Search This Blog

6.1.15

விவேகானந்தர் - ஓர் எக்ஸ்ரே பார்வை


  சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் :

  விவேகானந்தர் - ஓர் எக்ஸ்ரே பார்வை


  நூல்: கடவுளின் கதை - பகுதி IV
  ஆசிரியர்: அருணன்
  வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம்,
  69/24ஏ, அனுமார் கோவில் படித்துறை,
  சிம்மக்கல், மதுரை - 625 001.
  தொலைப்பேசி: 0452-2621997
  பக்கங்கள்: 288
  விலை: ரூ.200/-

  நாடறிந்த முற்போக்கு எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களது கடவுளின் கதை மிக்ஷி _ என்ற அரிய ஆராய்ச்சி நூல் _ நான்காம் தொகுதி மற்ற மூன்று தொகுதிகளைப் போலவே மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.

  முதலாளி யுகத்தின் முதல் நூற்றாண்டில் எப்படி மேற்கிலும் கிழக்கிலும் கடவுள் _ மதப் பரப்புகள் - புரட்டுகள் - திட்டமிட்டு நடைபெற்றன. எதிர் சிந்தனையாளர்களின் கருத்துப்போரும் அறிவாயுதங்களும் எப்படிப் பயன்படுத்தப்பட்டன என்பதை பல வாத ஆதாரங்களை முன்னிறுத்தி மிக சுவையான, ஆழமான, ஆய்வு நூலாக இந்நூல் - வழமைபோல் அமைந்துள்ளது!

  விவேகானந்தர் இப்போது ஆர்.எஸ்.எஸுக்குக் கிடைத்த அருமையான மயக்க பிஸ்கட் ஆகும்.

  படித்த நம்மில் பலரே இதில் மயங்கி வருகின்றனர்; அவர்களது மயக்கம் தெளிந்து சரியான புரிதல் பார்வையைப் பெற இந்த நூல் விவேகானந்தரை மிகவும் துல்லியமாக எக்ஸ்ரே எடுத்துப் புரியவைத்துள்ளது.
  அவசியம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்இது.
  பேச்சாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் கையேடுபோல் பயன்படக் கூடும்.
                                                         -------------------------- ஆசிரியர் கி.வீரமணி
  அந்நூலின் ஒரு பகுதி:
  கல்கத்தாவில் 1863இல் ஒரு பாரம்பரியமான காயஸ்தா குடும்பத்தில் பிறந்தார் நரேந்திரநாத் தத்தா. தந்தையார் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குரைஞர். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நரேந்திராவுக்கு பிரம்மோ சமாஜ இயக்கத்தில் பற்றுதல் ஏற்பட்டது. அதன் வருணாசிரம மறுப்பு, பிரம்மோ இறையியல் அந்த பிராமணரல்லாத மாணவரை  ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை. இதை ராமகிருஷ்ணரைப் பற்றிய பதிவுகளைத் தந்த மகேந்திரநாத் குப்தா இப்படியாகக் குறிப்பிட்டுள்ளார்: பத்தொன்பது வயது நிரம்பிய ஒரு வாலிபரைப் பார்த்து பல விஷயங்களை ஆனந்தமாகப் பேசினார் ஸ்ரீராமகிருஷ்ணர். அந்த வாலிபர் நரேந்திரா. அவர் கல்லூரி மாணவர்; சாதாரண பிரம்மோ சமாஜத்திற்கு அடிக்கடி செல்பவர்.

  விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறை எழுதியுள்ள நிகிலானந்தாவும் இப்படிச் சித்தரித்துள்ளார்: நரேந்திரா நவீன உணர்வின் அடையாளமாக இருந்தார். பிரம்மோ சமாஜத்தின் விசுவாசமான உறுப்பினர் என்ற முறையில் இந்து மதத்தின் உருவ வழிபாடு மற்றும் இதர சடங்குகளை அவர் விமர்சித்து வந்தார். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே குருமார்கள் தேவையில்லை என்று நினைத்தார். கடவுள்கள் மற்றும் தேவதைகள் பற்றிய ஸ்ரீராமகிருஷ்ணரின் தரிசனங்களை அவர் கேலி செய்தார், அவை பொய்த்தோற்றங்கள் என்றார்.

  கேசவ சந்திரசென், விஜய் போன்ற பிரம்மோ சமாஜத் தலைவர்கள் ராமகிருஷ்ணரைச் சந்தித்து வந்தார்கள் என்பதைக் கண்டோம். அப்படிப்பட்ட சூழலில்தான் 1881 நவம்பரில் அவரை நரேந்திராவும் சந்தித்துப் பேசினார். அவரது ஆற்றலைச் சட்டென்று உணர்ந்து கொண்ட ராமகிருஷ்ணர் அவரைத் தனது ஆளுகைக்குள் கொண்டுவர முடிவு செய்தார்; குறிவைத்து வலை விரித்தார். தனது சீடர் (நரேந்திரா) சென்றிருந்த பிரம்மோ ஆலயத்திற்கு ஸ்ரீராமகிருஷ்ணர் ஒருநாள் சென்றார். அவர் சென்றபோது நரேந்திரா மற்ற பிரம்மோக்களுடன் சேர்ந்து பாடிக்-கொண்டிருந்தார். நரேந்திராவின் குரலைக் கேட்டதும் ஸ்ரீராமகிருஷ்ணர் அருள் வந்தவராக ஆடினார். கூடியிருந்தவர்கள் பார்வையெல்லாம் அவர் மீது திரும்ப, அங்கே பெரும் சலசலப்பு ஏற்பட்டது என்று விவரித்துள்ளார் நிகிலானந்தா.

  பிரம்மோ சமாஜக் கூட்டத்திற்கே சென்று நரேந்திராவை இப்படியாக அங்கிருந்து இழுத்துவரும் வேலையில் இறங்கினார். அப்படியும் நரேந்திரா உடனடியாக ராமகிருஷ்ணரின் வலையில் விழவில்லை. உலகம் மாயை, பிரம்மம் எனப்பட்ட கடவுள் ஒன்றே மெய்ப்பொருள் எனும் அத்வைதம் அவருக்கு இயல்பானதாகப் படவில்லை. பூங்காவில் உலவிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த இரும்புக் கம்பத்தில் தனது தலையைப் பலமுறை மோதி இந்த உலகம் மெய்யா அல்லது மனதின் மாயையா என்று சோதனை செய்தார் என்கிறார் நிகிலானந்தா. நிச்சயம் உலகம் மாயை அல்ல என்பதை நெற்றிப்-பொட்டின் வலி காட்டிக் கொடுத்திருக்கும்!

  அப்படியும் முடிவில் நரேந்திரா ராமகிருஷ்ணரின் அத்வைதத்தையும், காளி வழிபாட்டையும் ஏற்றுக்கொண்டார் என்றால் அதற்குச் சிந்தாந்தக் காரணமும், வாழ்வியல் காரணமும் இருந்தன. அந்த 19 வயது இளைஞர், சந்திக்கிற பெரிய மனிதர்களிடம் எல்லாம் நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டு வந்தார். பிரம்மோ சமாஜத்தின் தேவேந்திரநாத் தாகூரிடம் அப்படிக் கேட்டபோது அவர் பேச்சை மாற்றிவிட்டார்.

  அதே கேள்வியை ராமகிருஷ்ணரிடம் கேட்டபோது அவர் தயங்காமல் சொன்னார்: ஆமாம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன். உன்னைப் பார்ப்பது போல, சொல்லப்-போனால் இதையும்விடத் தெளிவாக அவரைப் பார்க்கிறேன். கடவுளைப் பார்க்க முடியும், அவரோடு பேச முடியும். ஆனால் கடவுளைப் பார்க்க யார் பிரியப்படுகிறார்கள்? தங்களது மனைவி, குழந்தைகள், சொத்து ஆகியவற்றுக்குத்-தான் மனிதர்கள் குடம்குடமாகக் கண்ணீர் விடுகிறார்களே தவிர கடவுள் தரிசனத்திற்காக யார் அழுகிறார்கள்? கடவுளுக்காக ஒருவன் உண்மையில் கதறினால் நிச்சயம் அவரைக் காண்பான். இந்தப் பதிலைக் கேட்டு அசந்துபோனார் நரேந்திரா.

  விண்டவர் கண்டதில்லை, கண்டவர் விண்டதில்லை என்று மரணத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் பாமரர்களும் ஜாக்கிரதை-யாகவே பேசி வந்த இந்த நாட்டில் மகான்கள் எனப்பட்டோரே இப்படிச் சொல்லும் அசட்டுத் துணிச்சலைப் பெற்றிருந்தார்கள். கடவுள் எனும் கற்பிதத்தைக் கண்ணாரக் கண்டதாகச் சொன்னால் அதன் அர்த்தம் அந்தக் கற்பிதத்தின் மீது அவர்களுக்கிருந்த உறுதி-தானே தவிர புலனறிவால் ஒரு பவுதீக வஸ்துவைப் பார்த்த அர்த்தம் அல்ல என்று பின்னர் விளக்கினால் யாரால் மறுக்க முடியும்?

  அந்தத் தைரியம்தான் அவர்களை இப்படிப் பேச வைத்தது. அது மட்டுமல்ல, உண்மையில் கதறினால் என்று ஓர் இக்கு வைத்திருப்-பதையும் கவனிக்க வேண்டும். கடவுளின் தரிசனம் தனக்குக் கிடைக்கவில்லையென்று ஒரு பக்தன் புகார் கூறினால் இந்த நிபந்தனையை நினைவுபடுத்தியும் அவர்களால் சமாளிக்க முடியும். உண்மையில் என்பதற்கு யாரால் இலக்கணம் தர முடியும்? இப்போதும்கூட நரேந்திரா உடனடியாக ராமகிருஷ்ணர் பின்னால் சென்றுவிடவில்லை. அவருக்கும் பிரம்மோ சமாஜத்திற்கும் இடையே அல்லாடினார். அந்தச் சமயத்தில்தான் - 1884இல் - அவரது தந்தையார் அகால மரண-மடைய, அவரது குடும்பம் நடுத்தெருவில் நின்றது பணச்சிக்கலில்மாட்டி. அதில் திகைத்துப்போன நரேந்திரா தனது குடும்பத்திற்காகக் காளியைப் பிரார்த்திக்குமாறு வேண்டினார் ராமகிருஷ்ணரிடம். அவரோ மிகச் சாதுரியமாக அவரையே நேரடியாகப் பிரார்த்திக்கச் சொன்னார். நரேந்திரா துறவு வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் விரும்பினார். அப்படி-யெனில், தனது குடும்பத்திற்கு ஏதாவது செய்யுமாறு அவரைக் கேட்டுக்கொண்டார் நரேந்திரா. காளியைப் பிரபஞ்சத்தின் தெய்வத் தாயாக ஏற்றுக் கொண்டவர், அவளின் பக்தராக மாறினார் என்று விளக்கியிருக்கிறார் நிகிலானந்தா. வாழ்வின் எதிர்பாராத துயரங்கள் மனிதர்களை கடவுள் நம்பிக்கை-யாளர்-களாக மாற்றுகின்றன என்றால், அத்தகைய துயரம் ஒன்று இங்கே ஒரு பிரம்மோவை உருவ வழிபாட்டாளராக மாற்றியது! இதற்குப் பிறகு பிரம்மோ சமாஜத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை நரேந்திரா. அந்த சமாஜத்திற்கு மூடுவிழா காணும் முயற்சியில் இப்படியும் வெற்றிபெற்றார் ராமகிருஷ்ணர்.

  * * *
  1889 இறுதியிலிருந்து நரேந்திராவும் அப்படியொரு பாரத யாத்திரையை மேற்கொண்டார்.

  இதிலே கவனிக்க வேண்டிய விஷயம் இந்து சமஸ்தானங்களாகப் பார்த்து அவர் விஜயம் செய்தது, அவற்றின் ராஜாக்களைச் சந்தித்து அளவளாவியது. அவர்களில் பெரும்பாலோர் இந்துப் பழமைவாதிகளாக இருந்தார்கள்; இவரை அன்போடு உபசரித்து மகிழ்ந்தார்கள். மேற்கத்திய நவீனக் கல்விக்கு ஆட்பட்டு இந்துப் பழமைவாதத்தை சில ராஜாக்கள் விமர்சித்தபோது அவர்களைக் கண்டிக்கத் தவறவில்லை நரேந்திரா. அல்வார் மகாராஜாவை 1891 பிப்ரவரியில் சந்தித்தபோது அவர் உருவ வழிபாட்டைக் கேலி செய்ததை இவர் கேட்கவும் சகிக்கவில்லை. அவருக்குப் புத்தி புகட்டி அங்கிருந்து புறப்பட்டார்.

  கத்தியவார் ராஜாதான் இவரை மேற்குலகிற்குப் பயணம் செய்யுமாறு முதலில் ஆலோசனை சொன்னவர். அத்தகைய ஆலோசனையை ராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதி மூலமும் கேட்டார் நரேந்திரா. அமெரிக்காவில் நடக்கவிருந்த மதங்களின் நாடாளுமன்றம் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும், அதற்கு நிதி உதவி செய்வதாகவும் அவர் கூறினார்.

  கேத்ரி ராஜாவின் வேண்டுகோளின்படிதான் விவேகானந்தர் எனும் பெயரைச் சூட்டிக்-கொண்டார் நரேந்திரா. இதே ராஜா பட்டுக் காவி ஆடை, காவித் தலைப்பாகை, பெரிய பணமுடிப்பு, 1893 மே 31இல் கிளம்பவிருந்த எஸ்.எஸ்.பெனின்கலார் கப்பலில் ஒரு முதல் வகுப்பு டிக்கெட் என்று கொடுத்துதவினார் என்கிறார் நிகிலானந்தா. இந்த ராஜாக்களின் உதவி மட்டுமல்லாது இன்னும் மைசூர் மகாராஜா மற்றும் சமஸ்தானங்களது மந்திரிமார்களின் உதவியும் விவேகானந்தருக்கு இருந்தது என்கிறார் அவரே. ஆக, பாரதத்தின் பக்கா பழமைவாத நிலப்பிரபுத்துவ குறுநில மன்னர்களின் பிரதிநிதியாகத்தான் மனிதர் மேற்குலகிற்குப் பயணித்தார் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

  அமெரிக்காவைக் கிறிஸ்டோபர் கொலம்பஸ் கண்டுபிடித்ததன் நானூறாவது ஆண்டு விழாவை ஒட்டி அங்கே பலவித நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. அப்படியொரு நிகழ்ச்சிதான் சிக்காகோ நகரில் நடந்த மதங்களின் நாடாளுமன்றம் எனும் கூட்டம். அந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதில் பலரும் சீமான்களே! சீமாட்டிகளே! என்று விளித்துப் பேசியபோது விவேகானந்தர் சகோதரர்களே! சகோதரிகளே! என்று அழைத்துப் பேசியது இன்றளவும் பெரிதாகப் போற்றப்படுகிறது. ஆனால், அங்கே அவர் பேசிய பேச்சுகளைப் படித்துப் பார்த்தால் அப்படியொன்றும் சகோதரத்துவம் பொங்கிப் பிரவாகம் எடுத்து ஓடியதாகத் தெரியவில்லை. அவருடைய கவலை எல்லாம் பாரதத்தில் நடந்து வந்த கிறிஸ்தவ மத மாற்றமே, அதைத் தடுக்க பிராமணிய இந்து மதத்தின் பெருமைகள் எனப்பட்டவற்றைப் பறைசாற்றுவதே. அந்தக் காரியத்தையே திறம்படச் செய்தார். அதனாலேயே அவரது அமெரிக்க விஜயத்தை அன்றும் இன்றும் இந்துப் பழமைவாதிகள் புகழ்ந்துரைக்கிறார்கள்.

  செப்டம்பர் 20ஆம் தேதி அந்த நாடாளுமன்றத்தில் அவர் பேசிய பேச்சின் தலைப்பே இந்தியாவின் உடனடித் தேவை  மதம் அல்ல என்பதுதான். அதாவது கிறிஸ்தவ மதம் இந்தியாவுக்குத் தேவையில்லை என்றார். பேச்சைக் கேளுங்கள்: பரசமயத்தவரின் ஆன்மாவைக் காப்பாற்ற மிஷனரிகளை அனுப்புவதில் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் மிக ஆர்வத்தோடு இருக்கிறீர்கள். ஏன் நீங்கள் பசியிலிருந்து அவர்களது உடலைக் காப்பாற்ற முயற்சி செய்யக்கூடாது?

  இந்தியாவில் கொடூரமான பஞ்சங்களின்போது பசியால் ஆயிரக்கணக்கானோர் மாண்டுபோகிறார்கள். அப்படியும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஏதும் செய்வதில்லை. இந்தியா முழுக்க நீங்கள் தேவாலயங்களைக் கட்டுகிறீர்கள். ஆனால் இந்தியர்கள் ஏற்கெனவே போதுமான அளவுக்கு மதத்தைக் கொண்டிருக்கிறார்கள். எரியும் இந்தியாவின் கோடிக்கணக்கான வறியவர் தொண்டை வறளக் கத்துவது ரொட்டிக்காகத்தான்.

  இந்தியாவில் பஞ்சம் நேர்ந்தபோது நிவாரணம் தந்தவர்கள், கஞ்சித் தொட்டி திறந்தவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகளே என்பது வரலாற்று உண்மை.

  இந்துமடாதிபதிகள் அப்படியெல்லாம் பஞ்ச நிவாரண வேலையில் இறங்கியதில்லை. பிராமணர்களுக்குப் போஜனம் செய்விப்பதே சொர்க்கத்தின் கதவுகளைத் திறக்கும் வழி என தர்ம சாஸ்திரங்கள் சொல்லியதை அட்சரம் பிசகாமல் பின்-பற்றினார்கள்.

  அடித்தட்டு ஜாதியினர் பஞ்சத்தால் செத்தால் அது அவர்களது பூர்வஜென்ம வினை. அதில் தாங்கள் தலையிடக் கூடாது என்றிருந்தார்கள்.
  அமெரிக்காவுக்குப் போன விவேகானந்தரோ கிறிஸ்தவ மிஷனரி-களின் பணிகளை அப்படியே மூடிமறைத்துப் பேசினார்.

  ஓர் உண்மையை மட்டும் ஒப்புக்கொண்டார். இங்கே பஞ்சகாலத்தில் பாமரர்கள் பசியால் மாண்டார்கள் என்பதை. ஆனால் அப்போது அவரது பெருமைமிகு இந்து மதம் என்ன செய்து கொண்டிருந்தது என்பதை மட்டும் சொல்லவில்லை. அந்த அந்நியர்களிடம் ரொட்டிக்காக இவரும் சேர்ந்து கையேந்த வேண்டிய நிலை ஏன் வந்தது என்றும் சொல்லவில்லை.
  அவரது கவலை எல்லாம் அவரது சொந்த மதத்தை _ பசியால் வாடினாலும் கோடிக்கணக்கான இந்தியர்-களுக்குச் சோறு போடாத பிராமணிய மதத்தை _ கட்டிக் காப்பதுதான். அதைச் சரியவைக்கும் வேலையில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஈடுபடக்கூடாது என்றவர், மாற்று வழியாக ரொட்டி கொடுக்கும் வேலையைச் செய்யச் சொன்னார்! ஆதாயம் இல்லாமல் யாரேனும் உபகாரம் செய்வார்களோ அடுத்த நாட்டவருக்கு என்பதையும் மறந்தார்!


  தனது சொந்த மதம் தனது சொந்த மக்களுக்குச் சோறு போடவில்லை என்பதை நாசூக்காக மறைத்துவிட்டு அதன் பெருமை-களை எடுத்தோத ஆரம்பித்தார் அமெரிக்கர்-களுக்கு.சமீபத்திய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எதன் எதிரொலியாக இருக்கின்றனவோ அந்த உயர் ஆன்மிகமாகிய வேதாந்தத் தத்துவம் முதல் பலவித புராணங்களைக் கொண்ட தாழ்நிலையான உருவ வழிபாடு வரை, பவுத்தர்களின் அறியொணாவாதமும் சமணர்-களின் நாத்திகமும் என்று சகலமும் இந்து மதத்தில் இடம் பெற்றுள்ளன என்று ஒரு போடு போட்டார். நவீன விஞ்ஞானங்கள் எல்லாம் தங்கள் வேதங்களில் இருப்பதாக மார்தட்டுகிற இந்துப் பழமைவாதிகள் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் முன்னோடி விவேகானந்தர். எல்லாம் வேதங்களில் உள்ளன என்றால் ஏன் நீராவிச் சக்தியையும், அதில் இயங்கும் இயந்திரங்களையும், அதில் ஓடும் ரயிலையும் இந்து அறிவுஜீவிகள் கண்டுபிடிக்கவில்லை என்பதை மட்டும் அவரும் விளக்கவில்லை, அவருக்குப் பின்பு வந்தவர்களும் விளக்கவில்லை. மற்றொரு பொய்யுரை பவுத்தமும் சமணமும் இந்து மதத்தின் அங்கங்கள் என்று அவர் பேசியது. அவற்றை ஒழித்துக்கட்ட ஆதிசங்கரர் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்ததை, முதன்முதலில் நானாதிசைகளிலும் மடங்கள் அமைத்து ஆள் திரட்டியதைத் திட்டமிட்டு மறைத்தார். இன்றளவும் பவுத்தமும், சமணமும் உலகில் தனித்தனி மதங்களாகத்தான் இயங்குகின்றன எனும் நடப்பு யதார்த்தத்தைக்-கூட கணக்கில் கொள்ளவில்லை மனிதர்.
  இந்து மதம் ஜாதியை ஓர் அங்கமாகக் கொண்டிருக்கிறது எனும் விஷயம் அமெரிக்கா வரை போயிருந்தது. அந்த உண்மையை ஒப்புக்கொண்டு பேசவில்லை விவேகானந்தர். மாறாக முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்த்தார். காணுங்கள் அதை: இந்துக்களின் மதம் இரு பகுதிகளைக் கொண்டது.

  அவை: 1. சடங்குப் பூர்வமானது. 2. ஆன்மிகப் பூர்வமானது.

  பிந்தியதைத் துறவிகள் சிறப்பாக ஆராய்கிறார்கள். அங்கே ஜாதி கிடையாது. மிக உயர்ந்த ஜாதியைச் சார்ந்த மனிதரும், மிகத் தாழ்ந்த ஜாதியைச் சார்ந்த மனிதரும் இந்தியாவில் துறவியாகலாம்; இரண்டு ஜாதிகளும் சமமாக மாறுகின்றன. மதத்தில் ஜாதி இல்லை; ஜாதி என்பது ஒரு சமூக நிறுவனமே. (செப்.26இல் நிகழ்த்திய உரை)
  ----------- மேலும் அறிய, புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்!

  36 comments:

  தமிழ் ஓவியா said...

  பிரதமர் மோடியின் ஜனநாயகம்?

  ஊடகங்கள் அரசை விமர்சனம் செய்தால் தான் அரசு நன்றாக செயல்படும் இதில் பாரபட்சம் பார்க்கக்கூடாது என்று கோலாப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

  மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் இருந்து வெளி வரும் பத்திரிகையான புடாரியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய போது அவர் கூறியதாவது: ஊடகங்கள் நமது நாட்டின் ஜனநாயகத்தின் தூண்களுள் ஒன்று இந்த ஊடகம் மக்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள தூரத்தை இணைக்கும் முக்கியமான பாலமாகும். ஊடகங்கள் இன்றி அரசும் சரிவர இயங்க முடியாது, மக்களும் நிலவரங்களை அறிந்துகொள்ளமுடியாது. ஊடகங்களின் மிகமுக்கிய பணி என்னவென்றால் அரசு, அமைச்சர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை கடுமை யாக விமர்சனம் செய்யவேண்டும் என்று பேசினார். மோடியின் பேச்சும் செயலும் தாமரை இலைத்தண் ணீர் போல் உள்ளது இதில் இருந்து தெரியவருகிறது.

  தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி முழுமையாக ஊடகங்களை விலைக்கு வாங்கினார். மோடியின் தேர்தல் பிரச்சாரப்பேச்சுக்களை அனைத்து இந்தி மற்றும் ஆங்கில அலைவரிசைகள் நேரடி ஒளிபரப்புச் செய்தன. தன்னுடைய பெயர் பத்திரிகையில் எப்போ தும் முதலிடத்தில் வரவேண்டும் என்பதற்காகவே தெரிந்த வரலாறுகளைக்கூட தவறாகப் பேசி பத்திரிகை யில் இடம் பிடித்தார்.

  பி.ஜே.பி. - மதவாதத்துக்கு எதிரான பத்திரிகையா ளர்கள் இருந்தால், அத்தகையவர்களை அடையாளம் கண்டு செல்வாக்கைப் பயன்படுத்தி வெளியேற்றியும் உள்ளார். பண பலத்தின் மூலமும் இந்துத்துவா சிந்தனை கொண்ட ஊடகவியலாளர்கள் வாயிலாகவும் மக்களி டையே பெரும் பிரச்சாரம் மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றார்.

  தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்த பிறகு இதுவரை எந்த ஒரு இந்திய ஊடகத்திற்கும் பேட்டியளிக்கவில்லை. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாரம் ஒருமுறை ஊடகங்கள் என்னைச் சந்தித்து நிறைகுறைகளை முன்வைக்கலாம் என்று வெற்றுப் பேச்சு பேசிய மோடி அதன் பிறகு ஊடகங்களை தனது அலுவலகவாசலுக்கு கூட வரவிடவில்லை.

  அதே நேரத்தில் தனக்கு எதிராக எந்த செய்தியும் வராமல் ஊடகங்களை தனது கைக்குள் போட்டுக் கொண்டார். இந்தியாவின் பெரிய ஊடகக்குழுமங் களை அம்பானி மற்றும் பாஜக ஆதரவு தொழி லதிபர்கள் விலைக்கு வாங்கிவிட்டனர். எடுத்துக்காட்டாக நியூஸ் நெட்வெர்க் என்ற குழுமத்தின் கீழ் 6 செய்தி அலைவரிசையில் வரு கின்றன, இந்தக் குழுமத்தை கடந்த ஜூன் மாதம் அம்பானி விலைக்கு வாங்கிவிட்டார். அதே போல் இண்டியா டுடே நெட்வொர்கின் பங்குகளை பா.ஜ.க. ஆதரவு தொழிலதிபர்கள் வாங்கியுள்ளனர். அதே போன்று வியாபார நோக்கம் கொண்ட அச்சு ஊடகங்கள் ஆளுங்கட்சி சார்பாகவே செயல்படுவது வழக்கம், ஊடகங்களை விலைக்கு வாங்கும் மோடிக்கு தானாகவே விலைபோகும் ஊடகங்களை கைவசம் வைத்துக்கொள்வதென்பது பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதையாகிவிட்டது. சுமார் 60 ஆண்டுகளாக மகாராட்டிரத்தில் வெளிவரும் புடாரி நாளிதழ் நடுநிலைப்பத்திரிகை என்று பெயர்பெற்றது. மராட்டியத் தேர்தலின் போது நடுநிலையாக நின்று தனது பணியைச்செய்தது. ஆனால் கடந்த சில நாட்களாக முழுக்க முழுக்க பாஜக அரசியல் ஏடாகவே மாறிவிட்டது. இப்படி ஆரம்பம் முதலே ஊடகத்தை வளைத்து, தனக்கு சாதமான செய்திகளை மாத்திரம் இடம் பெறச் செய்த மோடி மேடையேறும் போதுமட்டும் ஊடக தர்மம் பேசுகிறார்.

  அய்க்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பார்வை யாளர் கிறிஸ்தோ ஹேன்ஸ் குஜராத் இனப் படுகொலை களுக்குப் பிறகு குஜராத்துக்கு வர விரும்பினார்.

  உண்மை நிலையை அறிந்து கொள்ள விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதுபோல அப் போது குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி பாசாங்கு செய்தார். கடைசி நேரத்தில் என்ன செய்தார் தெரியுமா? குஜராத்துக்கு அவர் வரக் கூடாது என்று கூறி விட்டார்.

  இந்த நிலையை ஓர் அறிக்கை மூலமாக அய்க்கிய நாடுகள் மன்றத்தில் சிறப்புப் பார்வையாளர் அம்பலப் படுத்தினாரா இல்லையா?

  முஸ்லீம்கள், கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் இவர்களின் உரிமைகள் எப்பொழுதும் ஆபத்தில்தான் இருக்கின்றன என்று சொன்னாரே அய்.நா. பார்வையாளர். (Source Statement of U.N.
  Social Reporter - dt: 31.3.2012 MGM)

  இந்த நிலையில் உள்ளவர்தான் ஊடகவியலாளர்கள் தம் ஆட்சியில் காணும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுமாறு ஜனநாயகவாதியாக தோற்றம் காட்டுகிறார். அடடே! இவரைப் போன்ற பல வேட மாமனிதரைக் காண்பது அரிதினும் அரிதே!

  Read more: http://viduthalai.in/page-2/94003.html#ixzz3O3mHHAPv

  தமிழ் ஓவியா said...

  இந்தக் கவிஞரைத் தெரிந்து கொள்வோம்!


  ஒரே நேரத்தில் இலக்கியத்திலும் அரசியலிலும், கவிஞராகக் கலை களிலும் புரட்சியாளராகவும், புதுமை படைத்த ஆற்றலாளராகவும் ஒரு சிலரே உலக வரலாற்றில் சாதனை படைத்து, சரித்திரப் புகழ் பெற்றவர் களாக, சாகாத மா மனிதர்களாக வாழுகிறார்கள் - இன்றளவும்!

  அவர்களில் மிகவும் நினைவுக் குரிய பாராட்டப்பட வேண்டிய சிந்தனையாளர், கவிஞர் கலீல் ஜிப்ரான் அவர்களாவார்.

  பன்முக ஆற்றல் அறிஞரான அவர் தம் பிறந்த நாள் இன்று - ஜனவரி 6.

  லெபனான் நாட்டில் (பஷ்ரி என்ற நகரில்) பிறந்த இவர் தம் 12ஆம் வயதிலேயே குடும்பம் அமெரிக் காவுக்கு புலம் பெயர்ந்தது.

  அரேபிய மொழி, ஆங்கிலம், பாரசீக மொழிகளில் அறிவுள்ள இவர் சிறந்த ஓவிய நிபுணர்.

  அதனால்தான் அவர் பாஸ்டனில் உள்ள ஓவியப் பள்ளியில் சேர்க்கப் பட்டாராம்!

  15 வயதில் பெய்ரூத் சென்று உயர்கல்வியை அங்கே பயின்று, தமது தோழர்களுடன் இணைந்து கல்லூரி இலக்கியப் ஏட்டை வெளியிட்டார்!

  மீண்டும் பாஸ்டனுக்கு திரும்பிய இவரின் கட்டுரை வடிவிலான கவி தைகள் அடங்கிய.

  தி பிராஃபெட் (The Prophet) என்ற நூல் பல நாடுகளில் புகழை இவருக்கு அள்ளித் தந்தது!

  முதலில் கல்லூரிக் கவிஞர் - பிறகு இவர் எழுதிய அந்த புத்தகம் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.

  20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த நூல் என்ற முறையில்

  (இன்றைய தமிழ் இந்து நாளேடு நிறைய தகவல்களை இரண்டு இடங் களில் தந்துள்ளது.)

  இவரது படைப்பு இலக்கியங்களைத் தொகுத்து மக்கள் மன்றத்தில் சேர்த்து பரப்பியதற்கு முழுமுதற் காரணமான அவரது செயலாளரான பார்பராவையே சாரும்.

  இதில் இவரது துணிவான, தெளிவான முற்போக்குக் கருத்துகள் - எழுத்துகள் - சிந்தனைகளால் மத குருமார்கள், அதிகாரிகள் கோபத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளானவர்.

  யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்ற தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனார் சிந்தனையையொட்டி, உலகம் ஒரு குலம் அனைவரும் உறவினர் என்று கூறியவர் இவர்!
  வாழ்க்கையை தத்துவ ரீதியாக வரைந்து காட்டிய ஓவியக் கவிஞர் இவர்!

  அதற்கு ஒரு எடுத்துக்காட்டு கீழே:

  கலீல் ஜிப்ரான் (இவர் ஒரு மேரோனைட் கிறித்துவர்) - மிகவும் வசதி படைத்தவர்கள் - இயேசுபற்றி தனித்த கருத்தும் அவர் அமெரிக்காவுக்கு சொந்த மானவர் என்பது போன்ற கருத்தும் உடைய கிறித்துவப் பிரிவினர் - சால்ட் லேக்சிட்டி என்பது தலை நகரமாக கொண்ட அயோவா மாநிலத்தில் பெரிய தங்கத்தாலான கோபுரம் - வாஷிங்டனில் உள்ள சர்ச்சில் தங்கக் கோபுரம் உள்ளது) அப்பிரிவைச் சேர்ந்தவர் 1883-ல் பிறந்தவர் -

  இந்த காப்புரிமை வருமானத்தை தனது பிறந்த மண்ணான பஷ்ரியின் வளர்ச் சிக்கே உயிலாக எழுதி வைத்தவர் இவர்.

  இவரது ஒரு அருமையான கவிதை வரிகளைப் படியுங்கள்: என்னே உண்மைத் தத்துவ மிளிர்வு!

  உங்கள் குழந்தைகள் உங்களுடையவை அல்ல. அவை, வாழ்வு தன்னையே தான் அடையக் கொள்ளும் ஏக்கத்தின் மகனும் மகளுமாக ஜனித்தவை.

  உங்கள் குழந்தைகள் உங்களூடே தோன்றியவர்கள், உங்களிடமிருந்து அல்ல.

  உங்களுடன் இருப்பினும் அவர்கள் உங்கள் உடமைகளல்லர்.

  அவர்களுக்கு உங்களுடைய அன்பை நீங்கள் தரலாம், உங்கள் எண்ணங்களை அல்ல.

  ஏனெனில், சுயமாக அவர்களிடத்தே எண்ணங்கள் பிறக்கின்றன.

  அவர்கள் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம், உயிருக்கு அல்ல.

  ஏனெனில், உங்கள் கனவில்கூட நீங்கள் அடைய முடியாத எதிர் காலம்தான் அவர் களது உயிர் உறையும் வீடு.

  நீங்கள் அவர்களைப் போல ஆவதற் காக கடின முயற்சி செய்யலாம்.

  ஆனால், உங்களைப் போல அவர் களையும் ஆக்கிவிடக் கூடாது.

  ஏனெனில், வாழ்வு பின்னடித்துச் செல்வ தில்லை. நேற்றைய நாட்களில் சுணங்குவது மில்லை.

  உயிருள்ள அம்புகளாக உங்களிட மிருந்தே எய்யப்படும் குழந்தைகளுக்கு நீங்கள் வில்லுகள்.
  வில்லாளி, காலாதீதத்தின் மார்க்கத்தில் குறிவைத்து, தனது அம்புகள் அதிவேகத் துடன் தொலை தூரம் செல்லும்படி, உங் களைத் தனது மகாசக்தியால் வளைக்கிறான்.

  வில்லாளியின் கரத்தில் உங்கள் வளைவு ஆனந்திக்கட்டும்.

  ஏனெனில், பறக்கும் அம்புகளை அவன் விரும்புகிற அளவுக்கு அசைவற்ற வில்லின் உறுதியையும் விரும்புகிறான்.

  (கலீல் ஜிப்ரானின் தீர்க்கதரிசி புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி. தமிழில்: பிரமிள்)

  - வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

  Read more: http://viduthalai.in/page-2/94005.html#ixzz3O3mY6T00

  தமிழ் ஓவியா said...

  இந்துத்துவ வரலாற்று நிகழ்வுகள் வெறும் கட்டுக் கதைகளே  - கிரீஷ் சஹானே


  2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து வெளிவந்த மிகப் பெரிய செய்தி மக்களின் மனம் கவர்ந்த நரேந்திரமோடியின் தலைமையில் பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்றதுதான். நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாது என்று பலராலும் கருதப்பட்டதை பா.ஜ.க. செய்து காட்டி சாதனை படைத்துள்ளது. கட்டுப்பாடோ, வரையறையோ அற்ற வியப்பளிக்கும் இந்துத்துவ வரலாறு என்ற எனது முந்தைய கட்டுரையில், மோடியும், அவரது எண்ணற்ற சகாக்களும் கொண்டிருக்கும் கருத்துகள் பற்றி நான் விவரித்திருந்தேன். என்றாலும், வரலாற்றை தவறாகப் படித்துக் காட்டுவதன் மூலம், பெரும்பான்மையான மக்களிடையே பொய்யான வரலாற்று நிகழ்வுகளை உண்மையானவை என்று கருதச் செய்யும் பா.ஜ.க.வின் முயற்சி நீடித்து நிலைபெற்று வந்துள்ளது. பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இத்தகைய முக்கியமான அய்ந்து கட்டுக் கதைகளை கால வரிசையில் பின்னோக்கிச் செல்லும் வண்ணம் நான் இங்கே பட்டியலிட்டுள்ளேன்.  தமிழ் ஓவியா said...

  1. ராணி பத்மினி பற்றிய கட்டுக்கதை

  கி.பி. 1303 இல் டில்லி துருக்கிய சுல்தான் அலாவுதீன் கில்ஜி, ஒரு நீண்ட கால முற்றுகைக்குப் பிறகு சித்தூர் கோட்டையைப் பிடித்தார். அதற்குப் பிறகு 237 ஆண்டுகள் கழித்து, மாலிக் முகம்மது ஜெயசி என்ற ஒரு அவாதி கவிஞர், சித்தூர் கோட்டை வீழ்ந்தது பற்றி பத்மாவதி என்ற ஒரு கவிதை நூலை இயற்றினார். தொடர்ந்து வந்த காலங்களில் இந்த கதை அக்பர் அவையில் இருந்த அபுல் ஃபாசி போன்ற வரலாற்றாசிரியர் களால் கையாளப்பட்டு வந்தது.

  பத்மினி கதை எழுத்தாளர் எழுத் தாளருக்கு மாறுபட்டிருந்தது. ஆனால் அடிப்படைக் கதை என்னமோ ஒரே மாதிரிதான் இருந்தது. மேவார் மன்னன் ரத்தன் சிங்கினால் நாடு கடத்தப்பட்ட சூனியக்காரன் ஒருவன் அலாவுதீன் கில்ஜி அவையில் அடைக்கலம் அடைந் தான். ரத்தன் சிங்கின் மனைவி ராணி பத்மினியின் அழகு பற்றிய கதைகளை அவன் சுல்தான் கில்ஜிக்கு கூறிக் கொண்டேயிருந்தான். ஒரு முறை பத்மினியைக் கண்ட அலாவுதீன் அவளது அழகைக் கண்டு மயங்கி விட்டார். தந்திரம் செய்து ரத்தன் சிங் மன்னனைப் பிடித்த சுல்தான், பத்மி னியைத் தன் னிடம் கொடுத்துவிட்டால், அவனை விடுவித்துவிடுவதாகக் கூறி னார். தங்கள் மன்னரை விடுவிக்க ராஜ புத்ரர்கள் ஒரு தந்திரமான திட்டமிட் டனர். ஆனால் அந்த முயற்சியில் பல போர்வீரர்கள் உயிரிழந்தனர். சோர் வடைந்துபோன ராஜபுத்ர சேனையை வெற்றி கொண்ட சுல்தான், பத்மி னியைக் கவர்ந்து வருவதற்காக சித் தூருக்குச் சென்றபோது, அங்கிருந்த ராணி பத்மினியும் மற்ற அனைத்து பெண்களும் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டார். ராஜபுதன அல்லது சுல்தான் அவை ஆவணங்கள் எது ஒன்றிலும் ராணி பத்மினியைப் பற்றி குறிப் பிடப்பட்டு இருக்கவில்லை. அப்படி ஒரு ராணி இருந்தாள் என்பதற்கான வரலாற்று ஆதாரம் எதுவுமே இல்லை. இந்திய ராணுவ வரலாற்றிலேயே திறமை மிகுந்த தளபதி என்று புகழ்ந் துரைக்கப்பட்ட அலாவுதீன் சித்தூரை வெல்வதற்கு எந்த வித சதிதிட்டமும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. தொடர்ந்து படை யெடுத்து வந்த மங்கோலியர்களை அவர் பலமுறை வென்றதுடன், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களின் பெரும் பகுதியையும் வெற்றி கொண்டிருந் தார். ஆனால், ராஜபுத்ரர்களுடன் பகை உணர்வு கொண்ட ஒரு காமாந் தகாரன், ஏமாற்றுக்காரன், கொடுங் கோலன் என்ற தோற்றமே சுல் தானைப் பற்றி நிலவி வந்துள்ளது.

  2. பிரிதிவிராஜ் சவுஹான் பற்றிய கட்டுக்கதை

  வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுவது என்று அவர்கள் கூறு கின்றனர். ஆனால், மிகச் சிறந்த கவி தைகள் பெரும்பாலும் தோற்றவர்களா லேயே இயற்றப்பட்டுள்ளன. இந்தி யாவைப் பொறுத்த மட்டிலுமாவது, வரலாற்று நிகழ்வுகளை விட கட்டுக் கதைகளே முக்கியத்துவம் பெற்றிருந்தன என்று கூறலாம். 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிதிவி ராஜ் சவுஹான் டில்லியை ஆண்டு வந்தான். பிரிதிவி ராஜின் ராஜ்யத்தின் எல்லை ஓரத்தில் இருந்த பாடிண்டா கோட்டையை ஆப் கானிஸ்தானத்து அரசன் முகமது கோரி கைப்பற்றினான். தனது படையுடன் எல்லையை நோக்கிச் சென்ற பிரிதிவிராஜ் தாரெய்ன் என்ற இடத்தில் கோரியின் படையைத் தோற்கடித்தான். அதற்கு அடுத்த ஆண்டில் மேலும் பலமான ஒரு படையுடன் திரும்பவும் படை யெடுத்து வந்த கோரி பிரிதிவிராஜைத் தோற்கடித்து அவனைக் கொன்றான்.

  தமிழ் ஓவியா said...

  வீரம் செறிந்த பிருதிவிராஜ் கோரியை வென்று கைது செய்ததும் அன்றி, பெருந் தன்மையுடன் கோரியை விடுவித்து விட்டான் என்று பிரிதிவிராஜின் அவைப் புலவர் சந்த் பர்தாய் என்பவரும், அவரைத் தொடர்ந்து பல எழுத்தாளர் களும் உண் மையல்லாத நிகழ்ச்சிகளை இட்டுக் கட்டி கதை புனைந்துவிட்டனர். பகைவனான கோரி நியாயமற்ற முறை யில் இரவில் திரும்பி வந்து, பிருதிவி ராஜை கைது செய்து அவனைக் குருடனாக்கிவிட்டு, தனது தலைநகருக்கு இழுத்துச் சென்றானாம். குருட்டு அரசனைத் தனது வில்வித்தையைக் காட்டச் செய்ய வைக்க கோரிக்கு பிருதிவி ராஜனுடன் கொண்டுவரப்பட்ட ஒருவன் ஆலோசனை கூறினானாம். அவனது ஆலோசனைப்படி பிருதிவிராஜ் முகமது கோரியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டானாம்.

  இது வரலாற்று உண்மை என்ற நம்பிக் கையுடன் வளர்ந்தவன் நான். பிரிதிவிராஜின் வாழ்க்கை வரலாறு பற்றிய அமர்சித்ரகதா என்னும் நூலுக்கு இதற்காக நன்றி செலுத்த வேண்டும். இன்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் பிரிதிவி ராஜ், பத்மினி பற்றிய இந்தக் கட்டுக் கதைகளையே இன்னமும் நம்பி வருகிறார்கள் என்று நான் கருது கிறேன். இந்திய வரலாற்றை இவ்வாறு திரித்துக் கூறியுள்ளது பற்றி எந்த இந்திய நீதி மன்றத்திலும் எந்த ஒரு வழக்கும் தொடரப் பட்டது போல தெரியவில்லை.

  3. வன்முறையற்ற இந்தியா என்ற கட்டுக்கதை

  நமது மதம் மற்ற எந்த மதத்தையும் விட மேலானது, உண்மையானது. ஏனென்றால் எப்போதுமே அது போரிட்டு ரத்தம் சிந்தியதுமில்லை; வெற்றி பெற்றதுமில்லை என்று கூறிய சுவாமி விவேகானந்தா, இந்தியா அமைதி நிறைந்த நாடு என்ற கட்டுக்கதையை பரப்பி வந்தார். அவர் அடிக்கடி மதம், தேசம், இனம் ஆகிய சொற் களை ஆர்வம் அளிக்கும் வகை யில் மாறி மாறி கூறிக்கொண்டிருப்பார்.

  ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இந்தியா அமைதி நிறைந்த நாடாகவே இருந்து வந்துள்ளது. உலகத்தில் உள்ள அனைத்து தேசங்களிலும், மற்றவர்களை வென்று அடிமை கொள்ப வர்களாக நாம் எப்போதுமே இருந்ததில்லை. இதற்கான இறைவனின் வாழ்த்து நம் மீது எப்போதுமே இருந்து வந்துள்ளது என்று 1897 ஆம் ஆண்டில் கொழும்பில் அவர் பேசி னார். இதில் உள்ள அவலம் என்னவென் றால், இந்திய அரசர்கள் (அதிலும் இந்து அரசர்கள்) திரும்பத் திரும்ப படையெடுத்த நாடுகளில் இலங்கையும் ஒன்று. தெற்காசிய நாடுகள், நகரங்கள் மீது சோழ அரசர்கள் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் கடற்படை கொண்டு படையெடுத்து தாக்கியுள்ளனர்.

  தமிழ் ஓவியா said...

  அண்டை நாடுகளில் நுழைவதற்கும், அந்நாடுகளின் மக்களைக் கொல்வதற் கும், கொள்ளை அடிப்பதற்கும் இந்து அரசர்கள் சற்றும் தயங்கியதே இல்லை. இந்திய துணைக் கண்டத்தைத் தாண்டி வெளி நாடுகள் மீது அவர்கள் படை யெடுத்துச் செல்லாததற்குக் காரணமே, தங்கள் நாட் டிற்கு அருகிலேயே கொள்ளையடிப் பதற்கு வளமான நாடுகள் இருந்ததுதான். ஆப்கானிஸ்தானம் மற்றும் துருக்கி குதிரைப்படை ஏன் வளமான இந்திய சம வெளி மீது படையெடுத்தன என்றால், அதற்குக் காரணம் அவர்களுக்கு அதனால் அதிக செலவுமில்லை; ஆதாயமோ அதிகமாக இருந்தது. ஆனால், இந்திய அரசர்கள் வெளிநாடுகள் மீது படை யெடுத்து செல்லவேண்டுமென்றால் அவர்களின் யானைப்படையினையும், ஆயிரக்கணக் கான போர்வீரர்களையும் கொண்டு செல்ல செலவு அதிகமாகும்; ஆனால் வெளிநாடுகளில் கிடைக்கக்கூடிய ஆதாயம் குறைவாகவே இருக்கும். கால் நடை மந்தைகளை மட்டுமே செல்வ மாகக் கொண்டிருக்கும் நாடுகளை வெல்ல கடினமான மலைப்பாதையில் தங்கள் படைகளுக்குத் தேவையான உணவு மற்றும் தளவாடங்களைக் கொண்டு செல்ல வேண்டும். தனது முன்னோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை என்று கருதி சாமர்கண்ட் மீது படையெடுத்துச் சென்ற ஷாஜஹான் அதற்கு ஒரு பெரும் விலை கொடுக்க வேண்டியதாயிற்று.

  4. சமஸ்கிருதம் பற்றிய கட்டுக்கதை

  சமஸ்கிருத மொழி மாபெரும் அளவி லான பாடல்கள், தத்துவநெறிகள், தியான நெறிகள், கவிதைகள், புராணங்கள், இதிகாசங்கள், நாடகங்கள், ஒப்பந்தங்கள் என்று பல்வகை இலக்கியங்களை உருவாக்கி யுள்ளது. கலாச்சார அடிப் படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உலக மொழிகளில் அதுவும் ஒன்று என்பதில் அய்யமேதும் இருக்க முடியாது. ஆனால், அனைத்து மொழி களுக்கும் சமஸ்கிருத மொழியே தாய் என்று சொல்லப்படுவது மட்டும் உண்மையல்ல. சமஸ்கிருத மொழி சார்ந் துள்ள இந்திய-அய்ரோப்பிய மொழிக் குடும் பத்து மொழிகளுக்கு அடிப்படையான மொழி என்று கூட அதனைக் கூற முடியாது.

  தமிழ் ஓவியா said...

  இம்மொழிக் குடும்பத்தை முதன் முதலாக அடையாளம் கண்ட வில்லியம் ஜோன்ஸ் என்பவர், சமஸ்கிருத, லத்தீன், பாரசீக மொழிகள், முன்பு இருந்து இப்போது மறைந்து போயிருக்க இயன்ற ஒரு பொதுவான மூலத்திலிருந்து பிறந்த மொழிகளாக இருக்கக்கூடும் என்று 1786 ஆம் ஆண்டின்போதே கருத்து தெரி வித்திருந்தார். அந்த மூலம் இந்திய அய்ரோப்பிய மொழிக்குடும்பத்துக்கு முந்தையது என்று இப்போது அழைக் கப்படுவதாகும். அந்த மூலமொழி கருங் கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5500 முதல் 6000 ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட் டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

  இந்தியாவில் சமஸ்கிருதத்துக்கு முந் தைய மொழி ஒன்று இன்றைய துருக்கி, உக்ரைன் நாடுகளில் ஒரு காலத்தில் வாழ்ந்து வந்த கால்நடை களுக்குத் தீவனம் தேடி புலம் பெயரும் நாடோடி களால் பேசப்பட்டது என்று கூறுவது இந்தியாவில் ஏற்றுக் கொள் ளப்படாத தாகவும்; விரும்பப்படாததாகவும்; மறுக் கப்பட இயன்றதாகவும் இருப்பதாகும். ஆனால், அதுதான் சமஸ்கிருதத்தை மற்ற பல மொழி களைப் போல ஆக்க இயன்றதாகும்.

  5. 5000 ஆண்டு கால நாகரிகம்

  பகவத் கீதையின் 5151 ஆவது ஆண்டுவிழாக் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் நமது அயல்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டார்.

  இவ் வாறு ஆண்டுக் கணக்கை குறிப்பிடு வதே கட்டுப்பாடோ, வரையறையோ அற்ற வியப்பளிக்கும் இந்துத்துவ வரலாறு என்பதைச் சார்ந் தது. ஆனால், இந்து கலாச்சாரத்துடன் தொடர்புடைய எது ஒன்றினைப் பற்றி குறிப்பிடும்போதும் இந்த 5000 ஆண்டுக் கணக்கு பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. வேதங்கள் குறைந் தது 5000 ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்டவை; ஆயுர்வேதம். அதுவும் 5000 ஆண்டு களுக்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டது. யோகா, அதுவும் 5000 ஆண்டுகள் பழமையானது. இந்திய கலை, கணிதம், ஜோதிடம், இலக்கணம் எந்த ஒன்றை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அவை யெல்லாம் 5000 ஆண்டு கால பழமை வாய்ந்தவையே.

  உண்மையைக் கூறுவதானால், இந்தியாவில் உள்ள எதுவுமே 5000 ஆண்டு கால பழமை வாய்ந்தது அல்ல. இந்தியாவில் பழமையானது என்று கூறப்படும் ஹரப்பா நாகரிகத் தின் காலமே, அங்கிருந்த தாழிகள், கட்டடங்கள், முத்திரைகள் ஆகிய வற்றைக் கொண்டு கி.மு. 2500 காலத் தைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது. நமது இலக்கியங்களில் பழமையானது என்று கூறப்படுவது 3500 ஆண்டு களுக்கு முன்பு எழுதப்பட்டதுதான். கி.மு. 500 க்கு முந்தையது என்று குறிப் பிடப்பட இயன்ற கலைகள் மிகமிகக் குறைவானவையே. இந்தி யாவின் முக்கியமான கணித சாதனை களே இடைக்காலத்தில் நிகழ்த்தப் பட்ட வைதாம்.

  தற்கால யோகாவில் பின்பற்றப் படும் ஆசனங்களில் பெரும்பாலானவை விவரிக்கப்பட் டுள்ள வரலாறு ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் சற்று மேலா னதுதான். கலியுகத்தினாலோ, முஸ்லிம் களின் படையெடுப்பாலோ, ஆங்கிலேய ஆதிக்கத்தினராலோ கெட்டுப் போவ தற்கு முன்பு இந்தியா இருந்த காலம் ஒரு பொற்காலம் என்று நம்புபவர்களின் கைகளில் இந்த போலியான 5000 ஆண்டு பழமை என்ற விளையாட்டு சிக்கிக் கொண்டு சீரழிகிறது.

  தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

  Read more: http://viduthalai.in/page-2/94006.html#ixzz3O3miAsso

  தமிழ் ஓவியா said...

  அ.மா.சாமி எழுதிய ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை நூல் வெளியீட்டு விழா தந்தை பெரியாரால் புரட்சி செய்தவர் என்று பாராட்டப்பட்டவர் ஆதித்தனார்


  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

  சென்னை, ஜன. 6_- எழுத்தாளர், மூத்த பத்திரிகையா ளர் அ.மா.சாமி எழுதிய ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை நூல் வெளியீட்டு விழா உலகத் தமிழ்ப் பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் சென்னை மயிலாப்பூர் சி.அய்.டி. காலனியில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் நேற்று (5.1.2015) நடைபெற்றது. உலகத் தமிழ்ப் பண் பாட்டுக் கழகத் தலைவர் அ.இரபியுதீன் வரவேற்றார். மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.மோகன் தலை மையேற்று உரையாற்றினார்.

  எழுத்தாளர், மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமி எழுதிய ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை என்ற நூலை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட தொழில திபர் வி.ஜி.சந்தோஷம் முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.

  விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு விழாக்குழுவின் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. நூலாசிரியர் அ.மா.சாமியைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து, பெரியார் களஞ்சியம் நூலை அன்பளிப்பாக வழங்கினார்கள்.

  நீதியரசர் எஸ்.மோகன்

  நீதியரசர் எஸ்.மோகன் தலைமையுரையில் குறிப்பிட்டதாவது: நீதிபதி ஒருவர் பதவியில் இருந்து விலகிவிட்டால் ஒரு காசும் கிடைக்காது. ஆனால், என்னைத் தேடி இந்த நூலை வெளியிட வேண்டும் என்று அழைத்தமைக்கு மிகவும் நன்றி.

  ஆதித்தனார் என் கட்சிக்காரர். வாழ்க்கையில் போராட்டம் இருப்பதுண்டு. போராட்டமே வாழ்க்கை என்று ஆதித்தனார் இருந்தவர். நெருங்கிப் பழகியவன் நான். இந்தியாவிலேயே தினத்தந்தி முதல் இடத்தைப் பெற்றுள்ளது என்றால், அந்த அளவுக்கு முன்னேற்றி இருக்கிறார்கள். ஆதித்தனார் போராட் டத்தால் அது ஏற்பட்டது. முதலில் தமிழன். எத்தனை இன்னல் சொல்லி முடியாது. கையாலேயே கூழைக் கரைத்து, காகிதம் செய்தார். பாரிஸ்டர் வேலையா இது? இந்தியாவின் முதல் இடத்தைப் பெற்றுள்ள தமிழ் நாளிதழ் தினத்தந்தி உறுதி, நெஞ்சுறுதி மட்டு மன்றி உண்மைகளைத் துணிச்சலோடு செய்த மனிதர்.

  ஆதித்தனாருக்கு பன்முகங்கள் உண்டு. ஏழைகளைப்பார்த்து இரங்குபவர். காலை முதல் இரவுவரை பாடுபடுபவர். 30 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களுக்கு என்று பத்திரிகைகள் கிடையாது. ஆதித்தனாரை, பெரியார் ஆதரித்து வந்தார். வழக்கு ரைஞர் தொழிலில் நிறைய சம்பாதித்திருக்க வேண்டி யவர் மக்களோடு மக்களாக உழைத்து, பெயரை சம் பாதித்தவர் ஆதித்தனார்.-இவ்வாறு தலைமை யுரையில் நீதியரசர் எஸ்.மோகன் குறிப்பிட்டார்.

  தமிழர் தலைவர்

  நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டதாவது:

  தந்தை பெரியார் அறியாமையைக் களைவதில் புரட்சி செய்தார். சமூக மறுமலர்ச்சி, சமூகப் புரட்சி யின்மூலம் ரத்தம் சிந்தாத புரட்சியை ஆதித்தனார் செய்தார். Pen is mightier than sword. என்பதற்கேற்ப மொழிக்காக சிறந்த ஆயுதமாக பயன்படுத்தியவர். 1967ஆம் ஆண்டிலே பெரிய மாற்றம் தமிழகத்தில் வந்தது. மொழியை அடித்தளமாகக் கொண்டு ஆதித் தனார் செய்த தொண்டு சாதாரணமானதல்ல. எல் லோருக்கும், எளிய மக்களுக்கும் தொண்டாற்றியவர்.

  நூலாசிரியர் அ.மா.சாமி அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பெரியார் களஞ்சியம் நூலினை வழங்கிப் பாராட்டினார்

  அந்தக்காலத்தில் பத்திரிகைகள் மேல் ஜாதி, மேல் வர்க்கம் என்பவர்களிடம் இருந்தது. பாரத தேவி, சுதேசமித்திரன், ஹிந்து, பின்னாளில் தினமணி, சொக்க லிங்கத்தின் தினசரி என்று இருந்தது. தேனீர்க்கடையில் சென்று சேரும் வகையில் ஆதித்தனார் சேவை இருந்தது.

  நான் மாணவப்பருவத்தில் இருந்தபோது இரண்டாம் உலக யுத்தம் நடந்த காலகட்டம். என்னு டைய 10, 11 வயதிலேயே தந்தை பெரியார் கொள்கை யில் ஒப்படைத்துக் கொண்ட போது தமிழன் வார ஏடு படித்திருக்கிறேன். என் மூத்த சகோதரர் செய்தித் தாள் விற்பனை செய்துகொண்டிருந்தார். அப்போது பல பத்திரிகைகளையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

  தமிழ் ஓவியா said...

  ஆதித்தனார் சிங்கப்பூரிலிருந்து இங்கு வந்து நடத்திய ஏடுதான் தமிழன். வார ஏடு உலகப்போரின் போது காகிதங்களுக்கு நெருக்கடியான கட்டத்தில் காகிதத்தைத் தானே தயாரித்தார். ஆதித்தனார் தந்தை பெரியாருக்கு பக்கத்து வீடு மட்டுமல்ல, பக்கத்து உறவாகவே இருந்தவர்.

  சிங்கப்பூர் ஓ.இராமசாமி நாடார் காரைக்குடி மணச்சை பகுதியிலிருந்து 1929 ஆண்டில் சிங்கப்பூர் சென்றவர். இரண்டாம் முறையாக 1953ஆம் ஆண்டில் பர்மா சென்றவர்.

  தந்தை பெரியார் சிங்கப்பூர் சென்றபோது முதல் முதலாக ரோல்ஸ்ராய்ஸ் கார்மூலம் பெரிய அளவில் வரவேற்றார். வரலாற்று உணர்வு இருக்க வேண்டும். நம் குடும்பத்தைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். நம்மில் பலருக்கும் தாத்தா, தாத்தாவுக்கு அப்பா பெயர் தெரிந்திருக்கும். தாத்தாவுக்கு தாத்தா பெயர் தெரியாது. அதை எழுதிவைக்கும் பழக்கம்கூட கிடையாது.

  தமிழர் சீர்திருத்த சங்கம் அமைத்து தந்தை பெரியார் கொள்கைகளைச் சொல்வதற்கு, தமிழவேள் சாரங்கபாணி அந்த உணர்வை, அந்த வரலாற்றை உருவாக்கினார்கள். கடல்கடந்த உணர்வு அது. கே.டிகே.தங்கமணி, செல்லமணி ஆதித்தனார் எல்லோருமே பார் அட்லா பட்டம் பெற்றவர்கள். சமுதாயத்துக்குத்தான் பாடுபட்டார்கள்.

  நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டோர்...

  இந்த உணர்வுகளை உருவாக் கினார்கள். பத்திரிகை நடத்தினார்கள். தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்துவிட்டார்களே, ஓர் இனம் தங்கள் மொழி, இன அடையாளங்களை இழக் கக்கூடாது என்று ஆதித்தனார் பத்திரிகை நடத் தினார். தினத்தந்தி அலுவலகம் பெரியார் திடலில் இருப்பதுபோன்று, கொள்கையிலும் தந்தை பெரியாரின் பக்கத்தில் இருந்தார்.

  1960ஆம் ஆண்டில் என் திருமணம். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நடத்தி வைத்தார்கள். அப்போது சுதந்திர தமிழ்நாடு போராட்டம், தமிழ்நாடு நீங்கலாக படத்தை எரிப்பு போராட்டம் அறிவிக்கப் பட்ட நிலை. 25 வயதிலே திருச்சி பெரியார் மாளிகையிலே என்னுடைய திருமணம் நடைபெற்ற போது, தினத்தந்தி அ.மாரிச்சாமி செய்தியாளராக இருந்தவர்.

  செய்தியாளர்களை எப்போதுமே தந்தை பெரியார் எதிர்பார்ப்பதில்லை. நான் என்ன பேசினாலும் அதைப் போட மாட்டீர்கள். நான் மக்களை சந்திப்பவன். பத்திரிகை தயவு எனக்கு வேண்டியதில்லை என்று கூறுபவர். ஆனாலும், விதிவிலக்கு அ.மாரிச்சாமிக்கு உண்டு. தந்தை பெரியார் வேனிலேயே பயணம் செய்ய அ.மா.சாமிக்கு மட்டும் இடம் உண்டு. நான், புலவர் இமயவரம்பன் உடன் இருப்போம்.

  தமிழ் ஓவியா said...

  காலச்சுவடு என்று வரும்போது, பிடிக்கவில்லை என்றாலும், செய்திகளை செய்திகளாகவே கொடுக்க வேண்டும். சிந்தாதிரிப்பேட்டையில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டபோது, கழகச் செயலாளர் நான், தந்தை பெரியாரின் செயலாளர் புலவர் இமயவரம்பன், விடுதலை ஆசிரியர் குருசாமி கைது செய்யப்பட்டோம்.

  நாங்கள் அடைக்கப்பட்ட சிறையில் அடுத்த அறையில் ஆதித்தனார் இருந்தார். ஆதித்தனார் இலக்கியத்தை சத்தமாகப் படிப்பார். தந்தை பெரியார், ஆதித்தனார் இருவரும் தந்தை மகன் உறவுபோல் பேசுவார்கள். பல வரலாற்றுத் தகவல்களைப் பேசிக்கொள்வார்கள். பெரியாரும், ஆதித்தனாரும் பேசும்போது நாங்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்போம்.

  ஆதித்தனார் விவசாயிகளுக்காகப் போராட்டத்தில் பங்கேற்றபோது கை விலங்கு போட்டு கைது செய்யப் பட்டார். பார் அட்லா படித்தவர் என்கிற அந்தஸ்து, செல்வாக்குகளைப் பார்க்காமல் சாதாரணமானவராகவே சென்றார். லேனா தமிழ்வாணன் கூறியதுபோல் ஆதித்தனார் சாதித்தனார் என்பதில் சாதியைமட்டும் அடையாளமாக்க முற்படுகிறார்கள்.

  உயர்ஜாதி, உயர் வர்க்கம் கைகளிலிருந்த பத்திரிகைத் துறையில் எளிய மக்களுக்காக புரட்சி செய்தவர். என்று தந்தை பெரியார் அவர்கள் கூறினார். ஜாதி தீண்டாமை பாகம் 9 இல் தந்தை பெரியார் ஆதித்தனார்குறித்து கூறியதை அப்படியே போட்டுள்ளோம். இதுவரையிலும் 35, 40க்கும் மேல் களஞ்சியம் வந்துள்ளது.

  பார்ப்பனர்கள் கைகளில் வலிமையான ஆயுதமாக பத்திரிகைகள் இருந்தன. அமைச்சராக இருந்தபோது பொப்பிலி அரசர் கஸ்தூரி அய்யங்காருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் பொப்பிலியரசர் சென்று பார்ப்பார். ஏனென்றால், பத்திரிகை தயவு அவர்களுக்கு வேண்டி யிருந்தது. நான் மக்களிடம் தினமும் 10ஆயிரம்பேரிடம் பேசி வருபவன் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்கள்.

  இந்த பத்திரிகைத்துறை அனைத்தும் பார்ப்பனர் களிடம் உள்ளது. ஜஸ்டிஸ் கட்சி நஷ்டம் அடைந்து, பத்திரிகை ஆபீஸ் ஏலத்துக்கு வந்தது. அதை நான்தான் எடுத்தேன் என்றார். ஏலத்துக்கு எடுக்கப்பட்டதுதான் இன்றைக்கும் விடுதலை நாளிதழாக உள்ளது.

  தமிழ் ஓவியா said...


  ஆதித்தனார் Innovation புத்தாக்கம் செய்தவர். பெரியார் ஓவியக்காரர், போட்டோ கலைஞர் அல்ல. எக்ஸ்ரே நிபுணர்போல்தான் பேசுவார். உள்ளதை உள்ளவாறே பேசுவார். நண்பர் ஆதித்தனார் கஷ்ட, நஷ்டம் பட்டார். அவர் பத்திரிகை பார்ப்பனப் பத்திரிகைகளின் பல்லைப் பிடுங்கிவிட்டது. அதற்காக அதில் உள்ள செய்திகளை எல்லாம் ஆதரிக்கிறேன் என்பதல்ல. (இது கொள்கை) புரட்சியைச் செய்தார் என்று பெரியார் பேசியுள்ளார்.

  அதற்கு முன் தேசிய இயக்கங்களின் தலைவர்கள் பெயரில் பத்திரிகை ஆசிரியர்களே அறிக்கை வெளியிடுவார்கள். தினத்தந்தி வந்தபின் மாற்றினார்கள்.

  ஏட்டின் கருத்தை ஏற்கலாம் ஏற்காமல் போகலாம். சமூக அநீதியாக இருந்ததை, நான்காவது தூணாக மாற்றி யவர் ஆதித்தனார். ஏழை, எளிய அடித்தள மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. ஆதித்தனார் உயிர் தமிழுக்கு என்றார்.

  அண்ணா தமிழருக்கு அளவு கோல் என்று கூறும்போது, மொழியால், விழியால், வழியால் தமிழர் என்று கூறுவார். ஆதித்தனார் சபாநாயகராக இருந்தபோது திருக்குறள் சட்டசபை நிகழ்ச்சியில் இடம்பெற்றது. தினத்தந்தியில் கேலிச்சித்திரம் அருமையாக வரும். குறுந்தாடியுடன் ஆதித்தனார் காந்தி நகரில் இருப்பார். நான் கஸ்தூரிபாய் நகரிலிருந்தேன்.

  அப்போது அவரது இல்லம் செல்வேன். இரவு 1 மணிவரை பேசிக்கொண்டிருப்போம். பேசிக்கோண்டிருக்கும்போதே எட்டு காலச் செய்திகுறித்து பேசுவார். தமிழ்நாட்டில் பொதுவாழ்க்கை சாதாரணமானதல்ல. அவருடைய தாடிகுறித்தெல்லாம் எழுதினார்கள். அப்போது வழக்கு போடவேண்டும் என்றபோது வேண்டாம் என்று ஆதித்தனார் மறுத்துவிட்டார். இன்றைக்கு கொள்கை வழியில் எழுதும்போதுகூட வழக்கு என்கிறார்கள். சகிப்புத்தன்மையே இல்லை.

  பல்கலைக்கழகங்களில் இதழியல் துறையில் இந்த நூல் பாடமாக வைக்கப்பட் வேண்டும். அரசியல், மொழி, பண்பாடு துறைகளில் மாற்றம் ஏற்பட்டது. தனியாருக்கு உரிமை உள்ளது என்றாலும், பொது உரிமையை உடையது. ஆதித்தனார் மாணவர் அ.மா.சாமி எழுதிய நூலை வெளியிட பெரியாரின் மாணவனாகிய எனக்கு அற்புதமான வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.

  -இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரையில் குறிப்பிட்டார்.

  விழாவில் உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகப் பொதுச்செயலாளர் அ.அய்யூப், எழுத்தாளர், ஊடக வியலாளர் கோமல் ஆர்.கே. அன்பரசன் பேசினார்கள்.

  விழாவில் காங்கிரசு கட்சியின் மூத்தத் தலைவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், தஞ்சை கூத்தரசன், ஊடகவி யலாளர்கள் லேனா தமிழ்வாணன், வசீகரன், மாநில பகுத்தறிவாளர் கழகப்பொதுச்செயலாளர் வீ.குமரேசன், பகுத்தறிவாளர் கழக வட சென்னை மாவட்டத் துணைத்தலைவர் வெங்கடேசன், திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் மயிலை சேதுராமன், எம்.கே.காளத்தி, சண்முகப்பிரியன், பொறியாளர் குமார், பெரியார் மாணாக்கன் உள்பட பலரும் கலந்துகொண்டார்கள்.

  உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் அப்துல் வகாப் நன்றி கூறினார்.

  Read more: http://viduthalai.in/page-3/94040.html#ixzz3O3oESSxS

  தமிழ் ஓவியா said...


  ஆதித்தனார் Innovation புத்தாக்கம் செய்தவர். பெரியார் ஓவியக்காரர், போட்டோ கலைஞர் அல்ல. எக்ஸ்ரே நிபுணர்போல்தான் பேசுவார். உள்ளதை உள்ளவாறே பேசுவார். நண்பர் ஆதித்தனார் கஷ்ட, நஷ்டம் பட்டார். அவர் பத்திரிகை பார்ப்பனப் பத்திரிகைகளின் பல்லைப் பிடுங்கிவிட்டது. அதற்காக அதில் உள்ள செய்திகளை எல்லாம் ஆதரிக்கிறேன் என்பதல்ல. (இது கொள்கை) புரட்சியைச் செய்தார் என்று பெரியார் பேசியுள்ளார்.

  அதற்கு முன் தேசிய இயக்கங்களின் தலைவர்கள் பெயரில் பத்திரிகை ஆசிரியர்களே அறிக்கை வெளியிடுவார்கள். தினத்தந்தி வந்தபின் மாற்றினார்கள்.

  ஏட்டின் கருத்தை ஏற்கலாம் ஏற்காமல் போகலாம். சமூக அநீதியாக இருந்ததை, நான்காவது தூணாக மாற்றி யவர் ஆதித்தனார். ஏழை, எளிய அடித்தள மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. ஆதித்தனார் உயிர் தமிழுக்கு என்றார்.

  அண்ணா தமிழருக்கு அளவு கோல் என்று கூறும்போது, மொழியால், விழியால், வழியால் தமிழர் என்று கூறுவார். ஆதித்தனார் சபாநாயகராக இருந்தபோது திருக்குறள் சட்டசபை நிகழ்ச்சியில் இடம்பெற்றது. தினத்தந்தியில் கேலிச்சித்திரம் அருமையாக வரும். குறுந்தாடியுடன் ஆதித்தனார் காந்தி நகரில் இருப்பார். நான் கஸ்தூரிபாய் நகரிலிருந்தேன்.

  அப்போது அவரது இல்லம் செல்வேன். இரவு 1 மணிவரை பேசிக்கொண்டிருப்போம். பேசிக்கோண்டிருக்கும்போதே எட்டு காலச் செய்திகுறித்து பேசுவார். தமிழ்நாட்டில் பொதுவாழ்க்கை சாதாரணமானதல்ல. அவருடைய தாடிகுறித்தெல்லாம் எழுதினார்கள். அப்போது வழக்கு போடவேண்டும் என்றபோது வேண்டாம் என்று ஆதித்தனார் மறுத்துவிட்டார். இன்றைக்கு கொள்கை வழியில் எழுதும்போதுகூட வழக்கு என்கிறார்கள். சகிப்புத்தன்மையே இல்லை.

  பல்கலைக்கழகங்களில் இதழியல் துறையில் இந்த நூல் பாடமாக வைக்கப்பட் வேண்டும். அரசியல், மொழி, பண்பாடு துறைகளில் மாற்றம் ஏற்பட்டது. தனியாருக்கு உரிமை உள்ளது என்றாலும், பொது உரிமையை உடையது. ஆதித்தனார் மாணவர் அ.மா.சாமி எழுதிய நூலை வெளியிட பெரியாரின் மாணவனாகிய எனக்கு அற்புதமான வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.

  -இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரையில் குறிப்பிட்டார்.

  விழாவில் உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகப் பொதுச்செயலாளர் அ.அய்யூப், எழுத்தாளர், ஊடக வியலாளர் கோமல் ஆர்.கே. அன்பரசன் பேசினார்கள்.

  விழாவில் காங்கிரசு கட்சியின் மூத்தத் தலைவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், தஞ்சை கூத்தரசன், ஊடகவி யலாளர்கள் லேனா தமிழ்வாணன், வசீகரன், மாநில பகுத்தறிவாளர் கழகப்பொதுச்செயலாளர் வீ.குமரேசன், பகுத்தறிவாளர் கழக வட சென்னை மாவட்டத் துணைத்தலைவர் வெங்கடேசன், திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் மயிலை சேதுராமன், எம்.கே.காளத்தி, சண்முகப்பிரியன், பொறியாளர் குமார், பெரியார் மாணாக்கன் உள்பட பலரும் கலந்துகொண்டார்கள்.

  உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் அப்துல் வகாப் நன்றி கூறினார்.

  Read more: http://viduthalai.in/page-3/94040.html#ixzz3O3oESSxS

  தமிழ் ஓவியா said...

  கோட்சேவை புனிதப்படுத்துகிறார் மோடி: ராஜேஷ் எம்.பி. குற்றச்சாட்டு


  பாலா (கேரளா), ஜன. 6_- மகாத்மா காந்தியாரை ஓரங்கட்டிவிட்டு கோட் சேவை மகத்துவப்படுத்த முயல்கின்ற நரேந்திர மோடி, நாட்டில் மத வெறியை வளர்த்து இந்து நாட்டை நிறுவ முயல் கிறார் என்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் எம்.பி. ராஜேஷ் (நாடாளுமன்ற உறுப்பினர்) குற்றம் சாட் டினார். இது இந்தியாவை மதவாத நாடுகளான பாகிஸ்தான், வங்க தேசம் போன்ற சீர்குலைவு நிலைக்கு இட்டுச் செல்லும் என்றும் ராஜேஷ் கூறினார்.

  மதவெறிக்கும், ஊழ லுக்கும் எதிராக போராட் டம்தான் ஒரே வழி என்ற முழக்கத்தை முன்வைத்து வாலிபர் சங்கம் பாலா என்ற இடத்தில் நடத்திய இளைஞர் சங்கம நிகழ்ச்சி யைத் தொடங்கி வைத்து ராஜேஷ் பேசினார்.நல்ல காலம் பிறக்கப் போகிறது என்ற பிரமையை உரு வாக்கி அதிகாரத்தில் அமர்ந்தமோடி, கர்வாபஸி போன்ற மத வகுப்புவாத நட வடிக்கைகளின் மறை வில் நாட்டின் செல்வங் களை கார்ப்பரேட் முதலா ளிகளின் காலடியில் சமர்ப் பிக்கின்ற கொள்கைகளைத் தான் அமல் படுத்துகிறார்.

  மதச்சிறுபான்மையினரிடையே பாதுகாப்பற்ற நிலை மையை உருவாக்கி மக்கள் மனதில் பிளவு விதை களைத் தூவுகிறது பா.ஜ.க. அரசு. தேசிய அளவில் கிறிஸ்துமஸ் தினத்தை உழைப்பு தினமாக்கிய மத்திய அரசு பக்ரீத் விடு முறையையும் ஒழித்துக் கட்டும் முயற்சியில் ஈடுபட் டுள்ளது.

  கல்வி - கலாச்சா ரத் துறை களில் மூட நம் பிக்கைகளுக்கும் அறிவிய லுக்கும் புறம்பான நிலை பாடுகளுக்கும் அங்கீகாரம் அளித்து நாட்டின் வர லாற்றை, நாட்டின் முகத் தோற்றத்தை தலைகீழாக மாற்ற முயல்கிறார்கள். மதச்சார்பற்ற இந்தியா வின் தேசியப் பதாகை ஏந்திய ஆடம்பரக் காரில் பயணம் செய்கிற கோட்சே மனம் படைத்த பிரதமர், அம்பானி - அதானிக ளுக்கு சேவை செய்யும் பணியில்தான் தீவிரமாக உள்ளார்.

  நாட்டில் பட்டினி, விலை உயர்வு போன்றவற் றைக் கட்டுப் படுத்தும் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாத மோடி ஆட்சி, அதானி வெளி நாட் டில் நிலக்கரிச் சுரங்கத் தொழில் ஆரம்பிக்க எஸ் பிஅய் வங்கியிலிருந்து ரூ.6200 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

  பெட்ரோல் விலைக் கட்டுப் பாட்டை நீக்க மன்மோகன்சிங் அரசு 6 ஆண்டுகள் காத்திருந்தது என்றால், மோடி அரசு ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் டீசல் மீதான விலைக் காட்டுப்பாட்டை நீக்கியது. பெரும் ஏகபோக முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை மோடி அரசு ஏற்படுத்திக் கொடுத்துள் ளது.

  மருந்துகளின் விலை யைத் தீர்மானிக்கும் உரி மையை மருந்துக் கம் பெனிகளுக்கு அளிக்கப் பட்டிருப்பதன் மூலம் ஏழை மக்களின் மருத்துவச் செலவை மோடி அரசு பெரு மளவு அதிகரித்துள்ளது.

  ஆதாரை எதிர்த்த பாஜக அரசுஅதிகாரத் திற்கு வந்தபின் ஆதாரை கட்டாயமாக்கி விட்டது. 12 ஆக இருந்த சமையல் வாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9 ஆக குறைக்க முடிவு செய்துள் ளது.

  பல பத்தாண்டுகளாக தொழிலாளர்களுக்கு கிடைத்து வந்த பிஎப், இஎஸ்அய் சலுகைகளை ரத்து செய்வதற்கும், தொழி லாளர்களை முதலாளிகள் தங்கள் இஷ்டப்படி வேலை நீக்கம் செய்வதற்குமான சட்டத்தை அமல்படுத்துவ தும் பா.ஜ.க. அரசின் புத் தாண்டுப் பரிசாகும் என் றும் ராஜேஷ் கூறினார்

  Read more: http://viduthalai.in/page-8/94037.html#ixzz3O3qC1HkA

  தமிழ் ஓவியா said...

  சங்கராச்சாரியார்மீதான கொலை வழக்கு:

  தீர்ப்பை எதிர்த்து களமிறங்கும் சமூக சேவகர்!


  புதுச்சேரி, ஜன.7_ காஞ்சி புரம் வரதராஜப் பெரு மாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை செய் யப்பட்ட வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.

  கடந்த 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வளா கத்திலேயே படுகொலை செய்யப்பட்டார் மேலாளர் சங்கரராமன். இந்த கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 23 பேர் மீது வழக் குப் பதிவு செய்யப்பட்டது.

  தமிழகத்தில் நடை பெற்ற இந்த வழக்கு புதுச் சேரி மாநிலத்துக்கு மாற் றப்பட்டு தலைமை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப் பட்டனர். அதன்பின் சங்கரராமன் கொலை வழக்கில் புதுவை அரசு மேல்முறையீடு செய்ய வில்லை. இந்நிலையில், சென்னை கிழக்கு தாம் பரத்தைச் சேர்ந்த சமூக சேவகர் வாராகி என்பவர் புதுவை தலைமை குற்ற வியல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு புதுவை தலைமை குற்றவியல் நீதி மன்ற நீதிபதி வேல்முருகனி டம் தாக்கல் செய்யப்பட் டது. வாராகி அளித்துள்ள மனுவில், எனக்கு சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பின் சான்றளிக்கப்பட்ட ஆவ ணங்கள் அளிக்கவேண் டும்.

  டாக்டர் மன்மோகன் சிங், சுப்பிரமணிய சுவாமி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில் குற்ற வியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோரை விடு தலை செய்ததற்கு எதிராக எந்தக் குடிமகனும் மறு ஆய்வு மனு தாக்கல் செய் யலாம் என குறிப்பிடப் பட்டுள்ளது. சங்கரராமன் கொலை வழக்கில் அரசு தரப்பு மேல்முறையீடு செய்ய நட வடிக்கை எடுக்கவில்லை. இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்த்து நான் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய விரும் புகிறேன். எனவே, வழக்கு தொடர்பான தீர்ப்பு நகல்கள் மற்றும் ஆவணங் களை எனக்கு அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். சங்கரராமன் கொலை வழக்கு மேல்முறையீடு செய்யத் தகுதியற்றது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு சமர்ப்பித்துள்ள அறிக் கையில் தெரிவித்திருந்தார். சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திர சரஸ் வதி மற்றும் விஜயேந்திர சரஸ்வதி ஆகியோரை கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி புதுச்சேரி நீதிமன்றம் விடுவித்தது. அப்போது மேல்முறையீடு செய்ய 90 நாள்கள் அவகாசமிருந்தது. தொடக்கத்தில் மேல்முறை யீடு செய்ய புதுச்சேரி அரசு ஆர்வமற்று இருந்தது. அதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முன்னாள் துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா அனுமதியளித்தார். இதுகுறித்து வீரேந்திர கட்டாரியா கூறும்போது, தனக்கு இந்த வழக்குபற்றி முழு விவரங்களும் சொல் லப்படவில்லை என்றார். இந்தப் பின்புலத்தில் தான் புதுச்சேரி அரசு மத்திய உள்துறை அமைச் சகத்தின் மூலமாக இந்த விஷயத்தில் அட்டர்னி ஜெனரலின் கருத்தைக் கோரியது. காஞ்சி சங்க ராச்சாரியார்களை விடுவிப் பதற்கு விசாரணை நடத் தப்பட்ட விதம், சாட்சி யங்கள் உருவாக்கப்பட்ட விதம் உள்ளிட்ட 20 கார ணங்களைப் பட்டியலிட் டுள்ளது புதுச்சேரி நீதி மன்றம். மேலும் 189 சாட் சியங்களில் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 83 பேர் பிறழ் சாட்சியங்கள் ஆயினர். எனவே இந்த வழக்கு மேல் முறையீடு செய்யத் தகுதி யற்றது என்று குறிப்பிட்டி ருந்தார். இந்த நிலையில் சங்கர ராமன் கொலை வழக்கிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட உள்ளதால் வழக்கு மீண்டும் சூடு பிடிக் கத் தொடங்கி உள்ளது.

  Read more: http://viduthalai.in/e-paper/94056.html#ixzz3O9AC8QIc

  தமிழ் ஓவியா said...

  எப்படியாவது இந்துப் பெண்கள் நான்கு குழந்தைகளைப் பெறவேண்டுமாம்: சொல்கிறார், பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி சாமியார்


  லக்னோ, ஜன.7_ பாஜக நாடாளுமன்ற உறுப் பினரும் கோட்சேவை தேசபக்தர் என்று புகழ்ந்த வருமான சாக்ஷி என்ற சாமியார் இந்துப் பெண் கள் ஒவ்வொருவரும் எப் படியாவது 4 குழந்தை களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் ஒரு கோமாளித் தனமான உளறலைக் கொட்டியுள்ளார்

  உத்தரபிரதேசம் மீரட் நகரில் நடந்த ஒரு மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக சாமியார் எம்பி சாக்ஷி தனது உரையில் கூறியதாவது: தற்போது மதமாற்றம் குறித்து பல்வேறு எதிர்க் கட்சிகள் பேசி வருகிறது. இது மதமாற்றம் அல்ல; தாய் மதம் திரும்ப வரு கிற நிகழ்ச்சிதான். மத மாற்றம் என்பது இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்குத் செல்லு வதைத்தான் குறிப்பிட வேண்டும். மதமாற்றம் செய்பவர்களைத் தூக்கில் போடவேண்டும் அதைச் சட்டமாக்கவும் பாஜக தயாராக உள்ளது.

  நாதுராம் கோட்சே விற்கு சிலைவைப்பது பற்றி நான் தற்போது ஒன்றும் கூறமுடியாது.

  இந்திய நாடு பல்வேறு கலாச்சாரங்களை உள்ள டக்கியது. இங்கு அனை வரும் ஒரே சிந்தனையில் இருப்பவர்கள் என்று கூறமுடியாது. பலருக்கு பல்வேறு சிந்தனைகள் இங்கே கடவுளை பன்றி வடிவிலும் வழிபடும் வழக்கம் உள்ளது. கழு தையையும் பூஜை செய்யும் மக்கள் இருக்கிறார்கள். மீரா கடவுளை பாம் பிற்குள்ளே பார்த்தாள், அவரவர்களுடைய எண் ணம் ஆகவே கோட் சேவை சிலர் புனிதராக பார்க்கின்றனர், அவ்வள வுதான் என்றார். மேலும் அவர் கூறிய தாவது, இதுவரை இருந்த இந்து விரோத அரசுகள் நாம் இருவர் நமக்கு இரு வர் என்ற கோரிக்கையை வைத்து இந்துக்களின் எண் ணிக்கையை குறைத்து விட்டனர். இனிமேல் மக்கள் நாம் இருவர் நமக்கு இருவர் என்பதை கருத்தில் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு இந் துக்களும் நான்கு அல்லது அதற்குமேல் குழந்தை களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்துக்கள் எப்படியும் கட்டாயமாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

  அப் போதுதான் இந்துக்களின் எதிர்காலமும் இந்து தர் மமும் காக்கப்படும் என்றார்.

  Read more: http://viduthalai.in/e-paper/94054.html#ixzz3O9AKmeUy

  தமிழ் ஓவியா said...

  மாட்டுக்கறி வறுவல்!

  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (சி.பி.எம்.) 6.1.2015 அன்று பிற்பகல் 3 மணிக்கு - செங்கற்பட்டில் நடை பெறும் சுயமரியாதை மாநாட் டில் மாட்டுக்கறி வறுவல் சிறப்பு விற்பனை மய்யத் தைத் தொடங்குகிறது - வரவேற்கத்தக்கதே!

  இன்றைக்கு 40 ஆண்டு களுக்கு முன்பே திராவிடர் கழகம் இத்தகு மாட்டுக்கறி விருந்தை ஓர் இயக்கமா கவே நடத்தியது குறிப்பிடத் தக்கதாகும்.

  Read more: http://viduthalai.in/e-paper/94052.html#ixzz3O9AWgwTh

  தமிழ் ஓவியா said...

  சுயமரியாதை வரலாற்றுப் புத்தகத்தில் ஓர் அரிய பாடம்


  ஆசிரியருக்குக் கடிதம் >>>

  சுயமரியாதை வரலாற்றுப் புத்தகத்தில் ஓர் அரிய பாடம்

  ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மை யார் அவர்களின் மரணம், ஓர் இயற் கையின் விதியாகும். பகுத்தறிவாளர்கள் தாம் வாழுகின்ற காலத்தை, தனக்கும், பிறருக்கும் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்கின்றனர். அந்த வகையிலே அம்மா அவர்கள் வாழ்ந்த காலம் வீட்டிற்கும், நாட் டிற்கும் பயனுள்ளதாக அமைந்திருப்பதே மிகவும் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக் கும் உரியதாகும்.

  நான், அம்மா அவர்களின் மரண சாசனத்தை ஒரு தடவைக்கு நான்கு தடவைகள் படித்துப் பார்த்தேன். அதில் ஒவ்வொரு வரியும், வைர வரிகளாகும். பிறருக்கும் நல்ல எடுத்துக் காட்டுகளாகும்.

  தன்னுடைய பெற்றோர்கள், அன்பான அரவணைப்போடு, பகுத்தறிவுப் பாலூட்டி சுயமரியாதைக் கருத்துக்களோடு ஊறிப் பிறந்ததை, நினைவூட்டி தன் பெற்றோர் களைப் பெருமைப்படுத்தியிருக்கிறார்.
  தந்தை பெரியாரின் அன்பான தலைமை, நல்ல தலைவர், நல்ல கொள்கை, சமுதாய சீர்திருத்தப்பணி, தந்தை பெரியாரே, மண மகனைத் தேர்வு செய்து, தம் செலவிலேயே திருமணம் செய்வித்த மிகப்பெரும் பேறு பெற்றேன் என்று தன்னுடைய நன்றி யுணர்வை வெளிப்படுத்தி பெரியாருக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

  இந்தியக் குடிமக்களின் சராசரி வயதான அறுபதைத் தாண்டி வாழ்ந்து கொண்டிருக் கிறேன் என்பதே மகிழ்ச்சிக்குரியது தானே? என்ற வினாவை வயது 76 இல் எழுப்பி, 81 வயது வரை நிறை வாழ்வு வாழ்ந்தார்கள்.

  மனித நேயப் பண்பாளர் டார்பிடோ, ஜனார்த்தனம் என் துணைவராகக் கிடைத்த காவிய வாழ்க்கை வாழ்ந்தோ மென்று தன் இணையரைப் பெருமைப் படுத்தியிருக்கிறார்.

  தந்தை பெரியாரின் கருத்துகளை உலகம் முழுவதும் பரப்பிடும் பணியை, கல்விக் கூடங்களைப் பெருக்கி, அரசியல் மாற்றங் களை ஏற்படுத்திடும் அரிய தலைவர் நாட் டுக்குக் கிடைத்திருப்பதையெண்ணி, இறும் பூதெய்துகிறேன் என்று ஆசிரியர் அய்யா வீரமணியாரைப் பெருமைப்படுத்தியிருக் கிறார்.

  பெரியார் தந்த துணிவோடு, ஆசிரியரின் வழிகாட்டுதலோடு, சமுதாயப் பணியில் மன நிறைவோடு, மரணத்தையும் மகிழ்வோடு தழுவிக் கொண்ட மனோரஞ்சிதம் அம் மாவை எண்ணியெண்ணி என் உள்ளம் நெகிழ்கிறது.

  தன்னுடைய இறப்பிற்குப் பின்னாலும், தன்னுடைய உடல் மறைவதற்குள் ஏதாவது நன்மை செய்திட முடியாதா? என்று எண் ணியிருப்பார்கள் போலிருக்கிறது, என்ன விநோதம்! எனக்கு மாலைக்குப் பதில் விடுதலை சந்தா தாருங்கள் என்று கேட்ட தலைவரைப்போல என் உடலுக்கு மாலை போட வேண்டாம். அதற்குப் பதில் என் உட லருகில் உண்டியல் வைத்து நிதி தாருங்கள் என்று சொன்ன அந்த தொண்டரின் மனப் பாங்கை நான் என்னவென்று சொல்வேன்!

  தலைவரைப் போலவே தொண்டர், தொண்டரைப் போலவே தலைவர். தொண்டன் நினைப்பதையே தலைவர் நினைக்கிறார். தலைவர் நினைப்பதையே தொண்டனும் நினைக்கிறார். உலகத்திலே இப்படியொரு விந்தையான இயக்கம் எங்காவது உண்டா? சாவுக்கு வருகின்ற மாலையைக்கூட வீணாக்க மனமின்றி, வாழ்வோருக்குப் பயன்படும் வித்தையினை கற்றுத் தந்த வித்தகர் யாரோ? அவர்தான் தந்தை பெரியாரோ! அம்மா நெஞ்சினில் நிறைந் தாரோ! அம்மாவின் எண்ணம் நிறை வேறியது. நாகம்மையார் இல்லத்துக்கு மாலைக்குப்பதில் கிடைத்த நன்கொடை கள் ரூ. 25,021/-

  ஒருவர் இறந்துவிட்டால், சமுதாய நடப்பிலே, பெரிய காரியம் ஆகிவிட்டது என்று சிலர் சொல்லுவார்கள். கெட்ட காரியம் ஆகிவிட்டது என்றும் சிலர் சொல்லுவார்கள். அம்மாவின் மரணத் திலும், ஒரு நல்ல காரியம் பார்த்தீர்களா? இது தான் பகுத்தறிவு. இது தான் தன்னல மறுப்பு. இது தான் சுயமரியாதை இயக்கம் பார்த்தீர்களா? தோழர்களே!

  அடிக்க அடிக்க பந்து எகிறுவது போல யார் தடுத்தாலும் அலைகள் அடிப்பதைப் போல எவ்வளவு நெருக்கடிகள், எவ்வளவு இடையூறுகள் வந்தாலும், அதையும் தாண்டி ஓர் இயக்கம், ஒரு நூற்றாண்டை நோக்கி வீறுநடை போடுகின்றதென்றால், மனோரஞ்சிதம் அம்மா போன்ற இயக்கக் கண்மணிகள், இல்லை வீரப்பெண்மணி கள் இருப்பதனாலன்றோ!

  சட்ட எரிப்புப் போராட்டத்திலே, சிறைக்கஞ்சா அந்த வீரப்பெண்மணியை, மரணம் தன் சிறையிலே அடைத்துக் கொண்டது. எனினும் அவர் புகழை, யாராலும் சிறையிட முடியாது. ஆம், அம்மா அவர்கள் ஓர் காவியமாக நினைவு ஓவியமாக, சுயமரியாதை இயக்க சரித் தித்தில் மறக்கவொண்ணா ஓர் நீங்கா இடம் பெற்று விட்டார். ஆம் அம்மா ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அவர்களின் புகழ், வாழ்க! வாழ்க! வாழ்கவே!

  வீர வணக்கம்! நன்றி!

  - கா.நா.பாலு (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம், மேட்டூர் மாவட்டம்)

  Read more: http://viduthalai.in/e-paper/94062.html#ixzz3O9B3v0r9

  தமிழ் ஓவியா said...

  ராம்தேவுக்குப் பத்மபூஷண் விருதாம்!

  ராம்தேவ் என்ற சாமியாருக்கு மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு பத்ம பூஷண் விருது அளிக்க முடிவு செய்துள்ளதாம். இதன்மூலம் இத்தகு விருதுகள் எத்தகைய கேவலத்தின் உச்சியைத் தொட்டுள்ளன என்பது தெளி வாகிறது. ரொமிலா தாப்பர் போன்றவர்கள் இதுபோன்ற விருதுகளை ஏன் புறக்கணித்தனர் என்பது இப்பொழுது தான் புரிகிறது.

  போகிற போக்கைப் பார்த்தால் காந்தியாரைப் படு கொலை செய்த நாதுராம் கோட்சேவுக்குக்கூட இத்தகைய விருதுகள் அளிக்கப்படலாம் என்று தோன்றுகிறது.

  யாரிந்த ராம்தேவ்?

  தனது யோகா மருத்துவ முறைகளால் எவ்வித நோயையும் குணப்படுத்த முடியும் என்று வாய்ச்சவடால் விட்ட இவரை, 2006 ஆம் ஆண்டில் என்.டி.டி..வி.யில் மடக்கியவர் இந்திய அறிவியல் மற்றும் பகுத்தறிவாளர் சங்கத்தின் பிர்பீர்கோஷ். அவர் ராம்தேவிடம் வைத்த சவால் என்ன தெரியுமா?
  தான் அனுப்பும் ஒரு நோயாளியையும், டில்லியைச் சேர்ந்த ஒரு வழுக்கைத் தலையரையும் நவீன மருத்துவ முறைகளைப் பின்பற்றாமல் முற்றிலும் ராம்தேவ் நம்பும் யோகா மருத்துவ முறைகளைக் கையாண்டு குணப்படுத்த முடியுமா? என்பதுதான் அந்தச் சவால். ஆனால், அதனை எதிர்கொள்ளாமல் நழுவியவர்தான் இந்தப் பேர்வழி!

  ராம்தேவ் தயாரித்த ஆயுர் வேத மருந்துகளில் கலப் படங்கள் இருப்பதாகக் குற்றச்சாற்று எழுந்தது. சென்னை, அய்தராபாத், கொல்கத்தா முதலிய ஆய்வகங்களில் அந்த மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புகள் கலக்கப் பட்டதற்கான தடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. எந்த ஒரு மருந்துப் பொருளிலும் அதன் உள்ளடக்கப் பொருள்கள் இன்னின்னவை என்று பொறிக்கப்பட்டிருக்கும். அது கட்டாயமும்கூட; ஆனால், இந்த ராம்தேவ் தயாரித்து விற்கப்பட்ட மருந்துகளில் அத்தகு விவரங்கள் கிடையாது.

  காங்கிரசின் பொதுச்செயலாளரான திக்விஜய் சிங் இந்த யோகா குரு என்றழைக்கப்பட்ட ராம்தேவ் பற்றி பல பிரச்சினைகளை எழுப்பியதுண்டு. பல கோடி சொத்துகள் எப்படி அவருக்கு வந்தன? அவற்றிற்கு முறையாக வருமான வரி செலுத்தப்பட்டதா? ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபடும் இந்த ராம்தேவுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டது எந்த அடிப்படையில்? என்பது போன்ற கேள்விகள் அவை!

  1995 ஆம் ஆண்டில் திவ்யா யோக மந்திர் என்ற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கினார். 2003 ஆம் ஆண்டில் ஆஸ்தா தொலைக்காட்சியில் யோகா கற்றுத்தரத் தொடங்கியதுமுதல் பிரபலமானார். (தொலைக் காட்சியல்லவா!). பின்னர் உத்தரப்பிரதேச மாநிலம் அரித்துவாரில் பதஞ்சலி என்ற யோகா பீடம் அமைத்தார். ஆயுர்வேத மருத்துவமனை, பல்கலைக் கழக மருந்துத் தயாரிப்புத் தொழிற்சாலை, அழகு சாதனத் தொழிற்சாலை எனப் பெரும் ஆலை முதலாளியாக உருவெடுத்தார்.

  200 நிறுவனங்களுக்குச் சொந்தக்கார பெருமுதலாளியாக உருவெடுத்தார்.

  யோகா சொல்லிக் கொடுத்த அந்த ஆஸ்தா தொலைக்காட்சியையே விலைக்கு வாங்கினார் என்றால், அவரின் பொருளாதார வளர்ச்சியை எளிதில் தெரிந்து கொள்ளலாமே (ஒரு சாமியாருக்குத் தேவையானவையா இவை என்று யாரும் கேட்கவேண்டாம்!)

  மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ஊழல் ஒழிப்பு உத்தமராகத் தன்னைக் காட்டிக்கொள்ள முற்பட்டார். (இவரின் பின்னணியில் பி.ஜே.பி,. சங் பரிவார் இருந்தன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்).

  வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை மீட்கவேண்டும் என்றும், அதற்காக பட்டினிப் போராட்டம் இருக்கப் போவதாக மிரட்டினார். அவரை விமான நிலையத்திலேயே சந்தித்து, சமாதானம் செய்தார்கள் மத்திய அமைச்சர்கள் என்பதெல்லாம் எத்தகைய சிறுபிள்ளைத்தனம்!

  ராம்லீலா மைதானத்தில் பட்டினிப் போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்தார். ஊடகங்கள் ஊது குழல்களாக மாறின. ராம்லீலா மைதானம் முழுவதுமே பிரம்மாண்டமாக அலங்காரப் பந்தல் போடப்பட்டது மட்டு மல்ல; முழுமையாக குளிர்சாதன வசதியும் செய்யப்பட்டது. இதற்காக, 18 கோடி ரூபாய் வசூல் கொள்ளை! இன்னொரு பக்கத்தில். ஆர்.எஸ்.எசுடன் கைகோத்து பட்டினிப் போராட்ட நாடகத்தைத் தொடங்கினார் (ஊழல் ஒழிப்பு முன்னணி ஒன்றை ஆர்.எஸ்.எஸ். தொடங்கியது. அதில் ஒரு புரவலர் இந்த பாபா ராம்தேவ்).

  பட்டினிப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, காவல் துறை ராம்லீலா மைதானத்தில் நுழைந்தபோது, இந்த வீராதி வீரர் ராம்தேவ் என்ன செய்தார் தெரியுமா? சுடிதார் போட்டுக்கொண்டு, முகத்தை மூடிக்கொண்டு தப்பிக்க முயற்சி செய்தார் என்பது எவ்வளவுக் கேவலம்!

  இத்தகு ஒரு நாலாந்தர மனிதனுக்கு மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சி பத்மபூஷண் விருது அளிக்க முடிவு செய்துள்ளது என்றால், இந்த ஆட்சியின் யோக்கியதாம்சம் என்ன என்பதை எளிதிற் தெரிந்துகொள்ளலாம்.

  இந்தியத் துணைக் கண்டத்தில் இப்படியொரு கேடு கெட்ட ஆட்சியா? வெட்கக்கேடு!

  Read more: http://viduthalai.in/e-paper/94059.html#ixzz3O9BP0G52

  தமிழ் ஓவியா said...

  கருநாடகத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பாராட்டு!

  கருநாடகா, ஜன. 7_ இதுகுறித்து கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் மு.சானகிராமன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:_

  இந்தியாவிலேயே முதன் மாநிலமாக சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற் கொள்ளும் வழிகாட்டி மாநிலமாக கருநாடக மாநிலத்தை கணக்கெ டுப்பு பணியை மேற்கொள் வதற்கு முதலமைச்சர் அவர்களை கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் பாராட்டி, வரவேற்கிறது.

  1931ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் எந்த ஒரு சாதிவாரி கணக்கும் துல்லியமாகப் பராமரிக் கப்படாமல் 12 அய்ந் தாண்டு திட்டங்கள் நிறை வேற்றியும் மக்களுக்கு எந்த திட்டங்களும் இல குவாக சென்றடையவில்லை என்பதே உண்மையாகும்.

  இதனால்தான் தந்தை பெரியார் சுதந்திரம் பெற் றோம் சுகவாழ்வு பெற் றோமா? எனக் கேட்டார். அதற்கான விடையும், தேவையும் பூர்த்தி செய் யப்படாமலே உள்ளன.

  சாதிவாரிக் கணக் கெடுப்பு பணி செய்து, நாட்டில் எந்தெந்த வகுப் பினர் எவ்வளவு பேர்கள் உள்ளனர். அவர்களின் பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முழு புள்ளி விவரங்கள் அரசிடமில்லை. அதனால் மக்களின் வளர்ச் சிக்கு ஏற்ற திட்டங்களை செயல்படுத்த முடிய வில்லை.

  இதனைக் கருத் தில் கொண்ட கருநாடக முதலமைச்சர் சித்தரா மையா அவர்கள் ஏப்ரல் திங்களுக்குள் சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ள முன்வந்த மைக்கு வெகுஜன மக்க ளின் சார்பாக பாராட்டு தெரிவிக்கின்றோம்.

  மேலும் அரசுப் பணியா ளர்கள் எந்தவித சுணக்க மும் காட்டாமல் பொறுப் புடனும், விடுபடாமல் துல்லியமாக கணக் கெடுப்பு செய்து, இந்தியா விற்கே முன்னோடியாக விளங்கிட ஆவன செய்திட கேட்டுக் கொள்கிறோம்.

  Read more: http://viduthalai.in/page-7/94101.html#ixzz3O9COkCKJ

  தமிழ் ஓவியா said...

  கம்பராமாயணத்தைப் பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. கம்பராமாயணம் தோன்றி இல்லாவிட்டால் நம் நாட்டின் கலை, ஒழுக்கம் கெட்டிருக்காது.

  வால்மீகி இராமாயணத்தில் ஆரியர்களின் இழிவு நன்றாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. கம்பன் அவைகளை மறைத்து அவர்களைக் கடவுளாக்கிவிட்டான். கம்பராமாயணத்தைப் போற்றுகிறவர்கள் ஆரிய அடிமைகளாய்த்தானிருக்க முடியும் என்பதே எனது உறுதியான எண்ணமாகும்.

  இராமன் ஒரு சகோதரத் துரோகி, அயோக்கியன் என்றும் கூறுவேன். தம்பியைத் துரோகம் செய்தவன் நாடு பரதனுக்கே உரித்தானதாக ஆக்கப்பட்டுவிட்டது என்பதை முன்னமே அறிந்திருந்தும், தசரதன் பட்டாபிஷேகம் செய்கிறேன் என்று கூறியபோது, இராமன் ஒப்புக்கொள்ளலாமா? அப்போதாவது தம்பி எங்கே என்று ஒரு வார்த்தையாவது கேட்டானா? சாதாரணக் குடும்பங்களில்கூட திருமணம் என்றால் அண்ணன் தம்பி எங்கே? பாட்டன் பூட்டன் எங்கே? தங்கை தமக்கை, உற்றார், உறவினரைக் கேட்கிறோமே. பரதனின் பாட்டனுக்குக்கூட கடிதம் எழுதவில்லை. இவைகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்படுகின்றன.
  பரதன் வருவதற்கு முன்னதாகவே பட்டாபிஷேகம் செய்துவிட வேண்டும் என்று தசரதன் அவசர அவசரமாக நாள் பார்த்தபோதுகூட, இராமன் ஏன் என்று தடுத்திருப்பானா? இந்தச் சூழ்ச்சியை வேலைக்காரி அறிந்து கொண்ட பிறகல்லவோ பரதனுடைய தாய்க்கு உண்மை தெரியவந்தது. இது எவ்வளவு படுமோசம்.

  மகளைத் துரோகம் செய்வதும், தம்பியைத் துரோகம் செய்வதும் மட்டுமல்ல இராமாயணத்திலிருப்பது. ஒருவனுக்கு 60 ஆயிரம் பெண்டாட்டிகள். சென்னை நகர கார்ப்பொரேஷன் கூட போதாது இக்குடும்பத்துக்கு? இந்த அக்கிரமத்தை மகாயோக்கியன் என்று கூறப்படும் இராமனாவது கேட்டானா? அவன் எப்படிக் கேட்க முடியும்?

  ஒரு பெண்ணின் மார்பையும், மூக்கையும் மானமின்றி அறுக்கத் துணிந்தவனுக்குப் பெண்ணின் பெருமையைப் பற்றி என்ன தெரிந்திருக்க முடியும்?

  இப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டிகளைக் கடவுள் என்று கூறும் கம்பன் பித்தலாட்டக்-காரன் இல்லாமல், வேறு எவனாக இருக்க முடியும். அதேபோன்று அவன் எழுதி வைத்த இராமாயணத்தைப் போற்றித் திரிந்தவர்கள் கம்பனின் பித்தலாட்டத்துக்குத் துணை புரிபவர்கள் என்பதல்லாமல், எந்த வகையில் அவர்களை மக்கள் யோக்கியர்களாய்க் கருத முடியும் என்று கேட்கிறேன்."

  - தந்தை பெரியார் , ( 10 - 11 - 1948 , விடுதலை )

  தமிழ் ஓவியா said...

  இன்றைய ஆன்மிகம்?

  நவநீத கிருஷ்ணன்

  நவநீத கிருஷ்ணன் சின்ன வயதில் வெண் ணெயைத் திருடினான் வாலிப வயதில் பெண் ணைத் திருடினான் என் கிறார்களே - இப்பொ ழுது அவன் என்ன செய்கிறானாம்? அந்த வேலையை இப்பொழுது செய்தால் கம்பி எண்ண வேண்டியது தான்.

  Read more: http://viduthalai.in/e-paper/94116.html#ixzz3OHq2QfcF

  தமிழ் ஓவியா said...

  600 ஆண்டுகால நவரத்தினங்கள் பதித்த தங்கக் கிரீடத்தைத் திருடிய அர்ச்சகப் பார்ப்பான் கைது!


  லக்னோ, ஜன.8_ 600 ஆண்டுகாலமாக கோவிலில் இருந்த நவரத்தினம் பதித்த தங்கக் கிரீடத்தைக் கோவில் அர்ச்சகப் பார்ப் பான் திருடினான்_ அவன் கைது செய்யப்பட்டான்.

  உத்தரப்பிரதேசம் பலியா நகரத்தில் உள்ள லகந்தரோட் என்ற பழங்காலக் கோட்டையில் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமை யான விஷ்ணு கோவில் ஒன்று உள்ளது. இக்கோ விலில் உள்ள விஷ்ணு சிலைக்குச் சாம்பல் மாகாணத்தின் குறுநில மன்னர்களால் வழங்கிய நவரத்தினம் இழைக் கப்பட்ட தங்கக் கிரீடம் திடீரென காணாமல் போனது. விலை மதிப்பு மிக்க தங்கக் கிரீடத்தைக் கோவில் அர்ச்சகப் பார்ப் பானே திட்டமிட்டு கொள் ளையடித்துள்ளான்.

  600 ஆண்டு காலத் திற்கு முந்தைய விலை மதிப்பு மிக்க பொருள் என்பதால் உத்தரப் பிரதேச சி.அய்.டி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரணை செய்தது. இதில் கோவில் அர்ச்சகப் பார்ப்பானே இந்தக் கிரீடத்தை சில சமூக விரோதிகளின் துணை யுடன் திருடியது தெரிய வந்தது.

  இதனைத் தொடர்ந்து அர்ச்சகப் பார்ப்பான் மற்றும் இந்தத் திருட் டுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தத் திருட்டு வழக்கு தொடர்பாக பலி யாநகர இணை ஆணை யர் கூறியதாவது: விலைமதிப்பு மிக்க இந்த கிரீடத்தின் மீது நீண்ட நாள்களாகவே அர்ச்சகப் பார்ப்பானுக்கு ஒரு கண் இருந்து வந்தது.

  இதை அப்பகுதியில் உள்ள சில சமூக விரோதிகள் மூலம் திருட திட்டமிட் டான். இதனைத் தொடர்ந்து தன்மீது சந்தேகம் எழாத வகையில் சில நாள்களாக பூசை முடிந்த பிறகு மக்களோடு மக்களாகவே அர்ச்சகப் பார்ப்பானும் கோவிலை மூடிவிட்டுச் சென்றுள் ளான்.

  மஹாபூர்ணிமா நாளன்று அலகாபாத் செல்வதாக கூறிச் சென் றவர், ரகசியமாக திருடர் களுக்கு கட்டளையிட் டுள்ளார். இதனை அடுத்து கோட்டையில் யாருமில்லாத நேரத்தில் புகுந்து கோவில் கதவை உடைத்து கிரீடத்தை திருடிச் சென்றுள்ளனர். எப்போதும்போல் கோவிலுக்கு வந்த அர்ச் சகப் பார்ப்பான், கிரீடம் திருடு போனதாக நடித் துள்ளார்.

  ஆனால், எங் களுக்கு ஆரம்பத்தில் இருந்தே அர்ச்சகப் பார்ப்பான்மீது சந்தேகம் இருந்தது. விசாரணையில் இந்தக் கொள்ளைக்கு திட்டமிட்டுக் கொடுத் தது, தான்தான் என்று ஒப்புக்கொண்டார். கிரீடம் தற்போது வேறு ஒருவரிடம் கொடுத்து வைத்துள்ளதாக தெரி கிறது. விரைவில் கிரீ டத்தை மீட்டுவிடுவோம் என்று கூறினார்.

  Read more: http://viduthalai.in/e-paper/94111.html#ixzz3OKAHQuI8

  தமிழ் ஓவியா said...

  பி.கே. திரைப்படம் ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக இல்லை

  டில்லி உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

  புதுடில்லி, ஜன.8_ ஹிந்தி நடிகர் அமீர்கான் நடித்து வெளிவந்துள்ள "பி.கே.' திரைப்படத்தில் ஹிந்து மத உணர்வு களைப் புண்படுத்தும்படி யாக காட்சிகள் உள்ளதாக கூறப்படுவதில் எந்த முகாந்திரமுமில்லை என்று டில்லி உயர்நீதி மன்றம் தெரிவித்தது. பி.கே. ஹிந்தி திரைப்படத்தை எதிர்த்து தாக்கல் செய் யப்பட்ட பொது நல மனுவை புதன்கிழமை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. ரோஹிணி, நீதிபதி ஆர்.எஸ். என்ட்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, மேற்கண்டவாறு தெரிவித்தது.

  ""அந்த திரைப்படத்தில் என்ன தவறு உள்ளது? எல்லாவற்றையும் நீங்கள் அவதூறாக கருதக் கூடாது. மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. இதுகுறித்து, விரிவான உத்தரவை, பிறகு பிறப் பிக்கிறோம்'' என்று நீதி பதிகள் தெரிவித்தனர்.

  இதுகுறித்து, அஜய் கவுதம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டிருந்ததா வது: பி.கே. திரைப்படத் தில் சில காட்சிகள் ஹிந்து மத உணர்வுகளை புண் படுத்தக்கூடியதாக உள் ளன. ஆனால், அவற்றை கவனத்தில் கொள்ளாமல், திரைப்படத்தை வெளியிட திரைப்படத் தணிக்கை (சென்ஸார்) வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

  இந்தத் திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி, நாட்டின் பல்வேறு பகுதி களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதனால், சட்டம்- ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டது. எனவே, பி.கே. திரைப்படத்தில் இருந்து, ஹிந்து மத உணர்வு களைப் புண்புடுத்தக் கூடிய காட்சிகளை நீக்க உத்தரவிட வேண்டும். அவ்வாறான காட்சிகளு டன், இத்திரைப்படத்தை திரையரங்கு களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிடக்கூடாது என்று இதன் தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

  விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், "இதே போன்ற மனுவை, உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்து விட்டது. எனினும், திரைப் படத்துக்கு அனுமதி யளித்து திரைப்படத் தணிக்கை வாரியம் அளித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடமுள்ளது' என்று வாதிட்டார்.
  அவரது வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், "திரைப்பட தணிக்கை வாரியத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு மட்டுமே உரிமையுண்டு. சட்டப்படி, வெளியாள் களுக்கு அந்த உரிமை யில்லை' என்று தெரிவித்தனர்.

  Read more: http://viduthalai.in/e-paper/94114.html#ixzz3OKAhcivk

  தமிழ் ஓவியா said...

  இருந்து வரும்


  பார்ப்பனச் சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும் வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்து வரும்.
  (விடுதலை, 29.5.1973)

  Read more: http://viduthalai.in/page1/94118.html#ixzz3OKCpwunl

  தமிழ் ஓவியா said...

  மதம் படுத்தும் பாட்டைப் பாரீர்!


  400 சீடர்களின் ஆண்மையை பறித்ததாக சாமியார் மீது சி.பி.அய். வழக்குப்பதிவு

  புதுடில்லி, ஜன. 8_- அரியானா மாநிலத்தில் 400 சீடர்களின் ஆண்மையை பறித்த சாமியார் மீது குர்மீட் ராம் ரஹிம் சிங் மீது சி.பி.அய். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  சீக்கியர்களை எதிர்த்து கருத்து தெரிவித் ததன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர், குர்மீட் ராம் ரஹிம் சிங். டேரா ஸச்சா சவுதா என்ற அமைப்பை ஏற்படுத்தி சில சமூக சேவைகளை செய்துவரும் இவருக்கு அரியானா மாநிலத்தில் உள்ள சிர்ஸா நகரில் பெரிய ஆசிரமம் உள்ளது.

  இந்த ஆசிரமத்தில் பல ஆண், பெண் சீடர் கள் தங்கியுள்ளனர். இங்கு தங்கியிருக்கும் ஆண் சீடர்களுக்கு இனப்பெருக் கத்தை கட்டுப்படுத்தும் விதமாக சுமார் 400 பேரின் விதைகளை அகற்றி விட்டதாக ஒரு முன்னாள் சீடர் பரபரப்பு புகாரை வெளி யிட்டார்.

  ஹன்ஸ்ராஜ் சவுகான் என்ற அந்த சீடர் இதே குற்றச்சாட்டை குறிப்பிட்டு பஞ்சாப்-அரியானா நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

  இது தொடர்பாக, சி.பி.அய். விசார ணைக்கு நீதிபதி கண்ணன் உத்தரவிட்டார். இதனையடுத்து, சி.பி.அய். நடத்திய விசார ணையில் ஆண்மையை உற்பத்தி செய்யும் விதைகளை அகற்றி விட்டால் கடவுளை காணலாம் என்று உபதேசித்த குர்மீட் ராம் ரஹிம் சிங், தனது ஆசிரமத்தில் உள்ள மருத் துவமனையில் பணியாற்றும் மருத்துவர் களை வைத்து பல சீடர்களின் ஆண்மையை பறித்துள்ளது உறுதி செய்யப்பட்டது.

  இவர் மீது ஏற்கெனவே, ஒரு பத்திரிகை யாளரை கொன்றது, ஆசிரமத்தில் உள்ள பெண் சீடர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

  சங்கராபுரம் அருகே கோவில் பூட்டை உடைத்து அய்ம்பொன் சிலை கொள்ளை

  சங்கராபுரம், ஜன.8 சங்கராபுரம் அருகே கீழ்பட்டு கிராமத்தில் சவுந்தர ராஜபெருமாள் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை கோவில் அர்ச் சகர் ராஜப்பா (45), கோவிலில் விளக்கேற்றி பூஜை செய்துவிட்டு இரவு கோவிலை பூட்டி விட்டு சென்றார். மார்கழி மாதத்தை யொட்டி வழக்கம்போல் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அர்ச்சகர் ராஜப்பா பூஜை செய்ய கோவிலுக்கு வந்தார்.

  அப்போது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு பூட்டு தனியாக வெளியே கிடந்ததை கண்டு ராஜப்பா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கோவில் உள்ளே சென்றுபார்த்தபோது கோவில் கருவறையில் வைக்கப்பட்டிருந்த 2 அடி உயரம் மற்றும் 20 கிலோ எடை கொண்ட சிறீதேவி அய்ம்பொன் சிலையை காணாமல் திடுக்கிட்டார்.

  அந்த சிலையை யாரோ கொள்ளை யடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கோவில் சிலையை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

  கோயில்களில் நடக்கும் மோசடி: பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு!

  நாகர்கோவில், ஜன. 8_- இணையத்தின்மூலம் சபரிமலை பிரசாதம் வழங்குவதாக கூறி போலி பிரசாதம் விற்று வந்த மேற்கு வங்க பிரமுகர் ஒருவரை கேரள காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

  கேரள காவல்துறையினருக்கு ஒரு புகார் வந்தது. இணையத்தின்மூலம் சபரிமலை பிரசாதம் விற்கப்படுவது உண்மைதானா என விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதனை யடுத்து சைபர் கிரைம், கால்துறையினரின் தனிப்படை விசாரித்தது.

  மே.வங்கத்தை சேர்ந்தவர்; இந்த விசா ரணையில் ஆன்லைன் பிரசாதம் டாட்காம்'- என்ற பெயரில் இணையதளம் நடத்துவது தெரியவந்தது. இந்த அலுவலகம் பெங்களூரு பழைய விமான நிலையப்பகுதியில் இருப்பது தெரிய வந்தது. அங்கு விரைந்த காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

  அங்கு வைக்கப்பட்டிருந்த போலி பிரசாதம் மற்றும் குறுந்தகடுகள் கைப்பற்றப்பட்டன. மேற்கு வங்கம் ராஞ்சல் மாவட்டம் ஊஞ் சல்மால் என்ற பகுதியை சேர்ந்தவர் இந்த போலி பிரசாத நிறுவனத்தை நடத்தி வந்து உள்ளார். அய். டி., பொறியாளரான அவரை பிடிக்க காவல்துறையின் தனிப்படையினர் மேற்குவங்கம் விரைந்துள்ளனர்.

  சபரிமலை பிரசாதம் மீனாட்சி அம்மன், பழநி பிரசாதம்

  சபரிமலை பிரசாதத்தை பிரதானமாக விற்று வந்த அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழநி முருகன் கோயில் என 51 பிரபல கோயில்கள் பிரசாதம் தருவ தாக விளம்பரம் செய்துள்ளார்.

  சபரி மலை பிரசாதத்தில் ஒருபாக்கெட், அப்பம், விபூதி, குங்குமம் கொண்ட பாக்கெட் விலை 501, 1500, 3 ஆயிரம் ரூபாய் வரை விற்றுள்ளார். இது குறித்து திருவதாங்கூர் தேவஸ் தானம் அதிகாரிகளிடம் கேட்ட போது சபரிமலை பிரசாதத்தை ஆன்லைனில் வழங் கிட யாருக்கும் நாங்கள் அனுமதி வழங்க வில்லை என கூறினர்

  Read more: http://viduthalai.in/page1/94154.html#ixzz3OKDbwFSm

  தமிழ் ஓவியா said...

  கலைஞர், பேராசிரியர், தளபதி ஆகியோருக்கு வாழ்த்துகள் - பாராட்டுகள்


  தி.மு.க.வில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட

  கலைஞர், பேராசிரியர், தளபதி ஆகியோருக்கு வாழ்த்துகள் - பாராட்டுகள்

  இன்று காலை (9.1.2015) கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் 14ஆவது கட்சித் தேர்தலில், அதன் தலைவராக உழைப்பின் உருவம் மானமிகு சுயமரியாதைக் காரரான நமது கலைஞர் அவர்களை மீண்டும் ஒருமனதாக, போட்டியின்றித் தேர்வு செய்து தனித்ததோர் வரலாறு படைத்துள்ளது.

  வரலாற்றில் தொடர்ந்து சாதனைகள் செய்து வருபவர்; தி.மு.க.விற்கு எப்படிப்பட்ட மலை போன்ற எதிர்ப்புகளும், இடையூறுகளும், ஏற்படினும், தனது ஆற்றல்மிகு உழைப்பாலும், ஒப்பற்ற சாதுர்யத்தாலும் எதிர்கொண்டு இயக்கத்தின் சோதனைகளை சாதனைகளாக்கிடும் ஆற்றல் படைத்த கலைஞர் அவர்களுக்கு தாய்க் கழகமான திராவிடர் கழகம் தனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துப் பாராட்டி மகிழ்கிறது.

  அவர்களோடு அக்கழகத்தை வழி நடத்திட உதவியாக தேர்வு செய்யப்பட்டு, புதிய அத்தியாயத்தைப் படைக்க பொதுச் செயலாளராக இனமானப் பேராசிரியர் அவர்களும், பொருளாளராக தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம். மற்ற பொறுப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள் - பாராட்டுகள்!

  - கி.வீரமணி
  தலைவர் திராவிடர் கழகம்

  Read more: http://viduthalai.in/page1/94171.html#ixzz3OKGTp0kv

  தமிழ் ஓவியா said...

  இன்றைய ஆன்மிகம்?

  பசு

  ஒரு பசுவின் உடலில் 14 உலகங்கள், ரிஷிகள், தேவர்கள், பிரம்மா முதலி யோர் அடங்கியுள்ளனர்.
  (கல்கி 26.1.2014 பக்.17)

  கடவுளுக்கு ஏனிந்த பாரபட்சம்? அதிக பால் கொடுக்கும் எருமை மாட்டு மீது என்ன கோபதாபமோ!

  Read more: http://viduthalai.in/page1/94175.html#ixzz3OKGeoTuK

  தமிழ் ஓவியா said...

  ஜனநாயகவாதி போல கருத்துக்கூறும் ராஜபக்சே

  ஜனநாயகவாதி போல
  கருத்துக்கூறும் ராஜபக்சே

  மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட் சியை அமைதியான வழி யில் புதிய அதிபரிடம் ஒப்படைப்பேன் என்று அதிபர் ராஜபக்சே கூறி யுள்ளார். தேர்தலில் தோல்வி முகம் ஏற்பட்ட உட னேயே அதிபர் மாளி கையில் இருந்து வெளி யேறிய முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே தன்னுடை கருத்து குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் அதிபர் மாளிகை புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட மைத்ரி பால சிறி சேனாவின் அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நண்பகல் 12 மணி அளவில் மைத்திரி பால சிறிசேனாவின் வெற்றியும் தேர்தல் குழுத் தலைவர் வெளியிட்டார். இதனை அடுத்து மகிந்தா தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

  அதில் அவர் கூறியிருப்ப தாவது,தேர்தல் முடிவுகள் புதிய ஆட்சிமாற்றத்தை மய்யமாக கொண்டுள் ளது. 10 ஆண்டுகளாக எனது ஆட்சிக் காலத்தில் இலங்கையை சர்வதேச அளவில் பல்வேறு துறை களில் முன்னுக்கு கொண்டு வந்துள்ளேன். இலங்கை மக்கள் எனது பணியை நினைவிற்கொள்வார்கள். புதிய அதிபருக்கு வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைதியான வழியில் புதிய அதிபரிடம் ஒப் படைப்பேன். இது குறித்து காலையில் எதிர் கட்சித் தலைவர் ரனில் விக்கிரம சிங்கேவிடம் விபர மாக பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.

  Read more: http://viduthalai.in/page1/94179.html#ixzz3OKGo8DFf

  தமிழ் ஓவியா said...

  தலித் என்ற சொல்

  தாழ்த்தப்பட்டவர்கள் என பட்டியல் படுத்தப்பட்ட மக்களைத் தற்போது தலித் என்ற சொல்லால் குறிப்பிடுவதை நிறைய அரசியல்கட்சிகளும், ஊடகங்களும் பின் பற்றி வருகின்றன. தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல்லிலும் ஆதிதிராவிடர்கள் என்ற சொல்லிலும் பொருள் இருக்கிறது.

  தாழ்த்தப்பட்டவர்கள், ஆதி திராவிடர்கள் ஆகிய சொற்களில் இருக்கக்கூடிய வரலாற்றை மறைப்பதற்கும் மறுப்பதற்கும் தலித் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர் என பட்டியல் படுத்தப்பட்ட மக்களின் தாய்மொழி தமிழ் ஆகும். ஒரு சமுதாயத்தின் அடை யாளத்தை அந்நிய மொழியில் தலித் என்று குறிப்பிடுவது ஏற்புடையதாகத் தெரிய வில்லை. தாழ்த்தப்பட்டோர் என பட்டியல் படுத்தப்பட்ட, மக்களிடையேயும் பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மக்களிடையேயும் நிரந்தர பிளவை ஏற்படுத்திடவே தலித் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தமிழிலிருந்து அவர்களை அந்நியப்படுத்தவே தலித் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

  தங்கள் பெயரைத் தமிழில் வைக்க வேண்டும் என்று போராட வேண்டியிருக்கக் கூடிய இக்காலக் கட்டத்தில் ஒரு சமுதாயத்தின் பெயரையே தாய்மொழியில் அடையாளப்படுத்தாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. இந்தியா முழு வதிற்கும் ஒரு பொதுச் சொல் வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

  பொதுச் சொல்லாக ஆங்கிலத்தில் எஸ்.சி./எஸ்.டி. என்ற சொல் இருக்கிறபோது மராட்டிய மொழியான தலித் என்ற சொல்லலால் தாழ்த்தப்பட்ட மக்களை அடையாளப் படுத்த வேண்டிய தேவை ஒன்றுமில்லை. தமிழில் பெரும்பாலான ஊடகங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் தலித் என்ற சொல்லைப் பயன்படுத்துகிற சூழலில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் இது வரை அந்தச் சொல்லைப் பயன்படுத்திய தில்லை.

  விடுதலை, உண்மை ஆகிய இதழ்களின் தலையங்கத்திலும் தலித் என்ற சொல் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் சில நேரங்களில் விடுதலையில் இச்சொல் செய்திப் பக்கங்களில் வெளியாகிறது. இந்த வார்த்தையைத் தவிர்க்க வேண்டும் என அன்புடன் வேண்டுகோள் வைக்கிறேன்.

  சி. செந்தமிழ்ச் சரவணன், குடியாத்தம்

  Read more: http://viduthalai.in/page-2/94202.html#ixzz3OKIJYYwY

  தமிழ் ஓவியா said...

  அருகதையற்றவர்கள்


  பேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிரதாய முறைகளையும், ஸ்தாப னங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற, ஒழிக்கத் துணிவு கொள்ள வேண்டும். இந்தத் துணிவு கொள் ளாத எவரும் சமதர்ம முயற்சிக்கு அருகதை அற்றவர்களே ஆவார்கள்.
  (விடுதலை, 7.7.1965)

  Read more: http://viduthalai.in/page-2/94182.html#ixzz3OKIZcaqo

  தமிழ் ஓவியா said...

  தீபாவளி மகாலட்சுமி அகோர ரத்தப்பசி காளி!

  தீபவாளி அமாவாசை இரவு பெண்கள் மகாலட்சுமி நோன்பு - பூசை போடுகிறார்கள் - பட்டுக்குஞ்ச மஞ்சள் கயிறு கையில் கட்டிக் கொள்கிறார்கள்.

  இந்த மகாலட்சுமியின் லட்சணங்கள் என்ன தெரியுமா?

  மகாலட்சுமி தோத்திரம் என்று பார்ப்பனர் பாடும் சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைக் கவனியுங்கள்:- ஓ, தேவி! நீயே பிரபஞ்சம் அந்த பிரபஞ்ச சக்தி நீயே - நீ மகாபயங்கரி - மாய சக்தி நீ.

  அகோர பசிக்காரி - காளி உருவத்தில் ஓ மகாலட்சுமி நமஸ்காரம்.

  இந்த மகாலட்சுமி மகா பயங்கர உருவமும், செயலும், குரலும், கொண்டவள்.

  காளி உருவம் எடுத்துள்ள போது அகோர பசி - அதாவது ஆண்களையும் எருமைகளையும் கொன்று அவர்கள் இரத்தத்தை குடிக்கவும் அவர்கள் குடலைத்தின்னவும் பெரும்பசி கொண்டவள்.

  பலன் ஸ்ஜர்னல் 1967 - தீபவாளி மலர்.  Read more: http://viduthalai.in/page-7/94196.html#ixzz3OKIsYuyh

  தமிழ் ஓவியா said...

  இவ்விதம் ஆணையும் எருமையையும் கொன்று ரத்தம் குடிப்பதாகப் புராணக் கதை சித்தரித்துக் காட்டும் பெண் உருவத்தை வணங்கினால் ஏற்படும் குணபாவங்கள் எத்தகையதாக இருக்கும்

  -சிந்தியுங்கள் - அறிவு - தெளிவுபட!

  (காளி உருவச்சிலைகளையும், படங்களையும் பார்த்திருப்பீர்கள்- அதில் மகாகாளி பைரவி என்ற பெண் உருவம் பல கொலை ஆயுதங்கள் கொண்ட பல கைகள்.

  சாதாரண ஆடையணியாத நிர்வாண கோலம் - இடுப்பிலே, மனிதர் கால் கைகளின் எலும்புகளைக் கோர்த்து, ஒட்டி இறக்கத்துக்கு ஆடை போல் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் - கழுத்திலே மனித மண்டை ஓடுகள் கோர்த்த மாலை - வாயிலே கோரப் பற்களிடையே ரத்தம் வடியும் குடல்கள், காலடியிலே - வயிறு கிழிக்கப்பட்ட ஆணுருவம்.)

  விடுதலை 4.11.1969

  Read more: http://viduthalai.in/page-7/94196.html#ixzz3OKJ3wDzb

  தமிழ் ஓவியா said...

  கடவுள்


  1. கடவுளைக் காப்பாற்ற மனிதன் புறப்பட்டதாலேயே கடவுளின் பலவீனம் விளங்குவதோடு கடவுள்களுக்கு வரவர பலவீனம் ஏற்பட்டு ஆபத்தும் பலப்பட்டு வருகிறது.

  2. கடவுள்கள் இல்லாவிட்டால் அரசன் இருக்க முடியாது. அரசன் இல்லாவிட்டால் பணக்காரன் இருக்க முடியாது. பணக்காரன் இல்லாவிட்டால் உயர்ந்த ஜாதிக்காரன் இருக்க முடியாது. ஆகவே இவை ஒன்றையொன்று பற்றிக் கொண்டிருக்கின்றன.

  3. பெரும்பாலும் சுயநலக்காரர்களும் தந்திரக்காரர் களுமே கடவுளையும், வேதத்தையும், ஜாதியையும் உண்டாக்கு கிறார்கள்.

  4. கடவுள் உண்டானால் பேய் உண்டு. பேய் உண்டானால் கடவுள் உண்டு. இரண்டும் ஒரே தத்துவங் கொண்டவை.

  5. இந்தியாவில் காகிதம், புத்தகம், எழுத்து, எழுது கருவி எல்லாம் சரஸ்வதியாக பாவிக்கப்பட்டு வணங்கி வந்தாலும் 100-க்கு 5 பேர்களே படித்திருக்கின்றார்கள்.

  6. மேல்நாட்டில் காகிதங்களினால் மலம் துடைத்து சரஸ்வதியை அலட்சியம் செய்தும் அங்கு 100-க்கு 90 பேர்கள் படித்திருக்கிறார்கள்.

  7. கோயில்கள் சாமிக்காக கட்டியதல்ல. வேறெதற்காக என்றால் ஜாதியைப் பிரித்துக்காட்டி மக்களைத் தாழ்த்தவும், பணம் பறித்து ஒரு கூட்டத்தார் பிழைக் கவும், மக்களை அறியாமையில் வைத்து அடிமை களாக்கவும் கட்டப்பட்டதாகும்.

  8. எவனொருவன் கடவுளிடத் திலும் அதைப் பற்றிச் சொல்லும் மதக் கொள்கை இடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங் களும் அவர்களுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக் கிறானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதத்தை வாயினால் உச்சரிக்கக் கூட யோக்கியதையற்ற வனாவான்.

  9. சுயமரியாதைக்காரன் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனி தனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப் போய்விட்டது. ஆனால் நமது நாட்டில் அந்த செத்த பிணம் அழுகி நாறிக் கொண்டி ருப்பதை எடுத்துப் புதைத்து, நாறின இடத்தை லோஷன் போட்டுக் கழுவி சுத்தம் செய்கின்ற வேலையைத்தான் சுய மரியாதைக்காரன் செய்து கொண்டிருக் கின்றான்.

  10. பத்துமாதக் குழந்தையை கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

  11. கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பானைச் சாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை.

  -தந்தை பெரியார்

  Read more: http://viduthalai.in/page-7/94195.html#ixzz3OKJBCYYp

  தமிழ் ஓவியா said...

  இந்து மதம் பற்றி....


  நாம் யாருக்கும் மேல் அல்ல; யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது. தர்ப்பை ஆகாது சேரியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது, யோக யாகப் புரட்டுகள் மனிதர் யாவரும் சரி நிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை இந்து என்று கூறிக் கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை - சூத்திரன் என்று கூறிக் கொள்ள எப்படித்தான் மனம் இடந்தரும்?

  எப்படித்தான் துணியும்? இந்துமதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாயமுறை, மதக் கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப் பார்த்த பிறகு யாருக்குத் தான் தன்னை ஓர் இந்து என்று கூறிக் கொள்ள மனம் இடந்தரும், பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களை விட்டு, மதி கெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா?

  மீளமார்க்கம் தேடுவதை விட்டு, மாள வழித் தேடிக் கொள்வாரா?

  விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும் போது குழியில் வீழ்வார? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு திராவிடர் தனி நிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் இந்து மார்க்கத்தில் போய்ச் சேர இசைவாரா?

  வீரர் திராவிடர் என்ற உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர் இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!!

  - அறிஞர் அண்ணா
  (ஆரியமாயை என்ற நூலில்)

  Read more: http://viduthalai.in/page-7/94198.html#ixzz3OKJK6OWs

  தமிழ் ஓவியா said...

  பிராமணீயமும், கார்ப்பரேட்டுகளும்தான் உண்மையான எதிரிகள்: பேராசிரியர் அருணன் கருத்துரை

  செங்கல்பட்டு, ஜன.9_ பொது எதிரிகளை அடையாளம் கண்டு போராட வேண்டும் என்று செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் பேராசிரியர் அருணன் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

  ஜாதி, மூடநம்பிக்கை பெண்ணடிமைத்தனத்தை ஒழிப்போம். காதல் சுயமரியாதை திருமணத்தை ஆதரிப்போம் என்ற தலைப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டில் சுயமரியாதை சிறப்பு மாநாடு நடைபெற்றது. செவ்வாயன்று (ஜன.6) செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். முத்துக்கண்ணன் தலைமை தாங்கினார்.

  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் பேராசிரியர் அருணன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

  அப்போது அவர் கூறியதாவது:

  85 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை பெரியார், முதல் சுயமரியாதை மாநாடு நடத்திய செங்கல்பட்டில் வாலிபர் சங்கம் மீண்டும் சுயமரியாதை மாநாடு நடத்துவது மகிழ்ச்சியைத் தருகிறது.

  அதேநேரத்தில் 85 ஆண்டுகள் கழித்து மீண்டும் சுயமரியாதை மாநாடு நடத்தவேண்டிய நிலைமை இருப்பது வருத்தத்தையும் தருகிறது. 1950_களில் முக்கியமான காதல் திரைப்படங்கள் வந்ததுண்டு. அவை காத்தவராயன், மதுரை வீரன் உள்ளிட்ட உண்மை காதல் கதைகளை பேசின.

  21 ஆம் நூற்றாண்டிலும் சினிமா காதலை பேச வேண்டுமா என்றால் தருமபுரியில் இளவரசன் ரயில்முன் பாய்ந்ததற்குப் பிறகுதான் தமிழ் சினிமா இன்னும் காதலைப் பேச வேண்டிய அவசியம் உள்ளது. ஜாதி மதங்களைக் கடந்து காதலை சினிமா பேச வேண்டும்.

  18 வயதில் காதல் திருமணம் செய்யக் கூடாது என்கின்றார் மருத்துவர் ராமதாசு. 22 வயதில் தாழ்த்தப்பட்ட இன இளைஞரை காதலித்தால் ஏற்றுக் கொள்வார்களா? தருமபுரியில் ஒரு தந்தையின் தற்கொலையைத் தொடர்ந்து இளவரசனின் மரணம், வீடுகள் எரிப்பு, கலவரம் என அனைத்தையும் செய்து விட்டு ஜாதியம் இல்லை என அன்புமணி ராமதாசு கூறுகின்றார்.

  1931 இல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டைப் பற்றி குடியரசு ஏட்டில் சிங்காரவேலர், ஜாதி ஒழியும்வரை சகோதரத்துவம் என்பது வெறும் சொல் மட்டுமே என்று எழுதினார். நாட்டில் தீண்டா மையை ஒழித்தது இந்து முன்னணி அல்ல.

  ஜாதியை எதிர்ப்பவர்களை இந்துக்களின் எதிரி எனக் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் மூன்று சதவிகிதம் உள்ள கிறிஸ்துவர்களையும், முஸ்லிம்களையும் பொது எதிரியாக கட்டமைக்கின்றனர். உண்மையான எதிரி கள் ஜாதி, மதம் பெண்ணடிமைத்தனத்தை கடைப் பிடிப்பவர்கள்தான்.

  மண்டல் குழு பரிந்துரைத்த பிற்படுத்தப்பட்ட மக் களுக்கான இடஒதுக்கீட்டை வி.பி.சிங் அமல் படுத்தியபோது அதற்கு எதிராக மாணவர்களைப் பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தியது ஆர்எஸ்எஸ், பிஜேபி, சங்பரிவார் கூட்டங்கள்தான். மேலும், அந்த நேரத் தில் ரத யாத்திரையை நடத்தியதும் அவர்கள் தான்.

  பிற்படுத்தப்பட்ட மக்களுக்குஇடஒதுக்கீடு என்றவுடன் ரத யாத்திரை நடத்திய ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபிதான் இந்துக்களின் முதல் எதிரி. இப்போது அவர்கள்தான் தாய் மதத்திற்கு திரும்பவேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

  இந்தியாவில் எது தாய்மதம்? இந்தியாவில் பெரிய மதங்கள் புத்தமும், சமணமும்தான். பிராமணீயம் இல்லை. அப்படியே திரும்பினாலும் திரும்பியவர் களுக்கு எந்த ஜாதியில் இடம் அளிப்பார்கள்? ஒபாமாவிற்காக மோடி இந்திய நாட்டு வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பலி கொடுத்து வருகின்றார்.

  பிராமணீயமும், கார்ப்பரேட்டுகளும்தான் இந்தியாவின் உண்மையானஎதிரிகள். இவர்களை அடையாளம் கண்டு போராட இளைஞர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அருணன் பேசினார்.

  Read more: http://viduthalai.in/page-5/94181.html#ixzz3OP2fVIhi

  தமிழ் ஓவியா said...

  திருக்குறள் தேசிய நூல் தி.க., திமுக தீர்மானங்கள்
  திருக்குறள் தேசிய நூல்

  தி.க., திமுக தீர்மானங்கள்  6-7-2002 அன்று சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக இளை ஞரணி மாநாட்டில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  ...

  4,3.2006 அன்று திருச்சிராப்பள்ளி யில் கூடிய தி.மு.க. 9ஆவது மாநில மாநாடு தி.மு.க. இளைஞரணி வெள்ளி விழா மாநாட்டில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  Read more: http://viduthalai.in/page4/%20_94227.html#ixzz3OPoypgJQ