Search This Blog

3.1.15

இதுதான் வால்மீகி இராமாயணம் - 49

இதுதான் வால்மீகி இராமாயணம்

இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.அயோத்தியா காண்டம்

பன்னிரெண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி


ஆதலின் வஞ்சகனாகிய வசிட்டன்  உண்மையைக் கூறாது பரதனை அழைத்தால் அவன் மட்டும் அயோத்திக்கு வருவான். அப்போது வேண்டுவன செய்து கொள்ளலாமென நினைத்தான். அவன் சூழ்ச்சியும் பலித்தது. பின் குடிகள் சென்று வேண்டியும் பரதன் முடிபெற மறுத்ததையும், அதற்கு முன்னரும் அவன் கோசலையிடம் வஞ்சினமுரைத்து எவ்வாற்றாளும் இராமனையழைத்து வரத்துணிந்ததையும் அறிந்திருந்துங்கூட, வசிட்டன் மறு படியும் சபை கூட்டிப்பரதனையழைத்து முடிசூட வேண்டு கிறான். இது தன்மேல் குற்றமில்லாமல் தப்பித்துக் கொள்வதற்குச் செய்த சூழ்ச்சியேயாகும். பரதன் வந்தபோது அவனுக்கு உண்மையை உரைத்து முடிசூட்ட ஏன் பார்த்திருந்தா யெனக் கேகயன் வினவினால், அப்போது வசிட்டன் அகப்பட்டுக் கொள்வான். அதனால் வசிட்ட னுடைய தீயசிந்தைகளையும் சூழ்ச்சிகளையும் உலகமறியும் போது, யாவரும் அவனை இகழ்வார்கள். இவ்வுண்மையை அறியாமலிருந்தும் பரதன் வசிட்டனை அப்போது நிந்திக் கிறான். இதனால் தீமை செய்கிறவர்கள் எவ்வாறாவது நிந்தனையடைவர் என்பது விளங்குகின்றது. இச்சூழ்ச்சி யால் வசிட்டன் மற்றொரு நன்மையுமடைகிறான். அதாவது பரதன் சபைமுன் வாக்குரைக்கச் செய்து தன்னுடைய தீய தோழனாகிய தசரதனுடைய பேராசைப்படி இராமனை யழைத்து வந்து முடி சூட்டிவிடலாம் என முனிவன் நினைத்தான். இதிலும் அவன் வெற்றி பெறுகிறான். இதனால் கேகய மன்னனுக்குத் தான் சபை கூட்டி முடிசூட்டப் போனதாகவும், பரதனே மறுத்துவிட்டன னென்றும் சமாதானம் கூறிக் கொள்ளலாம். தன்னுடைய சூழ்ச்சிகளும், தசரதன் சூழ்ச்சிகளும் மறையக்கூடும். இராமனும் அரசு பெறுவான். வசிட்டனைப் போன்ற தீயோரும உளரோ? வேறு கதைகளிலும் இதைப் போலக் கேட்டறிய முடியாதே!


பரதனிடம் கைகேயி தன் கணவன் இறக்கும்போது கூறியவற்றைத் தன்னிடம் கூறியதுபோலக் கூறுகிறாள். தசரதன் இறக்கும்போது கோசலையின் அரண்மனை யிலேயே இருந்தான். மறுநாளே அவன் இறந்தமையறிந்து அங்கே கைகேயி போகிறாள். இதனால் இவள் இச்சொற் களைப் பரதனுக்குத் திடீரென்று ஏக்கம் வராமலிருக்கும்படி உண்மையை மறைத்துக் கூறியவளாவள். இச்சொற்களை இவள் எவ்வாறு அறிந்தனளோ? இராமன் காட்டுக்குப் போய்விட்டானென்பதைக் கேட்ட பரதன், இராமன் ஏதாவது பெரிய குற்றஞ்செய்தே நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டிருக்க வேண்டுமென அய்யுற்று வினாவுகிறான். இவ்விடத்தில் மொழி பெயர்ப் பாளர் சீனிவாசய்யங்கார், இராமனுடைய கலியாண குணங் களைப் பூரணமாகவறிந்த பரதன் அப்படிச் சந்தேகப்படு வதே தகாது என்று குறித்திருக்கிறார். இது தகுமோ தகாதோ, பரதன் இராமனை விபசாரம் முதலிய கொடிய குற்றங்களைச் செய்திருப்பானோ என்று சந்தேகித்தது உண்மை. பரதன் இராமனுடைய தீயநடைகளை உணர்ந்திருந்தமையினாற் றான் அவ்வாறு சந்தேகித்தனன் போலும்! ஆனால், அவன் ஏன் இராமனை அழைத்து வந்து முடிசூட்டத் துணிகிறான்? என்றால், பரதன் வீரத்தன்மையுடையோனாயிராமல் பயங்காளியாயிருந்தான். மேலும் அவனுக்குத் தன்தந்தை செய்த வாக்குறுதியால் நாடு தனக்குரியவையானது என்ற உண்மையும், பிறப்பால் உரிமையுள்ள தன்னை வஞ்சித்துத் தன் தந்தை இராமனுக்கு நாடளிக்க முயன்ற உண்மையும் தெரியாது. அவன் உண்மையாகவே தன்னுடைய தாய் வம்புக்காரி, அவள் இராமனை வஞ்சித்துத் துரத்திவிட்டாள், அதனால் கொடிய பாவம் தனக்கு வந்து சேரும் என்று நம்பி நடுங்கினான். இவ்வாறு அவனுடைய அச்சமும் அவசரமும் அவனுக்கு மனநடுக்கத்தைத் தந்தன. மேலும் கைகேயியுங் கூட பரதனே பிறப்பால் அரசுரிமையுடையவன் என்பதை உணராளே. உணர்ந்திருப்பின் கட்டாயம் அதைக் கூறிப் பரதனைத் தன் வசப்படுத்தியிருப்பாள். இவ்விபரீதங் களினாலேயே பரதன் மிகவும் பழிக்கு அஞ்சியவனாய்த்தன் தாயைத் தாயென்றும் பாராமல் கயிறிட்டு உயிரை விடு எனப்பலவாறு தகாத முறையில் நிந்திக்கிறான். தன்னைப் பெற்ற தாயை நிந்தித்த இவன் மக்களுக்கு ஒரு வழிக்காட்டியே! இவனைப் பார்த்து உலகத்தார் நடப்பரேல், உலகம் விரைவிற் கெட்டழிவது திண்ணம். தன் தாய் தவறி நடந்தால் அவளைக் கண்டிக்கும் முறை வேறு.

பரதனைப் பார்க்க வந்த கோசலை அவனைக் கொடுமையாக நிந்திக்கிறாள். பரதன் மனம் துடிக்கிறான். அப்போது அவன் கூறியதில் தேவதைகளுக்கும் விருந்தி னருக்கும் தென்புலத்தாருக்கும் ஊட்டாமல் எவன் உண் கிறானோ, அவன் நரகமடைகிறான் என்று கூறப்படுகிறது. இதுவும் நாம் முன் கட்டுரைகளில் ஆரியரைப் பற்றிப் புலாலுண்போரென்று கூறிய உண்மையை வலியுறுத்தும். விருந்தினர் வந்தபோது புலாலுணவும், தெய்வம் தொழும் பொழுது உயிர்க்கொலையும் அவர்களுக்கு இன்றியமை யாதது. நாம் முன் கட்டுரைகளில் சீதை கங்கைக்கும் யமுனைக்கும் நேர்ந்து கொண்டபோது, பல உயிர்ப்பிராணி களை வதைத்துத் திருப்தி செய்கிறேன் என்ற வரலாறே இதற்கு இவர்களுடைய மனுநீதி சாஸ்திரம் மேற்கோளா யிருக்கிறது. மேற்கோளாகச் சிலவற்றை இங்கே அந்நாளி லிருந்து குறிப்போம்.

பிதிர்க்களுக்குத் திதி கொடுப்பதைப்பற்றி மனுஸ்மிருதி மூன்றாவது அத்தியாயம் விளங்கக் கூறுகிறது. அதில் சுலோகம் 268 இல் பாடீனசம் முதலிய மச்ச மாமிசத்தால் சிரார்த்தம் செய்தால் பிதிர்க்கள் இரண்டு மாதம் வரையிலும் திருப்தியடைகிறார்கள். அரிணமென்கிற மான் மாமிசத்தாற் செய்தால் மூன்று மாதம் வரையிலும், செம்மறியாட்டு மாமிசத்தாற் செய்தால் நான்கு மாதம் வரையிலும் திருப்தியடைகிறார்கள். சுலோகம் 269-இல் வெள்ளாட்டின் மாமிசத்தாற் செய்தால் ஆறுமாதம் வரையிலும், புள்ளி மான் மாமிசத்தாற் செய்தால் ஏழு மாதம் வரையிலும், கருப்புமான் மாமிசத்தாற் செய்தால் எட்டு மாதம் வரையிலும் கலைமான்  மாமிசத்தாற் செய்தால் ஒன்பது மாதம் வரையிலும் பறவைகளின் மாமிசத்தாற் செய்தால் அய்ந்து மாதம் வரையிலும் திருப்தியடைகிறார்கள். சுலோகம் 270 இல் முள்ளம் பன்றி, காட்டெருமைக்கடா இவற்றின் மாமிசத்தாற் செய்தால் பத்து மாதம் வரையிலும், முயல், ஆமை இவற்றின் மாமிசத்தாற் செய்தால் பதினோரு மாதம் வரையிலும் திருப்தியடைகிறார்கள். சுலோகம் 271 இல் பசுவின் பால், தயிர், நெய் இவற்றால் சிரார்த்தம் செய்தால் ஓராண்டு வரையிலும், தண்ணீர் குடிக்கும்போது இரண்டு காதும் தண்ணீரிற்படக் குடிக்கின்ற க்ஷீண இந்திரியத்தை யுடையதாகிய வார்த்தீனச மென்னும் கிழ வெள்ளாட்டுக் கடாவின் மாமிசத்தாற் செய்தால் பன்னிரண்டு ஆண்டுகள் வரையிலும் திருப்தியடைகிறார்கள்.

                          ---------------------- தொடரும்- “விடுதலை”30-12-2014
Read more: http://viduthalai.in/page-3/93615.html#ixzz3NOQVjFLd

 **********************************************************************************
இதுதான் வால்மீகி இராமாயணம்
இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.


அயோத்தியா காண்டம்

பன்னிரெண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி

சுலோகம் 212 இல் அந்தந்தக் காலத்திலுண்டான கரியமுது, முள்ளுள்ள வாளை மீன், கட்கமிருகம், சிவந்த ஆடு இவற்றின் மாமிசங்களால் செய்தால் அளவற்றநாள் வரையில் திருப்தியடைகிறார்கள். சுலோகம் 123 இல் மாதந்தோறும் செய்யத்தக்க அமாவாசிய சிரார்த்தத்தைப் புதிதாயும் நாற்றமில்லாமலுமிருக்கிற மாமிச முதலிய வற்றாலே செய்யத்தக்கது. 5-ஆம் அத்தியாயம் சுலோகம் 16 இல் ஆயிரம் பல்லுள்ள யுடீனசமென்னும் மீனும், சிவப்பு மீனும் எக்கியத்திலும் சிரார்த்தத்திலும் விதிக்கப்பட்டிருக் கிறது. கும்பலோடு சஞ்சரிக்கின்ற மீனும், சிங்கமுக மீனும், முள் மீனும் மற்ற காலங்களில் உண்ணலாமென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. சுலோகம் 18 இல் முள்ளம்பன்றி, சல்லியமிருகம், உடும்பு, காண்டாமிருகம், முயல் இவை அய்ந்து நகங்களுள்ளவையாயிருந்த போதிலும் உண்ணலாம். ஒரு பக்கம் பல்லுள்ள மிருகங்களில் ஒட்டகம் நீங்கலாக மற்றவற்றை உண்ணலாம். சுலோகம் 28-இல் பிரமன் இவ்வுலக முழுவதையும் சீவனுக்கு ஆகாரமாக உண்டு பண்ணினார். ஆகையால் நெல் முதலான தாவரமும், மிருக முதலான சங்கமமும் சீவனுக்கு ஆகாரமாகவே இருக்கின்றன. சுலோகம் 30-இல் ஆதலால் பிராமணன் புசிக்கத் தகுந்த பிராணிகளைத் தினந்தோறும் புசித்த போதிலும் பாவத்தையடைய மாட்டான். புசிக்கத் தக்கவர்களும், கொல்லத் தகுந்தவையும் பிரமனாலேயே படைக்கப்பட்டிருக்கின்றனவல்லவா?


மேலே கண்டவற்றைச் சிந்தித்தால் ஆரியர் எவ்வளவு தூரம் இழிவான அறிவுடையவர்களாயிருந்தார்களென் பதை உணரலாம். மனிதன் தின்பதற்காகவே மிருகங் களையும் பறவைகளையும் பிரமன் படைத்தானென்று அவர்களுடைய சட்ட நூலாகிய மனுஸ்மிருதியே கூறுகிறது! என்ன அநியாயம்! இவ்வளவு கேவலமான அறிவுடைய மக்களும் இருந்திருப்பார்களா? மிருகங்கள் தின்பதற்காகவே மனிதரைப் பிரமன் படைத்தான் என்று அம்மிருகங்கள் விதித்துக் கொண்டு மனிதர்களைக் கொல்லத் துணிந்தால் இம்மனு முதலிய அறிவற்ற மிருகங்கள் யாது கூறுமோ? இம்மனுவைப் பகுத்தறிவுள்ள மனிதனென்பதா, அறிவற்ற மிருகமென்பதா? இவன் பகுத்தறிவற்ற மிருகமென்பதை நன்கு நிரூபித்துவிட்ட பின்னரும் இவனை மனிதனென்று எவ்வாறு கொள்வது?


 இச்சுயநல மிருகத்தை ஒருவகுப்பார் தமது நீதி நூலாசிரியன் எனப்பாராட்டுகின்றனரே? பரிதாபம்! இதனால் இவ்வாரிய மக்கள் புலாலுண்ணுந்தன்மை மிக விவரமாகத் தெளிவாகின்றது. இதற்குச் சான்றாக இக்காலத்திலும், சென்னைமாபுரிக்கு வடக்கேயுள்ள பார்ப்பன மக்களனை வரும் புலாலுண்பவராக இருத்தலே அமையும், வடநாட்டுப் பார்ப்பனருள் புலாலுண்ணாதோர் கிடைப்பது அருமை யிலும் அருமை.
தென்னாட்டுப் பார்ப்பனரோ தமிழ் மக்களிடைக் காணப்படும் மிகச்சிறந்ததான கொல்லாமையைக் கற்றுக் கொண்டனர். அதனால் புலாலுணவையும் மறுத்தனர். ஏனெனில், அவ்வாறு அவர்கள் நடந்து கொள்ளாதிருப்பின் அவர்களைக் கேடுகெட்ட மிருகங்களாகவே தமிழ் மக்கள் மதித்திருப்பர். ஆனால் தென்னாட்டுப் பார்ப்பனரோ அடிக்கடி பல வேள்விகள் புரிந்து எண்ணற்ற ஆடுகளைக் காயடித்துக் கொன்று நெய்யிலிட்டுப் பொரித்துத் தின்கின்றனர். இதை அவர்கள் தேவதைகளுக்குப் பிரியமான செயலென்று கூறித்தமிழ் மக்களை ஏமாற்றி வந்ததோடு அமையாது தமிழ் மக்களிற் சிலரையும் தம் வசப்படுத்தி, சிறு தெய்வ வழிபாடுகளைப் புகுத்தி, கடவுள் மிருகங்களை மனிதர்கள் தின்பதற்காகவே படைத்தார் என்ற தீய கொள்கைகளையும் பரப்பிப் பலரைப் புலாலுணவு உண் ணுமாறும் செய்து விட்டனர். ஆரியருக்கும் தமிழருக்கும் ஏற்பட்ட பழக்கத்தால் ஆரியர் புலாலுணவைக் குறைப் பதையும், தமிழரிற் சிலர் புலாலுண்பதையும் கற்றுக் கொண்டனர். மேலும் தேவதைகளுக்குப் பூசை செய்யும்போது கட்டாயம் ஆடு - மாடுகளைக் கொன்று தின்னவேண்டும், இல்லையானால் பாவம் வந்து சேரும் என்ற தப்பான தீய கொள்கையையும் தமிழ் மக்களிற் சிலரிடம் புகுத்தினர்.இது எதனால் விளங்குகிற தென்றால், மேலே பரதன் இராமனுக்குத் தீமை நினைத்திருந்தால் ஆட்டு மாமிசத்தைத் தேவதைகளுக்கு ஊட்டாமல் உண்பவன் அடையும் பாவத்தில் போடுகிறேன் எனச் சூளுரைப்பதால் இது தெளிவாகிறது.  ஆனால் தற்போது பலர் இதன் உண்மையையுணரத் தொடங்கியுளர். ஆனால், சிறு தெய்வ வழிபாடுகள் ஒழிவதோடு பலியிடுவதும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இது கண்ட பார்ப்பனர் பாகமென்று பெயர் வைத்து அடிக்கடிப் பல ஆடுகளை வதைத்துக் கொல்லுவதில் மிகுதியாக முனைந்துளர். பரிதாபம்! இத்தகைய ஆரியச் சூழ்ச்சித் தீமைகள் ஒழிந்து கொல்லா விரதம் இக்குவலய மெல்லாம் ஓங்குநாள் எந்நாளோ என்று அறிஞரனைவரும் வேண்டும் முயற்சிகளைச் செய்து கொல்லாவிரதத்தைப் பரப்ப வேண்டும்.


தமிழ் மக்கள் மறந்துமத பிறன்கேடு சூழா மாண்பினர். இன்னா செய்தாரைத் தண்டிக்க அவர் நாண நன்னயஞ் செய்யும் நடையினர். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்வதுதான் சாலுமெனக் கொண்டு யாவருக்கும் நலமே புரிவர். ஆதலின் தமிழ் மக்களனைவரும் நமது முன் னோரியல்புணர்ந்து நல்வழிப்படுமாறு வேண்டுகிறோம்.


---------------- தொடரும் --”விடுதலை” 02-01-2015

27 comments:

தமிழ் ஓவியா said...

பேய்கள் செய்த படுகொலைகளுக்கு அஞ்சலி செலுத்தின பிசாசுகள்

யாருக்காக நான் அழ.....?
பாமியான் புத்தர் சிலையை
பீரங்கியால் பிளந்தவர்கள்
பள்ளிக் குழந்தைகளை
துப்பாக்கியால் துளைத்தார்கள்
இரண்டுமே இஸ்லாத்தின்
புனிதப் போரென்று
பெருமையும் தான் பட்டார்கள்.
பக்கத்து நாட்டினிலோ
பாபர் மசூதி இடித்து
பகை நஞ்சை விதைத்தவர்கள்
கொழுக்கட்டைப் பிள்ளையாரை
கொலைக் கருவி ஆக்கியவர்கள்
பெஷாவர் பிள்ளைகளுக்கு
அவசர அவசரமாய்
அஞ்சலி என்று சொன்னார்கள்
இந்தியாவை இடித்து
இந்துராஷ்டிரம் அமைப்பவர்கள்

அண்டை நாட்டின்
அல்லாவின் கொலைகளுக்கு
அனுதாபம் சொரிந்தார்கள்
பேய்கள் செய்த படுகொலைகளுக்கு
அஞ்சலி செலுத்தின பிசாசுகள்
சந்தடி சாக்கில்
வந்ததொரு அறிவிப்பு
இனி பகவத் கீதையே
இந்தியாவின் புனித நூலென்னும்
புத்தம் புது கண்டுபிடிப்பு
தயங்காமல் கொல்
தமையனையும் கொல்
எனும் உபதேசம் புனிதமென்றால்
எதற்கிந்த அஞ்சலிகள்?
ஏனிந்த நீலிக் கண்ணீர்?
எங்கிருந்து வந்தது உம் அனுதாபம்?
கீதை உபதேசித்ததை
குரான் செய்து முடித்திருக்கிறது?
பாராட்ட வேண்டாமா
எதற்காக கண்ணீர்?
கிறிஸ்துமஸ் விடுமுறையில்
குதூகலிக்கும்
குழந்தைகளை
கொண்டாட்டத்தை நிறுத்து
எம்அரசின் புகழ்பாடி
கட்டுரைகள் எழுதுஎன
கட்டளை இட்டவர்கள்
கொடுங்கோன்மை செய்பவர்கள்
குழந்தைகள் கொலைக்காக
சிந்துவது கண்ணீரா?
அனுஷ்டிப்பது அஞ்சலியா?
காட்டுவது அனுதாபமா?
அரசியல்! அரசியல்!!
எல்லாம் அரசியல்!!!
குழந்தைகள் கொலைகூட
கேவலமானது அரசியலால்.
பேய்கள் அரசாண்டால்
பிணந்தின்னும் சாத்திரங்கள்
என்றதுவும் இதைத் தானோ?
குரானின் ஜிகாத்தும்,
கண்ணனின் கீதையும்
ஏசுவின் பைபிளும்,
சீக்கியம்
இன்னுமுள்ள
ஏராள மதங்களும்
அவற்றால் ஆன பெரிய
புனித நூல்களும்
கொல், கொல், கொல்லென்றும்
கொல்வது மதக் கடமையென்றும்
எதிரியை மட்டுமல்ல
அவர் வீட்டுக் குழவியையும்
விட்டுவிடாமல் கொல்லென்றும்
உபதேசித்தும்
உருவேற்றியும்
சொல்லியும் செய்தும்
காட்டிய பின்னும்
இவையெல்லாம்
புனிதமென்றும்
போற்றத்தக்க
நூல்களென்றும்
மனிதனை மேம்படுத்தும்
தேவ வாக்கென்றும்
எதைக் கொண்டு
என் பிள்ளைக்கு
நான் சொல்ல?
துள்ளித் திரியும்
பிள்ளைகளைவிட
புனிதம் என்று
ஒன்றுண்டா
இந்த பூமியிலே?
அந்த புனிதங்களை
சுட்டுப் பொசுக்கிய,
பிணங்களாக்கிய
புல்லர்களை
பிள்ளைக் கறி சமைத்த மாபாதகரை
கண்டிக்க வார்த்தையுண்டா?
தண்டிக்கத்தான் வழியுண்டா?
கொலையை தடுக்காதமதமும்
குழந்தையை காக்காத கடவுளும்
மழலைக்கு மயங்காத மனிதனும்
இருந்தென்ன? இறந்தென்ன?
இதில்யாருக்காக நான் அழ?
குழவியைக் கொன்ற
மதத்தின் மரணத்துக்கா?
காக்க மறுத்த
கடவுளின் சாவுக்கா?
மழலையைக் கொன்ற
மனிதமிருகத்தின் மறைவுக்கா?
இல்லை இந்த மூன்றின்
கூட்டுக் கொலை வெறியால்
துள்ளத் துடிக்க
கொடூரமாய் மரணித்த
மழலைகளின் மறைவுக்கா?
காணாமல் போன அவர்தம்
கள்ளமில்லாச் சிரிப்புக்கா?

(முக நூலில் இருந்து: எல்.ஆர்.ஜெகதீசன்)

Read more: http://viduthalai.in/page3/93841.html#ixzz3NlOrCI8d

தமிழ் ஓவியா said...

கல் முதலாளி


திருப்பதி கோவிலில் 1975-ஆம் ஆண்டு முதல் தன்னிச்சையாக கோவில் நிர்வாகம் உண்டியல் வருமானம் மட்டும் தனியாக வரவில் வைக்கப்பட்டது. தினந்தோறும் எண்ணப்படும் பணம் அன்றைய தினமே வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. 1975-76-ஆம் ஆண்டில் ரூ.5.84 கோடியாக இருந்த உண்டியல் வருமானம், 1985-86-ம் ஆண்டில் ரூ.15.86 கோடியாக அதிகரித்தது. இது 1995-96-ல் ரூ.85.06 கோடியாகவும், 2005-06-ல் ரூ.307 கோடியாகவும் அதிகரித்தது. 2005-ம் ஆண்டுக்குப் பிறகு உண்டியல் வருமானம் சராசரியாக நாளொன்றுக்கு ரூ.1 கோடியாக இருந்தது.

பின்னர் அதிகரிக்கத் தொடங்கி, 2010-11-ல் ஆண்டுக்கு ரூ.675.85 கோடியாகவும், 2011-12-ல் ரூ.782.23 கோடியாகவும் வருமானம் அதிகரித்தது. இது 2012-13-ல் ரூ.859 கோடியானது. 2013-14-ல்(ஜுலை மாதம் 2014-வரை) உண்டியல் வருமானம் ரூ.950 கோடியை வங்கியில் டெபாசிட் வைக்கப்பட்டது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கடவுள் பணம் வாங்கிக் கொண்டுதான் அருள் பாலிக்குமா?

Read more: http://viduthalai.in/page4/93843.html#ixzz3NlPDE1H4

தமிழ் ஓவியா said...

இவர்களிடம் சேர்ந்தால்...

ஒரு மிஸ்ஸுடு கால் கொடுத்தால், நாங்க வருவோம். வந்து எங்க கட்சியில் சேர்ப்போம் சொல்லுது பாஜக. இவங்கள்கிட்ட சேர்ந்தால் என்ன ஆகும்னு பாருங்க.

மாட்டு மூத்திரத்தில் கோலா, சோப்பு விற்கிறது விசுவ ஹிந்து பரிசத்.

நந்தினி பியூட்டி சோப் இதில் மாட்டு அதுவும் பசு மாட்டு மூத்திரத்தையும் சேர்த்து செய்தது.

லால் தந்த் மஞ்சன்: பசு மாட்டு சாணியை சேர்த்து செய்தது.

ஹார்டி சுர்னா லக்சாடிவ்: மாட்டு மூத்திரம் சேர்த்து செய்தது.

நந்தினி தோல் கிரீம் மாட்டு மூத்திரம் சேர்த்து செய்தது.

நந்தினி தூப் ஸ்டிக்ஸ்: மாட்டு சாணியை சேர்த்து செய்தது.

அனேகமாக, பசு மாட்டு மூத்திரம் நம் தேசிய டானிக்காக விரைவில் ஒரு அமைச்சரால் அறிவிக்கப்படலாம்.

- Indiatimes.com

Read more: http://viduthalai.in/page5/93845.html#ixzz3NlRKyc9n

தமிழ் ஓவியா said...

தகவல் களஞ்சியம்

தையல் எந்திரத்தைக் கண்டறிந் தவர் மெட்ரிக்சிங்கர் இவர் இதைக் கண்டறிந்த விதம் மிக சுவாரசியமானது. தையல் எந்திரத்தின் எல்லாப் பாகங் களையும் கண்டறிந்த சிங்கர், ஊசியை மட்டும் அதில் எவ்வாறு பொருத்துவது என்று ரொம்பவே யோசித்தாராம். பின்னர் படுக்கைக்கு சென்றதும் ஒரு கனவு கண்டார். காட்டுவாசிகள் கூட்டம் கையில் கூர்மையான ஈட்டிகளுடன் அவரைச்சுற்றி நின்று நடனம் ஆடு கிறது. அந்த ஈட்டிகளின் முனைகளில் துளைகள் இருந்ததை பார்த்துவிட்டார். உடனே சிங்கருக்கு பொறி தட்டியது. அதன் மூலம் தையல் எந்திரத்தில் ஊசியை பொருத்தி தீர்வு கண்டார்

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல் டி.வி. அல்லது கணினித் திரையைப் பார்த்துக் கொண் டிருப்பவர்களுக்கு இதயநோய் ரிஸ்க் இரண்டு மடங்கு அதிகம்.

யானைகள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் தூங்குகின்றன. யானை ஒரே இடத்தில் தொடர்ந்து 8 மணி நேரம்கூட நிற்கும்.

(நூல்: அறிவியல் செய்திகள் களஞ்சியம்)

Read more: http://viduthalai.in/page7/93848.html#ixzz3NlS5Vutd

தமிழ் ஓவியா said...

ஆத்மா மற்றொரு மோசடி

தந்தை பெரியார் அவர்கள் கடவுளை கண்டு பிடித்தவனை மன்னிக்கலாம். ஆத்மாவைக் கண்டு பிடித்தவனை மன்னிக்க முடியாது என்று கூறியுள்ளார். ஆத்மா என்பதற்கு என்ன விளக்கம் சொன்னார்கள்? அது கண்ணுக்குத் தெரியாது. கூடுவிட்டு கூடு பாயும், என்று இதை நம்முடைய தமிழ்ப் புலவர்கள் என்ன செய்தார்கள்? ஆத்மாவை ஆன்மாவாக ஆக்கி ஆன்மாவை ஆன்மீகமாக்கி அதற்கப்புறம் ஆன்மீகத்தை ஆன்மீக சொற்பொழிவுகளாக ஆக்கி வைத்துவிட்டார்கள்.

இங்கே அறிஞர்கள் இருக்கின்றீர்கள். இனிமேல் சாதி என்றுகூட எழுதக் கூடாது. நம்முடைய கலாச்சாரத்திலிருந்து மாறுபட்டது என்பதைக் காட்டுவதற்கு ஜாதி என்றே எழுத வேண்டும். இதை என்னுடைய தனிப்பட்ட கருத்தாக சொல்கின்றேன் (கைதட்டல்)

நமது சரக்கு வேறு. அவர்களுடைய சரக்கு வேறு என்று தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். பாலையும் நீரையும் பிரிக்க முடியாது. பாலோடு மண்ணெண்ணெயை ஊற்றினால் பளிச்சென்று தெரியும். இது வேறு, அது வேறு என்று. அது மாதிரி ஆரியம் வேறு, தமிழ் வேறு. ஒரு காலத்தில் தூக்கி எறியப்பட்ட கருத்துக்கள் ஆட்டம் போடுகின்றன. உலகத்தில் உள்ள கழிவுப் பொருள்களை எல்லாம் நாம் இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றோம். ஆத்மா கூடு விட்டு கூடு பாய்கிறது என்று சொல் கின்றார்கள். ஆத்மா ரொட்டேசன் ஆகிறது.

தந்தை பெரியார் ஒரு முறை பளிச் சென்று கேட்டார். பெரிய ஆராய்ச்சிக் கெல்லாம் போகவில்லை. குப்பனுக்கும், சுப்பனுக்கும் விளங்க வேண்டும் என்ப தற்காகச் சொன்னார்.

இங்கிருந்து ஆத்மா கிளம்பி இன்னொரு கூட்டுக்குள் நுழைந்தால் உலகம் தோன்றிய பொழுது எவ்வளவு மக்கட் தொகை இருந்ததோ அவ்வளவு தானே இன்றைக்கும் இருக்க வேண்டும். இன்றைக்கு எப்படி இவ்வளவு ஜனத் தொகை வளர்ந்தது. ஆத்மா என்ன கட்டிப்போட்டால் குட்டி போடுகின்ற சங்கதியா? என்று கேட்டார். அய்யா, ஆத்மா மறுப்பு வாசகத்தை எவ்வளவு விஞ்ஞான பூர்வமாக சொல்லியிருக் கின்றார் என்பதை எண்ணிப் பாருங்கள்.

தந்தை பெரியார் ஒரு விஞ்ஞான ரீதியான சிந்தனையாளர். ஒருவர் இறந்து போகிறார். அவரை கொளுத்துகிறோம் அல்லது எரிக்கிறோம். கீதை கருத்துப்படி ஆத்மா புறப்பட்டு இன்னொரு கூட்டுக் குள் செல்கிறது. அது உடனே குழந் தையாகப் பிறந்து விடுகின்றது.

அடுத்த கேள்வி அய்யா கேட்டார் - அப்படியானால் நரகத்தில் ஆட்கள் எப்படி இருக்கிறார்கள்?

(நூல்: பகவத்கீதை இதுதான் - கி.வீரமணி)

- தகவல்: க.பழநிசாமி (தெ.புதுப்பட்டி)

Read more: http://viduthalai.in/page7/93851.html#ixzz3NlSYLtK6

தமிழ் ஓவியா said...

மோசமான 2014


2014 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 87 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். என சிபிஜே (பத்திரியாளர்களுக்கான் பாதுகாப்பு ஆணையகம்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் பத்திரிகைத் துறையைச்சார்ந்தவர்கள் தினசரி ஏதாவது ஒரு நெருக்கடிக்கு ஆளாகிக் கொண்டுள்ளனர். முக்கியமாக தென் அமெரிக்க நாடுகளில் உள்ள பத்திரிகை யாளர்கள், மற்றும் மத்திய ஆசிய நாடு களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் கடுமையான நெருக்கடியின் கீழ் பணியாற்றிவருகின்றனர். தென் அமெரிக்காவில் அர்ஜண் டைனா, பெரு போன்ற நாடுகளில் இந்த ஆண்டு 17 பத்திரிகையாளர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும், ஊழல் அரசியல்வாதிகளால் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், லிபியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதி களால் தலைவெட்டிக் கொலை செய்யப்பட்ட 8 பத்திரிகையாளர்களும் அடங்குவர். ஆப்கானில் அஞ்ச நிட் ரிங்கஸ் என்ற பத்திரிகையாளர் சித்திர வதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது உலகை உலுக்கிய சம்பவமாகும்.2011-ஆம் ஆண்டு 79 பத்திரிகையாளர்கள் கொல் லப்பட்டனர். இதனை அடுத்து இந்த ஆண்டு அதிக அளவில் கொல்லப்பட் டுள்ளனர். இந்தியா, சிறீலங்கா, பாகிஸ்தான், மற்றும் நேபாள் போன்ற் நாடுகளில் பத்திரிகையாளர்கள் கடும் நெருக்கடிகளுக்கு இடையே பணியாற்றி வருகின்றனர். இங்கு பத்திரிகையாளர் களுக்கு எதிராக நடக்கும் படுகொலைகள் திசை திருப்பப்பட்டுவிடுகின்றன. உக்ரைன் மற்றும் வடக்கு ஆப்ரிகக நாடுகளிலும் பத்திரிகையாளர்கள் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவருகின்றனர். காசாவின் மீதான இஸ்ரேல் தாக்குதலின் போது அசோஸியேசன் பிரஸ் நிறு வனத்தில் பத்திரிகையாளர்கள் சிமோன் கமிலி மற்றும் மொழிபெயர்ப்பாளர் அபு அஃபாஸ் இருவரையும் குறிவைத்து இஸ்ரேல் துருப்புகள் தாக்குதல் நடத்தியது.

எபோலா நோயின் தாக்குதலில் 3 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் எபோலா நோய் பற்றிய செய்தியை மக்களிடையே எடுத்துச்சென்ற மகத்தான பணியைச்செய்துள்ளனர். முக் கியமாக் உலகில் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்கள் பற்றிய முழுமையான தகவல் வெளி வரவில்லை, அல்லது அந்த அரசுகளால் அச்செய்தி மறைக்கப்படுகிறது. பத்திரி கையாளர்களின் மரணம் என்பது மக்கள் உரிமைகளின் மரணம் என்று நியூயார்க் நகரில் உள்ள தலைமையகத்தில் இருந்து சி.பி.ஜெ அமைப்பு வெளியிட்ட அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page7/93852.html#ixzz3NlSh9NSH

தமிழ் ஓவியா said...

ஆண்டாள் என்று ஒருவர் இருந்தாரா? இதோ ஆச்சாரியார் பதில்


மார்கழி மாதம் - போட்டிப் போட்டுக் கொண்டு சில நாளேடுகள் நாள்தோறும் ஆண்டாள் பாடியதாக திருப்பாவையிலிருந்து பாடல்களை வெளியிட்டு வருகின்றன. உண்மையிலே ஆண்டாள் என்ற பக்தை இருந்தாளா? இல்லை என்று மறுப்பவர் யார் தெரியுமா? வைணவப் பக்தரான சாட்சாத் ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) தான் அப்படி சொல்லுகிறார் இதோ அவர்.

ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிர பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவை அல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார் என்று திரிவேணி என்னும் ஆங்கில மாதப் பத்திரிகையில் (1946 செப்டம்பர் இதழில்) எழுதினாரே! இதற்கு என்ன பதில்?

Read more: http://viduthalai.in/e-paper/93857.html#ixzz3NlUSl5Wr

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வைகுண்ட ஏகாதசி

விரதங்களில் சிறந்தது வைகுண்ட ஏகாதசியாம்; இந்த விரதம் இருந்தால் அஸ்வமேத யாகம் செய் யும் பலனைத் தருமாம். அஸ்வமேத யாகம் என் றால் என்ன? குதிரைகளை நெருப்பில் போட்டுப் பொசுக்குவது தானே!

Read more: http://viduthalai.in/e-paper/93859.html#ixzz3NlUcj3t0

தமிழ் ஓவியா said...

காலத்துக்கேற்ற...


காலத்துக்கேற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனா வான். - (குடிஅரசு,26.1.1936)

Read more: http://viduthalai.in/page-2/93860.html#ixzz3NlUxNMG7

தமிழ் ஓவியா said...

மலேயா தமிழர்கள்


மலேயாவில் உள்ள பினாங்கு நகரில் சென்ற 16, 17 - 01 - 1932ல் அகில மலேயா தமிழர்களின் இரண்டாவது மகாநாடு மிகவும் விமரிசையாக நடைபெற்றதை அறிந்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

மலேயாவில் நமது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்து தொண் டாற்றிவரும் திருவாளர்களான வி. கே. முருகேசம் பிள்ளை, ஆர். ஆர். அய்யாறு, தாமோதரம், ஜி. சாரங்கபாணி, சுவாமி அற்புதானந்தா, எச். எச். அப்துல்காதர் முதலான வர்கள் அம்மகாநாட்டில் அதிகமானப் பங்கு எடுத்துக் கொண்டு வேலை செய்திருக்கின்றார்கள்.

அந்த மகா நாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் நமது இயக்கக் கொள்கையை அநுசரித்தனவாகவே இருக் கின்றன.

அத்தீர்மானங்களில் முக்கியமானவை பொருத்தமற்ற விவாகங்களைக் கண்டிப்பதும், விதவா விவாகத்தை ஆதரிப்பதும், விவாகரத்தை ஆதரிப்பதும், இறந்து போனவர்களுக்காகச் செய்யப்படும் அர்த்தமற்ற சடங்குகளைக் கண்டிப்பதும் அகில மலேயா தமிழர் மகாநாடு என்பதை அகில மலேயா தமிழர் சீர்திருத்த மகாநாடு என்று மாற்ற வேண்டும் என்பதும் முக்கியமான தீர்மானங்களாகும்.

இது போலவே வாலிபர் மகாநாட்டிலும், பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இருப்பதைக் கண்டிப்பதாகவும், விவாகங்களைச் சடங்குகள் இல்லாமல் குறைந்த செலவில் பதிவு செய்து கொள்ளும் முறையில் செய்ய வேண்டு மென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இத்தீர்மானங்களை யெல்லாம் நாம் மனப்பூர்வமாகப் பாராட்டுகிறோம். தீர்மானங்களோடு நில்லாமல், வாலிபர்களும் சீர்திருத்த ஆர்வமுடைய தோழர்களும் இவைகளை அநுஷ்டானத்தில் கொண்டு வர வேலை செய்வார்களென்று நம்புகின்றோம்.

குடிஅரசு - கட்டுரை - 07.02.1932

Read more: http://viduthalai.in/e-paper/93892.html#ixzz3NoNQerAz

தமிழ் ஓவியா said...

உள்ளத் தூய்மை கொண்டோர் முகத்திலே கொடுமை சாயல் கொண்டி ராது. நல்ல பழக்க வழக்க முறைகள் கொண்ட நாட்டில் நல்ல நிலைமை யும், கெட்ட பழக்க வழக்கங்கள் கொண்ட நாட்டில் கேடுகளும் நிலவும், அவரவர்களின் செய் கைகளுக் கேற்ப முகமும் உடலும் தோற்றமும் ஏற் படுகின்றன; அதற்கேற்றபடி பலனும் அடைகின்றனர்.
மனிதன் இம்சையை இயற்கை என்று கருதுபவன் அல்ல. மற்றவனை அடித்தால் நோகுமே என்ற உணர்ச்சியை உடையவன் ஆவான். இம்சை செய் யாமல் மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்காமல் வாழத்தகும் அளவு பகுத்தறிவு இருக்கிறது. ஆனால், அவ்வித மனித சமுதாயம் அறிவைத் தவறாகப் பயன்படுத்தி மனிதத் தன்மையிலிருந்து பிறழ்ந்து, இயற்கையிலிருந்து மாறிவிட்டது.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/e-paper/93892.html#ixzz3NoNayHIb

தமிழ் ஓவியா said...

பூனைக்கும்? பாலுக்கும்?


இந்திய சட்டசபையில் மேன்மை தங்கிய வைசிராய் என்ன பிரசங்கம் செய்யப்போகிறார் என்று நமது நாட்டு அரசியல்வாதிகள் அனேகர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பிரசங்கமும் சென்ற 25 - 01 - 1932 தேதியில் வெளிவந்து விட்டது. அதில் குறிப்பிடத்தகுந்தபடி விஷயம் தற்கால சட்டமறுப்பைப் பற்றி ராஜப்பிரதிநிதி அவர்கள் சொல்லியிருக்கும் விஷயமேயாகும்.

மேன்மைதங்கிய ராஜபிரதிநிதியவர்கள் சண்டைக்கு இழுக்கப் பட்டால் எந்த அரசாங்கம் பின்வாங்கி நிற்கும்? என்று கேட்கும் கேள்வியும், சட்டமறுப்புக்கு விரோதமாக இப்பொழுது அமலில் உள்ள முறைகள் அவசியமாக இருக்கக் கூடிய வரையில் அவைகள் தளர்த்தப்படவே மாட்டா என்று கூறி இருப்பதும் மிகவும் கவனிக்கக் கூடிய விஷயமாகும்.

அதிலும் காங்கிரஸ் காரர்கள்பால் அனுதாபம் காட்டுவதன் மூலம் தேசாபிமானிகள் என்று காங்கிரஸ்காரர்களால் மதிக்கப்பட வேண்டுமென்றும், சட்டமறுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலைமையில் இருப்பதன் மூலம் அரசாங்கத்தார்க்கும் நல்லபிள்ளைகளாக இருக்க வேண்டுமென்றும் தடுமாறிக் கொண்டிருக்கின்ற கோழைத் தலைவர்கள் அவசியம் கவனிக்க வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும்.

அவசரப்பட்டு சட்டமறுப்பைத் தொடங்கியவர்கள் காங்கிரசின் குட்டித் தலைவர்களென்பது நாடறிந்த விஷயமாகும். ஆனால் திரு.காந்திக்கு இராஜப்பிரதிநிதி பேட்டி கொடுத்துப் பேசியிருந்தால் சட்டமறுப்பியக்கம் இவ்வளவு கஷ்டமான நிலைமைக்குப் போயிருக்காதெனவும், ஆகவே ராஜப்பிரதிநிதியவர்கள் திரு. காந்திய வர்களுக்குப் பேட்டியளிக்க மறுத்தது தவறு எனவும் இந்த நடுநிலைமைக்காரர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இவர்கள் இவ்வாறு சொல்லுவதிலும் ஒரு சிறிதும் அர்த்தமில்லை என்றுதான் நாம் சொல்லுகிறோம். உண்மையில் திரு. காந்தியவர்கள் சமாதானப் பிரியமுடையவராயிருந்தால் காங்கிரசின் சர்வாதிகாரி யாகிய தன்னுடைய அனுமதியும் இல்லாமல் குட்டித் தலைவர் களால் தொடங்கப்பட்ட சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்திவிட்டு ராஜப்பிரதிநிதி அவர்களுடன் சமாதானம் பேச முன்வருவாரானால் அது நியாயமாக இருக்கும்.

அப்பொழுது ராஜப்பிரதிநிதியவர்கள் சமாதானம் பேச மறுத்திருந்தால் காங்கிரஸ் தன்னுடைய கொள்கைப்படி சட்டமறுப்பு ஆரம்பித்திருக்கலாம். அப்பொழுது இந்த நடுநிலைமைவாதிகள் கூறும் ராஜப்பிரதிநிதி காந்திக்குப் பேட்டியளிக்க மறுத்துவிட்டது தவறு என்று சொல்லுதவற்கு அர்த்தமிருக்க முடியும்.

இது நிற்க, சட்டமறுப்பியக்கத்தால் ஒரு காரியமும் நடக்கப் போவதில்லை என்பது நமது நேயர்களுக் கெல்லாம் தெரிந்த விஷயமே ஒழிய வேறில்லை இதுவரையிலும் நடந்த சட்டமறுப்பினால் நமக்கு கிடைத்த பலன் என்ன என்பதை யோசித்துப் பார்ப்பவர்களுக்கு இது விளங்காமல் போகாது, சட்ட மறுப்பு இல்லாமலிருந்தால், வட்டமேஜை மகாநாட்டுக் கமிட்டிகளின் வேலை இன்னும் திறமையாகவும், தாராளமாகவும், விரைவாகவும், நடந்து முடியக்கூடும்.

இப்பொழுது கொஞ்சம் சீர்பட்டிருக்கின்ற தொழில்களும், வியாபாரங்களும், விளைவுப் பொருள்களின் அக விலைகளும் இன்னும் கொஞ்சம் சீர்படக்கூடும். சட்டமறுப்பு நடை பெறுவதால் இவைகள் பாதகமடையக் கூடுமேயொழிய நமது நாட்டிற்கு வேறு கடுகளவு நன்மை கூட உண்டாகப் போவ தில்லையென்று ஆரம்பமுதல் கூறிவந்ததையே இப்பொழுதும் கூறுகிறோம்.

ஆகையால், சட்டமறுப்பு இயக்கத்தில் சிறிதும் நம்பிக்கையில்லா விட்டாலும் அது நாட்டுக்குத் தீமை விளைவிக்கும் பயனற்ற வழி என்று எண்ணிக் கொண்டிருந்தாலும், பாமர மக்களின் தூற்றுதலுக்கு பயந்து பேசாமலிருக்கும் ராஜீயவாதிகள் தமது கோழைத்தனத்தை விட்டுவிட்டு தைரியமாக சட்டமறுப்பை அடக்குவதற்கு உதவி செய்வதே சிறந்த காரியமாகும்.

சட்டமறுப்பு நின்றால் அவசர சட்டங்களும் நீக்கப்படும் என்னும் கருத்தைத் தெளிவாக இராஜப்பிரதிநிதியவர்கள் தமது பிரசங்கத்தில் கூறி யிருப்பதைக் கவனித்து ஆவன செய்வதே கடமையாகும். பூனைக்குத் தோழன் பாலுக்குக் காவல் என்று சொல்லிக் கொண்டு வாழுகின்ற சமயம் இதுவல்ல என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.

குடிஅரசு - கட்டுரை - 31.01.1932

Read more: http://viduthalai.in/e-paper/93894.html#ixzz3NoOBoAlt

தமிழ் ஓவியா said...

ராமன்பற்றி...

அம்பேத்கர் எழுதிய புத்தகத்திலிருந்தும் ராமா யணம் பற்றிய கருத்துக் களிலிருந்தும் சிலவரிகள்...

English quotes are Quoted from: Appendix No.1 of Part 3 of the bookRiddles of Hinduism 1995 By Dr Baba saheb B.R.Ambedkar

1. ராமர் மற்றும் அவ ரது சகோதரர்கள் பிறப்பே சிறிது யோசிக்க வேண்டிய விசயம். முனிவர் கொடுத்த பிண்டங்களை சாப்பிட்ட தால் பிறந்தார் என்பது; சரி, அப்படியே முனிவர் கொடுத்த பிண்டத்திலி ருந்து வந்தவருக்கு தகப் பன் எப்படி தசரதனாக இருக்க முடியும்? மகா பாரத கர்ணன் சூர்ய குமாரன் என்றால் ராமர் முனிபுத்ரன் தானே?!

2. ராமாவதாரத்தில் அவருக்கு உதவ வான ரப்படைகளை தேவர்கள் விபசாரம் செய்தும், அடுத் தவர்கள் மனைவியைப் புணர்ந்தும் உருவாக்கி னார்கள்! ஒரு ஏகபத்தினி விரதனை உருவாக்க ஏகப்பட்ட பத்தினிகள் புணரப்பட்டனர்!

3. ராமனின் காமம் மற்றும் அவரது ஏகப்பட்ட பத்தினிகள்...

Mr. C.R. Sreenivasa lyengar's translation of Valmiki Ramayana says: " Though Rama had married Sita to be the queen, he married many other wives for sexual pleasure in accordance with the royal customs. (Ayodhya Kandam 8th Chapter, page 28). (The term "Rama's wives" has been used in many places in Ramayan).

4. தந்தையை கேவல மாகப் பேசிய தசரத ராமன்... Rama called his father "A FOOL, AN IDIOT" (Ayo dhya Kandam, 53rd Chapter).

5. வர்ணாசிரம வெறி யன் ராமன்... சூத்திரன் தவம் செய்தல் ஆகாது என்று ஒரு பாவமும் செய் யாத சம்புகனை கொன்ற பாதகன் ராமன்..

Sambuka was slain (by Rama) because he was making penance which was forbidden to him by Vedas as he was a "Shudra" (Uttara kan dam, Chapter 76).

இதுபோன்ற வினாக் களுக்கு விடைகளை எந்தக் கொம்பர்களும் கூறியதில்லை.

தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட இராமாயணப் பாத்தி ரங்கள் எனும் நூல் முதல் பதிப்பாக 1944இல் வெளி வந்துள்ளது. 15ஆம் பதிப்பு 2012இல் வெளியானது. பல லட்சக்கணக்கான நூல்கள் மக்களை சென்று அடைந் துள்ளன.

இந்நூல் ஆங்கிலத்தில் “Ramayana - A True Reading” என்ற பெயரிலும் இந்தியில் சச்சு இராமா யணா என்ற பெயரிலும் வெளி வந்துள்ளன.

இவற்றிற்கெல்லாம் ஒரு வரி மறுப்பை ஜீயர் முதல் சங்கராச்சாரியார் வரை பிரதிவாதி பயங்கரம் ஆசாமிகள் வரை யாரா லும் சொல்லப்பட முடிய வில்லை.

தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதுதான் எத்தகைய உண்மை! - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/93902.html#ixzz3Nr1Ofo30

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

போட்டிக் கடைகளா?

வைணவர்களுக்கு வைகுண்ட ஏகாதசி, சைவர்களுக்குச் சிவன் ராத்திரி இவை என்ன போட்டிக் கடைகளா?

Read more: http://viduthalai.in/e-paper/93908.html#ixzz3Nr25Z7ZP

தமிழ் ஓவியா said...

பிளாஸ்டிக் சர்ஜரி முதன் முதலில் செய்யப்பட்டது எப்பொழுது?


வரலாற்று உண்மைகளுக்குப் புறம்பாகப் பேசுவதை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. ஆதி காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறையை இந்தியர்கள் பின்பற்றியதாக பிரதமர் நரேந்திரமோடி பேசியதற்காகவே வரலாற்று ஆய்வுக் கவுன்சில் குட்டு வைத்துள்ளது.வரலாற்று அறிஞர்கள், ஆர்வலர்கள் 10 ஆயிரத்தும் மேற் பட்டோர் அங்கம் வகிக்கும் வரலாற்று ஆய்வுக் கவுன்சிலின் 80-ஆம் ஆண்டையொட்டி டில்லி, ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. படத்திலுள்ள வால்டர் என்பவருக்கு தான் முதன்முதலில் பிளாஸ்டிக் சர்ஜரி 1917ஆம் ஆண்டு செய்யப்பட்டது. இதற்கு முன்பு எவருக்கும் செய்யப்படவில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/93953.html#ixzz3O0Ea81ms

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சர்வமும் சக்திமயம்

துர்க்கை சர்வ சக்தி மயமாக இருக்கின்றாள். சிவனிடம் சிவையாகவும், நாராயணரிடம் லட்சுமி யாகவும், பிரம்மாவிடம் சரஸ்வதியாகவும், கிருஷ் ணரிடம் ராதையாகவும், சந்திரனிடம் ரோகினியா கவும், இந்திரனிடம் இந்திராணியாகவும், காமனிடம் ரதியாகவும், வருணனிடம் வருணாளி னியாகவும், வாயுவிடம் அவர் சக்தியாகவும், அக்னியிடம் ஸ்வாஹா வாகவும், குபேரனிடம் அவன் சக்தியாகவும், யமனிடம் சுசீலாவாகவும், நிருருதியாகவும் கோட வீயாகவும், ஈசானனிடம் சசிகலையாகவும், மனு விடம் சதரூபையாகவும், கர்தமரிடம் தேவகதி யாகவும், வசிஷ்டரிடம் லோபாமுத்ரையாகவும், கௌதமரிடம் அகலி கையாகவும், எல்லாவற் றிற்கும் ஆதாரபூதமான பூமியாகவும், பல சிறந்த நதிகளாகவும், இந்த துர்க் கையே விளங்குகின்றாள்.

இப்படி எழுதுகிறது ஓர் ஆன்மிக இதழ். துர்க்கை - இதுவரை சிவனின் மனைவியாகத் தான் பக்தர்கள் நினைத் துக் கொண்டு இருந்தனர். இந்த ஆன்மிக இதழ் சொல்லுவதைப் பார்த் தால் எல்லா முக்கியக் கட வுளுக்கும் மனைவியாக அல்லவா இருக்கிறாள்?

Read more: http://viduthalai.in/e-paper/93952.html#ixzz3O0Eq4xQn

தமிழ் ஓவியா said...

கோட்சேவுக்கு கோயில் கட்டுவதில் பிரதமரின் நிலைப்பாடு என்ன? உ.பி. நவ்நிர்மான் சேனா கேள்வி


லக்னோ, ஜன.5- கோட்சேவுக்கு கோயில் கட்டும் முடிவை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள 40 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்ற மகாபஞ்சாயத்து நடை பெற்றது.

காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு உ.பி.மாநிலம், மீரட் மாவட்டம் பிரம்மபுரி பகுதியில் சிலை அமைக் கப்படும். அந்த சிலை வைக்கப்படும் இடத்தில் கோயில் ஒன்றும் கட்டப்படும் என அகில பாரத இந்து மகாசபை அமைப்பின் தேசியப் பொதுச் செயலாளரான ஆச்சார்யா மதன் என்ப வர் அறிவித்திருந்தார். இங்குள்ள சாரதா சாலை யில் இந்த கோயி லுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்ட தாக செய்திகள் வெளி யாகின.

இதற்கிடையே, கோட் சேவுக்கு கோயில் கட்ட அனுமதிக்க மாட்டோம் என அறிவித்த உத்தரப் பிரதேச மாநில நவ் நிர்மான் சேனா, இவ்விவ காரம் தொடர்பாக அனைத்து தரப்பு மக் களின் கருத்தினை கேட்கும் வகையில் 40 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்ற மகா பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்தது. உத்தரப்பிர தேசம் மாநில நவ் நிர் மான் சேனா தலைவர் அமித் ஜானி தலைமை யில் நடைபெற்ற இந்த மகாபஞ்சாயத்தில் கோட் சேவுக்கு கோயில் கட்டு வதை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இதனையடுத்து, கோட்சேவுக்கு கோயில் கட்டுவது தொடர்பாக பிரதமரின் நிலைப்பாடு என்ன? மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என அமித் ஜானி குறிப்பிட்டார். கோட்சேவுக்கு கோயில் கட்டும் முடிவை எதிர்த்து வரும் 11ஆ-ம் தேதி மீரட் நகர் சாரதா சாலையில் உள்ள அகில பாரத இந்து மகாசபை அலுவல கத்தின் முன்னர் தொண் டர்களுடன் திரண்டு சென்று போராட்டத்தில் ஈடுபடவும், பட்டினிப் போராட்டம் மேற்கொள் ளவும் முடிவு செய்துள்ள தாகவும் அவர் தெரி வித்தார்.

பின்னர், டில்லியில் உள்ள பிரதமரின் அலு வலகத்துக்கு சென்று இது தொடர்பாக மனு அளிப் போம். கோட்சேவுக்கு கோயில் கட்டும் விவ காரத்தில் பிரதமரின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக ஒரு பொது விளக்கம் அளிக் கும்படி பிரதமரை கேட் டுக் கொள்ளப் போவ தாகவும் அமித் ஜானி கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93950.html#ixzz3O0ExWtjn

தமிழ் ஓவியா said...

பிஜேபியை தோற்கடித்து மேயரானார் திருநங்கை

வாடத் தொடங்கிய தாமரை சத்தீஸ்கர் தேர்தலில் பிஜேபி படுதோல்வி!

பிஜேபியை தோற்கடித்து மேயரானார் திருநங்கை


ரெய்ப்பூர், ஜன.5- சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர் தலில் பாஜக தோல் வியைச் சந்தித்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த வாரம் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. முன்பு வென்ற பெருவாரி யான இடங்களில் பா.ஜ.க. வினர் வைப்புத்தொகை கூட பெற முடியவில்லை. மோடி அலையை நம்பி களமிறங்கியவர்களை மக்கள் அலை தோற் கடித்துவிட்டது.

முக்கியமாக சத்தீஸ்கர் உள்ளாட்சித் தேர்தலில் மோடி பிரச்சாரம் செய் யாவிட்டாலும் விதிகளை மீறி மத்திய அரசு மின் சாரம் மற்றும் வீட்டுவசதி வாரியத்திற்கான திட்டங் களை அறிவித்தது இதன் மூலம் தேர்தலில் எளிதாக வென்றுவிடலாம் என்று எண்ணியது. 2009 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர் தலில் 154 இடங்களில் 139 இடங்களை பாஜக கைப்பற்றியது, காங்கிரஸ் வெறும் 10 இடங்களில் மாத்திரமே வெற்றி பெற முடிந்தது. இதர இடங் களில் சுயேட்சைகள் வென்றனர்.

இந்த்த் தேர்தலில் பாஜகவின் தோல்விமுகம் ஆரம்பமாகிவிட்டதைக் காட்டுகிறது தேர்தல் முடிவுகளில் மொத்த முள்ள 154 இடங்களில் 102 இடங்களை காங்கிரஸ் வென்றது. பா.ஜ.க. 53 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க.விற்கு மிகவும் சொற்ப வாக்கு களே கிடைத்துள்ளன.

மாநகரத்தின் மேயரான திருநங்கை

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் மாநகர மேயராக சுயேட்சையாக போட்டி யிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றார். மது என்ற திருநங்கை தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரான மஹாவீரை விட 4,537 வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்றுள்ளார்.

தலித் வகுப்பைச் சேர்ந்த மது தேர்தல் வெற்றி பற்றிக் கூறுகை யில் மேயர் தேர்தலில் கோடிகளைக் கொட்டி பல்வேறு வகையில் பா.ஜ.க. வினர் பிரச்சாரம் செய் தனர். என்னிடம் தினசரி வரும் வருமானம் மாத் திரமே தேர்தலுக்கான செலவுகளை எனது நண்பர்களும் பொதுமக்களும் மேற்கொண்டனர்.

எந்த ஒரு தொழிலதிபரும் எனக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை.

8 ஆம் வகுப்பு வரை மாத்திரம் படித்த மது தன்னைப் போன்ற பல்வேறு கைவிடப்பட்ட திருநங்கைகளுக்காக சுயதொழில் கூடம் ஒன்றை நடத்தி வரு கிறார்.

மேலும் அவர் கைவிடப்பட்ட பெண் குழந்தைகளையும் தத்து எடுத்து அவர்களையும் காப்பாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/93945.html#ixzz3O0F6B8Sx

தமிழ் ஓவியா said...

தெரிந்த பிசாசுதான்!

தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு மேலானது என்பதை கருத்தில் கொண்டு எனக்கு வாக்களியுங்கள் என்று கூறி ராஜபக்சே யாழ்ப்பாணத் தமிழர்களிடம் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

வரும் ஜனவரி 8-ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ராஜபக்சே மீண்டும் போட்டி யிடுகிறார். அவரை எதிர்த்து, அவரது அமைச் சரவையில் சுகாதார அமைச்சராக இருந்த இலங்கை சுதந்திரா கட்சி தலைவர் மைத்ரிபால சிறீசேனா பொது வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.

இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டணி இலங்கை முஸ்லீம் அமைப்புகள் அனைத்தும் மைத்ரி சிறீசேனா விற்கு ஆதரவு தந்துள்ளன. முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கேயும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.

சிங்கள பவுத்த மதத்துறவிகள் சங்கமும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவளித்த நிலையில், பொது வேட்பாளர் மைத்ரிபால வெற்றி உறுதியாகிக்கொண்டு இருக்கிறது. ராஜபக்சே தோல்வி பயத்தால் வெளிறிப் போய் உள்ளதாகத் தெரிகிறது - அவர் பேச்சு இதனைத் தெளிவுபடுத்துகிறது.

தோல்வியின் அச்சத்தில் இருக்கும் ராஜபக்சே யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது: இந்தத் தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிடுகிற சிறீசேனா வடக்கு பகுதி மக்களுக்கு புதியவர். ஆனால் நான் நாட்டின் அதிபர் என்ற வகையில் உங்களுக்கு நிறைய செய்திருக்கிறேன். நான் உங்களுக்கு மின்சார வசதி செய்து தந்திருக்கிறேன்.

உங்களுக்கான பிற வசதிகளையும் மேம்படுத்தி இருக்கிறேன். தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு மேலானது என்றுபழமொழி கூறுவார்கள். அதை நினைவில் கொண்டு எனக்கு வாக்களியுங்கள்; இங்கே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி நடக்கிறது; அவர்கள் தங்களின் குடும்பங்களை மட்டுமே வளப்படுத்து கின்றனர்.உங்களுக்கு என்று அவர்கள் ஒன்றும் செய்யவில்லை, என்று கூறியுள்ளார்.

பொதுவாக பழமொழிகளைத் தவறாக பயன்படுத் துவது என்பது தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு உத்தியாகவே தெரிகிறது, மோடியும் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத் தில் பல தவறான தகவல்களைச் சொல்லி பத்திரிகை களில் பரபரப்பான செய்திகளாக இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு மோடி செய்த அதே உத்தியை இலங்கையில் ராஜபக்சே செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் நடந்து முடிந்த 16ஆவது மக்களவைத் தேர்தலில் ஊடகத்துறைப் பிரச்சாரத்துக்குத் தமக்குப் பெரும் துணையாக விருந்த அர்விந்த் குப்தா தலைமை யில் ஒரு குழுவை இலங்கை அதிபர் - தெரிந்த பிசாசான ராஜபக்சேவுக்கு உதவியாக அனுப்பி வைத்துள்ளார் என்பதிலிருந்தே இந்த இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்; ஒரே படகில் சவாரி செய்யும் சகஜோடிகள் என்பது சொல்லாமலே விளங்கும்.

தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை அறியாமலேயே தன்னை பிசாசுக்கு ஒப்பிட்டுக் கொண்டுள்ளார்.

பேய் என்றோ, பிசாசு என்றோ ஒன்றும் கிடையாது என்றாலும் நடைமுறையில் புழக்கத்தில் உள்ள இந்தச் சொல்லுக்குள்ள பொருளில் பார்த்தால் ராஜபக்சே ரத்தம் குடிக்கும் பிசாசுதான்.

செஞ்சோலையில் சிறு வயது செல்வங்களைக் குண்டு போட்டு அழிக்கவில்லையா?

பாதுகாப்பான இடம் என்று அரசு கூறிய இடத்தில் குவிந்த தமிழ் மக்களைக் கொடூரமாகக் கொத்துக் குண்டுகளை வீசி கொலை வெறியாட்டம் போடவில்லையா? வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்களை யுத்த நெறி முறைகளுக்கு முரணாக துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்கவில்லையா?

இன்னும் எத்தனையோ எடுத்துக்காட்டுகளைச் சொல்லி ராஜபக்சே என்ற கொடிய பிசாசை அடையாளம் காட்டலாம்.

இந்தத் தேர்தலில் அவர் தோற்கடிக்கப்படவில்லை யானால், அந்தப் பிசாசுக்கு ஆயிரம் கொம்புகளும், கைகளும், கால்களும் முளைத்துத் தமிழின மக்களை மதங் கொண்ட யானையாகத் துவம்சம் செய்யும்.
இங்குள்ள மோடிகளும் சிறுபான்மையினருக்கு எதிராக மேலும் கொம்பு சீவிக் கொண்டு பாய்வார்கள் என்பதில் அய்யமில்லை.

அண்டை நாடுகள் இரண்டும் அபாயகரமான கும்மிருட்டில் சிக்கிக் கொண்டு தத்தளிக்கின்றன - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/93955.html#ixzz3O0FPq0MK

தமிழ் ஓவியா said...


ஒகேனக்கல் பயிற்சிப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட போர்வாள்!

நாம் இன்று பெற்றுள்ள உணவு, உடை, பேச்சு ஏன் மூச்சு சுதந்திரம் எவ்வளவு பெரியது என்பது நம் முன்னோர்கள் எதிர்கொண்ட அநீதிகளில் இருந்து புரிய வருகிறது. அடிப்படைத் தேவைகள் அனைத்தும் அவர்களுக்கு மறுக்கப்பட்டி ருந்தன. ஜாதி, மதங்களின் பெயரால் மக்கள் பிரிக்கப்பட்டு, சிலர் மேல்மக்கள் என்றும் சிலர் தாழ்ந்தவர்கள் என்றும் பிரிக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்டவர் களுக்கு தான் மேற்கூறிய அடிப்படைத் தேவைகள் மறுப்பு. ஜாதி, மதம் என்பது தந்திரமாக கடவுளின் பெயரால் அடி களிட்டு பார்ப்பனர் வீட்டிற்கு போடப்பட்ட கதவுகள். இவை அவர்கள் அதிகார செல்வம் களவு போகாமல் காப்பதற்கு அழகாக உதவுகிறது. பெரியார், அம் பேத்கர் போன்ற தலைவர்கள் அரும்பாடு பட்டும் ஜாதியும், மதமும் முழுமையாக ஒழிந்து போகாததன் காரணம், அவை கடவுளின் பெயரால் சித்தரிக்கப்பட்டு மக்களின் மனதில் ஏற்படுத்திய பயமே ஆகும் அவை சட்டங்களோ, நீதியோ அல்ல. இந்த சாதியையும், மதத்தையும் நீதியாக்கு வதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் பல.

அவற்றுள் முதலில் கூறபடுவது பிறப்பு! அதாவது பிரம்மன் தலையில் இருந்து பிராமணனும்,தோளில் இருந்து சத்ரியனும், தொடையில் இருந்து வைசியனும் காலில் இருந்து சூத்திரனும் பிறந்தான் என்பது. கடவுளே புனிதமுடையவர் என்று கூறும் போது அவர் கால் மட்டும் எப்படி தலையி லிருந்து தாழ்வான தாகிவிடும்? அப்படியே யென்றால் பிராமணன் மந்திரம் ஓதி போடும் பூக்கள் அனைத்தும் தலையிலே தானே விழ வேண்டும், ஏன் காலில் விழுகிறது. கடவுளே இருந்தாலும், என் பெயரால் இத்தனை வேறுபாடுகளா? என்று ரத்தக்கண்ணீர் சிந்தியிருப்பார். ஆனால்,அப்படி ஏதும் நடந்ததாக சரித்திரம் இல்லை. மனு என் பவன் பிராமணரின் நீதிபதி மற்றும் வக்கீல். இருபதவியையும் அவனே வகிக்கிறான். அவர்களுக்கு சாதகமான சட்டங்களை வகுத்து அவரே வாதாடுகிறார்.

அவர் வகுத்திருக்கும் நீதிகள் அனைத்தும் பிரா மணர் முன்னேற்றத்திற்கும் அதிகாரத்திற்கும் எளிதில் வழி வகுக்கிறது. இதில் உயர்நீதி (?) என்னவென்றால் பிராமணர்கள் கொலையே செய்தாலும் அவர்களின் தண்டனை மற்றவர்களை விட மிகமிக குறைவு தான். (தலையை மொட்டை அடித்தால் போதும்) பிராமணர்கள் இவ்வாறே தன் சொகுசு வீட்டிற்கு புகுவிழா, இல்லை இல்லை 'பிரவேசம்' செய்துள்ளனர். அந்த வீட்டின் கதவை உள் பூட்டிட்டு சாவியையும் விழுங்கிவிட்டனர். இப்போது கதவை உடைப்பதை தவிர வேறு வழியே இல்லை. வாருங்கள் இளைஞர்களே! கதவை உடைத் தால் மட்டும் போதுமா? இந்த வருணாசிரம கட்டடத்தையே தூள் தூளாக்க வேண்டும். இளைஞர்களாலேயே அது முடியும்.

ஆசிரியர் கடந்த 27, 28, 29.-12.-2014 ஆகிய மூன்று நாட்களில் ஒகேனக்கல்லில் நடந்த பயிற்சிப்பட்டறையில் பெற்ற பயிற்சி யின் விளைவாக எனக்குள் எழுந்த சிந் தனையை தங்களின் மேலான பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.

(நான், க. அருள்மொழி - அனிதாதாரணி இணையரின் மகள். கல்லூரியில் முதலாண்டு படிக்கும் மாணவி)

- அ.ஓவியா, குடியாத்தம் -632602

Read more: http://viduthalai.in/page-2/93958.html#ixzz3O0GBwCyt

தமிழ் ஓவியா said...

வயிற்றுப்புண்ணும்... உண்மையும்...


நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் (வயிற்றுப் புண்) வரும் என்று சொல்வார்கள்; வயிற்றுப்புண் பெரும்பாலும் சரியான நேரத் திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர் களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமோ அல்லது சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து பதினைந்து நாள்கள் கழித்துப் பாருங்கள். இப்போது அந்தச் சாதம் கெட்டுப் போய் நாற்றம் எடுக்கும்.

சில சமயம் புழுக்கள்கூட வந்திருக்கலாம். மீண்டும் அந்தப் பாத்திரத்தை மூடி அப்படியே வைத்து விடுங்கள். மறுபடியும் ஒரு பத்து பதினைந்து நாள்கள் கழித்துப் பாருங்கள். அந்தக் கெட்டுப்போன சாதம் நஞ்சாக மாறி, அந்தப் பாத்திரத்தைப் பாதித்து ஓட்டை போட்டிருப் பதைப் பார்த்திருக்கலாம் (இதை வீட்டிலேயே சோதித்துப் பாருங்கள்). இப்போது அல்சர் எப்படி வந்தது என்று உங்களால் சுலபமாகப் புரிந்து கொள்ளமுடியும்.

நீங்கள் நினைப்பது போல் நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்பதெல்லாம் தவறு. பசிக்காமல் நேரத்திற்குச் சாப்பிடும் போதுதான் அல்சரே வருகிறது. பசித்துச் சாப்பிடும் போதுதான் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. வயிற்றில் நேரத்திற்கு அலாரம் வைத்துக் கொண்டு ஜீரண நீர்கள் சுரப்பதில்லை. சரியான நேரத்திற்குச் சுரப்பதற்கு அங்கு எந்தவிதமான ஏற்பாடும் கிடையாது. மனித உடலானது முற்றிலும் உணர்வுகளால் ஆனது.

உணர்வுகளே மனித உடலை வேலை செய்யத் தூண்டு கின்றன, வேலையை முடிக்கவும் தூண்டுகின்றன. செயல் படுத்தவும் வைக்கின்றன. நேரத்திற்கு ஜீரண நீர் சுரந்து விடும். அப்போது வயிற்றில் சாப்பாடு இல்லையென்றால் அல்சர் புண் வந்துவிடும் என்பதும் தவறு. நீங்கள் பசிக்காமல் மூன்று வேளையும் சாப்பிடும்போது, ஜீரண நீர்கள் சுரக்காத நிலையில் வயிற்றில் இருக்கும் உணவு அங்கேயே தங்கி, புளித்து, கெட்டு, கெட்ட வாயுக்கள் உருவாகத் துணை புரிகிறது.

நாள்தோறும் இதுபோன்ற செயல் தொடர்ந்து நடைபெறும்போது, கெட்டுப்போன உணவு நஞ்சாக மாறுகிறது. பாத்திரத்தில் வைத்த உணவு எப்படி நஞ்சாக மாறுகிறதோ.... அப்படி நஞ்சாக மாறிய உணவு, உங்கள் வயிற்றில் அல்சரை (புண்களை) உருவாக்குகிறது. செரிமானம் கெட்டால்தான் அல்சர் வருமே ஒழிய, செரிமானத்திற்கு அங்கு ஒன்றுமே இல்லாதபோது அல்சர் வராது.

சாப்பிடாமல் இருந்தால் உடல் சோர்வடைந்து, சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அது சம்பந்தமாக நோய்கள் வேண்டுமானால் வரலாம். அல்சர் வந்துவிட்டால் உங்கள் உடலில் கழிவுகளின் தேக்கம் நிறைய உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உடலில் ஆண்டுக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க, மருந்தில்லா மருத்துவமான அக்குபஞ்சர் தொடு சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தின் கதவுகளைத் திறக்க இது ஒன்றே போதுமே!

Read more: http://viduthalai.in/page-7/93986.html#ixzz3O0I3DndL

தமிழ் ஓவியா said...

குளிர்காலத்தில் உடல் நலத்தைப் பாதுகாக்க!


வெயில் காலத்தைவிட பனி காலங்களில் நமக்கு அதிக அளவில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகிறது. மனிதர்களுக்கு காது, மூக்கு, தொண்டை பகுதிகளைத்தான் பனி தாக்குவ தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இரவு முதல் அதிகாலை வரையிலும் குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சுத் திணறல், சளி என பிரச்சினைகள் துவங்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறவும் வாய்ப்புள்ளது. பின்னர் அது மூக்கடைப்பு, காதுவலி போன்ற நோய்களையும் துணைக்கு அழைத்துக் கொள்ளும். குளிரால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி காய்ச்சல் மற்றும் குளிர்கால பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சில இயற்கை மருத்துவ வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.

1. பனிகாலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். அதற்கு எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். வெந்நீரில் ஒரு கைப்பிடி அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு கொதிக்கவைத்து அருந்தினால் தொண்டைவலி, மூக்கடைப்பு, காதுவலி, சளி போன்ற நோய்கள் நம்மை அண்டாது.

2. குளிருக்கு இதமாக கற்பூரவல்லி, தூதுவளை கீரை ஆகியவற்றில் கஷாயம் வைத்து அருந்தலாம். அல்லது 2 வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு பச்சையாக சாப்பிட்டாலும் உடலில் குளிரின் தாக்கம் ஏற்படாது.

3. குளிர்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது தோல்தான். சிலருக்கு தோலில் வெள்ளை படர் அல்லது தோல் சுருக்கம் ஏற்படும். எனவே, அதைத் தடுக்க குளிக்கும் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து குளிக்கலாம். தோல் பாதுகாக்கப்படும். தோல் வறட்சியும் நீங்கும்.

4. பனி காலத்தில் குளிப்பதற்கு சோப்புகளை பயன் படுத்துவதைவிட கடலை மாவு, பயத்தம் பருப்பு மாவு ஆகியற்றை தேய்த்து குளிக்கலாம்.

5. தொண்டைவலி, வறட்டு இருமலுக்கு, ஒரு கரண்டியில் நெய்யை விட்டு அடுப்பில் வைத்து, காய்ந்ததும் ஒரு சிறுதுண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும்போது, அரை தேக்கரண்டி மிளகுப்பொடி போட்டு சற்று ஆறியதும் அதை உருட்டி வாயில் போட்டுக்கொண்டால் இதமாக இருக்கும். வறட்டு இருமலும் அடங்கும்.

6. மூக்கு, தொண்டை, காதுகளில் ஏற்படும் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, காலில் பாத வெடிப்புகள் வேறு ஏற்படும். பாதவெடிப்புக்கு பயப்படவே தேவையில்லை. சிறிதளவு விளக்கெண்ணெயுடன், தேங்காய் எண்ணெயை சம விகிதத்தில் கலந்து, அதில் சிறிது மஞ்சள் பொடியை போட்டு குழைத்து, பேஸ்ட் போல் செய்து, அதை வெடிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகிவிடும்.

7. முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்க பாதாம் எண்ணெய் பயன்படுத்துவது உகந்தது.

குளிர் காலத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவு வகைகள்

தமிழ் ஓவியா said...


1. பனி காலங்களில் எண்ணெய்கள் மூலம் செய்யப்பட்ட பலகார வகைகளை அறவே ஒதுக்கிவிடவேண்டும். காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிக்கு இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசியால் செய்யப்பட்ட கஞ்சி, பிரெட் போன்றவற்றை சாப்பிடலாம்.

2. பழங்களில் சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களைச் சாப்பிடவேண்டும். புளிப்புச்சுவை நிறைந்த கொய்யா, ஆரஞ்சு, சீத்தாப்பழம் போன்ற பழவகைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ளக்கூடாது. வெயில் காலங்களில் நம் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளும் இப்பழங்கள் குளிர்காலங்களில் ஒத்துக்கொள்ளாது. விரிவாக கூறினால், வெயில் காலங்களில் நமக்கு அதிகம் வியர்க்கும். அப்போது வியர்வையுடன் சேர்ந்து அல்கலைன் சிட்ரைட் என்ற அமிலமும் நம் உடலில் இருந்து வெளியேறும். அதை ஈடு செய்வதற்காக நாம் புளிப்புச் சுவைமிக்க பழங்கள், மோர் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வோம். ஆனால், குளிர்காலத்தில் இவற்றை நாம் எடுத்துக்கொள்ளும்போது, நம் உடலில் அதிக அளவு அமிலச்சத்து சேர்ந்து சளி, சைனஸ் போன்றவை ஏற்படலாம். பழங்களில் பச்சை திராட்சையும், பச்சை வாழைப்பழத்தையும் கட்டாயம் தவிர்த்திட வேண்டும்.

3. முக்கியமாக இந்தப் பனிக்காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். சுண்டல் வகைகள், முளைக்கட்டிய தானியங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் சமையலில் மிளகு கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.

4. ஒரு நாளில் 2 வேளை உணவில் இரும்புச்சத்து நிறைந்த காய், கீரை, பழ வகைகள் எடுத்துக்கொள்ளலாம். முருங்கை, பேரீட்சை, திராட்சை உள்ளிட்டவற்றையும் சாப்பிடலாம். பழரசங்கள், இளநீர், தர்ப்பூசணி, அய்ஸ் கிரீம்கள் உள்ளிட்ட குளிர்ச்சியான உணவு வகைகளை அறவே தவிர்த்தல் நல்லது.

5. ஊட்டச்சத்துகள் முகுந்த பசலைக்கீரை, வேர்க்கடலை, கேரட், கோழிக்கறி ஆகியவற்றை சாப்பிடலாம். குறிப்பாக கோழி சூப் குளிருக்கு ஏற்ற இதமான ஒன்று என்பது யாவரும் அறிந்ததே.

6. நீர்ச்சத்து நிறைந்த பூசணி, சுரைக்காய், புடலங்காய், பீர்க்கன்காய், வெள்ளரி போன்ற காய்கறிகளை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.
மேலும் நோய் எதிர்ப்புச்சத்து மிகுந்த உணவுகளான கீரை, கோதுமை உட்கொள்ளுங்கள்.

Read more: http://viduthalai.in/page-7/93984.html#ixzz3O0IBhbHU

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பலவீனம்

பலமின்மையே துயரத் திற்கான ஒரே காரணம். நாம் பலவீனர்களாக இருப்பதால், நாம் கெட்ட வர்களாகிறோம். நம்மிடம் பொய்யும், திருட் டும், கொலையும், வேறு பாவச் செயல்களும் இருப் பதற்கு நமது பலவீனமே காரணம். நாம் துன்பமடைவதும், இறப்பதும் அந்த பலவீனத் தால் தான். நம்மை பல வீனர்களாக்க ஒன்றும் இல்லாத போது, மரணமும் இல்லை. துயரமும் இல்லை.
- விவேகானந்தர்

நம் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் காரணம் கர்மபலன் என்ற இந்து மதக் கோட்பாட்டை இதன் மூலம் விவேகானந்தர் தகர்த்தெறிகிறார் அல்லவா!

Read more: http://viduthalai.in/e-paper/94008.html#ixzz3O3lOm6Zr

தமிழ் ஓவியா said...

பிரதமர் மோடியின் ஜனநாயகம்?

ஊடகங்கள் அரசை விமர்சனம் செய்தால் தான் அரசு நன்றாக செயல்படும் இதில் பாரபட்சம் பார்க்கக்கூடாது என்று கோலாப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் இருந்து வெளி வரும் பத்திரிகையான புடாரியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய போது அவர் கூறியதாவது: ஊடகங்கள் நமது நாட்டின் ஜனநாயகத்தின் தூண்களுள் ஒன்று இந்த ஊடகம் மக்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள தூரத்தை இணைக்கும் முக்கியமான பாலமாகும். ஊடகங்கள் இன்றி அரசும் சரிவர இயங்க முடியாது, மக்களும் நிலவரங்களை அறிந்துகொள்ளமுடியாது. ஊடகங்களின் மிகமுக்கிய பணி என்னவென்றால் அரசு, அமைச்சர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை கடுமை யாக விமர்சனம் செய்யவேண்டும் என்று பேசினார். மோடியின் பேச்சும் செயலும் தாமரை இலைத்தண் ணீர் போல் உள்ளது இதில் இருந்து தெரியவருகிறது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி முழுமையாக ஊடகங்களை விலைக்கு வாங்கினார். மோடியின் தேர்தல் பிரச்சாரப்பேச்சுக்களை அனைத்து இந்தி மற்றும் ஆங்கில அலைவரிசைகள் நேரடி ஒளிபரப்புச் செய்தன. தன்னுடைய பெயர் பத்திரிகையில் எப்போ தும் முதலிடத்தில் வரவேண்டும் என்பதற்காகவே தெரிந்த வரலாறுகளைக்கூட தவறாகப் பேசி பத்திரிகை யில் இடம் பிடித்தார்.

பி.ஜே.பி. - மதவாதத்துக்கு எதிரான பத்திரிகையா ளர்கள் இருந்தால், அத்தகையவர்களை அடையாளம் கண்டு செல்வாக்கைப் பயன்படுத்தி வெளியேற்றியும் உள்ளார். பண பலத்தின் மூலமும் இந்துத்துவா சிந்தனை கொண்ட ஊடகவியலாளர்கள் வாயிலாகவும் மக்களி டையே பெரும் பிரச்சாரம் மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றார்.

தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்த பிறகு இதுவரை எந்த ஒரு இந்திய ஊடகத்திற்கும் பேட்டியளிக்கவில்லை. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாரம் ஒருமுறை ஊடகங்கள் என்னைச் சந்தித்து நிறைகுறைகளை முன்வைக்கலாம் என்று வெற்றுப் பேச்சு பேசிய மோடி அதன் பிறகு ஊடகங்களை தனது அலுவலகவாசலுக்கு கூட வரவிடவில்லை.

அதே நேரத்தில் தனக்கு எதிராக எந்த செய்தியும் வராமல் ஊடகங்களை தனது கைக்குள் போட்டுக் கொண்டார். இந்தியாவின் பெரிய ஊடகக்குழுமங் களை அம்பானி மற்றும் பாஜக ஆதரவு தொழி லதிபர்கள் விலைக்கு வாங்கிவிட்டனர். எடுத்துக்காட்டாக நியூஸ் நெட்வெர்க் என்ற குழுமத்தின் கீழ் 6 செய்தி அலைவரிசையில் வரு கின்றன, இந்தக் குழுமத்தை கடந்த ஜூன் மாதம் அம்பானி விலைக்கு வாங்கிவிட்டார். அதே போல் இண்டியா டுடே நெட்வொர்கின் பங்குகளை பா.ஜ.க. ஆதரவு தொழிலதிபர்கள் வாங்கியுள்ளனர். அதே போன்று வியாபார நோக்கம் கொண்ட அச்சு ஊடகங்கள் ஆளுங்கட்சி சார்பாகவே செயல்படுவது வழக்கம், ஊடகங்களை விலைக்கு வாங்கும் மோடிக்கு தானாகவே விலைபோகும் ஊடகங்களை கைவசம் வைத்துக்கொள்வதென்பது பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதையாகிவிட்டது. சுமார் 60 ஆண்டுகளாக மகாராட்டிரத்தில் வெளிவரும் புடாரி நாளிதழ் நடுநிலைப்பத்திரிகை என்று பெயர்பெற்றது. மராட்டியத் தேர்தலின் போது நடுநிலையாக நின்று தனது பணியைச்செய்தது. ஆனால் கடந்த சில நாட்களாக முழுக்க முழுக்க பாஜக அரசியல் ஏடாகவே மாறிவிட்டது. இப்படி ஆரம்பம் முதலே ஊடகத்தை வளைத்து, தனக்கு சாதமான செய்திகளை மாத்திரம் இடம் பெறச் செய்த மோடி மேடையேறும் போதுமட்டும் ஊடக தர்மம் பேசுகிறார்.

அய்க்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பார்வை யாளர் கிறிஸ்தோ ஹேன்ஸ் குஜராத் இனப் படுகொலை களுக்குப் பிறகு குஜராத்துக்கு வர விரும்பினார்.

உண்மை நிலையை அறிந்து கொள்ள விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதுபோல அப் போது குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி பாசாங்கு செய்தார். கடைசி நேரத்தில் என்ன செய்தார் தெரியுமா? குஜராத்துக்கு அவர் வரக் கூடாது என்று கூறி விட்டார்.

இந்த நிலையை ஓர் அறிக்கை மூலமாக அய்க்கிய நாடுகள் மன்றத்தில் சிறப்புப் பார்வையாளர் அம்பலப் படுத்தினாரா இல்லையா?

முஸ்லீம்கள், கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் இவர்களின் உரிமைகள் எப்பொழுதும் ஆபத்தில்தான் இருக்கின்றன என்று சொன்னாரே அய்.நா. பார்வையாளர். (Source Statement of U.N.
Social Reporter - dt: 31.3.2012 MGM)

இந்த நிலையில் உள்ளவர்தான் ஊடகவியலாளர்கள் தம் ஆட்சியில் காணும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுமாறு ஜனநாயகவாதியாக தோற்றம் காட்டுகிறார். அடடே! இவரைப் போன்ற பல வேட மாமனிதரைக் காண்பது அரிதினும் அரிதே!

Read more: http://viduthalai.in/page-2/94003.html#ixzz3O3mHHAPv

தமிழ் ஓவியா said...

இந்தக் கவிஞரைத் தெரிந்து கொள்வோம்!


ஒரே நேரத்தில் இலக்கியத்திலும் அரசியலிலும், கவிஞராகக் கலை களிலும் புரட்சியாளராகவும், புதுமை படைத்த ஆற்றலாளராகவும் ஒரு சிலரே உலக வரலாற்றில் சாதனை படைத்து, சரித்திரப் புகழ் பெற்றவர் களாக, சாகாத மா மனிதர்களாக வாழுகிறார்கள் - இன்றளவும்!

அவர்களில் மிகவும் நினைவுக் குரிய பாராட்டப்பட வேண்டிய சிந்தனையாளர், கவிஞர் கலீல் ஜிப்ரான் அவர்களாவார்.

பன்முக ஆற்றல் அறிஞரான அவர் தம் பிறந்த நாள் இன்று - ஜனவரி 6.

லெபனான் நாட்டில் (பஷ்ரி என்ற நகரில்) பிறந்த இவர் தம் 12ஆம் வயதிலேயே குடும்பம் அமெரிக் காவுக்கு புலம் பெயர்ந்தது.

அரேபிய மொழி, ஆங்கிலம், பாரசீக மொழிகளில் அறிவுள்ள இவர் சிறந்த ஓவிய நிபுணர்.

அதனால்தான் அவர் பாஸ்டனில் உள்ள ஓவியப் பள்ளியில் சேர்க்கப் பட்டாராம்!

15 வயதில் பெய்ரூத் சென்று உயர்கல்வியை அங்கே பயின்று, தமது தோழர்களுடன் இணைந்து கல்லூரி இலக்கியப் ஏட்டை வெளியிட்டார்!

மீண்டும் பாஸ்டனுக்கு திரும்பிய இவரின் கட்டுரை வடிவிலான கவி தைகள் அடங்கிய.

தி பிராஃபெட் (The Prophet) என்ற நூல் பல நாடுகளில் புகழை இவருக்கு அள்ளித் தந்தது!

முதலில் கல்லூரிக் கவிஞர் - பிறகு இவர் எழுதிய அந்த புத்தகம் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.

20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த நூல் என்ற முறையில்

(இன்றைய தமிழ் இந்து நாளேடு நிறைய தகவல்களை இரண்டு இடங் களில் தந்துள்ளது.)

இவரது படைப்பு இலக்கியங்களைத் தொகுத்து மக்கள் மன்றத்தில் சேர்த்து பரப்பியதற்கு முழுமுதற் காரணமான அவரது செயலாளரான பார்பராவையே சாரும்.

இதில் இவரது துணிவான, தெளிவான முற்போக்குக் கருத்துகள் - எழுத்துகள் - சிந்தனைகளால் மத குருமார்கள், அதிகாரிகள் கோபத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளானவர்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்ற தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனார் சிந்தனையையொட்டி, உலகம் ஒரு குலம் அனைவரும் உறவினர் என்று கூறியவர் இவர்!
வாழ்க்கையை தத்துவ ரீதியாக வரைந்து காட்டிய ஓவியக் கவிஞர் இவர்!

அதற்கு ஒரு எடுத்துக்காட்டு கீழே:

கலீல் ஜிப்ரான் (இவர் ஒரு மேரோனைட் கிறித்துவர்) - மிகவும் வசதி படைத்தவர்கள் - இயேசுபற்றி தனித்த கருத்தும் அவர் அமெரிக்காவுக்கு சொந்த மானவர் என்பது போன்ற கருத்தும் உடைய கிறித்துவப் பிரிவினர் - சால்ட் லேக்சிட்டி என்பது தலை நகரமாக கொண்ட அயோவா மாநிலத்தில் பெரிய தங்கத்தாலான கோபுரம் - வாஷிங்டனில் உள்ள சர்ச்சில் தங்கக் கோபுரம் உள்ளது) அப்பிரிவைச் சேர்ந்தவர் 1883-ல் பிறந்தவர் -

இந்த காப்புரிமை வருமானத்தை தனது பிறந்த மண்ணான பஷ்ரியின் வளர்ச் சிக்கே உயிலாக எழுதி வைத்தவர் இவர்.

இவரது ஒரு அருமையான கவிதை வரிகளைப் படியுங்கள்: என்னே உண்மைத் தத்துவ மிளிர்வு!

உங்கள் குழந்தைகள் உங்களுடையவை அல்ல. அவை, வாழ்வு தன்னையே தான் அடையக் கொள்ளும் ஏக்கத்தின் மகனும் மகளுமாக ஜனித்தவை.

உங்கள் குழந்தைகள் உங்களூடே தோன்றியவர்கள், உங்களிடமிருந்து அல்ல.

உங்களுடன் இருப்பினும் அவர்கள் உங்கள் உடமைகளல்லர்.

அவர்களுக்கு உங்களுடைய அன்பை நீங்கள் தரலாம், உங்கள் எண்ணங்களை அல்ல.

ஏனெனில், சுயமாக அவர்களிடத்தே எண்ணங்கள் பிறக்கின்றன.

அவர்கள் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம், உயிருக்கு அல்ல.

ஏனெனில், உங்கள் கனவில்கூட நீங்கள் அடைய முடியாத எதிர் காலம்தான் அவர் களது உயிர் உறையும் வீடு.

நீங்கள் அவர்களைப் போல ஆவதற் காக கடின முயற்சி செய்யலாம்.

ஆனால், உங்களைப் போல அவர் களையும் ஆக்கிவிடக் கூடாது.

ஏனெனில், வாழ்வு பின்னடித்துச் செல்வ தில்லை. நேற்றைய நாட்களில் சுணங்குவது மில்லை.

உயிருள்ள அம்புகளாக உங்களிட மிருந்தே எய்யப்படும் குழந்தைகளுக்கு நீங்கள் வில்லுகள்.
வில்லாளி, காலாதீதத்தின் மார்க்கத்தில் குறிவைத்து, தனது அம்புகள் அதிவேகத் துடன் தொலை தூரம் செல்லும்படி, உங் களைத் தனது மகாசக்தியால் வளைக்கிறான்.

வில்லாளியின் கரத்தில் உங்கள் வளைவு ஆனந்திக்கட்டும்.

ஏனெனில், பறக்கும் அம்புகளை அவன் விரும்புகிற அளவுக்கு அசைவற்ற வில்லின் உறுதியையும் விரும்புகிறான்.

(கலீல் ஜிப்ரானின் தீர்க்கதரிசி புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி. தமிழில்: பிரமிள்)

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/94005.html#ixzz3O3mY6T00

தமிழ் ஓவியா said...

கோட்சேவை புனிதப்படுத்துகிறார் மோடி: ராஜேஷ் எம்.பி. குற்றச்சாட்டு


பாலா (கேரளா), ஜன. 6_- மகாத்மா காந்தியாரை ஓரங்கட்டிவிட்டு கோட் சேவை மகத்துவப்படுத்த முயல்கின்ற நரேந்திர மோடி, நாட்டில் மத வெறியை வளர்த்து இந்து நாட்டை நிறுவ முயல் கிறார் என்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் எம்.பி. ராஜேஷ் (நாடாளுமன்ற உறுப்பினர்) குற்றம் சாட் டினார். இது இந்தியாவை மதவாத நாடுகளான பாகிஸ்தான், வங்க தேசம் போன்ற சீர்குலைவு நிலைக்கு இட்டுச் செல்லும் என்றும் ராஜேஷ் கூறினார்.

மதவெறிக்கும், ஊழ லுக்கும் எதிராக போராட் டம்தான் ஒரே வழி என்ற முழக்கத்தை முன்வைத்து வாலிபர் சங்கம் பாலா என்ற இடத்தில் நடத்திய இளைஞர் சங்கம நிகழ்ச்சி யைத் தொடங்கி வைத்து ராஜேஷ் பேசினார்.நல்ல காலம் பிறக்கப் போகிறது என்ற பிரமையை உரு வாக்கி அதிகாரத்தில் அமர்ந்தமோடி, கர்வாபஸி போன்ற மத வகுப்புவாத நட வடிக்கைகளின் மறை வில் நாட்டின் செல்வங் களை கார்ப்பரேட் முதலா ளிகளின் காலடியில் சமர்ப் பிக்கின்ற கொள்கைகளைத் தான் அமல் படுத்துகிறார்.

மதச்சிறுபான்மையினரிடையே பாதுகாப்பற்ற நிலை மையை உருவாக்கி மக்கள் மனதில் பிளவு விதை களைத் தூவுகிறது பா.ஜ.க. அரசு. தேசிய அளவில் கிறிஸ்துமஸ் தினத்தை உழைப்பு தினமாக்கிய மத்திய அரசு பக்ரீத் விடு முறையையும் ஒழித்துக் கட்டும் முயற்சியில் ஈடுபட் டுள்ளது.

கல்வி - கலாச்சா ரத் துறை களில் மூட நம் பிக்கைகளுக்கும் அறிவிய லுக்கும் புறம்பான நிலை பாடுகளுக்கும் அங்கீகாரம் அளித்து நாட்டின் வர லாற்றை, நாட்டின் முகத் தோற்றத்தை தலைகீழாக மாற்ற முயல்கிறார்கள். மதச்சார்பற்ற இந்தியா வின் தேசியப் பதாகை ஏந்திய ஆடம்பரக் காரில் பயணம் செய்கிற கோட்சே மனம் படைத்த பிரதமர், அம்பானி - அதானிக ளுக்கு சேவை செய்யும் பணியில்தான் தீவிரமாக உள்ளார்.

நாட்டில் பட்டினி, விலை உயர்வு போன்றவற் றைக் கட்டுப் படுத்தும் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாத மோடி ஆட்சி, அதானி வெளி நாட் டில் நிலக்கரிச் சுரங்கத் தொழில் ஆரம்பிக்க எஸ் பிஅய் வங்கியிலிருந்து ரூ.6200 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

பெட்ரோல் விலைக் கட்டுப் பாட்டை நீக்க மன்மோகன்சிங் அரசு 6 ஆண்டுகள் காத்திருந்தது என்றால், மோடி அரசு ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் டீசல் மீதான விலைக் காட்டுப்பாட்டை நீக்கியது. பெரும் ஏகபோக முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை மோடி அரசு ஏற்படுத்திக் கொடுத்துள் ளது.

மருந்துகளின் விலை யைத் தீர்மானிக்கும் உரி மையை மருந்துக் கம் பெனிகளுக்கு அளிக்கப் பட்டிருப்பதன் மூலம் ஏழை மக்களின் மருத்துவச் செலவை மோடி அரசு பெரு மளவு அதிகரித்துள்ளது.

ஆதாரை எதிர்த்த பாஜக அரசுஅதிகாரத் திற்கு வந்தபின் ஆதாரை கட்டாயமாக்கி விட்டது. 12 ஆக இருந்த சமையல் வாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9 ஆக குறைக்க முடிவு செய்துள் ளது.

பல பத்தாண்டுகளாக தொழிலாளர்களுக்கு கிடைத்து வந்த பிஎப், இஎஸ்அய் சலுகைகளை ரத்து செய்வதற்கும், தொழி லாளர்களை முதலாளிகள் தங்கள் இஷ்டப்படி வேலை நீக்கம் செய்வதற்குமான சட்டத்தை அமல்படுத்துவ தும் பா.ஜ.க. அரசின் புத் தாண்டுப் பரிசாகும் என் றும் ராஜேஷ் கூறினார்

Read more: http://viduthalai.in/page-8/94037.html#ixzz3O3qC1HkA