Search This Blog

15.12.13

சங்கராச்சாரியார் ஜெட் விமானத்தில் பறக்கலாமா?

எப்படி பறந்தார் மடாதிபதி?
27.11.2013 புதன்கிழமை 11 மணிக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்புக்கு அடுத்து லோககுரு ஜெயேந்திரர் திருச்செந்தூருக்குச் செல்கிறார், சென்று 28.11.2013 அன்று சாமிக்கு ஆராதனை செய்து அருள் பெற்றார். இது செய்தி.

28.11.2013 அன்று வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் 5ஆம் பக்கத்தில் விரிவான செய்தி (தீர்ப்புப்பற்றி) வெளி வந்துள்ளது. அதில் கீழ்க்கண்ட செய்தி:

“Mean while, a report  from Thuthukudi - said Jayandra Saraswathi reached Sri Kanchee Kamakodi Mutt in Tiruch endur hours after the verdict - was pronounced. The sankarachariya took a Private Jet and landed at Thoothukudi in the afternoon. At the mutt, he was welcomed with Purna Kumbam”.

புதுச்சேரி நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்புக்கு  அடுத்த விநாடியே தனி விமானத்தை பிடித்து தூத்துக்குடி வந்தார் என்பது செய்தி.

தேசிய நெடுஞ்சாலையில் எந்த விதமான முன்னேற்பாடுகள் இல் லாமல் உடன் பிரயாணத்தை தொடங் கலாம்; வானத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமானால், அதுவும் தனக்கு மட்டும் தனி விமானத்தில் பயணம் செய்வதாக இருந்தால் யார், யாரிடமோ முன்கூட்டியே அனுமதி வாங்க  வேண்டுமே!

எப்படி அந்த அனுமதி பெறப் பட்டது? தீர்ப்பு என்ன வரப் போகிறது என்பது முன் கூட்டியே தெரியுமா? எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொண்டிருந்தால் மட்டுமே, தனி விமானத்தின் மூலம் தூத்துக் குடிக்குப் பறந்திருக்க முடியும்!

பார்ப்பான் பண்ணையம் கேட் பாரில்லையோ!

கொலைக் குற்றத்தில் சிக்கி 60 நாட்கள் சிறையிலிருந்து, சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிய ஒருவ ருக்குத் திருச்செந்தூர் கோயிலில் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்பு கிடைக்கிறது.

மடாதிபதிக்கு மட்டுமல்ல - திருச்செந்தூர் முருகனுக்கும் (?) அர்ச் சகப் பார்ப்பனர்களுக்கும், அறங் காவலர்களுக்கும் வெட்கம் இல்லை- _ கொஞ்சமும்கூட வெட்கமில்லை.

கோயில்களும், பூஜைகளும் பக்தியும் எந்தத் தரத்தில் ஒழுக்கம் கேட்டுச் சீரழிந்து போய்க் கிடக் கின்றன என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!
கடவுளுக்கு மேல் பிராமணன் என்று சொன்னவர் தானே இந்த ஜெகத்குரு? இது என்ன இதற்கு மேலும் நடக்குமே!

அது சரி.. ஊர் உலகத்துக்கெல்லாம் ஆன்மீகத்தையும், சடங்குகளையும், வழக்க முறைகளையும் கட்டுக்கட் டாகப் போதிக்கும் ஜெயேந்திரருக்கு ஒரு கேள்வி.

சங்கராச்சாரியார் ஜெட் விமானத்தில் பறக்கலாமா? எந்த சாஸ்திரத்தில் இதற்கு ஆதாரம்?

கால் நடையாகத் தானே சஞ்சாரம் செய்ய வேண்டும் முனிபுங்கவர்? ஊருக்குத்தான் உபதேசமா? இதைப்பற்றி எல்லாம் எந்தப் பார்ப்பன ஏடும் எழுதாது. கடல் தாண்டிப் போகலாமா சங்கராச்சாரியார்? (சீனா செல்லத் திட்டமிட்டிருந்தார் ஜெயேந் திரர்) என்று கடிதம் எழுதிய சங்கர் ராமன் மேலோகத்துக்கு அனுப்பப் பட்டு விட்டாரே!)

####

அட எச்சக்கலையே!

பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் சொன்னது ஏதோ விளையாட்டு வார்த்தைகள் அல்ல.

கருநாடக மாநிலத்தில் அத்தே குக்கே எனும் ஊரில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைமீது அங்கப் பிரதட்சணம் செய்து நேர்த்திக் கடனைக் கழிக்கும் கேவலத்தை என்ன சொல்வது! இதனை அனு மதிக்கும் கயவாளித்தனத்தை எதைக் கொண்டு சாற்றுவது?

ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோயிலில் டிசம்பர் 3ஆம் தேதி இது நடந்து வருகிறது; இதற்குப் பெயரோ ஸ்நானா பிரார்த்தனையாம்.

சரி... பக்தி தானே? பார்ப்பனர் களுக்கு இல்லாத பக்தியா? ஆனால் அவர்கள் அந்த எச்சில் இலையில் விழுந்து புரள மாட்டார்களாம்!

வேறு யார்? தாழ்த்தப்பட்டவர்கள் தான் _ கீழ்த்தட்டு மக்கள்தான்இந்த வேலையைச் செய்கிறார்கள். அப்படி செய்தால் நினைத்தது நடக்குமாம்.
இந்தக் கேவலமான நேர்த்திக் கடனுக்கு ஏற்பாடு செய்யும் அர்ச்சகப் பார்ப்பானை வெளுக்க வேண்டும் என்று நினைத்து அங்கப் பிரதட் சணம் செய்யலாமா? அதன்படி அர்ச்சகர்ப் பார்ப்பானைக் கவனித்தால் அது குற்றமில்லை என்று கருதப் படுமா?

இந்தக் கேவலத்தை எதிர்த்து வழக்கு உயர்நீதிமன்றம் சென்றது. உயர்நீதிமன்றம் இந்தக் கேவலத்தை நிறுத்துமாறு ஆணை பிறப்பித்தது.
விடுவார்களா? உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர். உலகத்திலேயே மிகப் பெரிய அறிவாளர்கள் கூடும் மன்றமாயிற்றே! அது என்ன செய்தது தெரியுமா?
கோயிலில் நடைபெறும் நடை முறையை மாற்றக் கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. (வெட்கம்! வெட்கம்!! மகாவெட்கம்!!! என்று ஒரு முறை கூவுங்கள்!)

படித்த பாமரன், படிக்காத பாமரன் என்று தந்தை பெரியார் சொல்லுவது இவர்களை வைத்துத்தானோ!

உச்சநீதிமன்றம் என்றாலே அவாள் மன்றம்தானே! அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தமிழ்நாடு அரசின் சட்டத்தை அமுக்கி வைத்திருப்பதும் இதே உச்சநீதிமன்றம்தானே!

சுகாதாரம் என்று எடுத்துக் கொண்டாலும் எச்சில் இலையில் உருண்டு புரள்வது ஏற்கத்தக்கது தானா? சாதாரண மனிதனுக்குத் தெரிவது உச்சநீதிமன்ற நீதிபதிக்குத் தெரியாமல் போனது ஏன்?

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51கி(லீ) கூறு கிறதே -_ அதனைக் கடைப்பிடிக்கும் இலட்சணம் இதுதானா?

முதலில் நம் நாட்டு நீதிபதிகளுக்கு விஞ்ஞான மனப்பான்மையைப் புகட்ட வேண்டும்.

நீதிபதிகளும் மூடநம்பிக்கை யாளராக இருக்க வேண்டும் என்பதுதான் அர்த்தமுள்ள இந்து மதத்தின் முதல் நிபந்தனை போலும்!

1925ஆம் ஆண்டு குடிஅரசில் வெளிவந்த ஒரு தகவல் இதோ:

1925ஆம் ஆண்டு குடிஅரசு ஏட்டில் வைக்கம் எச்சிலை என்னும் தலைப்பில் வெளிவந்த செய்தி இது:

வைக்கம் கோவிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலை ஒன்று, சில சமயங்களில் 0.06 வீதம் விற்கப்படு கிறது. இதை வாங்கிச் சாப்பிடுவதால் வியாதியஸ்தர்களுக்கு, வியாதி சவுகரியமாய் விடும் என்றும், சந்தானமில்லாதவர்களுக்குச் சந்தான விருத்தியாகுமென்றும், (குழந்தைப்பேறு) அங்குள்ள பிராமணரல்லாத ஜனங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி வைக்கப்பட்டி ருக்கிறது. ஆனால், இது தமிழ்நாட்டில் ஒரு பிராமணனுக்கு ரூ.1000, 5000 என்று விகிதம் பேசி, நம்ம வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்குப் பணத்தைக் கொட்டிப் பூசை செய்து, அந்தக் காலைக் கழுவிய தண்ணீரைச் சாப்பிட்டால், தனது பாவம் போய்விடும் என்று நம்பும் படியாகச் செய்கிறதைவிடப் பெரிய மோசடியல்ல.

இதன் பிறகும் மீண்டும் குடிஅரசு வைக்கம் எச்சிலை என்னும் தலைப்பில் லோகோபகாரி பத்திரி கையிலிருந்து வந்த சென்ற வாரத்து லோகோபகாரி மூன்றாம் பக்கத்தில் வைக்கத் தெச்சிலையைப் பற்றி நமது குடிஅரசு பத்திரிகையில் வெளியான குறிப்பை வெளியிட்டு அந்த எச் சிலையை உண்பதால் நோய் நீக்கு மென்று நம்பிக்கையிருப்பது உண்மை யாயினும், எச்சிலை விற்கப்படுவதாகச் சொல்வது உண்மையல்ல வென்று மலையாளத்துப் பிராமணர் ஒருவர் கூறுகிறார் என்ற நமது குறிப்பும் வெளியாயிருந்தது.

வைக்கத்திலே பிறந்து வளர்ந்து வாழ்பவரும் வைக்கத்திலுள்ள சத்தியாக்கிரக ஆசிரமத்தின் தற்காலக் காரியதரிசியுமான ஸ்ரீமான் கே. நாராயணன் இதுபற்றி நமக்கு எழுதியிருக்கிறார்.

அவர் சொல்லுவதின் சுருக்கம்: - வைக்கம் எச்சிலை சகல நோய்களை யும், முக்கியமாக வயிற்று நோய் களையும், மலட்டுத் தன்மையையும் நீக்கவல்லதென்ற நம்பிக்கை பாமர ஜனங்களுக்குள் உண்டு; வைக்கத் தப்பன் கோயில் எச்சிலைகள் பரம் பரையாக வாரியர் குடும்பத்தாருக்கு உரியன.
அவர்களே கோயிலில் தாழ்ந்த வேலைகளைச் செய்கிறார்கள்; அவர் களே பிராமணர்கள் சாப்பிட்டபின் இலைகளை எடுத்து அப்புறப்படுத்து கிறார்கள். அவர்கள் இலைகளை வெளியே கொண்டு போய் மொத்த மாக நாயர்களுக்கு விற்று விடுகி றார்கள்.

நாயர்கள் எச்சிலைகளில் உள்ள வற்றையெல்லாம் -_ அவற்றின் சீர் கேட்டைச் சொல்ல வேண்டியதில்லை; ஒன்றாகக் கலந்து கடைத்தெருவுக்குக் கொண்டு போய்ப் பகிரங்கமாக விற்கிறார்கள்.

நகரபரிபாலன சபைக்கும் இந்த எச்சிலை லாபத்தில் பங்கு உண்டு. ஒரு பிராமண போஜனத்தில் வரும் எச்சிலையால் வாரியருக்குச் சுமார் 10 ரூபாய் லாபம் கிடைக்கும்; வாரியர் களிடம் இலைகளை வாங்கி விற்கும் நாயர்களுக்கு இன்னும் லாபம் அதிகம் கிடைக்கும்.

சில காலத்துக்கு முன் வரை தெய்வ பக்தியுள்ள உயர்ந்த வகுப்பார் பலர் இதனை வாங்கித் தங்கள் நோய் நீங்குமென்று உட்கொண்டு வந் தார்கள். ஆனால் இப்பொழுது பக்தியை விடப் பசி காரணமாகவே தாழ்ந்த வகுப்பு ஜனங்கள் இந்த எச்சிலை களை வாங்கி உண்கிறார்கள். மலை யாளத்துப் பிராமணர் கூற்றைத் தயவு செய்து திருத்த வேண்டும் (லோகோபகாரி)
கருநாடக மாநிலத்திலாவது எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்தனர். கேரளாவிலோ பார்ப் பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையைக் காசு கொடுத்து வாங்கி அதில் சாப்பிட்டார்கள் என்றால்.. அதன் பொருள் என்ன?
எச்சில் இலையில் சாப்பிட்டால் நோய்ப் போகுமா? நோய் வருமா?
கடவுளை வணங்குபவன் காட்டு மிராண்டி என்பது ஒருபுறம் இருக் கட்டும்; இந்த ஏற்பாட்டைச் செய்து வைத்திருக்கும் பார்ப்பனீயத்தின் ஆலகால நஞ்சை என்னவென்று கூறுவது!

-------------------------------- மின்சாரம்அவர்கள் 14-12-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

65 comments:

தமிழ் ஓவியா said...


காட்சிப்பிழை


பசுவின் கண்களில் கடவுள் தெரிகிறார்... வேப்பமர வேரில் கடவுள் காட்சியளிக்கிறார் என்று புரளிகள் கிளம்பும் போதெல்லாம், குடும்பத்துடன் சென்று மக்கள் கும்பிட்டு மகிழ்வார்கள். சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் கிளியின் உடலிலிருந்து திருநீறு கொட்டுகிறது என்று புரளி பரவி, அது கிளியோபாட்ரா அளவுக்குப் புகழ்பெற்றுவிடும். கடைசியில், மக்களின் தொந்தரவைத் தாங்க முடியாமல், மேற்கூரையிலிருந்து சிந்திய சுண்ணாம்புதான் அது என்று கிளியே சொல்லிவிடும்.

ஒரு கட்டத்தில் திருநீறு என்பதைப் பொடுகாக மாற்றிவிட்டார்கள் விளம்பரத்தை எடுத்தவர்கள். உலகெங்கும் இதுபோன்ற கட்டுக்கதைகள் பரவிப் பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. அவற்றில் மிக முக்கியமானவை யூஎஃப்ஓ எனப்படும் பறக்கும் தட்டுகள் பற்றிய வதந்திகள். ஆனால், அதுபோன்ற வீடி யோக்கள் என்னவோ ஏடிஎம் சிசிடிவி கேமராவில் எடுக்கப் பட்டதுபோல், கொசகொசவென்று இருக்கும். பெரும்பாலும் சைனீஸ் லேண்டர்ன் எனப்படும் வானில் பறக்க விடப்படும் ஒரு வித விளக்குகள், வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட ராணுவ விமானங்கள் போன்றவற்றைப் பறக்கும் தட்டுகளாகக் கற்பனைசெய்துவிடுகின்றனர்.

அதே போல பெரிய அளவிலான சம்பவங்கள் நடக்கும்போது, ஆர்வத்தைத் தூண்டும் பல விஷயங்கள் தீ போலப் பரவும். விமானங்களை வைத்தே உலக வர்த்தக மய்ய இரட்டை கோபுரங்களை அல்-கொய்தா தீவிரவாதிகள் தகர்த்த சம்பவத்தைத் தொடர்ந்து பல வதந்திகள் பரவின. அந்த விமானங்களில் ஒன்றின் எண் னி33ழிசீ என்றும் அந்த எண்ணை எம்எஸ்-வேர்டில் (விஷி கீஷீக்ஷீபீ) உள்ளிட்டு அதை விண்டிங்ஸ் (கீவீஸீபீஷீஷ்) என்ற எழுத்துருவுக்கு மாற்றினால் ஒரு விமானம், இரண்டு கட்டடங்கள், ஒரு மண்டையோடு இறுதியாக ஒரு நட்சத்திரம் தெரியும் என்றும் ஒரு வதந்தி பரவியது. மறைந்த எழுத்தாளர் சுஜாதாவே இதுகுறித்து ஒருமுறை எழுதியிருந்தார். அந்த எண்ணை விண்டிங்ஸ் எழுத்துருவுக்கு மாற்றினால் விமானம், இரண்டு கட்டடங்கள், மண்டையோடு, நட்சத்திரம் தெரிவதெல்லாம் உண்மைதான். ஆனால், அந்த விமானங்களில் ஒன்றுக்குக்கூட னி33ழிசீ என்ற எண் இல்லை என்பது பின்னால் தெரியவந்தது.

தற்போது, அதே 9/11 சம்பவத்தை வைத்து பரபரப்பூட்டும் செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. முதல் விமானம் மோதிய பின்னர், அந்தக் கட்டடத்தில் இருந்து கிடைத்த இரும்புத் தூண் ஒன்றில் மனித முகம் தெரிவதாக ஒரு செய்தி. பயங்கரமான அந்த நிகழ்வைக் கண்டு துயரமும், பதற்றமும் அடைந்தது போன்ற முகபாவனையுடன் இருக்கும் அந்த முகத்தை 9/11 தேவதைஎன்று அழைக்கிறார்கள். எனினும், குறிப்பிட்ட கோணம் மற்றும் ஒளியமைப்பில் பார்த்தால்தான் அது மனிதமுகம் போல் தெரிகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

- வெ.சந்திரமோகன்- தி இந்து 6.12.2013

Read more: http://viduthalai.in/page7/72055.html#ixzz2nUzaXHAh

தமிழ் ஓவியா said...


வாக்குப்பதிவு இயந்திரம்


எடிசன் தன் முதல் கண்டுபிடிப்பாக 1868-இல் பதிவு செய்த வாக்குப்பதிவு இயந் திரம் அரசினால் ஏற் றுக் கொள்ளப்பட வில்லை. தந்தி மற்றும் பங்குச்சந்தை சாதனங் களைத் தொடர்ந்து மின்சார விளக்கைக் கண்டுபிடித்ததும் உலகமே இவரைத் தலையில் வைத்துக் கொண்டாடியது. பாடும் மற்றும் பேசும் ஃபோனோ கிராப் இயந்திரம் இவரை பெரும் கோடீஸ்வரனாக்கியது. ஒலியைப் போலவே, ஒளியையும் பதிவு செய்ய முடியும் என சினிமாவைக் கண்டுபிடித்ததும், கண்டு பிடிப்புகளின் தந்தை எனப் புகழாரம் கிடைத்தது...!
1914-ஆம் வருடம் அவரது சோதனைச் சாலையில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட் டது. ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களைப் பார்த்து, தீ எவ்வளவு அழகாக எரிகிறது பாருங்கள்... ரசாயனப் பொருட்களைத் தவறான விகிதத்தில் கலந்துவிட்டேன் என்பதை, 67-ஆவது வயதில் எனக்குக் கற்றுக்கொடுத்த இந்த தோல்வியும் எனக்குப் படிப்பினையே என்றார் எடிசன் சிரித்தபடி.

தனது 81-ஆவது வயதில் மரணமடையும் வரை 1,093 கண்டுபிடிப்புகளை எடிசன் பதிவு செய்ய முடிந்ததற்குக் காரணம், தோல்வி களை வீழ்ச்சியாகக் கருதாத இவரது தன்மையே...

- த. பூபாலன், பணங்கொடம்

Read more: http://viduthalai.in/page2/72045.html#ixzz2nV01D4aq

தமிழ் ஓவியா said...


முஸ்லிம்களின் நிலை


இந்தியாவில் உள்ள 28 மாநிலங் களில் 13 மாநிலங்களில் உள்ள அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லிம் கூட அமைச்சராக நியமிக்கப்பட வில்லை என்பது மிகவும் வேதனைக் குரிய செய்தி. இந்த முஸ்லிம் விரோத போக்கிற்கு முஸ்லிம் வாக்குகளுக்காக தந்திரங்களை கையாளும் காங்கிரஸ் கட்சியும் பாஜகவுக்கு சளைத்ததில்லை என நிரூபித்துள்ளது.

தற்போது தேசியம், வளர்ச்சி என்று போலி முகமூடி அணிந்து பேசிவரும் மோடி ஆளும் மாநிலமான குஜராத் உட்பட, பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரே ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ. கூட பாஜகவுக்கு இல்லாததன் மூலம் அக்கட்சியின் தீவிர முஸ்லிம் விரோதப் போக்கை அதன் கொள்கையில் மட்டு மின்றி அதன் அரசியல் செயல்பாடு களிலும் காணமுடிகிறது.

இந்தியாவில் 28 மாநிலங்களில் 609 அமைச்சர்கள் உள்ளனர். இதில் மொத் தம் 57 பேர் முஸ்லிம்கள். வெறும் 9.35 விழுக்காடு மட்டுமே. 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி முஸ்லிம்களின் எண்ணிக்கை 13.34 சதவீதம் ஆகும். 57 அமைச்சர்களில் 18 பேர் ஜம்மு-கஷ்மீர் அமைச்சர்கள் ஆவர்.

பா.ஜ.க ஆளும் குஜராத்தில் 9.06 சதவீதம் முஸ்லிம்கள் வாழுகின்றனர், சத்தீஷ்கரில் 1.97சதவீதம் முஸ்லிம்களும், கோவாவில் 6.84 சதவீதம் முஸ்லிம் களும், மத்தியப் பிரதேசத்தில் 6.37 சதவீதம் முஸ்லிம்களும் வாழ்கின்றனர். ஆனால் இங்கெல்லாம் பா.ஜ.கவுக்கு ஒரே ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ கூட இல்லை.
பஞ்சாபை ஆளும் பா.ஜ.கவின் கூட்டணி கட்சியான அகாலிதளத்திற்கு மலேர்கோட்லா தொகுதியில் இருந்து ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ உள்ளார். காரணம் அத்தொகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்றார்கள்.

காங்கிரஸ் ஆளும் உத்தரகாண்டில் 11.92 சதவீத முஸ்லிம்கள் வாழுகின்றனர். ஆனால், முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த எந்த பிரதிநிதியும் அமைச் சரவையில் இடம்பெறவில்லை. முஸ்லிம் மக்கள் தொகை 10 சதவீதம் கொண்ட முஸ்லிம் ஆட்சியாளர்கள் பல ஆண்டு கள் ஆட்சி புரிந்த ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 37 காங்கிரஸ் அமைச்சர் களில் ஒருவர் மட்டுமே முஸ்லிம் ஆவார். காங்கிரஸ் ஆளும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை. 5.78 சதவீதம் முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட காங் கிரஸ் ஆளும் அரியானா மாநிலத்தில் ஒரேவொரு முஸ்லிம் அமைச்சர் உள்ளார். ஜம்மு-கஷ்மீரை அடுத்து அதிக முஸ்லிம்கள் வாழும் அஸ்ஸாமில் (30.90 சதவீதம் முஸ்லிம்கள்) காங்கிரஸ் கட்சி 3 முஸ்லிம்களை மட்டுமே அமைச் சரவையில் இடம்பெறச் செய்துள்ளது.

உத்தரபிரதேசத்தில்தான் அதிக முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர். 18.55 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் உ.பி.யில் 51 அமைச்சர்களில் 10 பேர் முஸ்லிம்கள் ஆவர். இங்கு சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ளது. 24.6 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சி புரிகிறது .இங்கு 20 அமைச்சர்களில் 5 பேர் முஸ்லிம்கள் ஆவர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்குவங்காளத்தில் 25 சதவீத முஸ்லிம்கள் வாழுகின்றனர். அங்கு 44 அமைச்சர்களில் அய்வர் மட்டுமே முஸ்லிம்கள்ஆவர். பீகாரில் நிதிஷ்குமார் அமைச்சரவையில் 2 முஸ்லிம்கள் உள் ளனர். கர்நாடகா காங்கிரஸ் அமைச் சரவையில் 2 முஸ்லிம்கள் உள்ளனர்.

Read more: http://viduthalai.in/page2/72044.html#ixzz2nV0LI7y3

தமிழ் ஓவியா said...


முதல் திருமணத்தை மறைத்து 2ஆவது திருமணம்


2ஆவது மனைவி ஜீவனாம்சம் பெறத் தகுதியானவரே உச்சநீதிமன்றம் தீர்ப்பு

முதல் திருமணத்தை மறைத்து செய்து கொண்ட இரண்டாவது திருமணம் சட்ட விரோதமானது என்றா லும், கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்காக இந்து திருமணச் சட்டப்படி இரண்டாவது மனைவி யையும் சட்டபூர்வமானவராகவே கருத வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் அளித்திருந்த முந்தைய தீர்ப்பானது, முதல் திருமணம் குறித்த தகவலை மறைத்து செய்து கொண்ட இரண்டாவது திருமணத்திற்கு பொருந்தாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

"இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படா விட்டால் அது மனைவியை ஏமாற்றும் கணவனுக்கு அளிக்கப்படும் சலுகையாக ஆகிவிடும்.

எனவே, ஜீவனாம்சம் பெறுவதற்காகவாவது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-இன்படி (ஜீவனாம்சம்) பாதிக்கப்பட்ட பெண் சட்ட பூர்வமான மனைவியாகவே கருதப்பட வேண்டும்'' என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதவ்-சபிதா பென் வழக்கில், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்புக்கு மாறானதாக மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என்று கூறி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-அய் உறுதியான நோக்கத்திற்காக செயல்படுத்தும் வகையில் இப்படி விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

ஆதவ் ஏற்கெனவே திருமணமானவர் என்பதை முழுமையாகத் தெரிந்து கொண்டு சபிதா பென் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண் டுள்ளார். ஆதலால், இந்து திருமணச் சட்டப்படி அந்த திருமணம் செல் லாது என தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதிகள் விளக்கம் கூறினர்.

- சட்டக்கதிர் - 2013 - டிசம்பர் பக்கம், 59

Read more: http://viduthalai.in/page3/72048.html#ixzz2nV0t7PgS

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்


- ஞான. அய்யாப்பிள்ளை, மும்பை

ஆசிரியர் வீரமணி அவர்களின் 81-ஆவது பிறந்தநாள் விழாவை மும்பை திராவிடர் கழகம் சீரும் சிறப்புமாக கொண்டாடிக்கொண்டிருக்கிறது. 81-ஆவது அகவையில் அடி வைத்திருக்கும் வீரமணி அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தையும், நான் சார்ந்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தாராவிக்கிளையின் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நான் இன்றைக்கு ஒரு கடவுள் மறுப்பாள னாகவும் பகுத்தறிவுவாதியாகவும் ஒரு கம்யூனிஸ்ட் டாகவும் உங்கள் முன்பாக நிற்கிறேன் என்று சொன் னால் அதற்கு முக்கிய காரணம் அய்யா வீரமணி அவர்கள்தான் என்பதைப் பணி வோடு இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக இருந்தவர் அய்யா வீரமணி அவர்கள். என்னுடைய அறிவுக் கண்ணைத் திறந்த ஒரு சிறந்த அறிஞர் அய்யா வீரமணி அவர்கள். அவருடைய 81-ஆவது பிறந்தநாள் விழாவிலே கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையுமடைகிறேன். 1975 -ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத் தில் சென்னையில் எண்ணூர் என்ற இடத் தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில்தான் முதன் முதலாக வீரமணி அவர்களை நான் சந்திக்க நேர்ந்தது. அப் பொழுது எனக்கு வயது 23. எண்ணூரிலுள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தில் ச. சொர்ணப்பன் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் என்னுடைய உறவினர். இளங்கலைப் பட்டம் பெற்றிருந்த நான் அவருடைய அழைப்பின் பேரில் வேலை தேடி அங்கு சென்றிருந்தேன். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துபிறப்பு பாடல்களை பாடி பயிற்சி பெறுவதற்காக அவர் சர்ச்சுக்கு சென்றார். நானும் அவரோடு சென்றி ருந்தேன். பாடல் பயிற்சி முடித்து வருகின்ற வழியில் தான் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் தொடங்கியிருந்தது. அந்த நிகழ்ச்சியில் வர வேற்புரை ஆற்றிய தோழர் முதல் அனை வருமே தங்களுடைய பேச்சை தொடங்கும் போது கடவுள் இல்லை - கடவுள் இல்லை - கடவுள் இல்லவே இல்லை என்றுதான் பேச்சைத் தொடங்கினர். அந்தப் பொதுக் கூட்டம்தான் நான் கலந்துகொண்ட திரா விடர் கழகத்தின் முதல் கூட்டம். " நான் கொஞ்ச நேரம் இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு வருகிறேன்; நீங்கள் வீட்டுக்கு செல் லுங்கள்" என்று சொல்லி என் கையிலிருந்த கிறிஸ்துமஸ் கீதங்கள் என்ற புத்தகத்தை என்னு டன் வந்த அண்ணனிடம் கொடுத்துவிட்டேன். அவர்களுடைய பேச்சுக்கள் அறிவுப் பூர்வமான தாகவும் மனிதாபிமானத்தின் அடிப்படை யிலும் அமைந்திருந்ததால் அங்கேயே அமர்ந்து நிகழ்ச்சி முழுவதையும் கேட்டேன்.

தமிழ் ஓவியா said...

கடவுள் இல்லை - _ கடவுள் இல்லை - _-கடவுள் இல்லவே இல்லை என்று அவர்கள் அனைவருமே பேசியது எனக்கு ஆச்சரியமாக வும் ஒருவித அச்சமாகவும் இருந்தது. இந்த உலகத்தை படைத்து ஆண்டுவருகின்ற கட வுளையே இல்லை என்று சொல்கிறார்களே! இவர்களுக்கு என்ன தைரியம்! என்ன நெஞ் சழுத்தம் இருந்தால் இப்படி பேசத்துணி வார்கள்? என்று அப்போது நினைத்தேன். நான் ஒரு புதிய உலகத்துக்குள் பிரவேசித்ததாக எனக்குள்ளே ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது. இந்த உணர்வுகளெல்லாம் வீரமணி அவர்கள் பேச ஆரம்பித்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங் கியது. அன்று வரை தந்தை பெரியார் என் பவர் ஒரு கடவுள் மறுப்பாளர் என்று மட் டுமே எனக்குத் தெரியும். ஆனால் பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி என்பதை அய்யா அவர்கள் மூலமாகத்தான் நான் தெரிந்து கொண்டேன். சுமார் கால் நூற்றண்டுக்கு முன்பாக அவர் பேசிய பேச்சுக்கள் இன்றைக்கும் என் காது களில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. கடவுள் என்பவர் சதா காலமும்; எங்கும்; எப்பொழுதும் வியாபித் திருப்பதாக, கடவுளை நம்புகி றவர்கள் கூறுகின்றனர். அவருக்கு ஆதியும் கிடையாது; அந்தமும் கிடையாது. அதாவது தொடக்கமும் கிடையாது. முடிவும் கிடையாது. அப்படி இருக்கும்பொழுது சமீபத்தில் Tamil Nadu Tourism Development Corporation ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது. புத்தகத்தின் பெயர் ‘The Origin of Lord Ayyappa’ என்று சொல்லிக்கொண்டே மேசை மீது வைத்திருந்த அந்தப் புத்தகத்தை எடுத்து காட்டினார். அதிலுள்ள சிலபகுதிகளை வாசித் தும் காட்டினார். வீரமணி அவர் கள் தகுந்த ஆதாரம் இல்லாமல் எதையுமே பேசமாட்டார் என்ற நம்பிக்கையையும் உறுதியையும் அன்றைய நிகழ்வு என் உள்ளத் திலே ஏற்படுத்தியது. இந்தப் புத்தகம் ஏன் ஆங்கி லத்தில் எழுதப்பட்டது? வெளிநாட் டிலிருந்து இந்தியாவுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு படிப்பதற் காக எழுதப்பட்டது. ஏன் இந்த டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படு கிறது? டிசம்பர் மாதத்தில்தான் சாமியே அய்யப்பா. சரணம் அய் யப்பா என்று சொல்லிக்கொண்டே ஏராளமான பேர் கேரளாவிலுள்ள சபரிமலை அய்யப்பன் கோவி லுக்குப் போகின்றனர்.

தமிழ் ஓவியா said...

இந்த அய் யப்ப பக்தர்களை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்க்க நேரிட்டால் அவர்கள் உள்ளத்தில் சில வினாக்கள் தோன்றும். அந்த வினாக்களுக்கு பதில் சொல்வதற் காகவே தமிழக அரசு அய்யப்ப சாமியின் பிறப்பு என்ற தலைப்பில் இந்த நூலை வெளியிட்டுள்ளது என்று விளக்கமும் சொன்னார்.

தந்தை பெரியார் எடுத்த எடுப் பிலேயே கடவுளை ஒழிக்க வேண்டுமென்று சொல்லவில்லை. அவருடைய முதன்மையான நோக் கம் மனிதனைப் பிளவு படுத்து கின்ற - மனிதனைக் _ கூறுபடுத்து கின்ற சாதியை ஒழிப்பதுதான். இந்த சாதி எதன்மீது வளர்ந்துள்ளது? அதன் ஆணி வேர் எங்கே இருக் கிறது? என்பதை தன்னுடைய ஆராய்ச் சியின்மூலம் கண்டுபிடித்தார். அதனை ஒளிவு மறைவின்றி பகிரங் கமாகச் சொன்னார்.

சாதிக் கொடுமைகளுக்கு அடிப் படை காரணம் மூடநம்பிக்கை. எனவே மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டுமென்று தந்தை பெரியார் சொன்னார். மூடநம்பிக்கைக்கு அடிப் படைக் காரணம் புராணங்களும் இதிகாசங்களும்தான். எனவே புராணங் களையும் இதிகாசங்ககளையும் ஒழிக்க வேண்டுமென்று தந்தை பெரியார் சொன்னார். புராணங்களும் இதிகாசங்களும் மதத்தை அடிப்படையாகக் கொண் டவை. எனவே மதத்தை ஒழிக்க வேண்டுமென்று தந்தை பெரியார் சொன்னார். மதம் கடவுள் நம்பிக் கையை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. எனவே கடவுளை ஒழிக்க வேண்டுமென்று தந்தை பெரியார் இறுதியாகவும் உறுதி யாகவும் சொன்னார். நான் கல்லூரியில் படிக்கின்ற காலங்களில் பல்வேறு இலக்கியக் கூட்டங்களுக்கும் பட்டி மன்ற நிகழ்சிகளுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் அய்யா வீரமணி பிறர் மனம் புண்படாமலும் அதேசமயம் வார்த்தைகளை மிக பக்குவமாகவும் பயன்படுத்திய விதம் கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஈர்த்தன. என்னைக் கவர்ந்த மிகச் சிறந்த பேச்சாளர் ஆசிரியர் வீரமணிதான். அன்றைய நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சுக்கள் எனக்கு மட்டுமே அவர் பாடம் நடத்துவதாக உணர்ந் தேன். இதை வெறும் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை. உண்மையை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். நான் சென்னைக்கு சென்று வீரமணியின் பேச்சுக்களை கேட்ட பின்னர்தான் தோழர் தா. பாண்டி யன் அவர்களுடைய சொற் பொழிவுகளைக் கேட்கின்ற வாய்ப்பு கிடைத்தது ; அதுவும் தந்தை பெரி யாரைப் பற்றிய சொற்பொழிவு. அன்றைய காலகட்டத்தில் சென் னையில் எனக்கு வேலை கிடைத்த பிறகு அரசுத் தேர்வு ஆணையாளர் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த என்னுடைய அண்ணன் ஜெயபாலன் என்பவர் வீட்டில் தங்கியிருந்தேன். அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் -_ சிறந்த சிறுகதை எழுத்தாளர். "கலாமணி" என்ற புனை பெயரில் ஏராளமான சிறு கதைகளை எழுதியிருக்கிறார். அவை "சகாப்தம்" என்ற மாத இதழில் தொடர்ந்து வெளிவந்தன. ஜனசக்தி யிலும் பல கட்டுரைகள் எழுதியி ருக்கிறார். இப்பொழுது அவர் காலமாகிவிட்டார். அவரிடம் நான் ஏராளமான கேள்விகளைக் கேட்டிருக்கிறேன். மிகுந்த பொறுமையுடன் அவை களுக்கு பதில் சொல்லுவார். "நீ சமு தாயப் பிரச்சனைகளை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டுமானால் முத லாவதாக தந்தை பெரியாரைப்படி" என்று அடிக்கடி என்னிடம் சொல் லுவார். சொல்லுவது மட்டுமல்ல; அவர் வீட்டில் சுயமரியாதை இயக்க வெளியீடுகள் ஏராளமாக வாங்கி வைத்திருந்தார். அவைகளில் தந்தை பெரியாரின் இலங்கைப் பேருரை என்ற நூல் மிக முக்கிய மானது. அதை என்னிடம் தந்து படிக்கவும் சொன்னார். அதன் பின்னர்தான் தந்தை பெரியாரின் சாதி ஒழிப்புக்கான போராட்ட வாழ்க்கை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன். வெறும் கடவுள் நம்பிக்கை உடையவனான என்னை மனித நேயமிக்க மனி தனாக மாற்றியது பெரியார் இயக் கமும் பொதுவுடைமை இயக்கமும் தான். இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் இதுவரை நடைபெற்றுள்ள சாதிப் பிரச்சினைகளில் எந்த வகையிலும் பின்வாங்காமல் நியாயத்திற்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராடியுள்ளன என் பதை யாராலும் மறுக்கமுடியாது. பெரியார் இயக்கங்களும் அம்பேத் கர் இயக்கங்களும் சாதி எதிர்ப்பில் கூர்மையாக நின்று போராடியுள்ளன. எனவே சாதிய ஆதிக்கசக்திகள் பெரியார் இயக்கங்கள் அம்பேத்கர் இயக்கங்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஒன்று சேர்ந்து தாக் குகின்றன. இனி வரும் காலங்களில், சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியார் இயக்கங்கள் அம்பேத்கர் இயக்கங்கள் கம்யூனிஸ்ட் இயக் கங்கள் ஆகியவை ஒன்றுபட்டுப் போராட முன்வரவேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக் கொண்டு, மீண்டும் ஒருமுறை அய்யா வீரமணி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் களை கூறி விடை பெறுகிறேன். நன்றி! வணக்கம்!!

Read more: http://viduthalai.in/page4/72049.html#ixzz2nV1EgZx6

தமிழ் ஓவியா said...


நீதிக்கட்சியால் ஏற்பட்ட நன்மைகள்


பிரிட்டிஷ் ஜனநாயகக் கொள் கைகளைப் பின்பற்றி (British liberalism) பெயரிலேயே Liberal
- என்கிற சொல்லையும் சேர்த்து தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (South Indian Liberal Federation) இணைத்து துவங்கியவர்கள் டி.எம்.நாயரும், தியாகராயரும்!.

அவர்கள் சாதாரண மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய பிரெஞ்சு நாட்டுத் தீவிரவாதக் குடி யரசுக் கட்சியில் இலட்சியங்களால் (Radical Republicans) ஈர்க்கப்பட் டவர்கள்; அதனால்தான் கிளமென் சோவைப் பின்பற்றித் தங்கள் நாளேட்டிற்கு யிவீநீமீ - என்று பெயர் வைத்தார்கள். பிராமணரல்லாதார் என்கிற எதிர்மறைப் பெயரில் அந்த உயிர் இல்லை - என்பதற்காக; அந்த உயிரைக் கொடுத்து உணர்வுகளைத் தட்டி எழுப்புவதற்கு இந்தச் சமுதாயத் திற்கு திராவிடர் என்கிற பெயரைக் கொடுத்தார்கள்; அதற்கு அடையாள மாகத் தங்கள் தமிழ் ஏட்டிற்கும் திரா விடன் என்கிற பெயரை வைத்தார்கள்!

ஒரு இனத்திற்கு தன்னுணர்வு ஊட்டி னார்கள்!

றீ அந்த நீதிக்கட்சியின் ஆட்சியி லேதான் நாடாளுமன்ற நடைமுறை களுக்கான அடித்தளம் இங்கே நாட்டப் பட்டது.

றீ இன்று தமிழ்நாடு நன்கு நிர்வகிக் கப்படும் மாநிலமாக இருக்கிறதென் றால் அதற்குக் காரணம் அன்று நீதிக்கட்சி தந்த பயிற்சிதான்!(321)

3321. “That Madras today is and is regarded as a well administered state in India. is due to the political education and experience gained here in operating dyarchy”
- S.Saraswathi. ‘Dyarchy in Madras’ P-20

அந்த நீதிக்கட்சியின் ஆட்சி யிலேதான் இந்தியாவிலேயே முதல் முறையாகப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது!(322)

322: 1919-ஆம் ஆண்டுச் சட்டப்படி பெண்களுக்கு வாக்குரிமை கொடுப்பது மாகாண சட்டசபைகளின் முடிவிற்கு விடப்பட்டது.

1921, ஏப்ரல் முதல் நாள் ஒரு தீர்மானத்தின் மூலம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

அந்த நீதிக்கட்சியின் ஆட்சி யிலேதான் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வியும், இலவசப் புத் தகங்களும்,இலவச ஆடைகளும், இலவச மதிய உணவும் வழங்கப் பட்டன!

-- - க.பழனிசாமி (தெ.புதுப்பட்டி) திராவிட இயக்க வரலாறு (1912 - 1921) முரசொலிமாறன் 414-ஆம் பக்கம்.

Read more: http://viduthalai.in/page4/72050.html#ixzz2nV1Tp8Ee

தமிழ் ஓவியா said...


இல்லவே இல்லை


ஒரு பக்தன்: நீங்களெல்லாம் கடவுள் இல் லேன்னு ஊர் பூராவும் சொல்கிறவனுங்க தானய்யா!

ஒரு பெரியார் தொண்டன்: அப்படியல்ல.

பக்தன்: நீங்கள் அப்படித்தானே சொல்லிக் கிட்டுத் திரியறீங்க.

ஒரு பெரியார் தொண்டன்: கடவுள் இல்லேன்னு சொல்லமாட்டோம். கடவுள் இல்லவே இல்லேன்னுதான் சொல்லுவோம் பக்தன்???

Read more: http://viduthalai.in/page8/72058.html#ixzz2nV2SmMex

தமிழ் ஓவியா said...


விருதுகள் விவரம்இந்தியாவின் மிக உயர்ந்த விருது - பாரத ரத்னா
1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது - காந்தி அமைதி விருது.
அமைதிக்கான மிக உயர்ந்த விருது - அசோக் சக்ரா விருது
மிக உயர்ந்த இலக்கிய விருது - பாரதீய ஞானபீட விருது.
மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது - நேரு சமாதான விருது
மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது - பி.டி.கோயங்கா விருது
மிக உயர்ந்த பால்வள விருது - கோபால் ரத்னா விருது
மிக உயர்ந்த கௌரவ ராணுவ விருது - ஃபீல்ட் மார்ஷல் விருது
மிக உயர்ந்த விளையாட்டு வீரர் விருது - அர்ஜீனா விருது
மிக உயர்ந்த விளையாட்டு பயிற்சியாளர் விருது - துரோணாச்சார்யா விருது
மிக உயர்ந்த வீரதீர விருது- மஹாவீர் சக்ரா
மிக உயர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் விருது - ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது
மிக உயர்ந்த வேளாண்மை விருது - க்ருஷி பண்டிட் விருது
மிக உயர்ந்த சினிமா விருது - தாதா சாகிப் பால்கே விருது

Read more: http://viduthalai.in/page8/72057.html#ixzz2nV2eOpEn

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


வைக்கம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் - சிறையில் கைவிலங்கு பூட்டி வைக்கப்பட்டிருந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

மண்டேலா வாழ்க்கைக் குறிப்பு


1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார்.

தெம்பு அரச குடும்பத்தைச் சார்ந்த பரம்பரையில் வந்த மண்டேலாவின் தந்தையின் பெயர் காட்லா ஹென்றி. தாயின் பெயர் நோஸ் கெனிபேனி.

இளம் வயதிலேயே குத்துச் சண்டை வீரராக அறியப்பட்ட மண்டேலா ஆடு மாடு மேய்த்துக்கொண்டே பள்ளியில் படித்தார்.

லண்டன் மற்றும் தென் ஆப்பிரிக்க பல்கலைக்கழகங்களில் படித்து பட்டப் படிப்பையும் சட்டப்படிப்பையும் முடித்தார்.

கருப்பர் இன மக்களுக்கு எதிரான வெள்ளையர்களின் நிறவெறியை எதிர்த்து 1939ஆம் ஆண்டு போராடத் தொடங்கினார்.

வெள்ளையர் இன அரசுக்கு எதிராகப் புரட்சி செய்ததாகக் கூறி 1956ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

சிறையிலிருந்து விடுதலையான பின் தீவிரமாகப் போராடினார்.

1961ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதப் படைத் தலைவர் ஆனார்.

1962ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி வெள்ளையர் அரசால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் 1964ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி ஆயுள் தண்டனைக் கைதியானார்.

18 ஆண்டுகள் ராபன் தீவில் தனிமைச் சிறைவாசம் அனுபவித்தார். பின் 1982ஆம் ஆண்டு போல்ஸ்மூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

உலக வரலாற்றில் தொடர்ந்து 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரே தலைவர் மண்டேலாதான்.

1990ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.

1990ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ஆம் தேதி சர்வதேச மண்டேலா தினமாக அய்.நா.சபை அறிவித்துள்ளது.

1994ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தார்.

1994ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி கருப்பர் இனத்தின் முதல் அதிபரானார்.

1999ஆம் ஆண்டில் முதுமை காரணமாக அதிபர் பதவியிலிருந்து விலகினார்.

2004ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொது வாழ்விலிருந்து ஓய்வு பெற்ற மண்டேலா 2013, டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.

ஈவிலின் மேசே, வின்னி, கிரேகா மேச்சல் என மூன்று மனைவிகள்.

பள்ளி ஆசிரியர் நெல்சன் என்ற பெயர் சூட்டினார். முழுப்பெயர் நெல்சன் ரோலிஹ்லாலா (Nelson Rolihlahla).

தமிழ் ஓவியா said...

ஓங்கி ஒலித்த உரிமைக் குரல்

உலகம் பல போராளிகளைப் பார்த்துள்ளது. அவர்களின் விடுதலை உணர்ச்சி முழக்கங்களைக் கேட்டுள்ளது. அவற்றில் மண்டேலாவின் முழக்கம் வித்தியாசமானது. மண்டேலா பல்வேறு நிகழ்வுகளில் ஒலித்த உரிமைக் குரல் இதோ:-

வெள்ளை ஆதிக்கத்தின் நேரடி விளைவுதான் ஆப்பிரிக்கர்கள் அனுபவிக்கும் இழிநிலை. வெள்ளை ஆதிக்கம் என்பது கருப்பர்கள் தாழ்வானவர்கள் என்பதையே குறிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஒழிசலான வேலைகள் என்பவை ஆப்பிரிக்கர்களால் மட்டுமே செய்யப்படுகின்றன. எதையாவது தூக்கிச் செல்ல வேண்டுமென்றாலோ எதையாவது சுத்தம் செய்ய வேண்டுமென்றாலோ ஒரு வெள்ளையர் சுற்றும்முற்றும் யாராவது கருப்பினத்தவர் தென்படுகிறாரா என்றுதான் பார்ப்பார், அவர் தனது வேலையாளாக இல்லாவிட்டாலும்கூட. இது போன்ற அணுகுமுறையால்தான் வெள்ளையர்கள் ஆப்பிரிக்கர்களை ஏதோ தனிவகை ஜந்து என்ற விதத்தில் பார்க்கிறார்கள். கருப்பர்களுக்கும் குடும்பம் இருக்கும் என்றோ அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கும் என்றோ, வெள்ளையர்களைப் போலவே அவர்களுக்கும் காதல் ஏற்படும் என்றோ வெள்ளையர்கள் உணர்வதில்லை. வெள்ளையர்கள் தங்கள் மனைவியருடனும் குழந்தைகளுடனும் இருக்க விரும்புவதைப் போலவே கருப்பர்களும் விரும்புவார்கள் என்று அவர்கள் உணர்வதில்லை; தங்கள் குடும்பத்தை நல்லபடி நடத்தவும், உணவு, துணிமணிகள் போன்ற தேவைகளை நிறைவேற்றவும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் தேவையான அளவுக்குச் சம்பாதிக்கக் கருப்பர்கள் விரும்புவார்கள் என்று வெள்ளையர்கள் உணர்வதில்லை.

எமது மக்கள் கண்டுள்ள முன்னேற்றங்கள், அவர்களின் தெள்ளத் தெளிந்த பேச்சு, அவர்கள் இங்கே பெற்று வரும் வெற்றிகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்கள் ஈட்டி வரும் அங்கீகாரம் ஆகியவை எல்லாம் ஒருவிதத்தில் எனது உழைப்பின் விளைவே என்று கூறி வருகிறார்கள். நான் என்ன நினைக்கிறேன் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். பெரியதொரு படையில் இடம் பெற்றிருப்பவர்களில் யானும் ஒருவன். வெற்றி அல்லது சாதனை என்று ஏதாவது உண்டென்றால் அதற்கான பெருமை இந்தப் படையில் இருக்கிற எல்லாரையும் சாரும். முன்னேற்றத்துக்குக் காரணம் எனது உழைப்பு மட்டுமே அன்று. எனது தோழர்களும் நானும் _ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் _ ஆற்றியுள்ள கூட்டுப் பணியின் விளைவாகவே முன்னேற்றம் கண்டுள்ளோம்.

தண்டனையை ஏற்கத் தயாராய் இருக்கிறேன். இந்த நாட்டின் சிறைச்சாலைகளில் ஓர் ஆப்பிரிக்கரின் நிலைமை எவ்வளவு கொடியது, எவ்வளவு அவலமானது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் தண்டனையை ஏற்கத் தயாராய் இருக்கிறேன். இந்தச் சிறைகளில் ஏற்கெனவே இருந்துள்ளேன். சிறைச் சுவர்களுக்குள்ளேயும்கூட ஆப்பிரிக்கர்களுக்கு எதிரான பாகுபாடு எவ்வளவு அப்பட்டமானது, வெள்ளைக் கைதிகளைக் காட்டிலும் ஆப்பிரிக்கக் கைதிகள் எவ்வளவு மோசமாய் நடத்தப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியும்.

ஆனால் இந்தக் காரணங்கள் எல்லாம் நான் தேர்ந்தெடுத்திருக்கிற பாதையிலிருந்து என்னை விலகச் செய்திட முடியாது; என்னைப் போன்ற ஏனையோரையும் விலகச் செய்திட முடியாது.

எனது மக்களுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் நான் செய்ய வேண்டிய கடமையைச் செய்தேன். நான் நிரபராதி என்றும், இந்த நீதிமன்றத்தில் கூண்டிலேற வேண்டிய குற்றவாளிகள் ஃபெர்வூடும்(பிரதமர்) அவரது அமைச்சர்களுமே என்றும் வருங்காலம் தீர்ப்பளிக்கும் _ இதில் எனக்குத் துளியும் அய்யமில்லை.

விடுதலை செய்யப்படும்போது, அநீதிகளை அகற்றுவதற்கான போராட்டத்தைத் தொடர்வேன். அநீதிகள் பூண்டோடு ஒழியும் வரை தொடர்ந்து போராடுவேன்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் போராட்டம் அன்னியர்கள் அல்லது கம்யூனிஸ்டுகளின் தூண்டுதலால் நடைபெறுவதாக அரசு ஏற்படுத்தி வரும் எண்ணம் முற்றிலும் தவறானது. தனி மனிதன் என்ற முறையிலும் எனது மக்களின் தலைவர்களில் ஒருவன் என்ற முறையிலும் நான் என்ன செய்திருந்தாலும் சரி, தென் ஆப்பிரிக்காவில் நான் பெற்ற அனுபவத்தின் காரணத்தாலும், நான் பெருமையாகக் கருதுகிற எனது ஆப்பிரிக்கப் பின்னணியின் காரணத்தாலும் செய்தேனே தவிர, யாரோ வெளிநாட்டார் ஏதோ சொன்னார் என்கிற காரணத்தால் அல்ல.

நாசவேலைக்குத் திட்டம் தீட்டியதை நான் மறுக்கவில்லை. வருவது வரட்டும் என்ற மனநிலையிலோ, வன்முறையின்பால் காதல் கொண்டோ அப்படிச் செய்யவில்லை. எனது மக்கள் பல்லாண்டு காலமாய் வெள்ளையரின் கொடுங்கோன்மைக்கும், சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாகி வருவதால் தோன்றியுள்ள அரசியல் நிலைமையை அமைதியாகவும் நிதானமாகவும் மதிப்பீடு செய்ததன் விளைவாகவே நாசவேலைக்குத் திட்டம் தீட்டினேன்

தமிழ் ஓவியா said...

வெள்ளை இருளைக் கிழித்த கருப்பு வெளிச்சம்


ஒரு உயிர் எப்போது விடுதலை பெறுகிறதோ அப்போதுதான் அது மனிதனாகிறது. விடுதலையை யாராலும் கொடுக்க முடியாது. போராடித்தான் பெற்றாக வேண்டும்

- (நெல்சன் மண்டேலா)


கொடும் சிறையில் அடைக்கப்பட்ட பலரின் வரலாறு உலகில் உண்டு. அவற்றில் பெரும் கொடுமையை அனுபவித்தவர் தென் ஆப்பிரிக்க கருப்பின மக்களின் தலைவர் நெல்சன் மண்டேலா. கடும் குற்றவாளிகளுக்குத்தான் அதிக ஆண்டுகள் ஆயுள் தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், விடுதலைக்காகப் போராடிய ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது நெல்சன் மண்டேலாவுக்குத்தான். அய்ந்தாண்டு பத்தாண்டல்ல, 27 ஆண்டுகள் சிறையில் கழித்தவர் மண்டேலா. விடுதலைக்குப் போராடிய போராளி ஒருவர் இவ்வளவு அதிக நாட்கள் சிறையில் இருந்தவர் உலக அளவில் உண்டென்றால் அவர் நெல்சன் மண்டேலாதான். அந்த மாமனிதர் கடந்த 2013 டிசம்பர் 5 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

மண்டேலா சிறைப்படுத்தப்பட்டபோது பார்த்துக் கொண்டிருந்த அதே உலகம்தான் அவர் மறைந்தபோது அழுதது. உலகத் தலைவர்கள் எல்லாம் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்; பல்வேறு நாடுகளும் அரசுமுறைத் துக்கம் அனுசரித்தன. இறுதி நிகழ்வில் பன்னாட்டு அதிபர்களும் பங்கேற்றனர்.அய்.நா.அவையின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

வெள்ளை நிறவெறிக்கு எதிராகப் போராடி வந்த தென் ஆப்பிரிக்க காங்கிரசில் சேர்ந்த மண்டேலா, அதன் மிதவாத அணுகுமுறை பலன் அளிக்காது எனக் கருதி ஆயுதம் ஏந்தியவர். அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாய் சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டவர். அரசுக்கு எதிராக நாசவேலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டபோது, 1964 ஏப்ரல் 20 அன்று தென் ஆப்பிரிக்க உச்ச நீதிமன்றத்தில், மண்டேலாவின் அந்த உரை உலகை உலுக்கியது. அவரது நீண்ட உரையின் நிறைவில் இப்படிக் கூறினார்.

``என் வாழ்நாள் முழுவதும் ஆப்பிரிக்க மக்களின் போராட்டத்துக்காகவே என்னை அர்ப்பணித்திருக்கிறேன். வெள்ளை ஆதிக்கத்துக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன், கருப்பர் ஆதிக்கத்துக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன். எல்லாரும் ஒற்றுமையாக வாழக்கூடிய, எல்லாருக்கும் சமமாக வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய, ஜனநாயகப்பூர்வமான, சுதந்திரமான சமூகம் என்ற லட்சியத்தையே நான் போற்றிவந்திருக்கிறேன். நான் அடைய நினைப்பது இந்த லட்சியத்தைத்தான்; நான் வாழ நினைப்பது இந்த லட்சியத்துக்காகத்தான். தேவை என்றால், என் உயிரையும் துறக்க நினைப்பது இந்த லட்சியத்துக்காகத்தான். -இந்த உறுதியுடன் சிறையில் பொறுமை காத்த 27 ஆண்டுகளும் தனது கொள்கை நெருப்பை அணையாமல் காத்தார் மண்டேலா.

அவரது பொறுமையின் பொருளை உலகம் அறியத் தொடங்கியது. மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் லண்டன் பி.பி.சி. வானொலி 11.6.88 அன்று 2 மணிநேர தெடர் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்றோர் அனைவரும் நெல்சன் மண்டேலாவை விடுதலை செய் என்று முழக்கமிட்டனர். அந்தப் பேரொலி உலகம் முழுவதும் ஒலிபரப்பப்பட்டது.

தமிழ் ஓவியா said...

இதனைப் பார்த்த தென் ஆப்பிரிக்க அரசு அதிர்ச்சி அடைந்தது. 40க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பாடிய நிகழ்ச்சியில் பாடி முடித்த ஒவ்வொருவரும்,
மக்கள் நெஞ்சில் நிறைந்துவிட்ட மண்டேலாவை விடுதலை செய்! விடுதலை செய் என முழக்கமிட்டனர். தென் ஆப்பிரிக்க அரசின் புதிய அதிபராகப் பொறுப்பேற்ற எப்.டபிள்யு.டி.கிளார்க் செய்தியாளர்களை அழைத்து, நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்கிறோம் என அறிவித்தார்.

மண்டேலாவும் அவருடன் சிறையில் வைக்கப்பட்டிருந்தவர்களும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டனர். சிறையிலிருந்து வெளியில் வந்த மண்டேலா தன்னை வரவேற்க ஆனந்தக் கண்ணீருடன் நின்ற மக்களைப் பார்த்து,
உங்களால் வரவேற்கப்படும் நான் யார்? உங்களின் ஒருவன். உங்களில் நானிருக்கிறேன். என்னோடு நீங்கள் இருக்கிறீர்கள். நான் உங்கள் தலைவனல்ல. உங்களின் தொண்டன் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

மேலும், நமது சுதந்திரப் போராட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. இன்னும் நாம் கடக்க வேண்டிய தூரம் உள்ளது. நமது தென்ஆப்பிரிக்க மக்கள் விரைவில் எல்லா உரிமைகளையும் பெற்றுச் சிறப்பார்கள். நம்மிடையே இனி நிறம், இனம் என்ற பாகுபாடு கூடாது. எல்லோரும் ஒன்றாக உழைத்து வெற்றி என்ற குறிக்கோளை அடைந்து இந்த உலகத்தில் உயர்ந்து நிற்போம் என்று ஒற்றுமைக்கும் வெற்றிக்கும் வித்திட்டு லட்சியப் பயணத்தில் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர். உலகின் நெருக்குதலில் 1990ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டபோது மண்டேலாவின் வயது 71.

மண்டேலாவின் போராட்டம் வென்றது. 80 ஆண்டுகால நிறவெறி ஆட்சிக்கு விடைகொடுத்தது. தென் ஆப்பிரிக்காவின் முதல் தேர்தலில் வென்றார். 1994ஆம் ஆண்டு அந்நாட்டின் அதிபராகப் பதவி ஏற்றார். 1999ஆம் ஆண்டு பதவிக் காலம் முடிந்தவுடன் மீண்டும் போட்டியிட மறுத்துவிட்டார். அரசுப் பதவியை விடுத்து அதன் பின் முழுமையாக மக்கள் நலனுக்காகப் பாடுபட்டார்.

அடிமை நாட்டில் வாழ்பவர்களுக்கு சுதந்திர நாடுகளைப் பார்த்தால் என்ன மனநிலை தோன்றும்? அதனை அனுபவித்த மண்டேலாவின் மனவோட்டம் இது. ஒரு முறை தனது வெளிநாட்டுப் பயண அனுபவம் குறித்து மண்டேலா சொன்னபோது,

என் வாழ்நாளிலேயே முதன்முதலாய் சுதந்தர மனிதனாய் இருந்தேன். வெள்ளை ஒடுக்குமுறை இல்லை; இன ஒதுக்கல், இனத் திமிர் என்கிற மடத்தனம் இல்லை; போலீஸ் தொல்லை இல்லை. அவமானமும் அவமதிப்பும் இல்லை. சென்ற இடமெல்லாம் என்னை மானிடப் பிறவியாய் மதித்தார்கள் என்றார். இந்தச் சுதந்திர வாழ்க்கை தனது இன மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். அதுவும் தனது மண்ணிலேயே வேண்டும் என்ற விடுதலை உணர்ச்சிதான் அவரைப் போராளியாக்கியது. நான் இனவெறியன் அல்லன்; இன வெறியைக் கட்டோடு வெறுப்பவன். இனவெறி என்பது கருப்பரிடமிருந்து வந்தாலும் வெள்ளையரிடமிருந்து வந்தாலும் அநாகரிகமானது, அருவருக்கத்தக்கது.

எனது காலம் திரும்பி வருமானால், இதுவரை செய்ததையே மீண்டும் செய்வேன்.

தன்னை மனிதன் என்று அழைத்துக் கொள்கிற எவனும் இப்படித்தான் செய்வான்.

அரசாங்க வன்முறையால் அதற்கெதிரான வன்முறையைத்தான் வளர்க்க முடியும். முடிவில், அரசாங்கத்துக்கு நல்ல புத்தி வராமற்போனால், அரசாங்கத்துக்கும் எனது மக்களுக்கும் இடையிலான பூசல் வன்முறை வழியில் தீர்க்கப்படும் என்று எக்காளமிட்டார் மண்டேலா.

1986 இல் அன்றைய வெள்ளை அரசாங்கம் மண்டேலாவை விடுதலை செய்யத் தயார் என்றது. ஆனால், அதற்கு ஒரே ஒரு நிபந்தனை என்றது. இதுதான் அந்த நிபந்தனை:- ``மண்டேலா வன்முறையைக் கைவிட வேண்டும். ஆதிக்க ஆட்சியின் செவிப்பறையைக் கிழிக்கும் பதிலை எச்சரிக்கையாக விடுத்தார் மண்டேலா. அரசுக்குச் சொல்லவேண்டிய பதிலை மக்களுக்கு அறிவித்தார்.

என் சுதந்திரத்தைப் பெரிதும் மதிக்கிறேன். ஆனால் அதைவிடவும் உங்கள் சுதந்திரத்துக்காகக் கவலைப்படுகிறேன். நான் சிறைப்பட்டதிலிருந்து எத்தனையோ பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எத்தனையோ பேர் சுதந்திரத்தை நேசித்து இன்னலுற்றிருக்கிறார்கள். கணவரை இழந்து கைம்பெண் ஆனவர்களுக்கு, ஆதரித்தோரை இழந்து அனாதை ஆனவர்களுக்கு, பெற்ற செல்வத்தைப் பறிகொடுத்த தாய் தந்தையருக்கு _ அன்புக்குரியவர்களை இழந்ததால் வருந்தி அழுதவர்களுக்கெல்லாம் நான் கடன்பட்டிருக்கிறேன். தனிமையும் வெறுமையும் சூழ்ந்த இந்த நீண்ட ஆண்டுகளில் அல்லலுற்றது நான் மட்டுமல்ல. வாழ்க்கையை நேசிப்பதில் உங்களுக்கு நான் சளைத்தவன் அல்லன். ஆனால், விடுதலை பெற்று வெளியே வர வேண்டும் என்பதற்காக எனது பிறப்புரிமையையும் நான் விற்க முடியாது. மக்களது பிறப்புரிமையையும் நான் விற்கத் தயாரில்லை. மக்களின் பிரதிநிதியாகவும், தடை செய்யப்பட்ட உங்கள் ஸ்தாபனமாகிய ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசின் பிரதிநிதியாகவுமே நான் சிறையிலிருக்கிறேன்.

மக்கள் ஸ்தாபனம் தடை செய்யப்பட்டிருக்கிறபோது, எனக்குச் சுதந்திரம் தருவதாகச் சொல்கிறார்களே, இது என்ன சுதந்திரம்? தனது இலட்சியத்திலிருந்து இறுதிவரை விலகாதவராகப் போராடிய அந்த மாவீரன் அடிமை நாட்டில் பிறந்தவர்; ஆனால் தன்னுடைய மக்களுக்கு அதிலிருந்து விடுதலை பெற்றுத் தந்தவர்.

அடிமைத்தனத்தைக் கடைப்பிடித்த வெள்ளை இருளை ஒழித்த கருப்பு வெளிச்சம் மண்டேலா மறையவில்லை. உலகெங்கும் நடந்துவரும் விடுதலைப் போராளிகளின் உள்ளங்களில் வாழ்கிறார்.

- அன்பன்

தமிழ் ஓவியா said...

மேலும், நமது சுதந்திரப் போராட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. இன்னும் நாம் கடக்க வேண்டிய தூரம் உள்ளது. நமது தென்ஆப்பிரிக்க மக்கள் விரைவில் எல்லா உரிமைகளையும் பெற்றுச் சிறப்பார்கள். நம்மிடையே இனி நிறம், இனம் என்ற பாகுபாடு கூடாது. எல்லோரும் ஒன்றாக உழைத்து வெற்றி என்ற குறிக்கோளை அடைந்து இந்த உலகத்தில் உயர்ந்து நிற்போம் என்று ஒற்றுமைக்கும் வெற்றிக்கும் வித்திட்டு லட்சியப் பயணத்தில் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர். உலகின் நெருக்குதலில் 1990ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டபோது மண்டேலாவின் வயது 71.

மண்டேலாவின் போராட்டம் வென்றது. 80 ஆண்டுகால நிறவெறி ஆட்சிக்கு விடைகொடுத்தது. தென் ஆப்பிரிக்காவின் முதல் தேர்தலில் வென்றார். 1994ஆம் ஆண்டு அந்நாட்டின் அதிபராகப் பதவி ஏற்றார். 1999ஆம் ஆண்டு பதவிக் காலம் முடிந்தவுடன் மீண்டும் போட்டியிட மறுத்துவிட்டார். அரசுப் பதவியை விடுத்து அதன் பின் முழுமையாக மக்கள் நலனுக்காகப் பாடுபட்டார்.

அடிமை நாட்டில் வாழ்பவர்களுக்கு சுதந்திர நாடுகளைப் பார்த்தால் என்ன மனநிலை தோன்றும்? அதனை அனுபவித்த மண்டேலாவின் மனவோட்டம் இது. ஒரு முறை தனது வெளிநாட்டுப் பயண அனுபவம் குறித்து மண்டேலா சொன்னபோது,

என் வாழ்நாளிலேயே முதன்முதலாய் சுதந்தர மனிதனாய் இருந்தேன். வெள்ளை ஒடுக்குமுறை இல்லை; இன ஒதுக்கல், இனத் திமிர் என்கிற மடத்தனம் இல்லை; போலீஸ் தொல்லை இல்லை. அவமானமும் அவமதிப்பும் இல்லை. சென்ற இடமெல்லாம் என்னை மானிடப் பிறவியாய் மதித்தார்கள் என்றார். இந்தச் சுதந்திர வாழ்க்கை தனது இன மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். அதுவும் தனது மண்ணிலேயே வேண்டும் என்ற விடுதலை உணர்ச்சிதான் அவரைப் போராளியாக்கியது. நான் இனவெறியன் அல்லன்; இன வெறியைக் கட்டோடு வெறுப்பவன். இனவெறி என்பது கருப்பரிடமிருந்து வந்தாலும் வெள்ளையரிடமிருந்து வந்தாலும் அநாகரிகமானது, அருவருக்கத்தக்கது.

எனது காலம் திரும்பி வருமானால், இதுவரை செய்ததையே மீண்டும் செய்வேன்.

தன்னை மனிதன் என்று அழைத்துக் கொள்கிற எவனும் இப்படித்தான் செய்வான்.

அரசாங்க வன்முறையால் அதற்கெதிரான வன்முறையைத்தான் வளர்க்க முடியும். முடிவில், அரசாங்கத்துக்கு நல்ல புத்தி வராமற்போனால், அரசாங்கத்துக்கும் எனது மக்களுக்கும் இடையிலான பூசல் வன்முறை வழியில் தீர்க்கப்படும் என்று எக்காளமிட்டார் மண்டேலா.

1986 இல் அன்றைய வெள்ளை அரசாங்கம் மண்டேலாவை விடுதலை செய்யத் தயார் என்றது. ஆனால், அதற்கு ஒரே ஒரு நிபந்தனை என்றது. இதுதான் அந்த நிபந்தனை:- ``மண்டேலா வன்முறையைக் கைவிட வேண்டும். ஆதிக்க ஆட்சியின் செவிப்பறையைக் கிழிக்கும் பதிலை எச்சரிக்கையாக விடுத்தார் மண்டேலா. அரசுக்குச் சொல்லவேண்டிய பதிலை மக்களுக்கு அறிவித்தார்.

என் சுதந்திரத்தைப் பெரிதும் மதிக்கிறேன். ஆனால் அதைவிடவும் உங்கள் சுதந்திரத்துக்காகக் கவலைப்படுகிறேன். நான் சிறைப்பட்டதிலிருந்து எத்தனையோ பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எத்தனையோ பேர் சுதந்திரத்தை நேசித்து இன்னலுற்றிருக்கிறார்கள். கணவரை இழந்து கைம்பெண் ஆனவர்களுக்கு, ஆதரித்தோரை இழந்து அனாதை ஆனவர்களுக்கு, பெற்ற செல்வத்தைப் பறிகொடுத்த தாய் தந்தையருக்கு _ அன்புக்குரியவர்களை இழந்ததால் வருந்தி அழுதவர்களுக்கெல்லாம் நான் கடன்பட்டிருக்கிறேன். தனிமையும் வெறுமையும் சூழ்ந்த இந்த நீண்ட ஆண்டுகளில் அல்லலுற்றது நான் மட்டுமல்ல. வாழ்க்கையை நேசிப்பதில் உங்களுக்கு நான் சளைத்தவன் அல்லன். ஆனால், விடுதலை பெற்று வெளியே வர வேண்டும் என்பதற்காக எனது பிறப்புரிமையையும் நான் விற்க முடியாது. மக்களது பிறப்புரிமையையும் நான் விற்கத் தயாரில்லை. மக்களின் பிரதிநிதியாகவும், தடை செய்யப்பட்ட உங்கள் ஸ்தாபனமாகிய ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசின் பிரதிநிதியாகவுமே நான் சிறையிலிருக்கிறேன்.

மக்கள் ஸ்தாபனம் தடை செய்யப்பட்டிருக்கிறபோது, எனக்குச் சுதந்திரம் தருவதாகச் சொல்கிறார்களே, இது என்ன சுதந்திரம்? தனது இலட்சியத்திலிருந்து இறுதிவரை விலகாதவராகப் போராடிய அந்த மாவீரன் அடிமை நாட்டில் பிறந்தவர்; ஆனால் தன்னுடைய மக்களுக்கு அதிலிருந்து விடுதலை பெற்றுத் தந்தவர்.

அடிமைத்தனத்தைக் கடைப்பிடித்த வெள்ளை இருளை ஒழித்த கருப்பு வெளிச்சம் மண்டேலா மறையவில்லை. உலகெங்கும் நடந்துவரும் விடுதலைப் போராளிகளின் உள்ளங்களில் வாழ்கிறார்.

- அன்பன்

தமிழ் ஓவியா said...

சங்கரராமன் கொலைவழக்கு:

தமிழக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலிலேயே அதன் முக்கிய பக்தர்களில் ஒருவரான சங்கரராமன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அக்கொலைபற்றி முதலில் போலிக் குற்றவாளிகளைக் கைது செய்து, பிறகு உண்மையான குற்றவாளிகள் இவர்கள்தான் என்று கண்டறிந்து காவல்துறையின் ஆழ்ந்த புலன் விசாரணைக்குப்பின், காஞ்சி மடாதிபதிகள் சங்கராச்சாரியார் ஜெயேந்திரரும், அவரது அடுத்த சீடரான விஜயேந்திரரும், இதில் குற்றவாளி ஒன்று, குற்றவாளி இரண்டு என்று கைது செய்யப்பட்டு மற்றும் பலருமாக 25 பேர்மீது குற்றப் பத்திரிகை தரப்பட்டது. கொலைக் குற்றத்திற்காக, இந்த இரண்டு சங்கராச்சாரியார்களும் சிறையில் சில காலம் இருந்து, பிணையில் (ஜாமீனில்) வெளி வந்தனர்!

இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை, மடங்களையும் கோவில்களையும் கண்காணிக்கும் துறை என்ற நிலையில், இவ்விருவரும் மடாலயப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்; அது ஏனோ நடைபெறவில்லை!

வழக்கினை தமிழ்நாடு நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாது; வேறு மாநிலத்தில் விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடுத்து, அதன் தீர்ப்புப்படி புதுவை நீதிமன்றம் விசாரித்தது. புதுவையில் வழக்கு நடக்கும்போதே தொலைப்பேசியில் அந்த நீதிபதியை அழைத்து, ஜெயேந்திரர் பேசியதாக ஒலி நாடாவை வைத்து அதற்குத் தனி விசாரணை நடைபெற்றது; அப்போது விசாரித்த நீதிபதி இராமசாமி என்பவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு நீதிபதி (செஷனில்) வந்து வழக்கை நடத்தினார். இந்த விசாரணை சரியாக நடைபெறவில்லை என்பது பொது மக்களிடையே பரவலாகப் பேசப்படும் செய்தியாகும்; அந்த ஒலி நாடா பேச்சு சரியாகக் கேட்கவில்லை; ஆகவே அதைத் தள்ளுபடி என்ற செய்தி; அது பூசி மெழுகப்பட்ட நிலையில் இணையதளங்களில் ஒலிக்கும் அதே நாடா எப்படி துல்லியமாகக் கேட்கிறது என்ற கேள்வியும் ஒரு சிக்கலான கேள்வியாகும்.

தமிழ் ஓவியா said...

இது ஒருபுறம் இருக்க, வழக்கில் 81 சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்கள் (Hostile Witness) ஆகியுள்ளனர்.

அப்ரூவர் ரவிசுப்ரமணியன் என்பவரே பல்டி அடித்துள்ளார். இப்படி ஒரு பிறழ்சாட்சியம் துவங்கும்போதே, அரசு அவர்மீது குற்ற நடவடிக்கை எடுத்து வழக்குப் போட்டு நீதிமன்றங்களில் நிறுத்தியிருந்தால், ஏனைய பிறழ் சாட்சியங்கள் தொடர் கதையாக ஆகியிருக்காது! ஏனோ காவல் துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்தார்கள்? அரசின் முக்கியப் பொறுப்பாளரின் கண் ஜாடையோ, அல்லது ஏதோ காரணமாக இருந்திருக்க வேண்டும் என்பது சட்டவட்டாரங்களில் பேசப்படுகின்றது.

இத்தீர்ப்பில் குற்றஞ்சாட்டப் பெற்ற அத் துணைப் பேரும் விடுதலை செய்யப்பட்டனர்! இந்த இரண்டு சங்கராச்சாரியார்கள் இப்படி ஒரு விசித்திர தீர்ப்பைப் பெற்ற விசித்திர வழக்காக இது கருதப்படுகிறது. உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டிய அவசரக் கடமை தமிழக அரசிற்கு உண்டு.

கொலைக் குற்றம் செய்தோர் என்று குற்ற ஆய்வில் கண்டறிந்ததற்குப் போதிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

துவக்கத்தில் கைது செய்ய ஆந்திராவிற்குப் போன காவல்துறை அதிகாரிகளிடமே பேரம் நடந்தது என்றெல்லாம்கூட செய்திகள் கசிந்தன.

துணிந்து அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள், நீதியை நிலைநாட்ட துணிந்து இந்த இருவரையும் கைது செய்ததன் மூலம் அவரது துணிச்சலுக்காக பெருமை பெற்றவராக ஆனார். நாமும் பாராட்டினோம். நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் செய்தோம்.

பெரிய இடத்து சிபாரிசுகளுக்குக்கூட முதல்வர் இணங்காமல் அப்போது நீதி வெல்ல வேண்டும் என்று நின்றார்!

இப்போதும் அவரே முதல் அமைச்சர் என்ற நிலையில் இவ்வழக்கில் இப்படி நீதி, கேலிக் கூத்தாவதைப் பார்த்து முதலமைச்சர் சும்மா இருக்கலாமா? உடனடியாக மேல் முறையீட்டினைச் (அப்பீல்) செய்ய சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு அவசர கதியில் ஆணை பிறப்பித்து, தனிக் குழுவை அமைத்து, நடவடிக்கையைத் தொடர வேண்டும் என்று நாடே எதிர்பார்க்கிறது.

தமிழ் ஓவியா said...

திடுக்கிடும் தகவல்கள்

தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு...நக்கீரன் வாரம் இருமுறை ஏட்டில் வெளிவந்துள்ள ஒரு செய்தியை தமிழக அரசின் முக்கியப் பார்வைக்கு வைக்கிறோம்:

புதுச்சேரி கோர்ட்டில் அரசு வக்கீலாக ஆஜரான தேவதாஸ், காஞ்சிபுரம் சி.பி.சி.அய்.டி. டி.எஸ்.பி.க்கு ஒரு லெட்டர் எழுதியிருக்காரு. அதில், சங்கரராமன் கேஸ் அப்பீலுக்குத் தகுதியான கேஸ்னு 7 பாயிண்ட்டுகளைச் சுட்டிக்காட்டியிருக்காரு. 1. அப்ரூவர் ரவிசுப்ரமணியம் பல்டி சாட்சியானதால் அது சம்பந்தமா தனி வழக்கைத் தொடுத்து விசாரிக்கணும். ஆனா, அவரை வழக்கிலிருந்தே விடுதலை செஞ்சிருக்காரு நீதிபதி முருகன். இந்தியச் சட்ட வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லையாம். மறுவிசாரணை நடத்த இந்த பாயிண்ட்டே போதும். 2. சங்கரராமனுக்கும், ஜெயேந்திரருக்கும் முன்விரோதம் இல்லைன்னு நீதிபதி தன் தீர்ப்பில் சொல்லியிருக்காரு. ஆனா, சோமசேகர கனபாடிகள்ங்கிற பேரில் ஜெயேந்திரருக்கு எதிரா எழுதப்பட்ட லெட்டர்களெல்லாம் சங்கரராமன் தன் கைப்பட எழுதியதுதான்னு கையெழுத்து நிபுணர்கள் அளித்த சாட்சியத்தை நீதிபதி கவனத்தில் எடுத்துக்கலை.

3. இந்த வழக்கில் பல்டி சாட்சியான பலரும் ஏற்கெனவே ஒரு நீதிபதி முன்பு 164 ஸ்டேட்மெண்ட் கொடுத்தவர்கள்தான்; அதை அப்படியே நீதிபதி முருகன் நிராகரிச்சிருக்காரு.
4. காஞ்சி மாஜிஸ்டிரேட் முன்பாக நடந்த அணிவகுப்பில் கொலையாளிகளை சங்கரராமன் குடும்பத்தினர் அடையாளம் காட்டியதையும் அவர் கவனத்தில் எடுத்துக்கலை.

5. கொலை நடந்தபோது சிறையில் இருந்த ஒருவன், ஜெயேந்திரரின் தூண்டுதலால்தான் போலிக் குற்றவாளியாகச் சரணடைந்தான் என அரசுத் தரப்பு நிரூபித்திருப்பதும் நீதிபதியின் தீர்ப்பில் இடம் பெறவில்லை. 6. ஜாமீன் கொடுத்தபோது தெரிவிக்கப்பட்ட கருத்துகளை விசாரணை நீதிமன்றம் அப்படியே எடுத்துக்கக் கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட்டே சொல்லியிருந்தும், ஜெயேந்திரர் கொலைக்கான சதித் திட்டத்தைத் தீட்டினாருங்கிறதுக்கு முகாந்திரம் இல்லைன்னு அப்படியே எடுத்துக் கொண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்குது.

7. கொலைக்காக 5 லட்ச ரூபாய் மடத்திலிருந்து கொடுக்கப்பட்டிருப்பதையும் அதில் ஒரு லட்சத்தை ஜெயேந்திரரே கொடுத்திருக்கிறார்னு அரசுத் தரப்பு நிரூபித்த ஆதாரங்களும் ஏற்கப்படலை. இதெல்லாம் அந்த லெட்டரில் சொல்லப்பட்டிருக்குது. அது அப்படியே சி.பி.சி.அய்.டி. டி.ஜி.பி.க்குப் போக, அவர் அதை சி.எம். அலுவலகத்துக்கு அனுப்பிட்டாரு. (நக்கீரன் 7.12.2013)

சட்டப்படி சம்பவம் நடந்தது, விசாரித்தது, எல்லாம் தமிழக அரசும் காவல்துறையும்தான்; விசாரணை நீதிமன்றம் புதுச்சேரியாக இருப்பதால் அந்த அரசுக்கே மேல் முறையீடு செய்ய உரிமை என்ற சட்ட வியாக்யானம் ஏற்கத்தக்கதல்ல.

நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டத்துறை என்று மூன்றும் தனியே வந்தபோது, புதுச்சேரி நீதிமன்றம் விசாரித்ததோடு அவர்களது, அதிகார எல்லை (Jurisdiction) முடிந்ததாகக் கொண்டு, விசாரித்து வழக்கைத் தாக்கல் செய்த அரசுக்கே மேல்முறையீட்டு உரிமையும், கடமையும் உண்டு என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலைநாட்டிட, நீதி, நியாயம் நிலைக்க, தமிழக அரசும், முதல் அமைச்சரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இன்றேல் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் அபாயம் ஏற்படக்கூடும்.

- கி.வீரமணி
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

புத்தர் பிறப்பு கி.மு. 6ஆம் நூற்றாண்டில்...புதிய ஆய்வுத் தகவல்

புத்தர் கி.மு.3ஆம் நூற்றாண்டில் பிறந்தவர், 4ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் என்று பல கருத்துகள் நிலவிவரும் நிலையில், புத்தரின் பிறப்பிடமான நேபாளத்தில் மிகப் பழைமையான புத்த விகாரை (கோவில்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் துர்ஹாம் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபின் கன்னிங்ஹம் தலைமையிலான தொல்லியல் குழுவினர் மேற்கொண்ட அகழ்வாய்வில், செங்கற்களால் கட்டப்பட்ட தொடர் புத்த விஹாரைகளின் கீழ் கி.மு.6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மரத்தாலான விஹாரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மய்யப்பகுதியில் வெற்று இடம் உள்ளது. இந்த வெற்றிடத்தின் மய்யத்தில் மரம் இருந்திருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பழமையான மரத்தின் வேர்கள் அந்த இடத்தில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. லும்பினி தோட்டத்தில் மரத்தின் கிளையைப் பிடித்தபடி ராணி மாயாதேவி புத்தரைப் பிரசவித்த கதையுடன் இதற்குத் தொடர்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இதிலிருந்து, புத்தர் மரத்தடியில் பிறந்திருக்கலாம் என்ற வரலாறு உண்மை என்பதும் அவர் பிறந்த இடமான மரம் புனிதமாகக் கருதப்பட்டு வணங்கப்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

பொன்மொழி

செய்யக் கூடியதைச் செய்யாமல் இருப்பவன் சோம்பேறி. செய்யக் கூடியதைச் செய்து முடிப்பவன் உழைப்பாளி. செய்யக் கூடியதை வேகமாகவும் அதிகமாகவும் செய்பவன் திறமைசாலி. செய்ய முடியாத அரிய செயல்களைச் செய்பவனே சாதனையாளி.

- இந்தியா

தமிழ் ஓவியா said...


துளிச் செய்திகள்

இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி 53 சதவிகித பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். அதில் 88.6 சதவிகித குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே வன்முறைக்கு ஆளாகின்றனர்.

அமெரிக்காவில் மருத்துவக் கல்விப் பாடத் திட்டத்தில் மாற்று மருத்துவச் சிகிச்சை முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் 6 மாதம் மாற்று மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்துப் பயில வேண்டும். நிலவின் சுற்றுவட்டப் பாதையில் செல்லும் ஜேட் ராபிட் என்ற புதிய தொழில்நுட்பம் இணைந்த செயற்கைக் கோளினை டிசம்பர் 2 அன்று சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் டிசம்பர் 3 அன்று டில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

வாய்ஸ் 17பி என்ற கிரகத்தில் அதிக அளவில் தண்ணீர் இருப்பது அமெரிக்கா அனுப்பிய ஹப்பிள் தொலைநோக்கி விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றி டிசம்பர் 7ஆம் தேதி முதல் 10 வரை விசாரணை நடத்தி 10ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் வகையில் ஜெர்மனியில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

கருத்து

சென்னையில் பல இடங்களில் தெருவிலும், சாலை ஓரங்களிலும் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை இன்றும் பார்க்கலாம். ஏன் அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை? எதிர்காலத்தில் திருட்டுகள், பிக் பாக்கெட், செயின் பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடும் வாய்ப்பு இந்தச் சிறுவர்களுக்கு அதிகம் உள்ளது.

- எஸ். ராஜேஸ்வரன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

மக்களை இழுத்தடிப்பதை அரசு அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். மக்கள்தான் ஜனநாயகத்தின் நாயகர்கள். அதிகாரிகள் எல்லோரும் அவர்களுக்கு ஊழியர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அரசு என்பது மக்களுக்காகத் தானே தவிர அவர்களுக்கு எதிராக இருக்கக்கூடாது.

- கே.கே.சசீதரன்,
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

இலங்கை தங்கள் நாட்டு சட்டதிட்டங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அவ்வாறு நடந்துகொள்ளும் என்றும் நம்புகிறோம். மேலும், போருக்குப் பிறகு நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளையும் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். இந்த நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லாவிட்டால் சர்வதேச சமூகம் இனியும் பொறுமையாக இருக்காது.

- நிஷா பிஸ்வால், அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர்

தமிழ் ஓவியா said...


சிறந்த நூலிலிருந்து சில கவிதைகள்துளிரத் தொடங்கும் எங்களுக்கான தேசம்!

நூல்: வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு

ஆசிரியர்: ரகசியன் | செல்பேசி: 9445182142

வெளியீடு: பொன்னி,
2/1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவன்யூ, மடிப்பாக்கம், சென்னை-91

பக்கங்கள்: 88 | விலை: ரூ.60/-

ஒருவரியேனும்

உங்களோடு சேர்ந்து வாக்களிக்கிறேன்
உங்களோடு சேர்ந்து திரைப்படம் பார்க்கிறேன் அவ்வப்போது
உங்களோடு சேர்ந்து மது அருந்துகிறேன்

உங்கள் விரல்களில் இருக்கும் வெண்சுருட்டை
போதை நிறைந்த அப்பொழுதில்
புகைக்கவும் செய்கிறேன்
என்பதினால்
நீங்களாக நான் எப்போதும் ஆனதில்லை

என்றாவது மலர்கள் மொழிந்ததுண்டா
உங்களிடம்?
நிலவின் இதழ் உங்கள் கன்னம்
தீண்டியிருக்கிறதா?

இப்பெரிய நீலம்
உம் கண்களில் நிரம்பி வழிந்திருக்கிறதா?

வெட்டு வாங்கிய மரங்கள்
உம்மிடம் சொல்லி அழுதிருக்கின்றனவா?

தோண்டப்பட்ட மலையில் வழியும்
இரத்தக் கவிச்சியை உணர்ந்திருக்கிறீரா நீவீர்?

நீ இளைப்பாறும் இந்நிழல்
நீரே நட்டு வளர்ந்த மரமா?
சுவைக்கும் கனியும் அப்படியோ?

நீரில்லா இம்மணல் வெளியில்
நதியின் கண்ணீர் ஓடுகின்றதைக் கண்டீரா? வியர்வைக்கு நியாயமான விலை கேட்டதற்கு
உம் சகமனிதன் கொளுத்தப்பட்டான்
பார்த்துக் கொண்டிருந்தீர்கள்

உம் சகமனிதனின் தலைமையைப்
பொறுத்துக் கொள்ளாமல்
அவனை வெட்டி முண்டமாக்கினர்
பார்த்துக் கொண்டிருந்தீர்கள்

உம் சக மனிதனின் வாயில்
பீ திணித்தார்கள்
பார்த்துக் கொண்டிருந்தீர்கள்

அற்புதமாக எழுதும் நீங்கள்
இம்மானிட இழிவுக்கு எதிராக
ஒருவரியேனும் எழுதியதுண்டா?

ஓசோன் படலம் கிழிந்துவிட்டது
பூமி வெப்பம் அடைந்துவிட்டது
ஆயிரமாண்டின் பண்பாடு
அழியத் தொடங்குகிறது

என்று புலம்பும் வாயிலிருந்து
இந்த இழிசெயல்கள் மேல்
காறி உமிழ எச்சில்
ஏன் இல்லை?

இதயத்தில் கசிவில்லை

எறும்புகள் புழுவை
வதைப்பது போல்
மக்களை வதைக்கிறது பசி

பைத்தியத்தின் திமிரில் வரும்
உம் சொற்கள் அல்லது
செயல்கள்
இம்மண்ணின் இதயங்களைக்
கருக வைக்கின்றன
கவின்மிகு பூக்கள் தீயில்
கருகுவது போல்

சன்னல் வழி சொட்டும்
இவ்வழகிய மழை தான்
குடிசை மக்களைத் துன்புறுத்துகிறது

தும்பிகள் பிடிக்க வேண்டிய
விரல்களைச் சுடுகிறது
கண்ணாடிக் குவளை வழி தேனீர்

இன்னும் பல யாவும் கண்டும்
எந்தக் கசிவுமில்லை இருதயத்தில்

இப்பெரும் கடலில் நீலம்
கொட்டிக்கிடப்பது போலவே
இவையாவும் என்றெண்ணி
ஒரே அலைவரிசையில் பயணம் செய்கிறோம்

நம் எழுத்துக்காரர்களைப் போல்
நம் கூத்துக்காரர்களைப் போல்
நம் ஆட்சிக்காரர்களைப் போல்

கொடும் விலங்கொன்று

பசியையும் தீண்டாமையையும்
தின்று வளர்கிறது
கொடும் விலங்கொன்று
குடிசை ஒவ்வொன்றிலும்

ஆழிப்பேரலையையும்
அடங்கா பெரும் காற்றையும்
எங்கள் திசைகளில்
திருப்புகின்றாய்

புயல்களைச் சுவாசித்தே
ஜீவித்துக் கொண்டிருக்கிறோம்
ஆயிரம் ஆண்டுகளாய்
வடிகட்டிய மென்காற்றைத் தின்று
வாழ்கிறாய்

ஆரவாரமாய், அமைதியாய், திமிராய்
கட்டப்பட்டுள்ள அவ்விலங்கு
கட்டுக்கடங்காமல் அறுத்துக்கொண்டு
உன் அமைதியை ஆரவாரத்தை திமிரை குதறும்

அந்நாள் வரை துய்
எம் மகிழ்வை அமைதியை
மென்காற்றை

துளிரும் தேசம்

ஒருவருக்கு மலம் திணிக்கிறீர்

எல்லோரும் கொதிக்கிறோம்
நெருப்புக் குளம்பாய்

எங்கள் தாய்களையும்
சகோதரிகளையும் பலாத்காரம் செய்கிறீர்

கருவுருகிறோம்
ஆயுதங்களோடு

எரித்த எம் குடிசைகளின் தீக்களாலே
சூரியன்கள் பல காய்த்திருக்கிறோம்

உங்களின் ஒதுக்குதல்களில் இருந்து
துளிரத் தொடங்கும் எங்களுக்கான தேசம்

வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு

தெரிந்த வழி எல்லாம்
பயணிக்கிறோம்
எங்கும் காணவில்லை

வளர்ந்து வரும்
நம் எழுத்தின் கைகளுக்கும்
உறுமும் நம் பேச்சின் பேரொலிக்கும்
துளிர்க்கும் நம் அரசியலுக்கும்
தொடரும் உரையாடலுக்கும் மசியவில்லை

தேவைப்படுகிறது
இன்னும் பல ஆயுதங்கள்
வண்ணங்களை விழுங்கிப்
பெருத்துக் கொண்டிருக்கும்
இருட்டினுள் இருக்கிறது அது

ஆயிரமாண்டின் இதயங்களைக்
கழற்றி எறிந்து விட்டு
அப்பெரும் இருட்டினுள்
பாய்வோம் சூரியனாய்

அறிவின் வாளில்

சாதி கழித்த மலத்தினுள்
புதைந்திருக்கிறது தாய் நிலம்

மலத்தில் பிறந்த மிருகம்
வேட்டையாடிக் கொண்டிருக்கின்றது
மக்களை

ஞானத்தின் கூரிய வாள்
வாய்மையின்
தலைமேல் தொங்கிக் கொண்டிருக்கிறது

மதம் காக்க தெய்வத்தின்
பிணத்திற்கு அரிதாரம் பூசி
ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்

ஆயிரங்கள் ஆகிப்போன
நான்கு வர்ணங்களைக் கட்டிக் காக்கிறது
பூணூல்

பிரிக்கப்படாமலிருக்கும்
மந்திரக்கட்டுகள் அறுத்தெறியப்படும்
கூரேறிக் கொண்டிருக்கும்
அறிவின் வாளில்

தமிழ் ஓவியா said...

விருதுகள் இப்படி


தயான் சந்த் என்பவரைத் தெரியுமா?

விளையாட்டுத் துறைக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதில்லை என்று தயான் சந்த்தை நிராகரித்த இந்திய அரசுதான் இன்று சச்சின் டெண்டுல்கரைத் தேடிக் கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, யார் அந்த தயான் சந்த் என்பதைப் பார்க்கலாம். விதிகளை மாற்றி விளையாட்டுத் துறைக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என்றால் முதல் விருது தயான் சந்த்துக்குத்தான் தரப்பட வேண்டும் என்கிறது அவரது சாதனைப் பட்டியல்.

ஹாக்கி விளையாட்டு வீரரான இவர்தான் இந்தியாவுக்கு 3 ஒலிம்பிக் தங்கம் வாங்கிக் கொடுத்தவர். இவர் தலைமையில் சென்ற இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் தோற்றதே இல்லை.

1932இல் 37 போட்டிகளில் 133 கோல், 1934_35இல் 43 போட்டிகளில் 201 கோல் என இவர் ஆடிய ஆட்டத்தை முறியடிக்க இன்னும் ஒருவர் பிறக்கவில்லை. இவரது ஆட்டத்தைப் பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன், ஹாக்கி வீரர் என்று சொல்லி ஒரு கிரிக்கெட் வீரரை ஹாக்கி அணியில் சேர்த்து விட்டார்கள்! கிரிக்கெட்டில் ரன்கள் எடுப்பது போல் அல்லவா கோல்கள் அடிக்கிறார்! என்று சொன்னாராம்.

அன்றைய பன்னாட்டுப் பத்திரிகைகள் இவர் மட்டையில் பசையைத் தடவி வைத்திருக்கிறாரோ? பந்து அவர் மட்டையுடனே செல்கிறதே! என்று எழுதினவாம்!

ஆஸ்திரிய நாட்டில் இவருக்குச் சிலை வைத்துள்ளார்கள். எப்படித் தெரியுமா? நான்கு கைகளுடன் இருப்பது போல சிலை அமைத்து, அந்த நான்கு கைகளும் தலா ஒரு ஹாக்கி மட்டையைக் கையில் பிடித்த வண்ணம் இருக்கும்!

1905இல் பிறந்து 1979இல் மறைந்த தயான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ஆம் தேதிதான் இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது! ஹாலந்து நாட்டில் இவரது ஹாக்கி மட்டையை உடைத்து அதில் காந்தம் ஏதும் உள்ளதா என சோதித்தார்களாம்.

ஒருமுறை ஹாக்கிப் போட்டியில் விளையாடியபோது, தயான் சந்த்தினால் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லையாம்; இவர் அடித்த கோல்கள் இலக்கினுள் விழவில்லை. பின்னர் நடுவரிடம் சென்ற தயான் சந்த், இரு கோல் கம்பங்களுக்கு இடையே உள்ள தூரம் சரியான அளவில் அமைக்கப்படவில்லை என்று முறையிட்டுள்ளார். இதனை ஏற்று அளவெடுத்துப் பார்த்துள்ளார்கள். அப்போது, பன்னாட்டு விதிகளின்படி இடைத்தூர அளவு சரியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அனைவரும் வியந்துவிட்டனர்.

தயான் சந்த்தின் திறமையைப் பார்த்த ஹிட்லர், ஜெர்மன் குடியுரிமையுடன் ராணுவத்தில் கலோனல் பதவியும் தருவதாகச் சொல்லி இருக்கிறார்! ஆனால், அதனை ஏற்க மறுத்துவிட்டார் தயான் சந்த்!

பன்னாட்டு ஹாக்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ள தயான் சந்த்துக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது; விளையாட்டு அமைச்சகமும் பரிந்துரை செய்தது. ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு பாரத ரத்னா கொடுக்கப்படுவதில்லை என்பதால் அதை அரசு நிராகரித்துவிட்டது.

இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் 3 முறை தங்கம் வாங்கிக்கொடுத்த தயான் சந்த்துக்கு வழங்காத பாரத ரத்னா, தனது சொந்த சாதனைக்காக விளையாடியதோடு மட்டுமல்லாமல், விளையாட்டை வைத்து கோடிகளில் சம்பாதித்தவருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்பற்றுக்கும், உழைப்புக்கும் இந்தியாவில் மதிப்பு இவ்வளவுதானா?

- விளையாட்டுப்பிள்ளை

தமிழ் ஓவியா said...

ராஜராஜன் மேல் மரியாதை இல்லை!

கேள்வி: தஞ்சாவூரில் பத்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறீர்கள். பெரிய கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா?

பதில்: பெரிய கோவிலின் புல்வெளியில் இருக்கும் புல் ஒவ்வொன்றும் என்னை அறியும். ஆனால், ராஜராஜன் மேல் மட்டுமல்ல, எந்த மன்னன் மேலும் எனக்கு மரியாதை இல்லை. இன்னொரு நாட்டின் மேல் படையெடுத்து, அந்நாட்டு மக்களின் அமைதியைக் கெடுத்து, பெண்களை அடிமையாக்கி, பொருள்களைக் கொள்ளையடித்து வாழ்ந்த மன்னர்கள் என்பவர்கள் கிரிமினல்கள். அவர்கள் புகழப்படுவது, தவறு. பிரமாண்டமாக ஒன்றைச் செய்வது (கோவில் கட்டுவதுபோல), மக்கள் வரிப்பணம் ஊதாரித்தனமாகச் செலவழிக்கப்பட்டது மட்டுமல்ல... அது எளிமையை அழிக்கிற ஆணவச் செயல்பாடு, ஏழ்மை, இல்லாமை, தேவைகளோடு வாழ்கிற மக்களை, இந்தப் பிரமாண்டம் அவமானப்படுத்துகிறது. தன்னைப் பிரமாண்டமாகக் கருதுவது மனிதத்தனம் அல்ல. கோவில், கலையை வளர்த்தது உண்மை. ஆனால், அது யாருக்கான கலை? கோவிலுக்குள் எல்லா ஜாதி மக்களும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களா? யாருக்காக அத்தனை பெரிய கட்டடம்? யார் தொழ, யார் ஆசி பெற இந்தக் கோவில்? கோவிலுக்குள் இருக்கும் இறைவன் எனக்குள் இருக்க மாட்டானா என்ன?

- பிரபஞ்சன்,

நன்றி: ஆனந்தவிகடன், 4-.12.2013

தமிழ் ஓவியா said...

நாத்திக அறிவியலாளர்

ஸ்டீவன் வெய்ன்பெர்க் - (STEVEN WEINBERG)

ஸ்டீவன் வெய்ன்பெர்க் அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியல் அறிவியலாளர். ஆரம்பநிலைத் துகள்களின் பலம் குறைந்த சக்திக்கும், மின்காந்த அலைகளுக்கும் இடையே ஏற்படும் செயல் விளைவுகள், அவற்றை ஒன்றுபடுத்துவது பற்றிய ஆராய்ச்சிக்காக நோபெல் பரிசு பெற்றார்.

வெய்ன்பெர்க்கின் ஆரம்ப நிலைத் துகள்களும் வான்வெளியியலும் பற்றிய ஆராய்ச்சி அவருக்குப் பல்வேறு விதமான பரிசுகளையும் 1979இல் இயற்பியலுக்கான நோபெல் பரிசையும் 1991இல் அறிவியலுக்கான தேசிய மெடலையும் பெற்றுக் கொடுத்தது.

தமிழ் ஓவியா said...

2004இல் அவர் அமெரிக்கன் பிலாசபிகல் சொசைட்டியின் பெஞ்சமின் ஃபிராங்ளின் மெடலையும் பெற்றார். அத்துடன் கொடுக்கப்பட்ட பாராட்டுப் பத்திரத்தில், இன்று உலகத்தில் வாழும் சித்தாந்த இயற்பியலாளர்களில் தலைசிறந்தவராகப் பலரால் கருதப்படுகிறவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர், அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்திற்கும், பிரிட்டனின் ராயல் சொசைட்டிக்கும் அமெரிக்கத் தத்துவக் கழகத்திற்கும், அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கழகத்திற்கும் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார்.

ஸ்டீவன் வெய்ன் பெர்க், 1933 மே 3ஆம் நாள், நியூயார்க் நகரத்தில் பிறந்தார். அவரது பெற்றோர்கள், ப்ஃரடெரிக், மற்றும் ஈவா வெயின்பெர்க்கும், அமெரிக்காவில் குடியேறிய யூதர்கள். 1950இல் வெயின்பெர்க் அறிவியலில் தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். 1954இல் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். அதை முடித்த பிறகு அவர், கோப்பன்ஹேமில் உள்ள நீல்ஸ்போர் கல்விக் கழகத்தில் சேர்ந்து, முதுநிலைப் பட்டப் படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். ஓராண்டிற்குப் பிறகு வெயின்பெர்க் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்திற்குத் திரும்ப வந்து, சாம் டெர்ரிமேன் என்ற பேராசிரியரின் கீழ் பயின்று 1957இல் இயற்பியலில் முனைவர் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றார். வெயின்பெர்க் ஒரு நாத்திகர்.

தனது முனைவர் பட்டத்தைப் பெற்ற பிறகு, 1957_59இல் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட மேல் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தார்.

1959இல் பெர்க்கெலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றி, 1960_1966இல் அவர் ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். 1968இல் வெயின் பெர்க்கெலியை விட்டு ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பதவியேற்றார். 1967இல் அவர் எம்.அய்.டி. கல்வி நிறுவனத்தின் கவுரவப் (விசிட்டிங்) பேராசிரியராகவும் இருந்துள்ளார். 1967ஆம் ஆண்டிற்குப் பிறகு, முழு தரமான மாதிரியில், ஆரம்பநிலைத் துகள்கள் பற்றிய கருத்து பலரால் விரிவுபடுத்தப்பட்டது. 1973இல் ஹிக்ஸ் போசன் என்பவரின் ஆய்வுகள் அந்த மாதிரிகளின் அடிப்படைகளைக் கொண்டிருக்கவில்லை. 1973இல் வெய்ன்பெர்க் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இயற்பியலில் ஹிக்கின்ஸ் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

1979இல் நடுநிலை விசை பற்றிய கண்டுபிடிப்பிற்கு ஆறாண்டுகளுக்குப் பிறகு அதாவது இசட் பாசன் இருப்பதாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்பை ஒட்டி, இசட் பாசானை மின் காந்தத்துடன் இணைத்து ஏற்படுத்தும் விளைவுகளுக்கு ஏற்படும் சம இணை மறுப்புகள் பற்றி எதிர்நோக்கிய நிலையில் அமைந்தது.

வெய்ன்பெர்க், இயற்பியலுக்காக, ஷெல்டன் கிளாஸ்ஸோ, அப்துஸ் சலாம் ஆகியோருடன் இணைந்து நோபெல் பரிசு பெற்றார்.

1982இல் ஆஸ்டினிலிருந்த டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை ஜேக் எஸ். ஜோசி _ வெல்ச் அறக்கட்டளையின் அறிவியலின் ரீஜென்ட்ஸ் இருக்கைக்கு (சிலீணீவீக்ஷீ) இடம் மாறினார். அங்கே இயற்பியல் இலாகாவின் கொள்கைக் குழுவைக் கண்டறிந்தார்.

அவரது அறிவியல் ஆய்வு தவிர, ஸ்டீவன் வெய்ன்பெர்க் அறிவியலுக்கான ஒரு தகவல் தொடர்பாளராகவும் இருந்தார்.

அமெரிக்க சட்டசபையின் முன் பெரும் மோதல்களை உண்டாக்கும் சூப்பர் கடத்திகள்பற்றி விளக்கம் அளித்தார். நியூயார்க் புத்தக விமரிசனம் என்ற இதழில் கட்டுரைகள் எழுதினார். மற்றும் அறிவியலின் பரந்த பொருள் பற்றி விரிவுரைகள் கொடுத்தார். பொதுமக்களுக்காக அறிவியல் பற்றி அவர் எழுதிய புத்தகங்கள் வழக்கமாக, பாரம்பரியமாக அறிவியல், நாத்திகம் பற்றிய வரலாறும் தத்துவமும் கொண்ட கலவையாக, அறிவியலைப் பிரபலப்படுத்துவதற்கான தனித்தன்மை கொண்டவையாய் இருக்கும்.

வெய்ன்பெர்க், அறிவியல் போர் என்று சொல்லப்பட்டவற்றில் முக்கியமான ஒரு பங்களிப்பாளராக இருந்தார். அவர் அறிவியல் அறிவு பற்றியும் அறிவியல் பற்றிய கடினமான உண்மைத்திறன் பற்றியுமானவற்றில் வாதிடுவார். வாஷிங்டன் நகரில் 1999இல் அவர் பேச்சில் தெரிவித்த மதம் பற்றிய அவரது கருத்துகள்:

மனித கவுரவத்திற்கு மதம் ஒரு அவமானம். மதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் நல்லது செய்கிற நல்ல மனிதர்களையும் தீங்கு செய்கிற தீமையாளர்களையும் கொண்டிருக்கிறீர்கள். நல்ல மனிதர்கள் தீமைகளைச் செய்ய மதம் வழி செய்கிறது. அவர் மேலும், எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக உலகம் தோன்றினாலும்கூட அதிகமாக அவை குறியற்றதாக இருப்பதாகத் தோன்றுகிறது என்றார்.

2006 நவம்பரில் நடந்த நம்பிக்கைக்கு அப்பால் என்ற சொல்லாடல் அரங்கத்தில் அவர் பங்கு கொண்டு உரையாற்றினார்.

அவர் லூயிஸ் என்ற பெண்ணை மணந்து எலிசபெத் என்ற மகளைப் பெற்றார்.

- தமிழில்: ஆர்.ராமதாஸ்

தமிழ் ஓவியா said...

அய்யர் மலையில் ஆரியம்’


பார்ப்பான்
இன்னமும் பல்லக்கில்
பாழும் தமிழனின்
தோள்களில் அய்யர் - மலை ஏற்றம்.?!

கோவிலுக்குள்
அழுக்குப் பிசுக்கின்
அலாதி நாற்றம்.
சமாளிக்க
சாம்பிராணியும்
ஊதுபத்தியும்
தெய்வீக மணம்.?!

ஓயாமல் உச்சரிக்கப்பட்ட
சமக்கிருத மந்திரங்களில்
ஓரிடத்தில் தவறு!
உச்சரித்தவர்களுக்கு மட்டுமே
அது புரிகிறது;
அவர்களின் அசட்டுச் சிரிப்பில்
நமக்கும்!

ஒரு வார்த்தை கூட
புரியவில்லை
பூசையில் சமக்கிருதம்...
முடிந்ததும்,
உணவு வருகிறது...
பாழும் வயிற்றுக்குக் கூட
புரிந்துவிடுகிறது.

பக்திப்பெருக்கில்
பக்தனுக்கு
கண்ணீர் வடிகிறது.
ஓமப் புகையின் உதவியோடு?

பால், தயிர், மோர்,
பேரிச்சம்பழம்,
எலுமிச்சைச் சாறு,
சந்தனம், திராட்சைச் சாறு
இன்னும் சில...

அண்டாக்களில்
நிறைந்து கிடக்கிறது
கருங்கல்லின்மீது சொரியப்பட!

ஈசன் கோவில் பூசையில்
சமக்கிருத மந்திரம்
இங்கு தமிழிலும்
அர்ச்சனை செய்யப்படும்
என்ற பலகையின் சாட்சியுடன்.

கோவிலின் உள்பிரகாரத்தில் ஆங்காங்கே எடிசனின் அறிவு பளிச்சிடுகிறது.
ஆகம விதிகளிலும்
அறிவியலின் ஊடுருவல்!

- உடுமலை வடிவேல்

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரும் தொன்மங்களும்


- மதிமன்னன்

அருப்புக்கோட்டையில் ஓர் அரசுப் பணியாளர். மார்க்சிய அறிவுடன் சீரிய பகுத்தறிவாளர். தீவிர பெரியாரிஸ்ட். தமிழ்நாடு மின் வாரியத்தில் பணி புரிகிறார். ஏதோ ஓர் அமைப்பின் சார்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தப் போவதாகவும் அதில் நான் இந்தியா இவன் மதமா? அவன் மதமா? இந்தியா எவன் மதம்? என்ற தலைப்பில் பேச வேண்டும் என்றார். அவர் எனக்கு அறிமுகமானவர் அல்லர். என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார். எங்காவது போய்ப் பேசிச் சிக்கலாகிவிடக் கூடாது என்கிற, வழக்கமான பழக்கத்தில் அருப்புக்கோட்டை கழகத் தோழர் விடுதலை ஆதவனிடம் கேட்டேன். தோழர் மதி.கண்ணன் நல்ல பகுத்தறிவாளர், நீங்கள் தாராளமாகக் கலந்துகொள்ளலாம் என்று கூறியதோடு, கலந்துகொள்ள வேண்டும் எனவும் கூறிவிட்டார். நான் ஒப்புதல் தந்தேன்.

கருத்தரங்கம் திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராசர் சிலைக்கு எதிரில் உள்ள வசதியான அரங்கில். காலையில் நான் உள்பட சிலர், மாலையில் சி.பி.அய். தோழர் மகேந்திரன் உள்பட சிலர். கருத்தரங்கத்திற்கு இரண்டு நாள் முன்னதாக மதி.கண்ணன் பேசினார். என் பேச்சைத் தட்டச்சு செய்து அனுப்ப முடியுமா? எனக் கேட்டார். பேச்சை எழுதுவதோ, எழுதி வைத்துப் படிப்பதோ நான் அறியாதது. நான் விரும்பாததும் கூட. என்றாலும் அவர் கேட்ட மாதிரியே செய்து தந்தேன்.

கருத்தரங்க நேரத்திற்கு முன்னதாகவே என் வழமைப்படி சென்று விட்டேன். அரங்கம் செல்லும் வழியில் நூல்கள் விற்பனைக்கடை விரித்திருந்தார் ஒருவர். நான் ஒரு புத்தகப் புழு. புத்தகங்களை மேய்ந்தேன். என் பெயர் போட்ட ஒரு சிறிய நூல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. எனக்கே வியப்பு. எடுத்துப் பார்த்தேன். நான் பேசப்போகும் பேச்சு நூலாக உள்ளது. இதற்காகத்தான் மதி.கண்ணன் தட்டச்சு செய்து கேட்டார் என்பது அப்போதுதான் விளங்கியது.

நான் பேசினேன். படித்தேன். முப்பது மணித்துளிகள் பேசினேன். கேள்வி நேரம் என்றார்கள். கேள்விகள் கேட்டார்கள். முதல் கேள்வியே, பார்ப்பனர் என்று மரியாதை இல்லாமல் குறிக்கிறீர்களே, ஏன்? என்பது. பார்ப்பனர், பார்ப்பான் என்பது மரியாதைக் குறைவான சொல் அன்று, நல்ல தமிழ்ச்சொல், இலக்கியத்தில் ஆளப்பட்டுள்ள தூய தமிழ்ச் சொல் என்பதையெல்லாம் விளக்கினேன். திருக்குறள், சிலப்பதிகாரம், குறுந்தொகை ஆகியவற்றின் வரிகளை எடுத்துக்காட்டிப் பதில் இறுத்தேன். அந்தத் தோழருக்குத் திருப்தி இல்லை போலும், துணைக் கேள்வி எழுப்பினார். இங்கிலீஷ் ஏட்டின் ஆசிரியர் பார்ப்பனர் ஒருவர் பெயரைச் சொல்லி அவர் போன்ற நல்லவர்களே உங்கள் கண்களில் படவில்லையா எனப் படபடத்தார். நான் விளக்கம் கூறிப் பேசினேன். (விவரம் நாகரிகம் கருதித் தவிர்க்கப்பட்டது).

பார்ப்பனர் என்று திராவிடர் கழகத்தினரும் தீவிர பெரியாரியவாதிகளும் மட்டுமே விளிக்கின்றனர். மற்றையோர் பிராமணர் எனப் பயன்படுத்துகின்றனர். பெரியார் சொன்னார், அவரைப் பிராமணன் என்று சொன்னால் நம்மைச் சூத்திரன் என்று ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டார். அந்தச் சொல்லுக்கு எதிர்ச் சொல் இதுதானே! சூத்திரன் என அழைத்துக் கொண்டால், தாசி மகன் உள்பட ஏழு பெயர்களில் ஒன்றை ஏற்றுக் கொண்டதாகி விடுமே! எனவே தவிர்க்கிறோம். ஆனாலும் அதனை வசைச் சொல் எனக் கருதிச் சிலர் கோபப்பட்டனர். இன்னமும் கோபப்படுகின்றனர். சில நாள்களுக்கு முன் சீரங்கத்தில்கூட 23 பேர் கொண்ட மாபெரும் மக்கள் திரள் முன்பு நின்று பேசிய பேச்சாளர் கூடப் பேசினாராம். சீரங்கம் அல்லவா? பேச்சு தடை இல்லாமல் அவர்கள் பேசலாமே! அதனால்!

ஆனால் உண்மை என்ன?

கற்றோய்த் துடுத்துப் படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப நிற்போர் எனப் பாடுகிறது முல்லைப் பாட்டு.

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பாக்கமும் என விளக்குகிறது தொல்காப்பியம்.

ஆறுவகையான பார்ப்பனர் யார் என்பதை விளக்குகிறது நம்பியகப் பொருள் (பாடல் 213) தலைவன், தலைவி, பார்ப்பான், பாங்கன், பாங்கி, செவிலியென்றீங் கிங்கறுவரும் சாற்றிய களவில் கூற்றிற் குரியர் என்கிறது பாடல் வரிகள்.

ஓதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல் (தனக்காக), வேள்வி செய்தல்(பிறர்க்காக) ஈதல், ஏற்றல் எனும் ஆறு செயல்களைப் புரிவோர் இவர்கள் எனப் பதிற்றுப் பத்து கூறுகிறது.

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
என்று குறுந்தொகை (பாடல் 156) பாடுகிறது.
நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய
நெருநல் வேள்வி நீ செயல் வேண்டும்
என்று ஒலிக்கிறது சிலப்பதிகாரம்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பினி எனப் பார்ப்பனப் பெண்ணைஅழைப்பதை பாசண்டன் யான் பார்ப்பினி தன்மேல் என்று சிலப்பதிகாரமே காட்டுகிறது.

மாபெரும் பாத்திரம் பார்ப்பினி சாவி

கப்புடைக் கழித்து வருவோன் என்று இரட்டைக் காப்பியத்தில் மற்றொன்றான மணிமேகலை கூறுகிறது.

பார்ப்பார் தவறே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தோர் இளையார் பசுப்பெண்டிர்

என்று ஆசாரக்கோவை பலவீனமானவர்களைப் பட்டியல் போடுகிறது.

பார்ப்பார் மறை ஓதுக என்றும் பார்ப்பனக் குறுமகன் போலத்தாமும் என்றும் அய்ங்குறுநூறு கூறுகிறது.

வேள்விப் பாகம் உண்ட பைங்கப் பார்ப்பான் என்று அவிர்பாகம் உண்ட அய்யரைக் குறிப்பது பரிபாடல்.

திருந்துகேளாய் முழுதிர்தமுது பார்ப்பான் அஞ்சின முதுபார்ப்பான் என்று கலித்தொகை வருணிக்கிறது.
நின் முன்னோரெல்லாம் பார்ப்பார் நோவன செய்கார் என்று நைச்சியமாகப் பார்ப்பான் பேசியதைப் புறநானூறு (பாடல் 43) காட்டுகிறது.

வேளாப் பார்ப்பான் வாவரந்துமித்த என அகநானூறு பேசுகிறது.

மாலதியும் பார்ப்பானொடு, மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட, பார்ப்பன வாகை குடியேற்புற என்பனவெல்லாம் சிலம்புப் பரல்கள். படுபொருள் வவ்விய பார்ப்பான் இவன் என இடுசிறை கோட்டத்து இட்டார் என்று கூறுவதும் சிலப்பதிகாரம் தான்!
இலக்கியச் சான்றுகளை இன்னும் ஏராளம் காட்டலாம். என்றாலும், அவாள் திட்டுகிறோம் என்றே நினைத்து நடந்து கொள்கிறார்கள். இதற்காகவே சிலர், பிராமணர் என்று சொல்லாமல் பிராமின் என்று இங்கிலீசில் சொல்லி... அவர்கள் மனம் நோகாமல் பார்த்துக் கொள்கிறார்களாம்!

இலக்கிய அறிவும் ஆய்வுப் பட்டறிவும் நிரம்பப் பெற்ற பேராசிரியர்கள் பலரின் கருத்து, சங்ககாலம் தொடங்கி இன்றுவரை பொருள் மாறாமல் நின்று நிலவிடும் சொற்கள் பரதவர் என்பதும் பார்ப்பனர் என்பதும் மட்டுமே என்கின்றனர். கடலோரத்தில் வாழ்ந்துகொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவோர் பரதவர் என்றே இன்றுவரை குறிக்கப் பெறுவதைப் போலவே பார்ப்பனர் என்பதும் ஈராயிரம் ஆண்டாக நிலைபெற்றுள்ளது என்பதே பெருமைக்குரியதாக அல்லவா கருதப்பட வேண்டும்! பார்ப்பனரின் வாதூல கோத்ரம் வாதூளி என்றும் பாரத்வாஜ கோத்ரம் நெடும்பாரதாயன் எனும் பெயராலும் கவுண்டில்ய கோத்ரம் கவுணியன் எனும் பெயராலும் கவுதம கோத்ரம் கோதமன் என்ற பெயராலும் இலக்கியங்களில் காணப்படுகிறதே!

பசுமாடுகளைக் கயிற்றால் பிணைத்து ஓரணியில் கட்டப்பட்ட நிலைக்குக் கோத்ரம் என்று வடமொழியில் கூறுவர். பசுக்களை மேய்த்துக் கொண்டு இங்கே நுழைந்தவர்கள் இன்றளவும் அதையே தங்களுக்கான அடையாளமாக _ இனக் குழுப் பெயர்களாக வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். அதைத் தமிழ் இலக்கியம் பொத்தி வைத்துத் தருகிறது. அவை மட்டும் இனிக்கின்றன, பார்ப்பான் மட்டும் கசக்கிறது என்றால்... ஏன் இந்த இரட்டை நிலை?

தமிழ் ஓவியா said...

வேள்வி செய்யாத பார்ப்பனர்களும் இருந்ததை வேளாப் பார்ப்பான் எனும் சொல் பிரித்துக் காட்டுகிறது. இன்றளவும் அண்ணாவிப் பார்ப்பனர்கள் என்ற பெயரில் வேதமே படிக்கக் கூடாத பார்ப்பனர்களும் இருக்கிறார்களே! கந்துவட்டித் தொழில் மட்டுமே செய்யக்கூடிய, செய்ய வேண்டிய கல்லிடைக் குறிச்சிப் பார்ப்பனர்கள் இருக்கிறார்களே! வேளாப் பார்ப்பான் வாள் அரந்துமிய எனும் அகநானூற்று வரிகள் (பாடல் 94) சங்கறுத்துப் பிழைத்த பார்ப்பனர்களைக் குறிப்பிடுகிறதே! சண்டையிடும் அரசர்க்கிடையே தூது சென்ற பார்ப்பனர்களையும், காதல் வயப்பட்ட தலைவன் தலைவியிடையே தூதுபோன பார்ப்பனர்களையும் தூதொய் பார்ப்பான் என்று அகநானூறு (பாடல் 337) அறிமுகப்படுத்துகிறதே! (படிக்க: பண்பாட்டு அசைவுகள் -_ பேரா.தொ.பரமசிவன்)

வேதத்தைப் பார்ப்பதால், பார்ப்பான் என வந்தது எனச் சில பேராசிரியர்களின் கூற்று. பார்ப்பும் பறழும் பறப்பவற்றில் இளமை என்கிறது தொல்காப்பியம். எனவே பார்ப்பார் எனும் சொல்லுக்கு இளையர் என்பதே பொருள் என்கிறார் பேரா. தொ.பரமசிவன்.

அவரே எழுப்புகிறார், பார்ப்பார் யாருக்கு இளையர்? அவருக்கு மூத்தவர் யார்?

விடையை இலக்கியத்தில் தேட இயலாது. கள ஆய்வுதான் விடைகாண துணை செய்யும் என்கிறார், அவரே! தென் மாவட்டங்களில் வழங்கும் சொல்லடையைச் சுட்டிக் காட்டுகிறார்: பார்ப்பானுக்கு மூப்பு பறையன், கேட்பார் இல்லாமல் கீழ்ச்சாதி ஆனான் எனும் சொல்லடை ஒரு காலத்தில் பறையர் பெற்றிருந்த சமூக உயர்வுக்கான சான்றாகும் என்கிறார். (அதே நூல் பக்கம் 180) பறை எனும் இசைக்கருவியை இசைத்ததால் பறையர் எனும் பெயரைப் பெற்ற மக்கள் பார்ப்பனர்க்கு மூத்தவராக இருந்த நிலை மாறி, இன்றைக்கு இழி நிலைக்குத் தள்ளப்பட்டது எவ்வாறு?

வரலாறு எங்காவது இதுபற்றிப் பேசுகிறதா? சிறு குறிப்பாவது உள்ளதா? வரலாறு என்பதே, ஆள்வோரின் வரலாறாக, அரசுகளின் வரலாறாக, அரசர்களின் வரலாறாக மட்டும் தானே உள்ளது? சாம்ராஜ்யங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்தான் வரலாறாக உள்ளது என்பதுதான் மேலைநாட்டுப் பேராசிரியர்களின் கருத்து. எல்லாமே வர்க்கப் போராட்டங்களின் வரலாறு எனக் கூறிவிட்டார் கார்ல் மார்க்ஸ்.

தமிழ் ஓவியா said...

அப்படியானால் சாமான்யர்களின் வரலாறு எங்கே தெரியும்? அவர்களின் நினைவுகளில் தங்கி, தேங்கி சடங்குகளாக, கதைகளாக, புராணங்களாக, இதிகாசங்களாகத் தெரிய வருகின்றன. புராண, இதிகாசங்கள் என்பவை யெல்லாமே புனைவுகளாகவும் புளுகுகளாகவும் உள்ளன. தன்னல ஆதிக்கச் சக்திகள் இவற்றை ஆக்ரமித்துத் தங்களின் வக்கிரத்தைத் திணித்துப் புகுத்திப் பரப்பி வெற்றி பெற்றன. அவற்றை வரலாறு என்று மதவாதிகள் கூறிக் கொண்டிருக்கின்றனர் இந்தியாவில்!

இலியது, ஒடிசி போன்ற மேலைநாட்டு இதிகாசங்கள் வரலாறு எனும் அந்தஸ்தைப் பெறவில்லை. அந்நாட்டில் அறிவுள்ளோர் அதிகம். அதனால், நேர்மாறான நிலை இங்கு. ராமன் பெயரால் அரசியலே நடக்கிறது 100 ஆண்டாக. கிருஷ்ணன் ஆண்ட துவாரகா எங்கே என்று கடலுக்குள் போய் ஆய்வு நடத்த குஜராத் அரசு திட்டம் போடுகிறது. சரசுவதி நதி எங்கே என, கோடிக்கணக்கில் கொட்டி வீணாக்கிய வாஜ்பேயி போல! இதிகாசம் என்றால், நடந்த வரலாறு என்று அரும்பத உரை தருகிறது பாபநாசத்துப் பத்தாம் வகுப்புப் பெயில் பார்ப்பனன் சிறீ சிறீ ரவிசங்கர் எனும் பார்ப்பனர்!

மக்கள் சமூகத்தின் கடந்தகால வாழ்வு அனுபவம், முரண்கள், சிந்தனைப் போக்கு, போன்ற பலவற்றைத் தொன்மங்களில்தான் (MYTH) கட்டி வைத்துள்ளது. உலகச் சமுதாயம் முழுமையுமே இம்மாதிரித் தொன்மங்களைக் கொண்டுள்ளது. பிரளயம், உலகம் அழிவு, மீளவும் உயிர்ப்பு ஏற்பட்டமை பற்றிய யூத, கிறித்துவ இனத்தாரின் தொன்மங்கள் போலவே (இந்திய) இந்து இனத்தாரின் தொன்மங்களும் அமைந்துள்ளதை ஒப்பு நோக்கலாம்.

தமிழ் ஓவியா said...

அப்படிப்பட்ட தொன்மங்கள், பார்ப்பனர் (பிரமனின்) படைப்புக் கடவுளின் வாயிலிருந்து வந்ததாகக் கூறும். அத்தோடு நிறுத்தி அந்தச் சமூக உயர்வைக் கூறிப் பெருமைப்படுவதோடு நில்லாமல், பிற சமூகத்தவரைக் கீழ்ப்படியில் நிறுத்திக் கீழானவர்களாக்கும் தீய எண்ணத் தொன்மமாகவும் அமைந்துள்ளது நேர் மாறாக கேரளாவில் உள்ள அடித்தள மக்களின் தொன்மம், பறையர்களை மூத்த பிராமணன் என்று கூறுகிறது.

தமிழ் ஓவியா said...

மாடு வருவதையும் ரத்தம் எடுப்பதையும் தூரத்தில் இருந்து பார்த்தவர்கள், தம்பியிடம் போட்டுக் கொடுத்துவிட்டனர். உன் அண்ணன் மாட்டை அறுத்து மாட்டுக்கறி உண்டுவிட்டு உங்களுக்கு மட்டும் அரிசிப் பொங்கலைத் தருகிறான் என்று வத்தி வைத்தனர். இதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் மூத்தவன் மனைவி. முழுகாமல் இருந்த அவளுக்கு மாட்டுக்கறி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. கணவனிடம் கண்டிஷன் போட்டுக் கேட்டாள் மாட்டுக்கறி கொண்டு வரவேண்டும் என்று. மசக்கைக்காரி மனதில் தோன்றும் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பது மரபு. அர்ச்சகர் மாட்டை அறுத்தான். கறி சமைத்து வீட்டுக்குக் கொண்டு வந்தான். அண்ணன் மாட்டை அறுத்துக் கறியாக்கிப் பொங்கலில் கலந்து வீட்டுக்கு எடுத்துப் போவதை மறைந்திருந்து தம்பி பார்த்து விட்டான். பொங்கலைச் சாப்பிட மறுத்துவிட்டான். அறுபட்ட பசுமாடும் செத்துவிட்டது.

செய்தி அறிந்த ஊரார் பஞ்சாயத்துக் கூட்டினார்கள். செத்த மாட்டை அர்ச்சகரே அப்புறப்படுத்த வேண்டும், ஊரைவிட்டுப் போய்விட வேண்டும் என்று தீர்ப்பானது.
அண்ணனாகிய அர்ச்சகப் பார்ப்பான் ஊரைவிட்டுப் போகும்போது, ஒருவர் கேட்டாராம், இனிமேல் கோவிலைப் பார்ப்பது யார் என்று! என் தம்பி பார்ப்பான் என்று கூறிவிட்டுப் போய்விட்டானாம்.

வேற்றூருக்கு வந்த அண்ணனுக்கு ஊர்க்காவல் பணியும் ஊர்க்கூட்டத்திற்கு மக்களுக்குச் சேதி தெரிவிக்கும் பணியும் ஒதுக்கித் தரப்பட்டதாம். தன் பணியை எளிதாக்கும் வகையில் பறை ஒன்று செய்து அதனைப் பயன்படுத்தினானாம். அதனால் அவனைப் பறையன் என்று அழைத்தார்களாம். (படிக்க: THE MYTHS OF ORIGIN OF THE INDIAN UNTOUCHABLES - ராபர்ட் டெலீஜ் எழுதியது)

அதுசரி, பார்ப்பனர் மாட்டிறைச்சி உண்பார்களா? உண்டார்கள் என்பதற்கு வேதங்களும், அய்ந்தாம் வேதமான பாரதமும் நிறைய சான்றுகளை வைத்துள்ளன. போதாக்குறைக்கு இந்துமதம் எங்கே போகிறது என்று கேட்டு அக்னிகோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரி பிட்டுப்பிட்டு வைத்துவிட்டார்.

இதோ வரலாற்றுச் சான்று: பார்ப்பனர்கள் பஞ்ச திராவிடர் என்றும் பஞ்சகவுடர் என்றும் இருபெரும் பிரிவினராம். இவர்களில் பஞ்ச திராவிடர்கள் கறி தின்ன மாட்டார்கள். பஞ்ச கவுடர்கள் மீனும் ஊனும் உண்பவர்கள். ஒரிசா, வங்காளம் போன்ற மாநிலங்களில் இவர்கள்தாம் நிறைந்திருக்கின்றனர்.

பொதுவாகப் பார்ப்பனர்கள் ஏழு முனிவர்களின் சந்ததியினர் எனும் தொன்மம் இருக்கிறது. அத்ரி, பிருகு, குத்சர், வசிஷ்டர், கவுதமர், தாச்யபர், ஆங்கிரசர் என்போர் முனிவர்கள். வேறு ஒரு தொன்மத்தின்படி குத்சர் இல்லாமல் அகஸ்தியருக்கு இடம் உண்டு. இம்முனிவர்களைச் சேர்ந்த 18 கணங்களும் (CLAN) சுமார் 230 கோத்ரங்களும் உண்டு.

பார்ப்பனர்கள் ஒரே ஜாதியினர் அல்ல. அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் எனும் மூன்று பிரிவினர் மட்டுமல்ல. இவர்களில் மொத்தம் 1886 உள் பிரிவுகள் (SECTS) உள்ளன.

புதுவைப் பல்கலைக்கழக, மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் ச.பிலவேந்திரன் தொகுத்து வெளியிட்ட சனங்களும் வரலாறும் எனும் நூலில் பல்வேறு தொன்மங்களைப் படித்தறியலாம்.

பனைமரம் தமிழ்நாட்டின் அரச மரம் (STATE TREE). சிறிதளவு நீர் இருந்தாலும் அல்லது நீரே இல்லாமல் போனாலும் பனை வாழும். வளரும். சிறுநீர் கழித்தாலும் அதைக் கொண்டே வாழும் எனப் பனை மரத்தைச் சிறப்பித்துப் பேசுவர். அதனால் தந்தை பெரியார் தம் கழகத்தை /இயக்கத்தைப் பனை மரத்துக்கு ஒப்பிட்டார். அந்தப் பனை மரத்தைப் பார்ப்பனரோடு தொடர்புபடுத்திய தொன்மம் ஒன்றும் உண்டு. குமரி மாவட்ட நாடார் மத்தியில் வழங்கி வருகிறது.

காட்டில் சுனை ஒன்றை உருவாக்கி வலங்கையர்களைக் காளை வளர்த்து வந்ததாம். அச்சுனை நீரை ஒரு பார்ப்பனனும் அவன் மனைவியும் குடித்தனராம். ஆத்திரம் கொண்ட காளி, அத்தம்பதியினரைத் தலைகீழாக நட்டுவிட்டதாம். அவையே ஆண்பனையாகவும் பெண்பனையாகவும் இருக்கின்றனவாம்.

பனை மரம் ஏறும் தொழிலை இழிவான தொழிலாகக் கருதும் உயர்ஜாதி மனோபாவத்தைப் பழிதீர்க்கும் செயலாக இக்கதை கட்டப்பட்டிருக்கலாம். பதநீர் இறக்கப் பனை மரத்தில் ஏறும் ஆண், பார்ப்பனப் பெண் ஒருத்தியைக் கட்டிப் பிடித்துத் தழுவி ஏறுகின்றனர் எனும் நிலையையும் இக்கதையில் பொதிந்து வைத்துள்ளது இத்தொன்மம்.

உயர்வு கற்பித்துக் கொண்டு மற்ற சமூகத்தினரை இழிவு செய்யும்போது, மிதிபடும் புழுகூட கொட்டும் என்பதைப்போல பாதிக்கப்பட்ட சமுதாயத்தினர் இத்தகைய பழிதீர்க்கும் தொன்மங்களை உருவாக்கி விட்டனரோ!

இந்தத் தொன்மங்களும் புராண, இதிகாச அந்தஸ்து பெற்றுவிட்டால், சம்பூகன் கொலை, தாடகை வதம், சூர்ப்பநகை மானபங்கம் போன்றவற்றிற்குப் பழிதீர்க்கும் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டு ராமாயணம் போலவே உலகெங்கும் பரப்பப்படலாம் அல்லவா?

தமிழ் ஓவியா said...

வலிப்பு வந்தால் கையில் சாவி கொடுக்கலாமா?

- டாக்டர் கனகசபை
சென்னை, ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைத் தலைவர்

மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும் மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்துப் பாகங்களும் ஒரு முகமாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலிப்பு நோய் வருகிறது. குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வலிப்பு நோய் வர வாய்ப்பு உள்ளது. ஒரு சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகிறது.

வலிப்பு நோய் வந்தால் உடனடியாக சாவியைக் கையில் கொடுப்பது போல சினிமாவில் காட்டுகின்றனர். அதனைப் பார்த்து பொதுமக்களும் வலிப்பு நோய் வந்தவுடன், அவர்களின் கையில் சாவியைக் கொடுக்கின்றனர்.

வலிப்பு நோய்க்கு சாவி கொடுப்பதன் மூலம் எவ்விதப் பயனும் இல்லை. இதுபோன்ற மூடநம்பிக்கைகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

வலிப்பு வந்தவுடன், அவரை உடனடியாக இடது பக்கம் திரும்பிப் படுக்க வைக்க வேண்டும். அவர் பற்களைக் கடித்துக் கொள்ளாமல் பாதுகாக்க ரப்பர் பந்துகளை வாயில் வைக்க வேண்டும். கட்டையை வாயில் வைத்தால், பற்கள் உடைந்துவிடும்.

அதன்பின், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். டாக்டர்கள் சொல்லும் மருந்து, மாத்திரைகளை வலிப்பு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். மருந்து, மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதலில் அடிக்கடி வரும் வலிப்பு நோய் குறையும். அதன்பின், வலிப்பு நோய் முழுவதுமாக குணமடையும்.

வலிப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது மற்றும் உயரமான இடங்களில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக வலிப்பு நோயாளிகள் கவலைப்படக்கூடாது. பதற்றம் அடையக்கூடாது.

தமிழ் ஓவியா said...

குடும்பத்தின் மேல் கண்ணீர்

- உவமைக் கவிஞர் சுரதா

உவமைக்கவிஞர் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். சுயசிந்தனையாளர்; புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடன் தங்கியிருந்து பாடல் படியெடுத்தல், அச்சுப் பணி கவனித்தல் போன்ற நூல் வெளியிடுவதற்கான பணிகளை மனம் உவந்து செய்தவர். பாரதிதாசனின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்ற பெயரை சுப்புரத்தினதாசன் என்று வைத்துக் கொண்டார். காவியம் என்ற பெயரில் கவிதை வார இதழினையும், இலக்கியம், ஊர்வலம், விண்மீன் போன்ற பல இலக்கிய ஏடுகளையும் நடத்தியவர். 100க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியதோடு 4 திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

நான் நாத்திகன்; பெரியார் வழியில் நடப்பவன்; கவிதை என்பது வரப்பிரசாதம் என்று கூறுவதைக்கூட நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். படிக்கும்தோறும் பழகும்தோறும் ஒருவன் கவிதையில் தேர்ச்சி பெற்றவனாகிறான் என்று ஒரு நேர்காணலின்போது கூறியவர்..

* * *
அன்புள்ள மதிமுத்தம்!
என் தாய். என்னை, முதல் பிரசவத்துக்கு ஊருக்கு அழைத்து வருவதற்கு முன்தினம் உன் கணவர், உன்னைக் கல்லக்குடிக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டாராம்.

வந்தும் சந்திக்க முடியவில்லை!

என் தங்கையின் பருவச் சடங்குக்காக வேறொரு தடவை வந்திருந்தபோது, திடீரென்று எனக்கு சன்னி கண்டு பிழைப்பேனா, போய்விடுவேனோ என்று இருக்கும் நிலையில் _ நீ என்னை வந்து பார்த்தாயாம்.

உனது முகம் குவிந்துவிட்டதாம்! கருவிழிகள் கண்ணீர் திறந்தனவாம். எனக்காக!
அந்தச் சந்தர்ப்பத்திலே _ நீ பார்த்திருக்கிறாய் என்னை. ஆனால், நான் பார்க்கமுடியவில்லை, உன்னை!

இப்படி ஒவ்வொரு காரணத்தாலும், நமது சந்திப்பு, இந்த ஒன்பது ஆண்டுகளாக; வெட்டுப்பட்டுக் கொண்டே வருகிறது.

பக்கத்திலுள்ள சித்திர புத்தூருக்குச் சென்ற மாதம் வந்திருந்தாயாம்; உன் வீட்டுக்காரரோடு, திருமணப் பரிசு வழங்க. கேள்விப்பட்டேன்.

வந்த நீ, அப்படியே இந்த ஏழையின் முகத்தை எட்டிப் பார்த்துவிட்டுப் போகக் கூடாதா?

சித்திர புத்தூருக்கும், என் கூரை இருக்கும் சத்திமுத்தத்துக்கும் தூரமென்ன _ பத்துகாதமா? மனமிருந்தால் வந்திருக்கலாம்.
அப்படியே, நீ வந்துவிட்டாலும். எனது சிறு பருவத்துச் சிநேகிதி வந்திருக்கிறாளே என்று _ பத்து வித பதார்த்தமும், பதினெட்டு வகைக் கூட்டும் செய்து உனக்கு மதிப்பான விருந்து வைத்திட முடியுமா என்னால்?

ஏதோ என்னிடமுள்ள கூழ் கிடைக்கும். கருணைக் கிழங்கு என்றால்தான் உனக்குப் பிரியமாயிற்றே; அவை, என் கொல்லையில் ஏராளமாக இருக்கின்றன. வேண்டுமானால் பூனைக்கண் போல பொரியல் செய்து, அதை உனக்கு வைப்பேன்.
விருந்து வந்தால், சிரித்த முகத்தோடு வரவேற்க வேண்டும் என்பார்கள். எனக்கு ஏது சிரித்த முகம் இப்போது?

கூட்டிலே பறவைகள்; குளத்திலே மலர்கள்; மரத்திலே இலைகள்; மஞ்சத்திலே மனிதர்கள் _ அசந்து நித்திரை போகும் விடிஇருட்டில்; கொண்டைக்கோழி.

கொக்கரக்கோ ஓசை கொடுப்பதற்கு முன், கொடி இடையில் குடம் சுமந்து; நமது ஊர் நெல்லிக் குளத்துக்கு நீராடச் செல்வோமே நினைவிருக்கிறதா. நாம் கொய்யாத கனிகளாக இருந்த பருவத்திலே!

நீரின் உடலில் நாம் நீராடிக் கொண்டே; மொட்டுத் தாமரையை; முதல் நாள் மலர்ந்த அல்லியை; முத்தமிட்டு. எத்தனையோ ஆசை வார்த்தைகளைச் சத்தமிட்டுப் பேசி இருக்கிறோம்.

சிரிக்கும்போது, எனது சிவந்த கன்னத்திலே குழி விழுவது கண்டு, கிளிச்சிறை நீ அதிர்ஷ்டக்காரிடி. உன் கன்னத்தில் எப்படிக் குழி விழுகிறது பார்த்தாயா? நீ போகுமிடத்தில், பொன் விளையும் என்று அடிக்கடி கூறி இருக்கிறாய் என்னிடம்.
அம்மா உன் விரல் பட்டால், தவிடும் தங்கத் தூளாய்விடும்.

_ இப்படி பிச்சைக்காரர்களும்; ஆரூடச் சொற்கள் சொல்லி வந்தார்கள். அன்றாடம் எனக்கு.

கீழத்தெரு குடுமி ஜோதிடர் இருக்கிறாரே; அவர் அளந்ததைத்தான் அருகிலிருந்து நீ கேட்டுக் கொண்டிருந்தாயே.

யோகம் வரும் என்றார்.

எனது இதயம் ஈரமானது.

தமிழ் ஓவியா said...

கோவலனைப் போன்ற பெரும் பொருள் படைத்தவனுக்கு நீ வாழ்க்கைப்படுவாய் என்றார்.

ஆயுட்காலம் முழுவதும், பணத்திலேயே படுத்திருக்கலாம் என்று அப்போது மனக்கனவு கண்டேன்?

இப்போது _மான் விழியிலே, நீரைத்தான் காண்கிறேன்.

அந்த நாட்களிலே, என்னை அதிர்ஷ்டக்காரி என்றாயே மதிமுத்தம்; என் கதையிலே அதிர்ஷ்டமா கலந்திருக்கிறது.

தவிடும் தங்கத் தூளாய்விடும் என்றார்களே. அவர்கள் வாக்குத்தான் பலித்ததா? இல்லை, யோகம் வரும் என்றாரே ஜோதிடர்; அவர் சொன்னதுதான் வந்ததா?

இந்த ஜோதிடக்காரர்கள், இப்படி எல்லோருக்கும் ஏன் ஆசை காட்ட வேண்டும்?

அந்த ஆசையை எதிர்பார்த்து, ஏங்கி ஏமாந்து _ ஏன் மனிதர்கள் இப்படி மனம் முறிந்து போக வேண்டும்?

கவிஞர்கள்; தத்துவ மனிதர்கள்; இசை வாணர்கள் _ இவர்களைச் சிறையிலே தள்ளி வைத்தால்தான் உலகம் குழப்பமில்லாமல் இருக்கும் என்று நம் இராவண வாத்தியாரின் ஓலைச் சுவடியிலே பார்த்த ஞாபகம். அவர்களோடு, இந்த ஜோதிடக்காரர்களையும் சேர்த்துச் சிறையிலே போடவேண்டும் என்று நான் கூறுகிறேன். ஆமாம் மதிமுத்தம், இவர்கள் மீது அவ்வளவு ஆத்திரம் எனக்கு!
எனது குடிசையைச் சுற்றிலும் நெற்கதிர்கள் முற்றிக் கிடக்கின்றன. அவைகளை எடுக்கும் உரிமை குருவிகளுக்கு இருக்கிறது. ஆனால் எனக்கு இல்லை. அந்தக் கதிர்களும், என் குடிசைக்கு வராது. ஆனால் என் ஏழைக் கணவர், தனது மேல் துண்டில் வாங்கி முடி போட்டிருக்கும் அரிசிதான் வரும். அரிசியும் அவரும் வந்த பிறகுதான், அடுப்பு வெளிச்சமடையும்!

என் கணவர் இருக்கிறாரே. அவரைக் கல்யாணம் செய்து கொண்டதற்குப் பதில் _ பேசாமல் அவரது புத்தகங்களைக் கல்யாணம் செய்து கொண்டிருந்தாலும் நிம்மதி ஏற்பட்டிருக்கும். ஏனென்றால், புத்தகங்கள் பேசுவதுமில்லை. அதிகாரம் செய்வதும் கிடையாது. ஆனால் அவர் இரண்டும் செய்கிறாரே.

தமிழ் ஓவியா said...

பாவம்! என் கணவரைக் குறை கூறுவது தவறு. குடலுக்குள் ஒட்டிக் கொண்டிருக்கும் விரோதி ஆயிற்றே பசி அது தாக்கியதும், தாண்டிக் குதிக்கிறார் என்னிடம்.

என் கணவர்; சுயமாக வீடு கட்டத் தெரியாத, நாகப்பாம்பு போன்றவரல்ல. பிறர் பொருளைப் பிரதிபலித்துக் காட்டும், கண்ணாடி போன்றவரல்ல.

அறிவு மாறாட்டம் செய்பவரா? அல்ல அல்ல?

இரவல் பெருமை தேடும் இலக்கியத் திருடரா? அல்லவே அல்ல! இப்படி ஏன் அழுத்தமாகச் சொல்கிறேன் தெரியுமா?

என் கணவர், குளம் போன்றவர் அல்ல _ கிணறு போன்றவர். கிணறு, தண்ணீரைக் கடன் கேட்பதில்லை. தடாகந்தான் மேகத்தின் உதவியை எதிர்பார்க்கும்.
என் கணவரை எதிர்ப்பவர்கள்கூட, சத்தி முத்தப் புலவர். மிகச் சிறந்த சிந்தனைச் சிற்பி என்று ஒப்புக் கொள்கிறார்கள்.

இவர், சிலருக்கு _ பேரறிஞராக விளங்குகிறார். பலருக்குப் பித்தராகப் புலப்படுகிறார். மனிதரிலே பலர் _ இவரை மடையன் என்று முடிவு கட்டுகிறார்கள்.
இவரைப் பற்றி _ இவர் போன்ற அறிஞர்களைப் பற்றி _ இப்படி வெவ்வேறு விதமாகப் பேசப்பட்டு வருவதற்குக் காரணம் என்ன தெரியுமா?

உயர்ந்தது எது? என்ற முடிவும்; ஏன் மதிக்கிறோம்? என்பதற்கு விமர்சனமும் சரியாக இல்லாததுதான்.

கண்டிக்கப்படாத புகழ். இன்று, நம் நாட்டில் யாருக்குமே இல்லாமலிருப்பதற்குக் காரணங்கூட இதுதான்.

கோடை இடி போல மேடைச் சத்தம் போடுகின்றனர். தமிழ் வளர வேண்டும், வாழ வேண்டும், வையமெல்லாம் சுற்றி வரவேண்டும் என்று.

ஆனால், தமிழுக்குச் சக்தி தருபவனை; அறிந்தவர்கள் பாராட்டுவதுமில்லை. அரசாங்கம் ஆதரிப்பதும் கிடையாது.

என் கணவரை ஆதரிக்கவில்லையே என்னும் கசப்பில் இப்படிக் கூறவில்லை மதிமுத்தம்.

கவிஞர் ஒருவரை, கலிங்க அரசாங்கம் அமைச்சராக நியமித்திருக்கிறதாம்! கடார தேசத்திலே கவிதைக்கு முதல் மரியாதையும்; கிரீடத்துக்கு இரண்டாவது வணக்கமும் தரப்பட்டு வருகிறதாம்.

அக்கம் பக்கத்துக் கிளைநாடுகள். அங்கே, அப்படி நடந்து கொள்ள, இங்கே இருந்து வரும் ஆஸ்தானக் கவிஞரை எழுந்து போகச் சொல்லுகிறது பதவியை விட்டு _ நமது அரசாங்கம்!

இது சரியா? இருக்கலாமா? இருக்கத்தான் விடலாமா?

மூங்கிலைத் தேடுகிறான் _ கீதக் குழலுக்காக.
முத்துக்களைத் தேடுகிறான் _ ஆபரணத்துக்காக.
மலரைத் தேடுகிறான் -_ மாலைக்காக.

மதிநுட்பம் மிகுந்த புலவர்களை மட்டும் தேடுவதேயில்லை _ தமிழ் வளர்ச்சிக்காக! இது ஏன்?

என் கணவரை, இந்த அரசாங்கம் ஆதரித்திருந்தால், என் விழியிலே நீர் மிதக்குமா? வீட்டிலே வறுமைதான் பிறக்குமா?

தமிழ் ஓவியா said...

மதிமுத்தம்! நான் கொடுத்து வைக்காதவள். ஆம்! நான் கொடுத்தே வைக்காதவள்தான்!
அழகாகப் பிறந்தேன்.

அருமையாக வளர்ந்தேன்.

அறிஞனுக்குத்தான் வாழ்க்கைப்பட்டேன். ஆனால், அனுபவிக்க வேண்டிய சுகம்; அணுவளவுகூட இன்னும் கிடைக்கவில்லை. என் ஆசைகள் வாடுகின்றன. அவஸ்தைகள் வாட்டுகின்றன. அதனால் அழுகிறேன், அழுகிறேன் அழுதுகொண்டே இருக்கிறேன்! சிவந்த ரத்தத்திலே பிறந்து; இங்கே சீரழிகிறேன். இந்த வேதனையிலிருந்து வேவதைவிட, ஒரு கட்டு விறகிலிருந்து வெந்து விடலாம் போலிருக்கிறது மதிமுத்தம்!

இந்த லட்சணத்திலே, எனக்குக் குழந்தைகள் வேறு. அதுவும் ஒன்றா இரண்டா. ஒன்பது! அதில் முதல் ஏழும் பெண். அடுத்த இரண்டும் ஆண், கடைசிக் குழந்தையோ; பிறக்கும்போதே நரைத்த தலையோடு பிறந்தது.

யாரோ ஒரு யவன அறிஞன்கூட இப்படித்தான் நரைத்த உரோமத்தோடு பிறந்தானாம். பிறப்பு அதுபோல இருந்தாலும் சிறப்பு எப்படியோ, என் மகனுக்கு.
ஒரு நாட்டிலே, பொருளாதாரப் பிரச்சினையை உண்டாக்குவது, பற்றாக்குறை, பஞ்சம் _ இவை மட்டுமல்ல _ அதிகமான பிள்ளை உற்பத்தி இதுவுந்தான். எனது குடும்ப அனுபவத்தைக் கொண்டு கூறுகிறேன் இப்படி.

ஒரு பெண்
பன்றிபோல பல குட்டிகள்
பெறுவதை விட; சிங்கம்போல
ஒன்று பெறுவது, நல்லது _
உயர்வு _ கவுரவம் _ சுகம்!

இந்த உபதேசத்தை உன் வாழ்விலே ஏன் அனுசரிக்கவில்லை என்று கேட்கலாம்....
மானத்தை மறைப்பதற்கு மட்டுந்தான் என்றிருந்தால்; ஆடையில் சாயம் ஏற்ற வேண்டியதுமில்லை. ஆடை விஷயத்தில்; அழகை எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.

உடல் நலத்துக்காக மட்டும் உணவு உட்கொள்வதாக இருந்தால், வேப்பிலைகூட துவையலாக வேண்டி வந்துவிடும்.

தமிழ் ஓவியா said...

ஆனால், நாம் _ ஆடையிலே அழகும்; உணவிலே சுவையும்; இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்.

அவசியத்தைவிட ஆசைக்காகத்தான் மனிதன்_அநேக காரியங்களைச் செய்து வருகிறான்.

மாதம் இருமுறைதான் _ கணவனுக்காக மனைவியின் சேலை அவிழவேண்டும் என்று சதகங்கள் சொல்லுகின்றன. ஆனால் நடந்து கொள்ள முடிகிறதா அப்படி? முடிந்தால்; இந்த ஒன்பது வெளிப்பட்டு என் உயிரை வாங்கிக் கொண்டிருக்குமா இப்படி?

குழந்தைகள் _ கவலை தீர்க்கும் மருந்து என்கிறாள் தாய். பிராத்தனை_கவலை தீர்க்கும் மருந்து என்கிறான் பக்தன். பிறர் பொருள் _ கவலை தீர்க்கும் மருந்து என்கிறான் திருடன். ஆனால், என் கவலை தீர்க்கும் மருந்து; குழந்தைகள் அல்ல; கொல்லும் விஷம்! அல்லது சாவு!

உனக்கு உற்றார் உறவினர் எவ்வளவோ பேர் இருந்தும் நீ இப்படி வேதனைப்படலாமா? என்று கேட்கலாம்! அவர்கள் இருந்து எனக்கென்ன?
உறவினர்தான் வௌவால்களாயிற்றே! பழம் இருந்தால், எடுத்துக் கொண்டு போக மரத்தை நாடி வௌவால்கள் வரும்.

என் குடும்பம் வெறும் இலையுள்ள மரந்தானே _ எப்படி வரும் அந்த வௌவால்கள்.

தமிழ் ஓவியா said...

மற்றவர்கள் போகட்டும் _ உன் சிற்றப்பாபிள்ளை செந்தில்நாயகந்தான் சீரும் சிறப்புமாக இருக்கிறாரே. அவரிடம், உனது கண்ணீர்க் குடும்பத்தைப் பற்றி ஏன் கூறக்கூடாது? கேட்டால் உதவமாட்டாரா? என்று நினைவுப்படுத்துகிறாய்.

இதுவரை, அவரிடம் எந்த உதவிக்கும் உதடு திறந்ததே இல்லை. கேட்டாலும் கிடைக்கும். ஆனால் அது எத்தனை நாளைக்கு?

சிறிய இளநீரைக் கொண்டு, வாழ்நாட்களில் ஏற்படும் தாகத்தை எல்லாம் தீர்த்துக் கொண்டுவிட முடியுமா?

எனது கஷ்டத்தைக் குறைத்துக் கொள்ள, அவர் வீட்டில் போய் இரண்டொரு மாதம் இருந்து வரலாம். ஆனால், அந்நியர் வீட்டில் அறுசுவையோடு உண்ணுவதைவிட _ சொந்த வீட்டில் பட்டினியோடு சுருண்டு கிடப்பதுதானே கீர்த்தி கொடுக்கும் விருந்து!

ஆமாம்_உனக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறதே. அதற்கு என்ன பெயர் இடப்போகிறாய்?

பங்கஜம் என்று முதல் பெண்ணுக்குப் பெயர் வைத்தாயே, அதுபோல ஆரிய வார்த்தையிலா? இல்லை_அமுதத் தமிழ்ச் சொல்லிலா?

மன்னர்கள்_மாவீரர்கள், வாரி வழங்கிய வள்ளல்கள், தமிழ்காத்த புலவர்கள்_கலைஞர்கள், அறிஞர்கள்; கற்பரசிகள்; அவர்களது நினைவாக நமது பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதா? மொழி மரியாதை இழந்து_அந்நியர் சொற்களை உபயோகித்து _ நம் குழந்தைகளை அழைப்பதா?

நீயே இப்படி நடந்துகொண்டால் நாட்டிலே படிக்காதவர்களைப் பற்றிக் கேட்க வேண்டுமா?

பங்கஜம்_என்னும் பெயரை உடனே, தாமரை என்று தமிழிலே மாற்று.

ஏன் மதிமுத்தம்_குழந்தையின் குழல்_சுருண்டு சுருண்டு இருக்கிறதா? அப்படி இருந்தால், மோதிரக் குழலி என்று உன் மகளுக்குப் பெயர் இடு. அல்லது மேகலை என்னும், ஒரு ஆபரணத்தின் பெயரைத்தான் உனது அரும்புக் குழந்தைக்கு இடேன்.
நீதான், நாகரெத்தினம் போல தேகமெடுத்தவள். அழகின் அழகி! உன் வயிற்றிலே பிறந்த உரு, அந்தி வானம் போல அழகாகத்தானே இருக்கும்! அதனால், உன் மகளை அழகி என்றுகூட அழைக்கலாம்.

ஏன் உனக்குத்தான் கவிஞர்களை மிகவும் பிடிக்குமே_நப்பசலையார் என்னும் சங்ககாலப் பெண்கவியின் பெயரைத்தான் உன் பெண்ணுக்கு வையேன்.

இப்படிப் பெயர் வைத்தால்_நப்பசலையாரின் நினைவு வரும். அடுத்து, அந்த அம்மையாரின் வாழ்க்கை வரலாறும்; அவர் வளர்த்துத் தந்த பெருமையும் விளங்கும். பிறகு அவரைப் போல ஆகவேண்டும் என்ற எண்ணம்; உனது இன்ப மகளுக்கு ஏற்படும்!

இன்னொரு சேதி, மிக முக்கியம் இது. உன் கணவர் ஊரான கல்லக்குடியை, தாலமிபுரம் என்று மாற்றிவிடத் திட்டம் தீட்டுகிறார்களாம்_மார்புநூல் மனிதர்கள். இந்த வஞ்சக வேலையை_உன் கணவரிடம் கூறு. ஊராருக்கும் உரைக்கச் சொல்_உணர்வு பெற்று எழ!

இதில் நாம், ஏமாந்தால்_நம் தமிழ் ஏமாந்தது_என்பதுதான் பொருள். இப்படி நாம் அடிக்கடி ஏமாந்துவிட்டதால்தான்_ திருமறைக்காடு_வேதாரண்யமாகத் திரும்பியிருக்கிறது. முதுகுன்றம்_விருத்தாசலம் என்று உச்சரிக்கப்படுகிறது. மயிலாடுதுறை_மாயூரம் என்று எழுதப்பட்டு வருகிறது.

வேறு மொழிக்காரர்கள்_நமது விருந்துத் தமிழை இனியும் வீணாக்கவிடக் கூடாது. அதற்கு, நமது உணர்ச்சிகளையும் கவனத்தையும் பழுதுபடாமல் பக்குவமாக வைத்துக் கொள்ளவேண்டும். விஷ ஜந்துக்களைப் போல; எப்போதும் ஜாக்கிரதையாகவும் இருந்து வரவேண்டும்.

ஆயுதங்கள் அசைவது குறைந்தால் _ வீரம் சுருங்கிவிடும். மொழியைப் பாதுகாக்கத் தவறிவிட்டால் _ இனி உணர்ச்சி ஏற்பட வழியில்லாது போய்விடும்.

இந்த இரண்டு நிலைகளும் வளர்ந்துவிட்டால் _ பிறகு; அந்நியத்தனமும்; அடிமை நடத்தைகளும்_நம் நாட்டை, ஆக்ரமித்து அதிகாரம் செய்ய ஆரம்பித்து விடும்!

மதிமுத்தம்! என் கணவர், தமிழ் மதுரை சென்று பாண்டியனைப் பார்க்க விரும்புகிறார். அவரை அனுப்பிவைக்க_வழிச் செலவுக்கு வழியில்லை. வயிற்றுக்கே இல்லாமல் வாடும்போது, வட்டப்பணம் எப்படி இருக்க முடியும் என்னிடம்.

தயவு செய்து ஏதோ கொஞ்சம் உதவி செய். இது உனக்குப் புண்ணியமல்ல _ பெருமை. நம் தமிழுக்கு நீ தரும் நன்கொடை.

குடும்பக் கதையைக் கூறி; கடைசியில்_கைப்பொருளுக்கே வழிவைக்கப் பார்க்கிறாளே கிளிச்சிறை என்று நினைத்துவிடாதே. நீ அப்படி நினைக்கவும் மாட்டாய். அதனால்தான் கேட்கிறேன். கடிதத்தை விட்டும் உன்னைக் கேட்கவைக்கிறேன்!

அழுதுகொண்டே எழுதி முடித்த இந்த ஓலை; உன்னிடம் வந்ததும்; இந்த உதவி செய்ய மறந்துவிடாதே மதிமுத்தம்!

இப்படிக்கு,
கண்ணீர்விடும் கிளிச்சிறை

தமிழ் ஓவியா said...

கொலை வழக்கில் ஜோதிட சாமியார்


வக்கிர எண்ணமும், குற்றச்செயல்களின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணமும் சில மனிதர்களுக்கு ஏற்படுவது பழங்கதைதான். ஆனால், அதற்கு அவர்கள் போட்டுக் கொள்ளும் முகமூடிகளாக மதமும், கடவுள் பக்தியும், ஜோதிடமும் இருப்பதுதான் இந்தியாவின் சிறப்பம்சம்.

வடநாடு தொடங்கி தென்னகம் வரை சாமியார்கள் செய்யும் அட்டகாசங்களும் அநியாயங்களும் தொடர்கதைகளாகி வருகின்றன. கடவுள் மூடநம்பிக்கைக்குப் பலியாகும் மக்கள் இவர்களின் பிடிக்குள் சிக்கி மானத்தையும், பொருளையும், அறிவையும் இழப்பதோடு மட்டுமல்லாமல் உயிரையும் இழப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

மீண்டும் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. திருச்சியில் பிரபல ஜோதிடராக வலம் வந்த ஒரு சாமியார் கொலை செய்யும் அளவுக்குப் போயுள்ளார்.

அந்தச் சாமியாரின் பெயர் கண்ணன். சிறீரங்கத்தைச் சேர்ந்தவர். 9ஆம் வகுப்புவரை படித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலிருக்கும் ஒரு சாமியாரிடம் மந்திரம் என்ற பெயரில் ஏமாற்று வித்தைகளைக் கற்றுக் கொண்டுள்ளார். அப்போது, கண் அசைவிலேயே தான் நினைக்கும் செயலினை மற்றவர்களின் மூளையை இயங்கச் செய்து செயலாற்ற வைக்கும் நோக்கு வர்மக் கலையிலும் தேர்ச்சி பெற்றாராம்(?). பின்னர், அங்கிருந்து திருச்சிக்கு வந்து ஜோதிடத்தையும் சாமியார் தொழிலையும் செய்து வந்துள்ளார். அப்போது, திருச்சி திருவானைக்காவைச் சேர்ந்த வைர வியாபாரி தங்கவேல், தொழிலில் ஏற்பட்ட பிரச்சினையிலிருந்து விடுபட மனைவி யமுனாவுடன் சாமியார் கண்ணனிடம் சென்றுள்ளார். பரிகாரம் என்ற பெயரில் அடிக்கடி வந்து சென்றதில் யமுனாவுக்கும் சாமியாருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தங்கவேல் கண்டித்ததால் அவரைக் கொலை செய்துள்ளனர். அடுத்து, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் யமுனாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்த துரைராஜ் என்பவரைக் கொலை செய்ததுடன் அவரது ஓட்டுனர் சக்திவேலையும் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலத்தில் கண்ணன் கூறியுள்ளார். மேலும், யமுனாவின் மகனுக்கும் மகளுக்கும் இவர்களது அந்தரங்கம் தெரியவர அவர்களது கதையையும் முடித்துள்ளனர். பெற்ற பிள்ளைகளையே கொல்வதற்கு உடந்தையாக இருந்து வேடிக்கை பார்த்துள்ளார் யமுனா.

இப்போது சாமியார் கண்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொலை செய்துவிட்டு எவரும் தப்பமுடியாது என்கிற நிலையை நமது காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. அந்த நம்பிக்கை இன்னும் மக்களிடம் இருக்கிறதுதான். ஆனால், குற்றம் நடந்து முடிந்தவுடன் குற்றவாளிகளைப் பிடிப்பது என்பது மட்டும் போதுமானதா? குற்றத்தை நடக்கவிடாமல் தடுக்க முன் முயற்சிகளை காவல்துறை எடுக்க வேண்டாமா? பொதுவாக சமூக விரோதிகளைக் கண்காணிக்கும் பணியைக் காவல்துறை தொடர்ந்து செய்துவருகிறது. அதுபோல ஜோதிடம், மாந்திரீகம், பில்லி, சூனியம் செய்யும் சாமியார்களையும் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை இந்த திருச்சி சம்பவம் உணர்த்திவிட்டது.

சாமியார் கண்ணனைப் பிடிக்க வேண்டிய காவல்துறை, அவரிடமே குறி கேட்கும் மூடத்தனத்தையும் செய்துள்ளதுதான் வேடிக்கையின் உச்சகட்டம்.

மதச்சார்பின்மையின் மீது அமைக்கப்பட்டுள்ள நமது அரசியல் சட்டத்தைப் பின்பற்ற வேண்டிய காவல்துறையினர், தமது மத நம்பிக்கைகளை பணியிடங்களில் திணிக்கும் சட்டமீறலைச் செய்கின்றனர். காவல் நிலையங்களிலேயே கடவுளர் படங்களை மாட்டிவைத்துக் கொண்டு, ஆண்டுதோறும் சரஸ்வதி -ஆயுத பூஜைகளைக் கொண்டாடினால், அதே மத நம்பிக்கையின் மூலம் தொழில் நடத்தும் திருச்சி கண்ணனைப் போன்றோர் அதனைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்களா? காவல்துறையினரையும் தமது பக்திப் பிரசங்கங்களின் மூலம் ஏய்த்துவிடலாம் என்று கருதுவதால்தான் இத்தகைய சாமியார்கள் எளிதில் தமது குற்றச்செயல்களை அரங்கேற்றுகின்றனர்.
சாமியார்கள் கடவுளின் தூதுவர்கள் என்று கருதும் காவல்துறையினர் இவர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் விளைவுதான் இத்தனைக் கொலைகளும் நடக்குமளவுக்குச் சென்றுவிட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகாவது சாமியார்களைக் கண்காணிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்குத் துணை செய்யும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை தமிழக அரசு விரைந்து இயற்றவேண்டிய சரியான தருணம் இதுதான்.

- சமன்

தமிழ் ஓவியா said...

'பெரியார் உலகம்” 1005 பவுன் தங்கம்


நமது உண்மை ஆசிரியரும் தி.க.தலைவருமான கி.வீரமணி அவர்களின் 81ஆவது பிறந்த நாள் விழா கடந்த 2.12.2013 அன்று தஞ்சாவூரில் நடந்தது. கொட்டும் மழையில் கொள்கை முழக்கமிட்ட அந்த விழாவில் தந்தை பெரியார் அவர்களின் 95 அடி உயர வெண்கலச் சிலை, பெரியார் உலகம் அமைக்கும் திட்டத்திற்கு நிதியாக 1005 சவரன் தங்கம் அளிக்கப்பட்டது.(இதன் மதிப்பு 2 கோடியே 51 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய்).

பெரியாரின் வார்ப்பான கி.வீரமணி, பெரியாரை வெண்கலத்தால் வார்த்து வானுயர நிற்க வைக்கப்போகிறார் என்றதும் கருஞ்சட்டைத் தோழர்கள் சூறாவளியாகச் சுழன்று, தேனீயாய் சேகரித்த தங்கம் தமிழினத்தின் மானமீட்பர் தந்தை பெரியாரை உலகப் புகழுக்கு உயர்த்தப் போகிறது.

திராவிடர் கழகம் நடத்தும் ஒவ்வொரு நிகழ்வும் அது கொள்கைப் பரப்புதலுக்கே என்பது தெள்ளத் தெளிவு.அந்த வகையில்தான் தஞ்சை விழாவும் அமைந்தது. கி.வீரமணி அவர்களை வாழ்த்திப் பேசிய தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின், பெரியார் உலகம் _95 அடி உயரத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு வெண்கலச் சிலையினை அமைக்க 1000 பவுன் நிதி திரட்டும் நிகழ்ச்சி _ தமிழர் தலைவர் அய்யா அவர்களின் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா _ அந்த விழாக்களில் தானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி, பூரிப்படைவதுடன் தன்னுடைய வாழ்நாளில் தனக்குக் கிடைத்திருக்கும் பெரும்பேறு என்று குறிப்பிட்டார்.

எந்த நாட்டிலும் 200 ஆண்டுகளில் செய்து முடிக்காத ஒரு பெரும் சாதனையினை தந்தை பெரியார் அவர்கள் 20 ஆண்டுக் காலத்தில் செய்து முடித்து வரலாற்றினை உருவாக்கியிருக்கிறார்கள்.

1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களால் முன்னின்று நிறைவேற்றப்பட்ட 34 தீர்மானங்களில் பல தீர்மானங்கள் தலைவர் கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தீர்மானங்களில் ஒன்றான சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது 60 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது வரலாற்றிலே பதிவாக வேண்டிய ஒன்று.

மிசா என்ற கொடுமையான சட்டத்தில் கைது செய்யப்பட்டு எங்களைப் போன்றவர்கள் சிறையில் இருந்தபோது எங்களுடன் சிறையில் இருந்து துன்பங்களை அனுபவித்தவர் ஆசிரியர் அவர்கள்.

அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களுக்கு, நான் கொண்டு வந்திருக்கும் நெருக்கடி நிலையை _ அவசரப் பிரகடனத்தை ஆதரிக்க வேண்டாம். எதிர்க்கக் கூடாது; எதிர்த்தால் தமிழ்நாட்டில் உங்கள் ஆட்சி இருக்காது. அடுத்த விநாடி உங்கள் ஆட்சி கவிழ்க்கப்படும் என்று இந்திரா காந்தி அம்மையார் எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு,

நான் தந்தை பெரியார் அவர்களால், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டவன், வார்க்கப்பட்டிருக்கக் கூடியவன். எனவே, இந்த அச்சுறுத்தல்களுக்கு நான் பயப்பட மாட்டேன். நெருக்கடியை எதிர்க்கின்ற காரணத்தினால் என்னுடைய ஆட்சியல்ல, என்னுடைய உயிரே போனாலும், நான் கவலைப்பட மாட்டேன் என்று வந்த தூதுவர்களிடம் சிரித்துக்கொண்டே பதில் சொன்னாராம் தலைவர் கலைஞர்.

தமிழ் ஓவியா said...

அடுத்த நாளே சென்னைக் கடற்கரையில் தி.மு.க. சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த விநாடி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மிசா கைதிகளாக தி.மு.க.வைச் சேர்ந்தவர்களுடன் தி.க. தலைவர் அய்யா வீரமணியும் சிறைக் கொட்டகைக்குள் அடைக்கப்பட்டார். அப்போது, அண்ணன் நம் ஆசிரியர் அவர்களுடைய அருகிலிருந்து பழகக் கூடிய, அவர்களுடைய லட்சியங்களை உணர்ந்துகொள்ளக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.-

முதல்நாள் ஆசிரியர் சிறையிலடைக்கப்பட்டார், அடுத்த நாள் இரவு 12 மணியளவில் என்னைச் சிறைக்கு அழைத்துச் சென்றனர். ஒரு துளி வெளிச்சம் கிடையாது. சிறைக் கூடாரத்தில் இருக்கக்கூடிய 9ஆம் நம்பர் கொட்டடியில் கொண்டுபோய் ஓர் அறையின் கதவினைத் திறந்து உள்ளே விடுகிறார்கள். அங்கே 8 அல்லது 10 பேர்கள் படுத்திருப்பது எனக்குத் தெரியவில்லை. நான் உள்ளே போனபோது யாருடைய காலையோ மிதித்துவிடுகிறேன். யாருடைய கால் என்றால், நம்முடைய ஆசிரியருடைய கால்தான். அப்பொழுதே என்னை அருகில் அமர வைத்து, வந்துவிட்டாயா, உனக்கு இது தேவை. இந்தப் பயிற்சி உனக்கு அவசியம் தேவை என்று சொல்லி அப்போதே என்னை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள் என்று தனது நினைவுகளைப் பகிர்ந்தார்.

தலைவர் கலைஞர் அவர்களே ஆசிரியர் என்றுதான் அழைத்துக் கொண்டிருக்கிறார். குடிஅரசு ஏட்டில் தந்தை பெரியாருடன் பணியாற்றியதுதான் என்னுடைய குருகுல வாசம் என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

அறிஞர் அண்ணா அவர்கள் கூறியது போல தி.மு.க.வும், தி.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக தந்தை பெரியார் வாழ்ந்த பொழுதும் சரி, மறைந்த பிறகும் சரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.

தமிழ் ஓவியா said...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் தனது உரையில்,``சமூக இயக்கத்தை நடத்திக் கொண்டு, பகுத்தறிவுப் பிரச்சாரத்தை முழங்கும் ஒருவர் இவ்வளவு பெரிய சாதனைகளைப் படைக்க முடியும் என்பதற்கு நம்முடைய தமிழர் தலைவருக்கு நிகர் தமிழர் தலைவர்தான்; ஆசிரியருக்கு நிகர் ஆசிரியர்தான். கல்வி நிறுவனங்கள், குழந்தைகள் காப்பகம் முதல் முதியோர் காப்பகம் வரை அமைத்து பத்திரிகைகள், பிரச்சார நிறுவனங்கள், நூலகம், வெளியீட்டகம்... எண்ணிப் பார்க்கவே வியப்பாக உள்ளது.

அதிகாரத்தை _ சட்டமன்றத்தை _ நாடாளுமன்றத்தை நோக்கிய பயணமாக இல்லாமல் சமூக மாற்றத்தை _ சமத்துவத்தை நோக்கிய பயணம். முரண்பாடு, சிக்கல், மோதல், எதிர்ப்பு, பகை நிறைந்த களம். இழிவு, அவமானம் பற்றிக் கவலைப்படாமல் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்து கொண்டு பெரியார் இட்ட கட்டளைகளை நிறைவேற்றி வருகிறார் என்று குறிப்பிட்டார்.

அண்மையில் ஒடிசா மாநிலத்தின் அரசு சார்பில் தந்தை பெரியார் சிந்தனைகளை ஒடிசா மொழியில் முதன் முதலாக வெளியிட்ட பேராசிரியர் தானேஸ்வர் சாகு இவ்விழாவில் பங்கேற்றார். அவர் பேசும்போது, ``நான் இங்கே விருந்தாளியாக, பேச்சாளராக வரவில்லை. பகுத்தறிவுப் பிரச்சாரத் தலைமையிடம் நோக்கி வருகின்ற பகுத்தறிவாளர் பயணியாக யாத்ரிகனாக வந்துள்ளேன். பெரியாரைப் பற்றி உங்களிடம் பேசுவது, தாய்மாமன் வீட்டில் தாயைப்பற்றிப் பேசுவது போலாகும். பெரியார் பெரிய தொலைநோக்காளர்; சமூக விஞ்ஞானி. மக்களுக்கு அன்று நிலவிய சமூக அநீதியை நீக்கிடப் போராடியவர். மனிதநேயம் காக்கப் பாடுபட்ட மாபெரும் தலைவரின் சீடர் தலைவர் கிவீரமணி அவர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

தந்தை பெரியாரின் மூளையாக, உள்ளமாக, சிந்தனையாக, குரலாக எங்களிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவரது சிந்தனை மிகத் தெளிவானது. எண்ணங்கள் உயர்வானது. அவருடைய எழுத்து, பேச்சு, சிந்தனை, கொள்கை தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலக அளவில் பரவ வேண்டும். அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வதை நினைத்துப் பெருமைப்படுகிறோம் என்று தனக்கே உரிய பாணியில் பேசினார் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவர் காதர் மொய்தீன்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசும்போது, ``தந்தை பெரியார் அவர்கள் நமக்கு காலத்தால் அழியாத கோட்பாடுகளைத் தந்தார். அந்தக் கோட்பாடுகளை, கொள்கைகளைக் கொண்டு போய்ச் சேர்க்கின்ற இயக்கத்தைத் தந்தார். இயக்கத்திற்காக ஒரு நிறுவனத்தைத் தந்தார். இவை மூன்றை மட்டுமே தந்துவிட்டு பெரியார் சென்றிருப்பாரேயானால், திராவிடர் கழகம் ஒருவேளை இந்த நேரம் வலிமையை இழந்து இருக்கக்கூடும். ஆனால், இந்த மூன்றுடன், நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களையும் சேர்த்துத் தந்துவிட்டுப் போன காரணத்தினாலேதான், பெரியார் மறைந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்றைக்கும் இந்த எழுச்சிமிக்க கூட்டத்தினை தமிழ்நாட்டில் நம்மால் பார்க்க முடிகிறது என்று குறிப்பிட்டார்.

நிறைவாக ஏற்புரையாற்றிய கி.வீரமணி அவர்கள், ``பெரியார் உலகத் திட்டம் 15 ஆண்டுகாலத் திட்டமாகும். இந்த உலகம், பெரியாருக்கு முன்னால்; பெரியாருக்குப் பின்னால்; பெரியார் காண விரும்பிய சமுதாயம், அறிவியல் சமுதாயம், அறிவியலுக்கும் மூட நம்பிக்கைக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடுகள்; அறிவியலால் ஏற்படும் நன்மைகள்; மூட நம்பிக்கையால் ஏற்படும் தீமைகள்; இவைகளையெல்லாம் ஒருமுனைப்படுத்தி, ஒரே இடத்தில், ஒரு நகருக்குள்ளே, ஒரு உலகத்திற்குள்ளே சென்று திரும்பும்பொழுது, பழைய நம்பிக்கைகள் உள்ளவர்கள் கூட மாறிவருவார்கள் என்று சொல்லி, பெரியார் கண்ட, காண விரும்பிய ஒரு சமுதாயத்தை உருவாக்குகின்ற பணி, அங்கே தொடர்ச்சியாக இருக்கும். அதற்காகத் தோழர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். ஒரு பக்கம் ஜாதியம், இன்னொரு பக்கம் மதவெறி இவைகளெல்லாம் வருகின்றபொழுது, பெரியார் சிலையாக நின்றால் மட்டும் போதாது; பெரியாரைப் பின்பற்றப்பட வேண்டிய சீலமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி என்று குறிப்பிட்டு, பெரியாரை உலக மயமாக்குவதன் அடுத்த கட்ட நகர்வை தமிழகத்திற்கு உணர்த்தினார்.

தமிழ் ஓவியா said...

மதத்தைச் சும்மா விட்டுஇட முடியுமா?


கடவுள் இல்லை என்று நிரூபிப்பதற்காக உங்கள் நேரத்தை ஏன் செலவிடுகிறீர்கள்?

மக்கள் எதை நம்புவதற்கு விரும்புகிறார்களோ அதை நம்புவதற்கு ஏன் அவர்களை அனுமதிக்கக்கூடாது?

மத விஷயங்களில் தலையிடாமல் மதத்தை ஏன் தனியாக இருக்கும்படி விட்டுவிடக்கூடாது?

இது போன்ற கேள்விகள் நாள்தோறும் மத நம்பிக்கையாளர்களிடமிருந்து வருகின்றன.

கடவுள் நம்பிக்கையாளர்களை தங்களின் நம்பிக்கையினைக் கைவிடச் செய்வது ஏன் மிகவும் முக்கியமானது என்பதற்கான காரணத்தை யாராலும் எனக்கு விளக்கிக் கூற முடியாது என்று யூ- டியூப் இணையத்தில் அண்மையில் ஒருவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதற்கான விடை மிகவும் எளிதானது. மதம் என்ற ஒன்று இருப்பதால்தான், மதம் பற்றிய எதிர்க் கருத்துகளும் இருக்கின்றன

நமது கலாச்சாரத்தில் ஊடுருவி, நமது வீட்டு வாயில்கள் வரை வேதம், புராணம், சாத்திரம் ஆகியவற்றைக் கொண்டு வந்து சேர்ப்பதுடன், நரகத்தில் முடிவில்லாத தண்டனை கிடைக்கும் என்று நம்மை அச்சுறுத்தி, நமது அறிவியல் நூல்களில் தனது மூக்கை நுழைத்து, ஜோதிடம், வாஸ்து என்பது போன்ற போலி அறிவியல் பேசிக் கொண்டு, தொற்றுநோய் போன்று நமது அரசியல் நடைமுறையையும் தொற்றிக் கொண்டு, நமது குழந்தைகளுக்கு மதக் கோட்பாடுகளைக் கற்றுக் கொடுத்து, அந்தக் கோட்பாடுகளை அவர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர்கள் உடல், ஆன்மா அளவில் அழிவைத் தேடிக் கொள்வர் என்றும் மதம் அச்சுறுத்துகிறது.

நம்மை அன்றாடம் அச்சுறுத்தும் பேரிடர் போன்ற மதச் செய்திகளுக்கு கடவுள் நம்பிக்கையற்றவர்கள் பதில் அளிக்கிறார்கள்; அவ்வளவுதான்.

நமது இல்லக் கதவுகளைத் தட்டி உள்ளே நுழைந்து, நமது இல்லங்களிலும், நமது பணியிடங்களிலும், நமது தனிப்பட்ட வாழ்விலும், நாம் செய்யும் தொழிலிலும் நம்மை மிரட்டி, நம் மீது குற்றம் சுமத்தி தான் விரும்பும் அளவுக்கு உரத்த குரலில் பேசுவதற்கான முழு சுதந்திரத்தையும் மதம் பெற்றுள்ளது. உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று ஒவ்வொரு மனித உயிருக்கும் வேதாகமத்தைப் பற்றி சமயச் சொற்பொழிவாற்றுக என்று உரத்த குரலில் கூவும் கடவுள் நம்பிக்கையாளர்கள், மதபோதனை செய்வது, வேதம் கற்பிப்பது, சீடர்களை உருவாக்குவது ஆகியவற்றையே தங்களின் வாழ்நாள் இலக்காகக் கொண்டு செயல்படுகின்றனர். மதம் என்பது அங்கிங்கெனாதபடி பரவி எங்கும் நிலை பெற்றுள்ளது.

தமிழ் ஓவியா said...

ஆனால் பின்வரும் கேள்விகளுக்கு மதவாதிகளிடம் பதில் உண்டா?

மனித நேயம் பற்றிய நல்ல செய்தியுடன் கடவுள் மறுப்பாளர் கடைசியாக உங்கள் வீட்டுக் கதவை எப்போது தட்டினார்? நீங்கள் தங்கும் விடுதிகளின் மேசையில் பெரியார், ரிச்சர்ட் டாகின்ஸ் அல்லது வேறொரு பகுத்தறிவாளரின் புத்தகங்களை எத்தனை முறை பார்த்திருக்கிறீர்கள்? உங்கள் குடியிருப்புப் பகுதியில் கடவுள் மறுப்புக் கட்டடம் எப்போது கடைசியாகக் கட்டப்பட்டது? அல்லது ஏதேனும் கடவுளுக்குக் கோவில் கட்டுவதற்கு என்றோ, திருவிழாவிற்குப் பங்கு தர வேண்டும் என்றோ அதில் விருப்பமில்லாதவரிடம்கூட கட்டாய வசூல் நடத்தப்படுவது போல, நாத்திகத் திருவிழாவுக்கென்று உங்கள் பகுதியில் எப்போதாவது கட்டாய வசூல் செய்யப்பட்டுள்ளதா? கடவுள் மறுப்பாளர் கூட்டங்கள் எதற்கேனும் நீங்கள் சென்றதுண்டா? உங்கள் குடும்ப வருவாயில் 10 விழுக்காட்டினை நன்கொடையாக அளிக்கும்படி நாத்திகம் எப்போதாவது உங்களைக் கேட்டதுண்டா? உங்கள் தொலைக்காட்சி அலைவரிசையில் நாத்திகக் கருத்துகளைக் கொண்ட எத்தனை நிகழ்ச்சிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? குழந்தைகளாக நீங்கள் இருந்தபோது எத்தனை நாத்திகப் பாடல்களை மனப்பாடம் செய்ய வற்புறுத்தப்பட்டிருக்கிறீர்கள்? உணவு உண்ணும் மேசையில், கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதற்குப் பதிலாக அந்த உணவை உற்பத்தி செய்த விவசாயிக்கோ அல்லது அந்த உணவைச் சமைத்த சமையற்காரருக்கோ நீங்கள் எப்போதாவது நன்றி தெரிவித்ததுண்டா?

தமிழ் ஓவியா said...

கடவுள் நம்பிக்கையாளரின் தலையைக் கடைசியாக வெட்டிய நாத்திகரின் பெயர் என்ன என்று உங்களால் கூறமுடியுமா? அல்லது மதவாதிகள் கடவுள் மறுப்பாளரை அல்லது மற்ற மதத்துக்காரரைச் செய்வது போல் செய்த நாத்திகர் ஒருவரை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா? ஆணாதிக்க மனப்பான்மை மிகுந்த கணவனது _ மனம் மகிழாதபடி நடந்து கொண்ட மனைவி கடைசியாக நாத்திகத்தால் தண்டிக்கப்பட்டது எப்போது என்று உங்களால் கூறமுடியுமா? அல்லது ஒரு பொது இடத்தில் நூற்றுக்கணக்கான மக்களைக் கொல்வதற்காக ஒரு நாத்திகர் வெடிகுண்டைத் தனது உடலில் கட்டிக் கொண்டிருந்ததாகக் கூறமுடியுமா? அல்லது ஓரினப் புணர்ச்சியாளர் எவராவது எல்லோரும் காணும்படி நாத்திகர்களால் தூக்கிலிடப்பட்டுள்ளாரா?

************

மதம் என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி நிலை பெற்றுள்ளது. மிகமிக நீண்ட காலத்திற்கு பெரும்பாலும் எந்தவித எதிர்ப்பும் இல்லாத நிலையில் தனது முரசைக் கொட்டிக் கொண்டிருந்ததுதான் மதம். நம்பிக்கையாளர்களின் மனங்களிலும், இல்லங்களிலும் அமைதியாக இடம் பெற்றிருப்பதுடன் மதம் மனநிறைவடைந்துவிடுவதில்லை. கடவுளிடம் நம்பிக்கை கொள்ளவும், மதபோதனை செய்யவும், மதப் பிரச்சாரம் செய்யவும், மதத்தைப் பரப்பவும், மதமாற்றம் செய்யவும், மதம் பற்றிய விவாதத்தில் வெற்றி பெறவும் நம்பிக்கையாளரை வற்புறுத்துவதே மதத்தின் இயல்பான தன்மையாகும்.

மதம் மேற்கொள்ளும் இத்தகைய முயற்சிகள், செயல்பாடுகள் பற்றி எவர் ஒருவராவது எதிர்த்துக் குரல் எழுப்பிவிட்டால் போதும், அதுவே பெரும் பிரச்சினையாக ஆக்கப்பட்டுவிடும் என்பதை நமது வரலாறு முழுமையிலும் நாம் காணலாம். நியாயமான கேள்விகளையும், கவலையையும்கூடப் புறந்தள்ளியும், அவற்றைத் தெரிவித்தவர் தவறாக வழிநடத்திச் செல்லப்படுபவர் என்றும், ஒழுக்கமற்றவர் என்றும், திக்குத் திசை தெரியாதவர் என்றும், வெஞ்சினம் கொண்டவர் என்றும், பரிதாபத்திற்குரியவர் என்றும், வழிதவறிப்போய் தன்னந்தனியாகச் சுற்றிக் கொண்டிருப்பவர் என்றும் கூறி வெற்றி கொள்ளவுமான முயற்சிகளை மதம் மேற்கொண்டுள்ளது.

பைபிள், குரான், கீதை மற்றும் இதர மதப் புனித நூல்களில் காணப்படும், நடந்திருக்கவே இயலாத, நம்பமுடியாத கட்டுக் கதைகளுக்கு பகுத்தறிவு சவால் விடும்போது, நீங்கள் ஏன் எங்களைச் சும்மா இருக்க விடமாட்டேன் என்கிறீர்கள்? என்று புலம்புகிறார்கள் மத நம்பிக்கையாளர்கள்.

கடவுளே பிரபஞ்சத்தையும், உயிர்களையும் படைத்தார் என்று கூறி, உண்மைகளை அறிந்து கொள்ள மக்களுக்கு ஏற்படும் பேராவலையும், கற்றறிந்து கொள்வதையும் தடை செய்து, மனித குல முன்னேற்றத்தையும் மதம் தடுத்து நிறுத்துகிறது. பகுத்தறிவுச் சிந்தனையை மதம் தடுக்கிறது. நம்பமுடியாதவற்றை நம்பும்படி நம்மை அது வற்புறுத்துகிறது. நாளைய தலைமுறையினரைப் பயிற்றுவிக்க நாம் பயன்படுத்தும் அடிப்படைக் கோட்பாடுகளை மதம் நச்சு மயமாக்குகிறது.

மதம் பற்றிய இத்தகைய வினாக்களுக்கு நாங்கள் அளிக்கும் இந்த விடை, எதிர்வாதம் எதற்கென்று கேட்டால், மூடநம்பிக்கையின் பெருங்கூச்சலுக்கு சவாலே இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான். உங்களது நம்பிக்கை அந்த அளவுக்கு மறுக்கமுடியாததாக, உண்மை மிகுந்ததாக, மெய்ப்பிக்க இயன்றதாக, நடைமுறை சாத்தியமானதாக இருக்கும்போது, இங்கேயோ அல்லது வேறு எந்த இடத்திலிருந்தோ தெரிவிக்கப்படும் எதிர்மறையான கருத்துகளை நிச்சயமாக உங்களால் தாங்கிக் கொள்ளவும், எதிர்கொள்ளவும் இயலும். எத்தகைய கடினமான சோதனைகளையும் நிச்சயமாக அதனால் சந்திக்க இயலும்.
இதனை மட்டும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இந்த வாதத்தைத் தொடங்கியதே மதம்தான். உலகின் முன்னே அது தனது குரலை உயர்த்தி, மதத்தினை மறுத்தால், நிராகரித்தால் அதற்குத் தக்க தண்டனை கிடைக்கும் என்று மனித குலத்தையே அச்சுறுத்தி வந்திருக்கிறது.

நாங்கள் நாத்திகர்கள்; ஒழுக்கமானவர்கள்; நியாயமானவர்கள். நாங்கள் மிகுந்த சிந்தனையும், பகுத்தறிவும், கருணை மனமும் கொண்டவர்கள்; மகிழ்வான நிறைவு பெற்ற- நன்கு தெளிவு பெற்ற வாழ்வினை வாழ்பவர்கள்.

மதத்தில் நம்பிக்கையற்றவர்கள், எதிர்ப்பவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று மதம் வலியுறுத்தும் காலம் வரை, பிரச்சினை நாங்களல்ல மதம்தான் என்று நாங்கள் பதில் கூறிக் கொண்டேதான் இருப்போம்.

-_ -thethinkingatheist.com இணையதளத்தில் சேத் எழுதிய கட்டுரையைத் தழுவியது.

தமிழாக்கம் : த.க.பாலகிருட்டிணன்.

தமிழ் ஓவியா said...


சங்கராபுரம் ஆஞ்சநேயன் எங்கே போனான்?


சங்கராபுரம், டிச.15-சங்கரா புரத்தை அடுத்த காட்டு வண்ணஞ்சூ ரில் புதிதாக ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டது. கடந்த சில நாட் களுக்கு முன்பு இந்த கோவில் குட முழுக்கு நடந்தது. நேற்று இரவு பூசாரி வெங்கடேசன் வழக்கம்போல் பூஜை கள் செய்தார். பிறகு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இரவில் அடையாள தெரியாத மனிதர்கள் அந்த கோவில் வளாக சுவர் ஏறி குதித்தனர். கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்தனர். சில நாட்களுக்கு முன்பு குடமுழுக்கு நடந்திருந்ததால் உண்டியலில் பக்தர் கள் ஏராளமாக காணிக்கை செலுத்தி யிருந்தனர். அந்த பணத்தை கொள் ளையர்கள் அள்ளி மூட்டை போட்டு கொண்டு தப்பி சென்று விட்டனர்.

நேற்று (14.12.2013) காலையில் கோவிலை திறக்க பூஜாரி வெங்கடே சன் வந்தார். கோவிலை திறந்து உள்ளே சென்றபோது உண்டியலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப் பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து பார்த் தனர். இதனால் அந்த பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி சங்கராபுரம் காவல் துறையிடம் புகார் செய்யப்பட்டது. உடனே ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவல் நிலையத்தில் தடய வியல் நிபுணருடன் கோவிலுக்கு விரைந்து சென்றனர்.

ஆஞ்சநேயர் கோவிலில் பதிவாகி யிருந்த ரேகைகள் மற்றும் தடயங் களை சேகரித்தனர். துணிகர கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72080.html#ixzz2nayHMSjl

தமிழ் ஓவியா said...


பட்டை நாமக் கோயிலுக்கே பட்டை போட்ட பலே திருடன்!


ஆவடி, டிச.15- ஆவடியை அடுத்த சேக்காட்டில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோயி லில் இரண்டாவது முறை யாக உண்டியல் பணம் கொள் ளையடிக்கப்பட்டு உள்ளது.

ஆவடி அடுத்த சேக்காடு கிராமத்தில் சீனிவாச பெரு மாள் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு குருக்கள் கோவிந்தராஜ் பூஜையை முடித்துவிட்டு கோயிலை பூட்டி விட்டு சென்றார்.

நேற்று காலை அவர் கோயிலை திறக்க வந்தார். அப்போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு, சில்லறைக் காசுகள் சிதறிக்கிடந்தன. இதனால் குருக்கள் அதிர்ச்சி அடைந் தார். இதுபற்றி அறிந்ததும் கோயில் முன் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அடிப்படையில், ஆவடி உதவி ஆய்வாளர் சேரன் காவல் துறையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். கைரேகை நிபுணர்கள் வந்து உண்டியல், கோயில் கதவுகளில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள காவல்துறையினர் கோயி லில் கொள்ளையடித்துச் சென்றவர் களை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கோயிலில், கடந்த 3 மாதத்துக்கு முன்பும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. தற்போது உண்டியலில் 10,000 ரூபாய் இருந்திருக்கலாம் என்று கோயில் குருக்கள் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/72082.html#ixzz2nayQRPdB

தமிழ் ஓவியா said...


நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. பலமான அணியாக இருக்கும் நெஞ்சுக்கு நீதி புத்தகம் வெளியீட்டு விழாவில் கலைஞர்


சென்னை, டிச.15- நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. பலமான அணியாக இருக்கும் என்றும், கூட்டணி குறித்து பொதுக்குழுவில் விவாதிப்போம் என்றும் நெஞ்சுக்கு நீதி புத்தக வெளியீட்டு விழா வில் கலைஞர் உரையாற்றினார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி (6 ஆவது பாகம்) புத்தக வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு, தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமை தாங்கினார்.

புத்தகத்தை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் வெளி யிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். நிறைவாக தி.மு.க. தலைவர் கலைஞர் ஏற்புரையாற் றினார். அப்போது அவர் உரையாற்றியதாவது:-

நெஞ்சுக்கு நீதி புத்தக வெளியீட்டு விழாவில் பேராசிரியர் அன்பழகன் கலந்துகொண்டது சந் தோஷமாக உள்ளது. அவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவாரோ?, வரமாட்டாரோ? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. தற்போது, சந்தோஷமாக இருக்கிறது.

துன்பங்கள் என்னையும், தி.மு.க.வையும் தொட்ட போது, கவிஞர் வைரமுத்து நம்மோடு இருப்பாரா? என்று பலரும் கேட்டதுண்டு. அவர்களிடம் நிச்சயம் இருப்பார் என்று கூறினேன். பொதுவாக இந்த இயக்கத்தில் இருந்து கவிஞர்கள் காணாமல் போய்விடுவதுண்டு. அப்படி போனவர்கள் திரும்பி வந்ததும் உண்டு.

நான் பிறந்த 1924 ஆம் ஆண்டு முதல் 1969 வரை நெஞ்சுக்கு நீதி முதல் பாகமும், 1969 முதல் 1976 ஆம் ஆண்டு வரை நடந்த நிகழ்வுகளை 2 ஆம் பாகமாகவும் தொகுத்துள்ளேன்.

1976 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப் பட்டது. இலங்கை தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்தோம் என்று காரணம் காட்டி தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அதேபோல், சந்திரசேகர் பிரத மராக இருந்தபோதும் விடுதலைப் புலிகளுக்கு தி.மு.க. அரசு உதவியதாக கூறி, தி.மு.க. ஆட்சி கலைக் கப்பட்டது.

அப்போது, தி.மு.க. அரசை கலைக்க வேண்டும் என்று தூண்டிவிட்டவர் யார் என்பதை நான் சொல்ல தேவையில்லை. ஆளுநரின் கருத்து கேட் காமலேயே ஆட்சி அப்போது கலைக்கப்பட்டது. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இலங்கை தமிழர் பிரச்சினையில் நாங்கள் எதையும் செய்யவில்லை என்று இங்கே சில பேர் சொல் கிறார்களே, அவர்களுக்காகத்தான் இதை சொல் கிறேன்.

நெஞ்சுக்கு நீதி 6 ஆம் பாகமாக வந்துள்ளது. 7 ஆவது பாகம் உண்டா என்பது எனக்கு தெரியாது. இயற்கைக்குத்தான் தெரியும். இயற்கை வழி கொடுத்தால் 8, 9 ஆம் பாகம் கூட வெளிவரும்.

நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டபோதெல்லாம் சட்டசபைக்குப் போய் வந்துள்ளேன். ஆனால், கடந்த ஓரிரு ஆண்டு காலமாகத்தான் நடக்க முடியாத காரணத்தால், சட்டசபையில் எனக்கு இடவசதி செய்து கொடுக் காததால் என்னால் சட்டசபைக்குச் செல்லமுடிய வில்லை.

இருப்பினும் மக்கள் தொண்டு ஆற்றிவருகிறேன். இந்தத் தொண்டு தொடரும். சட்டசபைக்குச் சென்று பேசினால் குண்டு கட்டாக தூக்கிப்போடக் கூடிய நிலைக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக மட்டுமல்ல, கழகத் தோழர்கள் இதன் மூலம் கொதிப்பும், வேதனையும் அடைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

தமிழகத்தில் அரசியல் நாகரிகம் எப்படி இருக்கிறது என்பதை கோபாலபுரம் வந்து பார்த்தால் உங்களுக்கு தெரியும். அங்குள்ள விளம்பரப் பதாகைகளை நீங்கள் பார்த்து அரசியல் நாகரிகத்தை தெரிந்துகொள்ளலாம்.

நாங்கள் மக்களைப் பற்றி கவலைப்படுகிறோம். ஆனால், நீ யார் கவலைப்பட என்று கேட்கிறார்கள். ஆனால், மக்கள் பணி ஆற்றுவதில் எங்களை பிரித்து விட முடியாது. ஒரு சமுதாய இயக்கமாக உருவாகி, அரசியல் இயக்கமாக தி.மு.க. திகழ்கிறது. அரசியல் இயக்கம் என்று சொல்லும் போதே நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி, யாருடன் சேர்வீர்கள் என்ற கேள்விகளும் கேட்கத் தோன்றும்.

யாருடன் சேர வேண்டும், யாருடன் சேரக் கூடாது என்பதை கடந்த கால நிகழ்வை சிந்தித்து பார்த்து பொதுக்குழுவில் விவாதிப்போம். பொதுக் குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை 21 ஆம் தேதி முதல் மாவட்டத் தலைநகரங்களில் கூட்டம் நடத்தி மக்கள் மத்தியில் விளக்கி பேச வேண்டும். யாருடன் கூட்டு என்று கேட்பவர்களுக்கு அணி உண்டு, எந்த அணி என்று இப்போது சொன்னால் பிணியாகிவிடும். ஆனால், தி.மு.க. பலமான அணியாக இருக்கும்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-5/72087.html#ixzz2naz09lQd

தமிழ் ஓவியா said...


லஞ்சம்-ஊழல், மது ஒழிப்பிற்கான புகார் அளிக்க தொலைபேசி சேவை மய்யம் தொடக்கம்


சென்னை, டிச.15- லஞ்சம்-ஊழல், மது ஒழிப்பிற்கான புகார் அளிக்க தொலைபேசி சேவை மய்யம் தொடக்க விழா சென்னை யில் நடந்தது.

சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில், சென்னை தியாகராயநகரில் உள்ள பிட்டி தியாகராயர் அரங்கத்தில் லஞ்சம்-ஊழல், மது ஒழிப்புத் தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி சேவை மய்யம் நேற்று தொடங்கப்பட்டது. விழாவில் கோ-ஆப்-டெக்ஸ் நிருவாக இயக்குநர் உ.சகாயம் கலந்து கொண்டு, தொலைபேசி சேவை மய்யத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம், அரசின் சேவைகள், சலுகைகள், விதிமுறைகள், அரசாணைகள் சட்டத் திட்டங்களை ஏழை-எளிய மக்களும் தெரிந்து கொள்ளவும், லஞ்சம் அளிக்காமல் அரசு சேவைகள் பெற வும் வழிகாட்டுவதற்காக இந்தத் தொலை பேசி சேவை மய்யம் செயல்பட உள்ளது.

தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்த விளக்கமளித்தல், மதுவினால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகள், லஞ்சம்-ஊழல், மது ஒழிப்பு குறித்து புகார் அளிக்க, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ் போர்ட், மின் இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்புகள், பட்டா மாற்றம், கல்விக்கடன் போன்ற அரசு சேவைகள் அனைத்தையும் குறித்த விளக்கங்கள், குறித்த வழிகாட்டுதல் போன்ற பணிகளை இந்த சேவை மய்யம் செய்கிறது.

சேவை மய்யத்தின் 7667-100-100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு சேவைகள் குறித்த விளக்கங்களை பெற்றுக்கொள்ள லாம்.

இதுகுறித்து நிர்வாக இயக்குநர் உ.சகாயம் கூறியதாவது:-

நேர்மை என்பது முக்கியமான ஒன்று. அந்த நேர்மை அரசியல், ஆட்சியில் மட்டும் நேர்மை இருந்தால் போதாது. சமூக முழு மையும் நேர்மை இருக்கவேண்டும். ஊழ லுக்கு எதிராக போராடுவது கடுமையான போராட்டம். ஆனால் நாம் கண்டிப்பாக போராட வேண்டும்.

- இவ்வாறு அவர் கூறினார்

Read more: http://viduthalai.in/page-5/72089.html#ixzz2nazJryTW

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மூடநம்பிக்கை உச்சத்துக்குப் போகும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி எச்சரிக்கை


திருப்பூர், டிச.15- இந் துத்துவ மதவெறி அடிப் படையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் மூடநம்பிக்கை உச்சத்துக்குப் போகும் என்று திருப்பூரில் நடை பெற்ற மக்கள் கோரிக்கை மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத் தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார்.

திருப்பூர் அரிசிக் கடை வீதியில் நடை பெற்ற மாநாட்டில் உ.வாசுகி பேசியதாவது:

உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் இந்திய நாட்டு மக்களுக்கு எதிரானது

உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் இந்தியா உணவு மானி யத்தைக் குறைக்க வேண் டும் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் நிர்ப்பந் தித்துள்ளது. அமெரிக் காவில் விவசாயிகளுக்கு 385 கிலோ மானியம் வழங்கும் அந்த நாட்டு அரசு இந்தியாவில் 60 கிலோ மானியம் வழங் குவதை அநியாயம் என்று அதை வெட்டச் சொல்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடு கள் எதிர்ப்புத் தெரி வித்த அடிப்படையில் இந்த உத்தரவை நான் காண்டு காலத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர். உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் உருவான போதே அது இந்திய நாட்டு மக்களுக்கு எதி ரானது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது.

நரேந்திர மோடி அலை என்ற தில்லுமுல்லு மோசடிகளை....

நாட்டில் நரேந்திர மோடி அலை வீசுவ தாகச் சொல்கிறார்கள். ஆனால் டில்லியில் அவ ரது அலையால் பாஜக ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை ஏன்? கடலில் அலை வரும் போகும், ஆனால் கரை பலமாக இருந்தால் எந்த அலையாலும் அதை உடைக்க முடியாது. நரேந்திர மோடி அலை என்ற தில்லுமுல்லு மோசடிகளை, மக்கள் ஒற்றுமை என்ற வலு வான கரையைக் கொண்டு தடுத்து நிறுத்த முடியும்.

நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக் கிறார். ஆனால் காங் கிரஸ் கட்சியின் கொள் கைகளை அவர் விமர் சிப்பது கிடையாது. டில்லியில் இளம்பெண் பாலியல் வன்கொடு மைக்கு ஆளான சம் பவம் நடந்தபோது, சம்பவத்தில் ஈடுபட்ட ஆண்களைப் பார்த்து சகோதரனே என்று கெஞ்சியிருந்தால், சரஸ்வதி மந்திரம் உச் சரித்திருந்தால் தப்பி யிருக்கலாம் என்று ஆசாராம் பாபு என்ற சாமியார் சொன்னார்.

சரஸ்வதி மந்திரம் பலிக்கவில்லை போலும்!

ஆனால் அவரது ஆசி ரமத்தில் வேலை செய்த இளம் பெண்களையே அவர் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கி இப்போது சிறையில் இருக்கிறார். அங்கெல் லாம் சரஸ்வதி மந்திரம் பலிக்கவில்லை போலும். மேலும் இந்த சாமியா ருக்கு பாதுகாப்பாக குரல் கொடுத்தது யார் தெரியுமா? பாஜகவுக்கு நெருக்கமான இந்துத் துவ அமைப்பான விசுவ இந்து பரிஷத் தலை வர்கள் தான் ஆசாராம் பாபுக்கு ஆதரவாக இருந்தனர்.

எனவே பெண் களுக்கு எதிரானவர்கள் இவர்கள். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் மூட நம்பிக்கை உச்சத்துக்குப் போகும். - இவ்வாறு உ. வாசுகி உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-8/72084.html#ixzz2nb0EfJ9e

தமிழ் ஓவியா said...


தந்தை இறந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு கருணை அடிப்படையில் மகனுக்கு வேலை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, டிச. 16- தந்தை இறந்து 11 ஆண்டுகள் கழித்து கருணை அடிப்படை யில் மகனுக்கு வேலை வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.அழகேசன் உயர்நீதிமன்றத்தில் தாக் கல் செய்துள்ள மனு விவரம் வருமாறு:

எனது தந்தை மணி வேல் கரூர் மாவட்டம் காவூர் தாலுகா பாப் பயம்பட்டி கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். அவர் 2001 ஜனவரி 20 ஆம் தேதி இறந்தார்.

இதையடுத்து, 2001 மார்ச் 19 ஆம் தேதி கருணை அடிப்படை யில் பணி வழங்கக் கோரி எனது தாய் கரூர் மாவட்ட நிருவாகத் திடம் மனு கொடுத்தார். ஆனால், உரிய தகுதி இல்லை என்ற கார ணத்தினால் கருணை அடிப்படையில் பணி வழங்கவில்லை. எனது தந்தை இறந்தபோது நான் மைனராக இருந் ததால் என்னால் கருணை அடிப்படை யில் பணி கேட்க முடியவில்லை.

2012 இல் நான் பிளஸ் 2 முடித்துள்ளேன். இதையடுத்து, எனக்கு கருணை அடிப்படை யில் பணி வழங்கக் கோரி கரூர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பினேன். தந்தை இறந்து 3 ஆண்டுகளுக் குள் விண்ணப்பித்தால் மனுவை பரிசீலிக்கலாம். இப்போது மிகவும் கால தாமதமாக மனு செய்தி ருப்பதை ஏற்க முடியாது என்று கூறி எனது மனுவை கரூர் மாவட்ட ஆட்சியர் நிராகரித்து விட்டார். எனவே, எனக்கு கருணை அடிப் படையில் பணி வழங்கு மாறு உத்தரவிட வேண் டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி உத்தரவு

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்னி லையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:

மனுதாரரின் தந்தை இறந்தவுடன் அவரது தாய் தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனு இன்னும் நிலுவையில் உள்ளது.

அவருக்கு உரிய கல்வித் தகுதி இல்லாததால் அவருக்கு பணி வழங்க வில்லை என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. அவரது மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் அவரது மகன் பணி கோரி மனு தாக் கல் செய்ததில் முகாந் திரம் உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து அவ ருக்கு ஏற்ற பணியை 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும்.

- இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-5/72111.html#ixzz2nenBo4nD

தமிழ் ஓவியா said...


எந்தெந்த பழங்களில் என்ன இருக்கிறது?


மாம்பழம்: ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. ரத்தத்தை அதிகரித்து உடலுக்கு பலம் அளிக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக் கிறது.

கொய்யா: வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. சொறி, சிரங்கு, ரத்த சோகை, இருப்பவர்கள் கொய்யாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். நச்சுக்கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யா பழத்துக்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் நச்சுக் கிருமிகள் ரத்தத்தில் கலந்துவிட்டால் அதை உடனே கொன்றுவிடும் சக்தி படைத்தது.

பப்பாளி: மூலநோய், சர்க்கரைநோய், குடல் அழற்சி, போன்றவற்றுக்கு சிறந்தது. வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பல் சம்பந்தமான குறைப்பாட்டிற்கும் சிறுநீர் பையில் ஏற்படும் கல்லை கரைக்கவும் பப்பாளி பயன்படும். நரம்புகள் பலப்படும். ஆண்மைதன்மையை பலப்படுத்தும்.

மாதுளை: மலத்தை இளக்கும் சக்தி பெற்றது. இருமல், பித்தம், சம்பந்தமான அனைத்து குறைபாடுகளுக்கும் நல்ல பலன் தரக்கூடியது. வறட்டு இருமலை குணப் படுத்தும்.

வாழை: மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு, பலனடையலாம். இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்ல செரிமாண சக்தி கிடைக்கும். செவ்வாழைப்பழம் கண் பார்வை சக்தியை அளிக்கும்.

ஆரஞ்சு: வைட்டமின் ஏ, வைட்டன் சி, வைட்டமின் பி, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. தூக்கமின்றி அவதிப்படுபவர்கள் படுக்கச்செல்லும் முன் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம் சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, ஈறுகளில் ரத்தக்கசிவு உள்ளவர்கள் ஆரஞ்சு பழச்சாற்றை கொப்பளித்து விழுங்கி நிவாரணம் பெறலாம்.

திராட்சை: வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. சரியாக பசி எடுக்காமல் வயிறு, மந்த நிலையில் காணப்படு பவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரை டம்ளர் சாறு எடுத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து அருந்தினால் நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதகக் கோளாறுகளுக்கு திராட்சைச் சாறு பலனளிக்கும். முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும்.

எலுமிச்சை: எலுமிச்சைச் சாற்றுடன் சிறிய இஞ்சித் துண்டை நறுக்கிப்போட்டு கொதிக்க வைத்து ஆறிய பிறகு தினமும் 2முறை குடித்தால் இருமல் நின்றுவிடும். சூடான தேநீரில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து 3 நாட்கள் குடித்தால் தலைவலி வராது. வயிற்றுவலி, பித்தத்தால், செரிமாண உறுப்பு களில் ஏற்படும் குறைபாடுகள் சிறுநீர் தொந்தரவுகள் வராது.

பேரீச்சை: தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலையும் 2 பேரீச்சை பழமும் சாப்பிட்டால் உடல் பலம் பெறும் புதிய ரத்தம் உண்டாகும்.

Read more: http://viduthalai.in/page-7/72115.html#ixzz2nenOLkXL

தமிழ் ஓவியா said...


இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்


அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுபவர்கள், விளாம்பழம் சாப்பிட்டுவர குணமாகும். வெயில் காலத்தில் அடிக்கடி தாகம் எடுத்தால் கூட இதைச் சாப்பிடலாம் ஏனெனில் இதயத்துக்கும் பாதுகாப்பு, தாகமும் தீரும்.. இப்பழத்தி லிருந்து கல்லீரல் மற்றும் இதய கோளாறுக்கான டானிக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இது பழுக்காத போது துவர்ப்பாக இருக்கும். இது வயிற்றுபோக்கையும், வயிற்றுக்கடுப்பையும் நிறுத்தும் குணம் கொண்டது.

இதுவிக்கலுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. தொண்டை புண்ணை இதனுடைய கோந்து சரி செய் கிறது. இதனுடைய சதை வீக்கத்திற்கு வைத்து கட்டு கிறார்கள்..

விஷப்பூச்சிகள் கடித்தால் பழ ஓட்டின் பவுடரை அரைத்து பூசுவதால் சரியாகிறது. பெரும் பயன் தரும் பழங்களில் இது ஒன்று. அடிக்கடி மார்பில் வலி ஏற்பட்டால், உங்கள் வயிற்றில் புளிப்பு தன்மையுடைய நீர் அதிகமாகி விட்டது என்று அர்த்தம். இதைப்போக்க இஞ்சியும், எலுமிச்சம்பழமும் உணவில் நிறைய சேர்த்துக் கொள்ளவும்.

அதன்பிறகு மார்பு வலி வராது. அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டால், மாத்திரை மருந்து சாப்பிடுவதைவிட உளுந்து மாவைக் களியாகக்கிண்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம், நெஞ்சு வலியும் போகும். மாரடைப்பு, இதயநோய் வராமலிருக்க அடிக்கடி உணவில் வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும். கடலைப்பருப்பையும் அடிக்கடி உணவில் சேர்த்த்துக் கொள்ளவும்.

பூண்டைப் போட்டு காய்ச்சியும் பருகி வரலாம். மார்பில் நமநம என்று வலி ஏற்பட்டு தொந்தரவு வரும்போது செம்பரத்தம்பூ கஷாயம் மிகவும் நல்லது. பூக்களை சுத்தம்செய்து, சுண்டும்படியாக கஷாயம் வைத்து, பாலும் சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், மார்புவலி இருக்காது. இருந்த வலியும் நின்றுபோகும்.

குப்பைமேனி இலையை உலர்த்தி இடித்து மெல்லிய துணியில் சலித்துக் கொண்டு, சமமாகச் சர்க்கரை சேர்த்து, 200 மில்லி பசும்பாலில் கலந்து, காலையில் மட்டும் சாப்பிட்டு வரவும்.

இவ்வாறு 15 நாட்கள் சாப்பிட்டால், மார்பு வலி நீங்கி உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/72114.html#ixzz2nenWQ73g

தமிழ் ஓவியா said...


பனியிலிருந்து பாதுகாக்க வழிமுறைகள்

சுள்ளெனக் கொளுத்தும் வெயிலையும், சடசட மழை யையும் தாங்கி கொள்ளலாம். அதுவும் எலும்பை ஊடுருவும் கார்த்திகை, மார்கழிப் பனியைக் கண்டால் பயப்படுவோம். மழையும் குளிரும் வாட்டும் இந்த காலக்கட்டங்களில் காய்ச்சலும் சளித் தொந்தரவும் எளிதில் வந்துவிடும். உதடுகளில் வெடிப்பு, கை, கால்களில் வறட்சி ஏற்படும். இதற்காக நாம் கவலைப்பட வேண்டாம். நாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் பனியும் குளிரும் நம்மை எதுவும் செய்யாது.

ஒரே சீரான தட்ப வெப்பநிலை இல்லாமல் வெப்பமும் பனியும் கலந்து இருக்கும் நாட்களில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். பனிக்காலத்தில் ஏ டிபிக்கல் வகை வைரஸ் அதிகமாக தாக்கும். இந்த வைரஸ் கிருமிகள் தாக்கினால் 10 முதல் 13 நாட்கள் வரை வலி நீடிக்கும். சுற்றுச் சூழல் மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து வருவதுதான் இதற்குக் காரணம். இந்த வைரஸ் குழந்தைகளையும், வயதானவர்களையும்தான் அதிகம் தாக்குகிறது.

இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் காரத்தைத் தவிர்த்துவிட வேண்டும். இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசி கஞ்சி, பிரெட் ஆகியவற்றைச் சாப்பிடலாம். சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களை சாப் பிடலாம். புளிப்புச் சுவை நிறைந்த பழங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.வெயில் காலங்களில் நம் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் இந்தப் பழங்கள், குளிர் காலங்களில் ஒத்துக்கொள்ளாது. காரணம், தட்பவெப்ப நிலைக்கு ஏற்றமாதிரி நம் உடல் செயல்பாடுகள் மாறுவதுதான்.

வெயில் காலங்களில் நமக்கு அதிகமாக வியர்க்கும். அப்போது வியர்வையுடன் சேர்ந்து அல்கலைன் சிட்ரேட் என்ற அமிலமும் நம் உடலில் இருந்து வெளியேறும். அதை ஈடு செய்வதற்காக அமிலச் சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்கள் மற்றும் மோர், பானகம் போன்ற புளிப்புச்சுவை நிறைந்த பானங்களைப் பருகுவோம். குளிர்காலத்தில் அதிகமாக வியர்க்காத நிலையில் இவற்றைக் குடிக்கும்போது, நம் உடலில் அதிக அளவில் அமிலச் சத்து சேர்ந்து, சளி, சைனஸ் போன்றவை ஏற்படலாம். முக்கியமாக பச்சை திராட்சையையும், பச்சை வாழைப்பழத்தையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பனிக்காலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். குளிக்க வேண்டும். வெந்நீரில் கைப்பிடி அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்தால் சளி பிடிக்காது, தொண்டை வலியும் வராது. துளசி கிடைக்கவில்லை என்றால் கற்பூர வல்லி, தூதுவளை கீரை ஆகியவற்றில் கஷாயம் வைத்தும் குடிக்கலாம். எந்தக் கீரையும் கிடைக்கவில்லையென்றால் இரண்டு வெற்றிலையை மென்று சாப்பிடலாம். கற்பூரவல்லி கஷாயம் குடிக்கப் பிடிக்கவில்லையென்றால் அதில் பஜ்ஜி, மோர்க் குழம்பு செய்து சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு இரவில் தூங்குவதற்கு முன்பு காதுகளின் பின்புறங்களில் லேசாகத் தைலம் தேய்த்தால் சளி பிடிக்காது. எந்த உணவாக இருந்தாலும் சுடச்சுட சாப்பிடத் தர வேண்டும். கடுகுடன் பால் அல்லது தண்ணீர் சேர்த்து அரைத்து, தினமும் பூசி வர, சருமம் மென்மையாகி, பளபளக்கும். ஒரு கரண்டி ஆலிவ் ஆயிலை ஒரு பக்கெட் நீரில் கலந்து குளிக்கலாம். சருமம் மிகவும் வறண்டிருந்தால், ஆலிவ் ஆயிலை உடம்பில் பூசி, மசாஜ் செய்யவும். 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கலாம். சிறிது பஞ்சை காதில் வைத்துக் கொண்டு சென்றாலும், குளிர் காற்றி லிருந்து தப்பிக்கலாம்.

குளிர்ச்சியான பானங்களை அருந்துவதை தவிர்க்கவும். சூப் அருந்தலாம். குழந்தைகளுக்கு குல்லா, ஸ்வெட்டர், சாக்ஸ் அணிவித்து, வெளியே அழைத்துச் செல் வதும் அவசியம். எண்ணெய் மற்றும் மசாலா வகைகள் அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. தினமும் காலையில், துளசி இலை நான்கை தண்ணீரில் ஊற வைத்து அருந்துவது நல்லது.

Read more: http://viduthalai.in/page-7/72113.html#ixzz2nenfYM5U

தமிழ் ஓவியா said...


நடவடிக்கை

பார்ப்பனர்களுக்கு விரோதமாக எவர் நடக்க ஆரம்பித்தாலும் அவர்களை ஒழித்துக்கட்டவே பார்ப்பனர் சதி செய்வார்கள். புராண கால முதலே இதுதான் அவர்கள் நடவடிக்கையாக இருந்து வந்திருக்கிறது.

- (விடுதலை, 14.7.1961)

Read more: http://viduthalai.in/page-2/72165.html#ixzz2nk012Thc

தமிழ் ஓவியா said...


அய்யப்பன் கோயில் தரிசனச் சீட்டில் மோசடி!

திருவனந்தபுரம், டிச. 17- சபரிமலை அய்யப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடந்து வருகின்றன. சபரிமலையில் பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஆன்லைன் தரிசன முன்பதிவு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் வெகு தொலைவில் இருந்து வரும் பக்தர்களால் எளிதில் தரிசனம் செய்ய முடிந்தது. இந்நிலையில் பக்தர்கள் போலி ஆன்லைன் டிக்கெட்களுடன் சபரிமலை வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒருவர் பயன்படுத்திய டிக்கெட்டில் புகைப்படத்தை மாற்றி ஒட்டியும், தேதியை திருத்தியும் பக்தர்கள் பயன் படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தென்மண்டல ஏடிஜிபி ஹேமச்சந்திரன் கூறுகையில், இவ்வருடம் பக்தர்கள் போலி ஆன்லைன் தரிசன டிக்கெட்டை கொண்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சில கணினி மய்யங் களில் இதுபோன்ற டிக்கெட்களை எடுத்து கொடுத்தது தெரியவந்துள்ளது. இவ்வாறு போலி ஆன்லைன் டிக்கெட் கொண்டு வரும் பக்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைனில் பதிவு செய்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது. ஆனால் சில கணினி மய்யங் களில் இதற்கு கட்டணம் வசூலிக்கின்றனர். இவ்வாறு கட்டணம் வசூலிக்கும் கணினி மய்யங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.

தமிழ் ஓவியா said...


தி.மு.க. பொதுக்குழுத் தீர்மானங்களுக்கு வரவேற்பும் பாராட்டும் - சுப. வீரபாண்டியன் அறிக்கை!

சென்னை, டிச.17- காங்கிரஸ், பா.ஜ.க., ஆகிய இரு கட்சிகளையும் விட்டு சம தூரத்தில் விலகி நிற்பது என தி.மு.க., பொதுக் குழுத் தீர்மானங்களை வரவேற்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கைவருமாறு:

15.12.2013 அன்று சென்னையில் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழு, தமிழக மக்களின் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இறுதியில், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து, தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிவிப்பு பெரும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தருவதாக உள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க., ஆகிய இரு கட்சிகளையும் விட்டு சமதூரத்தில் விலகி நிற்பது என்னும் தி.மு.கழகத்தின் முடிவு மிகுந்த பாராட்டிற்கும், வரவேற்பிற்கும் உரியது. காங்கிரஸ் போன்ற கட்சிகளை கால காலமாக தூக்கிச் சுமந்ததும் போதும், மதவாதக் கட்சிகளோடு உறவும் ஒரு நாளும் வேண்டாம் என இரு திசைகளிலும் எடுக்கப்பட்டிருக்கும் நல்ல முடிவு இது. தி.மு. கழகத் தொண்டர்களிடம் புதியதோர் எழுச்சியை உருவாக்கியிருக்கும் இவ்வறிவிப்பு, பொது மக்களிடமும் ஏற்றதொரு வரவேற்பைக் கண்டிருக்கிறது. வழக்க மாகவே ஊக்கம் குறையாமல் தேர்தல் பணியாற்றும் தி.மு.கழகத் தொண் டர்கள் இம் முறை முழு மூச்சில் களத்தில் இறங்கிப் பணியாற்றுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தி.மு.க. பொதுக்குழுவின் தீர்மானங்கள் அனைத்தையும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை மீண்டும் ஒரு முறை மகிழ்வுடன் வரவேற்கிறது.

தமிழ் ஓவியா said...


மதக் கலவரத் தடுப்புச் சட்டத்தை எதிர்ப்போர் யார்?


தஞ்சை வல்லத்தில், கடந்த14ஆம் தேதி கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத் தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஒன்று - மதக் கலவரத் தடுப்புச் சட்டத்தை வரவேற்றதாகும். மத்திய அரசு கொண்டுவரும் மதக் கலவரம் மற்றும் குறி வைத்து மேற்கொள்ளப்படும் வன் முறைத் தடுப்பு (நீதி மற்றும் மறுவாழ்வு பெறுதல்) சட்ட வரைவு (Prevention of Communal Violence (Access to Justice and Repatriation) Bill) எனும் சட்டம் விரிவான பொருள்கொண்ட நியாயமான, தேவையான வரவேற்கப் படவேண்டிய சட்டம் ஆகும்.

அவசியம் கருதி இந்தச் சட்டத்தினைச் செயல் படுத்தும் போது மாநில அரசுகளின் உரிமைகளுக்குப் பங்கம் இல்லாமல், மாநில அரசுகளின் ஒப்புதலுடன் செயல்படுத் தும் வகையில், சட்டத்தில் சரத்துகளை இணைத்துக் கொள்ளுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது என்பதுதான் அந்தத் தீர்மானமாகும்.

மாநில உரிமைக்கு எதிரானது என்ற ஒரு கருத்து எழுந்துள்ளது - மாநில அரசின் அனுமதியையும், ஒத்துழைப்பையும் பெற்று இந்தச் சட்டத்தை செயல்படுத்தலாம் என்பது ஒரு நியாயமான கருத்தாகும். அதை விட்டு விட்டு, இந்தச் சட்டமே கூடாது என்று ஒரு அமைப்புக் கூறுகிறது என்றால் அதன் உட்பொருள் என்ன? அப்படியொரு சட்டம் செயல்பட்டால் தங்களுக்குப் பாதகமாக இருக்கும் என்று கருதுவது - குற்றமுள்ள நெஞ்சுடையாரின் குறுகுறுப்பேயாகும்.

காரணம் நாடு தழுவிய அளவில் மதக் கலவரங் களை உண்டாக்கிக் குளிர்காய்வதுதான் ஆர். எஸ்.எஸ். சங்பரிவார் உள்ளிட்ட (பி.ஜே.பி.யும்) குழுமத்தின் வழிமுறைகள்!

மக்களை இந்துக்கள் - சிறுபான்மையினர் என்று கூறு போட்டால் பெரும்பான்மையான இந்துக்களின் வாக்குகள் (Polarisation) தங்களுக்குக் கிடைக்கும் என்ற தந்திரமாகும்.

குஜராத்தில் மதக் கலவரத்தை உருவாக்கி அப்படியொரு சூழ்நிலையை ஏற்படுத்தவில்லையா? பாபர் மசூதியை இடித்தவர்கள் அல்லவா!

கோத்ராவில் ரயில் பெட்டி எரிந்து பலர் மாண்டனர் என்பது வேதனையான ஒன்றே! பொறுப்புள்ள முதல்வராக இருந்தால் நரேந்திரமோடி என்ன செய்திருக்க வேண்டும்?

இதனை வைத்து மக்களுக்குள் மோதல், கலவரம் வந்து விடக் கூடாது என்பதில் அல்லவா கவனம் செலுத்தி இருக்க வேண்டும்? அதற்கு மாறாக, அவரின் சிந்தனை யும், அணுகுமுறையும் இருந்தன உள்ளுக்குள்ளிருந்த இந்துத்துவா வெறியல்லவா அவரை உசுப்பி விட்டது!

பலியானவர்களை அடையாளம் கண்டு, உடல்களை அந்தந்த ஊருக்கு அனுப்புவது என்று தான், முதலில் முடிவு செய்யப்பட்டது. அந்தத் திட் டத்தை மாற்றி, பலியான அத்தனை உடல்களையும் ஒரே இடத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லுவது என்று முடிவு செய்தவர்தான் முதல் அமைச்சர் நரேந்திரமோடி.

அதன் விளைவு என்ன ஆகும் என்பது, கடுகளவு சிந்திப்பவர்கள்கூட உணர்ந்து கொள்வார்கள். பலியான பிணத்தைக் காட்டி பெரும்பான்மையான இந்துக்களை வெறியேற்றி சிறுபான்மை மக்கள்மீது வன்முறையை ஏவுவதுதான் மோடியின் திட்டம்; அதன்படியே நடந்தது.

அப்பொழுது குடியரசு தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன் அவர்கள் பிரதமர் வாஜ்பேயிடம் பல முறை தொடர்பு கொண்டு, இராணுவத்தை அனுப்பிக் கலவரத்தை அடக்க வேண்டும் என்று வலியுறுத் தியும் அதனைப் பிரதமர் வாஜ்பேயி செய்யவில்லையே! இவ்வளவும் நடந்த பிறகு எந்தமுகத்தை வைத் துக் கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று நீலிக் கண்ணீர் வடித்தவர்தான் இந்த வாஜ்பேயி.

குஜராத்தில் ஓர்அரசே முன்னின்று கலவரத்தைத் தூண்டி, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு பான்மை மக்கள் கொல்லப்பட்ட பிறகுகூட, இப்படி யொரு மதக் கலவரத் தடுப்புச் சட்டம் கூடாது என்று சொல்லுபவர்கள் யாராக இருக்க முடியும்?

இது, சிறுபான்மை மக்களைத் தாஜா செய்வ தற்குக் கொண்டு வரப்படும் சட்டம் என்று, இந்துத் துவாவாதிகள் சொல்லுகிறார்கள் என்றால் இதன் பொருள் எளிமையாக அறியப்படக் கூடியதே.

இந்தச் சட்டத்தைப் புரிந்து கொள்ளாமலோ அல்லது புரிந்து கொண்டு வேண்டுமென்றே விமர்சிக்கிறார்கள் என்று கருத வேண்டியுள்ளது.

இந்துக்கள், முஸ்லிம்கள் மட்டுமல்ல; காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் இந்துக்களுக்கும் பயன் உடையதாக இருக்கும். கருநாடகம், மும்பை போன்ற மாநிலங்களில் தமிழர்கள் போன்ற வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும், மகாராட்டிரத்தில் பீகாரிகளுக்கும் கூடப் பாதுகாப்பான சட்டம்தான்.

இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் யாராக இருந் தாலும் மதக் கலவரம் நாட்டில் நடைபெற வேண்டும் என்ற நஞ்சை கன்னத்தில் அடக்கி வைத்திருக்கக் கூடியவர்களே ஆவர்! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/72198.html#ixzz2nk1r5a00

தமிழ் ஓவியா said...


வகுப்புக் கலவரத் தடுப்பு மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதல்


புதுடில்லி, டிச.17- வகுப்புக் கலவரத் தடுப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை திங்கள் கிழமை ஒப்புதல் அளித் தது. இதையடுத்து, "இந்த மசோதா செவ்வாய்க் கிழமை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அமைச்சரவைக் கூட்டத் துக்கு பிறகு செய்தியா ளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார். அதே நேரத்தில் இந்த மசோதா நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு அச் சுறுத்தலாக உள்ளதால், நாடாளுமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவி க்கப்படும் என்று பாஜக கூறியுள்ளது. வகுப்புக் கலவரத் தடுப்பு மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் மாநில அர சுகளின் அதிகாரங் களைப் பறிக்கும் வகை யில் உள்ளது என்று தமிழக முதல்வர் ஜெய லலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணர்ஜி ஆகியோர் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், வகுப்புக் கலவ ரம் ஏற்பட்டால் அதற்கு பெரும்பான்மை சமுத யத்தினரே பொறுப் பேற்கும் வகையில் உள் ளதாக பாஜக உள் ளிட்ட சில கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து, அந்த அம்சத்தில் திருத்தம் செய்யப்பட்டு அனைத்து தரப்பினரும் பொது வாக கருதப்படுவார்கள் என்று திருத்தப்பட்டுள் ளதாக தெரிகிறது. "வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டால் மாநில அர சுகளின் ஆலோசனை யைப் பெறாமல் மத்திய துணை ராணுவம் சம்பவ இடத்துக்கு செல்ல லாம்' என்று மத்திய அரசுக்கு அதிகாரமளிக் கும் வகையில் மசோதா வில் முன்பு குறிப்பிடப் பட்டிருந்தது. இது தற்போது, "மாநில அர சுகள் கேட்டுக்கொண் டால் தான் மத்திய அரசு பாதுகாப்புப் படை களை அனுப்பும்' என்று மாற்றம் செய்யப்பட் டுள்ளது.

தமிழ் ஓவியா said...


படிக்காத காமராசர் செய்த சமூக புரட்சியை படித்தவர்கள் எவரும் செய்யவில்லை!


காமராசர் பவுண்டேசன் ஆப் இந்தியா 37ஆவது தேசிய மாநாட்டில் தமிழர் தலைவர் உரை

திருச்சி, டிச. 17- காமராசர் பவுண் டேசன் ஆப் இந்தியா என்ற சமூக கலாச்சார அமைப்பு 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட் டது. டாக்டர் நீலலோகித தாஸ் (நாடார்) நிறுவனத் தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பு காமராசரு டைய கொள்கைகளை பரப்பி வருகிறது.

இந்த அமைப்பின் 37 ஆவது தேசிய மாநாடு திருச்சி திரு வரங்கம் எஸ்.என். திருமண மண்டபத்தில் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. நிறைவு நாளான (டிச.15) அன்று திரா விடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற் றினார். இவ்விழாவிற்கு முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் முகமது இஸ்மாயில் தலைமை தாங்கினார். புரவலர் எஸ். நடராசன் முன்னிலைவகித்தார்.

தமிழர் தலைவர் உரை

காமராசர் பவுண்டேசன் ஆப் இந்தியா சார்பில் 37 ஆவது ஆண்டு தேசிய மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டு நடந்து வருகிறது. இவ் விழாவில் என்னை கலந்து கொள்ள வேண்டுமென எனது நீண்டகால நண்பர் நீலலோகி தாஸ் (நாடார்) கேட்டுக் கொண் டார். இவர் நல்ல தொண்டற செம்மலாக விளங்கி வருபவர். சமூக நீதி போர்க்களத்தில் பின்னால் நிற்பவர். அருமை நண்பர். காமராசர் தொண்டை யும், அவரது கொள்கையும் எடுத்துச் சொல்லக் கூடியவர். இவ்விழாவில் நான் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி யடைகின்றேன். தந்தை பெரியார், காமராச ரும் சமூகத்திற்கு தொண்டாற் றியதை நன்கு அறிவீர்கள். தந்தை பெரியார் அவர்கள் யாருக்கும் சொல்லாததை காம ராசரைப் பார்த்து சொன்னார். பச்சைத் தமிழர் காமராசர் என்று. ஒடுக்கப்பட்டவர்களுக் காகவும், தாழ்த்தப்பட்டவர்க ளுக்காகவும் உழைத்தவர் காம ராசர். காமராசர் என்ற கலங் கரை வெளிச்சத்தை பார்த்தால் கண் பார்வையற்றவர்களுக்கும் நன்கு தெரியும். அரசியல் வாதி களுக்கும் வெளிச்சம் வேண்டு மென்றால், காமராசர் தேவை. காமராசரின் சாதனை

படிக்காத காமராசர் இந்த நாட்டுக்கு செய்ய முடிந்ததை, படித்தவர்கள் சாதிக்க முடிய வில்லை! தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய நாட்டிற்கு வழிகாட்டியவர் காமராசர். குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி கொண்டு வந்து பள்ளிக் கூடங்களை மூடினார். மூடிய பள்ளிக் கூடங்களை அனைத் தையும் காமராசர் திறந்த தோடு அல்லாமல் கிராமங்கள் தோறும் பள்ளிச் சாலைகளை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் இரட்சகர்

தமிழ்நாட்டில் மிகப் பெரிய கல்வி புரட்சியை ஏற்படுத்திய காமராசர். பொருளாதார புரட்சியையும் ஏற்படுத்தினார். அதனால் தான் தந்தை பெரி யார் அவர்கள் காமராசரை தமிழ்நாட்டின் இரட்சகர் என்று கூறினார். குப்பன் மகனும், சுப்பன் மகனும் அமெரிக்காவில் கணினி பொறியாளராக பணியாற்று கிறார்கள் என்றால் அதற்கு காமராசர் தான் காரணம். எனவே அவரது கொள்கையை, அவரது தொண்டினையும் அனைவரும் பின்பற்ற வேண் டும். அவர் எந்த தத்துவத்தை சொன்னாரோ, அதை நிறை வேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/72191.html#ixzz2nmrLMJxz