Search This Blog

7.1.15

புத்தக வாசிப்பும் பெரியாரும்

வானொலி உரை - புத்தக வாசிப்பும் பெரியாரும்
தந்தை பெரியாரின் பள்ளிப் படிப்பு என்பது குறிப்பிடத் தகுந்ததாக ஒன்றும் கிடையாது. தன் பள்ளிப் படிப்பைப் பற்றி அவர் என்ன சொல்கிறார்?

நான் பள்ளியில் படித்த காலம் மிகச் சொற்ப காலமே யாகும். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் 3 வருஷம். ஸ்கூல் பள்ளிக் கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக் கூடத்தில் 2 வருஷமும்தான் படித்தவன். எனக்குப் படிப்பே வராது என்று எனது பெற்றோர் முடிவுகட்டி விட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாயிருந்ததாகவும், ஆதலால் என்னை பகலெல்லாம் பிடித்து வைத்திருந்து இரவில் வீட்டிற்கனுப் பினால் போதுமென்று கருதியதாகவும் சொன்னார்கள். நான் படித்த நாலு வார்த்தையும் பிழையறக்கூட எழுத முடியாது என்பதுதான்.

1884-85லேயே தரகு மண்டி ஆரம்பித்தாகிவிட்டது. அப்போது நான் சிறிய பையன். என் சிறிய பாட்டியார் வீட்டில் தத்தாகக் கொடுத்து வளர்ந்து வந்தேன். அடிக்கடி தந்தையார் கடைக்குப் போய்விடுவேன். அப்பொழுது திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்தேன். மூட்டைகள் ஏராளமாக வந்திறங்கும். அப்போதே நான் சிறு பையனாக இருந்தாலும் கடைக்குப் போகிறபோது ஏலம் கூறுவேன்.

சமர்த்தாகப் பேசுவேன். வியாபாரிகளிடமெல்லாம் நன்றாகப் பழகுவேன். சாதுர்யமாகப் பேசி அவர்களை என் வசத்துக்குக் கொண்டு வருவேன். எனக்காக சில வியாபாரிகள் ஏலத்தில் விலை கேட்பார்கள். இதனால் நான் சரியாகக்கூடப் பள்ளிக்கூடம் போக மாட்டேன். அதனால் என்னைப் பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திவிட்டு, என் தந்தையார் என்னை எட்டாம் வயதிலேயே கடையில் போட்டுவிட்டார்.

ஓர் ஆண்டு வரை கடையிலேயே இருந்து கொண்டு வியாபாரத்தில் கவனம் செலுத்தி வந்தேன். நான் சுறுசுறுப்பாகவும், வியாபாரத்தில் அதிக அக்கறையும் ஆசையும் காட்டி வந்ததனால் என் தகப்பனார் மகிழ்ச்சி அடைவார். ஆனால், ஊரில் உள்ள என் தகப்பனாரின் நண்பர் களும் மற்றும் பெரிய மனிதர்களும், இந்தச் சிறிய பையனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் வீணாகக் கடையில் போட்டுக் கெடுக்கிறீர்களே! இது நியாயமல்ல, எப்படியாவது அவனை நல்ல வார்த்தைகள் சொல்லி படிக்க அனுப்புங்கள் என்று வற்புறுத்தி வந்தார்கள்.

அதன்பேரில் மீண்டும் ஸ்கூலுக்கு அதாவது பிரைமரி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டேன். அதற்கு முன் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்தேன். பிரைமரி வகுப்பில் நான்காம் வகுப்புப் படித்தேன். நான் பாஸ் செய்ததும் படிப்பை விட்டு விட்டேன். உடனே 1890ஆம் ஆண்டில் கடைக்கு மீண்டும் வந்துவிட்டேன்  என்கிறார்  பெரியார்.

இப்படி படிப்பு என்பது வெறும் நான்காம் வகுப்பே என்றாலும், இந்தத் தலைவரின் பேச்சுகளும், எழுத்துகளும் மிகப்பெரிய அளவில் வாசிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியதுதான் ஆச்சரியம். பள்ளிப் புத்தகங்கள் வாசிப்பு என்பது குறைவானதாக இருந்தபோதிலும், ஆய்வு நோக்கில் தந்தை பெரியார் கடைசிவரையில் படித்துக்கொண்டே தானிருந்தார்.

தந்தை பெரியாரின் நண்பர்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுவது ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி என்னும் புராண அகராதியும், மதுரைத் தமிழ்ப் பேரகராதிகளும் ஆகும். எப்பொழுதும் தந்தை பெரியார் அவர்களின் அருகிலேயே அவை இருக்கும்; வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம், அவற்றைத் துருவிக்கொண்டே இருப்பார் பெரியார்.

முக்கிய குறிப்பு என்று தாம் கருதுவதை, புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் அதன் பக்க எண்களைக் கைப்பட எழுதி வைத்துக் கொள்வார்கள். எந்தப் பொருளைக் குறிக்கும் சொல்லாக இருந்தாலும் அதன் வேர்ச் சொல் என்ன? அதன் பொருள் என்ன? எப்படி மருவியது என்கிற அளவுக்கு அதன் மூல வேருக்கே செல்வதுதான் தந்தை பெரியாரின் வாசிப்பு என்னும் ஆய்வு முறையாகும்.

தந்தை பெரியார் அவர்களைப் பற்றி அறிஞர்அண்ணா அவர்கள் அழகான வார்த்தைகளால் படம் பிடித்தார் - மூல பலத்தோடு போர் புரிவதுதான் தந்தை பெரியார் அவர்களின் போர்முறை என்பார் அண்ணா. எதை விமர்சித்தாலும், எதிர்த்தாலும் அதன் மூலபலத்தில் கைவைக்கக் கூடிய நுண்மாண் நுழைபுலத்தின் காதலர் அவர்.

நான் சாதாரணமாக ஒரு வெறும் பேச்சாளியல்ல, அல்லது விசயங்களை எல்லாம் படித்து அறிந்து மக்களுக்கு எடுத்துச் சொல்லும்படியான அறிவாளி அல்ல; நான் ஒரு கருத்தாளி. உலகத்தைப் பார்த்து எப்படி நடந்தால் அவர்களுக்கும் நல்லது - நாட்டுக்கும் நல்லது என்று தான் சொந்தமாகக் கொண்ட கருத்தினைக் கூறி வருபவன் என்று இன்னொரு இடத்தில் குறிப்பிடுகிறார்கள்.

சென்னை சட்டக் கல்லூரியின் இயக்குநராகவும் அதன்பின் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருந்தவருமான ஏ.எஸ்.பி.அய்யர், சென்னை சட்டக் கல்லூரி தமிழ் இலக்கியக் கழகத்தால் நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவில், உரையாற்றிட தந்தை பெரியார் வந்தபோது (10.2.1960) தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்:-

கீழை நாடுகளைப் பற்றி பெட்ரண்ட் ரசல் ஒரு நூலில் எழுதும்போது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும் பேசினாலும் மேற்கோள் காட்டிப் பேசுவதுதான் வழக்கம்; தங்கள் கருத்து என்று வெளியிட மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். நான் அறிந்தவரையில், மேற்கோள் காட்டிப் பேசாமல், தன்னறிவையே முன்னிறுத்திப் பேசும் தனித்த சிந்தனையாளர் பெரியார் ஒருவர்தான் என்றாரே!
திருக்குறளையும், திருவள்ளுவரையும் பற்றிப் பேசும் போதுகூட நான் சொன்ன கருத்தை திருவள்ளுவரும் சொல்லி யிருக்கிறார் என்று சொல்லுவாரே தவிர, திருவள்ளுவர் சொன் னதைத் தான் நானும் சொல்லுகிறேன் என்று ஒருபோதும் சொன்னதில்லை. அந்தத் திருக்குறளுக்காக - மக்கள் மத்தியில் அதைக் கொண்டு செல்லுவதற்காக முதன்முதலில் திருக்குறள் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்தான்!
திருவள்ளுவர் கூறும் விதி என்பது, ஊழ் என்பதுபற்றி எல்லாம் தனித்தன்மையாக பொருள் கூறியுள்ளார் பெரியார்.

ஊழ் என்பது சிலருக்குப் பிறவியிலேயே அமைந்த குணம். இதில் சிலவற்றை மாற்றலாம்; மாற்ற முடியாமலும் போகலாம். இதைத்தான் திருவள்ளுவர் ஊழ் என்று குறிப்பிடுகிறார் என்கிறார் தந்தை பெரியார்.

எழுபிறப்பு என்று திருவள்ளுவர் கூறுவது ஏழு ஜென்மமல்ல. ஒருவன் கொண்டுள்ள குண மாற்றங்களைத்தான் அவ்வாறு வள்ளுவர் குறிப்பிடுகிறார். ஒருவனைப் பார்த்து அவன் புது மனிதனாகிவிட்டான் என்று சொல்லுவ தில்லையா? அதுபோலத்தான் என்று கூறுகிறார் அந்தக் கொள்கைக் கோமான்.


திராவிடம் என்பது எப்படி வந்தது? பலரும் ஆய்வு செய்துள்ளனர். ஆனால், நான்காம் வகுப்பே படித்த தந்தை பெரியார் அவர்களோ எல்லோருக்கும் புரியும்படியாக பளிச்சென்று சொல்லுகிறார். திரு இடம் என்பதுதான் திருவிடமாகி திராவிடம் என்பதாகிவிட்டது என்று கூறுகிறார்.

இராமாயணத்தை எத்தனையோ ஆண்டுக் காலமாக எண்ணற்றோர் வாசித்துக் கொண்டு தானிருக்கின்றனர்.

தந்தை பெரியாரும் வாசித்தார். தந்தை பெரியார் அவர்கள் போல் பல்வேறு இராமாயணங்களையும் வாசித்தவர்கள் அரிதி னும் அரிது. அவர் வாசிப்பு என்பது அவரைச் சார்ந்ததல்ல - மக்களைச் சார்ந்தது. மக்களின் அறிவுப்புலத்தில் ஆழமான சிந்தனைப் பொறியைத் தட்டி எழுப்பக் கூடியது. இராமா யணத்தின் மீது பெரியார் மேற்கொண்ட வாசிப்பின் பலன் இராமாயணப் பாத்திரங்கள் என்றும், இராமாயணக் குறிப்புகள் என்றும் இரு நூல்களாக வெளிவந்துள்ளன.
இராமாயணப் பாத்திரங்கள் - எனும் நூல் ஆங்கிலத்தில் ஸிணீனீணீஹ்ணீஸீணீ - கி ஜிக்ஷீமீ ஸிமீணீபீவீஸீரீ எனும் தலைப்பிலும் இந்தியில் ச்ச்சு இராமாயணம் எனும் தலைப்பிலும் வெளிவந்துள்ளன.
இராமாயணத்தை வாசித்த பெரியார் அடிப்படையில் ஒரு வினாவை எழுப்புகிறார். அது ஆணிவேரையே வீழ்த்தக் கூடியதாகவும், அஸ்திவாரத்தையே பிளக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
திரேதாயுகத்துக்கு உண்டான வருஷம் 12,96,000தான். ஆனால் அந்த யுகத்தில் இராவணன் 50 லட்சம் வருடங்கள் ஆண்டிருக்கிறான்  என்பது இராமாயணக் கதையின்படி உள்ள சேதியாகும். 13 லட்சம் வருடத்திற்கு உள்பட்ட ஒரு யுகத்தில் நடந்த செய்கை 50 லட்சம் வருடம் நடந்ததாக இருக்க முடியுமா? என்ற வினாவை எழுப்பினார் - அந்த வெண்தாடி வேந்தர். பல்வேறு இராமாயணங்களைப் படித்துத் திளைத்த தலைவர் பெரியார் அவர்கள் பொதுக் கூட்டங்களில் சில பகுதி களைப் படித்துக் காட்டி பொதுமக்கள் மத்தியில் தம் விமர்சனத்தை வைப்பார்கள்.
அதன் விளைவு என்னாயிற்று? அவர் எடுத்துக்காட்டிப் பொதுக்கூட்டங்களில் படித்துக் காட்டிய பகுதிகளை அடுத்த பதிப்பில் எடுத்துவிட்டனர் என்பதுதான்.

தந்தை பெரியார் புத்தக வாசிப்பு என்பது மக்கள் மத்தியிலே மாபெரும் மாற்றத்தை - மறுமலர்ச்சியை மலரச் செய்வதற்கான காரணிகளாக அமைந்தது என்பது தனிச் சிறப்பாகும்.


கல்விக்கூடப் படிப்பு குறைவாக இருந்தாலும் அவர் குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி, ஸிமீஸ்ஷீறீ முதலிய ஏடுகளுக்கு ஆசிரியராகவும் இருந்தார். விடுதலை ஏட்டைத் தொடங்கி நடத்தினார். திரையுலகில் நகைச்சுவைத் தேனில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் எனது குருநாதர் பச்சை அட்டைக் குடிஅரசு என்று கூறியதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் மட்டுமல்ல - கோடிக்கணக்கான மக்களின் மூளையில் குடிபுகுந்து புரட்சி விதைகளை விதைத்தது. அறிஞர் அண்ணா, ஆசிரியர் வீரமணி போன்ற எண்ணற்ற படித்தவர்களையும், பாமரர்களையும்கூட சுண்டி இழுத்தது.

மூப்படைந்த நிலையில் படிப்பதற்குச் சிரமமான அந்த நிலையில்கூட, எழுத்துகளைப் பெரிதுபடுத்திக் காட்டும் லென்சை வைத்துப் புத்தகங்களை வாசித்தார் என்றால் சாதாரணமா? தமிழ், ஆங்கிலச் செய்தி ஏடுகளை விடாமல் படித்துத் தீர்த்துவிடுவார். படித்த பல பகுதிகளில் கோடிடுவ துண்டு. சிலவற்றைக் கத்தரித்து தனி நாட்குறிப்பில் வைத்துக் கொள்வார் - பொதுக் கூட்டங்களில் தேவைப்படும்பொழுது அதனை எடுத்துக்காட்டியும் விளக்குவார். எந்தப் புத்தகங்களை வாசிப்பது என்பது குறித்தும் அவர் கூறியுள்ளவை:
நீங்கள் எந்தப் புத்தகத்தைப் படித்தால்தான் என்ன பயன்? படிப்பது என்பது அறிவு உண்டாவதற்கு. ஆனால் நீங்கள் படிக்கும் புத்தகம் எல்லாம் மடமை வளர்ச்சிக்கும் மூட நம்பிக்கை ஏற்படவும் பயன்படுகிறது. அதனால்தான் இன்றும் நம்மக்கள் பகுத்தறிவற்றிருக்கிறார்கள்.
நீங்கள்  குடிஅரசு பகுத்தறிவுப் பதிப்பகப் புத்தகங்கள் வாங்கிப் படித்தால், கட்டாயம் பகுத்தறிவுவாதிகளாவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்தம் நினைவு நாளான இன்று அவர்களின் புத்தக வாசிப்புக் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் உரத்த முறையில் சிந்திப்போமாக!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
------------------------------------தந்தை பெரியார் நினைவு நாள் உரையாக 24.12.2014 இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான கவிஞர் கலி.பூங்குன்றன்,  துணைத் தலைவர், திராவிடர் கழகம் அவர்கள் ஆற்றிய உரை இது  --”விடுதலை”  04-01-2015

31 comments:

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர்களே, ராஜபக்சேவைத் தோற்கடிப்பீர்!

யார் வரவேண்டும் என்பதைவிடவும் - யார் வரக்கூடாது என்பதே இப்போது முக்கியம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைஈழத் தமிழர்களே, ராஜபக்சேவைத் தோற்கடிப்பீர்!

இந்தக் காலகட்டத்தில் சிறீலங்கா அதிபர் தேர்தலில் யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதே முக்கியமாதலால், ஈழத் தமிழர்கள் ராஜபக் சேவைத் தோற்கடிக்கும் வகையில், அவரை எதிர்த்துப் போட்டியிடுபவருக்கே வாக்களிப்பது நல்லது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் நாளை (8.1.2015) ஒரு திணிக்கப்பட்ட பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது!

இன்னும் தனது பதவிக் காலம் இரண்டாண்டுகள் இருக் கும் நிலையில், இப்படி ஒரு பொதுத் தேர்தலில் வென்று தனது மூன்றாவது முறையும் பதவியேற்றால், அடுத்து ஒரு அப்பட்டமான சர்வாதிகாரி ஹிட்லரைப்போல ஆகி, நிரந் தரமான ஆட்சியாளராக நங்கூரம் பாய்ச்சலாம் என்று திரை மறைவு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ள காரணத்தால்தான் இந்தத் தேர்தல் இப்போது நடைபெறுகிறது!

நீதிமன்றம்மூலம் சட்டத்தை வளைத்தவர்

மூன்றாவது முறை அதிபராக இருக்க முடியாது என்ற சட்ட நிலவரம் இருந்ததை மாற்றி, நீதிமன்றங்கள் உள்பட எல்லாம் தனக்குச் சாதகமாக இருக்கும் சூழ்நிலையை உருவாக்கி, இத்தேர்தலில் ராஜபக்சே போட்டியிடுகிறார் - சிங்களப் பேரினவாதக் கொடி அங்கே தலைதாழாமல் பறக்கவேண்டும்; தன்னுடைய குடும்ப ஆட்சியே கோலோச்சவேண்டும் என்ற கோணல் புத்தியால், குறுக்கு வழிகளையும் கடைப்பிடிக்க அவர் அஞ்சப் போவதில்லை.

எதிர்ப்புக் கடுமையாகிறது!

ஆனால், அவர் எதிர்பாராத அளவுக்கு எதிர்ப்பலை அங்கே வெடித்துக் கிளம்பியுள்ளது.

தமிழ் ஓவியா said...


இவரை எதிர்த்து, இவரிடமிருந்து வெளியேறிய மைத்ரிபாலாவை சிறீசேனா பொதுவேட்பாளராக அனைத்து சிங்கள எதிர்க்கட்சிகளும் நிறுத்தியுள்ளனர்.

இவரின் அரசில் முக்கிய அமைச்சர்களாக இருந்தவர் களே கூட ராஜபக்சேவை எதிர்க்க வெளியேறி விட்டனர்! முஸ்லிம்களும், அவர்கள் சார்பாக அமைச்சராக இருந்தவர் களும்கூட வெளியேறி, பொது வேட்பாளருக்கு ஆதரவு தரும் நிலையில், அங்கு ஜனநாயகம் மீண்டும் துளிர்க்க முயன்று கொண்டுள்ளனர்!

ராஜபக்சே என்ற தெரிந்த பிசாசு மேற்கொள்ளும் முறைகேடுகள்!

ராஜபக்சே என்ற தெரிந்த பிசாசு மீண்டும் பதவிக்கு வரத் துடியாய்த் துடித்துக் கொண்டுள்ளது.

அதற்காக சாம, பேத, தான, தண்டம் முதல் அத்துணை யும் அதிகார பலத்தால் தேர்தல் கூட்ட மேடைகளில் துப் பாக்கிச் சூடு நடத்தி, அச்சுறுத்துவதுவரை செய்யத் தொடங்கிவிட்டனர்!

சிங்கள இராணுவத்தினரது உதவிகொண்டு, கள்ள வாக்கு போன்ற கீழ்த்தர உள்ளடி வேலைகளையும் செய்ய முழு வீச்சில் இறங்கிவிட்டனர் ராஜபக்சேவும், அவரது அதிகாரக் குவியல் ஆன குடும்பத்தவர்களும்! இதில் வாழ்வா - சாவா? என்று துணிந்துவிட்டனர்!

தமிழர்களான வாக்காளர்கள் முந்தைய மாநில தேர்தல் களில் துணிந்து, ராஜபக்சே கட்சிக்கு எதிராக வாக்களித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். (முதல்வர் விக்னேசுவரனுக்கு அதிகாரப் பகிர்வு இன்னமும் தரப்படவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும்கூட) அதன்மூலம் உலக நாடுகள் இந்த இலங்கை ராஜபக்சேவின் கொடுங்கோல் ஆட்சிபற்றி ஒரு சுவர் எழுத்துப்போல ஆகியது.

தமிழர்கள் தேர்தலை புறக்கணிக்கக்கூடாது

புலம்பெயர்ந்த சில அமைப்பினர், ஈழ உணர்வாளர்கள், தேர்தலைத் தமிழர்கள் புறக்கணிக்கச் சொல்லிக் கேட்பது சரியான நிலைப்பாடு ஆகாது என்பது எமது உறுதியான கருத்தாகும்.

காரணம், இதுபோல் முன்பு எடுத்த தவறான முடிவினால் தான் ராஜபக்சே என்ற கொடுங்கோலன் வெற்றி பெற்று, இத்தகைய கொடுமைகள் கட்டவிழ்த்துவிட வாய்ப்பும், வசதியும், அதிகாரமும் ஏற்பட்டன! அதே தவறு மீண்டும் ஏற்படக்கூடாது.

இன்று சிங்களவர்கள் மத்தியிலேயே ராஜபக்சேவுக்கு எதிராகக் கிளம்பியுள்ள பேரெதிர்ப்பு என்ற அலையை தமிழர்கள் பயன்படுத்திக் கொண்டு, அந்த நீரோட்டத்தில் கலந்துகொண்டு, தேர்தலில் ராஜபக்சேவுக்கு எதிராக வாக்

களித்து, அவரைத் தோற்கடிப்பதற்குத் தங்கள் பங்களிப்பையும் செலுத்தத் தவறிடவே கூடாது!

தோற்கடிக்கப்படவேண்டியவர் யார் என்பதுதான் முக்கியம்!

முதலில் கொடுமைக்கார ராஜபக்சேவைத் தோற் கடிப்பதன்மூலம் உலகம் தமிழர்களுக்குக் கேடு செய்து மனித உரிமைகளைப் பலி பீடத்திற்கு அனுப்பிய ராஜபக்சே, அதனால் மக்களால் தோற்கடிக்கப்பட்டார் என்ற சரித்திர முடிவைத் தரவேண்டும். யார் வரவேண்டும் என்பது சிங்கள மெஜாரிட்டியுள்ள நாயகத்தில் தவிர்க்க முடியாததுதானே!

வருபவர் பெரிய மாறுதல் - தமிழர்களுக்கு உதவிட பெரும் அளவில் முன்வந்து தலைகீழாக மாற்றி விடுவார் என்று நாம் நம்பாவிட்டாலும்கூட, ராஜபக்சே தோல்வி என்பது பல வரலாற்றுப் பாடங்களை உருவாக்கும்.

ராஜபக்சே தேர்தலில் தோற்கடிக்கப்பட்டால், போர்க் குற்ற வாளியாகக் கூண்டில் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தும் வாய்ப் புப் பறிக்கப்பட்டுவிடும் அல்லவா! (எப்படியாக இருந்தா லும் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்றாலும்)

தமிழர் தேசிய கூட்டணி பொது வேட்பாளரை ஆதரிக்கும் என்ற முடிவு சரியான முடிவு ஆகும்.

யார் வரக்கூடாது என்பதே முதல் கவனமாகவும், முன் னுரிமையாகவும் இருக்கவேண்டும். அதே அரசின்கீழ் தானே இன்றைய காலகட்டத்தில் அங்கு வாழும் ஈழத் தமிழர்கள் வாழ்ந்து தீரவேண்டியவர்களாக உள்ளனர். அதேநேரத்தில், தேர்தலைப் புறக்கணிப்பது, நல்ல வாய்ப்பை நழுவ விடுவதும், ஜனநாயகம் மீண்டும் அங்கே துளிர்க்கவும் உதவியதாகாது என்பதால், தவறாமல் கலந்து ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களித்து, தோற்கடிக்க முன்வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் - ஜனநாயகத்தின் முக்கிய கூறு ஆகும்!

புலம்பெயர்ந்த தமிழர்கள் சிந்திக்கட்டும்!

தேர்தலைப் புறக்கணிக்கக்கூறும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள், அமைப்புகள் நாம் கூறுவதை உணர்ச்சிவயப் படாமல் ஆய்ந்து, புரிந்துகொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
7.1.2015

Read more: http://viduthalai.in/e-paper/94051.html#ixzz3O99sDwQY

தமிழ் ஓவியா said...

தடுமாற்றம் இருக்காது!

செய்தி: கூட்டணியிலி ருந்து பா.ம.க. வெளியேறி னாலும், பா.ஜ.க.வுக்குப் பாதிப்பு இல்லை.
- மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

சிந்தனை: இதற்குப் பிற காவது பா.ம.க. நிறுவனருக்கு முடிவு செய்வதில் தடு மாற்றம் அனேகமாக இருக் காது என்று நம்பலாம்.

Read more: http://viduthalai.in/e-paper/94053.html#ixzz3O9A3uM2n

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியார்மீதான கொலை வழக்கு:

தீர்ப்பை எதிர்த்து களமிறங்கும் சமூக சேவகர்!


புதுச்சேரி, ஜன.7_ காஞ்சி புரம் வரதராஜப் பெரு மாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை செய் யப்பட்ட வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வளா கத்திலேயே படுகொலை செய்யப்பட்டார் மேலாளர் சங்கரராமன். இந்த கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 23 பேர் மீது வழக் குப் பதிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் நடை பெற்ற இந்த வழக்கு புதுச் சேரி மாநிலத்துக்கு மாற் றப்பட்டு தலைமை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப் பட்டனர். அதன்பின் சங்கரராமன் கொலை வழக்கில் புதுவை அரசு மேல்முறையீடு செய்ய வில்லை. இந்நிலையில், சென்னை கிழக்கு தாம் பரத்தைச் சேர்ந்த சமூக சேவகர் வாராகி என்பவர் புதுவை தலைமை குற்ற வியல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு புதுவை தலைமை குற்றவியல் நீதி மன்ற நீதிபதி வேல்முருகனி டம் தாக்கல் செய்யப்பட் டது. வாராகி அளித்துள்ள மனுவில், எனக்கு சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பின் சான்றளிக்கப்பட்ட ஆவ ணங்கள் அளிக்கவேண் டும்.

டாக்டர் மன்மோகன் சிங், சுப்பிரமணிய சுவாமி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில் குற்ற வியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோரை விடு தலை செய்ததற்கு எதிராக எந்தக் குடிமகனும் மறு ஆய்வு மனு தாக்கல் செய் யலாம் என குறிப்பிடப் பட்டுள்ளது. சங்கரராமன் கொலை வழக்கில் அரசு தரப்பு மேல்முறையீடு செய்ய நட வடிக்கை எடுக்கவில்லை. இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்த்து நான் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய விரும் புகிறேன். எனவே, வழக்கு தொடர்பான தீர்ப்பு நகல்கள் மற்றும் ஆவணங் களை எனக்கு அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். சங்கரராமன் கொலை வழக்கு மேல்முறையீடு செய்யத் தகுதியற்றது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு சமர்ப்பித்துள்ள அறிக் கையில் தெரிவித்திருந்தார். சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திர சரஸ் வதி மற்றும் விஜயேந்திர சரஸ்வதி ஆகியோரை கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி புதுச்சேரி நீதிமன்றம் விடுவித்தது. அப்போது மேல்முறையீடு செய்ய 90 நாள்கள் அவகாசமிருந்தது. தொடக்கத்தில் மேல்முறை யீடு செய்ய புதுச்சேரி அரசு ஆர்வமற்று இருந்தது. அதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முன்னாள் துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா அனுமதியளித்தார். இதுகுறித்து வீரேந்திர கட்டாரியா கூறும்போது, தனக்கு இந்த வழக்குபற்றி முழு விவரங்களும் சொல் லப்படவில்லை என்றார். இந்தப் பின்புலத்தில் தான் புதுச்சேரி அரசு மத்திய உள்துறை அமைச் சகத்தின் மூலமாக இந்த விஷயத்தில் அட்டர்னி ஜெனரலின் கருத்தைக் கோரியது. காஞ்சி சங்க ராச்சாரியார்களை விடுவிப் பதற்கு விசாரணை நடத் தப்பட்ட விதம், சாட்சி யங்கள் உருவாக்கப்பட்ட விதம் உள்ளிட்ட 20 கார ணங்களைப் பட்டியலிட் டுள்ளது புதுச்சேரி நீதி மன்றம். மேலும் 189 சாட் சியங்களில் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 83 பேர் பிறழ் சாட்சியங்கள் ஆயினர். எனவே இந்த வழக்கு மேல் முறையீடு செய்யத் தகுதி யற்றது என்று குறிப்பிட்டி ருந்தார். இந்த நிலையில் சங்கர ராமன் கொலை வழக்கிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட உள்ளதால் வழக்கு மீண்டும் சூடு பிடிக் கத் தொடங்கி உள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/94056.html#ixzz3O9AC8QIc

தமிழ் ஓவியா said...

எப்படியாவது இந்துப் பெண்கள் நான்கு குழந்தைகளைப் பெறவேண்டுமாம்: சொல்கிறார், பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி சாமியார்


லக்னோ, ஜன.7_ பாஜக நாடாளுமன்ற உறுப் பினரும் கோட்சேவை தேசபக்தர் என்று புகழ்ந்த வருமான சாக்ஷி என்ற சாமியார் இந்துப் பெண் கள் ஒவ்வொருவரும் எப் படியாவது 4 குழந்தை களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் ஒரு கோமாளித் தனமான உளறலைக் கொட்டியுள்ளார்

உத்தரபிரதேசம் மீரட் நகரில் நடந்த ஒரு மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக சாமியார் எம்பி சாக்ஷி தனது உரையில் கூறியதாவது: தற்போது மதமாற்றம் குறித்து பல்வேறு எதிர்க் கட்சிகள் பேசி வருகிறது. இது மதமாற்றம் அல்ல; தாய் மதம் திரும்ப வரு கிற நிகழ்ச்சிதான். மத மாற்றம் என்பது இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்குத் செல்லு வதைத்தான் குறிப்பிட வேண்டும். மதமாற்றம் செய்பவர்களைத் தூக்கில் போடவேண்டும் அதைச் சட்டமாக்கவும் பாஜக தயாராக உள்ளது.

நாதுராம் கோட்சே விற்கு சிலைவைப்பது பற்றி நான் தற்போது ஒன்றும் கூறமுடியாது.

இந்திய நாடு பல்வேறு கலாச்சாரங்களை உள்ள டக்கியது. இங்கு அனை வரும் ஒரே சிந்தனையில் இருப்பவர்கள் என்று கூறமுடியாது. பலருக்கு பல்வேறு சிந்தனைகள் இங்கே கடவுளை பன்றி வடிவிலும் வழிபடும் வழக்கம் உள்ளது. கழு தையையும் பூஜை செய்யும் மக்கள் இருக்கிறார்கள். மீரா கடவுளை பாம் பிற்குள்ளே பார்த்தாள், அவரவர்களுடைய எண் ணம் ஆகவே கோட் சேவை சிலர் புனிதராக பார்க்கின்றனர், அவ்வள வுதான் என்றார். மேலும் அவர் கூறிய தாவது, இதுவரை இருந்த இந்து விரோத அரசுகள் நாம் இருவர் நமக்கு இரு வர் என்ற கோரிக்கையை வைத்து இந்துக்களின் எண் ணிக்கையை குறைத்து விட்டனர். இனிமேல் மக்கள் நாம் இருவர் நமக்கு இருவர் என்பதை கருத்தில் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு இந் துக்களும் நான்கு அல்லது அதற்குமேல் குழந்தை களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்துக்கள் எப்படியும் கட்டாயமாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

அப் போதுதான் இந்துக்களின் எதிர்காலமும் இந்து தர் மமும் காக்கப்படும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/94054.html#ixzz3O9AKmeUy

தமிழ் ஓவியா said...

மாட்டுக்கறி வறுவல்!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (சி.பி.எம்.) 6.1.2015 அன்று பிற்பகல் 3 மணிக்கு - செங்கற்பட்டில் நடை பெறும் சுயமரியாதை மாநாட் டில் மாட்டுக்கறி வறுவல் சிறப்பு விற்பனை மய்யத் தைத் தொடங்குகிறது - வரவேற்கத்தக்கதே!

இன்றைக்கு 40 ஆண்டு களுக்கு முன்பே திராவிடர் கழகம் இத்தகு மாட்டுக்கறி விருந்தை ஓர் இயக்கமா கவே நடத்தியது குறிப்பிடத் தக்கதாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/94052.html#ixzz3O9AWgwTh

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை வரலாற்றுப் புத்தகத்தில் ஓர் அரிய பாடம்


ஆசிரியருக்குக் கடிதம் >>>

சுயமரியாதை வரலாற்றுப் புத்தகத்தில் ஓர் அரிய பாடம்

ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மை யார் அவர்களின் மரணம், ஓர் இயற் கையின் விதியாகும். பகுத்தறிவாளர்கள் தாம் வாழுகின்ற காலத்தை, தனக்கும், பிறருக்கும் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்கின்றனர். அந்த வகையிலே அம்மா அவர்கள் வாழ்ந்த காலம் வீட்டிற்கும், நாட் டிற்கும் பயனுள்ளதாக அமைந்திருப்பதே மிகவும் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக் கும் உரியதாகும்.

நான், அம்மா அவர்களின் மரண சாசனத்தை ஒரு தடவைக்கு நான்கு தடவைகள் படித்துப் பார்த்தேன். அதில் ஒவ்வொரு வரியும், வைர வரிகளாகும். பிறருக்கும் நல்ல எடுத்துக் காட்டுகளாகும்.

தன்னுடைய பெற்றோர்கள், அன்பான அரவணைப்போடு, பகுத்தறிவுப் பாலூட்டி சுயமரியாதைக் கருத்துக்களோடு ஊறிப் பிறந்ததை, நினைவூட்டி தன் பெற்றோர் களைப் பெருமைப்படுத்தியிருக்கிறார்.
தந்தை பெரியாரின் அன்பான தலைமை, நல்ல தலைவர், நல்ல கொள்கை, சமுதாய சீர்திருத்தப்பணி, தந்தை பெரியாரே, மண மகனைத் தேர்வு செய்து, தம் செலவிலேயே திருமணம் செய்வித்த மிகப்பெரும் பேறு பெற்றேன் என்று தன்னுடைய நன்றி யுணர்வை வெளிப்படுத்தி பெரியாருக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

இந்தியக் குடிமக்களின் சராசரி வயதான அறுபதைத் தாண்டி வாழ்ந்து கொண்டிருக் கிறேன் என்பதே மகிழ்ச்சிக்குரியது தானே? என்ற வினாவை வயது 76 இல் எழுப்பி, 81 வயது வரை நிறை வாழ்வு வாழ்ந்தார்கள்.

மனித நேயப் பண்பாளர் டார்பிடோ, ஜனார்த்தனம் என் துணைவராகக் கிடைத்த காவிய வாழ்க்கை வாழ்ந்தோ மென்று தன் இணையரைப் பெருமைப் படுத்தியிருக்கிறார்.

தந்தை பெரியாரின் கருத்துகளை உலகம் முழுவதும் பரப்பிடும் பணியை, கல்விக் கூடங்களைப் பெருக்கி, அரசியல் மாற்றங் களை ஏற்படுத்திடும் அரிய தலைவர் நாட் டுக்குக் கிடைத்திருப்பதையெண்ணி, இறும் பூதெய்துகிறேன் என்று ஆசிரியர் அய்யா வீரமணியாரைப் பெருமைப்படுத்தியிருக் கிறார்.

பெரியார் தந்த துணிவோடு, ஆசிரியரின் வழிகாட்டுதலோடு, சமுதாயப் பணியில் மன நிறைவோடு, மரணத்தையும் மகிழ்வோடு தழுவிக் கொண்ட மனோரஞ்சிதம் அம் மாவை எண்ணியெண்ணி என் உள்ளம் நெகிழ்கிறது.

தன்னுடைய இறப்பிற்குப் பின்னாலும், தன்னுடைய உடல் மறைவதற்குள் ஏதாவது நன்மை செய்திட முடியாதா? என்று எண் ணியிருப்பார்கள் போலிருக்கிறது, என்ன விநோதம்! எனக்கு மாலைக்குப் பதில் விடுதலை சந்தா தாருங்கள் என்று கேட்ட தலைவரைப்போல என் உடலுக்கு மாலை போட வேண்டாம். அதற்குப் பதில் என் உட லருகில் உண்டியல் வைத்து நிதி தாருங்கள் என்று சொன்ன அந்த தொண்டரின் மனப் பாங்கை நான் என்னவென்று சொல்வேன்!

தலைவரைப் போலவே தொண்டர், தொண்டரைப் போலவே தலைவர். தொண்டன் நினைப்பதையே தலைவர் நினைக்கிறார். தலைவர் நினைப்பதையே தொண்டனும் நினைக்கிறார். உலகத்திலே இப்படியொரு விந்தையான இயக்கம் எங்காவது உண்டா? சாவுக்கு வருகின்ற மாலையைக்கூட வீணாக்க மனமின்றி, வாழ்வோருக்குப் பயன்படும் வித்தையினை கற்றுத் தந்த வித்தகர் யாரோ? அவர்தான் தந்தை பெரியாரோ! அம்மா நெஞ்சினில் நிறைந் தாரோ! அம்மாவின் எண்ணம் நிறை வேறியது. நாகம்மையார் இல்லத்துக்கு மாலைக்குப்பதில் கிடைத்த நன்கொடை கள் ரூ. 25,021/-

ஒருவர் இறந்துவிட்டால், சமுதாய நடப்பிலே, பெரிய காரியம் ஆகிவிட்டது என்று சிலர் சொல்லுவார்கள். கெட்ட காரியம் ஆகிவிட்டது என்றும் சிலர் சொல்லுவார்கள். அம்மாவின் மரணத் திலும், ஒரு நல்ல காரியம் பார்த்தீர்களா? இது தான் பகுத்தறிவு. இது தான் தன்னல மறுப்பு. இது தான் சுயமரியாதை இயக்கம் பார்த்தீர்களா? தோழர்களே!

அடிக்க அடிக்க பந்து எகிறுவது போல யார் தடுத்தாலும் அலைகள் அடிப்பதைப் போல எவ்வளவு நெருக்கடிகள், எவ்வளவு இடையூறுகள் வந்தாலும், அதையும் தாண்டி ஓர் இயக்கம், ஒரு நூற்றாண்டை நோக்கி வீறுநடை போடுகின்றதென்றால், மனோரஞ்சிதம் அம்மா போன்ற இயக்கக் கண்மணிகள், இல்லை வீரப்பெண்மணி கள் இருப்பதனாலன்றோ!

சட்ட எரிப்புப் போராட்டத்திலே, சிறைக்கஞ்சா அந்த வீரப்பெண்மணியை, மரணம் தன் சிறையிலே அடைத்துக் கொண்டது. எனினும் அவர் புகழை, யாராலும் சிறையிட முடியாது. ஆம், அம்மா அவர்கள் ஓர் காவியமாக நினைவு ஓவியமாக, சுயமரியாதை இயக்க சரித் தித்தில் மறக்கவொண்ணா ஓர் நீங்கா இடம் பெற்று விட்டார். ஆம் அம்மா ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அவர்களின் புகழ், வாழ்க! வாழ்க! வாழ்கவே!

வீர வணக்கம்! நன்றி!

- கா.நா.பாலு (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம், மேட்டூர் மாவட்டம்)

Read more: http://viduthalai.in/e-paper/94062.html#ixzz3O9B3v0r9

தமிழ் ஓவியா said...

பார்ப்பனத் தந்திரம்எந்தப் பார்ப்பனராவது வேஷம் போட்டு ஆடுவதோ, செடில் குத்திக் கொள்வதோ, அலகுக் குத்திக் கொள்வதோ, கன்னத்திலோ, நாக்கிலோ கம்பியைக் குத்திக் கொள்வதோ ஆகிய காரியங்களைச் செய்கிறார்களா? கோவில் கட்டுகின்றார்களா?
_ (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/e-paper/94058.html#ixzz3O9BEiyvH

தமிழ் ஓவியா said...

ராம்தேவுக்குப் பத்மபூஷண் விருதாம்!

ராம்தேவ் என்ற சாமியாருக்கு மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு பத்ம பூஷண் விருது அளிக்க முடிவு செய்துள்ளதாம். இதன்மூலம் இத்தகு விருதுகள் எத்தகைய கேவலத்தின் உச்சியைத் தொட்டுள்ளன என்பது தெளி வாகிறது. ரொமிலா தாப்பர் போன்றவர்கள் இதுபோன்ற விருதுகளை ஏன் புறக்கணித்தனர் என்பது இப்பொழுது தான் புரிகிறது.

போகிற போக்கைப் பார்த்தால் காந்தியாரைப் படு கொலை செய்த நாதுராம் கோட்சேவுக்குக்கூட இத்தகைய விருதுகள் அளிக்கப்படலாம் என்று தோன்றுகிறது.

யாரிந்த ராம்தேவ்?

தனது யோகா மருத்துவ முறைகளால் எவ்வித நோயையும் குணப்படுத்த முடியும் என்று வாய்ச்சவடால் விட்ட இவரை, 2006 ஆம் ஆண்டில் என்.டி.டி..வி.யில் மடக்கியவர் இந்திய அறிவியல் மற்றும் பகுத்தறிவாளர் சங்கத்தின் பிர்பீர்கோஷ். அவர் ராம்தேவிடம் வைத்த சவால் என்ன தெரியுமா?
தான் அனுப்பும் ஒரு நோயாளியையும், டில்லியைச் சேர்ந்த ஒரு வழுக்கைத் தலையரையும் நவீன மருத்துவ முறைகளைப் பின்பற்றாமல் முற்றிலும் ராம்தேவ் நம்பும் யோகா மருத்துவ முறைகளைக் கையாண்டு குணப்படுத்த முடியுமா? என்பதுதான் அந்தச் சவால். ஆனால், அதனை எதிர்கொள்ளாமல் நழுவியவர்தான் இந்தப் பேர்வழி!

ராம்தேவ் தயாரித்த ஆயுர் வேத மருந்துகளில் கலப் படங்கள் இருப்பதாகக் குற்றச்சாற்று எழுந்தது. சென்னை, அய்தராபாத், கொல்கத்தா முதலிய ஆய்வகங்களில் அந்த மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புகள் கலக்கப் பட்டதற்கான தடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. எந்த ஒரு மருந்துப் பொருளிலும் அதன் உள்ளடக்கப் பொருள்கள் இன்னின்னவை என்று பொறிக்கப்பட்டிருக்கும். அது கட்டாயமும்கூட; ஆனால், இந்த ராம்தேவ் தயாரித்து விற்கப்பட்ட மருந்துகளில் அத்தகு விவரங்கள் கிடையாது.

காங்கிரசின் பொதுச்செயலாளரான திக்விஜய் சிங் இந்த யோகா குரு என்றழைக்கப்பட்ட ராம்தேவ் பற்றி பல பிரச்சினைகளை எழுப்பியதுண்டு. பல கோடி சொத்துகள் எப்படி அவருக்கு வந்தன? அவற்றிற்கு முறையாக வருமான வரி செலுத்தப்பட்டதா? ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபடும் இந்த ராம்தேவுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டது எந்த அடிப்படையில்? என்பது போன்ற கேள்விகள் அவை!

1995 ஆம் ஆண்டில் திவ்யா யோக மந்திர் என்ற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கினார். 2003 ஆம் ஆண்டில் ஆஸ்தா தொலைக்காட்சியில் யோகா கற்றுத்தரத் தொடங்கியதுமுதல் பிரபலமானார். (தொலைக் காட்சியல்லவா!). பின்னர் உத்தரப்பிரதேச மாநிலம் அரித்துவாரில் பதஞ்சலி என்ற யோகா பீடம் அமைத்தார். ஆயுர்வேத மருத்துவமனை, பல்கலைக் கழக மருந்துத் தயாரிப்புத் தொழிற்சாலை, அழகு சாதனத் தொழிற்சாலை எனப் பெரும் ஆலை முதலாளியாக உருவெடுத்தார்.

200 நிறுவனங்களுக்குச் சொந்தக்கார பெருமுதலாளியாக உருவெடுத்தார்.

யோகா சொல்லிக் கொடுத்த அந்த ஆஸ்தா தொலைக்காட்சியையே விலைக்கு வாங்கினார் என்றால், அவரின் பொருளாதார வளர்ச்சியை எளிதில் தெரிந்து கொள்ளலாமே (ஒரு சாமியாருக்குத் தேவையானவையா இவை என்று யாரும் கேட்கவேண்டாம்!)

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ஊழல் ஒழிப்பு உத்தமராகத் தன்னைக் காட்டிக்கொள்ள முற்பட்டார். (இவரின் பின்னணியில் பி.ஜே.பி,. சங் பரிவார் இருந்தன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்).

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை மீட்கவேண்டும் என்றும், அதற்காக பட்டினிப் போராட்டம் இருக்கப் போவதாக மிரட்டினார். அவரை விமான நிலையத்திலேயே சந்தித்து, சமாதானம் செய்தார்கள் மத்திய அமைச்சர்கள் என்பதெல்லாம் எத்தகைய சிறுபிள்ளைத்தனம்!

ராம்லீலா மைதானத்தில் பட்டினிப் போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்தார். ஊடகங்கள் ஊது குழல்களாக மாறின. ராம்லீலா மைதானம் முழுவதுமே பிரம்மாண்டமாக அலங்காரப் பந்தல் போடப்பட்டது மட்டு மல்ல; முழுமையாக குளிர்சாதன வசதியும் செய்யப்பட்டது. இதற்காக, 18 கோடி ரூபாய் வசூல் கொள்ளை! இன்னொரு பக்கத்தில். ஆர்.எஸ்.எசுடன் கைகோத்து பட்டினிப் போராட்ட நாடகத்தைத் தொடங்கினார் (ஊழல் ஒழிப்பு முன்னணி ஒன்றை ஆர்.எஸ்.எஸ். தொடங்கியது. அதில் ஒரு புரவலர் இந்த பாபா ராம்தேவ்).

பட்டினிப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, காவல் துறை ராம்லீலா மைதானத்தில் நுழைந்தபோது, இந்த வீராதி வீரர் ராம்தேவ் என்ன செய்தார் தெரியுமா? சுடிதார் போட்டுக்கொண்டு, முகத்தை மூடிக்கொண்டு தப்பிக்க முயற்சி செய்தார் என்பது எவ்வளவுக் கேவலம்!

இத்தகு ஒரு நாலாந்தர மனிதனுக்கு மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சி பத்மபூஷண் விருது அளிக்க முடிவு செய்துள்ளது என்றால், இந்த ஆட்சியின் யோக்கியதாம்சம் என்ன என்பதை எளிதிற் தெரிந்துகொள்ளலாம்.

இந்தியத் துணைக் கண்டத்தில் இப்படியொரு கேடு கெட்ட ஆட்சியா? வெட்கக்கேடு!

Read more: http://viduthalai.in/e-paper/94059.html#ixzz3O9BP0G52

தமிழ் ஓவியா said...

ஒகேனக்கல் பயிற்சிப்பட்டறை வரலாற்று நிகழ்வாகியது: தமிழர் தலைவர் பெருமிதம்

தருமபுரி ஜன. 7_ தருமபுரி மாவட்டம் ஒகேனக் கல்லில் நடைபெற்று முடிந்த 3 நாள் பெரியாரியல் பயிற்சி பட்டறை வரலாற்று நிகழ்வாகியது என தமிழர் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

ஒகேனக்கல்லில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் இறுதி நாள் நிகழ்வு டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற்றது.

காலை முதல் நிகழ்ச்சியாக தஞ்சை யோகிராசர் அவர்களின் யோகப்பயிற்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பயிற்சிப்பட்டறையில் கடவுள் மறுப்பு என்னும் தலைப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வகுப்பெடுத்தார். அதைத் தொடர்ந்து தமிழர் தலைவரின் தனித்தன்மைகள் என்னும் தலைப்பின் கீழ் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பயிற்சி அளித்தார்.

மூடநம்பிக்கைகள் ஒரு மோசடியே என்னும் தலைப்பில் மருத்துவர் கவுதமன் அவர்களும் புராண இதிகாச புரட்டுகள் என்னும் தலைப்பில் பேராசிரியர் ப.காளிமுத்து அவர்களும், தமிழர் தலைவரின் தனித் தன்மைகள் என்னும் தலைப்பில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

அதைத்தொடர்ந்து தமிழர் தலைவர் அவர்கள் மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு விரிவான பதில் அளித்தார். அந்த உரையே சிறப் புரையாக இருந்தது. மதிய உணவு இடைவெளிக்குப் பின் இளங்கோ தலைமையிலான அன்பு கலைச்குழுவின் சார்பில் நாடகம் மற்றும் பாடல் இசைக்கப்பட்டன.

சிறப்பித்தல்

மூன்று நாள் நிகழ்வில் பங்குபெற்ற தலைமை கழக நிர்வாகிகள் தமிழர் தலைவர், துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மாநிலப் பொருளாளர் டாக்டர் பிறைநுதற் செல்வி, செயலவைத்தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், பேராசிரியர் காளிமுத்து, மருத்துவர் கவுதமன், மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், யோகா மாஸ்டர் யோகராஜா, ஈரோடு மண்டலச் செயலாளர் சண்முகம், வேலூர் மாவட்டத் தலைவர் சடகோபன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாநில துணைச்செயலாளர் சிவக்குமார், கிருட்டிணகிரி மாவட்டச் செயலாளர் சு.வனவேந்தன் மற்றும் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்களுக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் சிறப்பு செய்தனர்.

பயிற்சி பட்டறையில் பங்கேற்ற அனைவரும் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடத்திட துணை புரிந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நகர கழக நிர்வாகிகளுக்கு கழக துணைத்தலைவர் சிறப்பு செய்தார்.

அத்துடன் பயிற்சிப் பட்டறை சிறப்பாக அமைந்திட பொருள் உதவி, மண்டப உதவி, ஒலி, ஒளி, அமைப்பு, உணவு ஏற்பாடு செய்திட்ட அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

பெரியார் ஆயிரம் வினா விடை நிகழ்ச்சியில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட அனைவரும் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றனர். பயிற்சிப் பட்டறையின் மூன்று நாளும் பயிற்சி பெற்றவர்களுக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் தருமபுரி பெரியார் பெருந்தொண்டர் பி.கே.ராமமூர்த்தி குடும்பத்தின் சார்பில் மருத்துவர் கவுதமன் அவர்கள் சிறப்பான முறையில் விருந்தளித்தார் என்பது குறிப்பிடதக்கது. அவருக்கு அனைவரும் நன்றியைத் தெரிவித்தனர்.

பயிற்சிப் பட்டறையில் தருமபுரி, சேலம், கிருட்டிணகிரி, வேலூர், சென்னை, திருச்சி, தஞ்சை, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, பழனி, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் இருந்து பயிற்சியில் கலந்து கொண்டனர் என்பது சிறப்புக்குரியது.

Read more: http://viduthalai.in/e-paper/94067.html#ixzz3O9Be5JTH

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கையின் வெறியாட்டம் பொங்கலை நாய் சாப்பிட்டதால் விழாவை தவிர்த்தனராம் கிராம மக்கள்

நாமக்கல், ஜன. 7_ சுவா மிக்கு வைக்கப்பட்ட பொங் கலை நாய் சாப்பிட்டதால், அதை தீட்டாக கருதிய கிராம மக்கள், மூன்று தலைமுறைகளாக பொங் கல் பண்டிகையை தவிர்த்து வருகின்றனர்.

நாமக்கல்லில் இருந்து, திருச்செங்கோடு செல்லும் சாலையில், சிங்கிலிப்பட்டி என்ற கிராமம் அமைந்து உள்ளது. மூன்று தலைமுறை களுக்கு முன், கிராமத்தில் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டா டப்பட்டது. அப்போது, சுவாமிக்கு படைப்பதற் காக, பானையில் வைக் கப்பட்டிருந்த பொங்கலை, நாய் சாப்பிட்டுள்ளது. இதை தீட்டாக கருதிய கிராம மக்கள், அந்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை தவிர்த் தனர்.

அதற்கடுத்த ஆண்டு, பண்டிகையை கொண் டாட முற்பட்டபோது, கிராமத்தில், சில பசு மாடு கள், அடுத்தடுத்து இறந் தன. இது, கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத் தியது.அதன் காரணமாக, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை, கிராம மக்கள் தவிர்த்தனர். தொடர்ந்து, மூன்று தலை முறைகளாக, இந்த, வினோத பழக்கத்தை கிராம மக்கள் கடைப் பிடித்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை சமயத்தில், சுற்று வட்டார கிராமங்கள் ஆரவாரமாக காணப்படும் நிலையில், சிங்கிலிப்பட்டி கிராம மக்கள், எவ்வித பரபரப்பு மின்றி, வழக்கமான பணி களில் ஈடுபடுவர். இப் பழக்கத்தை, அந்த கிராமத் தில் இருந்து வெளியேறி, வெளியூர்களில் வசிக்கும் மக்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.

'எதேச்சையாக நடந்த சம்பவத்தை வைத்து, கிராம மக்கள் பண்டிகை கொண்டாட்டத்தை தவிர்க் கக் கூடாது. தமிழரின் அடையாளமாக கருதப் படும் பொங்கல் பண்டி கையை, கிராம மக்கள் கொண்டாட வேண்டும்' என, இக்கிராமத்தை சேர்ந்த, முன்னாள் பஞ்சா யத்து தலைவர் இளங்கோ வலியுறுத்தி வருகிறார்.

அதன்படி, 10 ஆண்டு களுக்கு முன், அவர் தன் வீட்டில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவதற்காக நடவடிக்கை மேற்கொண் டார். அப்போது, அவரது பசு மாடு திடீரென சுருண்டு விழுந்து இறந் தது.

அதைக் கண்டு பீதி யடைந்த மக்கள், பொங்கல் கொண்டாட்டத்தை, தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.மக்களின் மூடநம்பிக்கையை முறிய டிக்கும் வகையில், இளங்கோ, தொடர்ந்து, கிராமத்தில் பொங்கல் வைத்து வழி பாடு நடத்தும் வழக்கத்தை, 13 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார்.

அதேபோல், இந்தாண்டும், பொங்கலை கொண்டாட முடிவு செய் திருப்பதாக தெரிவித்து உள்ளார்.பொங்கல் விழா புறக்கணிப்பால், இளை ஞர்கள், சிறுவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-7/94103.html#ixzz3O9CGV5ub

தமிழ் ஓவியா said...

பாலகர்களைக் காப்பாற்றாத பால முருகன் சாமி


தூத்துக்குடி, ஜன. 7_ தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர் கள் தொடர்ந்து தங்களது குழந்தைகளை பறி கொடுத்து வருகின்றனர். கண்டு பிடிக்க வேண்டிய காவல்துறையினரோ மெத் தனப்போக்கில் உள்ளனர்.

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர் களிடம் குழந்தைகளை திருடி கடத்தும் கும்பலின் செயல் நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. குழந் தைகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை யினர் திணறி வருகின்ற னர். விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த ராஜதுரை, பால சுபா இணையரின் மகன் சரண்,4. இவர்கள் ஆங்கிலப் புத்தாண்டு அன்று திருச் செந்தூர் முருகன் கோயி லுக்கு வருகை தந்தனர்.

சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நிற்கும் போது, கூட்ட நெரிசலில் மகன் சரணை காணவில்லை. இதுகுறித்து கோயில் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இன்று வரை சிறுவன் கிடைக்க வில்லை.

திருச்சி காட்டூரை சேர்ந்த இளங்கோவன், சுதா இணையரின் மகள் அஷ்வினி, 3. இவர்கள் ஜன., 3இல் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணி வரை இருந்த மகள் அஷ்வி னியை விடிந்த போது காணவில்லை. இது குறித் தும் கோயில் காவல்துறை யினரிடம் புகார் தெரிவித் துள்ளனர். இன்று வரை கண்டு பிடிக்கப்படவில்லை.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆணையூர் பகு தியை சேர்ந்தவர் கண்ணன், கணபதி இணையரின் மகள் மனிஷா, 3. இவர்கள் அனைவரும் 2014 ஜூன் 12இல் கோயில் வசந்த மண்டபத்தில் படுத்திருந் தனர். அதிகாலை கண் விழித்து பார்த்த போது மனிஷாவை காணவில்லை. இவர்களும் புகார் செய்தி ருந்தாலும் இன்று வரை குழந்தையை பற்றிய தக வல் இல்லை.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய பாலத்திற்கு அடியில், 2014 ஜூன் 26இல் ஆறு மாத குழந்தை திவ்யாவுடன் தாய் காமாட்சி படுத்திருந் தார். அவருடைய குழந் தையை யாரோ திருடி சென்று விட்டனர். குழந்தையை பறிகொடுத்த ராஜதுரை ஆட்சியர் ரவிக்குமாரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் திருச்செந்தூர் கோயில் பகுதியில் 'சிசிடி' கேமரா வைத்து கண்கா ணிக்க வேண்டும். காணா மல் போன குழந்தைகளை கண்டு பிடித்து தர வேண் டும், என தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-7/94102.html#ixzz3O9CKZ4BP

தமிழ் ஓவியா said...

கருநாடகத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பாராட்டு!

கருநாடகா, ஜன. 7_ இதுகுறித்து கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் மு.சானகிராமன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:_

இந்தியாவிலேயே முதன் மாநிலமாக சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற் கொள்ளும் வழிகாட்டி மாநிலமாக கருநாடக மாநிலத்தை கணக்கெ டுப்பு பணியை மேற்கொள் வதற்கு முதலமைச்சர் அவர்களை கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் பாராட்டி, வரவேற்கிறது.

1931ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் எந்த ஒரு சாதிவாரி கணக்கும் துல்லியமாகப் பராமரிக் கப்படாமல் 12 அய்ந் தாண்டு திட்டங்கள் நிறை வேற்றியும் மக்களுக்கு எந்த திட்டங்களும் இல குவாக சென்றடையவில்லை என்பதே உண்மையாகும்.

இதனால்தான் தந்தை பெரியார் சுதந்திரம் பெற் றோம் சுகவாழ்வு பெற் றோமா? எனக் கேட்டார். அதற்கான விடையும், தேவையும் பூர்த்தி செய் யப்படாமலே உள்ளன.

சாதிவாரிக் கணக் கெடுப்பு பணி செய்து, நாட்டில் எந்தெந்த வகுப் பினர் எவ்வளவு பேர்கள் உள்ளனர். அவர்களின் பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முழு புள்ளி விவரங்கள் அரசிடமில்லை. அதனால் மக்களின் வளர்ச் சிக்கு ஏற்ற திட்டங்களை செயல்படுத்த முடிய வில்லை.

இதனைக் கருத் தில் கொண்ட கருநாடக முதலமைச்சர் சித்தரா மையா அவர்கள் ஏப்ரல் திங்களுக்குள் சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ள முன்வந்த மைக்கு வெகுஜன மக்க ளின் சார்பாக பாராட்டு தெரிவிக்கின்றோம்.

மேலும் அரசுப் பணியா ளர்கள் எந்தவித சுணக்க மும் காட்டாமல் பொறுப் புடனும், விடுபடாமல் துல்லியமாக கணக் கெடுப்பு செய்து, இந்தியா விற்கே முன்னோடியாக விளங்கிட ஆவன செய்திட கேட்டுக் கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-7/94101.html#ixzz3O9COkCKJ

தமிழ் ஓவியா said...

கம்பராமாயணத்தைப் பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. கம்பராமாயணம் தோன்றி இல்லாவிட்டால் நம் நாட்டின் கலை, ஒழுக்கம் கெட்டிருக்காது.

வால்மீகி இராமாயணத்தில் ஆரியர்களின் இழிவு நன்றாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. கம்பன் அவைகளை மறைத்து அவர்களைக் கடவுளாக்கிவிட்டான். கம்பராமாயணத்தைப் போற்றுகிறவர்கள் ஆரிய அடிமைகளாய்த்தானிருக்க முடியும் என்பதே எனது உறுதியான எண்ணமாகும்.

இராமன் ஒரு சகோதரத் துரோகி, அயோக்கியன் என்றும் கூறுவேன். தம்பியைத் துரோகம் செய்தவன் நாடு பரதனுக்கே உரித்தானதாக ஆக்கப்பட்டுவிட்டது என்பதை முன்னமே அறிந்திருந்தும், தசரதன் பட்டாபிஷேகம் செய்கிறேன் என்று கூறியபோது, இராமன் ஒப்புக்கொள்ளலாமா? அப்போதாவது தம்பி எங்கே என்று ஒரு வார்த்தையாவது கேட்டானா? சாதாரணக் குடும்பங்களில்கூட திருமணம் என்றால் அண்ணன் தம்பி எங்கே? பாட்டன் பூட்டன் எங்கே? தங்கை தமக்கை, உற்றார், உறவினரைக் கேட்கிறோமே. பரதனின் பாட்டனுக்குக்கூட கடிதம் எழுதவில்லை. இவைகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்படுகின்றன.
பரதன் வருவதற்கு முன்னதாகவே பட்டாபிஷேகம் செய்துவிட வேண்டும் என்று தசரதன் அவசர அவசரமாக நாள் பார்த்தபோதுகூட, இராமன் ஏன் என்று தடுத்திருப்பானா? இந்தச் சூழ்ச்சியை வேலைக்காரி அறிந்து கொண்ட பிறகல்லவோ பரதனுடைய தாய்க்கு உண்மை தெரியவந்தது. இது எவ்வளவு படுமோசம்.

மகளைத் துரோகம் செய்வதும், தம்பியைத் துரோகம் செய்வதும் மட்டுமல்ல இராமாயணத்திலிருப்பது. ஒருவனுக்கு 60 ஆயிரம் பெண்டாட்டிகள். சென்னை நகர கார்ப்பொரேஷன் கூட போதாது இக்குடும்பத்துக்கு? இந்த அக்கிரமத்தை மகாயோக்கியன் என்று கூறப்படும் இராமனாவது கேட்டானா? அவன் எப்படிக் கேட்க முடியும்?

ஒரு பெண்ணின் மார்பையும், மூக்கையும் மானமின்றி அறுக்கத் துணிந்தவனுக்குப் பெண்ணின் பெருமையைப் பற்றி என்ன தெரிந்திருக்க முடியும்?

இப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டிகளைக் கடவுள் என்று கூறும் கம்பன் பித்தலாட்டக்-காரன் இல்லாமல், வேறு எவனாக இருக்க முடியும். அதேபோன்று அவன் எழுதி வைத்த இராமாயணத்தைப் போற்றித் திரிந்தவர்கள் கம்பனின் பித்தலாட்டத்துக்குத் துணை புரிபவர்கள் என்பதல்லாமல், எந்த வகையில் அவர்களை மக்கள் யோக்கியர்களாய்க் கருத முடியும் என்று கேட்கிறேன்."

- தந்தை பெரியார் , ( 10 - 11 - 1948 , விடுதலை )

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நவநீத கிருஷ்ணன்

நவநீத கிருஷ்ணன் சின்ன வயதில் வெண் ணெயைத் திருடினான் வாலிப வயதில் பெண் ணைத் திருடினான் என் கிறார்களே - இப்பொ ழுது அவன் என்ன செய்கிறானாம்? அந்த வேலையை இப்பொழுது செய்தால் கம்பி எண்ண வேண்டியது தான்.

Read more: http://viduthalai.in/e-paper/94116.html#ixzz3OHq2QfcF

தமிழ் ஓவியா said...

600 ஆண்டுகால நவரத்தினங்கள் பதித்த தங்கக் கிரீடத்தைத் திருடிய அர்ச்சகப் பார்ப்பான் கைது!


லக்னோ, ஜன.8_ 600 ஆண்டுகாலமாக கோவிலில் இருந்த நவரத்தினம் பதித்த தங்கக் கிரீடத்தைக் கோவில் அர்ச்சகப் பார்ப் பான் திருடினான்_ அவன் கைது செய்யப்பட்டான்.

உத்தரப்பிரதேசம் பலியா நகரத்தில் உள்ள லகந்தரோட் என்ற பழங்காலக் கோட்டையில் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமை யான விஷ்ணு கோவில் ஒன்று உள்ளது. இக்கோ விலில் உள்ள விஷ்ணு சிலைக்குச் சாம்பல் மாகாணத்தின் குறுநில மன்னர்களால் வழங்கிய நவரத்தினம் இழைக் கப்பட்ட தங்கக் கிரீடம் திடீரென காணாமல் போனது. விலை மதிப்பு மிக்க தங்கக் கிரீடத்தைக் கோவில் அர்ச்சகப் பார்ப் பானே திட்டமிட்டு கொள் ளையடித்துள்ளான்.

600 ஆண்டு காலத் திற்கு முந்தைய விலை மதிப்பு மிக்க பொருள் என்பதால் உத்தரப் பிரதேச சி.அய்.டி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரணை செய்தது. இதில் கோவில் அர்ச்சகப் பார்ப்பானே இந்தக் கிரீடத்தை சில சமூக விரோதிகளின் துணை யுடன் திருடியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அர்ச்சகப் பார்ப்பான் மற்றும் இந்தத் திருட் டுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தத் திருட்டு வழக்கு தொடர்பாக பலி யாநகர இணை ஆணை யர் கூறியதாவது: விலைமதிப்பு மிக்க இந்த கிரீடத்தின் மீது நீண்ட நாள்களாகவே அர்ச்சகப் பார்ப்பானுக்கு ஒரு கண் இருந்து வந்தது.

இதை அப்பகுதியில் உள்ள சில சமூக விரோதிகள் மூலம் திருட திட்டமிட் டான். இதனைத் தொடர்ந்து தன்மீது சந்தேகம் எழாத வகையில் சில நாள்களாக பூசை முடிந்த பிறகு மக்களோடு மக்களாகவே அர்ச்சகப் பார்ப்பானும் கோவிலை மூடிவிட்டுச் சென்றுள் ளான்.

மஹாபூர்ணிமா நாளன்று அலகாபாத் செல்வதாக கூறிச் சென் றவர், ரகசியமாக திருடர் களுக்கு கட்டளையிட் டுள்ளார். இதனை அடுத்து கோட்டையில் யாருமில்லாத நேரத்தில் புகுந்து கோவில் கதவை உடைத்து கிரீடத்தை திருடிச் சென்றுள்ளனர். எப்போதும்போல் கோவிலுக்கு வந்த அர்ச் சகப் பார்ப்பான், கிரீடம் திருடு போனதாக நடித் துள்ளார்.

ஆனால், எங் களுக்கு ஆரம்பத்தில் இருந்தே அர்ச்சகப் பார்ப்பான்மீது சந்தேகம் இருந்தது. விசாரணையில் இந்தக் கொள்ளைக்கு திட்டமிட்டுக் கொடுத் தது, தான்தான் என்று ஒப்புக்கொண்டார். கிரீடம் தற்போது வேறு ஒருவரிடம் கொடுத்து வைத்துள்ளதாக தெரி கிறது. விரைவில் கிரீ டத்தை மீட்டுவிடுவோம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/94111.html#ixzz3OKAHQuI8

தமிழ் ஓவியா said...

காந்தியார் கொல்லப்பட்ட நாளில் கோட்சேவுக்காக இருசக்கர வண்டியில் ஊர்வலமாம்
லக்னோ, ஜன.8- காந்தியார் கொல்லப் பட்ட ஜனவரி 30 அன்று கோட்சேவுக்காக இருசக் கர வண்டி ஊர்வலங் களை நடத்த இந்து மகா சபை திட்டமிட்டுள்ளது.

சீதாபூர் பகுதியில் கோட்சேவுக்கு கோயில் கட்டும் திட்டத்தைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந் தாலும், கோட்சேவுக்காக இரு சக்கர வண்டிகளில் ஊர்வலத்தின் வாயிலாக காந்தி எதற்காகக் கொல் லப்பட்டார் என்று பிரச் சாரம் செய்ய இந்து மகா சபை திட்டமிட்டுள்ளது.

இந்து மகாசபாவின் தேசிய செயல் தலைவர் காம்லேஷ் திவாரி கூறும் போது, இரு சக்கர வண் டிகளில் கோட்சேவை ஆதரித்து, காந்தி கொல் லப்பட்டதற்கான காரணங்களை விளக்கி பிரச்சாரம் செய்யும்போது, பாப்தமாவ் கிராமத்தில் கோட்சே சிலை அமைப் பதற்கான பூமி பூஜை செய்ய உள்ளோம். பின்னர் அந்த இடத்தில் கோட்சே சிலையை அமைப்போம்.

அதே போன்று கோட்சேவுக் கான கோயில் அமைப் பதற்கு பூமி பூஜை செய்ய உள்ளோம். மேலும், பூமி பூஜை செய்வதற்கு முன் பாகவே சீதாபூரில் ஜன வரி 30 அன்று கோட்சே சிலையை அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று திவாரி கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, கர்ஷெட் பாக்கில் உள்ள இந்து சபா பவ னில் இரு சக்கர வாகன பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளது. சார்பாக், ஆலம் பாக், சவுக், அமினாபாத் மற்றும் பாரா ஆகிய பகுதிகளைக் கடந்து பப்தமாவ் கிராமத்தை அடையும். இருசக்கர வாகன பிரச்சாரத்தின் போது, கோட்சே ஏன் காந்தியைக் கொன்றார்? என்பதை விளக்கும் துண்டறிக்கைகள் வழங் கப்பட உள்ளது.

ஜன் ஜக்ரான் இரு சக்கர வாகன பிரச்சாரத் துக்கு இந்து மகாசபையின் நிர்வாகத்தின்மூலம் அனுமதி கோரப்பட்டுள் ளது. உரிய அலுவலர் களுக்கு எஸ்.எம்.எஸ். என்கிற குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இப்பிரச்சாரத்தில் கோட்சேவைப் புகழ்வதில் சட்ட விரோதம் எதுவு மில்லை. அரசுக்கு விரோ தமாக செயல்பட்டதாக எந்த சட்டத்தின்படி கோட்சேவுக்கு தண் டனை அளிக்கப்பட்டதா? என்று திவாரி கேட்டுள்ளார்.

அமைதியை சீர் குலைப்பதான குற்றச் சாட்டின்பேரில் திவாரி உள்ளிட்ட 26பேர் மீது சிதாபூர் மாவட்ட நிர்வா கம் 26.12.2014 அன்று வழக்கு பதிவு செய்துள் ளமை குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/94113.html#ixzz3OKAUMnIV

தமிழ் ஓவியா said...

இருந்து வரும்


பார்ப்பனச் சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும் வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்து வரும்.
(விடுதலை, 29.5.1973)

Read more: http://viduthalai.in/page1/94118.html#ixzz3OKCpwunl

தமிழ் ஓவியா said...

கொடுங்கோலன் ஆட்சி வீழ்த்தப்பட்டது


கொடுங்கோலன் ஆட்சி வீழ்த்தப்பட்டது
எந்த காரணத்துக்காக யாரால் வெற்றி பெற்றாரோ
அதனை உணர்ந்து பொதுமை ஆட்சி நடத்த வேண்டும் புதிய அதிபர் தமிழர் தலைவர்

ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

இலங்கைத் தீவில் கொடுங்கோலன் ராஜபக்சே ஆட்சி வீழ்ந்தது - வரவேற்கத்தக்கதே! எந்த மக்களின் ஆதரவால் எந்த காரணங்களால் புதிய அதிபராக மைத்திரி பால சிறீசேன வெற்றி பெற்றாரோ, அந்தக் காரணங்களை உள்ளபடியே உணர்ந்து சிறுபான்மை மக்களையும் மதிக்கும் பாதுகாக்கும் பொதுமை ஆட்சியாக நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இலங்கையில் இராஜபக்சே ஆட்சி வீழ்த்தப்பட்டது! தனது குழியைத் தானே தோண்டி வீழ்ந்த வரலாறு படைத்தார் அந்த சிங்கள வெறித்தன ஆட்சி அதிபர்.

மக்கள் வாக்குகள் மூலமே மீண்டும் முழு சர்வாதி காரியாய் ஆக முயன்ற இராஜபக்சேயின் குடும்ப ஆட் சிக்கு குதூகலத்துடன் விடை கொடுத்தனுப்பியுள்ளனர் வாக்காளர்கள்!

இனி, குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு, போர்க் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டிய, தடி நாயகம் நடத்தியவருக்கு இலங்கை மக்கள் தந்த தண்டனை இது! சர்வாதிகாரியாக மாறிட ஜனநாயகப் படிக்கட்டுக்களையே பயன்படுத்த நினைக்கும் பாசாங்குக்காரர்களுக்குப் பாடம் கற்பித்த முடிவு இது!

வாக்களித்தோரைப் பாராட்டுகிறோம்

இதனை உலகம் - நாகரிக உலகம் வரவேற்பதைப் போலவே, நாமும் வாக்களித்தோரைப் பாராட்டி வரவேற்கிறோம்.

மைத்திரி பால சிறீசேன என்ற எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ராஜபக்சேவை விட சுமார் 5 விழுக்காடு வாக்குகள் கூடுதலாகப் பெற்று ராஜபக்சேயின் குடும்ப ஆட்சியை வீழ்த்தியுள்ளது - எப்படி, எதனால் என்பதை வெற்றி பெற்ற, புதிய அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் மைத்திரி சிறீசேன ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

வெற்றிக்கு உறுதுணையாக இருந்தோர்

இந்த 5 விழுக்காடு வாக்குகள் பெரிதும் ஈழத் தமிழர்களாலும், இஸ்லாமிய சகோதரர்களாலும்தான் என்பதை மனதிற் கொண்டு, அவர்களுக்குக் கேடு, துன்பம் இழைத்து, சொந்த நாட்டு மக்களையே அந்நியப்படுத்தி குண்டு போட்டு அழிக்கவும் தயங்காத ராஜபக்சே யிசத்திற்கு விடை கொடுத்து அனைவருக்கும் அனைத் தும் என்ற சமூக நல்லிணக்கத்தை உருவாக்கிட தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும்.

அந்த மண்ணைப் பொன்னாக்கிட உழைத்த அந்தக் குடி மக்களையே மனிதாபிமானமின்றிக் கொன்றும், முள் வேலி சிறைக்குள் - சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கிய - அவல வாழ்வுக்கும் ஆளாக்கிய கொடுமைக்கு தக்க பரிகாரம் காண வேண்டும்.

ஜனநாயகத்தில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பும் உரிமையும் தேவை!

ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினர் ஆளுவது தான் என்றாலும் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழவும் உறுதி அளிக்கும் ஆட்சி முறை என்பதை மறந்து விடக் கூடாது!

தமிழர்களின் பங்களிப்புக் காரணமாகவே இலங்கை யின் பொருளாதாரமும், வளர்ச்சியும், முன்னேற்றமும் என்பதை உணர்ந்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் தவிர்த்தல் அவசியம்.

ஆட்சியைப் பொதுமையுடன் நடத்துக!

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமும் பறிக்கப்படும் அவலம் தொடராமல், நல்லுறவுடன் பழைய ராஜபக்சே ஆட்சி சென்ற பாதையில் செல்லாமல், புதிய மனிதாபிமான அணுகுமுறையுடன், சிக்கல்களைத் தீர்க்க முயல வேண்டும். பொது வேட்பாளராக வெற்றி பெற்றுள்ள புதிய அதிபர் ஆட்சியையும் பொதுமையுடன் நடத்தி, பழைய கறைகளைத் துடைக்க வேண்டும் என்றே உலகம் எதிர்பார்க்கிறது.

பொறுத்திருந்து பார்ப்போம்; மாற்றம் ஏமாற்றமாக முடிந்துவிடாது என்று நம்புவோமாக!

கீ.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை

9-1-2015

Read more: http://viduthalai.in/page1/94169.html#ixzz3OKGIP400

தமிழ் ஓவியா said...

கலைஞர், பேராசிரியர், தளபதி ஆகியோருக்கு வாழ்த்துகள் - பாராட்டுகள்


தி.மு.க.வில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட

கலைஞர், பேராசிரியர், தளபதி ஆகியோருக்கு வாழ்த்துகள் - பாராட்டுகள்

இன்று காலை (9.1.2015) கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் 14ஆவது கட்சித் தேர்தலில், அதன் தலைவராக உழைப்பின் உருவம் மானமிகு சுயமரியாதைக் காரரான நமது கலைஞர் அவர்களை மீண்டும் ஒருமனதாக, போட்டியின்றித் தேர்வு செய்து தனித்ததோர் வரலாறு படைத்துள்ளது.

வரலாற்றில் தொடர்ந்து சாதனைகள் செய்து வருபவர்; தி.மு.க.விற்கு எப்படிப்பட்ட மலை போன்ற எதிர்ப்புகளும், இடையூறுகளும், ஏற்படினும், தனது ஆற்றல்மிகு உழைப்பாலும், ஒப்பற்ற சாதுர்யத்தாலும் எதிர்கொண்டு இயக்கத்தின் சோதனைகளை சாதனைகளாக்கிடும் ஆற்றல் படைத்த கலைஞர் அவர்களுக்கு தாய்க் கழகமான திராவிடர் கழகம் தனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துப் பாராட்டி மகிழ்கிறது.

அவர்களோடு அக்கழகத்தை வழி நடத்திட உதவியாக தேர்வு செய்யப்பட்டு, புதிய அத்தியாயத்தைப் படைக்க பொதுச் செயலாளராக இனமானப் பேராசிரியர் அவர்களும், பொருளாளராக தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம். மற்ற பொறுப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள் - பாராட்டுகள்!

- கி.வீரமணி
தலைவர் திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page1/94171.html#ixzz3OKGTp0kv

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பசு

ஒரு பசுவின் உடலில் 14 உலகங்கள், ரிஷிகள், தேவர்கள், பிரம்மா முதலி யோர் அடங்கியுள்ளனர்.
(கல்கி 26.1.2014 பக்.17)

கடவுளுக்கு ஏனிந்த பாரபட்சம்? அதிக பால் கொடுக்கும் எருமை மாட்டு மீது என்ன கோபதாபமோ!

Read more: http://viduthalai.in/page1/94175.html#ixzz3OKGeoTuK

தமிழ் ஓவியா said...

ஜனநாயகவாதி போல கருத்துக்கூறும் ராஜபக்சே

ஜனநாயகவாதி போல
கருத்துக்கூறும் ராஜபக்சே

மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட் சியை அமைதியான வழி யில் புதிய அதிபரிடம் ஒப்படைப்பேன் என்று அதிபர் ராஜபக்சே கூறி யுள்ளார். தேர்தலில் தோல்வி முகம் ஏற்பட்ட உட னேயே அதிபர் மாளி கையில் இருந்து வெளி யேறிய முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே தன்னுடை கருத்து குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் அதிபர் மாளிகை புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட மைத்ரி பால சிறி சேனாவின் அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நண்பகல் 12 மணி அளவில் மைத்திரி பால சிறிசேனாவின் வெற்றியும் தேர்தல் குழுத் தலைவர் வெளியிட்டார். இதனை அடுத்து மகிந்தா தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்ப தாவது,தேர்தல் முடிவுகள் புதிய ஆட்சிமாற்றத்தை மய்யமாக கொண்டுள் ளது. 10 ஆண்டுகளாக எனது ஆட்சிக் காலத்தில் இலங்கையை சர்வதேச அளவில் பல்வேறு துறை களில் முன்னுக்கு கொண்டு வந்துள்ளேன். இலங்கை மக்கள் எனது பணியை நினைவிற்கொள்வார்கள். புதிய அதிபருக்கு வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைதியான வழியில் புதிய அதிபரிடம் ஒப் படைப்பேன். இது குறித்து காலையில் எதிர் கட்சித் தலைவர் ரனில் விக்கிரம சிங்கேவிடம் விபர மாக பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page1/94179.html#ixzz3OKGo8DFf

தமிழ் ஓவியா said...

தமிழிசை Vs குஷ்பு......


நோட் பண்ணுங்கப்பா, நோட் பண்ணுங்கப்பா

தமிழிசை Vs குஷ்பு......

தமிழிசை - 1: காமராஜர் கட்சி இப் பொழுது நடிகை(குஷ்பு) பின்னால் செல்கிறது...

தமிழிசை - 2: குஷ்புவை யாருக்கு தெரியும்.....

குஷ்பு - 1: என் பின்னால் யாரும் வரவில்லை. நான் தான் காமராஜரின் கட்சிக்கு சென்றுள்ளேன்...

குஷ்பு - 2: காங்கிரஸ் நடிகை பின்னால் செல்கிறது என்று சொல்லும் நீங்கள் ஏன் ரஜினியை இழுக்க முயல்கின்றீர்கள்? உங்கள் தேசிய தலைவர் நெப்போலியன், காயத்ரி, குட்டி பத்மினி, கங்கை அமரன் எல்லாம் யார்? நீங்க கேபினட் அமைச்சர் பதவி கொடுத்திருக்கும் ஸ்ம்ரிதி ஈரானி என்ன தலைவரா....????

குஷ்பு - 3: என்னை தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே ஏன் உலகிற்கே தெரியும், ஆனால் தமி ழிசையை தபால்காரருக்கே இப் பொழுதுதான் தெரியும். (சபாஷ். குஷ்புக்கா காங்கிரசுக்கு வந்த உடன்தான் அதிகம் வெளுத்து வாங்குகிறது)

குஷ்பு - 4: மத்திய மந்திரிகள் வாய்க்கு வந்ததை சொல்லி விட்டு பின்பு எதிர்க்கட்சிகள், மக்கள், பத்திரி கைகள் எதிர்த்ததும் மன்னிப்பு கேட் கின்றார்கள். நாடாளுமன்றம் பாவ மன்னிப்பு கோரும் இடமாகி விட்டது. (அக்கா என்னமா யோசிக்குது!!!)

குஷ்பு - 5: மோடி வெளிநாடு சுற் றாமல், இந்தியாவில் இருந்து மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்,
(நோட் பண்ணுங்கப்பா, நோட் பண்ணுங்கப்பா)
முக நூலிலிருந்து: கோ. கருணாநிதி

Read more: http://viduthalai.in/page-2/94200.html#ixzz3OKIAQVPk

தமிழ் ஓவியா said...

தலித் என்ற சொல்

தாழ்த்தப்பட்டவர்கள் என பட்டியல் படுத்தப்பட்ட மக்களைத் தற்போது தலித் என்ற சொல்லால் குறிப்பிடுவதை நிறைய அரசியல்கட்சிகளும், ஊடகங்களும் பின் பற்றி வருகின்றன. தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல்லிலும் ஆதிதிராவிடர்கள் என்ற சொல்லிலும் பொருள் இருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்கள், ஆதி திராவிடர்கள் ஆகிய சொற்களில் இருக்கக்கூடிய வரலாற்றை மறைப்பதற்கும் மறுப்பதற்கும் தலித் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர் என பட்டியல் படுத்தப்பட்ட மக்களின் தாய்மொழி தமிழ் ஆகும். ஒரு சமுதாயத்தின் அடை யாளத்தை அந்நிய மொழியில் தலித் என்று குறிப்பிடுவது ஏற்புடையதாகத் தெரிய வில்லை. தாழ்த்தப்பட்டோர் என பட்டியல் படுத்தப்பட்ட, மக்களிடையேயும் பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மக்களிடையேயும் நிரந்தர பிளவை ஏற்படுத்திடவே தலித் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தமிழிலிருந்து அவர்களை அந்நியப்படுத்தவே தலித் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

தங்கள் பெயரைத் தமிழில் வைக்க வேண்டும் என்று போராட வேண்டியிருக்கக் கூடிய இக்காலக் கட்டத்தில் ஒரு சமுதாயத்தின் பெயரையே தாய்மொழியில் அடையாளப்படுத்தாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. இந்தியா முழு வதிற்கும் ஒரு பொதுச் சொல் வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

பொதுச் சொல்லாக ஆங்கிலத்தில் எஸ்.சி./எஸ்.டி. என்ற சொல் இருக்கிறபோது மராட்டிய மொழியான தலித் என்ற சொல்லலால் தாழ்த்தப்பட்ட மக்களை அடையாளப் படுத்த வேண்டிய தேவை ஒன்றுமில்லை. தமிழில் பெரும்பாலான ஊடகங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் தலித் என்ற சொல்லைப் பயன்படுத்துகிற சூழலில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் இது வரை அந்தச் சொல்லைப் பயன்படுத்திய தில்லை.

விடுதலை, உண்மை ஆகிய இதழ்களின் தலையங்கத்திலும் தலித் என்ற சொல் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் சில நேரங்களில் விடுதலையில் இச்சொல் செய்திப் பக்கங்களில் வெளியாகிறது. இந்த வார்த்தையைத் தவிர்க்க வேண்டும் என அன்புடன் வேண்டுகோள் வைக்கிறேன்.

சி. செந்தமிழ்ச் சரவணன், குடியாத்தம்

Read more: http://viduthalai.in/page-2/94202.html#ixzz3OKIJYYwY

தமிழ் ஓவியா said...

பீடை மதம்

இன்றைய ஆன்மிகம்? என்ற பெட்டிச் செய்தியை (சனி 27.12.2014 திருச்சி பதிப்பு) படித்தேன்.
புத்தர் மறுபிறவியில்லா வீடுபேறு மரணமடைந்த மாதம் மார்கழி 28ஆம் நாளாகும். எனவே மார்கழி மாதம் பெருமைக்குரிய மாதம் என்னும் பொருளில் பீடு மாதம் என்று பௌத்த மதத்தினரால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

பவுத்தத்திற்கு எதிரான ஆரிய வேத மதத்தினர், இப்பீடு மாதம் என்பதை பீடை மாதம் எனத் திரிபு செய்து விட்டனர். அம்மாதத்தின் சிறப்பைச் சிதைத்து விட்டனர். தடு என்ற சொல்லும் தடை என்ற சொல்லும் ஒரே பொருள் தரவல்லது போல, பீடு என்ற சொல்லும் பீடை என்ற சொல்லும் ஒரே பொருள் தராது என்பது உணரத் தக்கதாகும்.

- தி. அன்பழகன், திருச்சிராப்பள்ளி

Read more: http://viduthalai.in/page-2/94202.html#ixzz3OKITrh47

தமிழ் ஓவியா said...

அருகதையற்றவர்கள்


பேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிரதாய முறைகளையும், ஸ்தாப னங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற, ஒழிக்கத் துணிவு கொள்ள வேண்டும். இந்தத் துணிவு கொள் ளாத எவரும் சமதர்ம முயற்சிக்கு அருகதை அற்றவர்களே ஆவார்கள்.
(விடுதலை, 7.7.1965)

Read more: http://viduthalai.in/page-2/94182.html#ixzz3OKIZcaqo

தமிழ் ஓவியா said...

தீபாவளி மகாலட்சுமி அகோர ரத்தப்பசி காளி!

தீபவாளி அமாவாசை இரவு பெண்கள் மகாலட்சுமி நோன்பு - பூசை போடுகிறார்கள் - பட்டுக்குஞ்ச மஞ்சள் கயிறு கையில் கட்டிக் கொள்கிறார்கள்.

இந்த மகாலட்சுமியின் லட்சணங்கள் என்ன தெரியுமா?

மகாலட்சுமி தோத்திரம் என்று பார்ப்பனர் பாடும் சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைக் கவனியுங்கள்:- ஓ, தேவி! நீயே பிரபஞ்சம் அந்த பிரபஞ்ச சக்தி நீயே - நீ மகாபயங்கரி - மாய சக்தி நீ.

அகோர பசிக்காரி - காளி உருவத்தில் ஓ மகாலட்சுமி நமஸ்காரம்.

இந்த மகாலட்சுமி மகா பயங்கர உருவமும், செயலும், குரலும், கொண்டவள்.

காளி உருவம் எடுத்துள்ள போது அகோர பசி - அதாவது ஆண்களையும் எருமைகளையும் கொன்று அவர்கள் இரத்தத்தை குடிக்கவும் அவர்கள் குடலைத்தின்னவும் பெரும்பசி கொண்டவள்.

பலன் ஸ்ஜர்னல் 1967 - தீபவாளி மலர்.Read more: http://viduthalai.in/page-7/94196.html#ixzz3OKIsYuyh

தமிழ் ஓவியா said...

கடவுள்


1. கடவுளைக் காப்பாற்ற மனிதன் புறப்பட்டதாலேயே கடவுளின் பலவீனம் விளங்குவதோடு கடவுள்களுக்கு வரவர பலவீனம் ஏற்பட்டு ஆபத்தும் பலப்பட்டு வருகிறது.

2. கடவுள்கள் இல்லாவிட்டால் அரசன் இருக்க முடியாது. அரசன் இல்லாவிட்டால் பணக்காரன் இருக்க முடியாது. பணக்காரன் இல்லாவிட்டால் உயர்ந்த ஜாதிக்காரன் இருக்க முடியாது. ஆகவே இவை ஒன்றையொன்று பற்றிக் கொண்டிருக்கின்றன.

3. பெரும்பாலும் சுயநலக்காரர்களும் தந்திரக்காரர் களுமே கடவுளையும், வேதத்தையும், ஜாதியையும் உண்டாக்கு கிறார்கள்.

4. கடவுள் உண்டானால் பேய் உண்டு. பேய் உண்டானால் கடவுள் உண்டு. இரண்டும் ஒரே தத்துவங் கொண்டவை.

5. இந்தியாவில் காகிதம், புத்தகம், எழுத்து, எழுது கருவி எல்லாம் சரஸ்வதியாக பாவிக்கப்பட்டு வணங்கி வந்தாலும் 100-க்கு 5 பேர்களே படித்திருக்கின்றார்கள்.

6. மேல்நாட்டில் காகிதங்களினால் மலம் துடைத்து சரஸ்வதியை அலட்சியம் செய்தும் அங்கு 100-க்கு 90 பேர்கள் படித்திருக்கிறார்கள்.

7. கோயில்கள் சாமிக்காக கட்டியதல்ல. வேறெதற்காக என்றால் ஜாதியைப் பிரித்துக்காட்டி மக்களைத் தாழ்த்தவும், பணம் பறித்து ஒரு கூட்டத்தார் பிழைக் கவும், மக்களை அறியாமையில் வைத்து அடிமை களாக்கவும் கட்டப்பட்டதாகும்.

8. எவனொருவன் கடவுளிடத் திலும் அதைப் பற்றிச் சொல்லும் மதக் கொள்கை இடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங் களும் அவர்களுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக் கிறானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதத்தை வாயினால் உச்சரிக்கக் கூட யோக்கியதையற்ற வனாவான்.

9. சுயமரியாதைக்காரன் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனி தனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப் போய்விட்டது. ஆனால் நமது நாட்டில் அந்த செத்த பிணம் அழுகி நாறிக் கொண்டி ருப்பதை எடுத்துப் புதைத்து, நாறின இடத்தை லோஷன் போட்டுக் கழுவி சுத்தம் செய்கின்ற வேலையைத்தான் சுய மரியாதைக்காரன் செய்து கொண்டிருக் கின்றான்.

10. பத்துமாதக் குழந்தையை கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

11. கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பானைச் சாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை.

-தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/94195.html#ixzz3OKJBCYYp

தமிழ் ஓவியா said...

இந்து மதம் பற்றி....


நாம் யாருக்கும் மேல் அல்ல; யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது. தர்ப்பை ஆகாது சேரியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது, யோக யாகப் புரட்டுகள் மனிதர் யாவரும் சரி நிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை இந்து என்று கூறிக் கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை - சூத்திரன் என்று கூறிக் கொள்ள எப்படித்தான் மனம் இடந்தரும்?

எப்படித்தான் துணியும்? இந்துமதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாயமுறை, மதக் கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப் பார்த்த பிறகு யாருக்குத் தான் தன்னை ஓர் இந்து என்று கூறிக் கொள்ள மனம் இடந்தரும், பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களை விட்டு, மதி கெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா?

மீளமார்க்கம் தேடுவதை விட்டு, மாள வழித் தேடிக் கொள்வாரா?

விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும் போது குழியில் வீழ்வார? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு திராவிடர் தனி நிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் இந்து மார்க்கத்தில் போய்ச் சேர இசைவாரா?

வீரர் திராவிடர் என்ற உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர் இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!!

- அறிஞர் அண்ணா
(ஆரியமாயை என்ற நூலில்)

Read more: http://viduthalai.in/page-7/94198.html#ixzz3OKJK6OWs

தமிழ் ஓவியா said...

சுதந்திரத் திராவிடத்தில் ஆரியர் கதி என்ன?

- அறிஞர் அண்ணா

திராவிடநாடு பிரிவினை ஏற்பட்ட பின்பு, ஆரியர்கள் எங்கு செல்வது என்பது பற்றி, ஆரியர்களேதான் முடிவு செய்ய வேண்டும்.

ஆங்கிலோ - இந்தியர்கள் முதலிய மைனாரிட்டிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் ஆரியர்களுக்கும் அளிக்கப்படும்.

ஆனால் மூடப்பழக்க வழக்கங்களும், பிறவியில் உயர்ந்தவன் என்பதும், வைதீகமும், வர்ணாச்சிரமமும் இருக்க இடங்கொடுக்க மாட்டோம்.

ஆரியர்களை எங்கும் ஓடிப்போகும்படி சொல்லவில்லை ஆனால், ஆரியர்களுக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லையானால் மேலே பல ஆரியவர்த்தத்திற்கு போகலாம்.

ஆரியர்கள் இந்நாட்டை விட்டு வெகு சுலபத்தில் போய் விட மாட்டார்கள். ஜெர்மனியில் யூதர்கள் விரட்டப்பட்ட போதுதான் வெளியேறினார்கள்.
ஆனால், நாங்கள் ஹிட்லராக இருக்க விரும்பவில்லை.

Read more: http://viduthalai.in/page4/%20_94226.html#ixzz3OPoh4auM

தமிழ் ஓவியா said...

திருக்குறள் தேசிய நூல் தி.க., திமுக தீர்மானங்கள்
திருக்குறள் தேசிய நூல்

தி.க., திமுக தீர்மானங்கள்6-7-2002 அன்று சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக இளை ஞரணி மாநாட்டில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

...

4,3.2006 அன்று திருச்சிராப்பள்ளி யில் கூடிய தி.மு.க. 9ஆவது மாநில மாநாடு தி.மு.க. இளைஞரணி வெள்ளி விழா மாநாட்டில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Read more: http://viduthalai.in/page4/%20_94227.html#ixzz3OPoypgJQ