Search This Blog

26.1.15

காந்தியாரை இன்னும் எத்தனை முறை கொலை செய்வார்கள்?

காந்தியாரை இன்னும் எத்தனை முறை கொலை செய்வார்கள்?
நாதுராம் கோட்சேவை தூக்கிலிட்ட தினத்தை அவரது நினைவு நாளாக மகராஷ்டிரா முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. மகராஷ்டிரா மாநிலம் பன்வேலில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய இந்து மகாசபை செய்தித்தொடர்பாளர் தினேஷ் போன்சலே கூறியதாவது:  நாம் இன்று ஷஹூரிய திவஸ் (வீரர்களின் நினைவுநாள்) கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.நாம் இந்து தேசத்திற்காக பாடுபட்ட வீரர்களை என்றும் நினைவில் கொள்ள வேண்டும். நமது இந்துமதப்பாதுகாப்பிற்காக நாதுராம் கோட்சே தனது இன்னுயிரை ஈந்த நாள் இன்று, இந்த நாளை நாடுமுழுவதும் கொண்டாடிவருகிறோம். நாங்கள் இன்றும் நாதுராம் கோட்சேவின் சாம்பலை போற்றிப் பாதுகாத்து வருகிறோம் அதை அகண்ட பாரதமானபிறகு சிந்து நதி கடலில் கலக்கும் இடத்தில் (கராச்சி-பாகிஸ்தான்) கரைப்போம், இது எங்கள் சத்திய பிரமாணம்! இதை தலைமுறைக்கு எடுத்துக் கூறவே இந்த நாளை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம்.வரும் தலைமுறைக்கு நாதுராம் கோட்சேவின் உண்மையான வரலாற்றைக் எடுத்துக்கூறும் விதமாக கர்மவீர பூமிபுத்ர நாதுராம்ஜீ கோட்சே என்ற திரைப்படத்தை ஜனவரி 30-ஆம் தேதி வெளியிட விருக்கிறோம். உண்மையான தேசபக்தனின் வரலாற்றை அனைத்து இந்துக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.அது மட்டுமல்ல, காந்தியார் கொல்லப்பட்ட ஜனவரி 30 அன்று கோட்சேவுக்காக இருசக்கர வண்டி ஊர் வலங்களை நடத்த இந்து மகா சபை திட்டமிட்டுள்ளது.


சீதாபூர் பகுதியில் கோட்சேவுக்கு கோயில் கட்டும் திட்டத்தைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந் தாலும், கோட்சேவுக்காக இரு சக்கர வண்டிகளில் ஊர்வலத்தின் வாயிலாக காந்தி எதற்காகக் கொல்லப்பட்டார் என்று பிரச்சாரம் செய்ய இந்து மகாசபை திட்டமிட்டுள்ளது.இந்து மகாசபாவின் தேசிய செயல் தலைவர் காம்லேஷ் திவாரி கூறும் போது, இரு சக்கர வண்டி களில் கோட்சேவை ஆதரித்து, காந்தி கொல்லப்பட்ட தற்கான காரணங்களை விளக்கிப் பிரச்சாரம் செய்யும்போது, பாப்தமாவ் கிராமத்தில் கோட்சே சிலை அமைப்பதற்கான பூமி பூஜை செய்ய உள்ளோம். பின்னர் அந்த இடத்தில் கோட்சே சிலையை அமைப்போம். அதே போன்று கோட்சேவுக்கான கோயில் அமைப்பதற்கு பூமி பூஜை செய்ய உள்ளோம். மேலும், பூமி பூஜை செய்வதற்கு முன்பாகவே சீதாபூரில் ஜனவரி 30 அன்று கோட்சே சிலையை அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று திவாரி கூறினார்.மேலும் அவர் கூறும் போது, கர்ஷெட் பாக்கில் உள்ள இந்து சபா பவனில் இரு சக்கர வாகன  பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளது. சார்பாக், ஆலம் பாக், சவுக், அமினாபாத் மற்றும் பாரா ஆகிய பகுதிகளைக் கடந்து பப்தமாவ் கிராமத்தை அடையும். இருசக்கர வாகன பிரச்சாரத்தின் போது, கோட்சே ஏன் காந்தியைக் கொன்றார்? என்பதை விளக்கும் துண்டறிக்கைகள் வழங்கப்பட உள்ளன.


ஜன் ஜக்ரான் இரு சக்கர வாகன பிரச்சாரத்துக்கு இந்து மகாசபையின் நிர்வாகத்தின்மூலம் அனுமதி கோரப்பட்டுள்ளது. உரிய அலுவலர்களுக்கு எஸ்.எம்.எஸ். என்கிற குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இப்பிரச்சாரத்தில் கோட்சேவைப் புகழ்வதில் சட்ட விரோதம் எதுவுமில்லை. அரசுக்கு விரோதமாக செயல்பட்டதாக எந்த சட்டத்தின்படி கோட்சேவுக்கு தண்டனை அளிக்கப்பட்டது? என்று திவாரி கேட்டுள்ளார்.அமைதியை சீர் குலைப்பதான குற்றச் சாட்டின் பேரில் திவாரி உள்ளிட்ட 26பேர் மீது சிதாபூர் மாவட்ட நிர்வாகம் 26.12.2014 அன்று வழக்கு பதிவு செய் துள்ளமை குறிப்பிடத்தக்கது.


காந்தியாரை 1948 ஜனவரி 30ஆம் தேதி இந்துத்துவா வெறி படுகொலை செய்தது போதாது என்று மீண்டும் மீண்டும் அவரைக் கொலை செய்ய வெறி கொண்டு கிளம்பி விட்டது காவிக் கூட்டம். இதன் போக்கு எதில் கொண்டு போய் முடியுமோ என்ற திகில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே மக்கள் மத்தியில் பிளவுகளை உண்டாக்கும்  வேலையில் இறங்கி இருப்பது - அதாவது வேலியே பயிரை மேய்ந்து தீர்ப்பது என்ற முடிவோடு முண்டாதட்டி கிளம்பி இருப்பது - நாடு ரண களப்படுவதற்கான முயற்சியேயாகும்.


சங்பரிவார்கள் இப்படி சண்டமாருதம் செய்வதை ஆட்சியில் உள்ள பிரதமர் கண்டு கொள்வதேயில்லை. இந்த மவுனம் இந்த வன்முறைக்கு மறைமுகமாகப் பச்சைக் கொடி காட்டுவதாகத் தான் பொருள்படும்.

காந்தியார் பிறந்த நாளை தூய்மைப் படுத்தும் நாள் என்று அறிவித்து, காந்தியாரின் நினைவை மக்கள் மத்தியிலிருந்து முற்றிலும் அப்புறப்படுத்துவதே இதன் பின்னணியில் உள்ள தந்திரமாகும்.

பொதுவாக பார்ப்பனீயம் என்பதே மறைந்திருந்து தாக்கும் யுக்தியுடையதாகும்; வாலியை மரத்தின் மறைவிலிருந்து தாக்கவில்லையா கோழை இராமன்?


ஆரியர்களுக்கு ஆபத்துவரும் பொழுதெல்லாம் இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்று ஆச்சாரி யார்கள் சொல்லுவதன் பொருள் இதுதான்.மத்தியில் பிஜேபி தலைமையிலான ஆட்சி அமைந்து ஏழரை மாதங்கள் ஆவதற்குள்ளாகவே கா(லி)விவெறித்தனம் கண் மூடித்தனமாக குதியாட்டம் போட ஆரம்பித்து விட்டது; இன்னும் சொச்ச காலம் எப்படி போகுமோ என்ற பீதியில் மக்கள்  உறைந்து இருக்கிறார்கள்.இதே மக்கள் நினைத்தால் இந்த மத்தியக் காவி ஆட்சிக்குத் தக்க பாடம் கற்பிக்கலாம்; நடக்கவிருக்கும் ஒவவொரு தேர்தலிலும் வாக்குச் சீட்டு மூலம் பாடம் கற்பிக்க வேண்டும்; இன்னொரு பக்கத்தில் மிக முக்கியமாக இந்துத்துவாவின் கேடு கெட்ட கோட் பாட்டை உள்வாங்கிக் கொள்வது மிக மிக முக்கியமாகும்.தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு மூலி கையே  இதற்கான கை கண்ட மாமருந்து என்பதையும் மறக்க வேண்டாம்!


                                                        -------------------------”விடுதலை” தலையங்கம் 9-1-2015

Read more: http://viduthalai.in/page-2/94197.html#ixzz3OKHNFQ85

8 comments:

தமிழ் ஓவியா said...

பெரியார் பூமியில் மதவெறி அச்சுறுத்தலை தடுக்கவே
திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்துகிறோம்

தமிழர் தலைவர் பேட்டி


காஞ்சிபுரம், ஜன.25- தந்தை பெரியார் பூமியில் ஜாதி வெறி - மதவெறி என்கிற அச்சுறுத்தலை உருவாக்கலாம் என நினைப்பவர்களின் செயலைத் தடுக்கவே திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தி வருகிறோம் என தமிழர் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் நேற்று (24.1.2015 மாலை நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் பங்கேற்க சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் 2000 திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகள் நடத்தப்படுவது குறித்து கூறியதாவது:

பெரியார் பூமியில் ஜாதி வெறி, மத வெறி என்கிற அச்சுறுத்தலை உருவாக் கலாம் என்று நினைக்கின்ற காலக் கட்டத்திலே கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னாலேயே திராவிடர்கழகம் இதை மக்களுக்கு எச்சரித்தது. வளர்ச்சி என்ற பெயராலும், இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் என்கிற மாயையைக் காட்டியும், ஏற்கெ னவே இருந்த ஆட்சியின்மீதிருந்த அதிருப்திகளையும் பயன்படுத்தி மோடி ஆட்சிக்கு வந்தார். மதவெறிகளை வெளிப்படையாக செய்கிறார்கள்

இப்போது வெளிப்படையாகவே கோட்சேவுக்கு சிலை வைக்கக்கூடிய அளவுக்கு, அறிவிக்கக்கூடிய அளவுக்கு மதவெறிகளை வெளிப்படையாக செய் கிறார்கள். 10 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும், எங்களுக்கு ஓட்டுப்போடாதவர்கள் எல்லாம் யாருக்கோ பிறந்தவர்கள் என்று அவதூறுகளைப் பேசி வருகிறார்கள். அதுமட்டுமல்ல அமைச்சர்களாக இருப்பவர்களே கண்டிக்கப்படக்கூடிய அளவிலே இருக்கிறார்கள். என்றாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், நாடாளுமன்றத்திலேகூட சரிவர சட்டங்கள் இயற்றாத அளவுக்கு, இன்றைக்கு வேலை வாய்ப்புகள் பறிபோய் இருக்கின்றன.

வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் இல்லை

ஏற்கெனவே இருந்த வேலை வாய்ப்புகள் இப்போது இளைஞர்களுக்கு கணினித்துறையில் இல்லை. இந்த ஊருக்கு அருகிலேயே இருக்கக்கூடிய இரண்டு மிகப் பெரிய தொழிற்சாலைகள் ஃபாக்ஸ்கான், நோக்கியா போன்றவையெல்லாம் மூடப்பட்டிருக்கின்றன. ஆலங் குளம் அரசு சிமெண்ட் தொழிற்சாலையும் மூடப்பட் டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகளிலே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், ஏற்கெனவே இருந்த வேலைவாய்ப்புகளுக்கு உத்தரவாதம் இருக்கிறதா என்றால் கிடையாது. இவையெல்லாம் ஏன் செய்யவில்லை என்று மக்கள் நினைப்பார்கள் அல்லது கேட்பார்கள் என்று திசைதிருப்புவதற்காக முழுக்க முழுக்க பல்வேறு பிரச் சினைகளை, கோட்சே பிரச்சினைகள் ஆகியவைகளை அவர்கள் சுலபமாக சொல்லுகிறார்கள். எனவே, மதவெறியை மாய்த்து, மனித நேயத்தை உருவாக்குவோம் என்று தெளிவான நிலையை உருவாக்க, திராவிடர் இயக்கம் அதனுடைய கொள்கைகள்தான் ஒரே விடியல் என்பதை விளக்குவதற்காக திராவிடர் விழிப்புணர்வு மாநாடு தமிழ்நாடு முழுக்க 2000 மாநாடுகளை திராவிடர் கழகம் ஒத்த கருத்துள்ள நண்பர்களை எல்லாம் அழைத்து வெகு சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறது. இதுவரையிலே தென்கோடியிலிருந்து 20, 25 மாநாடுகளை நாங்கள் நடத்திக்கொண்டிருக்கிறோம். இன்றைக்கு காஞ்சிபுரத்தில் மாநாடு நடைபெறுகிறது. ஆகவே, இந்தப்பணி தொடரும்.

அடுத்த தேர்தலைப்பற்றிக் கவலைப்படு வதைவிட, தலைமுறையைப்பற்றிக் கவலைப்படுவதுதான் திராவிடர் இயக்கத் தினுடைய குறிக்கோள். பதவிக்காக திராவிட இயக்கங்கள் இல்லை. மாறாக, உண்மையான திராவிடர் இயக்கம் தமி ழர்கள் மானத்தோடு, அறிவோடு, உரிமை யோடு வாழ வேண்டும். பகுத்தறிவோடும் வாழவேண்டும். மதவெறி மாய்த்து மனித நேயத்தைக் காக்க வேண்டும் என்பதுதான்.

தமிழ் ஓவியா said...

சிறீரங்கத்தில் பொது வேட்பாளர்

செய்தியாளர் கேள்வி: சிறீரங்கத்தில் அமைச்சர்கள் அனைவருமே முகாமிட்டுள் ளனர். சட்டசபை வெறிச்சோடி எல்லோ ருமே அங்கேதான் இருக்கிறார்களே?

தமிழர் தலைவர் பதில்: தெரிந்த விஷயம்தானே. எல்லாருமே அங்கு இருந்தாலும், வாக்களிக்க வேண்டியவர்கள் மக்கள்தானே. அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. அதனாலே, மக்களுக்குத் தெளி வாக தெரியக்கூடிய உணர்வுகள் அங்கே இருக்கிறது. ஏன் அந்தத் தேர்தல் வந்தது என்ற கேள்வி கேட்டாலே அதற் குப் பதிலிலேயே மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண் டுமோ அதைச் செய்வார்கள். அதுமட்டுமல்ல, இதற்கு இடையிலே எதிர்க்கட்சிகள் என்பவர்கள் கலைஞர் அவர்கள் கேட்டுக்கொண்டபடி ஒரு பொது வேட்பாளரை அவர்கள் நிறுத்தி இருந்தால், யார் உண்மையான எதிரி என்று அவர்களை வீழ்த்துவதற்கு வாய்ப்பு ஏற்படும். அதற்கு வாய்ப்பு இல்லாமல், மற்றவர்களை பிரித்தாளக்கூடிய அளவுக்கு, அதன்மூலமாக ஆட்சி அதிகாரம், பலவீனங் களைப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால், பாஜக திராவிடர் இயக்கங்களையே வீழ்த்திவிடுவோம் என்று சொல்லி வந்திருக்கிற இயக் கத்தைப் பொறுத்தவரையிலே, ஏற்கெனவே, பாராளு மன்றத் தேர்தலில் யார்யார் அவர்களோடு இருந்தார்களோ, அவர்கள் எல்லாம் காணாமற் போய் விட்டார்கள். அவர் களுடைய எண்ணிக்கை குறைந்திருக்கிறது. காணாமல் போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் நாங்கள் பலத்த கூட்டணி என்று சொல்கிறார்கள். கேள்வி: மதவெறி சக்தி என்று சொல்லியும் அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள், அவர்களுக்கு இந்த இடைத் தேர்தல் மூலம் பாடம் புகட்டுவதற்கு இந்த இடைத் தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டது யாருடைய தவறு?

பதில்: மக்களுடையது. ஜனநாயகத்திலே மக்கள் தெளிவாக இருந்திருந்தால், நீங்கள் ஏற்கெனவே சொன்னதுபோல எச்சரித்தோம். அதையும் தாண்டி ஏமாந்தார்கள். ஒரு தடவை ஏமாறலாம். மறுபடியும் திரும்பத்திரும்ப ஏமாந்துகொண்டிருக்கலாமா? தவத்திரு குன்றக்குடி அடிகளார்தான் சொல்வார், விழுவது தப்பில்லை, நேற்று விழுந்த இடத்திலேயே இன்றைக்கும் விழுவது இருக்கிறதே அதைவிட வேறு என்ன கொடுமை? அதேமாதிரி தமிழர்களுடைய நிலை இருக்கிறது. அதை எடுத்துச்சொல்லி, விழிப்புணர்வு ஊட்டுவதற்குத்தான் நாங்கள் அந்தப்பணியைச் செய்து வருகிறோம்.

கேள்வி: பொது வேட்பாளர் நிறுத்துவதில் தவறு எங்கு நேர்ந்தது?

பதில்: தவறியதற்கு பல காரணங்கள் உண்டு. அதிலே குறிப்பாக என்னவென்றால், எல்லோருமே தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, உண்மை நிலையையோ, அல்லது பொதுக்கருத்தையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்கிற பொது எண்ணங்கள் இன்னும் தமிழ்நாட்டில் வரவில்லை. தீப்பிடித்து எரிகின்ற நேரத்தில் அணைப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து அணைக்க வேண்டுமே தவிர, எனக்கு முன்னால் வாய்ப்பு இருக்கிறதா? உனக்கு முன்னால் வாய்ப்பு இருக்கிறதா? என்று நினைத்தால், தீ முழுமையாக வெற்றி பெற்றுவிடும். அணைப்பவர்கள் தங்களை முன்னிலைப் படுத்துவதாலேயே பின்னாலே அவர்கள் பழியை ஏற்கவேண்டி வரும்.

கேள்வி: 2016ஆம் ஆண்டிலே இந்த நிலை மாறும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: நிச்சயமாக மாறும். ஏனென்றால், அரசியல் என்பதே, நாளை காலை என்ன செய்தி என்பது தெரி யாமல் இருப்பதுதான் அரசியல். நேற்று இருந்த செய்தி வேறு, இன்று இருக்கிற செய்தி வேறு. ஆக்ராவுக்கு போகிறார்ஒபாமா என்று சொன்னார்கள். இன்றைக்கு ஆக்ராவுக்கு போகவில்லை என்று சொல்கிறார்கள். உடனே செய்தி மாறுகிறது. அதே போல்தான் எத் தனையோ செய்திகள் மாறும். கால நிலையே இவ்வளவு வேகமாக மாறும்போது, அரசியலில் மாறுவதற்கு என்ன? தாராளமாக மாறும். அவ்வளவுதான்

Read more: http://viduthalai.in/e-paper/94959.html#ixzz3PtAHwMGO

தமிழ் ஓவியா said...

உப்புக்கும், ரத்த அழுத்தத்துக்கும் காரணம் கண்டுபிடிப்பு: ஆய்வுத் தகவல்

டொரன்டோ, ஜன.25_ உணவில் அதிக மாக உப்பு சேர்த்தால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் உப்புக்கும், ரத்த அழுத்தத்துக்கும் அப்படி என்ன தொடர்பு என்பது இதுவரை விஞ் ஞானிகளுக்குக்கூட தெரியாத புதிராக இருந்து வந்தது. இந்த நிலையில், கனடாவைச் சேர்ந்த மெக்கில் பல்கலைக்கழகப் பேராசிரியர் சார்லஸ் போர்க் தலைமையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் இந்த முடிச்சு அவிழ்க்கப் பட்டுள்ளது.

அதாவது, அளவுக்கு அதிகமாக உடலில் சேரும் உப்பு, மூளையின் செயல் பாட்டில் ஏற்படுத்தும் குறிப்பிட்ட மாற்றமே, ரத்த அழுத்தம் அதிகரிக்கக் காரணம் என எலிகளைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட ஆய்ந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சார்லஸ் போர்க் கூறியதாவது:

உணவில் அதிக உப்பு சேர்க்கப்படும்போது, "வாஸாபிரெஸ்ஸின்' எனப் படும் ஹார்மோன் களை வெளிப்படுத்தும் நரம் பணுக்களில் அது வேதி யியல் மாற்றத்தை ஏற்படுத் துகிறது.

இந்த வேதியியல் மாற்றம் காரணமாக, மூளையில் இயற்கையாக அமைந்துள்ள ரத்த அழுத்தத்தைக் கண் காணிக்கும் அமைப்பால், "வாஸாபிரெஸ்ஸின்' ஹார் மோன்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது.

"வாஸாபிரெஸ்ஸின்' ஹார்மோன்கள்தான் ரத்த அழுத்தத்தையும், உடலின் நீர் அளவையும் அதிகரிக்கச் செய்கின்றன.

இந்த ஹார்மோன்கள் மிக அதிக அளவில் உற் பத்தியாவதன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக் கிறது என்றார் அவர்.

இந்தக் கண்டுபிடிப்பால் உப்புக்கும், ரத்த அழுத்தத் துக்கும் உள்ள தொடர்பு கண்டறியப்பட்டாலும், இந்தப் பிரச்சினைக்கு மருத் துவத் தீர்வு காண்பதற்கான சிகிச்சை முறைகளை உருவாக்க, இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட வேண்டி யிருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்த னர்.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "நியூரான்' அறிவியல் இதழில் இந்த ஆய்வின் விவரம் வெளி யிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

எது உண்மையான இராமாயணம்?

இராமாயணம் என் றால் ஒன்றிரண்டு அல்ல; எண்ண முடியாத அள வுக்கு இராமாயணம் பல மொழிகளில் உண்டாம்.

உண்மை என்றால் ஒன்றாகத் தானே இருக்க வேண்டும். இத்தனை இராமாயணங்களில் எது உண்மை என்று ஏற்றுக் கொள்வது? வங்காள இராமாயணத்தில் இரா வணனின் மகள் சீதை! எப்படி இருக்கிறது?

Read more: http://viduthalai.in/e-paper/94980.html#ixzz3Pvh8Ub73

தமிழ் ஓவியா said...

விருதுகள் பார்ப்பனரின் ஏகபோகமா?


ஜனவரி 26 - இந்தியக் குடிஅரசு நாளை யொட்டி, இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறுவர் பத்மபூஷன், பத்மஸ்ரீ முதலிய விருதுகளுக் குரியவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள்

1) என்.கோபால்சாமி (அய்யங்கார்) ஓய்வு
2) சுதா இரகுநாதன்
3) எம்.ஆர். சீனுவாசன்
4) பி.வி. இராஜராமன் (அய்.ஏ.எஸ்.) ஓய்வு

அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் தேடித் தேடிப் பார்த்தாலும் தமிழ்நாட்டிலிருந்து பெரிதும் பூணூல் திருமேனிகளே தகுதி பெற்றவர்களாக உள்ளார்கள்;
தடவித் தடவிப் பார்த்தால் ஒன்று வெறும் முதுகு கிடைக்குமோ என்ன?

யாருக்கு வந்த சுதந்திரம் இது?

புரிகிறதா?

Read more: http://viduthalai.in/e-paper/94984.html#ixzz3PvhFequ3

தமிழ் ஓவியா said...

காந்தியாரைக் கொன்ற கோட்சேவுக்கு கோயில் கட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இடத்துக்கு சீல் வைப்பு

உ.பி. அரசின் பாராட்டத்தக்க நடவடிக்கை

லக்னோ, ஜன.26 உத்தரப்பிரதேசம் மாநி லம், மீரட் நகரில் இந்து மதவெறியன் கோட் சேவுக்கு கோயில் கட்டுவ தாக அறிவிக்கப்பட்ட இடத்துக்கு உ.பி. அரசின் மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

அனைத்து தரப்பு மக்களாலும், மகாத்மா என ஏற்றுக் கொள்ளப் பட்டவர் காந்தியார். அவரை பிர்லா பிரார்த் தனை மய்யத்தில் 30.1.1948 அன்று இந்து மதவெறி யன் நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். காந்தி கொலை வழக்கில் அவனுக்காக வாதாட எவரும் முன்வரவில்லை. அந்த கொலை வழக்கில் கோட்சேக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்தான். காந்தியாரை கொன்ற வனையே 18 ஆண்டு களுக்குபின் விடுதலை செய்தனர்.

அவனிடம் காந்தியை ஏன் கொலை செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, அவர் இந்து மதத்துக்கு துரோ கம் செய்தார். இஸ்லாமி யர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். அதனால் காந்தியாரை சுட்டுக் கொன்றேன் என்றான். அப்படிப்பட்ட இந்து மதவெறி பிடித்த நாதுராம் கோட்சேவுக்கு மீரட் மாவட்டம் பிரம்ம புரி பகுதியில் வரும் ஜன வரி மாதம் சிலை வைக்கப் படும். அந்த சிலை வைக்கப்படும் இடத்தில் கோயில் ஒன்றும் கட்டப் படும் என மதவெறியை தூண்டும் வகையில் அகில இந்திய இந்து மகா சபாவின் தேசியப் பொதுச் செயலாளரான ஆச் சார்யா மதன் கடந்த டிசம்பர் மாதம் அறிவித் திருந்தார்.

இந்த கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக, விசா ரித்து நடவடிக்கை எடுக் கும்படி மாவட்ட நிர் வாகம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் மற்றவரை அவமதிப்பு செய்வது, வதந்திகளை பரப்புவது போன்ற குற்றவியல் சட்டங்களின்கீழ் ஆச் சார்யா மதன் மீது கிரி மினல் வழக்குப்பதிவு செய் யப்பட்டது.

இந்நிலையில், இவ் விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட மேல் விசாரணையின் விளை வாக கோட்சேவுக்கு சிலை அமைக்க விரும்பிய சர்ச்சைக்குரிய இடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

அந்த இடத்துக்குள் அத்துமீறி நுழைய முயற் சிப்பவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக் கப்படும் என மீரட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/94969.html#ixzz3PvhSGEMk

தமிழ் ஓவியா said...

குறைகளை பேஸ்புக்கில் தெரிவிப்பது குற்றமில்லை: உச்சநீதிமன்றம்

பெங்களூரு, ஜன.26_ கருநாடகம் மாநிலத்தைச் சேர்ந்த இணையர், தங் களிடம் காவல்துறையினர் தவறாக நடந்து கொண் டது தொடர்பான தக வலை பெங்களூரு போக் குவரத்துக் காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டு இருந்த பேஸ்புக் பக்கத் தில் பதிவு செய்தனர். இதுதொடர்பாக அவர் கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கிரிமினல் நடவடிக்கை மற்றும் காவல்துறை அதிகாரியை கடமையை செய்யவிடா மல் தடுப்பது ஆகிய குற்றங்கள் அடிப்படை யில் இணையர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது.

இதனை எதிர்த்து இணையர் கருநாடக மாநிலம் உயர்நீதிமன் றத்தை நாடினார். ஆனால், உயர்நீதிமன்றம் அவர் களுடைய மனுவை நிரா கரித்துவிட்டது. இது முன்கூட்டி தாக்கல் செய் யப்பட்டது, விசாரணை முடிவடைவதற்கு முன்ன தாகவே தாக்கல் செய்யப் பட்டுள்ளது என்று கூறி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

உயர்நீதிமன்றத்தில் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்றத்தை நாடி னர். உச்சநீதிமன்றம் அவர் கள் மீதான முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

விசாரணையின் போது, இதுவரையில் பேஸ் புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத் துகள் கவலைக்குரியது, பேஸ்புக் பொதுமன்றத் தில் உள்ள உதவிபொருள் போன்று தோன்றுகிறது. பேஸ்புக்கில் முறையிடுப வர்கள்மீது நடவடிக்கை எடுப்பது, இந்திய தண்ட னைச் சட்டம் 503- ஆவது பிரிவின்படி குற்றவியல் மிரட்டல் தொடர்பான மூலகருத்தை ஈர்க்கமா லிருக்க செய்யலாம்.

குறிப் பிட்ட பேஸ்புக் பக்கம், பொதுமக்கள் தங்களது குற்றங்களை தெரிவிப்ப தற்காக தொடங்கப்பட் டது. எங்களது பார்வை யில், கோரிக்கை விடுத்த வர்கள் மாறுபட்ட வித மான நம்பிக்கையில், தங்களது கருத்துகளைப் பதிவு செய்திருக்கலாம். அது குறிப்பிட்ட எல் லைக்குள் இருக்கிறது என்று நீதிபதிகள் வி. கோபாலா கோவ்தா மற் றும் ஆர். பானுமதி அடங் கிய உச்சநீதிமன்ற அமர்வு கூறியது.

மாலிக் தானேஜா மற்றும் அவருடைய மனைவி சாக்ஷி ஜாவா கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி சாலை விபத்தை சந்திக்க நேரிட்டது. இச்சம்பவத் தில் ஆட்டோவில் பய ணம் செய்த ஒருவர் காய மடைந்தார். காயமடைந்த அவர் உடனடியாக மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் அவர்களுக் குள்ளேயே பேசி தீர்க்கப் பட்டது.

இதற்கிடையே சம்பவம் நடந்தபோது அங்கிருந்த காவலர் ஒரு வர், மூத்த அதிகாரியை சந்திக்குமாறு இணைய ருக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக அவர்களும் மூத்த அதிகாரியை சென்று சந்தித்துள்ளனர். அவர் கள் அதிகாரியை சந்தித்த போது, அவர் இவர்களி டம் தவறாக நடந்து கொண்டுள்ளார். உயரதி காரி, இணையரை மிரட் டியுள்ளார்.

இதனையடுத்து தவ றான நடத்தை தொடர் பாக பாதிக்கப்பட்ட இணையர் சம்பவம் தொடர் பான தகவல்களை பெங் களூரு போக்குவரத்து காவல்துறை பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்த னர். இ-_மெயிலும் புகார் தெரிவித்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-8/94999.html#ixzz3PvjQhbTN

தமிழ் ஓவியா said...

மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தோழர்கள் உடற்கொடை


திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள், தனது பிரச் சார பயணங்களில் செல்லுமிடமெல்லாம் வலியுறுத்துவது மனிதா பிமான அடிப்படையில் உதவவேண்டும். குருதிக் கொடை, உட லுறுப்பு கொடை, கண் கொடை மற்றும் உடற் கொடை வழங்கவேண் டும்.

அது பொதுமக் களுக்கு பயன்படும். உடற்கொடை அளிப்ப தால், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்குப் பயன்படும். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக தோழர்கள் மாவட்டத் தலைவர் டி.ஏ.ஜி.அசோகன், மாவட்ட செயலாளர் இரா.சக்திவேல், நகர செயலாளர் ச.வேலாயுதம், அவருடைய தாயார் லட்சுமி அம்மாள் சண்முகம், மண்டல மாணவரணி செயலாளர் அ.அர்ஜூனன், மாவட்ட ப.க. தலைவர் என்.சிதம்பரநாதன்,

பெரியார் பெருந்தொண்டர் டி.ஏ.ஜோதி மற்றும் தோழர்கள் தனது உடலை மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கொடை வழங்குவதாக பதிவு செய்து, அதற்கான சான்றிதழ்களையும், பத்திரங்களின் நகலை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர் (காஞ்சிபுரம், 24.1.2015)

Read more: http://viduthalai.in/page-8/95003.html#ixzz3Pvjd5jfE