? நாம் அதைஅனுமதிக்கலாமா? ஏற்கத்தான் முடியுமா?

120 கோடி மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கிக் கொண்டு தவிக்கிறது. எதை எதையெல்லாம் விற்கலாம் என்று திட்டம் போடுகிறார்கள் மத்தியில் உள்ள ஆட்சியாளர்.

இந்த லட்சணத்தில் ஒவ்வொரு வரும் நான்கு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஒருவர் கூறுகிறார் - இன்னொரு சங்கராசசாரியாரோ - ஒவ்வொரு வரும் பத்துப் பிள்ளைகளைப் பெற்று தள்ளுங்கள் என்று சொல்லுகிறார்கள் - மத்தியில் ஆள்பவர்கள். இவற்றை யெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. மக்கள் தொகை யைக் கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையை எதிர்த்து ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே பேசுகிறார்கள் - இதுதான் பிஜேபி ஆட்சியின் இலட்சணம்!

ஒரு பெண் எத்தனை குழந்தையைப் பெற்றுக் கொள் வது என்பதை ஆண்கள் முடிவு செய்யலாமா?

கருவைப் பத்து மாதம் சுமந்து பிரசவிக்கும் பெண்ணுக்கல்லவா அதன் வலியும் சுமையும் தெரியும்.

கேட்டால் கடவுள் கொடுக்கிறான் என்று சமாதானம் சொல்கிறார்கள். அந்தக் கடவுளிடமே சொல்லுங்கள். அவர்தான் சர்வ சக்தி வாய்ந்தவராயிற்றே! பெண்களின் கருப்பையை ஆண்களுக்கு மாற்றி வைக்கச் சொல்லுங்கள். பத்து மாதம் ஆண்கள் கருவைச் சுமந்து பிரசவிக்கட்டுமே! ஏற்றுக் கொள்வார்களா? (பலத்த சிரிப்பு - கை தட்டு!)

மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சியில் ஒரு பக்கம் பார்ப்பனர் ஆதிக்கம்; இன்னொரு பக்கத்தில் கார்ப்பரேட்டு நிறுவனங்கள் இரண்டும் நாட்டைச் சூறையாடுகின்றன.

அரசமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நிற்பதாக சத்தியம் செய்து கொடுத்துப் பதவி ஏற்கிறார்கள். அந்த அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார் பின்மைக்கு விரோதமாகப் பேசுகிறார்கள் - நடந்து கொள்கிறார்கள்.

இத்தகையவர்களை அடையாளம் காணுங்கள் என்று எச்சரிக்கவே திராவிடர் கழகம் நடத்தும் திராவிடர் விழிப்புணர்ச்சி மாநாடுகள்!

வீட்டுக்காரன் தூங்கலாம்; குறட்டை விட்டுக் கூடத் தூங்கலாம்; ஆனால், காவல்காரன் தூங்கலாமா? தூங்கத்தான் முடியுமா?

அந்தக் காவல்காரனாக இருந்துதான் திராவிடர் கழகம் எச்சரித்துக் கொண்டு இருக்கிறது. கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன் என்ற பழமொழிதான் உங்களுக்குத் தெரியுமே! என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/94744.html#ixzz3PYfW3C49

தமிழ் ஓவியா said...

கலவரங்களில் ஆர்.எஸ்.எஸின் பங்கு கிரண்பேடிக்கு திக்விஜய்சிங் கேள்வி


புதுடில்லி, ஜன 22_ ஆர்.எஸ்.எஸ்., ஒரு தேசியவாத அமைப்பு என டில்லி தேர்தலில் போட் டியிடும் பா.ஜ., முதல்வர் வேட்பாளரும், முன்னாள் அய்.பி.எஸ்., அதிகாரியு மான கிரண்பேடி தெரி வித்திருந்தார். இது தொடர்பாக தனது டுவிட் டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், ஆர் .எஸ்.எஸ்., நாட்டை ஒருமைப்படுத்தியதாக கிரண்பேடி கூறி உள் ளார். ஒரு அய்.பி.எஸ்., அதிகாரியாக அவர் மத கலவரங்கள் தொடர்பான சட்ட ஆணைய அறிக்கை களை படித்ததில்லையா? கலவரங்களில் ஆர்.எஸ். எஸ்.,ன் பங்கு என்ன வென்று படித்ததில் லையா? சுதந்திர போராட் டத்தில் ஆர்.எஸ்.எஸ்.,ன் பங்கு என்னவென்று கிரண்பேடியால் சொல்ல முடியுமா? ஆர்.எஸ். எஸ்.அய்., சேர்ந்த 5 சுதந்திர போராட்ட வீரர் களின் பெயர்களை அவ ரால் சொல்ல முடியுமா? கோட்சேவை அவர் தேசபக்தராக கருது கிறாரா? இந்துத்துவா என்பதற்கு என்ன அர்த் தம் என்று அவர் விளக்கு வாரா? கிரண்பேடி அவர்களே..உங்களது சொந்த விருப்பங்களுக்காக வரலாற்றை சிதைக்க வேண்டாம். உங்களது அரசியல் ஆசை என்ன என்பது எனக்கு தெரியும். அதில் தவறேதும் இல்லை. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் மற்றவர்களின் அரசியல் ஆசைகளுக்காக அன்னா ஹசாரேவின் சமூக சேவை கள் பயன்படுத்தப்படுவதற் காக பரிதாபப்படுகிறேன். இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/94739.html#ixzz3PYffHxGS

தமிழ் ஓவியா said...

நிரந்தர விரோதி

நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கிறது.
_ (குடிஅரசு, 13.4.1930)

Read more: http://viduthalai.in/page-2/94737.html#ixzz3PYfyLEc7

தமிழ் ஓவியா said...

பெரியார் உலகம் - ஒரு வரலாற்றுச் சாதனை முயற்சி
பேரறிஞர் வரிசையில் போற்றப்பட வேண்டியவர் ஆசிரியர்!

82 வயதான புதுச்சேரி ஜி.கே.எம். பேட்டி!

புதுச்சேரி மாநில திராவிடர் கழக பொதுக் குழு உறுப்பினர் ஜி.கே.எம். என்கிற ஜி. கிருட்டிணமூர்த்தி. 82 வயதான இளைஞர். தமிழர் தலைவர் ஆசிரியர்மீது வற்றா அன்பு பூண்டவர். சீரிய நூல் வாசிப்பாளர். விடுதலையின் தொடர் வாசகர்.

அவர் வீடு முழுவதும் கொள்கை வாசகங்கள்; பேரறிஞர்கள் தம் கருத்துக்கள் எங்கு பார்த்தாலும் எழுதப்பட்டுள்ளன. சிந்தனையாளர் களின், முற்போக்காளர்களின் உருவப் படங்கள் வீட்டை அலங்கரிக்கின்றன.

அவரைப்பற்றி...

காரைக்காலில் 31.07.1933இல் கோவிந்தசாமி - _ பட்டம்மாள் இணை யரின் மூத்த மகனாகப் பிறந்தவர். விசயலட்சுமி இவரின் துணைவியார். எழில், அன்பரசு, அறிவொளி, மல்லிகா, செல்வி என 5 பிள்ளைகள் இவருக்கு! இவரின் தந்தையார் சுயமரியாதை உணர்ச்சி உள்ளவர். அவரே ஜி.கே.எம். பகுத்தறிவுவாதியாக பரிணமிப்பதற்குக் காரணம். இயக்கப் பற்றுதல் எப்படி ஏற்பட்டது?

காரைக்கால் நிரவி பகுதிக்கு பெரியார் வந்தபோது எனக்கு 15 வயது இருக்கும். நான் நேரில் சென்று பார்த்ததும், 17,18 வயது இருக்கும்போது என் தாத்தா வீடான புதுச்சேரி குயவர் பாளையம் சென்றிருந்தபோது ஒதியஞ் சாலை திடலில் தந்தை பெரியார் பேசியதைக் கேட்டதும், குபேர் தலை மையில் வள்ளுவர் விழா நடந்தபோது திருக்குறள் முனுசாமியும், இளைஞர் வீரமணி (தமிழர் தலைவர்)யும் பேசி யதைக் கேட்டதும் இயக்கக் கொள்கை யின் பால் பற்றுதல் ஏற்பட காரண மான நிகழ்வுகளாகும்.

இயக்கத்தின் ஆதரவாளனாக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்திருக்கிறேன். வி.சு. சம்பந்தம் பொறுப் பிலிருந்த போதுதான் நான் இயக்கத்தின் பொறுப்புக்கு வந்தேன். இப்போது புது வையில் இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதைப் பார்க்கும்போது பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ் ஓவியா said...


கொள்கை பரவலுக்கு தங்களின் பணிபற்றி...

இயக்க நூல்கள் மற்றும் மேலை நாட்டு அறிஞர்களின் நூல்கள் அவ்வப் போது நிறைய வாங்கி ஏராளமானவர் களுக்கு கொடுத்து அவர்களில் பலரை இயக்கத்துக்கு ஆதரவாளர்களாக மாற்றியுள்ளேன். தேவையான சமயத் தில் துண்டறிக்கைகள் அச்சிட்டு வழங்கி வருகிறேன்.

இயக்க நிகழ்ச்சிகள் நடத்தும் போது தாராளமாக நிதி உதவி செய்வதில் மகிழ்ச்சி காணுபவன். பெரியார் உலகம் நிதி இருபத்தையா யிரம் அளித்துள்ளேன். எப்போதும் யாரிடமாவது இயக்கக் கொள்கைகளை பற்றிப் பேசிக் கொண்டே இருப்பேன்! பலரை இயக்க சார்பாளர்களாக நான் மாற்றி உள்ளேன்.
மறக்க முடியாத நிகழ்ச்சி ஏதாவது...

1984ல் என் புதிய வீடு திறப்பு. என் துணைவியார் கிரகப் பிரவேசமாக நடத்த விரும்பினார். நான் மறுத்து விட்டேன். எனது கொள்கை உரிமையை விட்டுக் கொடுக்க நான் தயாரில்லை என்று கூறிவிட்டேன். வேறு வழியின்றி எதுவுமே செய்யாமல் அவ்வீட்டுக்கு குடிசென்று விட்டோம். அதன்பிறகு தான் எனக்கு (என் கொள்கைக்கு) ஒத் துழைக்க ஆரம்பித்தார் என் துணை வியார்.

தமிழர் தலைவர் பற்றி தங்களின் கருத்து....

தந்தை பெரியார் சூரியன் என்றால் ஆசிரியர் கி. வீரமணி அவர்களோ அதன் ஒளி வாங்கிய முழு நிலா என் பேன். உலகளாவிய பேரறிஞர் வரிசையில் போற்றப்பட வேண்டியவர். பெரியார் உலகம் -அவரின் வரலாற்றுச் சாதனை முயற்சியாகும்.

ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைகள் நூல் வரிசை என்னை மிகவும் ஈர்த்திட்ட புத்தகங்களாகும். புதுச்சேரி தமிழக மக்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்களாகும். பல நூறு புத்தகங்கள் அவற்றில் வாங்கி மற்றவர்களுக்கு கொடுத்திருக்கிறேன்.அதுபோல கீதையின் மறுபக்கம் சீரிய ஆய்வு நூல். அதைப் படித்து வியந்தவன் நான்.

அய்யாவின் அடிச்சுவட்டில்...

நூல் வரிசையும் இயக்கத்தின் வர லாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளப் பயன்படும் நூல் களாகும்.

இயக்க வளர்ச்சிக்கு தங்களின் கருத்து...

இயக்கத்தில் இளைஞர்கள், மாண வச் செல்வங்கள் நிறைய பேர் சேர வேண்டும். இயக்க இளைஞர்கள் விடுதலை ஏட்டினைத் தவறாமல் படிப்பதுடன், அய்யா, ஆசிரியர் நூல்களை முழுவதுமாக வாசிக்க வேண்டும். தொடர்ந்த வாசிப்பு வழக்கம் ஆழ்ந்த கொள்கை உறுதியை ஏற்படுத்தும்.

அறிவில் சிறந்தவர்களாக மிளிர முடியும். 2000 மாநாடுகள் என்று ஆசிரியர் அறிவித்துள்ள அறிவிப்பு என்னை பிரமிக்க வைத்தது. கழக நிர்வாகிகளும், தோழர்களும் வட்டார விழிப்புணர்வு மாநாடுகளைத் திறம்பட நடத்தினாலே இயக்க வளர்ச்சி செழித்தோங்கும் என்பது என் கருத்து. ஒவ்வொரு கழகத் தோழரும் விடுதலை வாங்க வேண்டும் _- படிக்க வேண்டும்.

மதவெறிக்கு தூபம் போடும் மத்திய அரசு அமைந்து உள்ள இக்காலத்தில் அதனை முறியடித்து மனிதநேயம் காக்கப்பட நமது இயக்கத்தால் மட்டுமே செயலாற்ற முடியும்.

நமது தமிழர் தலைவர் ஆசிரியர் எவ்வித எதிர்பார்ப்புமின்றி அய்யாவின் கொள்கையைப் பரப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவரின் ஆணையைச் செயல்படுத்துவதே நாம் இயக்கத்துக்கு மக்களுக்கு ஆற்றிடும் தொண்டு என்பதை உணர்ந்து தோழர்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்!

பேட்டி கண்டவர்: துரை. சந்திரசேகரன் 31.12.2014

Read more: http://viduthalai.in/page-1/94844.html#ixzz3Pk0n5V3d

தமிழ் ஓவியா said...

நீ.. இந்து என்றால்....

நீ இந்து என்றால் உனக்கு ஏன் கோயிலில் நுழைய அனுமதி இல்லை? அர்ச்சகராகவும் உரிமையில்லை.

நீ கட்டிய கோயில், நீ செதுக்கிய சிலை, நீ தொட்டுச் செய்த அந்த சிலை எப்படி கடவுளாக முடியும்?

நீ தொட்டால் மட்டும் அது எப்படி தீட்டாகும்? தீட்டு என்றால் என்ன? அப்படித்தானே அர்ச்சகர் ஆகும் உரிமையில்லை என்று தமிழக சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது?

நீ இந்து என்று சொல்லிக் கொள்கிறாய். ஆனால் உன்னை வேசிமக்கள் என்றும் பாவ யோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்றும் வேதத்தில் எழுதி வைத்துள்ளான். அந்த வேத சாஸ்திரங்கள்தானே அர்ச்சகர் ஆகும் உரிமையைத் தடுத்துள்ளன.

ஒரே ரத்தம் உள்ள மனிதனை பல ஜாதிகளாக பிரித்து தான் மட்டுமே சொன்னால் கடவுள் கேட்பார் என்று ஊருக்கு ஊர் ஒரு தேரை வைத்து வினை தீர்ப்பதாகவும், பணம் கொடுப்பதாகவும், நோய் தீர்ப்பதற்கும், திருமணம் செய்வதற்கும் என்றே பல கடவுள் என்கிற சிலைகளையும் கோயில்களையும் கட்ட வைத்து தன்னினத்தையே உரிமையாக்கிக் கொண்டு மக்களை ஓட்டாண்டிகளாக வைத்துள்ளார்கள்.

எத்தனை நூற்றாண்டுகளாகியும் எத்தனை பெரியோர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வந்துள்ளார்கள். கல்வியே இல்லை என்று சொன்னதை மறந்து இப்போதுதானே படிக்க முன்வந்துள்ளீர்கள்.

எத்தனையோ அறிவார்ந்த புத்தகங்கள் பெரியார் மன்றத்தில் குவிந்து கிடக்கின்றன. அதைப் படிக்கும் முன்பே செத்த மொழியைப் புகுத்தி அதிலே நீ செய்த சிலைகளையும் அதற்காக தொகுத்த கற்பனைக் கதைகளையும் படிக்க வைத்து மீளவும் கற்காலப் பயணத்துக்கு ஆட்படுத்த உள்ளார்கள்.

எனக்கென்ன எனக்கென்ன என்று நீயிருந்தால் உன் சந்ததிகள் அல்லல்படும் என்பதை அறிவாயா? இப்போது இருக்கும் கல்விமுறையில் மாற்றம் என்ற பெயரில் செத்த மொழி சமஸ்கிருதத்தைத் திணிப்பதால் என்ன நன்மை ஏற்படப் போகின்றது?

கர்நாடகா மற்றும் கேரளா அரசுகள் மூடநம்பிக்கையை ஒழிக்க சட்டம் செய்ய முன்வந்துள்ள இன்றைய நிலையில் தமிழ்நாடு என்ன செய்யப் போகிறது? -

மா. சென்றாயன், தருமபுரி

Read more: http://viduthalai.in/page-1/94845.html#ixzz3Pk1EtE00

தமிழ் ஓவியா said...

ஒரு மருத்துவர் பார்வையில்....

(அ. உசேன் மஸ்தான் விஙிஙிஷி., ஞிளி., வி.கி., (தமிழ்) இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் (நிறைவு) கண் மருத் துவர், சஞ்சிதா மெடிக்கல்ஸ் அறந் தாங்கி புதுக்கோட்டை மாவட்டம்).

பொருள்: திருமணப் பொருத்தம் - _ மருத்துவப் பரிசோதனை பார்வை: 28.8.2014 விடுதலை வியாழன்
ability is of little account without opportunity
பார்ப்பானை ஒழிக்க தமிழர்களால் ஒருக்காலும் முடியாது.

தமிழர்களை ஒழிக்க பார்ப்பான் தேவையில்லை. தமிழர்களே ஒருவருக்கொருவர் அடித் துக் கொண்டு வீழ்ந்து விடுவார்கள். பணம், பதவி, புகழ், மது, மாது ஒரு இலட்சம் கால வரலாற்றை உற்று நோக்கும் போது தமிழர்களிடம் இதற்கென்ற மரபணு இருப்பதாக என் சிந்தனைக்குத் தென்படுகிறது.
அதிர்ந்து விடாதீர்கள்.

ஒரு காரணத்திற்காக முகம் இதழுக்கு எழுதினேன். இதைச் சொல் லுவதற்கு எனக்குத் தகுதி இல்லைதான். ஏதோ எடுத்த எடுப்பில் நான் சொல்லவில்லை.

அடிப்படையில் நான் ஓர் அறிவிய லாளன். மருத்துவப் படிப்பு படித்தவன். பெரிய மேதைகளோடோ உலக அரசியல் தலைவர்களின் பழக்கமோ எனக்குக் கிடையாது. கிட்டத்தட்ட 120 புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துள்ளேன்.

மருத்துவப் படிப்பின் இயல்புதான் எனக்குக் கை கொடுத்தது. கற்றது கடுகளவுதான். பொது மக்களின் தொடர்புதான் எனக்கு படிப்பினை கொடுத்தது. பாமர மக்களிலிருந்து உலகப் பெரிய தலைவர்களின் எண் ணங்கள் ஒன்றாகவே இருக்கின்றன. அவர்களுடைய சூழ்நிலை புகழைத் தந்தது. உழைப்பு அவர்களுக்கு முன் னேற்றத்தைக் கொடுத்தது. அவ்வளவே இந்தக் கடிதம் எழுதுவதற்குக் காரணம்?

சிறுபிராயத்திலே பார்ப்பனர்களிடம் பழகியவன். பள்ளிப் பருவத்தில் மணப்பாறை அஞ்சலகத்தில் கூலி வேலை செய்தவன். நான் தடுமாற்றம் இல்லாமல் படிப்பதைப் பார்த்து கீழ் மட்டப் பணியாளர்கள் என்னை விடுதலையை வாசிக்கச் சொல்லி பத்து பேர்கள் காது தாழ்த்தி கேட்பார்கள். அடுத்த நாள் விடுதலையை துப்பறியும் நாவல் போல் ஆர்வமுடன் கேட் பார்கள்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாக அறந்தாங்கி தி.க. செயற்குழு உறுப்பினர் கண்ணுச்சாமி அய்யா. அவர்களின் இல்லத் திருமண விழாவில் ஆசிரியர் தலைமையேற்று நடத்தியபோது வாழ்த் துரை வழங்கியதில் நானும் ஒருவன்.

அப்போது நான் திருமணப் பொருத்தம் மூடத்தனமானது அறிவியல் - மருத்துவப் பொருத்தம்தான் நன்மை யானது என்றேன். நான் இந்த விஷயத் தில் வெட்டு, குத்து, கொலை ஆகிய வற்றில் (Post Mortem) செய்து கோர்ட் டில் விளக்கம் கொடுக்கப் போவேன்.

நான் பல இடங்களில் அறிவியல் உண்மைகளைச் சொல்லி கூட்டமாக என்னை வெட்ட வந்து விடுவார்கள் -_ நான் தப்பியோடி உயிர் பிழைத்தது உண்டு.இந்த பேச்சைக் கேட்டு இந்த மாதிரி எந்த டாக்டரும் சொல்லியதில்லையே என்றீர்கள்.

கொலம்பஸ்ஸுக்கு ஸ்பெயின் நாட்டு அரசு உதவ முன் வரவில்லை. இராணி யின் அனுமதி கேட்டு அவரிடம் வாக்குறுதி பெற்று அமெரிக்கா சென்று வந்த பிறகு பலவற்றைக் கொடுத்தார். SYPHILIS என்ற பால்வினை நோய் பரவுவதற்குக் காரணமானார். இந்த நோய் இராஜபிளவை என்றும் அரச பரம்பரைக்குத் தான் வரும் என்று பெருமையாகப் பேசிக் கொள்வார்கள். பெருமையுடனிருப்பார்கள்.

300 ஆண்டுகளுக்குள் இது பாமர மக்களிடையே பரவ ஆரம்பித்தவுடன் மருத்துவர்கள் ஆராய ஆரம்பித்தார்கள். இதற்கிடையே மனைவிமார்கள்மீது சந்தேகப்பட்டு பல கொலைகள் நடந் தன. பலர் நோயினால் பைத்தியமாக திரிந்தார்கள். PENICILLIN கண்டுபிடித்த தின் பின் நோய் குறைந்தது. மரணம் தள்ளிப் போடப்பட்டது. மக்கள் பெருக்கம் அதிகமாகியது.

மருத்துவத் துறையைப் பொறுத்த மட்டில் பாமரன் மேதை தலைவன் என்று எல்லோருக்கும் ஒரே எண்ணம் தான் அதில் கடுகளவும் பொய்யில்லை.

உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் 25 ஆண்டுகளுக்கு முன் திருமணத்தில் கலந்து கொண்ட வயதானவர் அன்று ஏளனமாய் சிரித்ததுபோல் சட்டத் துறையிலுள்ளவர்களுக்கும் பைத்தியம் பிடித்து விட்டது போலிருக்கிறதே என்றார். நான் என்ன ஒரு சுண்டைக் காய்தான்.

சார்லஸ் டார்வின் -_ மென்டல் - தற்போது பால்நர்ஸ் என்ப வர்கள் படாத அவமானமா நான் அடைந்து விட்டேன்? ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். சமயக் கருத்துக்கு மாறுபட்டா சொன்னேன். பிழைக்கத் தெரிந்த பார்ப்பனர்கள்தான் கெட்டிக்காரர்கள்.

தமிழர்கள் எப்போ துமே மற்றவர்களுக்கு அடிமையா யிருந்து, கசையடி பெற்றுப் பழகிப் போனவர்கள். மரபணுவின் செய்வது தந்தை பெரியாரைவிட பாடுபட்டவர் கள் யாருமில்லை. அவரையே தூக்கி எறிந்து பேசுகிறார்கள் மருத்துவர்கள்.

இன்னும் எவ்வளவோ இருக்கிறது சொல்ல நேரமும் இடமும்தான் இல்லை. முயற்சி திருவினையாக்கும் என்று காலத்தைத் தள்ளிக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

Read more: http://viduthalai.in/page-1/94891.html#ixzz3Pk2hwL2G

தமிழ் ஓவியா said...

திராவிடர் திருநாள் ஏற்படுத்திய திருப்பம்

சென்னை லயோலா கல்லூரியில் சமூகவியல் இரண்டாம் ஆண்டு மாணவர் கி.விக்னேஷ், சிவகங்கை மாவட்டம் தேவரம்பூர் கிராமத்தைச் சார்ந்தவர். இவர் அகில இந்திய தேசிய மாணவர் படையில் சேர்ந்து முகாம்களில் பல பயிற் சிகளைப் பெற்றுள் ளவர்.

தமிழகம் முழுவதும் ஏழு முகாம்கள் நடை பெற்ற ஆறு பயிற்சிப் பிரிவுகளில் பயிற்சி பெற்றவர். காலாட்படை ஓட்டம் (Thalsanik), சுடுதல் பயிற்சி (Firing), சுத்தம் மற்றும் சுகாதாரம் (Health & Higene), நில யுக்தி (Field Craft), போர் யுக்தி(Battle Craft), முகாம் அமைத்தல் (Tent Fixing) உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றுள்ளவர்.

தமிழகத்திலிருந்து தேசிய அளவி லான டில்லியில் நடைபெற்ற முகா முக்கு தேர்வு செய்யப்பட்டவர்.
அகில இந்திய அளவில் டில்லி யில் தல்சானிக் முகாம் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற ஏழு முகாம் களிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர் கி.விக்னேஷ்.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் திருநாள் விழாக்கொண்டாட்டங்களில் பங்கேற்று பெரிதும் உற்சாகம் அடைந்துள்ளார். அவர் கூறும்போது, "என் தலைமுறையில் உள்ள மக்களுக்கு மதம், ஜாதி போன்றவைகளிலி ருந்து விடுபட பகுத்தறி வுடன் அடக்குமுறை, ஒடுக்குமுறைகளுக்கு எதிராக செயல்படும் நோக்கோடு நான் இப்பயிற்சியை மேற் கொண்டு, இப்போது பயணப்பட்டுக் கொண் டிருக்கிறேன். இது ஒரு நீண்ட பயணம்.

என் சார்ந்த பகுதி, கலாச்சாரம் சார்ந்த மக்களுக்கு பகுத்தறிவு குறைவாக உள்ள மக்களிடம் சென்று பெரியார் அளித்த சுயசிந்தனை, விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். என்னை ஆட்கொண்டிருக்கும் தந்தை பெரியாரின் பணியைத் தொடருவேன்" என்று உறுதிபடக் கூறினார்.

இவரைப் போன்று ஏராள மான இளைஞர்கள், மாணவ _ மாண வியர்கள் பெரியார் திடலில் மூன்று நாள்கள் (ஜன.16,17,18) நடைபெற்ற திராவிடர் திருநாள் கொண்டாட்டத் தில் கலந்து கொண்டு இத போன்ற உணர்வினை பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-1/94896.html#ixzz3Pk39UtLB

தமிழ் ஓவியா said...

திருவள்ளுவர் நாள் ஊர்வலம் துவக்கி வைக்க கருநாடக முதல்வர் சித்தராமையா ஒப்புதல்பெங்களூரு, ஜன.23- பெங்களூருவில், திருவள் ளுவர் நாள் ஊர்வலத்தை, கர்நாடக முதல்வர் சித்த ராமையா துவக்கி வைக்க உள்ளார்.பெங்களூரு தமிழ் சங்கமும், பெங்களூ ருவிலுள்ள அனைத்து தமிழ், தமிழர் அமைப் புகள் இணைந்து, ஆண்டு தோறும் திருவள்ளுவர் தின ஊர்வலம் நடத்தப் படுகிறது. இந்தாண்டு, பிப்., 1ஆம் தேதி காலை, திருவள்ளுவர் தின ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, வரும் பிப்., 1ஆம் தேதி, நடக்கும் திரு வள்ளுவர் தின ஊர்வ லத்தை துவக்கி வைக்க, முதல்வர் ஒப்புதல் தெரி வித்து உள்ளார். அனைத்து தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பெரும் எண்ணிக்கையில் மக்களை திரட்டி, ஊர்வலத்தை சிறப்பாக நடத்த உள்ளன.

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவின் கொள்கை

பகுத்தறிவு வாரப் பத்திரிகையின் முதல் மலர் 26.9.1934 ஞாயிறு வெளியாகின்றது என்றாலும், அதன் கொள்கை களைப் பற்றி குடிஅரசு ரிவோல்ட் பகுத்தறிவு (தினசரி) ஆகிய பத்திரிகைகளின் அபிமானிகளுக்கும் வாசகர் களுக்கும் எடுத்துக் கூற வேண்டியதில்லை.

சுருக்கமாக ஒரு வாக்கியத்தில் சொல்லித் தீர வேண்டுமானால் பகுத்தறிவு தோன்றலானது இன்றைய உலக வழக்கில் இருந்து வரும் காரியங்களில் பெரும் பான்மை மக்களால் முதன்மையானதாகவும், இன்றி யமையாதனவாகவும் கருதப்படும்.

எங்கும் நிறைந்த இறைவனை வாழ்த்தவோ, எல்லாம் வல்ல மன்னனை வாழ்த்தவோ, யாதினும் மேம்பட்ட வேதியனை வணங்கவோ, ஏதும் செய்யவல்ல செல்வ வானை வாழிய செப்பவோ கருதி அல்ல வென்பதே யாகும்.

மேலும் மனித சமூகத்தில் மௌட்டியத்தால் ஏற்பட்ட துரபிமானங்களாகிய கடவுள், ஜாதி, மதம், தேசம், நான், என்பன போன்ற அபிமானங்களை அறவே ஒழித்து மனித சமூக ஜீவாபிமானத்தையும், ஒற்றுமையையும் பிரதான மாய்க் கருதி உழைத்து வரும் என்றும் சொல்லுவோம்.

இத்தொண்டாற்றுவதில் பகுத்தறிவு வேதத்திற்கோ, விமலத்திற்கோ, சாத்திரத்திற்கோ, பழக்கத்திற்கோ, பழமைக்கோ, புதுமைக்கோ, அடிமையாகாமல் கொள்வன கொண்டு தள்வன தள்ளி தானே சுதந்திரமாய் தன்னையே நம்பி தனது அறிவையும் ஆற்றலையுமே துணைக் கொண்டு தன்னாலான தொண்டாற்றி வரும்.

முடிவாய் கூறுமிடத்து பகுத்தறிவு மனித ஜீவாபி மானத்துக்கு மக்களை நடத்திச் செல்லுமே ஒழிய எக் காரணம் கொண்டும் மக்கள் பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வில் உயிர் வாழாது என்பதேயாகும்.

-தந்தை பெரியார்
பகுத்தறிவு 26.8.1934

Read more: http://viduthalai.in/page1/94822.html#ixzz3Pk5nMAUQ

தமிழ் ஓவியா said...

கடவுள் செய்த துரோகம்


ஒரு திருடனைப் பற்றியும் அவன் செய்த வித்தியாசமான திருட்டைப் பற்றியும் ஒரு ருசிகரமான கேஸ் குஜராத்தைச் சேர்ந்த போலீஸ் கையில் சிக்கியிருக்கிறது. சூரத் நகரிலிருக்கும் ப்ரோ இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி என்ற ஒரு நிறுவனத்தின் முத்திரையிடப்பட்ட 20 லட்சம் ரூபாய் செக் ஒன்று காணாமல் போய் விட்டது; அல்லது திருட்டுப் போய் விட்டது.

அதையடுத்து வங்கியிலிருந்து பணத்தை எடுப்பதற் காகத் தேவையான ஒரு போலி முத்திரை அல்லது சீல் தயாரிக்கப்பட்டு திருட்டுக் கையெழுத்துடன் ரூ.20 லட்சம் பணமும் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது.

இந்தக் கைங்கரியத்தைச் செய்த ஆசாமி அதே வங்கியின் ஊழியரான ராஜேஷ் குல்மி என்பவர்தான். அவர் ராஜஸ்தானிலிருந்து வேலை தேடி சூரத்துக்கு வந்தவர். பொய்ச் செக்கு எழுதி 20 லட்சம் ரூபாயைக் கையி லெடுத்துக் கொண்டு, இவர் நேரே ராஜஸ்தானிலிருக்கும் தன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார். இந்த நிகழ்ச்சி எத்தனையோ முறை மென்று துப்பிய நிகழ்ச்சி என்று தோன்றத்தான் செய்யும் நமக்கு! ஆனால் இதற்குப் பிறகுதான் இருக்கிறது டுவிஸ்ட்!

20 லட்சம் ரூபாயைக் களவாடிச் சென்ற ராஜேஷுக்கு தான் எங்கே யாவது போலீசில் மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் இருக்கத்தானிருந்தது. எனவே அவர்தன் பாதுகாப்பிற்காக, தன் ஊருக்கு எல்லையிலிருந்த ஒரு பிரசித்தி பெற்ற கோவிலுக்குச் சென்று, 2 லட்சம் ரூபாய் நோட்டுகளை அங்கேயிருந்த உண்டியலில் போட்டு, கடவுளே! ப்ளீஸ்! என்னை எப்படியாவது காப்பாத்த வேணும்! என்று பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டார்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் அவர் கடவுளுக்குப் ப்ரொட்டெக்ஷன் மனி அதாவது பாதுகாப்பு ஊதியம் கொடுத்து விட்டார். இப்படிக் கடவுளுக்கே லஞ்சம் கொடுப்பதில் அவருக்குத் துளியேனும் மனசாட்சி உறுத்தவில்லை. வெட்கமும் தோன்ற வில்லை.

இந்தக் கேசின் விவரத்தைக் கேட்ட ஒரு மூத்த க்ரைம் ரிப்போர்ட்டர் அல்லது பத்திரிகை நிருபர் ஒருவர். தமாஷாக ஒரு கமெண்ட் அடித்தார். 2 லட்சம் ரூபாயைக் கடவுளுக்குக் கொடுத்ததற்குப் பதிலாக போலீசுக்குக் கொடுத்திருந்தால் கேஸே இல்லாமல் போயிருக்கும்! சரியான முட்டாள் ஆசாமி! என்று அவர் திருவாய் மலர்ந்தருளினார்.

இந்தக் கேசின் முடிவு என்னவென்றால் போலீஸ் ராஜேஷைக் கைது செய்து அவரிடம் மிச்சமிருந்த 18 லட்சம் ரூபாயைக் கைப்பற்றியது. கோவில் உண்டிப் பெட்டியிலிருக்கும் பாக்கி 2 லட்சம் ரூபாயையும் மீட்கும் முயற்சியில் அது இறங்கியுள்ளது. ஏனெனில், உண்டியலில் போடப்பட்ட அந்தப் பணம், போலீசைப் பொறுத்த வரைக்கும் திருட்டுச் சொத்து அல்லவா?

ராஜேஷ் இப்போது சிறையில் கையைப் பிசைந்த வண்ணம் உட்கார்ந்திருக்கிறார். பாவம்! கடவுள் அவருக்குத் துரோகம் செய்து விட்டார்.

குறிப்பு: கடவுள் பக்தி உள்ளவன் ஒழுக்கம் எந்தத் தரத்தில் உள்ளது பார்த்தீர்களா! பாக்யா டிச.30.2011 - ஜன 5 - 201

Read more: http://viduthalai.in/page1/94823.html#ixzz3Pk5waeuF

தமிழ் ஓவியா said...

நாத்திகர்களே தேவை!


இந்துக்கள் தங்களுடைய மதமே சிறந்தது எனக் கருதுகிறார்கள். முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் தர்மமே மேலானது என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் நாம் எந்த மதத்தைத் தழுவுவது என்று அக்பர் ஒருமுறை கேட்டதாக கிறிஸ்துவப் பாதிரிகள் சொல்லுகிறார்கள். அக்பருடைய கேள்வி நியாமானது. ஆனால், அது கிறிஸ்துவ பாதிரிகளுக்கு பிடிக்கவில்லை.

தங்கள் குறிப்பேட்டில்,

எல்லா நாஸ்திகர்களுக்கும் உரிய பொதுவான குற்றம் அக்பரிடத்தும் காணப்படுகிறது. நாஸ்திகர் தங்கள் படித்தறிவை மத நம்பிக்கைகளுக்கு கீழ்ப்படுத்த மறுக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஒரு நாஸ்திகனுக்குரிய லட்சணம் இதுவாயின் இத்தகைய நாஸ்திகர்களின் தொகை பெருகுவதால் நாட்டுக்கு நன்மையே தவிர வேறில்லை.

-ஜவகர்லால்நேரு
உலக சரித்திரம், பக்கம் 157

Read more: http://viduthalai.in/page1/94825.html#ixzz3Pk67GuZz

தமிழ் ஓவியா said...

முதல் பெண் அய்.எப்.எஸ்.

பெண்களில் முதல் அய்.எப்.எஸ். அதிகாரி இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளராகவும் இருந்தவர். அதுவும் பிற் படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் (கருநாடகம்) என்றால் பலருக்கும் ஆச்சரி யமாக இருக்கலாம் - இந்தத் தகவல் சிலருக்குப் புதிதாகக் கூட இருக்கக் கூடும்.

அவர் பெயர் சி.பி. முத்தம்மா (1924-2009) 1949இல் இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த போது அவர் சந்தித்த சவால்கள் சாதாரணமான வையல்ல!

திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்தபோது, சட்ட விதிகள் சல்லடம் கட்டி எதிர் நிலையில் நின்றன. திரு மணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் வெளி யுறவுத்துறை செயலாளர் பதவியில் இருக்கக் கூடா தாம்! பாரத மாதாவின் மடியில் குடி கொண்டிருந்த விதிகளைப் பார்த்தீர்களா? அய்.எப்.எஸ். படித்து வெளியுறவுத்துறை செயலாளராகவும் ஒளி விட்டவர் அல்லவா? விடுவாரா? உச்சநீதிமன்றம் சென்றார்; நல்ல வாய்ப்பாக அந்த வழக்கை விசாரித்தவர் வி.ஆர். கிருஷ்ணஅய்யர்.

விதி எண் 8(2) தடைச் சுவர் எழுப்புவதைக் கண்ட நீதிபதி ஏளனமாகச் சிரித்தார்.

தனது சிந்தனைக் கூட்டி லிருந்து சில அம்புகளை எடுத்து வீசினார். ஒரு பெண் அதிகாரி திருமணத்துக்கு முன்னர் அரசின் அனு மதியைப் பெற வேண்டு மென்றால், ஓர் ஆண் அதிகாரியும் அத்தகைய அனுமதியைப் பெற வேண்டாமா!? தமது குடும்பப் பொறுப்பு காரணமாக ஒரு பெண் தன் அலுவலகப் பணிகளைச் சரி வர செய்யாத நிலை என்றால், அதே காரணம் ஓர் ஆணுக் கும் பொருந்த வேண்டாமா? என்று வினா தொடுத்த நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய் யர் - அரசமைப்புச் சட்டத் தின் முரண்பாட்டையும் ஒரு மொத்து மொத்தினார்.

இந்த விதி அரசியல் சாசனத்தின் 16ஆம் பிரிவுக்கு முரணானது என்பதையும் சுட்டிக் காட்டினார்.

பெண்கள் பலவீனமான வர்கள் என்ற மனோ நிலை கொண்ட ஆணாதிக்கக் கலாச்சாரத்தின் தொடர்ச்சி தான் இந்த பாகுபாடு சுதந்திரமும், நீதியும் - ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதே! அரசியல் சாசனம் கூறும் சம நீதித் தத்துவத்திற்கு இந்த விதி முறைகள் எதிரானவை என்றும் இடித்துக் கூறினார் நீதிபதி.

35 ஆண்டுகள் அரசு பணியில் சிறப்பாகப் பணி யாற்றி முத்திரை பொறித்தார் முத்தம்மா.

நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் முன்னிலையில் இந்தவழக்குச் செல்லாமல், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவி ருந்த ரெங்கநாத் மிஸ்ரா போன்றவர்களிடம் சென்றி ருந்தால் என்னாகும்?

பெண்கள் வீட்டு வேலை செய்வதில்தான் திறமையானவர்கள்; ஆண்களோடு போட்டிப் போட்டுக் கொண்டு அரசுப் பணிகளுக்கு வர ஆசைப்படக் கூடாது என்று பிரம்ம குமாரிகள் மாநாட்டில் பேசிய துண்டே! (8.11.1996)

- மயிலாடன்

குறிப்பு : முத்தம்மா அவர் களின் பிறந்த நாள் இந்நாள் (1924)

Read more: http://viduthalai.in/e-paper/94874.html#ixzz3Pk7S9ccG

தமிழ் ஓவியா said...

காஷ்மீர் தலைமை நீதிபதி

ஜஸ்டீஸ் பால்வசந்தகுமாரை பாராட்டுகிறோம்

சென்னை உயர்நீதி மன்ற மூத்த நீதிபதியான ஜஸ்டீஸ் திரு. பால்வசந்த குமார் அவர்கள் ஜம்மு - காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் பெற்று, வரும் 2.2.2015 அன்று காஷ்மீர் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கிறார் என்பது அனைத்துத் தரப்பினரும் மகிழ்ந்து, வரவேற்கும் ஒரு நல்ல செய்தியாகும்.

தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டத் தில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த இவர், தனது அறிவு, ஆற்றல், நுண்ணறிவு, மனிதநேயம், சமூக நீதிப் பார்வைகளால், பல்வேறு விரைந்த தீர்ப்புகள்மூலம் தனக்கென்று ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் ஆவார்!

தகுதி திறமை என்பது உழைக்கும் எவர்க்கும், நேர்மையாளர்களுக்குக் கிட்ட வேண்டிய பரிசு என்பதை நிரூபித்துள்ளார்.

மற்ற சக அமர்வில் உள்ளவர்களின் பைசலை (Disposal) விட மிகவும் விரைந்து அதிகமாக வழக்குகளை முடித்து சாதனை சரித்திரம் படைத்த இவருக்கு நமது வாழ்த்துகள் - பாராட்டுகள்!

இவர் உச்சநீதிமன்றம் போன்ற அமைப்புகளிலும் இடம் பெற்று, நீதித் துறைக்குப் பெருமை சேர்ப்பார் என்று நம்புகிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


சென்னை
24-1-2015

Read more: http://viduthalai.in/e-paper/94886.html#ixzz3Pk7mGDFU

தமிழ் ஓவியா said...

சிறீரங்கம் தேர்தலில் தனித்து விடப்படும் பா.ஜ.க.?!

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழக கட்சிகளில் முக்கியமான (வைகோவின்) ம.தி.மு.க. ஏற்கெனவே வெளியேறிய பின்னர்,

சிறீரங்கத்தில் பா.ஜ.க. தனி வேட்பாளராக நிறுத்தியுள்ளதன் மூலம், அக்கூட்டணியிலிருந்து தே.மு.தி.க. என்ற விஜயகாந்த் கட்சி வெளியேறுவது உறுதியாகி விட்டது!

பா.ம.க. சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என்பதால் அதுவும் ஏறத்தாழ வெளியேறிய நிலைதான்! அதிகார பூர்வ அறிவிப்பு பிப்ரவரி ஒன்றில் வெளியாகக் கூடுமாம்!

அந்தோ பரிதாபம் விவீமீபீ சிணீறீறீ - கொடுத்தே இனிமேல் இக்கட்சி பலம் பெறுமாம்!

வாக்காளர் ஆதரவும் மிஸ்டு கால் மூலம் தானா? என்று கேட்கிறார் சிறீரங்கத்து வாக்காளர் ஒருவர்!

Read more: http://viduthalai.in/e-paper/94884.html#ixzz3Pk7t24pu

தமிழ் ஓவியா said...

அரசுப் பேருந்தில் ஹிந்துமத மாநாட்டு விளம்பரமா?


அரசு நிர்வாகம் சாதி,மத பேதங்களுக்கு அப் பாற்பட்டு இருக்க வேண்டும். அரசுநிர்வாகத்தில் மதத்தையோ, சாதியையோ இணைக்கக் கூடாது என்பது விதிமுறை. ஆனால் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகத்தின் உடுமலை பணிமனைக்குட்பட்ட அரசு பேருந்தில் ஒரு மதத்தின் மாநாடு குறித்த விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.அந்த விளம்பரத் திற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசு நிர்வாகம் அதனை அனுமதித்திருக்கிறது. ஏற்கெனவே தலைவர் களின் பெயரில் ஓடிய பேருந்துகளில் கூட சாதிய அடையாளம் காணப்பட்டு பிரச்சினை உருவானது.

அது தமிழகத்தின் சட்டஒழுங்கு பிரச்சினையான பின்பு, அனைத்துக் கட்சிகளின் முடிவிற்கேற்ப, அனைத்து அரசுபோக்குவரத்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற ஒரே பெயரில் இயக்கப்படுகிறது. ஆனால் தற்போது புதியதாக மதத்தின் பெயரால் இன்னொரு சட்ட ஒழுங்கு பிரச்சினையை உருவாக்க உடுமலை அரசு போக்குவரத்து பணிமனை வழி காட்டுகிறதோ ? என்ற அய்யம் உடுமலை பகுதி மக்களிடம் எழுந் திருக்கிறது. அரசு போக்குவரத்து கழக தலைமை நிர்வாகம் இதனை கவனிக்கின்றதா?

Read more: http://viduthalai.in/e-paper/94885.html#ixzz3Pk808l2I

தமிழ் ஓவியா said...

உயிருக்கு குறி வைக்கும் இரசாயன ஆலைகள்


ஆலைகள் அவசியம் தான்; அவற்றின்மூலம் உற்பத்திகள் பெருகுகின்றன, பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது, வேலை வாய்ப்பும் விரிவடைகிறது. அதே நேரத்தில் அவை சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதற்கு இடம் தரக் கூடாது அல்லவா?

விதி முறைகள் ஏராளம்இருந்தும், அவை கடைப் பிடிக்கப்படுவதில்லை என்பதுதான் வேதனையான செய்தியாகும்.

ஆலை முதலாளிகளின் கவனிப்பில் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாற்று இன்னொரு பக்கத்தில்; எது எப்படி இருந்தாலும் இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பொது மக்கள்தான்.

இந்த ஆலைக் கழிவுகள் பெரும்பாலும் நதிகளில் கலந்து விடுகின்றன; இதனால் பாதிக்கப்படுவது சுற்றுச் சூழலும், பொது மக்களும் கால் நடைகளும் தான்.

நீதிமன்றங்கள் பற்பல நேரங்களில் கடுமையான தீர்ப்புகள், ஆணைகள் வழங்கிக் கொண்டு தானிருக் கின்றன! ஆனால் அவற்றையும் கண்டு கொள்வ தில்லை; சட்ட ஆட்சி எந்தத் தரத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறது என்பதற்கு இவை எல்லாம் கண்ணிறைந்த சாட்சியங்களாகும்.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் அருகே தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் (DCW)என்ற அமில ஆலை ஒன்று செயல்பட்டு வருகின்றது.

இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் காஸ்டிக் சோடா, பி.வி.சி., சி.பி.வி.சி. போன்றவை; இவற்றின் மூலப் பொருள் பாதரசம் ஆகும்.

எந்த விதிமுறைகளையும், கட்டுத் திட்டங்களையும் பற்றிக் கவலைப்படாமல் இந்த ஆலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டும் வருகிறது.

இந்த ஆலைகளில் தேக்கி வைக்கப்படும் டிரை குளோரோ எதிலின், அயன் ஆக்சைடு, காட்மியம் போன்ற ஆபத்தான செந்நிறம் கொண்ட ரசாயன கழிவுகள் ஆலைக்கு அருகில் உள்ள காயல்பட்டணம் கடலில் கலக்க விடப்படுகின்றன.

இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள், குறிப்பாக மீன் வளம் மிகக் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகி வருகிறது.

காயல் பட்டணம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் கொடிய நோய்களுக்கும் ஆளாகின்றனர். சுவாசக் கோளாறுகள், புற்று நோய் போன்ற நோய்களின் தாக்குதலுக்கு இரையாகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு மனு கொடுத்து, மனு கொடுத்து ஓய்ந்தும் போய் விட்டனர். பல்வேறு அமைப்புகள் முற்றுகைப் போராட்டங் களைக்கூட நடத்திப் பார்த்து விட்டனர். கடையடைப் புகள் எல்லாம் நடந்தும் இருக்கின்றன - அரசோ அசையவில்லை.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்த ஆலைக்குத் தேவையான தண்ணீரைத் தாமிரபரணியிலிருந்து பெற்றுக் கொள்ள தமிழ்நாடு அரசிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 3 லட்சம் கேலன் தண்ணீர் பயன்படுத் தப்படுகிறது. அதற்கான கெடு முடிந்தும்கூட தாமிரபரணி தண்ணீரை அந்த ஆலை சட்ட விரோத மாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாம்.

நாட்டின் போக்கு எப்படி இருக்கிறது? மக்களின் உயிர் என்பதுதான் இந்த நாட்டில் மிகவும் மலிவான பொருள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்!

எடுத்துக்காட்டுக்கு இதனைக் குறிப்பிடுகிறோம். பெரும்பாலான ஆலைகளில் கழிவுகள் நீரில் கலக்கப் படுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கடுமையானசட்ட திட்டங்களும், செயல்பாடுகளும் கண்காணிப்புகளும் மிக மிக தேவை என்று வலியுறுத்துகிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/94870.html#ixzz3Pk8Yoeiz

தமிழ் ஓவியா said...

இந்துமதப் போர்வைக்குள் பார்ப்பனிய பாம்புகள்!...

நடந்து முடிந்த திமுக பொதுக்குழுவில் அதன் பொதுச்செயலாளர், இனமானக் காவலர் பேராசிரியர் அவர்கள், பெரும் பான்மை மக்களின் ஆதர்ஷபுருஷனாகக் கருதப்படும் ராமனை ஏடா கூடமாக விமர்சித்து விட்டார் என கோபக்கனலை அள்ளி வீசி இருக்கிறது ஒரு பார்ப்பன ஏடு.

இது அந்த ஏட்டின் குரலல்ல; பார்ப் பனியத்தின் பாசீசக்குரல்! ராமனுக்குப் பிறந்தவர்கள்தான் இந்துக்கள், ஏனையோர் முறை தவறிப் பிறந்தவர்கள் என வாய்க் கொழுப்போடு பேசிய பா.ஜ.க. எம்.பியைக் கண்டிப்பதற்கு யோக்கியதை இல்லாத அந்த ஏடு, ராமன் என்ன ஜல்லிக்கட்டு காளையா? எனப் பேராசிரியர் பேசியதை மட்டும் ஆவேசத்தோடு கண்டித்திருப் பதைப் பார்க்கும்போது அய்யாவின் பேச்சுதான் நினைவுக்கு வருகிறது.

ஆரியரும், திராவிடரும் ஒற்றுமையாக இருக்க முடியாதா? என அய்யாவைக் கேட்டதற்கு அவர் சொன்னார்.

நெசவாளியும், குரங்கும் ஒற்றுமையாக இருக்க முடியுமா? நெசவாளி நெய்து கொண்டே இருப்பான்; குரங்கு இழைகளை அறுத்துக்கொண்டே இருக்கும். எப்படி ஒற்றுமை ஏற்பட முடியும்? என அன் றைக்கே அய்யா அவர்கள் ஆணித்தர மாகக் கூறினார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை என்பதைத்தான் இன்றைய அந்த பார்ப்பனிய ஏடு விளக்கி இருக்கிறது!...

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ் சாது என்பதை அந்தப் பார்ப்பனிய ஏடு புரிந்து கொண்டால் சரி!... பார்ப்பனியக் கோட்டை அய்யாவின் பகுத்தறிவு ஏவு கணைத் தாக்குதல்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சரிந்துவரும் வேதனையைத் தாங்கிக்கொள்ள வழியின்றித் தனது வயிற்றெரிச்சலை வார்த்தைகளாகக் கொட்டித் தீர்த்திருக்கிறது.

இளமையிலேயே வசிஷ்டருக்குத் தாதாவேலை செய்தவனை சொந்தமாகச் சிந்திக்கத் திறனற்று எவனோ சொன்னான் என்பதற்காக தனது சொந்த துணைவியின் மீதே சந்தேகப்பட்டு கர்ப்பிணி என்று கூடப் பாராமல் காட்டுக்குத் துரத்திய காருண்ய சீலனை! கடவுளின் அவதாரம் எனச் சொல்லிக் கொண்டு மானுக்கும், மாயமானுக்கும் வேறுபாடு தெரியாமல் இருந்த ஒரு கருத்துக்குருடனை, புராணம் என்றும் இதிகாசம் என்றும், வேதம் என்றும், பாமர மக்களை ஏமாற்றி இன்ன மும் அவர்களைச் சுரண்டிப்பிழைக்க நினைக்கும் ஒரு எத்தர் கூட்டம் இப்படி ஆணவத்தோடு பேசுகிறதென்றால் என்ன பொருள்? அதன் ஆதிக்கக்கோட்டை கலகலத்துப்போய்விட்டது என்பது தானே பொருள்! அய்யா ஆசிரியர் அவர்களின் தொண்டறம் வீண் போகவில்லை என்பதுதானே அர்த்தம்!

தமிழினத் தலைவர் கலைஞர் அவர் களையும், இனமானப் பேராசிரியர் அவர் களையும் குறிவைத்து பார்ப்பனியம் பாய் வதற்குக்காரணம் இப்போது மக்களுக்குப் புரிந்திருக்கும்!

சாம, பேத, தான, தண்டம் என்ற முனைமழுங்கிப்போன பார்ப்பனிய அஸ்திரத்தை மீண்டும் தமிழர்கள் மீது ஏவி அவர்களை அழித்து விடலாமென பகற்கனவு காணுகிறது பார்ப்பனியம். இந்து மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு ஏமாந்த தமிழர்களை தனது நச்சுப்பற்களால் கொத்தி மகிழத்துடிக்கிறது பார்ப்பனியம்!... அது பெரியார் பூமியிலே ஒரு காலும் நடவாது! நடக்க விடாது திராவிடர் கழகம்!!...

முள்மீது இலை மோதினாலும், இலை மீது முள் மோதினாலும் கிழிபடப்போவது இலை தானே தவிர முள் அல்ல என்பதை இனியேனும் பார்ப்பனியம் புரிந்து கொண் டால் சரி!...

- நெய்வேலி க.தியாகராசன், கொர நாட்டுக்கருப்பூர்

Read more: http://viduthalai.in/page-2/94873.html#ixzz3PkA5dsDj

தமிழ் ஓவியா said...

இத்தகைய கோவில்கள் ஏன்?


தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்த வரகூர் என்னும் கிராமத்தில் உள்ள வெங்டேசப் பெருமாள் கோவிலில் பார்ப்பனரல்லாதார் சென்று தரிசனம் பண்ணக்கூடாது என்பது பற்றி அவ்வூர் பார்ப்பனர்களுக்கும்,, பார்ப்ப னரல்லாதார்களுக்கும் நீண்டகாலமாக வழக்கு நடை பெற்றது.

கடைசியில் சென்னை ஹைகோர்ட்டில், ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டலே முன்பும் ஜஸ்டிஸ் வாலர் முன்பும் விசாரணைக்கு வந்தபோது இருவரும் வேறு வேறு அபிப்பிராயம் கொண்டனர்.

ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டலே பார்ப்பனரல் லாதாருக்கும் தரிசனம் பண்ண உரிமையுண்டு என்று அபிப்பிராயப்பட்டார்; ஜஸ்டிஸ் வாலர், பார்ப்பனரல்லா தாருக்குத் தரிசனம் பண்ணும் உரிமையில்லை என்று அபிப்பிராயப்பட்டார்; ஆகையால் கடைசியாக ஜஸ்டிஸ் வாலர் அவர்கள் அவ்வழக்கை இரண்டாம் முறையாக விசாரித்து, பார்ப்பனரல்லாதார்க்குத் தரிசன உரிமை இல்லை என்று தீர்ப்புக் கூறினார்.

இத்தீர்ப்பைப் பற்றி நமக்கு ஒரு கவலையுமில்லை. பார்ப்பனரல்லாதாருடைய தயவோ ஒத்தாசையோ இல்லாவிட்டால் எந்தக் கோயில்களும் நிலைத்திருக்க முடியாது. சோற்றை வடித்து பொங்கல் புளியோதரைகள் பண்ணி அவற்றைக் கல்லுப் பொம்மையின் முன்பு கொண்டு போய் காட்டியபின் பார்ப்பனர்கள் பங்கு போட்டு எடுத்துக் கொண்டு போகிற ஒரு காரியத்தைத் தவிர, மற்ற எல்லாக் காரியங்களையும் பார்ப்பனரல்லாதார்களே செய்து வருகின்றார்கள்.

இத்தகைய ஒரு கோயிலுக்குள், பார்ப்பனரல்லாதார் போகக் கூடாது என்று தடுத்துக் கோர்ட்டுக்குப் போகும்படி செய்த பார்ப்பனர்களின் சுய நலத்தையும் அகங்காரத் தையும் உணருகின்ற எந்தப் பார்ப்பனரல்லாதாரும், இனி இது போன்ற கோயில்கள் விஷயத்தில் எந்த வகையிலும் ஒத்துழைக்க முன்வர மாட்டார்களென்றே நம்புகின்றோம்.

ஆகையால் உண்மையில், பார்ப்பனர்களின் சுயநலத் தையும், அகங்காரத்தையும் ஒழிக்க வேண்டுமானால் முதலில் செய்ய வேண்டியது கோயில்களைப் பகிஷ்கரிக்க வேண்டிய வேலையேயாகும். தங்களுக்கு உரிமையில்லாத கோயில் சம்பந்தமான எந்த வேலைகளையும் செய்ய மறுத்து அவைகளைப் பார்ப்பனர்களே செய்து கொள்ளும்படி விட்டுவிட வேண்டும்.

இவ்வாறு கோயில்களைப் பகிஷ்கரிக்க ஆரம்பித்தால், கோயில்களே அனேகமாக ஒழிந்து போய்விடும். நமது மக்களுக்குக் கோயில்களின் மேல் உள்ள மயக்கம் ஒழிந்தால் முக்கால்வாசிமூட நம்பிக்கைகள் ஒழிந்து போகுமென்பதில் அய்யமில்லை.

ஆகையால் இனியேனும், கோயில் பிரவேசத்திற்காகப் பாடுபடுகின்ற வர்கள். கோயில்களை ஒழிக்கப்பாடு படுவார்களானால், அதனால் அதிக நலனும், பொருளா தாரச் சிக்கனமும் ஏற்படுமென்பதில் அய்யமில்லை.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 10.04.1932

Read more: http://viduthalai.in/page-6/94907.html#ixzz3PkBN5V00

தமிழ் ஓவியா said...

மொழிப் பிரச்சினையில் முன்னாள் பிரதமர்கள் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றவேண்டும் கலைஞர் கடிதம்


சென்னை, ஜன.24- மொழிப் பிரச்சினையில் முன்னாள் பிரதமர்கள் அளித்த வாக்குறுதியை இன்றைய பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றுவாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.

முரசொலியில் அவர் இன்று (24.1.2015) எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் - வீரவணக்க நாள் - அந்த நாளை, தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடித்து வருகிறோம். அந்த நாளில் தமிழகத்தின் ஒவ்வொரு நகரிலும், கழகப் பேச்சாளர்கள் கலந்து கொண்டு, மொழிப் போரிலே கழகம் ஈடுபட்ட வரலாற்றை நினைவு படுத்தி வருகிறார்கள். அதுபோல இந்த ஆண்டும் தமிழகம் முழுவதிலும் வீரவணக்க நாள் கடைப் பிடிக்கப்படுகிறது.

1965 ஆம் ஆண்டு கழகம் நடத்திய அந்த மொழிப் போரின் அய்ம்பதாம் ஆண்டு நிறைவு தான் 2015. அதாவது மொழிப்போர் வரலாற்றின் பொன் விழா. ஆனால் அதற்கு முன்பே 1937-1938 ஆம் ஆண்டிலேயே மொழிப்போர் என்பது தொடங்கிவிட்டது. அப்போது எனக்கு வயது பதி னான்குதான். திருவாரூர் உயர்நிலைப் பள்ளியிலே நான் மாணவன்.

அப்போதிருந்த ஆட்சியாளர்கள் கல்வி நிலையங்களில் இந்தி கட்டாயப் பாடம், இந்தி படித்து அதில் போதிய மதிப்பெண் பெற்றால்தான் அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியும் என்று ஓர் ஆணையைப் பிறப்பித்தபோது, அதனை எதிர்த்து தமிழகமே போர்க்கோலம் பூண்டது. அப்போது பள்ளி மாணவனாக இருந்த நான், கையிலே ஒரு பதாகையை ஏந்திக் கொண்டு புறப்பட்டுவிட்டேன்.

அந்த நாளே, என்னை அரசியலில், பொது வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கச் செய்த நாள். என்னையும் ஒரு கவிஞனாக்கிய நாளும் அந்த நாள்தான். 1938 இல் தொடங்கிய எனது அரசியல் பயணம், இதோ 92 வயதிலும் தொடருகிறது - அதே உணர்வுகளோடு இது மேலும் தொடரும்.

நம்முடைய போராட்டத்தின் விளைவாகத்தான் இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர்கள் எல்லாம் நமக்கு வாக்குறுதி அளித்தார்கள். 1959 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7 ஆம் நாள் பண்டித நேரு கூறும்போது, (இந்தி) திணிப்பு கூடவே கூடாது. இரண்டாவதாக, காலவரம்பற்ற நீண்ட காலத்திற்கு - அது எவ்வளவு காலம் என்பது எனக்குத் தெரி யாது - ஆங்கிலத்தை கூட்டு ஆட்சி மொழியாக நீடிக்க விரும்புகிறேன்.

மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலத்தை நீடிக்க வைப்பேன். ஆங்கிலம் இனி நீடிக்கக்கூடாது என்கிற முடிவினை நான் இந்தி பேசும் மக்களிடம் விடமாட்டேன். அதை முடிவு செய்யவேண்டியது இந்தி பேசாத மக்களே என்றார்.

மீண்டும் நேரு 1963 ஆம் ஆண்டும் நாடாளு மன்றத்திலே இந்தி பேசாத மக்களின் பூரண சம்மதத்தைப் பெறுகிற வரையில் ஆங்கிலம் அல்லது இந்தி நிலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படக்கூடாது என்றார். இதே உறுதி மொழி களைத் தான் 1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதியன்று பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியும், அதன் பின்னர் இந்திரா காந்தியும் தெரிவித்தார்கள்.

ஆனால் அந்த மூன்று பிரதமர்களும் இந்தி பேசாத மக்களுக்கு அளித்த உறுதிமொழியை இன்றைய பிரதமர் நரேந்திரமோடி காப்பாற்றுவாரா? அல்லது இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பைக் கொண்டு வர முனையும் சிலருடைய தூண்டுதலுக்கு இரையாகி விடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டு வரும் நேரத்திலேதான், இந்த ஆண்டு வீரவணக்க நாள் நடைபெறுகிறது.

அந்த உறுதிமொழியை அளிக்க வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தும் நாளாக இந்த ஆண்டு அமையவேண்டும் என்பதை தமிழ் மக்களிடையே விளக்கிக் கூறுவதைத்தான் நம் முடைய பேச்சாளர்கள் நாளைய கூட்டத்தில் முக்கியமாக வலியுறுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முன்னாள் பிரதமர்களின் உறுதிமொழி, இந்நாள் பிரதமர் நரேந்திரமோடியால் காப்பாற்றப்படுமா?.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறி யுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/94922.html#ixzz3PkBeLvfi