Search This Blog

9.12.13

பெரியார் அவர்கள் இறுதியாக நடத்திய மாநாட்டில்...

இதே நாளில் - 40 ஆண்டுகளுக்கு முன்! 

இதே டிசம்பர் 8,9 ஆகிய நாட்களில்தான் 1973ஆம் ஆண்டு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டைக் கூட்டி தமிழர்களின்மீது சுமத்தப்பட்ட இன இழிவை எதிர்த்துப் போர் முரசம் கொட்டினார் தந்தை பெரியார்.

தம் வாழ் நாளில் தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக நடத்திய  மாநாடு அது என்று அப்பொழுது  தெரியாது.  அது வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாடாகவும் அமைந்து விட்டது. அம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானவை - தொலைநோக்குக் கொண்டவை.

"நமது ஆட்சி, கடவுள் மத நம்பிக்கைகள் சம்பந்தமற்ற, மதச் சார்பற்ற (ளுநஉரடயச ளுவயவந) ஆட்சி என்று பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது என்ற போதிலும், மக்கள் எல்லோரும் மதப்படியும், ஜாதிப்படியும் பிரிக்கப்பட்டுள்ளதை உறுதிப் படுத்தும் வகையில் முஸ்லீம், கிறித்துவர், பார்சி, யூதர் தவிர்த்த மற்றவர்கள்  யாவரும் - பவுத்தர்கள், சமணர்கள் சீக்கியர்கள், பகுத்தறிவாளர்கள், நாஸ்திகர்கள் உள்பட இந்து மதத்தவர்கள் என்று ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட இந்துக்களில் இரண்டு ஜாதி உண்டென்றும் அவர்களுள் ஒன்று பார்ப்பனர் (பிராமணர்) மற்றொன்று பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லா மக்களும் சூத்திரர்கள் ஆவார்கள் என்றும் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள் மற்றும் சூத்திரன் என்றால் நாலாவது ஜாதியாவான் என்ப தோடு, அவன் பார்ப்பானுடைய (பிராமணனுடைய) தாசி மகனாவான் என்று இந்துலா என்னும் சட்டத்திலேயே விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 372ஆவது விதி இந்துலாவை அங்கீகரிப்பதோடு, மதச் சுதந்திர உரிமை என்னும் பேரால் அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 25,26ஆவது ஷரத்துக்களைக்காட்டி, உச்சநீதிமன்றம் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக முடியாது என்னும் மத விஷயங்களில் அரசு தலையிட்டு, சாதி ஒழிப்புப் போன்ற சீர்திருத்தங்களைச் செய்ய இயலாது என்றும் திட்டவட்டமாக அண்மையில் ஒரு தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருப்பது - பார்ப்பனரல்லாத சூத்திர மக்களாகிய நம் மக்களின் இழிவினை என்றும் நிலை நிறுத்தும் தன்மையில் இருப்பதால், அதனை மாற்றி, நம்மை மனிதர்கள், சமத்துவம் வாய்ந்த மனிதர்கள் என்பதைச் சட்டம் அங்கீகரிக்க வேண்டும் என்பதால் கீழ்க்காணும் வகையில் அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்று அரசியல் காரணங்களன்றி, சமுதாயக் கண்ணோட்டத்தோடு தமிழ் சமுதாயத்தின் சார்பாக மத்திய அரசாங்கத்தை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. 26ஆவது அரசியல் சட்ட ஷரத்துக்கள் நீக்கப்பட வேண்டும். சாதி ஒழிப்புக்கு வழி வகை செய்யவும், மதச் சார்பின்மையை உண்மையாக்கும் வகையிலும், அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.

சோஷலிசத்தைக் குறிக்கோளாகக் கொண்ட ஆட்சி என்று சொல்லிக் கொள்ளும்படியான ஆட்சியான படியால், மதச் சுதந்திரம் என்ற பெயரால் மனித சமத் துவம், சுதந்திரம்பறி போகக் கூடாது என்று இம்மாநாடு உறுதியான கருத்துக் கொண்டு இருக்கிறது" - என்று தன்னிலை விளக்கம் கொண்ட தீர்மானம் இன்றைக்கு 40 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டது.
இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு சொல்லும் மிக ஆழமான பொருளையும், தேவையையும் கொண்டதாகும்.

1973-க்குப் பிறகு தொடர்ந்த இந்த அம்சங்களை திராவிடர் கழகம் பிரச்சாரத்தின் வாயிலாகவும், மாநாடுகளின் வாயிலாகவும், போராட்டங்கள் வாயிலாகவும் மக்கள் மத்தியில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் வலியுறுத்திய வண்ணமாகவே உள்ளது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக் கான சட்டத்தை தமிழ்நாடு அரசு (திமுக ஆட்சி) நிறை வேற்றிய நிலையிலும்கூட உச்சநீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டு வருவது - தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணம் முக்கியமானதாகும்.

சுதந்திரம் என்றால் அதன் பொருள் என்ன? நாட்டு மக்கள் மத்தியில் பிறப்பின் அடிப்படையிலான பேதத்தை  சட்ட ரீதியாக நீக்காவிட்டால் சுதந்திரம் என்பதற்குப் பொருள் இருக்க முடியுமா?

சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரமும் இருக்குமா? இந்தக் கேள்விக்கு நாணயமான முறையில் இந்திய அறிவாளி கள் அரசியல்வாதிகள், ஊடகத்துக்காரர்கள், அரசிய லுக்கு அப்பாற்பட்டவர்கள்தான் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம். தத்துவக் கர்த்தாவான தந்தை பெரி யாரையும் அவர்களால் உண்டாக்கப்பட்ட திராவிடர் கழகத்தைத் தவிர வேறு யாராவது இந்த அடிப்படை மனித உரிமைப் பிரச்சினைபற்றி சிந்திப்பதுண்டா? கருத்துத் தெரிவிப்பதுண்டா?

தழிழ்நாட்டு மக்களை மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள 120 கோடி மக்கள் முன்பும் இந்நாளில் திராவிடர் கழகம் இந்த வினாவை முன் வைக்கிறது.
கழகத் தோழர்களே! நாம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இலட்சியத்தின் தொண்டர்களாக, தூதர்களாக இருக்கிறோம் என்று ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள் - நம் மார்பு விம்மும், தோள்களும் - பூரிக்கும்! தொடரும் நம் பணி! வாழ்க பெரியார்!!
               ----------------------"விடுதலை” தலையங்கம் 9-12-2013

27 comments:

தமிழ் ஓவியா said...


சடங்கு என்ற பெயரால் மனித குலத்துக்கு இழைக்கப்படும் அநீதி

பார்ப்பனர்கள் உணவருந்திய எச்சில் இலைகள்மீது மற்ற ஜாதியினர் உருளும் அவலம்!

சடங்கு என்ற பெயரால் மனித குலத்துக்கு இழைக்கப்படும் அநீதி

கர்நாடகாவில் மடாதிபதிகள், பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் கடும் கண்டனம்

மங்களூரு, டிச. 9- பார்ப்பனர்கள் உணவருந்திய எச்சில் இலைகள்மீது மற்ற ஜாதியினர் உருளும் அவலம் சடங்கு என்ற பெயரால் மனித குலத்துக்கு இழைக் கப்படும் அநீதி என கர்நாடகாவில் மடாதிபதிகள், பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரி வித்து பட்டினிப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

பார்ப்பனர்கள் உணவருந்திய எச்சில் இலைகள் மீது மற்ற ஜாதியினர் உருளும் சடங்கு கர்நாடகாவின் பெருமைக்கு இழுக்கா கும் என்பதுடன் மனித குலத்துக்கு இழைக்கப் படும் அநீதியும், இந்திய பண்பாட்டின் மீது சுமத் தப்படும் களங்கமு மாகும் என்று தார் வாட் ரேவன சித்தேஸ்வர மடாதிபதி சிறீ பசவ ராஜா தேவாரு கூறினார். மங்களூர் அருகே உள்ள குக்கே சுப்ரமணியா கோவிலில் நடைபெற்று வரும் இந்த மூடநம்பிக்கை சடங்கினை எதிர்த்து நடைபெற்ற ஒருநாள் பட்டினி போராட்டத் தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.

கர்நாடகா ராஜ்ய இந்து லிடா வர்க்கலா ஜகுருடா வேதிக் பிற்படுத்தப்பட் டோர் நல அமைப்பு சனிக் கிழமையன்று மங்களூர் துணை ஆணையாளர் அலு வலகம் எதிரில் மடேஸ் நானாவை எதிர்த்து சனிக் கிழமை யன்று ஒருநாள் பட்டி னிப் போராட்டம் நடத் தியது. எச்சில் இலைகள் மீது உருளுவதால் யாரும் குணம் அடை வதில்லை. பார்ப்பனர் களின் அகந்தையின் அடையாளமாக இது இன்றும் நீடிக்கிறது. எச்சில் இலை மீது உருளும் மக்கள் அப் பாவிகள் என்றும் நம் பிக்கையின் பெயரால் அவர்கள் நசுக்கப்படு கிறார்கள் என்றும் உதவி யற்றவர்கள் ஆக ஆக்கப் படுகிறார்கள் என்றும் தேவாரு குறிப்பிட்டார். மாநில முதல்வர் உடன டியாக இதில் தலை யிட்டு இது போன்ற மனித விரோத செயல் களை நிறுத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண் டும் என்றும் அவர் சொன்னார்.

இந்த மூடநம் பிக்கைப் பழக்கம் பல ஆண்டுகளாக நீடிக் கிறது. கடந்த நான்காண் டுகளாக தங்களது அமைப்பு இதை எதிர்த்து வருகிறது. இதற்காக தன்மீது தாக்குதல் நடத் தப்பட்டது இது இந்திய சமுதாயத்துக்கு விடுக்கப் படும் சவால் . இந்த பழக்கம் நிறுத்தப்படும் வரை தங்களுடைய எதிர்ப்பு தொடரும் என் றும் பிற்படுத்தப்பட் டோர் அமைப்பின் மாநில தலைவர் சிவ ராமு கூறினார். மைசூர் பேட்டாடபுரா மடாதி பதி சிறீரச்சோட்டி சிவாச் சார்ய சுவாமிஜியும் இந்த மடேஸ்நானா நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அமைச்சர் எதிர்ப்பு

தெற்கு கன்னடாவில் உள்ள குக்கே சுப்ர மணியா கோவிலில் நடைபெற்று வரும் மடேஸ்நானா போன்ற குருட்டுத்தனமான மூட நம்பிக்கைப் பழக்கங் களை மக்கள் ஆதரிக் கக்கூடாது என்று கர் நாடகா சமூக நலத்துறை அமைச்சர் எச்.ஆஞ்ச நேயா செய்தியாளர்களி டம் கூறினார். இது ஒரு மனித விரோத முட்டாள் தனமான நடைமுறை என்றும் அவர் கூறினார். இதில் கலந்து கொண் டவர்களை முட்டாள் கள் அல்லது அறி வாளிகள் என்று தன் னால் கூற இயலவில்லை என்றும் அவர் சொன் னார். எச்சில் இலைகள் மீது உருளுவதால், அவர் களின் தோல் மேலும் பாதிக்கப்படுமே தவிர அவர்கள் நம்புவது போல் தோல் வியாதிகள் குணம் அடைவதில்லை என்றும் அவர் கூறினார்.

இது போன்ற மூட நம்பிக்கைகளை சட்டங்களால் அகற்ற முடியாது என்றும் அவர் கூறினார். பல்வேறு மடாதிபதிகளும், மதத் தலைவர்களும் இது வொரு மனிதாபிமான மற்ற நடைமுறை என்று அறிவித்த பின்பும் மக்கள் இதில் ஈடுபடுவது வருந்தத்தக்கது என்றும் அவர் சொன்னார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மடேஸ்நானாவை எதிர்த்து இயக்கம் நடத் திய சிவராமுவை மத வெறி அமைப்புகள் கடு மையாக தாக்கின. இத னால் கடந்த இரண் டாண்டுகளாக பலத்த பாதுகாப்புடன் மடேஸ்நானா நடத்தப் பட்டு வருகிறது. இவ் வாண்டு கோவில் வளா கத்தில் நூற்றுக்கு மேற் பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்! கோயில் உண்டியல்கள் கொள்ளை


திட்டக்குடி,டிச.9- ராமநத்தம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற வர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவரு கின்றனர்.

ராமநத்தத்தை அடுத்துள்ள எழுத்தூர் கிராம எல்லையில் நல்லதங்காள் கோவில் உள்ளது. சம்பவத்தன்று மாலை இந்த கோவில் பூசாரி ராஜா வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கோவி லின் முன்பக்க கதவுகளை உடைத்து அங்கிருந்த உண்டியலோடு பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுபற்றி தகவல் அறிந்துதம் ராமநத்தம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், யாரோ சிலர் முன்புற இரும்பு கேட் மீது ஏறி உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு 2 உண்டியல்களை தூக்கி அருகில் சோளக்காட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். அந்த இடத்தில் உண்டியல்களை உடைத்துப் போட்டுவிட்டு பணத்துடன் ஓடியது தெரியவந்தது.

இதுகுறித்து ராமநத்தம் காவல் நிலையத்தில் பூசாரி ராஜா புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் விஜி வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்றவர்களை தேடி வரு கின்றார்.

தமிழ் ஓவியா said...


சிதம்பரம் நடராசர் கோயில் - வழக்கு அப்பீல் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்னோட்டமா?


தினமலர் நாளேடு இன்று தந்துள்ளதை அப்படியே தருகிறோம்

புதுடில்லி, டிச.9- சிதம்பரம் கோவில் நிர்வாகத்தில் யாருக்கு உரிமை உள்ளது என்ற வழக்கில், உச்சநீதிமன்றத்தில் நடந்த விவாதங்கள் முடிந்து, தீர்ப்பு அடுத்த மாதம் வெளிவரலாம் என, எதிர் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடந்த விவா தங்கள் குறித்த சுவாரசிய தகவல் கள் வெளிவந்துள்ளன.

உச்சநீதிமன்றத்தில், சிதம்பரம் கோவில் நிர்வாக உரிமை தொடர் பான வழக்கு விசாரணை, கடந்த நவ., 26ம் தேதி துவங்கி, கடந்த 5ஆம் தேதி முடிவடைந்தது.

அப்போது நடந்த விவாதங் களின் சாராம்சம்: சுப்ரமணியம் சுவாமி, தன் வாதத்தின் போது, "தீட்சிதர்கள், தனி சமயப் பிரிவை சேர்ந்தோர். அது, 1954ல், தமிழக அரசுக்கும், தீட்சிதர்களுக்கும் நடந்த வழக்கில் உறுதி செய்யப்பட்டது. ஆனால், தனி நீதிபதி பானுமதி, தீட்சிதர்கள் தனி சமயப் பிரிவைச் சேர்ந்தோர்தானா என்பதை மீண் டும் சோதித்துப் பார்க்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்,'' என, தெரிவித்தார்.

விவாதம்

அப்போது நீதிபதிகள் குறுக் கிட்டு, "பெஞ்சினால் அளிக்கப்பட்ட தீர்ப்பை, ஒரு தனி நீதிபதி இவ்வாறு மறுபரிசீலனை செய்வது, நீதிசார் ஒழுங்கீனம்' என, கடுமையாக குறிப் பிட்டனர்.

அரசு தரப்பு வழக்கறிஞர் தன் வாதத்தில், தீட்சிதர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள். அவர்கள் கோவிலை நிறுவவில்லை. அதனால் கோவிலை நிர்வாகம் செய்யும் உரிமை, அவர்களுக்கு கிடையாது' என, வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதி பதிகள், "தீட்சிதர்கள் எப்போது சிதம்பரம் வந்தனர்? 2,000 ஆண்டு களாக ஒரு கோவிலில் நிர்வாகம் செய்பவர்களை நீங்கள் எப்படி வெளி யேற்ற முடியும்? அப்படி வெளியேற்றி னால், அது அந்த சிறிய சமூகத் தையே அழித்து விடும்' என்றனர்.

பின் பேசிய அரசு தரப்பு வழக் கறிஞர், "தீட்சிதர்களை நாங்கள் வெளியேற்றவில்லை. அவர்களுடன் சேர்ந்து நிர்வகிக்கும் வகையில் தான், இந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், 19 ஷரத்துகள் உள்ளன. அவை தீட்சிதர்கள், செயல் அலுவலருக்கான அதிகாரங்களை விளக்குகின்றன' என, கூறி, ஷரத்துகளை படிக்க துவங்கினார்.

தமிழ் ஓவியா said...

அதை கேட்ட நீதிபதிகள், "தீட்சி தர்களுக்கு எந்த நிர்வாகமும் கொடுக்கப்படவில்லை. இதை இணை நிர்வாகம் என ஒப்புக் கொள்ள முடியாது' என்றனர்.

கடந்த, 3ம் தேதி நடந்த விசார ணையில், அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுப்ர மணியன் பிரசாத், "பொது தீட்சிதர் கள், நிர்வாகத்தில் பல தவறுகளை இழைத்துள்ளனர்,'' எனக் கூறி, அது தொடர்பான சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளின் தீர்ப்புகளை படிக்க துவங்கினார்.

அப்போது நீதிபதி சவுகான், "இந்த குற்றச்சாட்டுகளுக்கு என்ன விசாரணை நடத்தினீர்கள்? எத் தனை குற்றங்களை கண்டுபிடித் தீர்கள்? எத்தனை எப்.அய்.ஆர்., பதிவு செய்தீர்கள்? எவ்வளவு சொத் துகளை மீட்டீர்கள்?' என, சரமாரி யாக கேள்வி எழுப்பினார்.
தீட்சிதர்கள் இடைக்கால தடை பெற்றதால், தங்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போனதாக, அரசு வழக்கறிஞர் பதிலளித்தார்.
"இடைக்கால தடை, செயல் அலுவலர் நியமனத்திற்குத் தான். நீங்கள் விசாரிக்கவோ, எப்.அய். ஆர்., பதிவு செய்வதற்கோ அல்ல. வெறும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது,'' என, நீதிபதி சவுகான் கூறினார்.

குரு கிடையாது

கடந்த, 5ம் தேதி, வழக்கறிஞர் கான்சால்வேஸ், வாதம் செய்தார். அப்போது, "பொது தீட்சிதர்களுக்கு குரு என யாரும் கிடையாது. அதனால் அவர்கள், ஒரு தனி சமயப் பிரிவினர் அல்லர். மேலும், சிவன், விஷ்ணுவை வணங்குவோருக்கு, அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு, 26ன் கீழ், விசேஷ உரிமைகள் கிடையாது,'' என்றார்.

மதம் சம்பந்தப்பட்ட விஷயம்

அப்போது நீதிபதிகள் கூறிய தாவது:

புராட்டஸ்டன்ட் மதத்தினர், இஸ்லாமியர் ஆகியோருக்கும் தான் குரு என, யாரும் கிடையாது. அவர் களையும், தனி சமயப் பிரிவினர் அல்லர் என, கூறலாமா?

ஷிரூர் மடத்து வழக்கு தீர்ப்பில், நீதிபதிகள் சில உதாரணங்களை கொடுத்துள்ளனர். மேலும், இந்து மதம் தொன்மையானது. அதில் பல உட்பிரிவுகள் உள்ளன. அதனால், தீட்சிதர்களுக்கு, அரசியல் நிர்ணய சட்டப் பிரிவு 26, பொருந்தும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான, வெங்கட்ரமணி வாதிட்டதாவது: அரசியல் நிர்ணய சட்டப் பிரிவு 26, உட்பிரிவு, "ஏ, பி' ஆகியவற்றின் கீழ் தான் கோவில் நிர்வாகம் வரும். அதன்படி கோவில் நிர்வாகத்தையும், கோவில் சொத்து நிர்வாகத்தையும் பிரித்துதான் பார்க்க வேண்டும். பொது நன்மைக்கு உட்பட்டு நடைபெறும் கோவில் நிர்வாகம், ஒரு மதம் சம்பந்தப்பட்ட விஷயம். அதில், ஒரு மதச்சார்பற்ற அரசு தலையிட உரிமை கிடையாது. அறநிலையத் துறை சட்டப் பிரிவு, 45ன் கீழ், செயல் அலுவலர் நியமிக்கப்பட்ட போது, குற்றச்சாட்டுகளை நிரூபணம் செய்வது தன் வேலையில்லை என, குறிப்பிட்டுதான், கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது அடிப்படை நீதிக்கு, விரோதமானது. இவ்வாறு, அவர் வாதிட்டார்.

நன்றி: தினமலர் (9.12.2013)என்ன நடந்தது?

கடந்த, 2009, பிப்., 2ம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பானுமதி அளித்த தீர்ப்பின்படி, அறநிலையத் துறை சட்டப் பிரிவு 45ன் கீழ், சிதம்பரம் கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து, பொது தீட்சிதர்கள் செய்த மேல்முறையீட்டிலும், அந்த நியமனம் உறுதி செய்யப்பட்டது. மேல்முறையீட்டு தீர்ப்பை எதிர்த்து, பொது தீட்சிதர்களும், சுப்ரமணியம் சுவாமியும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு, நீதிபதிகள் சவுகான், பாப்டே அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. பொது தீட்சிதர்கள் சார்பில், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சி.எஸ்.வைத்தியநாதன், ஆர்.வெங்கட் ரமணி ஆஜராகினர். தன் வழக்கில், சுப்ரமணியம் சுவாமியே ஆஜரானார். எதிர்தரப்பான, ஆறுமுகசாமி தரப்பில், காலின்கொன்சால்வேசும், அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுப்ரமணியன் பிரசாத்தும் ஆஜராகினர். மேலும், மற்றொரு எதிர் மனுதாரர் சத்தியவேல் முருகன் சார்பில், துருவ் மேத்தாவும், கோவிந்த ராமானுஜ தாசர் தரப்பில் அவரும், சிதம்பரம் நடராஜர் கோவில் பக்தர் பேரவை சார்பில், பரமேஸ்வரனும் ஆஜராகினர்.

தமிழ் ஓவியா said...


மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...


இளைஞர்களே, இயந்திரங்கள் வழி தானா?

உலகத்தின் தலைசிறந்த மனோ தத்துவ அறிவியல் சிந்தனையாளர் களில் ஒருவர் டேனியல் கோல்மென் (Daniel Goleman) அவர்கள்.

நியூயார்க் டைம்ஸ் என்ற பிரபல அமெரிக்க நாளேட்டின் அறிவியல் செய்தியாளராக நிருபராக இருந்தவர்; இதுவரை பல லட்சம் விற்பனையாகும் 13 புத்தகங்களை எழுதியவர்.
மக்கள் தொடர்புக்குரியதான நிறுவனங்கள், இயக்கங்கள், அமைப்பு களை நடத்துவோர் அனைவரும் எப்படி மனிதவளத்தைச் சீரிய முறை யில் நல்லுறவோடு பயன்படுத்தி முழுப் பயனைத் துய்ப்பது என்பதுபோன்ற கருத்துகளையே பலவித கோணங் களில் அந்த புத்தாக்கச் சிந்தனை ஊற்றான நூல்கள் நமக்குத் தருவன வாகும்.

அவர் 2013இல் எழுதி, 2014இல் வெளிவரவிருக்கும் ஒரு புதுப் புத்தகம் - (இப்போது கடைகளுக்கு வந்து விட்டது) வாங்கினேன். படித்தேன். சுவைத்தேன்.

‘Focus’ என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது அந்த புத்தகம் (‘The Hidden Driver of Exellence’) என்பது அதன் அடித்தலைப்பு ஆகும்.

இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் படித்து, தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அந்நூல் பல அரிய தகவல் களை அவர்களுக்கு அளிக்கிறது!

இன்றைய குழந்தை- வளர் இளம் பிராயத்தினர் எப்போதும் கைத் தொலைப் பேசி முதல் பல் வகை மின் கருவிகளோடு தான் வாழ்ந்த வண்ணம் உள்ளனர்.

இந்த உலகத்தைவிட டிஜிட்டில் உலகத்தில் (Digital World) தான் அவர்கள் சதா வாழ்கின்றனர்!

எங்கும் எதிலும் ‘Wifi’ - மின் இயந்தி ரங்களோடு இன்றைய இளையர்கள் தங்கள் வாழ்க்கையைச் செலவு செய் கின்றனர்!

உணவு, உறக்கம், படிப்பு - இவை களைக் கூட விட்டுவிட்டு - குடும்ப உறவுகளுடன் ஆசிரியர்களுடன்கூட உரையாடுவதைத் தவிர்த்து விட்டு, சதா சர்வ நேரமும் மின் இயந்திரக் கருவி களோடு, இணை பிரியா வாழ்வு வாழுகின்றனர்!

இவர் இதைப்பற்றி ஒரு அருமையான தேவையான எச்சரிக்கையை விடுத் துள்ளார்.

இப்போது இவர்களது நேரம் - காலம் - எல்லாம் அதிகம் நேரம் இந்தியரங் களுடன்; குறைந்த நேரமே மனித உறவு களுடன் என்ற போக்கு அண்மையில் பெரிதும் வளர்ந்துள்ளது.

இது விரும்பத்தக்கதல்ல; காரணம் குழந்தைகள், இளைஞர்களின் மூளை வளர்ச்சி என்பது, சமூக மற்றும் வளர்ச்சி பூர்வமான விஷயங்களைக் கற்று பெருக்கம் அடைவது என்பது மனிதத் தொடர்புகள் (Contacts) மற்றும் கலந்து உரையாடல்கள் (Conversatiion) மூலம்தான் ஒவ்வொரு நாளிலும் உருவாகிறது. இப்படி கலந்து பேசி உறவாடுதல் தான் மூளையின் ரத்த ஒட்டப் பாதையை பக்குவப்படுத்தி சிறப்பாக அமைய உதவி புரிகிறது. (Mold Brain Circutory)

குறைந்த நேரமே மனிதர்களுடன் பேசுவதில், விவாதிப்பதில் செலவிடப் படுமானால் மூளை வளர்ச்சி சிறப்பாக அமைவதற்கு அதுவே (அதாவது இயந்திரங்களை அதிக நேரம் செல விடப்படுதல்) பெருந்தடையேயாகும்.

அவ்வளவு தூரம் ஏன் போவா னேன்? நாம் வாய்ப்பாடு படித்தோம்; நினைவுவன்மையை அதிகப்படுத் தியது.

இப்போது Calculator கால் குலேட்டர் எதற்கெடுத்தாலும் பயன் படுத்துவது, அவசர விடை கிடைத்தா லும், மூளை வளர்ச்சிக்கு உதவவில் லையே! அது ஒன்றே போதாதா?

பல வகுப்பு நண்பர்களுக்கு உரை யாடல் சக்திகூட பலவீனமாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

(எஞ்சியவை நாளை) --k.veramani

தமிழ் ஓவியா said...


4 மாநில சட்டசபை தேர்தல் முடிவு தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து


சென்னை, டிச.9- 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவை வைத்து பார்க்கும் போது, காங்கிரஸ் கட்சிக்கு இது பின்னடைவுதான் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறினார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் சென் னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (8.12.2013) மாலை செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது செய்தி யாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கலைஞர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி:4 மாநில தேர்தல் முடிவுகளைப்பற்றி...!

கலைஞர்:அந்த மாநிலங்களில்இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு எல்லாம் என்னுடைய வாழ்த்துகள்.

கேள்வி:இந்த தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?.

கலைஞர்:யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. காங் கிரசை பொறுத்தவரையில் இது ஒரு பின்னடைவு தான்.

கேள்வி:ஏற்காடு இடைத்தேர்தலில் நடைபெற்ற அராஜகங்களை சுட்டிக்காட்டியிருக் கிறீர்கள். அதற்குப்பிறகும் கணிசமான வாக்குகள் தி.மு.க.விற்கு கிடைத்திருக் கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் உங்கள் புகார்களை கண்டு கொள்ள வில்லையே!.

கலைஞர்: தேர்தல் ஆணையம் முதல் அமைச்சரின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் கண்டனம் தெரிவித் திருக்கிறதே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கேள்வி:ஏற்காடு இடைத்தேர்தல் அராஜகங்களை பார்க்கும்போது, இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி என்ற நிலை இருக்கிறது!

கலைஞர்:ஆளுங்கட்சியின் அராஜகங்களை தடுக்க முடியவில்லையே, என்ன செய்வது?
கேள்வி: இதற்கு முடிவுதான் என்ன?

கலைஞர்: உங்களைப் போன்ற பத்திரிகைகாரர்கள் இதைப் பற்றி விளக்கி எழுத வேண்டும். அப்படித் துணிந்து எழுதினால் பயன் கிடைக்கும்.
- இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


தஞ்சை விழாவில் பெருமக்கள் கொட்டு முரசம்


தந்தை பெரியார் புகழ் உலகம் முழுவதும் பரவுவதற்குக் காரணமானவர் ஆசிரியர்
தி.மு.க. தேர்தல் பிரச்சாரக் குழு செயலாளர் எல்.கணேசன்


2.12.2013 அன்று மாலை தஞ்சையில் நடை பெற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - பெரியார் உலகத்திற்காக 1000 பவுனுக்குரிய தொகை வழங்கும் விழாவில் பாராட்டுரை வழங்கினார்கள்.

தி.மு.க.தேர்தல் பிரச்சாரக் குழு செயலாளர் எல்.கணேசன்

நான் ஒன்றே ஒன்றை மேற்குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். ஒரு தலைவருடைய புகழ், ஒரு தலைவருடைய வரலாறு நிலைப்பது என்பது அந்தத் தலைவராலே என்று நான் நினைப்பது இல்லை. தந்தை பெரியார் அவர்களுடைய புகழ் இன்றைக்கு அகில இந்திய அளவில், ஏன் இந்த அகில அளவில் நிலை நாட்டப்படுகிறது என்று சொன்னால், அதற்கு அடிப்படையான காரணம், அவருடைய வழித்தோன்றலாக, அவருக்குப் பின்னாலே அந்த இயக்கத்தைக் கட்டிக் காத்து வருகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள்தான்.

நான் இன்னும் சொல்லுவேன், அதுதான் உண்மை. உங்களுக்குத் தெரியும், அறிஞர் அண்ணா அவர்களுடைய புகழை, நிலை நிறுத்திய பெருமை அண்ணன் கலைஞர் அவர் களுக்குத்தான் உண்டு. அந்த மறுமலர்ச்சியை, யார் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமா னாலும் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் என்று அண் ணாவின் பெயரை அந்த மறுமலர்ச்சித் திட்டத் திற்கு வைப்பதற்கு, ஒரு கலைஞர்தான் தேவைப் பட்டார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

அதைப்போலத்தான், நாம் சமத்துவம், சகோதரத்துவம் என்றெல்லாம் சொல்கிறோம் அல்லவா, இந்தச் சொற்களை நாம் எங்கேயிருந்து கடன் பெற்றோம் தெரியுமா? பிரெஞ்ச் புரட்சி யின் மூலப் பிதாக்களாக இருந்த ரூசோ, வால் டேர் போன்றவர்கள் முழங்கிய முழக்கம்தான் சமத்துவம். ஆனால், நண்பர்களே, தந்தை பெரி யார் நினைவு சமத்துவபுரம் என்று பெயர் வைக்க, ஒரு கலைஞர்தான் தேவைப்பட்டிருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

ஆகவேதான், என்னைப் பொறுத்தவரையில், திராவிடர் இயக்கம் - தந்தை பெரியார் அவர்கள் கொள்கையைத் தந்தார் - இலட்சியத்தைக் கொடுத்தார் - அதுவும் புரட்சிகரமான இலட் சியத்தையும், கொள்கைகளையும் கொடுத்தார். அதோடு நின்றிருந்தால், பெரியார் நிலைத்திருக்க மாட்டார் - பெரியார் நிலைத்து நிற்கிறார் என்பதற்குக் காரணம், அவர் விட்டுச் சென்ற சொத்துக்களில் தலையாய சொத்து - தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான். அவர்களுக்கு இன்று 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா. இந்த பிறந்த நாள் விழாவில், இதயம் திறந்து வாழ்த்து கிறேன். வாழ்த்துவதற்கு வயதெல்லாம் வேண்டிய தில்லை - உள்ளம்தான் வேண்டும். எனக்கு நிரம்ப உள்ளம் உண்டு - அவர் வாழவேண்டும், வாழ வேண்டும் என்பதற்குத் தமிழ்ச் சமுதாயம் தந்தை பெரியார் வழியில் நடப்பதற்கு அவர் பாடுபட வேண்டும் என்பதற்காக அவர் வாழவேண்டும், வாழவேண்டும் என்று வாழ்த்தி விடைபெறு கிறேன், நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்

தமிழர் தலைவர் அவர்கள் பாலப் பருவம் முதல் 81 வயது வரை 71 ஆண்டுகளுக்கும் மேலான பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராக - தந்தை பெரியாரால் அடையாளம் காணப்பட்டு 71 ஆண்டு காலம் ஒரே கட்சி - ஒரே கொடி - ஒரே தலைமை என்று இன்றைக்கும் ஒரு போர்க்கள நாயகராகத் திகழ்ந்துகொண்டிருக்கக்கூடிய உத்தமத் தலைவராக இந்தியத் துணைக் கண்டத்தில் திகழ்ந்து வருபவர் தமிழர் தலைவர் அவர்கள்தான்.

எந்த ஒரு தலைமைக்கும் இல்லாத சிறப்பும், பெருமையும் 71 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 வயதில் மேடை ஏறி பேசத் தொடங்கி, கம்ப ராமாயணத்திலும், கடவுள் காம லீலைகளிலும் ஊறித் திளைத்திருக்கும் என்னருமை தமிழகப் பெருமக்களே என்று தமிழ்நாட்டு மக்களுடைய உள்ளத்திலே ஒரு விழிப்புணர்ச்சியை, அறியா மைக்கு எதிரான ஒரு அறப்போர் உணர்வைத் தூண்டிவிட்ட அந்தத் தலைவர்தான், இன்றைக்கு ஒரு மாபெரும் தலைவராக உயர்ந்திருக்கிறார். அப்படிப்பட்ட தலைவரை வாழ்த்திப் பெருமை சேர்க்க வெறும் பிறந்த நாள் விழாவாக மட்டும் இல்லாமல், இந்த நிகழ்ச்சியை, பெரியார் உலகம் காண - 95 அடி உயர பெரியார் சிலை - பீடத்தை யும் சேர்த்து 135 அடி உயர பெரியார் சிலையை உருவாக்கி - அந்தச் சிலை உருவாக்கத்திற்காக இந்தப் பிறந்த நாள் விழாவைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு தலைவராக, அப்பழுக்கற்ற ஒரு தலைவராக திகழ்ந்துகொண்டிருக்கக்கூடிய தத்துவப் பேராசான்தான் தந்தை பெரியாரின் அரிய கண்டுபிடிப்புதான் - இவர்! வழிகாட்டக் கூடிய ஒரு மாபெரும் தலைவராக அடையாளப் படுத்தி இருக்கக்கூடிய அந்தத் தலைவரை வாழ்க, வாழ்க என நெஞ்சார வாழ்த்தக் கூடிய வகையில், இன்றைக்கு மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் என்று சொல்லக்கூடிய வகையில், இயற்கையே இன்றைக்கு எங்கள் தலைவரை வாழ்த்துகிறது.

இந்தத் தலைவர் வாழவேண்டும்; ஒரு புரட்சிக்காரராக, புதுமையாளராக, பெரியாரின் கொள்கையைப் பரப்புகின்ற ஒரு பணியாளராக, பெரியார் கொள்கையைப் பேசாத நாளெல்லாம் தன் வாழ்க்கையில் வெறும் நாள் என அறிவித்து, பெரியாரின் கொள்கையைப் பேசிக்கொண்டே யிருக்கக் கூடிய அந்தத் தலைவர் - இன்றைக்கு அவரைத் தமிழகமே வாழ்த்துகிறது என்று சொல்லி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி

நம்மால் முடியாதது யாராலும் முடியாது
யாராலும் முடியாதது நம்மால் மட்டும் முடியும் என்று இன்று நிரூபித்துக் காட்டி, மிக அமைதியாக இருக்கும் திராவிட இயக்கத்தின் அருமை மிகு உறவுகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினை தெரிவித் துக் கொள்கிறேன்.

தந்தை பெரியார் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை - பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அவர் செய்த மிகப்பெரிய சமூகப் பணிகளை இளைஞர் சமுதாயமும், மாணவர் சமுதாயமும் தெரிந்துகொள்வதற்கு ஏற்ற வகையில், தமிழர் தலைவர் அய்யா அவர்கள், சிறுகனூரில் தந்தை பெரியார் அவர்களுக்கு 95 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கவேண்டும் என்று, அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தின்படி, சிறுகனூரில் பெரியார் உலகம் அமைய, பெரியாரின் 95 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கவேண்டுமானால், 500 டன் சிமெண்ட், 300 டன் இரும்பு, 146 டன் வெண்கலம் மேலும், நூலகம், ஆய்வகம், உணவு விடுதி, சிறுவர் பூங்கா இவை அனைத்தும் அமைய வேண்டுமென்று சொன்னால், 39 கோடியே 85 லட்சம் ரூபாய் தேவை என்ற நிலையில், இது முதல் ஆரம்பமாக, முதல் சுற்றாக, திராவிடர் கழகத்தின் தோழர்கள் தேனீக்கள் போல பறந்து பறந்து சேகரித்து, 43 நாள்களில் 2 கோடியே 51 லட்சத்து 33 ஆயிரம் (அதாவது 1005 பவுன்) ரூபாய் சேகரிக்கப்பட்டு முதல் தவணையாக இது அளிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய தோழர்கள் தேனீக்களைப் போல சுற்றிச் சுற்றி இந்தத் தொகை யினை வசூலித்திருக்கிறார்கள். இது முதல் தொகை தான். இன்னும் 7 கோடி தமிழர்கள் இருக்கக் கூடிய சூழ்நிலையில், எல்லோரிடத்திலும் வசூ லித்து, இந்த 39 கோடியே 85 லட்சம் ரூபாயினை நாம் அடைவோம் என்று சூளுரைப்போம். இவ் வாறு திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

தமிழர்க்கு உலகில் எந்த மூலையில் இடர்ப்பாடு வந்தாலும் முதலில் குரல் கொடுக்கக்கூடிய தலைவர் ஆசிரியர் வீரமணி - டாக்டர் சோம.இளங்கோவன் படப்பிடிப்பு

பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் (அமெரிக்கா) அவர்கள் உரையாற்றுகையில்,

அருமைத் தமிழ் நெஞ்சங்களே, தந்தை பெரியார் வாழ்கிறார், வாழ்ந்து கொண்டிருக் கிறார் - சிலையாக இல்லை, சிந்தனையாக உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை, தினந்தோறும் தமது கடும் உழைப் பால், தமிழகம் மட்டுமன்றி, உலகெங்கும் பரப்பி வரும் தமிழர் தலைவர் அவர்களே, கூடியுள்ள பெரியோர்களே, தாய்மார்களே, ஆர்வமிக்க தொண்டர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

ஓரிரு செய்திகளைச் சொல்லி, தமிழர் தலைவர் அவர்களை வாழ்த்த விரும்புகிறேன். எந்தத் தமிழனுக்கு உலகத்தில் எந்த ஒரு மூலையில் கெடுதல் நடந்தாலும், முதலில் துடிக்கும் இதயம் நம்முடைய தமிழர் தலைவர் இதயமாகத்தான் இருக்கும். தமிழ்நாடு அறக்கட்டளை என்று அமெரிக்காவிலுள்ள நாங்கள் இங்கே நிறுவினோம்; அதற்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டது. அந்த இடத்திற்கு ஒரு ஆபத்து வந்தது. உடனே தமிழர் தலைவர் அவர்கள் எங்களை அழைத்து, அதற்கு ஆவன செய்ய அறிவுரை வழங்கினார். அந்த இடம் காப் பாற்றப்பட்டு, இன்றைக்கு தமிழ்நாடு அறக்கட் டளை பல பணிகளைச் செய்து வருகிறது.

அதேபோல், அமெரிக்காவில் ஒரு செய்தி வந்தது; ராஜபக்சே அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கப் போகிறான் என்று; அந்தச் செய்தியைத் தெரிவித்தவுடனே தமிழர் தலைவர் அவர்கள் மிகவும் ஆத்திரத்துடன், முதல்வர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து, என் னென்ன செய்ய முடியுமோ, அத்தனையையும் செய்தார்கள். அடுத்த நாள் முதல்வர் கலைஞர் அவர்கள், யாருக்கும் தெரியாமல் உண்ணா விரதம் இருந்தார். ஆனால், கொடுங்கோலன் ராஜபக்சே, பொய் சொல்லி, ஏமாற்றி விட்டான்.

தந்தை பெரியார் அவர்களின் வாரிசு என்று சொன்னார்கள்; அது கொள்கை வாரிசாக இன்று உலகமெங்கும் பெரியாரின் கொள்கை யைப் பரப்புவதற்காக நாங்கள் எல்லாம் பாடுபடுகின்றோம் அவரின் தலைமையில்.

அவர் வெளிநாட்டிற்கு வந்துவிட்டால், ஈ மொய்க்கும் கும்பல்போல் தமிழர்களின் கூட்டம் அவரிடம் அன்போடு பழகுவதைப் பார்த்தால், ஆசிரியரும், பெரியாரும் என்றும் வாழ்வார்கள் என்பதை நாம் மிகவும் உறுதி யாகச் சொல்லிக் கொள்ளலாம்.
திராவிடர் கழகம், தமிழர் தலைவர் அவர்கள் ஒரு ஏணி போன்று. அந்த ஏணியில் ஏறியவர்கள் பலர் உண்டு.

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்
என்றார் திருவள்ளுவர்.

எல்லாப் புகழும் வேண்டாம் - தமிழர் தலை வரின் ஆணை மட்டும் போதும்; எங்களுக்குப் புகழ் வேண்டாம் - உங்கள் கடமைகளை நிறைவேற்றுவோம் என்று ஆயிரம் ஆயிரம் கருஞ்சட்டைப் படையினர் தயாராக உள்ளனர். ஆயிரம் பொற்காசுகள் ஒன்றும் பெரிய செய் தியல்ல - அவருடைய ஆணையை நிறைவேற்ற ஆயிரம் ஆயிரம் கருஞ்சட்டைத் தொண்டர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். அவர் நீண்டு வாழவேண்டும்; தமிழர்களுக்கு இன விடுதலை முக்கியம்; அந்த இன விடுதலை கிடைக்கும்வரை வாழ்ந்து அவர் சாதித்துக் காட்டவேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகின்றேன்.
- இவ்வாறு அவர் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


ஸ்டெம்செல்கள் மூலம் செயல்பாட்டு நுரையீரல் செல்கள்: மருத்துவ உலகில் புதிய சாதனை

ஸ்டெம் செல்களைக் கொண்டு புதிய நுரையீரல் செல்களை உரு வாக்கி அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள் புதிய சாதனை படைத் துள்ளனர். ஸ்டெம்செல்கள் மூலம் இதுவரை இதய செல்கள், கணைய பீட்டா செல்கள், குடல் செல்கள், கல்லீரல் செல்கள், நரம்பு செல்கள் போன்றவை உருவாக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், ஸ்டெம் செல்கள் மூலம் முதன்முறையாக செயல்பாட்டு நுரையீரல் செல்களை உருவாக்கி புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர் அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள்.

நுரையீரல் செல்கள்.... அமெரிக்காவின் கொலம் பியா மருத்துவ மய்யத்தின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனித ஸ்டெம்செல்களைக் கொண்டு முதன்முறையாக செயல்பாட்டு நுரையீரல் செல்களை உருவாக்கியுள்ளனர்.

முக்கியத்துவம் வாய்ந்தது.... இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், நுரையீரல் நோய் குறித்த மாதிரிகளை ஆய்வு செய்வதிலும், மருந்துகளைப் பரி சோதிப்பதிலும், மனித நுரையீரல் வளர்ச்சிகளைப் பற்றி அறிவதிலும், மாற்று நுரையீரல் திசு உருவாக்கு வதிலும் முக்கியத்துவம் பெறுவதாக கருதப்படுகிறது.

புதிய முன்னேற்றம்.... தனது ஆராய்ச்சி முடிவுகள் குறித்து மருத் துவ பேராசிரியர் ஹான்ஸ் வில்லியம் கூறுகையில், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது பெரிய முன்னேற்றத்தை இதுநாள்வரை கொண்டிருக்க வில்லை. எனவே, தற்போதைய கண்டுபிடிப்பு இந்த சிகிச்சையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

நுரையீரல் மாற்றுச் சிகிச்சை.... இவற்றை முறையாகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர பல வருடங்கள் ஆகும் என்றபோதிலும், ஒரு நோயாளிக்கு அவரது தோலைப் பயன்படுத்துவதன் மூலம் நுரையீரல் மாற்று சிகிச்சை அளிப்பது குறித்து நாம் யோசிக்கத் தொடங்கமுடியும்' எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

உடல் நலம் காக்க...

கீரை சாப்பிடுங்க கீரைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. எல்லாவித கீரையிலும் மருத்துவ குணங்கள் உள்ளது.
வெந்தயக்கீரை: உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்றுப் புண்கள், பேதியை குறைக்கும். அதிகமாக இரும்புச்சத்து கொண்டது.

முருங்கை கீரை: உடலுக்கு சக்தியையும், வலிமை யையும் அளிக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆண்மையை அதிகரிக்கச்செய்யும். மலச்சிக்கலை குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். மாதவிலக்கின் போது ஏற்படும் வலியை குறைக்கும். ரத்தசோகையை குறைக்கும்.

அரைக்கீரை: உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி பெற்றது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கும். தளர்ச்சியைப் போக்கும். குடல் புண்னை ஆற்றும். குடலுக்கு வலிமையை தரும். தொடர்ந்து அரைக்கீரை சாப்பிட்டால் தேமல், சிரங்கு, சொறி, போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
சிறுகீரை: மலச்சிக்கலைக் குறைக்கும். தொடர்ந்து இந்த கீரையைச் சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப் படியான பித்தத்தைக் குறைக்கும். உடலுக்கு ஊக்கம் அழித்து தளர்ச்சியை போக்கும்.

அகத்திக்கீரை: உடலில் காணப்படும் அதிகஅளவு வெப்பத்தை குறைக்கும் குடற்புழுக்கலை அழிக்கும். பித்தம், தலைச்சுற்றல், மயக்கம், போன்றவை வராமல் தடுக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பேதி ஏற்படும்.
மணத்தக்காளி கீரை: வயிற்று புண்களை போக்கும். குடல் புண்களை குறைத்து குடலுக்கு பலம் அளிக்கும்.

பசலைக்கீரை: உடலுக்கு குளிர்ச்சி தரும். சிறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது. தாய்ப்பால் பெருகும்

தமிழ் ஓவியா said...

வாய்ப்புண் தொல்லையா? இதோ தீர்வு

வாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுவர். பாதிப்படைந்த சிறிய பகுதி என்றாலும் அந்த அளவிற்கு முகத்தை வாட வைக்கும் இந்த வாய்ப்புண் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மட்டுமின்றி, பாதிப்படைந்தவர்களுக்கும் உதவிடலாமே? வாய்ப்புண் என்றால் என்ன? வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மை யாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதி யே வாய்ப்புண் (மவுத் அல்சர்) எனப்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் "சுர்ர்" என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.

யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்?

வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக் களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் 12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.

வாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்? மருந்துகள்: ஆச்சரியப்பட வைக்கும் வகையில் வேறொரு நோய்க்காக உட்கொண்டு வரும் மருந்துகள், ஒருவருக்கு வாய்ப்புண் ஏற்படக் காரணமாக அமைகின்றன. நீங்கள் உட்கொண்டு வரும் ஏதேனும் ஒரு மருந்து இத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறதா? எனப் பரிசோதியுங்கள்.

பரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிவரங்கள் தரும் செய்தி.

தமிழ் ஓவியா said...


ஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம்.
உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால் கூட வாய்ப்புண்கள் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன.

காயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத் தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.

பாக்டீரியா: வாயில் ஏற்கெனவே தங்கியுள்ள பாக்டீரி யாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.

இயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.

உணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறை பாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத் தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.

பற்பசை (டூத் பேஸ்ட்): அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.

மாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமான வையே.

தடுக்க வழியுண்டா?

அறவே ஒழிக்க முடியாவிட்டாலும் கீழ்க்கண்டவற்றைக் கடைப்பிடித்து வருவதன் மூலம் வாய்ப்புண்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம்:

- நல்ல உணவுப் பழக்க வழக்கம்
- தினசரி மிதமான உடற்பயிற்சி
- மன அழுத்தத்தைக் குறைப்பது
- தேவையான அளவு தூங்கி ஓய்வெடுப்பது

இத்துடன், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்கவல்ல ஆண்ட்டி பாக்டீரியா (மவுத்வாஷ்) கொண்டு வாயைக் கொப்பளித்தல், வாயை இயன்றவரையில் சுத்தமாக வைத்திருத்தல், தினமும் காலையிலும் இரவில் உறங்கு வதற்கு முன்னும் மருத்துவர் பரிந்துரைக்கும் முறையில் பல் துலக்குதல் போன்றவை வாய்ப்புண் அண்டாமல் தடுக்கும்.

வாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் வாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்ட வற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம்.

தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் ஆகியவற் றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.

வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.
மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.

கவனத்தில் கொள்ள வேண்டியது: வாய்ப்புண் என்பது தற்காலிகமான நோயாகும். வேறொரு செயல் மூலம் ஏற்படுவதாகும். குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில் வாய்ப்புண் குணமாகி விட வேண்டும். அதுவல்லாமல் வாய்ப்புண் தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

தமிழ் ஓவியா said...


இன்று (டிச. 9) சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்

இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாக இருக் கக்கூடிய பிரச்சினைக ளில் முதலிடத்தை பிடித் திருப்பது ஊழல். இது நாட்டின் பொருளா தார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடியது. ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழலை தடுக் கக்கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக டிச., ஒன்பதாம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப் படுகிறது.

"பொதுச் சொத்தை, தனியாரின் கைகளுக்கு போக விடுவது, அதிகா ரத்தை தவறாக பயன் படுத்துவது, பொதுப் பணத்தில் முறைகேடு செய்வது' ஆகியவை தான் ஊழல். இது பல வழிகளில் நடக்கிறது. லஞ்சம், மோசடி, டெண் டர்களில் விரும்பியவர்க ளுக்கு வளைந்து கொடுப் பது, சட்ட விதிகளை பின்பற்ற மறுப்பது ஆகியவற்றின் மூலம் ஊழல் பெருகுகிறது.
டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷன்ல்' 2013ஆம் ஆண்டுக்கான "ஊழல் குறைவு முதல் அதிகம் வரை' என்ற அடிப்படையில் பட்டி யலை சமீபத்தில் வெளி யிட்டது. மொத்தம் 177 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஊழல் குறைவாக உள்ள இப்பட்டியலில் டென் மார்க், நியூசிலாந்து, பின்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்தியா, 94ஆவது இடத் தில் உள்ளது. அப்படி யெனில் இந்தியாவை விட, 93 நாடுகளில் ஊழல் குறைவாக உள்ளது.

லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் இருந்தா லும், இதனால் தண் டனை பெற்ற அதிகாரி கள் எண்ணிக்கை மிகக் குறைவே. அரசு அலுவலங் களில் மட்டும் அல்ல, முக்கிய பொது இடங் களில், லஞ்ச ஒழிப்பு துறையினரின் முகவரி, போன் எண்களை தெளி வாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், மக் கள் தைரியமாக புகார் செய்ய முன்வர வேண் டும். ஊழல் வழக்கில் கைது செய்யப்படுபவர்க ளின் பெயர்களை, பொது இடங்களில் விளம்பரப் படுத்த வேண்டும். ஊழல் வாதிகளுக்கு கடும் தண் டனை வழங்க வேண்டும். அவர்களது வேலையை யும் பறிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர் களிடம் அந்த எண் ணமே வராது.

தமிழ் ஓவியா said...


பெரியாரியல் பெண்ணியப் பயிற்சிப் பட்டறை

கழகக் குடும்பத்தினருக்கு, வணக்கம்!

நம் இயக்கக் கொள்கைகளை, நாடெங்கிலும் பரப்பி, பகுத்தறிவு சமுதாயம் படைக்க, பெண் பேச்சாளர்களை உருவாக்கும் நோக்கில் டிசம்பர் 24, 25 மற்றும் 26 ஆம் தேதிகளில், 15 முதல் 25 வயதிற்குட்பட்ட இளம் பெண்களுக்கு சென்னை பெரியார் திடலில் சிறந்த சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கொண்டு பேச்சுப் பயிற்சிப் பட்டறை நடத்துவதெனத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் பங்குபெற்று தங்கள் பேச்சுத் திறனைப் பட்டை தீட்டிக்கொள்ள விரும்பும் இளம் பெண்கள் தங்கள் பெயரைக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களிலோ, மின்னஞ்சல் முகவரியிலோ டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். மின்னஞ்சல் maniammaidaisy@gmail.com

தொடர்பு எண்கள்:

வி.டெய்சி மணியம்மை 9884851997, உமா செல்வராசு 9444868564, த.மரகதமணி 9841936691

அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர்), வி.டெய்சி மணியம்மை (மாநில செயலாளர், மகளிர் பாசறை), அ.கலைச்செல்வி (மாநில செயலாளர், மகளிரணி)

Read more: http://viduthalai.in/page-8/71785.html#ixzz2n7PCVFIw

தமிழ் ஓவியா said...


சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டிலேயே நீடிக்க அழுத்தமான வாதங்களை முன் வைக்க வேண்டும் தமிழக அரசுக்கு சிபிஎம் வேண்டுகோள்

சென்னை, டிச. 10 -சிதம்பரம் நடராஜர் கோவில்நிர்வாகம் அரசின் கட்டுப்பாட் டிலேயே நீடித்திட வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண் டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சி யின் மாநிலச் செயலா ளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச் சினை நீண்ட காலமாக நீதிமன்ற வழக்குகளில் நீடித்து வருகிறது.

சிறந்த பாரம்பரிய மிக்கதும், ஏராளமான நிலம், சொத்துக்கள், நகைகள் மற்றும் அன்றாட பக்தர் களிடமிருந்து பெறப் படும் வருமானம் போன்ற அனைத்தையும் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நிர்வா கிக்க வேண்டுமென நூறாண்டுகளுக்கு மேலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் இத்தகைய முயற்சிகள் அனைத் தையும் இழுத்தடித்து தொடர்ந்து தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள பொது தீட்சிதர்கள் நீதிமன்றங் களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் பகுதியாக தொடர்ந்து ஏற்பட்ட நிர்வாகச் சீர் கேடுகள் மற்றும் சொத் துக்கள் பராமரிப்பில் ஏற்பட்ட முறைகேடுகள் காரண மாகவும் அவை களை முறைப்படுத்திட 1982ம் ஆண்டு தனி நிர்வாக அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தர விட் டது.

வழக்கம் போல் இதனை எதிர்த்து தீட்சி தர்கள் சார்பில் பல கட்ட வழக்குகள் நடந்து, அர சின் உத்தரவை நீதி மன்றங்கள் ஏற்றுக் கொண்ட நிலையில், தற் போது தீட்சிதர்கள் சார் பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு நடைபெற்று அனைத்து தரப்பு வாதங்களும் முடிவுக்கு வந்துள்ளன. இருப்பினும் எழுத்துப் பூர்வமான வாதங்களை சமர்ப்பிக்க மேலும் அவ காசத்தை உச்சநீதிமன் றம் வழங்கியுள்ளது.

இவ்வழக்கிற்கு அரசு போதுமான அழுத்தம் கொடுக்க வேண்டும். எனவே தற்போதுள்ள அவகாசத்தை பயன் படுத்தி கோயில் நிர்வா கத்தை தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில் நீடிக்கும் வகையில் அழுத்தமாக தனது வாதங்களை முன்வைக்க வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசை வலியுறுத் துகிறது. கோயில் நிர்வா கம் அரசின் கட்டுப் பாட்டில் நீடிக்கும் போது தான் சொத்துக் கள், கோயில் பாரம் பரியம் போன்றவற்றை பாதுகாத்திட முடியும்.

மேலும் சுமார் 1000 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டுள்ள கலை சிற்ப கட்டுமானங்களை பாதுகாக்கவும், பராம ரிக்கவும் இயலும். கோயில் நிர்வாகத்தை அரசு மேற்கொள்ளும் அதே நேரத்தில் வழி பாட்டு முறைகளை தீட் சிதர்களே மேற்கொள்ள வழியுள்ளதால் பொது தீட்சதர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதையும் அரசு கணக்கில் கொண்டு - கோவில் நிர்வாகம் தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில் நீடித் திட தேவையான அனைத்து முயற்சிகளை யும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு வலியுறுத்துகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/71757.html#ixzz2n7PT3bIV

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!


இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல; மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.

(குடிஅரசு, 8.9.1940)

Read more: http://viduthalai.in/page-2/71759.html#ixzz2n7PtZVgx

தமிழ் ஓவியா said...


சிதம்பரம் கோயிலும் வேதவிதிமுறையும்


பார்ப்பனர்கள் தங்கள் சுரண்டல் தொழிலுக்கான கேந்திரங்களாகக் கோயில்களைப் பயன்படுத்தி வருவது பெரும் உண்மையே! போட்டிக் கடை வைத்து விளம்பரம் செய்வதுபோல ஒவ்வொரு கோயிலுக்கும் தவப் புராணங்களை எழுதி வைத்துக் கொண்டு பக்திப் போதையில் சிக்கியுள்ள - படித்த மற்றும் படிக்காத பாமர மக்களை தத்தம் கோயில்களின் பக்கம் கவர்ந்து இழுக்கிறார்கள்.

இந்த விளம்பர யுக்தியில் சிதம்பரம் நடராஜன் கோயிலைத் தட்டிக் கொள்ள முடியாது. அந்த அள வுக்குப் புளுகு மூட்டைகளை அள்ளி விட்டுள்ளனர்.

சைவக் கோயில்களில், கோயில் என்று சொன் னாலே அது சிதம்பரம் நடராஜன் கோயிலைத்தான் குறிக்குமாம். அப்படியென்றால் மற்ற கோயில்கள் எல்லாம் குட்டிச் சுவர்களா?

பொதுவாக சைவக் கோயில்களில் லிங்க வழிபாடு என்பது மிகவும் முக்கியம். சிதம்பரத்திலே அது கிடையவே கிடையாது, அதற்கு முக்கியத்துவமும் இல்லை.

இது தொடர்பாகப் பிரச்சினை வரும் போது மிகவும் சாமர்த்தியமாக ஆகாசலிங்கமாக இருப்பதாகக் கதை கட்டி விட்டார்கள்.
ஆகமம் ஆகமம் என்று எதற்கெடுத்தாலும் கூச்சல் போடுகிறார்களே - சிதம்பரம் கோயிலில் ஆகம விதி முறைகள் பின்பற்றப்படுவதில்லை; மாறாக வேத முறைகளைப் பின்பற்றுகிறார்கள்.

இது குறித்து பிரபல ஆன்மிகப் பழமான காஞ்சி புரம் அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் கூறியது கவனிக்கத் தக்கதாகும்.

வழிபாட்டு முறைகளுக்காக உண்டாக்கப்பட்டது தான் ஆகமம்; அதாவது வைஷ்ணவத்தில் பாஞ்சராத் ஆகமம் வைகனாஸ ஆகமம்னு ரெண்டு இருக்கு. சைவத்திற்கு சிவாகமம்னு பேர். இந்த ஆகமத்தை அதாவது வழிபாட்டு முறையைப் புறக்கணிச்சுட்டு வேதம் சொன்னபடிதான் வழிபாடு நடத்துவோம்னு சொல்பவர்கள்தான் தீட்சிதர்கள்.

வேதத்துக்குப் பிறகான காலங்களில் தோன்றியது தான் ஆகமம் ஆனால் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள யாகங்களில் முக்கியமானது பல பொருட்கள், அதாவது மாடுகள், ஆடுகள், குதிரைகள் ஆகிய வற்றைப் பலி கொடுக்க வேண்டும்.

அதனால் சிதம்பரத்திலுள்ள ஒவ்வொரு தீட்சிதரும் இன்று வரை பசுக்களைப் பலி கொடுக்கும் சோம யாகம் முதலியவற்றைச் செய்து வர வேண்டும் என்பது அய்தீகம். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் கோயிலுக்கு வெளியே பசுக்கள் பலியிடப்படும் யாகங்கள் நடத்தப்படுவதைப் பார்த்திருக்கிறேன், இன்று அப்படியெல்லாம் செய்கிறார்களா என்று எனக்குத் தெரியாது.

வேத வழிபாடு என்றால் பூஜை மொழியும், வேதம் சொன்ன வட மொழியில்தான் இருக்க வேண்டும் என்று சொல்லித் தான் தமிழுக்கு எதிராக மல்லுக்கு நிற்கிறார்கள் என்று அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் கூறியுள்ளார் (ஜூனியர்விகடன் 12.3.2008 பக்கம் 18)

சொல்லுவது யார் என்பதைப் பார்க்க வேண்டும்; திராவிடர் கழகத் தலைவர் இதனை சொல்லவில்லை, வேதம் மற்றும் ஆகமங்களில் கரை கண்டவர் அத்துப்படியானவர் என்று அவாள் வட்டாரத்திலேயே ஏற்றுக் கொள்ளப்படுபவர் - மறைந்த பெரியவாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு அத்தியந்தமாக இருந்தவர்; இன்னும் சொல்லப் போனால் அவருக்கு ஆலோசகராக இருந்த வரும்கூட!

சம்பிரதாயங்களை, கோயில் வழிமுறைகளை அப்படியே துல்லியமாக - கறாராகக் கடைப்பிடித்தே தீர வேண்டும் என்று அடம்பிடிப்பவர்கள், அதற்காக உச்சநீதிமன்றம் வரை செல்லக் கூடியவர்கள் அவர்கள் கடைப்பிடிக்கும் வேதமுறைப்படியான வழிபாட்டு முறைப்படி ஏன் உயிர்களைப் பலியிடுவ தில்லை?

அரசு காரணம் என்றால், அதன் பொருள்,கோயில் பிரச்சினைகளில் அரசு தலையிடும் அதிகாரம் படைத்தது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது சிதம்பரம் நடராஜன் கோயிலை அந்த முறைப்படி எடுத்துக் கொள்ளும்போது அதனை எதிர்த்து ஏன் நீதிமன்றம் செல்ல வேண்டும்?

இன்னொரு கேள்வியும் இருக்கிறது. தில்லைக் கூத்தன் ஆடுவதால்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அவர்கள் கூறுவது உண்மையானால், அதில் அந்தரங்க சுத்தியான நம்பிக்கை அவர்களுக்கு இருக்குமேயானால், அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லுவதற்குப் பதிலாக அந்த ஞானக் கூத்தனாகிய நடராஜப் பெரும் மானிடம்தானே முறையிட வேண்டும் ஏன் அவ்வாறு செய்யவில்லை? அவர்களுக்கே அந்தக் கடவுள்மீது நம்பிக்கை இல்லை என்று தானே பொருள்? பக்தர்கள் சிந்திப்பார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/71761.html#ixzz2n7Q4CRoT

தமிழ் ஓவியா said...


இன்று (டிச.10): சர்வதேச மனித உரிமைகள் தினம்


ஒவ்வொரு மனிதனும், தான் வாழ்வதுடன், பிற ரையும் வாழவிட வேண் டும் என்பதை வலியுறுத் தும் விதமாக டிச., 10ஆம் தேதி, மனித உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப் படுகிறது.

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக் கும் வலியுறுத்துவதே இதன் நோக்கம். 1948, டிச.10ஆம் தேதி அய்க் கிய நாடுகளின் பொது சபையால் உலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை, பெருமைப்படுத்தும் விதத் தில் 1950இல் இத்தினம் தொடங்கப்பட்டது.

உல கில் வாழும் அனைத்து மனிதர்களும் சமமான வர்களே. ஒருவரிடமி ருந்து நாம் எவ்வித உரி மையை எதிர்பார்க்கி றோமோ, அதே உரி மையை மற்றவர்களுக் கும் வழங்க வேண்டும். யாரும் யாரையும் அடி மைப்படுத்தக் கூடாது.

ஒருவர் பிறக்கும் போதே, அவருக்கான மனித உரிமைகள் வந்து விடுகின்றன. உயிர் வாழ் வதற்கான உரிமைகள், கருத்து சுதந்திரம், மனி தன் சுதந்திரமாக வாழ் வதற்கான கல்வி, மருத் துவம், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் மற்றும் ஒரு மனிதனாக வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் எனலாம். இது அனைத்து மக்களும் அங்கீகரிக்கக்கூடிய சர்வதேச அங்கீகாரத்தை பெற்றவை.

இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் 1991, அக். 13இல் இந்திய மனித உரிமைகள் பாது காப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-3/71800.html#ixzz2n7QzMXyo

தமிழ் ஓவியா said...


கேரளாவில் பல தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தமிழர்களை வெளியேற்றுவதா?

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி, சோலையூர், புதூர், அகழி, பாலூர், சாவடியூர் போன்ற கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் பல ஆண்டுகளாக விவசாயத்தினை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு உழைக்கும் மக்கள் ஆவார்கள். அவர்கள் கேரள மாநில வாசிகளே!

இவர்கள் பழங்குடி மக்களிடமிருந்து நிலத்தை முறையாகப் பெற்று (விலை கொடுத்து வாங்கி) பத்திரப் பதிவும் செய்து வரி செலுத்தி வந்தனர். 1986 இல் அந்த நிலங்களை வாங்கியது செல்லாது என கேரள அரசு அறிவித்தது.

அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர். ஆதரவுடன் பெரிய அறப்போர் வெடித்தது; அப்போது பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டது.

இப்போது கேரள அரசின் கெடுபிடி காரணமாக அவர்கள் நிலங்களை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கேரளாவாழ் அட்டப்பாடி தமிழர்கள் ஒருங்கிணைந்த போராட்டத்தை - அறவழிப்பட்ட எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்!

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனே தலையிட்டு, கேரள முதலமைச்சருக்குக் கடிதம் எழுதிடவும், தேவைப்பட்டால், தொலைப்பேசிமூலம் பேசி, இப்பிரச்சினையை சுமூகமாக, முன்பு எம்.ஜி.ஆர். காலத்தில் முடிவுக்குக் கொண்டு வந்ததுபோல செய்யவேண்டும்!

மத்திய அரசும் இப்பிரச்சினையில் தலையிட்டு, கேரள அரசுடன் பேசவேண்டும்; அவசரம், அவசியம்!

இரண்டு மாநில மக்களின் நல்லுறவு பாதிக்கப்படாமல் வாழை இலை முள்ளை அகற்றுவதுபோன்று, மென்மையும், உறுதியும் கலந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்து அதன்மூலம் நல்ல பயன் கிடைக்கச் செய்யவேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இத்தமிழர்களின் உடைமைகள் அவை

எனவே, நியாய அடிப்படையில் அவர்களை வெளியேற்றுவது மிகப்பெரிய தவறு; சமூகநீதி அவர்களுக்கும் தேவை.

பழங்குடியினருக்கான நிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துவிட்டு, பல தலைமுறைகளாக அந்தப் பகுதியைத் தம் உழைப்பின்மூலம் வளப்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களை வெளியேற்றுவது எந்த வகையில் நியாயமாகும்? பழங்குடி மக்களுக்கு நியாயம் வழங்க எத்தனையோ வழிகள் உண்டு; அதுபற்றி கேரள அரசு சிந்திக்கட்டும்!

ஒரு பக்கத்தில் ஒருமைப்பாடு பேசிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் அதற்கு உலை வைப்பது தேசியமா? என்பதும் முக்கியமான கேள்வியாகும்.

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை 11.12.2013

Read more: http://viduthalai.in/e-paper/71806.html#ixzz2nAvtzpxL

தமிழ் ஓவியா said...


பாராட்டத் தக்க நியமனம்


டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தராக டாக்டர் வணங்காமுடி நியமனம்

சென்னை, டிச. 11- தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் புதிய துணை வேந்தராக பேராசிரியர் முனைவர் வணங்காமுடி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் புதன்கிழமை (டிச. 11) பல்கலைக் கழகத்தின் 6 ஆவது துணை வேந்தராக பதவி ஏற்றார்.

திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டியில் விவசாயக்குடும்பத்தில் பிறந்த இவர் 2 எம்.ஏ., எம்.எல். முடித்து 2 ஆராய்ச்சிப் படிப்புகளை (பிஎச்.டி.) நிறைவு செய்துள்ளார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் கடந்த 9 ஆண்டுகளாக பேராசிரியராகப் பணியாற்றியதோடு, பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார். இவரது மனைவி சமாதானம் அரசு பள்ளி ஆசிரியர். மகள் அன்பரசி சிங்கப்பூரில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/71829.html#ixzz2nAwXwNcA

தமிழ் ஓவியா said...


பொதுவுடைமை- பொதுவுரிமை


பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.
(குடிஅரசு, 25.3.1944)

Read more: http://viduthalai.in/page-2/71834.html#ixzz2nAwmEJeG

தமிழ் ஓவியா said...


மோடி அலையா?


நடந்து முடிந்த அய்ந்து மாநிலங்கள் தேர்தலில், மூன்று மாநிலங்களில் பி.ஜே.பி. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. பி.ஜே.பி. மிகவும் எதிர் பார்த்தது டில்லி மாநிலத் தேர்தல் - இந்தியாவின் தலைநகரமாயிற்றே! அதில் வெற்றிக்கொடியை ஏற்றினால், இந்திய ஆட்சியே தங்கள் கைக்கு வந்துவிடும் என்ற ஆசையில் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைந்தது பி.ஜே.பி.

மோடி அலை வீசுகின்றது என்று கூறி, சிலர் புறப்பட்டுள்ளார்கள்; அந்த நரேந்திர மோடி புது டில்லியில் அதிகமான பொதுக்கூட்டங்களில் பேசி னார். பணம் தண்ணீராய் வாரி இறைக்கப்பட்டது. மோடியைப் பிரதமராக்கித் தீருவது என்பதில் கோவணங் கட்டிக்கொண்டு களத்தில் நிற்கும் பெரிய பெரிய முதலாளிகள், பின்னணியில் இருக்கும்பொழுது பணம் எல்லாம் ஒரு பொருட்டா?

இவ்வளவு முயற்சிகள் செய்த பிறகும், டில்லியைக் கைப்பற்ற முடியவில்லை. முந்தா நாள் பெய்த மழையில் முளைத்த காளான் என்று சொல்லு வார்களே அதேபோல தோன்றிய ஒரு கட்சி (ஆம் ஆத்மி கட்சி) காங்கிரசையும், பி.ஜே.பி.யையும் தண்ணீர் காட்டிவிட்டது.

எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. புதிதாக முளைத்த அந்தக் கட்சிகூட, வெறும் ஊழலை முன்னிறுத் தியதே தவிர, அந்தக் கட்சிக்கு வேறு சமுதாயக் கொள்கைகள் சொல்லும்படியாக ஏதுமில்லை.

தேர்தலில் செலவு செய்ய, அந்தக் கட்சிக்குப் பணம் எங்கிருந்து குதித்தது என்பதும் கேள்விக் குறியாகும். அந்தக் கட்சியின் தலைவர், எந்தக் கட்சியின் உதவியையும் நாடப் போவதில்லை; நாங்களும் எந்தக் கட்சிக்கும் உதவிக் கரம் நீட்டப் போவதில்லை என்கிறார். அந்தக் கட்சியின் இன்னொரு மூத்த தலைவரோ, (அவர் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன்) வேறு குரலில் இப்பொழுதே பேச ஆரம்பித்துவிட்டார்; பி.ஜே.பி.,க்குக் காதல் கண் சிமிட்டுவதைக் காண முடிகிறது.

காங்கிரசையும் பிடிக்கவில்லை; பி.ஜே.பி.யையும் பிடிக்கவில்லை. அதைத் தாண்டி மூன்றாவது கட்சி தலையைக் காட்டியதால், அதற்கு டில்லியில் ஆதரவு கிடைத்துவிட்டது என்று பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்த கருத்து - கருத்தூன்றத் தக்கதாகும்.

இந்தத் தேர்தல் முடிவு வெளிவந்த நிலையில், வழக்கமாக நீட்டி முழங்கும் நரேந்திர மோடியின் சத்தம் ஒன்றும் கேட்கவில்லை - பெட்டிப் பாம்பாகி விட்டார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே பி.ஜே.பி.,க்குச் சாய்கால் உள்ள மாநிலங்கள்தான். ராஜஸ்தானைப் பொறுத்தவரை காங்கிரசும், பி.ஜே.பி.,யும் மாறி மாறி வந்துள்ளன என்பதுதான் உண்மை.

இதற்கிடையே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மோடி அலை எங்கும் வீசுகிறது; மோடிதான் அடுத்த பிரதமர் என்று தனக்கே உரித்தான முறையில், நீட்டி முழங்கி இருக்கிறார்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினையை முன்னிறுத்தி, காங்கிரஸ் தோல்வி தமிழக மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால், ஈழத் தமிழர் பிரச்சினையில் பி.ஜே.பி., தமிழர்களின் உணர்வைப் பிரதிபலிக்கக் கூடியது என்று சொல்ல வருகிறார் என்றால், அதைவிட நகைச்சுவை வேறு ஒன்று இருக்க முடியாது.

சென்னையில் நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் பி.ஜே.பி.பற்றி ஒரு முக்கிய தகவலைத் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது, பி.ஜே.பி. அதற்கு முட்டுக்கட்டை போட்டது; இன்னொரு நாட்டுப் பிரச்சினையில் இந்தியா எப்படி தலையிடலாம் என்று கூறிவிட்டது என்று கூறி இருக்கிறாரே - இதுவரை பி.ஜே.பி. தரப்பிலிருந்து மறுப்பு உண்டா?

பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியா பயிற்சி அளிக்கவில்லையா? தமிழக மீனவர்கள்தான் தாக்கப்படவில்லையா?

குளிக்கப் போய், சேற்றில் விழலாமா?

Read more: http://viduthalai.in/page-2/71835.html#ixzz2nAwuEDMI

தமிழ் ஓவியா said...


2ஜி கூட்டுக்குழு அறிக்கை: கலைஞர் கருத்து

சென்னை, டிச.11- 2ஜி தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்த கருத்து வருமாறு:

கேள்வி :- அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு, பா.ஜ.க., மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவித் திருக்கி றார்களே?

கலைஞர் :- குற்றம் சாட்டப்பட்டவரையே விசாரிக்காமல் - அவர் தன்னை விசாரிக்க வேண்டு மென்று கோரிக்கை வைத்த பிறகும் அவரை அழைக்காமல் - அந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது. அந்த அறிக்கையை தி.மு. கழகம் மட்டுமல்ல; விதிமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்படவில்லை என்றும், நாடாளுமன்ற வரலாற்றில் இன்று மோசமான நாள் என்றும், அது பற்றிப் பேசவே வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா கூறியிருக்கிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், இந்த அறிக்கையை நாங்கள் புறக்கணிக்கிறோம், இது திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட மோசடி அறிக்கை, பிரதமர் உள்ளிட்டோரைத் தப்பிக்கச் செய்வதற்காக திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசும்போது, பி.சி. சாக்கோ அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை யானது முழுமையற்ற, வேண்டுமென்றே தன்னிச்சை யாக, உரிய ஆவணங்கள் இன்றி தயாரிக்கப்பட்ட அரைகுறையான அறிக்கை. இன்னமும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து கொண்டி ருக்கும் ஆ.ராஜா இந்தக் குழுவில் சாட்சிய மளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறியதோடு, இந்த அறிக்கை தாக்கல் செய்யப் பட்டதை எதிர்த்து கழக உறுப்பினர்கள் வெளி நடப்புச் செய்திருக்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-3/71846.html#ixzz2nAxCxhkd

தமிழ் ஓவியா said...


இலங்கைக் கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பதா? நாடாளுமன்றத்தில் தி.மு.க. எதிர்ப்பு

புதுடில்லி, டிச.11-இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பது குறித்து டில்லி மாநிலங் களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் பிரச்சினை எழுப்பினர்.

இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பது குறித் தும், இந்திய மீனவர்கள் தொ டர்ந்து இலங்கையால் சிறை பிடிக்கப்படுவது குறித்தும் விவா திக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி, மாநிலங் களவை தலைவருக்கு மனு அளித் திருந்தார்.

ஆனால், இதற்கு நேரம் ஒதுக்க மறுத்ததால், கனிமொழி தலைமையில் தி.மு.க. உறுப்பி னர்கள் பிரச்சினை எழுப்பினர்.

இலங்கைக் கடற்படைக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த எதிர்ப்புகளையும் மீறி கடற்படையினருக்கு பயிற்சி அளிப்பது நிறுத்தப்படவில்லை. இதேபோல, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து இலங்கை சிறையில் இருந்து வருகின்றனர்.

இந்த மீனவர்களை விடுவிக் கவும், மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இதுகுறித்து விவாதிக்க வேண்டுமென்று, கனிமொழி எழுப்பிய கோரிக்கையை மாநிலங் களவை தலைவர் ஏற்க மறுத்தார். இதையொட்டி, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையில் முழக்கங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

நாடாளுமன்ற தலைமை செயலாளருக்கு 193ஆம் பிரிவின் கீழ் ஆ.ராசா ஒரு மனு அளித்தார்.

அதில், அரைகுறையாகவும், நடைமுறைக்கு ஒவ்வாத வகை யிலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த கூட்டுக்குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் முன் வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் நாடாளு மன்ற விதிமுறைகளில் வரை யறுக்கப்பட்டுள்ள நடைமுறை களுக்கு எதிராகவும், தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் முன்வைக்கப் பட்டுள்ளதால் இந்த அறிக்கை குறித்து அவையில் விரிவாக விவா திக்க வேண்டும் என்று கூறியுள் ளார்.

193ஆம் விதியின் கீழ் நடை பெறும் விவாதத்தில் வாக்கெடுப்பு கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது. மாநிலங்களவை துணைத் தலைவரான பா.ஜனதா எம்.பி. ரவிசங்கர் பிரசாத்தும், 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான கூட்டுக்குழு அறிக்கை விவாத மின்றி ஏற்றுக் கொண்டது தவறு என்று குற்றம்சாட்டினார்.

Read more: http://viduthalai.in/page-5/71810.html#ixzz2nAxYQicR