Search This Blog

20.1.15

தீண்டாமை என்பதற்குப் பதிலாக ஜாதியை ஒழிப்பதாக சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும்!


நவ. 26 - ஜாதி ஒழிப்பு நாளில் தாம்பரத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை


சென்னை, ஜன. 17- தீண்டாமை ஒழிக்கப்படும் என்பதற் குப் பதிலாக ஜாதியை ஒழிப்பதாக சட்டத்திட்டம் கொண்டு வரவேண்டும் என்றார் தமிழர் தலைவர் அவர்கள்.
26.11.2014 அன்று தாம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

சரியாக 10 மணிக்கு நிகழ்ச்சி முடிவடையவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கிறது. இப்பொழுது மணி 9.25 என்னு டைய கடிகாரத்தில். ஆகவே, இந்த குறுகிய நேரத்தில் பல்வேறு கருத்துகளை எடுத்துச்சொல்ல வேண்டிய கட்டா யத்தில் இருக்கின்ற காரணத்தால், இந்த குறிப்பிட்ட நேரத் தில் கருத்துகளை வேக, வேகமாக சொல்லுகின்ற இந்த நேரத்தில், இந்தக் கொள்கையைப் பற்றி விளக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், இங்கு குறைந்த விலை யில் புத்தகங்கள்  வெளியிடப்பட்டு, அடக்க விலைக்கு கொடுக்கப்பட்டு, இயக்கக் கொள்கை விளக்கப் புத்தகங்கள் ஏராளமாக இங்கே பரப்பப்படுகின்றன.

அவைகளை யெல்லாம் நீங்கள் வாங்கி, படித்து பயன்பெறவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், நீண்டநேரம் உரையாற்றக் கூடிய வாய்ப்பில்லை.

ஆகவே, உங்களுக்கு சில கருத்துகளை எடுத்துச் சொல்ல விழைகின்றேன். ஏராளமான தெளிவான இளை ஞர்களை இங்கே பார்க்கின்றபொழுது ஒரு புதிய நம்பிக் கையும், பெருமையும் உணர்வும் எங்களுக்கு ஏற்படுகிறது. நேரமின்மை காரணத்தினால்தான் இங்கே உரையாற்றிய பல பேர் தங்களுடைய உரைகளை சுருக்கிக் கொண்டார் கள்.

இங்கே உரையாற்றிய சிவசாமி ஆனாலும், தமிழ் சாக் ரட்டீஸ் ஆனாலும், பொழிசை கண்ணன் ஆனாலும், மற்ற தோழர்களானாலும் அத்துணை இளைஞர்களும் மிகவும் அற்புதமான கருத்துகளைச் சொன்னார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் பேசுவதுகூட முக்கிய மல்ல; சுருக்கமாக இருந்தாலும் பரவாயில்லை.

நமக்கு அடுத்தபடியாக, நம்முடைய இளைஞர்கள் எவ்வளவு பெரிய நம்பிக்கை நட்சத்திரங்களாக மலர்ந்துகொண்டிருக் கிறார்கள். இந்த இயக்கம் இவர்களுக்குத் தருவதற்கு என்ன இருக்கிறது? கொள்கைதான் இருக்கிறது.
அதைத் தவிர வேறெதுவும் கிடையாது. இந்தப் பதவி, அந்தப் பதவி எந்தப் பதவியும் கிடையாது. அப்படி இருக்கும்பொழுது, இதைத் தேடி வருகிறார்கள் என்றால், கொள்கையைத் தேடி வரக் கூடிய அற்புதமான செயல்வீரர்களாக, பாசறை வீரர்களாக இந்த இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பது பொருள்.


பள்ளனாக, பறையனாக, ஒதுங்கிப் போய் இரு என்று சொல்லக்கூடியது சுதந்திரமா?
இன்றைய முக்கியத்துவத்தை கவிஞர் அவர்களும், தோழர் அவர்களும் சொன்னார்கள். 26 ஆம் தேதி என்று சொன்னால், 57 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ் வைத்தான் அசைபோட்டு சிந்திக்கின்றோம். பல்லாயிரக் கணக்கான தோழர்களும், தோழியர்களும் தந்தை பெரியா ரின் ஆணையைத் தலைமேற்கொண்டு, கையகல கடிதாசி யாக இருக்கக்கூடிய இந்த அரசியல் சட்டத்தில்,

ஜாதியைப் பாதுகாக்கக்கூடிய அந்த அம்சங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி, சுதந்திர நாட்டில் சூத்திரன் இருக்கலாமா? சுதந்திர நாட்டில் பஞ்சமன் இருக்கலாமா? தொடக்கூடியவன், தொடக்கூடாதவன் என்று மனிதர்களில் பேதம் இருக் கலாமா? என்று தந்தை பெரியார் அவர்கள் கேள்வி கேட்டு, மக்களுக்கு சுதந்திரம் வந்துவிட்டது என்று சொல்கிறீர்களே,

எங்களுடைய சுதந்திரம் என்ன சூத்திரனாக இருக்கின்ற சுதந்திரமா? பள்ளனாக, பறையனாக, ஒதுங்கிப் போய் இரு என்று சொல்லக்கூடியது சுதந்திரமா? இதற்குப் பெயர் சுதந்திரமா? என்று சொல்லி, இது ஒரு அதிகார மாற்றமே தவிர, வேறு கிடையாது என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்.


எல்லோருக்கும் சம வாய்ப்பு, சமத்துவம் இருக்கிறதா?

அதற்காகவே, ஜாதியை ஒழிக்கவேண்டும்; ஜாதி இருக்கின்ற வரையில், நம்முடைய நாட்டில் பேதங்கள் இருக்கும். அப்படியென்ன, ஜாதி மிகவும் ஆதாரபூர்வ மானதா? ஜாதியைப் பாதுகாக்கின்ற அளவிற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதியைப்பற்றி குறிப் பிட்டிருக்கின்றார்கள். ஆனால், எடுத்த எடுப்பில் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்ற ஒரு செய்தி என்னவென்று சொன்னால், பல நண்பர்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்.

முகவுரை ஒன்று உண்டு; அந்த முகவுரையை எடுத்துச் சொல்கின்ற நேரத்தில், எப்படித் தொடங்குகிறார்கள் என்று சொன்னால், மிகப்பெரிய அளவில் அவர்கள் தங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை எடுத்துக்காட்டக்கூடிய வகையில், அங்கு ஆரம்பிக்கின்றார்கள்.

அப்படி ஆரம்பிக் கின்ற நிலையில், முதல் பகுதியை எப்படித் தொடங்கு கிறார்கள் என்று சொன்னால், இந்த அடிப்படையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, Justice, Social, Economic, Political Equality of status and opportunity என்று வருகிறது.

எல்லோருக்கும் சம வாய்ப்பு, சமத்துவம் இருக்கிறதா? ஜாதியை வைத்துக்கொண்டு சமத்துவம் பேச முடியுமா? ஜாதியை வைத்துக்கொண்டு மிகப்பெரிய அளவிற்கு எல்லோருக்கும் சம வாய்ப்பு என்று சொல்ல முடியுமா? எப்படி சமவாய்ப்பாகும்.

நம்மாள் ஊழல் செய்யவில்லை என்றாலும், ஊழல் என்று பூஜ்ஜியம், பூஜ்ஜியம், பூஜ்ஜியம், என்று அனுமானத் திற்குப் போடுகிறார்கள். ஊழல் செய்து தண்டனை வாங் கினாலும், அதைப்பற்றி கவலைப்படாமல், மறைக்கின்றார் கள் என்று சொன்னால், ஊழலேப் பார்க்கும்பொழுதுகூட அங்கே ஜாதி வருகிறது என்பதுதான் மிக முக்கியம்.

கிரிக்கெட்டில் ஊழல் செய்கிறார்களே? அவன் பார்ப் பானாக இருந்தால், வெளியில் வந்துவிடுங்கள்; அடுத்த முறை இன்னும் தாராளமாக செய்யலாம் என்று சொல் கிறார்கள். அதேநேரத்தில், தவறு செய்யாதவர்கள்மீதுகூட, ஊழல் சாயத்தைப் பூசி, நம்மவர்களே அதனைப் புரிந்து கொள்ளாத அளவிற்கு ஆக்குகிறார்கள்.

17 ஆவது விதி என்ன சொல்கிறது?

எனவே, சமத்துவம் என்பது முகவுரையில் சொல்லப் பட்டிருக்கிறதே, Equality of status and opportunity இருக்கிறதா? இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் கேட்டார். இதைத்தான் இன்றைக்கும் திராவிடர் கழகம் கேட்கிறது.
67 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த நிலையில், இன்றைக்கு இந்த நாட்டில் இன்னமும் ஜாதி இருக்கிறது; பேதம் இருக்கிறது. இதில் வேறு, உள்ளே உள்ள தீண்டா மையை ஒழிப்பதற்கு மிகத் தீவிரமாக இருப்பதுபோல ஒரு கருத்தைப் போட்டு, Untouchability abolished  தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது.

அதை எந்த ரூபத்தில் கடைபிடித் தாலும், சட்டப்படி குற்றம் என்று 17 ஆவது விதியில் இருக் கிறது. ஆனால், நண்பர்களே இன்றைக்குத் தீண்டாமையை ஒழித்துவிட்டார்களா? இன்னமும் தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை இருக்கிறதே! தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை இருக்கிறதே தவிர, டாஸ்மாக் கடையில் இரண்டு கிளாஸ் முறை இருக்கிறதா? தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டாமா? சாராயம் குடிப்பதில் சமத்துவம் இருக்கிறது;

போதையில் இருந்தால் தான் சமத்துவம் வருமா? மனிதன் நல்ல நிலையில் இருந்தால், அவனுக்கு சமத்துவம் இருக்காதா? என்னுடைய தோழன், என்னுடன் உழைப்பவன், அவன் உழைப்பில்லை என்றால், நமக்கு வாழ்வு கிடையாது. அவனை இன்னமும் கீழ்ஜாதி, தொடாதே, எட்டி நில் என்கிறீர்களே, அவனை மிருகத்தைவிட கேவலமாக நினைக்கிறார்களே, இதைப் பற்றி சிந்திக்கின்ற இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு இந்த நாட்டில் உண்டா? என்று இளைஞர்கள் யோசிக்கவேண்டும்.

மூவாயிரம் தோழர்கள் மூன்றாண்டுகள் வரை சிறையில் இருந்தார்கள்!

ஜாதியை ஒழிப்போம் என்று பெரியார் சொன்னார்; ஜாதியை ஒழிப்பதற்காக நாங்கள் பாடுபட்டோம். பத்தாயிரம் தோழர்கள் கொளுத்தினார்கள்; மூவாயிரம் தோழர்கள் மூன்றாண்டு வரையில் சிறையில் இருந்தார்கள். 15 பேர் மடிந்தனர். சிறைக்குள்ளேயே 5 பேர்; சிறைக்கு வெளியே 10 பேர் தாய்மார்கள் உள்பட இறந்தார்கள்.

பல பேருடைய வாழ்க்கை நசிந்தது. யாருக்காக? நம்முடைய சூத்திரத் தன்மை, நம்முடைய இழிவு, நம்முடைய பிறவி இழிவு இவைகள் போகவேண்டும் என்பதற்காகத்தான்.

இந்த நாட்டில் சமத்துவமின்மை இருக்கிறதே, inequality  அந்த சமத்துவமின்மைவிட, அந்த பேதகளதவி மற்ற நாடுகளில் என்ன பேதம் இருக்கும்? ஏழை - பணக்காரன் அதோடு முடிந்துவிட்டது. ஆனால், இங்கே ஜாதி, பிறவி யினால் பேதம் இருக்கிறது. நேற்றைய ஏழை, இன்றைக்குப் பணக்காரன் ஆக முடியும்; இன்றைய பணக்காரன், நாளைக்கு ஏழையாக மாற முடியும்.

ஆனால், இன்றைக்குப் பார்ப்பான், என்றைக்கும் பார்ப்பான். இன்றைய பறையன், என்றைக்கும் பறையன். சுடுகாட்டிற்குப் போனாலும், அவனுக்குத் தனி இடம் என்று சொல்லக்கூடிய அளவில் தான் இருக்கிறது. இதைவிட காட்டுமிராண்டி நாடு வேறு இருக்குமா என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். இதனை நினைத்துப் பார்த்தால் ரத்தம் கொதிக்கிறது.

இந்த நாட்டில் இவ்வளவு பேர் படித்திருக்கிறார்கள்; படித்தவர்கள்கூட என்ன செய்கிறார்கள், தனியாகத்தானே பார்க்கிறார்கள். நம்மாள்களுடன் கலந்து பேசமாட்டேன் என்கிறார்களே, இன்னமும் நம்முடைய நாட்டில், இல்லாத ஜாதியை, நாம் ஜாதி மறுப்பு சொல்லிக் கொண்டிருக் கிறோமே! ஜாதி என்பதற்கு என்ன அடையாளம்?

இன்றைய நாளிதழ்களில்கூட செய்தி வெளிவந்திருக் கிறது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புக ளைக் கொடையாக அளிக்கிறார்கள். பலருக்கு இன்றைக்கு மனிதநேயம் வளர்ந்திருக்கிறது; அது ஒரு நல்ல திருப்பம்; பாராட்டவேண்டிய விஷயம். சிறுநீரகத்தைக் கொடையாக அளிக்கிறார்கள்; பல உடல் உறுப்புகளையும் கொடையாக அளிக்கிறார்கள்.
செட்டியாருடைய சிறுநீரகம் செட்டியா ரைப் பார்த்தே தான் பொருத்துகிறார்களா? முதலியாரு டைய உடல் உறுப்புகளை முதலியாருக்கே பொருத்துகிறார் களா? வன்னியர் உடல் உறுப்புகளை வன்னியருக்கே பொருத்துகிறார்களா? பார்ப்பானுடைய உடல் உறுப்புகளை, பார்ப்பானுக்கே பொருத்துகிறார்களா?  அய்யங்கார் உடல் உறுப்புகளை அய்யங்காருக்கே பொருத்துகிறார்களா? இல்லையே!

ஜாதிக்கு என்ன ஆதாரம்? ஒரு ஆதாரமும் கிடையாது!
இளைஞர்கள் குருதிக் கொடை அளிக்கிறார்களே, அந்தக் குருதி எப்படிப்பட்டது. உலகம் முழுவதும் அறி வியல் ரீதியாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். ஏ1 பாசிட்டிவ், பி1 பாசிட்டிவ், ஓ பாசிட்டிவ் இப்படி பல பிரிவுகளில் குருதி இருக்கிறது. எந்தப் பிரிவுக் குருதிக்கு எந்தப் பிரிவு குருதி பொருந்துமோ அந்தக் குருதியைத்தான் ஏற்றுவார்கள். மற்றபடி ஜாதியைப் பார்த்தா குருதியைச் செலுத்துகிறார்கள். பிறகு ஜாதிக்கு என்ன ஆதாரம்? ஒரு ஆதாரமும் கிடையாது.

இல்லாத ஒன்று; இல்லாத கடவுளைக் காட்டி ஏமாற்று கிறான்; இல்லாத ஜாதியைக் காட்டி நம்மை அடிமைப்படுத்து கிறான். நடக்காத புராணத்தை வரலாறாக மாற்றிக் காட்ட வேண்டும் என்று இன்றைக்குத் தலைகீழாக நின்று கொண் டிருக்கிறார்கள். இவையெல்லாவற்றையும் நீங்கள் எண் ணிப் பார்க்கவேண்டும்.

1973 ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் நடத்திய மாநாட்டில்...

ஜாதியை நியாயப்படுத்துகிறான். ஜாதி ஒழியக்கூடாது; சில பேர் பார்த்தீர்களேயானால், தந்திரமாகச் சொல்கிறார் கள்; நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களையெல்லாம் கட்டி அணைக்கிறோம்; தீண்டாமையை ஒழிக்கிறோம்; வருணா சிரம தருமத்தை ஆதரிக்கிறோம் என்கிறார்கள்.
ஏன் ஜாதியை ஒழிக்கக்கூடாது என்று தந்தை பெரியார் அவர்கள் மிக அழகாகக் கேட்டார். 1973 ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் நடத்திய மாநாட்டில், தீர்மானம் நிறை வேற்றும்பொழுது மிக தெளிவாகக் கேட்டார், அரசியல் சட்டத்தில் தீண்டாமை என்கிற வார்த்தை போட்டிருக் கிறீர்கள் அல்லவா, அந்த வார்த்தைக்குப் பதில் ஜாதி என்ற வார்த்தையை போடுங்கள் Caste is abolished ஜாதி ஒழிக்கப்பட்டு விட்டது என்று. அது எந்த ரூபத்தில் கடைபிடித்தாலும், அது குற்றம் என்று போடுங்கள் என்று இவ்வளவு தெளிவாகச் சொன்னவர், இந்திய திருநாட்டி லேயே தந்தை பெரியார் என்கிற மாமனிதரைத் தவிர வேறு யாரும் கிடையாது.

இன்னமும் ஜாதியினால் நல்லது என்று பேசுகிறார்கள். அதிலும், ஆர்.எஸ்.எஸ். ஆட்டி வைக்கக்கூடிய ஒரு ஆட்சி; மோடியை வைத்துக்கொண்டு வித்தையைக் காட்டு கிறார்களே, மத்திய ஆட்சியில், ஜாதியை ஒழிப்பார்கள் என்று நீங்கள் நினைக்க முடியுமா? முடியாது.

எதையும் நாம் ஆதாரத்தோடு சொல்லி பழக்கப்பட்டவர்கள்!

இப்பொழுதே வெளிப்படையாக, அந்த அமைப்பைச் சார்ந்த பார்ப்பனர்களும், ஏடுகளும், ஜாதியை லாவகமாக, ஜாதியினால் நன்மை ஏற்படுகிறது என்று வாதம் செய் கிறார்கள். இது எவ்வளவு பெரிய காட்டுமிராண்டித் தனமாகும். நேரமின்மை காரணத்தினால், உங்களுக்குத் தொட்டுக் காட்டுகிறேன். இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எதையும் நாம் ஆதாரத்தோடு சொல்லி பழக்கப் பட்டவர்கள்.

என்னுடைய கையில் இருப்பது ஞானகங்கை என்கிற நூல், கங்கையைப் புனிதப்படுத்துவதற்காக, தூய்மைப்படுத் துவதற்காக 2000 கோடி ரூபாயை செலவழிக்கிறார்கள். அதி லும் புனிதமான கங்கையைத் தூய்மைப்படுத்துவது என்றால் என்ன அர்த்தம்? அசிங்கப்பட்டு இருக்கிறது என்று தானே அர்த்தம். இவன் சங்கதி முழுவதும் இப்படித்தான் இருக்கும்; ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக இருக்கும்.

அது எப்படி, புனிதமான கங்கா ஜலம்; அதைத் தெளித்து விட்டால் எல்லாமே போய்விடும் என்று சொல்கிறார்கள். அந்தக் கங்கையைத் தூய்மைப்படுத்தவேண்டும் என் கிறார்கள். அதற்கு 2000 ஆயிரம் கோடி போதாது; 10 ஆயிரம் கோடி ரூபாய் இருந்தாலும் போதாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளே சொல்கிறார்கள்.

கோல்வால்கர் எழுதியதாகச் சொல்லப்பட்ட ஞான கங்கை நூலாகும். இவர்தான் அந்தத் தத்துவங்களை ஆர்.எஸ்.எஸ்-ற்குச் சொல்லிக் கொடுக்கின்ற கதாகர்த்தா ஆவார். இந்த நூல்தான் அவர்களுக்குத் தத்துவப் புத்தகம். எப்படி மதவாதிகளுக்கு மதப் புத்தகம் இருக்கிறதோ, அதேபோல், ஆர்.எஸ்.எஸ். நண்பர்களுக்கு அவர்களு டைய தத்துவப் புத்தகம் இது.
கோல்வால்கர், குருஜி கோல்வால்கர் என்று அழைக்கப் படுபவர். அவர் எழுதியதாகச் சொல்லப்பட்ட ஞான கங்கையில் சொல்லியிருக்கின்ற ஒரு பகுதியைப் பாருங்கள்.

பக்கம் 162 ஆவது பக்கத்தில்,

நம்முடைய சமுதாயத்தின் மற்றொரு விசேஷ அம்சம் நான்கு வருண அமைப்பாகும். இன்று அது ஜாதிவாதம் என்று கூறி, கேலி செய்யப்படுகிறது. வருண அமைப்பு என்று கூறுவதே கேவலமானது என்று நம் மக்கள் எண்ணு கின்றனர். இந்த நால் வருண அமைப்பில் உருவாகிய சமூக அமைப்பினையே, சமூக சமநீதிக்குப் புறம்பானது என்று தவறாக எண்ணுகின்றனர்.

நான்கு வருணம் என்றால் என்ன?
பிரம்மா முகத்தில் பிறந்தவன் பிராமணன்
பிரம்மா தோளில் பிறந்தவன் சத்திரியன்
பிரம்மா தொடையில் பிறந்தவன் வைசியன்
பிரம்மா காலில் பிறந்தவன் சூத்திரன்
இதுதான் நான்கு வருண அமைப்பு.

ஆகவே, சமுதாயத்தில் இந்தக் காலத்தில், இன்னமும் ஏன் வருணதருமம் இருக்கவேண்டும். ஜாதியைப் பாது காக்கவேண்டும்; ஜாதியினுடைய அடிப்படை மிக முக்கிய மானது என்று கோல்வால்கர் தன்னுடைய நூலில் சொல்லி யிருக்கிறார். பிரம்மாவின் உடலிருந்து இத்தனை இடத்தி லிருந்து பிறக்க முடியுமா என்று தந்தை பெரியார் கேட்ட பிறகுதான், கொஞ்சம் யோசனை செய்தார்கள்.


இவன்தாண்டா, பிறக்கவேண்டிய இடத்தில், நியாயமாகப் பிறந்தவன்!
கடவுளுக்கு என்ன  வேலை என்று கேட்டால், இத்தனை இடத்திலிருந்து அவர் இத்தனை பேரை பெற்றிருக்கிறார்.

அய்யா அவர்களிடம் சென்று ஒருவர் ஒரு சீட்டில் ஒரு கேள்வியை எழுதி கேட்டார். அதில், எங்களை பஞ்சமர் என்று அய்ந்தாம் ஜாதியாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். நாங்கள் எந்த இடத்திலிருந்து பிறந்தோம்? என்று கேட்டார்.

உடனே பெரியார் அவர்கள் அந்த சீட்டைப் படித்துவிட்டு சொன்னார், இவன்தாண்டா, பிறக்கவேண்டிய இடத்தில், நியாயமாகப் பிறந்தவன் என்று சொன்னார்.

ஜாதியை ஒழிப்பதற்கு எங்களையே அர்ப்பணித்துக் கொள்வோம்!

கோல்வாக்கர் கருத்தினை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தக்கூடியவர்களிடமிருந்து நாம் எப்படி ஜாதி ஒழிப்பை எதிர்பார்ப்பது. இதைத்தான் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆகவே, அதை நாம் என்ன விலை கொடுத் தாவது, ஜாதியை ஒழிப்பதற்கு நாங்கள் எங்களையே அர்ப்பணித்துக் கொள்வோம் என்று சூளுரைக்கும் கூட்டம்தான் எங்களுடைய கூட்டம்.

எங்களுக்கு உயிர் வெல்லம் அல்ல; நாங்கள் வன்முறை யைத் தூண்டக்கூடியவர்கள் அல்ல. ஆனால், அதே நேரத்தில், இந்த நாட்டில், ரத்தம் சிந்தாத ஒரு அமைதிப் புரட்சியை, அறிவாயுதத்தின் மூலமாக, மக்களுக்கு எழுச் சியை உண்டாக்குவதன்மூலமாக, இதனைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் நினைக்கின்றோம்.

ஜாதி எப்படிப்பட்ட அளவில் இருக்கிறது என்பதற்கு உதாரணம் சொல்லவேண்டுமானால் நண்பர்களே, உங் களுக்கு ஒரு தகவலைச் சொல்கிறேன்.

என்னுடைய கையில் இருப்பது, 1960 ஆம் ஆண்டில் லண்டனிலிருந்து ஆராய்ச்சி செய்து வெளியிடப்பட்ட புத்தகம் CASTE TODAY.
அந்த ஆராய்ச்சியை தயாசின்கின் என்பவர் செய்தார். அவர் இந்தியாவில் நீண்ட நாள்களாகத் தங்கியிருந்து, இங்கே ஜாதி, மதம் எப்படி இருக்கிறது என்பதைப்பற்றி 1962 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகம்தான் இது.
அப்பொழுது பண்டிட் ஜவகர்லால் நேரு  அவர்கள் பிரதமராக இருக்கிறார். வெளிநாட்டுக்காரர் களுக்கு ஜாதி முறையே தெரியாது. அவர்கள் கேட்கிறார் கள், தொடக்கூடாதவர்கள் என்று இருக்கிறார்களா? நாங்கள் எல்லாம் மின்சாரத்தைத்தான் தொடக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்; ஏனென்றால், அதைத் தொட்டால், ஷாக் அடிக்கும். ஆனால், உங்கள் ஊரில் மனிதர்களைத் தொடக்கூடாது என்று சொல்கிறார்களா? இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார்கள்.

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது. விளக்கி சொல்லவும் முடியாது. இன்னமும்கூட!

பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். அடுக்குமுறை பேதம் Graded inequality ஏணிப் படிக்கட்டுகள் போல! ஒருவர் மேலே, ஒருத்தர் கீழே அந்த நால்வருண அமைப்பு என்பது ஒரே மாதிரியல்ல; அந்த நான்குக்கும் அப்பாற்பட்டவர்கள் பஞ்ச மர்கள்; பெண்கள் யாரென்றால், அதற்கும் கீழே -  எல்லா ஜாதிப் பெண்களும், அவர்கள் பார்ப்பனப் பெண்களாக இருந்தாலும்கூட சமத்துவத்தைச் சொல்லவில்லை.

அதற்கு என்ன காரணம் என்றால், ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு வரும்பொழுது பெண்களை அழைத்துக்கொண்டு வரவில்லை. பெண்கள் இங்கே இருந்து வந்த காரணத் தினால், அவர்களுக்குச் சந்தேகம். ஆகவே, பெண்களை எல்லாவற்றையும்விட கீழே வைக்கவேண்டும் என்பதுதான் அதனுடைய அடிப்படையாகும். இதனை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

CASTE TODAY

ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்டிருக் கின்ற CASTE TODAY நூலில்  அவர் சொல்கிறார்:

Eating meat ia considered   polluting, yet all kshatryas-and they come next to the Brahmins-eat meat. There are even Brahmins, the Pandits of Kashmir, who not only eat meat but eat it in the company of Muslims; they continue to be Brahmins and remain entitled to look upon all non-Brahmins as inferior.
But Brahmins who observe vegetarianism look on Kashmiri Pandits with a disgust reminiscent of what many Britons would feel if a frog was served on their plate. The late Sir Girija Shankar Bajpai, Secretary General for Foreign Affairs, once told me that it was only because he was truly westernised that he could bring himself to eat at the same table as the Prime Minister. ‘But you are both Brahmins’, I ventured, ‘so what is the difficulty?’ ‘He is a Kashmiri Pandit. I am a Kanya Khubja, I belong to the highest hierarchy of Brahmins, the ones who are Chaturvedis (of the four Vedas), we are strict vegetarians by caste, atleast at home; but Nehru is a Kashmiri Pandit, his ancestors were reared on meat and fish... I would not wish a girl of my family to marry  into his although I have the highest regard for him as Prime Minister.’

இதன் தமிழாக்கம் வருமாறு:

இறைச்சியை உண்பது இழிவானது. இருந்தாலும், பார்ப் பனர்களுக்கு அடுத்தபடியாக உள்ள சத்திரியர்கள் இறைச்சியை உண்கிறார்கள். பார்ப்பனர்களிலேயேகூட, காஷ்மீர் பண்டிட்டுகள் இறைச்சியை உண்பதுமட்டுமன்றி முசுலீம்களுடன் சேர்ந்தே உண்கிறார்கள். ஆனாலும், அவர்கள் பார்ப்பனர்களாகவே தொடர்ந்து இருப்பதுடன் பார்ப்பனர் அல்லாதவர்களை இழிவாகவே கருதிவந்து உள்ளார்கள்.
ஒரு தட்டில் தவளைக்கறியை வைத்திருக்கும்போது பிரிட்டானியர்கள் முன்னிலையில் சைவர்கள்போல் தோற்றம் அளிப்பார்கள். மேனாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் மறைந்த சர் கிரிஜா ஷங்கர் பாஜ்பாய் ஒருமுறை கூறும்போது, பிரதமராக இருந்த நேருவுடன் மேற்கத்திய கலாச்சாரத்தின்படி ஒரே மேசையில் அமர்ந்து உணவு உண்போம் என்றவரிடம் நீங்கள் இருவரும் பார்ப்பனர்கள் தானே? அதில் என்ன கஷ்டம்? என்று கேட்டபோது, நேரு காஷ்மீர் பண்டிட்.
நான் கன்யா குப்ஜா,  பார்ப்பனர்களி லேயே நான் உயர் ஜாதியைச் சேர்ந்தவன் ஆவேன். ஒரு காலத்தில் நான்கு வேதங்களையும் கற்ற சதுர்வேதிகள். நாங்கள் ஜாதியால் சைவத்தில் குறைந்தபட்சம் வீட்டிலா வது கடுமையாக இருப்போம். ஆனால், நேரு காஷ்மீர் பண்டிட் பார்ப்பனர் அவர்களின் மூதாதையர் இறைச்சி மற்றும் மீனை சாப்பிடுபவர்கள்.
நேரு பிரதமராக என்னால் அதிக அளவில் மதிக்கப்பட்டாலும், எங்கள் குடும்பத்திலி ருந்து பெண்ணை, அவர் குடும்பத்தில் திருமணம் செய்து கொடுக்க மாட்டேன். மேற்கண்ட தகவலை அவர் அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால், நேருவினு டைய தகுதி என்ன? நேருவுக்கே, அவருடைய குடும்பத் திற்கே பெண் கொடுக்கமாட்டேன் என்று சொல்கிறான். அவனுக்கு ஜாதிதான் முக்கியம் என்று சொல்கிறான். சொல்வது யார்? இங்கிலாந்துக்கு சென்று படித்துவிட்டு வந்தவன் சொல்கிறான்.

இவன் இங்கிலாந்து சென்று படித் ததே முதலில் தவறு. அங்கே கறி சாப்பிட்டானா, இல்லையா என்பது பிறகு. இந்து மதத்தில் கடலையே கடக்கக்கூடாது. ஆகவேதான், மாளவியா, மண்ணுருண்டையைத் தூக்கிக் கொண்டு சென்றார்.

                    -----------------------------------(தொடரும்) 17-1-2015
தாம்பரம் பொதுக் கூட்டத்தில்  தமிழர் தலைவர் கொள்கை முழக்கம்

சென்னை, ஜன. 18- ஜாதி ஒழிக! பெண்ணடிமைத்தனம் ஒழிக! மூடநம்பிக்கை ஒழிக! என்பதே எங்கள் முழக்கம்! என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
26.11.2014 அன்று தாம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர், தமி ழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:


எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால், இந்த ஜாதியினுடைய கொடுமை என்பது அன்றைக்கு ஆரம் பித்தது, இன்றுவரையில் எவ்வளவு வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இன்னமும் நம் நாட்டில் மறுபடியும் புதிதாக உருவாக்குகின்றானே? இப்பொழுது சாதாரணமாக நடைபெறுகிறது; விதவைத் திருமணம், ஜாதி மறுப்புத் திருமணம் நடைபெறுகிறது. இப்பொழுது புதிதாக ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், கவுரவக் கொலை! என்னய்யா கவுரவம், எதில் கவுரவம்; இல்லாத விஷயத்தில் கவுரவமா? ஜாதி என்பது ஒரு கோடே கிடையாது. பூமத்திய ரேகையில் ஜாதி எங்கே இருக்கிறது என்றால், தேடிக்கொண்டு இருக்கிறேன் என்று சொல் வானா? இவர்களுடைய சிந்தனைதானே ஜாதி. ஆகவே நண்பர்களே, இந்த ஜாதியை ஒழிப்பது எப்படி? இதுதான் மிக முக்கியம். அந்த ஜாதிக்கு ஆதாரமாக எவை எவை இருக்கிறதோ, அவை அத்தனையையும் ஒழிக்காமல், ஜாதியை ஒழிக்க முடியாது.


சாஸ்திரமா, அதை ஒழி! மதமா, அதை அழி! சடங்குகளா, தேவையில்லை!  கடவுள்களா, தேவையில்லை!


பகவத் கீதையில் என்ன சொல்கிறார் பகவான் கண்ணன்? சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்


நான்கு வருணங்களை நானே உண்டாக்கினேன். நானே நினைத்தால்கூட, அதனை மாற்ற முடியாது என்று சொல்லக் கூடிய அளவிற்கு பகவான் கண்ணன் இருக்கிறான் என்றால், அந்தப் பகவத் கீதையை கொண்டு போய் உலகம் முழு வதும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. அதற்கு என்ன அர்த்தம்? எங்கள் நாடு நால் வகை வருணத்தை தலை தூக்கி ஆளக்கூடிய நாடு. எங்கள் நாட்டில் நீங்கள் வந்தால், நீங்கள் வேறு; நாங்கள் வேறு என்று சொன்னால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? அதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். சமத்துவத் திற்கு அங்கே இடமில்லை. அரசியல் சட்டத்தில் இருக்கக் கூடிய வாய்ப்பு என்ன? இதனை எடுத்துச் சொல்வதற்குக் கூட இந்த நாட்டில் ஆள் கிடையாது. அதனை நீங்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்.


காங்கிரஸ் மேல் இருந்த வெறுப்பின் காரணமாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரையில் உள்ளவர்கள் மாற்றி வாக்களித்தனர். இவர்கள் வந்தால் ஒரு மாற்றம் வரும் என்று நினைத்தார்கள். வந்ததா?
எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால், வாய்ப்பு வரும்போது ஜாதியைச் சொல்வது, அந்த நேரத்தில் ஜாதியைப் பயன்படுத்திக் கொள்வது; இதுபோன்று இருக்கக் கூடிய ஒரு கூட்டம் இருக்கிறதென்றால், அதனை ஒழிப்பதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள், கடைசி மூச்சுள்ள வரை பாடுபட்டார்.


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்


ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், ஆண்களுக்கும், பெண்களுக்கும் 30 சதவிகித இட ஒதுக்கீடு; எல்லோரும் ஒன்றாக வர வாய்ப்பு என்று கொடுத்துவிட்டார். பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்த முதலில். இரண்டு பேரும் படித்தார்கள்; இரண்டு பேரும் வேலைக்குச் சென்றார்கள். ஒருவருக் கொருவர் புரிந்துகொண்டு திருமணம் செய்வதற்கு வசதி யாக இருக்குமே. அதற்கு முன்பெல்லாம் சொல்வார்கள், நான்கு செருப்பு தேய்ந்தால்தான், ஒரு மாப்பிள்ளையைக் கண்டுபிடிக்கமுடியும் என்று சொல்வார்கள்.


ஒரு செருப்பும் தேய வேண்டிய அவசியமில்லாமல், இன்றைக்கு சுயமரி யாதைக் கொள்கை இருக்கிறதே. ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டார்கள்; சுலபமாகத் திருமணம் செய்து கொள்கிறார்கள். இரண்டு பேருக்கும் தகுதி இருக்கிறது; இரண்டு பேருக்கும் புரிந்துகொள்ளக்கூடிய அறிவு இருக்கிறது. வயது இருக்கிறது! ஆகவே, இந்த சமுதாயத் தைப் பொறுத்தவரையில், ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஒரு பகுதி என்று சொன்னாலும்கூட, அதுமட்டுமே தீர்வு ஆகாது. அதைத் தாண்டி இன்னும் வேகமாக செய்ய நாம் உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும்.


அதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண் டிய போராட்டம் இருக்கிறதே, அதனை ஏன் நான் கையில் எடுத்தேன் என்றார்.


உங்களுக்கு என்ன அக்கறை என்று கேட்கிறார்கள்?


இன்னமும் நம்மாள் கேள்வி கேட்டுக் கொண்டிருக் கிறான்; தெரிந்தும் கேட்கிறான், வேண்டும் என்றும் கேட்கிறான்; தூங்குவதுபோல் படுத்துக்கொண்டிருப்பவனை எப்படி எழுப்புவது? தூங்குகின்றவனை எழுப்பலாம். சிலர் கேட்கிறார்கள், ஏங்க, நீங்கள்தான் கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள். யார் அர்ச்சகராக இருந்தால் உங்களுக்கு என்ன? உங்களுக்கு அதைப்பற்றி என்ன கவலை வேண்டியிருக்கிறது? என்று கேட்கிறார்கள்.
நாங்கள் கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள்தான். நான் அர்ச்சகனாகச் சென்றால்தானே நீ இந்தக் கேள்வி யைக் கேட்கலாம். என்னுடைய அண்ணன் போகிறான் கோவிலுக்கு; என்னுடைய மாமன் போகிறான் கோவிலுக்கு; அவர்கள் இன்னும் முட்டாள் பயல்களாக இருக்கிறார்களே, இன்னும் அவர்களுக்கு அறிவு வரவில்லையே! அவர்கள் கோவிலுக்குச் செல்லும்பொழுது, அங்கே வெளியில் நிற்கிறானே, அதற்கு என்ன அர்த்தம். நீ சூத்திரன், வெளியே நில் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? எங்கள் அம்மா வைப்பற்றி பேசுகிறான் என்றுதானே அதற்கு அர்த்தம். அதனை நான் பொறுத்துக் கொள்வேனா? ஏற்றுக்கொள் வேனா? ஆகவேதான், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சொல்வது இருக்கிறதே, இது கடவுள் உண்டா? இல்லையா? என்ற பிரச்சினையைப் பொறுத்தது அல்ல. மனித உரிமை பிரச்சினையாகும். ஒரு மனிதனுக்கு இருக் கின்ற உரிமை, மற்ற மனிதர்களுக்கு மறுக்கப்படக்கூடாது என்பதற்காகப் பெரியார் அவர்கள் தொடங்கியதாகும்.


திராவிடர் கழகத்துக்காரர்கள், இந்து மதம், இந்து மதம் என்று இந்து மதத்தைப்பற்றியே பேசுகிறார்களே, கிறிஸ்தவ மதத்தைப்பற்றி பேசுகிறார்களா? இஸ்லாமிய மதத்தைத் தாக்குகிறார்களா? இவர்கள் என்றால்,


எங்களுக்கொன்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது!


எங்களுக்கு எந்த மதமும் எங்களைப் பொறுத்த வரையில் ஏற்புடையதல்ல. ஆனால், இந்து மதத்தைப்பற்றி அதிகமாகப் பேசுகிறோம் என்றால், அதிகமாகப் பாதிக்கப் பட்டவன் என்பதால்தானே பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டது. மற்ற மதக்காரர்களா எங்களை சூத்திரன் என் கிறார்கள்? அவர்களா எங்களை பள்ளன், பறையன் என் கிறார்கள்? அவர்களா எங்களை தொடாதே, எட்டி நில்! என்று சொல்கிறார்கள்? எவன் தொடாதே என்று சொல் கிறானோ, எந்த மதம் அவனை தொடாதே என்று சொல் வதை நியாயப்படுத்துகிறதோ அந்த மதத்தை ஒழிக்காமல், நாங்கள் எப்படி மனித தர்மத்தைப் பெற முடியும்; சமத்து வத்தைப் பெற முடியும்? ஆகவே, எங்களுக்கொன்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது. எந்த மதங்களை யும் ஏற்காத நாங்கள், மதங்களைக் காயப்படுத்தக் கூடியவர் கள் அல்ல.


ஆர்.எஸ்.எஸ். இப்பொழுது எந்த அளவிற்கு வந்து இருக்கிறது பாருங்கள்;
சிங்கால் சொல்கிறார், 800 ஆண்டுகளுக்கு பின் இந்து ராஜ்ஜியம் என்கிறார்கள். பாபர் மசூதியை இடித்ததை சாதனை என்கிறார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஊடகங்கள் என்று சொன்னால், உயர்ஜாதி ஆதிக்கம்; குறிப்பாக, பார்ப்பனர் ஆதிக்கம். இவைகளை சொல்வதற்கு எங்களைவிட்டால், இந்த நாட்டில் நாதியில்லை! மக்க ளுக்கு இன உணர்வு வரவேண்டும்; சமஸ்கிருதம் கட்டாயம் படிக்கவேண்டும் என்று சொல்கிறார்களே!  தமிழ்நாட்டில் எதிர்ப்பு வந்தவுடன், பாம்புப் புற்றிலிருந்து தலை தூக்கும் பொழுது, ஒரு அடி விழுந்ததும் டக்கென்று தலையை உள்ளே இழுத்துக்கொள்வதுபோல. சமஸ்கிருத ஆதிக் கத்தை வீழ்த்துகின்றவரை நம்முடைய இளைஞர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். இது பெரியார் பிறந்த மண்.


கடைசியில் உங்களுக்கு மிஞ்சப் போவது பூஜ்ஜியம்தான்!


அவர்கள் ஊழல் செய்து போய்விட்டார்கள்; இவர்கள் ஊழல் செய்து போய்விட்டார்கள். அடுத்ததுநாம்தான்; அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று பழமொழி சொல்வார்கள் பாருங்கள், அதுபோல, மிகச் சுலபமாக வந்து உட்கார்ந்துவிடலாம் என்று நினைக்கிறார் கள். அப்படி நினைக்கின்றவர்களுக்குச் சொல்கிறோம், திராவிடர் இயக்கத்தை நீங்கள் வீழ்த்திவிடலாம் என்று எண்ணாதீர்கள். சும்மா, பூஜ்ஜியம், பூஜ்ஜியம் என்று போட்டால், கடைசியில் உங்களுக்கு மிஞ்சப் போவது பூஜ் ஜியம்தான். அதில் ஒன்றும் சந்தேகம் கிடையாது.

நம் மக்களுக்குப் புரியாதவரையில்தான், ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன்

புலி வேஷம் போடுகின்றான்!

பொது மக்கட்குப்

புல்லளவு மதிப்பேனும் தருகின்றானா?

என்றார் புரட்சிக்கவிஞர்.

அதுபோன்ற பணியை செய்வதுதான் நம்முடைய வேலை.
திராவிடர் கழகம் ஒரு பிரச்சார இயக்கம். இன்றைக்குத் தி.மு.க.விலும் பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்தவேண்டும் என்கிறார்கள்.
திராவிடத்தால்தான் நாம் எழுந்தோம்; திராவிடத்தில்தான் நாம் வாழ்வோம்!
ஏனென்று கேட்டால், எருது இளைத்தால் எறும்பு மச்சான் முறை கொண்டாடும் என்று ஒரு பழமொழி உண்டு, விவசாயியைப்பற்றி.
ஆனால், என்னதான் சொன்னாலும், அதனால் தாழ்ந்து விடுவார்களா?
எனவேதான் நண்பர்களே, இங்கே அழகாக இளைஞர் கள் சொன்னார்கள், திராவிடத்தால்தான் நாம் எழுந்தோம்; திராவிடத்தில்தான் நாம் வாழ்வோம் என்று.


ஏனென்றால், இன்றைக்கு நேர் விரோதமான ஒரு கொள்கை எங்கே இருக்கிறது. ஜாதி - ஜாதியை ஒழிக்க வேண்டும். இப்பொழுது என்ன எழுதுகிறார்கள் என்றால், கிக்ஷீஹ்ணீஸீ மிஸீஸ்ணீவீஷீஸீ லீமீஷீக்ஷீஹ் ஆரியர்கள் படையெடுத்து வந்தார்கள் என்ற வரலாறையெல்லாம் மாற்றவேண்டும் என்கிறார்கள். நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம், இப்பொழுது ரத்தத்தில் எல்லாம் மாறிப் போய்விட்டது என்கிறார்கள்; மாறிப் போய் விட்டது என்பதை நீ என்ன கண்டுபிடிப்பது? பெரியார் கேட்டார், மற்றவற்றில் நீ மாறியிருக்கிறாயா? இரண்டு பேரும் ஒன்றாக இருக்கும்பொழுது, உன்னுடைய முதுகில் பூணூல் இருக்கிறது? என்னுடைய முதுகு வெறும் முதுவாக இருக்கிறது. தொட்டால் குளிக்கவேண்டும் என்று சொல் கிறாய் என்கிற இந்த வேறுபாடுகளைப்பற்றி கேட்டார்.


ஆகவே, நண்பர்களே, மிகத் தெளிவாக உணருங்கள், ஜாதியை ஒழிக்கவேண்டும். அந்த ஜாதியை ஒழிப்பதற்கு சமத்துவத்தை உண்டாக்கவேண்டும். கல்வியில், உத்தியோ கத்தில் சமத்துவத்தை உண்டாக்குவதற்குத்தான் இட ஒதுக் கீடு. எனவே, இந்த இட ஒதுக்கீடு வரும்பொழுது, அதிலே குழப்பம் விளைவிக்கிறான்.

ஆகா, ஜாதி இருக்கவேண்டும் என்று சொல்கிறார்களே, என்று. நோய்க்கு மருந்து கொடுக்கவேண்டும் என்றால், அந்த மருந்து கொடுக்கும்பொழுது சில நேரங்களில் பக்க விளைவுகள் வரும் என்று சொன்னால், அதனைத் தாங்கித் தானே ஆகவேண்டும். வேறு வழியில்லையே! சமத்துவம் உண்டாகவேண்டும் என்பதினாலேதான் அந்த வாய்ப்புகள்.


எனவேதான் நண்பர்களே, முழுக்க முழுக்க இந்த இயக்கம் தெளிவான கொள்கையை முன்வைக்கிறது.


ஜாதி ஒழிந்த சமுதாயத்தை உருவாக்கவேண்டும்; மூட நம்பிக்கை ஒழிந்த ஒரு சமுதாயத்தை உருவாக்கவேண்டும். பெண்ணடிமை நீங்கிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும்; அறிவியல் மனப்பான்மையை உருவாக்கக்கூடிய சமு தாயத்தை உருவாக்கவேண்டும். எல்லாருக்கும், எல்லாமும் இருக்கக்கூடிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும். அதற்குப் பெயர்தான் சமதர்மம்.
எனவே, சமதர்மம் எங்கே இருக்கிறதோ, அங்கு குலதர்மத்திற்கு இடமே கிடையாது. மனுதர்மம் ஆண்டால், மனித தர்மத்தின்மூலம் அதை வீழ்த்தவேண்டும் என்பது தான். இப்பொழுது மனுதர்ம நிலைத்துவிடும் என்று சிலர் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். அவர்களுக்குச் சொல் கிறோம், நிச்சயமாக, இது பெரியாரின் மண்! நாங்கள் இருக்கும்போது, நீங்கள் எந்த வழியிலும் உங்கள் கனவை இங்கு செயல்படுத்த முடியாது. நேரமில்லை, இருந்தால், இன்னும் விரிவாக, விளக்கமாகப் பேசுவேன்.


பரவாயில்லை, மற்றொரு முறை வரக்கூடிய வாய்ப்பை உருவாக்கித் தருவார்கள்  தோழர்கள். எனவே, உங்களை மீண்டும் சந்தித்து பல்வேறு கருத்துகளை எடுத்துச் சொல் வேன் என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, இளைஞர்களுக்கு நல்ல பயிற்சி பட்டறைகளை இந்தப் பகுதியில் உருவாக்குங்கள்; ஏராளமான இளைஞர்களை இங்கு பார்க்கும்பொழுது புது உற்சாகத்தோடு நான் திரும்பிப் போகிறேன் என்பதை உங்களுக்குச் சொல்லி, வாழ்த்து களையும், நன்றியையும் தெரிவித்து விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்!


வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

--------------- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


தாம்பரம் மாவட்டத்திற்கு பாராட்டு

ஜாதி ஒழிப்பு போராட்டத்தின் நினைவாக தாம்பரம் மாவட்டத்தின் சார்பில் 26-11-2014 அன்று செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்ட ஏற்பாடுகளின் சிறப்பைப் பாராட்டும் வண் ணம் தமிழர் தலைவர், அனைவரின் ஒத்துழைப்போடு கூட் டம் நடத்துவதில் தாம்பரம் மாவட்டம் சிறந்து விளங்குகிறது என்று தாம்பரம் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு நற்சான்று வழங்கிவிட்டு பேசத் தொடங்கினார். புரட்சிகரமான சுயமரியாதைத் திருமணம்
நிகழ்ச்சியின் முதலில் ஒரு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆகவே, எடுத்த எடுப்பிலேயே தந்தை பெரியாரின் கொள்கைகள் ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி இருக்கின்ற நிலைதான் இந்தத் திருமணம் என்று பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சம்பத், கற்பகம் ஆகியோரின் திருமணத்தைக் குறிப் பிட்டார்.


பெரியார் அவர்கள் ஏற்படுத்திய அறிவுப்புரட்சி எந்த அளவுக்கு இங்கு பக்குவத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால்? என்று ஒரு கேள்வியை எழுப்பி, முதலில் மண மக்களான, 55 வயதான சம்பத்தையும், 40 வயதான கற்பகத் தையும் அறிமுகம் செய்தபிறகு, இந்து மதத்தில் விதவைகள் திருமணம் செய்வதே கூடாது என்ற கொடுமையை சுட்டிக் காட்ட, ரூப் கன்வர் கணவனை இழந்ததும் கணவனின் பிணத்தோடு அவளையும் எரித்து, அவளை சதி மாதா வாக்கி கோயில் கட்டி வைத்துவிட்டார்கள் என்பதை சுட்டிக் காட்டிவிட்டு, அப்படிப்பட்ட கொடுமைகள் நடந்த சூழலில் தான் விதவையான கற்பகத்தின் திருமணம் நடைபெறுகிறது என்று தான் முன்னர் கேட்ட கேள்விக்கு பதிலும் கூறினார்.

பெரியார் மாணாக்கன் - செல்வி இணையர்கள் பாராட்டத்தக்கவர்கள்!
தொடர்ந்து அவர், இந்த தலைகீழ் மாற்றத்தை ஏற் படுத்தியவர்தான் தந்தை பெரியார் என்றதும், திரண்டிருந்த கூட்டத்தினர் அதை ஆமோதிக்கும் விதமாக பலமாக கையொலி செய்தனர். மேலும் அவர், இது ஜாதி மறுப்புத் திருமணம், இரண்டு பக்கமும் ஆளான பிள்ளைகளின் இசைவோடு நடைபெறுகின்ற திருமணம் என்று இந்த திருமணத்திற்கான சிறப்புகளைப் பட்டியலிட்டார். ஆகவே, இத்திருமணத்திற்கு காரணமாக இருந்த, கற்பகத்தின் சகோதரர் பெரியார் மாணாக்கன் - செல்வி இணையர்களை பாராட்டும் விதமாக, பெரியார் மாணாக்கன், செல்வி இருவரும் எப்போதும் இயக்க உணர்வோடு இருப்பவர்கள் என்று இருவருக்கும் புகழாரம் சூட்டினார்.] 

பெரியார் என்றுமே வெற்றி பெறுவார்!

தொடர்ந்து பேசிய தமிழர் தலைவர், இந்து மதம் பெண்களை எவ்வளவு தூரம் இழிவுபடுத்திக்கொண்டி ருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட, விதவை இருக்கிறது விதவன் இல்லை என்பதயும், ஆங்கிலத்தில் விடோயர் என்று இருபாலருக்கும் இருப்பதை எடுத்துக்காட்டிவிட்டு, சமுதாயத்தில் சரிபாதி இருக்கக்கூடிய பெண்களுக்கு இந்து மதத்தில் இதுதான் நிலை என்பதை நினைவூட்டி, அதை மீட்டுக்கொடுத்தவர் தந்தை பெரியார்தான் என்றார். தொடர்ந்து அவர், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் சமூக நீதிக்கான வீரமணி விருது பெற்றவரான தத்துவப் பேராசிரி யர் தானேஷ்வர்சாகு அவர்கள் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டதையும், ஜெர்மன் கொலோன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத்தையும் விவரித்துவிட்டு, பெரியார் வெற்றிபெறப்போவதில்லை என்று எண்ணியவர்கள் இவைகளைப்பார்த்து, பெரியார் என்றுமே வெற்றி பெறுவார் என்று புரிந்து கொள்வார்கள் என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே பெருமிதத்தோடு குறிப்பிட்டுவிட்டு, மணமக்கள் இருவரையும் தனித்தனியாக உறுதிமொழியைக் கூற வைத்து இணையேற்பு ஒப்பந்த விழாவை நடத்தி வைத்தார். கூடியிருந்த பெருந்திரளான மக்கள் மிகுந்த வியப்போடு, பார்த்தறியாத இந்த புரட்சிகர மான இணையேற்பு விழாவை போட்டி போட்டுக்கொண்டு தங்கள் தங்கள் கைபேசிகளில் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தனர்.


குவிந்தது பெரியார் உலகத்திற்கு நிதி!


முன்னதாக முரசொலி முகிலனின் ஈரோட்டு பூகம்பம் என்ற பெயரில் பகுத்தறிவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அவர்களுக்கு பாராட்டு செய்யப்பட்டது. தொடர்ந்து, கரசங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் தட்சிணாமூர்த்தி, தாம்பரம் தி.மு.க. முன்னாள் அமைப்பாளர் ஆதிமாறன், பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் திருமகள் இறையன் மற்றும் ஏ.வி. கிரி ஆகியோர், பெரியார் உலகத்திற்காக தலா 25,000 ரூபாயை  தமிழர் தலைவரிடம் கொடுத்தனர். தாம்பரம் மாவட்டம் சார்பாக, மாவட்டத் தலைவர் முத்தையன் ரூ. 50,000 கொடுத்தார். கரிகாலன் விடுதலை சந்தா வழங்கினார்.

மோடியின் தில்லுமுல்லுகள்

கூட்ட நிகழ்ச்சியின் துவக்கத்தில் பொழிசைக் கண்ணன் வரவேற்புக்கூற, ஆ.இரா. சிவசாமி தலைமையேற்று திராவிடத்தால் வாழ்கி றோம் என்ற கருத்தமையப் பேசினார். அவரைத் தொடர்ந்து தமிழ்சாக்ரடீசு ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் சில நிகழ்வு களை உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்தார். அவரைத் தொடர்ந்து கழகத்தின் துணைத்தலைவர், பிரதமராக இருக்கும் மோடி, தான் போட்டியிட்ட வாரனாசி தொகுதி யில் செய்த தில்லுமுல்லுகளை ஆதாரத்துடன் பட்டிய லிட்டார்.


பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள்

நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்,  வடக்கு மண்டல அமைப்பாளர் ஞானசேகரன், மண்டலத் தலை வர் இரத்தினசாமி, மண்டல செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் கு. ஆறுமுகம், பொருளாளர் ம. ராசு, மாவட்ட துணைத்தலைவர் கோ. நாத்திகன், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி. வீரபத்திரன், இலக்கிய அணி செயலா ளர் மஞ்சை வசந்தன், கே.என். சிகாமணி, லட்சுமிபதி, விடு தலை நகர் ஜெயராமன், துரைராஜ், சன் சரவணன், முடிச் சூர் சண்முகசுந்தரம், ஆர் கருப்பையா, பம்மல் கோபி, லட் சுமிபுரம் க. கமலக்கண்ணன், டாக்டர். தேவதாஸ், பொய்யா மொழி, நூர்ஜஹான், மகாலிங்கம், பூவை ஏழுமலை, வழக் கறிஞர்கள் அருளானந்தம், உத்தரகுமாரன், மற்றும் காளி முத்து, மதிவாணன், பெருமாள், பரசுராமன், தாம்பரம் தாஸ், பொழிசை பாடகர் பெருமாள், பாண்டியன், கிருஷ்ண மூர்த்தி, நங்கநல்லூர் மோகன், தமிழினியன், மு. மணிமாறன், வீரசுந்தர், ஜெயக்குமார், இறைவி, கண்ணப் பன், பண் பொளி கண்ணப்பன், வீரமணி, திவாரி வீரமணி, இசை யின்பன், பசும்பொன் செந்தில், உடுமலை வடிவேல், பாசு. ஓவியச்செல்வன், கே. விஜயகுமார், தங்க ரமேஷ்குமார், பொறியாளர் ம. இனியரசன், கே. சுரேஷ், மீனம்பாக்கம் கு. செல் வம், கோ. தமிழன்பன் மற்றும் ஏராளமான பொதுமக்களும் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்ட இரு வீட்டாரின் உறவினர்களும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

                      ---------------------”விடுதலை”  18-01-2015

14 comments:

தமிழ் ஓவியா said...

பாடுபடுவான்

இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாகக் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால், அவனுக்குக் கடுகளவு சுயமரியாதையாவது இருக்குமானால், அவன் மனித இழிவைப் போக்கத்தான் முதலில் பாடுபடுவான். - (குடிஅரசு, 3.5.1936)

Read more: http://viduthalai.in/page-2/94634.html#ixzz3PPprWpim

தமிழ் ஓவியா said...

மனிதநேயம்

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த பாதிரி யார் ஜி.யு. போப் தன் கல் லறையில் நான் ஒரு தமிழ் மாணவன் என்று எழுதச் சொன்னார் தமிழ்ப் பற்றின் காரணமாக. அதேபோல் வேளாங்கண்ணி மாதா கோயிலின் பாதிரியார் ஒருவர், தமது கடைசி ஆசையாக எழுதி வைத்தி ருக்கும் வாசகம், மதநல்லி ணக்கத்தின் அடையாளம். அந்த வாசகம் என்ன தெரியுமா?

எனது வாழ்நாளில் பைபிளை முழுமையாகப் படித்து, அதன்படி வாழக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால், குர்ஆனையும் பகவத்கீதையையும் முழு மையாகப் படிக்க முடிய வில்லை. எனவே, நான் இறந்த பிறகு எனது இரண்டு கண்களில் ஒன்றினை ஓர் இஸ்லாமியச் சகோதரருக் கும், இன்னொன்றை ஓர் இந்து சகோதரருக்கும், பொருத்தினால் அவர்கள் மூலமாகவாவது நான் குர் ஆனையும் பகவத் கீதை யையும் படித்தவன் ஆவேன்.
அ. யாழினி, பர்வதம், சென்னை-78
கல்கி 11.11.2015 பக்.48

கிறித்தவர்களா? அவர் கள் கீழ்த்தரமானவர்கள்; முஸ்லிம்களா அவர்கள் மிக மிக மோசம் என்று ஆர். எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்களும் பிஜேபி என்ற கட்சியைச் சேர்ந்தவர்களும் குமட்டுகிறார்களே - அவர் களுக்கு இது ஒரு சிறிய காணிக்கை.

எடுத்துச் சொல்லுவது நாமல்ல - அவாளின் கல்கி இதழ்தான்.

வெள்ளைக்காரர்கள் இந்தியாவுக்கு வந்தது கிறித்துவத்தைப் பரப்பத்தான் என்று சொல்லுவதுண்டு. அதே நேரத்தில் அவர்கள் இந்நாட்டு மக்களுக்குக் கல்வியைக் கொடுத்தார்கள்; மருத்துவ உதவியை நல்கி னார்கள் என்பதை மறுக்க முடியுமா?

படிக்காதே - நீ கல்வி கற்பதற்கு உரிமையில்லை! என்று இந்நாட்டு ஒடுக்கப் பட்ட மக்களைப் பார்த்து கூறியது இந்து மதம்; - நீ படி என்று கூறி கல்வியைக் கொடுத்தது கிறித்துவம்.

உடல் முழுவதும் மூளை உள்ளவர் என்று அக்கிரகார வாசிகளால் ஆகாயத்தில் தூக்கி வைத்துப் பாராட்டப் படும் அந்த ராஜாஜி இரண்டு முறை சென்னை மாநிலத் திற்கு முதலமைச்சராக வந்திருந்த போதிலும் (1937இல் ஒரு முறை 1952இல் இன்னொரு முறையும்) அவர் செய்தது என்ன? பள்ளி களை இழுத்து மூடியது தானே? 1937இல் 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார் என்றால் 1952இல் 6000 பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும், அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கவில்லையா?

அந்தக் கெட்ட புத்தியே அவருக்கு எதிராக அமைய வில்லையா? தந்தை பெரி யார் உருவில் எழுந்த அந்த எதிர்ப்பு - ஆச்சாரியாரின் பொதுவாழ்வையே அஸ்த மிக்கச் செய்யவில்லையா?

கிருத்தவர் ஒருவர் தமது இரு கண்களில் ஒன்றை இஸ்லாமியருக்கும் மற்றொன்றை ஒரு இந்து வுக்கும் பொருத்தச் சொன் னாரே - அந்த மனிதநேயர் எங்கே! நாத்திகனுக்கு வைத் தியம் பார்க்காதே என்று சொன்ன இந்து மதத் தலை வர் ஜெகத் குரு சங்கராச் சாரியார் எங்கே? (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதியின் - தெய்வத்தின் குரல் 3ஆம் பாகம் - பக்கம் 148). அடையாளம் காண்பீர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/94655.html#ixzz3PPqdAdzt

தமிழ் ஓவியா said...

உன்னால் நான் கெட்டேன் என்னால் நீ கெட்டாய்! புலம்புகிறார் மகிந்தா ராஜபக்சே


என்னை தமிழனோ, முஸ்லீமோ அழிக்க வில்லை. நீங்கள்தான் என்னுடைய அரசியல் வாழ்வை நாசப் படுத்தினீர்கள் என்று கோத்தபாயவிடமும், தன் பிள்ளைகளிடமும் எரிந்து விழுந்துள்ளார் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே.

தேர்தலில் தோல்வி யடைந்த பின்னர் தனது சொந்த ஊருக்குச் சென்ற மகிந்தா அங்கு தன்னைச் சந்தித்த பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அதன் பிறகு அவரது வீட்டில் கூடி யிருந்த அவரது உறவினர் கள் அனைவரையும் திட் டித் தீர்த்துவிட்டார்.

இது குறித்து இலங்கை உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தி யில், எனது 45 ஆண்டு அர சியல் வாழ்க்கை எனது பிள்ளைகளாலும் சகோதரா களாலும் அழிந்துவிட்டது என அனைவரையும் திட்டி தீர்த்தாராம்.

Read more: http://viduthalai.in/e-paper/94657.html#ixzz3PPqrYBsC

தமிழ் ஓவியா said...

நிதி நெருக்கடியில் திண்டாடும் மத்திய அரசு கோயில் நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமே!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


நிதி நெருக்கடி என்று கூறி, பல முக்கியத் துறைகளுக்கான நிதியை வெட்டும் மத்திய அரசு, கோயில்களில் குவிந்து கிடக்கும் நிதியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. (மத்திய) அரசு தனது நிதிப் பற்றாக்குறைக்காக நல்ல லாபம் தரும் - பொன் முட்டை இடும் வாத்தைக் கொல்வது போன்று - பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதில், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஈடுபட்டு வருகிறது.

மக்களின் சுகாதாரத் திட்டத்திற்காக செலவு செய்வதில் 20 விழுக்காடு வெட்டு!
உயர் கல்வித் துறை வளர்ச்சிக்கான ஒதுக்கீட்டில் 3000 கோடி ரூபாய்க்கு மேல் வெட்டு.

வரிமூலம் பறிக்கும் அரசு

பெட்ரோல், டீசல் (ஏழை விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில்) உலகச் சந்தை விலை சரி பாதிக்கு மேல் வீழ்ச்சி அடைந்தும், அதன் பயனை நுகருவோரான மக்களைச் சென்று அடையாமல், மத்திய அரசு வரி விதிப்பின் மூலம் இடையே பறித்துக் கொள்கிறது!

உரவிலையும் கூடவே விவசாயிகளின் தலையில் விடிகிறது; சந்தைப் பொருளாதாரத்தின் கொள்ளை லாபக் குபேரர்கள் கொள்ளையடிக்க ஏதுவாக கட்டுப்பாடுகளை நீக்கி கதவுகள் - திறந்து விடப்படும் கொடுமையும் நாளும் வளர்ந்துவருகிறது!

மக்களைத் துன்புறுத்தும் இந்த மாய வளர்ச்சியின் உண்மைத் தன்மையை வாக்களித்தவர்கள் உணரத் தலைப்பட்டு வருகிறார்கள்!

கோயில்களில் குவிந்துள்ள நிதியைப் பயன்படுத்தலாமே!

நிதி ஆதாரம் தேடும் மத்திய அரசு, பல லட்சம் கோடி ரூபாய்களை உள்ளடக்கிய கோயில்களான திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், குருவாயூரப்பன் கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில் வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக கடன் பத்திரங்களாக்கி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு - திருப்பிக் கொடுக்கலாமே!

மக்கள் பணத்தை முழுமையாக மக்கள் நலத்திற்குச் செலவிடுவதில் என்ன தவறு?

திருப்பதி ஏழுமலையான் கோயில் பட்ஜெட்டைப் பாரீர்!

எடுத்துக்காட்டாக, கடவுள்களிலேயே அதிக வருவாய் பெறும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் வருமானம் 2014-2015 பற்றிய ஒரு புள்ளி விவரம் இதோ:

அதன் பட்ஜெட் ரூ.2401 கோடி, ரூ.900 கோடி உண்டியல் மூலம் வசூல்; வங்கியில் உள்ள டெபாசிட்டுகளுக்கான வட்டி மூலம் வருவாய் 655 கோடி ரூபாய், பக்தர்களின் மொட்டை - மயிர்மூலம் ரூபாய் 190 கோடி வருவாய், கட்டட வாடகை மூலம் ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு ரூ.108 கோடி - வருவாய்.

செலவு விவரம் பாரீர்!

ஹிந்து தர்ம பிரச்சாரத்திற்கு ரூ.109 கோடி!
மருத்துவமனைகளுக்கு ரூ.55 கோடி
மற்ற பெரும் பகுதி - ஊழியர்கள் சம்பளம்.
இதன் வைப்பு நிதி மூலதனம் 7,000 கோடி ரூபாய்!

இந்து மதப் பிரச்சாரத்துக்கு
ரூ.100 கோடியாம்

மற்ற அறக்கட்டளைகளுக்கு வருமான வரித் துறையினர் தரும காரியங்களுக்கு எவ்வளவு விழுக்காடு செலவு செய்தீர்கள் என்று கேள்வி கேட்கும்போது, வெங்கடாஜலபதி கோயிலில் கொழுத்த பார்ப்பனர் சுரண்டல் எப்படி உள்ளது பார்த்தீர்களா? இவர்கள் ஆண்டுக்கு ரூ.100 கோடியில் ஹிந்து தர்ம பிரச்சாரமாம்! அதன் விவரத்தை அளிக்கவேண்டாமா?

கிறித்துவர்களின் கல்வித் தொண்டு மருத்துவத் தொண்டுக்கு முன் இது எம்மாத்திரம்? அரசின் மக்கள் நலப் பணிகள் மருத்துவம், கல்வி, முதலியவற்றை இவைகளை ஒருங்கிணைத்தாவது செய்தால் திருப்பதி ஏழுமலையான் கோபித்துக் கொண்டு வெளி நாட்டிற்கா போய் விடுவார்?

மூடபக்தியினால் திருப்பதிக்கு வாரி வழங்கும் பணக்காரர்களும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கட்டும்.

பக்தி வந்தால் புத்தி போகும்
புத்தி வந்தால் பக்தி போகும்

எனவே - மனிதர்களை வாழ விடுங்கள்.

விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்திட அரசுகள் வழி காணட்டும்!

பெரியார் கூறிய மூன்று வகை முதலாளிகளில்

1) உயிருடன் மூலதனம் போடும் முதலாளிகள்

2) கடவுள் (கல்) முதலாளிகள்

3) பிறவி முதலாளிகளான பார்ப்பனர்

இந்த முதலாளித்துவத்தை எதிர்த்து ஒழித்தால் ஒழிய சமதர்மம் வருமா? சிந்தியுங்கள்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
21.1.2015

தமிழ் ஓவியா said...

ஜாதி-மத வெறிகளை எதிர்த்தும்,
மனிதநேயம், சமூகநீதியை வலியுறுத்தியும்
2000 வட்டார மாநாடுகள்
திருவாரூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்


திருவாரூர், ஜன.21- ஜாதி, மதவெறி களை எதிர்த்தும், மனிதநேயம், சமூக நீதியை வலியுறுத்தியும் 2000 வட்டார மாநாடுகள் தமிழகம் முழுவதும் திரா விடர் கழகம் சார்பில் நடத்தப்பட்டு வரு கின்றன என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (21.1.2015) திருவாரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: திராவிடர் கழக மாநாட்டின் நோக்கம்...?

தமிழர் தலைவர்: ஜாதி வெறி, மத வெறிகளை எதிர்த்தும், மனித நேயம், சமூகநீதி ஆகியவற்றை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் 2000 வட்டார மாநாடுகளை நடத்த திராவிடர் கழகம் திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் நாளை (22.1.2015) வரை 14 மாநாடுகள் நடைபெறுகின்றன. மத்தியில் ஆளும் பிஜேபி அரசு, அதனுடைய சங் பரி வாரங்களும் புதிய சூழ்நிலையைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சி செய்கின்றன. அதுகுறித்து மக் களிடத்தில் எச்சரிக்கை உணர்வை ஏற் படுத்துவதும் இம்மாநாட்டின் நோக்க மாகும். புதிய பலம் ஏற்பட்டதுபோல அவர்கள் நினைக்கிறார்கள்.

அது இல்லை என்பதை நாம் காட்டுவோம்

செய்தியாளர்: மேனாள் முதலமைச் சர் ஜெயலலிதாவுடன் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி சந்திப்பு குறித்து...?

தமிழர் தலைவர்: டில்லியில் சிபிஅய் இயக்குநரை வழக்கு சம்பந்தப் பட்டவர்கள் யார் யார் சந்தித்தார்கள் என்பது பிரச்சினையானது. உச்சநீதிமன் றத்திலும் இது கடுமையாக விமரிசிக்கப் பட்டது. இது மத்திய நிதியமைச்சர் ஜெட்லிக்கு தெரியாததா?

செய்தியாளர்: இலங்கையின் புதிய ஆட்சி குறித்து...?

தமிழர் தலைவர்: ஒரு மாற்றம் தெரி கிறது. 13 ஆவது சட்டத் திருத்தம் நிறை வேற்றப்படும் என்பதும், மாகாணங் களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப் படும் என்கிற மாநில சுயாட்சி அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. இந்த வெள்ளிக்கீற்று கள் அகலமாக வேண்டும். ராஜபக்சே குடும்பம் செய்த அநியாயங்கள், கொடு மைகள்குறித்து விசாரணை ஆரம்ப மாவது வரவேற்கத்தகுந்தது.

செய்தியாளர்: மீத்தேன் திட்டம் வரவேற்கத்தகுந்தது என்று பாஜக மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே?

தமிழர் தலைவர்: மூன்றாண்டு களுக்கு முன்பாகவே மதுக்கூர் திராவிடர் கழக மாநாட்டில் மீத்தேன் குறித்து தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட் டில் விவசாயிகள் கடுமையாக எதிர்த்துக் கிளம்பியுள்ள இந்த காலகட்டத்தில், ஒரு பொறுப்புள்ள மத்திய அமைச்சர் இப்படிப் பேசியிருப்பது சரியானதுதானா? நாட்டு மக்கள் இவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

செய்தியாளர்: சிறீரங்கம் இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு?

தமிழர் தலைவர்: சிறீரங்கம் தேர்தல் ஆதரவுகுறித்து விரைவில் அறிக்கை வெளிவரும்.

செய்தியாளர் சந்திப்பின்போது திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் கழகப் பொறுப் பாளர்கள் உடனிருந்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/94680.html#ixzz3PVinkqc4

தமிழ் ஓவியா said...

தமிழர் பகுதிக்கு அதிகாரப் பகிர்வு; 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதி


கொழும்பு, ஜன.21_ தமி ழர் பகுதிக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க 13- ஆவது அரசியல் சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதி அளித்துள்ளார்.

கடந்த 1987- ஆம் ஆண்டு ஜூலை மாதம், இந்தியா_- இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதில், அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், அப்போதைய இலங்கை அதிபர் ஜெய வர்த்தனேவும் கையெழுத் திட்டனர்.

அதைத் தொடர்ந்து, இலங்கை அரசியல் சட் டத்தில் 13- ஆவது திருத் தம் மேற்கொள்ளப்பட் டது. தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகா ணங்கள் உள்பட அனைத்து மாகாணங்களுக்கும் அதி காரப் பகிர்வு அளிக்க இந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது.

ஆனால், அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள், இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்தவில்லை. மேலும், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம், 13 ஆ-வது சட்டத் திருத் தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், மாகாணங்களுக்கு இது வரை அதிகாரப் பகிர்வு கிடைக்கவில்லை.

ஆனால், 13- ஆவது சட் டத் திருத்தத்தை எழுத் திலும், செயலிலும் அமல் படுத்துமாறு இலங்கையை, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த 8- ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜ பக்சே தோல்வி அடைந் தார். புதிய அதிபராக மைத்ரிபால சிறீசேனா பதவி ஏற்றார்.

அய்க்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்கே, புதிய பிரதமராக பதவி ஏற்றார். புதிய அரசு பதவி ஏற்ற பிறகு, நேற்று முதல் முறையாக நாடாளுமன் றம் கூடியது. நாடாளு மன்றத்தில் பேசிய புதிய பிரதமர் ரணில் விக்ரம சிங்கே, தனது அரசின் 100 நாள் திட்டம்பற்றி விளக்கிக் கூறினார்.

அப்போது அவர், 13- ஆவது சட்டத் திருத் தத்தை அமல்படுத்தப்
போவதாக அறிவித்தார். அவர் பேசியதாவது:-

வெவ்வேறு கொள்கை களும், நோக்கங்களும் கொண்ட அரசியல் கட்சி கள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளோம். சர் வாதிகார குடும்ப ஆட் சிக்கு முடிவு கட்ட நாங் கள் ஒன்று சேர்ந்தோம்.

எல்லா அரசியல் கட்சி களிடம் இருந்தும் நாங் கள் யோசனைகளையும், திட்டங்களையும், விமர் சனங்களையும் வரவேற்கி றோம். தேசிய பிரச்சினை களுக்குத் தீர்வுகாண நாங்கள் ஒன்று சேர்வது சவாலான விஷயம்தான். இருப்பினும், இந்த பிரச் சினைகளை இந்த நாடா ளுமன்ற பதவிக்காலத் துக்கு அப்பாலும் நீடிக்க விட்டுவிடக்கூடாது.

மாகாணங்களுக்கு அதி காரப் பகிர்வு அளிக்க வகை செய்யும் 13- ஆவது அரசியல் சட்ட திருத் தத்தை அமல்படுத்து வோம். ஒன்றுபட்ட இலங்கை என்ற அடிப் படையிலும், சிறுபான்மை தமிழர்களுடன் நல்லிணக் கத்தை எட்டுவதற்காகவும் இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்தப்போகிறோம்.

ஜனநாயக சீர்திருத்தங் களை அறிமுகப்படுத்து வதுதான், எங்களது 100 நாள் திட்டத்தின் பெரும் பகுதியாக இருக்கும். ராஜ பக்சே, நாடாளுமன்றத் தின் அதிகாரத்தைக் குழி தோண்டி புதைத்து விட்டு, அதிபர் பதவிக்கு அதிகாரங்களை குவித்துக் கொண்டார்.

இதற்காக அவர் செய்த 18 ஆ-வது அரசியல் சட்ட திருத்தத்தை ரத்து செய் வோம். இதன்மூலம், அதி பர் பதவிக்கான அதிகாரங் கள் கட்டுப்படுத்தப்படும். நாடாளுமன்றத்துக்கும், அமைச்சரவைக்கும் அதி காரங்கள் அளிக்கப்படும். நாடாளுமன்றத்துடன் இணைக்கப்பட்ட அமைச் சரவையை கொண்ட புதிய அரசு முறையை கொண்டுவர நாடாளு மன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்.

தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை மீண்டும் உருவாக்க, 19 ஆ-வது அரசியல் சட்ட திருத் தம் கொண்டுவரப்படும். நீதித்துறை உள்ளிட்ட பொது அமைப்புகளை கண்காணிக்கும் அமைப் பாக இந்த தன்னாட்சி அமைப்புகள் செயல்படும். இதுவும், அதிபரின் அதி காரத்தைக் குறைக்கும் நடவடிக்கைதான்.
ஒளிவு மறைவற்ற நிர் வாகத்தை அளிப்பதற்காக, தகவல் பெறும் உரிமை சட்டம் கொண்டுவரப் படும்.

ராஜபக்சே ஆட்சி யால், மேலை நாடுகள் மற்றும் இந்தியாவின் ஆதரவை இலங்கை இழந்து விட்டது. சீனா வையே சார்ந்து இருந்தது. ஆனால், சீனா, ராஜபக் சேவின் நடவடிக்கைகளை கண்டு கொள்ளவில்லை.

இவ்வாறு ரணில் விக் ரமசிங்கே பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/94676.html#ixzz3PVjCYDC5

தமிழ் ஓவியா said...

கங்கை இந்துக்களின் தனிச் சொத்தா?


கங்கையில் நூற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்து பல கிலோமீட்டர் கரைப்பகுதிகள் பிணநாற்றமெடுத்து அருவருப்பான நிலையில் இருக்கும் பட்சத்தில் கங்கை யில் பிணங்களை வீசுவது குறித்து சாமியார்கள் முடி வெடுப்பார்கள் என்று மத்திய நீர்வள மற்றும் கங்கை நீர் சுத்திகரிப்பு துறைக்கான அமைச்சர் உமாபாரதி கூறியுள்ளார்.

சனிக்கிழமை அன்று அலகாபாத் கங்கைக் கரையில் சாமியார்கள் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டு உமாபாரதி கூறியதாவது, மத்திய அரசு கங்கையில் இந்து மக்கள் கொண்ட கொள்கைக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காது, இந்துக்களின் நம்பிக் கையின் அடிப்படையில் தான் மோட்சமடைவதற்காக கங்கையில் உடல்கள் வீசப்படுகின்றன, உலகிலேயே கங்கை நதிமாத்திரம் தான் எலும்புகளைக்கூட மிகவிரைவிலேயே அரித்து தண்ணீரோடு கலந்துவிடும் தன்மை கொண்டது.

இதனடிப்படையில் தான் கங்கையில் உடல்கள் வீசப்படுகின்றன, மலர்கள், உடைகள் கங்கையில் வீசப்படுகின்றன என்றால் அவை நீண்ட நெடிய கங்கை கரையில் உரமாக மாற்றப்படுகின்றன. மேலும் கங்கை நதிக்கரையில் மரங்கள் நடுவது குறித்து சாமியார்களிடம் கேட்டு இருக்கிறோம், இந்துமத சாஸ்திரங்களின் படி கங்கைக் கரையில் மரங்கள் நடுவதா வேண்டாமா என்பதை சாமியார்கள் தான் இறுதிமுடிவெடுப்பார்கள். கங்கை மாசுபடுவது இறந்த உடல்கள் மற்றும் கடவுளுக்கு சாற்றிய மலர்கள் மற்றும் ஆடைகளால் தான் என்று கூறுவது முட்டாள் தனமானது, நவீன காலத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் கங்கைக் கரையில் அமைந்துவிட்டன. இவற்றிலிருந்து வரும் கழிவுகளால் தான் கங்கை மாசடைந்து வருகிறது.

கங்கையை சுத்தப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது, ஆனால் அது ஒருபோதும் இந்த நாட்டின் மக்களாகிய இந்துக்களின் நம்பிக்கைக்கு விரோதமாக இருக்காது. கங்கைக்கரை முழுவதும் தடுப்புகள் அமைப்பது குறித்து மத்திய அரசு எந்த ஒரு முடிவை யும் எடுக்காது; அது அந்த அந்த மாநில அரசின் முடிவுகள், மேலும் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பது குறித்து எந்த ஒரு மாநில அரசு சாமியார்களின் ஆலோசனையைப் பெறவேண்டும். இந்துக்களின் நம்பிக்கையில் விளையாடவேண்டாம் என்று கர்ச்சிக் கிறார் அமைச்சர் உமாபாரதி.

கடந்த வாரம் கங்கையில் 200-க்கும் மேற்பட்ட பிணங்கள் மிதந்தது குறித்து நேரிடையாக பதிலளிக் காமல் மத நம்பிக்கைகளை நாம் இழிவுபடுத்தக் கூடாது.உடல்கள் இன்றல்ல நேற்றல்ல; தொன்று தொட்டு கங்கைக்கு அர்ப்பணிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் இது குறித்து கூறுவதற்கு ஒன்றுமில்லை, இருப்பினும் சாமியார்கள் தான் இது குறித்து முடிவு செய்யவேண்டும், மேலும் திருவிழா காலங்களில் சாமி சிலைகள் கங்கையில் வீசுவதற்குப் பதிலாக கங்கைக் கரையில் பெரிய பள்ளங்களைத் தோண்டி அதில் கரைக்க வேண்டும் என்ற தொண்டு அமைப்பின் கோரிக்கைக்கு பதிலளித்த உமா பாரதி கங்கையை ஒரு சிறிய பள்ளத்தில் அடைக்க முடியுமா? என்று எதிர்க்கேள்வி கேட்டுள்ளார். என்னே தர்க்கம் இது? சிலைகளை குழிதோண்டி மூடமுடியாதா?

இந்து சாமியார்களைக் கேட்டு முடிவெடுப்பதற்கு கங்கை என்ன இந்துக்களுக்கு மட்டும் சொந்தமான தனிப்பட்ட சொத்தா? நாட்டின் பொதுச் சொத்து அல்லவா! இந்துக்களைத் தவிர வேற்று மதத்தவர்கள்

கங்கையில் நீராடக் கூடாது என்று கூட சட்டம் செய்வார்கள் போல தோன்றுகிறது.

கங்கை மாசுபடுவதற்கு முக்கிய காரணம் மனித உடல்களையும், கிழட்டு மாடுகளையும் எரியூட்டி எரிக்கப்பட்ட மனித சாம்பலையும், எலும்புகளையும் கங்கையில் வீசுவதுதான் என்பதை மறுக்கிறார் ஒரு மத்திய அமைச்சர் என்றால் மதம் அவர்களின் மதியை எப்படி எல்லாம் பாழ்படுத்தி இருக்கிறது! எதையும் இந்து சாமியார்கள் தான் முடிவு செய்வர்களா? ஆஸ்தான சாமியார்களைக்கூட அதிகாரப் பூர்வமாக அமைத்துக் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாடு மன்னர்கள் காலத்திற்குச் செல்லுகிறதா? எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...

மேலான ஆட்சிதந்திரத்தாலும், வஞ்சகத்தாலும், மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட, துப்பாக்கியாலும், பீரங்கியினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது. _ (குடிஅரசு, 3.11.1929)

தமிழ் ஓவியா said...

திருவரங்கம் விடுதலை வாசகர் வட்டத்தில் நடைபெற்ற இராவண காவியம் விந்த காண்டம் சொற்பொழிவு

திருவரங்கம், ஜன. 21_ விடுதலை வாசகர் வட்டம் திருவரங்கம் சார்பில் 10ஆவது மாதாந்திர கூட்டம் 29.11.2014 அன்று மாலை 6.30 மணிக்கு மு. மீனாட்சி சுந்தரம் (தலை வர் வி.வா.வ.) தலைமை யில் சிறப்பாக நடைபெற் றது. தந்தை பெரியார் சிறப்பைப் பற்றிய கவி தையை டி.செல்வராஜ் படித்தார்.

அனைவரையும் வழக்குரைஞர் சா.ஹரி ஹரன் (செயலாளர் வி. வா.வ) வரவேற்று உரை யாற்றினார் ஆ.பெரிய சாமி, சா.கண்ணன், இரா. மோகன்தாஸ், எம்.நேருஜி (திமுக) ஆகியோர் முன் னிலை வகித்தார்கள். வி. சீனிவாசன் (திமுக) வாழ்த் துரை வழங்கினார்.

பொறியாளர் சி.ரெங்க ராஜூ நிகழ்ச்சியை துவக்கி ஆற்றிய உரையில் தந்தை பெரியாரின் பண்புகள் கொள்கை உறுதி மனித நேயம் அரிய பண்புகளை எடுத்துக் காட்டுடன் விளக்கினார். ஆரியரு டைய நிர்வாகத்தில் இயங் கும் திருச்சி சீதாலெட்சுமி ராமசாமி பெண்கள் கல்லூரியில் (ஷி.ஸி.சிஷீறீறீமீரீமீ) தந்தை பெரியாரை உரை யாற்ற அழைத்தார்கள்.

தந்தை பெரியார் உரை யாற்றுவதை கேள்விபட் டவுடன் இயக்கத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித் தார்கள். உடனடியாக தந்தை பெரியார் பெண் கள் கல்வி கற்க வேண்டு மென கொள்கையை வலியுறுத்தி 50 ஆண்டு களாக போராடி வருகி றேன் பெண்கள் கல்வி கொள்கை வெற்றி பெற் றது என மகிழ்ச்சி அடைந் தேன் என தக்க பதிலடி தந்தார்.

இராவண காவி யம் 5 காண்டம், 57 பட லம், 3100 செய்யுள் கொண்ட காப்பியம். இராவணகாவி யத்திற்கு 1948 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு தடைவிதித்தது ஆனால் 1971 ஆம் ஆண்டு டாக்டர் கலைஞர் அரசு தடையை நீக்கி ஆணை பிறப்பித் தார் என சிறப்பான உரை யாற்றினார்.

பேராசிரியர் இ.சூசை முழக்கம்

ஆசிரியர் புலவர் குழந்தை தன் இராவண காவியம் விந்த காண்டம். ஆரிய படலம் முடிய உள்ள பாடல்கள் மூலம் இரா வணப் பேராசின் எல்லை விந்தியம் முதல் தென்னிந் தியா முழுவதும், இன்றைய ஒரிசா மாநிலம் (பழைய கலிங்கம்) உள்ளிட்டதாக பரவியிருந்தது எனக் கூறுகிறார். விந்த காண் டம் 28 பாடல்களைக் கொண்டும், ஆரியபடலத் தில் ஆரியர்களின் வாழ்வு முறை ஒழுக்கச் சீர்கேடு களை நுட்பமாக ஆய்வு டன் சாடியுள்ளார்கள்.

ஆரியர்கள் தங்கள் மனைவி மக்களுடன் உடலாலும், உள்ளத்தாலும் மகிழ்ந் திருந்தனர். ஆயினும் காட்டில் வசதியுடன் துறவிவேடம் பூண்டு மனித சமுதாயத்தில் உயர்ந்தவனாகவும், கருத வைத்தும் தங்களை வணங்க வைத்தும், தமிழர் களுக்கு சோமபானம் வழங்கி போதையில் மதி யிழந்து, மதிப்பு இழந்து வீழ்த்தினார்கள்.

ஆரியப் படலத்தில் ஆரியர்கள் சூழ்ச்சியில் மூழ்கிய ஆரி யர்கள் என்றே கூறுகிறார். இராவணன் படையுடன் வரும்போது ஆரியர்கள் ஓடி ஒளிந்தனர் எனப்பகர் கின்றார். ஆரியர்களுக்கே தனி மொழியாக சமஸ்கிரு தம் இல்லை. வடிவமில்லை, சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவராக கருதிக்கொண்டு அந்தந்த இடத்திற்கு தக்கவாறு வேடம்பூண்டனர்.

உதார ணம் தமிழ்நாட்டில் அந் தணர், தெலுங்கு நாட்டில் தெலுங்கு பிராமணர் எனவும், ஆரியர்கள் மராத் தியுடன் (சவுராஷ்டிர மொழி) கலந்து சமஸ் கிருதம் எனக்கூறியுள் ளார். இந்த பொய்யுரை களை கூறியதால் இவர் களை உயிருடன் கொளுத்த வேண்டும் என கார்த்தி என்ற ஆய்வாளர் வெகுண்டு உரைக்கின்றார். ஆரியர் களின் வாழ்வு நெறியினை புலவர் குழந்தை சாடி யுள்ளார்.

ஒற்றுமையான சமூகத்தினை குறிப்பாக தமிழர்களை பிரித்தல், இயலவில்லை எனில் தமி ழர்களுடன் கூட்டுசேர்ந்து அடுத்து கெடுத்தல், பொருட்களை கேடு செய் வது, ஆராயாமல் எதனை யும் செய்தல் இவைகளை யெல்லாம் பஞ்சதந்திரம் எனக்கூறி ஏமாற்றுகின் றனர் என்பதை ஆரிய படலத்தில் விரித்துரைக் கப்பட்டிருக்கிறது.

ஆரியர் கள் பொய் புரட்டுகளை, ஒழுக்கச்சீர்கேடுகளை பட்டியலிட்டு விரித்து ரைத்தால் இராவண காவியத்தை தீய இலக் கியம் எனக்கூறி அழித்து விடுவர் என்றே புலவர் குழந்தை அஞ்சினார் அஞ்சியதற்கு காரணம் இராவண காவியம் நின்று நிலைத்து காலத்தால் அழி யாமல் இருக்க வேண்டும் என்ற ஆசிரியரின் பேரவா எனக்கூறி பேராசிரியர் சூசை நிறைவு செய்தார்.

கூட்டத்திற்கு வருகை தந்தோர் சட்டஎரிப்பு வீரர்முத்துகுமாரசாமி, ப.இராமநாதன், தி.சண் முகநாதன், பி.தேவா, இரா.முருகன், காட்டூர் கனகராசு, க.சுதாகர், கிருஷ்ணகுமார், க.பாஸ் கர், திமுகவை சார்ந்த மு.கருணாநிதி.ராஜேஷ், மூலதோப்புரவி, கே. மாணிக்க, செல்வகுமார், அப்பு.அன்பு கணபதி, சு.பரஸ்கரன் ந.நிஜவீரப்பா மற்றும் ஏராளமான இயக்க தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் கள்.
இறுதியாக டி.பி.தியாக ராசன் நன்றி கூற இனிதே முடிவுற்றது.

Read more: http://viduthalai.in/e-paper/94719.html#ixzz3PVkwhEB9

தமிழ் ஓவியா said...

சென்னை புத்தகக் கண்காட்சியில்
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனப் புத்தகங்கள் ரூ.5,14,553க்கு விற்றுச் சாதனை!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின ரால் நந்தனம் ஒய்.எம். சி.ஏ. கல்லூரி மைதானத் தில் 9.1.2015 முதல் 21.1.2015 வரை 13 நாள்கள் நடத்தப் பட்ட 38ஆவது சென்னை புத்தகக் காட்சியில் நமது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அரங் கில் எந்த ஆண்டும் இல் லாத சாதனை அளவாக ரூ.5,14,553க்கு நூல்கள் விற்பனை ஆகி உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். இந்தச் சாதனையை அடைய ஆதரவு அளித்த பொது மக்களுக்கு உளங் கனிந்த நன்றியும், ஊக்கத்தோடு பணிபுரிந்த பெரியார் புத்தக நிலைய உதவியாளர்களுக்குப் பாராட்டுதலையும் உரித்தாக்குகிறோம். நன்றி
- த.க. நடராசன், மேலாளர்

Read more: http://viduthalai.in/e-paper/94742.html#ixzz3PYfD2c94

தமிழ் ஓவியா said...

நரேந்திர மோடி அரசு ராம பக்தர்களின் அரசாம் : ராமனின் ராஜ்ஜியமாம்!


கூறுகிறார் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நரேந்திரமோடி அரசு ராமபக்தர்களின் அரசு நாடெங்கும் ஜெய் சிறீ ராம் என்ற முழக்கத்தை ஒலிக்க வைக்கும் அரசு, என்று நெடுஞ்சாலை மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசம், பைசாபாத் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் நிதின் கட்கரி கூறியதா வது: மோடி ஆட்சி, ஒரு வரலாற்றுத் திருப்பம் நீண்ட காத்திருப்பிற்கு பிறகு ராமபக்தர்களின் ஆட்சி அமைந்திருக்கிறது.

ராமனின் அனுக்கிரகத் தால் பிரதமர் நரேந்திர மோடி, இந்த நாட்டை வளமான பாதைக்குக் கொண்டு சென்று கொண்டு இருக்கிறார்.ராமனின் ஆட்சியில் பேதங்கள் இல்லை, ஊழல்கள் இல்லை, வறுமை இல்லை, அதை இந்த ஆட்சியில் நரேந்திரமோடி கொண்டு வர முனைப்புடன் இருக் கிறார். நாங்கள் ஊழல் வாதிகளை ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம். நாடு முழுவதும் ராம வன் மார்க்(ராமர் அம்பு காட் டிய பாதை) என்ற பெய ரில் சாலைகள் அமைப் போம், இது இலங்கை யையும் இணைக்கும் வகையில் எதிர்காலத்தில் அமையும். இந்த ராமன் வன் மார்க் குறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திட்டவரை முறைகளை முன்வைப் போம், வருங் காலத்தில் இந்த ஆட்சியில் நாடெங் கும் ஜெய் சிறீராம் என்ற முழக்கமே ஒலிக்கும், என்றார். அரசியல் சாசனப்படி அனைத்து மக்களையும் ஒன்றாக பாவிப்பேன் என்று கூறி பதவியேற்ற நிதின் கட்கரி, ஒரு மதத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறி யுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/94743.html#ixzz3PYfKhjDe

தமிழ் ஓவியா said...

கலவரங்களில் ஆர்.எஸ்.எஸின் பங்கு கிரண்பேடிக்கு திக்விஜய்சிங் கேள்வி


புதுடில்லி, ஜன 22_ ஆர்.எஸ்.எஸ்., ஒரு தேசியவாத அமைப்பு என டில்லி தேர்தலில் போட் டியிடும் பா.ஜ., முதல்வர் வேட்பாளரும், முன்னாள் அய்.பி.எஸ்., அதிகாரியு மான கிரண்பேடி தெரி வித்திருந்தார். இது தொடர்பாக தனது டுவிட் டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், ஆர் .எஸ்.எஸ்., நாட்டை ஒருமைப்படுத்தியதாக கிரண்பேடி கூறி உள் ளார். ஒரு அய்.பி.எஸ்., அதிகாரியாக அவர் மத கலவரங்கள் தொடர்பான சட்ட ஆணைய அறிக்கை களை படித்ததில்லையா? கலவரங்களில் ஆர்.எஸ். எஸ்.,ன் பங்கு என்ன வென்று படித்ததில் லையா? சுதந்திர போராட் டத்தில் ஆர்.எஸ்.எஸ்.,ன் பங்கு என்னவென்று கிரண்பேடியால் சொல்ல முடியுமா? ஆர்.எஸ். எஸ்.அய்., சேர்ந்த 5 சுதந்திர போராட்ட வீரர் களின் பெயர்களை அவ ரால் சொல்ல முடியுமா? கோட்சேவை அவர் தேசபக்தராக கருது கிறாரா? இந்துத்துவா என்பதற்கு என்ன அர்த் தம் என்று அவர் விளக்கு வாரா? கிரண்பேடி அவர்களே..உங்களது சொந்த விருப்பங்களுக்காக வரலாற்றை சிதைக்க வேண்டாம். உங்களது அரசியல் ஆசை என்ன என்பது எனக்கு தெரியும். அதில் தவறேதும் இல்லை. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் மற்றவர்களின் அரசியல் ஆசைகளுக்காக அன்னா ஹசாரேவின் சமூக சேவை கள் பயன்படுத்தப்படுவதற் காக பரிதாபப்படுகிறேன். இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/94739.html#ixzz3PYffHxGS

தமிழ் ஓவியா said...

நிரந்தர விரோதி

நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கிறது.
_ (குடிஅரசு, 13.4.1930)

Read more: http://viduthalai.in/page-2/94737.html#ixzz3PYfyLEc7

தமிழ் ஓவியா said...

பெருமாள் முருகனுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்! திராவிடர் கழகம் பங்கேற்பு

சென்னை, ஜன.22_ கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து எழுத்தாளர் பெருமாள் முருகனை ஆதரித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் என்ற நாவலுக்கு எதிராக இந்துத்துவவாதிகளும், ஜாதியவாதிகளும் தொடர்ந்து செய்துவரும் பிரச்சினைகளால், எழுத்தாளர் பெருமாள் முருகன் திருச்செங்கோட்டில் வாழ முடியாத வண்ணம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் இனிமேல் தான் எழுதப் போவதில்லை, தனது எழுத்துகள், புத்தகங்கள் இனி பதிப்பிக்கப்படமாட்டாது என்று அறிவித்ததோடு, எழுத்தாளர் பெருமாள்முருகன் இறந்துவிட்டான்; இனி இருப்பது பேராசிரியர் பெ.முருகன் தான் என்று மிகுந்த மன உளைச்சலோடு முகநூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி ஒரு எழுத்தாளனின் படைப்புக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் பெருமாள் முருகனோடு நிற்கப்போவதில்லை; கருத்துரிமைக்கு எதிரான இந்த பாசிசப் போக்கு இனி எல்லா விதங்களிலும் தொடரக்கூடிய ஆபத்தை எடுத்துச் சொல்லும் விதத்தில் பெருமாள்முருகனுக்கு ஆதரவான ஆர்ப் பாட்டம் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் 20.1.2015 அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார். திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பழ.நெடுமாறன், பேராசிரியர் அருணன், தியாகு, பேராசிரியர் மார்க்ஸ், எழுத்தாளர் ஜெயப்பிரகாசம், ஞானி, நடிகை ரோகிணி, இயக்குநர் வெற்றிமாறன், ராம், உள்ளிட்ட தலைவர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்கு நர்கள், ஊடகத்துறையினர் உள்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

Read more: http://viduthalai.in/page-3/94778.html#ixzz3PYh6q3K0