Search This Blog

22.12.13

இந்து மதத்தில் ஸ்தாபகனோ, மத நூலோ, வயதோ உண்டா?- பெரியார்

இன இழிவு ஒழிய...

தோழர்களே, பகுத்தறிவுக் கழகம் என்பது மக்கள் எல்லோருமே சேர்ந்ததுதான் பகுத்தறிவாளர் கழகம் மனிதன் என்றாலே பகுத்தறிவுவாதிதான்; அப்படி இருக்கும்போது பகுத்தறிவாளர் கழகம் என்று வைத்துக் கொண்டு அதில் சிலர் மட்டும் உறுப்பினர் களாக இருப்பது என்றால் அதில் பங்கு பெறாதவர்களுக்கு என்ன என்று பெயர்? அவர்கள் எல்லாம் பகுத்தறிவற்றவர்களா?

மனிதன் எனப்படுகிறவன் கூடுமான வரை எல்லாக் காரியங்களிலும் பகுத்தறிவுவாதி யாகத்தான் இருந்து வருகிறான். ஆனால், கடவுள் - மதத் துறையில் மட்டும் பகுத்தறி வற்றவனாக வாழ்கிறான். இந்தத் துறையில் சிந்திப்பதைப் பாவம் என்றே ஆக்கி விட்டதால் மனிதன் சிந்திக்கப் பயந்து விட்டான்.

திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், தி.மு.க. தோழர்களிலே குறிப்பிட்ட பகுதியினர் இவர்களைத் தவிர, மற்ற அத்துணை பேரும் நமது மதப்படி, சாஸ்திரப்படி, இந்து சட்டப்படி எல்லோரும் சூத்திரர்கள்தானே. பார்ப் பனர்க்கு வைப்பாட்டி மக்கள் தானே; இதை இல்லை என்று எவனாவது நிரூபித்தால் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.

முதன்முதலாக நமக்குத் தேவை எல்லாம் நமது இழி ஜாதித் தன்மை ஒழிய வேண்டிய தாகும். இதற்காகத் தான் கடந்த 50 ஆண்டு காலமாக இயக்கம் நடத்தி வருகின்றேன்.

எங்கள் கழகத்தைத் தவிர, இந்த மனிதத் தொண்டுக்கு பாடுபடுகிறவர்கள் எவன் இருக்கிறான்? அரசியல் கட்சிக்காரன் கவலை எல்லாம் சட்டசபைக்குச் சென்று பொறுக்கித் தின்பதுதானே!

இந்த கம்யூனிஸ்டுக்காரனைத் தான் எடுத்துக் கொள்ளுங்களேன். அவன் வாயிலே கூட ஜாதி ஒழிக என்று வராதே! காந்தியைத்தான் எடுத்துக் கொள்ளுங்களேன் - அந்த ஆளும், ஜாதி ஒழிய வேண்டும் என்று பாடுபடவில்லையே! நாங்கள் பாடுபட்டு வந்த காரணத்தால்தான் இன்றைக்குப் பார்ப்பான் நம்மைப் பார்த்து சூத்திரன்' என்று சொல்ல முடியாத நிலைமை உண்டாகி விட்டது.

எதிரியின் வாயை அடைத்து விட்டோம். இன்றைய நிலைமை என்ன என்றால் நாம் இழி ஜாதி என்பதை நாமேதான் ஏற்றுக் கொள் கிறோம். இனி நம் ஆட்களோடுதான் போராட வேண்டியிருக்கிறது.

பார்ப்பானை இன்றைய தினம் ஒழித்தே கட்டி விட்டோம். இனி அவன் தலை எடுத்து நம்மை ஆட்டிப் படைப்பது என்பது கனவிலும் கிடையாது. அவன் ஒழிந்தே போய்விட்டான்.

நம்ப ஆட்கள் அவனுக்குக் காட்டிக் கொடுத்து இடம் தந்தால்தான் உண்டு. இன்றைக்கு பார்ப்பான் மனித சமுதாயத்தில் தீண்டத்தகாதவனாகி விட்டான். எங்களுக்கு விகிதாசாரம் தேவை என்று கூப்பாடு போடுகிற அளவுக்கு பார்ப்பான் நிலைமை கேவலமாகி விட்டது.

நாங்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை கேட்டபோது, இது வகுப்புத் துவேசம் என்று சொன்ன பார்ப்பான் இன்றைக்கு அவனே தங்களுக்கு வகுப்புவாரி உரிமை வேண்டும் என்கிறான்! நிலைமை என்ன ஆயிற்று என்றால், இன்றைக்கு உயர்நீதி மன்றத்திலே ஒரு ஆதிதிராவிடன் நீதிபதி கீழே இருக்கிற பார்ப்பன வக்கீல் எல்லாம் அவனைப் பார்த்து ஓ! மை லார்டு' என்கின் றான்! நிலைமை எவ்வளவு மாறி இருக்கிறது!!

இன்றைய தினம் நமது தொண்டால் சமுதாயத்தில் பலன்கள் பெருகி இருக்கிறதே தவிர, வெற்றி பெற்று இருக்கிறதா என்றால் அதுதான் இல்லை. இதற்குக் காரணம் நாமேதான்.

கோயிலுக்குள் செல்கிறாயே, கம்பிக்கு வெளியே நின்று கொண்டு இருக்கிறாயே - கர்ப்பக்கிரகத்திற்குள் உன்னால் நுழைய முடியவில்லையே! காரணம் - நீ சூத்திரன் என்பதால் தானே! உன்னை சூத்திரன் என்று ஒப்புக் கொண்டு எதற்கு அந்தக் குழவிக் கல்லு கோயிலுக்குப் போக வேண்டும்?

உலகத்திலே இருக்கிற மதங்களிலேயே ஆதாரமற்றதும் தெளிவற்றதுமான ஒருமதம் இருக்கிறது என்றால் அது இந்த இந்து மதம்தானே!

கிறித்தவனுக்கோ, இஸ்லாமியனுக்கோ வரலாறு, மத நூல்கள் ஒழுங்காக இருக்கின் றனவே! உன் இந்து மதத்தில் ஸ்தாபகனோ, மத நூலோ, வயதோ உண்டா? இந்து மதத் திற்கு ஆதாரம் என்னடா என்றால் உன்னைப் பார்த்து சூத்திரன் என்று சொல்வதைத் தவிர, வேறு என்ன ஆதாரம் இருக்கிறது?
கடவுளைப் பற்றி பெரிதாக பேசுகிறார்கள். எந்தக் கடவுளிடத்தில் நீ சொல்கிற கடவுள் தன்மை இருக்கிறது? உன் இந்து மதக் கடவுள்களின் யோக்கியதையை நான்கு பெண்களை வைத்துக் கொண்டு பேச முடி யாதே! அவ்வளவு நாற்றம் அடிக்குமே! தோழர் களே, உங்களிடம் வலியுறுத்திக் கூறுவது எல்லாம் நம்முடைய இழிவை நாமே எதிரி இல்லாமலேயே ஒப்புக்கொண்டு வாழ்கிறோம். இதற்கு நாம் ஒரு முடிவுக்கு வந்தாக வேண் டும். சும்மா வெறும் பொதுக்கூட்டங்களை போட்டுக் கொண்டு பேசிக் கொண்டே போனால் என்ன பிரயோசனம்?

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நான் கத்திக் கொண்டு இருப்பேன்? எனக்குப் பின்னால் இதை எல்லாம் எடுத்து  சொல்ல எவன் இருக்கிறான்? உலகம் இருக்கிறவரை இதையே பேசிக் கொண்டுதான் நாம் சாக வேண்டுமா? நாம் என்றைக்குத் தான் மனிதராக மாற வேண்டியது?

நாம் இந்து அல்ல' என்று பத்திரிகையில் எழுதி விடுங்கள். கோயிலுக்குப் போவதில்லை என்று கூறுகிறவர்களின் பெயர்களை எல்லாம் கெஜட்டிலேயே வெளியிட வேண்டும்.

                --------------------------14.4.1973 அன்று சீர்காழி பகுத்தறிவாளர் கழக இரண்டாம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - "விடுதலை' 30.4.1973

34 comments:

தமிழ் ஓவியா said...

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சிந்தனைக்கு...


இறை நம்பிக்கை உள்ளவர் களுக்கு அதிசயம் ஏற்படும். நம்பிக்கையை இழப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவே முடியாது. இறைவனிடம் அசைக்க முடியாத நம்பிக்கை உங்களிடம் இருந்தால் உங்கள் வாழ்வின் வெற்றி நிச்சயம்!

இவ்வாறு பேசியிருப்பவர் வேறு யாராகத் தான் இருக்க முடியும் - அம்மையார் ஜெயலலிதாவைத் தவிர?

இந்தக் கருத்தைக் கூறுமுன் ஒரே ஒரு நொடி, தந்தை பெரியாரை நினைத்துப் பார்த்திருக்க வேண் டாமா? அப்படி நினைத்துப் பார்க்கும் நிலை இல்லாவிட்டால் உங்கள் சுவரொட்டிகளில் தந்தை பெரியார் படம் எதற்கு? பெரியார் உருவாக்கிய திராவிட எதற்கு? என்ற கேள்வி எழாதா?

அனைத்திந்திய அண்ணா தி.மு.க. என்பதற்குப் பதிலாக அக்கிரகார முன்னேற்றக் கழகம் என்று வைத்துக் கொள்ளலாமே!

அண்ணாவின் பெயரைக்கூட கட்சியில் வைத்துக் கொள்ளும் அருகதை கூடக் கிடையாதே!

அண்ணா எந்தக் கோயிலுக்குச் சென்றார்? அண்ணா யாகம் நடத்தினார், மண் சோறு சாப்பிடச் சொன்னார் என்று சொல்ல முடியுமா?

இறை நம்பிக்கை இல்லாதவர்கள் வெற்றி பெற முடியாதாமே!

அடேயப்பா - எப்படிப்பட்ட கண்டு பிடிப்பு!

சமுதாயப் புரட்சி இயக்கம் நடத்தி மக்களிடம் மண்டிக் கிடந்த மூடநம்பிக் கைகளை, ஆரியச் சழக்குகளை, ஆண்டவன்களின் ஆபாசச் சேற்றை யெல்லாம் அணு அணுவாகச் சிதைத்து விழிப்புணர்வு எரிமலையை ஏற்படுத்தி, மாபெரும் வெற்றி பெற்ற உண்மையான புரட்சித் தலைவர் தந்தை பெரியார் அல்லவா!

அதனால்தானே அறிஞர் அண்ணா அவர்கள் பெரியார் ஒரு தனி மனிதரல்லர்; ஒரு சகாப்தம், கால கட்டம், திருப்பம்! என்று ஆணி அடித்தது போல கணித்தார்.

பெரியார் கடவுள் மறுப்பாளர்தான்!

கடவுள் இல்லை; இல்லவே இல்லை

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்

பரப்பியவன் அயோக்கியன்

வணங்குகிறவன் காட்டுமிராண்டி

என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர்தான்.

அந்த பெரியார் அவர்களுக்குத் தான் இந்த அமைச்சரவையே காணிக்கை என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் அண்ணா பிரகடனப்படுத்தினார்.

இந்த வரலாறெல்லாம் அம்மையா ருக்குத் தெரியாது என்றால் யாருக் காவது அ.இ.அ.தி.மு.க.வில் திராவிடர் இயக்க வரலாறு தெரியும் என்றால்(?!) அவர்களிடம் பாடம் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்! அல்லது விடுதலை ஏட்டை நாளும் படிக்கட்டும்; அல்லது திராவிடர் கழக வெளியீடுகளைப் படித்துப் பார்க் கட்டும்!

தமிழ் ஓவியா said...


அ.இ.அ.தி.மு.க. என்பதில் அண்ணா இருக்கிறார் - திராவிடமும் இருக்கிறது. இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டு கருத்துச் சொல்ல அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாள ருக்கு அதிகாரம் கிடையாது. அவர் கருத்தை பாரம்பரியமிக்க கருத்தாக் கமுடைய சொல்லாடல்களைக் கொண்ட கட்சியின் மீது திணிக்க முடியாது - திணிக்கவும் கூடாது.

ஒன்றை வேண்டுமானால் வெளிப் படையாகக் கூறட்டுமே பார்க்கலாம்; அ.இ.அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நெற்றியிலே பட்டையும், குங்குமமும் அணிந் திருக்க வேண்டும்,

கழுத்திலே உருத்திராட்சக் கொட்டை தொங்க வேண்டும். கையிலே மந்திரக் கயிறு கட்டி இருக்க வேண்டும் - இவை இருந்தால்தான் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் என்று அதிகார பூர்வமான சட்ட விதிகளிலே திருத்தம் கொண்டு வரலாமே!

ரிலேட்டி விட்டி விதியைக் கண்டு பிடித்த அய்ன்ஸ்டின் நாத்திகர்தான் - அந்தத் தத்துவத்தை மட்டும் அவர் கண்டு பிடிக்கவில்லையென்றால் இன் றைக்கு ஏற்பட்டுள்ள விஞ்ஞான சாதனைகளில் மஞ்சள் குளிக்க முடியுமா?

நோபல் பரிசு பெற்ற பெரும் பாலான விஞ்ஞானிகள் எல்லாம் நாத்திகர்கள்தான். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென்கூட கடவுள் மறுப்பாளர் தான்.

கடவுள்தான் மனிதனைப் படைக் கிறார் - மனிதன் ஆயுளை நிர்ணக் கிறான் என்பது இப்பொழுது தவிடு பொடியாகவில்லையா?

கடவுள் துகள் கண்டுபிடிக்கப் பட்டு விட்டதே!

காலரா நோய்க்கு காரணம் காளியாத்தா - அம்மை நோய்க்குக் காரணம் மாரியாத்தா என்று நம்பி கோயில்களில் கூழ் காய்ச்சி ஊற்றிக் கொண்டு கிடந்தார்களே அவற்றாலா காலராவும், அம்மையும் ஒழிந்தன?

தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த தால் அல்லவா - பெரியம்மை இருப்ப தாகக் கண்டுபிடித்துச் சொன்னால் ஆயிரம் ரூபாய் பரிசு என்று அரசு விளம்பரம் செய்ததே!

அம்மைத் தடுப்பு நோயைக் கண்டுபிடித்த ஜென்னரையும், உலகம் உருண்டை என்ற கலிலியோவையும், பரிணாமத் தத்துவத்தைக் கண்டு பிடித்த டார்வினையும் எதிர்த்ததும் அவர்களைத் தண்டித்ததும்கூட மதம் தானே!

டார்வின்மீதும், கலிலியோ மீதும் கிறித்துவ மதம் தண்டனையை ஏவிய தற்காக போப் - இப்பொழுது வருத்தம் தெரிவித்துள்ளாரே. இந்த வரலாறு எல்லாம் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்குத் தெரியுமா?

Religious People are less intelligent than atheists - Study finds என்ற சிறப்பு மிக்க கட்டுரையை முதல் அமைச்சர் படித்துப் பார்த்ததுண்டா?

அமெரிக்காவின் ராச் செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வு பற்றி அறி வாரா?

மிரான் ஜீக்கர் மேன் என்ற ராச் செஸ்டர் பல்கலைக் கழகப் பேராசிரி யரின் தலைமையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், அறிவாற்றலுக்கும், மதப் பழக்கத்திற்கும் ஏற்பட்டுள்ள வேலைப் பாடுகளைப் பற்றிய 63 ஆய்வுகளில் 53 ஆய்வுகள் மத நம் பிக்கை உடையவர்கள் குறைந்தளவு அறிவாற்றல் உடையவர்கள் என்பதை ஆய்வுகள்மூலம் நிரூபித்துள்ளனரே!

அரசியலில் அடாவடித்தனமாகப் பேசுவதுபோல பகுத்தறிவாளர்கள் மீதும், அறிவியல்வாதிகள்மீதும் கல்லெறியலாம் என்று அம்மையார் ஆசைப்பட வேண்டாம்.

- மின்சாரம்

Read more: http://viduthalai.in/e-paper/72465.html#ixzz2oCpFjYta

தமிழ் ஓவியா said...

தோழர் தா.பா.வும் தோழர் ஜி.ஆரும் என்ன செய்தார்களாம்?தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா பேசிய இந்தக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் தா.பாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்சிஸ்ட்டு) தமிழ் மாநில செயலாளர் தோழர் ஜி. இராமகிருட்டிணன் ஆகியோரும் அந்தக் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்களே - முதல் அமைச்சர் ஜெயலலிதா சொன்ன கருத்து அவர்களையும் சேர்த்துத்தானே?

மார்க்சும் - ஏங்கல்சும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்ததால் அவர்கள் வெற்றி பெறவில்லையா? அந்த இடத்தில் முதல் அமைச்சருக்குப் பதில் கூற வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமல் போயிருக்கலாம். அவர்கள் கட்சியின் அதிகாரபூர்வ ஏடு களானஜனசக்தி தீக்கதிரில் முதல் அமைச்சர் கருத்துக்கு மறுப்புக் கூறுவார்களா? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/e-paper/72465.html#ixzz2oCph9LI2

தமிழ் ஓவியா said...


அஞ்சல் மூலம் ஆசீர்வாதமாம்


திருமலை ஏழுமலை யானின் ஆசீர்வாதத்தை அஞ்சல் மூலம் பெறும் திட்டத்தை அஞ்சல்துறை மீண்டும் தொடங்கியுள்ளது.

திருமலை ஏழுமலையா னுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் இனி அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

இத்திட்டம் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் செயல் அதிகாரி, திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி என்ற பெயரில் பணவிடை (மணியார்டர்) அனுப்பினால் பக்தர்களின் காணிக்கைகள் திருமலையை அடைந்தவு டன் 3 நாள்களுக்கு பின் மணியார்டர் பெறப்பட்டதற் கான ரசீதும், ஏழுமலையா னின் திருவுருவப் படமும், கல்யாண உற்சவ அட்சதை யும் தேவஸ்தான கவரில் அனுப்பி வைக்கப்படும். இதற் காக தலைமை அஞ்சலகத் தில் ஆசீர்வாதம் என்று ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை ஆண்டு களாக சரிவர செயல்படாமல் இருந்த இந்த திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ள னர். மேலும் மாவட்ட வாரி யாக செயல்பட்ட இந்த திட் டம் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங் களுக்கும் விரிவுபடுத்தப்பட் டுள்ளது. முன்னர் 10 ஆயிரம் பக்தர்கள் பயன் பெற்ற இந்த திட்டத்தின்மூலம் தற்போது 40 ஆயிரம் பக்தர்கள் பயன்பெறுகின்றனர்.

மேலும் திருப்பதிக்கு அருகில் உள்ள ஸ்ரீகாள ஹஸ்தி கோயிலிலும் வெகு விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர் - என்று செய்தி தினமணியில் வெளி வந்துள்ளது (21.12.2013).

பக்தி என்பது ஒரு வியாபாரம், சுரண்டல் என்பது அதன் தொழில் என்று நாம் சொன்னால் பற்களை நறநற வென்று கடிப்போர் உண்டு.

இப்பொழுது திருப்பதி தேவஸ்தானம் இந்தச் செய லுக்கு என்ன நாமகரணம் சூட்டப் போகிறதோ!

துக்ளக் இதழில் திருவாளர் சோ ராமசாமி எழுதிய பதில்தான் இந்த நேரத்தில் நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

கேள்வி: சென்னை தீவுத் திடலில் திருப்பதி ஏழுமலை யான் சீனிவாச திருக்கல்யா ணம் உற்சவம் நடைபெற்றது பற்றியும், அதில் லட்சக்கணக் கான பக்தர்கள் பங்கு பெற் றது பற்றியும் தங்கள் கருத்து?

சோ பதில்: இவ்வளவு கட்டணம் செலுத்தினால் வெங்கடேஸ்வரப் பெரு மாளை உங்கள் வீட்டிற்குக் கொண்டு வந்து ஒரு நாள் தங்க வைக்கிறோம் என்ற ஒரு புதிய திட்டம் வராத ஒன்றுதான் குறை! (துக்ளக் 23.4.2008 பக்கம் 17) என்று அவரே வெட்கத்தை விட்டு எழுதினாரே அதுதான் நினைவிற்கு வருகிறது.

இதையும் தாண்டி காஞ்சி (மாஜி) சங்கராச்சாரி யார் காஞ்சிபுரத்தில் 1976 மே மாதத்தில் நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில் ஒரு உண்மையை ஒப்புக் கொண் டார்.
கோயிலுக்குப் போவதை மக்கள் ஒரு ஃபேஷனாகக் கருதுகிறார்கள் பெரும்பா லோரிடம் வர்த்தக மனப் பான்மை காணப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

நமக்கு ஏன் வீண் வம்பு? அவாளே ஒப்புக் கொண்டு விட்டனர்.

கடைசியாக ஒரு கேள்வி இப்படி வெள்ளைக்காரன் கண்டுபிடித்த அஞ்சல் முறை யில் எல்லாம் பணம் வசூ லித்து பிரசாதம் அனுப்புவது அவாளின் எந்த ஆகமத்தில் எத்தனையாவது அத்தியா யத்தில் இருக்கிறதாம்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72461.html#ixzz2oCq0LTU4

தமிழ் ஓவியா said...


எச்சரிக்கை! இவர்களை அடையாளம் காண்பீர்! ராமராஜ்யத்தைஏற்படுத்தவேண்டுமாம்! நரேந்திரமோடி கூறுகிறார்


வாரணாசி, டிச.22- நாட்டில் ராம ராஜ் யத்தை ஏற்படுத்த வேண் டும் என்றும், அதற்கு மக்களைவைத் தேர்த லில் சரியான கட்சியைத் தேர்வு செய்ய உத்தரப் பிரதேச மக்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெள்ளிக்கி ழமை வேண்டுகோள் விடுத்தார்.

உத்தரபிரதேச மாநி லம் வாரணாசியில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசிய தாவது:

மத்தியில் சரியான அரசு அமையாததற்கு உத்தரப் பிரதேச மக் களின் பங்களிப்பில் ஏற் பட்ட குறைதான் கார ணம். (நாட்டிலேயே அதி கமாக 80 மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரப் பிரதே சம் என்பதை கருத்தில் கொண்டு அவர் இவ் வாறு தெரிவித்தார்).

நீங்கள் ஒருநாள் சரியான அரசை தேர்வு செய்வீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக் கிறது. அப்படி தேர்வு செய்வீர்கள் என்றால், அன்றுதான் ராம ராஜ் யம் நடைமுறைக்கு வரும்.

கங்கை நதியை சுத்தப் படுத்தும் பணிக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செல விடப்பட்டது. ஆனால் இன்னும் கங்கை நதி, மாசுபட்டதாகத்தான் காணப்படுகிறது.

கங்கை நதியை சுத்தப் படுத்தும் திட்டத்துக் காக எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செல விடப்பட்டது என்பது குறித்து பிரதமர் விளக்க வேண்டும் என்று பேசினார்.

ராமர் கோயில் விவகாரத்தில் தனது நிலையை மோடி தெளிவுபடுத்த வேண்டும்: விஹெச்பி

ராமர் கோயில் விவ காரத்தில் நரேந்திர மோடி தனது நிலையை தெளிவு படுத்திய பிறகே, பாஜகவுக்கு ஆதரவு தருவோம் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தெரி வித்துள்ளது.

இதுகுறித்து உத்த ரப்பிரதேசத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப் பின் தலைவர் பிரவீண் தொகாடியா செய்தியா ளர்களிடம் வியாழக் கிழமை கூறியதாவது:

ராமர் கோயில் கட்டு வது குறித்து உறுதி யளிக்கும் கட்சிக்கே, விஷ்வ ஹிந்து பரிஷத் ஆதரவு அளிக்கும். ராமர் கோயில் கட்டுவது குறித்து தேர்தல் அறிக் கையில் பாஜக வெளி யிட வேண்டும்.

எங்கள் அமைப்பின் ஆதரவை விரும்பினால், இந்த விஷ யத்தில் மோடி தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் பிர சாரங்களில் ராமர் கோயில் குறித்த விவ ரங்களை மோடி பேசா மல் இருப்பது வருத்த மளிக்கிறது என்று பிரவீண் தொகாடியா தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/72466.html#ixzz2oCqUpAPZ

Unknown said...

thaivaa seidu scl la jathi certificate vangaratha niruthanum.... eppudi ..

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் அவர்களின் 2014-புத்தாண்டுவாழ்த்து!


பிறக்கும் புத்தாண்டு (2014) - மனித நேயம், சமத்துவம், சம வாய்ப்பு, பகுத்தறிவுச் சிந்தனை வளம் பெருகி வாழ வைக்கும் புது உலகப் புத்தாண்டாக அமையட்டும்!

அனைவருக்கும் நமது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

முகாம்: சிங்கப்பூர்

31.12.2013

Read more: http://viduthalai.in/e-paper/72872.html#ixzz2p6Np262c

தமிழ் ஓவியா said...


கலைஞர் புத்தாண்டு வாழ்த்து


2014ஆம் ஆண்டிற்கு வரவேற்புக் கூறி; எனது அருமைத் தமிழக மக்க ளுக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

மூன்று மாதங்களில் மின்சாரப் பிரச்சினையைத் தீர்ப்போம் எனப் பொய் கூறி வந்த ஆட்சியின் மூன்றாம் ஆண்டிலும் மக்கள் இருளில் தவிக்கும் நிலை தொடர்கிறது.

அனைத்து வகைத் தொழில்களும் முடங்கி விட்டன; புதிய தொழில்களும் இல்லை.

தொழிலாளர் சமுதாயம் அல்லல்படுகின்றது; வேளாண்மை நாளுக்கு நாள் குன்றி வருகிறது. நெல்லுக்கும், கரும்புக்கும் நியாய விலை இல்லை; விவசாயம் செய்ய முடியவில்லை என விவசாயிகள் குமுறுகின்றனர். ஆளுவோரின் தவறான கொள்கை யால் மணல் கிடைப்பதில்லை; கட்டுமானப் பணிகள் முடங்கி, கட்டுமானத் தொழிலாளர் வாழ்வு கேள்விக் குறியாகிறது.

ஆட்சிக்கு வந்தபின் செயின் பறிப்பவர் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடிவிட்டனர் என்றார்கள். செயின் பறிப்பு மட்டுமல்ல; கொலை, கொள்ளை, கற்பழிப்பு எனும் கொடிய குற்றங்கள் எல்லாம் தினமும் பெருகிக் கொண்டுள்ளன.

சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியவர்கள் உண்மைகளைக் கட்டிப் போட்டு விட்டு; பொய்களுக் குச் சாமரம் வீசி - ஜனநாயகக் கடமையாற்று வோர்க்குச் சிறைகளைக் காட்டி, ஏறி வா நீதிமன்றப் படிகளை என இழுத்தடிக்கும் எதேச்சாதிகாரப் போக்கு தலைவிரித்தாடுகிறது.

விலைவாசி உயர்வு எல்லா வகை மக்களுக்கும் வேதனையையே பரிசாகத் தந்துள்ளது. வேதனை யைத் தீர்க்க வேண்டியவர்கள் - மத்திய அரசு மீதும், கழகத்தின் மீதும் பழி சுமத்தியே தப்பிக்கப் பார்க்கின் றனர். பத்திரிகைகளும், ஊடகங்களும் உண்மை நிலையை உரைத்தால் அரசின் அடக்கு முறைக்கு ஆளாவோம் என்று அஞ்சுகின்றன.

இவையும் இவை போன்ற பலவும்தான் 2013இல் நாம் கண்டவை. இவையெல்லாம் களையப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் செய்யத் தவறியவைகளை நினைவுகூர்வோம். தமிழுக்கும், தமிழருக்கும், தமிழகத் திற்கும் பயன் தந்திடும் பணிகளோடு - இந்தியத் திருநாடு முழுமைக்கும் வலிவையும், பொலிவையும் தந்திடத்தக்க கடமைகள் ஆற்றிட - களம் கண்டிட - புறப்பகை நோக்கி, உட்பகை நீக்கி ஒன்றுபட்டு உழைத்திடுவோம்! புத்தாண்டு புத்துணர்வு வழங்கட்டும்!

Read more: http://viduthalai.in/e-paper/72877.html#ixzz2p6NycGmS

தமிழ் ஓவியா said...


பார்ப்பனச் சாதி


பார்ப்பனச் சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும்வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்துவரும்.

(விடுதலை, 29.5.1973)

Read more: http://viduthalai.in/page-2/72882.html#ixzz2p6OAe0Zb

தமிழ் ஓவியா said...


டிசம்பர் 31 (1993)சமூகநீதி வரலாற்றில் இந்நாளையும் மறக்க முடி யாது. இந்த நாளில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் 31(சி) சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நாள்.

அ.இ.அ.தி.மு.க. ஆட் சியே உருவாக்கிய சட்டமா என்றால், அதுதான் இல்லை;

மண்டல் குழு தொடர்பான இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு ஒன்றில் (25.8.1993) இடஒதுக் கீடு 50 சதவீதத்திற்குமேல் போகக் கூடாது என்று கூறியதால் தமிழ்நாட்டில் நாம் போராடிப் போராடிப் பெற்ற 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்த நிலையில், அந்த விபத்திலிருந்து தமிழ்நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றிட, தனக்கே உரித் தான சட்ட ஞானத்தால் மசோதா ஒன்றை உருவாக்கிக் கொடுத்தவர் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 31 (சி) பிரிவின்கீழ் மாநில அரசே சட்டம் இயற்றி நாடாளுமன்றத்தில் அது நிறைவேற்றப்பட்டு, 9ஆவது அட்டவணையில் இணைக்கப் பட்டால் நீதிமன்றம் தலை யிடவே முடியாது என்ற முறையில் சடடத்தின் நக லைத் தயாரித்துக் கொடுத் தவர் திராவிடர் கழகத் தலைவர்.

அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட குறிப் பிடத்தக்க நாள்தான் டிசம்பர் 31 (1993).

பிறகு நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப் பட்டது (19.7.1994).

முதல்வர், பிரதமர், குடியரசு தலைவர் ஆகிய மூன்று பார்ப்பனர்களைச் செயல்பட வைத்து வரலாற் றில் வெற்றி கண்டவர் நம் தலைவர்.

இன்றைக்கு இந்தியாவிலேயே இடஒதுக்கீடு சட்டத்தில் (ACT) அடிப்படையில் வலிவாக இருப்பது தமிழ் நாட்டில் தான்; மற்ற மற்ற மாநிலங்களில் அரசு ஆணை (G.O.) யால்தான் நின்று கொண்டு இருக்கிறது என் பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவலாகும்.

அன்றைக்கு முதல் அமைச்சர் செல்வி ஜெய லலிதா இந்தச் சட்டம் நிறை வேற்றப்பட ஒத்துழைப்புக் கொடுத்தார் என்பது ஒருபுறம்; அப்படியொரு சட்டத்தைப் பிறப்பித்து 69 சதவீதம் காப்பாற்றப்படவில்லையானால் அம்மையாரின் ஆட்சி காப் பாற்றப்பட்டு இருக்காது என் பதும் கசப்பான உண்மை யாகும்.

அதே அம்மையார் ஜெய லலிதா இப்பொழுது எப்படி இருக்கிறார்? பட்டதாரி ஆசிரியர்களின் பணி நிய மனம், இடைநிலை ஆசிரியர் கள் நியமனங்களிலும், ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சில் கொடுத்த மதிப்பெண் தளர்வினைக் கூட கொடுக்காமல் சமூக நீதிக்குச் சவக்குழி வெட்டி விட்டாரே!

சமூகநீதிக்கு எதிராக செயல்பட முடியாத அளவுக் குத் தடுப்பு அரணாக திராவிடர் கழகத் தலைவரும், திராவிடர் கழகமும் அன்று இருந்த காரணத்தால்தான் 1993இல் அப்படியொரு சட்டம் வர வாய்ப்பு இருந்தது என் பதுதான் உண்மை.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72871.html#ixzz2p6OSqkP5

தமிழ் ஓவியா said...மத்திய அரசே, மாநில அரசே!
பாதிக்கப்படும் விவசாயிகளைக் காப்பாற்று! கடன்களை ரத்து செய்! இழப்பீடு வழங்குக!
திருவாரூரில் தி.க. விவசாய சங்கத் தோழர்கள் ஆர்ப்பாட்டம்!

திருவாரூர், டிச.31- எல்லா வகையிலும் பாதிப்புக்கும், இழப்பிற்கும் ஆளாகும் ஏழை, எளிய விவசாயிகளைக் காப்பாற்றுமாறும், கடன்களை ரத்து செய்யுமாறும், இழப்பீடுகளை வழங்குமாறும் கோரிக்கைகளை முன்வைத்து, கீழத்தஞ்சை திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் தலைமையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப் பாட்டம் இன்று (31.12.2013) காலை 10 மணியளவில் எழுச்சியுடன் நடை பெற்றது.

ஆயிரக்கணக்கான தோழர்கள் (ஆண்களும், பெண்களும்) ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முழங்கப்பட்ட முழக்கங்கள் வருமாறு:

போராட்டம் போராட்டம்
விவசாயிகளின் போராட்டம்
திராவிடர் விவசாயிகளின் போராட்டம்
போராட்டம் போராட்டம்
வஞ்சிக்கப்படும் வஞ்சிக்கப்படும்
விவசாயிகளின் விவசாயிகளின்
போராட்டம், போராட்டம்
தமிழக அரசே, தமிழக அரசே!
வழங்குக வழங்குக!
நஷ்டப்படும் நஷ்டப்படும்
விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு
இழப்பீடு இழப்பீடு
வழங்குக வழங்குக!
ஏக்கருக்கு ஏக்கருக்கு
25 ஆயிரம் ரூபாய்
25 ஆயிரம் ரூபாய்
இழப்பீடு இழப்பீடு
வழங்குக வழங்குக!
தள்ளுபடி செய், தள்ளுபடி செய்!
விவசாயிகளின் கடன்களை
விவசாயிகளின் கடன்களை
தள்ளுபடி செய் தள்ளுபடி செய்!
வழங்குக வழங்குக! சென்றாண்டுக்கான
சென்றாண்டுக்கான பயிர் காப்பீடுத் தொகையினை பயிர் காப்பீடுத் தொகையினை
வழங்குக வழங்குக!
கடைக்கோடி பகுதிகளுக்கு
கடைக்கோடி பகுதிகளுக்கு
நீர்ப்பாசனம் கிடைத்திட
நீர்ப்பாசனம் கிடைத்திட
தூர்வாருக, தூர்வாருக!
கால்நடைக் கிளை நிலையங்களை
கால்நடைக் கிளை நிலையங்களை
கிராமம் தோறும் கிராமம் தோறும்
ஏற்படுத்துக, ஏற்படுத்துக!
கோமாரி நோயால் கோமாரி நோயால்
இறந்து போன இறந்து போன
கால்நடைகளுக்கு கால்நடைகளுக்கு
இழப்பீடு தருக, இழப்பீடு தருக!
ஒடுக்கப்பட்ட மக்களின்
ஒடுக்கப்பட்ட மக்களின்
உயிர் போன்ற விவசாயத்தை
உயிர் போன்ற விவசாயத்தை
சாகடிக்காதீர், சாகடிக்காதீர்!
பாவப்பட்ட தொழிலா?
பாவப்பட்ட தொழிலா?
ஏழை எளிய மக்களின்
ஏழை எளிய மக்களின்
விவசாயத் தொழில், விவசாயத் தொழில்
பாவப்பட்ட தொழிலா? பாவப்பட்ட தொழிலா?
வேண்டும் வேண்டும்
வேலை வாய்ப்புப் பெற்றிட
வேலை வாய்ப்புப் பெற்றிட
தொழிற் சாலைகள், தொழிற் சாலைகள்
வேண்டும், வேண்டும்.
மாநில அரசே, மத்திய அரசே!
காப்பாற்று, காப்பாற்று
விவசாயிகளை விவசாயிகளை
காப்பாற்று, காப்பாற்று!
போராடுவோம், போராடுவோம்!
வெற்றி கிட்டும் வரை, வெற்றி கிட்டும் வரை
போராடுவோம், போராடுவோம்!

மேற்கண்ட முழக்கங்களை முன்வைத்தனர். ஆர்ப்பாட்டத் தின் நோக்கங்களை விளக்கி ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, தி.மு.க. மாவட்ட செயலாளர் கலைவாணன், மாநில விவசாய தொழிலாள ரணி செயலாளர் குடவாசல் கா.கணபதி, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மண்டல தலைவர் இராயபுரம் கோபால் முதலியோர் உரையாற்றினர்.

ஆர்ப்பாட்ட முடிவில், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவி யாளர் ரவிச்சந்திரனைச் சந் தித்து கோரிக்கை மனு அளிக் கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-8/72897.html#ixzz2p6PfXaVd

தமிழ் ஓவியா said...


2014-ஆம் ஆண்டு துவக்கத்தில்...! விடுதலை வாசக நேயர்களுக்கு அரிய பகுத்தறிவுப் போட்டி

திராவிடர் கழகமும், அதன் தலைமையும் இந்த 2014-ஆம் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான 10 பணிகள் என்பதை 1,2,3 என்று வரிசைப்படுத்தி வாசக நேயர்கள் ஒரே பக்கம் (டெம்மிசைஸ்) ஒன்றின்பின் ஒன்றாக 10 பணிகளைச் சுட்டிக்காட்டி எழுதுங்கள்.

அதில் சிறந்த கட்டுரைக்கு ரூபாய் 1,000/- முதல் பரிசாகவும், இரண்டு, மூன்றாம் இடம் பெறுவோர்க்கு ரூ. 500/-, ரூ. 300/- பரிசுகளும் வழங்கப்படும்.

விடுதலை அலுவலகத்திற்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 12.1.2014 ஆகும். அவசரப் பணிகள் 10 என்று உறையில் தலைப்பிட்டு எழுதவும்.

- ஆசிரியர், விடுதலை

Read more: http://viduthalai.in/page-8/72889.html#ixzz2p6PpDCDx

தமிழ் ஓவியா said...


முன்னாள் நீதிபதி திரு. சந்துரு அவர்களுக்கு....

சென்னை உயர்நீதிமன்ற முன் னாள் நீதிபதி திரு. சந்துரு அவர்கள் தி இந்து தமிழ் நாளேட்டில் (22.12.2013) ஏன் இந்த தடுமாற்றம்? என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

எடுத்த எடுப்பிலேயே திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவித்துள்ள ஆர்ப்பாட் டத்தைப் பற்றிக் குறை கூறியுள்ளார்.

எதற்காக? மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பதவியிலிருந்து நீதிபதி கங்குலி பதவி விலகக் கோரி வரும் 24ஆம் தேதி திராவிடர் கழக மகளிரணி நடத்தும் போராட்டம்பற்றித் தான் அந்தக் குறை.

அதற்காக அவர் எடுத்து வைக்கும் காரணம் ஆச்சரியமானது. ஒரு நீதிபதியா இப்படி ஒரு காரணத்தைக் கூறுவது? என்ற வினா எழுகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னும் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்துக்குத் தலைவரை நியமிக்காமலும், இரண்டு வருடங்களாகப் பதவியை நிரப்பாமலும் உள்ள தமிழக அரசை அவர் ஏன் கண்டிக்கவில்லை? என்று ஒரு வினாவை எழுப்பியுள்ளார்.

கேள்வியை வரவேற்கிறோம் - தமிழ்நாடு அரசை எதிர்த்து ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும் என்று சொன்னதற்காக வரவேற்கலாம். அதே நேரத்தில் அதற்காகப் போராட்டம் நடத்தவில்லை என்பதற் காக, வேறு எந்தப் போராட்டத்தையும் நடத்தக் கூடாது என்று முன்னாள் நீதிபதி கூற வருகிறாரா?

இதற்கு மட்டுமல்ல திராவிடர் கழகம் நடத்தும் ஒவ்வொரு போராட் டத்தின்போதும் இதே கேள்வியை அவர் எழுப்புவாரோ! இனிமேல் ஏதாவது ஒரு போராட் டம் நடத்துவதாக இருந்தால் தமிழ் நாட்டில் மனித உரிமை ஆணையத் திற்குத் தலைவர் பதவியை நியமிக்க வேண்டும் என்ற ஒரு போராட்டம் நடத்தாமல் வேறு எந்த ஒரு போராட் டத்தையும் நடத்தக் கூடாது - இதுதான் நீதியரசரின் கருத்தோ!

அப்படியானால் கடந்த இரண்டு வருடங்களாக திராவிடர் கழகம் எத்தனையோ போராட்டங்களை நடத்தி இருக்கிறதே - அப்பொழு தெல்லாம் இந்த நிபந்தனையை முன் வைக்கவில்லையே - முன்னாள் நீதிபதி சந்துரு அவர்கள்.

நீதிபதி கங்குலியை எதிர்த் துப் பல கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் குரல் கொடுத் துள்ளனரே - அவர்களைப் பற்றிக் குறை கூறாத திரு. சந்துரு அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை மட்டும் ஏன் குறை கூறுகிறார்? எங்கேயோ இடிக்கிறதே! கங்குலியின்மீது நடவடிக்கை என்றதும் இந்த நிபந்தனையை முன் வைப்பதும் - எங்கேயோ இடிக்கிறதே!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மூன்று நீதிபதிகள் அடங்கிய விசா ரணைக் குழுவை நியமனம் செய்தார் என்றும் அந்தக் குழு, புகாரில் முதல் தோற்றச் சான்று உள்ளதாகக் கூறியதையும் ஒப்புக் கொண்டு எழுதி இருக்கும் நீதியரசர் - அவர் பதவி விலக வேண்டும் என்பதில் மட்டும் நந்தியாகக் குறுக்கே நிற்பது ஏன்?

குற்றச்சாற்று நிரூபிக்கப்பட்ட பிறகுதான் பதவி விலகுவது என்பது தவிர்க்க முடியாதது - வெளியே கழுத்தைப் பிடித்துத் தள்ளும் தருணம் அது. அதற்கு முன்பாகவே பூர்வாங்கக் காரணம் இருக்கிறது என்ற விசாரணைக் குழு சொன்ன நிலையிலேயே தார்மீகப் பொறுப் பேற்று ஏ.கே. கங்குலி பதவி விலகி இருக்கலாம் என்றுகூட எழுதிட நீதிபதி சந்துரு அவர்களுக்குத் தார்மீக ரீதியான உணர்வு ஏற்படாதது - ஏன்?

பாதிக்கப்பட்ட பெண்ணைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத் தில் பார்கவுன்சில் உதவித் தலைவர் தலைமையில் ஊர்வலம் நடத்தியுள் ளனர் என்ற தகவலையும் தவறாமல் குறிப்பிட்டிருக்கும் போது பாதிக்கப் பட்ட ஒருவர் புகார் தெரிவிப்பதை எதிர்த்து இப்படிப்பட்ட ஊர் வலத்தை நடத்தலாமா? என்ற வினாவை ஏன் எழுப்பிடவில்லை திரு. சந்துரு அவர்கள்?

பாதிக்கப்பட்டவர்களை எதிர்த்துப் போராடலாம் - பாதிப்புக்குக் காரண மானவரை எதிர்த்துப் போராடக் கூடாது என்பதுதான் திரு. சந்துரு அவர்களின் நியாயத் தராசா?

அப்படியானால் டெகல்கா ஏட்டின் ஆசிரியர் தருண்தேஜ்பால்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டதா? அதற்கு முன்பே அவர் ஏன் கைது செய்யப்பட்டார் - சிறையில் அடைக் கப்பட்டார்?

அவர் கைது செய்யப்பட்டபோது திரு. சந்துரு அவர்கள் ஏன் மவுன விரதம் இருந்தார்?

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி என்றால் அவர் சட்டத்திற்கு அப்பாற் பட்டவரா? நவீன மனுதர்மமா? முன்னாள் நீதிபதிக்கு முன்னாள் நீதிபதி வக்காலத்தா? முன்னாள் நீதிபதிகள் சங்கம் ஒன்று இருக் கிறதா? என்றும் தெரியவில்லை!

- மின்சாரம்

Read more: http://viduthalai.in/page1/72513.html#ixzz2p6REx0N8

தமிழ் ஓவியா said...


பெண்களைஇழிவுப்படுத்திசொற்பொழிவு நடத்துவதுநீதிமன்றங்களின்வேலையல்ல! டில்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை


புதுடில்லி, டிச.23- வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் வழக்குக்குள் நின்று தீர்ப்புகளை வழங்க வேண்டுமே தவிர வழக்குக்கு அப்பால் சென்று பெண்களை இழிவுபடுத்தும் வகை யிலும், அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் தன்மையிலும் தேவை யில்லாத சொற்பொழிவு களை நீதிமன்றங்களில் நிகழ்த்தக் கூடாது என்று டில்லி உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. டில்லியில் பாலியல் வன்கொடுமை தொடர் பான ஒரு வழக்கின் தீர்ப்பில், "19 முதல் 24 வயது வரை உள்ள இளம் பெண்கள் அவர்களு டைய காதலர்களுடன் தன்னிச்சையாக வீட்டை விட்டு ஓடிப் போய்விடு கின்றனர்' என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார். மேலும், பெண்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டு, குறிப்பிட்டபடிதான் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவது போன்ற வகையிலும் நீதிபதி கருத்து தெரிவித்திருந் தார்.

விசாரணை விரைவு நீதிமன்ற நீதிபதியின் இத் தீர்ப்பை அறிந்த டில்லி உயர்நீதிமன்றம், தானே முன்வந்து விசாரணை நடத்தியது. விசாரணை யின் முடிவில் அந்த நீதி பதியின் கருத்துகளுக்கு, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரதீப் நந்த்ர ஜோக், வி.கே.ராவ் ஆகி யோர் அடங்கிய அமர்வு கண்டனம் தெரிவித்தது.

"வழக்கில் முன் வைக் கப்படும் சாட்சியங்கள், ஆதாரங்களின் அடிப் படையில்தான் தீர்ப்பு வாசகங்கள் இருக்க வேண்டுமே தவிர, தங்க ளது சொந்த அல்லது சமூகப் பார்வைகளைத் தீர்ப்புகளில் தெரிவிக்கக் கூடாது' என்று நீதிபதி கள் தெரிவித்தனர்.

தீர்ப்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ள தாவது: இந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி தெரி வித்த கருத்துகள் பொது வான தன்மையிலானவை.

பெண்களுக்கு எதிரான கருத்துகள்

பெண்களுக்கு எதி ரான கருத்துகளையும், அலட்சியமான விமர் சனங்களையும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள் ளார். முடிவு எடுப்பதில் பெண்களின் நிலை குறித்து தனது சொந்த அபிப்ராயத்தை நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். அது தவறானது.

மாறி வரும் இந்திய சமூகத்தில் முடிவு எடுப் பதில் பெண்கள் குழப்ப நிலையில் உள்ளனர். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் அவருக்குள்ள விருப்பம் மற்றும் ஆணாதிக்கம் மிகுந்த சமூகச் சூழல் ஆகியவற்றுக்கு இடையே பெண்கள் சிக்கிக் கொண்டு வதை படுகின்றனர். அதை கவ னத்துடனும் கருணை யுடனும்தான் பார்க்க வேண்டுமே ஒழிய, சொற் பொழிவு போன்ற அறி வுரைகளைத் தரக் கூடாது.

இந்த வழக்கின் தீர்ப் பில் விசாரணை நீதிமன்ற நீதிபதி, அப்பெண் குறித்து தெரிவித்த கருத்துகள், "அப் பெண் எப்படி சமூகத்தில் நடந்து கொள்ள வேண்டும்' என பிரசங்கம் செய்வதைப் போல உள்ளது. அது நீதிபதியின் வேலையல்ல.

சமூக வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு தனி நபருக்கும் உரிமை உள்ளது. சிலர் அவ்வாறு தேர்வு செய்யும்போது விரும்பத்தகாதவை நடந்துவிடுகின்றன. அதற்காக நீதிமன்றங்கள், "உன் வாழ்க்கையை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். அப் படி இல்லாவிட்டால் இந்த சமூகம் உனக்காக கண்ணீர் வடிக்காது' என்று சொல்லக் கூடாது.

அலட்சியமான பார் வையுடன் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள், காவல் நிலையங்களில் பெண்களைத் துன்புறுத் தவே உதவும். மேலும், அலட்சியமான முறை யில் விசாரணைகள் நடைபெறுவதுடன், குற் றச்சாட்டுகளுக்குப் போது மான, முழுமையான சாட் சியங்கள் நீதிமன்றத்தின் முன்பு கொண்டுவர முடியாத சூழல் ஏற்படும்.

காவல்துறையினருக்குப் புது வசதி!

நீதிமன்றங்களின் இது போன்ற தீர்ப்புகள், பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மீது காவல் துறையினருக்கு ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுத்து அதன்படியே விசாரிக்க வழி வகுத்து விடும். மேலும், இது போன்ற தீர்ப்புகளை முன்வைத்து, பாதிக் கப்படும் பெண்களுக்கு எதிராக வழக்குரைஞர் கள் வாதிடக் கூடும்' என்று நீதிபதிகள் கூறி யுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page1/72508.html#ixzz2p6Rk8KnG

தமிழ் ஓவியா said...


சொல்லவேண்டும்

பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.

- (குடிஅரசு, 17.8.1930)

Read more: http://viduthalai.in/page1/72514.html#ixzz2p6SFx4tE

தமிழ் ஓவியா said...


இன்று தந்தை பெரியார் நினைவு நாள்


தந்தை பெரியார் கொள்கைகள் - இலட்சியங்கள் ஓங்கி உலகாள உறுதி எடுப்போம்!

2013 டிசம்பர் 24ஆம் நாளாகிய இன்று அறிவாசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்த 40ஆம் ஆண்டு ஆகும்!

டிசம்பர் 24 தந்தை பெரியாரின் நினைவு நாள் என்பது நமக்கெல்லாம் ஒரு வரலாற்றுக் குறிப்பை பதிவு செய்யும் நாள் தான்; மற்றபடி ஒப்பாரும் மிக் காரும் இல்லாத ஒரே தலை வரான நம் அய்யாவை நினைக் காத நாளோ, மணித் துளியோ ஏது?

அவர்தம் பெருமைகளை - பயன்களைப் பேசா நாட்கள் எல்லாம் நமக்குப் பிறவா நாட்களே!

கடந்த சில நாட்களில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய திராவிடர் கழகம் மூன்றாண் டுகளுக்கு ஒரு முறை நடத்தும் தேசிய மாநாடு மிகச் சிறப்பாக, கடந்த 21,22 ஆகிய தேதிகளில் நடந் தேறியபோது, தற்போதுள்ள மத்தியக் கூட்டரசின் அங்கமான மலேசிய இந்தியக் காங்கிரசின் அமைச் சர்களும், பொறுப்பாளர்களும், தந்தை பெரியார் இல்லாவிட்டால் நாம் இந்நிலைக்கு - மலேசியாவில் - உயர்ந்திருக்க முடியாது; பெரியார் தம் கருத்துக்கள் இன்றும் தேவை; காரணம் அது ஒரு சமூக விஞ்ஞானம்.

விஞ்ஞானத்தை என்றும் ஒதுக்க முடியாது என்பது எப்படி உண்மையோ, அது போன்றதே பெரியார் கொள்கைகள்? என்பதை இரண்டு நிகழ்ச்சிகளிலும் விளக்கிப் பேசியதைக் கேட்ட பொழுது பெரிதும் உவந்தோம்! உலகப் பெரியார் அய்யா பெரியார் ; அனைத்து மக்களுக்கும் உரியார். காரணம் அவர் உயர் நெறியார், நரியார்களை விரட்டி சமுதாயத்தைப் பாதுகாப்பது; அந்தத் தலைவரின் மண்டை சுரப்பு என்பதை அகிலமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

நேற்று (23.12.2013) மலேசியாவின் முக்கியப் பெரு நகரங்களில் ஒன்றான ஈப்போ நகரில் மலேசிய திராவிடர் கழகத்தின் கொள்கைப் பிரச்சார சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

பிரபல ரிவர்வியூ ஓட்டல் சிறப்பு மண்டபத்தில், விந்தை யான ஒரு வரலாற்று நிகழ்வு! இதே நாளில் 1929இல் தந்தை பெரியார் ஈப்போ நகரில் (23.12.1929) உரையாற்றியதை, நம் வெளியீடான மலேசியா, சிங்கப்பூரில் பெரியார் என்ற நூலில் இருந்து எடுத்துக் காட் டினேன். அம் மக்கள் வியந்தனர். பெரியார் அவர்கள் வருகை தந்து 84 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்தம் கொள்கைக் குரல் மலேசிய திராவிடர் கழகத்தின் மூலம் இங்கே முழங்குகிறது. பெரியாரின் கொள்கைகள் காலத்தை வென்றவை.

புத்தாக்கத்திற்கான புதிய தேவையும்கூட; அய்யா மறைந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் உலகை அக்கொள்கை ஆளுகிறது.

எனவே வரும் ஆண்டுகளில் திருச்சி - சிறுகனூரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைய இருக்கும் 95 அடி உயர தந்தை பெரியார் பேருருவச் சிலை 40 அடி பீடம், 135 அடி உயரத்தில் செம்மாந்து நிற்கப் போவது போல அவர்தம் கொள்கைகளும், லட்சியங் களும் சிறப்புடன் ஓங்கி உயர்ந்து நிற்கும் என்பது உறுதி. அவை உலகாள வழி வகுப்போம்.

அதற்கான உறுதியைச் சூளுரையாக புதுப்பிப்பது பெரியார் தொண்டர்களின் தலையாய கடமை.

வெல்க பெரியாரியம், வருக பெரியார் உலகம்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


முகாம்: பினாங்கு (மலேசியா)
24.12.2013

தமிழ் ஓவியா said...


தமிழர் நலம் பெற...


தமிழ்நாடும், தமிழ்மொழியும், தமிழர் தன்மானமும், விடுதலையும் பெற்று வளர்ச்சியடைய வேண்டுமானால், தமிழன் காரியத்தில் தமிழனல் லாதவன்- அவன் எப்படிப்பட்டவன் ஆனாலும் தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டும். இதை வேறு எதை ஒழித்தாவது ஒழிக்கவேண்டும்.

- (குடிஅரசு, 19.2.1944)

தமிழ் ஓவியா said...


மாவோ


மா சே துங் அவர்களி டம் சிண்டைப் பறி கொடுத்தவர்கள் அவருடன் உடன்பயின்ற பன்னி ரெண்டு மாணவர்கள். அறுக்கப்பட்ட இடம் சாங்சா (Changca) உயர்தரப் பள்ளிக்கூடம்.

சீனாவை 1911ஆம் ஆண்டில் ஆண்டு கொண் டிருந்த மஞ்ச் வம்சத்தினர். சீனர்கள் என்றும் அடி மைகள் என்று காட்ட சீனர் களை சிண்டு வைத்துக் கொள்ளச் செய்தனர்.

மாணவன் மாவோ வுக்கு ஆத்திரம் தாங்க வில்லை. மான உணர்வு பீரிட்டது. மாவோவின் மாணவ நண்பர்கள் தங்கள் சிண்டுகளை அறுத்துக் கொண்டு விடுவதாக உறுதி கூறினார்கள். ஒரு சிலரோ அந்த உறுதி மொழியைக் காற்றில் பறக்க விட்டனர். அந்தப் பன்னி ரெண்டு பேர்களின் சிண்டை மாவோ பலாத்காரமாக அறுத்தெறிந்து விட்டார்!

ஆதாரம்: ஸ்டூவர்ட் ச்ராம் அவர்களால் எழுதப் பட்ட மாசே துங் என்ற நூலில் 23ஆம் பக்கம். தந்தை பெரியாரால் ஏற்படுத்தப்பட்ட சுயமரி யாதை இயக்கமோ, திரா விடர் கழகமோ பார்ப்பனர் களின் சிண்டையோ, பூணூலையோ வன்முறை யில் அறுக்கச் சொல்ல வில்லை என்றாலும் அவர் கள் இவற்றை வைத்துக் கொண்டு இருப்பது அவர் களின் தனிப்பட்ட உரிமை என்று அடம் பிடிக்க முடியாது.

அவர்கள் அவற்றை வைத்துக் கொள்வது நாங்கள் பிறவியிலேயே உயர்ந்தவர்கள், பிரம்மா எனும் கடவுளால் அவன் நெற்றியிலிருந்து பிறப்பிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள், மற்றவர்கள் சூத்திரர்கள்; பிரம்மாவின் காலில் பிறந்தவர்கள் வேசி மக்கள் (மனுதர்மம் அத்தி யாயம் 8 சுலோகம் 415).

சூத்திரன், பிராமண ஜாதிக் குறியை - பூணூல் முதலியதைத் தரித்தால் அரசன், சூத்திரனின் அங் கங்களை வெட்டி விட வேண்டும்.
(மனு அத்தியாயம் 9 சுலோகம் 224).

சீனக்காரர்கள் சிண்டு வைக்கக் கட்டாயப்படுத்தப் பட்டது அவர்களை அடி மைகள் என்று காட்டிக் கொள்ள; பார்ப்பனர்கள் இங்கு இதுபோன்ற அடை யாளங்களை வைத்துக் கொள்வது பிறவியில் உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ள; எப்ப டியோ பேதத்தின் சின்னம் தான் இவை.

மாவோ கண்ணோட்டத் தில் சிந்தியுங்கள் விடை கிடைக்கும்.

குறிப்பு: இன்று மாசே துங் பிறந்த நாள் (1893).

- மயிலாடன்
26-12-2013
Read more: http://viduthalai.in/page1/72610.html#ixzz2p6VUVmeO

தமிழ் ஓவியா said...


சிந்தனைக்கு...
26-12-2013
இன்று தாத்தா பாட்டி தினமாக உலகில் கொண்டாடப்படுகிறது. மூத்தோர்களை மதிப் பதும், அன்பு செலுத்து வதும் பராமரிப்பதும் நமது தலையாய கடமை! நன்றி உள்ளவர்களாக மனிதாபிமானம் உள்ள வர்களாக இருக்கி றோம் என்பதற்கான அடையாளம். முதியோர் இல்லம் என்பது இளை யோரின் மனிதாபிமான மற்ற நிலையை விளக் கும் நிலையமாகும்.

தமிழ் ஓவியா said...


இறந்த பின்...


ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

Read more: http://viduthalai.in/page1/72620.html#ixzz2p6WNsNPy

தமிழ் ஓவியா said...


விவசாயம் என்பது பாவப்பட்ட தொழிலா?


> விவசாயம் என்பது பாவப்பட்ட தொழிலா?

> கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள பரிதாப நிலை!

கீழத்தஞ்சைமாவட்டவிவசாயிகளுக்குநிவாரணம்கோரி

31ஆம் தேதி திருவாரூரில்மாபெரும் ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் அறிக்கை

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் களுக்கு நிவாரணம் கோரி வரும் 31ஆம் தேதி திருவா ரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகமுன் ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

திருவாரூர், நாகை மாவட்டங்களில் விவசாயிகள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்றைய பொழுது எப்படி போகும் என்ற கேள்விக் குறியே அன்றாட வாழ்க்கையாகி விட்டது.

திருவாரூர் ஒன்றியத்தில்...

குறிப்பாக திருவாரூர் ஒன்றியத்தில் வெட்டாறு பாசனம், சிற்றாறின் கிளை வாய்க்கால்கள் சென்றாண்டு தூர் வாரப்படாத காரணத்தினால் கடைமடைப் பாசனப் பகுதிகளான நடப்பூர், செருகுடி, வைப்பூர், சூரனூர், திருவாதிரை மங்கலம், பழையவலம், ஓடாச்சேரி, ஆமூர், வடகுடி, சோழங்கநல்லூர், கீழத் தஞ்சாவூர், நெடுங் காட்டாங்குடி, எழு முக்கால், ராஜாங்கட்டளை உட்பட பல கிராமங்களில் 3500 ஏக்கர் சாகுபடி நிலங்களில் மஞ்சள் நோயினால் பயிர்கள் சூறையாகி விட்டன.

கால்நடைகள் நோயால் பாதிப்பு

விவசாயிகளின் கால்நடைகளும் கோமாரி (குடிடிவ ஹனே ஆடிரவா) நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலை.

விவசாயம் என்றால் பாவத் தொழில் என்று மனுதர்மத் தில் அன்று எழுதி வைத்தனர். இன்று அதன் கோர வடிவத்தில் ஏழை எளிய மக்கள் அல்லாடுகின்றனர்.

கிராமங்களின் பரிதாப நிலை

கிராமங்களில் வேறு தொழிலுக்கு வகையில்லை. குறிப்பாக திருவாரூர், நாகை மாவட்டங்களில் வேலை வாய்ப்புகளுக்குக் கதவு திறந்து விடும் தொழிற்சாலைகள் ஏதுமில்லை. நாகை துறைமுகம் என்பது காட்சி சாலையாகி விட்டது. இந்த நிலையில் கிராமப்புற ஏழை, எளிய மக்கள் (பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள்) விவசாயத்தைக் கட்டிக் கொண்டே மாரடிக்கும் பரிதாப நிலைதான்!

மத்திய, மாநில அரசுகளின் காருண்யக் கண்களும் இவர்கள் மீது படுவது கிடையாது.

மாநில அரசின் கவனத்துக்கு...

இன்றைய சூழலில் மாநில அரசின் கவனத்துக்குக் கீழ்க்கண்ட கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.

1) ஏக்கருக்கு ரூ.15000 என்கிற அளவுக்குக் கடன் வாங்கி முற்றிலும் நட்டப்பட்டுள்ள மக்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும். கூட்டுறவு மற்றும் அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

2) சென்றாண்டுக்கான பயிர் காப்பீட்டு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

3) வரும் ஆண்டிலாவது நீர்ப் பாசனம் கடைகோடி மக்களுக்குக் கிடைக்கும் வகையில் வாய்க்கால்கள் தூர் வாரப்பட வேண்டும்.

4) கால்நடைக் கிளை நிலையங்கள் அதிகமான அளவில் கிராமப் பகுதிகளில் தொடங்கப்பட்டு, பருவத்துக் கேற்ற தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும் - கோமாரி நோயினால் உயிரிழந்த கால்நடைகளுக் கான இழப்பீட்டுத் தொகையையும் வழங்க வேண்டும்.

திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 31.12.2013 செவ்வாய் காலை 10 மணியளவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகமுன் திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழக விவசாய தொழிலாளரணி சார்பில் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் மானமிகு சு. அறிவுக்கரசு அவர்களின் தலைமையில் நடைபெறும்.

நாகை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை மாவட்டக் கழகத் தோழர்கள் கிளர்ந்தெழுந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்முகாம்: சிங்கப்பூர்

27.12.2013

Read more: http://viduthalai.in/page1/72675.html#ixzz2p6oDyqHT

தமிழ் ஓவியா said...


ஜாதகம்


கேள்வி: பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்து விட்டு பெண் பார்க்கச் செல்வது நல்லதா? பெண்ணை முதலில் பார்த்து விட்டு ஜாதகம் பார்ப்பது நல்லதா?

பதில்: தயவு செய்து ஜாதகப் பேச்சை எடுக்கா தீர்கள். இந்த ஜாதகம் என்ற காகிதம் எத்தனைப் பெண்களை இன்னும் கன்னியாகவே வைத் திருக்கிறது என்பதை அறிவீர்களா? ஓரம் கட் டுங்கள் ஜாதகத்தை. பொருத்தம் மனதில் இருக்கிறதா பாருங்கள். ஜாம் ஜாமென மேளம் கொட்ட ஏற்பாடு செய் யுங்கள்.

இப்படி ஒரு கேள்வி பதில் உண்மை இதழில் வெளி வந்தால் அது இயல்பு. ஆனால் தினமலர் வார மலரில் (22.12.2013 பக்கம் 10) வெளி வந்திருக்கிறது என்று படிக்கும் பொழுது, நமது பகுத்தறிவுப் பிரச் சாரம் நன்றாகவே வேலை செய்திருக்கிறது என்று பெருமைப்படலாம்.

பிறந்த நேரத்தை மய்யப்படுத்தி - அந்த நேரத்தில் கிரகங்களின் நிலையை வைத்து ஜாத கத்தைக் கணிக்கிறார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் தான் அருமை யாக ஒரு வினாவை எழுப்பினார்.

பிறந்த காலம் என்பது கருப்பைக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அப்படிப்பிறக்கும் காலத் தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல் லது ஒரு நாள் அரை நாள் அக்குழந்தை கீழே விழா மல் கஷ்டப்படும் காலத் தில் தலை வெளியாகி, நிலத்தில் பட்டு கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண் டிருக்கும் காலமா? அல் லது கால், தலை ஆகிய எல்லாம் மருத்துவச்சி கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போவார் (குடிஅரசு 6.7.1930) இக்கேள்விகளுக்கு எந்தப் பிரசித்தி பெற்ற சோதிடராலும் பதில் சொல்ல முடியவில்லை.

குழந்தை கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த தென்றால் அதற்கு ஜாத கம் கணிக்கிறார்களே - அதை நினைத்தால் வயிறு வெடித்து விடும் அளவுக்குச் சிரிப்புதான்!

410 ஒளியாண்டுத் தொலைவில் அந்த நட் சத்திரம் சுற்றிக் கொண்டி ருக்கும் சுய ஒளி கொண் டது. சூரியனைப் போல 1200 மடங்கு ஒளியுடை யது. அதிலிருந்து புறப் பட்ட ஒளி பூமிக்கு வர வேண்டும் என்றால் 410 ஆண்டுகள் ஆகுமாம்.

இந்த நிலையில் கிருத் திகை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பூமி யில் ஜாதகம் கணிப்பதை என்ன சொல்ல!

இந்த ஜாதகப் பொருத்தக் கோளாறுகளினால் திருமணம் ஆகாத பெண்கள் எத் தனை எத்தனைப் பேர்! இதனைத்தான் தினமலரும் ஒப்புக் கொள்கிறது.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/72674.html#ixzz2p6oKu8aG

தமிழ் ஓவியா said...


ஜாதகம்


கேள்வி: பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்து விட்டு பெண் பார்க்கச் செல்வது நல்லதா? பெண்ணை முதலில் பார்த்து விட்டு ஜாதகம் பார்ப்பது நல்லதா?

பதில்: தயவு செய்து ஜாதகப் பேச்சை எடுக்கா தீர்கள். இந்த ஜாதகம் என்ற காகிதம் எத்தனைப் பெண்களை இன்னும் கன்னியாகவே வைத் திருக்கிறது என்பதை அறிவீர்களா? ஓரம் கட் டுங்கள் ஜாதகத்தை. பொருத்தம் மனதில் இருக்கிறதா பாருங்கள். ஜாம் ஜாமென மேளம் கொட்ட ஏற்பாடு செய் யுங்கள்.

இப்படி ஒரு கேள்வி பதில் உண்மை இதழில் வெளி வந்தால் அது இயல்பு. ஆனால் தினமலர் வார மலரில் (22.12.2013 பக்கம் 10) வெளி வந்திருக்கிறது என்று படிக்கும் பொழுது, நமது பகுத்தறிவுப் பிரச் சாரம் நன்றாகவே வேலை செய்திருக்கிறது என்று பெருமைப்படலாம்.

பிறந்த நேரத்தை மய்யப்படுத்தி - அந்த நேரத்தில் கிரகங்களின் நிலையை வைத்து ஜாத கத்தைக் கணிக்கிறார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் தான் அருமை யாக ஒரு வினாவை எழுப்பினார்.

பிறந்த காலம் என்பது கருப்பைக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அப்படிப்பிறக்கும் காலத் தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல் லது ஒரு நாள் அரை நாள் அக்குழந்தை கீழே விழா மல் கஷ்டப்படும் காலத் தில் தலை வெளியாகி, நிலத்தில் பட்டு கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண் டிருக்கும் காலமா? அல் லது கால், தலை ஆகிய எல்லாம் மருத்துவச்சி கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போவார் (குடிஅரசு 6.7.1930) இக்கேள்விகளுக்கு எந்தப் பிரசித்தி பெற்ற சோதிடராலும் பதில் சொல்ல முடியவில்லை.

குழந்தை கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த தென்றால் அதற்கு ஜாத கம் கணிக்கிறார்களே - அதை நினைத்தால் வயிறு வெடித்து விடும் அளவுக்குச் சிரிப்புதான்!

410 ஒளியாண்டுத் தொலைவில் அந்த நட் சத்திரம் சுற்றிக் கொண்டி ருக்கும் சுய ஒளி கொண் டது. சூரியனைப் போல 1200 மடங்கு ஒளியுடை யது. அதிலிருந்து புறப் பட்ட ஒளி பூமிக்கு வர வேண்டும் என்றால் 410 ஆண்டுகள் ஆகுமாம்.

இந்த நிலையில் கிருத் திகை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பூமி யில் ஜாதகம் கணிப்பதை என்ன சொல்ல!

இந்த ஜாதகப் பொருத்தக் கோளாறுகளினால் திருமணம் ஆகாத பெண்கள் எத் தனை எத்தனைப் பேர்! இதனைத்தான் தினமலரும் ஒப்புக் கொள்கிறது.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/72674.html#ixzz2p6oKu8aG

தமிழ் ஓவியா said...


மூடனே!


கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிச் சோம்பித் திரிந்துகொண்டு, தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழிபோட்டுத் திரிகின்றவன் ஒரு மூடனே!

(விடுதலை, 1.2.1969)

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவருக்கு விஞ்ஞானி ஆ. சிவதாணுப்பிள்ளை நன்றிக் கடிதம்


பெருமதிப்பிற்குரிய அய்யா,

ரஷ்ய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஃப்ரெண்ட்ஷிப் (டீசனநச டிக குசநைனேளாயீ) விருதை பெற்ற மைக்கான தங்களின் வாழ்த்துச்செய்தி கிடைக்கப் பெற்றது. தமிழினத்தலைவராகிய தங்களிடமிருந்து இத்தகைய வாழ்த்துச் செய்தி கண்டு மிகப்பெருமையடைகிறேன். தமிழுக்காகவும், தமிழின மேன்மைக்காகவும் பாடுபடும் தங்களிடம் இத்தனை ஆண்டுகளான என்னுடைய நட்புறவை நான் பெற்ற பெரும்பேறாக கருதுகிறேன்.

இந்த விருது இந்திய - ரஷ்ய கூட்டமைப்பான ப்ரம் மோஸ், டி.ஆர்.டி.ஓ. என்.பி.ஓ.எம் ஆகிய நிறுவனங்களில் பங்காற்றும் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பாலும், இருநாட்டின் அரசாங்கத்தின் ஆதர வாலும் மேலும் தங்களைப் போன்ற நலம் விரும்புவோர்களின் நல்லாசிகளின் மூலமும் 60 ஆண்டுகால இந்திய - ரஷ்ய நட்புறவை, ப்ரம்மோஸ் நிறுவனத்தின் மூலம் மென்மேலும் வலிமை பெறு முடிந்தது.

தங்களுடைய பல வேலைகளுக்கு இடையில், சிங்கப்பூரில் இருந்து அனுப்பிய இந்த வாழ்த்து, மேலும் சாதிக்கத் தேவையான மனத்திட்பத்தையும் உறுதியையும் தருகிறது.
வாழ்க தமிழ், வளர்க திராவிடர் இனம்.

நன்றியுடன்
ஆ.சிவதாணுப்பிள்ளை

Read more: http://viduthalai.in/page1/72694.html#ixzz2p6p6HQg2

தமிழ் ஓவியா said...

கோபுரங்கள் ஏன்?

வருணாசிரமத் தர்மங்களைக் கடைப்பிடித்தொழுகும் இந்துக்களில் சில ஜாதியார் கோயிலுக்குள் பிரவேசித்து, இறைவன் உருவினைக் கண்டு தொழுவதற்கு இயலாதவராய் இருத்தலின், அன்னார் நெடுநிலைக் கோபுரங்களைக் கண்டு தொழுது நற்பிறப்பெய்துந் திருப் பெறவே வானளாவுங் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆதாரம்: இராஜ ராஜ சோழன், ஆசிரியர்: இரா.சிவ. சாம்பசிவ சர்மா, நூல் பக்கம்: 93

கோபுரங்கள் கட்டப்பட்ட தன் தத்துவம் புரிகிறதா? நந்தன்கூட தில்லைத் தேரடியில் நின்று தரிசித்தால் போதும் என்று தரிசித்தால் போதும் என்று மனநிறைவு கொண்டதன் தத்துவமும் இதுதானே!

இப்போது கூட பார்ப்பனர்கள் அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகராகத் தகுதி இல்லை - சூத்திரப் பசங்கள் கோபுரத்தைத் தரிசித்தால் போதும் என்ற எண்ணத்தில்தானே அதை எதிர்க்கிறார்கள்!

Read more: http://viduthalai.in/page1/72715.html#ixzz2p6q6hSkv

தமிழ் ஓவியா said...


29ஆண்டுகளுக்கு முன்....


இன்றைக்கு 29 ஆண்டுகளுக்கு முன்பு இந்தநாடு எப்படி இருந்தது. ஜாதி வெறியின் தாண்டவம் எப்படி எப்படி எல்லாம் கொடூரமாக இருந்தது என்பது இன்றைய இளைஞர்களுக்கு அதிகம் தெரியாது. சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகத்தின் தன்மையை உணர்ந்தமாத்திரத்தில்தான் அறியமுடியும். இதோ ஒரு எடுத்துக் காட்டு: 29.12.1947 அன்று விடுதலையில் வெளியான ஆசிரியர் கடிதம்.

மருத்துவத் தோழருக்கு சுயமரியாதை

அய்யா, நான் நேற்று மாலை இவ்வூரில் காப்பி கிளப் வைத்திருக்கும் அய்யர் ஒருவர் கடையில் காப்பி சாப்பிடச் சென்றிருந்தேன். நான் மருத்துவ வகுப்பினைச் சேர்ந்தவன்.

நான் அக்கடையில் பலகாரம் வாங்கி டேபிளின் மேல் வைத்துக் கொண்டு, மரியாதைக்காக நின்று கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அங்கு வேலை செய்யும் பார்ப்பனர் ஒருவர் என்ன நீ டேபிள் மேலேயே உட்கார்ந்து கொண்டாற் போலிருக்கிறதே! நீ தரையில் அல்லவா உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு நான் மற்றவர் மேஜைமேல் சாப்பிடும் போது நான் மட்டும் தானா சாப்பிடக்கூடாது? என்று கேட்டேன். அதற்குள் தமிழர் ஒருவர் மரியாதை இல்லாமல் இப்படி நீ சாப்பிடுவதால், மற்றவர்களுக்குச் கூச்சமாய் இருக்காதா? என்று கேட்டார். உடனே நான், மற்றவர்களுக்காக நான் சாப்பிடவில்லை, மரியாதைக்காகத் தான் நின்று கொண்டு சாப்பிட்டேன்.

இல்லாவிட்டால் உட்கார்ந்து சாப்பிட எனக்குத் தெரியும் என்று கூறி மேஜை மேல் உட்கார்ந்து சாப்பிட்டு வந்தேன். திராவிடர் கழகம் நன்றாக வேலை செய்கிற இந்த ஊரிலேயே இவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதென்றால் மற்ற ஊர்த் தோழர்களுக்கு எவ்வளவு எதிர்ப்புகள் நடக்கும்?

கே.டி.பெரியசாமி, லால்குடி - 29.12.1947

Read more: http://viduthalai.in/page1/72714.html#ixzz2p6qJpRz8

தமிழ் ஓவியா said...

கண்ணன் எங்கே போனான்?

திரவுபதையின் மானத்தைக் காத்த கண்ணனுக்கு நாம் உற்சவங்கள் கொண் டாடுகிறோம். கவிகள் அவனைப் பற்றி காவியங்கள் பாடுகிறார்கள். தத்துவ ஞானிகள் அவனைப் பூர்ணாவதாரம் என்கிறார்கள்.

ஆனால், அந்தக் காலத் தில் ஒரு திரவுபதையின் மானத்தைக் காப்பாற்ற ஓடி வந்த கண்ணன், இன்றைய தினம், உடுக்க ஒரு முழக்கந்தலுமின்றித் தவிக்கின்ற லட்சக்கணக்கான ஏழைப் பெண்களைக் காப்பாற்ற ஏன் முன் வரவில்லை? தெய்வமே குருடாகிவிட்டது என்று எனக்குக் தோன்றுகிறது?

- காண்டேகர்

Read more: http://viduthalai.in/page1/72714.html#ixzz2p6qQLijm

தமிழ் ஓவியா said...

புத்தகப் படிப்பும் பட்டையும்!

சென்னையில் நடக்கும் துர் ஆசாரங் கள் மனிதன் சகிக்கக் கூடியதல்ல. விபூதி பொட்டுகளையும் பட்டை நாமங்களையும் தீட்டிய நெற்றி யுடைய பெரிய பெரிய ஆங்கிலப் பட்டம் பெற்ற பண்டிதர்களுடைய சம்பாசணை யைக் கேட்டதிலிருந்து வெறும் புத்தகங் களைப் படித்துப் பட்டம் பெற்று விட்டதில் மாத்திரம் மனிதனுக்கு அறிவு வந்து விடாதென்று நிச்சயம் செய்து கொண் டேன்.

- லாலா லஜபதி

Read more: http://viduthalai.in/page1/72714.html#ixzz2p6qWy1K2

தமிழ் ஓவியா said...


தனி மனித தத்துவம் கூடாது...வாழ்க்கை என்பது தனித்தனி மனிதனைப் பொறுத்த தத்துவம் என்பது கூடவே, கூடாது.
(பகுத்தறிவு, 1.11.1938)

Read more: http://viduthalai.in/page-2/72920.html#ixzz2p9d9QxQG

தமிழ் ஓவியா said...

பழையன கழிதலும்...2013 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. பழையன கழியட்டும்! 2014 ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. புதியன பூத்து மலரட்டும்! பழைய பஞ்சாங்கங்களைப் புரட்டி, புரட்டுகளை எழுதிக் குவிக்கும் அஞ்ஞானமும் ஒருபுறத்தில் அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் புத்தாண்டு வாழ்த்தில் குறிப்பிட்டுள்ள வாசகக் கருத்துகள் மிக முக்கியமானவை.

மனிதநேயம், சமத்துவம், சம வாய்ப்பு, பகுத்தறிவுச் சிந்தனை வளம் பெருகி, வாழ வைக்கும் புதுஉலகப் புத்தாண்டாக அமையட்டும்! என்பவை மிகமிகச் சிறப்புக்கும், வரவேற்புக்கும் உரியவை.

இந்தச் சொற்களில் அடங்கியுள்ள மகரந்தங்கள் புதிய ஒப்புரவுச் சமனிய சமுதாயத்தை மலர்விக்கும் என்பதில் அய்யமில்லை.

பெற்றோர்களைப் பராமரிக்காவிட்டால், அவர்களுக்குத் தண்டனை என்று ஓர் அருமையான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது - வரவேற்கத்தக்கதேயானாலும், இப்படியொரு சட்டம் நிறைவேற்றப்பட நேர்ந்தமைக்கு, எல்லோரும் வெட்கப்படவேண்டாமா?

கைநிறைய சம்பாதிக்கிறோம் என்ற அகந்தையில் அதற்குக் காரணமான தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கின்றனரே - எங்கே போயிற்று மனிதநேயம்?

சமத்துவம், சம வாய்ப்பு என்று தமிழர் தலைவர் கூறியுள்ளதில் சமதர்ம மணம் கமழ்கிறது, இன்னும் மாத வருவாய் ரூ.20 ஈட்டக்கூடியவர்கள் நாட்டில் 70 விழுக்காடு என்றால், வெட்கப்படவேண்டாமா?

நாடு சுதந்திரம் அடைந்தால் தேனாறும், பாலாறும் கரைபுரண்டு ஓடும் என்றார்களே - அதற்கான மறுப்புதான் மேற்கண்ட சென்குப்தா குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரம்.


இந்தியாவில் விவசாயம் என்பது மிக முக்கியமான உயிர்நாடித் தொழில். பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள்தான் ஆண்களும், பெண்களுமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் வயிற்றுக்குச் சோறு போட்டு உயிரை நீட்டித்துக் கொண்டிருக்கும் அந்தத் தொழில் பாவப்பட்ட தொழிலாகத்தானே கருதப்படுகிறது - ஆக்கப்படுகிறது.

இந்திய விவசாயி கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து,கடனிலே சாகிறான் என்ற வாசகங்களை இன்னும் எவ்வளவுக் காலத்துக்குத்தான் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள்?

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் விவசாயிகள் வளமையாக வாழ்கிறார்கள் எனும் நிலை, நிலை நிறுத்தப்பட்ட நாள்தான் இந்தியா பொருளாதாரத்தில் - சமத்துவத்தில் புன்னகை பூக்கிறது என்பதற்கான அத்தாட்சியாகும்.


இந்தியாவின் பெருங்குடி மக்களான விவசாயிகள் வறுமைக்கோட்டுக்குள் மூச்சுத் திணறிக் கொண்டுள்ள சூழ்நிலையில், அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் அய்.ஏ.எஸ். ஆக முடியும்; உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியும் என்று கனவுகூடக் காண முடியாதே!

மாநில, மத்திய அரசுகள் வருணாசிரமக் கண் ணோட்டத்தில் பாவப்பட்ட தொழிலாக நசுங்கிப்போன வேளாண் மக்களின் வாழ்வுக்கு வளமைகூட்ட அனைத்து முயற்சிகளையும் முனைந்து, மும்முரமாக செய்யட்டும்! செய்யட்டும்!!

சமவாய்ப்புப்பற்றியும், திராவிடர் கழகத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அளவில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்க்குக் கல்வி, வேலை வாய்ப்புகள் உரிய சதவிகிதத்தில் கிடைக்கப் பெறவில்லை.

மண்டல் குழு பரிந்துரைக்காக, திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியுள்ளது. வேலை வாய்ப்பில் 27 சதவிகிதம் என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் இன்னும் எட்டு சதவிகிதத்தைக் கூடத் தாண்டவில்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்திற்கு, இன்னும் சட்ட வலிமை அளிக்கப்படவில்லை.

கல்வியில் இட ஒதுக்கீடு என்பது வெறும் ஏட்டுச் சர்க்கரையாகவே இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் இந்திய அளவில் பெரும் விழிப்புணர்ச்சி ஊட்டப்படவேண்டும் என்பதைத்தான் இது காட்டுகிறது.

அனைத்துத்துறைகளிலும் விதிவிலக்கின்றி இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்; குறிப்பாக உடனடியாக நமது கவனம் - தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு சட்டப்படி கிடைக்கச் செய்வதே!

இந்தியாவில் ஆயிரம் கார்ப்பரேட் நிறுவனங்களில் 9052 போர்டு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 44.6 சதவிகிதம் பார்ப்பனர்கள். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 3.5 சதவிகிதம்.

சம வாய்ப்புத் தேவை என்று தமிழர் தலைவர் கூறியிருப்பதன் பொருள் இதன்மூலம் வெளிப்படும்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது 2014 ஆம் ஆண்டு மிக முக்கியத்துவம் உள்ளதாக அமையும்.
பகுத்தறிவுச் சிந்தனை பெருகவேண்டும் என்றும் கூறியுள்ளார்; மனி

தன் என்பதற்கே அடையாளம் பகுத்தறிவுச் சிந்தனைதானே! மதவாத சக்திகளை மக்கள் மனதிலிருந்து வேரோடு கெல்லி எறிந்திடவும் வேண்டும்.

நம் நாட்டுப் படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் ஏதாவது தொடர்புண்டா? வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்சாகத்தானே நம் கல்வி உள்ளது.

இந்த நிலையில் பெரியாரியலை உலக மயமாக்கும் பணி - பெரியார் உலகம் பணியை முன்னெடுப்போம்!

வருக புத்தாண்டே, வளமுடன்!

Read more: http://viduthalai.in/page-2/72921.html#ixzz2p9dMwQ4t

தமிழ் ஓவியா said...


கலைஞர் தொலைக்காட்சி


தொலைக்காட்சி என் றாலே, அறிவியல் மனப் பான்மை - பகுத்தறிவு மனப் பான்மை உள்ளவர்களுக்கு ஒரு குமட்டல் உண்டு.

விஞ்ஞான சாதனம் ஒன்றில் அஞ்ஞானத்தைக் கொட்டும் குப்பைத் தொட்டி யாக ஆக்கிவிட்டார்களே என்ற சமுதாயக் கவலை அவர்களுக்குண்டு.

விஞ்ஞான சாதனத்தில், அஞ்ஞானத்தைப் பரப்புவது அறிவு நாணயம்தானா? என்ற வினாவையும் எழுப்பி வருகிறோம்.

பெரும்பாலான மனித நேரத்தை இந்தத் தொலைக் காட்சி என்னும் கரையான் தின்று அழிக்கின்றதே என்ற ஆதங்கம் கண்டிப்பாக உண்டு.

குறிப்பாக சிறுவர்களைச் சீரழித்துக் கொண்டிருக் கிறது. சக்திமான் என்ற ஒரு நபர் ஆபத்துக் காலத்தில் வந்து உதவுவான் என்கிற முறையில் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகிக் கொண் டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, பார்த்துக் கொண்டிருந்த திருவாரூரை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுவன், வீட்டு மாடியிலி ருந்து சக்தி மான் என்று குரல் கொடுத்துக் கீழே குதித்தவன் பரிதாபகரமாக மரணமடைந்தான்.

அமரிக்காவைச் சேர்ந்த ஸ்டேன் போர்டு பல்கலைக் கழக மருத்துவர் டான் ராபின்சன் குழந்தைகளின் எதிர்காலத்தை தொலைக் காட்சிகள் முடிவு செய்கின் றன என்றார். எட்டு வயது முதல் 18 வயதுக்குள் பத்து வருடங்களுக்குள் இரண்டு இலட்சங்களுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகளைக் காண்பதாக ஆய்வுகள் கூறு கின்றன.

அந்த ஆய்வாளர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள் ளார். இரு பள்ளிக்கூடங் களைத் தேர்வு செய்தார்; முதல் பிரிவில் 105 மாண வர்கள், மாணவிகள்; இவர் கள் தொலைக்காட்சிகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார் கள். இன்னொரு பிரிவில் 120 இருபால் மாணவர்கள்; இவர் கள் தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கப்படவில்லை; இதற்காக, ஆறு மாதம் ஒதுக்கப்பட்ட பின் ஆய்வுகள் செய்யப்பட்டன.

தொலைக்காட்சி பக்கம் தலை வைக்காத இருபால் மாணவர்களிடம் இயல்பான போக்குகளும், நாகரிகமான நடவடிக்கைகளும் இருந்த தைக் காண முடிந்தது. எப் பொழுதும் தொலைக்காட்சி யைப் பார்த்தவர்களோ, கேலி செய்வது, தகாத சொற் களைப் பயன்படுத்துவது, வன்முறை என்ற நிலையில் இருந்தனர் என்பதை பெற் றோர் கவனித்துக் கொள்ள வேண்டும்.

மூட நம்பிக்கையை எடுத் துக்கொண்டால், இராமாய ணம், மகாபாரதங்களை ஒளி பரப்பும் வேலை சரியானது தானா?

இன்று கலைஞர் தொலைக் காட்சியில் மக்களைப் பெரிதும் மயக்குவது மூட நம்பிக்கைகளா? திரைப் படங்களா? என்ற அருமை யான பட்டிமன்றம் நடை பெற்றது.

இதற்காகக் கலைஞர் தொலைக்காட்சியைப் பாராட் டுகிறோம். இந்த நிலை தொடரட்டும்! மற்ற மற்ற தொலைக்காட்சிகளும் இத னைப் பின்பற்றுமா? தொலைக்காட்சிகளுக்கு ஒரு நினைவூட்டல்! ஒரு சித்திரம் என்பது ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பதை உணர்ந்து கொண் டால், அவர்களின் பொறுப்பு கத்தி முனையில் நடப்பது என்பதை உணர முடியும்.

2014 புத்தாண்டிலாவது புதிய சிந்தனைகள் பூக் கட்டுமே!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72917.html#ixzz2p9dUmzAP

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர்கள் பிரச்சினை: நேரடியாக சந்தித்து முடிவு காண்போம்!


கலைஞரின் வீறுமிக்க அறிக்கை

http://viduthalai.in/images/stories/dailymagazine/2013/dec/26/s29.jpg

சென்னை, ஜன.1- தமிழக மீனவர்கள் பிரச் சினைக்குத் தீர்வு காண்பதில் நேரடியாகச் சந்தித்து முடிவு காண்போம் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

கடல் ஆதாரத்தை நம்பி வாழும் தமிழக மீனவர்களுக்குச் சோதனைகளுக்கு மேல் சோதனை சிங்கள வெறியர்களாலும், சிங் கள அரசாலும் தொடர்ந்து நடந்து கொண் டிருக்கின்றன. இதற்கோர் முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்று நாடாளுமன்றக் கழகக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு அவர் களை பிரதமரைச் சந்தித்து பிரச்சினைகளின் முழு வடிவத்தையும் எடுத்துக் கூறச் செய்தேன். தக்க முடிவெடுக்கப்படும் என்று பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும், டி.ஆர்.பாலு அவர்களிடம் உறுதி அளித் திருந்த போதிலும், இந்தப் பிரச்சினையை எடுத்துச் சொல்லும் கட்டத்திலேயே பிரதம ருடைய மற்றும் வெளியுறவுத் துறை அமைச் சருடைய வாக்குறுதிகளுக்கு மாறாக, தமி ழக மீனவர்கள் தாக்கப்படுவதும், அவர்கள் மீது வழக்குகள் தொடர்ந்து இலங்கைச் சிறையிலே அடைக்கப்படுவதும், இலங்கை யிலே உள்ள நீதிமன்றங்களில் அவர்கள் குற்ற வாளிகளாக நிறுத்தப்படுவதும் நின்ற பாடில்லை, தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

காட்டிக்கொள்ளும் மத்திய அரசு

ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர் களைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக நமது வேண்டுகோள்களைச் செவிமடுப்பது போல மத்திய அரசு காட்டிக்கொண்டாலுங் கூட, உற்ற பயன் எதுவும் விளையவில்லை. மாறாக இந்தப் பிரச்சினை குறித்து பிரத மரிடத்திலே டி.ஆர். பாலு அவர்கள் முறை யிட்டுக் கொண்டிருக்கும்போதே, மேலும் தமிழக மீனவர்களுடைய படகுகளைக் கவர்ந்து சென்றும், அவர்களுடைய வாழ்வா தாரத்திற்கு உள்ள வழியை அறவே அடைக் கும் விதத்தில் நூற்றுக்கணக்கான மீனவர் களைச் சிறைப்பிடித்து வழக்குகள் தொடர்ந் தும்; அவர்களுடைய விடுதலை என்பது கேள்விக்குறியாக ஆக்கப்படுகிற சூழ்நிலை இலங்கை அரசின் ஆதரவோடு, அங்குள்ள சிங்களக் கடற்படையினரால் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிற கொடு மையை இனியும் தமிழ்நாடு தாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை. பிரச்சினையின் அவசர, அவசியத்தை மனிதாபிமானக்

கண்கொண்டு பார்க்கத் தவறி பழி வாங்கும் நோக்கத்தோடு இலங்கை அரசின் ஆதரவோடு நடைபெறும் இந்தக் கொடுமையை எவ்வளவு நாளைக்குத்தான் தமிழக மக்கள் தாங்கிக் கொள்ள முடியும்? பிரதமரி டமும், வெளியுறவுத் துறை அமைச் சரிடமும் இந்த உச்சக்கட்டக் கொடு மைகளை நேரடியாக தமிழ்நாட்டு மீனவ மக்களின் பிரதிநிதிகள் டில் லிக்கே சென்று எடுத்துரைத்தும்கூட, எந்தப் பலனும் இல்லை என்ற நிலையில் இதற்கோர் கடுமையான மாற்று என்ன என்பதைத் தெரிந்து, தெளிந்து தமிழக மீனவர்களைத் திட்டமிட்டே கொடுமைப்படுத்தும் சிங்களவர் அட்டூழியத்தை நேரடி யாகச் சந்தித்து முடிவு காண்பதற்குத் தமிழ்நாடு தயாராகி வருகின்றது.

தமிழக மீனவர்களைக் காப்பாற் றும் முயற்சியில் களத்தில் நிற்பதற்கும், அவர்களைக் காப்பாற்ற எத்தகைய இடுக்கண்களை ஏற்பதற்கும் நானும், என் தலைமையிலே உள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் தயாராக இருப் பதோடு அந்தப் போராட்டத்திற்கான நாளும் விரைவில் குறிக்கப்படும் என் பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தமது அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/72919.html#ixzz2p9fEVZD8