Search This Blog

11.12.13

பெரியார் பேருருவச் சிலை ஏன்?


கல்விக்குக் கடவுள் சரஸ்வதி, அதற்கு ஆண்டுதோறும் விழா! அதா வது சரஸ்வதி பூஜை. ஒன்பது நாட்கள் கொலுப் பொம்மைகளை வரிசை கட்டி வீடுகளில் அலங்காரம்! அதுவும் விஜய தசமி என்று அன்று தான் குழந்தைகள் கல்வி கற்கத் தொடங்கும் நாள்! அதற்கும் பார்ப்பனர்களுக்குத் தானம், தருமம் என ஆக்கித் தமிழனின் அறிவைக் குழந்தைப் பருவத்திலேயே முளையிலேயே கிள்ளிவைக்கும் ஆரியப் பண்பாடாய் தமிழ் இனம், தமிழ்ச் சமுதாயம் எந்த அளவு சீரழிந்து சின்னா பின்னமாகி விட்டது!
இதில் கூட பிராமணன் வந்துதான் அப்பியா சதார்த்தம் செய்து வைக்க வேண்டும் என்ற ஒரு நிலை எத்தனை நூற்றாண்டுகளாக நீடித்தது! என்றா லும் பார்ப்பானுடைய மொழி தமிழா! இல்லை! அவன்தான் தமிழை நீச பாஷை என்று கூறி செத்த(வட) மொழி யான சமஸ்கிருதத்தைத்தான் தேவ பாஷை என்று கூறிவிட்டானே.

தமிழ், வாழ்வில் தவிர்க்க முடியாத மொழி எனவே பார்ப்பனர்கள் தமிழையே வழக்கு மொழியாக வைத்துக் கொண்டு தங்கள் இல்லங்களில்கூடத் தாங்கள் பேசும் மொழி தமிழாகவே இருக்கும் போது, தமிழனை கோவிலுக்கு வெளியே நிறுத்தி கருவறைக்குள் போகும்போது வடமொழியை எடுத்து விடுகிறானே தமிழன் என்றாவது எவனாவது இதை உணர்ந்தானா?

ஏண்டா நான் பேசும் மொழியை நீயும் பேசுகிறாய்! நான் உண்ணும் உணவு தண்ணீர் எல்லாவற்றையும் நீயும் பயன்படுத்துகிறாய். கோவிலுக்குள் மட்டும் வரக்கூடாது என்கிறாயே என் னடா நியாயம்? என்று எவன் கேட்டான்? மூன்றே விழுக்காடு பார்ப்பான் உன்னை அடிமையாக்கி உன் முதுகிலேறிச் சவாரி செய்கிறானே! உன் வீட்டில் நடக்கும் நல்லது கெட்டதுக்கு அவனையே அழைக்கிறாயே ஏன்? எதனால் என்று சிந்தித்தாயா? இந்தக் கேள்வியைத் தந்தை பெரியார் 65 ஆண்டு காலமாகக் கேட்டு, மறைந்தாரே தமிழா உனக்கு இன்னும் உணர்வு வரவில்லையே?

மடிகட்டிக் கோயிலிலே மேலுடையை வரிந்து கட்டிப் பொடிகட்டி இல்லாது பூசி இரு கை கட்டி, பார்ப்பானுக்குப் படிகட்டி அவன் நின்ற படிக்கட்டின் கீழ்நின்று தன்மானத்தை இழக்கிறாயே! உன்னை விட அவன் (பார்ப்பான்) எந்த வகையில் உயர்ந்தவன்? எண்ணிப் பார்த்தாயா? உனக்கு ஆயிரமாயிரம் கடவுள்களையும், கோயில்களையும் கற்பித்தானே! உன் தாய்மொழியான தமிழைக் கற்பித் தானா? காணுமிடமெல்லாம் கோயில் களைக் கட்டினான். உனக்கு உன் தாய் மொழியான தமிழைக் கற்பித்தானா?

2000 ஆண்டுகளில் 400 ஆண்டுகள் மட்டுமே தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஊருக்கு ஊர் பள்ளிக் கூடங்களைக் கட்டினார்களா? இல்லை கோயில்களைக் கட்டினார்கள். அதில் பார்ப்பனர்கள் கற்பித்த புராணப்படி, கடவுள் பொம்மைகளை உண்டாக் கினார்கள்.

திறமை வாய்ந்த கலையுணர்வு கொண்ட ஸ்தபதிகளை (சிற்பிகளை) கொண்டு பார்ப்பான் நினைத்தப்படி யெல்லாம் கடவுள் பொம்மைகளை வைத்தான். அதைக் கண்ட தமிழர்கள் அவைகளை வணங்கினார்கள்.
உயர்ந்த கோபுரங்களை எழுப் பினார்கள், அதில் புராணத்தில் புளுகி வைத்துள்ள பொம்மைகளையெல்லாம் பதிய வைத்தார்கள்.
சோழ மன்னர்கள், பல்லவ மன் னர்கள் காலத்திலேதான் தமிழ்நாட்டில் கோயில்கள் பெருகின. சேரனோ, சோழனோ, பல்லவனோ, பாண்டியனோ எங்கேயாவது அவர்கள் பெயரில் தமிழ் பள்ளிக் கூடங்களைக் கட்டியிருக் கிறானா?

ஆள வந்த மன்னர்கள் மக்கள் பணத்தையும், ஏழை எளியவர்களின் உழைப்பையும் பயன்படுத்தி, கண்டபடி கோயில்களைக்கட்டி, அதற்கு ஏராள மான நிலங்களையும், சொத்துக்களையும் எழுதி வைத்து தங்கள் பெயரையும் கல்வெட்டுக்களிலே பொறித்துக் கொண்டார்கள்.

பார்ப்பானுக்கு ஊர் ஊராக நிலங் களைத் தந்து அவைகளுக்கு பார்ப் பனர்களையே உடையவர்களாக்கிக் கொண்டார்கள். அதிலே தமிழ் மன்னர்கள் தங்களது கல்வெட்டுகள், செப்பேடுகள், சிலசாசனங்கள், பட் டயங்கள் எனப் பதித்துக்கொண் டார்கள். சதுர்வேதி மங்கலங்கள் உத்தமதானபுரங்கள், மகாதானபுரங்கள் என தஞ்சை மாவட்டம் முழுவதுமே பார்ப்பனர்களுக்குத் தமிழ் மன்னர்கள் தானமாக இலட்சக் கணக்கான ஏக்கர் நிலங்களை வழங்கியுள்ளனர்.

இன்றைக்குத் தஞ்சையிலே கொண் டாடுகிறார்களே சதயவிழா, தஞ்சையை ஆண்ட இராஜராஜசோழனுக்குப் பாராட்டு விழா எதற்கு?
அவ்வளவு பெரிய கோயிலை, தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி னானே ராஜராஜசோழன் அவனைப் பாராட்டவாம். ராஜராஜன் தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டினானே அவன் அந்தக் கோயிலுக்குள் நுழைய முடிந் ததா?

கோயிலுக்கு வெளியே காவல் காரனைப் போலக் கொண்டு போய் நிறுத்திவிட்டானே பார்ப்பான், ராஜ ராஜன் கோவிலுக்கு வெளியே அவனது வாகனமான நந்தி கோயிலுக்குள்ளே! எத்தனை தமிழர்களுக்குச் சூடு சொரணை வந்தது? ராஜராஜ சோழன் நினைத்திருந்தால் தஞ்சைப் பகுதியில் எத்தனை தமிழ்ப் பள்ளிகளை உரு வாக்கியிருக்க முடியும்?

எங்காவது உண்டா? ராஜராஜன் பெயரால் தஞ்சை மாவட்டத்தில் எங் காவது ஒரு சிற்றூரில் தொடக்கப்பள்ளி உண்டா?

அதே நேரத்தில் சமஸ்கிருதப் பள்ளிகள் எத்தனை? எத்தனை?

ராஜராஜனுடைய இயற்பெயரே அருண்மொழித்தேவன் பார்ப்பான் என்ன செய்தான்? பெரிய கோயில் கட்டியதற்காக அருண்மொழித்தேவன் என்ற பெயரை இராஜராஜ சோழன் என்று மாற்றிவிட்டானே! இராஜராஜ சோழன் பரம்பரையில் ஒரு இளவரசன் கல்வி கற்காதவனாக இருந்திருக் கிறான் என்று வரலாற்றுக் குறிப்புக் கூறுகிறது.

சோழன் பரம்பரையே கல்வியில் கவனம் செலுத்தி தமிழ் வளர்க்காத காரணத்தால், அந்த வம்சத்திலேயே படிக்காத மன்னனும் இருந்திருக் கிறான், கணவாய் வழியாக வந்த பார்ப்பான் ஆங்கிலேயனை அண்டி அடிமையாகி ஆங்கிலம் கற்றுக் கொண்டான். பிறகு தமிழ் மன்னர்களை அண்டித் தமிழ் கற்றுக் கொண்டு மன்னர்களுக்கு வடமொழி கற்றுக் கொடுத்தது மட்டுமின்றி மன்னர்களின் அரண்மனைக்குள் புகுந்து அந்தப்புரம் வரை சென்று அரசர்களுக்கு ராஜகுருக் களாக, அமைச்சர்களாக ஆட்சியையே இயக்கும் ஆற்றலாளர்களாகிவிட்டார் கள்.

இதுவரைக்கும் தமிழ் வளர தமிழ் மக்கள் அறிவு வளரக்கல்வி கற்றுக் கொடுக்கவில்லை. ஒரு பள்ளிக்கூடம் கூடத்திறக்கப்படவில்லை. மாறாக கோயில்களைக்கட்டி பெருக்கினான்.

தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடி அருகே புன் னைக்காயல் என்ற சிற்றூரில் 1567-ஆம் ஆண்டு முதல் பள்ளிக்கூடம் தோற்றுவிக்கப்பட்டது. அதற்கு முன்பு தமிழ்நாட்டில் பள்ளிக்கூடமே இல்லை (பேராசிரியர் க.ப.அறவாணன்) கத் தோலிக்கப் பாதிரிமார்கள் தங்கள் சமயத்தைப் பரப்புவதற்காகத் தமிழ் பள்ளிக் கூடங்களைத் துவக்கினார்கள். அதன் பிறகுதான் கிறித்துவ சமய வளர்ச்சிக்காக ஆங்காங்கே பள்ளிகள் உருவாகின. மருத்துவமனைகள் உரு வாகின. கிறித்துவர்கள் தங்கள் சம யத்தைப் பரப்புவதற்காக தமிழ் பள் ளிக்கூடங்களை, மருத்துவமனைகளை உருவாக்கினார்கள். ஓரளவு தமிழர்கள் கல்வி கற்க உதவியாக இருக்கிறது.

பார்ப்பனர் என்ன செய்தார்கள்?

இருந்த 6000 பள்ளிகளை மூடினான். பாதி நேரம் படிப்பு, மீதி நேரம் குடும் பத்தொழில் என்று தமிழனின் அறிவுக் கண்களில் மண்ணை அள்ளிப்போட் டான். தமிழர்களை வாழ விட்டானா?

தந்தை பெரியாரும், காமராசரும் தானே பார்ப்பானின் இந்தச் சூழ்ச்சியில் இருந்து தமிழனை மீட்டனர்.

தமிழன் கட்டிய கோயில்களில், தமிழர்கள் கோவிலுக்கு முன்புள்ள துவஜஸ்தம்பத்துக்கும் அதாவது கொடிமரத்திற்கும் வெளியே நின்றுதான் வணங்க வேண்டும். கோவிலைக் கட்டி, சிலையைச் செதுக்கி கோயில் கரு வறைக்குள் கொண்டு போய் வைத்து விட்டவுடன் அவன் சூத்திரனாக்கப் பட்டுப் பின்னர் ஒதுக்கி வைக்கப் பட்டுள்ளான்.

இந்த நிலையை மாற்றுவதற்குத்தான் நம் அருமைத் தமிழர் தலைவர் தளபதி கி.வீரமணி அவர்கள் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் தந்தை பெரியார் உலகம் அமைக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் மேற்கொண்டுள்ள, நாடு பயக்கும் நல்லதொண்டு அய்யா பெரியாரை உலக மயப்படுத்தும் உறுதியாக!

---------------------- பரமத்தி சண்முகம், கரூர் அவர்கள் எழுதிய கட்டுரை “விடுதலை” 11-12-2013

31 comments:

தமிழ் ஓவியா said...

வீசியது மோடி அலை அல்ல - வலை! காங்கிரஸ் தன் தவறுகளைத் திருத்திக் கொள்ளட்டும்!

நடந்து முடிந்த தேர்தல் முடிவின் பின்னணி என்ன?

வீசியது மோடி அலை அல்ல - வலை!

காங்கிரஸ் தன் தவறுகளைத் திருத்திக் கொள்ளட்டும்!

விலைவாசியைக் கட்டுப்படுத்துவது அவசியம்!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

வடக்கில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்தப் பின்னணியைக் கொண்டவை என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் கணிப்பும், கருத்தும் கலந்துள்ள அறிக்கை வருமாறு:

டில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வந்து இரண்டு நாள்கள் ஆகின்றன.

இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது.

மிசோரமில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

டில்லியில் மொத்தம் 70 இடங்களில், பா.ஜ.க. 31; ஆம் ஆத்மி என்ற புதுக்கட்சி 28 இடங்கள்; காங்கிரஸ் 8 இடங்கள்; 2 இடங்களில் சுயேச்சைகள் என்ற இழுபறி - அதாவது அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் தகுதி, முதல், இரண்டு வரிசையில் உள்ள கட்சிகளுக்குக் கிடைக்கவில்லை.

தமிழ் ஓவியா said...

டில்லி தேர்தல் - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி நிலை!

எனவே, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற பழமொழிக்கொப்ப அவை உள்ளன! பா.ஜ.க.வுடன் எக்காரணம் கொண்டும் செல்லமாட்டோம்; எதிர்க்கட்சியாகவே இருக்கத் தயார் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்றும் கூறியுள்ளார்.

அநேகமாக - இந்நிலையே நீடித்தால், சிறிது காலம் குடியரசுத் தலைவர் (President‘s Rule) ஆட்சி வரக்கூடும். அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளைப் பொறுத்தது அது!

இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தும் உண்மைகள் என்ன?

காங்கிரஸ்மீது கடுங்கோபம்!

1. காங்கிரசின்மீது வாக்காளர்கள் எல்லா இடங்களிலும் (மிசோரம் தவிர) கடுங்கோபத்துடன் உள்ளனர். அதனால்தான் தன் வசமிருந்த டில்லி ஆட்சி, ராஜஸ்தான் ஆட்சிகளை இழந்ததோடு, தான் கைப்பற்ற முனைந்த மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கரிலும்கூட ஆட்சி அமைக்கும் வாய்ப்பை அது பெற முடியவில்லை.

விண்ணைமுட்டும் விலைவாசி!

காரணம், விண்ணை முட்டும் விலைவாசி ஏற்றம் - பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் இவைபற்றி முதலாளிகள் இஷ்டம்போல் விலையேற்ற அனுமதிக்கும் கொள்கை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு, எந்த முடிவையும் உடனுக்குடன் எடுத்து அறிவித்து, உறுதியோடு அதைச் செயல்படுத்த தவறியமை, கூட்டணி அரசியலில் கூட்டணிக் கட்சிகளை இழந்து, எதிர்ப்பு வரும்போது தங்களை மட்டும் காப்பாற்றி, நட்புறவுள்ளவர்களை அம்போவென்று விட்டுவிடுதல், பிரதமர் தனது சகாக்களின் செய்கைக்கும், தான் கூட்டுப் பொறுப்பு (Vicarious Responsibility) ஏற்கத் தயங்கியது; அதனால் ஊழலோ, ஊழல் என்று ஓங்காரக் கூச்சல், உறுதியோடு உடனுக்குடனே முடிவு எடுத்திருந்தால், பல்வேறு பிரச்சினைகள் புதிது புதிதாக முளைத்திருக்காது; சொந்தக் கட்சியில் பல்குழுவும் பாழ்செய்யும் மனப்பான்மையும் ஊடுருவிய நிலையில், அதற்குரிய சிகிச்சையை அவ்வப்போது செய்யத் தவறியமை!
2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முரண்பாடான நிலை

2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜீரோ நட்டம் (Zero Loss) என்று நாடாளுமன்றத்தில் கூறிவிட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சர்மீது வழக்கு என்று போட்டு, சிறையில் அடைத்து ஒரே பிரச்சினைக்கு இரண்டு ஜே.பி.சி. குழு விசாரணை என்ற கேலிக்கூத்து, அதிலும்கூட (இரண்டாவது) குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சரின் வாக்குமூலத்தை நேரில் அழைத்துக் கேட்டு, அறிக்கை தராததால், இன்றும் எதிர்க்கட்சிகளின் கடுந்தாக்குதல் - காலந்தாழ்ந்த முடிவான தெலங்கானா பிரச்சினை போன்று பலப்பல.

காங்கிரஸ் தலைமை ஆழமாக யோசித்து மிகப்பெரிய மாற்றங்களை செய்தாலொழிய அது தேறாது; வழியே இல்லை!

அந்த வெறுப்பு - எதிர்ப்புதான் பா.ஜ.க.வின், மற்ற எதிர்க்கட்சிகளின் அறுவடை! மற்றபடி மோடி அலையேதும் - பிரச்சாரம் செய்யப்படுவதுபோல் இல்லை. அது உண்மையானால், டில்லியில் அடுத்த கட்சிகள் காணாமற் போய் இருக்கவேண்டுமே! சட்டீஸ்கரில் அபரிமிதமான இடங்கள் வந்திருக்கவேண்டுமே! (மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் பி.ஜே.பி. ஆதரவு மாநிலங்கள் முன்பே!).

மோடி அலையா?

ராஜஸ்தான் ஆட்சியை காங்கிரஸ் இழந்தது - மத்திய பிரதேசத்தில் சவுகான் பா.ஜ.க. முதல்வர் எடுத்த பெயர் - சாதனை (அத்வானியே மோடிக்குப் பதிலாக பிரதமர் வேட்பாளராக மத்திய பிரதேச முதல்வர் சவுகானை முன்னிறுத்தி கூறவில்லையா?).

இப்படிப்பட்ட நிலையில், மோடி அலை அல்ல; மோடி வலைதான் விரிக்கப்பட்டது! சில சிறிய மீன்கள்தான் சிக்கின - பெரிய மீன்கள் வலையில் விழவில்லை என்பதே நிதர்சனமான உண்மை!

கடைசியாக, இதே போக்கு 5 மாதம் கழித்து வரும் பொதுத் தேர்தலில் பிரதிபலிக்கும் என்பது பிரச்சாரமே தவிர, யதார்த்த அரசியல் அனுபவ உண்மையல்ல; அதை காலம் உணர்த்தும்!

ஆரூடம் பலனளிக்காது!

மோடியின் பேச்சுகளே அவருக்கு எதிராக அமையக்கூடும்; ஏற்கெனவே அமைந்துள்ளது!
ஒரே நாளில்கூட தேர்தல் முடிவுகள் மாறிய வரலாறு உண்டு.

எனவே, 5 மாதங்கள் கழித்து வரும் பொதுத் தேர்தலுக்கு இப்போதே ஆரூடம் கூறுவது, ஆசைகளைக் குதிரைகளாக்கி சவாரி செய்யும் வேடிக்கையும், விந்தையும் நிறைந்த நிலையாகும்!

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.சென்னை 11.12.2013

Read more: http://viduthalai.in/e-paper/71805.html#ixzz2nAvk9rXP

தமிழ் ஓவியா said...


கேரளாவில் பல தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தமிழர்களை வெளியேற்றுவதா?

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி, சோலையூர், புதூர், அகழி, பாலூர், சாவடியூர் போன்ற கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் பல ஆண்டுகளாக விவசாயத்தினை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு உழைக்கும் மக்கள் ஆவார்கள். அவர்கள் கேரள மாநில வாசிகளே!

இவர்கள் பழங்குடி மக்களிடமிருந்து நிலத்தை முறையாகப் பெற்று (விலை கொடுத்து வாங்கி) பத்திரப் பதிவும் செய்து வரி செலுத்தி வந்தனர். 1986 இல் அந்த நிலங்களை வாங்கியது செல்லாது என கேரள அரசு அறிவித்தது.

அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர். ஆதரவுடன் பெரிய அறப்போர் வெடித்தது; அப்போது பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டது.

இப்போது கேரள அரசின் கெடுபிடி காரணமாக அவர்கள் நிலங்களை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கேரளாவாழ் அட்டப்பாடி தமிழர்கள் ஒருங்கிணைந்த போராட்டத்தை - அறவழிப்பட்ட எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்!

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனே தலையிட்டு, கேரள முதலமைச்சருக்குக் கடிதம் எழுதிடவும், தேவைப்பட்டால், தொலைப்பேசிமூலம் பேசி, இப்பிரச்சினையை சுமூகமாக, முன்பு எம்.ஜி.ஆர். காலத்தில் முடிவுக்குக் கொண்டு வந்ததுபோல செய்யவேண்டும்!

மத்திய அரசும் இப்பிரச்சினையில் தலையிட்டு, கேரள அரசுடன் பேசவேண்டும்; அவசரம், அவசியம்!

இரண்டு மாநில மக்களின் நல்லுறவு பாதிக்கப்படாமல் வாழை இலை முள்ளை அகற்றுவதுபோன்று, மென்மையும், உறுதியும் கலந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்து அதன்மூலம் நல்ல பயன் கிடைக்கச் செய்யவேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இத்தமிழர்களின் உடைமைகள் அவை

எனவே, நியாய அடிப்படையில் அவர்களை வெளியேற்றுவது மிகப்பெரிய தவறு; சமூகநீதி அவர்களுக்கும் தேவை.

பழங்குடியினருக்கான நிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துவிட்டு, பல தலைமுறைகளாக அந்தப் பகுதியைத் தம் உழைப்பின்மூலம் வளப்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களை வெளியேற்றுவது எந்த வகையில் நியாயமாகும்? பழங்குடி மக்களுக்கு நியாயம் வழங்க எத்தனையோ வழிகள் உண்டு; அதுபற்றி கேரள அரசு சிந்திக்கட்டும்!

ஒரு பக்கத்தில் ஒருமைப்பாடு பேசிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் அதற்கு உலை வைப்பது தேசியமா? என்பதும் முக்கியமான கேள்வியாகும்.

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை 11.12.2013

Read more: http://viduthalai.in/e-paper/71806.html#ixzz2nAvtzpxL

தமிழ் ஓவியா said...


நிறவெறி எதிர்ப்பையும் கடந்த மனிதநேய மாண்பாளர் நெல்சன் மண்டேலா

நிறவெறி எதிர்ப்பையும் கடந்த மனிதநேய மாண்பாளர் நெல்சன் மண்டேலா வரலாற்றில் இடம் பெற்றவர் அல்ல; வரலாற்றையே படைத்தவர்!

சென்னை பெரியார் திடலில் மண்டேலாவின் படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் நினைவேந்தல்!


சென்னை, டிச. 11- தென் னாப்பிரிக்கா நாட்டில் நிலவிய கறுப்பின மக் களை அடக்குமுறைக்கு ஆட்படுத்திய நிற வெறி யினை எதிர்த்துப் போரா டிய நாயகர், நெல்சன் மண்டேலா அந்நிலையி னையும் தாண்டிய மனித நேய பண்பாளர். அந்த வகையில் நெல்சன் மண் டேலா வரலாற்றில் இடம் பெற்றவர் அல்ல; வரலாற்றையே படைத் தவர் என நெல்சன் மண்டேலா மறைவினை ஒட்டி நடைபெற்ற நினைவேந்தலில் தமிழர் தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டார்.

சென்னை - பெரியார் திடலில் 10.12.2013 அன்று மாலை நிறவெறி எதிர்ப் புப் போராளி நெல்சன் மண்டேலாவிற்கு நினை வேந்தல் நடைபெற்றது. திராவிடர் கழகம், பகுத் தறிவாளர் கழகம் மற் றும் பெரியார் நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய நெல்சன் மண்டேலா நினைவேந்தல், அன்னை மணியம்மையார் அரங் கத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

நினைவேந்தல் நிகழ் விற்கு திராவிடர் கழகத் தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழகத் தின் பொதுச் செயலா ளர் வீ.குமரேசன் முன் னுரை ஆற்றினார். மண் டேலா பற்றிய குறிப் புகள் மற்றும் கருத்துரை யினை திராவிட தமிழர் இயக்கப் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன் வழங்கி னார். மண்டேலாவின் ஒளிப்படத்தினை திறந்து வைத்து பெரியார் இயக்கத்தின் தலைவர் தமிழர் தலைவர் கி.வீர மணி நினைவேந்தல் உரையாற்றினார். முதல் நிகழ்வாக நெல் சன் மண்டேலாவின் ஒளிப்படத்தினை தமி ழர் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தபொழுது நினைவேந்தலுக்கு வருகை தந்திருந்த அனைத்து தரப்பினரும் எழுந்து நின்று மண் டேலாவின் மறைவிற்கு மரியாதை செலுத்தினர்.

பகுத்தறிவாளர் கழ கப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தனது முன் னுரையில் குறிப்பிட்ட தாவது:-


தமிழ் ஓவியா said...

95 ஆண்டு காலம் வாழ்ந்து நீண்ட காலம் பொது வாழ்க்கைக்குச் சொந்தமான நெல்சன் மண்டேலா 27 ஆண்டு காலம் சிறையில் இருந் தார். கறுப்பின மக் களின் வாழ்வாதார உரி மைகளுக்காக தென் னாப்பிரிக்க நாட்டு

வெள்ளைக்கார அரசினை எதிர்த்துப் போராடி னாலும், அடிப்படையில் மண்டேலா மனித சமத்துவத்திற்காகப் பாடுபட்ட மனித நேயப் போராளி ஆவார். மதவெறி அடிப்படையிலான வர்ண (அ)தர்மத்தை எதிர்த்துப் போராடிய தந்தை பெரியாரைப் போன்று, தென்னாப்பிரிக்காவில் நிலவிய சமூக அரசியல் அதிகாரம் சார்ந்த நிற வெறியினை எதிர்த்து மண்டேலா போராடினார். இரு பெரும் புரட்சிப் போராளிகளும் 95 ஆண்டு காலம் வாழ்ந்து மக்கள் மேம்பாட்டிற்குப் பாடுபட்டார்கள். தென்னாப் பிரிக்க மக்கள் கடைப்பிடித்த மதம் மனிதரைப் பாகு படுத்திப் பார்க்கவில்லை. கடைப்பிடித்த மனிதர்கள் தான் மனிதரை வேறுபடுத்திப் பார்த்தனர். ஆனால் இந்நாட்டில் மதமே மக்களை பிறப்பின் அடிப் படையில் கூறு போட்டு, பாகுபடுத்திப் பார்க்கிறது. தென்னாப்பிரிக்க நாட்டு நிறவெறி எதிர்ப்பினை பாராட்டிப் பேசும் இந்நாட்டு அரசு, வர்ண வெறியை மதப் போர்வை கொண்டு சட்டப்பாதுகாப்பு அளித்து வருவது விந்தையானது. வர்ண கோட்பாட்டை எதிர்க்கும் பெரியார் இயக்கம் நிறவெறியினை எதிர்த்த வாழ்ந்த நெல்சன் மண்டேலாவிற்கு நினைவேந்தல் நடத்துகிறது.

கவிஞர் கலி.பூங்குன்றன்

நினைவேந்தலுக்கு தலைமைவகித்த கவிஞர் கலி.பூங்குன்றன் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

நிறவெறியினை எதிர்த்துப் போராடி, வெள்ளையர் அரசினை நீக்கி, மக்கள் ஆதரவுடன் தேர்தலில்நெல்சன் மண்டேலா வெற்றிபெற்றார். கறுப்பின முதல் அதிபராக நெல்சன் மண்டேலா பொறுப்பேற்ற பொழுது அமைச்சரவை யினை அவர் தெரிந்தெடுத்து அமைத்த விதம் அவரை நிறவெறி எதிர்ப்பினைத் தாண்டிய மனித பண்பாளராக வோ காட்டியது. எந்த வெள்ளைக்கார அரசினை நீக்கிட பாடுபட்டாரோ, அந்த வெள்ளைக்கார அரசில் அதிபராக இருந்தவரை தனது அமைச்சரவையில் துணை அதிபராக சேர்த்துக் கொண்டார். வெள்ளைக்காரர் காட்டிய அடக்குமுறை எந்தளவு அநியாயமானதோ அந்த அளவு கறுப்பின மக்கள் காட்டும் அடக்கு முறை என்பதில் மண்டேலா எச்சரிக் கையாகவும் இருந்தார். தனது பதவி ஏற்பு நிகழ்விற்கு, தான் ராபன் தீவுச் சிறையில் நீண்ட காலம் இருந்த பொழுது பணி ஆற்றிய சிறை அதிகாரியையும் அழைத்திட்ட பாங்கு நெல்சன் மண்டேலா எந்த அளவிற்கு மனித நேயம் சார்ந்து விளங்கினார் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டு.

அய்ந்தாண்டு காலம் மக்கள் ஆதரவுடன் அதிபராக இருந்தாலும் அதற்குமேல் அரசு அதிகாரத்தில் நீடிக்க நெல்சன் மண்டேலா விரும்பவில்லை. அப்படிப்பட்ட அதிகார நீடிப்பு சர்வாதிகாரத்திற்கு வழிகோலும் என்பதில் உறுதியாக இருந்தார். பொது வாழ்வில் மெச்சத்தகுந்த பண்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக விளங்கினார் நெல்சன் மண்டேலா. நிறவெறி அரசு நீக்கப் போராடி, அரசு அதிகாரத்தில் இருந்து, பின்னர் தொடரும் நிலைகள் இருந்த சூழலிலும் அதிகாரத்தின் மீது ஆர்வம் காட்டாமல் பொது வாழ்க்கையில் நீடித்த பெருமை நெல்சன் மண்டேலாவிற்கு உண்டு.

நிறவெறி அரசு நீக்கப்பட்ட சூழலிலும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் அங்கம் வகிக்கின்ற 15 பேரில் 13 பேர் வெள்ளைக்காரர்கள் மீதமுள்ள 2 பேர் மட்டுமே கறுப்பின விளையாட்டு வீரர்கள். வெள்ளைக் காரர்கள் ஆப்பிரிக்காவிற்கு வரும்பொழுது மதப் பிரச்சார நிமித்தமாகத்தான் வந்தனர். பூர்வீக குடிமக் களான கறுப்பின மக்களிடம் பைபிளை கொடுத்து விட்டு போதனை செய்தனர். பைபிளை வாங்கி மத நம்பிக்கையில் மூழ்கியவர்கள் கண் திறந்து பார்த்த பொழுது கறுப்பின மக்களின் வசம் பைபிள் மட்டுமே இருந்தது. கறுப்பின மக்களின் நாடு வெள்ளையர் வசம் சென்றுவிட்டது என வேடிக்கையாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட அடிமை நிலையிலிருந்து கறுப்பின மக்களை மீட்டெடுத்து பெருமை நெல்சன் மண்டேலா வையே சாரும்.
இவ்வாறு கவிஞர் கலி.பூங்குன்றன் தனது உரையில் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

நினைவேந்தலில் நெல்சன் மண்டேலா பற்றி கருத்துரை வழங்கிய திராவிடர் இயக்கப் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

தென்னாப்பிரிக்க நாட்டின் முதல் கறுப்பின தலைவரான நெல்சன் மண்டேலா இறக்கும் பொழுது அதிபர் பதவியில் இல்லை. இருப்பினும் அவரது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏறக்குறைய 90 நாடுகளி லிருந்து அவற்றின் அதிபர்கள், முக்கிய அதிகாரத்தினர் வருகை தரவிருக்கின்றனர் என்பதே நெல்சன் மண்டேலா நல்ல பண்பாளர், உலகலாவிய தலைவர் என்பதை தெரிவித்திடும். நிறவெறி எதிர்ப்புக்கு போராட் டத்தில் கைது செய்யப்பட்டு ராபன் தீவில் சிறைவாசம் செய்த காலத்தில் சுண்ணாம்புப் பாறையினை உடைத்து எடுக்கும் பணியினை கடுங்காவல் தண்டனைக் கைதியாக மனமுவந்து செய்து வந்தார். இந்த நிலையில் இந்நாட்டு வர்ண வெறியினை எதிர்த்துப் போராடிய தந்தை பெரியார் பெல்லாரி சிறையில் கைதியாக கல்லுடைத்த வரலாற்றையும் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. கடுங்காவல் தண்டனையினை நடைமுறைப்படுத்திய சிறை அதிகாரியினையும் பின்னர் தான் அதிபராக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு அழைத்த நெல்சன் மண்டேலாவின் பண்பு அவரது மாண்பினை பறை சாற்றுவதாக இருந்தது.

அதிபராவதற்கு முன்பு வெள்ளையரின் ஆதிக்கத்தை ஏற்க முடியாது என போராடிய மண்டேலா அதிபரான பின்னர் கருப்பர்களின் ஆதிக்கத்தையும் ஏற்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார். சமத்துவ சமுதாயம் காண்பதே மண்டேலாவின் லட்சியக் கனவாக இருந்தது. வெள்ளையர்களையும் சகோதரர்களாகவே பாவித்தார். நிறவெறி எதிர்ப்பு என்பது இனவாதத்தை வலியுறுத்து வதற்காக அல்ல; தன்னுரிமையினை நிலைநாட்டவே என்பதில் மண்டேலா மிகவும் உறுதி காட்டினார்.

தமிழ் ஓவியா said...

ஆயுதம் தாங்கி அடக்கு முறையை எதிர்த்துப் போராடிய, உலகப் பார்வையில் இடம்பெற்ற மூன்று போராளிகளில் நெல்சன் மண்டேலாவும் ஒருவர். மற்றவர் பாலஸ்தீனப் போராளி யாசர் அராபத் இன்னொருவர் தமிழர் ஈழப் போராளி பிரபாகரன். ஆயுதம் தாங்கி அவர்கள் போராட வேண்டிய நிலைக்கு முன்னர், அமைதி வழியில் விடுதலை காண எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததே காரணமாக அமைந்தன. அடக்குமுறையின் சூட்சமம், அழுத்தம் காரணமாகவே ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு அந்தப் போராளிகள் ஆளாக வேண்டி வந்தது.
நெல்சன் மண்டேலாவிற்கு கறுப்பின மக்கள் அரசியல் விடுதலை பெற்று அதிபரான நிலை அவருக்கு முழு மகிழ்ச்சியினை அளித்திடவில்லை. அநீதியாக கறுப்பர் இனம் அவமானப்படுத்தப்பட்ட நிகழ்வுக்கு 150 ஆண்டுகளுக்குப் பின்னர் அயல்நாடு வருத்தம் தெரிவிக் கப்பட்ட நிகழ்வுதான் தமக்கு பெரும் மகிழ்வையும், மன நிறைவையும் அளித்தது என்றார் மண்டேலா.

கறுப்பினப் பெண்களுக்கு அங்கங்கள் பெரிதாக இருப்பதை காட்சிப் பொருளாக்கிட, ஒரு கருப்பினப் பெண்ணை 150 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்வாணப் படுத்தி கண்காட்சியில் வைத்தது இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள். அவமானம் தாங்காமல் அந்தக் கருப்பினப் பெண் இறந்துபோன நிலையிலும் அவளது அங்கங்களை வெட்டி எடுத்து காட்சிப் பொருளாக வைத்து ஆனந்தப்பட்டனர். மண்டேலா அதிபராக இருந்த பொழுதும் அதற்கு முன்னரும் பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டும் காட்சிப் பொருள் நீக்கப்படவில்லை. அறுக்கப்பட்ட அங்கங்கள் திரும்ப கருப்பின நாட்டுக்கு அளிக்கப்படவில்லை. அதிபர் பதவியில் இருந்து விடுபட்ட நிலையிலும் மண்டேலா, பிரான்ஸ் நாட்டிற்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தார். ஒரு நிலையில் பிரான்ஸ் நாடு தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து கறுப்பின பெண்ணின், காட்சிப் பொருளாக வைக்கப்பட்ட அங்கங்களை திரும்ப அம்மக்களிடமே சேர்த்துவிட்டது. மண்டேலா அந்த நாளை பெரும் மனநிறைவுடன் கழித்ததாக குறிப்பிடுவதிலிருந்து, விடாமுயற்சியால், கறுப்பின மக்களின் சுயமரியாதை காக்க மண்டேலா தொடர்ந்து போராடிய நிலை தெரியும்.

அறவழியில் போராடி கறுப்பின மக்களின் உரிமைக்காக அமெரிக்காவில் குரல் கொடுத்து போராடிய மற்றுமொரு நிறவெறி எதிர்ப்புப் போராளி மார்டின் லூதர்கிங். நிறவெறி எதிர்ப்புப் போராட்டம் விரைவான வெற்றியினை எதிர்பார்த்ததல்ல. தொடர்ந்து 385 நாட்கள் பொதுப் பேருந்துகளில் பயணிக்க மறுத்து கறுப்பின மக்கள் நடந்தே சென்று, போராடி தங்களது உரிமையினை பெற்றனர். இந்நாட்டிலும் பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கப்படும் நிலை கண்டு அதை களைந்திட 95 வயது வரை வாழ்ந்து போராடி தனது வாழ்நாளிலேயே பல வெற்றிகளைக் கண்டவர் தந்தை பெரியார், போராளிகள் வாழ்க்கை வெற்றியை மட்டும் எதிர்பார்த்தது அல்ல. போராட்ட நோக்கத்தின் நியாயம் சார்ந்தது என்பதே அனைத்துப் போராளிகளின் வாழ்வு உலகிற்கு தரும் பாடம். இவ்வாறு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தனது உரையில் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் ஆற்றிய நினைவேந்தல்

நிகழ்ச்சியின் நினைவேந்தலில் தமிழர் தலைவர் கி.வீரமணி பேசிய பேச்சின் சுருக்கம்:-
பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் லட்சியம் பற்றி குறிப்பிடுவார். எளிதில் அடைந்து விடக்கூடிய லட்சியம் சிறந்ததாக இருக்க முடியாது. மானிடத்தின் முழுமையான விடுதலைக்கு கடுமையான விலை கொடுக்க நேரிடும். தனது பொது வாழ்க்கைப் பணி பற்றிக் குறிப்பிடுகையில் உரிய விலை கொடுத்து லட்சியம் வெல்லப்பட்டதாகத் தான் பெரியார் சொல்லுவாரே தவிர, தான் செய்தது தியாகம் என்பதாக ஒருபோதும் அவர் சுட்டிக் காட்டியதே இல்லை.

கறுப்பின மக்கள் விடுதலைக்கு நெல்சன் மண்டேலா கொடுத்த விலை மிக மிக அதிகம். 27 ஆண்டுகால சிறைவாசம். அதில் 18 ஆண்டுகள் தீவிர சிறைவாசம். எந்தச் சூழ்நிலையிலும் நெல்சன் மண்டேலா தனது சுயமரியாதையினை விட்டுக் கொடுக்கவில்லை. தாழ்ந்து போவது கூடாது; பிறரை தாழ்த்துவதும் கூடாது என்பதே தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம். மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காக மட்டுமே பிறக்கவில்லை என்பது பெரியாரின் தத்துவம். பிறருக் காக வாழ்ந்து மனித நேயம் பெருகிட போராடிய போ ராளி நெல்சன் மண்டேலா. எனவேதான் மண் டேலா வரலாற்றில் இடம் பெற்றார் என குறிப்பிடுவதை விட வரலாற்றை உருவாக்கியவர் நெல்சன் மண்டேலா என்பதே அவர் வாழ்ந்த வாழ்விற்கு, மானிட மேம் பாட்டிற்கு உழைத்ததற்கு சாலப் பொருந்தும்.

மனிதரை பிரித்தாளும் சமூக அவலங்களுள் ஒன்று நிறவெறி; இன்னொன்று ஜாதி வெறி. இரண்டிலும் மிகவும் கொடுமையானது ஜாதி வெறி. ஜாதி வெறியின் நடைமுறை வெளிப்பாடு பார்ப்பனீயம். அமெரிக்கா வில் கறுப்பின மக்களுக்கு உரிமை பெற்றுத்தர நிற வெறியினை எதிர்த்து மார்டின் லூதர் கிங் போராடினார். இந்த மண்ணில் ஜாதி வெறியின் மூலம் பலன்பெற்ற பார்ப்பனீயத்தை எதிர்த்து தந்தை பெரியார் போராடினார்.

பொதுப் பேருந்தில் அமர்வதற்கு கறுப்பின மக்களுக்கு சம உரிமை பெற்றுத்தர மார்ட்டின் லூதர் கிங் போராடினார். உணவகங்களில் பார்ப்பனீயத்தின் மேன்மையினை பறை சாற்றும் செயலை எதிர்ப்பதன் அடையாளமான பிராமணாள் கபே எனும் குறிப்பினை அகற்றிட தொடர் போராட்டம் கண்டு வெற்றி கண்டார் தந்தை பெரியார்.

போராட்டக் களங்கள் மாறினாலும் போராட்டத் தின் நோக்கம் சமத்துவம் பேணுவதே. சமூக நீதி தத்துவம் - எல்லார்க்கும் எல்லாமும் என்பதே. வெளிநாடுகளில் ஆண்டான் அடிமை நீக்கம் - சமூக நீதி போராட்ட முறையாக இருக்கிறது. ஜாதி களைந்த சமுதாயத்தை நோக்கிய பயணமாக இந்த மண்ணில் சமூக நீதித் தத்துவம் நிலவுகிறது. பாரத ரத்னா விருது நெல்சன் மண்டேலாவிற்கு சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் வழங்கப்பட்டது.

அந்த சமயம் இந்தியாவிற்கு வருகை தந்த நெல்சன் மண்டேலாவை பத்திரிகையாளர் சந்தித்து மண்டல் குழு பரிந்துரை பற்றிக் கருத்து கேட்ட பொழுது, பரிந் துரைகள் வரவேற்கத்தகுந்தன என பாராட்டிக் குறிப் பிட்டார். அப்பொழுது ஆதிக்க சக்திகள், இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நெல்சன் மண்டேலா விருந்தினர் அல்ல; வினையாகி விட்டார் (சூநடளடி ஆயனேநடய ளை ய டயைடைவைல வடி ஐனேயை யனே டிவ ய பரநளவ) எனக் குறிப்பிட்டனர். ஆதிக்க சக்திகளின் உளப்பாங்கு வெளிப்பட்டது. உலகில் மனிதநேயம், சமூக நீதி தத்துவம் ஒன்றே போராட்ட வழிமுறைகள் நாட்டுக்கு நாடு மாறுபடு கின்றன. அத்தகைய போராட்டங்களில் உன்னத இடம் வகித்தவர் நெல்சன் மண்டேலா.

இவ்வாறு தமிழர் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார். (தமிழர் தலைவரின் நினைவேந்தல் முழுப் பேச்சு பின்னர் வெளிவரும்).

நிறைவாக பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி.சத்தியநாராயணன் நன்றி கூறினார்.

நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு, சான்றோர்கள், சிந்தனையாளர்கள், நடுநிலையாளர்கள் என பலதரப்பட்ட மக்கள், பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த மனித நேய ஆர்வலர்கள், பெரியார் இயக்க பொறுப்பாளர்கள், தோழர்கள் பெரும் திரளாக வருகை தந்திருந்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/71831.html#ixzz2nAw2mV4Q

தமிழ் ஓவியா said...


பாராட்டத் தக்க நியமனம்


டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தராக டாக்டர் வணங்காமுடி நியமனம்

சென்னை, டிச. 11- தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் புதிய துணை வேந்தராக பேராசிரியர் முனைவர் வணங்காமுடி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் புதன்கிழமை (டிச. 11) பல்கலைக் கழகத்தின் 6 ஆவது துணை வேந்தராக பதவி ஏற்றார்.

திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டியில் விவசாயக்குடும்பத்தில் பிறந்த இவர் 2 எம்.ஏ., எம்.எல். முடித்து 2 ஆராய்ச்சிப் படிப்புகளை (பிஎச்.டி.) நிறைவு செய்துள்ளார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் கடந்த 9 ஆண்டுகளாக பேராசிரியராகப் பணியாற்றியதோடு, பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார். இவரது மனைவி சமாதானம் அரசு பள்ளி ஆசிரியர். மகள் அன்பரசி சிங்கப்பூரில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/71829.html#ixzz2nAwXwNcA

தமிழ் ஓவியா said...


பொதுவுடைமை- பொதுவுரிமை


பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.
(குடிஅரசு, 25.3.1944)

Read more: http://viduthalai.in/page-2/71834.html#ixzz2nAwmEJeG

தமிழ் ஓவியா said...


மோடி அலையா?


நடந்து முடிந்த அய்ந்து மாநிலங்கள் தேர்தலில், மூன்று மாநிலங்களில் பி.ஜே.பி. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. பி.ஜே.பி. மிகவும் எதிர் பார்த்தது டில்லி மாநிலத் தேர்தல் - இந்தியாவின் தலைநகரமாயிற்றே! அதில் வெற்றிக்கொடியை ஏற்றினால், இந்திய ஆட்சியே தங்கள் கைக்கு வந்துவிடும் என்ற ஆசையில் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைந்தது பி.ஜே.பி.

மோடி அலை வீசுகின்றது என்று கூறி, சிலர் புறப்பட்டுள்ளார்கள்; அந்த நரேந்திர மோடி புது டில்லியில் அதிகமான பொதுக்கூட்டங்களில் பேசி னார். பணம் தண்ணீராய் வாரி இறைக்கப்பட்டது. மோடியைப் பிரதமராக்கித் தீருவது என்பதில் கோவணங் கட்டிக்கொண்டு களத்தில் நிற்கும் பெரிய பெரிய முதலாளிகள், பின்னணியில் இருக்கும்பொழுது பணம் எல்லாம் ஒரு பொருட்டா?

இவ்வளவு முயற்சிகள் செய்த பிறகும், டில்லியைக் கைப்பற்ற முடியவில்லை. முந்தா நாள் பெய்த மழையில் முளைத்த காளான் என்று சொல்லு வார்களே அதேபோல தோன்றிய ஒரு கட்சி (ஆம் ஆத்மி கட்சி) காங்கிரசையும், பி.ஜே.பி.யையும் தண்ணீர் காட்டிவிட்டது.

எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. புதிதாக முளைத்த அந்தக் கட்சிகூட, வெறும் ஊழலை முன்னிறுத் தியதே தவிர, அந்தக் கட்சிக்கு வேறு சமுதாயக் கொள்கைகள் சொல்லும்படியாக ஏதுமில்லை.

தேர்தலில் செலவு செய்ய, அந்தக் கட்சிக்குப் பணம் எங்கிருந்து குதித்தது என்பதும் கேள்விக் குறியாகும். அந்தக் கட்சியின் தலைவர், எந்தக் கட்சியின் உதவியையும் நாடப் போவதில்லை; நாங்களும் எந்தக் கட்சிக்கும் உதவிக் கரம் நீட்டப் போவதில்லை என்கிறார். அந்தக் கட்சியின் இன்னொரு மூத்த தலைவரோ, (அவர் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன்) வேறு குரலில் இப்பொழுதே பேச ஆரம்பித்துவிட்டார்; பி.ஜே.பி.,க்குக் காதல் கண் சிமிட்டுவதைக் காண முடிகிறது.

காங்கிரசையும் பிடிக்கவில்லை; பி.ஜே.பி.யையும் பிடிக்கவில்லை. அதைத் தாண்டி மூன்றாவது கட்சி தலையைக் காட்டியதால், அதற்கு டில்லியில் ஆதரவு கிடைத்துவிட்டது என்று பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்த கருத்து - கருத்தூன்றத் தக்கதாகும்.

இந்தத் தேர்தல் முடிவு வெளிவந்த நிலையில், வழக்கமாக நீட்டி முழங்கும் நரேந்திர மோடியின் சத்தம் ஒன்றும் கேட்கவில்லை - பெட்டிப் பாம்பாகி விட்டார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே பி.ஜே.பி.,க்குச் சாய்கால் உள்ள மாநிலங்கள்தான். ராஜஸ்தானைப் பொறுத்தவரை காங்கிரசும், பி.ஜே.பி.,யும் மாறி மாறி வந்துள்ளன என்பதுதான் உண்மை.

இதற்கிடையே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மோடி அலை எங்கும் வீசுகிறது; மோடிதான் அடுத்த பிரதமர் என்று தனக்கே உரித்தான முறையில், நீட்டி முழங்கி இருக்கிறார்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினையை முன்னிறுத்தி, காங்கிரஸ் தோல்வி தமிழக மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால், ஈழத் தமிழர் பிரச்சினையில் பி.ஜே.பி., தமிழர்களின் உணர்வைப் பிரதிபலிக்கக் கூடியது என்று சொல்ல வருகிறார் என்றால், அதைவிட நகைச்சுவை வேறு ஒன்று இருக்க முடியாது.

சென்னையில் நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் பி.ஜே.பி.பற்றி ஒரு முக்கிய தகவலைத் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது, பி.ஜே.பி. அதற்கு முட்டுக்கட்டை போட்டது; இன்னொரு நாட்டுப் பிரச்சினையில் இந்தியா எப்படி தலையிடலாம் என்று கூறிவிட்டது என்று கூறி இருக்கிறாரே - இதுவரை பி.ஜே.பி. தரப்பிலிருந்து மறுப்பு உண்டா?

பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியா பயிற்சி அளிக்கவில்லையா? தமிழக மீனவர்கள்தான் தாக்கப்படவில்லையா?

குளிக்கப் போய், சேற்றில் விழலாமா?

Read more: http://viduthalai.in/page-2/71835.html#ixzz2nAwuEDMI

தமிழ் ஓவியா said...


2ஜி கூட்டுக்குழு அறிக்கை: கலைஞர் கருத்து

சென்னை, டிச.11- 2ஜி தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்த கருத்து வருமாறு:

கேள்வி :- அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு, பா.ஜ.க., மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவித் திருக்கி றார்களே?

கலைஞர் :- குற்றம் சாட்டப்பட்டவரையே விசாரிக்காமல் - அவர் தன்னை விசாரிக்க வேண்டு மென்று கோரிக்கை வைத்த பிறகும் அவரை அழைக்காமல் - அந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது. அந்த அறிக்கையை தி.மு. கழகம் மட்டுமல்ல; விதிமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்படவில்லை என்றும், நாடாளுமன்ற வரலாற்றில் இன்று மோசமான நாள் என்றும், அது பற்றிப் பேசவே வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா கூறியிருக்கிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், இந்த அறிக்கையை நாங்கள் புறக்கணிக்கிறோம், இது திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட மோசடி அறிக்கை, பிரதமர் உள்ளிட்டோரைத் தப்பிக்கச் செய்வதற்காக திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசும்போது, பி.சி. சாக்கோ அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை யானது முழுமையற்ற, வேண்டுமென்றே தன்னிச்சை யாக, உரிய ஆவணங்கள் இன்றி தயாரிக்கப்பட்ட அரைகுறையான அறிக்கை. இன்னமும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து கொண்டி ருக்கும் ஆ.ராஜா இந்தக் குழுவில் சாட்சிய மளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறியதோடு, இந்த அறிக்கை தாக்கல் செய்யப் பட்டதை எதிர்த்து கழக உறுப்பினர்கள் வெளி நடப்புச் செய்திருக்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-3/71846.html#ixzz2nAxCxhkd

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டும் சட்டம் ஒழுங்கு படும்பாடு!


கேள்வி :- சட்டம், ஒழுங்கு இன்று (10-12-2013) ஒரு நாளில் மட்டும்?

கலைஞர் :- 10-12-2013 ஒரு நாளில் மாத்திரம் ஏடுகளில் வந்துள்ள சட்டம் ஒழுங்கு பற்றிய செய்திகளின் தலைப்புகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

தாயைக் காப்பாற்ற முயன்ற மகன் செங்கத்தில் சுட்டுக் கொலை. சென்னையில் மூன்று இடங்களில் போலீசார்போல வேடமணிந்து செயின் பறிப்பு. பெண்ணாகரத்தில் போதையில் மூன்று போலீசார். அரசு நிலத்தில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் அலுவலகம். திருவண்ணாமலை யில் கலெக்டர் அலுவலகம் முன் நான்கு பேர் தீக்குளிக்க முயற்சி.

நடிகர் மயில்சாமியிடம் 50 ஆயிரம் கேட்டு மிரட்டல். துரைப்பாக்கத்தில் பெண்ணிடம் 12 சவரன் அபேஸ். சென்னைத் தெருக்களில் தண்ணீர் புகுந்து மீனவர்களின் 2 வீடுகள் இடிந்தன. மது விருந்தில் தகராறு - ஒருவருக்கு பீர் பாட்டில் குத்து. மீனம்பாக்கத்தில் இஞ்சினீயரிடம் 20 சவரன் கொள்ளை. ஆலந்தூரில் பெண் ஊழியரைத் தாக்கி நகை பறிப்பு.

வீட்டு மனை வழங்க 2000 ரூபாய் லஞ்சம். ஆவடியில் மூதாட்டியிடம் 23 சவரன் கொள்ளை. சோழவரத்தில் தம்பதியரிடம் நகை பறிப்பு. திருப்போரூர் அருகே பிளாஸ்டிக் கம்பெனியில் நள்ளிரவில் பயங்கரத் தீ - பெட்ரோல் ஊற்றி எரித்ததாகப் புகார். ரயிலில் 25 சவரன் நகை பறித்த நான்கு பெண்கள்.

இன்ஸ்பெக்டருக்கு எதிராக பா.ஜ.க. திடீர் போர்க்கொடி. அய்யப்ப பக்தர்கள்போல் கொள்ளையர்கள் ஊடுருவல். தூத்துக்குடி அருகே பெண் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டுக் கொலை. வேலூர் சிறையில் மோதல். பெரவள்ளூரில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து இரண்டரை லட்சம் ரூபாய் கொள்ளை. கோயம்பேட்டில் பால் விற்கும் பெண் உரிமை யாளரைத் தாக்கிக் கொள் ளை.

இந்தப் பட்டியல் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்கிறது சட்டம் ஒழுங்கு!

- தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையிலிருந்து
(முரசொலி, 11.12.2013)

Read more: http://viduthalai.in/page-5/71813.html#ixzz2nAxQGugi

தமிழ் ஓவியா said...


இலங்கைக் கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பதா? நாடாளுமன்றத்தில் தி.மு.க. எதிர்ப்பு

புதுடில்லி, டிச.11-இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பது குறித்து டில்லி மாநிலங் களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் பிரச்சினை எழுப்பினர்.

இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பது குறித் தும், இந்திய மீனவர்கள் தொ டர்ந்து இலங்கையால் சிறை பிடிக்கப்படுவது குறித்தும் விவா திக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி, மாநிலங் களவை தலைவருக்கு மனு அளித் திருந்தார்.

ஆனால், இதற்கு நேரம் ஒதுக்க மறுத்ததால், கனிமொழி தலைமையில் தி.மு.க. உறுப்பி னர்கள் பிரச்சினை எழுப்பினர்.

இலங்கைக் கடற்படைக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த எதிர்ப்புகளையும் மீறி கடற்படையினருக்கு பயிற்சி அளிப்பது நிறுத்தப்படவில்லை. இதேபோல, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து இலங்கை சிறையில் இருந்து வருகின்றனர்.

இந்த மீனவர்களை விடுவிக் கவும், மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இதுகுறித்து விவாதிக்க வேண்டுமென்று, கனிமொழி எழுப்பிய கோரிக்கையை மாநிலங் களவை தலைவர் ஏற்க மறுத்தார். இதையொட்டி, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையில் முழக்கங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

நாடாளுமன்ற தலைமை செயலாளருக்கு 193ஆம் பிரிவின் கீழ் ஆ.ராசா ஒரு மனு அளித்தார்.

அதில், அரைகுறையாகவும், நடைமுறைக்கு ஒவ்வாத வகை யிலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த கூட்டுக்குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் முன் வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் நாடாளு மன்ற விதிமுறைகளில் வரை யறுக்கப்பட்டுள்ள நடைமுறை களுக்கு எதிராகவும், தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் முன்வைக்கப் பட்டுள்ளதால் இந்த அறிக்கை குறித்து அவையில் விரிவாக விவா திக்க வேண்டும் என்று கூறியுள் ளார்.

193ஆம் விதியின் கீழ் நடை பெறும் விவாதத்தில் வாக்கெடுப்பு கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது. மாநிலங்களவை துணைத் தலைவரான பா.ஜனதா எம்.பி. ரவிசங்கர் பிரசாத்தும், 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான கூட்டுக்குழு அறிக்கை விவாத மின்றி ஏற்றுக் கொண்டது தவறு என்று குற்றம்சாட்டினார்.

Read more: http://viduthalai.in/page-5/71810.html#ixzz2nAxYQicR

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்டவர் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., ஆகலாம்; அர்ச்சகர் ஆகக்கூடாதா?
சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் அடித்த கொள்ளை போதாதா?
சிதம்பரத்தில் சி.பி.எம். ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் முழக்கம்!

சிதம்பரம், டிச.11- சிதம்பரம் நடராஜன் கோயி லில் தீட்சிதர்கள் அடித்த கொள்ளையைத் தடுத்து நிறுத்த அக்கோயில் அரசின் கட்டுப் பாட்டில் தொடரவேண்டும் என்றார் சிதம்பரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.பால கிருஷ்ணன்.

சிதம்பரம் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், காந்திசிலை அருகில் 9.12.2013 திங் களன்று நகர சி.பி.எம். செயலாளர் தலைமையில் சிதம்பரம் நடராசர் கோயிலை அரசே தொடர்ந்து நிர்வகிக்க வேண்டுமென ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிதம் பரம் தொகுதி மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப் பினர் க.பாலகிருட்டிணன் சிறப்புரையாற்றினார். அவர் உரையில்...

சிதம்பரம் கோயிலை அரசு ஏற்றவுடன் வைக்கப்பட்ட உண்டியலில் கோடிக்கணக்கான ரூபாய் சேர்ந்துள்ளது. இதற்கு முன் தீட்சிதர்கள் காட்டிய கணக்கு வெறும் நாற்பதாயிரம் ரூபாய் தான். மூன்று ஆண்டுகளில் கோடிக்கணக்கான பணம் என்றால் கடந்த ஆண்டுகளில் எத்தனை கோடியிருக்கும். தற்பொழுது வெளிநாட்டைச் சார்ந்த ஒரு குடும்பம் மூன்றரைக் கோடி மதிப் புள்ள பவழ மாலை நன்கொடை கொடுத் துள்ளதாக செய்தி பத்திரிகைகளில் வந்துள்ளது.

தற்பொழுது கோயில் நிர்வாக அதிகாரி நு.டீ. அது குறித்து தீட்சிதர்களுக்கு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளார். இச்செய்தி எப் படியோ வெளியே வந்துள்ளது. இச்செய்தி தெரியாமல் போயிருந்தால் என்னவாகியிருக் கும்? தீட்சிதர்கள் சார்பில் ஒரு மூட்டை சிமெண் டாவது செலவு செய்து பராமரிப்பு செய்துள் ளீர்களா? என்னென்ன நகைகள் உள்ளன என்ற பட்டியல் வெளியிட்டு இருக்கிறீர்களா?

கோடிக் கணக்கான சொத்துக்களை, பல ஏக்கர் நிலங் களை நிர்வகிக்கும் பொறுப்பு ஒரு தனிப்பட்ட குழுவிடம் இருப்பது சரியா? இந்த தீட்சிதர்கள் துரத்தி அடித்ததால்தானே வள்ளலார் வடலூருக்கு ஓடினார். தீட்சிதர்கள் அவரை விரட்ட வில்லை என்றால் இங்குதானே இருந்திருப்பார்.

பெருமாளைத் தரிசிக்க உள்ளே போக முடியுமா?

சிதம்பரம் கோயிலின் உள்ளே கோவிந்தராஜ பெருமாள் கோயில் நிர்வாகம் சட்டப்படி தீட்சி தர்களுக்குச் சென்றுவிட்டால், நாங்கள் எங்கள் பெருமாள் கோயிலுக்குச் செல்வதை தீட்சிதர்கள் தடுத்தால், என்னசெய்வது என்று அவர்கள் கேட் கிறார்கள், தமிழில் பாடினால், ஆறுமுகசாமி ஓதுவார் தேவாரம் பாடினால் தீட்டாகிவிடு மென்றால், பிறகு எதற்குக் கோயில்? தமிழ்நாட் டில் தமிழுக்கு இடமில்லையென்றால் தமிழர் களுக்கு என்ன மரியாதை? யோக்கியதை?

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆனால் இவர்களுக்கு என்ன வந்தது? அதற்கும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு; சிதம்பரம் கோயில் விவகா ரத்திலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு. உச்ச நீதிமன்றம் என்ன இவர்களுக்கு மட்டும் சொந் தமா? ஒருவர் அய்.ஏ.எஸ். ஆகலாம்; அய்.பி.எஸ். ஆகலாம் ஆனால் அர்ச்சகர் ஆகமுடியாது என்றால், இந்த நிலை நீடிக்கவிடக் கூடாது.

சிதம்பரம் கோயிலை அரசு ஏற்பது என்பது எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபொழுதே நடைபெற்ற முயற்சி; தந்தை பெரியார் பிறந்த மண்ணில் - திராவிட இயக்கங்களின் ஆட்சியில் - சிதம்பரம் கோயிலை அரசு ஏற்கவில்லை என்றால், வேறு எந்த ஆட்சியில் நடைபெறும்?

தமிழக முதல்வருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இந்து மதத்திற்கே தலைவர் என்ற காஞ்சி சங்கராச்சாரியையே சிறையில் அடைத்த உங்களுக்கு தீட்சிதர்களின் ஆணவத்தை அடக்குவது பெரிய வேலையில்லை.

ஒருவேளை தீர்ப்பு நமக்குச் சாதகமாக இல்லையென்றாலும்கூட தமிழக அரசின் முயற்சி தொடரவேண்டும். இனிமேலாவது சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டும். வர்ணாசிரம தர்ம ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று சிறப்புரையாற் றினார்.

நிகழ்ச்சியில் சி.பி.அய். நகர செயலாளர் சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய லாளர் வ.க.செல்லப்பன், மாநில ப.க. அமைப்புச் செயலாளர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் மற்றும் பலர் உரையாற்றினர்.

Read more: http://viduthalai.in/page-8/71847.html#ixzz2nAxxTrzW

தமிழ் ஓவியா said...


செய்திக்குப் பின்னால்.....

இந்தியாவில் ரசாயனம் கலந்த குடிநீரால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 4.21 கோடி என்று மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை இணை யமைச்சர் பரத்சிங் சோலங்கி தெரிவித்துள்ளார்.

(இதைச் சொல்லுவதற்கு ஓர் அமைச்சர் தேவையா? மனித உயிர் என்பது மிகவும் மலிவானது என்ற நினைப்பா?).

விபத்துகள்

ஒரு நாளில் மட்டும் ஒட்டன்சத்திரம் அருகில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 5 பேர் சாவு.

(ஒட்டன் சத்திரம் காவல் நிலையத்தில் விரைவாக யாகம் நடத்தப்படும் என்று எதிர் பார்க்கலாம்.)

மக்கள் நீதிமன்றம்

மாநில அரசுகளின் ஊழல்பற்றி விசாரிக்கும் மக்கள் நீதிமன்றம் (லோக் ஆயுக்தா) அமைக்கப் படுகிறது. ஆனால், குஜராத்தைப் பொறுத்தவரை 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதற்கான நீதிபதி நியமிக்கப்படவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிபதி டி.பி.புச் நியமிக்கப்பட்டுள்ளார்.

(ஊழலற்ற உத்தமபுத்திரன் என்று மோடி பற்றி தம்பட்டம் அடித்தார்களே, அப்படிப் பட்டவர் ஆட்சியில் ஏன் இத்தனை ஆண்டு களாக இந்த நீதிமன்றம் செயல்படவில்லை? மடியில் கனமோ!)

கங்குலியாயிற்றே!

பாலியல் புகாரில் சிக்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து இன்னும் விலகவில்லை.

(கங்குலி ஆயிற்றே! மனுதர்மத்தில் இது குறித்து என்ன சொல்லப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கலாம்.)

அன்னா ஹசாரே!

நாடாளுமன்ற நடப்புக் கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, தனது சொந்த கிராமத்தில் அன்னா ஹசாரே சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

(டில்லியில் இவர் நடத்திய போராட்டத்தின் லாபத்தை இன்னொருவர் அபகரித்துவிட்டாரே! ஆதங்கம் இருக்கத்தானே செய்யும்?).

அமெரிக்க இராணுவத்தில் சீக்கியருக்குத் தடை!

அமெரிக்க இராணுவத்தில் அமெரிக்கவாழ் சீக்கியர்களை மத நம்பிக்கைகளைக் காரணம் காட்டி, இராணுவப் பணிகளில் நிராகரிப்பது குறித்து சர்ச்சை அமெரிக்காவில் எழுந்துள்ளது.

(இந்தியாவில் காவல்துறையில் அய்யப்பன் வேடம் போட்டுக் கொண்டே அதிகாரிகள் முதற் கொண்டு பணி புரியவில்லையா? தலைப் பாகை மதச் சின்னம் என்றால், பூணூல் அணி கிறார்களே, அது எந்த சின்னம்?).

கிரிக்கெட்

ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் ஜாகீர்கானைச் சேர்த்திருக்கவேண்டும். - தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் நிட்னி.

(சர்மாக்கள் இருக்கும்போது ஜாகீர்கான்கள் கண்களில் படுவார்களா?)

Read more: http://viduthalai.in/e-paper/71865.html#ixzz2nGeXMptJ

தமிழ் ஓவியா said...


ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது!கேப்டன் தொலைக்காட்சி செய்தியாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை மதுரவாயலில் கடந்த (2.12.2013) திங்களன்று கேப்டன் தொலைக்காட்சி செய்தியாளர்கள் லாவன்யா, சதீஷ், கேமரா மேன்கள் விமல் காளிதாஸ் உட்பட ஏழு பேர் தனியார் பள்ளி வேன் ஓட்டுநர்களால் தாக்கப்பட்டனர். தாக்கியவர்களின்மீது உரிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யக்கோரி போராட்டம் நடத்திய சக பத்திரிகையாளர்கள் 80க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இரவு முழுவதும் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் காலை 9.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனராம்.

அதனை தொடர்ந்து ஆணையர் அலுவலகத்தில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மீண்டும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள்மீதே வழக்கு தொடர மதுரவாயல் காவல்துறையினர் முயற்சிப்பதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போது வரை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் கைது செய்யப்படவில்லை என்பது முறையல்ல - வருந்தத்தக்கதுமாகும்.

செய்தியாளர்கள் என்பவர்கள், ஒரு நாட்டுத் தூதுவர் போன்று, செய்திகளை சேகரித்து தருபவர்கள்; அவர்களை தாக்குவது அறம் அல்ல. தாக்கியோர்மீது உரிய நடவடிக்கை உடனடியாகத் தேவை.

இன்றேல் ஜனநாயகத்தின் 4ஆவது தூண் (ஊடக உலகம்) நிலைக்காது என்பதால் அனைவரும் கவலைப்பட வேண்டிய செய்தி.

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
12.12.2013

Read more: http://viduthalai.in/e-paper/71858.html#ixzz2nGejzmQr

தமிழ் ஓவியா said...


வெளிச்சத்துக்கு வரும் சாமியார் ஆசாராம் மகனின் கேவலங்கள்


பாலியல் வழக்கில் கைதான ஆசாராமின் மகன் நாராயண்சாயி கடந்த வாரம் அரியானாவில் மாறுவேடத்தில் இருந்த போது கைதானான். பஞ்சாபியரைப்போல் வேடமிட்டு வெளிநாட் டிற்கு தப்பிச்செல்ல இருந்த நேரத்தில் அரியானா மாநில எல்லையில் பிடிபட்ட அவன் பல பெண்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினேன் என்றும், அவர்கள் உண்மையைச் சொல்லாமலிருக்க படமெடுத்து மிரட்டினேன் என்றும் உண்மை யைக்கூறினான், இதை குஜராத் காவல் துறையினர் உறுதிசெய்துள்ளனர். சூரத் காவல்துறை ஆய்வாளர் ராகேஷ் அஸ்தனா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது, கடந்த வாரம் வன் கொடுமை வழக்கில் கைதான ஆசாராமின் மகன் நாராயண் சாயியை காவல்துறை பொறுப்பில் எடுத்து விசாரித்தோம், அப்போது அவன் தன் மீதானகுற்றத்தை ஒப்புக்கொண்டான்

பல பெண்களிடம் உறவு

மேலும் அவர் வாக்குமூலத்தில் கூறியதாவது நான் என்னுடைய 8 பெண் சீடர்களுடன் தொடர்ந்து உடல் ரீதியான தொடர்பிலிருந்தேன், அதில் இருவருக்கு என் மூலமாக குழந்தை பிறந்தது, அதை மறைத்து பரோடாவைச் சேர்ந்த எனது சீடர் ஒருவருக்கு எனது தந்தையின் ஆலோசனைப்படி திருமணம் செய்து வைத்தேன். ஆசிரமத்திற்கு வருகைதரும் பல பெண்களிடம் உறவு வைத் துள்ளேன். என் தந்தையின் செல்வாக்கை பயன் படுத்தி அனைவரையும் மிரட்டி வைத்துவிடுவேன், சிலர் ஒன்றும் சொல்வதில்லை, ஆனால் 12 ஆண்டுகளுக்கு பிறகு புகார் கூறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றான்

மேலும் தலைமறைவாக இருந்த 58 நாட்கள் எங்கு தங்கி இருந்தேன், யார் யார் எனக்கு உதவி செய்தார்கள் என்பதையும் கூறினான். ஒடிசா அல்லது ஆந்திரா சென்று கடல் மார்க்கமாக சிங்கப்பூர் சென்று அங்கிருந்து கனடா செல்ல திட்டமிட்டதையும் அதற்கான ஏற்பாடுகள் செய்து தருபவர் தாமதமாகிக்கொண்டு வந்ததால் பஞ்சாப் சென்று தரை மார்க்கமாக பாகிஸ் தானுக்கு செல்லும் திட்டம் இருந்ததாக கூறினார்.

நீதிமன்றம் இன்று மாலை வரை காவல் துறையின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. இன்று மாலையோடு காவல்துறை பொறுப்பு முடிவதால் நாளை காலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார்.

Read more: http://viduthalai.in/e-paper/71867.html#ixzz2nGewp4UR

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு, அமெரிக்கா எச்சரிக்கை! கலைஞர் கருத்து


சென்னை டிச.12- ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசு பற்றி அமெரிக்கா கூறியுள்ள கருத்து குறித்து திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:

கேள்வி :- இலங்கை அரசின் நடவடிக் கைகள் பற்றி காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட காமரூன் தெரிவித்த கருத்துகளை பல நாளேடுகளும் வெளியிட் டன. பிரான்ஸ் நாட்டின் கருத்தினைத் தாங்களே வெளியிட்டிருந்தீர்கள். தற் போது அமெரிக்க நாடு கூட இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாக ஒரு செய்தி வந்திருக்கிறதே?

கலைஞர் :- உண்மைதான்! இலங்கை உள்நாட்டுப் போரில் ராணுவத்தின் அட்டூழியம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்நாடு நடவடிக்கை எடுக்கா விட்டால், சர்வதேச சமூகம் இனியும் பொறுமை யாக இருக் காது என்று தெற்காசிய விவகாரங்களுக் கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நிஷா பிஸ்வால் கூறி யிருக்கிறார்.

போர்க் குற்றங்கள் தொடர் பாக இலங்கை அரசின் நடவடிக்கையில், வரும் மார்ச் மாதத்துக்குள் எந்த முன்னேற் றமும் இல்லாவிட்டால், அய்.நா. தலைமை யிலான விசாரணை கோருவோம் என்று இங்கிலாந்துப் பிரதமர் கூறிய கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமெரிக்கா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது. மேலும் இத்தாலியைச் சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று, இலங்கை ராணுவத்தின் மீதான போர்க் குற்றம் தொடர்பான வழக்கு விசாரணையில் இறங்கியுள்ளது. இதற்காக ஜெர்மனியில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/71864.html#ixzz2nGf7NxId

தமிழ் ஓவியா said...


சிறப்பு


விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவையில்லாவிடின், பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பயனில்லை. அறிவுடை யோர்க்கே சென்றவிடமெல்லாம் சிறப்பு. - (விடுதலை, 12.3.1965)

Read more: http://viduthalai.in/page-2/71870.html#ixzz2nGfMmDBY

தமிழ் ஓவியா said...


ஒரே நேரத்தில் 107 தமிழக மீனவர்கள் கைது!


கோடியக்கரை நடுக்கடலில், மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள், 107 பேர்களை இலங்கை சிங்களக் கடற்படையினர் கைது செய்து, இலங்கைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், கல்லார், சாமந்தான் பேட்டை, நாகூர் பட்டினச்சேரி, வேளங்கண்ணி பகுதிகளைச் சேர்ந்த 215 தமிழின மீனவர்கள் 32 விசைப் படகுகளில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி, சட்ட விரோதமாக, தமிழக மீனவர்களின் விசைப் படகுகளைச் சுற்றி வளைத்து, இந்த வேலையைச் செய்துள்ளனர்.

இந்திய அதிகாரிகள், ஏன் இந்திய அமைச்சர்கள் கூட பழுதடைந்த கிராமபோன் தட்டுப்போல, ஒன்றையே திருப்பித் திருப்பிச் சொல்லி வருவது வாடிக்கையும், விஷமம் கலந்த வேடிக்கையுமாகும்.

தமிழக மீனவர்கள் எல்லைகளைக் கடந்து, இலங்கை கடற்பகுதிக்குள் என்று மீன்பிடிப்ப தால்தான், இலங்கைக் கடற்படை சிறைப்பிடிக்கிறது, என்பது தான் பச்சைப் பொய்யான பல்லவியாகும். அது அப்பட்டமான பொய் என்பதற்கு நேற்று நடந்த நிகழ்வே போதுமான சாட்சியமாகும். நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களைத்தான் சிங்களக் கடற்படை சுற்றி வளைத்துச் சிறைபிடித் திருக்கிறது.

சர்வதேச சட்டப்படி கூட கடற்பகுதியிலிருந்து 12 மைல் தூரம் அந்த நாட்டுக்குச் சொந்தமானதாகும். கச்சத் தீவைப் பொறுத்தவரை இராமேசுவரத்தி லிருந்து 12 மைல் தூரத்தில் உள்ளது; இலங்கைக் கடற்கரைப் பகுதியிலிருந்தோ 13 மைல் தூரத்தில் உள்ளது. இந்தச் சர்வதேச சட்டப்படி பார்த்தாலும்கூட கச்சத் தீவுப் பகுதியில் மீன்பிடிக்க இலங்கை மீனவர்களைவிட தமிழின மீனவர்களுக்குத்தான் உரிமை அதிகம் ஆகும்.

1983 முதல் இன்று வரை 600 தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட் டுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.

எந்த அளவுக்கு, இந்தக் கொடுமை நீண்டு இருக்கிறது என்றால் - இலங்கைக் கடற்படை யினரால் கைது செய்யப்பட்டு, இழுத்துச் செல்லப் படுகிற தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி, இந்தியத் தேசியக் கொடியைக் கோவணமாகக் கட்டச் செய்து கெக்கலி கொட்டுகின்றனராம்.

பொதுவாக, பார்ப்பன ஏடுகளும் சரி, இந்திய அதிகாரிகளும் சரி, இந்திய மீனவர்கள் என்றுகூடக் குறிப்பிடுவதில்லை; மாறாக தமிழக மீனவர்கள் என்றுதான் குறிப்பிடுவது வழக்கம்.

நாம் இவ்வாறு சொன்னால், பிரிவினை வாடை வீசுகிறது என்று பேசும் அந்த 22 காரட் தேசிய வாதிகள், மீனவர்கள் பிரச்சினை என்று வரும் பொழுது மட்டும், அவர்களே பிரிவினைவாதிகள் ஆகி விடுகின்றனரே!

தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டு இருக்கும், கொன்று குவித்துக் கொண்டி ருக்கும் இலங்கைக் கடற்படையினருக்கு, இந்திய இராணுவம் பயிற்சி கொடுக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.

இந்தியத் தேசியக் கொடியைக் கோவணமாகக் கட்டச் செய்கிறார்கள் என்ற நிலையில்கூட இந்திய அரசுக்குத் தார்மீக ரீதியான சினம் சீறி எழவில்லையே!

தமிழின மீனவர்கள் அல்லாமல் இந்தியாவின் சீக்கியர்களுக்கோ, வங்காளிகளுக்கோ இப்படி வன்கொடுமைகள் நடந்திருந்தால் என்ன நடந் திருக்கும் என்பதை பொதுவான நிலையில் உள்ள வர்கள் கொஞ்சம் சிந்திக்கவேண்டும்.

தமிழ்நாடு அமைதி காக்கிறது; நிதானத்தை கடைபிடிக்கிறது, மத்திய அரசு உரியதைச் செய்யும் என்று நினைத்தால் அதனைத் தமிழர்களின் கோழைத்தனம் என்று இந்திய அரசு கருதுகிறது.

டாடா நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம், பன்னாட்டு நிறுவனங்கள், ஆழ்கடலில் மீன்பிடிக் கிறார்கள்; அவர்களிடத்தில் சிங்களக் கடற்படை வாலை ஆட்டுவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஆக ஊருக்கு இளைத்தவர்கள் தமிழக மீனவர்கள்தான் என்ற நிலை நீடிப்பது சரியானதல்ல. மிதிக்க மிதிக்கப் புழுவும் புலியாகும் என்பதை மறந்து விட வேண்டாம்!

தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு, தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்பதுதான்.

தமிழ்நாட்டு மக்கள் அரசியலைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு, தமிழின உணர்வோடு, அல்லது மனிதநேய உணர்வோடு ஒன்று சேரட்டும் - ஒரு நொடியில் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்து விடுமே!

Read more: http://viduthalai.in/page-2/71874.html#ixzz2nGfWSzpv

தமிழ் ஓவியா said...


பெரும் முதலாளிகள் வாங்கிய கடனை வசூலிப்பதில் பாராமுகம் - கல்விக் கடன் வாங்கும் மாணவர்களிடம் கிடுக்குப்பிடி ஏன்?


தி.மு.க தலைவர் கலைஞர் கேள்வி

சென்னை, டிச.12- கோடிக்கணக்கில் கடன் வாங்கும் முதலாளிகளிடம் இருந்து கடன் வசூலிப் பதில் பாராமுகம், கல்வி கடன் வாங்கும் மாணவர் களிடம் கெடுபிடி ஏன் என்ற நியாமான வினாவை தொடுத்துள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர். விவரம் வருமாறு:-

கேள்வி :- ஆயிரக்கணக்கில், இலட்சக் கணக்கில் வங்கிகளிலே கடன் வாங்குபவர்களை கிட்டி கட்டி வசூலிக்கும் வங்கிகள், கோடிக் கணக்கிலே கடன் பெற்றவர்களைக் கண்டு கொள்வதில்லையாமே?

கலைஞர் :- மாணவர்கள் தங்கள் படிப்பிற்காக வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பதற்காக அவர்களின் புகைப்படங்களை வங்கியின் வாசலில் வைத்தது பற்றி நான் சில மாதங்களுக்கு முன்பு அது தவறு என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். 2008ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள வங்கிகளின் மொத்த வராக் கடன் 39 ஆயிரத்து 30 கோடி ரூபாய். 2012இல் இந்தத் தொகை 1 இலட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது. 2013 மார்ச் 31ஆம் தேதியன்று பொதுத் துறை வங்கிகளுக்கான மொத்த வராக் கடன் 1 இலட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய். இந்தக் கடன்களை பாக்கியாக வைத்திருப்பவர் களில் முக்கியமானவர்கள், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் (விஜய் மல்லையா) 2,673 கோடி ரூபாய்; விஸ்டம் டைமன்ட்ஸ் அண்ட் ஜுவல்லரி நிறுவனம் 2,660 கோடி ரூபாய்; எலெக்ட்ரோ தேர்ம் இந்தியா நிறுவனம் 2,211 கோடி ரூபாய்; ஸும் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் 1,810 கோடி ரூபாய்; ஸ்டெர்லிங் பயோடெக் லிமிடெட் 1,732 கோடி ரூபாய்; எஸ். குமார்ஸ் நேஷன்வைடு லிமிட் 1,692 கோடி ரூபாய்; சூர்யா வினாயக் இண்டஸ்ட்ரீஸ் லிமிட் 1,446 கோடி ரூபாய்; கார்ப்பரேட் இஸ்பட் அலாய்ஸ் லிமிடெட் 1,360 கோடி ரூபாய்; போரவர் பிரிசியஸ் ஜுவல்லரி அண்ட் டைமன்ட்ஸ் 1,254 கோடி ரூபாய்; ஸ்டெர்லிங் ஆயில் ரிசோர்ஸ் லிமிட் 1,197 கோடி ரூபாய்; வருண் இண்டஸ்ட்ரீஸ் லிமிட் 1,129 கோடி ரூபாய். டெக்கான் க்ரோனிக்கல் ஹோல் டிங்ஸ் நிறுவனம் வைத்துள்ள பாக்கி 700 கோடி ரூபாய். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர்கிட் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் வைத்துள்ள கடன் பாக்கி 938 கோடி ரூபாய். இந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு மத்திய அரசு அண்மையில் பத்மஸ்ரீ விருது வழங்கிப் பாராட்டியிருக்கிறதாம். (குடியரசுத் தலைவருக்குத் தான் வெளிச்சம்) வங்கியில் ஒருவர் வாங்கிய கட னைத் திருப்பிச் செலுத்த வசதியிருந்தும் செலுத்த வில்லை என்றால் கிரிமினல் குற்றமாகும். ஆனால் இத்தனை கோடி ரூபாய் வங்கிகளிலே கடன் பெற்று பாக்கி வைத்திருப்போர் மீது நடவடிக்கை இன்றி, சலுகை காட்டப்படுவது ஏன் என்று தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-3/71892.html#ixzz2nGfqYjhq

தமிழ் ஓவியா said...


இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அறிவிப்பு


இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அறிவிப்பு

ரோம், டிச.12- 2009ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழர்கள் மீது நடந்தது இனப்படு கொலையே என நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டில் இலங் கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணு வத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. அதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் போர் விதி முறை களை மீறி படுகொலை செய்யப்பட்டனர்.

எனவே, இலங்கை போர்க்குற்றம் புரிந்த தாகவும், விசாரணை நடத்த வலியுறுத்தியும் அய்.நா. சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து நிறை வேற்றியது. இந்த நிலையில், இத்தாலி தலைநகர் ரோமை தலைமையகமாக கொண்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கையில் நடைபெற்றது. மனித படுகொலையே என தீர்ப்பளித்தது. கடந்த 2009ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த இறுதிகட்ட போர் தொடர்பாக சர்வதேச மனித உரிமை ஒன்றியம் மற்றும் இலங்கை சமாதானத்திற்கான அய்ரில் போரம் ஆகியவை கூட்டாக இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன. அதைத் தொடர்ந்து நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது உண்மை. மேலும், இறுதிகட்ட போரின் போது மனித படுகொலை நடந் துள்ளது என்றும் தீர்ப்பு கூறியுள்ளது.

இந்த தீர்ப்பாயத்தின் அறிக்கை சர்வதேச நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப் படுவது வழக்கம். இருந்தாலும் வருகிற மார்ச் மாதம் நடைபெறவுள்ள அய்க்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மா நாட்டில் இந்த அறிக்கை சமர்பிக்கப்படு மா? என்பது பற்றி எதையும் உறுதியாக கூற முடியாது என மக்கள் தீர்ப்பாய பிரதி நிதிகள் இலங்கை வானொலிக்கு தெரிவித் துள்ளனர். மேலும், விடுதலைப் புலிகளை சுதந்திர போராட்ட வீரர்களாகவோ அல் லது பயங்கரவாதி களாகவோ அடை யாளப்படுத்த முடியாது என்றும் கூறி யுள்ளனர்.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் குறித்து சர்வதேச நீதிமன்றம் ஒன்று முதல் தடவையாக இது போன்ற தீர்ப்பளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more: http://viduthalai.in/page-3/71897.html#ixzz2nGg2tVK7

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

பிறந்தநாளில் கேக் வெட்டும் பொழுது அதில் மெழுகுவர்த்தியை ஏற்றுகிறார்கள் - பிறந்த நாள் யாருக்குக் கொண் டாடப்படுகிறதோ, அவரை விட்டு ஊதச் செய்கிறார் கள். மெழுகு வர்த்தியின் துகள்கள் கேக்கில் விழு கின்றன. இது உடல் நலனுக்குக் கேடு என்று கண்டறியப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/71961.html#ixzz2nMTLyuW1

தமிழ் ஓவியா said...


அய்யப்பன் கோயிலுக்குச் சென்ற அய்யப்பப் பக்தர்கள் 19 பேர் நெஞ்சுவலி காரணமாக பரிதாப மரணம்


அந்தோ பரிதாபம்!

அய்யப்பா! - உன்னை நம்பியோர் கெதி இப்படியாப்பா?

அய்யப்பன் கோயிலுக்குச் சென்ற அய்யப்பப் பக்தர்கள்

19 பேர் நெஞ்சுவலி காரணமாக பரிதாப மரணம்

மதுரை மீனாட்சியின் கோயில் மின்னல் தாக்கி கோபுரம் தூள்

திருவனந்தபுரம், டிச.13- கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநி லங்களில் இருந்தும் பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி செல்கி றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பம்பையில் இருந்து நடந்தே சபரிமலை செல் வது வழக்கம். அவ்வாறு போகும்போது மலை யில் ஏறும்போது ஏற்படும் ரத்த அழுத்தம் காரணமாகவும் உடல் நலக்குறைவு ஏற்படுவது வழக்கம். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பெருவழி நடை பாதை முழுவதும் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு நோய் வாய்ப்படும் பக்தர்களுக்கு உடனே முதல்உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பெரிய மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இம்முறை சபரி மலையில் கோவில் நடை திறந்த பின்பு வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் அய்யப்பன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ள னர். ஆனால் எப்போதும் இருப்பதை விட இம் முறை கேரளாவில் பருவ மழையும், குளிரும் நில வியதால் பக்தர்கள் பல ரும் பாதிக்கப்பட்டனர்.

நெஞ்சுவலி ஏற்பட் டும், மூச்சுதிணறலாலும் பாதிக்கப்பட்ட அவர் களுக்கு அய்யப்ப சேவா சங்கத்தினர் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் இது வரை 19 பேர் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் 2 பேர் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பலியாகி விட்டனர்.

இவர்களின் உடல் களை அய்யப்ப சேவா சங்கத்தினர் அவரவர் ஊர்களுக்கு எடுத்து சென்று உறவினர்களி டம் ஒப்படைத்தனர்.

மின்னல் தாக்கி கோபுரம் தூள்! மதுரை மாநகரில் நேற்று இரவு 9 மணி யளவில் இடி-மின்ன லுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின் னல் தாக்கியதில் மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தில் சேதம் ஏற் பட்டது.

கிழக்கு ராஜ கோபுரத்தின் உச்சியில் இருந்த வடக்கு நாசி தலத்தின் ஒரு பகுதியை மின்னல் தாக்கியது. இதனால் அதன் ஒரு பகுதி கீழே விழுந்தது. தகவலறிந்த கோவில் இணை ஆணையர் செய ராமன் மற்றும் அதி காரிகள் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். கிழக்கு கோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களி லும் இடிதாங்கி பொருத் தப்பட்டு இருந்ததால் பெருத்த சேதம் தவிர்க்கப் பட்டது.

மீனாட்சி அம் மன் கோவிலில் உள்ள 4 ராஜ கோபுரங்களில் கிழக்கு கோபுரம் மிகவும் பழமையானது. மாற வர்மன் சுந்தரபாண்டி யன் என்ற அரசனால் கடந்த 1216-1238 ஆண்டுக் குள் இந்த கோபுரம் கட்டப்பட்டதாக நம்பப் படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/71962.html#ixzz2nMTU6hS9

தமிழ் ஓவியா said...


பெரியார் உலகம் ஒருபேராசிரியையின் நன்றிஉள்ளம்!


பேராசிரியை தந்த அதிர்ச்சி: காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில்பணியாற்றி ஒய்வு பெற்ற பேராசிரியை திருமதி வி.பி.ஆவுடையம்மாள் அவர்கள் நமது இயக்க நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதோடு நமது இயக்க ஏடுகளையும் தவறாமல் வாங்கி வாசிப்பபவர்.அந்த அடிப்படையில் பெரியார் உலகம் அமைக்க நன்கொடை வசூலிக்க தலைமைக் கழகத்தில் அச்சிட்டுள்ள விவரத்தை கொடுத்து வசூல் பணி நடைபெறுவதை சொன்னோம்.அவர்களும் கேட்டுவிட்டு ரூ 1000/-நன்கொடை தருகிறேன்என்று சொன்னார்கள்.உள்ளபடியே நாங்கள் எதிர்பார்த்து போகவில்லை.

வாங்கி வந்து சிறிது நேரத்தில் எங்களை செல்போனில் தொடர்பு கொண்ட அம்மையார் நாளை காலை வீட்டிற்கு வாருங்கள் நன்கொடையை ரூ 5000/-மாக தருகிறேன் என்று சொன்னார்கள்.சரி என்று நாங்களும் காலை வீட்டில் சந்தித்து அந்த தொகையை வாங்க செல்லும்போது எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்!

ரூ.1000/-த்தை தந்து,பிறகு ரூ.5000/-திற்கு காசோலையாக தருகிறேன் என சொல்லிவிட்டு நேரில் வரச்சொல்லி ரூ.25,000/-த்திற்கான காசோலையை தந்தபோது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அதை பெற்றுக்கொண்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி அவர்கள் நன்றி தெரிவித்துவிட்டு இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு மாற்றம் எப்படியம்மா? என கேட்டதற்கு அம்மையார் சொன்ன பதில் இருக்கிறதே! எங்களை கண்கலங்கச் செய்தது என்றுதான் சொல்லவேண்டும். அவர் சொன்னார்,நேற்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. எவ்வளவு பெரிய பணி யாரால் இதைச் செய்யமுடியும்? அதுவும் பெண்களின் இன்றைய வாழ்க்கை வளர்ச்சிக்கு 95 வயது வரை உழைத்த தந்தை பெரியாருக்கு 95அடி உயரத்தில் அப்பாடா! நினைக்கவே பிரமாண்டமாகவும்,மலைப்பாகவும் இருந்தது; எனக்கு கிடைத்த ஒவ்வொரு ரூபாயும் தந்தை பெரியார் தந்தது என்று உணர்கின்றேன் .

உடனே எனது கணவரும் நானும் அப்போதே முடிவு செய்து ஒரு பவுனுக்கான தொகையை கொடுத்துவிடுவோம் என தீர்மானித்தோம். இந்தத் தொகையை எனது மகளுக்கு பிறந்தநாள் பரிசாக தங்க நகை வாங்கிக் தரத்தான் வைத்திருந்தேன்.

பரவாயில்லை அடுத்த மாதம் வாங்கிக் கொடுத்துவிடுவேன் என்று சொன்னபோது நாங்கள் அந்த மலைப்பிலிருந்து விடுபட, அவர்களே சென்று தேநீர் போட்டு கொடுத்து உபசரித்ததை எண்ணிப் பார்க்கும்போது அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாரின் தொண்டு எந்த அளவிற்கு இந்த இனத்திற்கு,குறிப்பாக மகளிர் சமுதாயத்திற்கு பயன்பட்டிருக்கிறது என்று எண்ணி எண்ணி மகிழ்வுற்றோம்.

நமது தலைவர் ஆசிரியர் அடிக்கடி சொல்வார்களே!

அய்யா அவர்களை பற்றி சொல்லுங்கள்,மக்கள் தர தயாராக இருப்பார்கள் என்று.! மிகச்சரியாக இருக்கின்றது. தமிழர் தலைவர் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை!ஆம்!

"நம்மால் முடியாதது யாராலும் முடியாது

யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்"

தி.என்னாரெசு பிராட்லா, மாவட்ட கழக செயலாளர்,காரைக்குடி

Read more: http://viduthalai.in/e-paper/71970.html#ixzz2nMTwk8Ll

தமிழ் ஓவியா said...


மதம்


பிறருக்கு உழைத்து உழைத்து உருக்குலையும் மக்களை உற்பத்தி செய்யவும், அவர்களை விடுதலை அடைய வொட்டாமல் அழுத்தி வைக்கப் பயன்படுகிற ஆபத்தான ஆயுதங்களில் மிக முக்கியமானது மதம். - லெனின்

Read more: http://viduthalai.in/page-7/71944.html#ixzz2nMUyfrIF

தமிழ் ஓவியா said...

ஜாதி ஆச்சாரங்களைக் கையாளும் மக்கள் குற்ற வாளிகளல்ல; ஜாதி புனித மானது என்ற உணர்ச்சியை உண்டு பண்ணிய மதமே உண் மையிலே குற்றவாளி.

ஆதலால் ஜாதி ஆச்சாரங்களைக் கையாளும் மக்கள் உங்கள் எதிரிகளல்ல. ஜாதி ஆச்சாரங்களைப் புனித மென்று வற்புறுத்தும் சாஸ்திரங்களே உங்கள் எதிரி. எனவே அந்த எதிரியைத் தான் நீங்கள் ஒழிக்க முயற்சிக்க வேண்டும். - டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page-7/71944.html#ixzz2nMVCSWv3

தமிழ் ஓவியா said...


பூசாரிகளின் யோக்கியதை!


இந்துமத அறக்கட்டளைகள் பற்றி விசாரிக்க மத்திய அரசு 1960ஆம் ஆண்டு நியமித்த சி.பி.இராமசாமி அய்யர் கமிட்டி தனது அறிக்கையை 1962ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் காணப்படும் பூசாரிகள் பற்றி விவரங்கள் (அத்தியாயம் 5) இங்கே திரட்டித் தரப்படுகின்றன.

நாங்கள் தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது ஏராளமான கோயில்களுக்கு நேரடியாக நாங்களே போய்ப் பார்க்க எங்களுக்கு நிரம்ப வாய்ப்புக் கிடைத்தது.

அர்ச்சகர்களும், பூசாரிகளும் ஒன்று கல்வி அறிவற்ற தற்குறிகளாக இருக்கின்றனர். அல்லது அரைகுறை யாக படித்தவர்களாக இருக்கின்றனர்; இவர்கள் வழக்கமாகவே பணம் பறிப்பவர்களாகவும் இருக்கின்றனர். இதில் ஏதோ சிற்சில சிறப்பான விதிவிலக்குகள் உள்ளன. இந்த விதிவிலக்குகள் வடக்கைவிட தெற்கேதான் அதிகம் - இவ்வாறுதான் தோன்றுகிறது.

பொருளறியாத புலம்பலே மந்திரம்!

அவர்கள் ஓதும் மந்திரங்களில் அவர்களின் உச்சரிப்பும் உச்சாடனமும் பதியத்தக்கதாக இல்லை; தப்புந்தவறுமாக இருக்கின்றன. தாங்கள் முழங்கும் இந்த மந்திரங்களின் சிறப்பையோ அல்லது பொருளையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது வருந்துதற்குரியது.

தெய்வத்தின் கருணையைப் பெறுவதற்காக கோயில் களுக்கு வரும் பக்தர்களிடத்திலும் வழிபடுவோரிடத்திலும் பக்தியும் மரியாதையும் அடங்கிய ஒரு உணர்ச்சியை ஊட்டக் கூடிய நிலை யில் அர்ச்சகர்கள் இருப்பதில்லை என்பது வெளிப்படை.

சின்னஞ்சிறு பயலுக்கு என்ன தெரியும்?

ஆந்திரப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் இருக்கிறது; இந்தக் கோயில்களில் நடத்தப்பட்டு வரும் வழி பாடு கொஞ்சம் கூட போதாது என்று கூறப்படு கிறது, தாங்கள் பணிபுரியும் கோயிலில் எந்த ஆகமம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதுகூட பூசாரிகளில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றுதான் தோன்று கிறது. தெய்வத்துக்கு எந்த நேரத்தில் அபிசேகம் செய்யப்பட வேண்டும் என்றும் எந்த மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதுகூட அவர் களுக்குத் தெரியவில்லை.

மகாநந்தி என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு தாம் போயிருந்தபோது அங்கே 15 வயதாகிய ஒரு சிறுவன் பூசாரியாக இருந்ததைக் கண்டதாக திரு.ரமேசன் என்பவர் சாட்சியம் கூறியுள்ளார். தெய்வங்கள் பெயர்கள்கூட அந்தச் சிறுவனுக்குத் தெரியவில்லை, எந்தவகையான வழிபாடு நடத்தப்பட வேண்டும் - என்னென்ன மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்பதும் அச்சிறுவனுக்கு தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-7/71947.html#ixzz2nMVKDl2f

தமிழ் ஓவியா said...

சீட்டுக்கட்டில் மதம் ஒழிப்பு

ஆரம்ப காலத்தில் மதம் ஒழிக்கும் பிரச்சாரத்தை ருசியா ஒரு நூதன முறையில் கையாண்டு வந்தது. ஒரு புதுவகையான சீட்டுக் கட்டுகள் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு சீட்டிலும் ஒவ்வொரு மதத்தைப் பற்றிக் கிண்டல் செய்யப்பட்டிருக்கும். ஆடுதன் என்று சொல்லப் படும் சீட்டில் ஒரு பாதிரியார் ஒரு பெண் மீது காமம் கொண்டு உருகுவது போலவும், டயமன் சீட்டில் யூதர்களின் மதச் சடங்கை கேலி செய்தும் சித்தரிக்கப் பட்டு இருக்கும்.

ருசியாவில் உள்ள கிறிஸ்தவ மதத்தைப் பழிக்கும் சித்திரம் ஸ்பேட் சீட்டுகளிலும் கீழ் நாட்டு மதங்களை எள்ளி நகையாடும் படம் கிளவர் சீட்டிலும் அச்சடிக்கப்பட்டிருந்தது.

மத இருளால் மக்கள் அல்லல் உற்றதையும், நாத்திகத்தால் அவர்கள் நலம் பெற்றதையும் சித்தரிக் கும் படம் ஆஸ் சீட்டில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இச்சீட்டின் ஒரு பகுதியின் பாதியில் காட்டுமிராண்டி வேஷங் கொண்டவர்கள் தம்பட்டம் அடித்து, தம் மதக் கொள்கைகளை ஏற்காதவர்களைத் தண்டிக்க சவுக்குகளும், கழு மரங்களும் தயார் செய்வது போலவும், இன்னொரு பாதியில் விஞ்ஞான சின்னங்களான இயந்திரங்கள் முதலியனவும்,

பள்ளிக் கூடங்கள், விளையாட்டுக் கருவிகள் இவைகளை குறிக்கும் பொம்மைகளும் அச்சிடப்பட்டிருந்தன. இச்சீட்டின் ஒரு முனையில் முன் அவ்வாறு இருந்தது என்றும் இன் னொரு முனையில் இனி இங்ஙனமிருக்கும் என்றும் எழுதப்பட்டிருந்தது.

Read more: http://viduthalai.in/page-7/71947.html#ixzz2nMVT4X4m

தமிழ் ஓவியா said...


செம்மொழி என்றாலே ஆட்சிக்கு ஒவ்வாமை! கலைஞர் பேட்டி


சென்னை, டிச.13- தி.மு.க. தலைவர் கலைஞர் அவர் களை அவரது இல்லத்தில் நியூஸ் சைரன் வார இத ழின் சிறப்பு ஆசிரியர் ராவ், ஆசிரியர் எஸ்.சரவணக் குமார் ஆகியோர் சிறப்புப் பேட்டி கண்டனர். அப்பேட்டியில் கலைஞர் கூறியதாவது:

கேள்வி: செம்மொழி மாநாட்டை ஒரு தனி மனிதராக - எவ்வளவோ வேலை பளுக்களுக்கு இடையில் - தமிழ் உலகம் திரும்பிப் பார்க்குமாறு நடத்தினீர்கள். அதன் முழுப் பலனும் தமிழுக்குக் கிடைத்ததா?

கலைஞர்: கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி வேண்டும் என்பதற்காகப் பெரு முயற்சி மேற் கொண்டேன்; கிடைத்தது. செம்மொழித் தமி ழாய்வு மய்யத்தினைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென்று பாடுபட்டேன்; வந்தது. கோவையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் பல அறிவிப்புகள் செய்யப் பட்டன.

அவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாமல் ஆட்சி மாறியது. இன்றைக்கு செம் மொழி என்றாலே ஆட்சியினருக்கு ஓர் ஒவ் வாமை! செம்மொழிப் பூங்காவைக் கூட பரா மரிக்க ஆட்சியினருக்கு மனம் இல்லை. செம் மொழி உயராய்வுப் பணிகளை ஊக்குவித்திடவேண்டும் எனும் நோக்கில், என்னுடைய சொந்தப் பணத்திலே ஒரு கோடி ரூபாயை செம்மொழி ஆய்வு நிறுவனத்திற் காக ஒப்படைத்து, அதிலே கிடைக்கும் வட்டித் தொகையிலி ருந்து ஆண்டுதோறும் தமிழ் ஆய்வில் தலைசிறந்த வல்லு நருக்கு விருது வழங்கக் கேட்டுக் கொண்டேன்.அந்தப் பணியைக்கூடச் சரியாகச் செய்ய யாரும் இப்போது முன்வரவில்லை.

கேள்வி: எப்போதும் தோழர்களுடன் வலம் வரும் நீங்கள், யாருமே இல்லாத ஒரு அறையில் தனிமையில் உட்கார்ந்து யோசித்த அனுபவம் உண்டா? எதைப்பற்றி?

கலைஞர்: காலை 10 மணிமுதல், இரவு 10.20 மணிவரை தோழர்களுடன்தான் வலம் வருகி றேன்; பல்வேறு பிரச்சினைகள் குறித்து அள வளாவுகிறேன். அந்த நேரம் தவிர, தனிமையில் இருக்கின்ற நேரங்களில், அடுத்த நாள் எதை எழுதலாம் என்று யோசிக்கிறேன். கடந்த காலங் களில் அவ்வாறு தனிமை கிடைத்த நேரங்களில் யோசித்தவைதான் பல நூல்களாக வெளி வந்தவை.

- இவ்வாறு கலைஞர் அவர்கள் பேட்டி யளித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/71958.html#ixzz2nMVfoDL7