Search This Blog

23.12.13

இறை நம்பிக்கை இல்லாதவர்கள் வெற்றி பெற முடியாதா?

இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு அதிசயம் ஏற்படும். நம்பிக்கையை இழப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவே முடியாது. இறைவனிடம் அசைக்க முடியாத நம்பிக்கை உங்களிடம்  இருந்தால் உங்கள் வாழ்வின் வெற்றி நிச்சயம்!

இவ்வாறு பேசியிருப்பவர் வேறு யாராகத் தான் இருக்க முடியும் -  அம்மையார் ஜெயலலிதாவைத் தவிர?

இந்தக் கருத்தைக் கூறுமுன் ஒரே ஒரு நொடி, தந்தை பெரியாரை நினைத்துப் பார்த்திருக்க வேண் டாமா? அப்படி நினைத்துப் பார்க்கும் நிலை இல்லாவிட்டால் உங்கள் சுவரொட்டிகளில் தந்தை பெரியார் படம் எதற்கு?

பெரியார் உருவாக்கிய திராவிட எதற்கு? என்ற கேள்வி எழாதா?

அனைத்திந்திய அண்ணா தி.மு.க. என்பதற்குப் பதிலாக அக்கிரகார முன்னேற்றக் கழகம் என்று வைத்துக் கொள்ளலாமே!

அண்ணாவின் பெயரைக்கூட கட்சியில் வைத்துக் கொள்ளும் அருகதை கூடக் கிடையாதே!

அண்ணா எந்தக் கோயிலுக்குச் சென்றார்? அண்ணா யாகம் நடத்தினார், மண் சோறு சாப்பிடச் சொன்னார் என்று சொல்ல முடியுமா?

இறை நம்பிக்கை இல்லாதவர்கள் வெற்றி பெற முடியாதாமே!


அடேயப்பா - எப்படிப்பட்ட கண்டு பிடிப்பு!

சமுதாயப் புரட்சி இயக்கம் நடத்தி மக்களிடம் மண்டிக் கிடந்த மூடநம்பிக் கைகளை, ஆரியச் சழக்குகளை, ஆண்டவன்களின் ஆபாசச் சேற்றை யெல்லாம் அணு அணுவாகச் சிதைத்து விழிப்புணர்வு எரிமலையை ஏற்படுத்தி, மாபெரும் வெற்றி பெற்ற உண்மையான புரட்சித் தலைவர் தந்தை பெரியார் அல்லவா!

அதனால்தானே அறிஞர் அண்ணா அவர்கள் பெரியார் ஒரு தனி மனிதரல்லர்; ஒரு சகாப்தம், கால கட்டம், திருப்பம்! என்று  ஆணி அடித்தது போல கணித்தார்.

பெரியார் கடவுள் மறுப்பாளர்தான்!

கடவுள் இல்லை; இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
பரப்பியவன் அயோக்கியன்
வணங்குகிறவன் காட்டுமிராண்டி

என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர்தான்.

அந்த பெரியார் அவர்களுக்குத் தான் இந்த அமைச்சரவையே காணிக்கை என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் அண்ணா பிரகடனப்படுத்தினார்.

இந்த வரலாறெல்லாம் அம்மையா ருக்குத் தெரியாது என்றால் யாருக் காவது அ.இ.அ.தி.மு.க.வில் திராவிடர் இயக்க வரலாறு தெரியும் என்றால்(?!) அவர்களிடம் பாடம் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்! அல்லது விடுதலை ஏட்டை நாளும் படிக்கட்டும்; அல்லது திராவிடர் கழக வெளியீடுகளைப் படித்துப் பார்க் கட்டும்!

அ.இ.அ.தி.மு.க. என்பதில் அண்ணா இருக்கிறார் - திராவிடமும் இருக்கிறது. இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டு கருத்துச் சொல்ல அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாள ருக்கு அதிகாரம் கிடையாது. அவர் கருத்தை பாரம்பரியமிக்க  கருத்தாக் கமுடைய சொல்லாடல்களைக் கொண்ட கட்சியின் மீது திணிக்க முடியாது - திணிக்கவும் கூடாது.

ஒன்றை வேண்டுமானால் வெளிப் படையாகக் கூறட்டுமே பார்க்கலாம்; அ.இ.அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நெற்றியிலே பட்டையும், குங்குமமும் அணிந் திருக்க வேண்டும்,
கழுத்திலே உருத்திராட்சக் கொட்டை தொங்க வேண்டும். கையிலே மந்திரக் கயிறு கட்டி இருக்க வேண்டும் - இவை இருந்தால்தான் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் என்று அதிகார பூர்வமான சட்ட விதிகளிலே திருத்தம் கொண்டு வரலாமே!

ரிலேட்டி விட்டி விதியைக் கண்டு பிடித்த அய்ன்ஸ்டின் நாத்திகர்தான் - அந்தத் தத்துவத்தை மட்டும் அவர்  கண்டு பிடிக்கவில்லையென்றால் இன் றைக்கு ஏற்பட்டுள்ள விஞ்ஞான சாதனைகளில் மஞ்சள் குளிக்க முடியுமா?
நோபல் பரிசு பெற்ற பெரும் பாலான விஞ்ஞானிகள் எல்லாம் நாத்திகர்கள்தான். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென்கூட கடவுள் மறுப்பாளர் தான்.

கடவுள்தான் மனிதனைப் படைக் கிறார் - மனிதன் ஆயுளை நிர்ணக் கிறான் என்பது இப்பொழுது தவிடு பொடியாகவில்லையா?

கடவுள் துகள் கண்டுபிடிக்கப் பட்டு விட்டதே!

காலரா நோய்க்கு காரணம் காளியாத்தா - அம்மை நோய்க்குக் காரணம் மாரியாத்தா என்று நம்பி கோயில்களில் கூழ்  காய்ச்சி ஊற்றிக் கொண்டு கிடந்தார்களே அவற்றாலா காலராவும், அம்மையும் ஒழிந்தன?
தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த தால் அல்லவா - பெரியம்மை இருப்ப தாகக் கண்டுபிடித்துச் சொன்னால் ஆயிரம் ரூபாய் பரிசு என்று அரசு விளம்பரம் செய்ததே!

அம்மைத் தடுப்பு நோயைக் கண்டுபிடித்த ஜென்னரையும்,  உலகம் உருண்டை என்ற கலிலியோவையும்,  பரிணாமத் தத்துவத்தைக் கண்டு பிடித்த டார்வினையும் எதிர்த்ததும் அவர்களைத் தண்டித்ததும்கூட மதம் தானே!
டார்வின்மீதும், கலிலியோ மீதும் கிறித்துவ மதம் தண்டனையை ஏவிய தற்காக போப் - இப்பொழுது வருத்தம் தெரிவித்துள்ளாரே. இந்த வரலாறு எல்லாம் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்குத் தெரியுமா?

Religious People are less intelligent than atheists - Study finds என்ற சிறப்பு மிக்க கட்டுரையை முதல் அமைச்சர் படித்துப் பார்த்ததுண்டா?

அமெரிக்காவின் ராச் செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வு பற்றி அறி வாரா?
மிரான் ஜீக்கர் மேன் என்ற ராச் செஸ்டர் பல்கலைக் கழகப் பேராசிரி யரின் தலைமையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், அறிவாற்றலுக்கும், மதப் பழக்கத்திற்கும் ஏற்பட்டுள்ள வேலைப் பாடுகளைப் பற்றிய 63 ஆய்வுகளில் 53 ஆய்வுகள் மத நம் பிக்கை உடையவர்கள் குறைந்தளவு அறிவாற்றல் உடையவர்கள் என்பதை ஆய்வுகள்மூலம் நிரூபித்துள்ளனரே!

அரசியலில் அடாவடித்தனமாகப் பேசுவதுபோல பகுத்தறிவாளர்கள் மீதும், அறிவியல்வாதிகள்மீதும் கல்லெறியலாம் என்று அம்மையார் ஆசைப்பட வேண்டாம்.
தோழர் தா.பா.வும் தோழர் ஜி.ஆரும் என்ன செய்தார்களாம்?

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா பேசிய இந்தக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில  செயலாளர் தோழர் தா.பாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்சிஸ்ட்டு) தமிழ் மாநில  செயலாளர் தோழர் ஜி. இராமகிருட்டிணன் ஆகியோரும் அந்தக் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்களே - முதல் அமைச்சர் ஜெயலலிதா சொன்ன கருத்து அவர்களையும் சேர்த்துத்தானே?

மார்க்சும் - ஏங்கல்சும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்ததால் அவர்கள் வெற்றி பெறவில்லையா? அந்த இடத்தில் முதல் அமைச்சருக்குப் பதில் கூற வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமல் போயிருக்கலாம். அவர்கள் கட்சியின் அதிகாரபூர்வ ஏடு களானஜனசக்தி தீக்கதிரில் முதல் அமைச்சர் கருத்துக்கு மறுப்புக் கூறுவார்களா? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/e-paper/72465.html#ixzz2oCpqUrW522-12-2013

------------------ மின்சாரம் அவர்கள் 22-12-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

45 comments:

Unknown said...

பகுத்தறிவுத்தமிழனின் எண்ணமும் நோக்கமும் தமிழ் மக்கள் பகுத்தறிவுடன் இந்த BளாGஐ பார்த்து சிரிக்கவேண்டும். சிரித்து மகிழ வேண்டும்.

எனது நேற்றைய மடலைப் படித்திருப்பீர்க்ள் என்று ந்ம்புகிறேன். அறிவு பகுத்தறிவாளிகளுக்கு மட்டும் சொந்தமில்லை என்று உணர்த்த்தான் என் பதிவுகள்.


இதை மதிமாறன் போன்றவர்களுக்கும்
தெரிவிக்கவும்.

kgopaalan@blogspot.com

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் அவர்களின் 2014-புத்தாண்டுவாழ்த்து!


பிறக்கும் புத்தாண்டு (2014) - மனித நேயம், சமத்துவம், சம வாய்ப்பு, பகுத்தறிவுச் சிந்தனை வளம் பெருகி வாழ வைக்கும் புது உலகப் புத்தாண்டாக அமையட்டும்!

அனைவருக்கும் நமது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

முகாம்: சிங்கப்பூர்

31.12.2013

Read more: http://viduthalai.in/e-paper/72872.html#ixzz2p6Np262c

தமிழ் ஓவியா said...


கலைஞர் புத்தாண்டு வாழ்த்து


2014ஆம் ஆண்டிற்கு வரவேற்புக் கூறி; எனது அருமைத் தமிழக மக்க ளுக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

மூன்று மாதங்களில் மின்சாரப் பிரச்சினையைத் தீர்ப்போம் எனப் பொய் கூறி வந்த ஆட்சியின் மூன்றாம் ஆண்டிலும் மக்கள் இருளில் தவிக்கும் நிலை தொடர்கிறது.

அனைத்து வகைத் தொழில்களும் முடங்கி விட்டன; புதிய தொழில்களும் இல்லை.

தொழிலாளர் சமுதாயம் அல்லல்படுகின்றது; வேளாண்மை நாளுக்கு நாள் குன்றி வருகிறது. நெல்லுக்கும், கரும்புக்கும் நியாய விலை இல்லை; விவசாயம் செய்ய முடியவில்லை என விவசாயிகள் குமுறுகின்றனர். ஆளுவோரின் தவறான கொள்கை யால் மணல் கிடைப்பதில்லை; கட்டுமானப் பணிகள் முடங்கி, கட்டுமானத் தொழிலாளர் வாழ்வு கேள்விக் குறியாகிறது.

ஆட்சிக்கு வந்தபின் செயின் பறிப்பவர் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடிவிட்டனர் என்றார்கள். செயின் பறிப்பு மட்டுமல்ல; கொலை, கொள்ளை, கற்பழிப்பு எனும் கொடிய குற்றங்கள் எல்லாம் தினமும் பெருகிக் கொண்டுள்ளன.

சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியவர்கள் உண்மைகளைக் கட்டிப் போட்டு விட்டு; பொய்களுக் குச் சாமரம் வீசி - ஜனநாயகக் கடமையாற்று வோர்க்குச் சிறைகளைக் காட்டி, ஏறி வா நீதிமன்றப் படிகளை என இழுத்தடிக்கும் எதேச்சாதிகாரப் போக்கு தலைவிரித்தாடுகிறது.

விலைவாசி உயர்வு எல்லா வகை மக்களுக்கும் வேதனையையே பரிசாகத் தந்துள்ளது. வேதனை யைத் தீர்க்க வேண்டியவர்கள் - மத்திய அரசு மீதும், கழகத்தின் மீதும் பழி சுமத்தியே தப்பிக்கப் பார்க்கின் றனர். பத்திரிகைகளும், ஊடகங்களும் உண்மை நிலையை உரைத்தால் அரசின் அடக்கு முறைக்கு ஆளாவோம் என்று அஞ்சுகின்றன.

இவையும் இவை போன்ற பலவும்தான் 2013இல் நாம் கண்டவை. இவையெல்லாம் களையப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் செய்யத் தவறியவைகளை நினைவுகூர்வோம். தமிழுக்கும், தமிழருக்கும், தமிழகத் திற்கும் பயன் தந்திடும் பணிகளோடு - இந்தியத் திருநாடு முழுமைக்கும் வலிவையும், பொலிவையும் தந்திடத்தக்க கடமைகள் ஆற்றிட - களம் கண்டிட - புறப்பகை நோக்கி, உட்பகை நீக்கி ஒன்றுபட்டு உழைத்திடுவோம்! புத்தாண்டு புத்துணர்வு வழங்கட்டும்!

Read more: http://viduthalai.in/e-paper/72877.html#ixzz2p6NycGmS

தமிழ் ஓவியா said...


டிசம்பர் 31 (1993)சமூகநீதி வரலாற்றில் இந்நாளையும் மறக்க முடி யாது. இந்த நாளில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் 31(சி) சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நாள்.

அ.இ.அ.தி.மு.க. ஆட் சியே உருவாக்கிய சட்டமா என்றால், அதுதான் இல்லை;

மண்டல் குழு தொடர்பான இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு ஒன்றில் (25.8.1993) இடஒதுக் கீடு 50 சதவீதத்திற்குமேல் போகக் கூடாது என்று கூறியதால் தமிழ்நாட்டில் நாம் போராடிப் போராடிப் பெற்ற 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்த நிலையில், அந்த விபத்திலிருந்து தமிழ்நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றிட, தனக்கே உரித் தான சட்ட ஞானத்தால் மசோதா ஒன்றை உருவாக்கிக் கொடுத்தவர் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 31 (சி) பிரிவின்கீழ் மாநில அரசே சட்டம் இயற்றி நாடாளுமன்றத்தில் அது நிறைவேற்றப்பட்டு, 9ஆவது அட்டவணையில் இணைக்கப் பட்டால் நீதிமன்றம் தலை யிடவே முடியாது என்ற முறையில் சடடத்தின் நக லைத் தயாரித்துக் கொடுத் தவர் திராவிடர் கழகத் தலைவர்.

அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட குறிப் பிடத்தக்க நாள்தான் டிசம்பர் 31 (1993).

பிறகு நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப் பட்டது (19.7.1994).

முதல்வர், பிரதமர், குடியரசு தலைவர் ஆகிய மூன்று பார்ப்பனர்களைச் செயல்பட வைத்து வரலாற் றில் வெற்றி கண்டவர் நம் தலைவர்.

இன்றைக்கு இந்தியாவிலேயே இடஒதுக்கீடு சட்டத்தில் (ACT) அடிப்படையில் வலிவாக இருப்பது தமிழ் நாட்டில் தான்; மற்ற மற்ற மாநிலங்களில் அரசு ஆணை (G.O.) யால்தான் நின்று கொண்டு இருக்கிறது என் பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவலாகும்.

அன்றைக்கு முதல் அமைச்சர் செல்வி ஜெய லலிதா இந்தச் சட்டம் நிறை வேற்றப்பட ஒத்துழைப்புக் கொடுத்தார் என்பது ஒருபுறம்; அப்படியொரு சட்டத்தைப் பிறப்பித்து 69 சதவீதம் காப்பாற்றப்படவில்லையானால் அம்மையாரின் ஆட்சி காப் பாற்றப்பட்டு இருக்காது என் பதும் கசப்பான உண்மை யாகும்.

அதே அம்மையார் ஜெய லலிதா இப்பொழுது எப்படி இருக்கிறார்? பட்டதாரி ஆசிரியர்களின் பணி நிய மனம், இடைநிலை ஆசிரியர் கள் நியமனங்களிலும், ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சில் கொடுத்த மதிப்பெண் தளர்வினைக் கூட கொடுக்காமல் சமூக நீதிக்குச் சவக்குழி வெட்டி விட்டாரே!

சமூகநீதிக்கு எதிராக செயல்பட முடியாத அளவுக் குத் தடுப்பு அரணாக திராவிடர் கழகத் தலைவரும், திராவிடர் கழகமும் அன்று இருந்த காரணத்தால்தான் 1993இல் அப்படியொரு சட்டம் வர வாய்ப்பு இருந்தது என் பதுதான் உண்மை.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72871.html#ixzz2p6OSqkP5

தமிழ் ஓவியா said...


2014-ஆம் ஆண்டு துவக்கத்தில்...! விடுதலை வாசக நேயர்களுக்கு அரிய பகுத்தறிவுப் போட்டி

திராவிடர் கழகமும், அதன் தலைமையும் இந்த 2014-ஆம் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான 10 பணிகள் என்பதை 1,2,3 என்று வரிசைப்படுத்தி வாசக நேயர்கள் ஒரே பக்கம் (டெம்மிசைஸ்) ஒன்றின்பின் ஒன்றாக 10 பணிகளைச் சுட்டிக்காட்டி எழுதுங்கள்.

அதில் சிறந்த கட்டுரைக்கு ரூபாய் 1,000/- முதல் பரிசாகவும், இரண்டு, மூன்றாம் இடம் பெறுவோர்க்கு ரூ. 500/-, ரூ. 300/- பரிசுகளும் வழங்கப்படும்.

விடுதலை அலுவலகத்திற்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 12.1.2014 ஆகும். அவசரப் பணிகள் 10 என்று உறையில் தலைப்பிட்டு எழுதவும்.

- ஆசிரியர், விடுதலை

Read more: http://viduthalai.in/page-8/72889.html#ixzz2p6PpDCDx

தமிழ் ஓவியா said...


கோவிலாம்!

சமீபத்தில் கோவி லுக்குச் சென்றிருந்தேன். பிரபலமான கோயில் என்பதால் அன்று மக்கள் கூட்டம் அலை மோதியது. அங்கே, அதிசயமாக என் நண்பனைக் கண்டேன். அவன் அவனுடைய காதலி யுடன் வந்தான். நான் அவனிடம் என்னடா சாமி தரிசனம் முடிஞ் சாச்சா... எனக் கேட்க, பதிலுக்கு, தரிசனமா... சாமிய பாக்க யார் வந்தா.. பத்து நாளா, இவள பாக்க முடியல. இன்னிக்குத் தான் பாக்க முடிஞ்சது. பீச்சுக்குப் போனா, போலீஸ் தொல்ல.. அதுதான் இங்கு வந்தோம். இங்க, யாரும் நம்மள கண்டுக்க மாட்டாங்க... எனக் கூறி காதலியுடன், தனியிடம் தேடி நகர்ந்தான்.

அவன் சென்றதும், ஒரு முறை கோயிலைச் சுற்றிப் பார்த்தேன். மெரீனா பீச்சைப் போல, ஆங்காங்கே காதல் ஜோடிகள். இவர்கள் கட வுளைத் தரிசிக்க வரா மல், கோயிலை காதலர் கள் சந்திக்கும் இடமாக பயன்படுத்துவது வருத்த மளிக்கிறது.

இன்றைய வாழ்க் கைச் சூழலில், மனதில் அமைதி இழந்து, நிம் மதியைத் தேடி வரும் ஒரே இடம் கோவில் அங்கே யும் இப்படியென்றால், நிம்மதியை தேடி எங்கே தான் போவது?

- தி. சந்திரசேகர் அம்பத்தூர்

இந்தக் கடிதம் வெளி வந்த இதழ் எது தெரியுமா? அது தான் முக்கியம். சாட் சாத் தினமலர் - வாரமலர் (22.12.2013 பக்கம் 4)

பகுத்தறிவாளர்களையும், திராவிடர் கழகத்துக்காரர் களையும் இல்லாதது - பொல்லாதது எல்லாம் சொல்லி, கேலியும் கிண்ட லும் செய்யும் தினமலர் பார்ப்பன ஏடு தான் தன் னையும் அறியாமல் கோயில் என்பது மெரீனா பீச் மாதிரி காதலர்கள் உறவாடும் இடம் என்று ஒப்புக் கொண்டு இருக்கிறது.

நாம் சொன்னால் இவர்களுக்கு இதுதான் வேலை என்று சொல்லும் பக்த சிகாமணிகள் இதற்கு என்ன தான் பதில் சொல் லுவார்கள்?

இந்த இடத்தில் இன் னொரு இதழில் பல ஆண்டு களுக்கு முன் வெளி வந்த ஒரு தகவலையும் கொண்டு வந்து காட்டினால் மீத மிச்சம் இருக்கும் கடவுள் - கோயில் - பக்தியின் வண்ட வாளங்கள் தண்டவாளத் தில் ஏறிடும் வினா: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களி டம் பக்தி இருக்கிறதா இப்போது? புரோகிதர் விடை: பக்தியாவது, ஒண்ணா வது? கோவிலுக்கு வர்ற வன் சாமி தரிசனத்துக்கா வர்றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக்கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல்லாம் போக, நேரம் இருந்தா சுவாமி அம்பாளை நெனைச்சிக் கிறா!

- இந்த செய்தி எதில் வந்துள்ளது தெரியுமா? சோ ராமசாமி அய்யர் வாளின் துக்ளக்கில் (1.6.1981 பக்கம் 32).

கருப்புச்சட்டைக்காரர்கள் சொன்னால் மூக்கின்மேல் கோபம் புடைக்கும் சங்பரி வார் உட்பட்ட பக்தர்கள் இவற்றிற்கெல்லாம் என்ன பதில், சொல்லுவார்களாம்? - மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/72507.html#ixzz2p6RP4iwp

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


ஊழலோ ஊழல்!

செய்தி: ஊழலைப் பற்றிப் பேச காங்கிரசுக் குத் தகுதியில்லை.
- மும்பையில் மோடி பேச்சு

சிந்தனை: ஆமாம் பிஜேபிக்கே ஒட்டு மொத்தமாக சொந்தமான ஒன்றை மற்றவர்கள் அபகரிக்க அனு மதிக்கலாமா?

(கருநாடக மாநில பிஜேபி ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த ரெட்டி சகோ தரர்களுக்கு உபயம்!).

ம்ம்ம் தர்மம்

செய்தி: இளைஞர் களிடையே தர்மம் பற்றிய சிந்தனையை வளர்க்க வேண்டும். - ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி

சிந்தனை: அவர் கூறினால் அந்தத் தர்மம் கண்டிப்பாக வர்ணா சிரம தர்மமாகத்தான் இருக்கும்.

Read more: http://viduthalai.in/page1/72509.html#ixzz2p6RbEfA4

தமிழ் ஓவியா said...


பெண்களைஇழிவுப்படுத்திசொற்பொழிவு நடத்துவதுநீதிமன்றங்களின்வேலையல்ல! டில்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை


புதுடில்லி, டிச.23- வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் வழக்குக்குள் நின்று தீர்ப்புகளை வழங்க வேண்டுமே தவிர வழக்குக்கு அப்பால் சென்று பெண்களை இழிவுபடுத்தும் வகை யிலும், அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் தன்மையிலும் தேவை யில்லாத சொற்பொழிவு களை நீதிமன்றங்களில் நிகழ்த்தக் கூடாது என்று டில்லி உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. டில்லியில் பாலியல் வன்கொடுமை தொடர் பான ஒரு வழக்கின் தீர்ப்பில், "19 முதல் 24 வயது வரை உள்ள இளம் பெண்கள் அவர்களு டைய காதலர்களுடன் தன்னிச்சையாக வீட்டை விட்டு ஓடிப் போய்விடு கின்றனர்' என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார். மேலும், பெண்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டு, குறிப்பிட்டபடிதான் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவது போன்ற வகையிலும் நீதிபதி கருத்து தெரிவித்திருந் தார்.

விசாரணை விரைவு நீதிமன்ற நீதிபதியின் இத் தீர்ப்பை அறிந்த டில்லி உயர்நீதிமன்றம், தானே முன்வந்து விசாரணை நடத்தியது. விசாரணை யின் முடிவில் அந்த நீதி பதியின் கருத்துகளுக்கு, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரதீப் நந்த்ர ஜோக், வி.கே.ராவ் ஆகி யோர் அடங்கிய அமர்வு கண்டனம் தெரிவித்தது.

"வழக்கில் முன் வைக் கப்படும் சாட்சியங்கள், ஆதாரங்களின் அடிப் படையில்தான் தீர்ப்பு வாசகங்கள் இருக்க வேண்டுமே தவிர, தங்க ளது சொந்த அல்லது சமூகப் பார்வைகளைத் தீர்ப்புகளில் தெரிவிக்கக் கூடாது' என்று நீதிபதி கள் தெரிவித்தனர்.

தீர்ப்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ள தாவது: இந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி தெரி வித்த கருத்துகள் பொது வான தன்மையிலானவை.

பெண்களுக்கு எதிரான கருத்துகள்

பெண்களுக்கு எதி ரான கருத்துகளையும், அலட்சியமான விமர் சனங்களையும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள் ளார். முடிவு எடுப்பதில் பெண்களின் நிலை குறித்து தனது சொந்த அபிப்ராயத்தை நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். அது தவறானது.

மாறி வரும் இந்திய சமூகத்தில் முடிவு எடுப் பதில் பெண்கள் குழப்ப நிலையில் உள்ளனர். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் அவருக்குள்ள விருப்பம் மற்றும் ஆணாதிக்கம் மிகுந்த சமூகச் சூழல் ஆகியவற்றுக்கு இடையே பெண்கள் சிக்கிக் கொண்டு வதை படுகின்றனர். அதை கவ னத்துடனும் கருணை யுடனும்தான் பார்க்க வேண்டுமே ஒழிய, சொற் பொழிவு போன்ற அறி வுரைகளைத் தரக் கூடாது.

இந்த வழக்கின் தீர்ப் பில் விசாரணை நீதிமன்ற நீதிபதி, அப்பெண் குறித்து தெரிவித்த கருத்துகள், "அப் பெண் எப்படி சமூகத்தில் நடந்து கொள்ள வேண்டும்' என பிரசங்கம் செய்வதைப் போல உள்ளது. அது நீதிபதியின் வேலையல்ல.

சமூக வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு தனி நபருக்கும் உரிமை உள்ளது. சிலர் அவ்வாறு தேர்வு செய்யும்போது விரும்பத்தகாதவை நடந்துவிடுகின்றன. அதற்காக நீதிமன்றங்கள், "உன் வாழ்க்கையை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். அப் படி இல்லாவிட்டால் இந்த சமூகம் உனக்காக கண்ணீர் வடிக்காது' என்று சொல்லக் கூடாது.

அலட்சியமான பார் வையுடன் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள், காவல் நிலையங்களில் பெண்களைத் துன்புறுத் தவே உதவும். மேலும், அலட்சியமான முறை யில் விசாரணைகள் நடைபெறுவதுடன், குற் றச்சாட்டுகளுக்குப் போது மான, முழுமையான சாட் சியங்கள் நீதிமன்றத்தின் முன்பு கொண்டுவர முடியாத சூழல் ஏற்படும்.

காவல்துறையினருக்குப் புது வசதி!

நீதிமன்றங்களின் இது போன்ற தீர்ப்புகள், பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மீது காவல் துறையினருக்கு ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுத்து அதன்படியே விசாரிக்க வழி வகுத்து விடும். மேலும், இது போன்ற தீர்ப்புகளை முன்வைத்து, பாதிக் கப்படும் பெண்களுக்கு எதிராக வழக்குரைஞர் கள் வாதிடக் கூடும்' என்று நீதிபதிகள் கூறி யுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page1/72508.html#ixzz2p6Rk8KnG

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

ரயிலில் அய்யப்பப் பக்தர்கள் கற்பூரம் ஏற்ற தடை விதிக் கப்பட்டுள்ளது. மீறி ஏற்றினால் உடனே ரயில்வே காவல் துறையினருக்குத் தெரிவிக்கலாம்.

Read more: http://viduthalai.in/page1/72508.html#ixzz2p6RtRQMh

தமிழ் ஓவியா said...


இராம ராஜ்ஜியமா?


பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளராக நரேந்திரமோடி - ராமர் கோயில் விவகாரத்தில் தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் - அதன் பின்னர்தான் விசுவ ஹிந்து பரிஷத் தன் ஆதரவு பற்றி தெரிவிக்கும் என்று வி.எச்.பி.யின் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியிருந்தார். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராமர் கோயில் கட்டுவதைப் பற்றி மோடி ஏன் பேசவில்லை? என்ற வினாவையும் தொகாடியா எழுப்பியிருந்தார்.

அதன் எதிர்வினையாகத்தான் நரேந்திரமோடி, தன் வாயைத் திறந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசி இருக்கிறார்.

மத்தியில் சரியான அரசு அமையாததற்கு உத்தரப்பிரதேச மக்களின் பங்களிப்பில் ஏற்பட்ட குறைதான் காரணம்; (அம்மாநிலத்திற்கான 80 மக்களவை உறுப்பினர்களைத்தான் மறைமுக மாகச் சுட்டிக் காட்டுகிறார்).

நீங்கள் மட்டும் ஒரு சரியான அரசைத் தேர்வு செய்வீர்களேயானால் அன்றுதான் ராம ராஜ்ஜியம் நடைமுறைக்கு வரும் - என்று மோடி பேசி இருக்கிறார்.

ராமராஜ்ஜியம் பற்றியும், ராமன் கோயில் கட்டுவது குறித்தும் நரேந்திர மோடி வாய்த் திறக்காது இருந்ததுகூட ஒரு வகை அரசியல் தந்திரம்தான். அதை முன் வைத்தால் மக்களின் தீர்ப்பு வேறுவிதமாக இருக்கும் என்று தெரிந்து தான் தந்திரமாக அதனைத் தவிர்த்து வந்திருக் கிறார். அவர் வாய் திறக்கா விட்டாலும், அந்த வட்டாரத்தின் உள்ளக் கிடக்கை என்ன என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். வெளிப்படையாகப் பேசப்பட்டால் எதிர்ப் பிரச்சாரம் சுனாமியாக வீறு கொண்டு எழும் - ஏன் வீண் வம்பு என்று தவிர்த்து வந்தார்.

அயோத்தியில் சங்பரிவார்க் கும்பல், பிஜேபி தலைவர் அத்வானி தலைமையில் பாபர் மசூதியை இடித்த நேரத்தில் இதே மோடி என்ன கூறினார்? இந்துக்கள் கோழைகள் அல்ல - ஆண்மை உள்ளவர்கள் என்று நிரூபித்து விட்டார்கள் என்று சொன்னவர்தானே இந்த மோடி!

அதே நேரத்தில் மிகப் பெரிய மனிதர் என்று சித்தரிக்கப்படும் அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது என்ன பேசினார்?

அதுவும் அமெரிக்கா சென்றிருந்தபோது ஸ்டேட்டன் தீவில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநாட்டிலேயே பேசினாரே - நினைவிருக்கிறதா?

ஆர்.எஸ்.எஸ். என்பது என் ஆன்மா; பிரதமர் பதவியைவிட ஆர்.எஸ்.எஸ்.காரன் என்று சொல் லிக் கொள்வதில்தான் நான் பெருமைப்படுகிறேன். நமக்குப் பெரும்பான்மை இடம் நாடாளுமன்றத்தில் கிட்டுமேயானால், அயோத்தியில் ராமன் கோயிலைக் கண்டிப்பாகக் கட்டுவோம்! என்று பேசினாரா இல்லையா?

இந்த நேரத்தில் பிஜேபி வட்டாரமாக இருந் தாலும்சரி, சங்பரிவார் வட்டாரமாக இருந்தாலும் சரி - அவர்கள் அறிவு நாணயம் உள்ளவர்களாக இருப்பார்களேயானால் 16ஆவது மக்களவைத் தேர்தலில் அவர்கள் மக்கள் முன் வைக்கவிருக்கும் தேர்தல் அறிக்கையில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவோம்! என்று குறிப்பிடட்டுமே பார்க்கலாம்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள்மீது தாமதத்தைத் தவிர்த்து, வழக்கினை முறையாக, நடத்தியிருக் குமேயானால் பி.ஜே.பி. சங்பரிவார்த் தலைவர்கள் எல்லாம் இந்நேரம் சிறைக்குள் தானிருப்பார்கள்; தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டச் சிக்கலும் ஏற்பட்டிருக்குமே.

செய்ய வேண்டியதைக் காலத்தால் செய்யாத ஓர் ஆட்சியாகத்தான் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது.

இந்தப் பிழையை பி.ஜே.பி. தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதும் உண்மை.

தேர்தல் அறிக்கையில் ராமன் கோயில் கட்டு வது குறித்துக் குறிப்பிடாவிட்டாலும், இவர்கள் இந்து ராஜ்ஜியம் கோருபவர்கள் என்ற உண்மையை மக்கள் மத்தியில் எடுத்து வைக்க வேண்டியது மதச் சார்பற்ற சக்திகளின் கடமையாகும்.

Read more: http://viduthalai.in/page1/72515.html#ixzz2p6S83Ywr

தமிழ் ஓவியா said...


சொல்லவேண்டும்

பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.

- (குடிஅரசு, 17.8.1930)

Read more: http://viduthalai.in/page1/72514.html#ixzz2p6SFx4tE

தமிழ் ஓவியா said...


தமிழர் நலம் பெற...


தமிழ்நாடும், தமிழ்மொழியும், தமிழர் தன்மானமும், விடுதலையும் பெற்று வளர்ச்சியடைய வேண்டுமானால், தமிழன் காரியத்தில் தமிழனல் லாதவன்- அவன் எப்படிப்பட்டவன் ஆனாலும் தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டும். இதை வேறு எதை ஒழித்தாவது ஒழிக்கவேண்டும்.

- (குடிஅரசு, 19.2.1944)

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் நினைவு நாளில் நம் சூளுரை!நம் நாட்டில் உள்ள மக்கள் நண்பர் வீரமணி சொன்னதுபோல், கிறிஸ்தவன், முஸ்லிம், பார்சி தவிர மற்றவன் எல்லாம் இந்து; இந்துவிலே 100-க்கு 23/4 பயல்களாய் இருக்கிற பார்ப்பான் தவிர, பாக்கி 97 சில்லறைப் பேர் தேவடியாள் மக்கள் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் என்று சட்டத்திலே எழுதி வைத்திருக்கிறான். இதற்கெல் லாம் காரணம் என்ன? திருப்பிச் சொல்லாத காரணம். - தந்தை பெரியார் அவர்களின் இறுதி உரையில் (19.12.1973) மரண சாசனமாகக் கூறிய வார்த்தைகள் தான் மேலே எடுத்துக்காட்டப்பட்டவை.

நாற்பதாண்டுகள் ஓடிவிட்டன; இன்றும் பார்ப் பனர் அல்லாத மக்கள் சட்ட ரீதியாகவே சூத்திரர் களாகவே இருந்து வருகின்றனர் என்பது மிகப் பெரிய வெட்கக் கேடாகும்.

தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாளில் இறுதிப் போராட்டமாக அறிவித்தது - அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் என்பதாகும்.

இது ஏதோ கோயிலில் வேலை வாய்ப்புக்காக சொல்லப்பட்டதல்ல. இந்த நாட்டுக்குரிய சொந்த மக்களான பார்ப்பனர் அல்லாதார், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகராக முடியாது - கூடாது என்ற நிலை இருந்து வருவது எதன் அடிப்படையில்? மேலே எடுத்துக்காட்டப்பட்ட தந்தை பெரியார் அவர்களின் உரையில் அதற்கான காரணம் இருக்கிறது.

இந்தப் பிரச்சினைக்காக தந்தை பெரியார் குரல் கொடுத்து, போராட்ட அறிவிப்புகளையும் கொடுத்து - அவற்றின் அடிப்படையில் தி.மு.க. அரசில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கான சட்டம் இயற்றப்பட்டும், பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று ஏதோ கடைக்குச் சென்று கத்தரிக்காய் வாங்கி வருவதுபோல, இடைக்காலத் தடையை வாங்கி வருகிறார்கள். இதன் பொருள் என்ன?

ஒன்று - பார்ப்பனர்கள் இன்னும் இந்த நாட்டுக்குரிய பெரும்பான்மை மக்களை சூத்திரர்கள் என்ற நிலையிலேயே கட்டிப் போட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். இரண்டாவது நீதிமன்றங்களும் இந்தச் சமூகநீதி - மனித உரிமைப் பிரச்சினையில் உரிய கவனம் செலுத்துவதில்லை. மூன்றாவதாக தமிழர்களின் இந்த அடிப்படை யான மான உணர்வுப் பிரச்சினையில், இனமானப் பிரச்சினையில் திராவிடர் கழகம் செலுத்தும் அக்கறை பொறுப்புணர்ச்சி மற்றவர்களுக்கு போதிய அளவு ஏற்படவில்லை என்பதும் கவலையளிக்கக் கூடியதாகும்.

இவ்வளவுக்கும் இந்தக் கோயில் கட்டப்பட்ட தற்கும் பார்ப்பனர்களுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? உடலுழைப்பு உண்டா? பொருளுதவி உண்டா என்றால் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

மிகப் பெரிய கோயில்கள் எல்லாம் நமது தமிழின அரசர்களால் கட்டப்பட்டவைதான். இந்தக் கோயில்களில் பார்ப்பனர்கள் நமது அரசர்களின் பார்ப்பன அடிமைத்தனத்தால் இனவுணர்வு அற்ற தன்மையில் உள்ளே புகுந்தனர்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்றும், கோபுரத்தைக் கும்பிட்டால் மோட்சம் கிடைக்கும் என்றும் மற்றவர்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட் டனர்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் கோயிலுக்குள் அர்ச்சகர்களாக இருப்பவர்களுக்கு அர்ச்சனை மந்திரங்கள்கூட ஒழுங்காகத் தெரியாது என்பது நிரூபிக்கப்பட்டும் இருக்கிறது.

கொழுத்த பார்ப்பனரான சர்.சி.பி. இராமசாமி அய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவே விலா வாரியாக இந்த உண்மையை வெளிப்படுத்தியிருக் கிறது.

எடுத்துக்காட்டாக, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகப் பார்ப்பனர்களில் நான்கு அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஆகம விதிகள் தெரிந்துள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 116 அர்ச்சகர்களுள் ஆகமம் பயின்றவர்கள் வெறும் 28 நபர்கள் மட்டுமே! என்று நீதியரசர் ஏ.கே. ராஜன் குறிப்பிட்டுள்ளார் (நூல்: கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள் - பக்கம் 75).

தி.மு.க ஆட்சியில் ஆகமப் பள்ளிகள் ஏற்படுத்தி முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் - ஆகமங் களைப் பயின்றவர்கள் அர்ச்சகர்கள் ஆனால், சாமி தீட்டுப்பட்டு விடும் என்று அர்ச்சகர்களின் வழக் குரைஞர்கள் உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கூறு வதும், அவற்றிற்கு உச்சநீதிமன்றம் செவி சாய்ப்பதும் நியாயம்தானா?

தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில் இதனை எண்ணிப் பார்ப்போம்! இன இழிவினை ஒழிக்கும் போரில் வெற்றி பெற சூளுரை ஏற்போம்,

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

Read more: http://viduthalai.in/page1/72594.html#ixzz2p6UTgXcE

தமிழ் ஓவியா said...


மாவோ


மா சே துங் அவர்களி டம் சிண்டைப் பறி கொடுத்தவர்கள் அவருடன் உடன்பயின்ற பன்னி ரெண்டு மாணவர்கள். அறுக்கப்பட்ட இடம் சாங்சா (Changca) உயர்தரப் பள்ளிக்கூடம்.

சீனாவை 1911ஆம் ஆண்டில் ஆண்டு கொண் டிருந்த மஞ்ச் வம்சத்தினர். சீனர்கள் என்றும் அடி மைகள் என்று காட்ட சீனர் களை சிண்டு வைத்துக் கொள்ளச் செய்தனர்.

மாணவன் மாவோ வுக்கு ஆத்திரம் தாங்க வில்லை. மான உணர்வு பீரிட்டது. மாவோவின் மாணவ நண்பர்கள் தங்கள் சிண்டுகளை அறுத்துக் கொண்டு விடுவதாக உறுதி கூறினார்கள். ஒரு சிலரோ அந்த உறுதி மொழியைக் காற்றில் பறக்க விட்டனர். அந்தப் பன்னி ரெண்டு பேர்களின் சிண்டை மாவோ பலாத்காரமாக அறுத்தெறிந்து விட்டார்!

ஆதாரம்: ஸ்டூவர்ட் ச்ராம் அவர்களால் எழுதப் பட்ட மாசே துங் என்ற நூலில் 23ஆம் பக்கம். தந்தை பெரியாரால் ஏற்படுத்தப்பட்ட சுயமரி யாதை இயக்கமோ, திரா விடர் கழகமோ பார்ப்பனர் களின் சிண்டையோ, பூணூலையோ வன்முறை யில் அறுக்கச் சொல்ல வில்லை என்றாலும் அவர் கள் இவற்றை வைத்துக் கொண்டு இருப்பது அவர் களின் தனிப்பட்ட உரிமை என்று அடம் பிடிக்க முடியாது.

அவர்கள் அவற்றை வைத்துக் கொள்வது நாங்கள் பிறவியிலேயே உயர்ந்தவர்கள், பிரம்மா எனும் கடவுளால் அவன் நெற்றியிலிருந்து பிறப்பிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள், மற்றவர்கள் சூத்திரர்கள்; பிரம்மாவின் காலில் பிறந்தவர்கள் வேசி மக்கள் (மனுதர்மம் அத்தி யாயம் 8 சுலோகம் 415).

சூத்திரன், பிராமண ஜாதிக் குறியை - பூணூல் முதலியதைத் தரித்தால் அரசன், சூத்திரனின் அங் கங்களை வெட்டி விட வேண்டும்.
(மனு அத்தியாயம் 9 சுலோகம் 224).

சீனக்காரர்கள் சிண்டு வைக்கக் கட்டாயப்படுத்தப் பட்டது அவர்களை அடி மைகள் என்று காட்டிக் கொள்ள; பார்ப்பனர்கள் இங்கு இதுபோன்ற அடை யாளங்களை வைத்துக் கொள்வது பிறவியில் உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ள; எப்ப டியோ பேதத்தின் சின்னம் தான் இவை.

மாவோ கண்ணோட்டத் தில் சிந்தியுங்கள் விடை கிடைக்கும்.

குறிப்பு: இன்று மாசே துங் பிறந்த நாள் (1893).

- மயிலாடன்
26-12-2013
Read more: http://viduthalai.in/page1/72610.html#ixzz2p6VUVmeO

தமிழ் ஓவியா said...


மூன்றாவதுஅணியா? கலைஞர் பேட்டி

சென்னை, டிச.26- தி.மு.க. தலைமையில் மூன்றாவது அணி அமையுமா என்ற கேள்விக்கு திமுக தலைவர் கலைஞர் பதில் சொன்னார் செய்தியாளர்கள் பேட்டியில் (25.12.2013) அவர் கூறியதாவது:

செய்தியாளர் :- தி.மு. கழகத்தின் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டுமென்று உங்கள் தோழமைக் கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் உங்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறாரே? கலைஞர் :- அப்படி ஒன்றும் என்னிடம் கோரிக்கை வைக்க வில்லையே!

செய்தியாளர் :- ஒரு கூட்டத்தில் பேசும் போது, திருமாவளவன், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற வேண்டுமென்றும், உங்கள் தலைமை யில் மூன்றாவது அணி அமைய வேண்டுமென்றும் பேசியிருக்கிறார். தே.மு.தி.க., தி.மு.கழகக் கூட்டணியில் இடம் பெற வேண்டுமென்று பேசியி ருப்பதால், அப்படிஅமையவாய்ப்பு இருக்கிறதா?
கலைஞர்:- அது அவருடைய நல்லெண்ணத்தின் அறிகுறி. அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

செய்தியாளர் :- காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை மனதிலே கொண்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதைப் போன்றமாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறதே, இது தேர்தலுக்காகச் செய்யப்படும் மாயையா?

கலைஞர் :- தெரியாது.

ஜெயலலிதா கொடநாடு செல்வது
வழக்கமான ஒன்றுதான்!

செய்தியாளர் :- தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் நிலவு கின்றன. இந்தப் பிரச்சினைகளை யெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் முதலமைச்சர் ஜெயலலிதா கொட நாட்டிற்குச் சென்றுவிட்டாரே?

கலைஞர் :- கொட நாட்டிற்கு அந்த அம்மையார் செல்வது என்பது வழக்கமான ஒன்று.
மீனவர் பிரச்சினை செய்தியாளர் :- நாகப்பட்டி னத்தில் மீனவர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். அதைப் பற்றிக் கவலைப்படாமல் மத்திய அரசு இலங்கைராணுவத்திற்கு கூட்டுப் பயிற்சி நடத்துகிறது. மீனவர் களை வஞ்சிக்கின்ற காரியமாகஇதைக் கருதலாமா?

கலைஞர் :- தி.மு.கழகத்தின் சார்பில் நான் டி.ஆர். பாலுவை நாகப் பட்டினத்திற்கு அனுப்பினேன். அவர் அங்கே சென்று உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேசியிருக்கிறார். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடை பெறும் என்று கருதுகிறேன். மத்திய அரசும் இது சம்பந்தமான முயற்சி களை மேற்கொள்ளும் என்றுநம்பு கிறேன்.

செய்தியாளர் :- அ.தி.மு.க. பல் வேறு பொதுக் கூட்டங்களிலும், பொதுக் குழுவிலும், இன்று எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடுத்துக் கொண்ட உறுதிமொழியிலும் உங்களைப் புறக் கணிக்க வேண்டுமென்றும், தீயசக்தி என்றும் கடுமையாக விமர்சிக் கிறார்களே?

கலைஞர் :- அ.தி.மு.க.வினர் அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் என்னைக் கடுமையாகத் தாக்கி பஜனை பாடி யிருக்கிறார்கள். அது அவர்களுடைய நாகரிகத்தையும், பண்பாட்டையும் எடுத்துக்காட்டுகின்றது.

இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

Read more: http://viduthalai.in/page1/72619.html#ixzz2p6VfAm6L

தமிழ் ஓவியா said...


சிந்தனைக்கு...
26-12-2013
இன்று தாத்தா பாட்டி தினமாக உலகில் கொண்டாடப்படுகிறது. மூத்தோர்களை மதிப் பதும், அன்பு செலுத்து வதும் பராமரிப்பதும் நமது தலையாய கடமை! நன்றி உள்ளவர்களாக மனிதாபிமானம் உள்ள வர்களாக இருக்கி றோம் என்பதற்கான அடையாளம். முதியோர் இல்லம் என்பது இளை யோரின் மனிதாபிமான மற்ற நிலையை விளக் கும் நிலையமாகும்.

தமிழ் ஓவியா said...


இறந்த பின்...


ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

Read more: http://viduthalai.in/page1/72620.html#ixzz2p6WNsNPy

தமிழ் ஓவியா said...


ஆதி திராவிடர் பள்ளிகளில் வருகைக் குறைவா?ஆதி திராவிடர்களுக்காக தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் பள்ளிகள் சரிவரப் பராமரிக்கப்படாததால் 50 சதவீதமாக வருகை குறைந்து விட்டது என்கிற ஒரு செய்தி அதிர்ச்சியை அளிக்கக் கூடியது.

ஆண்டாண்டுக் காலமாக கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்குக் கல்விக் கண்ணைத் திறக்க வேண்டும் என்ற சமூக நீதி நோக்கோடு உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இப்படியொரு நிலை என்றால் அது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கதாகும்.

அதற்கென்று தனித் துறையே இருக்கிறது. அந்தத் துறை அதிகாரிகள் இதில் தலையிட்டு, இதற்கான காரணத்தை உள்ளபடியே கண்டறிந்து அந்தக் குறைபாடுகளை நீக்கி நூறு சதவீதம் இருபால் மாணவர்களும் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்யவேண்டியது மிகவும் அவசியமாகும்.

கல்வி என்பது அடிப்படை உரிமையாகும். அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பொதுவாக கிராமங்களில் நடைபெறும் தொடக்கப் பள்ளிகளாக இருந்தாலும் சரி உயர்நிலைப்பள்ளிகளாக இருந்தாலும் சரி, அவைகளுக்கு நகர்ப்புறப் பள்ளிகளில் உள்ள கட்டடம் மற்றும் கட்டுமான வசதிகள்போல் இருப்பதில்லை.

தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், நகர்ப்புறம் என்றால் பிராமணன், கிராமப்புறம் என்றால் பஞ்சமர், சூத்திரர் என்னும் நவீன வருணா சிரமத் தன்மையுடையது என்பதை அனுபவத்தில் நாம் பார்க்கக் கூடிய நிதர்சனமான உண்மையாகும்.

பொதுவாக தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகூட அவர்களுக்குப் பயன் படுத்தப்படாமல், மற்ற மற்ற துறைகளுக்குச் செலவழிக்கப்படுகிறது என்ற குற்றச் சாற்றுண்டு.

தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் எப்படியும் நடந்து கொள்ளலாம் - நடத்தலாம் என்ற மனோபாவம் அதிகாரிகளிடமும், ஆட்சியாளர் களிடமும் இருப்பது தான் இவற்றிற்குக் காரணமா?

கிராமப்புறங்களில் இப்படி கல்விக் கூடங்களை வைத்துக் கொண்டு, அடிப்படை வசதிகளைக்கூட செய்து கொடுக்காமல் தகுதி - திறமை பேசுகிறார்கள் என்றால் அதைவிட சமூக அநீதி வேறு ஒன்று இருக்க முடியுமா?

சம வாய்ப்பும், வசதிகளும் செய்து கொடுக்காமல் தகுதி திறமை பேசுவது மோசடியல்லாமல் வேறு என்ன?

ஆதிதிராவிடர் பள்ளிகள் மட்டுமல்ல; ஆதி திராவிடர் மாணவர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள விடுதிகள்கூட அவல நிலையில்தான் சீரழிந்து காணப்படுகின்றன. அந்தக் கட்டடத்தைப் பார்த்தவுடனேயே சொல்லி விடலாம்; இது ஆதி திராவிடர் பள்ளியாக இருக்க வேண்டும் அல்லது ஆதி திராவிடர் விடுதியாக இருக்கவேண்டும் என்று சொல்லி விட முடியுமே.

தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சதவீத அடிப்படையில் இடங்கள் அளித்தால் மட்டும் போதாது, அவர்கள் படிப்பதற்கான சூழலை, அடிப்படை வசதிகளைச் செய்து தருவதும் மிக முக்கியமானதாகும்.

சமச்சீர்க்கல்வி எவ்வளவு அவசியமோ, சமச்சீரான வசதிகளும் மிகவும் அவசியமாகும். சீருடை மட்டும்போதாது - எல்லோருக்கும் ஒரே சீராகக் கல்வி கற்பிக்கப்படுவதற்கான சீர்மிகு வசதிகளும் அவசியம்; இதற்கு முன்னுரிமை கொடுத்து அரசு செயல்படட்டும்!

Read more: http://viduthalai.in/page1/72621.html#ixzz2p6Wifr47

தமிழ் ஓவியா said...


மூடனே!


கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிச் சோம்பித் திரிந்துகொண்டு, தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழிபோட்டுத் திரிகின்றவன் ஒரு மூடனே!

(விடுதலை, 1.2.1969)

தமிழ் ஓவியா said...


பணம் - காமம் - இவைகளும் இரட்டையர்களே!

பணமும் - காமமும் இரட்டைப் பிள்ளைகள்!

என்ன வித்தியாசமான ஒப்புவமை யாக உள்ளதே என்று வியக்கின் றீர்களா?

சற்று ஆழ்ந்து, அமைதியாகச் சிந்தித்துப் பாருங்கள்; அதன் உண்மை அப்போது உங்களுக்குப் புரியும்! இரண்டும் மனித வாழ்க்கையின் இன்றியமையாத தேவைகள்தான்.
ஒன்றும் மற்றொன்றும் ஒட்டிப் பிறப்பவைதான் என்றாலும் காமம் இருக்கிறதே, அது பணத்தோடு மட்டும் வருவதில்லை; பணம் இல்லாத ஏழைகளிடையே கூட இலவசமாக விலையில்லாப் பொருள்களாக, தங் களுக்குரிய கவலைகள் தீர்க்கும் மருந்தாக, பலருக்கும் பயன்படுவ தாகும்.

பணம் பல நேரங்களில் சரியில்லாத பார்வையோடுதான் இருக்கும்!

காமமும்கூட கண்ணற்று, சிந்தனை யற்று நடந்து கொள்ளவே தூண்டும்!

பணமும், குணமும் ஒரு சில இடங்களில், ஒரு சில மனிதர்களிடமே சிறப்பாக இயங்கும்.
அதுபோலவே காமமும் அளவான, முறையான வாழ்க்கை இன்பத்திற்கு அடித்தளமாக ஒரு வரைமுறைக்குள்ளே இயங்கி, வாழ்வை வளர்க்கும்; எனவே தான் திருவள்ளுவர் காமத்துப்பால் என்ற ஒரு பகுதியை - முப்பால் நூலில் - திருக்குறளில் - அறத்துப்பால், பொருட் பால், அடுத்து காமத்துப் பால் என்று வைத்துள்ளார்!

காமம் என்பது உடல் இன்பம், என்பது மட்டுமல்ல; மன மகிழ்ச்சியினால் பீறிட்டுக் கிளம்பும் இன்பத்திற்கும் காரணமாகும். காமம் என்ற சொல் லாட்சியை உடல் இன்பம் என்ற குறுகிய பொருளில் அடங்காது, உள மகிழ்ச்சி - உள்ளத்தின் ஏற்றம் என்ற வகையிலும் விரிவான பொருள் தந்து, பயன் படுத்தி மக்களுக்குக் காட்டியுள்ளார் - திருவள்ளுவர்.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்று அறவழிச் சிந்தனைகளை எழுதிய புலவர்கள், அதனை விரிந்த பொருளில் தானே பயன்படுத்தியுள்ளனர்! இல்லையா?

கற்றவரைக் காமுறுதல் என்றால் அது உடல் இன்பத்தையா குறிக்கும்? அல்ல அல்ல; மாறாக மிகுந்த விருப்பத் துடன் கருத்துரையாடி மகிழ்வர்; இவர்தம் நட்பு காலத்தால் கிடைத்தற்கரிய செல்வம் என்று கருதுவர்.

பணம் சம்பாதிப்பதில் இன்பம் கொள்பவரின் ஒரு குறிப்பிட்ட நிலைக்குச் செல்லும்போது, அவர்கள் வரைமுறை - அறநிலைதானா இது? என்று ஆராய்ச் சியா செய்கின்றனர்?
பணம் சம்பாதித்து விட்டால் பிறகு எல்லாம் தானே வந்து விடும் - பதவி - பட்டம் - புகழ் இவையனைத்தும் என்று தானே எண்ணுகின்றனர்?

பணம் சேர்க்கும் ஆசை பல நேரங் களில் வெறியாக மாறி விடுகிறதோ - எல்லையைத் தாண்டுகிறோமோ என்றா நினைக்கின்றனர்? இல்லையே!

அதுபோலவே காமத்திற்குக் கண் இல்லை என்ற பழமொழியைப்போல பண வெறியும் காமவெறிபோல - பற்பல நேரங்களில் கண்மண் தெரியாமல் - ஏன் வரன்முறைகூடப் பார்க்காமல் நடந்து கொள்ளச் செய்கிறதே!

அளவோடு இருக்கும்போது, அடிப் படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவோடு நிற்கையில், இரண்டும் (பணமும், காமமும்) வாழ்க்கையில் மிக நன்றாகப் பயன்படுகிறது.

இயற்கையின் தேவையை நிறைவேற் றிடும் கருவிகளாக அவை அமைந்து, வாழ்வை வளப்படுத்தி முன்னேற்றுகின்றன.

ஆனால், இவ்விரண்டும் எல்லை தாண்டி முறைகளைப் பற்றிக் கவலைப் படாத மனக் குரங்குகள் மரத்திற்கு மரம் தாவும்போது, மிருக மனமாகவும் மனிதர்களாக, மாறி, மனிதத்தை இழந்து - மரியாதையைத் துறந்து வாழும் அவலத்திற்கு ஆளாக்கப்படு கிறார்களே!

இரட்டையர்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை; - நீரும் நெருப் புமாக - எதிரும் புதிருமாகவும்கூட இருப்பார்கள்.

அது இந்த விசித்திர இரட்டைக் குழந்தைகளின் இயல்பு ஆகும்!

பணத்திற்காக - வருவாய்க்காக - தான் முறையாகப் பெற்று வாழும் இருபாலரும், உடல் இன்பத்தை விலை கொடுத்து வாங்குவதும், இயந்திரமாகி - தந்திரங்களைச் செய்து பணத்தைக் கறப்பதும் இவ்விரண்டும் ஒன்றுக் கொன்று அறைகூவல் விடுவது போன்றதல்லவா?

துவக்கத்தில் தேவையாகி, பின் அவைகளே சுமையாகி, இன்பந் தந்தவை, மக்களை துன்பக் கடலில் தள்ளி விடுகின்றனவே!

எனவே, கண்டிப்புடன் குழந்தை களைக் கட்டுப்பாட்டுடன் வளர்க்க விரும்பும் பெற்றோர்களைப் போல - இவ்விரண்டையும் (பணம், காமம்) மனிதர்கள் கையாண்டால், வாழ்வு சிறக்கும் வளர்ச்சி பளிச்சுறும்; வானம் வசப்படும்!
veramani

Read more: http://viduthalai.in/page1/72693.html#ixzz2p6olRBk1

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவருக்கு விஞ்ஞானி ஆ. சிவதாணுப்பிள்ளை நன்றிக் கடிதம்


பெருமதிப்பிற்குரிய அய்யா,

ரஷ்ய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஃப்ரெண்ட்ஷிப் (டீசனநச டிக குசநைனேளாயீ) விருதை பெற்ற மைக்கான தங்களின் வாழ்த்துச்செய்தி கிடைக்கப் பெற்றது. தமிழினத்தலைவராகிய தங்களிடமிருந்து இத்தகைய வாழ்த்துச் செய்தி கண்டு மிகப்பெருமையடைகிறேன். தமிழுக்காகவும், தமிழின மேன்மைக்காகவும் பாடுபடும் தங்களிடம் இத்தனை ஆண்டுகளான என்னுடைய நட்புறவை நான் பெற்ற பெரும்பேறாக கருதுகிறேன்.

இந்த விருது இந்திய - ரஷ்ய கூட்டமைப்பான ப்ரம் மோஸ், டி.ஆர்.டி.ஓ. என்.பி.ஓ.எம் ஆகிய நிறுவனங்களில் பங்காற்றும் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பாலும், இருநாட்டின் அரசாங்கத்தின் ஆதர வாலும் மேலும் தங்களைப் போன்ற நலம் விரும்புவோர்களின் நல்லாசிகளின் மூலமும் 60 ஆண்டுகால இந்திய - ரஷ்ய நட்புறவை, ப்ரம்மோஸ் நிறுவனத்தின் மூலம் மென்மேலும் வலிமை பெறு முடிந்தது.

தங்களுடைய பல வேலைகளுக்கு இடையில், சிங்கப்பூரில் இருந்து அனுப்பிய இந்த வாழ்த்து, மேலும் சாதிக்கத் தேவையான மனத்திட்பத்தையும் உறுதியையும் தருகிறது.
வாழ்க தமிழ், வளர்க திராவிடர் இனம்.

நன்றியுடன்
ஆ.சிவதாணுப்பிள்ளை

Read more: http://viduthalai.in/page1/72694.html#ixzz2p6p6HQg2

தமிழ் ஓவியா said...


மதுரை வீரா! காத்தவராயா!!


ஜாதி உணர்வு நம் நாட்டில் செய்திருக்கிற கொடுமைகளுக்கு, உயிர்ப்பலிகளுக்கு அளவே இல்லை. அதில் இன்னும் என்ன வேடிக்கை என்றால், ஜாதி வெறிக்குப் பலியான வீரர்களை இன்றைக்கும் நாம் குலதெய்வமாக ஆடு வெட்டி, கோழி வெட்டிப் படைத்துக் கொண்டி ருக்கிறோமே தவிர, அந்த மனித உயிர்ப்பலி களால் நாம் பெற வேண்டிய பாடத்தைப் பெறத் தவறிவிட்டோம்.

அந்த வீரர்கள் பலியிடுவதற்கு - கழுமரம் ஏறுவதற்கு காரணமாக இருந்த ஜாதி உணர் வைப் பழிவாங்காமல் அந்த வீரர்களை ஜாதிக் கடவுளாக்கி வழிபாடு செய்து வருகிறோம். அந்த வீரர்களைக் கடவுளாக்கிய நோக்கமே ஒருக்கால் அந்த உணர்வு நமக்கு வராமல் இருக்க வேண்டும் என்ற திட்டத்தாலேயே இருக்கும்.

காத்தான் என்ற ஆதித் திராவிடன் அப்பாப் பட்டர் மகள் ஆரியமாலாவைக் காதலித்தான். ஆரிய மாலாவும் அவனைக் காதலித்தாள். காத்தான் ஆரியமாலாவைச் சிறை எடுத்தான். (தாலி கட்டிக் கூட்டிக் கொண்டு போய் விட்டான்)

ஜாதி கெட்டுப் போனதென்றும், ஆசாரங் குலைந்ததென்றும் ஆறாயிரம் வேதியர்கள், ஆரியப்பூ ராஜனிடம் முறையிட்டார்கள். அரசன் காத்தானைப் பிடித்து இழுத்து வந்து கழுவேற்றிக் கொன்றான். வீரன் என்ற சக்கிலியர் குலத்திலே பிறந் தவன் மதுரை மன்னன் மகள் வெள்ளையம் மாளையும், பொம்மியம்மாளையும் நேசித்தான்.

அரசிளங் குமாரிகளும் காவல்காரனான வீரனை உயிராகக் காதலித்தார்கள்.

வீரன் இருவரையும் சிறை எடுத்துச் சென்றான்.

காலையில் செய்தி தெரிந்தது. நாடே கிடுகிடுத்தது. ஆட்கள் பறந்தனர்.

வீரனைக் கையும் களவுமாகப் பிடித்து இழுத்து வந்தனர். ஆம்! வீரன் துடிக்கத் துடிக்க மாறுகை மாறுகால் வாங்கப்பட்டான்.

கழுவேற்றிக் கொல்லப்பட்ட காத்தான் காத்தவராயன் சாமியாகி, மாறுகை, மாறுகால் வாங்கப்பட்ட வீரன் மதுரை வீரனாகி, அவர்கள் ஜாதியினரால் இன்றைக்கும் குலதெய்வமாக வழிபாடு செய்யப்படுகிறார்கள்.

காத்தவராயன் சரித்திரமும் மதுரை வீரன் சரித்திரமும் இன்றைக்கும் சேரிகளிலே பாட்டாய்ப் படிக்கப்படுகிறது.

அந்தோ! அந்தப் பாட்டுக்குள் இருக்கும் கருவை உணர்ந்து அவர்கள் விழிப்புறும் நாள் எந்நாளோ!

Read more: http://viduthalai.in/page1/72715.html#ixzz2p6pyqntV

தமிழ் ஓவியா said...

கோபுரங்கள் ஏன்?

வருணாசிரமத் தர்மங்களைக் கடைப்பிடித்தொழுகும் இந்துக்களில் சில ஜாதியார் கோயிலுக்குள் பிரவேசித்து, இறைவன் உருவினைக் கண்டு தொழுவதற்கு இயலாதவராய் இருத்தலின், அன்னார் நெடுநிலைக் கோபுரங்களைக் கண்டு தொழுது நற்பிறப்பெய்துந் திருப் பெறவே வானளாவுங் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆதாரம்: இராஜ ராஜ சோழன், ஆசிரியர்: இரா.சிவ. சாம்பசிவ சர்மா, நூல் பக்கம்: 93

கோபுரங்கள் கட்டப்பட்ட தன் தத்துவம் புரிகிறதா? நந்தன்கூட தில்லைத் தேரடியில் நின்று தரிசித்தால் போதும் என்று தரிசித்தால் போதும் என்று மனநிறைவு கொண்டதன் தத்துவமும் இதுதானே!

இப்போது கூட பார்ப்பனர்கள் அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகராகத் தகுதி இல்லை - சூத்திரப் பசங்கள் கோபுரத்தைத் தரிசித்தால் போதும் என்ற எண்ணத்தில்தானே அதை எதிர்க்கிறார்கள்!

Read more: http://viduthalai.in/page1/72715.html#ixzz2p6q6hSkv

தமிழ் ஓவியா said...


29ஆண்டுகளுக்கு முன்....


இன்றைக்கு 29 ஆண்டுகளுக்கு முன்பு இந்தநாடு எப்படி இருந்தது. ஜாதி வெறியின் தாண்டவம் எப்படி எப்படி எல்லாம் கொடூரமாக இருந்தது என்பது இன்றைய இளைஞர்களுக்கு அதிகம் தெரியாது. சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகத்தின் தன்மையை உணர்ந்தமாத்திரத்தில்தான் அறியமுடியும். இதோ ஒரு எடுத்துக் காட்டு: 29.12.1947 அன்று விடுதலையில் வெளியான ஆசிரியர் கடிதம்.

மருத்துவத் தோழருக்கு சுயமரியாதை

அய்யா, நான் நேற்று மாலை இவ்வூரில் காப்பி கிளப் வைத்திருக்கும் அய்யர் ஒருவர் கடையில் காப்பி சாப்பிடச் சென்றிருந்தேன். நான் மருத்துவ வகுப்பினைச் சேர்ந்தவன்.

நான் அக்கடையில் பலகாரம் வாங்கி டேபிளின் மேல் வைத்துக் கொண்டு, மரியாதைக்காக நின்று கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அங்கு வேலை செய்யும் பார்ப்பனர் ஒருவர் என்ன நீ டேபிள் மேலேயே உட்கார்ந்து கொண்டாற் போலிருக்கிறதே! நீ தரையில் அல்லவா உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு நான் மற்றவர் மேஜைமேல் சாப்பிடும் போது நான் மட்டும் தானா சாப்பிடக்கூடாது? என்று கேட்டேன். அதற்குள் தமிழர் ஒருவர் மரியாதை இல்லாமல் இப்படி நீ சாப்பிடுவதால், மற்றவர்களுக்குச் கூச்சமாய் இருக்காதா? என்று கேட்டார். உடனே நான், மற்றவர்களுக்காக நான் சாப்பிடவில்லை, மரியாதைக்காகத் தான் நின்று கொண்டு சாப்பிட்டேன்.

இல்லாவிட்டால் உட்கார்ந்து சாப்பிட எனக்குத் தெரியும் என்று கூறி மேஜை மேல் உட்கார்ந்து சாப்பிட்டு வந்தேன். திராவிடர் கழகம் நன்றாக வேலை செய்கிற இந்த ஊரிலேயே இவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதென்றால் மற்ற ஊர்த் தோழர்களுக்கு எவ்வளவு எதிர்ப்புகள் நடக்கும்?

கே.டி.பெரியசாமி, லால்குடி - 29.12.1947

Read more: http://viduthalai.in/page1/72714.html#ixzz2p6qJpRz8

தமிழ் ஓவியா said...

கண்ணன் எங்கே போனான்?

திரவுபதையின் மானத்தைக் காத்த கண்ணனுக்கு நாம் உற்சவங்கள் கொண் டாடுகிறோம். கவிகள் அவனைப் பற்றி காவியங்கள் பாடுகிறார்கள். தத்துவ ஞானிகள் அவனைப் பூர்ணாவதாரம் என்கிறார்கள்.

ஆனால், அந்தக் காலத் தில் ஒரு திரவுபதையின் மானத்தைக் காப்பாற்ற ஓடி வந்த கண்ணன், இன்றைய தினம், உடுக்க ஒரு முழக்கந்தலுமின்றித் தவிக்கின்ற லட்சக்கணக்கான ஏழைப் பெண்களைக் காப்பாற்ற ஏன் முன் வரவில்லை? தெய்வமே குருடாகிவிட்டது என்று எனக்குக் தோன்றுகிறது?

- காண்டேகர்

Read more: http://viduthalai.in/page1/72714.html#ixzz2p6qQLijm

தமிழ் ஓவியா said...


பெரியார் பெண்ணியம் மூன்று நாள் பயிற்சி: ஒரு பார்வை


தந்தை பெரியாரின் நினைவு நாளான டிசம்பர் 24 ஆம் தேதி காலை 6 மணி முதல் அய்யா நினை விடத்தில் கூடத் தொடங்கினர் பயிற்சிக்கு வந்த பெண்கள், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவி கள், வேலை பார்க்கும் பெண்கள், திருமணம் முடித்து குடும்பப் பொறுப்பை ஏற்றவர்கள் என வரு கைக்கு சிலர். திராவிடர் கழக மகளிரணியும், மகளிர் பாசறையும் இணைந்து நடத்திய பெரியார் பெண் ணியப் பயிற்சி பட்டறை சரியாக காலை 7 மணிக்குத் தொடங்கியது.

பங்கேற்பாளர்களின் அறிமுகத் திற்குப் பின், கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்அவர்கள் எளிமையாக உரையாற்றி துவக்கி வைத்தார். முதல் நாள் காலை முதல் மதியம் வரை புத்தர் கலைக்குழு வின் இயக்குநர் மணிமாறன் குழுவினரோடு பறை இசை, பாடல், தாளம் என அடிப்படைப் பயிற்சி யைத் தொடங்கி வைத்தார்.

திரைப்பாடகர் மகிழினி அவர்கள் கொடுத்த பாடல் பயிற்சியோடு நாடக வடிவத்திற்குள் நுழைந்தார்கள். மதியம் முதல் மாலை 6 மணி வரை கூத்துப்பட்டறை நாடக இயக்கத்தைச் சேர்ந்த தம்பிச்சோழன் பல் வேறு பயிற்சிகளோடு நாடகம் அமைப்பதற்கான தயாரிப்பை பயிற்சியாளர்களுக்கு அளித்தார்.

முதல் நாள் இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை Not one less என்ற சீனமொழித் திரைப்படம் திரையிடப்பட்டது.

டிசம்பர் 25-ஆம் தேதி காலை 6.30 மணி முதல் 10 மணி வரை பறை இசைப் பயிற்சி நடைபெற்றது.

தொடர்ந்து தன் வாழ்வியல் அனுபவங் கள் குறித்து வனத்துறை அலுவலரும், நரிக்குறவர் சமூகத்தின் முதல் பெண் பட்டதாரியுமான இந்திரா காந்தி அவர்களும், இன் றைய பெண்கள் எதிர் கொள்ளும் சவால்களைப் பற்றி சிறப்புக்குழந்தை களின் ஆசிரியரான நிர்மலா அவர்களும், பிரச் சினைகள் அவற்றின் தீர்வுகள் என்ற தலைப்பில் மனநல மருத்துவர் நப்பின்னை அவர்களும் பயிற்சியாளர்களோடு இயல்பாகப்பேசி, கலந்துரையாடல் முறையில் ஆலோசனைகளை அளித்தார்கள்.

மீண்டும் நாடகப் பயிற்சியில் புதிய அனுபவங்களைப் பெற்றனர். மாலை மற்றொரு திரைப்படம் அதுவும் சீனத் திரைப்படமே, அதன் பெயர் “To Live” (வாழ்வதற்காக) மூன்றாம் நாள் பறைப்பயிற்சியைத் தொடர்ந்து குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நடந்த கோரக் கொலைகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பதிவு செய்து ராகேஷ்சர்மா உருவாக்கிய The Final Solution "இறுதித் தீர்வு" என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இந்தியா எதிர்கொள்ள இருக்கும் மதவெறி வன்முறை பற்றிய இந்த ஆவணப்படம் பற்றி பங்கேற்பாளர்களுடன் கழகப் பிரச்சாரச் செயலா ளர் அருள்மொழி கலந்துரையாடல் நடத்தினார்.

மாலை 4 மணிக்கு நிறைவு விழாவில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பாராட் டுரையும், பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழும் வழங்கினார். திராவிட மகளிர் பாசறையின் செயலாளர் டெய்சி மணியம்மை இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.

பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், பரமேஸ்வரி அம்மையார், தலை மைச் செயற்குழு உறுப்பினர்கள் க.பார்வதி, க.திரு மகள், மகளிர் பாசறை உமா, வி.வெற்றிச்செல்வி முதலியோர் பங்கேற்றனர்.

Read more: http://viduthalai.in/page1/72697.html#ixzz2p6qcHcI3

தமிழ் ஓவியா said...


தனி மனித தத்துவம் கூடாது...வாழ்க்கை என்பது தனித்தனி மனிதனைப் பொறுத்த தத்துவம் என்பது கூடவே, கூடாது.
(பகுத்தறிவு, 1.11.1938)

Read more: http://viduthalai.in/page-2/72920.html#ixzz2p9d9QxQG

தமிழ் ஓவியா said...

பழையன கழிதலும்...2013 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. பழையன கழியட்டும்! 2014 ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. புதியன பூத்து மலரட்டும்! பழைய பஞ்சாங்கங்களைப் புரட்டி, புரட்டுகளை எழுதிக் குவிக்கும் அஞ்ஞானமும் ஒருபுறத்தில் அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் புத்தாண்டு வாழ்த்தில் குறிப்பிட்டுள்ள வாசகக் கருத்துகள் மிக முக்கியமானவை.

மனிதநேயம், சமத்துவம், சம வாய்ப்பு, பகுத்தறிவுச் சிந்தனை வளம் பெருகி, வாழ வைக்கும் புதுஉலகப் புத்தாண்டாக அமையட்டும்! என்பவை மிகமிகச் சிறப்புக்கும், வரவேற்புக்கும் உரியவை.

இந்தச் சொற்களில் அடங்கியுள்ள மகரந்தங்கள் புதிய ஒப்புரவுச் சமனிய சமுதாயத்தை மலர்விக்கும் என்பதில் அய்யமில்லை.

பெற்றோர்களைப் பராமரிக்காவிட்டால், அவர்களுக்குத் தண்டனை என்று ஓர் அருமையான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது - வரவேற்கத்தக்கதேயானாலும், இப்படியொரு சட்டம் நிறைவேற்றப்பட நேர்ந்தமைக்கு, எல்லோரும் வெட்கப்படவேண்டாமா?

கைநிறைய சம்பாதிக்கிறோம் என்ற அகந்தையில் அதற்குக் காரணமான தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கின்றனரே - எங்கே போயிற்று மனிதநேயம்?

சமத்துவம், சம வாய்ப்பு என்று தமிழர் தலைவர் கூறியுள்ளதில் சமதர்ம மணம் கமழ்கிறது, இன்னும் மாத வருவாய் ரூ.20 ஈட்டக்கூடியவர்கள் நாட்டில் 70 விழுக்காடு என்றால், வெட்கப்படவேண்டாமா?

நாடு சுதந்திரம் அடைந்தால் தேனாறும், பாலாறும் கரைபுரண்டு ஓடும் என்றார்களே - அதற்கான மறுப்புதான் மேற்கண்ட சென்குப்தா குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரம்.


இந்தியாவில் விவசாயம் என்பது மிக முக்கியமான உயிர்நாடித் தொழில். பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள்தான் ஆண்களும், பெண்களுமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் வயிற்றுக்குச் சோறு போட்டு உயிரை நீட்டித்துக் கொண்டிருக்கும் அந்தத் தொழில் பாவப்பட்ட தொழிலாகத்தானே கருதப்படுகிறது - ஆக்கப்படுகிறது.

இந்திய விவசாயி கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து,கடனிலே சாகிறான் என்ற வாசகங்களை இன்னும் எவ்வளவுக் காலத்துக்குத்தான் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள்?

இந்தியாவில் விவசாயிகள் வளமையாக வாழ்கிறார்கள் எனும் நிலை, நிலை நிறுத்தப்பட்ட நாள்தான் இந்தியா பொருளாதாரத்தில் - சமத்துவத்தில் புன்னகை பூக்கிறது என்பதற்கான அத்தாட்சியாகும்.


இந்தியாவின் பெருங்குடி மக்களான விவசாயிகள் வறுமைக்கோட்டுக்குள் மூச்சுத் திணறிக் கொண்டுள்ள சூழ்நிலையில், அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் அய்.ஏ.எஸ். ஆக முடியும்; உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியும் என்று கனவுகூடக் காண முடியாதே!

மாநில, மத்திய அரசுகள் வருணாசிரமக் கண் ணோட்டத்தில் பாவப்பட்ட தொழிலாக நசுங்கிப்போன வேளாண் மக்களின் வாழ்வுக்கு வளமைகூட்ட அனைத்து முயற்சிகளையும் முனைந்து, மும்முரமாக செய்யட்டும்! செய்யட்டும்!!

சமவாய்ப்புப்பற்றியும், திராவிடர் கழகத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அளவில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்க்குக் கல்வி, வேலை வாய்ப்புகள் உரிய சதவிகிதத்தில் கிடைக்கப் பெறவில்லை.

மண்டல் குழு பரிந்துரைக்காக, திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியுள்ளது. வேலை வாய்ப்பில் 27 சதவிகிதம் என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் இன்னும் எட்டு சதவிகிதத்தைக் கூடத் தாண்டவில்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்திற்கு, இன்னும் சட்ட வலிமை அளிக்கப்படவில்லை.

தமிழ் ஓவியா said...


கல்வியில் இட ஒதுக்கீடு என்பது வெறும் ஏட்டுச் சர்க்கரையாகவே இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் இந்திய அளவில் பெரும் விழிப்புணர்ச்சி ஊட்டப்படவேண்டும் என்பதைத்தான் இது காட்டுகிறது.

அனைத்துத்துறைகளிலும் விதிவிலக்கின்றி இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்; குறிப்பாக உடனடியாக நமது கவனம் - தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு சட்டப்படி கிடைக்கச் செய்வதே!

இந்தியாவில் ஆயிரம் கார்ப்பரேட் நிறுவனங்களில் 9052 போர்டு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 44.6 சதவிகிதம் பார்ப்பனர்கள். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 3.5 சதவிகிதம்.

சம வாய்ப்புத் தேவை என்று தமிழர் தலைவர் கூறியிருப்பதன் பொருள் இதன்மூலம் வெளிப்படும்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது 2014 ஆம் ஆண்டு மிக முக்கியத்துவம் உள்ளதாக அமையும்.
பகுத்தறிவுச் சிந்தனை பெருகவேண்டும் என்றும் கூறியுள்ளார்; மனி

தன் என்பதற்கே அடையாளம் பகுத்தறிவுச் சிந்தனைதானே! மதவாத சக்திகளை மக்கள் மனதிலிருந்து வேரோடு கெல்லி எறிந்திடவும் வேண்டும்.

நம் நாட்டுப் படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் ஏதாவது தொடர்புண்டா? வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்சாகத்தானே நம் கல்வி உள்ளது.

இந்த நிலையில் பெரியாரியலை உலக மயமாக்கும் பணி - பெரியார் உலகம் பணியை முன்னெடுப்போம்!

வருக புத்தாண்டே, வளமுடன்!

Read more: http://viduthalai.in/page-2/72921.html#ixzz2p9dMwQ4t

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யின் இரட்டை வேடம் : கிழிக்கிறார் கபில்சிபல்


வேவு பார்ப்பு விவகா ரத்தில் பாஜக இரட்டை நாக்குடன் இருவேறு விதமாக பேசி வருகிறது என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

கோத்ரா கலவரம் தொடர்பாக விசாரிக்க முதல்வர் நரேந்திர மோடி, நானாவதி ஆணையத்தை நியமித்தார். அந்த ஆணை யம் 4 மாதங்களில் விசா ரணை அறிக்கையை தாக் கல் செய்திருக்க வேண்டும். ஆனால், சுமார் 11 ஆண்டு கள் ஆகிவிட்டன. இன் னும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. பெண் பொறியாளர் வேவு பார்க்கப்பட்ட விவகா ரம் தொடர்பாகவும் முதல்வர் மோடி விசா ரணை ஆணையம் நியமித்துள்ளார். இந்த ஆணையமும் நானா வதி ஆணையம் போல் தான் செயல்படும்.

பெண் பொறியா ளர் வேவு பார்க்கப் பட்டதில் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம், டெலிகிராப் சட்டம் ஆகியவை அப்பட்டமாக மீறப் பட்டுள்ளன. ஒரு இளம்பெண்ணின் தனிப்பட்ட உரிமை யும் பாதிக்கப்பட்டி ருக்கிறது.

இதன் காரண மாகத் தான் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆணையம் பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட் லியின் தொலைப்பேசி உரையாடல் விவரங்கள் வெளியான விவகாரம் குறித்தும் விசாரணை நடத்தும்.

மேலும் இமாசலப் பிரதேச முதல்வர் வீர பத்ர சிங், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அவரது தொலைப் பேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் குறித்தும் விசாரணை நடத்தும்.

மாறி மாறி பேசும் பா.ஜ.க.

அருண் ஜேட்லியின் தொலைப்பேசி உரை யாடல் விவரம் வெளி யானபோது, அதுதொடர் பாக விசாரணை ஆணை யம் அமைக்க வேண்டும் என்று பாஜக தலை வர்கள் குரல் எழுப்பினர். அதேநேரம் இளம் பெண் வேவு பார்ப்பு விவகாரம், இமாசலப் பிரதேச முதல்வர் வீர பத்ர சிங்கின் தொலைப் பேசி உரையாடல் ஒட் டுக் கேட்பு ஆகியவை குறித்து ஆணையம் அமைக்க பாஜக தலை வர்கள் எதிர்ப்பு தெரி விக்கின்றனர்.
இது, மாறி மாறி பேசும் அந்தக் கட்சியின் இரட்டை நாக்கை வெளிப்படுத்துகிறது. ஒரு மாநில முதல்வர் மக்களின் அந்தரங் கத்தை எட்டிப் பார்ப் பதை சட்டம் ஒரு போதும் அனுமதிக்காது என்று கபில் சிபல் கூறி யுள்ளார். -பி.டி.அய்.

Read more: http://viduthalai.in/page1/72740.html#ixzz2pCQ5KkzS

தமிழ் ஓவியா said...


விண்வெளித் துறை எட்டாத துறையா?


1975 ஆம் ஆண்டு முதற் கொண்டு இந்திய விண்வெளி ஆய்வு (i s r o) மற்றும் விண்வெளித் துறையும் நாடுமுழுவதிலும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை வேலைக்கு எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது, ஆராய்ச்சி அல்லாத முன்னேற்றப் பணிகளைச் செய்வதற்கான அறிவியல் மற்றும் தொழில் நுட்ப முதல் தர நேரடிப் பணிகளுக்கான இட ஒதுக்கீடு ஆணைகள் பின்பற்றப்படுவதில்லை. 10 ஆண்டு கால நீண்ட போராட்டத்திற்குப் பிறகு டில்லியில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் விண்வெளித் துறைக்கு ஒரு பரிந்துரையை அனுப்பியது. அதன் அடிப் படையில் 23-06-1975 தேதியிட்ட நிர்வாக சீர்திருத்த துறையின் O.M.No.9.02.1973ESST (SCT) தாழ்த்தப் பட்டோருக்கான இட ஒதுக் கீட்டாணையை நடைமுறைப்படுத்தி அது தொடர்பான அறிக்கையை தேசிய தாழ்த்தப் பட்டோருக்கான ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும், ஆனால் டில்லியில் உள்ள தாழ்த்தப் பட்டவர்களுக்கான தேசிய ஆணையத்திற்கு கீழ்ப்படியாமல் விண்வெளித் துறை புறக் கணிக்கிறது, இந்த அறிக்கை அனுப்பி 60 நாட்கள் கடந்து விட்ட நிலையில், டில்லி தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் ஆணையின் படி விண்வெளித் துறை உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு மக்கள் எழுச்சியை வெளிப்படுத்த இந்த விவரத்தை அகில இந்திய அளவில் விளம்பரம் கொடுத்து தாழ்த்தப்பட் டோருக்கான இடஒதுக்கீட்டினை அமல் செய்ய ஆவன செய்யவேண்டும் என்ற குரல் எழுந் துள்ளது. திராவிடர் கழகம் தொடர்ந்து விதி விலக்கின்றி அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. விதி விலக்கு என்று குறிப்பிட்ட துறைகளை ஒதுக்கி வைத்தால், நாளடைவில் விதி விலக்குப் பட்டியலில் உள்ள துறைகளின் எண்ணிக்கைதான் விரிவடைந்து போகும்.

எந்தத் துறையாக இருந்தாலும் சரி, அதில் குறிப்பிட்ட உயர் ஜாதி வட்டத்தைச் சேர்ந்த வர்கள்தான் இடம் பெற முடியும்என்ற நிலை இருப்பது நியாயமாகாது; தகுதி, திறமை என்ற தந்திர வலையை உருவாக்கி, குறிப்பிட்ட உயர் ஜாதி யினர் மட்டுமே ஏக போகக் குத்தகை தாரர்களாக இருந்து வருவதை இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தான் அனுமதிக்க முடியும்?

மின்னஞ்சலைக் (E-Mail) கண்டுபிடித்த சிவ. அய்யாதுரை என்பவர் திருவில்லிப்புத்தூரை யடுத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.

ஆனாலும் இந்தியப் பார்ப்பன ஊடகத்தார் அவரின் அருஞ் சாதனையை மூடி போட்டு மறைத்து விட்டனரே!

மும்பையைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பார்ப்பன ஆங்கில இதழின் ஆசிரியர் தன்னைப் பற்றி சொன்னதை சென்னை நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவா அய்யாதுரை எடுத்துக் கூறிக் குமுறினாரே!

பார்ப்பனர் அல்லாத சிவ அய்யாதுரை எப்படி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்க முடியும் என்று கூறினாராம். இதுதான் இன்றைக்கும் இருக்கும் பார்ப்பன மனப்பான்மை.
தகுதி திறமை எல்லோருக்கும் பொது என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் நிருபித்து வருகிறார்கள். எனவே விண்வெளித்துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் இடஒதுக் கீடு தேவை - இத்திசையில் திராவிடர் கழகம் தொடர்ந்து போராடும்.

Read more: http://viduthalai.in/page1/72745.html#ixzz2pCQsvU88

தமிழ் ஓவியா said...


பித்தலாட்டம்


மனித சக்திகளுக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவு தான் உயர் நிலையில் இருந்தாலும் சரி - அது பித்தலாட்டம், மோச வார்த்தை என்பதை மனதில் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- (விடுதலை, 20.5.1948)

Read more: http://viduthalai.in/page1/72744.html#ixzz2pCRJ3KqE

தமிழ் ஓவியா said...


பகிஷ்காரமும் ஜஸ்டிஸ் கட்சியும்

பகிஷ்காரமும் ஜஸ்டிஸ் கட்சியும்

பகிஷ்காரக் கூட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சி யாரும் சேர்ந்துகொண்டால் தேவலாம் போல அக்கட்சி பிரமுகர்களுக்குத் தோன்றுவதாய்த் தெரிகின்றது. ஏனெனில் பாமர ஜனங்களிடம் தங்களுக்குச் செல்வாக்கில்லை என்று நினைப்பதுடன் அரசாங்கத் தாரும் தங்களைக் கண்டால் பயப்படுவதில்லை என்றும் நினைப்பதாய்க் காணப்படுகிறது. அவர்கள் அப்படி நினைத்திருப்பது தப்பு என்பது நமது கெட்டியான அபிப்பிராயம், பாமர மக்கள் எப்போதும் பாமர மக்களாகவே இருக்க முடியாது. இப்பொழுது சற்று கண் விழித்துக் கொண்டு வருகின்றார்கள். பாமர மக்களிடம் செல்வாக்குப்பெற்று ஏதாவது நன்மை செய்யவேண்டுமானால் பாமர மக்கள் மகிழும்படியான மாதிரியிலேயே போய்க் கொண்டிருப்பதினால் ஒரு பலனும் ஏற்படாது. அவர்கள் உண்மையை உணர்ந்து நன்மையைக் கடைப்பிடிக்கும்படி செய்யவேண்டும். அதற்காக காத்திருந்தாலும் குற்றமில்லை. இரண்டொரு தடவை தோல்வி ஏற்பட்டாலும் குற்றமில்லை. இல்லாவிட்டால் முக்கியமான சமயத்தில் ஆபத்து வந்துவிடும். பிறகு சுலபமாய் திருத்த முடியாமலும் போய்விடும். ஆதலால் தக்க அஸ்திவாரத்துடனும் நிலை யான கொள்கைகளுடனும் வேலைசெய்ய வேண்டியதுதான் பொறுப்பாகுமே தவிர கூட்டத்தில் கோவிந்தா போடுவது பொறுப்பாகாது என்று நினைக்கிறோம்.

தவிர, சர்க்கார் பயப்படமாட்டார்கள் என்று எண்ணுவது தப்பு என்று நினைக்கின்றோம். சர்க்காரைப் பயப்படுத்துவதாய் நினைப்பதைப் போல முட்டாள் தனமான காரியம் வேறில்லை. வெறும் உத்தியோகம் மாத்திரம் நமது கவலை யானால் சர்க்காரை மிரட்டுவது பயன்படும், அது நமது முக்கிய நோக்கமல்ல. ஒருக்கால் அப்படியே வைத்துக் கொண்டாலும் நாமாக ஒரு காரியம் செய்து அதன் மூலம் சர்க்காரை மிரட்டலாம். அந்த யோக்கியதை வரும் வரை காத்திருக்கலாம். அப்படிக்கில்லாமல் பார்ப்பனர்களோடு சேர்ந்து நாமும் கூப்பாடு போடுவதின் மூலம் சர்க்காரை மிரட்டினால், ஒரு சமயம் சர்க்காரும் பயப்படுவ தனால் அதன் பலன் முன்னின்று சத்தம் போட்ட பார்ப்பனர்களுக்குத்தான் ஏற்படுமே தவிர மற்றவர்களுக்கு ஒன்றும் ஏற்படப்போவதில்லை. பார்ப்பனர்கள் அவ்வளவு பைத்தியக்காரர்களல்ல. மிஞ்சி ஏதாவது கிடைத்தால் அவர்கள் தின்றது போக மீதி எச்சில்தான் கிடைக்கும். ஒரு சமயம் நமக்கு ஏதாவது பெரியபலன் கிடைப்பதாயிருந்தால் அப்போது வேறு வழியை அனுஷ்டிக்க பார்ப்பனர்களுக்குத் தெரியும். தவிரவும் ஒரு பெரிய சமூகத்தின் நிரந்தரமான முன்னேற்றத்திற்கு பாடுபடும் இயக்கம் இம்மாதிரி அடிக்கடி மாறும் கொள்கைகளைப் பார்ப்பன அரசியல்காரருக்கும் வயிற்றுச் சோற்று தேசபக்தர்களுக்கும் பயந்துகொண்டு மாற்றி வந்தார்களா? பார்ப்பனரல்லாதார் என்கின்ற இவ்வளவு பெரிய சமூகத்தின் பேரால் ஏற்பட்ட இயக்கம் தனக்கென ஒரு மனத்துணிவும் நிலையும் இல்லாமல் கூச்சலுக்கும் கும்பலுக்கும் பயந்து கொண்டிருக்கின்றது என்று பிறர்சொல்லும்படி நடந்தார்கள்? சர்க்காரையாவது உதறித்தள்ளிவிட வேண்டும். யோக்கியமான நிலையான கொள்கைகளைக் கட்டிக்கொண்டு சாக வேண்டும்.

அப்பொழுதுதான் நமதுபின் சந்ததிக்காவது பலனுண்டு. இம்மாதிரி மனக்கிலேசங்கள் வரும்போது உண்மைத் தலைவர்களான டாக்டர் நாயர் பெருமானையும் சர்.தியாகராயரையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் ஏதாவது அடிக்கடி மாறினார்களா? பாமர மக்களுக்காவது பயந்தார்களா என்பது ஞாபகப்படுத்தும் என்று நினைக்கின்றோம். முடிவாக நாம் சொல்லுவது என்னவென்றால் பார்ப்பனரல்லாத சமூக இயக்கத் தலைவர்கள், தங்களைக் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களைப்போல் தாங்கள் தங்கள் பெண்டு பிள்ளை குடும்பங்களுக்கு மாத்திரம் தலைவர்கள் என்று எண்ணாமல், பார்ப்பனர்களாலும் அரசாங்கத்தாராலும் எவ்வளவோ கொடுமைகள் செய்யப்பட்டு வாயில்லாப் பூச்சிகளாய் கிடக்கின்ற பாமர மக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் தலைவர்கள் பிரதிநிதிகள் என்பதை நினைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 11.12.1927

Read more: http://viduthalai.in/page1/72762.html#ixzz2pCS5s8YZ

தமிழ் ஓவியா said...

திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதைச் சங்க மகாநாடு

இவ்வாண்டு விழாவுக்கு நான் தலைமை வகிக்க வேண்டுமென்று கட்டளை இட்ட கனவான்கள் எல்லாம் என்னைப்பற்றி அதிகம் கூறினார்கள். அது என்னை மிகுதியும் வெட்கப்படும்படி செய்துவிட்டது. அதனால் நான் என்ன பேசவேண்டு மென்று எண் ணினேனோ, அதை மறக்கச் செய்தது. அவர் களுக்கு என்னிடமும், எனது இயக்கத்திடமும் உள்ள பற்றும், அவர்களின் இயற்கையான பெருந்தன் மையும், அளவுக்கு மீறி என்னைப் புகழச்செய்தது. அப்புகழுரைகளுக்கு நான் சிறிதும் அருகனல்ல, ஆனாலும் (இல்லை இல்லை முழுதும் பொருந்தும் இன்னமும் அதிகமாயும் பொருந்தும் என்கின்ற கூச்சல்) அதற்கு வந்தனம் செலுத்துகின்றேன்.

இயக்கம் ஆரம்பித்த காலத்தில் எதிர்ப்புகள் பலமாய் இருந்தது. இன்னும் யாவரும் ஏகமனதாய் ஆதரிப்பதாகவும் எண்ண இட மில்லை. இன்னும் அதிக எதிர்ப்பு இருக்கிறது. ஆயினும், இத்தகைய மகான்கள் எல்லாம் ஆதரவு அளித்து வருவதைக் கண்டு, மிக தைரியங்கொண்டு, அந்த ஆசையின்மீது அவர்கள் உரையை நான் சகித்துக் கொண்டி ருக்கிறேன். குடிஅரசைப்பற்றி மிக அதிக மாகக் கூறினார்கள். அதில் உள்ள குற்ற மெல்லாம் எனக்குத் தெரியும். அதில் உள்ள மெல்லின, வல்லினம் போன்ற பல இலக் கணப் பிழைகளும் மற்றும் பல பிழைகளும் எனக்குத் தெரியும். இதற்காக நான் இலக் கணம் கற்கப்போவதில்லை. இவ்வாண்டு விழாவுக்கு எனக்குக் கடிதம் அனுப்பா விட் டாலும் எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடுவேன். இந்த நிலையில் உள்ள என்னையே தலைமை வகிக்க வேண்டுமென்று கூறியது எனது பாக்கியமே யாகும். சிறந்த கல்வியாளர்களும், பெரியார்களும் நிறைந்த இந்த ஜில்லா வாசிகளான நீங்கள் இவ்வியக்கத்துக்கு இவ்வளவு ஆதரவு காட்டி வருவதைக் கண்டு நான் பெருமை அடைவது மட்டுமல்ல, மற்ற ஜில்லாவாசிகளும் உங் களுடன் போட்டியிட்டு தங்கள் சுய மரியாதையை நிலைநிறுத்துவதில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டு மென்று மீண்டும் அறிவித்துக் கொள்ளு கிறேன்.

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை

சுயமரியாதை இயக்க மென்றோரியக்கம் தோன்றிய காலத்தில் பலர் பல விதமாகப் பேசியதுண்டு. ஆனால், இப்பொழுதோவெனில், இவ்வியக்கம் பலரால் ஒப்புக் கொள்ளக்கூடிய தாயும், மனிதனுடைய வாழ்விற்கும் உலக முற் போக்குக்கும் இன்றியமையாததென நம்மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். உணர்ந்தும் வருகிறார்கள். இப்பொழுது எங்கு பார்த்தாலும் சுயமரியாதைப் பேச்சாகத்தானிருக்கிறது. நம் நாடு, வெளிநாடு தேசியவாதிகளும்கூட இச்சுயமரியாதையென்னும் வார்த்தையை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்ரீ காந்தியும் சுயமரியாதை யைப்பற்றி பேசுகிறார். ஒத்துழையாமையே சுயமரியாதைக்காக ஆரம்பித்ததே ஒழிய சுயராஜ்யத்திற்காக அல்ல. இப்பொழுது கொஞ்சகாலமாய் நமது நாட்டில் நடந்துவரும் ராயல் கமிஷன் பகிஷ்காரம் என்கின்ற கூச்சல்கூட சுயமரியாதைக் காகத்தான் என்று சொல்லுகிறார்கள்.

இச்சுயமரியாதைச் சங்கத்தின் கொள் கைகள் என்னவெனிலோ, பிறப்பில் உயர்வு தாழ்வில்லை என்பதும், மேல் கீழ் இல்லை யென்பதும் தானேயல்லாமல் எந்தத் தனி வகுப்பாரையும் இழிவுபடுத்தவில்லை யென் பதையும் உங்களுக்கு நினைப்பூட்டு கின்றேன். ஆனால் நம் நாட்டுப் பார்ப்பனர்கள் தங்களை ஏதோ துவேஷிப்பதாகக் கூறி வருகின்றனர். இது அக்கூட்டத்தாரின் யோசனையின்மை யாலும், பேராசையாலுமே ஏற்படுகிறது. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களென்று சொல்லிக்கொள்கிறவர்களுக்கும் நமக்கும் சுயமரியாதை தத்துவம் எவ்வளவு பயன்படு கிறதோ அதைவிட அதிகமாக பார்ப்பனர் களுக்கும் பயனுண்டு.

பார்ப்பனரல்லாதாராகிய நாம் எவ்வளவு தூரம் இழிவுபடுத்தி வைக்கப் பட்டிருக்கின் றோமோ, அந்த அளவுக்கு பார்ப்பனர்கள் சுகம் அனுபவித்து வருகிறார்கள். நாம் எவ்வளவுக் கெவ்வளவு கொடுமையுடன் நடத்தப்படு கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அவர் களுக்கு நன்மையாகவே இருக்கிறது. இவ்வியக்கத்தின் பயனால் நாம் மாத்திரம் சுகப்படுவதல்லாமல், பார்ப்பனர்களும் இதன் மூலமாய் தங்கள் இழிவைப் போக்கிக் கொள்ளுகிறவர்களாகிறார்கள். உண்மையாக, கடைசியாக இவ்வியக்கத்தால் யாருக்காவது கடுகளவாவது துன்பம் நேரிடுமா என்றால் இல்லவே இல்லை. ஆனால், அரசாங்கத் தாருக்கு மாத்திரம் கொஞ்ச காலத்திற்கு கஷ்டமாகத்தானிருக்கும். ஏனெனில், நாம் எவ்வளவு தூரம் சுயமரியாதையற்றிருக்கின் றோமோ, அவ்வளவு தூரம் நம்மை இழிவுபடுத்தி நம்மிடமிருந்து அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்களுக்குங் கூட கொஞ்ச நாளைக்குள் புத்தி வந்து விடும். எத்தனை நாளைக்குத்தான் தூங்குகிறவன் தொடையில் கயிறு திரிப்பதென்று சொல்லி விலகி விடுவார்கள். பின்னர் யாரும் சுதந்திரத் துடன் வாழலாம். ஆகையால், வாழ்க்கையின் பரிசுத்தத்திற்கும் சுயமரியாதையே அடிப் படையானது. இதைப்பற்றி எத்தனையோ பெரியார்கள் கூறியிருக்கின்றனர். கவரிமான் ஒரு மயிரிழப்பின் உயிர் வாழாது என்பதுபோல், மனிதனும் மானமிழந்து வாழ விரும்பான். ஆகவே, நம் மானத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், மனிதத் தன்மை யோடிசைந்த வாழ்க்கை நடத்தவேண்டு மென்றால் சுயமரியாதைதான் வேண்டற்பாலது. இப்பொழுது மணி 12 ஆகிவிட்டது. மீண்டும் மாலையில் இம்மகாநாடு கூடவேண்டியிருப்ப தால் இத்துடன் எனது பிரசங்கத்தை முடித்துக் கொள்வதுடன் எனக்கு அன்புடன் இவ்வக் கிராசனப் பதவியை அளித்த அன்பர் களுக்கும் எனது மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்திக் கொள்ளுகிறேன்.
- குடிஅரசு - சொற்பொழிவு - 04.12.1927

Read more: http://viduthalai.in/page1/72762.html#ixzz2pCSFNtjY

தமிழ் ஓவியா said...


அவருக்கு அடுத்து வந்த திரு. பல்லம்ராஜூ அவர்கள் மேல்தட்டு அறிஞர். அவரது தெலங் கானா பிரிவினை பிரச்சினை காரணமாக அவர் கல்வி அமைச்சராக தொடர்ந்து பணியாற்றி கோப்புகளைப் பார்த்து, அதிகாரிகளிடம் வேலை வாங்குகிறாரா இல்லையா என்பதே நாட்டு மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது.

மத்தியப் பட்டியலில் ஒன்றான பொதுப் பட்டியல் (Concurrent List) என்பதில் 1976இல் நெருக்கடி காலத்தில் கல்வியை இணைத்ததின் விளைவு, *(மாநிலப் பட்டியலிலிருந்து எடுத்து அதில் இணைப்பு).

குழப்பங்களும், குளறுபடிகளும்!

பல்வேறு குழப்பங்களும், முரண்பாடுகளும், குளறுபடிகளும் மத்திய கல்வித் துறையில் தொடர்ந்து அரங்கேறி தலைவலியை மக்களுக் கும், ஆட்சியாளருக்கும் ஏற்படுத்தவே செய் துள்ளன!

எடுத்துக்காட்டாக, உயர்கல்வி என்பது சீனாவில் 20 விழுக்காடு என்றால், நம் நாட்டில் 6 முதல் 8 விழுக்காடுதான் என்ற பரிதாப நிலை!

ஒருபுறத்தில் பல்கலைக் கழகங்கள் புதிதாக 1500 உருவாக வேண்டும் நம் நாட்டில் என்று அறிவுசார் கமிஷன் (Knowledge Commission)பரிந்துரை,

1500-க்கு மேல் தேவை என்று 11ஆவது அய்ந்தாண்டு திட்டத்தில் மதிப்பீடு - பரிந்துரை,
ஆனால், தேவையற்று வெளிநாட்டில் போணி யாகாத சில பல்கலைக் கழகங்களை இங்கே நுழைப்பது என்ற தன்னிச்சையாக முடிவு செய்து மத்திய மனித வளத்துறை அமைச்சர், வேண்டு மென்றே இங்கே துவக்கப்பட்ட நிகர் நிலைப் பல்கலை கழகங்கள்மீது வீண்பழி தூற்றி, வழக்கு மன்றம் வரை சென்று கடந்த 4 ஆண்டுகளாக அவற்றின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட் டுள்ள வேதனையான நிலையில் இவ்வாண்டு மேலும் 269 புதிய பல்கலைக் கழகங்களைத் தொடங்க அறிவிப்பு!

இதில் உள்ள சுய முரண்பாட்டைக் கவனிக்க வேண்டும்; இருப்பதை - வளருவதை ஊக்கப்படுத் தாமல் மூடி, புதியதைத் துவக்குவார்களாம்! என்னே விசித்திரம்!

கண்டனத்திற்குரியது

இந்த நிலையில் பல்கலைக் கழகங்களோ, கல்லூரிகளோ வெளிநாட்டு, உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் எது செய்தாலும் மத்திய கல்வித் துறையின் முன் அனுமதி பெற்றாக வேண்டும் என்பதாக 2010 புதிய மசோதாவில் இணைத்து, புதியதாக அறிவிப்புகள் வந்திருப்பது மிகவும் கண்டனத் திற்குரியதாகும்.

பல்கலைக் கழகங்களின் சங்கத் தலைவர் ஏ.ஐ.கூ வேந்தர் திரு. விசுவநாதன் அவர்களும், கல்வி யாளர்களும் இதனைக் கண்டித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்கள். (செய்தி கீழே காண்க)

தான்தோன்றித்தன முடிவை திரும்பப் பெற...

அவர்தம் கருத்து மத்திய கல்வித்துறைக்கு காலத்தால் தரப்பட்ட சரியான அறிவிப்பு ஆகும். கல்வியாளர்கள் எவரையும் கலந்து ஆலோசிக் காமல், தான் தோன்றித்தனமாக எடுத்த முடிவு இது. இது தவறானதாகும். திரும்பப் பெற காரணங்கள் வருமாறு:

1. 2010 விதிகள் பற்றிய வழக்கு நீதிமன்றத் தில் விசாரணையில் உள்ளது.

2. சில பேர் தடையாணையும் வாங்கியுள் ளனர்.

3. பல்கலைக் கழகங்கள் என்றால் அவை தன்னாட்சி (Autonomous) உரிமை படைத் தவை. அதில் தேவையற்ற அரசியல் தலை யீடுகளோ, குறுக்கீடுகளோ இருக்கக் கூடாது.

தவறுகள் நடந்தால் மட்டுமே அரசுகள் குறுக்கிட உரிமையும், அதிகாரமும் உண்டு.

சமூக முன்னேற்றத்திற்கு உதவி

எனவே தேவையில்லாத அடுத்த தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் நிலை யில், இருப்பவைகளை மாற்றி குழப்பங்களை கோலோச்ச செய்யும் முடிவுகளை கைவிட்டு, இயங்கும் பல்கலைக் கழகங்கள் - நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளை வளர்ச்சி யடைய வழி காட்டினால் அது சமூக முன்னேற்றத் திற்கு மத்திய அரசு உதவியதாகும்!

அவசர அவசியம்!

எனவே, மத்திய அரசு, பிரதமர் மன்மோகன் சிங், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் திருமதி. சோனியா காந்தி ஆகியோர் இதில் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து, குளறுபடிகளைத் தவிர்ப்பது அவசரம் - அவசியம்.கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

முகாம்: சிங்கப்பூர்

29.12.2013

Read more: http://viduthalai.in/page1/72810.html#ixzz2pCTL8kQX

தமிழ் ஓவியா said...


தமிழ் பிரபாகரனை கைது செய்ததற்கு தமிழர் தலைவர் கண்டனம்ஜூனியர் விகடன் வார ஏட்டின் செய்தியாளர் திரு. தமிழ் பிரபாகரனை இலங்கை அரசு அங்கே அவர் ஏதோ நிழற்படம் எடுத்தார் என்ற சாக்கைக் காட்டி கைது செய்து நடவடிக்கை எடுக்க முனைந்ததை, நாம், வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இதுபற்றி நமது நாடாளுமன்ற உறுப்பினர், வெளியுறவுத் துறை அமைச்சரிடம் பேசி, ஜனநாயக உரிமைப்படி பத்திரிகையாளர் சுதந்திரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொண்டு அவரை விடுவித்து இருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

ஏற்கெனவே அங்கே பல பத்திரிகையாளர்கள் காணாமற் போனதாக தகவல்கள் உண்டு. அவர்கள் சிங்களவர்கள் ஆன போதிலும்கூட!

பிரபாகரன் என்ற பெயரேகூட அந்த ஆட்சியினருக்கு ஒவ்வாமையைத் தந்திருக்கக் கூடும்!

உடனடியாக இதற்குரியவைகளைச் செய்து அவரைத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்திருப்பது நமது மத்திய அரசின் முதற் கடமையாகவே கருதுகிறோம்!

பத்திரிகையாளருக்கு, தூதுவரைப் போல சில தனி உரிமைகளும் உண்டு அவர்கள் கடமையாற்றும்போது என்பது விளக்கப்பட வேண்டியதில்லையே!


கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

29.12.2013

Read more: http://viduthalai.in/page1/72811.html#ixzz2pCTtSs6p

தமிழ் ஓவியா said...

இந்தியச் சமுதாயம் பற்றி ஆப்பிரிக்கப் பாதிரியார்


டெஸ்மாண்ட் டுடு

நோபல் பரிசு பெற்றவரும் தென் ஆப்பிரிக்காவின் நிற வேற்றுமை எதிர்ப்பாளருமான ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு, தான் அம்பேத்கரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை என்று இந்து நாளிதழ் நிருபரிடம் கூறியுள்ளார். இந்திய அரசியல் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் பங்கு பெற்று இருந்தார் என்பதை அறிந்தவுடன் டுடு மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.

மகாத்மா காந்திக்குச் செலுத்திய கவனத்தை நிற வேற்றுமைக்கு எதிராகப் போராடும் ஆப்பிரிக்கத் தலைவர்கள், அம்பேத்கர் மீது ஏன் செலுத்தவில்லை என்று டுடு-விடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், நாங்கள் தென் ஆப்பிரிக்காவில் இன அநீதிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது நீங்கள் உங்கள் சக வாழ்வு நிலைமையை மாற்றி அமைப்பதற்கான போராளிகளைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே, வெளிப்படையாகவே அந்தந்த நாட்டின் செல்வாக்கும் சக்தியும் மிக்கவர்களை நாடிப்போக வேண்டியதாயிற்று என்று கூறினார்.

டுடு, இன வேற்றுமை பாராட்டும் அரசுக்கு எதிராகப் போராடும் ஆப்பிரிக்கர்களுடன் ஜாதி வெறுப்புகளுக்கு எதிராகப் போராடும் தாழ்த்தப்பட்டவர்கள் கூட்டு வைத்துக்கொள்வது இயற்கைதான் என்று குறிப்பிட்டார்.

நாம் எல்லோரும் ஜாதி வேற்றுமையைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். இந்திய சமூகத்தின் மற்றொரு பாதியினருக்கு நாம் ஏன் இந்தக் கொடுமையை அனுமதித்துக் கொண்டிருக்கிறோம் என்று கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்க வேண்டும், அது எல்லாம் எல்லோருக்கும் என்று எண்ணம் கொண்டு இருந்தால் உங்கள் அரசியல் அமைப்புச் சட்டம் கூறுவதைத்தான் நான் கூறுகிறேன்.

ஆர்ச்பிஷப், தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமை பற்றி இந்தியச் சமுதாயம் சவாலுக்கு இழுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார். அதற்குக் காரணம், அது மனிதத் தன்மையைப் பாதிப்பதுதான் என்றும் கூறினார்.

நன்றி: தி இந்து 8.11.13

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


மனைவியை அடித்து, கையை உடைத்த கணவன் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது விசாரணை செய்த நீதிபதி முத்துசாமி அய்யர், மனுதர்மப்படி மனைவியை அடிப்பது குற்றமல்ல என்று தீர்ப்பளித்த வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

எம்மதமும் சம்மதம் இல்லை


நீங்கள் நாத்திகவாதியாக இருப்பதில் மகிழ்ச்சியே... ஆனால் உங்கள் பகுத்தறிவு, மற்ற மதங்களை சாய்ஸில் விட்டுவிட்டு இந்து மதத்தை மட்டும்தான் கேள்வி கேட்குமா?- புகழேந்தி, கள்ளக்குறிச்சி

என்னைப் போன்ற உண்மையான பகுத்தறி வாளனுக்கு எம்மதமும் சம்மதம் இல்லை!

அமாவாசை மூலம் தமிழக அரசியல்வாதிகளுக்கு குறுக்குவழியில் முன்னேறும் உத்தியைக் கற்றுக் கொடுத்தீர்கள். ஆனால், நீங்கள் ஏன் அரசியலில் இறங்கவில்லை? - பாஸ்கரன், திருப்பூர்

எனக்குனு ஒரு சமூகப் பார்வை இருக்கு. இப்ப குறிப்பிட்ட கட்சியில் சேர்ந்துட்டா, அந்தக் கட்சித் தலைமை என்ன சொல்லுதோ, அதுக்கு நான் கட்டுப்படணும். உதாரணத்துக்கு ஓட்டுக் கேட்கப் போகும்போது, பெண்கள் ஆரத்தி எடுத்துப் பொட்டு வைக்க வந்தால், இதெல்லாம் வேண்டாம், நம்பிக்கை இல்லைனு நான் சொல்லமுடியுமா? உங்க கொள்கையை எல்லாம் உங்களோடவே வெச்சுக்குங்க சார்னு கட்சி சொல்லாதா? இது எல்லாத்தையும்விட, நான் சுகவாசி. சினிமா நடிப்புக்காக மட்டும்தான் கஷ்டப்பட்டு இருப்பேன். மற்றபடி தேர்தல் பிரச்சாரத்துக்காக அலையிற மனோபாவம் எனக்கு இல்லை. என் கேரக்டரை நல்லா புரிஞ்சிக் கிட்டதாலதான் நான் அரசியலுக்கு வரலை!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்த உங்களுக்கு, இப்போது இந்திப் படங்களில் நடிக்கும்போது மனநிலை எப்படி இருக்கும்? - சங்கர் குமார், நாசரேத்

நண்பா சங்கர்... அப்போது இருந்து இப்போது வரை, இந்தியை யாரும் எதிர்க்கலை; இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். நான் தமிழன். எனக்குத் தமிழ் தெரியும். கணிப்பொறி, செல்போன்னு நவீன சாதனங்களை இயக்க நான் ஆங்கிலம் கத்துக்குவேன். ஆனா, ஆர்வத்தின் பேரில் நான் கத்துக்க வேண்டிய மூணாவது மொழி எது?னு நான்தான் தீர்மானிக்கணும். ஒருவேளை நான் கேரளாவில் வாழ்க்கையை நடத்த வேண்டி இருந்தா, மலையாளம் கத்துக்குவேன். ஹைதராபாத்ல செட்டில் ஆக வேண்டியிருந்தா தெலுங்கு கத்துக்குவேன். ஆனா, காலம் முழுக்க தமிழ்நாட்ல வாழப் போறவனுக்கு எதுக்கு இந்தி? அதனால் சங்கர், திணிப்புதான் தப்பு; மொழி தப்பு கிடையாது. இந்தப் புரிதல் இருந்ததால்தான், இந்திப் படத்தில் நடிக்கும்போது எனக்கு எந்த மனவருத்தமோ, கூச்சமோ இல்லை!

நன்றி: ஆனந்த விகடன், 18.12.2013

தமிழ் ஓவியா said...

கருத்து


அண்மைக் காலங்களில் கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தண்டனை வழங்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகள் ஏற்கெனவே சிறையில் இருந்த காலங்களையே தண்டனையாகக் கருதி அவர்களை விடுவிக்கும் வழக்கம் உயர் நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் உள்ளது. ஆனால், அவ்வாறு குறைந்த தண்டனை வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது.- பி. சதாசிவம், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிதிருநங்கைகளை, பெற்ற பெற்றோரே மதிக்காத சூழல் இருப்பதால் சமுதாயத்திலும் அவர்களை யாரும் மதிப்பதில்லை. காவல்துறையில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் குடும்பப் பொறுப்பு இருக்கிறது. எங்களுக்குக் குடும்பம் என்ற ஒன்று இல்லை. எனவே, 24 மணி நேரமும் எங்களால் சேவையாற்ற முடியும்.

- அனுசியா சிறீ, திருநங்கை

மருத்துவப் பராமரிப்புக்காக சீன அரசு செலவிடுவதில் நான்கில் ஒரு பங்கையே இந்திய அரசு செலவிடுகிறது. நமது மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) 1.2% நாம் செலவிடுகிறோம். சீன அரசோ கிட்டத்தட்ட 3% செலவிடுகிறது. எனவே, தனியார் துறை சிறப்பாகச் செயல்படும் என்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.

அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது என்றே நாம் நம்புகிறோம்; எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுக்கிறோம்; கூடுதல் பணத்தையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு நம்மாலேயே விடுவிக்க முடியாத கண்ணி ஒன்றை நாமே வைத்துவிட்டு அதில் நாமே அகப்பட்டுக் கொள்கிறோம்.

- அமர்த்தியா சென், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்

தமிழ் ஓவியா said...

காலத்தை வீணடிக்கும் இந்து மதம்


நல்ல செயல் செய்யக் கூடாத நாட்கள்....

இராகுகாலம் 1 மாதத்திற்கு 1.30 X 30=45
ஒரு ஆண்டிற்கு 540 மணி

எமகண்டம் 1 மாதத்திற்கு 1.30x30=45
ஒரு ஆண்டிற்கு 540 மணி

அஷ்டமி (மாதத்திற்கு 2 நாள்)
ஒரு ஆண்டிற்கு 48x12=576 மணி

நவமி (மாதத்திற்கு 2 நாள்)
ஒரு ஆண்டிற்கு 48x12=576 மணி

மரணயோகம் 1 மாதத்திற்கு 1.30x30=45
ஒரு ஆண்டிற்கு 540 மணி

கரிநாள் (மாதத்தில் 3 நாட்கள்)
ஒரு ஆண்டிற்கு 864 மணி

பிரதமை (பாட்டிமை மாதம் 2 நாட்கள்)
ஒரு ஆண்டிற்கு 48x12=576 மணி

சூரிய கிரகணம் ஒரு ஆண்டிற்கு
ஒரு நாள் 24 மணி

சந்திரகிரகணம் ஒரு ஆண்டிற்கு
ஒரு நாள் 24 மணி

மதம் சார்ந்த பண்டிகை ஆண்டிற்கு
33 நாட்கள் ஒரு ஆண்டிற்கு 33x24=792 மணி

ஆக, மொத்தம் 5052 மணி
(5052/24 மணி = 210 நாட்கள்)

ஆக ஆண்டிற்கு 365 நாட்களில் 210 நாட்கள் வீண்.

இந்து மத நம்பிக்கை என்ற பேரால் விலை மதிக்கமுடியாத நம் நேரம் வீணடிக்கப்படுகிறது. நம் மூளையில் இடப்பட்ட இந்த விலங்கை உடை. சாதனை படை. காலம் பொன் போன்றது,

-கடமை கண் போன்றது.

வேர்ல்டு தமிழ் எம்பசி,
வழி: கோபால் கிருஷ்ணன்

தமிழ் ஓவியா said...

சட்டம் கடமையைச் செய்யட்டும்


உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து, சில காலம் முன்பு ஓய்வு பெற்ற _- மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஜஸ்டிஸ் ஏ.கே.கங்குலி அவர்கள்பற்றி, பயிற்சி பெண் வழக்குரைஞர் கொடுத்த பாலியல் புகார்பற்றி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் மூவர் (ஒருவர் பெண் நீதிபதி உட்பட) விசாரணை நடத்தி தலைமை நீதிபதியிடம் தங்களது விசாரணை அறிக்கையைத் தந்தனர்.இவர்மீது சொல்லப்பட்ட புகார்களுக்கு முகாந்திரம் உள்ளது என்பதை விசாரணை செய்த மூன்று நீதிபதிகளின் அறிக்கை தெளி வாக்கி விட்டது.

இதனை ஒளிவு மறைவின்றி உண்மைகளை விசாரித்து தக்க தண்டனையை குற்றம் புரிந்தவருக்கு வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டியது _- நாட்டின் நிர்வாகத் துறையின் தலையாய கடமையாகும்.

டில்லியில் பாலியல் நீதிக்காக பல நாள் நிர்வாகமே நிலை குலையும் அளவுக்கு மக்கள் திரண்டு கிளர்ச்சிகள் நடந்தன.

வளர் இளம் பிராய வாலிபர்களுக்குக் கூட _ துள்ளித் திரியும் பொறுப்பற்ற வயது என்றால்கூட -_ சட்டம் அவர்களை மன்னிக்கத் தயாராக இல்லை.

குற்றங்கள் நாட்டில் நடைபெறாது தடுக்க வேண்டிய பெருங் கடமை நீதித் துறைக்கே உண்டு; மக்களின் கடைசி நம்பிக்கையே இன்றைய நிலையில் நீதித்துறைதான்!

நீதியரசர்கள், ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நீதி வழங்கினால்தான் நாட்டில் பொது ஒழுக்கமும், ஒழுங்கும் காப்பாற்றப்பட முடியும்.

இந்த கங்குலி விவகாரத்தில் இதுவரை மறைத்து வைக்கப்பட்ட பல செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. பல தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியைத் தருவதாக உள்ளன.

தனது பேத்தி வயதுள்ள _- பயிற்சி வழக்குரைஞரை தன்னுடைய அறையில் தங்கும்படி நீதிபதி கங்குலி வற்புறுத்தினார். உரையாடும்போது இரட்டை அர்த்தமுள்ள பேச்சாகவே அவரது பேச்சிருந்தது; தன்னுடன் மது அருந்தவும் அப்பெண்ணை வற்புறுத்தினார் என்றெல்லாம் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி வருவதைக் கேட்கும்போது, வெட்கமும் வேதனையும் படமெடுத்து ஆடுகின்றன!

இந்த ஏ.கே. கங்குலி இப்போது மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணையத் தலைவராகவும் உள்ளார். அவரை உடனே பதவி நீக்கம் செய்து, அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் வற்புறுத்தி வருகிறார்.

16.12.2013 அன்று வந்துள்ள பல செய்திகளைக் கண்டு மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் அவர்கள், அவர்மீது உடனே நடவடிக்கையை எடுக்க உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பேட்டி கொடுத்துள்ளார்!

மகளிர் அமைப்புகள் பலவும் கிளர்ச்சிகளுக்கு முன்னோட்டமாகக் குரல் கொடுக்கத் துவங்கி விட்டன! ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் அவர்மீது பாயாமல் அவர் ராஜநடை போட்டு, நான் பதவி விலக மாட்டேன் என்று பிடிவாதமாகக் கூறுகிறார்!

நீதி பரிபாலனத்தில், நீதியை வழங்கினால் மட்டும் போதாது; நீதி வழங்கப்பட்டுள்ளது என்று மற்றவர்களுக்குத் தெரியும் வகையில் அமைய வேண்டும் என்று கூறுவது உண்டு; (Not only Justice done; it is also important Justice appears to be done) இப்பிரச்சினை மேலும் நாடு தழுவிய கிளர்ச்சியாக, பெருந்தீயாக ஆகுமுன்பே நீதிபதி கங்குலி மீது கிரிமினல் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பால் இருக்க வேண்டும். அவர் நிரபராதி என்று காட்டி நிரூபித்துப் பிறகு வெளியே வரட்டும். அடிக்கடி நீதிபதிகள் தங்கள் தீர்ப்புரைகளில் எழுதுவார்களே சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்று.

வெறும் சந்தேகத்திற்கே அவ்வளவு முக்கியத்துவம் அச்சொற்றொடரில் இருக்கையில், அதிர்ச்சியூட்டக் கூடிய தகவல்கள் மூன்று நீதிபதிகளின் விசாரணை மூலமே வெளியாகியுள்ள நிலையில், மவுனமாக நீதித்துறையும் உள்துறையும் இருக்கலாமா?

அரசு இடத்தை ஆக்கிரமித்ததாகக் குற்றம் சுமத்தி உச்ச நீதிமன்ற நீதிபதியாக வந்திருக்க வேண்டிய ஒரு தாழ்த்தப்பட்ட (கிறித்துவ) நீதிபதியை அவருடைய தீர்ப்புகள் பலவும் மிகவும் சிறந்தவை என்ற நிலை இருந்தாலும், கட்டுப்பாடான பிரச்சாரத்தின் மூலமே அவரை விரட்டினரே!

இங்கே என்ன அளவுகோல்? இந்தக் குற்றம் புரிந்ததாக குற்றச் செயல்கள் பற்றி பிரஸ்தாபிக்கப்படும் நபர் உயர் ஜாதி என்பதால் அவருக்கு இப்படி ஒரு மென்மையான அணுகுமுறையா?

நாட்டில் மனுதர்ம ஆட்சியா பச்சையாக நடைபெறுகிறது என்று மக்கள் கேட்க மாட்டார்களா?

எனவே நீதியின் மாண்பைக் காப்பாற்ற உடனடியாக சட்ட நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்; அவரிடமிருந்து பதவி பறிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்மீது நடவடிக்கை சார்பின்றி நடைபெற வாய்ப்பு ஏற்படும்.

உடனே செய்ய வேண்டும்; இதை வற்புறுத்தி திராவிடர் கழக மகளிரணியினர் சென்னையில் தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 காலை 11 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை தலைமைச் செயற்குழு உறுப்பினர் மானமிகு க. பார்வதி அவர்களின் தலைமையில் நடத்தியுள்ளனர்.

ஆங்காங்கே தொடர் பிரச்சாரம் நடைபெறும்.

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

தமிழ்ப் பல்கலையில் ஜோதிடக் கல்வியா?


தி இந்து தமிழ் நாளிதழில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விளம்பரம் ஒன்று பார்த்தேன்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு. திருமலை அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்றாலும் .தந்தை பெரியார் பற்றாளர். அவரிடம் அன்பான வேண்டுகோள்: தயவுசெய்து ஜோதிட பட்டயப் படிப்பை நீக்கி சமுதாயம் சிறக்க உதவுங்கள்.

ஜோதிடவியல் ஓராண்டு பட்டயப் படிப்பு அறிவிப்பு வந்துள்ளது. ஜோதிடவியல் படிப்பை ரத்து செய்ய வேண்டும். ஜோதிடம் என்பது அறிவியல் அன்று, மூடநம்பிக்கை. .அரசு, அறிவியல்பூர்வமான கருத்துகளை மட்டுமே மக்களிடம் கற்பிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கின்றது. ஜோதிடம் மதம் சார்ந்தது; மதச் சார்பற்ற அரசு பல்கலைக்கழகம் ஜோதிடத்தைப் பாடமாக _ பட்டயப் படிப்பாக கற்பிப்பது சட்டத்திற்கு முரணானது .

எனவே, அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஜோதிடக் கல்வியை ரத்து செய்ய வேண்டும். பித்தலாட்ட ஜோதிடம், கல்வி அன்று. ஜோதிடம் அறிவியல் அன்று.

ஒரு மனிதனின் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுகின்றனர். பிறந்த நேரமே யாருக்கும் சரியாகத் தெரியாதபோது, ஜோதிடம் எப்படி உண்மையாகும்? பிறந்த சில நிமிடங்கள் கழித்து வந்து செவிலியர் சொல்லும் நேரத்தை பிறந்த நேரம் என்று குறிக்கின்றனர்; பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுகின்றனர்.

ஜாதகத்தை வைத்து திருமணப் பொருத்தம் பார்க்கின்றனர். எல்லாப் பொருத்தங்களும் உள்ளது என்று சொல்லித் திருமணம் செய்கின்றனர். சில நாட்களில் சண்டை வந்து மணவிலக்குக் கேட்கின்றனர். சிலர் எந்தப் பொருத்தமும், ஜோதிடமும் பார்க்காமல் திருமணம் செய்கின்றனர். பல்லாண்டுகள் சண்டை இன்றி ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

ஒருவரின் ஜாதகத்தை மூன்று ஜோதிடர்களிடம் கொடுத்து ஜாதக பலன்களைத் தனித்தனியாக எழுதச் சொல்லிப் பாருங்கள். மூன்றும் ஒரே மாதிரி இருக்கவே இருக்காது. மூன்றும் மூன்று மாதிரியாகவே இருக்கும்.

நாளிதழ்களில் வரும் ராசி பலனைப் படித்துப் பாருங்கள். ஒரே ராசிக்கு ஒரே மாதிரிதானே வர வேண்டும் ஒவ்வொரு நாளிதழிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஜோதிடம் அறிவியல் என்றால் இப்படி வேறுபாடு ஒரே ராசிக்கு ஒரே நாளில் வருமா ? சிந்திக்க வேண்டாமா?

சுனாமி வரும் என்று எந்த ஜோதிடரும் சொல்லவில்லை. சொல்லி இருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாமே! ஜோதிடர்களுக்குத் தெரிந்தால்தானே சொல்வார்கள்.

கண்ணன் என்ற ஜோதிடர் 5 கொலைகள் செய்து இப்போது சிறை சென்றுள்ளார். அவர் ஜாதகத்தை அவர் கணித்து இருக்கலாமே. இப்படித்தான் பல சாமியார்கள் ஜோதிடம் சொல்லி பித்தலாட்டம் செய்து வருகின்றனர். ஜோதிடர்கள் தொல்லை சாமியார்கள் தொல்லை தினசரி செய்தியாக வருகின்றது.

ஜோதிட பட்டயப் படிப்பு வேறு படித்துவிட்டால் நாட்டில் பித்தலாட்ட ஜோதிடர்கள் பெருகி விடுவார்கள். நாட்டில் தொல்லை இன்னும் அதிகமாகி விடும் பணத்தாசை காரணமாக.

பல்கலைக்கழகத்தினர் பித்தலாட்ட ஜோதிடத்தைப் பாடமாக கற்பிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

தந்தை பெரியார் சொன்னது போல எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால் என்று கேட்டுப் பாருங்கள்.

மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சொன்னது:

எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் என்பதில் எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை.

- இரா.இரவி, மதுரை

தமிழ் ஓவியா said...

மருத்துவ அறிவியலின் வெற்றி துடிக்கிறது.... உலகின் முதல் செயற்கை இதயம்

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் 75 வயது முதியவருக்கு உலகின் முதல் செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சையினைச் செய்து பாரிசில் உள்ள ஜார்ஜஸ் போம்பிடௌ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார்மட் என்னும் உயிரி மருந்தியல் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தச் செயற்கை இதயம் டென்மார்க்கைச் சேர்ந்த அய்ரோப்பிய ஏரோநாட்டிக் டிபன்ஸ் அன்ட் ஸ்பேஸ் (EADS) நிறுவனத்தால் மேம்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. லித்தியம் _அயன் பேட்டரியால் இயங்கக்கூடிய செயற்கை இதயத்தின் பேட்டரியினை உடலின் வெளிப்பகுதியில் அணிந்து கொள்ள வேண்டும்.

உயிரிப் பொருள்களுடன் மாட்டின் திசுக்களைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளதால் உடல் ஏற்றுக் கொள்ளாமலிருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. பிளாஸ்டிக் போன்ற செயற்கை இழைகள் பயன்படுத்தப்படாமல் மாட்டின் திசுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் ரத்தம் உறைந்து கட்டியாவதையும் தடுக்கும் சிறப்பம்சத்துடன்கூடிய செயற்கை இதயம் 5 ஆண்டுகள் இயங்கும் செயல்திறன் கொண்டது.

ஆரோக்கியமான மனிதனின் இதயத்தின் எடை (250 கிராம் முதல் 300 கிராம்)யுடன் ஒப்பிடும்போது செயற்கை இதயம் மூன்று மடங்கு அதிகமாகும் (ஒரு கிலோவுக்குக் கொஞ்சம் குறைவு). இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட செயற்கை இதயங்கள் தற்காலிகப் பயன்பாட்டுக்கு மட்டுமே ஏற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.