Search This Blog

16.12.13

கல்கியின் சாய்ந்த தராசு!இதற்குப் பெயர்தான் மனுநீதி! புரிகிறதா?

இவ்வார கல்கி ஏட்டில் (22.12.2013) ஒரு கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் கல்கி ஆசிரியர் - தராசு பகுதியில்

* பி.எஸ். பூவராகவன், படியூர் கேள்வி:  சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்களுக்குச் சொந்த மானது அல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியிருக்கிறாரே?

பதில்: கோயில் யாருக்குச் சொந்தம், சொந்தமில்லை என்பது பிரச்சினை இல்லை. பல காலமாக அனுபவித்து வரும் உரிமைகள் பறிக்கப்படும்போது எதிர்ப்பு எழுவது இயல்பு. எனவேதான் கோயிலைத் தமிழகஅரசு,   அறநிலையத் துறையின் கீழ் எடுத்து நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது.

எது நியாயம் என்பதை நீதிமன்றத் திடம் விட்டு விட்டு அதன் தீர்ப்பை ஏற்பதே சிறந்த வழி - இதுதான் கல்கியின் பதில்.

கல்கியார் கண்ணீர் சிந்துகிறார்; அதுமட்டுமல்ல. கட்டப் பஞ்சாயத்து செய்வதுபோல இடைத் தீர்ப்பு வழங் குகிறார்!

ஆனால் எடுத்த எடுப்பிலே ஒன்றை அவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் கருத்துக்கு மாறாக கூறவில்லை; அதனை முதற் கட்டத்தில் மறுக்காமல் ஒப்புக் கொள் ளுகிறார்!

ஆனால் பல காலம் அனுபவித்து வரும் உரிமைகள் பறிக்கப்படும்போது எதிர்ப்பு எழுவது இயல்பு என்று கூறி, தீட்சிதத் திருமேனிகளுக்காக ஆதரவு காட்டுகிறார்; நாம் கேட்கிறோம்.

உரிமையாளர்கள் மக்கள் அரசின் துறை - ஆகவே அது மற்ற கோயில்களைப் போல - இந்து அற நிலையப் பாதுகாப்புத் துறை (H.R. & C.E.) யின்கீழ் வருவது தானே நியாயம்? ஏன் இப்போது எடுக்க வேண்டிய அவசியம்? இது 1888 முதலே வழக்கு  நடந்துகொண்டுள்ள விவகாரம்!

இல்லையானால் 1888 வெள்ளைக்கார நீதிபதி லார்டுஷெப்பர்டு மற்றும் இந்தியர் முதல் நீதிபதி என்ற பெருமை பெற்ற சர்.டி. முத்துசாமி அய்யரும் இணைந்து, இந்தக் கோயில் பொதுக் கோயிலே தவிர, தனிப்பட்ட தீட்சிதர்களுக்குச் சொந்தமல்ல என்று தீர்ப்பு வழங்கினரே!

அதற்குப் பிறகு சில ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்தக் கோயிலில் நடைபெற்ற முறை கேடுகள், ஊழல்கள், பொருள்கள் திருட்டு; வைர நகைகள் உட்பட திருட்டுப் போனதை தீட்சிதர்களில் சிலரே தமிழக அரசிடம் (எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது மனு கொடுத்துள்ளனர்). வருவாய்கள் அபகரிப்பு கையாடல்கள் எல்லாம் நடைபெற்றதால் இதை இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பு நிர்வாகத்தின்கீழ் (நு.டீ) நிர்வாக அதிகாரியைப் போட்டு மேற் பார்வையிட்டது சரியானதே என்றும், அதன்பிறகு  உண்டியல் வருவாயி லிருந்து எல்லாம் அதிகமாக கோயில் திருப்பணிகள் சிறப்பாக நடைபெறு கின்றன என்றும் சென்னை உயர்நீதி மன்ற தனி நீதிபதி (ளுபேடந துரனபந) பிறகு இரு நீதியரசர்களைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச் தனி அமர்வு இவைகள் எல்லாம் இரண்டு முக்கிய தீர்ப்புகளை சட்ட ரீதியாக அலசி ஆராய்ந்து தந்துள் ளனரே!

நில அபகரிப்பில்கூட ஏற்கெனவே பல காலம் அல்லது சில காலம் அனுப வித்தவர்களிடமிருந்து அதைப் பறித்து முறையாக உரியவர்களிடம் அளிப்பது தானே சட்டப்படி, நியாயப்படி, நீதிப்படி சரியானதாகும்?

திருட்டு சொத்தை உரியவர்களுக்குத் தானே தர வேண்டும்!

அதை எடுக்க நேர்ந்த அவசியம் என்ன என்பதுதான் முக்கியம் அங்கு சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்களால் நடைபெற்ற கொள்ளை - சுரண்டல் களைத் தடுக்க பக்தர்களே வைத்த கோரிக்கைதானே முக்கிய காரணம்?

அபகரிக்கப்பட்ட சொத்தை எடுத்து உரியவரிடம் கொடுத்தால் எதிரிகள் சில காலம் அவர்கள் அனுபவித்த ஒரே காரணத்தினாலேயே அது நியாயமற்ற தாகி விடுமா?

கல்கியாரின் வாதம், ஒரு சார்பு (மனு) வாதம் அல்லவா?

தீர்ப்பை நீதிமன்றத் திடம் விட்டுவிட்டிருந்தால் சுப்ரமணிய சுவாமிகளும், தீட்சிதர்களும் இப்படி உச்சநீதிமன்றத்திற்குச் சென்று, நாங்கள் மேலே இருந்து குதித்து வந்த வர்கள் என்ற புருடாவை அங்கே விடுவார்களா?

கோயில் கட்டியவர் களுக்கான வரலாறு, தீட்சிதர்கள் குடியேறிய கால கட்டம் எல்லாம் ஆய்வாளர்களாலே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. முந்தைய தீர்ப்புகளில் அலசப்பட்டுள்ளதே!

இந்து அற நிலையப் பாதுகாப்புத் துறை இப்படி எத்தனையோ கோயில் களை, நிலங்களை மீட்டுள்ளதே!

அதனை முன்பு வரவேற்ற இந்து முன்னணி ராம. கோபாலய்யர்களும், கல்கியும் இப்படி தீட்சிதர்கள் விஷயத்தில் மட்டும் வேறு அணுகுமுறை, அளவுகோல் வைத்து அளக்கலாமா?

இதற்குப் பெயர்தானே ஒரு குலத்துக் கொரு நீதி மனுநீதி இல்லையா!
மனச்சாட்சியை அடகு வைத்து விட்டு பிறழ் சாட்சிகளினாலும் நீதியையே நாட்டில் விலைக்கு வாங்கும் நிலையில் இதிலாவது நியாயப்படி பேச வேண் டாமா?

தராசு சாயக் கூடாது பாவம், கல்கியாரின் தராசு (ஒருபால்) சாய்ந்த தராசாக அல்லவா ஆகிவிட்டது! இதற்குப் பெயர்தான் மனுநீதி! புரிகிறதா?

-------------- ஊசி மிளகாய் அவர்கள் 16-12-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

30 comments:

தமிழ் ஓவியா said...


மூடனே!


கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிச் சோம்பித் திரிந்துகொண்டு, தொட்டதற் கெல்லாம் கடவுள்மீது பழிபோட்டுத் திரிகின்றவன் ஒரு மூடனே!
(விடுதலை, 1.2.1969)

Read more: http://viduthalai.in/page-2/72144.html#ixzz2nekoIubu

தமிழ் ஓவியா said...


ஒற்றுமை ஓட்டமா?

நரேந்திரமோடி என்றாலே நம்பகத் தன்மை வாய்ந்த மனிதரல்ல - அவரின் ஒவ்வொரு நடவடிக் கையிலும் நயவஞ்சகமும், தந்திரமும் கைகோர்த் தாடும் என்பது மெல்ல மெல்ல மக்களுக்குப் புரிந்துதான் வருகிறது.

இரகசியமாய் இருந்த உண்மையை இந்தியாவின் தலைநகர மக்கள் மிகச் சரியாகவே உணர்ந்து கொண்டு விட்டனர். டில்லியில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதனை நிரூபித்தும் காட்டி விட்டனர்.

மோடியின் மீது ஏற்கெனவே விழுந்துள்ள முத் திரைகள் எல்லாம் மத வெறியர் - சிறுபான்மை மக்களின் கொடும் எதிரி, கோத்ரா ரயில் எரிப்பு என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான முசுலிம் மக்களைக் கொன்று குவிக்கக் காரணமாக இருந்தவர்; அவர்களின் வீடுகளையும், வியாபார நிறுவனங் களையும் கொளுத்தியும், இடித்தும் வன்முறை வெறியாட்டத்தை நடத்திக் காட்டியவர் என்ற முத்திரைகள் எல்லாம் கணிசமான அளவுக்கு அவர்மீது உலக்கை இடிபோல் விழுந்திருக்கின்றன.

இதிலிருந்து அவர் கரை ஏறிட எந்தப் பொய்யை யாவது, புனை சுருட்டையாவது ஜோடித்து அவற்றின் மீது மோடியை சவாரி செய்ய வைக்க வேண்டும் என்ற நெருக்கடி அவர்களுக்கு!

மோடி பராக்! பராக்!! இந்தியாவிலேயே வளர்ச்சிப் பாதையில் குஜராத்தை முதல் மாநிலமாக்கிய மோடி பராக்! பாரக்!! - என்று பூமியே அதிரும் அளவுக்குப் பிரச்சார சத்தத்தைப் போட வைத்தனர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக வந்த ரகுராம் ராஜன் தலைமையிலான அறுவர் கொண்ட அறிக்கை - குஜராத் வளர்ச்சி அடைந்த மாநிலம் அல்ல; மாறாக தளர்ச்சி அடைந்து தள்ளாடும் மாநிலம் என்று தரைமட்டமாக அடித்துத் தூக்கி எறிந்து விட்டது.

இப்பொழுது அந்த வளர்ச்சிப் பல்லவியை கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டு விட்டனர். திடீரென்று குஜராத் மாநிலத்தில், வல்லபாய் பட்டேலுக்கு 597 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலையை நிறுவப் போவதாகக் கூறி, இந்திய மக்களை எல்லாம் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

படேல் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெரிய தலைவர் - அதனால் மண்ணின் மைந்தரைப் பெருமைப்படுத்துகிறார் என்று சொல்ல முடியாது - அப்படியானால், காந்தியாரும் அம்மாநில மண்ணின் மைந்தர் தானே? அவருக்கல்லவா 597 அடிக்கு மேலாக உயரமான சிலையை நிறுவியிருக்க வேண்டும்? ஏன் படேலைத் தேர்வு செய்தார்?

படேல்மீது கொஞ்சம் இந்துத்துவாவின் நிழல் உண்டு. பாகிஸ்தான் பிரிவினையின்போது டில்லியில் முசுலிம்கள்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் கொலைகள் இவற்றைக் கட்டுப்படுத்துவதில் அன்றைய உள்துறை அமைச்சராகவிருந்த படேல் போதிய ஆர்வம் - அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாற்று உண்டு. காந்தியாரும், நேருவும்கூட அப்பொழுது படேலிடம் அதிருப்தி அடைந்தனர் - இந்த அடிப்படையில் இந்துத்துவாவாதியான மோடி போன்றவர்கள் படேலின்மீது பற்றுதல் கொண்ட வர்களே!
ஆனாலும் காந்தியார் படுகொலை செய்யப்பட்ட போது அதற்குக் காரணமாகவிருந்த ஆர்.எஸ். எஸைத் தடை செய்து ஆணை பிறப்பித்தவர் அன்றைய உள்துறை அமைச்சர் படேல்தான்.

ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம்களைத் தாக்குகிறது. ஹிந்துக்களைத் தூண்டுவதற்காக விஷத்தைப் பரப்புவது என்ன நியாயமாம்? வகுப்புவாத உணர்வைத் தூண்டியதன் விளைவாக மகாத்மா காந்தியாரைப் பலி கொடுக்க நேர்ந்தது. ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அதை இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். வன்முறையை வளர்த்த தாலும், அரசுக்குக் கட்டுப்பட மறுத்ததாலும் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்படுகிறது என்று உத்தரவு போட்டவர் படேல்.

இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, படேலுக்கு 597 அடி உயரத்தில் சிலை என்று விளம்பரம் செய்து நாடெங்கும் ஒற்றுமை ஓட்டம் என்று கூத்தை அரங்கேற்றியுள்ளது. படேல் சிலைக்கு இரும்பு, மண் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களைச் சேகரிக்கிறது.

இதுபோன்ற செயல்கள்மூலம் மோடிமீது விழுந்திருக்கும் மோசமான முத்திரைகளிலிருந்து திசை திருப்பி விடலாம் என்ற உள் நோக்கம் இதற்குள் புதைந்து கிடக்கிறது என்பதைப் பொது மக்கள் அறியத் தவறக் கூடாது என்பதே நமது வேண்டு கோளாகும். ஒற்றுமை ஓட்டம் என்று பிஜேபி கூறிடத் தகுதி உண்டா? பிறப்பிலேயே ஜாதி பேதம் கற்பித்து மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி மனித ஒற் றுமையைச் சீர்குலைக்கும் இந்துத்துவாவாதிகளின் ஒற்றுமை ஓட்டம் நகைப்பிற்குரியதாகும்.

Read more: http://viduthalai.in/page-2/72145.html#ixzz2nekwvn00

தமிழ் ஓவியா said...


வரும்... ஆனால் வராது...

கேள்வி: கடவுள் இருக்கிறாரா?

பதில்: இருக்கிறார் - ஆனால் முகவரி இல்லை. (குமுதம் 18.12.2013 பக்கம் 12).

ஒருவனைப் பார்த்து நீ முகவரி இல்லாத பேர்வழிதானே என்று கேட்டால் மூக்கைப் பொத் துக் கொண்டு கேட்கப்பட்டவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும்; கடவுளை அந்தப் பட்டியலில் வைத்துப் பதில் சொல்லுகிறது குமுதம். ஆனால் கடவுளுக்கே கோபம் வராது - காரணம் அப்படி ஒருவர் இருந்தால்தானே கோபம் வரும்? வரும்... ஆனால் வராது என்ற சினிமா நகைச்சுவை வசனக் காட்சி நினைவிற்கு வருகிறதா?

Read more: http://viduthalai.in/e-paper/72143.html#ixzz2nelE73d7

தமிழ் ஓவியா said...

நீதிபதிகள் நியமனத்தில் தற்போதுள்ள கொலிஜியம் முறையை நீக்க வேண்டும்


உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் சமூகநீதிக் கொடி பறக்க வேண்டும்

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்

சென்னை, டிச.16- உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகள் நியமனத் தில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கு சமூகநீதி அடிப் படையில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் மேலும் பார்ப்பன நீதிபதிகள் நியமனத்தைக் கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று (16.12.2013) திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:

நாடு தழுவிய அளவில்....

சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 60 இடங்கள் அனுமதிக்கப்பட்ட இடங்கள். 60 நீதிபதிகள் அமரவேண்டிய வாய்ப்பு இருக்கிறது. இதில், தற்பொழுது ஓய்வு பெற்ற நீதிபதிகள் போக, 48 நீதிபதிகள்தான் அமர்ந்து வழக்குகளை விசாரிக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கில் வழக் குகள் தேங்கிக் கிடக்கின்றன. வழக்காடிகளுக்கு இதனால் கேடும், நட்டமும், அவதியும் ஏற்படு கின்றன. விரைந்த நீதிதான் உண்மையான நீதியாகும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். இந்நிலையில், உடனடியாக, அந்த 60-க்கும் உரிய பதவிகள் அத்தனையும் பூர்த்தி செய்யப்படவேண்டும்; நியமனம் செய்யப்பட வேண்டும். இந்த நியமன முறைகளில் இப்பொ ழுது மாற்றம் வரவேண்டும் என்கிற குரல் நாடு தழுவிய அளவில் இருக்கிறது.

இப்பொழுது இருக்கின்ற முறைப்படிப் பார்த்தால், ஏற்கெனவே இருக்கின்ற அரசியல் சட்ட விதிகளைப்பற்றி கவலைப்படாமல், குறுக்கு வழியில் வேறொரு வகையான நியமன முறை உள்ளே புகுந்து பல ஆண்டுகளாக ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது. கொலிஜியம் என்ற பெயரால், தலைமை நீதிபதி, அதற்கடுத்து இருக்கக்கூடிய இரண்டு மூத்த நீதிபதிகள் மூன்று பேர்தான்,தேர்ந்தெடுக்கப்படவேண்டியவர்களை, அவர்கள் நியமனம் செய்து, அந்தப் பட்டியலை உச்சநீதிமன்றத்திற்கு அனுப்புவார்கள். உச்சநீதி மன்றம் அதனை ஒப்புக்கொண்டு, ஏற்றால், அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார்கள் என்ற நிலைதான் இப்பொழுது இருக்கிறது.

சமூகநீதிபற்றியோ, வழக்கறிஞர்களைப்பற்றியோ...

இதனுடைய விளைவு என்னவென்று சொன் னால், உயர்நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதி யாக வருகின்றவர், வேறு மாநிலங்களிலிருந்து வருகிறார். அவருக்குத் தமிழ் தெரியாது என்பது மட்டுமல்ல, இந்த நாட்டினுடைய மனோபாவம், சமூகநீதி, மற்ற வழக்கறிஞர்களைப்பற்றியோ முழுத் தகவல்களும் அவருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. அந்த வகையில், மூத்த இரண்டு நீதிபதிகளைத்தான் அவர் நாடவேண்டும். ஆனால், அந்த இரண்டு நீதிபதிகளில் அடுத்த நீதிபதியும் வெளி மாநிலங்களில் இருந்துதான் வருகிறார். அவருக்கும் தமிழோ, தமிழ்நாட் டைப்பற்றியோ தெரியாது. மூன்றாவதாக உள்ள நீதிபதிதான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவர் யாரென்றால், தற்பொழுது ஒரு பார்ப்பன அம்மையார். நமக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவிதமான விருப்பு வெறுப்போ, கோபதா பங்களோ யார்மீதும் கிடையாது. கொள்கை அளவில் நாங்கள் இதனைத் தெளிவாகச் சொல்கின்றோம்.

தமிழ் ஓவியா said...


சரி சமமான வாய்ப்புகள் கொடுக்கப்படவேண்டும்

இந்த மூன்று நீதிபதிகளில், இருவர் பார்ப் பனர்கள். அந்த மூன்று பேர்தான் நியமனம் செய்கிறார்கள் என்று சொல்லும்பொழுது, அந்த நியமனத்தில் சமூகநீதிக் கடைபிடிக்கப் படவேண்டும் என்று வலியுறுத்துவது சமூகநீதிப் போராளிகளான எங்களுடைய இன்றியமையாத கடமை யாகும். அந்த அடிப்படையில், நிரப்பப்படுகின்ற நீதிபதி பதவியிடங்களில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, போதிய வாய்ப் பில்லாத மக்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு எல்லோருக்குமே சரி சமமான வாய்ப்புகள் கொடுக்கப்படவேண்டும்.

இப்பொழுது எங்களுக்குக் கிடைத்திருக் கின்ற தகவல்கள்படி பார்த்தால், பெண்கள் நீதிபதிகளாக வரவேண்டும் என்கிற கோரிக் கையை நாங்கள் அடிக்கடி வைத்துக் கொண் டிருக்கிறோம். சமூகநீதி, பாலியல் நீதியோடு சேர்ந்ததாக இருக்கவேண்டும்.Social Justice Combined with Gender Justice என்று இருக்க வேண்டும். அந்த அடிப்படையில், பாலியல் நீதியில், பெண்களுக்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று சொல்லும்பொழுது, தந்திர மாக என்ன செய்கிறார்கள் என்றால், பார்ப்பன மேல்ஜாதிப் பெண்களையே தேர்ந்தெடுக் கிறார்கள்.

அதற்கும்கூட, ஏராளமான நம்முடைய வழக் கறிஞர்கள், அனுபவபட்டவர்கள், பிற்படுத்தப் பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், மலைவாழ் மக்கள் இப்படி பல பிரிவுகள் இருக்கின்றன.

அதுமட்டுமல்ல, நாங்கள் கேள்விப்படுவது, அய்ந்து பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் கள். அதில் டில்லியில் இருந்து ஒரு பார்ப்பன அம்மையார், அதேபோல, மதுரையில் இருந்து ஒரு பார்ப்பன அம்மையார் பெயரை அந்தப் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்.
அப்பட்டமான சமூக அநீதியாகும்!

தற்பொழுதுள்ள நீதிபதிகளின் எண்ணிக் கையில், 6 பேர் பார்ப்பன நீதிபதிகளாக மிகப் பெரிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இதுவே அவர்களுடைய விகிதாச்சாரத்திற்கு மிக அதிகம். சாதாரணமாக, மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த வர்கள், சலவையாளர்களாக இருப்பவார்கள், அதேபோல், முடிதிருத்தும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்; அதேபோல், திறமையானவர்கள் இருக்கிறார்கள், அனுபவப் பட்டவர்கள் வழக்கறிஞர்களாக ஏராளமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரையும் பரிந்துரை செய்யவில்லை. எனவே, இது அப்பட்டமான சமூக அநீதியாகும்.

எனவே, வாய்ப்பில்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும்; சரிசமப்படுத்தவேண்டும். அரசியல் சட்டத்தில் இருக்கின்ற அடிக்கோட் ரெப்ரசென்டேசன் (Ade Quate Representation)

என்கிற சொல்லுக்கு, மற்றவர் களோடு சமப்படுத்தக் கூடிய அள விற்கு என்று அதற்குப் பொருள். ஆகவே, மற்றவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்கள் விகிதாச்சா ரத்திற்கு அதிகமாக இருக்கிறார்கள்.

நீண்ட காலத்திற்குப் பிறகு இப்பொழுதுதான்...

அடுத்தபடியாக, உச்சநீதிமன்றத் திலுள்ள 31 நீதிபதி இடங்களில், இந்த நாட்டில் பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் இன்றைக்கு ஒருவர் கூட நீதிபதியாகவில்லை. 31 நீதிபதி களில் பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்தவர்கள் ஓரிருவர் நீதிபதிகளாக உள்ளனர். இப்பொ ழுது தலைமை நீதிபதியாக உள்ள வர் நீண்ட காலத்திற்குப் பிறகு வந்துள்ளார். அவர் சில மாதங்களே அந்தப் பணியில் உள்ள வாய்ப்பைப் பெற்று, வருகின்ற ஏப்ரல் மாதத்தில் ஓய்வு பெற உள்ளார்.

இந்த நிலையில், பிற்படுத்தப்பட் டவர்களுக்கோ, தாழ்த்தப்பட்டவர் களுக்கோ உச்சநீதிமன்றத்தில் இடமே இல்லை. ஏராளமான உயர்நீதிமன்ற நீதிபதிகள், அனுப வம் உள்ளவர்கள், மூத்த நீதிபதிகள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருக்கிறார்கள். மலைவாழ் சமு தாய மக்கள், அந்த மக்களுக்கு வாய்ப்பில்லாத சூழல் இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

சென்னையிலும், மதுரையிலும்...

பெண்கள் என்று சொன்னாலும் சரி அல்லது தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு - இதுவரை வாய்ப்பு கிடைக்காதவர் களுக்கு வாய்ப்புக் கொடுக்கவேண் டும். அதனை வலியுறுத்துவதற்குத் தான் இந்தப் போராட்டம்.

இந்தப் போராட்டம் இன் றைக்கு சென்னையிலும் நடை பெறுகிறது; மதுரையிலும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, இதனைத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம்.

மீண்டும் மீண்டும் பார்ப்பனர் களையே கொண்டு வந்து, பாலியல் நீதி என்று சொல்லும் பொழுது கூட, பெண்களில்கூட பார்ப்பனரல் லாத பெண்கள் அவர்களுடைய கண்களுக்குத் தெரிவதில்லை. எனவே தான், இதனை வலியுறுத்து வதற்காக இந்தப் போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

பழைய கருப்பன், மீண்டும் புதிய உருவில் வரக்கூடிய ஆபத்துகள்

இதையே நாங்கள் உயர்நீதிமன் றத்திற்கு உங்கள் மூலமாக கொண்டு போகின்றோம். உச்சநீதி மன்ற காதுகளுக்கும், கண்களுக் கும்கூட இவைகளெல்லாம் சென்ற டைய வேண்டும் என்று கருதுகின் றோம். கொலிஜியம் முறையையே மாற்ற வேண்டும் அதில்கூட, ஒடுக் கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருந்தால்தான், தேர்வு முறையில்கூட நியாயம் கிட்டும். இல்லையானால், பழைய கருப்பன், மீண்டும் புதிய உருவில் வரக்கூடிய ஆபத்துகள் இருந்து கொண்டிருக்கின்றன.

எனவே, இந்தப் போராட்டத் தினுடைய நோக்கம் என்னவென் றால்,

சென்னையில் இருக்கக்கூடிய உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கையான 60 இல், 48 நீதிபதிகள் இருக்கிறார்கள். 12 நீதிபதி இடங்கள் காலியாக இருக்கின்றன. இவைகளில் நியம னங்கள் சமூகநீதி அடிப்படையில் இருக்கவேண்டும். ஏற்கெனவே பார்ப்பனர்கள் 6 பேர் இருக்கிறார் கள். மேலும் மேலும் பார்ப்பனர் களையே கொண்டு வந்து திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெண்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்கிற பெயரால், மறுபடியும் பார்ப்பன உயர்ஜாதிப் பெண்களையே அவர்கள் தேடிப் பிடிக்கக்கூடாது. மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பினைக் கொடுக்க வேண்டும்.

திராவிடர் கழகம் இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்திருக்கிறது

அதேபோல, உச்சநீதிமன்றத்தி லுள்ள 31 நீதிபதி இடங்களில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற் படுத்தப்பட்டவர்களுக்கு இடம் கொடுக்கவேண்டும். தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதியை உடனடியாக நியமிக்க வேண்டும். ஒரு காலத்தில் இந்தியா வில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தி லிருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் யாரும் இல்லை; நாங்கள் என்ன செய்வோம் என்று கேட்டார்கள். ஆனால், இப்பொழுது அந்த நிலை இல்லை. மூத்த நீதிபதிகள் தமிழ கத்தில் இருக்கிறார்கள்; ஆந்திரா வில் இருக்கிறார்கள்; இன்னும் பல மாநிலங்களில் இருக்கிறார்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதிகள். எனவே, அவர் களில் மிகத் தெளிவானவர்கள், நல்ல அனுபவம் உள்ளவர்களை நியமிக்கவேண்டும். இதனைச் சொல்வதற்குத்தான், திராவிடர் கழகம் இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்திருக்கிறது.

பிச்சையல்ல - சலுகையல்ல - இது நம்முடைய உரிமை!

ஏனென்றால், இந்த நாட்டில் நீதிப் போக்கு எப்படி இருக்கிறது என்றால், உயர்ஜாதிக்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு வேறொரு நீதி என்று சொல்கிற அளவிற்கு, இன்னமும் மனுநீதி ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டு மானால், சமூகநீதிக் கொடி உயர் நீதிமன்றத்திலும் பறக்கவேண்டும்; உச்சநீதிமன்றத்திலும் பறக்க வேண்டும். இதுதான் மிக முக்கிய மானது. ஆகவே, அதற்கு அனை வரும் ஒத்துழைக்கவேண்டும். பொதுமக்கள் மத்தியில் இது கட்சி களுக்கு அப்பாற்பட்ட பிரச்சினை. இது ஒரு ஜாதிக்குரிய பிரச்சினை யல்ல; மதத்திற்குரிய பிரச்சினை யல்ல; கட்சிக்குரிய பிரச்சினை யல்ல. இது ஒரு சமூகநீதிப் பிரச்சினை. சமூகநீதி என்பது அரசி யல் சட்டத்தில் நமக்கு உத்தரவாதம் செய்யப்பட்டிருக்கிறது. அது ஏதோ பிச்சையல்ல; சலுகையல்ல. இது நம்முடைய உரிமை. அந்த உரிமை யைத்தான் நாம் முழக்கமிட்டு கேட்கிறோம். எனவே, அந்த உரிமை நமக்குத் தேவை, தேவை என்பதை வலியுறுத்துவதுதான் இந்தப் போராட்டம். இது கிட்டுகின்ற வரையில், எங்களுடைய போராட் டம் ஓயாது, ஒழியாது என்பதை சொல்லி முடிக்கின்றேன்.
நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/e-paper/72141.html#ixzz2nelQeZPC

தமிழ் ஓவியா said...


நெருக்கடி நிலைக் காலத்தில் பெரும் இடர்ப்பாடுகளைச் சந்தித்த பெரியார் பெருந்தொண்டர் மானமிகு வ.சு.சம்பந்தம் மறைந்தாரே!

கடலூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் புதுவை மானமிகு வ.சு.சம்பந்தம் அவர்கள் (வயது 79) இன்று திடீர் மறைவுற்றார் என்ற தகவலை அறிந்து அதிர்ச்சியுற்றேன். இளம் பருவத்திலேயிருந்து இயக்க ஈடுபாடு கொண்ட இலட்சிய வீரர் அவர்.

கூட்டுறவுத் துறையில் பணியாற்றியவர். நெருக்கடி நிலைக் காலத்தில் பெரும் இடர்ப்பாடு களைச் சந்தித்தவர். பொருள் நட்டத்திற்கெல்லாம் ஆளானவர் தோழர் சம்பந்தம் அவர்கள்.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதி, சட்ட விரோத செயல்களையெல்லாம் முகம் கொடுத்து, சந்தித்து, நீதிமன்றம் சென்று, கடைசியில் சிரிப்பவர் யார்? என்ற முறையில் வெற்றியும் கண்டவர்!

அவருக்குக் கழகத் தலைமை, பல வகைகளில் துணையாயும் நின்றது. தான் மட்டுமல்லாமல், தன் குடும்பத்தினர் அனைவரையும் கொள்கை வழியில் வார்த்தெடுத்த கொள்கை வீரர் அவர்! கழகக் கொள்கைகளை மேடைகளில் மணிக்கணக்கில் பேசும் ஆற்றல் படைத்தவர். கழகம் கல்தூண்போல் அசையாது நின்ற கருஞ்சட்டை வீரரை இழந்துவிட்டது.

அவரது குடும்பம் தம் தலைவரை இழந்துவிட்டது! குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதுடன், அவர்தம் அளப்பரிய அருந்தொண்டுக்கு கழகம் வீர வணக்கத்தைச் செலுத்துகிறது.

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.

குறிப்பு: தலைமைக் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

வா.சு.சம்பந்தம் அவர்களின் வாழ்விணையர் மானமிகு மீனாசம்பந்தம், மகன் மாறன் ஆகியோரிடம் கழகத் தலைவர் தொலைப்பேசியின்மூலம் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/72119.html#ixzz2nemEf2lm

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நெல்சன் மண்டேலா கூறிய பகுத்தறிவுக் கருத்து

தி.மு.க. பொதுக்குழுவில் எடுத்துக்காட்டி கலைஞர் கருத்துரை

சென்னை, டிச. 16- திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் நேற்று (15.12.2013) காலை நடைபெற் றது. இக்கூட்டத்தில் கலைஞர் கூறியதாவது:-

மண்டேலா மறைந்ததற்காக இந்தப் பொதுக்குழுவில் நாம் தீர்மானம் நிறை வேற்றுகின்ற அதே நேரத்தில், இதே மண் டேலா அவர்கள் 27 ஆண்டுக் காலம் தான் கொண்ட கொள் கைக்காக, நிறவெறியை நிர்மூல மாக ஆக்க வேண்டும் என்று எடுத்துப் பிடித்த இலட்சியப் பதாகைக்காக அவர் அந்த இருண்ட கண்டத்திலே சிறை யிலே இருந்தார் - 27 ஆண்டுக் காலம். இன்றைக்கு 27 நாள் சிறை யிலே இருந்தோம் என்றாலே, அதைப் பெரிதாக தியாகிகள் பட்டியலிலே இணைக்கின்ற இந்தக் காலத்தையும், 27 ஆண்டுக் காலம் ஒரு மனிதர் சிறையிலே இருந்தார் என்பதை யும் எண்ணிப் பார்க்கும்போது, அந்தத் தியாகம் தான் அவரை தென்னாப்பிரிக்காவின் தலைவ ராகவே ஆக்கியது என்பதை யும், இன்றைக்கு உலகம் முழுதும் உள்ள மக்கள், உலகம் முழுதும் உள்ள தலைவர்கள், உலகம் முழுதும் உள்ள இயக் கங்கள், அவருக்காக கண்ணீர் சிந்துவது மாத்திர மல்ல, இரங் கல் தீர்மானங்களை நிறை வேற்றுகின்றன என்பதையும், நம்முடைய இந்திய நாட்டி லிருந்து குடியரசுத் தலைவரும், திருமதி சோனியா காந்தி அவர் களும் சென்று, அவருக்கு வீர வணக்கம் செலுத்தி விட்டு வருகிறார்கள் என்றால், அவருக் குக் கிடைத்த வெற்றி, அவர் சோதனைகளை இடறி, சிறைக் கஷ்டங்களையெல்லாம் துச்சமெனக் கருதி, நடந்த பய ணத்தினால் தான் இந்த வெற்றி அவருக்கும், அவருடைய இயக் கத்திற்கும் கிடைத்தது.

அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கு, அவர் தெரிவித்த ஒரு கருத்தைச் சொல்கிறேன். “Honesty, sincerity, simplicity, humilnity, pure generosity, absence of vanity, readiness to serve others - qualities which are within easy reach of every soul - are the foundation of one’s spiritual life.”

இதனைத் தமிழிலே சொல்ல வேண்டுமேயானால் நேர்மை, உண்மை, எளிமை, பணிவு, தாராள மனப்பான்மை, தற்பெருமை இன்மை, மற்றவர்க்குச் சேவை செய்யத் தயாராக இருக்கும் மனநிலை ஆகிய குணநலன் களே ஒரு மனிதனின் வாழ்க் கைக்கு அடிப்படையாகும். இது நெல்சன் மண்டேலாவி னுடைய வார்த்தைகள். அது மாத்திரமல்ல; மேலும் சொல் கிறார்.

“In real life we deal, not with gods, but with ordinary humans like ourselves : men and women who are full of contradictions, who are stable and fickle, strong and weak, famous and infamous.”


தமிழ் ஓவியா said...

(மாறாததும் மாறுவதும் - வலிமையானதும் வலுவிழந் ததும் - புகழ் மிக்கதும் புகழ் இழந்தது மான முரண்பாடு கள் மிக்க ஆண்களோடும், பெண்களோடும் வாழ்க்கை யில் நாம் பழகுகிறோம்; கடவு ளர்களோடு அல்ல; நம்மைப் போன்ற சாமான்ய மனிதர்களு டனேயே நாம் பழகுகிறோம்) இதுவும் நெல்சன் மண்டேலா எடுத்துச் சொன்ன வாசகம் தான். நான் இந்த இரண்டையும் இங்கே நம்முடைய பேரா சிரியர் குறிப்பிட்ட நம்முடைய ஆரம்பக் காலப் பகுத்தறிவு இயக்கத்தின் கருத்துகளோடு ஒப்பிட்டுப் பார்த்து எந்த மண்டேலா அவர்களுக்கு நாம் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, இங்கே நம்முடைய கண்ணீ ரைக் காணிக்கையாக்கினோமோ, அந்த மண்டேலா உதிர்த்த வார்த்தைகளை, வாசகங்களை, வழிமுறைகளை, மனித சமு தாயத்தைப் பற்றிய மகோன்னத மான எண்ணங்களை, ஆண்ட வனைப் பற்றி அவர் சொன்ன உண்மைகளை, மனதிலே பதிய வைத்துக் கொண்டால் இரங் கல் தீர்மானம் நிறைவேற்றியது மாத்திரமல்ல, அவருடைய கருத்துக்களை, எப்படி பெரி யாருடைய கருத்துகளை, அண்ணாவின் எண்ணங்களை நாம் பின்பற்றி நடக்க இன் றைக்கு நம்மைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறோமோ, அதற்குப் பெரும் உதவியாக நான் இங்கே எடுத்துச் சொன்ன இந்த வாசகங்கள், நெல்சன் மண்டேலாவின் வாசகங்கள் துணை புரியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதைத் தான் நான் இங்கே உங்களுக்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

நம்முடைய இயக்கத்தின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சி யிலும் எத்தகைய சோதனை ஆனாலும், வேதனை ஆனா லும் அவைகளை யெல்லாம் நாம் கடந்து நின்ற, தாங்கிப் பழகியிருக்க; காரணம் என் றால், இப்படிப்பட்ட கருத்து கள் அடங்கிய மாமனிதர்களு டைய சொற்களைப் பின்பற்றி யது, அவர்களுடைய வாழ்க்கை நெறியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று இந்த இயக்கத் தின் தலைவர்கள் நமக்குக் கற்பித்ததை மறவாமல், இன்று வரையில் நடை போட்டுக் கொண்டிருப்பது தான் நம்மை இன்றைக்கு வாழ வைத்துக் கொண்டிருக்கின்ற சக்தி என் பதை மறந்து விடக் கூடாது.

ஏதோ தேர்தலில் நாம் ஈடு பட வேண்டும்; வேண்டுமா, வேண்டாமா எப்படி ஈடுபடு வது? எந்த வகையில், என்ன முறையில், யாரோடு கூட்டுச் சேர்ந்து என்றெல்லாம் இன் றைக்கு இந்தப் பொதுக்குழுவில் கேள்விகள் கேட்கப்பட்டு, வழி முறைகளும் கூறப்பட்டு, இறு தியாக எல்லா பொறுப்புகளை யும் நீங்களே தாங்கிக் கொள் ளுங்கள் என்று எங்கள் தலை யிலே பாரத்தைச் சுமத்தி ஒரு தீர் மானத்தை இங்கே நிறைவேற்றி, அதற்கான கையொலிகளையும் பெற்று எங்களை இதிலே சிக்க வைத்திருக்கிறீர்கள். நான் உங் களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தி.மு. கழகத் தைப் பொறுத்தவரை தனித்து நின்றே கூட இந்த வெற்றியைப் பெற முடியும். (நீண்ட கைதட் டல்) அவசரப்பட்டு கை தட் டக் கூடாது. தனித்து நின்றே கூட என்று நான் கூறும்போது, கூட என்று குறிப்பிட்ட வார்த் தையை மறந்து விடக் கூடாது. தனித்து நின்றே இந்த வெற்றி யைப் பெறுவோம் என்று நான் சொல்லவில்லை. தனித்து நின்றே கூட நாம் வெற்றி பெற முடியுமென்று சொன்னால், கொஞ்ச நஞ்சம் ஒருவர், இருவ ருடைய உதவி இருப்பது நல்லது என்று குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-3/72121.html#ixzz2nemXkboI

தமிழ் ஓவியா said...


எந்தெந்த பழங்களில் என்ன இருக்கிறது?


மாம்பழம்: ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. ரத்தத்தை அதிகரித்து உடலுக்கு பலம் அளிக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக் கிறது.

கொய்யா: வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. சொறி, சிரங்கு, ரத்த சோகை, இருப்பவர்கள் கொய்யாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். நச்சுக்கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யா பழத்துக்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் நச்சுக் கிருமிகள் ரத்தத்தில் கலந்துவிட்டால் அதை உடனே கொன்றுவிடும் சக்தி படைத்தது.

பப்பாளி: மூலநோய், சர்க்கரைநோய், குடல் அழற்சி, போன்றவற்றுக்கு சிறந்தது. வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பல் சம்பந்தமான குறைப்பாட்டிற்கும் சிறுநீர் பையில் ஏற்படும் கல்லை கரைக்கவும் பப்பாளி பயன்படும். நரம்புகள் பலப்படும். ஆண்மைதன்மையை பலப்படுத்தும்.

மாதுளை: மலத்தை இளக்கும் சக்தி பெற்றது. இருமல், பித்தம், சம்பந்தமான அனைத்து குறைபாடுகளுக்கும் நல்ல பலன் தரக்கூடியது. வறட்டு இருமலை குணப் படுத்தும்.

வாழை: மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு, பலனடையலாம். இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்ல செரிமாண சக்தி கிடைக்கும். செவ்வாழைப்பழம் கண் பார்வை சக்தியை அளிக்கும்.

ஆரஞ்சு: வைட்டமின் ஏ, வைட்டன் சி, வைட்டமின் பி, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. தூக்கமின்றி அவதிப்படுபவர்கள் படுக்கச்செல்லும் முன் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம் சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, ஈறுகளில் ரத்தக்கசிவு உள்ளவர்கள் ஆரஞ்சு பழச்சாற்றை கொப்பளித்து விழுங்கி நிவாரணம் பெறலாம்.

திராட்சை: வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. சரியாக பசி எடுக்காமல் வயிறு, மந்த நிலையில் காணப்படு பவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரை டம்ளர் சாறு எடுத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து அருந்தினால் நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதகக் கோளாறுகளுக்கு திராட்சைச் சாறு பலனளிக்கும். முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும்.

எலுமிச்சை: எலுமிச்சைச் சாற்றுடன் சிறிய இஞ்சித் துண்டை நறுக்கிப்போட்டு கொதிக்க வைத்து ஆறிய பிறகு தினமும் 2முறை குடித்தால் இருமல் நின்றுவிடும். சூடான தேநீரில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து 3 நாட்கள் குடித்தால் தலைவலி வராது. வயிற்றுவலி, பித்தத்தால், செரிமாண உறுப்பு களில் ஏற்படும் குறைபாடுகள் சிறுநீர் தொந்தரவுகள் வராது.

பேரீச்சை: தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலையும் 2 பேரீச்சை பழமும் சாப்பிட்டால் உடல் பலம் பெறும் புதிய ரத்தம் உண்டாகும்.

Read more: http://viduthalai.in/page-7/72115.html#ixzz2nenOLkXL

தமிழ் ஓவியா said...


பனியிலிருந்து பாதுகாக்க வழிமுறைகள்

சுள்ளெனக் கொளுத்தும் வெயிலையும், சடசட மழை யையும் தாங்கி கொள்ளலாம். அதுவும் எலும்பை ஊடுருவும் கார்த்திகை, மார்கழிப் பனியைக் கண்டால் பயப்படுவோம். மழையும் குளிரும் வாட்டும் இந்த காலக்கட்டங்களில் காய்ச்சலும் சளித் தொந்தரவும் எளிதில் வந்துவிடும். உதடுகளில் வெடிப்பு, கை, கால்களில் வறட்சி ஏற்படும். இதற்காக நாம் கவலைப்பட வேண்டாம். நாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் பனியும் குளிரும் நம்மை எதுவும் செய்யாது.

ஒரே சீரான தட்ப வெப்பநிலை இல்லாமல் வெப்பமும் பனியும் கலந்து இருக்கும் நாட்களில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். பனிக்காலத்தில் ஏ டிபிக்கல் வகை வைரஸ் அதிகமாக தாக்கும். இந்த வைரஸ் கிருமிகள் தாக்கினால் 10 முதல் 13 நாட்கள் வரை வலி நீடிக்கும். சுற்றுச் சூழல் மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து வருவதுதான் இதற்குக் காரணம். இந்த வைரஸ் குழந்தைகளையும், வயதானவர்களையும்தான் அதிகம் தாக்குகிறது.

இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் காரத்தைத் தவிர்த்துவிட வேண்டும். இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசி கஞ்சி, பிரெட் ஆகியவற்றைச் சாப்பிடலாம். சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களை சாப் பிடலாம். புளிப்புச் சுவை நிறைந்த பழங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.வெயில் காலங்களில் நம் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் இந்தப் பழங்கள், குளிர் காலங்களில் ஒத்துக்கொள்ளாது. காரணம், தட்பவெப்ப நிலைக்கு ஏற்றமாதிரி நம் உடல் செயல்பாடுகள் மாறுவதுதான்.

வெயில் காலங்களில் நமக்கு அதிகமாக வியர்க்கும். அப்போது வியர்வையுடன் சேர்ந்து அல்கலைன் சிட்ரேட் என்ற அமிலமும் நம் உடலில் இருந்து வெளியேறும். அதை ஈடு செய்வதற்காக அமிலச் சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்கள் மற்றும் மோர், பானகம் போன்ற புளிப்புச்சுவை நிறைந்த பானங்களைப் பருகுவோம். குளிர்காலத்தில் அதிகமாக வியர்க்காத நிலையில் இவற்றைக் குடிக்கும்போது, நம் உடலில் அதிக அளவில் அமிலச் சத்து சேர்ந்து, சளி, சைனஸ் போன்றவை ஏற்படலாம். முக்கியமாக பச்சை திராட்சையையும், பச்சை வாழைப்பழத்தையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பனிக்காலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். குளிக்க வேண்டும். வெந்நீரில் கைப்பிடி அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்தால் சளி பிடிக்காது, தொண்டை வலியும் வராது. துளசி கிடைக்கவில்லை என்றால் கற்பூர வல்லி, தூதுவளை கீரை ஆகியவற்றில் கஷாயம் வைத்தும் குடிக்கலாம். எந்தக் கீரையும் கிடைக்கவில்லையென்றால் இரண்டு வெற்றிலையை மென்று சாப்பிடலாம். கற்பூரவல்லி கஷாயம் குடிக்கப் பிடிக்கவில்லையென்றால் அதில் பஜ்ஜி, மோர்க் குழம்பு செய்து சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு இரவில் தூங்குவதற்கு முன்பு காதுகளின் பின்புறங்களில் லேசாகத் தைலம் தேய்த்தால் சளி பிடிக்காது. எந்த உணவாக இருந்தாலும் சுடச்சுட சாப்பிடத் தர வேண்டும். கடுகுடன் பால் அல்லது தண்ணீர் சேர்த்து அரைத்து, தினமும் பூசி வர, சருமம் மென்மையாகி, பளபளக்கும். ஒரு கரண்டி ஆலிவ் ஆயிலை ஒரு பக்கெட் நீரில் கலந்து குளிக்கலாம். சருமம் மிகவும் வறண்டிருந்தால், ஆலிவ் ஆயிலை உடம்பில் பூசி, மசாஜ் செய்யவும். 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கலாம். சிறிது பஞ்சை காதில் வைத்துக் கொண்டு சென்றாலும், குளிர் காற்றி லிருந்து தப்பிக்கலாம்.

குளிர்ச்சியான பானங்களை அருந்துவதை தவிர்க்கவும். சூப் அருந்தலாம். குழந்தைகளுக்கு குல்லா, ஸ்வெட்டர், சாக்ஸ் அணிவித்து, வெளியே அழைத்துச் செல் வதும் அவசியம். எண்ணெய் மற்றும் மசாலா வகைகள் அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. தினமும் காலையில், துளசி இலை நான்கை தண்ணீரில் ஊற வைத்து அருந்துவது நல்லது.

Read more: http://viduthalai.in/page-7/72113.html#ixzz2nenfYM5U

தமிழ் ஓவியா said...


நடவடிக்கை

பார்ப்பனர்களுக்கு விரோதமாக எவர் நடக்க ஆரம்பித்தாலும் அவர்களை ஒழித்துக்கட்டவே பார்ப்பனர் சதி செய்வார்கள். புராண கால முதலே இதுதான் அவர்கள் நடவடிக்கையாக இருந்து வந்திருக்கிறது.

- (விடுதலை, 14.7.1961)

Read more: http://viduthalai.in/page-2/72165.html#ixzz2nk012Thc

தமிழ் ஓவியா said...


அய்யப்பன் கோயில் தரிசனச் சீட்டில் மோசடி!

திருவனந்தபுரம், டிச. 17- சபரிமலை அய்யப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடந்து வருகின்றன. சபரிமலையில் பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஆன்லைன் தரிசன முன்பதிவு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் வெகு தொலைவில் இருந்து வரும் பக்தர்களால் எளிதில் தரிசனம் செய்ய முடிந்தது. இந்நிலையில் பக்தர்கள் போலி ஆன்லைன் டிக்கெட்களுடன் சபரிமலை வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒருவர் பயன்படுத்திய டிக்கெட்டில் புகைப்படத்தை மாற்றி ஒட்டியும், தேதியை திருத்தியும் பக்தர்கள் பயன் படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தென்மண்டல ஏடிஜிபி ஹேமச்சந்திரன் கூறுகையில், இவ்வருடம் பக்தர்கள் போலி ஆன்லைன் தரிசன டிக்கெட்டை கொண்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சில கணினி மய்யங் களில் இதுபோன்ற டிக்கெட்களை எடுத்து கொடுத்தது தெரியவந்துள்ளது. இவ்வாறு போலி ஆன்லைன் டிக்கெட் கொண்டு வரும் பக்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைனில் பதிவு செய்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது. ஆனால் சில கணினி மய்யங் களில் இதற்கு கட்டணம் வசூலிக்கின்றனர். இவ்வாறு கட்டணம் வசூலிக்கும் கணினி மய்யங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.

தமிழ் ஓவியா said...


தி.மு.க. பொதுக்குழுத் தீர்மானங்களுக்கு வரவேற்பும் பாராட்டும் - சுப. வீரபாண்டியன் அறிக்கை!

சென்னை, டிச.17- காங்கிரஸ், பா.ஜ.க., ஆகிய இரு கட்சிகளையும் விட்டு சம தூரத்தில் விலகி நிற்பது என தி.மு.க., பொதுக் குழுத் தீர்மானங்களை வரவேற்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கைவருமாறு:

15.12.2013 அன்று சென்னையில் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழு, தமிழக மக்களின் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இறுதியில், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து, தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிவிப்பு பெரும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தருவதாக உள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க., ஆகிய இரு கட்சிகளையும் விட்டு சமதூரத்தில் விலகி நிற்பது என்னும் தி.மு.கழகத்தின் முடிவு மிகுந்த பாராட்டிற்கும், வரவேற்பிற்கும் உரியது. காங்கிரஸ் போன்ற கட்சிகளை கால காலமாக தூக்கிச் சுமந்ததும் போதும், மதவாதக் கட்சிகளோடு உறவும் ஒரு நாளும் வேண்டாம் என இரு திசைகளிலும் எடுக்கப்பட்டிருக்கும் நல்ல முடிவு இது. தி.மு. கழகத் தொண்டர்களிடம் புதியதோர் எழுச்சியை உருவாக்கியிருக்கும் இவ்வறிவிப்பு, பொது மக்களிடமும் ஏற்றதொரு வரவேற்பைக் கண்டிருக்கிறது. வழக்க மாகவே ஊக்கம் குறையாமல் தேர்தல் பணியாற்றும் தி.மு.கழகத் தொண் டர்கள் இம் முறை முழு மூச்சில் களத்தில் இறங்கிப் பணியாற்றுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தி.மு.க. பொதுக்குழுவின் தீர்மானங்கள் அனைத்தையும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை மீண்டும் ஒரு முறை மகிழ்வுடன் வரவேற்கிறது.

தமிழ் ஓவியா said...


மதக் கலவரத் தடுப்புச் சட்டத்தை எதிர்ப்போர் யார்?


தஞ்சை வல்லத்தில், கடந்த14ஆம் தேதி கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத் தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஒன்று - மதக் கலவரத் தடுப்புச் சட்டத்தை வரவேற்றதாகும். மத்திய அரசு கொண்டுவரும் மதக் கலவரம் மற்றும் குறி வைத்து மேற்கொள்ளப்படும் வன் முறைத் தடுப்பு (நீதி மற்றும் மறுவாழ்வு பெறுதல்) சட்ட வரைவு (Prevention of Communal Violence (Access to Justice and Repatriation) Bill) எனும் சட்டம் விரிவான பொருள்கொண்ட நியாயமான, தேவையான வரவேற்கப் படவேண்டிய சட்டம் ஆகும்.

அவசியம் கருதி இந்தச் சட்டத்தினைச் செயல் படுத்தும் போது மாநில அரசுகளின் உரிமைகளுக்குப் பங்கம் இல்லாமல், மாநில அரசுகளின் ஒப்புதலுடன் செயல்படுத் தும் வகையில், சட்டத்தில் சரத்துகளை இணைத்துக் கொள்ளுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது என்பதுதான் அந்தத் தீர்மானமாகும்.

மாநில உரிமைக்கு எதிரானது என்ற ஒரு கருத்து எழுந்துள்ளது - மாநில அரசின் அனுமதியையும், ஒத்துழைப்பையும் பெற்று இந்தச் சட்டத்தை செயல்படுத்தலாம் என்பது ஒரு நியாயமான கருத்தாகும். அதை விட்டு விட்டு, இந்தச் சட்டமே கூடாது என்று ஒரு அமைப்புக் கூறுகிறது என்றால் அதன் உட்பொருள் என்ன? அப்படியொரு சட்டம் செயல்பட்டால் தங்களுக்குப் பாதகமாக இருக்கும் என்று கருதுவது - குற்றமுள்ள நெஞ்சுடையாரின் குறுகுறுப்பேயாகும்.

காரணம் நாடு தழுவிய அளவில் மதக் கலவரங் களை உண்டாக்கிக் குளிர்காய்வதுதான் ஆர். எஸ்.எஸ். சங்பரிவார் உள்ளிட்ட (பி.ஜே.பி.யும்) குழுமத்தின் வழிமுறைகள்!

மக்களை இந்துக்கள் - சிறுபான்மையினர் என்று கூறு போட்டால் பெரும்பான்மையான இந்துக்களின் வாக்குகள் (Polarisation) தங்களுக்குக் கிடைக்கும் என்ற தந்திரமாகும்.

குஜராத்தில் மதக் கலவரத்தை உருவாக்கி அப்படியொரு சூழ்நிலையை ஏற்படுத்தவில்லையா? பாபர் மசூதியை இடித்தவர்கள் அல்லவா!

கோத்ராவில் ரயில் பெட்டி எரிந்து பலர் மாண்டனர் என்பது வேதனையான ஒன்றே! பொறுப்புள்ள முதல்வராக இருந்தால் நரேந்திரமோடி என்ன செய்திருக்க வேண்டும்?

இதனை வைத்து மக்களுக்குள் மோதல், கலவரம் வந்து விடக் கூடாது என்பதில் அல்லவா கவனம் செலுத்தி இருக்க வேண்டும்? அதற்கு மாறாக, அவரின் சிந்தனை யும், அணுகுமுறையும் இருந்தன உள்ளுக்குள்ளிருந்த இந்துத்துவா வெறியல்லவா அவரை உசுப்பி விட்டது!

பலியானவர்களை அடையாளம் கண்டு, உடல்களை அந்தந்த ஊருக்கு அனுப்புவது என்று தான், முதலில் முடிவு செய்யப்பட்டது. அந்தத் திட் டத்தை மாற்றி, பலியான அத்தனை உடல்களையும் ஒரே இடத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லுவது என்று முடிவு செய்தவர்தான் முதல் அமைச்சர் நரேந்திரமோடி.

அதன் விளைவு என்ன ஆகும் என்பது, கடுகளவு சிந்திப்பவர்கள்கூட உணர்ந்து கொள்வார்கள். பலியான பிணத்தைக் காட்டி பெரும்பான்மையான இந்துக்களை வெறியேற்றி சிறுபான்மை மக்கள்மீது வன்முறையை ஏவுவதுதான் மோடியின் திட்டம்; அதன்படியே நடந்தது.

அப்பொழுது குடியரசு தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன் அவர்கள் பிரதமர் வாஜ்பேயிடம் பல முறை தொடர்பு கொண்டு, இராணுவத்தை அனுப்பிக் கலவரத்தை அடக்க வேண்டும் என்று வலியுறுத் தியும் அதனைப் பிரதமர் வாஜ்பேயி செய்யவில்லையே! இவ்வளவும் நடந்த பிறகு எந்தமுகத்தை வைத் துக் கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று நீலிக் கண்ணீர் வடித்தவர்தான் இந்த வாஜ்பேயி.

குஜராத்தில் ஓர்அரசே முன்னின்று கலவரத்தைத் தூண்டி, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு பான்மை மக்கள் கொல்லப்பட்ட பிறகுகூட, இப்படி யொரு மதக் கலவரத் தடுப்புச் சட்டம் கூடாது என்று சொல்லுபவர்கள் யாராக இருக்க முடியும்?

இது, சிறுபான்மை மக்களைத் தாஜா செய்வ தற்குக் கொண்டு வரப்படும் சட்டம் என்று, இந்துத் துவாவாதிகள் சொல்லுகிறார்கள் என்றால் இதன் பொருள் எளிமையாக அறியப்படக் கூடியதே.

இந்தச் சட்டத்தைப் புரிந்து கொள்ளாமலோ அல்லது புரிந்து கொண்டு வேண்டுமென்றே விமர்சிக்கிறார்கள் என்று கருத வேண்டியுள்ளது.

இந்துக்கள், முஸ்லிம்கள் மட்டுமல்ல; காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் இந்துக்களுக்கும் பயன் உடையதாக இருக்கும். கருநாடகம், மும்பை போன்ற மாநிலங்களில் தமிழர்கள் போன்ற வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும், மகாராட்டிரத்தில் பீகாரிகளுக்கும் கூடப் பாதுகாப்பான சட்டம்தான்.

இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் யாராக இருந் தாலும் மதக் கலவரம் நாட்டில் நடைபெற வேண்டும் என்ற நஞ்சை கன்னத்தில் அடக்கி வைத்திருக்கக் கூடியவர்களே ஆவர்! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/72198.html#ixzz2nk1r5a00

தமிழ் ஓவியா said...


வகுப்புக் கலவரத் தடுப்பு மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதல்


புதுடில்லி, டிச.17- வகுப்புக் கலவரத் தடுப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை திங்கள் கிழமை ஒப்புதல் அளித் தது. இதையடுத்து, "இந்த மசோதா செவ்வாய்க் கிழமை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அமைச்சரவைக் கூட்டத் துக்கு பிறகு செய்தியா ளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார். அதே நேரத்தில் இந்த மசோதா நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு அச் சுறுத்தலாக உள்ளதால், நாடாளுமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவி க்கப்படும் என்று பாஜக கூறியுள்ளது. வகுப்புக் கலவரத் தடுப்பு மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் மாநில அர சுகளின் அதிகாரங் களைப் பறிக்கும் வகை யில் உள்ளது என்று தமிழக முதல்வர் ஜெய லலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணர்ஜி ஆகியோர் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், வகுப்புக் கலவ ரம் ஏற்பட்டால் அதற்கு பெரும்பான்மை சமுத யத்தினரே பொறுப் பேற்கும் வகையில் உள் ளதாக பாஜக உள் ளிட்ட சில கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து, அந்த அம்சத்தில் திருத்தம் செய்யப்பட்டு அனைத்து தரப்பினரும் பொது வாக கருதப்படுவார்கள் என்று திருத்தப்பட்டுள் ளதாக தெரிகிறது. "வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டால் மாநில அர சுகளின் ஆலோசனை யைப் பெறாமல் மத்திய துணை ராணுவம் சம்பவ இடத்துக்கு செல்ல லாம்' என்று மத்திய அரசுக்கு அதிகாரமளிக் கும் வகையில் மசோதா வில் முன்பு குறிப்பிடப் பட்டிருந்தது. இது தற்போது, "மாநில அர சுகள் கேட்டுக்கொண் டால் தான் மத்திய அரசு பாதுகாப்புப் படை களை அனுப்பும்' என்று மாற்றம் செய்யப்பட் டுள்ளது.

தமிழ் ஓவியா said...


படிக்காத காமராசர் செய்த சமூக புரட்சியை படித்தவர்கள் எவரும் செய்யவில்லை!


காமராசர் பவுண்டேசன் ஆப் இந்தியா 37ஆவது தேசிய மாநாட்டில் தமிழர் தலைவர் உரை

திருச்சி, டிச. 17- காமராசர் பவுண் டேசன் ஆப் இந்தியா என்ற சமூக கலாச்சார அமைப்பு 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட் டது. டாக்டர் நீலலோகித தாஸ் (நாடார்) நிறுவனத் தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பு காமராசரு டைய கொள்கைகளை பரப்பி வருகிறது.

இந்த அமைப்பின் 37 ஆவது தேசிய மாநாடு திருச்சி திரு வரங்கம் எஸ்.என். திருமண மண்டபத்தில் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. நிறைவு நாளான (டிச.15) அன்று திரா விடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற் றினார். இவ்விழாவிற்கு முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் முகமது இஸ்மாயில் தலைமை தாங்கினார். புரவலர் எஸ். நடராசன் முன்னிலைவகித்தார்.

தமிழர் தலைவர் உரை

காமராசர் பவுண்டேசன் ஆப் இந்தியா சார்பில் 37 ஆவது ஆண்டு தேசிய மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டு நடந்து வருகிறது. இவ் விழாவில் என்னை கலந்து கொள்ள வேண்டுமென எனது நீண்டகால நண்பர் நீலலோகி தாஸ் (நாடார்) கேட்டுக் கொண் டார். இவர் நல்ல தொண்டற செம்மலாக விளங்கி வருபவர். சமூக நீதி போர்க்களத்தில் பின்னால் நிற்பவர். அருமை நண்பர். காமராசர் தொண்டை யும், அவரது கொள்கையும் எடுத்துச் சொல்லக் கூடியவர். இவ்விழாவில் நான் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி யடைகின்றேன். தந்தை பெரியார், காமராச ரும் சமூகத்திற்கு தொண்டாற் றியதை நன்கு அறிவீர்கள். தந்தை பெரியார் அவர்கள் யாருக்கும் சொல்லாததை காம ராசரைப் பார்த்து சொன்னார். பச்சைத் தமிழர் காமராசர் என்று. ஒடுக்கப்பட்டவர்களுக் காகவும், தாழ்த்தப்பட்டவர்க ளுக்காகவும் உழைத்தவர் காம ராசர். காமராசர் என்ற கலங் கரை வெளிச்சத்தை பார்த்தால் கண் பார்வையற்றவர்களுக்கும் நன்கு தெரியும். அரசியல் வாதி களுக்கும் வெளிச்சம் வேண்டு மென்றால், காமராசர் தேவை. காமராசரின் சாதனை

படிக்காத காமராசர் இந்த நாட்டுக்கு செய்ய முடிந்ததை, படித்தவர்கள் சாதிக்க முடிய வில்லை! தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய நாட்டிற்கு வழிகாட்டியவர் காமராசர். குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி கொண்டு வந்து பள்ளிக் கூடங்களை மூடினார். மூடிய பள்ளிக் கூடங்களை அனைத் தையும் காமராசர் திறந்த தோடு அல்லாமல் கிராமங்கள் தோறும் பள்ளிச் சாலைகளை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் இரட்சகர்

தமிழ்நாட்டில் மிகப் பெரிய கல்வி புரட்சியை ஏற்படுத்திய காமராசர். பொருளாதார புரட்சியையும் ஏற்படுத்தினார். அதனால் தான் தந்தை பெரி யார் அவர்கள் காமராசரை தமிழ்நாட்டின் இரட்சகர் என்று கூறினார். குப்பன் மகனும், சுப்பன் மகனும் அமெரிக்காவில் கணினி பொறியாளராக பணியாற்று கிறார்கள் என்றால் அதற்கு காமராசர் தான் காரணம். எனவே அவரது கொள்கையை, அவரது தொண்டினையும் அனைவரும் பின்பற்ற வேண் டும். அவர் எந்த தத்துவத்தை சொன்னாரோ, அதை நிறை வேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/72191.html#ixzz2nmrLMJxz

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.- காங்கிரசுடன் கூட்டணி இல்லை தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி

சென்னை, டிச.18- பி.ஜே.பி. மற்றும் காங் கிரசுடன் கூட்டணி கிடையாது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பேட்டி விவரம் வருமாறு:

கலைஞர் அவர்கள் நேற்று (17.12.2013) காலை தமது இல்லத்திலிருந்து அண்ணா அறிவாலயத்திற்குப் புறப்பட்டபோது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

செய்தியாளர்: லோக்பால் மசோதா இன்றையதினம் (17.12.2013) நாடாளுமன் றத்தில் விவாதிக்கப்படுகிறது. அந்த மசோதாவை தி.மு. கழகம் ஆதரிக்குமா? கலைஞர்: நாடாளுமன்ற தி.மு.கழகக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு, இந்த மசோதா விவாதத்திற்கு வருகின்ற நேரத் தில் எப்படி முடிவெடுக்க வேண்டு மென்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அந்த முடிவு எடுத்த பிறகு உங்களுக்கும் தெரியும்.

செய்தியாளர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் இன்று (17.12.2013) அளித்த பேட்டியில், தமிழகத்தில் உங்கள் தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் என்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: மகிழ்ச்சி.

செய்தியாளர்: நேற்றையதினம் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞான தேசிகன் அளித்த பேட்டியின்போது, தி.மு.கழகம் அய்க்கிய முற்போக்குக் கூட் டணியிலே தற்போது இல்லை என்றும் ஏற்கெனவே விலகி விட்டதாகவும், வரு கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க.விற்கு ஆதரவு கேட்டு எந்தவித மான கடிதமும் தான் எழுதவில்லை என்றும் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: அதிலிருந்தே நீங்களே தெரிந்து கொண்டிருக்கலாம். காங்கிரசை விட்டு விலகியதற்கு வேறு காரணம் தேவையில்லை என்று ஞானதேசிகன் அவர்களே சொல்லிவிட்டதற்காக நன்றி.

செய்தியாளர்: தமிழகத்தில் காங் கிரஸ், பா.ஜ.க.வுடன் சேராது, தி.மு.கழகம் தனித்துப் போட்டியிடப் போகிறதா?

கலைஞர்: ஆமாம். ஏற்கெனவே எங் களுடன் உள்ள தோழமைக் கட்சி களுடன் சேர்ந்து போட்டியிடுவோம்.

செய்தியாளர்: பா.ஜ.க. சார்பில் நேற்றைய தினம் பேட்டியளித்த நிர்மலா சீத்தாராமன், தி.மு.கழகம் கூட்டணிக் காக அழைப்பு விடுத்தால் பரிசீலிப்போம் என்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: பா.ஜ.க.வை நாங்கள் அழைப்பது என்று எதுவும் முடிவு செய்யவில்லை.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/72203.html#ixzz2nptN7FRt

தமிழ் ஓவியா said...


சபாஷ், சரியான நடவடிக்கை!


உயர்நீதிமன்ற நுழைவாயிலில் உள்ள அம்மன் கோயிலை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை,டிச.18- உயர் நீதிமன்ற நுழைவாயிலில் உள்ள அம்மன் கோயிலை இடிக்க நீதிபதிகள் உத் தரவிட்டனர்.

சென்னையில் உள்ள சாலையோரக் கோயில் களை இடிக்கக் கோரி யும், உயர்நீதிமன்ற நுழை வாயிலில் சாலையோரம் உள்ள ஒரு மாரியம்மன் கோயிலை இடிக்கக் கோரியும் டிராபிக் ராம சாமி என்பவர் உயர்நீதி மன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய் தார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்து, சாலையோ ரக் கோயில்களை இடிக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அம் மன் கோயிலை இடிக் கும்படி அதன் அறங் காவலர் காந்தா சீனிவா சனுக்கு மாநகராட்சி தாக்கீது அனுப்பியது. இதை ரத்து செய்யக் கோரி காந்தா சீனிவா சன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வரும்போது அவர் குணமடைய இந்த அம்மன் கோயில் கட் டப்பட்டது. அதன்பிறகு அவர் குணமடைந்து சென்னை வந்தார். அவர் நினைவாக இந்தக் கோயில் உள்ளது. இதை இடிக்கக் கூடாது. மாநக ராட்சி அனுப்பிய தாக் கீதை ரத்து செய்யவேண் டும் என்று கூறியிருந் தார்.

இந்த வழக்கை நீதி பதிகள் அக்னிகோத்ரே, சசிதரன் ஆகியோர் விசாரித்து அளித்த தீர்ப்பு வருமாறு:

சாலை யோரம் உள்ள அனைத்துக் கோயில் களை யும் இடிக்க உத் தரவிடப் பட்டுள்ளது. அதன் அடிப் படையில் தான் மனுதார ருக்கு மாநகராட்சி தாக் கீது அனுப்பியுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம். இந்தக் கோயிலை மாநக ராட்சி இடிக்கலாம்.
இந்தக் கோயில் அனு மதியில்லாமல் கட்டப் பட்டுள்ளது என்று தெளிவாகத் தெரிகிறது. உயர்நீதிமன்ற வளாகத் தின் சுற்றுச்சுவரை யொட்டி கோயில் உள் ளது. கோயில், மசூதி, கிறிஸ்தவ கோவில் ஆகியவற்றை தனியார் இடத்தில் வைக்க உரி மையுள்ளது. பொதுமக் களை பாதிக்கும் வகை யில் வைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு தீர்ப்புகளில் கூறியுள் ளது. மதரீதியான கட்ட டங்களை பொது இடத் தில் கட்ட யாருக்கும் உரிமையில்லை. எனவே இந்த வழக்கை தள்ளு படி செய்கிறோம்.
- இவ்வாறு நீதிபதி கள் தீர்ப்பில் கூறியுள் ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72204.html#ixzz2nptlqmPB

தமிழ் ஓவியா said...


மலேசியாவில் தமிழர் தலைவரின் நிகழ்ச்சிகள்கோலாலம்பூர், டிச.18- மலேசியத் திராவிடர் கழகத் தின் சார்பில் 67 ஆம் மூவாண்டு தேசியப் பேராளர் மாநாடு வரும் 21, 22 ஆகிய தேதிகளில், கோலாலம்பூர் கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகிறார். டிசம்பர் 21 இல் தொடங்கும் மாநாட்டை, ம.இ.கா தேசியத் தலைவரும், இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சருமான டத்தோசிறீ ஜி.பழனிவேல் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியின் தொடக்கமாக காலை 9 மணி அமர்வில், தமிழகத்திலிருந்து சிறப்பு வருகை புரியும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார். தொடர்ந்து ம.இ.கா தேசியத் உதவித் தலைவர் டத்தோசிறீ சி.பாலகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

அதேநாளின் பிற்பகல் நிகழ்ச்சிகள் இரவு 7 மணி யளவில் டைனாஸ்டி தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ம.இ.கா. தேசியத் துணைத் தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோ சிறீ டாக்டர் எஸ்.சுப்பிர மணியம் தொடங்கி வைக்கிறார். நிகழ்வில் மலேசிய இந்திய தெற்காசிய நாடு களுக்கான கட்டமைப்புச் சிறப்புத் தூதர் டத்தோசிறீ உத்தாமா ச.சாமிவேலு, மருத முத்து அவர்களின் படத்தைத் திறந்து வைத்து உரை நிகழ்த்துகிறார். மக்கள் ஓசை பத்திரிகையின் நிர்வாக இயக் குநரும், ம.இ.கா. மத்திய செய லவை உறுப்பினருமான சுந்தர் சுப்பிரமணியம் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

இந்த அமர்விலும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கின்றார். தொடர்ந்து மலேசியத் திராவிடர் கழகத்தின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் பெரும்பங்காற்றி, கழகத் தின் கட்டடம் உருவாக, உண்டியல் ஏந்தி நன்கொடை பெற்ற தோழர்களுக்குச் சிறப்பு செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 22 ஞாயிறன்று இரண்டாம் நாள் மாநாடு தொடங்குகிறது. இதில் முக்கியத் தீர்மானங்களும், பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றன. கழகத்தின் மாபெரும் சொத்தான செராஸ், தாமான் செமிலிங் பெர்காசாவில் உள்ள இயக்கக் கட்டடமான விஸ்மா மருதமுத்து கட்டடத்தை மீட்டுச் சாதனைப் புரிந்த மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் பி.எஸ். மணியம் அவர்கள் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். அவருடன் இணைந்து கே.ஆர்.அன்பழகன், பிரகாஷ் உள்ளிட்ட தோழர்களும் பணியாற்றி வருகிறார்கள். இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளையும் மலேசியத் தமிழ்ப் பத்திரிகைகள் நல்ல வண்ணம் செய்திகள் வெளியிட்டு பரப்புரை செய்து வருகின்றன. தொடர்ந்து டிசம்பர் 23 ஆம் நாளன்று பேராக் மாநிலத்தில் நடைபெறும் பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி, மாநிலத் தலைவர் கி.கூத்தரசன் தலைமையில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பங்கேற்றுச் சிறப்புரையாற்றுகிறார். மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் பி.எஸ்.மணியம், கே.ஆர்.அன்பழகன், பிரகாஷ் உள்ளிட்ட தோழர்கள் பலர் இதில் பங்கேற்கின்றனர். டிசம்பர் 24 ஆம் நாளன்று பினாங் மாநிலத்தில் நடைபெறும் பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி, மாநிலத் தலைவர் ச.தா.அண்ணாமலை தலைமையில் நடைபெறு கிறது. இந்நிகழ்ச்சியிலும் தமிழர் தலைவர் அவர்கள் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்கள். இந்நிகழ்வில் பினாங் மாநிலத் துணை முதலமைச்சர் ப.இராமசாமி, டத்தோ புலவேந்திரன், பி.எஸ்.மணியம், கே.ஆர். அன்பழகன், பிரகாஷ் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற் கின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72208.html#ixzz2nptwZ8VG

தமிழ் ஓவியா said...


பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள்


புதுடில்லி, டிச.18- பழங் குடியினர் பட்டியலில் நரிக்குறவர் ஜாதியைச் சேர்க்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மக்கள வையில் செவ்வாய்க் கிழமை தாக்கல் செய்யப் பட்டது. இந்த மசோ தாவை மத்திய பழங்குடி யினர் விவகாரத் துறை அமைச்சர் கிஷோர்சந் திர தேவ் அறிமுகம் செய்தார்.

இந்த சட்டத் திருத்த மசோதாவில், பழங்குடி யினர் பட்டியலில் தமி ழகத்தில் இருந்து நரிக் குறவர் ஜாதியும், சட் டீஸ்கரில் இருந்து தனு ஹர், தனுவார் ஆகிய இரு ஜாதிகளும் சேர்க் கப்பட்டுள்ளன.

இதையடுத்து, முறைப் படி இந்த மசோதா மக்களவையிலும், அதைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு, குடியரசுத் தலை வர் அதற்கு ஒப்புதல் தெரிவிப்பார். அதன் பிறகு, மேற்கண்ட மூன்று ஜாதிகளும் பழங்குடியி னர் பட்டியலில் சேர்க் கப்படுவதற்கான ஆணை மத்திய அரசிதழில் வெளியாகும்.

தற்போது தமிழகத் தில் பழங்குடியினர் பட் டியலில் 36 ஜாதிகளும், சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் பட்டி யலில் 42 ஜாதிகளும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/72207.html#ixzz2npu7bQ8X

தமிழ் ஓவியா said...

வள்ளுவரின் குறள் எனது வாழ்வை வளப்படுத்தியது! ஆசிரியர் தாத்தா பிறந்த நாள் 02.12.2013மாணவப் பருவத்தில் ஆசிரியர் தாத்தா

எனது நான்காம் படிவம் முதல் ஆறாம் படிவம் வரை எனக்கு அரசு உதவித் தொகையில் சம்பளம் போக இரண்டு ரூபாய்கள் மிஞ்சும். ரூபாய் ஆறரை சம்பளம் போக ரூபாய் இரண்டரை மிஞ்சும். (10 ரூபாய் சம்பள ஸ்காலர்ஷிப்) எங்கள் பள்ளியின் கடைநிலை ஊழியர் தோழர் தனபால் அந்த மாத காசோலையை (செக்கினை) உதவித் தொகைக்காக வங்கியில் மாற்றி வருவார்.

அவருக்கும் ஒரு சிறு தொகை தவறாது அதில் கொடுப்பேன் -மனமுவந்து.- அவர் தொடக்கத்தில் மறுத்தாலும்கூட - இந்த உதவித்தொகை எனக்குக் கிடைக்க என்னுடைய ஆசிரியர், தலைமையாசிரியர் பரிந்துரை காரணம் என்றாலும், பலர் போட்டியிட இதனை ஒரேயொரு மாணவருக்குத் தந்ததற்கு ஒரு நிகழ்ச்சி காரணம் என்று சொல்ல வேண்டும்.

ஒரு நாள் (D.E.O) மாவட்டக் கல்வி அதிகாரி சோதனை (இன்ஸ்பெக்ஷன்); அவர் தமிழ் மொழி இனப்பற்றாளர் - திரு. முருகேச முதலியார் என்பது அவரது பெயர். சென்னையிலிருந்து வந்தவர். ஒவ்வொரு வகுப்புகளையும் சுற்றிப் பார்ப்பார்!

சில வகுப்புகளுக்குள்ளும் சென்று ஆசிரியர் பாடம் நடத்துவதைக் கண்காணிக்க சிறிது நேரம் தங்கி மாணவர்களையும், ஆசிரியரையும் கேள்வி கேட்டு வெளியேறும் கடமை வீரர் அவர். எல்லா ஆசிரியரின் வகுப்பறைகளும், துப்புரவாகவும், துடிதுடிப்புடனும், எச்சரிக்கையுடனும் அவரது வருகையை எதிர்நோக்கியிருந்தன.

இரண்டு நாள் தொடர் இன்ஸ்பெக்ஷன். இரண்டாவது நாள் அவர் எங்கள் வகுப்பிற்கு வந்தார்.- உள்ளூர் பிரமுகர் திரு. அழகானந்த முதலியார் கட்டித் தந்த அழகானந்த கூடம்.

அந்த வகுப்பறையில் எங்கள் தமிழாசிரியர் திரு. பழனியாண்டி (முதலியார்) தமிழ் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்.

(டர்பனுடன் இருப்பார் ஆசிரியர்) நுழைந்தார் கல்வி அதிகாரி. அமர்ந்தார் நாற்காலியில். வகுப்பு நடைபெறுவதைத் தொடரச் சொன்னார். முன்பே நடத்திய பாடத்தையே நடத்தினார் எங்கள் ஆசிரியர்; கேள்வி கேட்டாலும் மாணவர்கள் தெளிவாகப் பதில் சொல்ல வாய்ப்பு அதனால் சிறப்பாக ஏற்படுமென்பதால்!

கல்வி அதிகாரி திடீரென்று மாணவர்களாகிய எங்களை நோக்கி திருக்குறளில் எத்தனை குறள்கள் உங்களுக்குத் தெரியும்? தெரிந்த மாணவர்கள் யாரேனும் சொல்லுங்கள் என்றார். ஓர் நிமிடம் அமைதி. தமிழாசிரியரேகூட எதிர்பார்க்காத கேள்விக்கணை அது! ஆசிரியர் எங்களைப் பார்த்தார்; உடனே அச்சமின்றி, துணிவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, சில குறள்பாக்களை மடமடவென்று உரத்த குரலில், மேடையில் பேசுவது போல சொல்லத் தொடங்கினேன்.

அப்போது எனக்கு எந்தத் திருக்குறள் அதிகாரமும் முறையாக 10 தொடர்ந்து தெரியாது என்றாலும், நான் நமது மேடைகளில் பல சொற்பொழிவாளர்கள் கூறுவதைக் கேட்டும் குடியரசு, திராவிட நாடு, விடுதலை போன்ற நமது கொள்கை ஏடுகளில் வரும் கட்டுரையின் மேற்கோள்களைப் படித்து மனத்தில் பதிய வைத்திருந்தவற்றையே ஒப்புவித்தேன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் என்னும் குறள், எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் என்ற குறள்,

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் என்ற குறள்-, இப்படி சில குறள்களைக் கூறினேன்.

மகிழ்ந்தார்; பாராட்டினார்; போதுமென்றார்; என்னைக் காப்பாற்றினார் மாவட்டக் கல்வி அதிகாரி! வகுப்பிலுள்ள மற்ற மாணவர்கள் மவுனமாகிவிட்ட நிலையில், பளிச்சென்று எழுந்து நான் குறள்பாக்களைக் கூறியது பற்றி எங்கள் தமிழாசிரியர் அவர்களுக்கும் மெத்த மகிழ்ச்சி.

மாவட்டக் கல்வி அதிகாரி திரு. முருகேச முதலியார் உடனே உன் பெயர் என்னவென்று கேட்டார். பிறகு சென்றுவிட்டார். அவர் சென்ற நிலையில் அடுத்த நாள் எங்கள் பள்ளி மாணவர் உதவித்தொகை பற்றிய குறிப்புகள் கொண்ட கோப்புகளை அவர் காண நேர்ந்தது;

அவர் முடிவெடுக்க வேண்டிய அதிகாரி என்பதால் -எனது பெயரை அவர் மிக நன்றாக நினைவில் கொண்டதன் பேரிலும், எனக்கே அந்த உதவித்தொகையை (ஸ்காலர்ஷிப்) அளிக்க ஆணை பிறப்பித்தார்.

நான்காம் படிவத்திலிருந்து பள்ளியிறுதி வகுப்பான 6ஆ-வது படிவம் (S.S.L.C. Sixth form) வரை மூன்று ஆண்டுகளும்- அது தொடர்ந்து கிடைத்தது. காரணம், ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்த மாணவன் என்ற கூடுதல் தகுதியும் அதற்குரியவனாக என்னை ஆக்கிற்று. வள்ளுவரின் குறள் எனது வாழ்வை வளப்படுத்தியது; அதற்கு மூல காரணம் திராவிட இயக்கச் சார்பே ஆகும்.

நூல்: அய்யாவின் அடிச்சுவட்டில் (பாகம்-1

தமிழ் ஓவியா said...

முதல் மதிப்பெண்ணுக்கு மோதாதீர்!

- சிகரம்

முதல் மதிப்பெண் மோகம், வேகம், தாகம், கிடைக்காவிடின் சோகம் என்பவை பெற்றோர், நிர்வாகம், மாணவர் என்ற முத்தரப்பிலும் முனைந்து நிற்கும் முதன்மை உணர்வு.

சில நிர்வாகமும், சில பெற்றோரும் இதற்காக மாணவர்களுக்குக் கொடுக்கும் நெருக்கடியும், நிம்மதிச் சிதைப்பும், உளைச்சலும், உதையும், வதையும் ஏராளம்!

100க்கு 97 மதிப்பெண் எடுத்த ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டாள். காரணம், முதல் மதிப்பெண் பெற 1 மதிப்பெண் குறைந்துவிட்டதாம்! எவ்வளவு கொடுமையான முட்டாள்தனம்; மூளைச்சலவை; மூடநம்பிக்கை பாருங்கள்!

ஒரு மதிப்பெண்தான் வாழ்வா? 97 மதிப்பெண் பெற்றது என்ன சாதாரண சாதனையா? சாதாரண உழைப்பா? அதைவிட ஒரு மாணவர் என்ன சாதிக்க வேண்டும்?

இங்கு அவள் ஆயுளைப் பறித்தது எது? அறியாமையா? வறட்டுப் பெருமையா? மானப் பிரச்சனையா? பெற்றோர் கொடுத்த உளைச்சலா? விசாரித்தபோது பெற்றோர் திட்டியதுதான் காரணம் என்று தெரிந்தது. இப்படி ஒரு படிப்பாளிப் பெண்ணைப் பாராட்டுவார்களா? பழிப்பார்களா?

படிக்காத பெற்றோர் யாரும் இப்படிச் செய்வதில்லை; படித்த முட்டாள்கள் படுத்தும் பாடுதான் இது! முதல் மதிப்பெண்ணில்தான் தன் மானமும், மரியாதையும் அடங்கியிருப்பதாக அலையும் அவலம்.

40 மாணவர்களில் முதன்மை வந்தால், நாலு பள்ளிகளில் முதன்மை இல்லை; மாவட்டத்தில் முதன்மை வந்தால் மாநிலத்தில் முதன்மை இல்லை.

மாநிலத்தில் முதன்மை வந்தவர் மேற்படிப்பில் முதன்மை இல்லை! இதுதானே யதார்த்த நிலை? இதற்கா இத்தனைப் போட்டி? பொறாமை?

பகுத்தறிவின்பாற்பட்ட முயற்சி எது என்றால், நாம் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறோம் என்பதைத் திட்டமிட்டு, அதற்கேற்ற தகுதி மதிப்பெண்ணை அடைய உழைப்பதே! சரியான அணுகுமுறை அதுவே!

நமக்குத் தேவையான உணவை உண்பதுதானே உடல்நலம் காக்கும் அறிவுடைய செயல்? அடுத்தவனைவிட ஒரு உருண்டை கூடுதலாகச் சாப்பிட வேண்டும் என்று முனைவது முறையா? அதுதானே மதிப்பெண்ணுக்கும்!

பணிக்குப் போகும்போதும், படிக்கப் போகும்போதும், அவை கிடைக்க என்ன மதிப்பெண் தேவையோ அதைப் பெற திட்டமிட்டு முயலுவது என்ற செயல்திட்டமே சிறந்தது, உகந்தது; சமூக நல்லிணக்கம், மனிதநேயம், நட்பு இவற்றிற்கு ஏற்றது. மற்றபடி போட்டியிட்டு மோதுவது மூடத்தனம் என்பதை பெற்றோர் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் வணிக நோக்கில் தன் பள்ளி முதலிடம் பெறவேண்டும் என்ற சுயநலத்தில், மாணவர்களை வாட்டி வதைப்பது கண்டிக்கத்தக்கது.

ஒரு மாணவனை முதல் மதிப்பெண் வாங்க வைக்க அலைவதைத் தவிர்த்து, 100 மாணவர்களைத் தரமாக உருவாக்க முயற்சிப்பதே உண்மையான கல்விச் சேவை. தன் பிள்ளைக்குத் தேவையான மதிப்பெண் கிடைக்க பிள்ளைக்கு வேண்டிய கடமைகளைச் செய்வதே பெற்றோரின் பொறுப்பு.

தன் எதிர்காலத் திட்டத்திற்கு - இலக்கிற்கு ஏற்ற மதிப்பெண்ணைப் பெறப் பாடுபடுவதே படிப்போர்க்குச் சிறப்பு. அதை விடுத்து முதல் மதிப்பெண்ணுக்காக மோதுவதும், சாவதும் முட்டாள்தனம்; மூடத்தனம்! எனவே, பெற்றோரும், நிர்வாகத்தினரும், மாணவரும் இந்த மூடத்தனத்திலிருந்து முதலில் விலக வேண்டும்.

முயற்சிக்கு ஓர் உந்துதல் வேண்டாமா? சிலர் கேட்பர். முதல் மதிப்பெண்தான் உந்துதலா?

அது போட்டிக்கும் பொறாமைக்குமே வழிவகுக்கும். தனக்குத் தேவையான மதிப்பெண் இவ்வளவு. அதைப் பெறவேண்டும் என்றால் உந்துதல் வராதா?

கல்வி என்பது விளையாட்டுப் போட்டியோ, பந்தயமோ அல்ல. அது அறிவுத் தெளிவு; ஆற்றல் வளர்ப்பு.

ஓட்டப் பந்தயத்தில்தான் முதல், இரண்டு, மூன்று என்பதெல்லாம். படிப்பில் மதிப்பெண்ணில் அல்ல.

விளையாட்டில் போட்டி ஆர்வம் தரும்; கல்வியில் போட்டி உளைச்சல் தரும்.

98% மதிப்பெண் பெற்றிருக்கிறோம் என்று உண்மையில் மகிழ்வதற்குப் பதில், 99% இன்னொருவன் பெற்று முதலிடம் வந்து விட்டானே! என்று ஏங்கிக் கவலைப்படுவது அறிவிற்கு அழகா?

98% பெறும் அளவிற்கு நாம் படிப்பாளி என்று பெருமை கொள்ளமுடியாமல் செய்வது முதல் மதிப்பெண் மோகம் என்றால், அது மூடத்தனம் அல்லவா?

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரின் மரண சாசனம்


எனவே தோழர்களே! நம் முடைய நிலைமை உலகத்திலே பெரிய மானக்கேடான நிலைமை. 2000 வருடமாக இருக்கிற முட்டாள்தனத்தைவிட இந்தச் சட்டத்திலே இருக்கிற, இந்து லாவிலேயும், அரசியல் சட்டத் திலும் அது பெரிய முட்டாள்தனம். முதலிலே இதை மாற்றச் சொல் லாமல், இந்த ஆட்சியிலே குடிமகனாக இருக்கிறோமே, அது மகா மகா முட்டாள்தனம். பொறுக்கித்தின்பவனுக்கு இந்த ஆட்சி வேண்டும். மானத்தோடு பொழைக்கிறவனுக்கு இந்த ஆட்சியை ஒழித்துத்தானே ஆக ணும்? உன்னைப்போல் நான், என்னைப்போல் நீ மாற்றுகிறாயா? இல்லை. மூட்டை கட்டுகிறாயா என்று தானே கேட்க வேண்டும்? இல்லாவிட்டால் வழி? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்போம் என்று என்ன நிச்சயம்? நான் இறந்தால் நாளைக்கே மாறிவிடுவான்.

கலைஞரின் தீர்மானம்!

நமது கலைஞர் கருணாநிதி அவர்கள், கல்லுதான் - யார் வேண்டுமானாலும் பூஜை செய்ய லாம், இப்படி இப்படிச் செய்ய வேண்டும் என்று எல்லோருக் கும் அனுமதி கொடுத்தார். பார்ப்பான் கோர்ட். சுப்ரீம் கோர்ட் என்றால் பார்ப்பான் கோர்ட் என்று பெயர் (சிரிப்பு) சிரிக்காதீர்கள்; அதிலே தமிழ னுக்கு இடமே இல்லை. போனா லும் அவனுடைய அடிமைதான் அங்கு போவான், அவன் சாஸ்திரத்தைப் பார்த்துத்தான் தீர்ப்புச் சொல்வான். இந்த ஜனம் கோயிலுக்குள் போவது தப்பு; அது சாஸ்திர விரோதம். அட முட்டாள்களே! சாஸ்திரம் என்றால் எது? எப்ப எழுதியது? எவன் எழுதினான்! எவனை யாவது சொல்லச் சொல்லு, ஆகமத்தின்படி எழுதினான் என்கிறான். அய்கோர்ட் ஜட்ஜ் பார்ப்பான் ஆதிக்கமுள்ளது. பார்ப்பாத்தியால் நியமிக்கப்பட் டவர்கள் அவர்கள். அவர்கள் அப்படித்தானே எழுதுவார்கள்? எனவே, நமது இழிவு ஒழிந்தாக வேண்டும்; அதுதான் முக்கியம்.

தேங்காது! இப்போது நாம் கஷ்டப்பட் டால், பிறகு வட்டியும் முதலுமாய் உயரலாம். நமது நாட்டு முன் னேற்றம் ஒன்றும் தேங்கிப் போய்விடாது. எனவே இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்து கேட்ட உங்களுக்கு எனது நன் றியைத் தெரிவித்து, எனது உரையை முடித்துக்கொள்கிறேன்.

சென்னை தியாகராயர் நகரில் தந்தை பெரியார் தம் வாழ்வின் இறுதி உரையாக (19.12.1973) - மரண சாசனமாக ஆற்றிய உரையின் முடிவுப் பகுதி இது.

Read more: http://viduthalai.in/e-paper/72294.html#ixzz2nuzwBRnl

தமிழ் ஓவியா said...


ஆருத்ரா


மாயேந்திரன்: (வேலைக்காரன் வெள் ளையைப் பார்த்து) கடை வீதியிலே யாருட்டயோ சொன்னியாமே - எங்க எஜமான் ஊருக்கு நல் லது தான் செய்றாரு. ஆனா கோயிலில் இருக் கிறதெல்லாம் கல்லுன்னு சொல்றாருன்னு சொன்னி யாமே! அப்படியா சொன்னே.. கோயில்லே கல் இல்லாம வேற என்னடா இருக்கு?

வெள்ளை: சாமிதா னுங்க எஜமான் இருக்கு.

மாயே: சாமியா? இங்கே வாடா! (வருகி றான் பக்கத்தில்) ஒரு காலைத் தூக்கடா.. கையை இப்படி வைடா (நடராஜர் சிதம்பரத்திலி ருப்பது போல் நிற்கச் செய்கிறார்;

நிற்கிறான் வெள்ளை); பத்திரிகை படித்துக் கொண்டிருக் கிறார் மாயேந்திரன், வெள்ளை காலை ஊன்று கிறான். டேய் தூக்குடா காலை, நில்லுடா என்கி றார் எஜமான் மாயேந் திரன் (மறுபடியும் தூக்கி சிறிது நேரம் நின்று விட்டு காலை ஊன்று கிறான்). டேய், ஏண்டா ஊண்டுன... தூக்குடா காலை - என்கிறார் எஜமான்.
வெள்ளை: கால் வலிக்குதுங்க எஜமான்.

மாயே: ஏண்டா ரெண்டு நிமிஷம் நிக்கிற துக்கே கால் வலிக்கு துன்னு சொல்றீயே - அப்ப தூக்கின காலை இன்னும் கீழே ஊன்றாம இருக்குதேடா...

வெள்ளை: எங்கே எஜமான்!
மாயே: சிதம்பரத்திலே

வெள்ளை: அது கல்லு எஜமான்.

மாயே: என்ன அது கல்லா? ஏண்டா கல் லுன்னா சொன்ன? கல்லை கல்லுன்னு நீ சொன்னா என்ன - நான் சொன்னா என்ன? நான் சொன்னா எங்க எஜமான் கல்லுன்னுசொல்றாருன்னு எல்லார் கிட்டேயும் போய் சொல்ற....

வெள்ளை: இனிமே சொல்ல மாட்டேனுங்க எஜமான். மேலே கண்ட உரை யாடல் சாட்சாத் அறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்ட சந்திரோத யம் நாடகத்தின் ஒரு காட்சி.

கல்லுன்னு பக்தன் வாயாலேயே சொல்ல வைத்திருக்கிறார் அறிஞர் அண்ணா.. இந்த உண்மையை மறுக்க முடியுமா?

சிதம்பரத்திலே ஆருத்ரா தரிசனம் பற்றி தடபுடலாக விளம்பரங் கள் செய்யப்படும் இந்தக் கால கட்டத்தில் இந்தச் சிந்தனைப் பொறி பெரி யார் திடலிலிருந்து கிளம் புகிறது பக்தர்களே சிந் திப்பீர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72278.html#ixzz2nv04b4zJ

தமிழ் ஓவியா said...


நமது இனமானப் பேராசிரியர் வாழ்க! வாழ்கவே!! கழகத் தலைவர் வாழ்த்து!

நமது இனமானப் பேராசிரியர் அவர்களுக்கு 92 ஆவது பிறந்த நாள் விழா இன்று!

இது நமக்கெல்லாம் இனமானத் திருவிழா - பெருவிழா.

நமது இனமானப் பேராசிரியர் அவர்கள் தி.மு.க.வின் பொதுச் செயலாளர்; அது மட்டுமல்ல நமது இனத்தின் தன்மானப் பெருங் குரல், உரிமைக் குரல்!

மனதிற்பட்டதை ஒளிவு மறைவின்றிப் பேசிடும் உண்மையின் உலா அவர்!

கொள்கை, லட்சியங்களையே முன்னிறுத்தி பதவி, பொறுப்புகளை பின்னிறுத்தும் லட்சியத்தின் ஒளி காட்டும் கலங்கரை விளக்கம். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அவருக்கு பேரா சிரியராக உயர்ந்திட உதவியது.

அய்யாவும், அண்ணாவும் அவரை இனமானப் பேரா சிரியராக செதுக்கியவர்கள்.
92 வயது இளைஞர்!

உடல் நலம் சீராகி, சிறு கால ஓய்வுக்குப் பின் அவர்தம் இனமானப் பணி இன்றுமுதல் புத்தாக்கத்துடன், புத்தெழுச்சியுடன் புறப்படுகிறது.
92 வயது இளைஞர் அவர் - உணர்வால்!

அவர் பிறந்த இந்நாள் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி நாள் என்றே கொள்ள வேண் டும். தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் நமக்கெல்லாம் இனமானம் போதித்த ஆசான், தன் இறுதி முழக் கத்தை முடித்துக் கொண்ட இந்நாள் (19 டிசம்பர்) பேராசிரியரின் பிறந்த நாள்!

திராவிடர் இயக்கத்தின் முழக்கம் தொய்வடையாது தொடரும் என்பதற்கான சரித்திரச் சான்று என்றும் கொள்ளலாம்!

தாய்க் கழகம் வாழ்த்துகிறது

நல்ல உடல்நலத்துடன் நமது இனமானப் பேரா சிரியரின் நூற்றாண்டு விழாவை மானமிகு கலைஞரும், தி.மு.க.வும், தாய்க் கழகமாம் திராவிடர் கழகமும் அவரை வைத்தே கொண்டாடுவோம் என்ற நம்பிக்கையோடு, நல்லெண்ண வாழ்த்தைக் கூறு கிறோம்!

மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் இது நியாயமான ஆசையே தவிர, பேராசை அல்ல.

இனமானப் பேராசிரியர் வாழ்க,

அவர் பணி தொடர்க வெல்க!

கி.விரமணி
தலைவர்,திராவிடர்கழகம்

முகாம் சிங்கப்பூர்

19 டிசம்பர் 2013

Read more: http://viduthalai.in/e-paper/72293.html#ixzz2nv0CUBv1

தமிழ் ஓவியா said...

பக்தர்கள் பலி
கொழிஞ்சாம்பாறை, டிச.19- கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கடவளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணீஸ் (வயது 28), ராஜன் (49), சுதாகர் (35), முகேஷ் (29), உண்ணி (35), சுஜா (30) ஆகிய 6 பேர் கடவளூரில் உள்ள சிவன் கோவிலில் நடைபெற்ற திருவா திரை விழாவுக்கு நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு புறப்பட்டனர். கோவில் அருகே வந்த போது பக் தர்கள் கூட்டத்தில் அவர்கள் கலந் தனர்.

அந்த நேரத்தில் திருச்சூரில் இருந்து கோழிக்கோட்டுக்கு டேங்கர் லாரி வந்தது. எதிரே கோழிக் கோட்டில் இருந்து திருச்சூருக்கு லாரி ஒன்று வந்தது. கோவில் அருகே 2 லாரியும் வந்தபோது எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதின.

கட்டுப்பாட்டை இழந்த லாரி பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மணீஸ், ராஜன், சுதாகர், முகேஷ், உண்ணி, சுஜா ஆகியோர் மீது லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் உண்ணி, சுஜாவை தவிர மற்றவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். உண்ணியும், சுஜாவும் படுகாயம டைந்து உயிருக்கு போராடினர். இதை பார்த்த மற்ற பக்தர்கள் அதிர்ச்சி யடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இது குறித்து தகவல் கிடைத்ததும் திருச்சூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

உயிருக்கு போராடிய உண்ணி யையும், சுஜாவையும் மீட்டு கடவ ளூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். இறந்த 4 பேரின் உடல்களையும் பிரேத பரி சோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவிலில் பூட்டை உடைத்து ரூ.24 ஆயிரம் கொள்ளை

சேலம், டிச 19- சேலம் அருகில் உள்ளது உடையாப்பட்டி. இங் குள்ள செல்வநகரில் ராஜகணபதி திருக்கோவில் உள்ளது. இந்த கோவி லுக்கு உடையாப்பட்டி மற்றும் அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்து சாமியை வணங்கி செல்வார்கள்.

இந்த கோவில் பூசாரி நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை கோவிலுக்கு அய்யப்ப பக்தர்கள் சிலர் வந்தனர். அப்பேது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி கோவில் பூசா ரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே கோவிலுக்கு வந்து பார்த்தார்.

கோவிலில் பொருட்கள் ஏதும் திருட்டு போகவில்லை. ஆனால் கோவிலில் இருந்த பீரோவை காணவில்லை. இந்த பீரோவை திருடர்கள் எங்கு தூக்கி சென்றனர் என அக்கம் பக்கம் அனைவரும் தேடினர்.

அப்பேது இந்த பீரோ கோவில் அருகில் உள்ள ரயில் தண்டவாளம் பகுதியில் கிடந்தது. இதன் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரொக்கம் ரூ.24ஆயிரத்தை திருடர்கள் திருடிச் சென்று இருந்தனர். பின்னர் பொது மக்கள் இந்த பீரோவை கோவிலுக்கு தூக்கி வந்தனர். கோவிலில் வேறு ஏதும் பொருட்கள் திருடு போக வில்லை. இந்த துணிகர திருட்டு குறித்து கோவில் பூசாரி பகவதி வீரா ணம் காவல்துறையில் புகார் செய் தார். இதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-2/72267.html#ixzz2nv0chIYj

தமிழ் ஓவியா said...


அவசியம்


மூடநம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம். - (விடுதலை, 12.10.1967)

Read more: http://viduthalai.in/page-2/72262.html#ixzz2nv0lXBay

தமிழ் ஓவியா said...


வகுப்புரிமைப் போராட்டம்

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு க. அன்பழகன் அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள்.

மாணவர் பருவந்தொட்டு அவருடைய வாழ்க்கைச் சூழல் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைப் பக்கம் ஈர்த்தது.

தந்தை பெரியார் அவர்களின் மெய்க் காவலர் என்று கணிக்கப்பட்ட மாயவரம் சி. நடராசன் அவர்கள் நெருங்கிய உறவினர் என்பது மட்டுமல்ல; அவரது தந்தையார் அவர்களே நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்தின்பால் தீவிரப் பற்றுதலும் செயல்பாடும் கொண்டவர்.

இந்தப் பின்னணி அவருக்குப் பலமாகவே இருந்து வந்திருக்கிறது. இன்று வரையிலும் அவருடைய ஒவ்வொரு சொற்பொழிவிலும் திராவிடர் இயக்கத்தின் பாய்ச்சலும், சுயமரியாதை இயக்கத்தின் சூடும் அப்படியே கண கண என்று தணியாமல் கொழுந்துவிட்டு நிற்பதைக் காண முடியும். புதிய தலைமுறையினருக்கு வகுப்புக்கான நற்பாடங்களாக அவை திகழும்.

அவரால் எழுதப்பட்ட ஒவ்வொரு நூலும் ஆழமான கருத்துடையவை. அரிய தகவல்களின் கருவூலங்கள் ஆகும்.

குறிப்பாக அவரின் வகுப்புரிமைப் போராட்டம் (கம்யூனல் ஜி.ஓ.) எனும் நூல் 1951இல் முதல் பதிப்பாக வெளி வந்தது. அதன் இரண்டாம் பதிப்பை திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது (2013)

இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழ்நாடு சமூக நீதியில் நிகரின்றிப் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் திராவிடர் இயக்கத்தின் தனிப் பெரும் சாதனையே! இந்தியாவில் கூட சமூக நீதிக்குப் பெரும் அளவு ஈர்ப்பு இன்று ஏற்பட்டுள்ளது என்றால் அதற்குக் காரணம் திராவிடர் இயக்கத்தின் வீச்சே!

இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாக திருத்தப்பட்டதற்குக் காரணம் என்று வருகின்ற போது தந்தை பெரியார் முதல் வரிசையில் கம்பீரமாக நிற்கிறார்.

அதேபோல வகுப்புரிமை ஆணை முதன் முதலாக பிறப்பிக்கப்பட்டதும் நீதிக்கட்சி ஆதரவு பெற்ற சென்னை மாநில ஆட்சியில்தான் (1927) இன்றைக்கு சென்னை பல்கலைக் கழகத்தில் படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் 89 விழுக்காடு என்று அப்பல்கலைக் கழகத் துணை வேந்தராகயிருந்த முனைவர் திருவாசகம் கூறி னார். (சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நீதிக்கட்சி 95ஆம் ஆண்டு விழாவில் - நாள் 20.11.2010).

மேலும் அவ்விழாவில் அவர் தெரிவித்த புள்ளி விவரங்கள் இன்று சென்னைப் பல்கலைக் கழகத்தில் பார்ப்பனர் அல்லாதார் நிலவரம் பற்றிய தகவல் இதோ:
செனட் - 90 விழுக்காடு

ஆசிரியர் - 92 விழுக்காடு
ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் - 91 விழுக்காடு
80 துறைகளுக்கான பணியாளர்கள் (3380) - 95%
கல்லூரி மாணவர்கள் - 1,45,450 (89%)

திராவிடர் இயக்கத்தைப் பற்றி வாய்ப்புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று பேசும் அரை வேக்காடுகள் இந்தப் புள்ளி விவரங்களைக் கண்ணுற வேண்டும் - கருத்தூன்ற வேண்டும்.

பேராசிரியர் அவர்களின் வகுப்புரிமைப் போராட்டம் நூலில் அந்தக் காலக் கட்டத்தில் புள்ளி விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றோடு இதனை ஒப்பிட்டுப் பார்க்கட்டும்.

இந்த வளர்ச்சியின் பின்புலத்தை, வரலாற்றை பார்ப்பனர் அல்லாதார் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்று பிறந்த நாள் விழா காணும் பெருமகனார் இனமானப் பேராசிரியர் க. அன்பழகனார் அவர்களின் வகுப்புரிமை போராட்டம் (கம்யூனல் ஜி.ஓ.) என்னும் நூலை, இளைஞர் உலகினரின் சிந்தனைக்குக் காணிக்கையாக்குகிறோம்.

மற்றவர்களைவிட திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் படிப்பார்களாக!

இந்த உணர்வு வளர்ந்தால் அதுவே இனமானப் பேராசிரியர் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு அளிக்கப்படும் மகத்தான பரிசாக இருக்கும்; வாழ்க பேராசிரியர்! வளர்க அவர்தம் எதிர்பார்ப்புகள்!

Read more: http://viduthalai.in/page-2/72264.html#ixzz2nv0tHyVy

தமிழ் ஓவியா said...


இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு இதுவரை உறுதியான நடவடிக்கை எடுத்திடவில்லை


கவிஞர் கனிமொழி குற்றச்சாட்டு

புதுடில்லி, டிச.19- இலங்கைச் சிறையில் வாடி வரும் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களை மீட்டுவர, உறுதியான நடவடிக்கை எதையும் மத்திய அரசு இதுவரை எடுத்திடவில்லை என மாநிலங் களவை தி.மு.க. உறுப்பினர் கவிஞர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

பாதிக்கப்படும் இந்தியர்களைக் காத்திட வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் நேற்று (18.12.2013) பேசிய கவிஞர் கனிமொழி, அமெரிக்காவில் இந்திய பெண் அய்.எஃஎஸ் அதிகாரி தேவயானி கைவிலங்கிடப் பட்டு அவமரியாதை செய்யப்பட்டதை குறிப் பிட்டதோடு ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் என்பதாலேயே அவருக்கு இந்த அநீதி இழைக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அமெரிக்கா தனது செயலை நியாயப்படுத்தி யிருப்பதற்கும் கண்டனம் தெரிவித்தார்.

பெண் அதிகாரி அவமானப்படுத்தப்பட்ட விவகாரம், நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதையும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு பல எதிர் நடவடிக்கைகளை எடுத்திருப் பதையும் கவிஞர் கனிமொழி சுட்டிக் காட்டினார்.
இந்திய அரசியல் தலைவர்கள் பலர் அமெரிக்காவில் இதுபோன்ற அத்துமீறல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதையும் அவர் நினைவூட்டினார். இதேபோல், இலங்கைக் கடற்படையால் சிறை பிடித்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள், அந்நாட்டு சிறையில் வாடி வருவது தெரிந்தும், அவர்களை மீட்க மத்திய அரசு இது வரை உறுதியான நட வடிக்கை எடுக்க வில்லை யே ஏன்? என்றும் கவிஞர் கனிமொழி கேள்வி எழுப் பினார்.
பாதிக்கப்படும் இந்தியர் களைக் காத்திட வெளி யுறவுக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது அவசியம் என்றும் கவிஞர் கனிமொழி வலியுறுத்தினார்.
இலங்கையில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் சிறையில் வாடி வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகார மட்டத்தில் பேச்சு வார்த்தையும் நடத்த வில்லை. யாருமே இதனை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை, என்றும் குறிப்பிட்டார்.
நமது உரிமைகளுக்காக நாம் போராடவும் இல்லை. இதில் தீர்வு காண்பதற்கு பதிலாக இந்திய அரசு பணிந்து போய் கொண்டிருக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
வெளிநாடுகளில் இந்தியர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியர்களை பாதுகாக்கும் வகையில் வெளி நாட்டுக் கொள்கைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது என்று கவிஞர் கனிமொழி குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-3/72313.html#ixzz2nv1AmIy4