Search This Blog

20.12.13

யோசித்துப் பாருங்கள் - பெரியார்

யோசித்துப் பாருங்கள்

னிதன் தனது சமூகத்தை வஞ்சித்துப் பொருள் சேர்த்துப் `பகுத்தறிவுள்ள தனது பெண்டு பிள்ளைக்குப் பணம் சேர்த்து வைக்கவேண்டுமென்று சொல்கிறான். ஆனால், மிருகம், பட்சி ஆகியவை பகுத்தறிவு இல்லாத தமது பெண்டு, பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்த்து வைக்கக் கருதுவதில்லை. தன் குட்டிகளையும், குஞ்சுகளையும் அவை தாமாக ஓடியாடும் பருவம் வந்தவுடன் தனித்து வாழ்ந்து கொள்ளும்படி கடித்தும், கொத்தியும் துரத்தி விடுகின்றன.
அவற்றைப்பற்றிய கவலையோ, ஞாபகமோ கூட அவற்றுக்குக் கிடையாது.
மனிதனின் பிறப்பு கடவுளால் என்கிறோம்; இறப்பு கடவுளால் என்கிறோம். இவ்விரண்டுக்கும் காரணமாய்க் காணப்படுவது மனிதன் நடப்பாய் இருப்பதால், அந்த நடப்பும் கடவுளால்தான் என்று சொல்ல வேண்டியதாகின்றது.

ஆகவே, மனிதனின் நடப்பையும், கடவுளால்தான் நடைபெறுகின்றது என்று சொல்கிறார்கள். மனிதனுடைய நடப்போ பெரிதும் நான் மேலே சொல்லியதுபோலவே தான் கவலையும், கொடுமையும் நிறைந்ததாய் இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட நடப்புக்குக் கடவுளைக் காரணமாக்குகின்றவர்கள் இதன் பயனாகிய பிறப்பு, இறப்புக்குக் காரணமாக்குகின்றவர்கள் கடவுளை மேன்மைப்படுத்தினவர்களா? அல்லது கீழ்மைப்படுத்தினவர்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

செல்வவான் (சோம்பேறியாய் இருந்து வாழ உரிமை உடையவன்) என்கின்ற ஒரு நிலைமை உலகில் இல்லையானால், கடவுளுக்கும், மதத்திற்கும், ஜாதிக்கும், அரசனுக்கும் உலகில் இடம் இருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.

-------------------தந்தை பெரியார் -------------"உண்மை" 14.8.1971

29 comments:

தமிழ் ஓவியா said...


கடவுளின் கையாலாகத்தனத்தை மூடி மறைக்கும் மோடி மஸ்தான் வேலை!


கோவில்பட்டி அருகே கார்மீது பஸ் மோதியதில் பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த 5 மின்வாரிய ஊழியர்கள் பலியானார்கள். விபத்தில் சிக்கிய கார் சின்னாபின்னமாகி கிடப்பதை படத்தில் காணலாம். திருச்செந்தூர் முருகனைக் கும்பிடச் சென்றவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டம் சின்னைய பாளையத்தைச் சேர்ந்தவர் அனந்த பத்பநாபன் (58).

சபரிமலைக்குச் செல்ல மாலை அணிந்து இருந்தார். திருப்பதிக்குச் சாமி கும்பிட வந்தார். ஏழுமலை யானை தரிசிக்க வரிசையில் நின்றவர் சுருண்டு விழுந்த மரணம் அடைந் தார். (நமது அனுதாபம் உரியதாகுக) கோயில் முன் பகுதியில் பக்தர் மரணம் அடைந்ததால் பரிகாரப் பூஜை நடத்தப் பட்டது. ஆகமவிதிப்படி கோயில் தூய்மைப்படுத்தப்பட்டது. தோஷ நிவாரணப் பூஜைகள் நடந்தன. அதில் அர்ச்சகர்களும், பண்டிதர்களும் கலந்து கொண்டனர். இதன் காரண மாக கோயில் முன் பகுதியில் நடந்த சகஸ்ரதீப அலங்கார சேவை 10 நிமிடங்கள் பாதிக்கப்பட்டன (மாலை மலர் 19.12.2013 பக்.4).

இது செய்தி ஆனால் அதன் பின் னணியில் சிந்திக்கப்பட வேண்டிய துண்டு.

கோயிலுக்குச் சென்றார் ஒரு பக்தர். அதுவும் எந்த கோயிலுக்கு? தீராத வினைகளை எல்லாம் தீர்த்து வைப்பார் கோவிந்தம் என்று பக்தக் கோடிகள் - போற்றித் துதிக்கும் ஏழு மலையான் கோயிலுக்குச் சென்றி ருக்கிறார்.

எந்த கோலத்தில்? அய்யப்பன் பக்தர் கோலத்தில்! ஆக இரண்டு கடவுள்களின் பக்தராகச் சென்று இருக்கிறார்.

கடவுளைக் கும்பிட்டால் வழிபட் டால் நல்லது நடக்கும் - குடும்பக் கஷ்டங்கள் தீரும் - கெட்ட வினை எல் லாம் ஓடி மறையும் என்ற நம்பிக் கையில் தானே ஏழுமலையானைத் தரிசிக்க வரிசையில் நின்றார்.

ஆனால் என்ன நடந்தது? வினையைத் தீர்ப்பான் ஏழுமலையான் என்ற எண்ணத்தில் நின்றவனின் வினை உயிர் அல்லவா பறிபோனது!

இதன் பொருள் என்ன? கடவுளா வது கத்திரிக்காயாவது! அது வெறும் கல்லு என்ற நாம் சொல்லி வருவது உண்மை - உண்மையிலும் உண்மை என்பது நிரூபணம் ஆகிவிட்டதா இல்லையா? சில நாட்களுக்குமுன் பூவிருந்த வல்லியிலிருந்து திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்கச் சென்ற அய்ந்து பக்தர்கள் சாலை விபத்தில் பலியானார்களே - அதன் பொருளும் இதுதானே!

இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும்; இவ்வளவும் நடந்ததற்குப் பிறகு - எங்கே கடவுள் பக்தி குன்றிப் போய் விடுமோ என்ற கவலை- கவ லைக்குக் காரணம் பக்தி பறி போனால் அதை வைத்துப் பிழைக்கும் ஒரு சுரண்டல் கூட்டத்தின் வயிற் றிலடித்த கதையாக முடிந்து விடுமே!

உடனே என்ன செய்கிறார்கள்? கோயில் முன் பகுதியில் மரணம் ஏற்பட்டு விட்டதாம். அதற்காகப் பரிகாரப் பூசையில் ஈடுபட்டார்களாம் - தோஷங்கள் கழித்தார்களாம் - சடங்குகளைச் செய்தார்களாம் - அங்கே அர்ச்சகர்களும், பண்டிதர் களும் இருந்தார்களாம்.

இதன் பொருள் - கோயிலைச் சுற்றி எது நடந்தாலும், பக்தியின் பெயரால் எது நடந்தாலும், அது க்ஷீரணத் தோரண பூர்ண கும்பாபி ஷேகமாக இருந்தாலும், இதுபோல பக்தர்கள் மரணம் அடைந்தாலும் - எப்படியும் அதன் ஒட்டு மொத்த நிகர லாபம் என்பது பார்ப்பனர்களுக்கு இலாபகரமாக அமைந்து விடுவதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

கோயில் என்பது சுரண்டல் கேந்திரம் என்று சுயமரியாதை இயக்கம் சொன்னது - திராவிடர் கழகம் இன்று சொல்லி வருவது எத்தகைய உண்மை என்பதைப் பார்ப்பனரல்லாத பக்தர்களே அறிந்து கொள்வீர்!

தந்தை பெரியாரின் முத்திரையடி

கடவுளும், மதமும் கெட்டாக வேண்டுமானால் பார்ப்பான் கெட்டாக வேண்டும். (இல்லாமல் போக வேண்டும்) அவன் கெட்ட இடம்தான் கடவுள், மதம் கெட்ட இடமாகும்.

- தந்தை பெரியார் (விடுதலை 24.4.1967)

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/e-paper/72363.html#ixzz2o1aRl865

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


பார்ப்பனீயம்!

செய்தி: கால்பந்து தர வரிசையில் உலகில் 154ஆம் இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

சிந்தனை: விளையாட்டுத்துறையில் புகுந்த பார்ப்பனீய சிந்தனையால் கிரிக்கெட் உயர்ந்து, உண்மை உழைப்புத் திறன் விளையாட்டான கால்பந்து, ஹாக்கிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன.

Read more: http://viduthalai.in/e-paper/72361.html#ixzz2o1b0UY1k

தமிழ் ஓவியா said...


இதோ ஒரு வீடணன்


இலங்கையில் தான் இராவணனும் பிறந்தான் - உடன் பிறந்தே கொல்லும் வீடண னும் அங்குதான் பிறந்தான்.

இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவது தான் - என்றாரே தந்தை பெரியார் (பெரியார் 90ஆவது பிறந்த நாள் விடுதலை மலர் 17.9.1969).

விபீஷணன் பிறந்த அந்த இலங்கையிலேதான் முத்தையா முரளிதரன் என்ற கிரிக்கெட் விளையாட்டுக் காரரும் பிறந்துள்ளார்; தமிழன்தான் - சென்னை தான் அவர் மாமனார் - மாமியார் வீடும் கூட!

வாயைத் திறக்காமல் - இருந்தாலாவது அவரைப் பற்றிக் கொஞ்சம் மரியாதை மிஞ்சி இருக்கும். வாயைத் திறந்து தன் விபீஷணப் புத்தியையல்லவா தனக்குத் தானே அம்பலப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

முப்பது தாய்மார்கள் தங்களது பிள்ளைகளைக் காணவில்லை என அழுது புலம்பிப் போராட்டம் நடத்துவ தனால் குற்றச்சாட்டுகள் உண்மையாகி விடாது. இந்த மக்களும் பிழையாக வழி நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறியுள்ளார் (குமுதம் 4.12.2013).

இலங்கைத் தீவில் தமிழினத்து இளைஞர்கள் காணாமற் போனது குறித்து விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் என்று அய்.நா. வரை கோரிக்கை சென் றுள்ளது.

இலங்கை அரசு தமக்குத் தானே நிரூபித்துக் கொண்ட எல்.எல்.ஆர்.சி. என்ற அமைப் புக்கூட காணாமற் போன வர்கள் தொடர்பான விசா ரணைகளுக்குப் பரிந்துரை செய்துள்ள நிலையில், தமி ழனாகப் பிறந்த முத்தையா முரளிதரன் ராஜபக்சே மொழியில் பேசுகிறார்.

எந்த அளவுக்குச் சென் றுள்ளார் இந்த முரளிதரன் தெரியுமா? 30 வருடப் பிரச் சினையை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்த ராஜபக்ஷேவுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போராளிகளை காட்டிக் கொடுத்த கருணா ராஜ பக்சே அமைச்சரவையில் அமைச்சராகவே ஆகி விட்டார். முத்தையா முரளி தரனுக்கும்கூட ஏதாவது முடிசூட்டு விழா விரைவில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாம்.

அண்ணனைக் காட்டிக் கொடுத்த காரணத்தால் தானே சாதாரண விபீஷண னுக்கு ஆழ்வார் பட்டம் கிடைத்தது; நாட்டை ஆளும் ஆட்சிப் பொறுப்பும் கிடைத்தது.

முத்தையா முரளிதரனை நோக்கி ஒரு கேள்வி உள் ளது. இலங்கைக் கிரிக்கெட் அணியில் விளையாடி சுழற் பந்துவீச்சில் உலக சாதனையை நிகழ்த்தியவர் தானே அவர்?

இலங்கை அணி பலமுறை வெற்றி பெற் றதற்குக் காரணமாக இருந்தவர்கூட!

இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த விளை யாட்டு வீரர்தானே!

குறைந்த பட்சம் அந்த அணியின் துணைத் தலைவராகவாவது (Vice Captain) நியமிக்கப் பட்டாரா?

ஏன் நியமிக்கப்பட வில்லை? சிந்தித்துப் பார்த் தால் அவர் தோளில் தூக்கி வைத்துக் கொள்ளும் ராஜபக்சேவின் இனவெறிக் கண்ணோட்டம் தெரிய வரும்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72359.html#ixzz2o1bKifh5

தமிழ் ஓவியா said...


சட்டம் குறட்டை விடுகிறதா?


கோயில்கட்டபொதுப்பணித்துறை ஆலோசனைக்கூட்டமாம்

இதோ ஆதாரம் பாரீர்!

பட்டுக்கோட்டை, டிச.20- அரசுத் துறை வளாகங்களில் எந்த மத சம்பந்தமான கோயில் களுக்கும் அனுமதி யில்லை என்று தெளி வான அரசாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் பட்டுக்கோட்டையில் பொதுப் பணித்துறை வளாகத்தில் உள்ள கோயில் புதுப்பித்தல் மற்றும் குடமுழுக்கு நடைபெற துறை அதி காரிகள் கூட்டம் நடை பெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது அரசு அதிகாரிகளே அரசா ணையை மீறிய செய லாகும்.

இது தொடர்பாக அறிவிப்பும் அதை நிறுத்த எழுதிய விவரங்கள் வரு மாறு:

அறிவிப்பு:

அன்புடையீர்,

வணக்கம். நமது பொதுப்பணித்துறை வளாகத்தில் அமைந் துள்ள சிறீகற்பக விநாய கர் ஆலய கும்பாபிஷே கம் 2015ஆம் ஆண்டு நடைபெற வேண்டி உள் ளதால் கோவில் புதுப் பித்தல் தொடர்பாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆலோ சனைக் கூட்டம் எதிர் வரும் 19.07.2013 வெள் ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பொதுப் பணித் துறை வளாகத் தில் உள்ள விவசாயிகள் கூட்ட அரங்கில் நடை பெறவள்ளது. அது சமயம் அனைத்துப் பொறியாளர்களும், அலுவலர்களும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க கேட்டுக் கொள் கிறோம்.

இப்படிக்கு,
கோவில் நிர்வாகிகள்
சிறீ கற்பக விநாயகர் ஆலயம், பட்டுக்கோட்டை

கழகத்தின் சார்பில் கடிதம்

பட்டுக்கோட்டை திராவிடர் கழக நகர தலைவர் அ. காளிதாசன் 19.12.2013 அன்று பட்டுக் கோட்டை செயற்பொறி யாளர் அவர்களுக்கு எழுதிய கடிதம் விவரம்:

தஞ்சாவூர் மாவட் டம், பட்டுக்கோட்டை வட்டம், நகரம் பொதுப் பணித் துறை அலுவலக வளாகத்தில் கல்லணை கால்வாய் உபகோட்டம் பிரிவு -2 அலுவலகம் அருகில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் பொதுப்பணித்துறை யினரால் குறிப்பாக கல் லணை கால்வாய் உப கோட்டம் - 2 அலுவலக ஊழியர்களால் பிள்ளை யார் கோவில் கட்டப் பட்டு வருகிறது. அரசுக் குச் சொந்தமான நிலத் தில் எந்த மத சின்னங் களும், கோயில்களும், வழிபாட்டுத் தளங் களும் கட்டக் கூடாது என்று அரசு ஆணையும், நீதிமன்ற உத்தரவும் இருந்த போதிலும் தற் போது சட்டத்தை மீறி மேற்கண்டவாறு பிள்ளை யார் கோவில் கட்டி வருவது சட்ட விரோத மாகும். இதனால் மதக் கலவரங்களும், ஜாதியப் பிரச்சினையும், பொது மக்களுக்கு இடையூறும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகவே அய்யா அவர் கள், பொதுப்பணித் துறை அலுவலக வளா கத்தில் கட்டப்பட்டு வரும் பிள்ளையார் கோயில் கட்டுமானப் பணியை உடனடியாக தடுத்து நிறுத்தியும் கட்டப்பட்ட அஸ்திவா ரத்தை அப்புறப்படுத்தி யும், சட்டத்திற்குப் புறம் பாக கோயில் கட்ட காரணமாக இருந்த பொதுப் பணித்துறை யினர்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இதன் நகல்

தமிழக முதலமைச்ச ரின் தனிப் பிரிவு, தஞ்சை மாவட்ட ஆட்சியர், தலைமைப் பொறியா ளர், பொதுப்பணித் துறை ஆகியோருக்கு அனுப்பப்பட்டது.

காவல் நிலையத்தில் யாகமா? ஆய்வாளர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் காவல் நிலையத்தில் அந்த சரகத்தில் சமீப காலமாக கொலை கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் அதி கரித்து விட்டன என் றும் அதற்குக் காரணம் கெட்ட ஆவிகளின் நடமாட்டம் தான் என் றும் அந்த ஆவிகளை விரட்ட யாகம் ஒன்று காவல் நிலைய ஆய் வாளர் தலைமையில் நடைபெற்றதாக தின கரன் நாளிதழில் 15.11.2013 அன்று புகைப்படத் துடன் செய்தி வெளி யிடப்பட்டிருந்தது. இந்த செயல் அரசி யல் சட்டத்துக்கு முர ணானது என்றும் தமி ழக அரசு மற்றும் மத் திய அரசின் ஆணை களை மீறிய செயல் என்றும், ஏற்கெனவே மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இரண்டு நீதி பதிகளைக் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப் புக்கு முரணானது என் றும் மேற்படி ஆய்வா ளர்மீது தக்க நடவ டிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பணி நிறைவு பெற்ற நீதிபதியும், திராவிடர் கழக சட்டத்துறை துணைத்தலைவருமான பொ.நடராசன் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேற்படி வழக்கு 19.12.2013 அன்று நீதியர சர்கள் திரு. ஆர். சுதா கரன் மற்றும் திரு. வைத் தியநாதன் ஆகியோர் களைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப் பில் வழக்கறிஞர்கள் ந.தமிழ்மணி, மற்றும் ந. இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இரு தரப்பு வாதங் களைக் கேட்ட நீதியரசர் கள் காவல் நிலையத்தில் யாகம் நடத்திய காவல் ஆய்வாளர் மாரிமுத்து அவர்களை வருகிற 06.01.2014 அன்று உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72360.html#ixzz2o1bs8aWm

தமிழ் ஓவியா said...


மனிதத் தன்மை

மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும். - (விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/72354.html#ixzz2o1cSunMA

தமிழ் ஓவியா said...


டிசம்பர் 24 - திரள்வீர்!



உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி -தன்னிடம் பயிற்சியாளராக வந்த பெண் வழக்குரைஞரிடம் நடந்து கொண்ட கேவலமான போக்கு நாற்றமெடுத்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமைத்த மூவர் பேர்கள் கொண்ட குழுவும் விசாரணை நடத்தி குற்றச்சாற்றில் உண்மை இருக்கிறது என்று கூறி விட்டது. கங்குலி ஓய்வு பெற்று விட்டதால் நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றமோ கையை விரித்து விட்டது.

சரி, அது போகட்டும்; மேற்கு வங்க அரசு என்ன செய்திருக்க வேண்டும்? வழக்கைப் பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட வேண்டாமா?
மேற்கு வங்க முதல் அமைச்சரின் கடமை வெறும் கண்டனத்தோடு நின்று விட்டால் போதுமா? அவர் அதிகாரத்தின் கீழ் தானே அம்மாநிலக் காவல்துறை இருக்கிறது?

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும்கூட பொதுவாக அவாளுக்கே உரிய குணத்தோடு - இறுமாப்போடு நடந்து கொள்வதைக் கவனிக்க வேண்டும்.

மேற்கு வங்க மாநில மனித உரிமைக் குழுவின் தலைவராக இருக்கும் அவர் அந்தப் பதவியிலி ருந்து தார்மீக ரீதியாக விலகி இருக்க வேண் டாமா? முதல் அமைச்சர் விலகுமாறு கோரிக்கை வைத்தும் பதவி விலக முடியாது! என்று கண்டிப் பாகக் கூறி மார்க்கண்டயர் போல பதவி நாற் காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள் ளாரே - இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புத்தி என்பது!

இதில் ஒரு வெட்கக்கேடு - முன்னால் மக்களவைத் தலைவரும் மார்க்சியவாதியுமான சோம்நாத் சட்டர்ஜி ஏ.கே. கங்குலிக்கு வக்காலத்து வாங்குவதுதான்.

குற்றம் சுமத்தப்பட்டதாலேயே கங்குலி விலக வேண்டுமா? அப்படி விலகினால், குற்றத்தை ஒப்புக் கொண்டதாகி விடுமே என்று வக்காலத்து வாங்குகிறார். அவரா பேசுகிறார்? அவரின் பூணூல் பாசம்அவ்வாறு பேசச் செய்கிறது. தனது பேரனுக்கே அச்சுப் போட்டு அழைப்பிதழ் அடித்து, பூணூல் கல்யாணத்தை சாங்கோ பாங்கமாக நடத்தியவர் ஆயிற்றே! அவர் அப்படித்தான் நடந்து கொள்வார்.

2ஜி வழக்கில்கூட ஆ. ராஜாமீது குற்றப் பத்திரிக்கைதான் தாக்கல் செய்யப்பட்டது.

அவர்மீதான வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்படவில்லையே! அப்படி இருக்கும்போது இன்னும் ராஜா எப்படி அமைச்சராக நீடிக்கலாம்? என்ற கேள்வியை எழுப்பியவர் அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த இதே ஏ.கே.கங்குலிதான்.
இவர்கள் மனு தர்மச் சிந்தனையாளர்கள் ஆயிற்றே! ஒரு குலத்துக்கொரு நீதி என்ற மனப்பான்மை அவர்களின் குருதியிலேயே குடிகொண்டதாயிற்றே! அதனால்தான் ராஜாவுக்கு ஒரு நீதி - கங்குலிக்கு இன்னொரு நீதி.

ஆந்திர மாநிலத்தில் ஆளுநராக இருந்த என்.டி. திவாரி (87) என்ற பார்ப்பனரும் ஆளுநர் மாளி கையிலேயே கிருஷ்ண லீலைகளை நடத்தினார். பிரச்சினை பூகம்பமாக வெடித்துக் கிளம்பியது; அப்பொழுதுகூட தானாக முன் வந்து பதவி விலகவில்லை.

அழுத்தம் கொடுக்கப்பட்டதற்குப் பிறகுதான் அந்தப் பதவி நாற்காலியை விட்டு எழுந்திருந்தார்.

சட்டப்படி மேலும் நடவடிக்கைகளை எடுத் திருக்க வேண்டாமா!

இவ்வளவு நடந்திருந்தும் பார்ப்பன ஊடகங்கள் கங்குலி பிரச்சினையில் கமுக்கமாகவே நடந்து கொண்டு வருகின்றன. நிகழ்கால நடவடிக்கை களை அந்தந்த வாரமே அலசும் துக்ளக் இதழில், கங்குலி பற்றிய ஒரு நிகழ்வே நடந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

கொலை வழக்கில் சிக்கிய சங்கராச்சாரியார் பிரச்சினையில் பார்ப்பன ஏடுகள் எப்படி நடந்து கொண்டன என்பதைத் தெரிந்து கொண்டால் இந்த 2013ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்கள் பூணூல் பாசத்தோடும், நோக்கத்தோடும்தான் நடந்து கொள்கிறார்கள் என்பதை எளிதில் அறியலாம்.

இந்த உண்மைகள் எல்லாம் ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் பிசிறு இன்றித் துல்லிய மாகப் புலப்படும்; பாலியல் குற்றத்தில் சிக்கியுள்ள ஏ.கே.. கங்குலிமீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 24ஆம் தேதி தந்தை பெரியார் நினைவு நாளன்று காலை 11 மணிக்கு சென்னை விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திரள்வீர்! திரள்வீர்!!

Read more: http://viduthalai.in/page-2/72355.html#ixzz2o1cbwLrR

தமிழ் ஓவியா said...


பிஜேபியோடு கூட்டணியா?: பத்திரிகை செய்திகளுக்கு கலைஞர் மறுப்பு


சென்னை, டிச.20- தேர்தல் கூட்டணி தொடர்பாக தி.மு.க. பற்றி தவறான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் மறுப்பு தெரிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:-

தி.மு.கழகப் பொதுக்குழுவில் தீர்மானங்களை நிறைவேற்றி விட்டு, இறுதியாக நான் உரையாற்றும் போது, முக்கியமாக காங்கிரஸ் கட்சியுடனும், பா.ஜ.க. வுடனும் தி.மு. கழகம் கூட்டணி கிடையாது என்று நான் வெளிப்படையாகப் பேசி, அந்தப் பேச்சினைப் பத்திரிகைகளுக்கும் கொடுத்த பிறகு, மோடியின் ஆதரவாளர்களாகவோ, அல்லது காங்கிரஸ் கட்சியின் அனுதாபிகளாகவோ உள்ள ஒரு சிலர் வேண்டுமென்றே என்னுடைய அந்தக் கருத்தைத் திரித்து, நான் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்ததைப் போலப் பேசி வருகிறார்கள்.

ஒரு சில ஏடுகள் அந்தக் கருத்தோடு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவர்கள் அவ்வாறு ஒருதலைப்பட்சமாக செய்திகளைப் பரப்புவது ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் என்னை மிகவும் வருந்தச் செய்வதாகும். ஏன் கண்டிக்கத்தக்க செயலும் ஆகும். எனவே பத்திரிகை யாளர்கள் கழகப் பொதுக்குழுவிலே நான் பேசிய கருத்தினை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தங் களுக்குச் சாதகமாகவோ, கழகத்தின் நிலைப் பாடுகளுக்கு பாதகமாகவோ செய்திகளை வெளியிடுவதையும், பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Read more: http://viduthalai.in/page-2/72369.html#ixzz2o1dFoVYR

தமிழ் ஓவியா said...


நீரிழிவு நோய்க்கு இன்சுலின் மாத்திரைகள் கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்



லண்டன், டிச. 20-இந்தி யாவின் மிகப்பெரிய மருத்துவ சவால்களுள் ஒன்றாக நீரிழிவு நோய் இருந்து வருகின்றது. வரும் 2030ஆம் ஆண்டிற்குள் இந்தி யாவின் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டக்கூடும் என்று கணக் கிடப்பட்டுள்ளது. இது முன்னர் கணக்கிடப்பட்ட 87 மில்லியன் என்பதைவிட அதிகமாகும். டைப்-1 என்ற வகை நோய்க்குறைபாடு, உடலில் தேவையான இன்சுலின் சுரக்காதபோது ஏற்படும் ஒன்றாகும். உடலில் உள்ள இன்சுலின் ரத்தத்தில் உள்ள குளுகோசைக் கரைக்கா விடில் டைப்-2 எனப்படும் நோய்த் தாக்கம் தோன்றும். இது கடுமை யான பிரச்சினைகளை உருவாக் கக்கூடியதாகும்.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண் டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட இன்சுலின் மருந்து இந்த நோய் கண்ட ஏராளமான மக்களுக்கு உயிர் காக்கும் மருந்தாகப் பயன் பட்டு வருகின்றது. ஆயினும், இந்த மருந்தை தினமும் ஊசி மூலம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் வலி தராத மாத்திரை வடிவத்தில் இந்த மருந்தினைப் பெற மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயன்று வந்தனர்.

1930 ஆம் ஆண்டிலிருந்து ஆய்வில் இருக்கும் இந்த முயற்சி யில் தற்போது இந்திய விஞ் ஞானிகள் வெற்றி பெற்றுள்ள விபரம் அமெரிக்கன் கெமிகல் சொ சைட்டி இதழில் வெளிவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு நிரூபிக்கப் பட்டு பயன்பாட்டுக்கு வருமேயா னால் பாதுகாப்பற்ற ஊசிகளால் ஏற்படும் பின்விளைவுகளில் இருந் தும், தினமும் ஊசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் வலிகளி லிருந்தும் நீரிழிவு நோயாளிகள் நிவாரணம் பெறமுடியும்.

மாத்திரை வடிவில் பெறப்படும் இன்சுலின் மருந்துகள் நீரிழிவு நோயாளிகளின் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இன்னும் அதிக அளவிலான பரி சோதனைகள் இந்த கண்டுபிடிப் பில் தேவைப்படும்போதும் இந்த மாத்திரைகள் பயன்பாட்டிற்கு வரும் காலத்தை எதிர்நோக்குவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த நீரிழிவு நோய் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லிப்பி டோவ்லிங் தெரிவிக்கின்றார்

Read more: http://viduthalai.in/page-2/72370.html#ixzz2o1dOrDDF

தமிழ் ஓவியா said...


சிரிக்க... சிந்திக்க!


ஆஸ்திகன்: (மகனை நோக்கி) ஏய் தம்பி, நரசிம்மா! கொல்லைக் கதவைத் தாளிட்டியா? குறுக்குத் தாழ்ப் பாளைப் பார்த்தியா? தெருக்கதவைத் தாளிட்டியா? ஜன்னலை ஒழுங்காக மூடுனியா? சாவிக் கொத்தை தலைகாணிக்கு அடியில் ஜாக்ரதையா வைச்சிட்டுயா? ஏன் னா ஊரெல்லாம் ஒரே திருட்டுப் பயம்!

மகன்: என்னப்பா இப்படி பயப்படுறேள்? நம்ப ஜாக்ரதையிலே என்ன இருக்கு? எல்லாம் எமை ஆளும் ஈசன் செயல்! என்னதான் பாதுகாத்தாலும், எப்படியும் போறது போவத்தான் செய்யும்! நீங்கள் அடிக்கடி சொல்ற மாதிரி...

ஆஸ்திகன்: ஊம் வாயை மூடு! என் பிரசங்கத்தை என்னிடமே காட்டுறியா? அதிகப் பிரசங்கி! அதெல் லாம் முட்டாப் பசங்களுக்குச் சொல்றப் பேச்சு! கதவைத் திறந்து போட்டுண்டு, எல்லாம் கடவுள் செயலுன்னு தூங்குற ஒரு பக்தனைக் காட்டு என்னிடம். பைத்தியக் காரா! கடவுளுக்கே பூட்டும் சாவியும் வேண்டி இருக் குடா - அதுவும் பூசணிக்காய்ப் பெரிசுலே!

@@@@@@@@@@@@

காவலர்: திருடினதுதான் திருடினாய், சாமி நகையைத் திருடலாமா?

திருடன்: பற்றற்றவனாயிற்றே பகவான்! அவனுக்கு எதற்கு இந்த நகை என்று திருடிவிட்டேன்.

காவலர்: பகவான் நகையை உன் மனைவி கழுத்தில் சூட்டலாமோ?

திருடன்: பற்றுள்ளவளாயிற்றே அவள். பற்றற்ற திலிருந்து கிளம்பி பற்றை நோக்கிச் செல்வதுதானே ஆத்மார்த்தம்!

@@@@@@@@@@@@

புலி: கடவுளே! உன் கருணையே கருணை! என்னையும் படைத்து, இந்த ஆட்டையும் படைத்தாயே! இல்லாட்டிப் போனா என் வயிறு என்னாவறது? ஈசனே, உன்னைப் போற்றுகிறேன்; உன் புத்தியை மெச்சு கிறேன்!

ஆடு: நாசமாய்ப் போன கடவுளே! உனக்குக் கண்ணில்லையா? கருத்தில்லையா? என்னைத்தான் படைத்தாய்; இந்தப் பாழாய்ப் போன புலியையும் ஏன் படைத்தாய்? உன்னை போயும் போயும் கருணாமூர்த்தி என்கிறார்களே - இந்தக் கபோதிகள்! வெட்கக்கேடு! அசல் வெட்கக்கேடு!!

Read more: http://viduthalai.in/page-7/72348.html#ixzz2o1dsvFqs

தமிழ் ஓவியா said...


கடவுளுக்கு ஏது முகவரி?

- சிவகாசி மணியம்

வரும் ஆனா வராது என்ற ரெண்டும் கெட்டான் வசனத்தைக் கேட்டுச் சிரித்தவர்கள் உண்டு. ஒரு திரைப்படத்தில் நகைச்சுவைக்கென சொல்லப்பட்டது. பத்திரிகைகளிலும் இதுபோன்ற சொல்லாடல்கள் அவ்வப்போது இடம் பெறுவதுண்டு.

கடவுள் இருக்கிறாரா? என்பது கேள்வி. பெரியார் மொழியில் சொல்வதானால் இல்லவே இல்லை என்பதுதான் சரியான பதிலாக இருக்க முடியும். ஆனால் குமுதம் அரசு (18.12.2013) இருக்கிறார். ஆனால் முகவரி இல்லை என்கிறார்.

சிரிப்பவர்களுக்கு வேலை இருக்கலாம். சிந்திப்பவர்களுக்கு? அண்ட சராசரங்களையும் ஆட்டிப் படைப்பதாகச் சொல்லப்படும் ஆண்டவனுக்கா அட்ரஸ் இல்லை? அறிவுக்கும், உண்மைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? வெட்டு ஒன்று. துண்டு இரண்டு! இதுதான் பகுத்தறிவு, படித்தவரின் எதிர்பார்ப்பு!

இல்லை என்பான் யாரடா? தில்லையிலே வந்து பாரடா? என்று பாடியவர்கள் இப்போது இல்லை. ஆனாலும் அதில் கடவுளின் முகவரி இருக்கிறதே.

நடராஜப் பெருமான், காலைத் தூக்கி நின்றாடும் தெய்வம், சிதம் பரம், கடலூர் மாவட்டம் சரிதானே! இதோ இன்னொரு கடவுளின் முகவரி: மணிகண்டன் என்ற அய் யப்பன் தாய் தந்தை பெயர் விஷ்ணு, சிவன், சபரிமலை, கேரள மாநிலம். இதுபோல வெங்கடாசலபதி, பணத்தை வாரி வழங்கும் கடவுள், திருப்பதி, ஆந்திர மாநிலம்! மீனாட்சி க/பெ சொக்கன், மதுரை. முருகன் என்ற ஆண்டி, பழனி. இப்படி சொல்லிக் கொண்டே போகலாமே.

தூணிலும் இருப்பான், துரும் பிலும் இருப்பானாமே, அப்படி யானால் மிஸ்டர் கடவுள், இருப்புத் தூண் அல்லது துரும்பு என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப லாமே? கைலாயமும், வைகுண்டமும் கடவுள்கள் குடியிருப்பு என்பதை மறக்கலாமா! கோகுலமும், துவார கையும், பிருந்தாவனமும், யமுனை ஆற்றங்கரையும் குழலூதும் கண்ணன் வளையவரும் இடமா யிற்றே! திருப்பாற் கடலில் பள்ளி கொண்ட சிறீமன் நாராயணனும் முகவரி இல்லாதவன் தானா? பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே என்கிறார்களே அதுகூட பித்தலாட்டம்தானா? பரலோக சாம்ராஜ்யம் என்பதெல்லாம் தேவர்கள் நடமாட்டமில்லாத வெறும் பாலைவனம்தானா?

கண்ணீர் அஞ்சலி சுவரொட் டிகளில் இறைவனடி சேர்ந்தார் என்று எழுதுகிறார்களே அவர்க ளெல்லாம் அட்ரஸ் இல்லாதவன் காலடியிலா அடைக்கலம் ஆகிறார்கள்?

வருத்தப்பட்டு பாரம் சுமக்கிற வர்களே. என்னிடத்தில் வாருங்கள். எல்லோருக்கும் இளைப்பாறுதல் தருகிறேன் என்ற கர்த்தர் அழைப்பை ஏற்று அவரிடத்தில் போகிறவர்கள், அட்ரஸ் இல்லாத இலக்கை நோக்கியா இன்று வரை போய்க் கொண்டிருக்கிறார்கள்? கண் மூடிப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிப் போன பக்தர்களை விட்டு விடுவோம்.

வரிசையில் நின்று, காத்துக் கிடந்து வாக்களித்து தேர்ந்தெடுக்கும் மக்கள். அவசியம் ஏற்படும் போது அரசு அலுவலகப் படிக்கட்டுகளில் ஏறினால், அடையாள அட்டை எடு, ஆதார் அட்டை காட்டு, குடும்ப அட்டை எங்கே என்றெல்லாம் கேட்கும் ஆட்சி அதிகாரத்திலுள்ள வர்கள் முகவரியே இல்லாத கடவுளை மட்டும் சந்தேகத்திற்கிட மின்றி நம்பிக் கிடக்கிறார்களே அது எப்படி? முகவரி இல்லாதவன் இருந்தென்ன இல்லாமல் போனால்தான் என்ன?

Read more: http://viduthalai.in/page2/72380.html#ixzz2o6qT3mHF

தமிழ் ஓவியா said...


குறும்பா

இயற்கை..
இறைவன்
ஆனது...!

கல்லு...
கடவுளானது!

மாண்டவன்
ஆண்டவன்
ஆனான்...!

அனைத்தும்
ஒன்றே...!

இறுதியில்
எல்லாமே
பூஜியம்!!!

######

நிரூபணம்!

தமக்கு 95 வயது வரை பெரியார் கடவுளைத் திட்டினாரே...!

கடவுள் ஏன் கோபித்துக் கொள்ளவேயில்லை...?

அவர் இல்லை என்பதை நிரூபித்து விட்டார்!

- கோ. கலியபெருமாள், மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page2/72381.html#ixzz2o6qeSTbP

தமிழ் ஓவியா said...


மகாத்மாவைப்பற்றி தமிழ்நாடுவின் கவலை


மகாத்மாவைப்பற்றி தமிழ்நாடுவின் கவலை

தமிழ்நாடு பத்திரிகையானது 16-12-1927ஆம் தேதி உபதலையங்கத்தில் கண்ணோட்டம் என்னும் தலைப்பின் கீழ் ஒரு வியாசம் எழுதி இருக்கின்றது. அதில் ஸ்ரீமான் காந்தி அவர்களை மகாத்மா என்று சொல்லாமல், வெறும் காந்தி என்று சொல்வதால் தனக்குப் பெரிய கவலை ஏற்பட்டு விட்டதாகக் காட்ட வெளிவந்து, உலகம் போற்றும் உத்தமர்களில் மகாத்மா காந்தி ஒருவர் என்றும், அதை மறுப்பவர் ஒன்று இழி குணம்படைத்தவராக இருக்கவேண்டும் அல்லது மதியற்றவர்களாக இருக்கவேண்டும் என்றும் எழுதி யிருக்கிறது.

மகாத்மா காந்தி என்பவரை ஸ்ரீமான் காந்தி என்று சொல்வதால் இழிகுணப் பட்டமும், மதியற்ற பட்டமும் வந்தாலும் வரட்டும் நமக்கு அதைப்பற்றிக் கவலை யில்லை.
ஸ்ரீமான் காந்தி என்றைய தினம் மக்களுக்குள் வருணம் நான்கு உண்டு. அதுவும் அவைகள் பிறவியில் ஏற்படுகின்றன. அந்தந்த வருணத்தானுக்கும் ஒவ்வொரு தர்மம் உண்டு. அதைத்தான் அவனவன் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார் என்பதாக நாம் உணர்ந்தோமோ, அன்றே அவரிடம் மகாத்மா தன்மை அங்கு இல்லையென்று தீர்மானித்துவிட்டோம். அதிலும் சூத்திரன் என்பவன் அடுத்த ஜென்மத்தில், தான் பிராமணனாய் பிறக்கலாம் என்கின்ற அவருடைய தீர்ப்பு சுத்தசுத்தமாய் நம்மை மாற்றியது. மகாத்மா பட்டம் ஒருவரின் அபிப்பிராயத்தையும், நடவடிக்கை யையும் பொருத்துத்தான் வழங்கப்படுவதே தவிர, வெறும் உருவத்திற்காக வழங்கப்படுவதல்ல என்பதை உணர்ந்தவர்களுக்கு இவ்விஷயத்தில் கவலை ஏற்பட நியாயமில்லை. மகாத்மா என்கின்ற பட்டத்தை நீக்கி நாம் எழுத ஆரம்பித்து இன்றைக்கு சுமார் இரண்டு மாதம் ஆகின்றது. இதுவரையும் சகித்துக் கொண்டிருந்த தமிழ் நாட்டிற்கு இந்த வாரம் திடீரென்று கவலை தோன்றி நமது, இழிகுணத்தையும் மகிமையையும் கண்டு பிடித்து எழுதியிருப்பதற்கு இரகசியமான காரணம் இல்லாமல் போக வில்லை. அதைத் தக்க சமயம் வெளியிடுவோம்.

ஒவ்வொரு பட்டமும் அவரவர்கள் அபிப்பிராயத் தாலோ, நடவடிக்கைகளாலோ ஏற்படுவதும், அவைகள் மாறும்போது மறைபடுவதும் வழக்கமாகவே இருந்து வந்திருக்கின்றது. மற்றும் சிலருக்குப் பட்டம் மக்களின் அறியாமையினால் ஏற்படுவதும், விஷயம் தெரிந்த உடன் மறைந்துபோவதும் வழக்கமாக இருக்கின்றது. இது வரையில் எத்தனை பேர்கள் தலைவர்களாகி மறுபடியும் நினைப்பதற்கே அருகற்றவர்களாய்ப் போயிருக் கின்றார்கள் என்பதை யோசித்துப் பார்த்திருந்தால் தமிழ்நாடுவுக்கு இவ்விஷயத்தில் இவ்வளவு கவலை ஏற்பட்டிருக்க நியாயமே இருந்திருக்காது.

தவிர, கடவுளின் அவதாரமாகவும், மகான் தோன்றின தாகச் சொல்லப்பட்ட கிருஷ்ணன் என்பவன் கடைசி காலத்தில் ஒரு காட்டில் ஒரு வேடனால் கொல்லப்பட்டு அழுவாரற்றுச் செத்து நாறிக்கிடந்ததாக வுள்ள விஷயங்களை அறிந்திருந்தால், இம்மாதிரி காரியத்திற் காக ஒருவரை இழிகுணம் என்றும், மதியீனம் என்றும் எழுத நியாயம் கிடைத்திருக்காது என்போம். ஆனாலும், நம்முடைய இந்த சமாதானமெல்லாம் தமிழ்நாடு பத்திரிகைக்கல்ல. ஏனெனில், அது பழைய குப்பையைத் தேடிப் பார்த்து குற்றங்கள் கண்டுபிடிக்கின்ற வேலையில் முனைந்து இருக்கின்றது. ஆதலால், அதற்கு இச்சமாதானங்கள் ஒரு உணர்ச்சியையும் கொடுக்காது என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதைக் கண்ணுற்றவர்கள் ஏமாறாதிருக்கவே இதை எழுதுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 25.12.1927

Read more: http://viduthalai.in/page-7/72426.html#ixzz2oA1z7wU7

தமிழ் ஓவியா said...

காங்கிரஸ் துவேஷமாம்!

சென்னை கார்ப்பரேஷன்காரர் காங்கிரஸ் பொருட்காட்சிக்கு ரூபாய் கொடுக்கக்கூடாதென்று ஜஸ்டிஸ் கட்சியார் ஆட்சேபித்ததற்காக அவர்களை காங்கிரஸ் துவேஷிகள் என்று பார்ப்பனப் பத்திரிகைகள் விஷமப் பிரச்சாரம் செய்கின்றன. காங்கிரஸ் பொருள் காட்சியென்ற பெயர் வைத்துக்கொண்டு, காங்கிரஸ் பெயரால் வெள்ளைக்காரர்கள் பொருள்களைக் காட்சி சாலை வைப்பதாக வெள்ளைக்கார கம்பெனியிடம் ரகசியமாய் ஒப்பந்தம் பேசி லஞ்சம் வாங்கிக் கொண்டு இவர்கள் நடத்தும் பொருட்காட்சிக்குப் பணம் கொடுக்கா விட்டால் அதற்குப் பெயர் காங்கிரஸ் துவேஷம் என்றால் அதற்கு நாம் பயப்படுவதா என்கின்றோம். பட்டாஸ் வெடி விற்றுத்தருவதாகவும், கற்பூரம் விற்றுத்தருவதாகவும் சைனாக்காரரிடம் ஒப்பந்தம் பேசி கூலி வாங்கிக்கொண்டு பண்டிகையும் பூசையும் பார்ப்பனர் ஏற்படுத்தி இருந்தால், பட்டாசு வாங்காதீர்கள் கற்பூரம் கொளுத்தி புகையாக்காதீர்கள், என்று நாம் சொன்னால் அது மததுவேஷமும் சாமி துவேஷமும் ஆகுமா என்று கேட்கின்றோம். இந்தப் பார்ப்பனர்கள் இப்படியே நம்மை மிரட்டி ,மிரட்டி கை கண்டுவிட்டாலும் நம்மில் சில கேனர்களும் வயிற்றுச் சோற்று ஆசாமிகளும் அவர்களுடன் சேர்ந்து திரிவதாலும் பார்ப்பனர் சொல்வதெல்லாம் செலாவணியாகி வருகிறது. இன்னும் அப்படி நடக்கப் பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றீர்களா? சுயமரியாதைக்காக உயிர் விடப்போகிறீர்களா என்று கேட்கின்றோம்.
- குடிஅரசு - கட்டுரை - 11.12.1927

Read more: http://viduthalai.in/page-7/72426.html#ixzz2oA2Ismgw

தமிழ் ஓவியா said...

மனுதர்ம சாஸ்திரம்

சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகு மக்களுக்கு எங்கு பார்த்தாலும் மனிதரின் சுயமரியாதைக்கு விரோதமான ஆதாரங்களை ஒழிப்பதில் கவலையும், ஊக்கமும் அதிகமாகி வருகின்றது. சென்னை, வட ஆற்காடு, சேலம், தஞ்சை, திருநெல்வேலி, மதுரை முதலிய இடங்களில் கூடிய பல மகாநாடுகளில் வர்ணாசிரம தர்மம் என்பதைக் கண்டித்திருப்பதுடன், அதற்கு ஆதாரமான புஸ்தகங்களையும் பகிஷ்கரிக்கத் தீர்மானங்களும் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன. சில மகாநாடுகள் மனுதர்ம சாஸ் திரத்தை நெருப்பில் கொளுத்தி சாம்பலைக் கரைத்தும் வந்திருக்கின்றன.
அரசாங்கமும் சட்டசபை மெம்பர்களும் இதைக் கவனிக்கப் போகிறார்களா என்று தீர்மானிக்க முடியவில்லை. பழைய காலமாயிருந்திருக்குமானால் இம்மாதிரி பெரும்பான்மையான மக்களுக்கேற்பட்டிருக் கும் உணர்ச்சியை மதித்து அரசாங்கமானது வருணா சிரமத்தை அழித்துச் சட்டம் செய்திருக்கும் என்பதோடு வருணாசிரமக் கொள்கைக்காரர்களை கழுவிலேற்றி இருக்கும் என்றுங்கூட சொல்லலாம். ஏனெனில், நிரபராதிகளான 8,000 சமணர்கள் கழுவேற்றப்பட்டதாக சொல்லும் சரித்திரத்தைப் பார்க்கும்போது இவ்வளவு அக்கிரமும், ஜீவகாருண் யமும் அறிவும் அற்ற தன்மையான கொடுமையை சகித்துக் கொண்டிருக்கும் என்றும் யாரும் சொல்ல முடியாது. நமது அரசாங்கங்கள் பழையகால அரசாங்கங் களைப் பின்பற்றிக் கழுவேற்றாவிட்டாலும் சட்டமூலம் கொடுமைகளை ஒழிக்கவாவது உதவவேண்டாமா என்று கேட்கின்றோம். ஒருக்கால் மத விஷயத்தில் தலை யிடமுடியாது என்று சொல்வார்களானால், மத விஷயங் களையாவது கவனித்து மதத்தில் எப்படி சொல்லியிருக் கின்றதோ யார் யாருக்கு என்ன என்ன வேலை இடப்பட்டிருக்கின்றதோ, யார் யாரின் நடத்தை எப்படி இருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருக்கின்றதோ அப்படியாவது நடக்கும்படி பார்க்கவேண்டும். அப்படியும் இல்லாமல் இப்படியுமில்லாமல் பார்ப்பானும் வெள்ளைக்காரனும் மாத்திரம் பிழைக்க என்ன என்ன மாதிரி நடக்க வேண்டுமோ, எப்படி எப்படி சீர்திருத்தம் செய்யவேண்டுமோ அப்படியெல்லாம் சூழ்ச்சிகள் செய்துகொண்டு மதவிஷயத்தில் பிரவேசிக்க மாட்டோம் என்று சொல்வது வடிகட்டின அயோக்கியத்தனமாகு மென்றே சொல்லுவோம்.

இச்சூழ்ச்சிகளைப் பார்க்கும்பொழுது, இது சமயம் மகம்மதிய அரசாங்கத்தில் வாழும் யோக்கியதையாவது நமக்குக் கிடைக்காதா என்று ஆசைப்பட வேண்டிய தாயிருக்கின்றது. காரணமென்னவென்றால், வீரர் கமால்பாட்சா அவர்கள் ஒரு அரச விசாரணைக்கு குரானை ஆதரவாக காட்டியபோது அது அக்காலத்து சங்கதி இக்காலத்திற்கு செல்லாது என்று அதைப் பிடுங்கி வீசி எறிந்தாராம். குரான் வாக்கியம் செதுக்கப் பட்ட இடங்களையெல்லாம் அழித்து சுயமரியாதை யையும், கைத்தொழிலையும் கவனியுங்கள் என்று எழுதிவருகிறாராம். மகம்மதியரைவிட வெள்ளைக் காரருக்கும் பார்ப்பனர்களுக்கும் மத பக்தியிருக்கின்றது என்று சொன்னால் எந்த பைத்தியக்காரராவது நம்பமுடியுமா என்று கேட்கின்றோம்.

எனவே, மதம் என்கிற புரட்டுகளையும், மதாச் சாரியர்கள் என்கின்ற அயோக்கியர்களையும் சாஸ்திரம், வேதம், புராணம் என்பவைகளாகிய அதர்ம அக்கிரம, ஆதாரங்களையும் குருட்டுத்தனமாய் பின்பற்றாமல் அன்பு, ஜீவ காருண்யம், அறிவு, சத்தியம் என்பவைகளை ஆதாரமாய் வைத்து அவற்றிற்கு விரோதமாய் உள்ளவை களையெல்லாம் அடியோடு ஒழிப்பதற்கு முற்பட வேண்டியது தான் பகுத்தறிவுள்ள மனிதனின் கடமை, ஆதலால், அதற்கு ஒவ்வொருவரும் முற்பட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் 04.12.1927

Read more: http://viduthalai.in/page-7/72426.html#ixzz2oA2ObGke

தமிழ் ஓவியா said...

இவர்கள்தான் சாமியார்கள்

கும்பமேளாவில் கூடிய சாதுக்களிடம் காணப்பட்ட பொதுவான அம்சம் யாதெனில் சோறு, தண்ணீர், தூக்கம்கூட இல்லாமல் இருந்து விடுவர். ஆனால், நீள்போதை தரும் கஞ்சாவை புகைக்காமல் இருக்க மாட்டார்கள்.

-தினமலர் 4.3.2013 பக்கம் 16

தமிழ் ஓவியா said...


சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி


மின்சாரம் சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம் கொண்டு வர ஜப்பான் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டதில் புருஷிமா அணுஉலை வெடித்து சிதறியது. அதனால் அங் குள்ள அணுமின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

எனவே, நாட்டின் மின் தேவைக்கு விஞ்ஞானிகள் மாற்று வழியை உருவாக்க முயற்சி செய்கின்றனர். இந்த வகையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தீவிரப்படுத்த உள்ளனர்.

பூமியை பொறுத்தவரை எப்போ தும் சூரிய ஒளி கிடைப்பதில்லை. பகலில் மட்டுமே கிடைக்கிறது. மோசமான தட்ப வெப்பநிலை மேக மூட்டம் இருந்தால் அதையும் முழுமையாக பெற முடியாது.

எனவே, சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர ஜப்பானில் உள்ள ஷிமிஷூ கார்ப்பரேசன் என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியை சுற்றிலும் சோலார் பேனல் தகடுகளை சீராக அமைத்து அதன் மூலம் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர திட்டமிட் டுள்ளது. அதற்கு ஜனாரிங் என பெயரிட்டுள்ளனர்.

இதன் மூலம் 13 ஆயிரம் டெரா வாட் மின்சாரத்தை தயாரித்து பூமிக்கு கொண்டு வர முடியும். ஒரு டெராவாட் என்பது 1 லட்சம் கோடி வாட் ஆகும். இந்த திட்டத்தின் கட்டுமான பணி வருகிற 2035ஆம் ஆண்டில் தொடங் கப்பட உள்ளது.
தொடர்ந்து மின்சாரம் தயாரிக்க சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் 11 ஆயிரம் கி.மீட்டர் பரப்பரளவில் 400 கி.மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே சோலார் மின்கலன்கள் அமைக்கப்பட உள்ளன.

சந்திரனில் சோலார் பேனல் தகடுகள் மற்றும் சோலார் மின் கலன்கள் அமைக்கும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் அமைக்கப்படும் சோலார் பேனல் தகடுகள் கேபிள்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் மைக்ரோவேவ் மற்றும் லேசர் டிரான்ஸ்மிசன் நிலை யங்களில் இணைக்கப்படும். பின்னர் அவை 20 கி.மீட்டர் விட்டமுள்ள ஆண்டனாக்கள் மூலம் பூமிக்கு வரும்.

Read more: http://viduthalai.in/page3/72047.html#ixzz2oA3NtXZv

தமிழ் ஓவியா said...


முதல் திருமணத்தை மறைத்து 2ஆவது திருமணம்


2ஆவது மனைவி ஜீவனாம்சம் பெறத் தகுதியானவரே உச்சநீதிமன்றம் தீர்ப்பு

முதல் திருமணத்தை மறைத்து செய்து கொண்ட இரண்டாவது திருமணம் சட்ட விரோதமானது என்றா லும், கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்காக இந்து திருமணச் சட்டப்படி இரண்டாவது மனைவி யையும் சட்டபூர்வமானவராகவே கருத வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் அளித்திருந்த முந்தைய தீர்ப்பானது, முதல் திருமணம் குறித்த தகவலை மறைத்து செய்து கொண்ட இரண்டாவது திருமணத்திற்கு பொருந்தாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

"இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படா விட்டால் அது மனைவியை ஏமாற்றும் கணவனுக்கு அளிக்கப்படும் சலுகையாக ஆகிவிடும்.

எனவே, ஜீவனாம்சம் பெறுவதற்காகவாவது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-இன்படி (ஜீவனாம்சம்) பாதிக்கப்பட்ட பெண் சட்ட பூர்வமான மனைவியாகவே கருதப்பட வேண்டும்'' என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதவ்-சபிதா பென் வழக்கில், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்புக்கு மாறானதாக மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என்று கூறி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-அய் உறுதியான நோக்கத்திற்காக செயல்படுத்தும் வகையில் இப்படி விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

ஆதவ் ஏற்கெனவே திருமணமானவர் என்பதை முழுமையாகத் தெரிந்து கொண்டு சபிதா பென் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண் டுள்ளார். ஆதலால், இந்து திருமணச் சட்டப்படி அந்த திருமணம் செல் லாது என தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதிகள் விளக்கம் கூறினர்.

- சட்டக்கதிர் - 2013 - டிசம்பர் பக்கம், 59

Read more: http://viduthalai.in/page3/72048.html#ixzz2oA3ZY2WD

தமிழ் ஓவியா said...


மாலையும் மனுதர்மமும்


- மு.வி.சோமசுந்தரம்

கடவுளை மற! மனிதனை நினை! மனித இனம் நசுக்கப்படாமல் இருக்க நலிந்து போகாமல் இருக்க, சுயமரியாதையுடன் வாழ சுயசிந்தனையாளர் தந்தை பெரியார் அவர்கள் காட்டிய நல்வழிதான் மேலே சுட்டிக்காட்டிய அறிவார்ந்த முழக்கம்.

மானுடத்தின் மதிக்கத் தக்கவரான மாதரை மண்புழுவாக மிதிக் கும் மனப்போக்கை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தவர் பகுத் தறிவுப் பகலவன் பெரியார், குரல் கொடுத்ததுடன் அமையாது, பெண் குலம் சீர்குலைத்து போனதற்கான காரணத்தை, நோய் நாடும் சமூக மருத்துவராக 1.1.1942-இல், பெண் ஏன் அடிமையானாள்? என்ற கருத்துக் கருவூலமான புத்தகத்தை நமக்களித்தார் பெரியார்.

பெண்களை அடிமைபடுத்தும் சூத்திரத்தின் (Trick) மூலாதாரம் எங்கே உள்ளது? அதைத்தான் நமது மானமிகு ஆசிரியர் அவர்கள், அந்த புத்தகத்தின் அறிமுக உரையில்:

பெண்களை, சூத்திரர்களான நாலஞ் ஜாதியினரைவிடக் கீழாக மதிக்க வேண்டியவர்கள் என்கின்றது மனுதர்மம்!

எனவே மனுதர்மம் பெண்களை முடமாக்கிய போலியோ வியாதிக் கிருமி.

இந்த புத்தகத்துக்கு முகவுரை எழுதிய தந்தை பெரியார், இந்த புத்த கக் கருத்துகள், இன்றைய நிலையில், எந்த மதத்திற்கும் எந்த தேச மக்களுக்கும், எந்த சமூகத்தாருக்கும் பயன்பட்டாக வேண்டும் என்பதே நமது கருத்தாகும். என்று தம் எண்ணத்தைத் தெளிவுபடுத்துகிறார்.

அய்யா அவர்கள் குறிப்பிட்டுள்ள எந்த தேச மக்களுக்கும், எந்த சமூகத்தாருக்கும் என்று 1942-ஆம் ஆண்டு குறிப்பிட்டுக் கூறியதற்கு நல்லதொரு கண்விரித்து (அறிவுக் கண்) பார்க்கத்தக்க ஒரு விளக்கச் செய்தியைக் கூறுவோம்.

இங்கிலாந்து நாட்டு இளவரசர் பிரின்ஸ் சார்ல்ஸ், அரசி எலிசபத் அய்அய் சார்பில் கொழும்பில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள புறப்பட்டவர், இந்தியா வுக்கும் வந்துள்ளார். அவருடன் அவர் இணையர் கேமில்லா பார்க் கர் பவல்ஸ் அவர்களும் வந்துள் ளார்கள். சுற்றுலா பயணிகளாக இந்தியாவின் வரலாற்று தொடர் புடைய இடங்களுக்கும், ஆன்மீக வாதிகளால் வழி காட்டப்படும் புண்ணியத் தலங்களுக்கும் சென்று புதிய காட்சிகளைக் கண்டும், புதிய அனுபவங்களையும் பெற்று சுற்றி வருகின்றனர். கங்கை ஆற்றின் படித் துறையில், காவி உடை, தாடி சாமி யார்கள், ஆரத்தி எடுத்து ஆலாபனம் செய்ததையும் கண்டார்கள் (ஆகமம், ஆசாரம், சாஸ்திரம், எல்லாம் இங்கே ஊமைகளாயின).

அரச குடும்பத்து பெருமக்கள் இருவரும் ரிஷிகேஷ் செல்லும்முன், டேராடூன் விமான நிலையத்திற்கு வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு மாலை அணிவித்து ஒளிப்படம் எடுக்கப்பட்டு, அந்த படம் டைம்ஸ் ஆப் இந்தியா (10.11.2013) இதழில் வெளிவந்துள்ளது.

இந்த ஒளி படத்தை முதன்மைப் படுத்தி சிறந்த கட்டுரையாளர் எம்.ஜே.அக்பர் நம் கண்ணுக்கு பட்டும், கருத்துக்குத் தட்டுபடாத ஒன்றை குறிப்பிட்டு (ஈரோட்டு பார்வையில்) ஒரு வினாவை எழுப்புகிறார். அவர் எழுப்பிய வினா

ஏன் பிரின்ஸ் சார்லஸ்சும், கேமிலா பார்க்கர் பவஸ்சும் ஒரே அளவான மாலை அணிந்திருக்க வில்லை?

இது ஒரு கேள்வியா? என்று தோன்றக்கூடும், என்னதான் விலைவாசி கடுமையானாலும் ஒரே அளவு மாலை அணிவிப்பதால் செலவு அதிகமாகி இருக்காது (அதுவும் அரச குடும்பத்தவருக்கு) என்று அக்பர் சுட்டி காட்டுகிறார். ஏன் கணவன் மனைவி இருவருக்கும் ஒரே மாதிரியான வரவேற்பு கொடுக்கவில்லை? அக்பர் அவர்கள் காரணத்தைப் பிட்டு வைக்கிறார்.

இந்தியர்களாகிய நாம், ஆண் களையும் பெண்களையும் சமமாகக் கருதுவதில்லை. சார்லஸ் அணிந் திருக்கும் மாலை, பல சரங்களுடன், முழங்கால் அளவு நீண்டுள்ளது. கோமிலாவின் மாலை, சன்னமாக தொப்புள் அளவே உள்ளது. அரசு அதிகாரிகளுக்கும், சாதாரண இந்தியர்களுக்கும் இது விளங்காது.

இதை விளக்குபவர்கள் தந்தை பெரியாரும், தமிழர் தலைவரும் தான். இதுதான் மன்னர்களையும் மடக்கிபோடும் மனுதர்மம்.

முடி சூட்டி வாழும் மன்னவர் குடும்பத்தினர் ஆனாலும், அரண் மனை வாழ்க்கை வாழ்ந்தாலும், ஆரியத்தின் மனுதர்ம மகுடி இசையின் மறை பொருளைக் கண்டு கொள்வதில்லை. இந்தியா, விக்டோ ரியா மகாராணியின் நேரிடை ஆளுமையின் கீழ் வந்தபோதே இந்த அணுகுமுறை அறிமுகமாக்கப்பட் டதுதானே.

ஆங்கிலேயர் நம் நாட்டைவிட்டு வெளியேறி மண்ணடிமைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், சமூக சமத்துவம் பெற்று, முடிவில்லா கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், சமூக சமத்துவம் பெற்று, முடிவில்லா கொடுமைக்கு முற்றுப்புள்ளி என்றோ என்று ஏங்கும் நிலைதானே உள்ளது. உண்மை மண்ணடிமை எப்பொழுது மறையும்? இதோ பாவேந்தரின் பதில்:

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டின்
மண்ணடிமை தீர்தல் முயற்கொம்பே,

கூடுதல் செய்தி: டேராடூனில், அரச குடும்பத்தினரின் காமிலாபார்க் கருக்கு மெலிந்த குட்டையான மாலையாவது கொடுத்தார்கள். கேரளாவில் அந்த மரியாதையும் காணமுடியவில்லை. பிரச்சினை ஏதும் இல்லை. மகிழ்ச்சியுடன், இள வரசரின் 65-ஆவது ஆண்டு பிறந்த நாளைக் கேரளாவில் கொண்டாடி னார்கள்.

Read more: http://viduthalai.in/page4/72383.html#ixzz2oA3t6SUZ

தமிழ் ஓவியா said...

தொழிலாளி என்பவன் தன்னுடைய உடல் உழைப்பை
வயிற்றுப் பிழைப்பிற்காக விற்பவன்.

தன்னுடைய உழைப்பைத் தன்னுடைய இச்சைப்படித் தன் காரியங்களுக்கேற்ற வசதிப்படி
நடத்துபவன் முதலாளி.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...


பொன்மொழிகள்


தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல் வியுறுவான். - நெப்போலியன்

###

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்

###

மதம் எப்போதும் கலைகளுக்கும், ஆராய்ச்சிக்கும், அறிவியலுக்கும் எதிரியாக இருந்து வருகிறது. - இங்கர்சால்

Read more: http://viduthalai.in/page5/72385.html#ixzz2oA4KlMPF

தமிழ் ஓவியா said...


ஒழிக்கப்பட வேண்டியவை


1. மக்களிடம் உள்ள உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால் வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும் கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால் லைசன்ஸ், பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில்துறையில் தொழிலாளர்களிடையே சுகமும், நாணயமும், பொறுப்பும் ஏற்பட வேண்டு மானால், லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் கூட்டம் ஒழிக்கப்பட வேண்டும்.

7. அய்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பது ஒழிக்கப்பட வேண்டும்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page5/72387.html#ixzz2oA4X8AO1

தமிழ் ஓவியா said...


ஒழிக்கப்பட வேண்டியவை


1. மக்களிடம் உள்ள உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால் வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும் கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால் லைசன்ஸ், பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில்துறையில் தொழிலாளர்களிடையே சுகமும், நாணயமும், பொறுப்பும் ஏற்பட வேண்டு மானால், லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் கூட்டம் ஒழிக்கப்பட வேண்டும்.

7. அய்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பது ஒழிக்கப்பட வேண்டும்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page5/72387.html#ixzz2oA4X8AO1

தமிழ் ஓவியா said...


தவிப்பு

எழுபத்து மூன்று திசம்பரில் எந்தை

அழவைத்தார் துன்பில் அமிழ்ந்து (24.12.1973-இல் பெரியார் இயற்கை எய்தினார்)

நெக்குருகி நெஞ்சம் நினைவுதடு மாறினரே

திக்கெட்டும் மக்கள் திகைத்து நாடே கலங்கியன்று நாற்றிசையும் துன்பத்தின்

ஊடே உழன்ற(து) உணர். முடிப்பு

இன்றில்லை நம்பெரியார்! ஏக்கப் பெருமூச்சில்

நின்றிருக் கின்றோம் நினைந்து நான்குபத்(து) ஆண்டுகளா நம்பெரி யார்மறைந்து?

கூன்நிமிர்ந் தோமாநாம் கூறு பெரியார் பெரியாரே! பேசுவோம் யாண்டும்

உரியார் நமக்கவரே! ஓர் கருஞ்சட்டைப் போர்படை கண்டார் பெரியார்

செருக்கோ டிருக்கச் செறிந்து வழுவாப் பகுத்தறிவார்! வாய்த்தாரே நம்மின்

எழுச்சிக்கும் வித்தவரே! ஏத்து அறிந்துணர்ந் தென்றும் அகத்துள் பெரியார்

நெறிநிற்போம் வாரீர்! நிலைத்து பிறந்தநாள் இன்று பெரியார்க்கு! வாரீர்!

சிறக்கவே வாழ்த்துவோம் சேர்ந்து

- பெரியார் பெருங்கவிஞர் கருவூர்பாரி

Read more: http://viduthalai.in/page5/72388.html#ixzz2oA5EcMtu

தமிழ் ஓவியா said...


கோயில்களுக்குள் பார்ப்பனர்கள் புகுந்தது எப்படி


தென்னாட்டுத் திராவிட மன்னர்களால் சைவ, வைணவ மடங்களும் ஏற்படுத்தப்பட்டு அவற்றுக்குப் போதுமான சொத்துக்கள் விடப்பட்டு, சைவ, வைணவப் பெரியோர்களால் பரிபாலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்காலப் பிராமணர்கள் தந்திரமாகத் தங்களுடைய செல்வாக்கால் ஷிநீலீமீனீமீ ஷிவீ என்ற பெயரில், நீதி மன்றத்திலே ஒரு வழக்குத் தொடர்ந்து இராமேசுவரம், குன்றக்குடி, வைத்தீசுவரன் கோயில் போன்ற கோயில்களைத் தங்களின் ஆளுகையின் கீழ், கொண்டு வந்திருக்கிறார்கள்.

அதுவரையில் மடாதிபதிகளாக இருந்த மற்றவர்களிடம் அதன் ஆளுகை இருந்தது.

திருக்கோயிலில் நைவேத்தியம் பிராமணரே செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்து அவர்கள் உரிமை கொண்டனர்.

அரசாங்கம் கோவில் முதலிய மத விஷயங்களில் பிரவேசிக்கவில்லை என்று சொல்லியிருந்தும், வெள்ளைக்காரன் ஆட்சியில் பிராமணர்கள் தங்களுடைய செல்வாக்கால், திராவிடர்களால் ஏற்படுத்தப்பட்ட தரும சொத்துக்களில் இருந்து பொருள் எடுத்துத் தங்களுடைய ஜாதியர்களுக்கே பயன்படும் வகையான சமஸ்கிருதக் கலாசாலைகளை நடத்தி வருகிறார்கள்.

தளவாய் எம்.டி.சுப்பிரமணிய முதலியார் சொல்கிறார்:

கோயில் கட்டினவன் தமிழன்;
விக்கிரகமோ தமிழனைப் போல,

பாரம்பரியமாக நடைபெற்றதோ தமிழ் வழிபாடு
அதற்கு உரிமை உள்ளவர்கள் பண்டாரங்கள்
அல்லது அறங்காவலர்கள்.
ஆனால் ஸ்கீம் சூட் போட்டு அதை எடுத்துக் கொண் டவர்களோ, அவைகளுக்கு வந்த பெரிய வருமானத்தைச் சமஸ்கிருதக் கல்விக்கும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

இந்து மதப்பெயரால்தான் அந்த வேலையினைச் செய்ய முடியும்.

மேலும் 200 அல்லது 300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டிலே பலபேர் ஜாதி உயர்வு பெற சற்சூத்திரன் என்ற பெயரைத் தங்களுக்கு உரியதாக மேற்கொண்டார்கள்.

பிராமணர்களைப் போல் நடிக்கும் பிராமணர் அல்லாதார்களைக்கூட மிருகத்துக்கும் கேவலமாக மதித்து நடத்தி வந்தவர்களே பிராமணர்.

நாட்டின் பூர்வீகக் குடிகளெல்லாம் பஞ்சமர்களாய்த் தாழ்த்தப்பட்டோர்கள்.

இங்ஙனம் தாங்கள் வசிக்கும் வீதிகளிலும் பொது வீதிகளிலும் மேற்படி திராவிடக்குடிகளை வர விடாது தடுத்தும், கல்வி, ஞானம் முதலியவற்றைக் கொடுக்க மறுத்தும் வருவது, ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டிருந்த காலத்திலும் நடந்தது.

(திராவிட இயக்கம் சென்னைப் பல்கலைக்கழகம் கருத்தரங்குத் தொடக்கப் பேருரை: பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் 53-ஆம் பக்கத்தில் இருப்பது)

- தகவல்: க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page5/72398.html#ixzz2oA5SpJB9

தமிழ் ஓவியா said...


அர்ச்சகர் என்ன கூறுகிறார்?

தேவாரம் படித்த, பாடிவரும் ஒரு தலித் தமிழச்சிக்கு அரசு உத்தரவு கிடைத்தும் ஓதுவார் பணிக்கு செல்ல இயலாமல் தடுமாறும் நிலையில்... அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவைப்பற்றி... வேதவிற்பன்னரும் தமிழ் அர்ச்சனைக்காக பல்லாண்டு காலம் போராடி வருபவருமான அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரிடம் கேட்டோம். மகாஜனஹா ஏன கதாஹா சபந்தஹா - என்கிறது வேதம் அதாவது... பொதுஜனம் என்ன சொல்கிறார்களோ, கேட்கிறார்களோ அதன்படி செல் என அர்த்தம். அதுப்படி பார்த்தால் பொதுஜனங்கள் இப்போது தேர்ந்தெடுத்திருக்கிற கருணாநிதி மந்திரிசபை எல்லா ஜாதிக்காரர்களும் அர்ச்சகர்கள் ஆகலாம் என முடிவெடுத்து அறிவித்திருப்பது வேதவாக்கு. ஆகமத்தைச் சொல்லி மற்ற ஜாதிக்காரர்களை பிராமணர்கள் கோயிலுக்குள் விடாமல் இருந்தார்கள் ஆனால் உண்மை என்னவென்றால் பிராமணனுக்கும் ஆகமத்துகுமே முரண்பாடு தான்.

ஆகமம் உருவ வழிபாட்டைச் சொல்கிறது. ஆனால், பிராமணனுக்கு வேதம் சொன்னது உருவ வழிபாடு அல்ல. இயற்கை வழிபாடுதான். அருகம்புல் முதல் சூரியன் வரை பிராமணனின் வழிபாடுகள் எல்லாம் இயற்கை வழிபாடே. அப்படிப்பட்ட பிராமணன் தனக்கு எதிரான ஆகமத்தின் பெயரைச் சொல்லியே மற்ற ஜாதிக்காரர்களை உள்ளே விட மறுத்து வந்தான். ஆனால் உண்மையில் பாஞ்சராத்ர ஆகமப்படி ஜாதி தத்துவமே இல்லை. பிராமணர்கள் வேதத்தை எதிர்த்த ஆகமத்தையே, தங்களுக்காக பயன்படுத்திக் கொண்டனர். அதனால் ஆகமப்படியே பார்த்தாலும், யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம், பிராமணர் இதையே தன் தொழிலாக்கிக் கொண்டதால் மற்ற யாரையும் உள்ளே விடவில்லை. ராமசாமி நாயக்கர் அந்தக்காலத்தில் என்னிடம் ஒரு வார்த்தை கேட்டார். தாத்தாச்சாரியாரே எங்க கையால ஒரு பூவை எடுத்து உங்க சாமிக்கு போடக்கூடாதாய்யா? என்று அந்தப்பூவை இப்போது கருணாநிதி எடுத்துப் போட வைத்திருக்கார். இது வரவேற்க வேண்டிய ஒரு சீர்திருத்த விஷயம். இதை யாராவது ஆட்சேபித்தால் அவர்கள் மக்கள் முன்னேற்றத்தை தடுக்கிறார்கள்னு அர்த்தம். அவர்களுக்கு நாம்தான் நல்ல புத்தி சொல்லி திருத்த வேண்டும் என்று கையை உயர்த்தி இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார் தாத்தாச்சாரியார்.

- ஆரா, நக்கீரன் 27.05.2006, பக்கம் 25

Read more: http://viduthalai.in/page5/72400.html#ixzz2oA5qLRS0

தமிழ் ஓவியா said...

தோழர் தா.பா.வும் தோழர் ஜி.ஆரும் என்ன செய்தார்களாம்?



தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா பேசிய இந்தக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் தா.பாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்சிஸ்ட்டு) தமிழ் மாநில செயலாளர் தோழர் ஜி. இராமகிருட்டிணன் ஆகியோரும் அந்தக் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்களே - முதல் அமைச்சர் ஜெயலலிதா சொன்ன கருத்து அவர்களையும் சேர்த்துத்தானே?

மார்க்சும் - ஏங்கல்சும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்ததால் அவர்கள் வெற்றி பெறவில்லையா? அந்த இடத்தில் முதல் அமைச்சருக்குப் பதில் கூற வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமல் போயிருக்கலாம். அவர்கள் கட்சியின் அதிகாரபூர்வ ஏடு களானஜனசக்தி தீக்கதிரில் முதல் அமைச்சர் கருத்துக்கு மறுப்புக் கூறுவார்களா? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/e-paper/72465.html#ixzz2oCph9LI2

தமிழ் ஓவியா said...


அஞ்சல் மூலம் ஆசீர்வாதமாம்


திருமலை ஏழுமலை யானின் ஆசீர்வாதத்தை அஞ்சல் மூலம் பெறும் திட்டத்தை அஞ்சல்துறை மீண்டும் தொடங்கியுள்ளது.

திருமலை ஏழுமலையா னுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் இனி அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

இத்திட்டம் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் செயல் அதிகாரி, திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி என்ற பெயரில் பணவிடை (மணியார்டர்) அனுப்பினால் பக்தர்களின் காணிக்கைகள் திருமலையை அடைந்தவு டன் 3 நாள்களுக்கு பின் மணியார்டர் பெறப்பட்டதற் கான ரசீதும், ஏழுமலையா னின் திருவுருவப் படமும், கல்யாண உற்சவ அட்சதை யும் தேவஸ்தான கவரில் அனுப்பி வைக்கப்படும். இதற் காக தலைமை அஞ்சலகத் தில் ஆசீர்வாதம் என்று ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை ஆண்டு களாக சரிவர செயல்படாமல் இருந்த இந்த திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ள னர். மேலும் மாவட்ட வாரி யாக செயல்பட்ட இந்த திட் டம் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங் களுக்கும் விரிவுபடுத்தப்பட் டுள்ளது. முன்னர் 10 ஆயிரம் பக்தர்கள் பயன் பெற்ற இந்த திட்டத்தின்மூலம் தற்போது 40 ஆயிரம் பக்தர்கள் பயன்பெறுகின்றனர்.

மேலும் திருப்பதிக்கு அருகில் உள்ள ஸ்ரீகாள ஹஸ்தி கோயிலிலும் வெகு விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர் - என்று செய்தி தினமணியில் வெளி வந்துள்ளது (21.12.2013).

பக்தி என்பது ஒரு வியாபாரம், சுரண்டல் என்பது அதன் தொழில் என்று நாம் சொன்னால் பற்களை நறநற வென்று கடிப்போர் உண்டு.

இப்பொழுது திருப்பதி தேவஸ்தானம் இந்தச் செய லுக்கு என்ன நாமகரணம் சூட்டப் போகிறதோ!

துக்ளக் இதழில் திருவாளர் சோ ராமசாமி எழுதிய பதில்தான் இந்த நேரத்தில் நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

கேள்வி: சென்னை தீவுத் திடலில் திருப்பதி ஏழுமலை யான் சீனிவாச திருக்கல்யா ணம் உற்சவம் நடைபெற்றது பற்றியும், அதில் லட்சக்கணக் கான பக்தர்கள் பங்கு பெற் றது பற்றியும் தங்கள் கருத்து?

சோ பதில்: இவ்வளவு கட்டணம் செலுத்தினால் வெங்கடேஸ்வரப் பெரு மாளை உங்கள் வீட்டிற்குக் கொண்டு வந்து ஒரு நாள் தங்க வைக்கிறோம் என்ற ஒரு புதிய திட்டம் வராத ஒன்றுதான் குறை! (துக்ளக் 23.4.2008 பக்கம் 17) என்று அவரே வெட்கத்தை விட்டு எழுதினாரே அதுதான் நினைவிற்கு வருகிறது.

இதையும் தாண்டி காஞ்சி (மாஜி) சங்கராச்சாரி யார் காஞ்சிபுரத்தில் 1976 மே மாதத்தில் நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில் ஒரு உண்மையை ஒப்புக் கொண் டார்.
கோயிலுக்குப் போவதை மக்கள் ஒரு ஃபேஷனாகக் கருதுகிறார்கள் பெரும்பா லோரிடம் வர்த்தக மனப் பான்மை காணப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

நமக்கு ஏன் வீண் வம்பு? அவாளே ஒப்புக் கொண்டு விட்டனர்.

கடைசியாக ஒரு கேள்வி இப்படி வெள்ளைக்காரன் கண்டுபிடித்த அஞ்சல் முறை யில் எல்லாம் பணம் வசூ லித்து பிரசாதம் அனுப்புவது அவாளின் எந்த ஆகமத்தில் எத்தனையாவது அத்தியா யத்தில் இருக்கிறதாம்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72461.html#ixzz2oCq0LTU4

தமிழ் ஓவியா said...


100 கோடிக்கும் அதிகமான சூரியன்களை படம் பிடிக்கும் செயற்கைக்கோள்


பாரீஸ், டிச. 22- விண்வெளியில் கோள் கள் மற்றும் சூரியன் களை ஆய்வு செய்ய அய்ரோப்பிய யூனியன் ஹப்பிள் என்ற செயற் கைக்கோளை விண் ணுக்கு அனுப்பியது. அது விண்வெளியின் அதிசயங்களை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வந்தது.

இந்த நிலையில், ஹப் பிள் செயற்கைக்கோள் தனது செயல்பாட்டை இழந்து விட்டது. எனவே, அதை காட்டிலும் பல மடங்கு சக்தி வாய்ந்த கையா என்ற செயற் கைக்கோளை அய்ரோப் பிய யூனியன், விண்ணில் செலுத்தியுள்ளது.

அந்த செயற்கைக் கோளுடன் சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இது 100 கோடிக்கும் அதி கமான சூரியன்களை துல்லியமாக படம் பிடித்து அதன் தகவல் களை பூமிக்கு அனுப்பும் திறன் கொண்டது.

சக்தி வாய்ந்த கையா செயற்கைக்கோள் கோயுஸ் ராக்கெட் மூலம் பிரெஞ்ச் கயானா வில் உள்ள ஏவு தளத்தில் இருந்து நேற்று முன் தினம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

இந்த செயற்கை கோளை உருவாக்க 1991இல் முடிவெடுக்கப் பட்டது. ஆனால், 2006ஆம் ஆண்டு தான் இதன் கட்டுமான பணி களுக்கு மற்ற நாடுகளு டன் ஒப்பந்தம் ஏற்பட் டது. உலகம் முழுவதும் உள்ள 16 நாடுகளைச் சேர்ந்த 70 தொழிற் சாலைகள் கட்டுமான பணியில் ஈடுபட்டன.

கையா செயற்கைக் கோள் ஹப்பிள் செயற்கை கோளை விட பல மடங்கு அதிக தூரத் தில் நிலை நிறுத்தப்படு கிறது.

Read more: http://viduthalai.in/e-paper/72464.html#ixzz2oCqDuLTm

தமிழ் ஓவியா said...


எச்சரிக்கை! இவர்களை அடையாளம் காண்பீர்! ராமராஜ்யத்தைஏற்படுத்தவேண்டுமாம்! நரேந்திரமோடி கூறுகிறார்


வாரணாசி, டிச.22- நாட்டில் ராம ராஜ் யத்தை ஏற்படுத்த வேண் டும் என்றும், அதற்கு மக்களைவைத் தேர்த லில் சரியான கட்சியைத் தேர்வு செய்ய உத்தரப் பிரதேச மக்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெள்ளிக்கி ழமை வேண்டுகோள் விடுத்தார்.

உத்தரபிரதேச மாநி லம் வாரணாசியில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசிய தாவது:

மத்தியில் சரியான அரசு அமையாததற்கு உத்தரப் பிரதேச மக் களின் பங்களிப்பில் ஏற் பட்ட குறைதான் கார ணம். (நாட்டிலேயே அதி கமாக 80 மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரப் பிரதே சம் என்பதை கருத்தில் கொண்டு அவர் இவ் வாறு தெரிவித்தார்).

நீங்கள் ஒருநாள் சரியான அரசை தேர்வு செய்வீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக் கிறது. அப்படி தேர்வு செய்வீர்கள் என்றால், அன்றுதான் ராம ராஜ் யம் நடைமுறைக்கு வரும்.

கங்கை நதியை சுத்தப் படுத்தும் பணிக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செல விடப்பட்டது. ஆனால் இன்னும் கங்கை நதி, மாசுபட்டதாகத்தான் காணப்படுகிறது.

கங்கை நதியை சுத்தப் படுத்தும் திட்டத்துக் காக எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செல விடப்பட்டது என்பது குறித்து பிரதமர் விளக்க வேண்டும் என்று பேசினார்.

ராமர் கோயில் விவகாரத்தில் தனது நிலையை மோடி தெளிவுபடுத்த வேண்டும்: விஹெச்பி

ராமர் கோயில் விவ காரத்தில் நரேந்திர மோடி தனது நிலையை தெளிவு படுத்திய பிறகே, பாஜகவுக்கு ஆதரவு தருவோம் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தெரி வித்துள்ளது.

இதுகுறித்து உத்த ரப்பிரதேசத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப் பின் தலைவர் பிரவீண் தொகாடியா செய்தியா ளர்களிடம் வியாழக் கிழமை கூறியதாவது:

ராமர் கோயில் கட்டு வது குறித்து உறுதி யளிக்கும் கட்சிக்கே, விஷ்வ ஹிந்து பரிஷத் ஆதரவு அளிக்கும். ராமர் கோயில் கட்டுவது குறித்து தேர்தல் அறிக் கையில் பாஜக வெளி யிட வேண்டும்.

எங்கள் அமைப்பின் ஆதரவை விரும்பினால், இந்த விஷ யத்தில் மோடி தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் பிர சாரங்களில் ராமர் கோயில் குறித்த விவ ரங்களை மோடி பேசா மல் இருப்பது வருத்த மளிக்கிறது என்று பிரவீண் தொகாடியா தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/72466.html#ixzz2oCqUpAPZ