Search This Blog

22.12.13

காவல்துறையினர் வசூலுக்குக் கிளம்பினால்!-துப்பாக்கிகளுக்கெல்லாம் சந்தனப் பொட்டு - குங்குமப் பொட்டு

காக்கிகள் காஷாயம் ஆகலாமா?காக்கிச் சட்டை அணிவது எதற்கு? காவல் காக்கும் தைரியசாலிகள் நாங்கள் என்று காட்டுவதற்கு கவாத்துப் பயிற்சிகள் எதற்கு? உடலையும், உள்ளத்தையும் உறுதிப்பட வைப்ப தற்கு!
முடி வெட்டி இருப்பதைப் பார்த்த போதே கூறி விடலாம். இவர் காவல் துறையைச் சேர்ந்தவர் என்பதை; அவர்கள் எடுப்பாக இருக்க வேண்டியவர்கள்; பார்த்த மாத்திரத்திலேயே அந்தக் கம்பீரத்தைக் கண்டு மதிக்கத் தோன்ற வேண்டும்.
விதிமுறைகளையும், சட்டத் திட்டங்களையும் காக்கும் வேலிகள் என்று கருதப்பட வேண்டியவர்கள்.
காவல்துறையினர் இப்பொழுதெல்லாம் அப்படித்தான் இருக்கிறார்களா?
கையில் மந்திரக் கயிறுகள் கத்தைக் கத்தையாக - வண்ண வண்ணமாக!
நெற்றியிலே திருநீற்றுப் பட்டை - குங்குமம் சகிதம். அய்யப்பன் சீசனிலோ கேட்கவே வேண்டாம் கழுத்து நிறைய மணிமணியான கொத்துக்கள்.
காவல் நிலையம் அரசு நிலையம் தானே.. மதச் சார்பற்ற தன்மை கொண்ட அரசமைப்புச் சட்டத்தில் நுணுக்கங்களைக் கண்ணிமையாகக் காக்க வேண்டிய பொறுப்புகள் அவர்களுடையதுதானே?
போய் பாருங்கள், ஒவ்வொரு காவல் நிலையத்திலும்; கடவுள் கடவுளச்சிப் படங்கள் அலங்கரிப்பது ஒருபுறம் இருக்கட்டும்! கோயிலே கட்டி வைத்திருக்கிறார்களே! அந்தக் கோயிலை அவர்கள் பணத்திலா கட்டுகிறார்கள்? வசூல்! வசூல்!!
அரசு ஊழியர்கள் வசூலில் ஈடுபடலாமா? அதுவும் காவல்துறையினர் வசூலுக்குக் கிளம்பினால், பொது மக்கள் மத்தியில் மரியாதை எங்கிருந்து கிடைக்கும்?
ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்துவிட்டு, அடுத்த நாள் ஆதாயத்துக்காக வர மாட்டானா?
ஆயுதப் பூஜை வந்தால் போதும்! சரியான வசூல், - ஏலம்கூட விடுவ துண்டு. ஒலி பெருக்கிகள் காவல் நிலையத்தில் முழங்கும்!
துப்பாக்கி களுக்கெல்லாம் சந்தனப் பொட்டு - குங்குமப் பொட்டு.
இத்தகு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிறகு வீரம் விஞ்சுமா? விவேகம் கொஞ்சுமா? கோழைத்தனமான புத்தியல்லவா ஆட்கொள்ளும்.
அதனுடைய விளைவு எதுவரை சென்றிருக்கிறது தெரியுமா? குறிப்பிட்ட காவல் எல்லைக்குக் கொலைகள் அதிகம் நடந்தால், குற்றங்கள் அதிகம் நடந்தால் அதற்குரியவர்களைக் கண்டுபிடிக்க முடியாத மன நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள்.
உடனே பரிகாரம் பூஜை என்று ஆரம்பித்து விடுகிறார்கள். கிடா வெட்டிப் பூஜைகள் செய்கிறார்கள் யாகங்களும் நடத்துகிறார்கள்.
ஏதோ.. விளையாட்டல்ல -_ அள்ளுப்புள்ளியல்ல நாம் கூறுவது!
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த பல மாதங்களாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்தனவாம்.
கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி தொண்டை மாநல்லூரில் தொழிலதிபர் அழகு என்பவர் வீட்டில் 40 பவுன் நகைகள் மற்றும் சொகுசு கார் பறி போனது. அதே மாதம் காரைப்பட்டு கிராமத்தில் மனைவியை கொலை செய்த கணவன் தூக்குப் போட்டுக் கொண்டு செத்தான்.
அக்டோபர் 4ஆம் தேதி செங்களாக்குடியில் மணல் கடத்தலை காவல்துறைக்குக் காட்டிக் கொடுத்த அண்ணன் தம்பிகளான ராஜேஷ், கார்த்திக்  ஆகியோர் வெட்டிக் கொல் லப்பட்டனர்.
கடந்த தீபாவளியன்று நாசரேத்தில் யாகப்பன் என்பவரை அவரது மனைவியும் கள்ளக் காதலனும் சேர்ந்து வெட்டிக் கொன்றனர்.
அடுத்து மாத்தூரில் மூதாட்டியைக் கொன்று விட்டு 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இத்தியாதி இத்தியாதி குற்றங்கள் குலை குலையாகத் தொங்க ஆரம் பித்து விட்டன.

இந்தக் குற்றங்களைச் செய்தவர் களைக் கண்டுபிடிக்க முடியாத கையா லாகாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். காவல்துறையினர்; மேல் அதி காரிகளோ மெமோ மெமோ என்று குடைச்சலைக் கொடுக்கின்றனர்.
இந்தச் சூழலில் மாத்தூர் காவல்துறை அதிகாரிகள் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்து விட்டார்கள்; என்ன குற்றவாளிகளையா? அல்ல... அல்ல.. ஏதோ கெட்ட ஆவிகள்தான் இதற்கெல்லாம் காரணம் என்று கண்டுபிடித்தார்களே பார்க்கலாம்.
கடந்த நவம்பர் 14 நாள் நேரம் காலம் சுபமுகூர்த்தம் பார்த்து யாகம் நடத்தினார்கள். சிவாச்சாரியார்ப் பார்ப்பனர்களும் வரவழைக்கப்பட் டார்கள்; காவல் நிலைய வராண் டாவில் வாஸ்து, சாந்தி பூஜையும், காவல் நிலையத்திற்குள் அக்னி குண்டம் வளர்த்து சிறப்பு யாகமும் சும்மா ஜாம் ஜாமென்று நடத்தப்பட்டது.
காவல்துறை ஆய்வாளர் மாரிமுத்து என்பவர் புதுப்பட்டு வேட்டி, சட்டை சகிதமாக கழுத்தில் மாலையுடன் -வந்து அமர்ந்தார்.
கணபதி ஹோமம் மற்றும் நவக் கிரகப் பூஜைகளும் ஓகோ என்று நடந் தன. திருஷ்டி கழிக்க வேண்டாமா? தென்னங் கீற்றில் தீ பற்ற வைத்து காவல் நிலையத்தைச் சுற்றி வந்தனர்.
காவல் நிலையத்தின் கம்பீரத்தை இப்படி கழைக் கூத்தாடித்தனமாக ஆக்கி விட்டார்கள்.
இனிமேல் காவல்துறைக்கு ஆள் எடுக்கும்பொழுது மந்திரம் தந்திரம் தெரியுமா? வாஸ்து சாஸ்திரம் தெரியுமா என்று கேட்பதோடு நில்லாமல் அவைகளுக்குப் பரீட்சை நடத்தி அதிக மார்க்கு வாங்குகிறவர்களைத் தேர்வு செய்யலாமே!
உயரம் எத்தனை அடி? உயரத் தாண்டுதலில் எத்தனை அடி? மார்பு அளவு என்ன? மூச்சு இழுத்து விட்டால் எவ்வளவு - -_ மூச்சு விடாத போது எவ்வளவு? நூறு மீட்டர் ஓட்டம் எத்தனை நொடிகளில்? கயிறு தாவுதல் (Rupe Climbing) என்கிற தேர்வுகள் எல்லாம் இனித் தேவையில்லை.
மாறாகப் பஞ்சாங்கப் பரீட்சைகள் வைத்துத் தேர்வு செய்யலாம்.
ஒரு காவல் நிலையத்தில் காவல்துறையினர் என்றால் வெறும் இந்துக்கள் தானா? கிறித்துவர் இருக்க மாட்டாரா? முஸ்லிம் இருக்க மாட் டாரா?
கடவுள் நம்பிக்கை மத நம்பிக் கையற்ற பகுத்தறிவுவாதிகள் இருக்க மாட்டார்களா?  இது மதச் சார்பற்ற அரசு அல்லவா! அப்படி இருக்கும் பொழுது குறிப்பிட்ட மதம் சார்ந்த யாகங்களை, சடங்குகளை நடத்தலாமா? சட்டப்படி இது சரியானது தானா?
உச்சநீதிமன்றம் வரை தீர்ப்பு வந்த தெல்லாம் இந்தக் காவல்துறை அதி காரிகளுக்குத் தெரியவே தெரியாதா?
அவ்வளவுத் தூரம் கூடப் போக வேண்டாம் காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP) அண்மையில் சுற்ற றிக்கை ஒன்றைக்கூட அனுப்பியுள் ளாரே!
அதைக்கூட மதிக்கத் தயாராக இல்லையா?
காவல்துறை வளாகங்களில் வழிபடும் இடங்களான கோயில் தேவாலயம் (சர்ச்சு) மசூதி ஆகியவை இயங்கி வருகின்றன என்கிற தகவல் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.
காவல்துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், அறிவுறுத்தப்படுவது என்னவெனில் இத்தகைய வழிபாட்டுத் தலங்களை அனுமதிக்கக் கூடாது என்பதாகும்.
- (ஓம்) கே. இராமனுஜம் காவல்துறைத் தலைமை இயக்குநர்

வேலியே பயிரை மேயலாமா?
காவல் துறையின் இத்தகு நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் அவர்கள் நிலை என்ன? கூண்டிலேறியல்லவா தலைகுனிந்து பதில் சொல்ல நேரிடும்!
யாகத்தினால் குற்றங்களைத் தடுக்க முடியும் என்றால் காவல்நிலையங் களையெல்லாம் கோயில்களாக்கி, அங்கே பூசாரிகளை நியமித்து விடலாமே!
கொலைகளுக்குக் காரணம் கெட்ட ஆவி என்றால், கொலை குற்றவாளி நான் என்ன செய்யட்டும்! கெட்ட ஆவிதான் என்னைக் கொலை செய்ய வைத்தது என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?
என்ன செய்வது! மதச் சார்பற்ற அரசின் முதல் அமைச்சரே யாகம்- -_ யோகம் -_ கோயில் என்ற வட்டத் துக்குள் சிக்கி இருப்பதால் அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி என்று நினைத்துவிட்டதோ காவல்துறை!
---------------------------------------------------- மின்சாரம் அவர்கள்  21-12-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

40 comments:

தமிழ் ஓவியா said...


ராமேஸ்வரம்: கோவில் தீர்த்தமா? கழிவு நீர்த் தொட்டியா?


உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் குழு அறிக்கை

மதுரை, டிச.21- ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தப் பகுதி, புனித நீராட தகுதியான, தூய்மை யான இடமாக இல்லை. கால்களைக்கூட நனைக்க முடியாது. மாசடைந்துள்ளது' என, வழக்குரைஞர் குழுவினர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கோவை வழக்குரைஞர் வெண்ணிலா, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனு விவரம் வருமாறு: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலைச்சுற்றி, கழிவுகள் தேங்கியுள்ளன. கழிவுகள் அக்னி தீர்த்தப் பகுதியில் கலக்கின்றன. 22 இடங்களில் தீர்த்தமாட, தரகர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அக்னி தீர்த்தத்தை சுத்தப்படுத்த வேண்டும். கோயில் புனிதத் தன்மையை காக்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார். இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக் குரைஞர் குழுவினை, உயர்நீதிமன்றம் நியமித் திருந்தது. நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்திய நாதன் அடங்கிய, அமர்வுமுன், வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்குரைஞர் குழுவினர், அறிக்கையை தாக்கல் செய்தனர்.

அதில் கூறப்பட் டுள்ளதாவது: அக்னி தீர்த்தப் பகுதியில் தேங்கிய நீர், பழுப்பு நிறமாக, துர் நாற்றம் வீசுகிறது. பழைய துணிகள் தேங்கி யுள்ளன. பக்தர்கள், புனித நீராட முடிய வில்லை, என்றனர். விடுதி கள், ஓட்டல்கள், கடை களின் கழிவுநீர் கலப்ப தாக மக்கள் கூறினர். மொத்தத்தில், புனித நீராட தகுதியான, தூய் மையான இடமாக இல்லை; கால்களைக் கூட நனைக்க முடியாது. இடையூறாக, தெரு நாய்கள், மாடுகள் திரிகின்றன. பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகம். கழிவுகளைச் சுத்திகரித்து, கடலில் விடுவதாக ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் தெரிவித்தார். அப்பணி, பெயரளவில் நடக்கிறது. சுத்திகரிக்கப்படும் கழிவுநீரை, தொலை தூர பகுதிக்கு கடத்தி, கடலில் விடலாம்.

கோயிலுக் குள் தீர்த்தமாடும் பகுதியிலும் தண்ணீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை, ஜனவரி 3 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72403.html#ixzz2oA0hNHQ2

தமிழ் ஓவியா said...


மலிவான விளம்பரங்கள்!


மலிவான விளம்பரங்களால் மக்கள் மத்தியில் மலிவாக இடம்பிடிக்கலாம் என்கிற யுக்தியில் மோடி ஈடுபட்டு வருகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் இளைஞர்களை ஈர்ப்ப தற்காக அனைத்து இடங்களிலும் கிராமப் பஞ்சாயத்து முதல் மாநகரங்கள்வரை கிரிக்கெட் போட்டிகளை பி.ஜே.பி. நடத்துகிறது. போட்டியைக் காணவரும் பார்வையாளர்களுக்கு மோடி உருவம் பொறிக்கப்பட்ட காவி நிறச் சட்டை இலவசம் என்று அறிவித்து மக்களை திரட்டுகின்றனர்.

மோடி தொடக்கத்தில் தேநீர்க் கடையில் பணியாற்றியதால், அதைக் குறியீடாக்கி மகாராட்டிர மாநிலத்தில் அவர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு 10 ஆயிரம் தேநீர்க் கடைக்காரர்கள் திரட்டப்படுகிறார்களாம்.

காந்தியார் பிறந்த நாளில் குஜராத் முதலமைச்சர் மோடி என்ன செய்தார் தெரியுமா? காந்தியார் பிறந்த நாளில் (அக்டோபர் 2 இல்) காந்தி குல்லா 25 சதவிகிதம் தள்ளுபடியில் விற்பனை என்று விளம்பரம் செய்யப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், ஷாகாக்களின்போது அணியும் குல்லாவைத்தான் காந்திக் குல்லாய் என்று சொல்லி தள்ளுபடி விலையில் விற்றனர் - இதற்குப் பெயர் மோடி குல்லாய் என்று பெயர் சூட்டியிருப்பது எவ்வளவுப் பெரிய மோசடி! அரசுப் பணத்தில் இப்படி ஒரு பிரச்சாரம்!

மோடி குர்தா என்ற ஒரு சட்டையை விளம்பரப் படுத்தி வருகின்றனர். பருத்தி குர்தா ரூ.1895; லினன் குர்தா ரூ.1900.

முஸ்லிம்கள் அணிவது போன்ற தோற்றம் - முஸ்லிம் மக்களை ஏமாற்றிட!

(இதே மோடிதான் அவர் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் போரா பிரிவைச் சேர்ந்த ஒருவர், அன்பால் கொடுத்த குல்லாவை அணிய மறுத்தவர் என்பதை மறந்திடக் கூடாது!)
நமோ தேநீர்க் கடைகள், நமோ இனிப்புக் கடைகள் என்று தொடங்கப்பட்டுள்ளன. (நமோ என்றால் ந-நரேந்திர; மோ - மோடி என்று பொருளாம்).

இப்படியெல்லாம் விளம்பரம் செய்வதற்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தோடு (Apcoworld in
India) ஒப்பந்தம் செய்து பன்னூறு கோடி ரூபாய்கள் கொட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

டுவிட்டர் தேடுதலில் அமெரிக்க அதிபர் ஒபாமாவைத் தாண்டிவிட்டதாகக் கிளப்பப்பட்ட பொய்த்திரை கிழிக்கப்பட்டதையும் இந்த இடத்தில் நினைவு கொள்க!

மும்பையைச் சேர்ந்த அய்.டி.அய். நிபுணர் ஒருவர் எப்படியெல்லாம் இணைய தளத்தைப் பயன்படுத்தி மோடிக் கும்பல் பொய்ப் பிரச்சாரம் செய்கிறது என்பதை தொழில்நுட்ப ரீதியாக அம்பலப்படுத்தினார்; - இதற்காகவெல்லாம் இந்துத்துவாவாதிகள் வெட்கப்படமாட்டார்கள்.

கழிவறையைச் சுத்தம் செய்வதுபோல மோடியின் படத்தை வெளியிட்டு, கழிவறையைச் சுத்தம் செய்தவர் இப்பொழுது நாட்டைச் சுத்தம் செய்ய வருகிறார் என்று விளம்பரப்படுத்து கின்றனர்.

ஜப்பானில் உள்ள பேருந்து நிலையத்தின் படத்தைப் போட்டு இது குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சியில் அகமதாபாத்தில் உள்ள பேருந்து நிலையத்தின் படம் என்று மோசடிப் பிரச்சாரம் செய்வதை என்னவென்று சொல்ல!

அவருடைய அருமைச் சகோதரர் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சவுகானோ, ஸ்பெயினில் தென்னாப்பிரிக்காவில் உள்ள சாலையையும், ரூர்கேலாவில் உள்ள சாலையையும், மத்தியப் பிரதேசத்தில் உள்ளதாக விளம்பரம் செய்து மலிவாக மக்கள் வாக்குகளைப் பறிக்கவும் செய்தார்.

இந்த மோசடிக் கும்பல்தான் இந்தியாவை ஆளவேண்டுமா? வெகுமக்கள் சிந்திக்கட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/72408.html#ixzz2oA14NwXP

தமிழ் ஓவியா said...


மகாத்மாவைப்பற்றி தமிழ்நாடுவின் கவலை


மகாத்மாவைப்பற்றி தமிழ்நாடுவின் கவலை

தமிழ்நாடு பத்திரிகையானது 16-12-1927ஆம் தேதி உபதலையங்கத்தில் கண்ணோட்டம் என்னும் தலைப்பின் கீழ் ஒரு வியாசம் எழுதி இருக்கின்றது. அதில் ஸ்ரீமான் காந்தி அவர்களை மகாத்மா என்று சொல்லாமல், வெறும் காந்தி என்று சொல்வதால் தனக்குப் பெரிய கவலை ஏற்பட்டு விட்டதாகக் காட்ட வெளிவந்து, உலகம் போற்றும் உத்தமர்களில் மகாத்மா காந்தி ஒருவர் என்றும், அதை மறுப்பவர் ஒன்று இழி குணம்படைத்தவராக இருக்கவேண்டும் அல்லது மதியற்றவர்களாக இருக்கவேண்டும் என்றும் எழுதி யிருக்கிறது.

மகாத்மா காந்தி என்பவரை ஸ்ரீமான் காந்தி என்று சொல்வதால் இழிகுணப் பட்டமும், மதியற்ற பட்டமும் வந்தாலும் வரட்டும் நமக்கு அதைப்பற்றிக் கவலை யில்லை.
ஸ்ரீமான் காந்தி என்றைய தினம் மக்களுக்குள் வருணம் நான்கு உண்டு. அதுவும் அவைகள் பிறவியில் ஏற்படுகின்றன. அந்தந்த வருணத்தானுக்கும் ஒவ்வொரு தர்மம் உண்டு. அதைத்தான் அவனவன் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார் என்பதாக நாம் உணர்ந்தோமோ, அன்றே அவரிடம் மகாத்மா தன்மை அங்கு இல்லையென்று தீர்மானித்துவிட்டோம். அதிலும் சூத்திரன் என்பவன் அடுத்த ஜென்மத்தில், தான் பிராமணனாய் பிறக்கலாம் என்கின்ற அவருடைய தீர்ப்பு சுத்தசுத்தமாய் நம்மை மாற்றியது. மகாத்மா பட்டம் ஒருவரின் அபிப்பிராயத்தையும், நடவடிக்கை யையும் பொருத்துத்தான் வழங்கப்படுவதே தவிர, வெறும் உருவத்திற்காக வழங்கப்படுவதல்ல என்பதை உணர்ந்தவர்களுக்கு இவ்விஷயத்தில் கவலை ஏற்பட நியாயமில்லை. மகாத்மா என்கின்ற பட்டத்தை நீக்கி நாம் எழுத ஆரம்பித்து இன்றைக்கு சுமார் இரண்டு மாதம் ஆகின்றது. இதுவரையும் சகித்துக் கொண்டிருந்த தமிழ் நாட்டிற்கு இந்த வாரம் திடீரென்று கவலை தோன்றி நமது, இழிகுணத்தையும் மகிமையையும் கண்டு பிடித்து எழுதியிருப்பதற்கு இரகசியமான காரணம் இல்லாமல் போக வில்லை. அதைத் தக்க சமயம் வெளியிடுவோம்.

ஒவ்வொரு பட்டமும் அவரவர்கள் அபிப்பிராயத் தாலோ, நடவடிக்கைகளாலோ ஏற்படுவதும், அவைகள் மாறும்போது மறைபடுவதும் வழக்கமாகவே இருந்து வந்திருக்கின்றது. மற்றும் சிலருக்குப் பட்டம் மக்களின் அறியாமையினால் ஏற்படுவதும், விஷயம் தெரிந்த உடன் மறைந்துபோவதும் வழக்கமாக இருக்கின்றது. இது வரையில் எத்தனை பேர்கள் தலைவர்களாகி மறுபடியும் நினைப்பதற்கே அருகற்றவர்களாய்ப் போயிருக் கின்றார்கள் என்பதை யோசித்துப் பார்த்திருந்தால் தமிழ்நாடுவுக்கு இவ்விஷயத்தில் இவ்வளவு கவலை ஏற்பட்டிருக்க நியாயமே இருந்திருக்காது.

தவிர, கடவுளின் அவதாரமாகவும், மகான் தோன்றின தாகச் சொல்லப்பட்ட கிருஷ்ணன் என்பவன் கடைசி காலத்தில் ஒரு காட்டில் ஒரு வேடனால் கொல்லப்பட்டு அழுவாரற்றுச் செத்து நாறிக்கிடந்ததாக வுள்ள விஷயங்களை அறிந்திருந்தால், இம்மாதிரி காரியத்திற் காக ஒருவரை இழிகுணம் என்றும், மதியீனம் என்றும் எழுத நியாயம் கிடைத்திருக்காது என்போம். ஆனாலும், நம்முடைய இந்த சமாதானமெல்லாம் தமிழ்நாடு பத்திரிகைக்கல்ல. ஏனெனில், அது பழைய குப்பையைத் தேடிப் பார்த்து குற்றங்கள் கண்டுபிடிக்கின்ற வேலையில் முனைந்து இருக்கின்றது. ஆதலால், அதற்கு இச்சமாதானங்கள் ஒரு உணர்ச்சியையும் கொடுக்காது என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதைக் கண்ணுற்றவர்கள் ஏமாறாதிருக்கவே இதை எழுதுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 25.12.1927

Read more: http://viduthalai.in/page-7/72426.html#ixzz2oA1z7wU7

தமிழ் ஓவியா said...

காங்கிரஸ் துவேஷமாம்!

சென்னை கார்ப்பரேஷன்காரர் காங்கிரஸ் பொருட்காட்சிக்கு ரூபாய் கொடுக்கக்கூடாதென்று ஜஸ்டிஸ் கட்சியார் ஆட்சேபித்ததற்காக அவர்களை காங்கிரஸ் துவேஷிகள் என்று பார்ப்பனப் பத்திரிகைகள் விஷமப் பிரச்சாரம் செய்கின்றன. காங்கிரஸ் பொருள் காட்சியென்ற பெயர் வைத்துக்கொண்டு, காங்கிரஸ் பெயரால் வெள்ளைக்காரர்கள் பொருள்களைக் காட்சி சாலை வைப்பதாக வெள்ளைக்கார கம்பெனியிடம் ரகசியமாய் ஒப்பந்தம் பேசி லஞ்சம் வாங்கிக் கொண்டு இவர்கள் நடத்தும் பொருட்காட்சிக்குப் பணம் கொடுக்கா விட்டால் அதற்குப் பெயர் காங்கிரஸ் துவேஷம் என்றால் அதற்கு நாம் பயப்படுவதா என்கின்றோம். பட்டாஸ் வெடி விற்றுத்தருவதாகவும், கற்பூரம் விற்றுத்தருவதாகவும் சைனாக்காரரிடம் ஒப்பந்தம் பேசி கூலி வாங்கிக்கொண்டு பண்டிகையும் பூசையும் பார்ப்பனர் ஏற்படுத்தி இருந்தால், பட்டாசு வாங்காதீர்கள் கற்பூரம் கொளுத்தி புகையாக்காதீர்கள், என்று நாம் சொன்னால் அது மததுவேஷமும் சாமி துவேஷமும் ஆகுமா என்று கேட்கின்றோம். இந்தப் பார்ப்பனர்கள் இப்படியே நம்மை மிரட்டி ,மிரட்டி கை கண்டுவிட்டாலும் நம்மில் சில கேனர்களும் வயிற்றுச் சோற்று ஆசாமிகளும் அவர்களுடன் சேர்ந்து திரிவதாலும் பார்ப்பனர் சொல்வதெல்லாம் செலாவணியாகி வருகிறது. இன்னும் அப்படி நடக்கப் பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றீர்களா? சுயமரியாதைக்காக உயிர் விடப்போகிறீர்களா என்று கேட்கின்றோம்.
- குடிஅரசு - கட்டுரை - 11.12.1927

Read more: http://viduthalai.in/page-7/72426.html#ixzz2oA2Ismgw

தமிழ் ஓவியா said...

மனுதர்ம சாஸ்திரம்

சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகு மக்களுக்கு எங்கு பார்த்தாலும் மனிதரின் சுயமரியாதைக்கு விரோதமான ஆதாரங்களை ஒழிப்பதில் கவலையும், ஊக்கமும் அதிகமாகி வருகின்றது. சென்னை, வட ஆற்காடு, சேலம், தஞ்சை, திருநெல்வேலி, மதுரை முதலிய இடங்களில் கூடிய பல மகாநாடுகளில் வர்ணாசிரம தர்மம் என்பதைக் கண்டித்திருப்பதுடன், அதற்கு ஆதாரமான புஸ்தகங்களையும் பகிஷ்கரிக்கத் தீர்மானங்களும் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன. சில மகாநாடுகள் மனுதர்ம சாஸ் திரத்தை நெருப்பில் கொளுத்தி சாம்பலைக் கரைத்தும் வந்திருக்கின்றன.
அரசாங்கமும் சட்டசபை மெம்பர்களும் இதைக் கவனிக்கப் போகிறார்களா என்று தீர்மானிக்க முடியவில்லை. பழைய காலமாயிருந்திருக்குமானால் இம்மாதிரி பெரும்பான்மையான மக்களுக்கேற்பட்டிருக் கும் உணர்ச்சியை மதித்து அரசாங்கமானது வருணா சிரமத்தை அழித்துச் சட்டம் செய்திருக்கும் என்பதோடு வருணாசிரமக் கொள்கைக்காரர்களை கழுவிலேற்றி இருக்கும் என்றுங்கூட சொல்லலாம். ஏனெனில், நிரபராதிகளான 8,000 சமணர்கள் கழுவேற்றப்பட்டதாக சொல்லும் சரித்திரத்தைப் பார்க்கும்போது இவ்வளவு அக்கிரமும், ஜீவகாருண் யமும் அறிவும் அற்ற தன்மையான கொடுமையை சகித்துக் கொண்டிருக்கும் என்றும் யாரும் சொல்ல முடியாது. நமது அரசாங்கங்கள் பழையகால அரசாங்கங் களைப் பின்பற்றிக் கழுவேற்றாவிட்டாலும் சட்டமூலம் கொடுமைகளை ஒழிக்கவாவது உதவவேண்டாமா என்று கேட்கின்றோம். ஒருக்கால் மத விஷயத்தில் தலை யிடமுடியாது என்று சொல்வார்களானால், மத விஷயங் களையாவது கவனித்து மதத்தில் எப்படி சொல்லியிருக் கின்றதோ யார் யாருக்கு என்ன என்ன வேலை இடப்பட்டிருக்கின்றதோ, யார் யாரின் நடத்தை எப்படி இருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருக்கின்றதோ அப்படியாவது நடக்கும்படி பார்க்கவேண்டும். அப்படியும் இல்லாமல் இப்படியுமில்லாமல் பார்ப்பானும் வெள்ளைக்காரனும் மாத்திரம் பிழைக்க என்ன என்ன மாதிரி நடக்க வேண்டுமோ, எப்படி எப்படி சீர்திருத்தம் செய்யவேண்டுமோ அப்படியெல்லாம் சூழ்ச்சிகள் செய்துகொண்டு மதவிஷயத்தில் பிரவேசிக்க மாட்டோம் என்று சொல்வது வடிகட்டின அயோக்கியத்தனமாகு மென்றே சொல்லுவோம்.

இச்சூழ்ச்சிகளைப் பார்க்கும்பொழுது, இது சமயம் மகம்மதிய அரசாங்கத்தில் வாழும் யோக்கியதையாவது நமக்குக் கிடைக்காதா என்று ஆசைப்பட வேண்டிய தாயிருக்கின்றது. காரணமென்னவென்றால், வீரர் கமால்பாட்சா அவர்கள் ஒரு அரச விசாரணைக்கு குரானை ஆதரவாக காட்டியபோது அது அக்காலத்து சங்கதி இக்காலத்திற்கு செல்லாது என்று அதைப் பிடுங்கி வீசி எறிந்தாராம். குரான் வாக்கியம் செதுக்கப் பட்ட இடங்களையெல்லாம் அழித்து சுயமரியாதை யையும், கைத்தொழிலையும் கவனியுங்கள் என்று எழுதிவருகிறாராம். மகம்மதியரைவிட வெள்ளைக் காரருக்கும் பார்ப்பனர்களுக்கும் மத பக்தியிருக்கின்றது என்று சொன்னால் எந்த பைத்தியக்காரராவது நம்பமுடியுமா என்று கேட்கின்றோம்.

எனவே, மதம் என்கிற புரட்டுகளையும், மதாச் சாரியர்கள் என்கின்ற அயோக்கியர்களையும் சாஸ்திரம், வேதம், புராணம் என்பவைகளாகிய அதர்ம அக்கிரம, ஆதாரங்களையும் குருட்டுத்தனமாய் பின்பற்றாமல் அன்பு, ஜீவ காருண்யம், அறிவு, சத்தியம் என்பவைகளை ஆதாரமாய் வைத்து அவற்றிற்கு விரோதமாய் உள்ளவை களையெல்லாம் அடியோடு ஒழிப்பதற்கு முற்பட வேண்டியது தான் பகுத்தறிவுள்ள மனிதனின் கடமை, ஆதலால், அதற்கு ஒவ்வொருவரும் முற்பட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் 04.12.1927

Read more: http://viduthalai.in/page-7/72426.html#ixzz2oA2ObGke

தமிழ் ஓவியா said...

இவர்கள்தான் சாமியார்கள்

கும்பமேளாவில் கூடிய சாதுக்களிடம் காணப்பட்ட பொதுவான அம்சம் யாதெனில் சோறு, தண்ணீர், தூக்கம்கூட இல்லாமல் இருந்து விடுவர். ஆனால், நீள்போதை தரும் கஞ்சாவை புகைக்காமல் இருக்க மாட்டார்கள்.

-தினமலர் 4.3.2013 பக்கம் 16

தமிழ் ஓவியா said...


சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி


மின்சாரம் சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம் கொண்டு வர ஜப்பான் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டதில் புருஷிமா அணுஉலை வெடித்து சிதறியது. அதனால் அங் குள்ள அணுமின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

எனவே, நாட்டின் மின் தேவைக்கு விஞ்ஞானிகள் மாற்று வழியை உருவாக்க முயற்சி செய்கின்றனர். இந்த வகையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தீவிரப்படுத்த உள்ளனர்.

பூமியை பொறுத்தவரை எப்போ தும் சூரிய ஒளி கிடைப்பதில்லை. பகலில் மட்டுமே கிடைக்கிறது. மோசமான தட்ப வெப்பநிலை மேக மூட்டம் இருந்தால் அதையும் முழுமையாக பெற முடியாது.

எனவே, சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர ஜப்பானில் உள்ள ஷிமிஷூ கார்ப்பரேசன் என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியை சுற்றிலும் சோலார் பேனல் தகடுகளை சீராக அமைத்து அதன் மூலம் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர திட்டமிட் டுள்ளது. அதற்கு ஜனாரிங் என பெயரிட்டுள்ளனர்.

இதன் மூலம் 13 ஆயிரம் டெரா வாட் மின்சாரத்தை தயாரித்து பூமிக்கு கொண்டு வர முடியும். ஒரு டெராவாட் என்பது 1 லட்சம் கோடி வாட் ஆகும். இந்த திட்டத்தின் கட்டுமான பணி வருகிற 2035ஆம் ஆண்டில் தொடங் கப்பட உள்ளது.
தொடர்ந்து மின்சாரம் தயாரிக்க சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் 11 ஆயிரம் கி.மீட்டர் பரப்பரளவில் 400 கி.மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே சோலார் மின்கலன்கள் அமைக்கப்பட உள்ளன.

சந்திரனில் சோலார் பேனல் தகடுகள் மற்றும் சோலார் மின் கலன்கள் அமைக்கும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் அமைக்கப்படும் சோலார் பேனல் தகடுகள் கேபிள்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் மைக்ரோவேவ் மற்றும் லேசர் டிரான்ஸ்மிசன் நிலை யங்களில் இணைக்கப்படும். பின்னர் அவை 20 கி.மீட்டர் விட்டமுள்ள ஆண்டனாக்கள் மூலம் பூமிக்கு வரும்.

Read more: http://viduthalai.in/page3/72047.html#ixzz2oA3NtXZv

தமிழ் ஓவியா said...


மாலையும் மனுதர்மமும்


- மு.வி.சோமசுந்தரம்

கடவுளை மற! மனிதனை நினை! மனித இனம் நசுக்கப்படாமல் இருக்க நலிந்து போகாமல் இருக்க, சுயமரியாதையுடன் வாழ சுயசிந்தனையாளர் தந்தை பெரியார் அவர்கள் காட்டிய நல்வழிதான் மேலே சுட்டிக்காட்டிய அறிவார்ந்த முழக்கம்.

மானுடத்தின் மதிக்கத் தக்கவரான மாதரை மண்புழுவாக மிதிக் கும் மனப்போக்கை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தவர் பகுத் தறிவுப் பகலவன் பெரியார், குரல் கொடுத்ததுடன் அமையாது, பெண் குலம் சீர்குலைத்து போனதற்கான காரணத்தை, நோய் நாடும் சமூக மருத்துவராக 1.1.1942-இல், பெண் ஏன் அடிமையானாள்? என்ற கருத்துக் கருவூலமான புத்தகத்தை நமக்களித்தார் பெரியார்.

பெண்களை அடிமைபடுத்தும் சூத்திரத்தின் (Trick) மூலாதாரம் எங்கே உள்ளது? அதைத்தான் நமது மானமிகு ஆசிரியர் அவர்கள், அந்த புத்தகத்தின் அறிமுக உரையில்:

பெண்களை, சூத்திரர்களான நாலஞ் ஜாதியினரைவிடக் கீழாக மதிக்க வேண்டியவர்கள் என்கின்றது மனுதர்மம்!

எனவே மனுதர்மம் பெண்களை முடமாக்கிய போலியோ வியாதிக் கிருமி.

இந்த புத்தகத்துக்கு முகவுரை எழுதிய தந்தை பெரியார், இந்த புத்த கக் கருத்துகள், இன்றைய நிலையில், எந்த மதத்திற்கும் எந்த தேச மக்களுக்கும், எந்த சமூகத்தாருக்கும் பயன்பட்டாக வேண்டும் என்பதே நமது கருத்தாகும். என்று தம் எண்ணத்தைத் தெளிவுபடுத்துகிறார்.

அய்யா அவர்கள் குறிப்பிட்டுள்ள எந்த தேச மக்களுக்கும், எந்த சமூகத்தாருக்கும் என்று 1942-ஆம் ஆண்டு குறிப்பிட்டுக் கூறியதற்கு நல்லதொரு கண்விரித்து (அறிவுக் கண்) பார்க்கத்தக்க ஒரு விளக்கச் செய்தியைக் கூறுவோம்.

இங்கிலாந்து நாட்டு இளவரசர் பிரின்ஸ் சார்ல்ஸ், அரசி எலிசபத் அய்அய் சார்பில் கொழும்பில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள புறப்பட்டவர், இந்தியா வுக்கும் வந்துள்ளார். அவருடன் அவர் இணையர் கேமில்லா பார்க் கர் பவல்ஸ் அவர்களும் வந்துள் ளார்கள். சுற்றுலா பயணிகளாக இந்தியாவின் வரலாற்று தொடர் புடைய இடங்களுக்கும், ஆன்மீக வாதிகளால் வழி காட்டப்படும் புண்ணியத் தலங்களுக்கும் சென்று புதிய காட்சிகளைக் கண்டும், புதிய அனுபவங்களையும் பெற்று சுற்றி வருகின்றனர். கங்கை ஆற்றின் படித் துறையில், காவி உடை, தாடி சாமி யார்கள், ஆரத்தி எடுத்து ஆலாபனம் செய்ததையும் கண்டார்கள் (ஆகமம், ஆசாரம், சாஸ்திரம், எல்லாம் இங்கே ஊமைகளாயின).

அரச குடும்பத்து பெருமக்கள் இருவரும் ரிஷிகேஷ் செல்லும்முன், டேராடூன் விமான நிலையத்திற்கு வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு மாலை அணிவித்து ஒளிப்படம் எடுக்கப்பட்டு, அந்த படம் டைம்ஸ் ஆப் இந்தியா (10.11.2013) இதழில் வெளிவந்துள்ளது.

இந்த ஒளி படத்தை முதன்மைப் படுத்தி சிறந்த கட்டுரையாளர் எம்.ஜே.அக்பர் நம் கண்ணுக்கு பட்டும், கருத்துக்குத் தட்டுபடாத ஒன்றை குறிப்பிட்டு (ஈரோட்டு பார்வையில்) ஒரு வினாவை எழுப்புகிறார். அவர் எழுப்பிய வினா

ஏன் பிரின்ஸ் சார்லஸ்சும், கேமிலா பார்க்கர் பவஸ்சும் ஒரே அளவான மாலை அணிந்திருக்க வில்லை?

இது ஒரு கேள்வியா? என்று தோன்றக்கூடும், என்னதான் விலைவாசி கடுமையானாலும் ஒரே அளவு மாலை அணிவிப்பதால் செலவு அதிகமாகி இருக்காது (அதுவும் அரச குடும்பத்தவருக்கு) என்று அக்பர் சுட்டி காட்டுகிறார். ஏன் கணவன் மனைவி இருவருக்கும் ஒரே மாதிரியான வரவேற்பு கொடுக்கவில்லை? அக்பர் அவர்கள் காரணத்தைப் பிட்டு வைக்கிறார்.

இந்தியர்களாகிய நாம், ஆண் களையும் பெண்களையும் சமமாகக் கருதுவதில்லை. சார்லஸ் அணிந் திருக்கும் மாலை, பல சரங்களுடன், முழங்கால் அளவு நீண்டுள்ளது. கோமிலாவின் மாலை, சன்னமாக தொப்புள் அளவே உள்ளது. அரசு அதிகாரிகளுக்கும், சாதாரண இந்தியர்களுக்கும் இது விளங்காது.

இதை விளக்குபவர்கள் தந்தை பெரியாரும், தமிழர் தலைவரும் தான். இதுதான் மன்னர்களையும் மடக்கிபோடும் மனுதர்மம்.

முடி சூட்டி வாழும் மன்னவர் குடும்பத்தினர் ஆனாலும், அரண் மனை வாழ்க்கை வாழ்ந்தாலும், ஆரியத்தின் மனுதர்ம மகுடி இசையின் மறை பொருளைக் கண்டு கொள்வதில்லை. இந்தியா, விக்டோ ரியா மகாராணியின் நேரிடை ஆளுமையின் கீழ் வந்தபோதே இந்த அணுகுமுறை அறிமுகமாக்கப்பட் டதுதானே.

ஆங்கிலேயர் நம் நாட்டைவிட்டு வெளியேறி மண்ணடிமைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், சமூக சமத்துவம் பெற்று, முடிவில்லா கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், சமூக சமத்துவம் பெற்று, முடிவில்லா கொடுமைக்கு முற்றுப்புள்ளி என்றோ என்று ஏங்கும் நிலைதானே உள்ளது. உண்மை மண்ணடிமை எப்பொழுது மறையும்? இதோ பாவேந்தரின் பதில்:

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டின்
மண்ணடிமை தீர்தல் முயற்கொம்பே,

கூடுதல் செய்தி: டேராடூனில், அரச குடும்பத்தினரின் காமிலாபார்க் கருக்கு மெலிந்த குட்டையான மாலையாவது கொடுத்தார்கள். கேரளாவில் அந்த மரியாதையும் காணமுடியவில்லை. பிரச்சினை ஏதும் இல்லை. மகிழ்ச்சியுடன், இள வரசரின் 65-ஆவது ஆண்டு பிறந்த நாளைக் கேரளாவில் கொண்டாடி னார்கள்.

Read more: http://viduthalai.in/page4/72383.html#ixzz2oA3t6SUZ

தமிழ் ஓவியா said...

தொழிலாளி என்பவன் தன்னுடைய உடல் உழைப்பை
வயிற்றுப் பிழைப்பிற்காக விற்பவன்.

தன்னுடைய உழைப்பைத் தன்னுடைய இச்சைப்படித் தன் காரியங்களுக்கேற்ற வசதிப்படி
நடத்துபவன் முதலாளி.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...


பொன்மொழிகள்


தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல் வியுறுவான். - நெப்போலியன்

###

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்

###

மதம் எப்போதும் கலைகளுக்கும், ஆராய்ச்சிக்கும், அறிவியலுக்கும் எதிரியாக இருந்து வருகிறது. - இங்கர்சால்

Read more: http://viduthalai.in/page5/72385.html#ixzz2oA4KlMPF

தமிழ் ஓவியா said...


ஒழிக்கப்பட வேண்டியவை


1. மக்களிடம் உள்ள உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால் வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும் கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால் லைசன்ஸ், பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில்துறையில் தொழிலாளர்களிடையே சுகமும், நாணயமும், பொறுப்பும் ஏற்பட வேண்டு மானால், லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் கூட்டம் ஒழிக்கப்பட வேண்டும்.

7. அய்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பது ஒழிக்கப்பட வேண்டும்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page5/72387.html#ixzz2oA4X8AO1

தமிழ் ஓவியா said...


ஒழிக்கப்பட வேண்டியவை


1. மக்களிடம் உள்ள உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால் வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும் கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால் லைசன்ஸ், பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில்துறையில் தொழிலாளர்களிடையே சுகமும், நாணயமும், பொறுப்பும் ஏற்பட வேண்டு மானால், லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் கூட்டம் ஒழிக்கப்பட வேண்டும்.

7. அய்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பது ஒழிக்கப்பட வேண்டும்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page5/72387.html#ixzz2oA4X8AO1

தமிழ் ஓவியா said...


கிருஷ்ணகிரியில் அரிய கீறல் ஓவியங்கள்


கிருஷ்ணகிரி மாவட் டத்தில், காவேரிப்பட்டி ணத்திற்கு அருகில் உள்ள தட்டக்கல் கிராமம், ஆண்டி குட்டை, கம்பத்து மலை மற்றும் கோட்டைமலை சேரும் இடைப்பகுதியில் உள்ள பழங்கற்கால குகை வாழ்விடம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இக்குகை வாழ்விடத்தில் அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறைக் கீறல்களில் வரை யப்பட்ட காட்சிகள் கிடைத் துள்ளன.

சமீபத்திய பெண்ணை யாறு தொல்லியல் சங்கம் மற்றும் அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மய்யம் ஆகிய இரு வரலாற்று ஆய்வு அமைப்புகளும் இப்பகுதியில் கள ஆய்வினை மேற்கொண் டன. சுகவனமுருகன், சதானந்தம் கிருஷ்ணகுமார், ரத்தினவேலு மற்றும் முனுசாமி ஆகியோர் ஆண் டிக்குட்டைக்கு கீழே இரு ளன்குண்டு என்ற கற்கால குகை வாழ்விடத்தை கண்டு பிடித்து ஆய்வு செய்தனர். இக்குகையில் 8 அடி உயரத் தில் 6 அடிக்கு 6 அடி பரப் பில் வேட்டைக் காட்சிகளும், கொண்டாட்ட காட்சிகளும் வெண்சுண்ணத்தில் பாறை ஓவியங்களாகத் தீட்டப்பட் டுள்ளன. மொத்தம் 21 ஓவியங்கள் உள்ள இந்த ஓவியத் தொகுப்பு பெருங் கற்காலத்தைச் சேர்ந்ததாகும்.

ஓரிரு இடங்களில் மங்கிய செங்காவித் தீற்றல்கள் இக்குகையில் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஓவியக் காட்சிகள் வரையப்பட்டுள்ள பாறை யின் அடியில் தரைத்தளத் திலிருந்து 5 அடி உயரத்தில் உள்ள மற்றொரு தங்குமிட மாக உபயோகப்படுத்தப்பட்ட பாறையில் பாறைக் கீறல்களாக (பெட்ரோ கிளிப்) இரண்டு ஓவியங்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இரு மனிதர்களின் கொண்டாட்ட காட்சி பாறைக் கீறல்களாக கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே முதன் முறையாகும். தமிழகத்தில் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய பாறைக்கீறல்கள் பெருமுக்கல் மற்றும் தண்டராம்பட்டு ஆகிய இடங்களிலும், கேரளாவில் எடக்கல் குகையில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. ஆனாலும் பாறைக் கீறல்களில் வேட்டை மற்றும் கொண்டாட் டக் காட்சிகள் கொண்ட தொகுப்பு தற்போது தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது தமிழக தொல்லியல் வரலாற்றில் முக்கியமான மைல் கல்லாகும் என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இப்பாறைக் கீறல்களில் இரு மனிதர்கள் கைகோர்த்து இருப் பது போலவும், ஒரு நாட்டியக் காட்சியை சித்தரிப்பதாகவும் யூகமாகச் சொல்லலாம். இவ்விருவருக்கும் மேலே இரண்டு வட்டங்கள் நடுவில் குழியுடன் கீறப்பட்டிருக்கின்றன. ஒரு வட்டமிடப்பட்ட குழி சூரியனாகவும், மற்றொன்று நீர்நிலையாகவும் இருக்க வாய்ப்புள்ளது. காலடியில் உள்ள ஒரு கீறல் பாம்பாக இருக்கலாம் மேலும் இவர்கள் காலடியில் சில கீறல்கள் தற்சமயம் அடையாளப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள் ளது. இப்பாறைக் கீறல்கள் உள்ள பாறைக்குமேல் பகுதியின் குகை விதானத்தில் வரலாற்று காலத்திற்கு முந்தைய 21 ஓவியங்கள் உள்ள தொகுப்பு காணப்படுகிறது. இதில் வேட் டைக்கு செல்வதும், சில விலங் குகளும், சில கொண்டாட்டக் காட்சிகளும் சித்தரிக்கப்பட்டுள் ளன. குகை வாயிலிலிருந்து பார்க்கும் பொழுது ஓவியங்கள் மட்டுமே தெளிவாக காண இயலும். இவ்வரிய பாறை கீறல் களை தங்கும் பாறையின்மீது அமர்ந்தால் மட்டுமே பாறை அடித்தளத்தில் காண இயலும்.

மேலும் பெருங்கற்காலத்திற் கும் முந்தைய இப்பாறைக் கீறல்கள் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இப்பகுதியில் காவேரிப்பட்டி னம் பெண்ணையாறு தொல் லியல் சங்கமும், தருமபுரி அதியமான் வரலாற்று ஆய்வு மய்யமும் கள ஆய்வினை மேற்கொண்டு வரலாற்று காலத்திற்கு முந்தையச் சான்றுகளை ஆவணப்படுத்தி வருகின்றனர்.

தகவல்: கோ. திராவிடமணி, செய்தியாளர் விடுதலை கிருட்டிணகிரி

Read more: http://viduthalai.in/page5/72386.html#ixzz2oA53hGTD

தமிழ் ஓவியா said...


தவிப்பு

எழுபத்து மூன்று திசம்பரில் எந்தை

அழவைத்தார் துன்பில் அமிழ்ந்து (24.12.1973-இல் பெரியார் இயற்கை எய்தினார்)

நெக்குருகி நெஞ்சம் நினைவுதடு மாறினரே

திக்கெட்டும் மக்கள் திகைத்து நாடே கலங்கியன்று நாற்றிசையும் துன்பத்தின்

ஊடே உழன்ற(து) உணர். முடிப்பு

இன்றில்லை நம்பெரியார்! ஏக்கப் பெருமூச்சில்

நின்றிருக் கின்றோம் நினைந்து நான்குபத்(து) ஆண்டுகளா நம்பெரி யார்மறைந்து?

கூன்நிமிர்ந் தோமாநாம் கூறு பெரியார் பெரியாரே! பேசுவோம் யாண்டும்

உரியார் நமக்கவரே! ஓர் கருஞ்சட்டைப் போர்படை கண்டார் பெரியார்

செருக்கோ டிருக்கச் செறிந்து வழுவாப் பகுத்தறிவார்! வாய்த்தாரே நம்மின்

எழுச்சிக்கும் வித்தவரே! ஏத்து அறிந்துணர்ந் தென்றும் அகத்துள் பெரியார்

நெறிநிற்போம் வாரீர்! நிலைத்து பிறந்தநாள் இன்று பெரியார்க்கு! வாரீர்!

சிறக்கவே வாழ்த்துவோம் சேர்ந்து

- பெரியார் பெருங்கவிஞர் கருவூர்பாரி

Read more: http://viduthalai.in/page5/72388.html#ixzz2oA5EcMtu

தமிழ் ஓவியா said...


கோயில்களுக்குள் பார்ப்பனர்கள் புகுந்தது எப்படி


தென்னாட்டுத் திராவிட மன்னர்களால் சைவ, வைணவ மடங்களும் ஏற்படுத்தப்பட்டு அவற்றுக்குப் போதுமான சொத்துக்கள் விடப்பட்டு, சைவ, வைணவப் பெரியோர்களால் பரிபாலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்காலப் பிராமணர்கள் தந்திரமாகத் தங்களுடைய செல்வாக்கால் ஷிநீலீமீனீமீ ஷிவீ என்ற பெயரில், நீதி மன்றத்திலே ஒரு வழக்குத் தொடர்ந்து இராமேசுவரம், குன்றக்குடி, வைத்தீசுவரன் கோயில் போன்ற கோயில்களைத் தங்களின் ஆளுகையின் கீழ், கொண்டு வந்திருக்கிறார்கள்.

அதுவரையில் மடாதிபதிகளாக இருந்த மற்றவர்களிடம் அதன் ஆளுகை இருந்தது.

திருக்கோயிலில் நைவேத்தியம் பிராமணரே செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்து அவர்கள் உரிமை கொண்டனர்.

அரசாங்கம் கோவில் முதலிய மத விஷயங்களில் பிரவேசிக்கவில்லை என்று சொல்லியிருந்தும், வெள்ளைக்காரன் ஆட்சியில் பிராமணர்கள் தங்களுடைய செல்வாக்கால், திராவிடர்களால் ஏற்படுத்தப்பட்ட தரும சொத்துக்களில் இருந்து பொருள் எடுத்துத் தங்களுடைய ஜாதியர்களுக்கே பயன்படும் வகையான சமஸ்கிருதக் கலாசாலைகளை நடத்தி வருகிறார்கள்.

தளவாய் எம்.டி.சுப்பிரமணிய முதலியார் சொல்கிறார்:

கோயில் கட்டினவன் தமிழன்;
விக்கிரகமோ தமிழனைப் போல,

பாரம்பரியமாக நடைபெற்றதோ தமிழ் வழிபாடு
அதற்கு உரிமை உள்ளவர்கள் பண்டாரங்கள்
அல்லது அறங்காவலர்கள்.
ஆனால் ஸ்கீம் சூட் போட்டு அதை எடுத்துக் கொண் டவர்களோ, அவைகளுக்கு வந்த பெரிய வருமானத்தைச் சமஸ்கிருதக் கல்விக்கும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

இந்து மதப்பெயரால்தான் அந்த வேலையினைச் செய்ய முடியும்.

மேலும் 200 அல்லது 300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டிலே பலபேர் ஜாதி உயர்வு பெற சற்சூத்திரன் என்ற பெயரைத் தங்களுக்கு உரியதாக மேற்கொண்டார்கள்.

பிராமணர்களைப் போல் நடிக்கும் பிராமணர் அல்லாதார்களைக்கூட மிருகத்துக்கும் கேவலமாக மதித்து நடத்தி வந்தவர்களே பிராமணர்.

நாட்டின் பூர்வீகக் குடிகளெல்லாம் பஞ்சமர்களாய்த் தாழ்த்தப்பட்டோர்கள்.

இங்ஙனம் தாங்கள் வசிக்கும் வீதிகளிலும் பொது வீதிகளிலும் மேற்படி திராவிடக்குடிகளை வர விடாது தடுத்தும், கல்வி, ஞானம் முதலியவற்றைக் கொடுக்க மறுத்தும் வருவது, ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டிருந்த காலத்திலும் நடந்தது.

(திராவிட இயக்கம் சென்னைப் பல்கலைக்கழகம் கருத்தரங்குத் தொடக்கப் பேருரை: பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் 53-ஆம் பக்கத்தில் இருப்பது)

- தகவல்: க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page5/72398.html#ixzz2oA5SpJB9

தமிழ் ஓவியா said...


அர்ச்சகர் என்ன கூறுகிறார்?

தேவாரம் படித்த, பாடிவரும் ஒரு தலித் தமிழச்சிக்கு அரசு உத்தரவு கிடைத்தும் ஓதுவார் பணிக்கு செல்ல இயலாமல் தடுமாறும் நிலையில்... அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவைப்பற்றி... வேதவிற்பன்னரும் தமிழ் அர்ச்சனைக்காக பல்லாண்டு காலம் போராடி வருபவருமான அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரிடம் கேட்டோம். மகாஜனஹா ஏன கதாஹா சபந்தஹா - என்கிறது வேதம் அதாவது... பொதுஜனம் என்ன சொல்கிறார்களோ, கேட்கிறார்களோ அதன்படி செல் என அர்த்தம். அதுப்படி பார்த்தால் பொதுஜனங்கள் இப்போது தேர்ந்தெடுத்திருக்கிற கருணாநிதி மந்திரிசபை எல்லா ஜாதிக்காரர்களும் அர்ச்சகர்கள் ஆகலாம் என முடிவெடுத்து அறிவித்திருப்பது வேதவாக்கு. ஆகமத்தைச் சொல்லி மற்ற ஜாதிக்காரர்களை பிராமணர்கள் கோயிலுக்குள் விடாமல் இருந்தார்கள் ஆனால் உண்மை என்னவென்றால் பிராமணனுக்கும் ஆகமத்துகுமே முரண்பாடு தான்.

ஆகமம் உருவ வழிபாட்டைச் சொல்கிறது. ஆனால், பிராமணனுக்கு வேதம் சொன்னது உருவ வழிபாடு அல்ல. இயற்கை வழிபாடுதான். அருகம்புல் முதல் சூரியன் வரை பிராமணனின் வழிபாடுகள் எல்லாம் இயற்கை வழிபாடே. அப்படிப்பட்ட பிராமணன் தனக்கு எதிரான ஆகமத்தின் பெயரைச் சொல்லியே மற்ற ஜாதிக்காரர்களை உள்ளே விட மறுத்து வந்தான். ஆனால் உண்மையில் பாஞ்சராத்ர ஆகமப்படி ஜாதி தத்துவமே இல்லை. பிராமணர்கள் வேதத்தை எதிர்த்த ஆகமத்தையே, தங்களுக்காக பயன்படுத்திக் கொண்டனர். அதனால் ஆகமப்படியே பார்த்தாலும், யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம், பிராமணர் இதையே தன் தொழிலாக்கிக் கொண்டதால் மற்ற யாரையும் உள்ளே விடவில்லை. ராமசாமி நாயக்கர் அந்தக்காலத்தில் என்னிடம் ஒரு வார்த்தை கேட்டார். தாத்தாச்சாரியாரே எங்க கையால ஒரு பூவை எடுத்து உங்க சாமிக்கு போடக்கூடாதாய்யா? என்று அந்தப்பூவை இப்போது கருணாநிதி எடுத்துப் போட வைத்திருக்கார். இது வரவேற்க வேண்டிய ஒரு சீர்திருத்த விஷயம். இதை யாராவது ஆட்சேபித்தால் அவர்கள் மக்கள் முன்னேற்றத்தை தடுக்கிறார்கள்னு அர்த்தம். அவர்களுக்கு நாம்தான் நல்ல புத்தி சொல்லி திருத்த வேண்டும் என்று கையை உயர்த்தி இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார் தாத்தாச்சாரியார்.

- ஆரா, நக்கீரன் 27.05.2006, பக்கம் 25

Read more: http://viduthalai.in/page5/72400.html#ixzz2oA5qLRS0

தமிழ் ஓவியா said...


அஞ்சல் மூலம் ஆசீர்வாதமாம்


திருமலை ஏழுமலை யானின் ஆசீர்வாதத்தை அஞ்சல் மூலம் பெறும் திட்டத்தை அஞ்சல்துறை மீண்டும் தொடங்கியுள்ளது.

திருமலை ஏழுமலையா னுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் இனி அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

இத்திட்டம் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் செயல் அதிகாரி, திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி என்ற பெயரில் பணவிடை (மணியார்டர்) அனுப்பினால் பக்தர்களின் காணிக்கைகள் திருமலையை அடைந்தவு டன் 3 நாள்களுக்கு பின் மணியார்டர் பெறப்பட்டதற் கான ரசீதும், ஏழுமலையா னின் திருவுருவப் படமும், கல்யாண உற்சவ அட்சதை யும் தேவஸ்தான கவரில் அனுப்பி வைக்கப்படும். இதற் காக தலைமை அஞ்சலகத் தில் ஆசீர்வாதம் என்று ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை ஆண்டு களாக சரிவர செயல்படாமல் இருந்த இந்த திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ள னர். மேலும் மாவட்ட வாரி யாக செயல்பட்ட இந்த திட் டம் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங் களுக்கும் விரிவுபடுத்தப்பட் டுள்ளது. முன்னர் 10 ஆயிரம் பக்தர்கள் பயன் பெற்ற இந்த திட்டத்தின்மூலம் தற்போது 40 ஆயிரம் பக்தர்கள் பயன்பெறுகின்றனர்.

மேலும் திருப்பதிக்கு அருகில் உள்ள ஸ்ரீகாள ஹஸ்தி கோயிலிலும் வெகு விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர் - என்று செய்தி தினமணியில் வெளி வந்துள்ளது (21.12.2013).

பக்தி என்பது ஒரு வியாபாரம், சுரண்டல் என்பது அதன் தொழில் என்று நாம் சொன்னால் பற்களை நறநற வென்று கடிப்போர் உண்டு.

இப்பொழுது திருப்பதி தேவஸ்தானம் இந்தச் செய லுக்கு என்ன நாமகரணம் சூட்டப் போகிறதோ!

துக்ளக் இதழில் திருவாளர் சோ ராமசாமி எழுதிய பதில்தான் இந்த நேரத்தில் நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

கேள்வி: சென்னை தீவுத் திடலில் திருப்பதி ஏழுமலை யான் சீனிவாச திருக்கல்யா ணம் உற்சவம் நடைபெற்றது பற்றியும், அதில் லட்சக்கணக் கான பக்தர்கள் பங்கு பெற் றது பற்றியும் தங்கள் கருத்து?

சோ பதில்: இவ்வளவு கட்டணம் செலுத்தினால் வெங்கடேஸ்வரப் பெரு மாளை உங்கள் வீட்டிற்குக் கொண்டு வந்து ஒரு நாள் தங்க வைக்கிறோம் என்ற ஒரு புதிய திட்டம் வராத ஒன்றுதான் குறை! (துக்ளக் 23.4.2008 பக்கம் 17) என்று அவரே வெட்கத்தை விட்டு எழுதினாரே அதுதான் நினைவிற்கு வருகிறது.

இதையும் தாண்டி காஞ்சி (மாஜி) சங்கராச்சாரி யார் காஞ்சிபுரத்தில் 1976 மே மாதத்தில் நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில் ஒரு உண்மையை ஒப்புக் கொண் டார்.
கோயிலுக்குப் போவதை மக்கள் ஒரு ஃபேஷனாகக் கருதுகிறார்கள் பெரும்பா லோரிடம் வர்த்தக மனப் பான்மை காணப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

நமக்கு ஏன் வீண் வம்பு? அவாளே ஒப்புக் கொண்டு விட்டனர்.

கடைசியாக ஒரு கேள்வி இப்படி வெள்ளைக்காரன் கண்டுபிடித்த அஞ்சல் முறை யில் எல்லாம் பணம் வசூ லித்து பிரசாதம் அனுப்புவது அவாளின் எந்த ஆகமத்தில் எத்தனையாவது அத்தியா யத்தில் இருக்கிறதாம்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72461.html#ixzz2oCq0LTU4

தமிழ் ஓவியா said...


100 கோடிக்கும் அதிகமான சூரியன்களை படம் பிடிக்கும் செயற்கைக்கோள்


பாரீஸ், டிச. 22- விண்வெளியில் கோள் கள் மற்றும் சூரியன் களை ஆய்வு செய்ய அய்ரோப்பிய யூனியன் ஹப்பிள் என்ற செயற் கைக்கோளை விண் ணுக்கு அனுப்பியது. அது விண்வெளியின் அதிசயங்களை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வந்தது.

இந்த நிலையில், ஹப் பிள் செயற்கைக்கோள் தனது செயல்பாட்டை இழந்து விட்டது. எனவே, அதை காட்டிலும் பல மடங்கு சக்தி வாய்ந்த கையா என்ற செயற் கைக்கோளை அய்ரோப் பிய யூனியன், விண்ணில் செலுத்தியுள்ளது.

அந்த செயற்கைக் கோளுடன் சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இது 100 கோடிக்கும் அதி கமான சூரியன்களை துல்லியமாக படம் பிடித்து அதன் தகவல் களை பூமிக்கு அனுப்பும் திறன் கொண்டது.

சக்தி வாய்ந்த கையா செயற்கைக்கோள் கோயுஸ் ராக்கெட் மூலம் பிரெஞ்ச் கயானா வில் உள்ள ஏவு தளத்தில் இருந்து நேற்று முன் தினம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

இந்த செயற்கை கோளை உருவாக்க 1991இல் முடிவெடுக்கப் பட்டது. ஆனால், 2006ஆம் ஆண்டு தான் இதன் கட்டுமான பணி களுக்கு மற்ற நாடுகளு டன் ஒப்பந்தம் ஏற்பட் டது. உலகம் முழுவதும் உள்ள 16 நாடுகளைச் சேர்ந்த 70 தொழிற் சாலைகள் கட்டுமான பணியில் ஈடுபட்டன.

கையா செயற்கைக் கோள் ஹப்பிள் செயற்கை கோளை விட பல மடங்கு அதிக தூரத் தில் நிலை நிறுத்தப்படு கிறது.

Read more: http://viduthalai.in/e-paper/72464.html#ixzz2oCqDuLTm

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் அவர்களின் 2014-புத்தாண்டுவாழ்த்து!


பிறக்கும் புத்தாண்டு (2014) - மனித நேயம், சமத்துவம், சம வாய்ப்பு, பகுத்தறிவுச் சிந்தனை வளம் பெருகி வாழ வைக்கும் புது உலகப் புத்தாண்டாக அமையட்டும்!

அனைவருக்கும் நமது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

முகாம்: சிங்கப்பூர்

31.12.2013

Read more: http://viduthalai.in/e-paper/72872.html#ixzz2p6Np262c

தமிழ் ஓவியா said...


கலைஞர் புத்தாண்டு வாழ்த்து


2014ஆம் ஆண்டிற்கு வரவேற்புக் கூறி; எனது அருமைத் தமிழக மக்க ளுக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

மூன்று மாதங்களில் மின்சாரப் பிரச்சினையைத் தீர்ப்போம் எனப் பொய் கூறி வந்த ஆட்சியின் மூன்றாம் ஆண்டிலும் மக்கள் இருளில் தவிக்கும் நிலை தொடர்கிறது.

அனைத்து வகைத் தொழில்களும் முடங்கி விட்டன; புதிய தொழில்களும் இல்லை.

தொழிலாளர் சமுதாயம் அல்லல்படுகின்றது; வேளாண்மை நாளுக்கு நாள் குன்றி வருகிறது. நெல்லுக்கும், கரும்புக்கும் நியாய விலை இல்லை; விவசாயம் செய்ய முடியவில்லை என விவசாயிகள் குமுறுகின்றனர். ஆளுவோரின் தவறான கொள்கை யால் மணல் கிடைப்பதில்லை; கட்டுமானப் பணிகள் முடங்கி, கட்டுமானத் தொழிலாளர் வாழ்வு கேள்விக் குறியாகிறது.

ஆட்சிக்கு வந்தபின் செயின் பறிப்பவர் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடிவிட்டனர் என்றார்கள். செயின் பறிப்பு மட்டுமல்ல; கொலை, கொள்ளை, கற்பழிப்பு எனும் கொடிய குற்றங்கள் எல்லாம் தினமும் பெருகிக் கொண்டுள்ளன.

சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியவர்கள் உண்மைகளைக் கட்டிப் போட்டு விட்டு; பொய்களுக் குச் சாமரம் வீசி - ஜனநாயகக் கடமையாற்று வோர்க்குச் சிறைகளைக் காட்டி, ஏறி வா நீதிமன்றப் படிகளை என இழுத்தடிக்கும் எதேச்சாதிகாரப் போக்கு தலைவிரித்தாடுகிறது.

விலைவாசி உயர்வு எல்லா வகை மக்களுக்கும் வேதனையையே பரிசாகத் தந்துள்ளது. வேதனை யைத் தீர்க்க வேண்டியவர்கள் - மத்திய அரசு மீதும், கழகத்தின் மீதும் பழி சுமத்தியே தப்பிக்கப் பார்க்கின் றனர். பத்திரிகைகளும், ஊடகங்களும் உண்மை நிலையை உரைத்தால் அரசின் அடக்கு முறைக்கு ஆளாவோம் என்று அஞ்சுகின்றன.

இவையும் இவை போன்ற பலவும்தான் 2013இல் நாம் கண்டவை. இவையெல்லாம் களையப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் செய்யத் தவறியவைகளை நினைவுகூர்வோம். தமிழுக்கும், தமிழருக்கும், தமிழகத் திற்கும் பயன் தந்திடும் பணிகளோடு - இந்தியத் திருநாடு முழுமைக்கும் வலிவையும், பொலிவையும் தந்திடத்தக்க கடமைகள் ஆற்றிட - களம் கண்டிட - புறப்பகை நோக்கி, உட்பகை நீக்கி ஒன்றுபட்டு உழைத்திடுவோம்! புத்தாண்டு புத்துணர்வு வழங்கட்டும்!

Read more: http://viduthalai.in/e-paper/72877.html#ixzz2p6NycGmS

தமிழ் ஓவியா said...


டிசம்பர் 31 (1993)சமூகநீதி வரலாற்றில் இந்நாளையும் மறக்க முடி யாது. இந்த நாளில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் 31(சி) சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நாள்.

அ.இ.அ.தி.மு.க. ஆட் சியே உருவாக்கிய சட்டமா என்றால், அதுதான் இல்லை;

மண்டல் குழு தொடர்பான இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு ஒன்றில் (25.8.1993) இடஒதுக் கீடு 50 சதவீதத்திற்குமேல் போகக் கூடாது என்று கூறியதால் தமிழ்நாட்டில் நாம் போராடிப் போராடிப் பெற்ற 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்த நிலையில், அந்த விபத்திலிருந்து தமிழ்நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றிட, தனக்கே உரித் தான சட்ட ஞானத்தால் மசோதா ஒன்றை உருவாக்கிக் கொடுத்தவர் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 31 (சி) பிரிவின்கீழ் மாநில அரசே சட்டம் இயற்றி நாடாளுமன்றத்தில் அது நிறைவேற்றப்பட்டு, 9ஆவது அட்டவணையில் இணைக்கப் பட்டால் நீதிமன்றம் தலை யிடவே முடியாது என்ற முறையில் சடடத்தின் நக லைத் தயாரித்துக் கொடுத் தவர் திராவிடர் கழகத் தலைவர்.

அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட குறிப் பிடத்தக்க நாள்தான் டிசம்பர் 31 (1993).

பிறகு நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப் பட்டது (19.7.1994).

முதல்வர், பிரதமர், குடியரசு தலைவர் ஆகிய மூன்று பார்ப்பனர்களைச் செயல்பட வைத்து வரலாற் றில் வெற்றி கண்டவர் நம் தலைவர்.

இன்றைக்கு இந்தியாவிலேயே இடஒதுக்கீடு சட்டத்தில் (ACT) அடிப்படையில் வலிவாக இருப்பது தமிழ் நாட்டில் தான்; மற்ற மற்ற மாநிலங்களில் அரசு ஆணை (G.O.) யால்தான் நின்று கொண்டு இருக்கிறது என் பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவலாகும்.

அன்றைக்கு முதல் அமைச்சர் செல்வி ஜெய லலிதா இந்தச் சட்டம் நிறை வேற்றப்பட ஒத்துழைப்புக் கொடுத்தார் என்பது ஒருபுறம்; அப்படியொரு சட்டத்தைப் பிறப்பித்து 69 சதவீதம் காப்பாற்றப்படவில்லையானால் அம்மையாரின் ஆட்சி காப் பாற்றப்பட்டு இருக்காது என் பதும் கசப்பான உண்மை யாகும்.

அதே அம்மையார் ஜெய லலிதா இப்பொழுது எப்படி இருக்கிறார்? பட்டதாரி ஆசிரியர்களின் பணி நிய மனம், இடைநிலை ஆசிரியர் கள் நியமனங்களிலும், ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சில் கொடுத்த மதிப்பெண் தளர்வினைக் கூட கொடுக்காமல் சமூக நீதிக்குச் சவக்குழி வெட்டி விட்டாரே!

சமூகநீதிக்கு எதிராக செயல்பட முடியாத அளவுக் குத் தடுப்பு அரணாக திராவிடர் கழகத் தலைவரும், திராவிடர் கழகமும் அன்று இருந்த காரணத்தால்தான் 1993இல் அப்படியொரு சட்டம் வர வாய்ப்பு இருந்தது என் பதுதான் உண்மை.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72871.html#ixzz2p6OSqkP5

தமிழ் ஓவியா said...மத்திய அரசே, மாநில அரசே!
பாதிக்கப்படும் விவசாயிகளைக் காப்பாற்று! கடன்களை ரத்து செய்! இழப்பீடு வழங்குக!
திருவாரூரில் தி.க. விவசாய சங்கத் தோழர்கள் ஆர்ப்பாட்டம்!

திருவாரூர், டிச.31- எல்லா வகையிலும் பாதிப்புக்கும், இழப்பிற்கும் ஆளாகும் ஏழை, எளிய விவசாயிகளைக் காப்பாற்றுமாறும், கடன்களை ரத்து செய்யுமாறும், இழப்பீடுகளை வழங்குமாறும் கோரிக்கைகளை முன்வைத்து, கீழத்தஞ்சை திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் தலைமையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப் பாட்டம் இன்று (31.12.2013) காலை 10 மணியளவில் எழுச்சியுடன் நடை பெற்றது.

ஆயிரக்கணக்கான தோழர்கள் (ஆண்களும், பெண்களும்) ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முழங்கப்பட்ட முழக்கங்கள் வருமாறு:

போராட்டம் போராட்டம்
விவசாயிகளின் போராட்டம்
திராவிடர் விவசாயிகளின் போராட்டம்
போராட்டம் போராட்டம்
வஞ்சிக்கப்படும் வஞ்சிக்கப்படும்
விவசாயிகளின் விவசாயிகளின்
போராட்டம், போராட்டம்
தமிழக அரசே, தமிழக அரசே!
வழங்குக வழங்குக!
நஷ்டப்படும் நஷ்டப்படும்
விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு
இழப்பீடு இழப்பீடு
வழங்குக வழங்குக!
ஏக்கருக்கு ஏக்கருக்கு
25 ஆயிரம் ரூபாய்
25 ஆயிரம் ரூபாய்
இழப்பீடு இழப்பீடு
வழங்குக வழங்குக!
தள்ளுபடி செய், தள்ளுபடி செய்!
விவசாயிகளின் கடன்களை
விவசாயிகளின் கடன்களை
தள்ளுபடி செய் தள்ளுபடி செய்!
வழங்குக வழங்குக! சென்றாண்டுக்கான
சென்றாண்டுக்கான பயிர் காப்பீடுத் தொகையினை பயிர் காப்பீடுத் தொகையினை
வழங்குக வழங்குக!
கடைக்கோடி பகுதிகளுக்கு
கடைக்கோடி பகுதிகளுக்கு
நீர்ப்பாசனம் கிடைத்திட
நீர்ப்பாசனம் கிடைத்திட
தூர்வாருக, தூர்வாருக!
கால்நடைக் கிளை நிலையங்களை
கால்நடைக் கிளை நிலையங்களை
கிராமம் தோறும் கிராமம் தோறும்
ஏற்படுத்துக, ஏற்படுத்துக!
கோமாரி நோயால் கோமாரி நோயால்
இறந்து போன இறந்து போன
கால்நடைகளுக்கு கால்நடைகளுக்கு
இழப்பீடு தருக, இழப்பீடு தருக!
ஒடுக்கப்பட்ட மக்களின்
ஒடுக்கப்பட்ட மக்களின்
உயிர் போன்ற விவசாயத்தை
உயிர் போன்ற விவசாயத்தை
சாகடிக்காதீர், சாகடிக்காதீர்!
பாவப்பட்ட தொழிலா?
பாவப்பட்ட தொழிலா?
ஏழை எளிய மக்களின்
ஏழை எளிய மக்களின்
விவசாயத் தொழில், விவசாயத் தொழில்
பாவப்பட்ட தொழிலா? பாவப்பட்ட தொழிலா?
வேண்டும் வேண்டும்
வேலை வாய்ப்புப் பெற்றிட
வேலை வாய்ப்புப் பெற்றிட
தொழிற் சாலைகள், தொழிற் சாலைகள்
வேண்டும், வேண்டும்.
மாநில அரசே, மத்திய அரசே!
காப்பாற்று, காப்பாற்று
விவசாயிகளை விவசாயிகளை
காப்பாற்று, காப்பாற்று!
போராடுவோம், போராடுவோம்!
வெற்றி கிட்டும் வரை, வெற்றி கிட்டும் வரை
போராடுவோம், போராடுவோம்!

மேற்கண்ட முழக்கங்களை முன்வைத்தனர். ஆர்ப்பாட்டத் தின் நோக்கங்களை விளக்கி ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, தி.மு.க. மாவட்ட செயலாளர் கலைவாணன், மாநில விவசாய தொழிலாள ரணி செயலாளர் குடவாசல் கா.கணபதி, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மண்டல தலைவர் இராயபுரம் கோபால் முதலியோர் உரையாற்றினர்.

ஆர்ப்பாட்ட முடிவில், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவி யாளர் ரவிச்சந்திரனைச் சந் தித்து கோரிக்கை மனு அளிக் கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-8/72897.html#ixzz2p6PfXaVd

தமிழ் ஓவியா said...


2014-ஆம் ஆண்டு துவக்கத்தில்...! விடுதலை வாசக நேயர்களுக்கு அரிய பகுத்தறிவுப் போட்டி

திராவிடர் கழகமும், அதன் தலைமையும் இந்த 2014-ஆம் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான 10 பணிகள் என்பதை 1,2,3 என்று வரிசைப்படுத்தி வாசக நேயர்கள் ஒரே பக்கம் (டெம்மிசைஸ்) ஒன்றின்பின் ஒன்றாக 10 பணிகளைச் சுட்டிக்காட்டி எழுதுங்கள்.

அதில் சிறந்த கட்டுரைக்கு ரூபாய் 1,000/- முதல் பரிசாகவும், இரண்டு, மூன்றாம் இடம் பெறுவோர்க்கு ரூ. 500/-, ரூ. 300/- பரிசுகளும் வழங்கப்படும்.

விடுதலை அலுவலகத்திற்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 12.1.2014 ஆகும். அவசரப் பணிகள் 10 என்று உறையில் தலைப்பிட்டு எழுதவும்.

- ஆசிரியர், விடுதலை

Read more: http://viduthalai.in/page-8/72889.html#ixzz2p6PpDCDx

தமிழ் ஓவியா said...


முன்னாள் நீதிபதி திரு. சந்துரு அவர்களுக்கு....

சென்னை உயர்நீதிமன்ற முன் னாள் நீதிபதி திரு. சந்துரு அவர்கள் தி இந்து தமிழ் நாளேட்டில் (22.12.2013) ஏன் இந்த தடுமாற்றம்? என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

எடுத்த எடுப்பிலேயே திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவித்துள்ள ஆர்ப்பாட் டத்தைப் பற்றிக் குறை கூறியுள்ளார்.

எதற்காக? மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பதவியிலிருந்து நீதிபதி கங்குலி பதவி விலகக் கோரி வரும் 24ஆம் தேதி திராவிடர் கழக மகளிரணி நடத்தும் போராட்டம்பற்றித் தான் அந்தக் குறை.

அதற்காக அவர் எடுத்து வைக்கும் காரணம் ஆச்சரியமானது. ஒரு நீதிபதியா இப்படி ஒரு காரணத்தைக் கூறுவது? என்ற வினா எழுகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னும் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்துக்குத் தலைவரை நியமிக்காமலும், இரண்டு வருடங்களாகப் பதவியை நிரப்பாமலும் உள்ள தமிழக அரசை அவர் ஏன் கண்டிக்கவில்லை? என்று ஒரு வினாவை எழுப்பியுள்ளார்.

கேள்வியை வரவேற்கிறோம் - தமிழ்நாடு அரசை எதிர்த்து ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும் என்று சொன்னதற்காக வரவேற்கலாம். அதே நேரத்தில் அதற்காகப் போராட்டம் நடத்தவில்லை என்பதற் காக, வேறு எந்தப் போராட்டத்தையும் நடத்தக் கூடாது என்று முன்னாள் நீதிபதி கூற வருகிறாரா?

இதற்கு மட்டுமல்ல திராவிடர் கழகம் நடத்தும் ஒவ்வொரு போராட் டத்தின்போதும் இதே கேள்வியை அவர் எழுப்புவாரோ! இனிமேல் ஏதாவது ஒரு போராட் டம் நடத்துவதாக இருந்தால் தமிழ் நாட்டில் மனித உரிமை ஆணையத் திற்குத் தலைவர் பதவியை நியமிக்க வேண்டும் என்ற ஒரு போராட்டம் நடத்தாமல் வேறு எந்த ஒரு போராட் டத்தையும் நடத்தக் கூடாது - இதுதான் நீதியரசரின் கருத்தோ!

அப்படியானால் கடந்த இரண்டு வருடங்களாக திராவிடர் கழகம் எத்தனையோ போராட்டங்களை நடத்தி இருக்கிறதே - அப்பொழு தெல்லாம் இந்த நிபந்தனையை முன் வைக்கவில்லையே - முன்னாள் நீதிபதி சந்துரு அவர்கள்.

நீதிபதி கங்குலியை எதிர்த் துப் பல கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் குரல் கொடுத் துள்ளனரே - அவர்களைப் பற்றிக் குறை கூறாத திரு. சந்துரு அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை மட்டும் ஏன் குறை கூறுகிறார்? எங்கேயோ இடிக்கிறதே! கங்குலியின்மீது நடவடிக்கை என்றதும் இந்த நிபந்தனையை முன் வைப்பதும் - எங்கேயோ இடிக்கிறதே!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மூன்று நீதிபதிகள் அடங்கிய விசா ரணைக் குழுவை நியமனம் செய்தார் என்றும் அந்தக் குழு, புகாரில் முதல் தோற்றச் சான்று உள்ளதாகக் கூறியதையும் ஒப்புக் கொண்டு எழுதி இருக்கும் நீதியரசர் - அவர் பதவி விலக வேண்டும் என்பதில் மட்டும் நந்தியாகக் குறுக்கே நிற்பது ஏன்?

குற்றச்சாற்று நிரூபிக்கப்பட்ட பிறகுதான் பதவி விலகுவது என்பது தவிர்க்க முடியாதது - வெளியே கழுத்தைப் பிடித்துத் தள்ளும் தருணம் அது. அதற்கு முன்பாகவே பூர்வாங்கக் காரணம் இருக்கிறது என்ற விசாரணைக் குழு சொன்ன நிலையிலேயே தார்மீகப் பொறுப் பேற்று ஏ.கே. கங்குலி பதவி விலகி இருக்கலாம் என்றுகூட எழுதிட நீதிபதி சந்துரு அவர்களுக்குத் தார்மீக ரீதியான உணர்வு ஏற்படாதது - ஏன்?

பாதிக்கப்பட்ட பெண்ணைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத் தில் பார்கவுன்சில் உதவித் தலைவர் தலைமையில் ஊர்வலம் நடத்தியுள் ளனர் என்ற தகவலையும் தவறாமல் குறிப்பிட்டிருக்கும் போது பாதிக்கப் பட்ட ஒருவர் புகார் தெரிவிப்பதை எதிர்த்து இப்படிப்பட்ட ஊர் வலத்தை நடத்தலாமா? என்ற வினாவை ஏன் எழுப்பிடவில்லை திரு. சந்துரு அவர்கள்?

பாதிக்கப்பட்டவர்களை எதிர்த்துப் போராடலாம் - பாதிப்புக்குக் காரண மானவரை எதிர்த்துப் போராடக் கூடாது என்பதுதான் திரு. சந்துரு அவர்களின் நியாயத் தராசா?

அப்படியானால் டெகல்கா ஏட்டின் ஆசிரியர் தருண்தேஜ்பால்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டதா? அதற்கு முன்பே அவர் ஏன் கைது செய்யப்பட்டார் - சிறையில் அடைக் கப்பட்டார்?

அவர் கைது செய்யப்பட்டபோது திரு. சந்துரு அவர்கள் ஏன் மவுன விரதம் இருந்தார்?

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி என்றால் அவர் சட்டத்திற்கு அப்பாற் பட்டவரா? நவீன மனுதர்மமா? முன்னாள் நீதிபதிக்கு முன்னாள் நீதிபதி வக்காலத்தா? முன்னாள் நீதிபதிகள் சங்கம் ஒன்று இருக் கிறதா? என்றும் தெரியவில்லை!

- மின்சாரம்

Read more: http://viduthalai.in/page1/72513.html#ixzz2p6REx0N8

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


ஊழலோ ஊழல்!

செய்தி: ஊழலைப் பற்றிப் பேச காங்கிரசுக் குத் தகுதியில்லை.
- மும்பையில் மோடி பேச்சு

சிந்தனை: ஆமாம் பிஜேபிக்கே ஒட்டு மொத்தமாக சொந்தமான ஒன்றை மற்றவர்கள் அபகரிக்க அனு மதிக்கலாமா?

(கருநாடக மாநில பிஜேபி ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த ரெட்டி சகோ தரர்களுக்கு உபயம்!).

ம்ம்ம் தர்மம்

செய்தி: இளைஞர் களிடையே தர்மம் பற்றிய சிந்தனையை வளர்க்க வேண்டும். - ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி

சிந்தனை: அவர் கூறினால் அந்தத் தர்மம் கண்டிப்பாக வர்ணா சிரம தர்மமாகத்தான் இருக்கும்.

Read more: http://viduthalai.in/page1/72509.html#ixzz2p6RbEfA4

தமிழ் ஓவியா said...


பெண்களைஇழிவுப்படுத்திசொற்பொழிவு நடத்துவதுநீதிமன்றங்களின்வேலையல்ல! டில்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை


புதுடில்லி, டிச.23- வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் வழக்குக்குள் நின்று தீர்ப்புகளை வழங்க வேண்டுமே தவிர வழக்குக்கு அப்பால் சென்று பெண்களை இழிவுபடுத்தும் வகை யிலும், அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் தன்மையிலும் தேவை யில்லாத சொற்பொழிவு களை நீதிமன்றங்களில் நிகழ்த்தக் கூடாது என்று டில்லி உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. டில்லியில் பாலியல் வன்கொடுமை தொடர் பான ஒரு வழக்கின் தீர்ப்பில், "19 முதல் 24 வயது வரை உள்ள இளம் பெண்கள் அவர்களு டைய காதலர்களுடன் தன்னிச்சையாக வீட்டை விட்டு ஓடிப் போய்விடு கின்றனர்' என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார். மேலும், பெண்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டு, குறிப்பிட்டபடிதான் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவது போன்ற வகையிலும் நீதிபதி கருத்து தெரிவித்திருந் தார்.

விசாரணை விரைவு நீதிமன்ற நீதிபதியின் இத் தீர்ப்பை அறிந்த டில்லி உயர்நீதிமன்றம், தானே முன்வந்து விசாரணை நடத்தியது. விசாரணை யின் முடிவில் அந்த நீதி பதியின் கருத்துகளுக்கு, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரதீப் நந்த்ர ஜோக், வி.கே.ராவ் ஆகி யோர் அடங்கிய அமர்வு கண்டனம் தெரிவித்தது.

"வழக்கில் முன் வைக் கப்படும் சாட்சியங்கள், ஆதாரங்களின் அடிப் படையில்தான் தீர்ப்பு வாசகங்கள் இருக்க வேண்டுமே தவிர, தங்க ளது சொந்த அல்லது சமூகப் பார்வைகளைத் தீர்ப்புகளில் தெரிவிக்கக் கூடாது' என்று நீதிபதி கள் தெரிவித்தனர்.

தீர்ப்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ள தாவது: இந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி தெரி வித்த கருத்துகள் பொது வான தன்மையிலானவை.

பெண்களுக்கு எதிரான கருத்துகள்

பெண்களுக்கு எதி ரான கருத்துகளையும், அலட்சியமான விமர் சனங்களையும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள் ளார். முடிவு எடுப்பதில் பெண்களின் நிலை குறித்து தனது சொந்த அபிப்ராயத்தை நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். அது தவறானது.

மாறி வரும் இந்திய சமூகத்தில் முடிவு எடுப் பதில் பெண்கள் குழப்ப நிலையில் உள்ளனர். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் அவருக்குள்ள விருப்பம் மற்றும் ஆணாதிக்கம் மிகுந்த சமூகச் சூழல் ஆகியவற்றுக்கு இடையே பெண்கள் சிக்கிக் கொண்டு வதை படுகின்றனர். அதை கவ னத்துடனும் கருணை யுடனும்தான் பார்க்க வேண்டுமே ஒழிய, சொற் பொழிவு போன்ற அறி வுரைகளைத் தரக் கூடாது.

இந்த வழக்கின் தீர்ப் பில் விசாரணை நீதிமன்ற நீதிபதி, அப்பெண் குறித்து தெரிவித்த கருத்துகள், "அப் பெண் எப்படி சமூகத்தில் நடந்து கொள்ள வேண்டும்' என பிரசங்கம் செய்வதைப் போல உள்ளது. அது நீதிபதியின் வேலையல்ல.

சமூக வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு தனி நபருக்கும் உரிமை உள்ளது. சிலர் அவ்வாறு தேர்வு செய்யும்போது விரும்பத்தகாதவை நடந்துவிடுகின்றன. அதற்காக நீதிமன்றங்கள், "உன் வாழ்க்கையை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். அப் படி இல்லாவிட்டால் இந்த சமூகம் உனக்காக கண்ணீர் வடிக்காது' என்று சொல்லக் கூடாது.

அலட்சியமான பார் வையுடன் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள், காவல் நிலையங்களில் பெண்களைத் துன்புறுத் தவே உதவும். மேலும், அலட்சியமான முறை யில் விசாரணைகள் நடைபெறுவதுடன், குற் றச்சாட்டுகளுக்குப் போது மான, முழுமையான சாட் சியங்கள் நீதிமன்றத்தின் முன்பு கொண்டுவர முடியாத சூழல் ஏற்படும்.

காவல்துறையினருக்குப் புது வசதி!

நீதிமன்றங்களின் இது போன்ற தீர்ப்புகள், பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மீது காவல் துறையினருக்கு ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுத்து அதன்படியே விசாரிக்க வழி வகுத்து விடும். மேலும், இது போன்ற தீர்ப்புகளை முன்வைத்து, பாதிக் கப்படும் பெண்களுக்கு எதிராக வழக்குரைஞர் கள் வாதிடக் கூடும்' என்று நீதிபதிகள் கூறி யுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page1/72508.html#ixzz2p6Rk8KnG

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

ரயிலில் அய்யப்பப் பக்தர்கள் கற்பூரம் ஏற்ற தடை விதிக் கப்பட்டுள்ளது. மீறி ஏற்றினால் உடனே ரயில்வே காவல் துறையினருக்குத் தெரிவிக்கலாம்.

Read more: http://viduthalai.in/page1/72508.html#ixzz2p6RtRQMh

தமிழ் ஓவியா said...


சொல்லவேண்டும்

பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.

- (குடிஅரசு, 17.8.1930)

Read more: http://viduthalai.in/page1/72514.html#ixzz2p6SFx4tE

தமிழ் ஓவியா said...


இன்று தந்தை பெரியார் நினைவு நாள்


தந்தை பெரியார் கொள்கைகள் - இலட்சியங்கள் ஓங்கி உலகாள உறுதி எடுப்போம்!

2013 டிசம்பர் 24ஆம் நாளாகிய இன்று அறிவாசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்த 40ஆம் ஆண்டு ஆகும்!

டிசம்பர் 24 தந்தை பெரியாரின் நினைவு நாள் என்பது நமக்கெல்லாம் ஒரு வரலாற்றுக் குறிப்பை பதிவு செய்யும் நாள் தான்; மற்றபடி ஒப்பாரும் மிக் காரும் இல்லாத ஒரே தலை வரான நம் அய்யாவை நினைக் காத நாளோ, மணித் துளியோ ஏது?

அவர்தம் பெருமைகளை - பயன்களைப் பேசா நாட்கள் எல்லாம் நமக்குப் பிறவா நாட்களே!

கடந்த சில நாட்களில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய திராவிடர் கழகம் மூன்றாண் டுகளுக்கு ஒரு முறை நடத்தும் தேசிய மாநாடு மிகச் சிறப்பாக, கடந்த 21,22 ஆகிய தேதிகளில் நடந் தேறியபோது, தற்போதுள்ள மத்தியக் கூட்டரசின் அங்கமான மலேசிய இந்தியக் காங்கிரசின் அமைச் சர்களும், பொறுப்பாளர்களும், தந்தை பெரியார் இல்லாவிட்டால் நாம் இந்நிலைக்கு - மலேசியாவில் - உயர்ந்திருக்க முடியாது; பெரியார் தம் கருத்துக்கள் இன்றும் தேவை; காரணம் அது ஒரு சமூக விஞ்ஞானம்.

விஞ்ஞானத்தை என்றும் ஒதுக்க முடியாது என்பது எப்படி உண்மையோ, அது போன்றதே பெரியார் கொள்கைகள்? என்பதை இரண்டு நிகழ்ச்சிகளிலும் விளக்கிப் பேசியதைக் கேட்ட பொழுது பெரிதும் உவந்தோம்! உலகப் பெரியார் அய்யா பெரியார் ; அனைத்து மக்களுக்கும் உரியார். காரணம் அவர் உயர் நெறியார், நரியார்களை விரட்டி சமுதாயத்தைப் பாதுகாப்பது; அந்தத் தலைவரின் மண்டை சுரப்பு என்பதை அகிலமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

நேற்று (23.12.2013) மலேசியாவின் முக்கியப் பெரு நகரங்களில் ஒன்றான ஈப்போ நகரில் மலேசிய திராவிடர் கழகத்தின் கொள்கைப் பிரச்சார சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

பிரபல ரிவர்வியூ ஓட்டல் சிறப்பு மண்டபத்தில், விந்தை யான ஒரு வரலாற்று நிகழ்வு! இதே நாளில் 1929இல் தந்தை பெரியார் ஈப்போ நகரில் (23.12.1929) உரையாற்றியதை, நம் வெளியீடான மலேசியா, சிங்கப்பூரில் பெரியார் என்ற நூலில் இருந்து எடுத்துக் காட் டினேன். அம் மக்கள் வியந்தனர். பெரியார் அவர்கள் வருகை தந்து 84 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்தம் கொள்கைக் குரல் மலேசிய திராவிடர் கழகத்தின் மூலம் இங்கே முழங்குகிறது. பெரியாரின் கொள்கைகள் காலத்தை வென்றவை.

புத்தாக்கத்திற்கான புதிய தேவையும்கூட; அய்யா மறைந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் உலகை அக்கொள்கை ஆளுகிறது.

எனவே வரும் ஆண்டுகளில் திருச்சி - சிறுகனூரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைய இருக்கும் 95 அடி உயர தந்தை பெரியார் பேருருவச் சிலை 40 அடி பீடம், 135 அடி உயரத்தில் செம்மாந்து நிற்கப் போவது போல அவர்தம் கொள்கைகளும், லட்சியங் களும் சிறப்புடன் ஓங்கி உயர்ந்து நிற்கும் என்பது உறுதி. அவை உலகாள வழி வகுப்போம்.

அதற்கான உறுதியைச் சூளுரையாக புதுப்பிப்பது பெரியார் தொண்டர்களின் தலையாய கடமை.

வெல்க பெரியாரியம், வருக பெரியார் உலகம்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


முகாம்: பினாங்கு (மலேசியா)
24.12.2013

தமிழ் ஓவியா said...


தமிழர் நலம் பெற...


தமிழ்நாடும், தமிழ்மொழியும், தமிழர் தன்மானமும், விடுதலையும் பெற்று வளர்ச்சியடைய வேண்டுமானால், தமிழன் காரியத்தில் தமிழனல் லாதவன்- அவன் எப்படிப்பட்டவன் ஆனாலும் தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டும். இதை வேறு எதை ஒழித்தாவது ஒழிக்கவேண்டும்.

- (குடிஅரசு, 19.2.1944)

தமிழ் ஓவியா said...


சிந்தனைக்கு...
26-12-2013
இன்று தாத்தா பாட்டி தினமாக உலகில் கொண்டாடப்படுகிறது. மூத்தோர்களை மதிப் பதும், அன்பு செலுத்து வதும் பராமரிப்பதும் நமது தலையாய கடமை! நன்றி உள்ளவர்களாக மனிதாபிமானம் உள்ள வர்களாக இருக்கி றோம் என்பதற்கான அடையாளம். முதியோர் இல்லம் என்பது இளை யோரின் மனிதாபிமான மற்ற நிலையை விளக் கும் நிலையமாகும்.

தமிழ் ஓவியா said...


இறந்த பின்...


ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

Read more: http://viduthalai.in/page1/72620.html#ixzz2p6WNsNPy

தமிழ் ஓவியா said...


விவசாயம் என்பது பாவப்பட்ட தொழிலா?


> விவசாயம் என்பது பாவப்பட்ட தொழிலா?

> கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள பரிதாப நிலை!

கீழத்தஞ்சைமாவட்டவிவசாயிகளுக்குநிவாரணம்கோரி

31ஆம் தேதி திருவாரூரில்மாபெரும் ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் அறிக்கை

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் களுக்கு நிவாரணம் கோரி வரும் 31ஆம் தேதி திருவா ரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகமுன் ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

திருவாரூர், நாகை மாவட்டங்களில் விவசாயிகள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்றைய பொழுது எப்படி போகும் என்ற கேள்விக் குறியே அன்றாட வாழ்க்கையாகி விட்டது.

திருவாரூர் ஒன்றியத்தில்...

குறிப்பாக திருவாரூர் ஒன்றியத்தில் வெட்டாறு பாசனம், சிற்றாறின் கிளை வாய்க்கால்கள் சென்றாண்டு தூர் வாரப்படாத காரணத்தினால் கடைமடைப் பாசனப் பகுதிகளான நடப்பூர், செருகுடி, வைப்பூர், சூரனூர், திருவாதிரை மங்கலம், பழையவலம், ஓடாச்சேரி, ஆமூர், வடகுடி, சோழங்கநல்லூர், கீழத் தஞ்சாவூர், நெடுங் காட்டாங்குடி, எழு முக்கால், ராஜாங்கட்டளை உட்பட பல கிராமங்களில் 3500 ஏக்கர் சாகுபடி நிலங்களில் மஞ்சள் நோயினால் பயிர்கள் சூறையாகி விட்டன.

கால்நடைகள் நோயால் பாதிப்பு

விவசாயிகளின் கால்நடைகளும் கோமாரி (குடிடிவ ஹனே ஆடிரவா) நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலை.

விவசாயம் என்றால் பாவத் தொழில் என்று மனுதர்மத் தில் அன்று எழுதி வைத்தனர். இன்று அதன் கோர வடிவத்தில் ஏழை எளிய மக்கள் அல்லாடுகின்றனர்.

கிராமங்களின் பரிதாப நிலை

கிராமங்களில் வேறு தொழிலுக்கு வகையில்லை. குறிப்பாக திருவாரூர், நாகை மாவட்டங்களில் வேலை வாய்ப்புகளுக்குக் கதவு திறந்து விடும் தொழிற்சாலைகள் ஏதுமில்லை. நாகை துறைமுகம் என்பது காட்சி சாலையாகி விட்டது. இந்த நிலையில் கிராமப்புற ஏழை, எளிய மக்கள் (பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள்) விவசாயத்தைக் கட்டிக் கொண்டே மாரடிக்கும் பரிதாப நிலைதான்!

மத்திய, மாநில அரசுகளின் காருண்யக் கண்களும் இவர்கள் மீது படுவது கிடையாது.

மாநில அரசின் கவனத்துக்கு...

இன்றைய சூழலில் மாநில அரசின் கவனத்துக்குக் கீழ்க்கண்ட கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.

1) ஏக்கருக்கு ரூ.15000 என்கிற அளவுக்குக் கடன் வாங்கி முற்றிலும் நட்டப்பட்டுள்ள மக்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும். கூட்டுறவு மற்றும் அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

2) சென்றாண்டுக்கான பயிர் காப்பீட்டு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

3) வரும் ஆண்டிலாவது நீர்ப் பாசனம் கடைகோடி மக்களுக்குக் கிடைக்கும் வகையில் வாய்க்கால்கள் தூர் வாரப்பட வேண்டும்.

4) கால்நடைக் கிளை நிலையங்கள் அதிகமான அளவில் கிராமப் பகுதிகளில் தொடங்கப்பட்டு, பருவத்துக் கேற்ற தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும் - கோமாரி நோயினால் உயிரிழந்த கால்நடைகளுக் கான இழப்பீட்டுத் தொகையையும் வழங்க வேண்டும்.

திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 31.12.2013 செவ்வாய் காலை 10 மணியளவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகமுன் திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழக விவசாய தொழிலாளரணி சார்பில் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் மானமிகு சு. அறிவுக்கரசு அவர்களின் தலைமையில் நடைபெறும்.

நாகை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை மாவட்டக் கழகத் தோழர்கள் கிளர்ந்தெழுந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்முகாம்: சிங்கப்பூர்

27.12.2013

Read more: http://viduthalai.in/page1/72675.html#ixzz2p6oDyqHT

தமிழ் ஓவியா said...


மூடனே!


கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிச் சோம்பித் திரிந்துகொண்டு, தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழிபோட்டுத் திரிகின்றவன் ஒரு மூடனே!

(விடுதலை, 1.2.1969)

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவருக்கு விஞ்ஞானி ஆ. சிவதாணுப்பிள்ளை நன்றிக் கடிதம்


பெருமதிப்பிற்குரிய அய்யா,

ரஷ்ய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஃப்ரெண்ட்ஷிப் (டீசனநச டிக குசநைனேளாயீ) விருதை பெற்ற மைக்கான தங்களின் வாழ்த்துச்செய்தி கிடைக்கப் பெற்றது. தமிழினத்தலைவராகிய தங்களிடமிருந்து இத்தகைய வாழ்த்துச் செய்தி கண்டு மிகப்பெருமையடைகிறேன். தமிழுக்காகவும், தமிழின மேன்மைக்காகவும் பாடுபடும் தங்களிடம் இத்தனை ஆண்டுகளான என்னுடைய நட்புறவை நான் பெற்ற பெரும்பேறாக கருதுகிறேன்.

இந்த விருது இந்திய - ரஷ்ய கூட்டமைப்பான ப்ரம் மோஸ், டி.ஆர்.டி.ஓ. என்.பி.ஓ.எம் ஆகிய நிறுவனங்களில் பங்காற்றும் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பாலும், இருநாட்டின் அரசாங்கத்தின் ஆதர வாலும் மேலும் தங்களைப் போன்ற நலம் விரும்புவோர்களின் நல்லாசிகளின் மூலமும் 60 ஆண்டுகால இந்திய - ரஷ்ய நட்புறவை, ப்ரம்மோஸ் நிறுவனத்தின் மூலம் மென்மேலும் வலிமை பெறு முடிந்தது.

தங்களுடைய பல வேலைகளுக்கு இடையில், சிங்கப்பூரில் இருந்து அனுப்பிய இந்த வாழ்த்து, மேலும் சாதிக்கத் தேவையான மனத்திட்பத்தையும் உறுதியையும் தருகிறது.
வாழ்க தமிழ், வளர்க திராவிடர் இனம்.

நன்றியுடன்
ஆ.சிவதாணுப்பிள்ளை

Read more: http://viduthalai.in/page1/72694.html#ixzz2p6p6HQg2

தமிழ் ஓவியா said...


மதுரை வீரா! காத்தவராயா!!


ஜாதி உணர்வு நம் நாட்டில் செய்திருக்கிற கொடுமைகளுக்கு, உயிர்ப்பலிகளுக்கு அளவே இல்லை. அதில் இன்னும் என்ன வேடிக்கை என்றால், ஜாதி வெறிக்குப் பலியான வீரர்களை இன்றைக்கும் நாம் குலதெய்வமாக ஆடு வெட்டி, கோழி வெட்டிப் படைத்துக் கொண்டி ருக்கிறோமே தவிர, அந்த மனித உயிர்ப்பலி களால் நாம் பெற வேண்டிய பாடத்தைப் பெறத் தவறிவிட்டோம்.

அந்த வீரர்கள் பலியிடுவதற்கு - கழுமரம் ஏறுவதற்கு காரணமாக இருந்த ஜாதி உணர் வைப் பழிவாங்காமல் அந்த வீரர்களை ஜாதிக் கடவுளாக்கி வழிபாடு செய்து வருகிறோம். அந்த வீரர்களைக் கடவுளாக்கிய நோக்கமே ஒருக்கால் அந்த உணர்வு நமக்கு வராமல் இருக்க வேண்டும் என்ற திட்டத்தாலேயே இருக்கும்.

காத்தான் என்ற ஆதித் திராவிடன் அப்பாப் பட்டர் மகள் ஆரியமாலாவைக் காதலித்தான். ஆரிய மாலாவும் அவனைக் காதலித்தாள். காத்தான் ஆரியமாலாவைச் சிறை எடுத்தான். (தாலி கட்டிக் கூட்டிக் கொண்டு போய் விட்டான்)

ஜாதி கெட்டுப் போனதென்றும், ஆசாரங் குலைந்ததென்றும் ஆறாயிரம் வேதியர்கள், ஆரியப்பூ ராஜனிடம் முறையிட்டார்கள். அரசன் காத்தானைப் பிடித்து இழுத்து வந்து கழுவேற்றிக் கொன்றான். வீரன் என்ற சக்கிலியர் குலத்திலே பிறந் தவன் மதுரை மன்னன் மகள் வெள்ளையம் மாளையும், பொம்மியம்மாளையும் நேசித்தான்.

அரசிளங் குமாரிகளும் காவல்காரனான வீரனை உயிராகக் காதலித்தார்கள்.

வீரன் இருவரையும் சிறை எடுத்துச் சென்றான்.

காலையில் செய்தி தெரிந்தது. நாடே கிடுகிடுத்தது. ஆட்கள் பறந்தனர்.

வீரனைக் கையும் களவுமாகப் பிடித்து இழுத்து வந்தனர். ஆம்! வீரன் துடிக்கத் துடிக்க மாறுகை மாறுகால் வாங்கப்பட்டான்.

கழுவேற்றிக் கொல்லப்பட்ட காத்தான் காத்தவராயன் சாமியாகி, மாறுகை, மாறுகால் வாங்கப்பட்ட வீரன் மதுரை வீரனாகி, அவர்கள் ஜாதியினரால் இன்றைக்கும் குலதெய்வமாக வழிபாடு செய்யப்படுகிறார்கள்.

காத்தவராயன் சரித்திரமும் மதுரை வீரன் சரித்திரமும் இன்றைக்கும் சேரிகளிலே பாட்டாய்ப் படிக்கப்படுகிறது.

அந்தோ! அந்தப் பாட்டுக்குள் இருக்கும் கருவை உணர்ந்து அவர்கள் விழிப்புறும் நாள் எந்நாளோ!

Read more: http://viduthalai.in/page1/72715.html#ixzz2p6pyqntV

தமிழ் ஓவியா said...

கோபுரங்கள் ஏன்?

வருணாசிரமத் தர்மங்களைக் கடைப்பிடித்தொழுகும் இந்துக்களில் சில ஜாதியார் கோயிலுக்குள் பிரவேசித்து, இறைவன் உருவினைக் கண்டு தொழுவதற்கு இயலாதவராய் இருத்தலின், அன்னார் நெடுநிலைக் கோபுரங்களைக் கண்டு தொழுது நற்பிறப்பெய்துந் திருப் பெறவே வானளாவுங் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆதாரம்: இராஜ ராஜ சோழன், ஆசிரியர்: இரா.சிவ. சாம்பசிவ சர்மா, நூல் பக்கம்: 93

கோபுரங்கள் கட்டப்பட்ட தன் தத்துவம் புரிகிறதா? நந்தன்கூட தில்லைத் தேரடியில் நின்று தரிசித்தால் போதும் என்று தரிசித்தால் போதும் என்று மனநிறைவு கொண்டதன் தத்துவமும் இதுதானே!

இப்போது கூட பார்ப்பனர்கள் அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகராகத் தகுதி இல்லை - சூத்திரப் பசங்கள் கோபுரத்தைத் தரிசித்தால் போதும் என்ற எண்ணத்தில்தானே அதை எதிர்க்கிறார்கள்!

Read more: http://viduthalai.in/page1/72715.html#ixzz2p6q6hSkv

தமிழ் ஓவியா said...

ஜாதி

புதிய தமிழகத்தின் முதல் சீர்திருத்தம் ஜாதி ஒழிப்பே! அந்தணர், வீரர், வைசியர், தொண்டர் என்ற பாகுபாடு கூட எனக்கு உடன்பாடில்லை.

இப்படிப் பிரித்தே வேத காலத்தில் வாழ்ந்த ஆரியர், பிறகு வருணபேதம் ஏற்படுத்தி, அது ஜாதியாகி, நாலு ஜாதி நாலாயிரம் ஜாதியாகி, நமது நாட்டையே வாழ வொட்டாமல் அடித்தது. ஜாதி என்ற மொழியே நமது அகராதியில் தேவை இல்லை.

- சுத்தானந்த பாரதியார்

Read more: http://viduthalai.in/page1/72715.html#ixzz2p6qCyzLp

தமிழ் ஓவியா said...

கண்ணன் எங்கே போனான்?

திரவுபதையின் மானத்தைக் காத்த கண்ணனுக்கு நாம் உற்சவங்கள் கொண் டாடுகிறோம். கவிகள் அவனைப் பற்றி காவியங்கள் பாடுகிறார்கள். தத்துவ ஞானிகள் அவனைப் பூர்ணாவதாரம் என்கிறார்கள்.

ஆனால், அந்தக் காலத் தில் ஒரு திரவுபதையின் மானத்தைக் காப்பாற்ற ஓடி வந்த கண்ணன், இன்றைய தினம், உடுக்க ஒரு முழக்கந்தலுமின்றித் தவிக்கின்ற லட்சக்கணக்கான ஏழைப் பெண்களைக் காப்பாற்ற ஏன் முன் வரவில்லை? தெய்வமே குருடாகிவிட்டது என்று எனக்குக் தோன்றுகிறது?

- காண்டேகர்

Read more: http://viduthalai.in/page1/72714.html#ixzz2p6qQLijm

தமிழ் ஓவியா said...


பெரியார் பெண்ணியம் மூன்று நாள் பயிற்சி: ஒரு பார்வை


தந்தை பெரியாரின் நினைவு நாளான டிசம்பர் 24 ஆம் தேதி காலை 6 மணி முதல் அய்யா நினை விடத்தில் கூடத் தொடங்கினர் பயிற்சிக்கு வந்த பெண்கள், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவி கள், வேலை பார்க்கும் பெண்கள், திருமணம் முடித்து குடும்பப் பொறுப்பை ஏற்றவர்கள் என வரு கைக்கு சிலர். திராவிடர் கழக மகளிரணியும், மகளிர் பாசறையும் இணைந்து நடத்திய பெரியார் பெண் ணியப் பயிற்சி பட்டறை சரியாக காலை 7 மணிக்குத் தொடங்கியது.

பங்கேற்பாளர்களின் அறிமுகத் திற்குப் பின், கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்அவர்கள் எளிமையாக உரையாற்றி துவக்கி வைத்தார். முதல் நாள் காலை முதல் மதியம் வரை புத்தர் கலைக்குழு வின் இயக்குநர் மணிமாறன் குழுவினரோடு பறை இசை, பாடல், தாளம் என அடிப்படைப் பயிற்சி யைத் தொடங்கி வைத்தார்.

திரைப்பாடகர் மகிழினி அவர்கள் கொடுத்த பாடல் பயிற்சியோடு நாடக வடிவத்திற்குள் நுழைந்தார்கள். மதியம் முதல் மாலை 6 மணி வரை கூத்துப்பட்டறை நாடக இயக்கத்தைச் சேர்ந்த தம்பிச்சோழன் பல் வேறு பயிற்சிகளோடு நாடகம் அமைப்பதற்கான தயாரிப்பை பயிற்சியாளர்களுக்கு அளித்தார்.

முதல் நாள் இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை Not one less என்ற சீனமொழித் திரைப்படம் திரையிடப்பட்டது.

டிசம்பர் 25-ஆம் தேதி காலை 6.30 மணி முதல் 10 மணி வரை பறை இசைப் பயிற்சி நடைபெற்றது.

தொடர்ந்து தன் வாழ்வியல் அனுபவங் கள் குறித்து வனத்துறை அலுவலரும், நரிக்குறவர் சமூகத்தின் முதல் பெண் பட்டதாரியுமான இந்திரா காந்தி அவர்களும், இன் றைய பெண்கள் எதிர் கொள்ளும் சவால்களைப் பற்றி சிறப்புக்குழந்தை களின் ஆசிரியரான நிர்மலா அவர்களும், பிரச் சினைகள் அவற்றின் தீர்வுகள் என்ற தலைப்பில் மனநல மருத்துவர் நப்பின்னை அவர்களும் பயிற்சியாளர்களோடு இயல்பாகப்பேசி, கலந்துரையாடல் முறையில் ஆலோசனைகளை அளித்தார்கள்.

மீண்டும் நாடகப் பயிற்சியில் புதிய அனுபவங்களைப் பெற்றனர். மாலை மற்றொரு திரைப்படம் அதுவும் சீனத் திரைப்படமே, அதன் பெயர் “To Live” (வாழ்வதற்காக) மூன்றாம் நாள் பறைப்பயிற்சியைத் தொடர்ந்து குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நடந்த கோரக் கொலைகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பதிவு செய்து ராகேஷ்சர்மா உருவாக்கிய The Final Solution "இறுதித் தீர்வு" என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இந்தியா எதிர்கொள்ள இருக்கும் மதவெறி வன்முறை பற்றிய இந்த ஆவணப்படம் பற்றி பங்கேற்பாளர்களுடன் கழகப் பிரச்சாரச் செயலா ளர் அருள்மொழி கலந்துரையாடல் நடத்தினார்.

மாலை 4 மணிக்கு நிறைவு விழாவில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பாராட் டுரையும், பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழும் வழங்கினார். திராவிட மகளிர் பாசறையின் செயலாளர் டெய்சி மணியம்மை இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.

பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், பரமேஸ்வரி அம்மையார், தலை மைச் செயற்குழு உறுப்பினர்கள் க.பார்வதி, க.திரு மகள், மகளிர் பாசறை உமா, வி.வெற்றிச்செல்வி முதலியோர் பங்கேற்றனர்.

Read more: http://viduthalai.in/page1/72697.html#ixzz2p6qcHcI3