Search This Blog

14.12.13

மதக் கலவரத் தடுப்புச் சட்டம் வரவேற்கத்தக்கதே!


  • மதக் கலவரத் தடுப்புச் சட்டம் வரவேற்கத்தக்கதே!
  • தமிழக மீனவர்களைப் பாதுகாக்க நிரந்தர தீர்வு தேவை
பெரியார்உலகிற்கானமாவட்டஒதுக்கீட்டுநிதியை
உடனேமுடித்திடமுனைப்புக்காட்டுக!
2014ஆம் ஆண்டுக்கான வேலைத் திட்டங்கள்
தஞ்சை வல்லம் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் தீர்மானங்கள்
வல்லம் டிச.14- பெரியார் உலகிற்காக ஒவ் வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கப்பட்ட இலக்கீட் டுக்கான நிதியை நிலுவை வைத்துள்ள மாவட் டங்கள் உடனடியாக முடிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கொண்டுவரும் மதவாதத் தடுப்புச் சட்டத்தை வரவேற்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தஞ்சை வல்லத்தில் இன்று (14.12.2013) முற்பகல்  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

தீர்மானம் எண்: 1

இரங்கல் தீர்மானம்
நிறவெறியை எதிர்த்துப் போராட்டங்கள் பல நடத்தி 27 ஆண்டு சிறைத் தண்டனை ஏற்று, மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய மனித உரிமைப் போராளி என்னும் பெருமைக்குரிய நெல்சன் மண்டேலாவின் (வயது 95) மறைவிற்கு இச்செயற்குழு தனது இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 2

தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்புத் தேவை!

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது என்பது தொடர்கதையாக - அன்றாட நிகழ்வாக இருந்து வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட மீனவர் களும், இயக்கங்களும், கட்சிகளும் கண்டனக் குரல் கொடுத்து வந்திருந்தாலும், மத்திய அரசு கண்துடைப்பு வழிகளைப் பின்பற்றுகின்றது; தமிழக அரசு சார்பில் கடிதங்கள் எழுதப்படுவதும் - மத்திய அரசோ கவலை கொள்கிறோம் என்று கூறுவது என்பவையும் அன்றாட சடங்குகளாகி விட்டன.

இவற்றினால் பாதிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு எந்தவிதப் பரிகாரமும், நிரந்தரத் தீர்வும் கிட்டவில்லை. அவர்களின் அடிப்படை வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு அன்றாடம் கண்ணீரும், கம்பலையுமாகத் துக்கப்படும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.

கடுமையான முறையில் இலங்கைக்கு எச்சரிக்கை விடப்பட்டு, நிரந்தரமான முறையில் தமிழக மீனவர் களுக்கு எவ்வித சங்கடமும் இல்லாமல் மீன்பிடிக்கும் உரிமைக்கு உத்தரவாதம் செய்து தருமாறு  மத்திய - மாநில அரசுகளை இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண்: 3

மதக் கலவரத் தடுப்புச் சட்டம் வரவேற்கத்தக்கதே!

மத்திய அரசு கொண்டுவரும் மதக் கலவரம் மற்றும் குறி வைத்து மேற்கொள்ளப்படும் வன் முறைத் தடுப்பு (நீதி மற்றும் மறுவாழ்வு பெறுதல்) சட்ட வரைவு (Prevention of Communal Violence (Access to Justice and Repatriation) Bill) எனும் சட்டம் விரிவான பொருள்கொண்ட நியாயமான, தேவையான வரவேற்கப் படவேண்டிய சட்டம் ஆகும். 

அவசியம் கருதி இந்தச் சட்டத்தினைச் செயல்படுத்தும் போது மாநில அரசுகளின் உரிமைகளுக்குப் பங்கம் இல்லாமல், மாநில அரசுகளின் ஒப்புதலுடன் செயல்படுத் தும் வகையில் சட்டத்தில் சரத்துகளை இணைத்துக் கொள் ளுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 4 (அ)

பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டித் தந்த தோழர்களுக்குப் பாராட்டு
திருச்சி சிறுகனூரில் உருவாக இருக்கும் 95 அடி பெரியார் பேருருவச் சிலை மற்றும் பெரியார் உலகிற்கு திட்டமிட்டபடி 1005 சவரன் தங்கத்திற்கான நிதியைத் திரட்டிக் கொடுத்த கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்களின் செயற்கரும் முயற்சிக்கும், பணிக்கும் இச்செயற்குழு பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள் கிறது. இந்தப் பெரும் பணிக்கு நன்கொடைகளைத் தாராளமாக வழங்கி உதவிய பெருமக்களுக்கு இச்செயற் குழு தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 4 (ஆ)

அடுத்த கட்டமாக நன்கொடை திரட்டும் பணியைத் தொடங்குவதற்குமுன் மாவட்டத்திற்கு 15 சவரன் தங்கம் என்னும் தங்கள் இலக்கினை நிறைவு செய்யாத மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் அதனை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மண்டலக் கழகப் பொறுப்பாளர்கள், சம்பந்தப்பட்ட பகுதிகளின் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், இதற்கு முன்னுரிமை கொடுத்து அப்பணியை வெற்றியாக்கித் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

தீர்மானம் எண்: 5

(அ)  2014 ஆம் ஆண்டுக்கான வேலைத் திட்டம்

ஜாதி, தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்குகள் மாவட்டந்தோறும் (அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான விளக்கக் கூட்டங்கள்).

(ஆ) திராவிடர் மகளிர் பாசறை மற்றும் திராவிடர் கழக மகளிரணி ஆகிய இரு அணிகளின் சார்பில் திராவிடர் மகளிர் பயிற்சிப் பட்டறை (Work Shops) முதற்கட்டமாக சென்னை பெரியார் திடலில் டிசம்பர் 24, 25, 26 நாட்களில் அடுத்தகட்டமாக ஏலகிரி, நீலகிரி, குற்றாலம், காரைக்குடி ஆகிய இடங்களில் நடத்துவது; இதற்கான தேதிகளை ஒழுங்கு செய்யுமாறு மகளிர் பாசறை மற்றும் மகளிரணி மாநிலப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

(இ) திராவிடர் கழகப் பொருளாளராக இருந்த பழைய கோட்டை அர்ச்சுனன் நூற்றாண்டு விழாவை ஈரோட்டில் 8.2.2014 சனியன்றும், நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர் திராவிடர் செல்வம் ஏ.டி.பன்னீர்செல்வம் நூற்றாண்டு விழாவை சென்னையில் 17.1.2014 அன்றும் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

(ஈ) தமிழர் திருவிழாவாம் பொங்கலையொட்டி பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் 2014 ஜனவரி 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களிலும் சென்னை பெரியார் திடலில் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

பெரியார் பகுத்தறிவு கலை, இலக்கிய அணி பொறுப்பாளர்கள் சிறப்பாகக் கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

(உ) பெரியாரியல் பயிற்சி முகாம்களை மாவட்டந் தோறும் சனி, ஞாயிறுகளில் நடத்துவது என்று தீர்மானிக் கப்படுகிறது. (அதற்கான திட்டத்தைத் தயாரிக்குமாறு பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்).

(ஊ) பெரியாரியல் சமூகக் காப்பு அணி பயிற்சி முகாம் களை மண்டலம் தோறும் நடத்துவது என்று தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் எண்: 6

இளைஞரணி - மாணவரணி பொறுப்பாளர்களின் பணிகள்
திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி தோழர் கள் பெரியாரியல் பயிற்சி முகாம்களுக்குப் பயிற்சியா ளர்களைச் சேர்த்தல், மாணவரணி, இளைஞரணி அமைப் புகளை உருவாக்குதல், ஏடுகளுக்கு, இதழ்களுக்குச் சந்தா சேர்த்தல், புத்தகச் சந்தைகள் நடத்துதல் உள்ளிட்ட பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தீர்மானம் எண்: 7

அமைப்புகளில் மாற்றங்கள்
(அ) சேலம் மண்டல திராவிடர் கழகத் தலைவராக சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன், செயலாளராக சேலம் பூபதி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

மேட்டூர் மாவட்டக் கழகத் தலைவராக க.கிருட்டிண மூர்த்தி, மாவட்டச் செயலாளராக எடப்பாடி கே.என்.பாலு ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
கிருட்டிணகிரி மாவட்டத்திற்கு கழகத் தலைவராக காவேரிப் பட்டினம் மு.தியாகராசன், மாவட்ட செயலாள ராக ஓசூர் வனவேந்தன் ஆகியோர் நியமிக்கப்படு கின்றனர். பெரியார் பெருந்தொண்டர் தா.திருப்பதி தலைமைச் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.

ஈரோடு மண்டலம்
ஈரோடு மண்டலச் செயலாளராக குருவாரெட்டியூர் ப.பிரபாகரன், ஈரோடு மாவட்ட கழகத் தலைவராக இரா.நற்குணம், மாவட்டச் செயலாளராக கு.சிற்றரசு ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். ஈரோடு நகர திராவிடர் கழகத் தலைவராக ந.சிவராமன், செயலாள ராக வி.தேவராசு ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
                            ----------------------"விடுதலை” 14-12-2013

39 comments:

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கைகளை தடை செய்யும் சட்டம் மகாராஷ்டிரா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது


மும்பை, டிச.14-பில்லி, சூனியம், மந்திரம் போன்ற மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடி வந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் என்பவர் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி புனேயில் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, மூட நம்பிக்கைகளை பரப்பி வருவோரை சிறையில் அடைக்கும் சட்டத்தை மகாராஷ்டிரா அரசு அறிமுகப்படுத்தியது. மும்பை புறநகர் ரயில்களில் பில்லி, சூனியம், மந்திரம் தொடர்பாக விளம்பரப்படுத்த ரயில்வே நிர்வாகமும் தடை விதித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் மகாராஷ்டிர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மந்திரம், பில்லி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை தடை செய்யும் புதிய சட்டம் நேற்று (13.12.2013) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேல்சபையின் ஒப்புதலை பெற்றபின்னர் ஆளுநர் கையொப்பமிட்ட பின்னர் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வரும்.

Read more: http://viduthalai.in/e-paper/71999.html#ixzz2nS6DmCGz

தமிழ் ஓவியா said...


பெண்களின் பாதுகாப்பிற்காக மொபைலில் அலாரம் பட்டன்' மத்திய அரசு திட்டம்

புதுடில்லி, டிச.14- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டில்லியில் மருத் துவ மாணவி ஓடும் பேருந் தில் பாலியல் வன்முறை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையை உலுக்கி யது. இதனையடுத்து நாட்டில் பெண்களின் பாதுகாப்பை பலப் படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது, மொபைல் போன்களில் அலாரம் பட்டனை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத் தகைய வசதி கொண்ட மெபைல் போன்களைப் பயன்படுத்தும் பெண் கள், அவசர காலத்தில் இந்த பட்டனை அழுத்தி தங்களை காத்துக் கொள்ளலாம். அலாரம் பொருத்தப்பட்ட மொபைல்கள் தற்போது ஜெய்பூரில் பயன்பாட் டிற்கு வந்துள்ளதாக தக வல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் அய்.டி துறை சார்பில் நடத்தப் பட்ட கூட்டத்தின் போது, இந்தப் புதிய அலாரம் முறையை அறிமுகம் செய்யும் முடிவை மத்திய நிதியமைச்சர் சிதம்பரத் திடம் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். பெண்க ளின் பாதுகாப்பிற்காக இந்தப் புதிய முறையை கொண்டு வரவும் அவர் கள் யோசனை தெரிவித் தனர். இது தொடர்பாக அய்டி அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறுகை யில், தற்போது சோதனை முறையாக இத்தகைய வசதி கொண்ட மொபைல் கள் புழக்கத்தில் விடப் பட்டுள்ளன; இது குறித்த விவரங்களை விரைவில் அமைச்சர் முறையாக அறிவிப்பார் என கூறி உள்ளார். ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பெண் கள், இத்தகைய வசதியை பதிவிறக்கம் (டவுன் லோட்) செய்து கொள்ள லாம் எனவும், புதிய மாடல் மெபைல்களில் இந்த புதிய அலாரம் பட்டன் பெருத்தப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more: http://viduthalai.in/e-paper/72000.html#ixzz2nS6Uja43

தமிழ் ஓவியா said...

ஓரினச் சேர்க்கையாளர்கள் உரிமைகளுக்கு குரல் கொடுப்போம்

ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமான செயல் என்று தீர்ப்பிட்டு உச்சநீதிமன்றம் ஓரினச் சேர்க்கையாளர்களை .377-ன் படி கிரிமினல் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. ஏற்கெனவே ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சமுதாயத்தில் மரியாதை இல்லாத நிலையில் இந்த தீர்ப்பானது இவர் களை அதிக அளவில் பாதித் துள்ளது.

இது மனித உரிமைக்கு எதிரான தீர்ப்பு. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன்/அவள் விரும்பும்படியான வாழ்க்கை வாழ்வதற்கான உரிமை உள்ளது. ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்குப் புறம்பானது என்றும் இந்தியக் கலாச்சாரத்திற்கு விரோதமானது என்றும் சுட்டிக் காட்டி இவர்களை குற்றவாளி களாக அறிவித்திருக்கும் இந்த தீர்ப்பிற்கு எதிராக ஒவ்வொரு இந்தியரும் குரல் கொடுக்க வேண் டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஓரினச் சேர்க்கையாளர்களும் நம்மைப் போன்றே அத்தனை உரி மையும் கொண்ட சராசரி இந்திய குடிமக்களே. நம்மைப் போன்றே வரி செலுத்துகிறார்கள், ஓட்டு போடுகிறார்கள் வருவாய் ஈட்டு கிறார்கள். இவர்களை சராசரி மக்களிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பதே தவறான செயலாக இருக்கும் போது இவர்களை குற்ற வாளிகள் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிப்ப தாகவே உள்ளது.

இப்படி அறிவித்திருப்பதன் மூலம் அவர்கள் சந்திக்கப் போகும் கொடுமைகள் என்னவெல்லாமாக இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். கிரிமினல் குற்றவாளி களுக்கு எல்லாவிதமான உரிமை களும் பறிக்கப்படும். ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று தெரிந் தாலே சிறை செல்ல நேரிடும். சிறிய வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் இவர்கள் குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு கடுமை யான தண்டனைக்குள்ளாக நேரிடும் . காவல்துறையின் கெடுபிடிகள் அதிகமாகும்..... தங்குவதற்கு வீடு கிடைக்காது... வெளியில் சுற்றித் திரிய முடியாது... இவ்வளவு ஏன் உடல் நிலை சரியில்லையென்றாலும் மருத் துவமனைக்குக் கூட செல்ல முடி யாது. ஒரு நோயாளி ஓரினச் சேர்க் கையாளர் என்று அறிந்தால் மருத் துவர் சாதாரண நோயாளியைப் போல் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியுமா? குற்றவாளி என்னும் பட்சத்தில் காவல்துறைக்கு அறிவித்த பின் தானே அவருக்கு சிகிச்சை அளிக்க முடியும்.... வேறு நாட்டிற்குச் செல்லவேண்டுமென்றால் அவர் களுக்கு விசா கூட மறுக்கப்படுமே... இப்படி அவர்கள் சந்திக்கப் போகும் பிரச்சினைகள் ஏராளம். நினைத்துப் பார்த்தாலே அவர்கள்மீது பரிதாப மும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது அளவுகடந்த கோபமும் வரு கிறது.

தமிழ் ஓவியா said...

ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதுதான் இந்தியக் கலாச்சாரம் என்றால் எத்தனை எத்தனை இந்தியக் கலாச்சாரங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருக்கிறது? கணவன் மரணமடைந்தால் மனை வியை தீக்குள் தள்ளிக் கொல்லும் "சதி" என்ற வழக்கம் இந்தியக் கலாசாரத்திலிருந்து ஒழிக்கப்பட வில்லையா? கணவனை இழந்த பெண்கள் தவறான வழிக்குச் சென்று விடக்கூடாது ...நமது இந்தியக் கலாச்சாரம் கெட்டுவிடுமென்று அந்த வழக்கத்தை அப்படியே கடைப்பிடித்திருந்தால் இந்திரா காந்தி என்ற கைம்பெண் இந்தியப் பிரதமராக உலகம் வியக்கும் அள வுக்கு இந்தியாவை வழிநடத்திச் சென்ற வரலாறு உருவாகி இருக் காது..

"சதி" என்பது எப்படி மனித உரிமைக்கு எதிரான செயலோ அது போலத்தான் ஓரினச் சேர்க்கையாளர் களை குற்றவாளிகளாக அறிவித்திருப் பதும் மனித உரிமைக்கு எதிரான செயல். காலத்திற்கு ஏற்றவாறு கலாச் சாரங்கள் மாறிக்கொண்டுதான் இருக் கும் அதற்கேற்ப சட்டங்களில் மாற் றம் செய்யவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

நெதர்லாண்ட், நார்வே, பெல் ஜியம் ஸ்பெயின், கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்வீடன், போர்சுகல், அய்ஸ்லாண்ட், அர்ஜென்டினா, மெக் ஸிகோ என பதினோரு நாடுகளில் ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை எல்லோரும் அறிய வேண்டும்.

ஓரினச் சேர்க்கை நமக்குத் தவறான தாகத் தெரியலாம். கேலிக்குரியதாகத் தெரியலாம்... வெறுக்கத்தக்கதாகத் தோன்றலாம்... ஆனால் ஒரு தனி மனிதன் தன் விருப்பத்திற்கேற்றவாறு தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் உரிமை உடையவன் என் பதை நாம் புரிந்து கொள்ளவேண் டும்.

இந்தியாவில் 25 லட்சத்திற்கும் மேல் ஓரினச்சேர்க்கையாளர்கள் உள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது... ஒரே ஒரு தீர்ப்பின் மூலம் 25 லட்சம் இந்தியர்களை உச்சநீதிமன்றம் குற்ற வாளியாக அறிவித்திருப்பதைக் கண் டித்து ஓரினச்சேர்க்கையாளர் களோடு ஒன்று சேர்ந்து மக்களும் குடியரசுத் தலைவர் அலுவலகத் தின் முன் சென்று போராட்டம் நடத்த வேண்டும். ஓட்டுரிமை அட்டை, ரேஷன் கார்டு ஆதார் கார்ட், பான் கார்ட் ஆகியவற்றை வீசி எறியவேண்டும்... தீர்ப்பு மாற்றம் செய்து அனைத்து உரிமைகளும் ஓரினச் சேர்க்கை யாளர்கள் பெறும்வரை அவர் களுக்காக அவர்களோடு சேர்ந்து நாமும் குரல் கொடுக்க வேண்டும்....

இந்த தீர்ப்பில் மாற்றம் வராத பட்சத்தில் ஓரினச் சேர்க்கையாளர் கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து ஓரினச் சேர்க்கையாளர் களை ஆதரிக்கும் நாட்டிற்கு அடைக்கலமாக செல்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும். (ழுயலள ளாடிரடன யயீயீடல கடிச ஹளலடரஅ வடி பயல கசநைனேடல உடிரவேசநைள) லட்சக்கணக்கான ஓரினச் சேர்க்கையாளர்கள் ஒன்று சேர்ந்து இதைச் செய்வார்களே யானால் குடியரசுத் தலைவரே நேரடியாக தலையிட்டு அரசியல மைப்புச் சட் டத்தில் மாற்றம் செய்ய முடியும். இந்த மாற்றம் 25 லட்சத்திற்கு மேலான இந்தியர்க ளுக்கு எல்லா உரிமையும் கொண்ட இந்தியர் களாக வாழ வழிசெய்யும்.

அன்று அம்பேத்கர் "நான் இந்துவாகப் பிறந்தேன் ஆனால் இந்துவாக மரணிக்க மாட்டேன்" என்று கூறி லட்சக்கணக்கான மக்களோடு இந்து மதத்திலிருந்து வெளியேறி புத்த மதம் தழுவிய புரட்சி போல இன்னொரு புரட்சி யாக "நாங்கள் இந்தியர்களாகப் பிறந்தோம் ஆனால் இந்தியர் களாக மரணிக்க மாட்டோம்" என்று புதிய ஒரு புரட்சியை உருவாக்குவார்களேயானால் இந் தப் பிரச்சினைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

- லதாராணி பூங்காவனம், ஆற்காடு

Read more: http://viduthalai.in/page-2/72003.html#ixzz2nS6gVuGE

தமிழ் ஓவியா said...


ஜெர்மன் தீர்ப்பாயமும் கூறி விட்டது!

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, ராஜபக்சே தலைமையிலான இலங்கை சிங்கள இன வெறி அரசு படுகொலை செய்தது -

உண்மைதான் என்று ஜெர்மன் நாட்டில் ப்ரமன் நகரில் கூடிய, மக்கள் தீர்ப்பாயம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது. (10.12.2013)

தமிழகத்திலிருந்து மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள், ஜெர்மன் தீர்ப்பாயத்திடம் கொடுத்த புகாரின் பேரில், இந்த விசாரணை நடைபெற்றது. மூன்று நாள் விசாரணையை நடத்திய, அந்தத் தீர்ப்பாயம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு கூறியுள்ளது.

1) ஈழத் தமிழர்களை, தனித் தனியாகக் கொலை செய்யாமல், தமிழர் என்ற இன அடிப்படையில், அந்த இனத்தின் அடையாளமே இல்லாமல் அழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த இனப்படுகொலை நடந்திருக்கிறது.

2) விடுதலைப்புலிகளோடு அரசு நடத்திய போருக்கு முன்பாகவே, நீண்ட காலமாகவே இனப் படுகொலையை இலங்கை அரசு மேற்கொண்டு வந்தது. போருக்குப் பிறகும்கூட, இன அழிப்பை இலங்கை அரசு தொடர்ந்து கொண்டே இருந்தது.

3) உலக நாடுகளின் உதவியோடே இந்த இனப்படுகொலையை இலங்கை செய்தது என்றும், திட்டவட்டமாக ஜெர்மனி தீர்ப்பாயம் தெளிவுபடுத்தி விட்டது.

இந்தத் தீர்ப்பாயத்தில் உள்ள நீதிபதிகளில் ஒருவரான டென்னிஸ் ஹாலிடே யார் தெரியுமா? அய்.நா.வின் துணைத் தலைவராக இருந்தவர் ஆவார். என்னதான் இலங்கை அதிபர் தில்லுமுல்லு களையும் சூழ்ச்சிகளையும் பின்னினாலும் உலக மக்கள் மத்தியிலே ஓர் இனப்படுகொலையாளன் ராஜபக்சே என்கிற குரூர உருவம் சித்திரமாகத் தீட்டப்பட்டு விட்டது - அதை மாற்ற முடியவே முடியாது.

இந்தோனேசியா அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர், மார்ச்சுகி தாருஸ்மான் தலைமை யில், அமெரிக்காவின் சட்ட வல்லுநர் ஸ்டீவன் ரெட்னர், தென்னாப்பிரிக்க வல்லுநர் யாஷ்மின் சூக்கா, ஆகிய மூவர் அடங்கிய குழு இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்புத் தொடர்பான அறிக்கையை, அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான்-கீ- மூனிடம் அளித்தது (13.4.2011).

சிங்கள இனவாத அரசோ, ஒரே வரியில் இந்த அறிக்கையை நிராகரிப்பதாகக் கூறியது!

கிளிநொச்சி, முல்லைத் தீவுகளில் வாழ்ந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 ஆகும். இதனைத் தெரிவித்தது சிறீலங்கா அரசின் கச்சேரி (Local Govt Office) என்ற அமைப்பாகும்.

இந்தத் தமிழர்களின் எண்ணிக்கையில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 தமிழர்களே சிறீலங்கா படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றதாக அய்.நா.வின் ஒச்சா அமைப்பின் கணிப்புக் கூறுகிறது.

எஞ்சிய ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்கள் என்ன ஆனார்கள்? என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய - குருதியை உறைய வைக்கக் கூடிய வினாவாகும்.

மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார், விசரர் சூசை அடிகளார், சேவியர் குலூஸ் அடிகளார் ஆகியோர் இந்தத் தகவல்களை ராஜபக்சே தமக்குத்தாமே அமைத்துக் கொண்ட விசாரணைக் குழுவிடம் (LLRC) தெரிவித்தனரே!

இவ்வளவு நடந்தும், ஜெனீவா உலக மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டும், ராஜபக்சே எந்தக் குற்றமும் செய்யாத பெரு மகன் போலவே திரிந்து கொண்டுள்ளார்; போதும் - போதாதற்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராகவே ஆகிவிட்டார்.

ஆம் நாதுராம் கோட்சே நீதிபதி நாற்காலியில் அமர்ந்து காந்தியாரை விசாரிக்கிறார் - என்ன கொடுமையடா இது!

ராஜபக்சேவைத் தண்டிக்காவிட்டால், இந்தக் கால கட்டத்தில் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுமே குற்றவாளியாகத்தான் கருதப்பட நேரும் - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/72002.html#ixzz2nS6qpMq3

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடு

தமிழ்நாடு பத்திரிகையானது மறுபடியும் சென்னை பார்ப்பன தெய்வங்களுக்குள் இரண்டறக்கரையத் தீர்மானித்துவிட்டதாக நினைக்க வேண்டி இருக்கிறது. அதன் முழுக்கவனம் ராயல் கமிஷனை பகிஷ்கரிப்பதில் மாத்திரம் இல்லாமல், பெசண்டம்மையை தலைவியாக்கு வதிலும், அரசியல் பார்ப்பனர்களைக் காப்பாற்றுவதிலும் கவலை எடுத்துக் கொண்டிருக்கின்றதாகத் தெரிகிறது. கமிஷன் பகிஷ்காரத்தைப்பற்றி அவரவர்கள் அரசியல் அபிப்பிராயம் என்று சமாதானம் செய்து கொண்டு வாதாடலாமாயினும், பெசண்டம்மையாரை தலை வியாக்க ஆசைப்படுவதில் பார்ப்பனர்களுடன் போட்டி போடுவதான இரகசியம் நமக்கு விளங்கவில்லை. அது ஒருபுறம் இருக்கட்டும் என்று தள்ளி விடுவதா னாலும், பார்ப்பனரல்லாருக்கு கடுந்துரோகிகளாகிய அரசியல் பார்ப்பனர்களுடன் குலாவுவதும், அவர்களைக் காப்பாற்றுவதும் பற்றி காரணம் அறியாமலிருக்க முடியவில்லை. சென்னை கார்ப்பரேஷன் தேர்தல் விஷயத்தில் அரசியல் பார்ப் பனர்கள் நடந்து கொண்ட விஷயத்தைப்பற்றி தமிழ்நாடு பத்திரிகை தனது அபிப் பிராயமாக ஒரு வரிகூட எழுத முடியாத நிர்ப்பந்தம் இப்போது திடீரென்று அதற்கு ஏற்பட்ட காரணம் என்ன என்று கேட்கின்றோம்.

பார்ப்பன அரசியல்வாதிகள் தமிழ்நாடு பத்திரிகை ஆபீசுக்கு வந்து எவ்வளவு தூரம் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகின்றார்களோ, அவ்வளவு தூரம் அவர்கள் மற்ற எல்லாப் பத்திரிகை ஆபீசுகளுக்கும் தான் போய் கெஞ்சுகின்றார்கள், பார்ப்பனப் பத்திரிகைகளாகிய இந்து சுதேசமித்திரன் சுயராஜ்ஜியா முதலியவைகளும், பார்ப்பனரல்லாத பத்திரிகைகளாகிய ஜஸ்டிஸ் திரா விடன் அய்ரோப்பிய பத்திரிகைகளாகிய மெயில் முதலியவைகளும் தைரியமாய் தமது அபிப்பிராயத்தை எழுதி இருக்கும்போது தமிழ்நாடுக்கு மாத்திரம் ஏற்பட்ட தட்ட முடியாத தாட்சண்யம் என்ன என்று கேட்கின்றோம். பார்ப்பன தயவை எதிர்பார்க்கும் நிலை ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் செட்டியாரைவிட தமிழ்நாடுக்கு அதிகமாய் ஏற்பட்டு விட்டதா? ஸ்ரீமான் வெங்கடாசலம் செட்டியாரே எலக்ஷன் விஷயத்தில் தைரியமாய் பார்ப்பன சூழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கும் போது தமிழ்நாடு மாத்திரம் ஏன் பயப்படவேண்டும்?

பார்ப்பன சூழ்ச்சிக்கும், பார்ப்பன வகுப்புவாதத்திற்கும் சென்னை தேர்தலை விட சரித்திரத்தில் எழுதத் தகுந்த தான வேறு ஆதாரம் என்ன வேண்டும்? திடீர் திடீர் என்று இம்மாதிரி துப்பாக்கியைக் கீழே போட்டு எதிரிகளுக்கு இடம் கொடுத்து விடுவதால் எவ்வளவு காரியம் கெட்டுப் போய் விடுகிறது. முதலாவது, பார்ப் பனர்கள்கூட இப்பத்திரிகைக்கு பயப்படமாட்டார்கள், மதிக்கவும் மாட்டார்கள். ஏனெனில், நேரில் போய் சரிப்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற ஒரு தைரியம் அவர்களுக்கு உண்டாய் விடும். இரண்டாவதாக, அடிக்கடி இம்மாதிரி அயர்ந்து விடுவதால் மக்களுக்கும் அதனிடத்தில் அதிக மதிப்பு இருக்காது என்கின்ற தைரியமும் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும். இதைத் தமிழ்நாடு பத்திரிகை உணராதது நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது.

- குடிஅரசு - கட்டுரை - 20.11.1927

Read more: http://viduthalai.in/page-7/72015.html#ixzz2nS7WOsYa

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை பிரச்சாரத்தின் வெற்றி

எவ்வளவோ காலமாய் பார்ப்பனர்களால் கொடுமைப்படுத்தப்பட்டிருந்த தான பாலக்காடு கல்பாத்திப் பொது ரோடுகளில் மலையாளத்து ஈழவ சகோதரர்களும், தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் அய்கோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும், சமரச ஞானமும் உதயமாகி நீக்கப்பட்டது என்று சொல்லவே முடியாது என்றே சொல்லுவோம். இன்னமும் இதுபோல் மலையாளத்திலும், தமிழ்நாட்டிலும் நடக்கக் கூடாததும், கிட்டே அணுகக் கூடாததுமான எத்தனையோ தெருக்கள் இருந்து கொண்டு வருகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் வெள்ளைக்காரர்கள் வாய் மூலமாய்த் தீர்ப்பை எதிர்பார்க்கின்றார்களே ஒழிய, ஒரு பார்ப்பனருக்காவது புத்தி வந்து தாங்களாகவே அனுமதித்தார்களென்று சொல்லிக் கொள்ள முடியாமலேயே இருக்கின்றது. இனியாவது, சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஆரம்பித்த தலைவர்களுக்காவது திருவாங்கூர் அரசாங்கத்திற்காவது புத்தி வருமோ என்று கேட்கின்றோம். - குடிஅரசு - கட்டுரை - 27.11.192

Read more: http://viduthalai.in/page-7/72015.html#ixzz2nS7bq1tW

தமிழ் ஓவியா said...


காட்சிப்பிழை


பசுவின் கண்களில் கடவுள் தெரிகிறார்... வேப்பமர வேரில் கடவுள் காட்சியளிக்கிறார் என்று புரளிகள் கிளம்பும் போதெல்லாம், குடும்பத்துடன் சென்று மக்கள் கும்பிட்டு மகிழ்வார்கள். சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் கிளியின் உடலிலிருந்து திருநீறு கொட்டுகிறது என்று புரளி பரவி, அது கிளியோபாட்ரா அளவுக்குப் புகழ்பெற்றுவிடும். கடைசியில், மக்களின் தொந்தரவைத் தாங்க முடியாமல், மேற்கூரையிலிருந்து சிந்திய சுண்ணாம்புதான் அது என்று கிளியே சொல்லிவிடும்.

ஒரு கட்டத்தில் திருநீறு என்பதைப் பொடுகாக மாற்றிவிட்டார்கள் விளம்பரத்தை எடுத்தவர்கள். உலகெங்கும் இதுபோன்ற கட்டுக்கதைகள் பரவிப் பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. அவற்றில் மிக முக்கியமானவை யூஎஃப்ஓ எனப்படும் பறக்கும் தட்டுகள் பற்றிய வதந்திகள். ஆனால், அதுபோன்ற வீடி யோக்கள் என்னவோ ஏடிஎம் சிசிடிவி கேமராவில் எடுக்கப் பட்டதுபோல், கொசகொசவென்று இருக்கும். பெரும்பாலும் சைனீஸ் லேண்டர்ன் எனப்படும் வானில் பறக்க விடப்படும் ஒரு வித விளக்குகள், வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட ராணுவ விமானங்கள் போன்றவற்றைப் பறக்கும் தட்டுகளாகக் கற்பனைசெய்துவிடுகின்றனர்.

அதே போல பெரிய அளவிலான சம்பவங்கள் நடக்கும்போது, ஆர்வத்தைத் தூண்டும் பல விஷயங்கள் தீ போலப் பரவும். விமானங்களை வைத்தே உலக வர்த்தக மய்ய இரட்டை கோபுரங்களை அல்-கொய்தா தீவிரவாதிகள் தகர்த்த சம்பவத்தைத் தொடர்ந்து பல வதந்திகள் பரவின. அந்த விமானங்களில் ஒன்றின் எண் னி33ழிசீ என்றும் அந்த எண்ணை எம்எஸ்-வேர்டில் (விஷி கீஷீக்ஷீபீ) உள்ளிட்டு அதை விண்டிங்ஸ் (கீவீஸீபீஷீஷ்) என்ற எழுத்துருவுக்கு மாற்றினால் ஒரு விமானம், இரண்டு கட்டடங்கள், ஒரு மண்டையோடு இறுதியாக ஒரு நட்சத்திரம் தெரியும் என்றும் ஒரு வதந்தி பரவியது. மறைந்த எழுத்தாளர் சுஜாதாவே இதுகுறித்து ஒருமுறை எழுதியிருந்தார். அந்த எண்ணை விண்டிங்ஸ் எழுத்துருவுக்கு மாற்றினால் விமானம், இரண்டு கட்டடங்கள், மண்டையோடு, நட்சத்திரம் தெரிவதெல்லாம் உண்மைதான். ஆனால், அந்த விமானங்களில் ஒன்றுக்குக்கூட னி33ழிசீ என்ற எண் இல்லை என்பது பின்னால் தெரியவந்தது.

தற்போது, அதே 9/11 சம்பவத்தை வைத்து பரபரப்பூட்டும் செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. முதல் விமானம் மோதிய பின்னர், அந்தக் கட்டடத்தில் இருந்து கிடைத்த இரும்புத் தூண் ஒன்றில் மனித முகம் தெரிவதாக ஒரு செய்தி. பயங்கரமான அந்த நிகழ்வைக் கண்டு துயரமும், பதற்றமும் அடைந்தது போன்ற முகபாவனையுடன் இருக்கும் அந்த முகத்தை 9/11 தேவதைஎன்று அழைக்கிறார்கள். எனினும், குறிப்பிட்ட கோணம் மற்றும் ஒளியமைப்பில் பார்த்தால்தான் அது மனிதமுகம் போல் தெரிகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

- வெ.சந்திரமோகன்- தி இந்து 6.12.2013

Read more: http://viduthalai.in/page7/72055.html#ixzz2nUzaXHAh

தமிழ் ஓவியா said...


வாக்குப்பதிவு இயந்திரம்


எடிசன் தன் முதல் கண்டுபிடிப்பாக 1868-இல் பதிவு செய்த வாக்குப்பதிவு இயந் திரம் அரசினால் ஏற் றுக் கொள்ளப்பட வில்லை. தந்தி மற்றும் பங்குச்சந்தை சாதனங் களைத் தொடர்ந்து மின்சார விளக்கைக் கண்டுபிடித்ததும் உலகமே இவரைத் தலையில் வைத்துக் கொண்டாடியது. பாடும் மற்றும் பேசும் ஃபோனோ கிராப் இயந்திரம் இவரை பெரும் கோடீஸ்வரனாக்கியது. ஒலியைப் போலவே, ஒளியையும் பதிவு செய்ய முடியும் என சினிமாவைக் கண்டுபிடித்ததும், கண்டு பிடிப்புகளின் தந்தை எனப் புகழாரம் கிடைத்தது...!
1914-ஆம் வருடம் அவரது சோதனைச் சாலையில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட் டது. ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களைப் பார்த்து, தீ எவ்வளவு அழகாக எரிகிறது பாருங்கள்... ரசாயனப் பொருட்களைத் தவறான விகிதத்தில் கலந்துவிட்டேன் என்பதை, 67-ஆவது வயதில் எனக்குக் கற்றுக்கொடுத்த இந்த தோல்வியும் எனக்குப் படிப்பினையே என்றார் எடிசன் சிரித்தபடி.

தனது 81-ஆவது வயதில் மரணமடையும் வரை 1,093 கண்டுபிடிப்புகளை எடிசன் பதிவு செய்ய முடிந்ததற்குக் காரணம், தோல்வி களை வீழ்ச்சியாகக் கருதாத இவரது தன்மையே...

- த. பூபாலன், பணங்கொடம்

Read more: http://viduthalai.in/page2/72045.html#ixzz2nV01D4aq

தமிழ் ஓவியா said...


ஆன்மீகத்தால் அழிந்த மாவீரன்

நெப்போலியன் மாவீரன் என்றாலும் அவர் ஒரு மடத்தனமான ஆன்மீகவாதி, தன்னுடைய ஒவ்வோரு சாதாரண வெற்றியிலும் கடவுள் அருள் தன்னுடன் இருப்பதாகவே நினைத்துக் கொண்டான். 1812-ஆம் வ்ருடம் ரஷிய உடன்பாடு முறிந்த தன் காரணமாக ரசியாவுடன் படையெடுத்து ரசிய தலைநகரான மாஸ்கோவைக் கைப்பற்றினான். கடவுளின் பேரருள் தன்னுள் இருப்பதாக வும் விரைவில் தன்னை இந்த பரந்த அய்ரோப்பிய கண்டத்தின் அதிபதியாக கடவுள் நியமிப்பார் என்று நினைத்துக் கொண்டு இருந்தான்.

மாஸ்கோ வெற்றியை அடுத்து அவனின் கடவுள் பக்தி மேலும் அதிகமாகிப் போனது; விளைவு அவனுடைய செயல்களில் உத்வேகம் குறைந்தது. திட்டமிடாமை, எதிர் கால சிந்தனையின்மை, அலட்சியம், மற்றும் சோம் பேறித்தனம் அதிகமானது, இதைக் கவனத்தில் கொண்ட சிலர் அவனிடம் கடவுள் பெயரைச்சொல்லி நல்ல பெயரும், செல்வமும் குவிக்கும் நோக்கில் அளவிற்கு அதிக மாக புகழந்து விட்டனர். விளைவு மாஸ்கோவிலேயே புகழ் போதையில் தங்கிவிட்டான், அங்கிருந்து தான் அவனுக்கு கேடு ஆரம்பித்தது, அதாவது குளிர் காலம் துவங்கிவிட்டது, ரஷ்யாவின் குளிரைத்தாங்காமல் லட்சக்கணக்கான பிரென்சு படைவீரர்கள் மாண்டுவிட தப்பிப்பிழைத்தவர்கள் வெகுசிலரே! இதை எதிர்பார்த்துகாத்திருந்த ஆஸ்திரியா, பின்லாந்து, இதர அய்ரோப்பிய மன்னாராட்சி நாடுகள் பிரிட்டனின் ஆலோசனையில் பேரில் களைத்துத் திரும்பி பிரென்சு படைகளை தாக்க துவங்கினர், விளைவு கடுமை யான தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது, நெப்போலியன் கைது செய்யப்பட்டு இத்தாலியில் உள்ள எல்பாதீவில் சிறை வைக்கப்பட்டார். அங்கும் பக்திப் போதை விடவில்லை, கடவுளின் அனுக்கிரகம் தனக்கிருக்கிறது என்று கூறிக்கொண்டு சிறைக்காவலர்களுக்குப் பணம் கொடுத்துத் தப்பித்து பிரெஞ்சு திரும்பினான். 1813 மீண்டும் பிரெஞ்சு அரியணை ஏறினான். அப்போது பிரெஞ்சு தலைநகர் பாரிஸ் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தது, அவனும் இந்த பொருளாதார நெருக்கடியை போரின் மூலம் நாம் மீட்டுவிடலாம் என்ற பொய்யான மாயையை மக்களிடம் உருவாக்கி மீண்டும் போருக்குத் தயாரானான். த கிரேட் வாட்டர் லூ போர் எரிமலை என்று என்று தெரிந்தும் குதித்த ஒரு புத்திசாலியின் செயல் என வரலாற்று அறிஞர்கள் இன்றும் நெப்போலியனின் செயலைப்பற்றி குறிப்பிடுவார்கள், அறிவார்ந்த அறிஞர்களின் எந்த ஒரு அறிவுரையையும் ஏற்கவில்லை, இவன் செயலால் பல தத்துவ ஞானிகளும் மேதைகளும் இத்தாலிக்கும், ஜெர்மனுக்கும், பிரிட்டனுக்கும் சென்றுவிட இவனிடம் இருப்பவர்கள் எல்லாம் கடவுள் பெயரைச்சொல்லி பிழைப்பவர்கள் மாத்திரமே,

எதிரியின் பலம் என்னவென்று சரியாக எடுத்துக்கூற ஆள் இல்லாமல் சரியான போர்த்தளவாடங்கள், திட்டமிடல் என எதுவுமோ இல்லாமல் வாட்டர் லூ போரைத் துவக்கினான். பிரஞ்சுப் படையில் லட்சக்கணக்கானோர் இருந்தார்கள், ஆனால் எதிரே பல அய்ரோப்பிய நாடுகள் சரியான திட்டமிடல் மேலும் கடற்படையில் பிரிட்டனின் வலிமை எல்லாம் இணைந்து ஒன்றாக நெப்போலியனை எதிர்த்து, இந்தப் போரில் சுமார் 6 லட்சம் பிரெஞ்சுப் போர் வீரர்கள் அநியாயமாகப் கொல்லப்பட காரணமாக இருந்தான், இறுதியில் பிரிட்டீஷ் கடற்படை நெப்போலியனை சிறைபிடித்து செயின்ட் ஹெலினா தீவில் சிறைவைத்தது, சிறையில் சுகாதாரமான உணவு மற்றும் நல்ல சூழ்நிலையில்லாததால் காயங்களில் புரையேறி அது புற்று நோயாய் மாறி 1821 மே மாதம் உயிர்விட்டான்.
கடவுள் பெயரால் உலகை ஆளுவேன் என்று மமதை யுடன் திரிந்து மனித அறிவை செயலாக்க மறந்தான். விளைவு, வரலாற்று மாவீரன் என்று பெயரெடுத்தும் கடுமையான தோல்விகளைச் சந்தித்து நோய்க்கு மருந் திடக்கூட உதவிக்கு ஆளில்லாமல் மரணமடைந்தான்.

- சரவணா இராசேந்திரன்

Read more: http://viduthalai.in/page2/72046.html#ixzz2nV09Yd5W

தமிழ் ஓவியா said...


முஸ்லிம்களின் நிலை


இந்தியாவில் உள்ள 28 மாநிலங் களில் 13 மாநிலங்களில் உள்ள அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லிம் கூட அமைச்சராக நியமிக்கப்பட வில்லை என்பது மிகவும் வேதனைக் குரிய செய்தி. இந்த முஸ்லிம் விரோத போக்கிற்கு முஸ்லிம் வாக்குகளுக்காக தந்திரங்களை கையாளும் காங்கிரஸ் கட்சியும் பாஜகவுக்கு சளைத்ததில்லை என நிரூபித்துள்ளது.

தற்போது தேசியம், வளர்ச்சி என்று போலி முகமூடி அணிந்து பேசிவரும் மோடி ஆளும் மாநிலமான குஜராத் உட்பட, பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரே ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ. கூட பாஜகவுக்கு இல்லாததன் மூலம் அக்கட்சியின் தீவிர முஸ்லிம் விரோதப் போக்கை அதன் கொள்கையில் மட்டு மின்றி அதன் அரசியல் செயல்பாடு களிலும் காணமுடிகிறது.

இந்தியாவில் 28 மாநிலங்களில் 609 அமைச்சர்கள் உள்ளனர். இதில் மொத் தம் 57 பேர் முஸ்லிம்கள். வெறும் 9.35 விழுக்காடு மட்டுமே. 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி முஸ்லிம்களின் எண்ணிக்கை 13.34 சதவீதம் ஆகும். 57 அமைச்சர்களில் 18 பேர் ஜம்மு-கஷ்மீர் அமைச்சர்கள் ஆவர்.

பா.ஜ.க ஆளும் குஜராத்தில் 9.06 சதவீதம் முஸ்லிம்கள் வாழுகின்றனர், சத்தீஷ்கரில் 1.97சதவீதம் முஸ்லிம்களும், கோவாவில் 6.84 சதவீதம் முஸ்லிம் களும், மத்தியப் பிரதேசத்தில் 6.37 சதவீதம் முஸ்லிம்களும் வாழ்கின்றனர். ஆனால் இங்கெல்லாம் பா.ஜ.கவுக்கு ஒரே ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ கூட இல்லை.
பஞ்சாபை ஆளும் பா.ஜ.கவின் கூட்டணி கட்சியான அகாலிதளத்திற்கு மலேர்கோட்லா தொகுதியில் இருந்து ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ உள்ளார். காரணம் அத்தொகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்றார்கள்.

காங்கிரஸ் ஆளும் உத்தரகாண்டில் 11.92 சதவீத முஸ்லிம்கள் வாழுகின்றனர். ஆனால், முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த எந்த பிரதிநிதியும் அமைச் சரவையில் இடம்பெறவில்லை. முஸ்லிம் மக்கள் தொகை 10 சதவீதம் கொண்ட முஸ்லிம் ஆட்சியாளர்கள் பல ஆண்டு கள் ஆட்சி புரிந்த ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 37 காங்கிரஸ் அமைச்சர் களில் ஒருவர் மட்டுமே முஸ்லிம் ஆவார். காங்கிரஸ் ஆளும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை. 5.78 சதவீதம் முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட காங் கிரஸ் ஆளும் அரியானா மாநிலத்தில் ஒரேவொரு முஸ்லிம் அமைச்சர் உள்ளார். ஜம்மு-கஷ்மீரை அடுத்து அதிக முஸ்லிம்கள் வாழும் அஸ்ஸாமில் (30.90 சதவீதம் முஸ்லிம்கள்) காங்கிரஸ் கட்சி 3 முஸ்லிம்களை மட்டுமே அமைச் சரவையில் இடம்பெறச் செய்துள்ளது.

உத்தரபிரதேசத்தில்தான் அதிக முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர். 18.55 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் உ.பி.யில் 51 அமைச்சர்களில் 10 பேர் முஸ்லிம்கள் ஆவர். இங்கு சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ளது. 24.6 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சி புரிகிறது .இங்கு 20 அமைச்சர்களில் 5 பேர் முஸ்லிம்கள் ஆவர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்குவங்காளத்தில் 25 சதவீத முஸ்லிம்கள் வாழுகின்றனர். அங்கு 44 அமைச்சர்களில் அய்வர் மட்டுமே முஸ்லிம்கள்ஆவர். பீகாரில் நிதிஷ்குமார் அமைச்சரவையில் 2 முஸ்லிம்கள் உள் ளனர். கர்நாடகா காங்கிரஸ் அமைச் சரவையில் 2 முஸ்லிம்கள் உள்ளனர்.

Read more: http://viduthalai.in/page2/72044.html#ixzz2nV0LI7y3

தமிழ் ஓவியா said...


சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி


மின்சாரம் சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம் கொண்டு வர ஜப்பான் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டதில் புருஷிமா அணுஉலை வெடித்து சிதறியது. அதனால் அங் குள்ள அணுமின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

எனவே, நாட்டின் மின் தேவைக்கு விஞ்ஞானிகள் மாற்று வழியை உருவாக்க முயற்சி செய்கின்றனர். இந்த வகையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தீவிரப்படுத்த உள்ளனர்.

பூமியை பொறுத்தவரை எப்போ தும் சூரிய ஒளி கிடைப்பதில்லை. பகலில் மட்டுமே கிடைக்கிறது. மோசமான தட்ப வெப்பநிலை மேக மூட்டம் இருந்தால் அதையும் முழுமையாக பெற முடியாது.

எனவே, சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர ஜப்பானில் உள்ள ஷிமிஷூ கார்ப்பரேசன் என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியை சுற்றிலும் சோலார் பேனல் தகடுகளை சீராக அமைத்து அதன் மூலம் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர திட்டமிட் டுள்ளது. அதற்கு ஜனாரிங் என பெயரிட்டுள்ளனர்.

இதன் மூலம் 13 ஆயிரம் டெரா வாட் மின்சாரத்தை தயாரித்து பூமிக்கு கொண்டு வர முடியும். ஒரு டெராவாட் என்பது 1 லட்சம் கோடி வாட் ஆகும். இந்த திட்டத்தின் கட்டுமான பணி வருகிற 2035ஆம் ஆண்டில் தொடங் கப்பட உள்ளது.
தொடர்ந்து மின்சாரம் தயாரிக்க சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் 11 ஆயிரம் கி.மீட்டர் பரப்பரளவில் 400 கி.மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே சோலார் மின்கலன்கள் அமைக்கப்பட உள்ளன.

சந்திரனில் சோலார் பேனல் தகடுகள் மற்றும் சோலார் மின் கலன்கள் அமைக்கும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் அமைக்கப்படும் சோலார் பேனல் தகடுகள் கேபிள்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் மைக்ரோவேவ் மற்றும் லேசர் டிரான்ஸ்மிசன் நிலை யங்களில் இணைக்கப்படும். பின்னர் அவை 20 கி.மீட்டர் விட்டமுள்ள ஆண்டனாக்கள் மூலம் பூமிக்கு வரும்.

Read more: http://viduthalai.in/page3/72047.html#ixzz2nV0bkT9t

தமிழ் ஓவியா said...


முதல் திருமணத்தை மறைத்து 2ஆவது திருமணம்


2ஆவது மனைவி ஜீவனாம்சம் பெறத் தகுதியானவரே உச்சநீதிமன்றம் தீர்ப்பு

முதல் திருமணத்தை மறைத்து செய்து கொண்ட இரண்டாவது திருமணம் சட்ட விரோதமானது என்றா லும், கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்காக இந்து திருமணச் சட்டப்படி இரண்டாவது மனைவி யையும் சட்டபூர்வமானவராகவே கருத வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் அளித்திருந்த முந்தைய தீர்ப்பானது, முதல் திருமணம் குறித்த தகவலை மறைத்து செய்து கொண்ட இரண்டாவது திருமணத்திற்கு பொருந்தாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

"இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படா விட்டால் அது மனைவியை ஏமாற்றும் கணவனுக்கு அளிக்கப்படும் சலுகையாக ஆகிவிடும்.

எனவே, ஜீவனாம்சம் பெறுவதற்காகவாவது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-இன்படி (ஜீவனாம்சம்) பாதிக்கப்பட்ட பெண் சட்ட பூர்வமான மனைவியாகவே கருதப்பட வேண்டும்'' என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதவ்-சபிதா பென் வழக்கில், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்புக்கு மாறானதாக மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என்று கூறி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-அய் உறுதியான நோக்கத்திற்காக செயல்படுத்தும் வகையில் இப்படி விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

ஆதவ் ஏற்கெனவே திருமணமானவர் என்பதை முழுமையாகத் தெரிந்து கொண்டு சபிதா பென் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண் டுள்ளார். ஆதலால், இந்து திருமணச் சட்டப்படி அந்த திருமணம் செல் லாது என தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதிகள் விளக்கம் கூறினர்.

- சட்டக்கதிர் - 2013 - டிசம்பர் பக்கம், 59

Read more: http://viduthalai.in/page3/72048.html#ixzz2nV0t7PgS

தமிழ் ஓவியா said...


நீதிக்கட்சியால் ஏற்பட்ட நன்மைகள்


பிரிட்டிஷ் ஜனநாயகக் கொள் கைகளைப் பின்பற்றி (British liberalism) பெயரிலேயே Liberal
- என்கிற சொல்லையும் சேர்த்து தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (South Indian Liberal Federation) இணைத்து துவங்கியவர்கள் டி.எம்.நாயரும், தியாகராயரும்!.

அவர்கள் சாதாரண மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய பிரெஞ்சு நாட்டுத் தீவிரவாதக் குடி யரசுக் கட்சியில் இலட்சியங்களால் (Radical Republicans) ஈர்க்கப்பட் டவர்கள்; அதனால்தான் கிளமென் சோவைப் பின்பற்றித் தங்கள் நாளேட்டிற்கு யிவீநீமீ - என்று பெயர் வைத்தார்கள். பிராமணரல்லாதார் என்கிற எதிர்மறைப் பெயரில் அந்த உயிர் இல்லை - என்பதற்காக; அந்த உயிரைக் கொடுத்து உணர்வுகளைத் தட்டி எழுப்புவதற்கு இந்தச் சமுதாயத் திற்கு திராவிடர் என்கிற பெயரைக் கொடுத்தார்கள்; அதற்கு அடையாள மாகத் தங்கள் தமிழ் ஏட்டிற்கும் திரா விடன் என்கிற பெயரை வைத்தார்கள்!

ஒரு இனத்திற்கு தன்னுணர்வு ஊட்டி னார்கள்!

றீ அந்த நீதிக்கட்சியின் ஆட்சியி லேதான் நாடாளுமன்ற நடைமுறை களுக்கான அடித்தளம் இங்கே நாட்டப் பட்டது.

றீ இன்று தமிழ்நாடு நன்கு நிர்வகிக் கப்படும் மாநிலமாக இருக்கிறதென் றால் அதற்குக் காரணம் அன்று நீதிக்கட்சி தந்த பயிற்சிதான்!(321)

3321. “That Madras today is and is regarded as a well administered state in India. is due to the political education and experience gained here in operating dyarchy”
- S.Saraswathi. ‘Dyarchy in Madras’ P-20

அந்த நீதிக்கட்சியின் ஆட்சி யிலேதான் இந்தியாவிலேயே முதல் முறையாகப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது!(322)

322: 1919-ஆம் ஆண்டுச் சட்டப்படி பெண்களுக்கு வாக்குரிமை கொடுப்பது மாகாண சட்டசபைகளின் முடிவிற்கு விடப்பட்டது.

1921, ஏப்ரல் முதல் நாள் ஒரு தீர்மானத்தின் மூலம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

அந்த நீதிக்கட்சியின் ஆட்சி யிலேதான் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வியும், இலவசப் புத் தகங்களும்,இலவச ஆடைகளும், இலவச மதிய உணவும் வழங்கப் பட்டன!

-- - க.பழனிசாமி (தெ.புதுப்பட்டி) திராவிட இயக்க வரலாறு (1912 - 1921) முரசொலிமாறன் 414-ஆம் பக்கம்.

Read more: http://viduthalai.in/page4/72050.html#ixzz2nV1Tp8Ee

தமிழ் ஓவியா said...


விருதுகள் விவரம்இந்தியாவின் மிக உயர்ந்த விருது - பாரத ரத்னா
1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது - காந்தி அமைதி விருது.
அமைதிக்கான மிக உயர்ந்த விருது - அசோக் சக்ரா விருது
மிக உயர்ந்த இலக்கிய விருது - பாரதீய ஞானபீட விருது.
மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது - நேரு சமாதான விருது
மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது - பி.டி.கோயங்கா விருது
மிக உயர்ந்த பால்வள விருது - கோபால் ரத்னா விருது
மிக உயர்ந்த கௌரவ ராணுவ விருது - ஃபீல்ட் மார்ஷல் விருது
மிக உயர்ந்த விளையாட்டு வீரர் விருது - அர்ஜீனா விருது
மிக உயர்ந்த விளையாட்டு பயிற்சியாளர் விருது - துரோணாச்சார்யா விருது
மிக உயர்ந்த வீரதீர விருது- மஹாவீர் சக்ரா
மிக உயர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் விருது - ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது
மிக உயர்ந்த வேளாண்மை விருது - க்ருஷி பண்டிட் விருது
மிக உயர்ந்த சினிமா விருது - தாதா சாகிப் பால்கே விருது

Read more: http://viduthalai.in/page8/72057.html#ixzz2nV2eOpEn

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


வைக்கம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் - சிறையில் கைவிலங்கு பூட்டி வைக்கப்பட்டிருந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

மண்டேலா வாழ்க்கைக் குறிப்பு


1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார்.

தெம்பு அரச குடும்பத்தைச் சார்ந்த பரம்பரையில் வந்த மண்டேலாவின் தந்தையின் பெயர் காட்லா ஹென்றி. தாயின் பெயர் நோஸ் கெனிபேனி.

இளம் வயதிலேயே குத்துச் சண்டை வீரராக அறியப்பட்ட மண்டேலா ஆடு மாடு மேய்த்துக்கொண்டே பள்ளியில் படித்தார்.

லண்டன் மற்றும் தென் ஆப்பிரிக்க பல்கலைக்கழகங்களில் படித்து பட்டப் படிப்பையும் சட்டப்படிப்பையும் முடித்தார்.

கருப்பர் இன மக்களுக்கு எதிரான வெள்ளையர்களின் நிறவெறியை எதிர்த்து 1939ஆம் ஆண்டு போராடத் தொடங்கினார்.

வெள்ளையர் இன அரசுக்கு எதிராகப் புரட்சி செய்ததாகக் கூறி 1956ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

சிறையிலிருந்து விடுதலையான பின் தீவிரமாகப் போராடினார்.

1961ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதப் படைத் தலைவர் ஆனார்.

1962ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி வெள்ளையர் அரசால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் 1964ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி ஆயுள் தண்டனைக் கைதியானார்.

18 ஆண்டுகள் ராபன் தீவில் தனிமைச் சிறைவாசம் அனுபவித்தார். பின் 1982ஆம் ஆண்டு போல்ஸ்மூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

உலக வரலாற்றில் தொடர்ந்து 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரே தலைவர் மண்டேலாதான்.

1990ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.

1990ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ஆம் தேதி சர்வதேச மண்டேலா தினமாக அய்.நா.சபை அறிவித்துள்ளது.

1994ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தார்.

1994ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி கருப்பர் இனத்தின் முதல் அதிபரானார்.

1999ஆம் ஆண்டில் முதுமை காரணமாக அதிபர் பதவியிலிருந்து விலகினார்.

2004ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொது வாழ்விலிருந்து ஓய்வு பெற்ற மண்டேலா 2013, டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.

ஈவிலின் மேசே, வின்னி, கிரேகா மேச்சல் என மூன்று மனைவிகள்.

பள்ளி ஆசிரியர் நெல்சன் என்ற பெயர் சூட்டினார். முழுப்பெயர் நெல்சன் ரோலிஹ்லாலா (Nelson Rolihlahla).

தமிழ் ஓவியா said...

ஓங்கி ஒலித்த உரிமைக் குரல்

உலகம் பல போராளிகளைப் பார்த்துள்ளது. அவர்களின் விடுதலை உணர்ச்சி முழக்கங்களைக் கேட்டுள்ளது. அவற்றில் மண்டேலாவின் முழக்கம் வித்தியாசமானது. மண்டேலா பல்வேறு நிகழ்வுகளில் ஒலித்த உரிமைக் குரல் இதோ:-

வெள்ளை ஆதிக்கத்தின் நேரடி விளைவுதான் ஆப்பிரிக்கர்கள் அனுபவிக்கும் இழிநிலை. வெள்ளை ஆதிக்கம் என்பது கருப்பர்கள் தாழ்வானவர்கள் என்பதையே குறிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஒழிசலான வேலைகள் என்பவை ஆப்பிரிக்கர்களால் மட்டுமே செய்யப்படுகின்றன. எதையாவது தூக்கிச் செல்ல வேண்டுமென்றாலோ எதையாவது சுத்தம் செய்ய வேண்டுமென்றாலோ ஒரு வெள்ளையர் சுற்றும்முற்றும் யாராவது கருப்பினத்தவர் தென்படுகிறாரா என்றுதான் பார்ப்பார், அவர் தனது வேலையாளாக இல்லாவிட்டாலும்கூட. இது போன்ற அணுகுமுறையால்தான் வெள்ளையர்கள் ஆப்பிரிக்கர்களை ஏதோ தனிவகை ஜந்து என்ற விதத்தில் பார்க்கிறார்கள். கருப்பர்களுக்கும் குடும்பம் இருக்கும் என்றோ அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கும் என்றோ, வெள்ளையர்களைப் போலவே அவர்களுக்கும் காதல் ஏற்படும் என்றோ வெள்ளையர்கள் உணர்வதில்லை. வெள்ளையர்கள் தங்கள் மனைவியருடனும் குழந்தைகளுடனும் இருக்க விரும்புவதைப் போலவே கருப்பர்களும் விரும்புவார்கள் என்று அவர்கள் உணர்வதில்லை; தங்கள் குடும்பத்தை நல்லபடி நடத்தவும், உணவு, துணிமணிகள் போன்ற தேவைகளை நிறைவேற்றவும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் தேவையான அளவுக்குச் சம்பாதிக்கக் கருப்பர்கள் விரும்புவார்கள் என்று வெள்ளையர்கள் உணர்வதில்லை.

எமது மக்கள் கண்டுள்ள முன்னேற்றங்கள், அவர்களின் தெள்ளத் தெளிந்த பேச்சு, அவர்கள் இங்கே பெற்று வரும் வெற்றிகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்கள் ஈட்டி வரும் அங்கீகாரம் ஆகியவை எல்லாம் ஒருவிதத்தில் எனது உழைப்பின் விளைவே என்று கூறி வருகிறார்கள். நான் என்ன நினைக்கிறேன் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். பெரியதொரு படையில் இடம் பெற்றிருப்பவர்களில் யானும் ஒருவன். வெற்றி அல்லது சாதனை என்று ஏதாவது உண்டென்றால் அதற்கான பெருமை இந்தப் படையில் இருக்கிற எல்லாரையும் சாரும். முன்னேற்றத்துக்குக் காரணம் எனது உழைப்பு மட்டுமே அன்று. எனது தோழர்களும் நானும் _ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் _ ஆற்றியுள்ள கூட்டுப் பணியின் விளைவாகவே முன்னேற்றம் கண்டுள்ளோம்.

தண்டனையை ஏற்கத் தயாராய் இருக்கிறேன். இந்த நாட்டின் சிறைச்சாலைகளில் ஓர் ஆப்பிரிக்கரின் நிலைமை எவ்வளவு கொடியது, எவ்வளவு அவலமானது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் தண்டனையை ஏற்கத் தயாராய் இருக்கிறேன். இந்தச் சிறைகளில் ஏற்கெனவே இருந்துள்ளேன். சிறைச் சுவர்களுக்குள்ளேயும்கூட ஆப்பிரிக்கர்களுக்கு எதிரான பாகுபாடு எவ்வளவு அப்பட்டமானது, வெள்ளைக் கைதிகளைக் காட்டிலும் ஆப்பிரிக்கக் கைதிகள் எவ்வளவு மோசமாய் நடத்தப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியும்.

ஆனால் இந்தக் காரணங்கள் எல்லாம் நான் தேர்ந்தெடுத்திருக்கிற பாதையிலிருந்து என்னை விலகச் செய்திட முடியாது; என்னைப் போன்ற ஏனையோரையும் விலகச் செய்திட முடியாது.

எனது மக்களுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் நான் செய்ய வேண்டிய கடமையைச் செய்தேன். நான் நிரபராதி என்றும், இந்த நீதிமன்றத்தில் கூண்டிலேற வேண்டிய குற்றவாளிகள் ஃபெர்வூடும்(பிரதமர்) அவரது அமைச்சர்களுமே என்றும் வருங்காலம் தீர்ப்பளிக்கும் _ இதில் எனக்குத் துளியும் அய்யமில்லை.

விடுதலை செய்யப்படும்போது, அநீதிகளை அகற்றுவதற்கான போராட்டத்தைத் தொடர்வேன். அநீதிகள் பூண்டோடு ஒழியும் வரை தொடர்ந்து போராடுவேன்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் போராட்டம் அன்னியர்கள் அல்லது கம்யூனிஸ்டுகளின் தூண்டுதலால் நடைபெறுவதாக அரசு ஏற்படுத்தி வரும் எண்ணம் முற்றிலும் தவறானது. தனி மனிதன் என்ற முறையிலும் எனது மக்களின் தலைவர்களில் ஒருவன் என்ற முறையிலும் நான் என்ன செய்திருந்தாலும் சரி, தென் ஆப்பிரிக்காவில் நான் பெற்ற அனுபவத்தின் காரணத்தாலும், நான் பெருமையாகக் கருதுகிற எனது ஆப்பிரிக்கப் பின்னணியின் காரணத்தாலும் செய்தேனே தவிர, யாரோ வெளிநாட்டார் ஏதோ சொன்னார் என்கிற காரணத்தால் அல்ல.

நாசவேலைக்குத் திட்டம் தீட்டியதை நான் மறுக்கவில்லை. வருவது வரட்டும் என்ற மனநிலையிலோ, வன்முறையின்பால் காதல் கொண்டோ அப்படிச் செய்யவில்லை. எனது மக்கள் பல்லாண்டு காலமாய் வெள்ளையரின் கொடுங்கோன்மைக்கும், சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாகி வருவதால் தோன்றியுள்ள அரசியல் நிலைமையை அமைதியாகவும் நிதானமாகவும் மதிப்பீடு செய்ததன் விளைவாகவே நாசவேலைக்குத் திட்டம் தீட்டினேன்

தமிழ் ஓவியா said...

புத்தர் பிறப்பு கி.மு. 6ஆம் நூற்றாண்டில்...புதிய ஆய்வுத் தகவல்

புத்தர் கி.மு.3ஆம் நூற்றாண்டில் பிறந்தவர், 4ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் என்று பல கருத்துகள் நிலவிவரும் நிலையில், புத்தரின் பிறப்பிடமான நேபாளத்தில் மிகப் பழைமையான புத்த விகாரை (கோவில்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் துர்ஹாம் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபின் கன்னிங்ஹம் தலைமையிலான தொல்லியல் குழுவினர் மேற்கொண்ட அகழ்வாய்வில், செங்கற்களால் கட்டப்பட்ட தொடர் புத்த விஹாரைகளின் கீழ் கி.மு.6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மரத்தாலான விஹாரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மய்யப்பகுதியில் வெற்று இடம் உள்ளது. இந்த வெற்றிடத்தின் மய்யத்தில் மரம் இருந்திருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பழமையான மரத்தின் வேர்கள் அந்த இடத்தில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. லும்பினி தோட்டத்தில் மரத்தின் கிளையைப் பிடித்தபடி ராணி மாயாதேவி புத்தரைப் பிரசவித்த கதையுடன் இதற்குத் தொடர்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இதிலிருந்து, புத்தர் மரத்தடியில் பிறந்திருக்கலாம் என்ற வரலாறு உண்மை என்பதும் அவர் பிறந்த இடமான மரம் புனிதமாகக் கருதப்பட்டு வணங்கப்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

பொன்மொழி

செய்யக் கூடியதைச் செய்யாமல் இருப்பவன் சோம்பேறி. செய்யக் கூடியதைச் செய்து முடிப்பவன் உழைப்பாளி. செய்யக் கூடியதை வேகமாகவும் அதிகமாகவும் செய்பவன் திறமைசாலி. செய்ய முடியாத அரிய செயல்களைச் செய்பவனே சாதனையாளி.

- இந்தியா

தமிழ் ஓவியா said...


துளிச் செய்திகள்

இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி 53 சதவிகித பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். அதில் 88.6 சதவிகித குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே வன்முறைக்கு ஆளாகின்றனர்.

அமெரிக்காவில் மருத்துவக் கல்விப் பாடத் திட்டத்தில் மாற்று மருத்துவச் சிகிச்சை முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் 6 மாதம் மாற்று மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்துப் பயில வேண்டும். நிலவின் சுற்றுவட்டப் பாதையில் செல்லும் ஜேட் ராபிட் என்ற புதிய தொழில்நுட்பம் இணைந்த செயற்கைக் கோளினை டிசம்பர் 2 அன்று சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் டிசம்பர் 3 அன்று டில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

வாய்ஸ் 17பி என்ற கிரகத்தில் அதிக அளவில் தண்ணீர் இருப்பது அமெரிக்கா அனுப்பிய ஹப்பிள் தொலைநோக்கி விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றி டிசம்பர் 7ஆம் தேதி முதல் 10 வரை விசாரணை நடத்தி 10ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் வகையில் ஜெர்மனியில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

கருத்து

சென்னையில் பல இடங்களில் தெருவிலும், சாலை ஓரங்களிலும் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை இன்றும் பார்க்கலாம். ஏன் அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை? எதிர்காலத்தில் திருட்டுகள், பிக் பாக்கெட், செயின் பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடும் வாய்ப்பு இந்தச் சிறுவர்களுக்கு அதிகம் உள்ளது.

- எஸ். ராஜேஸ்வரன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

மக்களை இழுத்தடிப்பதை அரசு அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். மக்கள்தான் ஜனநாயகத்தின் நாயகர்கள். அதிகாரிகள் எல்லோரும் அவர்களுக்கு ஊழியர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அரசு என்பது மக்களுக்காகத் தானே தவிர அவர்களுக்கு எதிராக இருக்கக்கூடாது.

- கே.கே.சசீதரன்,
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

இலங்கை தங்கள் நாட்டு சட்டதிட்டங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அவ்வாறு நடந்துகொள்ளும் என்றும் நம்புகிறோம். மேலும், போருக்குப் பிறகு நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளையும் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். இந்த நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லாவிட்டால் சர்வதேச சமூகம் இனியும் பொறுமையாக இருக்காது.

- நிஷா பிஸ்வால், அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர்

தமிழ் ஓவியா said...


சிறந்த நூலிலிருந்து சில கவிதைகள்துளிரத் தொடங்கும் எங்களுக்கான தேசம்!

நூல்: வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு

ஆசிரியர்: ரகசியன் | செல்பேசி: 9445182142

வெளியீடு: பொன்னி,
2/1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவன்யூ, மடிப்பாக்கம், சென்னை-91

பக்கங்கள்: 88 | விலை: ரூ.60/-

ஒருவரியேனும்

உங்களோடு சேர்ந்து வாக்களிக்கிறேன்
உங்களோடு சேர்ந்து திரைப்படம் பார்க்கிறேன் அவ்வப்போது
உங்களோடு சேர்ந்து மது அருந்துகிறேன்

உங்கள் விரல்களில் இருக்கும் வெண்சுருட்டை
போதை நிறைந்த அப்பொழுதில்
புகைக்கவும் செய்கிறேன்
என்பதினால்
நீங்களாக நான் எப்போதும் ஆனதில்லை

என்றாவது மலர்கள் மொழிந்ததுண்டா
உங்களிடம்?
நிலவின் இதழ் உங்கள் கன்னம்
தீண்டியிருக்கிறதா?

இப்பெரிய நீலம்
உம் கண்களில் நிரம்பி வழிந்திருக்கிறதா?

வெட்டு வாங்கிய மரங்கள்
உம்மிடம் சொல்லி அழுதிருக்கின்றனவா?

தோண்டப்பட்ட மலையில் வழியும்
இரத்தக் கவிச்சியை உணர்ந்திருக்கிறீரா நீவீர்?

நீ இளைப்பாறும் இந்நிழல்
நீரே நட்டு வளர்ந்த மரமா?
சுவைக்கும் கனியும் அப்படியோ?

நீரில்லா இம்மணல் வெளியில்
நதியின் கண்ணீர் ஓடுகின்றதைக் கண்டீரா? வியர்வைக்கு நியாயமான விலை கேட்டதற்கு
உம் சகமனிதன் கொளுத்தப்பட்டான்
பார்த்துக் கொண்டிருந்தீர்கள்

உம் சகமனிதனின் தலைமையைப்
பொறுத்துக் கொள்ளாமல்
அவனை வெட்டி முண்டமாக்கினர்
பார்த்துக் கொண்டிருந்தீர்கள்

உம் சக மனிதனின் வாயில்
பீ திணித்தார்கள்
பார்த்துக் கொண்டிருந்தீர்கள்

அற்புதமாக எழுதும் நீங்கள்
இம்மானிட இழிவுக்கு எதிராக
ஒருவரியேனும் எழுதியதுண்டா?

ஓசோன் படலம் கிழிந்துவிட்டது
பூமி வெப்பம் அடைந்துவிட்டது
ஆயிரமாண்டின் பண்பாடு
அழியத் தொடங்குகிறது

என்று புலம்பும் வாயிலிருந்து
இந்த இழிசெயல்கள் மேல்
காறி உமிழ எச்சில்
ஏன் இல்லை?

இதயத்தில் கசிவில்லை

எறும்புகள் புழுவை
வதைப்பது போல்
மக்களை வதைக்கிறது பசி

பைத்தியத்தின் திமிரில் வரும்
உம் சொற்கள் அல்லது
செயல்கள்
இம்மண்ணின் இதயங்களைக்
கருக வைக்கின்றன
கவின்மிகு பூக்கள் தீயில்
கருகுவது போல்

சன்னல் வழி சொட்டும்
இவ்வழகிய மழை தான்
குடிசை மக்களைத் துன்புறுத்துகிறது

தும்பிகள் பிடிக்க வேண்டிய
விரல்களைச் சுடுகிறது
கண்ணாடிக் குவளை வழி தேனீர்

இன்னும் பல யாவும் கண்டும்
எந்தக் கசிவுமில்லை இருதயத்தில்

இப்பெரும் கடலில் நீலம்
கொட்டிக்கிடப்பது போலவே
இவையாவும் என்றெண்ணி
ஒரே அலைவரிசையில் பயணம் செய்கிறோம்

நம் எழுத்துக்காரர்களைப் போல்
நம் கூத்துக்காரர்களைப் போல்
நம் ஆட்சிக்காரர்களைப் போல்

கொடும் விலங்கொன்று

பசியையும் தீண்டாமையையும்
தின்று வளர்கிறது
கொடும் விலங்கொன்று
குடிசை ஒவ்வொன்றிலும்

ஆழிப்பேரலையையும்
அடங்கா பெரும் காற்றையும்
எங்கள் திசைகளில்
திருப்புகின்றாய்

புயல்களைச் சுவாசித்தே
ஜீவித்துக் கொண்டிருக்கிறோம்
ஆயிரம் ஆண்டுகளாய்
வடிகட்டிய மென்காற்றைத் தின்று
வாழ்கிறாய்

ஆரவாரமாய், அமைதியாய், திமிராய்
கட்டப்பட்டுள்ள அவ்விலங்கு
கட்டுக்கடங்காமல் அறுத்துக்கொண்டு
உன் அமைதியை ஆரவாரத்தை திமிரை குதறும்

அந்நாள் வரை துய்
எம் மகிழ்வை அமைதியை
மென்காற்றை

துளிரும் தேசம்

ஒருவருக்கு மலம் திணிக்கிறீர்

எல்லோரும் கொதிக்கிறோம்
நெருப்புக் குளம்பாய்

எங்கள் தாய்களையும்
சகோதரிகளையும் பலாத்காரம் செய்கிறீர்

கருவுருகிறோம்
ஆயுதங்களோடு

எரித்த எம் குடிசைகளின் தீக்களாலே
சூரியன்கள் பல காய்த்திருக்கிறோம்

உங்களின் ஒதுக்குதல்களில் இருந்து
துளிரத் தொடங்கும் எங்களுக்கான தேசம்

வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு

தெரிந்த வழி எல்லாம்
பயணிக்கிறோம்
எங்கும் காணவில்லை

வளர்ந்து வரும்
நம் எழுத்தின் கைகளுக்கும்
உறுமும் நம் பேச்சின் பேரொலிக்கும்
துளிர்க்கும் நம் அரசியலுக்கும்
தொடரும் உரையாடலுக்கும் மசியவில்லை

தேவைப்படுகிறது
இன்னும் பல ஆயுதங்கள்
வண்ணங்களை விழுங்கிப்
பெருத்துக் கொண்டிருக்கும்
இருட்டினுள் இருக்கிறது அது

ஆயிரமாண்டின் இதயங்களைக்
கழற்றி எறிந்து விட்டு
அப்பெரும் இருட்டினுள்
பாய்வோம் சூரியனாய்

அறிவின் வாளில்

சாதி கழித்த மலத்தினுள்
புதைந்திருக்கிறது தாய் நிலம்

மலத்தில் பிறந்த மிருகம்
வேட்டையாடிக் கொண்டிருக்கின்றது
மக்களை

ஞானத்தின் கூரிய வாள்
வாய்மையின்
தலைமேல் தொங்கிக் கொண்டிருக்கிறது

மதம் காக்க தெய்வத்தின்
பிணத்திற்கு அரிதாரம் பூசி
ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்

ஆயிரங்கள் ஆகிப்போன
நான்கு வர்ணங்களைக் கட்டிக் காக்கிறது
பூணூல்

பிரிக்கப்படாமலிருக்கும்
மந்திரக்கட்டுகள் அறுத்தெறியப்படும்
கூரேறிக் கொண்டிருக்கும்
அறிவின் வாளில்

தமிழ் ஓவியா said...

விருதுகள் இப்படி


தயான் சந்த் என்பவரைத் தெரியுமா?

விளையாட்டுத் துறைக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதில்லை என்று தயான் சந்த்தை நிராகரித்த இந்திய அரசுதான் இன்று சச்சின் டெண்டுல்கரைத் தேடிக் கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, யார் அந்த தயான் சந்த் என்பதைப் பார்க்கலாம். விதிகளை மாற்றி விளையாட்டுத் துறைக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என்றால் முதல் விருது தயான் சந்த்துக்குத்தான் தரப்பட வேண்டும் என்கிறது அவரது சாதனைப் பட்டியல்.

ஹாக்கி விளையாட்டு வீரரான இவர்தான் இந்தியாவுக்கு 3 ஒலிம்பிக் தங்கம் வாங்கிக் கொடுத்தவர். இவர் தலைமையில் சென்ற இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் தோற்றதே இல்லை.

1932இல் 37 போட்டிகளில் 133 கோல், 1934_35இல் 43 போட்டிகளில் 201 கோல் என இவர் ஆடிய ஆட்டத்தை முறியடிக்க இன்னும் ஒருவர் பிறக்கவில்லை. இவரது ஆட்டத்தைப் பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன், ஹாக்கி வீரர் என்று சொல்லி ஒரு கிரிக்கெட் வீரரை ஹாக்கி அணியில் சேர்த்து விட்டார்கள்! கிரிக்கெட்டில் ரன்கள் எடுப்பது போல் அல்லவா கோல்கள் அடிக்கிறார்! என்று சொன்னாராம்.

அன்றைய பன்னாட்டுப் பத்திரிகைகள் இவர் மட்டையில் பசையைத் தடவி வைத்திருக்கிறாரோ? பந்து அவர் மட்டையுடனே செல்கிறதே! என்று எழுதினவாம்!

ஆஸ்திரிய நாட்டில் இவருக்குச் சிலை வைத்துள்ளார்கள். எப்படித் தெரியுமா? நான்கு கைகளுடன் இருப்பது போல சிலை அமைத்து, அந்த நான்கு கைகளும் தலா ஒரு ஹாக்கி மட்டையைக் கையில் பிடித்த வண்ணம் இருக்கும்!

1905இல் பிறந்து 1979இல் மறைந்த தயான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ஆம் தேதிதான் இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது! ஹாலந்து நாட்டில் இவரது ஹாக்கி மட்டையை உடைத்து அதில் காந்தம் ஏதும் உள்ளதா என சோதித்தார்களாம்.

ஒருமுறை ஹாக்கிப் போட்டியில் விளையாடியபோது, தயான் சந்த்தினால் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லையாம்; இவர் அடித்த கோல்கள் இலக்கினுள் விழவில்லை. பின்னர் நடுவரிடம் சென்ற தயான் சந்த், இரு கோல் கம்பங்களுக்கு இடையே உள்ள தூரம் சரியான அளவில் அமைக்கப்படவில்லை என்று முறையிட்டுள்ளார். இதனை ஏற்று அளவெடுத்துப் பார்த்துள்ளார்கள். அப்போது, பன்னாட்டு விதிகளின்படி இடைத்தூர அளவு சரியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அனைவரும் வியந்துவிட்டனர்.

தயான் சந்த்தின் திறமையைப் பார்த்த ஹிட்லர், ஜெர்மன் குடியுரிமையுடன் ராணுவத்தில் கலோனல் பதவியும் தருவதாகச் சொல்லி இருக்கிறார்! ஆனால், அதனை ஏற்க மறுத்துவிட்டார் தயான் சந்த்!

பன்னாட்டு ஹாக்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ள தயான் சந்த்துக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது; விளையாட்டு அமைச்சகமும் பரிந்துரை செய்தது. ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு பாரத ரத்னா கொடுக்கப்படுவதில்லை என்பதால் அதை அரசு நிராகரித்துவிட்டது.

இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் 3 முறை தங்கம் வாங்கிக்கொடுத்த தயான் சந்த்துக்கு வழங்காத பாரத ரத்னா, தனது சொந்த சாதனைக்காக விளையாடியதோடு மட்டுமல்லாமல், விளையாட்டை வைத்து கோடிகளில் சம்பாதித்தவருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்பற்றுக்கும், உழைப்புக்கும் இந்தியாவில் மதிப்பு இவ்வளவுதானா?

- விளையாட்டுப்பிள்ளை

தமிழ் ஓவியா said...

ராஜராஜன் மேல் மரியாதை இல்லை!

கேள்வி: தஞ்சாவூரில் பத்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறீர்கள். பெரிய கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா?

பதில்: பெரிய கோவிலின் புல்வெளியில் இருக்கும் புல் ஒவ்வொன்றும் என்னை அறியும். ஆனால், ராஜராஜன் மேல் மட்டுமல்ல, எந்த மன்னன் மேலும் எனக்கு மரியாதை இல்லை. இன்னொரு நாட்டின் மேல் படையெடுத்து, அந்நாட்டு மக்களின் அமைதியைக் கெடுத்து, பெண்களை அடிமையாக்கி, பொருள்களைக் கொள்ளையடித்து வாழ்ந்த மன்னர்கள் என்பவர்கள் கிரிமினல்கள். அவர்கள் புகழப்படுவது, தவறு. பிரமாண்டமாக ஒன்றைச் செய்வது (கோவில் கட்டுவதுபோல), மக்கள் வரிப்பணம் ஊதாரித்தனமாகச் செலவழிக்கப்பட்டது மட்டுமல்ல... அது எளிமையை அழிக்கிற ஆணவச் செயல்பாடு, ஏழ்மை, இல்லாமை, தேவைகளோடு வாழ்கிற மக்களை, இந்தப் பிரமாண்டம் அவமானப்படுத்துகிறது. தன்னைப் பிரமாண்டமாகக் கருதுவது மனிதத்தனம் அல்ல. கோவில், கலையை வளர்த்தது உண்மை. ஆனால், அது யாருக்கான கலை? கோவிலுக்குள் எல்லா ஜாதி மக்களும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களா? யாருக்காக அத்தனை பெரிய கட்டடம்? யார் தொழ, யார் ஆசி பெற இந்தக் கோவில்? கோவிலுக்குள் இருக்கும் இறைவன் எனக்குள் இருக்க மாட்டானா என்ன?

- பிரபஞ்சன்,

நன்றி: ஆனந்தவிகடன், 4-.12.2013

தமிழ் ஓவியா said...

அய்யர் மலையில் ஆரியம்’


பார்ப்பான்
இன்னமும் பல்லக்கில்
பாழும் தமிழனின்
தோள்களில் அய்யர் - மலை ஏற்றம்.?!

கோவிலுக்குள்
அழுக்குப் பிசுக்கின்
அலாதி நாற்றம்.
சமாளிக்க
சாம்பிராணியும்
ஊதுபத்தியும்
தெய்வீக மணம்.?!

ஓயாமல் உச்சரிக்கப்பட்ட
சமக்கிருத மந்திரங்களில்
ஓரிடத்தில் தவறு!
உச்சரித்தவர்களுக்கு மட்டுமே
அது புரிகிறது;
அவர்களின் அசட்டுச் சிரிப்பில்
நமக்கும்!

ஒரு வார்த்தை கூட
புரியவில்லை
பூசையில் சமக்கிருதம்...
முடிந்ததும்,
உணவு வருகிறது...
பாழும் வயிற்றுக்குக் கூட
புரிந்துவிடுகிறது.

பக்திப்பெருக்கில்
பக்தனுக்கு
கண்ணீர் வடிகிறது.
ஓமப் புகையின் உதவியோடு?

பால், தயிர், மோர்,
பேரிச்சம்பழம்,
எலுமிச்சைச் சாறு,
சந்தனம், திராட்சைச் சாறு
இன்னும் சில...

அண்டாக்களில்
நிறைந்து கிடக்கிறது
கருங்கல்லின்மீது சொரியப்பட!

ஈசன் கோவில் பூசையில்
சமக்கிருத மந்திரம்
இங்கு தமிழிலும்
அர்ச்சனை செய்யப்படும்
என்ற பலகையின் சாட்சியுடன்.

கோவிலின் உள்பிரகாரத்தில் ஆங்காங்கே எடிசனின் அறிவு பளிச்சிடுகிறது.
ஆகம விதிகளிலும்
அறிவியலின் ஊடுருவல்!

- உடுமலை வடிவேல்

தமிழ் ஓவியா said...

வலிப்பு வந்தால் கையில் சாவி கொடுக்கலாமா?

- டாக்டர் கனகசபை
சென்னை, ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைத் தலைவர்

மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும் மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்துப் பாகங்களும் ஒரு முகமாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலிப்பு நோய் வருகிறது. குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வலிப்பு நோய் வர வாய்ப்பு உள்ளது. ஒரு சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகிறது.

வலிப்பு நோய் வந்தால் உடனடியாக சாவியைக் கையில் கொடுப்பது போல சினிமாவில் காட்டுகின்றனர். அதனைப் பார்த்து பொதுமக்களும் வலிப்பு நோய் வந்தவுடன், அவர்களின் கையில் சாவியைக் கொடுக்கின்றனர்.

வலிப்பு நோய்க்கு சாவி கொடுப்பதன் மூலம் எவ்விதப் பயனும் இல்லை. இதுபோன்ற மூடநம்பிக்கைகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

வலிப்பு வந்தவுடன், அவரை உடனடியாக இடது பக்கம் திரும்பிப் படுக்க வைக்க வேண்டும். அவர் பற்களைக் கடித்துக் கொள்ளாமல் பாதுகாக்க ரப்பர் பந்துகளை வாயில் வைக்க வேண்டும். கட்டையை வாயில் வைத்தால், பற்கள் உடைந்துவிடும்.

அதன்பின், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். டாக்டர்கள் சொல்லும் மருந்து, மாத்திரைகளை வலிப்பு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். மருந்து, மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதலில் அடிக்கடி வரும் வலிப்பு நோய் குறையும். அதன்பின், வலிப்பு நோய் முழுவதுமாக குணமடையும்.

வலிப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது மற்றும் உயரமான இடங்களில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக வலிப்பு நோயாளிகள் கவலைப்படக்கூடாது. பதற்றம் அடையக்கூடாது.

தமிழ் ஓவியா said...

கொலை வழக்கில் ஜோதிட சாமியார்


வக்கிர எண்ணமும், குற்றச்செயல்களின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணமும் சில மனிதர்களுக்கு ஏற்படுவது பழங்கதைதான். ஆனால், அதற்கு அவர்கள் போட்டுக் கொள்ளும் முகமூடிகளாக மதமும், கடவுள் பக்தியும், ஜோதிடமும் இருப்பதுதான் இந்தியாவின் சிறப்பம்சம்.

வடநாடு தொடங்கி தென்னகம் வரை சாமியார்கள் செய்யும் அட்டகாசங்களும் அநியாயங்களும் தொடர்கதைகளாகி வருகின்றன. கடவுள் மூடநம்பிக்கைக்குப் பலியாகும் மக்கள் இவர்களின் பிடிக்குள் சிக்கி மானத்தையும், பொருளையும், அறிவையும் இழப்பதோடு மட்டுமல்லாமல் உயிரையும் இழப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

மீண்டும் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. திருச்சியில் பிரபல ஜோதிடராக வலம் வந்த ஒரு சாமியார் கொலை செய்யும் அளவுக்குப் போயுள்ளார்.

அந்தச் சாமியாரின் பெயர் கண்ணன். சிறீரங்கத்தைச் சேர்ந்தவர். 9ஆம் வகுப்புவரை படித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலிருக்கும் ஒரு சாமியாரிடம் மந்திரம் என்ற பெயரில் ஏமாற்று வித்தைகளைக் கற்றுக் கொண்டுள்ளார். அப்போது, கண் அசைவிலேயே தான் நினைக்கும் செயலினை மற்றவர்களின் மூளையை இயங்கச் செய்து செயலாற்ற வைக்கும் நோக்கு வர்மக் கலையிலும் தேர்ச்சி பெற்றாராம்(?). பின்னர், அங்கிருந்து திருச்சிக்கு வந்து ஜோதிடத்தையும் சாமியார் தொழிலையும் செய்து வந்துள்ளார். அப்போது, திருச்சி திருவானைக்காவைச் சேர்ந்த வைர வியாபாரி தங்கவேல், தொழிலில் ஏற்பட்ட பிரச்சினையிலிருந்து விடுபட மனைவி யமுனாவுடன் சாமியார் கண்ணனிடம் சென்றுள்ளார். பரிகாரம் என்ற பெயரில் அடிக்கடி வந்து சென்றதில் யமுனாவுக்கும் சாமியாருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தங்கவேல் கண்டித்ததால் அவரைக் கொலை செய்துள்ளனர். அடுத்து, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் யமுனாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்த துரைராஜ் என்பவரைக் கொலை செய்ததுடன் அவரது ஓட்டுனர் சக்திவேலையும் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலத்தில் கண்ணன் கூறியுள்ளார். மேலும், யமுனாவின் மகனுக்கும் மகளுக்கும் இவர்களது அந்தரங்கம் தெரியவர அவர்களது கதையையும் முடித்துள்ளனர். பெற்ற பிள்ளைகளையே கொல்வதற்கு உடந்தையாக இருந்து வேடிக்கை பார்த்துள்ளார் யமுனா.

இப்போது சாமியார் கண்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொலை செய்துவிட்டு எவரும் தப்பமுடியாது என்கிற நிலையை நமது காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. அந்த நம்பிக்கை இன்னும் மக்களிடம் இருக்கிறதுதான். ஆனால், குற்றம் நடந்து முடிந்தவுடன் குற்றவாளிகளைப் பிடிப்பது என்பது மட்டும் போதுமானதா? குற்றத்தை நடக்கவிடாமல் தடுக்க முன் முயற்சிகளை காவல்துறை எடுக்க வேண்டாமா? பொதுவாக சமூக விரோதிகளைக் கண்காணிக்கும் பணியைக் காவல்துறை தொடர்ந்து செய்துவருகிறது. அதுபோல ஜோதிடம், மாந்திரீகம், பில்லி, சூனியம் செய்யும் சாமியார்களையும் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை இந்த திருச்சி சம்பவம் உணர்த்திவிட்டது.

சாமியார் கண்ணனைப் பிடிக்க வேண்டிய காவல்துறை, அவரிடமே குறி கேட்கும் மூடத்தனத்தையும் செய்துள்ளதுதான் வேடிக்கையின் உச்சகட்டம்.

மதச்சார்பின்மையின் மீது அமைக்கப்பட்டுள்ள நமது அரசியல் சட்டத்தைப் பின்பற்ற வேண்டிய காவல்துறையினர், தமது மத நம்பிக்கைகளை பணியிடங்களில் திணிக்கும் சட்டமீறலைச் செய்கின்றனர். காவல் நிலையங்களிலேயே கடவுளர் படங்களை மாட்டிவைத்துக் கொண்டு, ஆண்டுதோறும் சரஸ்வதி -ஆயுத பூஜைகளைக் கொண்டாடினால், அதே மத நம்பிக்கையின் மூலம் தொழில் நடத்தும் திருச்சி கண்ணனைப் போன்றோர் அதனைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்களா? காவல்துறையினரையும் தமது பக்திப் பிரசங்கங்களின் மூலம் ஏய்த்துவிடலாம் என்று கருதுவதால்தான் இத்தகைய சாமியார்கள் எளிதில் தமது குற்றச்செயல்களை அரங்கேற்றுகின்றனர்.
சாமியார்கள் கடவுளின் தூதுவர்கள் என்று கருதும் காவல்துறையினர் இவர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் விளைவுதான் இத்தனைக் கொலைகளும் நடக்குமளவுக்குச் சென்றுவிட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகாவது சாமியார்களைக் கண்காணிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்குத் துணை செய்யும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை தமிழக அரசு விரைந்து இயற்றவேண்டிய சரியான தருணம் இதுதான்.

- சமன்

தமிழ் ஓவியா said...


சங்கராபுரம் ஆஞ்சநேயன் எங்கே போனான்?


சங்கராபுரம், டிச.15-சங்கரா புரத்தை அடுத்த காட்டு வண்ணஞ்சூ ரில் புதிதாக ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டது. கடந்த சில நாட் களுக்கு முன்பு இந்த கோவில் குட முழுக்கு நடந்தது. நேற்று இரவு பூசாரி வெங்கடேசன் வழக்கம்போல் பூஜை கள் செய்தார். பிறகு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இரவில் அடையாள தெரியாத மனிதர்கள் அந்த கோவில் வளாக சுவர் ஏறி குதித்தனர். கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்தனர். சில நாட்களுக்கு முன்பு குடமுழுக்கு நடந்திருந்ததால் உண்டியலில் பக்தர் கள் ஏராளமாக காணிக்கை செலுத்தி யிருந்தனர். அந்த பணத்தை கொள் ளையர்கள் அள்ளி மூட்டை போட்டு கொண்டு தப்பி சென்று விட்டனர்.

நேற்று (14.12.2013) காலையில் கோவிலை திறக்க பூஜாரி வெங்கடே சன் வந்தார். கோவிலை திறந்து உள்ளே சென்றபோது உண்டியலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப் பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து பார்த் தனர். இதனால் அந்த பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி சங்கராபுரம் காவல் துறையிடம் புகார் செய்யப்பட்டது. உடனே ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவல் நிலையத்தில் தடய வியல் நிபுணருடன் கோவிலுக்கு விரைந்து சென்றனர்.

ஆஞ்சநேயர் கோவிலில் பதிவாகி யிருந்த ரேகைகள் மற்றும் தடயங் களை சேகரித்தனர். துணிகர கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72080.html#ixzz2nayHMSjl

தமிழ் ஓவியா said...


பட்டை நாமக் கோயிலுக்கே பட்டை போட்ட பலே திருடன்!


ஆவடி, டிச.15- ஆவடியை அடுத்த சேக்காட்டில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோயி லில் இரண்டாவது முறை யாக உண்டியல் பணம் கொள் ளையடிக்கப்பட்டு உள்ளது.

ஆவடி அடுத்த சேக்காடு கிராமத்தில் சீனிவாச பெரு மாள் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு குருக்கள் கோவிந்தராஜ் பூஜையை முடித்துவிட்டு கோயிலை பூட்டி விட்டு சென்றார்.

நேற்று காலை அவர் கோயிலை திறக்க வந்தார். அப்போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு, சில்லறைக் காசுகள் சிதறிக்கிடந்தன. இதனால் குருக்கள் அதிர்ச்சி அடைந் தார். இதுபற்றி அறிந்ததும் கோயில் முன் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அடிப்படையில், ஆவடி உதவி ஆய்வாளர் சேரன் காவல் துறையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். கைரேகை நிபுணர்கள் வந்து உண்டியல், கோயில் கதவுகளில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள காவல்துறையினர் கோயி லில் கொள்ளையடித்துச் சென்றவர் களை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கோயிலில், கடந்த 3 மாதத்துக்கு முன்பும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. தற்போது உண்டியலில் 10,000 ரூபாய் இருந்திருக்கலாம் என்று கோயில் குருக்கள் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/72082.html#ixzz2nayQRPdB

தமிழ் ஓவியா said...


நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. பலமான அணியாக இருக்கும் நெஞ்சுக்கு நீதி புத்தகம் வெளியீட்டு விழாவில் கலைஞர்


சென்னை, டிச.15- நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. பலமான அணியாக இருக்கும் என்றும், கூட்டணி குறித்து பொதுக்குழுவில் விவாதிப்போம் என்றும் நெஞ்சுக்கு நீதி புத்தக வெளியீட்டு விழா வில் கலைஞர் உரையாற்றினார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி (6 ஆவது பாகம்) புத்தக வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு, தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமை தாங்கினார்.

புத்தகத்தை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் வெளி யிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். நிறைவாக தி.மு.க. தலைவர் கலைஞர் ஏற்புரையாற் றினார். அப்போது அவர் உரையாற்றியதாவது:-

நெஞ்சுக்கு நீதி புத்தக வெளியீட்டு விழாவில் பேராசிரியர் அன்பழகன் கலந்துகொண்டது சந் தோஷமாக உள்ளது. அவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவாரோ?, வரமாட்டாரோ? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. தற்போது, சந்தோஷமாக இருக்கிறது.

துன்பங்கள் என்னையும், தி.மு.க.வையும் தொட்ட போது, கவிஞர் வைரமுத்து நம்மோடு இருப்பாரா? என்று பலரும் கேட்டதுண்டு. அவர்களிடம் நிச்சயம் இருப்பார் என்று கூறினேன். பொதுவாக இந்த இயக்கத்தில் இருந்து கவிஞர்கள் காணாமல் போய்விடுவதுண்டு. அப்படி போனவர்கள் திரும்பி வந்ததும் உண்டு.

நான் பிறந்த 1924 ஆம் ஆண்டு முதல் 1969 வரை நெஞ்சுக்கு நீதி முதல் பாகமும், 1969 முதல் 1976 ஆம் ஆண்டு வரை நடந்த நிகழ்வுகளை 2 ஆம் பாகமாகவும் தொகுத்துள்ளேன்.

1976 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப் பட்டது. இலங்கை தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்தோம் என்று காரணம் காட்டி தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அதேபோல், சந்திரசேகர் பிரத மராக இருந்தபோதும் விடுதலைப் புலிகளுக்கு தி.மு.க. அரசு உதவியதாக கூறி, தி.மு.க. ஆட்சி கலைக் கப்பட்டது.

அப்போது, தி.மு.க. அரசை கலைக்க வேண்டும் என்று தூண்டிவிட்டவர் யார் என்பதை நான் சொல்ல தேவையில்லை. ஆளுநரின் கருத்து கேட் காமலேயே ஆட்சி அப்போது கலைக்கப்பட்டது. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இலங்கை தமிழர் பிரச்சினையில் நாங்கள் எதையும் செய்யவில்லை என்று இங்கே சில பேர் சொல் கிறார்களே, அவர்களுக்காகத்தான் இதை சொல் கிறேன்.

நெஞ்சுக்கு நீதி 6 ஆம் பாகமாக வந்துள்ளது. 7 ஆவது பாகம் உண்டா என்பது எனக்கு தெரியாது. இயற்கைக்குத்தான் தெரியும். இயற்கை வழி கொடுத்தால் 8, 9 ஆம் பாகம் கூட வெளிவரும்.

நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டபோதெல்லாம் சட்டசபைக்குப் போய் வந்துள்ளேன். ஆனால், கடந்த ஓரிரு ஆண்டு காலமாகத்தான் நடக்க முடியாத காரணத்தால், சட்டசபையில் எனக்கு இடவசதி செய்து கொடுக் காததால் என்னால் சட்டசபைக்குச் செல்லமுடிய வில்லை.

இருப்பினும் மக்கள் தொண்டு ஆற்றிவருகிறேன். இந்தத் தொண்டு தொடரும். சட்டசபைக்குச் சென்று பேசினால் குண்டு கட்டாக தூக்கிப்போடக் கூடிய நிலைக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக மட்டுமல்ல, கழகத் தோழர்கள் இதன் மூலம் கொதிப்பும், வேதனையும் அடைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

தமிழகத்தில் அரசியல் நாகரிகம் எப்படி இருக்கிறது என்பதை கோபாலபுரம் வந்து பார்த்தால் உங்களுக்கு தெரியும். அங்குள்ள விளம்பரப் பதாகைகளை நீங்கள் பார்த்து அரசியல் நாகரிகத்தை தெரிந்துகொள்ளலாம்.

நாங்கள் மக்களைப் பற்றி கவலைப்படுகிறோம். ஆனால், நீ யார் கவலைப்பட என்று கேட்கிறார்கள். ஆனால், மக்கள் பணி ஆற்றுவதில் எங்களை பிரித்து விட முடியாது. ஒரு சமுதாய இயக்கமாக உருவாகி, அரசியல் இயக்கமாக தி.மு.க. திகழ்கிறது. அரசியல் இயக்கம் என்று சொல்லும் போதே நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி, யாருடன் சேர்வீர்கள் என்ற கேள்விகளும் கேட்கத் தோன்றும்.

யாருடன் சேர வேண்டும், யாருடன் சேரக் கூடாது என்பதை கடந்த கால நிகழ்வை சிந்தித்து பார்த்து பொதுக்குழுவில் விவாதிப்போம். பொதுக் குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை 21 ஆம் தேதி முதல் மாவட்டத் தலைநகரங்களில் கூட்டம் நடத்தி மக்கள் மத்தியில் விளக்கி பேச வேண்டும். யாருடன் கூட்டு என்று கேட்பவர்களுக்கு அணி உண்டு, எந்த அணி என்று இப்போது சொன்னால் பிணியாகிவிடும். ஆனால், தி.மு.க. பலமான அணியாக இருக்கும்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-5/72087.html#ixzz2naz09lQd

தமிழ் ஓவியா said...


லஞ்சம்-ஊழல், மது ஒழிப்பிற்கான புகார் அளிக்க தொலைபேசி சேவை மய்யம் தொடக்கம்


சென்னை, டிச.15- லஞ்சம்-ஊழல், மது ஒழிப்பிற்கான புகார் அளிக்க தொலைபேசி சேவை மய்யம் தொடக்க விழா சென்னை யில் நடந்தது.

சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில், சென்னை தியாகராயநகரில் உள்ள பிட்டி தியாகராயர் அரங்கத்தில் லஞ்சம்-ஊழல், மது ஒழிப்புத் தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி சேவை மய்யம் நேற்று தொடங்கப்பட்டது. விழாவில் கோ-ஆப்-டெக்ஸ் நிருவாக இயக்குநர் உ.சகாயம் கலந்து கொண்டு, தொலைபேசி சேவை மய்யத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம், அரசின் சேவைகள், சலுகைகள், விதிமுறைகள், அரசாணைகள் சட்டத் திட்டங்களை ஏழை-எளிய மக்களும் தெரிந்து கொள்ளவும், லஞ்சம் அளிக்காமல் அரசு சேவைகள் பெற வும் வழிகாட்டுவதற்காக இந்தத் தொலை பேசி சேவை மய்யம் செயல்பட உள்ளது.

தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்த விளக்கமளித்தல், மதுவினால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகள், லஞ்சம்-ஊழல், மது ஒழிப்பு குறித்து புகார் அளிக்க, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ் போர்ட், மின் இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்புகள், பட்டா மாற்றம், கல்விக்கடன் போன்ற அரசு சேவைகள் அனைத்தையும் குறித்த விளக்கங்கள், குறித்த வழிகாட்டுதல் போன்ற பணிகளை இந்த சேவை மய்யம் செய்கிறது.

சேவை மய்யத்தின் 7667-100-100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு சேவைகள் குறித்த விளக்கங்களை பெற்றுக்கொள்ள லாம்.

இதுகுறித்து நிர்வாக இயக்குநர் உ.சகாயம் கூறியதாவது:-

நேர்மை என்பது முக்கியமான ஒன்று. அந்த நேர்மை அரசியல், ஆட்சியில் மட்டும் நேர்மை இருந்தால் போதாது. சமூக முழு மையும் நேர்மை இருக்கவேண்டும். ஊழ லுக்கு எதிராக போராடுவது கடுமையான போராட்டம். ஆனால் நாம் கண்டிப்பாக போராட வேண்டும்.

- இவ்வாறு அவர் கூறினார்

Read more: http://viduthalai.in/page-5/72089.html#ixzz2nazJryTW

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மூடநம்பிக்கை உச்சத்துக்குப் போகும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி எச்சரிக்கை


திருப்பூர், டிச.15- இந் துத்துவ மதவெறி அடிப் படையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் மூடநம்பிக்கை உச்சத்துக்குப் போகும் என்று திருப்பூரில் நடை பெற்ற மக்கள் கோரிக்கை மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத் தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார்.

திருப்பூர் அரிசிக் கடை வீதியில் நடை பெற்ற மாநாட்டில் உ.வாசுகி பேசியதாவது:

உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் இந்திய நாட்டு மக்களுக்கு எதிரானது

உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் இந்தியா உணவு மானி யத்தைக் குறைக்க வேண் டும் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் நிர்ப்பந் தித்துள்ளது. அமெரிக் காவில் விவசாயிகளுக்கு 385 கிலோ மானியம் வழங்கும் அந்த நாட்டு அரசு இந்தியாவில் 60 கிலோ மானியம் வழங் குவதை அநியாயம் என்று அதை வெட்டச் சொல்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடு கள் எதிர்ப்புத் தெரி வித்த அடிப்படையில் இந்த உத்தரவை நான் காண்டு காலத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர். உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் உருவான போதே அது இந்திய நாட்டு மக்களுக்கு எதி ரானது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது.

நரேந்திர மோடி அலை என்ற தில்லுமுல்லு மோசடிகளை....

நாட்டில் நரேந்திர மோடி அலை வீசுவ தாகச் சொல்கிறார்கள். ஆனால் டில்லியில் அவ ரது அலையால் பாஜக ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை ஏன்? கடலில் அலை வரும் போகும், ஆனால் கரை பலமாக இருந்தால் எந்த அலையாலும் அதை உடைக்க முடியாது. நரேந்திர மோடி அலை என்ற தில்லுமுல்லு மோசடிகளை, மக்கள் ஒற்றுமை என்ற வலு வான கரையைக் கொண்டு தடுத்து நிறுத்த முடியும்.

நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக் கிறார். ஆனால் காங் கிரஸ் கட்சியின் கொள் கைகளை அவர் விமர் சிப்பது கிடையாது. டில்லியில் இளம்பெண் பாலியல் வன்கொடு மைக்கு ஆளான சம் பவம் நடந்தபோது, சம்பவத்தில் ஈடுபட்ட ஆண்களைப் பார்த்து சகோதரனே என்று கெஞ்சியிருந்தால், சரஸ்வதி மந்திரம் உச் சரித்திருந்தால் தப்பி யிருக்கலாம் என்று ஆசாராம் பாபு என்ற சாமியார் சொன்னார்.

சரஸ்வதி மந்திரம் பலிக்கவில்லை போலும்!

ஆனால் அவரது ஆசி ரமத்தில் வேலை செய்த இளம் பெண்களையே அவர் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கி இப்போது சிறையில் இருக்கிறார். அங்கெல் லாம் சரஸ்வதி மந்திரம் பலிக்கவில்லை போலும். மேலும் இந்த சாமியா ருக்கு பாதுகாப்பாக குரல் கொடுத்தது யார் தெரியுமா? பாஜகவுக்கு நெருக்கமான இந்துத் துவ அமைப்பான விசுவ இந்து பரிஷத் தலை வர்கள் தான் ஆசாராம் பாபுக்கு ஆதரவாக இருந்தனர்.

எனவே பெண் களுக்கு எதிரானவர்கள் இவர்கள். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் மூட நம்பிக்கை உச்சத்துக்குப் போகும். - இவ்வாறு உ. வாசுகி உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-8/72084.html#ixzz2nb0EfJ9e

தமிழ் ஓவியா said...


ஒற்றுமை ஓட்டமா?

நரேந்திரமோடி என்றாலே நம்பகத் தன்மை வாய்ந்த மனிதரல்ல - அவரின் ஒவ்வொரு நடவடிக் கையிலும் நயவஞ்சகமும், தந்திரமும் கைகோர்த் தாடும் என்பது மெல்ல மெல்ல மக்களுக்குப் புரிந்துதான் வருகிறது.

இரகசியமாய் இருந்த உண்மையை இந்தியாவின் தலைநகர மக்கள் மிகச் சரியாகவே உணர்ந்து கொண்டு விட்டனர். டில்லியில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதனை நிரூபித்தும் காட்டி விட்டனர்.

மோடியின் மீது ஏற்கெனவே விழுந்துள்ள முத் திரைகள் எல்லாம் மத வெறியர் - சிறுபான்மை மக்களின் கொடும் எதிரி, கோத்ரா ரயில் எரிப்பு என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான முசுலிம் மக்களைக் கொன்று குவிக்கக் காரணமாக இருந்தவர்; அவர்களின் வீடுகளையும், வியாபார நிறுவனங் களையும் கொளுத்தியும், இடித்தும் வன்முறை வெறியாட்டத்தை நடத்திக் காட்டியவர் என்ற முத்திரைகள் எல்லாம் கணிசமான அளவுக்கு அவர்மீது உலக்கை இடிபோல் விழுந்திருக்கின்றன.

இதிலிருந்து அவர் கரை ஏறிட எந்தப் பொய்யை யாவது, புனை சுருட்டையாவது ஜோடித்து அவற்றின் மீது மோடியை சவாரி செய்ய வைக்க வேண்டும் என்ற நெருக்கடி அவர்களுக்கு!

மோடி பராக்! பராக்!! இந்தியாவிலேயே வளர்ச்சிப் பாதையில் குஜராத்தை முதல் மாநிலமாக்கிய மோடி பராக்! பாரக்!! - என்று பூமியே அதிரும் அளவுக்குப் பிரச்சார சத்தத்தைப் போட வைத்தனர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக வந்த ரகுராம் ராஜன் தலைமையிலான அறுவர் கொண்ட அறிக்கை - குஜராத் வளர்ச்சி அடைந்த மாநிலம் அல்ல; மாறாக தளர்ச்சி அடைந்து தள்ளாடும் மாநிலம் என்று தரைமட்டமாக அடித்துத் தூக்கி எறிந்து விட்டது.

இப்பொழுது அந்த வளர்ச்சிப் பல்லவியை கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டு விட்டனர். திடீரென்று குஜராத் மாநிலத்தில், வல்லபாய் பட்டேலுக்கு 597 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலையை நிறுவப் போவதாகக் கூறி, இந்திய மக்களை எல்லாம் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

படேல் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெரிய தலைவர் - அதனால் மண்ணின் மைந்தரைப் பெருமைப்படுத்துகிறார் என்று சொல்ல முடியாது - அப்படியானால், காந்தியாரும் அம்மாநில மண்ணின் மைந்தர் தானே? அவருக்கல்லவா 597 அடிக்கு மேலாக உயரமான சிலையை நிறுவியிருக்க வேண்டும்? ஏன் படேலைத் தேர்வு செய்தார்?

படேல்மீது கொஞ்சம் இந்துத்துவாவின் நிழல் உண்டு. பாகிஸ்தான் பிரிவினையின்போது டில்லியில் முசுலிம்கள்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் கொலைகள் இவற்றைக் கட்டுப்படுத்துவதில் அன்றைய உள்துறை அமைச்சராகவிருந்த படேல் போதிய ஆர்வம் - அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாற்று உண்டு. காந்தியாரும், நேருவும்கூட அப்பொழுது படேலிடம் அதிருப்தி அடைந்தனர் - இந்த அடிப்படையில் இந்துத்துவாவாதியான மோடி போன்றவர்கள் படேலின்மீது பற்றுதல் கொண்ட வர்களே!
ஆனாலும் காந்தியார் படுகொலை செய்யப்பட்ட போது அதற்குக் காரணமாகவிருந்த ஆர்.எஸ். எஸைத் தடை செய்து ஆணை பிறப்பித்தவர் அன்றைய உள்துறை அமைச்சர் படேல்தான்.

ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம்களைத் தாக்குகிறது. ஹிந்துக்களைத் தூண்டுவதற்காக விஷத்தைப் பரப்புவது என்ன நியாயமாம்? வகுப்புவாத உணர்வைத் தூண்டியதன் விளைவாக மகாத்மா காந்தியாரைப் பலி கொடுக்க நேர்ந்தது. ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அதை இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். வன்முறையை வளர்த்த தாலும், அரசுக்குக் கட்டுப்பட மறுத்ததாலும் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்படுகிறது என்று உத்தரவு போட்டவர் படேல்.

இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, படேலுக்கு 597 அடி உயரத்தில் சிலை என்று விளம்பரம் செய்து நாடெங்கும் ஒற்றுமை ஓட்டம் என்று கூத்தை அரங்கேற்றியுள்ளது. படேல் சிலைக்கு இரும்பு, மண் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களைச் சேகரிக்கிறது.

இதுபோன்ற செயல்கள்மூலம் மோடிமீது விழுந்திருக்கும் மோசமான முத்திரைகளிலிருந்து திசை திருப்பி விடலாம் என்ற உள் நோக்கம் இதற்குள் புதைந்து கிடக்கிறது என்பதைப் பொது மக்கள் அறியத் தவறக் கூடாது என்பதே நமது வேண்டு கோளாகும். ஒற்றுமை ஓட்டம் என்று பிஜேபி கூறிடத் தகுதி உண்டா? பிறப்பிலேயே ஜாதி பேதம் கற்பித்து மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி மனித ஒற் றுமையைச் சீர்குலைக்கும் இந்துத்துவாவாதிகளின் ஒற்றுமை ஓட்டம் நகைப்பிற்குரியதாகும்.

Read more: http://viduthalai.in/page-2/72145.html#ixzz2nekwvn00

தமிழ் ஓவியா said...


வரும்... ஆனால் வராது...

கேள்வி: கடவுள் இருக்கிறாரா?

பதில்: இருக்கிறார் - ஆனால் முகவரி இல்லை. (குமுதம் 18.12.2013 பக்கம் 12).

ஒருவனைப் பார்த்து நீ முகவரி இல்லாத பேர்வழிதானே என்று கேட்டால் மூக்கைப் பொத் துக் கொண்டு கேட்கப்பட்டவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும்; கடவுளை அந்தப் பட்டியலில் வைத்துப் பதில் சொல்லுகிறது குமுதம். ஆனால் கடவுளுக்கே கோபம் வராது - காரணம் அப்படி ஒருவர் இருந்தால்தானே கோபம் வரும்? வரும்... ஆனால் வராது என்ற சினிமா நகைச்சுவை வசனக் காட்சி நினைவிற்கு வருகிறதா?

Read more: http://viduthalai.in/e-paper/72143.html#ixzz2nelE73d7

தமிழ் ஓவியா said...


நெருக்கடி நிலைக் காலத்தில் பெரும் இடர்ப்பாடுகளைச் சந்தித்த பெரியார் பெருந்தொண்டர் மானமிகு வ.சு.சம்பந்தம் மறைந்தாரே!

கடலூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் புதுவை மானமிகு வ.சு.சம்பந்தம் அவர்கள் (வயது 79) இன்று திடீர் மறைவுற்றார் என்ற தகவலை அறிந்து அதிர்ச்சியுற்றேன். இளம் பருவத்திலேயிருந்து இயக்க ஈடுபாடு கொண்ட இலட்சிய வீரர் அவர்.

கூட்டுறவுத் துறையில் பணியாற்றியவர். நெருக்கடி நிலைக் காலத்தில் பெரும் இடர்ப்பாடு களைச் சந்தித்தவர். பொருள் நட்டத்திற்கெல்லாம் ஆளானவர் தோழர் சம்பந்தம் அவர்கள்.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதி, சட்ட விரோத செயல்களையெல்லாம் முகம் கொடுத்து, சந்தித்து, நீதிமன்றம் சென்று, கடைசியில் சிரிப்பவர் யார்? என்ற முறையில் வெற்றியும் கண்டவர்!

அவருக்குக் கழகத் தலைமை, பல வகைகளில் துணையாயும் நின்றது. தான் மட்டுமல்லாமல், தன் குடும்பத்தினர் அனைவரையும் கொள்கை வழியில் வார்த்தெடுத்த கொள்கை வீரர் அவர்! கழகக் கொள்கைகளை மேடைகளில் மணிக்கணக்கில் பேசும் ஆற்றல் படைத்தவர். கழகம் கல்தூண்போல் அசையாது நின்ற கருஞ்சட்டை வீரரை இழந்துவிட்டது.

அவரது குடும்பம் தம் தலைவரை இழந்துவிட்டது! குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதுடன், அவர்தம் அளப்பரிய அருந்தொண்டுக்கு கழகம் வீர வணக்கத்தைச் செலுத்துகிறது.

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.

குறிப்பு: தலைமைக் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

வா.சு.சம்பந்தம் அவர்களின் வாழ்விணையர் மானமிகு மீனாசம்பந்தம், மகன் மாறன் ஆகியோரிடம் கழகத் தலைவர் தொலைப்பேசியின்மூலம் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/72119.html#ixzz2nemEf2lm

தமிழ் ஓவியா said...


தந்தை இறந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு கருணை அடிப்படையில் மகனுக்கு வேலை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, டிச. 16- தந்தை இறந்து 11 ஆண்டுகள் கழித்து கருணை அடிப்படை யில் மகனுக்கு வேலை வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.அழகேசன் உயர்நீதிமன்றத்தில் தாக் கல் செய்துள்ள மனு விவரம் வருமாறு:

எனது தந்தை மணி வேல் கரூர் மாவட்டம் காவூர் தாலுகா பாப் பயம்பட்டி கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். அவர் 2001 ஜனவரி 20 ஆம் தேதி இறந்தார்.

இதையடுத்து, 2001 மார்ச் 19 ஆம் தேதி கருணை அடிப்படை யில் பணி வழங்கக் கோரி எனது தாய் கரூர் மாவட்ட நிருவாகத் திடம் மனு கொடுத்தார். ஆனால், உரிய தகுதி இல்லை என்ற கார ணத்தினால் கருணை அடிப்படையில் பணி வழங்கவில்லை. எனது தந்தை இறந்தபோது நான் மைனராக இருந் ததால் என்னால் கருணை அடிப்படை யில் பணி கேட்க முடியவில்லை.

2012 இல் நான் பிளஸ் 2 முடித்துள்ளேன். இதையடுத்து, எனக்கு கருணை அடிப்படை யில் பணி வழங்கக் கோரி கரூர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பினேன். தந்தை இறந்து 3 ஆண்டுகளுக் குள் விண்ணப்பித்தால் மனுவை பரிசீலிக்கலாம். இப்போது மிகவும் கால தாமதமாக மனு செய்தி ருப்பதை ஏற்க முடியாது என்று கூறி எனது மனுவை கரூர் மாவட்ட ஆட்சியர் நிராகரித்து விட்டார். எனவே, எனக்கு கருணை அடிப் படையில் பணி வழங்கு மாறு உத்தரவிட வேண் டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி உத்தரவு

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்னி லையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:

மனுதாரரின் தந்தை இறந்தவுடன் அவரது தாய் தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனு இன்னும் நிலுவையில் உள்ளது.

அவருக்கு உரிய கல்வித் தகுதி இல்லாததால் அவருக்கு பணி வழங்க வில்லை என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. அவரது மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் அவரது மகன் பணி கோரி மனு தாக் கல் செய்ததில் முகாந் திரம் உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து அவ ருக்கு ஏற்ற பணியை 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும்.

- இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-5/72111.html#ixzz2nenBo4nD

தமிழ் ஓவியா said...


எந்தெந்த பழங்களில் என்ன இருக்கிறது?


மாம்பழம்: ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. ரத்தத்தை அதிகரித்து உடலுக்கு பலம் அளிக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக் கிறது.

கொய்யா: வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. சொறி, சிரங்கு, ரத்த சோகை, இருப்பவர்கள் கொய்யாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். நச்சுக்கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யா பழத்துக்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் நச்சுக் கிருமிகள் ரத்தத்தில் கலந்துவிட்டால் அதை உடனே கொன்றுவிடும் சக்தி படைத்தது.

பப்பாளி: மூலநோய், சர்க்கரைநோய், குடல் அழற்சி, போன்றவற்றுக்கு சிறந்தது. வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பல் சம்பந்தமான குறைப்பாட்டிற்கும் சிறுநீர் பையில் ஏற்படும் கல்லை கரைக்கவும் பப்பாளி பயன்படும். நரம்புகள் பலப்படும். ஆண்மைதன்மையை பலப்படுத்தும்.

மாதுளை: மலத்தை இளக்கும் சக்தி பெற்றது. இருமல், பித்தம், சம்பந்தமான அனைத்து குறைபாடுகளுக்கும் நல்ல பலன் தரக்கூடியது. வறட்டு இருமலை குணப் படுத்தும்.

வாழை: மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு, பலனடையலாம். இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்ல செரிமாண சக்தி கிடைக்கும். செவ்வாழைப்பழம் கண் பார்வை சக்தியை அளிக்கும்.

ஆரஞ்சு: வைட்டமின் ஏ, வைட்டன் சி, வைட்டமின் பி, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. தூக்கமின்றி அவதிப்படுபவர்கள் படுக்கச்செல்லும் முன் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம் சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, ஈறுகளில் ரத்தக்கசிவு உள்ளவர்கள் ஆரஞ்சு பழச்சாற்றை கொப்பளித்து விழுங்கி நிவாரணம் பெறலாம்.

திராட்சை: வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. சரியாக பசி எடுக்காமல் வயிறு, மந்த நிலையில் காணப்படு பவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரை டம்ளர் சாறு எடுத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து அருந்தினால் நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதகக் கோளாறுகளுக்கு திராட்சைச் சாறு பலனளிக்கும். முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும்.

எலுமிச்சை: எலுமிச்சைச் சாற்றுடன் சிறிய இஞ்சித் துண்டை நறுக்கிப்போட்டு கொதிக்க வைத்து ஆறிய பிறகு தினமும் 2முறை குடித்தால் இருமல் நின்றுவிடும். சூடான தேநீரில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து 3 நாட்கள் குடித்தால் தலைவலி வராது. வயிற்றுவலி, பித்தத்தால், செரிமாண உறுப்பு களில் ஏற்படும் குறைபாடுகள் சிறுநீர் தொந்தரவுகள் வராது.

பேரீச்சை: தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலையும் 2 பேரீச்சை பழமும் சாப்பிட்டால் உடல் பலம் பெறும் புதிய ரத்தம் உண்டாகும்.

Read more: http://viduthalai.in/page-7/72115.html#ixzz2nenOLkXL

தமிழ் ஓவியா said...


பனியிலிருந்து பாதுகாக்க வழிமுறைகள்

சுள்ளெனக் கொளுத்தும் வெயிலையும், சடசட மழை யையும் தாங்கி கொள்ளலாம். அதுவும் எலும்பை ஊடுருவும் கார்த்திகை, மார்கழிப் பனியைக் கண்டால் பயப்படுவோம். மழையும் குளிரும் வாட்டும் இந்த காலக்கட்டங்களில் காய்ச்சலும் சளித் தொந்தரவும் எளிதில் வந்துவிடும். உதடுகளில் வெடிப்பு, கை, கால்களில் வறட்சி ஏற்படும். இதற்காக நாம் கவலைப்பட வேண்டாம். நாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் பனியும் குளிரும் நம்மை எதுவும் செய்யாது.

ஒரே சீரான தட்ப வெப்பநிலை இல்லாமல் வெப்பமும் பனியும் கலந்து இருக்கும் நாட்களில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். பனிக்காலத்தில் ஏ டிபிக்கல் வகை வைரஸ் அதிகமாக தாக்கும். இந்த வைரஸ் கிருமிகள் தாக்கினால் 10 முதல் 13 நாட்கள் வரை வலி நீடிக்கும். சுற்றுச் சூழல் மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து வருவதுதான் இதற்குக் காரணம். இந்த வைரஸ் குழந்தைகளையும், வயதானவர்களையும்தான் அதிகம் தாக்குகிறது.

இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் காரத்தைத் தவிர்த்துவிட வேண்டும். இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசி கஞ்சி, பிரெட் ஆகியவற்றைச் சாப்பிடலாம். சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களை சாப் பிடலாம். புளிப்புச் சுவை நிறைந்த பழங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.வெயில் காலங்களில் நம் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் இந்தப் பழங்கள், குளிர் காலங்களில் ஒத்துக்கொள்ளாது. காரணம், தட்பவெப்ப நிலைக்கு ஏற்றமாதிரி நம் உடல் செயல்பாடுகள் மாறுவதுதான்.

வெயில் காலங்களில் நமக்கு அதிகமாக வியர்க்கும். அப்போது வியர்வையுடன் சேர்ந்து அல்கலைன் சிட்ரேட் என்ற அமிலமும் நம் உடலில் இருந்து வெளியேறும். அதை ஈடு செய்வதற்காக அமிலச் சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்கள் மற்றும் மோர், பானகம் போன்ற புளிப்புச்சுவை நிறைந்த பானங்களைப் பருகுவோம். குளிர்காலத்தில் அதிகமாக வியர்க்காத நிலையில் இவற்றைக் குடிக்கும்போது, நம் உடலில் அதிக அளவில் அமிலச் சத்து சேர்ந்து, சளி, சைனஸ் போன்றவை ஏற்படலாம். முக்கியமாக பச்சை திராட்சையையும், பச்சை வாழைப்பழத்தையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பனிக்காலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். குளிக்க வேண்டும். வெந்நீரில் கைப்பிடி அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்தால் சளி பிடிக்காது, தொண்டை வலியும் வராது. துளசி கிடைக்கவில்லை என்றால் கற்பூர வல்லி, தூதுவளை கீரை ஆகியவற்றில் கஷாயம் வைத்தும் குடிக்கலாம். எந்தக் கீரையும் கிடைக்கவில்லையென்றால் இரண்டு வெற்றிலையை மென்று சாப்பிடலாம். கற்பூரவல்லி கஷாயம் குடிக்கப் பிடிக்கவில்லையென்றால் அதில் பஜ்ஜி, மோர்க் குழம்பு செய்து சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு இரவில் தூங்குவதற்கு முன்பு காதுகளின் பின்புறங்களில் லேசாகத் தைலம் தேய்த்தால் சளி பிடிக்காது. எந்த உணவாக இருந்தாலும் சுடச்சுட சாப்பிடத் தர வேண்டும். கடுகுடன் பால் அல்லது தண்ணீர் சேர்த்து அரைத்து, தினமும் பூசி வர, சருமம் மென்மையாகி, பளபளக்கும். ஒரு கரண்டி ஆலிவ் ஆயிலை ஒரு பக்கெட் நீரில் கலந்து குளிக்கலாம். சருமம் மிகவும் வறண்டிருந்தால், ஆலிவ் ஆயிலை உடம்பில் பூசி, மசாஜ் செய்யவும். 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கலாம். சிறிது பஞ்சை காதில் வைத்துக் கொண்டு சென்றாலும், குளிர் காற்றி லிருந்து தப்பிக்கலாம்.

குளிர்ச்சியான பானங்களை அருந்துவதை தவிர்க்கவும். சூப் அருந்தலாம். குழந்தைகளுக்கு குல்லா, ஸ்வெட்டர், சாக்ஸ் அணிவித்து, வெளியே அழைத்துச் செல் வதும் அவசியம். எண்ணெய் மற்றும் மசாலா வகைகள் அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. தினமும் காலையில், துளசி இலை நான்கை தண்ணீரில் ஊற வைத்து அருந்துவது நல்லது.

Read more: http://viduthalai.in/page-7/72113.html#ixzz2nenfYM5U