Search This Blog

9.12.13

ஆரியர் செய்த அக்கிரமம் - அறிஞர் அண்ணா
டாக்டர் அத்பேத்காரும் மற்றும் இன்று தீண்டப்படாதவர்கள் என்று அழைக்கப்படும் ஏனையோரும் இந்தியப் பூர்வ குடிகளின் சந்ததிகளே. ஆதிகாலத்தில், அந்தப் பூர்வ குடி மக்களே நாட்டுக்கு, அதிபதிகளாக சுதந்திர வாழ்வு நடத்தி வந்தார்கள். அவ்வாறு வாழ்ந்து வந்த இந்தியப் பூர்வகுடி மக்கள் பிற்காலத்து வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு கூட்டத்தாருக்கு அடிமைப்பட்டு சுதந்திரத்தையும், மானத்தையும் இழந்து மிருகங்கள் அனுபவிக்கும் சாமானிய சுதந்திரங்களுமில்லாமல் உயிர்ப் பாரம் தாங்கும் படி நேர்ந்திருக்கிறது. இது போன்ற சம்பவத்தை உலக சரித்திரத்திலேயே காண முடியாது.

குடி புகுந்த ஆரியர்கள் பூர்வ குடிகளை விட பளபளப்பான வர்ண முடையவர்களா யிருந்தனர். எனவே, வெள்ளையர்களான ஆரியர்கள் கறுப்பர்களான அதி இந்தியர்களை விட உயர்ந்தவர்கள் என ஒரு ஐதீகம் ஏற்பட்டது. அன்று முதற் கொண்டே வர்ண பேதக் கொடுமை ஆரம்பமாயிற்று. வர்ண பேதக் கொடுமையினால் இந்தியாவைப் போல் கஷ்டப்படும் நாடு உலகத்திலேயே வேறு இல்லை என்று சொல்லலாம். ஆரியர்கள் ஆதி இந்தியர்களைச் சந்தித்தபோதே அவர்களுக்கு `கறுப்பர்கள்’ என்ற இழிபெயரைச் சூட்டினார். போர்க் கடவுளான இந்திரனை ஒரு ஆரிய வீரன் பாராட்டிப் புகழ்வதைக் காண்க.

ஆரியர் சட்டத்துக்குக் கீழ்ப்படியாதவர் களைத் தண்டித்து கறுப்பர்களை மனுவுக்கு அடிமைப்படுத்தி மற்றும் நூற்றுக்கணக்கான உதவிகள் புரிந்து இந்திரன் ஆரியர்களைக் காப்பாற்றினான். (ரிக் வேதம் முதல் மண்டலம் 30-வது மந்திரம் 8-வது ஸ்லோகம்.)

ஆரியர் கொடுமை

ஆரியர்களுக்கும் ஆதி இந்தியர்களுக் கும் நடைபெற்ற போரைப் பற்றியும் ஆரியர் செய்த பற்பல கொடுமைகளைப் பற்றியும் வேதங்களில் பல குறிப்புகள் காணப்படுகின்றன. வெள்ளை ஆரியர்கள் கறுப்புப் பூர்வ குடிகளை எவ்வளவு குரூரமாக இம்சித்தார்கள் என்பதைக் கீழ்வரும் உதாரணங்களால் ஒருவாறு யூகித்துக் கொள்ளலாம்.

1

ஓ! உலகம் போற்றும் இந்திரனே! ஸுஷ்ரூ வனை எதிர்த்த இருபது கறுப்பு அரசர்களையும் அவர்களது அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றி யொன்பது படைகளையும் நீ உன் தேர் சக்கரத்துக்கு இரையாக்கி நசுக்கிக் கொன்று ஆரியர்களுக்கு உதவி புரிந்தாய்.

(ரிக் வேதம் மண்டலம் 1, மந்திரம் 53. ஸ்லோகம் 9)


2
ஓ! இந்திரனே! பிப்ரு மிருகய அசுர அரசர்களை ஆரிரிய மன்னனான விதாதின் பத்திரன் ரிஜீஷ்வனுக்கு அடிமைப் படுத்தினாய்! ஐம்பதினாயிரம் கறுப்புப் படைகளை செயித்தாய். முதுமை உயிரை மாய்ப்பது போல் அனேக கோட்டைகளையும் பாழாக்கினாய்.

(ரிக் வேதம் மண்டலம் 4 மந்திரம் 16 ஸ்லோகம் 18)
3
ஆரிய அரசன் தாபிதியின் தன்மைக்காக முப்பதாயிரம் தாசர்களை உன் மந்திரச் சக்தியி னால், ஓ! இந்திரனே! யமனுலகுக்கு அனுப்பினாய்!

(ரிக் வேதம் மண்டலம் 4 மந்திரம் 30 சுலோகம் 21)
4
``ஓ தீரனான இந்திரனே! உன் வலை பிரம்மாண்டமானது, மஹா பலாட்டியமானது, ஆயிரக்கணக்கானவர்களைச் சிக்க வைக்கும் ஆற்றலுடையது, ஒன்று, பத்து, நூறு, ஆயிரமாகப் பெருகும் சக்தியுடையது. அத்தகைய வலையில் தாசப் படையைச் சிக்க வைத்து நூற்றுக்கணக் கான ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கானவர் களைக் கொன்றாயே!

(அதர்வண வேதம் தாண்டம் 8 மந்திரம் 8 ஸ்லோகம் 7)


மேலே கூறிய உதாரணங்களால் ஆதி இந்தியர்கள் லட்சக்கணக்காகக் கொல்லப் பட்டதையும் சித்திரவதை செய்யப்பட்டதையும் ஊகித்து அறிந்து கொள்ளலாமல்லவா? எஞ்சிய ஆதி இந்தியர்கள், மீது ஆரியர்கள் கொண்டி ருந்த வெறுப்பும், வஞ்சகமும் அம்மா பெரிது! பெரிது!!
கீழ் வருவன ரிக் வேதம் 7-வது படலம் 104-வது மந்திரத்திலும் அதற்கான வேதம் கண்டம் 8, 4வது ஸ்லோகத்திலும் காணப்படுகின்றன.

ஸ்லோகம் 1

இந்திரனே ஸோமனே ராட்சகர்களை எரி, எரி! நசுக்கு, நசுக்கு! இடவனாந்திரங்களில் ஒன்று நூறாய் பெருகிவரும் அந்தக் கூட்டங்களை அடக்கு, அடக்கு! பின்னப்படுத்து, மடையர்களை அக்னி சுவாலையால் சுட்டுப் பொசுக்கு, வதை செய்! துண்டு துண்டாக வெட்டு!

ஸ்லோகம் 2


இந்திரனே, ஸோமனே, அரக்கக் கூட்டத்தை, துரோகிகளை, தீமையில் உருவான வர்களை, அக்னி குண்டத்தில் வைத்து, நீர் பானையில் வேகவைப்பது போல் அவித்துக் கொல்! துரோகிகளான அந்த பச்சை மண்ணைத் தின்னும் அரக்கர்களை மீளா நரகத்தில் தள்ளி இம்சிப்பாயாக!

ஸ்லோகம் 3


குகைகளிலும் வனாந்திரங்களிலும் அந்த சண்டிகளை கீறி, பிளந்து அரித்து சித்திரவதைச் செய்! இருண்ட காடுகளில் மறைந்து கிடக்கும் அவர்களுக்கு ஒரு உதவியும் செய்யாதே! அந்த வனாந்திரங்களில் அவர்கள் மீளாமல் போவார்களாக. பயங்கர பலத்தால் அவர்களை அடக்கி ஒடுக்குவீர்களாக!

ஸ்லோகம் 4


ஓ இந்திரனே, ஓ ஸோமனே. மேல் மண்டலத்திலிருந்து கொடியவர்களை கீழே சொரிவீர்களாக! அதிலிருந்து ஆயிரக்கணக்கான ஆரியர் கிளம்புமாறு கருணை புரிவீர்களாக! தினமும் பெருகிவரும் இந்தக் கூட்டங்களை எதிர்ப்பதற்காகவே வானிலிருந்து லட்சக்கணக் கான அஸ்திரங்கள் தோன்றும்படியாக செய்வீர்களாக!

ஸ்லோகம் 11

அசூரர்கள் ஒழிக! பிள்ளை குட்டிகள் நசிக்க! பிற்கால சந்ததிகள் அசூரக் கூட்டங்களை விழுங்கி விடட்டும்.

-------------------------- அறிஞர் அண்ணா - ”திராவிட நாடு”, 29-11-1942

30 comments:

தமிழ் ஓவியா said...


மத்திய, மாநில அரசுகளின் நிதிப் பற்றாக் குறைக்கான தீர்வு தமிழர் தலைவரின் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கை


என்னை வாழ்நாள் கடனாளியாக்கிவிட்டீர்களே! தமிழர் தலைவரின் உருக்கமும், உயர்நோக்கமும் கொண்ட அறிக்கை

மத்திய அரசின் பொருளாதார நெருக்கடிகளைச் சரி செய்யவும், மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித் தும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

நமது மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையெல் லாம் சிறிது சிறிதாக விற்று, தனியார் உடைமைகளாக அவை ஆவதற்கு வழி வகை செய்யும் வேதனையான போக்கு - அரசியல் சட்டத்தின் பீடிகையில் குறிப்பிடப்பட்ட குறிக்கோளான சமதர்மத்தைக் காணாமற் போகவே வழி வகுக்கின்றது.

காரணம் கூறும்போது, நிதிப் பற்றாக் குறை என்பதால், பல்வேறு துறைகளில் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தை, கசக்கிப் பிழியும் கொடுமையும் ஏற்பட்டு வருகின்றது.

சுவிஸ் வங்கியில் பல லட்சம் கோடி ரூபாய்

அதே நேரத்தில் சுவிஸ் வங்கிகளில் இந்தியாவி லிருந்து போடப்பட்டுள்ள பல லட்சம் கோடி ரூபாய்களைக் கொணர, நாடாளுமன்றத்தில் வாக்குறுதி கொடுக்கப்பட் டதே தவிர, உருப்படியான முயற்சிகள் இல்லை; பல லட்சம் கோடி ரூபாய்களை நம் நாட்டிற்குக் கொண்டு வந்தால், நமது நிதிப் பற்றாக்குறை சுமை என்பது பெரிதும் குறையும்.

அது மட்டுமா? நாட்டின் பெரும் பணத் திமிங்கலங் களும், பண முதலைகளுமான பலருக்கும் சலுகை களுக்கு மேல் சலுகை! சலுகையால் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கம் என்ற சாக்கில் தரப்பட்டு வாராக் கடன்களாக் கப்பட்டு, வசூலிக்கப்படாத நிலுவைத் தொகைகள் பல லட்சணக்கான கோடி ரூபாய்கள் ஆகும்!

அவர்களது (பெரிய மனிதர்கள்) கடன் பற்றி ரிசர்வ் வங்கியோ, துறைகளோ வெளிப்படையாக ஏன் விளம்பரம் தந்து, வசூலிக்கத் தயங்குகின்றன?

ஏழை விவசாயிக்குக் கொடுத்த கடன், அவனுடைய நட்டத்தால் திரும்பக் கட்ட முடியாத நிலை என்றால் உடனே துள்ளிப் பாய்கின்ற நடவடிக்கைகள்.

மாணவர்களுக்காக பெற்றோர் கள் கல்விக் கடன் பெற படாதபாடு படவேண்டியிருக்கிறது தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளில்!

கடனைத் திருப்பித் தராத திமிங்கலங்கள்

பெரும் கடன் வசூலாகாத வர்களில் 50 பேர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது; அதில் காணப்படும் முக்கிய விவரங்கள் இதோ.

வாராக்கடன் தொகை மொத்தம் ரூ.5 லட்சம் கோடி யாம்! (இந்திய ஊழியர்கள் சங்கம் தந்துள்ள தகவல் இது!)

கிங்பிஷர் என்ற விமான சேவை துவங்கிய விஜய் மல்லய்யா என்ற பெரு முதலாளி, மது உற்பத்தியில் நாட் டிலேயே நம்பர் ஒன் என்று பெயரெடுத்த சாராயத் தொழிற்சாலைகளுக்கு அதிபர், அவர் செலுத்த வேண்டிய தொகை 2,673 கோடி ரூபாய்கள்!

172 பெரிய தொழில் நிறுவனங்கள் ரூ. நூறு கோடிக் கும் மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் உள்ளன.

ஒரு கோடிக்கும் மேல் கடன் வைத்திருப்பவர்கள் 7,295 பேர்கள்.

இதில் மிகவும் அதிர்ச்சியூட்டக் கூடிய ஒரு செய்தி.

மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கே.எஸ். ராவ் என்பவர் கடன் பெற்று திருப்பித் தராமல் இருக்கும் தொகை ரூ.350 கோடியாம்!

இவை உதாரணத்திற்கு, ஒரு பானை அல்ல; ஒரு சில பருக்கைச் சோறுகள்.

அதே நேரத்தில் மற்ற ஏழை, எளிய, தொழிலாளர்கள், பாக்கிகளை வைத்தால் அவற்றை வசூலிப்பதில் அரசு காட்டும் மும்முரம் ஏன் இந்தப் பெரிய மனிதர்களிடம் மட்டும் பாய்வதில்லை?

விஜய்மல்லய்யா அவர்கள் திருப்பதி வெங்கடா ஜலபதிக்கு தங்கத்தில் நறுக்கென்று சுமார் ரூ.700 கோடி. (?) பக்தி காணிக்கை செய்கிறார்; மத்திய அரசுக்கும், அவரிடம் வேலை பார்த்த ஊழியர்களின் சம்பள பாக்கிக்கும் பட்டை நாமம் போடுகிறார்!

பக்தி எப்படியெல்லாம் பயன் தருகிறது பார்த்தீர்களா?

மணல் வியாபாரத்தை மாநில அரசே செய்யலாமே!

அதுபோலவே மாநில அரசு, தமிழக அரசு, மணல் வியா பாரக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த காலந்தாழ்ந்து கண் விழித்துக் கொண்டது. (உயர்நீதிமன்ற ஆணை காரணமோ என்னவோ)

மணலை அரசே எடுத்து விற்பனை செய்வதன்மூலம் பல்லாயிரக்கணக்கில் அதற்கே லாபம் வர வாய்ப்பு உண்டு.

அதற்கென ஒரு தனித் துறையை உருவாக்கிடலாம். அரசு, தன் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம்.

அரசு, மது விலக்கைச் செயல்படுத்தி சாராய வியா பாரத்தை ஒழித்து விட்டுக்கூட, மணல் போன்ற பல்லா யிரக்கணக்கான ரூபாய் லாப வருவாய் வரும் துறையை எடுத்து, ஓட்டை இன்றிச் செய்தால் அவ்வருமானமே பல்லாயிரம் கோடி ஒரு ஆண்டிற்கே வரக்கூடும்!

மக்களுக்கும் தட்டுப்பாடின்றி மணல் கிடைக்கும்; கட்டுமானப் பணிகளும் சீராக, சிறப்பாக நடைபெற உதவிடக் கூடும்.

வீண் விளம்பரச் செலவுகளைக் குறைக்கலாம்

மத்திய, மாநில அரசுகள் தேவையற்ற வீண் விளம்பரச் செலவுகளைக் குறைத்து இது போன்று, வருவாய் பெருக் கலையும், செலவைச் சுருக்கலையும் செய்தால், கல்விப் பணிகளை அரசு, பல வகையிலும் மேம்படுத்திட இயலும்.

மத்திய, மாநில அரசுகள் சிந்திக்கட்டும்!

சென்னை
8.12.2013

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பக்தர் அளித்த ரூ.3 கோடி மதிப்புள்ள பவள மாலை எங்கே? தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை கடிதம்


சிதம்பரம், டிச.8- சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் அளித்த ரூ.3 கோடி மதிப்புள்ள பவள மாலை பற்றிய விவரம் கேட்டு தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை கடிதம் அனுப்பி உள் ளது. சிதம்பரம் நடரா ஜர் கோயில் ஆகாயத் தலமாக விளங்கி வரு கிறது.

பல ஆண்டுகளாக தீட்சிதர்கள் கட்டுப் பாட்டில் இருந்து வந்த இக்கோயில் பல்வேறு போராட்டங்களின் விளைவாக தமிழக அரசின் இந்து அற நிலையத்துறை கட்டுப் பாட்டில் சில ஆண்டு களுக்கு முன்பு வந்தது. பூஜை, வழிபாடுகளை தீட்சிதர்களே வழக்கம் போல் செய்து வருகின் றனர்.

இந்நிலையில், சென் னையை சேர்ந்த பக்தர் ஒருவர் அவரது குடும்பத் தினர் சார்பில் கடந்த மாதம் 21ஆம் தேதி சிதம் பரம் நடராஜனுக்கும் சிவகாமசுந்தரி அம்பா ளுக்கும் அணிவிப்பதற் காக ரூ.3.50 கோடி மதிப்பிலான இரு பவள மாலைகளைக் காணிக் கையாக வழங்கினார்.

இத்தாலியில் இருந்து வரவழைக்கப்பட்ட விலை உயர்ந்த பவள மணிகளைக் கொண்டு 20 பவுனில் இந்த மாலை கள் உருவாக்கப்பட்டன. இந்த பவளமாலைகள், அதன் மதிப்பு மற்றும் அதனை வழங்கிய உபய தாரர் ஆகிய முழு விவ ரத்தையும் பெறுமாறு சிதம்பரம் நடராஜர் கோயில் செயல் அலுவ லருக்கு அறநிலையத் துறை ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன்பேரில் மேற் கண்ட விவரங்களை அளிக்குமாறு நடராஜர் கோயில் பொது தீட்சி தர்களின் செயலருக்கு கோயில் செயல் அலு வலர் முருகன் தாக்கீது அனுப்பி உள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்களிடம் ஒப்படைக்குமாறு பொது தீட்சிதர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத் தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், ரூ.3 கோடி பவளமாலை குறித்து விவரம் கேட்டு தீட்சிதர்களுக்கு அரசு தாக்கீது அனுப்பி உள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் ஓவியா said...


சாய்பாபா கோயிலில் கொள்ளை


சிக்மகளூர், டிச. 8- கர்நாடக மாநிலம், சிக்மகளூர் சாய்பாபா கோயில் கொள்ளை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிக்மகளூர் மாவட் டம், மதுவனலே அவுட் டில் சாய்பாபா கோயில் உள்ளது. இந்த கோயி லுக்கு சுற்றுப்புறங் களைச் சேர்ந்த பக்தர் கள் சாமி தரிசனத்துக் காக வருகின்றனர். பக் தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில், கோயில் வளாகத்தில் உண்டியல் வைக்கப்பட் டுள்ளது.

நேற்று முன்தினம், பூசாரி நாகராஜ் கோயில் நடையை பூட்டி விட்டுச் சென்றார். நேற்று காலை கோயிலுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந் ததை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, வளாகத்தில் இருந்த பீரோ, உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததும், அதிலிருந்த ரூ.25 ஆயி ரம் பணத்தை திருடிச் சென்றதும் தெரிந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், சம்பவ இடத் துக்கு விரைந்து வந்த காவலர், துப்பறியும் மோப்ப நாய் உதவியு டன் திருடர்களை தேடும் பணியில் ஈடுபட் டனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


கூறுவது கல்கி


நேருவுக்குப் பதில் பட்டேல் பிரதமர் ஆகியிருந் தால் நாட்டின் தலையெழுத்து மாறியிருக்கும் என்று மோடி பேசியதை விமர்சித்து, மறக்கப்பட்ட வாக்குறுதி என்ற கட்டுரையை எழுதினார் ஹிந்து பத்திரிகையாளர் வித்யா சுப்பிரமணியம். அந்தக் கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சித்து பட்டேல் எழுதிய கடிதத்தைப் பற்றி ஆதாரபூர்வமாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் கடுப்படைந்த சங்கக் குடும்பத்தினர் பத்திரிகையாளருக்கு அலைபேசி மூலமாக அசிங்கமாகப் பேசி கொலை மிரட்டலும் விட்டிருக்கின்றனர். வித்யா காவல்துறையில் புகார் செய்ய டில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய் திருக்கிறது. எந்தெந்த நம்பர்களில் இருந்து மிரட்டல் வந்தது என்று பார்க்கும்போது பெரும்பாலான அழைப்புகள், தமிழ் நாட்டிலிருந்து அதுவும் கோவை யிலிருந்து வந்திருப்பது தெரியவந்தது.

இதுபற்றிய விவரங்களை டில்லி காவல்துறை தமிழக அரசுக்கு அனுப்பியிருந்தும் கோவை காவல்துறை இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்வதில் ஆர்வம் காட்டாமல் சுணக்கம் காட்டுகிறது என்கிறார்கள். இது என்ன அரசியலோ?

சென்னையில் உள்ள சுமார் ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் கணக்கில் வராமல் புரளும் பணம் மாதத்துக்கு சுமார் ஐந்து கோடி என்கிறார்கள். போலி மது விற்பது, டாஸ்மாக் சரக்கையே அதிக விலைக்கு விற்பது போன்றவற்றால் வரும் வருமானம் இது. பொதுவாக கடை மூடும் போதும், கூட்டம் அதிகமாக இருக்கும் போதும் அதிக விலைக்கு விற்பது, போலி மதுவை விற்பது போன்றவை நடக்கின்றன.

அவசரத்திலும், பதற்றத்திலும் குடிமகன்கள் இதைக் கண்டு கொள் வதில்லை. இந்த வரும்படி மேல்மட்டம் வரை பாய்கிறதாம். டாஸ்மாக் ஏரியா மானேஜர்கள் லட்சக்கணக்கில் கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்து நல்ல ஏரியா போஸ்டிங் வாங்குகிறார் களாம்.

(கல்கி 8.12.2013 பக்கம் 16)

தமிழ் ஓவியா said...


தஞ்சை விழாவில் பெருமக்கள் கொட்டு முரசம் தலைவர் வீரமணி எங்களுக்கு ஆசிரியர், வழிகாட்டி

ஒடிசா பேராசிரியர் தானேஸ்வர் சாகு

2.12.2013 அன்று மாலை தஞ்சையில் நடை பெற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - பெரியார் உலகத்திற்காக 1000 பவுனுக்குரிய தொகை வழங்கும் விழாவில் பாராட்டுரை வழங்கினார்கள்.

ஒடிசா பல்கலைக்கழகப் பேராசிரியர், ஒடிசா மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பேராசிரியர் தானேஸ்வர் சாகுவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்: (மொழியாக்கம்: வீ.குமரேசன்)

தலைவர் வீரமணி அவர்களே, இந்தப் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கக்கூடிய பெருமக்களே, தமிழகத்தைச் சார்ந்த சகோத ரர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

வரலாற்றில் தடம் பதிக்கவிருக்கின்ற இந்தப் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில், தலைவர் வீரமணி அவர்களுக்கும் ஏனைய பகுத் தறிவாளர் கழகத் தோழர்களுக்கும் எங்களது நன்றியினைச் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.

நான் இங்கே விருந்தாளியாக வரவில்லை; பேச்சாளனாகவும் வரவில்லை. பகுத்தறிவுப் பிரச்சார தலைமையிடம் நோக்கி வருகின்ற பகுத்தறிவாளர் பயணியாக, யாத்திரிகனாக வருகை தந்துள்ளேன்.

1980 ஆம் ஆண்டு பெரியாரை அறிந்து கொள்ளத் தொடங்கினேன். பெரியாருடைய பற்றாளராக மாறிய பின்பு, எனது வாழ்க்கையில் எனது மன உறுதியும், உளப்பாங்கும் பக்குவப் பட்டது.

எனது ஆசான் பெரியாருக்கு எனது நன்றி கலந்த மரியாதையினை அவரது சீடர் தலைவர் வீரமணி அவர்களின் 81 ஆம் ஆண்டு பிறந்த நாளில், சுயமரியாதை நாளாகக் கொண்டாடப் படும் நாளில் வருகை தந்துள்ளேன்.

பெரியாருடைய 95 அடி உயர சிலை நிறுவப் படுவது குறித்து பெருமையும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

தலைவர் வீரமணி அவர்கள், பெரியாரது கொள்கை சார்ந்த வழித்தடத்தைப் பின்பற்றி வருகிறார்.

தலைவர் வீரமணி அவர்களே, நீங்கள் பல்லாண்டு வாழ்ந்திட, சமுதாயப் பணியாற்றிட எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள் கிறோம்.

தலைவர் வீரமணி எங்களுக்கு வழிகாட்டி

தலைவர் வீரமணி அவர்கள், எங்களுக்கு நண்பராக, ஆசிரியராக, வழிகாட்டியாக விளங்கி வருகிறார்.

தலைவர் பெரியாரது மறைவிற்குப் பின்பு, தலைவர் வீரமணி அவர்களின் வழிகாட்டும் தலைமையில், பெரியார் விட்டுச் சென்ற பணிகள் தொடரப்பட்டு வருகின்றன.

தலைவரது தலைமைப் பண்பு, ஒருவித பரந்துபட்ட செயல்பாடு, மானுடக் கொள்கை மீதான பற்று, பகுத்தறிவு கொள்கையின்பால் அக்கறை; மற்றும் சுயமரியாதை இயக்கம்பற்றி எங்களிடம், எங்களைப் போன்ற பகுத்தறி வாளர்களிடம் ஒருவித ஆர்வத்தை உருவாக்கி உள்ளது. பெரியாருடைய கொள்கைகள் பரவுவ தற்கு வழி அமைத்து வருகிறது. பெரியாரைப்பற்றி உங்களிடம் பேசுவது, ஒரு தாய்மாமன் வீட்டில், தாயைப்பற்றி பேசுவதுபோலாகும்.

தந்தை பெரியார் அவர்கள் பள்ளிக் கல்வியை முழுமையாகப் பெற்றவர் அல்ல; படித்து பட்டம் பெற்றவரும் அல்ல. ஆனால், அவரது வாழ்வே ஒரு பல்கலைக் கழகத்திற்குச் சமமானது. சமு தாயத்தில் மனிதர்கள் படுகின்ற சமூக இன்னல் கள், நிலவுகின்ற சமூக அநீதிகள் அவருடைய மனதில் மாபெரும் மனப்போக்கினை உருவாக் கின.

தனது வசதி நிறைந்த வாழ்க்கையினை, தான் ஏற்றுக்கொண்ட சமூக சீர்திருத்தப் பணிகளுக் காக, பகுத்தறிவு சிந்தனையினை மக்களிடம் வளர்ப்பதற்காக அர்ப்பணித்தார். தீண்டாமைக் கொடுமையினை அவர் எதிர்த்தபொழுது, சமூகத்திலிருந்து பலவிதமான எதிர்ப்புகள் அவரை நோக்கிக் கிளம்பின; பார்ப்பனச் சுரண்டலும் அவரைப் பழிவாங்கிட சூழ்ச்சி செய்தது.

தமிழ் ஓவியா said...

எந்தவித எதிர்பார்ப்புக்கும் பெரியார் மசியவில்லை, அசைந்து கொடுக்கவில்லை. அவருடைய உள்ள உறுதி மேலும் வலுப்படவே செய்தது.

பெரும்பாலான சமூகப் புரட்சியாளர்கள் தம் வாழ்நாளில் எதிர்க்கப்பட்டே வந்துள்ளனர். காரணம், எதிர்காலத்தை நிகழ்காலத்தில் நடத்திட விரும்பியதுதான். பெரியார் அவர்கள் பல்வேறு எதிர்ப்புகளை எதிர்த்து, பகுத்தறிவு பிரச்சாரம் செய்து வந்தார். சமூக அநீதி ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தும் ஜாதிக் கட்டமைப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்.

சமூக அவலங்கள்

இந்தியா அரசியல் விடுதலை பெறுவதற்கு முன்பாகவே, இந்த நாடு பலவித சமூக அவலங் களைக் கொண்டிருந்தது. தீண்டாமை, குழந்தைத் திருமணம், பெண்ணடிமை, கல்வியின்மை, ஏழ்மை என பரவலாக சமுதாயத்தில் அவை நிலவி வந்தன. இத்தகைய நிலைமைகளை மாற்றிட, பெரியார் அவர்கள் களம் அமைத்துப் பாடுபட்டார். தமது வாழ்வையே அர்ப்பணித்தார்.

தந்தை பெரியார் அவர்கள் எந்தவித ஆட்சி அதிகாரத்திலும் இருந்தவர் அல்ல. அதிகாரம் கொள்ள அழைப்பு வந்தபொழுது, வேண்டாம் என்று சொன்னவர்தான் பெரியார்.

பெரியார் பெரிய தொலைநோக்காளர்; சமூக விஞ்ஞானி. மக்களுக்கு எது நல்லது என்று அறிந்துகொண்டு, அன்று நிலவிய சமூக அநீதியை நீக்கிட போராடி வந்த தலைவர். தீண்டாமையை எதிர்த்து தார்மீக யுத்தம் நடத் தினார். அடக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் என்றைக்குமே சளைக்காமல் போராடி வந்தார்.

பெரியார் மனிதநேயம் காக்க பாடுபட்ட ஒரு மாமனிதர் ஆவார். பெரியாருடைய சுயமரியா தைக் கொள்கை தனித்துவம் மிக்கது. பெண்ண டிமை தன்மை கொண்ட, தேவதாசி முறையை அவர் எதிர்த்து வந்தார். மகளிரின் கறைபடிந்த வாழ்வினைக் களைந்திட பாடுபட்ட தலைவர் பெரியார். கல்வி புகட்டுதலே அறிவியல் ஆர்வத் தினைப் பெருக்கும் என்று சமூக பிற்போக்கு மூடத் தனங்களிலிருந்து மக்களை விடுதலை அடையச் செய்த தலைவர் தந்தை பெரியார் ஆவார்.

மூடநம்பிக்கை ஒழிப்பு

மூட நம்பிக்கை ஒழிப்பில் முழுமையான அக்கறை கொண்டிருந்தார். வாழ்க்கையில் புதிர்கள் தென்படலாம்; அற்புதங்கள் நிகழ்விற்கு இடமேயில்லை. அது கட்டுக்கதை.

தென்படும் புதிர்களை பகுத்தறிவு கொண்டு விளக்கம் காண முடியும். அறிவியல் மனப்பான்மையினை வளர்த் துக் கொள்வது அற்புதங்களை அர்த்தமில்லாமல் செய்துவிடும். மொத்தத்தில் தந்தை பெரியார் அவர்கள் மனிதநேயத்தைப் பொறுத்தவரையில், மாமனிதராக, மக்களிடையே நிலவிய பல்வேறு வேறுபாடுகளை, ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து சமூகத்தில் சமத்துவம் நிலவ பாடுபட்ட ஒரு மாபெரும் தலைவர் பெரியார். அப்படிப்பட்ட அந்தப் பெரியாரின் சீடர் தலைவர் வீரமணி அவர்களுடைய பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு பேராசிரியர் தானேஸ்வர் சாகு அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன்

பெரியாருடைய மூளையாக, பெரியாருடைய உள்ளமாக, பெரியாருடைய சிந்தனையாக, பெரியாருடைய குரலாக எங்களிடையே வாழ்ந்துகொண்டிருக்கக் கூடிய எங்கள் வீரமணி அவர்கள், இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து அவருடைய பணியை மென்மேலும் தொடரவேண்டும்.

வீரமணி அவர்களுடைய பிறந்த நாளில், பெரியாருடைய கொள்கையைப்பற்றி பேசுவது என்பது தேவையில்லாத ஒன்று. காரணம், பெரியாருடைய மறுஉருவமாக இங்கே வீற்றிருக் கின்ற வீரமணி அவர்கள், தனது வாழ்நாள் முழுவதையும் பெரியாருடைய கொள்கைகளைப் பரப்புவதிலே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணி செய்துகொண்டிருக்கிறார்கள்.

அவருடைய சிந்தனை மிகத் தெளிவானது. அவருடைய எண்ணங்கள் உயர்வானது. அவர் விடுதலையில் தொடர்ந்து எழுதிவரும் வாழ்வியல் பெரியார் காட்டிய பகுத்தறிவுப் பாதையை செம்மைப்படுத்தக் கூடிய ஒன்று. அவருடைய எழுத்தும், பேச்சும், சிந்தனையும், அவருடைய கொள்கை தமிழ்நாட்டிற்கு மட்டு மல்லாமல், இந்திய நாட்டிற்கு மட்டுமல்லாமல், உலக அளவிற்கு அது பரவ வேண்டும்.

இந்தியா முழுவதிலும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கு, அறியாமையைப் போக்குவதற்கு, இயலாமையை, கல்லாமையைப் நீக்குவதற்கு, வீரமணி அவர் களுடைய எழுத்தும், சிந்தனையும், பேச்சும் நிச்சயமாகப் பயன்படும்.

அப்படிப்பட்ட மாபெரும் தலைவர் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருப்பது நாம் பெற்ற பேறு. அவர் வாழ்கின்ற காலத்தில் நாம் வாழுகின்றோம் என்று நினைக்கும்பொழுது நாம் பெருமைப்படுகிறோம். இந்த நல்ல மனிதர் வீரமணி, பெரியார் வழி நின்று வழிகாட்டிக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்ச் சமுதாயத்தினு டைய ஒப்பற்ற வழிகாட்டி நீண்ட நாள் வாழ வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

தமிழ் ஓவியா said...

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் உரையாற்றினார்.

திமுக மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்

தமிழ்நாட்டில் தோன்றிய பல்வேறு வகை யான சிந்தனையாளர்கள் மத்தியில், தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி, மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய தலைவர்கள் பலர்.

ஆனால், தன்னுடைய காலத்திலேயே விதைத்து, தன்னுடைய காலத்திலேயே தாழ்த்தப் பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேற் றத்தை உருவாக்கி, ஆயிரம் ஆயிரம் ஆண்டு களாக இந்த நாட்டைப் பிடித்திருந்த சனாதனப் பேயை விரட்டிய தந்தை பெரியா ருடைய கருத்து கள்தான் இந்த நாட்டில் அரை நூற்றாண்டிற்கு மேலாக கோலோச்சுகிறது.

அந்தக் கருத்துகளின் முனை மாறாமல், தொடர்ந்து தந்தை பெரியாரின் தொண்டினைச் செய்து வருகிற அய்யா அவர்கள், தலைவர் கலைஞர் அவர்கள் செயலாற்றவும், அய்யா தமிழர் தலைவர் அவர்கள் கருத்துகளை விதைக்கவும், அன்றைக்கு குறிப்பிட்ட இரட்டைக் குழல் துப்பாக்கியைப் போல் இணைந்து செய லாற்றுகின்ற திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும் - அய்யா தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்தையும் தாண்டி, நீங்கள் வாழ்ந்து நூறாண்டை நிறைவு செய்து தமிழர் களுக்குத் தொண்டு செய்யுங்கள் என்று தஞ்சை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்தி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்!

- இவ்வாறு தஞ்சை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் உரையாற்றினார்.

தந்தை பெரியார் அழியாத கோட்பாடுகளையும், இயக்கத்தையும் வழிநடத்த தலைவர் வீரமணியையும் விட்டுச் சென்றார்
திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

எழுந்து பறக்கும் கொடிகள் கருப்பாய்; எடுத்து உடுத்திய உடைகள் கருப்பாய்; விரிந்து கிடக்கும் குடைகளும் கருப்பாய் இந்த மாநாடுபோல் நடந்து கொண்டிருக்கக் கூடிய இன்றைய விழாவில், நம்முடைய அனைவருடைய அன்பினையும், வாழ்த்துகளையும் ஏற்று நமக்கு வாழ்த்துகளைக் கூற வந்திருக்கின்ற தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களை, வாழ்த்த - பாராட்ட

ஏற்காட்டு மலையில் உதயசூரியனுக்கு வர வேற்பை சொல்லிவிட்டு, வருகை தந்துகொண்டி ருக்கக்கூடிய தளபதி அவர்களே,

தமிழ் ஓவியா said...

எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களே,

மழை காரணமாக விரைந்து முடிக்கவேண்டிய நிலையிலே இருக்கிறோம். மேடையில் இருக் கின்ற ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்க இயலாமைக்கு மன்னிக்கவேண்டும். மேடையில் இருக்கின்ற பெரியோர்களே! திரளாகக் கூடியிருக்கின்ற இனமானமிகு, எழுச்சிமிகு தமிழர்களே, உங்கள் அனைவரின் சார்பாகவும், நான் சார்ந்திருக்கின்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பாகவும், நம் அய்யா அவர்களுக்கு நம் அனைவரது நெஞ்சம் கலந்த அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

மிகக் குறைந்த சில நிமிடங்கள் மட்டுமே உங்கள் முன்னால் பேசலாம் என்றிருக்கிறேன்.

ஒன்றைக் குறிப்பிடவேண்டும். கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் சொன்னதை நான் வழி மொழிகிறேன். தந்தை பெரியார் அவர்கள் நமக்கு காலத்தால் அழியாத கோட்பாடுகளைத் தந்தார். அந்தக் கோட்பாடுகளை, கொள்கைகளைக் கொண்டுபோய் சேர்க்கின்ற இயக்கத்தைத் தந்தார். இயக்கத்திற்காக ஒரு நிறுவனத்தைத் தந்தார்.

இவை மூன்றை மட்டுமே தந்துவிட்டு பெரியார் சென்றிருப்பாரேயானால், திராவிடர் கழகம் ஒருவேளை இந்த நேரம் வலிமையை இழந்து இருக்கக்கூடும். ஆனால், இந்த மூன்றை யும் சேர்த்து, நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களையும் சேர்த்து தந்துவிட்டுப் போன காரணத்தினாலேதான், பெரியார் மறைந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்றைக்கும் இந்த எழுச்சிமிக்கக் கூட்டத்தினை தமிழ்நாட்டில் நம்மால் பார்க்க முடிகிறது.

எனவே, இப்படி ஒரு இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி செல்கின்ற, ஆற்றல்மிகு தலைவரை நாம் பெற்றிருக்கிறோம். இந்த இனிய தருணத்தில் நெடுநேரம் பேசிக் கொண்டிருப்பதற்கு இது நேரமில்லை என்கிற காரணத்தினாலே, மீண்டும் மீண்டும் நம் அனைவருடைய வாழ்த்துகளையும் அய்யா அவர்களுக்குச் சொல்லிக் கொள்கி றோம்.

வாழ்த்துவதற்கு வயதில்லை என்று சொல் வார்கள்; பகுத்தறிவாளர்களுக்கு அப்படியெல் லாம் ஒன்றுமில்லை. வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை; மனம் இருந்தால் போதும் என்பதால், மறுபடியும், மறுபடியும் வாழ்த்தி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரையாற்றினார்.

பெரியார் விட்டுச் சென்றவற்றுள் தலையாய சொத்து தமிழர் தலைவர்
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்

தந்தை பெரியார் நமக்கு விட்டுச் சென்ற சொத்துக்களில் மிகவும் தலையாய விலை மதிக்க முடியாத சொத்து என்னவென்றால், அவர்தான் இன்றைக்கு 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் தமிழர் தலைவர் அவர்கள்தான். இந்தத் தஞ்சையிலே, தந்தை பெரியார் அவர் களுக்கு எடைக்கு எடை வெள்ளி ரூபாய் அளிக் கப்பட்டது.

இந்தத் தஞ்சையில் தந்தை பெரியா ரின் நூற்றாண்டு விழாவினையொட்டி, 100 சவரன் தங்கம் அளிக்கப்பட்டது. இன்றைக்கு அது பாலிடெக்னிக்காக ஒளிவீசிக் கொண்டிருக் கிறது.

இதே தஞ்சையில், தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம் கொடுக்கப்பட்டு, இன்றைக்கு இந்தியாவினுடைய தலைநகரத்தில் பெரியார் மய்யமாக ஒளிவீசி திகழ்ந்து கொண் டிருக்கிறது.

இன்றைக்கு இதே தஞ்சையில் 1000 சவரன் தங்கத்திற்கு மேலாகக் கொடுக்கப்படுகின்ற இந்த முதலீடு, சிறுகனூரில் தந்தை பெரியார் அவர்கள் 95 அடி உயரத்திலே ஒளிவீசுவார் என்பதிலே இரண்டு கருத்துக்கு இடமிருக்க முடியாது.

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமோ என்று சொல்வார்கள்; சிலையெல்லாம் தந்தை பெரியா ரின் சிலையாகுமோ என்று சொல்கின்ற அள விற்கு, அது வெறும் சிலை அல்ல; அது சீலம். தந்தை பெரியார் கைத்தடியோடுதான் இருக் கின்றார். ஜாதிவாத சக்திகளுக்குக் கசையடி கொடுப்பார்; மதவாத சக்திகளுக்கு மரண அடி கொடுப்பார்.

திராவிட இயக்கத்திலே திரிபு வாதம் செய்பவர்களுக்கும் தந்தை பெரியார் அவர்கள் சரியான பாடம் புகட்டுவார். திரா விடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்கின்ற சக்திகளுக்கு தந்தை பெரியார் அவர்கள் சிம்ம சொப்பனமாக இருப்பார். பெரியார் என்றும் வாழ்வார்.

- இவ்வாறு திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


சடங்கு என்ற பெயரால் மனித குலத்துக்கு இழைக்கப்படும் அநீதி

பார்ப்பனர்கள் உணவருந்திய எச்சில் இலைகள்மீது மற்ற ஜாதியினர் உருளும் அவலம்!

சடங்கு என்ற பெயரால் மனித குலத்துக்கு இழைக்கப்படும் அநீதி

கர்நாடகாவில் மடாதிபதிகள், பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் கடும் கண்டனம்

மங்களூரு, டிச. 9- பார்ப்பனர்கள் உணவருந்திய எச்சில் இலைகள்மீது மற்ற ஜாதியினர் உருளும் அவலம் சடங்கு என்ற பெயரால் மனித குலத்துக்கு இழைக் கப்படும் அநீதி என கர்நாடகாவில் மடாதிபதிகள், பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரி வித்து பட்டினிப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

பார்ப்பனர்கள் உணவருந்திய எச்சில் இலைகள் மீது மற்ற ஜாதியினர் உருளும் சடங்கு கர்நாடகாவின் பெருமைக்கு இழுக்கா கும் என்பதுடன் மனித குலத்துக்கு இழைக்கப் படும் அநீதியும், இந்திய பண்பாட்டின் மீது சுமத் தப்படும் களங்கமு மாகும் என்று தார் வாட் ரேவன சித்தேஸ்வர மடாதிபதி சிறீ பசவ ராஜா தேவாரு கூறினார். மங்களூர் அருகே உள்ள குக்கே சுப்ரமணியா கோவிலில் நடைபெற்று வரும் இந்த மூடநம்பிக்கை சடங்கினை எதிர்த்து நடைபெற்ற ஒருநாள் பட்டினி போராட்டத் தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.

கர்நாடகா ராஜ்ய இந்து லிடா வர்க்கலா ஜகுருடா வேதிக் பிற்படுத்தப்பட் டோர் நல அமைப்பு சனிக் கிழமையன்று மங்களூர் துணை ஆணையாளர் அலு வலகம் எதிரில் மடேஸ் நானாவை எதிர்த்து சனிக் கிழமை யன்று ஒருநாள் பட்டி னிப் போராட்டம் நடத் தியது. எச்சில் இலைகள் மீது உருளுவதால் யாரும் குணம் அடை வதில்லை. பார்ப்பனர் களின் அகந்தையின் அடையாளமாக இது இன்றும் நீடிக்கிறது. எச்சில் இலை மீது உருளும் மக்கள் அப் பாவிகள் என்றும் நம் பிக்கையின் பெயரால் அவர்கள் நசுக்கப்படு கிறார்கள் என்றும் உதவி யற்றவர்கள் ஆக ஆக்கப் படுகிறார்கள் என்றும் தேவாரு குறிப்பிட்டார். மாநில முதல்வர் உடன டியாக இதில் தலை யிட்டு இது போன்ற மனித விரோத செயல் களை நிறுத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண் டும் என்றும் அவர் சொன்னார்.

இந்த மூடநம் பிக்கைப் பழக்கம் பல ஆண்டுகளாக நீடிக் கிறது. கடந்த நான்காண் டுகளாக தங்களது அமைப்பு இதை எதிர்த்து வருகிறது. இதற்காக தன்மீது தாக்குதல் நடத் தப்பட்டது இது இந்திய சமுதாயத்துக்கு விடுக்கப் படும் சவால் . இந்த பழக்கம் நிறுத்தப்படும் வரை தங்களுடைய எதிர்ப்பு தொடரும் என் றும் பிற்படுத்தப்பட் டோர் அமைப்பின் மாநில தலைவர் சிவ ராமு கூறினார். மைசூர் பேட்டாடபுரா மடாதி பதி சிறீரச்சோட்டி சிவாச் சார்ய சுவாமிஜியும் இந்த மடேஸ்நானா நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அமைச்சர் எதிர்ப்பு

தெற்கு கன்னடாவில் உள்ள குக்கே சுப்ர மணியா கோவிலில் நடைபெற்று வரும் மடேஸ்நானா போன்ற குருட்டுத்தனமான மூட நம்பிக்கைப் பழக்கங் களை மக்கள் ஆதரிக் கக்கூடாது என்று கர் நாடகா சமூக நலத்துறை அமைச்சர் எச்.ஆஞ்ச நேயா செய்தியாளர்களி டம் கூறினார். இது ஒரு மனித விரோத முட்டாள் தனமான நடைமுறை என்றும் அவர் கூறினார். இதில் கலந்து கொண் டவர்களை முட்டாள் கள் அல்லது அறி வாளிகள் என்று தன் னால் கூற இயலவில்லை என்றும் அவர் சொன் னார். எச்சில் இலைகள் மீது உருளுவதால், அவர் களின் தோல் மேலும் பாதிக்கப்படுமே தவிர அவர்கள் நம்புவது போல் தோல் வியாதிகள் குணம் அடைவதில்லை என்றும் அவர் கூறினார்.

இது போன்ற மூட நம்பிக்கைகளை சட்டங்களால் அகற்ற முடியாது என்றும் அவர் கூறினார். பல்வேறு மடாதிபதிகளும், மதத் தலைவர்களும் இது வொரு மனிதாபிமான மற்ற நடைமுறை என்று அறிவித்த பின்பும் மக்கள் இதில் ஈடுபடுவது வருந்தத்தக்கது என்றும் அவர் சொன்னார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மடேஸ்நானாவை எதிர்த்து இயக்கம் நடத் திய சிவராமுவை மத வெறி அமைப்புகள் கடு மையாக தாக்கின. இத னால் கடந்த இரண் டாண்டுகளாக பலத்த பாதுகாப்புடன் மடேஸ்நானா நடத்தப் பட்டு வருகிறது. இவ் வாண்டு கோவில் வளா கத்தில் நூற்றுக்கு மேற் பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்! கோயில் உண்டியல்கள் கொள்ளை


திட்டக்குடி,டிச.9- ராமநத்தம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற வர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவரு கின்றனர்.

ராமநத்தத்தை அடுத்துள்ள எழுத்தூர் கிராம எல்லையில் நல்லதங்காள் கோவில் உள்ளது. சம்பவத்தன்று மாலை இந்த கோவில் பூசாரி ராஜா வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கோவி லின் முன்பக்க கதவுகளை உடைத்து அங்கிருந்த உண்டியலோடு பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுபற்றி தகவல் அறிந்துதம் ராமநத்தம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், யாரோ சிலர் முன்புற இரும்பு கேட் மீது ஏறி உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு 2 உண்டியல்களை தூக்கி அருகில் சோளக்காட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். அந்த இடத்தில் உண்டியல்களை உடைத்துப் போட்டுவிட்டு பணத்துடன் ஓடியது தெரியவந்தது.

இதுகுறித்து ராமநத்தம் காவல் நிலையத்தில் பூசாரி ராஜா புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் விஜி வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்றவர்களை தேடி வரு கின்றார்.

தமிழ் ஓவியா said...


மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...


இளைஞர்களே, இயந்திரங்கள் வழி தானா?

உலகத்தின் தலைசிறந்த மனோ தத்துவ அறிவியல் சிந்தனையாளர் களில் ஒருவர் டேனியல் கோல்மென் (Daniel Goleman) அவர்கள்.

நியூயார்க் டைம்ஸ் என்ற பிரபல அமெரிக்க நாளேட்டின் அறிவியல் செய்தியாளராக நிருபராக இருந்தவர்; இதுவரை பல லட்சம் விற்பனையாகும் 13 புத்தகங்களை எழுதியவர்.
மக்கள் தொடர்புக்குரியதான நிறுவனங்கள், இயக்கங்கள், அமைப்பு களை நடத்துவோர் அனைவரும் எப்படி மனிதவளத்தைச் சீரிய முறை யில் நல்லுறவோடு பயன்படுத்தி முழுப் பயனைத் துய்ப்பது என்பதுபோன்ற கருத்துகளையே பலவித கோணங் களில் அந்த புத்தாக்கச் சிந்தனை ஊற்றான நூல்கள் நமக்குத் தருவன வாகும்.

அவர் 2013இல் எழுதி, 2014இல் வெளிவரவிருக்கும் ஒரு புதுப் புத்தகம் - (இப்போது கடைகளுக்கு வந்து விட்டது) வாங்கினேன். படித்தேன். சுவைத்தேன்.

‘Focus’ என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது அந்த புத்தகம் (‘The Hidden Driver of Exellence’) என்பது அதன் அடித்தலைப்பு ஆகும்.

இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் படித்து, தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அந்நூல் பல அரிய தகவல் களை அவர்களுக்கு அளிக்கிறது!

இன்றைய குழந்தை- வளர் இளம் பிராயத்தினர் எப்போதும் கைத் தொலைப் பேசி முதல் பல் வகை மின் கருவிகளோடு தான் வாழ்ந்த வண்ணம் உள்ளனர்.

இந்த உலகத்தைவிட டிஜிட்டில் உலகத்தில் (Digital World) தான் அவர்கள் சதா வாழ்கின்றனர்!

எங்கும் எதிலும் ‘Wifi’ - மின் இயந்தி ரங்களோடு இன்றைய இளையர்கள் தங்கள் வாழ்க்கையைச் செலவு செய் கின்றனர்!

உணவு, உறக்கம், படிப்பு - இவை களைக் கூட விட்டுவிட்டு - குடும்ப உறவுகளுடன் ஆசிரியர்களுடன்கூட உரையாடுவதைத் தவிர்த்து விட்டு, சதா சர்வ நேரமும் மின் இயந்திரக் கருவி களோடு, இணை பிரியா வாழ்வு வாழுகின்றனர்!

இவர் இதைப்பற்றி ஒரு அருமையான தேவையான எச்சரிக்கையை விடுத் துள்ளார்.

இப்போது இவர்களது நேரம் - காலம் - எல்லாம் அதிகம் நேரம் இந்தியரங் களுடன்; குறைந்த நேரமே மனித உறவு களுடன் என்ற போக்கு அண்மையில் பெரிதும் வளர்ந்துள்ளது.

இது விரும்பத்தக்கதல்ல; காரணம் குழந்தைகள், இளைஞர்களின் மூளை வளர்ச்சி என்பது, சமூக மற்றும் வளர்ச்சி பூர்வமான விஷயங்களைக் கற்று பெருக்கம் அடைவது என்பது மனிதத் தொடர்புகள் (Contacts) மற்றும் கலந்து உரையாடல்கள் (Conversatiion) மூலம்தான் ஒவ்வொரு நாளிலும் உருவாகிறது. இப்படி கலந்து பேசி உறவாடுதல் தான் மூளையின் ரத்த ஒட்டப் பாதையை பக்குவப்படுத்தி சிறப்பாக அமைய உதவி புரிகிறது. (Mold Brain Circutory)

குறைந்த நேரமே மனிதர்களுடன் பேசுவதில், விவாதிப்பதில் செலவிடப் படுமானால் மூளை வளர்ச்சி சிறப்பாக அமைவதற்கு அதுவே (அதாவது இயந்திரங்களை அதிக நேரம் செல விடப்படுதல்) பெருந்தடையேயாகும்.

அவ்வளவு தூரம் ஏன் போவா னேன்? நாம் வாய்ப்பாடு படித்தோம்; நினைவுவன்மையை அதிகப்படுத் தியது.

இப்போது Calculator கால் குலேட்டர் எதற்கெடுத்தாலும் பயன் படுத்துவது, அவசர விடை கிடைத்தா லும், மூளை வளர்ச்சிக்கு உதவவில் லையே! அது ஒன்றே போதாதா?

பல வகுப்பு நண்பர்களுக்கு உரை யாடல் சக்திகூட பலவீனமாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

(எஞ்சியவை நாளை) --k.veramani

தமிழ் ஓவியா said...


4 மாநில சட்டசபை தேர்தல் முடிவு தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து


சென்னை, டிச.9- 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவை வைத்து பார்க்கும் போது, காங்கிரஸ் கட்சிக்கு இது பின்னடைவுதான் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறினார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் சென் னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (8.12.2013) மாலை செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது செய்தி யாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கலைஞர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி:4 மாநில தேர்தல் முடிவுகளைப்பற்றி...!

கலைஞர்:அந்த மாநிலங்களில்இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு எல்லாம் என்னுடைய வாழ்த்துகள்.

கேள்வி:இந்த தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?.

கலைஞர்:யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. காங் கிரசை பொறுத்தவரையில் இது ஒரு பின்னடைவு தான்.

கேள்வி:ஏற்காடு இடைத்தேர்தலில் நடைபெற்ற அராஜகங்களை சுட்டிக்காட்டியிருக் கிறீர்கள். அதற்குப்பிறகும் கணிசமான வாக்குகள் தி.மு.க.விற்கு கிடைத்திருக் கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் உங்கள் புகார்களை கண்டு கொள்ள வில்லையே!.

கலைஞர்: தேர்தல் ஆணையம் முதல் அமைச்சரின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் கண்டனம் தெரிவித் திருக்கிறதே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கேள்வி:ஏற்காடு இடைத்தேர்தல் அராஜகங்களை பார்க்கும்போது, இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி என்ற நிலை இருக்கிறது!

கலைஞர்:ஆளுங்கட்சியின் அராஜகங்களை தடுக்க முடியவில்லையே, என்ன செய்வது?
கேள்வி: இதற்கு முடிவுதான் என்ன?

கலைஞர்: உங்களைப் போன்ற பத்திரிகைகாரர்கள் இதைப் பற்றி விளக்கி எழுத வேண்டும். அப்படித் துணிந்து எழுதினால் பயன் கிடைக்கும்.
- இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


தஞ்சை விழாவில் பெருமக்கள் கொட்டு முரசம்


தந்தை பெரியார் புகழ் உலகம் முழுவதும் பரவுவதற்குக் காரணமானவர் ஆசிரியர்
தி.மு.க. தேர்தல் பிரச்சாரக் குழு செயலாளர் எல்.கணேசன்


2.12.2013 அன்று மாலை தஞ்சையில் நடை பெற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - பெரியார் உலகத்திற்காக 1000 பவுனுக்குரிய தொகை வழங்கும் விழாவில் பாராட்டுரை வழங்கினார்கள்.

தி.மு.க.தேர்தல் பிரச்சாரக் குழு செயலாளர் எல்.கணேசன்

நான் ஒன்றே ஒன்றை மேற்குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். ஒரு தலைவருடைய புகழ், ஒரு தலைவருடைய வரலாறு நிலைப்பது என்பது அந்தத் தலைவராலே என்று நான் நினைப்பது இல்லை. தந்தை பெரியார் அவர்களுடைய புகழ் இன்றைக்கு அகில இந்திய அளவில், ஏன் இந்த அகில அளவில் நிலை நாட்டப்படுகிறது என்று சொன்னால், அதற்கு அடிப்படையான காரணம், அவருடைய வழித்தோன்றலாக, அவருக்குப் பின்னாலே அந்த இயக்கத்தைக் கட்டிக் காத்து வருகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள்தான்.

நான் இன்னும் சொல்லுவேன், அதுதான் உண்மை. உங்களுக்குத் தெரியும், அறிஞர் அண்ணா அவர்களுடைய புகழை, நிலை நிறுத்திய பெருமை அண்ணன் கலைஞர் அவர் களுக்குத்தான் உண்டு. அந்த மறுமலர்ச்சியை, யார் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமா னாலும் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் என்று அண் ணாவின் பெயரை அந்த மறுமலர்ச்சித் திட்டத் திற்கு வைப்பதற்கு, ஒரு கலைஞர்தான் தேவைப் பட்டார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

அதைப்போலத்தான், நாம் சமத்துவம், சகோதரத்துவம் என்றெல்லாம் சொல்கிறோம் அல்லவா, இந்தச் சொற்களை நாம் எங்கேயிருந்து கடன் பெற்றோம் தெரியுமா? பிரெஞ்ச் புரட்சி யின் மூலப் பிதாக்களாக இருந்த ரூசோ, வால் டேர் போன்றவர்கள் முழங்கிய முழக்கம்தான் சமத்துவம். ஆனால், நண்பர்களே, தந்தை பெரி யார் நினைவு சமத்துவபுரம் என்று பெயர் வைக்க, ஒரு கலைஞர்தான் தேவைப்பட்டிருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

ஆகவேதான், என்னைப் பொறுத்தவரையில், திராவிடர் இயக்கம் - தந்தை பெரியார் அவர்கள் கொள்கையைத் தந்தார் - இலட்சியத்தைக் கொடுத்தார் - அதுவும் புரட்சிகரமான இலட் சியத்தையும், கொள்கைகளையும் கொடுத்தார். அதோடு நின்றிருந்தால், பெரியார் நிலைத்திருக்க மாட்டார் - பெரியார் நிலைத்து நிற்கிறார் என்பதற்குக் காரணம், அவர் விட்டுச் சென்ற சொத்துக்களில் தலையாய சொத்து - தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான். அவர்களுக்கு இன்று 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா. இந்த பிறந்த நாள் விழாவில், இதயம் திறந்து வாழ்த்து கிறேன். வாழ்த்துவதற்கு வயதெல்லாம் வேண்டிய தில்லை - உள்ளம்தான் வேண்டும். எனக்கு நிரம்ப உள்ளம் உண்டு - அவர் வாழவேண்டும், வாழ வேண்டும் என்பதற்குத் தமிழ்ச் சமுதாயம் தந்தை பெரியார் வழியில் நடப்பதற்கு அவர் பாடுபட வேண்டும் என்பதற்காக அவர் வாழவேண்டும், வாழவேண்டும் என்று வாழ்த்தி விடைபெறு கிறேன், நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்

தமிழர் தலைவர் அவர்கள் பாலப் பருவம் முதல் 81 வயது வரை 71 ஆண்டுகளுக்கும் மேலான பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராக - தந்தை பெரியாரால் அடையாளம் காணப்பட்டு 71 ஆண்டு காலம் ஒரே கட்சி - ஒரே கொடி - ஒரே தலைமை என்று இன்றைக்கும் ஒரு போர்க்கள நாயகராகத் திகழ்ந்துகொண்டிருக்கக்கூடிய உத்தமத் தலைவராக இந்தியத் துணைக் கண்டத்தில் திகழ்ந்து வருபவர் தமிழர் தலைவர் அவர்கள்தான்.

எந்த ஒரு தலைமைக்கும் இல்லாத சிறப்பும், பெருமையும் 71 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 வயதில் மேடை ஏறி பேசத் தொடங்கி, கம்ப ராமாயணத்திலும், கடவுள் காம லீலைகளிலும் ஊறித் திளைத்திருக்கும் என்னருமை தமிழகப் பெருமக்களே என்று தமிழ்நாட்டு மக்களுடைய உள்ளத்திலே ஒரு விழிப்புணர்ச்சியை, அறியா மைக்கு எதிரான ஒரு அறப்போர் உணர்வைத் தூண்டிவிட்ட அந்தத் தலைவர்தான், இன்றைக்கு ஒரு மாபெரும் தலைவராக உயர்ந்திருக்கிறார். அப்படிப்பட்ட தலைவரை வாழ்த்திப் பெருமை சேர்க்க வெறும் பிறந்த நாள் விழாவாக மட்டும் இல்லாமல், இந்த நிகழ்ச்சியை, பெரியார் உலகம் காண - 95 அடி உயர பெரியார் சிலை - பீடத்தை யும் சேர்த்து 135 அடி உயர பெரியார் சிலையை உருவாக்கி - அந்தச் சிலை உருவாக்கத்திற்காக இந்தப் பிறந்த நாள் விழாவைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு தலைவராக, அப்பழுக்கற்ற ஒரு தலைவராக திகழ்ந்துகொண்டிருக்கக்கூடிய தத்துவப் பேராசான்தான் தந்தை பெரியாரின் அரிய கண்டுபிடிப்புதான் - இவர்! வழிகாட்டக் கூடிய ஒரு மாபெரும் தலைவராக அடையாளப் படுத்தி இருக்கக்கூடிய அந்தத் தலைவரை வாழ்க, வாழ்க என நெஞ்சார வாழ்த்தக் கூடிய வகையில், இன்றைக்கு மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் என்று சொல்லக்கூடிய வகையில், இயற்கையே இன்றைக்கு எங்கள் தலைவரை வாழ்த்துகிறது.

இந்தத் தலைவர் வாழவேண்டும்; ஒரு புரட்சிக்காரராக, புதுமையாளராக, பெரியாரின் கொள்கையைப் பரப்புகின்ற ஒரு பணியாளராக, பெரியார் கொள்கையைப் பேசாத நாளெல்லாம் தன் வாழ்க்கையில் வெறும் நாள் என அறிவித்து, பெரியாரின் கொள்கையைப் பேசிக்கொண்டே யிருக்கக் கூடிய அந்தத் தலைவர் - இன்றைக்கு அவரைத் தமிழகமே வாழ்த்துகிறது என்று சொல்லி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி

நம்மால் முடியாதது யாராலும் முடியாது
யாராலும் முடியாதது நம்மால் மட்டும் முடியும் என்று இன்று நிரூபித்துக் காட்டி, மிக அமைதியாக இருக்கும் திராவிட இயக்கத்தின் அருமை மிகு உறவுகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினை தெரிவித் துக் கொள்கிறேன்.

தந்தை பெரியார் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை - பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அவர் செய்த மிகப்பெரிய சமூகப் பணிகளை இளைஞர் சமுதாயமும், மாணவர் சமுதாயமும் தெரிந்துகொள்வதற்கு ஏற்ற வகையில், தமிழர் தலைவர் அய்யா அவர்கள், சிறுகனூரில் தந்தை பெரியார் அவர்களுக்கு 95 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கவேண்டும் என்று, அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தின்படி, சிறுகனூரில் பெரியார் உலகம் அமைய, பெரியாரின் 95 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கவேண்டுமானால், 500 டன் சிமெண்ட், 300 டன் இரும்பு, 146 டன் வெண்கலம் மேலும், நூலகம், ஆய்வகம், உணவு விடுதி, சிறுவர் பூங்கா இவை அனைத்தும் அமைய வேண்டுமென்று சொன்னால், 39 கோடியே 85 லட்சம் ரூபாய் தேவை என்ற நிலையில், இது முதல் ஆரம்பமாக, முதல் சுற்றாக, திராவிடர் கழகத்தின் தோழர்கள் தேனீக்கள் போல பறந்து பறந்து சேகரித்து, 43 நாள்களில் 2 கோடியே 51 லட்சத்து 33 ஆயிரம் (அதாவது 1005 பவுன்) ரூபாய் சேகரிக்கப்பட்டு முதல் தவணையாக இது அளிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய தோழர்கள் தேனீக்களைப் போல சுற்றிச் சுற்றி இந்தத் தொகை யினை வசூலித்திருக்கிறார்கள். இது முதல் தொகை தான். இன்னும் 7 கோடி தமிழர்கள் இருக்கக் கூடிய சூழ்நிலையில், எல்லோரிடத்திலும் வசூ லித்து, இந்த 39 கோடியே 85 லட்சம் ரூபாயினை நாம் அடைவோம் என்று சூளுரைப்போம். இவ் வாறு திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

தமிழர்க்கு உலகில் எந்த மூலையில் இடர்ப்பாடு வந்தாலும் முதலில் குரல் கொடுக்கக்கூடிய தலைவர் ஆசிரியர் வீரமணி - டாக்டர் சோம.இளங்கோவன் படப்பிடிப்பு

பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் (அமெரிக்கா) அவர்கள் உரையாற்றுகையில்,

அருமைத் தமிழ் நெஞ்சங்களே, தந்தை பெரியார் வாழ்கிறார், வாழ்ந்து கொண்டிருக் கிறார் - சிலையாக இல்லை, சிந்தனையாக உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை, தினந்தோறும் தமது கடும் உழைப் பால், தமிழகம் மட்டுமன்றி, உலகெங்கும் பரப்பி வரும் தமிழர் தலைவர் அவர்களே, கூடியுள்ள பெரியோர்களே, தாய்மார்களே, ஆர்வமிக்க தொண்டர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

ஓரிரு செய்திகளைச் சொல்லி, தமிழர் தலைவர் அவர்களை வாழ்த்த விரும்புகிறேன். எந்தத் தமிழனுக்கு உலகத்தில் எந்த ஒரு மூலையில் கெடுதல் நடந்தாலும், முதலில் துடிக்கும் இதயம் நம்முடைய தமிழர் தலைவர் இதயமாகத்தான் இருக்கும். தமிழ்நாடு அறக்கட்டளை என்று அமெரிக்காவிலுள்ள நாங்கள் இங்கே நிறுவினோம்; அதற்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டது. அந்த இடத்திற்கு ஒரு ஆபத்து வந்தது. உடனே தமிழர் தலைவர் அவர்கள் எங்களை அழைத்து, அதற்கு ஆவன செய்ய அறிவுரை வழங்கினார். அந்த இடம் காப் பாற்றப்பட்டு, இன்றைக்கு தமிழ்நாடு அறக்கட் டளை பல பணிகளைச் செய்து வருகிறது.

அதேபோல், அமெரிக்காவில் ஒரு செய்தி வந்தது; ராஜபக்சே அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கப் போகிறான் என்று; அந்தச் செய்தியைத் தெரிவித்தவுடனே தமிழர் தலைவர் அவர்கள் மிகவும் ஆத்திரத்துடன், முதல்வர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து, என் னென்ன செய்ய முடியுமோ, அத்தனையையும் செய்தார்கள். அடுத்த நாள் முதல்வர் கலைஞர் அவர்கள், யாருக்கும் தெரியாமல் உண்ணா விரதம் இருந்தார். ஆனால், கொடுங்கோலன் ராஜபக்சே, பொய் சொல்லி, ஏமாற்றி விட்டான்.

தந்தை பெரியார் அவர்களின் வாரிசு என்று சொன்னார்கள்; அது கொள்கை வாரிசாக இன்று உலகமெங்கும் பெரியாரின் கொள்கை யைப் பரப்புவதற்காக நாங்கள் எல்லாம் பாடுபடுகின்றோம் அவரின் தலைமையில்.

அவர் வெளிநாட்டிற்கு வந்துவிட்டால், ஈ மொய்க்கும் கும்பல்போல் தமிழர்களின் கூட்டம் அவரிடம் அன்போடு பழகுவதைப் பார்த்தால், ஆசிரியரும், பெரியாரும் என்றும் வாழ்வார்கள் என்பதை நாம் மிகவும் உறுதி யாகச் சொல்லிக் கொள்ளலாம்.
திராவிடர் கழகம், தமிழர் தலைவர் அவர்கள் ஒரு ஏணி போன்று. அந்த ஏணியில் ஏறியவர்கள் பலர் உண்டு.

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்
என்றார் திருவள்ளுவர்.

எல்லாப் புகழும் வேண்டாம் - தமிழர் தலை வரின் ஆணை மட்டும் போதும்; எங்களுக்குப் புகழ் வேண்டாம் - உங்கள் கடமைகளை நிறைவேற்றுவோம் என்று ஆயிரம் ஆயிரம் கருஞ்சட்டைப் படையினர் தயாராக உள்ளனர். ஆயிரம் பொற்காசுகள் ஒன்றும் பெரிய செய் தியல்ல - அவருடைய ஆணையை நிறைவேற்ற ஆயிரம் ஆயிரம் கருஞ்சட்டைத் தொண்டர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். அவர் நீண்டு வாழவேண்டும்; தமிழர்களுக்கு இன விடுதலை முக்கியம்; அந்த இன விடுதலை கிடைக்கும்வரை வாழ்ந்து அவர் சாதித்துக் காட்டவேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகின்றேன்.
- இவ்வாறு அவர் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


ஸ்டெம்செல்கள் மூலம் செயல்பாட்டு நுரையீரல் செல்கள்: மருத்துவ உலகில் புதிய சாதனை

ஸ்டெம் செல்களைக் கொண்டு புதிய நுரையீரல் செல்களை உரு வாக்கி அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள் புதிய சாதனை படைத் துள்ளனர். ஸ்டெம்செல்கள் மூலம் இதுவரை இதய செல்கள், கணைய பீட்டா செல்கள், குடல் செல்கள், கல்லீரல் செல்கள், நரம்பு செல்கள் போன்றவை உருவாக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், ஸ்டெம் செல்கள் மூலம் முதன்முறையாக செயல்பாட்டு நுரையீரல் செல்களை உருவாக்கி புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர் அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள்.

நுரையீரல் செல்கள்.... அமெரிக்காவின் கொலம் பியா மருத்துவ மய்யத்தின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனித ஸ்டெம்செல்களைக் கொண்டு முதன்முறையாக செயல்பாட்டு நுரையீரல் செல்களை உருவாக்கியுள்ளனர்.

முக்கியத்துவம் வாய்ந்தது.... இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், நுரையீரல் நோய் குறித்த மாதிரிகளை ஆய்வு செய்வதிலும், மருந்துகளைப் பரி சோதிப்பதிலும், மனித நுரையீரல் வளர்ச்சிகளைப் பற்றி அறிவதிலும், மாற்று நுரையீரல் திசு உருவாக்கு வதிலும் முக்கியத்துவம் பெறுவதாக கருதப்படுகிறது.

புதிய முன்னேற்றம்.... தனது ஆராய்ச்சி முடிவுகள் குறித்து மருத் துவ பேராசிரியர் ஹான்ஸ் வில்லியம் கூறுகையில், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது பெரிய முன்னேற்றத்தை இதுநாள்வரை கொண்டிருக்க வில்லை. எனவே, தற்போதைய கண்டுபிடிப்பு இந்த சிகிச்சையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

நுரையீரல் மாற்றுச் சிகிச்சை.... இவற்றை முறையாகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர பல வருடங்கள் ஆகும் என்றபோதிலும், ஒரு நோயாளிக்கு அவரது தோலைப் பயன்படுத்துவதன் மூலம் நுரையீரல் மாற்று சிகிச்சை அளிப்பது குறித்து நாம் யோசிக்கத் தொடங்கமுடியும்' எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

உடல் நலம் காக்க...

கீரை சாப்பிடுங்க கீரைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. எல்லாவித கீரையிலும் மருத்துவ குணங்கள் உள்ளது.
வெந்தயக்கீரை: உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்றுப் புண்கள், பேதியை குறைக்கும். அதிகமாக இரும்புச்சத்து கொண்டது.

முருங்கை கீரை: உடலுக்கு சக்தியையும், வலிமை யையும் அளிக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆண்மையை அதிகரிக்கச்செய்யும். மலச்சிக்கலை குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். மாதவிலக்கின் போது ஏற்படும் வலியை குறைக்கும். ரத்தசோகையை குறைக்கும்.

அரைக்கீரை: உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி பெற்றது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கும். தளர்ச்சியைப் போக்கும். குடல் புண்னை ஆற்றும். குடலுக்கு வலிமையை தரும். தொடர்ந்து அரைக்கீரை சாப்பிட்டால் தேமல், சிரங்கு, சொறி, போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
சிறுகீரை: மலச்சிக்கலைக் குறைக்கும். தொடர்ந்து இந்த கீரையைச் சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப் படியான பித்தத்தைக் குறைக்கும். உடலுக்கு ஊக்கம் அழித்து தளர்ச்சியை போக்கும்.

அகத்திக்கீரை: உடலில் காணப்படும் அதிகஅளவு வெப்பத்தை குறைக்கும் குடற்புழுக்கலை அழிக்கும். பித்தம், தலைச்சுற்றல், மயக்கம், போன்றவை வராமல் தடுக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பேதி ஏற்படும்.
மணத்தக்காளி கீரை: வயிற்று புண்களை போக்கும். குடல் புண்களை குறைத்து குடலுக்கு பலம் அளிக்கும்.

பசலைக்கீரை: உடலுக்கு குளிர்ச்சி தரும். சிறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது. தாய்ப்பால் பெருகும்

தமிழ் ஓவியா said...


இன்று (டிச. 9) சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்

இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாக இருக் கக்கூடிய பிரச்சினைக ளில் முதலிடத்தை பிடித் திருப்பது ஊழல். இது நாட்டின் பொருளா தார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடியது. ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழலை தடுக் கக்கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக டிச., ஒன்பதாம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப் படுகிறது.

"பொதுச் சொத்தை, தனியாரின் கைகளுக்கு போக விடுவது, அதிகா ரத்தை தவறாக பயன் படுத்துவது, பொதுப் பணத்தில் முறைகேடு செய்வது' ஆகியவை தான் ஊழல். இது பல வழிகளில் நடக்கிறது. லஞ்சம், மோசடி, டெண் டர்களில் விரும்பியவர்க ளுக்கு வளைந்து கொடுப் பது, சட்ட விதிகளை பின்பற்ற மறுப்பது ஆகியவற்றின் மூலம் ஊழல் பெருகுகிறது.
டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷன்ல்' 2013ஆம் ஆண்டுக்கான "ஊழல் குறைவு முதல் அதிகம் வரை' என்ற அடிப்படையில் பட்டி யலை சமீபத்தில் வெளி யிட்டது. மொத்தம் 177 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஊழல் குறைவாக உள்ள இப்பட்டியலில் டென் மார்க், நியூசிலாந்து, பின்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்தியா, 94ஆவது இடத் தில் உள்ளது. அப்படி யெனில் இந்தியாவை விட, 93 நாடுகளில் ஊழல் குறைவாக உள்ளது.

லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் இருந்தா லும், இதனால் தண் டனை பெற்ற அதிகாரி கள் எண்ணிக்கை மிகக் குறைவே. அரசு அலுவலங் களில் மட்டும் அல்ல, முக்கிய பொது இடங் களில், லஞ்ச ஒழிப்பு துறையினரின் முகவரி, போன் எண்களை தெளி வாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், மக் கள் தைரியமாக புகார் செய்ய முன்வர வேண் டும். ஊழல் வழக்கில் கைது செய்யப்படுபவர்க ளின் பெயர்களை, பொது இடங்களில் விளம்பரப் படுத்த வேண்டும். ஊழல் வாதிகளுக்கு கடும் தண் டனை வழங்க வேண்டும். அவர்களது வேலையை யும் பறிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர் களிடம் அந்த எண் ணமே வராது.

தமிழ் ஓவியா said...


பெரியாரியல் பெண்ணியப் பயிற்சிப் பட்டறை

கழகக் குடும்பத்தினருக்கு, வணக்கம்!

நம் இயக்கக் கொள்கைகளை, நாடெங்கிலும் பரப்பி, பகுத்தறிவு சமுதாயம் படைக்க, பெண் பேச்சாளர்களை உருவாக்கும் நோக்கில் டிசம்பர் 24, 25 மற்றும் 26 ஆம் தேதிகளில், 15 முதல் 25 வயதிற்குட்பட்ட இளம் பெண்களுக்கு சென்னை பெரியார் திடலில் சிறந்த சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கொண்டு பேச்சுப் பயிற்சிப் பட்டறை நடத்துவதெனத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் பங்குபெற்று தங்கள் பேச்சுத் திறனைப் பட்டை தீட்டிக்கொள்ள விரும்பும் இளம் பெண்கள் தங்கள் பெயரைக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களிலோ, மின்னஞ்சல் முகவரியிலோ டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். மின்னஞ்சல் maniammaidaisy@gmail.com

தொடர்பு எண்கள்:

வி.டெய்சி மணியம்மை 9884851997, உமா செல்வராசு 9444868564, த.மரகதமணி 9841936691

அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர்), வி.டெய்சி மணியம்மை (மாநில செயலாளர், மகளிர் பாசறை), அ.கலைச்செல்வி (மாநில செயலாளர், மகளிரணி)

Read more: http://viduthalai.in/page-8/71785.html#ixzz2n7PCVFIw

தமிழ் ஓவியா said...


சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டிலேயே நீடிக்க அழுத்தமான வாதங்களை முன் வைக்க வேண்டும் தமிழக அரசுக்கு சிபிஎம் வேண்டுகோள்

சென்னை, டிச. 10 -சிதம்பரம் நடராஜர் கோவில்நிர்வாகம் அரசின் கட்டுப்பாட் டிலேயே நீடித்திட வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண் டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சி யின் மாநிலச் செயலா ளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச் சினை நீண்ட காலமாக நீதிமன்ற வழக்குகளில் நீடித்து வருகிறது.

சிறந்த பாரம்பரிய மிக்கதும், ஏராளமான நிலம், சொத்துக்கள், நகைகள் மற்றும் அன்றாட பக்தர் களிடமிருந்து பெறப் படும் வருமானம் போன்ற அனைத்தையும் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நிர்வா கிக்க வேண்டுமென நூறாண்டுகளுக்கு மேலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் இத்தகைய முயற்சிகள் அனைத் தையும் இழுத்தடித்து தொடர்ந்து தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள பொது தீட்சிதர்கள் நீதிமன்றங் களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் பகுதியாக தொடர்ந்து ஏற்பட்ட நிர்வாகச் சீர் கேடுகள் மற்றும் சொத் துக்கள் பராமரிப்பில் ஏற்பட்ட முறைகேடுகள் காரண மாகவும் அவை களை முறைப்படுத்திட 1982ம் ஆண்டு தனி நிர்வாக அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தர விட் டது.

வழக்கம் போல் இதனை எதிர்த்து தீட்சி தர்கள் சார்பில் பல கட்ட வழக்குகள் நடந்து, அர சின் உத்தரவை நீதி மன்றங்கள் ஏற்றுக் கொண்ட நிலையில், தற் போது தீட்சிதர்கள் சார் பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு நடைபெற்று அனைத்து தரப்பு வாதங்களும் முடிவுக்கு வந்துள்ளன. இருப்பினும் எழுத்துப் பூர்வமான வாதங்களை சமர்ப்பிக்க மேலும் அவ காசத்தை உச்சநீதிமன் றம் வழங்கியுள்ளது.

இவ்வழக்கிற்கு அரசு போதுமான அழுத்தம் கொடுக்க வேண்டும். எனவே தற்போதுள்ள அவகாசத்தை பயன் படுத்தி கோயில் நிர்வா கத்தை தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில் நீடிக்கும் வகையில் அழுத்தமாக தனது வாதங்களை முன்வைக்க வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசை வலியுறுத் துகிறது. கோயில் நிர்வா கம் அரசின் கட்டுப் பாட்டில் நீடிக்கும் போது தான் சொத்துக் கள், கோயில் பாரம் பரியம் போன்றவற்றை பாதுகாத்திட முடியும்.

மேலும் சுமார் 1000 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டுள்ள கலை சிற்ப கட்டுமானங்களை பாதுகாக்கவும், பராம ரிக்கவும் இயலும். கோயில் நிர்வாகத்தை அரசு மேற்கொள்ளும் அதே நேரத்தில் வழி பாட்டு முறைகளை தீட் சிதர்களே மேற்கொள்ள வழியுள்ளதால் பொது தீட்சதர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதையும் அரசு கணக்கில் கொண்டு - கோவில் நிர்வாகம் தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில் நீடித் திட தேவையான அனைத்து முயற்சிகளை யும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு வலியுறுத்துகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/71757.html#ixzz2n7PT3bIV

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!


இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல; மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.

(குடிஅரசு, 8.9.1940)

Read more: http://viduthalai.in/page-2/71759.html#ixzz2n7PtZVgx

தமிழ் ஓவியா said...


சிதம்பரம் கோயிலும் வேதவிதிமுறையும்


பார்ப்பனர்கள் தங்கள் சுரண்டல் தொழிலுக்கான கேந்திரங்களாகக் கோயில்களைப் பயன்படுத்தி வருவது பெரும் உண்மையே! போட்டிக் கடை வைத்து விளம்பரம் செய்வதுபோல ஒவ்வொரு கோயிலுக்கும் தவப் புராணங்களை எழுதி வைத்துக் கொண்டு பக்திப் போதையில் சிக்கியுள்ள - படித்த மற்றும் படிக்காத பாமர மக்களை தத்தம் கோயில்களின் பக்கம் கவர்ந்து இழுக்கிறார்கள்.

இந்த விளம்பர யுக்தியில் சிதம்பரம் நடராஜன் கோயிலைத் தட்டிக் கொள்ள முடியாது. அந்த அள வுக்குப் புளுகு மூட்டைகளை அள்ளி விட்டுள்ளனர்.

சைவக் கோயில்களில், கோயில் என்று சொன் னாலே அது சிதம்பரம் நடராஜன் கோயிலைத்தான் குறிக்குமாம். அப்படியென்றால் மற்ற கோயில்கள் எல்லாம் குட்டிச் சுவர்களா?

பொதுவாக சைவக் கோயில்களில் லிங்க வழிபாடு என்பது மிகவும் முக்கியம். சிதம்பரத்திலே அது கிடையவே கிடையாது, அதற்கு முக்கியத்துவமும் இல்லை.

இது தொடர்பாகப் பிரச்சினை வரும் போது மிகவும் சாமர்த்தியமாக ஆகாசலிங்கமாக இருப்பதாகக் கதை கட்டி விட்டார்கள்.
ஆகமம் ஆகமம் என்று எதற்கெடுத்தாலும் கூச்சல் போடுகிறார்களே - சிதம்பரம் கோயிலில் ஆகம விதி முறைகள் பின்பற்றப்படுவதில்லை; மாறாக வேத முறைகளைப் பின்பற்றுகிறார்கள்.

இது குறித்து பிரபல ஆன்மிகப் பழமான காஞ்சி புரம் அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் கூறியது கவனிக்கத் தக்கதாகும்.

வழிபாட்டு முறைகளுக்காக உண்டாக்கப்பட்டது தான் ஆகமம்; அதாவது வைஷ்ணவத்தில் பாஞ்சராத் ஆகமம் வைகனாஸ ஆகமம்னு ரெண்டு இருக்கு. சைவத்திற்கு சிவாகமம்னு பேர். இந்த ஆகமத்தை அதாவது வழிபாட்டு முறையைப் புறக்கணிச்சுட்டு வேதம் சொன்னபடிதான் வழிபாடு நடத்துவோம்னு சொல்பவர்கள்தான் தீட்சிதர்கள்.

வேதத்துக்குப் பிறகான காலங்களில் தோன்றியது தான் ஆகமம் ஆனால் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள யாகங்களில் முக்கியமானது பல பொருட்கள், அதாவது மாடுகள், ஆடுகள், குதிரைகள் ஆகிய வற்றைப் பலி கொடுக்க வேண்டும்.

அதனால் சிதம்பரத்திலுள்ள ஒவ்வொரு தீட்சிதரும் இன்று வரை பசுக்களைப் பலி கொடுக்கும் சோம யாகம் முதலியவற்றைச் செய்து வர வேண்டும் என்பது அய்தீகம். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் கோயிலுக்கு வெளியே பசுக்கள் பலியிடப்படும் யாகங்கள் நடத்தப்படுவதைப் பார்த்திருக்கிறேன், இன்று அப்படியெல்லாம் செய்கிறார்களா என்று எனக்குத் தெரியாது.

வேத வழிபாடு என்றால் பூஜை மொழியும், வேதம் சொன்ன வட மொழியில்தான் இருக்க வேண்டும் என்று சொல்லித் தான் தமிழுக்கு எதிராக மல்லுக்கு நிற்கிறார்கள் என்று அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் கூறியுள்ளார் (ஜூனியர்விகடன் 12.3.2008 பக்கம் 18)

சொல்லுவது யார் என்பதைப் பார்க்க வேண்டும்; திராவிடர் கழகத் தலைவர் இதனை சொல்லவில்லை, வேதம் மற்றும் ஆகமங்களில் கரை கண்டவர் அத்துப்படியானவர் என்று அவாள் வட்டாரத்திலேயே ஏற்றுக் கொள்ளப்படுபவர் - மறைந்த பெரியவாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு அத்தியந்தமாக இருந்தவர்; இன்னும் சொல்லப் போனால் அவருக்கு ஆலோசகராக இருந்த வரும்கூட!

சம்பிரதாயங்களை, கோயில் வழிமுறைகளை அப்படியே துல்லியமாக - கறாராகக் கடைப்பிடித்தே தீர வேண்டும் என்று அடம்பிடிப்பவர்கள், அதற்காக உச்சநீதிமன்றம் வரை செல்லக் கூடியவர்கள் அவர்கள் கடைப்பிடிக்கும் வேதமுறைப்படியான வழிபாட்டு முறைப்படி ஏன் உயிர்களைப் பலியிடுவ தில்லை?

அரசு காரணம் என்றால், அதன் பொருள்,கோயில் பிரச்சினைகளில் அரசு தலையிடும் அதிகாரம் படைத்தது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது சிதம்பரம் நடராஜன் கோயிலை அந்த முறைப்படி எடுத்துக் கொள்ளும்போது அதனை எதிர்த்து ஏன் நீதிமன்றம் செல்ல வேண்டும்?

இன்னொரு கேள்வியும் இருக்கிறது. தில்லைக் கூத்தன் ஆடுவதால்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அவர்கள் கூறுவது உண்மையானால், அதில் அந்தரங்க சுத்தியான நம்பிக்கை அவர்களுக்கு இருக்குமேயானால், அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லுவதற்குப் பதிலாக அந்த ஞானக் கூத்தனாகிய நடராஜப் பெரும் மானிடம்தானே முறையிட வேண்டும் ஏன் அவ்வாறு செய்யவில்லை? அவர்களுக்கே அந்தக் கடவுள்மீது நம்பிக்கை இல்லை என்று தானே பொருள்? பக்தர்கள் சிந்திப்பார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/71761.html#ixzz2n7Q4CRoT

தமிழ் ஓவியா said...


இன்று (டிச.10): சர்வதேச மனித உரிமைகள் தினம்


ஒவ்வொரு மனிதனும், தான் வாழ்வதுடன், பிற ரையும் வாழவிட வேண் டும் என்பதை வலியுறுத் தும் விதமாக டிச., 10ஆம் தேதி, மனித உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப் படுகிறது.

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக் கும் வலியுறுத்துவதே இதன் நோக்கம். 1948, டிச.10ஆம் தேதி அய்க் கிய நாடுகளின் பொது சபையால் உலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை, பெருமைப்படுத்தும் விதத் தில் 1950இல் இத்தினம் தொடங்கப்பட்டது.

உல கில் வாழும் அனைத்து மனிதர்களும் சமமான வர்களே. ஒருவரிடமி ருந்து நாம் எவ்வித உரி மையை எதிர்பார்க்கி றோமோ, அதே உரி மையை மற்றவர்களுக் கும் வழங்க வேண்டும். யாரும் யாரையும் அடி மைப்படுத்தக் கூடாது.

ஒருவர் பிறக்கும் போதே, அவருக்கான மனித உரிமைகள் வந்து விடுகின்றன. உயிர் வாழ் வதற்கான உரிமைகள், கருத்து சுதந்திரம், மனி தன் சுதந்திரமாக வாழ் வதற்கான கல்வி, மருத் துவம், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் மற்றும் ஒரு மனிதனாக வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் எனலாம். இது அனைத்து மக்களும் அங்கீகரிக்கக்கூடிய சர்வதேச அங்கீகாரத்தை பெற்றவை.

இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் 1991, அக். 13இல் இந்திய மனித உரிமைகள் பாது காப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-3/71800.html#ixzz2n7QzMXyo

தமிழ் ஓவியா said...


பாராட்டத் தக்க நியமனம்


டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தராக டாக்டர் வணங்காமுடி நியமனம்

சென்னை, டிச. 11- தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் புதிய துணை வேந்தராக பேராசிரியர் முனைவர் வணங்காமுடி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் புதன்கிழமை (டிச. 11) பல்கலைக் கழகத்தின் 6 ஆவது துணை வேந்தராக பதவி ஏற்றார்.

திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டியில் விவசாயக்குடும்பத்தில் பிறந்த இவர் 2 எம்.ஏ., எம்.எல். முடித்து 2 ஆராய்ச்சிப் படிப்புகளை (பிஎச்.டி.) நிறைவு செய்துள்ளார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் கடந்த 9 ஆண்டுகளாக பேராசிரியராகப் பணியாற்றியதோடு, பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார். இவரது மனைவி சமாதானம் அரசு பள்ளி ஆசிரியர். மகள் அன்பரசி சிங்கப்பூரில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/71829.html#ixzz2nAwXwNcA

தமிழ் ஓவியா said...


பொதுவுடைமை- பொதுவுரிமை


பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.
(குடிஅரசு, 25.3.1944)

Read more: http://viduthalai.in/page-2/71834.html#ixzz2nAwmEJeG

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டும் சட்டம் ஒழுங்கு படும்பாடு!


கேள்வி :- சட்டம், ஒழுங்கு இன்று (10-12-2013) ஒரு நாளில் மட்டும்?

கலைஞர் :- 10-12-2013 ஒரு நாளில் மாத்திரம் ஏடுகளில் வந்துள்ள சட்டம் ஒழுங்கு பற்றிய செய்திகளின் தலைப்புகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

தாயைக் காப்பாற்ற முயன்ற மகன் செங்கத்தில் சுட்டுக் கொலை. சென்னையில் மூன்று இடங்களில் போலீசார்போல வேடமணிந்து செயின் பறிப்பு. பெண்ணாகரத்தில் போதையில் மூன்று போலீசார். அரசு நிலத்தில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் அலுவலகம். திருவண்ணாமலை யில் கலெக்டர் அலுவலகம் முன் நான்கு பேர் தீக்குளிக்க முயற்சி.

நடிகர் மயில்சாமியிடம் 50 ஆயிரம் கேட்டு மிரட்டல். துரைப்பாக்கத்தில் பெண்ணிடம் 12 சவரன் அபேஸ். சென்னைத் தெருக்களில் தண்ணீர் புகுந்து மீனவர்களின் 2 வீடுகள் இடிந்தன. மது விருந்தில் தகராறு - ஒருவருக்கு பீர் பாட்டில் குத்து. மீனம்பாக்கத்தில் இஞ்சினீயரிடம் 20 சவரன் கொள்ளை. ஆலந்தூரில் பெண் ஊழியரைத் தாக்கி நகை பறிப்பு.

வீட்டு மனை வழங்க 2000 ரூபாய் லஞ்சம். ஆவடியில் மூதாட்டியிடம் 23 சவரன் கொள்ளை. சோழவரத்தில் தம்பதியரிடம் நகை பறிப்பு. திருப்போரூர் அருகே பிளாஸ்டிக் கம்பெனியில் நள்ளிரவில் பயங்கரத் தீ - பெட்ரோல் ஊற்றி எரித்ததாகப் புகார். ரயிலில் 25 சவரன் நகை பறித்த நான்கு பெண்கள்.

இன்ஸ்பெக்டருக்கு எதிராக பா.ஜ.க. திடீர் போர்க்கொடி. அய்யப்ப பக்தர்கள்போல் கொள்ளையர்கள் ஊடுருவல். தூத்துக்குடி அருகே பெண் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டுக் கொலை. வேலூர் சிறையில் மோதல். பெரவள்ளூரில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து இரண்டரை லட்சம் ரூபாய் கொள்ளை. கோயம்பேட்டில் பால் விற்கும் பெண் உரிமை யாளரைத் தாக்கிக் கொள் ளை.

இந்தப் பட்டியல் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்கிறது சட்டம் ஒழுங்கு!

- தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையிலிருந்து
(முரசொலி, 11.12.2013)

Read more: http://viduthalai.in/page-5/71813.html#ixzz2nAxQGugi

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்டவர் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., ஆகலாம்; அர்ச்சகர் ஆகக்கூடாதா?
சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் அடித்த கொள்ளை போதாதா?
சிதம்பரத்தில் சி.பி.எம். ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் முழக்கம்!

சிதம்பரம், டிச.11- சிதம்பரம் நடராஜன் கோயி லில் தீட்சிதர்கள் அடித்த கொள்ளையைத் தடுத்து நிறுத்த அக்கோயில் அரசின் கட்டுப் பாட்டில் தொடரவேண்டும் என்றார் சிதம்பரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.பால கிருஷ்ணன்.

சிதம்பரம் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், காந்திசிலை அருகில் 9.12.2013 திங் களன்று நகர சி.பி.எம். செயலாளர் தலைமையில் சிதம்பரம் நடராசர் கோயிலை அரசே தொடர்ந்து நிர்வகிக்க வேண்டுமென ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிதம் பரம் தொகுதி மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப் பினர் க.பாலகிருட்டிணன் சிறப்புரையாற்றினார். அவர் உரையில்...

சிதம்பரம் கோயிலை அரசு ஏற்றவுடன் வைக்கப்பட்ட உண்டியலில் கோடிக்கணக்கான ரூபாய் சேர்ந்துள்ளது. இதற்கு முன் தீட்சிதர்கள் காட்டிய கணக்கு வெறும் நாற்பதாயிரம் ரூபாய் தான். மூன்று ஆண்டுகளில் கோடிக்கணக்கான பணம் என்றால் கடந்த ஆண்டுகளில் எத்தனை கோடியிருக்கும். தற்பொழுது வெளிநாட்டைச் சார்ந்த ஒரு குடும்பம் மூன்றரைக் கோடி மதிப் புள்ள பவழ மாலை நன்கொடை கொடுத் துள்ளதாக செய்தி பத்திரிகைகளில் வந்துள்ளது.

தற்பொழுது கோயில் நிர்வாக அதிகாரி நு.டீ. அது குறித்து தீட்சிதர்களுக்கு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளார். இச்செய்தி எப் படியோ வெளியே வந்துள்ளது. இச்செய்தி தெரியாமல் போயிருந்தால் என்னவாகியிருக் கும்? தீட்சிதர்கள் சார்பில் ஒரு மூட்டை சிமெண் டாவது செலவு செய்து பராமரிப்பு செய்துள் ளீர்களா? என்னென்ன நகைகள் உள்ளன என்ற பட்டியல் வெளியிட்டு இருக்கிறீர்களா?

கோடிக் கணக்கான சொத்துக்களை, பல ஏக்கர் நிலங் களை நிர்வகிக்கும் பொறுப்பு ஒரு தனிப்பட்ட குழுவிடம் இருப்பது சரியா? இந்த தீட்சிதர்கள் துரத்தி அடித்ததால்தானே வள்ளலார் வடலூருக்கு ஓடினார். தீட்சிதர்கள் அவரை விரட்ட வில்லை என்றால் இங்குதானே இருந்திருப்பார்.

பெருமாளைத் தரிசிக்க உள்ளே போக முடியுமா?

சிதம்பரம் கோயிலின் உள்ளே கோவிந்தராஜ பெருமாள் கோயில் நிர்வாகம் சட்டப்படி தீட்சி தர்களுக்குச் சென்றுவிட்டால், நாங்கள் எங்கள் பெருமாள் கோயிலுக்குச் செல்வதை தீட்சிதர்கள் தடுத்தால், என்னசெய்வது என்று அவர்கள் கேட் கிறார்கள், தமிழில் பாடினால், ஆறுமுகசாமி ஓதுவார் தேவாரம் பாடினால் தீட்டாகிவிடு மென்றால், பிறகு எதற்குக் கோயில்? தமிழ்நாட் டில் தமிழுக்கு இடமில்லையென்றால் தமிழர் களுக்கு என்ன மரியாதை? யோக்கியதை?

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆனால் இவர்களுக்கு என்ன வந்தது? அதற்கும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு; சிதம்பரம் கோயில் விவகா ரத்திலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு. உச்ச நீதிமன்றம் என்ன இவர்களுக்கு மட்டும் சொந் தமா? ஒருவர் அய்.ஏ.எஸ். ஆகலாம்; அய்.பி.எஸ். ஆகலாம் ஆனால் அர்ச்சகர் ஆகமுடியாது என்றால், இந்த நிலை நீடிக்கவிடக் கூடாது.

சிதம்பரம் கோயிலை அரசு ஏற்பது என்பது எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபொழுதே நடைபெற்ற முயற்சி; தந்தை பெரியார் பிறந்த மண்ணில் - திராவிட இயக்கங்களின் ஆட்சியில் - சிதம்பரம் கோயிலை அரசு ஏற்கவில்லை என்றால், வேறு எந்த ஆட்சியில் நடைபெறும்?

தமிழக முதல்வருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இந்து மதத்திற்கே தலைவர் என்ற காஞ்சி சங்கராச்சாரியையே சிறையில் அடைத்த உங்களுக்கு தீட்சிதர்களின் ஆணவத்தை அடக்குவது பெரிய வேலையில்லை.

ஒருவேளை தீர்ப்பு நமக்குச் சாதகமாக இல்லையென்றாலும்கூட தமிழக அரசின் முயற்சி தொடரவேண்டும். இனிமேலாவது சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டும். வர்ணாசிரம தர்ம ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று சிறப்புரையாற் றினார்.

நிகழ்ச்சியில் சி.பி.அய். நகர செயலாளர் சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய லாளர் வ.க.செல்லப்பன், மாநில ப.க. அமைப்புச் செயலாளர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் மற்றும் பலர் உரையாற்றினர்.

Read more: http://viduthalai.in/page-8/71847.html#ixzz2nAxxTrzW