Search This Blog

12.12.13

ஜாதி இழிவு நீக்கமே எங்கள் குறி! - பெரியார்

ஜாதி இழிவு நீக்கமே எங்கள் குறி!

இந்த நாட்டை யார் ஆண்டாலும், எது ஆண்டாலும் இராமாயணத்தில் கூறி இருப்பது போல ஒரு ஜதை செருப்பு ஆண்டாலும் கூட எங்களுக்குக் கவலை இல்லை. எங்கள் கவலை எல்லாம் எங்களுக்கு இருக்கின்ற ஜாதிக் கொடுமைகள், இழிவுகள் ஒழிய வேண்டும் என்பது தான்!

இப்போது பெரிதாக அடிபடும் தேர்தலில் நின்று சட்டசபைக்கோ, பார்லிமென்டுக்கோ நிற்க வேண்டும் என்று ஆசைப்படுப்படுபவர்கள் அல்லர். ஆசைப்பட்டால் கிடைக்காதவர்களும் அல்லர். எங்கள் கட்சியின் கொள்கைகளில் ஒன்றே என்பது தான். நாங்கள் யாருக்கு ஒட்டுப் போட வேண்டும் என்று கூறுகிறோமோ அவர்களையெல்லாம் ஜெயிச்சு வைத்து காட்டி இருக்கிறோமே!

மற்றவன் பேசுவதை விட நாங்கள் பேசுவது தான் உண்மையானது என்பதை மக்கள் உணர முடியும். எங்களுக்குத்தான் சுயநலம் கிடையாது. எங்களுக்குத்தான் ஒட்டுப் பெட்டி இல்லை. மற்ற எந்தக் கட்சிக்காரன் மேடையேறினாலும் பேசுகின்றதை எல்லாம் பேசி விட்டுக் கடைசியில் எங்களுக்கு ஓட்டுக் கொடுங்கள் என்று தான் கேட்பான்.

நாங்கள் எப்போதாவது ஓட்டுக் கேட்கிறோம் என்றால் எங்களுக்காக அல்ல. சமுதாயக்கேடர்கள் உள்ளே வராமல் தடுக்க இன்னாருக்கு ஒட்டு அளியுங்கள் என்று வேண்டுமானால் கூறுவோம். எங்களை ஒர் அரசியல் கட்சிக்காரர்கள் என்று நீங்கள் நினைக்காதீர்கள். எங்களுக்கு உங்கள் ஒட்டு தேவை இல்லை.


இரண்டாவது, தேர்தலுக்கு நிற்கின்ற கட்சிகளில் காங்கிரஸ் தான் கொஞ்சம் பரவாய் இல்லை. மற்றக் கட்சிகள் எல்லாம் கேடானவைகள் என்பதை உணர்ந்தே இதனை மக்களுக்கு எடுத்து விளக்கி ஆதரிக்கச் சொன்னோம். இதுவே எங்கள் வேலையும், இலட்சியமும் அல்ல. தேர்தல் முடிந்ததும் எங்கள் வேலைக்கு அதாவது சமூதாயத் தொண்டுக்கு வந்து விட்டோம்.

இன்றைய காமராசரின் காங்கிரஸ் ஆட்சியானது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி, அறிவு சற்று இருந்த நமது சமூதாயத்துக்குக் கல்வி அளிக்க முன் வந்து பாடுபடுகின்றது.

அடுத்து ஜாதி ஒழிப்புக்கான பணி. இந்தச் ஜாதி ஒழிப்புக்கு இந்த நாட்டில் 2000- ஆண்டுகளாக எங்களைத் தவிர எவனுமே முன்வரவில்லை.

எங்களுக்கு முன் காட்ட வேண்டுமானால் 2500- ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புத்தரைக் கூறலாம். இவர் தான் தோன்றி கடவுள், மதம், ஆத்மா இவற்றைக் கண்டித்து அறிவுப் பிரச்சாரம் செய்து வந்தவர். அவரையும், அவர் மார்க்கத்தையும், பார்ப்பனர்கள் தந்திரமாக ஒழித்துக் கட்டி விட்டார்கள். அவருக்குப் பிறகு நாங்கள் தானே வேறு எவனும் இல்லை.

தோன்றியவன் எல்லாம் ஜாதியையும், முட்டாள்தனத்தையும் பாதுகாத்து நாம் என்றென்றைக்கும் தலை எடுக்காமல் அடக்கிக்கிடக்கவே பாடுபட்டார்களே ஒழிய, நமது முன்னேற்றத்துக்காக சிறிதும் பாடுபடவே இல்லை.

இப்படி பார்ப்பானுக்கு நல்ல பிள்ளையாக நடந்தவன்கள் எல்லாம் பார்ப்பனனால் ஆழ்வாராகவும், நாயன்மார்களாகவும், அவதார புருஷர்களாகவும் ஆக்கப்பட்டார்கள். நாங்கள் தான் இந்தச் ஜாதியையும், மூடப்பழக்க வழக்கங்களையும் ஒழிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு உயிருடன் இன்னும் இருக்கின்றோம்.

இன்றைய ஆட்சிதான் இதுவரை எந்த ஆட்சியும் இதற்கான காரியங்களைச் செய்யாததைச் செய்து வருகின்றது.


------------------------------ 21.11.1962- அன்று தாம்பரம் பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு.- "விடுதலை", 30.11.1962

16 comments:

தமிழ் ஓவியா said...


செய்திக்குப் பின்னால்.....

இந்தியாவில் ரசாயனம் கலந்த குடிநீரால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 4.21 கோடி என்று மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை இணை யமைச்சர் பரத்சிங் சோலங்கி தெரிவித்துள்ளார்.

(இதைச் சொல்லுவதற்கு ஓர் அமைச்சர் தேவையா? மனித உயிர் என்பது மிகவும் மலிவானது என்ற நினைப்பா?).

விபத்துகள்

ஒரு நாளில் மட்டும் ஒட்டன்சத்திரம் அருகில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 5 பேர் சாவு.

(ஒட்டன் சத்திரம் காவல் நிலையத்தில் விரைவாக யாகம் நடத்தப்படும் என்று எதிர் பார்க்கலாம்.)

மக்கள் நீதிமன்றம்

மாநில அரசுகளின் ஊழல்பற்றி விசாரிக்கும் மக்கள் நீதிமன்றம் (லோக் ஆயுக்தா) அமைக்கப் படுகிறது. ஆனால், குஜராத்தைப் பொறுத்தவரை 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதற்கான நீதிபதி நியமிக்கப்படவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிபதி டி.பி.புச் நியமிக்கப்பட்டுள்ளார்.

(ஊழலற்ற உத்தமபுத்திரன் என்று மோடி பற்றி தம்பட்டம் அடித்தார்களே, அப்படிப் பட்டவர் ஆட்சியில் ஏன் இத்தனை ஆண்டு களாக இந்த நீதிமன்றம் செயல்படவில்லை? மடியில் கனமோ!)

கங்குலியாயிற்றே!

பாலியல் புகாரில் சிக்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து இன்னும் விலகவில்லை.

(கங்குலி ஆயிற்றே! மனுதர்மத்தில் இது குறித்து என்ன சொல்லப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கலாம்.)

அன்னா ஹசாரே!

நாடாளுமன்ற நடப்புக் கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, தனது சொந்த கிராமத்தில் அன்னா ஹசாரே சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

(டில்லியில் இவர் நடத்திய போராட்டத்தின் லாபத்தை இன்னொருவர் அபகரித்துவிட்டாரே! ஆதங்கம் இருக்கத்தானே செய்யும்?).

அமெரிக்க இராணுவத்தில் சீக்கியருக்குத் தடை!

அமெரிக்க இராணுவத்தில் அமெரிக்கவாழ் சீக்கியர்களை மத நம்பிக்கைகளைக் காரணம் காட்டி, இராணுவப் பணிகளில் நிராகரிப்பது குறித்து சர்ச்சை அமெரிக்காவில் எழுந்துள்ளது.

(இந்தியாவில் காவல்துறையில் அய்யப்பன் வேடம் போட்டுக் கொண்டே அதிகாரிகள் முதற் கொண்டு பணி புரியவில்லையா? தலைப் பாகை மதச் சின்னம் என்றால், பூணூல் அணி கிறார்களே, அது எந்த சின்னம்?).

கிரிக்கெட்

ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் ஜாகீர்கானைச் சேர்த்திருக்கவேண்டும். - தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் நிட்னி.

(சர்மாக்கள் இருக்கும்போது ஜாகீர்கான்கள் கண்களில் படுவார்களா?)

Read more: http://viduthalai.in/e-paper/71865.html#ixzz2nGeXMptJ

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு, அமெரிக்கா எச்சரிக்கை! கலைஞர் கருத்து


சென்னை டிச.12- ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசு பற்றி அமெரிக்கா கூறியுள்ள கருத்து குறித்து திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:

கேள்வி :- இலங்கை அரசின் நடவடிக் கைகள் பற்றி காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட காமரூன் தெரிவித்த கருத்துகளை பல நாளேடுகளும் வெளியிட் டன. பிரான்ஸ் நாட்டின் கருத்தினைத் தாங்களே வெளியிட்டிருந்தீர்கள். தற் போது அமெரிக்க நாடு கூட இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாக ஒரு செய்தி வந்திருக்கிறதே?

கலைஞர் :- உண்மைதான்! இலங்கை உள்நாட்டுப் போரில் ராணுவத்தின் அட்டூழியம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்நாடு நடவடிக்கை எடுக்கா விட்டால், சர்வதேச சமூகம் இனியும் பொறுமை யாக இருக் காது என்று தெற்காசிய விவகாரங்களுக் கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நிஷா பிஸ்வால் கூறி யிருக்கிறார்.

போர்க் குற்றங்கள் தொடர் பாக இலங்கை அரசின் நடவடிக்கையில், வரும் மார்ச் மாதத்துக்குள் எந்த முன்னேற் றமும் இல்லாவிட்டால், அய்.நா. தலைமை யிலான விசாரணை கோருவோம் என்று இங்கிலாந்துப் பிரதமர் கூறிய கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமெரிக்கா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது. மேலும் இத்தாலியைச் சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று, இலங்கை ராணுவத்தின் மீதான போர்க் குற்றம் தொடர்பான வழக்கு விசாரணையில் இறங்கியுள்ளது. இதற்காக ஜெர்மனியில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/71864.html#ixzz2nGf7NxId

தமிழ் ஓவியா said...


சிறப்பு


விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவையில்லாவிடின், பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பயனில்லை. அறிவுடை யோர்க்கே சென்றவிடமெல்லாம் சிறப்பு. - (விடுதலை, 12.3.1965)

Read more: http://viduthalai.in/page-2/71870.html#ixzz2nGfMmDBY

தமிழ் ஓவியா said...


ஒரே நேரத்தில் 107 தமிழக மீனவர்கள் கைது!


கோடியக்கரை நடுக்கடலில், மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள், 107 பேர்களை இலங்கை சிங்களக் கடற்படையினர் கைது செய்து, இலங்கைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், கல்லார், சாமந்தான் பேட்டை, நாகூர் பட்டினச்சேரி, வேளங்கண்ணி பகுதிகளைச் சேர்ந்த 215 தமிழின மீனவர்கள் 32 விசைப் படகுகளில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி, சட்ட விரோதமாக, தமிழக மீனவர்களின் விசைப் படகுகளைச் சுற்றி வளைத்து, இந்த வேலையைச் செய்துள்ளனர்.

இந்திய அதிகாரிகள், ஏன் இந்திய அமைச்சர்கள் கூட பழுதடைந்த கிராமபோன் தட்டுப்போல, ஒன்றையே திருப்பித் திருப்பிச் சொல்லி வருவது வாடிக்கையும், விஷமம் கலந்த வேடிக்கையுமாகும்.

தமிழக மீனவர்கள் எல்லைகளைக் கடந்து, இலங்கை கடற்பகுதிக்குள் என்று மீன்பிடிப்ப தால்தான், இலங்கைக் கடற்படை சிறைப்பிடிக்கிறது, என்பது தான் பச்சைப் பொய்யான பல்லவியாகும். அது அப்பட்டமான பொய் என்பதற்கு நேற்று நடந்த நிகழ்வே போதுமான சாட்சியமாகும். நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களைத்தான் சிங்களக் கடற்படை சுற்றி வளைத்துச் சிறைபிடித் திருக்கிறது.

சர்வதேச சட்டப்படி கூட கடற்பகுதியிலிருந்து 12 மைல் தூரம் அந்த நாட்டுக்குச் சொந்தமானதாகும். கச்சத் தீவைப் பொறுத்தவரை இராமேசுவரத்தி லிருந்து 12 மைல் தூரத்தில் உள்ளது; இலங்கைக் கடற்கரைப் பகுதியிலிருந்தோ 13 மைல் தூரத்தில் உள்ளது. இந்தச் சர்வதேச சட்டப்படி பார்த்தாலும்கூட கச்சத் தீவுப் பகுதியில் மீன்பிடிக்க இலங்கை மீனவர்களைவிட தமிழின மீனவர்களுக்குத்தான் உரிமை அதிகம் ஆகும்.

1983 முதல் இன்று வரை 600 தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட் டுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.

எந்த அளவுக்கு, இந்தக் கொடுமை நீண்டு இருக்கிறது என்றால் - இலங்கைக் கடற்படை யினரால் கைது செய்யப்பட்டு, இழுத்துச் செல்லப் படுகிற தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி, இந்தியத் தேசியக் கொடியைக் கோவணமாகக் கட்டச் செய்து கெக்கலி கொட்டுகின்றனராம்.

பொதுவாக, பார்ப்பன ஏடுகளும் சரி, இந்திய அதிகாரிகளும் சரி, இந்திய மீனவர்கள் என்றுகூடக் குறிப்பிடுவதில்லை; மாறாக தமிழக மீனவர்கள் என்றுதான் குறிப்பிடுவது வழக்கம்.

நாம் இவ்வாறு சொன்னால், பிரிவினை வாடை வீசுகிறது என்று பேசும் அந்த 22 காரட் தேசிய வாதிகள், மீனவர்கள் பிரச்சினை என்று வரும் பொழுது மட்டும், அவர்களே பிரிவினைவாதிகள் ஆகி விடுகின்றனரே!

தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டு இருக்கும், கொன்று குவித்துக் கொண்டி ருக்கும் இலங்கைக் கடற்படையினருக்கு, இந்திய இராணுவம் பயிற்சி கொடுக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.

இந்தியத் தேசியக் கொடியைக் கோவணமாகக் கட்டச் செய்கிறார்கள் என்ற நிலையில்கூட இந்திய அரசுக்குத் தார்மீக ரீதியான சினம் சீறி எழவில்லையே!

தமிழின மீனவர்கள் அல்லாமல் இந்தியாவின் சீக்கியர்களுக்கோ, வங்காளிகளுக்கோ இப்படி வன்கொடுமைகள் நடந்திருந்தால் என்ன நடந் திருக்கும் என்பதை பொதுவான நிலையில் உள்ள வர்கள் கொஞ்சம் சிந்திக்கவேண்டும்.

தமிழ்நாடு அமைதி காக்கிறது; நிதானத்தை கடைபிடிக்கிறது, மத்திய அரசு உரியதைச் செய்யும் என்று நினைத்தால் அதனைத் தமிழர்களின் கோழைத்தனம் என்று இந்திய அரசு கருதுகிறது.

டாடா நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம், பன்னாட்டு நிறுவனங்கள், ஆழ்கடலில் மீன்பிடிக் கிறார்கள்; அவர்களிடத்தில் சிங்களக் கடற்படை வாலை ஆட்டுவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஆக ஊருக்கு இளைத்தவர்கள் தமிழக மீனவர்கள்தான் என்ற நிலை நீடிப்பது சரியானதல்ல. மிதிக்க மிதிக்கப் புழுவும் புலியாகும் என்பதை மறந்து விட வேண்டாம்!

தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு, தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்பதுதான்.

தமிழ்நாட்டு மக்கள் அரசியலைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு, தமிழின உணர்வோடு, அல்லது மனிதநேய உணர்வோடு ஒன்று சேரட்டும் - ஒரு நொடியில் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்து விடுமே!

Read more: http://viduthalai.in/page-2/71874.html#ixzz2nGfWSzpv

தமிழ் ஓவியா said...


பெரும் முதலாளிகள் வாங்கிய கடனை வசூலிப்பதில் பாராமுகம் - கல்விக் கடன் வாங்கும் மாணவர்களிடம் கிடுக்குப்பிடி ஏன்?


தி.மு.க தலைவர் கலைஞர் கேள்வி

சென்னை, டிச.12- கோடிக்கணக்கில் கடன் வாங்கும் முதலாளிகளிடம் இருந்து கடன் வசூலிப் பதில் பாராமுகம், கல்வி கடன் வாங்கும் மாணவர் களிடம் கெடுபிடி ஏன் என்ற நியாமான வினாவை தொடுத்துள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர். விவரம் வருமாறு:-

கேள்வி :- ஆயிரக்கணக்கில், இலட்சக் கணக்கில் வங்கிகளிலே கடன் வாங்குபவர்களை கிட்டி கட்டி வசூலிக்கும் வங்கிகள், கோடிக் கணக்கிலே கடன் பெற்றவர்களைக் கண்டு கொள்வதில்லையாமே?

கலைஞர் :- மாணவர்கள் தங்கள் படிப்பிற்காக வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பதற்காக அவர்களின் புகைப்படங்களை வங்கியின் வாசலில் வைத்தது பற்றி நான் சில மாதங்களுக்கு முன்பு அது தவறு என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். 2008ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள வங்கிகளின் மொத்த வராக் கடன் 39 ஆயிரத்து 30 கோடி ரூபாய். 2012இல் இந்தத் தொகை 1 இலட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது. 2013 மார்ச் 31ஆம் தேதியன்று பொதுத் துறை வங்கிகளுக்கான மொத்த வராக் கடன் 1 இலட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய். இந்தக் கடன்களை பாக்கியாக வைத்திருப்பவர் களில் முக்கியமானவர்கள், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் (விஜய் மல்லையா) 2,673 கோடி ரூபாய்; விஸ்டம் டைமன்ட்ஸ் அண்ட் ஜுவல்லரி நிறுவனம் 2,660 கோடி ரூபாய்; எலெக்ட்ரோ தேர்ம் இந்தியா நிறுவனம் 2,211 கோடி ரூபாய்; ஸும் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் 1,810 கோடி ரூபாய்; ஸ்டெர்லிங் பயோடெக் லிமிடெட் 1,732 கோடி ரூபாய்; எஸ். குமார்ஸ் நேஷன்வைடு லிமிட் 1,692 கோடி ரூபாய்; சூர்யா வினாயக் இண்டஸ்ட்ரீஸ் லிமிட் 1,446 கோடி ரூபாய்; கார்ப்பரேட் இஸ்பட் அலாய்ஸ் லிமிடெட் 1,360 கோடி ரூபாய்; போரவர் பிரிசியஸ் ஜுவல்லரி அண்ட் டைமன்ட்ஸ் 1,254 கோடி ரூபாய்; ஸ்டெர்லிங் ஆயில் ரிசோர்ஸ் லிமிட் 1,197 கோடி ரூபாய்; வருண் இண்டஸ்ட்ரீஸ் லிமிட் 1,129 கோடி ரூபாய். டெக்கான் க்ரோனிக்கல் ஹோல் டிங்ஸ் நிறுவனம் வைத்துள்ள பாக்கி 700 கோடி ரூபாய். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர்கிட் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் வைத்துள்ள கடன் பாக்கி 938 கோடி ரூபாய். இந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு மத்திய அரசு அண்மையில் பத்மஸ்ரீ விருது வழங்கிப் பாராட்டியிருக்கிறதாம். (குடியரசுத் தலைவருக்குத் தான் வெளிச்சம்) வங்கியில் ஒருவர் வாங்கிய கட னைத் திருப்பிச் செலுத்த வசதியிருந்தும் செலுத்த வில்லை என்றால் கிரிமினல் குற்றமாகும். ஆனால் இத்தனை கோடி ரூபாய் வங்கிகளிலே கடன் பெற்று பாக்கி வைத்திருப்போர் மீது நடவடிக்கை இன்றி, சலுகை காட்டப்படுவது ஏன் என்று தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-3/71892.html#ixzz2nGfqYjhq

தமிழ் ஓவியா said...


மனிதத் தன்மை


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும். - (விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/71973.html#ixzz2nMT85blY

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

பிறந்தநாளில் கேக் வெட்டும் பொழுது அதில் மெழுகுவர்த்தியை ஏற்றுகிறார்கள் - பிறந்த நாள் யாருக்குக் கொண் டாடப்படுகிறதோ, அவரை விட்டு ஊதச் செய்கிறார் கள். மெழுகு வர்த்தியின் துகள்கள் கேக்கில் விழு கின்றன. இது உடல் நலனுக்குக் கேடு என்று கண்டறியப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/71961.html#ixzz2nMTLyuW1

தமிழ் ஓவியா said...


அய்யப்பன் கோயிலுக்குச் சென்ற அய்யப்பப் பக்தர்கள் 19 பேர் நெஞ்சுவலி காரணமாக பரிதாப மரணம்


அந்தோ பரிதாபம்!

அய்யப்பா! - உன்னை நம்பியோர் கெதி இப்படியாப்பா?

அய்யப்பன் கோயிலுக்குச் சென்ற அய்யப்பப் பக்தர்கள்

19 பேர் நெஞ்சுவலி காரணமாக பரிதாப மரணம்

மதுரை மீனாட்சியின் கோயில் மின்னல் தாக்கி கோபுரம் தூள்

திருவனந்தபுரம், டிச.13- கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநி லங்களில் இருந்தும் பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி செல்கி றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பம்பையில் இருந்து நடந்தே சபரிமலை செல் வது வழக்கம். அவ்வாறு போகும்போது மலை யில் ஏறும்போது ஏற்படும் ரத்த அழுத்தம் காரணமாகவும் உடல் நலக்குறைவு ஏற்படுவது வழக்கம். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பெருவழி நடை பாதை முழுவதும் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு நோய் வாய்ப்படும் பக்தர்களுக்கு உடனே முதல்உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பெரிய மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இம்முறை சபரி மலையில் கோவில் நடை திறந்த பின்பு வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் அய்யப்பன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ள னர். ஆனால் எப்போதும் இருப்பதை விட இம் முறை கேரளாவில் பருவ மழையும், குளிரும் நில வியதால் பக்தர்கள் பல ரும் பாதிக்கப்பட்டனர்.

நெஞ்சுவலி ஏற்பட் டும், மூச்சுதிணறலாலும் பாதிக்கப்பட்ட அவர் களுக்கு அய்யப்ப சேவா சங்கத்தினர் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் இது வரை 19 பேர் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் 2 பேர் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பலியாகி விட்டனர்.

இவர்களின் உடல் களை அய்யப்ப சேவா சங்கத்தினர் அவரவர் ஊர்களுக்கு எடுத்து சென்று உறவினர்களி டம் ஒப்படைத்தனர்.

மின்னல் தாக்கி கோபுரம் தூள்! மதுரை மாநகரில் நேற்று இரவு 9 மணி யளவில் இடி-மின்ன லுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின் னல் தாக்கியதில் மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தில் சேதம் ஏற் பட்டது.

கிழக்கு ராஜ கோபுரத்தின் உச்சியில் இருந்த வடக்கு நாசி தலத்தின் ஒரு பகுதியை மின்னல் தாக்கியது. இதனால் அதன் ஒரு பகுதி கீழே விழுந்தது. தகவலறிந்த கோவில் இணை ஆணையர் செய ராமன் மற்றும் அதி காரிகள் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். கிழக்கு கோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களி லும் இடிதாங்கி பொருத் தப்பட்டு இருந்ததால் பெருத்த சேதம் தவிர்க்கப் பட்டது.

மீனாட்சி அம் மன் கோவிலில் உள்ள 4 ராஜ கோபுரங்களில் கிழக்கு கோபுரம் மிகவும் பழமையானது. மாற வர்மன் சுந்தரபாண்டி யன் என்ற அரசனால் கடந்த 1216-1238 ஆண்டுக் குள் இந்த கோபுரம் கட்டப்பட்டதாக நம்பப் படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/71962.html#ixzz2nMTU6hS9

தமிழ் ஓவியா said...


பெரியார் உலகம் ஒருபேராசிரியையின் நன்றிஉள்ளம்!


பேராசிரியை தந்த அதிர்ச்சி: காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில்பணியாற்றி ஒய்வு பெற்ற பேராசிரியை திருமதி வி.பி.ஆவுடையம்மாள் அவர்கள் நமது இயக்க நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதோடு நமது இயக்க ஏடுகளையும் தவறாமல் வாங்கி வாசிப்பபவர்.அந்த அடிப்படையில் பெரியார் உலகம் அமைக்க நன்கொடை வசூலிக்க தலைமைக் கழகத்தில் அச்சிட்டுள்ள விவரத்தை கொடுத்து வசூல் பணி நடைபெறுவதை சொன்னோம்.அவர்களும் கேட்டுவிட்டு ரூ 1000/-நன்கொடை தருகிறேன்என்று சொன்னார்கள்.உள்ளபடியே நாங்கள் எதிர்பார்த்து போகவில்லை.

வாங்கி வந்து சிறிது நேரத்தில் எங்களை செல்போனில் தொடர்பு கொண்ட அம்மையார் நாளை காலை வீட்டிற்கு வாருங்கள் நன்கொடையை ரூ 5000/-மாக தருகிறேன் என்று சொன்னார்கள்.சரி என்று நாங்களும் காலை வீட்டில் சந்தித்து அந்த தொகையை வாங்க செல்லும்போது எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்!

ரூ.1000/-த்தை தந்து,பிறகு ரூ.5000/-திற்கு காசோலையாக தருகிறேன் என சொல்லிவிட்டு நேரில் வரச்சொல்லி ரூ.25,000/-த்திற்கான காசோலையை தந்தபோது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அதை பெற்றுக்கொண்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி அவர்கள் நன்றி தெரிவித்துவிட்டு இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு மாற்றம் எப்படியம்மா? என கேட்டதற்கு அம்மையார் சொன்ன பதில் இருக்கிறதே! எங்களை கண்கலங்கச் செய்தது என்றுதான் சொல்லவேண்டும். அவர் சொன்னார்,நேற்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. எவ்வளவு பெரிய பணி யாரால் இதைச் செய்யமுடியும்? அதுவும் பெண்களின் இன்றைய வாழ்க்கை வளர்ச்சிக்கு 95 வயது வரை உழைத்த தந்தை பெரியாருக்கு 95அடி உயரத்தில் அப்பாடா! நினைக்கவே பிரமாண்டமாகவும்,மலைப்பாகவும் இருந்தது; எனக்கு கிடைத்த ஒவ்வொரு ரூபாயும் தந்தை பெரியார் தந்தது என்று உணர்கின்றேன் .

உடனே எனது கணவரும் நானும் அப்போதே முடிவு செய்து ஒரு பவுனுக்கான தொகையை கொடுத்துவிடுவோம் என தீர்மானித்தோம். இந்தத் தொகையை எனது மகளுக்கு பிறந்தநாள் பரிசாக தங்க நகை வாங்கிக் தரத்தான் வைத்திருந்தேன்.

பரவாயில்லை அடுத்த மாதம் வாங்கிக் கொடுத்துவிடுவேன் என்று சொன்னபோது நாங்கள் அந்த மலைப்பிலிருந்து விடுபட, அவர்களே சென்று தேநீர் போட்டு கொடுத்து உபசரித்ததை எண்ணிப் பார்க்கும்போது அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாரின் தொண்டு எந்த அளவிற்கு இந்த இனத்திற்கு,குறிப்பாக மகளிர் சமுதாயத்திற்கு பயன்பட்டிருக்கிறது என்று எண்ணி எண்ணி மகிழ்வுற்றோம்.

நமது தலைவர் ஆசிரியர் அடிக்கடி சொல்வார்களே!

அய்யா அவர்களை பற்றி சொல்லுங்கள்,மக்கள் தர தயாராக இருப்பார்கள் என்று.! மிகச்சரியாக இருக்கின்றது. தமிழர் தலைவர் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை!ஆம்!

"நம்மால் முடியாதது யாராலும் முடியாது

யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்"

தி.என்னாரெசு பிராட்லா, மாவட்ட கழக செயலாளர்,காரைக்குடி

Read more: http://viduthalai.in/e-paper/71970.html#ixzz2nMTwk8Ll

தமிழ் ஓவியா said...


ஏழை நாடா நம் நாடு? - ஊசி மிளகாய்

அய்.எப்.அய். (IFI) ன்ற பன்னாட்டு நிதி அமைப்பு ஒன்று 2002 முதல் 2011 வரை, வளரும் நாடுகளில் தடுக்கப்படட நிதி உள்ளீடுகள் என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையைத் தந்துள்ளது.

அதன்தலைவர் ரேமெண்ட் பேக்கர் என்பவர் கூற்றுப்படி,

2002 முதல் 2011 வரை வளரும் நாடு களில் இதுவரை கணக்கில் வராது, பதுக்கி வைக்கப்பட்ட பணம் வெளிநாடுகளில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன;

அதன் எண்ணிக்கை 2002இல் 270 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் என்றால் 100 கோடி).

அதுவே 2011-இல் 946 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது! குறிப்பாக 2010இல் 832 பில்லியன் டாலர் இருந்தது அடுத்த ஆண்டில் 13 சதவிகிதம் உயர்ந் துள்ளதாம்!

வளரும் நாடுகள் தங்கள் நாட்டிற்கு வருவாயாக வர வேண்டிய 59 டிரில்லியன் டாலரை இழந்துள்ளனவாம். (ஒரு டிரில் லியன் என்பது ஓராயிரம் பில்லியன்). இந்த கறுப்புப் பண பதுக்கலில் முதலிடம் வகிக்கும் நாடு சீனா - இந்த நாடு 1.08 டிரில்லியன் டாலர் பதுக்கி யுள்ளதாம்! அடுத்து ரஷ்யா - இரண்டாவது இடம். பதுக்கியுள்ளது - 880.96 பில்லியன் டாலர்.

மூன்றாவது மெக்சிகோ (461.86 பில்லியன் டாலர்)

மலேசியா (370.38 பில்லியன் டாலர்).

இந்தியா - 5ஆவது இடத்தில் (உலக அளவில் (343.04 பில்லியன் கோடி டாலர் களை முறைகேடாக ஏற்றுமதி செய்துள் ளது)

பிறகு வரிசையாக இந்தோனேசியா, தாய்லாந்து, போலந்து போன்ற நாடுகள்!

இந்த ஞானபூமியில் வறுமையே வெளியேறு (கரிபீஹட்டாவோ) என்று கோஷம் கொடுத்து எத்தனை ஆண்டு காலம் ஆகிறது?

வறுமையா வெளியேறியது? இல்லையே மாறாக, நம் நாட்டு (கறுப்புப்) பணம் அல்லவா வெளியேறி முதலைகளையும், முதலாளித்துவ திமிங்கலங்களையும் செழிப்பாக வாழ வைக்கிறது!

இந்தியா ஏழை நாடா? ஏழைகள் வாழும் பணக்காரா நாடா?

உலக மயம், தாராள மயம், தனியார் மயம் என்பதன் விளைவு... இதுதானா?

சமதர்மம் என்ற பீடிகையோடு நம் அரசியல் சட்டம் முடிந்து விட வேண்டியதா?

சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது மீட்டு வரப்பட்டதா? இல்லையே!

திருப்பதி வெங்கடாஜலபதி, திருவனந்த புரம் பத்மநாபசுவாமி கோயில், குருவா யூரப்பன், கிருஷ்ணன் கோயில், சபரிமலை அய்யப்பன் கோயில், போன்றவைகளில் பதுக்கப்பட்டுள்ள அல்லது முடக்கப்பட் டுள்ள தங்கமும், மற்றவைகளும் பல லட்சம் கோடிகள் அல்லவா?

ஆனால், நம் நாட்டில் கல்வி இன்னமும் இருபாலருக்கும் போதிய அளவில் இல்லை.

சுகாதாரமோ சொல்லும்படியாக இல்லை; கழிப்பறையே இல்லாத கிராமங்கள் இன்னமும் பல லட்சம்; மனிதக் கழிவை மனிதனே சுமக்கும் அவலம்! அசிங்கம் அருவருப்பான நிலை! - தொடருகிறது!

இவைகளுக்கு விடியல் எப்போது? ஆட்சியின் கதாநாயகர் மாற்றத்தால் மட்டும் மாறுமா?

பழைய கள் புது மொந்தை என்றால் அதற்குப் பெயர் என்ன?

பதுக்கும் பலர் நம் நாட்டில் கோடி ஈஸ்வரர்கள் - கடவுளுக்குப் பக்கத்திலேயே சீட் போடப்பட்டுள்ளது.

இதுதான் ஞான பூமியாம்! வெங்காயம்! (அதுகூட விலை ஏறி விட்டது!)

Read more: http://viduthalai.in/e-paper/71969.html#ixzz2nMU5ENfL

தமிழ் ஓவியா said...


சிந்தனைக்குத் தடை


பகுத்தறிவுக்கு எதிரிகள் நம்நாட்டில் தான் எப்பொழுதும் இருந்து கொண்டு வருகிறார்கள் என்பதில்லை. உலகெங்கும் மதத்தரகர்களின் தாக்கு தல்களுக்கு பகுத்தறிவாளர்கள் இலக்காகிக் கொண்டே இருந்துவர நேர்ந்துள்ளது.

சுயசிந்தனையாளர்கள் கிளர்ந்தெழாமல் மதப்பிடியில் சிக்கித் தவிக்க நேரிட்டது. ஒரு சுய சிந்தனையாளன் என்பவன் யார் என்று பொருள் கூறுமிடத்து மதத்தை மறுப்பவன்; நாத்திகவாதி என்று அகராதிகளில் குறிப் பிடப்பட்டுள்ளது. மதத்தின் கோரப்பிடியில் உலகின் மிகப் பெரும் சுயசிந்தனையாளர்கள் எல்லாம் சிக்கி உழன்று விடுபட பெரும்பாடுபட நேர்ந்தது.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் தந்தை சிறு குழந்தையான ரஸ்ஸல் மூட நம்பிக்கை இல்லாதவராக வளர இரண்டு சுயசிந்தனையாளர்கள் (பகுத்தறிவாளர்கள்) அவரை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்து விட்டு மறைந்தார். அதற்காக இரண்டு சிந்தனையாளர்களையும் நியமித்தார்.

ஆனால் இவ்வாறு நியமித்தது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த தோடு கிறிஸ்து மத நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவரை வளர்த்து வர வேண்டும் என்றும் ஆணையிட்டது.

Read more: http://viduthalai.in/page-7/71941.html#ixzz2nMUmTSBy

தமிழ் ஓவியா said...


மதம்


பிறருக்கு உழைத்து உழைத்து உருக்குலையும் மக்களை உற்பத்தி செய்யவும், அவர்களை விடுதலை அடைய வொட்டாமல் அழுத்தி வைக்கப் பயன்படுகிற ஆபத்தான ஆயுதங்களில் மிக முக்கியமானது மதம். - லெனின்

Read more: http://viduthalai.in/page-7/71944.html#ixzz2nMUyfrIF

தமிழ் ஓவியா said...

பூதங்களின் வேலையாம்!

இலேசான பாத்திரம் ஒன்றையும், கனமான பாத்திரம் ஒன்றையும் உயரமான ஒரு இடத்திலிருந்து கீழே போட்டால், கனமான பாத்திரம் சீக்கிரம் கீழே விழுந்து விடும் என்றும், இலேசான பாத்திரம் கீழேவிழ அதிக நேரம் பிடிக்கும் என்றும் மக்கள் கருதி வந்தார்கள்.

15, 16ஆம் நூற்றாண்டுவாக்கில், கலிலியோ என்ற இத்தாலிய விஞ்ஞானி இத்தாலியில் உள்ள சாய்வுக் கோபுரத்தின் மேல் ஏறி நின்று இலேசான பாத்திரம் ஒன்றையும் கனமான பாத்திரம் ஒன்றையும் ஒரே நேரத்தில் கீழே போட்டுக் காட்டி இரண்டும் ஒரே சமயத்தில்தான் விழுகின்றன என்று நிரூபித்துக் காட்டினார்.

ஆனால் மதவாதிகள் இதைக் கண்டு அஞ்சி நடுங்கினர். கனமானதும், இலே சானதும் ஒரே நேரத்தில் வீழ்வது ஏதோ பூதங்களின் வேலைதான் என்று அஞ்சி னார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/71944.html#ixzz2nMV6ji8n

தமிழ் ஓவியா said...

ஜாதி ஆச்சாரங்களைக் கையாளும் மக்கள் குற்ற வாளிகளல்ல; ஜாதி புனித மானது என்ற உணர்ச்சியை உண்டு பண்ணிய மதமே உண் மையிலே குற்றவாளி.

ஆதலால் ஜாதி ஆச்சாரங்களைக் கையாளும் மக்கள் உங்கள் எதிரிகளல்ல. ஜாதி ஆச்சாரங்களைப் புனித மென்று வற்புறுத்தும் சாஸ்திரங்களே உங்கள் எதிரி. எனவே அந்த எதிரியைத் தான் நீங்கள் ஒழிக்க முயற்சிக்க வேண்டும். - டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page-7/71944.html#ixzz2nMVCSWv3

தமிழ் ஓவியா said...


பூசாரிகளின் யோக்கியதை!


இந்துமத அறக்கட்டளைகள் பற்றி விசாரிக்க மத்திய அரசு 1960ஆம் ஆண்டு நியமித்த சி.பி.இராமசாமி அய்யர் கமிட்டி தனது அறிக்கையை 1962ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் காணப்படும் பூசாரிகள் பற்றி விவரங்கள் (அத்தியாயம் 5) இங்கே திரட்டித் தரப்படுகின்றன.

நாங்கள் தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது ஏராளமான கோயில்களுக்கு நேரடியாக நாங்களே போய்ப் பார்க்க எங்களுக்கு நிரம்ப வாய்ப்புக் கிடைத்தது.

அர்ச்சகர்களும், பூசாரிகளும் ஒன்று கல்வி அறிவற்ற தற்குறிகளாக இருக்கின்றனர். அல்லது அரைகுறை யாக படித்தவர்களாக இருக்கின்றனர்; இவர்கள் வழக்கமாகவே பணம் பறிப்பவர்களாகவும் இருக்கின்றனர். இதில் ஏதோ சிற்சில சிறப்பான விதிவிலக்குகள் உள்ளன. இந்த விதிவிலக்குகள் வடக்கைவிட தெற்கேதான் அதிகம் - இவ்வாறுதான் தோன்றுகிறது.

பொருளறியாத புலம்பலே மந்திரம்!

அவர்கள் ஓதும் மந்திரங்களில் அவர்களின் உச்சரிப்பும் உச்சாடனமும் பதியத்தக்கதாக இல்லை; தப்புந்தவறுமாக இருக்கின்றன. தாங்கள் முழங்கும் இந்த மந்திரங்களின் சிறப்பையோ அல்லது பொருளையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது வருந்துதற்குரியது.

தெய்வத்தின் கருணையைப் பெறுவதற்காக கோயில் களுக்கு வரும் பக்தர்களிடத்திலும் வழிபடுவோரிடத்திலும் பக்தியும் மரியாதையும் அடங்கிய ஒரு உணர்ச்சியை ஊட்டக் கூடிய நிலை யில் அர்ச்சகர்கள் இருப்பதில்லை என்பது வெளிப்படை.

சின்னஞ்சிறு பயலுக்கு என்ன தெரியும்?

ஆந்திரப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் இருக்கிறது; இந்தக் கோயில்களில் நடத்தப்பட்டு வரும் வழி பாடு கொஞ்சம் கூட போதாது என்று கூறப்படு கிறது, தாங்கள் பணிபுரியும் கோயிலில் எந்த ஆகமம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதுகூட பூசாரிகளில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றுதான் தோன்று கிறது. தெய்வத்துக்கு எந்த நேரத்தில் அபிசேகம் செய்யப்பட வேண்டும் என்றும் எந்த மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதுகூட அவர் களுக்குத் தெரியவில்லை.

மகாநந்தி என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு தாம் போயிருந்தபோது அங்கே 15 வயதாகிய ஒரு சிறுவன் பூசாரியாக இருந்ததைக் கண்டதாக திரு.ரமேசன் என்பவர் சாட்சியம் கூறியுள்ளார். தெய்வங்கள் பெயர்கள்கூட அந்தச் சிறுவனுக்குத் தெரியவில்லை, எந்தவகையான வழிபாடு நடத்தப்பட வேண்டும் - என்னென்ன மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்பதும் அச்சிறுவனுக்கு தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-7/71947.html#ixzz2nMVKDl2f

தமிழ் ஓவியா said...

சீட்டுக்கட்டில் மதம் ஒழிப்பு

ஆரம்ப காலத்தில் மதம் ஒழிக்கும் பிரச்சாரத்தை ருசியா ஒரு நூதன முறையில் கையாண்டு வந்தது. ஒரு புதுவகையான சீட்டுக் கட்டுகள் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு சீட்டிலும் ஒவ்வொரு மதத்தைப் பற்றிக் கிண்டல் செய்யப்பட்டிருக்கும். ஆடுதன் என்று சொல்லப் படும் சீட்டில் ஒரு பாதிரியார் ஒரு பெண் மீது காமம் கொண்டு உருகுவது போலவும், டயமன் சீட்டில் யூதர்களின் மதச் சடங்கை கேலி செய்தும் சித்தரிக்கப் பட்டு இருக்கும்.

ருசியாவில் உள்ள கிறிஸ்தவ மதத்தைப் பழிக்கும் சித்திரம் ஸ்பேட் சீட்டுகளிலும் கீழ் நாட்டு மதங்களை எள்ளி நகையாடும் படம் கிளவர் சீட்டிலும் அச்சடிக்கப்பட்டிருந்தது.

மத இருளால் மக்கள் அல்லல் உற்றதையும், நாத்திகத்தால் அவர்கள் நலம் பெற்றதையும் சித்தரிக் கும் படம் ஆஸ் சீட்டில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இச்சீட்டின் ஒரு பகுதியின் பாதியில் காட்டுமிராண்டி வேஷங் கொண்டவர்கள் தம்பட்டம் அடித்து, தம் மதக் கொள்கைகளை ஏற்காதவர்களைத் தண்டிக்க சவுக்குகளும், கழு மரங்களும் தயார் செய்வது போலவும், இன்னொரு பாதியில் விஞ்ஞான சின்னங்களான இயந்திரங்கள் முதலியனவும்,

பள்ளிக் கூடங்கள், விளையாட்டுக் கருவிகள் இவைகளை குறிக்கும் பொம்மைகளும் அச்சிடப்பட்டிருந்தன. இச்சீட்டின் ஒரு முனையில் முன் அவ்வாறு இருந்தது என்றும் இன் னொரு முனையில் இனி இங்ஙனமிருக்கும் என்றும் எழுதப்பட்டிருந்தது.

Read more: http://viduthalai.in/page-7/71947.html#ixzz2nMVT4X4m