Search This Blog

21.12.13

வகுப்புரிமைப் போராட்டம் - பேராசிரியர் க. அன்பழகன்

வகுப்புரிமைப் போராட்டம் (கம்யூனல் ஜி.ஓ.)
"92ஆம் அகவையில் அடி எடுத்து வைக்கும் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களால் எழுதப்பட்டு முதல் பதிப்பாக 1951ஆம் ஆண்டில் வெளிவந்தது, வகுப்புரிமைப் போராட்டம் என்ற நூல். 2013ஆம் ஆண்டில் அந்நூலை திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்ற ஒரு கட்டுரை தீர்ப்புக்குப்பின்! அது இங்கே வெளியிடப்பட்டுள்ளது.

                                -------------------------------------------------- பேராசிரியர் க. அன்பழகன்

சில உரையாடல்கள்:

கல்லூரி மாணவர்கள் சிலர்:-

டேய், கிட்டு நம்மளவா எதை எடுத்தாலும் ஜெயந்தாண்டா, பார்த்தியோன்னோ, கம்யூனல் ஜி.ஓ. மண்ணைக் கவ்விண்டு போயிட்டுது!

ஆமாண்டா, ரகு, அதான் அந்தப் பசங்கள்ளா, ஒரே ஆத்திரமா, கும் பலா கூடிக்கூடிப் பேசிண்டிருக்கா!

நோக்கு, ஏன்டா, அதுபற்றிக் கவலை. அந்தப் பசங்களையெல்லாம் நம்ம பிரின்ஸ்பால் நோட் பண் ணிக்காமலா இருப்பார்? அதிருக் கட்டும், வர்ற வருஷத்திலேருந்து, நம்மப் பிடிச்ச கலி ஒழிஞ்சுது. ஜாம், ஜாம்னு மெடிக்கல், இன்ஜினீயரிங் காலேஜ்லேயெல்லாம் நாமே சேர்ந்துடலாம்.

அடுத்த வருஷம் இருக்கட் டுண்டா, இப்பவே நம்ம ஃபிரண்ட்ஸ் Friends எல்லாம் நம்மையே ஒரு மாதிரி - பார்க் கிறாளேடா?

அந்தப் பசங்க இப்ப அப்படித் தாண்டா, கோபமா இருப்பா, நாலு நாள் ஆனா, அப்புறம் அதெல்லாம் அடங்கிடும். நீ ஏண்டா பயப்படுறே? வாடா, அய்ஸ்கிரீம் சாப்பிட்டு வரலாம்.

அரசாங்க அலுவலகத்தில்... உத்தியோகஸ்தர்கள் இருவர்:-

என்ன ஓய், வேம்புவா? வாரும், ஒரே குஷிதான் போலே இருக்கு! நம்மளவா, வெகுநாள் மனோபீஷ்டம் நிறைவேறிப் போச்சோல்லியோ?

ஆமாம், ஆமாம். சாம்பு சாஸ் திரிகளே! அவா, அதோட விட்டுடு வாண்ணு தோணல்லியே, அப்பீலுக் குப் போவாப் போல இருக்கே!

போனாதான், என்னங் காணும்? நம்ம அல்லாடியின் திறமை, சாமர்த் தியம், எல்லாம் எங்கே போயிடும் ஓய்! இப்பதான் அல்லாடியின் புத்தி தீட்சண்யட்தை தேசமே தெரிஞ்சுடப் போகுதுங்காணும்.

அதிருக்கட்டும். இப்ப நம்மள வாளை, ஊரெல்லாம் தூஷித்துப் பேசறதை, நெனச்சாத்தான், கொஞ்சம், என்னமோ போல இருக்கு ஓய்!

என்னங்காணும் வேம்பு! அதைப் பார்த்தே அசந்துட்டீர் போல இருக்கே! இப்படிப்பட்ட நேரத்திலே மனோ தைரியத்தை இழந்துடு வாளோ? அவாள்ளாம் இப்ப, அப் படித்தான் ஆத்திரமா கொதிச்சிண் டிருப்பா. இப்பத்தான் நாம கொஞ்சம் ஜாக்கிரதையா, ஏதோ ஒண்ணும் அறியாதவா மாதிரி சந்தோஷத்தை வெளிக்குக் காட்டாம நடந்துக்கணும்.

அதென்னமோ, அவன்களைப் பார்த்தா, காந்தி செத்தப்ப முகத்தை வைச்சிண்டிருந்தான்களே, அப்ப டீண்ணா இருக் கானுங்க.

வருத்தம் இருக்காதோ அவாளுக்கு. இது ஒண்ணுதான் அவா வாழ வழியா இருந்தது. அதுவும் போச் சுண்ணா, அய்யோடாண்ணு குந்த வேண்டியதுதானே? இருந்தாலும், காந்தி செத்தப்ப மஹாராஷ்டிரத்திலே யெல்லாம் நடந்துகிட்டான்களே, ஆத்திரமா, அப்படி நடந்துக்க மாட் டாங்காணும். இவா தென்னாட்டுக் காராளோல்லியோ, நாசகாரியத்திலே பிரவேசிச்சுட மாட்டாங்காணும்!

என்ன இருந்தாலும், ஆத்திரம் வந்தா? அப்புறம் நம்ம கதி?

அதாங்காணும், இப்ப ஜாக் கிரதையா இருந்துட்டம்ணா, அப் புறம் நம்மபாடு வேட்டைதான். கொஞ்ச நாளிலே அதுங்கள்ளியே சிலது, இதையெல்லாம் மறந்துட்டு வாலைக் குழைச்சிண்டு, நம்ம பின்னாலியே வரும் ஓய்! அது வரையிலே தான் நாம நிஷ்காமிய கருமி மாதிரி நடந்துக்கணும் ஓய். அப்புறம் நம்ம அல்லாடிக்குக் கோயிலே கட்டினா கூட, அவாளே பொருளுதவி பண்ணுவாங்காணும்.

சரி, சரி, மணி 4 ஆச்சு, வாரும் ஆத்துக்குப் புறப்படலாம்.

பத்திரிகாலயத்தில்...

ஆசிரியரும், உதவி ஆசிரியரும்:-

என்ன, மிஸ்டர் சீனு! இது ரொம்ப ரொம்பத் தொல்லை யான்னா போச்சு. கம்யூனல் ஜி.ஓ. சட்டப்படி செல்லாதுண்ணு தீர்ப்பு கிடைச்சதிலேருந்து ஊரெல்லாம் ஒரே ரகளையான்னா இருக்கு.

ஆமாம், எடிட்டர் சார்! நியூஸ் வேறே அதைப்பத்தியே ஏராளமா வந்துண்டே இருக்கு. நாம்தான் இருட்டடிப்புச் செய்தாகுணுமே? மற்றவா பத்திரிகையிலே மட்டும் கொஞ்சமாவது வெளியிட்டுடுவாளே? என்ன செய்றதுண்ணு யோசிச்சிண்டு இருந்தேன்.

அந்த நியூஸே ஒரு நியூசன் சான்னா போச்சு, அதைப் போடற துக்கு எடம் குப்பைக் கூடைதான் சீனு. ஆனா, நம்மளவாளுடைய  இந்த ஜெயத்தைப் பாராட்டி - ஒரு சப் லீடர் எழுதக் கூடண்ணா அதிர் ஷ்டம் இல்லாம போச்சுங்கிறதை நினைச்சாத்தான் மனசு ரொம்ப கஷ்டப்படுது!
ஏன் சார்? வழக்கம்போல, வேறொரு பிரச்சினையிலே கலந்து, தென்னாப்பிரிக்கா பிரச்சினை மாதிரி ஒண்ணுலே சேர்த்து, நம்ம கருத்தை எழுதிட்டாப் போச்சு!

நம்ம கருத்தை யாருங்காணும் கேக்கிறா? நாம வெளிப்படையா வர்றமாண்ணுதானே பாக்கிறா? இவ்வளவு காலமா எதைப் பத்தி வாரந் தவறாம எழுதி ஜெயமாச்சோ, அதையே அப்படி குழப்பினா, நம்ம பத்திரிகைக்கு ஜனங்ககிட்டே என்னா மதிப்பிருக்கும்ணு, நம்ம ஆத்துக் காரியே கேட்பாளே நாளைக்கு?

அப்படீண்ணா, தைரியமா, ஜெயத்தைப்பாராட்டி எழுதிட வேண்டியதுதான்.
ஆத்துக்காரி சொல்லுவா ளேண்ணா? சொன்னா சொல்லட் டுமே, நம்ம கிட்டத்தானே சொல் லுவா? நீர் சொல்றாப்பிலே எழு திட்டா அவ்வளவுதான், வேறே வினை வேண்டியதில்லை. நம்ம பத்திரிகையிலே பாராட்டி எழுதினா, உண்மை புரியாதவாளும் புரிஞ்சு டுவாளே! அதிலும், இப்ப அந்த இனத்தா வேறே நம்ப பத்திரிகையை ஏராளமா படிச்சிண்டிருக்கா, இப்ப இதை எழுதினா, நம்ம பத்திரிகைக்கு நாமே உலை வைச்சுண்ட மாதிரி தான்.

ஆமாம் சார், இப்பவே கிளர்ச்சி யிலே நான்பிராமின் காங்கிரஸ்காரா உட்பட எல்லோரும் ஒண்ணு சேர்ந் துட்டா! இப்ப எதை எழுதினாலும் நெருப்பிலே நெய் வார்த்தாப் பிலேதான்.

ஆமாம் சீனு, அல்லாடியைப் பாராட்டி எழுதாட்டியும் போறது, அவர் ஒண்ணும் கோபிக்க மாட் டார். அவரது சேவையையும், புத்தி தீட்சண்யத்தையும் நாம எழுதித் தானா நம்மளவா தெரிஞ்சுக்கப் போறா? இல்லாட்டி, நாம எழுதி னாத் தான், மத்தவர் நம்பப் போறாளா என்ன?

ஆமாம், ஆமாம்! நம்ம ஆபீசை நோக்கி ஆபத்து வராம இருந்தா அதுவே போதும்!

அது கிடக்கட்டும், நம்மளவா பயந்தவா பாரும்! அவாளுக்கும் ஒண்ணும் கஷ்டம் வரக்கூடாது நம்ம பத்திரிகையாலே! அதைக் கவனியும் முதல்லே.

சங்கீத சபாவில் இரு ரசிகர்கள்:-

கச்சேரி எப்படி இன்னைக்கு?

கவனிக்கல்லியே!

ஏன்? ஓய்!

கம்யூனல் ஜி.ஓ. தொலைஞ்ச விஷ யத்திலே அதே நினைவா இருந்துட் டன் ஓய். அரியக்குடி பாட்டா நுழைஞ்சுது காதிலே, அல்லாடி பேச்சுண்ணா கேட்டுண்டிருந்தது!

அட, போங்காணும், நீர் இந்த லோகத்திலேயே இல்ல போலிருக்கே. ஊரெல்லாம் நடக்கிறதைப் பார்த்தா பெரிய கஷ்டமால்ல முடியும் போலத் தோணுது, நம்மளவாளுக்கு. அந்தத் திகில்லியே - சங்கீதம் காதிலே ஏறல்லைங்காணும் நேக்கு.

ஸ்திரீகள் சங்கத்தில் இருவர்:-

ஏண்டி, சுகுணா! நீ சொன்ன படியே ஆயிட்டுதேடி, உன் வாய்க்கு சர்க்கரை தாண்டி கொட்டணும்.

போடி, போடி லீலா! முந்தி யெல்லாம், நம்மளைக் கண்டா மத்தவா, என்னா அன்பா, திருப்தியா பார்த்திண்டிருந்தா? இப்ப அதெல் லாங் காணண்டி! ஒரே துவேஷமா, கோபமா பார்க்கிறாடீ.

ஆமாண்டி, அதான் பஸ்ஸிலே டிராம்லே எல்லாங்கூட நம்மைக் கண்டதும் எழுந்திருச்சு உட்காரச் சொல்லிண்டிருந்த புருஷாகூட இப்ப இடம்தர மாட்டேங்கிறாடி, காலெல்லாம் வலியா வலிக்குதடி.

இதையெல்லாம் பார்த்தா நேக்குக்கூட, ஏண்டி இந்த வீண் விரோதமெல்லாம்ணுதான் தோன்றது! ஜாதியாம், ஆசாரமாம், எல்லாம் நமக்குத்தாண்டி விஷமா வந்துது! - நம்ம புருஷா சொன்னா கேட்கிறாளா, என்ன? அதாலேதான் இந்தக் கஷ்டமெல்லாம் நமக்கு?

* * *

இவ்விதந்தான், உரையாடல்கள் நிகழ்ந்திருக்க வேண்டும், ஆதிக்க வகுப்பார் சந்திக்கும் இடங்களி லெல்லாம்.

கல்வித் துறையில் கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்ற தீர்ப்புக் கிடைத்த வுடன், அவர்களது உள்ளமெல்லாம் உவகை வெள்ளம் கரைபுரளத் தொடங்கிய அதே நேரத்தில், தென்னாட்டுப் பெருங்குடி மக்கள், கம்யூனல் ஜி.ஓ.வை இழக்க மன மின்றி, காத்து நிற்கத் தீர்மானித்து, வரிந்து கட்டி, வரிசை வரிசையாகக் கிளம்பி, வானளாவ முழக்கமிட்டு, வரிப்புலிகளெனக் காட்சியளித்தது கண்டு, ஆதிக்கவாதிகள் திகில் கொண்டு, அச்சத்திற்கும், ஆசைக்கும் இடையிலே ஊசலாடுகின்றனர் இன்று.

அவர்களுடைய மனம் ஜெய பேரிகை கொட்டுகிறது. நாவோ, அதை வெளியிடத் துடித்து விளைவை எண்ணி மென்று விழுங்குகின்றது. அவர்களது மூளை வெற்றியை விவரிக்க, புதிய புதிய தொடர்களையெல்லாம் நினைவுபடுத்துகின்றது. கைகளோ தீட்டுதற்கு அஞ்சுகின்றன, தம் எண்ணம் வெளிப்பட்டு விடக்கூடாதே என்பதால். தமது இனத்தின் வெற்றிக் களிப்பும், பூரிப்பும் வெளியே பரவினால், மாற்றினத்தின் மரமண்டைகளும் மனப்பொம்மைகளுங்கூட உண்மையை உணர்ந்து, உரிமைப் போரில் பங்கு கொண்டு எதிர்ப்புச் சக்தியை, புரட்சித் தீயாக வளர்த்து விடுவரே என்ற அச்சமே, ஆதிக்கவாதி களின் நாவையும், கையையும் ஆடா மல், அசையாமல், ஆரவார மின்றியே அடங்கிக் கிடக்கச் செய்துள்ளது.

காவலுக்கு வைக்கப்பட்டவனே நடுநிசியிலே மாளிகையிலே நுழைந்து, தலையணைக்கடியிலே இருந்த சாவிக் கொட்தையும் எடுத்து, இரும்புப் பெட்டியையும் திறந்து பொருள் குவியலை அள்ளி மடியில் கட்டித் திரும்புகையில் கால் இடறியதால் செம்பு உருண்ட சப்தம் கேட்டு வீட்டுக்குரியவன் விழித்துக் கொண்டு, காவல்காரனைக் கூப்பிட, அவனோ, அதே இரும்புப் பெட்டிக்குப் பின் னால் ஒளிந்து கொண்டுள்ளதைப் போன்றுதான், இன்று வாய்மூடி மவுனிகளாக, இமை மூடாக் கண்ணினராகக் காட்சியளிக்கின்றனர் - ஆதிக்கவாதிகள்.

இந்துவும், மித்திரனும், கல்கியும், விகடனுங்கூட இந்த வெற்றி குறித் துப் பாராட்டி எழுத முன்வரவில்லை யெனில், அவர்களது திகைப்பு - குற்றம் செய்த உள்ளம் குறுகுறுக்குந் தன்மை தெளிவாகாமற் போகாது.
அவர்களது தந்திரமாகிய திறமை பொதுமக்களின் ஆத்திரத்தைக் கிளறிவிடாமல் தப்பித்துக் கொள்ள உதவுகிறது. உதவட்டும், வரவேற் கிறோம். ஆனால், அதே திறமைதான் - சூழ்ச்சியோடு கூடிய, சுயநலப் பேராசை எண்ணந்தான் அவர்களை - பொதுமக்களின் நிரந்தர வெறுப்புக்கு ஆளாக்கி, வருங்கால வாழ்வையே இழக்கச் செய்யக் காரணமாகும் என்பதை அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

எப்படி உணர முடியும் அந்த மேதைகளால்? அவர்கள்தான், பரம்பரை பரம்பரையாகப் பல நூறு ஆண்டுகளாகத் தந்திர மந்திரத் தினாலேயே, சோம்பேறிச் சுக வாழ்வைட் தேடிக் கொண்டவர் களாயிற்றே? பிறர் கஷ்டம் உணராத உயர்ஜாதிக்காரர் ஆயிற்றே? அப்படிப்பட்டவர்கள், மக்களாட்சிக் காலமாகிய இப்பகுத்தறிவு நூற்றாண் டில், அதே திறமைதான் தாம் வீழக் காரணமாகிவிடும் என்பதை எங்கே உணரப் போகிறார்கள்? அந்தட் தெளிவு எப்படிப் பிறக்கும் அகம் பாவப் பிறவிகளுக்கு? ஆதிக்கவாதி களின் திறமை, வழக்கு மன்றத்தை நாடி, சமூக நீதிக்கு வழிவகுத்த கம்யூனல் ஜி.ஓ. இந்த அரசியல் சட்டப்படிக் கல்வித் துறையில் செல்லத்தக்கதல்ல என்ற உயர்நீதி மன்றத் தீர்ப்பைத் தேடித் தந்தவுடன், பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள ஏமாற்றமும், அவநம்பிக்கையும் சொல்லுந் தரத்தது அன்று.

ஜூலை 27-க்குப் பின்!

உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கிய நாளான 27.07.1950  அன்று தோன்றிய அதிர்ச்சி, நாட்டு மக்களின் உள்ளங்களிலே ஏற்பட்ட கொதிப்பு, பிற்படுத்தப்பட்டவர்களின் நெஞ்சிலே நிறைந்த சோகம், மாண வர்களின் மனத்திலே பொங்கிய குமுறல் இன்னும் ஆறவில்லை, அண்மையில் ஆறவும் வழியில்லை.

இன்றைய தமிழகம் குமுறும் எரிமலையாக இருக்கிறது. தென் னாட்டுப் பொதுமக்களின் உரிமை உணர்ச்சியும், எழுச்சியும் ஓரள வேனும், ஆள வந்தோரால் மதிக் கப்படுகிறது என்பதற்குச் சில அறிகுறிகள் காணப்படுவதாலேயே குமுறும் எரிமலை புதைந்த படி உள்ளது, கனல் கக்கவில்லை; புரட் சிக் குழம்பு நாட்டில் பரவவில்லை, ஆதிக்க வெறியர்களை ஆபத்து இன்னும் அணைக்கவில்லை.

ஆனால், இந்த நிலைக்குக் கார ணமான தீர்ப்பைப் பெறுவதற்குட் தான் எவ்வளவு முயற்சி, என்னபாடு? அடடா, எவ்வளவு பெரிய மனிதர் களின் - அதிமேதாவிகளின் புத்திச் செலவு? சட்டத்தின்படி சரியென்றே ஒப்புக்கொள்ளினும், சமூக நிலைமைகளின்படி -

நியாயமில்லாத, கல்வித் துறையில் கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்ற இந்தத் தீர்ப்பைப் பெறத்தானா இவ்வளவு காலமும், முயற்சியும் செலவாக வேண்டும்? என்ன பலன் கண்டார்கள்? மலையைக் கெல்லி எலியையாவது பிடித்திருக்கிறார்களா? என்றால், எலி இருந்திருக்க வேண்டிய வளையில் பாம்பல்லவா படமெடுத்துச் சீறு வதைக் காண்கின்றனர்!

பொதுமக்களோ, பிற்படுத்தப் பட்டவர்கள் எல்லோரும், ஜாதி, மதம், கட்சி முதலிய வேறுபாடுகள் எதையும் விலக்கி, சமூக நீதியை நிலைநாட்ட, உறுதிகொண்டு ஒன்று பட்டுவிட்டனர். மாணவர்களோ எத்தகைய விலைகொடுத்தும், சமூக நீதியை நிலைநாட்டத் தீர்மானித்து விட்டனர். வாலிபர்கள் போருக்குத் தயாராகி விட்டனர். இந்நிலையைக் கண்ட பின்பே, அரசியல் சட் டத்தையே மாற்றியமைக்க வேண்டி நேரிட்டாலும், மாற்றியமைத்தேனும், இன்னும் சிறந்த வடிவிலேயே சமூக நீதி நிலைநாட்டப்பட்டுத் தீருமே தவிர, சரியவிடப்பட மாட்டாது என்ற உறுதி பிறக்கின்றது நமக்கு.
 
----------"விடுதலை” ஞாயிறுமலர் - 21-12-2013

19 comments:

தமிழ் ஓவியா said...


கடவுளுக்கு ஏது முகவரி?

- சிவகாசி மணியம்

வரும் ஆனா வராது என்ற ரெண்டும் கெட்டான் வசனத்தைக் கேட்டுச் சிரித்தவர்கள் உண்டு. ஒரு திரைப்படத்தில் நகைச்சுவைக்கென சொல்லப்பட்டது. பத்திரிகைகளிலும் இதுபோன்ற சொல்லாடல்கள் அவ்வப்போது இடம் பெறுவதுண்டு.

கடவுள் இருக்கிறாரா? என்பது கேள்வி. பெரியார் மொழியில் சொல்வதானால் இல்லவே இல்லை என்பதுதான் சரியான பதிலாக இருக்க முடியும். ஆனால் குமுதம் அரசு (18.12.2013) இருக்கிறார். ஆனால் முகவரி இல்லை என்கிறார்.

சிரிப்பவர்களுக்கு வேலை இருக்கலாம். சிந்திப்பவர்களுக்கு? அண்ட சராசரங்களையும் ஆட்டிப் படைப்பதாகச் சொல்லப்படும் ஆண்டவனுக்கா அட்ரஸ் இல்லை? அறிவுக்கும், உண்மைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? வெட்டு ஒன்று. துண்டு இரண்டு! இதுதான் பகுத்தறிவு, படித்தவரின் எதிர்பார்ப்பு!

இல்லை என்பான் யாரடா? தில்லையிலே வந்து பாரடா? என்று பாடியவர்கள் இப்போது இல்லை. ஆனாலும் அதில் கடவுளின் முகவரி இருக்கிறதே.

நடராஜப் பெருமான், காலைத் தூக்கி நின்றாடும் தெய்வம், சிதம் பரம், கடலூர் மாவட்டம் சரிதானே! இதோ இன்னொரு கடவுளின் முகவரி: மணிகண்டன் என்ற அய் யப்பன் தாய் தந்தை பெயர் விஷ்ணு, சிவன், சபரிமலை, கேரள மாநிலம். இதுபோல வெங்கடாசலபதி, பணத்தை வாரி வழங்கும் கடவுள், திருப்பதி, ஆந்திர மாநிலம்! மீனாட்சி க/பெ சொக்கன், மதுரை. முருகன் என்ற ஆண்டி, பழனி. இப்படி சொல்லிக் கொண்டே போகலாமே.

தூணிலும் இருப்பான், துரும் பிலும் இருப்பானாமே, அப்படி யானால் மிஸ்டர் கடவுள், இருப்புத் தூண் அல்லது துரும்பு என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப லாமே? கைலாயமும், வைகுண்டமும் கடவுள்கள் குடியிருப்பு என்பதை மறக்கலாமா! கோகுலமும், துவார கையும், பிருந்தாவனமும், யமுனை ஆற்றங்கரையும் குழலூதும் கண்ணன் வளையவரும் இடமா யிற்றே! திருப்பாற் கடலில் பள்ளி கொண்ட சிறீமன் நாராயணனும் முகவரி இல்லாதவன் தானா? பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே என்கிறார்களே அதுகூட பித்தலாட்டம்தானா? பரலோக சாம்ராஜ்யம் என்பதெல்லாம் தேவர்கள் நடமாட்டமில்லாத வெறும் பாலைவனம்தானா?

கண்ணீர் அஞ்சலி சுவரொட் டிகளில் இறைவனடி சேர்ந்தார் என்று எழுதுகிறார்களே அவர்க ளெல்லாம் அட்ரஸ் இல்லாதவன் காலடியிலா அடைக்கலம் ஆகிறார்கள்?

வருத்தப்பட்டு பாரம் சுமக்கிற வர்களே. என்னிடத்தில் வாருங்கள். எல்லோருக்கும் இளைப்பாறுதல் தருகிறேன் என்ற கர்த்தர் அழைப்பை ஏற்று அவரிடத்தில் போகிறவர்கள், அட்ரஸ் இல்லாத இலக்கை நோக்கியா இன்று வரை போய்க் கொண்டிருக்கிறார்கள்? கண் மூடிப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிப் போன பக்தர்களை விட்டு விடுவோம்.

வரிசையில் நின்று, காத்துக் கிடந்து வாக்களித்து தேர்ந்தெடுக்கும் மக்கள். அவசியம் ஏற்படும் போது அரசு அலுவலகப் படிக்கட்டுகளில் ஏறினால், அடையாள அட்டை எடு, ஆதார் அட்டை காட்டு, குடும்ப அட்டை எங்கே என்றெல்லாம் கேட்கும் ஆட்சி அதிகாரத்திலுள்ள வர்கள் முகவரியே இல்லாத கடவுளை மட்டும் சந்தேகத்திற்கிட மின்றி நம்பிக் கிடக்கிறார்களே அது எப்படி? முகவரி இல்லாதவன் இருந்தென்ன இல்லாமல் போனால்தான் என்ன?

Read more: http://viduthalai.in/page2/72380.html#ixzz2o6qT3mHF

தமிழ் ஓவியா said...


குறும்பா

இயற்கை..
இறைவன்
ஆனது...!

கல்லு...
கடவுளானது!

மாண்டவன்
ஆண்டவன்
ஆனான்...!

அனைத்தும்
ஒன்றே...!

இறுதியில்
எல்லாமே
பூஜியம்!!!

######

நிரூபணம்!

தமக்கு 95 வயது வரை பெரியார் கடவுளைத் திட்டினாரே...!

கடவுள் ஏன் கோபித்துக் கொள்ளவேயில்லை...?

அவர் இல்லை என்பதை நிரூபித்து விட்டார்!

- கோ. கலியபெருமாள், மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page2/72381.html#ixzz2o6qeSTbP

Unknown said...

ஏண்டா அம்பி பெரியார் என்னமோ கொவில்கள்ல எல்லாரும் அர்ச்சகர் ஆகவேண்டும்னார். ஆனால் அவர் வீட்டுகளை ப்ராமணார்களுக்கு மட்டும் வாடகைக்குவிட்டாராமே,
இது என்னடா இவரையா பகுத்திறிவுவாதி தமிழகத்தின் சாக்ரடீஸ அப்டீங்கறா.

அடக்கடவுளே. நெஜமாவா. யோசிச்சுப்பேசு. பகுத்தறிவுக்காரா எல்லாத்துக்கும் ப்ரூப் கேப்பாளே

நெஜமா. ஈரோட்ல ஒரு மீட்டிங்ல கூட இதுபத்திப் பேசி ஒத்துண்ட்ருக்கார்.

ஸ்ஸ்ஸ் மெதுவாப்பேசு. நம்ம தமிழ் நாட்ல இருக்கோம். எவனாவது பூணலைப்பிடிச்சு இழுக்கப்போறான். அப்றம் ஜெயேந்திரர் என்ன ஒழுங்காம்பான்.

கோபாலன்


(பகுத்திறிவு மேதைகள் இதை வெளியிடுவாளா)

Unknown said...

என்னடா அம்பி ஒனக்கும் பகுத்தறிவு வேலை செய்ய ஆரம்பிசுடுத்தா.

அமாம். கொஞ்ச நாள் முன்னால் பெரியார் எழுதின புத்தக்ங்கள் படிச்சேன். திடீர்னு யொசிக்க் ஆரம்பிசுட்டேன்.

என்னடா அம்பி யோசிசு என்னத்த புதுசா கிழிக்கபோர. TVல என்னமொ ப்ராமணாதான் எல்லாரையும் மட்டம் தட்டினா. பெரியார் இல்லட்டா இடஒதுக்கீடெ வந்திருக்காதுன்னு சொல்ராளே. அதுசரி அப்ரம் மத்த மதத்துக்காராள்ளாம் ஒதுக்கீடு கெக்கராளே. அங்கல்லாம் ப்ராமணாளா இருந்தா.

அடப் பாவமே இது என்ன வம்பாபோச்சு. இரு பெரியார் புக்க படிச்சுட்டு வந்து சொல்ரேன்.

இருடா ஏன் ஓடர. அப்பற்ம் கடவுள் இருக்காரா காட்டுங்கராளே. இப்படித்தான் பெரியார்தாசன்னு ஒருத்தர் இருந்தார் கடவுள் நம்பிக்கை இல்லாத பெரிய பகுத்தறிவுவாதியாமே. TVல ஒருதடவ குடுமியக்கூட அன்டென்னான்னு கேலிபண்ணினார்.

மாமி, அவர் அப்பரம் ஆஸதிகராகி அப்துல்லான்னு பேரை மாத்திண்டுட்டார். அங்க ப்ராமணாளே இல்லைன்னு போனாரோ என்னமோ.

அம்பி, அங்கபோனா இப்டியேல்லாம் பேச விடுவாளா

தெரியல மாமி.

கோபாலன்


அவாளுக்கும் இப்படில்லாம் எழுதத்தெரியும்னு நீங்க தெரிஞ்ஜுக்கத்தான் இந்த பதிவு.
நீங்க எழுதரப்ல சும்மா தமாசுதான். வெளியிடுவேளா சார்/மெடம். ம்ம்ம்ம்ம்ம்

தமிழ் ஓவியா said...


ராமேஸ்வரம்: கோவில் தீர்த்தமா? கழிவு நீர்த் தொட்டியா?


உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் குழு அறிக்கை

மதுரை, டிச.21- ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தப் பகுதி, புனித நீராட தகுதியான, தூய்மை யான இடமாக இல்லை. கால்களைக்கூட நனைக்க முடியாது. மாசடைந்துள்ளது' என, வழக்குரைஞர் குழுவினர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கோவை வழக்குரைஞர் வெண்ணிலா, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனு விவரம் வருமாறு: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலைச்சுற்றி, கழிவுகள் தேங்கியுள்ளன. கழிவுகள் அக்னி தீர்த்தப் பகுதியில் கலக்கின்றன. 22 இடங்களில் தீர்த்தமாட, தரகர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அக்னி தீர்த்தத்தை சுத்தப்படுத்த வேண்டும். கோயில் புனிதத் தன்மையை காக்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார். இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக் குரைஞர் குழுவினை, உயர்நீதிமன்றம் நியமித் திருந்தது. நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்திய நாதன் அடங்கிய, அமர்வுமுன், வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்குரைஞர் குழுவினர், அறிக்கையை தாக்கல் செய்தனர்.

அதில் கூறப்பட் டுள்ளதாவது: அக்னி தீர்த்தப் பகுதியில் தேங்கிய நீர், பழுப்பு நிறமாக, துர் நாற்றம் வீசுகிறது. பழைய துணிகள் தேங்கி யுள்ளன. பக்தர்கள், புனித நீராட முடிய வில்லை, என்றனர். விடுதி கள், ஓட்டல்கள், கடை களின் கழிவுநீர் கலப்ப தாக மக்கள் கூறினர். மொத்தத்தில், புனித நீராட தகுதியான, தூய் மையான இடமாக இல்லை; கால்களைக் கூட நனைக்க முடியாது. இடையூறாக, தெரு நாய்கள், மாடுகள் திரிகின்றன. பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகம். கழிவுகளைச் சுத்திகரித்து, கடலில் விடுவதாக ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் தெரிவித்தார். அப்பணி, பெயரளவில் நடக்கிறது. சுத்திகரிக்கப்படும் கழிவுநீரை, தொலை தூர பகுதிக்கு கடத்தி, கடலில் விடலாம்.

கோயிலுக் குள் தீர்த்தமாடும் பகுதியிலும் தண்ணீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை, ஜனவரி 3 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72403.html#ixzz2oA0hNHQ2

தமிழ் ஓவியா said...


பொதுத் தொண்டு வேண்டின்


ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொறுத்தமட்டில்தான் மானத்தையும், காலத்தையும் கவனிக்க வேண்டும். பொதுநலம், பொதுத் தொண்டுக்கு வந்துவிட்டால், இவை இரண்டையும் பார்க்கக் கூடாது. - (குடிஅரசு, 30.9.1944)

Read more: http://viduthalai.in/page-2/72407.html#ixzz2oA1SYego

தமிழ் ஓவியா said...


மகாத்மாவைப்பற்றி தமிழ்நாடுவின் கவலை


மகாத்மாவைப்பற்றி தமிழ்நாடுவின் கவலை

தமிழ்நாடு பத்திரிகையானது 16-12-1927ஆம் தேதி உபதலையங்கத்தில் கண்ணோட்டம் என்னும் தலைப்பின் கீழ் ஒரு வியாசம் எழுதி இருக்கின்றது. அதில் ஸ்ரீமான் காந்தி அவர்களை மகாத்மா என்று சொல்லாமல், வெறும் காந்தி என்று சொல்வதால் தனக்குப் பெரிய கவலை ஏற்பட்டு விட்டதாகக் காட்ட வெளிவந்து, உலகம் போற்றும் உத்தமர்களில் மகாத்மா காந்தி ஒருவர் என்றும், அதை மறுப்பவர் ஒன்று இழி குணம்படைத்தவராக இருக்கவேண்டும் அல்லது மதியற்றவர்களாக இருக்கவேண்டும் என்றும் எழுதி யிருக்கிறது.

மகாத்மா காந்தி என்பவரை ஸ்ரீமான் காந்தி என்று சொல்வதால் இழிகுணப் பட்டமும், மதியற்ற பட்டமும் வந்தாலும் வரட்டும் நமக்கு அதைப்பற்றிக் கவலை யில்லை.
ஸ்ரீமான் காந்தி என்றைய தினம் மக்களுக்குள் வருணம் நான்கு உண்டு. அதுவும் அவைகள் பிறவியில் ஏற்படுகின்றன. அந்தந்த வருணத்தானுக்கும் ஒவ்வொரு தர்மம் உண்டு. அதைத்தான் அவனவன் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார் என்பதாக நாம் உணர்ந்தோமோ, அன்றே அவரிடம் மகாத்மா தன்மை அங்கு இல்லையென்று தீர்மானித்துவிட்டோம். அதிலும் சூத்திரன் என்பவன் அடுத்த ஜென்மத்தில், தான் பிராமணனாய் பிறக்கலாம் என்கின்ற அவருடைய தீர்ப்பு சுத்தசுத்தமாய் நம்மை மாற்றியது. மகாத்மா பட்டம் ஒருவரின் அபிப்பிராயத்தையும், நடவடிக்கை யையும் பொருத்துத்தான் வழங்கப்படுவதே தவிர, வெறும் உருவத்திற்காக வழங்கப்படுவதல்ல என்பதை உணர்ந்தவர்களுக்கு இவ்விஷயத்தில் கவலை ஏற்பட நியாயமில்லை. மகாத்மா என்கின்ற பட்டத்தை நீக்கி நாம் எழுத ஆரம்பித்து இன்றைக்கு சுமார் இரண்டு மாதம் ஆகின்றது. இதுவரையும் சகித்துக் கொண்டிருந்த தமிழ் நாட்டிற்கு இந்த வாரம் திடீரென்று கவலை தோன்றி நமது, இழிகுணத்தையும் மகிமையையும் கண்டு பிடித்து எழுதியிருப்பதற்கு இரகசியமான காரணம் இல்லாமல் போக வில்லை. அதைத் தக்க சமயம் வெளியிடுவோம்.

ஒவ்வொரு பட்டமும் அவரவர்கள் அபிப்பிராயத் தாலோ, நடவடிக்கைகளாலோ ஏற்படுவதும், அவைகள் மாறும்போது மறைபடுவதும் வழக்கமாகவே இருந்து வந்திருக்கின்றது. மற்றும் சிலருக்குப் பட்டம் மக்களின் அறியாமையினால் ஏற்படுவதும், விஷயம் தெரிந்த உடன் மறைந்துபோவதும் வழக்கமாக இருக்கின்றது. இது வரையில் எத்தனை பேர்கள் தலைவர்களாகி மறுபடியும் நினைப்பதற்கே அருகற்றவர்களாய்ப் போயிருக் கின்றார்கள் என்பதை யோசித்துப் பார்த்திருந்தால் தமிழ்நாடுவுக்கு இவ்விஷயத்தில் இவ்வளவு கவலை ஏற்பட்டிருக்க நியாயமே இருந்திருக்காது.

தவிர, கடவுளின் அவதாரமாகவும், மகான் தோன்றின தாகச் சொல்லப்பட்ட கிருஷ்ணன் என்பவன் கடைசி காலத்தில் ஒரு காட்டில் ஒரு வேடனால் கொல்லப்பட்டு அழுவாரற்றுச் செத்து நாறிக்கிடந்ததாக வுள்ள விஷயங்களை அறிந்திருந்தால், இம்மாதிரி காரியத்திற் காக ஒருவரை இழிகுணம் என்றும், மதியீனம் என்றும் எழுத நியாயம் கிடைத்திருக்காது என்போம். ஆனாலும், நம்முடைய இந்த சமாதானமெல்லாம் தமிழ்நாடு பத்திரிகைக்கல்ல. ஏனெனில், அது பழைய குப்பையைத் தேடிப் பார்த்து குற்றங்கள் கண்டுபிடிக்கின்ற வேலையில் முனைந்து இருக்கின்றது. ஆதலால், அதற்கு இச்சமாதானங்கள் ஒரு உணர்ச்சியையும் கொடுக்காது என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதைக் கண்ணுற்றவர்கள் ஏமாறாதிருக்கவே இதை எழுதுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 25.12.1927

Read more: http://viduthalai.in/page-7/72426.html#ixzz2oA1z7wU7

தமிழ் ஓவியா said...

காங்கிரஸ் துவேஷமாம்!

சென்னை கார்ப்பரேஷன்காரர் காங்கிரஸ் பொருட்காட்சிக்கு ரூபாய் கொடுக்கக்கூடாதென்று ஜஸ்டிஸ் கட்சியார் ஆட்சேபித்ததற்காக அவர்களை காங்கிரஸ் துவேஷிகள் என்று பார்ப்பனப் பத்திரிகைகள் விஷமப் பிரச்சாரம் செய்கின்றன. காங்கிரஸ் பொருள் காட்சியென்ற பெயர் வைத்துக்கொண்டு, காங்கிரஸ் பெயரால் வெள்ளைக்காரர்கள் பொருள்களைக் காட்சி சாலை வைப்பதாக வெள்ளைக்கார கம்பெனியிடம் ரகசியமாய் ஒப்பந்தம் பேசி லஞ்சம் வாங்கிக் கொண்டு இவர்கள் நடத்தும் பொருட்காட்சிக்குப் பணம் கொடுக்கா விட்டால் அதற்குப் பெயர் காங்கிரஸ் துவேஷம் என்றால் அதற்கு நாம் பயப்படுவதா என்கின்றோம். பட்டாஸ் வெடி விற்றுத்தருவதாகவும், கற்பூரம் விற்றுத்தருவதாகவும் சைனாக்காரரிடம் ஒப்பந்தம் பேசி கூலி வாங்கிக்கொண்டு பண்டிகையும் பூசையும் பார்ப்பனர் ஏற்படுத்தி இருந்தால், பட்டாசு வாங்காதீர்கள் கற்பூரம் கொளுத்தி புகையாக்காதீர்கள், என்று நாம் சொன்னால் அது மததுவேஷமும் சாமி துவேஷமும் ஆகுமா என்று கேட்கின்றோம். இந்தப் பார்ப்பனர்கள் இப்படியே நம்மை மிரட்டி ,மிரட்டி கை கண்டுவிட்டாலும் நம்மில் சில கேனர்களும் வயிற்றுச் சோற்று ஆசாமிகளும் அவர்களுடன் சேர்ந்து திரிவதாலும் பார்ப்பனர் சொல்வதெல்லாம் செலாவணியாகி வருகிறது. இன்னும் அப்படி நடக்கப் பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றீர்களா? சுயமரியாதைக்காக உயிர் விடப்போகிறீர்களா என்று கேட்கின்றோம்.
- குடிஅரசு - கட்டுரை - 11.12.1927

Read more: http://viduthalai.in/page-7/72426.html#ixzz2oA2Ismgw

தமிழ் ஓவியா said...

மனுதர்ம சாஸ்திரம்

சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகு மக்களுக்கு எங்கு பார்த்தாலும் மனிதரின் சுயமரியாதைக்கு விரோதமான ஆதாரங்களை ஒழிப்பதில் கவலையும், ஊக்கமும் அதிகமாகி வருகின்றது. சென்னை, வட ஆற்காடு, சேலம், தஞ்சை, திருநெல்வேலி, மதுரை முதலிய இடங்களில் கூடிய பல மகாநாடுகளில் வர்ணாசிரம தர்மம் என்பதைக் கண்டித்திருப்பதுடன், அதற்கு ஆதாரமான புஸ்தகங்களையும் பகிஷ்கரிக்கத் தீர்மானங்களும் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன. சில மகாநாடுகள் மனுதர்ம சாஸ் திரத்தை நெருப்பில் கொளுத்தி சாம்பலைக் கரைத்தும் வந்திருக்கின்றன.
அரசாங்கமும் சட்டசபை மெம்பர்களும் இதைக் கவனிக்கப் போகிறார்களா என்று தீர்மானிக்க முடியவில்லை. பழைய காலமாயிருந்திருக்குமானால் இம்மாதிரி பெரும்பான்மையான மக்களுக்கேற்பட்டிருக் கும் உணர்ச்சியை மதித்து அரசாங்கமானது வருணா சிரமத்தை அழித்துச் சட்டம் செய்திருக்கும் என்பதோடு வருணாசிரமக் கொள்கைக்காரர்களை கழுவிலேற்றி இருக்கும் என்றுங்கூட சொல்லலாம். ஏனெனில், நிரபராதிகளான 8,000 சமணர்கள் கழுவேற்றப்பட்டதாக சொல்லும் சரித்திரத்தைப் பார்க்கும்போது இவ்வளவு அக்கிரமும், ஜீவகாருண் யமும் அறிவும் அற்ற தன்மையான கொடுமையை சகித்துக் கொண்டிருக்கும் என்றும் யாரும் சொல்ல முடியாது. நமது அரசாங்கங்கள் பழையகால அரசாங்கங் களைப் பின்பற்றிக் கழுவேற்றாவிட்டாலும் சட்டமூலம் கொடுமைகளை ஒழிக்கவாவது உதவவேண்டாமா என்று கேட்கின்றோம். ஒருக்கால் மத விஷயத்தில் தலை யிடமுடியாது என்று சொல்வார்களானால், மத விஷயங் களையாவது கவனித்து மதத்தில் எப்படி சொல்லியிருக் கின்றதோ யார் யாருக்கு என்ன என்ன வேலை இடப்பட்டிருக்கின்றதோ, யார் யாரின் நடத்தை எப்படி இருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருக்கின்றதோ அப்படியாவது நடக்கும்படி பார்க்கவேண்டும். அப்படியும் இல்லாமல் இப்படியுமில்லாமல் பார்ப்பானும் வெள்ளைக்காரனும் மாத்திரம் பிழைக்க என்ன என்ன மாதிரி நடக்க வேண்டுமோ, எப்படி எப்படி சீர்திருத்தம் செய்யவேண்டுமோ அப்படியெல்லாம் சூழ்ச்சிகள் செய்துகொண்டு மதவிஷயத்தில் பிரவேசிக்க மாட்டோம் என்று சொல்வது வடிகட்டின அயோக்கியத்தனமாகு மென்றே சொல்லுவோம்.

இச்சூழ்ச்சிகளைப் பார்க்கும்பொழுது, இது சமயம் மகம்மதிய அரசாங்கத்தில் வாழும் யோக்கியதையாவது நமக்குக் கிடைக்காதா என்று ஆசைப்பட வேண்டிய தாயிருக்கின்றது. காரணமென்னவென்றால், வீரர் கமால்பாட்சா அவர்கள் ஒரு அரச விசாரணைக்கு குரானை ஆதரவாக காட்டியபோது அது அக்காலத்து சங்கதி இக்காலத்திற்கு செல்லாது என்று அதைப் பிடுங்கி வீசி எறிந்தாராம். குரான் வாக்கியம் செதுக்கப் பட்ட இடங்களையெல்லாம் அழித்து சுயமரியாதை யையும், கைத்தொழிலையும் கவனியுங்கள் என்று எழுதிவருகிறாராம். மகம்மதியரைவிட வெள்ளைக் காரருக்கும் பார்ப்பனர்களுக்கும் மத பக்தியிருக்கின்றது என்று சொன்னால் எந்த பைத்தியக்காரராவது நம்பமுடியுமா என்று கேட்கின்றோம்.

எனவே, மதம் என்கிற புரட்டுகளையும், மதாச் சாரியர்கள் என்கின்ற அயோக்கியர்களையும் சாஸ்திரம், வேதம், புராணம் என்பவைகளாகிய அதர்ம அக்கிரம, ஆதாரங்களையும் குருட்டுத்தனமாய் பின்பற்றாமல் அன்பு, ஜீவ காருண்யம், அறிவு, சத்தியம் என்பவைகளை ஆதாரமாய் வைத்து அவற்றிற்கு விரோதமாய் உள்ளவை களையெல்லாம் அடியோடு ஒழிப்பதற்கு முற்பட வேண்டியது தான் பகுத்தறிவுள்ள மனிதனின் கடமை, ஆதலால், அதற்கு ஒவ்வொருவரும் முற்பட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் 04.12.1927

Read more: http://viduthalai.in/page-7/72426.html#ixzz2oA2ObGke

தமிழ் ஓவியா said...

இவர்கள்தான் சாமியார்கள்

கும்பமேளாவில் கூடிய சாதுக்களிடம் காணப்பட்ட பொதுவான அம்சம் யாதெனில் சோறு, தண்ணீர், தூக்கம்கூட இல்லாமல் இருந்து விடுவர். ஆனால், நீள்போதை தரும் கஞ்சாவை புகைக்காமல் இருக்க மாட்டார்கள்.

-தினமலர் 4.3.2013 பக்கம் 16

தமிழ் ஓவியா said...


சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி


மின்சாரம் சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம் கொண்டு வர ஜப்பான் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டதில் புருஷிமா அணுஉலை வெடித்து சிதறியது. அதனால் அங் குள்ள அணுமின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

எனவே, நாட்டின் மின் தேவைக்கு விஞ்ஞானிகள் மாற்று வழியை உருவாக்க முயற்சி செய்கின்றனர். இந்த வகையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தீவிரப்படுத்த உள்ளனர்.

பூமியை பொறுத்தவரை எப்போ தும் சூரிய ஒளி கிடைப்பதில்லை. பகலில் மட்டுமே கிடைக்கிறது. மோசமான தட்ப வெப்பநிலை மேக மூட்டம் இருந்தால் அதையும் முழுமையாக பெற முடியாது.

எனவே, சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர ஜப்பானில் உள்ள ஷிமிஷூ கார்ப்பரேசன் என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியை சுற்றிலும் சோலார் பேனல் தகடுகளை சீராக அமைத்து அதன் மூலம் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர திட்டமிட் டுள்ளது. அதற்கு ஜனாரிங் என பெயரிட்டுள்ளனர்.

இதன் மூலம் 13 ஆயிரம் டெரா வாட் மின்சாரத்தை தயாரித்து பூமிக்கு கொண்டு வர முடியும். ஒரு டெராவாட் என்பது 1 லட்சம் கோடி வாட் ஆகும். இந்த திட்டத்தின் கட்டுமான பணி வருகிற 2035ஆம் ஆண்டில் தொடங் கப்பட உள்ளது.
தொடர்ந்து மின்சாரம் தயாரிக்க சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் 11 ஆயிரம் கி.மீட்டர் பரப்பரளவில் 400 கி.மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே சோலார் மின்கலன்கள் அமைக்கப்பட உள்ளன.

சந்திரனில் சோலார் பேனல் தகடுகள் மற்றும் சோலார் மின் கலன்கள் அமைக்கும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் அமைக்கப்படும் சோலார் பேனல் தகடுகள் கேபிள்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் மைக்ரோவேவ் மற்றும் லேசர் டிரான்ஸ்மிசன் நிலை யங்களில் இணைக்கப்படும். பின்னர் அவை 20 கி.மீட்டர் விட்டமுள்ள ஆண்டனாக்கள் மூலம் பூமிக்கு வரும்.

Read more: http://viduthalai.in/page3/72047.html#ixzz2oA3NtXZv

தமிழ் ஓவியா said...


மாலையும் மனுதர்மமும்


- மு.வி.சோமசுந்தரம்

கடவுளை மற! மனிதனை நினை! மனித இனம் நசுக்கப்படாமல் இருக்க நலிந்து போகாமல் இருக்க, சுயமரியாதையுடன் வாழ சுயசிந்தனையாளர் தந்தை பெரியார் அவர்கள் காட்டிய நல்வழிதான் மேலே சுட்டிக்காட்டிய அறிவார்ந்த முழக்கம்.

மானுடத்தின் மதிக்கத் தக்கவரான மாதரை மண்புழுவாக மிதிக் கும் மனப்போக்கை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தவர் பகுத் தறிவுப் பகலவன் பெரியார், குரல் கொடுத்ததுடன் அமையாது, பெண் குலம் சீர்குலைத்து போனதற்கான காரணத்தை, நோய் நாடும் சமூக மருத்துவராக 1.1.1942-இல், பெண் ஏன் அடிமையானாள்? என்ற கருத்துக் கருவூலமான புத்தகத்தை நமக்களித்தார் பெரியார்.

பெண்களை அடிமைபடுத்தும் சூத்திரத்தின் (Trick) மூலாதாரம் எங்கே உள்ளது? அதைத்தான் நமது மானமிகு ஆசிரியர் அவர்கள், அந்த புத்தகத்தின் அறிமுக உரையில்:

பெண்களை, சூத்திரர்களான நாலஞ் ஜாதியினரைவிடக் கீழாக மதிக்க வேண்டியவர்கள் என்கின்றது மனுதர்மம்!

எனவே மனுதர்மம் பெண்களை முடமாக்கிய போலியோ வியாதிக் கிருமி.

இந்த புத்தகத்துக்கு முகவுரை எழுதிய தந்தை பெரியார், இந்த புத்த கக் கருத்துகள், இன்றைய நிலையில், எந்த மதத்திற்கும் எந்த தேச மக்களுக்கும், எந்த சமூகத்தாருக்கும் பயன்பட்டாக வேண்டும் என்பதே நமது கருத்தாகும். என்று தம் எண்ணத்தைத் தெளிவுபடுத்துகிறார்.

அய்யா அவர்கள் குறிப்பிட்டுள்ள எந்த தேச மக்களுக்கும், எந்த சமூகத்தாருக்கும் என்று 1942-ஆம் ஆண்டு குறிப்பிட்டுக் கூறியதற்கு நல்லதொரு கண்விரித்து (அறிவுக் கண்) பார்க்கத்தக்க ஒரு விளக்கச் செய்தியைக் கூறுவோம்.

இங்கிலாந்து நாட்டு இளவரசர் பிரின்ஸ் சார்ல்ஸ், அரசி எலிசபத் அய்அய் சார்பில் கொழும்பில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள புறப்பட்டவர், இந்தியா வுக்கும் வந்துள்ளார். அவருடன் அவர் இணையர் கேமில்லா பார்க் கர் பவல்ஸ் அவர்களும் வந்துள் ளார்கள். சுற்றுலா பயணிகளாக இந்தியாவின் வரலாற்று தொடர் புடைய இடங்களுக்கும், ஆன்மீக வாதிகளால் வழி காட்டப்படும் புண்ணியத் தலங்களுக்கும் சென்று புதிய காட்சிகளைக் கண்டும், புதிய அனுபவங்களையும் பெற்று சுற்றி வருகின்றனர். கங்கை ஆற்றின் படித் துறையில், காவி உடை, தாடி சாமி யார்கள், ஆரத்தி எடுத்து ஆலாபனம் செய்ததையும் கண்டார்கள் (ஆகமம், ஆசாரம், சாஸ்திரம், எல்லாம் இங்கே ஊமைகளாயின).

அரச குடும்பத்து பெருமக்கள் இருவரும் ரிஷிகேஷ் செல்லும்முன், டேராடூன் விமான நிலையத்திற்கு வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு மாலை அணிவித்து ஒளிப்படம் எடுக்கப்பட்டு, அந்த படம் டைம்ஸ் ஆப் இந்தியா (10.11.2013) இதழில் வெளிவந்துள்ளது.

இந்த ஒளி படத்தை முதன்மைப் படுத்தி சிறந்த கட்டுரையாளர் எம்.ஜே.அக்பர் நம் கண்ணுக்கு பட்டும், கருத்துக்குத் தட்டுபடாத ஒன்றை குறிப்பிட்டு (ஈரோட்டு பார்வையில்) ஒரு வினாவை எழுப்புகிறார். அவர் எழுப்பிய வினா

ஏன் பிரின்ஸ் சார்லஸ்சும், கேமிலா பார்க்கர் பவஸ்சும் ஒரே அளவான மாலை அணிந்திருக்க வில்லை?

இது ஒரு கேள்வியா? என்று தோன்றக்கூடும், என்னதான் விலைவாசி கடுமையானாலும் ஒரே அளவு மாலை அணிவிப்பதால் செலவு அதிகமாகி இருக்காது (அதுவும் அரச குடும்பத்தவருக்கு) என்று அக்பர் சுட்டி காட்டுகிறார். ஏன் கணவன் மனைவி இருவருக்கும் ஒரே மாதிரியான வரவேற்பு கொடுக்கவில்லை? அக்பர் அவர்கள் காரணத்தைப் பிட்டு வைக்கிறார்.

இந்தியர்களாகிய நாம், ஆண் களையும் பெண்களையும் சமமாகக் கருதுவதில்லை. சார்லஸ் அணிந் திருக்கும் மாலை, பல சரங்களுடன், முழங்கால் அளவு நீண்டுள்ளது. கோமிலாவின் மாலை, சன்னமாக தொப்புள் அளவே உள்ளது. அரசு அதிகாரிகளுக்கும், சாதாரண இந்தியர்களுக்கும் இது விளங்காது.

இதை விளக்குபவர்கள் தந்தை பெரியாரும், தமிழர் தலைவரும் தான். இதுதான் மன்னர்களையும் மடக்கிபோடும் மனுதர்மம்.

முடி சூட்டி வாழும் மன்னவர் குடும்பத்தினர் ஆனாலும், அரண் மனை வாழ்க்கை வாழ்ந்தாலும், ஆரியத்தின் மனுதர்ம மகுடி இசையின் மறை பொருளைக் கண்டு கொள்வதில்லை. இந்தியா, விக்டோ ரியா மகாராணியின் நேரிடை ஆளுமையின் கீழ் வந்தபோதே இந்த அணுகுமுறை அறிமுகமாக்கப்பட் டதுதானே.

ஆங்கிலேயர் நம் நாட்டைவிட்டு வெளியேறி மண்ணடிமைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், சமூக சமத்துவம் பெற்று, முடிவில்லா கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், சமூக சமத்துவம் பெற்று, முடிவில்லா கொடுமைக்கு முற்றுப்புள்ளி என்றோ என்று ஏங்கும் நிலைதானே உள்ளது. உண்மை மண்ணடிமை எப்பொழுது மறையும்? இதோ பாவேந்தரின் பதில்:

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டின்
மண்ணடிமை தீர்தல் முயற்கொம்பே,

கூடுதல் செய்தி: டேராடூனில், அரச குடும்பத்தினரின் காமிலாபார்க் கருக்கு மெலிந்த குட்டையான மாலையாவது கொடுத்தார்கள். கேரளாவில் அந்த மரியாதையும் காணமுடியவில்லை. பிரச்சினை ஏதும் இல்லை. மகிழ்ச்சியுடன், இள வரசரின் 65-ஆவது ஆண்டு பிறந்த நாளைக் கேரளாவில் கொண்டாடி னார்கள்.

Read more: http://viduthalai.in/page4/72383.html#ixzz2oA3t6SUZ

தமிழ் ஓவியா said...

தொழிலாளி என்பவன் தன்னுடைய உடல் உழைப்பை
வயிற்றுப் பிழைப்பிற்காக விற்பவன்.

தன்னுடைய உழைப்பைத் தன்னுடைய இச்சைப்படித் தன் காரியங்களுக்கேற்ற வசதிப்படி
நடத்துபவன் முதலாளி.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...


பொன்மொழிகள்


தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல் வியுறுவான். - நெப்போலியன்

###

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்

###

மதம் எப்போதும் கலைகளுக்கும், ஆராய்ச்சிக்கும், அறிவியலுக்கும் எதிரியாக இருந்து வருகிறது. - இங்கர்சால்

Read more: http://viduthalai.in/page5/72385.html#ixzz2oA4KlMPF

தமிழ் ஓவியா said...


ஒழிக்கப்பட வேண்டியவை


1. மக்களிடம் உள்ள உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால் வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும் கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால் லைசன்ஸ், பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில்துறையில் தொழிலாளர்களிடையே சுகமும், நாணயமும், பொறுப்பும் ஏற்பட வேண்டு மானால், லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் கூட்டம் ஒழிக்கப்பட வேண்டும்.

7. அய்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பது ஒழிக்கப்பட வேண்டும்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page5/72387.html#ixzz2oA4X8AO1

தமிழ் ஓவியா said...


கோயில்களுக்குள் பார்ப்பனர்கள் புகுந்தது எப்படி


தென்னாட்டுத் திராவிட மன்னர்களால் சைவ, வைணவ மடங்களும் ஏற்படுத்தப்பட்டு அவற்றுக்குப் போதுமான சொத்துக்கள் விடப்பட்டு, சைவ, வைணவப் பெரியோர்களால் பரிபாலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்காலப் பிராமணர்கள் தந்திரமாகத் தங்களுடைய செல்வாக்கால் ஷிநீலீமீனீமீ ஷிவீ என்ற பெயரில், நீதி மன்றத்திலே ஒரு வழக்குத் தொடர்ந்து இராமேசுவரம், குன்றக்குடி, வைத்தீசுவரன் கோயில் போன்ற கோயில்களைத் தங்களின் ஆளுகையின் கீழ், கொண்டு வந்திருக்கிறார்கள்.

அதுவரையில் மடாதிபதிகளாக இருந்த மற்றவர்களிடம் அதன் ஆளுகை இருந்தது.

திருக்கோயிலில் நைவேத்தியம் பிராமணரே செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்து அவர்கள் உரிமை கொண்டனர்.

அரசாங்கம் கோவில் முதலிய மத விஷயங்களில் பிரவேசிக்கவில்லை என்று சொல்லியிருந்தும், வெள்ளைக்காரன் ஆட்சியில் பிராமணர்கள் தங்களுடைய செல்வாக்கால், திராவிடர்களால் ஏற்படுத்தப்பட்ட தரும சொத்துக்களில் இருந்து பொருள் எடுத்துத் தங்களுடைய ஜாதியர்களுக்கே பயன்படும் வகையான சமஸ்கிருதக் கலாசாலைகளை நடத்தி வருகிறார்கள்.

தளவாய் எம்.டி.சுப்பிரமணிய முதலியார் சொல்கிறார்:

கோயில் கட்டினவன் தமிழன்;
விக்கிரகமோ தமிழனைப் போல,

பாரம்பரியமாக நடைபெற்றதோ தமிழ் வழிபாடு
அதற்கு உரிமை உள்ளவர்கள் பண்டாரங்கள்
அல்லது அறங்காவலர்கள்.
ஆனால் ஸ்கீம் சூட் போட்டு அதை எடுத்துக் கொண் டவர்களோ, அவைகளுக்கு வந்த பெரிய வருமானத்தைச் சமஸ்கிருதக் கல்விக்கும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

இந்து மதப்பெயரால்தான் அந்த வேலையினைச் செய்ய முடியும்.

மேலும் 200 அல்லது 300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டிலே பலபேர் ஜாதி உயர்வு பெற சற்சூத்திரன் என்ற பெயரைத் தங்களுக்கு உரியதாக மேற்கொண்டார்கள்.

பிராமணர்களைப் போல் நடிக்கும் பிராமணர் அல்லாதார்களைக்கூட மிருகத்துக்கும் கேவலமாக மதித்து நடத்தி வந்தவர்களே பிராமணர்.

நாட்டின் பூர்வீகக் குடிகளெல்லாம் பஞ்சமர்களாய்த் தாழ்த்தப்பட்டோர்கள்.

இங்ஙனம் தாங்கள் வசிக்கும் வீதிகளிலும் பொது வீதிகளிலும் மேற்படி திராவிடக்குடிகளை வர விடாது தடுத்தும், கல்வி, ஞானம் முதலியவற்றைக் கொடுக்க மறுத்தும் வருவது, ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டிருந்த காலத்திலும் நடந்தது.

(திராவிட இயக்கம் சென்னைப் பல்கலைக்கழகம் கருத்தரங்குத் தொடக்கப் பேருரை: பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் 53-ஆம் பக்கத்தில் இருப்பது)

- தகவல்: க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page5/72398.html#ixzz2oA5SpJB9

தமிழ் ஓவியா said...

தோழர் தா.பா.வும் தோழர் ஜி.ஆரும் என்ன செய்தார்களாம்?தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா பேசிய இந்தக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் தா.பாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்சிஸ்ட்டு) தமிழ் மாநில செயலாளர் தோழர் ஜி. இராமகிருட்டிணன் ஆகியோரும் அந்தக் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்களே - முதல் அமைச்சர் ஜெயலலிதா சொன்ன கருத்து அவர்களையும் சேர்த்துத்தானே?

மார்க்சும் - ஏங்கல்சும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்ததால் அவர்கள் வெற்றி பெறவில்லையா? அந்த இடத்தில் முதல் அமைச்சருக்குப் பதில் கூற வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமல் போயிருக்கலாம். அவர்கள் கட்சியின் அதிகாரபூர்வ ஏடு களானஜனசக்தி தீக்கதிரில் முதல் அமைச்சர் கருத்துக்கு மறுப்புக் கூறுவார்களா? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/e-paper/72465.html#ixzz2oCph9LI2

தமிழ் ஓவியா said...


அஞ்சல் மூலம் ஆசீர்வாதமாம்


திருமலை ஏழுமலை யானின் ஆசீர்வாதத்தை அஞ்சல் மூலம் பெறும் திட்டத்தை அஞ்சல்துறை மீண்டும் தொடங்கியுள்ளது.

திருமலை ஏழுமலையா னுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் இனி அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

இத்திட்டம் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் செயல் அதிகாரி, திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி என்ற பெயரில் பணவிடை (மணியார்டர்) அனுப்பினால் பக்தர்களின் காணிக்கைகள் திருமலையை அடைந்தவு டன் 3 நாள்களுக்கு பின் மணியார்டர் பெறப்பட்டதற் கான ரசீதும், ஏழுமலையா னின் திருவுருவப் படமும், கல்யாண உற்சவ அட்சதை யும் தேவஸ்தான கவரில் அனுப்பி வைக்கப்படும். இதற் காக தலைமை அஞ்சலகத் தில் ஆசீர்வாதம் என்று ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை ஆண்டு களாக சரிவர செயல்படாமல் இருந்த இந்த திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ள னர். மேலும் மாவட்ட வாரி யாக செயல்பட்ட இந்த திட் டம் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங் களுக்கும் விரிவுபடுத்தப்பட் டுள்ளது. முன்னர் 10 ஆயிரம் பக்தர்கள் பயன் பெற்ற இந்த திட்டத்தின்மூலம் தற்போது 40 ஆயிரம் பக்தர்கள் பயன்பெறுகின்றனர்.

மேலும் திருப்பதிக்கு அருகில் உள்ள ஸ்ரீகாள ஹஸ்தி கோயிலிலும் வெகு விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர் - என்று செய்தி தினமணியில் வெளி வந்துள்ளது (21.12.2013).

பக்தி என்பது ஒரு வியாபாரம், சுரண்டல் என்பது அதன் தொழில் என்று நாம் சொன்னால் பற்களை நறநற வென்று கடிப்போர் உண்டு.

இப்பொழுது திருப்பதி தேவஸ்தானம் இந்தச் செய லுக்கு என்ன நாமகரணம் சூட்டப் போகிறதோ!

துக்ளக் இதழில் திருவாளர் சோ ராமசாமி எழுதிய பதில்தான் இந்த நேரத்தில் நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

கேள்வி: சென்னை தீவுத் திடலில் திருப்பதி ஏழுமலை யான் சீனிவாச திருக்கல்யா ணம் உற்சவம் நடைபெற்றது பற்றியும், அதில் லட்சக்கணக் கான பக்தர்கள் பங்கு பெற் றது பற்றியும் தங்கள் கருத்து?

சோ பதில்: இவ்வளவு கட்டணம் செலுத்தினால் வெங்கடேஸ்வரப் பெரு மாளை உங்கள் வீட்டிற்குக் கொண்டு வந்து ஒரு நாள் தங்க வைக்கிறோம் என்ற ஒரு புதிய திட்டம் வராத ஒன்றுதான் குறை! (துக்ளக் 23.4.2008 பக்கம் 17) என்று அவரே வெட்கத்தை விட்டு எழுதினாரே அதுதான் நினைவிற்கு வருகிறது.

இதையும் தாண்டி காஞ்சி (மாஜி) சங்கராச்சாரி யார் காஞ்சிபுரத்தில் 1976 மே மாதத்தில் நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில் ஒரு உண்மையை ஒப்புக் கொண் டார்.
கோயிலுக்குப் போவதை மக்கள் ஒரு ஃபேஷனாகக் கருதுகிறார்கள் பெரும்பா லோரிடம் வர்த்தக மனப் பான்மை காணப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

நமக்கு ஏன் வீண் வம்பு? அவாளே ஒப்புக் கொண்டு விட்டனர்.

கடைசியாக ஒரு கேள்வி இப்படி வெள்ளைக்காரன் கண்டுபிடித்த அஞ்சல் முறை யில் எல்லாம் பணம் வசூ லித்து பிரசாதம் அனுப்புவது அவாளின் எந்த ஆகமத்தில் எத்தனையாவது அத்தியா யத்தில் இருக்கிறதாம்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72461.html#ixzz2oCq0LTU4

தமிழ் ஓவியா said...


எச்சரிக்கை! இவர்களை அடையாளம் காண்பீர்! ராமராஜ்யத்தைஏற்படுத்தவேண்டுமாம்! நரேந்திரமோடி கூறுகிறார்


வாரணாசி, டிச.22- நாட்டில் ராம ராஜ் யத்தை ஏற்படுத்த வேண் டும் என்றும், அதற்கு மக்களைவைத் தேர்த லில் சரியான கட்சியைத் தேர்வு செய்ய உத்தரப் பிரதேச மக்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெள்ளிக்கி ழமை வேண்டுகோள் விடுத்தார்.

உத்தரபிரதேச மாநி லம் வாரணாசியில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசிய தாவது:

மத்தியில் சரியான அரசு அமையாததற்கு உத்தரப் பிரதேச மக் களின் பங்களிப்பில் ஏற் பட்ட குறைதான் கார ணம். (நாட்டிலேயே அதி கமாக 80 மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரப் பிரதே சம் என்பதை கருத்தில் கொண்டு அவர் இவ் வாறு தெரிவித்தார்).

நீங்கள் ஒருநாள் சரியான அரசை தேர்வு செய்வீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக் கிறது. அப்படி தேர்வு செய்வீர்கள் என்றால், அன்றுதான் ராம ராஜ் யம் நடைமுறைக்கு வரும்.

கங்கை நதியை சுத்தப் படுத்தும் பணிக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செல விடப்பட்டது. ஆனால் இன்னும் கங்கை நதி, மாசுபட்டதாகத்தான் காணப்படுகிறது.

கங்கை நதியை சுத்தப் படுத்தும் திட்டத்துக் காக எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செல விடப்பட்டது என்பது குறித்து பிரதமர் விளக்க வேண்டும் என்று பேசினார்.

ராமர் கோயில் விவகாரத்தில் தனது நிலையை மோடி தெளிவுபடுத்த வேண்டும்: விஹெச்பி

ராமர் கோயில் விவ காரத்தில் நரேந்திர மோடி தனது நிலையை தெளிவு படுத்திய பிறகே, பாஜகவுக்கு ஆதரவு தருவோம் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தெரி வித்துள்ளது.

இதுகுறித்து உத்த ரப்பிரதேசத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப் பின் தலைவர் பிரவீண் தொகாடியா செய்தியா ளர்களிடம் வியாழக் கிழமை கூறியதாவது:

ராமர் கோயில் கட்டு வது குறித்து உறுதி யளிக்கும் கட்சிக்கே, விஷ்வ ஹிந்து பரிஷத் ஆதரவு அளிக்கும். ராமர் கோயில் கட்டுவது குறித்து தேர்தல் அறிக் கையில் பாஜக வெளி யிட வேண்டும்.

எங்கள் அமைப்பின் ஆதரவை விரும்பினால், இந்த விஷ யத்தில் மோடி தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் பிர சாரங்களில் ராமர் கோயில் குறித்த விவ ரங்களை மோடி பேசா மல் இருப்பது வருத்த மளிக்கிறது என்று பிரவீண் தொகாடியா தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/72466.html#ixzz2oCqUpAPZ